Search This Blog

9.8.14

இதுதான் வால்மீகி இராமாயணம் - 18

இதுதான் வால்மீகி இராமாயணம்

இதுதான் வால்மீகி இராமாயணம்

(இதிகாசங்கள் என்றும் புராணங்கள் என்றும்  மக்களிடையே உலவ விடுகிறார்கள். இவற்றிற்குத் தெய்வீக முத்திரைகள் குத்துகின்றனர் இவற்றைப் படித்தால், இவற்றின்படி ஒழுகினால் நல்லது நடக்கும் - நற்கதி கிடைக்கும் என்றெல்லாம் இன்றுவரை கூடப் பிரச்சாரம் செய்கிறார்கள். உண்மையில் அவை என்ன? இவற்றின் தன்மை என்ன? ஒழுக்கத்திற்கு இடம் இருக்கிறதா? பகுத்தறிவுக்கு வழி இருக்கிறது? ஒன்றும் இல்லை. வால்மீகி இராமாயணம் பற்றி சைவப் பெரும் புலவரான பண்டித இ.மு.சுப்பிரமணிய பிள்ளை  (சந்திரகேகரப் பாவலர்) குடிஅரசில் எழுதிய பகுதிகள் (நூலாகவும் வெளிவந்துள்ளன). இங்கே வாரம் இருமுறை வெளியிடப்படுகிறது. படியுங்கள் - பகுத்தறிந்து பாருங்கள் - தெளிவு பிறக்கும்.)


அயோத்தியா காண்டம்

இரண்டாம் அத்தியாயம் தொடர்ச்சி
அதனால் இராமன் பரதனுக்குக் கேடு செய்வான். இலக்குமணனுக்கும் சத்துருக்கனுக்கும் இந்த நாடு பொதுவானாலும், இலக்குமணன் இராம னிடத்தில் மிகவும் நண்புடையவன். அதனால் இராமனுக்கு அவனிடத்தில் பயமில்லை. அதேபோல் பரதனுக்குச் சத்துருக்கனிடம் பயமில்லை. இராமன் முந்திப் பிறந்தவன். அதனால் அரசாட்சி அவனுக்கு முதலில் கிடைக்கும். பின் வரிசையாகப் பரத இலக்குவ சத்துருக்கருக்குக் கிடைக்கும். ஆகையால் தனக்கடுத்த பாத்தியமுள்ள பரதனை அவன் கொல்லலவே முயல் வான். தனக்கு முதலில் அரசாட்சி கிடைக்கும்போது, பரதனுக்கு அது கிடைக்குமோ என்ற சந்தேகம் இராமனுக்கு உண்டாக நியாயமில்லையோ வென்றால் இராமன் விவேகி; அரச தந்திரத்தில் நிபுணன். செய்ய வேண்டிய காரியத்தைத் தகுந்த காலத்தில் செய்கிறவன். உன் மகனாகிய பரதன் மேற்சொன்ன குணங்களில் லாதவன். ஆதலால் இராமன் என்ன செய்வானோ என்று நடுங்குகிறேன். கோசலை வெகு அதிர்ஷ்டசாலி; நாளை அவள் மகன் நாடு பெற நீ அவள் வேலைக்காரியைப் போல அவளுக்குப் பணிவிடை செய்வாய். அவளால் உனக்குக்கேடு நேரும். நானும் அவளுக்குப் பணிசெய்ய வேண்டும். உன் மகன் இராமனுக்கு அடிமையன்றோ? அதனால், பரதனுடைய மனைவியர் துக்கப்படுவார்கள்; இராமனுடைய மனைவியர் அதிக மகிழ்ச்சியடை வார்கள் என்று புகன்றாள்.

இவ்வுரைகளாலும் உத்தமியாகிய கைகேயி, இராமன் நல்லவன்; மூத்த மகன். அதனால் இளவரசாகத் தகுந் தவன். இராமன் நூறு ஆண்டுகள் வரை ஆண்ட பிறகு, முன்னோர்களின் அரசு பரதனுக்குக் கிடைப்பது நிச்சயம். ஆகையால், தனக்குப்பின் அரசனாகும் பரதனுக்கும் இப்பொழுதே இளவரசுப்பட்டம் கட்டுவான். என்னி டத்தில் மிகவும் அன்போடு பணிவிடை செய்கிறான். நூறு ஆண்டுகளின் பின்னர் பரதனுக்கு நாடு கிடையாது போயினும் போகட்டும். இராமனுக்கு வந்த நன்மை பரதனுக்கு வந்ததுபோலவே இராமன் தன் உடன் பிறந்த வர்களைத் தன்னைப்போல் எண்ணுகிறான் என்றாள்.

மந்தரை அடங்காத்துயரங்கொண்டு அடீ., கெடுதியை நன்மையென்று நினைக்கிறவளே! பரதனுக்கு நியாயமாய்க் கிடைக்க வேண்டிய அரசாட்சி கிடைக்காம லிருப்பதும், அவன் நாட்டிலிருந்து துரத்தப்படுவதுமாகிய பெரிய ஆபத்தில் மூழ்கியிருப்பதை நீ அறியவில்லை. நூறு ஆண்டுகளுக்குப் பின் பரதனுக்குப் பட்டம் வருமென்று உனக்குச் சொன்னவர் யார்? இராமன் நாளை அரசனாவான். அவனுக்குப்பின் பட்டம் அவனுடைய மகனுக்கே கிடைக்கும். ஆகையால், அது பரதனுக்குக் கிடைக்க நியாயமே இல்லை. ஏனெனில், மூத்த பிள்ளை களே பட்டமெய்துவர். மூத்தவனிருக்க இளையவனுக்குப் பட்டம் கிடைக்காதன்றோ? உன் சக்களத்தியின் பெரு மையை உத்தேசித்து உன் மகிழ்ச்சிக்கு அடையாளமாக எனக்கு மணிமாலை கொடுக்கவருகிறாய். இராமன் இந்த நாட்டை அடைந்த பிறகு, பரதனை இவ்வுலகத்தி லிருந்தே துரத்தி விடுவான். இதற்கு அனுகூலமாக நீயும் செய்த கெடுதி என்னவென்றால், பரதனை அவனுடைய அம்மான் வீட்டிற்கு அனுப்பி விட்டாய். மரம், செடி முதலியவற்றையும் பக்கத்திலிருப்பவற்றையே தழுவு கின்றன. பரத சத்துருக்கனர்கள் பக்கத்திலிருந்தால், அரசனுக்கு அவர்களிடத்தில் அதிகப் பிரீதி உண்டாகும். அதையும் நீயே கெடுத்துவிட்டாய். சத்துருக்கனாவது இங்கேயிருந்தால், அவன் மூலமாக அரசனுக்குப் பரதனிடத்தில் பிரீதியுண்டாகும், அதுவுமில்லை. முள்ள டர்ந்த புதரின் நடுவிலிருந்தும் மரத்தை முள்ளுக்கஞ்சி விறகு வெட்டிகள் வெட்டுவதில்லை. இராமனும் இலக்குவனும் நெருங்கிய நட்புடையவராதலால், இலக்குவன் இராமனுக்குத் தீங்கு நினையான். பரதனுக்கு இராமன் தீங்கு செய்யாமலிருக்க மாட்டான். ஆகையால், பரதன் கேகய நாட்டிலிருந்தே காட்டிற்குப் போகட்டும். இங்கே வந்தால் நிச்சயமாய் இறப்பான். பரதனோ சிறுவன். தனக்குக் கிடைக்க வேண்டிய அரசாட்சியும் போய்ச் சுபாவ சத்துருவாயிருக்கும் இராமன் வசத்திலகப்பட்டு அவன் எப்படிப் பிழைப்பான்? ஆதலால், பரதனைக் காப்பாற்ற இதுவே சமயம். தசரதனுக்கு வேண்டிய வளென்ற கர்வத்தால் இதுவரையில் நீ அவமதித்த கோசலை தன் மகன் அரசனானதும் தன் மனத்திருக்கிற வைரத்தை ஏன் தீர்த்துக் கொள்ள மாட்டாள்? ஆதலால், இராமன் எப்போது அரசனாவானோ அப்போதே நீயும் பரதனும் அவமானமடைவது நிச்சயம். ஆதலால், உன் மகனுக்கு நாடு கிடைக்கவும் உன் பகைவனான இராமன் காடு கோகவும் ஏதாவது உபாயம் செய் என்றாள்.

உடனே கைகேயியின் மனம் மாறிவிட்டது. பரதனுக்கு அரசு கிடைக்கும்படியான உபாயத்தைக் கூறுமாறு அவள் மந்தரையைக் கேட்டாள். இவ்வரலாற்றை ஆராய்வோம்.

கூனியாகிய மந்தரை என்ற கிழவி கைகேயிக்கு வேண்டியவளென்பதும், அவள் இராமனுக்கு முடி சூட்டுதலை அறிந்து சினங்கொண்டு கைகேயியை யடைந்து எழுப்பி அவளிடத்தில் இராம பட்டாபிஷே கத்தைக் கூறுகிறிள் என்பதும், அதுவரை இராம பட்டாபிஷேகத்தை அறியாதவளாகிய கைகேயி அது கேட்டு மகிழ்ந்து கூனிக்கு மணிமாலையை வெகு மதியாகத் தந்தாளென்பது தெரிய வருகிறது. இதனால் தசரதன் இராமனுக்கு முடிசூட்டுவதற்காகத் தீர்மானித்து அரசர் பலருக்கும் கடிதமெழுதிப் பல நாட்டு மன்னரும் வந்து சேர்ந்து கூடிப்பேசி ஊரலங்காரம் செய்து நிற்கும்வரையும் இம்முக்கியமான செய்தியைத் தனது அன்புக்கு இருப்பிடமான கைகேயிக்கு அறிவியா திருந்தானென்றால் இதுமிகவும் வியப்பே. இதில் ஏதோ சூது இருத்தல் வேண்டுமென்பது தெளிவாகிறது. ஆதலினாலே மிகவும் நயவஞ்சகனாகிய தசரதன் பட்டத்திற் குரியவனாகிய பரதனை வஞ்சித்து இராமனுக்கு முடிசூட்ட நினைக்கிறான். இதனாலேயே பரதனை அவன் பாட்டனூருக்கு அனுப்பி விட்டதோடு, இராமனையும் குடிகளோடு நெருங்கிப் பழகச் செய்து இரகசியமாகக் குடிகளையும் அரசர்களையும் வரவ ழைத்தும் பேசி உண்மை தெரியாத அவர்களுடைய ஒப்பந்ததையும் பெற்று இராமனுக்கு முடிசூட்ட முனை கிறான். தான் கேகய மன்னனுக்குச் செய்து கொடுத்த வாக்குறுதியைக் கைகேயியும் ஏனையோரும் அறிந்தி ருந்தால் என்செய்வது! அதனால் தன்னுடைய வஞ்சனை வெளிப்படுமுன் இராமனுக்கு முடிசூட்ட வேண்டுமென்று அவசரப்பட்டு இராமனையும் வரவழைத்து அவனுக்கு வேண்டிய நண்பர்களுடைய பாதுகாவலிலிருக்கும் படியும் பரதன் வருமுன் முடிசூட்டல் முடிவுபெற வேண்டுமெனறும் கூறுகிறான்.

இப்பாவி எவ்வாறு நீதி வழங்கினானோ குடிகளுக்கு? மனமாறு முன்னரே இவனைப்பற்றிப் பலவாறு இகழ்ந்த கூனி பேச்சைக் கேட்டும் சினம் கொள்ளாதிருந்ததால் கைகேயியின் கற்புநிலை அய்யுறற்கேதுவாம். நிற்க புத்திரத்துரோகியாகிய தசரதனுடைய சூழ்ச்சிகள் வெளிப்பட்டு விடுகின்றன. ஆனால் தசரதனுடைய வாக்குறுதியை அறிந்தவர் ஒரு சிலரேயாவர். அவர்கள் வசிட்ட முனிவனும் சுமந்திரனுமாவர். அவர்கள் எல் லோரும் அரசனுடைய வஞ்சகத்துக்கு உடந்தையாகவே இருக்கின்றனர். மந்தரைக்கும் கைகேயிக்கும் நடந்த பேச்சினாலே அவர்கள் தசரதனுடைய வாக்குறுதியை அறிந்தவர்களாகக் காணப்படவில்லை. இருந்தாலும், அவர்கள் அறிந்திருந்தால் என் செய்வது என்றே தசரதன் அவர்களும் அறியாமல் முடி சூட்டலுக்கு ஏற்பாடு செய்தான்.

மந்தரை கைகேயிக்கு மிகவும் வேண்டியவளாதலால், அவள் நலனும் சுயநலனும் கருதியே இராமபட்டா பிஷேகத்தைத் தடைப்படுத்திப் பரதனுக்கு முடிசூட்ட நினைக்கிறாள். கைகேயி வெளுத்ததெல்லாம் பால் என்று நினைக்கிறவள். மந்தரை செய்தி சொன்னதும் மகிழ்ந்து மணிமாலை தருகிறாள். அதைக்கூனி வாங்காமலே அவளுக்கு மேலும் புத்தி கூறுகிறாள். அதாவது இராமன் முடிசூட்டியபின் தனக்கு அடுத்த பங்காளியான பரதனைக் கொன்றுவிடுவானென்பதும், இராமன் விவேகி, இராஜதந்திரி, பரதன் ஒன்றுமறியாத வெள்ளறிவன் என்பதும், கைகேயி கோசலைக்கு அடிமையாக வேண்டிவருமென்பதும், பரதனுடைய மனைவிமார் துக்கத்தையும், இராமனுடைய மனைவிமார் இன்பத் தையும் அடைவர் என்பதுமே. இக்கூற்றினால் பரதனும் இராமனும் பல மனைவியருடன் இருந்தனரெனத் தெரியவருகிறது. இராமன் ஏகபத்தினி விரதன் என்று உலகினர் கூறும் பேச்சு பொய்ப்பேச்சே. வால்மீகி இராமன் பல மனைவியருடனிருந்தவனென்றே கூறு கிறார். எமாற்றுக்காரராகிய கம்பரோ, அதற்கு மாறாக இராமனை ஏகபத்தினி விரதனைப் போலக்காட்டி உலகத்தை ஏமாற்றுகிறார்.

மேலே கண்ட கூற்றிலும் கைகேயி மனம் மாறாமல் இராமனிடத்திலிருந்த அன்பைக் காட்டுகிறாள். அவனுடைய ஒழுக்கத்தைப் பாராட்டுகிறாள். வஞ்சகனும் பலதாரகனுமாகிய இராமன் அவ்வளவுதூரம் கைகேயி ஏமாறும்படி மிக நல்லவனைப்போல நடந்திருக்கிறான். அவன் இலக்குமணனிடம் தாம் உயிரோடிருப்பதும் அவன் பொருட்டே என்று இணங்கிப்பேசி ஏமாற்றினா னன்றோ? மிகவும் இராஜதந்திர நிபுணன்.
நூறு ஆண்டுகளுக்குப்பின் பரதனுக்குப் பட்டம் வருமென்று மயங்கிய கைகேயியை மறுத்து மந்தரை உண்மையைக் கூறிப்பரதனும் அவனுக்கு வேண்டிய வனாகிய சத்துருக்கனும் இல்லாதபோது தசரதன் மய்யலில் மயங்கி அவன் தூண்டுதலால் பரதனை அடிக்கடி பாட்டன் வீட்டுக்கனுப்பியதே இத்தனை கேட்டுக்கும் காரண மென்பதையும் கூறுகிறாள். மேலும் கைகேயியால் அவமதிக்கப்பெற்ற கோசலை தன் மகன் பட்டம் பெற்றதும் கைகேயியை மிகவும் அவமதிப்பா ளென்றும் இராமன் கட்டாயம் பரதனைக் கொல்வா னென்றும் கூறுகிறாள். இதனால் கைகேயி மனம் மாறுகிறது.

கம்பர் புரட்டு
இனி புரட்டுக்காரராகிய கம்பர் இதைப்பற்றி யாது கூறுகிறாரெனக் கவனிப்போம்.

வால்மீகி, மந்தரை கைகேயியைச் சத்தமிட்டு எழுப்பினாளெனக் கம்பர் அவள் அவளைக் காலைத் தொட்டு எழுப்பினாளென்கிறார். உனக்குக் கேடு வந்ததென்ற கூனியைக் கைகேயி உன் முகம் வாடியதால் உனக்கு என்ன தீங்கு நேர்ந்ததென்று கேட்டாளென்று வால்மீகி கூற (இதனால் கைகேயி நற்குணம் விளங்கும்) கம்பரோ, எனக்கென்ன தீமை என்றனள் கைகேயி என் கிறார் (இதனால் கைகேயி சுயநலம் புலனாகிறது) மேலும், வால்மீகி கூறாததாகிய இராமன் சிறு பிள்ளையாக இருக்கும்போது வில்லில் ஒரு மண்ணுருண்டையைத் தொடுத்தெய்த அது கூனி மேல் விழுந்தது என்ற கதையை இராமன் மேல் கூனி வைரமுடையாள் என்பதற்குக் காரணமாகக் காட்டுகிறார். இப்பொய்க் கதையை இவர் எங்கேதான் கண்டாரோ, கைகேயி கொடுத்த மாலையைக்கூனி வாங்கவில்லையென்று வால்மீகி கூறக்கம்பர் அவள் அம்மாலையைக் கீழேபோட்டு மண்ணில் குழியுண்டாக மிதித்தாள் என்று கூறுகிறார்.

பரதன் புல்லறிவன், அரச தந்திரமறியாதவன், சமயமறிந்து செயல்புரியத் தெரியாதவனென்று கூனி கூறியதாக வால்மீகி கூறக்கம்பரே அதற்கு மாறாக:-
கல்வியு மிளமையும் கணக்கி லாற்றலும்
வல்வினை யுரிமையும் அழகும் வீரமும்
எல்லைஇல் குணங்களும் பரதற்கு எய்திய
புல்லிடையுகுத் தமுதேயும் போலென்றாள்
என்று முற்றிலும் மாற்றிக் கூறுகிறார்.

                  ----------------------"விடுதலை” 8-8-2014

Read more: http://viduthalai.in/page-3/85477.html#ixzz39r84EXB8

13 comments:

தமிழ் ஓவியா said...


ஒரு யோசனை


சென்ற மே மாதம் 25 ஆம் தேதியின் மாலை 6 மலர் 4 இதழில் ஒரு யோசனை என்னும் தலைப்பின் கீழ் குடி அரசு பத்திரிகையை எட்டு பக்கங்கள் குறைத்து சந்தாத் தொகை வருஷத்துக்கு மூன்று ரூபாயாக யிருப்பதை இரண்டு ரூபாயாக ஆக்கலாம் என்று கருதியிருப்பதை வெளிப்படுத்தி வாசகர்களின் அபிப்பிராயத்தையறிய ஆசைப்பட்டிருப்பதை வெளியிட்டிருந்தோம்.

அவற்றிற்கு வந்த பல அபிப்பிராயங் களில் சுமார் பத்து பேர்களேதான் அதற்கு சம்மதம் கொடுத்திருக் கிறார்கள். சுமார் 300க்கு மேற்பட்ட வாசகர்கள் பக்கங்களை எவ்வித காரணங் கொண்டும் குறைக்கக் கூடாதென்றும், சந்தா மூன்று ரூபாயாக இருப்பதைப்பற்றி கவலை இல்லையென்றும் தெரிவித்து வேறு சில யோசனைகளும் சொல்லி இருக்கிறார்கள். நிற்க, மலாய் நாட்டுச் சந்தாதாரர்கள், கண்டிப்பாகப் பக்கங்களை குறைக்கக் கூடாது என்றும் சௌகரியப் பட்டால் அதிகப்படுத்தும் படியும் தெரிவித்திருக்கிறார்கள்.

ஆகவே வாசகர்களின் பெரும்பான் மையோர்களுடைய அபிப்ராயம் மாறுபாடாயிருப்பதால் இது சமயம் அதாவது தற்காலம் குடிஅரசு பத்திரிக்கையில் பக்கங் களையாவது சந்தாவையாவது மாற்றுவது என்கின்ற விஷயத்தை நிறுத்தி வைத்திருக்கிறோமென்பதைத் தெரியப்படுத்திக் கொள்ளுகிறோம்.

- குடிஅரசு - துணைத்தலையங்கம் - 06.07.1930

Read more: http://viduthalai.in/home/viduthalai/history-/85537-2014-08-09-11-29-23.html#ixzz39wr8rXaR

தமிழ் ஓவியா said...


இந்த நாள் (10.8.1942) முரசொலிக்கு வயது 72

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் கலைஞர் அவர்களால் 10.8.1942 இல் தொடங்கப் பெற்ற முரசொலி இதழுக்கு இன்றுடன் 71 வயது நிறைவடைந்து 72 ஆவது வயது தொடங்குகின்றது.

முரசொலி இதழ் திருவாரூரில் நடைபெற்று வந்த தமிழ் மாணவர் மன்றத்தின் சார்பில் சேரன் என்ற புனைப்பெயர் கொண்ட நமது கலைஞர் அவர்களால் தொடங்கப்பெற்று இலவசமாக வழங்கப்பெற்று வந்துள்ளது. (குடிஅரசு -_ 6.5.1944 பக்கம் 2)

முரசொலி ஒலிக்குது பாரீர்! என்ற வாசகத்துடன் அறிவியக்கக் கொள்கைகளை அறிவுறுத்துவது ஆரியத்தை அலறவைப்பது, வைதீகத்தை வாட்டுவது, பண்டிதர்களைப் பதறவைப்பது என்ற கொள்கைகளைக் கொண்டு தொடங்கி 71 ஆண்டுகளைக் கடந்து வந்துள்ளது என்பதை அறியும் பொழுது உவகை மேலிடுகிறது. இடையில் எத்தனை சோதனைகள், வேதனைகளைக் கடந்து வந்துள்ளது.

இதழினை ஆதரிக்க வேண்டிய வேண்டுகோளுடன் இளம் எழுத்தா ளர்களின் வெளியீடுகள் ஆரியருக்கு நல்ல டார்ப்பிடோக்கள் ஆதரிக்க வேண்டுவது திராவிடர்களின் கடமையாகும் என்று அன்றே அறிவித்தது.

முரசொலி என்ற சுயமரியாதைக் கொள்கைகள் அடங்கிய துண்டுப்பிரசுரத்தை மாதமொருமுறை வெளியிடுவதெனத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. பெரியாரின் கொள்கைகளை சுயமரியாதை இயக்கத்துடன் இணைந்து பரப்பி வந்துள்ளது.

கலைஞர் அவர்கள் எப்பொழுதும் மூத்த பிள்ளையாக முரசொலியைத் தான் முதலில் கூறுவார் என்பது நாம் அறிந்த உண்மை. எனவே, முரசொலியின் முகப்பு வாசகமான வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும் என்று அன்றே தமிழ் மாணவராக இருந்து இன்றும் தமிழர்களின் ஒப்பற்ற தலைவராக விளங்கும் கலைஞர் அவர்களுக்கும் தலைவரின் மூத்த பிள்ளையான முரசொலிக்கும் வாழ்த்துகளை வழங்கி மகிழ்கிறோம்.

Read more: http://viduthalai.in/page-2/85589.html#ixzz39zqQLxQR

தமிழ் ஓவியா said...


பெர்னாட்சா


ஜார்ஜ் பெர்னாட்சா தந்தை பெரியார் போலவே 94 ஆண்டுகள் வாழ்ந்து மறைந்தவர் (1856-1950) மிகச் சிறந்த இலக்கியப் படைப்பாளர். ஆங்கிலத்தில் அவர் எழுதிய நாடகங்கள் காலங்கடந்து நிற்கக் கூடியவை. இலக்கியத் தொண்டுக்காக நோபல் பரிசு அளிக்கப்பட்டது (1925). நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவர் - பள்ளிப் படிப்பில் ஆர்வம் இல்லை - ஆனாலும், நூல்களைப் படிப்பதில் கட்டுக் கடங்கா ஆர்வம் கொண்டவர்.

பல எழுத்தாளர்களுக்கு ஏற்பட்ட அனுபவம் போலவே தொடக்கத்தில் அவர் எழுதிய எழுத்துகள் ஈர்க்கப்படவில்லை. விடா முயற்சியால் வெற்றி பெற்றார். ஆங்கில இலக்கியத்தில் நாடகப் பஞ்சம் என்ற விமர்சனத்தை வீழ்த்தும் வகையில் அரிய சாதனைகளைப் படைத்தவர் ஆவார். 50-க்கும் மேற் பட்ட நாடகங்களை எழுதினார்.

புராண மய்ய கருத்துகளைத் தூக்கி யெறிந்து சமூக மாற் றத்துக்கான கருத்து களை, சமூகச் சிக்கல்களை மய்யப் படுத்தி நாடகங்களைத் தீட்டினார். கருத்தும், வசீகர நடையும் காந்தமாக மக்களை ஈர்த்தது. இசை, நாடகங்களைத் திற னாய்வு செய்வதில் விற்பன்னர் என்ற பெய ரெல்லாம் இவருக்கு வந்து சேர்ந்தது. நல்ல பேச்சாளராக மிளிர வேண்டும் என்ற ஆசை அவருக்கு உண்டு. ஆனாலும், சபைக் கோழைத்தனம் என்பது அவரைப் பிடித்து உலுக்கியது. தானாகப் பேசிக் கொண்டு போக ஆரம்பித்தார். அதன்பின் கூட்டம் உள்ள இடத்தில் உரக்கப் பேச ஆரம்பித்தார். அதன் விளைவு தலைசிறந்த ஆங்கிலப் பேச்சாளர் என்ற புகழின் உச்சியில் பளபளப்பாகப் பறந்தார்.

மிகுந்த நகைச்சுவை உணர்வைக் கொண்டவர். பேச்சிலும், எழுத்திலும் அவை போட்டி போடும். கிறித்துவக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தாலும், கார்ல் மார்க்சின் தத்துவம் இவரைக் கவர்ந்தது. அமைதி வழியில் சோசலிசக் கொள்கை களைப் பரப்புவதற்காக நிறுவப்பட்டிருந்த ஃபேபியன் கழகத்தில் (திணீதீவீணீஸீ ஷிஷீநீவீமீஹ்) சேர்ந்தார். பெர்னாட்சாவைப்பற்றி ஏராள மான துணுக்குகளும், தகவல்களும் உலகம் பூராவும் பரவியுள்ளன. பத்திரிகை யாளர் ஒருவர் உலகில் மிகச் சிறந்த அறிவாளி யார்? என்று ஷாவைக் கேட் டார். இரண்டாவது இடத்தில் ஸ்டாலின், மூன்றாவது இடத்தில் அய்ன்ஸ்டீன், முதல் இடத்தில் உள்ளவரின் பெயரைச் சொன் னால் என்னைத் தற்பெருமைக்காரன் என்று சொல்லிவிடுவீர்கள் என்றாராம்.

அழகு கொழிக்கும் பெண் ஒருவர் ஷாவைச் சந்தித்து, நான் உங்களைத் திருமணம் செய்துகொள்ள விரும்புகிறேன். நம்மிருவருக்கும் திருமணம் நடந்தால், என்னைப் போன்ற அழகும், உங்களைப் போன்ற அறிவும் கொண்ட குழந்தை பிறக்கும் அல்லவா?

என்றார் அந்தப் பெண்மணி. நீ சொல்வது சரியென் றாலும், என்னைப் போன்ற அழகும், உன்னைப் போன்ற அறிவும் கொண்ட குழந்தை பிறந்தால் என்னாவது? என்றாராம். பெர்னாட்ஷா எழுதி வைத்த உயில் புகழ் பெற்றது. சொத்தின் சரி பகுதியை அவரது நூலகத்திற்கு எழுதி வைத்தார்.

Read more: http://viduthalai.in/page2/85561.html#ixzz39zrCxG4o

தமிழ் ஓவியா said...


செக்யூலரிஸம் என்றால் என்ன?
செக்யூலர் செக்யூலரிஸம் என்ற சொற்கள். இந்தியா சுயாட்சி என்பது அடைந்தது முதல் அதிகமாக அடிபட்டு வருகின்றன. இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திலும் இவை இடம் பெற் றுள்ளன.

இந்த செக்யூலர் செக்யூலர் கவர்ன் மெண்ட் என்பதற்கு ஆளும் குழுவினர் கூறும்பொருள், சமய சந்தர்ப்பத்துக் கேற்றபடி மாறுபடுகிறது.

மதமற்ற அரசாங்கம் என்று அடி நாளிலும்; பின்னர் மதச்சார்பற்ற அரசாங்கம் என்றும் கருத்து விளக்கம் தெரிவிக்கப்பட்டது.

குழப்பம்

ஆனால், அண்மையிலோ ஆட்சி பீடாதிபதிகள் மத விழாக்களிலும், கும்ப மேளாக்களிலும் கலந்துகொண்டதனை பொது மக்கள் உலகம் குற்றம் கூறவே, செக்யூலர் என்றால் மதங்கள் மீது வெறுப்புக் கொண்டு ஒதுக்கித் தள்ளுவ தல்ல- _ எல்லா மதங்கள் பாலும் சமரச நோக்குடன் நடந்து கொள்வதேயாகும் என்று பச்சோந்தி விரிவுரை கூறப் பட்டது. இது செக்யூலரிஸம் என்பதை குழப்பமாக்கி விட்டதுடன் -_ அதன் நற்பயனில் சந்தேகம் கொள்ளவும் செய்து விட்டது.

செக்யூலரிஸம் என்றால் ஆங்கில அகராதியில் தரப்பட்டுள்ள பொருள் -_ இந்த உலகானது -_ மறுவுலக சம்பந்தமில்லாதது என்பது. இதனை ஆரிய வடமொழியில் லோகாயிதம் என்கின்றனர். தமிழ் அகராதியிலும் இதே சொல் தரப்பட்டுள்ளது. இது பொருத்தமல்ல. ஏனெனில் இந்த லோகாயிதத்தின் தொடர்ச்சியாக பர மார்த்திகம் என்பதையும் பிணைத்துள் ளனர். அதாவது லோகாயித் வாழ்க்கையை அடுத்து பரமார்த்திகத்தை அடைய வேண்டுமென்றும் கருத்து விளக்கம் செய்து, லோகாயிதம் என்ப தன் உண்மைக் கருத்தையும் நோக்கத் தையும் பாழாக்கி விட்டனர். இந்தச் சொல்லுடன் மத இயலையும் கடவுளி யலையும் பிணைத்து விட்டனர்.

உண்மை விளக்கம்

செக்யூலரிஸம் என்பதன் உண்மை விளக்கப் பொருள் என்ன? இதன் மொழித்துறை வரலாறு என்ன? என்று அறிவியல்வாதிகளும் பகுத்தறிவுவாதி களும் ஆராய்ந்து பார்க்க வேண்டியுள் ளது. பகுத்தறிவியல் என்பது அறிவைப் பயன்படுத்தி மெய்யை உணர்தல். இவ்விதம் பகுத்தறிவு கொண்டு அறிந்த மெய்மைகளை நடைமுறையில் நடத்திக் காட்டுவதே செக்யூலரிஸம் ஆகும்.

இந்த செக்யூலரிஸம் என்ற ஆங்கிலச் சொல்லை முதன் முதல் கையாண்டவர் பகுத்தறிவு மேதை ராபர்ட் இங்கர்சால் அவர்களின் அறிவியல் தோழர்களில் ஒருவரான ஜார்ஜ் ஜாகப்ஹோலியோக் என்பவர். இவரும் குழந்தை வயதில் மதத் துறையில் வளர்க்கப்பட்டவர். அறிவு விரிவடைந்ததும் இந்த மதப் புரட்டு களையும் மதமடமைக் கொள்கைகளை யும் எதிர்த்துப் புரட்சிக் கொடி தூக்கி னார். நாத்திகர் என்ற குற்றத்துக்காக 1841_42ஆம் ஆண்டு வாக்கில் இங்கி லாந்தில் சிறை வாசமும் செய்தவர்.

நடைமுறையில் பரப்பியவர்

தோழர் ஜார்ஜ்ஜாகப் ஹோலி யோக்தான் முதன் முதல் தமக்கும் தம் கோட்பாட்டினருக்கும் செக்யூலரிஸம் என்ற தனி இடு குறிப்பெயர் இட்டுக் கொண்டார். இந்தப் பகுத்தறிவு நடைமுறை இயல் கழகங்களும் லண் டனில் பல இடங்களில் தோற்றுவித்து நடத்தினார். பகுத்தறிவு இயல் பத் திரிகைகள் பலநடத்தினார். பகுத்தறிவு பத்திரிகையாளர் கழகமும் ஏற்படுத் தினார். இதற்கு முதல் தலைவரும் இவரே.

பிரிட்டிஷ் செக்யூலர் யூனியன் என்ற பேரவைத் தலைவராகவும் இவர் பல்லாண்டுகளிருந்து பணியாற்றி, கோட்பாட்டையும், கழகத்தையும் பரப்பி, வலுப்படுத்தினார்.

இந்த செக்யூலரிஸம் என்ற சொல்லுக்கு இவர்தந்த விளக்கப் பொருள் இந்த உலக வாழ்க்கை சம் பந்தமான கடமை வழிக் கோட்பாடு அமைப்பு என்பதாகும்.

இங்கர்சால் விளக்கம்

மேதை இங்கர்சால் இந்தச் சொல்லுக்குத் தந்துள்ள விளக்கப் பொருள் இந்த உலக விஷயங்களில் மனிதப் பண்பாட்டுடன் மனித அனு தாபத்துடன் நடந்து கொள்ளும் நெறி; அறியும் உணர்ச்சி கொண்டவர்களின் நலனுக்கான ஒவ்வொரு விஷயத்திலும் நடப்பிலும் கருத்துச் செலுத்துவது; அனுபவ உலக ஆய்வு அறிவு என்பதற்கு மறுபெயரும் இதுவாகும். அதாவது அவரவர்கள் புரிந்து கொண்ட முறையிலும் விருப்ப வாய்ப்புகளுக்கு ஏற்ற வகையிலும் வாழ்க்கைத் துறையை செப்பனிட்டு அமைத்துக் கொள்ளச் செய்வது இது. இங்கு இந்த உலகில் அவரவர்களுக்கான நல் வீட்டை அமைத்துக் கொள்வதில் நம்பிக்கை கொள்ளச் செய்வது இந்த செக்யூ லரிஸம்

ஒவ்வொருவர் தனி முயற்சி ஊக்கம், அறிவு, ஆற்றல், ஆராய்ச்சி அனுபவம் ஆகியவற்றில் நம்பிக்கை கொள்ளச் செய்வது.

நாமறியாததும் அமானுஷியமானது மான ஏதோ ஒன்றில் (கடவுள்) நம் பிக்கை கொள்வதைத் தவிர்ப்பது இது. இந்த வாழ்க்கையில், இந்த உலகில் மகிழ்ச்சியுடன் நல்வாழ்வு அனைவரும் வாழ வேண்டுமென்பதே இதன் குறிக்கோள் என்பதாகும். இந்த பகுத்தறிவியக்க செக்யூலரிச மேதைகளின் விளக்கத்திலிருந்து இந்த செக்யூலர் -_ செக்யூலரிஸம் என்பன மத இயல், கடவுளியல் மறுப்புக் கோட்பாடு _- மதம் கடவுள் என்பதனை ஒழித்துக் கட்டுவது என்பது தெளிவுபடுகிறது.

Read more: http://viduthalai.in/page3/85563.html#ixzz39zrPHtqA

தமிழ் ஓவியா said...


வாஷிங்டன் வட்டார முன்னாள் தமிழ்ச் சங்க தலைவர் எம்.எம். இராஜ் பேட்டிவாஷிங்டன் வட்டார தமிழ்ச் சங்கத்தின் முன்னாள் தலைவரும், வாஷிங்டனில் வெளிவந்த முதல் தமிழ் மாத இதழான குமரி இதழின் நிர் வாக இயக்குநருமாகிய எம்.எம். இராஜ் அவர்கள் விடுதலை இதழுக்கு அளித்த நேர்காணல்:

சமீபத்தில் நடந்த வேட்டிப் பிரச்சினையில் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் வேட்டிக்கு ஆதரவாகக் குரல் கொடுத்திருப்பது மிகவும் வரவேற்கத்தக்கது. அதுபோல இந்துக் கோவில்களில் ஆண்கள் சட்டை அணிந்து செல்லக் கூடாது என்ற பழக்கம் இருந்து வருகிறது. இது மிகவும் கண்டிக்கத்தக்கது. சட்டை அணிய கோவில் நிர்வாகிகள் அனுமதிக்க வேண்டும். அதற்காக அனைத்து அரசியல் கட்சிகளும் குரல் கொடுக்க வேண்டும்.

அதுபோல் கோவில்களில் தமிழ் இன்னும் நுழைய வில்லை. சமஸ்கிருதம்தான் உள்ளது. அனைத்து கோவில் களிலும் தமிழில் வழிபடும் உரிமை வேண்டும். கோவில் வியாபார இடமாக மாறி விட்டது. பூஜை பொருட்கள், மலர் மாலைகள்கூட அதிக விலைக்கு ஏழை மக்களிடம் விற்பனை செய்வது கண்டிக்கத்தக்கது.

திருவனந்தபுரம் பத்மனாப சாமி கோவிலில் இருக்கும் நகைகள் குமரி மாவட்ட மக்களுடை யது. அன்றைய திருவிதாங்கூர் அரசு இளை ஞர்கள் மீசை வைத்தால் அதற்கு வரி, இது போன்று பல வரிகள் போட்டும் தற்போதைய குமரி மாவட்ட மக்களின் உழைப்பு, பொருள் அனைத்தும் பத்மனாபசாமி கோவிலில் நகையாக உள்ளது. அங்கு இருக்கும் நகைகளில் சரிபாதி நகைகளை தமிழக அரசுக்கு கோவில் நிர்வாகம் வழங்க வேண்டும். தமிழக அரசு அந்தத் தொகையினை முழுக்க முழுக்க குமரி மாவட்ட மக்களின் வளர்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும். பத்மனாபபுரத்தில் இருக்கும் அரண்மனை தற்போது கேரள அரசிடம் உள்ளது. இதனை மீட்டு அந்த அரண் மனையை தமிழக அரசின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர வேண்டும் என்று அவர் கூறினார்.

நேர்காணல்: கோ. வெற்றிவேந்தன், மாவட்ட செய்தியாளர்

Read more: http://viduthalai.in/page4/85565.html#ixzz39zs785kJ

தமிழ் ஓவியா said...


புதிய உயிரினங்கள் கண்டுபிடிப்புஉலகம் முழுவதும் 18 ஆயிரம் புதிய உயிரினங்களை, விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அவற்றில், பூனையை போன்ற கரடியும், தரைக்கு கீழ், 3,000 அடிக்கு கீழ் இருக்கும் கண்ணில்லாத நத்தையும் அடங்கும். இதுகுறித்து, நேஷனல் மியூசியம் ஆப் நேச்சுரல் சயின்ஸ் என்ற அமெரிக்க நிறுவனத்தின் உயிரியல் விஞ்ஞானி, அண்டோனியோ வால்டேகேசஸ் தலைமையிலான விஞ்ஞானிகள் குழுவினர் கூறியதாவது: உலகில் 20 லட்சம் உயிரினங்கள் இருப் பதாகவும், இவற்றில் தற்போது 18 ஆயிரம் உயிரினங்கள் கண்டறியப் பட்டுள்ளன. இன்னும் 1 கோடி உயிரி னங்கள் கண்டுபிடிக்க வேண்டியுள் ளது. அவற்றில் பல அழிவின் விளம் பில் உள்ளன. இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

Read more: http://viduthalai.in/page6/85570.html#ixzz39ztDruUb

தமிழ் ஓவியா said...


பெரியாரைப் பின்பற்று


விஞ்ஞான அறிவுக்கு முதன்மை கொடு
அஞ்ஞானக் குப்பையை விடு!
குழந்தைக்கு தமிழில் பெயரிடு
பகுத்தறிவைப் பாலோடு ஊட்டிடு!
நெருப் பாய் இரு
அதுவே உனக்கு திரு!
ஆரியம் வீழும் வரை
வீரியம் இழக்காதே!
கள்வன்கண்ணுக்கு கடவுள் உண்டியல் கற்கண்டு
காலத்தே திருந்து இதைக் கண்டு!
நூலைப் படி
அறிவின் வழிநூலைப் படி!
மானுடம் உயர்ந்திட பாடுபடு
மடமையை ஆழ் குழியிலிடு!
பெரியாரைப் பின்பற்று
அதுவே நம் வாழ்வின் பற்று!

- இரா. முல்லைக் கோ
பெங்களூர் - 43

Read more: http://viduthalai.in/page7/85572.html#ixzz39ztQqVEa

தமிழ் ஓவியா said...
இன்றைய ஆன்மிகம்?

அம்மை

ஆடி வந்து விட்டாலே ஆன்மீக விதிகளைச் சொல்லிக் கொண்டு பெண்கள் அதிக அளவில் ஆலயங்களிலும் தோழியர் இல்லங்களிலும் நடமாடு வதைக் காணலாம். கூழ் வார்த்தல் எனப்படுகிற முக்கிய நிகழ்ச்சியும் பூஜையும் எல்லா அம்மன் கோவில்களிலும் நடை பெறும். இதற்கு ஒரு புராணச் செய்தி உள்ளது. ஒரு சமயம் கார்த்த வீர் யன், ஜமதக்கினி முனிவர் மீது பகை உணர்வு கொண் டிருந்தான். அவனது மகன்கள் இருவர் முனி வரைக் கொன்று விட் டனர். கணவன் இறந்த துக்கம் தாங்க முடியாத ரேணுகாதேவி தீயை உண்டாக்கி அதில் விழுந்து விட்டாள். இதைக் கண்டு வருந்திய இந்திரன், வருண பக வானை அழைத்து மழையை பெய்விக்கும் படி கூறினான். மூட்டிய தீயில் விழுந்த ரேணு காவை மழை வந்து நனைத்துவிட வெற்று உடலோடு இருந்தவள் அருகிலிருந்த வேப்பமர இலைகளால் தன் உடலை மூடிக் கொண்டாள்.

வயிற்றுப் பசி ஏற்பட்ட போது அருகிலிருந்த கிராம மக்களிடம் உணவு கேட்டாள். அப்போது அவர்கள் மகரிஷி மனை வியான நீங்கள், எமது உணவை சாப்பிட வேண்டாம் என்று கூறி, பச்சரிசி மாவு, வரகு, வெல்லம், பானகம், இளநீர், காய், கனிகளைக் கொடுத்தனர். அவற்றைக் கொண்டு கூழ் தயாரித்துச் சாப் பிட்டுத் தன் பசியைத் தீர்த்துக் கொண்டாள் ரேணுகாதேவி.

அச்சமயம் சிவபெரு மான் அவள் முன் தோன்றி, சக்தியின் அம்ச மாக இந்தப் புவியில் அவரித்த நீ பூமியில் பாவங்களைக் களைந்து மனிதர்களுக்கு ஏற்படும் தீ நோய்களைக் கட்டுப் படுத்துக. உனக்கு ஏற் பட்ட அம்மைக் கொப் புளங்கள் உன் பக்தர் களுக்கு வரும் போது, உடனே நீங்கிட உன் வேப்பிலையே கண் கண்ட மருந்து, பச்சரிசி மாவு பானகம், வெல்லம், இளநீர், கூழ் படைக்கும் போது.. நீ மாரிதேவியாக அருள் காத்து அவர் களுக்கு வந்த நோய் களை நீக்குவாயாக என் றார். எனவே தான் மாரித் தாயின் சன்னதிகளில் கூழ் படைக்கிறார்களாம்.

அம்மை வருவது ஒருவகை கிருமியால், அது தடுக்கப்பட்டது அம்மைத் தடுப்பூசியால்; இதில் எங்கு வந்தாள் ரேணுகாதேவி?

அம்மைக்குக் கார ணம் கடவுளா? கிருமியா? ஆன்மிகவாதிகளுக்கு நோய் வந்தால் கோயி லுக்குச் செல்வார்களா? மருத்துவரிடம் செல் வார்களா? சிந்திப்பீர்!

Read more: http://viduthalai.in/page1/85490.html#ixzz39zuHNJLm

தமிழ் ஓவியா said...

செய்தியும் சிந்தனையும்

வெட்கக்கேடு

செய்தி: கருநாடகாவில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுவனை 6 நாட்கள் ஆகியும் மீட்க முடியவில்லை.

சிந்தனை: நாடெங்கும் இத்தகைய செய்திகள் வந்த வண்ணமேயுள்ளன. இதனைக் கூடத் தடுக்க முடியாத இந்த ஆட்சிகள் எந்தக் கேடுகளைத் தான் தடுக்கப் போகிறார்கள்? மனித உயிர்கள் அவ்வளவு மலிவா? வெட்கக் கேடு!

Read more: http://viduthalai.in/page1/85499.html#ixzz39zue0cct

தமிழ் ஓவியா said...


அழித்தாக வேண்டும்


மக்களைச் சுயமரியாதை இல்லாமல் செய்து மிருகங்களாக்கி, நாய், பன்றிகளைவிட இழிவாய் நடத்த ஆதாரமாய் இருக்கும் மதம் எது வானாலும் அதை அழித்தாக வேண்டும்.
(குடிஅரசு, 18.12.1927)

Read more: http://viduthalai.in/page1/85500.html#ixzz39zx7FdTY

தமிழ் ஓவியா said...


காந்தியார்


திரு. காந்தியார் சிறையில் மூன்று வேலைகள் செய்கிறார். அவற்றுள் ஒன்று தக்ளியில் நூல் நூற்பது. மற்றொன்று பகவத் கீதையை ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பது. வேறொன்று இந்த இரண்டும் செய்து மீதி இருக்கும் நேரத்தில் ராமநாம பஜனை செய்வது.

ஆகவே அவரது பகுத்தறிவுக்கு நாம் வேறு உதாரணம் காட்ட வேண்டிய தில்லையென்றே நினைக்கின்றோம். இம் மூன்று காரியங்களும் இந்தியாவின் பொது வாழ்க்கையையும் முன்னேற்றத்தையும் முன்னுக்குக் கொண்டு போகுமா? பின்னுக்குக் கொண்டு போகுமா வென்பதை யோசிக்கத் தக்கது.

திரு. காந்தியிடம் குருட்டுப் பக்தியுள்ளவர்களுக்கு நாம் இப்படிக் கேட்பது சற்று கஷ்டமாக இருக்கலாம். தக்ளியில் நூல் நூற்பது எதை உத்தேசித்து என்று இதுவரை யாராவது தெரிந்தார்களா? தக்ளிநூல் வெள் ளைக்கார ஆட்சியின் கொடுமையையும் இந்தியாவின் பொருளாதார கொள்ளையையும் என்ன செய்து விடக்கூடும் என்பது நமக்கு விளங்கவில்லை.

என்ன சொன்னாலும் தட்டிச் சொல்லாமல் கேட்பதற்குச் சில மக்கள் இருக்கின்றார்கள் என்பதைத் தவிர மற்றபடி அதில் என்ன உண்மை இருக்கின்றது. இரண்டாவதாக பகவத்கீதைக்கு ஆங்கில மொழி பெயர்ப்பு வேலை. இதுமுன் ஒரு தடவை டாக்டர் பெசன்டம்மையால் செய்தாய் விட்டது.

இரண்டாவதாக திரு திலகரால் ஒரு தடவை கீதா ரகசியம் என்பதாக ஒரு மொழி பெயர்ப்பும் செய்தாய் விட்டது. இப்போது திரு. காந்தியும் இதையே ஆரம்பித்து விட்டார். கீதையின் தத்துவம் என்ன? அதன் பயனென்ன? என்பதைப் பற்றிய உண்மை யாராவது தெரிந்து அதை மதிக்கின்றார்களா?

கீதையை ஒரு மனிதன் ஒப்புக் கொள்ளுவதானால் முதலாவதாக பாரதக் கதையை ஒப்புக் கொள்ள வேண்டும்.

பிறகு கிருஷ்ணனையும், அவனது செய்கைகளையும், அவனையே கடவுளாகவும் ஒப்புக் கொள்ள வேண்டும்.

இம்மூன்றிலும் சந்தேக முள்ளவர்கள் கீதையைப் பகவான் வாக்காகக் கொள்ள முடியாது. இது ஒரு புறமிருக்க அதிலுள்ள விஷயங்கள் வாழ்க்கைக்குப் பொருத்த மானதாகவோ அல்லது அனுபவத்திற்குச் சாத்தியமான தாகவோ இருக்கின்றதா? நிற்க மூன்றாவது காரியமாக பஜனை செய்து கொண்டி ருக்கிறாராம்.

பஜனை என்பது புராணங்களில் உள்ள கடவுள்களைப் புராணக் கதைகளைச் சொல்லிக் கொண்டோ நினைத்துக் கொண்டோ இருப்பதாகும்.

ஆகவே இம்மூன்று காரியங்களும் எவ்வளவு பகுத்தறிவும் பொது நல நன்மையுமான காரியம் என்பதை முடிவு செய்யும் விஷயம் வாசகர்களுக்கே விட்டுவிடு கின்றோம்.

- குடிஅரசு - துணைத்தலையங்கம் - 27.07.1930

Read more: http://viduthalai.in/page1/85536.html#ixzz39zzQpXqh

தமிழ் ஓவியா said...


சுயமரியாதைத் திருமணம்

பெண்கள் முன்னேற்றத்தில் கவலை உள்ளவர்கள் பெண்களைப் படிக்கவைக்கும் முன் இந்தக் கழுத்துக் கயிற்றைத் (தாலியை) அறுத்தெறியும் வேலையையே முக்கியமாய் செய்யவேண்டுமென்று சொல்லுவேன். நிற்க, இதுவரை மணமக்களுக்கு ஆசீர்வாதமோ வாழ்த்தோ என்பது மணமக்கள் நிறைய அதாவது 16 பிள்ளைகள் பெற்ற வேண்டுமென்று சொல்லுவார்கள்.

ஆனால் நான் மணமக்களுக்குச் சொல்லு வதென்ன வென்றால் அவர்கள் தயவு செய்து பிள்ளைகள் பெறக்கூடாது என்பதும், மிக்க அவசியமென்று தோன்றினால் ஒன்று அல்லது இரண்டுக்கு மேல் கூடாது என்றும் அதுவும் இன்னும் அய்ந்து ஆறு வருடம் பொறுத்துத்தான் பெற வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளுகின்றேன்.

அன்றியும் அப்படிப் பெறும் குழந்தைகளையும் தாய்மார்கள் குரங்குக் குட்டிகள்போல் சதா தூக்கிக் கொண்டு திரிந்து போகின்ற இடங் களுக்கெல்லாம் அழைத்துப் போய் அழ வைத்துக் கொண்டு கூட்டமும் நடவாமல் தங்களுக்கும் திருப்தியில் லாமல் சபையோருக்கும் வெறுப்புத் தோன்றும் படியாய் செய்யாமல் குழந்தைகளை ஆயம்மாள் வைத்து வளர்க்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

அவைகளுக்கு ஒழுங்கும் அவசி யமான கட்டுப்பாடும் பழக்கிக் கொடுக்க வேண்டும். இந்தக் கூட்டத் தில் நான் பேசமுடியாதபடி எத்த னைக் குழந்தைகள் அழுகின்றனர் பாருங்கள். அவற்றின் தாயார் முகங்கள் எவ்வளவு வாட்டத்துடன் வெட்கப் படுகின்றது பாருங்கள்.

அந்தத் தாய்மாரும் தகப்பன்மாரும் இந்தக் கூட்டத்தில் ஒருவரையொருவர் பார்த்து வெறுப்பதைத் தவிர அவர் களுக்கு இங்கு வேறு வேலையே இல்லாமல் இருக்கின்றது. இன்பமும் அன்பும் என்பது சுதந்திரத்தோடு இருக்க வேண்டுமே அல்லாது நிபந்தனையோடும் தனக்கு இஷ்டமில்லாத சௌகரிய மில்லாத கஷ்டத்தைச் சகித்துக் கொண்டு இருப்பதாய் இருக்கவே முடியாது.

ஆகவே இப்போதைய குழந்தை இன்பம் என்பது ஒருக்காலமும் உண்மையான இன்பமாகாது. ஆகையால் அவைகளை மாற்றிவிட வேண்டும். தவிர அதிக நகை போடாமலும் தாலி கட்டாமலும் மூடச் சடங்குகள் இல்லாமலும் மாத்திரம் நடைபெற்ற திருமணம் சுயமரியாதைத் திருமணமாகி விடாது.

பெண்ணின் பெற்றோர் இப்பெண்ணுக்குத் தங்கள் சொத்தில் ஒரு பாகம் பங்கிட்டுக் கொடுக்க வேண்டும். புருஷர்களைப் போலவே பெண்களுக்கும் சொத்துரிமை உண்டு; தொழில் உரிமை உண்டு, என்கின்ற கொள்கை ஏற்படாவிட்டால் எப்படி அவர்கள் சுயமரியாதை உடையவர்களாவார்கள்? ஆகையால் அவர்களுக்குச் சொத்துரிமையும் அவசியமானதாகும்.

தவிர பெண்களுக்கு இப்போது பொது நல சேவை என்னவென்றால் எப்படியாவது ஒவ்வொரு விதவையையும் ஒவ்வொரு புருஷனுடன் வாழச் செய்ய வேண்டும். அதுவே அவர்கள் இப்போது செய்ய வேண்டியது.

தவிர பெண்களும் புருஷர் களைப் போலவே தினமுமோ அல்லது வாரத்திற்கு ஒன்று இரண்டு நாளோ ஒரு பொது இடத்தில் கூடி மகிழ்ச்சியாய் பேசி விளையாட வேண்டும். பத்திரிகைகளைப் படிக்க வேண் டும். படிக்காத பெண்களுக்குப் படித்தவர்கள் படித்துக் காட்ட வேண்டும்.

வீட்டு வேலை செய்வதுதான் தங்கள் கடமை என்பதை மறந்து விட வேண்டும். புருஷனுக்குத் தலைவியாய் இருப்பதும் குடும்பத்துக்கு எஜமானியாய் இருப்பதும் தங்கள் கடமை என்று நினைத்து அதற்குத் தகுந்தபடி நடந்து கொள்ள வேண்டும். இந்த உணர்ச்சியோடேயே பெண்மக்களை வளர்த்து அவர்களுக்குத் தக்க பயிற்சி கொடுக்க வேண்டும்.

- குடிஅரசு - சொற்பொழிவு - 13.07.1930

Read more: http://viduthalai.in/page1/85538.html#ixzz39zzbay7j

தமிழ் ஓவியா said...

தந்தை பெரியார் பொன்மொழி

பொருளாதாரத்தில் சரிபண்ணி விட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்று பேசுகிறார்களே, பொருளாதாரத்தில் எவ்வளவுதான் உயர்ந்தவர்களாக ஆனாலும் கூடச் சூத்திரன் சூத்திரன் தானே! பறையன் பறையன்தானே!

வருணாசிரமத் தர்மத்தின் மூலமாகத்தான் நமது நாட்டில் தீண்டாமைக் கொள்கை அமலில் இருந்து வருகிறதேயொழிய, வருணாசிரமம் இல்லாவிட்டால் தீண்டாமைக் கொள்கை பரவ மார்க்கமே கிடையாது. வருணாசிரமத் தர்மம் என்கிற ஓர் உடல் இல்லாவிட்டால் தீண்டாமை என்கிற உயிருக்கு ஆட்டம் இல்லை.

Read more: http://viduthalai.in/page1/85538.html#ixzz39zzkOaAm