Search This Blog

2.8.14

இதுதான் வால்மீகி இராமாயணம் - 16


இதுதான் வால்மீகி இராமாயணம்
{இதிகாசங்கள் என்றும் புராணங்கள் என்றும்  மக்களிடையே உலவ விடுகிறார்கள். இவற்றிற்குத் தெய்வீக முத்திரைகள் குத்துகின்றனர் இவற்றைப் படித்தால், இவற்றின்படி ஒழுகினால் நல்லது நடக்கும் - நற்கதி கிடைக்கும் என்றெல்லாம் இன்றுவரை கூடப் பிரச்சாரம் செய்கிறார்கள். உண்மையில் அவை என்ன? இவற்றின் தன்மை என்ன? ஒழுக்கத்திற்கு இடம் இருக்கிறதா? பகுத்தறிவுக்கு வழி இருக்கிறது? ஒன்றும் இல்லை. வால்மீகி இராமாயணம் பற்றி சைவப் பெரும் புலவரான பண்டித இ.மு.சுப்பிரமணிய பிள்ளை  (சந்திரகேகரப் பாவலர்) குடிஅரசில் எழுதிய பகுதிகள் (நூலாகவும் வெளிவந்துள்ளன). இங்கே வாரம் இருமுறை வெளியிடப்படுகிறது. படியுங்கள் - பகுத்தறிந்து பாருங்கள் - தெளிவு பிறக்கும்.}அயோத்தியா காண்டம்

முதல் அத்தியாயம் தொடர்ச்சி 

அவர்களுடைய எண்ணத்தை அறிந்தும் அறியாத வனைப் போலப் பாசாங்கு பண்ணி, அரசர்களே! நான் உங்களை எல்லாம் சரியாக அரசாண்டு வரும்போது இராமனுக்கு ஏன் முடி சூட்டச் சொல்லுகிறீர்கள்? உண்மையைச் சொல்லுங்கள் என்று கேட்டான்.


அப்பொழுது அவ்வரசர்களும் குடி மக்களும் அவனை நோக்கி, இராமன் உத்தமமான குணங்களோடு நடக்கிறான். அவன் மிகவும் கேவலமானவர் களோடுங்கூட நெருங்கிப் பழகுகிறான். எல்லோருடனும் பிரியமாகப் பேசுகிறான். கிராமங்கள் நகரங்களைப்பற்றிப் பகைவர்களுடன் போராட வேண்டியிருந்தால், இலக்கு வனை அழைத்துக் கொண்டு சண்டைக்குப்போய் வெல்லாமல் திரும்புவதில்லை. போர் முடிந்த பிறகு ஊருக்கு வந்து குடிகளைப் பார்த்து, உங்கள் மனைவி மக்கள் யாவரும் சுகமா? என்று தந்தை குழந்தைகளை விசாரிப்பதுபோல சுகம் விசாரிப்பான். ஆதலால் இவ்வளவு நற்குணங்களோடு விளங்கும் இராமனுக்கு முடிசூட்ட நாங்கள் விரும்புகிறோம் என்று கேட்டுக் கொண்டார்கள். இதைக் கேட்ட தசரதன் மகிழ்ச்சி யடைந்து வசிட்டனைப் பார்த்து, பன்னிரண்டு மாதங்களில் இந்தச் சித்திரை சிறந்தது. இதே இராமன் பிறந்த மாதம். இந்த மாதத்தில் அரசனுக்குப் பட்டங் கட்டுவதே உத்தமம். ஆதலின் வேண்டுவன விரைந்து செய்க என்று கூறினான். உடனே வசிட்டமுனி சுமந்தி ரனைப் பார்த்து, எல்லாவிதமான அலங்காரங்களும் செய்க. பொருள்களெல்லாம் சேர்க்கக் காலையில் அநேகமாயிரம் பிராமணர்களுக்கு இஷ்டப்படி தயிர், பால் முதலிய வியஞ்சனங்களுடன் சிறந்த அன்னமும், நெய், தயிர், பொரி, பூர்ணமான தக்ஷணைகளும் வேண்டியவரையில் ஆதரவுடன் கொடுக்கப்படட்டும். சூரியோதயத்தில் சுவஸ்திவாசனம் நடக்க வேண்டும். பிராமணர்களுக்கு அதைப்பற்றி ஞாபகம் செய்து தகுந்த ஆசனங்கள் போடப்படட்டும் தாளங்கொட்டிப் பிழைக்கும் நட்டுவன் முதலியவர்களும் வேசிகளும் நன்றாய் அலங்கரித்துக்கொண்டு அரண்மனை இரண் டாங்கட்டில் தயாராயிருக்கட்டும் என்று ஆணையிட்டு, ஏனைய காரியங்களையும் செய்து முடிக்க ஏவிவிட்டுத் தசரதனிடத்தில் எல்லாம் செய்யப்பட்டன என்றனன். அரசன் இராமனை அழைத்துவரச் சுமந்திரனை ஏவினன். நான்கு திக்குகளிலுமிருந்து வந்திருக்கும் அரசர்களும் மிலேச்ச தேசத்தரசர்களும் அரசனைச் சூழ்ந்திருந்தனர். இராமனும் வந்து தந்தையை வணங்கி ஓர் உயர்ந்த இருக்கையில் இருந்தான். உடனே தசரதன்,  இராமா! உனக்குப் பூச நாளாகிய நாளைக்கு முடிசூட்ட எண்ணி யிருக்கிறேன், நல்லவனாக நடந்து கொள்வாயாக என்றான். இராமனுக்கு நண்பர் சிலர் இச்செய்தியை அவனுடைய தாயாகிய கோசலைக்கு அறிவித்தனர். அவள் அவர்களுக்குப் பரிசளித்தாள். இராமன் தந்தை யிடத்தில் விடைபெற்றுத் தனது அரண்மனையை அடைந்தான்.


சபையைவிட்டு எல்லோரும் போனபின்பு தசரதன், பூச நக்ஷத்திரத்தில் நாளைக்கு முடிசூட்டுவேனென்று முடிவு செய்து உள்ளே போய்ச் சுமந்திரனைப் பார்த்து இராமனை மறுபடியும் அழைத்துவரைச் சொன்னான். சுமந்திரன் இராமனுடைய அரண்மனையையடைந்து காவலர் மூலமாக வரவைத் தெரிவித்தான். உடனே இதென்ன! உத்தேசித்த காரியத்திற்கு ஏதாவது இடையூறு நேர்ந்ததோ? என்று இராமனுக்குச் சந்தேக முண்டா யிற்று. அவன் சுமந்திரனை உள்ளே அழைத்து, நீர் மறுபடியும் வந்த காரணமென்ன? நன்றாகச் சொல்லு மென்று கேட்டான். சுமந்திரன், இராமா! உனது பிதா உன்னைப் பார்க்க விரும்பி அழைத்துவரச் சொன்னார். அதைத் தெரிவித்தேன். அங்கே போவதும் போகாம லிருப்பதும் உன்னிஷ்டம் என்றான். சுமந்திரனுடைய சொல்லைக் கேட்டு இராமன் வெகு பரபரப்புடன் வேகமாக அரண்மனைக்குப் போனான்.


தசரதன் இராமனை நோக்கி, இராமா! உன்னிடம் அரசை ஒப்புவிப்பதைத் தவிர வேறு செயலில்லை. ஆகையால் நான் சொல்வதைத் தவறாமல் கேட்க வேண்டும். நமது தேசத்து மக்களனைவரும் இப்பொழுதே நீ அரசனாக வேண்டுமென விரும்புகிறார்கள். அவர் களுடைய புத்தி எப்பொழுதம் ஒரேவிதமாயிராது. என் புத்தி மாறுவதற்கு முன்னால் உனக்கு முடி சூட்டுகிறேன். இப்படிச் செய்யவேண்டுமென்று எனக்கு இப்போது தோன்றுகிறது. உத்தேசித்த காரியத்தை நாளைக்கே முடிக்க வேண்டும். இவ்விதமான காரியங்களுக்குப் பலவகை இடையூறுகள் நேரும். உன் நண்பர்கள் இன்று உன்னைக் கவனமாகக் காப்பாற்றட்டும். உன் தம்பி பரதன் வெகு நல்ல எண்ணமுள்ளவனே. ஆனாலும் அவன் அம்மான் வீட்டிற்குப் போய் வெகுநாளாயிற்று. சாதுக்களாயும், தர்ம சிந்தையுள்ளவர்களாயும், பிறரால் கலக்க முடியாதவர்களாயும் இருப்பவர்களின் மனமும் மாறிவிடும். ஆகையால் பரதன் ஊருக்கு வருவதற்குமுன் இந்தக் காரியத்தை முடிப்பது நல்லது என்று சொல்லி இராமனுக்கு விடை கொடுத்தனுப்பினான்.


இச்செய்திகளைத் தெரிவிப்பதற்கு இராமன் தன் தாய் கவுசலையிடம் சென்றான். கவுசலை செய்தியுணர்ந்து இராமனை நோக்கி, குழந்தாய், நீடு வாழ்க! உன் எதிரிகள் நாசமடையட்டும். நீ அரசைப்பெற்று என் பந்துக் களையும், சுமித்திரையின் பந்துக்களையும் காப்பாற்று. உன் பிதா தசரதர் உன் குணங்களால் மகிழ்ந்தார். நீ நல்ல நாளிலே பிறந்தாய். நான் நெடுநாளாகச் செய்த தவமே உனக்கு அரசைக் கிடைக்கச் செய்தது என்றாள். இராமன் பக்கத்தில் நின்ற இலக்குவனைப் பார்த்து, அப்பா உனக்காகவே இந்த அரசாட்சி எனக்குக் கிடைத்திருக்கிறது. ஆதலால், அரசாள வேண்டியது உன் வேலை. இந்த நாடு நான் உயிரோடிருப்பதும் எல்லாம் உனக்கே என்று கூறி விடைபெற்றுச்சென்றான்.


தசரதனால் அனுப்பப்பெற்ற வசிட்டன் இராம னுடைய அரண்மனைக்குச் சென்று, முடிசூட்டலுக்கு முன் செய்யவேண்டிய சில காரியங்களைச் செய்து மீண்டு, சபையிலிருந்து தசரதனையடைந்து அந்தப்புரம் சென்றான். இராமனும் தனக்குப் பிரியமான வார்த்தை களை எப்பொழுதும் சொல்லும் மித்திரர்களுடன் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்து விடைபெற்று அந்தப்புரஞ் சென்றான். இராமன் விடிய ஒரு ஜாமமிருக்கும்போது தூங்கி விழித்துக்கொண்டு, வேண்டிய அலங்காரங் களெல்லாம் செய்துக் கொண்டிருந்தான். மேலே கண்ட வற்றை ஆராய்வோம்.


மேலேகண்ட வரலாறும் நாம் கேள்விப்படாததாகவே இருக்கிறது. இவ்வரலாற்றைக் கற்றுவல்ல பெரியோரிற் பலரும்கூட அறிந்திருக்க முடியாது. ஏனெனில், இவ் வரலாறு வடமொழியில் வால்மீகியாற் கூறப்பட்டிருப்பது. அதனால் வடமொழி கற்றோருள்ளும் இந்நூலை நன்கு கற்போர் மட்டுமே அறியக்கூடியதாக இது உள்ளது. மேலும், இவ்வரலாற்றை முற்றிலும் புரட்டி எழுதியுள்ள பெரும் புரட்டுக்காரரான கம்பரும் தமிழில் இராமாயணம் பாடிவிட்டார். அதனால் தமிழ் மக்களனைவரும் கம்பர் பாடிய பெரும்புரட்டு நிரம்பிய கவிகளையே படித்து மயங்கி விட்டனராதலால், வடமொழி இராமாயணப் படிப்பே தமிழ் மக்களுக்கில்லாமற் போயிற்று. இதனாலேயே தமிழ் மக்களனைவரும் மேலே கண்ட உண்மையான வரலாற்றை அறிவதற்கு வழியில்லாமற் போயிற்று. வால்மீகியெழுதியுள்ள ஆபாசமான கதைகளை யெடுத்துக்கூறி அவற்றைப் பொய்க் கவிச்சக்ர வர்த்தி யாகிய கம்பர் எவ்வாறு புரட்டுகிறாரென்று எடுத்துக் காட்டியுங்கூடச் சிலர் நம்பாது வாய்க்கு வந்ததை எழுதவும் முன் வருகின்றனரே! ஆதலின், சந்தேக முள்ளவர்கள் வால்மீகி இராமாயண மூலத்தைப்படித்துப் பார்க்க வேண்டுகிறோம். வடமொழி தெரியாதவர்கள் பண்டித நடேச சாஸ்திரியார், பண்டித அனந்தாச்சாரியார், சி.ஆர்.சீனிவா சய்யங்கார் பி.ஏ., இவர்கள் எழுதிய வால்மீகி இராமாயணத் தமிழ் மொழிபெயர்ப்பையேனும் சிரத்தையோடு படித்துச் சரி பார்க்க வேண்டுகிறோம். இவை கிடையாதோர் பண்டித மன்மதநாத தத்தர் எழுதியுள்ள ஆங்கில மொழி பெயர்ப்பை வாங்கி வாசித்து உண்மையை உணர்வாராக! நிற்க வால்மீகி கூறும் உண்மை வரலாறாகிய மேலே கண்ட வரலாற் றைக் கம்பர் எவ்வாறு மறைக்கிறாரென்பதைப் பின்னர் ஆராய்வோம். இப்போது இவ்வரலாற்றால் விளங்கும் உண்மைகளை ஆராய்வோம்.


மேலே கண்ட வரலாற்றால், தசரதன் மிகவும் வஞ்சகன் என்பது புலப்படுகிறது. ஏனென்றால் அந்தப் பரதன் வருவதற்கு முன்னாலேயே எப்படியாவது இராமனுக்கு முடிசூட்டிவிட வேண்டுமென்று நினைக் கிறான். இதனால் முன் பாலகாண்ட இறுதியிலே வஞ்சகமாகவே பரதனை அவனுடைய மாமன் வீட்டுக்கு அனுப்பினான் என்றாராய்ந்த உண்மை வலியுறுகிறது. ஆதலினாலே தசரதன் ஏதோ சூழ்ச்சி கருதியே பரதனை அவனுடைய மாமன் வீட்டுக்கு அனுப்பியவனாதல் வேண்டும். இதிலிருந்து பரதன் அயோத்தியிலிருந்தால் இராமனுக்குப் பட்டாபிஷேகம் நடைபெறாதென்பதைத் தசரதன் நன்றாக அறிவான் என்பது ஊகிக்க இடமா கிறது. இராமன் மூத்த மகனாக இருக்க, மூத்த மகனுக்கே பட்டமுரியதாக இருக்கப் பரதனிருந்தால் எவ்வாறு தடையுறும்? இராமனுக்குப் பட்டமில்லாமல் பரதனே பட்டத்துக்கு உரியவனா? என்றாராய்ந்தால், பின்னால் சித்திரகூடம் சென்று அங்கேயிருந்த இராமனைப் பரதன் நாடாள அழைத்தபோது, இராமன் பரதனை நோக்கி (வால்மீகி அயோத்தியா காண்டம், சருக்கம் 107) நம் பிதா கைகேயியிடத்தில் மிகுந்த ஆசை வைத்து இவ்விதமான அநியாயத்தைச் செய்தாரென்று நீ அவரை நிந்திப்பது சரியன்று. இந்த விஷயத்தில் புத்தி பிசகி அவர் எதையும் செய்யவில்லை. முன்பு நம் பிதா உன் தாயான கைகேயியை விவாகம் செய்யும்பொழுது, கேகய மன்னனிடத்தில் உன் பெண்ணிற்குப் புத்திரன் பிறந்தால், அவனுக்கே என் இராஜ்யத்தைக் கொடுக்கிறேனென்று பிரதிக்ஞை செய்திருக்கிறார் என்று கூறியதாகக் காணப்படும் வாக்கியத்தால் பரதனே அரசாட்சிக்கு உரியவன். இராமனுக்கு யாதொரு உரிமையுமில்லை என்ற உண்மை விளங்குகிறது. தசரதனோ வால்மீகி கூறுகிறபடி இராமனிடத்தில் அதிக அன்புள்ளவன். ஆதலின், தான் செய்து கொடுத்திருக்கிற சத்தியத்தின்படி நடக்காமல் அதை மறைத்து எப்படியாவது இராமனுக்குப் பட்டங்கட்ட வேண்டிய சூழ்ச்சிகளைச் செய்கிறான். அதனாலே ராமனை அவனுடைய குடிகளிடத்தில் நெருங்கிப் பழகி அவர்களுக்கு நல்லவனாக நடந்து அவர்களுடைய அபிமானத்தைப் பெறும்படி வேண்டும் ஏற்பாடுகள் செய்கிறான்.


தசரதன் விரும்பியபடியே இராமனும் நடந்து கொள்கிறான். இராமன் மூத்த மகனானபடியால் கூடிய விரைவில் தங்களுக்கு அரசனாக வந்தால் தங்களுக்கு அநேக நன்மைகளைச் செய்வானென்று எண்ணத் தொடங்கினார்கள். இராமனோ தன் தந்தை செய்து கொடுத்த வாக்குத்தத்தத்தையும் அதனால் பரதனுக்கே அரசுரிமையுண்டு என்பதையும் அறிந்தவனே. இது பின் அவன் பரதனிடம் கூறிய மொழிகளினாலே வெட்ட வெளிச்சமாகத் தெரிவதோடு, மேலேகண்ட வரலாற் றிலும் ஊகித்தறியத் தக்கதாக இருக்கிறது. இராமனும் எவ்விதமாவது அரசைப் பெறவேண்டுமென்னும் பேராசையையுடையவனாகவும் தன்னுடைய தந்தையின் புத்திரத்துரோக நயவஞ்சகச் சூழ்ச்சிகளுக்கு உடந்தையாகவும் இருந்ததோடு, அதனால் தன்னுடைய தம்பியாகிய பரதனை வஞ்சிக்கவும் துணிந்து பரம சகோதரத் துரோகியாகவுமானான்.


                 ------------------தொடரும் -  “விடுதலை” 01-08-2014
Read more: http://viduthalai.in/page-3/85080.html#ixzz39C8uJ3Y9

41 comments:

தமிழ் ஓவியா said...


ஆகஸ்டு


ஆகஸ்டு என்றால் இந்திய நாடு சுதந்திர நாளை பற்றிய பேசுவார் கள். திராவிடர் கழகத்தைப் பொறுத்த வரையில் ஆகஸ்டு என்றால் போராட் டக் களங்கள் காணும் திங்கள் ஆகும்.

1938 ஆகஸ்டு முதல் தேதி (இந்நாள்) தமிழ் நாட்டின் வரலாற்றில் மொழி மானம் இனமானம் கூர் தீட்டப்பட்ட நாள்!

திரு. ராஜகோபாலாச் சாரியார் சென்னை மாநிலப் பிரதமராக (Premier) இருந்த நிலையில் சென்னை மாநிலப் பள்ளி களில் இந்தியைக் கொண்டு வரப் போகிறேன் என்று முதலில் அறிவித்ததும்கூட இந்த ஆகஸ்டில்தான் (இராமகிருஷ்ண மடத்தில் 10.8.1937).

6,7,8 ஆம் வகுப்பு களில் இந்தியைக் கொண்டு வந்தார் பிரதமர் ராஜாஜி; 1938 - 1939 நிதி நிலை அறிக்கையில் வெளிப் படுத்தப்பட்ட ஒரு தகவல்: இந்துஸ்தானி கற்பிக்க 125 நடுப் பள்ளிகள் தேர்வு செய்யப்பட்ட தகவல் வெளியானது (இதன்படி வெளியான அரசு ஆணை நாள் 21.4.1938) இந்தி ஆசிரியர்களுக்காக ரூ.20 ஆயிரமும் ஒதுக்கீடு செய் யப்பட்டதாக அந்த அறிக்கை கூறியது: தொடக் கக் கட்டத்திலேயே நீதிக் கட்சி உறுப்பினரான ராஜா சர். எம்.ஏ. முத்தையா (செட்டியார்) எதிர்த்தார்.

அதற்குப் பதில் அளித்த ராஜாஜி இந்தியை எதிர்ப்பவர்கள் இரு வகை யினர் (1) ஆரிய எதிர்ப்பின் விளைவாக ஒரு சார்பாக இருந்து எதிர்ப்பவர்கள் 2) காங்கிரஸ் மீதுள்ள வெறுப் பால் எதிர்ப்பவர்கள் என்று குறிப்பிட்டார்.

ராஜாஜியின் இந்த முடிவை எதிர்த்துத்தான் தமிழ் மண் போர்க்கோலம் கொண்டது. பல வடிவங் களில் போராட்டங்கள் கிளர்ந்து எழுந்தன. அதில் ஒன்றுதான் ஆகஸ்டு முதல் தேதி (1938) தமிழர் பெரும் படை திருச்சி -உறையூரிலிருந்து புறப் பட்டதாகும். (100 பேர்கள்)
படைத் தலைவர் அய். குமாரசாமி பிள்ளை. தளபதி - அஞ்சா நெஞ்சன் பட்டுக்கோட்டை கே.வி. அழகிரிசாமி, பெருஞ் சோற்றுத் தலைவி- மூவ லூர் இராமாமிர்தம் அம் மையார்; கடந்து வந்த ஊர்கள் 234. கடந்து வந்த தொலைவு 577 மைல்கள். சென்னைக்குப் படை வந்து சேர்ந்த நாள் 11.9.1938.

படையை வரவேற்று சென்னை திருவல்லிக்கேணி கடற்கரைக் கூட்டத்தில் தமிழ்நாடு தமிழர்க்கே! என்ற முழக் கத்தை முதன் முதலாகத் தந்தைபெரியார் கொடுத் தார்.

கட்டாய இந்தியை எதிர்த்து பட்டினிப் போராட்டம் மேற்கொண்ட ஸ்டாலின் செகதீசன் படுத்த படுக்கையாக இருந்த நிலை யில் மேடைக்குக் கொண்டு வந்து வைக்கப்பட்டார்.

இதே ஆகஸ்டு 1952, 1953, 1954 ஆண்டுகளில் தான் இரயில்வே நிலை யங்களில் இந்தி எழுத் துக்களை அழிக்கும் போராட்டத்தைத் தந்தை பெரியார் அறிவித்து நடத் திக் காட்டினார்.

அந்த ஆகஸ்டுப் பட்டியலில் இன்று (1.8.2014) சமஸ்கிருத வாரத்தை எதிர்த்து தமிழர் தலைவர் மானகிகு கி. வீரமணி அவர்கள் அறி வித்த இந்தப் போராட் டத்தையும் இணைத்துக் கொள்க!

- மயிலாடன்

Read more: http://viduthalai.in/e-paper/85062.html#ixzz39CAIBBMu

தமிழ் ஓவியா said...

சமூகநீதியின் சாதனை!

சென்னை, ஆக.1- கால்நடை மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்கான பொதுப் பிரிவு கலந் தாய்வில் முதல் மாணவராகத் தேர்வு செய்யப் பட்டிருப்பவர் லாரி ஓட்டுநர் மகனாவார்; வி. சரண்குமார் நாமக்கல்லைச் சேர்ந்தவர்; இரண்டாம் இடத்தைப் பிடித்தவர் புதுக்கோட்டையைச் சேர்ந்த கமலக் கண்ணன்; இவர் விவசாயத் தொழிலாளியின் மகன்; 3ஆம் இடத்தைத் தட்டிச் சென்றவர் மனோஜ்பிரபு நாமக்கல்லைச் சேர்ந்த இவரின் தந்தையார் விசைத்தறித் தொழிலாளி. இதுதான் திராவிட இயக்கத்தின் சமூகநீதிச் சாதனை.

Read more: http://viduthalai.in/e-paper/85064.html#ixzz39CAaT1ic

தமிழ் ஓவியா said...

இது என்ன குழப்பம்?

மரபணு மாற்றப்பட்ட பயிர்களைப் பயிரிட்டு சோதனையிடுவதற்குத் தடை விதிக்கப்பட்டதாக ஆர்.எஸ்.எஸ். கூறியது, இதுகுறித்து சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரை செய்தியாளர் கள் கேட்டபோது, இது தொடர்பாக எவ்வித முடிவும் எடுக்கப்படவில்லை என்று பதிலளித்துள்ளார்; யார் சொல்வது சரி?

Read more: http://viduthalai.in/e-paper/85064.html#ixzz39CAiKVqs

தமிழ் ஓவியா said...


இன்றைய ஆன்மிகம்?


ஆண்டாள்

ஆண்டாளின் பக்திக் குப் பெருமையளித்த சிறீரங்கம் ரங்கநாதர் அவளை தன்னுடன் ஏற் றுக் கொண்டார். அதை உணர்த்தும் விதமாக சிறிவில்லிப்புத்தூரில் நடக்கும் ஆடித் திரு விழாவின் 7ஆம் நாளில் ஆண்டாளின் மடியில் சயனித்த கோலத்தில் ரெங்க மன்னார் காட்சி தருவாராம். இந்த அரிய காட்சியைத் தரிசிக்கும் தம்பதியர் இடையே மேலும் ஒற்றுமை பலப் படுமாம்.

ஆண்டாள் என்ற பக்தை கடவுளை கணவ னாகக் கைப்பற்றிடப் பாடிய விரக தாபப் பாடல் கள் ஆபாசமானவை! கடவுளைத் தந்தையாகத் தொழும் நிலை போய் புருஷனாக்கிப் புணரும் ஆசை கொண்ட பாடல்கள் சகிக்க முடியாதவை. இது தான் பக்தி வழிகாட்டும் ஆன்மிகமா? வெட்கக் கேடு!

Read more: http://viduthalai.in/e-paper/85070.html#ixzz39CAyXH00

தமிழ் ஓவியா said...


மதரீதியாக கடவுளர் சிலைகளை சாலைகளில் அமைக்க எந்த விதி அனுமதிக்கிறது? உயர்நீதிமன்றம் கடுமையான கேள்வி


மதரீதியாக கடவுளர் சிலைகளை சாலைகளில் அமைக்க எந்த விதி அனுமதிக்கிறது?

உயர்நீதிமன்றம் கடுமையான கேள்வி

சென்னை, ஆக.1- சாலைகளில் மத விழாக் கள் என்று கடவுளர் சிலைகள், மற்ற கட்டுமா னங்களை அமைப்பதற்கு அனுமதிப்பது எவ்வாறு என்று சென்னை உயர்நீதி மன்றம் தமிழக அரசிடம் விளக்கம் கேட்டுள்ளது.

கடந்த வாரத்தில் சென்னை உயர்நீதிமன்றத் தின் தலைமை நீதிபதி (பொறுப்பு) சத்தீஷ் கே. அக்னிஹோத்ரி மற்றும் எம்.எம்.சுரேஷ் ஆகி யோரைக் கொண்ட முதல் அமர்வில் பொதுநல வழக்கு விசாரணையின் போது, தமிழ்நாட்டில் சாலைகளை ஆக்கிரமிப் பதனால் எண்ணிலடங் காத வகையில் பொது மக்களுக்கு இடையூறுகள் ஏற்படுகின்றன. இதுகுறித்து தமிழக அரசு விளக்கமளிப்பதற்கு இரண்டு வாரங்கள் கால அவகாசம் வழங்கி உத்தர விடப்பட்டது. ஆகஸ்ட் மாதம் 11 ஆம் தேதி அன்று இதுகுறித்த வழக்கு விசாரணைக்கு வைக்கப் பட்டுள்ளது.

பொதுநல வழக்கு மனுதாரர் கூறும்போது, தமிழ்நாடு முழுவதும் 77 ஆயிரம் சாலையோரக் கோயில்கள் உள்ளன. வண்டிகள் செல்வதற்கும், பாதசாரிகள் நடப்பதற்கும் பெரும் இடையூறாக அவை உள்ளன. ஏராள மான சாலைகள், தெருக் கள் மதரீதியான செயல் களின் பேரால் ஆக்கிர மிக்கப்பட்டுள்ளன. இதில் எந்த மதமும் விதிவிலக் கின்றி அஞ்சத்தக்க வகை யில் செயல்படுகின்றன.

அண்மையில் சென்னைக் காவல்துறையின்சார்பில் சுற்றறிக்கை அனுப்பப் பட்டுள்ளது. அதில் எதிர்வரும் விநாயகர் சதுர்த்தி பெயரால் விநாய கர் சிலைகள் அமைக்கப் படும் இடங்கள் குறித்த விதிமுறைகளை காவல் துறை வகுத்துள்ளது. இது அரசிலமைப்புக்கு முற்றிலும் எதிரானது. ஏனென்றால், காவல்துறை சாலைகளுக்கும், நடை பாதைகளுக்கும் உரிமை யாளர்கள் அல்ல. அலுவல கரீதியில் அனுமதியின்றி சிலைகளை சாலைகள் மற்றும் தெருக்களில் நிறுவ அனுமதிப்பது என்பது ஆட்சியாளர்கள் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகளை மீறுவதாகும். காவல்துறையினரின் கண் மூடித்தனமான செயல் களால், அபாயங்கள் விளைகின்றன. கோவில் களை நிறுவுவது அல்லது அனுமதிப்பது என்பது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்துவ தாக அமைகின்றன. மற்ற வர்களும் பக்தி உள்ளவர் களாக இருப்பினும், அதே நம்பிக்கையில் இருப்ப தில்லை என்று மனுதாரர் கூறி உள்ளார்.

மனுதாரரின் வேண்டு கோளை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் இதுநாள் வரையிலும் இதை முறைப் படுத்துவதற்கு சட்டம் இல்லை. ஆகவே, அரசு பதில்மனுவை தாக்கல் செய்வதற்கு, 5_-9_-2013 தேதி யில் தாக்கீது அனுப்பியும், இதுவரை எந்த பதிலும் இல்லை. இறுதி வாய்ப்பாக இரண்டு வாரங்கள் அளிக்கப்படுகின்றன. இவ்வழக்கில் உள்ள வாய்ப்புகள் அல்லது விதிமுறைகள் மற்றும் ஆட்சியாளர்களின் இவ்வழக்கின்மீதான செயல்பாடுகள் குறித்து பதில் அளிக்க இரண்டு வாரங்கள் இறுதிக் கெடு வாக அளிக்கப்படுகின்றன.

Read more: http://viduthalai.in/e-paper/85063.html#ixzz39CBG5K3R

தமிழ் ஓவியா said...


இவர்கள் யார்? யார்? மக்களவை உறுப்பினர்களின் தொழில்கள் என்ன?டில்லி, ஆக.1- 16ஆவது மக்களவையில் உள்ள 539 உறுப்பினர்கள் தங்களின் தொழிலாகக் குறிப்பிட் டுள்ள பட்டியல் நாடாளு மன்ற இணையதளத்தில் பதிவாகி உள்ளது. அந்த பட்டியல் ஊடகங்களில் வெளியானதால் பர பரப்பை ஏற்படுத்தி உள்ளது. ராகுல்காந்தி ஒரு திட்ட ஆலோசகர் என்று கூறும் அதேநேரத்தில் மோடி சமூகப் பணியாளர் என்று கூறிக்கொள்கிறார்.

மேற்கு வங்கத்தின் காங்கிரசுக் கட்சியின் தலைவராக உள்ள பஹரம்பூர் பகுதியைச் சேர்ந்த அதிர் ரஞ்சன் சவுத்ரி சமுதாய சீர்திருத்த வாதி என்று கூறிக் கொண்டுள்ளார். இவர்மீது ஏராளமான குற்ற வழக் குகள் உள்ளனவாம். ராகுல் காந்தியின் திட்டங்கள் கடந்த தேர்தலில் எடு படாமல் போனது. அவ ருடைய உறுதிமொழி ஆவ ணத்தில் அவர் தன்னை திட்ட ஆலோசகர் என்று கூறியுள்ளார்.

நாடாளுமன்ற இணையதளத்தில் மக்களவை உறுப்பினர்கள் அரசியலைக் கடந்து, தங்களின் தொழிலாக அறிவித்துள்ளதை விவசா யம் முதல் கட்டுமானத் தொழில் வரை, மருத் துவப்பணி முதல் கல்விப் பணிவரை, ஆசிரியர்பணி முதல் விளையாட்டு வீரர் கள் வரை, கலைஞர்கள் முதல் தொழிலதிபர்கள் வரை மற்றும் மத நிறு வனங்கள் முதல் சமுதாய சீர்திருத்தம்வரையிலும் 33 தொழில்களைக் கொண் டுள்ள பட்டியலை வெளி யிட்டுள்ளது.

பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி பெயர் பத்திரிகையாளர் என்று உள்ளது. இணையத்தில் பிளாக்கில் ஆர்வமுடன் எழுதுபவராக (blogger) உள்ளவர், ஆர்.எஸ்.எஸ். ஏடான ஆர்கனைசர் இதழில் அவர் பத்திரிகை யாளர் பணி தொடங்கி யது. மக்களவையில் உள்ள மற்ற நான்கு பத்திரிகை யாளர்களில் பிஜூ ஜனதா தளத்தின் பர்த்ருஹரி மஹ்தாப் மற்றும் தத் தாகதா சத்பதி ஆகியோர் உள்ளனர்.

வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவ ராஜ், பேரவைத்தலைவர் சுமித்ரா மகாஜன் ஆகிய இருவரும் வழக்குரைஞர் களாக உள்ளதாகத் தெரி வித்துள்ளனர்.

உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தன்னை ஓர் ஆசிரியர் என்று கூறி உள்ளார். அதேநேரத்தில் முரளிமனோகர் ஜோஷி பேராசிரியர் என்று பதிவு செய்துகொண்டுள்ளார். முசாபர் நகர் கலவர வழக்கில் தொடர்புள்ளவ ரான சஞ்சய் பாலியான் அவரும் தன்னைப் பேரா சிரியர் என்று கூறி உள்ளார்.

காங்கிரசு கட்சித் தலைவரான சோனியா காந்தி அவரைப்பற்றிக் குறிப்பிடுகையில் அரசியல் மற்றும் சமூகப்பணியாளர் என்று குறிப்பிட்டுள்ளார். மத்திய அமைச்சரான மேனகா காந்தி தன்னை ஒரு எழுத்தாளர் என்று சில நூல்களை வெளி யிட்டதன்மூலம் கூறியுள் ளார். இந்திய கிரிக்கெட் வீரர் கீர்தி ஆசாத் தன்னை விளையாட்டு வீரர் என்று குறிப்பிட்டுள் ளார். ஒன்பது கலைஞர் கள், ஏழு திரைத் துறைக் கலைஞர்கள் உள்ளனர். முதன்முறை நாடாளுமன்ற உறுப்பினர் ஆகியுள்ளவ ரான பூனம் மகாஜன் தன்னை வணிகத்தில் ஈடுபட்டுள்ளவராக குறிப் பிட்டுள்ளார். திரிணாமுல் காங்கிரசு சவ்காதா ராய் தன்னை ஒரு கல்வியாள ராகக் குறிப்பிட்டுள்ளார்.

பாஜக யோகி ஆதித்ய நாத் தன்னை மத நிறு வனத்தைச் சேர்ந்தவர் என்று குறிப்பிட்டு உள் ளார். சசிதரூர் தன்னை ஒரு இராஜதந்திரியாகக் குறிப்பிட்டுள்ளார்.

Read more: http://viduthalai.in/e-paper/85069.html#ixzz39CBevJBi

தமிழ் ஓவியா said...


மனிதத் தன்மை


மனிதன் நம்பிக்கை வழி நடப்பதை விட்டுவிட்டு அறிவின் வழிச் சென்று எதையும் சிந்திக்க வேண்டும். எதுவும் அறிவிற்கு நிற்கின்றதா என்று உரசிப் பார்க்கவேண்டும். அப்போதுதான் மனிதன் காட்டுமிராண்டி நிலையில் இருந்து மனிதத் தன்மை அடைய முடியும்.

- (விடுதலை, 13.8.1961)

Read more: http://viduthalai.in/page-2/85072.html#ixzz39CBwPfwe

தமிழ் ஓவியா said...


கோரத் தீக்குத் தண்டனை!


பத்து ஆண்டுகளுக்கு முன் கும்பகோணத்தில் நடந்த ஒரு தீ விபத்தில் 94 குழந்தை மொட்டுகள் குரூரமாகக் கொல்லப்பட்டன என்பது இன்னும் நூற்றாண்டு கண்டாலும் மனிதத்தின் குருதியை உறையச் செய்யக் கூடியதுதான்.

இதுபோன்ற கொடுமைகளுக்குத் தண்டனை கூட - தீர்ப்புகூட 10 ஆண்டுகளுக்குப் பிறகுதான் கிடைக்கிறது என்பது ஆரோக்கியமானதல்ல - இந்தியாவின் நிர்வாக முறையும், நீதிமுறையும் எப்படி பிறழ்ந்து போயுள்ளன என்பதற்கு இதுவும் ஒரு முக்கிய எடுத்துக்காட்டே!

பள்ளியின் உரிமையாளர், தாளாளர், தலைமை ஆசிரியர், சத்துணவு அமைப்பாளர், சமையற்காரர் என்று தண்டனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

பள்ளி என்றால் இப்படியெல்லாம் கட்டுமானம் இருக்கவேண்டும்; எத்தனை எத்தனை வசதிகள் இடம் பெற்றிருக்க வேண்டும்; விபத்துக் காலங்களில் உயிர் பிழைக்க முன்னேற்பாட்டு வசதிகள் எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்பதற்கான சட்ட திட்டங்கள், விதி முறைகள் இருக்கத்தான் செய்கின்றன.

இவை எல்லாம் ஏட்டுச் சுரைக்காயே என்பது - இத்தகு விபத்துகள் விளக்கமளிக்கின்றன.
சத்துணவு சமைக்கும் மய்யம் கீற்றுக் கொட்டகையில் இருப்பதை அனுமதித்தது யார் என்பதுதான் முக்கியமே தவிர, சத்துணவுக் கூடத்தில் பணியாற்றும் ஏழைத் தாய்மார் தலையில் அது விடியலாமா என்பது முக்கிய கேள்வியாகும்.

பள்ளிக்கு அனுமதி அளித்தது - பள்ளியின் வரைபடம், பள்ளியின் கட்டுமானம் - இவை சரியாக இருக்கின்றதா என்பதை ஆய்ந்து சான்று அளிக்கும் அதிகாரிகள், பணம் ஒன்றே குறி என்று கருதி கல்வியையும் காசாக்கும் காரியத்தில் ஈடுபடும் கனவான்கள் இவர்கள்தான் உண்மையிலேயே குற்றவாளிகளின் பட்டியலில் வரவேண்டியவர்கள்.

இதில் இன்னொரு முக்கிய தகவலை காதும் காதும் வைத்தாற்போல கை கழுவப் பார்க்கிறார்களே - அது ஏன்?

அந்தக் கோர விபத்து நடந்த நாள் இந்து மதக் கண்ணோட்டத்தில் மிகவும் புனிதமான நாளாம் - ஆம் ஆடி வெள்ளியாம்! (அத்தகு நாளில்தான் இந்த அநியாயம் அரங்கேறியுள்ளது).

ஆடி வெள்ளியென்றால் கோவிலுக்குப் போக வேண்டுமே - கும்பிடுத் தண்டம் போட வேண்டுமே - அதுவும் ஆசிரியைகள் என்றால் கேட்கவா வேண்டும்?

பக்கத்தில் உள்ள கோவிலுக்குச் சென்று சாமி கும்பிட்டு வந்துவிடலாம் என்று திட்டமிட்டு, அதே நேரத்தில் பிள்ளைகள் வெளியில் வந்துவிடக் கூடாது என்ற பாதுகாப்பு தொலைநோக்கோடு வெளிக் கதவைப் பூட்டி விட்டுச் சென்றனர்.

ஆசிரியை வகுப்பறையைப் பூட்டி விட்டு கோவிலுக்குச் சென்ற அந்த நேரத்தில்தான் தீ விபத்து நடந்திருக்கிறது; பிள்ளைகளும் உள்ளேயே மாட்டிக் கொண்டு கோர மரணத்தைத் தழுவியுள்ளனர்.

இந்தச் செய்தியைப் பெரும்பாலான ஏடுகள் மறைத்தது ஏன்? ஏதோ தப்பித் தவறி தி இந்து (தமிழ்) ஏடு 9ஆம் பக்கத்தில் 16.7.2014 அன்று வெளி யிட்டுள்ளது.

பாழும் பக்தி பச்சிளம் பாலகர்களைப் பலி கொடுக்கச் செய்துவிட்டது என்று எடுத்துக்காட்ட, அதன் வழி விழிப்புணர்வை ஏற்படுத்த விடுதலை யை விட்டால் வேறு நாதியில்லை என்பதுதான் உண்மை.

இதற்குப் பிறகாவது எண்ணிப் பார்க்க வேண் டாமா? அதுவும் ஆடி வெள்ளி, கோவில் - கும்பிடு - இந்தச் சூழலில் இந்த விபத்து!

கடவுள் கருணை உள்ளவர் என்று சொன்னாலும் சரி, சர்வ சக்தி வாய்ந்தவர் என்று வருணித்தாலும் சரி, எங்கும் நிறைந்தவர் என்று உரத்தக் குரலில் பாடித் தொலைத்தாலும் சரி இவையெல்லாம் சுத்தப் பொய், கடைந்தெடுத்த கற்பனை என்பதை இப்படிப்பட்ட காரியம் நடந்ததற்குப் பிறகாவது சிந்திக்க வேண்டாமா?

இதனைச் சுட்டிக்காட்டி மக்களைத் தெளிய வைக்கும் ஒரு அறப் பணிக்கு ஊடகங்கள் முன்வர வேண்டாமா?

என்ன தண்டனையைக் கொடுத்தாலும் மாண்ட மழலைகள் மீளப் போவதில்லை என்றாலும், அரசுக் கென்று ஒரு பொறுப்புணர்ச்சி, கடமை உணர்ச்சி இருக்கிறதே - அதுதான் இழப்பீடு என்னும் கருணை யுள்ளம்; கூடுதல் கருணைத் தொகை கொடுக்க வேண் டும் என்பதில்தமிழ்நாடு அரசு எதற்காக எதிர்நிலை எடுத்து உச்சநீதிமன்றத்திற்குச் செல்ல வேண்டும்?

அதுவும் கல்லும் கரையும் இந்தப் பிரச்சினையிலா ஓர் அரசு இப்படி ஒரு நிலையை எடுப்பது? மறுபரி சீலனை செய்க!

Read more: http://viduthalai.in/page-2/85073.html#ixzz39CC52fTZ

தமிழ் ஓவியா said...


தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் 13 மண்டலங்கள், 59 மாவட்டங்களுக்கு, 16 மய்யங்களில் களப்பணி பயிற்சி முகாம்!


தஞ்சாவூரில் 09.05.2014 அன்று நடைபெற்ற, திராவிடர் தலைமைக் கழகச் செயற்குழுக் கூட்டத்தில், தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஒர் அறிவிப்பு செய்தார். புதுச்சேரி உள்ளிட்டு தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் பொறுப்பாளர் களுக்கான களப்பணி பயிற்சி முகாம் நடத்த வேண்டும். அது நமக்கு மேலும் உந்து சக்தி அளிப்பதுடன், புதிய பரிணாமத்திற்கும் வித்திடுவதாய் அமைய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். ஆசிரியரின் விருப் பத்தை நிறைவேற்றிட தயக்கம் ஏது? சுணக் கம்தான் ஏது? உடன் களப்பணி பயிற்சிக் குழு தயாரானது. தமிழகம் முழுவதும் தேதிகள் அறிவிக்கப்பட்டன.

நாளும், தளமும்

ஆசிரியர் அறிவித்த 15 ஆம் நாளில், அதாவது மே 24 ஆம் தேதி முதல் களப்பணி பயிற்சி முகாம் புதுச்சேரியில் தொடங்கியது. புதுச்சேரி, காரைக்கால் மண்டலங்கள் இப் பயிற்சியை மேற்கொண்டன தொடர்ந்து கடலூர், சிதம்பரம் மாவட்டங்கள் பங்கேற்ற பயிற்சி வகுப்பு மே 25 ஆம் தேதி வடலூ ரிலும்/ மதுரை மாநகர், புறநகர்,விருதுநகர் மாவட்ட வகுப்புகள் ஜூன் 7 ஆம் தேதி மதுரை பசுமலையிலும்/ திண்டுக்கல், பழனி, தேனி மாவட்டங்களுக்கு ஜூன் 8 ஆம் தேதி திண்டுக்கல் சிறுமலையிலும்/ திருவள்ளூர், காஞ்சிபுரம், அரக்கோணம், செங்கல்பட்டு, வேலூர் மாவட்ட வகுப்புகள் ஜூன் 22 இல் நெமிலியிலும்/ திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டப் பயிற்சி வகுப்பு ஜூன் 27 ஆம் நாளில் குற்றாலம் வீகேயென் மாளிகையிலும்/ சேலம், மேட்டூர், ஆத்தூர், மாவட்ட களப் பணி முகாம் ஜூலை 5 இல் சேலத்திலும்/ திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட் டத் தோழர்களுக்கு ஜூலை 6 ஆம் தேதி திருப்பத்தூரிலும் மிகச் சிறப்பாக நடந்தேறு கிறது. தொடர்ந்து கோவை, திருப்பூர், மேட்டுப்பாளையம், தாராபுரம், நீலகிரி மாவட்ட முகாம் ஜூலை 12 ஆம் தேதி மேட்டுப்பாளையத்திலும்/ ஈரோடு, கோபி, நாமக்கல், மாவட்டத் தோழர்களுக்கு ஜூலை 13 ஆம் தேதி ஈரோட்டிலும்/ திண்டிவனம், விழுப்புரம், விருத்தாசலம், கள்ளக்குறிச்சி, செய்யாறு, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களுக்கு ஜூலை 19 ஆம் தேதி திண்டிவனத்திலும்/ வடசென்னை, தென் சென்னை, கும்மிடிப்பூண்டி,ஆவடி, தாம் பரம் மாவட்டப் பயிற்சி முகாம் ஜூலை 20 ஆம் தேதி தலைநகர் சென்னையிலும் - திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, திருத் துறைப்பூண்டி ஆகிய மாவட்டங்களுக்கு ஜூலை 25 இல் திருவாரூரிலும்/ காரைக்குடி, சிவகங்கை, இராமநாதபுரம், புதுக்கோட்டை, அறந்தாங்கி மாவட்டப் பொறுப்பாளர் களுக்கு ஜூலை 26இல் காரைக்குடி/வீகெயென் மாளிகையிலும்/ திருச்சி, இலால்குடி, கரூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்டதிற்கு ஜூலை 27 இல் திருச்சி பெரியார் கல்வி வளாகத்திலும்/ தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, கும்பகோணம் ஆகிய மாவட்டத் தோழர் களுக்கு அதே ஜூலை 27 ஆம் தேதி வல்லம் பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத் திலும் நடைபெற்று முடிந்தது.


தமிழ் ஓவியா said...

சுழற்சியில் பயிற்சி!

திராவிடர் கழகத்தின் 13 மண்டலங்கள், 59 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி மாநிலம் உள்ளிட்டு, இந்தக் களப்பணி பயிற்சி முகாம் சற்றொப்ப 2 மாதங்கள் தொடர்ந்து அதன் வீச்சை வெளிப்படுத்தி வந்துள்ளன. ஜூன் 27 மற்றும் ஜூலை 20 முறையே குற்றாலம், சென்னை ஆகிய பயிற்சி முகாம்களில் தமிழர் தலைவர் அவர்கள் பங்கேற்று அற் புதமான ஓர் வகுப்பைத் தோழர்களுக்கு எடுத்து உற்சாகமூட்டிச் சென்றனர். தொடர்ந்து "கழகப் பொறுப்பாளர்களின் செயல்பாடுகள்" என்ற தலைப்பில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங் குன்றன், "இயக்கத்தில் மகளிர் பங்கு" என்ற தலைப்பில் கழகப் பொருளாளர் பிறைநுதல் செல்வி, "பதிவேடுகள், ஆவணங்கள் பராமரிப்பு, தொழிலாளரணி விரிவாக்கம்" என்பது குறித்துச் செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு, "பன்முகப் பிரச்சார ஏடுகள்" தொடர்பாகப் பொதுச் செயலாளர் துரை. சந்திரசேகரன், "பிரச்சார அணுகுமுறையும், அறிவியல் தொழில் நுட்பமும்" குறித்துப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், "இளை ஞரணி, மாணவரணி கட்டமைப்பு, புதிய இடங்களில் அமைப்புகளை உருவாக்குதல் குறித்துப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக் குமார், விடுதலைச் சந்தா சேர்த்தல், நன் கொடை பெறுதல் தொடர்பாய் பொதுச் செயலாளர் இரா.குணசேகரன், இடஒதுக் கீட்டின் இன்றைய நிலை, இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புகள் குறித்து கோ.கருணாநிதி ஆகியோர் ஒன்றன்பின் ஒன்றாக வகுப்பு களை எடுத்தனர். கழகக் கட்டுப்பாடுகள் என்ற தலைப்பில் மதுரையில் பெரியார் உராய்வு மய்ய இணை இயக்குநர் முனைவர் அதிரடி அன்பழகன் பேசினார்.

தமிழ் ஓவியா said...

நோக்கமும், தாக்கமும் ! மொத்தம் 13 மண்டலங்களில் நடைபெற்ற இக் களப்பணி பயிற்சி முகாம்களில் குற்றாலம், சென்னை ஆகிய இடங்களில் தமிழர் தலைவர், ஆசிரியர் அவர்கள் பங்கேற்றுச் சிறப்பித்தார்கள். அவர்கள் ஆற்றிய உரையில், நம் இயக்கம் வேறெந்த இயக்கத்திற்கும் மற்றும் அரசியல் அமைப்பு களுக்கும் சளைத்தது அல்ல என்பதை ஆதாரபூர்வமாக விளக்கினார்கள். புதுடில்லி தொடங்கி, தமிழ்நாட்டுக் குக் கிராமம் வரையிலான இயக்கச் சொத்துகள் குறித்துக் குறிப்பிட்டார்கள். ஒவ்வொரு ஊரிலும் இயங்கும் நம் நூலகங்கள், படிப்பகங்கள் வேறு எவருக்குமே இல்லாதது; வேறு எங்குமே இல்லாதது என்பதை நினைவு படுத்தினார்கள். இன்றைக்குப் "பெரியார் உலகத்தை" உருவாக்கும் பெரும் பணியில் நாம் இருக்கிறோம். அப்படியான நம் இயக்கச் செயல்பாடுகளை முன்னெடுத் துச் செல்ல வேண்டும். தலைமையில் ஓர் அறிவிப்பு என்றால், இருட்டும் முன்பே கிளைக் கழகக் காதுகளுக்கு அது சென்று சேர வேண்டும். மனிதர்கள் தங்களைப் புதுப்பித்துக் கொள்வது நித்தமும் அவசியமாகிறது என்றார் ஆசிரியர்.

சுவரெழுத்தே ஆயுத எழுத்து !

திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் "கழகப் பொறுப்பாளர்களின் செயல்பாடுகள்" என்ற தலைப்பில் பேசுகையில், பாரதீய ஜனதா, இன்று வலுவான சக்தியாக வளர்ந்துள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் ஏதும் செய்ய முடியவில்லை. காரணம் பெரியார் கொள்கை! தொடர்ந்து செயல்படுவதன் மூலம் இதனை நாம் தக்க வைக்க முடியும். விடுதலை நம் உயிர் மூச்சு என்பதை நீங்கள் அறிய வேண்டும். மாவட்ட, ஒன்றிய,நகர, கிளைக் கழகக் கூட்டங்களை 3 மாதத்திற்கு ஒருமுறையும், அதேகால இடைவெளியில் தெருமுனை மற்றும் பொதுக் கூட்டங்களை நடத்துங்கள். நிறைய புதுத் தோழர்கள் கிடைப்பார்கள். அவர்களை விடுதலை வாசகர் வட்டத்திற்குள் அழைத்து போங்கள். உடன் உறுப்பினர் சேர்க்கையைத் துவங் குங்கள். உங்களின் வணிக நிறுவனங்களில் இயக்க நூல்கள் கிடைக்கச் செய்யுங்கள். ஆண்டிற்கு நான்கு முறை இயக்கக் கொடிகளைப் புதுப்பித்துக் கொள்ளுங்கள். புதிய, புதிய பகுதிகளில் படை எடுங்கள். எளிமையான மந்திரமா? தந்திரமா ? தீமிதி போன்ற போன்றவற்றை செய்து காட்டுங்கள். குறிப்பாகத் தோழர்களே ! உங்கள் ஊரில் அல்லது தெருவில் சிறு கரும்பலகை வைத்து எழுதுங்கள். அதன் பலனை வெகு சீக்கிரமே நீங்கள் பெறுவீர்கள். அதேபோல சுவர் எழுத்தே நம் சமூகத்திற்கான ஆயுத எழுத்து என்பதை அறிந்து மறவாதீர்கள் என்று கலி.பூங்குன்றன் பேசினார்.

மகளிரும் வெற்றியும் !

"இயக்கத்தில் மகளிர் பங்கு" என்ற தலைப்பில் கழகப் பொருளாளர் பிறைநுதல் செல்வி அவர்கள் பேசும்போது, எந்த இயக்கத்தில் பெண்கள் பங்கு அதிகம் இருந்ததோ, அது மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. இது ஓர் வரலாற்றுப் பதிவு. அவ்வகையில் மகளிரை அதிகம் முன்னிலை ஏற்ற இயக்கம் நம்முடையது. இதை அதிக மாக்க வேண்டும். ஒரு பெண் கல்வி கற்றால், அக்குடும்பமே கல்வி பெறுவதுபோல, ஒரு மகளிர் கொள்கை ஏற்றால் அக்குடும்பமே கொள்கைக் குடும்பமாக மாறும். எனவே பெண்களுக்கு நிறைய முக்கியத்துவம் அளியுங்கள். குழந்தைகள் மற்றும் மகளிர் சந்திப்புகள் நிறைய நடக்க வேண்டும். நிகழ்ச்சிகளில் அவர்களே கடவுள் மறுப்புக் கூற வேண்டும், அவர்களே தலைமை, முன் னிலை ஏற்க வேண்டும், எல்லாமும் அவர் களாகவே இருக்க வேண்டும். இதன் மூலமே கொள்கை வாரிசுகளை நாம் எளிதில் உரு வாக்க முடியும் என பிறைநுதல் செல்வி பேசினார்.

தமிழ் ஓவியா said...

ஆவணங்களே அளவீடு !

"பதிவேடுகள்,ஆவணங்கள் பராமரிப்பு, தொழிலாளரணி விரிவாக்கம்" என்பது குறித்துச் செயலவைத் தலைவர் சு.அறிவுக் கரசு அவர்கள் பேசுகையில், இயக்க ஆவணங்கள், பதிவேடுகள் பின்பற்றுவதில் கவனம் அவசியம். இயங்குவது எவ்வளவு முக்கியமோ, அதைப் பதிவிடுவதும் மிக அவ சியம். மாவட்டம், ஒன்றியம், நகரம், கிளைக் கழகம், மாணவரணி, மகளிரணி, தொழிலாள ரணி, வழக்கறிஞரணி என எல்லாவற்றிற்கும் பதிவுகள் அவசியம். பொறுப்பாளர்கள் மாறும் போது, பயன்படுத்திய ஆவணங் களைப் புதியவர்களிடம் கொடுக்க வேண் டும். தனித்தனி ஆவணங்கள் கூடாது. இயக்கக் கூட்டங்கள் முடிந்த பிறகு வரவு, செலவு ஆவணங்களைத் தலைமைக்கு அனுப்பிய வரலாறுகள் நம்மிடம் நிறைய உள்ளன. அதேபோன்று தலைமையில் இருந்து வரும் கடிதங்களை ஒரு கோப் பிலும், நீங்கள் அனுப்பும் பதில்களை மற்றொரு கோப்பிலும் பத்திரப்படுத்துங்கள். தோழர்களின் முகவரி, தொடர்பு எண்கள், மின்னஞ்சல் அனைத்தையும் ஆவணப் படுத்துங்கள். அது நம்முடைய சொத்து என்பதையும் கூடவே நினைவில் கொள் ளுங்கள் என சு.அறிவுக்கரசு பேசினார்.

தமிழ் ஓவியா said...

அடையாளம் அவசியம் ! "பன்முகப் பிரச்சார ஏடுகள்" தொடர் பாகப் பொதுச் செயலாளர் துரை.சந்திரசே கரன் அவர்கள் தம் உரையில், பெரியாரி யலை வாழ்வியலாக கொண்டவர் தன் ஒவ் வொரு அசைவிலும் தம்மை அடையாளம் காட்ட வேண்டும். மக்கள் தொடர்புகளில் நிறைய ஆர்வம் கொள்ள வேண்டும். நம் தேகத்தில், வாகனங்களில், வீட்டில் என எல்லா இடங்களிலும் நாம் யார் என்பதை அவர்களுக்கு அறிவிக்க வேண்டும். அது அய்யா கொடியாக இருக்கலாம், அய்யா, ஆசிரியர் படமாக இருக்கலாம். எந்த நேரமும், ஏதாவது ஒரு வடிவில் மக்களுக் கான நினைவூட்டல் அவசியம். நல்ல அம் சங்கள் எதுவும் இல்லாத அரசியல் கட்சி களில் இவ்வளவு மக்கள் திரள் எப்படி வந்தது? "அங்கே பதவியும், பணமும் கிடைக்கிறது", என நீங்கள் சொன்னால் அதை நான் மறுப்பேன். பல இலட்ச உறுப்பினர்களில் வெகு சிலருக்கே நீங்கள் சொல்லும் சுகம் கிடைக்கிறது. மற்றவர் நிலை மிகச் சாதாரணமே. அப்படியிருக்க குறிக்கோள், கொள்கை எதுவும் இல்லாத, சுயமரியாதை உணர்வு பெற முடியாத அந்நிலையிலிருந்து அம்மக்களை நம்மால் வெகுவாக கவர முடியும். தெருமுனை மற்றும் பொதுக் கூட்டங்கள் மூலம் எப் போதும் மக்களுடன் களத்தில் இருங்கள் என துரை.சந்திரசேகரன் பேசினார். சிறியதாயினும் தொடர்ந்து செய்யுங்கள்!

தமிழ் ஓவியா said...

"பிரச்சார அணுகுமுறையும், அறிவியல் தொழில் நுட்பமும்" குறித்துப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்கள் பேசும் போது, புதிய மனிதர்களை அடையாளம் காண்பதும், நம் அருகில் இருக்கும் நண்பர் களை கைப்பிடித்து அழைத்து வருவதும் நம் முக்கிய பணி. சேலத்தில் சாமியாடி வந்த ஒரு பெண்மணி சில நாட்களாக நம் கூட்டங் களுக்கு வந்து போகிறார். தஞ்சை பெரிய கோவிலில் ஒரு பிச்சைக்காரர் சொன்னா ராம்,"திருடர்களை உருவாக்கும் இடம் கோவில். மனிதர்களை உருவாக்கும் இடம் திராவிடர் கழகம்" என்று. இந்த வார்த்தை யின் ஈர்ப்பால் நம் இயக்கத்தில் இணைந்த ஒரு தோழர் தஞ்சாவூரில் இருக்கிறார். இப் படியான எண்ணற்ற மக்கள் நம் அருகி லேயே வாழ்ந்து வருகிறார்கள். இந்தியாவில் திட்டமிட்டுச் சிலர் பொய் பேசி வந்தார்கள். அதுவும் திரும்பத் திரும்ப அதே பொய்யை பேசினார்கள். அதன் மொத்த விளைவாக இன்றைக்கு மோடியைப் பார்க்கிறோம். பொய் பேசவே அவர்களுக்குத் தொடர் முயற்சியும், விடா உழைப்பும் இருக்கும் போது, சமூகத்தைப் பாதுகாக்கும் பொருட்டு நம் வேகம் எந்தப் பாய்ச்சலில் இருக்க வேண்டும்? அதேநேரம் கொள்கைகளைப்

புதிய விதங்களில், சிறந்த அணுகுமுறைகள் கொண்டு கையாளுங்கள். கிடைப்பது வெற்றி யாக மட்டுமே இருக்கும் என வீ.அன்புராஜ் பேசினார்.

தமிழ் ஓவியா said...

விதைப்பதை அறுவடை செய்யுங்கள்!

"இளைஞரணி, மாணவரணி கட்டமைப்பு, புதிய இடங்களில் அமைப்புகளை உருவாக்குதல் குறித்துப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார் அவர்கள் பேசுகையில், இயக்க உறுப்பினர்கள் குறைவு என எண்ணாதீர்கள்.அதைக் கொண்டு தான் தமிழகத்தில் பெரும் புரட்சிகள், மாற்றங்கள் கொண்டு வந்தோம். ஒவ்வொன்றுக்குப் பின் னாலும் நாம் இருக்கிறோம். இன்று பெரியாரை உலகம் பேசுகிறது. முன்பு மாவட்டங்கள் மிகப் பெரியதாக இருக்கும். வாகன வசதி, தொடர்பு சாதனங்கள் இல்லாத, அந்தக் காலத்திலே நம் தோழர்கள் வரலாறு படைத்தவர்கள். இன்றைக்கு நம்மிடம் எல்லாம் இருக்கிறது. நல்ல அணுகு முறையும், உழைப்பும் உள்ள மாவட்டங்களில் தோழர்கள் எண்ணிக்கை கூடிகொண்டே இருக்கும். பழைய, புதிய தோழர்களிடம் எப்போதும் தொடர்பில் இருங்கள். மாநாடு நடத்தி விட்டு ஆறு மாதம் அமைதியாய் இருந்தால், அதன் அறுவடையை யார் செய்வது? அதேபோல ஊர் நண்பர்கள், இயக்கத் தோழர்கள் வீட்டு நிகழ்ச்சிகளுக் குக் கறுப்புச் சட்டையுடன் அய்ந்தாறு பேர் செல்லுங்கள். இவையெல்லாம் மனிதர்களிடம் ஊடுருவிச் செல்ல எளிய வழியாகும் என்று இரா. ஜெயக்குமார் பேசினார்.

தமிழ் ஓவியா said...

விடுதலை படிக்கச் செய்யுங்கள்!

விடுதலைச் சந்தா சேர்த்தல், நன்கொடை பெறுதல் தொடர்பாய் பொதுச் செயலாளர் இரா.குணசேகரன் அவர்கள் பேசும்போது, விடுதலை வாழ்வின் 80 ஆண்டுகளில், அதன் ஆசிரியராக தமிழர் தலைவர் அவர்கள் 52 ஆண்டுகள் ஆசிரியராக இருந்து வருகிறார். வெளிநாட்டுப் பத்திரிகை ஒன்றில் 22 ஆண்டு களே இருந்த ஒருவருக்கு கின்னஸ் சாதனை வழங்கப்பட்டது. அதைவிட பெரும் சிறப்பு பெற்ற நம் ஆசிரியர் அவர்களுக்கு, நிறைய சந்தாக் களை வழங்க வேண்டும். தமிழ்நாட்டின் ஏனைய பத்திரிகைகளோடு விடுதலையை ஒப்பிடும் போது, வாழ்வை உயர்த்தும் பகுத்தறிவுக் கருத்துகள் நம்மிடம் மட்டுமே உள்ளன. தினமும் பல்வேறு துறைச் சார்ந்த செய்திகளை, மிகக் குறைந்த விலையில் நாம் மட்டுமே வழங்கி வருகிறோம்.எனவே தொடர்ந்து மக்களைச் சந்தித்து, குறித்த நேரத்தில் விடுதலை சந்தாக் களை வழங்க வேண்டும் என இரா.குணசேகரன் பேசினார்.

படிப்புக்கான வேலை:வேலைக்கான படிப்பு!

இடஒதுக்கீட்டின் இன்றைய நிலை, இளை ஞர்களுக்கான வேலை வாய்ப்புகள் குறித்து கோ.கருணாநிதி அவர்கள் பேசும் போது, இடஒதுக்கீட்டைப் பெற்றுத் தந்த இயக்கம் திராவிடர் கழகம். இந்த உருவாக்கம் குறித்தும், இதன் பயன் குறித்தும் நம் கழகப் பிள்ளைகள் அறியச் செய்ய வேண்டும். அப்போதுதான் அவர்கள் பலரிடமும் எடுத்துக் கூறுவார்கள். சமூகநீதியால் தமிழ் நாட்டில் நாம் பயன்களை அனுபவிக்க முடிகிறது. மற்ற மாநிலங்களில் அந்த நிலை இல்லை. அதேநேரம் மத்திய அரசு தொடர் பான நிறைய வேலை வாய்ப்புகள் உருவாகி வருகின்றன. அதை நல்ல முறையில் பயன் படுத்த வேண்டும். நமது மாணவர்கள் பொறி யியல் உள்ளிட்ட உயர் படிப்புகள் பயின்றாலும், வங்கி வேலை மற்றும் ஏனைய அலுவலக வேலை களுக்குத் தங்களைத் தயார் செய்து கொள்வ தில்லை. மாறாக வட இந்தியாவில் மற்ற படிப்புகள் எப்படி இருந்தாலும், அரசு வேலைகளுக்கான தேர்வுகளில் ஆர்வம் காட்டுகின்றனர். அந்நிலை இங்கும் வர வேண்டும் என கோ.கருணாநிதி பேசினார்.

- தொகுப்பு: வி.சி.வில்வம்

Read more: http://viduthalai.in/page-2/85076.html#ixzz39CDMirIA

தமிழ் ஓவியா said...

வாஸ்து சாஸ்திரம் என்பது நம்முடையதல்ல -இறக்குமதி செய்யப்பட்ட பண்பாட்டுப் படையெடுப்பு

தமிழர் தலைவர் ஆசிரியர் பகுத்தறிவு உரை

கொங்குநாட்டார்குப்பம், ஆக. 1- வாஸ்து சாஸ்திரம் என்பது நம்முடையதல்ல இறக்குமதி செய்யப்பட்ட பண்பாட்டுப் படையெடுப்பு என்று விளக்க உரையாற் றினார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

8.7.2014 அன்று கொங்குநாட்டார் குப்பத்தில் தியாக. முருகனின் பண்ணை இல்லத்தைத் திறந்து வைத்து தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார். அவரது உரை நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:

வீட்டை காட்டிக்கொண்டே வந்தார்கள்; பொதுவாக, ரிப்பனைக் கட் செய்வதற்கு, கத்திரிக்கோலை என்னிடம் கொடுத்தார்கள்; தந்தை பெரியார் அவர்களிடம், கத்திரி கோலை கொடுத்து, ரிப்பனை நடுவில் கட் செய்ய சொல் வார்கள். அய்யா அவர்கள் நடுவில் கட் செய்ய மாட்டார்; ரிப்பனை ஒரு ஓரமாக கட் செய்வார். அந்த ரிப்பன் வீணாகாமல் பார்த்துக் கொள்வார். நாங்கள் என்ன செய் வோம் என்றால், ஓரமாகக்கூட ஏன் கட் செய்ய வேண்டும்; ரிப்பனை ஒட்டித்தானே இருப்பார்கள்; கொஞ்சம் வேகமாக இழுத்தால், முழு ரிப்பனும் அப்படியே கையோடு வந்து விடும்; அதனை முழுமையாகவே பயன்படுத்தலாம் என்று சொல்லி, நாங்கள் ஒவ்வொன்றிலும் சிக்கன மனப்பான்மை யோடு இருப்போம். பெரியார் அவர்களோடு சேர்ந்தால், பெரியாருடைய கொள்கையிலே ஊர்ந்தால், பெரியார் கொள்கையை நாம் உணர்ந்தால், நிச்சயமாக அந்த வாய்ப்பு களை தெளிவாகப் பெறுவோம் - வெற்றி பெறுவோம்.

இயக்க நூல்களை நான் அளிப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன்

தமிழ் ஓவியா said...

அந்த வகையில், நம்முடைய தியாக.முருகன் அவர்கள், ஒவ்வொரு செயலையும் மிகத் தெளிவாகப் பார்த்து செய்தி ருக்கிறார். சுற்றுச்சூழல் மட்டுமல்ல, இந்த இல்லமே ஒரு சுற்றுச்சூழலை உள்ளடக்கிய இல்லம். இல்லத்தின் உள்ளே சென்றால், உள்ளே ஒரு அறையை ஒதுக்கியிருக் கிறார்கள்; அது என்ன அறை என்றால், புத்தக அறை. அறிவுப் பண்ணை என்பதற்கு என்ன அடையாளம் என்றால், வீட்டில் ஒரு புத்தக அறை இருப்பதே. அந்த அறையில் மிக அற்புதமான புத்தகங்கள், களஞ்சியங்கள் எல்லாம் வைத்திருக்கிறார். ஆகவே, அவர்களைப் பாராட்டுகின்ற வகையில், முதற்கண் தியாக.முருகனையும், கலாமுருகன் அம்மையார் அவர்களையும் அழைத்து, இந்தக் குடும்பத் தினரை அழைத்து, மிகத் தெளிவாக நாங்கள் இயக்கத்தின் சார்பிலே, அவர்கள் வீட்டிலே அமைத்திருக்கின்ற நூலகத் திற்கு சிறப்பான வகையில், அவர்களுக்கு இயக்க நூல் களை, தலைமைக் கழகத்தின் சார்பில் நான் அளிப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன்.
இந்த இல்லத் திறப்பு விழாவினை, அறிமுக விழா என்று அழைப்பிதழ் அடித்துள்ளார். ஆனால், பெரியார் கொள்கையைப் பின்பற்றி, பகுத்தறிவுப் பிரச்சார விழாவாக இதனை ஆக்கியிருக்கிறார்.

பெரியார் கொள்கையைப் பின்பற்றியதால், தியாக. முருகனோ, கலா முருகன் அவர்களுடைய குடும்பமோ கீழே போகவில்லை. பெரியார் கொள்கையைப் பின்பற்றியதால், நாங்கள் வளர்ந்துதான் இருக்கிறோம்; இதனை எல்லோரும் தெரிந்துகொள்ளவேண்டும் என்ப தால்தான், இவ்வளவு பெரிய விழாவும், விருந்தும் வைத்திருக்கிறார்.

இவரே வைதீகராக இருந்தால் என்னாகி இருக்கும்? இதுவே, புதிய பண்ணை இல்ல அறிமுக விழா அழைப் பிதழ் என்று தூய தமிழில் இருக்காது; கிரஹப் பிரவேசம் என்று இருக்கும்.

நான் இந்த இல்லத்தின் உள்ளே சென்றோம்; அற்புத மாக தரை போட்டிருக்கிறார்கள்; மிகவும் சுத்தமாக இருக் கிறது.

இவரே வைதீகராக இருந்தால், பசுமாட்டை உள்ளே அழைத்துக் கொண்டு வரவேண்டும்; அதை ரீவர்ஸ் கியர் போட வைக்கவேண்டும்; பின்பக்கமாகத் திருப்பவேண்டும்; அம்மாடு சாணி போட்டு, மூத்திரத்தை விட்டால்தான், அது நல்ல சகுனம் என்று வைத்திருக்கிறார்கள். இது மாதிரி ஒரு பைத்தியக்காரத்தனம், மூடத்தனம் வேறு எந்த நாட்டிலா வது உண்டா என்பதை நீங்கள் நினைத்துப் பார்க்க வேண்டும்.

தமிழ் ஓவியா said...


பஞ்சகவ்யம் செவ்வாய் கிரகத்திலிருந்து கொண்டு வரப்பட்டதா?

நாம் வீட்டை கட்டி, சுத்தமாக இருக்கவேண்டும் என்று தான் நினைப்போம். இது இங்கே மட்டுமல்ல, நம்மாள் களுக்கு மூடத்தனம் எப்படி இருக்கிறது என்றால், நான் சிங்கப்பூருக்குச் சென்றிருந்தேன். அங்கே 80 மாடி, 90 மாடி என்று பிளாட்ஸ் கட்டியிருக்கிறார்கள்; அரசாங்கமும் கட்டித் தருகிறது. அந்த வீட்டிற்குள் நம்மாள் சென்று என்ன செய்கிறான் என்றால், 2000 சிங்கப்பூர் டாலரை வாடகை யாகக் கொடுத்து, லாரியில் ஏற்றி, அய்யரையும் சேர்த்து ஏற்றிக் கொண்டு வந்து, 75 ஆவது மாடியிலுள்ள வீட்டிற்கு லிப்ட்டில் கொண்டு செல்கிறான். அது சாணி போடவேண் டும்; பஞ்சகவ்யம் என்று சொல்கின்ற மாட்டு மூத்திரம், சாணி, மோர், தயிர், பால். இது என்ன செவ்வாய் கிரகத்தி லிருந்து கொண்டு வரப்பட்டதா? பைவ் புராடக்ட்ஸ் ஆஃப் கவ் என்று ஆங்கிலத்தில் எழுதியிருக்கிறான். அதை வாங்கி, குடியுங்கள் என்று சொல்கிறான். அதை படித்தவன் உள்பட நம்மாள்கள் வாங்கிக் குடிக்கிறார்கள். ஆனால், இங்கே அதற்கெல்லாம் வேலை கிடையாது. சுத்தமாக இருக்கிறது. அதுமட்டுமல்லாமல், இந்த வீட்டை கட்டியதி லிருந்து, இன்றைக்குத் திறப்பதுவரையிலும், முருகன் அவர்களோ, அவர்களது துணைவியார் அவர்களோ இங்கே எலுமிச்சம் பழத்தையோ, பறங்கிக்காயையோ, பூசணிக்காயையோ கட்டித் தொங்கவிடவில்லை.

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்கள் சொன்னார், பூசணிக்காய் மகத்துவம் என்று எழுதினார். கைவண்ணம் அங்கு கண்டேன்; கரிவண்ணம் இங்கு கண்டேன் என்று எழுதினார்.

அமெரிக்காவிற்குச் சென்றபொழுது....

கரும்புள்ளி, செம்புள்ளி குத்தி ஒரு பெரிய பூசணிக் காயை கட்டியிருப்பார்கள். நான் முதன்முதலில் 1981 ஆம் ஆண்டு அமெரிக்காவிற்குச் சென்றேன். அப்பொழுது நியூயார்க்கிற்கு என்னை அழைத்துச் சென்றார்கள். அப்படி அங்கே சென்றதில், அங்கே எம்பயர் ஸ்டேட் பில்டிங் உலகத்தினுடைய உயரமான கட்டடம் என்று அப்பொழுது இருந்தது. அதற்குப் பிறகு வெவ்வேறு இடங்களில் உயரமான கட்டடங்கள் வந்துவிட்டன. என்னை அழைத் துக் கொண்டு சென்றவர், சுற்றிக் காண்பித்து வந்தார். நான் வேடிக்கையாக கேட்டேன்; நீங்கள் எந்த மாடியில் இருக்கிறீர்கள் என்று கேட்டேன். நான் 81 ஆவது மாடியில் இருக்கிறேன் என்றார். ரொம்ப நேரமாக உற்று உற்றுப் பார்க்கிறீர்களே, என்ன பார்க்கிறீர்கள்; ஏதாவது சந்தேகம் இருந்தால் என்னிடம் கேளுங்கள் என்றார். ஒன்றுமில்லை, இவ்வளவு பெரிய கட்டடத்தைக் காட்டினீர்கள்; மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது; பூசணிக்காய் எங்கே தொங்கு கிறது என்று பார்த்தேன்.

உடனே அவர் சிரித்துக்கொண்டே, சார், நீங்க எங்கே சென்றாலும், கேலி, கிண்டல்தான் பேசுவீர்கள் என்றார்.

இல்லீங்க, நம்மூரில் பெரிய கட்டடம் கட்டினால், பூசணிக் காயைத் தொங்கவிடுகிறார்களே? என்றேன்.

இந்தியாவில், தமிழ்நாட்டில் மூட நம்பிக்கையைப் புகுத்தியிருக்கிறார்கள்; இந்த பூசணிக்காய் மேல் ஒருத்தருக்கும் கோபம் இல்லை. பூசணிக்காயை அல்வா செய்யலாம்; கூட்டு செய்யலாம்; குழம்புக்குப் போடலாமே தவிர, சுற்றி நடு ரோட்டில் போட்டு உடைக்கவேண்டிய அவசியமில்லை. அதன்மேல் இரண்டு சக்கர வாகனம் ஏறி, வழுக்கிக் கொண்டு சென்று விபத்து ஏற்படுகின்ற நிலையும் தேவையில்லை.

பகுத்தறிவுவாதியாக மாறியதினால், இன்றைக்கு இந்த வீடு எவ்வளவு அழகாக இருக்கிறது; எல்லோருக்கும் மகிழ்ச்சியான ஒரு கொள்கைப் பிரச்சார விழாவாக இருக்கிறது என்பதை நீங்கள் நினைத்துப் பார்க்கவேண்டும்.

தமிழ் ஓவியா said...

நம்முடைய கழக செயலவைத் தலைவர் அறிவுக்கரசு அவர்கள் ஒரு நல்ல கருத்தினை இங்கே சொன்னார்.

சென்னையில் 11 மாடி கட்டடத்தை வாஸ்து சாஸ்திரம் பார்த்துதானே கட்டினார்கள்!

அது என்னவென்றால், வாஸ்து சாஸ்திரம்; 30 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் மனையடி சாஸ்திரத்தைப் பற்றிதான் பேசினார்கள். ஆனால், இப்பொழுது எங்கே பார்த்தாலும் வாஸ்து சாஸ்திரம், வாஸ்து சாஸ்திரப்படிதான் வீடு கட்டுகிறோம் என்கிறார்கள். உங்களுக்குத் தெரியும், கடந்த நான்கு நாள்களாக எந்த செய்தித் தாளை எடுத் தாலும், ஊடகங்களைப் பார்த்தாலும் சென்னையில் 11 மாடி கட்டடம் இடிந்து விழுந்து 60 பேர்களுக்குமேல் உயிரிழந் திருக்கிறார்கள் என்ற வேதனையான செய்தி வருகிறது. எல்லோரும் அந்தக் கட்டடத்தில் பணியாற்றியவர்கள் என்ற செய்தி வெளிவந்தது. வாஸ்து சாஸ்திரம் பார்த்துச் சொன்னவரை கைது செய்யவேண்டும் அல்லவா?

தமிழ் ஓவியா said...


அதற்கு அடுத்த வாரம் திருவள்ளூரில் மதிற்சுவர் விழுந்து 11 பேர் உயிரிழந்தனர் என்று சொன்னால், இந்த விபத்து விரும்பத்தகாத விபத்து என்று தெரியும். ஆனால், அவர்கள் அத்தனை பேருக்கும் ஆழ்ந்த இரங்கலை சொல்லவேண்டியது மனிதநேயமாகும். ஆனால், ஒன்றை நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டும், மூட நம்பிக்கையாளர் களுக்காக நான் சொல்கிறேன், இந்தக் கறுப்புச் சட்டைக் காரன் இப்படித்தான் பேசுவார்கள் என்பவர்களுக்காக சொல்கிறேன், இந்த 11 மாடி கட்டடம் கட்டினார்கள் பாருங் கள், அதை வாஸ்து சாஸ்திரம் பார்த்துதான் கட்டியிருக் கிறான். அந்தத் தகவல்களை விடுதலையில் வெளியிட்டி ருக்கிறோம். இப்பொழுது சம்பந்தப்பட்ட அத்தனை பேரை யும் கைது செய்கிறார்கள் அல்லவா, அதுபோல், வாஸ்து சாஸ்திரம் பார்த்துச் சொன்னவரை கைது செய்யவேண்டும் அல்லவா? உனக்குத்தானே ஞானோதயம், ஞானதிருஷ்டி இருக்கிறதே; அதற்காகத் தானே காசு கொடுத்திருக்கிறார் கள்; நீ கடவுள் அவதாரம்; நாங்கள் எல்லாம் மனித அவதாரம்; நீ என்ன சொல்லியிருக்கவேண்டும், இங்கே வேண்டாம் என்று சொல்லியிருக்கவேண்டாமா? அப்படி நீங்கள் இந்த இடத்தில் கட்டடம் கட்டினால், இந்தத் தேதியில் இடிந்து விழும் என்று சொல்லியிருக்கவேண் டாமா? அப்படி சொல்லியிருந்தால், அவருக்கு நாங்களும் பெரியார் உலகத்தில் ஒரு சிலை வைத்திருப்போம். ஆனால், அப்படிச் செய்யவில்லையே, அவரைக் கைது செய்யவில்லையே!

ஆனால், ஒரு காரணம் இருக்கும்பொழுது, இரண்டா வது முறை புரோகிதம் செய்கிறார் பாருங்கள், அவனைக் கைது செய்கிறார்கள். அதில் ஒன்றும் சந்தேகமில்லை. நான் போட்ட வழக்கில், முதன் முதலில் நான் நடத்திய வழக்கில், அந்தப் புரோகிதரை கைது செய்யும்படி செய்தேன்.

தமிழ் ஓவியா said...

ஆகவே, அப்பேர்ப்பட்ட ஒரு நிலையில், வாஸ்து சாஸ்திரம் பார்ப்பது என்பது எவ்வளவு மூடத்தனம்; அடிப்படை இல்லாத விஷயம் என்பதற்கு, நிதர்சனமான, நம் கண்முன் உள்ள ஒரு உதாரணம் என்னவென்றால், சென்னையில் விழுந்த கட்டட விபத்தும், திருவள்ளூரில் விழுந்த மதிற்சுவர் விபத்தும்தான் என்பதைத் தெளிவாகத் தெரிந்துகொண்டு, மூட நம்பிக்கைக்கு ஆளாகாதீர்கள்; பகுத்தறிவு சிந்தனையோடு, விஞ்ஞான மனப்பான்மை யோடு இருங்கள்; காரண, காரியத்தோடு சொல்லுங்கள் என்பதுதான் மிக முக்கியமானது.

அதுமட்டுமல்ல, இந்த வீட்டினை உள்ளே வந்து பாருங்கள்; இதுதான் மாஸ்டர் பெட் ரூம், அது விருந்தினர் அறை, இது சாப்பிடும் அறை; பெட் ரூமில், அட்டாச் பாத் ரூம் இருக்கிறது என்று சொல்கிறார்கள். இப்பொழுதுள்ள நவீன வீடுகளில், குளியலறையும், கழிவறையும் சேர்ந்து இருப்பதுதான் சிறப்பானது என்று பெருமையோடு சொல்கிறார்கள்.
நான் ஒரே ஒரு கேள்வி கேட்கிறேன், வாஸ்து சாஸ்திரத் தில் எங்கேயாவது வீட்டிற்குள் கழிப்பறை கட்டலாம் என்று இருக்கிறதா என்று கேளுங்கள்.

தமிழ் ஓவியா said...

இன்றைக்குள்ள நவீன வசதியான வீடுகளில் தேவைப்படுவது என்ன? கழிப்பறை உள்பட ஒரே அறைக்குள் குளித்துவிட்டு வரக்கூடியதுதான் சிறப்பாக இருக்கும்; அதைத்தான் பாத் அட்டாச்சுடு என்று சொல்கிறோம். எனவே, இன்றைக்கு நவீன உலகத்திற்கும், இந்த சிந்தனைக்கும் சம்பந்தமே இல்லை என்பதை நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும். ஆகவே, வாஸ்து சாஸ்திரம் என்பது நம்முடைய சொல்லே அல்ல; நம்முடைய மொழி அல்ல. அவர் சொல்லியதுபோல், எங்கிருந்தோ இறக்குமதி செய்யப்பட்ட பண்பாட்டுப் படையெடுப்பு. நம்மை ஏமாற்றுவதற்காக அதனைச் செய்திருக்கிறார். வருமானம் போனாலும்கூட பரவாயில்லை, அறிவும் போய்விடுகிறதே!

அதற்கெல்லாம் இடமில்லாமல், மிக அற்புதமாக இந்த இல்லத்தினை அமைத்திருக்கிறார்கள். அதற்காக திரு. தியாக.முருகனுக்கும், அவருடைய வாழ்விணையர் கலா முருகனுக்கும், அவருடைய உற்றார் உறவினரான எல்லோருக்கும் இயக்கத்தின் சார்பில் மகிழ்ச்சியோடு நன்றியையும், வாழ்த்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தியாக.முருகனிடம் ஒப்படைக்கிறேன்

தமிழ் ஓவியா said...

அடுத்தபடியாக, நம்முடைய தியாக.முருகன் அவர் களுக்கு, நான் உரிமை எடுத்துக்கொண்டு ஒரு பணியை ஒப்படைக்கலாம் என்று நினைக்கிறேன். அது என்ன பணி என்றால், இங்கே இந்த வீட்டினை மிக அழகாக கட்டியிருக் கிறார். இப்பொழுது வளர்ந்துவரும் பள்ளிக்கூடம் ஜெயங்கொண்டம் பள்ளிக்கூடம். இப்பொழுது நிறைய அளவிற்கு அங்கே கட்டடங்கள் எல்லாம் இருக்கிறது. அங்கே தோட்டக்கலை முறையை எடுத்து, மிக அழகாக, சிறப்பாக இதுபோல் பச்சை பசேல் என்று இருக்கக்கூடிய அளவிற்கு, எங்கெங்கே வாய்ப்பு உண்டாக்க முடியுமோ, அதனை செய்வதற்கு, அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொள் வதற்கு, நான் முழுமையாக அந்தப் பணியை அவரிடம் ஒப்படைக்கிறேன்; உங்கள் சாட்சியோடு நான் அதனைச் சொல்கிறேன். பள்ளி நிர்வாகத்திற்கும் சொல்லிவிடுகிறேன். அவரும், அவருடைய வாழ்விணையரும், நண்பர்களும் சேர்ந்து எவ்வளவு அழகாக செய்வார்களோ அதனை செய்யட்டும். அதனை செய்வார் என்று நினைக்கிறேன். நான் அவரிடம் அனுமதி கேட்கவில்லை. நான் உரிமை எடுத்துக்கொண்டு இதனை சொல்கிறேன். அவருடைய ஓய்வு நேரத்தில் இதனை மிகச் சிறப்பாக செய்து, இங்கே இவருடைய வீட்டைச் சுற்றி எப்படி பச்சை பசேல் என்று வைத்திருக்கிறாரோ, அதேபோல், பெரியார் மெட்ரி குலேசன் பள்ளிக்கூடத்தை மிகச் சிறப்பாக வைக்க வேண்டிய பொறுப்பு, தோட்டக்கலையைப் பொறுத்த வரையில், தியாக.முருகன் அவர்களிடமும், கலா முருகன் அவர்களிடமும் ஒப்படைக்கிறேன் என்பதை மகிழ்ச்சி யோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

என்னுடைய வேலைகளில் பல பேர் பங்கு பெற வேண்டும்; பங்கு பெற்றால் அது எனக்கு கிடைத்த பெரிய வாய்ப்பு. அவர்தான் அதற்கு முழுப் பொறுப்பு ஏற்க வேண்டும். ஆகவே, அதனை அவர் சிறப்பாக செய்ய வேண்டும்.

தியாக.முருகன் பண்ணை வீட்டில் பெரியாரியல் பயிற்சி வகுப்பு

இந்த இடத்தினை சுற்றிப் பார்த்த நேரத்தில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அடுத்த பயிற்சிப் பள்ளி, இளைஞர்களுக்கான கொள்கைப் பயிற்சிப் பள்ளி இந்தத் தோட்டத்திற்குள்தான் நடத்துவோம் என்பதை மகிழ்ச்சி யோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
அவருக்கு ஒன்றும் சுமை வைக்கவேண்டாம்; நம்முடைய மாவட்டத் தலைவர், செயலாளர், காமராசர் போன்றவர்கள் மற்ற பொறுப்புகளை ஏற்பார்கள். அவருக்கு ஒன்றும் சுமை இருக்காது; இடத்தையும், ஏற்பாட்டினையும் செய்தால், பெரியாரியல் பயிற்சி முகாமினை இரண்டு, அல்லது மூன்று நாள்கள் நடத்தலாம். வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாள்களில் நடத்தலாம். தலைமைக் கழகத்தையும் கலந்து நடத்துவதற்கு ஏற்பாடு செய்யலாம்.

இந்தத் தோட்டத்திற்குள் பெரியாரியல் வகுப்பு நடந்தது என்று சொல்கின்ற அளவிற்கு, முருகனுடைய பண்ணை இல்லம் நிச்சயமாக எங்களுக்குப் பயன்பட வேண்டும், நமக்கும் பயன்படவேண்டும், பெரியாருடைய இயலைப் பரப்புவதற்கும் பயன்பட்டது என்று இருக்கவேண்டும் என்பதை மிக்க மகிழ்ச்சியோடு சொல்லிக்கொண்டு, அவர்கள் எல்லா வகையிலும் சிறப்போடு வாழவேண்டும், வாழவேண்டும்; அவருக்கு உதவி செய்யக்கூடிய உற்றார், உறவினர்கள், நண்பர்கள், அய்யா போன்ற பெரியவர்கள் எல் லோருக்கும் என்னுடைய நன்றியை, இயக்கத்தின் சார்பில், பாராட்டி மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அதேபோல், பெரியார் உலகத்திற்கு அவர்கள் ஒரு லட்ச ரூபாயினையும், மற்றவர்கள் நன்கொடைகளையும் கொடுத் தார்கள். அவர்களுக்கும் நன்றியையும், மகிழ்ச்சியையும் தெரிவித்து, திரு.தியாக.முருகன் அவர்கள், இன்றைக்கு எங்களுக்குக் கிடைத்த ஒரு புது கண்டு பிடிப்புபோல் நான் மகிழ்கிறேன். ஏனென்றால், அவர் ரொம்ப அடக்கமாக, அமைதியாக, தன்னை முன்னிலைப் படுத்தாமல் இருந்தார். நான் இவரை நேரில் பார்த்தவுடன், இவரை முழுமையாக இயக்கம் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்; நம்முடைய கல்வி நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்று நினைத்துத்தான், அந்தப் பொறுப்பினை கொடுத்தி ருக்கிறேன்; ஆகவே, அதனை அவர் செய்வார் என்ற நம் பிக்கையோடு, அனை வருக்கும் வாழ்த்தைச் சொல்லி, இவ் வளவு சிறப்பாகக் கூடியிருக்கும் உங்கள் அனைவருக்கும் நன்றி கூறி விடைபெறுகிறேன், வணக்கம்! நன்றி!!

வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!! வளர்க இந்தத் தோழர்களுடைய முயற்சி!!!

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் உரையாற்றினார்.

Read more: http://viduthalai.in/page-4/85085.html#ixzz39CEOvLwZ

தமிழ் ஓவியா said...


நகைப்பிற்கு இடமான நவராத்திரி


செப்டம்பர் அல்லது அக்டோபர் தமிழ் மாதங்களில் ஒன்றாக சொல்லப்படுகின்ற புரட்டாசி பெயரிலேயே ஒரு புரட்டு- என்று சொல்லப்படுகின்ற காலத்து மகாளய அமாவாசை என்ற இரவில் நிலா இல்லாத நாளில் அவாள் மொழிப்படி திதியில் மூதேவிகள் - அதாவது துர்கா, சரசுவதி மற்றும் இலட்சுமி ஆகிய இம் மூதேவிகளும் கொலு இருக்கின்றனராம்.

கொலுவிருப்பது ஏனோ?

மகிடாசுரன் என்பவனைக் கொல்ல அனைத்து தேவர்களாலும் ஆகவில்லையாம். மகிடாசுரனுக்கு எருமைத் தலையாம். இவனை ஏன் கொல்ல வேண்டுமென்றால் இவன் தேவர்களுக்கு கொடுமை இழைத்து வந்தனராம். எனவே அவனை தொலைத்துக் கட்ட தேவர்களால் கையாலாகாது போகவே பிரம்மா, சிவன், விஷ்ணு ஆகிய அனைத்து தேவர்களும் மேற்கண்ட இவர்களது மூதேவியரையும் தூண்டி ஏவி விட்டனராம்.

எனவே இவர்கள் அந்த மகிடாசூரனைக் கொல்ல கொலு விருந்தனராம். எல்லாருக்கும் எல்லா வரங்களும் தரும் தேவர்களுக்கு இது கையால் ஆகாமல் போனதேனோ? இதற்காக அவர்களது மூதேவிகளும் கொலுவிருப்பது ஏனோ? அது எப்படியோ இருக்கட்டும்.]

அசுரர் யார்?

முதலில் அசுரர் யாரெனப் பார்ப்போம். திராவிடர் அல்லது தமிழர்தான் அவர்களால் - தேவர்களால் அதாவது ஆரியர்களால் அதாவது பார்ப்பனர்களால் அசுரர் என்றும் இராட்சசர் என்றும் இன்னும் பல பெயர்களாலும் இழிவாக எண்ணி அழைக்கப்பட்டனர்.

இது வரலாற்று ஆதாரமுடையது. ஆரியர்களால் விரும்பி அருந்தி வரப்பட்ட சுராபானம் என்ற மதுவை மறுத்தவர்களே அசுரர் என அழைக்கப்பட்டனர். சுராபானம் என்ற பானத்தை அருந்தியவர்களே சுரர் அதாவது தேவர் - ஆரியர் - பார்ப்பனர்.

மகிடாசுரன் என்ற திராவிட மன்னனுக்கும் ஆரிய மன்னர்களுக்கும் இடையே நடை பெற்ற போராட்டங் களுக்காகவே இந் நவராத்திரி இருக்க வேண்டும். தேவிகளை அதிலும் பெண்களை விட்டே இவர்கள் தங்கள் காரியத்தைச் சாதித்துள்ளனர். தங்கள் போர் வெற்றிக்காக இம் மூதேவிகளும் இரவுகளில் ஒன்பது இரவுகளில் கொலு விருந்தனரென்றால் பகலில் என்ன செய்தனர்; பகலெல்லாம் படுத்து தூங்கினரோ?

ஆரியர்கள் குருக்கள்களாகவும் மற்றும் பல வழிகளிலும் கூட்டிக் கொடுத்தும், மன்னர்களில் ஒருவருக்கொருவரைக் காட்டிக் கொடுத்தும், அடிமைப் படுத்தியும் பணிய வைத்தும், மன்னர் தம் ஆணைகளாலும் குடி மக்களையும் ஒப்புக் கொள்ள வைத்தும் எல்லோரையும் தங்கள் செல்வாக்கைப் பயன்படுத்தி நம்ப வைத்துள்ளனர்.

இந்த மூதேவிகளுக்கும் ஒன்பது இரவுகள் என்றால் மைசூர் மன்னருக்கு ஒரு இரவு சேர்த்து தசரா! இவர் கடைசிநாளில் யானைமேல் அம் பாரியில் படைகள் புடை சூழ எங்கோ ஓர் மூலையில் அம்பு எய்கிறாராம். இன்னும் மற்ற மன்னர்கள் எப்படியோ?

ஆலயங்கள் பலவற்றில் உலா மூர்த்தி சிலையெடுப்புகள். ஊர் கடைசியிலோ எங்கோ ஓர் மூலையில் அம்பு சேர் வைகள் என்ற பெயரால் விழாக்கள் நடத்தப்படுகின்றன. இதில் இன்னொரு அசுரனும் வன்னி யாசுரன் என்ற பெயரால் குட்டி போடப்பட்டு விடு கிறான். வன்னிமரம் என்ற ஒரு மரத்தின் கிளைகளில் ஒன்றோ அல்லது அதன் தழைக் கொத்தோ சிறிது கொண்டு வந்து கட்டி வைக்கப்பட்டு சாமியின் பிரதிநிதி குருக்கள் ஒருவர் அம்பு எய்கிறார். மனிதன் இறந்தால் மீண்டும் வருவதில்லை; ஆனால் இந்த அசுரன்கள் ஆண்டுக்காண்டு சாமிகளுக்கு எதிரிகளாக வந்து கொண்டே இருக்கின்றனர்.

மற்ற தனி வேடிக்கைகள்

மற்றும் இப்புரட்டாசியில் சனி பிடித்தல், காலையில் நாராயணமூர்த்தி என பக்தி பிச்சையெடுத்தல்கள், திருப்பதி போன்ற மலைகளுக்குச் செல்லல், கரூரில் உள்ள தாந்தோணி மலைக்கு பக்தர் படையெடுப்பு! ஏற்ற பேருந்து வசதி இல்லாத காலத்தில் டிக்கெட் இல்லாத வரும் பக்தகோடிகளால் இரயில்வேயிக்கு ஆயிரக்கணக்கான ரூபாய் இந்தச் சனிக்கிழமைகளில் மட்டும் நட்டம் ஏற்படும்.

கேட் கதவுகள் எல்லாவற்றையும் முழுதும் திறந்து விட்டு கரூர் இரயில் நிலைய அலுவலர் பக்த கோடிக் கூட்டத்தைக் கண்டு ஒதுங்கிக் கொள்வார். ஆனால் இப்பொழுது எப்படியோ? நாமக்கல்லுக்கருகில் உள்ள நைனாமலைப் படிகள் நெட்டுக்குத்தானவை. தவறி விழுந்தால் வை குண்டம் நிச்சயம்.

படி வாசல்களுக்கு நெடுக டியூப் லைட்டுகள், பந்த நெருப்பெடுத்து பாரெல்லாம் ஒளி காட்டும் பெருமாள் குடி கொண்டுள்ள நைனாமலைப் படிக்கட்டுகளுக்கு டியூப் லைட்டுகள் ஏன்? இன்னும் நவராத்திரி நகைப்பிற் கிடமானவை என்னென்னவோ?

பா.வீ.சாது

Read more: http://viduthalai.in/page-7/85065.html#ixzz39CFUMjGb

தமிழ் ஓவியா said...


ஆரியர் - திராவிடர்


சதா காலமும், பார்ப்பனர்களை, நாம் தூஷிப்பதில்லை -அவசிய முமில்லை. ஒருமுறையைக் கண்டிக் கிறோமே தவிர, தனிப்பட்ட நபர் களையல்ல, மார்வாடிக் கடை என்று கூறும்போது எப்படி அதிக வட்டி வாங்கும் அனை வரையும் அந்தச் சொல் குறிக்கிறதோ அதுபோல, பார்ப்பனீயம் என்று கண்டிக்கும் போது பார்ப்பனர் மட்டுமல்ல, வர்ணாசிரம தர்மத்தை ஆதரிக்கும் பார்ப்ப னரல்லாதாரும் அந்தப் பட்டத்துக்கு உரியவர்கள் ஆகிறார் கள். எனவே பார்ப்பனர்களைத் தூஷிக்கிறோம் என்று எண்ணுவது தவறு.

********************

பார்ப்பனரை ஏன் கண்டிக்கிறோம்?

இனங்கள் பலப்பல காலமாக ஓரிடத்தில் வாழ்வதால் கலப்பு ஏற்படுவது இயல்பு என்ற பொது உண்மையை யாரும் மறுக்கவில்லை. ஆனால், எவ்வளவு காலமாக ஒன்றாக வாழ்ந்தும், கலந்தும்கூட, ஒரு கூட்டத்தினர் இன்னமும் தங்கள் மொழி, நடை, உடை, பாவனை ஆகியவைகளை, மற்றவர் களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டியும், உயர்வு என்று கூறியும் வருவதைக் காண்கிறோம்.

இந்தப் போக்கைக் கொண்டுதான். ஆரியர் - திராவிடர் என்று கூறுகிறோம்.

- அண்ணா 23.11.47 திராவிட நாடு கேள்வி பதில் பகுதி

Read more: http://viduthalai.in/page-7/85067.html#ixzz39CFnPudE

தமிழ் ஓவியா said...

தந்தை பெரியார் பொன் மொழிகள்

மனிதனுக்கு மானமும் பகுத்தறிவும் இருக்கிறது. அது கண்மூடித்தனமான மிருகத் தன்மைக்கு ஏற்பட்டதல்ல. பகுத்தறிவை மனிதன் தப்பாகப் பயன் படுத்தியே அதிகமான தொல்லைக்குட்பட்டான்.

*********************

கழுதைக்கும் எருமைக்கும் 1000 ஆண்டுகளுக்கு முன்பு என்ன புத்தி இருந்ததோ அதே புத்திதான் இன்றும் உள்ளது. மனிதனோ, பகுத்தறிவைப் பயன்படுத்திச் சிந்தனை மூலம் வளர வேண்டியவன். அப்படி வளர்ச்சி அடையாமல் மிருகங்களைப் போல் பகுத்தறிவற்றவனாக இருக்கக் காரணம் என்ன? அவனது அறிவு வளர்ச்சியினைத் தடைப்படுத்திச் சாஸ்திரங்களையும், கடவுளையும், மதத்தையும், முன்னோர்கள் நடப்பையும் கொண்டு வந்து புகுத்தி விட்டார்கள்.

*********************

நமக்கு அறிவில்லை என்று எவரும் சொல்லிவிட முடியாது. தீட்சண்ய புத்தியும், கூர்மையான அறிவுமுடையவர்கள் என்பது நம் பழங்கலைகளையும் அவற்றின் திறனையுங் கண்டாலே தெரியும்.

ஆனால், நம் மக்களின் அறிவு மேலும் மேலும் பண்பட்டு வளர முடியாமல், கடவுள், மதம், சாஸ்திரம் என்பவைகளின் பேரால் அடக்கப்பட்டு விட்டது; சிந்திக்கும் உரிமையே அற்ற சிறிய மனிதர்களாக நம்மைச் செய்து விட்டது.

இந்தப்படியான சிந்திக்கும் தன்மையற்ற மக்களை மாற்றி அவர்களைச் சிந்திக்கத் தூண்டிச் சிந்தனைப் பாதையில் அழைத்துச் செல்வதுதான் திராவிடர் கழகம்.

Read more: http://viduthalai.in/page-7/85067.html#ixzz39CFyc6ei

தமிழ் ஓவியா said...

முதல் அமைச்சர்மீதான அவதூறுக்குத் தமிழர் தலைவர் கண்டனம்


இன்றைக்கு ஆர்ப்பாட்டத்திற்குப் புறப்பட்டு வருகின்ற நேரத்தில் ஒரு செய்தி கிடைத்திருக்கிறது; என்னவென்று சொன்னால், அங்கே இலங்கை அரசு எந்த அளவுக்கு அதீதமாக நடந்து கொள்கிறது. சுப்பிரமணி சாமிகளும், சேசாத்திரி அய்யங்கார்களும் அங்கே சென்று அவர்கள் ஏதோ இந்திய அரசாங்கத்தின் சார்பாக அனுப்பப்படுகிறோம் என்று சொல்லக்கூடிய அளவுக்கு பச்சையாக - தமிழினத்தின் எதிரியாக அவர்கள் நடந்து கொள்கிறார்கள் என்பதற்கு அடையாளம், அங்கிருக்கிற பாதுகாப் புத்துறையில் இணையத்திலே கட்டுரை ஒன்றைப் போட்டிருக்கிறார்கள்.

அது என்னுடைய கையிலே இருக்கிறது. அதிலே ஒருவர் எழுதியிருக்கிறார். தமிழ்நாடு முதலமைச்சரை எவ்வளவு கொச்சைப்படுத்தி, எவ்வளவு கேவலப்படுத்தி, தரமற்ற வார்த்தைகளிலே ஆபாசமான, அவதூறான வார்த்தையிலே அவர்கள் வருணித்திருக்கிறார்.

எனவே நீங்கள் அடிக்கடி மீனவர்களுக்காக போராடுகிறீர்கள், மீனவர்களுக்காக நீங்கள் ஆதரவு காட்டுகிறீர்கள். மீனவர்களிடத்தில் பறிமுதல் செய்யப்பட்ட படகுகளையெல்லாம் திரும்பக் கொடுக்கச் சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் என்ன சொன்னாலும் பிரதமர் மோடி எங்கள் பக்கம் இருப்பாரே தவிர, உங்களை ஒரு போதும் மதிக்க மாட்டார். உங்களை ஒரு போதும் சீண்ட மாட்டார். நீங்கள் மீண்டும் மீண்டும் இப்படிப்பட்ட கடிதங்கள் - அந்த கடிதங்களுக்கு முன்னாலே சொல்லப்பட்டிருக்கின்ற வார்த்தை நான் இங்கே உச்சரிக்க விரும்பவில்லை. அவ்வளவு அருவருப்பான, ஆபாசமான, கேவலமான, சர்வதேச ரீதியிலே ஒரு அரசாங்கத்தினுடைய - இலங்கை அரசாங்கத்தினுடைய இணையதளத்திலே இடம் பெறக்கூடாது. அவ்வளவு அசிங்கமான ஒரு சொல். இப்படிப்பட்ட காரியம் நடந்து கொண்டிருக்கிறது. யாருடைய தைரியத்திலே இது நடந்து கொண்டிருக்கிறது?

தமிழ்நாட்டு முதலமைச்சரைப் பற்றி எங்களுக்கு பல்வேறு மாறுபட்ட கருத்துக்கள் இருக்கலாம். அதுவேறு செய்தி, அந்த உரிமையை நாங்கள் மாற்றிக்கொள்வோம் என்று பொருளல்ல. ஆனால் அதே நேரத்திலே, ஒன்றை நீங்கள் எண்ணிப்பார்க்க வேண்டும்.

தமிழ் நாட்டினுடைய முதலமைச்சரை விமரிசனம் செய்வதற்குக்கூட, அவர்களுக்கு உரிமை இருக்கிறதா என்பது கேள்விக்குரிய ஒன்று. அப்படியே செய்தாலும் கூட, நாகரிகமான முறையிலே அது நடைபெற வேண்டும். ஆனால் அசிங்கமான ஒரு மஞ்சள் ஏட்டிலே எப்படி எழுதுவார்களோ அதுபோல எழுதக்கூடிய அளவுக்கு எழுதியிருக்கிறார்கள். அதே நேரத்திலே மோடி அவர்களுக்கு நீங்கள் எத்தனைக் கடிதங்கள் எழுதினாலும் எங்கள் பக்கம் தான் இருப்பாரே தவிர, உங்களைப்பற்றி சீண்ட மாட்டார் என்றெல்லாம் அங்கேயிருக்கிற இலங்கை அரசினுடைய பாதுகாப்புத்துறை இணையத் திலே என் கையில் இருக்கிற இந்தக்கடிதம் சொல்லுகிறது. உலகம் முழுவதும் இணையத்தின் பயன்பாட்டில் இருக்கக் கூடியவர்கள், பார்க்கக் கூடியவர்களாக இருக்கிறார்கள். இவ்வளவு கேவலமாக நடந்து கொள் கிறார்கள் என்றால் ஏதோ அரசு மாற்றப்பட்டால் எல்லாமே மாறிவிடும் என்று நினைத்தார்களோ, அதைவிட ஏமாற்றம் வேறு இருக்கிறதா? என்று எண்ணிப்பார்க்க வேண்டும்.

- (சென்னை ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தலைவர்- 1-8-2014)

Read more: http://viduthalai.in/e-paper/85101.html#ixzz39I4avGNV

தமிழ் ஓவியா said...

இலங்கையில் நடைபெற்ற போர்க் குற்ற
விசாரணையைத் தடுப்பது - ஏன்?

தமிழர் தலைவர் தொடுக்கும் வினா இன்னொரு முக்கியமான பிரச்சினை; அருகில் இருக்கக்கூடிய இலங்கையிலே, ஈழத் தமிழர்கள் வாழ் வுரிமை இழந்து படாத பாடுபட்டு, முள் வேலிக்குள்ளே அவர்களெல்லாம் இராணுவத்தால் எப்படியெல்லாம் சித்திரவதை செய்யப்பட்டு 90,000க்கும் மேற்பட்ட தமிழச்சிகள் விதவையாக இருக்கிறார்கள்என்ற கொடுமை களெல்லாம் சொல்லப்பட்ட நேரத்திலே, அய்.நா. சபை யினுடைய மனித உரிமை ஆணையத்தாலே நியமிக்கப் பட்டவர்கள் சென்று பார்த்து, அங்கே அவர்கள் போர்க் குற்றவாளிகள்தான் என்று முடிவு செய்யக்கூடிய அளவுக்கு அதைப்பற்றிய விசாரணை செய்வதற்கு வந்திருக்கக் கூடிய நிலையிலே, அதற்கு யார் யாரெல்லாம் தகவல் தெரிந்த வர்களோ, அவர்களிடத்திலே செய்தியை பரிமாறிக் கொள்ள வேண்டும். சாட்சியங்களை சரியாக பதிவு செய்ய வேண்டும் என்பதற்காக இங்கே இருக்கக் கூடிய அகதிகள் குடியேறியவர்கள், இவர்களிடத்திலெல்லாம் விசாரணை செய்வதற்கு மூவர் குழுவுக்கு இந்திய அரசு விசா மறுத் திருப்பதை விட வெட்கப்படக்கூடிய விசயம் வேறு கிடை யவே கிடையாது. இங்கே இருப்பது இலங்கை அரசினு டைய மறுபதிப்பா?

இலங்கை போர்க்குற்றவாளிகள் - அதுமட்டுமல்ல, அமெரிக்கா போன்ற நாடுகள் அதற்கான தீர்மானம் கொண்டு வந்து, பெரும்பாலான நாடுகள் ஆதரித்து அளித்த தீர்மானம் அய்.நா.வில் நிறைவேற்றி, அதற்குப் பிறகுதான் அந்தப்பணி தொடங்கியது. எனவே உலகம் முழுவதும் இருக்கக்கூடிய தமிழர்கள் மட்டுமல்ல, மனித உரிமை ஆர்வலர்கள் அத்தனை பேரும் இந்தக் கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்; ஈழத்தமிழர்களின் வாழ்வுரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்று சொல்லக்கூடிய நிலையில், அவர்களுக்காக பரிந்து பேசுவதைப்போல, முழுக்க முழுக்க அதை விசாரணையே செய்யக்கூடாது என்பது ஏதோ போர்க்குற்றமே நடக்கவில்லை என்பதைப்போல, ராஜபக்சே அரசுக்கு என்ன நிலைப்பாடோ, அதையே இங்கே இருக்கிற நரேந்திரமோடி தலைமையில் இருக்கக்கூடிய அரசு எடுக்கிறதென்றால், இதைவிட வேதனை, இதைவிட கண்டனத்திற்குரிய ஒன்று; இதைவிட வெட்கப்படக்கூடிய, அவமானகரமான - தேசிய அவமானம் வேறு இருக்க முடியாது. ஆகவே அதைக்கண்டித்து, அவர்களுக்கு விசா வழங்குங்கள் என்றுதான் இந்த ஆர்ப்பாட்டத்தின் இன்னொரு மிக முக்கியமான நோக்கம். அதுபோலவே மத்திய அரசு வெளியுறவுக் கொள்கை யிலே சென்ற காங்கிரஸ் அரசே பலமுறை பரவாயில்லை என்று சொல்லக்கூடிய அளவுக்கு இந்த 60 நாட்களிலே நடந்து கொள்கிறபோக்கு கூடாது மாறியாக வேண்டும். அது மாற்றப்படவில்லையானால், அதற்குக் கடும் விலையை மத்திய அரசு கொடுக்க வேண்டியிருக்கும். சர்வதேச ரீதியாக தமிழ்நாட்டு தமிழர்கள் மட்டுமல்ல. அகில உலகத்திலே இருக்கக்கூடிய தமிழர்கள் - புலம் பெயர்ந்த தமிழர்களாக இருந்தாலும் சரி, வெளிநாட்டிலே வாழுகிற தமிழர்களாக இருந்தாலும் சரி, அதோடு மனித உரிமை ஆர்வலர்களாக இருந்தாலும் சரி எல்லோரும் சேர்ந்த குரல் அது. அவர்களுடைய பிரதிபலிப்பு என்று தெளிவாக எடுத்துக்காட்டி, அதற்காகத்தான் முதல் கட்டமாக இந்தப் போராட்டம். இரண்டு முனைகளிலே நடந்து கொண்டிரு க்கிறது. ஒரு பக்கத்திலே சமஸ்கிருத வாரம் என்ற பெயராலே தமிழினத்தினுடைய தொன்மை பாதிப்பு; இன்னொரு பக்கத்திலே ஈழத்தமிழர்களின் வாழ்வுரிமை யிலே நடைபெற்ற அக்கிரமத்தை உலகம் தெரிந்து கொள் ளக்கூடாது என்பதற்காக திரையிட்டு மறைக்கக்கூடிய அளவிற்கு விசா வழங்க மறுக்கின்ற முயற்சி. இன்னொரு பக்கத்திலே இங்குள்ள மீனவர்களுக்கு இழைக்கக்கூடிய அநியாயங்கள், அவர்களுடைய வாழ்வாதாரத்தை பறிக்கக்கூடிய கொடுமை இருக்கிறது என்றால் அதை தட்டிக் கேட்கக்கூடாது. நாங்கள் எங்கள் இஷ்டத்திற்கு தான் செய்வோம். என்றால் முழுக்க முழுக்க மோடி அரசினுடைய ஆதரவு இருக்கிறது என்பதை இலங்கை அரசு வெளிப்படையாக சொல்லக்கூடிய கொடுமை. இவற்றுக்கெல்லாம் பரிகாரம் தேட வேண்டும், என்பதற்கா கத்தான் இங்கே திரண்டிருக்கிறோம் தோழர்களே!

ஆகவே இந்தப் போராட்டம் என்பது இன்றைக்கு ஒரு துவக்கம்தான் என்பதை மீண்டும் சொல்லி, மேலும் தேவைப்பட்டால் இந்தப் போராட்டம் பல வடிவங்களில் வெடிக்கும் என்பதை எடுத்து சொல்லுகிறோம்.

- (சென்னை ஆர்ப்பாட்டத்தில் - 1-8-2014)

Read more: http://viduthalai.in/e-paper/85101.html#ixzz39I4nkx00

தமிழ் ஓவியா said...


இன்றைய ஆன்மிகம்?

நம்பிக்கை

நான் ஒருவன் மட்டும் தான் நரகம் அனுபவிக்கப் போகிறேன். ஆனால் பல்லாயிரக்கணக்கான வர் ஸ்ரீமந் நாராயண அஷ்டாக்ஷ்ர மகாமந் திரத்தாலே மோட்ச நிலை எய்துவார்களே! -என்கிறார் இராமானுஜர்.

ஆதிசங்கரரைக் கேட்டால் இதற்கு நேர் மாறாக சிவபெருமானை ஏற்றிக் கூறுவார். அது சரி - இவர் ஏன் நரகம் போக வேண்டும்? ஒருக்கால் இவர் நாராயண அஷ் டாக்ஷ்ர மகாமந்திரத்தை உச்சரிக்கவில்லையா? அல்லது அதில் நம்பிக்கை தான் இல்லையோ!

Read more: http://viduthalai.in/e-paper/85105.html#ixzz39I5BFB00

தமிழ் ஓவியா said...

தாய்ப்பால் கொடுப்பீர்!

குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கொடுத்தால் மார்பகப் புற்று நோய் வருவதற்கு வாய்ப்புக் குறைவு என்று குழந்தைகள் மருத்துவர் ராகுல் யாதவ் கூறுகிறார்.

Read more: http://viduthalai.in/e-paper/85102.html#ixzz39I5Lj7Sn

தமிழ் ஓவியா said...


இரு வகையான பார்ப்பனீயத் தாக்கங்கள்

திராவிடர் கழகத்தின் சார்பில் நேற்று தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் (சென்னை, மதுரை, திருச்சிராப்பள்ளி, கோவை, சேலம், தஞ்சாவூர், புதுச்சேரி) இரு முக்கியப் பிரச் சினைகளை மய்யப்படுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

முதல் பிரச்சினை மத்தியில் உள்ள பிஜேபி ஆட்சி ஆகஸ்டு 7 முதல் 13 வரை சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் சமஸ்கிருத வாரம் கொண்டாடுவது பற்றியதாகும். இந்தியாவின் அரசமைப்புச் சட்டம் எட்டாவது அட்டவணையில் 22 மாநில மொழிகள் இடம் பெற்றுள்ளன இவற்றுள் ஒரு மொழி சமஸ்கிருதம் அவ்வளவுதான்; இந்த மொழியைத் தாய் மொழியாகக் கொண்ட எந்த மாநிலமும் இந்தியாவில் கிடையாது. இந்தியா முழுமையும் இம்மொழியைப் பேசுபவர்கள் 16412 பேர் மட்டுமே. சதவீதக் கணக்கில் கூற முடியாத அளவுக்குக் குறைந்த எண்ணிக்கை இது.

இது ஆரியப் பார்ப்பனர்களின் தாய்மொழி; இதனை அவர்களைத் தவிர, மற்றவர்கள் - சூத்திரர்கள் (பஞ்சமர்கள் உட்பட) படிக்கக் கூடாது என்பது சாத்திரத் தடையாகும். இப்படிப் பெரும்பான்மையான மக்கள் பேசக் கூடாது என்று ஆக்கப்பட்ட ஒரு மொழி செத்துப் போகாமல் வேறு என்ன செய்யும்? அதனால் தான் செத்த மொழி (ஞிமீணீபீ லிணீஸீரீணீரீமீ) என்ற பெயரை ஈட்டிக் கொண்டு விட்டது.

இந்த மொழியில் உள்ளவை எல்லாம் வேதங்கள், உபநிஷதங்கள், இதிகாசங்கள், புராணங்கள், ஸ்மிருதிகள் ஆகும். இவற்றில் கூறப்பட்டிருப்பவை எல்லாம் பிறப்பிலேயே உயர்வு - தாழ்வு கற்பிக்கும் - பேதங்களை உருவாக்கும் விஷயங்கள்தாம். வருண தர்மம் என்பதை நீக்கி விட்டால் சமஸ்கிருதம் வெறும் சுழியில்(Zero) ) தான் முடியும்.


தமிழ் ஓவியா said...

அதனால்தான் இந்து மதத்தை அமெரிக்கா வரை கொண்டு சென்ற விவேகானந்தர்கூட மதக் கலவரங்களும் ஜாதி வேற்றுமைகளும் பல்குவதற்கு ஒரு பெருங் கருவியாய் இருந்ததும் இருப்பதும் சமஸ்கிருத மொழியேயாகும். சமஸ்கிருத மொழி நூல்கள் தொலைந்து போனால் இப்போராட்டங்களும் தொலைந்து போகும் என்று கூறினார். இந்தச் சமஸ்கிருதக் குடும்பத்தைச் சேர்ந்ததுதான் இந்தி மொழியும். இந்தக் காரணத்தால்தான் பார்ப்பனர்கள் எப்பொழுதுமே இவற்றை மக்கள் மத்தியில் புகுத்துவதில் கண்ணும் கருத்துமாக இருந்து வருகின்றனர்; இதனை சரியாக அடையாளங் கண்டு ஆரியப் பண்பாட்டுப் படையெடுப்பின் தந்திரமும், சூழ்ச்சியும் இதனுள் பதுங்கி இருக்கிறது என்பதை வெட்ட வெளிச்சமாக்கியது - தந்தை பெரியாரும் அவர்கள் கண்ட திராவிடர் இயக்கமும்தான்.

மத்திய அரசு என்றால் அனைத்து மாநிலங்களுக்கும் மக்களுக்கும் பொதுவாக இருக்க வேண்டுமே தவிர, குறிப்பிட்ட சமஸ்கிருத மொழியின்மீது தனிக் கவனம் செலுத்தி, மக்கள் பணத்தை அதற்காக வாரி இறைக்கக் கூடாது.

மத்தியில் உள்ள பிஜேபி ஆட்சி இந்துத்துவா கொள்கை யுடையது என்பதால் அதன் மொழியான சமஸ்கிருதத் துக்குக் கூடுதல் முக்கியத்துவத்தைக் கொடுக்கிறது என்பதுதான் மறுக்கப்படவே முடியாத உண்மையாகும்.

இந்த அடிப்படையில்தான் சமஸ்கிருதத்தை எதிர்த்துத் திராவிடர் கழகம் நேற்று ஆர்ப்பாட்டத்தை எழுச்சியுடன் நடத்தியது. ஆர்ப்பாட்டத்தின் இரண்டாவது நோக்கம் - ஈழத் தமிழர் பிரச்சினையை மய்யமாகக் கொண்டதாகும்.

அய்.நா.வின் மனித உரிமை ஆணையத்தில் நிறை வேற்றப்பட்ட தீர்மானத்தின்படி, மூவர் குழு ஒன்று நியமிக் கப்பட்டு, இலங்கையில் நடைபெற்ற போர்க் குற்றத்தை விசாரிக்கும் அதிகாரம் கொடுக்கப்பட்டது.

அந்தக் குழு இலங்கையில் மட்டுமல்லாது, இந்தியா போன்ற நாடுகளிலும் விசாரணை நடத்தும் அதிகாரம் கொண்டதாகும். ஆனால் இந்திய அரசு அந்தக் குழு இந்தியாவிற்கு வர விசா வழங்க மறுத்துள்ளது என்பது மிகவும் கொடுமையானது. பல்லாயிரக்கணக்கான ஈழத் தமிழ் ஏதிலிகள் அடைக்கலம் பெற்றிருப்பது இந்தியாவில் தானே!

அய்.நா.வில் அங்கம் வகிக்கக்கூடிய இந்தியா, அய்.நா.வின் மனித உரிமை ஆணையத்தின் முடிவை நிராகரிக்கிறது என்றால் இதன் பொருள் என்ன?

இன்னொன்று - இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களா கிய தமிழர்கள், இந்தியாவில் வாழக் கூடிய தமிழர்களின் தொப்புள் கொடி உறவினர்கள்; இதில் இந்தியாவுக்குக் கூடுதல் கடமையும், பொறுப்புணர்ச்சியும் உண்டு.

கடந்த காங்கிரஸ் ஆட்சிதான் ஈழத் தமிழர்க்கு விரோதமாக நடந்து கொண்டது என்றால், இன்றைய பிஜேபி ஆட்சியும், கடந்த ஆட்சியைவிட மூர்க்கத்தனமாக இதில் நடந்து கொள்கிறது.

காரணம் என்ன? இரு ஆட்சிகளிலுமே - இந்தப் பிரச்சினையை கையாளக் கூடியவர்கள் பெரும்பாலும் பார்ப்பனர்களே!

ஈழத் தமிழர்ப் பிரச்சினையில் சோ ராமசாமியாக இருந்தாலும் சரி, குருமூர்த்தியாக இருந்தாலும் சரி இந்து ராமாக இருந்தாலும் சரி, சுப்பிரமணிய சாமியாக இருந்தாலும் சரி சுஷ்மா சுவராஜாக இருந்தாலும் சரி, தமிழின வெறுப்பு என்ற நஞ்சை நெஞ்சில் கொண்ட பார்ப்பனர்களே! தமிழினம் என்று சொன்னாலே ஒரு இனம் தெரியாத கடும் வெறுப்பு!

இந்த அடிப்படையில்தான் திராவிடர் கழகத் தலைவர் - தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள்கூட, நேற்று சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்குத் தலைமை வகித்துப் பேசுகையில் கருத்துத் தெரிவித்தார். பொதுவுடைமைவாதிகள் எந்த ஒரு பிரச்சினையிலும் வர்க்க நிலை உண்டு என்று சொல்லுவது போல, இந்து ஆதிக்கம் உள்ள பார்ப்பனீய சமூக அமைப்பில், எதிலும் ஒரு வருண நிலை உண்டு - நுட்பமாகக் கணித்தால் இதன் பொருள் விளங்கும்.

திராவிடர் கழகம் நேற்று நடத்திய இரு பிரச்சினை களுக்கும் காரணம் என்பது பார்ப்பனீயமே!

மத்திய அரசின் நடவடிக்கைகளைக் கூர்ந்து கவனிப் போம் - அதற்கேற்ப நம் செயல்பாடுகளும் எதிர் காலத்தில் இருக்கும்; கழகத் தலைவர் இதனையும் நேற்று அறிவித் துள்ளார் என்பதை தோழர்கள் நினைவில் கொள்ளட்டும்!

Read more: http://viduthalai.in/page-2/85107.html#ixzz39I5x6tef

தமிழ் ஓவியா said...


பிரான்சு நாட்டு பல்கலைக்கழக நூலகத்தில் தந்தை பெரியாரின் புத்தகங்கள்!


பிரான்சு நாட்டின் தலைநகர் பாரி சில் வசிக்கும் தமிழரான ந.கைலாசம் அவர்கள் 21.6.2014 அன்று 15 புத்தகங்களை கைலாசம் அறக் கட்டளை சார்பாக, யூனிவர்சிடேர் தே லாங்கு ஏ சிவிலைசேஷன் - நூலகத்திற்கு நன்கொடையாக அனுப்பியதாகவும், அனுப்பிய புத்த கங்களை பெற்றுக்கொண்ட நூலகத் தின் தமிழ்த்துறை பொறுப்பாளர் சுந்தரி கோபாலகிருஷ்ணன் இவை எங்கள் நூலகத்திற்கு வரும் வாசகர் களுக்கு மிகவும் உபயோகமாகவும் இருக்கும். இதற்கு எங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள் கிறோம் என்று 8.7.2014 அன்று பதில் கடிதம் அனுப்பி உள்ளதாகவும், அந்த கடித நகல்களுடன் இணைத்து கடந்த 15.7.2014 அன்று விடுதலை ஆசிரிய ருக்கு கடிதம் அனுப்பியிருந்தார்.

நூலகத்தின் தமிழ்த்துறைப் பொறுப்பாளர் சுந்தரி கோபால கிருஷ்ணன், ந.கைலாசம் அவர்களுக்கு அனுப்பியுள்ள பதில் கடிதத்தில் கைலாசம் அனுப்பி வைத்த புத்தகங் களுக்கான பட்டியலை இணைத் திருக்கிறார். அதில் தமிழர் தலைவர் கி.வீரமணி எழுதிய ‘Why I don’t believe in God, collected works of Periyar E.V.R.’, ‘Periyar 1000 Q & A’, ‘Bhagavad Gita myth & Mirage’ - - என்ற ஆங்கில நூல்கள் நான்கும், காந்தியார் கொலை, காமராஜர் கொலை முயற்சி சரித்திரம் என்ற தமிழ் நூல்கள் இரண்டும் ‘Untochability: History of Vaikam Agitation’ புரட்டு இமால யப்புரட்டு ‘Lemonde de demain’- என்று தந்தை பெரியாரால் எழுதப்பட்ட புத்தகங்களும் முறையே ஆங்கிலம், தமிழ், பிரெஞ்சு ஆகிய மொழிகளில் வெளியிடப்பட்டதும், கே.பி.பாலசுப்பிரமணியம் எழுதிய ‘Periyar E.V.Ramasamy’ - - என்ற பெயரில் வெளியான ஆங்கிலப் பதிப்பும், அறிஞர் அண்ணாவின் புத்தரின் புன்னகை தமிழ்ப் பதிப்பிலும், பொதுவுடமைத் தோழர் டி.ஞானய்யா அவர்கள் எழுதிய இந்துத்துவா பாசிசம் மற்றும் தகுதி - திறமை மோசடி என்ற தலைப்பில் தொகுக் கப்பட்ட கல்வி வள்ளல் காமராசரின் எழுச்சி உரைகள், பேராசிரியர் மஞ்சை வசந்தன் எழுதிய அர்த்தமற்ற இந்துமதம் - முதல் இரண்டு பகுதிகள் என்று 14 புத்தகங்களின் பட்டியலை கொடுத்திருக்கிறார்.

அத்தோடு நடேசன் கைலாசம் அவர்கள் மேற்கண்ட நூலகத்திற்கு அனுப்பி வைத்த மணி ஆர்ட்ர்க்கான சந்தா ரசீதையும் சேர்த்து (MR subs, period from July’ 2014 to June’ 2015 (Airmail)
அனுப்பி வைத்திருக்கிறார். ஆக மொத்தம் மேற்கண்ட 15 புத்தகங்கள் பிரான்சு நாட்டின் தலைநகரான பாரிசில் உள்ள யூனிவர்சிடேர் தே லாங்கு ஏ சிவிலைசேஷன் - நூலகத் திற்கு புதிதாக சேர்க்கப்பட்டிருக்கின் றன என்பதை நமது கவனத்திற்கு கொண்டு வந்திருக்கிறார்.

பெரியாரியலை உலகெங்கும் பரப்பும் பணியில் நடேசன் கைலாசம் செய்துள்ள இந்தப் பணியும் அவர் பாராட்டத்தக்கவர், மிகமுக்கியமான அங்கம் வகிக்கும் என்பதில் அய்ய மில்லை.

Read more: http://viduthalai.in/page-2/85108.html#ixzz39I6Ujk1U

தமிழ் ஓவியா said...


மோடி அரசுக்கு இலங்கை அரசின் நற்சான்று பத்திரம்கொழும்பு ஆக.2 இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு ஆதரவாக நடந்து கொள்வது எங்களுக்கு மகிழ்ச் சியளிக்கிறது, இதன் மூலம் இலங்கைக்கும் இந்தியாவிற்கு நீண்டகாலமாக இருந்து வந்த சிறிய பிணக்குகளும் களையப்படும் என்று இலங்கை நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சரும், அதிபருக்கான அரசியல் ஆலோசகருமான தினேஷ் குணவர்த்தனா கூறினார்.

சமீபத்தில் இலங்கைக்கு சென்ற இந்தியக்குழுவி னரின் அணுகுமுறைப் பற்றி பத்திரிகைக்கு பேட்டியளித்த ரமேஷ் குணவர்த் தன மோடி குறித்து கூறியதாவது இந்தியப்பிரதமரின் புதிய அணுகு முறையானது இலங்கை மற்றும் இந்தி யாவிற்கு நலன் மிக்க தாகவே அமையும் என்றும், சுப்பிரமணியசாமி தலை மையினாலான குழு இலங்கை வந்து மோடியின் அயலுறவுக்கொள்கை குறித்து எங்களிடம் பகிர்ந்து கொண் டனர். இலங்கை மற்றும் இந்தியா விற்கான வர்த்தக நலனுக்கான மோடி நல்ல பல திட்டங்களை விரைவில் அறிவிப்பார் என்றும் உறுதியளித்தனர் என்றார். இந்தியாவின் இந்த மாற்றம் எங்களுக்கு மிக வும் மகிழ்ச்சியளிக்கிறது என்று கூறிய அவர் அய்க்கிய நாடுகள் குறித்த விசாரணை பற்றி கூறும் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ அல்லது வடக்கில் வாழும் பொது மக்களோ ஐக்கிய நாடு களின் விசா ரணைக் குழுவுக்கு சாட்சியமளித்தால், அது குறித்து நாங்கள் ஆச்சரியமடைய மாட்டோம். காரணம் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் மற்றும் வடக்கில் வாழும் பலரும் எப்போதும் இலங் கைக்ககாகவும் இலங்கையின் வளர்ச்சிக் காகவும் மக்களுக்கு எதி ராகவும் தான் செயல்பட்டு வந்ததனர்.

அவர்களின் செயல்பாடுகள் சுயநலத்திற்காகவும், அயல்நாட்டில் வாழும் சில இனவாதக் குழுக்களின் ஆதரவாளர்களுக்கு ஆதரவாகவும் தான் இருக்கும் என்றார். மத்தியில் ஏற்படும் மாற்றம் காரணமாக தமிழக அரசியல் கட்சிகளும் இலங்கைக்கு இணக்கமான நடவடிக்கையில் இறங்கு வார்கள் என்று இலங்கை அரசு நம்பு கிறது என அவர் கூறினார்.

Read more: http://viduthalai.in/page-2/85109.html#ixzz39I6dTIYu

தமிழ் ஓவியா said...

கண்டன ஆர்ப்பாட்ட முழக்கங்கள்!.

1. வாழ்க வாழ்க வாழ்கவே!
தந்தை பெரியார் வாழ்கவே!
2. வாழ்க வாழ்க வாழ்கவே!
அன்னை மணியம்மையார் வாழ்கவே!
3. வெல்க வெல்க வெல்கவே!
திராவிடர் கழகம் வெல்கவே!
4. ஆர்ப்பாட்டம், ஆர்ப்பாட்டம்
திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம்!
5. கண்டிக்கிறோம், கண்டிக்கிறோம்
சமஸ்கிருத ஆதிக்கத்தை
சமஸ்கிருத ஆதிக்கத்தை
கண்டிக்கிறோம், கண்டிக்கிறோம்!
6. செத்துப் போன செத்துப் போன
சமஸ்கிருதத்துக்கு, சமஸ்கிருதத்துக்கு
சிங்காரமா? சிங்காரமா?
கொண்டாட்டமா? கொண்டாட்டமா?
7. சமஸ்கிருதம் என்று சொல்லி
சமஸ்கிருதம் என்று சொல்லி
திணிக்காதே! திணிக்காதே!
பார்ப்பனீயக் கலாச்சாரத்தை
பார்ப்பனீயக் கலாச்சாரத்தை
திணிக்காதே! திணிக்காதே!
8. மனித உரிமை ஆணையம்
மனித உரிமை ஆணையம்
நியமனம் செய்த நியமனம் செய்த
விசாரணைக் குழுவினை
விசாரணைக் குழுவினை
தடுக்காதே! தடுக்காதே!
9. மத்திய அரசே, மத்திய அரசே!
துணை போகாதே, துணை போகாதே!
கொடுங்கோலன் ராஜபக்சேவுக்கு
கொடுங்கோலன் ராஜபக்சேவுக்கு
துணை போகாதே, துணை போகாதே!
10. பணி முடிப்போம், பணி முடிப்போம்
தமிழர் தலைவர் தலைமையிலே
தமிழர் தலைவர் தலைமையிலே
தந்தை பெரியார், தந்தை பெரியார்
பணி முடிப்போம், பணி முடிப்போம்!
11. வாழ்க வாழ்க வாழ்கவே!
தந்தை பெரியார் வாழ்கவே!
வெல்க வெல்க வெல்கவே
திராவிடர் கழகம் வெல்கவே!
- திராவிடர் கழகம்

Read more: http://viduthalai.in/page-4/85114.html#ixzz39I7QlyRl

தமிழ் ஓவியா said...

தந்தை பெரியார் பொன்மொழிகள்

உன் தெய்வ மொழி நீ வணங்கும் உன் கடவுளுக்கே பிடிக்கவில்லையே? அப்புறம் என்ன தெய்வ மொழி வெங்காய மொழி. என்னென்னமோ சிறப்புச் சொல்கிறாய். இருந்தும் நமக்கு மானம் வரும்படியான, அறிவு வரும்படியான ஒரு நூல் தமிழில் இல்லையே.

பார்ப்பானுக்கும், பணக்காரனுக்கும் இருந்து வந்த மரியாதை குறைந்ததே ஒழிய இன்னும் ஆதிக்கம் ஒழியவில்லையே! சமதர்மம் என்றால் பார்ப்பான் ஒழிப்பும், பணக்காரன் ஒழிப்பும் தானே? பார்ப்பான் ஆதிக்கம் ஒழியாதவரை உண்மையான சமதர்மம் காணமுடியாது.

மக்கள் உலகம் முழுவதும் ஒன்றுபட வேண்டும்; மற்ற ஜீவன்களுக்குத் தன்னால் கெடுதி இல்லாத வாழ்வு பெறவேண்டும். மனிதனிடத்தில் பொறாமை, வஞ்சகம், துவேசம், கவலை, துக்கம் ஏற்படுவதற்கு இடமில்லாது சாந்தி வாழ்வுக்கு வகை தேட வேண்டும். இது தான் எனது ஆசை

Read more: http://viduthalai.in/page-7/85143.html#ixzz39I7uPl3J

தமிழ் ஓவியா said...


சிங்கப்பூரில் சுயமரியாதைச் சங்கம்

உண்மைத் தர்மம்

மலாய் நாட்டின் முக்கிய பட்டணமாகிய சிங்கப்பூரில் தமிழர் சீர்திருத்தக் காரர்கள் சங்கம் என்பதாக ஒரு சுயமரியாதைச் சங்கம் ஏற்படுத்தப் பட்டிருப்பதைப் பற்றிய விவரம் மற்றொரு பக்கம் பிரசுரித்திருக்கின்றோம்.

இதற்காகக் கூட்டப்பட்டுள்ள முதல் கூட்டத்திற்கு அவ்வூர்ப் பிரமுகர்கள் சுமார் 150 பேர்களுக்கு மேலாகவே கூட்டினதும், தலைமை வகித்த திரு. ராம சாமியார் பேசிய தலைமைப் பேருரைப் பேச்சுகளும் மிகவும் குறிப்பிடத் தக்கதாகும்

அதாவது சங்கத்தின் நோக்கங்களைக் குறிப்பிடுகையில்,

1. மக்கள் பிறவியில் உயர்வு தாழ்வு கற்பிக்கும் வருணாச் சிரம தர்மத்தையும், தீண்டாமையையும் ஒழித்தல்.

2. பெண்களுக்கு உரிமை அளித்தல்.

3. அறிவு விருத்திக்கான கல்வியைப் போதித்தல்.

4. சிக்கன முறையைக் கைகொள் ளுதல்.

5. அறிவிற்குப் பொருத்தமற்ற பழக்க வழக்கங்களை நீக்குதல்.

என்று சொன்னதிலிருந்து அவை கள் சுயமரியாதைக் கொள்கைகளை எவ்வளவு நுட்பமாக உணர்த்திச் சொல்லப்பட்ட உரைகள் என்பது யாவருக்கும் எளிதில் விளங்கும். தவிரவும் சிங்கப்பூரில் நிறுவப்பட்ட சங்கங்கள் அனேகம் உடனுக்குடன் மறைந்து போவதற்குக் காரணம் அச்சங்கங்களுக்கு ஒரு சொந்த இடம் இல்லாததே என்று குறிப்பிட்டு விட்டு அதற்காக தானும் திருவாளர் பி. கோவிந்தசாமி செட்டியாரும் சேர்ந்து ஒரு கட்டிடம் வாங்கி உதவுவதாய் அக்கூட்டத்திலேயே வாக்களித் திருப்பதானது அவர்களின் பரோபகார எண்ணத்தையும் உண்மைத் தர்மத்தை உணர்ந்திருக்கும் உணர்ச்சியையும் காட்டுகின்றது. மலாய் நாட்டில் எங்கு பார்த்தாலும் சீனர்களுக்கு ஒரு பொது இடம் இருப்பதை நமது சுற்றுப் பிரயாணத்தில் கண்டோம்.

ஆனால் அங்கு இந்தியர்களுக்கு எங்கு பார்த்தாலும் கோவிலும் பூஜையும் தான் பார்க்க முடிந்ததே ஒழிய ஒரு தனிப் பொதுக் கட்டிடம் நமது கண்களுக்குத் தென்படவே இல்லை. இதை எதற்காக எடுத்துக் காட்டுகின்றோமென்றால் இந்தியர்களின் அறிவே, பொது நலம் என்றால் பொதுதர்மம் என்றால் கோவிலைக் கட்டி குழவிக் கல்லை நட்டு கும்பாபிஷேகம் செய்து அதில் முட்டிக் கொள்வதே தான் என்று கருதி இருக்கிறார்கள்.

ஆனால் நமது உயர் திருவாளர்கள் ஓ. ராமசாமி நாடார் அவர்களும், பி.கோவிந்தசாமி செட்டியார் (நாயுடு) அவர்களும் சேர்ந்து சுமார் 15 ஆயிரம் அல்லது 20,000 ரூபாய்க்குள் ஒரு கட்டிடம் வாங்கி உதவுவதாய் தீர்மானித்து இருப்பதிலிருந்து கோவிலுக்குப் பணம் போடுவது முட்டாள்தனம் என்பதை நன்றாய் உணர்ந்து விட்டார்கள் என்றே தெரிகின்றது.

இக்கட்டிடமும் சங்கமும் நிரந்தரமாய் இருந்து அதன் கடமைகளைச் செய்ய வேண்டுமானால் அதற்குச் சிறிது பண்டுத் தொகையும் இருக்க வேண்டும் என்பதே நமது அபிப்பிராயமாகும். அதற்கும் திரு. நாடார் அவர்கள் முயற்சிப்பார்கள் என்றே நம்புகின்றோம்.

இவ்விஷயத்தில் பார்ப்பன சூழ்ச்சி யும், அவர்களது தாசர்களது தொல்லை களும் தடைகளாக ஏற்பட்டாலும் ஏற்படலாம். ஆனால் அவர்களுக் கெல்லாம் நமது நாடாரவர்கள் சிறிதும் பயப்படமாட்டார் என்பது நமது உறுதியாகும். எப்படியெனில், திரு. நாடாரவர்கள் முடிவுரையில்,

நமது இயக்கத்திற்கு எவ்வளவுக் கெவ்வளவு எதிர்ப்பு ஏற்படுகிறதோ, அவ்வளவுக் கவ்வளவு பலமாகவும், வேக மாகவும் இயக்கம் பரவும்.

என்று சொல்லியிருப்பதிலிருந்து எதிர்ப்புகளையும், தடுப்புகளையும் வரவேற்கின் றார் என்பது நன்றாய் விளங்குகின்றது. மற்றும் சுயமரியாதை வீரர்களான கோ. சாரங்கபாணி, அதிசயம், எ. கோபால், அ. ராஜகோபால் முதலியவர்களும் மற்றும் திருவாளர்கள் வெ.சோமசுந்திரம் செட்டியார், கோ. ராமலிங்கத் தேவர், அ.சி.சுப்பையா, கா. தாமோதரனார், ரா. து. கோவிந்தசாமி, மு. ரெ. முத்துக் கண்டியர், த.வ.குமாரசாமி, ச.குப்புசாமி, பு.ரா.கோவிந்தசாமி, ரெ.திருவேங்கிடம், அ. க. நாராயணசாமி, எ. ஆ. சிவராய பிள்ளை ஆகியவர்களும் இம் முயற்சியில் ஈடுபட்டிருப் பதைப் பார்க்க இச்சங்கமானது சிங்கையில் தலை சிறந்து விளங்கி ஒரு செல்வாக்குப் பொருந்திய பொது நல தாபனமாக இருக்கும் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை.

ஆகவே வெகு சீக்கிரத்தில் இச்சங்கத்திற்குக் கட்டிடம் முதலியவைகள் ஏற்பட்டு திறப்புவிழா நடந்து பிரச்சாரம் துவக்கப்படும் என்று உறுதியாய் நம்புவதுடன் இந்திய தாழ்த்தப்பட்ட - கொடுமைப்படுத்தப்பட்ட - இழிவு படுத்தப்பட்ட - மக்களின் சார்பாக மேல்கண்ட நண்பர்களுக்கு நமது மனம் நிறைந்த நன்றியறிதலைச் செலுத்துகின்றோம்.

- குடிஅரசு - தலையங்கம் - 27.07.1930

Read more: http://viduthalai.in/page-7/85145.html#ixzz39I83seBq

தமிழ் ஓவியா said...

தந்தை பெரியார் பொன்மொழி

ஜாதி ஒழிப்பது என்பது இன்று சட்டத்தின் மூலம் முடியாது என்று ஆகிவிட்டது. கிளர்ச்சி மூலம்தான் முடியும். வெள்ளைக்காரனிடமிருந்து பார்ப்பான் கைக்கு அதிகாரம் வந்ததும் முதலில் அரசியல் சட்டத்தில் மூலாதார உரிமையாக மதத்தையும் ஜாதியையும் காப்பாற்றுவது என்று போட்டுவிட்டான்.

Read more: http://viduthalai.in/page-7/85145.html#ixzz39I8D62gz

தமிழ் ஓவியா said...


முதல்வர்மீது அவதூறு: கலைஞர் கண்டனம்

சென்னை, ஆக.2_ இலங்கை சிங்கள அர சின் பாதுகாப்புத் துறையின் அதிகாரப்பூர்வ மான இணைய தளத்தில் தமிழக முதல மைச்சரை இழிவுபடுத்தும் வகையில் எழுதப் பட்டுள்ள தகவல் அறிந்த தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள், அச்செயலை வன்மை யாகக் கண்டித்து நேற்று (1.8.2014) மாலை அறிக்கையொன்று வெளியிட்டார்

அறிக்கையில் குறிப்பிட்டு இருப்பதாவது:_

இலங்கை சிங்களவாத அரசின் பாது காப்புத் துறையின் அதிகாரப்பூர்வமான இணைய தளத்தில், தமிழக மீனவர் பிரச் சினை தொடர்பாக எழுதப்பட்டுள்ள கட் டுரை ஒன்றில், தமிழக முதலமைச்சரை அநாகரிகமாக இழிவுபடுத்தும் வகையில் எழுதப்பட்டுள்ளதாக இன்று (1.8.2014) மாலை ஏடுகளில் செய்திகள் வந்துள்ளன.

அ.தி.மு.க. தலைவருக்கும், நமக்குமிடையே எத்தனையோ கருத்து வேறுபாடுகள் இருப் பினும், அவர் தமிழக மீனவர்களின் இன் னல்களைக் களையும் விதத்தில் பிரதமருக்கு எழுதிய கடிதங்களைக் கொச்சைப்படுத்தும் அளவுக்கு சிங்கள அரசினர் ஈடுபட்டிருக் கிறார்கள் என்பதிலிருந்து சிங்கள அரசின் நடவடிக்கைகள் எப்படிப்பட்டவை என்பதை யாவரும் புரிந்துகொள்ள முடியும்.

பொதுவாக இதுபோன்ற இழிவான விமர்சனங்களை தி.மு.க. எப்போதுமே ஆதரிப்பதுமில்லை. அந்தக் கடுமொழி களை, இழிமொழிகளைக் கண்டிக்கத் தவறி யதும் இல்லை. அப்படிப்பட்ட சிங்கள அரசுக்கு ஆதரவாக இந்திய அரசு நடந்து கொள்ளக்கூடாது என்றுதான் தமிழகத்தின் சார்பில் அனைத்துக் கட்சியினரும் தொடர்ந்து மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்து வருகிறோம்.

அந்தக் கட்டுரை இழிவு படுத்தியிருப்பது தமிழக முதலமைச்சரை மட்டுமல்ல; இந்திய நாட்டுப் பிரதமரையும் தான் இழிவுபடுத்தியிருக்கிறது என்ற எண்ணத்தோடு, இந்தப் பிரச்சினையில் மத்திய அரசு உடனடியாகத் தலையிட்டு தன்னுடைய கடுமையான கண்டனத்தை இலங்கை அரசுக்குத் தெரிவிக்கவேண்டும்.இவ்வாறு அவ்வறிக்கையில் தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் குறிப்பிட் டுள்ளார்.

மன்னிப்பு கேட்டது இலங்கை ராணுவம்

மீனவர்கள் பிரச்சினைபற்றி பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதுவதுபற்றி இழிவாக விமர்சித்த விவகாரத்தில், இலங்கைக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து, தனது ராணுவ இணையதளத்தில் வெளியிட்ட சர்ச்சைக்குரிய கட்டுரையை நீக்கிய இலங்கை ராணுவம், பகிரங்க மன்னிப்பு கேட்டது. அதிபர் ராஜபக்சே வருத்தம் தெரிவித்தார்.

Read more: http://viduthalai.in/page-8/85148.html#ixzz39I8KYexu

தமிழ் ஓவியா said...


என்.வி.என் (1912-1975)


என்.வி.என். என்று திராவிடர் இயக்கத்தாரால் அன்போடு விளிக்கப்படும் மானமிகு என்.வி. நட ராசன் அவர்களின் நினைவு நாள் இந்நாள் (1975).

அச்சுக்கோப்பாளராகத் தன் வாழ்வைத் தொடங் கிய இவர் தொடக்கத்தில் காங்கிரஸ்காரர்தான். 1937இல் தமிழ் மண்ணைத் தட்டி எழுப்பிய தந்தை பெரியார் தலைமை தாங் கிய அந்த இந்தி எதிர்ப்புப் போராட்டம் மொழி மான - இனமான - தன்மானப் போர் பல திக்குகளிலும் சிதறிக்கிடந்த தமிழர்களை ஓரினம் என்னும் கோட் பாட்டுக்குடையின் கீழ் கொண்டு வந்து நிறுத் தியது; அதில் அணி வகுத்து வந்த மெலிந்த உருவச் சிப்பாய்தான் என்.வி.என். என்னும் போராளி! திராவிடன் இதழையும் பிற்காலத்தில் நடத்தியவர்.

என்.வி.என். அவர் களைப் பற்றி அறிஞர் அண்ணாவின் படப் பிடிப்பு மிகவும் பொருத்த மானது.

திராவிடர் கழகத்தில் இருந்தபோது அதன் வளர்ச்சிக்காகத் தன்னல மற்று தம்மையே ஒப் படைத்துக் கொண்டு உழைத்தவர் என்.வி.என். தந்தை பெரியார் அவர்கள் அவர்மீது பேரன்பு பொழிந்த தோடு நிற்கவில்லை.

எந்த அளவுக்கு என்றால் தாம் எங்கே சென்றாலும் காரிலோ, வண்டியிலோ என்.வி.என்.னைத் தம் முடன் அழைத்துச் செல்லு ம் அளவுக்கு! கொள் என்றால் வாயைத் திறப்பதும் கடி வாளம் என்றால் வாயை மூடிக் கொள்வதும் குதிரை களுக்கு மட்டுமே சொந்த மான இயல்பு இல்லை.

சில சந்தர்ப்பவாத அரசியல் வாதிகளிடமும் அந்தத் தவறான தடம் புரளும் போக்கு உண்டு; ஆனால் என்.வி.என். அத்தகைய கோழை அல்லர். கொள்கைக் குன்று என்று அண்ணா அவர்கள் அகமகிழ வியந்துள்ளார் (சென்னை சூளையில் அண்ணா ஆற்றிய உரை 6.6.1963).

அண்ணா சொன்னது வெறும் சொற்கள் அல்ல; இந்தி எதிர்ப்புப் போராட் டத்தில், தாம் மட்டும் அல்ல; தம் வாழ்விணையர் புவனேசுவரி அம்மை யாரை சிறைக்கோட்டம் ஏகச் செய்தவர் (கைக் குழந்தையுடன் - அவர் தான் பிற்காலத்தில் மத்திய அமைச்சராக இருந்து விபத் தில் மரணம் அடைந்த என்.வி.என். சோமு).

எல்லாவற்றையும்விட ஒரு சிறப்புண்டு அவருக்கு இவர் என் செயலாளர் மட்டுமல்ல - உண்மை யான தொண்டாற்றிய (Sincere) சீடர் என்றாரே அதைவிட வேறு என்ன பாராட்டு வேண்டும்?

- மயிலாடன்

Read more: http://viduthalai.in/e-paper/85191.html#ixzz39NkMsmFO