Search This Blog

28.8.14

மூடத்தனம் என்ற நோயை ஒழித்ததால்தான் அம்மை நோய் ஒழிக்கப்பட்டது


அம்மை என்பது ஒரு நோய் என்று அறியாமல், மாரியம்மன் என்னும் கடவுளின் கடுங்கோபம் என்று கருதிய காலம் ஒன்றுண்டு. அம்மை நோய் கண்டால் மாரியம்மன் கோவிலில் கூழ் காய்ச்சி ஊற்று வார்கள் - நோயாளியின் தலை மாட்டில் உட்கார்ந்து மாரியம் மன் தாலாட்டுப் பாடல்களைப் பாடுவார்கள்.

இந்த நிலையில் வெள்ளை யர்கள் ஆட்சியின்போது அம்மை நோய்க்குத் தடுப்பு நடவடிக்கைகள் என்றால், மூட நம்பிக்கையில் முட்டையிட்டுப் பொரித்த மூளை உள்ளவர்கள் ஏற்கமாட்டார்களே! என்ன செய் தனர்!
தடுப்பூசி நடவடிக்கையை அம்மன் பிரசாதம் என்றே கூறுவார்களாம்.

1937 ஆம் ஆண்டு காரைக் குடி ஊராட்சி உறுப்பினர் (கவுன்சிலர்) சார்பில் தெய்வத் தன்மை தெய்வீக முறை என்ற பெயரில் அம்மை நோய் போட்டுக் கொள்வதற்கான கையேடுகள் வெளியிடப்பட் டன. அதில் பெரியம்மை எனும் தொற்றுநோயை அழிக்க அம்மன் தந்த வரப்பிரசாதமே அம்மைப் பால் என்ற வகை யில் வரிகள் இடம்பெற்றிருந்தன.

இது மட்டுமா? நாடகங் களில்கூட அம்மைக்கான தடுப் பூசி அம்மன் பிரசாதமாகவே காட்டப்பட்டு, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. 1933 ஆம் ஆண்டு திருப்பத்தூரில் கிருஷ்ணசுவாமி என்ற சுகாதார துறை ஆய்வாளர் எழுதிய நாடகத்தின்மூலம் விழிப் புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இந்தத் தகவல்களை சென்னை நாளை முன்னிட்டு தரமணி ராஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தில் அறிவி யலுக்கும் மதத்துக்கும் தொடு புள்ளியாய் அம்மன் எனும் தலைப்பில் அமெரிக்க உதவிப் பேராசிரியை பெருந்தேவி குறிப்பிட்டுள்ளார்.

 உண்மையில் அம்மை என்பதுதான் என்ன?

பெரியம்மை நோய்க்கு எப்படியாவது தீர்வு காண வேண்டும் என்ற வேட்கை காரணமாக செய்த எட்வின் ஜென்னர் இருபது ஆண்டுகள் தொடர்ந்து ஆராய்ச்சி செய்தார். தனது ஆய்வை ப்யூஸ்டெரின் மருத்துவ முறை மூலம் தீர்வு உண்டு என்று உறுதியாக நம்பினார் ஜென்னர்.

இதைச் சோதித்துப் பார்க்க எண்ணிய ஜென்னர் 1796 ஆம் ஆண்டு மே 14 ஆம் நாள் தனது தோட்டக்காரரின் மகனான ஜேம்ஸ் பிப்ஸ் என்ற எட்டு வயது சிறுவனுக்கு அம்மைக்கான தடுப்பூசி போட எத்தனித்தார் ஜென்னர். சாரான நில்மெசு என்ற பண்ணைப் பெண்ணின் கையிலிருந்த கவுபாக்சு கொப்புளத்திலிருந்து எடுத்த பாலை ஊசி மூலம் ஜேம்ஸ் பிப்ஸின் உடலுக்குள் செலுத்தினார். எதிர்பார்த்தது போலவே அச்சிறுவனுக்கு கவுபாக்சு நோய் ஏற்பட்டது. ஆனால் விரைவில் குண மடைந்தான்.


சில வாரங்கள் கழித்து பெரியம்மை கிருமியான அம்மைப் பாலை ஊசி மூலம் அதே சிறுவனுக்கு செலுத்தி னார். மற்ற மருத்துவர்கள் அவரை எள்ளி நகையாடினர். சிறுவனின் உயிரோடு விளை யாடுகிறான் என்று வசைபாடினர். ஆனால் ஜென்னர் சற்றும் மனம் தளராமல் அந்தத் தடுப்பூசியை சிறுவனுக்குக் குத்தினார். கிராமவாசிகள் எண்ணியதைப் போலவே, ஜென்னர் ஆராய்ச்சி செய்து உறுதிப்படுத்தியது போலவே அந்த சிறுவனுக்கு பெரியம்மை நோய் ஏற்பட வில்லை. அம்மைக்கான தடுப் பூசி கிடைத்துவிட்டது என் பதை உறுதி செய்தமைக்கும், ஜேம்ஸ் பிப்ஸ் என்ற அந்த சிறுவனுக்கும் மருத்துவ வர லாற்றில் அழியா இடம் கிடைத் தது.  அதன்பின் மேலும் பல ஆய்வுகளை செய்து தனது முடிவுகளை 1798 ஆம் ஆண்டு அம்மை நோயின் காரணங் களும், விளைவுகளும் பற்றிய ஓர் ஆய்வு என்ற தலைப்பில் ஒரு நூலாக வெளியிட்டார்.


எட்வர்டு ஜென்னருக்கு முன்னர் 1770-களிலேயே இங்கி லாந்து மற்றும் ஜெர்மனியைச் சேர்ந்த அய்ந்து கண்டுபிடிப்பா ளர்கள் (செவெல், ஜென்சன், பெஞ்சமின் ஜெஸ்டி 1774, ரெண்டெல், பிளெட் 1791) கவுபாக்சு நோயிலிருந்து தடுப் பூசியினை பெரியம்மையால் பாதிக்கப்பட்ட மனிதர்களின் உடலில் செலுத்தி வெற்றிகரமாக சோதனை செய்திருந்தனர். இதில் பெஞ்சமின் ஜெஸ்டி என்பவர் பெரியம்மை நோய்க் கெதிரான தடுப்பூசியினை தானும், தனது மனைவி மற்றும் இரு குழந்தைகளுக்கும் செலுத்தி வெற்றி பெற்றார். ஆனால் 20 ஆண்டுகள் ஆய்வு செய்து எட்வர்டு ஜென்னர் வெளியிட்ட முடிவுகளே விளக் கத்துடன் புரிந்து கொள்ளக் கூடியதாகவும் இருந்தது.

ஆக மூடத்தனம் என்ற நோயை ஒழித்ததால்தான் அறிவியல் அடிப்படையில் அம்மை நோய் ஒழிக்கப்பட்டது என்பதை அறிக.

------------------------ மயிலாடன் அவர்கள் 28-08-2014 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

29 comments:

தமிழ் ஓவியா said...

மூடநம்பிக்கைச் சகதிகள்!


(அன்றாட வாழ்வில் மனிதன் எப்படி எப்படி எல்லாம் மூடநம் பிக்கை மிருகமாக நடமாடுகிறான் என்பதை கோவை அய்யாமுத்து சுவைபடக் கூறுகிறார்)

ஒரு காகம் வீட்டின்முன் உட் கார்ந்து கரைந்தவுடனே, வீட்டுக்கு உற்றார் உறவினர் வரப் போகிறார்கள் எனத் தீர்மானிக்கிறார்கள். காகத்துக்கு இத்தகைய சக்தியிருக்கக் கூடுமோ?

ஒருவருக்கு விக்கல் எடுத்த வுடனே, பிறர் தம்மை நினைப்பதாகக் கூறுகிறார்கள். ஒருவருக்குப் பொறை போனவுடனே, பிறர் தம்மைக் காய் வதாக வைவதாக) எண்ணுகிறார்கள்.

கையிலிருந்து ஒரு காசு தவறிக் கீழே விழுந்தவுடனே லாபம் வரப் போவதாகக் கூறுகிறார்கள்.

ஒரு காரியம் செய்ய எண்ணும் போதோ அல்லது ஒரு காரியத்தைத் துவக்கும் போதோ யாராவது தும்மி னால் சகுனம் கெட்டதாகக் கூறுகிறார்கள்.

ஒருவன் புறப்படும்போது பூனை குறுக்கே ஓடினாலும் வீட்டின் விட்டம் தலையில் தட்டினாலும் வாசல் கல் காலில் பட்டாலும் காரியத் தடங்கல் ஏற்பட்டு விட்டதாக எண்ணுகிறார்கள்.

மற்றும் நாவிதன், விறகுச் சுமை, ஒற்றைப் பார்ப்பான், எண்ணெய்க்குடம் எல்லாம் சகுனத் தடைகளாகவே விளங்குகின்றன.

ஒரு ஊருக்குப் பிரயாணம் செய்யும்போது காகம் இடமிருந்து வலம் போனாலும், வலதுபுறமிருந்து இடதுபுறமாகப் பறந்தாலும் அதற்கு நன்மை,. தீமையெனப் பொருள் கூறுகிறார்கள்.

போதாக்குறைக்குப் பொல்லாத நேரங்களும், ராகு, குளிகை காலங்களும் பார்ப்பன பஞ்சாங்கத்தில் பொதிந்து கிடக்கின்றன.

பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காதாம், செவ்வாய் தோஷமாம்! வெள்ளிக்கிழமை விளக்கு வைத்த நேரத்தில் பிறரிடமிருந்து பொருள் பெறலாம். ஆனால் கொடுத்தல் கூடாது. ஏனெனில் லட்சுமி போய் விடுவாளாம்.

ஒருவன் வாழ்க்கையில் இன்ப மடைவதற்கும், துன்பமடைவதற்கும் அவன் வளர்க்கும் மாடு, எருது, குதிரையாகியவைகளின் சுழிகளே காரணமாம். ஹ்ஹ்ஹா! எவ்வளவு விந்தை! மிருகங்களின் சுழிகள் மனிதனின் வாழ்க்கையை நிச்சயிக்கச் சக்தி வாய்ந்திருக்கின்றன!

பச்சைக்கல் மோதிரத்தின் மர்மம் பலவாறாகக் கூறப்படுகின்றது.

கருப்புப்பட்டுக் கயிற்றால் ஏழு முடிபோட்டு, அதைக் காசிக் கயிறென்று கரத்தில் கட்டிக் கொண்டால் சலக பிணிகளும் போய் விடுமாம்!

வீட்டிலிருந்து வெளியே எடுத்துச் செல்லும் மாமிசப் பதார்த்தத் தில் ஒரு துண்டு அடுப்புக்கரியைப் போட்டுச் சென்றால் பேய் அணுகாதாம்! பருவமடைந்த கன்னி வீட்டினின்றும் வெளியே செல்லும் போது ஒரு மயிர் கோதியைக் கையில் எடுத்துச் சென்றால் பேய்கள் மிரண்டோடுமாம்!

இவையும், இன்னும் இவை போன்ற பலவும் அறியாமை என்ற நிலத்தில் விதைக்கப்பட்ட வித்துக்களா கும். தன் அறிவினால் ஆராய்ந்து பார்ப்பவனுக்கு இவைகளெல்லாம், கடுகளவு உண்மையும் உடையவையல்ல. என்பது நன்கு புலனாகும். நமது வாழ்க்கையின் போக்கை பறவைகள் பறப்பதும், கத்துவதும் நிச்சயப்படுத்த முடியாதென்று புத்தியுள்ளவனுக்குத் தெரியாமல் போகாது.

நமது வாழ்க்கையின் போக்கை மிருகங்களின் மேலிருக்கும் ரோமச் சுழிகளாலும் வண்ணான், நாவிதன், பார்ப்பான் போன்ற தொழிலாளிகள் சுபாவமாக நடமாடுதலாலும், கற்களாலும், கயிற்றாலும், இரும்பாலும் கல்லாலும், விட்டத்தாலும், மரச்சட் டத்தாலும் நிச்சயப்படுத்த முடியா தென்பதை அறிவினால் ஆராய்ந்து பார்ப்பவன் தெரிந்து கொள்வான்.

வியாழனைப் போன்றே பிரதி வெள்ளியும், வெற்றியைப் போன்றே சனியாகிய ஏழு நாட்களும் இருக் கின்றனவேயன்றி, ஒரு நாள் லட்சுமிக்கு ஏற்றதென்றும், பிறநாள் லட்சுமியை விரட்டுமென்றும் புத்தியுள்ளவன் ஒப்புக் கொள்ளமுடியாது.

(24.5.1931 குடிஅரசு)

Read more: http://viduthalai.in/page2/86874.html#ixzz3C1XmOTa4

தமிழ் ஓவியா said...

சத்தியமூர்த்திபற்றி ராமசாமி முதலியார்!


அரசியலாகட்டும், அலுவலகமா கட்டும் மகா உழைப்பாளிகள் போலவும், உண்மைத் தொண்டர்கள் போலவும் பாவலா செய்வது பார்ப் பனர்களுக்கு கை வந்த கலை!

பார்ப்பன அரசியல் மேதை சத்தியமூர்த்தி 1934 வாக்கில் காங்கிரஸ் சார்பில் மத்திய சட்டசபை தேர்தலுக்கு நின்றார். தேர்தல் கூட்டங்களில் என்ன பேசினார்கள் தெரியுமா? காங்கிரஸ் நாட்டுக்கு தியாகம் செய்த கட்சி. நாங் கள் எல்லாம் ஜெயிலுக்கு போனவர்கள், எனவே எங்களுக்கு ஓட்டு போடுங்கள் என்றார். இங்கேதான் வேடிக்கை.

சத்தியமூர்த்தி ஜெயிலுக்கு போக நேர்ந்ததையும் -_ அங்கு அவர்பட்ட கஷ்டத்தையும் ஏ. ராமசாமி முதலியார் அம்பலமாக்குவதைக் கவனியுங்கள்.

ஒரு சமயம் தோழர் சத்தியமூர்த்தி கோவிந்தப்ப நாயக்கன் தெருவில்ஒரு கடையில் நாற்காலி போட்டு உட் கார்ந்து கொண்டு சட்ட பகிஷ்கார துண்டு பிரசுரங்களை ஜனங்களுக்கு விநியோகித்துக் கொண்டிருந்தார்.

அப்போது அவரை போலீசார் கைது செய்து மாஜிஸ்டிரேட்டின் முன் நிறுத்தினார்கள். மாஜிஸ்டிரேட் சத்தியமூர்த்தியை பார்த்து அய்யா சத்தியமூர்த்தியே -_ இவ்வளவு மலிவான விலையில் நான் உன்னை பெரிய வீரனாக்க விரும்பவில்லை என்று சொல்லி எச்சரித்து விடுதலை செய்து விட்டார். சத்தியமூர்த்தி சிறைக்கு போகாததைப்பற்றி மக்கள் கேவலமாக பேச ஆரம்பித்துவிட்டார்கள். அவர் சிறைக்கு போனால்தான் மரியாதை என்ற நிலைமை ஏற்பட்டது.

கணக்கற்ற இளைஞர்கள் தடியடிபட்டு ஜெயிலுக்கு போய்க் கொண்டிருந்தனர். உயிர் போனாலும் சத்தியமூர்த்தி அப்படி தடியடி படமாட்டார். எனவே ஒரு மோட்டார் தேடிபிடித்து அதில் உட்கார்ந்துகொண்டு மறுபடியும் நோட்டீஸ் விநியோகம் செய்தார். இது பெரிய குற்றமாகாது என்றும், கைது ஆனாலும் பெரிய தண்டனை கிடைக் காது என்றும் முழு நம்பிக்கையோடு சத்திய மூர்த்தி மோட்டார் சட்ட மறுப்பில் இறங்கினார்.

ஆனால் பாவம். பதினெட்டு மாதம் தீட்டினார்கள். சிறை தண்டனை உத்தரவான அதே இடத்தில் ஏ வகுப்பு போடும்படி மன் றாடி வேண்ட, மாஜிஸ்டிரேட்டும் மனம் இரங்கி அவ்விதமாக அனுமதித் தார். வேலூர் ஜெயிலுக்கு அனுப்பி னார்கள். உடம்பு சரியில்லை என்று ஜெனரல் ஆஸ்பத்திரியில் நான்கு மாதம் இருந்தார். ஆஸ்பத்திரியில் எல்லா சுதந்திரங்களும் உண்டு.

ஜெயிலில் இருந்தபோதும் -_ அங்குவரும் (சத்திய மூர்த்திக்கு எதிர்க்கட்சி) பிரமுகர்களை வேண்டி எவ்வளவோ வசதிகளை ஜெயிலில் பெற்றுக் கொண்டார். மேலும் நீதிக்கட்சிக்காரர்களின் உதவி யுடன் குறித்த காலத்திற்கு முன்பே விடுதலை ஆனார். அப்படி உதவியவர் களில் நானும் ஒருவன். சத்தியமூர்த்திக்கு எள் மூக்கத்தனையாவது பெருந்தன்மை இல்லை என்பது நிச்சயம். வடிகட்டிய நன்றி கெட்டதனமே அந்த மகானுபா வரின் இயற்கைச் சுவாபம் என்று தெரிகிறது.

பார்ப்பனர்களால் _- மகாமேதை யாகவும், தியாகியாகவும் இன்று சொல்லப்படும் சத்தியமூர்த்தியின் யோக்கியதையே இப்படி என்றால்.. அந்தோ! வெட்கம் என்றால் வீசை என்ன விலை என்று கேட்கும் விசித்திர இனமே!

பகுத்தறிவு 21.10.1937

Read more: http://viduthalai.in/page8/86825.html#ixzz3C1ZC3jZp

தமிழ் ஓவியா said...

அன்றும் - இன்றும்!


காஞ்சீபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் பட்டப் பகலில் அக்கோ யில் மேலாளர் சங்கரரா மன் கொலை செய்யப்பட் டார். அந்த சங்கரராமன். காஞ்சிபுரம் சங்கராச்சாரி யார் ஜெயேந்திர சரஸ்வதி மீது குற்றஞ்சாட்டி எழுதிய கடிதங்கள் பிரசித்திப் பெற் றவை. அந்தச் சூழலில் காஞ்சி ஜெயேந்திரரால் ஏவப்பட்டவர்கள் இந்தப் படுகொலையைச் செய்த னர் என்று ஏடுகளில் ஏராளமான செய்திகள் வெளி வந்ததுண்டு

இந்த வழக்குத் தமிழ் நாட்டில் விசாரிக்கப்பட் டால் தமக்கு நியாயம் கிடைக்காது என்று கூறி சங்கராச்சாரியார் தரப்பில் உச்சநீதிமன்றம் சென்ற போது, உச்சநீதிமன்ற நீதி பதி திரு. பாலசுப்பிரமணி யம் என்பவர் நான் சங்க ராச்சாரியார் சீடன்; எனவே இந்த வழக்கினை நான் விசாரிக்க மாட்டேன்! என்று சொன்னது எத் தனைப் பேருக்கு நினை வில் இருக்கும் என்று தெரிய வில்லை.

உச்சநீதிமன்ற ஆணைப்படி இந்த வழக்கு புதுச்சேரி நீதிமன்றத்தில் நடத்தப்பட்டது. மொத்தம் 189 சாட்சியங்களில் 83 பேர் பிறழ் சாட்சியாகி விட்டார் கள். எந்த ஒரு வழக்கிலும் இத்தனைப் பேர் பிறழ் சாட்சியங்களாக மாறிய வரலாறு இல்லை; இப்படி பிறழ் சாட்சி சொன்னவர் கள்மீது கூட நடவடிக்கை எடுக்க சட்டத்தில் இடம் உண்டு. இந்த வழக்கில் அதுபற்றிக் கவலைப்பட்ட தாகத் தெரியவில்லை.

சங்கராச்சாரியார் இரு வரும் மற்றவர்களும் ஒட்டு மொத்தமாக விடுதலை செய்யப்பட்டார்கள்; அதன் மீது மேல் முறையீடு செய்ய புதுச்சேரி அரசு - ஆளுநர் அனுமதி வழங் கிய நிலையில், சுப்பிர மணியசாமி என்ற பச்சை பார்ப்பனர் ஒருவர் குடி யரசு தலைவருக்கு மனு கொடுக்கிறார். இந்த வழக் கின்மீது மேல் முறையீடு செய்வதற்கு அனுமதி அளிக்கக் கூடாது என்று அதில் கூறியுள்ளார்.

அதனைக் கண்டித்து தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் அறிக்கை ஒன்றினை வெளியிட்டார். சு. சாமி யின் புகாரை ஏற்கக் கூடாது என்று குடியரசு தலைவருக்கு மின்னஞ்சல் அனுப்புமாறு அந்த அறிக் கையில் வேண்டுகோள் விட்டிருந்தார். (8.8.2014)

இந்தச் சூழ்நிலையில் இந்த வழக்கை மேல் முறையீடு செய்யலாமா கூடாதா என்று அட்டர்னி ஜெனரலின் கருத்துக் கேட் கப்பட்டது. ஒரு மாவட்ட அளவில் நடைபெற்ற ஒரு வழக்குக்காக அட்டர்னி ஜெனரலிடம் கருத்துக் கேட்கும் போதே அதன்மீதான அய் யப்பாட்டை திரா விடர் கழகத் தலைவர் எழுப்பினார். (21.8.2014) அது உண்மை என்பதை நிரூபிக் கும் வகையில் அட்டர்னி ஜெனரல் மேல் முறையீடு தேவையில்லை என்று கூறி விட்டார்.

இந்த நேரத்தில் குடிஅரசு ஏட்டில் (20.2.1927) வெளி வந்த ஒன்றை எடுத்துக் காட்டுவது பொருத்தமான தாகும். பார்ப்பானை சுவாமி என்ற காலமும் போச்சே! லோக குரு என்ற காலமும் போச்சே! காலில் விழும் காலமும் பேச்சே! காலைக் கழுவி தண்ணீரைக்குடித்து மோட்சத்திற்குப் போகும் காலமும் போச்சே! நம் எல்லோரையும் வைப் பாட்டி மக்கள் சூத்திரர் கள் என்னும் காலமும் போச்சே!

காங்கிரஸ் தலைவர்: துரைகளே! இது வகுப்புத் துவேஷம் அல் லவா!

துரை: பொறும் பொறும் சட்ட மெம்பரை யும் அட்வொகேட் ஜென ரலையும் அபிப்ராயம் கேட் போம்; அவசரப் படாதே யும் (குடிஅரசு - 20.2.1927).

இதற்கு விளக்கம் தேவையில்லை அன்றும் அட்வொகேட் ஜெனர லைக் கேட்டார்கள்; இன்று அட்டர்னி ஜெனரலைக் கேட்கிறார்கள் - புரிகிறதா!

- மயிலாடன் 30-8-2014

Read more: http://viduthalai.in/page1/86799.html#ixzz3C1aDuUkJ

தமிழ் ஓவியா said...

சிக்கல் விநாயகருக்கு சிக்கல்!

திருவிடைமருதூர், ஆக.30_ கும்பகோணம் அருகே உள்ள சிக்கல் நாயக்கன்பேட்டையில் 50 ஆண் டுக்கு முன்பு கட்டப்பட்ட அய்யனார்கோவில் உள்ளது. இந்து சமய அறநிலைக்கு சொந்தமான இந்த கோவிலை இரவு வழக்கம்போல் பூட்டிச் சென்றனர். இந்த நிலையில் கோவிலுக்குள் புகுந்த சிலர் மூலவர் சன்னதி முன்பு இருந்து விநாயகர் சிலையை திருடி சென்றுவிட்டனர்.

இதுபற்றி கோவில் பரம்பரை அறங்காவலர் வரதராஜன் திருப்பனந்தாள் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விநாயகர் சிலையை திருடிய வர்களை தேடி வருகிறார்கள். விநாயகர் சதுர்த்தி விழாவின் போது விநாயகர் சிலை திருடப்பட்ட சம் பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Read more: http://viduthalai.in/page1/86801.html#ixzz3C1abtGnl

தமிழ் ஓவியா said...

காய்கறி உண(ர்)வுப் பிரச்சினை!

மத்திய ஆட்சி இந்துத்துவா ஆட்சியாகவே நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக நடந்து கொண்டு வருகிறது.

பிரதமர் நரேந்திரமோடி அவர்கள் கலந்து கொள்ளும் விருந்தில் இறைச்சி உணவுக்குத் தடையாம். அயல் நாடுகளில் உள்ள இந்தியத் தூதரக அலுவலகங் களுக்குக்கூட இந்த ஆணை பொருந்துமாம்.

பிரதமர் அலுவலகம் சார்பில் அனைத்து அமைச்சர் கள், உயர் அலுவலகங்கள், வெளிநாடுகளில் உள்ள இந்தியத் தூதரக அலுவலகங்களுக்கு இந்தியப் பிரதமர் அலுவலகத்திலிருந்து இந்த வகையில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

இது சரியானது தானா? சட்ட ரீதியிலோ, தார்மீக ரீதியிலோகூட இது ஏற்றுக் கொள்ளத்தக்கது தானா என்பதைப் புத்தியைச் செலுத்தி சிந்திக்க வேண்டும்.

பிரதமராக இருக்கக் கூடிய ஒருவர் சைவ உணவை சாப்பிடுபவராக இருக்கலாம்; பிரதமர் அப்படி இருக்கிறார் என்பதற்காக மற்றவர்களும் அவ்வாறுதான் சைவ உணவு சாப்பிட வேண்டும் என்று வற்புறுத்த, ஆணை பிறப்பிக்க, நிர்ப்பந்திக்க யாருக்கும் உரிமை கிடையாது. இந்த அடிப்படை மனித உரிமையைக் கூடத் மதிக்கத் தயாராக இல்லாதவர்தான் இந்தியாவின் பிரதமர் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும்.

பிரதமர் அலுவலகத்தில் இந்த ஆணை இந்தியாவின் உயர் மட்டப் பதவியை அலங்கரிக்கும் குடியரசுத் தலைவர் அலுவலகத்தைக் கட்டுப்படுத்தப் போவதில்லை. வங்காளத்தில் உள்ளவர்கள் விரும்பிச் சாப்பிடுவது மீன்தான் என்பது பிரதமருக்கும் பிரதமரின் அலுவலகத்தில் உள்ளவர்களுக்கும் இது தெரிந்தது தானே!

இதில் இன்னொரு கேள்வியும் தொக்கி நிற்கிறது. பிரதமர் வெளிநாடுகளுக்குச் செல்லும்போது (இந்த நூறு நாட்களில் அது தானே தொடர்ந்து நடந்து கொண்டு இருக்கிறது) வெளிநாட்டு அரசு அளிக்கும் விருந்திலும் இந்தக் கட்டுப்பாட்டை இந்தியப் பிரதமர் அலுவலகம் விதிக்கப் போகிறதா என்பது ஒரு கசப்பான கேள்வியாக இருக்கலாம்.

பசுவதைத் தடை சட்டம்பற்றி இன்னொரு வகையில் பேசிக் கொண்டு இருக்கிறார்கள். பிஜேபி ஆளும் மாநிலங்களில் பசுவதைத் தடை சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

கோ பாதுகாப்புப் பற்றி தேர்தல் அறிக்கையிலும் குறிப்பிட்டுள்ளார்கள்; அனேகமாக மத்திய அரசே பசு வதைத் தடுப்புச் சட்டம் ஒன்றைக் கொண்டு வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

இந்திய அரசின் இந்த நிலைப்பாட்டைக் கண்டு உலக நாடுகள் கைதட்டிச் சிரிக்காதா?

ஒரே ஒருவர் சைவ உணவு சாப்பிட வேண்டும் என்பதற்காக மற்றவர்கள் அனைவரும் அத்தகைய உணவையே சாப்பிட வேண்டும் என்று வற்புறுத்துவது ஜனநாயகமா? இந்தியா இதற்கு மாறான திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறதா? என்ற நியாயமான கேள்வி சிந்தனைத் திறன் உள்ள ஒவ்வொருவருக்கும் ஏற்படாமல் போகாது!

வி.வி. கிரி அவர்கள் குடியரசு தலைவராக இருந்தபோது சிங்கப்பூர் சென்றிருந்தார். அப்பொழுது தனக்குச் சமையல் செய்பவர்கள் பிராமணர்களாக இருக்க வேண்டும் என்று வற்புறுத்த தமிழ்நாட்டி லிருந்து பார்ப்பன சமையற்காரர்கள் அனுப்பி வைக்கப்பட்டதையும் இந்த இடத்தில் நினைவு கூர்வது பொருத்தம்.

சைவ உணவு தேவை என்றால், சிங்கப்பூரிலேயே அதனை சமைத்துக் கொடுக்க தேர்ந்த சமையற்காரர்கள் இல்லாமலா போய் விட்டார்கள்? அப்பொழுது இது ஒரு பிரச்சினையாகப் பேசப்பட்டதுண்டு - விமர்சிக்கப் பட்டதுண்டு.

நீண்ட காலத்திற்குப் பிறகு ஆட்சியில் உயர்மட்டப் பதவியில் உள்ளவர்களின் உணவுப் பிரச்சினை, அரசின் அதிகார பூர்வ அறிக்கையாக இப்பொழுது வெளி வந்துள்ளது.

இது அடுத்தவர்களின் உரிமையில் மூக்கை நுழைக்கும் மோசமான நடவடிக்கையாகும். இந்தப் போக்குத் தொடருமேயானால், தனி மனிதனின் தனிப்பட்ட உணர்வுகளில் பழக்க வழக்கங்களில் மோடி அரசு தலையிடக்கூடும் என்று எதிர்ப்பார்க்கலாம்.

தொடக்கத்திலேயே இது கண்டிக்கப்பட வேண்டும் எதிர்க்கப்பட வேண்டும் - விவாதங்கள் எழுப்பப்பட வேண்டும். ஊடகங்களும் ஒதுங்கிக் கொள்ளாமல் பெரும்பான்மையான மக்களின் உண(ர்)வுப் பிரச்சினையைத் தனி மனிதரின் ஆசாபாசத்தின் முடிவுக்கு விட்டுவிட முடியுமா? வெளிப்படையான விவாதங்கள் வெளிச்சத்திற்கு வரட்டும் - அதனை வரவேற்கிறோம்.

Read more: http://viduthalai.in/page1/86790.html#ixzz3C1atUqRG

தமிழ் ஓவியா said...

சட்டசபைக்குப் பார்ப்பனர் செல்வதன் ஆபத்து

திருவாளர் ராவ்பகதூர் கிருஷ்ணமாச்சாரியர் எம். எல். ஏ. இந்திய சட்டசபைக்கு நமது பிரதிநிதியாக அனுப் பப்பட்டவர். அவர் சமூக சட்டம் செய்ய சட்ட சபைக்கு அதிகாரம் இருக்கக் கூடாதென்றும் மத விஷயங்களில் எந்தச் சீர்திருத்தவாதியும் பிரவேசிக்கக் கூடாதென்றும், கல்யாண வயதைப் பற்றி சாஸ்திரங்களில் என்ன கூறியிருக்கிறதோ அதற்குச் சிறிதுகூட மாற்றம் செய்யச் சீர்திருத்தவாதி களையாவது, சர்க்காரையாவது, சட்டசபைகளை யாவது அனுமதிக்கக் கூடாது என்றும் பேசி அதற்காகக் கட்டுப்பாடான பிரச்சாரம் செய்ய வேண்டுமென்று தன்னால் கூடியவரை தான் சட்ட சபையில் பார்த்துக் கொள்வதாகவும் கூறியிருக்கின்றார்.

சுயராஜ்யம் கிடைத்த பிறகு சமூக சட்டம் செய்து கொள்ளலாம் என்று மக்களை ஏமாற்றி அரசியல் குழியில் விழுகும்படி செய்யும் பார்ப்பன தேசியவாதிகளும் அவர்களது பத்திரிகைகளும் இதற்கு யாதொரு பதிலும் சொல்லாமல் வாயை மூடிக் கொண்டேயிருக்கின்றன.

நாம் இந்தப் பித்தலாட்டங்களை எடுத்துக் காட்டினால் அது தேசத்துரோகம் என்பதாகவும் சுயராஜ்யத்திற்கு முட்டுக் கட்டையாகவும் போய்விட்டதாகக் கூக்குரல் போட்டு விஷமப் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்து விடுகிறார்கள்.

ஆகவே எப்படியாவது சட்டசபை முதலிய தானங் களுக்கு அரசியல் கட்சிகளையும் அபிப்பிராயங்களையும் எதிர்பார்க்காமல் உண்மையான சீர்திருத்தத்திற்கு போதிய உணர்ச்சியுள்ள மக்களாகப் போகும்படி பார்த்துக் கொள்ள வேண்டியதாகும்.

அதை விட்டு விட்டு அரசியல் கொள்கைகள் என்பதைக் கவனித்துக் கொண்டு எந்தக் காரணத்தை முன்னிட்டாவது பார்ப்பனர்களை நமது பிரதிநிதிகளாக அனுமதித்தோமானால் விதவைகள் கற்பம் உதிரக் கட்டியாகி திடீரென்று மறைந்து விடுவதுபோல் நமக்குத் தெரியாமலேயே அவர்கள் பார்ப்பனியப் பிரதிநிதி யாகவேதான் ஆகிவிடுவார்கள். அதில் சிறிதும் சந்தேகம் கொள்ளுவது அறியாமையேயாகும்.

- குடிஅரசு - கட்டுரை - 26.10.1930

Read more: http://viduthalai.in/page1/86768.html#ixzz3C1bdsXMW

தமிழ் ஓவியா said...

அரசியல் வியாபாரம்


டா க்டர் பி. சுப்பராயன் அவர்கள் அடுத்துக் கூடும் சட்டசபைக் கூட்டத்திற்கு மூன்று தீர்மானங்கள் அனுப்பப் போவதாகத் தெரிகின்றது. அதாவது,

1. சில பாதுகாப்புகளுடன் குடியேற்ற நாட்டத்துக்குக் குறைந்த எந்தத் திட்டமும் திருப்தியளிக்காது என்று இச்சபை அபிப்பிராயப்படுவதாக இந்த கவர்ன்மெண்ட் பிரிட்டிஷ் கவர்மெண்டாருக்குத் தெரிவிக்க வேண்டுமென இச்சபை சிபார்சு செய்கிறது.

2. பலாத்காரமற்ற குற்றங்களுக்காகத் தண்டிக்கப்பட்ட அரசியல் குற்றவாளிகளையெல்லாம் விடுதலை செய்ய வேண்டுமென்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குச் சிபார்சு செய்யும்படி இச்சபை சிபார்சு செய்கிறது.

3. அரசியல் கைதிகள் நடத்தப்படும் விதத்தைப் பற்றி விசாரணை செய்ய ஒரு கமிட்டி நியமிக்க வேண்டுமென்று இச்சபை கேட்டுக் கொள்ளுகிறது. என்பவையாகும். ஆகவே, இம்மூன்று தீர்மானங்களையும் நம்மைப் பொறுத்தவரை நாம் இவைகளை அரசியல் வியாபாரத் தீர்மானங்களென்றே சொல்லுவோம்.

இதற்காக ஜஸ்டிஸ் கட்சியார்கள் பயந்து கொள்ளவோ திக்கு முக்காடவோ தேவையில்லையென்றும் சொல் லுவோம். ஏனெனில் இந்த மாதிரி காரியங்களின் நடவடிக் கைகளை ஆதாரமாய் வைத்துக் கொண்டு கூப்பாடு போடும் தேசியப் பத்திரிகைகள் என்பவைகள் எல்லாம் ஜஸ்டிஸ் கட்சிக்கு நிபந்தனையில்லாத அடிமைகளாய்ப் போய்விட்டபடியாலும் சென்ற தேர்தலின் போது தேசியக் கட்சியை விட ஜஸ்டிஸ் கட்சி மோசமானது என்று கருதி அதைக் காப்பாற்ற வேண் டிய பொறுப்பு ஏற்பட்டது போல் இப்போது ஜஸ்டிஸ் கட்சியை விட தேசியக்கட்சி மோசமானது என்று கருதி ஜஸ்டிஸ் கட்சியைக் காப்பாற்றித் தீரவேண்டிய பொறுப் புடை யவைகளாகி விட்டபடியாலும் அவைகள் கருவாடு திருட்டுக் கொடுத்த பார்ப்பனத்தி போல் வெளியில் சொல்லாமல் வாயை மூடிக் கொள்ளும்.

ஆகையால், ஜஸ்டிஸ் கட்சியார் இவ்விஷயத்தில் யாருக்கும் பயப்படாமல் தங்கள் கொள்கையைத் தைரியமாய் வலியுறுத்தலாம் என்பதாகத் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.

- குடிஅரசு - துணைத்தலையங்கம் - 09.11.1930

Read more: http://viduthalai.in/page1/86770.html#ixzz3C1bwCOSJ

தமிழ் ஓவியா said...

ஜாதி மதப் பெயர் கொடுக்காதீர்கள்: முக்கியமான வேண்டுகோள்

இவ்வருஷக் கோடியில் சர்க்காரால் ஜனங்களுடைய எண்ணிக்கையை எடுக்கும் சென்சஸ் வேலை நடைபெறும். அதில் கணக்கெடுப்பவர்கள் உங் களிடம் வந்து விசாரிக்கையில் நீங்கள் ஜாதி மதத்தைப் பற்றி கேட்கப்படுவீர்கள்.

அப்போது முறையே இந்தியன் என்றும் பகுத்தறிவுக்காரன் என்றும் மாத்திரம் தான் சொல்ல வேண்டுமே ஒழிய எவ்வித மதத்தின் பேராவது ஜாதியின் பேராவது சொல்லக் கூடாது என்று தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

ஏனெனில் ஜாதி வித்தியாசத்தை ஒழிக்க இந்தியாவில் எல்லாப் பிரமுகர்களும் ஒரே முகமாய் நின்று மும்முரமாய் வேலை செய்யும் போது நாம் மறுபடியும் அதைச் சொல்லிக் கொண்டிருப்பது மூடத்தனமும் கவலையும் சுயமரியாதையும் அற்ற தன்மையுமாகும்.

அதுபோலவே இந்தியர்களில் யாராவது தன்னை இந்து என்று மதத்தின் பெயரைச் சொல்லுவதும் சுத்த முட்டாள் தனமாகும். இந்து மதம் என்பதாக ஒரு மதம் இல்லை யென்றும் அப்படியிருப்பதாகச் சொல்லும் மதத்தின் தத்துவமும் மக்கள் பிறவியில் உயர்வு தாழ்வு கற்பிப்பதும் 20 கோடி இந்துக்கள் என்பவர்களில் பார்ப்பனர்கள் தவிர மற்றவர்கள் எல்லோரும் பார்ப்பனருக்கு அடிமைகள்,

அவர்களது தாசிமக்கள் என்கின்ற மானமற்ற தன்மை கொண்ட பொருளே இருப்பதால் சுயமரியாதையுள்ள எவரும் தங்களை இந்துக்கள் என்று சொல்லக்கூடாது. தவிரவும் இந்து என்னும் பதத்திற்குத் திருடன், அயோக்கியன், மோசக்காரன் என்று அர்த்தம் என்பதையுமுணருங்கள் என்று தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

- குடிஅரசு - வேண்டுகோள் - 09.11.1930

Read more: http://viduthalai.in/page1/86769.html#ixzz3C1c7VNXC

தமிழ் ஓவியா said...

அரசியல் வியாபாரம்


டா க்டர் பி. சுப்பராயன் அவர்கள் அடுத்துக் கூடும் சட்டசபைக் கூட்டத்திற்கு மூன்று தீர்மானங்கள் அனுப்பப் போவதாகத் தெரிகின்றது. அதாவது,

1. சில பாதுகாப்புகளுடன் குடியேற்ற நாட்டத்துக்குக் குறைந்த எந்தத் திட்டமும் திருப்தியளிக்காது என்று இச்சபை அபிப்பிராயப்படுவதாக இந்த கவர்ன்மெண்ட் பிரிட்டிஷ் கவர்மெண்டாருக்குத் தெரிவிக்க வேண்டுமென இச்சபை சிபார்சு செய்கிறது.

2. பலாத்காரமற்ற குற்றங்களுக்காகத் தண்டிக்கப்பட்ட அரசியல் குற்றவாளிகளையெல்லாம் விடுதலை செய்ய வேண்டுமென்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குச் சிபார்சு செய்யும்படி இச்சபை சிபார்சு செய்கிறது.

3. அரசியல் கைதிகள் நடத்தப்படும் விதத்தைப் பற்றி விசாரணை செய்ய ஒரு கமிட்டி நியமிக்க வேண்டுமென்று இச்சபை கேட்டுக் கொள்ளுகிறது. என்பவையாகும். ஆகவே, இம்மூன்று தீர்மானங்களையும் நம்மைப் பொறுத்தவரை நாம் இவைகளை அரசியல் வியாபாரத் தீர்மானங்களென்றே சொல்லுவோம்.

இதற்காக ஜஸ்டிஸ் கட்சியார்கள் பயந்து கொள்ளவோ திக்கு முக்காடவோ தேவையில்லையென்றும் சொல் லுவோம். ஏனெனில் இந்த மாதிரி காரியங்களின் நடவடிக் கைகளை ஆதாரமாய் வைத்துக் கொண்டு கூப்பாடு போடும் தேசியப் பத்திரிகைகள் என்பவைகள் எல்லாம் ஜஸ்டிஸ் கட்சிக்கு நிபந்தனையில்லாத அடிமைகளாய்ப் போய்விட்டபடியாலும் சென்ற தேர்தலின் போது தேசியக் கட்சியை விட ஜஸ்டிஸ் கட்சி மோசமானது என்று கருதி அதைக் காப்பாற்ற வேண் டிய பொறுப்பு ஏற்பட்டது போல் இப்போது ஜஸ்டிஸ் கட்சியை விட தேசியக்கட்சி மோசமானது என்று கருதி ஜஸ்டிஸ் கட்சியைக் காப்பாற்றித் தீரவேண்டிய பொறுப் புடை யவைகளாகி விட்டபடியாலும் அவைகள் கருவாடு திருட்டுக் கொடுத்த பார்ப்பனத்தி போல் வெளியில் சொல்லாமல் வாயை மூடிக் கொள்ளும்.

ஆகையால், ஜஸ்டிஸ் கட்சியார் இவ்விஷயத்தில் யாருக்கும் பயப்படாமல் தங்கள் கொள்கையைத் தைரியமாய் வலியுறுத்தலாம் என்பதாகத் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.

- குடிஅரசு - துணைத்தலையங்கம் - 09.11.1930

Read more: http://viduthalai.in/page1/86770.html#ixzz3C1cEsRh0

தமிழ் ஓவியா said...

பெரியவா செய்தால்....?
தினமணியில் தோண்டி எடுத்த தீர்ப்பு - என்று தலையங்கம் (28.8.2014).

நிலக்கிரி ஒதுக்கீடு ஊழல் பற்றிய உச்சநீதிமன்றத் தீர்ப்பை அலசியிருக்கிறது.

ஊழல் நடந்தகாலம் 1993 முதல் 2012.

இதில் பா.ஜ.க. ஆட்சிக்காலம் 1998 முதல் 22.5.2004 வரை.

பிறகு காங்கிரஸ் ஆட்சி.

மொத்த ஊழல் ஒதுக்கீடுகள்: 218.

இதில் காங்கிரஸ் காலத்தில் ஒதுக்கீடு செய்யப் பட்டவை: 166

இதுகுறித்து விலாவாரியாக தினமணி தலையங்கம் கூறுகிறது. ஆனால், பா.ஜ.க. ஆட்சிக் காலத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்ட 52

ஒதுக்கீடுகளில் நிகழ்ந்த ஊழல்களைப்பற்றி விசாரிக்காமல் அந்த ஊழலை மட்டும் மீண்டும் புதைகுழிக்குள் மறைத்து விட்டதே! - தினமணி, அது ஏன்?

ஓ! பா.ஜ.க., பெரியவா செஞ்சா அது பெருமாள் செஞ்சமாதிரி. அதை யாரும் கேள்வி கேட்கப்படக் கூடாது அப்படித்தானே?

Read more: http://viduthalai.in/page1/86720.html#ixzz3C1cTjYtZ

தமிழ் ஓவியா said...

செய்தியும் சிந்தனையும்


செய்தியும் சிந்தனையும்

ஸ்வீட் கடை

செய்தி: ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட் கடைகளில் சிறப்பு இனிப்பு கார வகைகள் தனி டப்பாக்களில் விற்பனை - 2600 விநாயகர் கண்காட்சி யும் உண்டு.
சிந்தனை: வியாபாரத்திற்கும் வியாபாரம்! பார்ப்பனீய பக்திப் பிரச்சாரமும் இன் னொரு புறம்; சும்மா ஆடுமா அவாள் குடுமி?

வருண ஜெபம்

செய்தி: மழை வேண்டி திருக்கழுக்குன்றம் வேத புரீஸ்வர் கோயிலில் யாகம் நடைபெற்றது. சிந்தனை: இதுபோன்ற சேதிகள் ஏடுகளில் வருகின் றன; ஆனால், மழை பொழிய வில்லை என்பது மட்டும் மக்கள் அறிந்த உண்மை!

Read more: http://viduthalai.in/page1/86716.html#ixzz3C1cbcjo5

தமிழ் ஓவியா said...

புதிய பாரத் மாதா - ஹிந்து மாதாதான்! ஜே! ஜே!!

- ஊசி மிளகாய்

இந்த வார கல்கி ஏட்டில் (7.9.2014) ஒரு கேள்வி - பதில் வெளிவந்துள்ளதை அப்படியே தருகிறோம்.

கேள்வி: ஜாதி, மத உணர்வுகளை 10 ஆண்டுகள் நிறுத்தி வையுங்கள் என்கிறாரே மோடி?

(கல்கியின்) பதில்: பிரதமர் பதவியேற்றபின் முதல் முறையாக ஒரு அபத்த வேண்டுகோளை விடுத்துள்ளார் மோடி. பத்து ஆண்டுகள் என்ன கணக்கு? அதன் பிறகு மறுபடி இந்த தீய உணர்வுகள் தலையெடுத்தால் பாதகமில்லையா? என்ன? சரியான திட்டங்களை வகுத்து மனப்பூர்வமாக செயல்படுத்தினால் பத்து ஆண்டுகளில் ஜாதி, மத உணர்வுகளை அடியோடு ஒழித்துக் கட்ட முடியும்.

ஆனால், அதற்குக்கூட சங்பரிவார் அமைப்பு களின் ஒத்துழைப்பு மோடிக்குக் கிடைக்காது.

- கல்கியின் தராசு கூறும் இக்கருத்துக்களை உண்மையான - யதார்த்தமான - நிலவரத்தின் பிரதிபலிப்பாகும். சங்பரிவாரங்கள் என்றாவது ஜாதி ஒழிய வேண்டும் என்று கூறிட முன் வருமா? அதன் தத்துவ கர்த்தரான கோல்வாக்கரின் ஞான கங்கை நூலில் அவர் வர்ண தர்மத்தை (ஜாதியை) நியாயப்படுத்தியுள்ளதோடு அதனை சிலாகித்துப் பாதுகாக்க அல்லவா வற்புறுத் துகிறார்?

இங்குள்ள ஆர்.எஸ்.எஸ். காரரான கோயங்கா வீட்டுக் கணக்கப் பிள்ளை ஸ்ரீமான் குருமூர்த்தி அய்யர் வாள் சில நாள்களுக்கு முன் ஜாதி, பொருளாதாரத்திற்கு மிகவும் உதவுவதாகக் கூறி, ஜாதிப் பாதுகாப்பை மேம்படுத்தி உபந்நியாசம் செய்தாரே மறந்து விட்டதா?

அதை மிகப் பெரிய அளவில் தினமணி ஏட்டில் போட்டு விளம்பரப் படுத்தினரே - குருமூர்த்தி அய்யர்வாளின் ஆர்.எஸ்.எஸ். கூட்டு சகாவான ஸ்ரீமான் விளம்பரப்புகழ் வைத்தியநாத அய்யர்வாள் - அது எதைக் காட்டுகிறது?

மோடி ஜாதியை ஒழிக்க, மதத்தை அடக்க முன் வருவாரா? வரத்தான் முடியுமா? அவரது மூக்கணாங்கயிறு ஆர்.எஸ்.எஸ். கையில் அல்லவா உள்ளது?

பிரதமர் மோடி உண்மையில் விரும்பினால் அரசியல் சட்டத்தில் உள்ள 17ஆவது விதியில் மாற்ற வேண்டியது ஒரே ஒரு வார்த்தையைத்தான்! (ஒரு அரசியல் சட்டத் திருத்தம் ஏகமனதாக நிறைவேற போதிய பெரும்பான்மை உள்ளதே!) தீண்டாமை ஒழிக்கப்பட்டு விட்டது என்ற 17ஆவது விதியில் திண்டாமைக்கு பதில் ஜாதி என்ற சொல்லை மாற்றிப் போட்டாலே, பெரிய சமூகப் புரட்சி சரித்திரத்தை மோடியால் படைத்து விட முடியுமே! 18 இடங்களில் இந்திய அரசியல் சட்டத்தில் ‘Caste (ஜாதி) இடம் பெற்றுள்ளதே!

அது மட்டுமா? இந்தியாவின் அத்தனைக் குடி மக்களும் ஹிந்துக்கள் தானாம்! அதுதான் இந்தியாவின் அடையாளமாம்!

தேசிய அடையாளம் என்று மோடி அரசின் சிறுபான்மையினர் நலன் காக்கும் திருமதி நஜ்மா அப்துல்லா திருவாய் மலர்ந்தருளி, ஆர்.எஸ்.எஸ். தலைவரின் குரலுக்கு ஹெர் மாஸ்டர்ஸ் வாய்ஸ் ஆக ஆகி உள்ளார் நியூஸ்X என்ற ஆங்கில TV சேனல் இன்று காலை இதனை தொடர்ந்து விளம்பரப்படுத்திக் கொண்டே இருந்தது!

நாடு எங்கே போகிறது பார்த்தீர்களா? நமது அரசியல் சட்டத்தின் அடிப்படையை இம்மாதிரி கடப்பாறைகளால் பெயர்க்கும் முயற்சி துவங்கி, ஜாம் ஜாம் என்று நடைபெறுகிறது!

அகண்ட பாரதம் அட்லஸ் வந்து விட்டது.

புதிய பாரத மாதாக்கீ! ஜே! ஜே!!

இந்தியா ஒழிந்து ஹிந்துயா வந்தது போலும்!

Read more: http://viduthalai.in/page1/86725.html#ixzz3C1cjREQh

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

மாணிக்கக்கல்

மாணிக்கக் கல் அணிந் தால் அரசு வேலை கிட் டும் என்கிறது தினமணி சோதிடம்.

மாணிக்கக் கல் வாங்கும் அளவுக்குப் பசையிருந்தால் அவன் ஏன் அரசு வேலையைத் தேடப் போகிறான்?

Read more: http://viduthalai.in/page1/86729.html#ixzz3C1csROSV

தமிழ் ஓவியா said...

பார்ப்பன தர்மம்


பார்ப்பன தர்மம் என்பதே கொலை, கொள்ளை, விபச்சாரம், திருட்டு, புரட்டு, பித்தலாட்டம், துரோகம், அசிங்கம், ஆபாசம், நம்பிக்கைக் கேடு, நாணயக் கேடு ஆகிய கூடாத காரியங்களை, குணங்களை அடிப் படையாகக் கொண்டே ஏற்பாடு செய் யப்பட்டவை என்றே சொல்லக் கூடியவையாக இருக்கின்றன. - (விடுதலை, 5.1.1966)

Read more: http://viduthalai.in/page1/86695.html#ixzz3C1d8ZR80

தமிழ் ஓவியா said...

ராஜ்நாத்சிங் மகன் பிரச்சினை என்ன?


புதுடில்லி ஆக.29_ கடந்த வாரம் மத்தியில் உள்ள முக்கியமான அமைச்சர் ஒருவரின் மகன் ஒரு தொழில் அதிபரிடம் இருந்து பெரும் தொகையாக லஞ்சம் வாங்கினாராம், இது எப்படியோ மோடியின் பார் வைக்குச் சென்றது. உடனே மோடி அவரை அழைத்து வாங்கியப் பணத்தை திருப்பிக்கொடுக்கச் சொன்னாராம்.

இந்த செய்தி டில்லியில் அனைத்து அமைச்சரவை சகாக்களிடம் பரபர பானது இந்த நிலையில் ராஜ்நாத் சிங் அமித்ஷா, மற்றும் ஆர் எஸ் எஸ் தலைவரை திடீரென சந்தித்த சம்பவம் இந்த விவகாரத்தை மேலும் பரபரப்பாக்கிவிட்டது..

இந்த நிலையில் நவ்பாரத் டைம்ஸ் என்ற இந்திப்பத்திரிகை பரபரப்பான செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது ராஜ்நாத் சிங்கின் மகன்பற்றி டில்லியில் உள்ள முக்கிய பெண் அமைச்சர் ஒருவர் பொய்யான தகவலை மோடியிடமும், ஆர்.எஸ்.எஸ் தலைவரிடமும் தொடர்ந்து புகார் அளித்து வருவதாகவும், தன்னுடைய வளர்ச்சியில் பொறுக்காத அந்த பெண் அமைச்சர் மீது மிகவும் கோபத் தில் உள்ளதாகவும் அந்தப்பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது.

இந்தச் செய்தியை உண்மையாக்கும் விதமாக கடந்த வெள்ளி மற்றும் சனிக்கிழமை அமித் ஷா, மற்றும் மோகன் பகவத்தைச் சந்தித்தார். இந்த விவகாரம் தொடர்பாக அமித்ஷா மற்றும் மோகன் பகவத் தரப்பில் எந்த ஒரு பதிலும் வரவில்லை. ஆனால் ஆர்.எஸ்.எஸ் செய்தித்தொடர்பாளர் ராஜ்நாத் சிங் மோகன்பகவத்தை சந்தித் தார் என்றும் இது எப்போதும் உள்ள பொதுவான சந்திப்பு இந்தச் சந்திப் பிற்கும் தேர்தல் தோல்வி மற்றும் அவ ரது சொந்தப் பிரச்சனைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று கூறினார். பிரதமரின் அலுவலத்தில் இருந்து வந்த உறுதியான தகவலின் படி சில நாட்களுக்கு முன்பு மத்தியில் உள்ள முக்கிய அமைச்சர் ஒருவரின் மகன் மோடியைச் சந்திக்க வந்ததாகவும், மோடி அவரிடம் மிகவும் கடினமாக நடந்துகொண்டார் என்றும், இந்த விவகாரம் இத்தோடு முடித்துக் கொள்ள வேண்டும் மேலும் இது போன்ற செயலில் இறங்கினால் கடு மையான நடவடிக்கை எடுக்கவெண்டி இருக்கும் என்று கூறியதாகவும், கூறப்பட்டது.

இது தொடர்பாக பாஜக தலைமை அலுவலகம் தரப்பில் கூறியதாவது: ராஜ்நாத் சிங்கின் மகன் விவகாரம் தொடர்பாக எந்த ஒரு பிரச்சனையாக இருந்தாலும் அது பொய்யானது என்றால் நேரடியாக அந்த அமைச் சரைப் பற்றி பிரதமரிடமும் பாஜக தலைவரிடமும் புகார் அளிக்கலாமே அதைவிடுத்து கட்சி பிரமுகர்களிடம் விவாதித்துக்கொண்டு இருப்பது இந்தப் பிரச்சனையை மேலும் சிக்கலாக்கிவிடும் என பாஜக கட்சி கூறியுள்ளது.

மத்தியில் அமைச்சரவை அமைக் கப்படும் போதே முக்கியப் பதவி களுக்கு கடும்போட்டி ஏற்பட்டது, முக்கியமாக ராஜ்நாத் சிங்கின் உள்துறை அமைச்சர பதவியைக் கைப்பற்ற 4 பெரிய பாஜக தலை வர்கள் முயன்றனர்.

ஆனால் அவர் ஆர்.எஸ்.எஸ் தலைமையை அணுகி உள்துறை அமைச்சர் பதவியைக் கைப்பற்றிக்கொண்டார்.

கடந்த இரண்டு மாதங்களாக மத மோதல்கள், மற்றும் அஸ்ஸாமில் நடந்த கலவர எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல் என பல்வேறு சிக்கல் களைச் சந்தித்துக்கொண்டு இருந்த ராஜ்நாத் சிங்கை தற்போது மகன் விவ காரம் மூலமாக சிக்கவைத்து விட்டார்கள், இருப்பினும் இன்னும் சில மாதங்களில் ஜார்கண்ட், மஹராஷ்டிரா, ஜம்முகாஷ்மீர் போன்ற மாநிலங்களில் தேர்தல் நடைபெற விருப்பதால் தேவையில் லாமல் அமைச்சரவையில் மாற்றம் கொண்டுவரும் போது அது தேர்தலில் பிரச்சினையை கிளப்பும் எனவே தேர்தல் முடிந்த பிறகு ராஜ்நாத் சிங் கின் பதவி பறிபோகும் என்று தெரி கிறது.

Read more: http://viduthalai.in/page1/86704.html#ixzz3C1dOLXma

தமிழ் ஓவியா said...

வெண்ணீறு அணிந்தது என்ன? என்ன? என்ன?


நாடகக்காரன் ராஜாவேசம் போட்டுக் கொண்டு
நடிப்பது போல், இந்த மடையன்களும் சாம்பல் அடித்துக் கொண்டு, கொட்டை கட்டிக் கொண்டு
பக்தன் போல வேசம் போடுகிறான். - ஈ.வெ.ராமசாமி

நேசமுற்று பூசை செய்து நீறுபூசிச் சந்தனம்
வாசமோடு அணிந்து நெற்றிமை திலகம் இட்டுமே
மோசம், பொய், புனைசுருட்டு முற்றிலும் செய் மூடர்காள்
வேசரி களம் புரண்ட வெண்ணீறாகும் மேனியே.
-சிவவாக்கியர்

நேமங்கள், நிட்டைகள், வேதங்கள், ஆகம நீதிநெறி
ஓமங்கள், தர்ப்பணம், செப மந்திர யோகநிலை,
நாமங்கள், சந்தனம், வெண்ணீறு பூசி நலமுடனே
சாமங்கள் தோறும் இவர் செய்யும் பூசைகள் கற்பனையே!
- பட்டினத்தார்

அழகிய உடல்மேல் சாம்பலைப் பூசி
அருவருப்பாக்கலும், மகளிர்
கொழுவிய குழலை மொட்டையாய் மழித்துக்
குரங்கைப் போல் தோன்றலும், அறியா
மழலையர் கையினுட் காவடி எடுத்து
மலையின் மேல் ஏற்றலும் இவைதாம்
வழிபடு முறையோ? இதுகொலோ சமயம்?
மடமைகள் கண்டிரங்குமென் நெஞ்சே.
- தடங்கண்சித்தர்

கோவணாண்டி கோலத்திலோ, சடைமுடியுடனோ, அழுக்கேறிய உடம்புடனோ, பட்டினியாக இருத்தலோ, மண்மீது புரள்தலோ, மூச்சை அடக்கிக் கொண்டு உட்கார்ந்திருத்தலோ ஆசையை வெல்லாத ஒருவனை புனிதனாக்கி விட முடியாது.
- புத்தர்

தொகுப்பு: சி.நடராசன்

Read more: http://viduthalai.in/page1/86712.html#ixzz3C1dgyIqj

தமிழ் ஓவியா said...

தீண்டாமைக் கொடுமை மடமை


இந்தியத் துணைக்கண்டத்தில் தீண்டாமை என்பது எந்த அளவிற்கு இருந்தது என்பதற்கு ஒரு சம்பவத் தைக் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

ஒரு சமயம் சுபாஸ் சந்திரபோஸ் அவர்கள் ஒரு வக்கீலிடம் நன் கொடை வசூலிப்பதற்காய்ச் சென் றிருந்தார். அப்போது அந்த வழக் கறிஞர் என்னிடம் நன்கொடைக்கு வந்திருக்கிறீர்களே, என்னை தொட்டால் தீட்டு என்கிறார்கள் ஆனால் என் பணத்திற்கு மட்டும் அந்தத் தீட்டு இல்லையா? என்று கேட்டார்.

எல்லாவற்றையும் கடந்தவன் நான். நான் தீண்டா மையை அனுஷ்டிப்பவன் அல்ல என்றாராம் சுபாஸ் சந்திரபோஸ்.

அப்படியானால், ஒருநாளைக்கு என் வீட்டுக்கு வந்து விருந்து சாப்பிடுங்கள்; சாப்பிட்ட மறுநாள் நன்கொடை தருகிறேன் என்றார் அந்த வழக்கறிஞர்.

உடனே சுபாஸ் சந்திரபோஸ், சரி நாளைக்கே நாலைந்து உயர்ந்த ஜாதிக்காரர்களுடன் வந்து உங்கள் வீட்டில் சாப்பிடுகிறேன். நீங்களும் உங்கள் ஜாதிக்காரர்கள் சிலரை எங்க ளுடன் சேர்ந்து சாப்பிட ஏற்பாடு செய்யுங்கள் கலந்து அமர்ந்து சாப்பிட்ட பிறகு நன்கொடை தாருங்கள் என்றார். சரி என்றார் வக்கீல்.

அவர்கள் வந்த போது வழக்கறிஞர் மிகவும் சோகமாக உட்கார்ந்திருந்தார். ஏன்? என்று கேட்டார் போஸ். என்னால், நான் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற முடியவில்லை என்றார். என்ன, காரணம்? என்று கேட்ட போது, நீங்கள் உயர்ந்த சாதிக்காரர்களை என் வீட்டில் சாப்பிட அழைத்துக் கொண்டு வந்து வீட்டீர்கள்;

ஆனால், என் ஜாதியை சேர்ந்தவர்கள் யாரும் அய்யோ உயர்ந்த ஜாதியாருடன் சேர்ந்து சாப்பிடுவதா? என்ன பாபம் செய்ததாலோ இப்படிப்பட்ட பிறப்பெடுத்திருக்கிறோம் - அவர்களோடு சேர்ந்து சாப்பிடும் பாவத்தையும் செய்தால், இன்னும் எத்தனை பிறப்புக்கு இடர்ப்பட வேண்டுமோ! என்றாராம்.

இந்த அளவுக்கு இந்த நாட்டிலே தீண்டாமை வேர் விட்டிருந்தது.

இந்த அடிமை நிலைமை யைத்தான் அடியோடு தகர்த் தெறியப் பாடுபட்டார் தந்தை பெரியார்.

ஆதாரம்: கடலூர் மாநாட்டில் விடுதலை விரும்பி பேச்சு, முரசொலி (19.7.1981

Read more: http://viduthalai.in/page1/86718.html#ixzz3C1doqt00

தமிழ் ஓவியா said...

தந்தை பெரியார் பொன்மொழி

இன்றைய சுதந்திரம் வட நாட்டா னுக்கும் அவன் மொழிக்கும் தென்னாட்டவர் அடிமையாய் வாழ வேண்டுமென்றே ஆக்கப்பட்டுவிட்டது. வெள்ளையரிடமிருந்து பெற்ற சுதந்திரத்தைவிட வடவரிடமிருந்து சுதந்திரம் பெறுவதே மிகமிக முக்கியமானது.

Read more: http://viduthalai.in/page1/86718.html#ixzz3C1dxe1jD

தமிழ் ஓவியா said...

இராவணனுக்குப் பிறந்த பிள்ளை

இலங்கையினின்று சீதையை இராமன் மீட்டு வரும்போதே அவள் கர்ப்பிணி!

இது ஊருக்குத் தெரிந்து விட்டது. ஆதலால், இலக்குமணனை விடு, அவளைக் காட்டிற்குக் கொண்டுபோ என்றான். இலக்கு மணன் ஒரு கொழுத்த தவசியிடம் விட்டு மீண்டான். குசன் பிறந்தான். அதன்பிறகு சீதை ஒரு பையனைப் பெற்றிருந்தாள். அவன் பெயர் இலவன்.

இராமனால் விடப்பட்ட குதிரை இலவ னால் பிடித்துக் கட்டப்பட்டது. அதனால் குதிரையுடன் வந்தவர்கள் இலவனை உதைத்து தேர்க்காலில் சுட்டிக் கொண்டு போய்க் கொண்டிருந்தார்கள். பிறகு குசன் கேள்விப்பட்டுத் தம்பியை ஓடி மீட்கிறான். கட்டியவர்களைக் கொல்லு கின்றான். இராமன் வருகின்றான். அவனையும் கொன்று விடு கிறான்.

இலவன் தோற்றதேன்? இலவன் தவசிக்கு பிறந்தபிள்ளை குசன் ஏன் வென்றான்? அவன் இராவணனுக்குப் பிறந்தவன் தந்தையை கொன்ற இராமனைப் பழிக்குப் பழி கொடடா என்று தீர்த்தான் வேலையை!

-புரட்சிக் கவிஞர்

Read more: http://viduthalai.in/page1/86718.html#ixzz3C1e3x5Cn

தமிழ் ஓவியா said...

தலை எழுத்து

பிரம்மனால் பெண்ணுக்கும், ஆணுக்கும் தலை எழுத்து தனித்தனியே எழுதப்படு மாயின், மருத்துவத்தால் பெண்ணாக மாறும் ஆணுக்கும் ஆணாக மாறும் பெண்ணுக்கும் எவ்வாறு பொருந்தும்?

- சாமி. சேகரன், புதுவை

Read more: http://viduthalai.in/page1/86718.html#ixzz3C1eAsjRQ

தமிழ் ஓவியா said...

நிர்வாணப் பெண்கள்!

ஒரிசா மாநிலம் தன்சாரண்யா என்ற காட்டுப் பகுதியில் மலைவாழ் மக்கள் வாழ்கிறார்கள். அங்கு ஆண்கள் உடை உடுத்திக் கொள்கிறார்கள். பெண்கள் மட்டும் நிர்வாணமாகத் திரிகிறார்கள். அதற்குக் காரணம் கீழ்க்கண்ட மூடநம்பிக்கையாகும்.

ராமனுடன் சீதை இந்த காட்டில்தான் தங்கினாளாம். தனது ஆடைகளைக் கரையில் களைந்து வைத்து விட்டு ஒரு அருவியில் சீதை குளிக்கச் சென்றாளாம். அந்த உடைகளை அக்காட்டில் இருந்த பெண்கள் எடுத்துக் கொண்டு போய் விட்டார்களாம். குளித்து விட்டுக் கரையேறிய சீதை உடைகளின்றி நிர்வாணமாக நின்றாளாம். உடனே அந்தப் பெண்களுக்கு சாபமிட்டாளாம்.

என்னுடைய உடைகளைத் தூக்கிக் கொண்டு போய் வீட்டீர்கள் இனிமேல் இந்தப் பகுதியில் எந்தப் பெண்ணாவது உடை அணிந்தால் அவன் கணவன் இறந்து போய் விடுவான் என்று சாபமிட்டாளாம். அதிலிருந்து அந்தப் பகுதியில் எந்தப் பெண்ணும் உடை அணியாமல் நிர்வாணமாய் திரிகிறார்களாம். இப்பொழுது அதிகாரிகள் மிகவும் சிரமப்பட்டு இடுப்பில் சிறுதுணியைச் சுற்றிக் கொள்ளச் செய்துள்ளனர்.

மூடநம்பிக்கையின் கேவலத்திற்கு இதைவிட வேறு என்ன எடுத்துக்காட்டு வேண்டும்?

Read more: http://viduthalai.in/page1/86717.html#ixzz3C1eI4iHI

தமிழ் ஓவியா said...

மதம் என்றாலே எனக்கு ஒருவித வெறுப்பு; அடிக்கடி மதத்தைக் கண்டித்திருக் கிறேன். அதை உருத்தெரி யாமல் ஒழித்துக்கட்ட வேண் டுமென்று ஆசைப்பட்டிருக் கிறேன். மதம் என்றால் குருட்டு நம்பிக்கை, பிற் போக்குத்தனம், பிடிவாத மான வெறித்தனம், மூடப்பழக்கம், சுரண்டல், சுயநலத்தைப் பாதுகாத்தல் என்பதுதான் என் முடிவு.

- ஜவகர்லால் நேரு, (சுயசரிதை, பக்கம் 374

Read more: http://viduthalai.in/page1/86717.html#ixzz3C1ePOdfU

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

செம்புக் கம்பி

தேக்கி வைக்கப்பட் டுள்ள மின்சாரத்தைச் செலுத்துவதற்கு செம்புக் கம்பியை இன்றைய விஞ் ஞானம் கண்டுபிடித்துள் ளது. ஆனால், அக்காலத் திலேயே ஆண்டவன் அருள் ஒளியை செம்பி னால் கடத்த முடியும் என உணர்ந்து, இறைவன் உருவங்களை செம்பி னால் சிலை வடித்தார்கள்.
- கிருபானந்தவாரியார் தாய் வார இதழ் 28.8.1983)

அப்படியானால் கல்லால் செதுக்கப்பட்ட கடவுள் சிலைகள், அய்ம் பொன்னால் செய்யப் பட்ட கடவுள் சிலைகள் அருள் ஒளியைக் கடத் தாது என்று அர்த்தமா? செப்புக் கம்பியால் மின் கடத்தப்படுகிறது என் பதை நிரூபிக்க முடியும் (கையை வைத்தால தெரி யும் சங்கதி) செம்பினால் செய்யப்பட்ட கடவுள் சிலை அருள் ஒளியை கடத்துகிறதுஎன்பதற்கு என்ன நிரூபணம்?

Read more: http://viduthalai.in/page1/86658.html#ixzz3C1ejkrMF

தமிழ் ஓவியா said...

திருமணமாகுமுன் மணமக்களுக்கு மருத்துவப் பரிசோதனை:

திருமணமாகுமுன் மணமக்களுக்கு மருத்துவப் பரிசோதனை:

நீதியரசர் என். கிருபாகரன் கருத்து வரவேற்கத்தக்கதே!

இதனை ஒரு இயக்கமாகவே நடத்துவோம் - வாரீர்!


21ஆம் நூற்றாண்டிலும் மனிதக் கழிவுகளை மனிதனே சுமப்பதா? நவீன தொழில் நுட்ப முறைகளைக் கையாள வேண்டும்!

தமிழர் தலைவர் ஆசிரியர் வாழ்வியல் அறிக்கை திருமணத்திற்குமுன் மணமக்கள் மருத்துவ சோதனை செய்து கொள்வது தான் சரியானது - அறிவியல் பூர்வமானது என்று மதுரை உயர்நீதிமன்ற கிளையில் நீதிபதி என். கிருபாகரன் அவர்கள் அளித்த தீர்ப்பை வரவேற்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

மதுரை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி ஜஸ்டீஸ் திரு. என். கிருபாகரன் அவர்கள் வாழ்க்கை சம்பந்தமான வழக் கொன்றில் மிக அருமையான தீர்ப்பு ஒன்றினை சமூக நலம் சார்ந்த கண்ணோட்டத்தில் விஞ்ஞான பார்வையோடு வழங்கியுள்ளார்கள்.

ஜோதிடப் பொருத்தமல்ல - மருத்துவ ரீதியான பொருத்தம் தேவை!

திருமணங்களை ஏற்பாடு செய்யும் முன்பு நம் நாட்டுச் சமூக அமைப்பில் உள்ள பெரும்பாலான நடைமுறை என்ன?

ஜாதி, மதம், அதற்குப் பாதுகாப்பான ஜோசியம் பார்த்தல் - இவைகளைப்பற்றி தான் கவலைப்பட்டு அதிக முக்கியத்துவம் கொடுத்து, (ஏராளமான வரதட்சணை என்று கொடும் சமூக நோய்க்கும் சத்தமில்லாமல் ஆளாகி) திருமணங்களை நடத்திக் கொள்ளுகின்றனர்.

மணமக்களுக்கு மற்ற பொருத்தங்களைப் பார்ப்பதற்குப் பதிலாக, அறிவியல் அடிப்படையில் ஆதாரபூர்வமானதாக இவை இல்லாத நிலையில் - அறிவியல், உடலியல் - மருத்துவ ரீதியாக அவ்விருவருக்கும் மருத்துவப் பரிசோதனை சான்றுகளைப் பார்த்து ஒருவருக்கொருவர் உடல் ரீதியாகப் பொருத்தமானவர்களா என்று அறிந்து, திருமணங்களை ஏற்பாடு செய்தால், பின்னாள் அத்திருமணங்கள் - அந்தக் காரணங்களுக்காகத் தோல்வி அடையும் நிலை - வழக்கு மன்றங்களுக்குச் செல்லும் அவசியம் ஒரு போதும் ஏற்படாது. தேவையற்ற மன உளைச்சல்கள் - தானாகவே தீரும்.

ஜோதிடம் பார்ப்பது, மற்ற பொருத்தங்களை சடங்கு சம்பிரதாயங்கள் வழியில் பார்ப்பது அறிவியல் - பகுத் தறிவுக் கண்ணோட்டத்தில் சரியானது - உண்மையானது அல்ல.

சட்டத் திருத்தம்கூட கொண்டு வரலாமே பல திருமணங்களில் முதல் இரவிலேயே பல அதிர்ச்சி மணமகளுக்கோ, மணமகனுக்கோ தாக்கும் நிலை ஏற்பட்டு, அவர்கள் துன்பக் கேணியில் தள்ளப்படுகிறார்கள்.

ஏற்பாடு செய்த இருசாராரின் பெற்றோர்களுக்கோ அவர்களைவிட பன்மடங்கு வலியும், வேதனையும்! யாரையோ தேள் கொட்டியது போன்ற நிலையும்தான் ஏற்படுகிறது.

மதுரை உயர்நீதிமன்றத்தில் நீதியரசர் தந்த நல்லதோர் தீர்ப்பு!

மத்திய, மாநில அரசுகள் திருமணச் சட்டங்களில் இம்முயற்சியை ஒரு முன் நிபந்தனையாக்கிடும் வகையில் சட்ட திருத்தத்தைக் கொணர மதுரை உயர்நீதிமன்றத்தில் (அது சென்னை உயர்நீதிமன்றத்தின் ஒரு பகுதிதான்) வழங்கப்பட்ட இத்தீர்ப்பு ஒரு முன்னோட்டமாக அமைய வேண்டும்.

மருத்துவர்கள் தவறான சான்றிதழ் தந்தால் கடும் தண்டனை என்றும்கூட அச்சட்டத்தின் ஒரு பிரிவை முக்கியமாக இணைக்கலாம். அதன்மூலம் எப்போதாவது நிகழக் கூடிய தவறும்கூட நிகழ வாய்ப்பின்றித் தடுக்கலாம்!

இந்தக் கருத்தை வலியுறுத்தி- அதாவது மண ஏற்பாடுகளுக்குமுன் மணமக்களாக விரும்புவோர் சரியான மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு சான்று களோடும், மற்ற ஏற்பாடுகள் துவங்கி நடந்தால், பாதி திருமணங்கள் தோல்வி அடையாது. நீதிமன்றங்களுக்கு வழக்குக்குச் செல்ல முடியாது.

நாம் தொடர்ந்து வலியுறுத்தி வந்த கருத்துதான்

உடல் நோய்களை மறைத்து, எப்படியாவது திருமணம் நடந்து விட்டால்போதும் என்ற தவறான முயற்சிகள்தான் இப்படி இரு சாராருக்கும்; பிறகு தீராத வேதனையையும், மாறாத துயரத்தையும் ஏற்படுத்தி விடுகின்றன என்பதை பல சுயமரியாதைத் திருமண மேடைகளிலும், பெண்கள் விடுதலை மாநாட்டிலும் சொற்பொழிவு ஆற்றும் போதும் நாம் இடைவிடாமல் வலியுறுத்தி வந்துள்ளோம் - வருகிறோம்.

அது மட்டுமல்ல சென்னை பெரியார் திடலில் இயங்கும் பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையத்தின்மூலம் ஏற்பாடாகும் மணமக்கள் இருவருக்கும் இரத்தச் சோதனை, HIV சோதனை போன்றவைகளை நடத்திய பிறகே மணம் ஏற்பாடுகள் துவங்கி நடைபெறுவது வழக்கத்தில் உள்ளது.

சமூக ஆர்வலர்களும் முன்வரட்டும்!

இப்படி ஒரு சட்டத் திருத்தம் வந்து திருமண முறையில் நம் நாட்டில் மாறுதல் வந்தால் அதனால் அதிகம் பயன் பெறுவது முதலாவது மகளிரே ஆவர்; அடுத்து பெற் றோர்கள்ஆவார்கள்; அவர்களின் நிம்மதி குலைக்கப் படாது, முதுமையில் வாழும் வசதியும் உத்தரவாதமும் அதனால் ஏற்படும்.

சமூகநல ஆர்வலர்களும், சமூக சீர்திருத்த அமைப்பு களும் இதற்காக ஒரு தனி இயக்கமே நடத்திட உடனடியாக முன் வருதல் அவசியம் - அவசரமுங்கூட.

கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்

சென்னை
28.8.2014

Read more: http://viduthalai.in/page1/86653.html#ixzz3C1eszjp8

தமிழ் ஓவியா said...

மனிதன்பலவிதக் கருத்துகளையும், நிகழ்ச்சி களையும்பற்றிச் சிந்தித்து இது நல்லது, இது தீயது என்று உணரக் கூடிய சக்தி பெற்று, நல்லனவற்றைக் கடைப்பிடிக்கக் கூடியவன் எவனோ அவனைத்தான் மனிதன் என்று கூற முடியும்.
(விடுதலை, 9.6.1962)

Read more: http://viduthalai.in/page1/86644.html#ixzz3C1fjKvIE

தமிழ் ஓவியா said...

திராவிடர் கழகம்!


மிகப்பெரிய வரலாற்றுக்குச் சொந்தமான திராவிடர் இனமக்கள் எழுந்து நின்று இன்று ஒருமுறை கரவொலி எழுப்பலாம்.

ஏன்? இன்றைக்குத்தான் திராவிடர் கழகம் என்ற வர லாற்றைத் திருப்பிப் போட்ட சமூகப் புரட்சி இயக்கத்தின் பிறந்த நாள் (1944). ஆம், இது சேலம் மாநாட்டில் நடந்த ஒன்று.

மக்கள் பிறவியினால் ஜாதி பேதம் கற்பிக்கப்பட்டி ருப்பதையும், அவற்றுள் உயர்வு - தாழ்வு கற்பிக்கப்பட்டிருப் பதையும் இக்கழகம் மறுப்ப தோடு, அவைகளை ஆதரிக் கிற, போதிக்கிற, கொண்டு இருக்கிற மதம், சாஸ்திரம், ஸ்மிருதி, புராணம், காவியம் என்பவை முதலாகிய எவை யும் பொது மக்களும், குறிப்பாக நம் கழகத்தவர்களும் பின்பற்றக்கூடாது என்றும், அவைகள் நம்மீது சுமத்தப் படாமல் இருக்கவேண்டிய காரியம் தீவிரமாய்ச் செய்ய வேண்டுமென்று இம்மாநாடு தீர்மானிக்கிறது.

******

சர்க்காரால் தொகுதி வகுக்கப்பட்ட எந்தவிதமான தேர்தலுக்கும், கட்சி அங்கத் தினர்கள் நிற்கக்கூடாது; இதை ஏற்று ஒரு வாரத்தில் இதன்படி கட்டுப்பட்டு நடக் காதவர்கள் எவரும் இக்கட்சி யில் இருக்க இஷ்டமில்லை என்று கருதிக் கட்சியை விட்டு நீங்கிக் கொண்டவர் களாகக் கருதப்படவேண்டிய வர்கள் என்பது உள்ளிட்ட நவமணி (ஒன்பது) தீர்மானங் கள் சேலம் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.

அரசியலில் இருந்து விடு பட்டு அடிப்படைச் சமூக மாற் றத்தைக் கொண்டுவரவேண் டும் என்பதற்காகவே திராவி டர் கழகம் பிறப்பெடுத்தது.

ஏதோ ஒரு வழியில் நாம் மக்களுக்குப் பகுத் தறிவை உண்டாக்கிவிட்டோ மேயானால், பிறகு அவர்கள் எல்லாவற்றையும் ஒரே கண்ணாடி கொண்டு பார்த்து உண்மையை உணரக்கூடிய வர்களாகி விடுவார்கள் என்றார் தந்தை பெரியார்.

அரசியலில் நுழைந்து பதவிப் பக்கம் தலை வைத் தால் கொள்கைகளில் சமரசம் செய்துகொள்ள நேரிடும் என்பதால்தான் இருமுறை சென்னை மாநில பிரதம அமைச்சராகப் பொறுப்பு ஏற் கும்படி வெள்ளை அரசிட மிருந்து தங்கத்தட்டில் வைத்து அழைப்புக் கொடுத்த போதும், அதனை மறுதலித்தவர் மகத் தான புரட்சியாளராம் தந்தை பெரியார் அவர்கள்.

ஆட்சிக்கு அவர் சென்ற தில்லை; ஆனால், ஆட்சி யைத் தன் கொள்கைப் பாதை யில் கொண்டுவர ஆட்டு வித்தவர்! ஆட்சிக்குச் செல் லாத தந்தை பெரியார் அவர்களுக்கு இந்த ஆட்சியே பெரி யாருக்குக் காணிக்கை என்று ஆட்சித் தலைவர் அண்ணா சொன்னார் என்றால், அதன் அருமையைத் தெரிந்து கொள்ளலாமே! (20.1.1967)

பேதமற்ற இடம்தான் மேலான திருப்தியான இடமாகும் என்றார் உயர் எண் ணங்கள் மலரும் சோலை யாம் தந்தை பெரியார் (குடிஅரசு, 11.11.1944, பக்கம் 11).

சமூகநீதி, பெண்ணடிமை ஒழிப்பு, மூட நம்பிக்கை ஒழிப்பு, வருண - வர்க்கப் பேத ஒழிப்பு, தொழிலாளி, முதலாளி என்ற நிலையே இருக்கக்கூடாது என்னும் மிக உயர்ந்த சமநிலை - சமத் துவக் கோட்பாடுகள் - திரா விடர் கழகத்தினுடையது - இவை ஏதோ ஒரு எல்லைக் குட்பட்ட தத்துவங்கள் அல்ல - உலகிற்கே தேவைப்படு பவை! அதனால்தான் மண் டைச் சுரப்பை உலகு தொழும் என்று தந்தை பெரியார்பற்றி புரட்சிக்கவிஞர் தொலை நோக்கோடு பாடினார்.

- மயிலாடன்

குறிப்பு: திராவிடர் கழகம் பிறந்த அந்த சேலம் மாநாட் டில் ஒரு தீர்மானத்தின்மீது உரை யாற்றிய சிறுவன் வீரமணிதான் இன்றைக்கு திராவிடர் கழகத்தின் ஒப்பில்லாத மானமிகு தலைவர்.

Read more: http://viduthalai.in/page1/86592.html#ixzz3C1gPtgiy

தமிழ் ஓவியா said...

மும்பையில் பணக்கார கணபதியின் சக்திக்கு சவால்! நாளொன்றுக்கு ரூ.50 கோடிக்கு காப்பீடாம்!

மும்பையில் பணக்கார கணபதியின் சக்திக்கு சவால்!

நாளொன்றுக்கு ரூ.50 கோடிக்கு காப்பீடாம்!

தீ விபத்து, தீவிரவாத தாக்குதல், கலவரங்களில் பாதிப்பிலிருந்து இழப்பீடு பெறத் திட்டமாம்

மும்பை, ஆக.27- மும்பை வடாலாவில் ஜி.எஸ்.பி. சேவா மண்டல் சார்பில் விநாயகர் சிலைக்கு ரூ.260 கோடி அளவில் காப்பீடு செய்துள்ளது. விநாயகர் சிலை மற்றும் சிலைக்கு அணிவிப்பதற்காக பக்தர்களால் அளிக்கப்படும் தங்க ஆபரணங்கள் ஆகியவற்றை தீ விபத்து, தீவிரவாதம் மற்றும் கலவரங்களிலிருந்து காக்கும் வகையில் காப்பீடு செய்துள்ளதாக ஜி.எஸ்.பி. சேவா மண்டல் கூறுகிறது.

ரூ.22 கோடி மதிப்பில் தங்கம்

மும்பை மாநகரிலேயே பணக்கார அமைப்பாக உள்ள ஜி.எஸ்.பி. மண்டல் ரூ.259 கோடிக்கு காப்பீடு பெற்றுள்ளது. கிங் சர்க்கிள் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கணபதி சிலையை 5 நாள்கள் பூஜை செய்வதற்காக வைத்திருப்ப தற்காக நாளொன்றுக்கு ரூ.51.7 கோடி மதிப்பில் காப்பீடு செய்யப்பட்டுள்ளது. சிலை மட்டும் ரூ.22 கோடி மதிப்பில் தங்கம் இதுவரை செலவாகி உள்ளதாம்.

காப்பீடு தேசியமயமாக்கப்பட்ட காப்பீட்டு நிறுவனத் தின்மூலம் காப்பீடு செய்யப்பட்டுள்ளது. மும்பை மாகரி லேயே மற்ற மண்டல்களை விட அதிக மதிப்புள்ள மண்ட லாக வடாலாவில் அமைக்கப்பட்டு உள்ளது. மும்பை மாநகரில் பிரபலமான லால்பக்ச ராஜா ரூ.51 கோடிக்கு காப்பீடு செய்யப்பட்டுள்ளது. அதையும்கூட மிஞ்சிவிட்டது வடாலா ஜிஎஸ்பி மண்டல். தீவிபத்து, தீவிரவாதத் தாக்குதல் மற்றும் கலவரங்களிலிருந்தும் காக்கும்வகையில் ஜி.எஸ்.பி. யின் காப்பீடுமூலம் சிலை, தங்கம், மண்டபம் என்று இவைகளுக்கு மட்டுமின்றி அங்கு கூடும் பக்தர்களுக்கும் சேர்த்து காப்பீடு உள்ளடக்கி உள்ளது. முதல் நாளில் தொடங்கும் காப்பீடு விழா முடிந்ததுமே முடியாது. அமைப்பைச் சேர்ந்தவர்கள் விழா கடைசி நாளில் சிலையின் தங்க ஆப ரணங்களை பாதுகாப்பாக வங்கியின் பாதுகாப்புப் பெட்டகத்துக்குள் வைப் பதுவரை காப்பீடு இருக் கும். முதல் நாளில் தொடங்கி சிலை நகைக்கடைகளி லிருந்து வரும் தங்க ஆபரணங்களைக்கொண்டு சிலையை தண்ணீரில் மூழ் கடிக்கும் வரையிலும் அலங் காரங்கள் செய்யப்படும். தண்ணீரில் மூழ்கடிப்பதற்கு சற்றுமுன்பாக சிலையிலிருந்து தங்க ஆபரணங்கள் அகற் றப்பட்டு, அடுத்த ஆண்டுக்கு பாதுகாப்பாக வைக்கப்படும்.

மண்டலுக்கான காப்பீட்டுத் தொகை ரூ.258.9 கோடி

ஜி.எஸ்.பி.மண்டல் மூத்த அறக்கட்டளை உறுப்பினரான சத்தீஷ் நாயக் கூறும்போது, தேசிய மயமான காப்பீடு நிறுவனங்கள்மட்டும் பங்கேற்பதற்கான ஒப்பந்தப் புள்ளியைக் கோரினோம். காப்பீட்டுத்துறையில் உள்ள தனியாரை உள்ளேக் கொண்டுவரவில்லை. காப்பீட்டுத் தவணைத்தொகையை வெளியிடவில்லை. ஆனாலும், காப்பீட்டுக்கான பிரீமியத் தொகை மட்டும் இலட்சங்களில் இருக்கும். மண்டலுக்கான காப்பீட்டுத் தொகை ரூ.258.9 கோடியாக அமைக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

லால்பக்சா ராஜா மண்டல் ரூ. 51 கோடி காப்பீட்டுத் தொகைக்கு தவணைத் தொகையாக(பிரீமியம்) ரூ. 12 இலட்சத்தை செலுத்தியுள்ளது. அதன்படி பார்க்கும்போது, ஜிஎஸ்பி மண்டல் காப்பீட்டுத் தவணைத் தொகை (பிரீமியம்) குறைந்தபட்சம் ரூ.50 இலட்சத்தையாவது செலுத்த வேண்டியிருக்கும் என்று கருதப்படுகிறது.

தவணைத்தொகை ரூ.இரண்டரை இலட்சத்துக்கும்மேல்...

காப்பீட்டு நிறுவனத்தின் மூத்த மேலாளர் ஒருவர் கூறுகையில், சாதாரண பாலிசியைப் போன்று மண்டல் காப்பீட்டுப் பிரீமியித்தை கணக்கிட முடியாது. சாதாரண மாக காப்பீட்டுத்தொகை ரூ.இரண்டு கோடி என்றால், அதற்கானத் தவணைத்தொகை ரூ.இரண்டரை இலட் சத்துக்கும் மேல் இருக்கும். ஆனால், மண்டல் காப்பீடு செயல்பாடு வேறு விதமானது. அவர்கள் காப்பீடு செய் துள்ளதானது தீ விபத்து, தீவிரவாத செயல்கள் போன்ற வற்றைக் குறிப்பிட்டுள்ளார்கள். ஆகவே, ரூ. 259 கோடி காப்பீட்டுக்கு அரை கோடியைத் தாண்டியே தவணைத் தொகை இருக்கும். ஆனாலும், இது யூகத்தின் அடிப் படையிலான வேலையே ஆகும்.

தேங்காய் ஒப்பந்தப்புள்ளி

ஜிஎஸ்பி மண்டல் சார்பில் 1.75 இலட்சம் எண்ணிக்கை யில் தேங்காய்கள் பெறுவதற்காக ஒப்பந்தப்புள்ளியைக் கோரி உள்ளது. இறுதியாக ரூ.31.5 இலட்சத்துக்கு முடி வானது. அதன்படி, தேங்காய் ஒன்றின் விலை ரூ.18-லிருந்து ரூ.20 ஆக இருக்கும்.

5 இலட்சத்தில் தங்க மலர்

ஜிஎஸ்பி மண்டல் 150 கிராம் எடை அளவுள்ள தங்க மலர் ரூபாய் 5 இலட்சம் மதிப்பில் கொடையாகப் பெற் றுள்ளது என்று அதன் அறக்கட்டளை சார்பில் தெரிவிக் கப்பட்டுள்ளது.

Read more: http://viduthalai.in/page1/86597.html#ixzz3C1gYCnrz

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

கிருதா யுகத்தில் சத் தியமும், திரேதாயுகத்தில் ஞானமும், த்வாபர யுகத் தில் வைராக்கியமும் மோக்ஷத்திற்குச் சாதனம். ஆனால், இக்கலியில் பக்தியினாலேயே மோக்ஷம் கிடைக்கிறது. - காமகோடி, 1.5.1994

அப்படியோ? திரேதா யுகத்தில்தான் அறிவுக்கு (ஞானத்துக்கு) வேலை. கலியில் அறிவுக்கு வேலை யில்லை என்று பொருளா?

ஆமாம், அது என்ன மோக்ஷம்? அதன் அட் ரஸ் என்ன?

Read more: http://viduthalai.in/page1/86598.html#ixzz3C1gfyG2g

தமிழ் ஓவியா said...

தமிழ் முன்னேற...


முதலாவதாக தமிழ் முன்னேற்றமடைந்து உலக பாஷை வரிசையில் அதுவும் ஒரு பாஷையாக இருக்கவேண்டுமானால், தமிழையும், மதத்தையும் பிரித்துவிட வேண்டும். தமிழுக்கும், கடவுளுக்கும் உள்ள சம்பந்தத்தையும் கொஞ்சமாவது தள்ளி வைக்கவேண்டும்.
- (குடிஅரசு, 26.1.1936)

Read more: http://viduthalai.in/page1/86602.html#ixzz3C1gyFeD4