Search This Blog

7.9.14

சிவபெருமான் சைவச் சாப்பாடா சாப்பிட்டான்?என்ன ஷாப்பிட்றேள்? உணவுப் பழக்கத்தில் நுழையும் மூக்குகள்

என்ன ஷாப்பிட்றேள்? உணவுப் பழக்கத்தில் நுழையும் மூக்குகள்1916இல் தென்இந்தியர் நல உரிமைச் சங்கம் தொடங்கப்பட்டபோது வெளியிடப்பட்ட பார்ப்பனர் அல்லாதார் கொள்கை அறிக்கையைக் கேலி செய்தும் இது பார்ப்பனர் அல்லாதாரின் தற்கொலைக்கான நடவடிக்கை என்றும் எழுதிய ஏடுதான் உங்கள் குரல் என்று தன் குரலைப் பதிவு செய்திருக்கிறது.


அல்லாதார் கட்சியாமே என்றும் அல்லாதார் என்று ஒரு ஜாதியே இல்லையே என்றும் ஏகடியம் எழுதியவர் ஆயிரம் உண்டிங்கு ஜாதி எனில் அந்நியர் வந்து புகல் என்ன நீதி? என்று ரிட் மனு போட்டுப் பாட்டு எழுதிய சி.சு.பாரதி. இன்றைக்கு 100 ஆண்டுகள் வயதும் அதற்குத் தக்க வளர்ச்சியும் பெற்றுள்ள பார்ப்பனர் அல்லாதார் சமுதாயத்தைத் தரைமட்டமாக்கும் செயல்களில் இறங்குவது பார்ப்பனர்களுக்குப் பழகிய தொழில். பார்ப்பனர் அல்லாத மக்களைக் குறிக்க அப்பிராமண என்ற சொல்லை இவர்களது வேத, சாத்திரங்கள் பயன்படுத்துவதை வசதியாக மறைத்து விடுவார்கள். அப்பிராமணர்களின் மொழி, பழக்கவழக்கங்கள், உணவு முறை, உறவு முறை போன்ற அனைத்தையும் நொட்டை சொல் சொல்வது இவர்களது பொழுதுபோக்கு! விளையாட்டாகச் செய்வது போன்றும், சொல்வது போன்றும் எதையாவது கிண்டிக்கிளறி வினையாற்றுவதும் இவர்களுக்கு வாடிக்கை. கண்டிப்பதற்கோ, தண்டிப்பதற்கோ முயன்றால் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு ஓடுவார்கள். நாய்கள் பயத்தில் ஓடும்போது நீங்கள் கவனித்திருக்கலாம். பின்னங்கால் இடுக்கில் தன் வாலை ஒடுக்கி ஓடும். அதைப்போல ஓடும் இந்த ஜென்மாக்கள்!


சு.சாமி கதை


ஆதிதிராவிட சகோதரர்களை இழிவாகக் குறிக்கும் சொல்லைப் பயன்படுத்துவது இந்திய நாட்டில் குற்றம். தண்டிக்கத்தக்க குற்றம். அந்தச் சொல்லைப் பயன்படுத்தி விஷமத்தனம் நிறைந்த அறிக்கை ஒன்றை வெளியிட்டார் சோழவந்தான் சு.சாமி. நாடெங்கும் எதிர்ப்பு. உடனே அந்த ஜென்மா நான் இங்கிலீஷ் அகராதியில் இருப்பதைத்தான் பயன்படுத்தினேன் என்றது. இந்தியாவில் அது ஒரு ஜாதியைக் குறிக்கும் கேவலச் சொல்; அதனைப் பயன்படுத்துவது குற்றம் என்று குரல்கள் நாடு முழுவதும் கிளம்பின. உடனே அந்த ஜென்மா காலிடுக்கில் வால் ஒடுக்கி ஓடும் நாயாக மாறிப் பின்வாங்கி, மன்னிப்புக் கேட்டுத் தப்பித்தது. இப்படித்தான் அந்த ஜென்மாக்களின் செயல்பாடு இருக்கும், எப்போதும்!


உலக மக்கள் அனைவரின் உணவுப் பழக்கமும் ஒன்றுபோல் கிடையாது. மத்திய தரைக்கடல் பகுதி உணவுபோல, தாய்லாந்து உணவு இருக்காது. தாய்லாந்து உணவில் இருந்து மாறுபட்டுத்தான் சீன உணவு இருக்கிறது. மங்கோலிய இனத்தவர்கள்தான் என்றாலும் சீன உணவு வேறு. ஜப்பான் உணவு வேறு. இவை அனைத்திலும் வித்தியாசமானது மேலை நாட்டு கான்டினென்டல் உணவு. இந்திய நாட்டில் எடுத்துக்கொண்டால் மீன், இறைச்சி உணவு ஒரு வகை. மரக்கறி உணவு வேறோர் வகை. மரக்கறி உணவிலும் சமண (ஜெயின்) உணவு தனி. புலால் உணவில் மாட்டு இறைச்சி முகாமையான இடம் பிடிக்கும் மலையாளத்தில்! கோழி இறைச்சி முதலிடம் பிடிக்கும் பஞ்சாபில். மீன், இறால், நண்டு, கருவாடு போன்ற கடல் உணவு வகைகள் முக்கிய இடத்தைப் பெற்றிருக்கின்றன ஒரிசா, வங்காளம் போன்ற மாநிலங்களின் உணவில். குறிப்பாக ஒரிசா, வங்காளிப் பார்ப்பனர்கள் மத்ஸ்ய பிராமணா (மச்சப் பார்ப்பனர்கள்) எனப்படுகின்றனர். பாண்டா, பாண்டே, சாரங்கி எனப்படும் எந்தவகை ஒரிசாப் பார்ப்பனர்களாக இருந்தாலும் மீன் தின்பவர்கள். பானர்ஜி, முகர்ஜி, சட்டர்ஜி என்று எத்தனை வேதம் படித்த வங்கப் பார்ப்பனர்களும் மீன், இறால் இல்லாத உணவு உண்பதே இல்லை. வங்கப் பார்ப்பனர்களின வீடுகளின் தோட்டத்தில் குட்டை உண்டு. அதில் மீன் வளர்ப்பு உண்டு.  விருந்தினர் வந்துவிட்டால் வங்கப் பார்ப்பனர்கள் சமைப்பது தோட்டத்து வெண்டைக்காய் அல்ல. தோட்டத்து மீனும் இறாலும்தான். இப்படி எழுதிக் கொண்டே போகலாம்.


கடல் உணவின் சிறப்பு


உணவு வகைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ருசி, சுவை, மணம், சத்து கொண்டவை. கோளாறு செய்யாத, பக்க விளைவு இல்லாத உணவாக உலகம் முழுவதும் ஏற்கப்பட்டது கடல் உணவு. மீன், இறால், நண்டு, லாப்ஸ்டர் போன்றவை. பார்ப்பன அய்.டி. இளைஞர்களிடமும், இளைஞிகளிடமும் கேட்டுப் பாருங்கள். லாப்ஸ்டரின் ருசி என்ன என்று! ஆய்ஸ்டர் எப்படி இருக்கும் என்பதை அவர்களிடம் கேளுங்கள். எச்சில் ஒழுக விளக்கிச் சொல்வார்கள். கேட்கும்படி இந்த ஜென்மாக்களுக்கு எனது அட்வைஸ். அப்புறம் பேசட்டும் கடல் உணவு பற்றி!


பார்ப்பனர்கள் வழக்கமாகவே தங்கள் ஏடுகளில் ஆசிரியருக்குக் கடிதங்கள் என்ற பகுதியைத் தங்கள் மன அரிப்பைத் தீர்த்துக் கொள்ளப் பயன்படுத்துகிறார்கள். அந்த அரிப்பைச் சொரிந்து கொடுத்து தீர்த்துக் கொண்டதாகச் சில பேர் எழுதுவார்கள். மறுநாளே அது ஏட்டில் வந்துவிடும். தினவெடுத்தவர்கள் எழுதுவது பத்து பிரசுரமாகும். திட்டுபவர்கள் எழுதுவது ஒன்று மட்டும் பிரசுரமாகும். இதில் பத்திரிகைத் தொழில்முறைக் கமுக்கம் என்னவென்றால் வினை எழுதுவதும் எதிர்வினை எழுதுவதும் ஒருவரே! அதுவும் அந்த ஏட்டின் துணை ஆசிரியரே! இதற்கு இன்றைய எடுத்துக்காட்டு ராமசுப்பய்யரின் ஏடு! இந்த ஜென்மாக்கள் நடத்தும் எல்லா ஏடுகளுமே இந்தத் தொழிலைச் செய்கின்றன.


அப்படிப்பட்ட வகையில் எழுதி வைக்கப் பட்டதுதான் பலபேர் உண்ணும் இடங்களில் புலால் உணவு கூடாது என்பது! காய், கறி விற்கப்படும் சந்தைகளில் கருவாடு விற்கக் கூடாது என்று எழுதப்பட்டதும் அதேவகைதான். சொல்லப்படும் காரணம் என்ன? எங்களுக்குப் பிடிக்கவில்லை என்பது தானே! எங்களுக்குப் பிடித்திருக்கிறதே என்று பல்லாயிரக்கணக்கில் பல லட்சக்கணக்கில் கூறுபவர்கள் இருக்கிறார் கள். அவர்கள் எழுதுவ தில்லை. எழுதினாலும் இவர்கள் போடுவதில்லை.
அப்படியானால் இங்கு என்ன நடக்கிறது? ஜனநாயகத்தில் பெரும்பான்மை கொடிகட்டிப் பறக்கும் 51 பேர் சொல்லிவிட்டால் 49 பேர் அடிபணிந்தே ஆகவேண்டும்.


இன்றைய இந்தியாவில் 31 பேர் சொன்னதை 69 பேர் கேட்டுத் தீர வேண்டிய கஷ்டம். பா.ஜ.க. வாங்கிய ஓட்டுகள் மொத்தத்தில் 31 சதவீதம் தானே!
ஆனால் அதைவிடக் கொடுமையாக, 4 விழுக்காடு கூறுவதை 96 விழுக்காட்டினர் கேட்டாக வேண்டும் என்கிறார்கள். ஆனால் இந்த 4 விழுக்காட்டின் யோக்யதை என்ன? தினந்தினம் காட்லிவர் ஆயில் குடிக்கும் ஜென்மாக்கள், 7 சீஸ் காப்சுயூல்களை விழுங்கும் ஜென்மாக்கள், சிக்கன் எசன்ஸ் குடிக்கும் ஜென்மாக்கள் என்று பலப்பல ரகங்களும் உள்ளடக்கியவையே!


அய்யங்கார் குரல் கேட்கலாமே


நாளை இன்னொரு உங்கள் குரல் கேட்கலாம்! பூண்டு, வெங்காயம் இல்லாத சாத்தமுது மட்டும்தான் சாப்பிட வேண்டும் என்று ஒரு பிரதிவாதி பயங்கரமோ, பரகாலமோ, பரவஸ்துவோ கூக்குரல் எழுப்பலாம். (அய்யங்கார்ப் பார்ப்பனர்களின் குடும்பப் பெயர்கள் மேலே உள்ளவை! இளைஞர்களின் வசதிக்காக இவ்விளக்கம்). நாளை மறுநாள் மற்றுமொரு உங்கள் குரல் வரலாம்! காரட், பீட்ருட், தக்காளி இல்லாத சாப்பாடு மட்டும்தான் சாப்பிட வேண்டும். புஸ்குராஜ் ஜெயினோ, மல்மல்மல் ஜெயினோ, சோரடியாவோ, கரோடியாவோ கூக்குரல் போடலாம். (அவர்களது அடுக்குமாடிக் குடியிருப்புகள் இருக்கும் சாலையிலே, கோழி முட்டைகூட விற்கக் கூடாது என்கிறதுகள் இதுகள். (மோடி வருவதற்கு முன்னே அப்படி, இப்போது எப்படி என்பதை தருமமிகு சென்னைவாசிகள் தெரிவித்தால் தெரிந்துகொள்வேன்).
இந்த ஜென்மாக்கள் சைவம், அசைவம் என்கிறதுகள். வடக்கே போனால் தமிழ்நாட்டு சைவ ஓட்டலை வைஷ்ணவ் ஓட்டல் என்றுதான் எழுதி வைத்திருக்கிறார்கள். தெற்கத்திச் சைவம் வடக்கத்தி வைணவம் இரண்டுக்கும் மாற்றாக ஜெயின் உணவு வடக்கே! ஜெயின் உணவு கிடைக்கும் என்கிற பெயர்ப் பலகையைப் பரவலாகப் பார்க்கலாம்! அப்படி என்ன தனிச்சிறப்பு மரக்கறி உணவுக்கு? சொல்லுங்களேன்!


சிவன் தின்றது எது?

சைவம் என்ற வார்த்தையின் உபயதாரர் சிவன். சிவபெருமான். பரமசிவன் அல்லவா? அவன் சைவச் சாப்பாடா சாப்பிட்டான்? உங்கள் குரல் மாயாவி எழுத்தாளர்கள் சொல்லட்டுமே! கத்தரிக்காய் தனது விபூதிப்பை என்று சொன்னான் சிவன். வாழைக்காயைத் தன் நெற்றி என்று மறுதலித்தான். புடலங்காயைத் தன் ஜடாமுடி என்று சாப்பிட மறுத்து என்ன கேட்டான்? என்ன சமைத்தான் சிறுத்தொண்டன்? என்ன தின்றான் சிவன்? சைவம் சாப்பிட்டானா? வைணவம் சாப்பிட்டானா? கனிபலிசக் கறி (சிணீஸீஸீவீதீணீறீவீனீ) தின்றானய்யா! மனிதக் கறி! அதிலும் குழந்தைக் கறி! அது உங்கள் குரல்காரருக்கு உவப்போ? சொல்லுங்களேன்!


டூனா - டின்மீன்

வங்காளத்துப் பார்ப்பனர்கள் போல வசதியில்லாதவர்கள் _ புது மீனுக்கு எங்கே போவார்கள்? புது மீனாகக் கிடைத்ததைப் பதப்படுத்திப் பத்திரப்படுத்தி வைத்துச் சாப்பிடுகிறார்கள்! இங்கே மட்டுமா? எங்கேயும்! உலகம் முழுவதுமே! பதப்படுத்தி டூனா (ஜிஸீணீ) மீன், சால்மன், மெக்ரேல் போன்ற ஒமேகா 3 நிறைய உள்ளவை டின்களில் அடைத்து விற்கப்படுகின்றன. பயணத்தின்போதும் சாப்பிடுகிறோம். வீட்டில் இருக்கும்போதும் உண்கிறோம்! இதுவும் அதுதானே! அதையும் தடுப்பீர்களா? இது டப்பாக்களில் இருக்கிறது. கருவாடு காற்றுப் புகாத பிளாஸ்டிக் பைகளில் இருக்கிறது. இரண்டின் வாசமும் இந்த ஜென்மாக்களின் மூக்கில் நுழையாதே! பின் ஏன் வெறுப்பு? இன்னும் சொல்வோம், இதே ஜென்மாக்கள் அய்.டி. உத்தியோகத்தில் சம்மணம் போட்டு உட்கார்ந்து டின்னில் அடைத்த மேற்படி ருசியான பண்டத்தை ஒரு கை பார்க்கிறதுகளே! மடிசார்கள் வேண்டுமானால் ஒதுக்கலாம். மிடியும், ஜீன்சும், பெர்முடாவும், ஷார்ட்ஸும் வெட்டுகின்றதுகளே! அமெரிக்காவுக்கு ஒரு நீதி! கோயம்பேட்டுக்கும் ராயபுரம் கல்மண்டபம், தங்கசாலைக்கும் வேறு நீதியா? என்னய்யா உங்க மனுநீதி? சூத்திரன் கொன்றால் தூக்கு! பார்ப்பான் கொன்றால் மயிர் மழித்தல்! மனுநீதி இன்னுமா செல்லும்? கடையைக் கட்டுங்கள் பார்ப்பன ஜென்மாக்களே!
உங்கள் குரல் மீது குற்றம் சொல்வதைவிட மார்க்கெட் சீப் நிர்வாக அதிகாரிதான் குறை காணப்பட வேண்டியவர்! லைசென்ஸ் விதிகளுக்கு மாறுபாடு என்றால் பலசரக்கு சாமான்களை ஏன் ஒன்றும் செய்யவில்லை? காய்ந்த மிளகாய் விற்பதும் உரிம விதிப்படி தவறு என்று கூறுபவர் ஏன் அதைப் பறிக்கவில்லை? ஏன் காய்ந்த மீனை மட்டும் பறித்துக்கொண்டு போனார்? இந்தக் கேள்விக்கு என்ன பதில்?

விதிமுறைகள் கோளாறா? அதைக் கையாள்பவர்களின் கோளாறா?

எது நாறுகிறது?

காய்ந்த மீன் நாறுகிறது என்றால்... இந்தக் கேள்வி எழுவதும் நியாயமாகிறதே! போனவாரக் காய்கறிகளின் நாற்றத்தை விடவா கருவாடு நாற்றம் அதிகம்? மணக்கும் பூவாசனை இரண்டு நாள் கழித்து வயிற்றைக் குமட்டி வாந்தி வரவழைக்கும் வாசனையாகி விட்டதை அனுபவித்திருக்கிறீர்களா? பூமாலை கட்டும் கடைகளின் பக்கம் போங்கள். திருவரங்கத்தில் சாத்தாணித் தெருப்பக்கம் நடந்து பாருங்கள்! மின்ட் மார்க்கெட் தேவலை என்பீர்கள்!
இந்த ஜென்மாக்களுக்கு மீன் கூடாது! மீனவப் பெண் மட்டும் வேண்டுமோ? பராசரப் பார்ப்பான் மச்சகந்தியைக் குறித்த நேரத்தில் புணரவேண்டும் என்பதற்காக வயதுக்கு வராத சிறுமியை வயதுக்கு வரச்செய்து, கூடிக் குழந்தையைப் பெற்றானே! மீன் நாறுகிறது என்னும் ஜென்மாக்களே! மீனவப் பெண்ணும் நாறினாளாமே! மச்சகந்தி மீது அடித்த கவிச்சி நாற்றத்தைச் சகித்துக் கொண்டதால்தானே, வியாசன் பிறந்தான்? பாரதம் பாடினான்? அதற்கு மட்டும் கவிச்சி, பரவாயில்லை! கருவாடு நாற்றம் சகிக்க முடியவில்லை என்றால் என்னங்க இரட்டை நீதி?


எல்லா ஜீவராசிகளையும் ஆண்டவன் படைத்தான் என்கிறீர்களே! மீனையும் அவன்தானே படைத்தான்? படைத்ததோடு நிற்காமல் அவனே மீனாக அவதாரம் எடுத்தான் என்கிறீர்களே! அந்த மீனை ஏனய்யா உண்ணக் கூடாது என்கிறீர்கள்? நாறுகிறது என்றால், படைத்தவன் உங்கள் நாராயணன்தானே! தண்ணீரின்மேலே அவன் தூங்குகிறான்! தண்ணீருக்கு அடியில் அது வாழ்கிறது! இரண்டும் ஒன்றுதானே! அந்த மீனைத் திருடியும் தின்கிற கருடனை ஆழ்வாராக்கி வியாழக்கிழமை தோறும் செருப்பைக் கழற்றிவிட்டு நின்று மேலே பார்த்துக் கும்பிடும்போது, அதே மீனைத் தின்பவர்களை ஏனய்யா கரித்துக் கொட்டுகிறீர்கள்? அதைப் பிடித்து விற்று வாழ்பவர்களின் வயிற்றில் அடிக்கிறீர்கள்?


தேசிய வேஸ்ட்


உலகின் மொத்தக் கடல் உணவு விதைக்காமல், உரம் இடாமல், நீர் பாய்ச்சாமல் விளைந்து இருப்பது. பிடிக்கப் பிடிக்க உற்பத்தி! தின்னத் தின்ன உற்பத்தி! ஆனால் அதை உண்ணப் பயன்படுத்தும் இந்தியர்கள் மிகக் குறைந்த அளவு மட்டுமே! அதை அறுவடை செய்து வருமானம் பார்ப்பவர்கள் இந்தியாவில் மிகமிகக் குறைவு. இந்த ஏழைகளின் நாட்டில் இயற்கை வளத்தைப் பயன்படுத்தி வாழ்வதை, வளர்வதைத் தடுக்கும் வகையில் தத்துவம் பேசுபவர்களை என்ன செய்வது? தேச நன்மைக்கு எதிரானவர்கள் எனலாமா? தேசப் பாதுகாப்புச் சட்டம் இருப்பதைப் போல் அதற்கு இடையூறு செய்வதைப் போல _ தேச வளப் பாதுகாப்புச் சட்டம் கொண்டு வந்து தண்டிக்க வேண்டாமா?


பரதவரும் பார்ப்பனரும்


நெய்தல் நில மக்களில் ஆண்களில் கடலோடிகளாக இருப்பவர்கள்  எல்லாருமே! அவர்கள் மீன் பிடிக்க கடலுக்குப் போகும்போது, அவர்களின் மனைவியர் கருவாடும் உப்பும் விற்று நெல், அரிசி, பருப்பு வாங்கிப் பண்டமாற்று முறையில் குடும்பத்தை நடத்திய பாங்கினை இரண்டு ஆயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட சங்க இலக்கியங்கள் பாடுகின்றன. களவியலும் கற்பியலும் எவ்வித மோதலும் இல்லாமல் சிறந்து விளங்கிய சிறப்பைப் பாடுகின்றன. ஆனால்,

மேட்டுக் குடியினரின், மருத நிலத்து மக்களின் வாழ்வைப் பாடிய அதே இலக்கியங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட மனைவியர், குழந்தை பெற்றுக் கொடுக்க இன்னொரு மனைவி, இவர்கள் போதாது என்று காமக் கிழத்திகள், (வைப்பாட்டிகள், பரத்தையர்) என்று வாழ்ந்த அவலத்தையும் பாடுகின்றன.
ஆய்வாளர்களின் கருத்துப்படி தமிழ் மண்ணில், இரண்டாயிரம் ஆண்டுகளாக பண்டை இயல்பு மாறாமல் இருப்போர் இரண்டு ஜாதியினர்தாம். ஒருவர் மீனவர். மற்றவர் பார்ப்பனர். இப்படி இருக்கையில் மீனவரைப் பாதிக்கும் செயல்களில் பார்ப்பனர் ஈடுபடுவது அவர்கள் பாஷைப்படியே, பாபம் அல்லவா? ஏன் அவர்கள் இத்தகையப் புன்மைச் செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள்?


இந்த ஜென்மாக்கள் சைவம், அசைவம் என்று பேசித் தமிழைக் கெடுப்பதைப் போலவே, நான்வெஜ் என்று பேசி, எழுதி இங்கிலீஷையும் கெடுக்கிறதுகள். எந்த அகராதியிலும் இந்தச் சொல் இல்லை. பிவீஸீபீறீவீலீ  என்ற வகையில்கூடக் காணோம். ழிஷீஸீ என்ற லத்தீன் சொல்லை இவர்களாகவே முன்னால் செருகிக் கொண்டு வெஜ்ஜுக்கு எதிர்ச் சொல் என்று ஆக்கிக் கொண்டு விட்டார்கள். இயற்கையில், புலால் உணவு உண்பவன்தான் மனிதன். அதிலிருந்து மாறுபட்டு மரக்கறி மட்டும் விரும்பும் பிரகிருதிகளுக்காகத்தான் வெஜிடேரியன் என்ற சொல். நம்மூரில் 4 சதவீதம் இருந்து கொண்டு 96 சதவீதத்தை நான் போட்டுக் குறிப்பிடுகிறார்கள். எல்லாவற்றையும் கெடுத்ததைப் போல, இங்கிலீஷையும் கெடுத்து விட்டார்கள். இங்கிலீஷில் நாளேடு நடத்தினவர்கள் இப்போது தமிழிலும் நுழைந்து கெடுக்கத் தொடங்கி விட்டார்கள். தமிழால் இணைவோம் என்கிறார்கள். இணையும் யோக்யதை இதுவா?


மீன்களைப் பிடித்தலும் உண்பதும், விற்பதும், மீந்தவற்றை உணக்கலும் (காய வைத்தல்) நெய்தல் நில மக்களின் தொழில் என்பதை நற்றிணைப் பாடல் 63 பாடுகிறது. மீன் உணவின் பெருமையை அகநானூறு பாடல் 110 கூறும்போது கருவாடு பொறித்ததையும் பாடுகிறது. அம்மக்கள் வாழும் ஊர் முனிவுஇல் நல்ல ஊர் எனவும் கூறுகிறது.


வெறுத்தல் என்பதே என்ன என்று தெரியாத மக்களின் ஊராம். அத்தகைய ஊரில் குடியேறிய பார்ப்பன மாந்தர்கள் வெறுப்பையே கக்கி வாழ்கின்றனர்.
என்ன கொடுமை? பரதவர்களின் வாழ்முறைபற்றிச் சங்க காலத்திலேயே சிறப்பாகப் பாடப் பெற்றிருப்பதை குறுந்தொகை (பாடல் 320 மற்றும் பாடல் 269) குறிப்பிட்டுக் கூறுகிறது.


குள்ளமனம் கொண்ட குறுமதியினர் கூட்டம் குக்கலெனக் குரைக்கிறது. அலட்சியப் படுத்துவோம், அனைத்துத் துறையிலும்!


அய்யங்கார் ஏட்டு கான்டீனில் புகுத்தியதே அக்கிரமம்! அத்தோடு நிறுத்தாமல் கோயம்பேடுக்குள்ளும் நுழைவதைச் சகித்துக் கொள்ளக்கூடாது!


ஆரியர் சேர்க்கை தமிழுக்கும் தமிழர்க்கும் ஆகாது என்றார் மறைமலை அடிகள்.


நினைவில் கொள்வோம்! செயலில் காட்டுவோம்!


------------------- சார்வாகன் அவர்கள்  “உண்மை” செப்டம்பர் 01-15 2014 இதழில் எழுதிய கட்டுரை

15 comments:

தமிழ் ஓவியா said...

மத்திய அமைச்சரவையில் மாமிசம் கூடாது!மிகவும் அமைதியாக ஒரு மாற்றம் டில்லியில் நடந்ததிருக்கிறது, அமைச்சரவை நிகழ்ச்சிகளில் இனிமேல் அசைவம் கிடையாது என்பதுதான் அது. இந்தச் செய்தி பலருக்குத் தெரியாது. அமைச்சரவைக் கூட்டம் என்பது பார்ப்பனர்களின் யாகமேடை கிடையாது. அமைச்சரவைக் கூட்டத்தின் போது பல்வேறு மாநிலங்களில் உள்ள அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொள்வார்கள். அவர்களின் உணவு முறை அசைவத்துடன் சேர்ந்ததாக இருக்கலாம். மேற்கு வங்கப் பார்ப்பனர்கள்கூட மீன் இல்லாமல் சாப்பிடமாட்டார்கள். அப்படி இருக்க அமைச்சரவை நிகழ்ச்சிகளில் அசைவ உணவை நிறுத்தியது ஏன்? இதுவரை யாரும் கேள்வி கேட்கவில்லை. தமிழ்நாட்டிற்கு வருவோம். இங்கு என்ன நடக்கிறது? ஒரு பத்திரிகை அலுவலகம் அசைவ உணவு கொண்டு வருவதால் சைவம் சாப்பிடும் மற்றவர்களுக்கு அருவருப்பாக இருக்கிறதாம். ஆகையால் இனிமேல் அலுவலகத்திற்கு யாரும் அசைவ சாப்பாடு கொண்டுவர வேண்டாம் என்று கூறி அனைத்துப் பணியாளர்களுக்கும் சுற்றறிக்கை விட்டு, அலுவலக தகவல்பலகையிலும் ஒட்டிவிட்டனர். பொதுவாக ஊடக அலுவலகங்களில் அசைவம் கொண்டுவருவதை பல பத்திரிகை நிறுவனங்கள் நேரடியாக இல்லாமல் மறைமுகமாகத் தடுக்கின்றன. புதிதாகச் சேர்ந்தவர்கள் அசைவம் கொண்டுவந்தால் உடனே நாசுக்காக சரஸ்வதி வசிக்கும் இடம் என்று மறைமுகமாகக் கூறிவிடுவார்கள். அப்படி இருந்தும் கொண்டுவந்தால் உடனே தூக்கிவிடுவார்கள். திடீரென இந்த அசைவ எதிர்ப்பு ஏன் கிளம்பியது என்று தெரிகிறதா? இதற்கு உணவு முறையை நன்கு கவனித்தால் தெரியும். பார்ப்பனர்களின் அன்றாட உணவில் அதிக அளவு புரதம், கால்சியம், பொட்டாசியம், இரும்பு மற்றும் வைட்டமின்கள் இருக்கும். மிகக்குறைந்த அளவே மாவுச்சத்து மற்றும் கொழுப்புகள் இருக்கும். அவர்கள் சேர்க்கும் கொழுப்பு உணவு மிகவும் எளிதில் உடலில் ஆற்றலாக மாற்றமடையும் தாவரக்கொழுப்பு உணவுதான். பார்ப்பனர்களுக்கு அதிகம் உடலுழைப்பு கிடையாது. ஆனால், பார்ப்பனரல்லாத பெரும்பான்மை மண்ணின் மைந்தர்களுக்குத் தேவையான உணவு. அதுவும் இந்த மண்ணின் பாரம்பரிய உணவு என்பது, அசைவ உணவு வகையைச் சார்ந்ததே. இது விவசாய நாடு. பெரும்பான்மை மக்களின் உணவுத்தேவையை நிறைவு செய்ய மாமிசம் மிகவும் முக்கிய இடத்தைப் பிடிக்கிறது. மனித குல வரலாற்றைப் பார்த்தாலே உணவுச் சங்கிலிமுறை நமக்குத் தெரியவரும். மாட்டை மனிதன் உணவிற்காகத் தேர்ந்தெடுத்தது என்பது அதிகமான மக்கள் பங்கிட்டு உண்ணக்கூடியதும் அதே நேரத்தில் அவனது உடலுழைப்பிற்குத் தேவையான அனைத்து ஆற்றலும் மாட்டு மாமிசத்திலிருந்து கிடைக்கிறது. இந்தியாவைப் பொருத்தவரை குடும்ப வாழ்க்கை அமைப்பில் ஆடு, கோழி மற்றும் மாட்டு மாமிசம் பொதுவாக இருந்தது. விழா நாட்களில் மாட்டை உணவிற்காக அறுப்பது, விருந்தினர் வரும்போது கோழி, ஆடுகளை அறுப்பது என்பது காலம் காலமாகத் தொடர்வதாகும்.

கோமத யாகம், அசுவமேத யாகம், நரமேத யாகம் என்ற பெயர்களில் உயிரினங்களைத் தீயில் இட்டுப் பொசுக்கிய பார்ப்பனர்கள் இன்று மாமிசம் கொண்டுவராதே என்று கூறுகின்றனர். சரி உங்கள் ஆட்சி உங்கள் அலுவலகம் என்று விட்டால் இன்று கோயம்பேடு மார்க்கெட்டில் கருவாடு விற்க தடை விதித்துவிட்டார்கள். கேட்டால் கருவாட்டு நாற்றம் அங்குவரும் வியாபாரத் தரகர்களுக்குப் பிடிக்கவில்லையாம். கருவாட்டு விற்பனையாளர்களை எல்லாம் கடையைக் காலிசெய்துவிடச் சொல்லிவிட்டார்களாம். மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் மட்டுமல்ல... மோடி பதவியேற்பு விழாவிலேயே இந்த முயற்சி செய்யப்பட்டு பின்னர் பன்னாட்டுத் தலைவர்களுக்காக மாற்றடப்பட்டதும் அது கிண்டலுக்கு உள்ளானதையும் நாம் அறிவோம். இப்போது நடந்தேவிட்டது அவ்வளவுதான்.

ஏதேது இனிமேல் மாமிசம் சாப்பிடுபவர்கள் எல்லாம் இந்தியர்களே அல்ல என்று சட்டமியற்றிவிடுவார்கள் போலும்! விழிப்பாய் இரு தமிழா! இனி உனது உணவைக்கூட பார்ப்பானைக் கேட்டுத்தான் சாப்பிடும் நிலை வரப்போகிறது!

- சரவணா ராஜேந்திரன்

தமிழ் ஓவியா said...

பெண்களுக்கு எதிரான குற்றங்களில் சிறுவர்களின் பங்கு


பெண்களுக்கு எதிரான குற்றங்களில் சிறுவர்கள் ஈடுபடுவது கடந்த ஆண்டு 13.2 விழுக்காடு அதிகரித்துள்ளதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் தெரிவித்துள்ளது.

பெண்களை இழிவுபடுத்தும் வகையிலான குற்றங்கள் 70.5 விழுக்காடும் பாலியல் குற்றங்கள் 60.3 விழுக்காடும் அதிகரித்துள்ளது. இந்தக் குற்றங்களில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டவர்களில் 66.3 விழுக்காட்டினர் 16 முதல் 18 வயதிற்கு உட்பட்டவர்கள்.

பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்பாக 2013ஆம் ஆண்டு சிறுவர்கள்மீது மொத்தம் 31,725 வழக்குகள் பதிவாகியுள்ளன. இது, 2012ஆம் ஆண்டு 27,936ஆக இருந்துள்ளது. திருட்டு வழக்குகளில் 7,969 சிறுவர்களும், தாக்குதல் சம்பவங்களில் 6,043 சிறுவர்களும் கொள்ளை வழக்குகளில் 3,784 சிறுவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆண்டு வருமானம் 25 ஆயிரம் ரூபாய் உள்ள குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 50 விழுக்காட்டுச் சிறுவர்கள் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

தமிழ் ஓவியா said...

புனைப்பெயரில் திரியும் ஜனநாயகம்


அழுதுகொண்டிருந்தான் அவன்.
யாரும் கவனிக்கவில்லை!
பரட்டைத் தலை
அழுக்கான முகம்
வருவார் போவோரெல்லாம்
அடித்த வாசனைத் திரவியம்
ஆறியும் ஆறாமலும்
உடல் முழுவதும் தீப்புண்கள்
சிகரெட்டால் சுட்ட வடுக்கள்
அங்கங்கே வெட்டுக் காயங்கள்

சில சமயம்
புதுச் சட்டையோடு அரண்மனையிலிருப்பான்
பல சமயம்
கிழிந்த சட்டையோடு தெருவிலிருந்தான்

பிச்சைக்காரனுக்குப் பிச்சையிட்டான்
அதே தெருவில் அவனே பிச்சையெடுத்தான்
அவன் ஊமையென்று சந்தேகித்தார்கள்
அவன் வாய் தைக்கப்பட்டிருந்தது
கையை யாரோ முறித்திருந்தார்கள்

பரிதாபப்பட்டவர்கள் கூட்டிச் செல்வார்கள் வீட்டிற்கு
அடுத்த நாள்
தெருவில் தென்படுவான்.
அவனோடு புகைப்படம்
எடுத்துக்கொண்டார்கள்

பெயரைக் கேட்டேன்
சிரித்துக்கொண்டே நின்றான்
சர்வாதிகாரம் தன்னை
ஜனநாயகமென்பதால்
அடக்கு முறை பாசிசம்
ஜனநாயகமென்று சொல்லிக்கொண்டு திரிவதால்
மத வன்முறை அடிப்படைவாதம்
ஜனநாயகமென்று சொல்லிக்கொள்வதால்
தன் நிஜப்பெயரை தலைமறைவு வாழ்வுக்குக் கொடுத்துவிட்டு
புனைப்பெயரில் திரிகின்றான் ஜனநாயகம்.- கோசின்ரா

தமிழ் ஓவியா said...

இணைந்த கரங்கள் - வலுப்பெறும் மதச் சார்பற்ற அணி


மதவெறி மனிதர்களைப் பிரிக்கிறது, அழிவுக்கு இட்டுச் செல்கிறது. மதச் சார்பின்மை மனிதர்களை இணைக்கிறது; ஒற்றுமைக்கு வழிவகுக்கிறது. இந்த உண்மையை நிரூபிக்கும் சமீபத்திய நிகழ்வுதான், பிரிந்த அரசியல் நண்பர்களான லாலு பிரசாத்தும், நிதிஷ்குமாரும் மீண்டும் அரசியலில் இணைந்திருப்பது.

நண்பர்கள் மீண்டும் இணைந்திருப்பதை வரவேற்பவர்கள் ஒருபுறம் இருக்க, பொறுக்க முடியாமல் பொருமுபவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். நிதிஷ்குமார்_லாலு கூட்டணியை விரும்பாதவர்கள், மதத்தை வைத்து அரசியல் செய்பவர்களும், உயர்ஜாதி வகுப்பினரும்தான் என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை. உத்திர பிரதேசத்தில் இருந்து உத்திரகான்ட் பிரிக்கப்படாமல் இருந்தால், அதன் மொத்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 85 ஆகவும், பிகாரில் இருந்து ஜார்கண்ட் பிரிக்கப்படாமல் இருந்தால் அதன் மொத்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 54 ஆகவும் இருந்திருக்கும். இந்த இரு மாநிலங்களின் மொத்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 139. இந்தியாவின் மொத்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் இது சுமார் இருபத்தைந்து சதவிகிதம். இந்தியாவின் ஆட்சியைத் தீர்மானிக்கும் முக்கியப் பகுதி. நீண்ட காலமாக பெரிய தேசியக் கட்சியான காங்கிரஸ் மற்றும் பி.ஜே.பி ஆகிய இரு கட்சிகளின் மற்றும் அதன் உயர் ஜாதித் தலைவர்களின் கட்டுப்பாட்டில் இருந்து வந்தது இந்தப் பகுதியின் அரசியல்.

உத்திரபிரதேசம் மற்றும் பிகார் மாநிலத்தில் தங்கள் ஆதிக்கத்தைத் தக்கவைத்துக்கொள்ள பெரிய தேசியக் கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பி.ஜே.பி இரண்டிற்கும் இடையே நடந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக, ராமர் கோவிலைக் கட்டுகிறோம் என்று சொல்லி, பாபர் மசூதியை இடித்து, மத ரீதியாக மக்களைப் பிளவுபடுத்தி அதில் ஆதாயத்தைத் தேடியது பி.ஜே.பி. இவ்விரு பெரிய தேசியக் கட்சிகள் எதிர்நிலையில் அரசியல் செய்தாலும், அதன் மேல்மட்ட அரசியல் தலைவர்களில் பலர் சிறுபான்மை ஜாதியைச் சேர்ந்த பார்ப்பனர்களாக இருந்ததும், மாநில நலனுக்கு முக்கியத்துவம் தராமல் இருந்ததும், மெல்ல மெல்ல ஒரு அரசியல் மாறுதலை ஏற்படுத்திக்கொண்டே இருந்தது இந்தப் பகுதியில்.

உயர்ஜாதியினருக்கு எதிராக தன்னெழுச்சியாக ஏற்பட்ட அந்த மாறுதல், கன்ஷிராம், முலாயம் சிங் யாதவ், லாலு பிரசாத், சரத் யாதவ், நிதிஷ் குமார், சிபு சோரன், அஜீத் சிங் என பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட ஜாதிகளைச் சேர்ந்த தலைவர்களை வலுவாக வளரச் செய்தது இந்தப் பகுதியில். அந்தப் பகுதியில் மாநிலக் கட்சிகள் வளரத் தொடங்கின. இதன் விளைவாக, 1989-இல் காங்கிரசுக்கு மாற்றாக வி.பி.சிங் தலைமையில் புதிய மத்திய அரசு அமைந்தது. 79-இல் ஜனதா கட்சி ஆட்சியில் இருந்தபோது, சமூகரீதியாக கல்வி அறிவு ரீதியாக பின்தங்கியவர்களை ஆராய அமைக்கப்பட்ட மண்டல் கமிஷன், பத்தாண்டு கால நீண்ட இடைவெளிக்குப் பிறகு வெளியான 89-இல் மண்டல் கமிஷன் பரிந்துரையை அமல்படுத்த முயன்று ஆட்சியை வி.பி.சிங் இழந்தது வரலாறு.

இந்த பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட தலைவர்களின் மாநிலக் கட்சிகள் மூன்று வகையில் ஒன்றுபடுகிறது. முதலாவதாக, இக்கட்சிகள் பெரும்பான்மை மதவெறிக்கு எதிரான கட்சிகள். இரண்டாவதாக, பிற்படுத்தப்பட்ட - தாழ்த்தப்பட்ட மக்களின் நலனை முன்னிறுத்தும் கட்சிகள். மூன்றாவதாக, மாநில உரிமைக்கு முக்கியத்துவம் தரும் கட்சிகள். இம்மூன்றும் முதன்முதலாக தென்னிந்தியப் பகுதியில் வலுவோடு இருக்கும் திராவிட இயக்கங்களின் கொள்கை சார்ந்தவை. இக்கொள்கைக்கு நேர் எதிரானவைகளாக இருக்கும் தேசியக் கட்சிகளின் நேரடி அல்லது மறைமுகச் செயல்பாட்டால் இம்மாநிலக் கட்சிகள் பிரித்து மேயப்பட்டன. கட்சிகள் பிளவுண்டன. ஒருவருக்கொருவர் எதிராகக் களமிறங்கினர். பிளவுபட்டவர்களை பெரிய தேசியக் கட்சிகளான காங்கிரசும், பாரதிய ஜனதா பார்ட்டியும் தங்கள் ஆதரவாளர்களாக வைத்துக்கொண்டன. இவர்களின் பிரிவு தங்கள் கட்சியை வளர்க்க, வலுப்பெறச் செய்ய உதவும் எனக் கருதியது போல அந்தத் தேசியக் கட்சிகள். இந்த மாநிலக் கட்சிகள் மட்டும் பிரியவில்லை.

தமிழ் ஓவியா said...

அந்த மாநிலங்களே பிரிக்கப்பட்டன. உத்திரபிரதேசமும் பிகாரும் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. ஒற்றுமையாக இருந்து மத்தியில் ஆட்சி அமைத்த இந்தக் கட்சிகள் இணைய முடியாத அளவிற்குப் பிளவுகள் ஏற்பட்டன. மாநிலக் கட்சிகள் வலுவிழந்ததாகக் கருதிய பெரிய தேசியக் கட்சிகளான காங்கிரசும், பாரதிய ஜனதா பார்ட்டியும் ஒரு குறிப்பிட்ட விஷயத்தில் ஒன்றுபட்டுப் பேசிய அதிசயம் நிகழ்ந்தது. பல மொழிகளை, பண்பாடுகளைக் கொண்ட மக்களால் உருவாக்கப்பட்ட இந்தியா என்ற நாட்டில், அவர்கள் அனைவரும் தங்கள் அரசியல் உரிமையைக் காப்பாற்றிக்கொள்ளும் வகையில் உள்ள தற்போதைய முறையே போதாது, மாநிலங்களுக்கு அதிக அதிகாரமும், சுயாட்சி உரிமையும் வழங்கப்படவேண்டும் என்ற கோரிக்கை நிலுவையில் இருக்கும் நிலையில், அமெரிக்காவைப் போல இரட்டைக் கட்சி முறை இந்தியாவில் வரவேண்டும் என்ற கருத்தை பாரதிய ஜனதா கட்சி முன்வைக்க, அதை வருங்கால காங்கிரசின் தலைவராகக் கருதப்படும் ராகுல் காந்தி வரவேற்ற அதிசயம் நிகழ்ந்தது. பாரதிய ஜனதா பார்ட்டி தனக்குத் தோதான அமெரிக்க பாணி முறையைப் பின்பற்றி அதிபரை முன்னிறுத்தித் தேர்தலைச் சந்திப்பது போல, வழக்கத்திற்கு மாறாக பிரதமர் வேட்பாளர் என்ற புதிய பாணியில் தேர்தலைச் சந்தித்து, அதற்கு அளவிற்கு அதிகமான விளம்பரம் செய்து, தேர்தலில் வென்று தனிப் பெரும்பான்மையோடு ஆட்சியைப் பிடித்துள்ளது. இதில் கவனிக்கவேண்டியது, உத்திரபிரதேசம் மற்றும் பிகாரில் பாரதிய ஜனதா பார்ட்டி பெற்றுள்ள வெற்றியே இதற்குக் காரணமாக அமைந்துள்ளது என்பதுதான். பெரிய தேசியக் கட்சியான காங்கிரஸ் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் படு தோல்வியைச் சந்தித்துள்ள நிலையில், அந்தக் கட்சித் தலைவி சோனியா காந்தி நடத்திய இஃப்தார் விருந்தின் மூலமாக, பிரிந்த முன்னாள் நண்பர்களான லாலு பிரசாத் யாதவும், நிதிஷ் குமாரும் இணைந்துள்ளனர் என்ற செய்தி மதத்தை வைத்து அரசியல் செய்பவர்களுக்குக் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. பாபர் மசூதி இடிக்கப்படுவதற்கு முன்பு, மதக் கலவரத்தைத் தூண்டும் வகையில் அமைந்த அத்வானியின் ரத யாத்திரையை பிகாருக்குள் நுழைய விடாமல் தடுத்தவர் அன்றைய பிகார் முதல்வராக இருந்த லாலு பிரசாத் யாதவ். குஜராத் மதக் கலவரத்தின் போது முதலமைச்சராக இருந்த நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக ஏற்றுக்கொள்ளாமல் கூட்டணியை முறித்தவர் பிகாரின் முதலமைச்சராக இருந்த நிதிஷ் குமார்.

மதவெறிக்கு எதிராக இவ்விருவரும் இணைந்தது ஒரு புதிய தொடக்கமாகத் தோன்றுகிறது. இது புதிய அரசியல் மாற்றத்தை இந்தியாவில் ஏற்படுத்தும் என்பது நிச்சயம். இணைந்த இருவரும் மதசார்பின்மையை முன்னிறுத்துபவர்கள் மட்டுமல்ல, இணைத்த நிகழ்ச்சியே மதச் சார்பின்மையைப் பறைசாற்றும் இஃப்தார் விருந்து நிகழ்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் தொடர்ச்சியாக மதச்சார்பற்ற இயக்கத் தலைவர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டியது காலத்தின் கட்டாயம்.

லாலு பிரசாத் _ நிதிஷ் குமார் கூட்டணி பெற்றிருக்கும் வரவேற்பிற்குப் பிறகு வி.பி.சிங் பிரதமராக இருந்தபோது இணைந்து இருந்த அரசியல் நண்பர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றும் ஆதாசப்படுகிறார்கள் மதச் சார்பற்ற சிந்தனையாளர்கள். காலம் காத்திருக்கிறது.

- திராவிடப் புரட்சி

தமிழ் ஓவியா said...

இன்றைக்கு 'ஓணம்' கதையை பார்ப்போமா?

சோழ நாட்டில் திருமரைக்காடு (வேதாரண்யம்); அங்கு ஒரு சிவன் கோயில். அங்குள்ள சிவனின் மனைவிக்குப் பெயர் ஞானம் பழுத்த நாயகி என்பதாகும்.

ஒரு நாள் தன் மனைவியோடு சிவன் புணர்ந்து கொண்டு இருந்தானாம்.(அர்த்தமுள்ள இந்து மதம்.....ம்)

அந்த நேரத்தில் எரிந்து கொண்டிருந்த தீபம் ஒளி குன்றி எரிந்து கொண்டிருந்ததாம். அந்த சமயத்தில் அங்கு வந்த எலி விளக்கில் இருந்த நெய்யைக் குடித்துவிட்டு, எலியின் வால் திரியின் மேல் பட்டதால், தூண்டப்பட்டு ஒளி பிரகாசமாகிவிட்டதாம்.

உடனே எலியைப் பார்த்து சிவன், நீ மூவுலகையும் அரசாட்சி செய்வாய்! என்று வரம் கொடுத்தானாம்.

அந்த எலி,
மாவலி என்னும் பெயரோடு பிறந்த அசுர குல அரசன் மண்ணுலகம், விண்ணுலகம், பாதாள உலகம் மூன்றையும் கட்டி ஆண்டானாம்.

விண்ணுலகையும் மாவலி ஆண்டதால், இந்திர லோகத்தின் அதிபதியாகிய இந்திரன் கூட மாவலிக்குக் கட்டுப்பட்டவனாகிவிட்டான். பொறுக்குமா அவர்களுக்கு?

அதே நேரத்தில் யாருக்கும் எந்த கேட்டையும் செய்யாமல் நல்லாட்சி புரிந்து, நல்ல பெயர் எடுத்தான் மாவலி!
அசுர குலத்தவன் நல்லாட்சி செய்வதாவது! நல்ல பெயர் எடுப்பதாவது! விட்டுவிடுவார்களா? இந்திரனின் தகப்பனாகிய காசிப முனிவன், விஷ்ணுவிடம் மனு போட்டானாம். கடும் தவமிருந்து விஷ்ணுவிடம் வரம் வேண் டினானாம். விஷ்ணு தமக்கு மகனாகப் பிறந்து மாவலியை ஒழித்துக் கட்ட வேண்டும் என்று மன்றாடினானாம். அதன்படியே வரமும் கிடைத்தது.

(மூன்று உலகத்தையும் மாவலி கட்டி ஆள வேண் டும் என்று சிவன் கொடுத்த வரம் என்னவாயிற்று? சிவனை விட வைணவக் கடவுளுக்குச் சக்தி அதிகம் என்று காட்டுவதற்கு இதுபோன்ற கதைகள் போலும்!)

ஒருமுறை யாகம் செய்த மாவலி தான தருமங்களைச் செய்தான். இதுதான் சந்தர்ப்பம் என்று கருதி காசிப முனிவருக்குப் பிறந்த வாமனன் (குள்ளப் பார்ப்பான் - சூழ்ச்சி என்று வந்தால் புராணங்கள் கூட பார்ப்பானைத்தான் தேடிப் பிடிக்கின்றன.) பிச்சைக்காரனாக (யாசகம் புருஷ லட்சணம் என்பதே பார்ப்பன தருமம் ஆயிற்றே!) சென்று மூன்று அடி மண்ணைக் கேட்டானாம். கேட்பாருக்கு இல்லை என்று சொல்லிப் பழக்க மில்லாத அந்தத் தர்மப்பிரபுவாகிய மாவலி எனும் அசுர அரசன் சம்மதித்தான்.

சூழ்ச்சிக்காரக் குள்ளப் பார்ப்பனனாகிய வாமனன் பேருரு எடுத்து (விசுவரூபம்) ஓரடியை மண்ணுலகத்திலும் மற்றொரு அடியை விண்ணு லகத்திலும் வைத்து, மூன்றாவது அடியை எங்கு வைப்பது என்று கேட்டானாம். என் தலையில் வை! என்றானாம் அந்த அப்பாவி; அவ்வளவுதான். தலையில் காலை வைத்து மிதித்து சிறையிலும் அடைத்தானாம்.
இந்த நாளில் மாவலி வீட்டுக்கு வீடு வருகி றானாம். கேரளத்தில் அப்படி ஒரு நம்பிக்கை. வீட்டு வாசலில் கோலம் போட்டு வைக்கிறார்கள்- மாவலியின் வருகைக்காக. ஓணம் பண்டிகை என்பது இதுதான்.

இந்தக் கதை மூடத்தனத்தின் மொத்தக் குத்தகை என்பது ஒருபுறம். இந்து மதத்தில் விஷ்ணு அவதாரம் எடுப்பதெல்லாம் அசுரர்களை அழிக்கத் தான் என்பதை மறந்துவிடவேண்டாம்.

தீபாவளிக் கதையும் இந்த ரகத்தைச் சேர்ந்ததே!

நல்லவனாக இருந்தாலும் அவன் அசுர குலத்தவன் என்றால் - சூத்திரன் என்றால் அவனை ஆளவிடாதே- அழித்துவிடு! என்கிற ஆரிய தத்துவம்தான் இந்த வாமன அவதாரக் கதை!

இங்கு மதம், கடவுள், பக்தி என்பதெல்லாம் நம்மை ஒழிப்பதற்கே! இந்தச் சூழ்ச்சி புரியாமல் கடவுள், காடாத்து என்று அலைவது பரிதாபமே!

(நன்றி: விடுதலை 29.08.2012)

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

ஜாதகம்

திருமணத்தின்போது பொருளாதாரம், ஜாதகப் பொருத்தம் குடும்ப கவுரவம் - இதில் எதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்? என்ற கேள் விக்கு ஓர் ஆன்மிக இதழ் தந்துள்ள பதில் இது. முதலில் பெண்ணுக்கும், பையனுக்கும் மனப் பொருத்தம் பார்க்க வேண்டும்.

அடுத்து ஜாத கப் பொருத்தம் பாருங் கள் என்கிறது - ஆன்மிக இதழ். ஆக ஜாதகப் பொருத்தத்தில் மணமக் களின் மனப்பொருத்தத் துக்கு இடம் இல்லை என்பது இதன் மூலம் தெரிகிறதா இல்லையா? முக்கியமான விஷயத் திலேயே கோட்டை விட் டபின் அப்புறம் என்ன ஜாதகம் - வெங்காயம்?

Read more: http://viduthalai.in/e-paper/87322.html#ixzz3Ck7VvJdb

தமிழ் ஓவியா said...

முடியாது


மதக் கட்டளையையும், கடவுள் நம்பிக்கையையும் கொண்ட ஒரு அடிமை, ஒரு தாழ்ந்த ஜாதிக்காரன் ஒரு நாளும் விடுதலை அடையவோ, முன்னேற்றமடையவோ முடியவே முடியாது.
(குடிஅரசு, 7.5.1933)

Read more: http://viduthalai.in/page-2/87325.html#ixzz3Ck7kPKAM

தமிழ் ஓவியா said...

சர்க்கரை நோய் வராமல் தடுக்க ஏழு வழிமுறைகள்

சர்க்கரை ஆரம்ப நிலையில் உள்ள போது, சில முன்னேற்பாடுகளை கடைப்பிடித்தால் சர்க்கரை நோய் வராமல் தடுக்கலாம். இல்லாவிட்டால் 5 ஆண்டில் சர்க்கரை நோய் வந்து விடும். சர்க்கரை நோய் வராமல் தடுப்பது எளிது. அதற்கு 7 வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள்.

1. வாரத்திற்கு குறைந்தபட்சம் 3 நாளாவது குறைந்த பட்சம் 30 நிமிடமாவது கையை வீசி, வேகமாக நடக்க வேண்டும். இதனால் உடலில் சேரும் சர்க்கரை குறையும்.

2. சிகரெட் குடிப்பவர்களுக்கு வழக்கமாக வரக்கூடிய நோய்கள் என்று சில இருந்தாலும், கூடுதலாக சர்க்கரையின் அளவு ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் சிகரெட் குடிப்பதை விட வேண்டும்.

3. பெரும்பாலானோர் மாலை முதல் இரவு வரை அமர்ந்து டி.வி.பார்க்கின்றனர். இதனால் உடலுக்கு உழைப்பு கிடைப்பதில்லை. அப்போது நொறுக்கு தீனி உண்கின்றனர். இதனால் உடலுக்கு சர்க்கரை நோய் வரும். மாலை முழுவதும் விளையாட்டு என்று கடைப்பிடிக்க வேண்டும்.

4. நாம் சமையலுக்கு பயன்படுத்தும் எண்ணெய் வகைகள் ரத்தத்தில் சர்க்கரை அளவை கூட்டுகிறது. ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தக்கூடிய, நல்ல கொழுப்பை உருவாக்கக்கூடிய எக்ஸ்ட்ரா வர்ஜின் ஆலிவ் ஆயிலை சமையலுக்கு பயன்படுத்த வேண்டும். அல்லது எதாவதொரு வகையில் தினசரி 5 மில்லி ஆலிவ் ஆயில் உடலில் சேர்க்க வேண்டியது கட்டாயம்.

5.அரிசி, சர்க்கரை, உப்பு, மைதா, சாதம், தேங்காய், பால், தயிர் உள்ளிட்ட வெள்ளை உணவு பொருள்களை தவிர்க்க வேண்டும். பேக்கரியில் விற்கும் எல்லா பொருள்களும் சர்க் கரையை கூட்டக்கூடியது. அதையும் தவிர்க்க வேண்டும்.

6. மூன்று வேளை சாப்பிடுவதை 5 வேளையாக மாற்றி கொள்ள வேண்டும். 3 வேளை சாப்பிடும் அளவை 5 வேளைகளில் சாப்பிட வேண்டும்.

7. தினசரி 25 முதல் 30 கிராம் வெந்தயத்தை உணவின் மூலம் உடலில் சேர்க்க வேண்டும். அது சர்க்கரையின் அளவு கூடாமல் தடுக்கும். வால்நட், பாதாம்பருப்பு கொஞ்சம், நிறைய காய்கறிகள், பப்பாளி, ஆரஞ்சு, ஆப்பிள் ஆகிய பழங்கள் ஆகியவற்றை உணவில் சேர்க்க வேண்டும். இவையெல்லாம் கடைப்பிடித்தால் சர்க்கரை நோய் வராது. சர்க்கரை நோய் எந்த நிலையில் உள்ளது என்பதை கண்டறிந்து, அதற்கான ஆலோசனையும், சிகிச்சையும் பெறுவது முக்கியம்.

Read more: http://viduthalai.in/page-7/87350.html#ixzz3CkAG352y

தமிழ் ஓவியா said...

மழைக்காலம் வந்தாச்சு, குழந்தைகள் பத்திரம்

வெயில் காலம் வந்தா மட்டும் தான் பிரச்சி னையா? மழைக்காலம் வந்தா அதை விடப் பிரச்சினைதாங்க என பெற்றோர்கள் புலம்ப ஆரம்பிச்சாச்சு. மழை பருவம் வந்தாலே மருத்துவமனையில் குழந்தையும் கையுமாக பலரைப் பார்க்கலாம். பெரும்பாலும் சளி, இருமல், காய்ச்சல் பிரச்சினைகள். காரணம் வானிலை மாற்றம் தான். புது மழையில் நனைஞ்சா ஆகாதுன்னு பெரியவங்க சொல்றதைக் கேட்டிருப்பீங்க.

இந்த பருவத்தில் எப்படி சமாளிக்கிறது? குழந்தைகளை நோய்களிலிருந்து எப்படி பாதுகாக்கிறது?

இதுகுறித்து குழந்தைகள் நல மருத்துவர் டாக்டர் சுப்ரமணியன் கூறும்போது: மழைக் காலத்தில் குழந்தைகளை பராமரிப்பது மிகவும் முக்கியமான விஷயம். பெரியவர்களைவிட குழந்தைகளுக்கு எளிதில் உடல்நிலை சரியில்லாமல் போய்விடும். மழைக்காலத்தில் குழந்தைகளுக்கு உடல்நிலை சரியில்லாமல் போவதற்கு முதல் காரணம் கொசுதான். மழைக்காலத்தில் கொசுக்களால் மலேரியா, டெங்கு, வைரஸ் காய்ச்சல் போன்றவை வரக்கூடும். எனவே மழைக்காலத்தில் குழந்தைகளை கொசுக்கள் கடிக்காத அளவிற்கு பார்த்துக்கொள்ள வேண்டும்.

கொசுவலை மற்றும் கொசுக்களை விரட்டுவதற்கான பிரத்யோக சாதனங்கள் மூலம் கொசுக்களை குழந்தைகளிடம் நெருங்க விடக்கூடாது. அவ்வாறு செய்வதன் மூலம் கொசுக்களால் பரவும் நோய்களை எளிதில் தவிர்க்க முடியும்.

மேலும் அதிக ஈரப்பதத்தினால் கால்களில் பூஞ்சை நோய்களும் வர வாய்ப்புள்ளது. அதனால் குழந்தைகளின் சருமங்களில் அதிக ஈரப்பதம் ஆகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மேலும் மழைக்காலத்தில் வாட்டர் போன் இன்பெஃக்ஷன் என்று சொல்ல கூடிய எலும்பு தொடர்பான நோய்கள் வருவதற்கும் வாய்ப்புள்ளது.

கோடை காலத்திலிருந்து மழைக்காலத்திற்கு வானிலை மாறும் போது நோய் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை மாத்திரைகளோ, ஊசிகளோ போடுவதற்கு பதிலாக சரியான முறையில் பராமரிப்பதன் மூலமும் நோய்கள் வராமல் தடுக்கலாம். கால நிலை மாறும் போது பெரியவர்கள் தாங்கிக் கொள்வார்கள், ஆனால் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்திகள் குறைவாக இருக்கும் பட்சத்தில் நோய் எளிதில் தாக்கிவிடும்.

இதை தவிர்ப்பதற்கு காய்கறிகள் மற்றும் பழங்கள் அதிகமாக சாப்பிடக் கொடுப்பதன் மூலம் குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தலாம். சரியான விகிதத்தில் உணவுகளை கொடுக்க வேண்டும். குழந்தைகளின் விளையாட்டு திறனை அதிகப்படுத்தி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம். அதிகமாக எண்ணெய் உள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும்.

மேலும் குழந்தைகளுக்கு உடல்நிலை சரியில்லாத போது உடனே அதற்கான மருத்துவரை அணுகி, அவரின் பரிந்துரைப்படியே மருந்து கொடுக்க வேண்டும். நாமே மருந்து கொடுக்கும் முடிவை எடுக்க கூடாது, என்றார். அம்பிகா பாண்டியன் (பாடி): வானிலை மாறும் போது குழந்தைகளுக்கு காய்ச்சல், சளி போன்றவை வருவது சகஜம் தான். ஆனால் சரியான முறையில் குழந்தைகளை பாதுகாத்தால் இந்த பிரச்சினைகளை தவிர்க்கலாம். குளிர் காலங்களில் குழந்தைகளுக்கு காதில் குளிரான காற்று படக்கூடாது. அதனால் குழந்தைகளுக்கு மாலை நேரங்களில் ஸ்வெட்டர், குல்லா போன்றவற்றை போட்டு விடுவதன் மூலம் குளிரிலிருந்து பாதுகாக்கலாம். ஒரு வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கால்களில் சாக்ஸ் போட வேண்டும்.

சின்ன குழந்தைகளுக்கு காது மற்றும் கால் பகுதி அதிகம் குளிராக ஆகாதபடிக்கு பாதுகாப்பான உடைகளை அணிவிக்கவேண்டும். தண்ணீரை சுட வைத்து கொடுப்பதன் மூலம் குளிர் காலங்களில் வைரஸ், பாக்டீரியா போன்ற கிருமிகளின் தாக்குதலை தடுக்கலாம். மழையிலே நனைய விடக்கூடாது. நனைந்தால் உடனே துவட்டி விடவேண்டும். குளிர்பானங்கள், அய்ஸ்கிரீம் போன்றவற்றை குளிர் காலங்களில் முற்றிலும் தவிர்க்க வேண்டும். இனிப்புகளை அதிகமாக உண்ண கொடுக்கக் கூடாது. குழந்தைகளின் உடல் வெப்பத்தை சரியான அளவில் பாதுகாக்க வேண்டும்.

மணிகண்டன் (குருபுரம்): குழந்தைகளுக்கு மினி ஸ்கர்ட், சிலீவ் லெஸ் போன்ற உடைகளை போடாமல் உடம்பை முழுவதுமாக மூடும் படியாக ஆடை அணிவிக்க வேண்டும். மெல்லிய ஆடைகளை போடாமல் நல்ல குளிருக்கு அடக்கமாக போட்டுவிடுங்கள். குளிர் காத்துப்பட்டால் நெஞ்சு சளி பிடிக்கும்னு சொல்வாங்க.

மாலை நேரங்களில் வெளியில் அலைய விடக்கூடாது. அப்படியே வெளியே போகிற மாதிரி இருந்தால் காதுக்கு ஸ்கார்ஃப் கட்டி கூட்டிப் போங்க. மழை பருவம் என்பதால் குழந்தைகளை வெளியே கூட்டிப்போனால் குடை அல்லது ரெயின் கோட் கட்டாயம் எடுத்துட்டுப்போங்க. உணவில் காரத்துக்கு மிளகாய்க்கு பதில் மிளகு சேர்த்துக்கொள்வது நல்லது. மிளகு ரசம், மிளகு சாம்பார் இப்படி சாப்பிடக்கொடுக்கலாம். கொள்ளு ரசம், இஞ்சி ஆகியவை உடம்பின் சூட்டை அதிகரிக்கும்.

சளிப் பிடிக்காமல் பார்த்துக் கொள்ளும். ஆறிப்போன உணவுகளைக் கொடுக்காமல் சூடான உணவுகளையே குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும்.

Read more: http://viduthalai.in/page-7/87349.html#ixzz3CkAPGCkE

தமிழ் ஓவியா said...

ஆடு, கோழி பலியிட்டு காவல் நிலையங்களில் பரிகாரமாம்!


நாமக்கல், செப்.8-_ இடமாற்றம், மோசமான சம்பவங்கள் தொடர்ந்து நடப்பதால் அதிர்ச்சியடைந்த வேல கவுண்டம்பட்டி காவல்துறையினர் ஆடு, கோழி பலியிட்டு காவல் நிலையத்தில் ரத்தத்தைத் தெளித்து பரிகாரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டி காவல் நிலையத்தில் பணியாற்றிய காவல்துறையினர் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி தொடர்ச்சியாக வேறு இடங்களுக்கு மாறுதல் செய்யப்பட்டு வருகின்றனர்.

இங்கு ஆய்வாளர் பணியிடமும் காலியாகவே உள்ளது. தற்போது ஒரு துணை ஆய்வாளர் மற்றும் சில காவல் துறையினரே பணியில் உள்ளனர்.

அதிருப்தியிலும், மன உளைச்சலிலும்...

இந்தக் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் திருட்டு, சாலை விபத்து போன்ற மோசமான காரியங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. மேலும் ஒரு மாதத்திற்கு முன், காவல் நிலையத்திற்கு அருகிலேயே, காவல்துறையினரைக் கண்டித்து பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் இங்கு பணியாற்றும் காவல்துறையினர் மிகுந்த அதிருப்தியிலும், மன உளைச்சலிலும் உள்ளனர். இது போன்ற பிரச்சினைகளில் இருந்து தப்பிக்க வேலகவுண்டம்பட்டி காவல்துறையினர் நேற்று இரவு நடத்திய ரகசிய பூஜை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆடு, கோழிகளை பலியிட்டு ரகசிய பூஜை
காவல் நிலையத்தின் எல்லைக்குட்பட்ட பகுதியில் பிரச்சினைகள் நிகழாமல் இருக்கவேண்டும் என்பதற் காகவும், இடமாற்றத்தால் அலைக்கழிக்கப்படாமல் இருக்கவேண்டும் என்பதற்காகவும், காவல்துறையினர் நேற்று இரவு காவல் நிலையத்திற்கு அருகேயுள்ள காட்டுப்பகுதியில், ஆடு, கோழிகளை பலியிட்டு ரகசிய பூஜை நடத்தியதாகக் கூறப்படுகிறது. பின்னர் அந்த ரத்தத்தை காவல் நிலையத்தில் தெளித்துள்ளனர்.

இதைக் கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இது குறித்து காவல்துறையினர் கூறுகையில்,

கடந்த வாரம் நடந்த சாலை விபத்தில் 2 கல்லூரி மாணவர்கள் உயிரிழந்தனர். அந்த வாகனங்கள் காவல் நிலையத்தில்தான் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

அதில் படிந்துள்ள ரத்தக்கறையால் இரவு நேரங்களில், ஏதேனும் அசம்பாவிதங்கள் நிகழுமோ என்ற அச்சம் உள்ளதாம். செய்தியாளர்கள் படம் எடுக்க முடியாதவாறு...

எனவே, அதில் இருந்து விடுபடும் நோக்கில் தினமும் எலுமிச்சம் பழத்தை அறுத்து அதன் சாறை காவல் நிலையம் முழுவதும் தெளித்து வருகிறோம். இதனால் மன நிம்மதி ஏற்படுகிறது. மற்றபடி ஆடு, கோழிகளை பலியிடவில்லை? என்றனர்.

விவரம் அறிந்து செய்தியாளர்கள் படம் எடுக்க முடியாதவாறு அனைத்தையும் உடனடியாக அப்புறப்படுத்தியும் உள்ளனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.

Read more: http://viduthalai.in/page-8/87359.html#ixzz3CkAfdTKT

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?


கட்டுப்பாடு

உணவில், பேச்சில் கட்டுப்பாடு தேவை எல் லாவற்றிலும் கட்டுப்பா டாக இருக்கின்ற துறவி எல்லாத் துயரங்களிலி ருந்தும் விடுபட்டவனாக இருக்கிறான் என்கிறார் கவுதமப் புத்தர்.

இந்த அளவுகோலை வைத்து காஞ்சி சங்கராச் சாரியார்கள் ஜெயேந்திர ரையும் விஜயேந்திரரை யும் எந்தப் பட்டியலில் வைக்கலாம்? கொஞ்சம் மூளைக்கு வேலை கொடுங்கள் பார்க்கலாம்.

Read more: http://viduthalai.in/page1/87255.html#ixzz3CkBD7n00

தமிழ் ஓவியா said...

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் தொழிலாளர் பிரச்சினை!
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் ஒப்பந்தத் தொழிலாளர்களாகவே 13,000 தொழிலாளர்களின் குடும்பங்கள் வாடிக் கொண்டு வறுமையோடு போராடுவதை நெய்வேலி நிர்வாகமும், மத்திய அரசும் மனிதநேய அடிப்படையில் அணுகி, அவர்களை உடனடியாக நிரந்தரப்படுத்த முன் வர வேண்டுமென திராவிடர் கழகத்தின் சார்பில் கேட்டுக் கொள்வதாக திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் சுமார் 10 ஆண்டுகளுக்கும் மேலாக வெறும் ஒப்பந்தத் தொழி லாளர்களாகவே (Contract Labourers)
வைத்து, அவர்களை வழமையான ஊழியர்களாகவோ, நிரந்தரத் தொழிலாளர்களாகவோ ஆக்காமல் இருக்கும் அவலத்தையும் அநியாயத்தையும் கண்டித்து (இதேபோல திருச்சி B.H.E.L. என்ற கனரகத் தொழிற்சாலையிலும்கூட அநீதி தொடர்ந்த வண்ணம் உள்ளது) அங்கே பாதிக்கப்பட்டோர் தொடர்ந்து வேலை நிறுத்தம் செய்து வந்தனர்; இதனை எதிர்த்து வேலை நிறுத்தத்திற்குத் தடையாணையை பெற்றுள்ளனர்.

மனிதநேய அடிப்படையில் அணுக வேண்டிய பிரச்சினை இது.

நெய்வேலி நிறுவனம், நல்ல லாபத்தில் இயங்கும் நிறுவனம். இதற்கு அடிப்படைக் காரணம் உழைக்கும் தொழிலாளி வர்க்கம் அல்லவா? அவர்களது உழைப்பை - பணி நிரந்தரம் செய்யாது வெறும் ஒப்பந்தத் தொழிலாளர்களாகவே பல ஆண்டுகள் நீடிக்க வைப்பது கொடுமையிலும் கொடுமை அல்லவா?

காண்பதெல்லாம் தொழிலாளி செய்தான் - அவன்
காணத் தகுந்தது வறுமையோ?
பூணத் தகுந்தது பொறுமையோ? என்று கேட்டார் புரட்சிக் கவிஞர்.

நல்ல சமூக பொருளாதார நீதியை நிலை நாட்டும் அரசானால், அது தந்தை பெரியார் அவர்கள் அறிவுறுத்தியது போல - தொழிலாளர்களை, லாபத்தில் பங்கு பெற்ற பங்காளிகளாக ஆக்கிட முன் வர வேண்டும். மூலதனம் என்பது இவர்களுடைய உழைப்பும் தானே!
13,000 தொழிலாளர்களின் குடும்பங்கள் வாடிக் கொண்டு வறுமையோடு போராடுவதை வாடிக்கையாகவே வைத்திருக்க வேண்டும் என்று கருதுகிறதா அரசு?

நல்ல லாபத்தில் இயங்கும் இந்த நிறுவனம் இவர்களை நிரந்தரமாக்கி, வாழ்வளிப்பதனால் உற்பத்தி பெருகும் - காரணம் தொழிலாளர்கள் மேலும் உற்சாகத்துடன் பணி புரிவார்களே!

பெரிய அதிகாரிகள் அரிசி வாங்கும் கடையும் இந்த பரிதாபத்திற்குரிய தொழிலாளர்கள் வாங்கும் கடையும் ஒரே கடைதானே!
பசியும் இருவருக்கும் பொதுவானதுதானே! (வேண்டு மானால் அதிக சம்பளம் பெறுவோர்க்கு பசி சற்று குறைவாகக்கூட இருக்கும் என்பதே உண்மை).

எனவே, சட்டத்தின் சந்து பொந்துகளில் பதுங்கிக் கொண்டால், இப்பிரச்சினைக்கு எளிதில் தீர்வு காண முடியாது.
மனமிருந்தால் மார்க்கமுண்டு. தலைமை அதிகாரிகள் இதில் மனிதநேய உணர்வுடன் இப்பிரச்சினைக்குத் தீர்வு கண்டு, அந்த 13,000 குடும்பங்களுக்கு நல்வாழ்வு அளித்து, பெருமை தேடிக் கொள்ள முன்வர வேண்டும்.

நெய்வேலி நிறுவனம், B.H.E.L. போன்ற நவரத் தினங்கள் - தொழிலாளர் பிரச்சினையிலும் எடுத்துக் காட்டாக முன்னணியில் நிற்பது, அனைத்துத் தரப்பி னருக்கும் நல்லதல்லவா?

எனவே, காலந் தாழ்த்தாது உடனடித் தீர்வு காண முயன்று இரு சாராருக்கும் (Win-Win) வெற்றி என்ற நிலையில் நிர்வாகம் விட்டுக் கொடுத்து, ஒரு குடும்பத்தில் தன்முனைப்புக்கு எப்படி இடந்தரக் கூடாதோ அதே போல இப்பிரச்சினையில் அணுகு முறையை - நடைமுறைக்கு உகந்ததாக ஆக்கிட முன்வர வேண்டுமென நிர்வாகத் தினை - மத்திய அரசினை திராவிடர் கழகத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.


சென்னை

7.9.2014

கி.வீரமணி

தலைவர்,திராவிடர் கழகம்

Read more: http://viduthalai.in/page1/87246.html#ixzz3CkBQiWl5

vibration said...

அடியே தமிழ் ஓவியா எல்லாம் தெரிந்த மாதரி இந்து மதம் பற்றி எப்படி எழுதற. உனக்கு தைரியம் இருந்தால்
இஸ்லாம் மற்றும் கிருஸ்தவ மதம் பற்றி எழுதுவாயா சொல்லுடி?

vibration said...

அடியே தமிழ் ஓவியா எல்லாம் தெரிந்த மாதரி இந்து மதம் பற்றி எப்படி எழுதற. உனக்கு தைரியம் இருந்தால்
இஸ்லாம் மற்றும் கிருஸ்தவ மதம் பற்றி எழுதுவாயா சொல்லுடி?