Search This Blog

17.8.14

இதுதான் வால்மீகி இராமாயணம் - 19(இதிகாசங்கள் என்றும் புராணங்கள் என்றும்  மக்களிடையே உலவ விடுகிறார்கள். இவற்றிற்குத் தெய்வீக முத்திரைகள் குத்துகின்றனர் இவற்றைப் படித்தால், இவற்றின்படி ஒழுகினால் நல்லது நடக்கும் - நற்கதி கிடைக்கும் என்றெல்லாம் இன்றுவரை கூடப் பிரச்சாரம் செய்கிறார்கள். உண்மையில் அவை என்ன? இவற்றின் தன்மை என்ன? ஒழுக்கத்திற்கு இடம் இருக்கிறதா? பகுத்தறிவுக்கு வழி இருக்கிறது? ஒன்றும் இல்லை. வால்மீகி இராமாயணம் பற்றி சைவப் பெரும் புலவரான பண்டித இ.மு.சுப்பிரமணிய பிள்ளை  (சந்திரகேகரப் பாவலர்) குடிஅரசில் எழுதிய பகுதிகள் (நூலாகவும் வெளிவந்துள்ளன). இங்கே வாரம் இருமுறை வெளியிடப்படுகிறது. படியுங்கள் - பகுத்தறிந்து பாருங்கள் - தெளிவு பிறக்கும்.)


அயோத்தியா காண்டம்

இரண்டாம் அத்தியாயம் தொடர்ச்சி 


வால்மீகி இராமாயணத்தில் கைகேயி ஓரிடத்தி லேனும் மந்தரையைக் கடிந்து பேசிய தாகக் காணப்படவேயில்லை. அவளுடைய கணவனாகிய தசரதனைப் பலவாறு பாவி யெனவும் வஞ்சகனெனவும் தீயோனெனவும் மந்தரை மிக இகழ்ந்து பேசிய இடத்திலுங்கூட கைகேயி அவளு டைய பேச்சுகளில் ஒரு சிறிதும் கோபமுற்றவளாக வால்மீகி கூறவே இல்லை. அப்படியிருக்கக் கம்பரோ, கைகேயி மந்தரையை நோக்கி மிகவும் கெட்டவ ளென்றும், அவளுடைய நாக்கை அறுப்பதாகவும், இன்னும் பலவாறு கடுமையாகப் பேசியதாகவும் பல பாடல்கள் பாடுகிறார். நல்லவர்களைக் கெட்டவர்களா கவும், கெட்டவர்களை நல்லவர்களாகவும் மாற்றிப் பாடுகிறார் கம்பர்.
கடைசியாக மந்தரை கூற்றாகக் கம்பர் கூறுவன அழகாகவே உள்ளன. அவை வால்மீகி கூறாதவையே. அவை வருமாறு:- இராமன் பட்டம் பெற்றவுடன், தேசமெல்லாம் உன்மாற்றவட்காம். நீ அவளுக்கு அடிமையாவாய். பின் உன் உறவினர் இங்கு வந்து காண்பது உன் செல்வமோ? உன் மாற்றவள் செல்வமோ? சீதையின் தந்தை சனகன் உன் தந்தைக்குப் பகைவன். இராமன் முடிசூடியவுடனே உன் தந்தையை அவன் கொன்றுவிடுவான். உன் தந்தைக்கு இன்னும் பல பகைவருளர். இவ்வூர்ச்சேனை சென்று உதவாதுபோனால், உன் தந்தையை அவர்கள் அழித்துவிடுவார்கள். இராமன் பெறும் அரசு அவன் பிள்ளைகளுக்கும் அவனை அடுத்துள்ள தம்பியாகிய இலக்குமணனுக்குமே போகும். ஆதலால் உன் மகனைக் கெடுத்தொழித்தனை இதைக் கேட்ட மாத்திரத்திலே கைகேயி மனம் மாறியதாகக் கம்பர் கூறுகிறார்.
மேலே கண்டதில் சனகனுக்கும், கேகயனுக்கும் பகையென்ற செய்தியை வால்மீகி கூறவேயில்லை. இவையெல்லாம் கம்பர் கற்பனைகளே! பரதனை, இராமன் கொன்று விடுவான். ஆகையால் நீயும் கெடுவாய் என்று பலமுறையும் வால்மீகி கூறும் இம் முக்கியமான செய்தியைக் கம்பர் மறைத்தார். நிற்க; வால்மீகி கூறுகிறபடி ஓரிடத்திலும் கைகேயி கோபமுறா மைக்குக் காரணமென்ன? அவள் வெளுத்ததெல்லாம் பாலென நினைப்பவள். சூதுவாது தெரியாதவள். அதனாலன்றோ தசரதன் செய்த சூதை நெடுநாளாக உணராமலே காலந்தள்ளி வந்திருக்கிறாள். ஆனால் கைகேயி தன் கணவனைப்பற்றி இழித்துக்கூறியும் மந்தரையிடம் சினம் கொள்ளாதிருந்ததென்ன என்றால், அவளுக்குக் கொஞ்சம் அரசியல் ஆசையிருந்தது. அதனால் அவள் சினம் கொள்ளவில்லை. மேலும் பரபுரு ஷகமனத்தால் பிள்ளை பெற்றவள் தானே. இராமன் அவளிடம் மிகவும் நல்லவனாக நடந்து கொண்டி ருக்கிறபடியால், அவள் அவனைப்பற்றிய நல்லபிப் பிராயத்தை மாற்றிக் கொள்ளவும் முடியாமல் பலவாறு பேசிக் கடைசியாகப் பரதன் முடி சூட்டலுக்கிசைகிறாள். தசரதனைப் பற்றி மந்தரை இழித்துக் கூறியவற்றை யெல்லாம் கம்பர் மறைத்தார்.

மூன்றாம் அத்தியாயம்

பரதனுக்குப் பட்டம் கிடைக்க உபாயம் கூறக்கேட்ட மந்தரை மிகவும் மகிழ்ச்சியடைந்து, உபயம் என்னைக் கேட்கிறாயா? உனக்கு ஞாபகமில்லையா? இருந்தாலும் சொல்லுகிறேன் கேள் என்கிறாள். கைகேயி எழுந்து படுக்கையில் உட்கார்ந்தபடியே, பரதனுக்குப் பட்டம் கிடைக்க வேண்டும். இராமனுக்கு ஒரு நாளும் கிடைக்கக் கூடாது. உபாயம் சொல் என்றாள். மந்தரை, முன்னொரு காலத்தில் தேவாசுர யுத்தம் நடந்தபோது தோல்வியுற்ற தேவர்கள் தசரதனை உதவி செய்யும்படி வேண்டி னார்கள். அப்போது தசரதன் தன்னைச்சேர்ந்த மகரிஷிகளையும் உன்னையும் அழைத்துக்கொண்டு, தெற்கில் தண்டகாரணியத்தில் மீனக் கொடியுடைய சம்பரனென்ற மகாசூரன் அரசாளும் வைசயந்தபுரத்தை நோக்கிச் சென்றான். அவ்வசுரனோ மகா மாயாவி. தேவர்களால் வெல்ல முடியாதவன். இந்திரனுடன் அடிக்கடி போர்புரிந்து பகலில் காயம்பட்டவர்களை இரவில் தூங்கும்போது அசுரராற் கொல்விக்கிறவன். தசரதன் அவர்களுடன் கொடிய போர் செய்கையில், அசுரர்கள் அவனை அம்பாலும் வாளாலும் மிகவும் காயப்படுத்தினார்கள். அவன் மூர்ச்சையடைந்து அறிவு தப்பினான். அப்போது நீ தேரை வேறிடத்திற்கு ஓட்டிக் கொண்டு போய்ச் சைத்தியோப சாரஞ்செய்து உணர்வு வரச்செய்தாய். அசுரர்கள் அங்கேயும் வந்து அடிக்கடி அம்பெய்ய, அங்கிருந்தும் அவனை வேறிடத்திற்குக் கொண்டுபோய்ப் பாதுகாத்தாய். அவன் உனக்கு இரண்டு வரங்கள் கொடுக்க அவற்றை நீ சமயம் வாய்க்கும்போது கேட்கிறேனெனக் கூறினாய். அவற்றை இப்போது கேள். அவற்றால் இராமன் முடிசூட்டிழந்து காட்டுக்குப் பதினான்கு ஆண்டுகள் போகவும், பரதன் நாடாளவும் கேள். பதினான்காண்டுகளுக்குள் பரதன் குடிகளின் பிரீதியைப் பெற்று இராமனால் அசைக்கமுடியாத ஆட்சி யையடைவான். தசரதனிடம் வரம் கேட்கும் உபாயத் தையும் சொல்வேன் கேள். கோப அறையையடைந்து அலங்கோலமாகக் கிடக்கவேண்டும். அவன் உன்னிடம் மிகவும் மய்யலு டையவன். அதனால் உனக்காக நெருப்பிலும் விழுவான், உயிரையும் விடுவான். உன் அழகு அத்தகையது. அவனை வாக்குறுதி செய்யச் செய்து பின் வரங்களைச் சொல். இராமனை எப்படியாவது காட்டிற்கு அனுப்ப வேண்டும் என்று கூறினாள். கைகேயி அதைக்கேட்டு ஆவேசமடைந்து, உன்னைப்போல் அறிவுள்ளவர்களை இந்த உலகத்தில் கண்டதில்லை. என் எண்ணம் நிறை வேறினால் உனக்கு வேண்டிய பரிசுகள் தருவேன். உன்னைப்போலும் அழகும் அறிவும் உடையவர்களை நான் கண்டதேயில்லை என்று அவளைப் பலவாறு புகழ்ந்தாள். கூனி அவளைக்கோப அறைக்குப் போகத் தூண்டினாள்.

கைகேயி அவ்வாறே கோப அறையையடைந்து, தன் நகைகளையெல்லாம் கழற்றி எறிந்துவிட்டு அலங்கோல மாகப் படுத்துக்கொண்டு நான் நினைத்ததை முடிப்பேன். இராமனுக்கு முடிசூட்டினால் இங்கேயே உயிர்விடு வேன் என்றாள். மந்தரை மறுபடியும், எப்படியாவது பரதனுக்குப் பட்டம் கிடைக்கச் செய் என்றாள். தனக்குத் தெரியாமல் இவ்வளவு தந்திரமாக இராமனுக்கு முடிசூட்டத் தசரதன் முயன்றதை நினைக்கக் கைகேயி மிகவும் சினங்கொண்டவளாய், இராமன் காட்டிற்குப் போகவில்லையென்றால் நான் உயிர் வாழேன் என்று புகன்றாள். தான் நினைத்த காரியம் முடிந்துவிடுமென அறிந்த மந்தரை மகிழ்ச்சியடைந்தாள். இவ்வரலாற்றை ஆராய்வோம்.
மேலே கண்ட வரலாற்றில் மந்தரை தன் தலைவியின் நன்மையில் எவ்வளவு கவலையுடையவளாக இருந்தாளென்பது புலனாகிறது.
தலைவிக்கு நன்மையைத் தேடுவதில் கூனியைப் போன்ற சிறந்த வேலைக்காரர் அமைவது அருமையே. கூனி கடைசிவரை தன் தலைவியை விட்டுப் பிரியாமல் நின்று, வேண்டும் நன்மதிகளைக் கூறுகிறாள். இவ்வரலாற்றாலும் கூனிக்கேனும் கைகேயிக்கேனும் தசரதன் கேகய மன்னனிடம் கைகேயி மகனுக்கே (பரதனுக்கே) அரசைத் தருவதாகச் செய்து கொடுத்த சத்தியம் தெரியாதென்றே அறியக்கிடக் கின்றது. இவ்வளவுதூரம் சிரமப்பட்டு முயற்சி செய்கிறவளுக்கு அவ்வுண்மை வெளிப்படுமேல் இராமனுக்கு முடி சூட்டல் நின்றுவிடுமென அஞ்சுகிறான். ஒரு வேளை கைகேயியிடத்தில் அவன் முன்னரே கலந்து இவ்வேற் பாடுகள் செய்திருந்தானென்றால், இது சதியாலோ சனைக்கு அவள் இடங்கொடாமலிருந்தாலு மிருந்தி ருக்கலாம். நாமொன்று நினைக்கத் தெய்வமொன்று நினைக்கு மல்லவா? மறை வழிப்பட்ட பழமொழி தெய்வம் பறையறைந்தாங்கு ஓடிப்பறக்கும். ஆதலினாலே தசரதன் செய்த சூழ்ச்சியும் புத்திரத் துரோகமும் உலகறியப் பரவும் காலம் வந்துவிட்டபடியால், மந்தரை அதற்குக் காரணமாகி முன்வருகிறாள். உண்மை தெரியாமலே அவள் வேறு வகையாக முயன்றாலும், பின்னர்த் தசரதனுடைய சதியாலோசனை வெட்ட வெளிச்சமாகின்றது. தன்னை மறைத்து அரசன் செய்த சூதையறிந்த கைகேயி அவன்மீது அடக்க முடியாத சினமுறுகிறாள். நிற்க; இவ்வரலாற்றில் தேவாசுர யுத்தம் நடந்ததாகக் கேள்வியுறுகிறோம். தேவர்கள் அசுராகள் இவர்களைப் பற்றிய விரிவான ஆராய்ச்சியை இராவண னைப் பற்றிய இடம் வரும்போது நிகழ்த்துவோமென முன்னரே தாடகையைப்பற்றிய ஆராய்ச்சியில் கூறினோம். இருந்தாலும் இவ்விடத்தில் சம்பராசுர னுக்கும் இந்திரனுக்கும் நடந்த போரைப்பற்றிய குறிப்பு வருவதால், இரண்டொன்று அவர்களைப் பற்றிச் சுட்டுவது அவசியமாகிறது.

தேவாசுரப் போரென்பது ஆரியருக்கும் தமிழருக்கும் நடந்த போரையாம் என்பது இவ்வரலாற்றால் இனிது விளங்குகின்றது. தேவர்கள் சுராபானம் (கட்குடி) பண்ணியதால் சுரரெனப்படுவர். தமிழர் சுராபானம் பண்ணாமையால் அசுரரெனப்படுவர். ஆரியராகிய சுரரால் எழுதப்பெற்ற இராமாயணம் முதலிய நூல்களில் சுரராகிய ஆரிய மக்கள் மேலோ ரெனவும், அசுரராகிய தமிழ் மக்கள் முரடரெனவும் கூறப்பெறுகின்றனர். தமிழ் மக்கள் மிகவும் தீயோராக அந்நூலில் காட்டப்பெறுகின்றனர். இதன் வரலா றெல்லாம் பின்னர் இராவணனைப் பற்றி வருமிடத்து விரித்தாராய்வோம்.

சம்பரன் தமிழ்நாட்டையாண்ட பாண்டியன். அவன் பாண்டியனென்பது அவன் மீனக்கொடியையுடைய வனாகக் கூறப்படுவதால் விளங்கும். மீனக்கொடி பாண்டியருக்கே உரியது. பாண்டியர்கள் இந்திரனை மதியாதோரெனத் திருவிளையாடற் கதைகள் கூறுகின்றன. சம்பரன் இந்திரன் முதலிய தேவரை எதிர்த்து முறியடித்துப் பலவாறு வருத்த, அதனால் மெலிவடைந்த இந்திரன் தன்னையொத்த ஆரிய மன்னனாகிய தசர தனையடைந்து தனக்கு உதவி வேண்டுகிறான். அவனும் மிக மகிழ்ந்து கைகேயியையும் மகரிஷிகளையும் அழைத்துக்கொண்டு சம்பரனோடு சண்டைக்குப் போகிறான். மகரிஷிகளென்போர் பெண்டு பிள்ளை களோடு வாழ்ந்து வந்தவர்களாகவே காணப்படு கின்றனர். அவர்கள் அங்கங்கே அந்நிய நாடுகளிற் சென்று தங்கி நல்லவர்களைப் போலப்பாசாங்கு செய்து வாழ்ந்து உளவறிந்து வந்து தங்கள் ஆரிய மன்னர் களிடம் கூறித் தமிழ் மன்னரை வெல்லும்படி சூழ்ச்சிகள் சொல்லும் உளவர்களேயாவர் - ஆதலினாலேயே தசரதனும் அவ்வுளவர்களாகிய மகரிஷிகளையும் சண்டைக் கழைத்துச் சென்றானென்று வால்மீகி கூறுகிறார், இல்லையென்றால் இரும்படிக்கிற இடத்தில் ஈக்கு என்ன வேலை என்பதுபோல் சண்டையிடு மிடங்களில் தவம்செய்யும் ரிஷிகளுக்கு என்ன வேலையிருக்கும்?

போருக்குச் சென்ற தசரதன் உயிர் பிழைத்தது தம்பிரான் புண்ணியமாயிற்று. கைகேயி இரண்டு முறை அவனுடைய உயிரைப் பாதுகாக்கிறாள். சம்பர மன்னனுடைய தலைநகராகிய வைசயந்தபுரம் தண்டகாரணியத்துள்ளது - அது இதுவென அறிஞர் ஆராய்வாராக!


                               ----------------------"விடுதலை” 12-08-2014

29 comments:

தமிழ் ஓவியா said...

நான் தலை நிமிர்ந்து நிற்பது யாரால்?

இந்த மேடையிலே தலைநிமிர்ந்து நிற்கிறேன் -
தோளுயர்த்தி நிற்கிறேன் என்றால் அதற்கான முழுப் பொறுப்புதந்தை பெரியார் என்பதை மிகுந்த நன்றியோடு, உண்ர்ச்சியோ
டு தெரிவித்துக் கொள் கிறேன்.

திருமாவளவன் இப்படிப் பேசுகிறானே - உரிமை முழக்கமிடுகிறானே என்று சிலர் ஆத்திரப்படு கிறார்கள்.

நியாயமாக என்மீது ஆத்திரப்படுவதை விட என்னை தன்மான உணர்வோடுஉரத்தக் குரலில்பேச வைத்த தந்தை பெரியார் மீது ஆத்திரப் படவேண்டும்.

எனக்கு இந்தத் துணிவைத் தந்த தந்தை பெரியாரிடம் ஆத்திரப் படவேண்டும்.

துணிவிருந்தால் தந்தை பெரியாரை எதிர்த்துப் பேசுங்கள் பார்க்கலாம்.

ஒற்றை மனிதர் உருவாக்கிய புரட்சி
அந்த ஒற்றை மனிதர் உருவாக்கிய புரட்சி சாதாரணமானதல்ல!

டாக்டர் அம்பேத்கர் ஜாதியை எதிர்த்து, தீண்டாமையை எதிர்த்துப் பேசினார்.

போராடினார் என்றால் அதற்கொரு நியாயம் இருக்கிறது.

அவரே ஜாதிக் கொடுமையால் அவமதிக்கப் பட்டவர்.

அதற்காகப் போராட வேண்டிய அவசியம் ஏற்பட்டது.

ஆனால் தந்தை பெரியாருக்கு என்ன அவசியம் வந்தது தீண்டாமைக் கொடுமைக்கு ஆளானவரா?

கீழ் ஜாதி என்று தள்ளி வைக்கப்பட்டவரா?

இல்லையே! அவர் நினைத்திருந்தால் பார்ப்பனர் களின் தோளில் கை போட்டுக் கொண்டுசெல்லலாமே!

அந்தஸ்துள்ள குடும்பத்தில் பிறந்தவர்.

பொரு ளாதார வளமுள்ள குடும்பத்தில் பிறந்தவர்.

அவர் நினைத்திருந்தால் எப்படி எப்படியோ வாழ்ந்திருக்க முடியும்.

தான் வகித்த 29 பதவிகளையும் தூக்கி எறிந்துவிட்டு செல்வச் செழுமைகளை எல்லாம் உதறி எறிந்து ஒடுக்கப்பட்ட மக்களுக்காகத்தானே குரல் கொடுத்தார்?

அதற்கான பாதையைத்தானே தேர்ந்தெடுத்துக் கொண்டார்?

எத்தனை எத்தனை இன்னல்களை அதற்காக அவர் எதிர்கொள்ள நேரிட்டது?

அழுகின முட்டையால் அடிக்கவில்லையா?

எதற்காக அவர் அதனை ஏற்றுக் கொண்டார்?

யாருக்காகப் போராடினார்?

ஒட்டுமொத்த தமிழர் சமுதாயத்துக் குத்தானே வாழ்நாள் முழுவதும் போராடினார்.

பெரியாருக்கு ஈடு - இணை உண்டா?

எத்தனை அரசர்கள் தோன்றினார்கள்?

எத்தனை மகான்கள், மகாபுருஷர்கள் எல்லாம் வந்தார்கள்?

யாரும் ஜாதி இழிவைப் பற்றிக்கவலைப்பட வில்லையே.

பெரியார்தானே சிந்தித்தார்.

அவர் சிந்தித்துஎடுத்துச் சொன்னபிறகுதானே நமக்கு உணர்வு வந்தது?

பெரியாருக்கு முன்னால் இதே கருத்தைக்கூட சிலர் அங்கொன்றும், இங்கொன்று மாக எடுத்துச் சொல்லியிருக்கலாம்.

இயக்கம் கண்டது யார்?

அயோத்திதாசர் பேசி இருக்கிறார், எழுதி இருக்கிறார் - வைகுந்த சாமி சொல்லியிருக்கலாம்.

அய்யன் காளிகர் கூறியிருக்கலாம்.

ஆனால் அவர்கள் தனிப்பட்டவர்கள் சொன்ன கருத்துக்களே தவிர,

அவற்றை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல இயக்கம் நடத்தியவர் யார்?

களத்தில் நின்று போராடியவர் யார்?

தனக்குப் பின்னாலும் அந்தஇயக்கம் சிறப்பாக நடைபெறவேண்டும் என்ற ஏற்பாடுகளைச் செய்தவர் யார்?
தந்தை பெரியார்தானே.... நன்றி உணர்வு உள்ளவர்கள் வரவேற்பார்கள்.

நன்றி உணர்வு இல்லாதவர்கள் குறை கூறுவார்கள்.

அதுபற்றி நாம் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை.

[தோழர்திருமாஅவர்கள் எண்ணூரில் 25.12.2012 மாலை நடைபெற்ற தந்தை பெரியார் சிலை திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் பேசியது]

தமிழ் ஓவியா said...


மரியாதை இல்லை


பிறர் உழைப்பில் படாடோப வாழ்க்கை நடத்துவதும், அதிகப்படி யான பொருள்களுக்கு அதிபதியாய் இருப்பதும் கண்ணியமான பெருமை யான வாழ்க்கை என்று கருதப்படு கின்ற மூட நம்பிக்கை ஒழியவேண் டும். இதில் எத்தகைய ஒரு கவுரவமும், மரியாதையும் இல்லை.
(விடுதலை, _ 22.6.1973)

Read more: http://viduthalai.in/page1/85381.html#ixzz3B2JHISs0

தமிழ் ஓவியா said...


உலக தாய்ப்பால் வாரம் ஆகஸ்ட் 1 - 7


குழந்தைக்கு தாய்ப்பால் வழங்குவதன் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் முதல் வாரம், உலக தாய்ப்பால் வாரமாக கடைபிடிக்கப்படுகிறது. திரவ தங்கம் என்று அழைக்கப்படும் தாய்ப்பாலின் மகத்துவத்தை உணர்த்த யுனிசெப் மற்றும் உலக சுகாதார அமைப்பின் மூலமாக முன்னெடுத்துச் செல்லப்படுவது தாய்ப் பால் வார விழா. முதன்முதலில் 1992ஆம் ஆண்டு கடைபிடிக்கப்பட்ட தாய்ப்பால் வாரம் தற்போது 170 நாடுகளில் பிரபலமடைந்துள்ளது.

உடலளவிலும், மனதளவிலும் ஆரோக்கியமான குழந்தைகளை உருவாக்குவதே உலக தாய்ப்பால் வாரம் கொண்டாடுவதன் நோக்கம்.குழந்தை பிறந்த முதல் இரண்டு தினங்களில் சுரக்கும் தாய்ப்பாலில் குழந்தைக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியும் ஊட்டச்சத்தும் கிடைத்துவிடும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்

குழந்தைகளுக்கு தாய்ப்பால்தான் தரவேண்டும் என்று, குழந்தை பெற்ற பெண்களுக்கு அவர்களது தாய்மார்கள் எடுத்துசொல்வதுண்டு. தாய்ப்பாலில் அப்படி என்னதான் சத்துக்கள் உள்ளன. தாய்ப்பாலில் மட்டும்தான் பச்சிளம் குழந்தைக்குத் தேவையான கால்சியமும், பாஸ்பரசும் 2 : 1 என்கிற விகிதத்தில் உள்ளது. இதுதான் குழந்தைக்கு சரியான அளவுகோல். பசும்பாலில் பாஸ்பரஸ் அதிகமாக இருக்கும். ஆனால், அது கால்சியத்துடன் இணைந்து சால்டாக மாறிவிடும். எனவே பசும்பாலில் உள்ள கால்சியம் பச்சிளம் குழந்தைகளுக்குப் பயன்படாத கால்சியமாகவே இருக்கிறது.

அது போலத்தான் பசும்பாலில் உள்ள புரத மூலக்கூறுகள் இரட்டை தன்மை கொண்டவை இதை ஆங்கிலத்தில் டை புரோட்டின் அல்லது சியாசின்வே (ceasinwhey) எனக்கூறுவர் ஆனால் பச்சிளம் குழந்தைக்குத் தேவையானதோ ஒற்றை மூலக்கூறு கொண்ட whey
புரதம் தான். இந்த whey புரதம் தாய்ப்பாலில் மட்டும்தான் உள்ளது. பசும்பாலில் பச்சிளம் குழந்தைகளுக்கு தேவையான சத்துக்கள் எதுவும் சரிவிகிதத்தில் இல்லாததனால் பச்சிளம் குழந்தையின் குடலில் அலர்ஜி உண்டாகும். இந்த அலர்ஜி குழந்தைகளின் மலக்குடலை புண்ணாக்கும் வாய்ப்புள்ளது. தாய்ப்பாலால் குழந்தைக்கு மேற் சொன்ன பிரச்சனைகள் எதுவும் வராது. தாய்ப்பாலில் உள்ள நுண்சத்துக்கள் குழந்தைக்குத் தேவையான நோய் எதிர்ப்புச் சக்தியைத் தரும். தாய்ப்பால் குடிக்கும் குழந்தைக்கு வயிற்றுவலி வருவதற்கான வாய்ப்புக்கள் மிகமிக குறைவு. பசும்பால் குடிக்கும் குழந்தை களுக்கு வயிற்றுவலி வருவதற்கான வாய்ப்புகள் மிகமிக அதிகம்.

தாய்ப்பாலில் இல்லாத சத்து!

ஆம். ஒரு குறை உண்டு. தாய்ப்பாலில் வைட்டமின் D இல்லை என்பது இரண்டு ஆண்டிற்கு முன் நிரூபிக்கப் பட்ட ஆராய்ச்சி உண்மை. எனவே குழந்தை பிறந்த உடனே வெறும் வைட்டமின் D சொட்டு மருந்தும் தரவேண்டும். குழந்தை பெற்ற பெண்களும் இதை கேட்டு வாங்க வேண்டும். நமது நாட்டு தட்பவெப்ப நிலையில் தான் வெயில் அதிகமாயிற்றே. நமக்கு இயற்கையாகவே வைட்டமின் D கிடைக்குமே. என நீங்கள் நினைத்தால் அது தவறு. நமது கருந்தோல் அவ்வளவு விரைவில் வைட்டமின் D யை உள் வாங்கும் தன்மை வாய்ந்ததாக இல்லை என்பதுதான் உண்மை.

ஒரு தாய்க்கு வைட்டமின் D பற்றாக் குறையாக இருந்தால், குழந்தைக்கும் வைட்டமின் D பற்றாக்குறையாகத்தான் இருக்கும். எனவே குழந்தை பிறந்த உடனே வைட்டமின் Dசொட்டுமருந்தும் கொடுத்துப் பழக்கவேண்டும். முக்கியமாக தாய்ப்பால் மறக்கும் பருவத்தில் குழந்தைகளுக்கு எண்ணெய் மற்றும் காரம் தவிர்த்த எளிதில் செரி மானம் ஆகும் உணவு வகைகளை தரும்போது குழந்தைகளின் செரிமான சக்தி பெருகி அது எதிர்காலத்தில் எந்தவித உணவு வகையையும் எளிதில் செரிமானம் செய்யும் வகையில் உணவு மண்டலத்தை வலுவாக்கி விடுகிறது.

Read more: http://viduthalai.in/page1/85383.html#ixzz3B2JUaVyq

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

லட்சுமி விரதமாம்

இன்று லட்சுமி விரதமாம். இவள் தனத் தானிய செல்வங்களின் அதிபதியாம். மகாவிஷ் ணுவின் மனைவியான லட்சுமியின் அருள் வேண் டியும் தாலி பாக்கியம் நிலைக்கவும். இன்றைக் குப் பெண்கள் வரலட்சுமி விரதப் பூஜை நடத்து கிறார்களாம்.

ஆண்டுதோறும் இந்தப் பூஜையை நடத் திக் கொண்டு தானே இருக்கிறார்கள். தானிய விளைச்சல் ஓகோ என்றா இருக்கிறது? தமிழ் நாட்டை வறட்சி மாநில மாக அறிவிக்க வேண்டும் என்று வேண்டுகோள் வைக்கும் நிலைதானே?

சரி, இந்த லட்சுமிக் கடவுளைப்பற்றி காதம் பரி காவியம் என்ன கூறு கிறது? இமயமலைச் சாரலில் லட்சுமி கடவுள் தனித்திருந்தபோது ஒரு முனிபுங்கவரைக் காதலித்து ஒரு குழந் தையைப் பெற்றதற்காக, கணவனான விஷ்ணு சண்டாளப் பெண்ணாகப் பிறக்குமாறு சாபமிட் டான் என்று இருக்கிறதே இப்படிப்பட்ட ஒரு பெண் ணுக்காக வரலட்சுமி விரதம் ஒரு கேடா?

Read more: http://viduthalai.in/page1/85455.html#ixzz3B2K90G6h

தமிழ் ஓவியா said...


சங்கராச்சாரிகள் மீதான கொலை வழக்கில் மேல் முறையீடு செய்யக் கூடாதாம்! குடியரசு தலைவரிடம் சுப்பிரமணியசாமி மனு


சங்கராச்சாரிகள் மீதான கொலை வழக்கில் மேல் முறையீடு செய்யக் கூடாதாம்!

குடியரசு தலைவரிடம் சுப்பிரமணியசாமி மனு

கழகத் தோழர்களே, பொது மக்களே குடியரசு தலைவருக்கு மின்னஞ்சல் அனுப்புவீர்!

தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள அறிக்கை சங்கரராமன் கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட காஞ்சி சங்கராச்சாரியார் மீதான வழக்கில் மேல் முறையீடு செய்யக் கூடாது என்று சுப்பிரமணியசாமி குடியரசு தலைவரிடம் மனு கொடுத்துள்ளது தொடர்பாக திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: காஞ்சி சங்கரராமன் கொலை வழக்கில் குற்றஞ் சாட்டப்பட்ட காஞ்சிபுரம் சங்கராச்சாரியார்கள் இருவர் உள்ளிட்டவர்கள் புதுவை நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இதனை எதிர்த்து மேல்முறையீடு செய்ய புதுவை மாநில அரசு முடிவு செய்ய ஆளுநரின் அனுமதியும் பெற்றாகி விட்டது. சட்ட நடவடிக்கைகள் துவங்கி விட்டன.

யார் இந்த சுப்பிரமணியசாமி?

இந்தச் சூழ்நிலையில் சுப்பிரமணிய சாமி என்பவர் அதிகப் பிரசங்கித்தனமாக குடியரசு தலைவரிடம் மனு ஒன்றினைக் கொடுத்துள்ளார்.

குடியரசுத் தலைவர் இந்த விவகாரத்தில் தலையிட்டு புதுவை ஆளுநர் அளித்த அனுமதியைத் திரும்பப் பெறச் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.

பிஜேபியின் நிலைப்பாடு என்ன?

பிஜேபியைச் சேர்ந்தவராக இருக்கும் நிலையில், இந்தக் கருத்து பி.ஜே.பி.யின் கருத்தா? அல்லது பிஜேபி தலைமையிலான அரசின் கருத்தா? என்ற சந்தேகம் பொது மக்களுக்கு ஏற்படுகிறது. இதுகுறித்து பிஜேபி கட்சி தலைமையும், பிஜேபி ஆட்சித் தலைமையும்தான் தெரிவிக்க வேண்டும்.

ஒரு மாநில ஆட்சி முடிவெடுத்து, ஆளுநரும் அனுமதியளித்த நிலையில், குடியரசுத் தலைவர் தலையிட வேண்டும் என்று ஒருவர் சொல்லுவது, அரசமைப்புச் சட்டத்தில் மதிப்புறு நிலையில் வைக்கப்பட்டுள்ள குடியரசுத் தலைவரையே தேவையில்லாத சிக்கலில் மாட்ட வைக்கும் முயற்சி என்று கருதிடவும் இடம் இருக்கிறது.

ஏற்கெனவே சில சாமியார்கள் தண்டிக்கப்பட்டுள்ளனரே!

ஏற்கெனவே பிரேமானந்தா சாமியார் என்பவர் செய்த குற்றங்களுக்காக இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப் பட்டது நித்யானந்த சாமியும் செய்த குற்றங்களுக்காக அவர்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. கைதும் செய்யப்பட்டார்.

தமிழர்கள் வேறு வகையில் சிந்திக்க மாட்டார்களா?

இப்படிப்பட்ட ஒரு சூழலில் காஞ்சி சங்கராச்சாரியார் மீது கொலை குற்றம் உள்ளிட்ட வழக்கில் மட்டும் வேறு விதமாக நடந்து கொள்ள வேண்டும் என்று நினைப்பதும், அதற்குக் குடியரசு தலைவரின் அதிகாரச் செல்வாக்குப் பயன்படுத்தப்பட வேண்டும் என்று கோருவதும் தமிழ்நாட்டு மக்களிடத்தில் வேறுவிதமான எண்ணத்தை ஏற்படுத்தும் என்பதில் அய்யமில்லை.

அதிலும் குறிப்பாக சங்கரராமன் கொலை வழக்கில் மொத்தம் 177 சாட்சிகளில் 77 பேர் பிறழ்சாட்சி என்பது இதற்கு முன் எங்கும் கேள்விப்பட்டிராத ஒன்றே!

கொலை செய்யப்பட்ட சங்கரராமன் குடும்பத்தினரும் இந்த வழக்கில் மேல் முறையீடு தேவை என்பதை வலி யுறுத்தியுள்ளனர்.

இந்தச் சூழ்நிலையில் குடியரசு தலைவர் இதில் விலகியிருப்பது அவசியம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்?

குடியரசு தலைவருக்கு மின்னஞ்சல் அனுப்புக

கழகத் தோழர்களும் நீதியின்மீது கவலையுள்ள பெரு மக்களும் கீழ்க்கண்ட முகவரிக்கு மின் அஞ்சல் மூலம் கீழ்க்கண்ட வாசகத்தை அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

The President of India
Rashtrapati Bhawan
New Delhi

Honourable Sir,

The decision by Puducherry Government to go in for appeal against the acquittal of 24 persons including Kanchi Jeyendra Saraswathi and Vijayendra Saraswathi, two Sankaracharyas, in the Sankararaman murder case should be allowed to proceed without any delay. Any effort to stall the appeal process would give wrong impression in the minds of people of Tamilnadu and Puducherry that Chief Executive of this country viz. President is intervening in the judicial process.
The family of the slain Sankararaman through this appeal, are eagerly expecting justice as also the people of Tamilnadu. The murder was committed in the Varadarajasamy Temple premise.
We once again request your goodself to kindly resist any effort by vested interests in stopping this appeal process.

Email address: secy.president@rb.nic.in and usgrievance@rb.nic.in

கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்

சென்னை 8.8.2014

Read more: http://viduthalai.in/page1/85456.html#ixzz3B2KJ88oW

தமிழ் ஓவியா said...


கற்றுக் கொள்ள வேண்டியது


இதுவரை எந்தப் பார்ப்பனராவது பார்ப்பனரல்லாத கட்சிக்கு அனுகூலமாய்ப் பிரச்சாரம் செய்ய வந்திருக்கிறாரா? என்றால் ஒருவர்கூட இல்லையென்றுதான் சொல்ல வேண்டும். பார்ப்பனருக்கு வேறு எவ்வளவு கெட்ட குணம் இருந்தாலும், தங்கள் வகுப்பு விசயத்தில் எல்லாரும் ஒன்று சேருவது அவர்களிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய விசயம்.
(குடிஅரசு, 7.11.1926)

Read more: http://viduthalai.in/page1/85444.html#ixzz3B2KpAsAg

தமிழ் ஓவியா said...


அய்யோ இந்து மதமே!


இஸ்லாம், கிறிஸ்தவம் போல இந்து மதக் கோட்பாடுகள் ஒரு புத்தகத்தில் குறிக்கப்படவில்லை. அதற்கு சரித்திர ரீதியில் ஒரு அமைப் பாளரும் கிடையாது.

ஒன்றல்ல - பல கடவுள்களைக் கொண்டது. இந்துவாகி இருப்பதற்கு கடவுள் நம்பிக்கை இருக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை. இந்து மதம் என்று சொல்லப்படும் இதில் முரண்பாடுகள் செழித்து மலிந்து கிடக்கின்றன.

எல்லா இந்துக்களுக்கும் பொதுவான நம்பிக்கைகளோ அமைப்புகளோ ஒன்றும் கிடையாது.

இந்து மதத்திற்கு அடிப்படையான ஒவ்வொரு நம்பிக்கையும் - ஏதாவது ஒரு இந்து கூட்டத்தினரால் மறுத்து ஒதுக்கப்பட்டிருக்கின்றது.

- இன்டர்நேஷனல் என் சைக்கிளோபீடியா ஆஃப் சோசியல் சயின்ஸ்,பக்கம் 358, தொகுதி 6

Read more: http://viduthalai.in/page1/85458.html#ixzz3B2MUhfCR

தமிழ் ஓவியா said...

கயிலாயத்தில் ஒரு உரையாடல்!

பார்வதி: நாதா! நாடெங்கும் மூளைக் காய்ச்சலாமே! நாம் நம் பக்தர்களைப் பாதுகாக்கப் புறப்படலாமா?

பரமசிவன்: அடியே! அறிவிலி! பக்தர்களுக்கு எப்படியடி மூளைக் காய்ச் சல் வரும்! மூளை இருப்ப வர்களுக்கல்லவா அது வரும்!

Read more: http://viduthalai.in/page1/85458.html#ixzz3B2Mh1FWn

தமிழ் ஓவியா said...


இந்தியா ஏழை நாடா?


இந்த நாட்டின் செல்வத்தில் எவ்வளவு பெரிய பாகம் மதமும், கடவுளும் என்கின்ற பேரால் வேலை செய்யாத சோம்பேறிகள் அனுபவிக்கின்றார்கள் என்பதை நமது மூட ஜனங்கள் அறியாமலேயே இந்த நாடு தரித்திர நாடு என்று அழுகின்றார்கள்.

இந்த நாட்டில் உள்ள சன்னியாசிகள், துறவிகள், மதாச்சாரிகள் என்பவர்களுக்கு உள்ள சொத்துக்களும் வரும்படிகளும் வேறு யாருக்காவது இருக்கின்றதென்று யாராவது சொல்ல முடியுமா?

அவர்களுக்கு எதற்காக அவ்வளவு சொத்தும் வரும்படியும் வேண்டி இருக்கின்றதென்று எந்தப் பொரு ளாதார வாதியாவது கவனிக்கின்றானா? ஒரு சந்நியாசி கோடிக்கணக்கான ரூபாய் சொத் தும், வருசத்தில் லட்சக்கணக்கான ரூபாய் வரும் படியும் உடைய வனாக இருந் தால் அந்த நாடு ஏழை நாடு தரித் திர நாடு என்று யாராவது சொல்லமுடியுமா? என்று கேட்கின் றேன்.

ஒரு முழம் முக்கால் முழம் உயரமுள்ள குழவிக் கல்லுகளுக்கு நமது நாட்டில் எத்தனைக் கோடி ரூபாய்கள் சொத்தும், எத்தனை லட்சம் ரூபாய்கள் வரும்படியும் இருக்கின்றனவென்று பாருங்கள்.

இப்படி எத்தனை நூற்றுக்கணக்கான ஆயிரக் கணக்கான குழவிக்கல்லுகள் நமது நாட்டில் செல்வத் தோடு யானை, ஒட்டகம், குதிரை, பல்லக்கு, தேர், ரதம் முதலிய வாகனங்களோடு, பல பெண்டாட்டிகளோடு வாழ்கின்றன என்பவைகளை நேரில் பார்க்கும் ஒரு யோக்கியன் உண்மையில் நமது நாடு தரித்திரமுள்ள நாடு என்று சொல்ல வருவானா?

இதை எந்த பொருளாதார நிபுணனாவது கவனித்து நமது நாடு தரித்திரமுள்ள நாடு என்று சொல்லுகிறானா?

- தந்தை பெரியார், குடிஅரசு 14.9.1930

Read more: http://viduthalai.in/page1/85462.html#ixzz3B2MnPXWE

தமிழ் ஓவியா said...

தந்தை பெரியார் பொன்மொழி

இராம இராவணப் போரில் இராமனுக்கு அனுசரணையாக இனத் தையே காட்டிக் கொடுத்த விபீடணன், அனுமார், சுக்ரீவன், அங்கதன் ஆகிய வர்களைப் போல இன்றைக்கும், நமது இனத்தைப் பார்ப்பானுக்குக் காட்டிக் கொடுத்து வயிறு வளர்க்கவும், பதவி பெறவும் எண்ணுகின்றவர்கள் இருக் கின்றார்கள்.

Read more: http://viduthalai.in/page1/85462.html#ixzz3B2MtsMVk

தமிழ் ஓவியா said...

மத நம்பிக்கையே இல்லாமல் வாழும் மக்கள்

உலகின் ஒன்பது நாடுகளில் சமீபத்தில் நடந்த ஓர் ஆய்வில், அந்நாடுகளில் பெரும்பான்மையான மக்கள் மத நம்பிக்கையே இல்லாமல் வாழ்ந்து வருவது தெரிய வந்துள்ளது.

இதனால், அவற்றில் தற்போது இருக்கும் மதங்கள் விரைவில் காணாமல் போய்விடும் என்று அந்த ஆய்வு கூறுகிறது.

ஆஸ்திரேலியா, ஆஸ்திரியா, கனடா, செசன்ய குடியரசு, பின்லாந்து, அயர்லாந்து, நெதர்லாந்து, நியூசிலாந்து மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய ஒன்பது நாடுகளில் சமீபத்தில் ஓர் ஆய்வு நடத்தப்பட்டது.

இந்தநாடுகளில் கடந்த 100 ஆண்டுகளுக்குமேல் எடுக்கப்பட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டு, அங்குள்ள மக்களின் மத விவரங்கள் சேகரிக்கப்பட்டன. அதன்படி, இந்நாடுகளில் பெரும்பான்மையான மக்கள் மத நம்பிக்கை இல்லாமலேயே வாழந்து வருவது தெரிய வந்துள்ளது.

இப்படியே போனால் இன்னும் சில ஆண்டுகளில் அங்கு மதங்களே இல்லாமல் போய்விடும் என்று அந்த ஆய்வு எச்சரித்துள்ளது. அமெரிக்காவின் டல்லஸ் நகரில் நடந்த ஒரு கூட்டத்தில் இந்த ஆய்வின் முடிவு வெளியிடப்பட்டது. அதன்படி, மிகக் குறைந்தபட்சமாக நெதர்லாந்தில் 40 சதவிகிதம் பேரும், அதிகபட்சமாக செசன்ய குடியரசில் 60 சதவிகிதம் பேரும் மதநம்பிக்கை அற்றவர்களாக வாழ்ந்து வருகின்றனர்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த நிபுணர்கள் சிலர், இது ஒரு சாதாரண கணக்குதான். அதாவது, நாம் மேற்கொள்ளும் ஒரு காரியத்தால் ஏதாவது பயன் விளைந்தால் அக்காரியத்தையும் நாம் தொடர்ந்து செய்வோம்.

உதாரணமாக, ஸ்பானிய மொழி பேசுவதால் விளையும் பயன், பெரு நாட்டில் தற்போது வழக்கழிந்து வரும் கொச்சுவான் மொழியைப் பேசுவதால் விளையும் பயனைவிட மிக அதிகம்.

இதே கணக்கை மத நம்பிக்கையிலும் நீங்கள் வைத்துப் பார்க்கலாம் என்று தெரிவித்தனர்.

தினமலர், 27.3.2011, பக்கம் 12

Read more: http://viduthalai.in/page1/85462.html#ixzz3B2N00lMR

தமிழ் ஓவியா said...


இவர்களும் மூடர்கள்தானே!


வீரமாமுனிவர் எழுதிய பரமார்த்த குரு கதையில் ஒரு கதை வருகிறது. ஒரு குரு, அவருக்குத் துணையாக அய்ந்து சீடர்கள், ஒருநாள் குருவின் ஆடை கிழிந்து விட்டது.

குரு அந்த அய்ந்து சீடரையும் ஊசி ஒன்றினை வாங்கி வருமாறு அனுப்பினார். அய்ந்து சீடர்களும் ஊசி வாங்கச் சென்றனர். ஒரு கடையில் ஊசி ஒன்றினை வாங்கினர். ஆனால், எதிர்பார்த்தப்படி அவ்வளவு பெரிதாக இல்லை.

இவ்வளவு சிறிய பொருளை வாங்கவா அய்வரையும் அனுப்பினார் என்று அவர்களுக்குள் அய்யம். அதனால் ஒரு பனைமரம் ஒன்றினை வாங்கி அதன்மீது அந்த ஊசியை செருகி அய்வரும் தூக்கி வந்தனர்.

இக்கதை நம் ஊரில் நடக்கும் சம்பவம் ஒன்றினை நினைவூட்டுகிறது. நம் ஊரில் சாமி புறப்பாடு செய்வார்கள். அரை அடி அல்லது ஒரு அடி இருக்கும் அந்தச் சிலை. அந்த சிலையை ஒரு சிறுவன் கையில் பிடித்துக் கொண்டு ஊரைச் சுற்றி வரலாம். ஆனால் நடப்பது என்ன?

பல மரங்களை பாடைபோல் கட்டி அச்சிலையை அதன்மேல் வைத்து பத்து இருபது பேர் தூக்கிச் செல்வர். இதைப் பார்க்கும் போது பரமார்த்த குரு கதை சீடர்கள் ஊசி வாங்க வந்த கதை தான் ஞாபகத்துக்கு வருகிறது. அந்த மூடர்களுக்கும் இந்த மூடர்களுக்கும், என்ன வேறுபாடு?

தகவல்: கோ.இராமச்சந்திரன், அருந்தவபுரம்

Read more: http://viduthalai.in/page1/85464.html#ixzz3B2N6droE

தமிழ் ஓவியா said...

அறிஞர்களின் அறிவுரைகள்

மனித சமுதாயம் தவிர மற்றபடி மிருகம், பட்சி, பூச்சி, ஜந்து முதலியவைகளில் வேறு எந்தப் பெண் ஜீவனாவது, ஆண்களுக்காகவே இருக்கிறோம் நாம் என்ற கருத் துடன் - நடையுடன் இருக்கிறதா என்று பாருங்கள். இது என்ன நியாயம்?

- தந்தை பெரியார்

இந்து மதத்தில் எனக்கு அறவே நம்பிக்கை இல்லை; ஏனெனில் அயோக்கியத்தனம் என்பது எனக் குப் பிடிக்கவே பிடிக்காது!

- டாக்டர் அம்பேத்கர்

பைபிள் ஒரு பெண்ணால் எழுதப்படவில்லையே! ஆதலால்தான் அதில் பெண்கள் அவமானம் அடைய வேண்டிய விஷயங்கள் நிரம்பிக் கிடக்கின்றன!

- இங்கர்சால்

மதம் என்பது பிறருக்கு உழைத்து வறுமைப்பட்ட மக்களை தலை எடுக்கவிடாமல் அழுத்தி வைக்க ஏற்பட்ட சாதனங்களில் முக்கியமான ஒன்றாகும்.

- லெனின்

உலகில் உள்ள ஒவ்வொரு குழந்தையும் நாத்திகவாதி யாகப் பிறக்கிறது. பிறருடைய போதனையினாலும் தயாரிப்பினாலுமே தெய்வ நம்பிக்கை ஏற்படுகிறது.
- சார்லஸ் பிராட்லா

ஒரு புழுவைக் கூட படைக்கச் சக்தியற்ற மனிதன் கணக்கில்லா கடவுளரைப் படைத்துக் கொண்டே இருக்கிறான்.
- மான்டெயின்

Read more: http://viduthalai.in/page1/85464.html#ixzz3B2NE0Byl

தமிழ் ஓவியா said...இன்றைய ஆன்மிகம்?

அம்மை

ஆடி வந்து விட்டாலே ஆன்மீக விதிகளைச் சொல்லிக் கொண்டு பெண்கள் அதிக அளவில் ஆலயங்களிலும் தோழியர் இல்லங்களிலும் நடமாடு வதைக் காணலாம். கூழ் வார்த்தல் எனப்படுகிற முக்கிய நிகழ்ச்சியும் பூஜையும் எல்லா அம்மன் கோவில்களிலும் நடை பெறும். இதற்கு ஒரு புராணச் செய்தி உள்ளது. ஒரு சமயம் கார்த்த வீர் யன், ஜமதக்கினி முனிவர் மீது பகை உணர்வு கொண் டிருந்தான். அவனது மகன்கள் இருவர் முனி வரைக் கொன்று விட் டனர். கணவன் இறந்த துக்கம் தாங்க முடியாத ரேணுகாதேவி தீயை உண்டாக்கி அதில் விழுந்து விட்டாள். இதைக் கண்டு வருந்திய இந்திரன், வருண பக வானை அழைத்து மழையை பெய்விக்கும் படி கூறினான். மூட்டிய தீயில் விழுந்த ரேணு காவை மழை வந்து நனைத்துவிட வெற்று உடலோடு இருந்தவள் அருகிலிருந்த வேப்பமர இலைகளால் தன் உடலை மூடிக் கொண்டாள்.

வயிற்றுப் பசி ஏற்பட்ட போது அருகிலிருந்த கிராம மக்களிடம் உணவு கேட்டாள். அப்போது அவர்கள் மகரிஷி மனை வியான நீங்கள், எமது உணவை சாப்பிட வேண்டாம் என்று கூறி, பச்சரிசி மாவு, வரகு, வெல்லம், பானகம், இளநீர், காய், கனிகளைக் கொடுத்தனர். அவற்றைக் கொண்டு கூழ் தயாரித்துச் சாப் பிட்டுத் தன் பசியைத் தீர்த்துக் கொண்டாள் ரேணுகாதேவி.

அச்சமயம் சிவபெரு மான் அவள் முன் தோன்றி, சக்தியின் அம்ச மாக இந்தப் புவியில் அவரித்த நீ பூமியில் பாவங்களைக் களைந்து மனிதர்களுக்கு ஏற்படும் தீ நோய்களைக் கட்டுப் படுத்துக. உனக்கு ஏற் பட்ட அம்மைக் கொப் புளங்கள் உன் பக்தர் களுக்கு வரும் போது, உடனே நீங்கிட உன் வேப்பிலையே கண் கண்ட மருந்து, பச்சரிசி மாவு பானகம், வெல்லம், இளநீர், கூழ் படைக்கும் போது.. நீ மாரிதேவியாக அருள் காத்து அவர் களுக்கு வந்த நோய் களை நீக்குவாயாக என் றார். எனவே தான் மாரித் தாயின் சன்னதிகளில் கூழ் படைக்கிறார்களாம்.

அம்மை வருவது ஒருவகை கிருமியால், அது தடுக்கப்பட்டது அம்மைத் தடுப்பூசியால்; இதில் எங்கு வந்தாள் ரேணுகாதேவி?

அம்மைக்குக் கார ணம் கடவுளா? கிருமியா? ஆன்மிகவாதிகளுக்கு நோய் வந்தால் கோயி லுக்குச் செல்வார்களா? மருத்துவரிடம் செல் வார்களா? சிந்திப்பீர்!

Read more: http://viduthalai.in/page1/85490.html#ixzz3B2NqgMMt

தமிழ் ஓவியா said...

கோயிலில் தங்கக் குவியல்

குட்டி மாநிலமான இமா சலப் பிரதேசத்தில் 29 கோயில் களில் 400 கிலோ தங்கம், 15,800 கிலோ வெள்ளிக் கட்டிகள் தூங்குகின்றனவாம்! (இவற்றை எடுத்து மக்கள் நலனுக்குப் பயன்படுத்தக் கூடாதா?)

Read more: http://viduthalai.in/page1/85499.html#ixzz3B2OA3a6D

தமிழ் ஓவியா said...


அழித்தாக வேண்டும்


மக்களைச் சுயமரியாதை இல்லாமல் செய்து மிருகங்களாக்கி, நாய், பன்றிகளைவிட இழிவாய் நடத்த ஆதாரமாய் இருக்கும் மதம் எது வானாலும் அதை அழித்தாக வேண்டும்.
(குடிஅரசு, 18.12.1927)

Read more: http://viduthalai.in/page1/85500.html#ixzz3B2OXnJ8e

தமிழ் ஓவியா said...

சமஸ்கிருத வாரக் கொண்டாட்டம் ஜனநாயக விரோதம்!

- சுப. வீரபாண்டியன்

அரசின் நிதி ஒதுக்கீடு ஆண்டு தமிழ் சமஸ்கிருத மேம்பாட்டுக்கு மேம்பாட்டுக்கு 2008-09 4.47 கோடி 72.10 கோடி
2009-10 8.61 கோடி 99.18 கோடி 2010-11 10.16 கோடி 108.75 கோ

சமஸ்கிருத வாரம் கொண்டாடுவதில் என்ன தவறு என்று கேட்கிறார், ஆர். நடராஜன் (தி இந்து 07.08.2014). ஒரு பன்மைச் சமூகமான, பல மொழிகள் பேசப்படுகின்ற இந்தியாவில், சமஸ்கிருதத்துக்கு மட்டும் வாரம் கொண்டாடுவது தவறு என்றே குறிப்பிடுகிறோம். 120 கோடி மக்களின் வரிப்பணத்தில், ஒரு மொழியை மட்டுமே உயர்த்திப் பிடிப்பது தவறு என்பதை மனச்சான்று உள்ளவர்களால் உணர முடியும். தமிழ், சமஸ்கிருதம் இரண்டுமே செம் மொழிகள். ஆனால், நிதி ஒதுக்கீட்டில், மலைக்கும் மடுவுக்குமான வேறுபாடு நிலவுவது ஏன்? 03.08.2011 அன்று நாடாளு மன்றத்தில், மனித வள மேம்பாட்டுத் துறையின் இணை அமைச்சர், தந்துள்ள புள்ளிவிவரம் கீழே:

அரசின் நிதி ஒதுக்கீடு

ஆண்டு தமிழ் மேம்பாட்டுக்கு சமஸ்கிருத மேம்பாட்டுக்கு

2008-09 4.47 கோடி 72.10 கோடி

2009-10 8.61 கோடி 99.18 கோடி

2010-11 10.16 கோடி 108.75 கோடி

மேற்காணும் நிதிஒதுக்கீடு, காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் செய்யப்பட்டது. முன்னதாக, வாஜ்பாய் ஆட்சிக் காலத் திலும், இப்போது மோடியின் ஆட்சிக் காலத்திலும் நிலை இதேதான்! இந்த உண்மையைப் பற்றி எந்தக் கவலையும் கொள்ளாத கட்டுரையா சிரியர், தமிழ் வாழ்கஎன எழுதி வைக்கப் பட்டுள்ள பெயர்ப் பலகையைக் கண்டு சினம்கொள்வது வேடிக்கை! நம்மைப் பொறுத்தமட்டில் சமஸ் கிருதம், இந்திக்கு மட்டும் அல்ல; உலகில் எந்த மொழிக்கும் நாம் எதிரிகள் அல்லர். நாம் பேசுவதெல்லாம், இந்திய மொழி களுக்கு இடையிலான சமத்துவம் குறித்தே. சமஸ்கிருத வாரம் கொண்டாடும் மத்திய அரசே, தமிழுக்கும் வங்க மொழிக் கும் வாரம் எப்போது? அரசமைப்புச் சட்டத்தின் 8-வது அட்டவணையில் உள்ள 22 மொழிகளுக்கும் வாரங்கள் எப்போது? இந்தியாவில் சமஸ்கிருதத் துக்கு மட்டும் 12 பல்கலைக்கழகங்கள் உள்ளனவே, மற்ற மொழிகளுக்கான பல்கலைக்கழகங்கள் எங்கே? இந்த அடிப்படையில் இன்னும் சில உண்மை களையும் நாம் பகிர்ந்துகொள்ள வேண் டியுள்ளது. சமஸ்கிருதம் என்பது வட்டார மொழிகள் என்று ஏற்றுக்கொள்ளப்பட்ட 22 மொழிகளில் ஒன்று என்பதைத் தவிர, அம்மொழிக்குச் சட்டத்தில் வேறு எந்தத் தனிச் சிறப்பும் வழங்கப்படவில்லை. மேலும், சமஸ்கிருதம் எந்த ஒரு வட்டாரத் திலும் பேசப்படவில்லை என்னும் உண் மையையும் இங்கே பேசியாக வேண்டும். 1961-ம் ஆண்டு இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, சமஸ் கிருதம் பேசுகிறவர்களின் எண்ணிக்கை 2,544 மட்டுமே. 1991-ல் அது 49,000 ஆக உயர்ந்ததாகக் காட்டப்பட்டது. 2011-ம் ஆண்டுக் கணக்கெடுப்பில் அந்த எண் ணிக்கை 15,000-க்கும் குறைவானதாக ஆகியுள்ளது. ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள 22 மொழிகளில், 15-க்கும் மேற்பட்ட மொழிகள், கோடிக் கணக்கான மக்களால் பேசப்படுகின்றன.

காஷ்மீரி, சந்தாலி போன்ற மொழிகள் லட்சக்கணக்கா னோரால் பேசப்படுகின்றன. ஆயிரக் கணக்கானவர்களால் மட்டும் பேசப்படும் ஒரே மொழி சமஸ்கிருதம் மட்டுமே! அவ்வளவு குறைவான மக்களால் பேசப்படும் ஒரு மொழிக்கு, 120 கோடி மக்களின் வரிப்பணத்தைச் செலவிடுவது என்ன நியாயம்? ஏனைய எல்லா மொழி களையும் புறக்கணித்துவிட்டு, இந்தி, சமஸ்கிருதம் ஆகிய இரண்டு மொழி களுக்கு மட்டும் கோடிக் கணக்கில் நம் வரிப்பணத்தைக் கொட்டி மத்திய அரசு இப்படி வாரம்கொண்டாடுவது ஜனநாயக விரோதம் இல்லையா? சுப. வீரபாண்டியன், பேராசிரியர், திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர். தொடர்புக்கு: தீணீஸ்மீமீ11ரீனீணீவீறீ.நீஷீனீ நன்றி: தமிழ் இந்து ஆகஸ்டு 8, 2014

Read more: http://viduthalai.in/page1/85502.html#ixzz3B2Ojotx1

தமிழ் ஓவியா said...


காந்தியார்


திரு. காந்தியார் சிறையில் மூன்று வேலைகள் செய்கிறார். அவற்றுள் ஒன்று தக்ளியில் நூல் நூற்பது. மற்றொன்று பகவத் கீதையை ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பது. வேறொன்று இந்த இரண்டும் செய்து மீதி இருக்கும் நேரத்தில் ராமநாம பஜனை செய்வது.

ஆகவே அவரது பகுத்தறிவுக்கு நாம் வேறு உதாரணம் காட்ட வேண்டிய தில்லையென்றே நினைக்கின்றோம். இம் மூன்று காரியங்களும் இந்தியாவின் பொது வாழ்க்கையையும் முன்னேற்றத்தையும் முன்னுக்குக் கொண்டு போகுமா? பின்னுக்குக் கொண்டு போகுமா வென்பதை யோசிக்கத் தக்கது.

திரு. காந்தியிடம் குருட்டுப் பக்தியுள்ளவர்களுக்கு நாம் இப்படிக் கேட்பது சற்று கஷ்டமாக இருக்கலாம். தக்ளியில் நூல் நூற்பது எதை உத்தேசித்து என்று இதுவரை யாராவது தெரிந்தார்களா? தக்ளிநூல் வெள் ளைக்கார ஆட்சியின் கொடுமையையும் இந்தியாவின் பொருளாதார கொள்ளையையும் என்ன செய்து விடக்கூடும் என்பது நமக்கு விளங்கவில்லை.

என்ன சொன்னாலும் தட்டிச் சொல்லாமல் கேட்பதற்குச் சில மக்கள் இருக்கின்றார்கள் என்பதைத் தவிர மற்றபடி அதில் என்ன உண்மை இருக்கின்றது. இரண்டாவதாக பகவத்கீதைக்கு ஆங்கில மொழி பெயர்ப்பு வேலை. இதுமுன் ஒரு தடவை டாக்டர் பெசன்டம்மையால் செய்தாய் விட்டது.

இரண்டாவதாக திரு திலகரால் ஒரு தடவை கீதா ரகசியம் என்பதாக ஒரு மொழி பெயர்ப்பும் செய்தாய் விட்டது. இப்போது திரு. காந்தியும் இதையே ஆரம்பித்து விட்டார். கீதையின் தத்துவம் என்ன? அதன் பயனென்ன? என்பதைப் பற்றிய உண்மை யாராவது தெரிந்து அதை மதிக்கின்றார்களா?

கீதையை ஒரு மனிதன் ஒப்புக் கொள்ளுவதானால் முதலாவதாக பாரதக் கதையை ஒப்புக் கொள்ள வேண்டும்.

பிறகு கிருஷ்ணனையும், அவனது செய்கைகளையும், அவனையே கடவுளாகவும் ஒப்புக் கொள்ள வேண்டும்.

இம்மூன்றிலும் சந்தேக முள்ளவர்கள் கீதையைப் பகவான் வாக்காகக் கொள்ள முடியாது. இது ஒரு புறமிருக்க அதிலுள்ள விஷயங்கள் வாழ்க்கைக்குப் பொருத்த மானதாகவோ அல்லது அனுபவத்திற்குச் சாத்தியமான தாகவோ இருக்கின்றதா? நிற்க மூன்றாவது காரியமாக பஜனை செய்து கொண்டி ருக்கிறாராம்.

பஜனை என்பது புராணங்களில் உள்ள கடவுள்களைப் புராணக் கதைகளைச் சொல்லிக் கொண்டோ நினைத்துக் கொண்டோ இருப்பதாகும்.

ஆகவே இம்மூன்று காரியங்களும் எவ்வளவு பகுத்தறிவும் பொது நல நன்மையுமான காரியம் என்பதை முடிவு செய்யும் விஷயம் வாசகர்களுக்கே விட்டுவிடு கின்றோம்.

- குடிஅரசு - துணைத்தலையங்கம் - 27.07.1930

Read more: http://viduthalai.in/page1/85536.html#ixzz3B2PJyYqr

தமிழ் ஓவியா said...


சுயமரியாதைத் திருமணம்

பெண்கள் முன்னேற்றத்தில் கவலை உள்ளவர்கள் பெண்களைப் படிக்கவைக்கும் முன் இந்தக் கழுத்துக் கயிற்றைத் (தாலியை) அறுத்தெறியும் வேலையையே முக்கியமாய் செய்யவேண்டுமென்று சொல்லுவேன். நிற்க, இதுவரை மணமக்களுக்கு ஆசீர்வாதமோ வாழ்த்தோ என்பது மணமக்கள் நிறைய அதாவது 16 பிள்ளைகள் பெற்ற வேண்டுமென்று சொல்லுவார்கள்.

ஆனால் நான் மணமக்களுக்குச் சொல்லு வதென்ன வென்றால் அவர்கள் தயவு செய்து பிள்ளைகள் பெறக்கூடாது என்பதும், மிக்க அவசியமென்று தோன்றினால் ஒன்று அல்லது இரண்டுக்கு மேல் கூடாது என்றும் அதுவும் இன்னும் அய்ந்து ஆறு வருடம் பொறுத்துத்தான் பெற வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளுகின்றேன்.

அன்றியும் அப்படிப் பெறும் குழந்தைகளையும் தாய்மார்கள் குரங்குக் குட்டிகள்போல் சதா தூக்கிக் கொண்டு திரிந்து போகின்ற இடங் களுக்கெல்லாம் அழைத்துப் போய் அழ வைத்துக் கொண்டு கூட்டமும் நடவாமல் தங்களுக்கும் திருப்தியில் லாமல் சபையோருக்கும் வெறுப்புத் தோன்றும் படியாய் செய்யாமல் குழந்தைகளை ஆயம்மாள் வைத்து வளர்க்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

அவைகளுக்கு ஒழுங்கும் அவசி யமான கட்டுப்பாடும் பழக்கிக் கொடுக்க வேண்டும். இந்தக் கூட்டத் தில் நான் பேசமுடியாதபடி எத்த னைக் குழந்தைகள் அழுகின்றனர் பாருங்கள். அவற்றின் தாயார் முகங்கள் எவ்வளவு வாட்டத்துடன் வெட்கப் படுகின்றது பாருங்கள்.

அந்தத் தாய்மாரும் தகப்பன்மாரும் இந்தக் கூட்டத்தில் ஒருவரையொருவர் பார்த்து வெறுப்பதைத் தவிர அவர் களுக்கு இங்கு வேறு வேலையே இல்லாமல் இருக்கின்றது. இன்பமும் அன்பும் என்பது சுதந்திரத்தோடு இருக்க வேண்டுமே அல்லாது நிபந்தனையோடும் தனக்கு இஷ்டமில்லாத சௌகரிய மில்லாத கஷ்டத்தைச் சகித்துக் கொண்டு இருப்பதாய் இருக்கவே முடியாது.

ஆகவே இப்போதைய குழந்தை இன்பம் என்பது ஒருக்காலமும் உண்மையான இன்பமாகாது. ஆகையால் அவைகளை மாற்றிவிட வேண்டும். தவிர அதிக நகை போடாமலும் தாலி கட்டாமலும் மூடச் சடங்குகள் இல்லாமலும் மாத்திரம் நடைபெற்ற திருமணம் சுயமரியாதைத் திருமணமாகி விடாது.

பெண்ணின் பெற்றோர் இப்பெண்ணுக்குத் தங்கள் சொத்தில் ஒரு பாகம் பங்கிட்டுக் கொடுக்க வேண்டும். புருஷர்களைப் போலவே பெண்களுக்கும் சொத்துரிமை உண்டு; தொழில் உரிமை உண்டு, என்கின்ற கொள்கை ஏற்படாவிட்டால் எப்படி அவர்கள் சுயமரியாதை உடையவர்களாவார்கள்? ஆகையால் அவர்களுக்குச் சொத்துரிமையும் அவசியமானதாகும்.

தவிர பெண்களுக்கு இப்போது பொது நல சேவை என்னவென்றால் எப்படியாவது ஒவ்வொரு விதவையையும் ஒவ்வொரு புருஷனுடன் வாழச் செய்ய வேண்டும். அதுவே அவர்கள் இப்போது செய்ய வேண்டியது.

தவிர பெண்களும் புருஷர் களைப் போலவே தினமுமோ அல்லது வாரத்திற்கு ஒன்று இரண்டு நாளோ ஒரு பொது இடத்தில் கூடி மகிழ்ச்சியாய் பேசி விளையாட வேண்டும். பத்திரிகைகளைப் படிக்க வேண் டும். படிக்காத பெண்களுக்குப் படித்தவர்கள் படித்துக் காட்ட வேண்டும்.

வீட்டு வேலை செய்வதுதான் தங்கள் கடமை என்பதை மறந்து விட வேண்டும். புருஷனுக்குத் தலைவியாய் இருப்பதும் குடும்பத்துக்கு எஜமானியாய் இருப்பதும் தங்கள் கடமை என்று நினைத்து அதற்குத் தகுந்தபடி நடந்து கொள்ள வேண்டும். இந்த உணர்ச்சியோடேயே பெண்மக்களை வளர்த்து அவர்களுக்குத் தக்க பயிற்சி கொடுக்க வேண்டும்.

- குடிஅரசு - சொற்பொழிவு - 13.07.1930

Read more: http://viduthalai.in/page1/85538.html#ixzz3B2PSiVQI

தமிழ் ஓவியா said...

தந்தை பெரியார் பொன்மொழி

பொருளாதாரத்தில் சரிபண்ணி விட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்று பேசுகிறார்களே, பொருளாதாரத்தில் எவ்வளவுதான் உயர்ந்தவர்களாக ஆனாலும் கூடச் சூத்திரன் சூத்திரன் தானே! பறையன் பறையன்தானே!

Read more: http://viduthalai.in/page1/85538.html#ixzz3B2PZwHaU

தமிழ் ஓவியா said...

வருணாசிரமத் தர்மத்தின் மூலமாகத்தான் நமது நாட்டில் தீண்டாமைக் கொள்கை அமலில் இருந்து வருகிறதேயொழிய, வருணாசிரமம் இல்லாவிட்டால் தீண்டாமைக் கொள்கை பரவ மார்க்கமே கிடையாது. வருணாசிரமத் தர்மம் என்கிற ஓர் உடல் இல்லாவிட்டால் தீண்டாமை என்கிற உயிருக்கு ஆட்டம் இல்லை.

Read more: http://viduthalai.in/page1/85538.html#ixzz3B2PfoMdt

தமிழ் ஓவியா said...


ஒரு யோசனை


சென்ற மே மாதம் 25 ஆம் தேதியின் மாலை 6 மலர் 4 இதழில் ஒரு யோசனை என்னும் தலைப்பின் கீழ் குடி அரசு பத்திரிகையை எட்டு பக்கங்கள் குறைத்து சந்தாத் தொகை வருஷத்துக்கு மூன்று ரூபாயாக யிருப்பதை இரண்டு ரூபாயாக ஆக்கலாம் என்று கருதியிருப்பதை வெளிப்படுத்தி வாசகர்களின் அபிப்பிராயத்தையறிய ஆசைப்பட்டிருப்பதை வெளியிட்டிருந்தோம்.

அவற்றிற்கு வந்த பல அபிப்பிராயங் களில் சுமார் பத்து பேர்களேதான் அதற்கு சம்மதம் கொடுத்திருக் கிறார்கள். சுமார் 300க்கு மேற்பட்ட வாசகர்கள் பக்கங்களை எவ்வித காரணங் கொண்டும் குறைக்கக் கூடாதென்றும், சந்தா மூன்று ரூபாயாக இருப்பதைப்பற்றி கவலை இல்லையென்றும் தெரிவித்து வேறு சில யோசனைகளும் சொல்லி இருக்கிறார்கள். நிற்க, மலாய் நாட்டுச் சந்தாதாரர்கள், கண்டிப்பாகப் பக்கங்களை குறைக்கக் கூடாது என்றும் சௌகரியப் பட்டால் அதிகப்படுத்தும் படியும் தெரிவித்திருக்கிறார்கள்.

ஆகவே வாசகர்களின் பெரும்பான் மையோர்களுடைய அபிப்ராயம் மாறுபாடாயிருப்பதால் இது சமயம் அதாவது தற்காலம் குடிஅரசு பத்திரிக்கையில் பக்கங் களையாவது சந்தாவையாவது மாற்றுவது என்கின்ற விஷயத்தை நிறுத்தி வைத்திருக்கிறோமென்பதைத் தெரியப்படுத்திக் கொள்ளுகிறோம்.

- குடிஅரசு - துணைத்தலையங்கம் - 06.07.1930

Read more: http://viduthalai.in/page1/85537.html#ixzz3B2PltWeW

தமிழ் ஓவியா said...

கதர்

கதர் பிரச்சாரத்தின் பலனால் வேஷக்காரர்கள் டெம் பரரியாய் கதர் கட்ட ஆரம்பித்து எப்போதும் வழக்கமாய் கதர் கட்டி வந்தவர்களுக்கும் கதர் கிடைக்க வழி இல்லாமல் போய் வேறு துணி கட்ட நிர்பந்தப்படுத்தி விட்டது. இது ஒரு புறமிருக்க கதர் வியாபாரிகள் இந்த சமயத்தில் அடிக்கின்ற கொள்ளைக்கு அளவில்லை.

துணியோ சாணித்துணிக்கும் உதவாது. விலையோ டக்காமசிலினுக்கு மேல் விற்கப்படுகின்றது. பஞ்சு விலை கண்டி1.க்கு 320 ரூபாயிலிருக்கும் போதும் நூற்புக் கூலியும் நெசவுக் கூலியும் அரிசி ரூ. 1 க்கு இரண்டரை பட்டணம் படி விற்றுக் கொண்டும் இருந்த போது போட்ட விகிதப்படியே இப்போதும் விற்கின்றார்கள்.

இப்போது பஞ்சு பாரம் 150 முதல் 160ரூ க்குள் மிக்க சவுதமாக இருக்கின்றது. அரிசி ரூ. 4 பட்டணம் படிக்கு மேலாகவே விற்கின்றது.

520 ராத்தல் கொண்ட பாரம் பஞ்சு 160 ரூ. விலையானால் பவுன் ஒன்றுக்கு 8 அணாவே பஞ்சு விலை அடங்கும்.

10 கிராம் உள்ள 50 இஞ்சு பீசு 3 ராத்தல் அல்லது மூன்றேகால் ராத்தல் எடை இருக்கும். இந்த மூன்றேகால் ராத்தலுக்குக் கிரயம் ரூ 1 - 10 - 0 நூற்பு கூலி ரூ 1. நெசவு கூலி 1 - 14 ஆக 10 கஜத்திற்கு ரூ 4 - 8 - 0 ஆகும். சிலவும் லாபமும் 5 அணா சேர்த்தால் 4 - 14 - 0 க்கு விற்கவேண்டியது நியாய மாகும்.

இப்போது 10 கஜம் 6 ரூபாயிக்கு மேலாகவே விற்கப் படுகின்றது. ஈரோட்டில் 6-8-0க்கும் கூட கிடைப்பதில்லை. ஆகவே தேசிய கிளர்ச்சியின் பயனாய் பல வியாபாரிகள் இன்சால் வென்டாகவும் பல வியாபாரிகள் கொள்ளையடிக்க வும்தான் வழியேற் படுவதைத் தவிர மற்றபடி உண்மையான பலன் ஒன்றையும் ஏழைகள் அனுபவித்ததாகத் தெரியவில்லை,

- குடிஅரசு - துணைத்தலையங்கம் - 27.07.1930

Read more: http://viduthalai.in/page1/85537.html#ixzz3B2Pu7EBs

தமிழ் ஓவியா said...


விக்ரஹம்


ஏடு நடத்தும் பார்ப் பனர்கள் ஒன்றை மறக் காமல் செய்வார்கள். அது வேறு ஒன்றும் இல்லை. அவர்களின் லோகக் குருவான சங்கராச்சாரியார் படத்தைப் போடுவார்கள். அவாளின் அருள்வாக்கு களை வெளியிடுவார்கள்.

அதுபோல்தான் கல்கி (10.8.2014) மறைந்த காஞ்சி சங்கராச்சாரியார் சந்திர சேகரேந்திர சரஸ்வதியா ரின் அருள்வாக்கு ஒன்றை வெளியிட்டு மகிழ்ந்துள்ளது.

அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகியோர் பாடிய தேவார ஓலைச் சுவடி களை தில்லை நடராஜன் கோயிலில் ஓர் அறையில் போட்டுப் பூட்டி வைத்து விட்டனர் தீட்சிதர்கள்.

சிதம்பரம் சிற்றம் பலத்திலே ஓதுவார் ஆறு முகசாமி திருவாசகப் பாடல்களைப் பாடியபொ ழுது இப்பொழுதுதான் தில்லை தீட்சிதர்கள் தடுத் தனர், அடித்தனர் என்று கருதிட வேண்டாம்! அந்தக் காலத்திலேயே அவை தமிழில் உள்ளன என்ற துவேஷப் புயலால் அவற்றை வெளியிலேயே விடக் கூடாது என்ற கெட்ட எண்ணத்தால் அவற்றை ஓர் அறையில் போட்டுப் பூட்டினர் என் பதை நினைவில் கொள்ள வேண்டும்.

அந்த ஓலைச் சுவடி களை தீட்சிதர்களிடமி ருந்து மீட்க ராஜராஜ சோழன் நம்பியாண்டார் நம்பியுடன் தில்லை நட ராஜன் கோயிலுக்குச் செல்கிறான்.

தில்லை வாழ் கோயில் தீட்சதர்களோ மன்ன வனே வந்து விட்டான்; மரியாதையாக தேவார ஓலைச் சுவடிகளை கொடுத்து விட வேண்டி யதுதான் என்று நினைக்க வில்லை; மாறாக தேவாரம் பண்ணிய அந்த சாட்சாத் மூவரும் நேரில் வந்து கேட் கட்டும்; அப்பொழுதுதான் தருவோம் என்று ஆணவ மாகச் சொற்களை வாரி இறைத்தனர்.

இராஜராஜன் என்ன செய்தான்? அப்பர், சம் பந்தர், சுந்தரர் உருவப் பொம்மைகளை (விக்ர ஹங்களை) கொண்டு வந்து காட்டி, அந்த ஓலைச் சுவடிகளைத் தருமாறு வேண்டினான்; அப்பொ ழுதும் தீட்சிதர்கள் அசைந்து கொடுக்கவில்லை. இவை சிலைகள்தானே? இதனை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? என்று வினவிய நேரத்தில் ராஜராஜன் அப்படியானால் நடராஜப் பெருமானும் சிலையல் லவோ? என்ற வினாவைத் திருப்பிப் போட்டான்.

அதற்கு மேலும் தடை செய்தால்.. வந்தவன் ராஜா ராஜன் ஆயிற்றே! கெஞ்சி னால் மிஞ்சுவதும், மிஞ் சினால் கெஞ்சுவதும்தான் பார்ப்பனர்களின் நிலை! நிலைமையைப் புரிந்து கொண்டு அந்த ஓலைச் சுவடிகள் குவிந்து கிடந்த அறையைத் திறந்தனர். கரையான் புற்று மூடிக் கிடந்தது. பெரும்பாலா னவை அழிந்தும் போய் விட்டன!

சங்கராச்சாரியார் இது பற்றி என்ன சொல்கிறார்? கல்கி கூறுகிறது: ராஜராஜன் கொண்டு வந்தது விக்ர ஹம்தான் என்றாலும் ப்ராண பிரதிஷ்டை ஆன படியால் அது ப்ராண னுள்ள மூர்த்திகளே என்ப தால் தேவாரத்தை தீட்சி தர்களிடமிருந்து மீட்க முடிந்தது என்று கதை விடுகிறார். எப்படி இருக்கிறது? தீட்சிதர்களைக் காப்பாற்ற வேண்டும் அல்லவா!

- மயிலாடன்

Read more: http://viduthalai.in/page1/85616.html#ixzz3B2QDyySF

தமிழ் ஓவியா said...


பெரிதாக்குகிறார்கள்


தண்ணீரில் வீழ்ந்து உயிருக்கு மன்றாடுபவன் ஒரு புல் மிதந்து வந்தாலும் அதைப் பிடித்துக் கொண்டு கரையேற நினைப்பது போல், இன்று பார்ப்பனரும், அவர்கள் கூட்டாளிகளும் பதவி ஆசையால் அற்பக் காரியங்களையும் பெரிதாக்குகிறார்கள்.
(விடுதலை, 12.7.1972)

Read more: http://viduthalai.in/page1/85652.html#ixzz3B2RJWkyA

தமிழ் ஓவியா said...


தகவல் பெறும் உரிமை சட்டம்


அங்கும் இங்கும் அலையாமல் இலகுவாக இணையதளத்திலேயே தகவல் பெறும் உரிமைச் சட்டம் மூலம் அமைச்சர்களிடம் தகவல் கேட்க முடியும். 37 துறைகளுக்கு மட்டுமே தற்போது விண்ணப்பம் செய்ய முடியும்.

கீழே உள்ள லிங்க்அய் கிளிக் செய்து

https://rtionline.gov.in õ¼‹ Website-™ "Select Ministry/Department/Apex body"
என்பதன் கீழ் உங்களுக்கு தேவையான துறை களை தேர்வு செய்து RTI இல் நேரடியாக விண்ணப்பிக்கலாம்.

செலுத்த வேண்டிய கட்டணம் ரூ.10அய் ஏதாவது ஒரு வங்கியின் வழியாக (INTERNET TRANSACTION) செய்யலாம்.

Read more: http://viduthalai.in/page1/85661.html#ixzz3B2Rd4Vyc

தமிழ் ஓவியா said...

குளிர்காலத்தில் பக்கவாதம், மாரடைப்புக்கு வாய்ப்பு அதிகம்


சாதாரண நேரங்களைக் காட்டிலும் குளிர் காலங்களில் மாரடைப்பு, பக்கவாதம் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில், வெப்பத்துடன் கூடிய தட்பவெப்ப நிலையே அதிக காலங்கள் நீடிக்கிறது.

ஆனால், குளிர்காலம் வரும்போது இந்தியர்களின் உடல் தட்பவெப்ப நிலைக்கு ஏற்றவாறு மாறும்போது நோய்கள் பாதிக்கும் அபாயங்கள் இருந்து வருகின்றன. ஆனால், இதற்கான காரணிகள் குறித்து ஏராளமானவர்களுக்கு தெரிய வாய்ப்புகள் இல்லை.

பொதுவாக குளிர்காலங்களில் மனித உடலில் உள்ள ரத்தக்குழாய்கள் குளுமை காரணமாக சுருங்கிவிடும். இதனால் இதயம் அதிக செயல்பட வேண்டிய கட்டாயத் திற்கு தள்ளப்படும்.

குளிர்காலத்தில் காற்றில் உள்ள பிராண வாயுவின் அளவு, குறைந்து காணப்படும். இதனால் ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்கள், தட்டை அணுக்கள் மற்றும் பைபர்நோஜன் மூலக்கூறு ஆகியவை அதிகரிக்கும். இதனால் மற்ற காலங்களைக் காட்டிலும் குளிர்காலத்தில் மனித உடலில் உள்ள கொலஸ்ட்ராலும் அதிகரிக்கிறது.

இதனால் வழக்கத்திற்கு மாறாக ரத்தம் உறையத்தொடங்கி, மூளை மற்றும் இதயத்திற்கு செல்லும் ரத்த ஓட்டம் குறையும்.

ரத்தக்குழாயும் சுருங்கி, ரத்த ஓட்டமும் குறைவதன் விளைவாக மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஆகிய பாதிப்புகள் ஏற்படுகின்றன. இ

ந்தியாவில் மலைப்பிரதேசங் களில் வசிப்பவர்களுக்கு மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு மற்ற பிரதேசங்களில் வசிப்பவர்களை காட்டிலும் 50 சதவீதம் அதிகம் உள்ளது.

இதை எப்படி நாம் தெரிந்துகொள்வது என்ற சந்தேகம் எழலாம். குளிர்காலத்தில் மார்பில் அழுத்தம் ஏற்படுவது போன்ற உணர்வு ஏற்பட்டால், அதுதான் ரத்த ஓட்டம் குறைந்ததற்கான முதல் அறிகுறி.

குளிர்காலத்தில் ரத்தத்தின் அடர்த்தி அதிகரிப்பதால், இதயத்துடிப்பு அதிகரித்து, ரத்தக்கொதிப்பு ஏற்படும். இது போன்ற பாதிப்பு வயதானவர்களுக்கு அதிகம் ஏற்படும்.

மேலும் புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கும் இந்த பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. மனித உடலில் உள்ள வெப்பம் 80 பாரன்ஹீட்டுக்கு குறையும்போது விளைவுகள் விபரீதமாக இருக்கும். உடல் நடுக்கம் தொடங்கி, மயக்கநிலை, மாரடைப்பு, பக்கவாதம் ஆகியவை ஏற்படும்.

Read more: http://viduthalai.in/page1/85645.html#ixzz3B2SE96ZO

தமிழ் ஓவியா said...


பீட்ரூட்டின் மருத்துவப் பயன்கள்


அழகிய நிறமும் நிறைய சத்துக்களும் கொண்ட காய் பீட்ரூட் இதனுடைய நிறத்திற்காகவே இதனை அனைவரும் விரும்பி உண்ணு கின்றனர். பீட்ரூட்டில் உள்ள கார்போஹைட்ரேட்ஸ் சர்க்கரை துகள்களாக இருப்பதால் இது விரைவில் செரிமானமாகி நம் ரத்தத்துடன் கலந்து விடுகிறது.

பீட்ரூட்டில் உள்ள இரும்புச்சத்து நம் உடலில், புதியதாக இரத்த அணுக்கள் உருவாகத் துணை புரிகிறது. பச்சைக் காய்கறிகள், கீரைகள், பழங்கள், பேரீச்சம் பழம், அத்திப் பழம் ஆகியவற்றை அதிக அளவு உண்டும், இரத்தத்தின் அளவு அதிகரிக்காமல் இருக்கும் பட்சத்தில் பீட்ரூட்டை வாரத்திற்கு நான்கு நாட்கள் உண்டால் நல்ல பலன் கிடைக் கும். சமையல் செய்து சாப்பிடுவதுடன் பச்சையாகவும் சாப்பிடலாம்.

கல்லீரல் கோளாறுகளுக்கும் பீட்ரூட் ஒரு சிறந்த டானிக். பித்தம் அதிகமாகி அடிக்கடி பித்த வாந்தி எடுப்ப வர்களுக்கு பீட்ரூட் ஒரு சிறந்த டானிக். பீட்ரூட் கீரையை யும் மற்ற கீரைகள் போல் சமையல் செய்து சாப்பிட அல்சர், மஞ்சள் காமாலை போன்ற நோய்கள் சரியாகும்.

பல மாதங்களாக மலச் சிக்கலினால் துன்பப்படு பவர்களும், மூலக் கோளாறினால் துன்பப்படுபவர்களும் பீட்ரூட் சாறை தண்ணீருடன் கலந்து அரை டம்ளர், இரவு படுக்கைக்கு முன் குடிக்கவேண்டும். பீட்ரூட்டை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொண்டால் சிறுநீரகத்தில் கற்கள் உருவாவதைத் தடுக்கலாம்.

தோலில் ஏற்படும் அரிப்பு, எரிச்சல் போன்றவற்றிற்கு இரண்டு பங்கு பீட்ரூட் ஜூசுடன் ஒரு பங்கு தண்ணீரைக் கலந்து தடவினால் பிரச்சினையிலிருந்து விடுபடலாம்.

புற்றுநோயினால் துன்பப்பட்டுக் கொண்டிருக்கும் நோயாளிகள், ஊட்டி பீட்ரூட் ஜூஸ் தினமும் ஒரு டம்ளர் பருகி வந்தால் புற்றுநோய் பரவுவது தடுக்கப்படும். ஆரம்ப நிலையிலுள்ள புற்றுநோயைக் குணமாக்கும் வல்லமை படைத்தது பீட்ரூட். பீட்ரூட் பலருக்குப் பிடிக்காது, சிலருக்கு மட்டுமே பிடிக்கும். குழந்தைகளில் பலருக்குப் பிடிக்கும்.

இது பலருக்கும் சுவை சம்பந்தப்பட்ட ஒன்றாகவே தெரிகிறது. ஆனால், இதற்கென்று தனிப்பட்ட மருத்துவப் பயன்கள் உண்டு. பீட்ரூட்டின் முக்கியப் பயன்கள்: புற்றுநோய் பரவு வதை தடுக்கும்.

* மலச்சிக்கலைப் போக்கும்.

* பித்தத்தைக் குறைக்கும்

* அரிப்பு - எரிச்சலைத் தவிர்க்கும்.

* சிறுநீரகத்தில் சேர்ந்துள்ள தேவையற்றவைகளைப் போக்கிவிடும்.

Read more: http://viduthalai.in/page1/85650.html#ixzz3B2Sbrpiw

தமிழ் ஓவியா said...

ஓர் அறிவியல் தகவல் எரிநட்சத்திரப்பொலிவு (ஆகஸ்ட் 10-15)


நகர ஓட்டத்தில் நாம் இயற்கையின் அழகை காணத்தவறிவிடுகிறோம். நேற்றைய முழுநிலவை நாம் அனைவரும் பார்த்திருப்போம், சாதாரணமாகத் தெரியும் முழு நிலவைவிட இந்த நிலவும் 3 அல்லது நான்கு மடங்கு அதிக ஒளியுடன் மிகவும் பெரிதாகத் தோன்றியது மற்றுமொரு அழகு மிகவும் அதிக அளவில் எரிநட்சத்திரங்கள் தென்படும்.

உண்மையில் இவை நமது பூமியின் வளி மண்டலத்தில் புகும் எரிகற்கள் அல்ல; இவை சுமார் 300 ஒளியாண்டுகளுக்கு அப்பால் நடைபெறும் அற்புத வானியல் நிகழ்வாகும்.

பெர்சியஸ் விண்மீன் குழுமத்தில் உள்ள காமா (சிட்டா பெரிசி) என்ற விண்மீனின் வட்டப்பாதையில் நுழையும் விண்கற்கள்! அந்த விண்மீனின் ஈர்ப்பு விசையால் வேகமாக ஒன்றை ஒன்று மோதிக்கொண்டு செல்லும் அந்த நேரத்தில் ஏற்படும் ஒளிக்கீற்றுகள் வானம் முழுவதும் நிறைந்து காணப்படும்.

இயற்கையில் இந்த அழகிய தோற்றம் ஆகஸ்ட் மாதம் 10 ஆம் தேதியில் இருந்து 14 அல்லது 15- ஆம் தேதிவரை வானத்தின் வட பகுதியின் உச்சிப்பகுதியில் Taurus விண்மீன் குழுமத்தின் கீழாக உள்ள பெரிசியஸ் விண்மீன் குழுமத்தின் அருகில் காணப்படும்;

தற்போது தமிழகம் முழுவதும் மேகமூட்டமாக இருப்பதால் இந்த அழகைக் காணமுடியாது, இருப்பினும் மேகமூட்டம் இல்லாத இரவுகளில் இந்த இயற்கையின் அழகை கண்டு இரசிக்கலாம்.

Read more: http://viduthalai.in/page1/85685.html#ixzz3B2SoBHhl