சிங்கப்பூரில் தமிழர் சீர்திருத்த சங்கம்
தந்தை பெரியார் அவர்கள் சிங்கப்பூர்
சென்று சுயமரியாதைக் கருத்துகளைப் பரப்பி மக்களிடையே விழிப்புணர்ச்சியை
உண்டாக்கினார். சுயமரியாதை இயக்கத்தின் மேன்மையினை மனதில் பதியும்படி
எடுத்துரைத்தார். அதன் விளைவாக சிங்கப்பூர் தமிழர்கள் பெரியாரின் கொள்கைகளை
உள்ளடக்கி தமிழர் சீர்த்திருத்த சங்கம் ஏற்படுத்தினர். அச்சங்கத்தின்
தொடக்க நிகழ்ச்சி பற்றிய செய்தியினை குடிஅரசு இதழ் வெளி யிட்டது.
அது வருமாறு:
21-04-1930இல் சிங்கப்பூரில் கூடிய தமிழ்
மக்கள் பொதுக்கூட்டத்தில் தீர்மானித்த வண்ணம் இவ்வூரில் சீர்திருத்தக்
கொள்கையோடு ஓர் தமிழர் சீர்திருத்தச் சங்கம் ஒரு சுயமரியாதைச் சங்கம்
நிறுவுவதற்கான ஏற்பாடுகளை செய்வதைப் பற்றி யோசிப்பதற்காக 13-07-1930ம் தேதி
ஞாயிற்றுக்கிழமை மாலை 4-30 மணிக்கு இவ்வூர் பிரபல வர்த்தகரும்,
தனவந்தருமான உயர்திரு. ஓ. ராமசாமி நாடார் அவர்கள் தலைமையில் இந்தியச் சங்க
கட்டிடத்தில் ஆரம்பக் கூட்டம் நடந்தது.
இவ்வூர் பிரபல வியாபாரி களும்,
தலைவர்களுமாக சுமார் 150 பேர்களுக்கு மேல் விஜயம் செய்திருந்தனர். தலைவர்
உயர்திரு. ஓ. ராமசாமி நாடார் அவர்கள் சங்கத்தின் நோக்கங்களையும்,
அவசியத்தையும் குறித்து முகவுரையாக கூறியதாவது:-
அன்பார்ந்த சகோதரர்களே!
அறிவிலும், ஆற்றலிலும் சிறந்த நீங்கள்
எல்லாம் கூடியிருக்கும் இக்கூட்டத்திற்கு தலைமை வகிக்கும்படி பிறப்பித்த
கட்டளைக்கு நான் மனப்பூர்த்தியாய் நன்றி செலுத்திக் கொள்ளுகிறேன். இன்று
கூடியிருக்கும் இக்கூட்டத்தின் நோக்கம் என்னவென்பதைப் பற்றி நான் அதிகமாக
விவரித்துக் கூறவேண்டியதில்லையெனக் கருதுகிறேன். அதாவது சென்ற ஏப்ரல் மாதம்
21ஆம் தேதி இச்சங்கத் திடலில் கூடிய சிங்கை தமிழ் மக்கள் பொதுக்
கூட்டத்தில் தீர்மானித்த வண்ணம் தமிழ் மக்களாகிய நமக்கு இவ்வூரில்
சீர்திருத்தக் கொள்கையோடு ஓர் சங்கம் நிறுவ வேண்டியதைப் பற்றி யோசனை செய்து
தகுந்த நடவடிக்கைகளை எடுத்துக் கொள்வதற்கெனவே இக்கூட்டம் கூடியிருக்
கிறோம்.
மேல்சொன்ன ஏப்ரல் மாதக் கூட்டத்தில்
என்னையும், திருவாளர்கள். பா. கோவிந்தசாமி செட்டியார், கோ.
இராமலிங்கத்தேவர், அ. சி. சுப்பையா, சா. கோபால் ஆகியவர்களைக் கொண்ட ஓர்
கமிட்டியை நியமித்து மேற்படி சங்கம் நிறுவுவதற்கான முயற்சிகள் எடுத்துக்
கொள்ளும்படி தீர்மானிக்கப்பட்டது - அதன்படி நாங்களும் சில முயற்சிகளில்
ஈடுபட்டுள்ளோம் என்பதை உங்களுக்கு முன்னதாக தெரிவித்துக் கொள்ள
கடமைப்பட்டவனாக இருக்கிறேன்.
இவ்வூரில் நம் தமிழ் மக்களால்
நிறுவப்பெற்ற பல சங்கங்கள் கொஞ்ச காலத்திலேயே
மூடிவிடப்பட்டிருக்கின்றனவென்பது நீங்கள் ஒவ்வொருவரும் நேரில் அறிந்த
விஷயமாகும். இப்படி ஏற்பட்டதற்கு காரணம் என்னவென்றால் இச்சங்கங் களெல்லாம்
போதிய ஆதரவின்றி ஆரம்பிக்கப்பட்டு சங்க வாடகைகூட கொடுக்க முடியாமல்
கஷ்டப்பட்டதேயாகும். 4, 5 மாதங்களுக்கு சேர்ந்தாற்போல வாடகை தங்கியி
ருந்தும் சங்கத்திலிருந்து பணம் கொடுக்க சக்தியின்றியும், பொது ஜனங்களிடம்
பணம் வசூலித்து வாடகை கட்டிய சங்கங்களும் பல உண்டு.
இதிலிருந்து வாடகைக் கட்டிடங்களில்
ஆரம்பிக்கப்படும் சங்கங்களுக்கு எப்பொ ழுதும் ஆபத்து இருந்துகொண்டு
தானிருக்குமென்பது விளங்குகிறது. ஆகவே, நாம் எல்லோருமிருந்து
ஆரம்பிக்கப்படும் சங்கம் இவ்விதமான சங்கடங்களுக்கு ஆளாகாமலும் பிறர்
பார்த்து பரிகாசம் செய்யாத வண்ணமும் இருக்க வேண்டியது அவசியத்திலும் அவசிய
மாகுமென்பதை நான் உங்கள் யாவர்க்கும் தெரிவித்துக் கொள்ள வேண்டியதில்லையென
நினைக்கிறேன். தமிழன், கூலிக்காரன் இவர்களால் என்ன செய்ய முடியும் என்று
நமது சகோதரர்களாகிய இலங்கையரும் வட இந்தியரும் சொல்லக் கேட்டிருக்கிறோம்.
இந்த இலங்கையரும், வட இந்தியரும்
முற்பட்டு செய்யும் எந்த காரியத்திற்கும் தென்னிந்தியர்களாகிய நம்மால் மற்ற
எல்லோரையும்விட அதிகமாகப் பணம் கொடுக்கப்படுகின்றது - இதை யாரும் மறுக்க
முடியாது. இப்படி அதிகமான தொகை கொடுத் தாலும் நம்மை தமிழன், கூலிக்காரன்,
என்ன தெரியும் என இழிவுபடுத்திக் கொண்டு தானிருக்கிறார்கள். இவர்க ளெல்லாம்
இவ்விதம் நம்மை இழிவுபடுத்திக் கூறுவதற்குக் காரணம் நாம் பொது விஷயங்களில்
அதிகம் கவனம் செலுத்தாமலும், அதிகமாய் ஈடுபட்டு வேலைகள் செய்யாமல்
இருப்பதுமேயாகும்.
இனியும் நாம் இவ்விதமே இருந்துகொண்டே
இருப்போமேயானால் நமது சுய மரியாதையை நாம் காப்பாற்றிக் கொண்டவர்களாக
மாட்டோமென்பதல்லாமல், அறிவு உலகத்திலும், நாகரிக உலகத்திலும் நமக்கு
நியாயமாய் உலகத்திலும், நாகரிக உலகத்திலும் நமக்கு நியாயமாய் கிடைக்க
வேண்டிய ஸ்தானத்தை நாம் என்றும் அடைய முடியாது.
ஆகை யினால் நாம் தமிழ் மக்களின்
முன்னேற்றத்திற்கான பொது விஷயங்களில் பிறரின் தூண்டுதலும்
வற்புறுத்தலுமின்றி முன்னணியில் வந்து நின்று இயன்ற அளவு தொண்டாற்ற
வேண்டியது மிகவும் அவசியமென்பதை ஒவ்வொருவருக் கும் நான் வணக்கமாய்
விண்ணப்பித்துக் கொள்ளுவதுடன் நீங்களும் பொது ஜனத் தொண்டில் உங்கள் பங்கைச்
செய்ய முற்பட வேண்டுமெனவும் கேட்டுக் கொள்ளுகிறேன்.
சமுதாயச் சீர்திருத்தத் துறையில் நாம்
செய்யவேண்டிய தொண்டுகள் பல உண்டென்பது நீங்கள் ஒவ்வொருவரும் அறிந்த
விஷயமாகும். இத்துறையில் இது காலை நமது தாய்நாட்டில் வேலை செய்துவரும்
சுயமரியாதை இயக்கத் தையும், அதன் உயரிய கொள்கைகளையும் நோக்கங்களை யும்
நீங்கள் யாவரும் தெரிந்து கொண்டிருக்கிறீர்கள். நம் தாய்நாட்டில் நம்
மக்கள் ஈடுபட்டுக் கையாளும் அவ்வளவு மூடபழக்க வழக்கங்களும் இந்நாட்டில்
கைக்கொள் ளப்பட்டு வருகின்றன. இவர்களிடையில் சீர்திருத்தக் கொள்கைகள் பரப்ப
வேண்டுமானால் இடையறாதப் பிரசாரம் செய்யப்பட வேண்டும்.
பிரசாரம் செய்வதற்கு ஓர் சங்கம்
அவசியமிருத்தல் வேண்டும். அச்சங்கத்தை நிறுவ முயற்சிகள் எடுத்துக்கொள்ள
வேண்டியதே இக்கூட்டத் தின் முக்கிய கடமையும் காரியமுமாகும். இவ்வூரில்
ஆரம்பிக்கப்பட்ட பல சங்கங்கள் மூடிவிடப்பட்டதின் காரணங்களை நான் முன்பே
தெரிவித்துவிட்டேன். எனவே, நாம் நிறுவப்போகும் சங்கத்திற்கென ஓர் இடம்
சொந்தமாயிருக்க வேண்டியது மிகவும் முக்கியமான விஷயமாகும்.
இவ்விஷயத்தைப் பற்றி நாங்கள் பலதடவை
கலந்து ஆலோசித்து இச்சங்கத்திற்கென நானும் உயர்திரு பா. கோவிந்தசாமி
செட்டியார் அவர்களும் சேர்ந்து ஓர் கட்டிடத்தை வாங்கிக் கொடுத்து விடுவதென
தீர்மானித் திருக்கிறோம். உயர்திரு. கோவிந்தசாமி செட்டியார் அவர்கள்
சீர்திருத்த இயக்கத்தில் கொண்டுள்ள பற்றுதலுக் கும் ஊக்கத்திற்கும் தயாள
குணத்திற்கும் நான் மனமார்ந்த நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறேன்.
கட்டடத்தைக் கூடிய சீக்கிரம் வாங்கி
முடித்துவிடுகிறோம். சங்கத்தையும் அடுத்த மாதம் அதாவது ஆவணி மாதம் பத்துப்
பன்னிரண்டு தேதிக்குள் நிறுவிவிட வேண்டுமென விரும்புகிறேன்.
நிற்க, நாம் ஆரம்பிக்கப் போகும் சங்கத்தின் முக்கிய நோக் கங்கள் சிலவற்றை உங்கட்குச் சொல்ல விரும்புகிறேன்.
1. மக்கள் பிறவியில் உயர்வு தாழ்வு கற்பிக்கும் வருணாசிரம தருமத்தையும், தீண்டாமையையும் ஒழித்தல்.
2. பெண்களுக்கு உரிமை அளித்தல்.
3. அறிவு விருத்திக்கான கல்வியைப் போதித்தல்.
4. சிக்கன முறையைக் கைக்கொள்ளுதல்.
5. அறிவிற்குப் பொருத்தமற்ற பழக்க
வழக்கங்களை நீக்குதல் ஆகியவைகளே குறிப்பிடத்தக்கன.
இவையாவும் நீங்கள்
ஒவ்வொருவரும் மனப்பூர்த்தியாய் விரும்பும் சீர்திருத்தங்களே யாகுமாதலால்
இச்சங்கம் நிறுவுவதற்கான யோசனைகளையும் அபிப்பிராயங்களையும் தெரிவித்து
நிகழ்ச்சிக் குறிப்பில் கண்டுள்ள விஷயங்கள் எல்லாம் தீர்மானிக்கும்படி
உங்கள் யாவர்களையும் வணக்கமாய் கேட்டுக் கொள்ளுகிறேன் என் பேசிமுடித்தார்.
முகவுரை முடிந்ததும் நிறுவப்போகும்
சங்கத்திற்கு பெயரிடுவதை பற்றி பல நண்பர்கள் பேசியபிறகு தமிழர் சீர்திருத்த
சங்கம் என்று பெயரிடுவதாய் தீர்மானிக்கப் பட்டது. பின்னர்
பொதுக்கூட்டத்தில் உறுதிசெய்து கொள்ளும் வண்ணம் கீழ்க்கண்டவர்கள் கொண்ட ஒரு
நிருவாகக் கமிட்டி தேர்ந்தெடுக்கப்பட்டது.
உத்தியோகஸ்தர்கள்
தலைவர்: திரு. ஓ. இராமசாமி நாடார் அவர்கள்,
உபதலைவர்: திரு. பா. கோவிந்தசாமி செட்டியார் அவர்கள்,
காரியதரிசி: திரு. கோ. சாரங்கபாணி அவர்கள்,
உதவி காரியதரிசி: திரு. ச. கோபால் அவர்கள்,
பொக்கிஷதார்: திரு. அ. இராஜகோபால் அவர்கள்
கணக்குப் பரிசோதகர்: திரு. அ. அதிசயம் அவர்கள்
கமிட்டி அங்கத்தினர்கள்
திருவாளர்கள் வெ. சோமசுந்தரச் செட்டியார்,
கோ. இராமலிங்கத்தேவர், அ.சி. சுப்பையா, வி. தாமோதரன், ரா. து.
கோவிந்தசாமி, மு. ரெ. முத்துக்கண்டியார், த.வ.குமார சாமி, ச. குப்புசாமி,
பூ. ரா. கோவிந்தசாமி, ரெ. திருவேங்கடம், அ. சு. நாராயணசாமி, எ. ஆ.
சிவராமபிள்ளை.
27-07-1930ம் தேதிக்குள் சங்கத்திற்கு சட்ட திட்டங் களைத் தயார் செய்வதற்கென கீழ்க்கண்டவர்களடங்கிய கமிட்டி ஒன்று நியமிக்கப்பட்டது.
திருவாளர்கள். அ. அதிசயம், சு. கோபால், ரா. து. கோவிந்தசாமி, அ. சி. சுப்பையா, கோ. சாரங்கபாணி.
03-08-1930ந் தேதி ஞாயிற்றுக்கிழமை
சிங்கப்பூர் இந்திய சங்கத்திடலில் பொதுக்கூட்டம் கூடுவதெனவும் அக்கூட்
டத்தில் நிருவாக கமிட்டியார்களின் அங்கீகாரம் பெற்ற சட்டதிட்டங்கள் ஆஜர்
செய்யப்பட வேண்டு மென்றும் தீர்மானிக்கப்பட்டது.
பின்னர் தலைவர் அவர்கள் முடிவுரை கூறினார்.
--------------------- தந்தை பெரியார்- "குடிஅரசு" - சொற்பொழிவு - 27-07-1930
17 comments:
என்.வி.என் (1912-1975)
என்.வி.என். என்று திராவிடர் இயக்கத்தாரால் அன்போடு விளிக்கப்படும் மானமிகு என்.வி. நட ராசன் அவர்களின் நினைவு நாள் இந்நாள் (1975).
அச்சுக்கோப்பாளராகத் தன் வாழ்வைத் தொடங் கிய இவர் தொடக்கத்தில் காங்கிரஸ்காரர்தான். 1937இல் தமிழ் மண்ணைத் தட்டி எழுப்பிய தந்தை பெரியார் தலைமை தாங் கிய அந்த இந்தி எதிர்ப்புப் போராட்டம் மொழி மான - இனமான - தன்மானப் போர் பல திக்குகளிலும் சிதறிக்கிடந்த தமிழர்களை ஓரினம் என்னும் கோட் பாட்டுக்குடையின் கீழ் கொண்டு வந்து நிறுத் தியது; அதில் அணி வகுத்து வந்த மெலிந்த உருவச் சிப்பாய்தான் என்.வி.என். என்னும் போராளி! திராவிடன் இதழையும் பிற்காலத்தில் நடத்தியவர்.
என்.வி.என். அவர் களைப் பற்றி அறிஞர் அண்ணாவின் படப் பிடிப்பு மிகவும் பொருத்த மானது.
திராவிடர் கழகத்தில் இருந்தபோது அதன் வளர்ச்சிக்காகத் தன்னல மற்று தம்மையே ஒப் படைத்துக் கொண்டு உழைத்தவர் என்.வி.என். தந்தை பெரியார் அவர்கள் அவர்மீது பேரன்பு பொழிந்த தோடு நிற்கவில்லை.
எந்த அளவுக்கு என்றால் தாம் எங்கே சென்றாலும் காரிலோ, வண்டியிலோ என்.வி.என்.னைத் தம் முடன் அழைத்துச் செல்லு ம் அளவுக்கு! கொள் என்றால் வாயைத் திறப்பதும் கடி வாளம் என்றால் வாயை மூடிக் கொள்வதும் குதிரை களுக்கு மட்டுமே சொந்த மான இயல்பு இல்லை.
சில சந்தர்ப்பவாத அரசியல் வாதிகளிடமும் அந்தத் தவறான தடம் புரளும் போக்கு உண்டு; ஆனால் என்.வி.என். அத்தகைய கோழை அல்லர். கொள்கைக் குன்று என்று அண்ணா அவர்கள் அகமகிழ வியந்துள்ளார் (சென்னை சூளையில் அண்ணா ஆற்றிய உரை 6.6.1963).
அண்ணா சொன்னது வெறும் சொற்கள் அல்ல; இந்தி எதிர்ப்புப் போராட் டத்தில், தாம் மட்டும் அல்ல; தம் வாழ்விணையர் புவனேசுவரி அம்மை யாரை சிறைக்கோட்டம் ஏகச் செய்தவர் (கைக் குழந்தையுடன் - அவர் தான் பிற்காலத்தில் மத்திய அமைச்சராக இருந்து விபத் தில் மரணம் அடைந்த என்.வி.என். சோமு).
எல்லாவற்றையும்விட ஒரு சிறப்புண்டு அவருக்கு இவர் என் செயலாளர் மட்டுமல்ல - உண்மை யான தொண்டாற்றிய (Sincere) சீடர் என்றாரே அதைவிட வேறு என்ன பாராட்டு வேண்டும்?
- மயிலாடன்
Read more: http://viduthalai.in/e-paper/85191.html#ixzz39NkMsmFO
உங்களுக்கு எந்த ஜாதியில் இணைய விருப்பம்?
ஜேஸ்வா அய்சக்: அய்யா, நான் கிறிஸ்தவ சமுதாயத்தைச் சேர்ந்தவன். ஹிந்து மதத்திலிருந்து மூன்று தலை முறைகளுக்கு முன்னால் மாறிய குடும்பம் எங்களுடையது. எங்களைத் தாய் மதத் திற்கு திரும்பச் சொல்லி ஹிந்து அமைப் புகள் சொல்கின்றன. அப்படி நாங்கள் மாற முன் வந்தால் எங்களை இப்போதிருக்கிற ஜாதிய அடுக்கில் எங்கே வைப்பீர்கள்?
ராம.கோபாலன்: உங்களுக்கு எந்த ஜாதியில் இணைய விருப்பம்? அதைச் சொல்லுங்கள்; எந்த ஜாதியிலும் நீங்கள் இணைய முடியும். அதை வேறு யார் ஏற்றுக் கொள்கிறார்களோ, இல்லையோ; நான் ஏற்றுக்கொள்கிறேன். பிறப்பினால் ஜாதியா? செயலினால் ஜாதியா? நீங்கள் எந்த ஜாதியில் பிறக்க வேண்டும் என்பதை நீங்களா தீர்மானித்தீர்கள்? நீங்கள் உங்கள் பெற்றோர்களைத் தீர்மானிக்க முடியுமா? நீங்கள் முதலில் சோ எழுதிய எங்கே பிராமணன்? நூலைப் படித்துப் பாருங்கள். அப்போது இதைப்பற்றி நீங்கள் புரிந்து கொள்ள முடியும். புரிந்து கொள்வீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது
(துக்ளக் 6.8.2014 பக்.81).
இவர்கள் எவ்வளவுப் பெரிய கோணிப் புளுகர்கள் - திரிபு வேலைக் கில்லாடிகள் என்பதற்கு இந்தப் பதில் ஒன்று கூடப் போதுமானதுதான். எடுத்த எடுப்பிலேயே நீங்கள் எந்த ஜாதியிலும் இணைய முடியும் என்று சொல்கிறார். அதை இவர் ஏற்றுக் கொள்கிறாராம். இந்து மதத்தில் இப்படிச் சொல்லுவதற்கு இவ ருக்கு என்ன அருகதை?
இதனை சங்கராச்சாரியார் ஏற்றுக் கொள்வாரா? இல்லை ஜீயர்தான் ஏற்றுக் கொள்வாரா?
இப்பொழுது பிற மதத்திலிருந்து இந்து மதத்திற்கு மாற்றியுள்ளார்களே - அவர் களை எல்லாம் விரும்பிய ஜாதியில்தான் சேர்த்துக் கொண்டு இருக்கிறார்களா?
தீண்டாமைப் பெரு நோய்ப் பீடித்த இந்து மதத்திலிருந்து பெரும்பாலும் தாழ்த்தப்பட்டவர்கள் கிறிஸ்துவ மதத் திற்கோ, முஸ்லீம் மதத்துக்கோ சென்றுள் ளனர்; அவர்கள் மீண்டும் இந்து மதத்திற் குள் வந்து நாங்கள் பிராமண ஜாதியில் இணைய விரும்புகிறோம் என்று சொன் னால் இவர்களின் அர்த்தமுள்ள இந்து மதம் ஏற்றுக் கொள்ளுமா? அப்படி வரும் போது அந்த மக்களை பிராமண ஜாதியில் தான் சேர்க்க வேண்டும் என்று சங்கர மடத்தின் முன்னோ, ஜீயர் முன்னோ முற்றுகைப் போராட்டத்தை நடத்த முன் வருவாரா இந்த ராமகோபாலர்?
முதலில் அப்படி சொல்லிவிட்டு, அடுத்த வரியில் அனுமார் தாண்ட வத்தைக் கவனிக்க வேண்டும். நீங்கள் எந்தஜாதியில் பிறக்க வேண்டும் என்பதை நீங்களா தீர்மானித்தீர்கள்? என்று விதாண் டாவாதம் பேசுவது ஏன்? இதன் பொருள் என்ன? ஜாதி என்பது நாம் தீர்மானிக்கா மலேயே வந்தது; அதனை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதுதானே!
ஒரு வரியைச் சொல்லி, அடுத்த வரியிலேயே பித்தலாட்டம் செய்யும் இந்தப் பூணூல்களைப் புரிந்து கொள்ள வேண்டும்.
சோவின் எங்கே பிராமணன்? என்னும் நூலைப் படிக்கச் சொல்லுகிறார். பாவம் சோ.
நான் வேதங்கள் உபநிஷத்துகள், சாத்திரங்கள், புராணங்களை ஒழுங்காக படிக்கவில்லை என்று ஒப்புக் கொண்டு விட்டு எழுதுகிறார் சோ. அவரைத் துணைக்கழைப்பதுதான் வேடிக்கை.
நான்கு வருணங்கள் பிறப்பின் அடிப்படையில் ஏற்படுத்தப்பட்டவை யல்ல. குணம், வாழும் வகை ஆகியவற் றின் அடிப்படையில் ஏற்படுத்தப்பட்ட இந்த நான்கு வகைகள் காலப் போக்கில் பல மாற்றங்களைச் சந்தித்து பிறப்பின் அடிப்படையில் ஏற்படுகிற பிளவுகளாக உருவெடுத்து விட்டன என்று எழுது கிறாரே சோ.
அப்படியா சங்கதி? இதனை சங்கராச் சாரியார் ஏற்றுக் கொள்கிறாரா?
இந்த ஜாதி தர்மமேதான் உள்ளூர அவரவர்களின் குணமாக இருக்குமாத லால் - குணத்தால் சதுர்வர்ணம் பிரிவதாக பகவான் சொன்னதும் (கீதையில் கிருஷ்ணன்) பிறப்பால் இப்படி ஜாதியாகப் பிரிவதும் ஒன்றேதான் ஒன்றுக்கொன்று முரணல்ல என்று கூறுகிறாரே சங்கராச் சாரி சந்திரசேகேந்திர சரஸ்வதியார் (தெய்வத்தின் குரல் பார்க்க)
பிறப்பில் வருவது ஜாதி குணம் என்று மட்டைக்கு இரண்டு கீற்றாக கிழித்துச் சொல்லி விட்டாரே - என்ன பதில்?
இன்னொன்று முக்கியம்: ஸ்மார்த்தர் களாக இருக்கின்ற நாம் ஸ்மிருதியிலே என்ன சொல்லியிருக்கிறதோ, அதைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று சங்கராச் சாரியார் எழுதியுள்ளார்.
சரி.. அந்த மனுஸ்ருதி என்ன கூறு கிறது?
அந்தப் பிர்மாவானவர். இந்த உல கத்தைக் காப்பாற்றுவதற்காக தன்முகம், தோள், தொடை, பாதம் இவைகளினின்று உண்டான பிராமண, க்ஷத்திரிய, வைசிய, சூத்திர வருணத்தார்க்கு இம்மைக்கும் மறுமைக்கும் உரிய உபயோகமான கருமங்களைப் பகுத்தார் (மனுதர்மம் அத்தியாயம் 1 சுலோகம் 87),.
ஆக பிர்மா எனும் கடவுள் உண் டாக்கும் பொழுதே பிராமணர், க்ஷத்தியர், வைசியர், சூத்திரன் என்ற படைத்து விட்ட பிறகு, குணம், வாழும் வகை ஆகிய வற்றின் அடிப்படையில் ஏற்படுத்தப் பட்டவை தான் இந்த வருணங்கள் என்ற சோவின் கூற்று அடிப்பட்டுத் தலைக்குப் புற விழுந்து விடுகிறதே!
பாவம் பார்ப்பனர்கள்! சாஸ்திரங்களில் உள்ளதை உள்ளபடியே காப்பாற்ற வழி தெரியாமல், வக்கு இல்லாமல் அதே நேரத்தில் தந்தை பெரியார் எழுப்பிய அடிப்படைப் பகுத்தறிவு சிந்தனை என்னும் சூட்டுக்கோலின் வலி பொறுக்க முடியாமல் - முகம் கொடுக்க முடியாமல், புதிய முறையில் ஏதாவது வெண்டைக் காய், விளக்கெண்ணெய் வியாக்கியானம் செய்தாவது தலை தப்புமா என்று பார்க் கிறார்கள்.
அவர்களுக்காகப் பரிதாப்படுவோம் - எச்சரிக்கையாக!
- கருஞ்சட்டை
Read more: http://viduthalai.in/e-paper/85189.html#ixzz39NkjIfuh
சிவன் மனைவி காவேரிக்கு மசக்கையாம்! பிரசவம் நடந்தது எப்பொழுது?
18அய்க் கூட்டினால் 9. ஒன்பது என்பது நல்ல எண் என சொல்லுவாராம். ஒரு எண்ணிக்கை நிபுணர். ஆனால், பதினெட்டின் சிறப்பும், இந்த நாளில் ஆடிப்பெருக்கு கொண்டாடுவதன் காரணமும் உண்டாம்?
பார்வதிதேவி ருதுவான மாதம் ஆடி. ஆடி முதல் தேதியில் வயதுக்கு வந்ததாகச் சொல்வ துண்டு. வயதுக்கு வந்த பெண்களை இக்காலத்தில் தீட்டு என்ற காரணத்துக்காக 16 நாட்கள் வரை வீட்டிலிருந்து விலக்கி வைப்பார்கள். அக்காலத்தில் 18 நாட்கள் விலக்கி வைத்துள்ளனர்.
அதன்பிறகு சடங்கு என்ற நிகழ்ச்சியை நடத்துவர். பார்வதிதேவி வயதுக்கு வந்த பதினெட்டாவது நாளே ஆடிப் பெருக்கு ஆகும். இந்நாளில் நீர்நிலை கரைகளில் மக்கள் குடும்பத்துடன் சேர்ந்து கூட்டாஞ்சோறு சமைத்து உண்பர்.
பெண்கள் காவிரியில் குளித்து ஆற்றங்கரையில் ஒவ்வொருவரும் பூஜை செய்ய ஒரு இடத்தைப் பிடித்துக் கொள்கின்னர். அந்த இடத்தை சுத்தம் செய்து, பசு சாணத்தால் மெழுகி அதன் மேல் வாழை இலையை விரித்து, பிள்ளையார் சிலை வைத்து அதன் முன் அகல்விளக்கு ஏற்றி வைக்கின்றனர்.
பூஜையில் வெற்றிலை, பாக்கு, பழம் படைத்து, பத்தி, கற்பூரம் காட்டி, காவிரி உருவாகக் காரணமான விநாயகருக்கு பூஜை செய்கின்றனர். பூஜையில் தேங்காய் பாலை பொங்க பொங்க காய்ச்சி, படைக்கப்பட்ட நைவேத்யம் மற்றும் தேங்காய், வெல்லம், புளி, தயிர் சாதனங்கள் அடங்கிய சித் ரான்னம் படைக்கின்றனர்.
இக்காலத்தில் காவிரி தாய் மசக்கையாக (கர்ப்ப காலம்) இருப்பதாக கருதி படைக்கப்படுகிறது. வீட்டிலுள்ள மூத்த பெண் படையலுக்கும், காவிரித் தாய்க்கும் தீபாராதனை செய்து பூஜையை நிறைவு செய்வார்.
சிவனின் மனைவியாக காவிரி போற்றப்படு கிறாள்.கைலாயத்தில் சிவன்-பார்வதி திருமணத்தின் போது, வடபுலம் தாழ்ந்தது. இதனால் அகத்திய முனிவரை, தென்புலம் சென்று பூமியை சமநிலை யாக்குமாறு சிவபெருமான் பணித்தாராம். சிவனை திருமணம் செய்வதற்காக, பார்வதிதேவி ஒற்றைக் காலில் தவமிருந்தபோது, கையில் ஒரு மாலையும் வைத்திருந்தாள். அந்த மாலையை ஒரு பெண் ணாக்கி, அகத்திய முனிவரிட்ம வழங்கினாள் பார் வதி.
அவரும் அந்தப் பெண்ணை தன் கமண்ட லத்தில் அடக்கி தென்னகம் நோக்கி வந்தார். அவரது கமண்டலத்தில் இருந்து வழிந்த தண்ணீரே காவிரியானது. கமண்டலத்தில் மீதமிருந்த தண் ணீரை அகத்தியர் எடுத்துச் சென்று, தான் வசித்த பொதிகை மலையில் கொண்டுவிட அது தாமிர பரணியானது. இக்காரணத்தால் சிவபெருமானின் மனைவியாக போற்றப்படுகிறாள் காவிரி.
திருச்சி மலைக்கோட்டையின் உச்சியில் மகேந்திர பல்லவன் காலத்து குடவரைக் கோயில் ஒன்றுள்ளது. இங்கு சடைமுடியில் கங்கையைத் தாங்கியபடி அமர்ந்திருக்கும் சிவபெருமானும், பக்கத்திலேயே பார்வதிதேவி நின்ற கோலத்தில் இருப்பதையும் தேவகணங்கள் சுற்றி இருப்பதும் வடிவமைக்கப்பட்டுள்ளன.
ஏற்கெனவே சடைமுடியில் இரண்டாவது மனை வியைத் தாங்கிய சிவபெருமான், மலைக்கோட் டையின் பக்கத்திலேயே ஓடும் காவிரியின் மீதும் மோகம் கொண்டுவிடக் கூடாது என்ற கவலையில் பார்வதி தேவி நின்றபடியே காவல் இருக்கிறாராம். (கடவுளின் யோக்கியதை இதுதான்!) சிவபெரு மானின் மனைவியாக கருதப்படும் காவிரியன்னை, விஷ்ணுவுக்கு தங்கையாகிறாள்.
அண்ணனின் சீர்வரிசை:
சாதாரண மக்களே காவிரியன்னைக்கு பூஜை கள் செய்யும்போது, அவளது அண்ணனான ரங்கநாதர் சும்மாயிருப்பாரா? ரங்கத்தில் புகழ் பெற்ற அம்மா மண்டபம் படித்துறையில் காவிரிக்கு சீர்கொடுக்கும் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடக்கிறது.
ஆடிப்பெருக்கு நாளன்று ரங்கம் கோயிலில் இருந்து உற்சவர் நம்பெருமாள் புறப்பாடாகி, அம்மா மண்டபம் படித்துறைக்கு எழுந்தருள்வாராம். அங்கு சுவாமிக்கு திருமஞ்சனம் நடக்கும். மாலை வரை பெருமாள் அங்கு ஆஸ்தானமிருப்பார். பெரு மாளின் சீதனமாக தாலிப்பொட்டு, பட்டு மற்றும் மங்களப் பொருட்கள் ஆற்றில் விடப்படும்.
தம்பதியருக்குள் அற்ப விஷயங்களுக்காக பிரிவினை ஏற்பட்டாலும் கருத்து வேறுபாடுகளை களைந்து மீண்டும் ஒன்றுசேர வேண்டும் என்பதை வலியுறுத்தவே ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதி களை பிரிப்பதற்கான காரணமாக புராணங்கள் கூறுகின்றன.
புதிதாக திருமணமாகி புகுந்த வீட்டுக்கு சென்ற தனது பெண்ணை இம்மாதத்தில் தான் ஒரு தாய் சீர் செய்து தனது வீட்டுக்கு அழைத்து வருவாள். இம்மாதத்தில் தனது தாய் வீட்டில் இருக்கும் பெண் அனைத்து சாஸ்திர சம் பிரதாயங்களையும் கற்று கொள்வார்கள். கட்டுப் பாடாக குடும்பம் நடத்துவது எவ்வாறு எல்லோ ரையும் அனுசரித்து எவ்வாறு நடந்த கொள்வது தொடர்பில் சொல்லிக்கொடுப்பார்.
குழந்தை செல்வம், நீடித்த ஆயுள், வாழ்வில் சுபிட்சம் பெற ஆடிப்பெருக்கன்று பெண்கள் ஆற்றங்கரைக்கு சென்று சிறப்பு வழிபாடு நடத்துவார்கள். சுமங்கலி பெண்கள் மாங்கல்ய பூஜை செய்து தாலிச்சரடை மாற்றிக்கொள்வார்கள். இந்த விழா இன்று (3.8.2014) கொண்டாடப் படுகிறது.
ஆடி பதினெட்டாம் நாள் காவிரியில் புதுவெள்ளம் பெருக்கெடுத்து ஓடிவரும்.
அப்போது காவிரியைப் பெண்ணாகவும், சமுத்திர ராஜனை ஆணாகவும் கருதி காவிரிப் பெண் தனது கணவரான சமுத்திர ராஜனை அடைவதை மங்கலம் பொங்கும் விழாவாக காவிரி டெல்டா மக்கள் கொண்டாடி வருகிறார்கள்.
ஆடிபதினெட்டாம் நாள் காவிரிப் பெண்ணுக்கு மசக்கை என்று கூறி மக்கள் பலவகையான அன்னங்களை தயாரித்து கொண்டு போய் காவிரி கரையில் வைத்து நோன்பு நோற்பார்கள். (பிரசவம் பார்த்தவர்கள் யாராம்?)
கணவனைச் சென்றடையும் காவிரிக்கு மங்கல பொருட் களான மஞ்சள், பனை ஓலையால் செய்யப்பட்ட காதோலை, கருகுமணிமாலை, வளையல், அரிசி, வெல்லம், பழங்கள் ஆகியவற்றை வழங்கி பூஜை செய்வர்.
புதுமண இணையர்கள் அதிகாலை 4 மணிக்கே எழுந்து காவிரி கரைக்கு சென்று எண்ணெய் தேய்த்து தலையில் அருகம்புல், வெற்றிலைபாக்கு, வாழைப்பழம் வைத்து ஆற்றில் மூழ்கி குளிப்பார்கள். பின்னர் அவர்கள் அணிந்திருந்த ஆடையை களைந்துவிட்டு புத்தாடை அணிந்து கொள்வர். தொடர்ந்து காவிரிக் கரையோரம் உள்ள காவல் தெய்வங்களின் சன்னதிகளுக்கு சென்று வழிபடுவர்.
பெண்கள் மாங்கல்ய பூஜை செய்து புது தாலிக் கயிறை(மாங்கல்ய சரடு) அணிந்து கொள்வர். சிறுவர்கள் சிறிய அளவிலான மரச்சப்பரம் செய்து இழுத்துச்செல்வர். திருச்சி சிறீரங்கம், தஞ்சை திருவையாறு, ஒகேனக்கல் மேட்டூர், பவானி கூடுதுறை, மயிலாடுதுறை போன்ற காவிரி கரையோரம் உள்ள கோவில்களில் ஆடிப்பெருக்குவிழா ஆண்டுதோறும் கோலாகலமாக கொண் டாடப்படுகிறது.
ஏற்கெனவே சாராயம் குடித்தவனை தேள் கொட்டியதைப்போல உளறுவதற்கும் ஓர் அளவேயில்லையா?
காவேரி - சிவனுக்குப் பெண்டாட்டியாம் - காவேரிக்கு மசக்கையாம். சிறுபிள்ளைகள் சிறுநீர் கழித்துக் கூட்டாஞ்சோறு ஆக்குவார்களே - அதே நிலைதான் இந்தப் பக்தக் கோடி களுக்கும் போலும்!
அய்யய்ய... எழுதக் கைக் கூசுதே, வெட்கக்கேடு!
Read more: http://viduthalai.in/page-5/85160.html#ixzz39Nlcer3Q
களையிழந்த காவிரி
ஆடிப் பெருக்கைப்பற்றி அடேயப்பா நம் நாட்டுத் தொ(ல்)லைக் காட்சிகள் அள்ளி விடும் தகவல்கள் கொஞ்ச நஞ்சமல்ல! அதே நேரத்தில், தஞ்சாவூர் மாவட்டத்தில் களையிழந்து காணப்பட்டதாம். காரணம் என்ன தெரியுமா? காவிரியில் தண்ணீர் அறவேயில்லை! காவிரிதான் சிவபெருமானின் பெண்டாட்டியாயிற்றே! அவன் அருளால் ஆடிப் பெருக்கில் காவிரி கரை புரண்டு ஓட வேண்டாமா? இந்தக் கேள்வியை ஏன் இந்த ஊடகங்கள் கேட்பதில்லையாம்? இதில் என்ன பரிதாபம் என்றால் திருவையாறு போன்ற பகுதிகளில் காவிரியில் தண்ணீர் வரா விட்டால் என்ன? வெறும் ஆற்று மணலிலேயே படையல் போட்டு சாமி கும்பிட்டனராம்.
பக்திக் கிறுக்குக்கும், போதைக்கும் அளவேயில்லையா?
Read more: http://viduthalai.in/e-paper/85222.html#ixzz39TkQndYH
இன்றைய ஆன்மிகம்?
வழக்கு
பெங்களூருவில் ஒரு கோயில்; அதன் பெயர் குண்டு முனீஸ்வரன்; இந்தக் கோயிலுக்குப் பூட்டு வாங்கிக் கொடுத் துப் பிரார்த்தனை செய்தால் வழக்குகளில் வெற்றி கிட்டுமாம்!
பேஷ்! பேஷ்!! கொலைக்காரன்கூட பூட்டு வாங்கிக் கொடுத் துப் பிரார்த்தனை செய் தால் வழக்கு வெற்றி தானே!
ஒவ்வொரு கொலைக்கும் ஒவ்வொரு பூட்டோ!
Read more: http://viduthalai.in/e-paper/85226.html#ixzz39Tknf8Yr
தேவையான தண்டனையே!
முகநூல் என்பது அரட் டைக் கச்சேரியாகவும் ஆபா சத்தை அள்ளி வீசும் மேடை யாகவும் வளர்ந் தோங்கி(?) வருகிறது.
பெங்களூருவிலிருந்து ஒரு தகவல்: இவ்வூரைச் சேர்ந்த சமூகத் தொண்டரான பிரபா என்ற பெண்ணை பொது இடத்தில் மானபங்கம் செய்ய வேண்டும் என்று எழுதியுள்ளார் ஒருவர். இவ் வளவுக்கும் அந்தப் பெண் செய்த தவறு(?) என்னவாம்?
மூடநம்பிக்கைகளுக்கு எதிராக விழிப்புணர்வுப் பிரச்சாரம் செய்து வருகிறார்.
இதற்காக ஒரு அமைப்பையே நடத்தி வருகிறார். இத்தகைய முற்போக்குப் பெண் மணியைப் பற்றி தான் இவ்வளவுக் கேவலமாக வி.ஆர். பட் என்ற பார்ப்பனர் பிரபா போன்ற பெண்களின் தலை முடியைப் பிடித்துத் தெருவுக்கு இழுத்து வந்து பலாத்காரம் செய்ய வேண்டும் என்று முகநூலில் எழுதினார்.
குண்டர் சட்டத்தில் கைதாகலாம் என்று தெரிகிறது. இதற் குள் எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்ற பாணியில் அவர் ஆர்.எஸ்.எஸ்.காரர் அல்ல என்று தெரிவித்துள்ளது - ஆர்.எஸ்.எஸ். அமைப்பு!
Read more: http://viduthalai.in/e-paper/85224.html#ixzz39TkzhCZd
புதிய கருத்துகள்
மனித அறிவு நாளுக்கு நாள் மளமள வென்று மேலே போய்க்கொண்டே இருக்கிறது. அதையொட்டி மக்களைக் கொண்டு போகவேண்டாமா? புதிய உலகத்திற்குப் புதிய உணர்ச்சிகள், புதிய கருத்துகளைக் கொண்டு செலுத்த வேண்டாமா?
(விடுதலை, 2.2.1959)
Read more: http://viduthalai.in/e-paper/85210.html#ixzz39TlFTn8U
ஆடிப்பூரத்திற்கு விடுமுறை ஏன்?
தை பூசம், தை அமாவாசை பங்குனி உத்திரம் வைகாசி விசாகம், ஆடி அமா வாசை ஆவணி அவிட்டம், கோகுலாஷ் டமி, திருக்கார்த்திகை தீபம் இன்னும் ஏராளமான இந்துக்கள் பண்டிகைகள் உள்ளன. இதில் குறிப்பாக ஆடிப்பூரம், ஆடி வெள்ளி போன்றவைக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் லோக்கல் ஆலிடே (விடுமுறை விடுகின்றனர்) 30.7.2014 அன்று ஆடிப்பூரம், காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசு விடுமுறையாக அறிவித்திருந்தனர். மாவட்ட நிர்வாகமே (கலெக்டர்) ஆடிப்பூரம் என்றால் என்ன? இதற்கு என் ஒரு நாள் விடுமுறை? இதனால் எவ் வளவோ அரசுப் பணிகள் தேங்கி இருக் கின்றன? பொது ஜனங்களில் பலருக்கு பலவிதமான தேவைகள் இருக்கின்றன.
இந்த விடுமுறையால் அவர்களுக்கு அவஸ்தைகள் ஏராளம்! இதில் இன்னொரு விஷயம் என்னவென்றால் ஆடிப்பூரம் (விடுமுறை) என்பது பல பொதுமக்களுக்கு தெரியவில்லை. இது போன்ற விடுமுறை நாட்களில் பாமரமக்கள் திண்டாடி வரு கின்றனர். கலாச்சாரம், பண்பாடு, பழக்க வழக்கம் என்று மாட்டையும், குரங்கையும், மாட்டின் சாணியையும் சாமியாகக் கும்பிடும் காட்டுமிராண்டித்தனம் (மூட நம்பிக்கை) என்று காரல்மார்க்ஸ் என்பவர் கூறியுள்ளார். அதன்படி பார்த்தால் யாராவது எதையாவது சாமியென கும்பிடட்டும் அது அவரவர் விருப்பம். ஆனால் ஆடிப்பூரம் என்பது பெண் தெய்வமான அம்பாள் ருதுவான நாள் அதைத்தான் ஆடிப்பூரம் என்று ஆன்மீகத்தில் சொல்லப்படுகிறது! இதற் கெல்லாமா (விடுமுறை) விடுவது? பிரா மணர்கள் வகுத்துள்ள இந்த சம்பிரதாய மெல்லாம் அவர்களுக்கு (சாதகமான) ஆதாயத் தேவைக்காக வகுத்துக் கொண் டனர். மக்களைச் சிந்திக்க விடாமல் மூட நம்பிக்கையில் வைத்திருக்கும் இதுபோன்ற நாட்களில் (விடுமுறை) தேவையற்றது!
சமுதாய தந்தை பகுத்தறிவு பகலவன் பெரியாரின் சொற்களையும், பகுத்தறிவுப் பாடத்தையும் தாங்கள் (கலெக்டர்) அறிந்த தில்லையா? இன்னுமா மூடநம்பிக்கையில் மூழ்கியிருப்பது? ஆடி மாதமென்றால் கூழ் ஊற்றுவது, ஆடுவெட்டுதல், (கோழி) சேவல் காவு கொடுப்பது இதெல்லாம் நம்பிக்கையுள்ளவர்கள் செய்து கொள் ளட்டும் அவர்களின் விருப்பம், ஆனால் விடுமுறை விடுவது சரிதானா? முக்கிய மான அத்தியாவசியமான பணிகள் அதிகம் உள்ளன. ஏழை எளிய பள்ளி மாணவ, மாணவியர்களின் சான்றுகள் தேங்கி கிடக்கின்றன. பாமர மக்களின் பல விதமான தேவைப்பாடுகள் இருக்கும் நிலையில் சாமி ருதுவான (வயதுக்கு வந்த நாள்) விஷயத்துக்கெல்லாம் லோக்கல் விடுமுறை தேவையா? ஆக்கபூர்வமான எண்ணத்தோடு யோசித்து பாருங்கள் உண்மை புலப்படும்! எனது தனிப்பட்ட கருத்து இது! தவறு என்றால் மன்னிக்கவும்!
- ஜெ. கஜேந்திரன், புஷ்பகிரி, காஞ்சி மாவட்டம்
Read more: http://viduthalai.in/e-paper/85215.html#ixzz39TlktT1T
இந்தநாள்
ஷெல்லி
விதையை விதையுங்கள். ஆனால் எந்தக் கொடுங்கோலனையும் அறுக்க விடாதீர்கள்; செல்வத்தைத் தேடுங்கள்; ஆனால் எந்த ஏமாற்றுக்காரனையும் குவிக்க விடாதீர்கள்; ஆடைகளை நெய்யுங்கள்; ஆனால் சோம் பேறிகள் அவற்றை அணியவிடா தீர்கள்; ஆயுதங்களைச் செய்யுங் கள்; ஆனால் அதனை உங்கள் தற்காப்புக்காகவே தாங்கி நில்லுங் கள், என்று உழைப்போர்க்கு உத்தரவு இட்ட உலகமகா கவி ஷெல்லி 4.8.1792 அன்று, சசக்சு (ஸ்ஸெக்ஸ்) மாநிலத்தில் உள்ள பீல்ட் பிளேச என்னும் ஊரில் பிறந்தார். தந்தை திமேதி ஷெல்லி.
கல்வி
ஷெல்லி, பீல்ட் பிளேசே தொடக்கப்பள்ளியில் கற்றபின்னர், ஈட்டனிலுள்ள உயர்நிலைப்பள்ளியில் 1805 ஆம் ஆண்டு பயின்றார். பிரெஞ்சுப் புரட்சியின் விளைவுகள், பள்ளிச் சிறுவர்களைப் புரட்சியாளர்களாக்கிவிடும் என்று அய்யுற்ற அரசு, பிரெஞ்சுப் புரட்சியின் சிற்றொளியும் பள்ளிகளின்பால் சென்றடையாவண்ணம் தடையிட்டு மறைந்தது. 1810 ஆம் ஆண்டு ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத் திற்குப் படிக்கச் சென்ற அவர் படிக்கும் பொழுதே, பல கவிதைகளை எழுதினார்; அனல் தெறிக்கும் கவிதை வரிகள் படித்தோரின் உள்ளங்களில் வெம்பை ஏற்றின! தமது 17ஆம் வயதில் (ஈட்டனில் படிக்கும்பொதே) நாத்திகத்தின் அவசியம், என்னும் நூலை எழுதி ஸ்டக்லி, என்னும் புனைபெயரில் வெளியிட்டார். அந்நூலை (கையெழுத்து) ஆசிரியர்களுக்கும் மற்றோர்க்கும் அனுப்பினார். அந்நூலின் கருத்து வீச்சை உணர்ந்த கல்லூரி நிர்வாகம் அச்சமுற்றது. ஷெல்லியை அழைத்து விசாரணை நடத்தியது.
ஷெல்லியின் முழக்கங்கள்
உரக்க முழங்குங்கள்! ஊழலின் சிம்மாசனத்தின் கீழ் ஒடுங்கிக் கிடந்த ஒவ்வோர் அடிமையும் மனிதனாக விழித்தெழட்டும்! விலங்குகளையும், தலைக் கட்டுகளையும் ஒரு முனகல் கூட இல்லாமல் தைரியமாக எதிர்த்துச் சமாளிக்கட்டும்.
நாங்கள் பயம், அடிமைத்தனம், மத நம்பிக்கை முதலிய வற்றைச் சமாதி செய்துவிட்ட கல்லறையின் மீது பூத்திருந்த மலர் களைக் கண்டு புன்னகை புரிந்தோம்; ஞானத்தின் தீர்க்கத் தரி சனத்தில், மனித குலம் சுதந்திரமாகவும் சமமாகவும் புனிதமாகவும் ஞானம் சான்றதாகவும் இருந்தது உங்களது செயலாற்றலின் பிர மாண்டமான பேரொலி அதன் புயல் வீச்சில் கொடுங்கோலர்களின் சிம்மாசனங்களைச் சிதறடிக்கும் வரையிலும் - விழியுங்கள்! எழுங்கள்! கொடுங்கோலர்களோ இரத்தவெறி கொண்ட, மத நம்பிக்கை கொண்ட மதகுருக்களோதாம் என்றென்றும் ஆண்டு கொண்டே யிருப்பார்கள் என்று அஞ்சாதீர்கள். மரணத்தால் அவர்களே கறைபடுத்தியுள்ள அலைகளைக் கொண்ட மாபெரும் நதியின் கரையிலேதான் அவர்கள் நிற்கிறார்கள். அது ஓராயிரம் படு குழிகளின் ஆழத்திலிருந்து பொங்கி வருகிறது. அவர்களைச் சுற்றிலும் அது நுரைத்துப்பொங்கி, வீங்கிப் புடைக்கிறது. ஊழிப்பெருவெள்ளத்தில் உடைந்து சிதறி மிதக்கும் பொருள்களைப் போல் அவர்களது வாள்களும், செங்கோல்களும், அந்தப் பிரவாகத்தில் மிதந்து செல்வதை நான் காண்கிறேன்.
Read more: http://viduthalai.in/page-3/85209.html#ixzz39TmwzW41
மிகுந்த கோபம் கல்லீரலை பாதிக்கும்
கல்லீரல் மனித உடலின் ஒவ்வொரு உறுப்பு களுக்கும் தேவையான சக்தியை பெற உதவும். அது தன் வேலையை செய்தால்தான் மற்ற உறுப்புகள் சீராக இயங்கும்.
ரத்தத்தை சேமித்து வைத்து உடல் உழைப்பின் போது தேவையான பகுதிகளுக்கு அனுப்பி தசைகளுக்கும், தசை நார் களுக்கும் ஊட்டமளிக்கிறது. கல்லீரலின் சக்தி பாதிக்கப் பட்டால் தசை நாண்கள் சுருங்கி விரிதல், நீட்டி மடக்குதலில் தொய்வு ஏற்பட்டு உடலின் எலும்பு கூட்டமைப்பில் வலி மற்றும் நோய்கள் ஏற்படுகின்றன.
கண்பார்வைக் கோளாறுகள், சரும பாதிப்புகள், விரல் நகங்களில் கோளாறுகளுக்கு காரணம் கல்லீரலின் குறைபாடுகளே! மன இறுக்கம், அதிக கோபம், அதிக உடல் உழைப்பு, மது அருந்துதல், போதை பொருட்கள், போதிய உறக்கமின்மை, கொழுப்பு உணவுகள் கல்லீரலை பாதிக்கிறது.
இதனால் கொலஸ்ட்ரால், ரத்த அழுத்தம், முரட்டுதனம், கடுஞ்சொற்கள், ஒற்றைத் தலைவலி, இருதய நோய்கள், மஞ்சள் காமாலை, கிறுகிறுப்பு, வயிற்று வலி, புளித்த ஏப்பம், ஒழுங்கற்ற மாதவிடாய், நடுக்கம், மரத்துப் போதல், பக்கவாதம் போன்ற நோய்கள் ஏற்படுகின்றன.
கல்லீரலில் கொழுப்பு மிகுந்து விடும் பிரச்சினை களுக்கு எளிதாகவும் மற்றும் மிகவும் திறமையாகவும் வீட்டிலேயே நிவாரணங்களை செய்ய முடியும். இந்த நிவாரணங்கள் பல தலைமுறைகளை கடந்து பயன்படுத்தப் பட்டு மனிதனின் கல்லீரல்களுக்கு உதவி வருகின்றன.
கல்லீரல் கொழுப்பு என்ற இந்த பிரச்சினையினால் தேவையில்லாத கொழுப்புகள் கல்லீரலில் சேர்ந்து, அந்த உறுப்பை நிரந்தரமாக பாதித்து விடுகின்றன. இந்த நோயினால் ஏற்படும் எரிச்சலால், கல்லீரலில் தழும்புகள் ஏற்படவும் மற்றும் அதன் தசைகளை கடினப்படவும் செய்து விடுகிறது.
நீங்கள் பாதுகாப்பாகவும் மற்றும் ஆரோக்கியமாகவும் இருக்க விரும்பினால், வீட்டிலேயே கல்லீரல் கொழுப்பு பிரச்சினைக்கான சிகிச்சைகளை செய்ய வேண்டியது அவசியமாகும்.
மோசமான உணவு முறை மட்டுமல்லாமல், தொடர்ந்து ஆல்கஹாலை அதிகமாக குடித்தல், தொப்பை போன்ற விஷயங்களும் கல்லீரல் கொழுப்பு பிரச்சினை வர காரணமாக உள்ளன.
இந்த பிரச்சினைக்கான காரணம் உணவு முறையை ஒட்டியே துவங்குவதால், ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடத் துவங்குவது நல்லது.
Read more: http://viduthalai.in/page-7/85245.html#ixzz39TnitTb7
இன்றைய ஆன்மிகம்?
திருமணத் தடை
சென்னை தாம்பரம் - காஞ்சிபுரம் சாலையில் உள்ள முடிச்சூர் பிரம்ம வித்யாம்பிகை ஆலயத்தில் கொடுக்கப்படும் கொம்பு மஞ்சளை அம்பிகையின் சன்னிதியில் கட்டி பிரார்த் தனை செய்தால் திருமணத் தடை விலகும்.
திருமண தடை உள்ள வர்கள் திருச்செந்தூர் சுப்பிரமணியர் கோவிலில் உள்ள நாழிக் கிணற்றில் நீராடி, பின்னர் கடலில் குளித்து செந்தூரானை வணங்க வேண்டும். தொடர்ந்து அங்குள்ள வள்ளி குகையை தரிசித்தால் திருமணத் தடை நீங்கும்.
மதுரை - சோழவந்தான் சாலையில் பதினாறு கரவன துர்க்கை ஆலயம் உள்ளது. இந்த அம்மனுக்கு பூமாலை அணிவித்து, அதை பிர சாதமாகப் பெற்று அணிந்து, வீட்டில் வைத்து பூஜித்து வந்தால் விரைவில் திரு மண பாக்கியம் கிட்டும்.
கடவுள் என்ன திரு மணப் புரோக்கரா? திரு மணத் தடை என்று சொல் லப்படுகிறதே - அந்தத் தடையைப் போட்டவர் யாராம்?
Read more: http://viduthalai.in/e-paper/85272.html#ixzz39bulJ5L7
எச்சரிக்கை!
தெலங்கானா நல கொண்டா மாவட்டத்தில் உள்ள லட்சுமிதேவி கூடம் என்னும் கிராமத்தைச் சேர்ந்த கோம்பல்லி சைது - கீதா ஆகிய பெற்றோருக்கு ஒரே குழந்தை ஜான்சி (8 மாதம்).
ஆடு, மாடு, கோழிகள் வளர்த்து வருகின்றனர்.
வளர்ப்புக் கோழி குழந்தை யின் தலையில் கொத்திய தால் ரத்தம் பீறிட்டது.
மருத்துவமனைக்குக் கொண்டு சென்றும் பல னில்லை - பரிதாபமாக பெற்றோரின் ஒரே குழந்தை இறந்து விட்டது.
செல்லப் பிராணிகளை குழந்தை களுடன் விளையாட அனு மதிக்க வேண்டாமே!
Read more: http://viduthalai.in/e-paper/85271.html#ixzz39buvQ9br
தீராது
பார்ப்பனீயமும், மத ஆதிக்கமும் ஒழிந்தாலொழிய இந்தியாவில் யோக்கிய மான ஆட்சியை ஒருக்காலும் நாம் எதிர் பார்க்க முடியாது. பார்ப்பனீய மதத்தாலும், ஆதிக்கத்தாலும் நமது நாட்டுக்கு ஏற்பட்ட கெடுதிகளை எவ்வளவு காலத்திற்கு எடுத்துச் சொன்னாலும் தீராது என்றுதான் சொல்லவேண்டும்.
- (குடிஅரசு, 17.8.1930)
Read more: http://viduthalai.in/page-2/85264.html#ixzz39bvJ4Kj2
தூங்கிக் கொண்டிருக்கும் தமிழக தேசிய நெடுஞ்சாலை துறை
எழுத்துரு அளவு Larger Font Smaller Font
ஆசிரியருக்குக் கடிதம் >>>
தூங்கிக் கொண்டிருக்கும் தமிழக தேசிய நெடுஞ்சாலை துறை
சாலைகள் என்பது பொதுமக்களின் பயணத்திற்கு இதயத்துடிப்பாக, முதுகெ லும்பாக விளங்குகின்றன. சாலைகளுடைய தரம் மிகவும் உயர்ந்திருந்தால் தான் பயணிகளின் பயணங்கள் விபத்தில்லாமல் சிறப்பாக இருக்கும். இந்திய அரசின் தங்க நாற்கர சாலைத்திட்டம் என்பது மிகவும் ஒரு சிறப்பான திட்டம். அந்த சாலைகள் மிகவும் நீண்ட சாலைகள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளையும் மாநிலங்களையும் இணைக்கும் சாலைகளாக அச்சாலைகள் விளங்குகின்றன.
ஒரு மாவட்டத்திற்குள் பயணம் செய்யும்போது அந்த மாநில சாலைகள், மாவட்ட சாலைகள் மற்றும் கிராம சாலைகள் மிகவும் பயன்படுகின்றன. இந்நிலையில் குமரி மாவட்டத்தில் கன்னியாகுமரி முதல் களியக்காவிளை வரையிலான சாலை மத்திய அரசின் கீழ் செயல்படுகிறது. இந்த சாலையைத் தவிர மற்றும் அனைத்துச் சாலைகளும் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் தான் உள்ளன.
இந்நிலையில் சென்னை - திருவனந்த புரம் சாலையை இணைக்கின்ற சாலை நாகர் கோவில் பார்வதிபுரம் முதல் காவல்கிணறு சந்திப்பு வரை உள்ளது. இந்த சாலையானது தேசிய நெடுஞ்சாலை 47 பி என்று அழைக்கப்படுகிறது. இது முழுக்க முழுக்க தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலேயே மிகமிக மோசமான பராமரிப்பு இல்லாத சாலை இது தான்.
பார்வதிபுரம் முதல் காவல் கிணறு வரை இந்த சாலையை சுற்றி ஏராளமான ஆக்கிர மிப்புகள் வழிபாட்டுத் தலங்கள், வணிக நிறுவனங்கள், வீடுகள், விளம்பர தட்டிப் போர்டுகள் என்று இந்த சாலை முழுக்க முழுக்க ஆதிக்கவாதிகளின் ஆக்ரமிப்பில் தான் உள்ளது.
இந்த சாலையை தினமும் ஒவ்வொரு வரும் ஆக்ரமித்து வருகின்றனர். இதன் கோட்டப் பொறியாளர் அலுவலகம் திருநெல்வேலியிலும், உதவிக்கோட்டப் பொறியாளர் அலுவலகம் நாகர் கோவிலி லும் உள்ளது. இந்த ஆக்ரமிப்புகள் தொடர் பாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளைத் தொடர்பு கொண்டும் எந்தவித நடவடிக் கையும் அந்த அதிகாரிகள் எடுக்கவில்லை என்று பொதுமக்கள் வருத்தப்படுகிறார்கள்.
ஆக்ரமிப்புகள் மட்டுமா? இந்த சாலை மிகவும் பழுதடைந்து எங்கு பார்த்தாலும் குண்டும் குழியுமாகக் காணப்படுகிறது. பொதுமக்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் இதுவரை எந்த வித நடவடிக் கையும் அதிகாரிகள் எடுக்கவில்லை.
மேலும் இந்த சாலையில் பல்வேறு இடங்களில் மிக மிக குறுகலான பாலங்கள் தான் இருக்கின்றன. இதனால் இங்கு அடிக்கடி விபத்துகள் நடக்கிறது. இந்த பாலங்களையாவது அதிகாரிகள் அகலப் படுத்துகிறார்களா என்றால் இல்லை. இந்த சாலையை சீர்படுத்தவும் ஆக்ரமிப்புகளை அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் நாகர் கோவிலில் இருக்கும் உதவிக்கோட்டப் பொறியாளர் அலுவலகத்திற்கு சென்றால் அங்குள்ள உதவிக்கோட்டப் பொறியாளர் மற்றும் உதவிப்பொறியாளர்கள் பொதுமக்களிடம் எரிச்சலுடன் பேசுகின்றனர். அன்பாக நடந்து கொள்ளவில்லை என்று பொது மக்கள் வருந்துகிறார்கள்.
தமிழக அரசு ஏன் இந்த தே.தெ.சா. 47 பி - யை கவனிக்கவில்லை குமரிமாவட்டம், தமிழகத்துடன் தான் இருக்கிறதா? தமிழக தேசிய நெடுஞ்சாலைத் துறையும் செயல் படுகிறதா? இல்லை தூங்கிக் கொண்டிருக் கிறதா என்பது புரியாத புதிராகவே உள்ளது. உடனடியாக இந்த சாலையை செப்பனிட்டு ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். இல்லையெனில் ஆதிக்கவாதிகள் ஆக்கிர மித்து இந்த சாலை ஒற்றையடிப்பாதையாக மாறிவிடும். நடவடிக்கை எடுக்குமா? தமிழக அரசு
- கோ.வெற்றிவேந்தன், குமரி மாவட்ட விடுதலை, செய்தியாளர்.
Read more: http://viduthalai.in/page-2/85270.html#ixzz39bvQmrPU
Post a Comment