தெய்வ நம்பிக்கைக்கு மரணம் காரணமா?
வினா: கடவுளைப் பற்றிப் பொது வாக ஜனங்கள் கொண்டிருக்கும் கருத்துக்களை விளக்கிக்கூறு.
விடை:- கடவுள் வான மண்டலத் தையும், பூமியையும், அதிலுள்ள சகல சராசரங்களையும் படைத்தவன் என்று மக்களில் பெரும்பாலார் நம்புகிறார்கள்.
வினா:- அப்புறம்?
வினா:- அப்புறம்?
விடை:- கடவுள் சர்வ ஞானமுடைய வனாம், யாவற்றையும் பார்க்கிறானாம். பிரபஞ்ச முழுதும் அவனது உடைமை யாம், சர்வவியாபியாம்.
வினா:- கடவுள் ஒழுக்கத்தைப்பற்றி ஜனங்கள் என்ன சொல்லுகிறார்கள்.
விடை:- அவன் நீதிமானாம்; புனித னாம்.
வினா:- வேறு என்ன?
விடை:- அவன் அன்பு மயமான வனாம்.
வினா:- கடவுள் அன்பு மயமானவ னென்று ஜனங்கள் எப்பொழுதும் நம்புகிறார்களா?
விடை:- இல்லை. மக்கள் அறிவும், ஒழுக்கமும் உயர உயர, கடவுள் யோக் கியதையும் விருத்தியடைந்து கொண்டே போகிறது.
வினா:- உன் கருத்தை நன்கு விளக்கிக்கூறு.
விடை:- காட்டாளன் கடவுள், ஒரு
காட்டாளனாகவும், திருடனாகவும் இருந்தான். அராபித் தலைவன் கடவுளான ஜாப், ஒரு
கீழ் நாட்டு யதேச்சாதிகாரியாக இருந்தான். யூதர்கள் கடவுளோ வெறியனாயும்,
பழிக்குப்பழிவாங்கும் குணமுடைய வனாகவும் இருந்தான். கிறிஸ்தவர் கடவுளோ,
அற்பாயுளுடைய மக்கள் செய்யும் குற்றங்களுக்கு நித்திய நரக தண்டனை வழங்கக்
கூடியவனாக இருக்கிறான்.
வினா:- கடவுளைப் பற்றிய வேறு அபிப்பிராயங்கள் என்ன?
வினா:- கடவுளைப் பற்றிய வேறு அபிப்பிராயங்கள் என்ன?
விடை:- மக்கள் மனோ, வாக்கு, காயங்களினால் செய்யும் காரியங்களில் அவன் சிரத்தையுடையவனாக இருக் கிறானாம்.
வினா:- ஏன்?
விடை:- அவனுக்கு விருப்பமான காரியங்களை நாம் செய்தால் பரிசளிக் கவும் விருப்பமில்லாத காரியங்களைச் செய்தால் தண்டனையளிக்கவும்.
வினா:- கடவுளுக்கு என்ன என்ன பெயர் வழங்கப்பட்டிருக்கின்றன?
விடை:- ஒவ்வொரு தேசத்தாரும் கட வுளை
ஒவ்வொரு பெயரால் அழைக் கிறார்கள், கிரேக்கர்கள் யூயஸ் என்றும், ரோமர்கள்
ஜோவ் என்றும், பார்சிகள் ஆர்முஸ்ஜித் என்றும், இந்துக்கள் பிரம்மம்
என்றும், யூதர்களும் கிறிஸ் தவர்களும் ஜிஹோவா என்றும், முகம் மதியர் அல்லா
என்றும் கடவுளை அழைக்கிறார்கள்.
வினா:- கடவுளுக்குக் கொடுக்கப்பட்டி ருக்கும் வேறு பெயர்கள் எவை?
விடை:- பரம்பொருள், அனந்தன், மூலகாரணன், பரமாத்மா, நித்தியசக்தி, பிரபஞ்சம், இயற்கை, மனம், ஒழுங்கு முதலியன.
வினா:- ஆனால், ஜனங்கள் சொல் லும் கடவுள் ஒரே பொருளைத்தானா குறிக்கிறது?
விடை:- இல்லை, சிலர் கடவுளை ஒரு ஆளாக
பாவனை செய்கிறார்கள். சிலர் ஒரு கருத்தெனக் கூறுகிறார்கள். வேறு சிலர்
சட்டம் என்கிறார்கள். மற்றும் அறிய முடியாத ஒரு சக்தி என்கிறார்கள். ஒரு
கூட்டத்தார் கடவுள் பூரணன் என்கிறார்கள். பின்னும் சிலர் ஜடப் பொருளும்
மனமும் அய்க்கியப்படும் நிலையே கடவுள் என நம்புகிறார்கள்.
வினா:- மக்கள் எப்பொழுதும் ஒரே கடவுளில் நம்பிக்கை வைத்து வந்திருக் கிறார்களா?
விடை:- மக்களில் பெரும்பாலார் ஒருகடவுள் அல்லது பல கடவுள்கள் இருப்பதாக நம்பியே வந்திருக்கிறார்கள்.
வினா:- ஒன்றுக்கு மேற்பட்ட கடவு ளுண்டா?
விடை:- பல கடவுள்களும் உண்டென்றே பொதுவாக நம்பப்படுகிறது.
வினா:- பல கடவுள்களை நம்புகிற வர்களுக்கு என்ன பெயர் அளிக்கப் படுகிறது?
விடை:- பல கடவுளை நம்புகிறவர் பல தெய்வவாதிகள், ஒரே கடவுளை நம்புவோர் ஏக தெய்வவாதிகள்.
வினா:- சில, பல தெய்வவாதிகளின் பெயர் சொல்லு.
விடை:- எகிப்தியர், இந்துக்கள், கிரேக்கர், ரோமர்.
வினா:- ஏக தெய்வவாதிகள் யார்?
விடை:- யூதர்கள், கிறிஸ்தவர்கள், முகம்மதியர்.
வினா:- இவர்கள் எல்லாம் எப்பொ ழுதுமே ஏக தெய்வவாதிகளாக இருந் தார்களா?
விடை:- இல்லை, ஆதியில் எல்லா ஜாதியாரும் பல தெய்வங்களையே வணங்கி வந்தார்கள்.
வினா:- பல தெய்வவாதிகளின் கடவுள்கள் எவை?
விடை:- சூரியன், சந்திரன், ஆவிகள், நிழல்கள், பூதங்கள், பேய் பிசாசுகள், மிருகங்கள், மரங்கள், மலைகள், பாறைகள், நதிகள் முதலியன.
வினா:- இவைகள் எல்லாம் கடவு ளாக நம்பப்பட்டதாய் உனக்கு எப்படித் தெரியும்?
விடை:- எப்படியெனில் ஜனங்கள் அவைகளை
வணங்குகிறார்கள், அவை களுக்கு ஆலயங்கள் கட்டினார்கள், விக்கிரகங்கள் உண்டு
பண்ணினார்கள், அவைகளுக்கு பூஜைகள் நடத்தி னார்கள்.
வினா:- இந்த தெய்வங்கள் எல்லாம் ஒரே மாதிரி மகிமையுடையன வென்று ஜனங்கள் நம்பினார்களா?
விடை:- எல்லாக் கடவுள்களுக்கும் மேலான ஒரு கடவுளுக்கு அவை அடிமைகள், அல்லது சின்னங்கள் என்று அறிவாளிகளான சொற்பப்பேர் நம்பினார்கள்.
வினா:- அறிவில்லாதவர்களோ?
விடை:- அவைகளில் சில அதிக சக்தி யுடையவை
என்றும், சில கருணையுடை யவை என்றும், சில அழகானவை என்றும், சில அதிக
புத்தியுடையவை என்றும் நம்பினார்கள்.
வினா:- கடவுள் உற்பத்திக்கு அவர் கள் என்ன காரணம் கூறுகிறார்கள்.
விடை:- கடவுள் உற்பத்திக்குப் பலவித மான காரணங்கள் கூறப்படுகின்றன.
வினா:- அவற்றுள் சிலவற்றை விளக்கு.
விடை:- முதற்காரணம், ஆதி கால மக்கள்
அறிவில்லாதவர்களாக, குழந் தைகளைப் போல் பயங்காளிகளாயும் இருந்தார்கள்.
எனவே, தனக்கு அறிய முடியாதவைகள் மீது அவர் களுக்குப் பயமுண்டாயிற்று.
கண்ணால் காண முடியாத ஏதோ ஒன்றே பயத்தை உண்டு பண்ணுகிறதென்று நம்பினார்கள்.
இரண்டாவது, மக்கள் பலவீனராயும்,
உதவியற்றவராயுமிருப்பதினால் அவர்களுக்கு உதவியளிக்கக்கூடிய சர்வ
சக்தியுடையவொன்று இருக்க வேண்டுமென்று நம்பினார்கள்.
மூன்றாவது, மனிதன் இயல்பாக நேசமனப்பான்மையுடையவன், பிறருடன் கலந்து பழகவே அவன் எப்பொழுதும் விரும்புகிறான். எனவே, தன்னைச் சூழ்ந்திருக்கும் அறிய முடியாத சக்திகளை அறியவும், அவற்றுடன் சம்பந்தம் வைத்துக் கொள்ளவும் விரும்புகிறான். இறுதியில் அறியமுடியாத சக்திகளைக் கடவுளாக உருவகப்படுத்திக் கொள்கிறான்.
மூன்றாவது, மனிதன் இயல்பாக நேசமனப்பான்மையுடையவன், பிறருடன் கலந்து பழகவே அவன் எப்பொழுதும் விரும்புகிறான். எனவே, தன்னைச் சூழ்ந்திருக்கும் அறிய முடியாத சக்திகளை அறியவும், அவற்றுடன் சம்பந்தம் வைத்துக் கொள்ளவும் விரும்புகிறான். இறுதியில் அறியமுடியாத சக்திகளைக் கடவுளாக உருவகப்படுத்திக் கொள்கிறான்.
நான்காவது, தெய்வ நம்பிக்கைக்கு மரணமே முக்கிய காரணம்.
வினா:- அது எப்படி?
விடை:- நமக்கு உலகத்தில் சிரஞ்சீவி யாக
வாழ முடியுமானால் தெய்வங் களைப் பற்றியோ, தெய்வீக சக்திகளைப் பற்றியோ
நினைக்கத் தேவையே உண்டாகாது. மரணம் உண்டு என்ற உணர்ச்சியினாலேயே மறு ஜென்
மத்தைப் பற்றியும், பிறப்புக்கும் இறப் புக்கும் காரணமாக இருக்கும் ஒன்றைப்
பற்றியும், யோசிக்க வேண்டியதாக ஏற் படுகிறது. பிராணிகளுக்கு மரணத்தைப்
பற்றிய சிந்தனையே இல்லாததினால் கடவுளும் இல்லை.
வினா:- தெய்வங்களின் தொகை பெருகிக் கொண்டே இருக்கிறதா?
விடை: இல்லை. அது குறைந்து கொண்டே போகிறது.
வினா: ஏன்?
விடை:- மக்களது அறிவும், சக்தியும் வளர வளர தம்மைத்தாமே காப்பாற் றிக் கொள்ள முடியுமென்ற நம்பிக்கை விருத்தியடைகிறது.
வினா:- அறிவில்லாதவர் கடவுள் களைவிட அறிவுடையோர் கடவுள் குறைவா?
விடை: ஆம். நாகரிகமில்லாதவர் களே பல தெய்வங்களை வணங்கு கிறார்கள்.
வினா:- ஏக தெய்வவாதிகள் நிலைமை என்ன?
விடை:- இப்போதும் பெரும்பாலோர் ஏக தெய்வ நம்பிக்கையுடையவர்களா கவே இருக்கிறார்கள்.
வினா:- கடவுள் நம்பிக்கையே இல் லாதவர்களும் இருக்கிறார்களா?
விடை: ஆம். அதிகம் பேர் இருக் கிறார்கள்.
---------------------------------------- தந்தை பெரியார்- குடிஅரசு - கட்டுரை (உரையாடல்) 03.05.1936
34 comments:
ஆகஸ்டு
ஆகஸ்டு என்றால் இந்திய நாடு சுதந்திர நாளை பற்றிய பேசுவார் கள். திராவிடர் கழகத்தைப் பொறுத்த வரையில் ஆகஸ்டு என்றால் போராட் டக் களங்கள் காணும் திங்கள் ஆகும்.
1938 ஆகஸ்டு முதல் தேதி (இந்நாள்) தமிழ் நாட்டின் வரலாற்றில் மொழி மானம் இனமானம் கூர் தீட்டப்பட்ட நாள்!
திரு. ராஜகோபாலாச் சாரியார் சென்னை மாநிலப் பிரதமராக (Premier) இருந்த நிலையில் சென்னை மாநிலப் பள்ளி களில் இந்தியைக் கொண்டு வரப் போகிறேன் என்று முதலில் அறிவித்ததும்கூட இந்த ஆகஸ்டில்தான் (இராமகிருஷ்ண மடத்தில் 10.8.1937).
6,7,8 ஆம் வகுப்பு களில் இந்தியைக் கொண்டு வந்தார் பிரதமர் ராஜாஜி; 1938 - 1939 நிதி நிலை அறிக்கையில் வெளிப் படுத்தப்பட்ட ஒரு தகவல்: இந்துஸ்தானி கற்பிக்க 125 நடுப் பள்ளிகள் தேர்வு செய்யப்பட்ட தகவல் வெளியானது (இதன்படி வெளியான அரசு ஆணை நாள் 21.4.1938) இந்தி ஆசிரியர்களுக்காக ரூ.20 ஆயிரமும் ஒதுக்கீடு செய் யப்பட்டதாக அந்த அறிக்கை கூறியது: தொடக் கக் கட்டத்திலேயே நீதிக் கட்சி உறுப்பினரான ராஜா சர். எம்.ஏ. முத்தையா (செட்டியார்) எதிர்த்தார்.
அதற்குப் பதில் அளித்த ராஜாஜி இந்தியை எதிர்ப்பவர்கள் இரு வகை யினர் (1) ஆரிய எதிர்ப்பின் விளைவாக ஒரு சார்பாக இருந்து எதிர்ப்பவர்கள் 2) காங்கிரஸ் மீதுள்ள வெறுப் பால் எதிர்ப்பவர்கள் என்று குறிப்பிட்டார்.
ராஜாஜியின் இந்த முடிவை எதிர்த்துத்தான் தமிழ் மண் போர்க்கோலம் கொண்டது. பல வடிவங் களில் போராட்டங்கள் கிளர்ந்து எழுந்தன. அதில் ஒன்றுதான் ஆகஸ்டு முதல் தேதி (1938) தமிழர் பெரும் படை திருச்சி -உறையூரிலிருந்து புறப் பட்டதாகும். (100 பேர்கள்)
படைத் தலைவர் அய். குமாரசாமி பிள்ளை. தளபதி - அஞ்சா நெஞ்சன் பட்டுக்கோட்டை கே.வி. அழகிரிசாமி, பெருஞ் சோற்றுத் தலைவி- மூவ லூர் இராமாமிர்தம் அம் மையார்; கடந்து வந்த ஊர்கள் 234. கடந்து வந்த தொலைவு 577 மைல்கள். சென்னைக்குப் படை வந்து சேர்ந்த நாள் 11.9.1938.
படையை வரவேற்று சென்னை திருவல்லிக்கேணி கடற்கரைக் கூட்டத்தில் தமிழ்நாடு தமிழர்க்கே! என்ற முழக் கத்தை முதன் முதலாகத் தந்தைபெரியார் கொடுத் தார்.
கட்டாய இந்தியை எதிர்த்து பட்டினிப் போராட்டம் மேற்கொண்ட ஸ்டாலின் செகதீசன் படுத்த படுக்கையாக இருந்த நிலை யில் மேடைக்குக் கொண்டு வந்து வைக்கப்பட்டார்.
இதே ஆகஸ்டு 1952, 1953, 1954 ஆண்டுகளில் தான் இரயில்வே நிலை யங்களில் இந்தி எழுத் துக்களை அழிக்கும் போராட்டத்தைத் தந்தை பெரியார் அறிவித்து நடத் திக் காட்டினார்.
அந்த ஆகஸ்டுப் பட்டியலில் இன்று (1.8.2014) சமஸ்கிருத வாரத்தை எதிர்த்து தமிழர் தலைவர் மானகிகு கி. வீரமணி அவர்கள் அறி வித்த இந்தப் போராட் டத்தையும் இணைத்துக் கொள்க!
- மயிலாடன்
Read more: http://viduthalai.in/e-paper/85062.html#ixzz39CAIBBMu
சமூகநீதியின் சாதனை!
சென்னை, ஆக.1- கால்நடை மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்கான பொதுப் பிரிவு கலந் தாய்வில் முதல் மாணவராகத் தேர்வு செய்யப் பட்டிருப்பவர் லாரி ஓட்டுநர் மகனாவார்; வி. சரண்குமார் நாமக்கல்லைச் சேர்ந்தவர்; இரண்டாம் இடத்தைப் பிடித்தவர் புதுக்கோட்டையைச் சேர்ந்த கமலக் கண்ணன்; இவர் விவசாயத் தொழிலாளியின் மகன்; 3ஆம் இடத்தைத் தட்டிச் சென்றவர் மனோஜ்பிரபு நாமக்கல்லைச் சேர்ந்த இவரின் தந்தையார் விசைத்தறித் தொழிலாளி. இதுதான் திராவிட இயக்கத்தின் சமூகநீதிச் சாதனை.
Read more: http://viduthalai.in/e-paper/85064.html#ixzz39CAaT1ic
இது என்ன குழப்பம்?
மரபணு மாற்றப்பட்ட பயிர்களைப் பயிரிட்டு சோதனையிடுவதற்குத் தடை விதிக்கப்பட்டதாக ஆர்.எஸ்.எஸ். கூறியது, இதுகுறித்து சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரை செய்தியாளர் கள் கேட்டபோது, இது தொடர்பாக எவ்வித முடிவும் எடுக்கப்படவில்லை என்று பதிலளித்துள்ளார்; யார் சொல்வது சரி?
Read more: http://viduthalai.in/e-paper/85064.html#ixzz39CAiKVqs
இன்றைய ஆன்மிகம்?
ஆண்டாள்
ஆண்டாளின் பக்திக் குப் பெருமையளித்த சிறீரங்கம் ரங்கநாதர் அவளை தன்னுடன் ஏற் றுக் கொண்டார். அதை உணர்த்தும் விதமாக சிறிவில்லிப்புத்தூரில் நடக்கும் ஆடித் திரு விழாவின் 7ஆம் நாளில் ஆண்டாளின் மடியில் சயனித்த கோலத்தில் ரெங்க மன்னார் காட்சி தருவாராம். இந்த அரிய காட்சியைத் தரிசிக்கும் தம்பதியர் இடையே மேலும் ஒற்றுமை பலப் படுமாம்.
ஆண்டாள் என்ற பக்தை கடவுளை கணவ னாகக் கைப்பற்றிடப் பாடிய விரக தாபப் பாடல் கள் ஆபாசமானவை! கடவுளைத் தந்தையாகத் தொழும் நிலை போய் புருஷனாக்கிப் புணரும் ஆசை கொண்ட பாடல்கள் சகிக்க முடியாதவை. இது தான் பக்தி வழிகாட்டும் ஆன்மிகமா? வெட்கக் கேடு!
Read more: http://viduthalai.in/e-paper/85070.html#ixzz39CAyXH00
மதரீதியாக கடவுளர் சிலைகளை சாலைகளில் அமைக்க எந்த விதி அனுமதிக்கிறது? உயர்நீதிமன்றம் கடுமையான கேள்வி
மதரீதியாக கடவுளர் சிலைகளை சாலைகளில் அமைக்க எந்த விதி அனுமதிக்கிறது?
உயர்நீதிமன்றம் கடுமையான கேள்வி
சென்னை, ஆக.1- சாலைகளில் மத விழாக் கள் என்று கடவுளர் சிலைகள், மற்ற கட்டுமா னங்களை அமைப்பதற்கு அனுமதிப்பது எவ்வாறு என்று சென்னை உயர்நீதி மன்றம் தமிழக அரசிடம் விளக்கம் கேட்டுள்ளது.
கடந்த வாரத்தில் சென்னை உயர்நீதிமன்றத் தின் தலைமை நீதிபதி (பொறுப்பு) சத்தீஷ் கே. அக்னிஹோத்ரி மற்றும் எம்.எம்.சுரேஷ் ஆகி யோரைக் கொண்ட முதல் அமர்வில் பொதுநல வழக்கு விசாரணையின் போது, தமிழ்நாட்டில் சாலைகளை ஆக்கிரமிப் பதனால் எண்ணிலடங் காத வகையில் பொது மக்களுக்கு இடையூறுகள் ஏற்படுகின்றன. இதுகுறித்து தமிழக அரசு விளக்கமளிப்பதற்கு இரண்டு வாரங்கள் கால அவகாசம் வழங்கி உத்தர விடப்பட்டது. ஆகஸ்ட் மாதம் 11 ஆம் தேதி அன்று இதுகுறித்த வழக்கு விசாரணைக்கு வைக்கப் பட்டுள்ளது.
பொதுநல வழக்கு மனுதாரர் கூறும்போது, தமிழ்நாடு முழுவதும் 77 ஆயிரம் சாலையோரக் கோயில்கள் உள்ளன. வண்டிகள் செல்வதற்கும், பாதசாரிகள் நடப்பதற்கும் பெரும் இடையூறாக அவை உள்ளன. ஏராள மான சாலைகள், தெருக் கள் மதரீதியான செயல் களின் பேரால் ஆக்கிர மிக்கப்பட்டுள்ளன. இதில் எந்த மதமும் விதிவிலக் கின்றி அஞ்சத்தக்க வகை யில் செயல்படுகின்றன.
அண்மையில் சென்னைக் காவல்துறையின்சார்பில் சுற்றறிக்கை அனுப்பப் பட்டுள்ளது. அதில் எதிர்வரும் விநாயகர் சதுர்த்தி பெயரால் விநாய கர் சிலைகள் அமைக்கப் படும் இடங்கள் குறித்த விதிமுறைகளை காவல் துறை வகுத்துள்ளது. இது அரசிலமைப்புக்கு முற்றிலும் எதிரானது. ஏனென்றால், காவல்துறை சாலைகளுக்கும், நடை பாதைகளுக்கும் உரிமை யாளர்கள் அல்ல. அலுவல கரீதியில் அனுமதியின்றி சிலைகளை சாலைகள் மற்றும் தெருக்களில் நிறுவ அனுமதிப்பது என்பது ஆட்சியாளர்கள் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகளை மீறுவதாகும். காவல்துறையினரின் கண் மூடித்தனமான செயல் களால், அபாயங்கள் விளைகின்றன. கோவில் களை நிறுவுவது அல்லது அனுமதிப்பது என்பது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்துவ தாக அமைகின்றன. மற்ற வர்களும் பக்தி உள்ளவர் களாக இருப்பினும், அதே நம்பிக்கையில் இருப்ப தில்லை என்று மனுதாரர் கூறி உள்ளார்.
மனுதாரரின் வேண்டு கோளை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் இதுநாள் வரையிலும் இதை முறைப் படுத்துவதற்கு சட்டம் இல்லை. ஆகவே, அரசு பதில்மனுவை தாக்கல் செய்வதற்கு, 5_-9_-2013 தேதி யில் தாக்கீது அனுப்பியும், இதுவரை எந்த பதிலும் இல்லை. இறுதி வாய்ப்பாக இரண்டு வாரங்கள் அளிக்கப்படுகின்றன. இவ்வழக்கில் உள்ள வாய்ப்புகள் அல்லது விதிமுறைகள் மற்றும் ஆட்சியாளர்களின் இவ்வழக்கின்மீதான செயல்பாடுகள் குறித்து பதில் அளிக்க இரண்டு வாரங்கள் இறுதிக் கெடு வாக அளிக்கப்படுகின்றன.
Read more: http://viduthalai.in/e-paper/85063.html#ixzz39CBG5K3R
இவர்கள் யார்? யார்? மக்களவை உறுப்பினர்களின் தொழில்கள் என்ன?
டில்லி, ஆக.1- 16ஆவது மக்களவையில் உள்ள 539 உறுப்பினர்கள் தங்களின் தொழிலாகக் குறிப்பிட் டுள்ள பட்டியல் நாடாளு மன்ற இணையதளத்தில் பதிவாகி உள்ளது. அந்த பட்டியல் ஊடகங்களில் வெளியானதால் பர பரப்பை ஏற்படுத்தி உள்ளது. ராகுல்காந்தி ஒரு திட்ட ஆலோசகர் என்று கூறும் அதேநேரத்தில் மோடி சமூகப் பணியாளர் என்று கூறிக்கொள்கிறார்.
மேற்கு வங்கத்தின் காங்கிரசுக் கட்சியின் தலைவராக உள்ள பஹரம்பூர் பகுதியைச் சேர்ந்த அதிர் ரஞ்சன் சவுத்ரி சமுதாய சீர்திருத்த வாதி என்று கூறிக் கொண்டுள்ளார். இவர்மீது ஏராளமான குற்ற வழக் குகள் உள்ளனவாம். ராகுல் காந்தியின் திட்டங்கள் கடந்த தேர்தலில் எடு படாமல் போனது. அவ ருடைய உறுதிமொழி ஆவ ணத்தில் அவர் தன்னை திட்ட ஆலோசகர் என்று கூறியுள்ளார்.
நாடாளுமன்ற இணையதளத்தில் மக்களவை உறுப்பினர்கள் அரசியலைக் கடந்து, தங்களின் தொழிலாக அறிவித்துள்ளதை விவசா யம் முதல் கட்டுமானத் தொழில் வரை, மருத் துவப்பணி முதல் கல்விப் பணிவரை, ஆசிரியர்பணி முதல் விளையாட்டு வீரர் கள் வரை, கலைஞர்கள் முதல் தொழிலதிபர்கள் வரை மற்றும் மத நிறு வனங்கள் முதல் சமுதாய சீர்திருத்தம்வரையிலும் 33 தொழில்களைக் கொண் டுள்ள பட்டியலை வெளி யிட்டுள்ளது.
பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி பெயர் பத்திரிகையாளர் என்று உள்ளது. இணையத்தில் பிளாக்கில் ஆர்வமுடன் எழுதுபவராக (blogger) உள்ளவர், ஆர்.எஸ்.எஸ். ஏடான ஆர்கனைசர் இதழில் அவர் பத்திரிகை யாளர் பணி தொடங்கி யது. மக்களவையில் உள்ள மற்ற நான்கு பத்திரிகை யாளர்களில் பிஜூ ஜனதா தளத்தின் பர்த்ருஹரி மஹ்தாப் மற்றும் தத் தாகதா சத்பதி ஆகியோர் உள்ளனர்.
வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவ ராஜ், பேரவைத்தலைவர் சுமித்ரா மகாஜன் ஆகிய இருவரும் வழக்குரைஞர் களாக உள்ளதாகத் தெரி வித்துள்ளனர்.
உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தன்னை ஓர் ஆசிரியர் என்று கூறி உள்ளார். அதேநேரத்தில் முரளிமனோகர் ஜோஷி பேராசிரியர் என்று பதிவு செய்துகொண்டுள்ளார். முசாபர் நகர் கலவர வழக்கில் தொடர்புள்ளவ ரான சஞ்சய் பாலியான் அவரும் தன்னைப் பேரா சிரியர் என்று கூறி உள்ளார்.
காங்கிரசு கட்சித் தலைவரான சோனியா காந்தி அவரைப்பற்றிக் குறிப்பிடுகையில் அரசியல் மற்றும் சமூகப்பணியாளர் என்று குறிப்பிட்டுள்ளார். மத்திய அமைச்சரான மேனகா காந்தி தன்னை ஒரு எழுத்தாளர் என்று சில நூல்களை வெளி யிட்டதன்மூலம் கூறியுள் ளார். இந்திய கிரிக்கெட் வீரர் கீர்தி ஆசாத் தன்னை விளையாட்டு வீரர் என்று குறிப்பிட்டுள் ளார். ஒன்பது கலைஞர் கள், ஏழு திரைத் துறைக் கலைஞர்கள் உள்ளனர். முதன்முறை நாடாளுமன்ற உறுப்பினர் ஆகியுள்ளவ ரான பூனம் மகாஜன் தன்னை வணிகத்தில் ஈடுபட்டுள்ளவராக குறிப் பிட்டுள்ளார். திரிணாமுல் காங்கிரசு சவ்காதா ராய் தன்னை ஒரு கல்வியாள ராகக் குறிப்பிட்டுள்ளார்.
பாஜக யோகி ஆதித்ய நாத் தன்னை மத நிறு வனத்தைச் சேர்ந்தவர் என்று குறிப்பிட்டு உள் ளார். சசிதரூர் தன்னை ஒரு இராஜதந்திரியாகக் குறிப்பிட்டுள்ளார்.
Read more: http://viduthalai.in/e-paper/85069.html#ixzz39CBevJBi
மனிதத் தன்மை
மனிதன் நம்பிக்கை வழி நடப்பதை விட்டுவிட்டு அறிவின் வழிச் சென்று எதையும் சிந்திக்க வேண்டும். எதுவும் அறிவிற்கு நிற்கின்றதா என்று உரசிப் பார்க்கவேண்டும். அப்போதுதான் மனிதன் காட்டுமிராண்டி நிலையில் இருந்து மனிதத் தன்மை அடைய முடியும்.
- (விடுதலை, 13.8.1961)
Read more: http://viduthalai.in/page-2/85072.html#ixzz39CBwPfwe
கோரத் தீக்குத் தண்டனை!
பத்து ஆண்டுகளுக்கு முன் கும்பகோணத்தில் நடந்த ஒரு தீ விபத்தில் 94 குழந்தை மொட்டுகள் குரூரமாகக் கொல்லப்பட்டன என்பது இன்னும் நூற்றாண்டு கண்டாலும் மனிதத்தின் குருதியை உறையச் செய்யக் கூடியதுதான்.
இதுபோன்ற கொடுமைகளுக்குத் தண்டனை கூட - தீர்ப்புகூட 10 ஆண்டுகளுக்குப் பிறகுதான் கிடைக்கிறது என்பது ஆரோக்கியமானதல்ல - இந்தியாவின் நிர்வாக முறையும், நீதிமுறையும் எப்படி பிறழ்ந்து போயுள்ளன என்பதற்கு இதுவும் ஒரு முக்கிய எடுத்துக்காட்டே!
பள்ளியின் உரிமையாளர், தாளாளர், தலைமை ஆசிரியர், சத்துணவு அமைப்பாளர், சமையற்காரர் என்று தண்டனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
பள்ளி என்றால் இப்படியெல்லாம் கட்டுமானம் இருக்கவேண்டும்; எத்தனை எத்தனை வசதிகள் இடம் பெற்றிருக்க வேண்டும்; விபத்துக் காலங்களில் உயிர் பிழைக்க முன்னேற்பாட்டு வசதிகள் எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்பதற்கான சட்ட திட்டங்கள், விதி முறைகள் இருக்கத்தான் செய்கின்றன.
இவை எல்லாம் ஏட்டுச் சுரைக்காயே என்பது - இத்தகு விபத்துகள் விளக்கமளிக்கின்றன.
சத்துணவு சமைக்கும் மய்யம் கீற்றுக் கொட்டகையில் இருப்பதை அனுமதித்தது யார் என்பதுதான் முக்கியமே தவிர, சத்துணவுக் கூடத்தில் பணியாற்றும் ஏழைத் தாய்மார் தலையில் அது விடியலாமா என்பது முக்கிய கேள்வியாகும்.
பள்ளிக்கு அனுமதி அளித்தது - பள்ளியின் வரைபடம், பள்ளியின் கட்டுமானம் - இவை சரியாக இருக்கின்றதா என்பதை ஆய்ந்து சான்று அளிக்கும் அதிகாரிகள், பணம் ஒன்றே குறி என்று கருதி கல்வியையும் காசாக்கும் காரியத்தில் ஈடுபடும் கனவான்கள் இவர்கள்தான் உண்மையிலேயே குற்றவாளிகளின் பட்டியலில் வரவேண்டியவர்கள்.
இதில் இன்னொரு முக்கிய தகவலை காதும் காதும் வைத்தாற்போல கை கழுவப் பார்க்கிறார்களே - அது ஏன்?
அந்தக் கோர விபத்து நடந்த நாள் இந்து மதக் கண்ணோட்டத்தில் மிகவும் புனிதமான நாளாம் - ஆம் ஆடி வெள்ளியாம்! (அத்தகு நாளில்தான் இந்த அநியாயம் அரங்கேறியுள்ளது).
ஆடி வெள்ளியென்றால் கோவிலுக்குப் போக வேண்டுமே - கும்பிடுத் தண்டம் போட வேண்டுமே - அதுவும் ஆசிரியைகள் என்றால் கேட்கவா வேண்டும்?
பக்கத்தில் உள்ள கோவிலுக்குச் சென்று சாமி கும்பிட்டு வந்துவிடலாம் என்று திட்டமிட்டு, அதே நேரத்தில் பிள்ளைகள் வெளியில் வந்துவிடக் கூடாது என்ற பாதுகாப்பு தொலைநோக்கோடு வெளிக் கதவைப் பூட்டி விட்டுச் சென்றனர்.
ஆசிரியை வகுப்பறையைப் பூட்டி விட்டு கோவிலுக்குச் சென்ற அந்த நேரத்தில்தான் தீ விபத்து நடந்திருக்கிறது; பிள்ளைகளும் உள்ளேயே மாட்டிக் கொண்டு கோர மரணத்தைத் தழுவியுள்ளனர்.
இந்தச் செய்தியைப் பெரும்பாலான ஏடுகள் மறைத்தது ஏன்? ஏதோ தப்பித் தவறி தி இந்து (தமிழ்) ஏடு 9ஆம் பக்கத்தில் 16.7.2014 அன்று வெளி யிட்டுள்ளது.
பாழும் பக்தி பச்சிளம் பாலகர்களைப் பலி கொடுக்கச் செய்துவிட்டது என்று எடுத்துக்காட்ட, அதன் வழி விழிப்புணர்வை ஏற்படுத்த விடுதலை யை விட்டால் வேறு நாதியில்லை என்பதுதான் உண்மை.
இதற்குப் பிறகாவது எண்ணிப் பார்க்க வேண் டாமா? அதுவும் ஆடி வெள்ளி, கோவில் - கும்பிடு - இந்தச் சூழலில் இந்த விபத்து!
கடவுள் கருணை உள்ளவர் என்று சொன்னாலும் சரி, சர்வ சக்தி வாய்ந்தவர் என்று வருணித்தாலும் சரி, எங்கும் நிறைந்தவர் என்று உரத்தக் குரலில் பாடித் தொலைத்தாலும் சரி இவையெல்லாம் சுத்தப் பொய், கடைந்தெடுத்த கற்பனை என்பதை இப்படிப்பட்ட காரியம் நடந்ததற்குப் பிறகாவது சிந்திக்க வேண்டாமா?
இதனைச் சுட்டிக்காட்டி மக்களைத் தெளிய வைக்கும் ஒரு அறப் பணிக்கு ஊடகங்கள் முன்வர வேண்டாமா?
என்ன தண்டனையைக் கொடுத்தாலும் மாண்ட மழலைகள் மீளப் போவதில்லை என்றாலும், அரசுக் கென்று ஒரு பொறுப்புணர்ச்சி, கடமை உணர்ச்சி இருக்கிறதே - அதுதான் இழப்பீடு என்னும் கருணை யுள்ளம்; கூடுதல் கருணைத் தொகை கொடுக்க வேண் டும் என்பதில்தமிழ்நாடு அரசு எதற்காக எதிர்நிலை எடுத்து உச்சநீதிமன்றத்திற்குச் செல்ல வேண்டும்?
அதுவும் கல்லும் கரையும் இந்தப் பிரச்சினையிலா ஓர் அரசு இப்படி ஒரு நிலையை எடுப்பது? மறுபரி சீலனை செய்க!
Read more: http://viduthalai.in/page-2/85073.html#ixzz39CC52fTZ
உண்மையான உடைமை (சொத்து) எது?
மனிதர்களான நம்மில் பலரும் உடைமை என்றால் செல்வம் என்று பொருள் கொள்ளும்போது, பணத்தைத் தான் செல்வம் என்று குறுபொருள் கொள்கின்றனரே தவிர, அதைவிட விரிவானது - அழியாச் செல்வங்களான பல பண்புகள் என்பதை ஏனோ மறந்து விடுகின்றனர்!
வள்ளுவர் கருத்து எதில் அடங்கியுள்ளது என்று பகுத்தறிவுக் கண்ணோட்டத்தோடு, சிந்திக்கின்ற நேரத்தில், அவரது குறளில் உடைமை என்பவைகளை, மனிதர்க்கு இருக்க வேண்டிய பல பண்பு நலன்களையே (அழியாத செல்வம் - உடைமை என்று கூறுகிறார்!
1. அடக்கம் உடைமை
2. அருள் உடைமை
3. அறிவு உடைமை
4. அன்பு உடைமை
5. ஆள்வினை உடைமை
6. ஊக்கம் உடைமை 7. ஒழுக்கம் உடைமை
8. நாண் உடைமை
9. பண்பு உடைமை
10. பொறை உடைமை
குறளில் 133 அதிகாரங்களில் உள்ள தலைப்பில் உள்ள உடைமைகள் மேலே காட்டப்பட்டுள்ளவை.
ஒரு இலட்சிய மனிதன் - சிறந்த மனிதனின் பண்பு நலன்களில் இந்த பத்தும் இருக்க வேண்டும்; அப்படி இருந் தால் அவனை வெல்லுதல் யார்க்கும் அரிதினும் அரிதாகும்!
மனிதர்களில் எவ்வளவு உயரச் சென்றாலும் - பட்டம், பதவி, புகழ், பணம், பெருமை போன்ற நிலைகளில் - அவர்கள் அவ்வளவுக்கவ்வளவு அடக்கத்தினை அணியாய்க் கொண்டால் அவர்களின் வாழ்வு என்றும் சிறந்த வாழ்வாகும்.
அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் குடைபிடிப்பான் என்பது ஊரறிந்த ஒரு எளிய பழமொழியல்லவா? மனித அறிவுக்குத் தரும் முன்னுரிமை யைவிட அடக்கத்திற்கே வள்ளுவர் முதல் இடம் - முன்னுரிமையைத் தந்துள்ளார் என்பது மனிதர்கள் அறிவால் அளக்கப்படுவதைவிட, அதில் சிறந் தோங்கி அவர்கள் இருந்தபோதிலும் அத்தகையவர்களை அடக்கத்தால் அளக்க வேண்டுமென்று ஒரு அருமை யான வாழ்வியல் நியதியையும் கூறுகிறார்!
சொத்துக்கள் சேர்க்க மாளாது அலைந்து திரிபவர் எவராயினும், அவர் உய்ய, அவர்தம் வாழ்வு உயர சேர்க்க வேண்டிய பெரும் சொத்துகள் மேற்காட் டிய பத்து உடைமைகளே என்பதைப் புரிந்து; அவைகளைச் சேர்த்து, காத்து, பயன் பெற்று உயர்தலே ஒப்பற்ற பெரு வாழ்வு ஆகும்!
அடக்கத்தின் பெருமை, அடங்க அடங்கவே உயரும். எளிமையும், அடக் கமும் எவரிடம் ஏராளம் உள்ளதோ, அவரை வெல்லல் யார்க்கும் அரிது.
நிலையில் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது (குறள் 124)
தன் நல்லொழுக்க நிலையிலி ருந்து மாறுபடாமல், அடக்கமாய் நடந்து கொள்பவனுடைய உயர்ந்த தோற்றப் பொலிவு, தன்மை அடிப் படையில் மலையின் உச்சியைக் காட்டிலும் மிகவும் பெரியதாகக் கருதப்படும்
குடும்பம், நிறுவனம், இயக்கம், கல்வி அமைப்புகள், ஆட்சி இவை களில் பெரும் பொறுப்பில் இருப்பவர் களில் பலர் - இதனைக் கடைப் பிடிக்கத் தவறுவதாலேயே - அதாவது அடக்கமின்மை, ஆடம்பரம், அதி காரப் போதை, தன்னை அசைக்க இனி எவராலும் முடியாது என்ற இறுமாப்பு முதலியவை அவர்களை விரைவில் குழியில் தள்ளிவிடும் என்ற நிலையை நம் கண் எதிரிலேயே காண்கிறோமே!, இல்லையா? எனவே அடக்கத்தை, பிரியா உடைமையாகக் கொண்டு வாழுங்கள்.
- கி.வீரமணி
Read more: http://viduthalai.in/page-2/85075.html#ixzz39CCFDkoJ
இந்நாள்
ஆகஸ்டு 1ஆம் தேதி 1956
இராமன் படத்தை கொளுத்த ஆணையிட்ட நாள்
இராமன் கடவுள் அல்ல, இராமாயணக் கதையின் பாத்திரமான இராமன் ஒழுக்கமுள்ள ஒரு யோக்கியனல்ல எனக்கருதுபவர்கள் யாரும் நாட்டு நன்மையை சமுதாய சுயமரியாதையைக் கருதுபவர்கள் யாரும் இராமன் படத்தை கொளுத்தலாம். இந்த உரிமையை மக்களுக்கு உணர்த்துவ தற்காகத்தான் ஆகஸ்டு 1ஆம் தேதி இராமன் படம் கொளுத்தும் கிளர்ச்சி நாளாகக் கொண் டாட தமிழ்நாட்டு மக்கள் கேட்டுக் கொள் ளப்பட்டார்கள்.
அரசாங்கமும் நல்ல வாய்ப்பாக மக்கள் உரிமையில் பிரவேசிக்காமல் இராமன் படம் கொளுத்துவதன் மூலம் குழப்பம், கலவரம், பலாத்காரம் ஏற்படக்கூடாது என்று கருதி பொதுக்கூட்டத்தில் கொளுத்தக்கூடாது என்று கருதி, பொதுக்கூட்டத்திற்கும் அது சம்பந்தமான ஊர்வலத்திற்கும் தடை விதித்தது. என்றாலும் உரிமையுள்ள காரியம் நடைபெற்றால் கலவரம் உண்டாகும் என்று கருதினால், அதற்கு அரசாங்கம் பாதுக்காப்பு செய்ய வேண்டுமே ஒழிய காரியத்தைத் தடை செய்ய அல்ல என்பது என் கருத்து தெரிவித்து ஆணையிட்டு வெற்றி பெற்ற நாள்! இந்த நாள்!!
Read more: http://viduthalai.in/page-3/85079.html#ixzz39CE17oE5
அவதாரங்கள் அழிவு வேலைக்கே!
கடவுள் அவதாரங்கள் என்பதெல்லாம் எதற்காகத் தோன்றின! எதற்காகக் கற்பனை செய்யப்பட்டிருக்கின்றன! என்பதெல்லாம் தெரியுமா?
அவதாரங்கள் எல்லாம் அழிவு வேலைக்கே தோன்றி யவை என்பது முதலாவது உணரப்பட வேண்டும்!
திராவிடர்களை ஒழிக்க:
அவையாவும் ஆரியத்தை எதிர்த்து நின்ற திராவிடர் களை ஒழிக்கவே எதிர்ப்பு சக்திகளை ஒழிக்கவே தோன்றியவை! அல்லது தோற்றுவிக்கப்பட்டவை - அல்லது வேண்டுமென்றே கற்பனை செய்யப்பட்டைவை என்பது இரண்டாவதாக உணரப்பட வேண்டியதாகும்.
தசாவதார தத்துவமே அழிவு தத்துவந்தான். திராவிட கலாச்சார அழிவு தத்துவந்தான்! - திராவிட கலாச்சார ஒழிப்பு தத்துவந்தான்.
நம்மையும் ஒழித்திருப்பார்கள்:
மச்சாவதாரம் எடுக்கப்பட்ட காரணம் யாரோ ஒரு ராட்சதன் சாஸ்திரங்களை கொண்டுபோய் சமுத்திரத்தில் மறைத்துக் கொண்டான் என்பதுதான் நரசிம்ம அவ தாரத்துக்குக் காரணம்!
இரணியன் - விஷ்ணுவின் தலைமையில் புகுத்தப்பட்ட ஆரிய கலாச்சாரத்தை ஒப்புக்கொள்ள மறுத்தான். இராமா வதாரத்துக்குக் காரணம் இராவணன் ஆரிய பண்புகளான யாகத்தை தடைசெய்தான் ஆரியர்களின் பரவுதலைத் தடுத்தான் என்பதுதான்! இப்படியாக ஒவ்வோர் அவதாரமும் ஆரிய கலாச்சார எதிர்ப்புகளை ஒழிப்பதற் கென்றே ஏற்பட்டவையாகும்.
அதுபோலவே சிவன், கந்தன், முதலியவர்களும், இவர்களைப் பயன்படுத்தி அவர்களை ஒழித்ததுபோல் நம்மையும் ஒழித்திருப்பார்கள்!
10.1.1950 இல் சிதம்பரம் பொதுக்கூட்டத்தில் தந்தை பெரியார் ஆற்றிய சொற்பொழிவு
Read more: http://viduthalai.in/page-7/85061.html#ixzz39CFLWLCn
நகைப்பிற்கு இடமான நவராத்திரி
செப்டம்பர் அல்லது அக்டோபர் தமிழ் மாதங்களில் ஒன்றாக சொல்லப்படுகின்ற புரட்டாசி பெயரிலேயே ஒரு புரட்டு- என்று சொல்லப்படுகின்ற காலத்து மகாளய அமாவாசை என்ற இரவில் நிலா இல்லாத நாளில் அவாள் மொழிப்படி திதியில் மூதேவிகள் - அதாவது துர்கா, சரசுவதி மற்றும் இலட்சுமி ஆகிய இம் மூதேவிகளும் கொலு இருக்கின்றனராம்.
கொலுவிருப்பது ஏனோ?
மகிடாசுரன் என்பவனைக் கொல்ல அனைத்து தேவர்களாலும் ஆகவில்லையாம். மகிடாசுரனுக்கு எருமைத் தலையாம். இவனை ஏன் கொல்ல வேண்டுமென்றால் இவன் தேவர்களுக்கு கொடுமை இழைத்து வந்தனராம். எனவே அவனை தொலைத்துக் கட்ட தேவர்களால் கையாலாகாது போகவே பிரம்மா, சிவன், விஷ்ணு ஆகிய அனைத்து தேவர்களும் மேற்கண்ட இவர்களது மூதேவியரையும் தூண்டி ஏவி விட்டனராம்.
எனவே இவர்கள் அந்த மகிடாசூரனைக் கொல்ல கொலு விருந்தனராம். எல்லாருக்கும் எல்லா வரங்களும் தரும் தேவர்களுக்கு இது கையால் ஆகாமல் போனதேனோ? இதற்காக அவர்களது மூதேவிகளும் கொலுவிருப்பது ஏனோ? அது எப்படியோ இருக்கட்டும்.]
அசுரர் யார்?
முதலில் அசுரர் யாரெனப் பார்ப்போம். திராவிடர் அல்லது தமிழர்தான் அவர்களால் - தேவர்களால் அதாவது ஆரியர்களால் அதாவது பார்ப்பனர்களால் அசுரர் என்றும் இராட்சசர் என்றும் இன்னும் பல பெயர்களாலும் இழிவாக எண்ணி அழைக்கப்பட்டனர்.
இது வரலாற்று ஆதாரமுடையது. ஆரியர்களால் விரும்பி அருந்தி வரப்பட்ட சுராபானம் என்ற மதுவை மறுத்தவர்களே அசுரர் என அழைக்கப்பட்டனர். சுராபானம் என்ற பானத்தை அருந்தியவர்களே சுரர் அதாவது தேவர் - ஆரியர் - பார்ப்பனர்.
மகிடாசுரன் என்ற திராவிட மன்னனுக்கும் ஆரிய மன்னர்களுக்கும் இடையே நடை பெற்ற போராட்டங் களுக்காகவே இந் நவராத்திரி இருக்க வேண்டும். தேவிகளை அதிலும் பெண்களை விட்டே இவர்கள் தங்கள் காரியத்தைச் சாதித்துள்ளனர். தங்கள் போர் வெற்றிக்காக இம் மூதேவிகளும் இரவுகளில் ஒன்பது இரவுகளில் கொலு விருந்தனரென்றால் பகலில் என்ன செய்தனர்; பகலெல்லாம் படுத்து தூங்கினரோ?
ஆரியர்கள் குருக்கள்களாகவும் மற்றும் பல வழிகளிலும் கூட்டிக் கொடுத்தும், மன்னர்களில் ஒருவருக்கொருவரைக் காட்டிக் கொடுத்தும், அடிமைப் படுத்தியும் பணிய வைத்தும், மன்னர் தம் ஆணைகளாலும் குடி மக்களையும் ஒப்புக் கொள்ள வைத்தும் எல்லோரையும் தங்கள் செல்வாக்கைப் பயன்படுத்தி நம்ப வைத்துள்ளனர்.
இந்த மூதேவிகளுக்கும் ஒன்பது இரவுகள் என்றால் மைசூர் மன்னருக்கு ஒரு இரவு சேர்த்து தசரா! இவர் கடைசிநாளில் யானைமேல் அம் பாரியில் படைகள் புடை சூழ எங்கோ ஓர் மூலையில் அம்பு எய்கிறாராம். இன்னும் மற்ற மன்னர்கள் எப்படியோ?
ஆலயங்கள் பலவற்றில் உலா மூர்த்தி சிலையெடுப்புகள். ஊர் கடைசியிலோ எங்கோ ஓர் மூலையில் அம்பு சேர் வைகள் என்ற பெயரால் விழாக்கள் நடத்தப்படுகின்றன. இதில் இன்னொரு அசுரனும் வன்னி யாசுரன் என்ற பெயரால் குட்டி போடப்பட்டு விடு கிறான். வன்னிமரம் என்ற ஒரு மரத்தின் கிளைகளில் ஒன்றோ அல்லது அதன் தழைக் கொத்தோ சிறிது கொண்டு வந்து கட்டி வைக்கப்பட்டு சாமியின் பிரதிநிதி குருக்கள் ஒருவர் அம்பு எய்கிறார். மனிதன் இறந்தால் மீண்டும் வருவதில்லை; ஆனால் இந்த அசுரன்கள் ஆண்டுக்காண்டு சாமிகளுக்கு எதிரிகளாக வந்து கொண்டே இருக்கின்றனர்.
மற்ற தனி வேடிக்கைகள்
மற்றும் இப்புரட்டாசியில் சனி பிடித்தல், காலையில் நாராயணமூர்த்தி என பக்தி பிச்சையெடுத்தல்கள், திருப்பதி போன்ற மலைகளுக்குச் செல்லல், கரூரில் உள்ள தாந்தோணி மலைக்கு பக்தர் படையெடுப்பு! ஏற்ற பேருந்து வசதி இல்லாத காலத்தில் டிக்கெட் இல்லாத வரும் பக்தகோடிகளால் இரயில்வேயிக்கு ஆயிரக்கணக்கான ரூபாய் இந்தச் சனிக்கிழமைகளில் மட்டும் நட்டம் ஏற்படும்.
கேட் கதவுகள் எல்லாவற்றையும் முழுதும் திறந்து விட்டு கரூர் இரயில் நிலைய அலுவலர் பக்த கோடிக் கூட்டத்தைக் கண்டு ஒதுங்கிக் கொள்வார். ஆனால் இப்பொழுது எப்படியோ? நாமக்கல்லுக்கருகில் உள்ள நைனாமலைப் படிகள் நெட்டுக்குத்தானவை. தவறி விழுந்தால் வை குண்டம் நிச்சயம்.
படி வாசல்களுக்கு நெடுக டியூப் லைட்டுகள், பந்த நெருப்பெடுத்து பாரெல்லாம் ஒளி காட்டும் பெருமாள் குடி கொண்டுள்ள நைனாமலைப் படிக்கட்டுகளுக்கு டியூப் லைட்டுகள் ஏன்? இன்னும் நவராத்திரி நகைப்பிற் கிடமானவை என்னென்னவோ?
பா.வீ.சாது
Read more: http://viduthalai.in/page-7/85065.html#ixzz39CFUMjGb
தந்தை பெரியார் பொன்மொழி
இனத்தின் மானத்தைக் காக்க எவ்வகைத் துன்பத்தையும் பொறுத்துக் கொண்டு தொண்டாற்றத் தக்க குடிமகன் இல்லாத இனம் வேர்ப் பற்றில்லாத மரம்போல் - கோடாலிக் கொண்டு வெட்ட வேண்டிய அவசியம் இல்லாத மரம்போல் - தானாகவே விழுந்துவிடும்.
Read more: http://viduthalai.in/page-7/85065.html#ixzz39CFdeHHc
ஆரியர் - திராவிடர்
சதா காலமும், பார்ப்பனர்களை, நாம் தூஷிப்பதில்லை -அவசிய முமில்லை. ஒருமுறையைக் கண்டிக் கிறோமே தவிர, தனிப்பட்ட நபர் களையல்ல, மார்வாடிக் கடை என்று கூறும்போது எப்படி அதிக வட்டி வாங்கும் அனை வரையும் அந்தச் சொல் குறிக்கிறதோ அதுபோல, பார்ப்பனீயம் என்று கண்டிக்கும் போது பார்ப்பனர் மட்டுமல்ல, வர்ணாசிரம தர்மத்தை ஆதரிக்கும் பார்ப்ப னரல்லாதாரும் அந்தப் பட்டத்துக்கு உரியவர்கள் ஆகிறார் கள். எனவே பார்ப்பனர்களைத் தூஷிக்கிறோம் என்று எண்ணுவது தவறு.
********************
பார்ப்பனரை ஏன் கண்டிக்கிறோம்?
இனங்கள் பலப்பல காலமாக ஓரிடத்தில் வாழ்வதால் கலப்பு ஏற்படுவது இயல்பு என்ற பொது உண்மையை யாரும் மறுக்கவில்லை. ஆனால், எவ்வளவு காலமாக ஒன்றாக வாழ்ந்தும், கலந்தும்கூட, ஒரு கூட்டத்தினர் இன்னமும் தங்கள் மொழி, நடை, உடை, பாவனை ஆகியவைகளை, மற்றவர் களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டியும், உயர்வு என்று கூறியும் வருவதைக் காண்கிறோம்.
இந்தப் போக்கைக் கொண்டுதான். ஆரியர் - திராவிடர் என்று கூறுகிறோம்.
- அண்ணா 23.11.47 திராவிட நாடு கேள்வி பதில் பகுதி
Read more: http://viduthalai.in/page-7/85067.html#ixzz39CFnPudE
தந்தை பெரியார் பொன் மொழிகள்
மனிதனுக்கு மானமும் பகுத்தறிவும் இருக்கிறது. அது கண்மூடித்தனமான மிருகத் தன்மைக்கு ஏற்பட்டதல்ல. பகுத்தறிவை மனிதன் தப்பாகப் பயன் படுத்தியே அதிகமான தொல்லைக்குட்பட்டான்.
*********************
கழுதைக்கும் எருமைக்கும் 1000 ஆண்டுகளுக்கு முன்பு என்ன புத்தி இருந்ததோ அதே புத்திதான் இன்றும் உள்ளது. மனிதனோ, பகுத்தறிவைப் பயன்படுத்திச் சிந்தனை மூலம் வளர வேண்டியவன். அப்படி வளர்ச்சி அடையாமல் மிருகங்களைப் போல் பகுத்தறிவற்றவனாக இருக்கக் காரணம் என்ன? அவனது அறிவு வளர்ச்சியினைத் தடைப்படுத்திச் சாஸ்திரங்களையும், கடவுளையும், மதத்தையும், முன்னோர்கள் நடப்பையும் கொண்டு வந்து புகுத்தி விட்டார்கள்.
*********************
நமக்கு அறிவில்லை என்று எவரும் சொல்லிவிட முடியாது. தீட்சண்ய புத்தியும், கூர்மையான அறிவுமுடையவர்கள் என்பது நம் பழங்கலைகளையும் அவற்றின் திறனையுங் கண்டாலே தெரியும்.
ஆனால், நம் மக்களின் அறிவு மேலும் மேலும் பண்பட்டு வளர முடியாமல், கடவுள், மதம், சாஸ்திரம் என்பவைகளின் பேரால் அடக்கப்பட்டு விட்டது; சிந்திக்கும் உரிமையே அற்ற சிறிய மனிதர்களாக நம்மைச் செய்து விட்டது.
இந்தப்படியான சிந்திக்கும் தன்மையற்ற மக்களை மாற்றி அவர்களைச் சிந்திக்கத் தூண்டிச் சிந்தனைப் பாதையில் அழைத்துச் செல்வதுதான் திராவிடர் கழகம்.
Read more: http://viduthalai.in/page-7/85067.html#ixzz39CFyc6ei
முதல் அமைச்சர்மீதான அவதூறுக்குத் தமிழர் தலைவர் கண்டனம்
இன்றைக்கு ஆர்ப்பாட்டத்திற்குப் புறப்பட்டு வருகின்ற நேரத்தில் ஒரு செய்தி கிடைத்திருக்கிறது; என்னவென்று சொன்னால், அங்கே இலங்கை அரசு எந்த அளவுக்கு அதீதமாக நடந்து கொள்கிறது. சுப்பிரமணி சாமிகளும், சேசாத்திரி அய்யங்கார்களும் அங்கே சென்று அவர்கள் ஏதோ இந்திய அரசாங்கத்தின் சார்பாக அனுப்பப்படுகிறோம் என்று சொல்லக்கூடிய அளவுக்கு பச்சையாக - தமிழினத்தின் எதிரியாக அவர்கள் நடந்து கொள்கிறார்கள் என்பதற்கு அடையாளம், அங்கிருக்கிற பாதுகாப் புத்துறையில் இணையத்திலே கட்டுரை ஒன்றைப் போட்டிருக்கிறார்கள்.
அது என்னுடைய கையிலே இருக்கிறது. அதிலே ஒருவர் எழுதியிருக்கிறார். தமிழ்நாடு முதலமைச்சரை எவ்வளவு கொச்சைப்படுத்தி, எவ்வளவு கேவலப்படுத்தி, தரமற்ற வார்த்தைகளிலே ஆபாசமான, அவதூறான வார்த்தையிலே அவர்கள் வருணித்திருக்கிறார்.
எனவே நீங்கள் அடிக்கடி மீனவர்களுக்காக போராடுகிறீர்கள், மீனவர்களுக்காக நீங்கள் ஆதரவு காட்டுகிறீர்கள். மீனவர்களிடத்தில் பறிமுதல் செய்யப்பட்ட படகுகளையெல்லாம் திரும்பக் கொடுக்கச் சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் என்ன சொன்னாலும் பிரதமர் மோடி எங்கள் பக்கம் இருப்பாரே தவிர, உங்களை ஒரு போதும் மதிக்க மாட்டார். உங்களை ஒரு போதும் சீண்ட மாட்டார். நீங்கள் மீண்டும் மீண்டும் இப்படிப்பட்ட கடிதங்கள் - அந்த கடிதங்களுக்கு முன்னாலே சொல்லப்பட்டிருக்கின்ற வார்த்தை நான் இங்கே உச்சரிக்க விரும்பவில்லை. அவ்வளவு அருவருப்பான, ஆபாசமான, கேவலமான, சர்வதேச ரீதியிலே ஒரு அரசாங்கத்தினுடைய - இலங்கை அரசாங்கத்தினுடைய இணையதளத்திலே இடம் பெறக்கூடாது. அவ்வளவு அசிங்கமான ஒரு சொல். இப்படிப்பட்ட காரியம் நடந்து கொண்டிருக்கிறது. யாருடைய தைரியத்திலே இது நடந்து கொண்டிருக்கிறது?
தமிழ்நாட்டு முதலமைச்சரைப் பற்றி எங்களுக்கு பல்வேறு மாறுபட்ட கருத்துக்கள் இருக்கலாம். அதுவேறு செய்தி, அந்த உரிமையை நாங்கள் மாற்றிக்கொள்வோம் என்று பொருளல்ல. ஆனால் அதே நேரத்திலே, ஒன்றை நீங்கள் எண்ணிப்பார்க்க வேண்டும்.
தமிழ் நாட்டினுடைய முதலமைச்சரை விமரிசனம் செய்வதற்குக்கூட, அவர்களுக்கு உரிமை இருக்கிறதா என்பது கேள்விக்குரிய ஒன்று. அப்படியே செய்தாலும் கூட, நாகரிகமான முறையிலே அது நடைபெற வேண்டும். ஆனால் அசிங்கமான ஒரு மஞ்சள் ஏட்டிலே எப்படி எழுதுவார்களோ அதுபோல எழுதக்கூடிய அளவுக்கு எழுதியிருக்கிறார்கள். அதே நேரத்திலே மோடி அவர்களுக்கு நீங்கள் எத்தனைக் கடிதங்கள் எழுதினாலும் எங்கள் பக்கம் தான் இருப்பாரே தவிர, உங்களைப்பற்றி சீண்ட மாட்டார் என்றெல்லாம் அங்கேயிருக்கிற இலங்கை அரசினுடைய பாதுகாப்புத்துறை இணையத் திலே என் கையில் இருக்கிற இந்தக்கடிதம் சொல்லுகிறது. உலகம் முழுவதும் இணையத்தின் பயன்பாட்டில் இருக்கக் கூடியவர்கள், பார்க்கக் கூடியவர்களாக இருக்கிறார்கள். இவ்வளவு கேவலமாக நடந்து கொள் கிறார்கள் என்றால் ஏதோ அரசு மாற்றப்பட்டால் எல்லாமே மாறிவிடும் என்று நினைத்தார்களோ, அதைவிட ஏமாற்றம் வேறு இருக்கிறதா? என்று எண்ணிப்பார்க்க வேண்டும்.
- (சென்னை ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தலைவர்- 1-8-2014)
Read more: http://viduthalai.in/e-paper/85101.html#ixzz39I4avGNV
இலங்கையில் நடைபெற்ற போர்க் குற்ற
விசாரணையைத் தடுப்பது - ஏன்?
தமிழர் தலைவர் தொடுக்கும் வினா இன்னொரு முக்கியமான பிரச்சினை; அருகில் இருக்கக்கூடிய இலங்கையிலே, ஈழத் தமிழர்கள் வாழ் வுரிமை இழந்து படாத பாடுபட்டு, முள் வேலிக்குள்ளே அவர்களெல்லாம் இராணுவத்தால் எப்படியெல்லாம் சித்திரவதை செய்யப்பட்டு 90,000க்கும் மேற்பட்ட தமிழச்சிகள் விதவையாக இருக்கிறார்கள்என்ற கொடுமை களெல்லாம் சொல்லப்பட்ட நேரத்திலே, அய்.நா. சபை யினுடைய மனித உரிமை ஆணையத்தாலே நியமிக்கப் பட்டவர்கள் சென்று பார்த்து, அங்கே அவர்கள் போர்க் குற்றவாளிகள்தான் என்று முடிவு செய்யக்கூடிய அளவுக்கு அதைப்பற்றிய விசாரணை செய்வதற்கு வந்திருக்கக் கூடிய நிலையிலே, அதற்கு யார் யாரெல்லாம் தகவல் தெரிந்த வர்களோ, அவர்களிடத்திலே செய்தியை பரிமாறிக் கொள்ள வேண்டும். சாட்சியங்களை சரியாக பதிவு செய்ய வேண்டும் என்பதற்காக இங்கே இருக்கக் கூடிய அகதிகள் குடியேறியவர்கள், இவர்களிடத்திலெல்லாம் விசாரணை செய்வதற்கு மூவர் குழுவுக்கு இந்திய அரசு விசா மறுத் திருப்பதை விட வெட்கப்படக்கூடிய விசயம் வேறு கிடை யவே கிடையாது. இங்கே இருப்பது இலங்கை அரசினு டைய மறுபதிப்பா?
இலங்கை போர்க்குற்றவாளிகள் - அதுமட்டுமல்ல, அமெரிக்கா போன்ற நாடுகள் அதற்கான தீர்மானம் கொண்டு வந்து, பெரும்பாலான நாடுகள் ஆதரித்து அளித்த தீர்மானம் அய்.நா.வில் நிறைவேற்றி, அதற்குப் பிறகுதான் அந்தப்பணி தொடங்கியது. எனவே உலகம் முழுவதும் இருக்கக்கூடிய தமிழர்கள் மட்டுமல்ல, மனித உரிமை ஆர்வலர்கள் அத்தனை பேரும் இந்தக் கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்; ஈழத்தமிழர்களின் வாழ்வுரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்று சொல்லக்கூடிய நிலையில், அவர்களுக்காக பரிந்து பேசுவதைப்போல, முழுக்க முழுக்க அதை விசாரணையே செய்யக்கூடாது என்பது ஏதோ போர்க்குற்றமே நடக்கவில்லை என்பதைப்போல, ராஜபக்சே அரசுக்கு என்ன நிலைப்பாடோ, அதையே இங்கே இருக்கிற நரேந்திரமோடி தலைமையில் இருக்கக்கூடிய அரசு எடுக்கிறதென்றால், இதைவிட வேதனை, இதைவிட கண்டனத்திற்குரிய ஒன்று; இதைவிட வெட்கப்படக்கூடிய, அவமானகரமான - தேசிய அவமானம் வேறு இருக்க முடியாது. ஆகவே அதைக்கண்டித்து, அவர்களுக்கு விசா வழங்குங்கள் என்றுதான் இந்த ஆர்ப்பாட்டத்தின் இன்னொரு மிக முக்கியமான நோக்கம். அதுபோலவே மத்திய அரசு வெளியுறவுக் கொள்கை யிலே சென்ற காங்கிரஸ் அரசே பலமுறை பரவாயில்லை என்று சொல்லக்கூடிய அளவுக்கு இந்த 60 நாட்களிலே நடந்து கொள்கிறபோக்கு கூடாது மாறியாக வேண்டும். அது மாற்றப்படவில்லையானால், அதற்குக் கடும் விலையை மத்திய அரசு கொடுக்க வேண்டியிருக்கும். சர்வதேச ரீதியாக தமிழ்நாட்டு தமிழர்கள் மட்டுமல்ல. அகில உலகத்திலே இருக்கக்கூடிய தமிழர்கள் - புலம் பெயர்ந்த தமிழர்களாக இருந்தாலும் சரி, வெளிநாட்டிலே வாழுகிற தமிழர்களாக இருந்தாலும் சரி, அதோடு மனித உரிமை ஆர்வலர்களாக இருந்தாலும் சரி எல்லோரும் சேர்ந்த குரல் அது. அவர்களுடைய பிரதிபலிப்பு என்று தெளிவாக எடுத்துக்காட்டி, அதற்காகத்தான் முதல் கட்டமாக இந்தப் போராட்டம். இரண்டு முனைகளிலே நடந்து கொண்டிரு க்கிறது. ஒரு பக்கத்திலே சமஸ்கிருத வாரம் என்ற பெயராலே தமிழினத்தினுடைய தொன்மை பாதிப்பு; இன்னொரு பக்கத்திலே ஈழத்தமிழர்களின் வாழ்வுரிமை யிலே நடைபெற்ற அக்கிரமத்தை உலகம் தெரிந்து கொள் ளக்கூடாது என்பதற்காக திரையிட்டு மறைக்கக்கூடிய அளவிற்கு விசா வழங்க மறுக்கின்ற முயற்சி. இன்னொரு பக்கத்திலே இங்குள்ள மீனவர்களுக்கு இழைக்கக்கூடிய அநியாயங்கள், அவர்களுடைய வாழ்வாதாரத்தை பறிக்கக்கூடிய கொடுமை இருக்கிறது என்றால் அதை தட்டிக் கேட்கக்கூடாது. நாங்கள் எங்கள் இஷ்டத்திற்கு தான் செய்வோம். என்றால் முழுக்க முழுக்க மோடி அரசினுடைய ஆதரவு இருக்கிறது என்பதை இலங்கை அரசு வெளிப்படையாக சொல்லக்கூடிய கொடுமை. இவற்றுக்கெல்லாம் பரிகாரம் தேட வேண்டும், என்பதற்கா கத்தான் இங்கே திரண்டிருக்கிறோம் தோழர்களே!
ஆகவே இந்தப் போராட்டம் என்பது இன்றைக்கு ஒரு துவக்கம்தான் என்பதை மீண்டும் சொல்லி, மேலும் தேவைப்பட்டால் இந்தப் போராட்டம் பல வடிவங்களில் வெடிக்கும் என்பதை எடுத்து சொல்லுகிறோம்.
- (சென்னை ஆர்ப்பாட்டத்தில் - 1-8-2014)
Read more: http://viduthalai.in/e-paper/85101.html#ixzz39I4nkx00
இன்றைய ஆன்மிகம்?
நம்பிக்கை
நான் ஒருவன் மட்டும் தான் நரகம் அனுபவிக்கப் போகிறேன். ஆனால் பல்லாயிரக்கணக்கான வர் ஸ்ரீமந் நாராயண அஷ்டாக்ஷ்ர மகாமந் திரத்தாலே மோட்ச நிலை எய்துவார்களே! -என்கிறார் இராமானுஜர்.
ஆதிசங்கரரைக் கேட்டால் இதற்கு நேர் மாறாக சிவபெருமானை ஏற்றிக் கூறுவார். அது சரி - இவர் ஏன் நரகம் போக வேண்டும்? ஒருக்கால் இவர் நாராயண அஷ் டாக்ஷ்ர மகாமந்திரத்தை உச்சரிக்கவில்லையா? அல்லது அதில் நம்பிக்கை தான் இல்லையோ!
Read more: http://viduthalai.in/e-paper/85105.html#ixzz39I5BFB00
தாய்ப்பால் கொடுப்பீர்!
குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கொடுத்தால் மார்பகப் புற்று நோய் வருவதற்கு வாய்ப்புக் குறைவு என்று குழந்தைகள் மருத்துவர் ராகுல் யாதவ் கூறுகிறார்.
Read more: http://viduthalai.in/e-paper/85102.html#ixzz39I5Lj7Sn
தேவை புத்தி கொள்முதல்!
இப்பொழுதெல்லாம் கோயில்களுக்கு நடை பாதையாகச் செல்லும் ஒரு போக்குத் தலைதூக்கி நிற்கி றது. சாரை சாரையாக இரவெல்லாம் குடும்பம் குடும்பமாக நடந்து செல் வதைப் பார்க்க முடிகிறது. பழனி, சமயபுரம், மேல் மரு வத்தூர் என்று கதை நீள்கிறது.
தங்கள் கோயில்கள்மீது மக்களுக்கு மகத்துவம் ஏற்பட கோயில் நிர்வாகி களே விளம்பரங்கள் செய்து இதனை ஊக்குவிக்கின் றனர். சாலை விபத்துக்களில் இந்த பக்தர்கள் மரணம் அடையும் செய்தி ஏடுகளில் வந்த வண்ணம் உள்ளன. ஆனாலும் புத்தி கொள் முதல் பெறவில்லை இன்று வந்துள்ள செய்தி சமயபுரத் துக்குச் சென்ற இரு பக்தர் கள் லாரி மோதி மரணமாம்.
Read more: http://viduthalai.in/e-paper/85103.html#ixzz39I5afIbk
பகுத்தறிவு
பகுத்தறிவில்லாத எந்தச் சீவராசியும் தன் இனத்தை வருத்தி வாழ்வதில்லை. தன் இனத்தைக் கீழ்மைப்படுத்துவ தில்லை, தன் இனத்தின் உழைப் பாலேயே வாழ்வதில்லை. தன் இனத்தின்மீது சவாரி செய்வதில்லை. (குடிஅரசு, 26.5.1935)
Read more: http://viduthalai.in/page-2/85106.html#ixzz39I5pATDx
இரு வகையான பார்ப்பனீயத் தாக்கங்கள்
திராவிடர் கழகத்தின் சார்பில் நேற்று தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் (சென்னை, மதுரை, திருச்சிராப்பள்ளி, கோவை, சேலம், தஞ்சாவூர், புதுச்சேரி) இரு முக்கியப் பிரச் சினைகளை மய்யப்படுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
முதல் பிரச்சினை மத்தியில் உள்ள பிஜேபி ஆட்சி ஆகஸ்டு 7 முதல் 13 வரை சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் சமஸ்கிருத வாரம் கொண்டாடுவது பற்றியதாகும். இந்தியாவின் அரசமைப்புச் சட்டம் எட்டாவது அட்டவணையில் 22 மாநில மொழிகள் இடம் பெற்றுள்ளன இவற்றுள் ஒரு மொழி சமஸ்கிருதம் அவ்வளவுதான்; இந்த மொழியைத் தாய் மொழியாகக் கொண்ட எந்த மாநிலமும் இந்தியாவில் கிடையாது. இந்தியா முழுமையும் இம்மொழியைப் பேசுபவர்கள் 16412 பேர் மட்டுமே. சதவீதக் கணக்கில் கூற முடியாத அளவுக்குக் குறைந்த எண்ணிக்கை இது.
இது ஆரியப் பார்ப்பனர்களின் தாய்மொழி; இதனை அவர்களைத் தவிர, மற்றவர்கள் - சூத்திரர்கள் (பஞ்சமர்கள் உட்பட) படிக்கக் கூடாது என்பது சாத்திரத் தடையாகும். இப்படிப் பெரும்பான்மையான மக்கள் பேசக் கூடாது என்று ஆக்கப்பட்ட ஒரு மொழி செத்துப் போகாமல் வேறு என்ன செய்யும்? அதனால் தான் செத்த மொழி (ஞிமீணீபீ லிணீஸீரீணீரீமீ) என்ற பெயரை ஈட்டிக் கொண்டு விட்டது.
இந்த மொழியில் உள்ளவை எல்லாம் வேதங்கள், உபநிஷதங்கள், இதிகாசங்கள், புராணங்கள், ஸ்மிருதிகள் ஆகும். இவற்றில் கூறப்பட்டிருப்பவை எல்லாம் பிறப்பிலேயே உயர்வு - தாழ்வு கற்பிக்கும் - பேதங்களை உருவாக்கும் விஷயங்கள்தாம். வருண தர்மம் என்பதை நீக்கி விட்டால் சமஸ்கிருதம் வெறும் சுழியில்(Zero) ) தான் முடியும்.
அதனால்தான் இந்து மதத்தை அமெரிக்கா வரை கொண்டு சென்ற விவேகானந்தர்கூட மதக் கலவரங்களும் ஜாதி வேற்றுமைகளும் பல்குவதற்கு ஒரு பெருங் கருவியாய் இருந்ததும் இருப்பதும் சமஸ்கிருத மொழியேயாகும். சமஸ்கிருத மொழி நூல்கள் தொலைந்து போனால் இப்போராட்டங்களும் தொலைந்து போகும் என்று கூறினார். இந்தச் சமஸ்கிருதக் குடும்பத்தைச் சேர்ந்ததுதான் இந்தி மொழியும். இந்தக் காரணத்தால்தான் பார்ப்பனர்கள் எப்பொழுதுமே இவற்றை மக்கள் மத்தியில் புகுத்துவதில் கண்ணும் கருத்துமாக இருந்து வருகின்றனர்; இதனை சரியாக அடையாளங் கண்டு ஆரியப் பண்பாட்டுப் படையெடுப்பின் தந்திரமும், சூழ்ச்சியும் இதனுள் பதுங்கி இருக்கிறது என்பதை வெட்ட வெளிச்சமாக்கியது - தந்தை பெரியாரும் அவர்கள் கண்ட திராவிடர் இயக்கமும்தான்.
மத்திய அரசு என்றால் அனைத்து மாநிலங்களுக்கும் மக்களுக்கும் பொதுவாக இருக்க வேண்டுமே தவிர, குறிப்பிட்ட சமஸ்கிருத மொழியின்மீது தனிக் கவனம் செலுத்தி, மக்கள் பணத்தை அதற்காக வாரி இறைக்கக் கூடாது.
மத்தியில் உள்ள பிஜேபி ஆட்சி இந்துத்துவா கொள்கை யுடையது என்பதால் அதன் மொழியான சமஸ்கிருதத் துக்குக் கூடுதல் முக்கியத்துவத்தைக் கொடுக்கிறது என்பதுதான் மறுக்கப்படவே முடியாத உண்மையாகும்.
இந்த அடிப்படையில்தான் சமஸ்கிருதத்தை எதிர்த்துத் திராவிடர் கழகம் நேற்று ஆர்ப்பாட்டத்தை எழுச்சியுடன் நடத்தியது. ஆர்ப்பாட்டத்தின் இரண்டாவது நோக்கம் - ஈழத் தமிழர் பிரச்சினையை மய்யமாகக் கொண்டதாகும்.
அய்.நா.வின் மனித உரிமை ஆணையத்தில் நிறை வேற்றப்பட்ட தீர்மானத்தின்படி, மூவர் குழு ஒன்று நியமிக் கப்பட்டு, இலங்கையில் நடைபெற்ற போர்க் குற்றத்தை விசாரிக்கும் அதிகாரம் கொடுக்கப்பட்டது.
அந்தக் குழு இலங்கையில் மட்டுமல்லாது, இந்தியா போன்ற நாடுகளிலும் விசாரணை நடத்தும் அதிகாரம் கொண்டதாகும். ஆனால் இந்திய அரசு அந்தக் குழு இந்தியாவிற்கு வர விசா வழங்க மறுத்துள்ளது என்பது மிகவும் கொடுமையானது. பல்லாயிரக்கணக்கான ஈழத் தமிழ் ஏதிலிகள் அடைக்கலம் பெற்றிருப்பது இந்தியாவில் தானே!
அய்.நா.வில் அங்கம் வகிக்கக்கூடிய இந்தியா, அய்.நா.வின் மனித உரிமை ஆணையத்தின் முடிவை நிராகரிக்கிறது என்றால் இதன் பொருள் என்ன?
இன்னொன்று - இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களா கிய தமிழர்கள், இந்தியாவில் வாழக் கூடிய தமிழர்களின் தொப்புள் கொடி உறவினர்கள்; இதில் இந்தியாவுக்குக் கூடுதல் கடமையும், பொறுப்புணர்ச்சியும் உண்டு.
கடந்த காங்கிரஸ் ஆட்சிதான் ஈழத் தமிழர்க்கு விரோதமாக நடந்து கொண்டது என்றால், இன்றைய பிஜேபி ஆட்சியும், கடந்த ஆட்சியைவிட மூர்க்கத்தனமாக இதில் நடந்து கொள்கிறது.
காரணம் என்ன? இரு ஆட்சிகளிலுமே - இந்தப் பிரச்சினையை கையாளக் கூடியவர்கள் பெரும்பாலும் பார்ப்பனர்களே!
ஈழத் தமிழர்ப் பிரச்சினையில் சோ ராமசாமியாக இருந்தாலும் சரி, குருமூர்த்தியாக இருந்தாலும் சரி இந்து ராமாக இருந்தாலும் சரி, சுப்பிரமணிய சாமியாக இருந்தாலும் சரி சுஷ்மா சுவராஜாக இருந்தாலும் சரி, தமிழின வெறுப்பு என்ற நஞ்சை நெஞ்சில் கொண்ட பார்ப்பனர்களே! தமிழினம் என்று சொன்னாலே ஒரு இனம் தெரியாத கடும் வெறுப்பு!
இந்த அடிப்படையில்தான் திராவிடர் கழகத் தலைவர் - தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள்கூட, நேற்று சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்குத் தலைமை வகித்துப் பேசுகையில் கருத்துத் தெரிவித்தார். பொதுவுடைமைவாதிகள் எந்த ஒரு பிரச்சினையிலும் வர்க்க நிலை உண்டு என்று சொல்லுவது போல, இந்து ஆதிக்கம் உள்ள பார்ப்பனீய சமூக அமைப்பில், எதிலும் ஒரு வருண நிலை உண்டு - நுட்பமாகக் கணித்தால் இதன் பொருள் விளங்கும்.
திராவிடர் கழகம் நேற்று நடத்திய இரு பிரச்சினை களுக்கும் காரணம் என்பது பார்ப்பனீயமே!
மத்திய அரசின் நடவடிக்கைகளைக் கூர்ந்து கவனிப் போம் - அதற்கேற்ப நம் செயல்பாடுகளும் எதிர் காலத்தில் இருக்கும்; கழகத் தலைவர் இதனையும் நேற்று அறிவித் துள்ளார் என்பதை தோழர்கள் நினைவில் கொள்ளட்டும்!
Read more: http://viduthalai.in/page-2/85107.html#ixzz39I5x6tef
பிரான்சு நாட்டு பல்கலைக்கழக நூலகத்தில் தந்தை பெரியாரின் புத்தகங்கள்!
பிரான்சு நாட்டின் தலைநகர் பாரி சில் வசிக்கும் தமிழரான ந.கைலாசம் அவர்கள் 21.6.2014 அன்று 15 புத்தகங்களை கைலாசம் அறக் கட்டளை சார்பாக, யூனிவர்சிடேர் தே லாங்கு ஏ சிவிலைசேஷன் - நூலகத்திற்கு நன்கொடையாக அனுப்பியதாகவும், அனுப்பிய புத்த கங்களை பெற்றுக்கொண்ட நூலகத் தின் தமிழ்த்துறை பொறுப்பாளர் சுந்தரி கோபாலகிருஷ்ணன் இவை எங்கள் நூலகத்திற்கு வரும் வாசகர் களுக்கு மிகவும் உபயோகமாகவும் இருக்கும். இதற்கு எங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள் கிறோம் என்று 8.7.2014 அன்று பதில் கடிதம் அனுப்பி உள்ளதாகவும், அந்த கடித நகல்களுடன் இணைத்து கடந்த 15.7.2014 அன்று விடுதலை ஆசிரிய ருக்கு கடிதம் அனுப்பியிருந்தார்.
நூலகத்தின் தமிழ்த்துறைப் பொறுப்பாளர் சுந்தரி கோபால கிருஷ்ணன், ந.கைலாசம் அவர்களுக்கு அனுப்பியுள்ள பதில் கடிதத்தில் கைலாசம் அனுப்பி வைத்த புத்தகங் களுக்கான பட்டியலை இணைத் திருக்கிறார். அதில் தமிழர் தலைவர் கி.வீரமணி எழுதிய ‘Why I don’t believe in God, collected works of Periyar E.V.R.’, ‘Periyar 1000 Q & A’, ‘Bhagavad Gita myth & Mirage’ - - என்ற ஆங்கில நூல்கள் நான்கும், காந்தியார் கொலை, காமராஜர் கொலை முயற்சி சரித்திரம் என்ற தமிழ் நூல்கள் இரண்டும் ‘Untochability: History of Vaikam Agitation’ புரட்டு இமால யப்புரட்டு ‘Lemonde de demain’- என்று தந்தை பெரியாரால் எழுதப்பட்ட புத்தகங்களும் முறையே ஆங்கிலம், தமிழ், பிரெஞ்சு ஆகிய மொழிகளில் வெளியிடப்பட்டதும், கே.பி.பாலசுப்பிரமணியம் எழுதிய ‘Periyar E.V.Ramasamy’ - - என்ற பெயரில் வெளியான ஆங்கிலப் பதிப்பும், அறிஞர் அண்ணாவின் புத்தரின் புன்னகை தமிழ்ப் பதிப்பிலும், பொதுவுடமைத் தோழர் டி.ஞானய்யா அவர்கள் எழுதிய இந்துத்துவா பாசிசம் மற்றும் தகுதி - திறமை மோசடி என்ற தலைப்பில் தொகுக் கப்பட்ட கல்வி வள்ளல் காமராசரின் எழுச்சி உரைகள், பேராசிரியர் மஞ்சை வசந்தன் எழுதிய அர்த்தமற்ற இந்துமதம் - முதல் இரண்டு பகுதிகள் என்று 14 புத்தகங்களின் பட்டியலை கொடுத்திருக்கிறார்.
அத்தோடு நடேசன் கைலாசம் அவர்கள் மேற்கண்ட நூலகத்திற்கு அனுப்பி வைத்த மணி ஆர்ட்ர்க்கான சந்தா ரசீதையும் சேர்த்து (MR subs, period from July’ 2014 to June’ 2015 (Airmail)
அனுப்பி வைத்திருக்கிறார். ஆக மொத்தம் மேற்கண்ட 15 புத்தகங்கள் பிரான்சு நாட்டின் தலைநகரான பாரிசில் உள்ள யூனிவர்சிடேர் தே லாங்கு ஏ சிவிலைசேஷன் - நூலகத் திற்கு புதிதாக சேர்க்கப்பட்டிருக்கின் றன என்பதை நமது கவனத்திற்கு கொண்டு வந்திருக்கிறார்.
பெரியாரியலை உலகெங்கும் பரப்பும் பணியில் நடேசன் கைலாசம் செய்துள்ள இந்தப் பணியும் அவர் பாராட்டத்தக்கவர், மிகமுக்கியமான அங்கம் வகிக்கும் என்பதில் அய்ய மில்லை.
Read more: http://viduthalai.in/page-2/85108.html#ixzz39I6Ujk1U
மோடி அரசுக்கு இலங்கை அரசின் நற்சான்று பத்திரம்
கொழும்பு ஆக.2 இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு ஆதரவாக நடந்து கொள்வது எங்களுக்கு மகிழ்ச் சியளிக்கிறது, இதன் மூலம் இலங்கைக்கும் இந்தியாவிற்கு நீண்டகாலமாக இருந்து வந்த சிறிய பிணக்குகளும் களையப்படும் என்று இலங்கை நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சரும், அதிபருக்கான அரசியல் ஆலோசகருமான தினேஷ் குணவர்த்தனா கூறினார்.
சமீபத்தில் இலங்கைக்கு சென்ற இந்தியக்குழுவி னரின் அணுகுமுறைப் பற்றி பத்திரிகைக்கு பேட்டியளித்த ரமேஷ் குணவர்த் தன மோடி குறித்து கூறியதாவது இந்தியப்பிரதமரின் புதிய அணுகு முறையானது இலங்கை மற்றும் இந்தி யாவிற்கு நலன் மிக்க தாகவே அமையும் என்றும், சுப்பிரமணியசாமி தலை மையினாலான குழு இலங்கை வந்து மோடியின் அயலுறவுக்கொள்கை குறித்து எங்களிடம் பகிர்ந்து கொண் டனர். இலங்கை மற்றும் இந்தியா விற்கான வர்த்தக நலனுக்கான மோடி நல்ல பல திட்டங்களை விரைவில் அறிவிப்பார் என்றும் உறுதியளித்தனர் என்றார். இந்தியாவின் இந்த மாற்றம் எங்களுக்கு மிக வும் மகிழ்ச்சியளிக்கிறது என்று கூறிய அவர் அய்க்கிய நாடுகள் குறித்த விசாரணை பற்றி கூறும் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ அல்லது வடக்கில் வாழும் பொது மக்களோ ஐக்கிய நாடு களின் விசா ரணைக் குழுவுக்கு சாட்சியமளித்தால், அது குறித்து நாங்கள் ஆச்சரியமடைய மாட்டோம். காரணம் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் மற்றும் வடக்கில் வாழும் பலரும் எப்போதும் இலங் கைக்ககாகவும் இலங்கையின் வளர்ச்சிக் காகவும் மக்களுக்கு எதி ராகவும் தான் செயல்பட்டு வந்ததனர்.
அவர்களின் செயல்பாடுகள் சுயநலத்திற்காகவும், அயல்நாட்டில் வாழும் சில இனவாதக் குழுக்களின் ஆதரவாளர்களுக்கு ஆதரவாகவும் தான் இருக்கும் என்றார். மத்தியில் ஏற்படும் மாற்றம் காரணமாக தமிழக அரசியல் கட்சிகளும் இலங்கைக்கு இணக்கமான நடவடிக்கையில் இறங்கு வார்கள் என்று இலங்கை அரசு நம்பு கிறது என அவர் கூறினார்.
Read more: http://viduthalai.in/page-2/85109.html#ixzz39I6dTIYu
இந்நாள் : தஞ்சை ஆப்ரஹாம் பண்டிதர்
இந்நாள்
தஞ்சை ஆப்ரஹாம் பண்டிதர்
(தோற்றம்: 02.08.1859 - _ மறைவு: 31.08.1930)
இசை என்றாலே அது தெலுங்குக் கீர்த்தனைகள் மற்றும் வடமொழிக்கு மட்டுமே உரித்தானது எனும் அறியாமை நோய் தமிழர்கள் மத்தியில் விரவிக் கிடந்த காலத்தில் அதனை பொய்யென உணர்த்தும் வகையில் தமிழ் இசையின் பாரம்பரியத்தையும் அதன் மேன்மை மற்றும் தகுதியை உலகறியச் செய்தவர்.
தஞ்சை ஆப்ரகாம் பண்டிதர்
பெயரில்தான் தஞ்சை ஒட்டிக்கொண்டதே ஒழிய பண்டிதர் பிறந்தது திருநெல்வேலி மாவட்டத்தில் தென்காசி அருகில் உள்ள சாம்பவர் வடகரை. தந்தை முத்துசாமி நாடார், தாய் அன்னம்மாள் இளம் வயதிலேயே சடையாண்டிப் பத்தரிடம் இசை கற்றார். தாமே பாடல்கள் இயற்றி இசை யோடு பாடும் ஆற்றல் பெற்றார். தன் பள்ளிக் கல்வியைப் பன்றிக்குளம், சுரண்டை ஆகிய சிறிய ஊர்களில் துவக்கிய ஆப்ரகாம். பிற்பாடு திண்டுக் கல்லில் இருந்த நார்மல் ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் பயின்று ஆசிரியராக உருவாக்கம் பெற்றார். இக்காலத்தில் சுருளி மலையிலிருந்த கருணானந்த யோகியிடம் சித்த மருத்துவம் பயின்றார். சித்த மருத்துவத்தில் ஆழ்ந்த அறிவு மிக்கவராக இருந்த காரணத்தால் இவரை மக்கள் பண்டுவர் என்றும் அழைத்தனர். அந்தப் பண்டுவரே பிற்பாடு மெல்ல மருவி பண்டிதராக மாற இவரது வாழ்வும் அப்பெயருக்கு சாலப் பொருந்தியது. சித்த மருத்துவத்தில் இவர் கண்டுபிடித்த மருந்து வெளிநாடுகளிலம் புகழைப் பெற சட்டெனத் தன் ஆசிரியப் பணியை உதறித்தள்ளி முழுமூச்சுடன் அப்பணியில் இறங்கினார்.
தஞ்சாவூரில் கிட்டத்தட்ட 100 ஏக்கர் நிலத்தை வாங்கி அதில் மூலிகை களைப் பயிரிட்டு வளர்க்கத் துவங்கினார். தஞ்சை மண் இவருக்கு மீண்டும் இசையின் மீதுதான் நாட்டத்தை உண்டாக்கியது. இசையென்றாலே அனைவரும் மும்மூர்த்திகளின் தெலுங்கு கீர்த்தனைகளையே திரும்பத் திரும்பத் பாடுவதை எண்ணி வேதனை கொண்டவர். தமிழில் இசைக்கும் பலவித பாடல்களைப் புனையத் துவங்கினார். சொல், சுரம், தாளம் என எப்பிழைவும் இல்லாமல் இவர் உண்டாக்கிய பாடல்களின் மொத்த எண்ணிக்கை 96.
இதன் அடுத்தக்கட்ட முயற்சியாக முழுக்க முழுக்கத் தமிழிசை குறித்து கருணாமிர்த சாகரம் எனும் 1200 பக்க நூலை எழுதத் துவங்கினார். மொத்தம் 712 புலவர்களைப் பற்றிய குறிப்புகள் இப்புத்தகத்தில் காணப்படுகின்றன. தமிழிசை வரலாற்றில் அளப்பரிய சாதனையாகக் கருதப்படும் இப்புத்தகம் மொத்தம் இரண்டு பாகங்களாக எழுதப்பட்டு ஒவ்வொன்றும் நான்கு பாகங்களாக பகுக்கப்பட்டிருந்தது. பண்டிதர் 1912இல் எழுதத் துவங்கிய இப்புத்தகத்தை மொத்தம் பதினைந்து ஆண்டுகளாக இரவு பகலாகக் கடும் உழைப்பை அர்ப்பணித்து 1917இல் முடித்தார். இதற்காகவே தமிழ் நாட்டில் மின் விசையால் இயங்கும் முதல் அச்சகத்தை தஞ்சாவூரில் நிர்மாணித்தார். 1912இல் சங்கீத மகாஜன வித்யாசங்கம் எனும் அமைப்பை உருவாக்கி அதன் மூலம் தஞ்சையில், தன் சொந்த செலவில் மொத்தம் ஏழு இசை மாநாடுகள் இவைதான். இந்த இசைப்பணியில், தான் மட்டும் கரையாமல் தன் வாரிசு களையும் முழுவதுமாக இறக்கி தனக்குப் பிறகும் அச்சேவையைத் தொடரச் செய்தார். இவரது சேவையைப் பாராட்டி அப்போதைய பிரிட்டிஷ் அரசு இவருக்கு ராவ் சாகிப் பட்டம் வழங்கி கவுரவித்தது. தமிழக அரசு தஞ்சையில் ஒருவீதிக்கு தஞ்சை ஆப்ரஹாம் பண்டிதர் தெரு எனும் பெயர் சூட்டியுள்ளது.
Read more: http://viduthalai.in/page-3/85118.html#ixzz39I6sM24I
கண்டன ஆர்ப்பாட்ட முழக்கங்கள்!.
1. வாழ்க வாழ்க வாழ்கவே!
தந்தை பெரியார் வாழ்கவே!
2. வாழ்க வாழ்க வாழ்கவே!
அன்னை மணியம்மையார் வாழ்கவே!
3. வெல்க வெல்க வெல்கவே!
திராவிடர் கழகம் வெல்கவே!
4. ஆர்ப்பாட்டம், ஆர்ப்பாட்டம்
திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம்!
5. கண்டிக்கிறோம், கண்டிக்கிறோம்
சமஸ்கிருத ஆதிக்கத்தை
சமஸ்கிருத ஆதிக்கத்தை
கண்டிக்கிறோம், கண்டிக்கிறோம்!
6. செத்துப் போன செத்துப் போன
சமஸ்கிருதத்துக்கு, சமஸ்கிருதத்துக்கு
சிங்காரமா? சிங்காரமா?
கொண்டாட்டமா? கொண்டாட்டமா?
7. சமஸ்கிருதம் என்று சொல்லி
சமஸ்கிருதம் என்று சொல்லி
திணிக்காதே! திணிக்காதே!
பார்ப்பனீயக் கலாச்சாரத்தை
பார்ப்பனீயக் கலாச்சாரத்தை
திணிக்காதே! திணிக்காதே!
8. மனித உரிமை ஆணையம்
மனித உரிமை ஆணையம்
நியமனம் செய்த நியமனம் செய்த
விசாரணைக் குழுவினை
விசாரணைக் குழுவினை
தடுக்காதே! தடுக்காதே!
9. மத்திய அரசே, மத்திய அரசே!
துணை போகாதே, துணை போகாதே!
கொடுங்கோலன் ராஜபக்சேவுக்கு
கொடுங்கோலன் ராஜபக்சேவுக்கு
துணை போகாதே, துணை போகாதே!
10. பணி முடிப்போம், பணி முடிப்போம்
தமிழர் தலைவர் தலைமையிலே
தமிழர் தலைவர் தலைமையிலே
தந்தை பெரியார், தந்தை பெரியார்
பணி முடிப்போம், பணி முடிப்போம்!
11. வாழ்க வாழ்க வாழ்கவே!
தந்தை பெரியார் வாழ்கவே!
வெல்க வெல்க வெல்கவே
திராவிடர் கழகம் வெல்கவே!
- திராவிடர் கழகம்
Read more: http://viduthalai.in/page-4/85114.html#ixzz39I7QlyRl
கதர்
கதர் பிரச்சாரத்தின் பலனால் வேஷக்காரர்கள் டெம் பரரியாய் கதர் கட்ட ஆரம்பித்து எப்போதும் வழக்கமாய் கதர் கட்டி வந்தவர்களுக்கும் கதர் கிடைக்க வழி இல்லாமல் போய் வேறு துணி கட்ட நிர்பந்தப்படுத்தி விட்டது.
இது ஒரு புறமிருக்க கதர் வியாபாரிகள் இந்த சமயத்தில் அடிக்கின்ற கொள்ளைக்கு அளவில்லை. துணியோ சாணித்துணிக்கும் உதவாது.
விலையோ டக்காமசிலினுக்கு மேல் விற்கப்படுகின்றது. பஞ்சு விலை கண்டி1.க்கு 320 ரூபாயிலிருக்கும் போதும் நூற்புக் கூலியும் நெசவுக் கூலியும் அரிசி ரூ. 1க்கு இரண்டரை பட்டணம் படி விற்றுக் கொண்டும் இருந்த போது போட்ட விகிதப்படியே இப்போதும் விற்கின்றார்கள்.
இப்போது பஞ்சு பாரம் 150 முதல் 160ரூக்குள் மிக்க சவதமாக இருக்கின்றது. அரிசி ரூ. 4 பட்டணம் படிக்கு மேலாகவே விற்கின்றது.
520 ராத்தல் கொண்ட பாரம் பஞ்சு 160 ரூ. விலையானால் பவுன் ஒன்றுக்கு 8 அணாவே பஞ்சு விலை அடங்கும்.
10 கிராம் உள்ள 50 இஞ்சு பீசு 3 ராத்தல் அல்லது மூன்றேகால் ராத்தல் இடை இருக்கும். இந்த மூன்றேகால் ராத்தலுக்குக் கிரயம் ரூ 1 - 10 - 0 நூற்பு கூலி ரூ 1. நெசவு கூலி 1 - 14 ஆக 10 கஜத்திற்கு ரூ 4 - 8 - 0 ஆகும்.
சிலவும் லாபமும் 5 அணா சேர்த்தால் 4 - 14 - 0 க்கு விற்கவேண்டியது நியாயமாகும். இப்போது 10 கஜம் 6 ரூபாயிக்கு மேலாகவே விற்கப்படுகின்றது. ஈரோட்டில் 6-8-0க்கும் கூட கிடைப்பதில்லை.
ஆகவே தேசிய கிளர்ச்சியின் பயனாய் பல வியாபாரிகள் இன்சால் வென்டாகவும் பல வியாபாரிகள் கொள்ளையடிக்கவும்தான் வழியேற்படுவதைத் தவிர மற்றபடி உண்மையான பலன் ஒன்றையும் ஏழைகள் அனுபவித்ததாகத் தெரியவில்லை,
- குடிஅரசு - துணைத்தலையங்கம் - 27.07.1930
Read more: http://viduthalai.in/page-7/85143.html#ixzz39I7mjxXt
தந்தை பெரியார் பொன்மொழிகள்
உன் தெய்வ மொழி நீ வணங்கும் உன் கடவுளுக்கே பிடிக்கவில்லையே? அப்புறம் என்ன தெய்வ மொழி வெங்காய மொழி. என்னென்னமோ சிறப்புச் சொல்கிறாய். இருந்தும் நமக்கு மானம் வரும்படியான, அறிவு வரும்படியான ஒரு நூல் தமிழில் இல்லையே.
பார்ப்பானுக்கும், பணக்காரனுக்கும் இருந்து வந்த மரியாதை குறைந்ததே ஒழிய இன்னும் ஆதிக்கம் ஒழியவில்லையே! சமதர்மம் என்றால் பார்ப்பான் ஒழிப்பும், பணக்காரன் ஒழிப்பும் தானே? பார்ப்பான் ஆதிக்கம் ஒழியாதவரை உண்மையான சமதர்மம் காணமுடியாது.
மக்கள் உலகம் முழுவதும் ஒன்றுபட வேண்டும்; மற்ற ஜீவன்களுக்குத் தன்னால் கெடுதி இல்லாத வாழ்வு பெறவேண்டும். மனிதனிடத்தில் பொறாமை, வஞ்சகம், துவேசம், கவலை, துக்கம் ஏற்படுவதற்கு இடமில்லாது சாந்தி வாழ்வுக்கு வகை தேட வேண்டும். இது தான் எனது ஆசை
Read more: http://viduthalai.in/page-7/85143.html#ixzz39I7uPl3J
சிங்கப்பூரில் சுயமரியாதைச் சங்கம்
உண்மைத் தர்மம்
மலாய் நாட்டின் முக்கிய பட்டணமாகிய சிங்கப்பூரில் தமிழர் சீர்திருத்தக் காரர்கள் சங்கம் என்பதாக ஒரு சுயமரியாதைச் சங்கம் ஏற்படுத்தப் பட்டிருப்பதைப் பற்றிய விவரம் மற்றொரு பக்கம் பிரசுரித்திருக்கின்றோம்.
இதற்காகக் கூட்டப்பட்டுள்ள முதல் கூட்டத்திற்கு அவ்வூர்ப் பிரமுகர்கள் சுமார் 150 பேர்களுக்கு மேலாகவே கூட்டினதும், தலைமை வகித்த திரு. ராம சாமியார் பேசிய தலைமைப் பேருரைப் பேச்சுகளும் மிகவும் குறிப்பிடத் தக்கதாகும்
அதாவது சங்கத்தின் நோக்கங்களைக் குறிப்பிடுகையில்,
1. மக்கள் பிறவியில் உயர்வு தாழ்வு கற்பிக்கும் வருணாச் சிரம தர்மத்தையும், தீண்டாமையையும் ஒழித்தல்.
2. பெண்களுக்கு உரிமை அளித்தல்.
3. அறிவு விருத்திக்கான கல்வியைப் போதித்தல்.
4. சிக்கன முறையைக் கைகொள் ளுதல்.
5. அறிவிற்குப் பொருத்தமற்ற பழக்க வழக்கங்களை நீக்குதல்.
என்று சொன்னதிலிருந்து அவை கள் சுயமரியாதைக் கொள்கைகளை எவ்வளவு நுட்பமாக உணர்த்திச் சொல்லப்பட்ட உரைகள் என்பது யாவருக்கும் எளிதில் விளங்கும். தவிரவும் சிங்கப்பூரில் நிறுவப்பட்ட சங்கங்கள் அனேகம் உடனுக்குடன் மறைந்து போவதற்குக் காரணம் அச்சங்கங்களுக்கு ஒரு சொந்த இடம் இல்லாததே என்று குறிப்பிட்டு விட்டு அதற்காக தானும் திருவாளர் பி. கோவிந்தசாமி செட்டியாரும் சேர்ந்து ஒரு கட்டிடம் வாங்கி உதவுவதாய் அக்கூட்டத்திலேயே வாக்களித் திருப்பதானது அவர்களின் பரோபகார எண்ணத்தையும் உண்மைத் தர்மத்தை உணர்ந்திருக்கும் உணர்ச்சியையும் காட்டுகின்றது. மலாய் நாட்டில் எங்கு பார்த்தாலும் சீனர்களுக்கு ஒரு பொது இடம் இருப்பதை நமது சுற்றுப் பிரயாணத்தில் கண்டோம்.
ஆனால் அங்கு இந்தியர்களுக்கு எங்கு பார்த்தாலும் கோவிலும் பூஜையும் தான் பார்க்க முடிந்ததே ஒழிய ஒரு தனிப் பொதுக் கட்டிடம் நமது கண்களுக்குத் தென்படவே இல்லை. இதை எதற்காக எடுத்துக் காட்டுகின்றோமென்றால் இந்தியர்களின் அறிவே, பொது நலம் என்றால் பொதுதர்மம் என்றால் கோவிலைக் கட்டி குழவிக் கல்லை நட்டு கும்பாபிஷேகம் செய்து அதில் முட்டிக் கொள்வதே தான் என்று கருதி இருக்கிறார்கள்.
ஆனால் நமது உயர் திருவாளர்கள் ஓ. ராமசாமி நாடார் அவர்களும், பி.கோவிந்தசாமி செட்டியார் (நாயுடு) அவர்களும் சேர்ந்து சுமார் 15 ஆயிரம் அல்லது 20,000 ரூபாய்க்குள் ஒரு கட்டிடம் வாங்கி உதவுவதாய் தீர்மானித்து இருப்பதிலிருந்து கோவிலுக்குப் பணம் போடுவது முட்டாள்தனம் என்பதை நன்றாய் உணர்ந்து விட்டார்கள் என்றே தெரிகின்றது.
இக்கட்டிடமும் சங்கமும் நிரந்தரமாய் இருந்து அதன் கடமைகளைச் செய்ய வேண்டுமானால் அதற்குச் சிறிது பண்டுத் தொகையும் இருக்க வேண்டும் என்பதே நமது அபிப்பிராயமாகும். அதற்கும் திரு. நாடார் அவர்கள் முயற்சிப்பார்கள் என்றே நம்புகின்றோம்.
இவ்விஷயத்தில் பார்ப்பன சூழ்ச்சி யும், அவர்களது தாசர்களது தொல்லை களும் தடைகளாக ஏற்பட்டாலும் ஏற்படலாம். ஆனால் அவர்களுக் கெல்லாம் நமது நாடாரவர்கள் சிறிதும் பயப்படமாட்டார் என்பது நமது உறுதியாகும். எப்படியெனில், திரு. நாடாரவர்கள் முடிவுரையில்,
நமது இயக்கத்திற்கு எவ்வளவுக் கெவ்வளவு எதிர்ப்பு ஏற்படுகிறதோ, அவ்வளவுக் கவ்வளவு பலமாகவும், வேக மாகவும் இயக்கம் பரவும்.
என்று சொல்லியிருப்பதிலிருந்து எதிர்ப்புகளையும், தடுப்புகளையும் வரவேற்கின் றார் என்பது நன்றாய் விளங்குகின்றது. மற்றும் சுயமரியாதை வீரர்களான கோ. சாரங்கபாணி, அதிசயம், எ. கோபால், அ. ராஜகோபால் முதலியவர்களும் மற்றும் திருவாளர்கள் வெ.சோமசுந்திரம் செட்டியார், கோ. ராமலிங்கத் தேவர், அ.சி.சுப்பையா, கா. தாமோதரனார், ரா. து. கோவிந்தசாமி, மு. ரெ. முத்துக் கண்டியர், த.வ.குமாரசாமி, ச.குப்புசாமி, பு.ரா.கோவிந்தசாமி, ரெ.திருவேங்கிடம், அ. க. நாராயணசாமி, எ. ஆ. சிவராய பிள்ளை ஆகியவர்களும் இம் முயற்சியில் ஈடுபட்டிருப் பதைப் பார்க்க இச்சங்கமானது சிங்கையில் தலை சிறந்து விளங்கி ஒரு செல்வாக்குப் பொருந்திய பொது நல தாபனமாக இருக்கும் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை.
ஆகவே வெகு சீக்கிரத்தில் இச்சங்கத்திற்குக் கட்டிடம் முதலியவைகள் ஏற்பட்டு திறப்புவிழா நடந்து பிரச்சாரம் துவக்கப்படும் என்று உறுதியாய் நம்புவதுடன் இந்திய தாழ்த்தப்பட்ட - கொடுமைப்படுத்தப்பட்ட - இழிவு படுத்தப்பட்ட - மக்களின் சார்பாக மேல்கண்ட நண்பர்களுக்கு நமது மனம் நிறைந்த நன்றியறிதலைச் செலுத்துகின்றோம்.
- குடிஅரசு - தலையங்கம் - 27.07.1930
Read more: http://viduthalai.in/page-7/85145.html#ixzz39I83seBq
தந்தை பெரியார் பொன்மொழி
ஜாதி ஒழிப்பது என்பது இன்று சட்டத்தின் மூலம் முடியாது என்று ஆகிவிட்டது. கிளர்ச்சி மூலம்தான் முடியும். வெள்ளைக்காரனிடமிருந்து பார்ப்பான் கைக்கு அதிகாரம் வந்ததும் முதலில் அரசியல் சட்டத்தில் மூலாதார உரிமையாக மதத்தையும் ஜாதியையும் காப்பாற்றுவது என்று போட்டுவிட்டான்.
Read more: http://viduthalai.in/page-7/85145.html#ixzz39I8D62gz
முதல்வர்மீது அவதூறு: கலைஞர் கண்டனம்
சென்னை, ஆக.2_ இலங்கை சிங்கள அர சின் பாதுகாப்புத் துறையின் அதிகாரப்பூர்வ மான இணைய தளத்தில் தமிழக முதல மைச்சரை இழிவுபடுத்தும் வகையில் எழுதப் பட்டுள்ள தகவல் அறிந்த தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள், அச்செயலை வன்மை யாகக் கண்டித்து நேற்று (1.8.2014) மாலை அறிக்கையொன்று வெளியிட்டார்
அறிக்கையில் குறிப்பிட்டு இருப்பதாவது:_
இலங்கை சிங்களவாத அரசின் பாது காப்புத் துறையின் அதிகாரப்பூர்வமான இணைய தளத்தில், தமிழக மீனவர் பிரச் சினை தொடர்பாக எழுதப்பட்டுள்ள கட் டுரை ஒன்றில், தமிழக முதலமைச்சரை அநாகரிகமாக இழிவுபடுத்தும் வகையில் எழுதப்பட்டுள்ளதாக இன்று (1.8.2014) மாலை ஏடுகளில் செய்திகள் வந்துள்ளன.
அ.தி.மு.க. தலைவருக்கும், நமக்குமிடையே எத்தனையோ கருத்து வேறுபாடுகள் இருப் பினும், அவர் தமிழக மீனவர்களின் இன் னல்களைக் களையும் விதத்தில் பிரதமருக்கு எழுதிய கடிதங்களைக் கொச்சைப்படுத்தும் அளவுக்கு சிங்கள அரசினர் ஈடுபட்டிருக் கிறார்கள் என்பதிலிருந்து சிங்கள அரசின் நடவடிக்கைகள் எப்படிப்பட்டவை என்பதை யாவரும் புரிந்துகொள்ள முடியும்.
பொதுவாக இதுபோன்ற இழிவான விமர்சனங்களை தி.மு.க. எப்போதுமே ஆதரிப்பதுமில்லை. அந்தக் கடுமொழி களை, இழிமொழிகளைக் கண்டிக்கத் தவறி யதும் இல்லை. அப்படிப்பட்ட சிங்கள அரசுக்கு ஆதரவாக இந்திய அரசு நடந்து கொள்ளக்கூடாது என்றுதான் தமிழகத்தின் சார்பில் அனைத்துக் கட்சியினரும் தொடர்ந்து மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்து வருகிறோம்.
அந்தக் கட்டுரை இழிவு படுத்தியிருப்பது தமிழக முதலமைச்சரை மட்டுமல்ல; இந்திய நாட்டுப் பிரதமரையும் தான் இழிவுபடுத்தியிருக்கிறது என்ற எண்ணத்தோடு, இந்தப் பிரச்சினையில் மத்திய அரசு உடனடியாகத் தலையிட்டு தன்னுடைய கடுமையான கண்டனத்தை இலங்கை அரசுக்குத் தெரிவிக்கவேண்டும்.
இவ்வாறு அவ்வறிக்கையில் தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் குறிப்பிட் டுள்ளார்.
மன்னிப்பு கேட்டது இலங்கை ராணுவம்
மீனவர்கள் பிரச்சினைபற்றி பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதுவதுபற்றி இழிவாக விமர்சித்த விவகாரத்தில், இலங்கைக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து, தனது ராணுவ இணையதளத்தில் வெளியிட்ட சர்ச்சைக்குரிய கட்டுரையை நீக்கிய இலங்கை ராணுவம், பகிரங்க மன்னிப்பு கேட்டது. அதிபர் ராஜபக்சே வருத்தம் தெரிவித்தார்.
Read more: http://viduthalai.in/page-8/85148.html#ixzz39I8KYexu
ராஜி
திருவாளர்கள் ஜயகர் அவர்களும், சாப்ரூ அவர் களும் திரு. காந்திக்கும், கவர்ன்மெண்டுக்கும் ராஜி ஏற்படுவதற்காக முயற்சி செய்கிறார்கள்.
இம்முயற்சியின் முடிவு எப்படி இருந்தாலும், தேசிய பத்திரிகைக் காரர்களும், பொது ஜனங்களும் வெகு மகிழ்ச்சியுடன் இம்முயற்சியைப் போற்றி ஏதாவது ஒரு வழியில் ராஜி ஏற்பட்டால் போதுமென்று ஆசைப் படுகின்றார்கள்.
இதிலிருந்து சட்டமறுப்பும், சத்தியாக்கிரகமும் மக்களுக்குச் சலிப்பு தோன்றிவிட்டது என்பது வெளிப்படை. திரு. காந்தி எவ்வளவு விட்டுக் கொடுத்தாகிலும் ராஜி செய்து கொள்ள வேண்டு மென்பதே தேசிய பத்திரிகைகளின் கவலையாகி விட்டது. சத்தியாக்கிரகத்திற்கு இன்னும் சில நாள்களுக்குள்ளாக பலமான எதிர்ப்புகள் கிளம்பிவிடும் என்பதை தேசியவாதிகள் உணரத் தலைப்பட்டு விட்டார்கள். அனேக வியாபாரிகள் கெட்டுப்போய் விட்டார்கள்.
கஷ்டத்தில் சிக்கி விழித்துக் கொண்டிருந்த வியாபாரிகளும் இனியும் நாலு இரண்டு வருஷங்கள் தாட்டலாம் என்று நினைத்துக் கொண்டிருந்த வியாபாரிகளும் சட்ட மறுப்பின் மீது பழிபோட்டு சீக்கிரத்தில் தீபாவளி ஆக இதை ஒரு சாக்காகக் கொண்டு விட்டார்கள். இதனால் பல மக்களுக்குச் சத்தியாக்கிரகத்தின் மீது ஆத்திரம் உண்டாக இடம் ஏற்பட்டு விட்டது.
நிற்க, திருவாளர்கள் ஜயகரும், சாப்ரூவும் ராஜி முயற்சிக்கு வைசிராய்க்கு எழுதிய கடிதத்தில் தங்களுக்குத் திரு காந்தியின் நடவடிக்கையில் அனுதாபம் இல்லை என்று வெளிப் படையாகச் சொல்லி விட்டார்கள்.
திரு. வைசிராய் பதில் கடிதத்திலும் இந்தியர்களால் நிர்வகிக்க முடியாத காரியத்தை இந்தியர்கள் வசம் ஒப்படைக்க முடியாது என்பதாகச் சொல்லி, இந்தியர்கள் பூரண சுயாட்சிக்கு அருகர் அல்ல வென்றும், அவர்களது யோக்கியதைக்கு மேல் கொடுக்க முடியாதென்றும் பட்டவர்த்தனமாகச் சொல்லி விட்டார்.
இந்த நிலையில் திரு. காந்தி ராஜிப்பேச்சுக்கு இடம் கொடுப்பது எவ்வளவு தன் மதிப்பு உள்ளது? என்பதை நாம் தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை.
தவிரவும் இந்தியர்களால் நிர்வகிக்க முடியாத காரியங்கள் எவை என்பதைப் பற்றிக் கூட இப்பொழுது கூற முடியாதென்றும், அது லண்டன் மகாநாட்டில்தான் முடிவு செய்யப்படும் என்றும் வைசிராய் பிரபு சொல்லியிருப்பதிலிருந்து வெகு காலமாகவே சொல்லிக் கொண்டு வருவதைத் தவிர லார்ட் இர்வின் கடுகளவாவது இரங்கி வந்தாரா? என்பது அறிவாளிகள் யோசிக்கத்தக்கதாகும்.
எனவே இந்த யோக்கியதை உள்ள ராஜியில் மக்களும், தலைவர்களும் பத்திரிகைக்காரர்களும் காட்டும் உற்சாகத்திலிருந்து சத்யாக்கிரகத்தின் குற்றத்தையும், வெற்றியற்ற தன்மையையும் இப்பொழுதாவது உணர்ந்து விட்டார்கள் என்றே தெரிய வருகிறது. முன்னைய ஒத்துழை யாமையை யாருடைய வேண்டுகோளும் விருப்பமும் இல்லாமலே திடீரென்று நிறுத்தினார். இப்போது ஏதாவது ஒரு சாக்கைக் கொண்டு நிறுத்த வேண்டியதா யிருக்கின்றது. எல்லாம் கடவுள் செயல்.
- குடிஅரசு - துணைத்தலையங்கம் - 27.07.1930
Read more: http://viduthalai.in/page-7/85146.html#ixzz39I8SvdFz
சிறீவில்லிபுத்தூரில் ஜாதிக் கொடுமை
சிறீவில்லிபுத்தூரில் 2.7.1931-ஆம் தேதி காலையில் நாடார் கிளப்பிலிருந்து நாடார் சகோதரர் ஒருவர் நாடக சாலைத் தெருவிலுள்ள முனிசிபல் பொதுக் கிணற்றில் தண்ணீர் எடுத்துக் கொண்டிருக்கும் போது அத்தெருவிலுள்ள பார்ப்பனர் ஒன்று சேர்ந்து மேற்படி நாடார் சகோதரரைக் கம்பினால் மண்டையில் அடித்து இரத்தம் உடம்பெல்லாம் ஓட கீழே தள்ளி பலம் கொண்ட மட்டும் அடித்தார்கள். இது விவரம் தெரிந்து மற்றும் 2 நாடார்கள் அவ்விடம் போக அவர்களையும் மண்டையில் அடித்து இரத்தம் பீறிட அடித்து விட்டார்கள். அத்துடன் தண்ணீர் எடுத்த குடத்தையும் பிடுங்கி வைத்துக் கொண்டார்கள். முனிசிபல் பொதுக் கிணற்றில் தண்ணீர் எடுத்ததற்காக இவ்விதம் கொடுமை நடந்தால் இதை யாரிடம் சொல்வது? இச்செய்தியால் இவ்வூர் நாடார்களுக்கு மனக் கொதிப்பும், பரபரப்பும் ஏற்பட்டிருக்கிறது. இதற்கு மேல் என்ன நடக்குமென்று தெரியவில்லை என்று ஒரு நிருபர் எழுதுகிறார். குடிஅரசு 12.7.1931
Read more: http://viduthalai.in/page4/85136.html#ixzz39I98bkc7
Post a Comment