Search This Blog

8.8.14

சமஸ்கிருத எதிர்ப்பு என்றால் ஆரியம் அலறுவானேன்?


பார்ப்பனர்களைப் பற்றி பச்சையாக அறிந்து கொள்ள வேண்டும் என்றால், அவர்களின் சமஸ்கிருத ஆர்வம், பற்று என்ற எடைமேடையில் நிறுத்துப் பார்த்து ஒரே நிமிடத்தில் தெரிந்து கொள்ளலாம்.


சென்னை மாநகரில் வணிக விளம்பரப் பலகைகளில் தமிழ் இடம் பெற வேண்டும் என்று முயற்சி செய்தால் அதனை மொழி நக்சலிசம் என்று பெயர் சூட்டும் திருவாளர் சோ ராமசாமியிடம் கோவில்களில் வழிபாட்டு மொழியாக சமஸ்கிருதம் தான் இருக்க வேண்டுமா? பெரும்பாலான மக்கள் பேசும் தமிழ் தமிழ்நாட்டில் இடம் பெற்றால் என்ன என்று கேட்டுப்  பாருங்கள் - உடனே  அவருடைய பூணூல் துடிதுடிக்கும் - குருதி சூடேறும் - தமிழில் அர்ச்சனை செய்தால் பொருள் இருக்கும், அருள் இருக்காது; சமஸ்கிருத மொழியின் ஒலியில் தான் தெய்வீகம் இருக்கும் என்று வக்கணையாக ஓவியம் தீட்டுவார்.
நேற்றைய தமிழ் இந்து ஏட்டில் (7.8.2014 பக்கம் 9) திருவாளர் ஒருவர் சமஸ்கிருத வாரம் கொண்டாடுவதில் என்ன தவறு? என்று தலைப்பிட்டு ஒரு கட்டுரையைத் தீட்டி இருக்கிறார்.


சமஸ்கிருத வாரம் தாராளமாக கொண்டாடட்டும். இந்திய அரசமைப்புச் சட்டம் 8ஆவது அட்டவணையில் இடம் பெற்றுள்ள 22 மொழிகளுக்கும் அந்த வாய்ப்பு அளிக்கப்பட வேண்டாமா என்பதுதான் நாகரிகமான அறிவு நாணயமான நமது கேள்வி.


இவ்வளவுக்கும் இந்தியாவில் இம்மொழியைப் பேசக் கூடியவர்களின் எண்ணிக்கை சதவீதத்தில் சொல்ல வேண்டுமானால் 0.001 தான். இப்படிச்  செத்துச் சுண்ணாம்பாகிப் போன ஒரு மொழிக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் என்பதுதான் நமது கேள்வி.


காரணம் இருக்கிறது. இன்றைய மத்திய அரசு இந்துத்துவாவைக் கொள்கையாகக் கொண்டதாகும்; அந்த இந்துத்துவாவின் மொழிதான் இந்த சமஸ்கிருதம்.


நேரடியாக இந்துத்துவா என்று சொல்லாமல், சமஸ்கிருதம் என்ற குறியீட்டுக்குக் கொம்பு தீட்டுகிறார்கள் என்பதுதான் இந்த உள்ளீடு.
சமஸ்கிருதத்தைப் பற்றி சொல்லும் பொழுது அதனைத் தேவபாஷை என்றுதான் சொல்லுவார்கள்; சங்கராச்சாரியார்களோ தமிழை மிலேச்ச பாஷை என்பார்கள். பூஜை வேளையில் இப்பொழுதுகூட சங்கராச்சாரியார் தமிழில் பேச மாட்டார்; அப்படிப் பேச நேரிட்டால் ஸ்நானம் (முழுக்கு) செய்து விட்டுதான் பூஜைகளில் ஈடுபடுவது என்பது இன்றுவரை உள்ள நடைமுறையாகும்.


இவ்வாறு உள்ளவர்கள்தான் எழுதுகிறார்கள். சமஸ்கிருதம் சிங்கமா? புலியா? இவர்கள்மீது விழுந்து பிறாண்டி கடித்துக் குதறி விடப் போகிறதா? ஏன் இந்தக் கவலை? சமஸ்கிருத வாரம் கொண்டாடும் நாட்களில் தமிழ்மொழி நாடு கடத்தப்படுமா? என்றெல்லாம் தமிழ் இந்து நேற்றைய நாளேட்டில் ஆத்திரம் பொங்க வார்த்தைகளைக்கொட்டித் தீர்த்திருக்கிறார்.ஆம், சமஸ்கிருதம் ஒரு மிருகம் தான்; தமிழுக்குள் புகுந்து கலந்து தமிழையே சிதைத்து, தெலுங்கு என்றும், கன்னடம் என்றும், மலையாளம் என்றும், துளு என்றும் துண்டு போட்டுத் தின்ற மிருகம்தான் சமஸ்கிருதம்.
சமஸ்கிருதம் ஒழிந்தால், அதன் படைப்புகள் ஒழிக்கப்பட்டால் நாட்டில் மதக் கலவரங்களும் ஜாதி சண்டைகளும் ஒழியும் என்று சொன்னவர் தமிழர் அல்ல; தமிழ் மொழி தெரிந்தவர் அல்ல - பேசியவரும் அல்ல - இந்து மதத்தைக் கப்பலில் சென்று அமெரிக்காவில் அதிகப் பிரசங்கியாகப் பேசிய விவேகானந்தர்தான்.


ஆர்.எஸ்.எஸின் பிதா மகன்களில்  ஒருவரும், காந்தியார் படுகொலைக்குக் கூர் தீட்டிக் கொடுத்த வருமான சாவார்க்கர் சொல்லுகிறார்.


இந்துக்கள் என்போர் தம்மளவில் ஒரு தேசமாகவும்,  (Nation) ஜாதியாகவும் (Caste)  மட்டுமின்றி ஒரு பொதுவான சமஸ்கிருதி (Sanskriti) பண்பாட்டுக்கு உரியவர் - என்று எழுதியுள்ளாரே - இதன் பொருள் என்ன? தமிழ் இந்து எழுத்தாளருக்குத் தெரியாதா?


இன்றைக்கு சமஸ்கிருதத்துக்காக சத்துணவு கொடுத்து தூக்கி நிறுத்தும் இந்தப் புள்ளிகள் - கேள்வி ஒன்றுக்குப் பதில் சொல்லுவார்களா? சமஸ்கிருதம் செத்த மொழியாக ஆனதற்கு யார் காரணம்? சமஸ்கிருத எதிர்ப்பாளர்களா? சமஸ்கிருதத்தைத் தாய்மொழியாகக் கொண்ட ஆரியப் பார்ப்பனர்கள்தானே காரணம்.


சமஸ்கிருதம், தேவபாஷை என்றும், அதனை சூத்திரர்களும், பஞ்சமர்களும் படிக்கக் கூடாது, பேசக் கூடாது; படித்தால் நாக்கை அறுக்க வேண்டும், கேட்டால் காதுகளில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்ற வேண்டும்; தெரிந்து வைத்திருந்தால் நெஞ்சைப் பிளக்க வேண்டும் என்று சாஸ்திரம் எழுதி வைத்து செயல்படுத்தியவர்கள் இந்த ஆரியப் பார்ப்பனர்கள் தானே?
இப்படி பெரும்பான்மையான மக்களைப் பேச விடாமல் தடுத்தால் அந்த மொழி செத்துத் தொலையாமல் உயிர் வாழ  முடியுமா?


கல்யாண வீட்டிலும் கருமாதி  வீட்டிலும் பேசினால் மட்டும் போதுமா?
சமஸ்கிருத மொழி என்று சொல்லும் பொழுது ஓரினத்தின் கலாச்சார சின்னமாக பார்க்க வேண்டிய அவசியத்தை வரலாறு நமக்குக் கைகாட்டி எச்சரிக்கிறது.


இன்றுகூட கோவில்களில் தமிழில் வழிபாடு என்றால் அதனை எதிர்த்து உச்சநீதிமன்றம் வரை செல்லக் கூடியவர்கள் இந்து வகையறாக்கள் தானே - பார்ப்பனர்கள் தானே!


இதனை நுட்பமாய் புரிந்து கொண்டது தந்தை பெரியார் பிறந்த மண்! 

அதனால்தான் ஒருமுகமாக எழுந்து எதிர்ப்புப் புயலை வீசுகிறது;  இதனைப் புரிந்து கொண்ட ஆரியம் ஆத்திர அனலை- ஆற்றாமை நஞ்சைக் கக்குகிறது.  தி தமிழ் இந்துவின் கட்டுரையும் இதனைச் சேர்ந்ததே!  தமிழர்களே எச்சரிக்கை! எச்சரிக்கை!!

                               ---------------------”விடுதலை” தலையங்கம் 8-8-2014

58 comments:

தமிழ் ஓவியா said...


பாதுகாப்பு வளையத்துக்குள் மதுரை மீனாட்சி


மதுரை, ஆக.8_ மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு ஏற்கெனவே தீவிரவாதிகளின் அச்சுறுத் தல் இருந்து வருகிறது. இதற்காக கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப் பட்டு துப்பாக்கி ஏந்திய காவல்துறையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு வரும் பெண் பக்தர் களை பெண் காவல் துறையினரும், ஆண் பக் தர்களை ஆண் காவல் துறையினரும் சோதனை செய்து உள்ளே அனுப்பு கின்றனர். மேலும் கேமரா, பைனாகுலர் மற்றும் செல் பேசி போன்ற பொருட் களை உள்ளே கொண்டு செல்ல தடை விதிக்கப் பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னை தலைமை செயலகத்திற்கு நேற்றுமுன்தினம் வெளி நாட்டில் இருந்து இ-மெயில் மூலம் மிரட்டல் கடிதம் வந்துள்ளது. அந்தக் கடிதத்தில், மீனாட்சி அம்மன் கோயிலில் வெடி குண்டு வெடிக்கும் என மிரட்டல் வாசகம் இருந்தது.

இந்தத் தகவல் உட னடியாக மதுரை காவல் துறையினருக்கு தெரிவிக் கப்பட்டது. இதையடுத்து, மதுரை காவல்துறையினர் கடுமையான பாதுகாப்பு வளையத்திற்குள் மீனாட்சி அம்மன் கோயில் கொண்டு வரப்பட்டது. தெற்கு, வடக்கு உள்ளிட்ட ஒவ்வொரு கோபுர வாசல் கள் மற்றும் அதனை சுற்றியுள்ள வெளி வீதி களில் காவல் துறையினர் தீவிர சோதனை நடத் தினர்.வெடிகுண்டு தடுப்பு மற்றும் செயல் இழப்பு பிரிவினரும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். வெளிவீதிகளில் அமைந் துள்ள கடைகள் முன்பாக பைக்குகள், சைக்கிள்கள் நிறுத்த தடை விதிக்கப்பட் டுள்ளது. உள்ளே நுழையும் பாதைகளில் ஒரு எஸ்.அய் மற்றும் 2 காவல் துறை யினர் வீதம் 24 மணிநேர மும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Read more: http://viduthalai.in/e-paper/85454.html#ixzz39r3WzTMc

தமிழ் ஓவியா said...


சங்கராச்சாரிகள் மீதான கொலை வழக்கில் மேல் முறையீடு செய்யக் கூடாதாம்! குடியரசு தலைவரிடம் சுப்பிரமணியசாமி மனு

சங்கராச்சாரிகள் மீதான கொலை வழக்கில் மேல் முறையீடு செய்யக் கூடாதாம்!

குடியரசு தலைவரிடம் சுப்பிரமணியசாமி மனு

கழகத் தோழர்களே, பொது மக்களே குடியரசு தலைவருக்கு மின்னஞ்சல் அனுப்புவீர்!

தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள அறிக்கை சங்கரராமன் கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட காஞ்சி சங்கராச்சாரியார் மீதான வழக்கில் மேல் முறையீடு செய்யக் கூடாது என்று சுப்பிரமணியசாமி குடியரசு தலைவரிடம் மனு கொடுத்துள்ளது தொடர்பாக திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: காஞ்சி சங்கரராமன் கொலை வழக்கில் குற்றஞ் சாட்டப்பட்ட காஞ்சிபுரம் சங்கராச்சாரியார்கள் இருவர் உள்ளிட்டவர்கள் புதுவை நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இதனை எதிர்த்து மேல்முறையீடு செய்ய புதுவை மாநில அரசு முடிவு செய்ய ஆளுநரின் அனுமதியும் பெற்றாகி விட்டது. சட்ட நடவடிக்கைகள் துவங்கி விட்டன.

யார் இந்த சுப்பிரமணியசாமி?

இந்தச் சூழ்நிலையில் சுப்பிரமணிய சாமி என்பவர் அதிகப் பிரசங்கித்தனமாக குடியரசு தலைவரிடம் மனு ஒன்றினைக் கொடுத்துள்ளார்.

குடியரசுத் தலைவர் இந்த விவகாரத்தில் தலையிட்டு புதுவை ஆளுநர் அளித்த அனுமதியைத் திரும்பப் பெறச் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.

பிஜேபியின் நிலைப்பாடு என்ன?

பிஜேபியைச் சேர்ந்தவராக இருக்கும் நிலையில், இந்தக் கருத்து பி.ஜே.பி.யின் கருத்தா? அல்லது பிஜேபி தலைமையிலான அரசின் கருத்தா? என்ற சந்தேகம் பொது மக்களுக்கு ஏற்படுகிறது. இதுகுறித்து பிஜேபி கட்சி தலைமையும், பிஜேபி ஆட்சித் தலைமையும்தான் தெரிவிக்க வேண்டும்.

ஒரு மாநில ஆட்சி முடிவெடுத்து, ஆளுநரும் அனுமதியளித்த நிலையில், குடியரசுத் தலைவர் தலையிட வேண்டும் என்று ஒருவர் சொல்லுவது, அரசமைப்புச் சட்டத்தில் மதிப்புறு நிலையில் வைக்கப்பட்டுள்ள குடியரசுத் தலைவரையே தேவையில்லாத சிக்கலில் மாட்ட வைக்கும் முயற்சி என்று கருதிடவும் இடம் இருக்கிறது.

ஏற்கெனவே சில சாமியார்கள் தண்டிக்கப்பட்டுள்ளனரே!

ஏற்கெனவே பிரேமானந்தா சாமியார் என்பவர் செய்த குற்றங்களுக்காக இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப் பட்டது நித்யானந்த சாமியும் செய்த குற்றங்களுக்காக அவர்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. கைதும் செய்யப்பட்டார்.

தமிழர்கள் வேறு வகையில் சிந்திக்க மாட்டார்களா?

இப்படிப்பட்ட ஒரு சூழலில் காஞ்சி சங்கராச்சாரியார் மீது கொலை குற்றம் உள்ளிட்ட வழக்கில் மட்டும் வேறு விதமாக நடந்து கொள்ள வேண்டும் என்று நினைப்பதும், அதற்குக் குடியரசு தலைவரின் அதிகாரச் செல்வாக்குப் பயன்படுத்தப்பட வேண்டும் என்று கோருவதும் தமிழ்நாட்டு மக்களிடத்தில் வேறுவிதமான எண்ணத்தை ஏற்படுத்தும் என்பதில் அய்யமில்லை.

அதிலும் குறிப்பாக சங்கரராமன் கொலை வழக்கில் மொத்தம் 177 சாட்சிகளில் 77 பேர் பிறழ்சாட்சி என்பது இதற்கு முன் எங்கும் கேள்விப்பட்டிராத ஒன்றே!

கொலை செய்யப்பட்ட சங்கரராமன் குடும்பத்தினரும் இந்த வழக்கில் மேல் முறையீடு தேவை என்பதை வலி யுறுத்தியுள்ளனர்.

இந்தச் சூழ்நிலையில் குடியரசு தலைவர் இதில் விலகியிருப்பது அவசியம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்?

குடியரசு தலைவருக்கு மின்னஞ்சல் அனுப்புக

கழகத் தோழர்களும் நீதியின்மீது கவலையுள்ள பெரு மக்களும் கீழ்க்கண்ட முகவரிக்கு மின் அஞ்சல் மூலம் கீழ்க்கண்ட வாசகத்தை அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

The President of India
Rashtrapati Bhawan
New Delhi

Honourable Sir,

The decision by Puducherry Government to go in for appeal against the acquittal of 24 persons including Kanchi Jeyendra Saraswathi and Vijayendra Saraswathi, two Sankaracharyas, in the Sankararaman murder case should be allowed to proceed without any delay. Any effort to stall the appeal process would give wrong impression in the minds of people of Tamilnadu and Puducherry that Chief Executive of this country viz. President is intervening in the judicial process.
The family of the slain Sankararaman through this appeal, are eagerly expecting justice as also the people of Tamilnadu. The murder was committed in the Varadarajasamy Temple premise.
We once again request your goodself to kindly resist any effort by vested interests in stopping this appeal process.

Email address: secy.president@rb.nic.in and usgrievance@rb.nic.in

கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்

சென்னை 8.8.2014

Read more: http://viduthalai.in/e-paper/85456.html#ixzz39r5uTz5C

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

லட்சுமி விரதமாம்

இன்று லட்சுமி விரதமாம். இவள் தனத் தானிய செல்வங்களின் அதிபதியாம். மகாவிஷ் ணுவின் மனைவியான லட்சுமியின் அருள் வேண் டியும் தாலி பாக்கியம் நிலைக்கவும். இன்றைக் குப் பெண்கள் வரலட்சுமி விரதப் பூஜை நடத்து கிறார்களாம்.

ஆண்டுதோறும் இந்தப் பூஜையை நடத் திக் கொண்டு தானே இருக்கிறார்கள். தானிய விளைச்சல் ஓகோ என்றா இருக்கிறது? தமிழ் நாட்டை வறட்சி மாநில மாக அறிவிக்க வேண்டும் என்று வேண்டுகோள் வைக்கும் நிலைதானே?

சரி, இந்த லட்சுமிக் கடவுளைப்பற்றி காதம் பரி காவியம் என்ன கூறு கிறது? இமயமலைச் சாரலில் லட்சுமி கடவுள் தனித்திருந்தபோது ஒரு முனிபுங்கவரைக் காதலித்து ஒரு குழந் தையைப் பெற்றதற்காக, கணவனான விஷ்ணு சண்டாளப் பெண்ணாகப் பிறக்குமாறு சாபமிட் டான் என்று இருக்கிறதே இப்படிப்பட்ட ஒரு பெண் ணுக்காக வரலட்சுமி விரதம் ஒரு கேடா?

Read more: http://viduthalai.in/e-paper/85455.html#ixzz39r64JofX

தமிழ் ஓவியா said...


தமிழ்நாட்டில் 1,442 பெண்கள் அரசுப் பள்ளிகளில் கழிப்பறை வசதி இல்லை என்பது அதிர்ச்சித் தகவல்


தமிழ்நாட்டில் 1,442 பெண்கள் அரசுப் பள்ளிகளில் கழிப்பறை வசதி இல்லை என்பது அதிர்ச்சித் தகவல்

தமிழ்நாடு அரசு முக்கிய கவனம் செலுத்த வேண்டும்

மத்திய அரசும் போதிய நிதி வசதி செய்து உதவிட வேண்டும் தமிழர் தலைவர் அறிக்கை

தமிழ்நாட்டில் அரசுப் பெண்கள் பள்ளிகளில்கூட போதுமான எண்ணிக்கையில் கழிப்பறை வசதியில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ள தகவலைச் சுட்டிக்காட்டி உடனடியாக தமிழ்நாடு அரசு இதில் கவனம் செலுத்தி கழிப்பறை வசதிகளைச் செய்து தர வேண்டும் என்றும், கல்வியைப் பொதுப் பட்டியலுக்குக் கொண்டு சென்றுள்ள மத்திய அரசு இதற்கு நிதி உதவி செய்திட வேண்டும் என்றும் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

தமிழ்நாட்டில் 15 சதவிகித - அரசுப் பள்ளிகளில் அதாவது 5,720 அரசுப் பள்ளிகளில் - கழிப்பறை வசதிகள் இல்லை என்று மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் (மத்திய கல்வி அமைச்சகம்) வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகிறது!

இதில் - அதாவது 5,720இல் 1442 பள்ளிகள் - பெண்களுக் கான பள்ளிகள் என்பது அதிர்ச்சிக்கும், வேதனைக்கும் உரியதாக இருக்கிறது!

தமிழ்நாட்டில் மொத்தம் 37,002 அரசு பள்ளிகள் உள்ளன.

பெண்கள் பள்ளிகளிலும் கழிப்பறை வசதியில்லையா?

இதில் 1,442 பெண்கள் பள்ளிகளிலும் 4,278 ஆண்கள் பள்ளிகளிலும் கழிப்பறை வசதி இல்லை என்ற அவலம் உடனடியாக மாற்றப்பட வேண்டும்.

2013-2014-இல் எடுக்கப்பட்ட புள்ளி விவரத் தகவல்கள் இவை!

தனியார் நடத்தும் பள்ளிகளிலும்கூட போதிய கழிப்பறை வசதிகள் இருக்கின்றனவா என்பது பற்றிய ஆய்வு செய்து - தமிழக அரசு அதனையும் கண்காணிக்க வேண்டியது அவசர அவசியமாகும்.

அரசுப் பள்ளிகளில் 90 விழுக்காடு நிதி சம்பளம் கொடுப்பதற்கே செலவிடப்படுகிறது என்று சொல்லப்பட் டாலும் அதுதக்க சமாதானமாக (இக்குறைபாடுகளை நீக்கிட) ஆகாது. உடனடியாக அரசு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

கல்வியைப் பொதுப் பட்டியலில் வைத்து அதிகாரம் செய்ய முன் வந்துள்ள மத்திய அரசு, இதற்கெனவே மாநிலங்களுக்குத் தனி நிதி உதவி (மான்யமாக) தந்திட உடனே முன்வர வேண்டும்.

கடந்த ஜூலை 30ஆம் தேதி, தமிழக சட்டமன்றத்தில் - விதி 110ன் கீழ் ஓர் அறிக்கை வெளியிட்டார் முதல்வர் அவர்கள். அதில், அனைத்துப் பள்ளிகளிலும் 100 சதவிகிதம் கழிப்பறை வசதிகள், குடிநீர் வசதிகள் இருக்க வேண்டு மென்று கணக்கெடுக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார்.

இதில் 2047 பள்ளிகளில், கழிப்பறை வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த இரண்டும் முரண்பட்ட தகவல்களாக அமைவது - ஏனோ?

எப்படி இருந்தபோதிலும் உடனடியாக கழிப்பறைகள் அமைக்கப்படுவதோடு, ஒவ்வொரு பள்ளிக்கும் முழு நேர துப்புரவுப் பணியாளர் ஒருவரும் நீர் வசதியும் ஏற்படுத்தித் தரும் பொறுப்பைக் கண்காணித்து, பள்ளி சுகாதாரப் பிரிவு ஒன்றையேகூட ஏற்படுத்தினால் பிள்ளைகளின் நலவாழ்வு பாதுகாக்கப்பட வசதிகள் ஏற்பட்டு, இந்தியா விற்கு தமிழ்நாடு இதிலும் வழிகாட்டி மாநிலமாக அமையக் கூடும் அல்லவா?

கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்

சென்னை 8.8.2014

Read more: http://viduthalai.in/e-paper/85459.html#ixzz39r6BX1fd

தமிழ் ஓவியா said...


அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் கோரிக்கை


ஆசிரியருக்குக் கடிதம் >>>

அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் கோரிக்கை

எங்கள் சங்கத்தின் 206 மாணவர்கள் 2007-2008 ஆண்டுகளில் தமிழக அரசின் சார்பில் துவக்கப்பட்ட அர்ச்சகர் பயிற்சி பள்ளியில் சேர்ந்து படித்து அர்ச்சகர் பணிக்கான தகுதி பெற்றோம். ஆனால், உடனடியாக எங்களுக்கு வேலை கிடைக்க வில்லை. காரணம் மதுரை சிவாச்சாரி யார்கள் நேரடியாக உச்சநீதிமன்றத்தில் அனைத்து ஜாதி அர்ச்சகர் ஆக தடை பெற்று விட்டனர்.

உச்சநீதிமன்றத்தில் மேற்சொன்ன வழக்கு 13.12.2012 அன்று இறுதி விசார ணைக்காக வந்தபோது தமிழக அரசின் வழக்குரைஞர் இப்பிரச்சினையை சுமுக மாகப் பேசித் தீர்ப்பதாகக் கூறி கால அவ காசம் கோரினார். அதன்பிறகு 30.01.2013 அன்று வழக்கு இறுதி விசாரணைக்கு வந்து விட்டது. மதுரை சிவாச்சாரியர்கள் சார்பில் மூத்த வழக்குரைஞர் பராசரன் அவர்கள் தனது வாதங்களை முன்வைக்க தொடங் கினார். தமிழக அரசு சார்பில் பி.பி. ராவ் எனும் மூத்த வழக்குரைஞர் ஆஜரானார். ஆனால், வழக்கு அதற்கு பிறகு நீண்ட நாட்களுக்கு பிறகு 08.07.2014 அன்று பட்டிலிடப்பட்டாலும், விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை.

அர்ச்சகர் பணிக்கான சரியான தகுதி பெற்றிருந்தும் நாங்கள் கடந்த 8 ஆண்டு களாக பணி வாய்ப்பு இன்றி தவிக்கின்றோம். எங்கள் அனைவருக்கும் வயது உயர்ந்து கொண்டே செல்கிறது. ஆகையால் குடும்பம் நடத்த எந்த வழியும் இன்றி தவித்து வரு கிறோம். அது மட்டுமல்ல; இந்த படிப்பு படித்ததால் வேறு எந்த வேலைக்கும் எங்களால் செல்ல இயலவில்லை.

எனவே, எங்களின் நிலையை கருத்தில் கொண்டு தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கை விரைந்து நடத்தி முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை இடைக் காலமாக எங்களுக்கு நிவாரண ஊதியமாக ஒவ் வொருக்கும் தலா ரூ.5000 வழங்கி ஆணை யிட வேண்டும்படியும் பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம்.

- வா. அரங்கநாதன், மாநிலத் தலைவர், அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம்

Read more: http://viduthalai.in/page-2/85451.html#ixzz39r7i6zyS

தமிழ் ஓவியா said...


கருநாடக மாநில கழகக் குடும்ப விழா

பெங்களுரூ, ஆக. 8_ கரு நாடக மாநிலத் திராவிடர் கழகத்தின் மூத்த கழக உறுப்பினரும் பெரியாரி யல் சிந்தனையாளருமான வி.சி.வேலாயுதம் (எ) வேமண்ணா அவர்களின் 88ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா பெங்களூர் வீராசாமி நகர் 56ஆவது குறுக்குச் சாலை வேமண்ணாவின் இல்லத்தில் சிறப்பாக நடைபெற்றது.

3.8.1927 இல் பிறந்த வேமண்ணாவிற்கு 3.8.2014 அன்று காலை 10.30 மணிக்கு கருநாடக மாநி லத் தலைவர் மு.சானகிரா மன் தலைமை ஏற்று அவர் பெற்ற வாழ்வியல் அனுப வங்களை நிரல்பட விளக்கி கூறி அவர் பெற்ற விருதுக ளையும் எழுதிய நூல்க ளையும் எடுத்துக் கூறி பாராட்டினார்.

இந்திய தமிழ்ச் சங்கங் களின் கூட்டமைப்பின் தலைவரும் திராவிடர் கழக மூத்த உறுப்பினரு மான மு.முத்துச்செல்வன் முன்னிலை ஏற்றார். மாநி லச் செயலாளர் இரா.முல் லைக்கோ அனைவரையும் வரவேற்று வேமண் ணாவை பாராட்டினார்.

தங்கவயல் சி.சு.தென்ன வன் மொழி வாழ்த்துப் பாடி நிகழ்வை துவக்கி வைத்தார். தங்கம் இராம சந்திரா பெரியார் அறக்கட் டளை நிறுவனரும், மாநி லத் துணைத் தலைவரு மான இராமச்சந்திரா, கே.எஸ்.கார்டன் பகுதி கிளைத் தலைவர் வே.முனு சாமி, திராவிடர் கழகத் தலைவர் க.வேலு, தென் மண்டலத் தலைவர் கவிஞர் க.இரத்தினம், மாநிலத்துணைத் தலைவர் இராகணபதி, இரா.திரு வேங்கடம், எம்.எல். பிரேம்குமார், செயற்குழு உறுப்பினர் சி.சு.தென்ன வன், நா.சிவசங்கர், மாநிலத் துணைச் செயலாளர் வே. நடராசன், வட மண்டலத் தலைவர் இரா.பழனிவேல், கே.எஸ்.கார்டன் பகுதி கிளை செயலாளர் கு. ஆனந்தன், மாநிலப் பொரு ளாளர் கு.செயக்கிருட்டி ணன், வேமண்ணாவின் மூத்த மகள் செல்வமனி தனது தாய் நோய்வாய்ப் பட்டு படுக்கையில் இருந்த ஏழு ஆண்டுகளில் ஒரு நாள் கூட கடிந்து நடக் காமைக் குறித்து நெகிழ்ந்து கூறினார். தென் மண்டலச் செயலாளர் புலவர் கி.சு. இளங்கோவன், வே.மண் ணாவின் குணநலங்களை மொழிப்பற்றால் அவரது நூல்களைப் பற்றி விவ ரித்து கூறினார். கருநாடக மாநிலத் திராவிடர் கழகத் தின் மூத்த உறுப்பினரும் இந்திய தமிழ்ச் சங்கங்க ளின் கூட்டமைப்பின் தலைவர் முத்துச்செல்வன் திராவிடர் கழகத்தின் துவக்க நிலை, தந்தை பெரியார் கொள்கைகளை எடுத்து உரு பெற செய் தும், கன்னடர்கள் பரப் புரை செய்தது பற்றியும் பெங்களூர் தமிழ்ச்சங் கத்தில் அவரை சிறப்பித் தது, அவர் ஆற்றிய மொழி பெயர்ப்புப் பணிகள் குறித்து விளக்கமாக எடுத்துக்கூறி வயது நிலை பாராமல் அவரை மனப்பூர் வமாக அனைவரும் பாராட் டலாம் எனக் கூறினார்.

இறுதியாக 88 வயது நிறைந்த வேமண்ணா தந்தை பெரியார் கொள் கைகளை அடிநாள் தொட்டு தான் எடுத்துச்சென்ற விதம், கன்னட மொழி பயின்று அய்யாவின் நூல்களை தாம் எழுதிய விதம், கழகத் தோழர்கள் எவ்வாறு இயங்குவது போன்ற கருத்துரைகளை ஏற்புரையாக வழங்கினார். அவரது மகள் எழிலரசி நன்றியுரை கூறினார்.

மு.சானகிரான் வேமண் ணாவிற்கு பயனாடை அணிவித்தார் மு.முத்துச் செல்வன் பழக்கூடையை வழங்கினார். கி.சு. தென் னவன் பயனாடை அணி வித்தார். நாடக வேந்தர் வி.மு வேலுவுக்கு தங்கம் இராமச்சந்திர பயனாடை களை வேமண்ணாவின் மூலம் வழங்கினார். வேமண் ணாவிற்கு இராமச்சந்திரா உயர் பழங்களின் தொகுப்பை வழங்கி சிறப்பு செய்தமார். கவிஞர் வீ.இரத்தினம், இரா.கஜபதி ஆகியோர் பரிசு உறை களை வழங்கி மகிழ்ந்தனர். வே.பாவேந்தன் -_ உமா ஆகி யோரின் மகன் பெரியார் பிஞ்சு ரோசன் பரிசுப் பொருள் வழங்கினார்.

மதிய சிறப்பு உண வினை வேமண்ணாவின் குடும்பத்தினர்கள் மகள் செல்வமணி, எழிலரசி, பாவேந்தன், மருமகள் உமா பேரன் அசோக் அனைவருக்கும் வழங்கி சிறப்பித்தனர்.

புதியதாக உறுப்பின ராக கழகத்தில் இணைத் துக் கொண்ட அடையார் ஆனந்தபவன் கமனஹள் ளிக் கிளை உணவக மேற் பார்வையாளர் நா.சிவசங் கர் உறுப்பினர் படிவத் தினை மாநிலத் தலைவர் மு.சானகிராமன் அவர்களி டம் வழங்கி உறுப்பினரா கப் பதிவு செய்து கொண் டார். நா.சிவசங்கருக்கு வேமண்ணா பயனாடை அணிவித்து சிறப்பு செய்தார்.
கழக உறுப்பினர் பிரதீப் நிகழ்ச்சி அனைத்தையும் ஒளிப்படங்கள் எடுத்து சிறப்பு செய்தார்.

Read more: http://viduthalai.in/page-3/85475.html#ixzz39r8Zhw1y

தமிழ் ஓவியா said...


சங்கரராமன் கொலை வழக்கு: தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வதை நிறுத்த சு.சாமி குடியரசுத் தலைவரிடம் மனுவாம்


சென்னை, ஆக.8- காஞ்சிபுரம் சங்கரராமன் கொலைவழக்கில் புதுவை நீதிமன்றத்தில் இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட காஞ்சி மடத்தின் இரு சங்கராச்சாரிகள் உட்பட 24 பேரை யும் விடுதலை செய்திருந்தது. சங்கரராமன் கொலைவழக்கில் வெளியான தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்கு புதுவை ஆளுநர் வீரேந்திர கட்டாரியா அனுமதி அளித்தார்.

அவர் அளித்த அனுமதியை ரத்து செய்ய வேண் டும் என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி யிடம் பாஜக தலைவர்களில் ஒருவரான சுப்பிர மணியசாமி கோரி உள்ளார்.

குடியரசுத்தலைவரி டம் சுப்பிரமணியசாமி அளித்த மனுவில், புதுவை யூனியன் பிரதேசத்தின் ஆளுநர் கட்டாரியா, அவருடைய அலுவலகம் அவசரகதி யில் கொஞ்சம்கூட மூளையை செலுத்தாமல் இருப்பது தெரிகிறது.

ஜூலையில் அதை முன் னாள் துணைநிலை ஆளுநர் செய்தியாளர் களிடம் வெளியிட்ட கருத்தில் தெரிவித்துள் ளார் என்று குறிப்பிட்டுள்ளார்.

புதுச்சேரி செஷன்ஸ் நீதிமன்றம் சங்கரராமன் கொலை வழக்கில் 2013ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் அனைவரையும் விடுதலை செய்தது. சட்டத்தின்கீழ், தீர்ப்பு நாளிலிருந்து 90 நாட்களில் விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய லாம் என்று உள்ளது.

திரு. கட்டாரியா தீர்ப்புக்கு எதிராக அவரு டைய ஒப்புதலுடன் சென்னை உயர்நீதிமன் றத்தில் மேல்முறையீட்டை செய்ததுகுறித்து ஜூலை முதல் வாரத்தில் ஊடகங்களிடம் தெரி விக்கும்போது ஒருவாரத்திற்குள்ளாக அவர் எடுத்த முடிவு அவர் நிர்ப்பந்தத்துக்கு ஆளாகி முடிவெடுத்ததாக(புதுச்சேரி ரங்கசாமி அரசு கூறியதால்) வழக்கு குறித்த விவரம் ஏதும் தெரியாமலே ஆணையில் கையெழுத்திட்ட தாக பதவியைவிட்டு வெளியேறும்போது குறிப் பிட்டதாக சுப்பிரமணியசாமி சுட்டிக்காட்டு கிறார்.

இது வெளிப்படையாகவே துணைநிலை ஆளுநர் தன் மூளையைச் செலுத்தாமலே செயல்பட்டுள்ளதானது சட்டத்தின்படி, மேல் முறையீடு செய்வதற்கு அளித்த ஒப்புதல் செல் லாதது என்று சுப்பிரமணியசாமி வாதிடுகிறார்.

ஆகவே, குடியரசுத்தலைவர் இவ்விவகாரத் தில் தலையிட்டு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 239(2)இன்படி முன்னாள் துணைநிலை ஆளுநர் அளித்த அனுமதியை திரும்பப் பெற வேண்டும் என்று சுப்பிரமணிய சாமி கூறினார்.

கட்டாரியா பதவியிலிருந்து 10.7.2014 தேதி அன்று திரும்பப் பெறப்பட்டார்.

இவ்விவகாரத்தில் சென்னை உயர்நீதி மன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்வதற்கு முன்னதாக விரைவாக குடியரசுத் தலைவரை அவசரம் கருதி தீர்வு காணக்கூடிய முடிவை எடுக்க வேண்டும் என்று சுப்பிர மணியசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.

குடியரசுத்தலைவரிடம் அளித்த மனுவில் இந்த விவாகாரத்தில் நீங்கள் பிரதமருக்கு அறிவுறுத்தி, அமைச்சரவைக்கும் தகவல் தெரிவிக்கவேண்டும் என்று அவசரப்படுத்தி உள்ளார்.

Read more: http://viduthalai.in/page-5/85467.html#ixzz39r93TGx1

தமிழ் ஓவியா said...


அய்யோ இந்து மதமே!


இஸ்லாம், கிறிஸ்தவம் போல இந்து மதக் கோட்பாடுகள் ஒரு புத்தகத்தில் குறிக்கப்படவில்லை. அதற்கு சரித்திர ரீதியில் ஒரு அமைப் பாளரும் கிடையாது.

ஒன்றல்ல - பல கடவுள்களைக் கொண்டது. இந்துவாகி இருப்பதற்கு கடவுள் நம்பிக்கை இருக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை. இந்து மதம் என்று சொல்லப்படும் இதில் முரண்பாடுகள் செழித்து மலிந்து கிடக்கின்றன.

எல்லா இந்துக்களுக்கும் பொதுவான நம்பிக்கைகளோ அமைப்புகளோ ஒன்றும் கிடையாது.

இந்து மதத்திற்கு அடிப்படையான ஒவ்வொரு நம்பிக்கையும் - ஏதாவது ஒரு இந்து கூட்டத்தினரால் மறுத்து ஒதுக்கப்பட்டிருக்கின்றது.

- இன்டர்நேஷனல் என் சைக்கிளோபீடியா ஆஃப் சோசியல் சயின்ஸ்,பக்கம் 358, தொகுதி 6

Read more: http://viduthalai.in/page-7/85458.html#ixzz39r9HWOgC

தமிழ் ஓவியா said...

எல்லா முயற்சிகளும் தோல்வி!

இந்துமதம் என்பது ஒரு சமூக நாகரிகமாகவும், பல் வேறு மதங்களின் இணைப்பாகவும் இருக்கின்றது. அதற்கு ஒரு ஆரம்பமோ, ஆசிரியரோ, ஒரு மத்திய அதிகாரமோ, அமைப்போ, நிறுவனமோ கிடையாது.

இந்து மதம் என்றால் என்ன என்று வரையறுக்க மேற் கொள்ளப்பட்ட எல்லா முயற்சிகளும், ஒரு வழியில் திருப்தி அற்றுத்தான் முடிந்திருக்கின்றன.

இந்துக்கள் உள்பட, மிகச்சிறந்த இந்திய அறிஞர்கள் - இந்து மதம் என்ற இதன் ஒரு பகுதியை அல்லது மற்றதை வலியுறுத்தி பல்வேறு காலங்களில் சொல்லியிருப்பதால் - இந்த வரையறை வேலை மேலும் திருப்தியற்றதா யிருக்கின்றது.

- என்சைக்கிளோ பீடியா பிரிட்டானிகா, 1974, தொகுதி 8, பக்கம் 88

Read more: http://viduthalai.in/page-7/85458.html#ixzz39r9QHDLU

தமிழ் ஓவியா said...


இந்தியா ஏழை நாடா?


இந்த நாட்டின் செல்வத்தில் எவ்வளவு பெரிய பாகம் மதமும், கடவுளும் என்கின்ற பேரால் வேலை செய்யாத சோம்பேறிகள் அனுபவிக்கின்றார்கள் என்பதை நமது மூட ஜனங்கள் அறியாமலேயே இந்த நாடு தரித்திர நாடு என்று அழுகின்றார்கள்.

இந்த நாட்டில் உள்ள சன்னியாசிகள், துறவிகள், மதாச்சாரிகள் என்பவர்களுக்கு உள்ள சொத்துக்களும் வரும்படிகளும் வேறு யாருக்காவது இருக்கின்றதென்று யாராவது சொல்ல முடியுமா?

அவர்களுக்கு எதற்காக அவ்வளவு சொத்தும் வரும்படியும் வேண்டி இருக்கின்றதென்று எந்தப் பொரு ளாதார வாதியாவது கவனிக்கின்றானா? ஒரு சந்நியாசி கோடிக்கணக்கான ரூபாய் சொத் தும், வருசத்தில் லட்சக்கணக்கான ரூபாய் வரும் படியும் உடைய வனாக இருந் தால் அந்த நாடு ஏழை நாடு தரித் திர நாடு என்று யாராவது சொல்லமுடியுமா? என்று கேட்கின் றேன்.

ஒரு முழம் முக்கால் முழம் உயரமுள்ள குழவிக் கல்லுகளுக்கு நமது நாட்டில் எத்தனைக் கோடி ரூபாய்கள் சொத்தும், எத்தனை லட்சம் ரூபாய்கள் வரும்படியும் இருக்கின்றனவென்று பாருங்கள்.

இப்படி எத்தனை நூற்றுக்கணக்கான ஆயிரக் கணக்கான குழவிக்கல்லுகள் நமது நாட்டில் செல்வத் தோடு யானை, ஒட்டகம், குதிரை, பல்லக்கு, தேர், ரதம் முதலிய வாகனங்களோடு, பல பெண்டாட்டிகளோடு வாழ்கின்றன என்பவைகளை நேரில் பார்க்கும் ஒரு யோக்கியன் உண்மையில் நமது நாடு தரித்திரமுள்ள நாடு என்று சொல்ல வருவானா?

இதை எந்த பொருளாதார நிபுணனாவது கவனித்து நமது நாடு தரித்திரமுள்ள நாடு என்று சொல்லுகிறானா?

- தந்தை பெரியார், குடிஅரசு 14.9.1930

Read more: http://viduthalai.in/page-7/85462.html#ixzz39r9gn2Xp

தமிழ் ஓவியா said...

தந்தை பெரியார் பொன்மொழி

இராம இராவணப் போரில் இராமனுக்கு அனுசரணையாக இனத் தையே காட்டிக் கொடுத்த விபீடணன், அனுமார், சுக்ரீவன், அங்கதன் ஆகிய வர்களைப் போல இன்றைக்கும், நமது இனத்தைப் பார்ப்பானுக்குக் காட்டிக் கொடுத்து வயிறு வளர்க்கவும், பதவி பெறவும் எண்ணுகின்றவர்கள் இருக் கின்றார்கள்.

Read more: http://viduthalai.in/page-7/85462.html#ixzz39r9oonWv

தமிழ் ஓவியா said...


இவர்களும் மூடர்கள்தானே!


வீரமாமுனிவர் எழுதிய பரமார்த்த குரு கதையில் ஒரு கதை வருகிறது. ஒரு குரு, அவருக்குத் துணையாக அய்ந்து சீடர்கள், ஒருநாள் குருவின் ஆடை கிழிந்து விட்டது.

குரு அந்த அய்ந்து சீடரையும் ஊசி ஒன்றினை வாங்கி வருமாறு அனுப்பினார். அய்ந்து சீடர்களும் ஊசி வாங்கச் சென்றனர். ஒரு கடையில் ஊசி ஒன்றினை வாங்கினர். ஆனால், எதிர்பார்த்தப்படி அவ்வளவு பெரிதாக இல்லை.

இவ்வளவு சிறிய பொருளை வாங்கவா அய்வரையும் அனுப்பினார் என்று அவர்களுக்குள் அய்யம். அதனால் ஒரு பனைமரம் ஒன்றினை வாங்கி அதன்மீது அந்த ஊசியை செருகி அய்வரும் தூக்கி வந்தனர்.

இக்கதை நம் ஊரில் நடக்கும் சம்பவம் ஒன்றினை நினைவூட்டுகிறது. நம் ஊரில் சாமி புறப்பாடு செய்வார்கள். அரை அடி அல்லது ஒரு அடி இருக்கும் அந்தச் சிலை. அந்த சிலையை ஒரு சிறுவன் கையில் பிடித்துக் கொண்டு ஊரைச் சுற்றி வரலாம். ஆனால் நடப்பது என்ன?

பல மரங்களை பாடைபோல் கட்டி அச்சிலையை அதன்மேல் வைத்து பத்து இருபது பேர் தூக்கிச் செல்வர். இதைப் பார்க்கும் போது பரமார்த்த குரு கதை சீடர்கள் ஊசி வாங்க வந்த கதை தான் ஞாபகத்துக்கு வருகிறது. அந்த மூடர்களுக்கும் இந்த மூடர்களுக்கும், என்ன வேறுபாடு?

தகவல்: கோ.இராமச்சந்திரன், அருந்தவபுரம்

Read more: http://viduthalai.in/page-7/85464.html#ixzz39rA3yqFb

தமிழ் ஓவியா said...

அறிஞர்களின் அறிவுரைகள்

மனித சமுதாயம் தவிர மற்றபடி மிருகம், பட்சி, பூச்சி, ஜந்து முதலியவைகளில் வேறு எந்தப் பெண் ஜீவனாவது, ஆண்களுக்காகவே இருக்கிறோம் நாம் என்ற கருத் துடன் - நடையுடன் இருக்கிறதா என்று பாருங்கள். இது என்ன நியாயம்?

- தந்தை பெரியார்

இந்து மதத்தில் எனக்கு அறவே நம்பிக்கை இல்லை; ஏனெனில் அயோக்கியத்தனம் என்பது எனக் குப் பிடிக்கவே பிடிக்காது!

- டாக்டர் அம்பேத்கர்

பைபிள் ஒரு பெண்ணால் எழுதப்படவில்லையே! ஆதலால்தான் அதில் பெண்கள் அவமானம் அடைய வேண்டிய விஷயங்கள் நிரம்பிக் கிடக்கின்றன!

- இங்கர்சால்

மதம் என்பது பிறருக்கு உழைத்து வறுமைப்பட்ட மக்களை தலை எடுக்கவிடாமல் அழுத்தி வைக்க ஏற்பட்ட சாதனங்களில் முக்கியமான ஒன்றாகும்.

- லெனின்

உலகில் உள்ள ஒவ்வொரு குழந்தையும் நாத்திகவாதி யாகப் பிறக்கிறது. பிறருடைய போதனையினாலும் தயாரிப்பினாலுமே தெய்வ நம்பிக்கை ஏற்படுகிறது.
- சார்லஸ் பிராட்லா

ஒரு புழுவைக் கூட படைக்கச் சக்தியற்ற மனிதன் கணக்கில்லா கடவுளரைப் படைத்துக் கொண்டே இருக்கிறான்.
- மான்டெயின்

Read more: http://viduthalai.in/page-7/85464.html#ixzz39rABiYlr

தமிழ் ஓவியா said...


மனமென ஒன்றுண்டா? நூல் வெளியீட்டு விழா! நூலை வெளியிட்டு தமிழர் தலைவர் உரை

சென்னை, ஆக.8- மனமென ஒன்று உண்டா? நூல் வெளியீட்டு விழா 7.8.2014 சென்னை பெரியார் திடல் அன்னை மணியம்மையார் அரங்கில் நடைபெற்றது. நூலை திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசி ரியர் அவர்கள் வெளியிட்டு சிறப்புரை ஆற்றினார்கள்.

நூலைப் பெற்றுக் கொண்டு திராவிட இயக்கத் தமிழர் பேரவைப் பொதுச்செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண் டியன் உரையாற்றினார். விழாத் தலைமை ஏற்று திராவிடர் கழகத் துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் உரை நிகழ்த்தினார்.

தமிழர் தலைவர் உரை

நூலை வெளியிட்டு தமிழர் தலைவர் ஆசிரியர் உரையாற்றும்போது குறிப்பிட்டதாவது:

மனமென ஒன்று உண்டா? நூலை தத்துவரீதியாக அணுகிப்பார்த்தால் இழைபோல் ஊடுருவிச் செல்வது அறிவியலுக்கும், சமயத்துக்கும் உள்ள விவரம் என்ன என்பது குறித்தே இருக்கிறது.

எதுவும் புழக்கத்தில் இருப்ப தாலேயே அதை நிலைக்க நினைக்க விட்டுவிடக்கூடாது. மனம் திறந்து கூறுகிறேன் என்பார்கள். மற்ற நேரத்தில் மனம் என்ன மூடி இருக்குமா? கடவுளையே தட்டுங்கள் திறக்கப்படும் என்கிறார்கள், அவர் என்னவோ மூடி வைத்திருப்பதுபோல.

இந்த நாள் பொன்னாள்

இந்த நாள் 7.8.2014 சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் அவர் கள் மண்டல் அறிக்கைப்படி மத்திய அரசுப் பணிகளில் 27விழுக்காடு அமலாக்கப்பட்ட நாளாகும். மூளையே இல்லை என்று சொல்லி ஒதுக்கப்பட்டவர்களுக்கு வாய்ப்பு கிடைத்த நாள். மூடப்பட்ட கதவு திறக்கப்பட்ட நாளாகும். இந்த நாள் வரலாற்றில் ஒரு பொன்னாள். மனம் என்று ஒன்றில்லை. அது உளவியலும், மூளைத் தொடர்பில் உள்ள நரம்பியலும்தான் அது.

பழையனவைகளை மறுப்பதா? என்றால், திருவள்ளுவரையே மறுப்பதற்கு திருவள்ளு வரே அனுமதி கொடுத்துள்ளார். எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண் பதறிவு. எப்பொருள் எத்தன்மையத் தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு என்று கூறியுள்ளார்.


தமிழ் ஓவியா said...

தந்தை பெரியார் குடியாத்தத்தில் உரையாற்றும்போது, அவர் சொன்னார், இவர் சொன்னார் என்று எதையும் நம்பி விடாதே என்று பேசிக்கொண்டிருந்தபோது, பார்வையாளர் களிலிருந்து மாணவர் ஒருவர் எழுந்து நீங்கள் சொல்வ தைக் கூடவா? என்று கேட்டார்.

அப்போது, நான் சொல் கிறேன் என்பதற்காக நம்பாதே, உன் அறிவைப் பயன் படுத்து என்று கூறினார். பெரியார் தொண்டன் என்ற முறையில் மனமென ஒன்று உண்டா? என்று எழுதிய நூலாசிரியரின் துணிவைப் பாராட்டுகின்றேன். சிக்கிமுக்கிக் கல்வைத்து நெருப்பு உண்டாக்கியவன் பழங்காலத்து எடிசன் என்றார் பெரியார்.

இறந்தபின் எரிப்பதற்கு அந்தக்காலத்தில் சுடுகாட்டுக்கு எடுத்துச் செல்லும்போது, வாழை மட்டையில் நெருப்புச் சட்டியை வைத்து செல்வார்கள். நீண்ட தூரம் சுடு காட்டுக்குச் சென்றால் நெருப்பு வேண்டுமென்று. அப்படி வாழை மட்டையை வைத்து நெருப்புச் சட்டியை எடுத்துச் செல்வதைக் கண்டறிந்தவன் அந்த காலத்து எடிசன்.

ஆனால், இன்று காரில் செல்கிறோம். உடலைக்கூட தூக்கிச்செல்லாமல் வாகனத்தில் வைத்து எடுத்து மின் மயானத்துக்குக் கொண்டு செல்லும்போதும் நெருப்புச் சட்டியுடன் செல்கிறான் என்றால் பழைமை. அப்பா, தாத்தா எல்லோரும் இப்படித்தான் எடுத்துச் சென்றார்கள் என்று கூறுகிறான்.

இப்பொழுதும் ஏன் அவ்வாறே எடுத்துச் செல்கிறான்? நெருப்புக் கிடைக்காதா? தீப்பெட்டி வந்து விட்டதே - மின் சுடுகாட்டுக்கே தீச்சட்டி எடுத்துச் செல் கிறான் என்றால், இதன் பொருள் என்ன? சிந்தனைக்கு இடம் கொடுக்காமல் பழக்கவழக்கம் என்னும் மூடத்தனத் தில் சிக்கிக் கொள்கிறான்.

அறிவியல் உண்மை

அறிவியல் உண்மைப்படி மனம் என்று ஒன்று இல்லை. அய்ந்து புலன்களின் செயல்பாடு மூளையால்தான். அய்ந்து புலன்களையும் கட்டுப்படுத்துவது மூளைதான்.

மனம் என்பது உருவகம். மூளையைச் சிதைத்தால் இதயம் இயங் கும். மூளைச் செயலின்மைக்கு ஆளானால், அதுதான் சாவு என்கிறார்கள். தந்தை பெரியார் அவர்கள் கூறும்போது செத்துப்போச்சு என்றால் சத்துப்போச்சு என்று பொருள்.

தமிழ் ஓவியா said...


பெஞ்சமின் வாக்கர் தொகுத்த என்சைக்கிளோ பீடியாவில் சாருவாகர்கள்பற்றி உள்ளது. மென்மையாக, இனிமையாக பேசக்கூடியவர்கள் சாருவாகர்கள்.தத்துவ வரலாற்றில் முற்கால சிந்தனையாளர்கள். மற்றவர்களின் வசையின்மூலம்தான் சாருவாகர்களை அறிய முடிகிறது.

மனுஸ்மிருதி, மகாபாரதத்தில் சாருவாகர்கள் பற்றி உள்ளது. நிலம், நீர், நெருப்பு மற்றும் காற்று ஆகியவற்றை ஏற் கிறார்கள். ஆகாயத்தை ஏற்கவில்லை. நீஷீஸீநீவீஷீஸீமீ வீ யீஸீநீவீஷீஸீ ஷீயீ தீஷீபீஹ் என்று உள்ளது. விண்ணுக்கும் மண்ணுக் கும் என்று கூறாதீர்கள். வானம் என்று கூறலாம்.

விண் என்றால் விண்ணுலகம் என்று கற்பிக்கிறார்கள். சாருவாகர் கள் இருப்பதை மட்டும் ஏற்றார்கள். தமிழ்நாட்டில் ஒரு கல்லூரியை நகராட்சியே நடத்திய பெருமை சேலத்துக்குத் தான்.

அந்தக் கல்லுரியில் உள்ள தத்துவப் பேராசிரியர் ஒரு பார்ப்பனர். அங்கு பெரியார் பேசுவதற்குமுன் தத்துவத் தைப் பற்றி பெரியார் பேசுவார் என்று கூறினார். 1946ஆம் ஆண்டில் தந்தை பெரியார் தத்துவ விளக்கம்குறித்துப் பேசினார். மனிதன் என்பதே ஒரு பொருள், ஒரு கூட்டுப்பொருள் என்று கூறினார்.

அறிவியல் விலங்கு போடாதது. மதம் நம்பு என்று விலங்கிட்டது. அறிவியல் எதையும் அப்படியே நம்பாதே, ஆய்வு செய்து பார் என்கிறது. அறிவை செயல்படுத்தி சமு தாயத்துக்குப் பயன்படவேண்டும். மனமென ஒன்றில்லை! மூடநம்பிக்கைகளை வேட்டையாட வேண்டும்.

நூலாசி ரியர் தந்தை பெரியாரின் மெட்டீரியலிசம் அல்லது பிரதி கிருதவாதம் என்கிற நூலை ஆய்வு செய்யவேண்டும். சாருவாகர்களை அழித்துவிட்டார்கள். வீரமணிகளை அழிக்க முடியாது. நான் நூலாசிரியர் வீரமணியைச் சொல் கிறேன் என்று தமிழர் தலைவர், ஆசிரியர் பேசும்போது குறிப்பிட்டார்கள்.

கலந்துகொண்டவர்கள்

விழாவில் தலைமைச் செயற்குழு உறுப்பினர் சாமி. திராவிடமணி, பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன், புலவர் வெற்றியழகன், முன்னாள் சென்னை மேயர் சா.கணேசன், கயல் தினகரன், திராவிடர் கழக வடக்கு மண்டல அமைப்புச் செயலாளர் வெ.ஞானசேகரன்,

பெரியார் களம் இறைவி, பெரியார் நூலக வாசகர் வட்டத் துணை செய லாளர் சுப்பிரமணியம், பொருளாளர் மனோகரன், தஞ்சை கூத்தரசன், கோ.வீ.இராகவன், சா.தாமோதரன், பார்த்தசாரதி, அன்பு செல்வன், தனலட்சுமி தங்கமணி, மணியம்மை ஆகி யோர் கலந்துகொண்டனர்.

வெளியிடப்பட்ட நூலை தமிழர் தலைவர்மூலமாக பெற்றுக்கொண்டவர்கள் கலிய பெருமாள், முருகையன், ஏ.சாமிக்கண்ணு, கவிஞர் செ.வை.இரா.சிகாமணி, வழக்குரைஞர் செல்லய்யா ஆகியோர் ஆவர். நூலை முதலில் பெற்றுக்கொண்ட திராவிட இயக்க தமிழர் இயக்கப் பொதுச்செயலாளர் பேராசிரியர் சுபவீரபாண்டியன்,

நூலாசிரியர் புலவர் பா.வீரமணி, பதிப்பக உரிமையாளர் சோமு ஆகியோ ருக்குப் பயனாடை அணிவித்து தமிழர் தலைவர் ஆசிரியர் பாராட்டு தெரிவித்தார். நூலாசிரியர் புலவர் பா.வீரமணி தமிழர் தலைவர் ஆசிரியர், திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பேராசிரியர் சுபவீர பாண்டியன் ஆகியோருக்குப் பயனாடை அணிவித்து மகிழ்வைப்பகிர்ந்து கொண்டார்.

இறுதியாக நூலாசிரியர் புலவர் பா.வீரமணி ஏற்புரையுடன் நன்றி தெரிவித்துப் பேசினார்.

Read more: http://viduthalai.in/page-8/85478.html#ixzz39rAQJldb

தமிழ் ஓவியா said...

ஆம்பிளைக்கு உண்டா இந்த ’அட்வைஸ்’?


- இரா.உமா

13.07.2014 நாளிட்ட குமுதம் ரிப்போர்ட்டர் இதழில், இழு தள்ளு பகுதியில் ஒரு பதிவு வெளிவந்திருக்கிறது. பெப்சி நிறுவனத் தலைவராக உள்ள, இந்திரா நூயி அமெரிக்காவில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் பேசிய பேச்சை மய்யமாகக் கொண்டு அந்தக் கட்டுரை எழுதப்பட்டுள்ளது. கீழை நாடு, மேலை நாடு என்ற வேறுபாடின்றி எங்கும் நிறைந்திருக்கும் ஆணாதிக்கப் போக்கு, அதன் உற்பத்தியான பெண்ணடிமைச் சிந்தனை இவற்றின் அப்பட்டமான வெளிப்பாடாகவே அந்தக் கட்டுரை இருக்கிறது.இந்திரா நூயி பேசுகிறார்: வேலைக்குப் போகின்ற பெண்களால், குடும்பப் பொறுப்புகளைச் சரியாக ஆற்றமுடிவதில்லை என்பதுதான் உண்மை நிலை. சில பெண்கள் இல்லை இல்லை, நாங்கள் வேலை _ குடும்பம் என இரண்டையுமே சரியாகக் கையாள்கிறோம் என்று சொல்வது நம்பக்கூடியதாக இல்லை. அது வெறும் பாசாங்கு, சின்னக் குழந்தைகளாக இருக்கும் போது அம்மா அருகில் இருக்க வேண்டியது எவ்வளவு அவசியமோ, அதே மாதிரி அவர்கள் டீன் ஏஜ் பருவத்தில் இருக்கும்போதும், நமது துணை, நெருக்கம், வழிகாட்டுதல், ஷேரிங் எல்லாம் ரொம்ப ரொம்ப அவசியம். அந்தச் சந்தர்ப்பங்களில் நாம் அவர்களோடு இல்லையே என்கிற எண்ணம் குற்ற உணர்வாக மாறி என்னை வதைக்கும்.


முதலில், வேலைக்குப் போகின்ற பெண்களால் குடும்பப் பொறுப்புகளைச் சரியாக ஆற்ற முடிவதில்லை என்று கட்டுரையில் இருப்பதை எடுத்துக் கொள்வோம். பெண்கள் எத்தனை ஆண்டுகளாக வேலைக்குப் போகத் தொடங்கியிருக்கின்றனர்? குத்து மதிப்பாகப் பார்த்தால்கூட, 20 ஆண்டுகளாகத்தான் பெண்கள் வேலைக்குப் போவது அதிகரித்திருக்கிறது. அப்படி வேலைக்குப் போகின்ற பெண்களில் பெரும்பான்மையானவர்கள், ஓர் ஆணைச் சார்ந்திருக்காமல், தற்சார்போடு இருக்க வேண்டும் என்னும் பெண்விடுதலைச் சிந்தனையின்பாற்பட்டு வேலைக்குப் போவதாக எண்ணிவிட முடியாது. அதே போல், தன்னைப் போல தன் மனைவியும் சம வாய்ப்பும், மதிப்பும் இந்தச் சமூகத்தில் பெற வேண்டும் என்ற சமத்துவக் கொள்கையால் ஆட்கொள்ளப்பட்டு, ஆண்களும் தங்கள் மனைவிமார்களை வேலைக்கு அனுப்புவதில்லை.

தமிழ் ஓவியா said...


மாறாக, பெருகி வருகின்ற நுகர்வுக் கலாச்சாரம், குழந்தைகளின் எதிர்காலம், குடும்பத்தின் தேவைகள் _ இவையே, இருவரையும் பொருளாதாரத்தை நோக்கி உந்தித் தள்ளுகின்றன. குடும்பத்தின் பொருளாதார, சமூக வளர்ச்சியில் பெண்களுடைய பங்களிப்பு இன்றைய சூழலில் தவிர்க்க முடியாதது என்பதை ஆண், பெண் இருவரும் நன்கு உணர்ந்தே இருக்கின்றனர். கணவனுக்கு நிகராக, சில வேளைகளில் கணவனைவிட சில படிகள் மேலான பதவிகளில் இருப்பவர்களாகவும், அதிக ஊதியம் பெறுபவர்களாவும் பெண்கள் இருக்கின்றனர்.
ஆனாலும், உண்மை நிலை என்னவாக இருக்கிறது? நாட்டுக்குத்தான் ராணியப்பா...வீட்டுக்கு அவ மனைவியப்பா என்றுதானே! இதைத்தான் இந்திரா நூயியின் அம்மாவும் அவரிடம் நினைவூட்டியிருக்கிறார். ஒரு விசயம் புரிஞ்சுக்கோடி, உன் கம்பெனி உலகத்துலயே பெரிய கம்பெனி, சரி. அதுல நம்பர் ஒன் போஸ்ட் ஒனக்குக் கொடுத்திருக்கா சரி. ஆனா இந்த வீட்டுக்குள்ள வரும்போது, நீ ஒரு மனைவி, ஒரு அம்மா, ஒரு மகள், ஒரு மருமகள். இது எல்லாமும்னு வச்சிக்கோ. இந்த ரோலை வேற யாருமே ஏத்துக்க முடியாது. அதனால உன் தலையில சூட்டுற கிரீடத்தை எல்லாம் இந்தக் கராஜ்லயே விட்டுட்டு வந்துரு. வீட்டுக்குள்ள கொண்டு வராதே.

இதே போன்ற அறிவுரையை, ஒரு அம்மா தன் மகனிடமோ, ஒரு மாமியார் தன் மருமகனிடமோ சொல்லிவிட முடியுமா? குடும்பம் என்பது கணவன் மனைவி இருவரும் இணைந்து நடத்துகின்ற ஒரு நிறுவனம் என்னும்போது, பொறுப்புகள் இருவராலும் சமமாகப் பகிர்ந்து கொள்ளப்படுவதுதானே நியாயம்? அதைவிட்டுவிட்டு, பெண்கள், வேலைக்குப் போய் பணமும் சம்பாதித்துக் கொடுத்து, வீட்டுப் பொறுப்புகளையும் தலைமேல் போட்டுக்கொண்டு செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பது மனிதநேயச் செயலாகுமா? காலங்காலமாக, புருஷன் வீட்டில் வாழப் போற பெண்ணுக்கும், தங்கச்சிக் கண்ணுக்குமே புத்திமதிகள் சொல்லி அனுப்பும் நம் சமூகத்தில், வீட்டு வேலைகளும், இன்னபிற குடும்பப் பொறுப்புகளான குழந்தை வளர்ப்பு, மாமியார் மாமனாரைக் கவனித்தல், நாத்தனாருக்கு நல்லது கெட்டது பார்ப்பது, மச்சினருக்குப் பொறுப்பை உணர்த்தி நல்வழிப்படுத்துவது போன்ற குடும்பக் கடமைகள் தங்களைச் சார்ந்தவை மட்டுமே என்று பெண்கள் மனங்களில் பதிய வைக்கப்பட்டுவிட்டன. மேற்படிக் கடமைகளைச் சரிவரச் செய்யும் பெண்களுக்கு மட்டுமே, இங்கு குடும்பப் பெண் பட்டம் வழங்கப்படும். பெண்களும் இயல்பாகவே இந்தப் பட்டத்தைச் சுமக்க மனத்தளவில் பயிற்றுவிக்கப்பட்டு, ஏற்றுக்கொள்ளச் செய்யப்படுகிறார்கள்.

தமிழ் ஓவியா said...

இந்தச் சிந்தனைதான், இந்திரா நூயியின் பேச்சிலும் வெளிப்படுகிறது. குழந்தைகளோடு நேரம் செலவிட முடியாதது தனக்குக் குற்ற உணர்வைத் தருவதாகச் சொல்கிறார். பல வீடுகளில், தங்கள் பிள்ளைகள் என்ன படிக்கின்றனர், எப்படிப் படிக்கின்றனர், எப்போது வீட்டிற்கு வருகின்றனர், அவர்களுடைய நண்பர்கள் யார் _ எப்படிப்பட்டவர்கள், அவர்களுக்குப் பிடித்தவைகள் என்ன, பிடிக்காதவைகள் என்ன என்பதெல்லாம் அப்பாக்களுக்குத் தெரிவதே இல்லை. ஆனால், அது குறித்த எந்தக் குற்ற உணர்வும் அவர்களுக்கு எழுவதும் இல்லை. இந்த வீட்டுக்குள் வரும்போது, நீ ஒரு மனைவி, ஒரு அம்மா, ஒரு மகள், ஒரு மருமகள். இது எல்லாமும்னு வச்சிக்கோ _ என்கிறார் இந்திரா நூயியின் அம்மா. இப்படி ஒன்றுக்கும் மேற்பட்ட குடும்பப் பதவிகள் பெண்களுக்கு மட்டுமே நினைவூட்டப்படுகின்றன. இதே காரணத்தை முன்வைத்து ஏற்கெனவே அரசியலில் உயர் பதவிகளில் இருந்த மூன்று பெண்கள் பொறுப்புகளைக் கைவிட்டு இல்லத்தரசிகளாக மாறினர் என்றும் கூறி, இக்கட்டுரை தன் தரப்புக்கு வலுசேர்க்க முயல்கிறது. பொதுவாக நம் நாட்டில், இல்லத்தரசிகள் உண்டு _ இல்லத்தரசர்கள் கிடையாது; கற்புக்கரசிகள் உண்டு _ கற்புக்கரசர்கள் கிடையாது; குடும்பப் பெண்கள் உண்டு _ குடும்ப ஆண்கள் கிடையாது; மலடிகள் உண்டு _ மலடன்கள் கிடையாது; விதவைகள் உண்டு _ விதவன்கள் கிடையாது; விபச்சாரிகள் உண்டு _ விபச்சாரன்கள் கிடையாது _ இப்படி எல்லாச் சிறப்புகளையும் பெண்களுக்கு மட்டுமே உரித்தாக்கி இருக்கிற நாகரிக சமுதாயத்தின் நீட்சிப் போக்குகளே இக்கட்டுரைக்கான அடித்தளங்கள்.

எந்தவொரு ஆணும், அய்யகோ, என்னால் குடும்பப் பொறுப்புகளைச் சரியாகச் செய்ய முடியவில்லையே, என் மனச்சாட்சி என்னைக் கேள்வி கேட்கிறதே. நான் வேலையை விட்டுவிட்டு, என்னுடைய குடும்பக் கடமைகளைக் கவனிக்கப் போகிறேன் என்று ஒரு பேச்சுக்குக்கூட சொல்வதில்லை.

சரி, போகட்டும். வீட்டு வேலைகளையாவது சரிபாதியாகப் பகிர்ந்து கொள்வோமே என்ற குறைந்தளவு நியாயத்தையாவது செய்ய முன்வருகிறார்களா என்றால், பெரும்பாலும் இல்லை. அண்மையில் என்னோடு, தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் கலந்து கொண்டவர், இப்ப இருக்கிற பொம்பளைங்க, ஆம்பிளைங்கள வீட்டு வேலை செய்ய வைக்கிறாங்க. வேலைக்குப் போறதுனால, நா பாதி வேலைய செஞ்சா, நீ பாதி வேலைய செய்யின்னு பெண்ணுரிமை பேச ஆரம்பிச்சிடுறாங்க என்றார். இது மனித உரிமை. மனித உரிமைதான் பெண்ணுரிமை என்று அவருக்குப் புரிய வைப்பதில், பண்பாடு, கலாச்சாரம் எனப் பல தடைகள் குறுக்கே நிற்கின்றன.

கேட்டரிங் படிப்புப் படித்துவிட்டு, பெரிய உணவு விடுதிகளில் உணவு தயாரிப்பாளர்களாகப் பணியாற்றுகின்ற ஆண்கள், வீட்டில் மனைவிக்கு உடல்நலமில்லாத சூழலில்கூட, சமையல்கட்டுப் பக்கம் போவதில்லை என்கிற ஆண்மைச் செருக்கோடு இருக்கிறார்கள்.

தமிழ் ஓவியா said...

கணவன் மருத்துவராக இருந்தாலும், வீட்டில் குழந்தைக்கு உடல்நலமில்லை என்றால், அலுவலகத்தில் அனுமதி கேட்டோ, விடுப்பு எடுத்தோ மனைவிதான் குழந்தையைக் கவனித்துக் கொள்ள வேண்டும்.

பெண்களும் இப்படிப்பட்ட மனநிலையோடு வாழப் பழகிக் கொள்கிறார்கள். வந்ததும் ஓடுறியே, ஒரு ரெண்டு நாள் தங்கிட்டுப் போயேன்டி என்று அம்மா வீட்டில் ஆசையோடு சொன்னாலும், அய்யய்யோ, நா இல்லாட்டி அவருக்கு எந்த வேலையும் ஓடாதும்மா... நா கௌம்புறேன் என்று சொல்லும் பெண்ணுக்குத் தெரியும், தான் இல்லாவிட்டாலும் எல்லாம் நடைபெறும் என்று. இருந்தும், பொதுப்புத்தியில் ஏற்றி வைக்கப்பட்டிருக்கும், இல்லத்தரசிக்கான இலக்கணம், அவளை அப்படி ஓட வைக்கிறது. ஆனால் ஆண்களில் பெரும்பான்மையும், எம் பொண்டாட்டி ஊருக்குப் போய்ட்டா...எம் பொண்டாட்டி ஊருக்குப் போய்ட்டா... என்று துள்ளிக் குதிக்கும் ஜனகராஜ்களாகத்தான் இருக்கிறார்கள்.

கணவன் வேலைக்குப் போவது, குடும்பத்தின் நலனுக்காக என்றால், மனைவி வேலைக்குப் போவதும் குடும்பத்தின் நலனுக்காகத்தான். இருவரின் நோக்கமும் ஒன்றுதான் என்று ஆகும்போது, மனைவியின் வேலை மட்டும் குடும்பப் பொறுப்புகளுக்குத் தடையாக இருக்கிறது என்பது எப்படிச் சரியாகும்? ஆண் என்பதாலேயே, ஓர் ஆணால், தன் வாழ்க்கையின் எந்த நிலையிலும் தன்னுடைய அடையாளத்தை இழந்துவிடாமல், தனக்கான அனைத்தையும் பெற்றுக் கொள்ள முடிகிறது. பெண் என்பதாலேயே, வேலைக்குக்கூட குற்ற உணர்வில்லாமல் போக முடிவதில்லை. இதைத்தான் மூளையில் போடப்பட்ட விலங்கு என்றார் தந்தை பெரியார்.

குழந்தைகளைக்கூடக் கவனிக்காமல் பணத்தின் பின்னால் ஓடும் பெற்றோர்களைப் பார்த்து _ அதாவது கணவன், மனைவி இருவரிடமும் _ யாருக்காக ஓடி ஓடிப் பணம் சம்பாதிக்கிறீர்கள்? குடும்பத்திற்குத்தான் என்றால், குழந்தைகள், பெற்றோர் இல்லாமல் ஏது குடும்பம்? என்று கேட்டால் அது நீதி. அதைவிட்டுவிட்டு, என்னால் பிள்ளைகளை, குடும்பத்தைச் சரியாகக் கவனிக்க முடியவில்லையே என்ற குற்ற உணர்வைப் பெண்களிடம் ஏற்படுத்தி, தங்களை விடுவித்துக் கொள்ளும் ஆணாதிக்கச் சிந்தனை சமூக முன்னேற்றத்திற்கு மிகப்பெரும் தடை.

புஷ் காலத்தில் அவருடைய ஆலோசகர் மற்றும் உதவியாளர் பொறுப்புகளை வகித்த, கேரன் ஹ்யூக்ஸ், மேரி மேடலின் இருவரும் சொல்லும் யோசனையைக் கட்டுரை ஆசிரியர் இறுதியாக முன்வைக்கிறார். அன்றாட குடும்பப் பொறுப்புகளை நிறைவேற்றத் தடையாக இல்லாத வேலை அல்லது தொழிலை நாம் தேர்வு செய்வதுதான் ஒரே வழி என்பதுதான் அந்த உலகப் புகழ்பெற்ற யோசனை. அடடா, பெண்கள் மீதுதான் எத்தனை பரிவு? இந்த யோசனை பெண்களுக்கு மட்டும்தான். ஆண்களுக்குக் கண்டிப்பாகக் கிடையாது என்பதையும் குறித்துக் கொள்ள வேண்டும்.

கட்டுரை ஆசிரியர் மேற்கோள் காட்டும் பெண்கள் அனைவருமே, மேல்தட்டு வர்க்கப் பெண்கள் அல்லது மேலைநாட்டுப் பெண்களாகவே இருக்கின்றனர். இவ்வளவு குற்ற உணர்ச்சியோடு இருந்தாலும், ஆண்டுக்கு 75 கோடி ஊதியம் பெறும் தன்னுடைய வேலையில் இன்றும் இந்திரா நூயி தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறார். மேலைநாட்டுப் பெண்களே இவ்வளவு குடும்பப் பொறுப்போடு சிந்திக்கும் போது, பாரதப் பெண்கள் பண்பாட்டின் உச்சியில் நின்று யோசிக்க வேண்டாமா என்னும் தொனிதான் கட்டுரையில் இழையோடிக் கொண்டிருக்கிறது.

எத்தனையோ போராட்டங்களுக்குப் பிறகு, பெண்கள் பல துறைகளிலும் வாய்ப்புகளைப் பெற்று, சாதனையாளர்களாக வலம் வரத் தொடங்கி இருக்கிறார்கள். அவர்களை மீண்டும் கொல்லைப்புறத்தில் முடக்கிவைக்கும் உளவியல் தந்திரமே இவை போன்ற கருத்து உருவாக்கங்கள்.

தமிழ் ஓவியா said...

இந்தியா - இந்த நிலையில்


எச்.அய்.வி. பதிப்பு

இந்தியாவில் 21 லட்சம் பேருக்கு, அதாவது பத்துப் பேர்களில் 4 பேர்களுக்கு எச்.அய்.வி. பாதிப்பு இருப்பதாக அய்.நா.வின் எச்.அய்.வி. மற்றும் எய்ட்ஸ் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. உலக அளவில் எச்.அய்.வி. பாதிப்பில் இந்தியா மூன்றாவது இடத்தில் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

உலகம் முழுவதிலும் 35 கோடிப் பேர்கள் எச்.அய்.வி. நோய்க்கு ஆளாகியிருப்பதாகவும், இவர்களில் 19 கோடிப் பேர்கள் தங்களுக்கு எச்.அய்.வி. பாதிப்பு உள்ளது என்று தெரியாமல் இருக்கின்றனர்.

2013ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி, எய்ட்ஸ் நோய்க்குக் காரணமான எச்.அய்.வி. கிருமி தொற்று உள்ளவர்களில் சப் சஹாரா ஆப்ரிக்கா முதலிடத்தில் உள்ளது. இங்கு 48 லட்சம் பேர்கள் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் 21 லட்சம் பேர்கள் எச்.அய்.வி. பாதிப்புடன் உள்ளனர். இங்கு ஏற்படும் மரணங்களில் 51 விழுக்காடு எய்ட்ஸ் நோயுடன் தொடர்புடையனவாக இருக்கின்றன. ஆனால் 36 விழுக்காட்டினர் மட்டுமே சிகிச்சை எடுத்துக் கொண்டுள்ளனர். மேலும், பாலியல் தொழிலாளர்கள் மூலமாக நோய் பரவுவது 10.3 விழுக்காட்டிலிருந்து 2.7 விழுக்காடாக குறைக்கப்பட்டுள்ளது. ஆனால், அசாம், பீகார் மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களில் அதிகரித்துள்ளது. எச்.அய்.வி. பாதிப்பை ஒழிக்கும் திட்டம் 2030ஆம் ஆண்டுக்குள் முடிவுக்கு வரும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது..

தமிழ் ஓவியா said...

வாய்ப் புற்றுநோய்புகைப் பிடித்தல் மற்றும் புகையிலைப் பொருள்களை மெல்லும் பழக்கம் உடையவர்களைப் புற்றுநோய் தாக்கும் அபாயம் உள்ளது என்று எச்சரித்தாலும் யாரும் அதனைக் கண்டுகொள்வதில்லை.

புகையிலை தொடர்பான பழக்கங்களுக்கு அடிமையாகி நம் நாட்டில் 6 மணி நேரத்திற்கு ஓர் உயிர் பலியாவதாக அதிர்ச்சியூட்டும் செய்தி வெளியாகியுள்ளது. கிராமங்களில் இருப்பவர்கள் மற்றும் வறுமைக் கோட்டிற்குக் கீழே இருப்பவர்கள் தங்களுக்கு வாய்ப் புற்றுநோய் வந்துள்ளது என்பதைத் தெரிந்து கொள்ளாமலே இறந்துவிடுகின்றனர். அவர்களையும் சேர்த்தால் வாய்ப் புற்றுநேய் தாக்கி மரணமடைபவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்க வாய்ப்பு உள்ளது.

புற்று நோய் பாதிப்பினால் உயிரிழக்கும் நோயாளிகளில் 40 விழுக்காட்டிற்கும் அதிகமானவர்கள் வாய்ப் புற்று நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. வாய்ப்புற்று நோய் பாதிக்கப்பட்டவர்களில், வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் முதலிடத்திலும் மேற்கு வங்காளம், குஜராத், ஆந்திரா, தமிழ்நாடு உள்ளிட்ட பிற மாநிலங்களைச் சேர்ந்தோர் அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளனர்.

புகையிலை விவசாயம், பதப்படுத்துதல் மற்றும் சந்தைப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டிருக்கும் மக்களில் வாழ்க்கைக்குத் தேவைப்படும் மாற்று ஏற்பாடுகளை மத்திய, மாநில அரசுகள் செய்துவிட்டு, புகையிலை பயிரிடுவதை முழுவதும் தடை செய்தால் மட்டுமே இந்த இறப்பு விகிதத்தை ஒழிக்க முடியும் என புற்றுநோய் ஆராய்ச்சித் துறை நிபுணர்களும் சமூக ஆர்வலர்களும் கூறியுள்ளனர்.

தமிழ் ஓவியா said...

இந்தியா - இந்த நிலையில்

ஏழை நாடு

உலக நாடுகளில் உள்ள கடைக்கோடி ஏழைகளில் மூன்றில் ஒரு பங்கினர் இந்தியாவில் வசிப்பதாகவும், உலக அளவில் மரணமடையும் அய்ந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில் இந்தியக் குழந்தைகளே அதிகம் என்றும் அய்.நா. மில்லினியம் மேம்பாட்டு லட்சியங்கள் என்ற அமைப்பின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும் 60 விழுக்காடு இந்தியர்கள் திறந்தவெளியில் மலம் கழிப்பதாகவும், பேறுகால இறப்புகளில் 17 விழுக்காடு இந்தியாவில்தான் நிகழ்வதாகவும் கூறியுள்ளது, மேலும், தெற்காசிய நாடுகளில் மிகப்பெரியதும் அதிக மக்கள்தொகை கொண்டதுமான நாடு இந்தியா என்றாலும், பிற நாடுகளை ஒப்பிடும்போது பலவகைகளில் பின்தங்கி இருப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் ஓவியா said...

ஒவ்வொரு ஆண்டும் குறித்த நாளில் வந்துவிடுகிறது சுதந்திர தினம்!வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பெரு நிகழ்வுகள் மட்டும்தான் கலையாகும் என்றில்லை. அன்றாடத்தின் அனுகணம்கூட கலைதான் என்று கவிஞர் உதயகுமார் இந்த நூலுக்கான தனது, வாழ்த்துரையில் குறிப்பிட்டிருந்தார். அது உண்மைதான் என்பதை, பால்ய வீதி நெடுகிலும் காண முடிகிறது.

பள்ளிப் பருவத்தின் நிகழ்வுகளை,
தபால்பெட்டி டவுசரோடு
பால்ய வீதிகளில் அலைந்திருக்கிறேன்
கேட்பார் யாருமின்றி!
இன்று சிமெண்ட் மூடிக் கிடக்கிறது...
எதிர்காலத்தில், தொல்பொருள்துறை
தோண்டிப் பார்த்தால், படிமங்களாய்
கிடைக்கக்கூடும் அத்துணை குதூகலங்களும்

- என்று கவிதையாக்கித் தரும்போது, நமக்குள் பெருமூச்சு எழுவதைத் தடுக்க முடியவில்லை, ரேடியோ பெட்டி _ என்ற கவிதையில், கால மாற்றத்தை வெகு நயத்தோடு வடித்துக் காட்டுகிறார்.

குழந்தைகளைப்பற்றி எழுதும்போது, குழந்தையாகவே மாறி அவர்களின் அருகமர்ந்து பார்த்ததுபோல எழுதியிருக்கிறார். ஓரிடத்தில்,

வானவில் வரையக் கற்றுக் கொடுத்தேன் குழந்தைக்கு!

வானவில் பார்த்து குதூகலிக்க கற்றுக் கொடுத்தது குழந்தை! _ என்ற கவிதையைப் படிக்கும்போது, அட! என்று புதிதாக ஒன்றைக் கற்றுக்கொள்வது போன்ற உணர்வு வருகிறது.

குழந்தையாக இருந்தவர் சட்டென்று சுதந்திர தினத்தை எள்ளல் தொனியோடு ஒரு தெறிப்பில் சுட்டிக் காட்டிவிடுகிறார். பாருங்கள் இந்தக் கவிதையை.

வயல்வெளிகள் வறண்டாலும் திறந்துவிடப்படாத காவிரித் தண்ணீரைப் போல் அல்லாமல் ஒவ்வொரு ஆண்டும் குறித்த நாளில் வந்துவிடுகிறது சுதந்திர தினம்!

நம் சிந்தையில் ஏதேதோ எண்ணங்களைத் தூண்டுகிறது. அறிவியல் மனப்பான்மையோடு வாழவேண்டும் என்பதை,

இருக்கையைக் கைப்பற்றும் அறிவிக்கப்படாத போரில், கண்டுகொள்ள யாருமில்லை; இருக்கையின்றித் தவிக்கும் பூமியை!

_ என்று எழுதி, பூமி மிதந்து கொண்டிருப்பதை உணராமல் வாழும் நம் நிலையைக் கேலிக்குள்ளாக்குகிறார். அதோடு, இருக்கைக்காக நடக்கும் போர் _ என்றும், அதுவும் அறிவிக்கப்படாத போர் என்றும் நயத்துக்கும் குறைவு வந்துவிடாமல் எழுதியிருப்பதை ரசிக்காமல் இருக்க முடியவில்லை.
சட்டென்று கவிஞர்,

முப்பத்து முக்கோடி தேவர்களில் ஒருவர்கூட வருவதில்லை; விவாகரத்துப் பிரச்சினையைத் தீர்த்துவைக்க!

_ என்று எழுதி, மூடநம்பிக்கைகளின் முதுகில் சாட்டையால் சுளிர் சுளீர் என்று விளாசுகிறார். உண்மை படும் பாட்டை பொய் என்ற கவிதையில்

செம்பு கலந்த பொன்னைப் போல, அத்தனை அழகாய் இருப்பதில்லை பொய் கலவாத உண்மை

- என்று உவமை அழகோடு சொல்லி, நம்மையும் அந்த ஆழமான உண்மையை (நடைமுறையை) எண்ணி வெட்கப்பட வைக்கிறார்.

மொத்தத்தில் கவிஞர் வத்திராயிருப்பு தெ.சு.கவுதமனின் பால்ய வீதி எனும் கவிதைத் தொகுப்பு, படித்து ருசித்து மற்றவர்க்கும் படைக்க வேண்டிய படையல்.

தனது மூன்றாவது கவிதைத் தொகுப்பின் மூலம் நம்மையும் கைப்பிடித்து அழைத்துச் செல்கிறார் பால்ய வீதிக்குள். -

- உடுமலை

தமிழ் ஓவியா said...

கல்லணையும் கற்கோயிலும்


- பரமத்தி சண்முகம்கரிகாலனும் இராஜராஜனும் சந்தித்தால்...

கரிகாலன்: ஏன் இராஜராஜா சோகமாய் அமர்ந்திருக்கிறாய்? எதைப்பற்றிச் சிந்திக்கிறாய்?

இராஜராஜன்: கரிகாலரே, நீர் கல்லணையைக் கட்டிவிட்டு கரை காணாத மகிழ்ச்சியோடு இருக்கிறீர். நானோ உலகமே வியக்கும் வண்ணம் தஞ்சைப் பெரிய கோவிலைக் கட்டினேன். அந்தக் கோவிலைக் கட்ட நான் எவ்வளவு பாடுபட்டிருக்கிறேன். இலட்சக்கணக்கான என் குடிமக்களை வாட்டி வதைத்திருக்கிறேன். இவ்வளவும் கட்டி முடித்த என்னை நான் கட்டின கோவிலுக்குள் விடாமல் வெளியிலேயே ஒரு காவல்காரனைப் போல நிற்க வைத்துவிட்டார்கள். என்னை எப்போதும் சுமக்கும் நந்திவாகனம்கூடக் கோவில் பிரகாரத்துக்குள் கம்பீரமாக அமர்ந்திருக்கிறது. நான்தான் காவல்காரனைப் போல் கால்கடுக்க நின்று கொண்டே இருக்கிறேன். நான் என்ன பாவம் செய்தேன்.

கரிகாலன்: நீ செய்த பாவம் கொஞ்சமா? இந்தப் பெரியகோவிலைக் கட்டி முடிக்க இலட்சக்கணக்கான ஏழைக் குடிமக்களை வாட்டி வதைத்து அவர்கள் இரத்தத்தைச் சேறாக்கி, எலும்புகளை உரமாக்கி கோபுர உச்சியிலே ஒரு விமானம் என்ற பெயரால் தஞ்சையிலிருந்து ஏழு மைல்களுக்கு அப்பால் சாரப் பள்ளத்திலிருந்து சாரம் அமைத்து பெரிய கோபுரத்துக்கு அழகு ஊட்டுவதற்காக விமானம் அமைக்க அவ்வளவு பெரிய பாறாங்கல்லைக் கொண்டு வந்து கோபுரத்தின் உச்சியில் வைத்தாயே அது எவ்வளவு திறமையான செயல். ஆனால், அதற்கு மக்களை நீ எவ்வளவு கஷ்டப்படுத்தினாய். நான் அப்படிப்பட்ட பாவச் செயல்களைச் செய்யவில்லையே, அப்படிப் பெரும்பாடுபட்டு நீ எழுப்பிய கோவிலுக்குள் இருக்கும் பிரகதீசுவரனை அருகில் சென்று உன்னால் வணங்க முடியுமா? முடியாதே உனக்கு இந்தத் தண்டனை தேவைதானே.

இராஜராஜன்: ஆ... (கோபமாக) இது பெரிய அநியாயம். இதை நான் அனுமதிக்க முடியாது. (பல்லை நற நற வென்று கடித்தவாறு) நான் எழுப்பிய கோவிலில் நான் சென்று வழிபட முடியாதா? இது அக்ரமம், அநியாயம்.

தமிழ் ஓவியா said...


கரிகாலன்: பார்த்தாயா? புரோகிதர்களும் பார்ப்பனர்களும் குருமார்களும் சாத்திரத்துக்கு விரோதமாக சூத்திர மன்னர்கள் கோவிலுக்குள் நுழைய முடியாது என்று தீர்மானித்து இராஜராஜன் மன்னனேயானாலும் இந்தப் பெரிய கோவிலைக் கட்டியவனேயானாலும் மனு சாஸ்திரப்படி பிராமணர்கள்தான் கோவிலுக்குள் இருப்பார்கள்;

இராஜராஜனே, நீ எவ்வளவு கீர்த்தி பெற்றவனாக இருந்தாலும் சூத்திரன் சூத்திரன்தான் என்று உன்னை கோவில் பிரகாரத்துக்குள்கூட நுழைய விடாமல் தடுத்துவிட்டார்கள்.

இராஜராஜன்: அது போகட்டும், என்னை ஏன் கோவிலுக்கு வெளியே எரிக்கும் வெயிலிலும் கொட்டும் மழையிலும் நிற்க வைத்தார்கள்?

அன்று பாலாபிஷேகமும் பஞ்சாமிர்த அபிஷேகமும் செய்தார்கள். இன்று காக்கையும், குருவியும், கண்ட கண்ட பட்சிகளும் பறவைகளும் எச்சமிட்டுச் செல்கின்றனவே, என்னை அசிங்கப்படுத்தவா இப்படிச் செய்தார்கள். பொதுமக்கள்கூடக் கவலைப்படவோ இரக்கப்படவோ செய்வதில்லையே.

கரிகாலன்: இராஜராஜா நீ உன் குடிமக்களைப் போற்றி அவர்களை மகிழ்ச்சியுடன் வாழ வைக்காமல் புரோகிதப் பார்ப்பனர்களுக்கு நிலபுலன்களைத் தானம் செய்தாய், கிராமம் கிராமமாக எழுதி வைத்தாய். மகாதானபுரங்கள், உத்தமதானபுரங்கள் என அவ்வளவும் செய்து அவற்றைப் பராமரிக்கிற பொறுப்பையும் நீயே ஏற்றுக் கொண்டாயே, ஆனால், உனது ஆட்சிக்குட்பட்ட ஏழை எளியவர்களைக் காப்பாற்ற என்ன செய்தாய்?

என்னைப் பார், குடகிலிருந்து புறப்பட்ட காவிரியைக் கரைபுரண்டு ஊர்களை நிலபுலன்களை நிரவிக் கொண்டு போகாமல் தேக்கி அணைக்கட்டு ஒன்றை அமைத்து கல்லணையிலிருந்து முறையாக தஞ்சைத் தரணி முழுதும் பாய்ந்து வளம் கொழிக்கும்படியாகச் செய்துவிட்டேன். மக்கள் முப்போகமும் சாகுபடி செய்து நெல் விளைத்து சுபிட்சமாக வாழ வைத்துவிட்டேன். இப்போது நிம்மதியாக இருக்கிறேன். அதுமட்டுமல்ல, நீ பிரகதீசுவரனுக்கு மாபெரும் கோவிலைக் கட்டிவிட்டாய்.

உனது ஆட்சியில் உழைக்கும் ஏழை மக்களுக்கு என்ன செய்தாய்? ஊர் ஊருக்குக் கல்விச் சாலை அமைத்தாயா? அங்கு சோழன் பள்ளிக்கூடம், சோழன் நடுநிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகளை ஏற்படுத்தினாயா? ஏழை-_எளிய உழைக்கும் மக்களுக்குக் கல்வியறிவு ஊட்டினாயா?

மக்களுக்கு எதுவும் செய்யாமல் கோவில்களுக்குத் தானதருமம் செய்து அங்கே உன் பெயரால் கல்வெட்டுகளை நாட்டிக் கொண்டாய். அதைவிட மக்கள் என்ன பயன்பட்டனர்?

இராஜராஜன்: ஏன்? எனக்குத்தானே ஆண்டுதோறும் சதயத் திருவிழா நடத்துகிறார்கள். நாடே கண்டு அதிசயிக்கிறதே, அதை நீ பார்த்ததில்லையா?

கரிகாலன்: அட பைத்தியக்காரா, திருவிழா, தேர், உற்சவம், ஊர்வலம் என உன்னையும் ஊரையும் ஏமாற்றிக் கொட்டமடிக்கும் பார்ப்பனர்களால், இப்படி நடத்தப்படும் திருவிழாக்களிலும் அவர்களுக்குத்தானே இலாபம். உன் பெயரில் கோவில் மண்டகப்படி, திருவீதிஉலா என நடத்துவதால் எத்தனை பொதுமக்கள் பயனடைந்துள்ளனர் என்று நீ எண்ணிப் பார்த்ததுண்டா?

இராஜராஜன்: ஆமாம், ஆமாம், இப்போதுதான் புரிகிறது பார்ப்பனர் சூழ்ச்சி.

கரிகாலன்: அதுமட்டுமல்ல, சோழ இளவரசர்களில் தமிழ் எழுதப் படிக்கத் தெரியாத ஒருவன் இருந்தானே அறிவாயா? நான் கல்லணையைக் கட்டினேன், நீ கற்கோவில்களைக் கட்டினாய், உன் மகன் இராசேந்திரன் கங்கைகொண்ட சோழபுரத்தில் அற்புதமான கற்கோவில்களை அழகுற அமைத்தான், கலையுணர்வும், எழில்வடிவும் பொங்கிடும் அந்தக் கலைக் கோவில்களால் உன் குடிமக்கள் அடைந்த பலன் தான் என்ன? எல்லாமே காட்சிப் பொருளாகத்தானே நிற்கின்றன. இராஜராஜா, உன் கலைத்திறன்கள் கோவில்களாய் நிற்கின்றன. மாமல்லபுரத்தில் பல்லவ மன்னர்கள் உருவாக்கிய குடைவரைக் கோவில்கள் காண்போருக்குக் கதை சொல்கின்றன; ஆனாலும் என்ன பயன்?

இராஜராஜன்: தாங்கள் அரிதாக அமைத்த கல்லணை காவிரி நீரைத் தேக்கி தஞ்சைத் தரணியை நெற்களஞ்சியமாக்கியது. மக்கள் நிம்மதியாக உண்டு மகிழ்கின்றனர். கல்லணையால் வையம் செழிக்கின்றது.

நாங்கள் கட்டிய கற்கோவில்கள் கலை வளர்த்து காவியம் படைக்கும் என்பதை மட்டும்தான் கருதினோம். அதனால் மக்களுக்கு என்ன பயன்? என்று எண்ணிப் பார்க்கத் தவறிவிட்டதை இப்போது தான் உணர்கிறோம். நன்றி கரிகாலரே!

தமிழ் ஓவியா said...

கருணைக் கொலை வரவேற்கத்தக்கதே!கடும் துன்பத்திலிருந்து விடுதலை பெற வைப்பது - மனிதநேயமே!


கருணைக் கொலை பற்றி மத்திய மாநில அரசுகள், பொதுமக்கள் கருத்துகளை அறிவது முக்கியம் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. இதற்கேற்ப இதுபற்றிய விவாதங்கள் தொலைக்காட்சிகளிலும் ஜனநாயகத்தின் 4ஆவது தூண் என்று அழைக்கப்படும் ஊடக உலகத்திலும் விவாதங்கள் நடைபெறத் தொடங்கியுள்ளன.
பலருக்குத் தாங்க முடியாத, இனி முழு நலம் பெறமுடியாத அளவுக்கு, நோய் முற்றி, தாங்கொணாத வலி, வேதனை, துன்பத்தைத் தொடர்ந்து தந்து கொண்டிருப்பதால், அதிலிருந்து விடுபட்டு, நிம்மதியான சாவைப் பெற்று, ஆறுதலோடு உலகிலிருந்து விடைபெற வேண்டும் என்று பல நோயாளிகள் கருதுகின்றனர்; விரும்புகின்றனர்.

மற்றொரு வகை உண்டு. திடீர்க் கோர விபத்துகள் மூலமாகவோ, அல்லது வேறு எப்படியோ, மூளைச் சாவு (Brain Death) ஏற்பட்ட காரணத்தால், இனி அவரது வாழ்வு திரும்பவே வாய்ப்பில்லை; அந்த நிலையில் தங்கள் பிள்ளைகளோ, உறவுகளோ வாழ முடியாத நிலைதான் யதார்த்தம் என்று ஆகிவிட்டபோது, அவர்களை வைத்துக் கொண்டு கண்ணீருடன் கூடிய வாழ்க்கையை நீட்டிக் கொண்டே போவதில் அர்த்தமில்லை. எனவே சட்டம் அனுமதித்தால் கருணைக் கொலையே செய்துவிடலாம்; அவர்தம் மற்ற உடல் உறுப்புகள் பிறருக்குப் பயன்பட்டு, அவர்களாவது நல்வாழ்வு, புதுவாழ்வு பெறுகிறார்கள் என்றால் அதைவிட மாந்தநேயம், வளர்ந்த செயல் வேறு எதுவும் இல்லை என்று கருதி, மகிழ்ச்சியோடு இத்தொண்டறம் தொடர்வது மிக நல்ல திருப்பணி அல்லவா?

மருத்துவமனைகளில் ஒவ்வொரு அறுவை சிகிச்சையின்போதும், உயிர் பறிக்கப்படுவதற்கு டாக்டர் பொறுப்பல்ல என்பதற்கு நோயாளியும், அவருடைய உற்ற உறவினரும் இசைவுக் கையொப்பம் இடுகின்ற முறை உள்ளதே!

பல ஆண்டுகளுக்குமுன்பு அமெரிக்காவில் கார் உற்பத்திக்குப் புகழ் பெற்ற நகரமான டெட்டிராய்ட் (Detroit) நகரில் வாழ்ந்த ஒரு டாக்டர் இந்தக் கருணைக் கொலையைச் செய்து, கொள்கை அளவில் பிரபலமாக்கிட தானே தண்டனையையும்கூட ஏற்கும் நிலை அடைந்தார்.

இந்தக் கருணைக் கொலைக்கு எதிராக வாதம் செய்வோர்; ஆண்டவன் கொடுத்த உயிரை மனிதன் எடுப்பதா? என்ற பழைய நம்பிக்கையை முன்வைத்தே கூறுகின்றனர்.

அப்படியானால், தற்கொலை செய்து கொள்ளுகின்றனரே பலர், அதைத் தடுக்க முடிகிறதா? திடீர் விபத்துகளில் மனித உயிர்கள் பலியாகின்றனவே, அதைத் தடுக்க முடிகின்றதா? ணிஸீநீஷீஸீமீக்ஷீகள் என்ற திடீர் தாக்குதல்களைத் தடுக்க முடிந்ததா?

ஆகவே அந்த வாதங்களை ஒருபுறம் ஒதுக்கி வைத்துவிட்டு, கருணை அடிப்படையில் (Compassionate Killing) என்பதை எவ்வளவு விரைவில் சட்டமாக்க முடியுமோ அவ்வளவு விரைவில் தாராளமாகச் செய்ய முன்வர வேண்டும்.

நம்மைப் போன்ற ஆத்மா மறுப்பாளர்களை விட்டுவிட்டு, ஆத்மா நம்பிக்கையாளர்களைப் பார்த்து ஒரு கேள்வி கேட்க நாம் விரும்புகிறோம்.

உடம்புதான் அழியும், ஆத்மா என்றும் அழிவதில்லை என்று கூறுகிறார்களே, அந்த வாதத்தை நீங்கள் உள்ளபடியே நம்பினால், கருணைக் கொலையை ஏன் ஏற்க மறுக்கிறீர்கள்? உங்கள் நம்பிக்கை, வாதப்படி ஆத்மாதான் அழிவதில்லையே; கருணைக் கொலையில் உடல்தானே அழிகிறது; பின் ஏன் கருணைக் கொலையை (மத நம்பிக்கை காரணமாக) ஏற்க மறுக்க வேண்டும் என்பதே பகுத்தறிவுவாதிகளின் கேள்வியாகும்.

மனிதநேயம் (Humanism) நமது இந்திய அரசமைப்புச் சட்டம் 51A பிரிவு (h) வற்புறுத்தும் அடிப்படைக் கடமையின் முக்கிய அம்சம் அல்லவா? கடும் துன்பத்திலிருந்து உடல் அளவிலும் மன அளவிலும் விடுதலை கிடைப்பதுகூட மனிதநேயம்தானே!

பின் ஏன் தயக்கம்? பின் ஏன் மயக்கம்? உடனே சட்டம் இயற்ற முன்வாருங்கள்!

கி.வீரமணி,
ஆசிரியர்

தமிழ் ஓவியா said...

கல்வியென்பது பதிவா? தெளிவா?


- மஞ்சை வசந்தன்

கற்றல் என்பது இலக்கின்றி, பொருளின்றி, வரையறையின்றி, விவாதமின்றி, பயனின்றி மனனம் செய்து மதிப்பெண் பெறுதல்; ஏட்டில் உள்ளதை மூளையில் பதித்து, தேர்வுக் கூடத்தில் தாளில் பதித்தல்; தேர்வு முடிந்ததும் அனைத்தையும் மறத்தல் என்ற அளவில் இன்று _ குறிப்பாக இந்தியாவில் நடைபெறுகிறது.கல்வியென்பது வல்லுனர்கள், அரசு, பெற்றோர், ஆசிரியர், மாணவர்கள் ஆகியோரோடு பின்னிப் பிணைந்தது.

கல்வி எப்படியிருக்க வேண்டும் என்பதை கல்வியாளர்களும் அரசும் தீர்மானிக்க வேண்டும். அதைப் பொறுப்போடு மாணவர்க்குச் சேர்க்க வேண்டியவர்கள் ஆசிரியர்கள்; அதைச் சரியாகப் பெற வேண்டியவர்கள் மாணவர்கள்; பெறச்செய்ய வேண்டியவர்கள் பெற்றோர்.

எனவே, கற்கும் கல்வி பயனுடையதாக இருக்க, ஆற்றல், அறிவு, வல்லன வளர்ப்பதாய் இருக்க பொறுப்பேற்க வேண்டியவர்கள் அரசும், கல்வியாளர்களுமே!
அரசு என்பது மக்கள் தேர்வு செய்கின்ற ஆட்சியாளர்களும், அரசு அலுவலர்களும் ஆவர். அரசு அலுவலர்கள், ஆட்சியாளர்கள் இடும் கட்டளையை அப்படியே நிறைவேற்ற வேண்டியவர்கள். எனவே, அவர்கள் கல்வியைத் தீர்மானிக்கக் கூடியவர்கள் அல்ல. கல்வியைத் தீர்மானிக்க வேண்டிய ஆட்சியாளர்களோ, அதில் தெளிவும், நுட்பமும், வல்லமையும், அதற்குரிய அறிவும் அற்றவர்கள் - விலக்காக ஓரிருவர் இருக்கலாம்.

தமிழ் ஓவியா said...


எனவே, கல்வியை வகுத்தளிக்க வேண்டிய பெரும் பொறுப்பும் கல்வியாளர்களுக்கே உண்டு. ஆனால், அந்தக் கல்வியாளர்கள் வகுத்தளிக்கும் வல்லமையுடையவர்களேயன்றி, நிறைவேற்றும் அதிகாரம் உடையவர்கள் அல்ல.
ஆக, ஆட்சியாளர்கள் பொறுப்போடு, தொலைநோக்கோடு, கல்வியாளர்களை முறையாக, வெளிப்படையாக, தயக்கமின்றி கருத்துரைக்க வழிசெய்து கல்வியின் உள்ளடக்கத்தைத் தீர்மானித்து _ என்ன கற்பது, எப்படிக் கற்பது, எப்படிக் கற்பிப்பது என்பனவற்றை வரையறுத்து மாணவர்களைக் கற்கச் செய்வது மட்டுமே உண்மையான கல்வியாய் அமைந்து பயன் தரும்.

தமிழ் ஓவியா said...

மாறாக, ஆட்சியாளர் தான்தோன்றித் தனமான விருப்பு வெறுப்புகளையெல்லாம் கல்வித் திட்டமாக்கினால், அது பயனற்றுப் போவதோடு சமூக எதிர்ச் செயலாயும் ஆகும்.

முதலில் அரசும் கல்வியாளர்களும் கல்வியென்பது பதிவா? தெளிவா? என்பதை முடிவுசெய்து கொள்ள வேண்டும்.

யார் ஒருவன் நினைவாற்றலோடு பதிவு செய்து தேர்வில் எழுதுகிறானோ அவனே உயர் மாணவன், சிறந்த கல்வி கற்றவன் என்பது எவ்வகையில் சரியாகும்? அது நினைவாற்றல் திறனை மட்டுமே வெளிப்படுத்தும்.

நவீன கருவிகள் இல்லாத காலத்தில் நினைவாற்றல் முதன்மையிடத்தில் இருந்தது. இன்றைக்கு அது கட்டாயம் இல்லை. நினைவாற்றல் இன்றியே சாதிக்க முடியும்!

திருக்குறளைத் தலைகீழாகச் சொல்லும் நினைவாற்றல் உள்ள ஒருவர், திருக்குறளில் புலமை உள்ளவர் என்றாவாரா? திருக்குறளை மனப்பாடமாகச் சொல்லத் தெரியாதவர்கள் எல்லாம் திருக்குறளில் புலமை இல்லாதவர்கள் என்று ஆகுவரா?

இந்த நுட்பமான வேறுபாட்டைப் புரிந்துகொண்டால் கல்வித் திட்டம், பாடத் திட்டம், பயிலும் முறை எப்படியிருக்க வேண்டும் என்பது பளிச்செனப் புலப்படும்.
எனவே, புரிதலும் தெளிதலும்இன்றி கற்கும் கல்வி கல்வியே அல்ல. அது வெறும் மனனப் பயிற்சி மட்டுமே!

படித்தது அனைத்தும் பதிந்ததா? என்பதைவிட, படித்தது அனைத்தும் புரிந்ததா? என்பதே எடுத்துக் கொள்ளப்பட வேண்டியது! புரிதலும் தெளிதலும் இல்லாமல் எவ்வளவு செய்திகளை மூளையில் பதிவு செய்தாலும் என்ன பயன்? ஒலிப்பதிவு செய்யப்பட்ட நாடாவிற்கும் அவர்களுக்கும் என்ன வேறுபாடு?

படிப்பது அனைத்தும் புரிய வேண்டும், தெளிவாக வேண்டும் என்றால் கற்பிப்போர், கற்கும் மொழி இரண்டும் முதன்மைப் பங்கு வகிக்கும் நிலையில், இவற்றில் ஒரு தெளிவான கொள்கை முடிவு கல்வியாளர்களுக்கும் அரசுக்கும் வேண்டும்.

அதிலும் குறிப்பாக அடிப்படையான தொடக்கக் கல்வி எம்மொழியில் பயிலப்பட வேண்டும் என்பது மிக முதன்மையாகக் கருத்தில் கொள்ளப்பட வேண்டும்.

தாய்மொழி வழிக் கல்விதான் அதற்குச் சரியான தீர்வு என்பது மறுக்க முடியாத உண்மை. எனவே, 5ஆம் வகுப்பு வரையில் தாய்வழிக் கல்வி என்பது மட்டுமல்ல, முடிந்தால் கல்லூரிக் கல்விவரை தாய்மொழிக் கல்வியே சிறந்தது என்பதும் அசைக்க முடியாத, மறுக்க முடியாத உண்மை!

ஆனால், மக்களாட்சி நாட்டில், விரும்பிய மொழியில் கற்க உரிமையில்லையா? என்ற விவாதம் கட்டாயம் எழுகிறது.

விரும்பியதை உண்பது என்பதைவிட உகந்ததை, நலம் தருவதை உண்பது என்பதுதான் சரியாக இருக்க முடியும்! அது கல்வி கற்கும் பயிற்றுமொழிக்கும் பொருந்தும். எதன்வழி கற்பது சிறந்தது என்பதே கருத்தில் கொள்ளப்பட வேண்டியது.

தமிழ் ஓவியா said...

அதேவேளையில் தொடர்பு மொழியான ஆங்கில அறிவு மாணவர்களுக்குக் கட்டாயம் என்பது உண்மை! ஆங்கிலத்தில் படிக்க, பேச, எழுத உரிய வல்லமை உருவாக்கப்பட வேண்டும் என்பதும் கட்டாயம். அதற்குரிய பயிற்சி அடித்தட்டு மாணவர்களுக்கும் வழங்கப்பட வேண்டும்; அதுவும் இலவசமாக வழங்கப்பட வேண்டும்

!

இங்கு ஓர் உண்மையை அனைவரும் ஆழமாய் பதிய வைத்துக் கொள்ள வேண்டும். ஆங்கிலத்தில் சரளமாகப் பேசுதல் என்பது பழக்கத்தில் வருவதேயன்றி, படித்து வருவதன்று.

ஆங்கிலத்தில் மட்டுமே கட்டாயம் பேச வேண்டும் என்ற கட்டாயச் சூழலில் ஆங்கிலத்தை ஒருவர் சரளமாகப் பேச முடியும். மேல்நிலைக் கல்வி வரை தமிழில் படித்து, பின் பொறியியல் படிப்பை ஆங்கில வழியில் படித்து முடித்து, ஆங்கிலத்தில் பேச வராத கிராமப்புறத்து மாணவர்கள் எல்லாம், நிறுவனங்களில் பணியில் சேர்ந்த பின் சரளமாக ஆங்கிலத்தில் பேசும் ஆற்றல் பெற்றதெல்லாம் நடைமுறை உண்மை.

ஆங்கில வழியில் கற்றுத்தான் ஆகவேண்டும் என்று பிடிவாதமாய் கற்கும் மாணவர்கள், கற்பது எதுவாயினும் அதைத் தெளிவாய் தன் தாய்மொழியில் புரிந்து கற்க வேண்டும். காரணம், கற்றல் என்பது பதிவு அல்ல. தெளிவு!

தெளிவற்ற, விளங்காத கல்வி பயனற்றுப் பாழாகும்!

தமிழ் ஓவியா said...
நாத்திக அறிவியலாளர்

சர் ரோஜர் பென்ரோஸ்

- நீட்சே

ஆங்கிலேயரான சர் ரோஜர் பென்ரோஸ் ஒரு கணித இயல்பியலாளரும், கணித இயலாளரும், அறிவியல் தத்துவ இயலாளரும் ஆவார். ஆகக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் கணித நிறுவனத்தில் கணித எமிரடஸ் ரவுஸ் பால் பேராசிரியராகவும், வாட்ஹாம் கல்லூரியின் எமிரிடஸ் ஃபெலோவாகவும் இருந்தவர் இவர்.

கணித இயற்பியலில் ஆற்றிய அரும் பணிக்காக நன்கு அறியப்பட்டவரான பென்ரோஸ் விண்வெளியியல் மற்றும் பொதுவான தொடர்புத் தத்துவத்திற்கு அளித்த பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாகும். பிரபஞ்சத்தைப் பற்றி நாம் அறிந்திருப்பது என்ன என்பதை ஆய்ந்து அறிந்து வெளிப்படுத்தியமைக்காக 1988 ஆம் ஆண்டு இயற்பியலுக்காக ஸ்டீஃபன் ஹாகிங் அவர்களுடன் பகிர்ந்து கொண்ட வுல்ஃப் பரிசைப் போன்று எண்ணற்ற பரிசுகளும் விருதுகளும் இவர் பெற்றுள்ளார்.

இங்கிலாந்து நாட்டின் எஸ்ஸக்ஸ் பகுதியில் கோல்செஸ்டர் என்ற ஊரில் 1931 ஆகஸ்ட் மாதம் 8 ஆம் தேதியன்று, லையனல் பென்ரோஸ் _ மார்கரட் லீத்ஸ் என்னும் இணையருக்கு ரோஜர் பென்ரோஸ் பிறந்தார். லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரி பள்ளியிலும், பின்னர் அதே கல்லூரியிலும் கல்வி பயின்ற ரோஜர் பென்ரோஸ் கணிதப் பாடத்தில் முதல் வகுப்பில் பட்டம் பெற்றார். மாணவராக இருந்தபோதே இவர் ஈ.எச். மூர்ஸ் அவர்களால் பொதுவாக விளக்கப்பட்ட மேட்ரிக் இன்வெர்ஸ் என்ற கணிதக் கோட்பாட்டை விளக்கமாக வெளியிட்டு அறிமுகப்படுத்தினார். ஆர்னி ஜெர்ஹேமர் என்பவரால் 1951 இல் மேலும் விளக்கம் அளிக்கப்பட்ட இக்கோட்பாடு பின்னாட்களில் மூர்-ரோஜர் இன்வெர்ஸ் கோட்பாடு என்றே குறிப்பிடப்பட்டு வருகிறது. கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் செயின்ட் ஜான் கல்லூரியில், அல்ஜீப்ரா ஜியோமெட்ரியில் டென்சார் நடைமுறைகள் என்ற ஆய்வுக் கட்டுரையை, அல்ஜீப்ரா மற்றும் ஜியோமெட்ரி பேராசிரியர் ஜான் ஏ. டாட் அவர்களின் வழிகாட்டுதலில் எழுதி தனது ஆய்வு முனைவர் பட்டத்தை 1958இல் பென்ரோஸ் பெற்றார். விண்வெளியில் உள்ள கரும்புள்ளிகள் போன்ற தனித்துவம் பெற்றவை இறந்து கொண்டிருக்கும் மாபெரும் நட்சத்திரங்களின் ஈர்ப்பு விசை அழிவிலிருந்து தோற்றம் பெற இயலும் என்பதை இவர் மெய்ப்பித்துக் காட்டினார். பென்ரோஸின் இந்த ஆய்வுப் பணி பென்ரோஸ்-ஹாகின்ஸ் தனித்தன்மைக் கோட்பாடுகளை மெய்ப்பிக்க பெரிதும் பயன்படுத்தப்பட்டது. பொதுத் தொடர்புக் கோட்பாடு பற்றி மிக ஆழ்ந்து ஆராய்ந்து இவர் செய்த பணி கரும்புள்ளிகளைப் பற்றி நாம் நன்றாக அறிந்து கொள்வதற்கு ஒரு முக்கியமான காரணியாக விளங்கியது. கணித இயற்பியலில் தொன்மையான கணிதச் சமன்பாடுகள் பற்றிய அழகு நிறைந்த, ஆக்கபூர்வமான அணுகுமுறையுடன் கூடிய வழியில் ட்விஸ்டர் கோட்பாட்டை இவர் மேம்படுத்தினார்.

இயற்பியல் விதிகளுக்கு ஒருங்கிணைந்த முறையில் வழிகாட்டும் நோக்கத்துடன் உண்மை நிலைக்கான பாதை: பிரபஞ்ச விதிகளுக்கான ஒரு முழுமையான வழிகாட்டி என்ற 1099 பக்க நூலை பென்ரோஸ் எழுதி 2004 இல் வெளியிட்டார். மிகைச் சிற்றளவு இயந்திரவியல் பற்றி இவர் ஒரு புதுமையான விளக்கத்தை அளித்துள்ளார். பெனிசில்வேனியா மாநில பல்கலைக்கழகத்திற்கு வருகை தரும் மதிப்பு மிகுந்த இயற்பியல் மற்றும் கணிதவியல் பேராசிரியராக விளங்கிய இவர் வானியல் மறுஆய்வு பத்திரிகை ஆசிரியர் குழுவின் உறுப்பினராகவும் இருந்தார்.

1959 இல் ஜோன் இசபெல் வெட்ஜ் என்ற அமெரிக்கப் பெண்மணியை மணந்ததன் மூலம் இவருக்கு மூன்று மகன்களும், அடுத்து அபிங்டன் பள்ளி கணிதத் துறைத் தலைவராக இருந்த வானசா தாமஸ் என்பவரை மணந்து கொண்டதன் மூலம் ஒரு மகனும் இவருக்கு உள்ளனர். எந்த மதத்திலும் நம்பிக்கை அற்றிருந்த பென்ரோஸ் தன்னை ஒரு நாத்திகவாதி என்றே கூறிக்கொண்டார். காலத்தைப் பற்றிய சுருக்கமான ஒரு வரலாறு என்ற படத்தில், இந்தப் பிரபஞ்சம் உருவானதற்கு ஒரு நோக்கம் இருக்கவேண்டும் என்றே நான் கருதுகிறேன். ஏதோ தற்செயலாக இந்தப் பிரபஞ்சம் உருவாகி நிலைத்திருக்கிறது என்று கூறமுடியாது. இந்தப் பிரபஞ்சம் தற்செயலாகத் தோன்றி நிலைத்திருப்பதாகவே சிலர் கருதுகின்றனர். ஆனால் அவ்வாறு கூறுவது பிரபஞ்சத்தைக் காணும் ஒரு பயன்நிறைந்த அல்லது உதவிநிறைந்த வழியாக இருக்க முடியாது என்றே நான் கருதுகிறேன் என்று பென்ரோஸ் கூறியிருக்கிறார். இங்கிலாந்து மனித நேய சங்கத்தின் மதிப்பு மிகுந்த ஆதரவாளராக பென்ரோஸ் இருக்கிறார்.

- தமிழில்: த.க.பாலகிருட்டிணன்

தமிழ் ஓவியா said...

நாடார்களின் ஆலய நுழைவுப் போராட்டம்

சுமார் 75 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் நடைபெற்ற மிகப் பெரிய புரட்சி இது என்று தினத்தந்தி 8.7.2014 இதழில் திரு.வி.கே.ஸ்தாணுநாதன் அவர்கள் மதுரை வைத்தியநாத அய்யரைப் புகழ்ந்து தாழ்த்தப்பட்டவர்களை முதன்முறையாக கோவிலுக்கு அழைத்துச் சென்றார், என்று பதிவு செய்துள்ளார்.

அதற்குத் தக்க பதிலடியாக, ...உண்மை வரலாறு என்ன? என்று சுயமரியாதை இயக்கத்தின் கோவில் நுழைவுப் போராட்டங்களையும் அதை மழுங்கடிக்க ராஜாஜி _ வைத்தியநாதய்யர் கூட்டணி நடத்திய கபட நாடகத்தையும் எடுத்துக்காட்டி 12.7.2014 விடுதலை ஞாயிறு மலரில் மானமிகு கி.தளபதிராஜ் அவர்கள் கருத்துகளைத் தொகுத்துள்ளார்.

இச்செய்திகளை வெளியிடும் தினத்தந்தி போன்ற ஏடுகளுக்கு சுமார் 140 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற வரலாற்றை ஞாபகப்படுத்த வேண்டியது அவசியம்.

நாடார்களின் ஆலய நுழைவுப் போராட்ட நிகழ்ச்சிகள் வைத்தியநாத அய்யருக்குத் துணைபோகும் தமிழர்களைத் தோலுரித்துக் காட்டுவதாக அமையும்.

திருச்செந்தூர் கோவிலில் நாடார்கள் உள்ளே நுழைய முடியாது. வெளியில் இருந்துதான் தேங்காய் உடைத்து சாமி கும்பிட வேண்டும். 1872இல் இதை மீறி ஏழு நாடார்கள் உள்ளே நுழைந்தனர். கோவில் நிர்வாகம் இவர்கள் மீது வழக்குத் தொடுத்தது. டோபி, பார்பர் போன்ற இதர கீழ்ஜாதியினர் கொடிமரம் வரை செல்ல அனுமதியிருக்கும்போது நாடார்கள் உள்ளே நுழைந்ததால் கோவில் புனிதம் கெட்டுவிடாது எனக்கூறி விடுதலை செய்தது. இதனால் நாடார்கள் கொடிமரம் வரை செல்ல முடிந்தது.

1874இல் மூக்க நாடார் மதுரை--- கோவிலுக்குள் கிளி மண்டபம்வரை சென்றுவிட்டார். அடையாளம் கண்டுகொண்ட கோவில் பணியாளர்கள் அவரைக் கொன்றுவிட்டனர். நாடார்கள் பணியாட்கள் மீது வழக்குத் தொடுத்தனர். கோவிலுக்குள் நுழைய நாடார்களுக்கு உரிமையில்லை என நீதிபதி தீர்ப்பளித்து விட்டார்.

1876_78இல் சிறீவில்லிபுத்தூர் தாலுகா திருத்தங்கலில் கோவில் உள்ளே நுழைய நாடார்கள் போராட்டம் நடந்தது. மாவட்ட நீதிபதி தடை உத்தரவு பிறப்பித்து கோவிலைச் சுற்றியுள்ள தெருக்களில் ஊர்வலம் செல்ல அனுமதி அளித்தார்.

1885இல் கமுதி கோவிலுக்குள் நுழைய அனுமதி கேட்டனர். கோவில் நிர்வாகம் காணிக்கையை உயர்ஜாதியினர் மூலம் கொடுத்துவிடச் சொன்னது. நாடார்கள் மறுத்துவிட்டனர். கோவில் நிர்வாகம் அனைத்து ஜாதியினரையும் நாடார்களைப் பகிஷ்கரிக்க வைத்தது.

1890இல் திருச்சுழி கோவிலுக்குள்ளும், மதுரை கோவிலுக்குள்ளும் நாடார்கள் செல்ல முயன்றபோது அபராதம் விதிக்கப்பட்டது.

1897இல் இருளப்ப நாடார் தலைமையில் அய்ந்தாறு நாடார்கள் காவடி எடுத்துக்கொண்டு இரவில் கோவிலுக்குள் நுழைந்தனர். பூசாரி பூசை செய்ய மறுத்தார். அவர்களே தேங்காய் உடைத்து வழிபாடு நடத்தினர். கோவில் நிர்வாகம் வழக்குத் தொடுத்தது. கோவிலில் நுழைய நாடார்களுக்கு உரிமையில்லை. கோவிலைச் சுத்தம் செய்ய ரூ.500/_ நாடார்கள் தரவேண்டும் என கீழ்க்கோர்ட்டில் தீர்ப்பளிக்கப்பட்டது. உயர் நீதிமன்றத்திலும், இங்கிலாந்து பிரிவி கவுன்சிலும் இதையே உறுதி செய்தது.

1895இல் சிவகாசி கோவில் தர்மகர்த்தா தன் பதவியை ராஜினாமா செய்தார். அந்தப் பதவியை நாடார்கள் கேட்டனர். சிருங்கேரி சங்கராச்சாரியின் ஆணைப்படி மறுக்கப்பட்டது.

1896இல் கோவிலுக்குள் நுழைய முயன்றனர். கோவில் கதவுகள் மூடப்பட்டன. பூட்டை உடைத்து உள்ளே போய் தரிசனம் செய்தனர். மோதல்கள் நடந்தன. 1899இல் கலவரம் வெடித்தது. பல உயிர்கள், சொத்துகள் நாசமாயின.
இப்படிப் பல்வேறு சூழல்களால் 1910இல் நாடார் மகாஜன சங்கம் உருவாக்கப்பட்டது.

இப்படி நாடார் என்று ஆலய நுழைவு மறுக்கப்பட்ட காரணம், சனாதன கொள்கைப் படி பிராமணர்களில் பட்டர்கள் கர்ப்பக் கிரகத்துக்குள் போகலாம், இதர பிராமணர்கள் அர்த்த மண்டபம் வரை போகலாம். சூத்திரர்கள் மகா மண்டபம் வரையிலும், தீண்டத்தகாதாரும், நாடார்களும் வெளியில் நின்று கோபுரத்தை மட்டுமே ரசிக்க வேண்டும் என்ற இந்துமதத்தின் அடிப்படையே

தந்தை பெரியாரும் திராவிட இயக்கமும் இந்து மதத்தையும், சனாதனக் கொள்கையையும் அழிக்க வேண்டும் என்று போராடியதன் நியாயத்தை உணருவார்களா?

- சிவ.பாலசுப்ரமணியன்,
கண்ணந்தங்குடி மேலையூர்.-

தமிழ் ஓவியா said...புதுமை இலக்கிய பூங்கா

பக்தி

- டி.கே.சீனிவாசன்

புகழ்பெற்ற திராவிட இயக்க எழுத்தாளர்களுள் ஒருவரான டி.கே.சீனிவாசன் தாய்நாடு இதழின் ஆசிரியர். தத்துவ மேதை என்று அழைக்கப்பட்டவர். இவர் எழுதிய ஆடும் மாடும் என்ற நாவல் பெரும் வரவேற்பைப் பெற்றதாகும்.

மாநிலங்களவை உறுப்பினராகவும், தமிழ்நாடு பாடநூல் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநராகவும், தமிழ்நாடு திட்டக் குழுவின் துணைத் தலைவராகவும் பொறுப்புகளை வகித்தவர்.அடுக்கடுக்காக, ஒன்றுக்கொன்று ஆதரவாகப் பின்னிப் பிணைந்திருந்த அந்த மலரின் இதழ்களைப் பார்க்கும்போது, என் இதயம் மகிழ்ச்சியால் பொங்கிப் பூரித்தது. உதிக்கும் கதிரவன் ஒளி பட்டதும் அவை அத்தனையுமே விதிவிலக்கில்லாமல் மலர்ந்து சிரிக்கும். வட்டமிடும் வண்டு மலரை முத்தமிடும்போது ஒவ்வொரு இதழும் சிரிக்கும். ஒன்றுபட்டு வாழ்ந்த அந்தக் குடும்பத்தைத் துண்டுபடுத்திய அந்தச் சிறு நிகழ்ச்சி...!

எவனோ ஒரு வேலையற்ற விவேகமில்லாத வீணன் அந்த மலரைச் செடியிலிருந்து பறித்து அதன் இதழ்களைப் பிய்த்துப் போட்டுவிட்டான். சேர்ந்து வாழ்ந்தபோது அவைகளுக்கு ஜீவசக்தி ஊட்டிய அதே கதிரவன் ஒளியே அவை சிதறி விழுந்தவுடன் சுருக்கித் தீய்த்துவிட்டது.

என் மனம் இந்த அலங்கோலத்தைக் கண்டு அழுது கண்ணீர் வடித்தது. ஆனால்...? மலரின் இதழ்களுக்கு நாங்கள் ஒன்றும் உயர்ந்து போகவில்லை என்று மனித இதயங்கள் சொல்லிக் காட்டும்போதுதான் வெட்கத்தாலும் வேதனையாலும் துடிதுடித்துப் போனேன். பொன்னம்பலக் கவிராயருக்கும் தங்கப்பனுக்கும் இடையே இருந்த அந்த ஆழமான நட்பு கயிறு கட்டிப் பிணைத்த கதம்ப மாலையாக இல்லை, ஒன்றோடொன்று உருக்கி வார்த்த உலோகக் கலப்பாக இருந்தது. அந்தக் கலப்பைக் காய்ச்சித் தனித்தனியே பிரித்த நிகழ்ச்சி மிகவும் சாதாரணமானதுதான்.

ஒரு நாள் பேச்சுவாக்கில் தற்செயலாக கவிராயர் திக்கற்றவர் களுக்குத் தெய்வந்தானே துணை என்று சொன்னார். தங்கப்பன் கொஞ்சம் சு.ம. வாடை படிந்தவன்! அவனும் விளையாட்டாகவே, தெய்வமே திக்கற்றுக் கிடக்கிறதே, அது எங்கே துணை செய்யப் போகிறது? என்று சொல்லிவிட்டான்.

இந்த உரையாடலைவிட அது நிகழ்ந்த நேரந்தான் நெருப்பாக இருந்து அவர்கள் நட்பைப் பிரித்தது. அந்த ஊர்ப் பரந்தாமன் கோவில் பாழடைந்து கிடந்தது. சட்டபூர்வமான சோதாக்களுக்குப் பதிலாக கள்ள மார்க்கட் சோதாக்கள் அதைப் பஞ்சமா பாதகங்களுக்கும் பயன்படுத்திக் கொண்டிருந்தனர். தங்கப்பனுடைய சொற்கள் இந்தச் சோகச் சித்திரத்தைச் சுட்டிக் காட்டுவதுபோல கவிராயருக்குத் தெரிந்தது. ஆபத்பாந்தவன் அவருடைய இதயத்தின் ஆழத்தில் அவதாரமெடுத்து அபயம் அபயம் என்று கதறினார்.

அன்றிலிருந்து கவிராயரும், தங்கப்பனும் கிழக்கும் மேற்கும் ஆனார்கள். இருவர் உள்ளங்களும் ஈட்டி முனைகளாக உருப்பெற்றன!

ஏமாளித்தனத்தின் சின்னம் என்று பரிதாபப்பட்டான் தங்கப்பன். தடி கொண்டு தாக்கப்பட வேண்டிய படமெடுத்தாடும் நச்சுப் பாம்பு என்று ஆத்திரப்பட்டார் கவிராயர்.

வேத, சாஸ்திர, புராணங்கள் கவிராயர் கைஆயுதங்களாக ஆயின; விடுதலை, திராவிட நாடு, போர்வாள் கொஞ்சம் சொந்தப் புத்தி, இவைதாம் தந்கப்பனுக்குக் கிடைத்த ஆயுதங்களும், அஸ்திரங்களும்!

ஊர் இரண்டுபட்டது. சொற்போரில் தொடங்கி மற்போரில் வந்து முடிந்தது இந்தப் போராட்டம்! மலர்க்குலம் மனித குலத்தைப் பார்த்துக் கைகொட்டிச் சிரித்தது.

தமிழ் ஓவியா said...

இத்தனைக்குமிடையில் அனாதையாகக் கிடந்த அந்த ரட்சகன் மீது அந்த ஊரில் புதிதாக நிலம் வாங்கிய செட்டியாருக்கு அக்கறை பிறந்தது. வண்டி வண்டியாக வந்திறங்கிய கருங்கல்லும் செங்கல்லும் வானளாவும் மதிலாகவும் கோபுரமாகவும் உயர்ந்தன. எவனோ எங்கிருந்தோ வீசியெறிந்த வாழைப்பழத் துண்டு எப்படியோ நம் வாய்க்குள் வந்து விழுந்தால் ஏற்படும் திகைப்பும் மகிழ்ச்சியும் கவிராயர் உள்ளத்தைக் கட்டி அணைத்தன. நினைந்து நினைந்து நெக்குருகினார். மகிழ்ச்சியில் மல்கிய கண்ணீர் கசிந்து கசிந்து தரையில் விழுந்து சாய்ந்தது! பக்தர்களை ரட்சித்து துஷ்டர்களைத் துவம்சம் செய்யும் அந்தப் பரந்தாமனே செட்டியார் உருவில் அவதாரம் எடுத்துத் தங்கப்பனை மட்டம் தட்டிவிட்டதாக எண்ணி மகிழ்ந்தார். அன்று ஆண்டவன் கோவிலில் உட்பிரகாரத்தைச் சுற்றிப் பார்த்து வந்தார் கவிராயர். நிமிர்ந்து நின்ற கோபுரத்தின் நிழலில் நிம்மதியாகப் பள்ளி கொண்டிருந்த பரந்தாமனைப் பார்க்கப் பார்க்க அவருக்குப் பரவசமாக இருந்தது. தங்கக் கவசம்_அதில் பட்டுத் தெறிக்கும் பகலவனின் ஒளிக்கதிர்கள்! நீர்வீழ்ச்யிலிருந்து தெறித்து விழும் நீர்த்தி வலைகள் உடல்மேல் படும்மீது உண்டாகும் கோமளமான உணர்ச்சி கவிராயர் உள்ளத்தைத் தழுவியது. அதே நேரத்தில் கோவிலின் வாயிற்படியில் நின்ற தங்கப்பனுடைய பார்வை கல்லை உடைத்து உருவாக்கி அதற்கு உயிர் கொடுக்கும் தொழிலாளர்கள்மேல் பதிந்திருந்தது. காய்ந்து வறண்டு போன அவர்களுடைய உடல்கள்_ அவைகளை மேலும் மேலும் காய்ச்சிப் பதப்படுத்தும் கதிரவனின் வெம்மை! இத்தனை உழைப்பும் எவனோ ஒரு தனி மனிதன் புகழுக்கும் பெருமைக்கும்தானே என்பதை நினைத்தபோது அவன் நெஞ்சு பிளந்தது.

அவர்கள் இருவரும் கோவிலிலிருந்து ஒன்றாகவேதான் திரும்பி வந்தார்கள். இரட்டை மாட்டு வண்டியில் பூட்டப்பட்ட காளைகள் வண்டிக்காரன் சாட்டையால் விரட்டப்பட்டு வெருண்டோடுவதுபோல, வேகம் வேகமாக மௌனமாக ஒருவரோடொருவர் பேசிக் கொள்ளாமல் நடந்து கொண்டிருந்தனர்.

அய்யா! ஏழை! காலணாக் கொடுங்கோ! கடவுள் உங்களைக் காப்பாற்றுவார்!

தீனமான அந்தக் குரல் இருவரையுமே திரும்பிப் பார்க்கச் செய்தது. ஒரு பேசும் எலும்புக் கூடு, பிணமாகாமல் என்னைக் காப்பாற்றுங்கள் என்று சொல்லாமற் சொல்லி நின்றது.

கடவுள் உனக்கு நல்லகதி காட்டுவாரப்பா என்று உருக்கமாகச் சொல்லிக் கொண்டே நடந்தார் கவிராயர்.

தங்கப்பன் ஒரு காலணாவை எடுத்து அந்தப் பிச்சைக்காரனிடம் கொடுத்தான். கவிராயரைக் குறும்பாக ஒரு முறை பார்த்தான்.

நல்ல வேளை! கடவுள் இதற்காவது உபயோகப்படுகிறாரே! அதுவரையில் லாபம்தான்! என்று சொல்லிக் கொண்டே நடந்தான்.

இந்தச் சின்னஞ்சிறு நிகழ்ச்சி அன்றிரவு தங்கப்பன் வீட்டெதிரே ஒரு பெருங்கூட்டத்தையே கூட வைத்துவிட்டது.

கவிராயர் பக்தியால் தூண்டப்பட்டு ஆவேசத்தோடு கூச்சலிட்டார். அவர் கட்சி ஆட்கள் வெறிபிடித்துக் கூத்தாடினார்கள். செட்டியார் கொடுத்த காசும் அவர்களோடு சேர்ந்து கொண்டு அட்டகாசம் செய்தது. இவற்றால் ஏற்பட்ட பலன் தங்கப்பன் உடம்பிலிருந்து ஒருசில எலும்புகள் ஒடிந்து விழுந்ததுதான்! குற்றுயிரும் குலை உயிருமாக அவனை ஆக்கிவிட்டு அந்தக் கூட்டம் அங்கிருந்து நகர்ந்தது.

தமிழ் ஓவியா said...

இந்த நிகழ்சி செய்தியாகி எல்லாத் தமிழ் ஆங்கிலச் செய்தித்தாள்களிலும் நாத்திகம் பேசி நாத்தழும் பேறியவனுக்கு அந்த ஊர் மக்கள் நற்பாடம் கற்பித்தனர் என்ற தலைப்போடு வெளியாகி பிரான்சு, ஜெர்மனி, அமெரிக்காவரை பரவியது. அடுத்த நாள் மாலை கவிராயரைத் தேடிச் செட்டியாரே வந்துவிட்டார்.

நம்ம கோவிலுக்கு அதன் மகிமையை விளக்கி நீங்கதான் ஒரு ஸ்தல புராணம் எழுதித் தரணும் என்ற வேண்டுகோளை வினயமாகத் தெரிவித்தார்.

உடலை விட்டுப் பிரிந்த உயிர் எப்படி அந்தரத்தில் ஊசலாடும் என்பது இதுவரைக்கும் எவருக்குமே தெரியாது. ஆனால், அப்போது கவிராயர் அதை உண்மையாகவே அனுபவித்துக் கொண்டிருந்தார்.

அன்றிலிருந்து கவிராயர் இரவும் பகலும் அகராதியும் நிகண்டுமாகக் காலங் கழிக்கத் தொடங்கினார்.

தமிழ் ஓவியா said...

ஒவ்வொரு செய்யுளாக இயற்ற இயற்றப் பக்கத்து வீட்டுக்காரர்களை அழைத்து அவ்வப்போதே அரங்கேற்றம் செய்த கவிராயருக்கு அந்தப் புது ஸ்தல புராணம் அச்சாகி வந்ததும் எவ்வளவு இன்பம் ஏற்பட்டிருக்க வேண்டும்? அப்போது தான் ஈன்ற கன்றை ஆசையோடு நாவால் தடவிக் கொடுத்தார். ஒவ்வொரு செய்யுளிலும் கற்கண்டும் கனிச்சாறும் கலந்து ஓடுவதைப் போலத் தோன்றியது. அவருக்கே அவற்றை எழுதும்போது அவருக்கே புலப்படாத உட்பொருளும் மெய்ப்பொருளும் அவற்றில் பொதிந்து கிடப்பதை அப்போதுதான் உணர்ந்தார். கவனிப்பாரற்றுக் கிடந்த அகராதியும் நிகண்டும் ஒன்றையொன்று கட்டிக் கொண்டு கண்ணீர் வடித்தன!

தமிழ் ஓவியா said...

கவிராயர் தமிழுக்குச் செய்த அரும்பெரும் தொண்டைப் பாராட்டி தமிழ்நாட்டின் தலைசிறந்த பத்திரிகைகள் எல்லாம் விமரிசனம் செய்தன. அவைகளைப் படித்ததும் தாங்க முடியாத மகிழ்ச்சி அவரைத் தன் நிலையில் இருக்க வொட்டாமல் செய்தது. அத்தனை புத்தகங்களையும் அப்படியே எடுத்துப்போய் அந்தக் கருணை வள்ளலின் காலடியில் காணிக்கையாக வைக்க வேண்டும் என்ற எண்ணத்தால் தூண்டப்பட்டு, வேகவேகமாக ஓடினார் செட்டியார் வீட்டை நோக்கி!
உள்ளே செட்டியார் யாருடனோ பேசிக் கொண்டிருந்ததால் கவிராயர் வெளியில் நிற்க வேண்டி ஏற்பட்டது.

ஏது, இடிஞ்சு கிடந்த கோவிலைப் புதுப்பிச்சிருக்காப்போலே இருக்கே?

புதுக்குரல்!

கவிராயர் உள்ளத்தில் அந்தக் கேள்விக்குப் பதில் உருவானது. ஏதோ இந்த ஊர்க்காரவுங்களுக்குத்தான் அக்கறையில்லாமே இருக்குது. நாமாவது செய்யலாம் என்றுதான்

அப்படியே அதன் எதிரொலியைச் செட்டியார் வாயிலிருந்து எதிர்பார்த்தார் கவிராயர்.
இல்லை, புதுசா இந்தக் கிராமத்திலே ஒரு இருநூறு வேலி நிலம் வாங்கினேன். இந்தக் காட்டுப்பய ஊருக்கு வந்து போகப் பயமாயிருந்துச்சி. செலவோடு செலவா இதைக் கட்டித் தொலைச்சிட்டா நாலு பேரு வந்து போக இருப்பாங்க. நமக்கும் பயமில்லாமே இருக்கும் என்றுதான்....

டணார் என்று தொடங்கித் தொடர்ந்து ஒலித்தன ஆண்டவன் ஆலயத்திலிருந்து மணியொலிகள்.

கவிராயர் கையிலிருந்த புத்தகங்கள் நழுவிக் கீழே விழுந்தன.

திரும்பி வேகமாக நடந்தார். ஓடினார். பறந்தார்.

அடி தாங்காது உயிர் துறந்த தங்கப்பன் பிணத்தை எரிக்கச் சுடுகாட்டுக்கு எடுத்துப் போய்க் கொண்டிருந்தனர்.

தமிழ் ஓவியா said...


அதன் எதிரில்போய் விழுந்து தங்கப்பா என்று கதறினார் கவிராயர்.

அப்பன் ஆலயத்தில் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தார். தங்கம் அவர் தலையில் கிரீடமாக ஒளிவிட்டது. கோவில் மணிகள் மட்டும் நிதானந் தவறாமல் ஒலித்துக் கொண்டிருந்தன.

தமிழ் ஓவியா said...

பாலஸ்தீனப் படுகொலை


ஈழமும்,காசா முனையும் :

அரச பயங்கரவாதத்தின்
கோர முகங்கள்!

- அல்ஃபினா

போர் மூண்டுவிடும்போது உயிருக்கு அஞ்சி சர்வதேச எல்லை வழியாக அண்டை நாடுகளில் அடைக்கலம் தேடும் வழக்கம் உலகெங்கும் உள்ளது. அப்பாவி சிவிலியன்களுக்கு வேறு என்ன வழி இருக்க முடியும்? அதற்கும்கூட முடியாமல் அடைக்கப்பட்டிருக்கும் பெரும்பேறு வாய்க்கப்பட்ட மக்களினம் ஒன்று உண்டு.ஈழத் தமிழர்கள் போலவே ஈராயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக வரலாற்றுத் தொடர்ச்சி கொண்ட பாலஸ்தீனர்கள்தான் அந்த மக்களினம். தாய்மண்ணை இழந்து குற்றுயிரும் குலையுயிருமாகக் கதறும் பாலஸ்தீன காசா முனையின் கோரத்தை வீடியோ விளையாட்டுக் காட்சிகளைப் போல இஸ்ரேல் மட்டுமல்ல, உலக நாடுகள் மட்டுமல்ல, அய்.நா. மாமன்றமும் கடந்து சென்று கொண்டிருக்கிறது. வீடியோ விளையாட்டுகளில் இவ்வளவு வக்கிரக் காட்சிகளை இடம்பெறச் செய்து பார்ப்பவர்களைப் பதைபதைக்கச் செய்யலாமா என அப்பாவியாகக் கேட்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

உயிரைப் பொருட்படுத்தாமல் காசா முனைக்குச் சென்று போரில் காயம்பட்டவர்களுக்குச் சிகிச்சை அளித்து வரும் நார்வே மருத்துவர் டாக்டர் மேட்ஸ் கில்பர்ட், ஒபாமாவுக்கு எழுதியுள்ள திறந்த மடலில் கேட்கிறார், திரு.ஒபாமா, உங்களுக்கு இதயம் இருக்கிறதா?

தமிழ் ஓவியா said...

ஒரே இரவு மட்டும் எங்களுடன் அல்_-ஷிபா மருத்துவமனையில் தங்குங்கள், நிச்சயமாக அது வரலாற்றையே மாற்றியமைத்துவிடும் என உறுதியாக நம்புகிறேன். இதயமும், அதிகாரமும் வாய்க்கப் பெற்றவர்கள் ஒரே இரவு தங்கினால் போதும். பாலஸ்தீனர்கள் கொன்று குவிக்கப்படும் கோரத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு உறுதிபூணாமல், ஷிபா மருத்துவமனையிலிருந்து அகன்றுவிட முடியாது. ஆனால் இதயமும், கருணையும் அற்றவர்கள் காசா முனையைப் படுகொலை செய்ய கனகச்சிதமாக கணக்குத் தீட்டியிருக்கிறார்கள். ரத்தம் ஆறாகப் பெருக்கெடுத்து இரவையே நனைக்கிறது...

எங்கும் மரண ஓலம், குழந்தைகளின் சிதைந்த உடல்கள், கையற்றுக் கதறும் பெற்றோர்கள்.. இஸ்ரேல் எனும் ஆக்டோபசின் பிடியில் சிக்கியிருக்கும், காசா முனை எனப்படும் பாலஸ்தீனத் துண்டுநிலத்தின் நிலை இதுதான். போர் நடைபெறாத காலங்களிலோ அது திறந்தவெளிச் சிறைச்சாலை. இஸ்ரேல் எனும் நச்சுவிதையை பாலஸ்தீன பூமியில் விதைத்த இங்கிலாந்தின் பிரதமர் டேவிட் கேமரூனே மனம் பொறுக்காமல் சொன்ன சொற்கள் இவை:

இப்போது இஸ்ரேல் ராணுவம் வான்வழியாகவும், தரை வழியாகவும் கோரத் தாக்குதலைக் கட்டவிழ்த்துவிட்டுள்ள நிலையில், அய்.நா. அமைத்துள்ள முகாம்களில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் அடைக்கலம் புகுந்துள்ளனர். சாரை சாரையாக அஞ்சி ஓடிவரும் மக்களுக்கு இனி இடமில்லை எனுமளவிற்கு அது நிரம்பி வழிகிறது. உணவு, குடிநீர், மருத்துவ வசதிகளைப் பெற இனி உலக நாடுகள் மனது வைத்து நிதியளித்தால்தான் உண்டு என்று அய்.நா.வே கூறிவிட்டது.

சர்வதேச விதிகளைக் கழிவறைக் காகிதம் என நினைத்து, அய்.நா. முகாம் என்றும் பாராமல், முன்னர் ஒருமுறை இஸ்ரேல் குண்டுவீசித் தகர்த்திருப்பதால், எங்கிருந்தாலும் சாவு நிச்சயம் என உறுதியுடனிருக்கும் பாலஸ்தீனர்கள் போர்முனைகளில் அலைந்து திரிகிறார்கள்.

தமிழ் ஓவியா said...

கதறும் காசா முனை!

இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப் பட்டிருக்கும் பகுதி என அய்.நா. வர்ணிக்கும் காசா முனை (gaza Strip), 25 மைல் நீளமும், சில மைல் அகலமும் கொண்ட செவ்வக நிலப்பரப்பு. முள்ளிவாய்க்கால் போன்ற துண்டுநிலம். சுற்றிலும் காங்கிரீட் சுவர்களையும், முள்வேலிகளையும் எழுப்பி வைத்திருக்கிறது இஸ்ரேல். உள்ளே 20 லட்சம் பேர் நிரம்பி வழிகிறார்கள்.

எதற்காகவும் வெளியே செல்ல முடியாது. ஒருங்கிணைந்த பாலஸ்தீன அரசு மேற்குக்கரை நகரமான ரமல்லாவில் பதவியேற்றுக்கொண்டபோது, காசா முனையிலிருந்து தேர்வு செய்யப்பட்ட 4 அமைச்சர்கள் அங்கு சென்று பதவியேற்றுக் கொள்ள முடியவில்லை. காரணம், மேற்குக்கரை என்பது அனாதையாக இருக்கும் மற்றொரு துண்டுநிலம் என்பதோடு, இரண்டுக்கும் நடுவே இருப்பது இஸ்ரேலின் நிலப்பரப்பு. சமையல்கட்டுக்கும், படுக்கையறைக்கும் நடுவே இருப்பது வேறொருவரின் வீடு; சுற்றிக்கொண்டும் செல்லமுடியாமல் முள்வேலி தடுப்பு என்றால், பாலஸ்தீனர்களின் இந்தப் புவியியல் அவலம் புரியாமல், இஸ்ரேல் நடத்தும் வெறியாட்டத்தை உங்களால் எப்படி விளங்கிக் கொள்ள முடியும்?

தமிழ் ஓவியா said...

பாலஸ்தீன சுயாட்சிப் பிரதேசம் என்று சொல்லப்படும் காசா முனை மற்றும் மேற்குக்கரைப் பகுதிகள் இணைந்துதான் எதிர்கால பாலஸ்தீன அரசாக அமைய வேண்டும். பாலஸ்தீனர்கள் இருந்தால்தானே அவர்களுக்கு அரசு என மனக்கணக்குப் போடுகிறது இஸ்ரேல். அதன் விளைவுதான் இப்போது நடைபெற்று வரும் தாக்குதல். மேற்குக்கரையில், பாலஸ்தீனர்களின் நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத யூதக்குடியிருப்பில் இருந்து, ஜூன் 12ஆம் தேதி, பதின்ம வயது யூதச்சிறார்கள் 3 பேர் காணாமல் போகிறார்கள்; ஜூன் 30ஆம் தேதி அவர்கள் சடலமாக கண்டெடுக்கப்படுகிறார்கள். இடையில், அந்தச் சிறார்களைக் கடத்தியது காசா முனை ஆட்சியாளர்களான ஹமாஸ் அமைப்பினர்தான் என்கிறது இஸ்ரேல் அரசு; எத்தகைய செயலுக்கும் பொறுப்பேற்கும் கொள்கை கொண்ட ஹமாஸ், தாங்கள் அந்தச் சிறார்களைக் கடத்தவில்லை என அடித்துச்சொல்கிறது.

பாலஸ்தீனத்தில் ஒருங்கிணைந்த அரசு அமைக்கப்பட்டதுடன், அய்.நா.வில் நிரந்தர உறுப்பு நாடு அந்தஸ்து கோருவதையும் கண்ணில் நெருப்புப் பொறி பறக்கப் பார்த்து, தாக்குதலுக்குத் தருணம் பார்த்துக் கொண்டிருந்த இஸ்ரேலுக்கு இதைவிட உவப்பான காரணம் தேவையில்லை. ஹமாஸ் மீது கொலைக்குற்றம்சாட்டி முதலில் வான்வழித் தாக்குதல்; பிறகு தரை வழியாகவும் தாக்குதல். இஸ்ரேல் போர் தொடுத்திருக்கிறது என்கிறார்கள், கொல்லப்படுபவர்களோ குழந்தைகள், பெண்கள், முதியவர்கள்; மக்கள் நடமாடும் கடற்கரை, மருத்துவமனைகள், மசூதிகள் மீதுதான் குண்டுவீச்சு. ஜுலை 23ஆம் தேதி வரை கொல்லப்பட்ட பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 657; படுகாயமடைந்தவர்கள் பல்லாயிரம்.

இலங்கையின் போர்க்குற்றங்கள் பற்றி துணிச்சலாகப் பேசிய அதே நவநீதம் பிள்ளைதான், இப்போதும் அய்.நா. மனித உரிமை ஆணையத்தின் சார்பில் இஸ்ரேலின் போர்க்குற்றங்களையும் கண்டிக்கிறார். அரச பயங்கரவாதத்தின் கோரமுகத்தை இஸ்ரேல் பாலஸ்தீனர்களுக்கு ஏற்கெனவே பலமுறை காட்டியிருக்கிறது. பயங்கரவாதத்திற்கு எதிராகப் போர் தொடுத்திருப்பதாகச் சொல்லும், பழம்பெரும் ஜனநாயக நாடான அமெரிக்காவோ உக்ரைன் விமானத்தை வீழ்த்தியதாகச் சொல்லி ரஷ்யாவுக்கு எதிராக மேற்குலகத்தைத் திரட்டி தொடைதட்டிக் கொண்டிருக்கிறது. அய்.நா.பாதுகாப்புக் கவுன்சிலும் அதற்காகக் கூட்டப்பட்டு பொருளாதாரத் தடைக்குத் தயாராகிவிட்டார்கள்.

இதுவும்கூட அரச பயங்கரவாதத்தின் இன்னொரு முகம்தான்.

ஈழப் போர்க் குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணைக்கு மறுக்கிறார் சிங்களப் பேரினவாத ராஜபக்சே. விசாரணைக் குழுவுக்கு விசாகூடத் தரமுடியாது என்கிறது உலகின் மிகப்பெரும் ஜனநாயக நாடான இந்தியாவை ஆளும் பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு. ஈழம், பாலஸ்தீனம், காஷ்மீரம் என எங்கெங்கும் அரச பயங்கரவாதத்தின் கோரமுகங்கள்; போர்முனையிலிருந்து முன்னெச்சரிக்கையாக வெளியேறியிருக்கலாமே, ஹமாஸ் பொதுமக்களைக் கேடயமாகப் பயன்படுத்துகிறது என நீலிக்கண்ணீர் வடிக்கும் அறிவாளிகளே, எங்கு செல்வது, சொல்லுங்கள் என்ற பாலஸ்தீனர்களின் அழுகுரல் உங்கள் செவிப்பறையை எட்டவில்லையா?

தமிழ் ஓவியா said...

மத்திய அரசின் தேர்வாணைய வினாத்தாளில் பெண்களை அவமதிக்கும் வினாக்கள்


பின்வரும் நடிகையரில் யார் அதிக உயரமானவர்?

(அ) ஹூமா குரேஷி, (ஆ) கத்ரினா கைஃப், (இ) தீபிகா படுகோனே (ஈ) ப்ரீதி ஜிந்தா

இந்தக் கேள்வி ஏதோ ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியின் இறுதியில் கேட்கப்பட்டு எஸ்.எம்.எஸ்.சில் பதில் சொல்லப்படும் போட்டிக் கேள்வி அல்ல.

புது தில்லியில் உள்ள மத்திய தேர்வாணையம் நடத்திய மத்திய பணியாளர் தேர்வுக்கான வினாத்தாளில் இடம் பெற்றுள்ள வினாக்களுள் ஒன்று தான் மேலேயுள்ளது.

அது மட்டுமல்ல, பெண்களை பாலியல் ரீதியாக இழிவுபடுத்துவதுபோல், தரக்குறைவாக பெண்கள் அனைவரும் பூனைகள், பூனைகள் அனைத்தும் எலிகள் என்கிற தலைப்பில் வினாவும் இடம் பெற்றது.

பெண்களை இழிவுபடுத்தும்விதமாக பாலியல் வேறுபாடுகளுடன் வினாக்களைக் கேட்பதா என்று தேர்வாணையத்திடம் விளக்கம் கேட்டு கேரள மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அதற்கு மத்திய தேர்வாணையத்தின் தலைவராக உள்ள ஏ.பட்டாச்சார்யா மன்னிப்புக் கேட்டுள்ளார். இது முறையில்லாதது, சகித்துக் கொள்ள முடியாதது, தரக்குறைவானது என்று கூறியதுடன் இந்தத் தகவலால் மிகவும் நிலைகுலைந்துபோய் உள்ளதாகவும் கூறியுள்ளார்.

மேலும், மகளிர் ஆணையத்தின் வேண்டுகோளுக்கிணங்க தேர்வாணையம் அந்த இரு வினாக்களையும் நீக்கிவிடுவதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இனி மத்திய அரசுப் பணிகளுக்குத் தேர்வு எழுதுவோர் இன்ச் டேப்புடன் அலைய வேண்டுமோ என்னவோ? அப்புறம் இடுப்பளவு பற்றி கேள்வி கேட்டுவிட்டால் என்ன செய்வது?

தமிழ் ஓவியா said...

மூடநம்பிக்கைக்கு எல்லையே இல்லையா?


அண்மையில் (3.7.2014) நாளிதழ்களில் புதியதாக ஒரு மூடத்தனம் பற்றிய செய்தி வெளிவந்துள்ளது.

திருநெல்வேலி நகரத்தில் வாழும் 60 வயது முதியவருக்குப் பேய் பிடித்திருப்பதாகக் கூறிய மந்திரவாதி, அந்தப் பேயை ஓட்டுவதற்காக முதியவர் தலையில் மூன்று அங்குல நீளமுள்ள துருப்பிடித்த ஆணியை அடித்துள்ளார். வலியால் துடித்த அவருக்கு வலி நிவாரணி மாத்திரைகளைக் கொடுத்திருக்கிறார்கள். சில நாளில் முதியவருடைய இடது கையும், இடது காலும் செயலிழந்து போகவே, அவரைப் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றுள்ளார்கள். அங்கு அந்த முதியவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

இந்தச் செய்தியை வெளியிட்ட ஒரு நாளிதழ் (தி இந்து_தமிழ்) செய்தியின் இறுதியில் மூடநம்பிக்கைகளுக்கும் ஓர் எல்லையே இல்லையா என கேள்வி எழுப்புகின்றனர் சமூக ஆர்வலர்கள் என்று எழுதியுள்ளது.

இதைப் படித்தபோது எனக்கு சில மூடநம்பிக்கைகள் நினைவிற்கு வந்தன.

மழைவேண்டி தவளைக்கும் தவளைக்கும் திருமணம் செய்வது; மனிதனுக்கும் கழுதைக்கும் திருமணம் செய்வது; இடுகாட்டுக்குச் சென்று நிலத்தைத் தோண்டி மனித எலும்புகளை எடுத்துக் கடிப்பது: பேய் ஓட்டுவதாகக் கூறி வேப்பிலையால் அடிப்பது: தலையில் தேங்காய் உடைப்பது, பிறந்த குழந்தையை மாட்டுச் சாணத்தில் குளிப்பாட்டுவது... இன்னும் பல செய்திகள் என் மனதில் ஓடின.

தமிழ் ஓவியா said...


இப்படிப்பட்ட பல்வேறு வகையான கல்வியறிவு இல்லாத எளிய மக்களின் செயல்கள் _ மூடநம்பிக்கைகள்தான் இந்த நாளிதழ் குறிப்பிடும் சமூக ஆர்வலர்கள் மூடநம்பிக்கைகள் என்று கருதுகிறார்கள் போலும்.

அதே நாளிதழில் (3.7.2014) சந்தோஷம் தருபவர் சக்கரத்தாழ்வார் என்ற தலைப்பில் விக்னேஷ்ஜி அய்யர் என்பவர் எழுதியுள்ள கட்டுரையில் சக்கரத்தாழ்வாரைப் பூஜித்தால் என்னவெல்லாம் நடக்கும் என்று விளாவாரியாக எழுதியுள்ளார்.

1. நவக்கிரக தோஷங்கள் நீங்கும்!
2. விரைவில் திருமணம் கூடும்!
3. நினைத்த நல்ல காரியங்கள் கைகூடும்!
4. கடன் தொல்லை நீங்கும்!
5. வியாதி ஓடிவிடும்!
6. எதிரிகள் தரும் துன்பம் நீங்கும்!
7. கல்வியில் தடை நீக்கப்பட்டு மேலும் மேலும் தொடரும்!
8. வாழ்வில் வளம் கூடும்!
9. பொன்னையும் பொருளையும் வாரி வழங்குவார்!
என்று எழுதுகிறார்.

இதைப்பற்றிக் கவலைப்பட்டு மூடத்தனத்திற்கு ஓர் அளவே இல்லையா என்று எந்த அறிவுஜீவி சமூக ஆர்வலரும் கேட்டதாகக் காணோம்.

1.7.2014 அன்று வெளிவந்த இதே நாளிதழில், ஆந்திர மாநிலம் ஓங்கோலில் மழைவேண்டி நடைபெற்ற வருண பூஜையின்போது ஒரு தொட்டியில் உள்ள தண்ணீரில் கழுத்துவரை மூழ்கி பூசை செய்த குருக்கள் பற்றிய படச் செய்தி வந்துள்ளது. இதைப்பற்றி எந்த அறிவுஜீவி சமூக ஆர்வலர்களும் மூடநம்பிக்கைக்கு எல்லையே இல்லையா என்று கேட்கக் காணோம்.

மேலே உள்ள படச் செய்திக்கு கீழே பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.69 உயர்வு. டீசல் 50 பைசா அதிகரிப்பு என்ற செய்தி வெளியாகியுள்ளது.

அதைப் படித்தபோது, அதே தொட்டியில் பெட்ரோலை ஊற்றி அதில் குருக்கள் கழுத்துவரை மூழ்கி பெட்ரோல் வேண்டி பூதேவி பூஜை செய்தால், இந்த அறிவுஜீவி சமூக ஆர்வலர்கள் மூடத்தனத்திற்கும் ஓர் எல்லையே இல்லையா என்று கேட்பார்களா? மாட்டார்கள். மாறாக இவர்களும் மந்திரம்(?) ஓதுவார்கள்.

தமிழ் ஓவியா said...


ராகு, கேது பெயர்ச்சி விழா

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகில் உள்ள ராகு தோஷ பரிகாரத் தலமான திருநாகேசுவரத்தில் நடைபெற்ற ராகு பெயர்ச்சி விழாவிலும், நாகப்பட்டினம் மாவட்டம் கீழப்பெரும்பள்ளத்தில் உள்ள நாகநாதசுவாமி கோவிலில் நடைபெற்ற கேது பெயர்ச்சி விழாவிலும் திரளான மக்கள் கலந்து கொண்டனர் என்று செய்தி வெளியிட்டுள்ள (22.6.2014) அதே நாளிதழில் இல்லாத _ கற்பனையான ராகு _ கேது கோள்களின் பெயர்ச்சியும், அதற்கு ஆரவாரமாக விழாவும் எடுக்கிறார்கள். அதைக் காண திரளான பக்தர்கள் பணம், நேரம், உழைப்பு என எல்லாவற்றையும் வீணடித்துக்கொண்டு வருகிறார்களே, இப்படிப்பட்ட மூடநம்பிக்கைகளுக்கு ஓர் எல்லையே இல்லையா என்று எந்தச் சமூக ஆர்வலரும் ஆதங்கப்படக் காணோம்.

இதெல்லாம் ஒருபுறம் கிடக்கட்டும். கைகளில் கயிறுகள் வண்ணவண்ணமாய்க் கட்டினால், நினைத்தது, கேட்டது எல்லாம் கிடைத்து தங்கள் வாழ்வில் வளமும் நலமும் பெருகும் என்று மூடத்தனமாக நினைத்துக் கொண்டுள்ள இன்றைய மக்களைப் பார்த்து இந்த அறிவுஜீவி சமூக ஆர்வலர்கள் மூடநம்பிக்கைக்கு ஓர் எல்லையே இல்லையா என்று கதறி கண்ணீர் வடிக்கக் காணோம்! அது சரி, அவர்கள் கைகளிலும் அல்லவா கொசகொசவென்று வண்ணக் கயிறுகளைச் சுற்றிக் கொண்டு மூடநம்பிக்கைக்கு ஓர் எல்லையே இல்லாமல் இருக்கிறார்கள்.
எப்படியோ, பேய் ஓட்டுவதாகக் கூறி முதியவர் தலையில் ஆணி அடித்ததைக் கண்டாவது மூடத்தனத்திற்கு ஓர் எல்லையே இல்லையா என்று கேள்வி எழுப்பிய அறிவு ஜீவிகளான அந்தச் சமூக ஆர்வலர்களை நாம் நெஞ்சாரப் பாராட்டுவோம்.

தமிழ் ஓவியா said...


விக்ரஹம்


ஏடு நடத்தும் பார்ப் பனர்கள் ஒன்றை மறக் காமல் செய்வார்கள். அது வேறு ஒன்றும் இல்லை. அவர்களின் லோகக் குருவான சங்கராச்சாரியார் படத்தைப் போடுவார்கள். அவாளின் அருள்வாக்கு களை வெளியிடுவார்கள்.

அதுபோல்தான் கல்கி (10.8.2014) மறைந்த காஞ்சி சங்கராச்சாரியார் சந்திர சேகரேந்திர சரஸ்வதியா ரின் அருள்வாக்கு ஒன்றை வெளியிட்டு மகிழ்ந்துள்ளது.

அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகியோர் பாடிய தேவார ஓலைச் சுவடி களை தில்லை நடராஜன் கோயிலில் ஓர் அறையில் போட்டுப் பூட்டி வைத்து விட்டனர் தீட்சிதர்கள்.

சிதம்பரம் சிற்றம் பலத்திலே ஓதுவார் ஆறு முகசாமி திருவாசகப் பாடல்களைப் பாடியபொ ழுது இப்பொழுதுதான் தில்லை தீட்சிதர்கள் தடுத் தனர், அடித்தனர் என்று கருதிட வேண்டாம்! அந்தக் காலத்திலேயே அவை தமிழில் உள்ளன என்ற துவேஷப் புயலால் அவற்றை வெளியிலேயே விடக் கூடாது என்ற கெட்ட எண்ணத்தால் அவற்றை ஓர் அறையில் போட்டுப் பூட்டினர் என் பதை நினைவில் கொள்ள வேண்டும்.

அந்த ஓலைச் சுவடி களை தீட்சிதர்களிடமி ருந்து மீட்க ராஜராஜ சோழன் நம்பியாண்டார் நம்பியுடன் தில்லை நட ராஜன் கோயிலுக்குச் செல்கிறான்.

தில்லை வாழ் கோயில் தீட்சதர்களோ மன்ன வனே வந்து விட்டான்; மரியாதையாக தேவார ஓலைச் சுவடிகளை கொடுத்து விட வேண்டி யதுதான் என்று நினைக்க வில்லை; மாறாக தேவாரம் பண்ணிய அந்த சாட்சாத் மூவரும் நேரில் வந்து கேட் கட்டும்; அப்பொழுதுதான் தருவோம் என்று ஆணவ மாகச் சொற்களை வாரி இறைத்தனர்.

இராஜராஜன் என்ன செய்தான்? அப்பர், சம் பந்தர், சுந்தரர் உருவப் பொம்மைகளை (விக்ர ஹங்களை) கொண்டு வந்து காட்டி, அந்த ஓலைச் சுவடிகளைத் தருமாறு வேண்டினான்; அப்பொ ழுதும் தீட்சிதர்கள் அசைந்து கொடுக்கவில்லை. இவை சிலைகள்தானே? இதனை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? என்று வினவிய நேரத்தில் ராஜராஜன் அப்படியானால் நடராஜப் பெருமானும் சிலையல் லவோ? என்ற வினாவைத் திருப்பிப் போட்டான்.

அதற்கு மேலும் தடை செய்தால்.. வந்தவன் ராஜா ராஜன் ஆயிற்றே! கெஞ்சி னால் மிஞ்சுவதும், மிஞ் சினால் கெஞ்சுவதும்தான் பார்ப்பனர்களின் நிலை! நிலைமையைப் புரிந்து கொண்டு அந்த ஓலைச் சுவடிகள் குவிந்து கிடந்த அறையைத் திறந்தனர். கரையான் புற்று மூடிக் கிடந்தது. பெரும்பாலா னவை அழிந்தும் போய் விட்டன!

சங்கராச்சாரியார் இது பற்றி என்ன சொல்கிறார்? கல்கி கூறுகிறது: ராஜராஜன் கொண்டு வந்தது விக்ர ஹம்தான் என்றாலும் ப்ராண பிரதிஷ்டை ஆன படியால் அது ப்ராண னுள்ள மூர்த்திகளே என்ப தால் தேவாரத்தை தீட்சி தர்களிடமிருந்து மீட்க முடிந்தது என்று கதை விடுகிறார். எப்படி இருக்கிறது? தீட்சிதர்களைக் காப்பாற்ற வேண்டும் அல்லவா!

- மயிலாடன்

Read more: http://viduthalai.in/e-paper/85616.html#ixzz39zpZdwCw

தமிழ் ஓவியா said...


இந்த நாள் (10.8.1942) முரசொலிக்கு வயது 72

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் கலைஞர் அவர்களால் 10.8.1942 இல் தொடங்கப் பெற்ற முரசொலி இதழுக்கு இன்றுடன் 71 வயது நிறைவடைந்து 72 ஆவது வயது தொடங்குகின்றது.

முரசொலி இதழ் திருவாரூரில் நடைபெற்று வந்த தமிழ் மாணவர் மன்றத்தின் சார்பில் சேரன் என்ற புனைப்பெயர் கொண்ட நமது கலைஞர் அவர்களால் தொடங்கப்பெற்று இலவசமாக வழங்கப்பெற்று வந்துள்ளது. (குடிஅரசு -_ 6.5.1944 பக்கம் 2)

முரசொலி ஒலிக்குது பாரீர்! என்ற வாசகத்துடன் அறிவியக்கக் கொள்கைகளை அறிவுறுத்துவது ஆரியத்தை அலறவைப்பது, வைதீகத்தை வாட்டுவது, பண்டிதர்களைப் பதறவைப்பது என்ற கொள்கைகளைக் கொண்டு தொடங்கி 71 ஆண்டுகளைக் கடந்து வந்துள்ளது என்பதை அறியும் பொழுது உவகை மேலிடுகிறது. இடையில் எத்தனை சோதனைகள், வேதனைகளைக் கடந்து வந்துள்ளது.

இதழினை ஆதரிக்க வேண்டிய வேண்டுகோளுடன் இளம் எழுத்தா ளர்களின் வெளியீடுகள் ஆரியருக்கு நல்ல டார்ப்பிடோக்கள் ஆதரிக்க வேண்டுவது திராவிடர்களின் கடமையாகும் என்று அன்றே அறிவித்தது.

முரசொலி என்ற சுயமரியாதைக் கொள்கைகள் அடங்கிய துண்டுப்பிரசுரத்தை மாதமொருமுறை வெளியிடுவதெனத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. பெரியாரின் கொள்கைகளை சுயமரியாதை இயக்கத்துடன் இணைந்து பரப்பி வந்துள்ளது.

கலைஞர் அவர்கள் எப்பொழுதும் மூத்த பிள்ளையாக முரசொலியைத் தான் முதலில் கூறுவார் என்பது நாம் அறிந்த உண்மை. எனவே, முரசொலியின் முகப்பு வாசகமான வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும் என்று அன்றே தமிழ் மாணவராக இருந்து இன்றும் தமிழர்களின் ஒப்பற்ற தலைவராக விளங்கும் கலைஞர் அவர்களுக்கும் தலைவரின் மூத்த பிள்ளையான முரசொலிக்கும் வாழ்த்துகளை வழங்கி மகிழ்கிறோம்.

Read more: http://viduthalai.in/page-2/85589.html#ixzz39zqQLxQR

தமிழ் ஓவியா said...


பெர்னாட்சா


ஜார்ஜ் பெர்னாட்சா தந்தை பெரியார் போலவே 94 ஆண்டுகள் வாழ்ந்து மறைந்தவர் (1856-1950) மிகச் சிறந்த இலக்கியப் படைப்பாளர். ஆங்கிலத்தில் அவர் எழுதிய நாடகங்கள் காலங்கடந்து நிற்கக் கூடியவை. இலக்கியத் தொண்டுக்காக நோபல் பரிசு அளிக்கப்பட்டது (1925). நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவர் - பள்ளிப் படிப்பில் ஆர்வம் இல்லை - ஆனாலும், நூல்களைப் படிப்பதில் கட்டுக் கடங்கா ஆர்வம் கொண்டவர்.

பல எழுத்தாளர்களுக்கு ஏற்பட்ட அனுபவம் போலவே தொடக்கத்தில் அவர் எழுதிய எழுத்துகள் ஈர்க்கப்படவில்லை. விடா முயற்சியால் வெற்றி பெற்றார். ஆங்கில இலக்கியத்தில் நாடகப் பஞ்சம் என்ற விமர்சனத்தை வீழ்த்தும் வகையில் அரிய சாதனைகளைப் படைத்தவர் ஆவார். 50-க்கும் மேற் பட்ட நாடகங்களை எழுதினார்.

புராண மய்ய கருத்துகளைத் தூக்கி யெறிந்து சமூக மாற் றத்துக்கான கருத்து களை, சமூகச் சிக்கல்களை மய்யப் படுத்தி நாடகங்களைத் தீட்டினார். கருத்தும், வசீகர நடையும் காந்தமாக மக்களை ஈர்த்தது. இசை, நாடகங்களைத் திற னாய்வு செய்வதில் விற்பன்னர் என்ற பெய ரெல்லாம் இவருக்கு வந்து சேர்ந்தது. நல்ல பேச்சாளராக மிளிர வேண்டும் என்ற ஆசை அவருக்கு உண்டு. ஆனாலும், சபைக் கோழைத்தனம் என்பது அவரைப் பிடித்து உலுக்கியது. தானாகப் பேசிக் கொண்டு போக ஆரம்பித்தார். அதன்பின் கூட்டம் உள்ள இடத்தில் உரக்கப் பேச ஆரம்பித்தார். அதன் விளைவு தலைசிறந்த ஆங்கிலப் பேச்சாளர் என்ற புகழின் உச்சியில் பளபளப்பாகப் பறந்தார்.

மிகுந்த நகைச்சுவை உணர்வைக் கொண்டவர். பேச்சிலும், எழுத்திலும் அவை போட்டி போடும். கிறித்துவக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தாலும், கார்ல் மார்க்சின் தத்துவம் இவரைக் கவர்ந்தது. அமைதி வழியில் சோசலிசக் கொள்கை களைப் பரப்புவதற்காக நிறுவப்பட்டிருந்த ஃபேபியன் கழகத்தில் (திணீதீவீணீஸீ ஷிஷீநீவீமீஹ்) சேர்ந்தார். பெர்னாட்சாவைப்பற்றி ஏராள மான துணுக்குகளும், தகவல்களும் உலகம் பூராவும் பரவியுள்ளன. பத்திரிகை யாளர் ஒருவர் உலகில் மிகச் சிறந்த அறிவாளி யார்? என்று ஷாவைக் கேட் டார். இரண்டாவது இடத்தில் ஸ்டாலின், மூன்றாவது இடத்தில் அய்ன்ஸ்டீன், முதல் இடத்தில் உள்ளவரின் பெயரைச் சொன் னால் என்னைத் தற்பெருமைக்காரன் என்று சொல்லிவிடுவீர்கள் என்றாராம்.

அழகு கொழிக்கும் பெண் ஒருவர் ஷாவைச் சந்தித்து, நான் உங்களைத் திருமணம் செய்துகொள்ள விரும்புகிறேன். நம்மிருவருக்கும் திருமணம் நடந்தால், என்னைப் போன்ற அழகும், உங்களைப் போன்ற அறிவும் கொண்ட குழந்தை பிறக்கும் அல்லவா?

என்றார் அந்தப் பெண்மணி. நீ சொல்வது சரியென் றாலும், என்னைப் போன்ற அழகும், உன்னைப் போன்ற அறிவும் கொண்ட குழந்தை பிறந்தால் என்னாவது? என்றாராம். பெர்னாட்ஷா எழுதி வைத்த உயில் புகழ் பெற்றது. சொத்தின் சரி பகுதியை அவரது நூலகத்திற்கு எழுதி வைத்தார்.

Read more: http://viduthalai.in/page2/85561.html#ixzz39zrCxG4o

தமிழ் ஓவியா said...


செக்யூலரிஸம் என்றால் என்ன?
செக்யூலர் செக்யூலரிஸம் என்ற சொற்கள். இந்தியா சுயாட்சி என்பது அடைந்தது முதல் அதிகமாக அடிபட்டு வருகின்றன. இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திலும் இவை இடம் பெற் றுள்ளன.

இந்த செக்யூலர் செக்யூலர் கவர்ன் மெண்ட் என்பதற்கு ஆளும் குழுவினர் கூறும்பொருள், சமய சந்தர்ப்பத்துக் கேற்றபடி மாறுபடுகிறது.

மதமற்ற அரசாங்கம் என்று அடி நாளிலும்; பின்னர் மதச்சார்பற்ற அரசாங்கம் என்றும் கருத்து விளக்கம் தெரிவிக்கப்பட்டது.

குழப்பம்

ஆனால், அண்மையிலோ ஆட்சி பீடாதிபதிகள் மத விழாக்களிலும், கும்ப மேளாக்களிலும் கலந்துகொண்டதனை பொது மக்கள் உலகம் குற்றம் கூறவே, செக்யூலர் என்றால் மதங்கள் மீது வெறுப்புக் கொண்டு ஒதுக்கித் தள்ளுவ தல்ல- _ எல்லா மதங்கள் பாலும் சமரச நோக்குடன் நடந்து கொள்வதேயாகும் என்று பச்சோந்தி விரிவுரை கூறப் பட்டது. இது செக்யூலரிஸம் என்பதை குழப்பமாக்கி விட்டதுடன் -_ அதன் நற்பயனில் சந்தேகம் கொள்ளவும் செய்து விட்டது.

செக்யூலரிஸம் என்றால் ஆங்கில அகராதியில் தரப்பட்டுள்ள பொருள் -_ இந்த உலகானது -_ மறுவுலக சம்பந்தமில்லாதது என்பது. இதனை ஆரிய வடமொழியில் லோகாயிதம் என்கின்றனர். தமிழ் அகராதியிலும் இதே சொல் தரப்பட்டுள்ளது. இது பொருத்தமல்ல. ஏனெனில் இந்த லோகாயிதத்தின் தொடர்ச்சியாக பர மார்த்திகம் என்பதையும் பிணைத்துள் ளனர். அதாவது லோகாயித் வாழ்க்கையை அடுத்து பரமார்த்திகத்தை அடைய வேண்டுமென்றும் கருத்து விளக்கம் செய்து, லோகாயிதம் என்ப தன் உண்மைக் கருத்தையும் நோக்கத் தையும் பாழாக்கி விட்டனர். இந்தச் சொல்லுடன் மத இயலையும் கடவுளி யலையும் பிணைத்து விட்டனர்.

உண்மை விளக்கம்

செக்யூலரிஸம் என்பதன் உண்மை விளக்கப் பொருள் என்ன? இதன் மொழித்துறை வரலாறு என்ன? என்று அறிவியல்வாதிகளும் பகுத்தறிவுவாதி களும் ஆராய்ந்து பார்க்க வேண்டியுள் ளது. பகுத்தறிவியல் என்பது அறிவைப் பயன்படுத்தி மெய்யை உணர்தல். இவ்விதம் பகுத்தறிவு கொண்டு அறிந்த மெய்மைகளை நடைமுறையில் நடத்திக் காட்டுவதே செக்யூலரிஸம் ஆகும்.

இந்த செக்யூலரிஸம் என்ற ஆங்கிலச் சொல்லை முதன் முதல் கையாண்டவர் பகுத்தறிவு மேதை ராபர்ட் இங்கர்சால் அவர்களின் அறிவியல் தோழர்களில் ஒருவரான ஜார்ஜ் ஜாகப்ஹோலியோக் என்பவர். இவரும் குழந்தை வயதில் மதத் துறையில் வளர்க்கப்பட்டவர். அறிவு விரிவடைந்ததும் இந்த மதப் புரட்டு களையும் மதமடமைக் கொள்கைகளை யும் எதிர்த்துப் புரட்சிக் கொடி தூக்கி னார். நாத்திகர் என்ற குற்றத்துக்காக 1841_42ஆம் ஆண்டு வாக்கில் இங்கி லாந்தில் சிறை வாசமும் செய்தவர்.

நடைமுறையில் பரப்பியவர்

தோழர் ஜார்ஜ்ஜாகப் ஹோலி யோக்தான் முதன் முதல் தமக்கும் தம் கோட்பாட்டினருக்கும் செக்யூலரிஸம் என்ற தனி இடு குறிப்பெயர் இட்டுக் கொண்டார். இந்தப் பகுத்தறிவு நடைமுறை இயல் கழகங்களும் லண் டனில் பல இடங்களில் தோற்றுவித்து நடத்தினார். பகுத்தறிவு இயல் பத் திரிகைகள் பலநடத்தினார். பகுத்தறிவு பத்திரிகையாளர் கழகமும் ஏற்படுத் தினார். இதற்கு முதல் தலைவரும் இவரே.

பிரிட்டிஷ் செக்யூலர் யூனியன் என்ற பேரவைத் தலைவராகவும் இவர் பல்லாண்டுகளிருந்து பணியாற்றி, கோட்பாட்டையும், கழகத்தையும் பரப்பி, வலுப்படுத்தினார்.

இந்த செக்யூலரிஸம் என்ற சொல்லுக்கு இவர்தந்த விளக்கப் பொருள் இந்த உலக வாழ்க்கை சம் பந்தமான கடமை வழிக் கோட்பாடு அமைப்பு என்பதாகும்.

இங்கர்சால் விளக்கம்

மேதை இங்கர்சால் இந்தச் சொல்லுக்குத் தந்துள்ள விளக்கப் பொருள் இந்த உலக விஷயங்களில் மனிதப் பண்பாட்டுடன் மனித அனு தாபத்துடன் நடந்து கொள்ளும் நெறி; அறியும் உணர்ச்சி கொண்டவர்களின் நலனுக்கான ஒவ்வொரு விஷயத்திலும் நடப்பிலும் கருத்துச் செலுத்துவது; அனுபவ உலக ஆய்வு அறிவு என்பதற்கு மறுபெயரும் இதுவாகும். அதாவது அவரவர்கள் புரிந்து கொண்ட முறையிலும் விருப்ப வாய்ப்புகளுக்கு ஏற்ற வகையிலும் வாழ்க்கைத் துறையை செப்பனிட்டு அமைத்துக் கொள்ளச் செய்வது இது. இங்கு இந்த உலகில் அவரவர்களுக்கான நல் வீட்டை அமைத்துக் கொள்வதில் நம்பிக்கை கொள்ளச் செய்வது இந்த செக்யூ லரிஸம்

ஒவ்வொருவர் தனி முயற்சி ஊக்கம், அறிவு, ஆற்றல், ஆராய்ச்சி அனுபவம் ஆகியவற்றில் நம்பிக்கை கொள்ளச் செய்வது.

நாமறியாததும் அமானுஷியமானது மான ஏதோ ஒன்றில் (கடவுள்) நம் பிக்கை கொள்வதைத் தவிர்ப்பது இது. இந்த வாழ்க்கையில், இந்த உலகில் மகிழ்ச்சியுடன் நல்வாழ்வு அனைவரும் வாழ வேண்டுமென்பதே இதன் குறிக்கோள் என்பதாகும். இந்த பகுத்தறிவியக்க செக்யூலரிச மேதைகளின் விளக்கத்திலிருந்து இந்த செக்யூலர் -_ செக்யூலரிஸம் என்பன மத இயல், கடவுளியல் மறுப்புக் கோட்பாடு _- மதம் கடவுள் என்பதனை ஒழித்துக் கட்டுவது என்பது தெளிவுபடுகிறது.

Read more: http://viduthalai.in/page3/85563.html#ixzz39zrPHtqA

தமிழ் ஓவியா said...


வாஷிங்டன் வட்டார முன்னாள் தமிழ்ச் சங்க தலைவர் எம்.எம். இராஜ் பேட்டிவாஷிங்டன் வட்டார தமிழ்ச் சங்கத்தின் முன்னாள் தலைவரும், வாஷிங்டனில் வெளிவந்த முதல் தமிழ் மாத இதழான குமரி இதழின் நிர் வாக இயக்குநருமாகிய எம்.எம். இராஜ் அவர்கள் விடுதலை இதழுக்கு அளித்த நேர்காணல்:

சமீபத்தில் நடந்த வேட்டிப் பிரச்சினையில் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் வேட்டிக்கு ஆதரவாகக் குரல் கொடுத்திருப்பது மிகவும் வரவேற்கத்தக்கது. அதுபோல இந்துக் கோவில்களில் ஆண்கள் சட்டை அணிந்து செல்லக் கூடாது என்ற பழக்கம் இருந்து வருகிறது. இது மிகவும் கண்டிக்கத்தக்கது. சட்டை அணிய கோவில் நிர்வாகிகள் அனுமதிக்க வேண்டும். அதற்காக அனைத்து அரசியல் கட்சிகளும் குரல் கொடுக்க வேண்டும்.

அதுபோல் கோவில்களில் தமிழ் இன்னும் நுழைய வில்லை. சமஸ்கிருதம்தான் உள்ளது. அனைத்து கோவில் களிலும் தமிழில் வழிபடும் உரிமை வேண்டும். கோவில் வியாபார இடமாக மாறி விட்டது. பூஜை பொருட்கள், மலர் மாலைகள்கூட அதிக விலைக்கு ஏழை மக்களிடம் விற்பனை செய்வது கண்டிக்கத்தக்கது.

திருவனந்தபுரம் பத்மனாப சாமி கோவிலில் இருக்கும் நகைகள் குமரி மாவட்ட மக்களுடை யது. அன்றைய திருவிதாங்கூர் அரசு இளை ஞர்கள் மீசை வைத்தால் அதற்கு வரி, இது போன்று பல வரிகள் போட்டும் தற்போதைய குமரி மாவட்ட மக்களின் உழைப்பு, பொருள் அனைத்தும் பத்மனாபசாமி கோவிலில் நகையாக உள்ளது. அங்கு இருக்கும் நகைகளில் சரிபாதி நகைகளை தமிழக அரசுக்கு கோவில் நிர்வாகம் வழங்க வேண்டும். தமிழக அரசு அந்தத் தொகையினை முழுக்க முழுக்க குமரி மாவட்ட மக்களின் வளர்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும். பத்மனாபபுரத்தில் இருக்கும் அரண்மனை தற்போது கேரள அரசிடம் உள்ளது. இதனை மீட்டு அந்த அரண் மனையை தமிழக அரசின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர வேண்டும் என்று அவர் கூறினார்.

நேர்காணல்: கோ. வெற்றிவேந்தன், மாவட்ட செய்தியாளர்

Read more: http://viduthalai.in/page4/85565.html#ixzz39zs785kJ

தமிழ் ஓவியா said...


திதி கூறும் மந்திரம் என்ன?


மந்திரம்: யன்மே மாதா பிரலுலோப சரதி அனனு விருதா, தன்மே ரேதஹ பிதா விருங்க்தா ஆபுரண் யோப பத்யதாம் ரங்கராஜ சர்மணே ஸ்வாஹா. ரங்கராஜ சர்மணே அஸ்மது பித்ரே இதம் நமம.

பொருள்: எனது தாய் பதிவிரதா தர்மங்களை முழு வதுமாக அனுஷ்டிக்காமல், அதன் காரணமாக நான் பிறந்திருந்தால், இந்த அக்னி யில் நானிடும் ஹவி ஸூக்கு உரிமை கோரி எனது சொந்த தகப்பனார் வருவார். அப்படி அவர் இந்த ஹவிஸைப் பெறாமல் தடுத்து, நான் எந்தத் தகப்பனாருக்கு இந்தச் சிரார்த்தத்தைச் செய்கிறேனோ அவர் அதாவது எனது தாயின் கணவர் இந்த ஹவிசைப் பெற வேண்டும்

(ஆதாரம்: சுவாமி சிவானந்தா சரசுவதியின் ஞான சூரியன்)

தன் தாயைச் சந்தே, கித்து, விபச்சாரி என்று கூறி பார்ப்பான் சொல்லும் மந்திரம் தான் திதி, ஒழுக்கக் கேடும் விபச்சாரமும் தானே பார்ப்பனீயம்!

Read more: http://viduthalai.in/page5/85567.html#ixzz39zsrEJ87

தமிழ் ஓவியா said...


புதிய உயிரினங்கள் கண்டுபிடிப்புஉலகம் முழுவதும் 18 ஆயிரம் புதிய உயிரினங்களை, விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அவற்றில், பூனையை போன்ற கரடியும், தரைக்கு கீழ், 3,000 அடிக்கு கீழ் இருக்கும் கண்ணில்லாத நத்தையும் அடங்கும். இதுகுறித்து, நேஷனல் மியூசியம் ஆப் நேச்சுரல் சயின்ஸ் என்ற அமெரிக்க நிறுவனத்தின் உயிரியல் விஞ்ஞானி, அண்டோனியோ வால்டேகேசஸ் தலைமையிலான விஞ்ஞானிகள் குழுவினர் கூறியதாவது: உலகில் 20 லட்சம் உயிரினங்கள் இருப் பதாகவும், இவற்றில் தற்போது 18 ஆயிரம் உயிரினங்கள் கண்டறியப் பட்டுள்ளன. இன்னும் 1 கோடி உயிரி னங்கள் கண்டுபிடிக்க வேண்டியுள் ளது. அவற்றில் பல அழிவின் விளம் பில் உள்ளன. இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

Read more: http://viduthalai.in/page6/85570.html#ixzz39ztDruUb

தமிழ் ஓவியா said...

செய்தியும் சிந்தனையும்

வெட்கக்கேடு

செய்தி: கருநாடகாவில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுவனை 6 நாட்கள் ஆகியும் மீட்க முடியவில்லை.

சிந்தனை: நாடெங்கும் இத்தகைய செய்திகள் வந்த வண்ணமேயுள்ளன. இதனைக் கூடத் தடுக்க முடியாத இந்த ஆட்சிகள் எந்தக் கேடுகளைத் தான் தடுக்கப் போகிறார்கள்? மனித உயிர்கள் அவ்வளவு மலிவா? வெட்கக் கேடு!

Read more: http://viduthalai.in/page1/85499.html#ixzz39zue0cct

தமிழ் ஓவியா said...

கோயிலில் தங்கக் குவியல்

குட்டி மாநிலமான இமா சலப் பிரதேசத்தில் 29 கோயில் களில் 400 கிலோ தங்கம், 15,800 கிலோ வெள்ளிக் கட்டிகள் தூங்குகின்றனவாம்! (இவற்றை எடுத்து மக்கள் நலனுக்குப் பயன்படுத்தக் கூடாதா?)

Read more: http://viduthalai.in/page1/85499.html#ixzz39zukPWp2

தமிழ் ஓவியா said...


பெண்களுக்கு அறிவுரை கூறும் பெம்மான்கள்!


அறிவுரைதான் இந்த நாட்டில் மிகவும் மலிவானது; அதுவும் பெண்களுக்கு ஆண்கள் அதிகம் அறிவுரை சொல்லுவதில் இந்தியாவை வெல்ல உலகில் எந்த நாடும் கிடையாது.

பெண்கள் எந்த மாதிரி உடையை அணிய வேண்டும் என்று அறிவுரை சொல்லும் அருகதை ஆண்களுக்கு உண்டா என்பது அர்த்தமுள்ள முதல் கேள்வி.

ஆனாலும், யாரையும் கேட்காமலேயே ஆண்கள் தாங்களே முன்வந்து வலிய அந்த உரிமையை எடுத்துக் கொண்டு அருளுபதேசம் செய்ய ஆரம்பித்து விடுகிறார்கள்.

நாடாளுமன்றத்தில் தெலுங்குதேச மக்களவை உறுப்பினர் முரளி மோகன் மகந்த் பெண்கள் இந்தியக் கலாச்சாரத்துக்கு ஏற்ப கண்ணியமான உடை அணிய வேண்டும் என்று பேசப் போக, அவையில் கடுமையான எதிர்ப்புச் சுனாமியை அவர் எதிர் கொள்ளும் நிலை ஏற்பட்டு விட்டது; வேறு வழியின்றிப் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டுக் கொண்டார். (வாழ்க மகளிர் உறுப்பினர்கள்!)

இதற்கு முன்னதாக கோவா மாநில பொதுப் பணித்துறை மூத்த அமைச்சர் சுதின் துவாலிகர் என்பவர் கூறிய கருத்தும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது..

நமது நாட்டில் தற்போது பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்து வருவது கவலைக்குரியது. பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரிப்ப தற்குக் காரணம் பெண்கள்தான் முக்கியப் பங்கு வகிக்கின்றனர். பெண்கள் நாகரிக ஆடை அணிந்து கேளிக்கை விடுதிக்குச் செல்லுவதாலும் ஆண் துணை யின்றி துணிச்சல் என்ற பெயரில் தனியாக செல்லுவ தாலும்தான் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரிக்கின்றன என்று பேசியிருக்கிறார்.

கருநாடக மாநிலம் மங்களூரில் இயங்கி வரும் ராம்சேனா அமைப்பின் தலைவர் முத்தலிப் என்பவர் பெண்கள் கேளிக்கை அரங்குக்குச் செல்லுகிறார்கள் என்ற பெயரில் மங்களூரில் உள்ள பல கேளிக்கை அரங்குகளில் வலிய நுழைந்து பெண்களைத் தாக்குகின்றனரே என்று செய்தியாளர்கள் சுட்டிக் காட்டியபோது, கோவா அமைச்சர் அதனை நான் ஆதரிக்கிறேன்; அவர்கள் ஒன்றும் தவறு செய்யவில்லை என்றும் பதில் சொல்லியிருக்கிறார்.

மும்பையில் மும்பை கிழக்கு பகுதி சட்டப் பேரவை உறுப்பினர் பாலா சாலந்த் (சிவசேனா) என்பவர் முஸ்லிம் பெண் ஒருவரை வழிமறித்து அத்து மீறியதும் அண்மையில் மக்கள் கவனத்துக்கு வந்தது.

இவர்மீது குற்றப் பிரிவு 506, 509 மற்றும் 504 சட்டப் பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டதே தவிர கைது செய்யப்படவில்லை.

இவற்றையெல்லாம்விட ஒரு முக்கியமான செய்தி! பிரமுகர், ஒருவர் மத்தியில் ஆட்சியிலிருக்கும் பிஜேபி ஆட்சிக்கான மூக்கணாங் கயிற்றினைக் கையில் வைத்திருப்பவர் என்று சொல்லும் மாத்திரத்திலேயே அவர் ஆர்.எஸ்.எஸ்-இன் அகில இந்தியத் தலைவர் மோகன் பகவத்துதான் என்று மக்கள் எளிதில் புரிந்து கொள்வார்கள்.

அவர் இந்தூரில் ஆர்.எஸ்.எஸ். பொதுக் கூட்டத்தில் வெளிப்படையாகவே பேசினாரே!


தமிழ் ஓவியா said...


காந்தியார்


திரு. காந்தியார் சிறையில் மூன்று வேலைகள் செய்கிறார். அவற்றுள் ஒன்று தக்ளியில் நூல் நூற்பது. மற்றொன்று பகவத் கீதையை ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பது. வேறொன்று இந்த இரண்டும் செய்து மீதி இருக்கும் நேரத்தில் ராமநாம பஜனை செய்வது.

ஆகவே அவரது பகுத்தறிவுக்கு நாம் வேறு உதாரணம் காட்ட வேண்டிய தில்லையென்றே நினைக்கின்றோம். இம் மூன்று காரியங்களும் இந்தியாவின் பொது வாழ்க்கையையும் முன்னேற்றத்தையும் முன்னுக்குக் கொண்டு போகுமா? பின்னுக்குக் கொண்டு போகுமா வென்பதை யோசிக்கத் தக்கது.

திரு. காந்தியிடம் குருட்டுப் பக்தியுள்ளவர்களுக்கு நாம் இப்படிக் கேட்பது சற்று கஷ்டமாக இருக்கலாம். தக்ளியில் நூல் நூற்பது எதை உத்தேசித்து என்று இதுவரை யாராவது தெரிந்தார்களா? தக்ளிநூல் வெள் ளைக்கார ஆட்சியின் கொடுமையையும் இந்தியாவின் பொருளாதார கொள்ளையையும் என்ன செய்து விடக்கூடும் என்பது நமக்கு விளங்கவில்லை.

என்ன சொன்னாலும் தட்டிச் சொல்லாமல் கேட்பதற்குச் சில மக்கள் இருக்கின்றார்கள் என்பதைத் தவிர மற்றபடி அதில் என்ன உண்மை இருக்கின்றது. இரண்டாவதாக பகவத்கீதைக்கு ஆங்கில மொழி பெயர்ப்பு வேலை. இதுமுன் ஒரு தடவை டாக்டர் பெசன்டம்மையால் செய்தாய் விட்டது.

இரண்டாவதாக திரு திலகரால் ஒரு தடவை கீதா ரகசியம் என்பதாக ஒரு மொழி பெயர்ப்பும் செய்தாய் விட்டது. இப்போது திரு. காந்தியும் இதையே ஆரம்பித்து விட்டார். கீதையின் தத்துவம் என்ன? அதன் பயனென்ன? என்பதைப் பற்றிய உண்மை யாராவது தெரிந்து அதை மதிக்கின்றார்களா?

கீதையை ஒரு மனிதன் ஒப்புக் கொள்ளுவதானால் முதலாவதாக பாரதக் கதையை ஒப்புக் கொள்ள வேண்டும்.

பிறகு கிருஷ்ணனையும், அவனது செய்கைகளையும், அவனையே கடவுளாகவும் ஒப்புக் கொள்ள வேண்டும்.

இம்மூன்றிலும் சந்தேக முள்ளவர்கள் கீதையைப் பகவான் வாக்காகக் கொள்ள முடியாது. இது ஒரு புறமிருக்க அதிலுள்ள விஷயங்கள் வாழ்க்கைக்குப் பொருத்த மானதாகவோ அல்லது அனுபவத்திற்குச் சாத்தியமான தாகவோ இருக்கின்றதா? நிற்க மூன்றாவது காரியமாக பஜனை செய்து கொண்டி ருக்கிறாராம்.

பஜனை என்பது புராணங்களில் உள்ள கடவுள்களைப் புராணக் கதைகளைச் சொல்லிக் கொண்டோ நினைத்துக் கொண்டோ இருப்பதாகும்.

ஆகவே இம்மூன்று காரியங்களும் எவ்வளவு பகுத்தறிவும் பொது நல நன்மையுமான காரியம் என்பதை முடிவு செய்யும் விஷயம் வாசகர்களுக்கே விட்டுவிடு கின்றோம்.

- குடிஅரசு - துணைத்தலையங்கம் - 27.07.1930

Read more: http://viduthalai.in/page1/85536.html#ixzz39zzQpXqh