Search This Blog

8.9.14

ஊரெங்கும் நடக்கட்டும் உலகத் தலைவர் பெரியார் ஊர்வலம்!தந்தை பெரியார் பிறந்த நாள் செப்டம்பர் 17 (1879) தந்தை பெரியார் பிறந்த நாள் என்பது  தமிழ் சமுதாய மறுமலர்ச்சிக்கான - சகாப்தத்துக்கான ஒரு குறியீடு! அந்நாளை நாம் கொண்டாடுவது என்பது அவர்தம் கொள்கையின் செழுமையை, அவசியத்தை, தேவையை அடுத்த தலைமுறைக்கும் கொண்டு செலுத்துவதற்கான - வரலாறு நமக்கு நன்கொடையாக அளித்திருக்கும் ஓர் அரிய வாய்ப்பு!


அதுவும் மதவாதமும், ஜாதீயவாதமும் தலை தூக்க எத்தனிக்கும் இந்தக் கால கட்டத்தில் தந்தை பெரியார் என்ற பகுத்தறிவுப் பகலவனின் பகுத்தறிவுச் சிந் தனைகள் எந்த அளவு தேவை என்பது உறுதியாக உணரப்படுகிறது.
நாளேடுகளைப் புரட்டினால் இந்திய அளவில் மட்டுமல்ல; உலக அளவிலும்கூட மதச் சச்சரவுகளும், மதவெறியின் காரணமாகப் படுகொலைகளும் நாளும் நடந்து கொண்டு இருப்பதை நாடு அறியும்; பகுத்தறிவு இருந்தும் மனிதன் மிருகமாகிக் கொண்டு இருக்கிறானே என்று வெட்கித் தலை குனியும் நிலைதான்.


மக்களுக்கு நன்னெறி கொளுத்தவந்த பவுத்தம் மார்க்கம் என்ற நிலை திரிந்து, மதமாக்கப்பட்ட நிலையில் - அதன் குரூரத் தாண்டவத்தை இலங்கைத் தீவில் நாம் பார்க்கவில்லையா? வேடனிடமிருந்து ஆட்டுக்குட்டியைக் காப்பாற்றிட ஆட்டுக் குட்டியைத் தன் கழுத்தில் தூக்கி வைத்த கருணை மழை புத்தன் எங்கே, தமிழனைக் குலை குலையாகக் கொன்று குவித்து, அந்தக் குருதி வெள்ளத்தால் புத்தர் சிலை களைக் குளிப்பாட்டிக் குதூகலிக்கும் சிங்களத்தானின் மதவெறி எங்கே? மதத்தின் மூர்க்கத்தனத்தைப்பற்றிச் சிந்திக்க வேண்டாமா? இவர்கள் பவுத்தர்களாம்!


மதமே மனிதனுடைய சுயமரியாதைக்கு விரோதி. மதமே மனிதனுடைய சுதந்திரத்திற்கு விரோதி; மதமே மனிதனுடைய அறிவு வளர்ச் சிக்கு எதிரி. மதமே மனித சமூக சமத்துவத்துக்கு விரோதி. மதமே கொடுங்கோலாட்சிக்கு உற்ற துணை. மதமே முதலாளி வர்க்கத்துக்குக் காவல்; மதமே சோம்பேறி வாழ்க்கைக்கு ஆதரவு. உழைப்பவனை தரித்திரத்தில் ஆழ்த்தி உழைக் காதவனை உச்சத்தில் வைப்பதற்கு உதவி என் கின்ற முடிவின் பெயரிலேயே புரட்சி தோன்றி யிருக்கிறது என்பதில் அய்யம் வேண்டாம் என்ற புரட்சி ஏட்டினைத் துவக்கியபோது (புரட்சி 26.11.1933) தந்தை பெரியார் எழுதியதை நினைவூட்டுவது பொருத்தமானதாகும்.


உலக அளவில் அமைதி தவழவும், சமத்துவம் மலரவும் தந்தை பெரியார் அவர்கள் கூறும் அந்த ஒப்புரவுக் கொள்கைகள் தேவை என்ற கால கட்டம் இது. இந்தியத் துணைக் கண்டத்தைப் பொறுத்தவரை இந்த மதம் என்ற சீரழிவையும் தாண்டி, வருணம், ஜாதி என்கின்ற பிறப்பிலேயே பேதம் வளர்க்கும் கேடு கெட்ட சமூக அமைப்பு முறை இருக்கிறது. இது நீண்ட ஆயிரம்  கால மக்களின் எண்ண வேர்களில்குருத்து விட்டு, விழுதுகளை ஏராளம் கொண்ட அடையாறு ஆல மரம் போல கிளைத்து நிற்கிறது.
மக்களிடத்திலே படர்ந்திருக்கும் இந்தக் களைகளை அரசியல்வாதிகள் தண்ணீர் விட்டு வளர்க்கிறார்கள். இந்தப் பிறவிப் பேதத்தை ஒழிக்கும் மாமருந்து - மூலிகைத் தோட்டம் தான் தந்தை பெரியார் அவர்கள் நாட்டுக்கு வழங்கியருளிய கொள்கைச் சீலங்கள்.

பேதமற்ற இடமே மேலான திருப்தியான இடம் என்ற அறிவு மொழியை வீட்டுக்கு வீடு கொண்டு செல்லுவோம் - வீட்டுச் சுவர்களில் எழுதி வைப்போம் - எழுதச் செய்வோம்.


தந்தை பெரியார் அவர்களின் சமனிய தத்துவத்தை மக்கள் மத்தியில் பரப்பிட, கொண்டு செல்ல, அவர்களை உணர வைக்க, தந்தை பெரியார் பிறந்த நாளை ஒரு வரலாற்றுக் குறியீடாகக் கொள்வோம்.

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் நேற்று திருச்சியில் நடைபெற்ற மாணவரணி, இளைஞரணி கலந்துரையாடல் கூட்டத்தில் வெகு நேர்த்தியாகவே சொன்னார்.


நாம் நடத்துவது ஆடம்பர விழா அல்ல - அறிவை வளர்க்கும், அறிவுச் சிந்தனைகளைப் பரப்பும் இலட்சிய விருந்தை உள்ளடக்கிய விழா அது.
தமிழினத்தின் தேசிய விழாவாக தமிழர் இல்லந் தோறும் கொண்டாடுவோம். புத்தாடை அணிவோம், பலகாரங்களைச் சுடுவோம் - நண்பர்களைச் சந்திப் போம் - நூல்களைப் பரிமாறிக் கொள்வோம்! பெரியார் தம் பொன் மொழிகளை துண்டறிக்கைகளை வெளி யிட்டுப் பரப்புவோம்!

முக்கியமாக ஒரு புதிய திட்டத்தை கழகத் தலைவர் அறிவித்துள்ளார். தந்தை பெரியார் பிறந்த நாளான செப்டம்பர் 17 அன்று மாலை தந்தை பெரியார் உருவத்தை  வாகனங்களில் வைத்து  ஊர்வலமாக எடுத்துச் செல்லுவோம் - தந்தை பெரியார் அவர்களின் தத்துவ மொழிகள் அடங்கிய துண்ட றிக்கைகளைக் கொடுப்போம்!


பள்ளிகளில் தோழர்களுடன் சென்று பிள்ளை களுக்கு இனிப்புகளை வழங்குவோம். மூடத்தனங் களைப் போட்டி போட்டுக் கொண்டு, வெட்கம், அறிவு நாணயமற்ற முறையில் நம் நாட்டு ஊடகங்கள் பரப்பிக் கொண்டு இருக்கின்றன.


விஞ்ஞான கருவிகள் மூலம் அஞ்ஞான பொய் மூட்டைகளை அவிழ்த்துக் கொட்டி, மக்களின் அறிவை நாசப்படுத்திக் கொண்டு இருக்கின்றன - வெட்கம் சிறிதுமின்றி. இந்த நிலையில் அறிவு ஆசான் உயர் எண்ணங்கள் மலரும் சோலையாம் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா என்பது - இருளை - பிற்போக்கு நோயை நிர்மூலப்படுத்த கிடைத்திட்ட கிடைத்தற்கரிய நல் வாய்ப்பாம்.

கொள்கையைக் கொண்டு சேர்ப்பது வரைதான் நம் வேலை; கொண்டு சேர்த்து விட்டால், அது அதன்  வேலையை வெகு நேர்த்தியாகவே வெற்றி முடியைக் கொண்டு வந்து சேர்க்கும்.


ஊருக்கு ஊர் நடக்கட்டும் ஊர்வலம் - அந்த ஊர்வலத்தில் உலகத் தலைவர் தந்தை பெரியார் உருவம் அலங்கரிக்கப்பட்ட வாகனம் இடம் பெறட்டும்! தோழர்களே! தயார் தயார் தானா?

                      --------------------"விடுதலை” தலையங்கம் 8-9-2014

18 comments:

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

ஜாதகம்

திருமணத்தின்போது பொருளாதாரம், ஜாதகப் பொருத்தம் குடும்ப கவுரவம் - இதில் எதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்? என்ற கேள் விக்கு ஓர் ஆன்மிக இதழ் தந்துள்ள பதில் இது. முதலில் பெண்ணுக்கும், பையனுக்கும் மனப் பொருத்தம் பார்க்க வேண்டும்.

அடுத்து ஜாத கப் பொருத்தம் பாருங் கள் என்கிறது - ஆன்மிக இதழ். ஆக ஜாதகப் பொருத்தத்தில் மணமக் களின் மனப்பொருத்தத் துக்கு இடம் இல்லை என்பது இதன் மூலம் தெரிகிறதா இல்லையா? முக்கியமான விஷயத் திலேயே கோட்டை விட் டபின் அப்புறம் என்ன ஜாதகம் - வெங்காயம்?

Read more: http://viduthalai.in/e-paper/87322.html#ixzz3Ck7VvJdb

தமிழ் ஓவியா said...

முடியாது


மதக் கட்டளையையும், கடவுள் நம்பிக்கையையும் கொண்ட ஒரு அடிமை, ஒரு தாழ்ந்த ஜாதிக்காரன் ஒரு நாளும் விடுதலை அடையவோ, முன்னேற்றமடையவோ முடியவே முடியாது.
(குடிஅரசு, 7.5.1933)

Read more: http://viduthalai.in/page-2/87325.html#ixzz3Ck7kPKAM

தமிழ் ஓவியா said...

வேண்டாமே தகுதித் தேர்வு!


தமிழகத்தில் ஆசிரியர் பணி நியமனத்தில் ஏற்படும் குளறுபடிகள் வரலாறு காணாத தொடர்கதையாகி விட்டது. பல ஆண்டுகளாக இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் படிப்புகளை முடித்து பதிவு மூப்பு அடிப்படையில் தங்களுக்கான பணி வாய்ப்பு கிடைக்கும் என்று காத்திருந்த ஆசிரியர்களின் எண்ணத்தில் மண் விழுந்து விட்டது.

2009இல் மத்திய அரசு இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் ஆசிரியர் தகுதித்தேர்வை கொண்டு வந்தது. சில மாநிலங்களில் டி.டி.எட், பி.எட், போன்ற முறையான ஆசிரியர் படிப்பில் தேர்ச்சி பெறாதவர்கள் ஆசிரியர்களாக நியமிக்கப்படுவதாகவும், அதைத் தடுக்கவே தகுதியான ஆசிரியர் களை தேர்ந்தெடுக்க இத்தேர்வு கட்டாயம் என்றும் சொல்லப்பட்டது.

எனவே இப்படிப்பட்ட ஒரு தேர்வு தமிழ்நாட்டிற்கு தேவையில்லை என்பதை பல்வேறு சமூக அமைப்புகளும், அரசியல் கட்சித் தலை வர்களும் ஆரம்பத்திலேயே எதிர்த்தனர். தகுதி என்ற ஒற்றைச் சொல்லில் மயங்கி சில ஊடகங்கள் அப்போது மாற்று கருத்தை தெரிவித்தாலும் அவைகளும் காலப்போக்கில் அவற்றின் உண்மைத் தன்மையை உணர்ந்து தங்கள் கருத்தை மாற்றிகொண்டன.

"செவிடன் காதில் ஊதிய சங்காய்" தமிழக அரசின் போக்கில் மட்டும் எந்த வித மாற்றமும் இல்லை. தன் போக்கிற்கு ஆசிரியர் தகுதித்தேர்வை நடத்தி எந்த வித இடஒதுக்கீடு சலுகையுமின்றி ஆசிரியர் பணி நியமனத்தில் ஈடுபட்டது.

அண்டை மாநிலங்களில் தேர்ச்சி மதிப்பெண் தாழ்த்தப்பட்டோருக்கு 40 சதவீதமும், பிற்படுத்தப்பட்டோருக்கு 50 சதவீதமும், பொதுப்பிரிவினருக்கு 60 சதவீதமும் என நிர்ணயிக்கப்பட்டி ருந்ததை சுட்டிக்காட்டி அந்த முறை தமிழகத்திலும் கடைபிடிக்கப்பட வேண் டும் என தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை விடுத்தார்.

விடுதலை தலை யங்கம் எழுதியது. திராவிடர் கழகம் கல்வியாளர்களையும், தொடர்புடையவர் களையும் அழைத்து மாநாடு கூட்டியது. இதே கருத்தை அனைத்துக் கட்சி தலைவர்களும் வலியுறுத்தினர். ஆசிரியர் சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டன. தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் முறையீடு செய்யப்பட்டது. தாழ்த்தப் பட்டோர் ஆணையம் போட்ட கிடுக்கிப் பிடியில் இடஒதுக்கீட்டு பிரிவினர் அனை வருக்கும் தேர்ச்சி மதிப்பெண்ணை 5 சதவீதம் தளர்த்துவதாக வேண்டா வெறுப்பாக அறிவித்தது தமிழக அரசு. தங்களுக்கான இடஒதுக்கீடும் பின்பற்றப் படவில்லை என போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகளை அடித்து துன்புறுத்திய தமிழக காவல்துறையும் தமிழக அரசும் பல்வேறு கண்டனங் களுக்கு ஆளாகி, பின் பணிந்தது.

துவக்கத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வை மட்டும் அறிவித்த தமிழக அரசு, பின்னர் தகுதித்தேர்வில் வெற்றிபெற்ற பட்டதாரி ஆசிரியர்கள் வெயிட்டேஜ் மதிப்பெண் அடிப்படையிலும், இடை நிலை ஆசிரியர்கள் பதிவு மூப்பு அடிப் படையிலும் பணிநியமனம் செய்யப்படு வார்கள் என்று அறிவித்தது.தற்போது அதையும் மாற்றி இடைநிலை ஆசிரியர்களுக்கும் +2 மதிப்பெண்ணை சேர்த்து "வெயிட்டேஜ்" மதிப்பெண் அடிப் படையில் பணிநியமனம் செய்யப் போவதாக அறிவித்து விட்டது.

தமிழ் ஓவியா said...

தமிழக அரசு கொண்டு வந்த வெயிட்டேஜ் முறையால் கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் 82 மதிப்பெண் பெற்றவருக்கும் கிடைக்கக் கூடிய பணி வாய்ப்பு 102 மதிப்பெண் பெற்றவருக்கும் மறுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஆசிரியர்கள் மீண்டும் போராட்டம், பட்டினிப் போராட் டம் என களத்தில் இறங்கியுள்ளனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட நான்கு ஆசிரி யர்கள் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்ற செய்தி அனைத்து ஊடகங் களையும் திரும்பிப் பார்க்க செய் திருக்கிறது. "இந்த வெயிட்டேஜ் முறையைக்கூட கல்வியாளர்களைக் கொண்ட குழு நிர்ணயிக்கவில்லை. கல்வித்துறை அமைச்சர், செயலாளர், தேர்வு வாரிய தலைவர், மற்றும் துறை இயக்குநர்கள் அடங்கிய குழுவே இறுதிசெய்துள்ளது. இதில் கல்வியாளர்கள் யாரும் இல்லாத நிலையில், அவர்களின் முடிவு எப்படி சரியாக இருக்கும்?. இதே ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தான் கல்லூரி உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் தேர்வு செய்யப்படுகின்றன.

முதுகலைப் பட்டம் பெற்றவர்கள் நெட், ஸ்லெட் தேர்வுகள் எழுத அனுமதிக்கப்படுகின் றனர். அதன் மதிப்பெண் மற்றும் எம்.பில்., அல்லது பி.எச்.டி மதிப்பெண், பணி அனுபவம், ஆகியவற்றக்கு மதிப்பெண் வழங்கி அதன் மூலமே உதவிப் பேராசிரியர்கள் பணிநியமனம் செய்யப் படுகின்றனர். அங்கெல்லாம் +2, மற்றும் பட்டப்படிப்பு மதிப்பெண்களை கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை.

தகுதித் தேர்வு ஒன்றை வைத்து அதில் தேறியவர்களுக்கு வெயிட்டேஜ் நிர்ணயம் என்பது நியாயமற்ற போக்காகும். இது பின்தங்கிய சமூகத்தினரை பாதிக்கும். தமிழக அரசு நினைத்தால் இந்த குழப்பத்தை சரி செய்யலாம் என பொதுப் பள்ளி களுக்கான மாநில மேடையின் பொதுச் செயலாளர் கஜேந்திரபாபு கூறியிருக்கிறார். கலைஞர் உட்பட தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்களும் தமிழக அரசின் போக்கை மீண்டும் கண்டிக்கத் துவங்கியிருக்கிறார்கள்.

பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றத்தை நாட நீதிமன்றமும் தமிழக அரசின் ஆசிரியர் பணி நியமனத்திதிற்கு இடைக்கால தடை வழங்கியிருக்கிறது. போராட்டங்களும், வழக்குகளும் ஒருபக்கம் இருக்கும் பட்சத்தில் இப்படி ஒரு தகுதித் தேர்வு முறை தேவைதானா என்பதை தமிழக அரசு யோசிக்க மறுக் கக்கூடாது.

இவர்கள் கூறும் தகுதித் தேர்வும், வெயிட்டேஜ் முறையுமே ஒரு நல்ல ஆசிரியருக்கு தகுதியாகிவிட முடியுமா? பொது நல நோக்கும், சமூக சிந்தனையும், அர்ப்பணிப்பு உணர்வும் இந்த மதிப்பெண் மாயா ஜாலங்களைத் தாண்டி ஒரு ஆசிரியருக்கு அவசிய மல்லவா? வாதத்திற்கு வைத்துக் கொண்டால் கூட நீங்கள் சொல்லும் ஆசிரியர் தகுதி குறைவதற்கு யார் காரணம்? அரசுக் கல்லூரியானாலும், தனியார் கல்லூரியானாலும் அங்கு பயிலும் மாணவர்கள் அரசால் நடத்தப் படும் தேர்வைத்தானே எழுதி வெற்றி பெறுகிறார்கள்? ஒரு அரசு தான் நடத்தும் தேர்வில் வெற்றி பெற்ற ஒருவரையே தகுதியற்றவர் என சொல்வது வெட்ககேடான விஷயமல்லவா? தனியார் கல்வி நிறுவனங்களை முறைப்படுத்தாமல் திறந்துவிட்டது யார் குற்றம்? அவற்றை முறைப்படுத்தி சரியான கல்வி கொடுக்க முயற்சி செய்யாமல்,

அதில் படித்து பட்டம் பெற்று வேலைக்காக பல ஆண்டு களாக காத்திருக்கும் மாணவர்கள் வயிற்றில் அடிப்பது சரியா? சமூக நீதியின் பிறப்பிடமான தமிழகத்தில் ஆசிரியர் பணிநியமனம் மீண்டும் பழைய பதிவு மூப்பு முறையையே கடைபிடிக்க தமிழக அரசு ஆவன செய்ய வேண்டும். தேவைப்பட்டால் பணி நியமனத்திற்கு பின் அவர்களுக்குத் தேவையான பயிற்சியைக் கூட வழங்கலாமே! சமூக நீதியில் அக்கறை கொண்ட அனைவரின் விருப்பமும் தகுதித்தேர்வு ரத்து செய்யப் பட வேண்டும் என்பதே சில மாநிலங் களின் நிலைப்பாடு ஆகும்.

- கி.தளபதிராஜ்

Read more: http://viduthalai.in/page-2/87327.html#ixzz3Ck7u5hi1

தமிழ் ஓவியா said...

பெரியார் 1000 வினா - விடைப் போட்டி


என் பெயர் ஸி.ணி.லி. ஜான்சிராணி. நான் ஏழாம் வகுப்பு படிக்கிறேன். 31.08.2014 அன்று நான் தென் சென்னையில் அரும்பாக்கத்தில் நடைபெற்ற பெரியார் 1000 வினா விடைப் போட்டியில் கலந்து கொண்டேன்.

கடந்த 10 நாட்களாக பெரியார் 1000 வினா - விடைப் புத்தகத்தை முழுவதும் படித்தேன். மிகவும் பயனுள்ளதாக இருந்தது. நான் நிறைய தெரிந்துக் கொண்டேன். அதில் சில.

பெண்ணடிமை ஒழிப்பு
ஜாதி ஒழிப்பு
வகுப்புரிமைக்கான போராட்டம்
இனிவரும் உலகம்
மூடநம்பிக்கை ஒழிப்பு
தந்தை பெரியாரின் கடுமையான உழைப்பு
பெண்களுக்கான கல்வி நிறுவனங்கள்
பெரியாரின் வாழ்க்கை வரலாறு
பெரியாரின் இலட்சியங்கள், சிந்தனை.
இந்தப் போட்டியை நடத்திய திராவிடர் கழகத்திற்கு நன்றி.

- ஜான்சிராணி, சைதாப்பேட்டை, மேற்கு, சென்னை-15

Read more: http://viduthalai.in/page-2/87330.html#ixzz3Ck86eoGX

தமிழ் ஓவியா said...

தருமபுரியில் இளைஞரணி மாநாடு, சிதம்பரத்தில் மாணவரணி மாநாடு


தந்தை பெரியார் பிறந்த நாளையொட்டி தமிழ் நாடெங்கும் தெரு முனைக் கூட்டங்கள்
பள்ளி, கல்லூரிகள் முன் வாயிற் கூட்டங்கள்

மாநில மாணவரணி, இளைஞரணி கலந்துரையாடலில் மேற்கொள்ளப்பட்ட முடிவுகள்
திருச்சி, செப். 8- தந்தை பெரியார் 136ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டி நாடெங்கும் தெரு முனைக் கூட்டங்கள் கல்லூரி, பள்ளிகள் முன் வாயிற் கூட்டங்கள், நடத்துவது என்றும் சிதம்பரத்தில் திராவிடர் மாணவ கழக மாநாடு வரும் டிசம்பரிலும், தருமபுரியில் இளைஞரணி மாநாடு பிப்ரவரி 2015லும் எழுச்சியுடன் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.

07.09.2014 அன்று திருச்சிராப்பள்ளி பெரியார் மாளிகை யில் திராவிடர் கழகத்தலைவர், தமிழர் தலைவர் மானமிகு. கி.வீரமணி அவர்கள் தலைமையில் நடைபெற்ற திராவிடர் கழக இளைஞரணி, மாணவரணி மாநில கலந்து ரையாடல் கூட்ட தீர்மானங்கள் வருமாறு:-

தீர்மானம் 1: தந்தை பெரியார் 136ஆவது பிறந்தநாள்

அறிவுலகப் பேராசான், உலகத்தலைவர் தந்தை பெரியார் அவர்களின் 136ஆவது பிறந்தநாள் விழாவினை தமிழர்களின் தேசிய திருவிழாவாக கொண்டாடும் வகையில் கழக இளைஞரணி, மாணவரணி சார்பில், இல்லங்கள் தோறும் கழக தோழர்கள் புத்தாடை உடுத்துவது, பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்குவது, கிளைக்கழகங்கள் தோறும் கழக இலட்சியக் கொடியேற்றுவது, குருதிக்கொடை, விழிக்கொடை, உடற்கொடை,

மருத்துவமனை உள்நோயாளிகளுக்கு உணவுப் பொருட்கள் வழங்குவது, சுற்றுச் சூழலை பாதுகாக்கும் வகையில் மரக்கன்றுகளை நடுவது, உள்ளிட்ட மனிதநேயப் பணிகளை மேற்கொள்வது எனவும், மேலும் பொதுநலம் சார்ந்த தொண்டறப் பணிகளில் ஆங்காங்கே ஈடுபடுவது எனவும் முடிவு செய்யப்படுகிறது.

தீர்மானம் 2: பெரியார் 1000 வினா விடைப்போட்டி

இளைய தலைமுறையினருக்கு தந்தைபெரியாரின் கொள்கைகளை கொண்டு செல்லும் பெரும் முயற்சியாக தந்தை பெரியார் 136ஆவது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு பெரியார் மணியம்மை பல்கலைக்கழக பெரியார் சிந்தனை உயராய்வு மய்யம் மற்றும் பெரியார் பிஞ்சு இதழ் இணைந்து தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநில அளவில் தமிழ், ஆங்கிலம், பிரெஞ்சு ஆகிய மொழிகளில் பள்ளி மாணவர்களுக்கான சிந்தனைச் சோலை பெரியார்,

பெரியார் 1000 வினா-விடை எழுத்து தேர்வு போட்டியை 2014 ஆகஸ்டு மாதத்தில் மிகச்சிறப்பாக நடத்தி சுமார் 75,000 மாணவர்களை பங்கேற்கச் செய்ய உழைத்த கழகத்தின் அனைத்து அணிகளின் பொறுப்பாளர்கள், தோழர்கள், உதவி புரிந்த ஆசிரியர் பெருமக்கள், இடம் அளித்து உதவி செய்த கல்வி நிறுவனங்கள் அனைத்து பணிகளையும் ஒருங்கிணைத்து திட்டமிட்டு அனைவரையும் இயங்கச் செய்து பெரும் முயற்சி எடுத்த கழக பொதுச்செயலாளர் வீ. அன்புராஜ் அவர்களுக்கும் இக்கூட்டம் உளமார்ந்த பாராட்டுதல்களையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறது.

தீர்மானம் 3: திராவிடர்கழக இளைஞரணி மற்றும் மாணவரணி மாநாடு

தமிழ் ஓவியா said...

திராவிடர் மாணவர் கழக மாநில மாநாட்டை 2014 டிசம்பர் மாதத்தில் சிதம்பரத்திலும், கழக இளைஞரணி மாநில மாநாட்டை 2015 பிப்ரவரி மாதத்தில் தருமபுரியிலும் நடத்துவதற்கு அனுமதி அளிக்குமாறு கழகத் தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் 4: பள்ளி கல்லூரிகளில் வாயிற்கூட்டம், தகவல் பலகை

மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில் தந்தைபெரியாரின் கருத்துக்களை விளக்கும் வகையில் பள்ளிக் கல்லூரிகளில் திராவிடர் மாணவர்கழகத்தின் சார்பில் வாயிற்கூட்டங்களை நடத்துவது எனவும், பள்ளி கல்லூரி மாணவர் விடுதிகளில் மாணவர்களிடம் கலந்துறவாடி மாணவர் கழக அமைப்புகளை உருவாக்குவதுடன் பொது இடங்களில் பகுத்தறிவு, தகவல் பலகைகளை நிறுவி நாள்தோறும் கருத்துப் பிரச்சாரம் செய்வது என தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் 5: பெரியாரியல் பயிற்சிமுகாம்

திராவிடர் கழக இளைஞரணி, மாணவரணி பொறுப் பாளர்கள் தோழர்கள் பெரியார் சமூக காப்பு அணியிலும், பெரியாரியல் பயிற்சி வகுப்பிலும் கட்டாயம் பயிற்சி பெற்றிருக்க வேண்டும் என தமிழர் தலைவர் அவர்களின் அறிவுறுத்தலுக்கிணங்க வாய்ப்புள்ள இடங்களில் இரண்டு நாட்கள் (சனி, ஞாயிறு) பெரியாரியல் பயிற்சி முகாம்களை நடத்துவது எனவும் மாவட்ட பொறுப்பாளர்கள்,

பெருவாரி யான இருபால் இளைஞர்களை பங்கேற்கச் செய்வதுடன், முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டுமாறு இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் 6: அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர்

உரிமை தந்தை பெரியாரின் இறுதி விருப்பமான ஜாதி தீண்டாமை ஒழிப்பிற்கு அடிப்படை பணியான அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைச் சட்டம் தமிழக அரசால் நிறைவேற்றப்பட்டு ஆகமவிதிகளின்படி பயிற்சி களும் அளிக்கப்பட்டு அர்ச்சகர் பயிற்சி பெற்றவர்களுக்கு அர்ச்சகர் பணி நியமனத்தில் உச்சநீதிமன்றத்தில் வெளியில் பேசி தீர்த்துக்கொள்கிறோம் என்று உறுதி அளித்தும் இன்னும் இந்த பிரச்சனைக்கு தீர்வு காணாமல் தமிழக அரசு இழுத்தடிப்பதை இக்கூட்டம் வன்மையாக கண்டிப்பதுடன் இந்தப்பிரச்சினை தொடர்பாக தமிழர் தலைவர் கழகத் தலைவர் ஆசிரியர் எடுக்கும் எந்த வகையான போராட் டத்திற்கும் கழக இளைஞரணி மாணவரணி பொறுப்பா ளர்கள், தோழர்கள் யார்! தயார்! என இக்கூட்டத்தின் மூலமாக தெரிவித்துக்கொள்கிறோம்.

தீர்மானம் 7: ஆசிரியர் தகுதித் தேர்வில் வெயிட்டேஜ், மதிப்பெண் முறையை ஒழித்திடுக.

தமிழக அரசால், ஆசிரியர் படிப்பு (ஞி.ஜி.ணிபீ., ஙி.ணிபீ.,) முடித்தவர்களுக்கு தகுதித் தேர்வை நடத்தி அதில் வெற்றி பெற்றவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ்களும் சரிபார்க்கப் பட்டு வெயிட்டேஜ் மதிப்பெண்கள் முறையால் பிற்படுத்தப் பட்ட தாழ்த்தப்பட்ட கிராமபுற ஆசிரியர்கள் வேலை வாய்ப்பை இழக்கும் நிலை உள்ளது.

சமூகநீதி கண்ணோட் டத்தில் இப்பிரச்சினையை அணுகி தமிழக அரசு உடனடி யாக வெயிட்டேஜ் மதிப்பெண்கள் முறையை ரத்துசெய்து பதிவு மூப்பு அடிப்படையில் பணி நியமன ஆணை வழங்க வேண்டும் என்று இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

தமிழ் ஓவியா said...

தீர்மானம் 8. பெரியார் உலகம் நிதிவசூல்

திருச்சி, சென்னை தேசிய நெடுஞ்சாலை சிறுகனூரில் அமைய உள்ள தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் சிந்தனையில் உதித்த திட்டமான பெரியார் உலகம் 95 அடி உயர பெரியார் சிலை அமைப்புக்கான இரண்டாம் கட்ட நிதிவசூல் பணியில் கழக இளைஞரணி, மாணவரணி பொறுப்பாளர்கள், தோழர்கள், மாவட்டக் கழக பொறுப்பாளர்களோடு இணைந்து பெருவாரியான நிதியை திரட்டி தருவது என முடிவு செய்யப்படுகிறது.

தீர்மானம் 9. கணினிப் பயிற்சி

தந்தை பெரியார் 136ஆவது பிறந்தநாள முன்னிட்டு கிராமப்புற மாணவர்களுக்கு, கணினி அறிவை மேம்படுத்தும் வகையில் திராவிடர் மாணவர் கழகம் சார்பில் நடமாடும் கணினி பயிற்சி வாகனம் தமிழகம் முழுவதும் அக்டோபர் 1 முதல் 31 வரை கணினி பயிற்சி முகாம்கள நடத்துவது என முடிவு செய்யப்படுகிறது.

தீர்மானம் 10: தெருமுனைக்கூட்டங்கள்

தந்தை பெரியார் 136ஆவது பிறந்தநாளை முன்னிட்டு திராவிடர் கழக இளைஞரணி சார்பில் 136 மூடநம்பிக்கை ஒழிப்பு தெருமுனைக்கூட்டங்கள் நாடு முழுவதும் நடத்துவது என முடிவு செய்யப்படுகிறது.

Read more: http://viduthalai.in/page-3/87332.html#ixzz3Ck8kvGcq

தமிழ் ஓவியா said...

வயிற்றுப்புண் நோயை குணப்படுத்தும் இளநீர்


வயிற்றுப்புண் நோய்(அல்சர்) என்பது நமது உடலில் உள்ள சிறுகுடலில் ஏற்படுவது. நேரம் தவறி சாப்பிடுவது, நீண்ட நேரம் சாப்பிடாமல் இருப்பது, அதிக காரமான தின்பண்டங்களை சாப்பிடுவது போன்ற பல காரணங்களால் அல்சர் உருவாகிறது.

வயிற்றுப்புண் உருவாகி இருந்தால் சாப்பிடும்போது வயிற்றில் எரிச்சல், நெஞ்செரிச்சல், குமட்டல், வாந்தி உள்ளிட்டவைமூலம் நாம் அறிந்து கொள்ளலாம். வயிற்று புண் நோய் இருப்பவர்கள் சாக்லெட், குளிர் பானங்கள், மது, பெப்பர்மிண்ட், காபி, கருப்பு தேநீர், ஆரஞ்சு, திராட்சை, பூண்டு, மிளகாய், பால் உணவுகள், காரம், வெங்காயம், தக்காளி விழுது, தக்காளி பொருட்கள் உள்ளிட்டவைகளை தவிர்க்க வேண்டும்.

வயிற்றுப்புண் ஏற்பட்டிருந்தால் கோதுமை,கோழி,மீன், பீன்ஸ், முட்டை,தயிர், அத்திப்பழம் உள்ளிட்டவைகளை கொழுப்பு, சர்க்கரை மற்றும் உப்பு குறைவாக சேர்த்து சாப்பிட வேண்டும்.அத்துடன் புளிப்பான, பழங்கள் மற்றும் காரமான உணவுகளையும் தவிர்க்க வேண்டும்.

வயிற்றுப்புண் நோய் குணமாக முக்கிய இயற்கை மருந்தாக விளங்குவது இளநீர். இதில் உள்ள தண்ணீர்,வழுக்கை உள்ளிட்டவைகள் நம் உடலில் உண்டாக்கும் நோயை தடுக்கும் இயற்கை மருந்தாக பயன்படுகிறது. இதில் நாட்டு இளநீர், செவ்விளநீர், பச்சை இளநீர் என பல வகைகள் உண்டு.

இதனை தினமும் காலை மற்றும் மாலை என இரண்டு வேலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்புண் நோய் விரைவில் குணமடையும். மேலும் உடல் சூட்டை தணிப்பதோடு, கண்களுக்கு குளிர்ச்சி, அதிக உணவு சாப்பிட்ட பிறகு செரிமானமாகும், செரிமானக் கோளாறு களை சரிசெய்யும்.

மேலும், இதனை தினமும் மதியம் நேரத்தில் சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள ரத்தத்தை சுத்தப்படுத்தி, ரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற அசுத்த நீர்களை வெளியேற்று வதுடன், ரத்த சோகையை போக்குகிறது. அத்துடன் ரத்த கொதிப்பு குறைக்க, இரத்த அழுத்தம், மஞ்சள்காமாலை, காலரா, அம்மை நோய்,கல்லீரல் பாதிப்பு, நாவறட்சி, தொண்டை வலி ஆகியவற்றையும் நீக்குவதுடன், உடல் பருமனையும் அதிகரிக்க செய்யும்.

மேலும் வேர்க்குரு, வேனற்கட்டி, அம்மை, தட்டம்மையில் ஏற்படும் தடிப்புகளை குணப்படுத்தவும் இளநீரை உடம்பின் மீது பூசிக்கொள்ளலாம்.

Read more: http://viduthalai.in/page-7/87346.html#ixzz3Ck9wFvou

தமிழ் ஓவியா said...

சர்க்கரை நோய் வராமல் தடுக்க ஏழு வழிமுறைகள்

சர்க்கரை ஆரம்ப நிலையில் உள்ள போது, சில முன்னேற்பாடுகளை கடைப்பிடித்தால் சர்க்கரை நோய் வராமல் தடுக்கலாம். இல்லாவிட்டால் 5 ஆண்டில் சர்க்கரை நோய் வந்து விடும். சர்க்கரை நோய் வராமல் தடுப்பது எளிது. அதற்கு 7 வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள்.

1. வாரத்திற்கு குறைந்தபட்சம் 3 நாளாவது குறைந்த பட்சம் 30 நிமிடமாவது கையை வீசி, வேகமாக நடக்க வேண்டும். இதனால் உடலில் சேரும் சர்க்கரை குறையும்.

2. சிகரெட் குடிப்பவர்களுக்கு வழக்கமாக வரக்கூடிய நோய்கள் என்று சில இருந்தாலும், கூடுதலாக சர்க்கரையின் அளவு ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் சிகரெட் குடிப்பதை விட வேண்டும்.

3. பெரும்பாலானோர் மாலை முதல் இரவு வரை அமர்ந்து டி.வி.பார்க்கின்றனர். இதனால் உடலுக்கு உழைப்பு கிடைப்பதில்லை. அப்போது நொறுக்கு தீனி உண்கின்றனர். இதனால் உடலுக்கு சர்க்கரை நோய் வரும். மாலை முழுவதும் விளையாட்டு என்று கடைப்பிடிக்க வேண்டும்.

4. நாம் சமையலுக்கு பயன்படுத்தும் எண்ணெய் வகைகள் ரத்தத்தில் சர்க்கரை அளவை கூட்டுகிறது. ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தக்கூடிய, நல்ல கொழுப்பை உருவாக்கக்கூடிய எக்ஸ்ட்ரா வர்ஜின் ஆலிவ் ஆயிலை சமையலுக்கு பயன்படுத்த வேண்டும். அல்லது எதாவதொரு வகையில் தினசரி 5 மில்லி ஆலிவ் ஆயில் உடலில் சேர்க்க வேண்டியது கட்டாயம்.

5.அரிசி, சர்க்கரை, உப்பு, மைதா, சாதம், தேங்காய், பால், தயிர் உள்ளிட்ட வெள்ளை உணவு பொருள்களை தவிர்க்க வேண்டும். பேக்கரியில் விற்கும் எல்லா பொருள்களும் சர்க் கரையை கூட்டக்கூடியது. அதையும் தவிர்க்க வேண்டும்.

6. மூன்று வேளை சாப்பிடுவதை 5 வேளையாக மாற்றி கொள்ள வேண்டும். 3 வேளை சாப்பிடும் அளவை 5 வேளைகளில் சாப்பிட வேண்டும்.

7. தினசரி 25 முதல் 30 கிராம் வெந்தயத்தை உணவின் மூலம் உடலில் சேர்க்க வேண்டும். அது சர்க்கரையின் அளவு கூடாமல் தடுக்கும். வால்நட், பாதாம்பருப்பு கொஞ்சம், நிறைய காய்கறிகள், பப்பாளி, ஆரஞ்சு, ஆப்பிள் ஆகிய பழங்கள் ஆகியவற்றை உணவில் சேர்க்க வேண்டும். இவையெல்லாம் கடைப்பிடித்தால் சர்க்கரை நோய் வராது. சர்க்கரை நோய் எந்த நிலையில் உள்ளது என்பதை கண்டறிந்து, அதற்கான ஆலோசனையும், சிகிச்சையும் பெறுவது முக்கியம்.

Read more: http://viduthalai.in/page-7/87350.html#ixzz3CkAG352y

தமிழ் ஓவியா said...

மழைக்காலம் வந்தாச்சு, குழந்தைகள் பத்திரம்

வெயில் காலம் வந்தா மட்டும் தான் பிரச்சி னையா? மழைக்காலம் வந்தா அதை விடப் பிரச்சினைதாங்க என பெற்றோர்கள் புலம்ப ஆரம்பிச்சாச்சு. மழை பருவம் வந்தாலே மருத்துவமனையில் குழந்தையும் கையுமாக பலரைப் பார்க்கலாம். பெரும்பாலும் சளி, இருமல், காய்ச்சல் பிரச்சினைகள். காரணம் வானிலை மாற்றம் தான். புது மழையில் நனைஞ்சா ஆகாதுன்னு பெரியவங்க சொல்றதைக் கேட்டிருப்பீங்க.

இந்த பருவத்தில் எப்படி சமாளிக்கிறது? குழந்தைகளை நோய்களிலிருந்து எப்படி பாதுகாக்கிறது?

இதுகுறித்து குழந்தைகள் நல மருத்துவர் டாக்டர் சுப்ரமணியன் கூறும்போது: மழைக் காலத்தில் குழந்தைகளை பராமரிப்பது மிகவும் முக்கியமான விஷயம். பெரியவர்களைவிட குழந்தைகளுக்கு எளிதில் உடல்நிலை சரியில்லாமல் போய்விடும். மழைக்காலத்தில் குழந்தைகளுக்கு உடல்நிலை சரியில்லாமல் போவதற்கு முதல் காரணம் கொசுதான். மழைக்காலத்தில் கொசுக்களால் மலேரியா, டெங்கு, வைரஸ் காய்ச்சல் போன்றவை வரக்கூடும். எனவே மழைக்காலத்தில் குழந்தைகளை கொசுக்கள் கடிக்காத அளவிற்கு பார்த்துக்கொள்ள வேண்டும்.

கொசுவலை மற்றும் கொசுக்களை விரட்டுவதற்கான பிரத்யோக சாதனங்கள் மூலம் கொசுக்களை குழந்தைகளிடம் நெருங்க விடக்கூடாது. அவ்வாறு செய்வதன் மூலம் கொசுக்களால் பரவும் நோய்களை எளிதில் தவிர்க்க முடியும்.

மேலும் அதிக ஈரப்பதத்தினால் கால்களில் பூஞ்சை நோய்களும் வர வாய்ப்புள்ளது. அதனால் குழந்தைகளின் சருமங்களில் அதிக ஈரப்பதம் ஆகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மேலும் மழைக்காலத்தில் வாட்டர் போன் இன்பெஃக்ஷன் என்று சொல்ல கூடிய எலும்பு தொடர்பான நோய்கள் வருவதற்கும் வாய்ப்புள்ளது.

கோடை காலத்திலிருந்து மழைக்காலத்திற்கு வானிலை மாறும் போது நோய் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை மாத்திரைகளோ, ஊசிகளோ போடுவதற்கு பதிலாக சரியான முறையில் பராமரிப்பதன் மூலமும் நோய்கள் வராமல் தடுக்கலாம். கால நிலை மாறும் போது பெரியவர்கள் தாங்கிக் கொள்வார்கள், ஆனால் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்திகள் குறைவாக இருக்கும் பட்சத்தில் நோய் எளிதில் தாக்கிவிடும்.

இதை தவிர்ப்பதற்கு காய்கறிகள் மற்றும் பழங்கள் அதிகமாக சாப்பிடக் கொடுப்பதன் மூலம் குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தலாம். சரியான விகிதத்தில் உணவுகளை கொடுக்க வேண்டும். குழந்தைகளின் விளையாட்டு திறனை அதிகப்படுத்தி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம். அதிகமாக எண்ணெய் உள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும்.

மேலும் குழந்தைகளுக்கு உடல்நிலை சரியில்லாத போது உடனே அதற்கான மருத்துவரை அணுகி, அவரின் பரிந்துரைப்படியே மருந்து கொடுக்க வேண்டும். நாமே மருந்து கொடுக்கும் முடிவை எடுக்க கூடாது, என்றார். அம்பிகா பாண்டியன் (பாடி): வானிலை மாறும் போது குழந்தைகளுக்கு காய்ச்சல், சளி போன்றவை வருவது சகஜம் தான். ஆனால் சரியான முறையில் குழந்தைகளை பாதுகாத்தால் இந்த பிரச்சினைகளை தவிர்க்கலாம். குளிர் காலங்களில் குழந்தைகளுக்கு காதில் குளிரான காற்று படக்கூடாது. அதனால் குழந்தைகளுக்கு மாலை நேரங்களில் ஸ்வெட்டர், குல்லா போன்றவற்றை போட்டு விடுவதன் மூலம் குளிரிலிருந்து பாதுகாக்கலாம். ஒரு வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கால்களில் சாக்ஸ் போட வேண்டும்.

சின்ன குழந்தைகளுக்கு காது மற்றும் கால் பகுதி அதிகம் குளிராக ஆகாதபடிக்கு பாதுகாப்பான உடைகளை அணிவிக்கவேண்டும். தண்ணீரை சுட வைத்து கொடுப்பதன் மூலம் குளிர் காலங்களில் வைரஸ், பாக்டீரியா போன்ற கிருமிகளின் தாக்குதலை தடுக்கலாம். மழையிலே நனைய விடக்கூடாது. நனைந்தால் உடனே துவட்டி விடவேண்டும். குளிர்பானங்கள், அய்ஸ்கிரீம் போன்றவற்றை குளிர் காலங்களில் முற்றிலும் தவிர்க்க வேண்டும். இனிப்புகளை அதிகமாக உண்ண கொடுக்கக் கூடாது. குழந்தைகளின் உடல் வெப்பத்தை சரியான அளவில் பாதுகாக்க வேண்டும்.

மணிகண்டன் (குருபுரம்): குழந்தைகளுக்கு மினி ஸ்கர்ட், சிலீவ் லெஸ் போன்ற உடைகளை போடாமல் உடம்பை முழுவதுமாக மூடும் படியாக ஆடை அணிவிக்க வேண்டும். மெல்லிய ஆடைகளை போடாமல் நல்ல குளிருக்கு அடக்கமாக போட்டுவிடுங்கள். குளிர் காத்துப்பட்டால் நெஞ்சு சளி பிடிக்கும்னு சொல்வாங்க.

மாலை நேரங்களில் வெளியில் அலைய விடக்கூடாது. அப்படியே வெளியே போகிற மாதிரி இருந்தால் காதுக்கு ஸ்கார்ஃப் கட்டி கூட்டிப் போங்க. மழை பருவம் என்பதால் குழந்தைகளை வெளியே கூட்டிப்போனால் குடை அல்லது ரெயின் கோட் கட்டாயம் எடுத்துட்டுப்போங்க. உணவில் காரத்துக்கு மிளகாய்க்கு பதில் மிளகு சேர்த்துக்கொள்வது நல்லது. மிளகு ரசம், மிளகு சாம்பார் இப்படி சாப்பிடக்கொடுக்கலாம். கொள்ளு ரசம், இஞ்சி ஆகியவை உடம்பின் சூட்டை அதிகரிக்கும்.

சளிப் பிடிக்காமல் பார்த்துக் கொள்ளும். ஆறிப்போன உணவுகளைக் கொடுக்காமல் சூடான உணவுகளையே குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும்.

Read more: http://viduthalai.in/page-7/87349.html#ixzz3CkAPGCkE

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?


கட்டுப்பாடு

உணவில், பேச்சில் கட்டுப்பாடு தேவை எல் லாவற்றிலும் கட்டுப்பா டாக இருக்கின்ற துறவி எல்லாத் துயரங்களிலி ருந்தும் விடுபட்டவனாக இருக்கிறான் என்கிறார் கவுதமப் புத்தர்.

இந்த அளவுகோலை வைத்து காஞ்சி சங்கராச் சாரியார்கள் ஜெயேந்திர ரையும் விஜயேந்திரரை யும் எந்தப் பட்டியலில் வைக்கலாம்? கொஞ்சம் மூளைக்கு வேலை கொடுங்கள் பார்க்கலாம்.

Read more: http://viduthalai.in/page1/87255.html#ixzz3CkBD7n00

தமிழ் ஓவியா said...


பார்ப்பனர்கள்


பார்ப்பனர்கள் இந்நாடு எவ்விதச் சமுதாய மாறுதலும் அடையக் கூடாது என்ற தன்மையினையே தங்கள் மூலாதாரக் கொள்கையாகக் கொண்டுள்ளனர்.

(விடுதலை, 30.12.1972)

Read more: http://www.viduthalai.in/page1/87375.html#ixzz3Cy7t8073

தமிழ் ஓவியா said...


சுப்ரபாதம் நிறுத்தப்பட்டது


தென் சென்னை மாவட்ட துணைச் செயலாளர் சா.தாமோதரன் அவர்கள் செங்குன்றம் - தாம்பரம் வழித்தடத்தில் செல்லும் எண்114 குளுமை பேருந்தில் (கிழிமி 2681) 4.9.2014 விடியற்காலை 5.10மணி அளவில் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து ஏறி பயணமானார்,

அப்பொழுது அந்த பேருந்தினுள் சுப்ரபாதம் என்கிற இல்லாத கடவுளை எழுப்புகிற வடமொழிப் பாடல் (நின்று கொண்டு இருக்கிற ஏழு மலையானை எழுப்புவதாக பாவனை) ஒலித்துக்கொண்டிருந்த்து, 'சுப்ரபாதம்' போடுகிறீர்களே! முஸ்லீம் பாட்டு, கிருத்தவ பாட்டு என்று போடுவீர்களா? எல்லோரும் பயணம் செய்கிற பேருந்தில் இப்படி செய்வது சரியா? என்று நடத்துனரை பார்த்து கேட்டார்.

நடத்துனர் நிறுத்தவா? போடவா? என்று மிரண்டு போய் கூறினார். உங்கள் விருப்பம் என்று சொன்னவுடன், பாடலை நிறுத்திவிட்டார். தகராறு செய்யாமல் பாடலை நிறுத்திய நடத்துனரை பாராட்டித் தான் தீரவேண்டும்! அனைத்து பேருந்து களிலும் மத பாடல்களை நீக்கி பொதுவான பாடல்களை ஒலிபரப்ப பேருந்து கழகம் ஏற்பாடு செய்யவேண்டும்.

- செ.ர.பார்த்தசாரதி, தென்சென்னை மாவட்ட திராவிடர் கழகச் செயலாளர்

Read more: http://www.viduthalai.in/page1/87381.html#ixzz3Cy8EBdqv

தமிழ் ஓவியா said...


அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியாவில் கொண்டாட்டம்!


உலகின் பல நாடுகளிலும் உலகத் தலைவர் பெரியார் பிறந்த நாள் விழா!

வாஷிங்டன்,செப்.10- உலகத் தலைவர் தந்தை பெரியார் அவர்களின் 136 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா உலகெங்கும் கொண்டாடப்பட உள்ளது.

பெரியார் பன்னாட்டமைப்பு வாஷிங்டனில்...

நாள்: 13.9.2014 பிற்பகல் 2.30 மணிமுதல் மாலை 5.30 மணி வரை

இடம்: எல்கிரிட்ஜ் கிளை நூலகக் கூட்ட அரங்கு, 6540 வாஷிங்டன் பிஎல்விடி, எம்டி 21075

வரவேற்பு: திருமதி கல்பனா மெய்யப்பன், தலைவர், கிரேட்டர் வாஷிங்டன் தமிழ்ச்சங்கம்.

உரையாற்றுபவர்கள்: இளம் நாத்திகர்களின் போராட்டம் தலைப்பில் திரு.ஹேமந்த் மேத்தா (சிகாகோ பல்கலைக்கழகத்தில் உயிரியல் மற்றும் கணிதவியல் பாடங் களில் 2004 ஆம் ஆண்டில் இரட்டை பட்டம் பெற்றவர்.

உயிரியல் மற்றும் கணிதத்தில் 2007ஆம் ஆண்டுமுதல் பயிற்றுவித்து வருபவர். 2010ஆம் ஆண்டில் டீபால் பல் கலைக்கழகத்தில் கணிதத்தில் முதுகலை பயின்றுள்ளவர். இவர் பயின்ற பல்கலைக்கழகங்களில் மதசார்பற்ற மாணவர் குழுவை ஏற்படுத்தி தலைவராக பொறுப்பில் இருந்தவர்.

நம்பிக்கையைக் கடந்து இலாப நோக்கற்ற அறக்கட்டளை நிறுவனம் ஒன்றையும் நடத்தி வருபவர். சுதந்திர சிந்தனைக் காகத் தொடர்ந்து பேசி அமெரிக்க அய்க்கிய நாடுகள் முழுவதும் வருபவர். தி எதியிஸ்ட் நாத்திகம் என்கிற தலைப்பில் உள்ள பிளாக்மூலம் நம்பிக்கை உள்ளவர்கள் மற்றும் நம்பிக்கை இல்லாதவர்களையும் இணைக்கும் பாலமாக செயல்பட்டுவருபவர்.)

பெண்களுக்கான அதிகாரம் என்கிற தலைப்பில் முன்னாள் ஆளுநர் மதிப்பிற்குரிய பாரீஸ் நெல்சன் கிளெண்டெனிங் பேசுகிறார்.
பாரீஸ் நெல்சன் கிளெண்டெனிங் அமெரிக்காவின் அரசியல்வாதி ஆவார்.

ஜனநாயக கட்சியின் உறுப்பின ராவார். 18.1.1995 முதல் 15.1.2003 வரை மேரிலாண்ட் 59 ஆவது ஆளுநராக பணிபுரிந்தவர். 1982 ஆம் ஆண்டு முதல் 1994 வரை மேரிலாண்டில் பிரின்ஸ் ஜார்ஜ் பகுதியின் செயல் அதிகாரியாக இருந்துள்ளார். வளர்ந்துவரும் அமெரிக்காவின் தலைமைத்துவ பயிற்சி நிறுவனத்தின் தலைவராக உள்ளார்.

அதன்படியே ஆளுநரானார். பொரு ளாதாரம் மற்றும் சமுதாய வளர்ச்சிக்கு பாடுபடுவதன்மூலம் நாட்டில் மறுகட்டமைப்பை ஏற்படுத்தவும் நாடுமுழுவதும் பல்வேறு தரப்பட்ட தலைவர்களுடன் பணியாற்றி வந்துள்ளார்.

டாக்டர் அரசு மற்றும் டாக்டர் அசாமா ஆகியோரின் விவாதங்களைத் தொடர்ந்து , பெரியார் குறித்த வினாடி-வினா நிகழ்ச்சியை திரு. நாஞ்சில் பீட்டர் மற்றும் கொளந்தவேல் ராமசாமி நடத்துகிறார்கள்.

திரு. எம்.பி. சிவா நன்றி கூறுகிறார்.

தொடர்புக்கு:
டாக்டர் அரசு செல்லய்யா- (410) 404-7222
டாக்டர் சோமஇளங்கோவன்- (708) 361-1998
டாக்டர் சொர்ணம் சங்கர் 443 854-0181

சிங்கப்பூரில்...

சிங்கப்பூர் பெரியார் சமூக சேவை மன்றமும், பெரியார் மணியம்மை பல்கலைக் கழக முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் சிங்கப்பூர் பிரிவும் இணைந்து குருதிக் கொடை வழங்கும் விழாவை சிங்கப்பூரில் ஏற்பாடு செய்துள்ளது.

நிகழ்ச்சி வரும் செப்டம்பர் 13 ஆம் தேதி சனிக்கிழமை காலை 10 மணிமுதல் மாலை 4 மணிவரை ஊட்ரம் பார்க்கில் உள்ள எச்.எஸ்.ஏ. ரத்த வங்கிக் கட்டடத்தில் நடைபெற வுள்ளது.

நிகழ்ச்சியில் சிங்கப்பூர் அரசின் சுற்றுப்புற, நீர்வளத் துறை அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்ள உள்ளார்.

குருதிக் கொடை வழங்க விருப்பம் உள்ளவர்கள் 81185747 என்ற கைப்பேசியில் தொடர்புகொண்டு பதிவு செய்துகொள்ளலாம்.

16 வயதுக்குமேல் 60 வயதுக்குள் உள்ளோர், சுமார் 45 கிலோ எடைக்கு மேலும், ரத்தத்தில் சிவப்பணுக்களின் அளவு 12.5-க்கு மேலும் இருந்தால், சளி, காய்ச்சல் போன்ற பிரச்சினைகள் ஏதுமின்றி இருந்தால் அழைத்து, மேல் விவரங்களைத் தெரிந்துகொள்ளலாம்.
16, 17 வயதில் உள்ளோர் பெற்றோர் அனுமதியுடன் குருதிக் கொடை வழங்கலாம்.

மலேசியாவில்...

மலேசியாவிலும் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட உள்ளது என்று மலேசிய திராவிடர் கழகத் தேசியத் தலைவர் பி.எஸ்.மணியம் கோலாலம்பூரிலிருந்து, கழகத் தலைவர் ஆசிரியருக்குத் தொலைப்பேசிமூலம் தெரிவித்துள்ளார்.

Read more: http://www.viduthalai.in/e-paper/87443.html#ixzz3Cy8rpek7

தமிழ் ஓவியா said...


இந்தியைப் பரப்புவது - திருவள்ளுவர் பிறந்த நாளைக் கொண்டாடுவது குறித்து பி.ஜே.பி. ஆய்வுபுதுடில்லி, செப்.10_- இந் தியைப் பரப்புவது குறித் தும், திருவள்ளுவர் பிறந்த நாளைக் கொண்டாடுவது குறித்தும் இந்திய அலுவல் மொழிக்கான நாடாளு மன்றக் குழு ஆய்து செய்து வருகிறதாம்.

டில்லியில் திங்கள் கிழமை நடைபெற்ற மத் திய உள்துறை அமைச்ச கத்தின்கீழ் செயல்படும் இந்திய அலுவல் மொழிக் கான நாடாளுமன்றக் குழுவின் முதலாவது கூட் டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், திரு வள்ளுவர் பிறந்தநாளைக் கொண்டாட அலுவல் மொழிக்கான நாடாளு மன்றக் குழு தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது.

மத்திய அரசுத் துறை களில் நாட்டின் தேசிய மொழியான இந்தியைப் பயன்படுத்துவது குறித் தும், அலுவல் மொழியாக இந்தியை நாடு முழுவதும் பயன்படுத்த வகுக்கப்படும் கொள்கை முடிவுகள் குறித் தும் அலுவல் மொழிக் கான நாடாளுமன்றக் குழு, மத்திய அரசுக்கு யோசனை களை வழங்கி வருகிறது.

அந்த வகையில், மத் தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் புதிய அரசு அமைந்த பிறகு மத்திய உள்துறை அமைச்சகத்தின்கீழ் செயல் படும் இந்திய அலுவல் மொழிக்கான நாடாளு மன்றக் குழுவின் முதலா வது கூட்டம் டில்லியில் திங்கள்கிழமை கூடியது. மொத்தம் 30 பேர் கொண்ட இக்குழுவில் மக்களவையில் இருந்து 20 பேரும் மாநிலங்களவை யில் இருந்து 10 பேரும் உறுப்பினர்களாக உள்ளனர்.

மத்திய உள்துறை அமைச்சர் தலைவராக உள்ளார். முதலாவது கூட்டத்தில் பங்கேற்ற உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், குழுவின் தலைவராக முறைப்படி தேர்வு செய்யப்பட்டார்.

இதையடுத்து, குழுவின் செயல் திட்டம், எதிர்கால பணிகள் குறித்து இறுதி செய்வதுபற்றி உறுப்பி னர்கள் விவாதித்தனர். இக்குழுவில் இடம் பெற் றுள்ள உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பாஜக உறுப்பினர் தருண் விஜய் பேசுகையில், அலு வல் மொழியாக நாம் இந்தியைப் பயன்படுத்தி வருகிறோம்.

அதே சமயம், நாட்டின் தொன்மையான மொழியாக தமிழ் விளங் குகிறது. அதுபோல பல மாநிலங்களின் மொழி களும் தனிச்சிறப்புடன் விளங்குகின்றன. அவற் றுக்கு நாம் மரியாதை செலுத்தவேண்டும்.

உலகின் மிகவும் பழைமை யான மொழியாக தமி ழின் அடையாளமாக திருக்குறள் போற்றப்படு கிறது. உலகப் பொது மறையாக திகழும் அதை எழுதியவர் திருவள்ளுவர்.

அவரது பிறந்த நாள் ஜனவரி மாதத்தில் தமி ழர்களால் கொண்டாடப் படுகிறது. தமிழுக்கும், திரு வள்ளுவருக்கும் பெருமை சேர்க்கும் வகையில் மத் திய உள்துறையின் உயர் அமைப்பாகக் கருதப்படும் அலுவல் மொழிக்கான நாடாளுமன்றக் குழு திரு வள்ளுவர் பிறந்தநாளைக் கொண்டாட வேண்டும்.

இதன்மூலம் பல மொழி கள் பேசப்படும் இந்தியா வில் அனைவருக்கும் மத் திய அரசு அங்கீகாரம் அளிக் கும் செய்தியை நாட்டுக்கு நம்மால் உணர்த்த முடியும் என்றார்.

இதையடுத்து, ராஜ்நாத் சிங் பேசுகையில், தருண் விஜயின் கருத்து வரவேற்புக்குரி யது. அவரது யோச னையை நாம் நிச்சயம் பரிசீலிக்கவேண்டும். அடுத்த கூட்டம் நடை பெறும்போது இந்த விவ காரத்தில் உரிய முடி வெடுக்கப்படும் என்றார்.

பின்னர் திருவள்ளு வரின் சிறப்புகளை விளக் கிய தருண் விஜய், வட மாநிலங்களில் உள்ள சுமார் 500 பள்ளிகளில் திருக்குறளின் பெருமை களை விளக்கியும், திருவள்ளுவரின் பிறந்த நாளை அடுத்த ஆண்டு கொண்டாடவும் திட்ட மிட்டுள்ளதாகக் கூறினார். அவரது முயற்சிக்கு ராஜ் நாத் சிங் பாராட்டுத் தெரிவித்தார்.

திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்கவேண்டும் என்று இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே மாநிலங்களவையில் தருண் விஜய் கோரிக்கை வைத்தார். அதைத் தொடர்ந்து, அண்மையில் நடந்து முடிந்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் திரு வள்ளுவர் பிறந்த நாளை தேசிய மொழிகள் தினமாகக் கொண்டாட வேண் டும் என்று அவர் மாநிலங் களவையில் பேசினார்.

இதையடுத்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை அலுவல் மொழி யாக அறிவிக்கவேண்டும் என்று குடியரசுத் தலை வரிடமும் அவர் கோரிக்கை விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more: http://www.viduthalai.in/e-paper/87450.html#ixzz3Cy95g8dL

தமிழ் ஓவியா said...


பி.ஜே.பி.யின் அரசியல் தார்மீகம்?


பி.ஜே.பி. என்றால் தார்மீகப் பண்புகளுக்குப் பெயர் போனது என்று திட்டமிட்ட வகையில் பிரச்சாரம் செய்து வைத்துள்ளனர் - உண்மையில் அது ஒழுக்கக்கேட்டின் புகலிடம் (இந்து மதம்போல்) என்பதுதான் உண்மை.

பக்திதான் முக்கியமே தவிர - ஒழுக்கமல்ல என்பது தானே இந்து மதம்? எந்த ஒழுக்கக்கேட்டையும் செய்து விட்டு, அதற்கென்றுள்ள பிராயச்சித்தங்களைச் செய்து விட்டால் தீர்ந்தது கதை என்பதுதான் இந்து மதத்தின் கோட்பாடு.

அந்த இந்துத்துவாவை தோளில் தூக்கிக்கொண்டு ஆளும் பி.ஜே.பி. எப்படி நடந்துகொள்ளும்?
டில்லி சட்டமன்றத் தேர்தலுக்குப் பின் காங்கிரஸ் ஆதரவு அளித்த அடிப்படையில், ஆம் ஆத்மி ஆட்சி அமைந்தது. அனுபவம் இல்லாத காரணமாக பதவி விலகியது ஆம் ஆத்மி.

இது நடந்தது கடந்த பிப்ர வரியில்; ஏழு மாதங்கள் ஓடிவிட்டன; சட்டசபையும் கலைக்கப்படவில்லை; மறுதேர்தலுக்கான அறிவிப்பும் வராத நிலையில், தண்டத்துக்கு மக்கள் வரிப் பணத்தை மாதந்தோறும் சம்பளமாக வாங்கிக் கொண்டு இருக் கிறார்கள் சட்டப்பேரவை உறுப்பினர்கள்.

சட்டசபையைக் கலைத்துவிட்டு மறு தேர்தல் நடத்த வேண்டும் என்று கோரிக்கையை முன் வைத்துள்ளது ஆம் ஆத்மி கட்சி. இதற்கிடையில் பி.ஜேபி.,க்கு ஒரு நப்பாசை!
தனக்கு அறுதிப்பெரும்பான்மை இல்லாத நிலையில், ஆம் ஆத்மி கட்சியைச் சார்ந்த சட்டமன்ற உறுப்பினர் களை விலைக்கு வாங்கலாம் என்று திட்டமிட்டுக் குதிரைப் பேரத்தில் இறங்கியது.

ஆம் ஆத்மி கட்சியின் ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினருக்கும் ரூபாய் நான்கு கோடி அளிப்பதாகப் பேரம் பேசப்பட்டுள்ளதாம் - இதனைக் கண்ணி வைத்துப் பிடித்துவிட்டது ஆம் ஆத்மி. பி.ஜே.பி.யின் இத்தகைய நடவடிக்கைகள் வீடியோ மூலம் பதிவு செய்யப்பட்டு, உச்சநீதிமன்றத்திலும் வழக்கினைத் தொடுத்துவிட்டது ஆம் ஆத்மி. பி.ஜே.பி. குதிரை பேரத்தில் ஈடுபட்டதற் கான வீடியோ ஆதாரங்களும் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு விட்டன.

இதற்கிடையே எங்களை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பே கொடுக்கவில்லை என்று அந்தர்பல்டி அடித்தது பி.ஜே.பி. ஆளுநர் எழுதிய கடிதம் அம் பலத்துக்கு வந்துவிட்ட நிலையில், பி.ஜே.பி.யின் தார்மீகம் நார் நாராகக் கிழிந்து எங்கு பார்த்தாலும் தொங்கிக்கொண்டு இருக்கிறது.

உச்சநீதிமன்ற நீதிபதி எச்.எல்.தத்து தலைமையிலான அமர்வு பி.ஜே.பி. அரசுக்கு நல்ல சூடு கொடுத் திருக்கிறது.
நானும் ஒரு குடிமகன்தான். சட்டமன்ற உறுப்பினர் கள் சேவை செய்யவேண்டும் என்றுதான் வாக்களித்த மக்கள் விரும்புகிறார்கள்.

டில்லி சட்டப்பேரவையை இன்னும் எவ்வளவு காலத்திற்குத்தான் முடக்கி வைக்கப் போகிறீர்கள்? உறுப்பினர்களுக்கு வெட்டியாக மாதா மாதம் சம்பளம் கொடுத்துக் கொண்டு இருக்கப் போகிறீர்களா? விரைவாக முடிவெடுங்கள் என்று நீதியரசர் எச்.எல்.தத்து கடுமையாக விளாசி இருக்கிறார்.

இப்பொழுது எல்லாம் நீதிமன்றங்கள் சொல்லுகின்ற, தீர்ப்புகளை மதிக்கும் போக்குக் குறைந்து வருகிறது - இது எதில் போய் முடியும் என்று தெரியவில்லை.

குதிரைப் பேரம் என்பது பி.ஜே.பி.க்கு ஒன்றும் புதி தல்ல; ஏற்கெனவே பலமுறை பழக்கப்பட்ட ஒன்றுதான்.
உத்தரப்பிரதேசத்தில் கல்யாண்சிங் முதல்வராக வருவதற்கு எத்தகைய தில்லுமுல்லுகள் செய்யப்பட்டன! வாஜ்பேயி தலைமையில் 13 நாள்கள் ஆட்சியில் இருந்த போது, உத்தரப்பிரதேச வழிமுறையைப் பின்பற்றத் தயார் என்று பிரதமராக இருந்த வாஜ்பேயி கூற வில்லையா?

இந்தக் கூட்டத்தின் பிரச்சாரப் பீரங்கியாக இருக்கும் சோ ராமசாமியால்கூட அதனைப் பொறுக்க முடியாமல், தலையில் அடித்துக்கொண்டு கண்டித்து எழுத வில்லையா?

பி.ஜே.பி. ஒன்றும் கலப்படமற்ற புனித நெய்யில் பொரிக்கப்பட்ட அமைப்பு அல்ல என்பது தெரிந்த ஒன்றுதான்.
அடுத்தவன் மனைவியை தன் மனைவி என்று கூறி வெளிநாட்டுக்குப் பயணம் செய்த பேர்வழிகள் எல்லாம் பி.ஜே.பி.யில் பஞ்சம் இல்லை.

முதலாளிகளிடம் பணம் வாங்கிக்கொண்டு நாடாளுமன்றத்தில் முதலாளி களுக்காக கேள்வி கேட்டவர்களின் பட்டியலில் பி.ஜே.பி.க்குத்தான் முதலிடம்!
டில்லியில் பி.ஜே.பி. மேற்கொண்ட குதிரைப் பேரத்துக்குச் சாட்சியங்களாக வீடியோ பதிவுகள் எல்லாம் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
தீர்ப்புச் சொல்லும்பொழுதுதான் பி.ஜே.பி.யின் முகமூடி கிழியும், பொறுத்திருந்து பார்ப்போம்!

Read more: http://www.viduthalai.in/e-paper/87453.html#ixzz3Cy9a8iLf

தமிழ் ஓவியா said...

ஒழுக்கம் என்பது சொல்லுகின்றபடி நடப்பதும், நடந்தபடி சொல்லுவதுமே ஒழியத் தனிப்பட்ட குணங்கள் அல்ல.
_ (குடிஅரசு, 3.11.1929)

Read more: http://www.viduthalai.in/e-paper/87452.html#ixzz3Cy9rIw66