Search This Blog

17.8.14

வைஷணவாள் செம்பு- பெரியார்

 

இந்திய யூனியனின் மத்திய சர்க்கார் நேரடி நிருவாகப் பொறுப்பிலுள்ள ரயில்வே இலாகாவில் நமது நாட்டு அய்யங்கார் பார்ப்பனர்கள் அடியெடுத்து வந்தவன் சீர்திருத்த வேலையைச் செய்யத் தொடங்கியிருந் தார்கள். இவர்களின் இந்தச் சீர்திருத்தத்தைப் பார்க்கும்போது இந்தத் தொடக்கமே முடிவாகவும் இருந்து விடட் டும் என்று தான் நாம் ஆசைப்படுகிறோம்.


இப்படி நாம் ஆசைப்படுவதற்குக் காரணம், இவர்களின் சீர்திருத்தப் படையை நோக்கும் போது, அய்யர் பார்ப்பனர்கள் என்பவர்கள், அய்யங்கார் பார்ப்பனர் களைப் பற்றிக் கூறும் கிண்டல் தான் நமக்கு ஞாபகத்துக்கு வருகிறது. அய்யர், அய்யங் கார் ஆகிய இருவராகப் பார்ப்பனர்களும், பார்ப்பனச் சமுதாயம் பற்றிய பொதுக் காரியங்களில் ஒருவர்க்கொருவர் எவ் வளவு பகையாயிருந்தாலும் எவ்வளவு கருத்து மாற்றத்திடையேயும் கொள்கைக் காரர்களா இருந்தாலும் அவற்றை யெல்லாம் அப்போது மறந்துவிட்டு ஒன்று கூடிக் கொள்கிறார்கள் பதவி, மற்றபடி அவர்களுக்குள்யேயே ஏதாவது தகராறு என்றால் அது மிக மிகப் பிரபலமாகவும் ருசியுள்ளதாகவும் இருக்கும். 

சர்வதேச வர்த்தமானங்களை அனுசரித்து இந்த இரண்டு வகைப் பார்ப்பனர்களும் கோவில் முறையில் சண்டையிட்டுக் கொண்டு, கோர்ட்டுக்குப் போய் திராவிடன் பணத்தைப் பங்கு போடும் பழக்கம் இப்போது சில காலமாகக் குறிப்பிடத் தகுந்த முறையில் இல்லை யென்றாலும், சுமார்த்தப் பார்ப்பனர்களும், வடகலை அய்யங் கார்களும் சாதாரண வாழ்விலேயே சண்டை பிடித்துக் கொள்வதைச் சர்வ சாதாரணமாகக் காணலாம். ஆனால், அவர்களோடு சற்று நெருங்கிப் பழக வேண்டும். 

அய்யங்கார் பார்ப்பனர்களைப் பற்றிக் குறை சொல்ல வேண்டும் என்றெண்ணுகிற அய்யர் பார்ப்பனர்கள், போடாபோ! எல்லாம் ஒங்க வைஷ்ணவாள் செம்புதான் என்று வேடிக்கையாகவும் அதே சமயத்தில் மானமுள்ள நெஞ்சை ஈட்டியால் குத்துவது போலவும் நறுக் கென்று கூறுவதை நாம் பலமுறை கேட்டிருக்கிறோம். இதற்கு அவர்களும் வேடிக்கையாக ஏதாவது திருப்பிக் கூறுவார்களே தவிர மான ரோஷத்துடன் நம்மைப்போல் கைகலந்து விட மாட் டார்கள்.


இந்த ஷைஷ்ணவாள் செம்பின் ரகசியம் தெரியாதவர்களுக்கு, இதை அநுபவிக்க முடியாது. ஆகவே, அந்த ரகசியத்தைக் கூறி விடுகிறோம். இது பித்தளையினாலோ, தாமிரத்தினாலோ அல்லது இரண்டுங்கலந்தோ செய்யப் படுகிற செம்பு. அடிப்பாகம் (வயிறு) பெருத்திருக்கும். வாயின் விரிவுக்கேற்றபடி கழுத்தும் இல்லாமல் கையே நுழைய முடியாதபடி கழுத்து மிகமிகச் சிறுத்திருக் கும். இந்தச் செம்பு துலக்கியவுடன் நல்ல பயபளப்பாக, முகம் காட்டும் கண்ணாடி போலக் காட்சியளிக்கும். ஆனால் உள் ளேயே அழுக்கு இருக்கும். அது தான் கை நுழைய முடியாதே, அதற்குள் புகுந் திருக்கும் பாதியை - அழுக்கை எப்படிப் போக்குவது? உள்ளே அழுக்கும் வெளியே மினு மினுப்பும் உடையதுதான் அய்யங் கார்கள் செயல்கள் என்பது இதன் ரகசியம்.


நம் நாட்டு ரயில்களில் சமீப காலத்தில் யாரேனும் பிரயாணம் செய்து, ரயில்வே ஜங்ஷன்களில் செய்யப் பட்டிருக்கும் பெயர் மாறுதல்களை உற்றுப் பார்த்திருந் தால், இந்தச் சீர்திருத்தம் என்ன என்பது தெரியும். ஜங்ஷன்களிலுள்ள உணவுக் கடைகளின் பெயர்கள் எல்லாம், சுமார் ஒரு மாதத்துக்கு முன்பிருந்தே மாற்றி எழுதப் பட்டிருக்கின்றன. அய்ரோப்பியன் ரெரிப்ஃரெஷ்மென்ட் ரூம் என்பது அய்ரோப்பியன் ஸ்டைல் ரெரிப்ஃரெஷ் மென்ட் ரூம் என்பதாகவும், இண்டியன் ரெரிப்ஃரெஷ்மென்ட் ரூம் என்பது வெஜிட்டேரியன் (சைவ) ரெரிப்ஃரெஷ் மென்ட் ரூம் என்பதாகவும், முஸ்லிம் டீ ஸ்டால் என்பது ஜெனரல் டீ ஸ்டால் என்பதாகவும் புகுத்தியும் மாற்றியும் எழுதப்பட்டிருக்கின்றன.


இந்தப் பெயர் மாற்றத்திற்குக் கோபால் சாமி அய்யங்கார் ஒருவர் மட்டும் தான் பொறுப்பா? அல்லது சந்தானமய்யங் காரும் சேர்ந்தா? என்பது எப்படியிருந்தாலும், இந்தப் பெயர் மாற்றம் வைஷ்ணவாள் செம்பைத்தான் நினைப்பூட்டுகிறது.


மதம், இனம், ஜாதி, ஆண் அல்லது பெண்ணாயிருத்தல், பிறந்த இடம் ஆகிய வற்றில் ஒன்று அல்லது பலவற்றின் காரணமாக எந்தப் பிரஜைக்கும் எதிராகச் சர்க்கார் பாரபட்சமாக நடக்கக் கூடாது என்று நான்கு நாளைக்கு முன் அரசியல் நிர்ணய நாடக சபாவில் நிறைவேற்றப்பட் டிருக்கிற, அடிப்படை உரிமை என்கிற தீர்மானம் இருக்கிறதே அதை முன்னறிந்து பிரதிபலித்ததுதான் இந்த ரயில்வே கடைகளின் பெயர் திருத்தம் என்றாலும் சரி, தீர்மானம் எப்படிப் பிற நாட்டவர்களின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு, உள் நாட்டில் வர்ணாச்சிரமப் பாகுபாடும் அதன் வக்கிரமப் போக்கும் தலைவிரித்தாட இடங் கொடுக்க உதவுகிறதோ, அதைப் போலவே தான் பெயர் திருத்தமும் வெளித் தோற்றத் தில் மிகவும் உயர்ந்த சமத்துவ முறையிலும் நடை முறையில் வர்ணாச்சிரம முறையிலும் அமைந் திருக்கிறது.


நமது நகைச்சுவையரசு என்.எஸ்.கே. அவர்கள் கூறுவது போல், திராவிட நாட்டிலேயே தீண்டாமை இல்லாத இடம் ரயில்களும் ரயில்வேக்களும்தான். தீண் டாமையைப் பற்றிக் கொஞ்சமும் கவலைப் பட வேண்டாத இந்தத் திராவிட நாட்டு ரயில்வே நிலையங்களில் மட்டும் எதற்காக இந்தப் பெயர் மாற்றம்? இந்து-முஸ்லிம் வித்தியாசத்தை நீக்குவதற்காக என்றால் அது நம் திராவிட நாட்டைப் பொறுத்த வரையிலும், இல்லாத ஒன்றை உண்டென்று பெயர் பண்ணி, அதை ஒழித்துக்கட்ட முயலும் முயற்சியாகும். இந்து - முஸ்லிம் சாயாக்களுக்கு இடமும், அதையொட்டி மதவெறிக்கு இடமுமாக இல்லாத திராவிட நாட்டில், தென்னாட்டு அய்யங்கார் பார்ப்பனர்கள் ஏன் இந்தத் திருத்தத் திருப்பணியில் இறங்கவேண்டும்?


பழைய, இண்டியன் ரெரிப்ஃரெஷ் மென்ட் ரூமை எடுத்து கொண்டால் சமைப்பதும், அதைச் சப்ளை பண்ணுவதும், அதை ஏற்று நடத்தும் மானேஜிங் பொறுப்பும் பார்ப்பனர் சமூகத்துக்கே ஏகபோகமாயிருந்து வந்திருக்கிறது. இப் போது இண்டியன் ரெரிப்ஃரெஷ்மென்ட் ரூம் என்பது வெஜிட்டேரியன் ரெரிப்ஃ ரெஷ்மென்ட் ரூம் என்று மாற்றப்பட்டிருப்ப தால் சமைப்பவர்கள் மாறிவிடுவார்களா? சப்ளையர்கள் மாறிவிடுவார்களா? மானே ஜர்கள் மாறிவிடு வார்களா? அதாவது சைவ உணவு தயாரிக்கும் மற்ற திராவிடர் களும், வெஜிட்டேரியன் ரெரிப்ஃரெஷ்மென்டை ஏற்று நடத்த அய்யங்கார்களின் இந்தத் திருத்தம் பயன்படுமா? அப்படி யில்லாத வரையிலும் ஏன் இந்தக் கண் துடைப்பு வேலை?


இனி, வடநாட்டைப் பொறுத்த வரை யிலும் கூட இது பயன்படுமா? உண்மை யான சீர்திருத்த வேலையாகுமா? என்றால், அதுவும் இல்லை என்கிற முடிவுக்குத் தான் வரவேண்டும். இந்தச் சாயா தயாரிப்பவர்கள், இனியும் இந்துக்களாகத்தானிருப்பார்கள். முஸ்லிம் சாயா தயாரிப்பவர்கள் இனியும் முஸ்லிம்களாகத்தான் இருப்பார்கள். இப்படியாக வடநாட்டுக்கு இந்தப் பெயர் மாற்றம், மத வித்தியாசம் - ஜாதி வித்தியாசம் ஆகியவற்றை ஒழிப்பதற்குப் பயன்படாது என்றால் வேறு எதை முன்னிட்டு இப் பெயர் மாறுதல்?


அரசியலில் நாங்கள் தான் மெஜாரிட்டி என்று கூறி, அதற்கு அனுசரணையாகப் பல பெருங்குடி மக்களிலிருந்து வீபிஷணர் களைத் தயார் செய்த காங்கிரஸ், பழங்குடி மக்களான ஆதித் திராவிடர்களை அன்று ஹரி ஜனங்கள் என்று பெயர் மாற்றம் செய்து, அவர்கள் வாழ்வுக்கு எந்த மாறு தலையும் செய்யத் துணியவில்லையோ அந்த வழியைத்தான் மத்திய அரசாங்க ரயில் மந்திரிகளான அய்யங்கார்களும் பின்பற்றி இருக்கிறார்கள். காங்கிரசின் அன்றைய நடத்தை எப்படி வெள்ளையன் கண்ணை மறைக்கப் பயன்பட்டதோ, அப்படியே இன்று திராவிடன் கண்ணை மறைக்க இந்தப் பெயர் மாற்றம் பயன் படட்டும் என்று கருதியிருக்கிறார்கள். இன்று திராவிட நாட்டில், ஆரியரின் அக்கிரமச் செயல்கள் மீது வெறுப்பும், வடநாட்டுச் சுரண்டலை யொழிக்க வேண்டுமென்கிற உறுதியும், மத்திய அரசாங்கப் பிணைப்பிலிருந்து விடபட வேண்டுமென்கிற அவசியமும், வர வர வெளிப்படையாகக் கண்ணுக்குத் தெரிய ஆரம்பித்து விட்டது. மத்திய அரசாங்கத் தின் கையில் லகான் இல்லாமல், மாகாணங் களுக்கே சுயாட்சி என்று, எந்த வடிவத் திலோ அமையப் போகிற ஆட்சி உரிமை அமைந்து விட்டால், எப்படியும் பார்ப் பனர்கள் மற்றவர்களோடு ஒத்த முறையில் தான் வாழவேண்டியதாய் வரும் என்பதை நன்கு அறிந்து கொண்டார்கள். பிரிவினை இல்லாத வரைக்கும், இந்த நாட்டிற்குப் பார்ப்பனர்கள் வைத்ததுதான் சட்டம் என் பதையும் கண்டுகொண்டவர்கள், திராவிட னுக்கு மத்திய அரசாங்கத்தின் மீது வளரும் வெறுப்பைப் போக்க வேண்டும். அதே நேரத்தில் மாகாண சர்க்கார் மீது ஒரு அவ நம்பிக்கையை யுண்டு பண்ண வேண்டும். அதாவது மத்திய அரசாங்கம் பார்ப்பனர் களுக்கே ஏக போக மிராசாய் இருந்தும் கூட, வைதிக சிகாமணிகளான அய்யங்கார் பார்ப்பனர்கள் ரயில்வே மத்திரிகளாயிருந் தும்கூட, அவர் களுடைய நிருவாகத்தில் மத வித்தியாசம் - ஜாதி வித்தியாசம் போக்கடிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், மாகாண சர்க்காரோ அதற்கடங்கிய ஸ்தல ஸ்தாபனங்களோ இந்தக் காரியத்தைச் செய்ய முன் வரவில்லை என்கிற எண்ணத்தை வளர்க்க வேண்டும். இந்த அளவுக்குத் தான் இந்தப் பெயர் மாற்றம் பயன்படுத்தலாம் என்றெண்ணப் படுகிறதே தவிர வேறு என்ன?


உண்மையாகவே மதவித்தியாசம், ஜாதி வித்தியாசம் ஒழிய வேண்டுமென்கிற ஆசை நம் அய்யங்கார்களுக்கும், மத்திய அரசாங்கத்திற்கும் இருக்கிறது என்பது உண்மையானால், பெயர் மாற்றம் நடந்த போதே மாகாண சர்க்கார்களுக்கும் உத்தரவு போட்டிருக்கவேண்டும். நாட்டின் எந்த மூலையிலும் எந்த ரூபத்திலும் ஜாதி, மத வித்தியாசம் வெளிப்படாதிருக்க வகை செய்திருக்க வேண்டும். பெயர் மாற்றம் செய்து அன்றே இதற்கு ஏற்பாடு செய்யவில்லை யென்றாலும் இனியாவது மாகாண சர்க்கார் பின்பற்றுவதற்கான வழிவகை செய்யப்படுமா என்றால் அது இவர்களால் ஆகக் கூடிய காரியமல்ல வென்றே உறுதியாகச் சொல்லுவோம்.
ஆலயப் பிரவேசத்தை அனுமதித்துச் சட்டம் செய்துவிட்டு, மாகாண சர்க்கார் பல இடங்களில் முகத்தில் கரிபூசிக் கொள்ள வேண்டியதாய் ஆகிவிட்டது. இந்த வெட்கம் கெட்ட நிலையை வெளியில் சொல்லவு முடியவில்லை, விழுங்கவும் முடிய வில்லை. அந்த நிலையில், பொது இடங்களில் அடிப்படையான பிரஜாவு ரிமையைக் காப்பாற்ற மாகாண சர்க்கார் எந்த நியாயத்தால் முன் வந்து விட முடி யும்? வேண்டுமானால் ஆலயப் பிரவேச சட்டத்தைப் போல் மாகாண சட்டசபை களும் ஏட்டில் நிறைவேற்றிக் கொண்டி ருக்க முடியுமே தவிர, நாட்டு நடப்பில் அதை எப்படிச் செயல்படுத்திக் காட்ட முடியும்?


ஜாதியின் பேரால் தெருக்களுக்குப் பெயர், ஜாதி மதங்களையொட்டிக் கடை களுக்குப் பெயர், என்றிருக்கிற இழி நிலையை ஆங்காங்கே ஸ்தல ஸ்தாப னங்கள் தான் நீக்க வேண்டும் என்றிருக்கும் இப்போதைய சட்டத்தை நாமறிவோம். ஆனால், மற்ற காரியங்களில் ஸ்தல ஸ்தாபனங்களைக் கட்டுப்படுத்தி வரும் மாகாண அரசாங்கம், ஏன் இந்தக் காரியத்தில் தனக்கு நியாயம் என்று படுகிற ஒரு விசயத்தைக் கட்டாயப்படுத்தக் கூடாதா? அதைப் போலவே மற்ற காரியங் களில் மாகாணங்களைக் கட்டாயப்படுத்தும் மத்திய அரசாங்கம் இந்த விஷயங்களில் ஏன் கட்டாயப்படுத்தக் கூடாது? மத்திய அரசாங்கத்துக்கு உண்மையில் ஜாதி மத வேறுபாடுகளைப் போக்கவேண்டுமென்கிற கவலையிருக்கு மானால் பிரஜா உரிமை பற்றிய தீர்மானம் எந்த வடிவத்தில் இருக்க வேண்டும். மதம், இனம் முதலியவற்றின் காரணமாக எந்தப் பிரஜைக்கும் எதிராகச் சர்க்கார் பாரபட்சமாக நடக்கக் கூடாது என்கிற தீர்மானம் மதம், இனம், ஜாதி, ஆண் அல்லது பெண்ணாயிருத்தல் பிறந்த இடம் முதலியவற்றால் வித்தியாசம் இருக்க வேண்டுமென்று வற்புறுத்து கிறதா? அல்லது அவ்வித்தியாசங்களை ஒழித்துக் கட்ட வேண்டுமென்கிறதா? வித்தியாசங்கள் இருக்கத் தான் வேண்டும். அவற்றை ஒழித்துவிட வேண்டுமென்பது நோக்க மல்ல என்பதை இந்தத் தீர்மானமே வெளிப்படுத்தவில்லையா?


ஜாதி மத வித்தியாசத்தை - உயர்வு தாழ்வை - பிறப்பைக் காட்டியே ஒருவன் சுகவாழ்வு வாழ்வதற்கும் தன்னாலேயே மற்றொருவன் துயர வாழ்வு வாழ்வதற்கு மான நிலையை - இந்த அரசியல் நிர்ணய சபாவின் அடிப்படை பிரஜாவுரிமைத் தீர்மானம் எப்படி நீக்கி விடாதோ, அது எப்படி மற்ற நாட்டவர்களின் முன்பு தன் பெருமையைக் காப்பாற்றிக் கொள்ளவும் சமத்துவமான நாடு என்று விளம்பரம் செய்யவும் பயன்படுமோ அப்படித்தான் அய்யங்கார்களின் நடவடிக்கையும் வைஷ் ணவாள் செம்பாகத்தான் இருக்கிறது. அதனால்தான் இந்தக் கண்துடைப்பு நாடகத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட வேண்டுமென்கிறோம். ஏன்? திராவிடன் வெள்ளையனைப் போல வெளிநாட்டான் அல்ல.


------------------------------------------ தந்தை பெரியார் அவர்கள் எழுதிய தலையங்கம், "குடிஅரசு", 4.12.1948.

59 comments:

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

ஸ்பெஷலிஸ்டா?

எனக்குத் திருமண மாகி 34 வருடங்கள் ஆகின்றன. எனது கணவர் பிற பெண்களுடன் தகாத உறவு வைத்துள்ளார். இவர் குடும்பத்திலுள்ள அனை வருமே இப்படி இருந் திருக்கிறார்கள். இது முற்றுப் பெற என்ன செய்ய வேண்டும்? - ஒரு வாசகி

இவர்கள் அனைவரின் ஜாதகத்திலும் சந்திரன் சுக்கிரனுடனோ மாந்தி யுடனோ அல்லது சனியு டனோ சேர்ந்திருந்தாலும், ஏழுக்குடையவர் நீசம், 9ஆம் அதிபதி நீசம், 2, 8ல் பாபிகள் என்று பல துர் விஷயங்கள் தென்படு கின்றன. மிகப் பெரிய அளவில் நவசண்டீ மஹா ஹோமத்தை தேவி உபாச கரைக் கொண்டு நடத்த வேண்டும். இந்த ஹோ மத்தை திருவொற்றியூர் வடிவடை அம்மன் தெற் குப் பிரகாரத்தில் அமைந்த ஸ்ரீ சங்கரமடத்தில் நடத் தலாம். நவாக்ஷரீ மந்திர தாயத்தை எல்லோரும் கட்டிக் கொள்ள வேண்டும். மறக்காமல் குலதெய்வ வழி பாட்டை தொடர்ந்து மூன்று மாதங்கள் நடத்துங்கள்.

ஆன்மீக இதழ் ஒன்றில் இப்படியொரு கேள்வி பதில்:

அவர் ஏற்கெனவே பக்தர்தான். நம்பிக்கை உள்ளவர்தான். அப்படிப் பட்டவர்க்கு இந்தக் கொடுமை, மன உளைச் சல் ஏற்படாமல் அவர் பக்தி செலுத்தும் எந்தக் கட வுளும் தடுக்கவில்லையே ஏன்? இந்த யோக்கியதை யில் இன்னொரு கோயிலைக் கை காட்டுவது ஏன்? திருவொற்றியூர் கடவுள் இதில் என்ன ஸ்பெ ஷலிஸ்டா?

Read more: http://viduthalai.in/page1/85372.html#ixzz3B2J0hCWN

தமிழ் ஓவியா said...


மரியாதை இல்லை


பிறர் உழைப்பில் படாடோப வாழ்க்கை நடத்துவதும், அதிகப்படி யான பொருள்களுக்கு அதிபதியாய் இருப்பதும் கண்ணியமான பெருமை யான வாழ்க்கை என்று கருதப்படு கின்ற மூட நம்பிக்கை ஒழியவேண் டும். இதில் எத்தகைய ஒரு கவுரவமும், மரியாதையும் இல்லை.
(விடுதலை, _ 22.6.1973)

Read more: http://viduthalai.in/page1/85381.html#ixzz3B2JHISs0

தமிழ் ஓவியா said...



தமிழ்நாட்டில் 1,442 பெண்கள் அரசுப் பள்ளிகளில் கழிப்பறை வசதி இல்லை என்பது அதிர்ச்சித் தகவல்

தமிழ்நாடு அரசு முக்கிய கவனம் செலுத்த வேண்டும்

மத்திய அரசும் போதிய நிதி வசதி செய்து உதவிட வேண்டும் தமிழர் தலைவர் அறிக்கை

தமிழ்நாட்டில் அரசுப் பெண்கள் பள்ளிகளில்கூட போதுமான எண்ணிக்கையில் கழிப்பறை வசதியில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ள தகவலைச் சுட்டிக்காட்டி உடனடியாக தமிழ்நாடு அரசு இதில் கவனம் செலுத்தி கழிப்பறை வசதிகளைச் செய்து தர வேண்டும் என்றும், கல்வியைப் பொதுப் பட்டியலுக்குக் கொண்டு சென்றுள்ள மத்திய அரசு இதற்கு நிதி உதவி செய்திட வேண்டும் என்றும் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

தமிழ்நாட்டில் 15 சதவிகித - அரசுப் பள்ளிகளில் அதாவது 5,720 அரசுப் பள்ளிகளில் - கழிப்பறை வசதிகள் இல்லை என்று மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் (மத்திய கல்வி அமைச்சகம்) வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகிறது!

இதில் - அதாவது 5,720இல் 1442 பள்ளிகள் - பெண்களுக் கான பள்ளிகள் என்பது அதிர்ச்சிக்கும், வேதனைக்கும் உரியதாக இருக்கிறது!

தமிழ்நாட்டில் மொத்தம் 37,002 அரசு பள்ளிகள் உள்ளன.

பெண்கள் பள்ளிகளிலும் கழிப்பறை வசதியில்லையா?

இதில் 1,442 பெண்கள் பள்ளிகளிலும் 4,278 ஆண்கள் பள்ளிகளிலும் கழிப்பறை வசதி இல்லை என்ற அவலம் உடனடியாக மாற்றப்பட வேண்டும்.

2013-2014-இல் எடுக்கப்பட்ட புள்ளி விவரத் தகவல்கள் இவை!

தனியார் நடத்தும் பள்ளிகளிலும்கூட போதிய கழிப்பறை வசதிகள் இருக்கின்றனவா என்பது பற்றிய ஆய்வு செய்து - தமிழக அரசு அதனையும் கண்காணிக்க வேண்டியது அவசர அவசியமாகும்.

அரசுப் பள்ளிகளில் 90 விழுக்காடு நிதி சம்பளம் கொடுப்பதற்கே செலவிடப்படுகிறது என்று சொல்லப்பட் டாலும் அதுதக்க சமாதானமாக (இக்குறைபாடுகளை நீக்கிட) ஆகாது. உடனடியாக அரசு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

கல்வியைப் பொதுப் பட்டியலில் வைத்து அதிகாரம் செய்ய முன் வந்துள்ள மத்திய அரசு, இதற்கெனவே மாநிலங்களுக்குத் தனி நிதி உதவி (மான்யமாக) தந்திட உடனே முன்வர வேண்டும்.

கடந்த ஜூலை 30ஆம் தேதி, தமிழக சட்டமன்றத்தில் - விதி 110ன் கீழ் ஓர் அறிக்கை வெளியிட்டார் முதல்வர் அவர்கள். அதில், அனைத்துப் பள்ளிகளிலும் 100 சதவிகிதம் கழிப்பறை வசதிகள், குடிநீர் வசதிகள் இருக்க வேண்டு மென்று கணக்கெடுக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார்.

இதில் 2047 பள்ளிகளில், கழிப்பறை வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த இரண்டும் முரண்பட்ட தகவல்களாக அமைவது - ஏனோ?

எப்படி இருந்தபோதிலும் உடனடியாக கழிப்பறைகள் அமைக்கப்படுவதோடு, ஒவ்வொரு பள்ளிக்கும் முழு நேர துப்புரவுப் பணியாளர் ஒருவரும் நீர் வசதியும் ஏற்படுத்தித் தரும் பொறுப்பைக் கண்காணித்து, பள்ளி சுகாதாரப் பிரிவு ஒன்றையேகூட ஏற்படுத்தினால் பிள்ளைகளின் நலவாழ்வு பாதுகாக்கப்பட வசதிகள் ஏற்பட்டு, இந்தியா விற்கு தமிழ்நாடு இதிலும் வழிகாட்டி மாநிலமாக அமையக் கூடும் அல்லவா?

கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்

சென்னை 8.8.2014

Read more: http://viduthalai.in/page1/85459.html#ixzz3B2KXuxaX

தமிழ் ஓவியா said...


கற்றுக் கொள்ள வேண்டியது


இதுவரை எந்தப் பார்ப்பனராவது பார்ப்பனரல்லாத கட்சிக்கு அனுகூலமாய்ப் பிரச்சாரம் செய்ய வந்திருக்கிறாரா? என்றால் ஒருவர்கூட இல்லையென்றுதான் சொல்ல வேண்டும். பார்ப்பனருக்கு வேறு எவ்வளவு கெட்ட குணம் இருந்தாலும், தங்கள் வகுப்பு விசயத்தில் எல்லாரும் ஒன்று சேருவது அவர்களிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய விசயம்.
(குடிஅரசு, 7.11.1926)

Read more: http://viduthalai.in/page1/85444.html#ixzz3B2KpAsAg

தமிழ் ஓவியா said...

எல்லா முயற்சிகளும் தோல்வி!

இந்துமதம் என்பது ஒரு சமூக நாகரிகமாகவும், பல் வேறு மதங்களின் இணைப்பாகவும் இருக்கின்றது. அதற்கு ஒரு ஆரம்பமோ, ஆசிரியரோ, ஒரு மத்திய அதிகாரமோ, அமைப்போ, நிறுவனமோ கிடையாது.

இந்து மதம் என்றால் என்ன என்று வரையறுக்க மேற் கொள்ளப்பட்ட எல்லா முயற்சிகளும், ஒரு வழியில் திருப்தி அற்றுத்தான் முடிந்திருக்கின்றன.

இந்துக்கள் உள்பட, மிகச்சிறந்த இந்திய அறிஞர்கள் - இந்து மதம் என்ற இதன் ஒரு பகுதியை அல்லது மற்றதை வலியுறுத்தி பல்வேறு காலங்களில் சொல்லியிருப்பதால் - இந்த வரையறை வேலை மேலும் திருப்தியற்றதா யிருக்கின்றது.

- என்சைக்கிளோ பீடியா பிரிட்டானிகா, 1974, தொகுதி 8, பக்கம் 88

Read more: http://viduthalai.in/page1/85458.html#ixzz3B2MbX6kP

தமிழ் ஓவியா said...


இந்தியா ஏழை நாடா?


இந்த நாட்டின் செல்வத்தில் எவ்வளவு பெரிய பாகம் மதமும், கடவுளும் என்கின்ற பேரால் வேலை செய்யாத சோம்பேறிகள் அனுபவிக்கின்றார்கள் என்பதை நமது மூட ஜனங்கள் அறியாமலேயே இந்த நாடு தரித்திர நாடு என்று அழுகின்றார்கள்.

இந்த நாட்டில் உள்ள சன்னியாசிகள், துறவிகள், மதாச்சாரிகள் என்பவர்களுக்கு உள்ள சொத்துக்களும் வரும்படிகளும் வேறு யாருக்காவது இருக்கின்றதென்று யாராவது சொல்ல முடியுமா?

அவர்களுக்கு எதற்காக அவ்வளவு சொத்தும் வரும்படியும் வேண்டி இருக்கின்றதென்று எந்தப் பொரு ளாதார வாதியாவது கவனிக்கின்றானா? ஒரு சந்நியாசி கோடிக்கணக்கான ரூபாய் சொத் தும், வருசத்தில் லட்சக்கணக்கான ரூபாய் வரும் படியும் உடைய வனாக இருந் தால் அந்த நாடு ஏழை நாடு தரித் திர நாடு என்று யாராவது சொல்லமுடியுமா? என்று கேட்கின் றேன்.

ஒரு முழம் முக்கால் முழம் உயரமுள்ள குழவிக் கல்லுகளுக்கு நமது நாட்டில் எத்தனைக் கோடி ரூபாய்கள் சொத்தும், எத்தனை லட்சம் ரூபாய்கள் வரும்படியும் இருக்கின்றனவென்று பாருங்கள்.

இப்படி எத்தனை நூற்றுக்கணக்கான ஆயிரக் கணக்கான குழவிக்கல்லுகள் நமது நாட்டில் செல்வத் தோடு யானை, ஒட்டகம், குதிரை, பல்லக்கு, தேர், ரதம் முதலிய வாகனங்களோடு, பல பெண்டாட்டிகளோடு வாழ்கின்றன என்பவைகளை நேரில் பார்க்கும் ஒரு யோக்கியன் உண்மையில் நமது நாடு தரித்திரமுள்ள நாடு என்று சொல்ல வருவானா?

இதை எந்த பொருளாதார நிபுணனாவது கவனித்து நமது நாடு தரித்திரமுள்ள நாடு என்று சொல்லுகிறானா?

- தந்தை பெரியார், குடிஅரசு 14.9.1930

Read more: http://viduthalai.in/page1/85462.html#ixzz3B2MnPXWE

தமிழ் ஓவியா said...

தந்தை பெரியார் பொன்மொழி

இராம இராவணப் போரில் இராமனுக்கு அனுசரணையாக இனத் தையே காட்டிக் கொடுத்த விபீடணன், அனுமார், சுக்ரீவன், அங்கதன் ஆகிய வர்களைப் போல இன்றைக்கும், நமது இனத்தைப் பார்ப்பானுக்குக் காட்டிக் கொடுத்து வயிறு வளர்க்கவும், பதவி பெறவும் எண்ணுகின்றவர்கள் இருக் கின்றார்கள்.

Read more: http://viduthalai.in/page1/85462.html#ixzz3B2MtsMVk

தமிழ் ஓவியா said...

மத நம்பிக்கையே இல்லாமல் வாழும் மக்கள்

உலகின் ஒன்பது நாடுகளில் சமீபத்தில் நடந்த ஓர் ஆய்வில், அந்நாடுகளில் பெரும்பான்மையான மக்கள் மத நம்பிக்கையே இல்லாமல் வாழ்ந்து வருவது தெரிய வந்துள்ளது.

இதனால், அவற்றில் தற்போது இருக்கும் மதங்கள் விரைவில் காணாமல் போய்விடும் என்று அந்த ஆய்வு கூறுகிறது.

ஆஸ்திரேலியா, ஆஸ்திரியா, கனடா, செசன்ய குடியரசு, பின்லாந்து, அயர்லாந்து, நெதர்லாந்து, நியூசிலாந்து மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய ஒன்பது நாடுகளில் சமீபத்தில் ஓர் ஆய்வு நடத்தப்பட்டது.

இந்தநாடுகளில் கடந்த 100 ஆண்டுகளுக்குமேல் எடுக்கப்பட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டு, அங்குள்ள மக்களின் மத விவரங்கள் சேகரிக்கப்பட்டன. அதன்படி, இந்நாடுகளில் பெரும்பான்மையான மக்கள் மத நம்பிக்கை இல்லாமலேயே வாழந்து வருவது தெரிய வந்துள்ளது.

இப்படியே போனால் இன்னும் சில ஆண்டுகளில் அங்கு மதங்களே இல்லாமல் போய்விடும் என்று அந்த ஆய்வு எச்சரித்துள்ளது. அமெரிக்காவின் டல்லஸ் நகரில் நடந்த ஒரு கூட்டத்தில் இந்த ஆய்வின் முடிவு வெளியிடப்பட்டது. அதன்படி, மிகக் குறைந்தபட்சமாக நெதர்லாந்தில் 40 சதவிகிதம் பேரும், அதிகபட்சமாக செசன்ய குடியரசில் 60 சதவிகிதம் பேரும் மதநம்பிக்கை அற்றவர்களாக வாழ்ந்து வருகின்றனர்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த நிபுணர்கள் சிலர், இது ஒரு சாதாரண கணக்குதான். அதாவது, நாம் மேற்கொள்ளும் ஒரு காரியத்தால் ஏதாவது பயன் விளைந்தால் அக்காரியத்தையும் நாம் தொடர்ந்து செய்வோம்.

உதாரணமாக, ஸ்பானிய மொழி பேசுவதால் விளையும் பயன், பெரு நாட்டில் தற்போது வழக்கழிந்து வரும் கொச்சுவான் மொழியைப் பேசுவதால் விளையும் பயனைவிட மிக அதிகம்.

இதே கணக்கை மத நம்பிக்கையிலும் நீங்கள் வைத்துப் பார்க்கலாம் என்று தெரிவித்தனர்.

தினமலர், 27.3.2011, பக்கம் 12

Read more: http://viduthalai.in/page1/85462.html#ixzz3B2N00lMR

தமிழ் ஓவியா said...


இவர்களும் மூடர்கள்தானே!


வீரமாமுனிவர் எழுதிய பரமார்த்த குரு கதையில் ஒரு கதை வருகிறது. ஒரு குரு, அவருக்குத் துணையாக அய்ந்து சீடர்கள், ஒருநாள் குருவின் ஆடை கிழிந்து விட்டது.

குரு அந்த அய்ந்து சீடரையும் ஊசி ஒன்றினை வாங்கி வருமாறு அனுப்பினார். அய்ந்து சீடர்களும் ஊசி வாங்கச் சென்றனர். ஒரு கடையில் ஊசி ஒன்றினை வாங்கினர். ஆனால், எதிர்பார்த்தப்படி அவ்வளவு பெரிதாக இல்லை.

இவ்வளவு சிறிய பொருளை வாங்கவா அய்வரையும் அனுப்பினார் என்று அவர்களுக்குள் அய்யம். அதனால் ஒரு பனைமரம் ஒன்றினை வாங்கி அதன்மீது அந்த ஊசியை செருகி அய்வரும் தூக்கி வந்தனர்.

இக்கதை நம் ஊரில் நடக்கும் சம்பவம் ஒன்றினை நினைவூட்டுகிறது. நம் ஊரில் சாமி புறப்பாடு செய்வார்கள். அரை அடி அல்லது ஒரு அடி இருக்கும் அந்தச் சிலை. அந்த சிலையை ஒரு சிறுவன் கையில் பிடித்துக் கொண்டு ஊரைச் சுற்றி வரலாம். ஆனால் நடப்பது என்ன?

பல மரங்களை பாடைபோல் கட்டி அச்சிலையை அதன்மேல் வைத்து பத்து இருபது பேர் தூக்கிச் செல்வர். இதைப் பார்க்கும் போது பரமார்த்த குரு கதை சீடர்கள் ஊசி வாங்க வந்த கதை தான் ஞாபகத்துக்கு வருகிறது. அந்த மூடர்களுக்கும் இந்த மூடர்களுக்கும், என்ன வேறுபாடு?

தகவல்: கோ.இராமச்சந்திரன், அருந்தவபுரம்

Read more: http://viduthalai.in/page1/85464.html#ixzz3B2N6droE

தமிழ் ஓவியா said...

அறிஞர்களின் அறிவுரைகள்

மனித சமுதாயம் தவிர மற்றபடி மிருகம், பட்சி, பூச்சி, ஜந்து முதலியவைகளில் வேறு எந்தப் பெண் ஜீவனாவது, ஆண்களுக்காகவே இருக்கிறோம் நாம் என்ற கருத் துடன் - நடையுடன் இருக்கிறதா என்று பாருங்கள். இது என்ன நியாயம்?

- தந்தை பெரியார்

இந்து மதத்தில் எனக்கு அறவே நம்பிக்கை இல்லை; ஏனெனில் அயோக்கியத்தனம் என்பது எனக் குப் பிடிக்கவே பிடிக்காது!

- டாக்டர் அம்பேத்கர்

பைபிள் ஒரு பெண்ணால் எழுதப்படவில்லையே! ஆதலால்தான் அதில் பெண்கள் அவமானம் அடைய வேண்டிய விஷயங்கள் நிரம்பிக் கிடக்கின்றன!

- இங்கர்சால்

மதம் என்பது பிறருக்கு உழைத்து வறுமைப்பட்ட மக்களை தலை எடுக்கவிடாமல் அழுத்தி வைக்க ஏற்பட்ட சாதனங்களில் முக்கியமான ஒன்றாகும்.

- லெனின்

உலகில் உள்ள ஒவ்வொரு குழந்தையும் நாத்திகவாதி யாகப் பிறக்கிறது. பிறருடைய போதனையினாலும் தயாரிப்பினாலுமே தெய்வ நம்பிக்கை ஏற்படுகிறது.
- சார்லஸ் பிராட்லா

ஒரு புழுவைக் கூட படைக்கச் சக்தியற்ற மனிதன் கணக்கில்லா கடவுளரைப் படைத்துக் கொண்டே இருக்கிறான்.
- மான்டெயின்

Read more: http://viduthalai.in/page1/85464.html#ixzz3B2NE0Byl

தமிழ் ஓவியா said...



இன்றைய ஆன்மிகம்?

அம்மை

ஆடி வந்து விட்டாலே ஆன்மீக விதிகளைச் சொல்லிக் கொண்டு பெண்கள் அதிக அளவில் ஆலயங்களிலும் தோழியர் இல்லங்களிலும் நடமாடு வதைக் காணலாம். கூழ் வார்த்தல் எனப்படுகிற முக்கிய நிகழ்ச்சியும் பூஜையும் எல்லா அம்மன் கோவில்களிலும் நடை பெறும். இதற்கு ஒரு புராணச் செய்தி உள்ளது. ஒரு சமயம் கார்த்த வீர் யன், ஜமதக்கினி முனிவர் மீது பகை உணர்வு கொண் டிருந்தான். அவனது மகன்கள் இருவர் முனி வரைக் கொன்று விட் டனர். கணவன் இறந்த துக்கம் தாங்க முடியாத ரேணுகாதேவி தீயை உண்டாக்கி அதில் விழுந்து விட்டாள். இதைக் கண்டு வருந்திய இந்திரன், வருண பக வானை அழைத்து மழையை பெய்விக்கும் படி கூறினான். மூட்டிய தீயில் விழுந்த ரேணு காவை மழை வந்து நனைத்துவிட வெற்று உடலோடு இருந்தவள் அருகிலிருந்த வேப்பமர இலைகளால் தன் உடலை மூடிக் கொண்டாள்.

வயிற்றுப் பசி ஏற்பட்ட போது அருகிலிருந்த கிராம மக்களிடம் உணவு கேட்டாள். அப்போது அவர்கள் மகரிஷி மனை வியான நீங்கள், எமது உணவை சாப்பிட வேண்டாம் என்று கூறி, பச்சரிசி மாவு, வரகு, வெல்லம், பானகம், இளநீர், காய், கனிகளைக் கொடுத்தனர். அவற்றைக் கொண்டு கூழ் தயாரித்துச் சாப் பிட்டுத் தன் பசியைத் தீர்த்துக் கொண்டாள் ரேணுகாதேவி.

அச்சமயம் சிவபெரு மான் அவள் முன் தோன்றி, சக்தியின் அம்ச மாக இந்தப் புவியில் அவரித்த நீ பூமியில் பாவங்களைக் களைந்து மனிதர்களுக்கு ஏற்படும் தீ நோய்களைக் கட்டுப் படுத்துக. உனக்கு ஏற் பட்ட அம்மைக் கொப் புளங்கள் உன் பக்தர் களுக்கு வரும் போது, உடனே நீங்கிட உன் வேப்பிலையே கண் கண்ட மருந்து, பச்சரிசி மாவு பானகம், வெல்லம், இளநீர், கூழ் படைக்கும் போது.. நீ மாரிதேவியாக அருள் காத்து அவர் களுக்கு வந்த நோய் களை நீக்குவாயாக என் றார். எனவே தான் மாரித் தாயின் சன்னதிகளில் கூழ் படைக்கிறார்களாம்.

அம்மை வருவது ஒருவகை கிருமியால், அது தடுக்கப்பட்டது அம்மைத் தடுப்பூசியால்; இதில் எங்கு வந்தாள் ரேணுகாதேவி?

அம்மைக்குக் கார ணம் கடவுளா? கிருமியா? ஆன்மிகவாதிகளுக்கு நோய் வந்தால் கோயி லுக்குச் செல்வார்களா? மருத்துவரிடம் செல் வார்களா? சிந்திப்பீர்!

Read more: http://viduthalai.in/page1/85490.html#ixzz3B2NqgMMt

தமிழ் ஓவியா said...

கோயிலில் தங்கக் குவியல்

குட்டி மாநிலமான இமா சலப் பிரதேசத்தில் 29 கோயில் களில் 400 கிலோ தங்கம், 15,800 கிலோ வெள்ளிக் கட்டிகள் தூங்குகின்றனவாம்! (இவற்றை எடுத்து மக்கள் நலனுக்குப் பயன்படுத்தக் கூடாதா?)

Read more: http://viduthalai.in/page1/85499.html#ixzz3B2OA3a6D

தமிழ் ஓவியா said...


அழித்தாக வேண்டும்


மக்களைச் சுயமரியாதை இல்லாமல் செய்து மிருகங்களாக்கி, நாய், பன்றிகளைவிட இழிவாய் நடத்த ஆதாரமாய் இருக்கும் மதம் எது வானாலும் அதை அழித்தாக வேண்டும்.
(குடிஅரசு, 18.12.1927)

Read more: http://viduthalai.in/page1/85500.html#ixzz3B2OXnJ8e

தமிழ் ஓவியா said...

சமஸ்கிருத வாரக் கொண்டாட்டம் ஜனநாயக விரோதம்!

- சுப. வீரபாண்டியன்

அரசின் நிதி ஒதுக்கீடு ஆண்டு தமிழ் சமஸ்கிருத மேம்பாட்டுக்கு மேம்பாட்டுக்கு 2008-09 4.47 கோடி 72.10 கோடி
2009-10 8.61 கோடி 99.18 கோடி 2010-11 10.16 கோடி 108.75 கோ

சமஸ்கிருத வாரம் கொண்டாடுவதில் என்ன தவறு என்று கேட்கிறார், ஆர். நடராஜன் (தி இந்து 07.08.2014). ஒரு பன்மைச் சமூகமான, பல மொழிகள் பேசப்படுகின்ற இந்தியாவில், சமஸ்கிருதத்துக்கு மட்டும் வாரம் கொண்டாடுவது தவறு என்றே குறிப்பிடுகிறோம். 120 கோடி மக்களின் வரிப்பணத்தில், ஒரு மொழியை மட்டுமே உயர்த்திப் பிடிப்பது தவறு என்பதை மனச்சான்று உள்ளவர்களால் உணர முடியும். தமிழ், சமஸ்கிருதம் இரண்டுமே செம் மொழிகள். ஆனால், நிதி ஒதுக்கீட்டில், மலைக்கும் மடுவுக்குமான வேறுபாடு நிலவுவது ஏன்? 03.08.2011 அன்று நாடாளு மன்றத்தில், மனித வள மேம்பாட்டுத் துறையின் இணை அமைச்சர், தந்துள்ள புள்ளிவிவரம் கீழே:

அரசின் நிதி ஒதுக்கீடு

ஆண்டு தமிழ் மேம்பாட்டுக்கு சமஸ்கிருத மேம்பாட்டுக்கு

2008-09 4.47 கோடி 72.10 கோடி

2009-10 8.61 கோடி 99.18 கோடி

2010-11 10.16 கோடி 108.75 கோடி

மேற்காணும் நிதிஒதுக்கீடு, காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் செய்யப்பட்டது. முன்னதாக, வாஜ்பாய் ஆட்சிக் காலத் திலும், இப்போது மோடியின் ஆட்சிக் காலத்திலும் நிலை இதேதான்! இந்த உண்மையைப் பற்றி எந்தக் கவலையும் கொள்ளாத கட்டுரையா சிரியர், தமிழ் வாழ்கஎன எழுதி வைக்கப் பட்டுள்ள பெயர்ப் பலகையைக் கண்டு சினம்கொள்வது வேடிக்கை! நம்மைப் பொறுத்தமட்டில் சமஸ் கிருதம், இந்திக்கு மட்டும் அல்ல; உலகில் எந்த மொழிக்கும் நாம் எதிரிகள் அல்லர். நாம் பேசுவதெல்லாம், இந்திய மொழி களுக்கு இடையிலான சமத்துவம் குறித்தே. சமஸ்கிருத வாரம் கொண்டாடும் மத்திய அரசே, தமிழுக்கும் வங்க மொழிக் கும் வாரம் எப்போது? அரசமைப்புச் சட்டத்தின் 8-வது அட்டவணையில் உள்ள 22 மொழிகளுக்கும் வாரங்கள் எப்போது? இந்தியாவில் சமஸ்கிருதத் துக்கு மட்டும் 12 பல்கலைக்கழகங்கள் உள்ளனவே, மற்ற மொழிகளுக்கான பல்கலைக்கழகங்கள் எங்கே? இந்த அடிப்படையில் இன்னும் சில உண்மை களையும் நாம் பகிர்ந்துகொள்ள வேண் டியுள்ளது. சமஸ்கிருதம் என்பது வட்டார மொழிகள் என்று ஏற்றுக்கொள்ளப்பட்ட 22 மொழிகளில் ஒன்று என்பதைத் தவிர, அம்மொழிக்குச் சட்டத்தில் வேறு எந்தத் தனிச் சிறப்பும் வழங்கப்படவில்லை. மேலும், சமஸ்கிருதம் எந்த ஒரு வட்டாரத் திலும் பேசப்படவில்லை என்னும் உண் மையையும் இங்கே பேசியாக வேண்டும். 1961-ம் ஆண்டு இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, சமஸ் கிருதம் பேசுகிறவர்களின் எண்ணிக்கை 2,544 மட்டுமே. 1991-ல் அது 49,000 ஆக உயர்ந்ததாகக் காட்டப்பட்டது. 2011-ம் ஆண்டுக் கணக்கெடுப்பில் அந்த எண் ணிக்கை 15,000-க்கும் குறைவானதாக ஆகியுள்ளது. ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள 22 மொழிகளில், 15-க்கும் மேற்பட்ட மொழிகள், கோடிக் கணக்கான மக்களால் பேசப்படுகின்றன.

காஷ்மீரி, சந்தாலி போன்ற மொழிகள் லட்சக்கணக்கா னோரால் பேசப்படுகின்றன. ஆயிரக் கணக்கானவர்களால் மட்டும் பேசப்படும் ஒரே மொழி சமஸ்கிருதம் மட்டுமே! அவ்வளவு குறைவான மக்களால் பேசப்படும் ஒரு மொழிக்கு, 120 கோடி மக்களின் வரிப்பணத்தைச் செலவிடுவது என்ன நியாயம்? ஏனைய எல்லா மொழி களையும் புறக்கணித்துவிட்டு, இந்தி, சமஸ்கிருதம் ஆகிய இரண்டு மொழி களுக்கு மட்டும் கோடிக் கணக்கில் நம் வரிப்பணத்தைக் கொட்டி மத்திய அரசு இப்படி வாரம்கொண்டாடுவது ஜனநாயக விரோதம் இல்லையா? சுப. வீரபாண்டியன், பேராசிரியர், திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர். தொடர்புக்கு: தீணீஸ்மீமீ11ரீனீணீவீறீ.நீஷீனீ நன்றி: தமிழ் இந்து ஆகஸ்டு 8, 2014

Read more: http://viduthalai.in/page1/85502.html#ixzz3B2Ojotx1

தமிழ் ஓவியா said...


காந்தியார்


திரு. காந்தியார் சிறையில் மூன்று வேலைகள் செய்கிறார். அவற்றுள் ஒன்று தக்ளியில் நூல் நூற்பது. மற்றொன்று பகவத் கீதையை ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பது. வேறொன்று இந்த இரண்டும் செய்து மீதி இருக்கும் நேரத்தில் ராமநாம பஜனை செய்வது.

ஆகவே அவரது பகுத்தறிவுக்கு நாம் வேறு உதாரணம் காட்ட வேண்டிய தில்லையென்றே நினைக்கின்றோம். இம் மூன்று காரியங்களும் இந்தியாவின் பொது வாழ்க்கையையும் முன்னேற்றத்தையும் முன்னுக்குக் கொண்டு போகுமா? பின்னுக்குக் கொண்டு போகுமா வென்பதை யோசிக்கத் தக்கது.

திரு. காந்தியிடம் குருட்டுப் பக்தியுள்ளவர்களுக்கு நாம் இப்படிக் கேட்பது சற்று கஷ்டமாக இருக்கலாம். தக்ளியில் நூல் நூற்பது எதை உத்தேசித்து என்று இதுவரை யாராவது தெரிந்தார்களா? தக்ளிநூல் வெள் ளைக்கார ஆட்சியின் கொடுமையையும் இந்தியாவின் பொருளாதார கொள்ளையையும் என்ன செய்து விடக்கூடும் என்பது நமக்கு விளங்கவில்லை.

என்ன சொன்னாலும் தட்டிச் சொல்லாமல் கேட்பதற்குச் சில மக்கள் இருக்கின்றார்கள் என்பதைத் தவிர மற்றபடி அதில் என்ன உண்மை இருக்கின்றது. இரண்டாவதாக பகவத்கீதைக்கு ஆங்கில மொழி பெயர்ப்பு வேலை. இதுமுன் ஒரு தடவை டாக்டர் பெசன்டம்மையால் செய்தாய் விட்டது.

இரண்டாவதாக திரு திலகரால் ஒரு தடவை கீதா ரகசியம் என்பதாக ஒரு மொழி பெயர்ப்பும் செய்தாய் விட்டது. இப்போது திரு. காந்தியும் இதையே ஆரம்பித்து விட்டார். கீதையின் தத்துவம் என்ன? அதன் பயனென்ன? என்பதைப் பற்றிய உண்மை யாராவது தெரிந்து அதை மதிக்கின்றார்களா?

கீதையை ஒரு மனிதன் ஒப்புக் கொள்ளுவதானால் முதலாவதாக பாரதக் கதையை ஒப்புக் கொள்ள வேண்டும்.

பிறகு கிருஷ்ணனையும், அவனது செய்கைகளையும், அவனையே கடவுளாகவும் ஒப்புக் கொள்ள வேண்டும்.

இம்மூன்றிலும் சந்தேக முள்ளவர்கள் கீதையைப் பகவான் வாக்காகக் கொள்ள முடியாது. இது ஒரு புறமிருக்க அதிலுள்ள விஷயங்கள் வாழ்க்கைக்குப் பொருத்த மானதாகவோ அல்லது அனுபவத்திற்குச் சாத்தியமான தாகவோ இருக்கின்றதா? நிற்க மூன்றாவது காரியமாக பஜனை செய்து கொண்டி ருக்கிறாராம்.

பஜனை என்பது புராணங்களில் உள்ள கடவுள்களைப் புராணக் கதைகளைச் சொல்லிக் கொண்டோ நினைத்துக் கொண்டோ இருப்பதாகும்.

ஆகவே இம்மூன்று காரியங்களும் எவ்வளவு பகுத்தறிவும் பொது நல நன்மையுமான காரியம் என்பதை முடிவு செய்யும் விஷயம் வாசகர்களுக்கே விட்டுவிடு கின்றோம்.

- குடிஅரசு - துணைத்தலையங்கம் - 27.07.1930

Read more: http://viduthalai.in/page1/85536.html#ixzz3B2PJyYqr

தமிழ் ஓவியா said...


சுயமரியாதைத் திருமணம்

பெண்கள் முன்னேற்றத்தில் கவலை உள்ளவர்கள் பெண்களைப் படிக்கவைக்கும் முன் இந்தக் கழுத்துக் கயிற்றைத் (தாலியை) அறுத்தெறியும் வேலையையே முக்கியமாய் செய்யவேண்டுமென்று சொல்லுவேன். நிற்க, இதுவரை மணமக்களுக்கு ஆசீர்வாதமோ வாழ்த்தோ என்பது மணமக்கள் நிறைய அதாவது 16 பிள்ளைகள் பெற்ற வேண்டுமென்று சொல்லுவார்கள்.

ஆனால் நான் மணமக்களுக்குச் சொல்லு வதென்ன வென்றால் அவர்கள் தயவு செய்து பிள்ளைகள் பெறக்கூடாது என்பதும், மிக்க அவசியமென்று தோன்றினால் ஒன்று அல்லது இரண்டுக்கு மேல் கூடாது என்றும் அதுவும் இன்னும் அய்ந்து ஆறு வருடம் பொறுத்துத்தான் பெற வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளுகின்றேன்.

அன்றியும் அப்படிப் பெறும் குழந்தைகளையும் தாய்மார்கள் குரங்குக் குட்டிகள்போல் சதா தூக்கிக் கொண்டு திரிந்து போகின்ற இடங் களுக்கெல்லாம் அழைத்துப் போய் அழ வைத்துக் கொண்டு கூட்டமும் நடவாமல் தங்களுக்கும் திருப்தியில் லாமல் சபையோருக்கும் வெறுப்புத் தோன்றும் படியாய் செய்யாமல் குழந்தைகளை ஆயம்மாள் வைத்து வளர்க்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

அவைகளுக்கு ஒழுங்கும் அவசி யமான கட்டுப்பாடும் பழக்கிக் கொடுக்க வேண்டும். இந்தக் கூட்டத் தில் நான் பேசமுடியாதபடி எத்த னைக் குழந்தைகள் அழுகின்றனர் பாருங்கள். அவற்றின் தாயார் முகங்கள் எவ்வளவு வாட்டத்துடன் வெட்கப் படுகின்றது பாருங்கள்.

அந்தத் தாய்மாரும் தகப்பன்மாரும் இந்தக் கூட்டத்தில் ஒருவரையொருவர் பார்த்து வெறுப்பதைத் தவிர அவர் களுக்கு இங்கு வேறு வேலையே இல்லாமல் இருக்கின்றது. இன்பமும் அன்பும் என்பது சுதந்திரத்தோடு இருக்க வேண்டுமே அல்லாது நிபந்தனையோடும் தனக்கு இஷ்டமில்லாத சௌகரிய மில்லாத கஷ்டத்தைச் சகித்துக் கொண்டு இருப்பதாய் இருக்கவே முடியாது.

ஆகவே இப்போதைய குழந்தை இன்பம் என்பது ஒருக்காலமும் உண்மையான இன்பமாகாது. ஆகையால் அவைகளை மாற்றிவிட வேண்டும். தவிர அதிக நகை போடாமலும் தாலி கட்டாமலும் மூடச் சடங்குகள் இல்லாமலும் மாத்திரம் நடைபெற்ற திருமணம் சுயமரியாதைத் திருமணமாகி விடாது.

பெண்ணின் பெற்றோர் இப்பெண்ணுக்குத் தங்கள் சொத்தில் ஒரு பாகம் பங்கிட்டுக் கொடுக்க வேண்டும். புருஷர்களைப் போலவே பெண்களுக்கும் சொத்துரிமை உண்டு; தொழில் உரிமை உண்டு, என்கின்ற கொள்கை ஏற்படாவிட்டால் எப்படி அவர்கள் சுயமரியாதை உடையவர்களாவார்கள்? ஆகையால் அவர்களுக்குச் சொத்துரிமையும் அவசியமானதாகும்.

தவிர பெண்களுக்கு இப்போது பொது நல சேவை என்னவென்றால் எப்படியாவது ஒவ்வொரு விதவையையும் ஒவ்வொரு புருஷனுடன் வாழச் செய்ய வேண்டும். அதுவே அவர்கள் இப்போது செய்ய வேண்டியது.

தவிர பெண்களும் புருஷர் களைப் போலவே தினமுமோ அல்லது வாரத்திற்கு ஒன்று இரண்டு நாளோ ஒரு பொது இடத்தில் கூடி மகிழ்ச்சியாய் பேசி விளையாட வேண்டும். பத்திரிகைகளைப் படிக்க வேண் டும். படிக்காத பெண்களுக்குப் படித்தவர்கள் படித்துக் காட்ட வேண்டும்.

வீட்டு வேலை செய்வதுதான் தங்கள் கடமை என்பதை மறந்து விட வேண்டும். புருஷனுக்குத் தலைவியாய் இருப்பதும் குடும்பத்துக்கு எஜமானியாய் இருப்பதும் தங்கள் கடமை என்று நினைத்து அதற்குத் தகுந்தபடி நடந்து கொள்ள வேண்டும். இந்த உணர்ச்சியோடேயே பெண்மக்களை வளர்த்து அவர்களுக்குத் தக்க பயிற்சி கொடுக்க வேண்டும்.

- குடிஅரசு - சொற்பொழிவு - 13.07.1930

Read more: http://viduthalai.in/page1/85538.html#ixzz3B2PSiVQI

தமிழ் ஓவியா said...

தந்தை பெரியார் பொன்மொழி

பொருளாதாரத்தில் சரிபண்ணி விட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்று பேசுகிறார்களே, பொருளாதாரத்தில் எவ்வளவுதான் உயர்ந்தவர்களாக ஆனாலும் கூடச் சூத்திரன் சூத்திரன் தானே! பறையன் பறையன்தானே!

Read more: http://viduthalai.in/page1/85538.html#ixzz3B2PZwHaU

தமிழ் ஓவியா said...

வருணாசிரமத் தர்மத்தின் மூலமாகத்தான் நமது நாட்டில் தீண்டாமைக் கொள்கை அமலில் இருந்து வருகிறதேயொழிய, வருணாசிரமம் இல்லாவிட்டால் தீண்டாமைக் கொள்கை பரவ மார்க்கமே கிடையாது. வருணாசிரமத் தர்மம் என்கிற ஓர் உடல் இல்லாவிட்டால் தீண்டாமை என்கிற உயிருக்கு ஆட்டம் இல்லை.

Read more: http://viduthalai.in/page1/85538.html#ixzz3B2PfoMdt

தமிழ் ஓவியா said...


ஒரு யோசனை


சென்ற மே மாதம் 25 ஆம் தேதியின் மாலை 6 மலர் 4 இதழில் ஒரு யோசனை என்னும் தலைப்பின் கீழ் குடி அரசு பத்திரிகையை எட்டு பக்கங்கள் குறைத்து சந்தாத் தொகை வருஷத்துக்கு மூன்று ரூபாயாக யிருப்பதை இரண்டு ரூபாயாக ஆக்கலாம் என்று கருதியிருப்பதை வெளிப்படுத்தி வாசகர்களின் அபிப்பிராயத்தையறிய ஆசைப்பட்டிருப்பதை வெளியிட்டிருந்தோம்.

அவற்றிற்கு வந்த பல அபிப்பிராயங் களில் சுமார் பத்து பேர்களேதான் அதற்கு சம்மதம் கொடுத்திருக் கிறார்கள். சுமார் 300க்கு மேற்பட்ட வாசகர்கள் பக்கங்களை எவ்வித காரணங் கொண்டும் குறைக்கக் கூடாதென்றும், சந்தா மூன்று ரூபாயாக இருப்பதைப்பற்றி கவலை இல்லையென்றும் தெரிவித்து வேறு சில யோசனைகளும் சொல்லி இருக்கிறார்கள். நிற்க, மலாய் நாட்டுச் சந்தாதாரர்கள், கண்டிப்பாகப் பக்கங்களை குறைக்கக் கூடாது என்றும் சௌகரியப் பட்டால் அதிகப்படுத்தும் படியும் தெரிவித்திருக்கிறார்கள்.

ஆகவே வாசகர்களின் பெரும்பான் மையோர்களுடைய அபிப்ராயம் மாறுபாடாயிருப்பதால் இது சமயம் அதாவது தற்காலம் குடிஅரசு பத்திரிக்கையில் பக்கங் களையாவது சந்தாவையாவது மாற்றுவது என்கின்ற விஷயத்தை நிறுத்தி வைத்திருக்கிறோமென்பதைத் தெரியப்படுத்திக் கொள்ளுகிறோம்.

- குடிஅரசு - துணைத்தலையங்கம் - 06.07.1930

Read more: http://viduthalai.in/page1/85537.html#ixzz3B2PltWeW

தமிழ் ஓவியா said...

கதர்

கதர் பிரச்சாரத்தின் பலனால் வேஷக்காரர்கள் டெம் பரரியாய் கதர் கட்ட ஆரம்பித்து எப்போதும் வழக்கமாய் கதர் கட்டி வந்தவர்களுக்கும் கதர் கிடைக்க வழி இல்லாமல் போய் வேறு துணி கட்ட நிர்பந்தப்படுத்தி விட்டது. இது ஒரு புறமிருக்க கதர் வியாபாரிகள் இந்த சமயத்தில் அடிக்கின்ற கொள்ளைக்கு அளவில்லை.

துணியோ சாணித்துணிக்கும் உதவாது. விலையோ டக்காமசிலினுக்கு மேல் விற்கப்படுகின்றது. பஞ்சு விலை கண்டி1.க்கு 320 ரூபாயிலிருக்கும் போதும் நூற்புக் கூலியும் நெசவுக் கூலியும் அரிசி ரூ. 1 க்கு இரண்டரை பட்டணம் படி விற்றுக் கொண்டும் இருந்த போது போட்ட விகிதப்படியே இப்போதும் விற்கின்றார்கள்.

இப்போது பஞ்சு பாரம் 150 முதல் 160ரூ க்குள் மிக்க சவுதமாக இருக்கின்றது. அரிசி ரூ. 4 பட்டணம் படிக்கு மேலாகவே விற்கின்றது.

520 ராத்தல் கொண்ட பாரம் பஞ்சு 160 ரூ. விலையானால் பவுன் ஒன்றுக்கு 8 அணாவே பஞ்சு விலை அடங்கும்.

10 கிராம் உள்ள 50 இஞ்சு பீசு 3 ராத்தல் அல்லது மூன்றேகால் ராத்தல் எடை இருக்கும். இந்த மூன்றேகால் ராத்தலுக்குக் கிரயம் ரூ 1 - 10 - 0 நூற்பு கூலி ரூ 1. நெசவு கூலி 1 - 14 ஆக 10 கஜத்திற்கு ரூ 4 - 8 - 0 ஆகும். சிலவும் லாபமும் 5 அணா சேர்த்தால் 4 - 14 - 0 க்கு விற்கவேண்டியது நியாய மாகும்.

இப்போது 10 கஜம் 6 ரூபாயிக்கு மேலாகவே விற்கப் படுகின்றது. ஈரோட்டில் 6-8-0க்கும் கூட கிடைப்பதில்லை. ஆகவே தேசிய கிளர்ச்சியின் பயனாய் பல வியாபாரிகள் இன்சால் வென்டாகவும் பல வியாபாரிகள் கொள்ளையடிக்க வும்தான் வழியேற் படுவதைத் தவிர மற்றபடி உண்மையான பலன் ஒன்றையும் ஏழைகள் அனுபவித்ததாகத் தெரியவில்லை,

- குடிஅரசு - துணைத்தலையங்கம் - 27.07.1930

Read more: http://viduthalai.in/page1/85537.html#ixzz3B2Pu7EBs

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

மருத்துவமனை

பெரிய பாளையம் பவானி அம்மனைத் தரிசிக்கச் செல்பவர்கள் அங்குள்ள அய்முக்தீஸ் வரரையும் அன்ன பூர் ணாம்பிகையையும் சனிப் பிரதோஷத்தில் வழிபட் டால் எந்த நோயாக இருந்தாலும் உடனே நிவா ரணம் கிடைக்குமாம்.

நமக்கு ஒரே ஒரு சந்தேகம்! இவ்வளவு சக்தியுள்ள கடவுளான டாக்டர் இருக்கும்போது பெரியபாளையத்தில் மருத்துவமனைகள் இருப்பது ஏனாம்?

Read more: http://viduthalai.in/page1/85640.html#ixzz3B2QxQYem

தமிழ் ஓவியா said...


பெரிதாக்குகிறார்கள்


தண்ணீரில் வீழ்ந்து உயிருக்கு மன்றாடுபவன் ஒரு புல் மிதந்து வந்தாலும் அதைப் பிடித்துக் கொண்டு கரையேற நினைப்பது போல், இன்று பார்ப்பனரும், அவர்கள் கூட்டாளிகளும் பதவி ஆசையால் அற்பக் காரியங்களையும் பெரிதாக்குகிறார்கள்.
(விடுதலை, 12.7.1972)

Read more: http://viduthalai.in/page1/85652.html#ixzz3B2RJWkyA

தமிழ் ஓவியா said...


பீட்ரூட்டின் மருத்துவப் பயன்கள்


அழகிய நிறமும் நிறைய சத்துக்களும் கொண்ட காய் பீட்ரூட் இதனுடைய நிறத்திற்காகவே இதனை அனைவரும் விரும்பி உண்ணு கின்றனர். பீட்ரூட்டில் உள்ள கார்போஹைட்ரேட்ஸ் சர்க்கரை துகள்களாக இருப்பதால் இது விரைவில் செரிமானமாகி நம் ரத்தத்துடன் கலந்து விடுகிறது.

பீட்ரூட்டில் உள்ள இரும்புச்சத்து நம் உடலில், புதியதாக இரத்த அணுக்கள் உருவாகத் துணை புரிகிறது. பச்சைக் காய்கறிகள், கீரைகள், பழங்கள், பேரீச்சம் பழம், அத்திப் பழம் ஆகியவற்றை அதிக அளவு உண்டும், இரத்தத்தின் அளவு அதிகரிக்காமல் இருக்கும் பட்சத்தில் பீட்ரூட்டை வாரத்திற்கு நான்கு நாட்கள் உண்டால் நல்ல பலன் கிடைக் கும். சமையல் செய்து சாப்பிடுவதுடன் பச்சையாகவும் சாப்பிடலாம்.

கல்லீரல் கோளாறுகளுக்கும் பீட்ரூட் ஒரு சிறந்த டானிக். பித்தம் அதிகமாகி அடிக்கடி பித்த வாந்தி எடுப்ப வர்களுக்கு பீட்ரூட் ஒரு சிறந்த டானிக். பீட்ரூட் கீரையை யும் மற்ற கீரைகள் போல் சமையல் செய்து சாப்பிட அல்சர், மஞ்சள் காமாலை போன்ற நோய்கள் சரியாகும்.

பல மாதங்களாக மலச் சிக்கலினால் துன்பப்படு பவர்களும், மூலக் கோளாறினால் துன்பப்படுபவர்களும் பீட்ரூட் சாறை தண்ணீருடன் கலந்து அரை டம்ளர், இரவு படுக்கைக்கு முன் குடிக்கவேண்டும். பீட்ரூட்டை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொண்டால் சிறுநீரகத்தில் கற்கள் உருவாவதைத் தடுக்கலாம்.

தோலில் ஏற்படும் அரிப்பு, எரிச்சல் போன்றவற்றிற்கு இரண்டு பங்கு பீட்ரூட் ஜூசுடன் ஒரு பங்கு தண்ணீரைக் கலந்து தடவினால் பிரச்சினையிலிருந்து விடுபடலாம்.

புற்றுநோயினால் துன்பப்பட்டுக் கொண்டிருக்கும் நோயாளிகள், ஊட்டி பீட்ரூட் ஜூஸ் தினமும் ஒரு டம்ளர் பருகி வந்தால் புற்றுநோய் பரவுவது தடுக்கப்படும். ஆரம்ப நிலையிலுள்ள புற்றுநோயைக் குணமாக்கும் வல்லமை படைத்தது பீட்ரூட். பீட்ரூட் பலருக்குப் பிடிக்காது, சிலருக்கு மட்டுமே பிடிக்கும். குழந்தைகளில் பலருக்குப் பிடிக்கும்.

இது பலருக்கும் சுவை சம்பந்தப்பட்ட ஒன்றாகவே தெரிகிறது. ஆனால், இதற்கென்று தனிப்பட்ட மருத்துவப் பயன்கள் உண்டு. பீட்ரூட்டின் முக்கியப் பயன்கள்: புற்றுநோய் பரவு வதை தடுக்கும்.

* மலச்சிக்கலைப் போக்கும்.

* பித்தத்தைக் குறைக்கும்

* அரிப்பு - எரிச்சலைத் தவிர்க்கும்.

* சிறுநீரகத்தில் சேர்ந்துள்ள தேவையற்றவைகளைப் போக்கிவிடும்.

Read more: http://viduthalai.in/page1/85650.html#ixzz3B2Sbrpiw

தமிழ் ஓவியா said...

ஓர் அறிவியல் தகவல் எரிநட்சத்திரப்பொலிவு (ஆகஸ்ட் 10-15)


நகர ஓட்டத்தில் நாம் இயற்கையின் அழகை காணத்தவறிவிடுகிறோம். நேற்றைய முழுநிலவை நாம் அனைவரும் பார்த்திருப்போம், சாதாரணமாகத் தெரியும் முழு நிலவைவிட இந்த நிலவும் 3 அல்லது நான்கு மடங்கு அதிக ஒளியுடன் மிகவும் பெரிதாகத் தோன்றியது மற்றுமொரு அழகு மிகவும் அதிக அளவில் எரிநட்சத்திரங்கள் தென்படும்.

உண்மையில் இவை நமது பூமியின் வளி மண்டலத்தில் புகும் எரிகற்கள் அல்ல; இவை சுமார் 300 ஒளியாண்டுகளுக்கு அப்பால் நடைபெறும் அற்புத வானியல் நிகழ்வாகும்.

பெர்சியஸ் விண்மீன் குழுமத்தில் உள்ள காமா (சிட்டா பெரிசி) என்ற விண்மீனின் வட்டப்பாதையில் நுழையும் விண்கற்கள்! அந்த விண்மீனின் ஈர்ப்பு விசையால் வேகமாக ஒன்றை ஒன்று மோதிக்கொண்டு செல்லும் அந்த நேரத்தில் ஏற்படும் ஒளிக்கீற்றுகள் வானம் முழுவதும் நிறைந்து காணப்படும்.

இயற்கையில் இந்த அழகிய தோற்றம் ஆகஸ்ட் மாதம் 10 ஆம் தேதியில் இருந்து 14 அல்லது 15- ஆம் தேதிவரை வானத்தின் வட பகுதியின் உச்சிப்பகுதியில் Taurus விண்மீன் குழுமத்தின் கீழாக உள்ள பெரிசியஸ் விண்மீன் குழுமத்தின் அருகில் காணப்படும்;

தற்போது தமிழகம் முழுவதும் மேகமூட்டமாக இருப்பதால் இந்த அழகைக் காணமுடியாது, இருப்பினும் மேகமூட்டம் இல்லாத இரவுகளில் இந்த இயற்கையின் அழகை கண்டு இரசிக்கலாம்.

Read more: http://viduthalai.in/page1/85685.html#ixzz3B2SoBHhl

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

வல்லப கணபதி

அம்பாள் - ஸ்வா மிக்குத்தான் திருக்கல்யா ணம் நடத்தும்போது திரு மாங்கல்யம், குங்குமம், மஞ்சள் என மங்கலப் பொருட்களைப் பிரசாத மாகக் கொடுப்பார்கள். ஆனால், மதுரை அருகே வாடிப்பட்டியில் உள்ள ஆண் கடவுளான வல்லப கணபதி கோயி லிலும் இவற்றைப் பிரசாத மாகக் கொடுக்கின்றனர். விநாயகருக்குப் பூஜை யின்போது இப்பொருட் களை வைத்தும் வழிபடு கிறார்கள். விநாயகர் அம்பிகையிடமிருந்து தோன்றியதால் இவரை சக்தி அம்சமாகக் கருதி இவ்வாறு செய்கின்றன ராம்.

இடையிலே வல்லப கணபதி என்ற ஒரு சமாச்சாரம் வருகிறதே அது என்னவாம்? சூரபத் மனுக்கும் -சுப்பிரமணிய னுக்கும் சண்டை நடந்த போது சகோதரன் சுப்பிர மணியனைக் காப்பாற்ற விநாயகன் முன்வந்தா னாம். சூரபத்மனுக்குப் படை வீரர்கள் வல்லபை என்ற அசுரப் பெண்ணின் உறுப்பிலிருந்து வந்து கொண்டே இருந்தார் களாம் - விநாயகன் என்ன செய்தான்? தன் தும்பிக்கையால் பெண் ணின் குறியின் பாதையை அடைத்தானாம்.

அதனால்தான் விநாய கனுக்கு வல்லப கணபதி என்று பெயராம். இந்த அசிங்கமான காட்சியை இன்றைக்கு சிலையாக மத்தூர் கோயிலில் பார்க் கலாம்! அட ஆபாசமே, உன் பெயர்தான் பக்தியா? இந்து மதமா?

Read more: http://viduthalai.in/page1/85702.html#ixzz3B5388ywQ

தமிழ் ஓவியா said...

பெரியார் பணி முடிப்பவர்களுக்கு ஓய்வு, சலிப்பு கிடையாது!


விடுதலை ஆசிரியராகப் பொறுப்பேற்று 52 ஆண்டுகள்

பெரியார் பணி முடிப்பவர்களுக்கு ஓய்வு, சலிப்பு கிடையாது!

மணமக்களே விடுதலை சந்தா அளித்தது ஒரு முன் மாதிரியே!

தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை



விடுதலை ஆசிரியராகப் பொறுப்பேற்று 52 ஆண்டுகள் ஓடியுள்ள நிலையிலும், பெரியாரின் பணி முடிக்கும் அவர்தம் பணியில் ஓய்வோ, சலிப்போ ஏற்பட்டதில்லை என்பதைப் பெருமிதத்துடன் கூறும் திராவிடர் கழகத் தலைவர் விடுதலை ஆசிரியர் கி. வீரமணி அவர்களின் நெகிழ்ச்சியூட்டும் அறிக்கை:

பெரியார் நாடு என்று நம்மால் பெருமைப்பட அழைக்கப்படும் உரத்தநாட்டுப் பகுதியில் நேற்று முதல் நாள் (10.8.2014) அன்று காலை காவாரப்பட்டு என்ற சிறிய கிராமத்தில், நமது கழகப் பொதுச் செயலாளர்களில் ஒருவரான தோழர் இரா. குணசேகரன் தம்பி மகள் திருமண நிகழ்வில், விடுதலை ஆசிரியர் பொறுப்பேற்று 53ஆவது ஆண்டு தொடங்கும் நாள் என்பதை எனக்கு நினைவூட்டி மகிழ்ந்தனர்.

பெரியார் பணி முடிக்கும் பணியில் ஓய்வேது?

பெரியார் பணி முடிக்கும் இலக்கில் இது ஒரு சாதாரண நிகழ்வே தவிர - நம்மைப் பொறுத்த வரையில் - ஒரு பெரும் சாதனையல்ல! செல்ல வேண்டிய பயணங்கள் ஏராளம்!!

ஊதியத்திற்காகப் பணி செய்வோருக்கே ஓய்வு உண்டு. ஓய்வூதியம் உண்டு. ஓய்வு பெறும் கால அளவு உண்டு. மானம் பாராது, நன்றி நோக்காது பதவி, புகழ், பெருமை தேடாது, எதிர் நீச்சலிலேயே எப்போதும் உள்ளவர்களுக்கு - குடி செய்வார்க்கு பருவம் ஏது? கால நேரம் என்று காத்திருக்கும் குணம்தான் ஏது என்பது தானே பெரியார் தொண்டர்களின் இலக்கணம்! நமது அறிவு ஆசானின் பாடங்களைச் சரியாகக் கற்கும் எந்த மாணவருக்கும் மேற்சொன்னதுதான் பால பாடமாகும்.

அலுப்பு இல்லை - சலிப்பு இல்லை!

தன்னலம் அறியாத தன்மானப் பெரு வாழ்வு வாழ இந்தப் பாசறையில் இடம் கிடைத்து, அது பெரும் பேறு அல்லவா? இத்தனை ஆண்டு காலம் உழைத்தாலும், அலுப்போ, சலிப்போ, விரக்தியோ, வேதனையோ தோன்றவில்லை; மாறாக மாரத்தான் (Marathon) ஓட்டப் பந்தயத்தில் ஓடும் போட்டியாளனுக்கு இலக்குதானே முக்கியம்; எல்லோரையும் முந்தி ஓடி அதை அடைவதுதானே முக்கியம்! அதுபோன்றதே நமது இயக்கப் பணியும்.

ஓர் எடுத்துக்காட்டுத் திருமணம்

நமது தோழர்கள் - அன்பர்கள் - 53 ஆண்டு சந்தாக் களை விடுதலைக்குப் பரிசாக அளித்து ஊக்கப்படுத் தினார்களே, அதுதான் முக்கியம்!

மணமகனும் மணமகளும்கூட தனித்தனியே 14 விடுதலைச் சந்தாக்களை அளித்து நல்ல முன்மாதிரியாக - இனி வரும் நமது சுயமரியாதைத் திருமணங்களில் விடுதலை முதலிய நமது ஏடுகளுக்குச் சந்தா வழங்கு வதை ஒரு முக்கிய கடமை - நிகழ்வாகக் கொள்ள வேண்டும் என்று எடுத்துக் காட்டுவதுபோல் அமைந்தது அவர்களது பாராட்டத்தக்க நடவடிக்கை.

மாலைக்குப் பதில் சந்தா

1500 ரூபாய் செலவில் ரோசாப் பூக்கள் மாலை அணிவிக்க வந்தபோது, மிகுந்த வருத்தம் அடைந்தேன்; அதுபற்றிக் கூற எண்ணியிருந்தேன். எனது உரையில்; குறிப்பால் உணர்ந்த நம் தோழர்கள் அதனை மேடை யிலேயே ஏலம் விட்டு, திரு. நல். மெய்க்கப்பன் ரூ.2000/-க்கு ஏலம் எடுத்து அதனைக் கழக நிதியில் இணைத்து தப்பித்துக் கொண்டு மகிழச் செய்தனர்!.

சால்வைக்குப் பதில் சந்தா என்பதை அருள்கூர்ந்து அமுலாக்குங்கள்.

கட்டுப்பாடு காக்கும் அரிய பணி!

உரத்தநாட்டில் எல்லாத் தோழர்களும் ஓர் அணியாய் ஒன்றுபட்டுப் பணியாற்றுவதே எனக்கு மாலை சூட்டுவதைவிட பெரிதும் எம்மை மகிழ்விக்கும் கட்டுப்பாடு காக்கும் அரிய பணி என்று கூறிப் பாராட்டி மகிழ்கிறோம்.



கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்



சென்னை 12.8.2014

Read more: http://viduthalai.in/page1/85696.html#ixzz3B53QHmCd

தமிழ் ஓவியா said...


சாமி நகையைத் திருடிய அர்ச்சகர்

மைசூரு, ஆக.12-_ மைசூரு, மேல் கோட்டை செலுவநாராயணசாமி கோவிலில், 800 கிராம் தங்க நகை திருடு போனது. இது தொடர்பாக, அர்ச் சகர் நரசராஜபட் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

விசாரணையில், தங்க நகைகளை, முரளிதர் ஜெகந்நாத் என்பவர் அன்பளிப்பாக கொடுத்த பின், மூன்று மாதங்கள் வரை, நரசராஜபட் அதை கோவில் செல்வத்தில் ஒப்படைக்காமல், வீட் டிலேயே வைத்திருந்தது தெரியவந்தது. அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச் சாட்டுக்களில், பல்வேறு சந்தேகங்கள் இருந்தன. இது குறித்து முறையான விசாரணை நடத்த வேண் டும் என, தலித் சங்கர்ஷ சமிதி அமைப்பாளர் சீனிவாஸ், பாண்டவபுரா நீதிமன்றத்தில் மனு தாக் கல் செய்தார். நீதிமன்றம் வழிகாட்டுதலின்படி, நரசராஜபட் மீது புதிய குற்றப்பத்திரிகையை காவல்துறையினர் தாக்கல் செய்துள்ளது. சமிதி அமைப்பாளர் சீனிவாஸ் கூறுகையில், "புதிய குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ததிலிருந்து முந்தைய விசாரணை, அர்ச்சகரை காப்பாற்றும் வகையில் தயாரித்திருப்பது நிரூபணமாகியுள்ளது. தற்போது எடுக்கப்பட் டுள்ள முடிவு, உண்மையை வெளி கொண்டுவரும் என, நம்புகிறேன், என்றார்.

Read more: http://viduthalai.in/page1/85700.html#ixzz3B53ZKrhi

தமிழ் ஓவியா said...


இந்தியா இந்து நாடா?


ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன்பகவத் தெரிவித் துள்ள கருத்து - நாட்டில் தேவையில்லாத பிரச்சி னைக்குக் கொடியேற்றி வைத்துள்ளது. இந்தியா இந்து நாடு என்று அவர் தெரிவித்துள்ள கருத்துக் குறித்து திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் நேற்று விடுதலையில் மிக முக்கியமான அறிக்கையினை காலங் கருதி வெளியிட்டுள்ளார்கள்.

ஆர்.எஸ்.எஸ். தலைவர் தானே அறிவித்துள்ளார் என்று அலட்சியப்படுத்தி விடவும் முடியாது. ஆர்.எஸ்.எஸ். தான் பா.ஜ.க.வுக்குத் தாய் நிறுவனம்! இன்னும் சொல்லப் போனால் ஆர்.எஸ்.எஸ் ஆல் தேர்வு செய்து அறிவிக்கப்பட்டவர்தான் பிஜேபி வேட்பாளரான நரேந்திர மோடி என்பதைத் தெரிந்து கொண்டால் ஆர்.எஸ்.எஸ்-இன் தலைவர் தெரிவித்த கருத்தின் அபாயம் எத்தகையது என்பது எளிதிலேயே விளங்கி விடும்.

ஆர்.எஸ்.எஸ்-இல் தயாரிக்கப்பட்டவரே பா.ஜ.க.வின் பொதுச் செயலாளராக வர முடியும் என்பது ஆர்.எஸ்.எஸ்-இன் விதிமுறையாகும். 16ஆவது மக்களவைத் தேர்தலுக்கான பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவின் தலைவர் முரளி மனோகர் ஜோஷி பச்சையாக ஒப்புக் கொண்ட ஓர் உண்மை உண்டு.

ஆர்.எஸ்.எஸின் அறிவுரையைக் கேட்டுத்தான் தேர்தல் அறிக்கையைத் தயாரித்ததாகக் கூறிடவில் லையா? இதற்கு மேல் என்ன வேண்டும்? ஆர். எஸ்.எஸ்., என்ன சொல்லுகிறதோ, என்ன நினைக் கிறதோ, அதன்படி செயல்பட வேண்டிய கட்டாயம் மத்திய பிஜேபி அரசுக்கு இருக்கிறது.

இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டுமானால் அதனை நிறைவேற்றுவதைத் தவிர பிஜேபி தலைமை யிலான அரசுக்கு வேறு வழியும் கிடையாது - கிடையவே கிடையாது!

பிஜேபியின் தேர்தல் அறிக்கையை எடுத்துக் கொண்டாலும் 370ஆவது சட்டப் பிரிவு திருத்தம், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கென்றுள்ள சிறப்பு உரிமைகளை நீக்குவது, பசு பாதுகாப்பு, கங்கையைச் சுத்தப்படுத்துவது உள்ளிட்ட ஆர்.எஸ்.எஸ்-இன் அஜண்டா கம்பீரமாக இடம் பெற்று இருப்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

இதில் முக்கியமாகக் கருத்தூன்றத் தக்க விடயம் உண்டு. இந்திய அரசமைப்புச் சட்டத்தின் மதச் சார்பின்மைக் கொள்கைக்கு உண்மையாக இருப்பதாக உறுதிமொழி எடுத்துக் கொண்டுதான் அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் பிரதமர் உள்ளிட்ட அனைத்து அமைச்சர்களும் பதவி ஏற்றனர்.

இந்தச் சூழலில் இந்தியாவை இந்து நாடாக அறிவிக்க வேண்டும் என்று கூறுவது பச்சையாக அரசமைப்புச் சட்டத்தை அத்துமீறுதல் ஆகாதா?

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் வெளிப் படையாக அறிவித்த பிறகும்கூட, பிரதமரோ அல்லது பிஜேபியின் தலைவரோ ஆர்.எஸ்.எஸ். தலைவரின் கருத்தை அரசைக் கட்டுப்படுத்தாது; பிஜேபியைக் கட்டுப்படுத்தாது என்று சொல்லியிருக்க வேண்டும் அல்லவா? ஏன் சொல்லவில்லை? மவுனம் சம்மதத் துக்கு அடையாளம் என்கின்ற உலகியலை ஏற்றுக் கொண்டால் ஒரு மணித்துளி அளவுகூட ஆட்சியில் நீடிக்க முடியாது - கூடாது!

நாடாளுமன்றத்தில் மதச் சார்பற்ற கட்சிகள் இந்தப் பிரச்சினையைக் கையில் எடுத்துக் கொள்வார்கள் என்று எதிர்ப்பார்க்கிறோம்.

மத்தியில் ஆட்சி அமைத்து 60 நாட்களுக்குள் ளாகவே மத்திய ஆட்சியின் மதச் சார்பற்ற தன்மையின் மீது அய்யத்துக்கு இடமின்றி சந்தேக நிழல்கள் படரத் தொடங்கி விட்டன.

குடியரசு தலைவர் அழைத்த இப்தார் விருந்தையே பிரதமர் மோடி புறக்கணித்தது சாதாரணமானதல்ல.

இஸ்ரேல் - பாலஸ்தீன போரின் மீதான கருத்தை வெளிப்படையாக நாடாளுமன்றத்தில் தெரிவிக்கத் தயங்குவதும் இந்தப் பட்டியலில் வைக்கத் தகுந்ததே!

இந்திய வரலாற்று ஆய்வுக் கழகத்திற்குப் பச்சை யான இந்துத்துவாவாதியைப் பொறுக்கி எடுத்து அறிவித்திருப்பதும் அந்த வகையில்தான்.

சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் சமஸ்கிருத வாரம் கொண்டாட வேண்டும் என்று ஆணையிட்டு இருப் பதும், அதற்காக மக்கள் வரிப் பணத்தைக் கோடி கோடி யாகக் கொட்டுவதும், இந்துத்துவாவின் கூர்மையான நடவடிக்கையே!

சமஸ்கிருதக் குடும்பத்தைச் சேர்ந்த இந்தியில்தான் மத்திய அரசு பணியாளர்கள் கடிதத் தொடர்பு கொள்ள வேண்டும் என்று இதற்கு முன் ஆணை பிறப்பித்ததும் இந்துத்துவாவின் செயல்பாடே!

இத்தகைய செயல்பாடுகள் மூலம் பல்வேறு மதங்களைச் சார்ந்தவர்கள், மத நம்பிக்கையற்றவர்கள் 125 கோடி மக்கள் வாழும் இந்தியாவில் பிளவு மனப்பான்மையை உண்டாக்குவது - எத்தகைய விபரீதமானது!

வேற்றுமையில் ஒற்றுமை என்று பெருமையாகச் சொல்லிக் கொண்டதெல்லாம் பழங்கதைதானா? கட்சிகளை மறந்து இந்துத்துவாவாதிகளின் இத்தகைய மதவெறிப் போக்கை வன்மையாகக் கண்டிக்க முன்வர வேண்டும்.

திராவிடர் கழகத் தலைவர் வழக்கம் போலவே தக்கதோர் தருணத்தில் முன் குரல் கொடுத்து முழங்கியுள்ளார் - மதவாத சக்திகளை முறியடிக்க ஓரணியில் திரளுவோம்! திரளுவோம்!!

Read more: http://viduthalai.in/page1/85704.html#ixzz3B53tgcf4

தமிழ் ஓவியா said...


ஏ! தாழ்ந்த தமிழகமே!

வணக்கம், தென்கிழக்கு ஆசியாவின் சாக்ரடீஸ் சமூக சீர்திருத்த இயக்கத்தின் தந்தை, அறியாமை, மூடநம்பிக்கை, இழிவான நடவடிக்கைகள் ஆகியவற்றின் கடும் எதிரி என்று யுனெஸ்கோ ஹிழிணிஷிசிளி நிறுவனத்தால் விருது வழங்கப்பட்ட பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் பிறந்த மண்ணில், தமிழர் தலைவர் முனைவர் மானமிகு கி.வீரமணியார் ஓயாது பகுத்தறிவுப் பிரச்சாரம் செய்து வரும் தமிழ் மண்ணில் இன்னும் சில ஊர்களில் வெட்கக்கேடான செயல்கள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன.

31.7.2014 தேதிய தொலைக்காட்சியில் தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகில் உள்ள பல்லேனஹள்ளி என்ற கிராமத்தில் முனியசாமிக்கு ஒரு கோயில். அந்தக் கோயிலுக்கு அருகில் ஒரு பெரிய அரச மரம் உள்ளது. அந்த அரசமரத்தில் நூற்றுக் கணக்கான வவ்வால்கள் தங்கி வருகின்றன. அந்த வவ்வால்கள் அந்த கிராம மக் களுக்குக் கடவுளாம்! அந்த வவ்வால்களின் கழிவுகளை அந்த கிராம மக்கள் பிர சாதமாக மதிக்கிறார்களாம்!

முனியசாமியை வேண்டிக் கொண்டு நேர்த்திக்கடன் செய்தால் நினைத்த செயல் கைகூடுகிறதாம். படிப்பில் மந்தமாக இருந்த சில பெண்கள் முனியசாமியை வேண்டிக் கொண்டதில் பட்ட வகுப்பில் தேர்ச்சி பெற்று பட்டதாரிகள் ஆகியிருக்கிறார்களாம்!

கோயிலில் உணவு அருந்திக் கொண்டிருக்கும் தாய்மார்களிடம் சில இளம் பெண்கள் குழந்தை வரம் வேண்டி மடிப் பிச்சை வாங்குகிறார்கள்! ஒரு கிராமத்தில் மழை வேண்டி இரு கழுதைகளுக்குத் திருமணம் செய்து வைக் கிறார்கள்! கழுதைக்கும் மழைக்கும் என்ன தொடர்பு என்று திருமணம் செய்து வைக்கும் அறிவிலிகள் சிந்திப்பதே இல்லை.

மற்றொரு கிராமத்தில் பெண்களுக்குப் பேய் பிடித்திருக்கிறது என்று பேயை விரட்ட பெண்களைக் கோயில் பூசாரி சவுக்கால் அடிக்கிறான்! எந்த பார்ப்பனப் பெண்ணா வது பேய் பிடித்திருக்கிறது என்று தன்னை பூசாரி சவுக்கால் அடிக்க சம்மதிப்பாளா?
கரூர் அருகே மேட்டு மகாதானபுரம் மகாலட்சுமி அம்மன் கோயிலில் பெண்கள் தலையில், நேர்த்திக் கடன் என்று சொல்லி பூசாரி தேங்காயை உடைக்கிறான். சில பெண்கள் தலையில் ஆழமான காயம் ஏற்பட்டு இரத்தம் வடிகிறது. அவர்களை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்கிறார்கள்!

ஒரு கோயில் தேர்த்திருவிழாவில் தேரின் சக்கரம் பக்தரின் உடலில் ஏறி பக்தர் இறந்தே போகிறார்.

முன்னாள் இந்தியப் பிரதமர் பண்டித நேரு பின்வரும் வேண்டுகோளை விடுத் துள்ளார். இந்தியா தனது மத மவுடீகங் களைக் களைந்து விஞ்ஞானப் பாதையில் திரும்ப வேண்டும். தேவையற்ற, பொருளற்ற எண்ணங்களும், சமூகப் பழக்க வழக்கங் களும் - இந்தியத் தாய்க்குச் சிறைச் சாலையை எழுப்பி இருக்கின்றன. இந்த மடமையே இந்தியாவின் வளர்ச்சியைத் தடுக்கின்றன.

திருவண்ணாமலை கார்த்திகைத் தீப விழாவிற்கும், திருச்செந்தூர் சூர சம்மாரத் திற்கும் பக்தர்கள் 15 இலட்சம், 20 லட்சம் என்று கூடுகிறார்கள்! இதனால் மக்களின் நேரம், நினைப்பு, உழைப்பு, பணம் ஆகி யவை செலவே தவிர தமிழகத்திற்கு எவ் வகை நன்மையும் கிடையாது. சேத்துப் பட்டை அடுத்த மேல்வில்லிவனம் பச்சை யம்மன் கோவிலில் தீமிதி விழாவில் தீ மிதிப் போரைப் பார்த்தால் பரிதாபமாக உள்ளது.

சொல்லப் பயன்படுவர் சான்றோர்; கரும்புபோல்
கொல்லப் பயன்படும் கீழ்.

என்பது வள்ளுவரின் பொன்மொழி, தந்தை பெரியார், மானமிகு கி.வீரமணியார் ஆகிய அறிஞர்களின் கருத்துக்களைக் கேட்டாலே சான்றோர் மூடநம்பிக்கைகளி லிருந்து திருந்திவிடுவார்கள். தமிழகத்தில் இலட்சக் கணக்கான இளைஞர்கள் திருந்தி இருக்கிறார்கள். ஆனால் கீழ்மக்கள் கரும்பு போல் பிழிந்தால் தான் திருந்துவார்கள். ஆகவே பகுத்தறிவுக் கொள்கையையும், ஆராய்ச்சி மனப்பான்மையையும் வளர்க்க வேண்டும் என்ற இலட்சியத்தைக் கொண்ட இந்திய அரசியல் சட்டத்தை பின்பற்றும் தமிழ்நாடு அரசு சட்டத்தின் மூலம் பெண்களுக்கு பேய் விரட்டுதல், தலையில் தேங்காய் உடைத்தல், நெருப்பு மிதித்தல் போன்ற மூடப்பழக்கங்களைத் தடை செய்ய வேண்டும். தந்தை பெரியாரையும் அறிஞர் அண்ணாவையும் கொடியில் ஏந்தி இருக்கும் அண்ணா திமுக அரசு செய்ய வேண்டிய கடமை ஆகும் இது.

- இர.செங்கல்வராயன்
முன்னாள் துணைத் தலைவர், ப.க.,

Read more: http://viduthalai.in/page1/85706.html#ixzz3B54D9GoN

தமிழ் ஓவியா said...

செத்துப் போன சமஸ்கிருதத்தின் பரிதாப நிலை


தமிழ்நாட்டில் ஒருவர்கூட சமஸ்கிருதம் பேசவில்லை!

சென்னை, ஆக.13_ நாட்டின் வடகிழக்குப் பகுதியில் சமஸ்கிருதம் பேசக்கூடியவர் ஒருவர்கூட கிடையாது. மத்தியப்பிரதேசம், ஜம்மு காஷ்மீர், தமிழ்நாடு, கேரளா மற்றும் குஜராத் மாநிலங்களைக் கடந்து நாட்டின் கிழக்கு மாநிலங்களில் 2001 புள்ளிவிவரத்தின்படி சமஸ்கிருதம் பேசக்கூடியவர் ஒருவர்கூட கிடையாது.

தமிழ்நாடு தன்னித்தன்மையுடன் உள்ளது. 1921 ஆம் ஆண்டின் புள்ளிவிவரக் கணக்கின்படி மெட் ராஸ் மாகாணம் இந்தியாவிலேயே சமஸ்கிருதம் பேசுபவர்கள் அதிக எண்ணிக்கையில் இருந்தனர். இந்தியா முழுவதுமாக சமஸ்கிருதம் பேசுபவர்களில் 356 பேரில் தமிழ்நாட்டில் 315 பேர் இருந்துள்ளனர்.

சமஸ்கிருதம் பேசுபவர்களில் ஒரே நிலையில் இல்லாமல் 1981 ஆம் ஆண்டில் 6,106 பேரும், அதி லிருந்து 1991 ஆம் ஆண்டில் 49,736 பேரும், அதே 2001 ஆம் ஆண்டில் 14,135 பேருமாக இருப்பதாக புள்ளிவிவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெறும் 14 ஆயிரம்தான்

இவ்வளவு மாறுதல்களுக்குக் காரணம் புள்ளி விவரம் எடுக்கப்பட்ட முறைகளில் உள்ள குறைபாடு அல்ல. அன்றன்றைய அரசியல் சூழல்களுக்கு ஏற்ப மக்கள் தங்கள் மொழியின்மீதான ஈடுபாடுகளை மாற்றிக் கொள்வதுதான் காரணமாக உள்ளது என்று மக்களின் மொழியியல் குறித்து புள்ளிவிவரம் தொடர் பான பேராசிரியர் கணேஷ் தெவி தெரிவித்தார்.

மேலும் அவர் கூறும்போது, நாட்டில் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் உள்ள அரசியல் விருப்பங்கள் அல்லது சூழல்களைப் பொறுத்து அமைந்திருப்பதை புள்ளிவிவரத் தகவல்கள் வெளிப்படுத்துகின்றன. 1991 ஆம் ஆண்டுக்கும், 2001 ஆம் ஆண்டுக்கும் இடையே மேற்கு இந்தியப் பகுதி களில் உள்ள பழங்குடியினத்தின் பல்வேறு குழுக்கள் பேசக்கூடிய மொழிகள் குறித்த பில்(வில்) வழக்கில் குறிப்பிட்டுள்ளபடி, மொழிகளைப் பேசக் கூடிய வர்களின் எண்ணிக்கை இருமடங்காக உள்ளது. அந்த மக்களின் விருப்பங்களை வெளிக்கொணர்வதாக இருந்தமையால், ஜார்கண்ட் என்கிற புதிய மாநிலமே 1990 ஆம் ஆண்டுகளில் உருவானது என்று தெவி கூறுகிறார். மேலும் அவர் கூறும்போது,

மேற்கு வங்காளத்தில்...

இந்திக்குப் பின்னர் அதிகம் பேசக்கூடியவர்களாக வங்க மொழியைப் பேசுபவர்கள் இருக்கிறார்கள். கடந்த முப்பது ஆண்டுகளில் எடுக்கப்பட்ட புள்ளி விவரங்களின்படி, மேற்கு வங்கத்தின் மக்கள் தொகையைக் காட்டிலும், வங்க மொழி பேசுபவர் களின் எண்ணிக்கை மிகுந்து காணப்படுகிறது. அதற்குக் காரணம் வங்க தேசத்திலிருந்து இடம் பெயர்ந்தவர்கள் தங்கள் மொழி உருதுவாக இருப் பினும், வங்க மொழி என்று இந்தியக் குடியுரிமையைக் கோருவதற்காகக் கூறிவருவதும் காரணமாக இருக்கலாம் என்று கூறுகிறார்.

புள்ளிவிவரங்கள் ஒரு பொருட்டாகத் தெரியா விட்டாலும், அதுதான் மொழிகளைப் பேசுபவர்களின் அரசியல் கூறுகளை அளப்பதற்கான சரியான கருவியாக உள்ளன.
செம்மொழிகளுக்கான மய்யத்தைச் சேர்ந்த பி.மல்லிகார்ஜூன் கூறும்போது, நினைவில் வைத்துக்கொண்டு பேசக்கூடியதை மட்டும் கொண்ட பழைய சமஸ்கிருதத்தை உண்மை யாகவே தாய்மொழியாகக் கொண்டுள்ளவர்கள் நீண்டகாலத்துக்கு யாரும் கிடையாது. சமஸ்கிருதத்தை அப்படி தாய்மொழியாகக் கூறுபவர்கள் உயர்வான கவுரவத்துக்கும், அரசியல் சட்ட ரீதியாக பலன் பெறுவதற்காக மட்டுமே அப்படி சமஸ்கிருதத்தைத் தாய்மொழி என்று சொந்தம் கொண்டாடுபவர்களாக உள்ளனர் என்று கூறுகிறார்.

ஒரே ஒரு ஊரில்...

பேராசிரியர் கணேஷ் தெவி கூறும்போது,

இல்லாத ஒரு மொழியான சமஸ்கிருதம் தன் ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது; நாட்டின் எங்கோ ஒரு மூலையில் சமஸ்கிருதம் பேசப்படுவதாகத்தான் எண்ண முடிகிறது. கருநாடகாவில் உள்ள மத்தூர் கிராமத்தை சமஸ்கிருத கிராமமாகக் குறிப்பிடுவது வாடிக்கையாக உள்ளது. அங்கு தாய்மொழியாக உள்ள தாகவும் கூறப்படுகிறது. இறுதியாக, சமஸ்கிருதம் எங்குமே இல்லாவிட்டாலும், எங்கேயாகிலும் இருந்தாலும், அது சித்தாந்தங்களின்மூலம் நம்மி டையே இருப்பதாகக் கூறப்படுகிறது.

உணர்ச்சிகரமான தொடர்பு அந்த மொழிவாயிலாக உள்ளது. இதிகாசங்கள் மற்றும் சடங்குகள் சமஸ்கிருதத் திலிருந்து வெளியேறிவிட்டால் மற்றொரு மொழியால், அந்நிலையை மாற்ற முடியும் என்று தெவி கூறுகிறார்.

Read more: http://viduthalai.in/page1/85756.html#ixzz3B55C8rsX

தமிழ் ஓவியா said...


சங்கராச்சாரி-யார்?

ஜெகத்குரு என்று சங்கராச்சாரியாரைக் கூறுகிறார்களே! உண்மையில் சங் கராச்சாரியார் ஜெகத்துக்கே (உலகத்துக்கே) குருவா? முதலில் உள்ளூரில் இவரை அனைவரும் குருவாக ஏற் றுக் கொள்வார்களா? இந்து மதத்தில்தானாகட்டும் வை ணவர்கள் இவரைக் குரு வாக ஒப்புக்கொள்வார்களா?

உண்மை இவ்வாறு இருக்க, இவரை லோகக் குரு என்றும், ஜெகத்குரு என்றும் ஜெய பேரிகை கொட்டுவதில் மட்டும் குறைச்சலில்லை.

சங்கராச்சாரியார்களி லேயே மறைந்த மூத்த காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி யைத் தூக்கி வைத்துப் பேசுவார்கள்; புனிதர் என்று போற்றுவார்கள்.

உண்மை என்னவென் றால், துவேஷத்தில் தும் பிக்கை யானையைவிடப் பலம் வாய்ந்தவர்.

தீண்டாமைபற்றிப் பேச பாலக்காடு சென்று, காந்தி யார் அவரைச் சந்தித்தார் (16.10.1927). மகாத்மா என்று மக்கள் போற்றும் அந்தத் தலைவரை மாட்டுக் கொட் டகையில் உட்கார வைத் துத்தான் பேசினார் அந்த சங்கராச்சாரியார்.

பேசி என்ன பயன்?

ஹரிஜன ஆலயப் பிர வேச விஷயத்தில் சாஸ்திரங் களையும், பழைய வழக்கங் களையும் நம்பி இருப்பவர் கள் நம் நாட்டில் பெரும் பாலோர் இருக்கிறார்கள் என்றும், அவர்கள் மனம் நோகும்படிச் செய்யும் எந்த மாறுதலும் - இம்சைக்கு ஒப்பாகுமென்று தாம் முடி வுக்கு வரவேண்டியிருக்கின் றது என்று ஸ்வாமிகள் (காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி) காந்தியடிகளிடம் தெரிவித் தார். (ஆதாரம்: தமிழ்நாட் டில் காந்தி, பக்கம் 575, 576).

தீண்டாமைக் கொடு மைக்கு ஆளாக்கப்பட்ட வர்களின் வலிகள் சங்கராச் சாரியார்களுக்கு முக்கிய மல்ல; மாறாக, அதற்குக் காரணமானவர்கள் மனம் நோவதுதான் சங்கராச்சாரி யார்களுக்கு முக்கியம்.

இருப்பதிலேயே மகாபுரு ஷர் என்று பார்ப்பனர்களால் போற்றப்படும் அவர் நிலையே இப்படி! அவர் குறித்து தந்தை பெரியார் தெரிவித்த கருத் தும், தகவலும் மிகப்பெரிய அதிர்ச்சிக்குரியவை!

12 வருடத்திற்கு ஒரு முறை ஈசன் தண்ணீர் விடு வதாகக் கூறியபடி, 12 வருடத் திற்கு ஒருமுறை (கும்ப கோணம்) மகாமகம் வரு கிறது. முன் மகாமகம் 1945 ஆம் ஆண்டில் வந்தது. அதற்குமுன் 1933 இல் வந்தது. அதன்படி 12 வருடத் துக்கு ஒருமுறை இருக்க, இப்போது 1957 ஆம் ஆண்டில் வரவேண்டும்.

ஆனால், 1956 ஆம் ஆண்டிலேயே வருகிறது. இதன் காரணம், சங்கராச் சாரிக்கு இப்போது உடல் நிலை சரியில்லையாம். அவர் அடுத்த வருடம்வரை உயி ருடன் இருப்பாரோ? இருக்க மாட்டாரோ? என்ற சந்தேகத் தின்மீது, அவர் இப்பொழுது இருக்கும்போதே கொண்டா டிவிடவேண்டும் என்பதற் காக அடுத்த வருடம் கொண் டாடவேண்டியதை, இந்த வருடம் முன்பாக ஒத்தி வைத்துக் கொண்டாடுகிறார் களாம்.

இதன்படி ஈசன் இப் போது சங்கராச்சாரியாருக்கு உடல்நிலை சரியில்லை என் பதற்காக, 11 வருடத்திலேயே தண்ணீர் விடுகிறார்கள் என்று ஆகிறது. இப்படிப் பார்ப்பான் மனது வைத்தால் ஈசனுடைய செய்கையையும் மாற்றிவிட முடியும். அப்படி யானால், கடவுளும், வெங் காயமும் எங்கே போனதோ தெரியவில்லை (திருவத்தி புரத்தில் தந்தை பெரியார் பேசியது, விடுதலை, 6.2.1956).

இதற்கு விளக்கமும் தேவையா? இந்து மதம், சங்கராச்சாரியார்களின் உண்மைத் தன்மைகளை அறிந்து கொள்வீர்! - மயிலாடன்

Read more: http://viduthalai.in/page1/85755.html#ixzz3B55RQ3AY

தமிழ் ஓவியா said...

அங்கன்வாடி பணியாளர்கள் பிரச்சினை: தமிழர் தலைவர் வேண்டுகோள்!


அங்கன்வாடி பணியாளர்கள் பிரச்சினை:

தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதியை முதலமைச்சர் செயல்படுத்த முன்வரவேண்டும்

தமிழர் தலைவர் வேண்டுகோள்!

பெரியார் பணி முடிப்பவர்களுக்கு ஓய்வு, சலிப்பு கிடையாது!

தமிழ்நாடு முழுவதும் அங்கன்வாடி - சத்துணவுப் பணியாளர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு ஆயிரக்கணக்கில் கைது செய்யப் பட்டுள்ளனர்.

இவர்களில் பெரும்பாலோர் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஏழை, எளிய மக்களேயாவர்.

தி.மு.க. ஆட்சியின்போது பதவி உயர்வு உள்ளிட்ட உயர்வுகள் அளிக்கப்பட்டன. அதற்குப் பின் இந்தப் பணியாளர்கள் மேம் பாட்டுக்காக தமிழ்நாடு அரசு எதையும் செய்யவில்லை.

இவ்வளவுக்கும் 2011 சட்டப்பேரவைத் தேர்தல் அறிக்கையில் அ.இ.அ.தி.மு.க. முக்கிய வாக்குறுதியைக் கொடுத்திருந்தது.

சத்துணவுப் பணியாளர்களின் பணி மற்றும் ஊதியம் தொடர்பான பிரச்சினைகள் முன்னுரிமையோடு அணுகப் பட்டு, முடிவுகள் எடுக்கப்படும் என்று அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

மூன்றாண்டுகள் ஓடியும், இந்த வாக்குறுதிகள் காப்பாற்றப் படவில்லை; இதில் வறட்டுக் கவுரவம் பார்க்காமல், பெரும்பாலும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஏழை, எளிய இப்பணியாளர்கள்மீது கருணை செலுத்தி, அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றித் தருமாறு முதலமைச்சர் அவர்களைக் கேட்டுக்கொள்கிறோம்.

- கி.வீரமணி,
தலைவர், திராவிடர் கழகம்.

Read more: http://viduthalai.in/page1/85758.html#ixzz3B55aQRH7

தமிழ் ஓவியா said...

கடவுள் சக்திமீது நம்பிக்கை இல்லை


முக்கிய கோவில்களில் எல்லாம் கண்காணிப்பு கேமராக்களாம்!

இந்து அறநிலையத்துறை அறிவிப்பு!

மதுரை, ஆக.14-_- இந்து சமய அறநிலையத் துறை கோயில்கள் அனைத் திலும் பாதுகாப்புக்காக கட்டாயம் கண்காணிப்புக் கேமரா பொருத்தப்பட வேண்டும் என, அறநிலை யத் துறை உயரதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

மதுரையில் மீனாட்சி சுந்தரேசுவரர் கோயி லுக்கு தீவிரவாத அச்சுறுத் தல் தொடர்வதால், பாதுகாப்புப் பலப்படுத் தப்பட்டுள்ளது. மேலும், மக்கள் அதிகம் கூடும் திருக்கோயில்களின் பாது காப்பையும் உறுதிப்படுத்த வேண்டிய அவசியம் தற்போது எழுந்துள்ளது.

மதுரை மாவட்டத்தில் உள்ள மக்கள் அதிகம் கூடும் இந்து சமய அற நிலையத் துறைக்குச் சொந்தமான சுமார் நூற்றிற்கும் மேற்பட்ட கோயில்களில் பாதுகாப்பு காரணமாக, கண்காணிப் புக் கேமராக்கள் அமைக் கப்பட்டு வருகின்றன.

அந்த வரிசையில், திரு மோகூர் காளமேகப் பெருமாள் கோயிலில் புதன் மற்றும் சனிக் கிழமைகளில் பக்தர்கள் அதிகம் கூடுவர். எனவே, அக்கோயிலில் தற்போது 16 இடங்களில் கண் காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகின் றன. இதேபோன்று, கோயில் மய்யத்தில் இரும்புக் கோபுரம் அமைத்து, அதில் இடி தாங்கியும் பல லட்சம் ரூபாய் செலவில் அமைக் கப்பட்டு வருகிறது.

யா.ஒத்தக்கடை மலை அடிவாரத்தில் உள்ள யோக நரசிம்மர் கோயி லிலும் கண்காணிப்புக் கேமராவும், இடிதாங்கியும் அமைக்கப்பட உள்ளதாக, கோயில் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், திருவாதவூர் கோயில் உள்ளிட்ட அனைத்துக் கோயில் களிலும் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட் டுள்ளன. ஏற்கெனவே கண்காணிப்புக் கேம ராக்கள் உள்ள கோயில் களில் கூடுதலாக கேம ராக்களை பொருத்தவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதாக, இந்து சமய அறநிலையத் துறை வட்டாரங்கள் தெரிவித் தன.

கோயிலில் உள்ள கடவுள்கள் வெறும் சிலைகள்தான் அவை களுக்குச் சக்தியில்லை என்று இந்து அறநிலை யத்துறை கூறாமல் கூறு கிறது - அப்படித் தானே!

Read more: http://viduthalai.in/page1/85822.html#ixzz3B56ne2D6

தமிழ் ஓவியா said...


காஸாவில் இனப்படுகொலை!


ஒருபுறம் எகிப்தையும், இன்னொருபுறம் இசுரேலையும் எல்லைப் பகுதியாகக் கொண்ட காஸா, இனப்படுகொலைக்குப் பெரிய அளவில் ஆளாகிக் கொண்டு வருகிறது.

இலங்கையில் ஈழத் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்ட பிறகு, சொன்னதுபோல அய்.நா. தன் கடமையைச் செய்ய தவறி விட்டது என்று இந்த காஸா பிரச்சினையிலும், சொன்னால் ஆச்சரியப்படுவதற் கில்லை. உலக நாடுகளும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டு இருக்கின்றன என்பது வெட்கக்கேடாகும்!

இவ்வளவுக்கும் ஒரு சிறிய பிரச்சினையில் ஆரம்பித்த விவகாரம் பெரிய அளவில் ஆயிரக்கணக் கான மக்கள் ஈவு இரக்கமற்ற முறையில் படுகொலை செய்யப்பட்ட நிலைக்குக் கொண்டு சென்றுள்ளது.

சில வாரங்களுக்கு முன் காஸா பகுதியில் மூன்று இசுரேலிய மாணவர்கள் காணாமல் போனார்கள். அவர்களைத் தேடி உள்ளே நுழைந்த இசுரேல் படையினர் அந்த மூன்று மாணவர்களும் குண்டடி பட்டு இறந்து கிடந்ததைக் கண்டனர். அந்தப் படுகொலைக்கு யாரும் பொறுப்பு ஏற்கவில்லை.

இந்தச் சூழ்நிலையில் பாலஸ்தீன இளைஞர் ஒருவர் இஸ்ரேலிய வலதுசாரி இயக்கத்தைச் சேர்ந்தவர்களால் உயிரோடு கொளுத்தப்பட்டார். இதிலிருந்து துவங் கியது தான் இன்றைக்குப் பெரும் போராக உரு வெடுத்து விட்டது என்று கூறப்படுகிறது.

இது ஏதோ ஒரு காரணம் என்றாலும் இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு - பாலஸ்தீனத்தின் ஒரு பகுதி யூதர்களின் குடியிருப்புப் பகுதியாக ஆக்கப்பட்டது.

ஒண்ட வந்த பிடாரி ஊர்ப் பிடாரியை விரட்டிய கதையாக, கொஞ்சம் கொஞ்சமாக பாலஸ்தீன மக்களின் நிலங்களை ஆக்ரமிக்கத் தொடங்கி விட்டனர் என்பது தான் உண்மை.

இசுரேல் மாணவர்கள் கொல்லப்பட்டதற்கு யார் காரணம் என்று தெரியாமலேயே, தானே நீதிபதியாகி தாதாவாக மாறி விட்டது இஸ்ரேல். அதற்கு முட்டுக் கொடுக்கிறது அமெரிக்கா.

கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள், மாற்றுத் திறனாளிகளுக்கான இல்லங்கள் என்று எதையும் கவனத்தில் எடுத்துக் கொள்ளாமல் சகட்டு மேனியாகத் தாக்குதலைத் தொடுத்து வருகிறது இஸ்ரேல். காஸா இனி அவ்வளவுதான் - அதன் கதை முடிந்தது என்று காட்டுத்தனமாகச் செயல்படுகிறது இசுரேல்.

இந்திய அரசு இதில் நடந்து கொள்ளும் போக்கு வெட்கப்படத்தக்கது. இலங்கையில் எப்படி சிங்கள வெறியர்களுக்கு இந்தியா கொடி பிடிக்கிறதோ அதே நிலைதான் இப்பொழுதும் இசுரேலுக்குக் குடை பிடித்துக் கொண்டு இருக்கிறது மறைமுகமாக.

மகாராட்டிர மாநிலம் மாலேகான் குண்டு வெடிப்பில் சம்பந்தப்பட்ட - முன்னாள் இராணுவ அதிகாரி சிறீகாந்த் புரோகித் என்பவரின் மடிக் கணினியை ஆய்வு செய்தபோது, திடுக்கிடும் தகவல் அம்பலமானது. இசுரேலில் தஞ்சம் புகுந்து அங்கிருந்து ஒரு போட்டி இந்துத்துவா ஆட்சியை இந்தியாவில் நடத்துவது உட்பட வரைபடங்கள், அரசமைப்புச் சட்டம், கொடி முதலியவை வடிவமைக்கப்பட்டு இருந்தன என்பதை நினைவு கூர்ந்தால் இன்றைய பி.ஜே.பி. அரசு - இசுரேல் மேற்கொண்டுள்ள இனப்படுகொலைபற்றி மூச்சு விடாமல் இருப்பதற்கான அந்தரங்கம் புரியும்.

மாநிலங்களவையில் இதுபற்றிப் பேச இருந்த நிலையில் வெளியுறவுத் துறைஅமைச்சரின் எதிர்ப்பால் அதுபற்றி விவாதம் நடைபெறவில்லை என்பது முக்கியமானதாகும்.

எது எப்படி இருந்தாலும், வலுத்தவன், இளைத் தவனை வேட்டையாடுவது என்பது இந்த 21ஆம் நூற்றாண்டிலும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இங்கு நியாயத்திற்கோ, மனித உரிமைகளுக்கோ கிஞ்சிற்றும் இடம் இல்லா தொழிந்து விட்டது. அய்.நா. இருந்தும் பயனில்லை; அது வெறும் கொலு பொம்மை என்கிற அளவுக்குத்தான் சுருங்கிப் போய் விட்டது.

கடவுள் எனக்கு ஆணையிட்டார் என்று கூறி ஈராக் கில் புகுந்து துவம்சம் செய்ததே அமெரிக்கா! அந்த நாட்டின் அதிபர் சதாம் உசேனைத் தூக்கில் போட்டுக் கொன்றதே அமெரிக்கா - யார் என்ன செய்ய முடிந்தது?

மொத்தத்தில் அறிவியல் வளர்ந்த அளவுக்கு மனிதம் வளரவில்லை என்பதும், இயந்திரத் தன்மை யுடைய விலங்காக பெரும்பாலும் மனிதன் ஆகி விட்டான் என்பதும் மறுக்கப்படவே முடியாது!

Read more: http://viduthalai.in/page1/85831.html#ixzz3B57EuJZd

தமிழ் ஓவியா said...

வாயைக் குவித்து வேகமாக ஊதினால் காற்று குளிர்ச்சியாக இருக்கிறதே எப்படி?


வாயைக் குவித்து வேகமாக ஊதினால் நமது மூச்சுக் காற்று வெப்பமாகத் தானே இருக்க வேண்டும். காற்று குளிர்ச்சியாக இருக்கிறதே ஏன்? அதற்கு என்ன காரணம் தெரியுமா?

வாயைக் குவித்து வேகமாக ஊதினால் நமது மூச்சுக்காற்று வெப்பமாகத் தானே இருக்க வேண்டும். காற்று குளிர்ச்சியாக இருக்கிறதே ஏன்? அதற்கு என்ன காரணம் தெரியுமா?

இந்த கேள்வி சுவாரசியமானது. வாயை அகலத் திறந்து கையின் பின்புறத்தில் வெளி மூச்சை விட்டால் அது வெப்பமாக இருக்கும். உடம்பின் வெப்பத்தை நுரையீரலிலிருந்து எடுத்துக்கொண்டு வருவதால் வெளிமூச்சு வெப்பமாக இருக்கிறது.

யாருக்காவது கையில் சூடுபட்டுக் கொண்டால் உடனே வாயைக் குவித்து வேக மாக காற்றை ஊதுகிறோம். அது குளிர்ச்சியாக இருக்கிறது.

எப்படி? கையை தொலைவாக வைத்துக்கொண்டு காற்றை வேகமாக ஊதும்போது நீங்கள் எதிர்பார்ப்பது போல அது வாயிலிருந்து வரும் மூச்சுக் காற்று அல்ல. அட அப்படியா? பின் எந்தக் காற்று அது.

அக்கம் பக்கத்தில் உள்ள அறை வெப்பக் காற்றுதான் அது. நீங்கள் ஊதும் காற்று அறைக் காற்றை முட்டித் தள்ளி கையில் பட வைக்கிறது. கையை வாய் அருகே வைத்து ஊதிப் பாருங்கள் நேரடியாக நுரையீரலி லிருந்து வருவதால் அது வெப்பமாக இருக்கும். சூடு பட்டவர்கள் ஊதாதே ரொம்ப சூடாக இருக்கிறது என்பார்கள்.

நீங்கள் நினைக்கலாம், நெருப்பு ஜுவாலையுடன் எரிவதற்கு வாயால் ஊதுகிறோம். வெளி மூச்சில் ஆக்ஸிஜன் குறைவாகத்தானே இருக்கும் எப்படி நெருப்பு பற்றிக்கொள்கிறது என்று வியக்கலாம்.

இப்போது சொல்வீர்கள் வாயிலிருந்து வரும் காற்றல்ல நெருப்பை ஜுவாலை விடச் செய்வது. அக்கம் பக்கத்தில் உள்ளக் காற்றை வாயிலிருந்து வரும் மூச்சுக் காற்று மோதித் தள்ளி நெருப்பில் பட வைக்கிறது. அதிலுள்ள இருபது சதவீதம் ஆக்ஸிஜன் நெருப்பை ஜுவாலை விடச் செய்கிறது.

Read more: http://viduthalai.in/page1/85857.html#ixzz3B580VOAm

தமிழ் ஓவியா said...

பிரைமரி நிறங்கள் என்பவை என்னென்ன?

இந்த விஷயத்தில் நிறைய குழப்பங்கள் உள்ளன. உங்களுக்கு அந்தக் குழப்பம் ஏற் படாது. ஏனெனில் நீங்கள் ஒளி நிறங்களை பிரித்து தெரிந்துகொள்ளப்போகிறீர்கள். கணினி திரை, தொலைக்காட்சி திரை ஆகியவற்றிலிருந்து நாம் நேரடியாக ஒளியைப் பெறுகிறோம்.

புத்தகத்தில் பிரிண்ட் செய்யப்பட்டுள்ள கலர் படத்தைப் பார்க்கும்போது நாம் பிரதிபலிப்பு நிறங் களைப் பார்க்கிறோம். இந்த வித்தியாசம் மிகவும் முக்கியம்.

தொலைக்காட்சி திரையிலிருந்து வரும் நிறங்களில் பிரைமரி நிறங்கள் சிவப்பு, நீலம், பச்சை. சிவப்பு, நீலம், பச்சை நிற ஒளி களைக் கலந்தால் வெள்ளை ஒளி கிடைக்கும். இவை பிரைமரி நிறங்கள்.

இந்த நிறங்களை வேறு நிறங்களிலிருந்து பெற முடியாது. அதனால் இவை பிரைமரி நிறங்கள். மற்ற நிறங்களை இவற்றை பல அளவுகளில் கலப்பதன் மூலம் பெறமுடியும். அப்படி பெறப்பட்ட நிறங்கள் செகண்டரி நிறங்கள்.

Read more: http://viduthalai.in/page1/85857.html#ixzz3B58AjVCj

தமிழ் ஓவியா said...

ஒட்டகத்தால் எப்படி தண்ணீர் குடிக்காமல் உயிர் வாழ முடிகிறது?


ஒட்டகம் பாலைவன மிருகமாதலால் அதற்கு வறட்சி யைத் தாங்கிக்கொள்ளும் தன்மை (அடாப்டேஷன்) கிடைத்திருக்கிறது. அதன் முதுகில் உள்ள திமிலில் தண்ணீர் சேமிக்கப் படுவதில்லை. வயிற்றிலும் சேமிக்கப்படுவதில்லை. இரத்தத்தில்தான் தண்ணீர் சேமிக்கப்படுகிறது. குறைவாக வியர்வை ஏற்படுவதால் தண்ணீர் வியர்வையாக விரையமாவதும் இல்லை.

ஒரு வேளைக்கு ஒட்டகம் 150 லிட்டர் தண்ணீர் குடிக்கும். தண்ணீர் முழுவதும் இரத்தத்தில் சேர்ந்துவிடும். அப்படியானால் திமில் எதற்காக என்று கேட்கிறீர்கள்.

திமிலில் உள்ள பொருள் கொழுப்பு. கொழுப்பு செரிமானமாகும்போது நிறைய தண்ணீர் உற்பத்தியாகும். இந்த தண்ணீரை மெட்டபாலிக் தண்ணீர் என்பார்கள்.

ஒட்டகம் இரத்தத்தில் தண்ணீர் குறையும்போது மெட்டபாலிக் தண்ணீரை உற்பத்தி செய்துகொள்ளும். அப்போது திமிலின் அளவும் குறைந்துவிடும் கொழுப்பு கரைந்து திமில் தொளதொளவென்றாகிவிடும். எனவே தான் ஒட்டகத்தால் மாதக் கணக்கில் தண்ணீர் குடிக்காமல் உயிர் வாழ முடிகிறது.

Read more: http://viduthalai.in/page1/85858.html#ixzz3B58IB3zH

தமிழ் ஓவியா said...


வைரத்தை ஏன் கேரட் என்ற அளவில் குறிப்பிடுகிறார்கள்?


தங்கத்தை கேரட்டில் குறிப்பிடும் போது அதன் தூய்மையை அது குறிக் கிறது. எந்த அளவுக்கு தங்கத்தில் செம்பு, வெள்ளி, கேட்மியம் சேர்க்கப்பட்டிருக் கிறது என்பதை கேரட் அளவு கோள் குறிப்பிடுகிறது.

வைரம் முதலான நவரத்தினங்களில் கேரட் அளவீடு எடையைக் குறிப் பிடுகிறது. ஒரு கேரட் என்பது இருநூறு (200 மி) மில்லி கிராம். ஒரு பாரகான் என்பது 100 கேரட் வைரம் அல்லது முத்து போன்ற வேறு கல்லாக இருக்கலாம். 100 கேரட் என்றால் 20 கிராம் என்று நீங்கள் இப்போது கணக்குப் போட்டிருப்பீர்கள்.

கேரட் என்பது கேரட் வகை செடியி லிருந்துதான் பெயரை எடுத்துக் கொண் டது. கேரட் செடிகள் கடுகு செடி இனத் தைச் சேர்ந்தது. இதன் கனிகள் சிலிக்குவா என்ற வகையைச் சார்ந்தது. சிலிக்குவா கனியாகாமல் காயாக இருக்கும் போதே இரண்டாகப் பிளந்து கொள்ளும்.

அதன் ஊடே பத்துப் பதினைந்து விதைகள் இருக்கும். ஒரு விதையின் எடை (தோரா யமாக 200 மில்லி கிராம்) இருக்கும். முன்காலத்தில் எடை கற்களுக்கு செடி களின் விதைகளையே தரமாகப் பயன் படுத்தினார்கள்.

விதைகள் எப்போதும் மாறாத எடையைப் பெற்றிருக்கும் என்று நம்பினார்கள். அது உண்மையல்ல. இருந்தாலும் இந்த காலத்து நேர்மையும் நம்பிக்கையும் எடையை சந்தேகிக்க இடம் தரவில்லை.

மேலும் ஒரு செடியின் விதையையே எப்போதும் பயன்படுத் தியதால் நாளுக்கொரு எடை மாறுதல் என்கிற பிரச்சினை கிடையாது. இதே போல் இந்தியாவிலும் தங்கத்தை எடைபோட குன்றி மணி என்ற விதை எடையாகப் பயன்படுத்தப்பட்டது. 1907ஆம் ஆண்டில்தான் விதைகளை எடைக்கற்களாகப் பயன்படுத்துவதை விடுத்து உலோகங்களைப் பயன்படுத்த ஆரம்பித்தனர்.

Read more: http://viduthalai.in/page1/85855.html#ixzz3B58V3SCv

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

கிருஷ்ண ஜெயந்தி

கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடவிருக்கும் பக்தர்களுக்குப் புராணம் கூறும் ஒரு செய்தி.
கிருஷ்ணன் பிறப்பு என்னவென்றால், தேவர்கள் எல்லாம் போய், உலகில் அதர்மம் அதிகமாகி விட்டது; இராட்சதர்கள் தொல்லை பொறுக்க முடியவில்லை; அதைப் போக்க வலிமையுள்ள ஒருவனை எங்களுக்கு அளிக்க வேண்டும் என்று விஷ்ணுவைக் கேட்டார்களாம்.

உடனே விஷ்ணு என்ன செய் தான் தெரியுமா?

தன் மார்பிலிருந்து இரண்டு மயிரைப் பிடுங்கிக் கொடுத்தானாம். அந்த இரண்டு மயிரில் ஒன்று கறுப்பு நிறமாம்; மற்றது வெண்மை நிறமாம்.

கறுப்பு மயிர் கிருஷ்ண னாகவும், வெள்ளை மயிர் அவன் அண்ண னாகவும் ஆயின என்றும் அபிதான கோசத்தில் உள்ளது.

நாங்கள் சொல்லுவ தல்ல - அபிதான கோசம் - புராணம் கூறுகிறது.

இந்தக் கிருஷ்ணனுக்குத்தான் ஜெயந்தியா?

சிந்திப்பீர்!

Read more: http://viduthalai.in/page1/85879.html#ixzz3B5950adv

தமிழ் ஓவியா said...

உண்மையான தமிழன் யாரப்பா?

இந்த வார துக்ளக்கில் (13.8.2014) உண்மையான தமிழன் யார்? அதென்ன உண்மையான தமிழன்; பொய்யான தமிழன்; உண்மையும், பொய்யும் கலந்த தமிழன் என்றெல்லாம் வித்தியாசம் உண்டா என்ன? என்று பூணூலுக்கே உள்ள குயுக்தியுடனும், சேட்டையுடனும், கேவலப்படுத்தும் நோக்கத்துடனும் எழுதி இருக்கிறார் திருவாளர் சோ.

அவர் தமிழராக இல்லாததால் (வெளியில் அப்படி சொல்ல மாட்டார்கள்) இப்படியெல்லாம் இஷ்டத்துக்கு எழுதக் கூடிய வசதி இருக்கிறது.

தமிழ் பேசுவதால் தமிழன் ஆக மாட்டார் என்று கழகம் சொல்லுவது எவ்வளவுத் துல்லியமானது என்பது - இப்போதாவது நமது அப்பாவித் தமிழர்கள் புரிந்து கொண்டால் சரி.

இதுவே பார்ப்பனர் சம்பந்தப்பட்ட பிரச்சினையாக இருந்தால், சங்கரமடம் பிரச்சினையாக இருந்தால் இந்தக் கிண்டல், கேலி. நையாண்டி, விஷமம் இருக்குமா என்பதைத் துக்ளக்கைக் காசு கொடுத்து வாங்கும் நண்பர்கள்தான் சிந்திக்க வேண்டும்.

இப்பொழுது மட்டுமல்ல; தமிழ், தமிழர் என்று சொன்னாலே அக்ரகாரவாசிகளுக்கு அக்னிக் குண்டத்தில் விழுந்தது போலத்தான்.

கேள்வி: பெங்களூரில் திருவள்ளுவர் சிலை திறக்கப்படுவதன் மூலம் தமிழர் இடையே நல்லுறவு நல்லிணக்கம் ஏற்படும் என்று கர்நாடக முதல்வர் எடியூரப்பா கூறியுள்ளாரே

சோ பதில்: நல்லுறவா? நல்ல உறவுதான். யாராவது கன்னட வெறியர்கள் ஒரு சமயம் பார்த்து அந்தச் சிலையை அவமதிக்காமல் இருந்தால் போதுமே! (துக்ளக் 19.8.2009). புரிகிறதா?

கேட்ட கேள்வி என்ன? சோவின் பதில் என்ன?

ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா?

நீண்ட காலமாக பெங்களூரில் திறக்கப்படாமல் இருந்த திருவள்ளுவர் சிலையை திறப்பதற்கு எடியூரப்பா ஒத்துக் கொண்ட ஆத்திரம் இதில் பிரதிபலிக்கவில்லையா?
அவருடைய நோக்கம் திருவள்ளுவர் சிலையை அவமதிக்க வேண்டும் என்பதே - அதனை வேறொரு முறையில் எழுதுகிறார் தூண்டுகிறார் - அவ்வளவுதான்.

சென்னை மாநகரில் வணிக விளம்பரங்கள் தமிழில் எழுதினால்! இது என்ன மொழி நக்சலிசம் (துக்ளக் 15.9.2010) என்று எழுதிடவில்லையா?

அதே நேரத்தில் சமஸ்கிருதத்தைப்பற்றிச் சொல்லிப் பாருங்கள். கோயிலில் வழிபாட்டு மொழியாக சமஸ்கிருதம் இருக்கக் கூடாது என்று சொல்லிப் பாருங்கள் - அடேயப்பா பூணூல் துருத்திக் கொண்டு வந்து தண்டால் எடுக்கும். தமிழில் பாடினால் பொருள் இருக்கும். ஆனால், புனிதம் இருக்காது. மொழிக்கு முக்கியம் அல்ல - சமஸ்கிருத ஒலிக்குத் தான் முக்கியம் (துக்ளக் 18.11.1995). கடவுளுக்குக்கூட மொழி ஆசாபாசம் ஒலி ரசனைகள் உண்டாம்!

தமிழ் என்றால் அதற்கொரு விளக்கம் சமஸ்கிருதம் என்றால் சுற்றி வளைத்து அதற்கொரு வியாக்கியானம்!

உண்மையான தமிழன் யார்? பொய்யான தமிழன் யார்? என்று கேள்வி கேட்கிறாரே திருவாளர் சோ அதற்கான விடை இந்த இடத்தில் விளக்கமாகக் கிடைத்து விட்டதா இல்லையா?

இந்தப் பதிலில் இன்னொன்றையும் அதென்ன உண்மையான தமிழனின் கலாச்சாரம்?

அதுதான் மேற்கத்திய கலாச்சாரத்தைக் கடைப்பிடிக்க ஆரம்பித்து விட்டோமே என்று கேள்வி எழுப்புகிறார்.

மேற்கத்திய கலாச்சாரத்தை சோ கூட்டம் கடைப் பிடித்தாலும் - ஆவணி அவிட்டத்தை அனுஷ்டிக்காமல் இருக்கிறதா? பூணூலைப் புதுப்பிக்காது இருக்கிறதா?

திருமதி சிவசங்கரிக்குப் பதில் சொன்னாரே - நினைவிருக்கிறதா? சோ கேட்ட இதே கேள்வியைத் தான் தமிழர் தலைவரிடமும் கேட்டார் சிவசங்கரி.

கேள்வி: தமிழர் பண்பாடு தமிழர் பண்பாடு என்று அடிக்கடி சொல்கிறீர்களே, அப்படி என்றால் என்ன?

தமிழர் தலைவர் பதில்: இதுஒரு நல்ல கேள்வி. தாயை மகனும், மகளைத் தகப்பனும் போடி, வாடி என்று சொல்ல மாட்டோம் - அதுதான் தமிழர் பண்பாடு (குமுதம் 22.121983) என்று சொன்னதுதான் திருவாளர் சோ ராமசாமிக்கும் பதிலடி!

கொலை வழக்கில் சிக்கி சிறைச்சாலை வரை சென்று வந்த ஒருவரை ஜெகத் குரு என்று சொல்லும் இனப்பற்று பார்ப்பனர்களே, உங்களுக்கு இருக்கும் பொழுது, தமிழர்களுக்குத் தமிழ்ப் பற்றோ தமிழன் என்ற இனப் பற்றோ இருக்கக் கூடாதா?

இன்னும் பேசுங்கள் - இப்படியே எழுதுங்கள், அப்பொழுதாவது தமிழனின் தடித்த தோலுக்குச் சுயமரியாதை உணர்வு வருகிறதா என்று பார்ப்போம்!

- மின்சாரம்

Read more: http://viduthalai.in/page1/85891.html#ixzz3B59CpAoh

தமிழ் ஓவியா said...


அடிமைப்படக்கூடாது...


உழைத்தவன் உழைப்பின் பயனை அடையவேண்டுமானால் - இப்படி யாகம், சாத்திரம், வேதம், மோட்சம், கர்மம், முன்ஜென்மம், கடவுள் செயல் என்கின்ற பித்தலாட்டங்களுக்கு அடிமைப்படக் கூடாது.

- விடுதலை, 26.2.1968

Read more: http://viduthalai.in/page1/85896.html#ixzz3B59Z1Xsb

தமிழ் ஓவியா said...

இந்தியா என்பது இந்துஸ்தானா? ஆர்எஸ்எஸ் தலைவருக்கு, சீத்தாராம் யெச்சூரி பதிலடி!

புதுடில்லி, ஆக. 15_ -மாநிலங் களவையில் புதனன்று உள்துறை அமைச்சகத்தின் செயல்பாடுகள் மீதான விவாதத்தில் பங்கேற்று சீத்தாராம் யெச்சூரி பேசியதாவது:
உள்துறை அமைச்சகத்தின் புள்ளி விவரங்களின்படி 2013இல் 823 வகுப்புவாத வன்முறை நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன. இப்போதும் என்ன நடந்து கொண்டிருக்கிறது? உத்தரப் பிரதேசத்தில் மட்டும் 2013இல் 247 வன்செயல்கள் நடந்துள்ளன. 2014இல் ஏப்ரலுக்கும் ஜூனுக்கும் இடையில் 149 வகுப்புவாத மோதல்கள் நாடு முழுவதும் நடந்துள்ளன. சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெறவிருக்கும் தொகுதிகளில்தான் வகுப்புவாத மோதல்கள் அதிகரித்துள்ளன. இந்த அரசு ஆட்சிப்பொறுப்பை ஏற்ற மே 16க்குப் பின்னர், உத்தரப்பிரதேசத்தில் மட்டும் 605 வகுப்புவாத வன்செயல்கள் நடந்துள்ளன. இவற்றில் மூன்றில் இரு பங்கு நிகழ்வுகள் சட்டமன்றத்திற்கான இடைத்தேர்தல்கள் நடைபெறும் 12 தொகுதிகளில் நடந்துள்ளன. இதே போன்றே சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெறவிருக்கும் பீகாரிலும் நடை பெறுவதாக செய்திகள் வருகின்றன.

தேர்தல்களில் வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கத்துடன் இவ்வாறு மதவெறித் தீ விசிறிவிடப்படுகிறது. இது நாட்டின்ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட் டுக்கும் உதவாது.ஆர்எஸ்எஸ் தலைவர் கட்டாக்கில் ஒரு கூட்டத்தில் பேசிய பேச்சு செய்தித்தாள்களில் வெளியாகி யுள்ளது. சென்ற ஞாயிறு அன்று, இங்கிலாந்தில் வசிப்பவர்கள் ஆங்கி லேயர்கள் என்றால், ஜெர்மனியில் வசிப்பவர்கள் ஜெர்மனியர்கள் என்றால், அமெரிக்காவில் வசிப்பவர்கள் அமெரிக் கர்கள் என்றால், இந்துஸ்தானில் வசிப்பவர்கள் மட்டும் ஏன் இந்துக்களாக அறியப்படக்கூடாது என்று பேசி யிருக்கிறார். அனைத்து இந்தியர்களின் கலாச்சார அடையாளம் இந்துத்துவா. நாட்டில் இன்றையதினம் வசிப்போர் அனைவரும் இந்த மாபெரும் கலாச்சார மரபின் வழி வந்தவர்களாவர் என்று அவர் மேலும் பேசியிருக்கிறார்

.மாநிலங்களின் ஒன்றியம் இந்தியா

நம்முடைய அரசியல் நிர்ணய சபையில் நீண்ட நெடிய விவாதத்திற்குப் பின்னர் உருவாக்கப்பட்ட நம்முடைய அரசியலமைப்புச் சட்டத்தினை மதச்சார்பற்ற ஜனநாயக அடித்தளத்தின் மீதுதான் நிறைவேற்றியிருக்கிறோம். நமது நாடு இந்துஸ்தானா அல்லது பாரதமா அல்லது பரதவர்ஷாவா அல்லது பரதகண்டமா - எப்படி அழைப்பது என்பது குறித்து அரசியல் நிர்ணய சபையில் நீண்ட நெடிய விவாதமே நடந்தது. அரசியல் நிர்ணயசபையில் நடைபெற்ற விவாதங் களை முழுமையாக பார்த்தோமானால், இறுதியாக , 1950 ஜனவரி 26 அன்று அரசியலமைப்புச் சட்டத்தின் 1ஆவது பிரிவில் கூறியுள்ளபடி, இந்தியா, அதாவது பாரத், மாநிலங்களின் ஒன்றி யமாக இருக்கும், என்பதை நாமனை வரும் ஏற்றுக் கொண்டிருக்கிறோம்.

பாரத் என்றால் என்ன என்பது குறித்தும் இந்த அவையில் பல முறை நாம் வரையறுத்திருக்கிறோம். பாரத் அல்லது பாரதம் என்பதுதனிப்பட்ட எந்தவொரு மதத்திற்கோ, ஒரு சாதிக்கோ, ஓர் இனத்திற்கோ, ஓர் இனக்குழுவினருக்கோ சொந்தமான தல்ல, மாறாக அது மனிதகுலத்தின் முன்னேறிய பல்வேறு நாகரிகங்களின் கலவையால் உருவான ஓர் அற்புதம். இங்கே அனைத்து இனத்தினரும் பரஸ்பரம் கூடிப் பழகி வருகின்றனர். அனைத்துக் கலாச்சாரங்களும் ஒன்றுடன் ஒன்று இணைந்தும் பிணைந்தும் இந்தியா என்னும் சிந்தனையை உருவாக்கி இருக்கின்றன. இன்றையதினம் அத்தகைய சிந்தனைக்கு அச்சுறுத்தல் வருமானால், அது மிக மிக ஆபத்தான ஒன்று. அதனை நாம் நம் நாட்டில் அனுமதித்திடக்கூடாது.

நமது நாடு எல்லாவகைகளிலும் முன்னேற வேண்டும் என்று விரும்பு கிறோம், நமது நாடு பொருளாதாரத்தில் முன்னேற வேண்டும் என்று விரும்பு கிறோம். நமது நாடு ஜி-20எனப்படும் முன்னேறிய நாடுகளின் கூட்டமைப்பில் அமர வேண்டும் என்று விரும்புகிறோம். இவைஅனைத்துக்கும் நாம் ஆசைப் படுகிறோம். ஆனால், நாட்டின் ஒற் றுமையும் ஒருமைப்பாடும் சீர்குலையு மானால் இவை அனைத்தும் நாசமாகி விடும். குறுகிய தேர்தல் ஆதாயத் திற்காக அத்தகைய உயர்ந்த சிந் தனையை அழித்து விடாதீர்கள். இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி பேசினார்.

Read more: http://viduthalai.in/page1/85901.html#ixzz3B59hxBSo

தமிழ் ஓவியா said...


ஜாதிப் புழுக்கள்!


கல்வி என்பது தண்ணீர் அதைச் சமூகமென்னும் பெரு மரத்தின் வேரில் ஊற்றினால் நம் வேலை ஆகி விட்டது என்று நினைத்தேன். ஆனால், இந்த மரத்தின் வேரிலுள்ள ஜாதி வேற்றுமையும், கெட்ட எண்ணமும், பணத்துக்கு அடிமைத்தனமாகிய புழுக் களா அதை வளர விடப் போகின்றன? இந்த புழுக்கள் சாக வேண்டும்.

- காண்டேகர்

Read more: http://viduthalai.in/page1/85890.html#ixzz3B5Aexenn

தமிழ் ஓவியா said...


தந்தை பெரியார் அறிவுரை சீர்திருத்தக்காரர்கள் உயிர்துறக்க தயாராய் இருக்க வேண்டும்!

ஜாதி வித்தியாசமோ, உயர்வு தாழ்வோ கற்பிக்கின்ற பத்திரிகைகளைப் படிக்கக் கூடாது என்று சொல்லி விட வேண்டும். மீறிப் படிக்க ஆரம்பித்தால் அதைப் பறிமுதல் செய்து விடவேண்டும். உயர்வு - தாழ்வு வித்தியாசம் முதலி யவை கொண்ட மடாதிபதிகளையெல்லாம் சிறையில் அடைத்துவிட வேண்டும். பொது ஜனங்கள் கிளர்ச்சி செய்தால் மடாதிபதிகளைத் தீவாந்திரத்திற்கு அனுப்பிட வேண்டும்.

சுவாமிகளுக்குள்ள நகைகள், வாகனங்கள், பூமிகள் எல்லாவற்றையும் பறிமுதல் செய்து அவைகளை விற்றுப் படிப்பில்லாதவர்களுக்குப் படிப்பும், தொழில் இல்லாதவர்களுக்குத் தொழிலும் ஜீவன மும் ஏற்படுத்த உபயோகப் படுத்தி விட வேண்டும்.

இதுபோன்ற, காரியங்கள் செய்யத்தக்க உரம் கொண்ட வீர ஆட்சிக்கு நாட் டைக் கொண்டு வரவேண்டும். அப்பேர்ப்பட்ட வீரர்களின் ஆட்சிக்குட்பட்ட நாடுகள் தான் இன்று சுயமரியாதையையும் சீர்திருத்தமும் பொலிந்து விளங்குகின்றன.

அப்பேர்ப்பட்ட வீர ஆட்சிக்கு நாட்டைக் கொண்டு வரவேண்டுமானால் அநேக சீர்திருத் தக்காரர்கள் உயிர் துறக்கத் தயாராக இருந்து கொண்டு பாமர மக்களிடையில் உண்மையைப் பரப்ப முன்வர வேண்டும்

(இச்செய்தி 8.7.76 விடுதலை இதழிலிருந்து சென்சாரால் வெட்டப்பட்டதாகும்).

Read more: http://viduthalai.in/page1/85892.html#ixzz3B5B0RwY3

தமிழ் ஓவியா said...

மூவரும் முழுப் பொய்யர்களே!

ஆசிரியருக்கு கடிதம் 15.10.78 ஆனந்த விகடனில் இருவரும் ஒரே தொழில் என்ற தலைப்பில் (பக்கம் 93) ஓடத்தில் ஏற்றிச் சென்ற தற்கான, கூலியை ராமன் கொடுக்க குகன் வாங்க மறுத் தான் என்று வாரியார் கூறியதைக் கேட்க நகைப்புத்தான் ஏற்பட்டது. ஏனெனில் அயோத்தியை விட்டு அடவிக்குச் செல்லும்போது ராமன், லட்சுமணன், சீதை மூவரும் அணிந்திருந்த ஆடையாபரணங்களை அந்தணர்களுக்கு அளித்து விட்டு மர உரிதரித்து சென்றான் என்று கம்ப ராமாயணத்தில் எழுதி இருக்கின்றது.

கள்ளுக்கடை மயக்கத்தில் கவிதைகள் எழுதி கம்பனார் கானகத்தில் கனமான மூட்டையை அனுமான் கொடுக்க, அம்மூட்டையில் உள்ள ஆடையாபரணங்கள் ராவணன் எடுத்துச் சென்ற சீதையின் பொருளே என்று விளக்கியுள்ளன.

இதை படித்த தந்தை பெரியார், மர உரி தரித்து வந்த மூவர்களுக்கும் குறிப்பாக, சீதைக்கும், காட்டில் எப்படி ஆடையாபரணம் கிடைத்தது என்றும், அதிலும் சீதையைச் தேடச் சென்ற அனுமானிடம் கணையாழி கொடுத்தனுப்பியதும் - அதனைப் பெற்ற சீதையும் பதிலுக்கு தன்னுடைய கணையாழியை ராமனிடம் கொடுக்கும்படி அனுமானிடம் கொடுத்ததையும் பற்றி கேள்வி மேல் கேள்வி போட்டு கம்பனின் கயமையைப் பற்றி சொல்லியதை நாம் அறிவோம்.

அதுபோதாதென்று மேலும் கம்பனை பழிக்கவோ என்னவோ ஆனந்த விகடனைக் கொண்டு கம்பனை மேலும் பொய்யனாக்க வாரியார் ராமன் கூலி கொடுக்க, குகன் மறுத்தான் என்று சொல்லுவது கம்பனுடைய ஞாபக மறதியை மேலும் காற்றாடிபோல் பறக்கச் செய்கிறது. அயோத்தி விட்டு மூவரும் மர உரி மட்டும் மாட்டிக் கொண்டு வந்தவர்களுக்கு கூலி கொடுக்க என்ன இருந்தது? அப்படி இருந்தால் அயோத்தியில் இருந்து திருடி வந்தார்களா? ஏனெனில், எல்லாம் பரதன் சொத்து தானே.

அப்படி திருடி வந்தால் பஞ்சமா பாதகத்தில் ஒரு பாதகமல்லவா? ஆனதால் முன்னுக்குப் பின் முரணாக எழுதுவது முழுப் பொய்யல்லவா? ஆகவே கள்ளுண்டு கவிதைகள் எழுதிய கம்பனும் பொய்யன்! அக்கம்பனின் கவிதைகளை படித்து மோட்சம் போக எடுத்துச் சொல்லும் வாரியாரும் ஒரு பொய்யன்!! அதனை பிரமாதமாக வெளியிடும் ஆனந்த விகடனும் ஓர் பொய்யன்!!! ஆகவே மூவரும் மகா பொய்யர்கள் என்பது நன்கு தெரிகின்றதல்லவா?

ஆம்பூர் சீ.கோ.வெற்றியழகன், சென்னை

Read more: http://viduthalai.in/page1/85892.html#ixzz3B5BAPly5

தமிழ் ஓவியா said...


சுவாமிஜிக்கு ஏன் இந்த வேலை?


அண்மையில் பம்பாய் வந்த ஒரு ஹாலிவுட் நடிகை பூனாவில் உள்ள ஆச்சார்யா ரஜ்னீஷை சந்திக்கச் சென்றார். பகல் முழுவதும் அவருக்கு பக்திமிக்க பல்வேறு உபதேசங்கள் கொடுக்கப்பட்டது.

இரவு வந்ததும் ஒரு இருண்ட குகைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கே அவரது உடைகளை அவிழ்க் கும்படி கூறினார்கள். நிர்வாணமாக இருந்த ஒரு குறிப்பிட்ட நபருடன் படுத்துக் கொள்ளுபடி கட்டாயப் படுத்தினார்களாம்.

ஆனால் நடிகை மறுத்து விட்டார். உடனே அவர் உடைகள் வலுக்கட்டாயமாக கிழிக்கப்பட்டன. அடுத்தது நடப்பதற்குள் அவர் தப்பி ஓடிவந்து பம்பாய் காவல்துறை யினரிடம் புகார் கொடுத்துள்ளார்.

ஆனால் இந்த ஆசிரமத்திற்கு நடிகர் வினோத்கன்னா தொடர்ந்து செல்வதாக கூறப்படுகிறது; எதற்காக?

முருகனின் கோவண பிரசாதம்!

காலஞ்சென்ற வெற்றிப்படத் தயாரிப்பாளர் ஒரு முருக பக்தர். அவர் முருகன் சிலையில் உள்ள கோவணத்தைக் கொண்டு வந்து பன்னீரில் நனைத்துக் குடிப்பாராம்.

அவரைப் போல் வெற்றிப்படம் தயாரிக்க வேண்டும் என்று நினைத்து சில படத்தயாரிப்பாளர்கள் முருகன் கோவண பிரசாதத்திற்கு அலைகிறார்கள்.

சினிமா ஏரியா, அய்யப்பன் ஏரியா

திரைப்பட உலகில் நடிகர்கள், தொழில்நுட்ப நிபுணர்கள், சான்ஸ் கிடைக்காத நடிகர்கள் எல்லாரும் மாலை போட்டு அய்யப்பன் விரதம் பிடிக்க ஆரம்பித்துள்ளார்கள்.

நடிகர்களுக்கு மட்டும் ஒரு விதி விலக்கு. அவர்கள் முகத்தை ஷேவ் செய்து கொள்ளலாம், பெண்களைத் தொடலாம்? சாமியே சரணம் அய்யப்பா!

(மூக்குத்தி வார இதழிலிருந்து தருபவர் தமி.

Read more: http://viduthalai.in/page1/85895.html#ixzz3B5BHawKJ

தமிழ் ஓவியா said...

சமயலறைத் தத்துவம்

மிகவும் சாஸ்திரோத்தமனான இந்துவின் தினப்படி வாழ்க்கையில், அவன் மிகவும் கவலைப்படுவது, எங்கே சாப்பிடுவது, எங்கே சாப்பிடக் கூடாது, யார் கூட அமர்ந்து சாப்பிடலாம், யாரை விரட்டி விட்டு சாப்பிட வேண்டும் என்பவைகளைப் பற்றித்தான்.

அவனுடைய வாழ்வில் ஆத்மீக கவலைகள் எதுவும் இப்படி ஆட்டிப் படைப்பதில்லை. அவனுடைய சமூக வாழ்க்கையில் - சமையல் அறையின் விதிகளும் சட்டதிட்டங்களுமே ஆட்டம் போடுகின்றன.

-நேரு, 1960, பக்கம் 393-5

Read more: http://viduthalai.in/page1/85895.html#ixzz3B5BP75LU

தமிழ் ஓவியா said...

68 ஆம் ஆண்டு சுதந்திர நாள்: பலவிடங்களில் பலவிதம்!


68 ஆம் ஆண்டு சுதந்திர நாள்:
பலவிடங்களில் பலவிதம்!

நாமக்கல்லில் கருப்புக் கொடியேற்றிய கிராம மக்கள்

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தை அடுத்துள்ள பாதரை கிராமத்தில் உள்ள அண்ணா நகர், எம்ஜிஆர் நகர் பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரு கின்றன. இவர்களில் பெரும்பான்மையோர் விசைத்தறி மற்றும் சாயப்பட்டறைகளில் வேலை செய்யும் கூலித் தொழிலாளர்கள் ஆவர்.

கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக இங்கு வசித்து வரும் இந்த பொதுமக்கள் அப்பகுதியில் உள்ள காலி நிலத்தை வழித்தடமாக பயன்படுத்தி வந்தனர். மேலும், போதிய கழிப்பறைகள் இல்லாத நிலையில் அந்த காலி யிடத்தை திறந்தவெளி கழிப்பிடமாகவும் பயன்படுத்தி வந்துள்ளனர்.

இந்நிலையில், அந்த இடத்தை ஒரு தனியார் ஆக்கிர மித்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து பல முறை புகார் தெரிவித்தும் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் தரப்பில் புகார் தெரி விக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தராத கிராம நிர்வாகத்தை கண்டித்து தங்களின் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் சுதந்திர தினத்தில் வீடுகளில் கருப்புக் கொடிகளை ஏற்றி வைத்து எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இதனால், அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது. வருவாய்துறை அதிகாரிகள் அப்பகுதி மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

கடலூரில் கருப்பு கொடி ஏற்றம்

கடலூர் சூரப்ப நாயக்கன் சாவடியைச் சேர்ந்த பார்த்திபன் (வயது 34) என்பவர், நேற்று காலை 9 மணி அளவில் தனது வீட்டில் கருப்பு கொடி ஏற்றியிருந்தார். அவர் கூறுகையில், கடந்த ஆக., 15 இல், அதிகாலை எனது வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்த நபர், வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த எனது மனைவி கழுத்தில் அணிந்திருந்த நான்கரை சவரன் தாலிச் சங்கிலியைப் பறித்துச் சென்றார். திருப்பாதிரிப்புலியூர் காவல் நிலையத் தில் புகார் செய்தேன். அவர்களும் வழக்குப் பதிவு செய்தார்களே தவிர, ஓராண்டாகியும் குற்றவாளியை கைது செய்யவில்லை. இதைக் கண்டித்து, சம்பவம் நடந்த நாளான சுதந்திர தினத்தை கருப்பு நாளாக கடைப் பிடிக்கும் வகையில் கருப்புக் கொடி ஏற்றினேன் என்றார்.

தகவலறிந்த திருப்பாதிரிப்புலியூர் காவல்துறையினர் நண்பகல் 12 மணி அளவில் பார்த்திபன் ஏற்றியிருந்த கருப்பு கொடியை அகற்றினர்.



கரூரில் கருப்பு கொடியேற்றி போராட்டம்

கரூர் அருகே சுதந்திர தின நாளில், சுதந்திரமாக இருக்க முடியவில்லை எனக் கூறி, வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கரூர் அருகே கிருஷ்ணராயபுரம் பகுதியில் ஊர் பிரச்சினை காரணமாக கடந்த மூன்று ஆண்டுகளாக சுமார் 10-க்கும் மேற்பட்ட குடும்பங்களை ஊர் மக்கள் ஒதுக்கி வைத்துள்ளனர். இதனால் எந்தவொரு பொதுநிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ள முடியவில்லை என பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் நாட்டில் சுதந்திரமாக இருக்க முடிய வில்லை என கூறி, பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை துறைமுகத்தில் தலைகீழாக ஏற்றப்பட்ட தேசியக்கொடி சென்னை துறைமுகத்தில் தேசிய கொடி தலைகீழாக ஏற்றப்பட்டதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை துறைமுகத்தில் வெள்ளிக்கிழமை காலை 7.30 மணிக்கு சுதந்திர தினத்திற்கான நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சென்னை துறைமுக பொறுப்புக் கழகத்தின் தலைவர் அதுல்யா மிஸ்ரா தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். அப்போது தேசிய கொடி தலைகீழாகப் பறந்ததால், நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து தேசியக் கொடி கீழே இறக்கப்பட்டு, மீண்டும் சரியாக ஏற்றப்பட்டது. செல்பேசியில் பேசியபடியே தேசியக்கொடி ஏற்றிய அதிமுக நகர்மன்றத் தலைவர்

நேற்று 68 ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. நாடெங்கிலும் தேசியக்கொடி ஏற்றப்பட்டது. சென்னை அனகாபுத்தூரில் பம்மல் நகராட்சி அதிமுக நகர்மன்ற தலைவர் இளங்கோவன் செல்பேசியில் பேசியபடியே கொடியேற்றி அவமரியாதை செய்தார்.

Read more: http://viduthalai.in/page1/85983.html#ixzz3B5CzG4DZ

தமிழ் ஓவியா said...


தீண்டாமையும் பார்ப்பன உபாத்தியாயர்களும்


தீண்டாமையும் பார்ப்பன உபாத்தியாயர்களும்

விருத்தாஜலம் தாலுகா பெண்ணாடம் போர்டு எலிமெண்டரி பாட சாலையில் ஒரு பார்ப்பன தலைமை உபாத்தியாயர் இருப்பதாயும் அப்பள்ளிக் கூடத்தில் வாசிக்கும் ஆதிதிராவிட பிள்ளைகளை மேற்படியார் அதிகக் கொடுமையாகவும், கொஞ்சமும் இரக்கமின்றியும் நடத்துவதாகவும் பலர் நமக்குச் செய்திகளனுப்பி பத்திரிகையில் வெளியிடும்படி வேண்டினர். இவ்விஷயத்தை மேற்படி போர்டு அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்திப் பின்னர் தக்கது செய்யலாமென்ற முடிவின் பேரில் அவ்வாறே போர்டு அதிகாரிகளுக்கு நிலைமையை விளக்கி எழுதியிருந்தோம். அவர்களிட மிருந்து வந்த பதிலில் முன்னமே ஒரு தரம் அது சம்பந்தமாய் கவனித்திருப்பதாயும் மீண்டும் அதை விசாரித்து உண்மையறிந்து தக்க நடவடிக்கை எடுத்துக் கொள்வதாயும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேற்படி பாடசாலையில் உண்மையாய் நடப்பவை என்ன? ஆதி திராவிடப் பிள்ளைகள் எவ்வாறு நடத்தப் படுகிறார்கள், எவ்வளவு காலமாக இவ்விதம் நடை பெறுகிறது, அது சம்பந்தமாக மேலதிகாரிகள் எவ்விதம் கவனித்து என்ன பரிகாரம் செய்திருக்கிறார்கள் என்ற முழு விவரத்தையும் நமக்கு எழுதியனுப்பும்படி அவ்வூர் அன்பர்களைக் கேட்டுக் கொள்ளு கிறோம்.

- குடிஅரசு - துணைத்தலையங்கம் - 07.09.1930

Read more: http://viduthalai.in/page1/85965.html#ixzz3B5DB7t76

தமிழ் ஓவியா said...

கோவை முனிசிபல் நிர்வாகம்

கோயமுத்தூர் முனிசிபாலிட்டியின் 1929-30ஆம் வருஷத்திய நிர்வாக ரிப்போர்ட் வரப்பெற்று அதை முற்றிலும் படித்துப் பார்த்தோம். சென்ற வருஷத்தை விட இவ்வருஷம் கல்வி, பொருளாதாரம், பொதுஜன சுகாதாரம் முதலிய எல்லாத் துறைகளிலும் முற்போக்கடைந்திருக்கிறது. வரி வருமானம் ரூ 2,74,707-லிருந்து ரூ 2,96,171-க்கு உயர்ந்திருக்கிறது. பொது நிதி இருப்பிலிருந்து சிறுவாணி தண்ணீர் சப்ளை வேலைத்திட்டத்திற்காகக் கொடுக்கப்பட்ட ரூ 1,51,500ம் போக வருஷ முடிவில் ரூ 1.64 லட்சம் இருப்பதாகக் கணக்கிடப்பட்டிருக்கிறது. இம்முனிசிபா லிட்டியைப் பற்றி சர்க்கார் எழுதிய குறிப்பில் வெகுவாகப் புகழ்ந்து கோவை முனிசிபாலிட்டி யின் நிர்வாகம் இம்மாகாணமற்றெல்லா முனிசிபல் நிர்வாகங்களை விட தலை சிறந்து விளங்குவதாய் குறிப்பிட்டு விட்டு அதன் தலைவர் திரு. இரத்தினசபாபதி முதலியாரவர்களையும் அவரது சகாக்களையும் பாராட்டி எழுதப்பட்டிருக்கிறது.

தக்க பலனளிக்கும் முறையில் பொது ஜனசேவை செய்து வரும் கோவை முனிசிபல் தலைவரவர்களையும் அவரது சகாக்களின் கூட்டுறவையும் நாம் மிகுதியும் பாராட்டுகிறோம்.

- குடிஅரசு - துணைத் தலையங்கம் - 07.09.1930

Read more: http://viduthalai.in/page1/85965.html#ixzz3B5DIiu3t

தமிழ் ஓவியா said...



மலாய் நாட்டு வக்கீல்களின் தேசியம்

மலாய் நாட்டில் மலாக்கர் என்கின்ற பட்டணத்தில் கள்ளிக்கோட்டை திருவாளர் கே.பி. கேசவமேனன் அவர்கள் சுமார் 3, 4 ஆண்டுகளாக பிரபல பாரிஸ்டராக இருந்து வருகின்றார்கள். அவர் இப்போது தன்னை கு.ஆ.ளு. பாரிலும் வக்கீலாக சேர்த்துக் கொள்ள வேண்டுமென்று கோலாலம்பூர் சீப் ஜட்ஜிக்கு விண்ணப்பம் போட்டதில் அவரைச் சேர்த்துக் கொள்வதற்குக் கோலாலம்பூர் வக்கீல்கள் ஜட்ஜிக்கு ஆட்சேபணை சொன்னதாகவும் அவ்வாட்சேபணை என்ன வென்றால் திரு. கே. பி. கே. மேனன் அவர்கள் ராஜத் துரோக விஷயமாய் சிறைசென்றவர் என்று சொன் னார்களாம். அதற்குப் பாரிஸ்டர் திரு. கே. பி. கே. மேனன் அவர்கள் தான் வைக்கம் சத்தியாகிரகத் தில் ஈடுபட்டதால் சிறை செல்ல நேரிட்டதென்றும் மதராஸ் ஹைகோர்ட்டில் மிக்க செல்வாக்குப் பெற்ற பாரிடர் என்றும் எடுத்துக் காட்டி னாராம். இதற்காக கனம் ஜட்ஜ் அந்த விண்ணப்பத்தைப் பைசல் செய்ய 2 மாதம் வாய்தா தள்ளிப் போட்டிருப்பதாகத் தெரியவரு கின்றது. மலாய் நாட்டு வக்கீல்கள் இந்த விஷ யத்தில் இவ்வித ஆட்சே பனைக் கொண்டு வந்ததை நாம் பலமாகக் கண்டிக் கின்றோம். வக்கீல்கள் அரசியல் சம்பந்த மான கிளர்ச்சிகளில் ஈடுபடு வதும், தண்டனைகள் அடை வதும் அவர்களின் இப்போ தையத் தொழில் முறையில் முக்கிய அம்சமாகி விட்டது. இந்தியாவில் அனேக வக்கீல் கள் தண்டனை அடைந்து இப்பொழுது வக்கீல்களாகவே இருக்கின்றார்கள். இது ஒருபுறமிருக்க திரு. மு. ஞ. கேசவமேனன் அவர்கள் ராஜத் துவேஷ விஷயமாய்ச் சிறைச் சென்றவர் அல்லவென்று உறுதியாய்ச் சொல்லு வோம் சென்னை ஹைகோர்ட்டில் அவர் மிக்க பிரபல வக்கீலாக இருந்தவர். இந்தியாவில் பிரபலமாயிருந்த கனவான்கள் யாராவது தேசச் சேவையின் பலனாய் உண்மையான தியாகம் செய்தவர்கள் இருப்பார்களானால் அவர்களில் திரு. மு.ஞ.மு.மேனன் முதன்மையான வராவார். மலையாள தேச முழுமையும் மு.ஞ.மு. மேனன் என்றால் கண்களில் நீர் விடுவார்கள். அப்பேர்பட்ட உண்மையான தியாகியானவர். திருவாங்கூர் ராஜியத்தில் வைக்கம் என்னும் ஒரு பிரபல கோயில் உள்ள ஊரில் உள்ள பொதுத் தெருவில் ஈழவர்கள், நாடார்கள், முதலியவர்கள் கூட நடக்கக் கூடாது என்று தடைசெய்யப்பட்ட தெருவில் அவர்களுக்குத் தெருப்பாத்தியம் வாங்கிக் கொடுக்கச் செய்யப்பட்ட முயற்சியில் திருவாங்கூர் அரசர் என்னும் சுதேச ராஜாவால் 6 மாதம் தண்டிக்கப்பட்டு ஜெயிலிலும் மிக்க மரியாதையாய் நடத்தப்பட்டவர். அத்தண்டனையின் போது நாமும் அவரும் திருவாங்கூர் ஜெயிலில் ஒன்றாகவே தண்டனை அனுப் பவித்தவர்களாவோம். கடைசி யாக காலாவதி தீருமுன் எங்களை விடுதலை செய்து விட்டதோடு திரு. கே. பி. கே. மேனனை எதற் காகத் தண்டித் தார்களோ அந்த காரியமான வைக்கம் ரோடுகளை எல்லோரும் நடக்கும் படியாக உத்தரவு கொடுத்து விட்டார்கள்.

ஆகவே திரு. கே. பி. கே. மேனன் அவர்கள் செய்த காரியம் குற்றமா? அல்லது திருவாங்கூர் அரசாங்கம் அவரைச் சிறைபடுத்தினது குற்றமா? என்பதை யோசித்துப் பார்த்தால் விளங்காமல் போகாது.

ஆகவே இப்படிப்பட்ட திரு. மேனன் அவர்களை மலாய் வக்கீல்கள் சிலர் ஆட்சேபித் திருப்பதிலிருந்து அவர்களது தேசியமும், சமுக சீர்திருத்தமும், அரசியல் முற்போக்கு முயற்சியும் எப்படிப்பட்டதாயிருக்கும் என்பதை ஒருவாறு உணரலாம். நம்மைப் பொறுத்தவரை இவ்வித ஆட்சேபணைகள் அறியாமையினாலோ அல்லது பொறாமையாலோ தான் ஏற்பட்டிருக்க வேண்டுமென்று கருதுகின்றோம். இது வக்கீல் தன்மையின் பிறவிக் குணமாம் போலும்.

- குடிஅரசு - துணைத்தலையங்கம் - 03.08.1930

Read more: http://viduthalai.in/page1/85965.html#ixzz3B5DPnImS

தமிழ் ஓவியா said...

தந்தை பெரியார் பொன்மொழி

மேல்ஜாதி - கீழ்ஜாதி என்கிற அமைப்பை ஒழிக்க வேண்டும் என்று நான் சொல்லும்போது மேல்ஜாதி - கீழ்ஜாதி என்கிற தன்மையினால் ஒரு கூட்டம் அடைந்திருக்கும் அதிகப் பங்கையும் உரிமையையும் - போக போக்கியத்தையும் - கீழ்நிலையில் இருந்து கேடு அடையும் மக்கள் நிலைமையையும் ஒழிக்க வேண்டும் என்ற தத்துவத்தில் தான் நான் ஜாதியை ஒழிக்க வேண்டும் என்று சொல்லுகிறேன்.

Read more: http://viduthalai.in/page1/85965.html#ixzz3B5DWCYqc

தமிழ் ஓவியா said...


பெரியாரை கொச்சைப்படுத்தலாமா?



சேலம் - பெரியார் பல்கலைக் கழகத்தில் நடைப்பாதை மற்றும் துணைவேந்தர் பஙகளா ரூ.25 லட்சம் செலவில் மாற்றி அமைக்கப்படு கிறதாம்.

எதற்காகத் தெரி யுமா? இப்பொழுதுள் ளவை வாஸ்துப்படி சரி யானதாக இல்லையாம். வாஸ்து சாத்திரப்படி மாற்றி அமைக்கிறார் களாம்.

கட்டடம் ஒன்றும் பழுதுபட்டு விடவில்லை. சிறப்பாகத்தான் இருக் கிறது; புதிய துணை வேந்தராக வந்துள்ள சுவாமிநாதன் என்பவர் சிறப்பாக உள்ள துணை வேந்தர் பங்களாவுக்குள் சென்று குடியேறாமல் விருந்தினர் மாளிகை யிலேயே தங்கி உள்ளாராம்.

கட்டடத்தை மாற்றி அமைக்கும் பணியைக் கூட பொதுப் பணித் துறையிடம் ஒப்படைக்கா மல் தனியார் வசம் ஒப் படைக்கப்பட்டுள்ளதாம்.

எப்படி இருக்கிறது? தந்தை பெரியார் பெய ரால் ஒளிரக் கூடிய ஒரு பல்கலைக் கழகத்தில் தந்தை பெரியார் அவர் களின் கொள்கைக்கு முற்றிலும் விரோதமாக - வாஸ்து பார்த்து, நல்ல கட்டடத்தை இடித்து விட்டுக் கட்டுகிறார்கள் என்றால் இந்தக் கொடு மைகளை என்னென்று சொல்லுவது!

இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி (51A(h)) மக்கள் மத்தியில் விஞ்ஞான மனப்பான்மையை வளர்ப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமை என்று கூறப்பட்டுள்ளது.

ஆனால், இங்கு துணைவேந்தராக இருக்கக் கூடியவரே வாஸ்து பார்க்கும் மூட நம்பிக்கைவாதியாக இருந் தால், எங்குப் போய் முட்டிக் கொள்வது?

வாஸ்து என்றால் என்ன என்று விளக்கு வாரா துணைவேந்தர்? வாஸ்து சாத்திரப்படி கழிப்பறை கட்டலாமா?

வாஸ்து சாத்திரத்தில் கழிப்பறைக்கு இடம் உண்டா? ஆந்திர மாநி லத்தின் முதல் அமைச் சராகவிருந்த என்.டி. ராமராவ் தலைமைச் செயலகத்தின் வாச லையே மாற்றி அமைத் தாரே - விளைவு என்ன?

விளக்கெண் ணெய்க்கும் கேடாய் முடிந்ததே தவிர, பிள்ளை பிழைத்த பாடில் லையே! அதுவும் அரசு பணத்தை மூடநம்பிக் கையின் வாயில் போடலாமா?

பெரியார் பல்கலைக் கழக சிண்டிகேட் என்ன செய்கிறது? ஒருவர்கூட பெரியார் சிந்தனை உள்ளவர் கிடையாதா? விஞ்ஞான நோக்குடை யோர் யாரும் இல் லையா? மக்கள் கிளர்ச்சி வெடிக்கும் எச்சரிக்கை!

- மயிலாடன்

Read more: http://viduthalai.in/page1/85997.html#ixzz3B5Dty2NM

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

புனிதனாகி விடலாமா?

கோயிலில் இறைவ னுக்குப் பூஜை செய்து நிவேதனம் செய்யப்படும் பொருட்கள், நிவேதனம் செய்தவுடன் பிரசாதம் என்ற புனித நிலையை அடைகின்றன. அது போல எத்தகைய குற்றங் கள் படிந்த மனிதனும் தன்னைப் பயபக்தியுடன் மனப்பூர்வமாக இறைவ னிடம் ஒப்படைத்தால் புனிதனாகி விடலாம் என் பதைப் பிரசாதம் குறிக் கிறதாம்.

இதில் ஒரு கேள்வி இருக்கிறது. இறைவனுக் குப் பூஜை செய்து நிவே தனம்! செய்தவுடன் அவை பிரசாதம் ஆகின் றன என்றால் என்ன பொருள்? எப்படி அவ் வாறு ஆகிறது? வார்த்தை வித்தியாசம், அவ்வளவு தான்! ஏய்த்துப் பிழைக் கும் ஏற்பாடு இல்லாமல் இதற்கு என்ன பெயராம்?

என்ன குற்றங்கள் செய்தாலும் பயப்பக்தி யுடன் தன்னை இறைவனி டம் ஒப்படைத்தால் புனி தனாகி விடலாமா?
அப்படியானால் காஞ்சி சங்கராச்சாரியார் ஏன் கொலை வழக்கில் சிக்கி சிறைச்சாலையில் கம்பியை எண்ணினார்?

Read more: http://viduthalai.in/page1/86004.html#ixzz3B5EEmjDn

தமிழ் ஓவியா said...

60 சதவீத மக்களுக்குப் பாதுகாப்பான குடிநீர் இல்லை இல்லாத சரசுவதி நதி ஆராய்ச்சி தேவையா?


புதுடில்லி, ஆக.17_- 60 சதவீத மக்களுக்குப் பாதுகாப்பான குடிநீர் இல்லாத நாட்டில் இல் லாத கற்பனை சரசுவதி நதியைத் தேடும் ஆய்வில் மத்திய பிஜேபி அரசு இறங்கியுள்ளது.

கங்கை சீரமைப்பு

தற்போது நீர் வளம், ஆறு வளர்ச்சித்துறையில் (Water Resourse, River Development)கங்கை சீர மைப்பு என்பது அந்த பட்டியலில் அதிக இடத்தைப் பிடித்துக் கொண்டுள்ளதாக உள் ளது. அதற்கான காரணங் களாக எதையும் இது வரை காண முடிய வில்லை. மிகவும் சிக்கல் களைக் கொண்டுள்ளவற் றில் வளத்தை ஏற்படுத் துவது என்பது மக்களின் வாழ்வைப் பாதிக்கக் கூடிய அளவில், எந்த ஒரு அரசின் வளர்ச்சி அல் லது வளர்ச்சித் திட்டங் களை பாதிக்கக் கூடிய தாகவும் இருக்கின்றது. இந்நிலையில், உமாபாரதி அமைச்சகத்தில் பொறுப் பேற்றுக் கொண்டுள்ளார்.

திறமை காட்டவேண்டிய பிரச்சினைகள்

பல ஆண்டுகளாக தண்ணீர்ப் பிரச்சினை களில் இந்தியா எதிர் கொண்டுள்ள சவால்கள், குடிநீர்ப் பிரச்சினைகள், ஆற்றின் மாசுபாடுகள், நீண்ட காலங்களாகவே தண்ணீர் இன்றி, நிரப்பப் பட வேண்டியவைகளாக பெயரளவில்மட்டுமே உள்ள நீர்வளங்களாக இருப்பவை என்று இவற் றின் மீதே உமாபாரதி அவருடைய திறமையைக் காட்ட வேண்டும் என்று தான் எவர் ஒருவரும் எதிர்பார்ப்பார்.
ஆறுகளில் மற்றும் ஆற்றுக்கு வெளியே உள்ள ஆற்றங்கரைப் பகுதிகளிலும் உள்ள பிரச்சினைகள், பீகாரில் உள்ள கோசி போன்ற ஆற்றில் கட்டுப்படுத்த வேண்டிய வெள்ளம் ஆகிய பிரச்சினைகள் எதிர்கொள்ள வேண்டிய சவால்களாக இருக்கின் றன. தட்பவெப்ப மாற்றங் களால் நீர்வளம் அதிகரித் துள்ளதால் இயற்கைக்குத் தான் நன்றி கூற வேண்டும்.

இல்லாத சரசுவதி

ஆனால், அமைச்சர் தன்னுடைய நேரத்தை கதையில் வரக்கூடிய சரசுவதி ஆறு இருக் கிறதா? இல்லையா? என்று ஆராய செலவிடு கிறார். ஏற்கெனவே, சரசுவதி ஆற்றைக் கண் டறிய புவியியல் வல்லுநர் கள், அறிவியலாளர்கள் ஆராய்ந்து பார்த்தபோது, அதற்கான சாத்தியக் கூறுகளே இல்லை என்று தெரியவந்தது.

சரசுவதியைக் கண்டுபிடிப்பதாக உமாபாரதி

அமைச்சர் உமாபாரதி தற்போது சரசுவதி நதி யைக் கண்டுபிடித்துவிடுவ தாக கூறிவருகிறார். இதையே மக்களவையிலும் அவர் அறிவித்துள்ளார். அலகாபாத்தில் உள்ள கோட்டையினுள் கிணற்று நீரை எடுத்து ஆய்வு செய்து நீர்வளத்தை யும் மற்றும் சரசுவதி ஆற்றின் பாதையையும் கண்டறியுமாறு மத்திய நிலத்தடிநீர் வாரியத்தை யும் கேட்டுக்கொண்டுள் ளார். நாடாளுமன்றத்தில் மத்தியப்பிரதேசத்தின் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் ரத்தன் லால் கடாரியா என்பவர் சரசு வதி ஆராய்ச்சி நிறுவ னத்தை அமைக்க வலி யுறுத்தி ஒரு தீர்மானத்தை யும் நிறைவேற்றுமாறு கோரி உள்ளார்.

அமைச்சராக இருப் பவர், அவருடைய குழு வில் உள்ள அலுவலர்கள் மற்றும் கடாரியா போன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதிகப் படியான ஆர்வத்தை சரசுவதி ஆற்றைத் தேடு வதில் காட்டிவருகிறார்கள். அவர் முன் குறித்த நேரத் தில் செய்து முடிக்க வேண் டிய சவாலான பணிகள் ஏராளமாக இருக்கின்றன.

60% மக்களுக்கு குடிநீர் இல்லை

மாபெரும் திட்டமான கங்கையைத் தூய்மைப் படுத்தும் பணி (அண்மை யில் உச்சநீதிமன்றம் அப் பணியில் எதுவும் செய்ய வில்லை என்று அரசிடம் விளக்கம் கேட்டுள்ளது) குடிமக்களுக்கு பாது காப்பான குடிநீர் வழங்க வேண்டிய பணிகள் (இந் தியாவில் மக்கள் தொகை யில் 60 விழுக்காட்டின ருக்கு பாதுகாப்பான குடிநீர் கிடையாது), நீர் சேகரிப்பு சட்டங்களை அமல்படுத்த வேண்டியது மற்றும் வீணாகும் நீரை மறுசுழற்சிப்படுத்துவது என்று இதுபோன்று நூற்றுக்கும் மேலாக உள்ளன. ஆனால், அமைச் சர் இதுவரை இல்லாத தும், இதுவரை முன்னுரி மைப் பட்டியலில் இல்லா ததுமான ஒரேயொரு விவ காரத்தில் மட்டுமே தன்னை இணைத்துக் கொண்டுள்ளார்.

Read more: http://viduthalai.in/page1/85998.html#ixzz3B5EQ3CYP

தமிழ் ஓவியா said...


இந்தியாவை உடைக்கத் திட்டமா?


இந்தியாவை உடைக்கத் திட்டமா?

இந்தியா இந்து நாடே! மீண்டும் கொக்கரிக்கிறார் ஆர்.எஸ்.எஸ். தலைவர்

மும்பை, ஆக.18_ இந்தியா ஒரு இந்து நாடு, இந்துத்துவா அதன் அடையாளம் என்று ஆர்.எஸ்.எஸ்.தலைவர் மோகன் பகவத் பேசியிருப் பது மீண்டும் சர்ச்சையைக் கிளப்பிவிட்டுள்ளது.

மும்பையில் நேற்று நடைபெற்ற கிருஷ்ண ஜன்மாஸ்டமி நிகழ்ச்சி யில் ஆர்.எஸ்.எஸ். தலை வர் மோகன் பகவத் கலந்து கொண்டு பேசிய தாவது:

இந்தியா ஒரு இந்து நாடு. இந்துத்துவா என் பது அதன் அடையாளம். இந்து மதம் மற்றவர் களையும் உள்ளடக்கிய ஒரு மதம்.
அடுத்த 5 ஆண்டு களில் நாட்டில் உள்ள அனைத்து இந்துக்களிட மும் சமத்துவத்தை ஏற்படுத்த வேண்டும். இதற்காக நாம் உழைக்க வேண்டும்.

அனைத்து இந்துக் களும் ஒரே இடத்தில் குடிநீர் பருக வேண்டும். ஒரே இடத்தில் பிரார்த் தனை செய்ய வேண்டும். இது மட்டும் அல்லாமல் அவர்கள் இறந்த பிறகு உடல்கள் அனைத்தும் ஒரே இடத்தில் தகனம் செய்யப்பட வேண்டும்.
இவ்வாறு மோகன் பகவத் பேசியுள்ளார்.

இந்தியா, இந்துக்களின் நாடு' என்று மோகன் பகவத் கூறிஇருப்பது புதிய சர்ச்சையை ஏற் படுத்தி உள்ளது. ஏற்கெ னவே கடந்த வாரம் ஒடிஷா மாநிலம் கட்டாக் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்தியர்களின் கலாச்சார அடையாளமே இந்து மதம் தான். தற்போது வாழும் இந்துக்கள் அனைவரும் மிக பெரிய கலாச்சாரத்தின் சுவடுகள். ஆங்கிலேயர்களின் வழித் தோன்றல்கள் ஆங்கிலே யர்களாகவும், ஜெர்மனி யர்களின் சந்ததிகள் ஜெர்மனியர்களாகவும் இருக்கும்போது இந்துக் களின் வழித்தோன்றல்கள் ஏன் இந்துஸ்தானில் வாழ்ந்து வருவோர் இந்துக்களாக இருக்கக் கூடாது என்று கூறி சர்ச்சையில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.

விரைவில் ராமர் கோயில் கட்டப்படுமா!

அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் வாக் குறுதி விரைவில் பூர்த்தி செய்யப்படும் என விஷ்வ ஹிந்து பரிஷத்தின் தலை வர் பிரவீன் தொகாடியா தெரிவித்துள்ளார். இதே போன்று தொலைக்காட்சி அலைவரிசை ஒன்றிற்கு பேட்டி அளித்த பா.ஜ., எம்.பி., யோகி ஆதித்ய நாத், பா.ஜ.,வின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப் பட்ட ராமர் கோவில் கட்டும் பணி விரைவில் நடைபெறும் என தெரி வித்துள்ளார்.
தொகாடியா பேசுகிறார்

விஸ்வஹிந்து பரிஷத் உலகத்தலைவர் பிரவீன் தொகாடியா பேசும்போது, விஸ்வஹிந்து பரிஷத், இந்து சமாஜங்கள் அடுத்த 10லிருந்து 20 ஆண்டு களுக்குள் சரியான இடத்தைப் பெறக்கூடிய வகையில் வளர்ந்துவிடும். 50ஆண்டுகாலத்தில் ராமன்கோவில் இயக்கம் விஸ்வஹிந்து பரிஷத்தின் குறிப்பிடத்தக்க பணியாக இருந்துள்ளது. ராமன் கோவில் கட்டப்படும் வரையிலும் நம்மிடம் (ஹிந்துக்கள்) இந்த நாட் டில் சம்மான் (கவுரவம்) இருக்காது.

அடுத்த 25 ஆண்டு களில் அனைத்து கிராமங் களிலிருந்தும் மாநகர் மூலைமுடுக்குவரையிலும் விஸ்வஹிந்து பரிஷத் அடித்தளமாக இயங்கும் என்று தொகாடியா கூறி னார்.

(டில்லி _ விசுவஹிந்து பரிஷத் பொன் விழாவில் பேசியது)

Read more: http://viduthalai.in/page1/86075.html#ixzz3B5FG9FIa

தமிழ் ஓவியா said...

தலைவரின் பயணங்கள் - தமிழின் பெருமையை உணர்த்தட்டும்


ஆசிரியருக்குக் கடிதம் >>>

தலைவரின் பயணங்கள் - தமிழின் பெருமையை உணர்த்தட்டும்

அண்மையில் தலைவர் வீரமணி அய்யா அவர்கள் ஆந்திர மாநிலத்தில் அய்தராபாத்தில் நடைபெற்ற நீதியரசர் பி.எஸ்.ஏ.சாமி அவர்களின் ஆறாம் ஆண்டு நினைவு நாளில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றிய நிகழ்வினை இரண்டு பாகமும் படித்து மகிழ்ந்தேன்.

ஆந்திர மாநில நீதியரசர்கள், அறிஞர் கள், சமூக ஆர்வலர்கள் எப்படியெல்லாம் நம் தலைவரைச் சிறப்பித்து உரையாற்றினர் என்பதை அறிந்து பெருமைப்படுகிறேன். எப்பொழுமே ஆந்திர மாநில மக்களுக்கும், தமிழக மக்களுக்கும் காங்கிரஸ் பேரியக்க காலமாகட்டும் - ஜஸ்டிஸ் கட்சி காலமா கட்டும் அல்லது பொதுவுடைமை இயக்க காலமாகட்டும் ஏன் நம் திராவிட இயக்க காலமாகட்டும் நல்லுறவே நிலவி வந்துள்ளது.

பண்டைய வரலாற்றுக்குள் புகுந்தால் ஒரு காலத்தில் ஒரே இனமாக - ஒரே மொழி பேசி வந்தவர்கள்தான் தமிழர் - தெலுங்கர், கன்னடர், மலையாளிகள் என மாறி வேற்று இனத்தவரோ என நினைக்கும் அளவுக்கு மாற்றம் ஏற்பட்டுவிட்டது. அந்த புண்ணி யத்தைக் கட்டிக்கொண்ட மொழிதான் சமஸ்கிருதம் எனும் செத்த மொழியாகும். வடபுலத்திலிருந்து பிழைப்பை நாடி தென்புலம் வந்த ஆரியர்களை... வந்தாரை வாழவைக்கும் பண்பால் வரவேற்று தகுந்த உதவிகள் செய்தவர்களை பல வகையிலும் மூளைச் சலவை செய்து புனைகதைகளின் மகத்துவம் கூறி அறிவை மழுங்கடித்தனர். ஆர்வமாக கதை கேட்டு அயர்ந்திருந்த நேரத்தில் தங்களின் பண்பாட்டைத் திணித்தனர். தங்கள் செயல்பாட்டில் இருக்க வேண்டும் என்ற சுயநலத்தால் - நம்மவர்கள் பேசி வந்த மொழியை சிதைக்கலாயினர். அப்படி ஏற்பட்ட தெலுங்கு - கன்னடம் - மலையாள மொழிகள். தங்கள் சொந்த மொழிச் சொல்லை மறந்து வடமொழிச் சொல்லைக் கையாள முற்பட்டனர், பெருமைப்பட்டனர்.

உதாரணத்திற்கு சொல்ல வேண்டு மானால் தமிழில் நீர் என இருப்பது போன்றே தெலுங்கு நீலு என்பர் எனினும் (கண்ணீர் - செந்நீர் என இலக்கிய மொழியில் தெலுங்கிலேயே வார்த்தைகள் உண்டு) ஜலம் என பேச எழுத விழைந் தனர். கன்னடத்தில் நீர் என்றே உள்ளது. மலையாளம் வெள்ளம் என்பதும் - தமிழ்தான். தந்தை திரிந்து தன்றி என்பதை விட்டு பிதா ஏன் ஆனது. அம்மா - தாய் மறந்து மாதாவாக மாற்றம் ஏன்? இப்படித் தான் தேவையில்லாமல் வலியப் போய் வடமொழிச் சொற்களை ஏற்று சிதைந் துள்ளோம்.

தமிழ்நாட்டு அறிவாளிகள் மட்டும் கொஞ்சம் ஆபத்தை உணர்ந்து தூய தமிழ் - வடமொழி கலவாத தமிழ் என்ற திசை நோக்கி செயல்பட்டதால் தமிழ் தனித்தியங்க முடிந்துள்ளது. தனித்தமிழியக்கத்தின் செயல் பாடுகளால் ஓரளவு நிம்மதி பெற்றிருந்த நாம் அண்மையில் மய்ய அரசு அறிவித்த சமஸ்கிருத வார விழா அறிக்கையால் எழுச்சி பெற்று போர் முழக்கம் செய்துள் ளோம். நாம் வெற்றி பெறுவது உறுதி. வழக்கம் போல் அவர்கள் தோல்வியை தான் காண்பர்.

ஆனால் தமிழ் அளவுக்கு தெலுங்கு கன்னட, மலையாள மொழியினை தனித் தன்மை கொண்ட மொழியாக செயல் படுத்த இயலுமா எனில் சிரமமான காரியம். தமிழ் தவிர மற்ற மொழிகள். வடமொழி சாயலில் தான் க ச ட த ப ற எழுத்துக்களை கொண்டுள்ளன. வடமொழி இலக்கணமாக ஏக வசனம் - பஹ வசனம் என பேசுகின்றன, இவற்றை கண்டிப்பாக மாற்ற முடியும்.

அங்கு தமிழ்நாட்டுத் தலைவர்களான பெரியார் - மறைமலை அடிகள், சோம சுந்தர பாரதியார் - பாரதிதாசன் அண்ணா போன்று உருவாக வேண்டும். அப்படி உருவாக்கும் தன்மையை நம் ஆசிரியர் தலைவர் வீரமணி அவர்களால் கண்டிப் பாக முடியும். கால்டுவெல் செப்பனிட்ட பாதை உள்ளது. குதர்க்கம் பேசாத தமிழ்நாட்டு நல்ல உள்ளங்கள் வேண்டும். சமஸ்கிருத பெருமையை நாம் நினைத் தால் சமஸ்கிருத சாயலையே தென்னாட் டிலிருந்து துரத்த முயற்சி நடக்கிறதே என்று அவர்கள் அடங்க வேண்டும். ஆசிரியரின் அடுத்தடுத்த பயணங்கள் தனித்தெலுங்கு, தனி கன்னடம், தனி மலையாளம் என்ற இலக்கை நோக்கி செயல்படட்டும். எல்லாம் தமிழாகவே மீண்டும் என என்கனவினை இணைக்கிறேன்.

- வேலை. பொற்கோவன், வேலம்பட்டி

Read more: http://viduthalai.in/page1/86065.html#ixzz3B5FdWRJb

தமிழ் ஓவியா said...



தனிச் சலுகை


ஏழைகள் வாழ்வு மலரவே சமதர்மம் விழைகிறோம். எல்லா வகுப்பினரும் சம வாய்ப்புப் பெறும் வரையில் திட்டமிட்டுப் பரம்பரையாய்த் தாழ்ந்துள்ள சமூகத் தினர்க்குத் தனிச் சலுகை தரப்பட வேண்டும். - (விடுதலை, 8.12.1967)

Read more: http://viduthalai.in/page1/86056.html#ixzz3B5FlE8ko

தமிழ் ஓவியா said...

இனிப்புக்கு முதலிடம் கொடுங்க...

திருமணம் மற்றும் நிகழ்ச்சிகளில் கடைசியாக நாம் பாயாசம் என இனிப்பு வகை உணவுகளை சாப்பி டுகிறோம். ஆனால் இது தவறான முறையாகும். இனிப்பு வகைகளையே முதலில் எடுக்கவேண்டும். நாம் சாப்பிடும் முன்பு பசி காரணமாக வாயு அதிகரித்து காணப்படும்.

அப்போது நாம் இனிப்புகளை உண்பதால் அது வாயுவை தணித்து விடும். குறிப்பாக பழங்களைச் சாப்பிடும் முன்பே உண்பது நல்லது. நமது உடல் தேவையான உணவை செரித்த பின்னர் எஞ்சிய உணவுகள் வயிற்றில் தங்கியிருக்கும். அப்போது பழங்கள் தங்கியிருந்தால் அவை அழுகி வேதியியல் மாற்றம் காரணமாக இதர நோய்களை உருவாக்கும்.

தண்ணீர் குடிக்கும் முறை: சிலர் சாப்பிடும் முன்பு தண்ணீர் குடிப்பார்கள். சிலர் சாப்பிட்ட அரைமணி நேரம் கழித்து தண்ணீர் குடிப்பார்கள். ஆனால், ஆயுர்வேத கூற்றுப்படி சாப்பிடும்போது இடையிடையே அளவோடு தண்ணீர் அருந்தவேண்டும்.

Read more: http://viduthalai.in/page1/86094.html#ixzz3B5GsDEFP