ஜேஸ்வா அய்சக்: அய்யா,
நான் கிறிஸ்தவ சமுதாயத்தைச் சேர்ந்தவன். ஹிந்து மதத்திலிருந்து மூன்று தலை
முறைகளுக்கு முன்னால் மாறிய குடும்பம் எங்களுடையது. எங்களைத் தாய் மதத்
திற்கு திரும்பச் சொல்லி ஹிந்து அமைப் புகள் சொல்கின்றன. அப்படி நாங்கள்
மாற முன் வந்தால் எங்களை இப்போதிருக்கிற ஜாதிய அடுக்கில் எங்கே
வைப்பீர்கள்?
ராம.கோபாலன்: உங்களுக்கு
எந்த ஜாதியில் இணைய விருப்பம்? அதைச் சொல்லுங்கள்; எந்த ஜாதியிலும்
நீங்கள் இணைய முடியும். அதை வேறு யார் ஏற்றுக் கொள்கிறார்களோ, இல்லையோ;
நான் ஏற்றுக்கொள்கிறேன். பிறப்பினால் ஜாதியா? செயலினால் ஜாதியா? நீங்கள்
எந்த ஜாதியில் பிறக்க வேண்டும் என்பதை நீங்களா தீர்மானித்தீர்கள்? நீங்கள்
உங்கள் பெற்றோர்களைத் தீர்மானிக்க முடியுமா? நீங்கள் முதலில் சோ எழுதிய
எங்கே பிராமணன்? நூலைப் படித்துப் பாருங்கள். அப்போது இதைப்பற்றி நீங்கள்
புரிந்து கொள்ள முடியும். புரிந்து கொள்வீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு
இருக்கிறது
---------------------------------(துக்ளக் 6.8.2014 பக்.81).
இவர்கள் எவ்வளவுப் பெரிய கோணிப்
புளுகர்கள் - திரிபு வேலைக் கில்லாடிகள் என்பதற்கு இந்தப் பதில் ஒன்று
கூடப் போதுமானதுதான். எடுத்த எடுப்பிலேயே நீங்கள் எந்த ஜாதியிலும் இணைய
முடியும் என்று சொல்கிறார். அதை இவர் ஏற்றுக் கொள்கிறாராம். இந்து மதத்தில்
இப்படிச் சொல்லுவதற்கு இவ ருக்கு என்ன அருகதை?
இதனை சங்கராச்சாரியார் ஏற்றுக் கொள்வாரா? இல்லை ஜீயர்தான் ஏற்றுக் கொள்வாரா?
இப்பொழுது பிற மதத்திலிருந்து இந்து
மதத்திற்கு மாற்றியுள்ளார்களே - அவர் களை எல்லாம் விரும்பிய ஜாதியில்தான்
சேர்த்துக் கொண்டு இருக்கிறார்களா?
தீண்டாமைப் பெரு நோய்ப் பீடித்த இந்து
மதத்திலிருந்து பெரும்பாலும் தாழ்த்தப்பட்டவர்கள் கிறிஸ்துவ மதத் திற்கோ,
முஸ்லீம் மதத்துக்கோ சென்றுள் ளனர்; அவர்கள் மீண்டும் இந்து மதத்திற்குள்
வந்து நாங்கள் பிராமண ஜாதியில் இணைய விரும்புகிறோம் என்று சொன் னால்
இவர்களின் அர்த்தமுள்ள இந்து மதம் ஏற்றுக் கொள்ளுமா? அப்படி வரும் போது
அந்த மக்களை பிராமண ஜாதியில் தான் சேர்க்க வேண்டும் என்று சங்கர மடத்தின்
முன்னோ, ஜீயர் முன்னோ முற்றுகைப் போராட்டத்தை நடத்த முன் வருவாரா இந்த
ராமகோபாலர்?
முதலில் அப்படி சொல்லிவிட்டு, அடுத்த
வரியில் அனுமார் தாண்ட வத்தைக் கவனிக்க வேண்டும். நீங்கள் எந்தஜாதியில்
பிறக்க வேண்டும் என்பதை நீங்களா தீர்மானித்தீர்கள்? என்று விதாண் டாவாதம்
பேசுவது ஏன்? இதன் பொருள் என்ன? ஜாதி என்பது நாம் தீர்மானிக்கா மலேயே
வந்தது; அதனை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதுதானே!
ஒரு வரியைச் சொல்லி, அடுத்த வரியிலேயே பித்தலாட்டம் செய்யும் இந்தப் பூணூல்களைப் புரிந்து கொள்ள வேண்டும்.
சோவின் எங்கே பிராமணன்? என்னும் நூலைப் படிக்கச் சொல்லுகிறார். பாவம் சோ.
நான் வேதங்கள் உபநிஷத்துகள்,
சாத்திரங்கள், புராணங்களை ஒழுங்காக படிக்கவில்லை என்று ஒப்புக் கொண்டு
விட்டு எழுதுகிறார் சோ. அவரைத் துணைக்கழைப்பதுதான் வேடிக்கை.
நான்கு வருணங்கள் பிறப்பின் அடிப்படையில்
ஏற்படுத்தப்பட்டவை யல்ல. குணம், வாழும் வகை ஆகியவற் றின் அடிப்படையில்
ஏற்படுத்தப்பட்ட இந்த நான்கு வகைகள் காலப் போக்கில் பல மாற்றங்களைச்
சந்தித்து பிறப்பின் அடிப்படையில் ஏற்படுகிற பிளவுகளாக உருவெடுத்து விட்டன
என்று எழுது கிறாரே சோ.
அப்படியா சங்கதி? இதனை சங்கராச் சாரியார் ஏற்றுக் கொள்கிறாரா?
இந்த ஜாதி தர்மமேதான் உள்ளூர அவரவர்களின்
குணமாக இருக்குமாத லால் - குணத்தால் சதுர்வர்ணம் பிரிவதாக பகவான் சொன்னதும்
(கீதையில் கிருஷ்ணன்) பிறப்பால் இப்படி ஜாதியாகப் பிரிவதும் ஒன்றேதான்
ஒன்றுக்கொன்று முரணல்ல என்று கூறுகிறாரே சங்கராச் சாரி சந்திரசேகேந்திர
சரஸ்வதியார் (தெய்வத்தின் குரல் பார்க்க)
பிறப்பில் வருவது ஜாதி குணம் என்று மட்டைக்கு இரண்டு கீற்றாக கிழித்துச் சொல்லி விட்டாரே - என்ன பதில்?
இன்னொன்று முக்கியம்: ஸ்மார்த்தர் களாக
இருக்கின்ற நாம் ஸ்மிருதியிலே என்ன சொல்லியிருக்கிறதோ, அதைக் கடைப்பிடிக்க
வேண்டும் என்று சங்கராச் சாரியார் எழுதியுள்ளார்.
சரி.. அந்த மனுஸ்ருதி என்ன கூறு கிறது?
அந்தப் பிர்மாவானவர். இந்த உல கத்தைக்
காப்பாற்றுவதற்காக தன்முகம், தோள், தொடை, பாதம் இவைகளினின்று உண்டான
பிராமண, க்ஷத்திரிய, வைசிய, சூத்திர வருணத்தார்க்கு இம்மைக்கும்
மறுமைக்கும் உரிய உபயோகமான கருமங்களைப் பகுத்தார் (மனுதர்மம் அத்தியாயம் 1
சுலோகம் 87),.
ஆக பிர்மா எனும் கடவுள் உண் டாக்கும்
பொழுதே பிராமணர், க்ஷத்தியர், வைசியர், சூத்திரன் என்ற படைத்து விட்ட
பிறகு, குணம், வாழும் வகை ஆகிய வற்றின் அடிப்படையில் ஏற்படுத்தப் பட்டவை
தான் இந்த வருணங்கள் என்ற சோவின் கூற்று அடிப்பட்டுத் தலைக்குப் புற
விழுந்து விடுகிறதே!
பாவம் பார்ப்பனர்கள்! சாஸ்திரங்களில்
உள்ளதை உள்ளபடியே காப்பாற்ற வழி தெரியாமல், வக்கு இல்லாமல் அதே நேரத்தில்
தந்தை பெரியார் எழுப்பிய அடிப்படைப் பகுத்தறிவு சிந்தனை என்னும்
சூட்டுக்கோலின் வலி பொறுக்க முடியாமல் - முகம் கொடுக்க முடியாமல், புதிய
முறையில் ஏதாவது வெண்டைக் காய், விளக்கெண்ணெய் வியாக்கியானம் செய்தாவது தலை
தப்புமா என்று பார்க் கிறார்கள்.
அவர்களுக்காகப் பரிதாப்படுவோம் - எச்சரிக்கையாக!
-------------------- கருஞ்சட்டை 3-8-2014 "விடுதலை” யில் எழுதிய கட்டுரை
43 comments:
பாதுகாப்பு வளையத்துக்குள் மதுரை மீனாட்சி
மதுரை, ஆக.8_ மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு ஏற்கெனவே தீவிரவாதிகளின் அச்சுறுத் தல் இருந்து வருகிறது. இதற்காக கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப் பட்டு துப்பாக்கி ஏந்திய காவல்துறையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு வரும் பெண் பக்தர் களை பெண் காவல் துறையினரும், ஆண் பக் தர்களை ஆண் காவல் துறையினரும் சோதனை செய்து உள்ளே அனுப்பு கின்றனர். மேலும் கேமரா, பைனாகுலர் மற்றும் செல் பேசி போன்ற பொருட் களை உள்ளே கொண்டு செல்ல தடை விதிக்கப் பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னை தலைமை செயலகத்திற்கு நேற்றுமுன்தினம் வெளி நாட்டில் இருந்து இ-மெயில் மூலம் மிரட்டல் கடிதம் வந்துள்ளது. அந்தக் கடிதத்தில், மீனாட்சி அம்மன் கோயிலில் வெடி குண்டு வெடிக்கும் என மிரட்டல் வாசகம் இருந்தது.
இந்தத் தகவல் உட னடியாக மதுரை காவல் துறையினருக்கு தெரிவிக் கப்பட்டது. இதையடுத்து, மதுரை காவல்துறையினர் கடுமையான பாதுகாப்பு வளையத்திற்குள் மீனாட்சி அம்மன் கோயில் கொண்டு வரப்பட்டது. தெற்கு, வடக்கு உள்ளிட்ட ஒவ்வொரு கோபுர வாசல் கள் மற்றும் அதனை சுற்றியுள்ள வெளி வீதி களில் காவல் துறையினர் தீவிர சோதனை நடத் தினர்.வெடிகுண்டு தடுப்பு மற்றும் செயல் இழப்பு பிரிவினரும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். வெளிவீதிகளில் அமைந் துள்ள கடைகள் முன்பாக பைக்குகள், சைக்கிள்கள் நிறுத்த தடை விதிக்கப்பட் டுள்ளது. உள்ளே நுழையும் பாதைகளில் ஒரு எஸ்.அய் மற்றும் 2 காவல் துறை யினர் வீதம் 24 மணிநேர மும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Read more: http://viduthalai.in/e-paper/85454.html#ixzz39r3WzTMc
சங்கராச்சாரிகள் மீதான கொலை வழக்கில் மேல் முறையீடு செய்யக் கூடாதாம்! குடியரசு தலைவரிடம் சுப்பிரமணியசாமி மனு
சங்கராச்சாரிகள் மீதான கொலை வழக்கில் மேல் முறையீடு செய்யக் கூடாதாம்!
குடியரசு தலைவரிடம் சுப்பிரமணியசாமி மனு
கழகத் தோழர்களே, பொது மக்களே குடியரசு தலைவருக்கு மின்னஞ்சல் அனுப்புவீர்!
தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள அறிக்கை சங்கரராமன் கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட காஞ்சி சங்கராச்சாரியார் மீதான வழக்கில் மேல் முறையீடு செய்யக் கூடாது என்று சுப்பிரமணியசாமி குடியரசு தலைவரிடம் மனு கொடுத்துள்ளது தொடர்பாக திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: காஞ்சி சங்கரராமன் கொலை வழக்கில் குற்றஞ் சாட்டப்பட்ட காஞ்சிபுரம் சங்கராச்சாரியார்கள் இருவர் உள்ளிட்டவர்கள் புதுவை நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இதனை எதிர்த்து மேல்முறையீடு செய்ய புதுவை மாநில அரசு முடிவு செய்ய ஆளுநரின் அனுமதியும் பெற்றாகி விட்டது. சட்ட நடவடிக்கைகள் துவங்கி விட்டன.
யார் இந்த சுப்பிரமணியசாமி?
இந்தச் சூழ்நிலையில் சுப்பிரமணிய சாமி என்பவர் அதிகப் பிரசங்கித்தனமாக குடியரசு தலைவரிடம் மனு ஒன்றினைக் கொடுத்துள்ளார்.
குடியரசுத் தலைவர் இந்த விவகாரத்தில் தலையிட்டு புதுவை ஆளுநர் அளித்த அனுமதியைத் திரும்பப் பெறச் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.
பிஜேபியின் நிலைப்பாடு என்ன?
பிஜேபியைச் சேர்ந்தவராக இருக்கும் நிலையில், இந்தக் கருத்து பி.ஜே.பி.யின் கருத்தா? அல்லது பிஜேபி தலைமையிலான அரசின் கருத்தா? என்ற சந்தேகம் பொது மக்களுக்கு ஏற்படுகிறது. இதுகுறித்து பிஜேபி கட்சி தலைமையும், பிஜேபி ஆட்சித் தலைமையும்தான் தெரிவிக்க வேண்டும்.
ஒரு மாநில ஆட்சி முடிவெடுத்து, ஆளுநரும் அனுமதியளித்த நிலையில், குடியரசுத் தலைவர் தலையிட வேண்டும் என்று ஒருவர் சொல்லுவது, அரசமைப்புச் சட்டத்தில் மதிப்புறு நிலையில் வைக்கப்பட்டுள்ள குடியரசுத் தலைவரையே தேவையில்லாத சிக்கலில் மாட்ட வைக்கும் முயற்சி என்று கருதிடவும் இடம் இருக்கிறது.
ஏற்கெனவே சில சாமியார்கள் தண்டிக்கப்பட்டுள்ளனரே!
ஏற்கெனவே பிரேமானந்தா சாமியார் என்பவர் செய்த குற்றங்களுக்காக இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப் பட்டது நித்யானந்த சாமியும் செய்த குற்றங்களுக்காக அவர்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. கைதும் செய்யப்பட்டார்.
தமிழர்கள் வேறு வகையில் சிந்திக்க மாட்டார்களா?
இப்படிப்பட்ட ஒரு சூழலில் காஞ்சி சங்கராச்சாரியார் மீது கொலை குற்றம் உள்ளிட்ட வழக்கில் மட்டும் வேறு விதமாக நடந்து கொள்ள வேண்டும் என்று நினைப்பதும், அதற்குக் குடியரசு தலைவரின் அதிகாரச் செல்வாக்குப் பயன்படுத்தப்பட வேண்டும் என்று கோருவதும் தமிழ்நாட்டு மக்களிடத்தில் வேறுவிதமான எண்ணத்தை ஏற்படுத்தும் என்பதில் அய்யமில்லை.
அதிலும் குறிப்பாக சங்கரராமன் கொலை வழக்கில் மொத்தம் 177 சாட்சிகளில் 77 பேர் பிறழ்சாட்சி என்பது இதற்கு முன் எங்கும் கேள்விப்பட்டிராத ஒன்றே!
கொலை செய்யப்பட்ட சங்கரராமன் குடும்பத்தினரும் இந்த வழக்கில் மேல் முறையீடு தேவை என்பதை வலி யுறுத்தியுள்ளனர்.
இந்தச் சூழ்நிலையில் குடியரசு தலைவர் இதில் விலகியிருப்பது அவசியம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்?
குடியரசு தலைவருக்கு மின்னஞ்சல் அனுப்புக
கழகத் தோழர்களும் நீதியின்மீது கவலையுள்ள பெரு மக்களும் கீழ்க்கண்ட முகவரிக்கு மின் அஞ்சல் மூலம் கீழ்க்கண்ட வாசகத்தை அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
The President of India
Rashtrapati Bhawan
New Delhi
Honourable Sir,
The decision by Puducherry Government to go in for appeal against the acquittal of 24 persons including Kanchi Jeyendra Saraswathi and Vijayendra Saraswathi, two Sankaracharyas, in the Sankararaman murder case should be allowed to proceed without any delay. Any effort to stall the appeal process would give wrong impression in the minds of people of Tamilnadu and Puducherry that Chief Executive of this country viz. President is intervening in the judicial process.
The family of the slain Sankararaman through this appeal, are eagerly expecting justice as also the people of Tamilnadu. The murder was committed in the Varadarajasamy Temple premise.
We once again request your goodself to kindly resist any effort by vested interests in stopping this appeal process.
Email address: secy.president@rb.nic.in and usgrievance@rb.nic.in
கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்
சென்னை 8.8.2014
Read more: http://viduthalai.in/e-paper/85456.html#ixzz39r5uTz5C
இன்றைய ஆன்மிகம்?
லட்சுமி விரதமாம்
இன்று லட்சுமி விரதமாம். இவள் தனத் தானிய செல்வங்களின் அதிபதியாம். மகாவிஷ் ணுவின் மனைவியான லட்சுமியின் அருள் வேண் டியும் தாலி பாக்கியம் நிலைக்கவும். இன்றைக் குப் பெண்கள் வரலட்சுமி விரதப் பூஜை நடத்து கிறார்களாம்.
ஆண்டுதோறும் இந்தப் பூஜையை நடத் திக் கொண்டு தானே இருக்கிறார்கள். தானிய விளைச்சல் ஓகோ என்றா இருக்கிறது? தமிழ் நாட்டை வறட்சி மாநில மாக அறிவிக்க வேண்டும் என்று வேண்டுகோள் வைக்கும் நிலைதானே?
சரி, இந்த லட்சுமிக் கடவுளைப்பற்றி காதம் பரி காவியம் என்ன கூறு கிறது? இமயமலைச் சாரலில் லட்சுமி கடவுள் தனித்திருந்தபோது ஒரு முனிபுங்கவரைக் காதலித்து ஒரு குழந் தையைப் பெற்றதற்காக, கணவனான விஷ்ணு சண்டாளப் பெண்ணாகப் பிறக்குமாறு சாபமிட் டான் என்று இருக்கிறதே இப்படிப்பட்ட ஒரு பெண் ணுக்காக வரலட்சுமி விரதம் ஒரு கேடா?
Read more: http://viduthalai.in/e-paper/85455.html#ixzz39r64JofX
தமிழ்நாட்டில் 1,442 பெண்கள் அரசுப் பள்ளிகளில் கழிப்பறை வசதி இல்லை என்பது அதிர்ச்சித் தகவல்
தமிழ்நாட்டில் 1,442 பெண்கள் அரசுப் பள்ளிகளில் கழிப்பறை வசதி இல்லை என்பது அதிர்ச்சித் தகவல்
தமிழ்நாடு அரசு முக்கிய கவனம் செலுத்த வேண்டும்
மத்திய அரசும் போதிய நிதி வசதி செய்து உதவிட வேண்டும் தமிழர் தலைவர் அறிக்கை
தமிழ்நாட்டில் அரசுப் பெண்கள் பள்ளிகளில்கூட போதுமான எண்ணிக்கையில் கழிப்பறை வசதியில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ள தகவலைச் சுட்டிக்காட்டி உடனடியாக தமிழ்நாடு அரசு இதில் கவனம் செலுத்தி கழிப்பறை வசதிகளைச் செய்து தர வேண்டும் என்றும், கல்வியைப் பொதுப் பட்டியலுக்குக் கொண்டு சென்றுள்ள மத்திய அரசு இதற்கு நிதி உதவி செய்திட வேண்டும் என்றும் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
தமிழ்நாட்டில் 15 சதவிகித - அரசுப் பள்ளிகளில் அதாவது 5,720 அரசுப் பள்ளிகளில் - கழிப்பறை வசதிகள் இல்லை என்று மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் (மத்திய கல்வி அமைச்சகம்) வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகிறது!
இதில் - அதாவது 5,720இல் 1442 பள்ளிகள் - பெண்களுக் கான பள்ளிகள் என்பது அதிர்ச்சிக்கும், வேதனைக்கும் உரியதாக இருக்கிறது!
தமிழ்நாட்டில் மொத்தம் 37,002 அரசு பள்ளிகள் உள்ளன.
பெண்கள் பள்ளிகளிலும் கழிப்பறை வசதியில்லையா?
இதில் 1,442 பெண்கள் பள்ளிகளிலும் 4,278 ஆண்கள் பள்ளிகளிலும் கழிப்பறை வசதி இல்லை என்ற அவலம் உடனடியாக மாற்றப்பட வேண்டும்.
2013-2014-இல் எடுக்கப்பட்ட புள்ளி விவரத் தகவல்கள் இவை!
தனியார் நடத்தும் பள்ளிகளிலும்கூட போதிய கழிப்பறை வசதிகள் இருக்கின்றனவா என்பது பற்றிய ஆய்வு செய்து - தமிழக அரசு அதனையும் கண்காணிக்க வேண்டியது அவசர அவசியமாகும்.
அரசுப் பள்ளிகளில் 90 விழுக்காடு நிதி சம்பளம் கொடுப்பதற்கே செலவிடப்படுகிறது என்று சொல்லப்பட் டாலும் அதுதக்க சமாதானமாக (இக்குறைபாடுகளை நீக்கிட) ஆகாது. உடனடியாக அரசு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
கல்வியைப் பொதுப் பட்டியலில் வைத்து அதிகாரம் செய்ய முன் வந்துள்ள மத்திய அரசு, இதற்கெனவே மாநிலங்களுக்குத் தனி நிதி உதவி (மான்யமாக) தந்திட உடனே முன்வர வேண்டும்.
கடந்த ஜூலை 30ஆம் தேதி, தமிழக சட்டமன்றத்தில் - விதி 110ன் கீழ் ஓர் அறிக்கை வெளியிட்டார் முதல்வர் அவர்கள். அதில், அனைத்துப் பள்ளிகளிலும் 100 சதவிகிதம் கழிப்பறை வசதிகள், குடிநீர் வசதிகள் இருக்க வேண்டு மென்று கணக்கெடுக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார்.
இதில் 2047 பள்ளிகளில், கழிப்பறை வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த இரண்டும் முரண்பட்ட தகவல்களாக அமைவது - ஏனோ?
எப்படி இருந்தபோதிலும் உடனடியாக கழிப்பறைகள் அமைக்கப்படுவதோடு, ஒவ்வொரு பள்ளிக்கும் முழு நேர துப்புரவுப் பணியாளர் ஒருவரும் நீர் வசதியும் ஏற்படுத்தித் தரும் பொறுப்பைக் கண்காணித்து, பள்ளி சுகாதாரப் பிரிவு ஒன்றையேகூட ஏற்படுத்தினால் பிள்ளைகளின் நலவாழ்வு பாதுகாக்கப்பட வசதிகள் ஏற்பட்டு, இந்தியா விற்கு தமிழ்நாடு இதிலும் வழிகாட்டி மாநிலமாக அமையக் கூடும் அல்லவா?
கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்
சென்னை 8.8.2014
Read more: http://viduthalai.in/e-paper/85459.html#ixzz39r6BX1fd
இப்படியும்கூட சட்டமா?
இப்படியும்கூட சட்டமா?
சவூதி அரேபியாவில் உள்ள ஆண்கள் பாகிஸ் தான், வங்கதேசம், சாட் மற்றும் மியான்மா ஆகிய நான்கு நாடுகளிலிருந்து பெண்களைத் திருமணம் செய்யக் கூடாது என்று சவுதி அரசு தடை விதித் துள்ளது. (இவ்வளவுக்கும் இவர்கள் எல்லாம் ஒரே மதத்தைச் சேர்ந்தவர்கள் ஆயிற்றே!)
உதிர்ந்த முத்து!
குற்றங்களைக் கட்டுப் படுத்த முடியுமே தவிர முற்றிலும் ஒழிக்க முடியாது; எது போல என்றால் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த முடியுமே தவிர, முற்றிலும் ஒழிக்க முடியாது - அது போல.
- சட்டப் பேரவையில் முதல் அமைச்சர் 5.8.2014
பெண்களால் உயரும் ஜிடிபி
நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பெண்கள் அதிக அளவில் பங்கேற் றால் உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) உயரும் என்கிறார் அய்.சி.அய்.சி.அய் வங்கி தலைமைச் செயல் அதிகாரி சாந்தா கொச்சன்.
இது ஏழை நாடு?
மகாராட்டிரத்தைச் சேர்ந்த தொழிலதிபர் பங்கஜ்பாரஜ் என்பவர் தனது 45ஆம் ஆண்டு பிறந்த நாளுக்காக ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்புடைய தங்கத்தினா லான சட்டையை வாங்கி யுள்ளார். 8ஆம் வகுப்பு வரை படித்த அவர் இன் றைக்குப் பெரிய தொழி லதிபராம்.
Read more: http://viduthalai.in/e-paper/85460.html#ixzz39r7MQpE1
கற்றுக் கொள்ள வேண்டியது
இதுவரை எந்தப் பார்ப்பனராவது பார்ப்பனரல்லாத கட்சிக்கு அனுகூலமாய்ப் பிரச்சாரம் செய்ய வந்திருக்கிறாரா? என்றால் ஒருவர்கூட இல்லையென்றுதான் சொல்ல வேண்டும். பார்ப்பனருக்கு வேறு எவ்வளவு கெட்ட குணம் இருந்தாலும், தங்கள் வகுப்பு விசயத்தில் எல்லாரும் ஒன்று சேருவது அவர்களிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய விசயம்.
(குடிஅரசு, 7.11.1926)
Read more: http://viduthalai.in/page-2/85444.html#ixzz39r7ZMRkq
அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் கோரிக்கை
ஆசிரியருக்குக் கடிதம் >>>
அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் கோரிக்கை
எங்கள் சங்கத்தின் 206 மாணவர்கள் 2007-2008 ஆண்டுகளில் தமிழக அரசின் சார்பில் துவக்கப்பட்ட அர்ச்சகர் பயிற்சி பள்ளியில் சேர்ந்து படித்து அர்ச்சகர் பணிக்கான தகுதி பெற்றோம். ஆனால், உடனடியாக எங்களுக்கு வேலை கிடைக்க வில்லை. காரணம் மதுரை சிவாச்சாரி யார்கள் நேரடியாக உச்சநீதிமன்றத்தில் அனைத்து ஜாதி அர்ச்சகர் ஆக தடை பெற்று விட்டனர்.
உச்சநீதிமன்றத்தில் மேற்சொன்ன வழக்கு 13.12.2012 அன்று இறுதி விசார ணைக்காக வந்தபோது தமிழக அரசின் வழக்குரைஞர் இப்பிரச்சினையை சுமுக மாகப் பேசித் தீர்ப்பதாகக் கூறி கால அவ காசம் கோரினார். அதன்பிறகு 30.01.2013 அன்று வழக்கு இறுதி விசாரணைக்கு வந்து விட்டது. மதுரை சிவாச்சாரியர்கள் சார்பில் மூத்த வழக்குரைஞர் பராசரன் அவர்கள் தனது வாதங்களை முன்வைக்க தொடங் கினார். தமிழக அரசு சார்பில் பி.பி. ராவ் எனும் மூத்த வழக்குரைஞர் ஆஜரானார். ஆனால், வழக்கு அதற்கு பிறகு நீண்ட நாட்களுக்கு பிறகு 08.07.2014 அன்று பட்டிலிடப்பட்டாலும், விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை.
அர்ச்சகர் பணிக்கான சரியான தகுதி பெற்றிருந்தும் நாங்கள் கடந்த 8 ஆண்டு களாக பணி வாய்ப்பு இன்றி தவிக்கின்றோம். எங்கள் அனைவருக்கும் வயது உயர்ந்து கொண்டே செல்கிறது. ஆகையால் குடும்பம் நடத்த எந்த வழியும் இன்றி தவித்து வரு கிறோம். அது மட்டுமல்ல; இந்த படிப்பு படித்ததால் வேறு எந்த வேலைக்கும் எங்களால் செல்ல இயலவில்லை.
எனவே, எங்களின் நிலையை கருத்தில் கொண்டு தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கை விரைந்து நடத்தி முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை இடைக் காலமாக எங்களுக்கு நிவாரண ஊதியமாக ஒவ் வொருக்கும் தலா ரூ.5000 வழங்கி ஆணை யிட வேண்டும்படியும் பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம்.
- வா. அரங்கநாதன், மாநிலத் தலைவர், அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம்
Read more: http://viduthalai.in/page-2/85451.html#ixzz39r7i6zyS
கருநாடக மாநில கழகக் குடும்ப விழா
பெங்களுரூ, ஆக. 8_ கரு நாடக மாநிலத் திராவிடர் கழகத்தின் மூத்த கழக உறுப்பினரும் பெரியாரி யல் சிந்தனையாளருமான வி.சி.வேலாயுதம் (எ) வேமண்ணா அவர்களின் 88ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா பெங்களூர் வீராசாமி நகர் 56ஆவது குறுக்குச் சாலை வேமண்ணாவின் இல்லத்தில் சிறப்பாக நடைபெற்றது.
3.8.1927 இல் பிறந்த வேமண்ணாவிற்கு 3.8.2014 அன்று காலை 10.30 மணிக்கு கருநாடக மாநி லத் தலைவர் மு.சானகிரா மன் தலைமை ஏற்று அவர் பெற்ற வாழ்வியல் அனுப வங்களை நிரல்பட விளக்கி கூறி அவர் பெற்ற விருதுக ளையும் எழுதிய நூல்க ளையும் எடுத்துக் கூறி பாராட்டினார்.
இந்திய தமிழ்ச் சங்கங் களின் கூட்டமைப்பின் தலைவரும் திராவிடர் கழக மூத்த உறுப்பினரு மான மு.முத்துச்செல்வன் முன்னிலை ஏற்றார். மாநி லச் செயலாளர் இரா.முல் லைக்கோ அனைவரையும் வரவேற்று வேமண் ணாவை பாராட்டினார்.
தங்கவயல் சி.சு.தென்ன வன் மொழி வாழ்த்துப் பாடி நிகழ்வை துவக்கி வைத்தார். தங்கம் இராம சந்திரா பெரியார் அறக்கட் டளை நிறுவனரும், மாநி லத் துணைத் தலைவரு மான இராமச்சந்திரா, கே.எஸ்.கார்டன் பகுதி கிளைத் தலைவர் வே.முனு சாமி, திராவிடர் கழகத் தலைவர் க.வேலு, தென் மண்டலத் தலைவர் கவிஞர் க.இரத்தினம், மாநிலத்துணைத் தலைவர் இராகணபதி, இரா.திரு வேங்கடம், எம்.எல். பிரேம்குமார், செயற்குழு உறுப்பினர் சி.சு.தென்ன வன், நா.சிவசங்கர், மாநிலத் துணைச் செயலாளர் வே. நடராசன், வட மண்டலத் தலைவர் இரா.பழனிவேல், கே.எஸ்.கார்டன் பகுதி கிளை செயலாளர் கு. ஆனந்தன், மாநிலப் பொரு ளாளர் கு.செயக்கிருட்டி ணன், வேமண்ணாவின் மூத்த மகள் செல்வமனி தனது தாய் நோய்வாய்ப் பட்டு படுக்கையில் இருந்த ஏழு ஆண்டுகளில் ஒரு நாள் கூட கடிந்து நடக் காமைக் குறித்து நெகிழ்ந்து கூறினார். தென் மண்டலச் செயலாளர் புலவர் கி.சு. இளங்கோவன், வே.மண் ணாவின் குணநலங்களை மொழிப்பற்றால் அவரது நூல்களைப் பற்றி விவ ரித்து கூறினார். கருநாடக மாநிலத் திராவிடர் கழகத் தின் மூத்த உறுப்பினரும் இந்திய தமிழ்ச் சங்கங்க ளின் கூட்டமைப்பின் தலைவர் முத்துச்செல்வன் திராவிடர் கழகத்தின் துவக்க நிலை, தந்தை பெரியார் கொள்கைகளை எடுத்து உரு பெற செய் தும், கன்னடர்கள் பரப் புரை செய்தது பற்றியும் பெங்களூர் தமிழ்ச்சங் கத்தில் அவரை சிறப்பித் தது, அவர் ஆற்றிய மொழி பெயர்ப்புப் பணிகள் குறித்து விளக்கமாக எடுத்துக்கூறி வயது நிலை பாராமல் அவரை மனப்பூர் வமாக அனைவரும் பாராட் டலாம் எனக் கூறினார்.
இறுதியாக 88 வயது நிறைந்த வேமண்ணா தந்தை பெரியார் கொள் கைகளை அடிநாள் தொட்டு தான் எடுத்துச்சென்ற விதம், கன்னட மொழி பயின்று அய்யாவின் நூல்களை தாம் எழுதிய விதம், கழகத் தோழர்கள் எவ்வாறு இயங்குவது போன்ற கருத்துரைகளை ஏற்புரையாக வழங்கினார். அவரது மகள் எழிலரசி நன்றியுரை கூறினார்.
மு.சானகிரான் வேமண் ணாவிற்கு பயனாடை அணிவித்தார் மு.முத்துச் செல்வன் பழக்கூடையை வழங்கினார். கி.சு. தென் னவன் பயனாடை அணி வித்தார். நாடக வேந்தர் வி.மு வேலுவுக்கு தங்கம் இராமச்சந்திர பயனாடை களை வேமண்ணாவின் மூலம் வழங்கினார். வேமண் ணாவிற்கு இராமச்சந்திரா உயர் பழங்களின் தொகுப்பை வழங்கி சிறப்பு செய்தமார். கவிஞர் வீ.இரத்தினம், இரா.கஜபதி ஆகியோர் பரிசு உறை களை வழங்கி மகிழ்ந்தனர். வே.பாவேந்தன் -_ உமா ஆகி யோரின் மகன் பெரியார் பிஞ்சு ரோசன் பரிசுப் பொருள் வழங்கினார்.
மதிய சிறப்பு உண வினை வேமண்ணாவின் குடும்பத்தினர்கள் மகள் செல்வமணி, எழிலரசி, பாவேந்தன், மருமகள் உமா பேரன் அசோக் அனைவருக்கும் வழங்கி சிறப்பித்தனர்.
புதியதாக உறுப்பின ராக கழகத்தில் இணைத் துக் கொண்ட அடையார் ஆனந்தபவன் கமனஹள் ளிக் கிளை உணவக மேற் பார்வையாளர் நா.சிவசங் கர் உறுப்பினர் படிவத் தினை மாநிலத் தலைவர் மு.சானகிராமன் அவர்களி டம் வழங்கி உறுப்பினரா கப் பதிவு செய்து கொண் டார். நா.சிவசங்கருக்கு வேமண்ணா பயனாடை அணிவித்து சிறப்பு செய்தார்.
கழக உறுப்பினர் பிரதீப் நிகழ்ச்சி அனைத்தையும் ஒளிப்படங்கள் எடுத்து சிறப்பு செய்தார்.
Read more: http://viduthalai.in/page-3/85475.html#ixzz39r8Zhw1y
சங்கரராமன் கொலை வழக்கு: தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வதை நிறுத்த சு.சாமி குடியரசுத் தலைவரிடம் மனுவாம்
சென்னை, ஆக.8- காஞ்சிபுரம் சங்கரராமன் கொலைவழக்கில் புதுவை நீதிமன்றத்தில் இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட காஞ்சி மடத்தின் இரு சங்கராச்சாரிகள் உட்பட 24 பேரை யும் விடுதலை செய்திருந்தது. சங்கரராமன் கொலைவழக்கில் வெளியான தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்கு புதுவை ஆளுநர் வீரேந்திர கட்டாரியா அனுமதி அளித்தார்.
அவர் அளித்த அனுமதியை ரத்து செய்ய வேண் டும் என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி யிடம் பாஜக தலைவர்களில் ஒருவரான சுப்பிர மணியசாமி கோரி உள்ளார்.
குடியரசுத்தலைவரி டம் சுப்பிரமணியசாமி அளித்த மனுவில், புதுவை யூனியன் பிரதேசத்தின் ஆளுநர் கட்டாரியா, அவருடைய அலுவலகம் அவசரகதி யில் கொஞ்சம்கூட மூளையை செலுத்தாமல் இருப்பது தெரிகிறது.
ஜூலையில் அதை முன் னாள் துணைநிலை ஆளுநர் செய்தியாளர் களிடம் வெளியிட்ட கருத்தில் தெரிவித்துள் ளார் என்று குறிப்பிட்டுள்ளார்.
புதுச்சேரி செஷன்ஸ் நீதிமன்றம் சங்கரராமன் கொலை வழக்கில் 2013ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் அனைவரையும் விடுதலை செய்தது. சட்டத்தின்கீழ், தீர்ப்பு நாளிலிருந்து 90 நாட்களில் விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய லாம் என்று உள்ளது.
திரு. கட்டாரியா தீர்ப்புக்கு எதிராக அவரு டைய ஒப்புதலுடன் சென்னை உயர்நீதிமன் றத்தில் மேல்முறையீட்டை செய்ததுகுறித்து ஜூலை முதல் வாரத்தில் ஊடகங்களிடம் தெரி விக்கும்போது ஒருவாரத்திற்குள்ளாக அவர் எடுத்த முடிவு அவர் நிர்ப்பந்தத்துக்கு ஆளாகி முடிவெடுத்ததாக(புதுச்சேரி ரங்கசாமி அரசு கூறியதால்) வழக்கு குறித்த விவரம் ஏதும் தெரியாமலே ஆணையில் கையெழுத்திட்ட தாக பதவியைவிட்டு வெளியேறும்போது குறிப் பிட்டதாக சுப்பிரமணியசாமி சுட்டிக்காட்டு கிறார்.
இது வெளிப்படையாகவே துணைநிலை ஆளுநர் தன் மூளையைச் செலுத்தாமலே செயல்பட்டுள்ளதானது சட்டத்தின்படி, மேல் முறையீடு செய்வதற்கு அளித்த ஒப்புதல் செல் லாதது என்று சுப்பிரமணியசாமி வாதிடுகிறார்.
ஆகவே, குடியரசுத்தலைவர் இவ்விவகாரத் தில் தலையிட்டு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 239(2)இன்படி முன்னாள் துணைநிலை ஆளுநர் அளித்த அனுமதியை திரும்பப் பெற வேண்டும் என்று சுப்பிரமணிய சாமி கூறினார்.
கட்டாரியா பதவியிலிருந்து 10.7.2014 தேதி அன்று திரும்பப் பெறப்பட்டார்.
இவ்விவகாரத்தில் சென்னை உயர்நீதி மன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்வதற்கு முன்னதாக விரைவாக குடியரசுத் தலைவரை அவசரம் கருதி தீர்வு காணக்கூடிய முடிவை எடுக்க வேண்டும் என்று சுப்பிர மணியசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.
குடியரசுத்தலைவரிடம் அளித்த மனுவில் இந்த விவாகாரத்தில் நீங்கள் பிரதமருக்கு அறிவுறுத்தி, அமைச்சரவைக்கும் தகவல் தெரிவிக்கவேண்டும் என்று அவசரப்படுத்தி உள்ளார்.
Read more: http://viduthalai.in/page-5/85467.html#ixzz39r93TGx1
அய்யோ இந்து மதமே!
இஸ்லாம், கிறிஸ்தவம் போல இந்து மதக் கோட்பாடுகள் ஒரு புத்தகத்தில் குறிக்கப்படவில்லை. அதற்கு சரித்திர ரீதியில் ஒரு அமைப் பாளரும் கிடையாது.
ஒன்றல்ல - பல கடவுள்களைக் கொண்டது. இந்துவாகி இருப்பதற்கு கடவுள் நம்பிக்கை இருக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை. இந்து மதம் என்று சொல்லப்படும் இதில் முரண்பாடுகள் செழித்து மலிந்து கிடக்கின்றன.
எல்லா இந்துக்களுக்கும் பொதுவான நம்பிக்கைகளோ அமைப்புகளோ ஒன்றும் கிடையாது.
இந்து மதத்திற்கு அடிப்படையான ஒவ்வொரு நம்பிக்கையும் - ஏதாவது ஒரு இந்து கூட்டத்தினரால் மறுத்து ஒதுக்கப்பட்டிருக்கின்றது.
- இன்டர்நேஷனல் என் சைக்கிளோபீடியா ஆஃப் சோசியல் சயின்ஸ்,பக்கம் 358, தொகுதி 6
Read more: http://viduthalai.in/page-7/85458.html#ixzz39r9HWOgC
எல்லா முயற்சிகளும் தோல்வி!
இந்துமதம் என்பது ஒரு சமூக நாகரிகமாகவும், பல் வேறு மதங்களின் இணைப்பாகவும் இருக்கின்றது. அதற்கு ஒரு ஆரம்பமோ, ஆசிரியரோ, ஒரு மத்திய அதிகாரமோ, அமைப்போ, நிறுவனமோ கிடையாது.
இந்து மதம் என்றால் என்ன என்று வரையறுக்க மேற் கொள்ளப்பட்ட எல்லா முயற்சிகளும், ஒரு வழியில் திருப்தி அற்றுத்தான் முடிந்திருக்கின்றன.
இந்துக்கள் உள்பட, மிகச்சிறந்த இந்திய அறிஞர்கள் - இந்து மதம் என்ற இதன் ஒரு பகுதியை அல்லது மற்றதை வலியுறுத்தி பல்வேறு காலங்களில் சொல்லியிருப்பதால் - இந்த வரையறை வேலை மேலும் திருப்தியற்றதா யிருக்கின்றது.
- என்சைக்கிளோ பீடியா பிரிட்டானிகா, 1974, தொகுதி 8, பக்கம் 88
Read more: http://viduthalai.in/page-7/85458.html#ixzz39r9QHDLU
கயிலாயத்தில் ஒரு உரையாடல்!
பார்வதி: நாதா! நாடெங்கும் மூளைக் காய்ச்சலாமே! நாம் நம் பக்தர்களைப் பாதுகாக்கப் புறப்படலாமா?
பரமசிவன்: அடியே! அறிவிலி! பக்தர்களுக்கு எப்படியடி மூளைக் காய்ச் சல் வரும்! மூளை இருப்ப வர்களுக்கல்லவா அது வரும்!
Read more: http://viduthalai.in/page-7/85458.html#ixzz39r9WfAMv
இந்தியா ஏழை நாடா?
இந்த நாட்டின் செல்வத்தில் எவ்வளவு பெரிய பாகம் மதமும், கடவுளும் என்கின்ற பேரால் வேலை செய்யாத சோம்பேறிகள் அனுபவிக்கின்றார்கள் என்பதை நமது மூட ஜனங்கள் அறியாமலேயே இந்த நாடு தரித்திர நாடு என்று அழுகின்றார்கள்.
இந்த நாட்டில் உள்ள சன்னியாசிகள், துறவிகள், மதாச்சாரிகள் என்பவர்களுக்கு உள்ள சொத்துக்களும் வரும்படிகளும் வேறு யாருக்காவது இருக்கின்றதென்று யாராவது சொல்ல முடியுமா?
அவர்களுக்கு எதற்காக அவ்வளவு சொத்தும் வரும்படியும் வேண்டி இருக்கின்றதென்று எந்தப் பொரு ளாதார வாதியாவது கவனிக்கின்றானா? ஒரு சந்நியாசி கோடிக்கணக்கான ரூபாய் சொத் தும், வருசத்தில் லட்சக்கணக்கான ரூபாய் வரும் படியும் உடைய வனாக இருந் தால் அந்த நாடு ஏழை நாடு தரித் திர நாடு என்று யாராவது சொல்லமுடியுமா? என்று கேட்கின் றேன்.
ஒரு முழம் முக்கால் முழம் உயரமுள்ள குழவிக் கல்லுகளுக்கு நமது நாட்டில் எத்தனைக் கோடி ரூபாய்கள் சொத்தும், எத்தனை லட்சம் ரூபாய்கள் வரும்படியும் இருக்கின்றனவென்று பாருங்கள்.
இப்படி எத்தனை நூற்றுக்கணக்கான ஆயிரக் கணக்கான குழவிக்கல்லுகள் நமது நாட்டில் செல்வத் தோடு யானை, ஒட்டகம், குதிரை, பல்லக்கு, தேர், ரதம் முதலிய வாகனங்களோடு, பல பெண்டாட்டிகளோடு வாழ்கின்றன என்பவைகளை நேரில் பார்க்கும் ஒரு யோக்கியன் உண்மையில் நமது நாடு தரித்திரமுள்ள நாடு என்று சொல்ல வருவானா?
இதை எந்த பொருளாதார நிபுணனாவது கவனித்து நமது நாடு தரித்திரமுள்ள நாடு என்று சொல்லுகிறானா?
- தந்தை பெரியார், குடிஅரசு 14.9.1930
Read more: http://viduthalai.in/page-7/85462.html#ixzz39r9gn2Xp
தந்தை பெரியார் பொன்மொழி
இராம இராவணப் போரில் இராமனுக்கு அனுசரணையாக இனத் தையே காட்டிக் கொடுத்த விபீடணன், அனுமார், சுக்ரீவன், அங்கதன் ஆகிய வர்களைப் போல இன்றைக்கும், நமது இனத்தைப் பார்ப்பானுக்குக் காட்டிக் கொடுத்து வயிறு வளர்க்கவும், பதவி பெறவும் எண்ணுகின்றவர்கள் இருக் கின்றார்கள்.
Read more: http://viduthalai.in/page-7/85462.html#ixzz39r9oonWv
மத நம்பிக்கையே இல்லாமல் வாழும் மக்கள்
உலகின் ஒன்பது நாடுகளில் சமீபத்தில் நடந்த ஓர் ஆய்வில், அந்நாடுகளில் பெரும்பான்மையான மக்கள் மத நம்பிக்கையே இல்லாமல் வாழ்ந்து வருவது தெரிய வந்துள்ளது.
இதனால், அவற்றில் தற்போது இருக்கும் மதங்கள் விரைவில் காணாமல் போய்விடும் என்று அந்த ஆய்வு கூறுகிறது.
ஆஸ்திரேலியா, ஆஸ்திரியா, கனடா, செசன்ய குடியரசு, பின்லாந்து, அயர்லாந்து, நெதர்லாந்து, நியூசிலாந்து மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய ஒன்பது நாடுகளில் சமீபத்தில் ஓர் ஆய்வு நடத்தப்பட்டது.
இந்தநாடுகளில் கடந்த 100 ஆண்டுகளுக்குமேல் எடுக்கப்பட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டு, அங்குள்ள மக்களின் மத விவரங்கள் சேகரிக்கப்பட்டன. அதன்படி, இந்நாடுகளில் பெரும்பான்மையான மக்கள் மத நம்பிக்கை இல்லாமலேயே வாழந்து வருவது தெரிய வந்துள்ளது.
இப்படியே போனால் இன்னும் சில ஆண்டுகளில் அங்கு மதங்களே இல்லாமல் போய்விடும் என்று அந்த ஆய்வு எச்சரித்துள்ளது. அமெரிக்காவின் டல்லஸ் நகரில் நடந்த ஒரு கூட்டத்தில் இந்த ஆய்வின் முடிவு வெளியிடப்பட்டது. அதன்படி, மிகக் குறைந்தபட்சமாக நெதர்லாந்தில் 40 சதவிகிதம் பேரும், அதிகபட்சமாக செசன்ய குடியரசில் 60 சதவிகிதம் பேரும் மதநம்பிக்கை அற்றவர்களாக வாழ்ந்து வருகின்றனர்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த நிபுணர்கள் சிலர், இது ஒரு சாதாரண கணக்குதான். அதாவது, நாம் மேற்கொள்ளும் ஒரு காரியத்தால் ஏதாவது பயன் விளைந்தால் அக்காரியத்தையும் நாம் தொடர்ந்து செய்வோம்.
உதாரணமாக, ஸ்பானிய மொழி பேசுவதால் விளையும் பயன், பெரு நாட்டில் தற்போது வழக்கழிந்து வரும் கொச்சுவான் மொழியைப் பேசுவதால் விளையும் பயனைவிட மிக அதிகம்.
இதே கணக்கை மத நம்பிக்கையிலும் நீங்கள் வைத்துப் பார்க்கலாம் என்று தெரிவித்தனர்.
தினமலர், 27.3.2011, பக்கம் 12
Read more: http://viduthalai.in/page-7/85462.html#ixzz39r9wWjKT
இவர்களும் மூடர்கள்தானே!
வீரமாமுனிவர் எழுதிய பரமார்த்த குரு கதையில் ஒரு கதை வருகிறது. ஒரு குரு, அவருக்குத் துணையாக அய்ந்து சீடர்கள், ஒருநாள் குருவின் ஆடை கிழிந்து விட்டது.
குரு அந்த அய்ந்து சீடரையும் ஊசி ஒன்றினை வாங்கி வருமாறு அனுப்பினார். அய்ந்து சீடர்களும் ஊசி வாங்கச் சென்றனர். ஒரு கடையில் ஊசி ஒன்றினை வாங்கினர். ஆனால், எதிர்பார்த்தப்படி அவ்வளவு பெரிதாக இல்லை.
இவ்வளவு சிறிய பொருளை வாங்கவா அய்வரையும் அனுப்பினார் என்று அவர்களுக்குள் அய்யம். அதனால் ஒரு பனைமரம் ஒன்றினை வாங்கி அதன்மீது அந்த ஊசியை செருகி அய்வரும் தூக்கி வந்தனர்.
இக்கதை நம் ஊரில் நடக்கும் சம்பவம் ஒன்றினை நினைவூட்டுகிறது. நம் ஊரில் சாமி புறப்பாடு செய்வார்கள். அரை அடி அல்லது ஒரு அடி இருக்கும் அந்தச் சிலை. அந்த சிலையை ஒரு சிறுவன் கையில் பிடித்துக் கொண்டு ஊரைச் சுற்றி வரலாம். ஆனால் நடப்பது என்ன?
பல மரங்களை பாடைபோல் கட்டி அச்சிலையை அதன்மேல் வைத்து பத்து இருபது பேர் தூக்கிச் செல்வர். இதைப் பார்க்கும் போது பரமார்த்த குரு கதை சீடர்கள் ஊசி வாங்க வந்த கதை தான் ஞாபகத்துக்கு வருகிறது. அந்த மூடர்களுக்கும் இந்த மூடர்களுக்கும், என்ன வேறுபாடு?
தகவல்: கோ.இராமச்சந்திரன், அருந்தவபுரம்
Read more: http://viduthalai.in/page-7/85464.html#ixzz39rA3yqFb
அறிஞர்களின் அறிவுரைகள்
மனித சமுதாயம் தவிர மற்றபடி மிருகம், பட்சி, பூச்சி, ஜந்து முதலியவைகளில் வேறு எந்தப் பெண் ஜீவனாவது, ஆண்களுக்காகவே இருக்கிறோம் நாம் என்ற கருத் துடன் - நடையுடன் இருக்கிறதா என்று பாருங்கள். இது என்ன நியாயம்?
- தந்தை பெரியார்
இந்து மதத்தில் எனக்கு அறவே நம்பிக்கை இல்லை; ஏனெனில் அயோக்கியத்தனம் என்பது எனக் குப் பிடிக்கவே பிடிக்காது!
- டாக்டர் அம்பேத்கர்
பைபிள் ஒரு பெண்ணால் எழுதப்படவில்லையே! ஆதலால்தான் அதில் பெண்கள் அவமானம் அடைய வேண்டிய விஷயங்கள் நிரம்பிக் கிடக்கின்றன!
- இங்கர்சால்
மதம் என்பது பிறருக்கு உழைத்து வறுமைப்பட்ட மக்களை தலை எடுக்கவிடாமல் அழுத்தி வைக்க ஏற்பட்ட சாதனங்களில் முக்கியமான ஒன்றாகும்.
- லெனின்
உலகில் உள்ள ஒவ்வொரு குழந்தையும் நாத்திகவாதி யாகப் பிறக்கிறது. பிறருடைய போதனையினாலும் தயாரிப்பினாலுமே தெய்வ நம்பிக்கை ஏற்படுகிறது.
- சார்லஸ் பிராட்லா
ஒரு புழுவைக் கூட படைக்கச் சக்தியற்ற மனிதன் கணக்கில்லா கடவுளரைப் படைத்துக் கொண்டே இருக்கிறான்.
- மான்டெயின்
Read more: http://viduthalai.in/page-7/85464.html#ixzz39rABiYlr
இந்தியா - இந்த நிலையில்
எச்.அய்.வி. பதிப்பு
இந்தியாவில் 21 லட்சம் பேருக்கு, அதாவது பத்துப் பேர்களில் 4 பேர்களுக்கு எச்.அய்.வி. பாதிப்பு இருப்பதாக அய்.நா.வின் எச்.அய்.வி. மற்றும் எய்ட்ஸ் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. உலக அளவில் எச்.அய்.வி. பாதிப்பில் இந்தியா மூன்றாவது இடத்தில் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
உலகம் முழுவதிலும் 35 கோடிப் பேர்கள் எச்.அய்.வி. நோய்க்கு ஆளாகியிருப்பதாகவும், இவர்களில் 19 கோடிப் பேர்கள் தங்களுக்கு எச்.அய்.வி. பாதிப்பு உள்ளது என்று தெரியாமல் இருக்கின்றனர்.
2013ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி, எய்ட்ஸ் நோய்க்குக் காரணமான எச்.அய்.வி. கிருமி தொற்று உள்ளவர்களில் சப் சஹாரா ஆப்ரிக்கா முதலிடத்தில் உள்ளது. இங்கு 48 லட்சம் பேர்கள் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் 21 லட்சம் பேர்கள் எச்.அய்.வி. பாதிப்புடன் உள்ளனர். இங்கு ஏற்படும் மரணங்களில் 51 விழுக்காடு எய்ட்ஸ் நோயுடன் தொடர்புடையனவாக இருக்கின்றன. ஆனால் 36 விழுக்காட்டினர் மட்டுமே சிகிச்சை எடுத்துக் கொண்டுள்ளனர். மேலும், பாலியல் தொழிலாளர்கள் மூலமாக நோய் பரவுவது 10.3 விழுக்காட்டிலிருந்து 2.7 விழுக்காடாக குறைக்கப்பட்டுள்ளது. ஆனால், அசாம், பீகார் மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களில் அதிகரித்துள்ளது. எச்.அய்.வி. பாதிப்பை ஒழிக்கும் திட்டம் 2030ஆம் ஆண்டுக்குள் முடிவுக்கு வரும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது..
உங்களுக்குத் தெரியுமா?
1938-இல் முதலமைச்சர் ராஜகோபாலாச்சாரியார் பிறப்பித்த இந்தித் திணிப்பு உத்திரவை எதிர்த்து - தந்தை பெரியார் தலைமையில் போராட்டம் வெடித்தது; பட்டுக்கோட்டை அழகிரியைத் தளபதியாகக் கொண்டு திருச்சியிலிருந்து சென்னை நோக்கி வழிநடைப் பிரச்சாரப் படை 42 நாள்கள் நடந்தே வந்தது என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?
இந்தியா - இந்த நிலையில்
ஏழை நாடு
உலக நாடுகளில் உள்ள கடைக்கோடி ஏழைகளில் மூன்றில் ஒரு பங்கினர் இந்தியாவில் வசிப்பதாகவும், உலக அளவில் மரணமடையும் அய்ந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில் இந்தியக் குழந்தைகளே அதிகம் என்றும் அய்.நா. மில்லினியம் மேம்பாட்டு லட்சியங்கள் என்ற அமைப்பின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும் 60 விழுக்காடு இந்தியர்கள் திறந்தவெளியில் மலம் கழிப்பதாகவும், பேறுகால இறப்புகளில் 17 விழுக்காடு இந்தியாவில்தான் நிகழ்வதாகவும் கூறியுள்ளது, மேலும், தெற்காசிய நாடுகளில் மிகப்பெரியதும் அதிக மக்கள்தொகை கொண்டதுமான நாடு இந்தியா என்றாலும், பிற நாடுகளை ஒப்பிடும்போது பலவகைகளில் பின்தங்கி இருப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் குறித்த நாளில் வந்துவிடுகிறது சுதந்திர தினம்!
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பெரு நிகழ்வுகள் மட்டும்தான் கலையாகும் என்றில்லை. அன்றாடத்தின் அனுகணம்கூட கலைதான் என்று கவிஞர் உதயகுமார் இந்த நூலுக்கான தனது, வாழ்த்துரையில் குறிப்பிட்டிருந்தார். அது உண்மைதான் என்பதை, பால்ய வீதி நெடுகிலும் காண முடிகிறது.
பள்ளிப் பருவத்தின் நிகழ்வுகளை,
தபால்பெட்டி டவுசரோடு
பால்ய வீதிகளில் அலைந்திருக்கிறேன்
கேட்பார் யாருமின்றி!
இன்று சிமெண்ட் மூடிக் கிடக்கிறது...
எதிர்காலத்தில், தொல்பொருள்துறை
தோண்டிப் பார்த்தால், படிமங்களாய்
கிடைக்கக்கூடும் அத்துணை குதூகலங்களும்
- என்று கவிதையாக்கித் தரும்போது, நமக்குள் பெருமூச்சு எழுவதைத் தடுக்க முடியவில்லை, ரேடியோ பெட்டி _ என்ற கவிதையில், கால மாற்றத்தை வெகு நயத்தோடு வடித்துக் காட்டுகிறார்.
குழந்தைகளைப்பற்றி எழுதும்போது, குழந்தையாகவே மாறி அவர்களின் அருகமர்ந்து பார்த்ததுபோல எழுதியிருக்கிறார். ஓரிடத்தில்,
வானவில் வரையக் கற்றுக் கொடுத்தேன் குழந்தைக்கு!
வானவில் பார்த்து குதூகலிக்க கற்றுக் கொடுத்தது குழந்தை! _ என்ற கவிதையைப் படிக்கும்போது, அட! என்று புதிதாக ஒன்றைக் கற்றுக்கொள்வது போன்ற உணர்வு வருகிறது.
குழந்தையாக இருந்தவர் சட்டென்று சுதந்திர தினத்தை எள்ளல் தொனியோடு ஒரு தெறிப்பில் சுட்டிக் காட்டிவிடுகிறார். பாருங்கள் இந்தக் கவிதையை.
வயல்வெளிகள் வறண்டாலும் திறந்துவிடப்படாத காவிரித் தண்ணீரைப் போல் அல்லாமல் ஒவ்வொரு ஆண்டும் குறித்த நாளில் வந்துவிடுகிறது சுதந்திர தினம்!
நம் சிந்தையில் ஏதேதோ எண்ணங்களைத் தூண்டுகிறது. அறிவியல் மனப்பான்மையோடு வாழவேண்டும் என்பதை,
இருக்கையைக் கைப்பற்றும் அறிவிக்கப்படாத போரில், கண்டுகொள்ள யாருமில்லை; இருக்கையின்றித் தவிக்கும் பூமியை!
_ என்று எழுதி, பூமி மிதந்து கொண்டிருப்பதை உணராமல் வாழும் நம் நிலையைக் கேலிக்குள்ளாக்குகிறார். அதோடு, இருக்கைக்காக நடக்கும் போர் _ என்றும், அதுவும் அறிவிக்கப்படாத போர் என்றும் நயத்துக்கும் குறைவு வந்துவிடாமல் எழுதியிருப்பதை ரசிக்காமல் இருக்க முடியவில்லை.
சட்டென்று கவிஞர்,
முப்பத்து முக்கோடி தேவர்களில் ஒருவர்கூட வருவதில்லை; விவாகரத்துப் பிரச்சினையைத் தீர்த்துவைக்க!
_ என்று எழுதி, மூடநம்பிக்கைகளின் முதுகில் சாட்டையால் சுளிர் சுளீர் என்று விளாசுகிறார். உண்மை படும் பாட்டை பொய் என்ற கவிதையில்
செம்பு கலந்த பொன்னைப் போல, அத்தனை அழகாய் இருப்பதில்லை பொய் கலவாத உண்மை
- என்று உவமை அழகோடு சொல்லி, நம்மையும் அந்த ஆழமான உண்மையை (நடைமுறையை) எண்ணி வெட்கப்பட வைக்கிறார்.
மொத்தத்தில் கவிஞர் வத்திராயிருப்பு தெ.சு.கவுதமனின் பால்ய வீதி எனும் கவிதைத் தொகுப்பு, படித்து ருசித்து மற்றவர்க்கும் படைக்க வேண்டிய படையல்.
தனது மூன்றாவது கவிதைத் தொகுப்பின் மூலம் நம்மையும் கைப்பிடித்து அழைத்துச் செல்கிறார் பால்ய வீதிக்குள். -
- உடுமலை
கருணைக் கொலை வரவேற்கத்தக்கதே!
கடும் துன்பத்திலிருந்து விடுதலை பெற வைப்பது - மனிதநேயமே!
கருணைக் கொலை பற்றி மத்திய மாநில அரசுகள், பொதுமக்கள் கருத்துகளை அறிவது முக்கியம் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. இதற்கேற்ப இதுபற்றிய விவாதங்கள் தொலைக்காட்சிகளிலும் ஜனநாயகத்தின் 4ஆவது தூண் என்று அழைக்கப்படும் ஊடக உலகத்திலும் விவாதங்கள் நடைபெறத் தொடங்கியுள்ளன.
பலருக்குத் தாங்க முடியாத, இனி முழு நலம் பெறமுடியாத அளவுக்கு, நோய் முற்றி, தாங்கொணாத வலி, வேதனை, துன்பத்தைத் தொடர்ந்து தந்து கொண்டிருப்பதால், அதிலிருந்து விடுபட்டு, நிம்மதியான சாவைப் பெற்று, ஆறுதலோடு உலகிலிருந்து விடைபெற வேண்டும் என்று பல நோயாளிகள் கருதுகின்றனர்; விரும்புகின்றனர்.
மற்றொரு வகை உண்டு. திடீர்க் கோர விபத்துகள் மூலமாகவோ, அல்லது வேறு எப்படியோ, மூளைச் சாவு (Brain Death) ஏற்பட்ட காரணத்தால், இனி அவரது வாழ்வு திரும்பவே வாய்ப்பில்லை; அந்த நிலையில் தங்கள் பிள்ளைகளோ, உறவுகளோ வாழ முடியாத நிலைதான் யதார்த்தம் என்று ஆகிவிட்டபோது, அவர்களை வைத்துக் கொண்டு கண்ணீருடன் கூடிய வாழ்க்கையை நீட்டிக் கொண்டே போவதில் அர்த்தமில்லை. எனவே சட்டம் அனுமதித்தால் கருணைக் கொலையே செய்துவிடலாம்; அவர்தம் மற்ற உடல் உறுப்புகள் பிறருக்குப் பயன்பட்டு, அவர்களாவது நல்வாழ்வு, புதுவாழ்வு பெறுகிறார்கள் என்றால் அதைவிட மாந்தநேயம், வளர்ந்த செயல் வேறு எதுவும் இல்லை என்று கருதி, மகிழ்ச்சியோடு இத்தொண்டறம் தொடர்வது மிக நல்ல திருப்பணி அல்லவா?
மருத்துவமனைகளில் ஒவ்வொரு அறுவை சிகிச்சையின்போதும், உயிர் பறிக்கப்படுவதற்கு டாக்டர் பொறுப்பல்ல என்பதற்கு நோயாளியும், அவருடைய உற்ற உறவினரும் இசைவுக் கையொப்பம் இடுகின்ற முறை உள்ளதே!
பல ஆண்டுகளுக்குமுன்பு அமெரிக்காவில் கார் உற்பத்திக்குப் புகழ் பெற்ற நகரமான டெட்டிராய்ட் (Detroit) நகரில் வாழ்ந்த ஒரு டாக்டர் இந்தக் கருணைக் கொலையைச் செய்து, கொள்கை அளவில் பிரபலமாக்கிட தானே தண்டனையையும்கூட ஏற்கும் நிலை அடைந்தார்.
இந்தக் கருணைக் கொலைக்கு எதிராக வாதம் செய்வோர்; ஆண்டவன் கொடுத்த உயிரை மனிதன் எடுப்பதா? என்ற பழைய நம்பிக்கையை முன்வைத்தே கூறுகின்றனர்.
அப்படியானால், தற்கொலை செய்து கொள்ளுகின்றனரே பலர், அதைத் தடுக்க முடிகிறதா? திடீர் விபத்துகளில் மனித உயிர்கள் பலியாகின்றனவே, அதைத் தடுக்க முடிகின்றதா? ணிஸீநீஷீஸீமீக்ஷீகள் என்ற திடீர் தாக்குதல்களைத் தடுக்க முடிந்ததா?
ஆகவே அந்த வாதங்களை ஒருபுறம் ஒதுக்கி வைத்துவிட்டு, கருணை அடிப்படையில் (Compassionate Killing) என்பதை எவ்வளவு விரைவில் சட்டமாக்க முடியுமோ அவ்வளவு விரைவில் தாராளமாகச் செய்ய முன்வர வேண்டும்.
நம்மைப் போன்ற ஆத்மா மறுப்பாளர்களை விட்டுவிட்டு, ஆத்மா நம்பிக்கையாளர்களைப் பார்த்து ஒரு கேள்வி கேட்க நாம் விரும்புகிறோம்.
உடம்புதான் அழியும், ஆத்மா என்றும் அழிவதில்லை என்று கூறுகிறார்களே, அந்த வாதத்தை நீங்கள் உள்ளபடியே நம்பினால், கருணைக் கொலையை ஏன் ஏற்க மறுக்கிறீர்கள்? உங்கள் நம்பிக்கை, வாதப்படி ஆத்மாதான் அழிவதில்லையே; கருணைக் கொலையில் உடல்தானே அழிகிறது; பின் ஏன் கருணைக் கொலையை (மத நம்பிக்கை காரணமாக) ஏற்க மறுக்க வேண்டும் என்பதே பகுத்தறிவுவாதிகளின் கேள்வியாகும்.
மனிதநேயம் (Humanism) நமது இந்திய அரசமைப்புச் சட்டம் 51A பிரிவு (h) வற்புறுத்தும் அடிப்படைக் கடமையின் முக்கிய அம்சம் அல்லவா? கடும் துன்பத்திலிருந்து உடல் அளவிலும் மன அளவிலும் விடுதலை கிடைப்பதுகூட மனிதநேயம்தானே!
பின் ஏன் தயக்கம்? பின் ஏன் மயக்கம்? உடனே சட்டம் இயற்ற முன்வாருங்கள்!
கி.வீரமணி,
ஆசிரியர்
நாத்திக அறிவியலாளர்
சர் ரோஜர் பென்ரோஸ்
- நீட்சே
ஆங்கிலேயரான சர் ரோஜர் பென்ரோஸ் ஒரு கணித இயல்பியலாளரும், கணித இயலாளரும், அறிவியல் தத்துவ இயலாளரும் ஆவார். ஆகக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் கணித நிறுவனத்தில் கணித எமிரடஸ் ரவுஸ் பால் பேராசிரியராகவும், வாட்ஹாம் கல்லூரியின் எமிரிடஸ் ஃபெலோவாகவும் இருந்தவர் இவர்.
கணித இயற்பியலில் ஆற்றிய அரும் பணிக்காக நன்கு அறியப்பட்டவரான பென்ரோஸ் விண்வெளியியல் மற்றும் பொதுவான தொடர்புத் தத்துவத்திற்கு அளித்த பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாகும். பிரபஞ்சத்தைப் பற்றி நாம் அறிந்திருப்பது என்ன என்பதை ஆய்ந்து அறிந்து வெளிப்படுத்தியமைக்காக 1988 ஆம் ஆண்டு இயற்பியலுக்காக ஸ்டீஃபன் ஹாகிங் அவர்களுடன் பகிர்ந்து கொண்ட வுல்ஃப் பரிசைப் போன்று எண்ணற்ற பரிசுகளும் விருதுகளும் இவர் பெற்றுள்ளார்.
இங்கிலாந்து நாட்டின் எஸ்ஸக்ஸ் பகுதியில் கோல்செஸ்டர் என்ற ஊரில் 1931 ஆகஸ்ட் மாதம் 8 ஆம் தேதியன்று, லையனல் பென்ரோஸ் _ மார்கரட் லீத்ஸ் என்னும் இணையருக்கு ரோஜர் பென்ரோஸ் பிறந்தார். லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரி பள்ளியிலும், பின்னர் அதே கல்லூரியிலும் கல்வி பயின்ற ரோஜர் பென்ரோஸ் கணிதப் பாடத்தில் முதல் வகுப்பில் பட்டம் பெற்றார். மாணவராக இருந்தபோதே இவர் ஈ.எச். மூர்ஸ் அவர்களால் பொதுவாக விளக்கப்பட்ட மேட்ரிக் இன்வெர்ஸ் என்ற கணிதக் கோட்பாட்டை விளக்கமாக வெளியிட்டு அறிமுகப்படுத்தினார். ஆர்னி ஜெர்ஹேமர் என்பவரால் 1951 இல் மேலும் விளக்கம் அளிக்கப்பட்ட இக்கோட்பாடு பின்னாட்களில் மூர்-ரோஜர் இன்வெர்ஸ் கோட்பாடு என்றே குறிப்பிடப்பட்டு வருகிறது. கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் செயின்ட் ஜான் கல்லூரியில், அல்ஜீப்ரா ஜியோமெட்ரியில் டென்சார் நடைமுறைகள் என்ற ஆய்வுக் கட்டுரையை, அல்ஜீப்ரா மற்றும் ஜியோமெட்ரி பேராசிரியர் ஜான் ஏ. டாட் அவர்களின் வழிகாட்டுதலில் எழுதி தனது ஆய்வு முனைவர் பட்டத்தை 1958இல் பென்ரோஸ் பெற்றார். விண்வெளியில் உள்ள கரும்புள்ளிகள் போன்ற தனித்துவம் பெற்றவை இறந்து கொண்டிருக்கும் மாபெரும் நட்சத்திரங்களின் ஈர்ப்பு விசை அழிவிலிருந்து தோற்றம் பெற இயலும் என்பதை இவர் மெய்ப்பித்துக் காட்டினார். பென்ரோஸின் இந்த ஆய்வுப் பணி பென்ரோஸ்-ஹாகின்ஸ் தனித்தன்மைக் கோட்பாடுகளை மெய்ப்பிக்க பெரிதும் பயன்படுத்தப்பட்டது. பொதுத் தொடர்புக் கோட்பாடு பற்றி மிக ஆழ்ந்து ஆராய்ந்து இவர் செய்த பணி கரும்புள்ளிகளைப் பற்றி நாம் நன்றாக அறிந்து கொள்வதற்கு ஒரு முக்கியமான காரணியாக விளங்கியது. கணித இயற்பியலில் தொன்மையான கணிதச் சமன்பாடுகள் பற்றிய அழகு நிறைந்த, ஆக்கபூர்வமான அணுகுமுறையுடன் கூடிய வழியில் ட்விஸ்டர் கோட்பாட்டை இவர் மேம்படுத்தினார்.
இயற்பியல் விதிகளுக்கு ஒருங்கிணைந்த முறையில் வழிகாட்டும் நோக்கத்துடன் உண்மை நிலைக்கான பாதை: பிரபஞ்ச விதிகளுக்கான ஒரு முழுமையான வழிகாட்டி என்ற 1099 பக்க நூலை பென்ரோஸ் எழுதி 2004 இல் வெளியிட்டார். மிகைச் சிற்றளவு இயந்திரவியல் பற்றி இவர் ஒரு புதுமையான விளக்கத்தை அளித்துள்ளார். பெனிசில்வேனியா மாநில பல்கலைக்கழகத்திற்கு வருகை தரும் மதிப்பு மிகுந்த இயற்பியல் மற்றும் கணிதவியல் பேராசிரியராக விளங்கிய இவர் வானியல் மறுஆய்வு பத்திரிகை ஆசிரியர் குழுவின் உறுப்பினராகவும் இருந்தார்.
1959 இல் ஜோன் இசபெல் வெட்ஜ் என்ற அமெரிக்கப் பெண்மணியை மணந்ததன் மூலம் இவருக்கு மூன்று மகன்களும், அடுத்து அபிங்டன் பள்ளி கணிதத் துறைத் தலைவராக இருந்த வானசா தாமஸ் என்பவரை மணந்து கொண்டதன் மூலம் ஒரு மகனும் இவருக்கு உள்ளனர். எந்த மதத்திலும் நம்பிக்கை அற்றிருந்த பென்ரோஸ் தன்னை ஒரு நாத்திகவாதி என்றே கூறிக்கொண்டார். காலத்தைப் பற்றிய சுருக்கமான ஒரு வரலாறு என்ற படத்தில், இந்தப் பிரபஞ்சம் உருவானதற்கு ஒரு நோக்கம் இருக்கவேண்டும் என்றே நான் கருதுகிறேன். ஏதோ தற்செயலாக இந்தப் பிரபஞ்சம் உருவாகி நிலைத்திருக்கிறது என்று கூறமுடியாது. இந்தப் பிரபஞ்சம் தற்செயலாகத் தோன்றி நிலைத்திருப்பதாகவே சிலர் கருதுகின்றனர். ஆனால் அவ்வாறு கூறுவது பிரபஞ்சத்தைக் காணும் ஒரு பயன்நிறைந்த அல்லது உதவிநிறைந்த வழியாக இருக்க முடியாது என்றே நான் கருதுகிறேன் என்று பென்ரோஸ் கூறியிருக்கிறார். இங்கிலாந்து மனித நேய சங்கத்தின் மதிப்பு மிகுந்த ஆதரவாளராக பென்ரோஸ் இருக்கிறார்.
- தமிழில்: த.க.பாலகிருட்டிணன்
நாடார்களின் ஆலய நுழைவுப் போராட்டம்
சுமார் 75 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் நடைபெற்ற மிகப் பெரிய புரட்சி இது என்று தினத்தந்தி 8.7.2014 இதழில் திரு.வி.கே.ஸ்தாணுநாதன் அவர்கள் மதுரை வைத்தியநாத அய்யரைப் புகழ்ந்து தாழ்த்தப்பட்டவர்களை முதன்முறையாக கோவிலுக்கு அழைத்துச் சென்றார், என்று பதிவு செய்துள்ளார்.
அதற்குத் தக்க பதிலடியாக, ...உண்மை வரலாறு என்ன? என்று சுயமரியாதை இயக்கத்தின் கோவில் நுழைவுப் போராட்டங்களையும் அதை மழுங்கடிக்க ராஜாஜி _ வைத்தியநாதய்யர் கூட்டணி நடத்திய கபட நாடகத்தையும் எடுத்துக்காட்டி 12.7.2014 விடுதலை ஞாயிறு மலரில் மானமிகு கி.தளபதிராஜ் அவர்கள் கருத்துகளைத் தொகுத்துள்ளார்.
இச்செய்திகளை வெளியிடும் தினத்தந்தி போன்ற ஏடுகளுக்கு சுமார் 140 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற வரலாற்றை ஞாபகப்படுத்த வேண்டியது அவசியம்.
நாடார்களின் ஆலய நுழைவுப் போராட்ட நிகழ்ச்சிகள் வைத்தியநாத அய்யருக்குத் துணைபோகும் தமிழர்களைத் தோலுரித்துக் காட்டுவதாக அமையும்.
திருச்செந்தூர் கோவிலில் நாடார்கள் உள்ளே நுழைய முடியாது. வெளியில் இருந்துதான் தேங்காய் உடைத்து சாமி கும்பிட வேண்டும். 1872இல் இதை மீறி ஏழு நாடார்கள் உள்ளே நுழைந்தனர். கோவில் நிர்வாகம் இவர்கள் மீது வழக்குத் தொடுத்தது. டோபி, பார்பர் போன்ற இதர கீழ்ஜாதியினர் கொடிமரம் வரை செல்ல அனுமதியிருக்கும்போது நாடார்கள் உள்ளே நுழைந்ததால் கோவில் புனிதம் கெட்டுவிடாது எனக்கூறி விடுதலை செய்தது. இதனால் நாடார்கள் கொடிமரம் வரை செல்ல முடிந்தது.
1874இல் மூக்க நாடார் மதுரை--- கோவிலுக்குள் கிளி மண்டபம்வரை சென்றுவிட்டார். அடையாளம் கண்டுகொண்ட கோவில் பணியாளர்கள் அவரைக் கொன்றுவிட்டனர். நாடார்கள் பணியாட்கள் மீது வழக்குத் தொடுத்தனர். கோவிலுக்குள் நுழைய நாடார்களுக்கு உரிமையில்லை என நீதிபதி தீர்ப்பளித்து விட்டார்.
1876_78இல் சிறீவில்லிபுத்தூர் தாலுகா திருத்தங்கலில் கோவில் உள்ளே நுழைய நாடார்கள் போராட்டம் நடந்தது. மாவட்ட நீதிபதி தடை உத்தரவு பிறப்பித்து கோவிலைச் சுற்றியுள்ள தெருக்களில் ஊர்வலம் செல்ல அனுமதி அளித்தார்.
1885இல் கமுதி கோவிலுக்குள் நுழைய அனுமதி கேட்டனர். கோவில் நிர்வாகம் காணிக்கையை உயர்ஜாதியினர் மூலம் கொடுத்துவிடச் சொன்னது. நாடார்கள் மறுத்துவிட்டனர். கோவில் நிர்வாகம் அனைத்து ஜாதியினரையும் நாடார்களைப் பகிஷ்கரிக்க வைத்தது.
1890இல் திருச்சுழி கோவிலுக்குள்ளும், மதுரை கோவிலுக்குள்ளும் நாடார்கள் செல்ல முயன்றபோது அபராதம் விதிக்கப்பட்டது.
1897இல் இருளப்ப நாடார் தலைமையில் அய்ந்தாறு நாடார்கள் காவடி எடுத்துக்கொண்டு இரவில் கோவிலுக்குள் நுழைந்தனர். பூசாரி பூசை செய்ய மறுத்தார். அவர்களே தேங்காய் உடைத்து வழிபாடு நடத்தினர். கோவில் நிர்வாகம் வழக்குத் தொடுத்தது. கோவிலில் நுழைய நாடார்களுக்கு உரிமையில்லை. கோவிலைச் சுத்தம் செய்ய ரூ.500/_ நாடார்கள் தரவேண்டும் என கீழ்க்கோர்ட்டில் தீர்ப்பளிக்கப்பட்டது. உயர் நீதிமன்றத்திலும், இங்கிலாந்து பிரிவி கவுன்சிலும் இதையே உறுதி செய்தது.
1895இல் சிவகாசி கோவில் தர்மகர்த்தா தன் பதவியை ராஜினாமா செய்தார். அந்தப் பதவியை நாடார்கள் கேட்டனர். சிருங்கேரி சங்கராச்சாரியின் ஆணைப்படி மறுக்கப்பட்டது.
1896இல் கோவிலுக்குள் நுழைய முயன்றனர். கோவில் கதவுகள் மூடப்பட்டன. பூட்டை உடைத்து உள்ளே போய் தரிசனம் செய்தனர். மோதல்கள் நடந்தன. 1899இல் கலவரம் வெடித்தது. பல உயிர்கள், சொத்துகள் நாசமாயின.
இப்படிப் பல்வேறு சூழல்களால் 1910இல் நாடார் மகாஜன சங்கம் உருவாக்கப்பட்டது.
இப்படி நாடார் என்று ஆலய நுழைவு மறுக்கப்பட்ட காரணம், சனாதன கொள்கைப் படி பிராமணர்களில் பட்டர்கள் கர்ப்பக் கிரகத்துக்குள் போகலாம், இதர பிராமணர்கள் அர்த்த மண்டபம் வரை போகலாம். சூத்திரர்கள் மகா மண்டபம் வரையிலும், தீண்டத்தகாதாரும், நாடார்களும் வெளியில் நின்று கோபுரத்தை மட்டுமே ரசிக்க வேண்டும் என்ற இந்துமதத்தின் அடிப்படையே
தந்தை பெரியாரும் திராவிட இயக்கமும் இந்து மதத்தையும், சனாதனக் கொள்கையையும் அழிக்க வேண்டும் என்று போராடியதன் நியாயத்தை உணருவார்களா?
- சிவ.பாலசுப்ரமணியன்,
கண்ணந்தங்குடி மேலையூர்.-
மத்திய அரசின் தேர்வாணைய வினாத்தாளில் பெண்களை அவமதிக்கும் வினாக்கள்
பின்வரும் நடிகையரில் யார் அதிக உயரமானவர்?
(அ) ஹூமா குரேஷி, (ஆ) கத்ரினா கைஃப், (இ) தீபிகா படுகோனே (ஈ) ப்ரீதி ஜிந்தா
இந்தக் கேள்வி ஏதோ ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியின் இறுதியில் கேட்கப்பட்டு எஸ்.எம்.எஸ்.சில் பதில் சொல்லப்படும் போட்டிக் கேள்வி அல்ல.
புது தில்லியில் உள்ள மத்திய தேர்வாணையம் நடத்திய மத்திய பணியாளர் தேர்வுக்கான வினாத்தாளில் இடம் பெற்றுள்ள வினாக்களுள் ஒன்று தான் மேலேயுள்ளது.
அது மட்டுமல்ல, பெண்களை பாலியல் ரீதியாக இழிவுபடுத்துவதுபோல், தரக்குறைவாக பெண்கள் அனைவரும் பூனைகள், பூனைகள் அனைத்தும் எலிகள் என்கிற தலைப்பில் வினாவும் இடம் பெற்றது.
பெண்களை இழிவுபடுத்தும்விதமாக பாலியல் வேறுபாடுகளுடன் வினாக்களைக் கேட்பதா என்று தேர்வாணையத்திடம் விளக்கம் கேட்டு கேரள மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அதற்கு மத்திய தேர்வாணையத்தின் தலைவராக உள்ள ஏ.பட்டாச்சார்யா மன்னிப்புக் கேட்டுள்ளார். இது முறையில்லாதது, சகித்துக் கொள்ள முடியாதது, தரக்குறைவானது என்று கூறியதுடன் இந்தத் தகவலால் மிகவும் நிலைகுலைந்துபோய் உள்ளதாகவும் கூறியுள்ளார்.
மேலும், மகளிர் ஆணையத்தின் வேண்டுகோளுக்கிணங்க தேர்வாணையம் அந்த இரு வினாக்களையும் நீக்கிவிடுவதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இனி மத்திய அரசுப் பணிகளுக்குத் தேர்வு எழுதுவோர் இன்ச் டேப்புடன் அலைய வேண்டுமோ என்னவோ? அப்புறம் இடுப்பளவு பற்றி கேள்வி கேட்டுவிட்டால் என்ன செய்வது?
ஒரு யோசனை
சென்ற மே மாதம் 25 ஆம் தேதியின் மாலை 6 மலர் 4 இதழில் ஒரு யோசனை என்னும் தலைப்பின் கீழ் குடி அரசு பத்திரிகையை எட்டு பக்கங்கள் குறைத்து சந்தாத் தொகை வருஷத்துக்கு மூன்று ரூபாயாக யிருப்பதை இரண்டு ரூபாயாக ஆக்கலாம் என்று கருதியிருப்பதை வெளிப்படுத்தி வாசகர்களின் அபிப்பிராயத்தையறிய ஆசைப்பட்டிருப்பதை வெளியிட்டிருந்தோம்.
அவற்றிற்கு வந்த பல அபிப்பிராயங் களில் சுமார் பத்து பேர்களேதான் அதற்கு சம்மதம் கொடுத்திருக் கிறார்கள். சுமார் 300க்கு மேற்பட்ட வாசகர்கள் பக்கங்களை எவ்வித காரணங் கொண்டும் குறைக்கக் கூடாதென்றும், சந்தா மூன்று ரூபாயாக இருப்பதைப்பற்றி கவலை இல்லையென்றும் தெரிவித்து வேறு சில யோசனைகளும் சொல்லி இருக்கிறார்கள். நிற்க, மலாய் நாட்டுச் சந்தாதாரர்கள், கண்டிப்பாகப் பக்கங்களை குறைக்கக் கூடாது என்றும் சௌகரியப் பட்டால் அதிகப்படுத்தும் படியும் தெரிவித்திருக்கிறார்கள்.
ஆகவே வாசகர்களின் பெரும்பான் மையோர்களுடைய அபிப்ராயம் மாறுபாடாயிருப்பதால் இது சமயம் அதாவது தற்காலம் குடிஅரசு பத்திரிக்கையில் பக்கங் களையாவது சந்தாவையாவது மாற்றுவது என்கின்ற விஷயத்தை நிறுத்தி வைத்திருக்கிறோமென்பதைத் தெரியப்படுத்திக் கொள்ளுகிறோம்.
- குடிஅரசு - துணைத்தலையங்கம் - 06.07.1930
Read more: http://viduthalai.in/home/viduthalai/history-/85537-2014-08-09-11-29-23.html#ixzz39wr8rXaR
விக்ரஹம்
ஏடு நடத்தும் பார்ப் பனர்கள் ஒன்றை மறக் காமல் செய்வார்கள். அது வேறு ஒன்றும் இல்லை. அவர்களின் லோகக் குருவான சங்கராச்சாரியார் படத்தைப் போடுவார்கள். அவாளின் அருள்வாக்கு களை வெளியிடுவார்கள்.
அதுபோல்தான் கல்கி (10.8.2014) மறைந்த காஞ்சி சங்கராச்சாரியார் சந்திர சேகரேந்திர சரஸ்வதியா ரின் அருள்வாக்கு ஒன்றை வெளியிட்டு மகிழ்ந்துள்ளது.
அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகியோர் பாடிய தேவார ஓலைச் சுவடி களை தில்லை நடராஜன் கோயிலில் ஓர் அறையில் போட்டுப் பூட்டி வைத்து விட்டனர் தீட்சிதர்கள்.
சிதம்பரம் சிற்றம் பலத்திலே ஓதுவார் ஆறு முகசாமி திருவாசகப் பாடல்களைப் பாடியபொ ழுது இப்பொழுதுதான் தில்லை தீட்சிதர்கள் தடுத் தனர், அடித்தனர் என்று கருதிட வேண்டாம்! அந்தக் காலத்திலேயே அவை தமிழில் உள்ளன என்ற துவேஷப் புயலால் அவற்றை வெளியிலேயே விடக் கூடாது என்ற கெட்ட எண்ணத்தால் அவற்றை ஓர் அறையில் போட்டுப் பூட்டினர் என் பதை நினைவில் கொள்ள வேண்டும்.
அந்த ஓலைச் சுவடி களை தீட்சிதர்களிடமி ருந்து மீட்க ராஜராஜ சோழன் நம்பியாண்டார் நம்பியுடன் தில்லை நட ராஜன் கோயிலுக்குச் செல்கிறான்.
தில்லை வாழ் கோயில் தீட்சதர்களோ மன்ன வனே வந்து விட்டான்; மரியாதையாக தேவார ஓலைச் சுவடிகளை கொடுத்து விட வேண்டி யதுதான் என்று நினைக்க வில்லை; மாறாக தேவாரம் பண்ணிய அந்த சாட்சாத் மூவரும் நேரில் வந்து கேட் கட்டும்; அப்பொழுதுதான் தருவோம் என்று ஆணவ மாகச் சொற்களை வாரி இறைத்தனர்.
இராஜராஜன் என்ன செய்தான்? அப்பர், சம் பந்தர், சுந்தரர் உருவப் பொம்மைகளை (விக்ர ஹங்களை) கொண்டு வந்து காட்டி, அந்த ஓலைச் சுவடிகளைத் தருமாறு வேண்டினான்; அப்பொ ழுதும் தீட்சிதர்கள் அசைந்து கொடுக்கவில்லை. இவை சிலைகள்தானே? இதனை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? என்று வினவிய நேரத்தில் ராஜராஜன் அப்படியானால் நடராஜப் பெருமானும் சிலையல் லவோ? என்ற வினாவைத் திருப்பிப் போட்டான்.
அதற்கு மேலும் தடை செய்தால்.. வந்தவன் ராஜா ராஜன் ஆயிற்றே! கெஞ்சி னால் மிஞ்சுவதும், மிஞ் சினால் கெஞ்சுவதும்தான் பார்ப்பனர்களின் நிலை! நிலைமையைப் புரிந்து கொண்டு அந்த ஓலைச் சுவடிகள் குவிந்து கிடந்த அறையைத் திறந்தனர். கரையான் புற்று மூடிக் கிடந்தது. பெரும்பாலா னவை அழிந்தும் போய் விட்டன!
சங்கராச்சாரியார் இது பற்றி என்ன சொல்கிறார்? கல்கி கூறுகிறது: ராஜராஜன் கொண்டு வந்தது விக்ர ஹம்தான் என்றாலும் ப்ராண பிரதிஷ்டை ஆன படியால் அது ப்ராண னுள்ள மூர்த்திகளே என்ப தால் தேவாரத்தை தீட்சி தர்களிடமிருந்து மீட்க முடிந்தது என்று கதை விடுகிறார். எப்படி இருக்கிறது? தீட்சிதர்களைக் காப்பாற்ற வேண்டும் அல்லவா!
- மயிலாடன்
Read more: http://viduthalai.in/e-paper/85616.html#ixzz39zpZdwCw
இந்த நாள் (10.8.1942) முரசொலிக்கு வயது 72
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் கலைஞர் அவர்களால் 10.8.1942 இல் தொடங்கப் பெற்ற முரசொலி இதழுக்கு இன்றுடன் 71 வயது நிறைவடைந்து 72 ஆவது வயது தொடங்குகின்றது.
முரசொலி இதழ் திருவாரூரில் நடைபெற்று வந்த தமிழ் மாணவர் மன்றத்தின் சார்பில் சேரன் என்ற புனைப்பெயர் கொண்ட நமது கலைஞர் அவர்களால் தொடங்கப்பெற்று இலவசமாக வழங்கப்பெற்று வந்துள்ளது. (குடிஅரசு -_ 6.5.1944 பக்கம் 2)
முரசொலி ஒலிக்குது பாரீர்! என்ற வாசகத்துடன் அறிவியக்கக் கொள்கைகளை அறிவுறுத்துவது ஆரியத்தை அலறவைப்பது, வைதீகத்தை வாட்டுவது, பண்டிதர்களைப் பதறவைப்பது என்ற கொள்கைகளைக் கொண்டு தொடங்கி 71 ஆண்டுகளைக் கடந்து வந்துள்ளது என்பதை அறியும் பொழுது உவகை மேலிடுகிறது. இடையில் எத்தனை சோதனைகள், வேதனைகளைக் கடந்து வந்துள்ளது.
இதழினை ஆதரிக்க வேண்டிய வேண்டுகோளுடன் இளம் எழுத்தா ளர்களின் வெளியீடுகள் ஆரியருக்கு நல்ல டார்ப்பிடோக்கள் ஆதரிக்க வேண்டுவது திராவிடர்களின் கடமையாகும் என்று அன்றே அறிவித்தது.
முரசொலி என்ற சுயமரியாதைக் கொள்கைகள் அடங்கிய துண்டுப்பிரசுரத்தை மாதமொருமுறை வெளியிடுவதெனத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. பெரியாரின் கொள்கைகளை சுயமரியாதை இயக்கத்துடன் இணைந்து பரப்பி வந்துள்ளது.
கலைஞர் அவர்கள் எப்பொழுதும் மூத்த பிள்ளையாக முரசொலியைத் தான் முதலில் கூறுவார் என்பது நாம் அறிந்த உண்மை. எனவே, முரசொலியின் முகப்பு வாசகமான வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும் என்று அன்றே தமிழ் மாணவராக இருந்து இன்றும் தமிழர்களின் ஒப்பற்ற தலைவராக விளங்கும் கலைஞர் அவர்களுக்கும் தலைவரின் மூத்த பிள்ளையான முரசொலிக்கும் வாழ்த்துகளை வழங்கி மகிழ்கிறோம்.
Read more: http://viduthalai.in/page-2/85589.html#ixzz39zqQLxQR
பெர்னாட்சா
ஜார்ஜ் பெர்னாட்சா தந்தை பெரியார் போலவே 94 ஆண்டுகள் வாழ்ந்து மறைந்தவர் (1856-1950) மிகச் சிறந்த இலக்கியப் படைப்பாளர். ஆங்கிலத்தில் அவர் எழுதிய நாடகங்கள் காலங்கடந்து நிற்கக் கூடியவை. இலக்கியத் தொண்டுக்காக நோபல் பரிசு அளிக்கப்பட்டது (1925). நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவர் - பள்ளிப் படிப்பில் ஆர்வம் இல்லை - ஆனாலும், நூல்களைப் படிப்பதில் கட்டுக் கடங்கா ஆர்வம் கொண்டவர்.
பல எழுத்தாளர்களுக்கு ஏற்பட்ட அனுபவம் போலவே தொடக்கத்தில் அவர் எழுதிய எழுத்துகள் ஈர்க்கப்படவில்லை. விடா முயற்சியால் வெற்றி பெற்றார். ஆங்கில இலக்கியத்தில் நாடகப் பஞ்சம் என்ற விமர்சனத்தை வீழ்த்தும் வகையில் அரிய சாதனைகளைப் படைத்தவர் ஆவார். 50-க்கும் மேற் பட்ட நாடகங்களை எழுதினார்.
புராண மய்ய கருத்துகளைத் தூக்கி யெறிந்து சமூக மாற் றத்துக்கான கருத்து களை, சமூகச் சிக்கல்களை மய்யப் படுத்தி நாடகங்களைத் தீட்டினார். கருத்தும், வசீகர நடையும் காந்தமாக மக்களை ஈர்த்தது. இசை, நாடகங்களைத் திற னாய்வு செய்வதில் விற்பன்னர் என்ற பெய ரெல்லாம் இவருக்கு வந்து சேர்ந்தது. நல்ல பேச்சாளராக மிளிர வேண்டும் என்ற ஆசை அவருக்கு உண்டு. ஆனாலும், சபைக் கோழைத்தனம் என்பது அவரைப் பிடித்து உலுக்கியது. தானாகப் பேசிக் கொண்டு போக ஆரம்பித்தார். அதன்பின் கூட்டம் உள்ள இடத்தில் உரக்கப் பேச ஆரம்பித்தார். அதன் விளைவு தலைசிறந்த ஆங்கிலப் பேச்சாளர் என்ற புகழின் உச்சியில் பளபளப்பாகப் பறந்தார்.
மிகுந்த நகைச்சுவை உணர்வைக் கொண்டவர். பேச்சிலும், எழுத்திலும் அவை போட்டி போடும். கிறித்துவக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தாலும், கார்ல் மார்க்சின் தத்துவம் இவரைக் கவர்ந்தது. அமைதி வழியில் சோசலிசக் கொள்கை களைப் பரப்புவதற்காக நிறுவப்பட்டிருந்த ஃபேபியன் கழகத்தில் (திணீதீவீணீஸீ ஷிஷீநீவீமீஹ்) சேர்ந்தார். பெர்னாட்சாவைப்பற்றி ஏராள மான துணுக்குகளும், தகவல்களும் உலகம் பூராவும் பரவியுள்ளன. பத்திரிகை யாளர் ஒருவர் உலகில் மிகச் சிறந்த அறிவாளி யார்? என்று ஷாவைக் கேட் டார். இரண்டாவது இடத்தில் ஸ்டாலின், மூன்றாவது இடத்தில் அய்ன்ஸ்டீன், முதல் இடத்தில் உள்ளவரின் பெயரைச் சொன் னால் என்னைத் தற்பெருமைக்காரன் என்று சொல்லிவிடுவீர்கள் என்றாராம்.
அழகு கொழிக்கும் பெண் ஒருவர் ஷாவைச் சந்தித்து, நான் உங்களைத் திருமணம் செய்துகொள்ள விரும்புகிறேன். நம்மிருவருக்கும் திருமணம் நடந்தால், என்னைப் போன்ற அழகும், உங்களைப் போன்ற அறிவும் கொண்ட குழந்தை பிறக்கும் அல்லவா?
என்றார் அந்தப் பெண்மணி. நீ சொல்வது சரியென் றாலும், என்னைப் போன்ற அழகும், உன்னைப் போன்ற அறிவும் கொண்ட குழந்தை பிறந்தால் என்னாவது? என்றாராம். பெர்னாட்ஷா எழுதி வைத்த உயில் புகழ் பெற்றது. சொத்தின் சரி பகுதியை அவரது நூலகத்திற்கு எழுதி வைத்தார்.
Read more: http://viduthalai.in/page2/85561.html#ixzz39zrCxG4o
செக்யூலரிஸம் என்றால் என்ன?
செக்யூலர் செக்யூலரிஸம் என்ற சொற்கள். இந்தியா சுயாட்சி என்பது அடைந்தது முதல் அதிகமாக அடிபட்டு வருகின்றன. இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திலும் இவை இடம் பெற் றுள்ளன.
இந்த செக்யூலர் செக்யூலர் கவர்ன் மெண்ட் என்பதற்கு ஆளும் குழுவினர் கூறும்பொருள், சமய சந்தர்ப்பத்துக் கேற்றபடி மாறுபடுகிறது.
மதமற்ற அரசாங்கம் என்று அடி நாளிலும்; பின்னர் மதச்சார்பற்ற அரசாங்கம் என்றும் கருத்து விளக்கம் தெரிவிக்கப்பட்டது.
குழப்பம்
ஆனால், அண்மையிலோ ஆட்சி பீடாதிபதிகள் மத விழாக்களிலும், கும்ப மேளாக்களிலும் கலந்துகொண்டதனை பொது மக்கள் உலகம் குற்றம் கூறவே, செக்யூலர் என்றால் மதங்கள் மீது வெறுப்புக் கொண்டு ஒதுக்கித் தள்ளுவ தல்ல- _ எல்லா மதங்கள் பாலும் சமரச நோக்குடன் நடந்து கொள்வதேயாகும் என்று பச்சோந்தி விரிவுரை கூறப் பட்டது. இது செக்யூலரிஸம் என்பதை குழப்பமாக்கி விட்டதுடன் -_ அதன் நற்பயனில் சந்தேகம் கொள்ளவும் செய்து விட்டது.
செக்யூலரிஸம் என்றால் ஆங்கில அகராதியில் தரப்பட்டுள்ள பொருள் -_ இந்த உலகானது -_ மறுவுலக சம்பந்தமில்லாதது என்பது. இதனை ஆரிய வடமொழியில் லோகாயிதம் என்கின்றனர். தமிழ் அகராதியிலும் இதே சொல் தரப்பட்டுள்ளது. இது பொருத்தமல்ல. ஏனெனில் இந்த லோகாயிதத்தின் தொடர்ச்சியாக பர மார்த்திகம் என்பதையும் பிணைத்துள் ளனர். அதாவது லோகாயித் வாழ்க்கையை அடுத்து பரமார்த்திகத்தை அடைய வேண்டுமென்றும் கருத்து விளக்கம் செய்து, லோகாயிதம் என்ப தன் உண்மைக் கருத்தையும் நோக்கத் தையும் பாழாக்கி விட்டனர். இந்தச் சொல்லுடன் மத இயலையும் கடவுளி யலையும் பிணைத்து விட்டனர்.
உண்மை விளக்கம்
செக்யூலரிஸம் என்பதன் உண்மை விளக்கப் பொருள் என்ன? இதன் மொழித்துறை வரலாறு என்ன? என்று அறிவியல்வாதிகளும் பகுத்தறிவுவாதி களும் ஆராய்ந்து பார்க்க வேண்டியுள் ளது. பகுத்தறிவியல் என்பது அறிவைப் பயன்படுத்தி மெய்யை உணர்தல். இவ்விதம் பகுத்தறிவு கொண்டு அறிந்த மெய்மைகளை நடைமுறையில் நடத்திக் காட்டுவதே செக்யூலரிஸம் ஆகும்.
இந்த செக்யூலரிஸம் என்ற ஆங்கிலச் சொல்லை முதன் முதல் கையாண்டவர் பகுத்தறிவு மேதை ராபர்ட் இங்கர்சால் அவர்களின் அறிவியல் தோழர்களில் ஒருவரான ஜார்ஜ் ஜாகப்ஹோலியோக் என்பவர். இவரும் குழந்தை வயதில் மதத் துறையில் வளர்க்கப்பட்டவர். அறிவு விரிவடைந்ததும் இந்த மதப் புரட்டு களையும் மதமடமைக் கொள்கைகளை யும் எதிர்த்துப் புரட்சிக் கொடி தூக்கி னார். நாத்திகர் என்ற குற்றத்துக்காக 1841_42ஆம் ஆண்டு வாக்கில் இங்கி லாந்தில் சிறை வாசமும் செய்தவர்.
நடைமுறையில் பரப்பியவர்
தோழர் ஜார்ஜ்ஜாகப் ஹோலி யோக்தான் முதன் முதல் தமக்கும் தம் கோட்பாட்டினருக்கும் செக்யூலரிஸம் என்ற தனி இடு குறிப்பெயர் இட்டுக் கொண்டார். இந்தப் பகுத்தறிவு நடைமுறை இயல் கழகங்களும் லண் டனில் பல இடங்களில் தோற்றுவித்து நடத்தினார். பகுத்தறிவு இயல் பத் திரிகைகள் பலநடத்தினார். பகுத்தறிவு பத்திரிகையாளர் கழகமும் ஏற்படுத் தினார். இதற்கு முதல் தலைவரும் இவரே.
பிரிட்டிஷ் செக்யூலர் யூனியன் என்ற பேரவைத் தலைவராகவும் இவர் பல்லாண்டுகளிருந்து பணியாற்றி, கோட்பாட்டையும், கழகத்தையும் பரப்பி, வலுப்படுத்தினார்.
இந்த செக்யூலரிஸம் என்ற சொல்லுக்கு இவர்தந்த விளக்கப் பொருள் இந்த உலக வாழ்க்கை சம் பந்தமான கடமை வழிக் கோட்பாடு அமைப்பு என்பதாகும்.
இங்கர்சால் விளக்கம்
மேதை இங்கர்சால் இந்தச் சொல்லுக்குத் தந்துள்ள விளக்கப் பொருள் இந்த உலக விஷயங்களில் மனிதப் பண்பாட்டுடன் மனித அனு தாபத்துடன் நடந்து கொள்ளும் நெறி; அறியும் உணர்ச்சி கொண்டவர்களின் நலனுக்கான ஒவ்வொரு விஷயத்திலும் நடப்பிலும் கருத்துச் செலுத்துவது; அனுபவ உலக ஆய்வு அறிவு என்பதற்கு மறுபெயரும் இதுவாகும். அதாவது அவரவர்கள் புரிந்து கொண்ட முறையிலும் விருப்ப வாய்ப்புகளுக்கு ஏற்ற வகையிலும் வாழ்க்கைத் துறையை செப்பனிட்டு அமைத்துக் கொள்ளச் செய்வது இது. இங்கு இந்த உலகில் அவரவர்களுக்கான நல் வீட்டை அமைத்துக் கொள்வதில் நம்பிக்கை கொள்ளச் செய்வது இந்த செக்யூ லரிஸம்
ஒவ்வொருவர் தனி முயற்சி ஊக்கம், அறிவு, ஆற்றல், ஆராய்ச்சி அனுபவம் ஆகியவற்றில் நம்பிக்கை கொள்ளச் செய்வது.
நாமறியாததும் அமானுஷியமானது மான ஏதோ ஒன்றில் (கடவுள்) நம் பிக்கை கொள்வதைத் தவிர்ப்பது இது. இந்த வாழ்க்கையில், இந்த உலகில் மகிழ்ச்சியுடன் நல்வாழ்வு அனைவரும் வாழ வேண்டுமென்பதே இதன் குறிக்கோள் என்பதாகும். இந்த பகுத்தறிவியக்க செக்யூலரிச மேதைகளின் விளக்கத்திலிருந்து இந்த செக்யூலர் -_ செக்யூலரிஸம் என்பன மத இயல், கடவுளியல் மறுப்புக் கோட்பாடு _- மதம் கடவுள் என்பதனை ஒழித்துக் கட்டுவது என்பது தெளிவுபடுகிறது.
Read more: http://viduthalai.in/page3/85563.html#ixzz39zrPHtqA
வாஷிங்டன் வட்டார முன்னாள் தமிழ்ச் சங்க தலைவர் எம்.எம். இராஜ் பேட்டி
வாஷிங்டன் வட்டார தமிழ்ச் சங்கத்தின் முன்னாள் தலைவரும், வாஷிங்டனில் வெளிவந்த முதல் தமிழ் மாத இதழான குமரி இதழின் நிர் வாக இயக்குநருமாகிய எம்.எம். இராஜ் அவர்கள் விடுதலை இதழுக்கு அளித்த நேர்காணல்:
சமீபத்தில் நடந்த வேட்டிப் பிரச்சினையில் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் வேட்டிக்கு ஆதரவாகக் குரல் கொடுத்திருப்பது மிகவும் வரவேற்கத்தக்கது. அதுபோல இந்துக் கோவில்களில் ஆண்கள் சட்டை அணிந்து செல்லக் கூடாது என்ற பழக்கம் இருந்து வருகிறது. இது மிகவும் கண்டிக்கத்தக்கது. சட்டை அணிய கோவில் நிர்வாகிகள் அனுமதிக்க வேண்டும். அதற்காக அனைத்து அரசியல் கட்சிகளும் குரல் கொடுக்க வேண்டும்.
அதுபோல் கோவில்களில் தமிழ் இன்னும் நுழைய வில்லை. சமஸ்கிருதம்தான் உள்ளது. அனைத்து கோவில் களிலும் தமிழில் வழிபடும் உரிமை வேண்டும். கோவில் வியாபார இடமாக மாறி விட்டது. பூஜை பொருட்கள், மலர் மாலைகள்கூட அதிக விலைக்கு ஏழை மக்களிடம் விற்பனை செய்வது கண்டிக்கத்தக்கது.
திருவனந்தபுரம் பத்மனாப சாமி கோவிலில் இருக்கும் நகைகள் குமரி மாவட்ட மக்களுடை யது. அன்றைய திருவிதாங்கூர் அரசு இளை ஞர்கள் மீசை வைத்தால் அதற்கு வரி, இது போன்று பல வரிகள் போட்டும் தற்போதைய குமரி மாவட்ட மக்களின் உழைப்பு, பொருள் அனைத்தும் பத்மனாபசாமி கோவிலில் நகையாக உள்ளது. அங்கு இருக்கும் நகைகளில் சரிபாதி நகைகளை தமிழக அரசுக்கு கோவில் நிர்வாகம் வழங்க வேண்டும். தமிழக அரசு அந்தத் தொகையினை முழுக்க முழுக்க குமரி மாவட்ட மக்களின் வளர்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும். பத்மனாபபுரத்தில் இருக்கும் அரண்மனை தற்போது கேரள அரசிடம் உள்ளது. இதனை மீட்டு அந்த அரண் மனையை தமிழக அரசின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர வேண்டும் என்று அவர் கூறினார்.
நேர்காணல்: கோ. வெற்றிவேந்தன், மாவட்ட செய்தியாளர்
Read more: http://viduthalai.in/page4/85565.html#ixzz39zs785kJ
திதி கூறும் மந்திரம் என்ன?
மந்திரம்: யன்மே மாதா பிரலுலோப சரதி அனனு விருதா, தன்மே ரேதஹ பிதா விருங்க்தா ஆபுரண் யோப பத்யதாம் ரங்கராஜ சர்மணே ஸ்வாஹா. ரங்கராஜ சர்மணே அஸ்மது பித்ரே இதம் நமம.
பொருள்: எனது தாய் பதிவிரதா தர்மங்களை முழு வதுமாக அனுஷ்டிக்காமல், அதன் காரணமாக நான் பிறந்திருந்தால், இந்த அக்னி யில் நானிடும் ஹவி ஸூக்கு உரிமை கோரி எனது சொந்த தகப்பனார் வருவார். அப்படி அவர் இந்த ஹவிஸைப் பெறாமல் தடுத்து, நான் எந்தத் தகப்பனாருக்கு இந்தச் சிரார்த்தத்தைச் செய்கிறேனோ அவர் அதாவது எனது தாயின் கணவர் இந்த ஹவிசைப் பெற வேண்டும்
(ஆதாரம்: சுவாமி சிவானந்தா சரசுவதியின் ஞான சூரியன்)
தன் தாயைச் சந்தே, கித்து, விபச்சாரி என்று கூறி பார்ப்பான் சொல்லும் மந்திரம் தான் திதி, ஒழுக்கக் கேடும் விபச்சாரமும் தானே பார்ப்பனீயம்!
Read more: http://viduthalai.in/page5/85567.html#ixzz39zsrEJ87
புதிய உயிரினங்கள் கண்டுபிடிப்பு
உலகம் முழுவதும் 18 ஆயிரம் புதிய உயிரினங்களை, விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அவற்றில், பூனையை போன்ற கரடியும், தரைக்கு கீழ், 3,000 அடிக்கு கீழ் இருக்கும் கண்ணில்லாத நத்தையும் அடங்கும். இதுகுறித்து, நேஷனல் மியூசியம் ஆப் நேச்சுரல் சயின்ஸ் என்ற அமெரிக்க நிறுவனத்தின் உயிரியல் விஞ்ஞானி, அண்டோனியோ வால்டேகேசஸ் தலைமையிலான விஞ்ஞானிகள் குழுவினர் கூறியதாவது: உலகில் 20 லட்சம் உயிரினங்கள் இருப் பதாகவும், இவற்றில் தற்போது 18 ஆயிரம் உயிரினங்கள் கண்டறியப் பட்டுள்ளன. இன்னும் 1 கோடி உயிரி னங்கள் கண்டுபிடிக்க வேண்டியுள் ளது. அவற்றில் பல அழிவின் விளம் பில் உள்ளன. இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
Read more: http://viduthalai.in/page6/85570.html#ixzz39ztDruUb
பெரியாரைப் பின்பற்று
விஞ்ஞான அறிவுக்கு முதன்மை கொடு
அஞ்ஞானக் குப்பையை விடு!
குழந்தைக்கு தமிழில் பெயரிடு
பகுத்தறிவைப் பாலோடு ஊட்டிடு!
நெருப் பாய் இரு
அதுவே உனக்கு திரு!
ஆரியம் வீழும் வரை
வீரியம் இழக்காதே!
கள்வன்கண்ணுக்கு கடவுள் உண்டியல் கற்கண்டு
காலத்தே திருந்து இதைக் கண்டு!
நூலைப் படி
அறிவின் வழிநூலைப் படி!
மானுடம் உயர்ந்திட பாடுபடு
மடமையை ஆழ் குழியிலிடு!
பெரியாரைப் பின்பற்று
அதுவே நம் வாழ்வின் பற்று!
- இரா. முல்லைக் கோ
பெங்களூர் - 43
Read more: http://viduthalai.in/page7/85572.html#ixzz39ztQqVEa
இன்றைய ஆன்மிகம்?
அம்மை
ஆடி வந்து விட்டாலே ஆன்மீக விதிகளைச் சொல்லிக் கொண்டு பெண்கள் அதிக அளவில் ஆலயங்களிலும் தோழியர் இல்லங்களிலும் நடமாடு வதைக் காணலாம். கூழ் வார்த்தல் எனப்படுகிற முக்கிய நிகழ்ச்சியும் பூஜையும் எல்லா அம்மன் கோவில்களிலும் நடை பெறும். இதற்கு ஒரு புராணச் செய்தி உள்ளது. ஒரு சமயம் கார்த்த வீர் யன், ஜமதக்கினி முனிவர் மீது பகை உணர்வு கொண் டிருந்தான். அவனது மகன்கள் இருவர் முனி வரைக் கொன்று விட் டனர். கணவன் இறந்த துக்கம் தாங்க முடியாத ரேணுகாதேவி தீயை உண்டாக்கி அதில் விழுந்து விட்டாள். இதைக் கண்டு வருந்திய இந்திரன், வருண பக வானை அழைத்து மழையை பெய்விக்கும் படி கூறினான். மூட்டிய தீயில் விழுந்த ரேணு காவை மழை வந்து நனைத்துவிட வெற்று உடலோடு இருந்தவள் அருகிலிருந்த வேப்பமர இலைகளால் தன் உடலை மூடிக் கொண்டாள்.
வயிற்றுப் பசி ஏற்பட்ட போது அருகிலிருந்த கிராம மக்களிடம் உணவு கேட்டாள். அப்போது அவர்கள் மகரிஷி மனை வியான நீங்கள், எமது உணவை சாப்பிட வேண்டாம் என்று கூறி, பச்சரிசி மாவு, வரகு, வெல்லம், பானகம், இளநீர், காய், கனிகளைக் கொடுத்தனர். அவற்றைக் கொண்டு கூழ் தயாரித்துச் சாப் பிட்டுத் தன் பசியைத் தீர்த்துக் கொண்டாள் ரேணுகாதேவி.
அச்சமயம் சிவபெரு மான் அவள் முன் தோன்றி, சக்தியின் அம்ச மாக இந்தப் புவியில் அவரித்த நீ பூமியில் பாவங்களைக் களைந்து மனிதர்களுக்கு ஏற்படும் தீ நோய்களைக் கட்டுப் படுத்துக. உனக்கு ஏற் பட்ட அம்மைக் கொப் புளங்கள் உன் பக்தர் களுக்கு வரும் போது, உடனே நீங்கிட உன் வேப்பிலையே கண் கண்ட மருந்து, பச்சரிசி மாவு பானகம், வெல்லம், இளநீர், கூழ் படைக்கும் போது.. நீ மாரிதேவியாக அருள் காத்து அவர் களுக்கு வந்த நோய் களை நீக்குவாயாக என் றார். எனவே தான் மாரித் தாயின் சன்னதிகளில் கூழ் படைக்கிறார்களாம்.
அம்மை வருவது ஒருவகை கிருமியால், அது தடுக்கப்பட்டது அம்மைத் தடுப்பூசியால்; இதில் எங்கு வந்தாள் ரேணுகாதேவி?
அம்மைக்குக் கார ணம் கடவுளா? கிருமியா? ஆன்மிகவாதிகளுக்கு நோய் வந்தால் கோயி லுக்குச் செல்வார்களா? மருத்துவரிடம் செல் வார்களா? சிந்திப்பீர்!
Read more: http://viduthalai.in/page1/85490.html#ixzz39zuHNJLm
செய்தியும் சிந்தனையும்
வெட்கக்கேடு
செய்தி: கருநாடகாவில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுவனை 6 நாட்கள் ஆகியும் மீட்க முடியவில்லை.
சிந்தனை: நாடெங்கும் இத்தகைய செய்திகள் வந்த வண்ணமேயுள்ளன. இதனைக் கூடத் தடுக்க முடியாத இந்த ஆட்சிகள் எந்தக் கேடுகளைத் தான் தடுக்கப் போகிறார்கள்? மனித உயிர்கள் அவ்வளவு மலிவா? வெட்கக் கேடு!
Read more: http://viduthalai.in/page1/85499.html#ixzz39zue0cct
கோயிலில் தங்கக் குவியல்
குட்டி மாநிலமான இமா சலப் பிரதேசத்தில் 29 கோயில் களில் 400 கிலோ தங்கம், 15,800 கிலோ வெள்ளிக் கட்டிகள் தூங்குகின்றனவாம்! (இவற்றை எடுத்து மக்கள் நலனுக்குப் பயன்படுத்தக் கூடாதா?)
Read more: http://viduthalai.in/page1/85499.html#ixzz39zukPWp2
பெண்களுக்கு அறிவுரை கூறும் பெம்மான்கள்!
அறிவுரைதான் இந்த நாட்டில் மிகவும் மலிவானது; அதுவும் பெண்களுக்கு ஆண்கள் அதிகம் அறிவுரை சொல்லுவதில் இந்தியாவை வெல்ல உலகில் எந்த நாடும் கிடையாது.
பெண்கள் எந்த மாதிரி உடையை அணிய வேண்டும் என்று அறிவுரை சொல்லும் அருகதை ஆண்களுக்கு உண்டா என்பது அர்த்தமுள்ள முதல் கேள்வி.
ஆனாலும், யாரையும் கேட்காமலேயே ஆண்கள் தாங்களே முன்வந்து வலிய அந்த உரிமையை எடுத்துக் கொண்டு அருளுபதேசம் செய்ய ஆரம்பித்து விடுகிறார்கள்.
நாடாளுமன்றத்தில் தெலுங்குதேச மக்களவை உறுப்பினர் முரளி மோகன் மகந்த் பெண்கள் இந்தியக் கலாச்சாரத்துக்கு ஏற்ப கண்ணியமான உடை அணிய வேண்டும் என்று பேசப் போக, அவையில் கடுமையான எதிர்ப்புச் சுனாமியை அவர் எதிர் கொள்ளும் நிலை ஏற்பட்டு விட்டது; வேறு வழியின்றிப் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டுக் கொண்டார். (வாழ்க மகளிர் உறுப்பினர்கள்!)
இதற்கு முன்னதாக கோவா மாநில பொதுப் பணித்துறை மூத்த அமைச்சர் சுதின் துவாலிகர் என்பவர் கூறிய கருத்தும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது..
நமது நாட்டில் தற்போது பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்து வருவது கவலைக்குரியது. பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரிப்ப தற்குக் காரணம் பெண்கள்தான் முக்கியப் பங்கு வகிக்கின்றனர். பெண்கள் நாகரிக ஆடை அணிந்து கேளிக்கை விடுதிக்குச் செல்லுவதாலும் ஆண் துணை யின்றி துணிச்சல் என்ற பெயரில் தனியாக செல்லுவ தாலும்தான் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரிக்கின்றன என்று பேசியிருக்கிறார்.
கருநாடக மாநிலம் மங்களூரில் இயங்கி வரும் ராம்சேனா அமைப்பின் தலைவர் முத்தலிப் என்பவர் பெண்கள் கேளிக்கை அரங்குக்குச் செல்லுகிறார்கள் என்ற பெயரில் மங்களூரில் உள்ள பல கேளிக்கை அரங்குகளில் வலிய நுழைந்து பெண்களைத் தாக்குகின்றனரே என்று செய்தியாளர்கள் சுட்டிக் காட்டியபோது, கோவா அமைச்சர் அதனை நான் ஆதரிக்கிறேன்; அவர்கள் ஒன்றும் தவறு செய்யவில்லை என்றும் பதில் சொல்லியிருக்கிறார்.
மும்பையில் மும்பை கிழக்கு பகுதி சட்டப் பேரவை உறுப்பினர் பாலா சாலந்த் (சிவசேனா) என்பவர் முஸ்லிம் பெண் ஒருவரை வழிமறித்து அத்து மீறியதும் அண்மையில் மக்கள் கவனத்துக்கு வந்தது.
இவர்மீது குற்றப் பிரிவு 506, 509 மற்றும் 504 சட்டப் பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டதே தவிர கைது செய்யப்படவில்லை.
இவற்றையெல்லாம்விட ஒரு முக்கியமான செய்தி! பிரமுகர், ஒருவர் மத்தியில் ஆட்சியிலிருக்கும் பிஜேபி ஆட்சிக்கான மூக்கணாங் கயிற்றினைக் கையில் வைத்திருப்பவர் என்று சொல்லும் மாத்திரத்திலேயே அவர் ஆர்.எஸ்.எஸ்-இன் அகில இந்தியத் தலைவர் மோகன் பகவத்துதான் என்று மக்கள் எளிதில் புரிந்து கொள்வார்கள்.
அவர் இந்தூரில் ஆர்.எஸ்.எஸ். பொதுக் கூட்டத்தில் வெளிப்படையாகவே பேசினாரே!
பெண்கள் கல்வி கற்க ஆரம்பித்து விட்டனர்; திருமணத்தின்போது கணவன் மனைவி இருவரின் கல்வியும் சமமாக இருந்து வருகிறது. சில வேளைகளில் கணவனைவிட மனைவி அதிகம் படித்தவராக இருக்கிறார்; அல்லது திருமணத்திற்குப் பிறகு படித்துப் பட்டம் பெற்று விடுகிறார். சிலர் கணவனைவிட உயர் பதவிக்குச் சென்று விடுகிறார்கள். வருமானமும் கணவனைவிட அதிகம் வரத் துவங்கி விட்டது. இந்த இடத்தில் கணவனின் மன நிலைக்கு ஏற்ப நடக்காத சூழல் மனைவிக்கு ஏற்பட்டு விடும். இங்கு ஈகோவும் தோன்று விடுகிறது. இந்த ஈகோதான் இந்தியாவில் தற்போது நடக்கும் அதிகமான விவாகரத்திற்குக் காரணமாக அமைந்து விடுகிறது. மனைவி கணவனுக்குச் சேவகம் செய்வதையே கடமையாகக் கருத வேண்டும்.பெண்கள் இந்தக் கடமையில் இருந்து விலகி விட்டால் அந்தப் பெண்ணை விலக்கி விடுவது நல்லது என்றும் பேசினாரே! இந்தச் செய்தியை குறைந்தபட்சம் எந்த ஒரு ஏடு அல்லது இதழ் தமிழ்நாட்டில் வெளியிட்டது - விடுதலையைத் தவிர!
இந்துத்துவாவின் கொள்கை என்பது இன்னும் பழைய மனுதர்ம காலத்திலேயே சஞ்சரித்துக் கொண்டு இருக்கிறது என்பது அகில இந்திய ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவரின் பேச்சிலிருந்து விளங்கவில்லையா?
பால்யத்தில் தகப்பன் ஆக்ஞையிலும், யௌவனத்தில் கணவன் ஆக்ஞையிலும் கணவன் இறந்தபின் பிள்ளைகள் ஆக்ஞையிலும், இருக்க வேண்டியதல்லாமல் ஸ்திரீகள் தன் சுவாதீனமாக ஒரு போதும் இருக்கக் கூடாது என்று தானே மனு தர்மம் (அத்தியாயம் 5 சுலோகம் 148) கூறுகிறது. அதனைத் தானே இவர்கள் இன்றும் கூறுகிறார்கள்.
நியாயமாக ஒட்டு மொத்தமான பெண்கள் அனைவரும் இந்த இந்துத்துவா மனப்பான்மைக்கு எதிராக ஒன்று திரண்டு எழுந்து குரல் கொடுக்கவில்லையென்றால், போராடவில்லையென்றால் பெண்களுக்கு அறிவுரை - அருளுரை என்ற போர்வையில் பெண்களை ஆண்களின் உடைமை - எப்படி வேண்டுமானாலும் பெண்களை நடத்தலாம் என்கிற ஆண்களின் மமதை மனப்பான்மை - எஜமானத்துவம் மேலும் மேலும் கொம்பு முளைத்துத்தான் சீறிக் கொண்டு எழும் - எச்சரிக்கை!
இந்தப் பிரச்சினைக்கு ஒரே தீர்வு இந்த நாட்டில் பெரியாரியலே என்பதையும் பெண்கள் உணர்ந்து கொள்வார்களாக!
வாழ்க பெரியார்!
Read more: http://viduthalai.in/page1/85501.html#ixzz39zv2RWba
சமஸ்கிருத வாரக் கொண்டாட்டம் ஜனநாயக விரோதம்!
- சுப. வீரபாண்டியன்
அரசின் நிதி ஒதுக்கீடு ஆண்டு தமிழ் சமஸ்கிருத மேம்பாட்டுக்கு மேம்பாட்டுக்கு 2008-09 4.47 கோடி 72.10 கோடி
2009-10 8.61 கோடி 99.18 கோடி 2010-11 10.16 கோடி 108.75 கோ
சமஸ்கிருத வாரம் கொண்டாடுவதில் என்ன தவறு என்று கேட்கிறார், ஆர். நடராஜன் (தி இந்து 07.08.2014). ஒரு பன்மைச் சமூகமான, பல மொழிகள் பேசப்படுகின்ற இந்தியாவில், சமஸ்கிருதத்துக்கு மட்டும் வாரம் கொண்டாடுவது தவறு என்றே குறிப்பிடுகிறோம். 120 கோடி மக்களின் வரிப்பணத்தில், ஒரு மொழியை மட்டுமே உயர்த்திப் பிடிப்பது தவறு என்பதை மனச்சான்று உள்ளவர்களால் உணர முடியும். தமிழ், சமஸ்கிருதம் இரண்டுமே செம் மொழிகள். ஆனால், நிதி ஒதுக்கீட்டில், மலைக்கும் மடுவுக்குமான வேறுபாடு நிலவுவது ஏன்? 03.08.2011 அன்று நாடாளு மன்றத்தில், மனித வள மேம்பாட்டுத் துறையின் இணை அமைச்சர், தந்துள்ள புள்ளிவிவரம் கீழே:
அரசின் நிதி ஒதுக்கீடு
ஆண்டு தமிழ் மேம்பாட்டுக்கு சமஸ்கிருத மேம்பாட்டுக்கு
2008-09 4.47 கோடி 72.10 கோடி
2009-10 8.61 கோடி 99.18 கோடி
2010-11 10.16 கோடி 108.75 கோடி
மேற்காணும் நிதிஒதுக்கீடு, காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் செய்யப்பட்டது. முன்னதாக, வாஜ்பாய் ஆட்சிக் காலத் திலும், இப்போது மோடியின் ஆட்சிக் காலத்திலும் நிலை இதேதான்! இந்த உண்மையைப் பற்றி எந்தக் கவலையும் கொள்ளாத கட்டுரையா சிரியர், தமிழ் வாழ்கஎன எழுதி வைக்கப் பட்டுள்ள பெயர்ப் பலகையைக் கண்டு சினம்கொள்வது வேடிக்கை! நம்மைப் பொறுத்தமட்டில் சமஸ் கிருதம், இந்திக்கு மட்டும் அல்ல; உலகில் எந்த மொழிக்கும் நாம் எதிரிகள் அல்லர். நாம் பேசுவதெல்லாம், இந்திய மொழி களுக்கு இடையிலான சமத்துவம் குறித்தே. சமஸ்கிருத வாரம் கொண்டாடும் மத்திய அரசே, தமிழுக்கும் வங்க மொழிக் கும் வாரம் எப்போது? அரசமைப்புச் சட்டத்தின் 8-வது அட்டவணையில் உள்ள 22 மொழிகளுக்கும் வாரங்கள் எப்போது? இந்தியாவில் சமஸ்கிருதத் துக்கு மட்டும் 12 பல்கலைக்கழகங்கள் உள்ளனவே, மற்ற மொழிகளுக்கான பல்கலைக்கழகங்கள் எங்கே? இந்த அடிப்படையில் இன்னும் சில உண்மை களையும் நாம் பகிர்ந்துகொள்ள வேண் டியுள்ளது. சமஸ்கிருதம் என்பது வட்டார மொழிகள் என்று ஏற்றுக்கொள்ளப்பட்ட 22 மொழிகளில் ஒன்று என்பதைத் தவிர, அம்மொழிக்குச் சட்டத்தில் வேறு எந்தத் தனிச் சிறப்பும் வழங்கப்படவில்லை. மேலும், சமஸ்கிருதம் எந்த ஒரு வட்டாரத் திலும் பேசப்படவில்லை என்னும் உண் மையையும் இங்கே பேசியாக வேண்டும். 1961-ம் ஆண்டு இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, சமஸ் கிருதம் பேசுகிறவர்களின் எண்ணிக்கை 2,544 மட்டுமே. 1991-ல் அது 49,000 ஆக உயர்ந்ததாகக் காட்டப்பட்டது. 2011-ம் ஆண்டுக் கணக்கெடுப்பில் அந்த எண் ணிக்கை 15,000-க்கும் குறைவானதாக ஆகியுள்ளது. ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள 22 மொழிகளில், 15-க்கும் மேற்பட்ட மொழிகள், கோடிக் கணக்கான மக்களால் பேசப்படுகின்றன.
காஷ்மீரி, சந்தாலி போன்ற மொழிகள் லட்சக்கணக்கா னோரால் பேசப்படுகின்றன. ஆயிரக் கணக்கானவர்களால் மட்டும் பேசப்படும் ஒரே மொழி சமஸ்கிருதம் மட்டுமே! அவ்வளவு குறைவான மக்களால் பேசப்படும் ஒரு மொழிக்கு, 120 கோடி மக்களின் வரிப்பணத்தைச் செலவிடுவது என்ன நியாயம்? ஏனைய எல்லா மொழி களையும் புறக்கணித்துவிட்டு, இந்தி, சமஸ்கிருதம் ஆகிய இரண்டு மொழி களுக்கு மட்டும் கோடிக் கணக்கில் நம் வரிப்பணத்தைக் கொட்டி மத்திய அரசு இப்படி வாரம்கொண்டாடுவது ஜனநாயக விரோதம் இல்லையா? சுப. வீரபாண்டியன், பேராசிரியர், திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர். தொடர்புக்கு: தீணீஸ்மீமீ11ரீனீணீவீறீ.நீஷீனீ நன்றி: தமிழ் இந்து ஆகஸ்டு 8, 2014
Read more: http://viduthalai.in/page1/85502.html#ixzz39zwDFywa
காந்தியார்
திரு. காந்தியார் சிறையில் மூன்று வேலைகள் செய்கிறார். அவற்றுள் ஒன்று தக்ளியில் நூல் நூற்பது. மற்றொன்று பகவத் கீதையை ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பது. வேறொன்று இந்த இரண்டும் செய்து மீதி இருக்கும் நேரத்தில் ராமநாம பஜனை செய்வது.
ஆகவே அவரது பகுத்தறிவுக்கு நாம் வேறு உதாரணம் காட்ட வேண்டிய தில்லையென்றே நினைக்கின்றோம். இம் மூன்று காரியங்களும் இந்தியாவின் பொது வாழ்க்கையையும் முன்னேற்றத்தையும் முன்னுக்குக் கொண்டு போகுமா? பின்னுக்குக் கொண்டு போகுமா வென்பதை யோசிக்கத் தக்கது.
திரு. காந்தியிடம் குருட்டுப் பக்தியுள்ளவர்களுக்கு நாம் இப்படிக் கேட்பது சற்று கஷ்டமாக இருக்கலாம். தக்ளியில் நூல் நூற்பது எதை உத்தேசித்து என்று இதுவரை யாராவது தெரிந்தார்களா? தக்ளிநூல் வெள் ளைக்கார ஆட்சியின் கொடுமையையும் இந்தியாவின் பொருளாதார கொள்ளையையும் என்ன செய்து விடக்கூடும் என்பது நமக்கு விளங்கவில்லை.
என்ன சொன்னாலும் தட்டிச் சொல்லாமல் கேட்பதற்குச் சில மக்கள் இருக்கின்றார்கள் என்பதைத் தவிர மற்றபடி அதில் என்ன உண்மை இருக்கின்றது. இரண்டாவதாக பகவத்கீதைக்கு ஆங்கில மொழி பெயர்ப்பு வேலை. இதுமுன் ஒரு தடவை டாக்டர் பெசன்டம்மையால் செய்தாய் விட்டது.
இரண்டாவதாக திரு திலகரால் ஒரு தடவை கீதா ரகசியம் என்பதாக ஒரு மொழி பெயர்ப்பும் செய்தாய் விட்டது. இப்போது திரு. காந்தியும் இதையே ஆரம்பித்து விட்டார். கீதையின் தத்துவம் என்ன? அதன் பயனென்ன? என்பதைப் பற்றிய உண்மை யாராவது தெரிந்து அதை மதிக்கின்றார்களா?
கீதையை ஒரு மனிதன் ஒப்புக் கொள்ளுவதானால் முதலாவதாக பாரதக் கதையை ஒப்புக் கொள்ள வேண்டும்.
பிறகு கிருஷ்ணனையும், அவனது செய்கைகளையும், அவனையே கடவுளாகவும் ஒப்புக் கொள்ள வேண்டும்.
இம்மூன்றிலும் சந்தேக முள்ளவர்கள் கீதையைப் பகவான் வாக்காகக் கொள்ள முடியாது. இது ஒரு புறமிருக்க அதிலுள்ள விஷயங்கள் வாழ்க்கைக்குப் பொருத்த மானதாகவோ அல்லது அனுபவத்திற்குச் சாத்தியமான தாகவோ இருக்கின்றதா? நிற்க மூன்றாவது காரியமாக பஜனை செய்து கொண்டி ருக்கிறாராம்.
பஜனை என்பது புராணங்களில் உள்ள கடவுள்களைப் புராணக் கதைகளைச் சொல்லிக் கொண்டோ நினைத்துக் கொண்டோ இருப்பதாகும்.
ஆகவே இம்மூன்று காரியங்களும் எவ்வளவு பகுத்தறிவும் பொது நல நன்மையுமான காரியம் என்பதை முடிவு செய்யும் விஷயம் வாசகர்களுக்கே விட்டுவிடு கின்றோம்.
- குடிஅரசு - துணைத்தலையங்கம் - 27.07.1930
Read more: http://viduthalai.in/page1/85536.html#ixzz39zzQpXqh
சுயமரியாதைத் திருமணம்
பெண்கள் முன்னேற்றத்தில் கவலை உள்ளவர்கள் பெண்களைப் படிக்கவைக்கும் முன் இந்தக் கழுத்துக் கயிற்றைத் (தாலியை) அறுத்தெறியும் வேலையையே முக்கியமாய் செய்யவேண்டுமென்று சொல்லுவேன். நிற்க, இதுவரை மணமக்களுக்கு ஆசீர்வாதமோ வாழ்த்தோ என்பது மணமக்கள் நிறைய அதாவது 16 பிள்ளைகள் பெற்ற வேண்டுமென்று சொல்லுவார்கள்.
ஆனால் நான் மணமக்களுக்குச் சொல்லு வதென்ன வென்றால் அவர்கள் தயவு செய்து பிள்ளைகள் பெறக்கூடாது என்பதும், மிக்க அவசியமென்று தோன்றினால் ஒன்று அல்லது இரண்டுக்கு மேல் கூடாது என்றும் அதுவும் இன்னும் அய்ந்து ஆறு வருடம் பொறுத்துத்தான் பெற வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளுகின்றேன்.
அன்றியும் அப்படிப் பெறும் குழந்தைகளையும் தாய்மார்கள் குரங்குக் குட்டிகள்போல் சதா தூக்கிக் கொண்டு திரிந்து போகின்ற இடங் களுக்கெல்லாம் அழைத்துப் போய் அழ வைத்துக் கொண்டு கூட்டமும் நடவாமல் தங்களுக்கும் திருப்தியில் லாமல் சபையோருக்கும் வெறுப்புத் தோன்றும் படியாய் செய்யாமல் குழந்தைகளை ஆயம்மாள் வைத்து வளர்க்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
அவைகளுக்கு ஒழுங்கும் அவசி யமான கட்டுப்பாடும் பழக்கிக் கொடுக்க வேண்டும். இந்தக் கூட்டத் தில் நான் பேசமுடியாதபடி எத்த னைக் குழந்தைகள் அழுகின்றனர் பாருங்கள். அவற்றின் தாயார் முகங்கள் எவ்வளவு வாட்டத்துடன் வெட்கப் படுகின்றது பாருங்கள்.
அந்தத் தாய்மாரும் தகப்பன்மாரும் இந்தக் கூட்டத்தில் ஒருவரையொருவர் பார்த்து வெறுப்பதைத் தவிர அவர் களுக்கு இங்கு வேறு வேலையே இல்லாமல் இருக்கின்றது. இன்பமும் அன்பும் என்பது சுதந்திரத்தோடு இருக்க வேண்டுமே அல்லாது நிபந்தனையோடும் தனக்கு இஷ்டமில்லாத சௌகரிய மில்லாத கஷ்டத்தைச் சகித்துக் கொண்டு இருப்பதாய் இருக்கவே முடியாது.
ஆகவே இப்போதைய குழந்தை இன்பம் என்பது ஒருக்காலமும் உண்மையான இன்பமாகாது. ஆகையால் அவைகளை மாற்றிவிட வேண்டும். தவிர அதிக நகை போடாமலும் தாலி கட்டாமலும் மூடச் சடங்குகள் இல்லாமலும் மாத்திரம் நடைபெற்ற திருமணம் சுயமரியாதைத் திருமணமாகி விடாது.
பெண்ணின் பெற்றோர் இப்பெண்ணுக்குத் தங்கள் சொத்தில் ஒரு பாகம் பங்கிட்டுக் கொடுக்க வேண்டும். புருஷர்களைப் போலவே பெண்களுக்கும் சொத்துரிமை உண்டு; தொழில் உரிமை உண்டு, என்கின்ற கொள்கை ஏற்படாவிட்டால் எப்படி அவர்கள் சுயமரியாதை உடையவர்களாவார்கள்? ஆகையால் அவர்களுக்குச் சொத்துரிமையும் அவசியமானதாகும்.
தவிர பெண்களுக்கு இப்போது பொது நல சேவை என்னவென்றால் எப்படியாவது ஒவ்வொரு விதவையையும் ஒவ்வொரு புருஷனுடன் வாழச் செய்ய வேண்டும். அதுவே அவர்கள் இப்போது செய்ய வேண்டியது.
தவிர பெண்களும் புருஷர் களைப் போலவே தினமுமோ அல்லது வாரத்திற்கு ஒன்று இரண்டு நாளோ ஒரு பொது இடத்தில் கூடி மகிழ்ச்சியாய் பேசி விளையாட வேண்டும். பத்திரிகைகளைப் படிக்க வேண் டும். படிக்காத பெண்களுக்குப் படித்தவர்கள் படித்துக் காட்ட வேண்டும்.
வீட்டு வேலை செய்வதுதான் தங்கள் கடமை என்பதை மறந்து விட வேண்டும். புருஷனுக்குத் தலைவியாய் இருப்பதும் குடும்பத்துக்கு எஜமானியாய் இருப்பதும் தங்கள் கடமை என்று நினைத்து அதற்குத் தகுந்தபடி நடந்து கொள்ள வேண்டும். இந்த உணர்ச்சியோடேயே பெண்மக்களை வளர்த்து அவர்களுக்குத் தக்க பயிற்சி கொடுக்க வேண்டும்.
- குடிஅரசு - சொற்பொழிவு - 13.07.1930
Read more: http://viduthalai.in/page1/85538.html#ixzz39zzbay7j
தந்தை பெரியார் பொன்மொழி
பொருளாதாரத்தில் சரிபண்ணி விட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்று பேசுகிறார்களே, பொருளாதாரத்தில் எவ்வளவுதான் உயர்ந்தவர்களாக ஆனாலும் கூடச் சூத்திரன் சூத்திரன் தானே! பறையன் பறையன்தானே!
வருணாசிரமத் தர்மத்தின் மூலமாகத்தான் நமது நாட்டில் தீண்டாமைக் கொள்கை அமலில் இருந்து வருகிறதேயொழிய, வருணாசிரமம் இல்லாவிட்டால் தீண்டாமைக் கொள்கை பரவ மார்க்கமே கிடையாது. வருணாசிரமத் தர்மம் என்கிற ஓர் உடல் இல்லாவிட்டால் தீண்டாமை என்கிற உயிருக்கு ஆட்டம் இல்லை.
Read more: http://viduthalai.in/page1/85538.html#ixzz39zzkOaAm
Post a Comment