Search This Blog

22.8.14

இதுதான் வால்மீகி இராமாயணம் - 20



(இதிகாசங்கள் என்றும் புராணங்கள் என்றும்  மக்களிடையே உலவ விடுகிறார்கள். இவற்றிற்குத் தெய்வீக முத்திரைகள் குத்துகின்றனர் இவற்றைப் படித்தால், இவற்றின்படி ஒழுகினால் நல்லது நடக்கும் - நற்கதி கிடைக்கும் என்றெல்லாம் இன்றுவரை கூடப் பிரச்சாரம் செய்கிறார்கள். உண்மையில் அவை என்ன? இவற்றின் தன்மை என்ன? ஒழுக்கத்திற்கு இடம் இருக்கிறதா? பகுத்தறிவுக்கு வழி இருக்கிறது? ஒன்றும் இல்லை. வால்மீகி இராமாயணம் பற்றி சைவப் பெரும் புலவரான பண்டித இ.மு.சுப்பிரமணிய பிள்ளை  (சந்திரகேகரப் பாவலர்) குடிஅரசில் எழுதிய பகுதிகள் (நூலாகவும் வெளிவந்துள்ளன). இங்கே வாரம் இருமுறை வெளியிடப்படுகிறது. படியுங்கள் - பகுத்தறிந்து பாருங்கள் - தெளிவு பிறக்கும்.)

அயோத்தியா காண்டம்

மூன்றாம் அத்தியாயம் தொடர்ச்சி
இனி இவ்வரலாற்றைக் கம்பர் எவ்வாறு புரட்டி எழுதுகிறாரென ஆராய்வோம். தூங்கியிருந்த கைகேயியை சத்தமிட்டெ ழுப்பிய கூனி கைகேயியின் காலைத் தொட்டெழுப்பினாள் என்று பொய் கூறியதற்கேற்பக் கம்பர் இவ்விடத்தும் கைகேயி தன் மகன் பரதனுக்கு முடிபெறக்கேட்டவுடன், கூனி அவருடைய அடியைத் தொழுது கொண்டு வரங்கள் கேட்கக் கூறுகிறாளெனக் கூறுகிறார். அது அடிமைத் தன்மையைப் பரவச்செய்யும் குணம் கம்பரிடம் இருந்ததற்கறிகுறியாகும்.. இவ்விடத்து வால்மீகியோ கூனி வேறு செயல் புரியாது தந்திரங் களைக் கூறுகிறாள் என்று மட்டும் கூறுகிறார். அவள் கூறுகின்ற தந்திரங் களின் விவரமெல்லாம் கம்பர் மறைத்தார். மேலும் சம்பரன் மீனக்கொடியுடையவன் என்பதையும் அவர் மறைத்தார். மேலும் தசரதனை மிகவும் காமக்கிறுக் குடையவன்;  கைகேயி மய்யலுக் காகத் தன் உயிரையும் கொடுப்பானென் றெல்லாம் கூனி தசரதனைப் பற்றிக்கூறும் உண்மைகளையெல்லாம் கம்பர் மறைத்து விட்டார். ஏனென்றால், தசரதனை மிகவும் உத்தம னென்று தாம் உலகத்தாருக்குச் சித்திரித்துக்காட்ட விரும்பும் தம்முடைய முயற்சிக்கு இவ்வுண்மை களெல்லாம் மாறுகின்றன.
பரதன் முடிசூட்டலுக்கு உபாயம் கூறு என்று கைகேயி கேட்டவுடனே கூனி அவளை நோக்கி, என் தோழி வல்லள், என் துணை வல்லள் என்று அடிதொழுது தனது மகிழ்ச்சியைக் காட்டினாள் என்று கூறுகிறார் கம்பர். இவ்வளவு தூரம் அற்ப மதியுடைய வளாகக் கூனியை வால்மீகி காட்டவில்லை - கடைசியாகக் கைகேயியைத் தூண்டித் தூண்டிக் கடிந்து பேசி அவளைத் தயார் செய்து அவள் அலங்கோலமாகக் கிடந்த பின்னரே தனக்குத்தானே கூனி மகிழ்ச்சிய டைந்ததாக வால்மீகி கூறுகிறார். கைகேயி அவளை எவ்வளவோ புகழ்கிறாள்; பல நகைகள் தருகிறாள். அப்போதெல்லாம் கூட அவள் மகிழ்ச்சி காட்டியதாக வால்மீகி கூறவே இல்லை. இவ்வாறாகவும் இவ்வளவு திறமையுள்ள கூனியைச் சாதாரணமாக வெள்ளறிவாட்டி போல மகிழ்ந்தாளெனக் கம்பர் கூறுகிறார்.
நன்று சொல்லினை நம்பியை நளிர்முடி சூட்டல்
துன்று கானத்திலிராமனைத் துரத்த விவ்விரண்டும் அன்ந்தாமெனில் அரசன்முன்
ஆருயிர் துறந்து
பொன்றி நீங்குதல் புரிவாவென்யான் போதி நீயென்றாள்
கூனி போனபின் குவிமலர்க் குப்பை நின்றிழித்தாள்..
.................................... அலமர சிதைத்தாள்


என்று கம்பர் கூறுகிறார். கூனியை நோக்கி, நீ போ என்று கூறியதாக வால்மீகி இராமாயணத்திலெங்கும் காணப்படவில்லை. மேலும் கூனி போனபின்னரே சடையவிழ்த்துத் தலை விரித்துப் பொட்டழித்து நகை சிதறுகிறாள் கைகேயியெனக் கம்பர் கூறுகிறார். வால்மீகியோ கைகேயியை அவசரப்படுத்திக் கூனி கோப அறைக்கழைத்துச் சென்று நகை சிதறி சடையவிழ்ந்து முடித்து அலங்கோலமாகக் கிடக்கச் செய்கிறாள் என்று கூறுகிறார். கூனி கைகேயியினை விட்டுப் பிரிந்தாளென்று அவர் கூறவே இல்லை. கோப அறை ஒன்றிருந்தது. அங்கே போய்க் கைகேயி அலங்கோலமாகக் கிடந்தாள் என்பதையெல்லாம் கூறாது கம்பர் தான் இருந்த இடத்திலேயே அலங்கோலமானா ளென்று கூறுகிறார். நகைகளையெல்லாம் கழற்றி எறிந்துவிட்டுக் கடைசியாகக் சடையையவிழ்த்து நன்றாகச் சேர்த்து முடித்துகொண்டு கிடந்தாள் என்று வால்மீகி கூறக் கம்பர் முதலில் சடையவிழ்த்து விரித்து நகை சிதறினாளெனக் கூறுகிறார்.
நான்காம் அத்தியாயம்

நமது ஆராய்ச்சியுரையில் 23.9.28 தேதி குடி அரசு இதழில் இராமன் ஏகபத்தினி விரதனென்று உலகினர் கூறுவது பொய், அவன் பல தாரகமனன் என வால்மீகி கூறுகிறார் என்றும், அதற்கு மாறுபாடாகக் கம்பர், இராமனை ஏகபத்தினி விரதனைப்போலக் காட்டி உலகை மயக்குகிறார் எனவும் எழுதியிருந்தோம்.
கம்பருடைய மயக்குரையில் ஏமாந்த சில சகோதரர்கள், இது வால்மீகி நூலில் இருக்குமோவென அய்யுறுவதாகத் தெரிகிறது. இவ்வையுறுவுக்குக் காரணம் அவர்கள் வால்மீகி இராமாயணத்தையாவது அல்லது அதன் மொழிபெயர்ப்புகளையாவது படியாமையே யாகும். அவர்கள் அன்பு கூர்ந்து வால்மீகி இராமாயணம் அயோத்தியா காண்டம் எட்டாவது சருக்கத்தைப் படித்து உண்மையைத் தெரிந்து கொள்வார்களாக! வடமொழி தெரியாதோர் மொழி பெயர்ப்புகளைப் பார்த்துத் தெரிந்து கொள்வார்களாக! அவர்களுடைய சிரமத்தை நீக்கும் பொருட்டு மொழி பெயர்ப்புகளை இங்கே எழுதுவோம். நாம் இதற்கு முன் எழுதிவந்த கட்டுரைகளைத் தொடர்ந்து படிப்போர் வங்காளத்தைச் சேர்ந்த பண்டித மன்மத நாததத்தர் எம்.ஏ., என்பார் ஆங்கிலத்தில் வால்மீகி இரா மாயணத்தை மொழி பெயர்த்திருப்பதைத் தெரிந்திருப் பார்கள். அவர் 1892-ஆம் ஆண்டில் பதித்த புத்தகத்தில் 202-ஆவது பக்கத்தில் அயோத்தியா காண்டத்தில் எட்டாம் சருக்கத்தில்-
‘Rama’s wives together with their handmaids will be filled with delight; and in consequence of Bharata’s name, the daughters-in-law will be afflicted with sorrow’
என எழுதுகிறார். இதன் பொருள் இராமனுடைய மனைவிமார்கள் அவர்களுடைய வேலைக்காரி களோடும் மகிழ்ச்சியடைவார்கள்; அது போலவே உன்னுடைய மருகியர் (பரதனுடைய மனைவிமார்) துன்பத்தையடைவார்கள் என்பது. இதைப்போலவே பண்டித அனந்தாச்சாரியாரும், பண்டித நடேச சாஸ்திரி யாரும் எழுதியிருக்கின்றனர். இராமாயணத்தைத் தமிழில் மொழிபெயர்த்த மற்றொரு பண்டிதர் சென்னை, சமஸ்கிருதக் கல்லூரி ஆசிரியர் சி.ஆர்.சிறீனிவாசய் யங்கார் பி.ஏ., என்பார். அவருடைய இரண்டாம் பதிப்பு (1925) அயோத்தியா காண்டம் சருக்கம் 8-பக்கம் 28-இல் பின்வருமாறு எழுதுகிறார்:-

இங்கே உன் நாட்டுப்பெண்கள் என்று பரதனுடைய ஸ்திரீகளைச் சொன்னதால், அவனுக்குப் பார்யைகளே யென்றும், அப்படியே இராமனுடைய ஸ்திரீகள் என்றதற்கும் பார்யைகளென்றே கருத்தென்றும், இராமன் ஏகபத்தினி விரதனென்பதற்கு அர்த்தம், பட்ட மகிஷியாகச் சீதையை விவாகஞ் செய்து கொண்டாலும், அரசர்களுடைய வழக்கத்தை அனுசரித்துப் போகத்திற் காகப் பலரை விவாகஞ் செய்து கொண்டிருக்கிறார்கள். வேலைக்காரிகளென்று கோவிந்தராஜ வியாக்யானத்தின் கருத்து.
இவ்வுரையாலும் இராமன் சீதையோடு பல போக ஸ்திரீகளை வைத்திருந்தவனென்பது  தெளிவாகிறது. வால்மீகி வியாக்கியானங்கள் பலவும் மேலே கண்டவாறு கூறக் கோவிந்தராசர் மட்டும் வேலைக்காரி களென்று பொருள் கொள்வானேனென்றால், கோவிந்த ராசர் வைணவ மதத்தில் அழுத்தமுடையவர். பண்டித சிறீனிவாசய்யங்காரவர்கள், பீடிகை பக்கம் 7-இல் கோவிந்தராசரைப் பற்றி அவருக்குள்ள வைணவ மதாபிமானத்தால் சில இடங்களில் சைவ மதத்தை அளவுக்குமிஞ்சித் தகுந்த காரணமின்றிக் கண்டிக்கிறார் என எழுதியிருக்கிறார். ஆதலின் இந்தக் கோவிந்தராசர் மனைவிகள் என்று கூறாமல் வேலைக்காரிகள் என்று எழுதியது மதாபி மானம் பற்றியே. இராமனுடைய மனைவிமார்கள் அவர்களுடைய வேலைக்காரிகளோடும் மகிழ்ச்சியடை வார்கள் என்று இவ்விடத்தில் அவனுடைய மனைவி யரையும், வேலைக்காரிகளையும் பிரித்து விளக்கமாகக் கூறியிருப்பதை முன்னே கண்டோம்.
இதனால் இராமன் ஏகபத்தினி விரதனென உலகினர் மயங்கியிருப்பது முற்றிலும் பொய் என்பதும், அவன் தனது மனைவியாகிய சீதையுடனே இன்னும் பல பெண்களை மணந்து போகமாதராக அவர்களை வைத்திருந்தனனென்பதும் தெளிவாகின்றன. அவனைப் போலவே பரதனும் பல மனைவியரோடிருந்தா னென்பதும் விளங்கும். தசரதன் அறுபதினாயிரத்து மூன்று மனைவியரை வைத்திருந்தவனல்லனோ?

அய்ந்தாம் அத்தியாயம்

சென்ற கட்டுரையில் இராமன் பலதாரகமனன் என்பதைப் பற்றி விவரித்தெழுதினோம். சில நண்பர் களுக்கு அதில் அய்யுறவு தோன்றியதாலேயே விவரித்தெழுத வேண்டியதாயிற்று. ஏதாவது அய்யுறவு தோன்றுங்கால் உடனே வால்மீகியையாவது மொழி பெயர்ப்பையாவது நோக்க நண்பர்களை வேண்டு கிறோம். ஏனெனில், நாம் எழுதுவனவெல்லாம் வால்மீகி கூற்றுக்கு ஒரு எழுத்தேனும் அதிகமாக இருக்கா. நமக்கு இராமனிடத்திலாவது வேறு யாரிடத்திலாவது விருப் பேனும் வெறுப்பேனும் இல்லை. உண்மையை உலகத் துக்கு எடுத்துக்காட்ட வேண்டுமென்பதே நமது நோக்கம். தமிழ் மக்களைப் பற்றி மிகவும் கேவலமாக எழுதி வைத்துப் பகைத்துவரும் ஆரிய வகுப்பைச் சேர்ந்த ஒருவனும், சகோதரத் துரோகியும், நயவஞ்சகனும், பல தாரகமனனுமாகிய இராமனைத் தெய்வம்போல் பாவித்து வணங்குகின்றவர்களாகிய தமிழ் மக்களை உண்மை யுணரச் செய்வதற்காகவே நாம் இக்கட்டுரையை எழுதுகிறோம். ஆதலின் இதைப்படிக்கும் எமது உடன் பிறப்பினர் அனைவரும் நாம் எழுதுவன அனைத் தையும் உண்மை மொழியென்பதை இனியேனும் தெரிந்து கொள்ள வேண்டுகிறோம். நிற்க, மூன்றாம் கட்டுரையின் தொடர்ச்சியான வரலாற்றின் மேற்செல் லுதும். கைகேயி கோப அறையில் விழுந்து கிடக்கிறாள் என்பதை முன்னர் ஆராய்ந்தோம்.

தசரதன், முடிசூட்டிற்கு வேண்டியவற்றைச் செய்யக் கட்டளையிட்டுச் சபையோரிடம் அனுமதிபெற்றுக் கைகேயியின் அந்தப்புரம் வந்தான். அது பலவித அலங்காரங்களோடும் தேவலோகம்போல் விளங்கிற்று. வழக்கமான படுக்கையில் கைகேயியைக் காணாத வனாய், அப்பொழுது அவன் காமத்தை உண்டாக்கும் பொருள்களாற் சூழப்பட்டு அவளைப் புணர்வதற்குரிய காலமாகையால், மன்மத பாணங்களால் அடிக்கப்பட்டு அவளைத் தேடிக் காணாமையால், அங்கேயிருந்த அந்தப்புர அதிகாரியிடம் கேட்டான். அவன் கைகேயி கோப அறைக்குப் போனதைத் கூறினான். அதுகேட்ட தசரதன் மிகுந்த துக்கத்தோடு அங்கே ஓடிப்போய் அவளைக் கண்டான்.
தசரதனோ கிழவன், கைகேயியோ பால்யம் வாய்ந்தவள். அவள் வருத்தத்தைக் கண்டு அவன் மனம் சகிக்கவில்லை. அதிக புத்தகமானாயிருந்தும் அவளிடம் வைத்த பிரியத்தால் அவனுக்கு ஒன்றும் தோன்றவில்லை. அவளடைய அழகால் புத்தி மயங்கினவனாய் அவன் அவளைத் தடவிக்கொடுத்துத் தாமரையிதழ்களைப் போன்ற அவளுடைய கண்களைப் பாத்தவுடனே எல்லையற்ற ஆசை கொண்டு அவளுக்கு வசப்பட்டு, கைகேயி, அழாமல் உன் வருத்தத்திற்குக் காரணத்தைச் சொல். தகாத பாவச்செயல்களைச் செய்தாவது, என் உயிரைக் கொடுத்தாவது உன் கவலையை நீக்குவேன். என் புண்ணியத்தின்மேல் ஆணை வைத்துச் சொல்லுகிறேன் என்றான். அது கேட்ட கைகேயி, தசரதன் மன்மத பாணங்களால் அடிக்கப்பட்டுக் காம விகாரத்திற்கு வசப்பட்டுக் கேட்டதைக் கொடுக்கத் தயாராயிருக்கிறானென்பதையறிந்து, எனக்கு உடம்பில் அசவுக்கியமில்லை. எனக்கு உம்மால் ஒரு காரியம் ஆகவேண்டும். நான் சொல்லும் விதமாய்ப் பிரதிக்கினை செய்தால் அதைச் சொல்வேன் என்று கூறினாள்.

                           ---------------------------"விடுதலை” 15-8-2014

Read more: http://viduthalai.in/page1/85917.html#ixzz3B5AARb00

71 comments:

sivaje36 said...

இதே மாதிரி தமிழ் முஸ்லிம், தமிழ் கிறிஸ்டியன் அவர்களின் மத புத்தகத்தை கொஞ்சம் விமர்சனம் பண்ணுங்களேன்

தமிழ் ஓவியா said...


பெர்னாட்சா


ஜார்ஜ் பெர்னாட்சா தந்தை பெரியார் போலவே 94 ஆண்டுகள் வாழ்ந்து மறைந்தவர் (1856-1950) மிகச் சிறந்த இலக்கியப் படைப்பாளர். ஆங்கிலத்தில் அவர் எழுதிய நாடகங்கள் காலங்கடந்து நிற்கக் கூடியவை. இலக்கியத் தொண்டுக்காக நோபல் பரிசு அளிக்கப்பட்டது (1925). நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவர் - பள்ளிப் படிப்பில் ஆர்வம் இல்லை - ஆனாலும், நூல்களைப் படிப்பதில் கட்டுக் கடங்கா ஆர்வம் கொண்டவர்.

பல எழுத்தாளர்களுக்கு ஏற்பட்ட அனுபவம் போலவே தொடக்கத்தில் அவர் எழுதிய எழுத்துகள் ஈர்க்கப்படவில்லை. விடா முயற்சியால் வெற்றி பெற்றார். ஆங்கில இலக்கியத்தில் நாடகப் பஞ்சம் என்ற விமர்சனத்தை வீழ்த்தும் வகையில் அரிய சாதனைகளைப் படைத்தவர் ஆவார். 50-க்கும் மேற் பட்ட நாடகங்களை எழுதினார்.

புராண மய்ய கருத்துகளைத் தூக்கி யெறிந்து சமூக மாற் றத்துக்கான கருத்து களை, சமூகச் சிக்கல்களை மய்யப் படுத்தி நாடகங்களைத் தீட்டினார். கருத்தும், வசீகர நடையும் காந்தமாக மக்களை ஈர்த்தது. இசை, நாடகங்களைத் திற னாய்வு செய்வதில் விற்பன்னர் என்ற பெய ரெல்லாம் இவருக்கு வந்து சேர்ந்தது. நல்ல பேச்சாளராக மிளிர வேண்டும் என்ற ஆசை அவருக்கு உண்டு. ஆனாலும், சபைக் கோழைத்தனம் என்பது அவரைப் பிடித்து உலுக்கியது. தானாகப் பேசிக் கொண்டு போக ஆரம்பித்தார். அதன்பின் கூட்டம் உள்ள இடத்தில் உரக்கப் பேச ஆரம்பித்தார். அதன் விளைவு தலைசிறந்த ஆங்கிலப் பேச்சாளர் என்ற புகழின் உச்சியில் பளபளப்பாகப் பறந்தார்.

மிகுந்த நகைச்சுவை உணர்வைக் கொண்டவர். பேச்சிலும், எழுத்திலும் அவை போட்டி போடும். கிறித்துவக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தாலும், கார்ல் மார்க்சின் தத்துவம் இவரைக் கவர்ந்தது. அமைதி வழியில் சோசலிசக் கொள்கை களைப் பரப்புவதற்காக நிறுவப்பட்டிருந்த ஃபேபியன் கழகத்தில் (திணீதீவீணீஸீ ஷிஷீநீவீமீஹ்) சேர்ந்தார். பெர்னாட்சாவைப்பற்றி ஏராள மான துணுக்குகளும், தகவல்களும் உலகம் பூராவும் பரவியுள்ளன. பத்திரிகை யாளர் ஒருவர் உலகில் மிகச் சிறந்த அறிவாளி யார்? என்று ஷாவைக் கேட் டார். இரண்டாவது இடத்தில் ஸ்டாலின், மூன்றாவது இடத்தில் அய்ன்ஸ்டீன், முதல் இடத்தில் உள்ளவரின் பெயரைச் சொன் னால் என்னைத் தற்பெருமைக்காரன் என்று சொல்லிவிடுவீர்கள் என்றாராம்.

அழகு கொழிக்கும் பெண் ஒருவர் ஷாவைச் சந்தித்து, நான் உங்களைத் திருமணம் செய்துகொள்ள விரும்புகிறேன். நம்மிருவருக்கும் திருமணம் நடந்தால், என்னைப் போன்ற அழகும், உங்களைப் போன்ற அறிவும் கொண்ட குழந்தை பிறக்கும் அல்லவா?

என்றார் அந்தப் பெண்மணி. நீ சொல்வது சரியென் றாலும், என்னைப் போன்ற அழகும், உன்னைப் போன்ற அறிவும் கொண்ட குழந்தை பிறந்தால் என்னாவது? என்றாராம். பெர்னாட்ஷா எழுதி வைத்த உயில் புகழ் பெற்றது. சொத்தின் சரி பகுதியை அவரது நூலகத்திற்கு எழுதி வைத்தார்.

Read more: http://viduthalai.in/page-1/85561.html#ixzz3BDq1GIzq

தமிழ் ஓவியா said...


செக்யூலரிஸம் என்றால் என்ன?

செக்யூலர் செக்யூலரிஸம் என்ற சொற்கள். இந்தியா சுயாட்சி என்பது அடைந்தது முதல் அதிகமாக அடிபட்டு வருகின்றன. இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திலும் இவை இடம் பெற் றுள்ளன.

இந்த செக்யூலர் செக்யூலர் கவர்ன் மெண்ட் என்பதற்கு ஆளும் குழுவினர் கூறும்பொருள், சமய சந்தர்ப்பத்துக் கேற்றபடி மாறுபடுகிறது.

மதமற்ற அரசாங்கம் என்று அடி நாளிலும்; பின்னர் மதச்சார்பற்ற அரசாங்கம் என்றும் கருத்து விளக்கம் தெரிவிக்கப்பட்டது.

குழப்பம்

ஆனால், அண்மையிலோ ஆட்சி பீடாதிபதிகள் மத விழாக்களிலும், கும்ப மேளாக்களிலும் கலந்துகொண்டதனை பொது மக்கள் உலகம் குற்றம் கூறவே, செக்யூலர் என்றால் மதங்கள் மீது வெறுப்புக் கொண்டு ஒதுக்கித் தள்ளுவ தல்ல- _ எல்லா மதங்கள் பாலும் சமரச நோக்குடன் நடந்து கொள்வதேயாகும் என்று பச்சோந்தி விரிவுரை கூறப் பட்டது. இது செக்யூலரிஸம் என்பதை குழப்பமாக்கி விட்டதுடன் -_ அதன் நற்பயனில் சந்தேகம் கொள்ளவும் செய்து விட்டது.

செக்யூலரிஸம் என்றால் ஆங்கில அகராதியில் தரப்பட்டுள்ள பொருள் -_ இந்த உலகானது -_ மறுவுலக சம்பந்தமில்லாதது என்பது. இதனை ஆரிய வடமொழியில் லோகாயிதம் என்கின்றனர். தமிழ் அகராதியிலும் இதே சொல் தரப்பட்டுள்ளது. இது பொருத்தமல்ல. ஏனெனில் இந்த லோகாயிதத்தின் தொடர்ச்சியாக பர மார்த்திகம் என்பதையும் பிணைத்துள் ளனர். அதாவது லோகாயித் வாழ்க்கையை அடுத்து பரமார்த்திகத்தை அடைய வேண்டுமென்றும் கருத்து விளக்கம் செய்து, லோகாயிதம் என்ப தன் உண்மைக் கருத்தையும் நோக்கத் தையும் பாழாக்கி விட்டனர். இந்தச் சொல்லுடன் மத இயலையும் கடவுளி யலையும் பிணைத்து விட்டனர்.

உண்மை விளக்கம்

செக்யூலரிஸம் என்பதன் உண்மை விளக்கப் பொருள் என்ன? இதன் மொழித்துறை வரலாறு என்ன? என்று அறிவியல்வாதிகளும் பகுத்தறிவுவாதி களும் ஆராய்ந்து பார்க்க வேண்டியுள் ளது. பகுத்தறிவியல் என்பது அறிவைப் பயன்படுத்தி மெய்யை உணர்தல். இவ்விதம் பகுத்தறிவு கொண்டு அறிந்த மெய்மைகளை நடைமுறையில் நடத்திக் காட்டுவதே செக்யூலரிஸம் ஆகும்.

இந்த செக்யூலரிஸம் என்ற ஆங்கிலச் சொல்லை முதன் முதல் கையாண்டவர் பகுத்தறிவு மேதை ராபர்ட் இங்கர்சால் அவர்களின் அறிவியல் தோழர்களில் ஒருவரான ஜார்ஜ் ஜாகப்ஹோலியோக் என்பவர். இவரும் குழந்தை வயதில் மதத் துறையில் வளர்க்கப்பட்டவர். அறிவு விரிவடைந்ததும் இந்த மதப் புரட்டு களையும் மதமடமைக் கொள்கைகளை யும் எதிர்த்துப் புரட்சிக் கொடி தூக்கி னார். நாத்திகர் என்ற குற்றத்துக்காக 1841_42ஆம் ஆண்டு வாக்கில் இங்கி லாந்தில் சிறை வாசமும் செய்தவர்.

நடைமுறையில் பரப்பியவர்

தோழர் ஜார்ஜ்ஜாகப் ஹோலி யோக்தான் முதன் முதல் தமக்கும் தம் கோட்பாட்டினருக்கும் செக்யூலரிஸம் என்ற தனி இடு குறிப்பெயர் இட்டுக் கொண்டார். இந்தப் பகுத்தறிவு நடைமுறை இயல் கழகங்களும் லண் டனில் பல இடங்களில் தோற்றுவித்து நடத்தினார். பகுத்தறிவு இயல் பத் திரிகைகள் பலநடத்தினார். பகுத்தறிவு பத்திரிகையாளர் கழகமும் ஏற்படுத் தினார். இதற்கு முதல் தலைவரும் இவரே.

பிரிட்டிஷ் செக்யூலர் யூனியன் என்ற பேரவைத் தலைவராகவும் இவர் பல்லாண்டுகளிருந்து பணியாற்றி, கோட்பாட்டையும், கழகத்தையும் பரப்பி, வலுப்படுத்தினார்.

இந்த செக்யூலரிஸம் என்ற சொல்லுக்கு இவர்தந்த விளக்கப் பொருள் இந்த உலக வாழ்க்கை சம் பந்தமான கடமை வழிக் கோட்பாடு அமைப்பு என்பதாகும்.

இங்கர்சால் விளக்கம்

மேதை இங்கர்சால் இந்தச் சொல்லுக்குத் தந்துள்ள விளக்கப் பொருள் இந்த உலக விஷயங்களில் மனிதப் பண்பாட்டுடன் மனித அனு தாபத்துடன் நடந்து கொள்ளும் நெறி; அறியும் உணர்ச்சி கொண்டவர்களின் நலனுக்கான ஒவ்வொரு விஷயத்திலும் நடப்பிலும் கருத்துச் செலுத்துவது; அனுபவ உலக ஆய்வு அறிவு என்பதற்கு மறுபெயரும் இதுவாகும். அதாவது அவரவர்கள் புரிந்து கொண்ட முறையிலும் விருப்ப வாய்ப்புகளுக்கு ஏற்ற வகையிலும் வாழ்க்கைத் துறையை செப்பனிட்டு அமைத்துக் கொள்ளச் செய்வது இது. இங்கு இந்த உலகில் அவரவர்களுக்கான நல் வீட்டை அமைத்துக் கொள்வதில் நம்பிக்கை கொள்ளச் செய்வது இந்த செக்யூ லரிஸம்

ஒவ்வொருவர் தனி முயற்சி ஊக்கம், அறிவு, ஆற்றல், ஆராய்ச்சி அனுபவம் ஆகியவற்றில் நம்பிக்கை கொள்ளச் செய்வது.

நாமறியாததும் அமானுஷியமானது மான ஏதோ ஒன்றில் (கடவுள்) நம் பிக்கை கொள்வதைத் தவிர்ப்பது இது. இந்த வாழ்க்கையில், இந்த உலகில் மகிழ்ச்சியுடன் நல்வாழ்வு அனைவரும் வாழ வேண்டுமென்பதே இதன் குறிக்கோள் என்பதாகும். இந்த பகுத்தறிவியக்க செக்யூலரிச மேதைகளின் விளக்கத்திலிருந்து இந்த செக்யூலர் -_ செக்யூலரிஸம் என்பன மத இயல், கடவுளியல் மறுப்புக் கோட்பாடு _- மதம் கடவுள் என்பதனை ஒழித்துக் கட்டுவது என்பது தெளிவுபடுகிறது.

Read more: http://viduthalai.in/page-1/85563.html#ixzz3BDqKQuz7

தமிழ் ஓவியா said...


திதி கூறும் மந்திரம் என்ன?

மந்திரம்: யன்மே மாதா பிரலுலோப சரதி அனனு விருதா, தன்மே ரேதஹ பிதா விருங்க்தா ஆபுரண் யோப பத்யதாம் ரங்கராஜ சர்மணே ஸ்வாஹா. ரங்கராஜ சர்மணே அஸ்மது பித்ரே இதம் நமம.

பொருள்: எனது தாய் பதிவிரதா தர்மங்களை முழு வதுமாக அனுஷ்டிக்காமல், அதன் காரணமாக நான் பிறந்திருந்தால், இந்த அக்னி யில் நானிடும் ஹவி ஸூக்கு உரிமை கோரி எனது சொந்த தகப்பனார் வருவார். அப்படி அவர் இந்த ஹவிஸைப் பெறாமல் தடுத்து, நான் எந்தத் தகப்பனாருக்கு இந்தச் சிரார்த்தத்தைச் செய்கிறேனோ அவர் அதாவது எனது தாயின் கணவர் இந்த ஹவிசைப் பெற வேண்டும்

(ஆதாரம்: சுவாமி சிவானந்தா சரசுவதியின் ஞான சூரியன்)

தன் தாயைச் சந்தே, கித்து, விபச்சாரி என்று கூறி பார்ப்பான் சொல்லும் மந்திரம் தான் திதி, ஒழுக்கக் கேடும் விபச்சாரமும் தானே பார்ப்பனீயம்!

Read more: http://viduthalai.in/page-1/85567.html#ixzz3BDqknqqg

தமிழ் ஓவியா said...


கழுதையும் மதமும்!



மதம் மனிதனைத் தேவனாக, தெய் வமாக ஆக்குகிறதென்று பவுராணிகர் களும் பாதிரிகளும் முல்லாக்களும் ஓயாமல் கூறி வரலாம்.

மதம் என்பது மனிதனை முட்டா ளாக்குகின்றது. முட்டாள் என்பதை விட மனிதனை மிருகமாக்குகின்றது என்று பகுத்தறிவாளர்கள் கூறுவது வழக்கம் இந்தக் கூற்றே உண்மை என்பதை விளக்க நல்ல சான்று ஒன்று உள்ளது. இயேசு கிறிஸ்துவுக்கும் கழுதைக்கும் நிரம்ப தொடர்பு உண்டு.

இயேசு எகிப்துக்குப் போனது கழுதைமீது ஏறி. இதேபோல இயேசு எருசலேமுக்குத் திரும்பியதும் கழுதைமீது ஏறித்தான். இவ்வாறு இயேசுவின் தொடர்பு பெற்ற கழுதையைச் சும்மா விட்டு வைக்க மனம் வருமா பூசாரிகளுக்கு! அதற்கொரு திருவிழா உருவாக்கித் தாங்கள் தேட்டைப் போட்டுக் கொண்டார்கள்.

இந்தத் திருவிழா ஆரம்பமானது ஃபிரான்ஸ் நாட்டில். பின்னர் இந்தத் திருவிழா பக்தர்கள் மத்தியில் பிரபலம் பெற்று விட்டதால் எல்லை கடந்து ஜெர்மன் நாட்டுக்கும், கடல் கடந்து இங்கிலாந்து நாட்டுக்கும்கூட பரவி விட்டது.

கழுதைகளின் விருந்துநாள் என்றால் (Feast Of the Asses) விழுந்து விழுந்து விளக்கம் எழுதி மதச் சாயத்தை மேலும் பூசி மகிழ்ச்சி கொண் டாடினார்கள் மத வரலற்றாசிரியர்கள்.

ஆனால், இவர்களது நூல்களில் பக்கம் பக்கமாக வர்ணனைகள் அடங்கியிருந்தாலும்கூட உண்மையான நிகழ்ச்சிகள் -_ திருவிழாவின் சாரமான விஷயங்கள் இங்கே இருட்டடிக்கப் பட்டு விட்டன. கழுதைகளின் திரு விழா, எவ்வாறு கொண்டாடப்பட்டது?
நல்ல இளங்கழுதை ஒன்றைப் பிடித்து வந்து குளிப்பாட்டி அலங் கரிப்பது, அதன்மீது இளங்கன்னி ஒருத்தியை அமர வைப்பது, கழுதைக்கு முன்னும்பின்னும் அணி வகுப்புப் பாதிரியார்களும் பக்தர்களும் பிரமுகர் களும் தொடர்ந்துவர நகரத் தெருக் களில் இந்த ஊர்வலம் நடைபெறும்.

ஊர்வலம் மாதாகோயிலில் முடி வடையும். கழுதையைக் கோவிலின் உள்ளேயே அழைத்துக் கொண்டு போய் தேவாலயத்தின் பீடத்தின் அருகே பாதிரிகள் பிடித்து வைத்திருப்பார்கள்.

அன்று பிரார்த்தனை, ஜெபம் எல்லாம் கிடையாது. பாதிரியார்கள் கழுதைபோல கத்துவார்கள்; இதுதான் ஜெபம்!
ஊர்வலத்தின் போதும், ஜெபத்தின் முன்னும் பின்னும் கூட பரமண்டலங் களில் இருக்கிற பிதாவின் நாமத்தைப் பரிசுத்தப்படுத்தும் பாடல்கள் பாடப் படும்.

பாட்டு மட்டுமிருந்தால் திருவிழா வின் உச்ச கட்டம் எட்டிப் பிடிக்கப் பட்டதாகுமா? ஆட்டமும் உண்டு. கழுதையின் பெயரால் காம நடனங்கள் ஏராளம்- _ ஏராளம்!

நடனத்தின் உச்சகட்டமாக நாட கங்களும் நடத்தப் பெறும். தேவாலயத் தின் கதவருகே அமைக்கப்பட்டிருக்கும் சிறப்பு மேடையில்தான். இந்த நாட கங்கள் நடத்தப்படும்.

கழுதையின் பெயரால் அன்று காமனுக்கு விழா! இதுகூடப் பெரி தில்லை; மனிதனைக் கழுதைப்போல கத்தவைத்த பெருமையும் அல்லவா மதத்துக்கு வந்து விடுகிறது!

Read more: http://viduthalai.in/page-1/86041.html#ixzz3BDs2vGtC

தமிழ் ஓவியா said...

அமர்நாத் குகையில் அற்புத பனிலிங்கமா?

இமயமலையில் உள்ள அமர்நாத் குகையில் ஒவ்வொரு ஆண்டும் குறிப் பிட்ட சில மாதங்களில் அற்புத சிவலிங்கம் ஒன்று தோன்றி காட்சியளிக்கிறது என்றும், பின் அது தானே மறைந்து விடுகிறது என்றும், பக்தர்கள் போற்றிப் புகழ்ந்து வருகிறார்கள். ஆண்டுதோறும் இந்த அற்புத சிவலிங்கத்தைக் கண்டு வணங்கி வழிபாடு நடத்துவதற்காக பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் அந்த இடத்திற்கு புனிதப் பயணம் மேற்கொள்கிறார்கள். சிவனும் - பார்வதியும் வாழ்ந்த குகை அதுவென்றும், அந்தக் காலத்தில் பார்வதிதேவி வழிபாடு செய்து வந்த சிவலிங்கமே அதுவென்றும் கதைகள் புனைந்து பரப்பி வருகின்றார்கள். காஷ்மீரில் உள்ள வழிபாட்டு மய்யமான அமர்நாத்திற்கு பகல்ஹாமில் இருந்து கந்தன்வாடி வழியாக 38 கிலோமீட்டர் செல்ல வேண்டும். 12,729 அடி உயரத்தில் இந்த குகையில் இருந்து, புகழ்பெற்ற கோல்ஹாய் பனிச்சிகரம் அதிக தொலைவில் இல்லை. அமர்நாத்தில் உள்ள அந்தக் குகையில் குளிர்காலத்தின் தொடக்கத்தில் தோன்றுகின்ற ஒரு பனிக்கட்டியின் வடிவத்தைத்தான் சிவலிங்கமாகக் கருதி வழிபடுகிறார்கள். குகையின் மேல்புறத்தில் உள்ள ஒரு இடுக்கு வழியாக கசிந்து வருகின்ற தண்ணீர் துளித்துளிகளாக கீழே விழுகின்றன. பனிக் காலத்தின் கடும் குளிரில் தண்ணீர்ப் பனிக்கட்டியைத்தான் சிவலிங்கமாகக் கருதி வழிபட்டு வருகிறார்கள். நானும் ஒருமுறை பயணம் செய்து அந்தக் குகைக்குச் சென்றேன். அதைப் பார்வையிட்டேன். அப்போது அந்தப் பனிக்கட்டி லிங்கத்தை நிழற்படமும் எடுத்து வந்தேன். அந்த ஆண்டில் அப்போது நிலவிய குளிரின் தன்மைக்கேற்ப அமைந்த பனிக்கட்டியின் வடிவமே ஒளிப்படத்தில் பதிவானது.

குகைக்கு மேலேயிருந்து விழுகின்ற தண்ணீரின் அளவும், அன்றைய சூழ்நிலையில் உள்ள குளிரின் தன்மைக்கு ஏற்பவும் சிவலிங்கத்தின் வடிவம் சிறியதாகவோ, பெரியதாகவோ தோற்றம் அளிக்கிறது. ஜூன், ஜூலை மாதங்களில் சுற்றுப்புறச் சூழ்நிலை சூடாக - வெப்பமாக மாறும்போது பனிலிங்கம் உருகி இல்லாமலேயே போய்விடுகிறது. டிசம்பர், சனவரி மாதங்களில் அந்தப் பகுதி முழுவதும் பனியால் மூடப்பட்டு கிடக்கிறது. அமர்நாத் குகையில் உள்ள சிவலிங்கத்தின் அருகே ஒரு மின் வெப்பக் கருவியை (ஹீட்டர்) வைத்துப் பார்க்கட்டுமே. அப்போது தெரியும், அது கரைந்து தண்ணீராக மாறிப் போவதை. இப்படிப்பட்ட சிவலிங்கங்களை நாம் குளிர்சாதனப் பெட்டியில் (ஃபிரிஜ்)கூட உருவாக்கலாம்.

- ஜோசப் இடமருகு

குறிப்பு: 2014ஆம் ஆண்டில் அமர்நாத் சென்ற பக்தர்கள் 26 பேர் பலி!

Read more: http://viduthalai.in/page-1/86043.html#ixzz3BDsET3ht

தமிழ் ஓவியா said...


எப்படி உயர்ந்தீரய்யா?



என்ன செய்து கிழித்து விட்டாய்?
எந்தப் பள்ளியில் பயின்று பெற்றாய்?

எவரெஸ்டின் தலைதனைத் தொட்டாயோ?
எரிமலையின் தோள்தனில் துயின்றாயோ?

வாய்திறந்து சொல் வள்ளுவனே சொன்னதில்லை!
உயர்சாதி நானென உலகை வென்றவனும் சொன்னதில்லை!
உயர்சாதி நானென

எப்படி நீ
சொல்லிக்கொண்டாய்?
எவன் வழியைப் பின் தொடர்ந்தாய்?
உயர்சாதி நானென உளறும் மானுடனே...

கடலுக்குள் வாழக் கற்றுக் கொண்டாயோ?
காற்றில்லாமல் சுவாசம் கொள்ளத்
தெரிந்து கொண்டாயோ?
எப்படித்தான் உயர்ந்து போனாய் எனக்கெதுவும் தெரியலையே?

கொஞ்சம் பொறு காலம் மாறும் உன் கண்ணாடிப் பிம்பமே உன் முகத்தில் காறி உமிழும்!

உன் பிள்ளைகளே உன் முகம்பார்த்து பித்தன் பிதற்றுகிறானென பேசும் காலம் நிச்சயம் பிறப்புறும்!

சிலர் கற்றும்பயனில்லை
பெற்ற பட்டத்தைவிடப் பெயருக்கு முன்னால்
பெரிதாய் மின்னுகிறது பீப்போலே சாதிப்பெயர்!

பலர் பட்டம்பெற்றதையே பெயரோடு இணைப்பதில்லை பின்பெதற்குப் பெயருடன் சாதி பித்தனென்று காட்டவோ?

முட்டாள் சொன்னான் பூமி தட்டையென!
இன்னமுமா நம்புகிறாய்?

மடையன் சொன்னான் மின்னல் குப்பையில் விழுந்தால்
தங்கமாய் மாறுமென!
இன்னமுமா நம்புகிறாய்?
கோள்களின் எண்ணிக்கை கூட முன்னோர் சொன்னது தவறென ஒப்புக்கொண்டது உண்மைதானே!

கூறுகெட்ட எவனோபடைத்த கேடுகெட்ட சாதியை மட்டும் கைப்பிடித்தே போகிறாயே கறைப்பிடித்த மானுடனே!

ஏய்!! சாதிப்பித்தனே!
எனக்குத் தெரியும் யாராலும் முடியாத உனக்கோர் தகுதியுண்டு!!

உன் விரலால் உன் முகம்காட்டி முட்டாள் முட்டாளென முழங்கும் தகுதி
உனக்கேயுண்டு.

- அ.அருள்செல்வன், சிங்கப்பூர்

Read more: http://viduthalai.in/page-1/86045.html#ixzz3BDsw0ZuW

தமிழ் ஓவியா said...


கொழுப்புக் கரைப்பான்கள்!

உடல் எடை எக்கச்சக்கமாக எகிறியதால் அதைக் குறைக்க முடியாமல் ஜிம், உடற்பயிற்சி, உணவில் கட்டுப்பாடு என்று கஷ்டப்பட்டு வருபவர்கள் ஏராளம்.

அன்றாடம் சரியாக உணவு உண்டு வந்தாலே அதிக உடல் எடையானது குறைந்து விடுவதோடு ஆரோக்கியமாகவும் வாழலாம். அதிக எடை, குறிப்பாக கொழுப்பு கூடாமல் தடுக்கும் சில உணவுகள் இதோ...

மஞ்சள்: மஞ்சளானது ஒரு சிறந்த மருத்துவ குணம் வாய்ந்த பொருள் என்பது அனைவருக்கும் தெரியும். அத்தகைய மஞ்சளை தினமும் உணவில் சேர்த்து வந்தால், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளைக் கரைத்து, அதிக ரத்த அழுத்தம் எற்படாமல் தடுக்கும். ரத்த சுழற்சியானது நன்கு நடைபெற்று, இதய நோய் ஏற்படாமலும் இருக்கும்.

ஏலக்காய்: இது ஒரு சிறந்த உணவுப் பொருள். இதை உண்டால் உடலில் உள்ள உடல்செயலியல் மாற்றம் அதிகரிப்பதோடு, உடலில் உள்ள கொழுப்புகளைக் கரைத்துவிடும். மேலும் இது ஒரு சிறந்த செரிமானப் பொருள். ஆகவே எந்த உணவு உண்டாலும், அதை நன்றாக ஜீரணமாக்கிவிடும். ஆகவே ஏலக்காயை தினமும் உணவுப் பொருட் களில் சேர்த்தால், உடல் எடை குறையும்.

மிளகாய்: உணவில் சேர்க்கப்படும் மிளகாய் கூட கொழுப்புகளை கரைத்துவிடும் தன்மையுடையது. மேலும் இதில் உள்ள கேப்சைசின், உடல் செயலியல் மாற்றத்தை அதிகரிக்கச் செய்யும். கேப்சைசின் என்பது வெப்ப ஊட்ட பொருள். அது இருக்கும் உணவுப்பொருளை உண்பதால், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைத்து விடும்.

கறிவேப்பிலை: கறிவேப்பிலை உடலில் இருக்கும் கொழுப்பு மற்றும் நச்சுப்பொருட்களை உடலில் தங்க விடாமல் வெளியேற்றும். மேலும் அதிக எடை இருப்பவர்கள், தினமும் 8 முதல் 10 கறிவேப்பிலையை வெறும் வாயில் உண்டால் நல்லது. இல்லையென்றால், கறிவேப்பிலையை அரைத்து தண்ணீரில் கரைத்துக் குடிக்க வேண்டும்.

பூண்டு: இது ஒரு சிறந்த கொழுப்பை கரைக்கும் பொருள். ஏனெனில் இதில் சல்பர் இருக்கிறது. பூண்டில் கிருமிகளை அழிக்கும் பொருளான ஆன்டிபாக்டீரியல் இருப்பதோடு, தேவையற்ற கொழுப்புகளைக் கரைத்து உடலை விரைவில் ஸ்லிம் ஆக மாற்றும்.

கடுகு எண்ணெய்: இதில் மற்ற எண்ணெய் களை விட குறைந்த அளவு கொழுப்புகள் உள்ளன. மேலும் இதில் பேட்டி ஆசிட், இரூசிக் ஆசிட் மற்றும் லினோலிக் ஆசிட் போன்றவை இருக் கின்றன. இதுமட்டுமல்லாமல் ஆன்டி ஆக்சிடன்ட், தேவையான வைட்டமின்கள் உள்ளதோடு, தேவையற்ற கொழுப்புகளை அகற்றும். அதனால் இதயமும் ஆரோக்கியமாக இருக்கும்.

முட்டைக்கோஸ்: இதை சமைத்தும் உண்ண லாம் அல்லது பச்சையாகவே சாப்பிடலாம். அது உடலில் சேரும் கொழுப்புகளை வேறு விதமாக மாற்றி மற்ற உடலில் நடைபெறும் செயல்களுக்குப் பயன்படுத்திக் கொள்ளும். இதனால் உடலானது பருமனடையாமல் இருக்கும்.

தேன்: இது உடல் எடையைக் குறைக்க ஒரு சிறந்த வீட்டு மருந்து. இதனை உண்டால் உடலில் சேரும் கொழுப்புகளை சாதாரணமாக உடலில் நடைபெறும் செயல்களுக்கு பயன்படுத்திக் கொள்ளும். ஆகவே தினமும் ஒரு டேபிள் ஸ்பூன் தேனை சூடான தண்ணீரில் கலந்து, விடியற்காலையில் குடிக்க வேண்டும்.

மோர்: பால் பொருளில் கொழுப்புகள் அதிகமாக இருக்கும் என்பது அனைவருக் கும் தெரியும், ஆனால் மோரில் 2.2 கிராம் கொழுப்பும், 99 கலோரியும் மட்டுமே உள் ளது. ஆகவே இதைப் பருகுவதால் உடலுக் குத் தேவையான அளவு ஊட்டச்சத்துகள் கிடைப்பதோடு, கொழுப்பு மற்றும் கலோரியானது அதிகமாக சேராமல் எடையும் சரியான அளவு இருக்கும்.

நன்றி: தினத்தந்தி இளைஞர் மலர் 9.8.2014

Read more: http://viduthalai.in/page-1/86048.html#ixzz3BDt8j1W1

தமிழ் ஓவியா said...

வாய் நாற்றத்தால் அவதிபடுகிறீர்களா? இதோ இருக்குங்க மருந்து..!


நல்ல சுவையான உணவு களை உண்ட பின், வாயிலி ருந்து வரும் நாற்றத்தை தாங்கவே முடியாது. ஏனெனில் அதில் பூண்டு, வெங்காயம் போன்றவற்றை அதிகம் சேர்ப்பதால் நாற்றம் ஏற்படுகிறது.

ஆகவே நிறைய பேர் சாப் பிட்ட பின், வாய் நாற் றத்தைப் போக்க கடைகளில் விற்கும் நறுமணமிக்க பாக்கு களை, ஏதேனும் சுயிங் கம் களை வாங்கி மென்று கொண்டு இருப்பார்கள்.

ஆகவே அவ்வாறெல்லாம் கஷ்டப்பட்டு கடைகளில் விற்கும் வாய் நாற்றத்தைப் போக்கும் பொருட்களை வாங்குவதை விட, வீட்டில் இருக்கும் உடலுக்கு ஆரோக் கியத்தையும் தரும் ஒரு சில பொருட்களை மெல்ல லாமே!!!

ஏலக்காய்: உணவு உண்ட பின், பாக்குகளை போடாமல் அப்போது சமையலறையில் இருக்கும் ஏலக்காயை வாயில் போட்டு 20 நிமிடம் மென் றால், துர்நாற்றம் இல்லாமல் இருக்கும்.

கொத்தமல்லி: கொத்தமல்லியை சாப்பிட் டால் வாய் நாற்றம் போகும் என்பது நம்ப முடியாது தான். ஆனால் உண்மையில் கொத்தமல்லியை உணவுக்கு பின் சாப்பிட்டால் வாய் துர்நாற்றத்தை தடுக்கலாம்.

கிராம்பு/லவங்கம்: உணவில் காரம் மற்றும் மணத்திற்கு பயன்படும் பொருளான கிராம்பு மற்றும் லவங்கம், வாய் துர்நாற்றத் தையும் தடுக்கும்.

மேலும் ஆயுர்வேத மருத் துவத்தில் கிராம்பை சாப்பிட் டால், சளி மற்றும் இருமல் சரியாகிவிடும் என்று சொல் லப்படுகிறது.

அத்தகைய சிறப்பான கிராம்பு துர்நாற்றத்தை மட் டும் நீக்காமல், தொண்டை கரகரப்பையும் சரிசெய்யும்.

புதினா: நிறைய உணவில் மேலே அலங்கரிக்க புதி னாவை எதற்கு பயன்படுத் துகிறோம் என்று தெரியுமா? ஏனெனில் அதனால் உணவு நன்கு கலராக இருப்பதோடு, வாய் துர்நாற்றத்தையும் தடுக்கும் என்பதால் தான்.

கொய்யாப்பழம்: பழங் களில் ஒன்றான கொய்யா, வாய் துர்நாற்றதை நீக்கப் பயன்படுகிறது. ஆகவே வாய் நாற்றம் அடிக்கும் போது, ஆரோக்கியமற்ற பொருட் களை உண்பதை தவிர்த்து, இந்த கொய்யாப்பழத்தை சாப்பிட்டால், உடல் ஆரோக் கியமாக இருப்பதோடு, வாய் துர்நாற்றமும் நீங்கும்.

மாதுளை: அனைவருக் கும் மாதுளையின் நன்மைகள் தெரியும். இத்தகைய மாதுளை ஆரோக்கியமான இதயம் மற்றும் பளபளப்பான சருமத்தை தருவதோடு, இதன் விதையை சாப்பிட்டால், வாயில் நாற்றம் ஏற்படாமல் தடுக்கலாம்.
ஆகவே இனிமேல் கடைக்கு செல்லும் போது, இந்த பழத்தை வாங்கும் பழக் கத்தை வைத்துக் கொண் டால், வாய் துர்நாற்றத்தை தடுக்கலாம்.

ஆகவே மேற்கூறிய பொருட்களை சாப்பிட்டால்,

எந்த ஒரு பக்க விளைவும் ஏற்படாமல் இருப்பதோடு,

உடல் ஆரோக்கியமாக வும், வாய் துர்நாற்றம் இல்லாமலும் இருக்கும்.

Read more: http://viduthalai.in/page8/86412.html#ixzz3BDthW8Xk

தமிழ் ஓவியா said...

வாய் நாற்றத்தால் அவதிபடுகிறீர்களா? இதோ இருக்குங்க மருந்து..!


நல்ல சுவையான உணவு களை உண்ட பின், வாயிலி ருந்து வரும் நாற்றத்தை தாங்கவே முடியாது. ஏனெனில் அதில் பூண்டு, வெங்காயம் போன்றவற்றை அதிகம் சேர்ப்பதால் நாற்றம் ஏற்படுகிறது.

ஆகவே நிறைய பேர் சாப் பிட்ட பின், வாய் நாற் றத்தைப் போக்க கடைகளில் விற்கும் நறுமணமிக்க பாக்கு களை, ஏதேனும் சுயிங் கம் களை வாங்கி மென்று கொண்டு இருப்பார்கள்.

ஆகவே அவ்வாறெல்லாம் கஷ்டப்பட்டு கடைகளில் விற்கும் வாய் நாற்றத்தைப் போக்கும் பொருட்களை வாங்குவதை விட, வீட்டில் இருக்கும் உடலுக்கு ஆரோக் கியத்தையும் தரும் ஒரு சில பொருட்களை மெல்ல லாமே!!!

ஏலக்காய்: உணவு உண்ட பின், பாக்குகளை போடாமல் அப்போது சமையலறையில் இருக்கும் ஏலக்காயை வாயில் போட்டு 20 நிமிடம் மென் றால், துர்நாற்றம் இல்லாமல் இருக்கும்.

கொத்தமல்லி: கொத்தமல்லியை சாப்பிட் டால் வாய் நாற்றம் போகும் என்பது நம்ப முடியாது தான். ஆனால் உண்மையில் கொத்தமல்லியை உணவுக்கு பின் சாப்பிட்டால் வாய் துர்நாற்றத்தை தடுக்கலாம்.

கிராம்பு/லவங்கம்: உணவில் காரம் மற்றும் மணத்திற்கு பயன்படும் பொருளான கிராம்பு மற்றும் லவங்கம், வாய் துர்நாற்றத் தையும் தடுக்கும்.

மேலும் ஆயுர்வேத மருத் துவத்தில் கிராம்பை சாப்பிட் டால், சளி மற்றும் இருமல் சரியாகிவிடும் என்று சொல் லப்படுகிறது.

அத்தகைய சிறப்பான கிராம்பு துர்நாற்றத்தை மட் டும் நீக்காமல், தொண்டை கரகரப்பையும் சரிசெய்யும்.

புதினா: நிறைய உணவில் மேலே அலங்கரிக்க புதி னாவை எதற்கு பயன்படுத் துகிறோம் என்று தெரியுமா? ஏனெனில் அதனால் உணவு நன்கு கலராக இருப்பதோடு, வாய் துர்நாற்றத்தையும் தடுக்கும் என்பதால் தான்.

கொய்யாப்பழம்: பழங் களில் ஒன்றான கொய்யா, வாய் துர்நாற்றதை நீக்கப் பயன்படுகிறது. ஆகவே வாய் நாற்றம் அடிக்கும் போது, ஆரோக்கியமற்ற பொருட் களை உண்பதை தவிர்த்து, இந்த கொய்யாப்பழத்தை சாப்பிட்டால், உடல் ஆரோக் கியமாக இருப்பதோடு, வாய் துர்நாற்றமும் நீங்கும்.

மாதுளை: அனைவருக் கும் மாதுளையின் நன்மைகள் தெரியும். இத்தகைய மாதுளை ஆரோக்கியமான இதயம் மற்றும் பளபளப்பான சருமத்தை தருவதோடு, இதன் விதையை சாப்பிட்டால், வாயில் நாற்றம் ஏற்படாமல் தடுக்கலாம்.
ஆகவே இனிமேல் கடைக்கு செல்லும் போது, இந்த பழத்தை வாங்கும் பழக் கத்தை வைத்துக் கொண் டால், வாய் துர்நாற்றத்தை தடுக்கலாம்.

ஆகவே மேற்கூறிய பொருட்களை சாப்பிட்டால்,

எந்த ஒரு பக்க விளைவும் ஏற்படாமல் இருப்பதோடு,

உடல் ஆரோக்கியமாக வும், வாய் துர்நாற்றம் இல்லாமலும் இருக்கும்.

Read more: http://viduthalai.in/page8/86412.html#ixzz3BDthW8Xk

தமிழ் ஓவியா said...



இரட்டையர்கள்

தமிழ் இலக்கியத்தின் இரட்டைக் கவிஞர்கள்,மகாகவி பாரதியார் - பரலி சு. நெல்லையப்பர். றீ உலகப் புகழ்பெற்ற ஆற்காடு இரட்டையர், டாக்டர் இராமசாமி முதலியார் - இலட்சுமணசாமி முதலியார். றீ கிலாபத் இயக்கத்தைத் தொடங்கிய இரட்டையர், முகமது அலி - மௌலானா சவுக்கத் அலி. றீ அக்பரது அவையை அலங்கரித்த இரட்டையர் அபுல்பாசல் - அபுல் பெய்சி. றீ ரோமானிய அரசை நிறுவிய இரட்டையர், ரோமுலஸ் - ரிமஸ். றீ உலகில் இரட்டைக் காப்பியங்கள், இலியத் - ஓடிசி. றீ உலகின் முதல் கிரிக்கெட் இரட்டையர், மார்க் வாக் - ஸ்டீவ் வாக். றீ சந்திரனில் 14 நாள் பகல், 14 நாள் இரவாக இருக்கும். றீ உலகின் இரட்டை இனப்பறவைகள், கேரி பஸ்டர்ட் - கிரேட் பஸ்டர்ட்.

இரட்டைச் சொற்கள்

டம் டம் (மே வங்கம்) - ஒரு சர்வதேச விமான நிலையம். றீ டம் டம் (மே.வங்கம்) - ஒரு மக்களவை தொகுதி. றீ ஜீன் ஜீன் (ராஜஸ்தான்) - ஒரு மக்களவை தொகுதி. றீ சிங் சிங் (அமெரிக்கா) - நியூயார்க் நகரில் உள்ள ஒரு சிறைச்சாலை. றீ தரன் தரன் (பஞ்சாப்) ஒரு மக்களவைத் தொகுதி. றீ சிங் சிங் - சீனத் தலைவர் மாசேதுங்கின் மனைவி. றீ டிடி காகா பெரு - பொலிவியா எல்லையில் உள்ள ஒரு முக்கிய ஏரி (83000 ச.கி.மீ).

Read more: http://viduthalai.in/page8/86413.html#ixzz3BDu7UR00

தமிழ் ஓவியா said...

சங்பரிவாரம், பா.ஜ.கட்சி, பா.ஜ.க. அரசு வெவ்வேறு வடிவங்கள் கொண்ட ஒரே மாதிரியான அமைப்புகளா?

சங்பரிவாரம், பா.ஜ.கட்சி, பா.ஜ.க. அரசு வெவ்வேறு வடிவங்கள் கொண்ட ஒரே மாதிரியான அமைப்புகளா?

இந்து ஆங்கில நாளேட்டின் தலையங்கம்

பா.ஜ.கட்சி ஆட்சியில் இருக்கும் போதெல்லாம், அதன் மீதான ராஷ்டிரிய சுயம் சேவக் சங்கத்தின் (ஆர்.எஸ்.எஸ்.) செல்வாக்கு அதிகமாகவே இருந்து வந்துள்ளது. இரு முறை மத்தியில் இக் கட்சி ஆட்சி அமைத்தபோது, ஆட்சி அதிகாரத்திலிருந்து விலகி இருப்பது போன்ற தோற்றத்தை அளிக்க சங்கம் சில நேரங்களில் தயாராக இருந்த போதிலும், கட்சி அமைப்பு விவகாரங் களில் கட்டுப்பாடு வைத்திருப்பதில் கவனமாக இருந்தது. எனவே, பா.ஜ. கட்சியின் தலைவராக புதிதாக நிய மிக்கப்பட்ட அமித் ஷா, அமைப்பின் தலைமைப் பொறுப்புகளில் சங்பரி வாரத்தினரையே நியமிப்பது என்ற முடிவெடுத்ததில் வியப்பேதும் இருக்க முடியாது. ஆர்.எஸ்.எஸ்.சின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் ராம் மாதவ் தற்போது பா.ஜ.கட்சியின் பொதுச் செயலாளராகவும், சங் கோட்பாட்டாளர் வினய் சஹஸ்ரபுத்தே துணைத் தலைவராகவும் நியமிக்கப்பட்டதுடன், கட்சியின் அமைப்புச் செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள நால்வரும் ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்கள் ஆவர். இவர்கள் பா.ஜ.கட்சிப் பணிகளை அதிக அளவில் ஆற்றியவர்கள் அல்ல. சங்பரிவார அமைப்புகளுடன் ஒரு குறிப்பிடத்தக்க தூரத்தை ஆர்.எஸ்.எஸ். கடைப்பிடித்து வந்த போதிலும், பா.ஜ. கட்சி மற்றும் பா.ஜ.க. மத்திய, மாநில அரசுகள் விவகாரங்களிலும், தங்களின் ஆணைகளை நடைமுறைப்படுத்துவதை உறுதிப் படுத்திக் கொண்டே வந்துள் ளது. அமைப்பு அளவிலான தனது பலத்தினாலும், அர்ப்பணிப்பு உணர்வு கொண்ட தொண்டர்களை ஒரு பெரும் எண்ணிக்கையில் கொண்டிருப்பதினா லும், பா.ஜ.கட்சியின் கோட்பாட்டு ஆசானாக மட்டுமன்றி, அதன் முதுகெ லும்பாகவும் ஆர்.எஸ்.எஸ். இருந்து வருகிறது. 2014 மக்களவைப் பொதுத் தேர்தலில் ஆர்.எஸ்.எஸ். மற்றும் அதன் துணை அமைப்புகளும் தங்களின் முழு பலத்துடன் பா.ஜ.கட்சியை ஆதரித்த துடன், உத்தரப் பிரதேசம், பிகார் போன்ற மாநிலங்களில் கட்சியை மறுபடியும் புத்துணர்வு பெறச் செய்வதில் அவர்களின் பங்களிப்பு மிகப் பெரிய அளவில் இருந்தது. பா.ஜ. கட்சி யும், குறிப்பாக உத்தரப்பிரதேச தேர்தல் கட்சி விவகாரங்களுக்குப் பொறுப்பேற்று கவனித்து வந்த அமித்ஷாவும் இந்த உண்மையை அங்கீகரித்து, கட்சியின் முடிவெடுக்கும் கட்டமைப்பில் ஆர்.எஸ்.எஸ். தலைவர்களை நியமித் திருப்பது இயல்பான ஒன்றே.

ஆனால் இதில் உள்ள பிரச்சினை என்னவென்றால், பா.ஜ.கட்சியின் மீது தனக்குள்ள செல்வாக்கை ஆர்.எஸ்.எஸ். எவ்வாறு பா.ஜ.க.அரசை ரிமோட் கன்ட்ரோல் மூலம் கட்டுப்பாட்டில் வைத்திருந்து பயன்படுத்திக் கொள்ளப் போகிறது என்பதுதான். பிரதமர் நரேந்திரமோடியின் நம்பிக்கையைப் பெற்று அவருடன் நெருக்கமாக இருப்பவர் கட்சியின் தலைவர் அமித்ஷா என்பதால், அரசமைப்பு சட்டத்திற்கு அப்பாற்பட்ட ஓர் அதிகார மய்யமாக அவர் செயல்படக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. இப்போது ஆர். எஸ்.எஸ். ஆட்களால் அதிக அளவில் பா.ஜ.கட்சி வழிநடத்திச் செல்லப்படுவதால், அரசின் மீதான பா.ஜ.கட்சியின் செல்வாக்கு அதிகரிக்கவே செய்யும். முடிவெடுப்பது என்பது அமைச்சரவை அளவிலும், நாடாளுமன்ற அளவிலும் மட்டுமே இல்லாமல், கட்சிக் கூட்டங்கள் மற்றும், சங் பரிவாரக் கூட் டங்கள் அளவிலும் நடைபெறுவதாக இருக்கக்கூடும். இந்துத்துவாதான் இந்தியாவின் அடையாளம் என்று ஆர்.எஸ்.எஸ்.தலைவர் மோகன் பகத் வெளியிட்ட அறிவிப்பின்படி பார்த்தால், பா.ஜ.கட்சியுடனான ஆர்.எஸ்.எஸ். அமைப்பு மற்றும் அதன் மூலமாக மத்திய அரசுடனான உறவுகளும் பற்றிய மாபெரும் கவலையை பொதுமக்களின் மனதிலும், குறிப்பாக சிறுபான்மை மத மக்களிடையேயும் தோற்றுவிக்கவே செய்யும். மக்களவையில் பா.ஜ.கட்சி பெற்றுள்ள பெரும்பான்மையின் அடிப் படையில் அல்லாமல், கருத்தொற்றுமை என்பதன் அடிப்படையிலேயே மத்திய அரசின் ஆட்சி இருக்கும் என்று பிரதமர் மோடி கூறிவருகிறார். ஆனால் இந்துத்துவாவை இந்தியத் தன்மை மற்றும் ஹிந்துஸ்தானிகளுடன் (இந்தி யர்கள்) சமப்படுத்தி மோகன் பகவத் வெளியிட்டது போன்ற அறிவிப்புகள், அறிக்கைகள், பிரிவினை உணர்வு கொண்ட பெரும்பான்மையினரின் செயல் திட்டத்திற்கு பா.ஜ,கட்சி திரும்புகிறதோ என்ற அய்யத்தையே ஏற்படுத்தும். அரசின் சிந்தனையாக இத்தகைய அறிவிப்புகள், அறிக்கைகள் எடுத்துக் கொள்ளப்படத் தேவையில்லை என்றால், இவைகளிலிருந்து மோடியும், பா.ஜ.கட்சியும் விலகி இருக்க வேண்டும். இல்லாவிட்டால், சங்பரிவாரம், பா.ஜ.கட்சி, பா.ஜ.க.அரசு ஆகிய மூன்றுமே ஒரே மாதிரியான அமைப்பின் மூன்று வடிவங்கள்தான் என்ற அளவில்தான் மக்களால் பார்க்கப்படும்.

நன்றி: தி இந்து 21-08-2014
தமிழில்: த.க.பாலகிருட்டிணன்.

Read more: http://viduthalai.in/page2/86397.html#ixzz3BDubhJxn

தமிழ் ஓவியா said...

ஆஸ்திரேலியா சென்றுள்ள குருப்பெயர்ச்சி?


நேசனல் ஜியோகிராபிக் என்ற அறிவியல் பத்திரி கையின் புகைப்படக்கலைஞர் அமித் காம்ளே என்ற இந் தியர் எடுத்த படம். இந்த படத்தில் பால்வெளி மண் டலம் தெளிவாகத்தெரிகிறது. நமது புவியின் தென் அட் சரேகைக்கு கீழே இருப்பதால் ஆஸ்திரேலியாப் பகுதி வான வெளியில் அழகிய பால் வெளிமண்டலத்தின் குறுக்கு வெட்டுத்தோற்றம் தான் தெரியும். நிலநடுக்கோட்டிற்கு அரு கில் உள்ள இந்திய வான வெளிபோல் விண்மீன் மண்டலங்கள் தெரியாது. ஆஸ்திரேலியா பழங்குடி யினர் இங்குள்ள வான மண்டல கற்பனை விலங்கு களை (இராசி) படைக்க வில்லை, அவர்கள் வித்தியாச மாக பால்வெளிமண்டல வெளிச்சத்தில் உள்ள எல் லைப்பகுதிகளை ஒன்றி ணைத்து கங்காரு. பிளாடிபஸ் ஈமு போன்ற உருவங்களை கற்பனையில் கண்டனர்.

ஆனால் மெத்தப்படித்து ஆஸ்திரேலியா சென்று பல்வேறு பெரிய பதவிகளில் இருக்கும் படிப்பாளிகளோ ஆஸ்திரேலியா சென்று அங்கேயும் குருப்பெயர்ச்சி விழா கொண்டாடுகிறார்கள். நமது ஊர் வானில் சில விண்மீன் குடும்பத்தில் இருந்து வேறு ஒரு குடும் பத்திற்குச் செல்லும் போது அது குருப்பெயர்ச்சி, சனிப் பெயர்ச்சி என்று கதைவிட்டு அதில் கூடபணம் பார்ப் பார்கள், ஒரு விண்மீன் குழு மத்தில் உள்ள விண்மீன்கள் ஒவ்வோன்றிற்கும் உள்ள தொலைவு ஆயிரக்கணக்கான ஒளியாண்டுகள் ஆகும் படத்தில் கண்ட இப்படி பல ஆயிரம் ஒளியாண்டுகள் தூரம் உள்ள விண்மீன்கள் நாம் காணும் போது அருக ருகே தெரியும் சில வடிவங் களாக நாமே கற்பனை செய்துகொள்கிறோம், இதில் கோள்களுக்கும் இந்த விண்மீன் குழுமங்களுக்கும் முற்றிலும் தொடர்பில்லை. இது பற்றி படித்திருந்தும், வானில் விண்மீன் குழுமமே தெரியாத ஒரு நாட்டிற்கு சென்று அங்கேயும் போய் நான் குருப்பெயர்ச்சி பூசை செய்வேன், சனிப்பெயர்ச்சி பூசை செய்வேன் என்று சொன்னால் அவர்கள் படிப் பிற்கு மரியாதை தருகிறார் களா? அல்லது அவர்களின் படிப்புத்திறமையை மாத்திரம் கொண்டு அவர்களை பணிக்கு அழைத்த ஆஸ்திரேலிய நிறு வனங்களை கேலி செய் கிறார்களா? முழுமையான் சிந்தனை செலுத்தி படித்தவர்கள் இல் லாத மூடநம்பிக்கையை தூக்கிக் கொண்டு சுமக்கமாட்டார்கள்.

Read more: http://viduthalai.in/page3/86398.html#ixzz3BDupsuYh

தமிழ் ஓவியா said...


நூல் - சிகை - யறுத்தல் - நன்றே!


குடுமி வைத்துப் பூணூல் மாட்டிக் கொண்டதனால் மட்டும் ஒருவன் பிரா மணனாகான்.
நூலுஞ் சிகையும் நுவலிற் பிரமமோ? நூலது வேதாந்தம்:

நுண்சிகை ஞானமாம்

குடுமி, மயிர்; பூணூல், பருத்தி மயிரும் பருத்தியுமே இறையறிவிற்கு இலக்கண மாகுமா? ஆகா ஒழுக்கமில்லா வேடம் போலித்தனமாகும். வாழும் வேதாந்தத்தால் அவாவறுத்தலே பூணூலாகும். கடவுள றிவே சிகையாகும். நெஞ்சில் மடமையிருள் குடி கொண்டு சிகை வைத்துப் பூணூலும் போட்டு நான் பிராமணன் என்று பொய்வேடம் பூணுவோரால் நாடு கெடும், புவிவளம் குறையும். பெரு வாழ்வும், அரசும் பெருமையிழக்கும். ஆதலால் அந்த ஆடம்பரப் போலிகளின் பூணூலை யும், சிகையையும் அரசன் அறுத்தெறிதல் நன்றாகும்; ஞான நூல் பூண்டு அந்தண் ஞானிகள் எனவும் நடித்து உலகை ஏமாற்றுவர். அரசன் மெய்ஞ்ஞானிகளைக் கொண்டு அவர்களைச் சோதித்து; ஞான முண்டாக்கி நல்வழிப்படுத்த வேண்டும். அதுவே நாட்டிற்கு நலமாகும். (பக்கம் 100)

ஞான மிலாதார் சடை சிகை நூல் நண்ணி
ஞானிகள் போல நடிக்கின்றவர் தம்மை

ஞானிகளாலே நரபதி சோதித்து ஞானமுண் டாக்குதல் நலமாகும் நாட்டிற்கே

நூல்: திருமந்திர விளக்கம் (முதற்பாகம்) கழக வெளியீடு

Read more: http://viduthalai.in/page3/86399.html#ixzz3BDuxrLNH

தமிழ் ஓவியா said...

மதத்தின் வேர்கள்

மதச் சடங்குகள் உலகெங்கும் ஊதாரித்தனத்துடன் செய்யப்படுகின்றன; அவற்றால் காலமும், பொருளும் விரயமாகின்றன; அவை வலியையும், வறுமையையும் உண்டாக்குகின்றன. (இவற்றைக் காணும்) ஒரு பரிணாம வளர்ச்சி உளவியலாளருக்கு, மதம் (சூழலுக்குத் தக்க தன்னைச்) சரிப்படுத்திக் கொள்ளக் கூடியதாக இருக்கலாம் என, மண்ட்ரில் குரங்கின் அடிப்பகுதியைப் போன்று தெளிவாகத் தெரிகிறது.

- மரேக்கோன்
(ரிச்சர்டு டாகின்ஸ் எழுதியுள்ள கடவுள் ஒரு பொய் - நம்பிக்கை என்ற நூலிலிருந்து)

Read more: http://viduthalai.in/page4/86401.html#ixzz3BDvSEWDD

தமிழ் ஓவியா said...


சூரிய வெப்பம் எவ்வளவு?

சூரியனின் மேல்தளம், தன்னருகில் வரும் உலோக விமானத்தையே உருக்கி விடும் அளவுக்கு வெப்பம் கொண்டது. கொதி நிலையை அடைந்த தண்ணீரைவிட 15 மடங்கு வெப்பம் நிறைந்தது எனவும் கூறலாம். மேல் தளத்தின் வெப்பம் சுமார் 5500 டிகிரி செல்சியஸ் அல்லது 9940 டிகிரி ஃபாரன்ஹீட் ஆகும். அதன் மய்யப் பகுதி மேல்தளத்தைவிட 2300 மடங்கு சூடானது.

Read more: http://viduthalai.in/page4/86401.html#ixzz3BDvYH6KL

தமிழ் ஓவியா said...


விடுதலைக்கு நன்றி!


நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருப்புகலூர் கிராமத்தில் விடுதலை நாளிதழ் காலதாமதமாகக் கிடைத்து வந்தது. தற்போது விடுதலை நாளிதழ் காலை ஆறரை மணிக்கே வந்து விடுவதால் விடுதலை நாளிதழில் வெளியாகும் செய்திகளை கிராம மக்கள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள முடிகிறது. எனவே திருப்புகலூர் மற்றும் சுற்று வட்டார கிராம மக்கள் சார்பில் விடுதலை நாளிதழ் நிறுவனத்தார் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர். இதுபற்றி திராவிடர் கழகப் பொதுக் குழு உறுப்பினர் கூறும்போது இப்பகுதி விவசாயிகள் நிறைந்த பகுதியாகும் பாமர மக்கள் அதிகம் உள்ளனர்.

இப்பகுதியில் பகுத்தறிவு சிந்தனையுடையவர்கள் அதிகம் பேர் உள்ளதால் அவர்கள் விடுதலை நாளிதழை மிகவும் விரும்பி படிக்கின்றனர். எனவே, இப்பகுதியில் காலையிலேயே காலத்தோடு விடுதலை நாளிதழ் கிடைப்பதால்தான் மக்கள் ஆர்வமுடன் வாங்கிப் படிக்கின்றனர். ஆதலால் நானும் இவர்களோடு சேர்ந்து நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். 21.08.2014 காலை 6.30 மணிக்கு திருப்புகலூர் கடைவீதியில் கிராமத்து மக்கள் விடுதலைநாளிதழை வாங்கி ஆர்வமுடன் படிப்பதை படத்தில் காணலாம்.

Read more: http://viduthalai.in/page5/86403.html#ixzz3BDvyFwlD

தமிழ் ஓவியா said...


உனக்கு மற்றவர்கள்


உனக்கு மற்றவர்கள் எதைச் செய் யக்கூடாதென்று எதிர்பார்க் கிறாயோ, அதை நீ மற்றவர் களுக்குச் செய்யாதே! - டால்ஸ்டாய்

நேர்மை என்பது, செய்யும் செயலைப் பொறுத்தது. உண்மை யைப் பேசி உண்மையாக நடப்பது மட்டுமே நேர்மை ஆகாது! -சாக்ரடீஸ்

பொறுமையாக இருப்பது அவ்வளவு எளிதல்ல; ஆனால் அதன் விளைவோ பெரிது; இனிமையும் நன்மையும் பயக்கும். - ரூஸோ

உண்மை எதுவெனக் கண்டுபிடிப் பதைவிடச் சிறந்தது உலகில் வேறொன்றும் இல்லை. உண்மை தான் நிலைத்து நிற்கும். - இங்கர்சால்

உழைப்பே மூலதனம்; உழைப்பின்றி மூலதனம் இயங்க முடியாது! -கார்ல் மார்க்ஸ்


Read more: http://viduthalai.in/page5/86404.html#ixzz3BDw5IxUe

தமிழ் ஓவியா said...


ஆராய்ச்சி விளக்கம்! (ஈ.வெ.ரா.)


ஏழை என்பவன் யார்? : தனது சரீரத்தால் வேலை செய்து அதன் கூலியினால் மாத்திரமே ஜீவனம் செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்திலுள்ளவன். இக்கூட்டத்தார் களுக்குத்தான் பார்ப்பன மதப்படி சூத்திரர்கள் என்கின்ற பெயர்.

முதலாளிகள் என்பவர்கள் யார்? : சரீரத்தினால் வேலை செய்யும் ஆள்களை வைத்து வேலைகளை வாங்கி, வேலை செய்தவர்களுக்கு ஒரு அளவுக்குள்பட்ட ஜீவனத்துக்கு மாத்திரம் போதுமான கூலி கொடுத்துவிட்டு அவ்வேலையின் மற்ற எல்லாப் பயன்களையும் எல்லையின்றி அனுபவிப்பவர்கள்.

குடியானவர்கள் என்பவர்கள் யார்? : பூமியைத் தானே உழுது தானே பயிர் செய்து தன் குடும்பம் முழுவதும் அதில் ஈடுபட்டு அதன் பயனை அனுபவிப்பவர்கள்.

மிராசுதாரர்கள் என்பவர்கள் யார்? : தாங்களே நேரில் விவசாயத் தொழிலில் ஈடுபடாமல் ஆள்களை வைத்து பயிர் செய்கிறவர்களும், மற்றவர்களுக்கு குத்தகைக்கோ, வாரத்துக்கோ விட்டு லாபத்தை மாத்திரம் அடைபவர்களான (பூமியை உடைய)வர்கள்.

- குடிஅரசு - கட்டுரை - 10.01.1948

Read more: http://viduthalai.in/page7/86409.html#ixzz3BDwtutD1

தமிழ் ஓவியா said...

தென்னையை வச்சா இளநீரு! பிள்ளையைப் பெத்தா கண்ணீரு!

எங்கள் பக்கத்து வீட்டில் உண்மையிலேயே அனைவருக்கும் கண்ணீர் வரவழைக்கும் சம்பவம். இதோ: வயதான முதியவர் வயது சுமார் 90 இருக்கும். அவர் மனைவி இறந்து விட்டார். அவர் மகன் அரசு போக்குவரத்து கழகத்தில் நடத்துநர் பணி செய்து ஓய்வு பெற்றவர். அவருக்கு மனைவி இரண்டு மகன்கள் உண்டு. நடத்துனரின் தந்தைக்கு வயதாகி விட்டதால் ஊன்றுகோல் உதவியுடன்தான் நடக்க முடியும். கழிப்பறைக்கு செல்வதற்குக்கூட மிகவும் சிரமப்படுவார். இந்த வயதில் சர்க்கரை நோய் மற்றும் அஜீரனக் கோளாறுகள் இயற்கையிலேயே அனைவருக்கும் வருவது இயற்கை தானே! சிறுநீர் கழிப்பதற்கு வெளியே வருமுன் சிறுநீரை அடக்க முடியாமல் சில சமயங்களில் சிறுநீர் கழித்து விடுவதை தாங்கிக் கொள்ளாதஅவரின் மருமகள் அவரை ஏய் கம்மனாட்டி, கம்மானாட்டி என்று அடிக்கடி வசை பாடுவதுண்டு.

தந்தையை மகன் கையை மடக்கிக் கொண்டு ஓங்கி ஒரு குத்து விட்டார்.

இந்த வயதில் அவருக்கு சீரணமாகும் உணவைக் கொடுக்காமல் இவர்கள் சாப்பிடும் உணவையே அவருக்கும் கொடுப்பார் அவர் மருமகள். அந்த உணவு முதியவருக்கு ஜீரணமாகாமல் கழிப்பறைக்குச் செல்லும் வழியிலேயே மலஜலம் கழித்து விட்டதை அவர் கணவரிடம், இந்த சனியன் வீடெல்லாம் அசிங்கப் படுத்தி விட்டது என்று அவர் கண வரிடம் சொல்ல, அவர் கணவர் தன் தந்தையின் முதுகில் தன் கையை மடக்கி ஓங்கி ஒரு குத்து விட்டார். அய்யோ அம்மா என்று படுத்த முதியவர் நான்கு நாட்களில் இந்த உலகை விட்டே மறைந்துவிட்டார். இந்த நடத்துநருக்கும், இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். நாளைக்கு இவருக்கும் இந்த நிலைமை தானே ஏற்படும். (முதுமை என்பது காலத்தின் கட்டாயம் என்று தமிழர் தலைவர் வாழ்வியல் சிந்தனையில் கூறியுள்ளது தான்) என் நினைவில் வந்தது.

- சி. அம்பிகா, நிரந்தர நாத்திகர் கரிக்குளம், கும்பகோணம்

Read more: http://viduthalai.in/page7/86410.html#ixzz3BDx1r8HK

தமிழ் ஓவியா said...


இந்திய அரசில் இராமன் கட்டளை!

இராவணனை எதிர்த்து வெற்றி அடையாதவன் இராமன்.

சுக்ரீவன் அனுமன், வீடணன் என்னும் மூவரின் துணையைக் கொண்டே இராமன் இராவணனைத் தோற்கடித்தான்.

தான் வெற்றி அடைவதற்குத் துணை செய்த வீடணனிற்கு இராமன் முடிசூட்டி இலங்கை ஆட்சியினைத் தந்தான்.

இராமன் வீடணனிற்கு முடிசூட்டிய கையோடு நான்கு கட்டளைகளை இட்டான்.
கட்டளை 01: தமிழ்நாட்டில் தமிழ் இனத்திற்கு உள்ளதுபோல எல்லா உரிமையும் எங்களுக்குத் (ஆரியப் பார்ப்பனர்) தர வேண்டும்.
கட்டளை 02: தமிழர்கள் எங்களை எதிர்க்காமல் தடுக்க வேண்டும்.
கட்டளை 03: தமிழ்நாட்டில் எங்கள் தாய்மொழியான சமற்கிருதத்தை எங்கள் இனத்தவர் பேசவும், பயிலவும் உரிமை தர வேண்டும்.

கட்டளை 04:

தமிழ்நாட்டுக் குறுநில மன்னர்கள் எங்கள் மேல் படை எடுக்காதிருப்பதற்குத் தகுந்த ஏற்பாடு செய்ய வேண்டும்.

எங்களை எதிர்த்து ஒழிக்க நினைப்பவரை (இராவணன்) எதிர்த்து ஒழிக்கவே தமிழ்நாட்டிற்கு வந்தேன்.

இராமனின் இந்த வாய்மொழிக் கட்டளையை இராமன் காவியத்தில் இடம் பெற்றிருக்கும் ஒப்பந்தப் படலத்தில் உள்ள 15 முதல் 19 வரையிலான பாட்டுக்களின் வாயிலாய்ப் புலவர் குழந்தை அவர்கள் நமக்குப் பதிவு செய்து அளித்திருக்கிறார்.

தொடர்ந்து, தொடர்ந்து வரும் சமற்கிருத ஏற்பாடு: வட ஆரிய இராமனின் திட்டம் அல்லவா?
றீ ஈரோட்டுப் பெரியார் வழியில் புலவர் குழந்தை இராமாயணத்தை எதிர்த்துப் பாடிய இராவண காவியம் தரும் தொலைநோக்கு ஆழம்தான் என்னே!
புலவர் குறளன்பன், கோவை

Read more: http://viduthalai.in/page6/86406.html#ixzz3BDxEDCtQ

தமிழ் ஓவியா said...

இதே தியாகராயர் நகரில்தான்!

சென்னை மாநகரம் அதிலும் தியாகராய நகர் என்றபோது மூன்று மறக்க முடியாத நிகழ்வுகள்.

1) தந்தை பெரியார் இறுதியாக உரையாற்றியது தியாகராயர் நகரில்தான்.

2) அறிஞர் அண்ணா இறுதியாக பொது நிகழ்ச்சியில் பங்கேற்றது தியாகராயர் நகரில்தான் (வாணிமகால் அருகில் கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் சிலை திறப்பு).

3) புரட்சிக் கவிஞர் கடைசியாக இருந்து முடிவு எய்தி யதும் இதே தியாகராயர் நகரில்தான் (ராமன் தெரு).

Read more: http://viduthalai.in/e-paper/86368.html#ixzz3BDxV7Tcn

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

மலர் வேண்டாம் மனம் போதும்!

சிவபெருமானுக்கு பூஜை செய்ய புன்னை, வெள்ளெருக்கு, செண் பகம், நந்தியாவட்டை, நீலோத்பவம், பாதிரி, அரளி, செந்தாமரை ஆகிய எட்டு வகையான மலர்களைப் பயன்படுத் தலாம். இம்மலர்கள் அஷ்ட புஷ்பங்கள் எனப்படு கின்றன. இவற்றில் சில இப்போது கிடைப்ப தில்லை. இம்மலர்களை படைத்து மட்டும்தான் சிவனை வழிபட வேண்டு மென்பதில்லை. நமசி வாய என அவர் திருநாமத்தை உச்சரித்து, மனம் என்னும் பூவால் வழி பட்டாலே போதும். மலர்களால் அர்ச்சித்து வணங்கிய பலன் கிடைத்து விடுமாம்!

இதைப் போல கோயி லுக்குச் செல்லாமல் வீணா கப் பணத்தை எதையும் செலவு செய்யாமல், உள்ளமே கோயில் என்று கருதி வீட்டில் இருந்த படியே மனதளவில் சிவனை வழிபட்டால் போதும் என்ற முடிவுக்கு வர வேண்டியதுதானே - கோயில்களையும் இழுத்து மூடிவிடலாம் அல்லவா!

Read more: http://viduthalai.in/e-paper/86360.html#ixzz3BDxdVC1r

தமிழ் ஓவியா said...


கோவாவில் சிறீராம் சேனைக்கு தடை


பனாஜி, ஆக. 23_ கோவா மாநிலத்தில் சர்ச்சைக்குரிய இந்து அமைப்பான சிறீ ராம் சேனைக்கு தடை விதிக்கும் அரசின் முடிவினை கோவா மாநில கத்தோலிக்க சிறுபான்மை முன்னணி வரவேற்றுள்ளது. இதுபற்றி அந்த அமைப்பின் கன்வீனர் பெர்னாபே செபிகோ கூறியதாவது:- அமைதியான கோவா மாநிலத்தில் சிறீ ராம் சேனையின் தலைவர் பிரமோத் முத்தாலிக் தனது இயக்கத்தை ஆரம்பித்தால் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை மோசமடையும் என்று காவல்துறையும் குறிப்பிட்டுள்ளது. இந்துக்களின் காவலன் என்று தன்னை பிரபலப்படுத்துவதற்காக கோவாவில் அவர் சர்ச்சையை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்.

மத நல்லிணக்கத்திற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் முத்தாலிக் தனது அமைப்பை தொடங்குவதற்கு மதங்களைக் கடந்து அனைத்து மக்களும் எதிர்க்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார். சிறீராம் சேனா பற்றி காவல்துறை எதிர்மறையான அறிக்கை அளித்ததால் அதற்குத் தடை விதிக்கப்பட்டிருப்பதாக முதல்வர் மனோகர் பாரிக்கர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Read more: http://viduthalai.in/e-paper/86365.html#ixzz3BE0hWd2V

தமிழ் ஓவியா said...

தமிழ்நாட்டை வஞ்சிப்பதில் மட்டும் ஒற்றுமையா?

மத்தியில் பிஜேபி ஆட்சி வந்தவுடன் பார்த்தீர்களா? இலங்கை தீவில் சிறை வைக்கப்பட்டிருந்த அத்தனைத் தமிழக மீனவர்களும் விடுதலை செய்யப்பட்டு விட்டனர். இதற்கு மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுதானே காரணம் என்று மார் தட்டுகின்றனர்.

விவாதத்துக்காகவே ஒத்துக் கொள்வோம். இனி தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படை கைது செய்யாது என்று உத்தரவாதம் கொடுக்க முடியுமா? என்பது முக்கிய கேள்வியாகும்.

தமிழக மீனவர்கள் அனைவரும் விடுதலை செய்யப் பட்டு விட்டனர் என்று செய்தி வெளி வரும் நாளன்றே ... ஜெகதாபட்டினத்தைச் சேர்ந்த தமிழக மீனவர்கள் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளனர் என்ற செய்தி வருகிறது. பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை எக்காரணம் கொண்டும் திருப்பிக் கொடுக்க மாட்டோம் என்று இலங்கை அமைச்சர் அழுத்தந் திருத்தமாகக் கூறியிருப்பதும் இப்பொழுதுதான்.

இதில் இன்னும் குறிப்பிடத்தக்க மிகப் பெரிய கொடுமை என்னவென்றால் ஜெகதாப்பட்டின மீனவர்கள் கச்சத் தீவுப் பகுதிக்குச் சென்று மீன் பிடிக்கவில்லை. இந்திய எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோதே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கிறது!

தமிழக மீனவர்கள் தங்கள் எல்லைகளைத் தாண்டி மீன்பிடிக்கிறார்கள் - அதனால்தான் இலங்கைக்கடற்படை கைது செய்கிறது என்று கிளிப் பிள்ளைப் பாடம் படிக்கிறார்களே - ஜெகதாப்பட்டினத் தமிழக மீனவர்கள் இந்திய எல்லைக்குள்ளேயே தாக்கப்பட்டுள் ளனரே, தாக்கப்பட்டவர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளாரே - இதற்கு என்ன சமாதானத்தைச் சொல்லுகிறது இந்திய அரசு?

இதுபோன்ற நேரங்களில் அமைதி காப்பதுதான் இந்திய அரசின் அரசத் தந்திரமாக இருந்து வந்திருக் கிறது.

இப்படி இந்திய அரசு நடந்து கொள்ளுமேயானால் இந்திய அரசின்மீது தமிழக மீனவர்களுக்கு எப்படி நம்பகத் தன்மை ஏற்படும்?

இந்திய எல்லைக்குள் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டனர் என்று சொல்லும்பொழுது இன்னொரு உண்மையும் அதில் பதுங்கி இருக்கிறது. இலங்கைக் கடற்படையோ அல்லது இலங்கை சிங்கள மீனவர்களோ இலங்கையின் எல்லை தாண்டி இந்திய எல்லைக்குள் வந்துதானே தாக்குதலைத் தொடுத் திருக்க முடியும்? அப்படி இந்திய எல்லைக்குள் வந்த சிங்களவர்களை இந்தியக் கடற்படை ஏன் கைது செய்யவில்லை என்பது நியாயமான கேள்வியா இல்லையா?

உலகம் முழுவதும் கடலில் மீன்பிடிக்கிறார்களே அங்கெல்லாம் இந்த எல்லைப் பிரச்சினையோ, மீனவர்களைத் தாக்கும் நிலையோ, சிறைபிடிக்கும் வழமையோ இல்லாதிருக்கும்போது, இந்தியத் தரப்பினில் மட்டும் மாறான நிலை தவறான அணுகு முறை இருப்பது சரியா? இதற்கு ஏதாவது காரணம் இருந்தால் அதனையாவது வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டியதுதானே!

ஒன்று மட்டும் புரிகிறது, இதற்கு முன் ஆட்சியதி காரத்தில் இருந்த அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசும் சரி, தற்போதைய தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசும் சரி ஈழத் தமிழர்கள் பிரச்சினையிலும், தமிழக மீனவர்கள் பிரச்சினையிலும் தமிழ்நாட்டு மக்களுக்கு எதிராகவே நடந்து கொள்வது ஏன்? இதில் என்ன அப்படியொரு ஒற்றுமை? மற்ற மற்ற பிரச்சினைகளில் எல்லாம் ஒருவரைப் பார்த்து இன்னொருவர் முண்டா தட்டும் நிலையில் ஈழத் தமிழர்கள் - தமிழக மீனவர்கள் பிரச்சினைகளில் மட்டும் நாங்கள் புதுசா கட்டிக்கிட்ட ஜோடி தானுங்க! என்று ஆடுவது ஏன்?

இப்படியொரு சூழலில் பிரதமர் நரேந்திர மோடியும் பிஜேபியின் அகில இந்தியத் தலைவர் அமித்ஷாவும் தனித்தனியாக தமிழ்நாட்டில் கட்சியை வளர்க்க பிரச்சாரத்திற்கு வருகிறார்களாமே, வரட்டும் - நன்றாகவே வரட்டும் அப்பொழுதாவது தமிழ்நாட்டு மக்களின் இன உணர்வையும், மதவாத எதிர்ப்புணர் வையும் எளிதாகத் தெரிந்து கொள்ள வாய்ப்புக் கிட்டும்!

தமிழ்நாட்டில் உள்ள சில ஏடுகள் காற்றுள்ள போதே தூற்றிக் கொள்! என்ற தன்மைக்கு ஏற்ப நடந்து கொள்வதை வைத்து தமிழ் மண்ணைத் தப்புக் கணக்குப் போட வேண்டாம்!

Read more: http://viduthalai.in/page-2/86353.html#ixzz3BE0sg0WK

தமிழ் ஓவியா said...


கலெக்டர் கவனிப்பாரா?

கோபிசெட்டிபாளையம் டிப்டி கலெக்டரவர்கள் தேவஸ்தான மரங்களை கள்ளுக்கு விடும்படி தர்மகர்த் தாக்களை நிர்ப்பந்திக்கிறாரென்றும், கள்ளுக்கடை காரர்களுக்கு மரம் கிடைக்காவிட்டால் மணியக்காரர்கள் மீது நடவடிக்கை எடுத்துக்கொள்ளுவதாகச் சொன்ன தாகவும் நம்பத்தகுந்த இடங்களிலிருந்து செய்தி கிடைத்திருக்கிறது.

இது உண்மையானால் சர்க்காரிடத்தில் பொது ஜனங்களுக்கு துவேஷமும், பொது ஜனங்களுடைய வரிப்பணத்திலிருந்து வருடம் 4 லட்ச ரூபாய் செலவு செய்து சர்க்காரால் செய் யப்படும் மதுவிலக்கு பிரசாரத்தினிடத்தில் சந்தேகமும், கெட்ட எண்ணமும் ஏற்பட இடமுண்டாவ தோடு சர்க்காருக்கு நல்ல பேர் கிடைக்கும்படியாகச் செய்யப்பட்டு வரும் பிரசாரம் முதலியவைகளுக்கு இடைஞ்சலும் ஏற்படுமாகையால் நமது ஜில்லா கலெக்டர் அவர்கள் தயவு செய்து இந்த விஷயத்தைக் கவனித்து இந்தப்படி நடப்பதை நிறுத்தவும். இந்தப்படிக் கில்லையானால் ஓர் அறிக்கை வெளி யிடவும் முயற்சி செய்வாரென்று நம்புகிறோம்.

- குடிஅரசு - துணைத்தலையங்கம் - 28.09.1930

Read more: http://viduthalai.in/page-7/86385.html#ixzz3BE1r5BPR

தமிழ் ஓவியா said...

நீலாவதி - ராமசுப்ரமணியம் திருமண அழைப்பு

அய்யா:- குடிஅரசு, திராவிடன், குமரன் பத்திரிகைகளுக்கு வியாசம் எழுதிவரும் மதிநிறைச் செல்வி திருச்சி

நீலாவதிக்கும்

மதிநிறைச் செல்வன் கொத்தமங்கலம்

ராம சுப்ரமணியத்திற்கும்

பிரமோ தூத வருஷம் புரட்டாசி மாதம் 19 ஆம் (5. 10. 30) தேதி ஞாயிற்றுக் கிழமை காலை 10 மணிக்கு திருச்சியில், தென்னூர் ரோட் 4 நெம்பர் இல்லத்தில் திருமணம் நடத்த ஏற்பாடாகி இருக்கிறபடியால், அதுபோது தாங்கள் தயவுசெய்து தங்கள் வாழ்க்கைத் துணையுடன் எழுந்தருளி சாட்சியளிக்க விழைகின்றோம்.

ஈரோடு ஈ. வெ. ராமசாமி
01. 10. 1930 ஈ. வெ. ரா. நாகம்மாள்
குடிஅரசு, 05.10.1930

Read more: http://viduthalai.in/page-7/86385.html#ixzz3BE1xrqEg

தமிழ் ஓவியா said...

மேல்ஜாதி - கீழ்ஜாதி என்கிற அமைப்பை ஒழிக்க வேண்டும் என்று நான் சொல்லும்போது மேல்ஜாதி - கீழ்ஜாதி என்கிற தன்மையினால் ஒரு கூட்டம் அடைந்திருக்கும் அதிகப் பங்கையும் உரிமையையும் - போக போக்கியத்தையும் - கீழ்நிலையில் இருந்து கேடு அடையும் மக்கள் நிலைமையையும் ஒழிக்க வேண்டும் என்ற தத்துவத்தில் தான் நான் ஜாதியை ஒழிக்க வேண்டும் என்று சொல்லுகிறேன்.

Read more: http://viduthalai.in/page-7/86385.html#ixzz3BE27fm1o

தமிழ் ஓவியா said...


கடவுளின் நடவடிக்கை - சித்திரபுத்திரன்


உலகத்தை எல்லாம் உண்டாக்கி அதில் உள்ள எல்லாவற்றையும் நடத்தும் ஒரு சர்வசக்தியுள்ள கடவுள் ஒருவர் இருக்கிறார். அவரால் தான் (அவர் இஷ்டப்படி) உலகம் இயங்கு (நடைபெறு) கின்றது என்று சொல்லப்படுமானால் அவரை நடுநிலை யுடையவரென்று சொல்லுவதைவிட பாரபட்சமுடையவரென்று சொல் வதற்கே மிக மிக இடமிருக்கின்றன.

அவரை கருணையுடையவரென்று சொல்லுவதைவிட கருணையற்ற வரென்று சொல்லுவதற்கே ஏராளமான பிரதியட்ச உதாரணங்கள் இருக்கின்றன. அவரை நீதிவான் என்று சொல்லுவதைவிட அநீதிவான் என்று சொல்லு வதற்கே தாராளமான ஆதாரங்கள் அதிகமிருக்கின்றன.

அவரால் உலகுக்கு நன்மை ஏற்படுகின்றது என்று சொல்லுவதைவிட அவரால் அதிக தீமையே ஏற்படு கின்றது என்று சொல்லுவதற்குப் போதுமான ஆதார மிருக்கின்றது.

அவர் அறிவாளி என்று சொல்லுவதைவிட மூடர் என்று சொல்லுவதற்கே போதுமான ருஜுவு இருக்கின்றது.

(அதுவே முடிந்த முடிவானால்) அப்படிப்பட்டவரை யோக்கியர் என்று சொல்லுவதைவிட அயோக் கியர் என்று சொல்லுவதற்கே திருஷ்டாந்தங்கள் பல இருக் கின்றன.

அவர் ஜீவன்களுக்கு நன்மை யை செய்கின்றாரென்பதைவிட தீமையைச் செய்கின்றார் என்பதற்குப் போதிய காரணங்கள் இருக்கின்றன.

அவரால் நன்மையடைந்தவர்களைவிட தீமையடைந் தவர்கள் அதிகமாக இருக்கின்றார்கள் என்று சொல்லத் தகுந்த அத்தாட்சிகள் மிகுந்து கிடக்கின்றன.

அவர் நாகரிகமுடையவரென்று சொல்லுவதைவிட அவர் காட்டுமிராண்டி என்று சொல்லுவதற்கே அளவுக்கு மீறிய அனுபவங்கள் காணப்படு கின்றன.

அவர் இருந்தால் நல்லது என்று சொல்லுவதைவிட அப்படிப்பட்டவர் ஒருவர் இல்லாமல் இருந்தால் நல்லது என்று ஆசைப்படுவதற்கு அனேக காரணங்கள் இருக்கின்றன.

அப்படி ஒருவர் இருக்கிறார் என்று எண்ணிக் கொண்டு வாழ்க்கையை நடத்துவதைவிட அப்படி ஒருவர் இல்லை என்று வாழ்க்கை நடத்துவதே மனித சுதந்திரத்திற்கு அதிகமான நன்மை பயக்கத்தக்கது என்று கருதுவதற்கு வேண்டிய அவசியங்கள் பல இருக்கின்றன.

அறிஞர்களே, ஆராய்ந்து பாருங்கள்.

- குடிஅரசு - கட்டுரை 19.10.1930

Read more: http://viduthalai.in/page-7/86384.html#ixzz3BE2HvNuo

தமிழ் ஓவியா said...

தந்தை பெரியார் பொன்மொழி

மக்கள் இயற்கையிலேயே மூடநம்பிக்கை, காட்டு மிராண்டித்தனம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். அவர்களை ஓரளவுக்காவது மாற்றிப் பகுத்தறிவு, சமதர்மம் இவைகளுக்குப் பக்குவப்படுத்த வேண்டும்.

Read more: http://viduthalai.in/page-7/86384.html#ixzz3BE2QBk00

தமிழ் ஓவியா said...

மந்திரிகள்

அக்டோபர் மாதம் 23 தேதி வரை இப்போதைய மந்திரிகளே ஆட்சி நடத்துவார்கள். பிறகு டாக்டர் சுப்பராயன் அவர்களே மந்திரிசபை அமைத்தாலும் அமைக்கக்கூடும். அல்லது ஜஸ்டிஸ் கட்சியார் என்பவர்கள் சார்பாக என்று திரு. பி.முனுசாமி நாயுடு அவர்கள் அமைத்தாலும் அமைக்கக் கூடும்.

யார் யார் தலையில் பிரம்மா நீ மந்திரியாய் இரு என்று எழுதியிருக்கிறாரோ என்பது இப்போது தெரியவில்லை. ஆனால் நியமனம் ஆனவுடன் தெரிந்துவிடும், அதோடு நியமனமான பிறகு மத்தியில் ஒரு சமயம் அது போய் விடுவதாயிருந்தாலும் அதுவும் பிரம்மா எழுதின சங்கதி உத்தியோகம் போன பிறகுதான் தெரியும்.

எனவே பிரம்மா இந்த விஷயங்களை இவ்வளவு இரகசியமாய் யாரும் அறிய முடியாமல் எழுதி வைத்திருப்பதிலிருந்து, இரகசியத்தைக் காப்பாற்றுவதில் பிரம்மாவானவர் நமது கவர்னர் பிரபுவை விட கெட்டிக்காரர் என்றுதான் சொல்ல வேண்டும்!

இது ஒரு புறமிருக்க, நியமனமாகும் மந்திரிகளும் எதிர்பார்க்கும் நபர்களும் கூட தாங்கள் நியமனமான பிறகுதான் தங்களுக்கு இல்லை என்று முடிந்த பிறகும்தான் கவர்னரையும் பிரம்மாவையும் போற்றவோ, தூற்றவோ போகிறார்கள்.

இந்த மாதிரி மந்திரிகள் நியமனமாவது ஏமாற்றமடைவதும், வெறும் மந்திரி உத்தியோகத்திற்கு வருகிறவர் களுடையவும், ஏமாற்றமடைகிறவர்களுடையவும் தலை யெழுத்துக்களை மாத்திரம் பொறுத்ததாய் இல்லாமல் இவர்கள் வரவேண்டுமென்று எதிர்பார்ப்பவர்களுடையவும் வரக்கூடாது என்று எதிர்பார்ப்பவர்களுடையவும், இவர்களால் பிழைக்கலாம், இவர்களால் கெட்டுப் போகக்கூடும் என்று கருதிக் கொண்டிருப்பவர்களுடை யவும் தலையெழுத்துக்களையும் பொறுத் திருப்பதால் இந்த தலையெழுத்துக்கள் எப்போதும் பலருக்கு மிக்க குழப்பத்தையே தந்து கொண்டே வருகின்றன.

- குடிஅரசு - துணைத்தலையங்கம், 05.10.1930

Read more: http://viduthalai.in/page-7/86384.html#ixzz3BE2WQxaB

தமிழ் ஓவியா said...


வைசிராய் பிரபுக்கு வேண்டுகோள்


லாகூரிலுள்ள ஜட்பட் ரோரக் மண்டலமென்னும் சங்க மானது இந்து சமூகத்தில் காணப்படும் ஜாதி வித்தியாச மென்னும் உயர்வு, தாழ்வை ஒழிக்க மிகவும் பாடுபட்டு வருகின்றது. அடுத்த சென்சஸின் போது (ஜனத் தொகைக் கணக்கு கொடுக்கும் போது) இந்துக்கள் தங்கள் ஜாதியைக் குறிப்பிடலாகாதென்பது அதன் கொள்கை.

ஆகவே அச்சங்க நிர்வாகிகள், இந்திய சென்சஸ் கமிஷனரைக் கண்டு தங்கள் தங்கள் ஜாதியைக் குறிப்பிட விரும்பாதவர்களை ஜாதியைக் கூறும்படி வற்புறுத்தலாகா தெனக் கேட்டுக் கொண்டதற்கு அவர் வைசிராயிடம் அறிவித்துக்கொள்ளும்படி சொன்னதால் மேற்படி சங்கத்தார் வைசிராய்க்குச் செய்து கொண்ட விண்ணப்பத்தின் சாராம்சமாவது:- பற்பல மாகாணங்களிலுமுள்ள இந்து சமூகத்தினரில் பலர் இந்து மதத்துக்கு ஜாதி வித்தியாசம் அவசியமில்லை யென்றும் அத்தகைய வித்தியாசத்தால் தான் உயர்வு தாழ்வு ஏற்பட்டு இந்து சமயத்தினர் முன்னேற்றமடைய முடியாமல் போய்விட்ட தென்றும் உணர்ந்திருக்கின்றனர்.

இத்தகைய ஜாதி வித்தியாசம் பண்டைக் காலத்தில் அவசியமாயிருந்த போதிலும் இன்றுள்ள நிலைமையில் அம்முறை தீமையே தரத்தக்கதாக இருக்கின்றது. அரசியல், சமூக விஷயங்களில் இப்போது தோன்றி யிருக்கும் புத்துணர்ச்சியால், பழைய காலத்தில் தோற்று விக்கப்பட்ட சில ஆதாரங்கள் இப்போது அவசியமில்லை யென்றும், அவற்றால் தற்காலம் கஷ்டங்களே ஏற்படுகின்றன வென்றும் பலர் நம்புகின்றனர்.

ஆதலின் அடுத்த சென்சசில் தங்கள் ஜாதியைக் குறிப்பிடலாகாதென்பது பலருடைய ஆவல். ஆதலின் தாங்கள் அப்படிப்பட்டவர்களை ஜாதியைக் கூறும்படி வற்புறுத்தலாகாதென அவ்விலாகா அதிகாரிகளுக்கு உத்திரவிடும்படி கேட்டுக் கொள்ளுகிறோம். இத்தகைய அனுமதி முன்னரே சீக்கியர்களுக்கும், பாஞ்சாலத்திலுள்ள ஆதி இந்துக்களுக்கும் அளித்திருப்பதால் மற்ற இந்துக்களுக்கும் இந்த அனுமதி குற்றமாகாது.

ஜாதி என்று கேட்டிருக்கும் இடத்தில் ஒன்றுமில்லை என்று குறிப்பிட்டு விடுவதும் தவறாகாது. ஆதலின் தாங்கள் சென்சஸ் எடுக்கும் அதிகாரிகள், அல்லது குமாஸ்தாக்கள் ஜாதியைக் கூறும்படி கட்டாயப் படுத்தலாகாதென்றும், ஜனங்கள் சொல்லாமலிருக்கும் போது அவர்களாகத் தங்களுக்குத் தோன்றியதைப் பதிவு செய்யாமலிருக்க வேண்டுமென்றும் கட்டளை பிறப்பித்து இந்து சமுகத்தின் முன்னேற்றத்துக்கு அடிகோலுவீர் களென்று எதிர் பார்க்கிறோம்.

- குடிஅரசு - துணைத்தலையங்கம் - 28.09.1930

Read more: http://viduthalai.in/page-7/86373.html#ixzz3BE2cSkEy

தமிழ் ஓவியா said...

சீனாவில் மதக் குழுவினர் ஆயிரம்பேர் கைது


பீஜிங், ஆக.23- சீனாவில் தடைசெய்யப்பட்ட மதக் குழுவைச் சார்ந்தவர்கள் சுமார் ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர்.
ஷான்டாங் மாகாணத்தில் கடந்த மே மாதத்தில் மெக்டொனால்ட் அருகே குவானெங்ஷென் பிரிவினரின் கோயிலுக்குள்ளேயே பெண் ஒருவரை அடித்துக் கொலை செய்துள்ளனர். சீனாவின் பாதுகாப்புத்துறை அமைச்சகம் இந்தக் குற்றச்செயலில் 500 பேருக்கு தொடர்புள்ளதாக சந்தேகித் துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கொலைக் கானக் காரணங்கள் வெளியிடப்படவில்லை.

முதலில் நூற்றுக்கு மேற்பட்டவர்கள்மீது சந்தேகத்தை வெளிப்படுத்தும்போது, அவர்களில் உயர்ந்த நிலையில் இருக்கும் அமைப்பாளர்கள், முதுகெலும்பாக உள்ள உறுப்பினர்கள் இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மதப்பிரிவு முதலில் மத்திய ஹெனான் மாகாணப் பகுதியிலிருந்து தோன்றி உள்ளது. அவர்கள் நம்பிக்கை யின்படி இயேசு புத்துயிர் பெற்று யாங் ஜியாங்பின் என்பவர் வடிவில் உள்ளதாகவும், அவரே இந்த புதிய மதத்தின் நிறுவனரின் மனைவி என்றும், சாவோ வெய் ஷான், சிங்குவா கூறுகிறார்.

சாவோ என்று கூறப்படுப வரான சு வென்ஷான் 2000ஆம் ஆண்டில் அமெரிக் காவுக்கு சென்றுவிட்டார். அந்த வழிபாட்டிடத்திலிருந்த 5 உறுப்பினர்கள் முன்ன தாக கைது செய்யப்பட்டனர். திட்டமிட்டு கொலை செய் யும் எண்ணத்துடன் இருந்துள்ளதாக அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மெக்டொனால்ட் அருகில் பெண்ணை அடித்தே கொன்றுள்ளனர். காரணம் என்னவென்றால், அவர் கைப்பேசி எண்ணைக் கொடுக்க மறுத்துள்ளார் என்பது தான் காரணம். கைப்பேசி எண்ணைப் பெற்று அதன் மூலம் புதிய உறுப்பினர்களை அந்த மதத்தில் இணைப் பதற்காக அதன் தலைவர்கள் அதை ஒரு இயக்கமாகவே தொடர்ந்து செயல்படுத்தி வந்துள்ளனராம்.

Read more: http://viduthalai.in/page-8/86346.html#ixzz3BE3L7jzB

தமிழ் ஓவியா said...


சங்கராச்சாரி-யார்?

ஜெகத்குரு என்று சங்கராச்சாரியாரைக் கூறுகிறார்களே! உண்மையில் சங் கராச்சாரியார் ஜெகத்துக்கே (உலகத்துக்கே) குருவா? முதலில் உள்ளூரில் இவரை அனைவரும் குருவாக ஏற் றுக் கொள்வார்களா? இந்து மதத்தில்தானாகட்டும் வை ணவர்கள் இவரைக் குரு வாக ஒப்புக்கொள்வார்களா?

உண்மை இவ்வாறு இருக்க, இவரை லோகக் குரு என்றும், ஜெகத்குரு என்றும் ஜெய பேரிகை கொட்டுவதில் மட்டும் குறைச்சலில்லை.

சங்கராச்சாரியார்களி லேயே மறைந்த மூத்த காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி யைத் தூக்கி வைத்துப் பேசுவார்கள்; புனிதர் என்று போற்றுவார்கள்.

உண்மை என்னவென் றால், துவேஷத்தில் தும் பிக்கை யானையைவிடப் பலம் வாய்ந்தவர்.

தீண்டாமைபற்றிப் பேச பாலக்காடு சென்று, காந்தி யார் அவரைச் சந்தித்தார் (16.10.1927). மகாத்மா என்று மக்கள் போற்றும் அந்தத் தலைவரை மாட்டுக் கொட் டகையில் உட்கார வைத் துத்தான் பேசினார் அந்த சங்கராச்சாரியார்.

பேசி என்ன பயன்?

ஹரிஜன ஆலயப் பிர வேச விஷயத்தில் சாஸ்திரங் களையும், பழைய வழக்கங் களையும் நம்பி இருப்பவர் கள் நம் நாட்டில் பெரும் பாலோர் இருக்கிறார்கள் என்றும், அவர்கள் மனம் நோகும்படிச் செய்யும் எந்த மாறுதலும் - இம்சைக்கு ஒப்பாகுமென்று தாம் முடி வுக்கு வரவேண்டியிருக்கின் றது என்று ஸ்வாமிகள் (காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி) காந்தியடிகளிடம் தெரிவித் தார். (ஆதாரம்: தமிழ்நாட் டில் காந்தி, பக்கம் 575, 576).

தீண்டாமைக் கொடு மைக்கு ஆளாக்கப்பட்ட வர்களின் வலிகள் சங்கராச் சாரியார்களுக்கு முக்கிய மல்ல; மாறாக, அதற்குக் காரணமானவர்கள் மனம் நோவதுதான் சங்கராச்சாரி யார்களுக்கு முக்கியம்.

இருப்பதிலேயே மகாபுரு ஷர் என்று பார்ப்பனர்களால் போற்றப்படும் அவர் நிலையே இப்படி! அவர் குறித்து தந்தை பெரியார் தெரிவித்த கருத் தும், தகவலும் மிகப்பெரிய அதிர்ச்சிக்குரியவை!

12 வருடத்திற்கு ஒரு முறை ஈசன் தண்ணீர் விடு வதாகக் கூறியபடி, 12 வருடத் திற்கு ஒருமுறை (கும்ப கோணம்) மகாமகம் வரு கிறது. முன் மகாமகம் 1945 ஆம் ஆண்டில் வந்தது. அதற்குமுன் 1933 இல் வந்தது. அதன்படி 12 வருடத் துக்கு ஒருமுறை இருக்க, இப்போது 1957 ஆம் ஆண்டில் வரவேண்டும்.

ஆனால், 1956 ஆம் ஆண்டிலேயே வருகிறது. இதன் காரணம், சங்கராச் சாரிக்கு இப்போது உடல் நிலை சரியில்லையாம். அவர் அடுத்த வருடம்வரை உயி ருடன் இருப்பாரோ? இருக்க மாட்டாரோ? என்ற சந்தேகத் தின்மீது, அவர் இப்பொழுது இருக்கும்போதே கொண்டா டிவிடவேண்டும் என்பதற் காக அடுத்த வருடம் கொண் டாடவேண்டியதை, இந்த வருடம் முன்பாக ஒத்தி வைத்துக் கொண்டாடுகிறார் களாம்.

இதன்படி ஈசன் இப் போது சங்கராச்சாரியாருக்கு உடல்நிலை சரியில்லை என் பதற்காக, 11 வருடத்திலேயே தண்ணீர் விடுகிறார்கள் என்று ஆகிறது. இப்படிப் பார்ப்பான் மனது வைத்தால் ஈசனுடைய செய்கையையும் மாற்றிவிட முடியும். அப்படி யானால், கடவுளும், வெங் காயமும் எங்கே போனதோ தெரியவில்லை (திருவத்தி புரத்தில் தந்தை பெரியார் பேசியது, விடுதலை, 6.2.1956).

இதற்கு விளக்கமும் தேவையா? இந்து மதம், சங்கராச்சாரியார்களின் உண்மைத் தன்மைகளை அறிந்து கொள்வீர்! - மயிலாடன்

Read more: http://viduthalai.in/page1/85755.html#ixzz3BE3gkiYI

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

கிருஷ்ண ஜெயந்தி

கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடவிருக்கும் பக்தர்களுக்குப் புராணம் கூறும் ஒரு செய்தி.
கிருஷ்ணன் பிறப்பு என்னவென்றால், தேவர்கள் எல்லாம் போய், உலகில் அதர்மம் அதிகமாகி விட்டது; இராட்சதர்கள் தொல்லை பொறுக்க முடியவில்லை; அதைப் போக்க வலிமையுள்ள ஒருவனை எங்களுக்கு அளிக்க வேண்டும் என்று விஷ்ணுவைக் கேட்டார்களாம்.

உடனே விஷ்ணு என்ன செய் தான் தெரியுமா?

தன் மார்பிலிருந்து இரண்டு மயிரைப் பிடுங்கிக் கொடுத்தானாம். அந்த இரண்டு மயிரில் ஒன்று கறுப்பு நிறமாம்; மற்றது வெண்மை நிறமாம்.

கறுப்பு மயிர் கிருஷ்ண னாகவும், வெள்ளை மயிர் அவன் அண்ண னாகவும் ஆயின என்றும் அபிதான கோசத்தில் உள்ளது.

நாங்கள் சொல்லுவ தல்ல - அபிதான கோசம் - புராணம் கூறுகிறது.

இந்தக் கிருஷ்ணனுக்குத்தான் ஜெயந்தியா?

சிந்திப்பீர்!

Read more: http://viduthalai.in/page1/85879.html#ixzz3BE4sX3iJ

தமிழ் ஓவியா said...

உண்மையான தமிழன் யாரப்பா?

இந்த வார துக்ளக்கில் (13.8.2014) உண்மையான தமிழன் யார்? அதென்ன உண்மையான தமிழன்; பொய்யான தமிழன்; உண்மையும், பொய்யும் கலந்த தமிழன் என்றெல்லாம் வித்தியாசம் உண்டா என்ன? என்று பூணூலுக்கே உள்ள குயுக்தியுடனும், சேட்டையுடனும், கேவலப்படுத்தும் நோக்கத்துடனும் எழுதி இருக்கிறார் திருவாளர் சோ.

அவர் தமிழராக இல்லாததால் (வெளியில் அப்படி சொல்ல மாட்டார்கள்) இப்படியெல்லாம் இஷ்டத்துக்கு எழுதக் கூடிய வசதி இருக்கிறது.

தமிழ் பேசுவதால் தமிழன் ஆக மாட்டார் என்று கழகம் சொல்லுவது எவ்வளவுத் துல்லியமானது என்பது - இப்போதாவது நமது அப்பாவித் தமிழர்கள் புரிந்து கொண்டால் சரி.

இதுவே பார்ப்பனர் சம்பந்தப்பட்ட பிரச்சினையாக இருந்தால், சங்கரமடம் பிரச்சினையாக இருந்தால் இந்தக் கிண்டல், கேலி. நையாண்டி, விஷமம் இருக்குமா என்பதைத் துக்ளக்கைக் காசு கொடுத்து வாங்கும் நண்பர்கள்தான் சிந்திக்க வேண்டும்.

இப்பொழுது மட்டுமல்ல; தமிழ், தமிழர் என்று சொன்னாலே அக்ரகாரவாசிகளுக்கு அக்னிக் குண்டத்தில் விழுந்தது போலத்தான்.

கேள்வி: பெங்களூரில் திருவள்ளுவர் சிலை திறக்கப்படுவதன் மூலம் தமிழர் இடையே நல்லுறவு நல்லிணக்கம் ஏற்படும் என்று கர்நாடக முதல்வர் எடியூரப்பா கூறியுள்ளாரே

சோ பதில்: நல்லுறவா? நல்ல உறவுதான். யாராவது கன்னட வெறியர்கள் ஒரு சமயம் பார்த்து அந்தச் சிலையை அவமதிக்காமல் இருந்தால் போதுமே! (துக்ளக் 19.8.2009). புரிகிறதா?

கேட்ட கேள்வி என்ன? சோவின் பதில் என்ன?

ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா?

நீண்ட காலமாக பெங்களூரில் திறக்கப்படாமல் இருந்த திருவள்ளுவர் சிலையை திறப்பதற்கு எடியூரப்பா ஒத்துக் கொண்ட ஆத்திரம் இதில் பிரதிபலிக்கவில்லையா?
அவருடைய நோக்கம் திருவள்ளுவர் சிலையை அவமதிக்க வேண்டும் என்பதே - அதனை வேறொரு முறையில் எழுதுகிறார் தூண்டுகிறார் - அவ்வளவுதான்.

சென்னை மாநகரில் வணிக விளம்பரங்கள் தமிழில் எழுதினால்! இது என்ன மொழி நக்சலிசம் (துக்ளக் 15.9.2010) என்று எழுதிடவில்லையா?

அதே நேரத்தில் சமஸ்கிருதத்தைப்பற்றிச் சொல்லிப் பாருங்கள். கோயிலில் வழிபாட்டு மொழியாக சமஸ்கிருதம் இருக்கக் கூடாது என்று சொல்லிப் பாருங்கள் - அடேயப்பா பூணூல் துருத்திக் கொண்டு வந்து தண்டால் எடுக்கும். தமிழில் பாடினால் பொருள் இருக்கும். ஆனால், புனிதம் இருக்காது. மொழிக்கு முக்கியம் அல்ல - சமஸ்கிருத ஒலிக்குத் தான் முக்கியம் (துக்ளக் 18.11.1995). கடவுளுக்குக்கூட மொழி ஆசாபாசம் ஒலி ரசனைகள் உண்டாம்!

தமிழ் என்றால் அதற்கொரு விளக்கம் சமஸ்கிருதம் என்றால் சுற்றி வளைத்து அதற்கொரு வியாக்கியானம்!

உண்மையான தமிழன் யார்? பொய்யான தமிழன் யார்? என்று கேள்வி கேட்கிறாரே திருவாளர் சோ அதற்கான விடை இந்த இடத்தில் விளக்கமாகக் கிடைத்து விட்டதா இல்லையா?

இந்தப் பதிலில் இன்னொன்றையும் அதென்ன உண்மையான தமிழனின் கலாச்சாரம்?

அதுதான் மேற்கத்திய கலாச்சாரத்தைக் கடைப்பிடிக்க ஆரம்பித்து விட்டோமே என்று கேள்வி எழுப்புகிறார்.

மேற்கத்திய கலாச்சாரத்தை சோ கூட்டம் கடைப் பிடித்தாலும் - ஆவணி அவிட்டத்தை அனுஷ்டிக்காமல் இருக்கிறதா? பூணூலைப் புதுப்பிக்காது இருக்கிறதா?

திருமதி சிவசங்கரிக்குப் பதில் சொன்னாரே - நினைவிருக்கிறதா? சோ கேட்ட இதே கேள்வியைத் தான் தமிழர் தலைவரிடமும் கேட்டார் சிவசங்கரி.

கேள்வி: தமிழர் பண்பாடு தமிழர் பண்பாடு என்று அடிக்கடி சொல்கிறீர்களே, அப்படி என்றால் என்ன?

தமிழர் தலைவர் பதில்: இதுஒரு நல்ல கேள்வி. தாயை மகனும், மகளைத் தகப்பனும் போடி, வாடி என்று சொல்ல மாட்டோம் - அதுதான் தமிழர் பண்பாடு (குமுதம் 22.121983) என்று சொன்னதுதான் திருவாளர் சோ ராமசாமிக்கும் பதிலடி!

கொலை வழக்கில் சிக்கி சிறைச்சாலை வரை சென்று வந்த ஒருவரை ஜெகத் குரு என்று சொல்லும் இனப்பற்று பார்ப்பனர்களே, உங்களுக்கு இருக்கும் பொழுது, தமிழர்களுக்குத் தமிழ்ப் பற்றோ தமிழன் என்ற இனப் பற்றோ இருக்கக் கூடாதா?

இன்னும் பேசுங்கள் - இப்படியே எழுதுங்கள், அப்பொழுதாவது தமிழனின் தடித்த தோலுக்குச் சுயமரியாதை உணர்வு வருகிறதா என்று பார்ப்போம்!

- மின்சாரம்

Read more: http://viduthalai.in/page1/85891.html#ixzz3BE52FKMr

தமிழ் ஓவியா said...


அடிமைப்படக்கூடாது...


உழைத்தவன் உழைப்பின் பயனை அடையவேண்டுமானால் - இப்படி யாகம், சாத்திரம், வேதம், மோட்சம், கர்மம், முன்ஜென்மம், கடவுள் செயல் என்கின்ற பித்தலாட்டங்களுக்கு அடிமைப்படக் கூடாது.

- விடுதலை, 26.2.1968

Read more: http://viduthalai.in/page1/85896.html#ixzz3BE5JQhdS

தமிழ் ஓவியா said...


ஜாதிப் புழுக்கள்!

கல்வி என்பது தண்ணீர் அதைச் சமூகமென்னும் பெரு மரத்தின் வேரில் ஊற்றினால் நம் வேலை ஆகி விட்டது என்று நினைத்தேன். ஆனால், இந்த மரத்தின் வேரிலுள்ள ஜாதி வேற்றுமையும், கெட்ட எண்ணமும், பணத்துக்கு அடிமைத்தனமாகிய புழுக் களா அதை வளர விடப் போகின்றன? இந்த புழுக்கள் சாக வேண்டும்.

- காண்டேகர்

Read more: http://viduthalai.in/page1/85890.html#ixzz3BE60ZbQy

தமிழ் ஓவியா said...

சிந்தனைக்குத் தடை

பகுத்தறிவுக்கு எதிரிகள் நம்நாட்டில் தான் எப்பொழுதும் இருந்து கொண்டு வருகிறார்கள் என்பதில்லை. உலகெங்கும் மதத்தரகர்களின் தாக்குதல்களுக்கு பகுத்தறிவாளர்கள் இலக்காகிக் கொண்டே இருந்துவர நேர்ந்துள்ளது. சுயசிந்தனையாளர்கள் கிளர்ந்தெழாமல் மதப்பிடியில் சிக்கித் தவிக்க நேரிட்டது.

ஒரு சுய சிந்தனையாளன் என்பவன் யார் என்று பொருள் கூறுமிடத்து மதத்தை மறுப்பவன்; நாத்திக வாதி என்று அகராதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. மதத்தின் கோரப்பிடியில் உலகின் மிகப்பெரும் சுயசிந்தனையா ளர்கள் எல்லாம் சிக்கி உழன்று விடுபட பெரும் பாடுபட நேர்ந்தது.

பெர்ட்ரண்ட் ரஸ்ஸலின் தந்தை சிறு குழந்தையான ரஸ்ஸல் மூட நம்பிக்கை இல்லாதவராக வளர இரண்டு சுயசிந்தனையாளர்கள் (பகுத்தறிவாளர்கள்) அவரை வளர்த்து ஆளாக்க வேண்டும் என்று உயில் எழுதி வைத்து விட்டு மறைந்தார்.

அதற்காக இரண்டு சிந்தனையாளர் களையும் நியமித்தார். ஆனால், இவ்வாறு நியமித்தது செல்லாது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்த தோடு கிறிஸ்து மத நம்பிக்கையின் அடிப்படையில் தான் அவரை வளர்த்து வர வேண்டும் என்றும் ஆணையிட்டது.

Read more: http://viduthalai.in/page1/85890.html#ixzz3BE66wZ2x

தமிழ் ஓவியா said...



ஜாதி ஆச்சாரங்களைக் கை யாளும் மக்கள் குற்ற வாளிகளல்ல; ஜாதி புனிதமானது என்ற உணர்ச் சியை உண்டு பண்ணிய மதமே உண்மையிலே குற்றவாளி. ஆத லால் ஜாதி ஆச்சாரங்களைக் கையாளும் மக்கள் உங்கள் எதிரிகளல்ல.

ஜாதி ஆச்சாரங் களைப் புனித மென்று வற் புறுத்தும் சாஸ்திரங்களே உங்கள் எதிரி. எனவே அந்த எதிரியைத் தான் நீங்கள் ஒழிக்க முயற்சிக்க வேண்டும்.

- டாக்டர் அம்பேத்கர்

Read more: http://viduthalai.in/page1/85890.html#ixzz3BE6DK29A

தமிழ் ஓவியா said...

மூவரும் முழுப் பொய்யர்களே!

ஆசிரியருக்கு கடிதம் 15.10.78 ஆனந்த விகடனில் இருவரும் ஒரே தொழில் என்ற தலைப்பில் (பக்கம் 93) ஓடத்தில் ஏற்றிச் சென்ற தற்கான, கூலியை ராமன் கொடுக்க குகன் வாங்க மறுத் தான் என்று வாரியார் கூறியதைக் கேட்க நகைப்புத்தான் ஏற்பட்டது. ஏனெனில் அயோத்தியை விட்டு அடவிக்குச் செல்லும்போது ராமன், லட்சுமணன், சீதை மூவரும் அணிந்திருந்த ஆடையாபரணங்களை அந்தணர்களுக்கு அளித்து விட்டு மர உரிதரித்து சென்றான் என்று கம்ப ராமாயணத்தில் எழுதி இருக்கின்றது.

கள்ளுக்கடை மயக்கத்தில் கவிதைகள் எழுதி கம்பனார் கானகத்தில் கனமான மூட்டையை அனுமான் கொடுக்க, அம்மூட்டையில் உள்ள ஆடையாபரணங்கள் ராவணன் எடுத்துச் சென்ற சீதையின் பொருளே என்று விளக்கியுள்ளன.

இதை படித்த தந்தை பெரியார், மர உரி தரித்து வந்த மூவர்களுக்கும் குறிப்பாக, சீதைக்கும், காட்டில் எப்படி ஆடையாபரணம் கிடைத்தது என்றும், அதிலும் சீதையைச் தேடச் சென்ற அனுமானிடம் கணையாழி கொடுத்தனுப்பியதும் - அதனைப் பெற்ற சீதையும் பதிலுக்கு தன்னுடைய கணையாழியை ராமனிடம் கொடுக்கும்படி அனுமானிடம் கொடுத்ததையும் பற்றி கேள்வி மேல் கேள்வி போட்டு கம்பனின் கயமையைப் பற்றி சொல்லியதை நாம் அறிவோம்.

அதுபோதாதென்று மேலும் கம்பனை பழிக்கவோ என்னவோ ஆனந்த விகடனைக் கொண்டு கம்பனை மேலும் பொய்யனாக்க வாரியார் ராமன் கூலி கொடுக்க, குகன் மறுத்தான் என்று சொல்லுவது கம்பனுடைய ஞாபக மறதியை மேலும் காற்றாடிபோல் பறக்கச் செய்கிறது. அயோத்தி விட்டு மூவரும் மர உரி மட்டும் மாட்டிக் கொண்டு வந்தவர்களுக்கு கூலி கொடுக்க என்ன இருந்தது? அப்படி இருந்தால் அயோத்தியில் இருந்து திருடி வந்தார்களா? ஏனெனில், எல்லாம் பரதன் சொத்து தானே.

அப்படி திருடி வந்தால் பஞ்சமா பாதகத்தில் ஒரு பாதகமல்லவா? ஆனதால் முன்னுக்குப் பின் முரணாக எழுதுவது முழுப் பொய்யல்லவா? ஆகவே கள்ளுண்டு கவிதைகள் எழுதிய கம்பனும் பொய்யன்! அக்கம்பனின் கவிதைகளை படித்து மோட்சம் போக எடுத்துச் சொல்லும் வாரியாரும் ஒரு பொய்யன்!! அதனை பிரமாதமாக வெளியிடும் ஆனந்த விகடனும் ஓர் பொய்யன்!!! ஆகவே மூவரும் மகா பொய்யர்கள் என்பது நன்கு தெரிகின்றதல்லவா?

ஆம்பூர் சீ.கோ.வெற்றியழகன், சென்னை.

Read more: http://viduthalai.in/page1/85892.html#ixzz3BE6KEXt1

தமிழ் ஓவியா said...


சுவாமிஜிக்கு ஏன் இந்த வேலை?

அண்மையில் பம்பாய் வந்த ஒரு ஹாலிவுட் நடிகை பூனாவில் உள்ள ஆச்சார்யா ரஜ்னீஷை சந்திக்கச் சென்றார். பகல் முழுவதும் அவருக்கு பக்திமிக்க பல்வேறு உபதேசங்கள் கொடுக்கப்பட்டது.

இரவு வந்ததும் ஒரு இருண்ட குகைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கே அவரது உடைகளை அவிழ்க் கும்படி கூறினார்கள். நிர்வாணமாக இருந்த ஒரு குறிப்பிட்ட நபருடன் படுத்துக் கொள்ளுபடி கட்டாயப் படுத்தினார்களாம்.

ஆனால் நடிகை மறுத்து விட்டார். உடனே அவர் உடைகள் வலுக்கட்டாயமாக கிழிக்கப்பட்டன. அடுத்தது நடப்பதற்குள் அவர் தப்பி ஓடிவந்து பம்பாய் காவல்துறை யினரிடம் புகார் கொடுத்துள்ளார்.

ஆனால் இந்த ஆசிரமத்திற்கு நடிகர் வினோத்கன்னா தொடர்ந்து செல்வதாக கூறப்படுகிறது; எதற்காக?

முருகனின் கோவண பிரசாதம்!

காலஞ்சென்ற வெற்றிப்படத் தயாரிப்பாளர் ஒரு முருக பக்தர். அவர் முருகன் சிலையில் உள்ள கோவணத்தைக் கொண்டு வந்து பன்னீரில் நனைத்துக் குடிப்பாராம்.

அவரைப் போல் வெற்றிப்படம் தயாரிக்க வேண்டும் என்று நினைத்து சில படத்தயாரிப்பாளர்கள் முருகன் கோவண பிரசாதத்திற்கு அலைகிறார்கள்.

சினிமா ஏரியா, அய்யப்பன் ஏரியா

திரைப்பட உலகில் நடிகர்கள், தொழில்நுட்ப நிபுணர்கள், சான்ஸ் கிடைக்காத நடிகர்கள் எல்லாரும் மாலை போட்டு அய்யப்பன் விரதம் பிடிக்க ஆரம்பித்துள்ளார்கள்.

நடிகர்களுக்கு மட்டும் ஒரு விதி விலக்கு. அவர்கள் முகத்தை ஷேவ் செய்து கொள்ளலாம், பெண்களைத் தொடலாம்? சாமியே சரணம் அய்யப்பா!

(மூக்குத்தி வார இதழிலிருந்து தருபவர் தமி

Read more: http://viduthalai.in/page1/85895.html#ixzz3BE6UiKc0

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

ரமண ரிஷி

கடவுள் பக்தன்மீது கருணை கொண்டு அவ னது முன்னேற்றத்திற்குத் தக்கபடி வெளிப்படு கிறார். பக்தன் கடவுளை மனிதனென்று நினைத்து எதிர்பார்த்து நிற்கிறான். ஆனால், கடவுள், பக்த னுக்குள் இருந்து அவன் தவறுகளை உணர்த்தி நல்வழியில் செல்ல உதவுகிறார். - ரமணரிஷி

கொலைகாரனுக்கு எப்படி உதவுகிறார்? பக்தர்கள் தந்த கொள்ளைப் பணத்தை தனது உறவின ருக்கு எழுதி வைத்த இந்த ரமண ரிஷியையும் இப்படித்தான் வழி நடத்தினாரோ!

Read more: http://viduthalai.in/page1/85948.html#ixzz3BE6gZOO6

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

சுவாமி மலை

ஒவ்வொரு மனிதனுக் கும் கோபம் வருவதற்கு ஏதாவது ஒரு பிரச்சினை குடும்பத்தில் இருக்கிறது. அந்தப் பிரச்சினைகள் தீர கீழ்க்கண்ட கோவில் வழி பாடுகளை மேற்கொள் வது நல்லது.

நந்தனாருக்கு நந்தி விலகிய இடம் திருப்புன் கூர். இது வைத்தீஸ்வரன் கோவில் அருகில் உள்ளது.

பிரம்மா, விஷ்ணு, சிவன் மூம்மூர்த்திகளும் ஒன்றாக காட்சிதரும் தலம் சுசீந்திரம்.

சூரபத்மனை வென்ற பிறகு சுப்பிரமணியர் சினம் தணிந்து வள்ளியை மணம் புரிந்து அமர்ந்த இடம் திருத்தணி, சினம் கொண் டவர்கள் குணம் மாறவும், சிநேகம் கொள் ளவும் செல்ல வேண்டிய இடம் திருத்தணியாகும்.

தமிழ் வருடங்கள் அறுபதையும் படிகளாகக் கொண்ட படை வீடு சுவாமி மலை. தந்தை மகன் பிரச்சினைக்கு தீர்வு காணத் தரிசிக்க வேண்டிய தலம் இது.

சுவாமிமலை முருக னுக்கு இப்படி ஒரு விளம் பரம் தேவைப்படுகிறது; ஊருக்கு ஊர் கோயில் கள்தான் மண்டிக் கிடக் கின்றனவே போனியாக வேண்டுமானால் விளம்பர யுக்திகளைக் கையாள வேண்டாமா? கோயில் தல புராணங் கள் என்பவை இந்த வகையைச் சேர்ந்ததே.

ஒரு கேள்வி: கடவு ளுக்குக் கோபம் வர லாமா? கடவுள் சண்டை போட லாமா? இவை இருந்தால் இந்தக் கடவுள் கள் எப்படி மனிதர்களை விட உயர்ந் தவை.
மனிதன் தன் ஆசாபா சத்திற்கு ஏற்ப, அவனால் கற்பிக்கபபட்டவைதான் இந்தக் கடவுள்கள் என்பது இப்பொழுதாவது புரிகிறதா?

Read more: http://viduthalai.in/page1/86127.html#ixzz3BE8LaTvT

தமிழ் ஓவியா said...

முருகன் என்ன செய்கிறானாம்?

பழனியில் மழை இல் லாததால் தண்ணீர் பற்றாக் குறை ஏற்பட்டுள்ளது. பழனி முருகனுக்கு மொட்டை போடும் பக்தர்கள் நீராட வேண்டும் என்பது அய்தீகமாம். தொட்டிகளில் கொண்டு வந்து ஊற்றப்படும் நீரில் காக்கைக் குளியல் போடு கின்றனராம். பக்தர்களின் தண்ணீர்ப் பஞ்சத்தைக்கூட போக்க முடியாத மொட்டை யாண்டி முருகனா பக்தர் களின் குறையைப் போக்கப் போகிறான்?

Read more: http://viduthalai.in/page1/86132.html#ixzz3BE8Smely

தமிழ் ஓவியா said...


காந்தீய பல்டி வீரர் பற்றி...!

- ஊசி மிளகாய்

மணியனின் பல்டி-யும் ஒரு நாடகமே...

தமிழருவி மணியன் அவர்களின் நேர் காணலை அண்மையில் பார்த்தேன்... ரொம்ப பரிதாபகரமாக இருந்தது; எப்படி இருந்த அவர், இன்றைக்கு இப்படி தரமிழந்து நிற்கிறாரே... என்றுதான் மனத்தில் தோன்றியது.ஈழத் தமிழர்களுக்குத் துரோகம் இழைப்பதில், காங்கிரசை பிஜேபி விஞ்சிவிட்டது; அவர்களின் வஞ்சகத்தை உணர்ந்து கொள் வதற்கு 60 நாள் ஆட்சி போதும்; இனிமேல் அவர்கள் தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கோ அல்லது ஈழத் தமிழர்களுக்கோ நன்மை செய்வார்கள் என்ற நம்பிக்கை தனக்குத் துளியும் இல்லை என்று அந்த நேர்காணலில் அடுக்கித் தள்ளிவிட்டார். இப்போதுதான் பிஜேபியின் சுயரூபத்தை அறிந்து கொண் டேன் என்பதுபோல ஒப்பாரி வைத்தார். உண்மையில், தமிழருவியின் இந்த வாக்கு மூலம் ரொம்ப சாமர்த்தியமானது.

விமர்சனங்களிலிருந்து தப்பித்துக் கொள் ளும் தந்திரம் கொண்டது. குஜராத்தில், இஸ்லாமியர்கள் நரவேட்டை ஆடப்பட்ட தற்குக் காரணமான மோடி- அதற்காக குறைந்தபட்சம் மன்னிப்பைக் கூட கேட்காத மோடி, தமிழர்களைக் கொன்றழித்த ராஜ பக்சேவைக் கண்டிப்பதற்கு என்ன தார்மிக உரிமை இருக்கிறது? என்று தேர்தல் நேரத்தில் கேட்கப்பட்டது. அவர் தட்டிக் கேட்பார் என்று நம்புவது எவ்வளவு முட்டாள்தனமானது என்று விவாதங்கள் அனல் பறந்தன. பிஜேபி ஆளும் ம.பி. மாநிலத்தில் ராஜபக்சேவுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டதும்; அதை எதிர்த்து வைகோ ராஞ்சிக்குச் சென்று சாலையை மறித்ததும் அப்போதுதான் நடந்தி ருந்தன. ஆனால், இவை எதுவுமே தெரியாத அப்பாவி போல, தமிழருவி தற்போது கதை விடுகிறார். 45 ஆண்டுகால அரசியல் அனு பவம் கொண்டஅவருக்கா, எதுவும் தெரியாது? சொல்லப் போனால் தெரிந்தேதான் பிஜேபிக் கும், மோடிக்கும் அவர் வக்காலத்து வாங்கினார். தனது சுய அரசியல் லாபத்திற்காக, தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றினார். ஆனால், தற்போது திடீர் ஞானம் வந்தவர்போல பேசுகிறார். நிஜமாகவே, வருந்தி திருந்தி விட்டாரோ என்று பார்த்தால், 2016 தமிழக சட்டமன்றத் தேர்த லுக்கும் பாஜக தலைமையிலான கூட்டணி தொடர வேண்டும் என்றும், ஆனால், கூட்ட ணியில் உள்ள கட்சிகள் அதற்கான வேலை களைத் துவக்காமல் அலட்சியம் காட்டி வருவதாக தமிழருவி ரொம்பவே சலிப்பு காட்டுகிறார். தனது அடுத்த அசைன் மெண்ட் டுக்கும் துண்டை விரித்து இடம் பிடிக்கிறார். தமிழருவியின் நாடகத்தை, இனியுமா தமிழக மக்கள் நம்பப் போகிறார்கள்?

- கூ.போர்விஜயன், கடலூர்

தீக்கதிர் நாளேட்டில் வாசகர் ஒருவரால் எழுதப்பட்ட இக்கடிதம் இன்று (19.8.2014) வெளி வந்துள்ளது.

தமிழ்நாட்டில் பா.ஜ.க., கூட்டணி அமைய அரசியல் புரோக்கர் சு.சாமி அய்யரைவிட, சோ சாமி அய்யரைவிட, மிக அதிவேகமான ஈடுபாட்டில் இறங்கி, மோடி வந்தால் ஏதோ ஈழப் பிரச்சினை முதல் இங்குள்ள காவிரிப் பிரச்சினை வரை எல்லாம் நொடிப் பொழுதில் முடிந்து விடும் என்று ஆரூடம் கணித்த நவீன காந்தியான தமிழருவியார் பாவம் இப்படியா ஆக வேண்டும்?

தொலைக்காட்சி ஊடகத்தவர் குறுக்குக் கேள்வி போட்டு கேட்டால், நம்பினேன் அதற்காக நான் என்ன (தற்கொலையா) தூக்கு மாட்டிக் கொண்டா சாக முடியும்? என்று பதில் அளிக்கிறார்! அருவியார் அவர்களே நீங்கள் வாழ வேண்டும்; சாக வேண்டும் என்று எவரும் விரும்ப மாட்டார்கள். திருந்தி வாழுங்கள் அதுபோதும்! சரியான எடை போடக் கற்றுக் கொண்டு பிறகு அரசியல் நடத்துங்கள்.

Read more: http://viduthalai.in/page1/86131.html#ixzz3BE8b8Ogv

தமிழ் ஓவியா said...




21ஆம் நூற்றாண்டிலும் மனிதக் கழிவுகளை மனிதனே சுமப்பதா?
நவீன தொழில் நுட்ப முறைகளைக் கையாள வேண்டும்!

மாற்றுப் பணி கொடுத்து அத்தொழிலாளர்களை முன்னேற்ற வேண்டும்

தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை

கி.வீரமணி

21ஆம் நூற்றாண்டிலும் மனிதக் கழிவினை மனிதனே சுமக்கும் அவலம் ஒழிக்கப்பட வேண்டும்; நவீன தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி மலம் அகற்றப்பட வேண்டும் அத்தொழிலாளர்களை அத்தொழிலி லிருந்து விடுவித்து, மாற்றுப் பணிகள் தந்து அவர்களை முன்னேற்ற வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

இந்த 21ஆம் நூற்றாண்டின் மிகப் பெரிய அவலங்களில் ஒன்று மனிதக் கழிவுகளை மனிதர்களே சுமந்து செல்லும் மிகக் கேவலமாகும். இது அநாகரிகத்தின் உச்சம்! இது -மனிதர்களை மிருகங்களைவிடக் கேடான நிலையில் நடத்துவது அல்லவா?

இயந்திரமயமாகி தொழில் நுட்பம் உச்சத்தில் - ஓங்கி வளர்ந்து வரும் யுகத்திலா இப்படி நடப்பது?

துப்புரவுத் தொழிலாளர்களையெல்லாம் மாற்றுத் தொழிலாளர்களாக்கிட போதிய பயிற்சி தந்து, அவர்களது பொருளாதார வசதி குறையாமல், வாழ்வாதாரத்திற்கும் போதிய உத்தரவாதத்தினை அளிப்பது அவசர அவசிய மாகும்!

68 ஆண்டு சுதந்திரத்துக்குப் பிறகும் இந்நிலையா?

68 ஆண்டு சுதந்தரத்திற்குப் பிறகும் மனிதக் கழிவுகளை மனிதர்களே சுமப்பது - இதற்கென ஒரு தனி ஜாதி - கீழ்ஜாதி வேறு எந்த சுதந்திர நாட்டிலாவது - உலகில் உண்டா? இதைவிட பெருத்த தேசீய அவமானம் வேறு உண்டா?

இதனை இந்திய நாட்டின் எந்த மூலை முடுக்கிலும் இல்லாது ஒழிக்க மத்திய, மாநில அரசுகள் உடனடியாகத் திட்டம் தீட்ட வேண்டும்.

தொழில் நுணுக்க முறைகளைப் பயன்படுத்தி - இந்தக் கழிவுகளிலிருந்து பயனுறு பயன் (Recycling Process) முறையில் கோப்பர்காஸ் பல நிறுவனங்கள் செய்கின் றனவே! ஙிவீஷீ நிணீ முறைகளையெல்லாம் செய்யலாமே!

அந்தப் பணிகளில் ஈடுபடும் துப்புரவுத் தொழிலாளர் களைக்கூட, அவர்கள் எழுதப்படிக்கத் தெரியாதவர்கள் என்ற நிலை இருந்தால்கூட, பயிற்றுவித்து, பயன்படுத்திக் கொள்ளத் திட்டமிட வேண்டும்.

இன்று வெளிவந்த ஒரு தகவல்!

இன்று வெளிவந்துள்ள ஒரு செய்தியில் சென்னை மாநகராட்சியில் கடந்த 15ஆம் தேதி முதல் மனிதக் கழிவு களை அகற்றும் பணியாளர்கள் குறித்த கணக்கெடுப்பு துவங்கி, நேற்று வரை நடந்துள்ளது.

அதில் 200 வார்டுகளிலும் சேர்த்து மொத்தம் 100 பேர் மட்டுமே அந்தப் பணி செய்வோராகக் கண்டறியப் பட்டுள்ளனராம்.

ஆனால் 2011ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக் கெடுப்பின் அடிப்படையில் சென்னையில் மனித கழிவுகளை அகற்றும் பணியாளர்கள் 1,500 பேர்கள் இருந்ததாக குறிப்பிட்டுள்ளது வெளியாகி உள்ளதே!

மாற்றுப் பணிகள் தருக!

அந்த 1500 பேர்களில் தற்போது 100 பேர் என்று முரணான தகவல்; இதைச் செம்மைப்படுத்தி அவர்கள் அப்பணியை மனிதக் கழிவினை சுமக்கும் பணிக்கு பதிலாக இயந்திரங்களைப் பயன்படுத்தி, அவர்களை மாற்றுப் பணியாளர்களாக்கிட மாநகராட்சியும் தமிழக அரசும் முன்வர வேண்டும்.

திராவிடர் கழகம் ஒத்துழைக்கும்

இதனை ஒழிக்க நமது இயக்கம் தேவைப்பட்டால் அறப் போராட்டத்திலும், விழிப்புணர்வுப் பிரச்சாரத்திலும் ஈடுபடும் என்பதை அறிவித்துக் கொள்ளுகிறோம்.

கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்

சென்னை
19.8.2014

Read more: http://viduthalai.in/page1/86128.html#ixzz3BE8j9Kvv

தமிழ் ஓவியா said...


என் கவுன்ட்டர்கள்!

போலி என்கவுன்ட்டர் குறித்து விசாரணை நடத்திய நீதிபதி ஹெக்டே குழு அறிக்கையை மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. அதில், போலி என்கவுன்ட்டர் விஷயத்தில் மத்திய அரசு துளியும் சகிப்புத்தன்மை காட்டாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மணிப்பூர் மாநிலத்தில் நடந்த தொடர் என்கவுன்ட்டர்கள் போலியாக நடத்தப்பட்டவை என்று கூறி, தொண்டு நிறுவனங்கள் சார்பில் உச்சநீதிமன்றத் தில் மனு தாக்கல் செய்யப் பட்டிருந்தது.

கடந்த 30 ஆண்டுகளில் போலி என்கவுன்ட்டர் மூலம் 1,528 பேர் கொல்லப்பட்டதாகவும் இதற்கு காரணமான மத்திய ஆயுதப்படை யினர் மற்றும் காவல்துறையினரை தண்டிக்க முடியாமல் சிறப்புச் சட்டம் அவர்களைப் பாதுகாக்கிறது என்றும் மனுவில் கூறப்பட்டிருந்தது.

இதுகுறித்து விசாரித்து அறிக்கை அளிக்க நீதிபதி ஹெக்டே குழு நியமிக்கப்பட்டது. இக்குழு விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்துள்ளது. இதன் பரிந்துரைகளுடன் கூடிய அறிக்கையை மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. அதில் மத்திய அரசு கூறியிருப்பதாவது: போலி என்கவுன்ட்டர் மூலம் அப்பாவி மக்கள் கொல்லப் படுவதில் மத்திய அரசு துளியும் சகிப்புத் தன்மை காட்டாது என்று மோடி தலைமையிலான மத்திய அரசு தெரிவித்துள்ளது.

போலி என்கவுன்ட்டர் என்ற பேச்சு வரும் பொழுது இன்றைய பிரதமர் நரேந்திர மோடியையும், பி.ஜே.பி.யின் அகில இந்தியத் தலைவர் அமித்ஷா வையும் தவிர்த்து விட்டுச் சிந்திக்க முடியாது.

காரணம் குஜராத் மாநிலத்தில் தொடர்ந்து நடை பெற்ற என் கவுன்டர்களில் இவர்கள் இருவருக்கும் அதிக சம்பந்தம் உண்டு என்பதால்தான் இவ்வாறு குறிப்பிட நேர்கிறது.

குஜராத் மாநிலத்தில் சில ஆண்டுகளுக்கு முன் காவல்துறை என்கவுன்டரில் சொராபுதீன் ஷேக் என்பவர் கொல்லப்பட்டார். இது போலி என்கவுன்ட்டர் என்பது வெளிச்சத்திற்கு வந்தது. வேறு சில போலி என்கவுன்ட்டர் களும் நடந்தது தெரிய வந்தது.

இதுகுறித்து சி.பி.அய். விசாரணை நடத்தியது. குஜராத்தில் நடந்த போலி என்கவுன்ட்டர்கள் தொடர்பான வழக்குகளில் குஜராத் மற்றும் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த 6 அய்.பி.எஸ். அதிகாரிகள் உட்பட 32 காவல்துறை அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர்.

அத்தகையவர்களுள் ஒருவர் குஜராத் மாநில காவல்துறை டி.அய்.ஜி.யான வன்சாரா அய்.பி.எஸ்.; சொராபுதீன் போலி என்கவுன்ட்டர் தொடர்பாக 2007 ஏப்ரல் 24ஆம் தேதி கைது செய்யப்பட்டார். சபர்மதி சிறையில் அடைக்கப்பட்ட அவர் கடந்த ஆறு ஆண்டுகளில் மேலும் சில போலி என்கவுன்ட்டர் வழக்குகளிலும் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப் பட்டார். இவர் யார் என்றால் குஜராத் மாநில முதல் அமைச்சராக இருந்த நரேந்திர மோடிக்கு மிகவும் நெருக்கமாக இருப்பவர்.

அத்தகைய ஒருவர் சிறையில் இருந்தபடியே தம் பதவி விலகல் கடிதத்தை குஜராத் மாநிலக் கூடுதல் செயலாளருக்கு அனுப்பினார். அந்தப் பத்துப் பக்க அறிக்கை குஜராத் மாநில முதல்வர் நரேந்திர மோடிஉள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் மீதான கடும் குற்றப் பத்திரிக்கையாக இருக்கிறது.

இந்த இருவரும் கொடுத்த அறிவிப்பின் காரணமாகவும், குஜராத் மாநில அரசின் கொள்கைக் காரணமாகவும் மேற் கொள்ளப்பட்டது தான் போலி என்கவுன்ட்டர்; இவர்கள் இருவரும் தந்த ஊக்கம்தான் அந்த செயலை எங்களால் செய்ய முடிந்தது.

முதல் அமைச்சர் நரேந்திரமோடியை நாங்கள் கடவுள் போல் கருதினோம்; அவர்மீது மிகுந்த மரியாதை வைத்திருந்ததால்தான் இவ்வளவு நாள் அமைதி காத்து வந்தேன். முதல் அமைச்சர் நரேந்திர மோடியைத் தவறாக வழி நடத்தியவர் உள்துறை அமைச்சர் அமித்ஷாதான்.

போலி என்கவுன்ட்டர்களுக்காகக் காவல் துறையினரை சிறையில் அடைக்க முடியும் என்றால், அந்த என்கவுன்ட்டர்களுக்குக் காரணமான அரசாங் கத்தில் இருப்பவர்கள் மும்பையில் உள்ள தலோஜா சிறையிலோ அல்லது ஆமதாபாத்தில் உள்ள சபர்பதி மத்திய சிறையிலோ தான் இருக்க வேண்டும் என்று காவல்துறை அதிகாரி வன்சாரா தமது கடிதத்தில் விரிவாக எழுதினார்.

இதில் மிகவும் வருந்த வேண்டியது என்னவென்றால் ஒரு பொறுப்பான அதிகாரி எழுதிய கடிதத்தின்மீது எந்தவித விசாரணையும் நடத்தப்படவில்லை என்பது தான்.

நம் நாட்டு ஜனநாயகத்தின் யோக்கியதை எந்த அளவுக்கு இருக்கிறது என்பதற்கு அடையாளம் இவ்வாறு குற்றஞ்சாட்டப்பட்ட அந்த இருவரும் முறையே பிரதமராகவும், ஆளும் பிஜேபியின் அகில இந்தியத் தலைவராகவும் ஆகியுள்ளனர் என்பதுதான். அமித்ஷா மீதான போலி என்கவுன்ட்டர் வழக்கு மும்பையில் நடந்து கொண்டு இருக்கிறது. குஜராத் மாநிலத்துக்குள் அந்த வழக்கு நடந்தால் நேர்மையான முறையில் அமையாது என்ற எண்ணத்தில்தான் மும்பையில் நடந்து கொண்டு இருக்கிறது.

ஆனால், நீதிமன்றத்தில் ஒருமுறைகூட அமித்ஷா ஆஜராகவில்லை. நீதிபதி மிகவும் கடுமையாக எச்சரித் துள்ளார். எப்படிப்பட்டவர்கள் எல்லாம் நம் நாட்டில் தலைவர்களாக ஆகி இருக்கிறார்கள் என்பதற்கு இவை போதாதா?

Read more: http://viduthalai.in/page1/86117.html#ixzz3BE8xb1h0

தமிழ் ஓவியா said...


பக்குவமடையாதவன்

அறிவுக்கும், அனுபவத்திற்கும் ஒத்து வராததைப் பயத்தால் நம்புகிறவன் பக்குவமடைந்த மனிதனாகான்.
_ (விடுதலை, 3.4.1950)

Read more: http://viduthalai.in/page1/86116.html#ixzz3BE973TgQ

தமிழ் ஓவியா said...


இன்று (ஆக.19) உலக புகைப்பட நாள்


திராவிட இனத்திற்காக தன் வாழ்நாள் முழுவதும் உழைத்த தந்தை பெரியாரை புகைப்படம் எடுத்த புகைப்பட கலைஞர், ஓவியர் மா.குருசாமி கூறிய கருத்து:

தந்தை பெரியாரை எந்த நோக்கில் (Angle) இருந்து புகைப்படம் எடுத்தாலும் மிகச்சிறப்பாக இருக்கும் போட்டோ ஜினிக் உருவம் தந்தை பெரியார். எத்தனை முறை புகைப்படம் எடுத்தாலும் நமக்கு உற்சாகம் ஏற்படும். இன்று உலகப் புகைப்பட நாள்.



1839 ஆக., 19இல் உலகில் முதன் முதலாக புகைப் படம் அங்கீகரிக்கப்பட்டது. இதையடுத்து இந்தாண்டு புகைப்படத்துக்கு 175ஆவது ஆண்டு. புகைப்படம் என்பது ஒரு "படம்' அல்ல. அது ஒரு "கலை'. புகைப்படத்துக்கு பெரிய வலிமை உள்ளது. உலகளவில் புகைப்படம், பல வரலாற்று மாற்றங்களை ஏற்படுத்தி யுள்ளது. புகைப்படம் நாம் வாழ்க்கையோடு ஒன்றி ணைந்தது. அனைத்து இடங்களிலும் புகைப்படத்தின் பயன் உள்ளது. வரலாற்று நிகழ்வுகள், சமூக பிரச்சினைகள், சுப, துக்க நிகழ்ச்சிகள், மாநாடு, பொதுக் கூட்டம் என வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வுகளையும் நம் கண் முன் கொண்டு வருவது புகைப்படம். ஒரு சந்ததியினரின் வாழ்க்கை முறையை, வரும் தலை முறையினர் அறிந்து கொள்ள உதவுவதும் புகைப்படம் தான். 19ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் லூகிஸ் டாகுரே என்பவர் "டாகுரியோடைப்' எனப்படும் புகைப் படத்தின் செயல்பாட்டு முறையை வடிவமைத்தார். 1839ஆம் ஆண்டு ஜன., 9ஆம் தேதி பிரான்ஸ் அகாடமி ஆப் சயின்ஸ், இம்முறைக்கு ஒப்புதல் அளித்தது. ஆக., 19இல் பிரான்ஸ் அரசு "டாகுரியோடைப்' செயல் பாடுகளை "ப்ரீ டூ தி வேர்ல்டு' என உலகம் முழுவதும் அறிவித்தது. இதை எடுத்துரைக்கும் வகையில், ஆக., 19 உலக புகைப்பட நாளாக கடைபிடிக்கப்படுகிறது.

Read more: http://viduthalai.in/page1/86134.html#ixzz3BE9f5lZ6

தமிழ் ஓவியா said...


மக்கள் நலப் பணியாளர்கள்: நீதிமன்றத் தீர்ப்பை மதித்து தமிழ்நாடு அரசு செயல்படவேண்டும்! - கி.வீரமணி


மக்கள் நலப் பணியாளர்கள்:

நீதிமன்றத் தீர்ப்பை மதித்து தமிழ்நாடு அரசு செயல்படவேண்டும்!

தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை!

21ஆம் நூற்றாண்டிலும் மனிதக் கழிவுகளை மனிதனே சுமப்பதா? நவீன தொழில் நுட்ப முறைகளைக் கையாள வேண்டும்!

மக்கள் நலப் பணியாளர்களை அரசுப் பணிகளில் அமர்த்திடவேண்டும் என்ற உயர்நீதிமன்ற ஆணையை மதித்து, வேலை நீக்கம் செய்யப்பட்ட மக்கள் நலப் பணியாளர்களைப் பணியில் அமர்த்த தமிழ்நாடு அரசு முன்வரவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார். அறிக்கை வருமாறு:

எதிலும் அரசியல் பார்வை கூடாது

1989 ஆம் ஆண்டில் தி.மு.க. அரசில் 25234 பேர்கள் மக்கள் நலப் பணியாளர்களாக நியமிக்கப்பட்டனர். கிராம அளவில் அடிப்படைப் பணிகளை செய்யும் பொறுப்பு அவர்களிடம் அளிக்கப்பட்டது.

தி.மு.க. ஆட்சிக்குப் பிறகு ஆட்சிப் பொறுப்புக்கு வந்த அ.இ.அ.தி.மு.க. அரசு அவர்களைப் பணி நீக்கம் செய்தது.

இப்படி மூன்று முறை தி.மு.க. ஆட்சியில் இருக்கும் போது அவர்களைப் பணி நியமனம் செய்வதும், ஜெய லலிதா தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சிக்கு வரும் பொழுதெல்லாம் அவர்களைப் பணி நீக்கம் செய்வதுமான நிலை இருந்து வருகிறது.

ஓர் ஆட்சி போகும் - இன்னொரு ஆட்சி வரும் - இந்த மாற்றங்களால் அரசியல் நோக்கோடு அரசுப் பணியாளர் களைக் கால் பந்தாகக் கருதி உதைப்பது என்பது வருத்தப்படவேண்டிய ஒன்றாகும். ஆட்சி அமைப்பு முறைக்கு இது அழகும் அல்ல - உகந்ததும் அல்ல!

2011 இல் ஆட்சிக்கு வந்த அ.இ.அ.தி.மு.க. அரசு வழக்கம்போல மக்கள் நலப் பணியாளர்கள் 12618 பேர் களைப் பணிநீக்கம் செய்தது (8.11.2011).

நீதிமன்ற தீர்ப்புகள்

இதனை எதிர்த்து உயர்நீதிமன்றம் சென்றனர் - வேலை நீக்கம் செய்யப்பட்டவர்கள். வழக்கை விசாரித்த நீதிபதி கே.சுகுணா அவர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டவர் களுக்கு மீண்டும் பணி அளிக்கப்படவேண்டும் என்று தீர்ப்புக் கூறினார்.

தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்தது. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எலிப்பி தர்மராவ் - தலைமையி லான அமர்வு, தனி நீதிபதியின் ஆணையை ரத்து செய்தது.

இந்தத் தீர்ப்பினை எதிர்த்து மக்கள் நலப் பணி யாளர்கள் சங்கம் உச்சநீதிமன்றம் சென்றது.

வழக்கினை விசாரித்த உச்சநீதிமன்றம்; சென்னை உயர்நீதிமன்ற அமர்வு பிறப்பித்த ஆணையை ரத்து செய்து வழக்கை மீண்டும் புதிதாக விசாரிக்கும்படி சென்னை உயர்நீதிமன்றத்திற்கு ஆணை பிறப்பித்தது.

காலி இடங்களில் பணி நியமனம் செய்க!

நீதிபதிகள் என்.பால்வசந்தகுமார், எம்.சத்தியநாரா யணன் அடங்கிய அமர்வு, வேலை நீக்கம் செய்யப்பட்ட, மக்கள் நலப் பணியாளர்களை மீண்டும் பணியில் அமர்த்துமாறு ஆணை பிறப்பித்துள்ளது.

தமிழ்நாட்டில் 95 லட்சம் பட்டதாரிகள் வேலையில் லாமல் இருப்பதாக சட்டமன்றத்தில் அமைச்சர் கூறியதை எடுத்துக்காட்டியும், தமிழ்நாட்டில் கல்வித் துறை கிராமப் பஞ்சாயத்து, வட்டாட்சியர் அலுவலகம், மாவட்ட ஆட்சி யர் அலுவலகங்களில் 3 லட்சம் இடங்கள் காலியாக உள்ளதைக் குறிப்பிட்டும், அந்த இடங்களில் மக்கள் நலப் பணியாளர்களைப் பணியில் அமர்த்தலாம் என்று சென்னை உயர்நீதிமன்ற அமர்வு தீர்ப்பு அறுதியிட்டுக் கூறிவிட்டது.

மேல்முறையீடு வேண்டாம்!

நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை மதித்து வேலை நீக்கம் செய்யப்பட்ட மக்கள் நலப் பணியாளர்களைப் பணியில் அமர்த்துமாறு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களைக் கேட்டுக்கொள்கிறோம். மேல்முறையீடு என்னும் ஆயுதத் தைப் பயன்படுத்துவதால், நேரக்கேடும், அரசுப் பண விரயமும், பாதிக்கப்பட்ட பணியாளர்களுக்கு மன உளைச் சலும்தான் மிச்சமாகும்.

ஏற்கெனவே சாலைப் பணியாளர்கள் பிரச்சினையில் என்ன நடந்தது என்ற கசப்பான நடப்புகளைச் சுட்டிக் காட்டவேண்டிய அவசியம் இல்லை. பணிநீக்கம் காரண மாக அதிர்ச்சிக்கு ஆளான மக்கள் நலப் பணியாளர்கள் பலரும் மரணமடைந்த நிலையும் உண்டு.

இதுகுறித்து இதற்கு முன்பேகூட சுட்டிக்காட்டி அறிக்கைகளை வெளியிட்டிருக்கிறோம். (எடுத்துக்காட்டு விடுதலை 23.1.2012).

சமூகநீதி காத்திடுக!

பெரும்பாலும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமூகத் தைச் சேர்ந்தவர்கள் அதிலும் குறிப்பாக கிராமப் பகுதிகளில் இருந்து முதல் தலைமுறையாக அரசுப் பணியின் படிக் கட்டுகளை மிதித்தவர்கள் என்பதையும் சமூகநீதிக் கண் ணோட்டத்தில் அணுகி, அவர்களை மீண்டும் பணியில் அமர்த்தி ஆட்சிக்கு நல்ல பெயரைச் சம்பாதிக்குமாறு வலியுறுத்துகிறோம்.


கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்.



சென்னை
19.8.2014

Read more: http://viduthalai.in/page1/86174.html#ixzz3BEA4kEXJ

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

உலகில் ஒருவன்தான் ஆண் பிள்ளை. சிவபெருமானின் நெற்றிக் கண்ணிலிருந்து பிறந்த முருகனே அந்த ஆண் பிள்ளை. உலகத்தில் பிறக்கும் மற்ற அத்தனைப் பேரும் தாயின் கருவில் வளர்ந்து பிறப்பதால், நாம் அனைவரும் பெண் பிள்ளைகளே!

- கிருபானந்தவாரியார்

(வெளியீடு: அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ ஏடான டாக்டர் நமது எம்.ஜி.ஆர்.)

ஒரு சந்தேகம், அந்த சிவபெருமான் ஆணா - பெண்ணா?

Read more: http://viduthalai.in/page1/86176.html#ixzz3BEAEjxZE

தமிழ் ஓவியா said...

மத்திய மோடி அரசு நீதித்துறையில் தலையிடும் மற்றொரு மறைமுக முயற்சியா?



சங்கராச்சாரியார்மீது கொலை வழக்கு புதுவை அரசினர் அப்பீல் முடிவைக் கைவிட ஏற்பாடா?

மொத்தம் 117 சாட்சிகளில் 77 பிறழ்சாட்சியங்களை வைத்து, காஞ்சி சங்கரராமன் கொலை வழக்கினை புதுவை அரசின் மேல் முறையீடு செய்யும் முயற்சிக்கு முட்டுக்கட்டை போட்டு, சு.சாமிகள் குடிஅரசுத் தலைவருக்கு மனு கொடுத்துள்ளதைக் கண்டித்து ஏராளமானவர்கள், நீதித்துறையின் சுதந்திரம் காப்பாற்றப்பட வேண்டும், உண்மையான கொலைக் குற்றவாளிகள் தண்டனையிலிருந்து தப்பித்து விடக் கூடாது என்று பல்லாயிரக்கணக்கில் குடியரசுத் தலைவருக்கு மின் அஞ்சல்கள் சென்ற பிறகும்கூட, இன்று (21.8.2014) வந்துள்ள ஒரு ஆங்கிலச் செய்தித்தாளில் புதுவை மாநில ஆளுநர் ஆணை - அனுமதிபற்றி - அட்டர்னி ஜெனரலின் கருத்துக் கேட்க அம்முடிவு அனுப்பப்பட்டிருப்பதாக ஒரு செய்தி வெளியாகி உள்ளது.

இது உண்மையானால், அம்முடிவினை - மேல் முறையீடு செய்வதைக் கைவிட வைக்க (அதாவது சங்கராச்சாரியார்களைக் காப்பாற்ற) இப்படி ஒரு குறுக்கு வழி - தந்திர முயற்சிகளை மோடி அரசோ அல்லது மத்திய அரசின் வேறு அங்கமோ செய்வதாகத் தான் உலகத்தினர் புரிந்து கொள்ளக் கூடும்!

இந்த அவப் பெயர் தேவையா? இது அப்பட்டமான, நீதித்துறையில் தலையிடும் கொடூரமான முயற்சியாகும் என்பது நீதித்துறை - சட்டத்துறை வல்லுநர்கள் கருத்தாகும். இம்முயற்சி மூலம் கொலைக் குற்றத்தில்கூட, உண்மைக் குற்றவாளிகள் தப்பித்து விடலாம் என்ற நிலை ஏற்படலாமா?

நீதிக்குத் தலைவணங்க வேண்டாமா? நீதித்துறையின் சுதந்திரத்தில் நிர்வாகத் துறை குறுக்கிடலாமா?

மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் என்பதை மறவாதீர்! மறவாதீர்!!

குறிப்பு: இது குறித்து திராவிடர் கழகத் தலைவர் அறிவிப்பு வெளி வந்துள்ளது (விடுதலை 8.8.2014). தோழர்களே குடியரசுத் தலைவருக்கு மின்னஞ்சல் அனுப்பி விட்டீர்களா? குடியரசு தலைவருக்குக் கொடுக்கப்பட வேண்டிய வாசகம் இதோ:

குடியரசு தலைவருக்கு மின்னஞ்சல் அனுப்புக

கழகத் தோழர்களும் நீதியின்மீது கவலையுள்ள பெரு மக்களும் கீழ்க்கண்ட முகவரிக்கு மின் அஞ்சல் மூலம் கீழ்க்கண்ட வாசகத்தை அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.



The President of India
Rashtrapati Bhawan
New Delhi
Honourable Sir,

The decision by Puducherry Government to go in for appeal against the acquittal of 24 persons including Kanchi Jeyendra Saraswathi and Vijayendra Saraswathi, two Sankaracharyas, in the Sankararaman murder case should be allowed to proceed without any delay. Any effort to stall the appeal process would give wrong impression in the minds of people of Tamilnadu and Puducherry that Chief Executive of this country viz. President is intervening in the judicial process.

The family of the slain Sankararaman through this appeal, are eagerly expecting justice as also the people of Tamilnadu. The murder was committed in the Varadarajasamy Temple premise.
We once again request your goodself to kindly resist any effort by vested interests in stopping this appeal process.

Email address: secy.president@rb.nic.in and usgrievance@rb.nic.in

Read more: http://viduthalai.in/page1/86249.html#ixzz3BEBUwjjM

தமிழ் ஓவியா said...

இந்து முன்னணியின் பொய்ச் செய்திக்கு மறுப்பு


நாகர்கோயிலில் நடக்கும் புத்தகக் கண்காட்சியில் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் சார்பில் நூல்கள் விற்பனைக்கு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. பொது மக்கள் ஏராளம் இயக்க நூல்களை வாங்குகின்றனர். இதனைப் பொறுக்காத அவ்வூர் இந்து முன்னணியினர் மாவட்ட ஆட்சியருக்குப் புகார் கொடுத்துள்ளனர்.

இந்து மத விரோத நூல்கள் விற்பனைக்கு தடை செய்ய வேண்டும் என்று புகாரில் குறிப்பிட்டுள்ளனர் - வட்டாட்சியர் புத்தகக் கண்காட்சிக்கு வந்து சில இயக்க நூல்களைப் பெற்றுச் சென்றுள்ளார். இது மிகவும் கண்டிக்கத்தக்கது. தமிழ்நாட்டில் அனைத்துப் புத்தகக் கண்காட்சியிலும் கழக அரங்குகள் சிறப்பாக இடம் பெற்று வருகின்றன. நாகர்கோயிலில் மட்டும் ஏன் இந்த நிலைப்பாடு?

இதில் இன்னொரு விஷமத்தனம்: குறிப்பிட்ட நூல்களை விற்க மாட்டோம் என்று விற்பனைப் பகுதியில் உள்ளவர் சொன்னார் என்று இந்து முன்னணிப் பிரமுகர், சொன்னதாக தினகரன் செய்தி வெளியிட்டுள்ளது. இது உண்மை தானா என்று உறுதிப்படுத்தாமல் தினகரன் இந்த வேலையில் ஈடுபட்டு இருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது.

- தினகரன் மறுப்புச் செய்தியை வெளியிட வேண்டும்.

Read more: http://viduthalai.in/page1/86245.html#ixzz3BEBhckCZ

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

கோயில் குளத்தில்

கோயில் குளத்தில் துவைப்பது, பாத்திரம் கழுவுவது போன்றவற் றைச் செய்வது சரியா?
ஏ. மூர்த்தி, திருவள்ளூர்

வேறு நீரில் குளித்துச் சுத்தமான பிறகே கோயில் குளத்தில் நீராட வேண்டும் என்பது நியதி. அதன் புனிதத் தன்மை யைப் பாதுகாப்பதற்காக இப்படி சொல்லி இருக் கும் போது துவைப்பது, பாத்திரம் தேய்ப்பது போன்ற செயல்களைச் செய்வது சரியானது அல்ல.
(தினகரன் ஆன்மீக மலர்)

மகாமகத்தன்று லட்சக் கணக்கில் கும்பகோணத் தில் குளிக்கிறார்களே - அதனால் அந்தக் குளம் புனிதம் அடைகிறதா? அசுத்தம் அடைகிறதா?

Read more: http://viduthalai.in/page1/86242.html#ixzz3BEBqVZAR

தமிழ் ஓவியா said...


சபாஷ், சரியான நடவடிக்கை!


சென்னை அரும்பாக்கம் செல்வ விநாயகம் கோயில் தெருவில் அதே பகுதியைச் சேர்ந்த செயராமன் என்பவர் கோயில் ஒன்றைக் கட்டினார். அந்தக் கோயிலை அவர் ஒன்றும் தன் சொந்த நிலத்தில் கட்டவில்லை; மாநகராட்சிக்குச் சொந்தமான இடத்தில்தான் கட்டினார். அந்தப் பகுதியில் வசிக்கும் தியாகராசன் என்பவர் இதுபற்றி அறநிலையத் துறைக்கும், மாநகராட்சிக்கும் புகார் கொடுத்தார் - ஆனால் நியாயம் கிடைக்கவில்லை என்றவுடன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கொன்றைத் தொடர்ந்தார்.

அய்ந்தாண்டுகள் வழக்கு நடந்தது. கோயிலை இடித்து நிலத்தை மாநகராட்சிக்கு ஒப்படைக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்தது.

அதன்படி கோயிலை இடிக்க மாநகராட்சி ஊழியர்கள் சென்றபோது, பொது மக்களைக் கிளப்பி விட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனால் மாநகராட்சி ஊழியர்கள் திரும்பி செல்லும் நிலை ஏற்பட்டது.

கோயிலைக் கட்டிய செயராமன் என்பவர் உச்சநீதிமன்றம் சென்றார் - மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடிசெய்து விட்டது.

நேற்று காலை காவல்துறையின் உதவியுடன் மாநகராட்சி பணியாளர்கள் ஜே.சி.பி. எந்திரம் மூலம் கோயிலை இடித்துத் தரை மட்டமாக்கினர். நேற்றும் தடுத்துப் பார்த்தனர். ஒரு பெண் மாடியில் ஏறிக் கொண்டு கீழே குதித்துத் தற்கொலை செய்து கொள்வதாகவும் மிரட்டினார்; எல்லாவற்றையும் சமாளித்துக் கோயிலை இடித்து முடித்தனர்.

இது ஒன்று மட்டுமல்ல தமிழ்நாட்டில் பல்லாயிரக் கணக்கான கோயில்களை அனுமதியின்றி, அரசுக்குச் சொந்தமான இடங்களில் மிகப் பெரிய அளவில் எழுப்பியுள்ளனர்.

சென்னையை எடுத்துக் கொண்டாலும் எண்ணிறந் தவை; சைதாப்பேட்டை, மாடல் பள்ளி எதிரில் ஒரு கோயில் (அர்ச்சகருக்கான குடில் உட்பட) திருவான்மி யூரில் மருந்தீசுவரர் கோயில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகில் என்று அப்பட்டமான முறையில் பொது இடங்களில் ஏராளமான கோயில்கள் கட்டப்பட்டுள்ளன.

இப்படிப் பொது இடங்களில் கட்டப்பட்டுள்ள கோயில்கள் தமிழ்நாட்டில் 77,450. பொது இடங்களில் கோயில்கள் கட்டப்படுவது குறித்து உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் நீதிபதிகள் தல்வீர் பண்டாரி, எம்.கே. சர்மா ஆகியோர் அடங்கிய அமர்வு தெளிவாகத் தீர்ப்பினை வழங்கி இருக்கிறது.

குஜராத் மாநிலத்தில் தொடரப்பட்ட பொது நல வழக்கில்தான் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டது. பொது இடங்களில் அனுமதியில்லாமல் கட்டப்பட்டிருக்கும் வழிபாட்டுத் தலங்களை அகற்றாமலோ, வேறு இடங்களில் மாற்றாமலோ இருக்கும் மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள் நேரில் வந்து பதில் கூற வேண்டும் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஆணை பிறப்பித்தனர் (14.9.2010).

இந்தியாவிலேயே தமிழ் நாட்டில் மட்டும்தான் இப்படிப்பட்ட கோயில்கள் அதிகம். தமிழ்நாட்டில் 77450, ராஜஸ்தானில் 58233, குஜராத்தில் 15,000 - கோயில்கள் அனுமதியின்றிக் கட்டப்பட்டவை.

அருணாசலப் பிரதேசத்தில் மட்டுமே ஒரு இடத்தில் கூடப் பொது இடத்தில் கோயில் கட்டப்படவில்லை என்பதை அறிந்து நீதிபதிகள் நாகரிகமான மாநிலம்! என்று பாராட்டவும் செய்தனர்.

அனுமதி பெறாத கோயில்கள், மசூதிகள், சர்ச்சுகள், குருத்து வாரங்கள் மற்றும் பிற வழிபாட்டு இடங்களை பொது இடங்களிலிருந்தும் பாதைகளில் இருந்தும், அகற்றுமாறும் அவை போக்குவரத்துக்கு இடைஞ்சலாக இருக்கின்றன என்றும், நெரிசலை உண்டாக்குகின்றன என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கண்டிப்பாகத் தெரிவித்தனர்.

நான்கு ஆண்டுகள் கடந்து விட்ட நிலையிலும் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை நடை பாதைக் கோயில்கள் பொது இடங்களில் கட்டப்பட்ட கோயில்கள் அகற்றப் படவில்லை என்பது -அப்பட்டமான நீதிமன்ற அவமதிப்புதான்.

உச்சநீதிமன்றத்தில் இந்தத் தீர்ப்பின்மீது தமிழ்நாடு அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன? தமிழக அரசின் தலைமைச் செயலாளர் உச்சநீதிமன்றம் சென்று விளக்கம் அளித்தாரா என்பதைத் தமிழ்நாடு அரசு தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

இதில் ஆத்திகம் நாத்திகம் என்ற பிரச்சினைக்கு இடம் இல்லை; அரசாங்கத்துக்குச் சொந்தமான சொத்தை யார் கைப்பற்றினாலும், எந்த நோக்கத்துக் காகக் கைப்பற்றினாலும் குற்றம் குற்றமே! பொது ஒழுக்கச் சிதைவும் ஆகும்!

சென்னை அரும்பாக்கத்தில் மேற்கொள்ளப்பட்ட நடைமுறைகளை மற்ற மற்ற மாநகராட்சிகளும், நகராட்சிகள் ஊராட்சிகளும் தொடர வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

நெடுஞ்சாலைக்குச் சொந்தமான இடங்களில் சாலைகளின் இரு மருங்கிலும் மிக அதிக உயரத்தில் அனுமான் சிலைகள் திடீர் திடீரென்று தோற்றுவிக்கப் பட்டு வருகின்றன.

இவற்றை நெடுஞ்சாலைத் துறை கண்டும் காணாமல் இருப்பது எந்த வகையில் சரி? எந்த வகையில் நியாயம்? சட்டத்திற்குமுன் அனைவரும், அனைத்தும் சமம் என்ற கோட்பாடு என்னாயிற்று?

அரசு செயல்படுமா? எங்கே பார்ப்போம்!

Read more: http://viduthalai.in/page1/86234.html#ixzz3BEC2tDJj

தமிழ் ஓவியா said...

வரலாற்றில் வித்தியாசமான இயற்கைப் பேரழிவு ஏற்பட்ட நாள் (21.8.1986)


சுனாமி, புயல், எரிமலை, மற்றும் நிலநடுக்கம் போன்றவற்றால் ஏற்படும் பாதிப்புகள் அதனால் ஏற்படும் உயிரிழப்புகள் பற்றிக்கேள்விப்பட்டு இருக்கிறோம்.

ஆனால், வளிமண்டலத்தில் இருக்கும் ஆக்ஸிசன் உறிஞ்சப்பட்டு உயிரினங்கள் மரணித்து விடுகிறது என்பது பலர் அறியாத செய்தியாகும். காமரூன் நாட்டில் உள்ள நியோஸ் என்ற ஏரியில் 1986_ஆம் ஆண்டு இதே நாளில் இது போன்ற ஒரு பேரழிவு நிகழ்ந்தது. இதன் காரணமாக வன விலங்குகள், கால்நடைகள் ஆயிரக் கணக்கில் இறந்தன. சுமார் 8000-ஆம் பேர் மூச்சுத்தினறி உயிரிழந்தனர். 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கடுமையான சுவாசக்கோளாற்றிற்கு ஆளாகினர். எப்படி நடந்தது?. ஆழமான ஏரிகளில் அடிப்பகுதியில் உள்ள பிளவின் வழியாக கார்பன் டை ஆக் ஸைடு மெல்ல மெல்ல வெளியேறிக் கொண்டு இருக்கும் கார்பன் டை ஆக்ஸைடு அடர்த்தி அதிகம் கொண்ட வாயுவாக இருப்பதால் இந்த வாயு ஏரியின் ஆழத்திலேயே தங்கிவிடுகிறது. இவை பல ஆயிரம் ஆண்டுகளாக ஏரியின் அடிப்பகுதி யில் இருக்கும்.

நில நடுக்கம் மற்றும் எரிமலைவெடிப்பு போன்ற நேரங்களில் கூட நீர் நிலைகளின் ஆழத்தில் தங்கி இருக்கும் கார்பன் டை ஆக்ஸைடு வெளிப்படாது. ஆனால் 1986-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21 ஆம் நாள் காமரூன் நாட்டின் பெரிய நகரங்களுள் ஒன்றான மீமோன் என்ற நகரத்தில் இருந்து சுமார் 300 கிலோ மீட்டர் தொலை வில் உள்ள நியாஸ் ஏரியின் கரையில் பகல் 3 மணி அளவில் ஏரியின் கரையில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவினால் ஏற்பட்ட அதிர் வலைகள் ஏரியின் அடிப்பகுதிவரை சென்றதால் ஆழத்தில் தேங்கி இருந்த கரியமில வாயு திடீரென ஏரியை விட்டு வெளியேறி வளமண்டலத்தில் கலந்தது. இதன் காரணமாக சுமார் 3000 ஆயிரம் சதுர மைல் தொலைவில் உள்ள வளிமண்டலப்பகுதி அனைத் திலும் ஆக்ஸிஜன் உறிஞ்சப்பட்டு கார்பன் டை ஆக்ஸைடு அந்த இடத்தை நிரப்பத் துவங்கியது. இதன் காரணமாக அருகில் உள்ள சிறு நகரம் மற்றும் 20 கிராமங்களில் வசித்த மக்களுக்கு ஆக்ஸிஜன் கிடைக்காததால் மூச்சுத்தினறல் ஏற்பட்டது. மனித குல வரலாற்றில் இது போன்ற பேரழிவு முதல் முதலாக நடந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. வரலாற்று நெடுக வளிமண்டலத் தில் ஆக்ஸிஜன் இன்மையால் ஏற் பட்ட விபத்து குறித்த பதிவு எங்கும் இல்லை. இந்த பேரழிவிற்கு பிறகு கடலில் உள்ள மிகப்பெரிய கரியமில வாயு தேக்கம் மிக்க பகுதிகளை மிகவும் கவனமாக புவியியல் ஆய் வாளர்கள் கண்காணித்து வருகின் றனர். பசிபிக் பெருங்கடலில் ஆழத்தில் இரண்டு இடங்களில் மிகப்பெரிய கரியமில வாயுத்தேக்கம் காணப்படுகிறது. காமரூன் நியாஸ் ஏரியில் ஏற்பட்டது போன்ற விபத்து இங்கு நடந்தால் அதில் வெளிவரும் கார்பன் டை ஆக்ஸைடின் காரண மாக பூமியின் 60 விழுக்காடு உயிரினம் அழிந்துவிடும் ஆபத்து உள்ளது.

Read more: http://viduthalai.in/page1/86235.html#ixzz3BECBuCtM

தமிழ் ஓவியா said...


மதவாதங்களுக்கு மரண அடி!


மதவாதங்களுக்கு மரண அடி!
பாலினத்தை நிர்ணயிக்கும் புதிய மரபணு கண்டுபிடிப்பு

குழந்தை உருவாகும் போது அக் குழந்தை ஆணா, பெண்ணா என்பதை எக்ஸ், ஒய் என்கிற குரோமோ சோம்கள் மட்டுமே நிர்ணயிப்பதில்லை. துணை மரபியல் கூறாக உள்ள மிகச் சிறிய மரபணுக்களே முக்கி யப் பங்கை வகிக்கின்றன.

அமெரிக்காவில் உள்ள கோல்ட் ஸ்பிரிங் ஹார்பர் ஆய்வகத்தின் (சிஷீறீபீ ஷிஜீக்ஷீவீஸீரீ பிணீக்ஷீதீஷீக்ஷீ லிணீதீஷீக்ஷீணீஷீக்ஷீஹ்-சிஷிபிலி) அறிவியலாளர்கள் சிறிய மரபணுக்களின் துணைக் குழுக்கள் ஆர்.என்.ஏ மூலக்கூறுகளின் குறியீடுகளாக உள்ளதைக் கண்டறிந்தார்கள். அவற்றை மைக்ரோ ஆர்.என்.ஏ.க்கள் (னீவீஸிழிகி) என்று அழைக்கின்றனர். அதன் செயல்பாடுகளை உன்னிப்பாக கவனித்தபோது, அவை ஆண், பெண் திசுக்களை வேறுபடுத்துவதில் முக்கியப்பங்கினை ஆற்றுவதையும் கண்டு வியந் தார்கள்.

மைக்ரோ ஆர்.என்.ஏக்கள் சிறிய தொகுதிகளாக ஆர்.என்.ஏ.வில் உள்ளன. அவை செயலாற்றும்போது, மரபணுக்களில் ஒன்று அல்லது பல புரோட்டீன் குறியீடுகளை உருவாக்குகின்றன. அவற்றின்மூலம் எந்த ஒரு மரபணுவையும் குறிப்பிட்டு செயலிழக்கச் செய்ய முடியும். பல கூறுகளுடன் கூட்டு மரபணுக் களை திட்டமிட்டவகையில் வளர்ச்சியடையவும் செய்ய முடியும்.

Read more: http://viduthalai.in/page1/86294.html#ixzz3BECw8GEA

தமிழ் ஓவியா said...


கோமாதா ஆந்திராவில் படுத்தியபாடு!


ஞானபூமியாம் இந்த நாடு! புண்ணிய பூமியாம் இந்த நாடு!

பாரத நாடு பழம்பெரும் நாடு - இப்படிப் பாடுவதில் ஒன்றும் குறைச்சல் இல்லை!

நாள்தோறும் வரும் செய்திகளோ, உலக மகா அவமானத்தின் உச்சத்தில் நம் நாட்டைக் கொண்டு செல்லும் அவலச் சுவைகள்!

இன்று டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளேட்டில் ஒரு செய்தி - மூடநம்பிக்கை இந்த நாட்டினை எப்படியெல்லாம் உருக்குலையச் செய்துள்ளது என்பதற்குக் கலங்கரை வெளிச்சம் போல், வெளிச்சம் போட்டு உலகத்திற்குக் காட்டும் செய்தியாகும்!

தெலங்கானா பகுதியில் உள்ள வாரங்கல் பகுதியில் நேற்று ஒரு செய்தி... ஒரு பசு மனித உருவ கன்றுக் குட்டியைப் போட்டதாம்! அது பேச ஆரம்பித்ததாம், (தெலுங்கில் தான் பேசியதோ! அல்லது ஹிந்தி உருது மொழியில் பேசியதோ விசாரிக்க வேண்டும் இனிமேல்தான்) பூகம்பம் வந்து அப்பகுதியே அழியப் போகிறது என்று அந்தப் பசு மாடு மனிதக் குட்டி கூறியதாம்! அதனால் அப்பகுதி மக்கள் பூராவும் வீட்டுக்குள் இருக்காமல், தூங்காமல் இரவெல்லாம் கண் விழித்துக் காத்துக் கிடந்தார்களாம்!
எங்கும் வதந்திகள்! வதந்திகள்!!

அதை நம்பி, செவ்வாய் இரவு முழுவதும் சாவுக்குப் பயந்து, அதே போல புதன் இரவும் இரு நாட்களில் இப்படி விழித்தே வெளியில் பீதியில் குந்தியிருந்தார்களாம் எவ்வளவு பெரிய அறிவுக் கொழுந்துகள் பார்த்தீர்களா? இந்த லட்சணத்தில் கைத் தொலைபேசிகளும் இத்திருப்பணிக்கு - வதந்திக்கு உதவினவாம்! எவ்வளவு வெட்கக்கேடு!
மொபைல்ஃபோன் கண்டுபிடித்தவன் இதைக் கேட்டால் தூக்கு மாட்டிக் கொள்ள மாட்டானா?

கரிம்நகர், வாரங்கல், நாலகொண்டா, மேடாக் பகுதிகளில் குழந்தைகளையும் தூங்கவிடவில்லையாம் பெற்றோர்கள்! என்ன மடமை!!

கோமாதா, குலமாதா என்ன பாடுபடுத்துகிறது பார்த்தீர்களா?

எங்கள் நாட்டுக்கெந்த நாடு ஈடு?

பைத்தியக்காரத்தனத்தைப் பாங்குடன் பரப்புவதில் எந்த நாடு ஈடு?

- ஊசி மிளகாய்

Read more: http://viduthalai.in/page1/86301.html#ixzz3BED2s9IL

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

ராகு காலம்

ராகு காலத்தில் வீட்டில் இருந்து கிளம்ப நேரிட்டால் என்ன பரிகாரம் செய்யலாம்?
- ராம. முத்துக்குமரன், கடலூர்

துர்க்கையம்மனுக்கு விளக்கேற்றி சிவப்பு புஷ்பம் சாத்தி வழிபட்டு மனத் தெளிவுடன் கிளம்புங்கள். உங்களுக்கு வெற்றிதான்.
ஓர் ஆன்மிக இதழ்

சரி, ராகு காலத்தில் விமானமோ ரயிலோ புறப்பட்டால் என்ன செய்ய வேண்டுமாம்?

Read more: http://viduthalai.in/page1/86300.html#ixzz3BEDKzGOV

தமிழ் ஓவியா said...


கைவல்யம் நாள் (22.8.1877)


இன்று சாமி கைவல்யம் பிறந்த நாள் (1877. யார் இந்த கைவல்யம்? 1877இல் கேரளத்தைச் சேர்ந்த கள்ளிக்கோட்டையில் பிறந்தவர் இயற்பெயர் பொன்னுசாமி. இவர்களின் முன்னோர்கள் பட்டாளத்தைச் சேர்ந்தவர்கள்.

ஒரு முறை இவர் கரூருக்கு வந்தார். அங்குள்ள மவுனசாமி மடத்துக்குச் சென்றார். அங்கு சில சாமியார்கள் உண்டு. வேதாந்த விசாரணைகள் நடைபெற்றன. கைவல்யம் என்ற வேதாந்த விசாரணை நூல் பற்றிப் பேசப்பட்டது. கைவல்யம் தொடுத்த வினாக்கள், விசாரணைகள் பலரையும் அதிரச் செய்தன. இதன் காரணமாக அவர் கைவல்யம் என்றே அழைக்கப்படுபவர் ஆனார்.

அவரது தர்க்க ஞானம் முதலில் பார்ப்பன மதக் கொள்கை எதிர்ப்பிலிருந்து கிளர்ந்து எழுந்ததாகும். நாடு பூராவும் சுற்றித் திரிவார். வேதாந்த விசாரணைகளில் ஈடுபடுவார். பார்ப்பனீயத்தை நிலை குலையச் செய்யும் கூர்மையான அம்புகள் அவை!

தந்தை பெரியார் அவர்களின் நண்பர் ஆனது இயல்புதானே! தொடக்கத்தில் தர்க்கத்தில் ஆரம்பித்துப் பின்னர் இணை பிரியாக் கொள்கைக் கயிற்றால் இணைந்து நண்பர்கள் ஆனார்கள்.

குடிஅரசில் கைவல்யம் எழுதி வந்த கட்டுரைகள் ஆணித்தரமானவை. எழுத்து நடையோ புத்தம் புதிய பாணி! இசைபாடும் அருவி நீரோட்டம் போன்றது.

அடுக்கடுக்கான ஆதாரக் கருவூலங்கள் வந்து விழுந்து கொண்டே இருக்கும். பராசரஸ்மிருதியும், மனுதர்மமும் அவருக்கு அத்துப்படி!

கைவல்யம் வருகிறார் என்றால், சாமி யார்கள் ஆட்டம் கண்டு போய் விடுவார் களாம். எதிரிகள் வயிற்றைக் கலக்குமாம். கழிந்து விடுவார்களாம்; வாய் வறண்டு போகுமாம்; தொண்டை வற்றிப் போகுமாம்! அப்படியொரு அசைக்க முடியாத ஆற் றலுக்குச் சொந்தக்காரர்.

ஒருமுறை தந்தை பெரியாரும், சாமி கைவல்யமும் ஏனாளம்பள்ளி ஜமீன்தாரின் திருமணத்திற்குச் சென்றி ருந்தனர். விருந்தில் பக்கம் பக்கமாக அமர்ந்திருந்தனர். பந்தி பரிமாறிய பார்ப்பானிடம் தண்ணீர் கேட்டார் கைவல்யம். அவர் இலைக்கு முன்னிருந்த டம்ளரை சர்வர் பார்ப்பான் எடுத்தான். உடனே பக்கத்தில் இருந்த சமையல்காரப் பார்ப்பான். என்னடா மடையா? சூத்திரன் குடித்த டம்ளரைத் தொட்டு எடுத்து விட்டாயே? என்றா னாம். அவ்வளவுதான்! வந்ததே கோபம் கைவல் யத்துக்கு, அந்தப் பார்ப்பான் கன்னத்தில் எச்சில் கையாலேயே ஒரு ப்ளார்! யாரடா சூத்திரன்? ன்ற தன்மானக் கேள்வி. சிறு கலகமாகி அதன்பின் அடங்கியத. சூத்திரன் என்றால், ஆத்திரம் கொண்டு அடி! என்பது இதுதான்.

Read more: http://viduthalai.in/page1/86312.html#ixzz3BEDxxin8

தமிழ் ஓவியா said...


அடிமைப்படக்கூடாது...



உழைத்தவன் உழைப்பின் பயனை அடையவேண்டுமானால் - இப்படி யாகம், சாத்திரம், வேதம், மோட்சம், கர்மம், முன்ஜென்மம், கடவுள் செயல் என்கின்ற பித்தலாட்டங்களுக்கு அடிமைப்படக்கூடாது. - விடுதலை, 26.2.1968

Read more: http://viduthalai.in/page1/86303.html#ixzz3BEEECZd9

தமிழ் ஓவியா said...


புத்தர் அறிவுரைகள்


இரக்கத்தோடும் உபகார சிந்தையோடும் இருப்பது மகிழ்ச்சியோடு இருப்பதாகும்.

------------------------

உலகத்தில் உள்ளும் புறமும் அறிவற்ற வஸ்து எதுவும் கிடையாது. உலகத்தின் பொருள்கள் யாவும் நிமிடத்திற்கு நிமிடம் மாறிக்கொண் டேயிருக்கின்றன. தோன்றியது அழியும்.

------------------------

கோவணாண்டி கோலமோ ஜடை முடியோ, அழுக்கேறிய உடம்போ, பட்டினி கிடத்தலோ, மண்மீது புரளுவதோ, மூச்சை அடக்கி உட்கார்ந்திருத்தலோ, ஆசை வெல்லாத ஒருவனை பரிசுத்தவானாக்கி விடாது.

------------------------

முட்டாள்களுடன் கூடி வாழ்வதை விட தனியாக வாழ்வதே மேல்.

------------------------

பேசாமல் சும்மா உட்கார்ந்திருப்பவனையும் திட்டுகிறார்கள். அதிகம் பேசுபவனையும் திட்டு கிறார்கள். திட்டப்படாத மனிதனே உலகத்தில் இல்லை. எப்பொழுதுமே திட்டப்படுபவனாக அல்லது எப்பொழுதுமே போற்றப்படுபவனாக ஒரு மனிதன் இருந்ததும் இல்லை; இருக்கவும் இல்லை; இருக்கப் போவதும் இல்லை.

Read more: http://viduthalai.in/page1/86308.html#ixzz3BEFJpIiy

தமிழ் ஓவியா said...

ஆள் இல்லை!

...... முன்பு புராண இதிகாசங்களைத் தேடிக் கண்டு பிடித்தார்கள். பின்பு படித்தவர்கள் கூறினால் விளங்கிக் கொள்வார்கள்.

.... போகிற போக்கைப் பார்த்தால் வீடு தேடிப் போய் சொன்னாலும் கேட்க ஆள் அகப்படாது எனத் தோன்றுகிறது.

- கிருபானந்தவாரியார்
(10.6.1979 ஆனந்த விகடன், பக்கம் 55)

Read more: http://viduthalai.in/page1/86308.html#ixzz3BEFRp6BP

தமிழ் ஓவியா said...


மருத்துவம் வென்றது

எனது நண்பர் குப்புசாமி என்பவர் ஒருநாள் காலைக் கடன் முடித்து, பக்கத்திலுள்ள சிற்றோடைக்குச் சென்று கால் கழுவ அமர்ந்திருக்கிறார். அப்போது அவரது மர்ம ஸ்தானத்தின் பக்கவாட்டில் ஏதோ சுருக்கென வலி எடுத்ததாம்.

அதைப் பொறுத்துக் கொண்டு வீடு வந்து சேர்ந்தார். ஆனால், சிறிது நேரத்தில் அவரது மர்ம ஸ்தானம் பெரிதாக வீங்க ஆரம்பித்து விட்டது. அதோடு காய்ச்சலும் அடித் திருக்கிறது. இதனை அறிந்த பெற்றோர், மந்திரவாதியிடம் அழைத்துச் சென்றனர். ஆனால், பயனில்லை.

அதன் பிறகு, எனது நண்பரின் உறவினர் ஒருவர் மீது சாமி வந்து, நீ வரும்போது முனீஸ்வரன் எதிர்ப்பட்டு விட்டது. அதனால்தான் இந்தத் தொல்லை. ஆகவே, பால் அபிஷேகமும், கோழியும், துணிமணியும் முனீஸ்வர வனுக்குக் கொடுத்தால் உனது நோய் நீங்கும் என்று கூறிற்றாம். பெற்றோர்களும் இதற்குச் சம்மதித்தனராம்.

இந்நிலையில் குப்புசாமி என்னை அழைத்து வரும்படி தனது மனைவியிடம் சொல்லிய னுப்பியிருந்தார். நானும் சென்று நண்பரைச் பார்த்து விவரம் கேட்டேன். நடந்ததை யெல்லாம் அவர் கூறினார். நான் அவரிடம், ஏனப்பா, இதெல்லாம் பொய் யென்று உனக்கு தெரியாதா? இனியுமா மந்திரத்தையும், மாயத் தையும் நம்பிக் கொண்டிருக் கிறாய்! உடனே மருத்துவ மனைக்கு போய் உடம்பைக் கவனி என்று அறிவுரை கூறினேன்.

அவரும், தனது பெற்றோர்கள் வேலை இதெல்லாம் என்று கூறி, மருத்துமவனைக்குச் செல்வதாக உறுதி கூறினார். அதன் பிறகு அவர் எழுதச் சொன்ன கடிதத்தை எழுதிக் கொடுத்து விட்டு வந்தேன். இரண்டு நாட்கள் கழித்து நண்பரை காணச் சென்றேன். அவர் உடல் நலம் தேறி நன்றாக இருந்தார்.

அவரிடம், இனியும் இப்படி நடக்காதே! மூடக் கருத்துக் களை விட்டொழி! தந்தை பெரியாரின் அறிவுரைகளை நீயும் உன் குடும்பத்தாரும் கடைப்பிடித்தால் இது போன்ற செயல்களைத் தடுக்கலாம் என்று கூறினேன். அவரும் புன்னகையோடு ஏற்றுக் கொண்டார்.

பெ. இராதாகிருஷ்ணன் (தி.க.), சென்னை -7

Read more: http://viduthalai.in/page1/86309.html#ixzz3BEFa4GNy

தமிழ் ஓவியா said...

தாய்மார்களுக்கு தந்தை பெரியார் அறிவுரை

எந்தப் பார்ப்பனத்தியாவது திருப்பதிக்குப் போய் மொட்டையடித்துக் கொண்டு வருகிறாளா? இப்போது தாலியறுத்தால் கூட அவர்கள் மொட்டையடித்துக் கொள்வதில்லையே! மொட்டை அடிக்கப்படும் என்று தெரிந்தால் அதற்கு முன்பே வீட்டை விட்டு யாருட னாவது ஓடிவிடுகிறார்களே! அப்படியிருக்க உங்கள் தலை மயிரைத்தானா சாமி கேட்கும்?

உங்கள் கணவன்மாரை காவடி தூக்கிச் செல்ல அனுமதிக்கிறீர்களே! எந்த பார்ப்பானாவது பழனியாண்டவனுக்குக் காவடி தூக்கிச் செல்வதைப் பார்த்திருக்கிறீர்களா? அய்ந்து புருஷன் போதாதென்று ஆறாவது புருஷனையும் விரும்பிய துரோபதியம் மாளைப்போய் கும்பிடுகிறீர்களே!

அவளுக்கு மாவிளக்கு வைக்கிறீர்களே! உங்களுக்கு இன்னும் அதிகப்படியான புருஷன் வேண்டும் என்று வரம் கேட்கவா அந்தப்படி செய்கிறீர்கள்?

திராவிடத் தாய்மார்களாகிய உங்களுக்கு அடுக்குமா இது?

விடுதலை (3.6.1976)
(பத்திரிகை சென்சார் காலத்தில் சர்வாதிகார ஆட்சியில் கத்தரித்து எறியப்பட்ட அய்யாவின் அறிவுரை. )

Read more: http://viduthalai.in/page1/86309.html#ixzz3BEFjWBIv

தமிழ் ஓவியா said...


விடை என்ன?


தமிழ்நாட்டுக் கல்விக் கடவுள் சரசுவதி என்றால், ஆங்கில நாட்டுக் கல்விக் கடவுள் யார்?

ஆத்திகக் கம்பனுக்கும், காளிதாசனுக்கும் நாவிலே அருள் பாலித்தது சரசுவதி என்றால், அகில உலகப் புகழ் பெற்ற நாத்திகத் தந்தை பெரியாருக்கும், புரட்சிக் கவிஞர் பாரதிதாசனுக்கும், அறிஞர் அண்ணாவுக்கும், நாவிலே அருள்பாலித்தது யார்?

சரசுவதி பூசை கொண்டாடாத மேலை நாடுகளில் - கடவுளையே குப்பை குழிக்கு தள்ளிய ரஷ்யாவில் நூற்றுக்கு நூறு பேரும் படித்திருக்க காரணம் என்ன? சரசுவதியை வணங்கியே கல்வி, அறிவு பெறலாம் என்றால் பள்ளிகளும், கல்லூரிகளும், பல்கலைக் கழகங்களும், ஆசிரியர்களும் தேவை இல்லை அல்லவா?

பெற்ற தந்தை பிரம்மனாலேயே பெண்டாளப்பட்ட சரசுவதியா நமக்குக் கல்விக் கடவுள்? அவள்தான் கடவுள் என்றால், அந்தக் கல்வி ஒழுக்கத்தைப் போதிக்குமா?

பெற்ற தந்தை பிரம்மனாலே பெண்டாளப்பட்ட சரசுவதி கல்விக் கடவுளா? அல்லது கலவிக் கடவுளா? சகலகலாவல்லி சரசுவதி என்றால், அவள் ரஷிய, சீன, கல்விக் கலையையும், கல்வி முறைகளை அறிந்தவளா?

நவராத்திரி! தமிழர் விழா என்பதற்கு ஆதாரமான இலக்கிச் சான்று உண்டா? தமிழர் மறை என்று பெருமையாக சொல்லப்படுகின்றன திருக்குறளிலாவது நவராத்திரிக்கு ஆதாரமுன்டா?

இந்துமதப் பண்டிகை நவராத்திரி என்றால், அது ஏன் வைணவ ஆலயங்களில் சிறப்பாக கொண்டாடப்பட வில்லை?

ஆயுத பூஜை கொண்டாடும் இந்து மதப் சைவ பக்த தமிழா! நீ இன்றுவரை கண்டுபிடித்து உலகிற்கும் அறிமுகப்படுத்திய ஆயுதம்தான் என்ன?

அணுக்குண்டையும், அய்ட்ரஜன் குண்டையும், ஆகாய விமானத்தையும் கண்டுபிடித்தவன் கொண்டாடாத ஆயுத பூஜை - அரசமரத்தையும், ஆலமரத்தையும் சுற்றுப வனுக்கு ஒரு கேடா? ஆயுதங்களைக் கண்டுபிடிப்பது மேல் நாட்டான்; பூசை மட்டும் நடத்துவது நாமா?

வி.எம்.கே.லிங்கன், குடந்தை
(15.8.1979-உண்மை)

Read more: http://viduthalai.in/page1/86311.html#ixzz3BEFs0oI7

தமிழ் ஓவியா said...

அண்ணன் மோடியின் அடுத்த ஜீ பூம்பா...


ஆப்.கி.பார் டிராமா சர்க்கார்

அண்ணன் மோடியின் அடுத்த ஜீ பூம்பா...


ஒலகத் தலவரா அவதாரம் எடுக்கற அடுத்த முயற்சியில நம்ம அண்ணன் நேபாளம் போனது எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும்... அங்க கோவிலுக்குப் போனாரு, ரோட்ல நடந்தாரு, அல்லாரையும் பாத்தாரு. இதெல்லாம் தாண்டி இன்னொரு சூப்பர் வேல செஞ்சாரு. அது என்னா? செண்டிமெண்டா அடிச்சாரு.

எம்.ஜி.ஆர் நடிச்ச நாளை நமதே படத்த ரீரிலிஸ் பண்ணாரு. பல வருசம் முன்னாடி ஜீத்பகதூர்னு ஒரு பையன் அப்பா, அம்மாவ பிரிஞ்சி இந்தியா வந்துட்டான்.

அவன அண்ணன் குஜராத்ல கண்டெடுத்து வளத்தாரு. அவனும் வளந்தான், அண்ணனும் வளந்தாரு. அவன் பெரிய பையன் ஆனான், அண்ணன் பிரைம் மினிஸ்டர் ஆனாரு.

அவன அவங்க குடும்பத்தோட சேத்து வைக்கனும்னே நேபாள் டூர் போட சொன்னாரு. நேபாளுக்கு ஜீத்பகதூரையும் கையோட கூப்பிட்டுக்கிட்டுப் போனாரு. பிரியா படத்து ரஜினி மாதிரி ரோடு ரோடா பாடிக்கிட்டே போனாரு. அவங்க குடும்பத்தக் கண்டு பிடிச்சாரு.

அவங்ககூட சேத்து வச்சி, கண்கலங்குனாரு. நாளை நமதே இந்த நாளும் நமதே பாட்டு ஓடுச்சு. கூடி நின்ன இந்தியப் பத்திரிக்க கண்ணெல்லாம் ஆறா ஓடுச்சு. ஆனா ஜீத்பகதூரு கலங்கவேயில்ல... ஏன்? அங்கதான் ஒரு டிவிஸ்ட். ஜீத்து, மோடி அண்ணனுக்கே தெரியாம திருட்டு லாரில போயி அவங்க குடுமபத்த 2012 ஆகஸ்ட் 23_லயே பாத்துட்டான். இத அவன் தன் மூஞ்சிபுத்தகத்ல (Facebookல) படமா போட்டுட்டான். இது அண்ணனுக்குத் தெரியாமலே இருந்துடுச்சி.

அதுக்கு முன்னாடி 2012 ஜூன் 17ஆம் தேதி ஜீத் போட்ட ஸ்டேடஸ்:

Hey Fri Gm
Bye bye India.

2012 ஜூன் 19ஆம் தேதி போட்ட ஸ்டேடஸ்:

Hey Fri Today is I m v happy
Bcos I m my home (Nepal)

இதுவும் வளமான குஜராத் கதயான்னு யாரும் கேக்கக் கூடாது. அது அல்லாம் அண்ணன் தூங்கும் போது நடந்தது. ஆனாலும் அண்ணன் கடம ஒணர்ச்சியோட ஜீத்பகதூர அவங்க குடும்பத்தோட சேத்து வச்சிட்டு ட்வீட்டும் போட்டுட்டாரு.

அப்ப நம்ம வேல... ம், பாடுங்க...

# நாளை நமதே, இந்த நாளும் நமத

- எஸ்.எஸ்.சிவசங்கர்

தமிழ் ஓவியா said...

உங்களுக்குத் தெரியுமா?


இராசாராம் மோகன்ராய் வேதங்களின் கருத்துகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தபோது, தங்களைத் தவிர வேறுயாரும் அதைப் படிக்கக் கூடாது என்று காரணம் காட்டி, பார்ப்பனர்கள் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?

தமிழ் ஓவியா said...

கல்கியின் பூணூல் வித்தை


என்னடா.. இது! கல்கிக்கு வந்த தமிழ்ப் பற்று! சமஸ்கிருத வாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துவிட்டாராம் ஜெயலலிதா. அந்தத் தியாகத்தை, போர்க்குணத்தைப் படம் போட்டுப் பெருமைப்படுகிறது கல்கி (3.8.2014). உங்க சோலையில இந்த மயிலையும் கொஞ்சம் ஆடவிடுங்க என்று மென்மையாக சமஸ்கிருத வாரத்தை நுழைத்து, வான்கோழியாகிய இந்தியைத் திணிக்கிறாராம்.

அதனால் தமிழ்ப்பூங்காவில் மோடி நுழைக்க வந்த இந்தியையும், சமஸ்கிருதத்தையும் அம்மையார் தடுக்கிறார்.

அதெல்லாஞ் சரி! அனை வருக்கும் தெரியும் என்பதால் ஆதரிக்க முடியாது என்ற நிலையில், இந்தியைத் திணிப்பு என்றும் வான்கோழி என்றும் பொதுவாக எதிர்ப்பது போல் காட்டிவிட்டு, அதனினும் விஷமான சமஸ்கிருதத்தை மயில் என்று சாங்கோபாங்கமாக உயர்த்திக் காட்டுகிற வித்தை அட..அட... இதுதாங் காணும் பூணூல் வித்தை!

- அன்பன்

தமிழ் ஓவியா said...

கடவுள் இருந்தால்....!


கடவுள் நம்பிக்கையாளர்கள் பலரும் நம்பும் கடவுளின் முக்குணங்கள், முத்தன்மைகள் - மனித சக்திக்கு மேற்பட்டதாக கூறப்படுவன.

(1) சர்வ சக்தி - எல்லாம் வல்லவன்.

(2) சர்வ வியாபி - எங்கும் நிறைந்த பரம்பொருள்.

(3) சர்வ தயாபரன் - கருணையே வடிவானவன்.

உள்ளபடியே அப்படிப்பட்ட தன்மைகள் அக்கடவுளர் - கடவுளச்சிகளுக்கு உள்ளனவா என்று எந்த பக்தராவது புத்திகொண்டு சிந்திக்கின்றனரா? ஆராய்கின்றனரா? இல்லையா?

வெறும் நம்பிக்கை அதுவும் குருட்டு நம்பிக்கைதானே.

அதனால்தான் பக்தி வந்தால் புத்தி போகும், புத்தி வந்தால் பக்தி போகும் என்றார் அனுபவரீதியான வகையில் அறிவு ஆசான் தந்தை பெரியார்!

அன்றாடம் அத்துணை மதநம்பிக்கையாளரும் கடவுளை வணங்கி, பிராத்தனை என்ற கையூட்டும் - லஞ்சமும் தரத் தவறுவதே இல்லை.

அப்படி இருந்தும் அன்றாட நிகழ்வுகள் பெரும்பாலான மக்களுக்குத் துன்பமும், இழப்பும், தொல்லையும் ஆகத்தானே உள்ளதே தவிர, மகிழத்தக்கதாக உள்ளதா?

கடவுளை நம்பாத, நாத்திகர்கள், பகுத்தறிவாளர்கள் மட்டும்தான் தொல்லைகளை, துன்பத்தை அனுபவிக்கின்றார்களா? இல்லையே. நம்பிக்கையாளர்களில் பெரும்பாலோர் இப்படி துன்பத் தீயில் வெந்து கருகுகின்றனரே.

உத்தரகாண்டில் யாத்திரைக்குப் போனவர்கள் அளவுக்கு அதிகமான மழை, வெள்ளம் மூலம் அடித்துச் செல்லப்பட்டவர்கள்,

மராத்திய மாநிலம் புனேயில் மலின் என்ற ஊரில் பழங்குடிமக்கள் வீடுகளோடு, நிலச்சரிகளில் புதையுண்டு பிணக்குவியல்களைத் தோண்டி எடுக்கும் அவலம் கண்றாவிக் காட்சி அல்லவா?

பீகாரில் நதி வெள்ளப் பெருக்கெடுத்ததோடு, பல்லாயிரவர் வீடிழந்து, வாழ்விழந்து நிற்கின்றனர்!

இஸ்ரேலில் - பாலஸ்தீனப் பச்சிளங் குழந்தைகள்மீதும் ஈவிரக்கமில்லா இஸ்ரேலின் குண்டுமழை,

சீனாவில் 3.8.2014இல் 6.8 ரிக்டர் அளவுக்கு கடும் பூகம்பம் - பல நூற்றுக்கணக்கில் மக்கள் பலி,

கோவில் தரிசனம் மற்றும் பல மத விழாக்களுக்குச் சென்று, நேர்த்திக்கடன், காணிக்கை தந்துவிட்டுத் திரும்புவோர் சாலை விபத்துகளில் குடும்பம் குடும்பமாகப் பலியாகும் கொடுமை!

பச்சிளம் சிறுமிகள் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாகி பிணமாகும், வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத சோகச் செய்திகள் நாள்தோறும் வருகின்றனவே.

கடவுள் சர்வசக்தி படைத்தவராக இருப்பின் தடுத்திருக்க வேண்டாமா?

கடவுள் சர்வ வியாபி - எங்கும் நிறைந்தவர் _ இப்படி நடப்பதை வேடிக்கை பார்த்து வாய்மூடியாக இருப்பாரா?

எல்லாவற்றையும்விட மேலாக கருணையே வடிவானவராக இருந்தால், தனது பிள்ளைகள், தன்னால் சிருஷ்டிக்கப்பட்டவர்கள் இப்படிக் கொத்துக் கொத்தாக கொள்ளைச்சாவு சாவுவதைக் கண்டு வாளா இருப்பாரா?

எண்ணிப் பாருங்கள்!

நாத்திகம் நன்னெறி என்பது அப்போது புரியும்.

கி.வீரமணி,
ஆசிரியர்.