Search This Blog

27.8.14

புராண லோகங்களும் வானியல் கோள்களும் ஒன்றா? மடமைக் கருத்துக்கு மறுப்பு

  யார் என்பதா? எது என்பதா?
  நிலவுக்கு அப்பால் _ என்பது அறிவியல் கட்டுரைகள் சில அடங்கிய ஒரு நூல். இதன் ஆசிரியர் திரு. ஏ.டி.பக்தவத்சலம் எம்.எஸ்ஸி., எம்.ஏ., எம்.எட்., டிசி.எம். ஆவார். இவரது நூல்களில் உள்ள கட்டுரைகளுள் ஒரு கட்டுரையின் தலைப்பு. யார் அந்தக் கதிரவன்?

  உண்மையிலேயே, எது அந்தக் கதிரவன்? என்றிருக்க வேண்டும் அந்தத் தலைப்பு. ஏதோ சூரியன் என்பது உயிருள்ள _ அறிவுள்ள உயர்திணைப் பெயராக எண்ணி இவ்வாறு எழுதியுள்ளார். கட்டுரையின் தொடக்கத்தில் பின்வருமாறு எழுதி, இல்லை கிறுக்கியிருக்கிறார். அது இது:
  புவிக்கு மேலே ஏழு உலகம் உள்ளன என்று நம் முன்னோர் நம்பி வந்தனர். அவர்கள், மற்ற கோள்களையே இவ்வாறு கருதினர்.


  யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்?

  புவி(பூமி)க்கு மேல் ஏழு உல(லோ)கம் உள்ளன என்று நம்பி வந்தனர் நம் முன்னோர் என்று எழுதிய ஆசிரியரின் கட்டுரையில் வரும் நம்பி வந்தனர் என்ற தொடர், அவர்கள் கண்டறிந்தனர் என்று வான் அறிவியல் அடிப்படையில் இல்லாமல் வெறும் குருட்டு (மூட)நம்பிக்கை அடிப்படையில் கருதி வந்தனர் என்பது அறிவியல் அல்ல: ஆய்வுக்கு உரியதும் அல்ல.
  யார் அந்த முன்னோர்?

  இதில் நம் முன்னோர் நம்பி வந்தனர் என்கிறார். யார் அந்த நம் முன்னோர்? தம்முடைய இந்துமத முன்னோர்களையே இப்படிக் குறிப்பிடுகிறார். மகரிஷிகள் முதலானோர் எழுதி வைத்துப் போன மூடநம்பிக்கை _ முழுக் கற்பனை _ வேடிக்கைக் கதையைத்தான் நூலாசிரியர் முன்னோர் என்கிறார்.
  சரி, இனி செய்திக்கு வருவோம். புவிக்கு மேலாக ஏழு உலகங்கள் உள்ளன என்கிறது இந்துமத முன்னோர் எழுதிய நூல்கள்.

  ஏன் எழுதவில்லை?

  நம் முன்னோர்கள் நம்பி வந்த அந்த ஏழு உலகங்கள் என்னென்ன? என எழுதவில்லை! ஏன்? எழுதினால் என்ன? எழுதியிருக்க வேண்டும். சரி போகட்டும்.


  காஞ்சி சங்கரமட நூலில் காணப்படுபவை:

  அபிதான சிந்தாமணி என்னும் நூலிலிருந்தும் இந்துமத நூல்களிலிருந்தும் அவற்றைப் பொறுக்கி எடுத்து நாம் கூற இருக்கிறோம். இவற்றை அனைவரும் அறிந்து எள்ளி நகையாட வேண்டும். அபிதான சிந்தாமணி நூலிலிருந்தும், காஞ்சி காமகோடி பீட சங்கரமட ஆதரவில், சங்கராச்சாரியார் ஆசியில் இந்து சமய மன்றம் வெளியிட்டுள்ள நூல், ஹிந்து தர்மங்கள் என்பது அதிலிருந்தும் எடுத்துக் கூறவுள்ளோம்.

  எடுத்த எடுப்பிலேயே தவறு:

  புவிக்கு மேலே உள்ள ஏழு உலகங்கள் என எழுதியிருப்பதே தவறு. புவி (பூமி) உள்ளிட்ட ஏழு உலகங்கள் என்றுதான் எழுதியிருக்க வேண்டும். தொடக்கமே பிழை.

  போவோமா ஊர்கோலம் லோகங்கள் எங்கெங்கும்?

  இப்பொழுது, அபிதான சிந்தாமணி மற்றும் ஹிந்து தர்மங்கள் நூல்களில் எழுதப்பட்டுள்ள ஏழு லோகங்களைப் பார்க்கப் போகிறோம். தயாராக இருங்கள். பூமி அதாவது பூலோகம் என்பது அதில் கூறப்படும் முதல் லோகம். இனி, நாம் போக இருப்பன பூலோகத்திற்கு மேலே உள்ள மற்ற ஆறு லோகங்கள். ஏவுகணை (Rocket)  இல்லாமல், விண்கலம் இல்லாமல் எண்ணம் அளவில் பறந்து போவோம். போவோமா ஊர்கோலம்?

  இதோ! இரண்டாம் லோகம்

  இதோ 2ஆம் லோகம் வந்து விட்டோம். இது புவர் லோகம் எனப்படுகிறது. இந்த லோகம் பூமியிலிருந்து எத்துணை தொலைவு தெரியுமா? 15 லட்சம் யோசனை தூரம். ஒரு யோசனை என்பது இன்றைய அளவீட்டு முறையில் 10 மைல் அல்லது 16 கி.மீ.

  இனி, இந்த அளவீட்டு மாற்ற அடிப்படையிலேயே குறிப்பிடப் போகிறோம். 15 லட்சம் யோசனை என்பது 240 லட்சம் கிலோ மீட்டர் ஆகும்.

  என்னென்ன? யார் யார்?

  இந்தப் புவர் லோகத்தில்தான் சூரிய _ சந்திர கிரகங்கள், 27 நட்சத்திரக் கூட்டங்கள் இருக்கின்றனவாம். (சூரியனும், சந்திரனும் கிரகங்களை என்று கட்காதீர்கள். வந்துவிட்டோம்... பார்த்துவிட்டோம். இங்கே, பதினெண் கணங்களான கின்னரர், கிம்புருடர் முதலானவர்களும், வித்யாதரர்களும் வாழ்கின்றனராம்!

  அவற்றையும், அவர்களையும் பார்த்து விட்டோம். புவர் லோகத்திற்கு மேலே உள்ள லோகம் வந்துவிட்டோம். என்ன வேகத்தில், ஒலி வேகத்திலா, ஒளி வேகத்திலா எனக் கேட்டு விடாதீர்கள்.
  சுகலோகமா? சுவர்க்க லோகமா?

  நாம் வந்து சேர்ந்த 3ஆவது மேலுலகம்தான் சுவர்க்க லோகம் என்பது. பூஜை, புனஸ்காரம், வேத பாராயணம், நியம நிஷ்டை, தவங்கள் இல்லாமலேயே எத்துணை எளிதாக சுவர்க்கம் வந்துவிட்டோமே? பூமியிலிருந்து 1600 லட்சம் கி.மீ. தொலைவில் உள்ளது இது.

  கொட்டிக் கிடக்கும் குறைவிலாச் சுகம்

  அதோ! நன்றாக உற்றுப் பாருங்கள்! நான்கு கட்டிளங் கன்னிகைகள், கவர்ச்சிக் காரிகைகள் நின்று கொண்டிருக்கிறார்கள். யார் அவர்கள்? அவர்கள் ரம்பா, (நம்ம ஊர் திரைப்பட நடிகையல்ல) மேனகா, ஊர்வசி, திலோத்தமா ஆகிய தேவலோக நாட்டியத் திலகங்கள்! நடன நங்கையர்கள்!! தேவதாசிகள்!! இங்கே எல்லாச் சுகங்களை அனுபவிக்கவும் வாய்ப்புண்டு _ (நூல்: ஹிந்து தர்மங்கள், பக்கம்: 65)

  இதற்குமேல் இந்த லோகத்தில் நாம் இருக்க வேண்டாம்! நம் கற்புக்கு ஆபத்து வந்துவிடும். பார்வை ஒன்றே போதும்! நெருங்க வேண்டாம். நம் ஏழு லோகப் பயணம் தடைப்பட்டுவிடும். இதோ, சுவர்க்கத்தை விட்டுப் புறப்பட்டு விட்டோம்.


  வந்தது பெண்ணா? தேவதை தானா?

  4ஆவது மேலுலகம் வந்து விட்டோம். இது பூமியிலிருந்து 320 கோடி கி.மீ. தொலைவில் உள்ளது. இதன் பெயர் மஹர் லோகம் என்பது. இங்கே வாழ்பவர் பெண்கள் அல்லர்! வானகத்துத் தேவதைகள்! சொக்கவைத்து உள்ளத்தைச் சுண்டி இழுக்க வைக்கும் சுந்தரத் தேவதைகள்!

  நெருங்க வேண்டாம்! உங்களை ஒருவழி பண்ணிவிடுவர்! தொலைந்தீர்கள். இப்பொழுது உடனடியாகப் புறப்பட்டு 5ஆவது மேலோகம் வந்துவிட்டோம். பெயர் ஜனோ லோகம். இந்த லோகம் பூமியிலிருந்து 80 லட்சம் யோசனை தூரத்திலுள்ளது. அதாவது 1280 கோடி கி.மீ.


  ஈருடல் ஓருயிர்

  ஜனோ லோகத்தில், ஆண்களும் பெண்களும் இடைவெளியின்றி உடலுறவு இன்பம் கொண்டிருக்கும் காட்சி! யார் இவர்கள்? கணவன்மார் இறந்தவுடன் அவர்களோடு உடன்கட்டை (சதி) ஏறித் தீயினில் வெந்து நீறாகிப் போன மனைவிமார்கள். இந்த வாழ்விணையர்கள்தான் ஜனோ லோகம் சென்று அங்கே சரசம் சல்லாபம் அனுபவிக்கிறார்களாம்!

  பரவசக் காட்சிகளைப் பார்த்தது போதும்!

  உடன்கட்டை ஏறி உயிர் நீக்கப்பட்ட பெண்களுக்கு இப்படிப்பட்ட இன்பசுகம்? காமக் களியாட்டம். என்னமோ ஆசைகாட்டி, கணவனை இழந்த மங்கையரை உடன்கட்டையில் சாகடிக்கிறது இந்து மதம்! இந்துமத வேதம்! இந்து தர்மம்!! பார்ப்பன ஆரிய ஏமாற்று வேலை! இங்கு பார்த்தது போதும்! அடுத்த லோகம் கிளம்புவோம்.


  வைகுண்ட - சிவலோக பதவிகள்

  இதோ, அடுத்த 6ஆவது லோகம் வந்துவிட்டோம்! இதன் பெயர் தபோ லோகம்! இங்கேதான் விஷ்ணு லோகமாகிய ஸ்ரீவைகுண்டம், சிவலோகமாகிய ஸ்ரீகைலாஸம் இருக்கின்றன. இரண்டையும் நாம் பார்த்துவிட்டோம். இந்த லோகம் பூமியிலிருந்து 12 கோடி யோசனை அதாவது 120 கோடி மைல் _ அதாவது 192 கோடி கி.மீ.

  சத்தியம் - இது சத்தியம்!

  தபோ லோகம் விட்டு 7ஆம் மேலோகம் வந்து விட்டோம். இதன் பெயர் ஸத்ய லோகம். இது, பூமியிலிருந்து 272 கோடி கி.மீ. தொலைவில் உள்ளது. இது பிர்ம்ம லோகம் எனவும் அழைக்கப்படும். படைப்புக் கடவுள் தன் பத்தினி சரஸ்வதியோடு இங்குதான் ஆனந்த பரவசத்தில் ஆழ்ந்து கிடக்கிறானாம். அவனது ஆனந்தத்திற்கு இடையூறு செய்யாமல், நாம் புறப்படுவோம். புறப்பட்டு விட்டோம்.

  விண்ணைத் தாண்டி வருவாயா?
  வருவோம்! உறுதியாக வருவோம்! வந்தே விட்டோம் மறுபடியும் மனிதர் வாழும் நமது பூலோகத்திற்கு. என்ன இன்பமான விண்வெளிச் சுற்றுலா!!
  வெட்கப்பட வேண்டாமா?
  மேலே கண்ட, மத புராணப் புளுகுகளை உண்மை என்று கொண்டு இந்தப் புவி உட்பட மேல் ஏழு உலகங்கள்தான் கதிரவனைச் சுற்றும் மற்றைய கோள்கள் என மனம் கூசாமல், வெட்கப்படாமல் எழுதுகிறாரே, திரு. பக்தவத்சலம் என்னும் இந்த நூலாசிரியர்?

  மீண்டும் தவறு
  மேல் உலகம் ஏழும்தான் வானியல் கோள்கள் என்கிறார். இங்கேயும் புவிக்குமேல் ஏழுகோள் என்கிறார். சூரியனுக்கு மிக அண்மையில் உள்ள புதன், வெள்ளிக் கோள்களை இவர் கூற்றுப்படி, கீழ்க் கோள்கள் என்று விலக்கிவிட்டாலும் அடுத்ததாக உள்ள புவிக்கு மேல் உள்ள 7 கோள் என்கிறாரே, அது எப்படிச் சரியாகும்? புவியினைச் சேர்த்தால்தான், செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன், புளூட்டோ ஆகியவற்றோடு ஏழு கோள்கள் ஆகும். இவரோ புவிக்கு மேலே உள்ள 7 கோள்கள் என்கிறாரே?
  இன்னொரு கோள் எது? எதை வேண்டுமானாலும் ஆதாரமின்றி அறிவியல் அடிப்படையின்றி எழுதி விடுவதா, பக்தவத்சலனார் அவர்களே! வேண்டாம் அய்யா, இந்த வீண் வேலை!
  -தொடரும்
                   - பேராசிரியர் ந.வெற்றியழகன்-- "உண்மை” ஜூலை 01-15 - 2014

  ***********************************************************************

   மடமைக் கருத்துக்கு மறுப்பு - 3

  மடமைக் கருத்துக்கு மறுப்பு - 3

   புராண லோகங்களும் வானியல் கோள்களும் ஒன்றா?

   மேலும் இல்லை; கீழும் இல்லை
   இனி, வானியல் கோள்களை _ அதாவது புவியைச் சேர்த்து மீதி உள்ள 6 கோள்களை அறிவியல் ஆய்வு அடிப்படையில் பார்ப்போம். பக்தவத்சலனார் புவிக்கு மேலுள்ள லோகங்கள், கோள்கள் என எழுதுகிறார். விண்வெளியில் மேல், கீழ் என்பதாக பிரிவினை இல்லை. புராண லோகங்கள்தான் ஒன்றன்மேல் ஒன்றாக நிலையாக இருந்து கொண்டிருப்பதாகச் சொல்லப்பட்டுள்ளன. வானியலில் அப்படி இல்லை. எந்தக் கோளும் நிலையாக, நின்றுகொண்டே இருப்பதில்லை. சூரியனை மய்யமாக வைத்துச் சுற்றிக் கொண்டே இருக்கின்றன. புவியினை அடுத்து என்று தொலைவு அடிப்படையில் கூறலாமே தவிர மேல்கீழ் என்று கூறுவதில்லை.
   இனி புவிக்கோளை விட்டு மற்ற 6 கோள்களை அறிவியல் அடிப்படையில் சுருக்கமாகப் பார்ப்போம்.
   செல்வோம் செவ்வாய்க்கு
   புவியிலிருந்து 22 கோடியே 64 லட்சம் கி.மீ. தொலைவில் செவ்வாய் (Mars) உள்ளது. சிவப்பு நிறமுடையது. வெப்பநிலை 700 _1500 தி உடையது. 2012ஆம் ஆண்டில் செவ்வாய் மேற்பரப்பில் அமெரிக்க கியூரியாசிட்டி விண்கலம் இறங்கியது. இங்கு உயிரினங்கள் இருக்க வாய்ப்பில்லை என்ற தகவலை அறிவித்தது. இதன் இரு துருவங்களில் உள்ள பனியினால் நீர் நிறைந்திருக்கிறது. புவியிலிருந்து 22,64,00000 கி.மீ. தொலைவில் உள்ளது.
   மாபெரும் கோள் மண்டலம்
   செவ்வாய்க்கு அடுத்து இருப்பது மாபெருங் கோள் வியாழன் (Jupitor). 2000 F வெப்பநிலை உடையது. புவியிலிருந்து 58 கோடியே 72 லட்சம் கி.மீ. தொலைவில் உள்ளது.
   வளையங்கள் உள்ள வான்கோள்
   அடுத்துள்ளது தன்னைச் சுற்றிலும் வளையங்கள் கொண்ட சனி (Saturn).இதன் வெப்பநிலை 2250 தி. வியாழனிலும் சனியிலும் மனிதன் இறங்கவே முடியாது. புவியிலிருந்து 128 கோடி கி.மீ. தொலைவில் உள்ளது.
   கற்பனைக்கெட்டா கடுங்குளிர்க் கோள்
   சனிக்கு அடுத்துள்ள கோள் யுரேனஸ் (Uranus). புவியிலிருந்து 282 கோடி கி.மீ. தொலைவு. கற்பனைக்கெட்டா கடும் குளிர் கொண்டது. நச்சுக்காற்று நிறைந்துள்ளது.
   நிரம்பச் சுவையுள்ள நெப்டியூன்
   யுரேனஸை அடுத்துள்ளது நெப்டியூன் (Neptune). புவியிலிருந்து 437 கோடி கி.மீ. தொலைவிலுள்ளது. இங்கேயும் நச்சுக்காற்றுதான் நிறைந்துள்ளது.

   புத்தம் புதுக்கோள்
   நெப்டியூனை அடுத்துள்ளது புளூட்டோ (Pluto) புவியிலிருந்து 573 கோடி கி.மீ. தொலைவிலுள்ளது.
   ஒப்பீட்டுப் பார்வை உணர்த்தும் உண்மை:
   இதுவரை, புராணக் கற்பனை மேல் ஏழு உலகங்களையும், வானியல் கோள்களையும் 7அய்யும் பார்த்தோம். இரண்டு வகையும் வேறு வேறு; முதலாவதாக உள்ளது இல்லாதது; கற்பனை; புராணம், புளுகுமூட்டை; பொய்க்கூற்று. மற்றது, அறிவியல், ஆய்வு உண்மைகள். ஆதாரங்கள் உள்ளவை.
   புராண லோகங்கள்தான் வானியல் கோள்கள். இரண்டும் ஒன்று: கோள்களைத்தான் முன்னோர் லோகங்கள் என்று நம்பினர் என்று கதைக்கிறார் நூலாசிரியர்.
   புராண லோகங்களில், தேவர்கள், தேவதைகள், மகரிஷிகள், மும்மூர்த்திகள், நடனமாதர்கள், ஆண்கள் பெண்களின் காமக் களியாட்டம் எல்லாம் கூறப்பட்டுள்ளன.
   ஆனால், வான் அறிவியல் கோள்களில் முதனிலை நுண்ணுயிரிகள் கூடத் தோன்ற, வாழ இடமில்லை; சூழல் இல்லை.
   இப்படியிருக்க உயிரினங்களின் உச்சகட்டமான மனித இனம் இருக்க, வாழ வழியில்லை. ஒப்பீட்டுப் பார்வை காட்டும் உண்மை இது.
   தயங்கோம், தளரோம்:
   இரண்டும் ஒன்றுதான் என முன்னோர் நம்பினர் என்று எழுதி புல்லரித்துப் போகிறார் நிலவுக்கு அப்பால் நூலாசிரியர்.
   இவர் போன்றவர் இவ்வாறு மதப் புராணக் கருத்தோடு, அறிவியல் உண்மைகளோடு ஒப்பிட்டு இரண்டும் ஒன்றுதான் என்று எழுதினால் தந்தை பெரியார் பகுத்தறிவு, அறிவியல் நெறி நடக்கும் நாம் சும்மா இருக்க மாட்டோம். இவர்கள் தங்கள் போக்கை மாற்றிக் கொள்ளாதவரை நாமும் மறுப்புரைக்கத் தயங்கோம்; தளரோம்!

   ------------------- பேராசிரியர் ந.வெற்றியழகன்-- "உண்மை” ஜூலை 01-15 - 2014

   26 comments:

   தமிழ் ஓவியா said...

   நெஞ்சம் மறக்கவில்லை

   மன்னார்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் எழுத்தராகப் பணி புரிந்து கொண்டு பகுத்தறிவாளர் கழக செயலாளராகவும் பணி செய்து வந்தேன். மன்னை நாராயணசாமி அவர்களின் வீடு ஒன்றில் வாடகைக்குக் குடி இருந்தேன். எனது வீட்டின் அரு கில் அன்னை நாகம்மையார் மன்றம் இருந்தது. அங்கு கழகக் கூட்டங்கள், வாழ்க்கை ஒப்பந்த விழாக்கள் நடந்து வந்தன.

   உள்ளிக்கோட்டை பக்கிரிசாமி, எடமேலையூர் இராசன், நகரத் தலைவர் அழகிரிசாமி, காளவாய்க்கரை கோவிந்தராசு, நீடாமங்கலம் ஆறுமுகம், சுப்பிரமணியன் போன்ற கழகத் தலைவர்கள் வீட்டிற்கு வருவார்கள். மன்னை நாராயணசாமி, அவர்களை சந்தித்து பேசிவிட்டு செல்வார்கள். அரசு அதிகாரிகளும் என் மூலம் மன்னை அவர்களை சந்தித்து வரு வார்கள். நானும் அவர்களை மன்னை யிடம் அழைத்துச் சென்று அறிமுகம் செய்து வைப்பேன். கும்பகோணம் சோழன் போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநராகப் பணி செய்த பாசுக்கரன் என்பவர் கழகத் தலைவர்களுடன் எனது வீட்டிற்கு வந்தார்.

   எனது மூத்த மகள் திலகவதி பள்ளி இறுதி வகுப்பு (எஸ்.எஸ்.எல்.சி) முடித்து விட்டு வீட்டில் இருந்தது. அதைக் கவனித்த ஓட்டுநர், குடந்தை போக் குவரத்துக் கழக மேலாண்மை இயக் குநராக ஞான.அய்யாசாமி பணி செய்கிறார்கள். தந்தை பெரியார் அவர்களிடம் நெருங்கிப் பழகியவர். அவர்களிடம் கூறினால் கட் டாயம் வேலை போட்டுத் தருவார்கள் என்றும், கூடவே தானும் வருவதாக வும் தெரிவித்தார்கள்.

   அவர்களை தாங்கள் பார்க்க வரும்போது அன் றைய விடுதலை நாளிதழை அவர்கள் பார்க்கும்படி கையில் எடுத்து வரவும் என்று தெரிவித்தார். அதன்படி அவரை அழைத்துக் கொண்டு கும்பகோணம் தலைமை அலுவலகம் சென்றேன். நான் மன்னார்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பணி செய்வதையும், பகுத்தறிவாளர் கழக செயலாளராகச் செயல்படுகிறேன் என்றும் கூறினார். கையில் வைத்திருந்த அன்றைய விடுதலை நாளிதழை அவர்கள் மேசை மீது வைத்தேன். அதைப்படித்து விட்டு அதன் பிறகுதான் விசாரித்தார்கள்.

   எனது மகள் திலகவதி எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி பெற்றுள்ளது. அதனால் ஏதாவது வேலை போட்டுத் தாருங்கள் என்றேன். கூட வந்த ஓட்டு நரும் நான் மன்னை நாராயணசாமி அவர்கள் வீட்டில்தான் குடியிருக்கிறார் என்று கூறினார்கள்.

   போக்குவரத்து கழகத்தில் பெண் களை வேலைக்கு சேர்ப்பதில்லையே என்றார்கள். உடன் அருகில் தட்டச்சு செய்து கொண்டிருந்த எனது பெண்ணுடன் படித்த பெண்னைப் பார்த்தேன். அதை கவனித்த அவர்கள் தட்டச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். எழுத்தர் பணிகளுக்கு பெண்களை சேர்ப்ப தில்லை என்றார்கள். எனக்கு பையன்கள் இல்லை அவசியம் செய்ய வேண்டு மெனக்கூறி விண்ணப்பத்தைக் கொடுத்தேன்.

   வாங்கிக் கொண்டு வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளதா என்று கேட்டார்கள். செய்துள்ளது என்று கூறினேன். உடன் தட்டச்சரிடம் தஞ்சாவூர் வேலை வாய்ப்பு அலுவலகத்திற்கு கடிதம் எழுதி பட்டியல் கேட்கும்படி கூறினார். எனது மகள் பெயரைச் சேர்த்து பட்டியல் வாங்கி வந்தேன். எனது மகள் வேலை சம்பந்தமாக மன்னை அவர்களிடம் நடந்த விவரங்களைக் கூறி கட்டாயம் வேலை வாங்கித் தரும்படிக் கூறினேன்.

   சரியெனக்கூறி இயக்குநரிடம் சொன்னார்கள். அவர் களும் தொலைபேசியில் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் வந்த பட்டி யலில் உள்ள அனைவருக்கும் நேர்முகத் தேர்விற்கு அழைப்பு அனுப்பப்பட்டது. அதில் மன்னை அவர்களின் நேர்முக உதவியாளர் கடகம் இராமநாதன், உறவினர் பையனுக்கும் நேர்முக தேர் விற்கு அழைப்பு அனுப்பப்பட்டது.

   அந்தப் பையனுக்கும் மன்னை அவர்களிடம் சொல்லி சிபாரிசு செய்யப்பட்டது. எனது மகளுக்கும் அந்தப் பையனுக்கும் சிபாரிசு செய்த தால் உடனே இயக்குநர் அவர்கள் மன்னை அவர்களிடம் கேட்டபோது முதலில் பரிந்துரை செய்ததை நினைவில்லாமல் சொல்லிவிட்டேன். முதலில் சொன்ன திலகவதிக்கே நியமன ஆணை வழங்கும்படிக் கூறினார்கள்.

   ஆகவே மன்னார்குடி போக்குவரத்து கழக பணி மனையில் ரூ.600 (ஆறு நூறு ரூபாய் மட்டும்) தினக்கூலியாக நியமனம் செய்தார்கள். தனது வேலையை திறமையாகச் செய்ததால் ஓராண்டுக்குப் பிறகு கும்பகோணம் தலைமை அலுவலகத்திற்கு எழுத்தராகப் பணி நியமனம் செய்தார்கள். அங்கு பணி மூப்பு அடிப்படையில் பிரிவு கண் காணிப்பாளராக பணி செய்து அண் மையில் பணியிலிருந்து ஓய்வு பெற்றுள்ளது.

   சென்னை பெரியார் திடலுக்கு வரும் போதெல்லாம் ஞான.அய்யாசாமி அவர்களைச் சந்தித்து நலம் விசாரித்து வருவேன். அவர்கள் இயற்கையெய் தியதை விடுதலை மூலம் அறிந்து பெரிதும் வருந்தினேன்.

   - ச.மு.செகதீசன் (மாவட்ட தி.க. (மயிலாடுதுறை)

   Read more: http://viduthalai.in/page2/86875.html#ixzz3C1XdiQCp

   தமிழ் ஓவியா said...

   சத்தியமூர்த்திபற்றி ராமசாமி முதலியார்!


   அரசியலாகட்டும், அலுவலகமா கட்டும் மகா உழைப்பாளிகள் போலவும், உண்மைத் தொண்டர்கள் போலவும் பாவலா செய்வது பார்ப் பனர்களுக்கு கை வந்த கலை!

   பார்ப்பன அரசியல் மேதை சத்தியமூர்த்தி 1934 வாக்கில் காங்கிரஸ் சார்பில் மத்திய சட்டசபை தேர்தலுக்கு நின்றார். தேர்தல் கூட்டங்களில் என்ன பேசினார்கள் தெரியுமா? காங்கிரஸ் நாட்டுக்கு தியாகம் செய்த கட்சி. நாங் கள் எல்லாம் ஜெயிலுக்கு போனவர்கள், எனவே எங்களுக்கு ஓட்டு போடுங்கள் என்றார். இங்கேதான் வேடிக்கை.

   சத்தியமூர்த்தி ஜெயிலுக்கு போக நேர்ந்ததையும் -_ அங்கு அவர்பட்ட கஷ்டத்தையும் ஏ. ராமசாமி முதலியார் அம்பலமாக்குவதைக் கவனியுங்கள்.

   ஒரு சமயம் தோழர் சத்தியமூர்த்தி கோவிந்தப்ப நாயக்கன் தெருவில்ஒரு கடையில் நாற்காலி போட்டு உட் கார்ந்து கொண்டு சட்ட பகிஷ்கார துண்டு பிரசுரங்களை ஜனங்களுக்கு விநியோகித்துக் கொண்டிருந்தார்.

   அப்போது அவரை போலீசார் கைது செய்து மாஜிஸ்டிரேட்டின் முன் நிறுத்தினார்கள். மாஜிஸ்டிரேட் சத்தியமூர்த்தியை பார்த்து அய்யா சத்தியமூர்த்தியே -_ இவ்வளவு மலிவான விலையில் நான் உன்னை பெரிய வீரனாக்க விரும்பவில்லை என்று சொல்லி எச்சரித்து விடுதலை செய்து விட்டார். சத்தியமூர்த்தி சிறைக்கு போகாததைப்பற்றி மக்கள் கேவலமாக பேச ஆரம்பித்துவிட்டார்கள். அவர் சிறைக்கு போனால்தான் மரியாதை என்ற நிலைமை ஏற்பட்டது.

   கணக்கற்ற இளைஞர்கள் தடியடிபட்டு ஜெயிலுக்கு போய்க் கொண்டிருந்தனர். உயிர் போனாலும் சத்தியமூர்த்தி அப்படி தடியடி படமாட்டார். எனவே ஒரு மோட்டார் தேடிபிடித்து அதில் உட்கார்ந்துகொண்டு மறுபடியும் நோட்டீஸ் விநியோகம் செய்தார். இது பெரிய குற்றமாகாது என்றும், கைது ஆனாலும் பெரிய தண்டனை கிடைக் காது என்றும் முழு நம்பிக்கையோடு சத்திய மூர்த்தி மோட்டார் சட்ட மறுப்பில் இறங்கினார்.

   ஆனால் பாவம். பதினெட்டு மாதம் தீட்டினார்கள். சிறை தண்டனை உத்தரவான அதே இடத்தில் ஏ வகுப்பு போடும்படி மன் றாடி வேண்ட, மாஜிஸ்டிரேட்டும் மனம் இரங்கி அவ்விதமாக அனுமதித் தார். வேலூர் ஜெயிலுக்கு அனுப்பி னார்கள். உடம்பு சரியில்லை என்று ஜெனரல் ஆஸ்பத்திரியில் நான்கு மாதம் இருந்தார். ஆஸ்பத்திரியில் எல்லா சுதந்திரங்களும் உண்டு.

   ஜெயிலில் இருந்தபோதும் -_ அங்குவரும் (சத்திய மூர்த்திக்கு எதிர்க்கட்சி) பிரமுகர்களை வேண்டி எவ்வளவோ வசதிகளை ஜெயிலில் பெற்றுக் கொண்டார். மேலும் நீதிக்கட்சிக்காரர்களின் உதவி யுடன் குறித்த காலத்திற்கு முன்பே விடுதலை ஆனார். அப்படி உதவியவர் களில் நானும் ஒருவன். சத்தியமூர்த்திக்கு எள் மூக்கத்தனையாவது பெருந்தன்மை இல்லை என்பது நிச்சயம். வடிகட்டிய நன்றி கெட்டதனமே அந்த மகானுபா வரின் இயற்கைச் சுவாபம் என்று தெரிகிறது.

   பார்ப்பனர்களால் _- மகாமேதை யாகவும், தியாகியாகவும் இன்று சொல்லப்படும் சத்தியமூர்த்தியின் யோக்கியதையே இப்படி என்றால்.. அந்தோ! வெட்கம் என்றால் வீசை என்ன விலை என்று கேட்கும் விசித்திர இனமே!

   பகுத்தறிவு 21.10.1937

   Read more: http://viduthalai.in/page8/86825.html#ixzz3C1ZC3jZp

   தமிழ் ஓவியா said...

   அன்றும் - இன்றும்!


   காஞ்சீபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் பட்டப் பகலில் அக்கோ யில் மேலாளர் சங்கரரா மன் கொலை செய்யப்பட் டார். அந்த சங்கரராமன். காஞ்சிபுரம் சங்கராச்சாரி யார் ஜெயேந்திர சரஸ்வதி மீது குற்றஞ்சாட்டி எழுதிய கடிதங்கள் பிரசித்திப் பெற் றவை. அந்தச் சூழலில் காஞ்சி ஜெயேந்திரரால் ஏவப்பட்டவர்கள் இந்தப் படுகொலையைச் செய்த னர் என்று ஏடுகளில் ஏராளமான செய்திகள் வெளி வந்ததுண்டு

   இந்த வழக்குத் தமிழ் நாட்டில் விசாரிக்கப்பட் டால் தமக்கு நியாயம் கிடைக்காது என்று கூறி சங்கராச்சாரியார் தரப்பில் உச்சநீதிமன்றம் சென்ற போது, உச்சநீதிமன்ற நீதி பதி திரு. பாலசுப்பிரமணி யம் என்பவர் நான் சங்க ராச்சாரியார் சீடன்; எனவே இந்த வழக்கினை நான் விசாரிக்க மாட்டேன்! என்று சொன்னது எத் தனைப் பேருக்கு நினை வில் இருக்கும் என்று தெரிய வில்லை.

   உச்சநீதிமன்ற ஆணைப்படி இந்த வழக்கு புதுச்சேரி நீதிமன்றத்தில் நடத்தப்பட்டது. மொத்தம் 189 சாட்சியங்களில் 83 பேர் பிறழ் சாட்சியாகி விட்டார் கள். எந்த ஒரு வழக்கிலும் இத்தனைப் பேர் பிறழ் சாட்சியங்களாக மாறிய வரலாறு இல்லை; இப்படி பிறழ் சாட்சி சொன்னவர் கள்மீது கூட நடவடிக்கை எடுக்க சட்டத்தில் இடம் உண்டு. இந்த வழக்கில் அதுபற்றிக் கவலைப்பட்ட தாகத் தெரியவில்லை.

   சங்கராச்சாரியார் இரு வரும் மற்றவர்களும் ஒட்டு மொத்தமாக விடுதலை செய்யப்பட்டார்கள்; அதன் மீது மேல் முறையீடு செய்ய புதுச்சேரி அரசு - ஆளுநர் அனுமதி வழங் கிய நிலையில், சுப்பிர மணியசாமி என்ற பச்சை பார்ப்பனர் ஒருவர் குடி யரசு தலைவருக்கு மனு கொடுக்கிறார். இந்த வழக் கின்மீது மேல் முறையீடு செய்வதற்கு அனுமதி அளிக்கக் கூடாது என்று அதில் கூறியுள்ளார்.

   அதனைக் கண்டித்து தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் அறிக்கை ஒன்றினை வெளியிட்டார். சு. சாமி யின் புகாரை ஏற்கக் கூடாது என்று குடியரசு தலைவருக்கு மின்னஞ்சல் அனுப்புமாறு அந்த அறிக் கையில் வேண்டுகோள் விட்டிருந்தார். (8.8.2014)

   இந்தச் சூழ்நிலையில் இந்த வழக்கை மேல் முறையீடு செய்யலாமா கூடாதா என்று அட்டர்னி ஜெனரலின் கருத்துக் கேட் கப்பட்டது. ஒரு மாவட்ட அளவில் நடைபெற்ற ஒரு வழக்குக்காக அட்டர்னி ஜெனரலிடம் கருத்துக் கேட்கும் போதே அதன்மீதான அய் யப்பாட்டை திரா விடர் கழகத் தலைவர் எழுப்பினார். (21.8.2014) அது உண்மை என்பதை நிரூபிக் கும் வகையில் அட்டர்னி ஜெனரல் மேல் முறையீடு தேவையில்லை என்று கூறி விட்டார்.

   இந்த நேரத்தில் குடிஅரசு ஏட்டில் (20.2.1927) வெளி வந்த ஒன்றை எடுத்துக் காட்டுவது பொருத்தமான தாகும். பார்ப்பானை சுவாமி என்ற காலமும் போச்சே! லோக குரு என்ற காலமும் போச்சே! காலில் விழும் காலமும் பேச்சே! காலைக் கழுவி தண்ணீரைக்குடித்து மோட்சத்திற்குப் போகும் காலமும் போச்சே! நம் எல்லோரையும் வைப் பாட்டி மக்கள் சூத்திரர் கள் என்னும் காலமும் போச்சே!

   காங்கிரஸ் தலைவர்: துரைகளே! இது வகுப்புத் துவேஷம் அல் லவா!

   துரை: பொறும் பொறும் சட்ட மெம்பரை யும் அட்வொகேட் ஜென ரலையும் அபிப்ராயம் கேட் போம்; அவசரப் படாதே யும் (குடிஅரசு - 20.2.1927).

   இதற்கு விளக்கம் தேவையில்லை அன்றும் அட்வொகேட் ஜெனர லைக் கேட்டார்கள்; இன்று அட்டர்னி ஜெனரலைக் கேட்கிறார்கள் - புரிகிறதா!

   - மயிலாடன் 30-8-2014

   Read more: http://viduthalai.in/page1/86799.html#ixzz3C1aDuUkJ

   தமிழ் ஓவியா said...

   உள்ளதைச் சொன்னால் எரிச்சலா?

   மும்பை, ஆக.30_ விநாயகரை பற்றி, சமூக வலைதளத்தில் கிண்டலடித்தும், அவதூறாகவும் கருத்து தெரிவித்த, பாலிவுட் இயக்குனர் ராம் கோபால் வர்மாவுக்கு, கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

   பாலிவுட்டின் பிரபல இயக்குனர் ராம்கோபால் வர்மா. 'சத்யா, ரங்கீலா, சர்க்கார் ராஜ்' உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார். விநாயகர் சதுர்த் தியான நேற்று, சமூக வலைதளமான, 'டுவிட்டர்'ல், சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டார். விநாயகரை கிண்டலடித்தும், கேலி செய்தும், அவ மதிக்கும் வகையிலும், பல கருத்துகளை தெரி வித்திருந்தார்.

   'விநாயகருக்கு, அவரின் தலையையே, அவரால் காப்பாற்ற முடியவில்லை. பக்தர்களை எப்படி காப்பாற்றுவார். மற்ற கடவுள்களை விட, விநாயகர் அதிகம் சாப்பிடுவார் போலிருக்கிறது. அதனால் தான், குண்டாக இருக்கிறார். விநாயகரை வழிபட்டு, பலன் அடைந்த பக்தர்களின் பட்டியலை வெளியிட முடியுமா?' என்பது போன்ற பல சர்ச் சைக்குரிய விஷயங்களை அவர் தெரிவித்திருந்தார்.

   விநாயகர் சதுர்த்தி அன்று, ராம்கோபால் வர்மா இவ்வாறு தெரிவித்துள்ளது, கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, ''என் கருத்துகள் யார் மனதையாவது புண்படுத்தியிருந்தால் அதற்காக மன்னிப்பு கேட்கிறேன்,'' என்றார்.

   Read more: http://viduthalai.in/page1/86804.html#ixzz3C1aSchzc

   தமிழ் ஓவியா said...

   காய்கறி உண(ர்)வுப் பிரச்சினை!

   மத்திய ஆட்சி இந்துத்துவா ஆட்சியாகவே நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக நடந்து கொண்டு வருகிறது.

   பிரதமர் நரேந்திரமோடி அவர்கள் கலந்து கொள்ளும் விருந்தில் இறைச்சி உணவுக்குத் தடையாம். அயல் நாடுகளில் உள்ள இந்தியத் தூதரக அலுவலகங் களுக்குக்கூட இந்த ஆணை பொருந்துமாம்.

   பிரதமர் அலுவலகம் சார்பில் அனைத்து அமைச்சர் கள், உயர் அலுவலகங்கள், வெளிநாடுகளில் உள்ள இந்தியத் தூதரக அலுவலகங்களுக்கு இந்தியப் பிரதமர் அலுவலகத்திலிருந்து இந்த வகையில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

   இது சரியானது தானா? சட்ட ரீதியிலோ, தார்மீக ரீதியிலோகூட இது ஏற்றுக் கொள்ளத்தக்கது தானா என்பதைப் புத்தியைச் செலுத்தி சிந்திக்க வேண்டும்.

   பிரதமராக இருக்கக் கூடிய ஒருவர் சைவ உணவை சாப்பிடுபவராக இருக்கலாம்; பிரதமர் அப்படி இருக்கிறார் என்பதற்காக மற்றவர்களும் அவ்வாறுதான் சைவ உணவு சாப்பிட வேண்டும் என்று வற்புறுத்த, ஆணை பிறப்பிக்க, நிர்ப்பந்திக்க யாருக்கும் உரிமை கிடையாது. இந்த அடிப்படை மனித உரிமையைக் கூடத் மதிக்கத் தயாராக இல்லாதவர்தான் இந்தியாவின் பிரதமர் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும்.

   பிரதமர் அலுவலகத்தில் இந்த ஆணை இந்தியாவின் உயர் மட்டப் பதவியை அலங்கரிக்கும் குடியரசுத் தலைவர் அலுவலகத்தைக் கட்டுப்படுத்தப் போவதில்லை. வங்காளத்தில் உள்ளவர்கள் விரும்பிச் சாப்பிடுவது மீன்தான் என்பது பிரதமருக்கும் பிரதமரின் அலுவலகத்தில் உள்ளவர்களுக்கும் இது தெரிந்தது தானே!

   இதில் இன்னொரு கேள்வியும் தொக்கி நிற்கிறது. பிரதமர் வெளிநாடுகளுக்குச் செல்லும்போது (இந்த நூறு நாட்களில் அது தானே தொடர்ந்து நடந்து கொண்டு இருக்கிறது) வெளிநாட்டு அரசு அளிக்கும் விருந்திலும் இந்தக் கட்டுப்பாட்டை இந்தியப் பிரதமர் அலுவலகம் விதிக்கப் போகிறதா என்பது ஒரு கசப்பான கேள்வியாக இருக்கலாம்.

   பசுவதைத் தடை சட்டம்பற்றி இன்னொரு வகையில் பேசிக் கொண்டு இருக்கிறார்கள். பிஜேபி ஆளும் மாநிலங்களில் பசுவதைத் தடை சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

   கோ பாதுகாப்புப் பற்றி தேர்தல் அறிக்கையிலும் குறிப்பிட்டுள்ளார்கள்; அனேகமாக மத்திய அரசே பசு வதைத் தடுப்புச் சட்டம் ஒன்றைக் கொண்டு வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

   இந்திய அரசின் இந்த நிலைப்பாட்டைக் கண்டு உலக நாடுகள் கைதட்டிச் சிரிக்காதா?

   ஒரே ஒருவர் சைவ உணவு சாப்பிட வேண்டும் என்பதற்காக மற்றவர்கள் அனைவரும் அத்தகைய உணவையே சாப்பிட வேண்டும் என்று வற்புறுத்துவது ஜனநாயகமா? இந்தியா இதற்கு மாறான திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறதா? என்ற நியாயமான கேள்வி சிந்தனைத் திறன் உள்ள ஒவ்வொருவருக்கும் ஏற்படாமல் போகாது!

   வி.வி. கிரி அவர்கள் குடியரசு தலைவராக இருந்தபோது சிங்கப்பூர் சென்றிருந்தார். அப்பொழுது தனக்குச் சமையல் செய்பவர்கள் பிராமணர்களாக இருக்க வேண்டும் என்று வற்புறுத்த தமிழ்நாட்டி லிருந்து பார்ப்பன சமையற்காரர்கள் அனுப்பி வைக்கப்பட்டதையும் இந்த இடத்தில் நினைவு கூர்வது பொருத்தம்.

   சைவ உணவு தேவை என்றால், சிங்கப்பூரிலேயே அதனை சமைத்துக் கொடுக்க தேர்ந்த சமையற்காரர்கள் இல்லாமலா போய் விட்டார்கள்? அப்பொழுது இது ஒரு பிரச்சினையாகப் பேசப்பட்டதுண்டு - விமர்சிக்கப் பட்டதுண்டு.

   நீண்ட காலத்திற்குப் பிறகு ஆட்சியில் உயர்மட்டப் பதவியில் உள்ளவர்களின் உணவுப் பிரச்சினை, அரசின் அதிகார பூர்வ அறிக்கையாக இப்பொழுது வெளி வந்துள்ளது.

   இது அடுத்தவர்களின் உரிமையில் மூக்கை நுழைக்கும் மோசமான நடவடிக்கையாகும். இந்தப் போக்குத் தொடருமேயானால், தனி மனிதனின் தனிப்பட்ட உணர்வுகளில் பழக்க வழக்கங்களில் மோடி அரசு தலையிடக்கூடும் என்று எதிர்ப்பார்க்கலாம்.

   தொடக்கத்திலேயே இது கண்டிக்கப்பட வேண்டும் எதிர்க்கப்பட வேண்டும் - விவாதங்கள் எழுப்பப்பட வேண்டும். ஊடகங்களும் ஒதுங்கிக் கொள்ளாமல் பெரும்பான்மையான மக்களின் உண(ர்)வுப் பிரச்சினையைத் தனி மனிதரின் ஆசாபாசத்தின் முடிவுக்கு விட்டுவிட முடியுமா? வெளிப்படையான விவாதங்கள் வெளிச்சத்திற்கு வரட்டும் - அதனை வரவேற்கிறோம்.

   Read more: http://viduthalai.in/page1/86790.html#ixzz3C1atUqRG

   தமிழ் ஓவியா said...

   சட்டசபைக்குப் பார்ப்பனர் செல்வதன் ஆபத்து

   திருவாளர் ராவ்பகதூர் கிருஷ்ணமாச்சாரியர் எம். எல். ஏ. இந்திய சட்டசபைக்கு நமது பிரதிநிதியாக அனுப் பப்பட்டவர். அவர் சமூக சட்டம் செய்ய சட்ட சபைக்கு அதிகாரம் இருக்கக் கூடாதென்றும் மத விஷயங்களில் எந்தச் சீர்திருத்தவாதியும் பிரவேசிக்கக் கூடாதென்றும், கல்யாண வயதைப் பற்றி சாஸ்திரங்களில் என்ன கூறியிருக்கிறதோ அதற்குச் சிறிதுகூட மாற்றம் செய்யச் சீர்திருத்தவாதி களையாவது, சர்க்காரையாவது, சட்டசபைகளை யாவது அனுமதிக்கக் கூடாது என்றும் பேசி அதற்காகக் கட்டுப்பாடான பிரச்சாரம் செய்ய வேண்டுமென்று தன்னால் கூடியவரை தான் சட்ட சபையில் பார்த்துக் கொள்வதாகவும் கூறியிருக்கின்றார்.

   சுயராஜ்யம் கிடைத்த பிறகு சமூக சட்டம் செய்து கொள்ளலாம் என்று மக்களை ஏமாற்றி அரசியல் குழியில் விழுகும்படி செய்யும் பார்ப்பன தேசியவாதிகளும் அவர்களது பத்திரிகைகளும் இதற்கு யாதொரு பதிலும் சொல்லாமல் வாயை மூடிக் கொண்டேயிருக்கின்றன.

   நாம் இந்தப் பித்தலாட்டங்களை எடுத்துக் காட்டினால் அது தேசத்துரோகம் என்பதாகவும் சுயராஜ்யத்திற்கு முட்டுக் கட்டையாகவும் போய்விட்டதாகக் கூக்குரல் போட்டு விஷமப் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்து விடுகிறார்கள்.

   ஆகவே எப்படியாவது சட்டசபை முதலிய தானங் களுக்கு அரசியல் கட்சிகளையும் அபிப்பிராயங்களையும் எதிர்பார்க்காமல் உண்மையான சீர்திருத்தத்திற்கு போதிய உணர்ச்சியுள்ள மக்களாகப் போகும்படி பார்த்துக் கொள்ள வேண்டியதாகும்.

   அதை விட்டு விட்டு அரசியல் கொள்கைகள் என்பதைக் கவனித்துக் கொண்டு எந்தக் காரணத்தை முன்னிட்டாவது பார்ப்பனர்களை நமது பிரதிநிதிகளாக அனுமதித்தோமானால் விதவைகள் கற்பம் உதிரக் கட்டியாகி திடீரென்று மறைந்து விடுவதுபோல் நமக்குத் தெரியாமலேயே அவர்கள் பார்ப்பனியப் பிரதிநிதி யாகவேதான் ஆகிவிடுவார்கள். அதில் சிறிதும் சந்தேகம் கொள்ளுவது அறியாமையேயாகும்.

   - குடிஅரசு - கட்டுரை - 26.10.1930

   Read more: http://viduthalai.in/page1/86768.html#ixzz3C1bdsXMW

   தமிழ் ஓவியா said...

   இரண்டு வழக்குகள் விடுதலை


   ஈரோடு ஆலயப் பிரவேச வழக்கில் 3 பேர் தண்டனை அடைந்து அவ்வழக்குகள் ஹைக்கோர்ட் அப்பீலில் இருந்தது. நேயர்களுக்கு ஞாபகமிருக்கும். அதுபோலவே சுசீந்திரம் தெருப் பிரவேச வழக்கிலும் 12 பேர்கள் தண்டனை அடைந்து அவ்வழக்கும் திருவாங்கூர் ஹைகோர்ட்டில் அப்பீல் செய்யப்பட்டிருந்ததும் நேயர் களுக்கு ஞாபகமிருக்கும்.

   இவ்வாரம் மேற்படி இரண்டு வழக்குகளும் அப்பீலில் விசாரிக்கப்பட்டு தண்டனைகள் முழுவதும் தள்ளப்பட்டு வழக்குகள் விடுதலையாகிவிட்டன.

   முதல் வழக்கு. அதாவது ஈரோடு கோவில் பிரவேச வழக்கு போலீசாருடைய அக்கிரமத்தினாலேயே கொண்டு வரப்பட்டதாகும். அவர்களுக்குச் சலுகை காட்டினது ஜில்லா பெரிய அதிகாரியாகும். இவ்வழக்கை அதிகாரிகள் நியாயம் தெரியாமலோ, சட்டம் தெரியாமலோ நடத்தி னார்கள் என்பதாக யாரும் சொல்ல முடியாது. அவர்கள் வேண்டுமென்றே சிலரைத் திருப்தி செய்யத்தான் இப்படிச் செய்தார்கள் என்றே நாம் சொல்லவேண்டியிருக்கிறது.

   இரண்டாவது வழக்காகிய சுசீந்திரம் வழக்கும் அக்கிரம மாகவே நடத்தப்பட்டது என்பதில் யாருக்கும் சந்தேகமிருக்காது. அதன் ஜட்ஜ்மெண்ட் கீழே குறிப் பிட்டிருக்கிறோம். திருவாங்கூர் போலீசு கமிஷனர் திரு. பிட் துரை இருந்திருந்தால் இன்றைய தினம் திருவாங்கூரில் ஒரு ரோடுகூட ஒரு நபருக்கும் உரிமை இல்லாததாக இருக்காது. கோவில் பிரவேசம் கூட அனுமதிக்கப்பட்டிருக்கலாம்.

   ஆனால் அங்குள்ள பார்ப்பன ஆதிக்கமானது இவ்வளவு தொல்லையைக் கொடுத்துவிட்டது. இம்மாதிரி சந்தர்ப் பங்களில் ஒவ்வொரு வழக்கு முடிவும் அய்கோர்ட்டுக்குச் சென்றே நியாயம் பெறவேண்டுமானால் சாதாரண ஜனங்களுக்குச் சாத்தியப்படக்கூடியதாகுமா என்பதை யோசித்தால் இம்மாதிரி விஷயங்களுக்கு வெளிப் படையாயும் தெளிவாயும் ஒரு சட்டம் ஏற்பட்டுவிட வேண்டியது அவசியமாகும்.

   பொதுவாகவே இந்துக்கள் என்பவர்களுக்குள் ஜாதி வித்தி யாசமும், உயர்வு தாழ்வும் ஒழிவதற்குப் பார்ப்ப னர்கள் எப்படி சம்மதிக்க மாட்டார்களோ அது போலவே மகமதியர்கள், வெள்ளைக் காரர்கள், கிறித்தவர்கள் ஆகி யவர்கள் சம்மதிக்க மாட்டார்கள்.

   ஆதலால் இந்துக்கள் ஜாதி வித்தியாசம் உயர்வு தாழ்வு ஆகியவைகளை ஒழிக்கப் பாடுபடுகின்றவர்கள் மேல் கண்டவர்களின் விரோதத் தையும், அவர்களால் செய்யப் படும் தொல்லைகளையும் சமாளிக்க தயாராயிருந்து கொண்டுதான் பிரவேசிக்க வேண்டும் என்பதை உணர வேண்டும். நிற்க, இவ்விஷயங் களில் இனி மேல் நடக்க வேண்டிய விஷயங்களைப்பற்றி யோசித்து பின்னால் வெளியிடுவோம்.

   - குடிஅரசு - துணைத்தலையங்கம், 09.11.1930

   Read more: http://viduthalai.in/page1/86769.html#ixzz3C1bnmBFs

   தமிழ் ஓவியா said...

   அரசியல் வியாபாரம்


   டா க்டர் பி. சுப்பராயன் அவர்கள் அடுத்துக் கூடும் சட்டசபைக் கூட்டத்திற்கு மூன்று தீர்மானங்கள் அனுப்பப் போவதாகத் தெரிகின்றது. அதாவது,

   1. சில பாதுகாப்புகளுடன் குடியேற்ற நாட்டத்துக்குக் குறைந்த எந்தத் திட்டமும் திருப்தியளிக்காது என்று இச்சபை அபிப்பிராயப்படுவதாக இந்த கவர்ன்மெண்ட் பிரிட்டிஷ் கவர்மெண்டாருக்குத் தெரிவிக்க வேண்டுமென இச்சபை சிபார்சு செய்கிறது.

   2. பலாத்காரமற்ற குற்றங்களுக்காகத் தண்டிக்கப்பட்ட அரசியல் குற்றவாளிகளையெல்லாம் விடுதலை செய்ய வேண்டுமென்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குச் சிபார்சு செய்யும்படி இச்சபை சிபார்சு செய்கிறது.

   3. அரசியல் கைதிகள் நடத்தப்படும் விதத்தைப் பற்றி விசாரணை செய்ய ஒரு கமிட்டி நியமிக்க வேண்டுமென்று இச்சபை கேட்டுக் கொள்ளுகிறது. என்பவையாகும். ஆகவே, இம்மூன்று தீர்மானங்களையும் நம்மைப் பொறுத்தவரை நாம் இவைகளை அரசியல் வியாபாரத் தீர்மானங்களென்றே சொல்லுவோம்.

   இதற்காக ஜஸ்டிஸ் கட்சியார்கள் பயந்து கொள்ளவோ திக்கு முக்காடவோ தேவையில்லையென்றும் சொல் லுவோம். ஏனெனில் இந்த மாதிரி காரியங்களின் நடவடிக் கைகளை ஆதாரமாய் வைத்துக் கொண்டு கூப்பாடு போடும் தேசியப் பத்திரிகைகள் என்பவைகள் எல்லாம் ஜஸ்டிஸ் கட்சிக்கு நிபந்தனையில்லாத அடிமைகளாய்ப் போய்விட்டபடியாலும் சென்ற தேர்தலின் போது தேசியக் கட்சியை விட ஜஸ்டிஸ் கட்சி மோசமானது என்று கருதி அதைக் காப்பாற்ற வேண் டிய பொறுப்பு ஏற்பட்டது போல் இப்போது ஜஸ்டிஸ் கட்சியை விட தேசியக்கட்சி மோசமானது என்று கருதி ஜஸ்டிஸ் கட்சியைக் காப்பாற்றித் தீரவேண்டிய பொறுப் புடை யவைகளாகி விட்டபடியாலும் அவைகள் கருவாடு திருட்டுக் கொடுத்த பார்ப்பனத்தி போல் வெளியில் சொல்லாமல் வாயை மூடிக் கொள்ளும்.

   ஆகையால், ஜஸ்டிஸ் கட்சியார் இவ்விஷயத்தில் யாருக்கும் பயப்படாமல் தங்கள் கொள்கையைத் தைரியமாய் வலியுறுத்தலாம் என்பதாகத் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.

   - குடிஅரசு - துணைத்தலையங்கம் - 09.11.1930

   Read more: http://viduthalai.in/page1/86770.html#ixzz3C1bwCOSJ

   தமிழ் ஓவியா said...

   ஜாதி மதப் பெயர் கொடுக்காதீர்கள்: முக்கியமான வேண்டுகோள்

   இவ்வருஷக் கோடியில் சர்க்காரால் ஜனங்களுடைய எண்ணிக்கையை எடுக்கும் சென்சஸ் வேலை நடைபெறும். அதில் கணக்கெடுப்பவர்கள் உங் களிடம் வந்து விசாரிக்கையில் நீங்கள் ஜாதி மதத்தைப் பற்றி கேட்கப்படுவீர்கள்.

   அப்போது முறையே இந்தியன் என்றும் பகுத்தறிவுக்காரன் என்றும் மாத்திரம் தான் சொல்ல வேண்டுமே ஒழிய எவ்வித மதத்தின் பேராவது ஜாதியின் பேராவது சொல்லக் கூடாது என்று தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

   ஏனெனில் ஜாதி வித்தியாசத்தை ஒழிக்க இந்தியாவில் எல்லாப் பிரமுகர்களும் ஒரே முகமாய் நின்று மும்முரமாய் வேலை செய்யும் போது நாம் மறுபடியும் அதைச் சொல்லிக் கொண்டிருப்பது மூடத்தனமும் கவலையும் சுயமரியாதையும் அற்ற தன்மையுமாகும்.

   அதுபோலவே இந்தியர்களில் யாராவது தன்னை இந்து என்று மதத்தின் பெயரைச் சொல்லுவதும் சுத்த முட்டாள் தனமாகும். இந்து மதம் என்பதாக ஒரு மதம் இல்லை யென்றும் அப்படியிருப்பதாகச் சொல்லும் மதத்தின் தத்துவமும் மக்கள் பிறவியில் உயர்வு தாழ்வு கற்பிப்பதும் 20 கோடி இந்துக்கள் என்பவர்களில் பார்ப்பனர்கள் தவிர மற்றவர்கள் எல்லோரும் பார்ப்பனருக்கு அடிமைகள்,

   அவர்களது தாசிமக்கள் என்கின்ற மானமற்ற தன்மை கொண்ட பொருளே இருப்பதால் சுயமரியாதையுள்ள எவரும் தங்களை இந்துக்கள் என்று சொல்லக்கூடாது. தவிரவும் இந்து என்னும் பதத்திற்குத் திருடன், அயோக்கியன், மோசக்காரன் என்று அர்த்தம் என்பதையுமுணருங்கள் என்று தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

   - குடிஅரசு - வேண்டுகோள் - 09.11.1930

   Read more: http://viduthalai.in/page1/86769.html#ixzz3C1c7VNXC

   தமிழ் ஓவியா said...

   பெரியவா செய்தால்....?
   தினமணியில் தோண்டி எடுத்த தீர்ப்பு - என்று தலையங்கம் (28.8.2014).

   நிலக்கிரி ஒதுக்கீடு ஊழல் பற்றிய உச்சநீதிமன்றத் தீர்ப்பை அலசியிருக்கிறது.

   ஊழல் நடந்தகாலம் 1993 முதல் 2012.

   இதில் பா.ஜ.க. ஆட்சிக்காலம் 1998 முதல் 22.5.2004 வரை.

   பிறகு காங்கிரஸ் ஆட்சி.

   மொத்த ஊழல் ஒதுக்கீடுகள்: 218.

   இதில் காங்கிரஸ் காலத்தில் ஒதுக்கீடு செய்யப் பட்டவை: 166

   இதுகுறித்து விலாவாரியாக தினமணி தலையங்கம் கூறுகிறது. ஆனால், பா.ஜ.க. ஆட்சிக் காலத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்ட 52

   ஒதுக்கீடுகளில் நிகழ்ந்த ஊழல்களைப்பற்றி விசாரிக்காமல் அந்த ஊழலை மட்டும் மீண்டும் புதைகுழிக்குள் மறைத்து விட்டதே! - தினமணி, அது ஏன்?

   ஓ! பா.ஜ.க., பெரியவா செஞ்சா அது பெருமாள் செஞ்சமாதிரி. அதை யாரும் கேள்வி கேட்கப்படக் கூடாது அப்படித்தானே?

   Read more: http://viduthalai.in/page1/86720.html#ixzz3C1cTjYtZ

   தமிழ் ஓவியா said...

   செய்தியும் சிந்தனையும்


   செய்தியும் சிந்தனையும்

   ஸ்வீட் கடை

   செய்தி: ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட் கடைகளில் சிறப்பு இனிப்பு கார வகைகள் தனி டப்பாக்களில் விற்பனை - 2600 விநாயகர் கண்காட்சி யும் உண்டு.
   சிந்தனை: வியாபாரத்திற்கும் வியாபாரம்! பார்ப்பனீய பக்திப் பிரச்சாரமும் இன் னொரு புறம்; சும்மா ஆடுமா அவாள் குடுமி?

   வருண ஜெபம்

   செய்தி: மழை வேண்டி திருக்கழுக்குன்றம் வேத புரீஸ்வர் கோயிலில் யாகம் நடைபெற்றது. சிந்தனை: இதுபோன்ற சேதிகள் ஏடுகளில் வருகின் றன; ஆனால், மழை பொழிய வில்லை என்பது மட்டும் மக்கள் அறிந்த உண்மை!

   Read more: http://viduthalai.in/page1/86716.html#ixzz3C1cbcjo5

   தமிழ் ஓவியா said...

   புதிய பாரத் மாதா - ஹிந்து மாதாதான்! ஜே! ஜே!!

   - ஊசி மிளகாய்

   இந்த வார கல்கி ஏட்டில் (7.9.2014) ஒரு கேள்வி - பதில் வெளிவந்துள்ளதை அப்படியே தருகிறோம்.

   கேள்வி: ஜாதி, மத உணர்வுகளை 10 ஆண்டுகள் நிறுத்தி வையுங்கள் என்கிறாரே மோடி?

   (கல்கியின்) பதில்: பிரதமர் பதவியேற்றபின் முதல் முறையாக ஒரு அபத்த வேண்டுகோளை விடுத்துள்ளார் மோடி. பத்து ஆண்டுகள் என்ன கணக்கு? அதன் பிறகு மறுபடி இந்த தீய உணர்வுகள் தலையெடுத்தால் பாதகமில்லையா? என்ன? சரியான திட்டங்களை வகுத்து மனப்பூர்வமாக செயல்படுத்தினால் பத்து ஆண்டுகளில் ஜாதி, மத உணர்வுகளை அடியோடு ஒழித்துக் கட்ட முடியும்.

   ஆனால், அதற்குக்கூட சங்பரிவார் அமைப்பு களின் ஒத்துழைப்பு மோடிக்குக் கிடைக்காது.

   - கல்கியின் தராசு கூறும் இக்கருத்துக்களை உண்மையான - யதார்த்தமான - நிலவரத்தின் பிரதிபலிப்பாகும். சங்பரிவாரங்கள் என்றாவது ஜாதி ஒழிய வேண்டும் என்று கூறிட முன் வருமா? அதன் தத்துவ கர்த்தரான கோல்வாக்கரின் ஞான கங்கை நூலில் அவர் வர்ண தர்மத்தை (ஜாதியை) நியாயப்படுத்தியுள்ளதோடு அதனை சிலாகித்துப் பாதுகாக்க அல்லவா வற்புறுத் துகிறார்?

   இங்குள்ள ஆர்.எஸ்.எஸ். காரரான கோயங்கா வீட்டுக் கணக்கப் பிள்ளை ஸ்ரீமான் குருமூர்த்தி அய்யர் வாள் சில நாள்களுக்கு முன் ஜாதி, பொருளாதாரத்திற்கு மிகவும் உதவுவதாகக் கூறி, ஜாதிப் பாதுகாப்பை மேம்படுத்தி உபந்நியாசம் செய்தாரே மறந்து விட்டதா?

   அதை மிகப் பெரிய அளவில் தினமணி ஏட்டில் போட்டு விளம்பரப் படுத்தினரே - குருமூர்த்தி அய்யர்வாளின் ஆர்.எஸ்.எஸ். கூட்டு சகாவான ஸ்ரீமான் விளம்பரப்புகழ் வைத்தியநாத அய்யர்வாள் - அது எதைக் காட்டுகிறது?

   மோடி ஜாதியை ஒழிக்க, மதத்தை அடக்க முன் வருவாரா? வரத்தான் முடியுமா? அவரது மூக்கணாங்கயிறு ஆர்.எஸ்.எஸ். கையில் அல்லவா உள்ளது?

   பிரதமர் மோடி உண்மையில் விரும்பினால் அரசியல் சட்டத்தில் உள்ள 17ஆவது விதியில் மாற்ற வேண்டியது ஒரே ஒரு வார்த்தையைத்தான்! (ஒரு அரசியல் சட்டத் திருத்தம் ஏகமனதாக நிறைவேற போதிய பெரும்பான்மை உள்ளதே!) தீண்டாமை ஒழிக்கப்பட்டு விட்டது என்ற 17ஆவது விதியில் திண்டாமைக்கு பதில் ஜாதி என்ற சொல்லை மாற்றிப் போட்டாலே, பெரிய சமூகப் புரட்சி சரித்திரத்தை மோடியால் படைத்து விட முடியுமே! 18 இடங்களில் இந்திய அரசியல் சட்டத்தில் ‘Caste (ஜாதி) இடம் பெற்றுள்ளதே!

   அது மட்டுமா? இந்தியாவின் அத்தனைக் குடி மக்களும் ஹிந்துக்கள் தானாம்! அதுதான் இந்தியாவின் அடையாளமாம்!

   தேசிய அடையாளம் என்று மோடி அரசின் சிறுபான்மையினர் நலன் காக்கும் திருமதி நஜ்மா அப்துல்லா திருவாய் மலர்ந்தருளி, ஆர்.எஸ்.எஸ். தலைவரின் குரலுக்கு ஹெர் மாஸ்டர்ஸ் வாய்ஸ் ஆக ஆகி உள்ளார் நியூஸ்X என்ற ஆங்கில TV சேனல் இன்று காலை இதனை தொடர்ந்து விளம்பரப்படுத்திக் கொண்டே இருந்தது!

   நாடு எங்கே போகிறது பார்த்தீர்களா? நமது அரசியல் சட்டத்தின் அடிப்படையை இம்மாதிரி கடப்பாறைகளால் பெயர்க்கும் முயற்சி துவங்கி, ஜாம் ஜாம் என்று நடைபெறுகிறது!

   அகண்ட பாரதம் அட்லஸ் வந்து விட்டது.

   புதிய பாரத மாதாக்கீ! ஜே! ஜே!!

   இந்தியா ஒழிந்து ஹிந்துயா வந்தது போலும்!

   Read more: http://viduthalai.in/page1/86725.html#ixzz3C1cjREQh

   தமிழ் ஓவியா said...

   இன்றைய ஆன்மிகம்?

   மாணிக்கக்கல்

   மாணிக்கக் கல் அணிந் தால் அரசு வேலை கிட் டும் என்கிறது தினமணி சோதிடம்.

   மாணிக்கக் கல் வாங்கும் அளவுக்குப் பசையிருந்தால் அவன் ஏன் அரசு வேலையைத் தேடப் போகிறான்?

   Read more: http://viduthalai.in/page1/86729.html#ixzz3C1csROSV

   தமிழ் ஓவியா said...

   பார்ப்பன தர்மம்


   பார்ப்பன தர்மம் என்பதே கொலை, கொள்ளை, விபச்சாரம், திருட்டு, புரட்டு, பித்தலாட்டம், துரோகம், அசிங்கம், ஆபாசம், நம்பிக்கைக் கேடு, நாணயக் கேடு ஆகிய கூடாத காரியங்களை, குணங்களை அடிப் படையாகக் கொண்டே ஏற்பாடு செய் யப்பட்டவை என்றே சொல்லக் கூடியவையாக இருக்கின்றன. - (விடுதலை, 5.1.1966)

   Read more: http://viduthalai.in/page1/86695.html#ixzz3C1d8ZR80

   தமிழ் ஓவியா said...

   பிள்ளையார் ஊர்வலம் என்ற பெயரால்....

   தமிழ்நாட்டில் விநாயக ஊர்வலம் என்பது மகாராட்டிர மாநிலத்திலிருந்து இறக்குமதி செய்யப் பட்டது. தமிழ்நாடு முழுவதும் 60 ஆயிரம் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டையாம். ஒரு சிலைக்கு கிட்டதட்ட செய்யப்படும் செலவு ரூ.10 ஆயிரத்திற்குமேல்; 60 ஆயிரம் சிலைகள் என்றால் ரூ. 60 கோடி செலவாகும். சில இடங்களில் நாள் கணக்கில் வைத்துப் பூஜை செய்கிறார்கள். அப்படி வைக்கப்படும் சிலைக்கும் சம்பந்தப்பட்ட பகுதியில் உள்ளவர்களுக்குப் பணம் பரிமாறப்படுகிறது.

   பச்சையாகச் சொன்னால் பச்சை வியாபாரமாகவே இருக்கிறது; பிள்ளையாரின் கதையைச் சொல்ல ஆரம்பித்தால் வயிற்றைப் புரட்டிக் கொண்டுதான் வரும் - அத்தகைய கும்பிச் சகதி.

   திருஞானசம்பந்தன் எழுதி வைத்துள்ள பாடல் ஒன்று வலிவலம் சிவன் கோயிலில் (நாகை மாவட்டம்) பொறிக்கப்பட்டுள்ளது.

   பிடியதன் உருவுமைகொளமிகு கரியது
   வடிகொடு தனதடி வழிபடும் அவரிடர்
   கடிகண பதிவர அருளினன் மிகுகொடை
   வடிவினர் பயில்வலி வலம் உறையிறையே
   இமயமலையின் அடிவாரத்தில் ஆண் யானையும் பெண் யானையும் புணர்வதைக் கண்ட அம்மையும் அப்பனும் (சிவனும் - பார்வதியும்) காம வெறி கொண்டு இவர்களும் ஆண் - பெண் யானைகளாக உருக் கொண்டு புணர்ந்ததால் யானைத் தலை கொண்ட பிள்ளையாரைப் பெற்றெடுத்தார்களாம்.

   மக்களைப் பக்திப் போதையில் ஆழ அழுத்தி விட்டதால் இந்த ஆபாசங்கள் எல்லாம் அவர்களுக்கு ஒரு பொருட்டல்ல என்ற நிலை ஏற்பட்டு விட்டது.

   இந்து மதத்தில் இந்த பிள்ளையார் இருக்கிறாரே - சரியான கோமாளிப் பாத்திரப் பிறப்பு!

   பக்தர்கள் இந்தப் பிள்ளையாரை எந்தப் பெயரிட்டும் அழைக்கலாம்; கார்கில் பிள்ளையார் கிரிக்கெட் பிள்ளையார், கடன் தீர்த்த விநாயகர் - என்று எந்த அளவுக்கும் கிறுக்கலாம் யாரும் ஏன் எதற்கு என்று கேட்க மாட்டார்கள்.

   பிடித்து வைத்தால் பிள்ளையார் என்ற சொலவடையையும் நினைவில் கொள்க!

   சிவன் கோயில்களிலும், தேர்களிலும் ஒரு பெண்ணின் பெண் உறுப்பினுள் துதிக்கையை நுழைத்துக் கொண்டு இருப்பது போல உருவங்களை வடிக்கிறார்கள் என்றால் இந்த வெட்கக் கேட்டை என்னவென்று சொல்லுவது?

   தமிழ் செம்மொழி ஆனால் ஏழை விவசாயி வீட்டுக் கட்டுத்தறி தடை இல்லாமல் ஓடுமா? வீட்டுக்கு வீடு மட்டன் பிரியாணி கிடைக்குமா? என்று எழுதும் பார்ப்பனர்களை நோக்கி நாம் கேட்க வேண்டாமா? இந்தப் பிள்ளையார் ஊர்வலம் நடத்தினால், மழை கொட்டோ கொட்டென்று கொட்டுமா? முப்போகம் சாகுபடி நடக்குமா? மின்பற்றாக்குறை மின்னல் போல பறந்து ஓடிடுமா?

   பள்ளிகளில்கூட கழிப்பறை இல்லாமல் தமிழ்நாட்டு இருபால் மாணவர்கள் அவமானப்படும் இந்த நாட்டில் அழுக்குருண்டை பிள்ளையாருக்கு ஒரு சதுர்த்தியா? அதற்காக ஊர்வலமா? அதற்காக அரசு விடுமுறையா? அதற்காக பல கோடி ரூபாய் செலவழிப்பா? என்ற நியாயமான கேள்விக்கு நாணயமான பதில் உண்டா என்று சவால் விட்டுக் கேட்கிறோம்.

   விநாயகர் ஊர்வலம் என்ற பெயரில் ஆங்காங்கே கலவரங்கள்; சிறுபான்மையினர் வழிபாட்டு இடங்கள் மீது கல்லெறிதல், கலாட்டா செய்தல் இன்னோரன்ன நாகரிகமற்ற அழி செயல்கள்!

   சமுதாய அமைப்புகளோ, அரசியல் கட்சிகளோ ஊர்வலம் நடத்தினால் ஆயிரத்தெட்டு கேள்விகளை எழுப்பி அனுமதி மறுக்கும் அரசாங்கம், காவல்துறை ஒவ்வொரு முறையும் பிள்ளையார் ஊர்வலத்தில் வன்முறைகள் வெடிக்கின்றனவே - அதற்கு மட்டும் அனுமதியளிப்பு - ஏன்?

   மதக் காரணம் என்றால் அது என்ன நெய்யில் பொரித்ததா?

   பல ஊர்களில் பிள்ளையார் ஊர்வலத்தின் போது இந்து முன்னணிகளின் துண்டறிக்கைகள் விநியோகம் - அவற்றில் சிறுபான்மை மக்கள் மீது அவதூறு மாரி!

   போதும் போதாதற்கு இப்பொழுது மத்தியில் ஒரு இந்து மதவாத ஆட்சியே அமைந்து விட்டது - கேட்கவா வேண்டும்?

   தந்தை பெரியார் பிறந்து பகுத்தறிவுப் போதனை செய்தார். அதனால் புத்தி தெளிவு பெற்று கல்வி, உரிமை, வேலை வாய்ப்புகள் பெற்று முன்னேற்றத் திசையில் பயணித்து வருகிறோம்.

   அவற்றை நேரில் வீழ்த்த முடியாத வேதியக் கூட்டம், பக்தி என்னும் போதை மாத்திரைகளை இத்தகைய மத ஊர்வலங்கள் மூலம் இலவசமாக விநியோகித்து வருகிறது; ஏமாந்து விடாதீர்கள்! ஏமாந்தால் மீண்டும் ஒரு குலத்துக்கொரு நீதி என்னும் - மனுதர்மப் பார்ப்பன ஆதி பத்தியத்தின் காலடியில் தான் மிதிபட நேரிடும்!

   ஏமாறாதீர்கள்! ஏமாறாதீர்கள்!! எச்சரிக்கை! எச்சரிக்கை!!

   Read more: http://viduthalai.in/page1/86699.html#ixzz3C1dFtaRZ

   தமிழ் ஓவியா said...

   தீண்டாமைக் கொடுமை மடமை


   இந்தியத் துணைக்கண்டத்தில் தீண்டாமை என்பது எந்த அளவிற்கு இருந்தது என்பதற்கு ஒரு சம்பவத் தைக் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

   ஒரு சமயம் சுபாஸ் சந்திரபோஸ் அவர்கள் ஒரு வக்கீலிடம் நன் கொடை வசூலிப்பதற்காய்ச் சென் றிருந்தார். அப்போது அந்த வழக் கறிஞர் என்னிடம் நன்கொடைக்கு வந்திருக்கிறீர்களே, என்னை தொட்டால் தீட்டு என்கிறார்கள் ஆனால் என் பணத்திற்கு மட்டும் அந்தத் தீட்டு இல்லையா? என்று கேட்டார்.

   எல்லாவற்றையும் கடந்தவன் நான். நான் தீண்டா மையை அனுஷ்டிப்பவன் அல்ல என்றாராம் சுபாஸ் சந்திரபோஸ்.

   அப்படியானால், ஒருநாளைக்கு என் வீட்டுக்கு வந்து விருந்து சாப்பிடுங்கள்; சாப்பிட்ட மறுநாள் நன்கொடை தருகிறேன் என்றார் அந்த வழக்கறிஞர்.

   உடனே சுபாஸ் சந்திரபோஸ், சரி நாளைக்கே நாலைந்து உயர்ந்த ஜாதிக்காரர்களுடன் வந்து உங்கள் வீட்டில் சாப்பிடுகிறேன். நீங்களும் உங்கள் ஜாதிக்காரர்கள் சிலரை எங்க ளுடன் சேர்ந்து சாப்பிட ஏற்பாடு செய்யுங்கள் கலந்து அமர்ந்து சாப்பிட்ட பிறகு நன்கொடை தாருங்கள் என்றார். சரி என்றார் வக்கீல்.

   அவர்கள் வந்த போது வழக்கறிஞர் மிகவும் சோகமாக உட்கார்ந்திருந்தார். ஏன்? என்று கேட்டார் போஸ். என்னால், நான் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற முடியவில்லை என்றார். என்ன, காரணம்? என்று கேட்ட போது, நீங்கள் உயர்ந்த சாதிக்காரர்களை என் வீட்டில் சாப்பிட அழைத்துக் கொண்டு வந்து வீட்டீர்கள்;

   ஆனால், என் ஜாதியை சேர்ந்தவர்கள் யாரும் அய்யோ உயர்ந்த ஜாதியாருடன் சேர்ந்து சாப்பிடுவதா? என்ன பாபம் செய்ததாலோ இப்படிப்பட்ட பிறப்பெடுத்திருக்கிறோம் - அவர்களோடு சேர்ந்து சாப்பிடும் பாவத்தையும் செய்தால், இன்னும் எத்தனை பிறப்புக்கு இடர்ப்பட வேண்டுமோ! என்றாராம்.

   இந்த அளவுக்கு இந்த நாட்டிலே தீண்டாமை வேர் விட்டிருந்தது.

   இந்த அடிமை நிலைமை யைத்தான் அடியோடு தகர்த் தெறியப் பாடுபட்டார் தந்தை பெரியார்.

   ஆதாரம்: கடலூர் மாநாட்டில் விடுதலை விரும்பி பேச்சு, முரசொலி (19.7.1981

   Read more: http://viduthalai.in/page1/86718.html#ixzz3C1doqt00

   தமிழ் ஓவியா said...

   தந்தை பெரியார் பொன்மொழி

   இன்றைய சுதந்திரம் வட நாட்டா னுக்கும் அவன் மொழிக்கும் தென்னாட்டவர் அடிமையாய் வாழ வேண்டுமென்றே ஆக்கப்பட்டுவிட்டது. வெள்ளையரிடமிருந்து பெற்ற சுதந்திரத்தைவிட வடவரிடமிருந்து சுதந்திரம் பெறுவதே மிகமிக முக்கியமானது.

   Read more: http://viduthalai.in/page1/86718.html#ixzz3C1dxe1jD

   தமிழ் ஓவியா said...

   நிர்வாணப் பெண்கள்!

   ஒரிசா மாநிலம் தன்சாரண்யா என்ற காட்டுப் பகுதியில் மலைவாழ் மக்கள் வாழ்கிறார்கள். அங்கு ஆண்கள் உடை உடுத்திக் கொள்கிறார்கள். பெண்கள் மட்டும் நிர்வாணமாகத் திரிகிறார்கள். அதற்குக் காரணம் கீழ்க்கண்ட மூடநம்பிக்கையாகும்.

   ராமனுடன் சீதை இந்த காட்டில்தான் தங்கினாளாம். தனது ஆடைகளைக் கரையில் களைந்து வைத்து விட்டு ஒரு அருவியில் சீதை குளிக்கச் சென்றாளாம். அந்த உடைகளை அக்காட்டில் இருந்த பெண்கள் எடுத்துக் கொண்டு போய் விட்டார்களாம். குளித்து விட்டுக் கரையேறிய சீதை உடைகளின்றி நிர்வாணமாக நின்றாளாம். உடனே அந்தப் பெண்களுக்கு சாபமிட்டாளாம்.

   என்னுடைய உடைகளைத் தூக்கிக் கொண்டு போய் வீட்டீர்கள் இனிமேல் இந்தப் பகுதியில் எந்தப் பெண்ணாவது உடை அணிந்தால் அவன் கணவன் இறந்து போய் விடுவான் என்று சாபமிட்டாளாம். அதிலிருந்து அந்தப் பகுதியில் எந்தப் பெண்ணும் உடை அணியாமல் நிர்வாணமாய் திரிகிறார்களாம். இப்பொழுது அதிகாரிகள் மிகவும் சிரமப்பட்டு இடுப்பில் சிறுதுணியைச் சுற்றிக் கொள்ளச் செய்துள்ளனர்.

   மூடநம்பிக்கையின் கேவலத்திற்கு இதைவிட வேறு என்ன எடுத்துக்காட்டு வேண்டும்?

   Read more: http://viduthalai.in/page1/86717.html#ixzz3C1eI4iHI

   தமிழ் ஓவியா said...

   மதம் என்றாலே எனக்கு ஒருவித வெறுப்பு; அடிக்கடி மதத்தைக் கண்டித்திருக் கிறேன். அதை உருத்தெரி யாமல் ஒழித்துக்கட்ட வேண் டுமென்று ஆசைப்பட்டிருக் கிறேன். மதம் என்றால் குருட்டு நம்பிக்கை, பிற் போக்குத்தனம், பிடிவாத மான வெறித்தனம், மூடப்பழக்கம், சுரண்டல், சுயநலத்தைப் பாதுகாத்தல் என்பதுதான் என் முடிவு.

   - ஜவகர்லால் நேரு, (சுயசரிதை, பக்கம் 374

   Read more: http://viduthalai.in/page1/86717.html#ixzz3C1ePOdfU

   தமிழ் ஓவியா said...

   இன்றைய ஆன்மிகம்?

   செம்புக் கம்பி

   தேக்கி வைக்கப்பட் டுள்ள மின்சாரத்தைச் செலுத்துவதற்கு செம்புக் கம்பியை இன்றைய விஞ் ஞானம் கண்டுபிடித்துள் ளது. ஆனால், அக்காலத் திலேயே ஆண்டவன் அருள் ஒளியை செம்பி னால் கடத்த முடியும் என உணர்ந்து, இறைவன் உருவங்களை செம்பி னால் சிலை வடித்தார்கள்.
   - கிருபானந்தவாரியார் தாய் வார இதழ் 28.8.1983)

   அப்படியானால் கல்லால் செதுக்கப்பட்ட கடவுள் சிலைகள், அய்ம் பொன்னால் செய்யப் பட்ட கடவுள் சிலைகள் அருள் ஒளியைக் கடத் தாது என்று அர்த்தமா? செப்புக் கம்பியால் மின் கடத்தப்படுகிறது என் பதை நிரூபிக்க முடியும் (கையை வைத்தால தெரி யும் சங்கதி) செம்பினால் செய்யப்பட்ட கடவுள் சிலை அருள் ஒளியை கடத்துகிறதுஎன்பதற்கு என்ன நிரூபணம்?

   Read more: http://viduthalai.in/page1/86658.html#ixzz3C1ejkrMF

   தமிழ் ஓவியா said...

   திருமணமாகுமுன் மணமக்களுக்கு மருத்துவப் பரிசோதனை:

   திருமணமாகுமுன் மணமக்களுக்கு மருத்துவப் பரிசோதனை:

   நீதியரசர் என். கிருபாகரன் கருத்து வரவேற்கத்தக்கதே!

   இதனை ஒரு இயக்கமாகவே நடத்துவோம் - வாரீர்!


   21ஆம் நூற்றாண்டிலும் மனிதக் கழிவுகளை மனிதனே சுமப்பதா? நவீன தொழில் நுட்ப முறைகளைக் கையாள வேண்டும்!

   தமிழர் தலைவர் ஆசிரியர் வாழ்வியல் அறிக்கை திருமணத்திற்குமுன் மணமக்கள் மருத்துவ சோதனை செய்து கொள்வது தான் சரியானது - அறிவியல் பூர்வமானது என்று மதுரை உயர்நீதிமன்ற கிளையில் நீதிபதி என். கிருபாகரன் அவர்கள் அளித்த தீர்ப்பை வரவேற்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

   மதுரை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி ஜஸ்டீஸ் திரு. என். கிருபாகரன் அவர்கள் வாழ்க்கை சம்பந்தமான வழக் கொன்றில் மிக அருமையான தீர்ப்பு ஒன்றினை சமூக நலம் சார்ந்த கண்ணோட்டத்தில் விஞ்ஞான பார்வையோடு வழங்கியுள்ளார்கள்.

   ஜோதிடப் பொருத்தமல்ல - மருத்துவ ரீதியான பொருத்தம் தேவை!

   திருமணங்களை ஏற்பாடு செய்யும் முன்பு நம் நாட்டுச் சமூக அமைப்பில் உள்ள பெரும்பாலான நடைமுறை என்ன?

   ஜாதி, மதம், அதற்குப் பாதுகாப்பான ஜோசியம் பார்த்தல் - இவைகளைப்பற்றி தான் கவலைப்பட்டு அதிக முக்கியத்துவம் கொடுத்து, (ஏராளமான வரதட்சணை என்று கொடும் சமூக நோய்க்கும் சத்தமில்லாமல் ஆளாகி) திருமணங்களை நடத்திக் கொள்ளுகின்றனர்.

   மணமக்களுக்கு மற்ற பொருத்தங்களைப் பார்ப்பதற்குப் பதிலாக, அறிவியல் அடிப்படையில் ஆதாரபூர்வமானதாக இவை இல்லாத நிலையில் - அறிவியல், உடலியல் - மருத்துவ ரீதியாக அவ்விருவருக்கும் மருத்துவப் பரிசோதனை சான்றுகளைப் பார்த்து ஒருவருக்கொருவர் உடல் ரீதியாகப் பொருத்தமானவர்களா என்று அறிந்து, திருமணங்களை ஏற்பாடு செய்தால், பின்னாள் அத்திருமணங்கள் - அந்தக் காரணங்களுக்காகத் தோல்வி அடையும் நிலை - வழக்கு மன்றங்களுக்குச் செல்லும் அவசியம் ஒரு போதும் ஏற்படாது. தேவையற்ற மன உளைச்சல்கள் - தானாகவே தீரும்.

   ஜோதிடம் பார்ப்பது, மற்ற பொருத்தங்களை சடங்கு சம்பிரதாயங்கள் வழியில் பார்ப்பது அறிவியல் - பகுத் தறிவுக் கண்ணோட்டத்தில் சரியானது - உண்மையானது அல்ல.

   சட்டத் திருத்தம்கூட கொண்டு வரலாமே பல திருமணங்களில் முதல் இரவிலேயே பல அதிர்ச்சி மணமகளுக்கோ, மணமகனுக்கோ தாக்கும் நிலை ஏற்பட்டு, அவர்கள் துன்பக் கேணியில் தள்ளப்படுகிறார்கள்.

   ஏற்பாடு செய்த இருசாராரின் பெற்றோர்களுக்கோ அவர்களைவிட பன்மடங்கு வலியும், வேதனையும்! யாரையோ தேள் கொட்டியது போன்ற நிலையும்தான் ஏற்படுகிறது.

   மதுரை உயர்நீதிமன்றத்தில் நீதியரசர் தந்த நல்லதோர் தீர்ப்பு!

   மத்திய, மாநில அரசுகள் திருமணச் சட்டங்களில் இம்முயற்சியை ஒரு முன் நிபந்தனையாக்கிடும் வகையில் சட்ட திருத்தத்தைக் கொணர மதுரை உயர்நீதிமன்றத்தில் (அது சென்னை உயர்நீதிமன்றத்தின் ஒரு பகுதிதான்) வழங்கப்பட்ட இத்தீர்ப்பு ஒரு முன்னோட்டமாக அமைய வேண்டும்.

   மருத்துவர்கள் தவறான சான்றிதழ் தந்தால் கடும் தண்டனை என்றும்கூட அச்சட்டத்தின் ஒரு பிரிவை முக்கியமாக இணைக்கலாம். அதன்மூலம் எப்போதாவது நிகழக் கூடிய தவறும்கூட நிகழ வாய்ப்பின்றித் தடுக்கலாம்!

   இந்தக் கருத்தை வலியுறுத்தி- அதாவது மண ஏற்பாடுகளுக்குமுன் மணமக்களாக விரும்புவோர் சரியான மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு சான்று களோடும், மற்ற ஏற்பாடுகள் துவங்கி நடந்தால், பாதி திருமணங்கள் தோல்வி அடையாது. நீதிமன்றங்களுக்கு வழக்குக்குச் செல்ல முடியாது.

   நாம் தொடர்ந்து வலியுறுத்தி வந்த கருத்துதான்

   உடல் நோய்களை மறைத்து, எப்படியாவது திருமணம் நடந்து விட்டால்போதும் என்ற தவறான முயற்சிகள்தான் இப்படி இரு சாராருக்கும்; பிறகு தீராத வேதனையையும், மாறாத துயரத்தையும் ஏற்படுத்தி விடுகின்றன என்பதை பல சுயமரியாதைத் திருமண மேடைகளிலும், பெண்கள் விடுதலை மாநாட்டிலும் சொற்பொழிவு ஆற்றும் போதும் நாம் இடைவிடாமல் வலியுறுத்தி வந்துள்ளோம் - வருகிறோம்.

   அது மட்டுமல்ல சென்னை பெரியார் திடலில் இயங்கும் பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையத்தின்மூலம் ஏற்பாடாகும் மணமக்கள் இருவருக்கும் இரத்தச் சோதனை, HIV சோதனை போன்றவைகளை நடத்திய பிறகே மணம் ஏற்பாடுகள் துவங்கி நடைபெறுவது வழக்கத்தில் உள்ளது.

   சமூக ஆர்வலர்களும் முன்வரட்டும்!

   இப்படி ஒரு சட்டத் திருத்தம் வந்து திருமண முறையில் நம் நாட்டில் மாறுதல் வந்தால் அதனால் அதிகம் பயன் பெறுவது முதலாவது மகளிரே ஆவர்; அடுத்து பெற் றோர்கள்ஆவார்கள்; அவர்களின் நிம்மதி குலைக்கப் படாது, முதுமையில் வாழும் வசதியும் உத்தரவாதமும் அதனால் ஏற்படும்.

   சமூகநல ஆர்வலர்களும், சமூக சீர்திருத்த அமைப்பு களும் இதற்காக ஒரு தனி இயக்கமே நடத்திட உடனடியாக முன் வருதல் அவசியம் - அவசரமுங்கூட.

   கி.வீரமணி
   தலைவர்
   திராவிடர் கழகம்

   சென்னை
   28.8.2014

   Read more: http://viduthalai.in/page1/86653.html#ixzz3C1eszjp8

   தமிழ் ஓவியா said...

   மனிதன்   பலவிதக் கருத்துகளையும், நிகழ்ச்சி களையும்பற்றிச் சிந்தித்து இது நல்லது, இது தீயது என்று உணரக் கூடிய சக்தி பெற்று, நல்லனவற்றைக் கடைப்பிடிக்கக் கூடியவன் எவனோ அவனைத்தான் மனிதன் என்று கூற முடியும்.
   (விடுதலை, 9.6.1962)

   Read more: http://viduthalai.in/page1/86644.html#ixzz3C1fjKvIE

   தமிழ் ஓவியா said...

   திராவிடர் கழகம்!


   மிகப்பெரிய வரலாற்றுக்குச் சொந்தமான திராவிடர் இனமக்கள் எழுந்து நின்று இன்று ஒருமுறை கரவொலி எழுப்பலாம்.

   ஏன்? இன்றைக்குத்தான் திராவிடர் கழகம் என்ற வர லாற்றைத் திருப்பிப் போட்ட சமூகப் புரட்சி இயக்கத்தின் பிறந்த நாள் (1944). ஆம், இது சேலம் மாநாட்டில் நடந்த ஒன்று.

   மக்கள் பிறவியினால் ஜாதி பேதம் கற்பிக்கப்பட்டி ருப்பதையும், அவற்றுள் உயர்வு - தாழ்வு கற்பிக்கப்பட்டிருப் பதையும் இக்கழகம் மறுப்ப தோடு, அவைகளை ஆதரிக் கிற, போதிக்கிற, கொண்டு இருக்கிற மதம், சாஸ்திரம், ஸ்மிருதி, புராணம், காவியம் என்பவை முதலாகிய எவை யும் பொது மக்களும், குறிப்பாக நம் கழகத்தவர்களும் பின்பற்றக்கூடாது என்றும், அவைகள் நம்மீது சுமத்தப் படாமல் இருக்கவேண்டிய காரியம் தீவிரமாய்ச் செய்ய வேண்டுமென்று இம்மாநாடு தீர்மானிக்கிறது.

   ******

   சர்க்காரால் தொகுதி வகுக்கப்பட்ட எந்தவிதமான தேர்தலுக்கும், கட்சி அங்கத் தினர்கள் நிற்கக்கூடாது; இதை ஏற்று ஒரு வாரத்தில் இதன்படி கட்டுப்பட்டு நடக் காதவர்கள் எவரும் இக்கட்சி யில் இருக்க இஷ்டமில்லை என்று கருதிக் கட்சியை விட்டு நீங்கிக் கொண்டவர் களாகக் கருதப்படவேண்டிய வர்கள் என்பது உள்ளிட்ட நவமணி (ஒன்பது) தீர்மானங் கள் சேலம் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.

   அரசியலில் இருந்து விடு பட்டு அடிப்படைச் சமூக மாற் றத்தைக் கொண்டுவரவேண் டும் என்பதற்காகவே திராவி டர் கழகம் பிறப்பெடுத்தது.

   ஏதோ ஒரு வழியில் நாம் மக்களுக்குப் பகுத் தறிவை உண்டாக்கிவிட்டோ மேயானால், பிறகு அவர்கள் எல்லாவற்றையும் ஒரே கண்ணாடி கொண்டு பார்த்து உண்மையை உணரக்கூடிய வர்களாகி விடுவார்கள் என்றார் தந்தை பெரியார்.

   அரசியலில் நுழைந்து பதவிப் பக்கம் தலை வைத் தால் கொள்கைகளில் சமரசம் செய்துகொள்ள நேரிடும் என்பதால்தான் இருமுறை சென்னை மாநில பிரதம அமைச்சராகப் பொறுப்பு ஏற் கும்படி வெள்ளை அரசிட மிருந்து தங்கத்தட்டில் வைத்து அழைப்புக் கொடுத்த போதும், அதனை மறுதலித்தவர் மகத் தான புரட்சியாளராம் தந்தை பெரியார் அவர்கள்.

   ஆட்சிக்கு அவர் சென்ற தில்லை; ஆனால், ஆட்சி யைத் தன் கொள்கைப் பாதை யில் கொண்டுவர ஆட்டு வித்தவர்! ஆட்சிக்குச் செல் லாத தந்தை பெரியார் அவர்களுக்கு இந்த ஆட்சியே பெரி யாருக்குக் காணிக்கை என்று ஆட்சித் தலைவர் அண்ணா சொன்னார் என்றால், அதன் அருமையைத் தெரிந்து கொள்ளலாமே! (20.1.1967)

   பேதமற்ற இடம்தான் மேலான திருப்தியான இடமாகும் என்றார் உயர் எண் ணங்கள் மலரும் சோலை யாம் தந்தை பெரியார் (குடிஅரசு, 11.11.1944, பக்கம் 11).

   சமூகநீதி, பெண்ணடிமை ஒழிப்பு, மூட நம்பிக்கை ஒழிப்பு, வருண - வர்க்கப் பேத ஒழிப்பு, தொழிலாளி, முதலாளி என்ற நிலையே இருக்கக்கூடாது என்னும் மிக உயர்ந்த சமநிலை - சமத் துவக் கோட்பாடுகள் - திரா விடர் கழகத்தினுடையது - இவை ஏதோ ஒரு எல்லைக் குட்பட்ட தத்துவங்கள் அல்ல - உலகிற்கே தேவைப்படு பவை! அதனால்தான் மண் டைச் சுரப்பை உலகு தொழும் என்று தந்தை பெரியார்பற்றி புரட்சிக்கவிஞர் தொலை நோக்கோடு பாடினார்.

   - மயிலாடன்

   குறிப்பு: திராவிடர் கழகம் பிறந்த அந்த சேலம் மாநாட் டில் ஒரு தீர்மானத்தின்மீது உரை யாற்றிய சிறுவன் வீரமணிதான் இன்றைக்கு திராவிடர் கழகத்தின் ஒப்பில்லாத மானமிகு தலைவர்.

   Read more: http://viduthalai.in/page1/86592.html#ixzz3C1gPtgiy

   தமிழ் ஓவியா said...

   மும்பையில் பணக்கார கணபதியின் சக்திக்கு சவால்! நாளொன்றுக்கு ரூ.50 கோடிக்கு காப்பீடாம்!

   மும்பையில் பணக்கார கணபதியின் சக்திக்கு சவால்!

   நாளொன்றுக்கு ரூ.50 கோடிக்கு காப்பீடாம்!

   தீ விபத்து, தீவிரவாத தாக்குதல், கலவரங்களில் பாதிப்பிலிருந்து இழப்பீடு பெறத் திட்டமாம்

   மும்பை, ஆக.27- மும்பை வடாலாவில் ஜி.எஸ்.பி. சேவா மண்டல் சார்பில் விநாயகர் சிலைக்கு ரூ.260 கோடி அளவில் காப்பீடு செய்துள்ளது. விநாயகர் சிலை மற்றும் சிலைக்கு அணிவிப்பதற்காக பக்தர்களால் அளிக்கப்படும் தங்க ஆபரணங்கள் ஆகியவற்றை தீ விபத்து, தீவிரவாதம் மற்றும் கலவரங்களிலிருந்து காக்கும் வகையில் காப்பீடு செய்துள்ளதாக ஜி.எஸ்.பி. சேவா மண்டல் கூறுகிறது.

   ரூ.22 கோடி மதிப்பில் தங்கம்

   மும்பை மாநகரிலேயே பணக்கார அமைப்பாக உள்ள ஜி.எஸ்.பி. மண்டல் ரூ.259 கோடிக்கு காப்பீடு பெற்றுள்ளது. கிங் சர்க்கிள் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கணபதி சிலையை 5 நாள்கள் பூஜை செய்வதற்காக வைத்திருப்ப தற்காக நாளொன்றுக்கு ரூ.51.7 கோடி மதிப்பில் காப்பீடு செய்யப்பட்டுள்ளது. சிலை மட்டும் ரூ.22 கோடி மதிப்பில் தங்கம் இதுவரை செலவாகி உள்ளதாம்.

   காப்பீடு தேசியமயமாக்கப்பட்ட காப்பீட்டு நிறுவனத் தின்மூலம் காப்பீடு செய்யப்பட்டுள்ளது. மும்பை மாகரி லேயே மற்ற மண்டல்களை விட அதிக மதிப்புள்ள மண்ட லாக வடாலாவில் அமைக்கப்பட்டு உள்ளது. மும்பை மாநகரில் பிரபலமான லால்பக்ச ராஜா ரூ.51 கோடிக்கு காப்பீடு செய்யப்பட்டுள்ளது. அதையும்கூட மிஞ்சிவிட்டது வடாலா ஜிஎஸ்பி மண்டல். தீவிபத்து, தீவிரவாதத் தாக்குதல் மற்றும் கலவரங்களிலிருந்தும் காக்கும்வகையில் ஜி.எஸ்.பி. யின் காப்பீடுமூலம் சிலை, தங்கம், மண்டபம் என்று இவைகளுக்கு மட்டுமின்றி அங்கு கூடும் பக்தர்களுக்கும் சேர்த்து காப்பீடு உள்ளடக்கி உள்ளது. முதல் நாளில் தொடங்கும் காப்பீடு விழா முடிந்ததுமே முடியாது. அமைப்பைச் சேர்ந்தவர்கள் விழா கடைசி நாளில் சிலையின் தங்க ஆப ரணங்களை பாதுகாப்பாக வங்கியின் பாதுகாப்புப் பெட்டகத்துக்குள் வைப் பதுவரை காப்பீடு இருக் கும். முதல் நாளில் தொடங்கி சிலை நகைக்கடைகளி லிருந்து வரும் தங்க ஆபரணங்களைக்கொண்டு சிலையை தண்ணீரில் மூழ் கடிக்கும் வரையிலும் அலங் காரங்கள் செய்யப்படும். தண்ணீரில் மூழ்கடிப்பதற்கு சற்றுமுன்பாக சிலையிலிருந்து தங்க ஆபரணங்கள் அகற் றப்பட்டு, அடுத்த ஆண்டுக்கு பாதுகாப்பாக வைக்கப்படும்.

   மண்டலுக்கான காப்பீட்டுத் தொகை ரூ.258.9 கோடி

   ஜி.எஸ்.பி.மண்டல் மூத்த அறக்கட்டளை உறுப்பினரான சத்தீஷ் நாயக் கூறும்போது, தேசிய மயமான காப்பீடு நிறுவனங்கள்மட்டும் பங்கேற்பதற்கான ஒப்பந்தப் புள்ளியைக் கோரினோம். காப்பீட்டுத்துறையில் உள்ள தனியாரை உள்ளேக் கொண்டுவரவில்லை. காப்பீட்டுத் தவணைத்தொகையை வெளியிடவில்லை. ஆனாலும், காப்பீட்டுக்கான பிரீமியத் தொகை மட்டும் இலட்சங்களில் இருக்கும். மண்டலுக்கான காப்பீட்டுத் தொகை ரூ.258.9 கோடியாக அமைக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

   லால்பக்சா ராஜா மண்டல் ரூ. 51 கோடி காப்பீட்டுத் தொகைக்கு தவணைத் தொகையாக(பிரீமியம்) ரூ. 12 இலட்சத்தை செலுத்தியுள்ளது. அதன்படி பார்க்கும்போது, ஜிஎஸ்பி மண்டல் காப்பீட்டுத் தவணைத் தொகை (பிரீமியம்) குறைந்தபட்சம் ரூ.50 இலட்சத்தையாவது செலுத்த வேண்டியிருக்கும் என்று கருதப்படுகிறது.

   தவணைத்தொகை ரூ.இரண்டரை இலட்சத்துக்கும்மேல்...

   காப்பீட்டு நிறுவனத்தின் மூத்த மேலாளர் ஒருவர் கூறுகையில், சாதாரண பாலிசியைப் போன்று மண்டல் காப்பீட்டுப் பிரீமியித்தை கணக்கிட முடியாது. சாதாரண மாக காப்பீட்டுத்தொகை ரூ.இரண்டு கோடி என்றால், அதற்கானத் தவணைத்தொகை ரூ.இரண்டரை இலட் சத்துக்கும் மேல் இருக்கும். ஆனால், மண்டல் காப்பீடு செயல்பாடு வேறு விதமானது. அவர்கள் காப்பீடு செய் துள்ளதானது தீ விபத்து, தீவிரவாத செயல்கள் போன்ற வற்றைக் குறிப்பிட்டுள்ளார்கள். ஆகவே, ரூ. 259 கோடி காப்பீட்டுக்கு அரை கோடியைத் தாண்டியே தவணைத் தொகை இருக்கும். ஆனாலும், இது யூகத்தின் அடிப் படையிலான வேலையே ஆகும்.

   தேங்காய் ஒப்பந்தப்புள்ளி

   ஜிஎஸ்பி மண்டல் சார்பில் 1.75 இலட்சம் எண்ணிக்கை யில் தேங்காய்கள் பெறுவதற்காக ஒப்பந்தப்புள்ளியைக் கோரி உள்ளது. இறுதியாக ரூ.31.5 இலட்சத்துக்கு முடி வானது. அதன்படி, தேங்காய் ஒன்றின் விலை ரூ.18-லிருந்து ரூ.20 ஆக இருக்கும்.

   5 இலட்சத்தில் தங்க மலர்

   ஜிஎஸ்பி மண்டல் 150 கிராம் எடை அளவுள்ள தங்க மலர் ரூபாய் 5 இலட்சம் மதிப்பில் கொடையாகப் பெற் றுள்ளது என்று அதன் அறக்கட்டளை சார்பில் தெரிவிக் கப்பட்டுள்ளது.

   Read more: http://viduthalai.in/page1/86597.html#ixzz3C1gYCnrz

   தமிழ் ஓவியா said...

   இன்றைய ஆன்மிகம்?

   கிருதா யுகத்தில் சத் தியமும், திரேதாயுகத்தில் ஞானமும், த்வாபர யுகத் தில் வைராக்கியமும் மோக்ஷத்திற்குச் சாதனம். ஆனால், இக்கலியில் பக்தியினாலேயே மோக்ஷம் கிடைக்கிறது. - காமகோடி, 1.5.1994

   அப்படியோ? திரேதா யுகத்தில்தான் அறிவுக்கு (ஞானத்துக்கு) வேலை. கலியில் அறிவுக்கு வேலை யில்லை என்று பொருளா?

   ஆமாம், அது என்ன மோக்ஷம்? அதன் அட் ரஸ் என்ன?

   Read more: http://viduthalai.in/page1/86598.html#ixzz3C1gfyG2g

   தமிழ் ஓவியா said...

   தமிழ் முன்னேற...


   முதலாவதாக தமிழ் முன்னேற்றமடைந்து உலக பாஷை வரிசையில் அதுவும் ஒரு பாஷையாக இருக்கவேண்டுமானால், தமிழையும், மதத்தையும் பிரித்துவிட வேண்டும். தமிழுக்கும், கடவுளுக்கும் உள்ள சம்பந்தத்தையும் கொஞ்சமாவது தள்ளி வைக்கவேண்டும்.
   - (குடிஅரசு, 26.1.1936)

   Read more: http://viduthalai.in/page1/86602.html#ixzz3C1gyFeD4