புத்தரின் அறிவுரைகளை, நாகர்கள் நாடு
முழுவதும் பரப்பினார்கள். எனவே தான், நாம் அனைவரும் நாகர்கள் எனப்பட்டோம்.
நாகர்கள் பெருமளவில் நாகபுரியிலும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும்
வாழ்ந்ததாகத் தெரிகின்றது. எனவேதான், இந்நகரம் நாகபுரி எனப் பெயர்
பெற்றுள்ளது.
நாம் தன்மானத்திற்காகவே போராடுகின்றோம்.
மனித இனத்தையே சரியான பாதையை நோக்கி இட்டுச் செல்ல நாம் தயாராகிக்
கொண்டிருக் கின்றோம். இதற்காக எந்தத் தியாகத் தையும் செய்ய நாம் தயார்.
நமக்குரிய உரிமைகளை நாம் வென்றெடுப்போம். நாம் பவுத்தர்களாகி விட்ட
பிறகும், நமக்குள்ள அரசியல் உரிமைகளைப் பெற்றிட என்னால் முடியும். (`பாபா
சாகேப் அம்பேத்கர் வாழ்க! -_ விண் ணைப் பிளக்கும் அதிரொலியுடன்
கைதட்டல்கள்).
நான் இந்துவாகப் பிறந்திருந்தாலும் -_
இந்துவாகச் சாக மாட்டேன் என உறுதி ஏற்றேன். நேற்று அந்த வாக்கை
நிறைவேற்றினேன். எனக்கு அளவற்ற மகிழ்ச்சி; எல்லையற்ற இன்பம், கடுங்கொடிய
நரகத்திலிருந்து விடுதலை பெற்ற உளம்பூரிக்கும் உணர்வு. கண்மூடித்தனமான
தொண்டர்கள் எனக்குத் தேவை இல்லை. பவுத்த மார்க்கத்தில் இணைந்திடுபவர்கள்,
பவுத்த நெறிமுறைகளை மிக நன்றாகப் புரிந்து கொண்டு - உளமாற உணர்ந்து
பவுத்தத்தை ஏற்றிட வேண்டும். நாம் இந்துக்களாகவே இருப்பதால்தான், நம்மால்
எதையும் செய்ய முடியவில்லை.
இந்து மதத்தில் இருக்கும்வரை, எவரும் முன்னேற முடியாது.
இந்து மதத்தில் இருக்கும்வரை, எவரும் முன்னேற முடியாது.
ஏற்றத் தாழ்வு என்ற கட்டுமானத்தின்மேல்
கட்டப்பட்டுள்ள இந்து மதம், சிலருக்கு வேண்டுமானால் வசதியாக இருக்க லாம்.
குறிப்பாக, மேல் ஜாதியினருக்கு வசதியாக இருக்கலாம். ஆனால், மற்றவர்கள் நிலை
என்ன?
ஒரு பார்ப்பனப் பெண் -_ குழந்தையைப்
பெற்றால், அவள் குழந்தையைப் பெற்ற நாள் முதலே -_ எந்த உயர்நீதிமன்றத்தில்
நீதிபதியின் நாற்காலி காலியாக உள்ளதோ, எப்பொழுது காலியாகுமோ என்பதைப்
பற்றியே குறியாக இருக்கிறார். ஆனால், துப்புரவுப் பணி செய்யும் நம் சகோதரி,
ஒரு குழந்தை பெற்றாள் எனில், தாம் பெற்ற குழந்தைக்கும் ஒரு துடைப்பக்
கட்டை கிடைக்காதா? என்றே ஏங்கு கின்றாள்.
இப்படிப்பட்ட விந்தையான ஏற்பாடுகள், இந்து
மத ஜாதி அமைப்புகள் விளைவித்துள்ள கூறுகளின் வெளிப்பாடே யாகும். இதுபோன்ற
தொரு அமைப்பு முறையிலிருந்து நாம் எத்தகைய முன்னேற்றத்தைக் காண முடியும்?
பவுத்த மார்க்கத்தின் மூலம் மட்டுமே நாம்
மேம்பாடு அடைய முடியும். நம்மடைய வழியில் நாம் போய்க் கொண்டிருக்கின்றோம்.
மற்ற வர்கள் அவர்களுடைய வழியில் போகட்டும்.
நமக்கென ஒரு புதிய மார்க்கத்தை நாம்
கண்டுள்ளோம். இந்த நாள் ஒரு நம்பிக்கைக்குரிய நாள். வெற்றிக்கு வழிகண்ட
நாள். வளமான வாழ்விற்கு வழி கண்ட நாள். மாபெரும் விடுதலை நாள். இவ்வழி ஏதோ
புதிய வழி அல்ல. இவ்வழி வேறு எங்கிருந்தோ இங்கு இறக்குமதி
செய்யப்பட்டதுமல்ல. இம் மார்க்கம் இங்கிருந்தே தோன்றியது தான்.பவுத்தம்,
இந்தியாவில் இரண்டா யிரம் ஆண்டுகளுக்கும் மேலாக நிலை பெற்றிருக்கிறது.
புத்தரின் அறிவுரைகள் காலத்தால் அழிக்கப்படாதவை.
----------------------------------15.10.1956 அன்று,- அண்ணல் அம்பேத்கர்
நாகபுரியில் நிகழ்த்திய பேருரை. (இதே இடத்தில்தான் 14.10.1956 அன்று பத்து லட்சம் மக்களுடன் அம்பேத்கர் பவுத்தத்தைத் தழுவினார்)
நாகபுரியில் நிகழ்த்திய பேருரை. (இதே இடத்தில்தான் 14.10.1956 அன்று பத்து லட்சம் மக்களுடன் அம்பேத்கர் பவுத்தத்தைத் தழுவினார்)
68 comments:
இன்றைய ஆன்மிகம்?
ஸ்பெஷலிஸ்டா?
எனக்குத் திருமண மாகி 34 வருடங்கள் ஆகின்றன. எனது கணவர் பிற பெண்களுடன் தகாத உறவு வைத்துள்ளார். இவர் குடும்பத்திலுள்ள அனை வருமே இப்படி இருந் திருக்கிறார்கள். இது முற்றுப் பெற என்ன செய்ய வேண்டும்? - ஒரு வாசகி
இவர்கள் அனைவரின் ஜாதகத்திலும் சந்திரன் சுக்கிரனுடனோ மாந்தி யுடனோ அல்லது சனியு டனோ சேர்ந்திருந்தாலும், ஏழுக்குடையவர் நீசம், 9ஆம் அதிபதி நீசம், 2, 8ல் பாபிகள் என்று பல துர் விஷயங்கள் தென்படு கின்றன. மிகப் பெரிய அளவில் நவசண்டீ மஹா ஹோமத்தை தேவி உபாச கரைக் கொண்டு நடத்த வேண்டும். இந்த ஹோ மத்தை திருவொற்றியூர் வடிவடை அம்மன் தெற் குப் பிரகாரத்தில் அமைந்த ஸ்ரீ சங்கரமடத்தில் நடத் தலாம். நவாக்ஷரீ மந்திர தாயத்தை எல்லோரும் கட்டிக் கொள்ள வேண்டும். மறக்காமல் குலதெய்வ வழி பாட்டை தொடர்ந்து மூன்று மாதங்கள் நடத்துங்கள்.
ஆன்மீக இதழ் ஒன்றில் இப்படியொரு கேள்வி பதில்:
அவர் ஏற்கெனவே பக்தர்தான். நம்பிக்கை உள்ளவர்தான். அப்படிப் பட்டவர்க்கு இந்தக் கொடுமை, மன உளைச் சல் ஏற்படாமல் அவர் பக்தி செலுத்தும் எந்தக் கட வுளும் தடுக்கவில்லையே ஏன்? இந்த யோக்கியதை யில் இன்னொரு கோயிலைக் கை காட்டுவது ஏன்? திருவொற்றியூர் கடவுள் இதில் என்ன ஸ்பெ ஷலிஸ்டா?
Read more: http://viduthalai.in/e-paper/85372.html#ixzz39iNFpSeJ
மோடியின் செயல்களைக்கண்டு சிரிக்கிறார் கோவிந்தாச்சார்யா!
டில்லி, ஆக.7_- பாஜகவின் முன்னாள் தலைவரான கே.என். கோவிந்தாச்சார்யா தற் போதைய மோடியின் ஆட்சியின் செயல்பாடு களைக்கண்டு சிரிக்கிறார். இவர் மோடியை விமர் சனம் செய்து வருபவரா வார். மோடியின் நேபா ளப் பயணத்தை மட்டும் பாராட்டும் கோவிந்தாச் சார்யா மோடியின் பிற செயல்களைக்கண்டு சிரிக்கிறார்.
உலக வர்த்தக நிறுவ னம் குறித்த நிலைப்பாடு களில் உணவுப் பாதுகாப்பை வலியுறுத்துவது, நேரடி அன்னிய முதலீடு, காப்பீடு மற்றும் பாதுகாப்புத் துறை உட்பட அனைத்திலும் அமைதிகாத்து சர்ச்சைக் குரிய குழந்தையாக கட்சி யிலும், அரசியல் அவ தாரத்திலும் மோடி உள் ளதாக கோவிந்தாச்சார்யா குறிப்பிடுகிறார்.
கோவிந்தாச்சார்யா பாஜகவின் ஆட்சியில் நடைபெறக்கூடிய செயல் பாடுகள், புறக்கணிக்கும் செயல்கள் குறித்து கருத்தை வெளியிடுபவராக இருந்து வந்துள்ளார். அவர் தலை மையில் உள்ள ராஷ்டிரிய ஸ்வபிமான் மஞ்ச் அமைப்பு வாயிலாக வெளி யிட்டுள்ளார். மோடி அரசு குறித்த அளவீட்டுக் கருவி யாக(RADAR) தற்போது அவர் பதிவு செய்யத் தொடங்கியுள்ளார். சங் அமைப்பின் விசுவாசத்துக் குரிய அமைப்பாக. மிகப் பெரிய திட்டமான சுதே சியைக் கொண்டிருந்தா லும், சுதந்திரமாக தன் னுடைய விமர்சனங்களை செய்யக்கூடியவராக கோவிந் தாச்சார்யா உள்ளார்.
அவர் கூறும் போது, முந்தைய ஆட்சியின் நிலைகளைக் குறிப்பிட்டு வந்துள்ளேன். தற்போதைய ஆட்சியில் சரியானவற் றையும் அதேநேரத்தில் தவறாக உள்ளவற்றையும் சுட்டிக்காட்டும் உரிமை எனக்கு உள்ளது என்று கூறுகிறார்.
டிவிட்டரைப் பயன்படுத்துவது சட்ட விரோதமானது
பிரதமர் அலுவலகத் தின் அரசு அலுவலகப் பணிகளுக்கு டிவிட்டர் சமூக வலைத்தளத்தைப் பயன்படுத்துவதை, சட்ட விரோதமானது என்று கூறி டில்லி உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அவர், காப்பீட்டில் அன்னிய முதலீட்டை 49 விழுக்காட்டுக்கு உயர்த்தி உள்ளது உட்பட நேரடி அன்னிய முதலீட்டை (FDI-Foreign Direct Investment) அவர் கடுமையாக எதிர்ப்ப தாகவும் கூறுகிறார்.
மேலும் அவர், நேரடி அன்னிய முதலீடுகுறித்து எல்லோருமே பேசுகிறார் கள். நம்நாட்டிலிருந்து முதலீடுகளைக் கொண்டு போவதில் (FDO-Foreign
Direct Outflow) என்ன நடக் கிறது? நம் நாட்டிற்குள் வரும் நேரடி அன்னிய முதலீடு ஒன்றரை இலட் சம் கோடி ரூபாயாகவும், இந்தியாவிலிருந்து அயல் நாடுகளுக்கு வெளியேறக் கூடிய முதலீடுகள் எட்டு இலட்சம் கோடிகளாகவும் உள்ளன என்று கூறுகிறார்.
முந்தைய தேசிய ஜனநாயக கூட்டணி பாஜக ஆட்சிக்காலத்திலும் இந்தக்கொள்கைகளை முன்னெடுத்துச் செல்லும் போது அவர் எதிர்த் துள்ளார். அவர் கூறும் போது, நம் நாட்டில் தொடக்கத்தில் 26 விழுக் காட்டளவில் நேரடி அன் னிய முதலீடு இருந்தபோது, முதலீட்டுக்கான தளம் நன்றாகவே உருவாகுவ தாக இருந்தது. அதிலே கூட, முதலீட்டாளர்கள் இலாபத்துக்காக மட்டுமே வருகிறார்கள். இப்போது 49 விழுக்காட்டளவில் அன்னிய முதலீடு என்று வரும்போது பெரிதாக அவர்களைக் கவரப் போவதில்லை என்றார்.
பாதுகாப்பு உற்பத்தியில் நேரடி அன்னிய முதலீடு என்பது அவசரமாக முடிவு செய்யப்பட்டதாக உள்ளது. அத்தியாவசியமானவை மற்றும் அத்தியாவசியம் அற்றவை என்பதற் கிடையே தொழில்நுட்பங் கள் மற்றும் கருவிகளில் வேறுபாடுகள் இருக்க வேண்டும்.
தேசத்தின் பாதுகாப்பு, தேசத்தின் இறையாண்மை அற்பமாகக் கருதப்படக் கூடாது என்று கூறுகிறார். இப்படியான வேதனையில் உலக வர்த்தக நிறுவனத் துடனான அரசின் நிலைப்பாடு மகிழ்ச்சி அளிக்கக்கூடியதாக இருக் குமா? அவர் கூறும்போது, இன்னமும் நாம் இதில் தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டியவர் களாக இருக்கிறோம். ஆனாலும், அரசு உறுதி யான நிலைப்பாடு கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்றார்.
கடந்த வாரத்தில் இந்தியா உணவுக்கான மானியத்துக்கான தீர்வுக்காக உணவு வணிக ஒப்பந்தத்தைத் தடுத்துள் ளது.
விமர்சனம் செய்யக்கூடாதா?
அரசை விமர்சனம் செய்பவர் என்கிற குற்றச் சாட்டை கோவிந்தாச் சார்யா மறுக்கிறார். எதிர்க்கட்சியாக இருந்த போதும் இதே கொள்கை யளவில்தான் இருந்துள் ளார். அவர் கூறும்போது, அரசை நான் ஆதரிக்கும் போது எவருமே கவனத் தில் கொள்ளாமல் இருப் பது ஏன் என்று எனக்குத் தெரியவில்லை. மோடியின் நேபாளப் பயணம் நேர் மையானதாகவே கருது கிறேன். இரு நாடுகளுக் கிடையே உள்ள உறவு களில் அரசியல் பொரு ளாதார சாத்தியக் கூறுகள் குறித்த நல்ல குறிப்புகள் தென்படுகின்றன. குறிப்பாக இந்த ஒன்றில், நான் எப்படி அரசை எதிர்ப்ப வனாக இருக்க முடியும்? என்று கேட்டு சிரிக்கிறார் கோவிந்தாச்சார்யா.
Read more: http://viduthalai.in/e-paper/85373.html#ixzz39iNXn6CZ
மோடி சொன்னது....மோடி சொல்ல முடியாதது
மோடி சொன்னது....
ஹிரோஷிமா அணு குண்டு வீச்சில் பலியா னோரை நினைவு கூரும் அதே நேரத்தில் இது போன்ற சம்பவம் நடைபெறாத வகையில், உலக அமைதிக்காக பாடுபட உறுதிமொழி எடுத்துக் கொள்வோம்.
- பிரதமர் மோடி
மோடி சொல்ல முடியாதது
குஜராத்தில் இரண்டாயி ரத்துக்கும் மேற்பட்ட சிறுபான்மையினர் பலி யானது எனது ஆட்சி யில்தானே!
Read more: http://viduthalai.in/e-paper/85379.html#ixzz39iNhFrBZ
மரியாதை இல்லை
பிறர் உழைப்பில் படாடோப வாழ்க்கை நடத்துவதும், அதிகப்படி யான பொருள்களுக்கு அதிபதியாய் இருப்பதும் கண்ணியமான பெருமை யான வாழ்க்கை என்று கருதப்படு கின்ற மூட நம்பிக்கை ஒழியவேண் டும். இதில் எத்தகைய ஒரு கவுரவமும், மரியாதையும் இல்லை.
(விடுதலை, _ 22.6.1973)
Read more: http://viduthalai.in/page-2/85381.html#ixzz39iNsgr4r
உலக தாய்ப்பால் வாரம் ஆகஸ்ட் 1 - 7
குழந்தைக்கு தாய்ப்பால் வழங்குவதன் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் முதல் வாரம், உலக தாய்ப்பால் வாரமாக கடைபிடிக்கப்படுகிறது. திரவ தங்கம் என்று அழைக்கப்படும் தாய்ப்பாலின் மகத்துவத்தை உணர்த்த யுனிசெப் மற்றும் உலக சுகாதார அமைப்பின் மூலமாக முன்னெடுத்துச் செல்லப்படுவது தாய்ப் பால் வார விழா. முதன்முதலில் 1992ஆம் ஆண்டு கடைபிடிக்கப்பட்ட தாய்ப்பால் வாரம் தற்போது 170 நாடுகளில் பிரபலமடைந்துள்ளது.
உடலளவிலும், மனதளவிலும் ஆரோக்கியமான குழந்தைகளை உருவாக்குவதே உலக தாய்ப்பால் வாரம் கொண்டாடுவதன் நோக்கம்.குழந்தை பிறந்த முதல் இரண்டு தினங்களில் சுரக்கும் தாய்ப்பாலில் குழந்தைக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியும் ஊட்டச்சத்தும் கிடைத்துவிடும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்
குழந்தைகளுக்கு தாய்ப்பால்தான் தரவேண்டும் என்று, குழந்தை பெற்ற பெண்களுக்கு அவர்களது தாய்மார்கள் எடுத்துசொல்வதுண்டு. தாய்ப்பாலில் அப்படி என்னதான் சத்துக்கள் உள்ளன. தாய்ப்பாலில் மட்டும்தான் பச்சிளம் குழந்தைக்குத் தேவையான கால்சியமும், பாஸ்பரசும் 2 : 1 என்கிற விகிதத்தில் உள்ளது. இதுதான் குழந்தைக்கு சரியான அளவுகோல். பசும்பாலில் பாஸ்பரஸ் அதிகமாக இருக்கும். ஆனால், அது கால்சியத்துடன் இணைந்து சால்டாக மாறிவிடும். எனவே பசும்பாலில் உள்ள கால்சியம் பச்சிளம் குழந்தைகளுக்குப் பயன்படாத கால்சியமாகவே இருக்கிறது.
அது போலத்தான் பசும்பாலில் உள்ள புரத மூலக்கூறுகள் இரட்டை தன்மை கொண்டவை இதை ஆங்கிலத்தில் டை புரோட்டின் அல்லது சியாசின்வே (ceasinwhey) எனக்கூறுவர் ஆனால் பச்சிளம் குழந்தைக்குத் தேவையானதோ ஒற்றை மூலக்கூறு கொண்ட whey
புரதம் தான். இந்த whey புரதம் தாய்ப்பாலில் மட்டும்தான் உள்ளது. பசும்பாலில் பச்சிளம் குழந்தைகளுக்கு தேவையான சத்துக்கள் எதுவும் சரிவிகிதத்தில் இல்லாததனால் பச்சிளம் குழந்தையின் குடலில் அலர்ஜி உண்டாகும். இந்த அலர்ஜி குழந்தைகளின் மலக்குடலை புண்ணாக்கும் வாய்ப்புள்ளது. தாய்ப்பாலால் குழந்தைக்கு மேற் சொன்ன பிரச்சனைகள் எதுவும் வராது. தாய்ப்பாலில் உள்ள நுண்சத்துக்கள் குழந்தைக்குத் தேவையான நோய் எதிர்ப்புச் சக்தியைத் தரும். தாய்ப்பால் குடிக்கும் குழந்தைக்கு வயிற்றுவலி வருவதற்கான வாய்ப்புக்கள் மிகமிக குறைவு. பசும்பால் குடிக்கும் குழந்தை களுக்கு வயிற்றுவலி வருவதற்கான வாய்ப்புகள் மிகமிக அதிகம்.
தாய்ப்பாலில் இல்லாத சத்து!
ஆம். ஒரு குறை உண்டு. தாய்ப்பாலில் வைட்டமின் D இல்லை என்பது இரண்டு ஆண்டிற்கு முன் நிரூபிக்கப் பட்ட ஆராய்ச்சி உண்மை. எனவே குழந்தை பிறந்த உடனே வெறும் வைட்டமின் D சொட்டு மருந்தும் தரவேண்டும். குழந்தை பெற்ற பெண்களும் இதை கேட்டு வாங்க வேண்டும். நமது நாட்டு தட்பவெப்ப நிலையில் தான் வெயில் அதிகமாயிற்றே. நமக்கு இயற்கையாகவே வைட்டமின் D கிடைக்குமே. என நீங்கள் நினைத்தால் அது தவறு. நமது கருந்தோல் அவ்வளவு விரைவில் வைட்டமின் D யை உள் வாங்கும் தன்மை வாய்ந்ததாக இல்லை என்பதுதான் உண்மை.
ஒரு தாய்க்கு வைட்டமின் D பற்றாக் குறையாக இருந்தால், குழந்தைக்கும் வைட்டமின் D பற்றாக்குறையாகத்தான் இருக்கும். எனவே குழந்தை பிறந்த உடனே வைட்டமின் Dசொட்டுமருந்தும் கொடுத்துப் பழக்கவேண்டும். முக்கியமாக தாய்ப்பால் மறக்கும் பருவத்தில் குழந்தைகளுக்கு எண்ணெய் மற்றும் காரம் தவிர்த்த எளிதில் செரி மானம் ஆகும் உணவு வகைகளை தரும்போது குழந்தைகளின் செரிமான சக்தி பெருகி அது எதிர்காலத்தில் எந்தவித உணவு வகையையும் எளிதில் செரிமானம் செய்யும் வகையில் உணவு மண்டலத்தை வலுவாக்கி விடுகிறது.
Read more: http://viduthalai.in/page-2/85383.html#ixzz39iO0iwP1
இந்திய குடிமைப் பணி தேர்வு: சிக்கலுக்குத் தீர்வு என்ன?
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குடிமைப் பணி தேர்வு (அய்.ஏ.எஸ். உள் ளிட்டவை) இப்பொழுது பெரும் பிரச்சினைக்கு ஆளாகியிருக்கிறது.
இதற்குக் காரணம் இந்தியா முழுமையிலிருந்தும் தேர்வு எழுதக் கூடிய இரு பால் மாணவர்களுக்கும் பொதுவானதாக இல்லை என்பதுதான்.
மூன்று நிலைகளில் இதன் தேர்வு முறை இருந்து வருகிறது. ஆரம்பத் தேர்வு, இரண்டாம் நிலைத் தேர்வு, நேர்முகத் தேர்வு என்பவைதான் அந்த மூன்று நிலைகளும்.
இதில் ஆங்கிலத்திலும், இந்தியிலும் தான் தேர்வு எழுத முடியும் என்ற நிலை; இதுவே அடிப்படையில் தவறாகும். இந்தியைத் தாய்மொழியாகக் கொண்ட மக்களுக்குத் தேர்வு எழுதுவது எளிதாக இருக்கிறது. ஆனால் இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டிராத வர்கள் ஆங்கிலத்தில் எழுத வேண்டியுள்ளது. ஆங்கிலம் இந்த மக்களுக்குத் தாய்மொழி இல்லை.
குடிமைப் பயிற்சித் தேர்வில் இந்தி பேசும் பகுதியில் அதிகமாகத் தேர்வு செய்யப்படுவதற்கு இதுதான் முக்கிய காரணமாகும்.
இந்திய அரசமைப்புச் சட்டம் எட்டாவது அட்டவணையில் இடம் பெற்றுள்ள 22 மொழிகளிலும் அந்தத் தேர்வு எழுத வேண்டும் என்ற கோரிக்கை வலுப் பெற்று வருகிறது. இது ஒரு நியாயமான கோரிக்கை என்பது மேலெழுந்த வாரியாகப் பார்க்கும் பொழுதேகூட உணர முடியும்.
இப்பொழுது தமிழில் தேர்வு எழுதவில்லையா என்று கேட்கலாம்; உண்மைதான் அதில் உள்ள நிபந்தனை என்ன தெரியுமா?
குறைந்தபட்சம் அந்த மொழி பிரிவில் 25 பேர் தேர்வு எழுத வேண்டுமாம். இது என்ன முறை? அறிவியல் வளர்ந்த இந்தக் கால கட்டத்தில் இத்தகைய நிபந்தனைகள் தேவைதானா?
தமிழில் தேர்வு எழுத விரும்பும் ஒருவர் 25 பேர்களைச் சேர்க்க அலைந்து திரிய வேண்டுமா?
இதிலும் உள்ள இடர்ப்பாடு என்ன தெரியுமா? இந்தி, ஆங்கிலத்தைத் தவிர வேறு எந்த மொழியில் தேர்வு எழுதினாலும் கேள்வித்தாள் மட்டும் ஆங்கிலம், இந்தி மொழியில் மட்டும்தான் இருக்குமாம்.
சுற்றிச் சுற்றி வந்தாலும் இந்தியைத் தாய்மொழி யாகக் கொண்டவர்களுக்குக் கூடுதல் வசதியும், வாய்ப்பும், சலுகையும் உள்ள வகையில்தான் இந்தத் தேர்வு முறை இருந்து வருகிறது.
இப்பொழுது வடமாநில மாணவர்கள் புதியதோர் கோரிக்கையை முன் வைத்துப் போராடுகிறார்கள்; இது நாடாளுமன்றம் வரை எதிரொலிக்கிறது. இன்னும் சொல்லப் போனால் நாடாளுமன்றத்தில் இரு அவைகளுமே நடத்தப்பட முடியாத அளவுக்கு முடக்கப்பட்டு விட்டன.
தேர்வில் 400 மதிப்பெண்களில் 22 மதிப்பெண் களுக்குரிய வினாக்கள் ஆங்கில மொழியைச் சார்ந்ததாக இருக்கிறது. இது எங்களுக்கு இடையூறாக இருக்கிறது என்பதுதான் இந்தப் போராட்டத்தின் நோக்கமாகும். மத்திய அரசு இந்தக் கோரிக்கையை ஏற்று, குடிமைப் பணியில் ஆங்கிலத்திற்கென்று ஒதுக்கப்பட்ட பகுதியின் மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப் படாது என்று அறிவித்துள்ளது.
இன்னொரு பிரச்சினையும் இதன் உள்ளீட்டில் உண்டு மாற்றப்பட்டுள்ள தேர்வு முறை என்பது நகரப்புறங்களைச் சார்ந்த மாணவர்களுக்குத்தான் சாதகமாக உள்ளது. கிராமப்புறங்களைச் சேர்ந்தவர் களுக்கும், முதல் தலை முறையாகத் தேர்வு எழுதக் கூடியவர்களுக்கு கடினமாகவே உள்ளது.
எந்த ஒரு பிரச்சினையாக இருந்தாலும், அதில் சமூக நீதிப் பார்வை என்பது மிகவும் முக்கியமானது. அத் தகைய கண்ணோட்டம் இல்லையென்றால் சமூகத்தில் சம நிலை என்பது சாய்ந்த தராசாகத்தான் இருக்க முடியும்.
வடமாநிலங்களில் கல்லூரிகளிலேயே மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வைச் சந்திக்கும் வகையில் பாடத் திட்டங்களை வைத்துள்ளனர். இந்தி பேசும் பகுதிகளைச் சேர்ந்த வர்கள் அதிக எண்ணிக்கையில் தேர்ச்சி பெறுவதற்கு இது ஒரு முக்கிய காரணமாகும். இது பற்றி தமிழ்நாடு அரசும், கல்வித் துறையும் ஏன் சிந்திக்கக் கூடாது?
மத்திய அரசு நடத்தும் பணியாளர் தேர்வு ஆணையம் (Staff Selection Commission) நடத்தும் தேர்வு மூலம் அதிக எண்ணிக்கையில் பணியாளர் தேர்வு செய்யப்படுகின்றனர்.
அதில் மெட்ரிக் அளவில்தான் அவரவர் தாய் மொழியில் தேர்வு எழுத முடியும். பட்டதாரி அளவில் அந்த நிலை இல்லை என்பது பாரபட்சமானதாகும்.
அதுபற்றியும் மத்திய அரசு புதிய முடிவை அறிவிக்க வேண்டும். இந்தத் தேர்விலும் தென்னக மாநிலங்களைச் சேர்ந்தவர்களை விட இந்தி பேசும் வடமாநிலத்தவர்கள்தான் அதிக எண்ணிக்கையில் வெற்றி பெற்று வருகின்றனர்.
காரணம் மொழிப் பிரச்சினையே; அனைத்திந்திய தேர்வுகள் அனைத்தையும் இந்தியாவில் அங்கீகரிக்கப் பட்டுள்ள 22 மொழிகளிலுமே எழுதலாம் என்று பொதுவான சட்டம் பிறப்பிக்கப்பட்டால் ஆங்காங்கே அவ்வப் பொழுது இதுகுறித்த சர்ச்சைகளும், போராட் டங்களும் வெடிக்காதே!
நமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் இத்திசையில் குரலை உயர்த்த வேண்டும்; தமிழ்நாடு தந்தை பெரியாரின் சமூகநீதி மண்ணாயிற்றே - எடுத்துக் காட்டாகச் செயல்பட வேண்டாமா?
Read more: http://viduthalai.in/page-2/85382.html#ixzz39iPBbfHd
நேர்த்திக் கடன் என்ற பெயரில் தலையில் தேங்காய் உடைப்பதா? கரூரில் கண்டன ஆர்ப்பாட்டம்!
தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை!
கி.வீரமணி
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் வட்டம் மேட்டு மகாதானபுரத்தில் உள்ள மகாலட்சுமி கோவிலில் ஒவ் வொரு ஆண்டும் கோவில் திருவிழா என்ற பெயரில் இரு பால் பக்தர்களின் தலையில் தேங்காய் உடைக்கும் கொடுமை நடந்து கொண்டு வருகிறது.
நூற்றுக்கணக்கானவர்களின் தலைகளில் அக்கோவில் பூசாரி தேங்காய் உடைக்கிறார்.
குழந்தைகள், முதியவர்கள் என்று பாராமல் தேங்காய் உடைக்கப்படுகிறது. இவ்வாண்டும் இது நடைபெற்றுள்ளது.
நூற்றுக்கணக்கான பக்தர்களின் மண்டைகள் பிளந்து ரத்தம் பீறிட்டுக் கிளம்பியுள்ளது. பலருக்கு மண்டையில் தையல் போடும் அளவுக்கு விபரீதமாகியிருக்கிறது.
நரம்பியல் மருத்துவர்கள் இதுபோல் மண்டையில் தேங்காய் உடைப்பது ஆபத்தானது; மூளையைப் பாதிக்கக் கூடியது என்று கூறியுள்ளனர். பக்தி என்பதற்காக எதை வேண்டுமானாலும் செய்யலாமா? இந்தக் கொடுமையை அரசும், காவல்துறையும் கண்டும் காணாமல் இருக்கலாமா?
மதுரையையடுத்த பேரையூரில் குழிமாற்றுத் திருவிழா என்று சொல்லி குழந்தைகளைக் குழியில் போட்டு மூடும் காட்டுவிலங்காண்டித்தனத்தை எதிர்த்துத் திராவிடர் கழகம் குரல் கொடுத்தது; விடுதலையும் கண்டித்து எழுதியது.
அதன் காரணமாக அந்த நிகழ்ச்சி தடை செய்யப்பட்டு விட்டது. அதுபோலவே, கரூரில் நடக்கும் மண்டையில் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சியை அரசு தடை செய்ய வேண்டும்.
மக்கள் மத்தியில் விஞ்ஞான மனப்பான்மையை, சீர் திருத்த உணர்வைத் தூண்ட வேண்டியது ஒவ்வொரு குடிமகனின் கடமை என்று இந்திய அரசமைப்புச் சட்டம் (51-ஏ(எச்)) கூறுகிறது. குடிமகனுக்கே அடிப்படை உரிமை என்கிறபோது, அரசுக்குக் கூடுதல் பொறுப்புண்டு என்று சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.
இவ்வாண்டு நடந்து முடிந்துவிட்டது என்றாலும், வருங்காலத்தில் விஞ்ஞானத்துக்குப் புறம்பான இத்தகு விபரீதமான ஆபத்தான நிகழ்ச்சியைத் தடை செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறோம்.
அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காகவும், பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்திடவும் வரும் 13.8.2014 புதன் அன்று காலை 11 மணிக்கு கிருஷ்ணராயபுரத்தில் திராவிடர் கழகத்தின் சார்பில் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் வழக்குரைஞர் மானமிகு மு.க.இராசசேகரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்துக் கொள்கிறோம்!
திருச்சி, கரூர், லால்குடி மாவட்டக் கழகத் தோழர்கள் திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்.
சென்னை
6.8.2014
Read more: http://viduthalai.in/page1/85337.html#ixzz39iQ3HP5M
இன்றைய ஆன்மிகம்?
விஷ்ணுவின் பிள்ளை களான பிரம்மாவுக்கும், மன்மதனுக்கும் வழிபாடு கிடையாது. இவர்கள் லட்சுமியின் சம்பந்தம் இல்லாமல் பிறந்தவர்கள். விஷ்ணுவின் நாபித் தாமரையில் பிறந்ததால், கமலஜர் என்று பிரம்மா வுக்குப் பெயர். அவர், மன்மதனை மனதால் உண்டாக்கியதால், அவ னுக்கு மனசிஜன் என்று பெயர். இந்த இருவரும் இல்லாவிட்டால், உயிர் கள் மண்ணில் பிறக்க முடியாது. மன்மதனே, மலர்க்கணை தொடுத்து, ஒரு ஜீவனின் உற்பத்திக் குக் காரணமாகிறான். அந்த உயிர் புகுவதற் கான உடலைக் கொடுப்ப வர் பிரம்மா. இப்படி, உயிர்களை, பிறவிப் பிணி யில் சிக்கித் தத்தளிக்கச் செய்வதால், இவர்களுக்கு வழிபாடு இல்லாமல் போய்விட்டது என்று கூறுகிறார், காஞ்சிப் பெரியவர்.
படைப்புக் கடவு ளுக்கே - இந்தக் கதியா? எங்காவது பெண் சம்பந் தம் இல்லாமல் கொப் பூழ்கொடியில் பிறக்க முடியுமா? உயிர்களைப் படைத்தவன் பிறவிப் பிணியில் சிக்க வைக்கத் தானா? அப்படியானால், பெரியவாள் சங்கராச் சாரியாரின் பிறப்பும் அதைச் சார்ந்ததுதானா?
உளறல்களுக்கெல்லாம் ஓர் அளவேயில்லையா?
Read more: http://viduthalai.in/page1/85334.html#ixzz39iQBft5l
நரம்பியல் மருத்துவரின் எச்சரிக்கை
பக்தியின் பெயரால், மத மூடநம்பிக்கை காரணமாக தலையில் தேங்காய் உடைப்பதுபற்றி நரம்பியல் மருத்துவர் என்.திலோத்தம்மாள் கூறுவது:
தேங்காயைக் கையால் உடைக்கும் போது எலும்பு, சதைக்கு மட்டும்தான் பாதிப்பு ஏற்படும். ஆனால் தேங் காயைத் தலையில் உடைக்கும்போது மூளை பாதிக்கும். அதனால் பல பிரச்சினைகள் ஏற்படும். கராத்தே பயிற்சியில் கையால் உடைப்பதுபோல் செய்யலாமே என்று கேட்கலாம். தலையில் எலும்பு மட்டுமல்ல; உள்ளே மிகவும் மிருதுவான ஜெல்லி மாதிரி இருப்பதுதான் மூளை. ஒரு குழந்தையைத் தூக்கிக் குலுக்கினால்கூட மூளை ஆடலாம்.
மூளையில் மூன்று நிலை உண்டு. முதலில் அதிர்ச்சி (Concussion) அடுத்து அடிபடுவதால் கன்னிப்போதல் (Contusion) மூன்றாவது Nuronal Damage, Oxonal Damage.
ஆக்சோனல் என்பதுதான் அடிப்படை செல். அதாவது நரம்புகள் சிதறிப் போவது.
குத்துச் சண்டையில் பத்து அடி அடித்தவுடன் பார்த்தால், அடி வாங்கியவர் தள்ளாடித் தள்ளாடிப் போய் குடிகாரன் மாதிரி மயக்கமாகி விடுவார். இந்த நிலை தலையில் தேங்காய் உடைக்கும் பொழுதுகூட நிகழலாம்.
இதன் காரணமாக ரத்தக் குழாய் உடைந்து கட்டி ஏற்படலாம். இது உடனேயும் நடக்கலாம். தாமதமாகவும் ரத்தக் கட்டி வரலாம். இது உயிருக்கே ஆபத்தில் முடியக் கூடும், பக்கவாதம் உள்ளிட்ட பாதிப்புகளுக்கும் பிற்காலத்தில் இழுத்துச் செல்லலாம் என்று நரம்பியல் மருத்துவ நிபுணர் கூறியுள்ளார்.
Read more: http://viduthalai.in/page1/85337.html#ixzz39iQKyP13
வரலாற்றில் திரிபுவாதம்!
திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்தின் சார்பில் சென்னைப் பெரியார் திடலில் நடைபெற்ற சிறப்புக் கூட்டம் (5.8.2014) சிறப்பு வாய்ந்ததாகும். வரலாற்று நோக்கும் அதன் திரிபும் எனும் தலைப்பில் ஒழுங்கு செய்யப்பட்ட கூட்டம் அது.
கூட்டத்தில் கூறப்பட்ட அத்தனைக் கருத்துகளும், தகவல்களும் கருத்து என்னும் கண்களில் ஒத்திக் கொள்ளத்தகுந்த ஒளிமுத்துக்கள்.
இந்தியாவின் வரலாறு என்பது வேத நாகரிகம் என்பதைச் சாதிக்கப் பார்க்கும் போக்கு இருந்தது; உண்மை வரலாறு என்பது காவிரிக் கரையில் தொடங்கப்படவேண்டும் என்ற குரல் அண்மைக் காலமாகத்தான் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கிறது.
கூட்டத்தில் சிறப்புரை ஆற்றிய மேனாள் டில்லிப் பல்கலைக் கழக வரலாற்றுத் துறைப் பேராசிரியர் டி.கே.வெங்கட சுப்பிரமணியன் தெரிவித்த கருத்து முக்கியமானது.
வேதகால பிராமண நாகரிகம் இந்து நாகரிகமாக மாற்றப்பட்டது எப்படி என்பது சிந்தனைக்கு விருந்தளிக்கக் கூடியதாகும். வேத காலத்தில் மாட்டுக் கறியை ஆரியர்கள் உண்டார்கள் என்பதற்கு ஆதாரங்கள் உண்டு; இன்றோ பசுப் பாதுகாப்புப்பற்றிப் பேசுகிறார்கள் என்றும் குறிப்பிட்டார். புத்த மார்க்கத் திற்குப் பிறகுதான் ஆரியர்கள் தங்கள் உணவில் மாற்றம் செய்துகொண்டனர் என்று திராவிடர் கழகத் தலைவர் ஓர் வரலாற்று உண்மையை எடுத்துரைத்தார்.
வரலாறு என்பது உண்மையின் அடிப்படையிலா னது. புராணம் என்பது அத்தகையதல்ல - கற்பனை மயமானது. இரண்டையும் குழப்புவது ஆபத்தானதாகும்.
ஆனாலும், இந்திய வரலாறு என்பதற்கு கற்பனை வண்ணம் தீட்டி ஆரிய வரலாறாக மாற்றிட பல காலமாக முயன்று வருகின்றனர்.
சிந்துச் சமவெளி நாகரிகம் - திராவிடர் நாகரிகம் என்பதை அவர்கள் ஒப்புக்கொள்ள மறுக்கின்றனர். கடந்த பி.ஜே.பி. ஆட்சிக் காலத்தில் கணினிமூலம் திராவிடர்களுக்குரிய எருதினை ஆரியர்களுக்குரிய குதிரையாக மாற்றிக் காட்டவில்லையா?
தொல்பொருள் துறை ஏற்காத சரஸ்வதி நதி என்பது உண்மையானது என்று சாதிக்க முற்படவில்லையா?
இப்பொழுது மத்தியில் உள்ள பி.ஜே.பி. அரசு வரலாற்று ஆய்வுக் கழகத்திற்கு யாரை நியமித்துள் ளது? எல்லப்ப பிரகத சுதர்ஷன் ராவ் என்பவர்; இவர் யார் என்றால் ஆர்.எஸ்.எஸ்-இன் துணை அமைப் பான அகில் பாரதீய இதிஹாஸ் யோஜனாவின் (இந்திய வரலாற்றுப் பாதுகாப்பு) ஆந்திர மாநிலத் தலைவர் ஆவார்.
இந்தியாவில் உள்ள வரலாற்றுப் பேராசிரியர்கள் யார் இந்த ராவ் என்ற கேள்வியை எழுப்பியுள்ளனர். காரணம், வரலாற்றுப் பேராசிரியர்கள் இவரைத் தெரிந்துகொள்ளும் அளவுக்கு வரலாற்றுத் துறையில் எந்த சாதனையையும் செய்யாதவர் - குறிப்பிடத்தக்க அளவில் எந்த வரலாற்று நூலையும் எழுதாதவர். இவ ருக்குரிய ஒரே தகுதி நாக்பூரிலிருந்து (ஆர்.எஸ்.எஸ். தலைமைப் பீடத்திலிருந்து) வரும் ஆணைகளை அடியொற்றி அட்டியின்றி நிறைவேற்றுவதுதான்!
சிறப்புச் சொற்பொழிவாளரான திரு.டி.கே.வெங்கட சுப்பிரமணியன் அவர்கள் ஒரு கருத்தை அழகாகச் சொன்னார். அயோத்தியில் ராமன் பிறந்ததாகச் சொல் கிறார்களே - தொல்.பொருள் துறையின் ஆய்வுப் படி அந்தப் பகுதியில் 800 ஆண்டுகளுக்குமுன் மனிதர்கள் இருந்தார்கள் என்பதற்கான எந்தவிதத் தடயமும் கிடைக்கப் பெறவில்லை என்று கூறினார். அமெரிக்க அய்க்கிய நாட்டிலிருந்து கொண்டு இந்தியாவின் வரலாற்றை தங்கள் மனப்போக்கிற்கு ஏற்ப திரித்து எழுதுவோரையும் ஒரு பிடி பிடித்தார் பேராசிரியர் வெங்கட சுப்பிரமணியன்.
திராவிடர் இயக்கத்தைப்பற்றிக் குறிப்பிடும் பொழுது பகுத்தறிவு, சுயமரியாதை, சமத்துவம் இம்மூன்றும் அதன் முக்கிய கோட்பாடுகளாகும். எதையும், அது வரலாற்றுப் பிரச்சினையானாலும் பகுத்தறிவு அடிப்படையில் சிந்திக்கவேண்டும். பகுத் தறிவிற்கு ஒத்துவராத எதையும் நிராகரித்தே ஆக வேண்டும் - விஞ்ஞான ரீதியாக மெய்ப்பிக்கப்பட வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தினார்.
கடந்த முறை பி.ஜே.பி. ஆட்சிக்கு வந்தபோது, அவர்கள் என்ன செய்தார்கள்? பாடத் திட்டங்களி லிருந்து அவர்களுக்குப் பிடிக்காத, ஒத்துவராத பகுதி களை நீக்கச் செய்தார்கள் - அதனையும் தெளிவாக எடுத்துக் காட்டினார் பேராசிரியர் வெங்கட சுப்பிர மணியன்.
வரலாற்றைத் திரிபுக்கு உட்படுத்த முயலும் இந்தக் காலகட்டத்தில், திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்திற்கு இருக்கக்கூடிய முக்கியமான மேலான கடமையை, பொறுப்பை மய்யத்தின் புரவலர் மானமிகு டாக்டர் கி.வீரமணி அவர்கள் சுட்டிக்காட்டினார்.
மய்யத்தின் முக்கியப் பொறுப்பாளர்கள் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில், புரவலர் தெரிவித்த கருத்தினை முழுமையாக ஏற்றுக்கொண்டது குறிப்பிடத்தக்கதாகும்.
இந்தியத் துணைக் கண்டத்திலேயே சமுதாய மாற்றத்திற்கான - ஜாதி - தீண்டாமைக்கு எதிரான முதல் போராட்டம் தந்தை பெரியார் முன்னின்று நடத் திய வைக்கம் போராட்டமாகும். அதனை எப்படி யெல்லாம் வரலாற்றில் மறைக்கிறார்கள் என்று மய்யத் தின் புரவலர் சுட்டிக்காட்டியது கவனத்திற்குரியதாகும்.
குறிப்பாக சொல்லவேண்டுமானால், நேற்றைய சிறப்புக் கூட்டம் வரலாற்றுக் கண்ணோட்டத்தில் ஒரு விழிப்புணர்வை உண்டாக்கக் கூடியது என்பதில் அய்யமில்லை.
பி.ஜே.பி. ஆட்சியில் வரலாற்றைப் புரட்டும் வேலைகள் வேகமாக நடக்கலாம்; அதனை எதிர் கொள்ளும் சக்தியை தந்தை பெரியார் பிறந்த தமிழ் மண், இந்தியத் துணைக் கண்டத்திற்கே கொடுக்கும் என்பதில் அய்யமில்லை.
Read more: http://viduthalai.in/page1/85340.html#ixzz39iQY4Gvf
தொழிலாளி அன்று - பங்காளியே!
தொழிலாளி, முதலாளி தன்மை முறை இருக்கவே கூடாது. தொழிலாளர் சங்கம் என்கின்ற பெயரும் இருக்கக்கூடாது. ஒரு தொழிற்சாலைக்கு அங்கு வேலை செய்பவர்கள் பங்காளிகள் அல்லாமல், கூலிக்காரர்களாக இருப்பது என்பது முட்டாள்தனம், மானமற்றதனம் ஆகும்.
_ (குடிஅரசு, 6.7.1946)
Read more: http://viduthalai.in/page1/85339.html#ixzz39iQhzuye
கல்வியில் மதவெறி பிரகாஷ் காரத் எச்சரிக்கை
கொல்கத்தா, ஆக. 6_- நாடு முழுவதும் மதவெறி வன்முறை அபாயம் நிறைந்த அரசியல் சூழலை உருவாக்குவதில் ஆர்எஸ் எஸ் அமைப்பின் ஆலோ சனையோடு நரேந்திர மோடி அரசு தீவிரமாக இறங்கியுள்ளது என மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் குற்றம் சாட்டினார்.கல்வித்துறையிலும் சங்பரிவாரம் வெகுவேகமாக ஊடுருவி வருகிறது என் றும் அவர் சாடினார். மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மேற்குவங்க மாநிலக் குழு கூட்டம் கொல்கத் தாவில் முசாபர் அகமது பவனில் வெள்ளியன்று துவங்கியது. இக்கூட்டத்தில் பங் கேற்று உரை நிகழ்த்திய பொதுச்செயலாளர் பிரகாஷ் காரத், ஆர்எஸ் எஸ் அமைப்பின் அறிவுரை யோடு மோடி அரசு மேற் கொண்டுள்ள மதவெறி நடவடிக்கைகளுக்கு எதிராக தத்துவார்த்தப் போராட்டத்தை தீவிரப் படுத்த வேண்டிய கடமை நமக்கு உள்ளது என்று கட்சியின் அணிகளுக்கு அழைப்பு விடுத்தார்.
ஒருபுறம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் மத வெறி பதற்றத்தை உருவாக் குவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது; மறுபுறம் ஆர்எஸ்எஸ்சின் அறிவுரைப்படி கல்வித் துறையை மதவெறிமயமாக் கும் நடவடிக்கையும் துவங் கியுள்ளது. இன்றைக்கு இந்திய வரலாற்றியல் ஆய்வு நிறுவனத்தின் மிக உயர்ந்த தலைமைப் பொறுப்பில் அமர்ந்துள்ள ஒரு நபர், எந்தவிதமான வரலாற்று ஆய்வுப் பின் புலமும் இல்லாதவராக இருக்கிறார்; அதுமட் டுமல்ல அவர் இந்தியாவின் கேடுகெட்ட சாதிய கட்ட மைப்பை தீவிரமாக ஆதரித்தும் பேசுகிறார் என பிரகாஷ் காரத் சாடினார்.
மதவெறி சித்தாந்தத் திற்கு எதிரான தத்து வார்த்தப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இதர இடதுசாரி சக்திகளும் முன்னணிப் பங்கு வகிக்க வேண்டும் எனக்குறிப்பிட்ட அவர், இத்தகைய போராட்டத்தில் பல்வேறு இடதுசாரி கட்சிகளையும், இடதுசாரி தத்துவத்தின் மீது நம்பிக்கை கொண்ட ஏராளமான தனிநபர்களையும் ஒருங் கிணைக்கும் வேலையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செய்யும் எனக்குறிப் பிட்ட பிரகாஷ் காரத், ஒட்டுமொத்த இடதுசாரி சக்திகளின் ஓர் உறுதியான ஒற்றுமையே இன்றைய உடனடித் தேவை என்றும் குறிப்பிட்டார்.
பொருளாதாரத்துறையில் மோடி அரசு எந்தப் பாதையில் செல்கிறது என்பது தெள்ளத்தெளி வாக வெளிச்சத்திற்கு வந்து விட்டது எனத்தெரிவித்த பிரகாஷ் காரத், இன் சூரன்ஸ் துறையில் அந்நிய நேரடி முதலீட்டின் வரம் பை அதிகப்படுத்துவதன் மூலமாக அத்துறையை நாசமாக்குவதில் தீவிரமான முனைப்போடு இறங்கி யுள்ள மோடி அரசு, ஏற்கெனவே ரயில்வே, பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளை சீரழிக்கவும் முடிவு செய்துவிட்டது ; ஏராளமான பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை தனியாருக்கு தாரை வார்க் கவும் துவங்கிவிட்டார்கள்; பொதுத்துறை வங்கிகளில் அரசின் பங்குகளை வெறும் 51 சதவீதம் என்ற அளவிற்கு குறைத்து கிட்டத்தட்ட சரிபாதி அளவிற்கு தனியார்மய மாக்க முயற்சி மேற்கொண் டிருக்கிறார்கள்; நாட்டின் அனைத்து தொழிலாளர் சட்டங்களையும் திருத்தவும் சீர்குலைக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது என மோடி அரசின் தேச விரோத நடவடிக்கைகளை பிரகாஷ் காரத் பட்டிய லிட்டார்.
இத்தகைய நடவடிக்கை களை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தவும், அதை எதிர்த்து பெரும் போ ராட்டங்களை நடத்தவும் வர்க்க, வெகுஜன அமைப்பு கள் முக்கியப் பங்காற்ற வேண்டும் என அழைப்பு விடுத்த பிரகாஷ் காரத், சமூகத்தின் பல்வேறு பிரிவு களைச் சேர்ந்த மக்களின் உணர்வுகளையும் அவர்களி டையே எழும் கோரிக்கை களையும் மய்யப்படுத்தி போராட்டங்களுக்கு திட்ட மிடவேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத் தார்.இரண்டு நாட்கள் நடைபெற்ற, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மேற்குவங்க மாநிலக்குழு கூட்டத்தில் மாநிலச் செய லாளர் பிமன்பாசு உள் ளிட்ட தலைவர்கள் பங் கேற்றனர். ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று தேசிய ஒற்றுமை மற்றும் மத நல்லிணக்க நாளாக கடைப் பிடிப்பது என்றும், அன் றைய தினம் மேற்குவங்கம் முழுவதும் அனைத்து நகரங்கள் மற்றும் கிரா மங்களிலும் பத்து நிமிடம் மனிதச்சங்கிலி இயக்கத்தை நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.
மேற்குவங்கத்தில் மத்திய அரசின் மதவெறி மற்றும் நாசகர பொருளாதார நட வடிக்கைகளை எதிர்த்தும், மாநிலத்தில் ஆளும் மம்தா அரசின் ஜனநாயக விரோத ஆட்சியை எதிர்த்தும் இயக் கங்களையும் பிரச்சாரத் தையும் தீவிரப்படுத்துவது என்றும் முடிவு செய்யப் பட்டது.
Read more: http://viduthalai.in/page1/85317.html#ixzz39iRFPhFy
தீக்கதிர் குமரேசன் துணைவியார் மறைவு
தமிழர் தலைவர் மலர் மாலை வைத்து மரியாதை செலுத்தினார்
தீக்கதிர் நாளேட்டின் செய்தி ஆசிரியர் எ.குமரேசன் அவர்களின் துணைவியார் ரூபாவதி என்கிற பருவதலட்சுமி (வயது 56) அவர்கள் உடல்நலக்குறைவால் நேற்று (5.8.2014) மாலை சென்னை செயின்ட் தாமஸ் மவுண்ட் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் மறைவுற்றார் என்பதை அறிந்து வருந்துகிறோம். தகவல் அறிந்ததும் இன்று (6.8.2014) முற்பகல் 11.45 மணியளவில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் நேரில் சென்று மறைவுற்ற ரூபாவதி அம்மையார் உடலுக்கு மலர் மாலை வைத்து மரியாதை செய்தார். பின்னர் துணைவியாரை இழந்து வாடும் ஏ.குமரேசன் மற்றும் அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்தார். முன்னதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி, நக்கீரன்கோபால், சிபிஎம் மாநில குழு உறுப்பினர் சம்பத், தஞ்சை சீனுவாசன், உ.வாசுகி, விஜயா மற்றும் பத்திரியாகையாளர்கள் மலர் மாலை வைத்து மரியாதை செய்தனர்.
மறைவுற்ற ரூபாவதி அம்மையாரின் இறுதி நிகழ்வு இன்று (6.8.2014) பிற்பகல் 1 மணியளவில் சென்னை ஜாபர்கான் பேட்யில் உள்ள இடுகாட்டில் நடைபெற்றது.
Read more: http://viduthalai.in/page1/85316.html#ixzz39iRRZz6A
செல்லாது என்று நீதிமன்றம் சொன்ன நிலையிலும் மக்கள் ஏற்றுக்கொண்டு நடத்திய சுயமரியாதைத் திருமணங்கள்
தி.மு.க. மாணவரணிச் செயலாளர் இள.புகழேந்தி இல்ல மணவிழா
செல்லாது என்று நீதிமன்றம் சொன்ன நிலையிலும் மக்கள் ஏற்றுக்கொண்டு நடத்திய சுயமரியாதைத் திருமணங்கள்
சென்னை, ஆக் 6- சுயமரியாதைத் திருமணம் சட்டப்படி செல்லாது என்று நீதிமன்றம் சொன்னாலும் மக்கள் மன்றம் சுயமரியாதைத் திருமணத்தை ஏற்றுக்கொண்டு திருமணங் களை நடத்தியது என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள்.
18.7.2014 அன்று கடலூரில் திவான் பகதூர் சுப்பராயலு ரெட்டியார் திருமண அரங்கில் தி.மு.க. மாநில மாணவரணி செயலாளர் இள.புகழேந்தி - இரத்னமாலா ஆகியோரின் மகள் பு.ர.காவியச்செல்விக்கும், இராஜசேகரன் - சுமதி ஆகியோரின் மகன் இரா.ஜெயபிரகாசிற்கும் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் முன்னிலையில் தி.மு.க. பொருளாளர் தளபதி மு.க.ஸ்டாலின் வாழ்க்கை இணையேற்பு விழாவை நடத்தி வைத்தார். இள.புகழேந்தி வரவேற்புரை ஆற்றினார். மணமக்களை வாழ்த்தி எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், மா.சுப்பிரமணியம், டி.கே.எஸ்.இளங்கோவன், சற்குண பாண்டியன், வழக்குரைஞர் ஆலந்தூர் பாரதி, திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன், கழக செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு ஆகியோரது வாழ்த்துரைக்குப் பின்னர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார். நிறைவாக தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துரையாற்றினார். மணமகனின் தந்தை இராசசேகரன் நன்றி கூறினார்.
ஆசிரியர் ஆற்றிய உரை வருமாறு:
நீதிக்கட்சி காலத்திலிருந்து தொடர்ந்து செய்த பணி
இது எங்கள் மணவிழா; இவ்விழாவில் கலந்து கொள் வதில் இரட்டிப்பு மகிழ்ச்சியடைகிறோம். எங்களைப் பொறுத்தவரையில், திராவிடர் கழகத்தைப் பொறுத்த வரையில், இது அற்புதமான ஒரு இணைப்பு விழா என்று சொல்லவேண்டும். ஏனென்றால், நண்பர் இராஜசேகரன் அவர்களுடைய தந்தையார் அவர்கள், தந்தை பெரியாரின் கொள்கையை காலங்காலமாகக் கடைப்பிடித்து வாழ்ந்து, அதன்மூலமாக, மணமகன் ஜெயபிரகாஷ் அவர்களையும், அவருடைய தந்தையார் இராஜசேகரன் ஆகியோரை எல்லாம் பக்குவப்படுத்தி வளர்த்துள்ளார். பொதுவாக, அறிவாசான் தலைவர் தந்தை பெரியார் அவர்கள், திராவிடர் இயக்கம், நீதிக்கட்சி காலத்திலிருந்து தொடர்ந்து செய்த பணி எப்படிப்பட்ட அரிய பணி என்பதை, இங்கே அமர்ந்துள்ளவர்களைப் பார்த்தாலே உங்களுக்கு மிகத் தெளிவாகத் தெரியும்.
ஒரு காலத்தில், நம்மவர்களுக்கெல்லாம் படிப்பு வராது என்று சொன்னார்கள்; இந்த மேடையில் ஏராளமான மருத்துவர்கள், அதேபோல், பொறியாளர்கள், வழக்குரை ஞர்கள் அமர்ந்திருக்கிறார்கள். இவை இன்றைய கால கட்டம். இவையெல்லாம் எப்படி வந்தன? என்பதைப் பார்க்கவேண்டும்.
திராவிடத்தால் இதுவரை வீழ்ந்ததாக வரலாறு கிடையாது!
ஏனென்றால், இன்றைக்குக்கூட திராவிடத்தால் வீழ்ந் தோம் என்று சொல்லக்கூடிய புத்திசாலிகள் இருக்கிறார்கள். திராவிடத்தால் இதுவரை வீழ்ந்ததாக வரலாறு கிடையாது; எழுந்ததாகத்தான் இந்த நாட்டில் வரலாறு உண்டே தவிர, வேறு கிடையாது.
இந்த இரண்டு குடும்பங்களும் அற்புதமாக இணைந் திருக்கின்றன. அருமைச் சகோதரர் மறைந்தும் மறையாது நம் உள்ளங்களில் நிறைந்திருக்கின்ற சகோதரர் இளம் வழுதி அவர்கள், எங்களுக்கெல்லாம் முன்னோடியாகத் திகழ்ந்தவர்கள். அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் படிக்கும்பொழுதும் சரி, திராவிடர் இயக்கத்திலும் சரி, அதுபோலவே, நீதிமன்றத்தில் இந்த ஊர் வழக்குரைஞராக பணி தொடங்கிய நேரத்தில், ஒரே சீனியரிடம் நாங்கள் எல்லாம் தொழில் கற்றோம். ஒரே அலுவலகத்தைச் சார்ந்த வர்கள் நாங்கள்; பல்கலைக் கழகமும் ஒரே பல்கலைக் கழகம், இயக்கமும் அதே இயக்கம்; குடும்பமும் அதே குடும்பம் என்று சொல்வதைப்போன்று ஒன்றிணைந்த வர்கள்.
பிளாக் பிரின்ஸ் என்று சொல்வார்கள்
நம்முடைய புகழேந்தி அவர்களுடைய தாயார் அவர்கள் என்னை சந்தித்தார்கள்; மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது. இந்தக் குடும்பம் எப்படிப்பட்ட குடும்பம்; எத்தனை ஆண்டுகளாக அறிமுகம் என்கிறபோது, மணமக்கள் இரண்டு பேரும் கொள்கை ரீதியாக இணைந் திருக்கிறார்கள், இதனை எண்ணிப் பாருங்கள்; குறிஞ்சிப் பாடியில், பெரியசாமி நாடார் காலத்தில், அவருடைய பிள்ளைகள் எல்லோருமே இயக்கத்தில், பெரியார் கொள்கையில் பயணிப்பவர்கள்; தீவிரமாக ஈடுபடக் கூடியவர்கள். இளம்வழுதி அவர்கள்; அண்ணா அவர்கள், அண்ணா நினைவகத்தில் அவர்களைப் பார்க்கின்ற பொழுது, அழைக்கின்ற பெயரே பிளாக் பிரின்ஸ் என்று சொல்வார்கள். கறுப்பு இளவரசர்; இதுதான் அவர்கள் சூட்டிய பட்டம். அதுபோன்றே இன்றைக்கும் கறுப்புக்கும் பஞ்சமில்லாமல், மணமகன் கருப்புடை அணிந்திருக்கக் கூடிய அளவிற்கு வந்திருக்கிறார்கள் என்று சொன்னால், இந்தக் கருப்பு பாதிப்பு என்பதிருக்கிறதே, அது விடாது கருப்பு என்று சொல்லக்கூடிய அளவிற்கு வளர்ந்து கொண்டிருக்கிற ஒரு அற்புதமான ஒரு சூழல். எனவேதான், இது அவர்களுடைய காலத்தோடு நின்றுவிடவில்லை. இந்தப் பகுதியில் இருக்கக்கூடிய பழைய நண்பர்களும் சரி, மிகப்பெரிய அளவிற்கு, எல்லோரும் வந்து செல்வது நம்முடைய இளம்வழுதி அவர்களின் இல்லம்தான், அறிஞர் அண்ணா அவர்கள் வந்தாலும், இந்த இடத்தில் தங்கிவிட்டுத்தான், தொடர்ந்து தன்னுடைய பயணத்தை மேற்கொள்வார்கள். அதுபோலவே, கலைஞர் அவர்கள். சொல்லவேண்டிய அவசியமே இல்லை, அவருடைய உற்றத் தோழராகத்தான் நம்முடைய இளம்வழுதி அவர்கள் இருந்தார்கள்.
இன்றைக்கு எப்படி தளபதி அவர்கள் இளைஞர்களைத் தட்டிக்கொடுக்கிறார்களோ அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் அந்தக் காலத்தில் எங்களுக்கு எல்லாம் முன்னோடியாக தீவிரமாக அவர்கள் இருந்த நேரத்தில், ஆற்றல் வாய்ந்த பேச்சாளராக இருந்தார்கள். இந்தத் தகவல் மேடையில் அமர்ந்துள்ள பல பேருக்குத் தெரியாது. ஏன் இந்தக் குடும்பத்து பிள்ளை களில் கூட சில பேருக்குத் தெரியாத தகவல் என்ன வென்றால், பழைய திராவிட நாட்டைப் புரட்டிக் கொண்டே வந்தால், ஒரு வார அட்டை படத்தில் இளம் வழுதியினுடைய படம் அச்சிடப்பட்டிருக்கும். டாக்டர் இளம்வழுதி அவர்களுடைய படத்தைப் போட்டு, கீழே அண்ணா அவர்கள், இளைஞர்களைத் தட்டிக் கொடுத்து, இன்றைக்கு எப்படி தளபதி அவர்கள் இயக்கத்தை நோக்கு மிடலெல்லாம் வளர்க்கவேண்டும் என்று, இடையறாது, எவ்வளவு எதிர்ப்புகள், எவ்வளவு இன்னல்கள், எவ்வளவு தொல்லைகள் ஏற்பட்டாலும், அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல், செய்கிறார்களோ, அந்தப் பணியை, தந்தை பெரியார் அவர்கள் இருந்த காலத்தில், பேரறிஞர் அண்ணா அவர்கள் செய்தார்கள்.
அதற்கு அடையாளமாகத்தான், அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் மாணவராக இருந்த இளம்வழுதி அவர்கள், ஒரு பெரிய போர்த் தளபதி. கல்லூரிகளுக் கிடையே நடைபெற்ற பேச்சுப் போட்டியில், முதற் பரிசை வாங்குவது யார் என்றால், நம்முடைய தோழர் இளம்வழுதி அவர்களாகத்தான் இருப்பார்கள்.
பெரியார் நூலக ஆய்வகத்தில் வைத்திருக்கிறோம்
ஆகவே, அந்தக் காலத்தில், காங்கிரஸ் மாணவர்கள், கம்யூனிஸ்ட் மாணவர்கள் இப்படி பலவகையான மாண வர்கள் கலந்துகொண்ட ஒரு போட்டியில், அவர்கள் தன் னுடைய ஆற்றலால், முதற்பரிசான வெள்ளிக்கோப் பையைப் பெற்றார்கள். அதை அண்ணா அவர்கள் பாராட்டி, இளம்வழுதி அவர்களுடைய படத்தை, திராவிட நாடு அட்டைப் படத்தில் அச்சிட்டார்கள். அந்த இதழ், இந்தக் குடும்பத்தில் உள்ளவர்களிடம் இருக்காது; அந்த இதழ் இன்னமும்கூட எங்களிடம் இருக்கிறது. பெரியார் நூலக ஆய்வகத்தில் வைத்திருக்கிறோம்.
அருமையாக இங்கே நம்முடைய ஆர்.எஸ்.பாரதி அவர்கள் சொன்னார்கள், இன்றைக்கு 4000 வழக்குரை ஞர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தில் உறுப்பினர்களாக இருக்கிறார்கள் என்று. ஆனால், அன்றைக்கு வழக்குரை ஞர்களில் தமிழர்களைப் பார்ப்பதே அபூர்வம். தமிழர்களாக இருப்பவர்கள் அபூர்வம்தான். நாங்கள் தேடித் தேடிக் கண்டுபிடித்த ஒரே ஒருவர், எங்கள் சீனியராக இருந்த பார்த்தசாரதி நாயுடு அவர்கள்தான். அவரிடம் முதல் ஜூனியராக வழக்குரைஞராக இருந்தவர் இளம்வழுதி அவர்கள்.
அவருடைய அலுவலகத்தில்தான் நாங்கள் எல்லாம் இருக்கும்பொழுது, இளம்வழுதிஅவர்கள் ஒரு தலைசிறந்த வழக்குரைஞராக இந்த மாவட்டத்தில் திகழ்ந்தார்கள். இயக்க வரலாற்றில் அவருடைய பணி, மேலும் ஜொலித்தது. புதுபிரவாகத்தில் பார்ப்பனர்கள் தாக்கப்பட்டார்கள் என்று தூத்துக்குடியில் ஒரு பெரிய கலவரம் நடத்தப் பெற்றது. கே.வி.கே. சாமி போன்றவர் களையெல்லாம் குற்றவாளிகளாக ஆக்கினார்கள். அதற்காக வாதாட அன்றைய காலகட்டத்தில், வழக்குரை ஞர்கள் துணிச்சலாக, திராவிட முன்னேற்றக் கழகம் பிரிந்த பிறகு, திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய சார்பாக, வாதாடுவதற்கு, வழக்குரைஞர்கள் தேவைப்பட்டது. ஒரு சிலர் இருந்தார்கள்; தமிழ் இன உணர்வாளர்கள், தி.மு.க.விலே உறுப்பினர்களாக இருக்கக்கூடியவர்களில் அல்ல; அந்த அளவிற்கு வழக்குரைஞர்களுக்கு அப்போது பஞ்சம்; வழக்குரைஞர்களாக இருப்பவர்களுக்குத் துணி விற்குப் பஞ்சம். எனவே, அப்பேர்ப்பட்ட சூழ்நிலையில், ஒரே ஒருவர்தான் வழக்குரைஞராக அண்ணா அவர் களால் நியமிக்கப்பட்டு, அந்த வழக்கை நடத்துவார் என்று சொன்னார் என்றால், அது நம்முடைய கடலூர் இளம் வழுதி என்பது, பெருமைக்குரிய வரலாற்றுச் சுவடுகளாகும்.
ஜாதி மறுப்பல்ல; ஜாதி ஒழிப்புத் திருமணம்
எனவே, அப்படிப்பட்ட பாரம்பரியமான குடும்பம். அதுபோலவே, மணமகனாக இருக்கக்கூடிய ஜெயபிரகாஷ் அவர்களுடைய குடும்பம்; இந்தத் திருமணம் ஜாதி மறுப்புத் திருமணம் என்று சொல்வார்கள்; இல்லை, இல்லை, ஜாதி மறுப்பல்ல; நம்முடைய அமைப்புச் செயலாளர் சொன்னது போல, ஜாதி ஒழிப்புத் திருமணமாகும். ஜாதி ஒழிப்பு நிலைதான்; அது ஒரு கற்பனை; அவ்வளவுதானே தவிர, அய்யங்கார் ரத்தம் அய்யங்காருக்குச் சேருவதில்லை; முதலியார் ரத்தம் முதலியாருக்குச் சேருவதில்லை. உறுப்புகளைப் பொருத்துகின்ற நேரத்தில், வன்னியர் உறுப்பு வன்னியர்களுக்குத்தான்; அந்நியர்களுக்கு இல்லை என்று சொல்வதில்லை; ஆகவே, இது ஒரு கற்பனை; அவ்வளவுதானே தவிர, காலங்காலமாக இது மூளையில் ஏற்றப்பட்ட விலங்கு; அந்த விலங்கைத்தான் திராவிட இயக்கம் உடைத்துக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் தான், ஜாதி ஒழிந்த திருமணம்; மூட நம்பிக்கை ஒழிந்த வாழ்க்கை ஒப்பந்தம்; மக்கள் அறிவாளியாக இருக்கக் கூடாது என்பதற்காக, அறியாமையில் இருந்தால்தான், தங்களுக்குக் சவுகரியமாக இருக்கும் என்கிற காரணத் தினாலே, ஆரியத்தினால் புகுத்தப்பட்டதுதான். அதேநேரத் தில், தமிழர்கள் என்று சொன்னால், ஆடிப்பட்டம் தேடி விதை என்று சொல்லியிருக்கிறார்கள். இன்னுங்கேட்டால், விவசாயம்தான், வேளாண்மையில்தான் தமிழர்கள் சிறப்பாக விளங்கினார்கள். அந்த வேளாண்மை எப் பொழுது தொடங்கவேண்டும் என்று சொன்னால், ஆடிப் பட்டம் தேடி விதை என்று. ஆடிப்பட்டம் தேடி விதைக் கின்ற நேரத்தில், ஆடி மாதத்தில் அடி வைக்கக்கூடாது என்று சொல்கிறார்கள்; ஆனால், இப்பொழுது தாய்மார்கள் எல்லாம் அதிகமாக ஜவுளிக் கடைக்குள்ளேயே நுழைவது ஆடிமாதத்தில்தான். காரணம், ஆடித்தள்ளுபடி எப் பொழுது வருகிறது என்று பார்த்துதான், உள்ளே போகிறார்கள்.
எத்தனை சுயமரியாதைத் திருமணங்கள் நடைபெறுகின்றது என்பதுதான் இந்தக் கொள்கை வெற்றிக்கு அடையாளம்
இரண்டு மாதத்திற்கு முன்பு முரசொலியில் கலைஞர் அவர்கள் எழுதிய கடிதத்தில், தேர்தலில் நாங்கள் எத்தனை இடங்களில் வெற்றி பெற்றோம் என்பது முக்கியமல்ல; நம்முடைய இயக்கத்தைப் பொறுத்தவரையில், எத்தனை சுயமரியாதைத் திருமணங்கள் நடைபெறுகின்றது என்பது தான் இந்தக் கொள்கை வெற்றிக்கு அடையாளம் என்று சொன்னார்கள்.
நான் இங்கே பார்க்கின்றபொழுது, இந்தக் குடும்பம் எவ்வளவு அற்புதமான வாய்ப்பைப் பெற்றிருக்கிறது என்பதை எண்ணிப் பாருங்கள். எவ்வளவு பெரிய சிறப்பான வகையில், கொள்கைக் குடும்பமாக இன்னொரு குடும்பத் தைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்; அதன் காரணமாகத்தான் மூட நம்பிக்கைக்கு இடமில்லை என்று சொல்லக்கூடிய நிலை. இந்தக் கொள்கைகள் தாழ்ந்துவிட்டது; வீழ்ந்து விட்டது என்று நினைக்கவேண்டிய அவசியமில்லை. மூன்று தலைமுறையாக திரு.ராஜசேகரன் அவர்களுடைய குடும்பமும்; எப்படி இளம்வழுதி அவர்களுடைய குடும் பமும் இந்தக் கொள்கையைப் பின்பற்றி, ஜாதீயம் இன்றி வளர்ந்திருக்கிறார்களோ, அதேபோலத்தான், ஜெயப் பிரகாஷ் போன்றவர்களும் வளர்ந்திருக்கிறார்கள் என்ப தற்கு இது ஒரு அடையாளம். இந்த மணவிழா அழைப் பிதழில் போட்டிருக்கிறார்கள், அவர்களுடைய பிள்ளை களில் ஒருவர் டாக்டர் சிவபிரகாஷ், ஜெயப்பிரகாஷ் இங்கே மருமகன்; இன்னொருவர் எம்.பி.ஏ., பி.எச்டி., இவரும் பி.எச்டி., அதுபோல, இளநகை எம்.பி.ஏ., பி.எச்டி., இவை யெல்லாம் எப்படி வந்தது? சரசுவதி பூஜை கொண்டா டியதால் வரவில்லை நண்பர்களே, திராவிட இயக்கத்தி னுடைய அற்புதமான பணியின் காரணமாகத்தான் நண்பர் களே! சரசுவதி பூஜையினால் வந்திருந்தால், பாட்டி சரசு வதிக்குக் கையெழுத்துப் போடத் தெரிந்திருக்கவேண்டும்; ஆனால், பாட்டி சரசுவதிக்குக் கையெழுத்துப் போடத் தெரியாது; பெயர்த்தி சரசுவதி பொறியாளர் சரசுவதியாக இருக்கிறார்; டாக்டர் சரசுவதியாக இருக்கிறார்; வழக்குரை ஞர் சரசுவதியாக இருக்கிறார்; நீதிபதி சரசுவதியாக இருக்கிறார் என்றால், இதனை நீங்கள் நன்றாகப் புரிந்துகொள்ளவேண்டும் நண்பர்களே!
இந்த இயக்கம் என்ன செய்தது? நீதிக்கட்சி என்ன செய்தது? திராவிடர் கழகம் என்ன செய்தது? திராவிட முன் னேற்றக் கழகம் என்ன செய்தது? என்று கேட்கிறவர்கள், இவர்களைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவேண்டும். இவர்கள் கொள்கை நதியில் பூத்த மலர்கள்; காய்த்த கனிகள். எனவே நாம், இந்தக் கொள்கை வெற்றியை, இந்த மணவிழாவில் பார்க்கிறோம். இந்த மணமக்களைப் பொறுத்தவரையில், அதிகமாக சொல்லவேண்டிய அவசிய மில்லை. இந்த மணவிழாவைப் பொறுத்தவரையில், ஒரு காலத்தில், இந்த மணமுறை, அறிவாசான் தந்தை பெரியார் அவர்களால் உருவாக்கப் பெற்று, 85 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப் பெற்று, இன்றைக்கு உலகம் முழுவதும் இந்த மணமுறை ஏற்றுக்கொண்டு, நடைபெற்றுக் கொண் டிருக்கிறது. நம்முடைய சுபவீ அவர்கள் இங்கே சொன்னார், இந்த மணமக்கள் திருமணம் முடிந்து பின்லாந்திற்குச் செல்வார்கள்; அங்கே அவர்கள் பணியாற்றிக் கொண்டிருக் கிறார்கள்.
1934 இல் நடைபெற்ற சுயமரியாதைத் திருமணம் 1953 இல் செல்லாதாம்!
அந்த வகையில்தான் இந்த மணமுறையை அய்யா அவர்கள் புகுத்திய நேரத்தில், எதிர்ப்புகள் இருந்தன. இன்றைக்கோ ஒரு பெரிய மாநாடுபோல, இந்த அரங்கம் போதாமல், வெளியில் எல்லாம் நாற்காலிகள் போட்டிருக் கிறார்கள். ஒரு காலத்தில் இந்த மணவிழாவிற்கு எவ்வளவு எதிர்ப்பு இருந்தது தெரியுமா? சமுதாய எதிர்ப்பு மட்டுமல்ல, சட்ட மூலமாகவும் எதிர்ப்பு இருந்தது. அந்த சட்ட எதிர்ப்பு என்பதுதான், இரண்டு உயர்ஜாதி நீதிபதிகள், சென்னை உயர்நீதிமன்றத்தில் அமர்ந்துகொண்டு, 1953 ஆம் ஆண்டில், சுயமரியாதைத் திருமணம் செல்லாது என்று சொன்னார்கள். இதுபோல் நடைபெற்ற திருமணங்கள்; பல்லாயிரக்கணக்கான மக்கள்முன் நடைபெற்ற திருமணம்; பொதுக்கூட்டம் போட்டு நடைபெற்ற திருமணம்; திருச்சியில், கருணாநிதி பூங்கா என்று நீண்ட காலமாகவே இருக்கக்கூடிய ஒரு பூங்கா. அங்கே நகராட்சி பூங்காவில் நடைபெற்ற ஒரு திருமணம்; பல்லாயிரக்கணக்கான மக்கள் முன் நடைபெற்ற திருமணம் மட்டுமல்ல; தந்தை பெரியார் அவர்கள் நடத்திய திருமணம்; தந்தை பெரியார் அவர்கள் 1934 ஆம் ஆண்டு நடத்திய திருமணம்; அந்தத் திரு மணத்தை, சுயமரியாதைத் திருமண முறையில் நடத் தினார்கள் என்பதற்காக, இரண்டு நீதிபதிகள், இந்து சட்டப் படி அத்திருமணம் செல்லாது என்று தீர்ப்பளித்தார்கள்.
திருமணத்தை நடத்தி வைத்த தந்தை பெரியார் அவர்கள் சாட்சிக் கூண்டில் ஏறி, சாட்சி சொன்னார்கள். நான்தான் அந்தத் திருமணத்தை நடத்தி வைத்தேன். திருமணம் செய்துகொண்டவர்களுக்கு இரண்டு பெண்கள்; இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். 1934 ஆம் ஆண்டு நடைபெற்ற திருமணம், 1953 இல் செல்லாது என்று தீர்ப்பு வருகிறது. எவ்வளவு விசித்திரமான தீர்ப்பு.
நான்தான் நடத்தி வைத்தேன் என்று அய்யா அவர்கள் சொன்னால்கூட, நீங்கள் நடத்தி வைத்தாலும் ஏற்றுக் கொள்ள முடியாது. சடங்குகள் இல்லாத திருமணத்தை ஏற்றுக்கொள்ளமாட்டோம் என்றுதான், அவர்கள் செல்லாது என்று சொன்னார்கள்.
செல்லாது என்று சொன்ன பிறகுதான் நிறைய சுயமரியாதைத் திருமணங்கள் நடைபெற்றன!
ஆனால், செல்லாது என்று அப்படிக் குறிப்பிட்ட நிலைபற்றி யாரும் கவலைப்படவில்லை. அதற்குப் பிறகுதான், எங்களைப்போன்றவர்கள் பல பேர் திருமணம் செய்துகொண்டோம். எங்கள் திருமணங்கள் எல்லாம் செல்லாது என்கிற நிலையில்தான், எங்களுக்குப் பெரியார் வாக்கு செல்லும்; அதுதான் மிக முக்கியம்; அதுதான் எங்களுக்கு ஆணையே தவிர, சட்டம் மிக முக்கியமல்ல; சட்டம் பின்னால் வரும்; வராமல் போனாலும் எங்களுக்குக் கவலையில்லை. தந்தை பெரியார் அவர்களுடைய ஆணைதான் எங்களுக்குச் சட்டம்; இப்படி ஏற்றுக் கொண்டவர்கள்தான், சுயமரியாதை, திராவிட இயக்கத் தவர்கள். எண்ணற்ற திருமணங்கள், அண்ணா தலைமை யில், கலைஞர் தலைமையில், இன்னும் நெருக்கடி காலத் திலே எல்லாம் நிறைய சுயமரியாதைத் திருமணங்கள் நடைபெற்றன.
தந்தை பெரியாருக்குக் காணிக்கை
எனவே, அந்தக் காலத்தில்தான் மிகத் தெளிவாக வாக்களித்து, திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்ததின் விளைவாகத்தான், மிகப்பெரிய அளவிற்கு, பேரறிஞர் அண்ணாவின் தலைமையில் தமிழகத்தில் ஆட்சி ஏற்பட்டது. அந்த அமைச்சரவையே தந்தை பெரியாருக்குக் காணிக்கை என்று அண்ணா அவர்கள் சட்டமன்றத்தில் பிரகடனம் செய்தார்.
சுயமரியாதைத் திருமணங்கள் சட்டப்படி செல்லும் என்று ஒரு சட்டத்தைக் கொண்டு வந்தார்கள். உலக வரலாற்றில், சுயமரியாதைத் திருமணங்களை எந்தத் தலைவர் சொன்னாரோ, அந்தத் தலைவருடைய தொண்டர்களே ஆட்சிக்கு வந்து, சட்டம் செய்தது, அந்தத் தலைவரே நேரில் கண்ட ஒரே ஒரு வரலாற்றுச் சம்பவம்; உலக வரலாற்றில் திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய ஆட்சியில் நடந்த வரலாற்றுச் சம்பவமாகும்.
ஆகவே, அப்படிப்பட்ட நிலையில், இப்பொழுது நடைபெறக்கூடிய திருமணம் என்று சொன்னால், இது சமூகமும் ஏற்றுக்கொண்ட திருமணம்; சட்டமும் ஏற்றுக் கொண்ட திருமணம். அதைத்தான் நீங்கள் எண்ணிப் பார்க்கவேண்டும்.
அந்த வகையில், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோரை நினைக்காமல், அவர்கள் முன்னிலை வகிக்காமல், அவர்கள் தலைமை ஏற்காமல், தத்துவ ரீதியாக, எங்கேயும் சுயமரியாதைத் திருமணம் நடைபெறுவதாக வரலாறு கிடையாது.
அங்கீகரிக்கப்பட்ட மணவிழா!
அந்த வகையில்தான், செல்வங்கள் ஜெயபிரகாஷ் - காவியச்செல்வி ஆகியோருடைய மணவிழா நடைபெறு கிறது என்று சொன்னால், இந்த மணவிழா, இருவருடைய வாழ்க்கை ஒப்பந்த நிகழ்ச்சி இருக்கிறதே, இது சமு தாயத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது மட்டுமல்ல, சட்டத் தாலும், அங்கீகரிக்கப்பட்ட மணவிழாவாகும்.
கடந்த ஜூன் 5 ஆம் தேதி, ஜெர்மனியில் உள்ள கொலோன் பல்கலைக் கழகத்தில், ஈழத் தமிழர்கள் இருவருக்கு சுயமரியாதைத் திருமணத்தை நடத்தி வைத்தோம். பெரியாருடைய தத்துவங்கள் உலகம் முழுவதும் பரவிக் கொண்டிருக்கின்றது என்கிற முறையில், இங்கே இரண்டு குடும்பங்கள் அற்புதமான கொள்கைக் குடும்பங்களாக இணைந்திருக்கின்றன. எனவே, மனமுவந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
புரட்சிக்கவிஞர் அவர்கள் சொன்னார்கள்,
ஒருமனதாயினர் தோழி,
திருமண மக்கள் நன்குவாழி என்று
இதற்கு முன்னால், இரண்டு மனங்கள்; ஆனால், மண விழாவிற்குப் பிறகு, ஒரு மனம்தான்; ஒருவருடைய உணர்வுதான் இன்னொருவருடைய சிந்தனை என்பதைத் தான் புரட்சிக்கவிஞர் அவர்கள் அழகாக சொன்னார்கள்.
எனவே, நீங்கள் இருவரும் சிறப்பாக வாழுங்கள்; தந்தை பெரியார் அவர்கள் சொன்ன, எளிமை என்றைக்கும் உங்களுக்கு வழிகாட்டும்; தந்தை பெரியாருடைய பகுத் தறிவு என்றைக்கும் உங்களைப் பாதுகாக்கும். பேரறிஞர் அண்ணா அவர்கள் அருமையாகச் சொன்னார்கள், விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப்போவதில்லை; கெட்டுப் போகிறவர்கள் விட்டுக் கொடுப்பதில்லை என்று. எனவே, நீங்கள் இருவரும் விட்டுக் கொடுத்து வாழுங்கள்; சிறப்பாக வாழுங்கள். சிக்கல் எதுவாக இருந்தாலும், உங்களால் தீர்த்துக் கொள்ள முடியும். அதற்கு உதாரணம் வேறு எங்கும் செல்லவேண்டாம்; நம்முடைய தளபதி அவர்கள் இங்கே மாலை எடுத்துக் கொடுத்தார்கள்; நிறைய பேர் இங்கே மணமக்களை மறைத்துக்கொண்டு ஒளிப்படம் எடுத்துக் கொண்டிருந்த காரணத்தினால், உங்களில் பல பேர் பார்க்கக்கூடிய வாய்ப்பு இருந்திருக்காது. அதற்காக, நான் விளக்கமாக சொல்லுகிறேன், அவர் மாலை எடுத்துக்கொடுத்தார்; காவியச்செல்வியும் ஜெயபிரகாசின் கழுத்தில் போட்டார்; ஜெயப்பிரகாசும் காவியச்செல்வியின் கழுத்தில் மாலையைப் போட்டார். அதற்கடுத்து, இரண்டு பேரும் தாலிக்குப் பதிலாக, தங்கச் செயினை தளபதி கையில் கொடுத்தார்கள்; தளபதி அவர்களும், மணமகன் ஜெயபிரகாசிடம் கொடுத்து, காவியச்செல்வியின் கழுத்தில் போடச் சொன்னார்கள்; அப்படி அணிவிக்கும் நேரத்தில், காவியச்செல்வியின் தலையில் பூக்கள் இருந்த காரணத்தினால், கழுத்தில் போடுவதற்கு சிரமப்பட்டார். அந்தப் பிள்ளைகள் பகுத்தறிவு குடும்பத்தைச் சார்ந்த பிள்ளைகள் என்கிற காரணத்தினால், உடனே மணமகள் காவியச்செல்வி, பரவாயில்லை, கையில் கொடுங்கள் நான் வாங்கிக் கொள்கிறேன் என்று சொல்லி, செயினை வாங்கி கொண்டார். எனக்கேகூட, கொஞ்சம் வியப்பாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது. நான் மற்றவர்களின் முகத்தைப் பார்த்தேன், ஏதோ, மணமகன் போட்டால்தான் ஒரு நிறைவு ஏற்படும் என்பதைப்போல் பார்த்தார்கள்.
மணமகளின் கழுத்தில் இருக்கும் பூக்களைக் கொஞ்சம் அகற்றிவிடுங்கள்; பிறகு சங்கிலியைப் போடலாம் என்று சொன்னவுடன், மறுபடியும் அந்தச் சங்கிலியைப் போட்டார் மணமகன். இந்தச் சம்பவம் எப்பொழுதும் உங்களுக்கு நினைவில் இருக்கும். வாழ்க்கையில் சிக்கல் வந்தால், இந்நிகழ்வை நினைத்துக் கொள்ளுங்கள், சுலபமாக எந்தச் சிக்கலையும் தீர்த்து விடுவீர்கள் என்று சொல்லக் கூடிய வாய்ப்பைப் பெறுங்கள். நான் பொதுவாக மணவிழாவில், மணமக்களுக்கு அறிவுரை சொல்வதில்லை. ஏனென்றால், இந்தக் காலத்து மணமக்களுக்கு அறிவுரையும் தேவை யில்லை; கேட்ப தற்கும் அவர்கள் தயாராக இருப்பதில்லை. ஆகவேதான், அந்தச் சூழ்நிலையில், வேண்டுகோளை வைப்பதுதான் வழக்கம். மணமக்களுக்கு ஒரு வேண்டுகோளை விடுக்கிறேன்.
இல்லறத்தோடு நிறுத்தி விடாதீர்கள்; இல்லறம் அவசியம்; நல்லறமாகவும் இருக்கவேண்டியது அவசியம். இதற்கு முன்பு இல்லறம், துறவறம் என்று சொன்னார்கள்; ஆனால், பெரியார் அவர்கள், இல்லறம், தொண்டறம் என்று சொன்னார்கள். இல்லறத்தில் இருந்துகொண்ட தொண்டறத் தைச் செய்யலாம். பிறருக்குத் தொண்டு செய்வதில்தான் மகிழ்ச்சி; பிறருக்கு உதவி செய்வதில்தான் மிகப்பெரிய மனநிறைவு; அப்படிப்பட்ட மனநிறைவும், மகிழ்ச்சியும் ஏற்படவேண்டும் என்ற நிலையில், உங்களின் வாழ்க் கையை அமைத்துக் கொள்ளுங்கள். தன் பெண்டு, தன் பிள்ளை என்ற சின்னதோர் கடுகு உள்ளத்தோடு இல்லாமல், தொல்லுலக மக்களெல்லாம் நம்முடைய மக்கள் என்று, வாய்ப்பு கிடைக்கும்பொழுதெல்லாம் நீங்கள் உதவி செய்யுங்கள்.
உங்கள் பெற்றோரிடம் பாசம் காட்டுங்கள்; நன்றி காட்டுங்கள்!
இறுதியாக இன்னொரு வேண்டுகோள்; நீங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் உயருங்கள்; உயர்வீர்கள். மகிழ்ச்சியடைகிறோம். எடுத்துக்காட்டான மணமக்களாகத் திகழுங்கள், அது பெருமைக்குரியது. ஆனால், ஒன்றை நன்கு உணருங்கள்; பாசத்தை மறக்காதீர்கள்; உங்கள் பெற்றோர்களால்தான் நீங்கள் இவ்வளவு உயர்ந்த நிலைக்கு வந்திருக்கிறீர்கள். அவர்களுடைய உழைப்பு தான் உங்களை உயர்த்தியிருக்கிறது. எவ்வளவு உயர்ந் தாலும் உங்கள் பெற்றோரிடம் பாசம் காட்டுங்கள்; நன்றி காட்டுங்கள்; பெற்றோரிடம் மட்டுமல்ல, யார் யார் உங்கள் உயர்விற்கு உதவினார்களோ, அவர்களையெல்லாம் மறக்காதீர்கள்; அவர்களுக்கெல்லாம் உதவி செய்யுங்கள்; அதுதான் தொண்டறம் என்று சொல்லி, வாய்ப்பளித்த உங்களுக்கு நன்றி சொல்லி, விடைபெறுகிறேன்.
வாழ்க மணமக்கள்! வாழ்க பெரியார்!! வளர்க பகுத்தறிவு!!! என்று கூறி முடிக்கிறேன்.
நன்றி, வணக்கம்!
- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் உரையாற்றினார்.
Read more: http://viduthalai.in/page1/85313.html#ixzz39iReyk5d
பின்லாந்தில் பெரியார் பன்னாட்டு மய்யம்
ஏற்கெனவே ஒரு திருமணம், மணமகள் பரங்கிப்பேட்டையைச் சேர்ந்தவர்; மணமகன் திண்டுக்கல்லைச் சேர்ந்தவர். சிதம்பரத்தில் நடைபெற்ற திருமணத்திற்கு, நான் செல்ல முடியாத காரணத்தினால், நம்முடைய அறிவுக்கரசு அவர்களை அனுப்பினேன். அவர்கள் அந்த மணவிழா வினை நடத்தி வைத்தார். அந்த மணமக்களும் பின்லாந்தில் பணியாற்றுபவர்கள்தான். இன்னும் ஏராளமான நண்பர்கள் பின்லாந்தில் இருக்கிறார்கள். மணமகன் இங்கே பேசிக் கொண்டிருக்கும்பொழுது சொன்னார், நாங்கள் பின்லாந் திற்குச் சென்றதும், பெரியார் பன்னாட்டமைப்பை உருவாக் குவோம்; அதுதான் மிக முக்கியம் என்று சொன்னார்.
பெரியார் தத்துவம் என்பது, நமக்கு மட்டுமல்ல; இந்த ஊருக்கு மட்டுமல்ல; இந்த சமுதாயத்திற்கு மட்டுமல்ல; எங்கெல்லாம் சமூக அநீதி இருக்கிறதே, எங்கெங்கெல்லாம் மூட நம்பிக்கைகள் இருக்கிறதோ, எங்கெங்கெல்லாம் வாய்ப்பற்ற மக்கள் இருக்கிறார்களோ, அங்கெல்லாம் பூக்கும், வளரும் என்பதற்கு அடையாளமாகும்.
Read more: http://viduthalai.in/page1/85313.html#ixzz39iT2CabI
பகுத்தறிவு - சுயமரியாதை - சமத்துவம் திராவிடர் இயக்கம் மனித குல மேம்பாட்டிற்கு அளித்த நன்கொடைகள்!
சென்னை - பெரியார் திடலில் டில்லி பல்கலைக்கழக வரலாற்றுத்துறை மேனாள் பேராசிரியர் டி.கே.வெங்கட சுப்பிரமணியன் ஆய்வுரை!
திராவிட வரலாற்று ஆய்வு மய்ய சிறப்புக் கூட்டத்தில், புரவலர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றுகிறார் (சென்னை, 5.8.2014).
சென்னை, ஆக. 6- சென்னை - பெரியார் திடலில், திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்தின் சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. 5.8.2014 அன்று மாலையில் அன்னை மணியம்மையார் அரங்கத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்திற்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமை வகித்தார்.
வரலாற்று நோக்கும் - அதன் திரிபும் எனும் தலைப்பில் டில்லி பல்கலைக் கழக வரலாற்றுத்துறையின் மேனாள் பேராசிரி யர் முனைவர் டி.கே.வெங்கடசுப்பிரமணியன் சிறப்புரை ஆற் றினார். வரலாற்றுப் பேராசிரியர்கள் முனைவர் பெ.ஜெகதீசன் (மேனாள் துணை வேந்தர் பாரதிதாசன் பல்கலைக்கழகம் திருச்சி), முனைவர் த.ஜானகி (மேனாள் துணை வேந்தர், அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம், கொடைக்கானல்), முனைவர் ந.க.மங்களமுருகேசன் (மேனாள் பேராசிரியர், வரலாற்றுத்துறை, சென்னைப் பல்கலைக் கழகம்), பேராசிரியர், அ.கருணானந்தன் (மேனாள் பேராசிரியர், வரலாற்றுத்துறை, விவேகானந்தா கல்லூரி, சென்னை) ஆகியோர் உரையாற்றினர்.
முனைவர் பெ.ஜெகதீசன்
திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்தின் துணைத்தலைவர் பேராசிரியர் முனைவர் பெ.ஜெகதீசன் வருகை தந்த அனைவ ரையும் வரவேற்று உரையாற்றினார்.
இந்த நாட்டின் வரலாறு கங்கைக் கரையிலிருந்து எழுதப்பட்டிருக்கிறது. ஆனால் உண்மையில் வரலாறு காவிரிக் கரையிலிருந்துதான் எழுதப்பட்டிருக்க வேண்டும் என அறிஞர் அண்ணா கூறினார். இந்திய வரலாறு எழுதப்பட்டதில் தென்னிந்திய வரலாறு முழுமையாக எழுதப்படவில்லை. இன்னும் சொல்லப்போனால், இந்துத்துவா வரலாறு இந்திய வரலாறாக மாற்றி எழுதப்பட்டு வருகிறது.
இப்போது மாற்றி எழுதப்படுவதற்கு சில ஆதிக்க சக்திகள் பின்புலமாக இருக்கின்றன. வரலாறு என்பது எந்தவித ஆதிக்கத்திற்கும் உட்படாமல் எழுதப்பட வேண்டும். திராவிடர் வரலாறு முழுமையாக அப்படி எழுதப்பட வேண்டும். ஆனால் திராவிடர் வரலாற்றை முழுமையாக எழுதிட பல முட்டுக் கட்டைகள் நிலவுகின்றன. உண்மையினை மாற்றிச் சொல்லும் போக்கு தற்கால நிகழ்வாகவும் தொடர்கிறது. என்னை ஒரு வரலாற்று சொற்பொழிவுக் கூட்டத்திற்கு அழைத்திருந்தார்கள்.
நான் பேசியதற்கு முற்றிலும் மாறாகத் தலைப்பிட்டு அந்த செய்தியினை ஒரு தமிழ் நாளிதழ் வெளியிட்டு இருந்தது. அந்த நாளிதழுக்கு சாதகமாக நான் கூறியதாகச் செய்தி வெளியிட்டு எனக்கு அதில் பாராட்டும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. நடப்புக்கால நிகழ்ச்சி பற்றியே திரிபு செய்பவர்கள் இருக்கும்பொழுது திராவிடர் வரலாற்றை முழுமையாக எழுதிட எத்தகைய ஆதிக்க சக்திகளை நேர் கொள்ள வேண்டும் என்பது புலப்படும்.
இந்தச் சூழலில் திரிபுவாத வரலாற்றுப் புனைவை வெளிக்காட்டி, உண்மை வரலாறு எழுதப்படுவதற்கு வரலாற்று அறிஞர்கள் உறுதி மேற்கொண்டு அதற்காக உழைத்திட வேண்டும். - இவ்வாறு முனைவர் பெ.ஜெகதீசன் தமது உரையில் குறிப்பிட்டுள்ளார்.
முனைவர் ந.க.மங்களமுருகேசன்
திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்தின் செயலாளர் பேராசிரியர் முனைவர் ந.க.மங்களமுருகேசன் சிறப்புரை ஆற்றவிருந்த பேராசிரியர் முனைவர் டி.கே.வெங்கட சுப்பிரமணியன் பற்றி அறிமுக உரை ஆற்றினார்.
இந்தக் கூட்டத்தில் சிறப்புரை ஆற்றிட உள்ள பேராசிரியர் டி.கே.வெங்கடசுப்பிரமணியன் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர். சென்னை அரசு ஆடவர் கல்லூரியில் வரலாறு பட்டப்படிப்பும், சென்னை - மாநிலக் கல்லூரியில் முதுகலை பட்டமும் பெற்றவர்.
தமிழ்நாட்டில் பல இடங்களில் அரசுக் கல்லூரி வரலாற்று ஆசிரியராக பணி ஆற்றினார். இரு நூற்றாண்டு விழா கண்ட தமிழைக் கண்டெடுத்த கால்டுவெல் அவர்கள் எழுதிய திருநெல்வேலியின் வரலாற்றுக்கு அடுத்து நெல்லையின் வரலாறு என நூல் எழுதியவர்.
பேராசிரியர் டி.கே.வெங்கடசுப்பிரமணியன் டில்லிப் பல்கலைக்கழகத்தில் நிறைவாக பணியாற்றினார். வரலாற்றுத் துறை சார்ந்து அரசு அமைத்திட்ட பல்வேறு ஆராய்ச்சி அறிஞர்கள் குழுவில் அங்கம் பெற்றவர். இந்திய வரலாற்று ஆய்வு மன்றத்தில் (Indian Council of Historical Research) என்ற அமைப்பில் திறம்பட அங்கம் வகித்தவர்.
டில்லி வரலாற்றுக் குழு (Delhi Historical Group) எனும் அமைப் பினை பிற வரலாற்று அறிஞர்களுடன் சேர்ந்து வரலாறு பற்றிய பல்வேறு பதிவுகளை மேற்கொண்டு வருகிறார். இன்று திறம்பட பணியாற்றும் பல்வேறு வரலாற்று மாணவர்களை உருவாக் கியவர் இவர்.
- இவ்வாறு முனைவர் ந.க.மங்களமுருகேசன் தமது உரையில் குறிப்பிட்டார்.
முனைவர் த.ஜானகி
முன்னிலை வகித்த திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத் தின் துணைத் தலைவர் பேராசிரியர் முனைவர் த.ஜானகி தமது உரையில் குறிப்பிட்டதாவது:
வரலாறு உண்மையாக எழுதப்படவில்லை. நம்பிக்கை சார்ந்த செய்திகளே வரலாற்றுக் குறிப்புகளாக மாற்றப்பட்டுள் ளன. இருக்கின்ற வரலாறும் உண்மையாக, முழுமையாக இல்லை. நிலவுகின்ற வரலாற்றுக் குறிப்புகளில் உண்மை யானவை திரிபு செய்யப்படுகின்றன. மனிதகுல வரலாற்றில் மகளிரின் பங்கு ஏராளமாக இருப்பினும் அவை அனைத்தும் முழுமையாகப் பதிவு செய்யப்படவில்லை. அத்தகைய முழுமையான வரலாற்றுக் குறிப்பினைப் பதிவு செய்து, வரலாறு முழுமையாக்கப்பட வேண்டும்.
- இவ்வாறு முனைவர் ஜானகி உரையாற்றினார்.
பேராசிரியர் முனைவர் டி.கே.வெங்கடசுப்பிரமணியன் சிறப்புரை
டில்லிப் பல்கலைக்கழக வரலாற்றுத்துறையின் மேனாள் பேராசிரியர் முனைவர் டி.கே.வெங்கடசுப்பிரமணியன் வரலாற்று நோக்கும் - அதன் திரிபும் எனும் பொருளில் சிறப்புரை ஆற்றினார். சிறப்புரை - பேராசிரியர் தமது உரையில் குறிப்பிட்டதாவது:
வரலாற்று ஆய்வுத்துறையில் புராணக் கதைகள் வரலாற்றுக் குறிப்புகளாக மாற்றம் பெற்றிட திட்டமிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அத்தகைய உண்மைக்குப் புறம்பான மாற்றங்களைக் கொண்டு வருவதற்கு போலிக் கல்வியாளர்களை, ஆய்வுத்துறையில் ஆழமான அனுபவம் இல்லாதவர்கள் ஆராய்ச்சி படைப்புகளை அளிக்காதவர்கள் பொறுப்பார்களாக வரலாற்று ஆய்வு அமைப்புகளுக்கு நியமிக்கப்பட்டு வருகின்றனர்.
ஆங்கிலத்தில் ‘Myth’ என்று சொல்லப்படுவதற்கும் ‘History’ என்று கூறப்படுவதற்கும் அடிப்படையிலேயே வேறுபா டுகள் உள்ளன. Myth எனும் ஆங்கிலச் சொல்லிற்கான பொருள், இல் பொருள் கற்பனை, வெற்றுப் புனைந்துரை என தமிழ் அகராதி கூறுகிறது. ‘Mythology’ என்பதற்கு கற்பனைப் பழங்கதைக் கோவை எனப் பொருள் தருகிறது. ‘History’ என்பதற்கு பழங்கதை அல்லாத கற்பனை அல்லாத மெய்யான மெய்குறித்த விசாரணை என தமிழ் அகராதி கூறுகிறது.
வரலாற்றை எழுத முன்வரும் அறிஞர்கள் இந்த அடிப்படை வேறுபாடுகளை உணர்ந்து கொள்ளவேண்டும். இலக்கியத்தில் உள்ள குறிப்புகளைக் கொண்டு தொல்லியல் சான்றுகளோடு வரலாறு எழுதப்பட வேண்டும். பண்டைக்கால இந்திய வரலாற்றை கற்கும் மாணவர்களிடம் மூன்று முக்கிய கேள்விகளை முன்வைத்து விளக்கம் அளிக்கப்படும்.
1) வேதகால பிராமணியம் இந்து தர்மமாக மாறியது எப்போது?
2) வரலாற்றைப் படைப்பதில் புராணங்களின் பங்கு என்ன?
3) புராண காலத்தில் கருத்து பாங்கு எவ்வாறு இருந்தது?
கடந்த காலங்களில் இந்திய வரலாறு காவிமயமாக்கல் (Saffronisation) என்பதாக திரிபுவாத திருத்தம் செய்யப் பட்டது. தற்சமயம் இந்திய மயமாக்கல் (Indianisation) என்பதாக திரிபுவாதத் திருத்தம் செய்யப்பட்டு வருகிறது.
கடந்தக் காலத்தில் தேசிய கல்வி, ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கழகத்தின் (National Council of Educational Research and Training) சார்பாக சீரிய வரலாற்று அறிஞர்களான ஆர்.எஸ். சர்மா, ரொமிலா தாப்பர் மற்றும் சதீஷ் சந்திரா ஆகியோர் எழுதிய பாடப்புத்தகங்களில் வெறும் நம்பிக்கை சார்ந்த செய் திகள் இடம் பெறவேண்டும் என சில போலி கல்வியாளர்கள் குரல் கொடுத்தனர். அத்தகைய போலி கல்வியாளர்களின் படைப்புகள், நம்பிக்கை சார்ந்த குறிப்புகள் இன்று பள்ளிப் பாடமாக பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
வரலாற்றுக் கண்ணோட் டம் பெறாத கருத்துகளை வரலாறு எனக்கூறி மாணவர்கள் மனதில் உண்மைக்கும் மாறானவைகளைப் புகட்டுவதே இதன் அடிப்படை நோக்கம். இது திட்டமிட்ட வகையில் நடை பெற்று வருகிறது.
திராவிட நாகரிகமாகக் கருதப்படும் சிந்துவெளி நாகரிகத்தின் வரலாற்றுக் குறிப்புகளை மாற்றி வரலாற்றுக் குறிப்பில் இல்லாத சரஸ்வதி நதி இருந்ததான புனைவுகள் வரலாறாக மாறும் சூழலை உருவாக்கி வருகிறார்கள். பண்டைக்காலத்தில் பார்ப்பனர்கள் மாட்டுக்கறி புசித்தனர் எனும் வரலாற்று ஆதாரமிக்க செய்தியினை எந்த வித மறுப்பு ஆதாரமின்றி நீக்கிட குரல் கொடுத்தவருடைய புத்தகங்கள் இன்று பாடப்புத்தகங்களாக குஜராத்தில் இடம் பெற்றுள்ளன.
திராவிடர் இயக்கம் அளித்த நன்கொடை மூன்று: பகுத்தறி வுடன் சிந்தித்து செயல்படுவது, சுயமரியாதையுடன் வாழ்வது, சமத்துவம் போற்றுவது. மனித சமுதாயம் மேம்பட இந்த மூன்று பரிசுகளை திராவிடர் இயக்கம் வழங்கியுள்ளது.
இந்த அடிப்படையில் - பகுத்தறிவின் அடிப்படையில் வரலாறு உறுதிப்படுத்தப்பட வேண்டும். தொல்லியல் துறை ஆதாரமாக கழுதையின் எலும்பு கிடைத்தால், எந்தவித ஆய்வு ஆதாரமும் இல்லாமல் மத அடிப்படையில் அது குதிரையின் எலும்பு தான் எனக்கூறும் பிடிவாதப்போக்கினை வரலாறு எழுதப்படும் பொழுது நேர் கொள்ள வேண்டியுள்ளது.
இத்தகைய பிறவாதப்போக்கினைப் புறந்தள்ள பின்னணி ஆய்வு முறைகள் கூர்மையாக்கப்பட வேண்டும். புராண காலம் 5000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என நிறுவி விட்டால் குருசேத்திரப்போர் கி.மு. 3100 இல் நடைபெற்றதாக பதிவு செய்து விடலாம் என வரலாற்று திரிபுவாதிகள் நினைக் கிறார்கள். சில இடத்தில் 800 ஆண்டுகளுக்கு முன்னர் மனிதர் வாழ்ந்த தடமே இல்லை என ஆய்வுக்குறிப்புகள் கூறுகையில் 5000 ஆண்டுகளுக்கு முற்பட்ட மனித நிகழ்வுகளாக - புராணப் புனைவுகள் அந்த இடங்களில் நடந்ததாக மாற்றிட முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.
வரலாற்று திரிபுவாதி களின் தேவைக்கு ஏற்ப வரலாற்றை உருவாக்கித் தரும் வேலை களை செய்வதற்கு அமெரிக்காவில் அதற்காகவே செயல்பட்டு வரும் அமைப்புகளின் துணையினை தேடிப்பெறும் முயற்சிகளும் நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றன. பக்தி இயக்க வரலாற்றுப் பதிவில், வட புலத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் உள்ள வேறுபாடுகள் ஆய்வு செய்யப்படவேண்டும்.
தமிழ்நாட்டுக் கோயில்களில் மகாபாரத கதைகள் சொல்லும் வழக்கம் இருந்த வேளையில், வடபுலத்தில் இராமாயணக்கதை சொல்லும் பழக்கம் ஏன் இருந்தது எனும் நுண்ணிய வரலாற்று ஆய்வு மேற்கொள்ளப்படவேண்டும். உண்மையான, வரலாற்று அறிஞர்களின் விழிப்புணர்வுமிக்க செயல்பாட்டில்தான் வரலாற்று திரிபுவாதம் செய்யும் நிகழ்வுகள் நிறுத்தப்பட முடியும்.
வரலாற்று அறிஞர்களின் அத்தகைய செயல்களுக்கு திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம் போன்ற அமைப்பினர் துணை நின்றிட வேண்டும். - இவ்வாறு வரலாற்றுப் பேராசிரியர் டி.கே.வெங்கடசுப்பிரமணியன் தமது உரையில் குறிப்பிட்டுப் பேசினார்.
தமிழர் தலைவரின் நிறைவுரை
திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்தின் புரவலர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், சிறப்பு நிகழ்ச்சியில் நிறைவுரையினை ஆற்றினார். தமிழர் தலைவர் தமது உரையில் குறிப்பிட்டதாவது:
வரலாற்று திரிபு பல காலமாக சமூக ஆதிக்கவாதிகளால் திட்டமிட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. நேற்றுவரை வரலாற்று திரிபுவாதம் ஊர்ந்து வந்த நிலையிலிருந்து, இன்று ஏற்பட்டுள்ள அரசியல் ஆட்சி மாற்றங்களால் பறந்து வருகிறது; பரந்துபட்டு வருகிறது. வரலாற்று ஆதாரத்துடன் எழுதப்பட்ட குறிப்புகளை வெறும் நம்பிக்கை யின் அடிப்படையில் - மத நம்பிக்கையின் அடிப்படையில் நீக்கப்பட வேண்டும் என்று முன்பு குரல் கொடுத்து வந்த வர்கள் - இப்பொழுது அப்படிப்பட்ட நீக்கும் பணி சார்ந்த அதி கார அமைப்பில் தலைமைப் பொறுப்பில் அமர்த்தப் பட்டுள்ளார்கள்.
அண்ணல் அம்பேத்கர் சமூக விஞ்ஞானி மட்டுமல்ல வரலாற்று அறிஞரும் கூட. தாம் எழுதிய தீண்டத்தகாதோர் யார்? எனும் நூலில் (1948-இல் வெளிவந்தது) பார்ப்பனர்கள் மாட்டுக்கறி சாப்பிடும் வழக்கம் கொண்டிருந்தவர்கள் என குறிப்பிடுகிறார். பின்னாளில் பவுத்த மதக் கொள்கைகள் பரவலாக மக்களிடம் செல்வாக்குப் பெற்ற நிலையில் அதனுடைய கொள்கையான புலால் உண்ணாமையை சுவீகரித்துக் கொண்டதன் காரணமாக மாட்டுக்கறி உண்ணும் பழக்கத்தைக் கைவிட்டனர் என குறிப்பிடுகின்றார்.
மாட்டுக்கறி உட்கொண்ட பரம்பரையினர் என்பதை மறந்துவிட்டு, மாட்டுக்கறி உண்ணும் ஒடுக்கப்பட்ட மக்களையும் அவர்களது உணவு பழக்கத்தையும் சேர்த்து இழிவாகக் கருதிடும் நிலையினை தொடர்ந்தனர்; பார்ப்பனர் இன்று தொடர்ந்து வருகின்றனர். பார்ப்பனர்களின் இத்தகைய போக்கு பற்றி தந்தை பெரியார் கூறுவார்:
மாட்டுக்கறி விலை சற்றுக்குறைவாக இருக்கும் காரணத் தால் பொருளாதார வசதி இல்லாத ஒடுக்கப்பட்ட மக்கள் மாட்டுக்கறி சாப்பிடுவது இயல்பாகிறது. உணவுப் பழக்கத் தினை வைத்து ஒரு மனிதரை இழிவு படுத்துவது சரியல்ல, மாட்டுக்கறி உண்ணும் தாழ்த்தப்பட்ட மக்களை இழிவாகக் கருதும் பார்ப்பனர்கள், அந்நாளில் மாட்டுக்கறி சாப்பிட்ட வெள்ளைக்கார ஆட்சியாளர்களிடம் மட்டும் துரைமார்கள் எனச் சொல்லி மரியாதையுடன் நடந்து கொண்டது எப்படி?
பார்ப்பனர்களின் வேறுபட்ட அணுகுமுறையினைச் சுட்டிக்காட்டிய தந்தை பெரியாரின் கூற்று பார்ப்பனர்களின், ஒரே நேரத்தில் இழிவுபடுத்தியும் கனிவுபடுத்தியும் (Blowing Hot and Cold simultaneously) நடந்து கொள்ளும் இரட்டை அணுகுமுறையினைச் சுட்டிக்காட்டுகிறது.
பொதுவுடைமை இயக்கத்தின் தலைவர்களுள் ஒருவரான எஸ்.ஏ.டாங்கே தாம் எழுதிய பண்டைக்கால இந்தியா (1955-இல் வெளிவந்தது) நூலில் 19 ஆம் நூற்றாண்டிலிருந்து 20 ஆம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் சரித்திரம் எழுதும் அறிஞர்களின் கையில் சான்றுகள் இருந்ததை விட சித்தாந்தங்களே கருவிகளாகப் பயன்பட்டன என குறிப்பிட் டுள்ளார். சித்தாந்தங்கள் நம்பிக்கை சார்ந்தவை, அறிவியல் அடிப்படையிலான அணுகுமுறைக்கு அதில் இடமில்லை. வரலாறு என்பது அறிவியல் அடிப்படையில் சான்றுகளுடன் எழுதப்படவேண்டும்.
வரலாற்று திரிபுவாதம் காலங்காலமாக நடந்து வந்தாலும் அந்த திரிபு வாதத்திற்கு இடப்பட்ட பெயர்கள், மாற்றம் பெற்று புதிதானதாக எடுத்துக்காட்டப்படுகின்றன. இன்று நடைபெற்று வரும் வரலாற்று திரிபுவாதம் பண்பாட்டு தேசீயம் (Cultural Nationalism) என்பதன் பெயரால் பொய்யாக்கமாக நடை பெற்று வருகிறது.
சிந்துவெளி நாகரிகம் - அந்தக்காலத்தில் சிந்து நதியில் கட்டப்பட்ட அணைகளை ஆரியர்கள் உடைத்து நாகரிக வாழ்க்கை வாழ்ந்த மக்களை அவர்கள் நாகரிகத்தை அழித்தனர்.
வரலாற்றில் நிலைத்துவிட்ட இந்த ஆரியர் அழிவுக் குறிப்புகளை நீக்கிட, வரலாற்றில் இடம் பெறாத - புராணத்தில் மட்டுமே கூறப்பட்ட சரஸ்வதி நதியினை இருந்ததாகக் குறிப்பிட்டு அதற்கான புராண அடிப்படைக் குறிப்புகளைக் கொண்டு சிந்துவெளி நாகரிகத்தின் பெருமையினைக் குறைத் திடும் திரிபுவாதப்பணி திட்டமிட்டுச் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
கல்வியாளர்களில் குறிப்பாக குஜராத் மாநிலத்தில், பள்ளிக்கல்வி பயிலும் பிஞ்சு மாணவர்களின் நெஞ்சங்களில் மதம் சார்ந்த நச்சுக் கருத்துகளை விதைக்கத் தொடங்கி விட்டனர். பாசிசக் கொலைகாரன் ஹிட்லர் யூதர்களைப் பற்றி தவறாகக் கருதும் உளப்போக்கிளை மாணவர் மனதில் பதிந்திடும் வண்ணம், பாடத்திட்டங்களை அமைத்தது போல, இன்றுள்ள ஆட்சியாளர்கள் மனித நேயத்திற்கு மாறான இந்துத் துவா குறிப்புகளை மேன்மையானதாக்கும் பாடத்திட்டங் களை பள்ளிக்கல்வியில் புகுத்தத் தொடங்கி விட்டனர். அகண்ட பாரதம், வேதக் கணிதம் என பாடத்திட்டத்தில் புகுத்தத் தொடங்கிவிட்டனர்.
ஆர்.எஸ்.எஸ்.அமைப்பில் மக்களை பிரித்து ஒடுக்கிடும் - இந்துத்துவா கொள்கை நிறுவனரான கோல்வால்கர் படத்தினையும், ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்குப் பாடுபட்ட அண்ணல் அம்பேத்கர் படத்தினையும் பாடப் புத்தகத்தில் போட்டு நீரும் நெருப்பும் ஒன்று போல காட்டத் துவங்கியுள்ளனர். இந்த மண்ணில் பவுத்தம் ஆரியத்தால் அழிக்கப்பட்ட வரலாற்றிலிருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.
எதிராளியைப் பாராட்டி, அவர்தம் கருத்துகளை ஒத்துக்கொள்வது போல பாசாங்கு செய்து, இறுதியில் அந்தக் கொள்கைகளை கபளீகரம் செய்து அழித்து விடுவது ஆரியத் திற்கு கை வந்த கலை. ஆரியத்தின் இந்த அணுகுமுறையே Appreiciate, Accept and Assimilate (பாராட்டு, ஒத்துக் கொள், கபளீகரம் செய்) எனும் அடக்குமுறை கோட்பாடாக ‘‘Discerning Buddha’’ எனும் ஆங்கில நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே ஆதிக்கவாதிகள், முற்போக்கு கருத்துக்கு உடன்படும் பொழுது மிகவும் எச்சரிக்கையாக இருந்திடல் வேண்டும்.
வரலாறு எழுதுதல் - எழுதப்பட்ட வரலாற்றை திரிபுவாதம் செய்தல், என்பதிலிருந்து அடக்குமுறை காட்டும் ஆதிக்க வாதிகளின் செயலை முறியடித்திடும்படி உண்மையான வரலாறு எழுதும் பணி துவக்கப்பட வேண்டும். சமூக வரலாறு பற்றிய உண்மைகள், முழுமையான பதிவுகள் இதுவரை மேற் கொள்ளப்படவில்லை. அத்தகைய பணியினை மேற்கொள்ள வரலாற்று அறிஞர்கள் முன்வரவேண்டும். அப்பணிக்கு திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம் உறுதுணையாக, ஆதரவாக இருந்திடும்.
- இவ்வாறு தமிழர் தலைவர் தமது உரையில் கூறியுள்ளார்.
பேராசிரியர் அ.கருணானந்தன்
திராவிடர் வரலாற்று ஆய்வு மன்றத்தின் செயலாளர் பேராசிரியர் அ.கருணானந்தன் நிகழ்ச்சியின் நிறைவாக நன்றி கூறினார். அவர் தமது உரையில் குறிப்பிட்டதாவது:
கேரளத்தில் அந்நாளில் சனாதன இந்து தர்மத்தைக் கடைப்பிடித்த திருவாங்கூர் சமஸ்தான ஆட்சி நடைபெற்றது.
ஆங்கிலேயர் ஆட்சிக்குட்பட்ட மலபார் பகுதியும் இருந்தது. ஆனால் திருவாங்கூர் சமஸ்தானத்திற்கு உட்பட்ட பகுதியில் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தை சார்ந்த மகளிர் மேலாடை, ரவிக்கை அணியக்கூடாது என்ற இழிவான விதிமுறை நடைமுறையில் இருந்தது. இந்து சனாதன ஆட்சியில் மார்பக வரி (முலைவரி) என ஒடுக்கப்பட்ட சமுதாய மகளிரிடமிருந்து வசூலித்த வரலாறு இருக்கிறது.
இப்படிப்பட்ட இந்து சனாதனவாதிகள் இப்பொழுது வரலாற்று திரிபுவாதம் செய்திட பெரும் திட்டத்துடன் இருக்கிறார்கள். இதனை எதிர்த்து வரலாற்று அறிஞர்கள் செயல்பட முன்வரவேண்டும். இவ்வாறு பேராசிரியர் அ.கருணானந்தன் நன்றி உரையாற்றினார். திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்தின் பொருளாளர் வீ.குமரேசன் நிகழ்ச்சியில் இணைப்புரையினை வழங்கினார்.
திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்தின் சிறப்புக் கூட்டத்திற்கு கல்வியாளர்கள், எழுத்தாளர்கள், பல்வேறு பொதுநல அமைப் பினைச் சார்ந்தோர், பெரியார் இயக்கப் பொறுப்பாளர்கள் என பலதரப்பட்டவர்களும் திரளாக வருகை தந்திருந்தார்கள்.
Read more: http://viduthalai.in/page1/85358.html#ixzz39iTNbLQ5
கேரளத்தில் அந்நாளில் சனாதன இந்து தர்மத்தைக் கடைப்பிடித்த திருவாங்கூர் சமஸ்தான ஆட்சி நடைபெற்றது.
ஆங்கிலேயர் ஆட்சிக்குட்பட்ட மலபார் பகுதியும் இருந்தது. ஆனால் திருவாங்கூர் சமஸ்தானத்திற்கு உட்பட்ட பகுதியில் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தை சார்ந்த மகளிர் மேலாடை, ரவிக்கை அணியக்கூடாது என்ற இழிவான விதிமுறை நடைமுறையில் இருந்தது. இந்து சனாதன ஆட்சியில் மார்பக வரி (முலைவரி) என ஒடுக்கப்பட்ட சமுதாய மகளிரிடமிருந்து வசூலித்த வரலாறு இருக்கிறது.
இப்படிப்பட்ட இந்து சனாதனவாதிகள் இப்பொழுது வரலாற்று திரிபுவாதம் செய்திட பெரும் திட்டத்துடன் இருக்கிறார்கள். இதனை எதிர்த்து வரலாற்று அறிஞர்கள் செயல்பட முன்வரவேண்டும். இவ்வாறு பேராசிரியர் அ.கருணானந்தன் நன்றி உரையாற்றினார். திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்தின் பொருளாளர் வீ.குமரேசன் நிகழ்ச்சியில் இணைப்புரையினை வழங்கினார்.
திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்தின் சிறப்புக் கூட்டத்திற்கு கல்வியாளர்கள், எழுத்தாளர்கள், பல்வேறு பொதுநல அமைப் பினைச் சார்ந்தோர், பெரியார் இயக்கப் பொறுப்பாளர்கள் என பலதரப்பட்டவர்களும் திரளாக வருகை தந்திருந்தார்கள்.
Read more: http://viduthalai.in/page1/85358.html#ixzz39iTNbLQ5
மத்திய தேர்வாணைய அய்.ஏ.எஸ்., தேர்வில் வினாத்தாள் இந்தி, ஆங்கிலத்தில் இருப்பது சரியல்ல! - கி.வீரமணி
மத்திய தேர்வாணைய அய்.ஏ.எஸ்., தேர்வில் வினாத்தாள் இந்தி, ஆங்கிலத்தில் இருப்பது சரியல்ல!
அனைத்து மொழிகளிலும் வினாத்தாள் இருக்க வேண்டும் தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை
கி.வீரமணி
குடிமைப் பயிற்சி (அய்.ஏ.எஸ். உள்ளிட்டவை) தேர்வில் வினாத்தாள்கள் இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் மட்டும் இருப்பது இந்த இரு மொழிகளையும் தாய்மொழியாகக் கொள்ளாத மொழியினருக்கு இழைக்கப்படும் அநீதியாகும்; இந்திய அரசமைப்புச் சட்டத்தில் இடம் பெற்றுள்ள 22 மொழிகளிலும் வினாத்தாள்கள் இருக்க வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ். போன்ற தேர்வுகள் இந்திய நாட்டின் எல்லா மாநிலங்களிலும் வெவ்வேறு மொழி பேசுவோர் அனைவருக்கும் உண்மையான சமவாய்ப்பு அளித்து சமூகநீதியை (அரசியல் சட்டம் வழங்கியுள்ள உத்தரவாத உரிமை, சலுகை அல்ல) வழங்கிடும் வகையில் நடத்தப்படுதல் வேண்டும்.
அரசியல் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் அங்கீகரிக்கப்பட்ட மொழிகள் 22.
இவைகளில் சமஸ்கிருதம் தவிர மற்ற பல மொழிகளும் மக்களின் பேச்சு வழக்கில் உள்ளவை. எழுத்து வழக்கில் எல்லா மொழிகளும் உள்ளன. தமிழ் செம்மொழியாகும் என்ற அந்த அறிவிப்பு - கலைஞர் அவர்களின் பெரு முயற்சி காரணமாக வெளி வந்த பிறகே உயர் தனிச் செம்மொழி என்ற பட்டியலில் கூறப்பட்ட சமஸ்கிருதம் என்ற வடமொழிக்கும் அந்த சட்ட அங்கீகாரம் கிடைத்தது.
வட மாநில, மாணவர்களுக்குச் சாதகம்!
இந்நிலையில் மத்திய தேர்வாணையம் சார்பில் (U.P.S.C.) நடத்தப்படும் தேர்வுகளில் ஆங்கில அறிவை செம்மைப்படுத்தும் வகையில் தேர்வுக்கான பாடம் மிகக் கடினம் என்று பெரும்பாலான வடமொழிகளின் மாநில ஹிந்தி மாணவர்கள் கோரிக்கையை ஏற்று, அந்த மதிப்பெண் - தேர்வுக் கணக்கில் கொள்ளப்படாது என்று நேற்று நாடாளுமன்றத்தில் அத்துறைக்குரிய அமைச்சர் ஜிதேந்திர சிங் அவர்கள் அறிவித்து, இந்தி பேசும் வட மாநில மக்களின் நலனுக்கு வகை செய்து கொடுத்துள்ளார்.
அதே நேரத்தில், தமிழ்நாடு போன்ற மாநிலங்களிலிருந்து தேர்வெழுதும் மாணவர்களின் கோரிக்கையான அவரவர் தாய் மொழியில் கேள்வித் தாள்கள் அமைய வேண்டும் என்ற கோரிக்கையை ஏனோ இன்னமும் ஏற்கத் தயங்குகிறது மத்திய அரசு.
இதில் என்ன பெரிய சுமை மத்திய அரசுக்கு உள்ளது என்பது நமக்குப் புரியவில்லை! ஆங்கிலத்தின் கடுமையான சோதனையைக் குறைக்கலாமே தவிர, ஆங்கிலத்தின் மதிப்பெண் அறவே எடுத்துக் கொள்ளப்படாது என்றால், மறைமுகமாக இந்தியை ஆட்சிமொழியாக்கும் முயற்சி என்றே இதனை எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஆங்கிலத்தை அறவே விலக்குவதன் நோக்கம் என்ன?
ஆங்கிலம் அனைத்து மாநில மக்களுக்கு (கிழக்கு மாநிலங்களைத் தவிர) அதிகம் புழக்கத்தில் இல்லாத - தாய் மொழி போன்ற மொழி அல்ல என்பதால், போட்டி களிடையே, ஏற்படும் சோதனை அனைத்து மாநில மக்களுக்கும் சமமாகப் பிரித்து அளிக்கப்பட்டு, மற்ற வைகளைக் கொண்டு மதிப்பிடும் வாய்ப்பு அதன்மூலம் ஏற்படக்கூடும். (The disadvantage is equally distributed to all State Candidates) அதனை ஓரளவு கணக்கில் எடுத்துக் கொள்வது தேவையே. அது மட்டுமல்லாமல், பல மொழிகள் பேசும் மாநிலங்களிலிருந்து தேர்வு பெற்று, மூன்றில் ஒரு பகுதி, பிற மாநிலங்களுக்கு அய்.ஏ.எஸ். அய்.பி.எஸ். காரர்கள் அனுப்பப்படும்போது இணைப்பு மொழி அங் குள்ள நிர்வாகத்தோடு தொடர்புக்கு, மத்திய அரசின் தொடர்புக்கும், ஆங்கில மொழி அறிவு முக்கியம் அல்லவா?
ஆங்கிலத்தை அறவே ஒழித்து விட்டால் அந்த இடத்தில் உடனடியாக மாநில மொழிகள் இடம் பெறாது; மாறாக, ஹிந்தி மொழிதான் சந்தடி சாக்கில் கந்தப் பொடியைத் தூவிய கதையாக, உள்ளே நுழைந்த திடீர் மணமகனாகி விடும் நடைமுறை அபாயம் அதனுள் ஒளிந்திருக்கிறது என்பதை ஹிந்தியைத் தாய் மொழியாகக் கொள்ளாத மாநில மக்கள் (தமிழ் மக்கள் மட்டுமல்ல) உணர வேண்டும்.
அனைத்து மொழிகளிலும் கேள்வித்தாள் இருந் தால்தான் (உதாரணமாக தமிழ்நாட்டிலிருந்து செல்பவர் களுக்கு தமிழில் வினாத்தாள் அவசியம் தேவை) அவர் களால் அதனை நன்கு உள்வாங்கிக் கொண்டு எழுத முடியும்.
சமூகநீதி, சமவாய்ப்புத் தேவை!
இப்பிரச்சினையில் மத்திய அரசும், மத்திய தேர் வாணையமும், ஒரு தெளிவான, இணக்கமான அனைத்து மாநில,. மொழியாளர்களான இந்தியக் குடி மக்களுக்கு சமூகநீதி, சம வாய்ப்பு அதன் மூலம்தான் வாய்ப்புகள் ஏற்படுத்த முடியும்.
கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்
சென்னை
5.8.2014
சிங்கப்பூரில் மொழிப் பிரச்சினைக்கு தீர்வு எப்படி?
சிங்கப்பூரின் பிரபல ஆட்சியாளர் என்று புகழ் பெற்ற மேனாள் பிரதமரும், நவீன சிங்கப்பூரை உருவாக்கியவருமான திரு.லீக்வான்யூ அவர்கள் (91 வயது) தன் மொழிக் கொள்கைபற்றி எழுதியுள்ள ஒரு நூலில் ஆட்சி மொழி பற்றிய ஒரு முக்கிய (தேர்ந்த) கருத்துரையை அறிவித்துள்ளார்.
சிங்கப்பூரின் ஆட்சிமொழியாக எந்த மொழியை வைப்பது என்கிற பிரச்சினை எழுந்தபோது, பலரும் என்னிடம் மிகப்பெரும்பான்மையினரான (76 சதவிகிதம்) சீனர்கள் சிங்கப்பூர்காரர்களாக இருப்பதால் அந்த மொழியையே வைத்து விடலாம் என் றனர்.
நான் அது சரியான தீர்வாகாது. மலாய் மொழி பேசும் மலாய்க்காரர்கள் உள்ளனர். இந்தியர்கள் - தமிழர்கள் உள்ளனர். இந்நிலையில் பெரும்பான்மை யினர் மொழியை ஆட்சி மொழியாக வைத்தால் அது திணிக்கும் எண்ணத்தைத்தான் மற்றவர் களுக்கு ஏற்படுத்தும்.
எல்லா மொழிகளுக்கும் சமவாய்ப்பு சீனமொழி, மலாய்மொழி, தமிழ்மொழி, ஆங்கிலம் என்று அறிவிப்புகள் வந்தாலும் கூட ஆங்கிலம் என்றால் எல்லோருக்கும் உள்ள அதன் வசதிக் குறைவு (Disadvantage) சமமாக பகிர்ந்தளிக்கப்பட்டால் அனை வருக்கும் வசதிக் குறைவிலும் சமநிலை ஏற்படும் - இதனால் பாரபட்சமற்ற நிலையும் உருவாகும் என்று கூறி நடைமுறைப்படுத்தினார்.
இதன் மூலம் 72 சதவிகித சீனர்கள், 10 - 12 சதவிகித மலாய்கள், 8 சதவிகித இந்திய - தமிழர்கள் எல்லோ ருக்கும் சமவாய்ப்பை உறுதிப்படுத்தினார் என்பது இங்கே சுட்டிக் காட்டப்படவேண்டிய ஒன்றாகும். இந்த அணுகுமுறை சிங்கப்பூரைவிட இந்தியாவுக்கு அதிகமாகவே பொருந்தக் கூடியதாகும்.
Read more: http://viduthalai.in/page1/85279.html#ixzz39iU3Wagl
திருமணத் தடை
சென்னை தாம்பரம் - காஞ்சிபுரம் சாலையில் உள்ள முடிச்சூர் பிரம்ம வித்யாம்பிகை ஆலயத்தில் கொடுக்கப்படும் கொம்பு மஞ்சளை அம்பிகையின் சன்னிதியில் கட்டி பிரார்த் தனை செய்தால் திருமணத் தடை விலகும்.
திருமண தடை உள்ள வர்கள் திருச்செந்தூர் சுப்பிரமணியர் கோவிலில் உள்ள நாழிக் கிணற்றில் நீராடி, பின்னர் கடலில் குளித்து செந்தூரானை வணங்க வேண்டும். தொடர்ந்து அங்குள்ள வள்ளி குகையை தரிசித்தால் திருமணத் தடை நீங்கும்.
மதுரை - சோழவந்தான் சாலையில் பதினாறு கரவன துர்க்கை ஆலயம் உள்ளது. இந்த அம்மனுக்கு பூமாலை அணிவித்து, அதை பிர சாதமாகப் பெற்று அணிந்து, வீட்டில் வைத்து பூஜித்து வந்தால் விரைவில் திரு மண பாக்கியம் கிட்டும்.
கடவுள் என்ன திரு மணப் புரோக்கரா? திரு மணத் தடை என்று சொல் லப்படுகிறதே - அந்தத் தடையைப் போட்டவர் யாராம்?
Read more: http://viduthalai.in/page1/85272.html#ixzz39iUS7l7O
தீராது
பார்ப்பனீயமும், மத ஆதிக்கமும் ஒழிந்தாலொழிய இந்தியாவில் யோக்கிய மான ஆட்சியை ஒருக்காலும் நாம் எதிர் பார்க்க முடியாது. பார்ப்பனீய மதத்தாலும், ஆதிக்கத்தாலும் நமது நாட்டுக்கு ஏற்பட்ட கெடுதிகளை எவ்வளவு காலத்திற்கு எடுத்துச் சொன்னாலும் தீராது என்றுதான் சொல்லவேண்டும்.
- (குடிஅரசு, 17.8.1930)
Read more: http://viduthalai.in/page1/85264.html#ixzz39iUdICmu
பாதுகாப்பு வளையத்துக்குள் மதுரை மீனாட்சி
மதுரை, ஆக.8_ மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு ஏற்கெனவே தீவிரவாதிகளின் அச்சுறுத் தல் இருந்து வருகிறது. இதற்காக கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப் பட்டு துப்பாக்கி ஏந்திய காவல்துறையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு வரும் பெண் பக்தர் களை பெண் காவல் துறையினரும், ஆண் பக் தர்களை ஆண் காவல் துறையினரும் சோதனை செய்து உள்ளே அனுப்பு கின்றனர். மேலும் கேமரா, பைனாகுலர் மற்றும் செல் பேசி போன்ற பொருட் களை உள்ளே கொண்டு செல்ல தடை விதிக்கப் பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னை தலைமை செயலகத்திற்கு நேற்றுமுன்தினம் வெளி நாட்டில் இருந்து இ-மெயில் மூலம் மிரட்டல் கடிதம் வந்துள்ளது. அந்தக் கடிதத்தில், மீனாட்சி அம்மன் கோயிலில் வெடி குண்டு வெடிக்கும் என மிரட்டல் வாசகம் இருந்தது.
இந்தத் தகவல் உட னடியாக மதுரை காவல் துறையினருக்கு தெரிவிக் கப்பட்டது. இதையடுத்து, மதுரை காவல்துறையினர் கடுமையான பாதுகாப்பு வளையத்திற்குள் மீனாட்சி அம்மன் கோயில் கொண்டு வரப்பட்டது. தெற்கு, வடக்கு உள்ளிட்ட ஒவ்வொரு கோபுர வாசல் கள் மற்றும் அதனை சுற்றியுள்ள வெளி வீதி களில் காவல் துறையினர் தீவிர சோதனை நடத் தினர்.வெடிகுண்டு தடுப்பு மற்றும் செயல் இழப்பு பிரிவினரும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். வெளிவீதிகளில் அமைந் துள்ள கடைகள் முன்பாக பைக்குகள், சைக்கிள்கள் நிறுத்த தடை விதிக்கப்பட் டுள்ளது. உள்ளே நுழையும் பாதைகளில் ஒரு எஸ்.அய் மற்றும் 2 காவல் துறை யினர் வீதம் 24 மணிநேர மும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Read more: http://viduthalai.in/e-paper/85454.html#ixzz39r3WzTMc
சங்கராச்சாரிகள் மீதான கொலை வழக்கில் மேல் முறையீடு செய்யக் கூடாதாம்! குடியரசு தலைவரிடம் சுப்பிரமணியசாமி மனு
சங்கராச்சாரிகள் மீதான கொலை வழக்கில் மேல் முறையீடு செய்யக் கூடாதாம்!
குடியரசு தலைவரிடம் சுப்பிரமணியசாமி மனு
கழகத் தோழர்களே, பொது மக்களே குடியரசு தலைவருக்கு மின்னஞ்சல் அனுப்புவீர்!
தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள அறிக்கை சங்கரராமன் கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட காஞ்சி சங்கராச்சாரியார் மீதான வழக்கில் மேல் முறையீடு செய்யக் கூடாது என்று சுப்பிரமணியசாமி குடியரசு தலைவரிடம் மனு கொடுத்துள்ளது தொடர்பாக திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: காஞ்சி சங்கரராமன் கொலை வழக்கில் குற்றஞ் சாட்டப்பட்ட காஞ்சிபுரம் சங்கராச்சாரியார்கள் இருவர் உள்ளிட்டவர்கள் புதுவை நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இதனை எதிர்த்து மேல்முறையீடு செய்ய புதுவை மாநில அரசு முடிவு செய்ய ஆளுநரின் அனுமதியும் பெற்றாகி விட்டது. சட்ட நடவடிக்கைகள் துவங்கி விட்டன.
யார் இந்த சுப்பிரமணியசாமி?
இந்தச் சூழ்நிலையில் சுப்பிரமணிய சாமி என்பவர் அதிகப் பிரசங்கித்தனமாக குடியரசு தலைவரிடம் மனு ஒன்றினைக் கொடுத்துள்ளார்.
குடியரசுத் தலைவர் இந்த விவகாரத்தில் தலையிட்டு புதுவை ஆளுநர் அளித்த அனுமதியைத் திரும்பப் பெறச் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.
பிஜேபியின் நிலைப்பாடு என்ன?
பிஜேபியைச் சேர்ந்தவராக இருக்கும் நிலையில், இந்தக் கருத்து பி.ஜே.பி.யின் கருத்தா? அல்லது பிஜேபி தலைமையிலான அரசின் கருத்தா? என்ற சந்தேகம் பொது மக்களுக்கு ஏற்படுகிறது. இதுகுறித்து பிஜேபி கட்சி தலைமையும், பிஜேபி ஆட்சித் தலைமையும்தான் தெரிவிக்க வேண்டும்.
ஒரு மாநில ஆட்சி முடிவெடுத்து, ஆளுநரும் அனுமதியளித்த நிலையில், குடியரசுத் தலைவர் தலையிட வேண்டும் என்று ஒருவர் சொல்லுவது, அரசமைப்புச் சட்டத்தில் மதிப்புறு நிலையில் வைக்கப்பட்டுள்ள குடியரசுத் தலைவரையே தேவையில்லாத சிக்கலில் மாட்ட வைக்கும் முயற்சி என்று கருதிடவும் இடம் இருக்கிறது.
ஏற்கெனவே சில சாமியார்கள் தண்டிக்கப்பட்டுள்ளனரே!
ஏற்கெனவே பிரேமானந்தா சாமியார் என்பவர் செய்த குற்றங்களுக்காக இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப் பட்டது நித்யானந்த சாமியும் செய்த குற்றங்களுக்காக அவர்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. கைதும் செய்யப்பட்டார்.
தமிழர்கள் வேறு வகையில் சிந்திக்க மாட்டார்களா?
இப்படிப்பட்ட ஒரு சூழலில் காஞ்சி சங்கராச்சாரியார் மீது கொலை குற்றம் உள்ளிட்ட வழக்கில் மட்டும் வேறு விதமாக நடந்து கொள்ள வேண்டும் என்று நினைப்பதும், அதற்குக் குடியரசு தலைவரின் அதிகாரச் செல்வாக்குப் பயன்படுத்தப்பட வேண்டும் என்று கோருவதும் தமிழ்நாட்டு மக்களிடத்தில் வேறுவிதமான எண்ணத்தை ஏற்படுத்தும் என்பதில் அய்யமில்லை.
அதிலும் குறிப்பாக சங்கரராமன் கொலை வழக்கில் மொத்தம் 177 சாட்சிகளில் 77 பேர் பிறழ்சாட்சி என்பது இதற்கு முன் எங்கும் கேள்விப்பட்டிராத ஒன்றே!
கொலை செய்யப்பட்ட சங்கரராமன் குடும்பத்தினரும் இந்த வழக்கில் மேல் முறையீடு தேவை என்பதை வலி யுறுத்தியுள்ளனர்.
இந்தச் சூழ்நிலையில் குடியரசு தலைவர் இதில் விலகியிருப்பது அவசியம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்?
குடியரசு தலைவருக்கு மின்னஞ்சல் அனுப்புக
கழகத் தோழர்களும் நீதியின்மீது கவலையுள்ள பெரு மக்களும் கீழ்க்கண்ட முகவரிக்கு மின் அஞ்சல் மூலம் கீழ்க்கண்ட வாசகத்தை அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
The President of India
Rashtrapati Bhawan
New Delhi
Honourable Sir,
The decision by Puducherry Government to go in for appeal against the acquittal of 24 persons including Kanchi Jeyendra Saraswathi and Vijayendra Saraswathi, two Sankaracharyas, in the Sankararaman murder case should be allowed to proceed without any delay. Any effort to stall the appeal process would give wrong impression in the minds of people of Tamilnadu and Puducherry that Chief Executive of this country viz. President is intervening in the judicial process.
The family of the slain Sankararaman through this appeal, are eagerly expecting justice as also the people of Tamilnadu. The murder was committed in the Varadarajasamy Temple premise.
We once again request your goodself to kindly resist any effort by vested interests in stopping this appeal process.
Email address: secy.president@rb.nic.in and usgrievance@rb.nic.in
கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்
சென்னை 8.8.2014
Read more: http://viduthalai.in/e-paper/85456.html#ixzz39r5uTz5C
இன்றைய ஆன்மிகம்?
லட்சுமி விரதமாம்
இன்று லட்சுமி விரதமாம். இவள் தனத் தானிய செல்வங்களின் அதிபதியாம். மகாவிஷ் ணுவின் மனைவியான லட்சுமியின் அருள் வேண் டியும் தாலி பாக்கியம் நிலைக்கவும். இன்றைக் குப் பெண்கள் வரலட்சுமி விரதப் பூஜை நடத்து கிறார்களாம்.
ஆண்டுதோறும் இந்தப் பூஜையை நடத் திக் கொண்டு தானே இருக்கிறார்கள். தானிய விளைச்சல் ஓகோ என்றா இருக்கிறது? தமிழ் நாட்டை வறட்சி மாநில மாக அறிவிக்க வேண்டும் என்று வேண்டுகோள் வைக்கும் நிலைதானே?
சரி, இந்த லட்சுமிக் கடவுளைப்பற்றி காதம் பரி காவியம் என்ன கூறு கிறது? இமயமலைச் சாரலில் லட்சுமி கடவுள் தனித்திருந்தபோது ஒரு முனிபுங்கவரைக் காதலித்து ஒரு குழந் தையைப் பெற்றதற்காக, கணவனான விஷ்ணு சண்டாளப் பெண்ணாகப் பிறக்குமாறு சாபமிட் டான் என்று இருக்கிறதே இப்படிப்பட்ட ஒரு பெண் ணுக்காக வரலட்சுமி விரதம் ஒரு கேடா?
Read more: http://viduthalai.in/e-paper/85455.html#ixzz39r64JofX
தமிழ்நாட்டில் 1,442 பெண்கள் அரசுப் பள்ளிகளில் கழிப்பறை வசதி இல்லை என்பது அதிர்ச்சித் தகவல்
தமிழ்நாட்டில் 1,442 பெண்கள் அரசுப் பள்ளிகளில் கழிப்பறை வசதி இல்லை என்பது அதிர்ச்சித் தகவல்
தமிழ்நாடு அரசு முக்கிய கவனம் செலுத்த வேண்டும்
மத்திய அரசும் போதிய நிதி வசதி செய்து உதவிட வேண்டும் தமிழர் தலைவர் அறிக்கை
தமிழ்நாட்டில் அரசுப் பெண்கள் பள்ளிகளில்கூட போதுமான எண்ணிக்கையில் கழிப்பறை வசதியில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ள தகவலைச் சுட்டிக்காட்டி உடனடியாக தமிழ்நாடு அரசு இதில் கவனம் செலுத்தி கழிப்பறை வசதிகளைச் செய்து தர வேண்டும் என்றும், கல்வியைப் பொதுப் பட்டியலுக்குக் கொண்டு சென்றுள்ள மத்திய அரசு இதற்கு நிதி உதவி செய்திட வேண்டும் என்றும் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
தமிழ்நாட்டில் 15 சதவிகித - அரசுப் பள்ளிகளில் அதாவது 5,720 அரசுப் பள்ளிகளில் - கழிப்பறை வசதிகள் இல்லை என்று மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் (மத்திய கல்வி அமைச்சகம்) வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகிறது!
இதில் - அதாவது 5,720இல் 1442 பள்ளிகள் - பெண்களுக் கான பள்ளிகள் என்பது அதிர்ச்சிக்கும், வேதனைக்கும் உரியதாக இருக்கிறது!
தமிழ்நாட்டில் மொத்தம் 37,002 அரசு பள்ளிகள் உள்ளன.
பெண்கள் பள்ளிகளிலும் கழிப்பறை வசதியில்லையா?
இதில் 1,442 பெண்கள் பள்ளிகளிலும் 4,278 ஆண்கள் பள்ளிகளிலும் கழிப்பறை வசதி இல்லை என்ற அவலம் உடனடியாக மாற்றப்பட வேண்டும்.
2013-2014-இல் எடுக்கப்பட்ட புள்ளி விவரத் தகவல்கள் இவை!
தனியார் நடத்தும் பள்ளிகளிலும்கூட போதிய கழிப்பறை வசதிகள் இருக்கின்றனவா என்பது பற்றிய ஆய்வு செய்து - தமிழக அரசு அதனையும் கண்காணிக்க வேண்டியது அவசர அவசியமாகும்.
அரசுப் பள்ளிகளில் 90 விழுக்காடு நிதி சம்பளம் கொடுப்பதற்கே செலவிடப்படுகிறது என்று சொல்லப்பட் டாலும் அதுதக்க சமாதானமாக (இக்குறைபாடுகளை நீக்கிட) ஆகாது. உடனடியாக அரசு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
கல்வியைப் பொதுப் பட்டியலில் வைத்து அதிகாரம் செய்ய முன் வந்துள்ள மத்திய அரசு, இதற்கெனவே மாநிலங்களுக்குத் தனி நிதி உதவி (மான்யமாக) தந்திட உடனே முன்வர வேண்டும்.
கடந்த ஜூலை 30ஆம் தேதி, தமிழக சட்டமன்றத்தில் - விதி 110ன் கீழ் ஓர் அறிக்கை வெளியிட்டார் முதல்வர் அவர்கள். அதில், அனைத்துப் பள்ளிகளிலும் 100 சதவிகிதம் கழிப்பறை வசதிகள், குடிநீர் வசதிகள் இருக்க வேண்டு மென்று கணக்கெடுக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார்.
இதில் 2047 பள்ளிகளில், கழிப்பறை வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த இரண்டும் முரண்பட்ட தகவல்களாக அமைவது - ஏனோ?
எப்படி இருந்தபோதிலும் உடனடியாக கழிப்பறைகள் அமைக்கப்படுவதோடு, ஒவ்வொரு பள்ளிக்கும் முழு நேர துப்புரவுப் பணியாளர் ஒருவரும் நீர் வசதியும் ஏற்படுத்தித் தரும் பொறுப்பைக் கண்காணித்து, பள்ளி சுகாதாரப் பிரிவு ஒன்றையேகூட ஏற்படுத்தினால் பிள்ளைகளின் நலவாழ்வு பாதுகாக்கப்பட வசதிகள் ஏற்பட்டு, இந்தியா விற்கு தமிழ்நாடு இதிலும் வழிகாட்டி மாநிலமாக அமையக் கூடும் அல்லவா?
கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்
சென்னை 8.8.2014
Read more: http://viduthalai.in/e-paper/85459.html#ixzz39r6BX1fd
இப்படியும்கூட சட்டமா?
இப்படியும்கூட சட்டமா?
சவூதி அரேபியாவில் உள்ள ஆண்கள் பாகிஸ் தான், வங்கதேசம், சாட் மற்றும் மியான்மா ஆகிய நான்கு நாடுகளிலிருந்து பெண்களைத் திருமணம் செய்யக் கூடாது என்று சவுதி அரசு தடை விதித் துள்ளது. (இவ்வளவுக்கும் இவர்கள் எல்லாம் ஒரே மதத்தைச் சேர்ந்தவர்கள் ஆயிற்றே!)
உதிர்ந்த முத்து!
குற்றங்களைக் கட்டுப் படுத்த முடியுமே தவிர முற்றிலும் ஒழிக்க முடியாது; எது போல என்றால் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த முடியுமே தவிர, முற்றிலும் ஒழிக்க முடியாது - அது போல.
- சட்டப் பேரவையில் முதல் அமைச்சர் 5.8.2014
பெண்களால் உயரும் ஜிடிபி
நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பெண்கள் அதிக அளவில் பங்கேற் றால் உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) உயரும் என்கிறார் அய்.சி.அய்.சி.அய் வங்கி தலைமைச் செயல் அதிகாரி சாந்தா கொச்சன்.
இது ஏழை நாடு?
மகாராட்டிரத்தைச் சேர்ந்த தொழிலதிபர் பங்கஜ்பாரஜ் என்பவர் தனது 45ஆம் ஆண்டு பிறந்த நாளுக்காக ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்புடைய தங்கத்தினா லான சட்டையை வாங்கி யுள்ளார். 8ஆம் வகுப்பு வரை படித்த அவர் இன் றைக்குப் பெரிய தொழி லதிபராம்.
Read more: http://viduthalai.in/e-paper/85460.html#ixzz39r7MQpE1
கற்றுக் கொள்ள வேண்டியது
இதுவரை எந்தப் பார்ப்பனராவது பார்ப்பனரல்லாத கட்சிக்கு அனுகூலமாய்ப் பிரச்சாரம் செய்ய வந்திருக்கிறாரா? என்றால் ஒருவர்கூட இல்லையென்றுதான் சொல்ல வேண்டும். பார்ப்பனருக்கு வேறு எவ்வளவு கெட்ட குணம் இருந்தாலும், தங்கள் வகுப்பு விசயத்தில் எல்லாரும் ஒன்று சேருவது அவர்களிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய விசயம்.
(குடிஅரசு, 7.11.1926)
Read more: http://viduthalai.in/page-2/85444.html#ixzz39r7ZMRkq
அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் கோரிக்கை
ஆசிரியருக்குக் கடிதம் >>>
அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் கோரிக்கை
எங்கள் சங்கத்தின் 206 மாணவர்கள் 2007-2008 ஆண்டுகளில் தமிழக அரசின் சார்பில் துவக்கப்பட்ட அர்ச்சகர் பயிற்சி பள்ளியில் சேர்ந்து படித்து அர்ச்சகர் பணிக்கான தகுதி பெற்றோம். ஆனால், உடனடியாக எங்களுக்கு வேலை கிடைக்க வில்லை. காரணம் மதுரை சிவாச்சாரி யார்கள் நேரடியாக உச்சநீதிமன்றத்தில் அனைத்து ஜாதி அர்ச்சகர் ஆக தடை பெற்று விட்டனர்.
உச்சநீதிமன்றத்தில் மேற்சொன்ன வழக்கு 13.12.2012 அன்று இறுதி விசார ணைக்காக வந்தபோது தமிழக அரசின் வழக்குரைஞர் இப்பிரச்சினையை சுமுக மாகப் பேசித் தீர்ப்பதாகக் கூறி கால அவ காசம் கோரினார். அதன்பிறகு 30.01.2013 அன்று வழக்கு இறுதி விசாரணைக்கு வந்து விட்டது. மதுரை சிவாச்சாரியர்கள் சார்பில் மூத்த வழக்குரைஞர் பராசரன் அவர்கள் தனது வாதங்களை முன்வைக்க தொடங் கினார். தமிழக அரசு சார்பில் பி.பி. ராவ் எனும் மூத்த வழக்குரைஞர் ஆஜரானார். ஆனால், வழக்கு அதற்கு பிறகு நீண்ட நாட்களுக்கு பிறகு 08.07.2014 அன்று பட்டிலிடப்பட்டாலும், விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை.
அர்ச்சகர் பணிக்கான சரியான தகுதி பெற்றிருந்தும் நாங்கள் கடந்த 8 ஆண்டு களாக பணி வாய்ப்பு இன்றி தவிக்கின்றோம். எங்கள் அனைவருக்கும் வயது உயர்ந்து கொண்டே செல்கிறது. ஆகையால் குடும்பம் நடத்த எந்த வழியும் இன்றி தவித்து வரு கிறோம். அது மட்டுமல்ல; இந்த படிப்பு படித்ததால் வேறு எந்த வேலைக்கும் எங்களால் செல்ல இயலவில்லை.
எனவே, எங்களின் நிலையை கருத்தில் கொண்டு தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கை விரைந்து நடத்தி முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை இடைக் காலமாக எங்களுக்கு நிவாரண ஊதியமாக ஒவ் வொருக்கும் தலா ரூ.5000 வழங்கி ஆணை யிட வேண்டும்படியும் பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம்.
- வா. அரங்கநாதன், மாநிலத் தலைவர், அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம்
Read more: http://viduthalai.in/page-2/85451.html#ixzz39r7i6zyS
கருநாடக மாநில கழகக் குடும்ப விழா
பெங்களுரூ, ஆக. 8_ கரு நாடக மாநிலத் திராவிடர் கழகத்தின் மூத்த கழக உறுப்பினரும் பெரியாரி யல் சிந்தனையாளருமான வி.சி.வேலாயுதம் (எ) வேமண்ணா அவர்களின் 88ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா பெங்களூர் வீராசாமி நகர் 56ஆவது குறுக்குச் சாலை வேமண்ணாவின் இல்லத்தில் சிறப்பாக நடைபெற்றது.
3.8.1927 இல் பிறந்த வேமண்ணாவிற்கு 3.8.2014 அன்று காலை 10.30 மணிக்கு கருநாடக மாநி லத் தலைவர் மு.சானகிரா மன் தலைமை ஏற்று அவர் பெற்ற வாழ்வியல் அனுப வங்களை நிரல்பட விளக்கி கூறி அவர் பெற்ற விருதுக ளையும் எழுதிய நூல்க ளையும் எடுத்துக் கூறி பாராட்டினார்.
இந்திய தமிழ்ச் சங்கங் களின் கூட்டமைப்பின் தலைவரும் திராவிடர் கழக மூத்த உறுப்பினரு மான மு.முத்துச்செல்வன் முன்னிலை ஏற்றார். மாநி லச் செயலாளர் இரா.முல் லைக்கோ அனைவரையும் வரவேற்று வேமண் ணாவை பாராட்டினார்.
தங்கவயல் சி.சு.தென்ன வன் மொழி வாழ்த்துப் பாடி நிகழ்வை துவக்கி வைத்தார். தங்கம் இராம சந்திரா பெரியார் அறக்கட் டளை நிறுவனரும், மாநி லத் துணைத் தலைவரு மான இராமச்சந்திரா, கே.எஸ்.கார்டன் பகுதி கிளைத் தலைவர் வே.முனு சாமி, திராவிடர் கழகத் தலைவர் க.வேலு, தென் மண்டலத் தலைவர் கவிஞர் க.இரத்தினம், மாநிலத்துணைத் தலைவர் இராகணபதி, இரா.திரு வேங்கடம், எம்.எல். பிரேம்குமார், செயற்குழு உறுப்பினர் சி.சு.தென்ன வன், நா.சிவசங்கர், மாநிலத் துணைச் செயலாளர் வே. நடராசன், வட மண்டலத் தலைவர் இரா.பழனிவேல், கே.எஸ்.கார்டன் பகுதி கிளை செயலாளர் கு. ஆனந்தன், மாநிலப் பொரு ளாளர் கு.செயக்கிருட்டி ணன், வேமண்ணாவின் மூத்த மகள் செல்வமனி தனது தாய் நோய்வாய்ப் பட்டு படுக்கையில் இருந்த ஏழு ஆண்டுகளில் ஒரு நாள் கூட கடிந்து நடக் காமைக் குறித்து நெகிழ்ந்து கூறினார். தென் மண்டலச் செயலாளர் புலவர் கி.சு. இளங்கோவன், வே.மண் ணாவின் குணநலங்களை மொழிப்பற்றால் அவரது நூல்களைப் பற்றி விவ ரித்து கூறினார். கருநாடக மாநிலத் திராவிடர் கழகத் தின் மூத்த உறுப்பினரும் இந்திய தமிழ்ச் சங்கங்க ளின் கூட்டமைப்பின் தலைவர் முத்துச்செல்வன் திராவிடர் கழகத்தின் துவக்க நிலை, தந்தை பெரியார் கொள்கைகளை எடுத்து உரு பெற செய் தும், கன்னடர்கள் பரப் புரை செய்தது பற்றியும் பெங்களூர் தமிழ்ச்சங் கத்தில் அவரை சிறப்பித் தது, அவர் ஆற்றிய மொழி பெயர்ப்புப் பணிகள் குறித்து விளக்கமாக எடுத்துக்கூறி வயது நிலை பாராமல் அவரை மனப்பூர் வமாக அனைவரும் பாராட் டலாம் எனக் கூறினார்.
இறுதியாக 88 வயது நிறைந்த வேமண்ணா தந்தை பெரியார் கொள் கைகளை அடிநாள் தொட்டு தான் எடுத்துச்சென்ற விதம், கன்னட மொழி பயின்று அய்யாவின் நூல்களை தாம் எழுதிய விதம், கழகத் தோழர்கள் எவ்வாறு இயங்குவது போன்ற கருத்துரைகளை ஏற்புரையாக வழங்கினார். அவரது மகள் எழிலரசி நன்றியுரை கூறினார்.
மு.சானகிரான் வேமண் ணாவிற்கு பயனாடை அணிவித்தார் மு.முத்துச் செல்வன் பழக்கூடையை வழங்கினார். கி.சு. தென் னவன் பயனாடை அணி வித்தார். நாடக வேந்தர் வி.மு வேலுவுக்கு தங்கம் இராமச்சந்திர பயனாடை களை வேமண்ணாவின் மூலம் வழங்கினார். வேமண் ணாவிற்கு இராமச்சந்திரா உயர் பழங்களின் தொகுப்பை வழங்கி சிறப்பு செய்தமார். கவிஞர் வீ.இரத்தினம், இரா.கஜபதி ஆகியோர் பரிசு உறை களை வழங்கி மகிழ்ந்தனர். வே.பாவேந்தன் -_ உமா ஆகி யோரின் மகன் பெரியார் பிஞ்சு ரோசன் பரிசுப் பொருள் வழங்கினார்.
மதிய சிறப்பு உண வினை வேமண்ணாவின் குடும்பத்தினர்கள் மகள் செல்வமணி, எழிலரசி, பாவேந்தன், மருமகள் உமா பேரன் அசோக் அனைவருக்கும் வழங்கி சிறப்பித்தனர்.
புதியதாக உறுப்பின ராக கழகத்தில் இணைத் துக் கொண்ட அடையார் ஆனந்தபவன் கமனஹள் ளிக் கிளை உணவக மேற் பார்வையாளர் நா.சிவசங் கர் உறுப்பினர் படிவத் தினை மாநிலத் தலைவர் மு.சானகிராமன் அவர்களி டம் வழங்கி உறுப்பினரா கப் பதிவு செய்து கொண் டார். நா.சிவசங்கருக்கு வேமண்ணா பயனாடை அணிவித்து சிறப்பு செய்தார்.
கழக உறுப்பினர் பிரதீப் நிகழ்ச்சி அனைத்தையும் ஒளிப்படங்கள் எடுத்து சிறப்பு செய்தார்.
Read more: http://viduthalai.in/page-3/85475.html#ixzz39r8Zhw1y
சங்கரராமன் கொலை வழக்கு: தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வதை நிறுத்த சு.சாமி குடியரசுத் தலைவரிடம் மனுவாம்
சென்னை, ஆக.8- காஞ்சிபுரம் சங்கரராமன் கொலைவழக்கில் புதுவை நீதிமன்றத்தில் இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட காஞ்சி மடத்தின் இரு சங்கராச்சாரிகள் உட்பட 24 பேரை யும் விடுதலை செய்திருந்தது. சங்கரராமன் கொலைவழக்கில் வெளியான தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்கு புதுவை ஆளுநர் வீரேந்திர கட்டாரியா அனுமதி அளித்தார்.
அவர் அளித்த அனுமதியை ரத்து செய்ய வேண் டும் என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி யிடம் பாஜக தலைவர்களில் ஒருவரான சுப்பிர மணியசாமி கோரி உள்ளார்.
குடியரசுத்தலைவரி டம் சுப்பிரமணியசாமி அளித்த மனுவில், புதுவை யூனியன் பிரதேசத்தின் ஆளுநர் கட்டாரியா, அவருடைய அலுவலகம் அவசரகதி யில் கொஞ்சம்கூட மூளையை செலுத்தாமல் இருப்பது தெரிகிறது.
ஜூலையில் அதை முன் னாள் துணைநிலை ஆளுநர் செய்தியாளர் களிடம் வெளியிட்ட கருத்தில் தெரிவித்துள் ளார் என்று குறிப்பிட்டுள்ளார்.
புதுச்சேரி செஷன்ஸ் நீதிமன்றம் சங்கரராமன் கொலை வழக்கில் 2013ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் அனைவரையும் விடுதலை செய்தது. சட்டத்தின்கீழ், தீர்ப்பு நாளிலிருந்து 90 நாட்களில் விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய லாம் என்று உள்ளது.
திரு. கட்டாரியா தீர்ப்புக்கு எதிராக அவரு டைய ஒப்புதலுடன் சென்னை உயர்நீதிமன் றத்தில் மேல்முறையீட்டை செய்ததுகுறித்து ஜூலை முதல் வாரத்தில் ஊடகங்களிடம் தெரி விக்கும்போது ஒருவாரத்திற்குள்ளாக அவர் எடுத்த முடிவு அவர் நிர்ப்பந்தத்துக்கு ஆளாகி முடிவெடுத்ததாக(புதுச்சேரி ரங்கசாமி அரசு கூறியதால்) வழக்கு குறித்த விவரம் ஏதும் தெரியாமலே ஆணையில் கையெழுத்திட்ட தாக பதவியைவிட்டு வெளியேறும்போது குறிப் பிட்டதாக சுப்பிரமணியசாமி சுட்டிக்காட்டு கிறார்.
இது வெளிப்படையாகவே துணைநிலை ஆளுநர் தன் மூளையைச் செலுத்தாமலே செயல்பட்டுள்ளதானது சட்டத்தின்படி, மேல் முறையீடு செய்வதற்கு அளித்த ஒப்புதல் செல் லாதது என்று சுப்பிரமணியசாமி வாதிடுகிறார்.
ஆகவே, குடியரசுத்தலைவர் இவ்விவகாரத் தில் தலையிட்டு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 239(2)இன்படி முன்னாள் துணைநிலை ஆளுநர் அளித்த அனுமதியை திரும்பப் பெற வேண்டும் என்று சுப்பிரமணிய சாமி கூறினார்.
கட்டாரியா பதவியிலிருந்து 10.7.2014 தேதி அன்று திரும்பப் பெறப்பட்டார்.
இவ்விவகாரத்தில் சென்னை உயர்நீதி மன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்வதற்கு முன்னதாக விரைவாக குடியரசுத் தலைவரை அவசரம் கருதி தீர்வு காணக்கூடிய முடிவை எடுக்க வேண்டும் என்று சுப்பிர மணியசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.
குடியரசுத்தலைவரிடம் அளித்த மனுவில் இந்த விவாகாரத்தில் நீங்கள் பிரதமருக்கு அறிவுறுத்தி, அமைச்சரவைக்கும் தகவல் தெரிவிக்கவேண்டும் என்று அவசரப்படுத்தி உள்ளார்.
Read more: http://viduthalai.in/page-5/85467.html#ixzz39r93TGx1
அய்யோ இந்து மதமே!
இஸ்லாம், கிறிஸ்தவம் போல இந்து மதக் கோட்பாடுகள் ஒரு புத்தகத்தில் குறிக்கப்படவில்லை. அதற்கு சரித்திர ரீதியில் ஒரு அமைப் பாளரும் கிடையாது.
ஒன்றல்ல - பல கடவுள்களைக் கொண்டது. இந்துவாகி இருப்பதற்கு கடவுள் நம்பிக்கை இருக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை. இந்து மதம் என்று சொல்லப்படும் இதில் முரண்பாடுகள் செழித்து மலிந்து கிடக்கின்றன.
எல்லா இந்துக்களுக்கும் பொதுவான நம்பிக்கைகளோ அமைப்புகளோ ஒன்றும் கிடையாது.
இந்து மதத்திற்கு அடிப்படையான ஒவ்வொரு நம்பிக்கையும் - ஏதாவது ஒரு இந்து கூட்டத்தினரால் மறுத்து ஒதுக்கப்பட்டிருக்கின்றது.
- இன்டர்நேஷனல் என் சைக்கிளோபீடியா ஆஃப் சோசியல் சயின்ஸ்,பக்கம் 358, தொகுதி 6
Read more: http://viduthalai.in/page-7/85458.html#ixzz39r9HWOgC
எல்லா முயற்சிகளும் தோல்வி!
இந்துமதம் என்பது ஒரு சமூக நாகரிகமாகவும், பல் வேறு மதங்களின் இணைப்பாகவும் இருக்கின்றது. அதற்கு ஒரு ஆரம்பமோ, ஆசிரியரோ, ஒரு மத்திய அதிகாரமோ, அமைப்போ, நிறுவனமோ கிடையாது.
இந்து மதம் என்றால் என்ன என்று வரையறுக்க மேற் கொள்ளப்பட்ட எல்லா முயற்சிகளும், ஒரு வழியில் திருப்தி அற்றுத்தான் முடிந்திருக்கின்றன.
இந்துக்கள் உள்பட, மிகச்சிறந்த இந்திய அறிஞர்கள் - இந்து மதம் என்ற இதன் ஒரு பகுதியை அல்லது மற்றதை வலியுறுத்தி பல்வேறு காலங்களில் சொல்லியிருப்பதால் - இந்த வரையறை வேலை மேலும் திருப்தியற்றதா யிருக்கின்றது.
- என்சைக்கிளோ பீடியா பிரிட்டானிகா, 1974, தொகுதி 8, பக்கம் 88
Read more: http://viduthalai.in/page-7/85458.html#ixzz39r9QHDLU
கயிலாயத்தில் ஒரு உரையாடல்!
பார்வதி: நாதா! நாடெங்கும் மூளைக் காய்ச்சலாமே! நாம் நம் பக்தர்களைப் பாதுகாக்கப் புறப்படலாமா?
பரமசிவன்: அடியே! அறிவிலி! பக்தர்களுக்கு எப்படியடி மூளைக் காய்ச் சல் வரும்! மூளை இருப்ப வர்களுக்கல்லவா அது வரும்!
Read more: http://viduthalai.in/page-7/85458.html#ixzz39r9WfAMv
இந்தியா ஏழை நாடா?
இந்த நாட்டின் செல்வத்தில் எவ்வளவு பெரிய பாகம் மதமும், கடவுளும் என்கின்ற பேரால் வேலை செய்யாத சோம்பேறிகள் அனுபவிக்கின்றார்கள் என்பதை நமது மூட ஜனங்கள் அறியாமலேயே இந்த நாடு தரித்திர நாடு என்று அழுகின்றார்கள்.
இந்த நாட்டில் உள்ள சன்னியாசிகள், துறவிகள், மதாச்சாரிகள் என்பவர்களுக்கு உள்ள சொத்துக்களும் வரும்படிகளும் வேறு யாருக்காவது இருக்கின்றதென்று யாராவது சொல்ல முடியுமா?
அவர்களுக்கு எதற்காக அவ்வளவு சொத்தும் வரும்படியும் வேண்டி இருக்கின்றதென்று எந்தப் பொரு ளாதார வாதியாவது கவனிக்கின்றானா? ஒரு சந்நியாசி கோடிக்கணக்கான ரூபாய் சொத் தும், வருசத்தில் லட்சக்கணக்கான ரூபாய் வரும் படியும் உடைய வனாக இருந் தால் அந்த நாடு ஏழை நாடு தரித் திர நாடு என்று யாராவது சொல்லமுடியுமா? என்று கேட்கின் றேன்.
ஒரு முழம் முக்கால் முழம் உயரமுள்ள குழவிக் கல்லுகளுக்கு நமது நாட்டில் எத்தனைக் கோடி ரூபாய்கள் சொத்தும், எத்தனை லட்சம் ரூபாய்கள் வரும்படியும் இருக்கின்றனவென்று பாருங்கள்.
இப்படி எத்தனை நூற்றுக்கணக்கான ஆயிரக் கணக்கான குழவிக்கல்லுகள் நமது நாட்டில் செல்வத் தோடு யானை, ஒட்டகம், குதிரை, பல்லக்கு, தேர், ரதம் முதலிய வாகனங்களோடு, பல பெண்டாட்டிகளோடு வாழ்கின்றன என்பவைகளை நேரில் பார்க்கும் ஒரு யோக்கியன் உண்மையில் நமது நாடு தரித்திரமுள்ள நாடு என்று சொல்ல வருவானா?
இதை எந்த பொருளாதார நிபுணனாவது கவனித்து நமது நாடு தரித்திரமுள்ள நாடு என்று சொல்லுகிறானா?
- தந்தை பெரியார், குடிஅரசு 14.9.1930
Read more: http://viduthalai.in/page-7/85462.html#ixzz39r9gn2Xp
மத நம்பிக்கையே இல்லாமல் வாழும் மக்கள்
உலகின் ஒன்பது நாடுகளில் சமீபத்தில் நடந்த ஓர் ஆய்வில், அந்நாடுகளில் பெரும்பான்மையான மக்கள் மத நம்பிக்கையே இல்லாமல் வாழ்ந்து வருவது தெரிய வந்துள்ளது.
இதனால், அவற்றில் தற்போது இருக்கும் மதங்கள் விரைவில் காணாமல் போய்விடும் என்று அந்த ஆய்வு கூறுகிறது.
ஆஸ்திரேலியா, ஆஸ்திரியா, கனடா, செசன்ய குடியரசு, பின்லாந்து, அயர்லாந்து, நெதர்லாந்து, நியூசிலாந்து மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய ஒன்பது நாடுகளில் சமீபத்தில் ஓர் ஆய்வு நடத்தப்பட்டது.
இந்தநாடுகளில் கடந்த 100 ஆண்டுகளுக்குமேல் எடுக்கப்பட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டு, அங்குள்ள மக்களின் மத விவரங்கள் சேகரிக்கப்பட்டன. அதன்படி, இந்நாடுகளில் பெரும்பான்மையான மக்கள் மத நம்பிக்கை இல்லாமலேயே வாழந்து வருவது தெரிய வந்துள்ளது.
இப்படியே போனால் இன்னும் சில ஆண்டுகளில் அங்கு மதங்களே இல்லாமல் போய்விடும் என்று அந்த ஆய்வு எச்சரித்துள்ளது. அமெரிக்காவின் டல்லஸ் நகரில் நடந்த ஒரு கூட்டத்தில் இந்த ஆய்வின் முடிவு வெளியிடப்பட்டது. அதன்படி, மிகக் குறைந்தபட்சமாக நெதர்லாந்தில் 40 சதவிகிதம் பேரும், அதிகபட்சமாக செசன்ய குடியரசில் 60 சதவிகிதம் பேரும் மதநம்பிக்கை அற்றவர்களாக வாழ்ந்து வருகின்றனர்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த நிபுணர்கள் சிலர், இது ஒரு சாதாரண கணக்குதான். அதாவது, நாம் மேற்கொள்ளும் ஒரு காரியத்தால் ஏதாவது பயன் விளைந்தால் அக்காரியத்தையும் நாம் தொடர்ந்து செய்வோம்.
உதாரணமாக, ஸ்பானிய மொழி பேசுவதால் விளையும் பயன், பெரு நாட்டில் தற்போது வழக்கழிந்து வரும் கொச்சுவான் மொழியைப் பேசுவதால் விளையும் பயனைவிட மிக அதிகம்.
இதே கணக்கை மத நம்பிக்கையிலும் நீங்கள் வைத்துப் பார்க்கலாம் என்று தெரிவித்தனர்.
தினமலர், 27.3.2011, பக்கம் 12
Read more: http://viduthalai.in/page-7/85462.html#ixzz39r9wWjKT
இவர்களும் மூடர்கள்தானே!
வீரமாமுனிவர் எழுதிய பரமார்த்த குரு கதையில் ஒரு கதை வருகிறது. ஒரு குரு, அவருக்குத் துணையாக அய்ந்து சீடர்கள், ஒருநாள் குருவின் ஆடை கிழிந்து விட்டது.
குரு அந்த அய்ந்து சீடரையும் ஊசி ஒன்றினை வாங்கி வருமாறு அனுப்பினார். அய்ந்து சீடர்களும் ஊசி வாங்கச் சென்றனர். ஒரு கடையில் ஊசி ஒன்றினை வாங்கினர். ஆனால், எதிர்பார்த்தப்படி அவ்வளவு பெரிதாக இல்லை.
இவ்வளவு சிறிய பொருளை வாங்கவா அய்வரையும் அனுப்பினார் என்று அவர்களுக்குள் அய்யம். அதனால் ஒரு பனைமரம் ஒன்றினை வாங்கி அதன்மீது அந்த ஊசியை செருகி அய்வரும் தூக்கி வந்தனர்.
இக்கதை நம் ஊரில் நடக்கும் சம்பவம் ஒன்றினை நினைவூட்டுகிறது. நம் ஊரில் சாமி புறப்பாடு செய்வார்கள். அரை அடி அல்லது ஒரு அடி இருக்கும் அந்தச் சிலை. அந்த சிலையை ஒரு சிறுவன் கையில் பிடித்துக் கொண்டு ஊரைச் சுற்றி வரலாம். ஆனால் நடப்பது என்ன?
பல மரங்களை பாடைபோல் கட்டி அச்சிலையை அதன்மேல் வைத்து பத்து இருபது பேர் தூக்கிச் செல்வர். இதைப் பார்க்கும் போது பரமார்த்த குரு கதை சீடர்கள் ஊசி வாங்க வந்த கதை தான் ஞாபகத்துக்கு வருகிறது. அந்த மூடர்களுக்கும் இந்த மூடர்களுக்கும், என்ன வேறுபாடு?
தகவல்: கோ.இராமச்சந்திரன், அருந்தவபுரம்
Read more: http://viduthalai.in/page-7/85464.html#ixzz39rA3yqFb
அறிஞர்களின் அறிவுரைகள்
மனித சமுதாயம் தவிர மற்றபடி மிருகம், பட்சி, பூச்சி, ஜந்து முதலியவைகளில் வேறு எந்தப் பெண் ஜீவனாவது, ஆண்களுக்காகவே இருக்கிறோம் நாம் என்ற கருத் துடன் - நடையுடன் இருக்கிறதா என்று பாருங்கள். இது என்ன நியாயம்?
- தந்தை பெரியார்
இந்து மதத்தில் எனக்கு அறவே நம்பிக்கை இல்லை; ஏனெனில் அயோக்கியத்தனம் என்பது எனக் குப் பிடிக்கவே பிடிக்காது!
- டாக்டர் அம்பேத்கர்
பைபிள் ஒரு பெண்ணால் எழுதப்படவில்லையே! ஆதலால்தான் அதில் பெண்கள் அவமானம் அடைய வேண்டிய விஷயங்கள் நிரம்பிக் கிடக்கின்றன!
- இங்கர்சால்
மதம் என்பது பிறருக்கு உழைத்து வறுமைப்பட்ட மக்களை தலை எடுக்கவிடாமல் அழுத்தி வைக்க ஏற்பட்ட சாதனங்களில் முக்கியமான ஒன்றாகும்.
- லெனின்
உலகில் உள்ள ஒவ்வொரு குழந்தையும் நாத்திகவாதி யாகப் பிறக்கிறது. பிறருடைய போதனையினாலும் தயாரிப்பினாலுமே தெய்வ நம்பிக்கை ஏற்படுகிறது.
- சார்லஸ் பிராட்லா
ஒரு புழுவைக் கூட படைக்கச் சக்தியற்ற மனிதன் கணக்கில்லா கடவுளரைப் படைத்துக் கொண்டே இருக்கிறான்.
- மான்டெயின்
Read more: http://viduthalai.in/page-7/85464.html#ixzz39rABiYlr
இந்தியா - இந்த நிலையில்
எச்.அய்.வி. பதிப்பு
இந்தியாவில் 21 லட்சம் பேருக்கு, அதாவது பத்துப் பேர்களில் 4 பேர்களுக்கு எச்.அய்.வி. பாதிப்பு இருப்பதாக அய்.நா.வின் எச்.அய்.வி. மற்றும் எய்ட்ஸ் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. உலக அளவில் எச்.அய்.வி. பாதிப்பில் இந்தியா மூன்றாவது இடத்தில் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
உலகம் முழுவதிலும் 35 கோடிப் பேர்கள் எச்.அய்.வி. நோய்க்கு ஆளாகியிருப்பதாகவும், இவர்களில் 19 கோடிப் பேர்கள் தங்களுக்கு எச்.அய்.வி. பாதிப்பு உள்ளது என்று தெரியாமல் இருக்கின்றனர்.
2013ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி, எய்ட்ஸ் நோய்க்குக் காரணமான எச்.அய்.வி. கிருமி தொற்று உள்ளவர்களில் சப் சஹாரா ஆப்ரிக்கா முதலிடத்தில் உள்ளது. இங்கு 48 லட்சம் பேர்கள் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் 21 லட்சம் பேர்கள் எச்.அய்.வி. பாதிப்புடன் உள்ளனர். இங்கு ஏற்படும் மரணங்களில் 51 விழுக்காடு எய்ட்ஸ் நோயுடன் தொடர்புடையனவாக இருக்கின்றன. ஆனால் 36 விழுக்காட்டினர் மட்டுமே சிகிச்சை எடுத்துக் கொண்டுள்ளனர். மேலும், பாலியல் தொழிலாளர்கள் மூலமாக நோய் பரவுவது 10.3 விழுக்காட்டிலிருந்து 2.7 விழுக்காடாக குறைக்கப்பட்டுள்ளது. ஆனால், அசாம், பீகார் மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களில் அதிகரித்துள்ளது. எச்.அய்.வி. பாதிப்பை ஒழிக்கும் திட்டம் 2030ஆம் ஆண்டுக்குள் முடிவுக்கு வரும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது..
வாய்ப் புற்றுநோய்
புகைப் பிடித்தல் மற்றும் புகையிலைப் பொருள்களை மெல்லும் பழக்கம் உடையவர்களைப் புற்றுநோய் தாக்கும் அபாயம் உள்ளது என்று எச்சரித்தாலும் யாரும் அதனைக் கண்டுகொள்வதில்லை.
புகையிலை தொடர்பான பழக்கங்களுக்கு அடிமையாகி நம் நாட்டில் 6 மணி நேரத்திற்கு ஓர் உயிர் பலியாவதாக அதிர்ச்சியூட்டும் செய்தி வெளியாகியுள்ளது. கிராமங்களில் இருப்பவர்கள் மற்றும் வறுமைக் கோட்டிற்குக் கீழே இருப்பவர்கள் தங்களுக்கு வாய்ப் புற்றுநோய் வந்துள்ளது என்பதைத் தெரிந்து கொள்ளாமலே இறந்துவிடுகின்றனர். அவர்களையும் சேர்த்தால் வாய்ப் புற்றுநேய் தாக்கி மரணமடைபவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்க வாய்ப்பு உள்ளது.
புற்று நோய் பாதிப்பினால் உயிரிழக்கும் நோயாளிகளில் 40 விழுக்காட்டிற்கும் அதிகமானவர்கள் வாய்ப் புற்று நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. வாய்ப்புற்று நோய் பாதிக்கப்பட்டவர்களில், வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் முதலிடத்திலும் மேற்கு வங்காளம், குஜராத், ஆந்திரா, தமிழ்நாடு உள்ளிட்ட பிற மாநிலங்களைச் சேர்ந்தோர் அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளனர்.
புகையிலை விவசாயம், பதப்படுத்துதல் மற்றும் சந்தைப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டிருக்கும் மக்களில் வாழ்க்கைக்குத் தேவைப்படும் மாற்று ஏற்பாடுகளை மத்திய, மாநில அரசுகள் செய்துவிட்டு, புகையிலை பயிரிடுவதை முழுவதும் தடை செய்தால் மட்டுமே இந்த இறப்பு விகிதத்தை ஒழிக்க முடியும் என புற்றுநோய் ஆராய்ச்சித் துறை நிபுணர்களும் சமூக ஆர்வலர்களும் கூறியுள்ளனர்.
உங்களுக்குத் தெரியுமா?
1938-இல் முதலமைச்சர் ராஜகோபாலாச்சாரியார் பிறப்பித்த இந்தித் திணிப்பு உத்திரவை எதிர்த்து - தந்தை பெரியார் தலைமையில் போராட்டம் வெடித்தது; பட்டுக்கோட்டை அழகிரியைத் தளபதியாகக் கொண்டு திருச்சியிலிருந்து சென்னை நோக்கி வழிநடைப் பிரச்சாரப் படை 42 நாள்கள் நடந்தே வந்தது என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?
இந்தியா - இந்த நிலையில்
ஏழை நாடு
உலக நாடுகளில் உள்ள கடைக்கோடி ஏழைகளில் மூன்றில் ஒரு பங்கினர் இந்தியாவில் வசிப்பதாகவும், உலக அளவில் மரணமடையும் அய்ந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில் இந்தியக் குழந்தைகளே அதிகம் என்றும் அய்.நா. மில்லினியம் மேம்பாட்டு லட்சியங்கள் என்ற அமைப்பின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும் 60 விழுக்காடு இந்தியர்கள் திறந்தவெளியில் மலம் கழிப்பதாகவும், பேறுகால இறப்புகளில் 17 விழுக்காடு இந்தியாவில்தான் நிகழ்வதாகவும் கூறியுள்ளது, மேலும், தெற்காசிய நாடுகளில் மிகப்பெரியதும் அதிக மக்கள்தொகை கொண்டதுமான நாடு இந்தியா என்றாலும், பிற நாடுகளை ஒப்பிடும்போது பலவகைகளில் பின்தங்கி இருப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் குறித்த நாளில் வந்துவிடுகிறது சுதந்திர தினம்!
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பெரு நிகழ்வுகள் மட்டும்தான் கலையாகும் என்றில்லை. அன்றாடத்தின் அனுகணம்கூட கலைதான் என்று கவிஞர் உதயகுமார் இந்த நூலுக்கான தனது, வாழ்த்துரையில் குறிப்பிட்டிருந்தார். அது உண்மைதான் என்பதை, பால்ய வீதி நெடுகிலும் காண முடிகிறது.
பள்ளிப் பருவத்தின் நிகழ்வுகளை,
தபால்பெட்டி டவுசரோடு
பால்ய வீதிகளில் அலைந்திருக்கிறேன்
கேட்பார் யாருமின்றி!
இன்று சிமெண்ட் மூடிக் கிடக்கிறது...
எதிர்காலத்தில், தொல்பொருள்துறை
தோண்டிப் பார்த்தால், படிமங்களாய்
கிடைக்கக்கூடும் அத்துணை குதூகலங்களும்
- என்று கவிதையாக்கித் தரும்போது, நமக்குள் பெருமூச்சு எழுவதைத் தடுக்க முடியவில்லை, ரேடியோ பெட்டி _ என்ற கவிதையில், கால மாற்றத்தை வெகு நயத்தோடு வடித்துக் காட்டுகிறார்.
குழந்தைகளைப்பற்றி எழுதும்போது, குழந்தையாகவே மாறி அவர்களின் அருகமர்ந்து பார்த்ததுபோல எழுதியிருக்கிறார். ஓரிடத்தில்,
வானவில் வரையக் கற்றுக் கொடுத்தேன் குழந்தைக்கு!
வானவில் பார்த்து குதூகலிக்க கற்றுக் கொடுத்தது குழந்தை! _ என்ற கவிதையைப் படிக்கும்போது, அட! என்று புதிதாக ஒன்றைக் கற்றுக்கொள்வது போன்ற உணர்வு வருகிறது.
குழந்தையாக இருந்தவர் சட்டென்று சுதந்திர தினத்தை எள்ளல் தொனியோடு ஒரு தெறிப்பில் சுட்டிக் காட்டிவிடுகிறார். பாருங்கள் இந்தக் கவிதையை.
வயல்வெளிகள் வறண்டாலும் திறந்துவிடப்படாத காவிரித் தண்ணீரைப் போல் அல்லாமல் ஒவ்வொரு ஆண்டும் குறித்த நாளில் வந்துவிடுகிறது சுதந்திர தினம்!
நம் சிந்தையில் ஏதேதோ எண்ணங்களைத் தூண்டுகிறது. அறிவியல் மனப்பான்மையோடு வாழவேண்டும் என்பதை,
இருக்கையைக் கைப்பற்றும் அறிவிக்கப்படாத போரில், கண்டுகொள்ள யாருமில்லை; இருக்கையின்றித் தவிக்கும் பூமியை!
_ என்று எழுதி, பூமி மிதந்து கொண்டிருப்பதை உணராமல் வாழும் நம் நிலையைக் கேலிக்குள்ளாக்குகிறார். அதோடு, இருக்கைக்காக நடக்கும் போர் _ என்றும், அதுவும் அறிவிக்கப்படாத போர் என்றும் நயத்துக்கும் குறைவு வந்துவிடாமல் எழுதியிருப்பதை ரசிக்காமல் இருக்க முடியவில்லை.
சட்டென்று கவிஞர்,
முப்பத்து முக்கோடி தேவர்களில் ஒருவர்கூட வருவதில்லை; விவாகரத்துப் பிரச்சினையைத் தீர்த்துவைக்க!
_ என்று எழுதி, மூடநம்பிக்கைகளின் முதுகில் சாட்டையால் சுளிர் சுளீர் என்று விளாசுகிறார். உண்மை படும் பாட்டை பொய் என்ற கவிதையில்
செம்பு கலந்த பொன்னைப் போல, அத்தனை அழகாய் இருப்பதில்லை பொய் கலவாத உண்மை
- என்று உவமை அழகோடு சொல்லி, நம்மையும் அந்த ஆழமான உண்மையை (நடைமுறையை) எண்ணி வெட்கப்பட வைக்கிறார்.
மொத்தத்தில் கவிஞர் வத்திராயிருப்பு தெ.சு.கவுதமனின் பால்ய வீதி எனும் கவிதைத் தொகுப்பு, படித்து ருசித்து மற்றவர்க்கும் படைக்க வேண்டிய படையல்.
தனது மூன்றாவது கவிதைத் தொகுப்பின் மூலம் நம்மையும் கைப்பிடித்து அழைத்துச் செல்கிறார் பால்ய வீதிக்குள். -
- உடுமலை
கருணைக் கொலை வரவேற்கத்தக்கதே!
கடும் துன்பத்திலிருந்து விடுதலை பெற வைப்பது - மனிதநேயமே!
கருணைக் கொலை பற்றி மத்திய மாநில அரசுகள், பொதுமக்கள் கருத்துகளை அறிவது முக்கியம் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. இதற்கேற்ப இதுபற்றிய விவாதங்கள் தொலைக்காட்சிகளிலும் ஜனநாயகத்தின் 4ஆவது தூண் என்று அழைக்கப்படும் ஊடக உலகத்திலும் விவாதங்கள் நடைபெறத் தொடங்கியுள்ளன.
பலருக்குத் தாங்க முடியாத, இனி முழு நலம் பெறமுடியாத அளவுக்கு, நோய் முற்றி, தாங்கொணாத வலி, வேதனை, துன்பத்தைத் தொடர்ந்து தந்து கொண்டிருப்பதால், அதிலிருந்து விடுபட்டு, நிம்மதியான சாவைப் பெற்று, ஆறுதலோடு உலகிலிருந்து விடைபெற வேண்டும் என்று பல நோயாளிகள் கருதுகின்றனர்; விரும்புகின்றனர்.
மற்றொரு வகை உண்டு. திடீர்க் கோர விபத்துகள் மூலமாகவோ, அல்லது வேறு எப்படியோ, மூளைச் சாவு (Brain Death) ஏற்பட்ட காரணத்தால், இனி அவரது வாழ்வு திரும்பவே வாய்ப்பில்லை; அந்த நிலையில் தங்கள் பிள்ளைகளோ, உறவுகளோ வாழ முடியாத நிலைதான் யதார்த்தம் என்று ஆகிவிட்டபோது, அவர்களை வைத்துக் கொண்டு கண்ணீருடன் கூடிய வாழ்க்கையை நீட்டிக் கொண்டே போவதில் அர்த்தமில்லை. எனவே சட்டம் அனுமதித்தால் கருணைக் கொலையே செய்துவிடலாம்; அவர்தம் மற்ற உடல் உறுப்புகள் பிறருக்குப் பயன்பட்டு, அவர்களாவது நல்வாழ்வு, புதுவாழ்வு பெறுகிறார்கள் என்றால் அதைவிட மாந்தநேயம், வளர்ந்த செயல் வேறு எதுவும் இல்லை என்று கருதி, மகிழ்ச்சியோடு இத்தொண்டறம் தொடர்வது மிக நல்ல திருப்பணி அல்லவா?
மருத்துவமனைகளில் ஒவ்வொரு அறுவை சிகிச்சையின்போதும், உயிர் பறிக்கப்படுவதற்கு டாக்டர் பொறுப்பல்ல என்பதற்கு நோயாளியும், அவருடைய உற்ற உறவினரும் இசைவுக் கையொப்பம் இடுகின்ற முறை உள்ளதே!
பல ஆண்டுகளுக்குமுன்பு அமெரிக்காவில் கார் உற்பத்திக்குப் புகழ் பெற்ற நகரமான டெட்டிராய்ட் (Detroit) நகரில் வாழ்ந்த ஒரு டாக்டர் இந்தக் கருணைக் கொலையைச் செய்து, கொள்கை அளவில் பிரபலமாக்கிட தானே தண்டனையையும்கூட ஏற்கும் நிலை அடைந்தார்.
இந்தக் கருணைக் கொலைக்கு எதிராக வாதம் செய்வோர்; ஆண்டவன் கொடுத்த உயிரை மனிதன் எடுப்பதா? என்ற பழைய நம்பிக்கையை முன்வைத்தே கூறுகின்றனர்.
அப்படியானால், தற்கொலை செய்து கொள்ளுகின்றனரே பலர், அதைத் தடுக்க முடிகிறதா? திடீர் விபத்துகளில் மனித உயிர்கள் பலியாகின்றனவே, அதைத் தடுக்க முடிகின்றதா? ணிஸீநீஷீஸீமீக்ஷீகள் என்ற திடீர் தாக்குதல்களைத் தடுக்க முடிந்ததா?
ஆகவே அந்த வாதங்களை ஒருபுறம் ஒதுக்கி வைத்துவிட்டு, கருணை அடிப்படையில் (Compassionate Killing) என்பதை எவ்வளவு விரைவில் சட்டமாக்க முடியுமோ அவ்வளவு விரைவில் தாராளமாகச் செய்ய முன்வர வேண்டும்.
நம்மைப் போன்ற ஆத்மா மறுப்பாளர்களை விட்டுவிட்டு, ஆத்மா நம்பிக்கையாளர்களைப் பார்த்து ஒரு கேள்வி கேட்க நாம் விரும்புகிறோம்.
உடம்புதான் அழியும், ஆத்மா என்றும் அழிவதில்லை என்று கூறுகிறார்களே, அந்த வாதத்தை நீங்கள் உள்ளபடியே நம்பினால், கருணைக் கொலையை ஏன் ஏற்க மறுக்கிறீர்கள்? உங்கள் நம்பிக்கை, வாதப்படி ஆத்மாதான் அழிவதில்லையே; கருணைக் கொலையில் உடல்தானே அழிகிறது; பின் ஏன் கருணைக் கொலையை (மத நம்பிக்கை காரணமாக) ஏற்க மறுக்க வேண்டும் என்பதே பகுத்தறிவுவாதிகளின் கேள்வியாகும்.
மனிதநேயம் (Humanism) நமது இந்திய அரசமைப்புச் சட்டம் 51A பிரிவு (h) வற்புறுத்தும் அடிப்படைக் கடமையின் முக்கிய அம்சம் அல்லவா? கடும் துன்பத்திலிருந்து உடல் அளவிலும் மன அளவிலும் விடுதலை கிடைப்பதுகூட மனிதநேயம்தானே!
பின் ஏன் தயக்கம்? பின் ஏன் மயக்கம்? உடனே சட்டம் இயற்ற முன்வாருங்கள்!
கி.வீரமணி,
ஆசிரியர்
நாத்திக அறிவியலாளர்
சர் ரோஜர் பென்ரோஸ்
- நீட்சே
ஆங்கிலேயரான சர் ரோஜர் பென்ரோஸ் ஒரு கணித இயல்பியலாளரும், கணித இயலாளரும், அறிவியல் தத்துவ இயலாளரும் ஆவார். ஆகக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் கணித நிறுவனத்தில் கணித எமிரடஸ் ரவுஸ் பால் பேராசிரியராகவும், வாட்ஹாம் கல்லூரியின் எமிரிடஸ் ஃபெலோவாகவும் இருந்தவர் இவர்.
கணித இயற்பியலில் ஆற்றிய அரும் பணிக்காக நன்கு அறியப்பட்டவரான பென்ரோஸ் விண்வெளியியல் மற்றும் பொதுவான தொடர்புத் தத்துவத்திற்கு அளித்த பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாகும். பிரபஞ்சத்தைப் பற்றி நாம் அறிந்திருப்பது என்ன என்பதை ஆய்ந்து அறிந்து வெளிப்படுத்தியமைக்காக 1988 ஆம் ஆண்டு இயற்பியலுக்காக ஸ்டீஃபன் ஹாகிங் அவர்களுடன் பகிர்ந்து கொண்ட வுல்ஃப் பரிசைப் போன்று எண்ணற்ற பரிசுகளும் விருதுகளும் இவர் பெற்றுள்ளார்.
இங்கிலாந்து நாட்டின் எஸ்ஸக்ஸ் பகுதியில் கோல்செஸ்டர் என்ற ஊரில் 1931 ஆகஸ்ட் மாதம் 8 ஆம் தேதியன்று, லையனல் பென்ரோஸ் _ மார்கரட் லீத்ஸ் என்னும் இணையருக்கு ரோஜர் பென்ரோஸ் பிறந்தார். லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரி பள்ளியிலும், பின்னர் அதே கல்லூரியிலும் கல்வி பயின்ற ரோஜர் பென்ரோஸ் கணிதப் பாடத்தில் முதல் வகுப்பில் பட்டம் பெற்றார். மாணவராக இருந்தபோதே இவர் ஈ.எச். மூர்ஸ் அவர்களால் பொதுவாக விளக்கப்பட்ட மேட்ரிக் இன்வெர்ஸ் என்ற கணிதக் கோட்பாட்டை விளக்கமாக வெளியிட்டு அறிமுகப்படுத்தினார். ஆர்னி ஜெர்ஹேமர் என்பவரால் 1951 இல் மேலும் விளக்கம் அளிக்கப்பட்ட இக்கோட்பாடு பின்னாட்களில் மூர்-ரோஜர் இன்வெர்ஸ் கோட்பாடு என்றே குறிப்பிடப்பட்டு வருகிறது. கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் செயின்ட் ஜான் கல்லூரியில், அல்ஜீப்ரா ஜியோமெட்ரியில் டென்சார் நடைமுறைகள் என்ற ஆய்வுக் கட்டுரையை, அல்ஜீப்ரா மற்றும் ஜியோமெட்ரி பேராசிரியர் ஜான் ஏ. டாட் அவர்களின் வழிகாட்டுதலில் எழுதி தனது ஆய்வு முனைவர் பட்டத்தை 1958இல் பென்ரோஸ் பெற்றார். விண்வெளியில் உள்ள கரும்புள்ளிகள் போன்ற தனித்துவம் பெற்றவை இறந்து கொண்டிருக்கும் மாபெரும் நட்சத்திரங்களின் ஈர்ப்பு விசை அழிவிலிருந்து தோற்றம் பெற இயலும் என்பதை இவர் மெய்ப்பித்துக் காட்டினார். பென்ரோஸின் இந்த ஆய்வுப் பணி பென்ரோஸ்-ஹாகின்ஸ் தனித்தன்மைக் கோட்பாடுகளை மெய்ப்பிக்க பெரிதும் பயன்படுத்தப்பட்டது. பொதுத் தொடர்புக் கோட்பாடு பற்றி மிக ஆழ்ந்து ஆராய்ந்து இவர் செய்த பணி கரும்புள்ளிகளைப் பற்றி நாம் நன்றாக அறிந்து கொள்வதற்கு ஒரு முக்கியமான காரணியாக விளங்கியது. கணித இயற்பியலில் தொன்மையான கணிதச் சமன்பாடுகள் பற்றிய அழகு நிறைந்த, ஆக்கபூர்வமான அணுகுமுறையுடன் கூடிய வழியில் ட்விஸ்டர் கோட்பாட்டை இவர் மேம்படுத்தினார்.
இயற்பியல் விதிகளுக்கு ஒருங்கிணைந்த முறையில் வழிகாட்டும் நோக்கத்துடன் உண்மை நிலைக்கான பாதை: பிரபஞ்ச விதிகளுக்கான ஒரு முழுமையான வழிகாட்டி என்ற 1099 பக்க நூலை பென்ரோஸ் எழுதி 2004 இல் வெளியிட்டார். மிகைச் சிற்றளவு இயந்திரவியல் பற்றி இவர் ஒரு புதுமையான விளக்கத்தை அளித்துள்ளார். பெனிசில்வேனியா மாநில பல்கலைக்கழகத்திற்கு வருகை தரும் மதிப்பு மிகுந்த இயற்பியல் மற்றும் கணிதவியல் பேராசிரியராக விளங்கிய இவர் வானியல் மறுஆய்வு பத்திரிகை ஆசிரியர் குழுவின் உறுப்பினராகவும் இருந்தார்.
1959 இல் ஜோன் இசபெல் வெட்ஜ் என்ற அமெரிக்கப் பெண்மணியை மணந்ததன் மூலம் இவருக்கு மூன்று மகன்களும், அடுத்து அபிங்டன் பள்ளி கணிதத் துறைத் தலைவராக இருந்த வானசா தாமஸ் என்பவரை மணந்து கொண்டதன் மூலம் ஒரு மகனும் இவருக்கு உள்ளனர். எந்த மதத்திலும் நம்பிக்கை அற்றிருந்த பென்ரோஸ் தன்னை ஒரு நாத்திகவாதி என்றே கூறிக்கொண்டார். காலத்தைப் பற்றிய சுருக்கமான ஒரு வரலாறு என்ற படத்தில், இந்தப் பிரபஞ்சம் உருவானதற்கு ஒரு நோக்கம் இருக்கவேண்டும் என்றே நான் கருதுகிறேன். ஏதோ தற்செயலாக இந்தப் பிரபஞ்சம் உருவாகி நிலைத்திருக்கிறது என்று கூறமுடியாது. இந்தப் பிரபஞ்சம் தற்செயலாகத் தோன்றி நிலைத்திருப்பதாகவே சிலர் கருதுகின்றனர். ஆனால் அவ்வாறு கூறுவது பிரபஞ்சத்தைக் காணும் ஒரு பயன்நிறைந்த அல்லது உதவிநிறைந்த வழியாக இருக்க முடியாது என்றே நான் கருதுகிறேன் என்று பென்ரோஸ் கூறியிருக்கிறார். இங்கிலாந்து மனித நேய சங்கத்தின் மதிப்பு மிகுந்த ஆதரவாளராக பென்ரோஸ் இருக்கிறார்.
- தமிழில்: த.க.பாலகிருட்டிணன்
நாடார்களின் ஆலய நுழைவுப் போராட்டம்
சுமார் 75 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் நடைபெற்ற மிகப் பெரிய புரட்சி இது என்று தினத்தந்தி 8.7.2014 இதழில் திரு.வி.கே.ஸ்தாணுநாதன் அவர்கள் மதுரை வைத்தியநாத அய்யரைப் புகழ்ந்து தாழ்த்தப்பட்டவர்களை முதன்முறையாக கோவிலுக்கு அழைத்துச் சென்றார், என்று பதிவு செய்துள்ளார்.
அதற்குத் தக்க பதிலடியாக, ...உண்மை வரலாறு என்ன? என்று சுயமரியாதை இயக்கத்தின் கோவில் நுழைவுப் போராட்டங்களையும் அதை மழுங்கடிக்க ராஜாஜி _ வைத்தியநாதய்யர் கூட்டணி நடத்திய கபட நாடகத்தையும் எடுத்துக்காட்டி 12.7.2014 விடுதலை ஞாயிறு மலரில் மானமிகு கி.தளபதிராஜ் அவர்கள் கருத்துகளைத் தொகுத்துள்ளார்.
இச்செய்திகளை வெளியிடும் தினத்தந்தி போன்ற ஏடுகளுக்கு சுமார் 140 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற வரலாற்றை ஞாபகப்படுத்த வேண்டியது அவசியம்.
நாடார்களின் ஆலய நுழைவுப் போராட்ட நிகழ்ச்சிகள் வைத்தியநாத அய்யருக்குத் துணைபோகும் தமிழர்களைத் தோலுரித்துக் காட்டுவதாக அமையும்.
திருச்செந்தூர் கோவிலில் நாடார்கள் உள்ளே நுழைய முடியாது. வெளியில் இருந்துதான் தேங்காய் உடைத்து சாமி கும்பிட வேண்டும். 1872இல் இதை மீறி ஏழு நாடார்கள் உள்ளே நுழைந்தனர். கோவில் நிர்வாகம் இவர்கள் மீது வழக்குத் தொடுத்தது. டோபி, பார்பர் போன்ற இதர கீழ்ஜாதியினர் கொடிமரம் வரை செல்ல அனுமதியிருக்கும்போது நாடார்கள் உள்ளே நுழைந்ததால் கோவில் புனிதம் கெட்டுவிடாது எனக்கூறி விடுதலை செய்தது. இதனால் நாடார்கள் கொடிமரம் வரை செல்ல முடிந்தது.
1874இல் மூக்க நாடார் மதுரை--- கோவிலுக்குள் கிளி மண்டபம்வரை சென்றுவிட்டார். அடையாளம் கண்டுகொண்ட கோவில் பணியாளர்கள் அவரைக் கொன்றுவிட்டனர். நாடார்கள் பணியாட்கள் மீது வழக்குத் தொடுத்தனர். கோவிலுக்குள் நுழைய நாடார்களுக்கு உரிமையில்லை என நீதிபதி தீர்ப்பளித்து விட்டார்.
1876_78இல் சிறீவில்லிபுத்தூர் தாலுகா திருத்தங்கலில் கோவில் உள்ளே நுழைய நாடார்கள் போராட்டம் நடந்தது. மாவட்ட நீதிபதி தடை உத்தரவு பிறப்பித்து கோவிலைச் சுற்றியுள்ள தெருக்களில் ஊர்வலம் செல்ல அனுமதி அளித்தார்.
1885இல் கமுதி கோவிலுக்குள் நுழைய அனுமதி கேட்டனர். கோவில் நிர்வாகம் காணிக்கையை உயர்ஜாதியினர் மூலம் கொடுத்துவிடச் சொன்னது. நாடார்கள் மறுத்துவிட்டனர். கோவில் நிர்வாகம் அனைத்து ஜாதியினரையும் நாடார்களைப் பகிஷ்கரிக்க வைத்தது.
1890இல் திருச்சுழி கோவிலுக்குள்ளும், மதுரை கோவிலுக்குள்ளும் நாடார்கள் செல்ல முயன்றபோது அபராதம் விதிக்கப்பட்டது.
1897இல் இருளப்ப நாடார் தலைமையில் அய்ந்தாறு நாடார்கள் காவடி எடுத்துக்கொண்டு இரவில் கோவிலுக்குள் நுழைந்தனர். பூசாரி பூசை செய்ய மறுத்தார். அவர்களே தேங்காய் உடைத்து வழிபாடு நடத்தினர். கோவில் நிர்வாகம் வழக்குத் தொடுத்தது. கோவிலில் நுழைய நாடார்களுக்கு உரிமையில்லை. கோவிலைச் சுத்தம் செய்ய ரூ.500/_ நாடார்கள் தரவேண்டும் என கீழ்க்கோர்ட்டில் தீர்ப்பளிக்கப்பட்டது. உயர் நீதிமன்றத்திலும், இங்கிலாந்து பிரிவி கவுன்சிலும் இதையே உறுதி செய்தது.
1895இல் சிவகாசி கோவில் தர்மகர்த்தா தன் பதவியை ராஜினாமா செய்தார். அந்தப் பதவியை நாடார்கள் கேட்டனர். சிருங்கேரி சங்கராச்சாரியின் ஆணைப்படி மறுக்கப்பட்டது.
1896இல் கோவிலுக்குள் நுழைய முயன்றனர். கோவில் கதவுகள் மூடப்பட்டன. பூட்டை உடைத்து உள்ளே போய் தரிசனம் செய்தனர். மோதல்கள் நடந்தன. 1899இல் கலவரம் வெடித்தது. பல உயிர்கள், சொத்துகள் நாசமாயின.
இப்படிப் பல்வேறு சூழல்களால் 1910இல் நாடார் மகாஜன சங்கம் உருவாக்கப்பட்டது.
இப்படி நாடார் என்று ஆலய நுழைவு மறுக்கப்பட்ட காரணம், சனாதன கொள்கைப் படி பிராமணர்களில் பட்டர்கள் கர்ப்பக் கிரகத்துக்குள் போகலாம், இதர பிராமணர்கள் அர்த்த மண்டபம் வரை போகலாம். சூத்திரர்கள் மகா மண்டபம் வரையிலும், தீண்டத்தகாதாரும், நாடார்களும் வெளியில் நின்று கோபுரத்தை மட்டுமே ரசிக்க வேண்டும் என்ற இந்துமதத்தின் அடிப்படையே
தந்தை பெரியாரும் திராவிட இயக்கமும் இந்து மதத்தையும், சனாதனக் கொள்கையையும் அழிக்க வேண்டும் என்று போராடியதன் நியாயத்தை உணருவார்களா?
- சிவ.பாலசுப்ரமணியன்,
கண்ணந்தங்குடி மேலையூர்.-
மத்திய அரசின் தேர்வாணைய வினாத்தாளில் பெண்களை அவமதிக்கும் வினாக்கள்
பின்வரும் நடிகையரில் யார் அதிக உயரமானவர்?
(அ) ஹூமா குரேஷி, (ஆ) கத்ரினா கைஃப், (இ) தீபிகா படுகோனே (ஈ) ப்ரீதி ஜிந்தா
இந்தக் கேள்வி ஏதோ ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியின் இறுதியில் கேட்கப்பட்டு எஸ்.எம்.எஸ்.சில் பதில் சொல்லப்படும் போட்டிக் கேள்வி அல்ல.
புது தில்லியில் உள்ள மத்திய தேர்வாணையம் நடத்திய மத்திய பணியாளர் தேர்வுக்கான வினாத்தாளில் இடம் பெற்றுள்ள வினாக்களுள் ஒன்று தான் மேலேயுள்ளது.
அது மட்டுமல்ல, பெண்களை பாலியல் ரீதியாக இழிவுபடுத்துவதுபோல், தரக்குறைவாக பெண்கள் அனைவரும் பூனைகள், பூனைகள் அனைத்தும் எலிகள் என்கிற தலைப்பில் வினாவும் இடம் பெற்றது.
பெண்களை இழிவுபடுத்தும்விதமாக பாலியல் வேறுபாடுகளுடன் வினாக்களைக் கேட்பதா என்று தேர்வாணையத்திடம் விளக்கம் கேட்டு கேரள மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அதற்கு மத்திய தேர்வாணையத்தின் தலைவராக உள்ள ஏ.பட்டாச்சார்யா மன்னிப்புக் கேட்டுள்ளார். இது முறையில்லாதது, சகித்துக் கொள்ள முடியாதது, தரக்குறைவானது என்று கூறியதுடன் இந்தத் தகவலால் மிகவும் நிலைகுலைந்துபோய் உள்ளதாகவும் கூறியுள்ளார்.
மேலும், மகளிர் ஆணையத்தின் வேண்டுகோளுக்கிணங்க தேர்வாணையம் அந்த இரு வினாக்களையும் நீக்கிவிடுவதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இனி மத்திய அரசுப் பணிகளுக்குத் தேர்வு எழுதுவோர் இன்ச் டேப்புடன் அலைய வேண்டுமோ என்னவோ? அப்புறம் இடுப்பளவு பற்றி கேள்வி கேட்டுவிட்டால் என்ன செய்வது?
Post a Comment