செய்தியும் சிந்தனைகளும்
I. பாடத் திட்டத்தில் ஜாதிப் பெயரா?
முகநூலில் வெளிவந்துள்ள ஒரு தகவல் திடுக்கிட வைக்கிறது. மத்திய அரசு என் றாலே மேல் தட்டு அரசு தானா?
1925ஆம் ஆண்டு சேலம் பொதுக் கூட்டத்தில் தொலைநோக்கோடு தந்தை பெரியார் சொன்னாரே - அடடே! அதுதான் எத்தகைய பேருண்மை?
வெள்ளைக்காரர்கள் இங்கு இருக்கும் பொழுதே
பார்ப்பனர் - பார்ப்பனர் அல்லா தார் பிரச்சினைக்கு ஒரு முடிவைக் காண
வேண்டும்; அவ்வாறு செய்யாவிட்டால், இந்தியாவில் ஏற்படப்போவது டெமாக்கிர
சியல்ல பிராமினோகிரசி என்று சொன் னாரே - அது என்ன சாதாரணமானதா?
இதோ ஒரு தகவல்: (முகநூலிலிருந்து -
12.8.2014) சி.பி.எஸ்.இ பள்ளியில் இரண்டாம் வகுப்பு தமிழ்ப் பாட
புத்தகத்தில், சக்கிலியர், நாவிதர், வண்ணார் என்று ஜாதி பெயர்களை
பயிற்றுவிக்கிறார்கள்.
வரலாற்றுப் பாடத்தில், அண்ணல் அம்பேத்கரை
பற்றி தவறாக சித்தரித்தார்கள், தமிழ்நாட்டில் நடந்த இந்தித் திணிப்பு
எதிர்ப்பு போராட்டத்தைப் பற்றி தவறாக சித்தரிக்கிறார்கள்
மோடி அரசு சி.பி.எஸ்.இ பள்ளிகளில்
சம்ஸ்கிருத வாரம் கொண்டாடச் சொல் கிறது. தமிழகத்தில் செயல்படும்
சி.பி.எஸ்.இ பள்ளிகளில் தமிழைவிட சமஸ்கிருதத்தை மொழிப்பாடமாக எடுத்து
படிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது.
மெட்ரிகுலேசன் கல்விமுறை தமிழகத்தில்
ஒழிக்கப்பட்ட பிறகு, இப்போது உயர் நடுத்தர வகுப்பினர் சி.பி.எஸ்.இ மீது
ஆர்வம் கொள்ள ஆரம்பித்திருக்கிறார்கள். சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில்
பிள்ளைகளை படிக்க வைப்பது, இந்திய தேசிய - இந்தி ஆதிக்க - இந்துத்துவ
மூளைச் சலவைக்கு உள்ளாக்கும் செயலாகும்!
ஒரு கால கட்டம் இருந்தது - சென்னை மாநிலப் பாடத் திட்டத்திலேயே!
இவன் அம்பட்டன் - சவரம் செய்கிறான்.
இவன் வண்ணான் - துணி துவைக்கிறான்.
இவன் - குயவன் - மண்பாண்டம் செய்கிறான்.
இவர் அய்யர் - படிக்கிறார்
என்றுள்ள பாடத் திட்டங்கள் தந்தை பெரியாரின் சுயமரியாதைச் சூறாவளியால் சுக்கல் நூறாக உடைத்து தூள் தூளானது.
என்றுள்ள பாடத் திட்டங்கள் தந்தை பெரியாரின் சுயமரியாதைச் சூறாவளியால் சுக்கல் நூறாக உடைத்து தூள் தூளானது.
சி.பி.எஸ்.இ. என்கிற மத்திய அரசின் பாடத்
திட்டத்தில் ஜாதிப் பெயரைச் சொல்லிக் கேவலப்படுத்தும் கீழ்த்தரம் கொடி
கட்டிப் பறப்பது வெட்கக் கேடான தாகும்.
சி.பி.எஸ்.இ. பள்ளிதான் இப்படி இருக்
கிறது என்றால் ஜாதி ஒழிப்புச் சகாப்தத் தலைவரான தந்தை பெரியார்பற்றி தமிழ்
நாடு பாடநூல் நிறுவனத்தால் வெளியிடப் பட்ட 10ஆம் வகுப்பு சமூக அறிவியல்
நூலில் 110 ஆம் பக்கத்தில் வெளி வந்துள்ள ஒன்று நம்மைத் திடுக்கிட வைத்தது.
தமிழ்நாட்டின் மிகச் சிறந்த சமூக
சீர்திருத்தவாதி பெரியார் ஈ.வே. இராமசாமி நாயக்கர் ஆவார் என்று இடம் பெற்ற
நிலையும் உண்டு வே என்பது தவறு அது வெ என்று இருந்திடல் வேண்டும். அதை
யாவது பொறுத்துக் கொள்ளலாம்.
ஆனால், அந்த ஜாதி ஒழிப்பு சமத்துவத்
தலைவரின் பெயரில் நாயக்கர் வால் ஒட்டப்பட்டது எந்த அடிப்படையில்? ஏதோ
தவறுதலாக நடந்து விட்டது என்று சமாளிக்க முடியாது.
பெரியார் என்றால் யார் என்று தெரி யாதவரா
இந்தப் பாடத்தை எழுதியிருக்க முடியும்? விஷமத்தனத்துடன் விளை யாடிப்
பார்க்கலாம் என்று ஆசைப்பட்டால் தமிழ்நாடு எரிமலையாகும் என்று எச்சரித்தோம்
- பிறகு மாற்றப்பட்டது.
II. அறிவியலுக்கு அழிவுக் குழியா?
கடந்த சில மாதங்களாக அறிவியல் மற்றும்
வரலாறு போன்ற தகவல்களுக்காக ஒளிபரப்பப்படும் ஹிஸ்டரி சேனல், டிஸ்கவரி
நேசனல் மற்றும் ஜியோகிராபிக் போன்ற சேனல்களில் அறிவியல் தொடர்பான
நிகழ்ச்சிகள் முற்றிலும் ஒளிபரப்புவது நிறுத்தப்பட்டுவிட்டது. அதே
நேரத்தில் புதுமையாக காமசூத்திரா போன்ற நிகழ்ச்சிகளை அதிகாலையில் ஒளிபரப்ப
ஆரம்பித்துவிட்டார்கள்.
12.08.14 அன்று இந்தியாவில் ஒளி பரப்பப்பட்ட ஹிஸ்டரி சேனல் 7.00 மணி நிகழ்ச்சியில் காமசூத்திரா என்ற பாலியல் கலை நிகழ்ச்சியை ஒளிபரப்ப ஆரம் பித்துவிட்டார்கள். முக்கியமாக இந்த நிகழ்ச்சிக்கு காமசூத்திரத்தில் யோகா என்று வேறு புதுமையாக பெயர்வைத்து ஆரம்பித்துவிட்டார்கள். இந்த ஆண்டு மேமாதம் வரை(நாடாளுமன்றத்தேர்தல் வரை) தொழிற்சாலை, வானியல், கட்டிடக்கலை, மற்றும் உலக வரலாறு, போர்கள் என பல்வேறு நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வந்த இந்த அலைவரிசை தற்போது மந்திரம், வட்டிக்கு விடும் கடைக்காரர், சூதாட்டம், முறையற்ற செயல்களில் இறங்கும் ரவுடிக்குழுக்களின் சாகசம், பழைய பொருட்களை வாங்கி அதை புதியது போல் செய்து விற்கும் கும்பல் என குற்ற உணர்வுகளைத் தூண்டும் நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப ஆரம்பித்துவிட்டார்கள். வரலாற்றை நாம் எடுத்துப்பார்த்தால் வேத காலம் ஆரம் பித்த பிறகு மக்களை பவுத்த நெறியில் இருந்து திசை திருப்ப காமசூத்திரா என்ற ஒன்றை வாத்சாயனார் எழுதினார். அதற் குப் பிறகு அந்த கதைகளை சாமானி யர்கள் வரைக்கும் கொண்டு சென்றார்கள். விளைவு தான் அனைவரும் அறிந்ததே, குழந்தைத்திருமணம் என்பது முக்கியமாக வேத மதத்துக்காரர்களிடம் மட்டும் இருந்தது. பொதுவான நடைமுறைக்கு வந்தது கிபி 2 முதல் 3 ஆம் நூற்றாண்டில் தான். தற்போது காலையிலேயே இது போன்ற நிகழ்ச்சிகள் ஆரம்பமாகி விட்டன! நிறுத்தப்பட்ட மிகவும் பிரபலமான அறிவியல் நிகழ்ச்சிகள்.
12.08.14 அன்று இந்தியாவில் ஒளி பரப்பப்பட்ட ஹிஸ்டரி சேனல் 7.00 மணி நிகழ்ச்சியில் காமசூத்திரா என்ற பாலியல் கலை நிகழ்ச்சியை ஒளிபரப்ப ஆரம் பித்துவிட்டார்கள். முக்கியமாக இந்த நிகழ்ச்சிக்கு காமசூத்திரத்தில் யோகா என்று வேறு புதுமையாக பெயர்வைத்து ஆரம்பித்துவிட்டார்கள். இந்த ஆண்டு மேமாதம் வரை(நாடாளுமன்றத்தேர்தல் வரை) தொழிற்சாலை, வானியல், கட்டிடக்கலை, மற்றும் உலக வரலாறு, போர்கள் என பல்வேறு நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வந்த இந்த அலைவரிசை தற்போது மந்திரம், வட்டிக்கு விடும் கடைக்காரர், சூதாட்டம், முறையற்ற செயல்களில் இறங்கும் ரவுடிக்குழுக்களின் சாகசம், பழைய பொருட்களை வாங்கி அதை புதியது போல் செய்து விற்கும் கும்பல் என குற்ற உணர்வுகளைத் தூண்டும் நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப ஆரம்பித்துவிட்டார்கள். வரலாற்றை நாம் எடுத்துப்பார்த்தால் வேத காலம் ஆரம் பித்த பிறகு மக்களை பவுத்த நெறியில் இருந்து திசை திருப்ப காமசூத்திரா என்ற ஒன்றை வாத்சாயனார் எழுதினார். அதற் குப் பிறகு அந்த கதைகளை சாமானி யர்கள் வரைக்கும் கொண்டு சென்றார்கள். விளைவு தான் அனைவரும் அறிந்ததே, குழந்தைத்திருமணம் என்பது முக்கியமாக வேத மதத்துக்காரர்களிடம் மட்டும் இருந்தது. பொதுவான நடைமுறைக்கு வந்தது கிபி 2 முதல் 3 ஆம் நூற்றாண்டில் தான். தற்போது காலையிலேயே இது போன்ற நிகழ்ச்சிகள் ஆரம்பமாகி விட்டன! நிறுத்தப்பட்ட மிகவும் பிரபலமான அறிவியல் நிகழ்ச்சிகள்.
1. COSMOS: A Spacetime Odyssey
national geographic Channel காஸ்மோஸ் வானியல் நிகழ்ச்சி
national geographic Channel காஸ்மோஸ் வானியல் நிகழ்ச்சி
2. The Universe - History Channel பெருவெளி
3. Our planet discovery channel நமது பூமியின் தோற்றம்
4. Into the Universe with Stephen Hawking பெரு வெளியின் உண்மைகள் ஸ்டீபன் ஹவுகின்ஸ்
5. 3 dimensional discovery channel பெருவெளியில் ஆற்றல், வேகம் மற்றும் காலம்
6. Our solar system national geographic நமது சூரியக்குடும்பம்
7. Cosmic Origins - NASA Science BBC (discovery Science) பெருவெளியின் மூலம்
8. Milky way galaxy discovery channel நமது பால்வெளிமண்டலம்
கடந்த ஜூன் முதல் வாரம் அறிவியல்
நிகழ்ச்சிகளை இந்தியாவில் ஒளிபரப்பும் முக்கிய தொலைக்காட்சி நிறுவனமான
நெட்வொர்க் 18 என்ற நிறுவனத்தை ரிலை யன்ஸ் விலைக்கு வாங்கியது. அப்போதே
ஃபெர்ப்ஸ் என்ற வியாபார இதழ் தொலைக்காட்சி சுதந்திரத்தின் மரணம் என்ற
தலைப்பிட்டு செய்தியை எழுதியது, கடந்த ஜூன் 2-ஆம் தேதியில் எழுதிய அந்த
செய்தி தற்போது உண்மையானது. ஊட கச்சுதந்திரத்தின் மரணம் மாத்திரமல்ல,
மக்களை மீண்டும் கற்காலத்திற்கு தள்ளும் ஓர் கருவியாக மாற்றப்பட்டுவிட்டது.
இதற்கு பெரிய எடுத்துக்காட்டு காலையில் காம சூத்திரா போன்ற பாலியல்
நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவது.
நாடு எங்கே செல்லுகிறது? இதன் பின்னணி
என்ன? அறிவியல் பகுத்தறிவுச் சிந்தனைகள் வளர்ந்தால் மதவாத சக்தி களுக்கு
ஆபத்து என்று கருதுகிறார்களா? நாட்டில், எது நடந்தால் நமக்கென்ன என்று நம்
மக்கள் மிதந்துகொண்டு இருந்தால், இடுப்பு வேட்டியும் களவு போய் விடும் -
எச்சரிக்கை!
III. கிளம்பியிருக்கின்றனர் ஆரிய சமாஜ்காரர்கள்
ராமானுஜர் அனைவருக்கும் பூணூல் அணிவித்துப் பார்த்தவர் - தனது குருவாக தாழ்த்தப்பட சமூகத்தைச் சேர்ந்த திருக்கச்சி நம்பியை ஏற்றுக்கொண்டார். உறங்கா வில்லிதாசர் என்ற தாழ்த்தப்பட்டவரை சீடராக ஏற்றுக் கொண்டவர் இவற்றிற்காக ராமானுஜரைக் கொல்ல மூன்று முறை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. புதுச் சேரியில் பாரதியார் தாழ்த்தப்பட்ட ஒருவ ருக்குப் பூணூல் அணிவித்துப் பூச்சிக் காட் டினார் - விளைவு என்ன?
புறமுதுகிட்டு ஓடியதுதான் மிச்சம்! அனைத்து ஜாதியின ருக்கும் பூணூல் அணிவிப்பார் களாம். வேதத்தின் அடிப்படையிலாம். அதே வேதம்தான் இவ்வாறு கூறுகிறது.
தெய்வாதீனம் ஜகத் சர்வம்
மந்த்ராதீனம் து தெய்வதம்
தன் மந்த்ரம் பிரம்மணாதீனம்
தஸ்மத் பிரம்மணப் பிரபு ஜெயத்
என்பது ரிக் வேதத்தின் சுலோகம்
மந்த்ராதீனம் து தெய்வதம்
தன் மந்த்ரம் பிரம்மணாதீனம்
தஸ்மத் பிரம்மணப் பிரபு ஜெயத்
என்பது ரிக் வேதத்தின் சுலோகம்
உலகம் கடவுளுக்குக் கட்டுப்பட்டது, கடவுள்
மந்திரங்களுக்குக் கட்டுப்பட்டவர் மந்திரங்கள் பிராமணர்களுக்குக்
கட்டுப்பட் டவை; பிராமணர்களே நமது கடவுளர் என்பது இதன் பொருள். இந்த
வேதத்தை ஏற்றுக் கொண்டு வேத முறைப்படி அனை வருக்கும் பூணூல் அணிவிப்பு
என்றால் இதன் மூலம் யாரை ஏமாற்ற?
அருந்தமிழ் வளர்த்த அந்தணர் என்னும் நூல் வெளியீட்டு விழாவில் காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் என்ன சொன்னார் நினைவிருக்கிறதா?
கடவுளுக்கு மேலே பிராமணர் என் றாரே -
அப்பொழுது எங்கே போனார்கள் இந்த ஆர்ய சமாஜ் பேர் வழிகள்? தஞ்சாவூரில் இந்த
ஆர்ய சமாஜ் அமைப்பினர் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினார்கள். ஏன் தெரியுமா?
கிறித்துவ மதத்திற்குச் சென்ற தாழ்த்தப்பட்டவர் களை மீண்டும் இந்து
மதத்திற்குக் கொண்டு வந்து அவர்களுக்கு இடஒதுக்கீடு சலுகை வாங்கிக்
கொடுப்பதற்காகவாம்; அவர் களைத் தாழ்த்தப்பட்டவர்களாக தீண்டத் தகாதவர்களாக
ஆக்கியது இந்தப் பாழாய்ப் போன இந்துமதம்தானே!
133 comments:
இன்றைய ஆன்மிகம்?
ஸ்பெஷலிஸ்டா?
எனக்குத் திருமண மாகி 34 வருடங்கள் ஆகின்றன. எனது கணவர் பிற பெண்களுடன் தகாத உறவு வைத்துள்ளார். இவர் குடும்பத்திலுள்ள அனை வருமே இப்படி இருந் திருக்கிறார்கள். இது முற்றுப் பெற என்ன செய்ய வேண்டும்? - ஒரு வாசகி
இவர்கள் அனைவரின் ஜாதகத்திலும் சந்திரன் சுக்கிரனுடனோ மாந்தி யுடனோ அல்லது சனியு டனோ சேர்ந்திருந்தாலும், ஏழுக்குடையவர் நீசம், 9ஆம் அதிபதி நீசம், 2, 8ல் பாபிகள் என்று பல துர் விஷயங்கள் தென்படு கின்றன. மிகப் பெரிய அளவில் நவசண்டீ மஹா ஹோமத்தை தேவி உபாச கரைக் கொண்டு நடத்த வேண்டும். இந்த ஹோ மத்தை திருவொற்றியூர் வடிவடை அம்மன் தெற் குப் பிரகாரத்தில் அமைந்த ஸ்ரீ சங்கரமடத்தில் நடத் தலாம். நவாக்ஷரீ மந்திர தாயத்தை எல்லோரும் கட்டிக் கொள்ள வேண்டும். மறக்காமல் குலதெய்வ வழி பாட்டை தொடர்ந்து மூன்று மாதங்கள் நடத்துங்கள்.
ஆன்மீக இதழ் ஒன்றில் இப்படியொரு கேள்வி பதில்:
அவர் ஏற்கெனவே பக்தர்தான். நம்பிக்கை உள்ளவர்தான். அப்படிப் பட்டவர்க்கு இந்தக் கொடுமை, மன உளைச் சல் ஏற்படாமல் அவர் பக்தி செலுத்தும் எந்தக் கட வுளும் தடுக்கவில்லையே ஏன்? இந்த யோக்கியதை யில் இன்னொரு கோயிலைக் கை காட்டுவது ஏன்? திருவொற்றியூர் கடவுள் இதில் என்ன ஸ்பெ ஷலிஸ்டா?
Read more: http://viduthalai.in/page1/85372.html#ixzz3B2J0hCWN
மரியாதை இல்லை
பிறர் உழைப்பில் படாடோப வாழ்க்கை நடத்துவதும், அதிகப்படி யான பொருள்களுக்கு அதிபதியாய் இருப்பதும் கண்ணியமான பெருமை யான வாழ்க்கை என்று கருதப்படு கின்ற மூட நம்பிக்கை ஒழியவேண் டும். இதில் எத்தகைய ஒரு கவுரவமும், மரியாதையும் இல்லை.
(விடுதலை, _ 22.6.1973)
Read more: http://viduthalai.in/page1/85381.html#ixzz3B2JHISs0
உலக தாய்ப்பால் வாரம் ஆகஸ்ட் 1 - 7
குழந்தைக்கு தாய்ப்பால் வழங்குவதன் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் முதல் வாரம், உலக தாய்ப்பால் வாரமாக கடைபிடிக்கப்படுகிறது. திரவ தங்கம் என்று அழைக்கப்படும் தாய்ப்பாலின் மகத்துவத்தை உணர்த்த யுனிசெப் மற்றும் உலக சுகாதார அமைப்பின் மூலமாக முன்னெடுத்துச் செல்லப்படுவது தாய்ப் பால் வார விழா. முதன்முதலில் 1992ஆம் ஆண்டு கடைபிடிக்கப்பட்ட தாய்ப்பால் வாரம் தற்போது 170 நாடுகளில் பிரபலமடைந்துள்ளது.
உடலளவிலும், மனதளவிலும் ஆரோக்கியமான குழந்தைகளை உருவாக்குவதே உலக தாய்ப்பால் வாரம் கொண்டாடுவதன் நோக்கம்.குழந்தை பிறந்த முதல் இரண்டு தினங்களில் சுரக்கும் தாய்ப்பாலில் குழந்தைக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியும் ஊட்டச்சத்தும் கிடைத்துவிடும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்
குழந்தைகளுக்கு தாய்ப்பால்தான் தரவேண்டும் என்று, குழந்தை பெற்ற பெண்களுக்கு அவர்களது தாய்மார்கள் எடுத்துசொல்வதுண்டு. தாய்ப்பாலில் அப்படி என்னதான் சத்துக்கள் உள்ளன. தாய்ப்பாலில் மட்டும்தான் பச்சிளம் குழந்தைக்குத் தேவையான கால்சியமும், பாஸ்பரசும் 2 : 1 என்கிற விகிதத்தில் உள்ளது. இதுதான் குழந்தைக்கு சரியான அளவுகோல். பசும்பாலில் பாஸ்பரஸ் அதிகமாக இருக்கும். ஆனால், அது கால்சியத்துடன் இணைந்து சால்டாக மாறிவிடும். எனவே பசும்பாலில் உள்ள கால்சியம் பச்சிளம் குழந்தைகளுக்குப் பயன்படாத கால்சியமாகவே இருக்கிறது.
அது போலத்தான் பசும்பாலில் உள்ள புரத மூலக்கூறுகள் இரட்டை தன்மை கொண்டவை இதை ஆங்கிலத்தில் டை புரோட்டின் அல்லது சியாசின்வே (ceasinwhey) எனக்கூறுவர் ஆனால் பச்சிளம் குழந்தைக்குத் தேவையானதோ ஒற்றை மூலக்கூறு கொண்ட whey
புரதம் தான். இந்த whey புரதம் தாய்ப்பாலில் மட்டும்தான் உள்ளது. பசும்பாலில் பச்சிளம் குழந்தைகளுக்கு தேவையான சத்துக்கள் எதுவும் சரிவிகிதத்தில் இல்லாததனால் பச்சிளம் குழந்தையின் குடலில் அலர்ஜி உண்டாகும். இந்த அலர்ஜி குழந்தைகளின் மலக்குடலை புண்ணாக்கும் வாய்ப்புள்ளது. தாய்ப்பாலால் குழந்தைக்கு மேற் சொன்ன பிரச்சனைகள் எதுவும் வராது. தாய்ப்பாலில் உள்ள நுண்சத்துக்கள் குழந்தைக்குத் தேவையான நோய் எதிர்ப்புச் சக்தியைத் தரும். தாய்ப்பால் குடிக்கும் குழந்தைக்கு வயிற்றுவலி வருவதற்கான வாய்ப்புக்கள் மிகமிக குறைவு. பசும்பால் குடிக்கும் குழந்தை களுக்கு வயிற்றுவலி வருவதற்கான வாய்ப்புகள் மிகமிக அதிகம்.
தாய்ப்பாலில் இல்லாத சத்து!
ஆம். ஒரு குறை உண்டு. தாய்ப்பாலில் வைட்டமின் D இல்லை என்பது இரண்டு ஆண்டிற்கு முன் நிரூபிக்கப் பட்ட ஆராய்ச்சி உண்மை. எனவே குழந்தை பிறந்த உடனே வெறும் வைட்டமின் D சொட்டு மருந்தும் தரவேண்டும். குழந்தை பெற்ற பெண்களும் இதை கேட்டு வாங்க வேண்டும். நமது நாட்டு தட்பவெப்ப நிலையில் தான் வெயில் அதிகமாயிற்றே. நமக்கு இயற்கையாகவே வைட்டமின் D கிடைக்குமே. என நீங்கள் நினைத்தால் அது தவறு. நமது கருந்தோல் அவ்வளவு விரைவில் வைட்டமின் D யை உள் வாங்கும் தன்மை வாய்ந்ததாக இல்லை என்பதுதான் உண்மை.
ஒரு தாய்க்கு வைட்டமின் D பற்றாக் குறையாக இருந்தால், குழந்தைக்கும் வைட்டமின் D பற்றாக்குறையாகத்தான் இருக்கும். எனவே குழந்தை பிறந்த உடனே வைட்டமின் Dசொட்டுமருந்தும் கொடுத்துப் பழக்கவேண்டும். முக்கியமாக தாய்ப்பால் மறக்கும் பருவத்தில் குழந்தைகளுக்கு எண்ணெய் மற்றும் காரம் தவிர்த்த எளிதில் செரி மானம் ஆகும் உணவு வகைகளை தரும்போது குழந்தைகளின் செரிமான சக்தி பெருகி அது எதிர்காலத்தில் எந்தவித உணவு வகையையும் எளிதில் செரிமானம் செய்யும் வகையில் உணவு மண்டலத்தை வலுவாக்கி விடுகிறது.
Read more: http://viduthalai.in/page1/85383.html#ixzz3B2JUaVyq
சங்கராச்சாரிகள் மீதான கொலை வழக்கில் மேல் முறையீடு செய்யக் கூடாதாம்! குடியரசு தலைவரிடம் சுப்பிரமணியசாமி மனு
சங்கராச்சாரிகள் மீதான கொலை வழக்கில் மேல் முறையீடு செய்யக் கூடாதாம்!
குடியரசு தலைவரிடம் சுப்பிரமணியசாமி மனு
கழகத் தோழர்களே, பொது மக்களே குடியரசு தலைவருக்கு மின்னஞ்சல் அனுப்புவீர்!
தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள அறிக்கை சங்கரராமன் கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட காஞ்சி சங்கராச்சாரியார் மீதான வழக்கில் மேல் முறையீடு செய்யக் கூடாது என்று சுப்பிரமணியசாமி குடியரசு தலைவரிடம் மனு கொடுத்துள்ளது தொடர்பாக திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: காஞ்சி சங்கரராமன் கொலை வழக்கில் குற்றஞ் சாட்டப்பட்ட காஞ்சிபுரம் சங்கராச்சாரியார்கள் இருவர் உள்ளிட்டவர்கள் புதுவை நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இதனை எதிர்த்து மேல்முறையீடு செய்ய புதுவை மாநில அரசு முடிவு செய்ய ஆளுநரின் அனுமதியும் பெற்றாகி விட்டது. சட்ட நடவடிக்கைகள் துவங்கி விட்டன.
யார் இந்த சுப்பிரமணியசாமி?
இந்தச் சூழ்நிலையில் சுப்பிரமணிய சாமி என்பவர் அதிகப் பிரசங்கித்தனமாக குடியரசு தலைவரிடம் மனு ஒன்றினைக் கொடுத்துள்ளார்.
குடியரசுத் தலைவர் இந்த விவகாரத்தில் தலையிட்டு புதுவை ஆளுநர் அளித்த அனுமதியைத் திரும்பப் பெறச் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.
பிஜேபியின் நிலைப்பாடு என்ன?
பிஜேபியைச் சேர்ந்தவராக இருக்கும் நிலையில், இந்தக் கருத்து பி.ஜே.பி.யின் கருத்தா? அல்லது பிஜேபி தலைமையிலான அரசின் கருத்தா? என்ற சந்தேகம் பொது மக்களுக்கு ஏற்படுகிறது. இதுகுறித்து பிஜேபி கட்சி தலைமையும், பிஜேபி ஆட்சித் தலைமையும்தான் தெரிவிக்க வேண்டும்.
ஒரு மாநில ஆட்சி முடிவெடுத்து, ஆளுநரும் அனுமதியளித்த நிலையில், குடியரசுத் தலைவர் தலையிட வேண்டும் என்று ஒருவர் சொல்லுவது, அரசமைப்புச் சட்டத்தில் மதிப்புறு நிலையில் வைக்கப்பட்டுள்ள குடியரசுத் தலைவரையே தேவையில்லாத சிக்கலில் மாட்ட வைக்கும் முயற்சி என்று கருதிடவும் இடம் இருக்கிறது.
ஏற்கெனவே சில சாமியார்கள் தண்டிக்கப்பட்டுள்ளனரே!
ஏற்கெனவே பிரேமானந்தா சாமியார் என்பவர் செய்த குற்றங்களுக்காக இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப் பட்டது நித்யானந்த சாமியும் செய்த குற்றங்களுக்காக அவர்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. கைதும் செய்யப்பட்டார்.
தமிழர்கள் வேறு வகையில் சிந்திக்க மாட்டார்களா?
இப்படிப்பட்ட ஒரு சூழலில் காஞ்சி சங்கராச்சாரியார் மீது கொலை குற்றம் உள்ளிட்ட வழக்கில் மட்டும் வேறு விதமாக நடந்து கொள்ள வேண்டும் என்று நினைப்பதும், அதற்குக் குடியரசு தலைவரின் அதிகாரச் செல்வாக்குப் பயன்படுத்தப்பட வேண்டும் என்று கோருவதும் தமிழ்நாட்டு மக்களிடத்தில் வேறுவிதமான எண்ணத்தை ஏற்படுத்தும் என்பதில் அய்யமில்லை.
அதிலும் குறிப்பாக சங்கரராமன் கொலை வழக்கில் மொத்தம் 177 சாட்சிகளில் 77 பேர் பிறழ்சாட்சி என்பது இதற்கு முன் எங்கும் கேள்விப்பட்டிராத ஒன்றே!
கொலை செய்யப்பட்ட சங்கரராமன் குடும்பத்தினரும் இந்த வழக்கில் மேல் முறையீடு தேவை என்பதை வலி யுறுத்தியுள்ளனர்.
இந்தச் சூழ்நிலையில் குடியரசு தலைவர் இதில் விலகியிருப்பது அவசியம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்?
குடியரசு தலைவருக்கு மின்னஞ்சல் அனுப்புக
கழகத் தோழர்களும் நீதியின்மீது கவலையுள்ள பெரு மக்களும் கீழ்க்கண்ட முகவரிக்கு மின் அஞ்சல் மூலம் கீழ்க்கண்ட வாசகத்தை அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
The President of India
Rashtrapati Bhawan
New Delhi
Honourable Sir,
The decision by Puducherry Government to go in for appeal against the acquittal of 24 persons including Kanchi Jeyendra Saraswathi and Vijayendra Saraswathi, two Sankaracharyas, in the Sankararaman murder case should be allowed to proceed without any delay. Any effort to stall the appeal process would give wrong impression in the minds of people of Tamilnadu and Puducherry that Chief Executive of this country viz. President is intervening in the judicial process.
The family of the slain Sankararaman through this appeal, are eagerly expecting justice as also the people of Tamilnadu. The murder was committed in the Varadarajasamy Temple premise.
We once again request your goodself to kindly resist any effort by vested interests in stopping this appeal process.
Email address: secy.president@rb.nic.in and usgrievance@rb.nic.in
கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்
சென்னை 8.8.2014
Read more: http://viduthalai.in/page1/85456.html#ixzz3B2KJ88oW
தமிழ்நாட்டில் 1,442 பெண்கள் அரசுப் பள்ளிகளில் கழிப்பறை வசதி இல்லை என்பது அதிர்ச்சித் தகவல்
தமிழ்நாடு அரசு முக்கிய கவனம் செலுத்த வேண்டும்
மத்திய அரசும் போதிய நிதி வசதி செய்து உதவிட வேண்டும் தமிழர் தலைவர் அறிக்கை
தமிழ்நாட்டில் அரசுப் பெண்கள் பள்ளிகளில்கூட போதுமான எண்ணிக்கையில் கழிப்பறை வசதியில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ள தகவலைச் சுட்டிக்காட்டி உடனடியாக தமிழ்நாடு அரசு இதில் கவனம் செலுத்தி கழிப்பறை வசதிகளைச் செய்து தர வேண்டும் என்றும், கல்வியைப் பொதுப் பட்டியலுக்குக் கொண்டு சென்றுள்ள மத்திய அரசு இதற்கு நிதி உதவி செய்திட வேண்டும் என்றும் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
தமிழ்நாட்டில் 15 சதவிகித - அரசுப் பள்ளிகளில் அதாவது 5,720 அரசுப் பள்ளிகளில் - கழிப்பறை வசதிகள் இல்லை என்று மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் (மத்திய கல்வி அமைச்சகம்) வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகிறது!
இதில் - அதாவது 5,720இல் 1442 பள்ளிகள் - பெண்களுக் கான பள்ளிகள் என்பது அதிர்ச்சிக்கும், வேதனைக்கும் உரியதாக இருக்கிறது!
தமிழ்நாட்டில் மொத்தம் 37,002 அரசு பள்ளிகள் உள்ளன.
பெண்கள் பள்ளிகளிலும் கழிப்பறை வசதியில்லையா?
இதில் 1,442 பெண்கள் பள்ளிகளிலும் 4,278 ஆண்கள் பள்ளிகளிலும் கழிப்பறை வசதி இல்லை என்ற அவலம் உடனடியாக மாற்றப்பட வேண்டும்.
2013-2014-இல் எடுக்கப்பட்ட புள்ளி விவரத் தகவல்கள் இவை!
தனியார் நடத்தும் பள்ளிகளிலும்கூட போதிய கழிப்பறை வசதிகள் இருக்கின்றனவா என்பது பற்றிய ஆய்வு செய்து - தமிழக அரசு அதனையும் கண்காணிக்க வேண்டியது அவசர அவசியமாகும்.
அரசுப் பள்ளிகளில் 90 விழுக்காடு நிதி சம்பளம் கொடுப்பதற்கே செலவிடப்படுகிறது என்று சொல்லப்பட் டாலும் அதுதக்க சமாதானமாக (இக்குறைபாடுகளை நீக்கிட) ஆகாது. உடனடியாக அரசு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
கல்வியைப் பொதுப் பட்டியலில் வைத்து அதிகாரம் செய்ய முன் வந்துள்ள மத்திய அரசு, இதற்கெனவே மாநிலங்களுக்குத் தனி நிதி உதவி (மான்யமாக) தந்திட உடனே முன்வர வேண்டும்.
கடந்த ஜூலை 30ஆம் தேதி, தமிழக சட்டமன்றத்தில் - விதி 110ன் கீழ் ஓர் அறிக்கை வெளியிட்டார் முதல்வர் அவர்கள். அதில், அனைத்துப் பள்ளிகளிலும் 100 சதவிகிதம் கழிப்பறை வசதிகள், குடிநீர் வசதிகள் இருக்க வேண்டு மென்று கணக்கெடுக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார்.
இதில் 2047 பள்ளிகளில், கழிப்பறை வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த இரண்டும் முரண்பட்ட தகவல்களாக அமைவது - ஏனோ?
எப்படி இருந்தபோதிலும் உடனடியாக கழிப்பறைகள் அமைக்கப்படுவதோடு, ஒவ்வொரு பள்ளிக்கும் முழு நேர துப்புரவுப் பணியாளர் ஒருவரும் நீர் வசதியும் ஏற்படுத்தித் தரும் பொறுப்பைக் கண்காணித்து, பள்ளி சுகாதாரப் பிரிவு ஒன்றையேகூட ஏற்படுத்தினால் பிள்ளைகளின் நலவாழ்வு பாதுகாக்கப்பட வசதிகள் ஏற்பட்டு, இந்தியா விற்கு தமிழ்நாடு இதிலும் வழிகாட்டி மாநிலமாக அமையக் கூடும் அல்லவா?
கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்
சென்னை 8.8.2014
Read more: http://viduthalai.in/page1/85459.html#ixzz3B2KXuxaX
கற்றுக் கொள்ள வேண்டியது
இதுவரை எந்தப் பார்ப்பனராவது பார்ப்பனரல்லாத கட்சிக்கு அனுகூலமாய்ப் பிரச்சாரம் செய்ய வந்திருக்கிறாரா? என்றால் ஒருவர்கூட இல்லையென்றுதான் சொல்ல வேண்டும். பார்ப்பனருக்கு வேறு எவ்வளவு கெட்ட குணம் இருந்தாலும், தங்கள் வகுப்பு விசயத்தில் எல்லாரும் ஒன்று சேருவது அவர்களிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய விசயம்.
(குடிஅரசு, 7.11.1926)
Read more: http://viduthalai.in/page1/85444.html#ixzz3B2KpAsAg
சமஸ்கிருத எதிர்ப்பு என்றால் ஆரியம் அலறுவானேன்?
பார்ப்பனர்களைப் பற்றி பச்சையாக அறிந்து கொள்ள வேண்டும் என்றால், அவர்களின் சமஸ்கிருத ஆர்வம், பற்று என்ற எடைமேடையில் நிறுத்துப் பார்த்து ஒரே நிமிடத்தில் தெரிந்து கொள்ளலாம்.
சென்னை மாநகரில் வணிக விளம்பரப் பலகைகளில் தமிழ் இடம் பெற வேண்டும் என்று முயற்சி செய்தால் அதனை மொழி நக்சலிசம் என்று பெயர் சூட்டும் திருவாளர் சோ ராமசாமியிடம் கோவில்களில் வழிபாட்டு மொழியாக சமஸ்கிருதம் தான் இருக்க வேண்டுமா? பெரும்பாலான மக்கள் பேசும் தமிழ் தமிழ்நாட்டில் இடம் பெற்றால் என்ன என்று கேட்டுப் பாருங்கள் - உடனே அவருடைய பூணூல் துடிதுடிக்கும் - குருதி சூடேறும் - தமிழில் அர்ச்சனை செய்தால் பொருள் இருக்கும், அருள் இருக்காது; சமஸ்கிருத மொழியின் ஒலியில் தான் தெய்வீகம் இருக்கும் என்று வக்கணையாக ஓவியம் தீட்டுவார்.
நேற்றைய தமிழ் இந்து ஏட்டில் (7.8.2014 பக்கம் 9) திருவாளர் ஒருவர் சமஸ்கிருத வாரம் கொண்டாடுவதில் என்ன தவறு? என்று தலைப்பிட்டு ஒரு கட்டுரையைத் தீட்டி இருக்கிறார்.
சமஸ்கிருத வாரம் தாராளமாக கொண்டாடட்டும். இந்திய அரசமைப்புச் சட்டம் 8ஆவது அட்டவணையில் இடம் பெற்றுள்ள 22 மொழிகளுக்கும் அந்த வாய்ப்பு அளிக்கப்பட வேண்டாமா என்பதுதான் நாகரிகமான அறிவு நாணயமான நமது கேள்வி.
இவ்வளவுக்கும் இந்தியாவில் இம்மொழியைப் பேசக் கூடியவர்களின் எண்ணிக்கை சதவீதத்தில் சொல்ல வேண்டுமானால் 0.001 தான். இப்படிச் செத்துச் சுண்ணாம்பாகிப் போன ஒரு மொழிக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் என்பதுதான் நமது கேள்வி.
காரணம் இருக்கிறது. இன்றைய மத்திய அரசு இந்துத்துவாவைக் கொள்கையாகக் கொண்டதாகும்; அந்த இந்துத்துவாவின் மொழிதான் இந்த சமஸ்கிருதம்.
நேரடியாக இந்துத்துவா என்று சொல்லாமல், சமஸ்கிருதம் என்ற குறியீட்டுக்குக் கொம்பு தீட்டுகிறார்கள் என்பதுதான் இந்த உள்ளீடு.
சமஸ்கிருதத்தைப் பற்றி சொல்லும் பொழுது அதனைத் தேவபாஷை என்றுதான் சொல்லுவார்கள்; சங்கராச்சாரியார்களோ தமிழை மிலேச்ச பாஷை என்பார்கள். பூஜை வேளையில் இப்பொழுதுகூட சங்கராச்சாரியார் தமிழில் பேச மாட்டார்; அப்படிப் பேச நேரிட்டால் ஸ்நானம் (முழுக்கு) செய்து விட்டுதான் பூஜைகளில் ஈடுபடுவது என்பது இன்றுவரை உள்ள நடைமுறையாகும்.
இவ்வாறு உள்ளவர்கள்தான் எழுதுகிறார்கள். சமஸ்கிருதம் சிங்கமா? புலியா? இவர்கள்மீது விழுந்து பிறாண்டி கடித்துக் குதறி விடப் போகிறதா? ஏன் இந்தக் கவலை? சமஸ்கிருத வாரம் கொண்டாடும் நாட்களில் தமிழ்மொழி நாடு கடத்தப்படுமா? என்றெல்லாம் தமிழ் இந்து நேற்றைய நாளேட்டில் ஆத்திரம் பொங்க வார்த்தைகளைக்கொட்டித் தீர்த்திருக்கிறார்.
ஆம், சமஸ்கிருதம் ஒரு மிருகம் தான்; தமிழுக்குள் புகுந்து கலந்து தமிழையே சிதைத்து, தெலுங்கு என்றும், கன்னடம் என்றும், மலையாளம் என்றும், துளு என்றும் துண்டு போட்டுத் தின்ற மிருகம்தான் சமஸ்கிருதம்.
சமஸ்கிருதம் ஒழிந்தால், அதன் படைப்புகள் ஒழிக்கப்பட்டால் நாட்டில் மதக் கலவரங்களும் ஜாதி சண்டைகளும் ஒழியும் என்று சொன்னவர் தமிழர் அல்ல; தமிழ் மொழி தெரிந்தவர் அல்ல - பேசியவரும் அல்ல - இந்து மதத்தைக் கப்பலில் சென்று அமெரிக்காவில் அதிகப் பிரசங்கியாகப் பேசிய விவேகானந்தர்தான்.
ஆர்.எஸ்.எஸின் பிதா மகன்களில் ஒருவரும், காந்தியார் படுகொலைக்குக் கூர் தீட்டிக் கொடுத்த வருமான சாவார்க்கர் சொல்லுகிறார்.
இந்துக்கள் என்போர் தம்மளவில் ஒரு தேசமாகவும், (Nation) ஜாதியாகவும் (Caste) மட்டுமின்றி ஒரு பொதுவான சமஸ்கிருதி (Sanskriti) பண்பாட்டுக்கு உரியவர் - என்று எழுதியுள்ளாரே - இதன் பொருள் என்ன? தமிழ் இந்து எழுத்தாளருக்குத் தெரியாதா?
இன்றைக்கு சமஸ்கிருதத்துக்காக சத்துணவு கொடுத்து தூக்கி நிறுத்தும் இந்தப் புள்ளிகள் - கேள்வி ஒன்றுக்குப் பதில் சொல்லுவார்களா? சமஸ்கிருதம் செத்த மொழியாக ஆனதற்கு யார் காரணம்? சமஸ்கிருத எதிர்ப்பாளர்களா? சமஸ்கிருதத்தைத் தாய்மொழியாகக் கொண்ட ஆரியப் பார்ப்பனர்கள்தானே காரணம்.
சமஸ்கிருதம், தேவபாஷை என்றும், அதனை சூத்திரர்களும், பஞ்சமர்களும் படிக்கக் கூடாது, பேசக் கூடாது; படித்தால் நாக்கை அறுக்க வேண்டும், கேட்டால் காதுகளில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்ற வேண்டும்; தெரிந்து வைத்திருந்தால் நெஞ்சைப் பிளக்க வேண்டும் என்று சாஸ்திரம் எழுதி வைத்து செயல்படுத்தியவர்கள் இந்த ஆரியப் பார்ப்பனர்கள் தானே?
இப்படி பெரும்பான்மையான மக்களைப் பேச விடாமல் தடுத்தால் அந்த மொழி செத்துத் தொலையாமல் உயிர் வாழ முடியுமா?
கல்யாண வீட்டிலும் கருமாதி வீட்டிலும் பேசினால் மட்டும் போதுமா?
சமஸ்கிருத மொழி என்று சொல்லும் பொழுது ஓரினத்தின் கலாச்சார சின்னமாக பார்க்க வேண்டிய அவசியத்தை வரலாறு நமக்குக் கைகாட்டி எச்சரிக்கிறது.
இன்றுகூட கோவில்களில் தமிழில் வழிபாடு என்றால் அதனை எதிர்த்து உச்சநீதிமன்றம் வரை செல்லக் கூடியவர்கள் இந்து வகையறாக்கள் தானே - பார்ப்பனர்கள் தானே!
இதனை நுட்பமாய் புரிந்து கொண்டது தந்தை பெரியார் பிறந்த மண்! அதனால்தான் ஒருமுகமாக எழுந்து எதிர்ப்புப் புயலை வீசுகிறது; இதனைப் புரிந்து கொண்ட ஆரியம் ஆத்திர அனலை- ஆற்றாமை நஞ்சைக் கக்குகிறது. தி தமிழ் இந்துவின் கட்டுரையும் இதனைச் சேர்ந்ததே! தமிழர்களே எச்சரிக்கை! எச்சரிக்கை!!
Read more: http://viduthalai.in/page1/85446.html#ixzz3B2Kx89Yu
அய்யோ இந்து மதமே!
இஸ்லாம், கிறிஸ்தவம் போல இந்து மதக் கோட்பாடுகள் ஒரு புத்தகத்தில் குறிக்கப்படவில்லை. அதற்கு சரித்திர ரீதியில் ஒரு அமைப் பாளரும் கிடையாது.
ஒன்றல்ல - பல கடவுள்களைக் கொண்டது. இந்துவாகி இருப்பதற்கு கடவுள் நம்பிக்கை இருக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை. இந்து மதம் என்று சொல்லப்படும் இதில் முரண்பாடுகள் செழித்து மலிந்து கிடக்கின்றன.
எல்லா இந்துக்களுக்கும் பொதுவான நம்பிக்கைகளோ அமைப்புகளோ ஒன்றும் கிடையாது.
இந்து மதத்திற்கு அடிப்படையான ஒவ்வொரு நம்பிக்கையும் - ஏதாவது ஒரு இந்து கூட்டத்தினரால் மறுத்து ஒதுக்கப்பட்டிருக்கின்றது.
- இன்டர்நேஷனல் என் சைக்கிளோபீடியா ஆஃப் சோசியல் சயின்ஸ்,பக்கம் 358, தொகுதி 6
Read more: http://viduthalai.in/page1/85458.html#ixzz3B2MUhfCR
எல்லா முயற்சிகளும் தோல்வி!
இந்துமதம் என்பது ஒரு சமூக நாகரிகமாகவும், பல் வேறு மதங்களின் இணைப்பாகவும் இருக்கின்றது. அதற்கு ஒரு ஆரம்பமோ, ஆசிரியரோ, ஒரு மத்திய அதிகாரமோ, அமைப்போ, நிறுவனமோ கிடையாது.
இந்து மதம் என்றால் என்ன என்று வரையறுக்க மேற் கொள்ளப்பட்ட எல்லா முயற்சிகளும், ஒரு வழியில் திருப்தி அற்றுத்தான் முடிந்திருக்கின்றன.
இந்துக்கள் உள்பட, மிகச்சிறந்த இந்திய அறிஞர்கள் - இந்து மதம் என்ற இதன் ஒரு பகுதியை அல்லது மற்றதை வலியுறுத்தி பல்வேறு காலங்களில் சொல்லியிருப்பதால் - இந்த வரையறை வேலை மேலும் திருப்தியற்றதா யிருக்கின்றது.
- என்சைக்கிளோ பீடியா பிரிட்டானிகா, 1974, தொகுதி 8, பக்கம் 88
Read more: http://viduthalai.in/page1/85458.html#ixzz3B2MbX6kP
கயிலாயத்தில் ஒரு உரையாடல்!
பார்வதி: நாதா! நாடெங்கும் மூளைக் காய்ச்சலாமே! நாம் நம் பக்தர்களைப் பாதுகாக்கப் புறப்படலாமா?
பரமசிவன்: அடியே! அறிவிலி! பக்தர்களுக்கு எப்படியடி மூளைக் காய்ச் சல் வரும்! மூளை இருப்ப வர்களுக்கல்லவா அது வரும்!
Read more: http://viduthalai.in/page1/85458.html#ixzz3B2Mh1FWn
இந்தியா ஏழை நாடா?
இந்த நாட்டின் செல்வத்தில் எவ்வளவு பெரிய பாகம் மதமும், கடவுளும் என்கின்ற பேரால் வேலை செய்யாத சோம்பேறிகள் அனுபவிக்கின்றார்கள் என்பதை நமது மூட ஜனங்கள் அறியாமலேயே இந்த நாடு தரித்திர நாடு என்று அழுகின்றார்கள்.
இந்த நாட்டில் உள்ள சன்னியாசிகள், துறவிகள், மதாச்சாரிகள் என்பவர்களுக்கு உள்ள சொத்துக்களும் வரும்படிகளும் வேறு யாருக்காவது இருக்கின்றதென்று யாராவது சொல்ல முடியுமா?
அவர்களுக்கு எதற்காக அவ்வளவு சொத்தும் வரும்படியும் வேண்டி இருக்கின்றதென்று எந்தப் பொரு ளாதார வாதியாவது கவனிக்கின்றானா? ஒரு சந்நியாசி கோடிக்கணக்கான ரூபாய் சொத் தும், வருசத்தில் லட்சக்கணக்கான ரூபாய் வரும் படியும் உடைய வனாக இருந் தால் அந்த நாடு ஏழை நாடு தரித் திர நாடு என்று யாராவது சொல்லமுடியுமா? என்று கேட்கின் றேன்.
ஒரு முழம் முக்கால் முழம் உயரமுள்ள குழவிக் கல்லுகளுக்கு நமது நாட்டில் எத்தனைக் கோடி ரூபாய்கள் சொத்தும், எத்தனை லட்சம் ரூபாய்கள் வரும்படியும் இருக்கின்றனவென்று பாருங்கள்.
இப்படி எத்தனை நூற்றுக்கணக்கான ஆயிரக் கணக்கான குழவிக்கல்லுகள் நமது நாட்டில் செல்வத் தோடு யானை, ஒட்டகம், குதிரை, பல்லக்கு, தேர், ரதம் முதலிய வாகனங்களோடு, பல பெண்டாட்டிகளோடு வாழ்கின்றன என்பவைகளை நேரில் பார்க்கும் ஒரு யோக்கியன் உண்மையில் நமது நாடு தரித்திரமுள்ள நாடு என்று சொல்ல வருவானா?
இதை எந்த பொருளாதார நிபுணனாவது கவனித்து நமது நாடு தரித்திரமுள்ள நாடு என்று சொல்லுகிறானா?
- தந்தை பெரியார், குடிஅரசு 14.9.1930
Read more: http://viduthalai.in/page1/85462.html#ixzz3B2MnPXWE
மத நம்பிக்கையே இல்லாமல் வாழும் மக்கள்
உலகின் ஒன்பது நாடுகளில் சமீபத்தில் நடந்த ஓர் ஆய்வில், அந்நாடுகளில் பெரும்பான்மையான மக்கள் மத நம்பிக்கையே இல்லாமல் வாழ்ந்து வருவது தெரிய வந்துள்ளது.
இதனால், அவற்றில் தற்போது இருக்கும் மதங்கள் விரைவில் காணாமல் போய்விடும் என்று அந்த ஆய்வு கூறுகிறது.
ஆஸ்திரேலியா, ஆஸ்திரியா, கனடா, செசன்ய குடியரசு, பின்லாந்து, அயர்லாந்து, நெதர்லாந்து, நியூசிலாந்து மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய ஒன்பது நாடுகளில் சமீபத்தில் ஓர் ஆய்வு நடத்தப்பட்டது.
இந்தநாடுகளில் கடந்த 100 ஆண்டுகளுக்குமேல் எடுக்கப்பட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டு, அங்குள்ள மக்களின் மத விவரங்கள் சேகரிக்கப்பட்டன. அதன்படி, இந்நாடுகளில் பெரும்பான்மையான மக்கள் மத நம்பிக்கை இல்லாமலேயே வாழந்து வருவது தெரிய வந்துள்ளது.
இப்படியே போனால் இன்னும் சில ஆண்டுகளில் அங்கு மதங்களே இல்லாமல் போய்விடும் என்று அந்த ஆய்வு எச்சரித்துள்ளது. அமெரிக்காவின் டல்லஸ் நகரில் நடந்த ஒரு கூட்டத்தில் இந்த ஆய்வின் முடிவு வெளியிடப்பட்டது. அதன்படி, மிகக் குறைந்தபட்சமாக நெதர்லாந்தில் 40 சதவிகிதம் பேரும், அதிகபட்சமாக செசன்ய குடியரசில் 60 சதவிகிதம் பேரும் மதநம்பிக்கை அற்றவர்களாக வாழ்ந்து வருகின்றனர்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த நிபுணர்கள் சிலர், இது ஒரு சாதாரண கணக்குதான். அதாவது, நாம் மேற்கொள்ளும் ஒரு காரியத்தால் ஏதாவது பயன் விளைந்தால் அக்காரியத்தையும் நாம் தொடர்ந்து செய்வோம்.
உதாரணமாக, ஸ்பானிய மொழி பேசுவதால் விளையும் பயன், பெரு நாட்டில் தற்போது வழக்கழிந்து வரும் கொச்சுவான் மொழியைப் பேசுவதால் விளையும் பயனைவிட மிக அதிகம்.
இதே கணக்கை மத நம்பிக்கையிலும் நீங்கள் வைத்துப் பார்க்கலாம் என்று தெரிவித்தனர்.
தினமலர், 27.3.2011, பக்கம் 12
Read more: http://viduthalai.in/page1/85462.html#ixzz3B2N00lMR
இவர்களும் மூடர்கள்தானே!
வீரமாமுனிவர் எழுதிய பரமார்த்த குரு கதையில் ஒரு கதை வருகிறது. ஒரு குரு, அவருக்குத் துணையாக அய்ந்து சீடர்கள், ஒருநாள் குருவின் ஆடை கிழிந்து விட்டது.
குரு அந்த அய்ந்து சீடரையும் ஊசி ஒன்றினை வாங்கி வருமாறு அனுப்பினார். அய்ந்து சீடர்களும் ஊசி வாங்கச் சென்றனர். ஒரு கடையில் ஊசி ஒன்றினை வாங்கினர். ஆனால், எதிர்பார்த்தப்படி அவ்வளவு பெரிதாக இல்லை.
இவ்வளவு சிறிய பொருளை வாங்கவா அய்வரையும் அனுப்பினார் என்று அவர்களுக்குள் அய்யம். அதனால் ஒரு பனைமரம் ஒன்றினை வாங்கி அதன்மீது அந்த ஊசியை செருகி அய்வரும் தூக்கி வந்தனர்.
இக்கதை நம் ஊரில் நடக்கும் சம்பவம் ஒன்றினை நினைவூட்டுகிறது. நம் ஊரில் சாமி புறப்பாடு செய்வார்கள். அரை அடி அல்லது ஒரு அடி இருக்கும் அந்தச் சிலை. அந்த சிலையை ஒரு சிறுவன் கையில் பிடித்துக் கொண்டு ஊரைச் சுற்றி வரலாம். ஆனால் நடப்பது என்ன?
பல மரங்களை பாடைபோல் கட்டி அச்சிலையை அதன்மேல் வைத்து பத்து இருபது பேர் தூக்கிச் செல்வர். இதைப் பார்க்கும் போது பரமார்த்த குரு கதை சீடர்கள் ஊசி வாங்க வந்த கதை தான் ஞாபகத்துக்கு வருகிறது. அந்த மூடர்களுக்கும் இந்த மூடர்களுக்கும், என்ன வேறுபாடு?
தகவல்: கோ.இராமச்சந்திரன், அருந்தவபுரம்
Read more: http://viduthalai.in/page1/85464.html#ixzz3B2N6droE
அறிஞர்களின் அறிவுரைகள்
மனித சமுதாயம் தவிர மற்றபடி மிருகம், பட்சி, பூச்சி, ஜந்து முதலியவைகளில் வேறு எந்தப் பெண் ஜீவனாவது, ஆண்களுக்காகவே இருக்கிறோம் நாம் என்ற கருத் துடன் - நடையுடன் இருக்கிறதா என்று பாருங்கள். இது என்ன நியாயம்?
- தந்தை பெரியார்
இந்து மதத்தில் எனக்கு அறவே நம்பிக்கை இல்லை; ஏனெனில் அயோக்கியத்தனம் என்பது எனக் குப் பிடிக்கவே பிடிக்காது!
- டாக்டர் அம்பேத்கர்
பைபிள் ஒரு பெண்ணால் எழுதப்படவில்லையே! ஆதலால்தான் அதில் பெண்கள் அவமானம் அடைய வேண்டிய விஷயங்கள் நிரம்பிக் கிடக்கின்றன!
- இங்கர்சால்
மதம் என்பது பிறருக்கு உழைத்து வறுமைப்பட்ட மக்களை தலை எடுக்கவிடாமல் அழுத்தி வைக்க ஏற்பட்ட சாதனங்களில் முக்கியமான ஒன்றாகும்.
- லெனின்
உலகில் உள்ள ஒவ்வொரு குழந்தையும் நாத்திகவாதி யாகப் பிறக்கிறது. பிறருடைய போதனையினாலும் தயாரிப்பினாலுமே தெய்வ நம்பிக்கை ஏற்படுகிறது.
- சார்லஸ் பிராட்லா
ஒரு புழுவைக் கூட படைக்கச் சக்தியற்ற மனிதன் கணக்கில்லா கடவுளரைப் படைத்துக் கொண்டே இருக்கிறான்.
- மான்டெயின்
Read more: http://viduthalai.in/page1/85464.html#ixzz3B2NE0Byl
மனமென ஒன்றுண்டா? நூல் வெளியீட்டு விழா! நூலை வெளியிட்டு தமிழர் தலைவர் உரை
சென்னை, ஆக.8- மனமென ஒன்று உண்டா? நூல் வெளியீட்டு விழா 7.8.2014 சென்னை பெரியார் திடல் அன்னை மணியம்மையார் அரங்கில் நடைபெற்றது. நூலை திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசி ரியர் அவர்கள் வெளியிட்டு சிறப்புரை ஆற்றினார்கள்.
நூலைப் பெற்றுக் கொண்டு திராவிட இயக்கத் தமிழர் பேரவைப் பொதுச்செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண் டியன் உரையாற்றினார். விழாத் தலைமை ஏற்று திராவிடர் கழகத் துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் உரை நிகழ்த்தினார்.
தமிழர் தலைவர் உரை
நூலை வெளியிட்டு தமிழர் தலைவர் ஆசிரியர் உரையாற்றும்போது குறிப்பிட்டதாவது:
மனமென ஒன்று உண்டா? நூலை தத்துவரீதியாக அணுகிப்பார்த்தால் இழைபோல் ஊடுருவிச் செல்வது அறிவியலுக்கும், சமயத்துக்கும் உள்ள விவரம் என்ன என்பது குறித்தே இருக்கிறது.
எதுவும் புழக்கத்தில் இருப்ப தாலேயே அதை நிலைக்க நினைக்க விட்டுவிடக்கூடாது. மனம் திறந்து கூறுகிறேன் என்பார்கள். மற்ற நேரத்தில் மனம் என்ன மூடி இருக்குமா? கடவுளையே தட்டுங்கள் திறக்கப்படும் என்கிறார்கள், அவர் என்னவோ மூடி வைத்திருப்பதுபோல.
இந்த நாள் பொன்னாள்
இந்த நாள் 7.8.2014 சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் அவர் கள் மண்டல் அறிக்கைப்படி மத்திய அரசுப் பணிகளில் 27விழுக்காடு அமலாக்கப்பட்ட நாளாகும். மூளையே இல்லை என்று சொல்லி ஒதுக்கப்பட்டவர்களுக்கு வாய்ப்பு கிடைத்த நாள். மூடப்பட்ட கதவு திறக்கப்பட்ட நாளாகும். இந்த நாள் வரலாற்றில் ஒரு பொன்னாள். மனம் என்று ஒன்றில்லை. அது உளவியலும், மூளைத் தொடர்பில் உள்ள நரம்பியலும்தான் அது.
பழையனவைகளை மறுப்பதா? என்றால், திருவள்ளுவரையே மறுப்பதற்கு திருவள்ளு வரே அனுமதி கொடுத்துள்ளார். எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண் பதறிவு. எப்பொருள் எத்தன்மையத் தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு என்று கூறியுள்ளார்.
தந்தை பெரியார் குடியாத்தத்தில் உரையாற்றும்போது, அவர் சொன்னார், இவர் சொன்னார் என்று எதையும் நம்பி விடாதே என்று பேசிக்கொண்டிருந்தபோது, பார்வையாளர் களிலிருந்து மாணவர் ஒருவர் எழுந்து நீங்கள் சொல்வ தைக் கூடவா? என்று கேட்டார்.
அப்போது, நான் சொல் கிறேன் என்பதற்காக நம்பாதே, உன் அறிவைப் பயன் படுத்து என்று கூறினார். பெரியார் தொண்டன் என்ற முறையில் மனமென ஒன்று உண்டா? என்று எழுதிய நூலாசிரியரின் துணிவைப் பாராட்டுகின்றேன். சிக்கிமுக்கிக் கல்வைத்து நெருப்பு உண்டாக்கியவன் பழங்காலத்து எடிசன் என்றார் பெரியார்.
இறந்தபின் எரிப்பதற்கு அந்தக்காலத்தில் சுடுகாட்டுக்கு எடுத்துச் செல்லும்போது, வாழை மட்டையில் நெருப்புச் சட்டியை வைத்து செல்வார்கள். நீண்ட தூரம் சுடு காட்டுக்குச் சென்றால் நெருப்பு வேண்டுமென்று. அப்படி வாழை மட்டையை வைத்து நெருப்புச் சட்டியை எடுத்துச் செல்வதைக் கண்டறிந்தவன் அந்த காலத்து எடிசன்.
ஆனால், இன்று காரில் செல்கிறோம். உடலைக்கூட தூக்கிச்செல்லாமல் வாகனத்தில் வைத்து எடுத்து மின் மயானத்துக்குக் கொண்டு செல்லும்போதும் நெருப்புச் சட்டியுடன் செல்கிறான் என்றால் பழைமை. அப்பா, தாத்தா எல்லோரும் இப்படித்தான் எடுத்துச் சென்றார்கள் என்று கூறுகிறான்.
இப்பொழுதும் ஏன் அவ்வாறே எடுத்துச் செல்கிறான்? நெருப்புக் கிடைக்காதா? தீப்பெட்டி வந்து விட்டதே - மின் சுடுகாட்டுக்கே தீச்சட்டி எடுத்துச் செல் கிறான் என்றால், இதன் பொருள் என்ன? சிந்தனைக்கு இடம் கொடுக்காமல் பழக்கவழக்கம் என்னும் மூடத்தனத் தில் சிக்கிக் கொள்கிறான்.
அறிவியல் உண்மை
அறிவியல் உண்மைப்படி மனம் என்று ஒன்று இல்லை. அய்ந்து புலன்களின் செயல்பாடு மூளையால்தான். அய்ந்து புலன்களையும் கட்டுப்படுத்துவது மூளைதான்.
மனம் என்பது உருவகம். மூளையைச் சிதைத்தால் இதயம் இயங் கும். மூளைச் செயலின்மைக்கு ஆளானால், அதுதான் சாவு என்கிறார்கள். தந்தை பெரியார் அவர்கள் கூறும்போது செத்துப்போச்சு என்றால் சத்துப்போச்சு என்று பொருள்.
பெஞ்சமின் வாக்கர் தொகுத்த என்சைக்கிளோ பீடியாவில் சாருவாகர்கள்பற்றி உள்ளது. மென்மையாக, இனிமையாக பேசக்கூடியவர்கள் சாருவாகர்கள்.தத்துவ வரலாற்றில் முற்கால சிந்தனையாளர்கள். மற்றவர்களின் வசையின்மூலம்தான் சாருவாகர்களை அறிய முடிகிறது.
மனுஸ்மிருதி, மகாபாரதத்தில் சாருவாகர்கள் பற்றி உள்ளது. நிலம், நீர், நெருப்பு மற்றும் காற்று ஆகியவற்றை ஏற் கிறார்கள். ஆகாயத்தை ஏற்கவில்லை. நீஷீஸீநீவீஷீஸீமீ வீ யீஸீநீவீஷீஸீ ஷீயீ தீஷீபீஹ் என்று உள்ளது. விண்ணுக்கும் மண்ணுக் கும் என்று கூறாதீர்கள். வானம் என்று கூறலாம்.
விண் என்றால் விண்ணுலகம் என்று கற்பிக்கிறார்கள். சாருவாகர் கள் இருப்பதை மட்டும் ஏற்றார்கள். தமிழ்நாட்டில் ஒரு கல்லூரியை நகராட்சியே நடத்திய பெருமை சேலத்துக்குத் தான்.
அந்தக் கல்லுரியில் உள்ள தத்துவப் பேராசிரியர் ஒரு பார்ப்பனர். அங்கு பெரியார் பேசுவதற்குமுன் தத்துவத் தைப் பற்றி பெரியார் பேசுவார் என்று கூறினார். 1946ஆம் ஆண்டில் தந்தை பெரியார் தத்துவ விளக்கம்குறித்துப் பேசினார். மனிதன் என்பதே ஒரு பொருள், ஒரு கூட்டுப்பொருள் என்று கூறினார்.
அறிவியல் விலங்கு போடாதது. மதம் நம்பு என்று விலங்கிட்டது. அறிவியல் எதையும் அப்படியே நம்பாதே, ஆய்வு செய்து பார் என்கிறது. அறிவை செயல்படுத்தி சமு தாயத்துக்குப் பயன்படவேண்டும். மனமென ஒன்றில்லை! மூடநம்பிக்கைகளை வேட்டையாட வேண்டும்.
நூலாசி ரியர் தந்தை பெரியாரின் மெட்டீரியலிசம் அல்லது பிரதி கிருதவாதம் என்கிற நூலை ஆய்வு செய்யவேண்டும். சாருவாகர்களை அழித்துவிட்டார்கள். வீரமணிகளை அழிக்க முடியாது. நான் நூலாசிரியர் வீரமணியைச் சொல் கிறேன் என்று தமிழர் தலைவர், ஆசிரியர் பேசும்போது குறிப்பிட்டார்கள்.
கலந்துகொண்டவர்கள்
விழாவில் தலைமைச் செயற்குழு உறுப்பினர் சாமி. திராவிடமணி, பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன், புலவர் வெற்றியழகன், முன்னாள் சென்னை மேயர் சா.கணேசன், கயல் தினகரன், திராவிடர் கழக வடக்கு மண்டல அமைப்புச் செயலாளர் வெ.ஞானசேகரன்,
பெரியார் களம் இறைவி, பெரியார் நூலக வாசகர் வட்டத் துணை செய லாளர் சுப்பிரமணியம், பொருளாளர் மனோகரன், தஞ்சை கூத்தரசன், கோ.வீ.இராகவன், சா.தாமோதரன், பார்த்தசாரதி, அன்பு செல்வன், தனலட்சுமி தங்கமணி, மணியம்மை ஆகி யோர் கலந்துகொண்டனர்.
வெளியிடப்பட்ட நூலை தமிழர் தலைவர்மூலமாக பெற்றுக்கொண்டவர்கள் கலிய பெருமாள், முருகையன், ஏ.சாமிக்கண்ணு, கவிஞர் செ.வை.இரா.சிகாமணி, வழக்குரைஞர் செல்லய்யா ஆகியோர் ஆவர். நூலை முதலில் பெற்றுக்கொண்ட திராவிட இயக்க தமிழர் இயக்கப் பொதுச்செயலாளர் பேராசிரியர் சுபவீரபாண்டியன்,
நூலாசிரியர் புலவர் பா.வீரமணி, பதிப்பக உரிமையாளர் சோமு ஆகியோ ருக்குப் பயனாடை அணிவித்து தமிழர் தலைவர் ஆசிரியர் பாராட்டு தெரிவித்தார். நூலாசிரியர் புலவர் பா.வீரமணி தமிழர் தலைவர் ஆசிரியர், திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பேராசிரியர் சுபவீர பாண்டியன் ஆகியோருக்குப் பயனாடை அணிவித்து மகிழ்வைப்பகிர்ந்து கொண்டார்.
இறுதியாக நூலாசிரியர் புலவர் பா.வீரமணி ஏற்புரையுடன் நன்றி தெரிவித்துப் பேசினார்.
8-8-2014
Read more: http://viduthalai.in/page1/85478.html#ixzz3B2NSaqtN
இன்றைய ஆன்மிகம்?
அம்மை
ஆடி வந்து விட்டாலே ஆன்மீக விதிகளைச் சொல்லிக் கொண்டு பெண்கள் அதிக அளவில் ஆலயங்களிலும் தோழியர் இல்லங்களிலும் நடமாடு வதைக் காணலாம். கூழ் வார்த்தல் எனப்படுகிற முக்கிய நிகழ்ச்சியும் பூஜையும் எல்லா அம்மன் கோவில்களிலும் நடை பெறும். இதற்கு ஒரு புராணச் செய்தி உள்ளது. ஒரு சமயம் கார்த்த வீர் யன், ஜமதக்கினி முனிவர் மீது பகை உணர்வு கொண் டிருந்தான். அவனது மகன்கள் இருவர் முனி வரைக் கொன்று விட் டனர். கணவன் இறந்த துக்கம் தாங்க முடியாத ரேணுகாதேவி தீயை உண்டாக்கி அதில் விழுந்து விட்டாள். இதைக் கண்டு வருந்திய இந்திரன், வருண பக வானை அழைத்து மழையை பெய்விக்கும் படி கூறினான். மூட்டிய தீயில் விழுந்த ரேணு காவை மழை வந்து நனைத்துவிட வெற்று உடலோடு இருந்தவள் அருகிலிருந்த வேப்பமர இலைகளால் தன் உடலை மூடிக் கொண்டாள்.
வயிற்றுப் பசி ஏற்பட்ட போது அருகிலிருந்த கிராம மக்களிடம் உணவு கேட்டாள். அப்போது அவர்கள் மகரிஷி மனை வியான நீங்கள், எமது உணவை சாப்பிட வேண்டாம் என்று கூறி, பச்சரிசி மாவு, வரகு, வெல்லம், பானகம், இளநீர், காய், கனிகளைக் கொடுத்தனர். அவற்றைக் கொண்டு கூழ் தயாரித்துச் சாப் பிட்டுத் தன் பசியைத் தீர்த்துக் கொண்டாள் ரேணுகாதேவி.
அச்சமயம் சிவபெரு மான் அவள் முன் தோன்றி, சக்தியின் அம்ச மாக இந்தப் புவியில் அவரித்த நீ பூமியில் பாவங்களைக் களைந்து மனிதர்களுக்கு ஏற்படும் தீ நோய்களைக் கட்டுப் படுத்துக. உனக்கு ஏற் பட்ட அம்மைக் கொப் புளங்கள் உன் பக்தர் களுக்கு வரும் போது, உடனே நீங்கிட உன் வேப்பிலையே கண் கண்ட மருந்து, பச்சரிசி மாவு பானகம், வெல்லம், இளநீர், கூழ் படைக்கும் போது.. நீ மாரிதேவியாக அருள் காத்து அவர் களுக்கு வந்த நோய் களை நீக்குவாயாக என் றார். எனவே தான் மாரித் தாயின் சன்னதிகளில் கூழ் படைக்கிறார்களாம்.
அம்மை வருவது ஒருவகை கிருமியால், அது தடுக்கப்பட்டது அம்மைத் தடுப்பூசியால்; இதில் எங்கு வந்தாள் ரேணுகாதேவி?
அம்மைக்குக் கார ணம் கடவுளா? கிருமியா? ஆன்மிகவாதிகளுக்கு நோய் வந்தால் கோயி லுக்குச் செல்வார்களா? மருத்துவரிடம் செல் வார்களா? சிந்திப்பீர்!
Read more: http://viduthalai.in/page1/85490.html#ixzz3B2NqgMMt
மதவாத மூடநம்பிக்கைவாதிகளுக்கு ஓர் அதிர்ச்சி தகவல்!
அமெரிக்காவில் நாத்திகத் தொலைக்காட்சி உதயம்
மதவாதம், அஞ்ஞான கருத்துக்களைக் கடுமையாக விமர்சிக்கும்!
அமெரிக்க நாத்திக அமைப்பின் தலைவர் டேவிட் சில்வர்மேன் அறிவிப்பு
நியூயார்க், ஆக.9-_ உலகில் முதல் நாத்திகத் தொலைக்காட்சி அமெரிக் காவில் தொடங்கப்பட் டுள்ளது. மதவாதம் உள்ளிட்ட அஞ்ஞான, பிற்போக்குத்தனமான வற்றை இத்தொலைக் காட்சி கடுமையாக விமர் சிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
கடவுள் நம்பிக்கை இல்லாதவன் அல்லது நாத்திகர் என்றதுமே இன்றைய கால கட்டத் திலும் பலரின் எதிர்ப்பை நீங்கள் எதிர் கொள்ள வேண்டி இருக்கும். இவர் களுக்கு கடவுளை எதிர்க்க ஒரு சாதனம் கிடைத்தால் அந்த சாதனம் மூலம் எதிர்ப்பையும் வெற்றிகர மாக எதிர்கொள்ளலாம் அப்படி ஒரு சாதனம் தான் நாத்திக தொலை காட்சி மூலமாக அமெரிக் காவில் உதயமாகத் துவங்கியுள்ளது. இந்த நாத்திகத் தொலைக்காட்சி ஒளிபரப் பின் துவக்கத்தின் போது அமெரிக்க நாத்திகர் அமைப்பின் தலைவர் டேவிட் சில்வர்மேன் கூறியதாவது, இந்த தொலைக்காட்சி அறிவியல் அரசியல் மற் றும் நகைச்சுவை அனைத் தும் உள்ளடக்கிய ஒரு பொதுவான தொலைக் காட்சி ஆகும். அதே நேரத்தில் இவை அனைத் திலும் மதம் தொடர்பாக தங்களின் எதிர்ப்பை நாத்திக கருத்தைக் கூற முழுச் சுதந்திரம் உண்டு நாத்திக கருத்தின் மீது தான் தொலைகாட்சி நிகழ்ச்சிகளின் கவனம் இருக்கும்.
நாத்திகர்கள் என்றால்...
நாத்திகர் என்றாலே ஏதோ சுதந்திர மற்றவர் கள் போன்ற ஒரு பார் வைக்கு பலரால் பார்க்கும் நிலைக்குத் தள்ளப்படு கின்றனர். நாத்திகம் என்றவுடன் இந்தியா தான் நமக்கு நினைவிற்கு வரும் நாத் திகப்புரட்சி இந்தியாவில் தோன்றியது அதாவது கிமு 300 அல்லது 400 களில் தான்(புத்தரின் காலம்)
உலகமும் கிமுவிற்கு முன்பாகவே நாத்திகம் இந்தியாவில் பிறந்து விட்டதாக ஒப்புக் கொண்டு உள்ளது. புத் தரின் சீடர்களுள் ஒருவராக கருதப்படுபவர் அஜந்த கோசம்பி இவரை அஜந்தா கோசம்பலி என்றும் அழைப்பார்கள். நாத்திகக் கொள்கையில் முழுவதுமாக நம்பிக்கைக் கொண்டு இருந்தார். சொர்க்கம் நரகம் மற்றும் கடவுளர்கள் வாழும் உலகம் போன்ற கூற்றைக் கடுமையாக எதிர்த்தார். அதே போல் உடலில் உயிர்போனபிறகு மண் ணோடு மண்ணாகிவிடும், ஆன்மா போன்றவை எல்லாம் முட்டாள் தன மானது என்றும் கூறினார்.
இன்று நவீன உலகின் அறிவியல் வளர்ச்சி எல்லாம் நாத்திகர்களின் அறிவார்ந்த பார்வையில் உருவானது. மிட்செல் ஸ்டீவன் பார்வையில் இந்தியாவில் தான் நாத்திகத்துவம் முதல் முதலில் துவங்கியது, இந் தியாவில் தான் கடவுள் சக்தி, மற்றும் மூடநம்பிக் கைகளை எதிர்க்கும் கொள்கையான உண்மை யான நாத்திகம் உருவா னது. ஆனால் இன்றைய நிலை என்ன? இந்தியா வில் அமெரிக்காவை விட அதிகமாக மூடநம்பிக் கையை கடவுள் செயல் என்றபெயரில் நம்பும் மனிதர்கள் அதிகம் உள்ளனர். ஆனால், உலகில் தற்போது நாத்திகர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நவீன சாத னங்கள் மற்றும் முதலில் இருந்ததை விட அதிக எண்ணிக்கையில் நாத்தி கர்கள் உருவாகி வரு கின்றனர். 2012-ஆம் ஆண்டு எடுத்த ஆய்வின் படி உலகின் கடவுள் மறுப்பாளர் மற்றும் மூடநம்பிகைக்கு எதிரான மக்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டு வருகிறது. முக்கியமாக நாத்தி கர்கள் என்று பலர் தங்களை நேரடியாக பதிவு செய்யத்தயங்குகின்றனர். காரணம் அவர்கள் சமூகத்தில் தனித்து விடப் பட்டு விடுவார்கள் என்ற நம்பிக்கை ஆனால் அவர் கள் கடவுள் நம்பிக்கை மற்றும் மூடநம்பிக்கை
இதர அறிவிலித்தனமாக அனைத்துக் கொள்கை களுக்கும் கடுமையான எதிரியாக உள்ளனர். நாத்திகத் தொலைக் காட்சி மக்கள் மத்தியில் நாத்திகர்களின் தனிமையைப் போக்கவும் நாத்திகத்தன்மையில் இருக்கும் மக்கள் தங்கள் கொள்கைகளில் மேலும் தீவிரம் காட்ட வுமே உதயமாகிறது. கடுமையாக எதிர்ப்போம் அறிவியல் அல்லாத எந்த ஒரு கருத்து கொள்கை மற்றும் நட வடிக்கைகளை நாத்திகத் தொலைக்காட்சி கடுமை யாக எதிர்த்துப்பிரச்சாரம் செய்யும் அதே வேளையில் தங்களை அறிஞர்கள் என்று கூறிக்கொண்டு திரியும் மதம் தொடர்பானவர்கள் மற்றும் மதவெறி கொண்ட நபர்களின் கூற்றுக்களை எல் லாம் பொய் யாக்கும் விதமாக நமது நாத்திகத் தொலைக்காட்சி திகழும். இன்றைய அறிவியல் உலகின் முதல் படி நாத் திகம் ஆகும், தற்போது மருத்துவத்துறை, நவீனக் கருவிகள் கண்டுபிடிப் புகள் மற்றும் பல்வேறு அறிவியல் பரிமாணங்கள் அனைத்தும் நாத்திகத்தில் இருந்துதான் ஆரம்பிக்கின்றன. நாத்திகம் என்றாலே பொய்யில் இருந்து விலகி உண்மையைத்தேடுவதாகும். மத நம்பிக்கைகள் மனிதநேயத்தைக் கெடுத்து மனிதர்களுக்கு இடையே பிளவை ஏற்படுத்துகின்றன. ஆனால் நாத்திகம் உலகில் உள்ள அனைத்து மனிதர்களையும் ஒன்றாக இணைக்கும் மனிதநேயச் சங்கிலியாகும்.நாத்திகத்தின் அடித்தளம் மனித நேயமாகும், பிரிட்டிஷ் தத்துவஞானி ஏசி கார்லின் தனது நூலான கடவுளின் வாதம் (ஜிலீமீ நிஷீபீ கிக்ஷீரீனீமீஸீ) என்ற நூலில் எழுதுகிறார். அறிவு என்பது முடிவில்லாத ஒன்றாகும், கேள்வி அதன்மூலம் கிடைக்கும் பதில் போன்றவை -_ மனித நாகரிகத்தின் வளர்ச்சிக்கு முக்கிய காரணியாக இருந்த ஒன்றாகும். மனித அறிவாற்றல் வளர்ச்சியின் காரணமாக எது உண்மை? எது தவறு என்பதைப் புரிந்து கொள்கிறான். மதங்கள் மனிதர்களை கவலை மறந்து வாழவைக்கும் போலியான ஒரு தத்துவத்தைக் கூறுகின்றன. நீ இங்கே சிரமப்பட்டால் வானுலகில் மகிழ்வாக வாழ்வாய் என்ற ஒரு போதையை மனிதர்களின் உள்ளத்தில் புகுத்திவிடுகிறது. கடவுள் நம்பிக்கை தீர்வாகாது மதங்கள் சொல்கின்றன எது நடந்தாலும் அது கடவு ளுக்குத்தெரிந்தே நடக்கிறது, ஆகவே சிரமப்படுவதை நன்மையாக ஏற்றுக்கொள்ளுங்கள் என்கிறது. ஆனால் உண்மையில் கடவுள் பக்தி உங்களின் வாழ்க்கையில் ஏற் படும் பல்வேறு சிக்கல்களுக்கு எந்த ஒரு தீர்வையும் தராது. மனிதநேயம் மட்டுமே மனித குலத்தைக் காப்பாற்றும். குறிப்பு: *அஜித் கோசம்பி அல்லது அஜித் கோசம்பலி கவுதம புத்தரின் நேரடிச்சீடர் ஆவார் இவர் புத்தரின் கொள்கைகளை மக்களிடையே எடுத்துச் சென்றவர். அப்போது இருந்த பல்வேறு வேதமத நம்பிக்கைகளை கடுமையாக எதிர்த்தவர் ஓவ்வொரு மதம் தொடர்பான மடங்களுக்குச்சென்று நேரடியாக பல்வேறு விவாதங்கள் நடத்தி மதநம்பிக்கையா ளர்களைத் திணறடித்தவர். கடவுள் நம்பிக்கை, மூடநம்பிக்கை, மற்றும் கடவுள் பெயரால் செய்யப்படும் அனைத்தும் மடத்தனமான செயல் என்று கூறினார். அதே நேரத்தில் உடல் இறந்த பிறகு மண்ணோடு மண்ணாகிவிடும். ஆன்மா மறுபிறப்பு கர்மபலன் எல்லாம் மூட்டாள்களின் வாதம் என்று கூறியவர்.
Read more: http://viduthalai.in/page1/85495.html#ixzz3B2NzCmr4
கோயிலில் தங்கக் குவியல்
குட்டி மாநிலமான இமா சலப் பிரதேசத்தில் 29 கோயில் களில் 400 கிலோ தங்கம், 15,800 கிலோ வெள்ளிக் கட்டிகள் தூங்குகின்றனவாம்! (இவற்றை எடுத்து மக்கள் நலனுக்குப் பயன்படுத்தக் கூடாதா?)
Read more: http://viduthalai.in/page1/85499.html#ixzz3B2OA3a6D
பெண்களுக்கு அறிவுரை கூறும் பெம்மான்கள்!
அறிவுரைதான் இந்த நாட்டில் மிகவும் மலிவானது; அதுவும் பெண்களுக்கு ஆண்கள் அதிகம் அறிவுரை சொல்லுவதில் இந்தியாவை வெல்ல உலகில் எந்த நாடும் கிடையாது.
பெண்கள் எந்த மாதிரி உடையை அணிய வேண்டும் என்று அறிவுரை சொல்லும் அருகதை ஆண்களுக்கு உண்டா என்பது அர்த்தமுள்ள முதல் கேள்வி.
ஆனாலும், யாரையும் கேட்காமலேயே ஆண்கள் தாங்களே முன்வந்து வலிய அந்த உரிமையை எடுத்துக் கொண்டு அருளுபதேசம் செய்ய ஆரம்பித்து விடுகிறார்கள்.
நாடாளுமன்றத்தில் தெலுங்குதேச மக்களவை உறுப்பினர் முரளி மோகன் மகந்த் பெண்கள் இந்தியக் கலாச்சாரத்துக்கு ஏற்ப கண்ணியமான உடை அணிய வேண்டும் என்று பேசப் போக, அவையில் கடுமையான எதிர்ப்புச் சுனாமியை அவர் எதிர் கொள்ளும் நிலை ஏற்பட்டு விட்டது; வேறு வழியின்றிப் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டுக் கொண்டார். (வாழ்க மகளிர் உறுப்பினர்கள்!)
இதற்கு முன்னதாக கோவா மாநில பொதுப் பணித்துறை மூத்த அமைச்சர் சுதின் துவாலிகர் என்பவர் கூறிய கருத்தும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது..
நமது நாட்டில் தற்போது பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்து வருவது கவலைக்குரியது. பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரிப்ப தற்குக் காரணம் பெண்கள்தான் முக்கியப் பங்கு வகிக்கின்றனர். பெண்கள் நாகரிக ஆடை அணிந்து கேளிக்கை விடுதிக்குச் செல்லுவதாலும் ஆண் துணை யின்றி துணிச்சல் என்ற பெயரில் தனியாக செல்லுவ தாலும்தான் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரிக்கின்றன என்று பேசியிருக்கிறார்.
கருநாடக மாநிலம் மங்களூரில் இயங்கி வரும் ராம்சேனா அமைப்பின் தலைவர் முத்தலிப் என்பவர் பெண்கள் கேளிக்கை அரங்குக்குச் செல்லுகிறார்கள் என்ற பெயரில் மங்களூரில் உள்ள பல கேளிக்கை அரங்குகளில் வலிய நுழைந்து பெண்களைத் தாக்குகின்றனரே என்று செய்தியாளர்கள் சுட்டிக் காட்டியபோது, கோவா அமைச்சர் அதனை நான் ஆதரிக்கிறேன்; அவர்கள் ஒன்றும் தவறு செய்யவில்லை என்றும் பதில் சொல்லியிருக்கிறார்.
மும்பையில் மும்பை கிழக்கு பகுதி சட்டப் பேரவை உறுப்பினர் பாலா சாலந்த் (சிவசேனா) என்பவர் முஸ்லிம் பெண் ஒருவரை வழிமறித்து அத்து மீறியதும் அண்மையில் மக்கள் கவனத்துக்கு வந்தது.
இவர்மீது குற்றப் பிரிவு 506, 509 மற்றும் 504 சட்டப் பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டதே தவிர கைது செய்யப்படவில்லை.
இவற்றையெல்லாம்விட ஒரு முக்கியமான செய்தி! பிரமுகர், ஒருவர் மத்தியில் ஆட்சியிலிருக்கும் பிஜேபி ஆட்சிக்கான மூக்கணாங் கயிற்றினைக் கையில் வைத்திருப்பவர் என்று சொல்லும் மாத்திரத்திலேயே அவர் ஆர்.எஸ்.எஸ்-இன் அகில இந்தியத் தலைவர் மோகன் பகவத்துதான் என்று மக்கள் எளிதில் புரிந்து கொள்வார்கள்.
அவர் இந்தூரில் ஆர்.எஸ்.எஸ். பொதுக் கூட்டத்தில் வெளிப்படையாகவே பேசினாரே!
பெண்கள் கல்வி கற்க ஆரம்பித்து விட்டனர்; திருமணத்தின்போது கணவன் மனைவி இருவரின் கல்வியும் சமமாக இருந்து வருகிறது. சில வேளைகளில் கணவனைவிட மனைவி அதிகம் படித்தவராக இருக்கிறார்; அல்லது திருமணத்திற்குப் பிறகு படித்துப் பட்டம் பெற்று விடுகிறார். சிலர் கணவனைவிட உயர் பதவிக்குச் சென்று விடுகிறார்கள். வருமானமும் கணவனைவிட அதிகம் வரத் துவங்கி விட்டது. இந்த இடத்தில் கணவனின் மன நிலைக்கு ஏற்ப நடக்காத சூழல் மனைவிக்கு ஏற்பட்டு விடும். இங்கு ஈகோவும் தோன்று விடுகிறது. இந்த ஈகோதான் இந்தியாவில் தற்போது நடக்கும் அதிகமான விவாகரத்திற்குக் காரணமாக அமைந்து விடுகிறது. மனைவி கணவனுக்குச் சேவகம் செய்வதையே கடமையாகக் கருத வேண்டும்.பெண்கள் இந்தக் கடமையில் இருந்து விலகி விட்டால் அந்தப் பெண்ணை விலக்கி விடுவது நல்லது என்றும் பேசினாரே! இந்தச் செய்தியை குறைந்தபட்சம் எந்த ஒரு ஏடு அல்லது இதழ் தமிழ்நாட்டில் வெளியிட்டது - விடுதலையைத் தவிர!
இந்துத்துவாவின் கொள்கை என்பது இன்னும் பழைய மனுதர்ம காலத்திலேயே சஞ்சரித்துக் கொண்டு இருக்கிறது என்பது அகில இந்திய ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவரின் பேச்சிலிருந்து விளங்கவில்லையா?
பால்யத்தில் தகப்பன் ஆக்ஞையிலும், யௌவனத்தில் கணவன் ஆக்ஞையிலும் கணவன் இறந்தபின் பிள்ளைகள் ஆக்ஞையிலும், இருக்க வேண்டியதல்லாமல் ஸ்திரீகள் தன் சுவாதீனமாக ஒரு போதும் இருக்கக் கூடாது என்று தானே மனு தர்மம் (அத்தியாயம் 5 சுலோகம் 148) கூறுகிறது. அதனைத் தானே இவர்கள் இன்றும் கூறுகிறார்கள்.
நியாயமாக ஒட்டு மொத்தமான பெண்கள் அனைவரும் இந்த இந்துத்துவா மனப்பான்மைக்கு எதிராக ஒன்று திரண்டு எழுந்து குரல் கொடுக்கவில்லையென்றால், போராடவில்லையென்றால் பெண்களுக்கு அறிவுரை - அருளுரை என்ற போர்வையில் பெண்களை ஆண்களின் உடைமை - எப்படி வேண்டுமானாலும் பெண்களை நடத்தலாம் என்கிற ஆண்களின் மமதை மனப்பான்மை - எஜமானத்துவம் மேலும் மேலும் கொம்பு முளைத்துத்தான் சீறிக் கொண்டு எழும் - எச்சரிக்கை!
இந்தப் பிரச்சினைக்கு ஒரே தீர்வு இந்த நாட்டில் பெரியாரியலே என்பதையும் பெண்கள் உணர்ந்து கொள்வார்களாக!
வாழ்க பெரியார்!
Read more: http://viduthalai.in/page1/85501.html#ixzz3B2OP3mhC
அழித்தாக வேண்டும்
மக்களைச் சுயமரியாதை இல்லாமல் செய்து மிருகங்களாக்கி, நாய், பன்றிகளைவிட இழிவாய் நடத்த ஆதாரமாய் இருக்கும் மதம் எது வானாலும் அதை அழித்தாக வேண்டும்.
(குடிஅரசு, 18.12.1927)
Read more: http://viduthalai.in/page1/85500.html#ixzz3B2OXnJ8e
சமஸ்கிருத வாரக் கொண்டாட்டம் ஜனநாயக விரோதம்!
- சுப. வீரபாண்டியன்
அரசின் நிதி ஒதுக்கீடு ஆண்டு தமிழ் சமஸ்கிருத மேம்பாட்டுக்கு மேம்பாட்டுக்கு 2008-09 4.47 கோடி 72.10 கோடி
2009-10 8.61 கோடி 99.18 கோடி 2010-11 10.16 கோடி 108.75 கோ
சமஸ்கிருத வாரம் கொண்டாடுவதில் என்ன தவறு என்று கேட்கிறார், ஆர். நடராஜன் (தி இந்து 07.08.2014). ஒரு பன்மைச் சமூகமான, பல மொழிகள் பேசப்படுகின்ற இந்தியாவில், சமஸ்கிருதத்துக்கு மட்டும் வாரம் கொண்டாடுவது தவறு என்றே குறிப்பிடுகிறோம். 120 கோடி மக்களின் வரிப்பணத்தில், ஒரு மொழியை மட்டுமே உயர்த்திப் பிடிப்பது தவறு என்பதை மனச்சான்று உள்ளவர்களால் உணர முடியும். தமிழ், சமஸ்கிருதம் இரண்டுமே செம் மொழிகள். ஆனால், நிதி ஒதுக்கீட்டில், மலைக்கும் மடுவுக்குமான வேறுபாடு நிலவுவது ஏன்? 03.08.2011 அன்று நாடாளு மன்றத்தில், மனித வள மேம்பாட்டுத் துறையின் இணை அமைச்சர், தந்துள்ள புள்ளிவிவரம் கீழே:
அரசின் நிதி ஒதுக்கீடு
ஆண்டு தமிழ் மேம்பாட்டுக்கு சமஸ்கிருத மேம்பாட்டுக்கு
2008-09 4.47 கோடி 72.10 கோடி
2009-10 8.61 கோடி 99.18 கோடி
2010-11 10.16 கோடி 108.75 கோடி
மேற்காணும் நிதிஒதுக்கீடு, காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் செய்யப்பட்டது. முன்னதாக, வாஜ்பாய் ஆட்சிக் காலத் திலும், இப்போது மோடியின் ஆட்சிக் காலத்திலும் நிலை இதேதான்! இந்த உண்மையைப் பற்றி எந்தக் கவலையும் கொள்ளாத கட்டுரையா சிரியர், தமிழ் வாழ்கஎன எழுதி வைக்கப் பட்டுள்ள பெயர்ப் பலகையைக் கண்டு சினம்கொள்வது வேடிக்கை! நம்மைப் பொறுத்தமட்டில் சமஸ் கிருதம், இந்திக்கு மட்டும் அல்ல; உலகில் எந்த மொழிக்கும் நாம் எதிரிகள் அல்லர். நாம் பேசுவதெல்லாம், இந்திய மொழி களுக்கு இடையிலான சமத்துவம் குறித்தே. சமஸ்கிருத வாரம் கொண்டாடும் மத்திய அரசே, தமிழுக்கும் வங்க மொழிக் கும் வாரம் எப்போது? அரசமைப்புச் சட்டத்தின் 8-வது அட்டவணையில் உள்ள 22 மொழிகளுக்கும் வாரங்கள் எப்போது? இந்தியாவில் சமஸ்கிருதத் துக்கு மட்டும் 12 பல்கலைக்கழகங்கள் உள்ளனவே, மற்ற மொழிகளுக்கான பல்கலைக்கழகங்கள் எங்கே? இந்த அடிப்படையில் இன்னும் சில உண்மை களையும் நாம் பகிர்ந்துகொள்ள வேண் டியுள்ளது. சமஸ்கிருதம் என்பது வட்டார மொழிகள் என்று ஏற்றுக்கொள்ளப்பட்ட 22 மொழிகளில் ஒன்று என்பதைத் தவிர, அம்மொழிக்குச் சட்டத்தில் வேறு எந்தத் தனிச் சிறப்பும் வழங்கப்படவில்லை. மேலும், சமஸ்கிருதம் எந்த ஒரு வட்டாரத் திலும் பேசப்படவில்லை என்னும் உண் மையையும் இங்கே பேசியாக வேண்டும். 1961-ம் ஆண்டு இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, சமஸ் கிருதம் பேசுகிறவர்களின் எண்ணிக்கை 2,544 மட்டுமே. 1991-ல் அது 49,000 ஆக உயர்ந்ததாகக் காட்டப்பட்டது. 2011-ம் ஆண்டுக் கணக்கெடுப்பில் அந்த எண் ணிக்கை 15,000-க்கும் குறைவானதாக ஆகியுள்ளது. ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள 22 மொழிகளில், 15-க்கும் மேற்பட்ட மொழிகள், கோடிக் கணக்கான மக்களால் பேசப்படுகின்றன.
காஷ்மீரி, சந்தாலி போன்ற மொழிகள் லட்சக்கணக்கா னோரால் பேசப்படுகின்றன. ஆயிரக் கணக்கானவர்களால் மட்டும் பேசப்படும் ஒரே மொழி சமஸ்கிருதம் மட்டுமே! அவ்வளவு குறைவான மக்களால் பேசப்படும் ஒரு மொழிக்கு, 120 கோடி மக்களின் வரிப்பணத்தைச் செலவிடுவது என்ன நியாயம்? ஏனைய எல்லா மொழி களையும் புறக்கணித்துவிட்டு, இந்தி, சமஸ்கிருதம் ஆகிய இரண்டு மொழி களுக்கு மட்டும் கோடிக் கணக்கில் நம் வரிப்பணத்தைக் கொட்டி மத்திய அரசு இப்படி வாரம்கொண்டாடுவது ஜனநாயக விரோதம் இல்லையா? சுப. வீரபாண்டியன், பேராசிரியர், திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர். தொடர்புக்கு: தீணீஸ்மீமீ11ரீனீணீவீறீ.நீஷீனீ நன்றி: தமிழ் இந்து ஆகஸ்டு 8, 2014
Read more: http://viduthalai.in/page1/85502.html#ixzz3B2Ojotx1
காந்தியார்
திரு. காந்தியார் சிறையில் மூன்று வேலைகள் செய்கிறார். அவற்றுள் ஒன்று தக்ளியில் நூல் நூற்பது. மற்றொன்று பகவத் கீதையை ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பது. வேறொன்று இந்த இரண்டும் செய்து மீதி இருக்கும் நேரத்தில் ராமநாம பஜனை செய்வது.
ஆகவே அவரது பகுத்தறிவுக்கு நாம் வேறு உதாரணம் காட்ட வேண்டிய தில்லையென்றே நினைக்கின்றோம். இம் மூன்று காரியங்களும் இந்தியாவின் பொது வாழ்க்கையையும் முன்னேற்றத்தையும் முன்னுக்குக் கொண்டு போகுமா? பின்னுக்குக் கொண்டு போகுமா வென்பதை யோசிக்கத் தக்கது.
திரு. காந்தியிடம் குருட்டுப் பக்தியுள்ளவர்களுக்கு நாம் இப்படிக் கேட்பது சற்று கஷ்டமாக இருக்கலாம். தக்ளியில் நூல் நூற்பது எதை உத்தேசித்து என்று இதுவரை யாராவது தெரிந்தார்களா? தக்ளிநூல் வெள் ளைக்கார ஆட்சியின் கொடுமையையும் இந்தியாவின் பொருளாதார கொள்ளையையும் என்ன செய்து விடக்கூடும் என்பது நமக்கு விளங்கவில்லை.
என்ன சொன்னாலும் தட்டிச் சொல்லாமல் கேட்பதற்குச் சில மக்கள் இருக்கின்றார்கள் என்பதைத் தவிர மற்றபடி அதில் என்ன உண்மை இருக்கின்றது. இரண்டாவதாக பகவத்கீதைக்கு ஆங்கில மொழி பெயர்ப்பு வேலை. இதுமுன் ஒரு தடவை டாக்டர் பெசன்டம்மையால் செய்தாய் விட்டது.
இரண்டாவதாக திரு திலகரால் ஒரு தடவை கீதா ரகசியம் என்பதாக ஒரு மொழி பெயர்ப்பும் செய்தாய் விட்டது. இப்போது திரு. காந்தியும் இதையே ஆரம்பித்து விட்டார். கீதையின் தத்துவம் என்ன? அதன் பயனென்ன? என்பதைப் பற்றிய உண்மை யாராவது தெரிந்து அதை மதிக்கின்றார்களா?
கீதையை ஒரு மனிதன் ஒப்புக் கொள்ளுவதானால் முதலாவதாக பாரதக் கதையை ஒப்புக் கொள்ள வேண்டும்.
பிறகு கிருஷ்ணனையும், அவனது செய்கைகளையும், அவனையே கடவுளாகவும் ஒப்புக் கொள்ள வேண்டும்.
இம்மூன்றிலும் சந்தேக முள்ளவர்கள் கீதையைப் பகவான் வாக்காகக் கொள்ள முடியாது. இது ஒரு புறமிருக்க அதிலுள்ள விஷயங்கள் வாழ்க்கைக்குப் பொருத்த மானதாகவோ அல்லது அனுபவத்திற்குச் சாத்தியமான தாகவோ இருக்கின்றதா? நிற்க மூன்றாவது காரியமாக பஜனை செய்து கொண்டி ருக்கிறாராம்.
பஜனை என்பது புராணங்களில் உள்ள கடவுள்களைப் புராணக் கதைகளைச் சொல்லிக் கொண்டோ நினைத்துக் கொண்டோ இருப்பதாகும்.
ஆகவே இம்மூன்று காரியங்களும் எவ்வளவு பகுத்தறிவும் பொது நல நன்மையுமான காரியம் என்பதை முடிவு செய்யும் விஷயம் வாசகர்களுக்கே விட்டுவிடு கின்றோம்.
- குடிஅரசு - துணைத்தலையங்கம் - 27.07.1930
Read more: http://viduthalai.in/page1/85536.html#ixzz3B2PJyYqr
சுயமரியாதைத் திருமணம்
பெண்கள் முன்னேற்றத்தில் கவலை உள்ளவர்கள் பெண்களைப் படிக்கவைக்கும் முன் இந்தக் கழுத்துக் கயிற்றைத் (தாலியை) அறுத்தெறியும் வேலையையே முக்கியமாய் செய்யவேண்டுமென்று சொல்லுவேன். நிற்க, இதுவரை மணமக்களுக்கு ஆசீர்வாதமோ வாழ்த்தோ என்பது மணமக்கள் நிறைய அதாவது 16 பிள்ளைகள் பெற்ற வேண்டுமென்று சொல்லுவார்கள்.
ஆனால் நான் மணமக்களுக்குச் சொல்லு வதென்ன வென்றால் அவர்கள் தயவு செய்து பிள்ளைகள் பெறக்கூடாது என்பதும், மிக்க அவசியமென்று தோன்றினால் ஒன்று அல்லது இரண்டுக்கு மேல் கூடாது என்றும் அதுவும் இன்னும் அய்ந்து ஆறு வருடம் பொறுத்துத்தான் பெற வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளுகின்றேன்.
அன்றியும் அப்படிப் பெறும் குழந்தைகளையும் தாய்மார்கள் குரங்குக் குட்டிகள்போல் சதா தூக்கிக் கொண்டு திரிந்து போகின்ற இடங் களுக்கெல்லாம் அழைத்துப் போய் அழ வைத்துக் கொண்டு கூட்டமும் நடவாமல் தங்களுக்கும் திருப்தியில் லாமல் சபையோருக்கும் வெறுப்புத் தோன்றும் படியாய் செய்யாமல் குழந்தைகளை ஆயம்மாள் வைத்து வளர்க்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
அவைகளுக்கு ஒழுங்கும் அவசி யமான கட்டுப்பாடும் பழக்கிக் கொடுக்க வேண்டும். இந்தக் கூட்டத் தில் நான் பேசமுடியாதபடி எத்த னைக் குழந்தைகள் அழுகின்றனர் பாருங்கள். அவற்றின் தாயார் முகங்கள் எவ்வளவு வாட்டத்துடன் வெட்கப் படுகின்றது பாருங்கள்.
அந்தத் தாய்மாரும் தகப்பன்மாரும் இந்தக் கூட்டத்தில் ஒருவரையொருவர் பார்த்து வெறுப்பதைத் தவிர அவர் களுக்கு இங்கு வேறு வேலையே இல்லாமல் இருக்கின்றது. இன்பமும் அன்பும் என்பது சுதந்திரத்தோடு இருக்க வேண்டுமே அல்லாது நிபந்தனையோடும் தனக்கு இஷ்டமில்லாத சௌகரிய மில்லாத கஷ்டத்தைச் சகித்துக் கொண்டு இருப்பதாய் இருக்கவே முடியாது.
ஆகவே இப்போதைய குழந்தை இன்பம் என்பது ஒருக்காலமும் உண்மையான இன்பமாகாது. ஆகையால் அவைகளை மாற்றிவிட வேண்டும். தவிர அதிக நகை போடாமலும் தாலி கட்டாமலும் மூடச் சடங்குகள் இல்லாமலும் மாத்திரம் நடைபெற்ற திருமணம் சுயமரியாதைத் திருமணமாகி விடாது.
பெண்ணின் பெற்றோர் இப்பெண்ணுக்குத் தங்கள் சொத்தில் ஒரு பாகம் பங்கிட்டுக் கொடுக்க வேண்டும். புருஷர்களைப் போலவே பெண்களுக்கும் சொத்துரிமை உண்டு; தொழில் உரிமை உண்டு, என்கின்ற கொள்கை ஏற்படாவிட்டால் எப்படி அவர்கள் சுயமரியாதை உடையவர்களாவார்கள்? ஆகையால் அவர்களுக்குச் சொத்துரிமையும் அவசியமானதாகும்.
தவிர பெண்களுக்கு இப்போது பொது நல சேவை என்னவென்றால் எப்படியாவது ஒவ்வொரு விதவையையும் ஒவ்வொரு புருஷனுடன் வாழச் செய்ய வேண்டும். அதுவே அவர்கள் இப்போது செய்ய வேண்டியது.
தவிர பெண்களும் புருஷர் களைப் போலவே தினமுமோ அல்லது வாரத்திற்கு ஒன்று இரண்டு நாளோ ஒரு பொது இடத்தில் கூடி மகிழ்ச்சியாய் பேசி விளையாட வேண்டும். பத்திரிகைகளைப் படிக்க வேண் டும். படிக்காத பெண்களுக்குப் படித்தவர்கள் படித்துக் காட்ட வேண்டும்.
வீட்டு வேலை செய்வதுதான் தங்கள் கடமை என்பதை மறந்து விட வேண்டும். புருஷனுக்குத் தலைவியாய் இருப்பதும் குடும்பத்துக்கு எஜமானியாய் இருப்பதும் தங்கள் கடமை என்று நினைத்து அதற்குத் தகுந்தபடி நடந்து கொள்ள வேண்டும். இந்த உணர்ச்சியோடேயே பெண்மக்களை வளர்த்து அவர்களுக்குத் தக்க பயிற்சி கொடுக்க வேண்டும்.
- குடிஅரசு - சொற்பொழிவு - 13.07.1930
Read more: http://viduthalai.in/page1/85538.html#ixzz3B2PSiVQI
வருணாசிரமத் தர்மத்தின் மூலமாகத்தான் நமது நாட்டில் தீண்டாமைக் கொள்கை அமலில் இருந்து வருகிறதேயொழிய, வருணாசிரமம் இல்லாவிட்டால் தீண்டாமைக் கொள்கை பரவ மார்க்கமே கிடையாது. வருணாசிரமத் தர்மம் என்கிற ஓர் உடல் இல்லாவிட்டால் தீண்டாமை என்கிற உயிருக்கு ஆட்டம் இல்லை.
Read more: http://viduthalai.in/page1/85538.html#ixzz3B2PfoMdt
ஒரு யோசனை
சென்ற மே மாதம் 25 ஆம் தேதியின் மாலை 6 மலர் 4 இதழில் ஒரு யோசனை என்னும் தலைப்பின் கீழ் குடி அரசு பத்திரிகையை எட்டு பக்கங்கள் குறைத்து சந்தாத் தொகை வருஷத்துக்கு மூன்று ரூபாயாக யிருப்பதை இரண்டு ரூபாயாக ஆக்கலாம் என்று கருதியிருப்பதை வெளிப்படுத்தி வாசகர்களின் அபிப்பிராயத்தையறிய ஆசைப்பட்டிருப்பதை வெளியிட்டிருந்தோம்.
அவற்றிற்கு வந்த பல அபிப்பிராயங் களில் சுமார் பத்து பேர்களேதான் அதற்கு சம்மதம் கொடுத்திருக் கிறார்கள். சுமார் 300க்கு மேற்பட்ட வாசகர்கள் பக்கங்களை எவ்வித காரணங் கொண்டும் குறைக்கக் கூடாதென்றும், சந்தா மூன்று ரூபாயாக இருப்பதைப்பற்றி கவலை இல்லையென்றும் தெரிவித்து வேறு சில யோசனைகளும் சொல்லி இருக்கிறார்கள். நிற்க, மலாய் நாட்டுச் சந்தாதாரர்கள், கண்டிப்பாகப் பக்கங்களை குறைக்கக் கூடாது என்றும் சௌகரியப் பட்டால் அதிகப்படுத்தும் படியும் தெரிவித்திருக்கிறார்கள்.
ஆகவே வாசகர்களின் பெரும்பான் மையோர்களுடைய அபிப்ராயம் மாறுபாடாயிருப்பதால் இது சமயம் அதாவது தற்காலம் குடிஅரசு பத்திரிக்கையில் பக்கங் களையாவது சந்தாவையாவது மாற்றுவது என்கின்ற விஷயத்தை நிறுத்தி வைத்திருக்கிறோமென்பதைத் தெரியப்படுத்திக் கொள்ளுகிறோம்.
- குடிஅரசு - துணைத்தலையங்கம் - 06.07.1930
Read more: http://viduthalai.in/page1/85537.html#ixzz3B2PltWeW
கதர்
கதர் பிரச்சாரத்தின் பலனால் வேஷக்காரர்கள் டெம் பரரியாய் கதர் கட்ட ஆரம்பித்து எப்போதும் வழக்கமாய் கதர் கட்டி வந்தவர்களுக்கும் கதர் கிடைக்க வழி இல்லாமல் போய் வேறு துணி கட்ட நிர்பந்தப்படுத்தி விட்டது. இது ஒரு புறமிருக்க கதர் வியாபாரிகள் இந்த சமயத்தில் அடிக்கின்ற கொள்ளைக்கு அளவில்லை.
துணியோ சாணித்துணிக்கும் உதவாது. விலையோ டக்காமசிலினுக்கு மேல் விற்கப்படுகின்றது. பஞ்சு விலை கண்டி1.க்கு 320 ரூபாயிலிருக்கும் போதும் நூற்புக் கூலியும் நெசவுக் கூலியும் அரிசி ரூ. 1 க்கு இரண்டரை பட்டணம் படி விற்றுக் கொண்டும் இருந்த போது போட்ட விகிதப்படியே இப்போதும் விற்கின்றார்கள்.
இப்போது பஞ்சு பாரம் 150 முதல் 160ரூ க்குள் மிக்க சவுதமாக இருக்கின்றது. அரிசி ரூ. 4 பட்டணம் படிக்கு மேலாகவே விற்கின்றது.
520 ராத்தல் கொண்ட பாரம் பஞ்சு 160 ரூ. விலையானால் பவுன் ஒன்றுக்கு 8 அணாவே பஞ்சு விலை அடங்கும்.
10 கிராம் உள்ள 50 இஞ்சு பீசு 3 ராத்தல் அல்லது மூன்றேகால் ராத்தல் எடை இருக்கும். இந்த மூன்றேகால் ராத்தலுக்குக் கிரயம் ரூ 1 - 10 - 0 நூற்பு கூலி ரூ 1. நெசவு கூலி 1 - 14 ஆக 10 கஜத்திற்கு ரூ 4 - 8 - 0 ஆகும். சிலவும் லாபமும் 5 அணா சேர்த்தால் 4 - 14 - 0 க்கு விற்கவேண்டியது நியாய மாகும்.
இப்போது 10 கஜம் 6 ரூபாயிக்கு மேலாகவே விற்கப் படுகின்றது. ஈரோட்டில் 6-8-0க்கும் கூட கிடைப்பதில்லை. ஆகவே தேசிய கிளர்ச்சியின் பயனாய் பல வியாபாரிகள் இன்சால் வென்டாகவும் பல வியாபாரிகள் கொள்ளையடிக்க வும்தான் வழியேற் படுவதைத் தவிர மற்றபடி உண்மையான பலன் ஒன்றையும் ஏழைகள் அனுபவித்ததாகத் தெரியவில்லை,
- குடிஅரசு - துணைத்தலையங்கம் - 27.07.1930
Read more: http://viduthalai.in/page1/85537.html#ixzz3B2Pu7EBs
விக்ரஹம்
ஏடு நடத்தும் பார்ப் பனர்கள் ஒன்றை மறக் காமல் செய்வார்கள். அது வேறு ஒன்றும் இல்லை. அவர்களின் லோகக் குருவான சங்கராச்சாரியார் படத்தைப் போடுவார்கள். அவாளின் அருள்வாக்கு களை வெளியிடுவார்கள்.
அதுபோல்தான் கல்கி (10.8.2014) மறைந்த காஞ்சி சங்கராச்சாரியார் சந்திர சேகரேந்திர சரஸ்வதியா ரின் அருள்வாக்கு ஒன்றை வெளியிட்டு மகிழ்ந்துள்ளது.
அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகியோர் பாடிய தேவார ஓலைச் சுவடி களை தில்லை நடராஜன் கோயிலில் ஓர் அறையில் போட்டுப் பூட்டி வைத்து விட்டனர் தீட்சிதர்கள்.
சிதம்பரம் சிற்றம் பலத்திலே ஓதுவார் ஆறு முகசாமி திருவாசகப் பாடல்களைப் பாடியபொ ழுது இப்பொழுதுதான் தில்லை தீட்சிதர்கள் தடுத் தனர், அடித்தனர் என்று கருதிட வேண்டாம்! அந்தக் காலத்திலேயே அவை தமிழில் உள்ளன என்ற துவேஷப் புயலால் அவற்றை வெளியிலேயே விடக் கூடாது என்ற கெட்ட எண்ணத்தால் அவற்றை ஓர் அறையில் போட்டுப் பூட்டினர் என் பதை நினைவில் கொள்ள வேண்டும்.
அந்த ஓலைச் சுவடி களை தீட்சிதர்களிடமி ருந்து மீட்க ராஜராஜ சோழன் நம்பியாண்டார் நம்பியுடன் தில்லை நட ராஜன் கோயிலுக்குச் செல்கிறான்.
தில்லை வாழ் கோயில் தீட்சதர்களோ மன்ன வனே வந்து விட்டான்; மரியாதையாக தேவார ஓலைச் சுவடிகளை கொடுத்து விட வேண்டி யதுதான் என்று நினைக்க வில்லை; மாறாக தேவாரம் பண்ணிய அந்த சாட்சாத் மூவரும் நேரில் வந்து கேட் கட்டும்; அப்பொழுதுதான் தருவோம் என்று ஆணவ மாகச் சொற்களை வாரி இறைத்தனர்.
இராஜராஜன் என்ன செய்தான்? அப்பர், சம் பந்தர், சுந்தரர் உருவப் பொம்மைகளை (விக்ர ஹங்களை) கொண்டு வந்து காட்டி, அந்த ஓலைச் சுவடிகளைத் தருமாறு வேண்டினான்; அப்பொ ழுதும் தீட்சிதர்கள் அசைந்து கொடுக்கவில்லை. இவை சிலைகள்தானே? இதனை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? என்று வினவிய நேரத்தில் ராஜராஜன் அப்படியானால் நடராஜப் பெருமானும் சிலையல் லவோ? என்ற வினாவைத் திருப்பிப் போட்டான்.
அதற்கு மேலும் தடை செய்தால்.. வந்தவன் ராஜா ராஜன் ஆயிற்றே! கெஞ்சி னால் மிஞ்சுவதும், மிஞ் சினால் கெஞ்சுவதும்தான் பார்ப்பனர்களின் நிலை! நிலைமையைப் புரிந்து கொண்டு அந்த ஓலைச் சுவடிகள் குவிந்து கிடந்த அறையைத் திறந்தனர். கரையான் புற்று மூடிக் கிடந்தது. பெரும்பாலா னவை அழிந்தும் போய் விட்டன!
சங்கராச்சாரியார் இது பற்றி என்ன சொல்கிறார்? கல்கி கூறுகிறது: ராஜராஜன் கொண்டு வந்தது விக்ர ஹம்தான் என்றாலும் ப்ராண பிரதிஷ்டை ஆன படியால் அது ப்ராண னுள்ள மூர்த்திகளே என்ப தால் தேவாரத்தை தீட்சி தர்களிடமிருந்து மீட்க முடிந்தது என்று கதை விடுகிறார். எப்படி இருக்கிறது? தீட்சிதர்களைக் காப்பாற்ற வேண்டும் அல்லவா!
- மயிலாடன்
Read more: http://viduthalai.in/page1/85616.html#ixzz3B2QDyySF
இன்றைய ஆன்மிகம்?
மருத்துவமனை
பெரிய பாளையம் பவானி அம்மனைத் தரிசிக்கச் செல்பவர்கள் அங்குள்ள அய்முக்தீஸ் வரரையும் அன்ன பூர் ணாம்பிகையையும் சனிப் பிரதோஷத்தில் வழிபட் டால் எந்த நோயாக இருந்தாலும் உடனே நிவா ரணம் கிடைக்குமாம்.
நமக்கு ஒரே ஒரு சந்தேகம்! இவ்வளவு சக்தியுள்ள கடவுளான டாக்டர் இருக்கும்போது பெரியபாளையத்தில் மருத்துவமனைகள் இருப்பது ஏனாம்?
Read more: http://viduthalai.in/page1/85640.html#ixzz3B2QxQYem
மக்களிடையே பிளவையும், பாதுகாப்பற்ற தன்மையையும் உருவாக்கும் வேலையில் இறங்கி வருகிறது மத்திய பிஜேபி ஆட்சி! தமிழர் தலைவர் ஆசிரியர் எச்சரிக்கை!
இந்தியாவில் வாழ்வோரெல்லாம் இந்துக்களாம்! ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கூறுகிறார்
மக்களிடையே பிளவையும், பாதுகாப்பற்ற தன்மையையும்
உருவாக்கும் வேலையில் இறங்கி வருகிறது மத்திய பிஜேபி ஆட்சி!
தமிழர் தலைவர் ஆசிரியர் எச்சரிக்கை!
மத்தியில் உள்ள பிஜேபி தலைமையிலான ஆட்சி, இந்துத்துவா இந்தியாவை உருவாக்கும் ஒரு வேலை யில் இறங்கிக் கொண்டு இருக்கிறது. வாக்களித்த மக்களே ஒருகணம் எண்ணிப் பாரீர்! என்று எச்சரிக்கிறார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள். அறிக்கை வருமாறு:
ஆர்.எஸ்.எஸ். என்ற ஆரிய தர்மப் பாதுகாப்பு அமைப்பு மத்தியில் தங்கள்ஆணைப்படி செயல்படக் கூடிய ஒரு ஆட்சி மோடி தலைமையில் அமைந்து விட்டது என்றவுடன், தங்களது சுய உருவத்தையும், தங்களது கொள்கையான ஹிந்துத்துவா நடவடிக்கைகளையும் உடனடியாக நிறைவேற்றிடத் துடியாய்த் துடிக்கிறது.
யார் யாருக்கெல்லாம் பாரத ரத்னா?
முக்கிய பதவிகளில் எல்லாம் தங்கள் அமைப் பினரையே நுழைப்பதும், பாரத ரத்னா போன்ற பட்டங்களைக்கூட ஹிந்துத்துவாவை பரப்பியவர்களுக்கே அவர்கள் மறைந்தவர்களாக இருப்பினும், வாழ்பவர்களாக இருப்பினும் தந்து ஒரு புது நம்பிக்கையை, புது உத்வேகத்தை ஏற்படுத்தும் முயற்சியில் பகிரங்கமாக நிற்கிறார் பிரதமர் மோடி!
செத்த மொழி என்று நாட்டின் பல பகுதிகளில் வாழும் மக்களுக்குச் சம்பந்தமில்லாத மொழி என்றாலும், 22இல் இதைப் போல ஒதுக்கப்பட்ட மொழி எதுவும் இல்லை என்றாலும், அதற்குப் பல கோடி ரூபாய் பொது மக்கள் வரிப் பணத்தை வாரி இறைப்பது! சமஸ்கிருத வாரம் கொண் டாடுங்கள் என்று ஆணை பிறப்பிப்பது போன்ற அடாவடித்தனம் தொடங்கியுள்ளது.
இந்தியாவில் வாழும் அனைவரும் இந்துக்களா?
அவற்றையெல்லாம் தாண்டி ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவரான திரு. மோகன் பகவத் அவர்கள், இந்தியாவில் வாழும் அனைவரையும் ஹிந்துக்கள் என்றே அழைப்பதுதான் பொருத்தம் - மிகப் பழைய புராதன கலாச்சாரத்தின் அடிப்படையில் அதிலிருந்து உதித்தவர்கள் என்று காட்டிட முன் வர வேண்டும்; ஹிந்துத்துவா என்பது ஒரு வாழ்க்கை முறை; எந்த மதத்த வராக இருந்தாலும், எந்தக் கடவுளை வணங்குபவராகவோ, அல்லது வணங்காதவராகவோ இருந்தாலும் அவர்கள் அனைவரும் ஹிந்துக்களே என்று தனது குரு, கோல்வால்கர் பல ஆண்டுகளுக்கு முன் கூறிய கருத்தை அப்படியே அட்சரம் பிசகாமல் கூறியுள்ளார்!
இதன்மூலம் அதாவது மதச் சார்பற்ற நாடு என்று இந்திய அரசமைப்புச் சட்டம் கூறியுள்ள அடிப்படையையே தகர்க்க பகிரங்கமாகக் கூறுகிறார்!
இஸ்லாமியர்கள் - கிறித்தவர்கள்கூட இந்துக்கள் தானா?
இந்திய நாடு என்பது இவர்களின் அகராதியில் ஹிந்துக் கள் நாடு என்று கூறமுன் வந்துள்ளார்கள்!
இனி இந்தியர்களை இந்தியாவில் காண முடியாது; இஸ்லாமியர்கள், கிறித்தவர்கள், பவுத்தர்கள், பார்சிகள் என்றோ தமிழர்கள் - திராவிடர்கள் என்றோ அழைப் பதைக்கூட, குற்றம் என்று சொல்லும் சட்டங்களைக்கூட கொண்டு வர முயற்சிக்கலாம்!
ஆழம் பார்க்கிறார்கள்!
இது ஒரு முன்னோட்டமான ஆழம் பார்த்தல் ஆகும்! ஆர்.எஸ்.எஸ். தத்துவக் கர்த்தா கோல்வால்கர், அவரது ”ஞானகங்கை” (Bunch of Thoughts)நூலில், நம் நாட்டில் வாழும் அனைவரும் தங்களை ஹிந்துக்கள் என்றே இந்த ஹிந்துத்துவக் கலாச்சார அடிப்படையில், அழைத்துக் கொள்ள முன்வர வேண்டும். இராமனைக் கடவுளாக இஸ் லாமியர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்; கிருஷ்ணனைக் கடவுளாக ஏற்றுக் கொள்ள கிறிஸ்தவர்கள் முன் வர வேண் டும் என்று எழுதியதைத்தான் முதல் கட்டமாக இப்படி முழங்கியுள்ளார் ஒரிசா - புவனேஸ்வரில்! (நேற்று 10.8.2014இல் - ஆதாரம்: டைம்ஸ் ஆஃப் இந்தியா 11.8.2014 பக்.9).
இதற்கு வேடிக்கையான ஒரு காரணம் கூறுகிறார்! இங்கிலாந்தில் உள்ளவர்களை இங்கிலீஷ்காரர்கள் என்றும், ஜெர்மனியில் உள்ளவர்களை ஜெர்மானியர்கள் என்றும், அமெரிக்காவில் (USA) உள்ளவர்களை அமெரிக்கர்கள் என்றும் அழைப்பதில்லையா? அதுபோல இங்குள்ள குடிமக்கள் அனைவரையும் ஹிந்துக்கள் என்றே அழைக்க வேண்டும் என்று கூறுவது விசித்திரமானதல்லவா?
இது இந்தியாவா? ஹிந்துயாவா? என்ற கேள்விக்கு அவர்கள் பதில் - இது இந்தியா அல்ல ஹிந்துயா (Not India, but Hinduia தான் என்பது போலுள்ளது!
ஒரே கலாச்சாரம் கொண்ட நாடா இந்தியா?
மற்ற நாடுகள் இங்குள்ளதுபோல பன்மொழி, பன்மதம், பல கலாச்சாரங்கள் கொண்டவை (Plural Society) அல்லவே!
பெரும் பகுதி அவர்கள் மதத்தால், மொழியால், கலாச்சாரத்தால் ஒன்றுபட்டவர்கள் - வேறுபாடுகள் அற்றவர்கள் ஆயிற்றே!
காஷ்மீரத்தையும், கன்னியாகுமரியையும் இணைப்பது இந்தியா என்ற அமைப்புதானேதவிர, ஹிந்து மதமா - அதுவும் வெள்ளைக்காரர்களின் ஆட்சிக்குப் பிறகு?
காஷ்மீரத்தில் இஸ்லாமியர்களும், காஷ்மீரப் பண்டிதர்களும் உள்ளதால் தானே அதுகூட ஜம்மு - காஷ்மீர் என்று இரு பகுதிகள் அங்கே பளிச்சென்று தெரிய வில்லையா?
நாட்டு மக்களிடையே பாதுகாப்பற்ற உணர்வை ஏற்படுத்தலாமா?
இப்பேச்சு நாட்டு மக்களிடையே எத்தகைய பாது காப்பற்ற உணர்வை - குறிப்பாக சிறுபான்மையினர் - பெரும் பான்மையினரில்கூட அமைதி வாழ்வை ஒற்று மையை விரும்புவோர் இடையே எத்தகைய உணர்வை உருவாக்கும்?
வாக்களித்தோரே புரிந்து கொள்வீர்!
வாக்களித்தோரே புரிந்து கொண்டு வருந்தும் கட்டம் விரைந்துவருகிறது.
புரிந்து கொள்வீர்!
கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்.
சென்னை
11.8.2014
Read more: http://viduthalai.in/page1/85642.html#ixzz3B2R5Yqtm
பெரிதாக்குகிறார்கள்
தண்ணீரில் வீழ்ந்து உயிருக்கு மன்றாடுபவன் ஒரு புல் மிதந்து வந்தாலும் அதைப் பிடித்துக் கொண்டு கரையேற நினைப்பது போல், இன்று பார்ப்பனரும், அவர்கள் கூட்டாளிகளும் பதவி ஆசையால் அற்பக் காரியங்களையும் பெரிதாக்குகிறார்கள்.
(விடுதலை, 12.7.1972)
Read more: http://viduthalai.in/page1/85652.html#ixzz3B2RJWkyA
அடையாள மிழந்திடுவார் தமிழர்
- மா.பால்ராசேந்திரம்
சதுமறை ஆரியம் வருமுன் சகமுழுது நினதாயின் முதுமொழிநீ அனாதியென மொழிகுவதும் வியப்பாமே
என்று தமிழ்மொழியின் தொன்மையைச் சிறப்பிப் பார் மனோன்மணீயம் சுந்தரம்பிள்ளை.
நாடோடிகளான ஆரியர்கள் தாம் குடியேறிய நாடுகளில் வாழ்ந்த நாகரிக மக்களின் எழுத்துக் களையே பயன்படுத்தித் தங்கள் நெடுங்கணக்கை அமைத்துக் கொண்டனர். வடமொழி வேதங்கள் சுருதியாக, எழுதாக்கிளவியாக இருந்து, தலைமுறைத் தலைமுறையாகக் செவி வழியாகவே நெடுங்காலம் நிலவி வந்ததற்கு அவர்கள் எழுதும் முறையை அறியாததே காரணமாகும், என்பார் வரலாற்றாசிரியர் வில்டுராண்டு.
வடமொழி சமஸ்கிருதம் கி.மு. 5ஆம் நூற்றாண்டில் தான் உருப்பெற்றது. சமம் + கிருதம் = சமஸ்கிருதம் திராவிடச் சொற்கள், பிராகிருதச் சொற்கள் பழைய ஆரியச் சொற்கள் சேர்ந்தமைந்த ஒன்றே சமஸ்கிருதம், வடநாட்டில் திராவிடர் (தமிழர்) செம்மையான மொழியே பேசினர் என்பதற்கு இதுவே நற்சான்றாகும் என்பார் மயிலை சீனி.வேங்கடசாமி.
இன்றோ சமஸ்கிருதம் எல்லா மொழிக்கும் தாயெனச் சரடு விடுகின்றனர்.
இன்பத் தமிழுக் கின்னல் விளைக்கையில் கன்னலோ என்னுயிர்? என எழ வேண்டும் தமிழ் இளைஞர் பட்டாளம்.
வடமொழி தேவபாஷையாம், தமிழ் நீச, பைசாச மொழியாம். அகத்தியத்தை முதல்நூல் என்றனர். தமிழ் முதல் நூலாம் தொல்காப்பியத்தில் வேண்டாத சமஸ்கிருதச் சொற்களையும் ஆரியக்கருத்துக்களையும் புகுத்தினர்.
தமிழர்களின் மறைநூல், மந்திரநூல் போன்ற அரிய நூற்களைச் சமஸ்கிருதத்தில் மொழிபெயர்த்து மூலநூல்களை அழித்துவிட்டு வடமொழியிலிருந்தே அவ்வரிய கருத்துக்கள் வந்தன போலக் காட்டினார்கள் எனச் சான்றளிக்கிறார் பரிதிமாற் கலைஞர்.
திருவள்ளுவரைச் சீவல்லபர் என்ற ஆரியராக் கினர். திருக்குறளின் அறத்துப்பால் வடமொழி தர்ம சாத்திரத்தையும், பொருட்பால் அர்த்த சாத்திரத்தையும், காமத்துப்பால் காமசூத்திரத்தையும் தழுவி எழுந்தன என வெட்கமின்றிச் சொல்லித்திரிந்தனர். தூய தமிழ்ப் பெயர் தாங்கிய பரிமேலழகர் கூட தம் உரையில் ஆரியக்கருத்துக்களை வலிந்து புகுத்தித் தமிழர் கருத் துக்களை மறைத்துள்ளார். அஃதே உயரிய உரையெனத் தமிழர் நாவால் உரைக்கச் செய்து விட்டனரே!
பரிமேலழகர் உரையோ வள்ளுவர்
திருவுள்ளத்தின் திரையே ஆனது
என்பார் புரட்சிக் கவிஞர்.
வடவேதமொழி சமஸ்கிருத ஆதிக்கத்தால் தென்னாடெங்கும் நிலவிய தமிழ் மொழியினின்றும் கன்னடம், தெலுங்கு, மலையாளம் முளைத்துப் பிரிந்தன. தமிழ்ச் சொற்கள் பல வழக்கற்றுப்போயின. சான்றுக்கு, பா - கவிதையாகியது, கழுவாய் - பிராயச்சித்தமாயிற்று, பலகணி - சன்னலாகியது, சோறு - சாதமாகியது, மிளகு நீர் - ரசமாகியது, இடிதூள் - சூரணமாயிற்று, செரியாமை - அஜீரணமாயிற்று, கனவு - சொப்ன மாகியது. இன்னும் விரிக்கின் விரியும். தைத்திங் களிலிருந்து ஆண்டுப் பிறப்பினைக் கொண்டாடினர் தமிழர். அதனை மாற்றிப் பிரபவ தொடங்கி அட்ஷய ஈறாகச் சமஸ்கிருத அறுபதாண்டு வட்டத்தைப் புகுத்தி ஒரு தொடராண்டுக் கணக்கில்லாது செய்து விட்டனரே! சட்டப்படிக் கலைஞர் மாற்றியமைத்த பின்னும் சித்திரைதான் வருஷப்பிறப்பு என்கிறானே தமிழனும், திங்களை மாதமென்றார், ஆண்டினை வருஷமென்றார், காரியைச் சனியென்றார், கிழமையை வாரமென்றார் அநியாயம் பண்ணிவிட்டார்.
செந்தமிழைச் செந்தமிழ் நாட்டைச் சிறைமீட்க
நந்தமிழர் உள்ளத்தில் வையம் நடுங்கும்
வெந்தணல் ஒன்று விரைந்து வளர்ந்திடுக எனப் புரட்சிக்கவிஞர் விடுக்கும் ஆணை இன்று தமிழ்காக்க மிக விரைவாகத் தேவைப்படுகிறது.
நந்தமிழால் நாராயணன் துதி, பரமன் துதி பாடி வந்த நிலையைச் சமஸ்கிருதம் பற்றியதால் இறைவழிபாடு, மதச்சடங்குகள் நடத்தும் உரிமையும் தமிழர்களிட மிருந்து பார்ப்பனர் எளிதாய்ப் பறித்துக் கொண்டனர்.
குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, வினரி, தாரமெனும் ஏழு தமிழிசைச் சுரங்களைச் சாம வேதத்திலிருந்து தோன்றியதாய்ப் பொய் சொல்லினர்.
பொருளற்ற பாட்டுக்களை - அங்குப்
புத்தமுதென்றார்; கைத்தாள மிட்டார்
தமிழர் சாரங்க தேவரின் ச, ரி, க, ம, ப, த, நி என்னும் இசைக்குறிகளைச் சமஸ்கிருதக்குறிகளென ஏமாற்றினர்.
வேதங்கள் வடமொழி சமஸ்கிருதத்தில் இருந்தன. வேதங்களில் பொதிந்துள்ள பார்ப்பனர் பித்தலாட் டங்களைத் தெரியக்கூடாதென்பதற்காகவே சூத்திரர், பஞ்சமர் கல்வி கற்கக்கூடாது என்றாக்கினர். மன்னரும், பார்ப்பனர் வழிச்சார்ந்து கல்விச்சாலைகளை நிறுவி, பார்ப்பனர்க்கு மட்டுமே வடமொழிப் பயிற்சியளித்தனர். தமிழ் இலக்கண இலக்கியம் பயிற்றவில்லை எனக் குறிப்பிடுகிறார் கே.கே.பிள்ளை.
சீர்த்தியால் அறத்தால் செழுமையால் - வையப்
போர்த்திறத்தால் இயற்கை புனைந்த ஓருயிர் நான்! என் உயிர் இனம் திராவிடம்!
ஆரியன் அல்லேன் என்றிருந்தத் தமிழரைச் சதுர்வர்ண ஜாதிச் சாக்கடையில் தள்ளி நாற்றமடிக்கிறதெனத் தனித்து வைத்ததோடு பிற்காலத்தே இருக்கு வேதத்தில் புகுத்தி உறுதிப்படுத்தினர். பெண்களைத் திருமணத்திற்கு முன்பே சோமன், கந்தர்வன், அக்னியிடம் சோரம் போனவளென வேத சுலோகமெழுதி இன்றும் விற்றுக் காசாக்குகின்றனரே!
நாவலம் பொழிலாக விளங்கிய நம் நாட்டை ஜம்புத் தீவம், பரத கண்டம், பாரததேசம் என்றெல்லாம் மாற்றிப் பெயரிட்டு அழைக்கலாயினர். பார்ப்பனப் பாரதியும் இதற்கே பேரிமய வெற்பு முதல் பெண்குமரி ஈறாகும் ஆரிய நாடென்றே அறி என்று முட்டுக் கொடுக்கிறார்.
ஆரிய வடமொழிச் சமஸ்கிருத ஆதிக்கத்தால் தமிழ்நாடு, தமிழர்கள் பன்னூறாண்டு காலமாக மொழி, கல்வி, கலை, சமூகம், பணி என்று எல்லா நிலைகளிலும் ஒதுக்கப்பட்டு வதிந்தே வந்துள்ளார்கள். அதனை மாற்றியமைத்த பெருமை நம் அய்யா தந்தை பெரியார் அவர்களுக்கே உண்டு.
விழித்திருந்து ஆரி யத்தை, ஆரிய மொழியை வீழ்த்தியதால் இன்றைய நிலையைத் தமிழர் அடைந்தார். மீண்டும் வடமொழி சமஸ்கிருதம் நுழையுமாயின், உண்மையாகச் சொல்லுகிறேன். வடமொழி சாஸ்திர, புராண, இதிகாசங்கள் அவை எந்த ரூபத்தில் நுழைந்திருந்தாலும் அவை யாவும் அடியோடு ஒழிக்கப்பட்டாலொழிய தமிழன் மனித உரிமையோடும், மானத் தோடும் வாழ்ந்து சம நிலை அடைய முடியவே முடியாது என்பதை உண ருங்கள் என்ற தந்தை பெரியாரின் வாக்கு உண்மை யாகித் தமிழர், தமிழரென்ற அடையாளமின்றி அனாதை யாக்கப்படுவர் என்பதை மட்டும் எச்சரிக் கையாக்கித் தற்காலிகமாக முடிக்கிறோம்.
Read more: http://viduthalai.in/page1/85656.html#ixzz3B2RSBM4b
தகவல் பெறும் உரிமை சட்டம்
அங்கும் இங்கும் அலையாமல் இலகுவாக இணையதளத்திலேயே தகவல் பெறும் உரிமைச் சட்டம் மூலம் அமைச்சர்களிடம் தகவல் கேட்க முடியும். 37 துறைகளுக்கு மட்டுமே தற்போது விண்ணப்பம் செய்ய முடியும்.
கீழே உள்ள லிங்க்அய் கிளிக் செய்து
https://rtionline.gov.in õ¼‹ Website-™ "Select Ministry/Department/Apex body"
என்பதன் கீழ் உங்களுக்கு தேவையான துறை களை தேர்வு செய்து RTI இல் நேரடியாக விண்ணப்பிக்கலாம்.
செலுத்த வேண்டிய கட்டணம் ரூ.10அய் ஏதாவது ஒரு வங்கியின் வழியாக (INTERNET TRANSACTION) செய்யலாம்.
Read more: http://viduthalai.in/page1/85661.html#ixzz3B2Rd4Vyc
குளிர்காலத்தில் பக்கவாதம், மாரடைப்புக்கு வாய்ப்பு அதிகம்
சாதாரண நேரங்களைக் காட்டிலும் குளிர் காலங்களில் மாரடைப்பு, பக்கவாதம் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில், வெப்பத்துடன் கூடிய தட்பவெப்ப நிலையே அதிக காலங்கள் நீடிக்கிறது.
ஆனால், குளிர்காலம் வரும்போது இந்தியர்களின் உடல் தட்பவெப்ப நிலைக்கு ஏற்றவாறு மாறும்போது நோய்கள் பாதிக்கும் அபாயங்கள் இருந்து வருகின்றன. ஆனால், இதற்கான காரணிகள் குறித்து ஏராளமானவர்களுக்கு தெரிய வாய்ப்புகள் இல்லை.
பொதுவாக குளிர்காலங்களில் மனித உடலில் உள்ள ரத்தக்குழாய்கள் குளுமை காரணமாக சுருங்கிவிடும். இதனால் இதயம் அதிக செயல்பட வேண்டிய கட்டாயத் திற்கு தள்ளப்படும்.
குளிர்காலத்தில் காற்றில் உள்ள பிராண வாயுவின் அளவு, குறைந்து காணப்படும். இதனால் ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்கள், தட்டை அணுக்கள் மற்றும் பைபர்நோஜன் மூலக்கூறு ஆகியவை அதிகரிக்கும். இதனால் மற்ற காலங்களைக் காட்டிலும் குளிர்காலத்தில் மனித உடலில் உள்ள கொலஸ்ட்ராலும் அதிகரிக்கிறது.
இதனால் வழக்கத்திற்கு மாறாக ரத்தம் உறையத்தொடங்கி, மூளை மற்றும் இதயத்திற்கு செல்லும் ரத்த ஓட்டம் குறையும்.
ரத்தக்குழாயும் சுருங்கி, ரத்த ஓட்டமும் குறைவதன் விளைவாக மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஆகிய பாதிப்புகள் ஏற்படுகின்றன. இ
ந்தியாவில் மலைப்பிரதேசங் களில் வசிப்பவர்களுக்கு மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு மற்ற பிரதேசங்களில் வசிப்பவர்களை காட்டிலும் 50 சதவீதம் அதிகம் உள்ளது.
இதை எப்படி நாம் தெரிந்துகொள்வது என்ற சந்தேகம் எழலாம். குளிர்காலத்தில் மார்பில் அழுத்தம் ஏற்படுவது போன்ற உணர்வு ஏற்பட்டால், அதுதான் ரத்த ஓட்டம் குறைந்ததற்கான முதல் அறிகுறி.
குளிர்காலத்தில் ரத்தத்தின் அடர்த்தி அதிகரிப்பதால், இதயத்துடிப்பு அதிகரித்து, ரத்தக்கொதிப்பு ஏற்படும். இது போன்ற பாதிப்பு வயதானவர்களுக்கு அதிகம் ஏற்படும்.
மேலும் புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கும் இந்த பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. மனித உடலில் உள்ள வெப்பம் 80 பாரன்ஹீட்டுக்கு குறையும்போது விளைவுகள் விபரீதமாக இருக்கும். உடல் நடுக்கம் தொடங்கி, மயக்கநிலை, மாரடைப்பு, பக்கவாதம் ஆகியவை ஏற்படும்.
Read more: http://viduthalai.in/page1/85645.html#ixzz3B2SE96ZO
ஏன் வருகிறது சிறுநீரக பாதிப்பு?
இரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்க உதவும் ஹர்மோனையும், ரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்வதை கட்டுப்படுத்தும் ஹார்மோனையும், எலும்புகளின் உறுதிக்கு பயன்படும் ஹார்மோ னையும் சுரக்கச் செய்வது உள்ளிட்ட பணிகளில் சிறுநீரகம் தீவிரமாக பங்கேற்கிறது.
செல்கள் புரதத்தை பயன் படுத்தியது போக எஞ்சிய கழிவுகள், நைட்ரஜன் அடங்கிய யூரியாவாக மாறி இரத்தத்தில் கலந்துவிடும். இவற்றை பிரித்தெடுத்து வெளியேற்றுவது தான், சிறுநீரக மண்ட லத்தின் முக்கிய வேலையாகும். நமது உடம்பில் சேரும் அசுத்த இரத்தத்தில் இருந்து யூரியா போன்ற கழிவுகளை அகற்றி உடம்பை நல்ல நிலையில் வைப்பது தான் நெப் ரான்களின் பணியே.
பொதுவாக, வெளி சிறுநீரக குழாய் அமைப்பில் ஆணுக்கும், பெண்ணுக்கும் வேறு பாடுகள் உண்டு. இது பெண்களுக்கு வெறும் சிறுநீரை வெளி யேற்றும் குழாயாக மட்டுமே பயன்படுகிறது.
ஆனால் ஆண்களுக்கு பிறப்புறுப்பின் ஒரு பகுதியாகவும் இயங்கு கிறது. உடலை பொறுத்தவரையில் கழிவுகள் என்பவை உடலை விட்டு வெளியேற்றப்பட வேண்டியவை. இவை இரத்தத்தில் சேர்ந்தால் உடல் முழுமையாக சீரழிந்துவிடும்.
உலகின் மிக சிறந்த, நுண்ணிய சுத்திகரிப்பு தொழிற் சாலையான சிறுநீரகங்கள் பாதிக்கப்பட என்ன காரணம்.?
இன்னதுதான் என்று ஓரே ஒரு காரணத்தை மட்டும் சொல்லிவிட முடியாது. இந்த செயலிழப்பு கொஞ்சம் கொஞ்சமாகவும் ஏற்படும். திடீரெனவும் ஏற்படும். முதலில் கொஞ்சம் கொஞ்சமாக செயலிழப்பதற்கான காரணங் களை பார்ப்போம்.
நமக்கு நாமே மருத்துவராகி மருந்து கடைகளிலும் உள்ளூர் பெட்டிக்கடைகளிலும் வாங்கி விழுங்கும் மாத்திரைகள்... கொண்டாடவோ, துக்கத்தை போக்கவோ என ஏதாவது காரணத்திற்காக குடிக்கும் மது, சிகரெட், ஆகியவை மிக முக்கிய காரணங்கள்.... கவனிக்காமல் விட்ட நாட்பட்ட உயர் இரத்த அழுத்தம், சர்க்கரை வியாதிகள்.
இப்படியாக பற்பல காரணங்களால் சிறுநீரகம் பழுதடைகிறது. நாட்பட்ட சிறுநீரகம் செயலிழப்பு அல்லது கோளாறு என்பது சிறுநீரகமானது உடலின் கழிவுப் பொருட்களை, சிறுநீரினை வெளியேற்றும் தன்மை, மற்றும் உடலில் உள்ள கனிமப்பொருள்கள் சிறுநீரில் வெளி யேறாமல் தடுத்து பாதுகாக்கும் தன்மை போன்றவற்றை படிப்படியாக இழந்து, செயலற்ற தன்மை அடையும். உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய், மூட்டுவலி, தலைவலி, முதுகு வலிக்கு தொடர்ந்து எடுத்துக்கொள்ளும் வலி நிவாரணிகள் மற்றும் ஆன்டிபயாடிக் மருந்துகள் சிறு நீரகத்தை அதிகம் பாதிக்கும்.
சர்க்கரைநோய் மற்றும் உயர் இரத்த அழுத்தம் நோயால் பாதிக்கப்பட்டு, அதற்காக தொடர்ந்து எடுத்துக்கொள்ளப்பட்ட முறையற்ற மருந்து களினால் சிறுநீரகங்கள் செயலிழந்து, உடலில் திரவம் மற்றும் தேவையற்ற கழிவுகள் இரத்தத்தில் சேர்ந்து அசோடிமியா, மற்றும் யூரிமியா ஏற்படுகிறது.
அசோடிமியா என்பது எந்த அறிகுறியும் இன்றி இரத்தத்தில் யூரியா போன்ற நைட்ரஜன் பொருள்கள் அதிகரிப்பதாகும். யூரியா என்பது சிறுநீரகங்கள் செயல் இழப்பதினால் ஏற்படக்கூடிய ஆரோக்கிய குறைவு ஆகும்.
முக்கியமாக இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதை சரியாக கவனிக்காமல் விட்டு விடுவதால் சிறுநீரக பாதிப்புக்கு ஆளாகிறார்கள். ஆண்டுக்கணக்கில் சிறு நீரகங்களின் உள்ளமைப்புக் கூறுகள் சேதமடைதல் முக்கிய காரணமாகும்.
கருத்தடை மாத்திரைகளை தொடர்ச்சியாக எடுத்துக்கொள்பவர்களுக்கு சிறுநீரகங்கள் கண்டிப்பாக பாதிக்கும் வாய்ப்புள்ளது. நீண்ட நாள்களாக முதுகு வலி அல்லது மூட்டுவலி என்று தவிப்பவர்கள் வலி நிவாரணி களைச் சாப்பிட்டாலும் மாற்று மருத்துவர் துணையின்றி மற்றவர் கூறும் ஆலோசனைப்படி அதிக அளவில் உலோகங்கள் கலக்கக்கப்பட்ட தரமற்ற லேகியங்களை உட்கொண்டாலும் அதுவே சிறுநீரகத்தை பாதிக்கும்.
இணைப்பு திசுக்கள் நோய்களினாலும் எய்ட்ஸ் நோயி னாலும் சிறுநீரகம் பாதிக்கப்படலாம். உடல் வலியை போக்க உதவும் மருந்துகள், காசநோய்க்கான பல்வேறு வகையான மருந்துகள் ஆகியவற்றினாலும் சிறுநீரக நோய்கள் உண்டாகி சிறுநீரகம் பாதிக்கப்பட்டு செயலிழக்க நேரிடும்.
புகைபிடிக்கும் போது சிறுநீரகத்துக்குச் செல்லும் இரத்தத் தின் அளவு குறைந்துவிடும். தேவைக்கு குறைவான இரத்தம் சிறுநீரகத்துக்கு செல்வதால் சிறுநீரகத்தின் செயல் திறன் குறையும். சீரான இரத்த ஓட்டம் இல்லாததால் சிறு நீரகப் புற்று நோய், சிறுநீரகப்பை புற்றுநோய், வருவதற்கான வாய்ப்பையும் அதிகரிக்கும். புகை தான் சிறுநீரகம், சிறுநீரகப் பையின் முதல் எதிரி..
நாம் உண்ணும் உணவில் இருந்து தேவையான கால்சியம் நமக்கு கிடைக்கிறது. அதிகப்படியாக கால்சியம், நாம் மாத்திரைகளாகவோ, உணவாகவோ, எடுக்கும்போது அவை சிறுநீரில் கழிவு பொருளாக வெளியேறும் பாதை களில் படிந்து நாளடைவில் இவையே படிகங்களாக சிறுநீர் வெளியேறும் பாதைகளில் படிந்து, பின் கற்களாக மாறி விடும் வாய்ப்புள்ளது.
பாரா தைராய்டு மிகுதி நோயும், சிறுநீர்ப் பாதையில் தொற்றுகள், சிறுநீரகநோய்கள் போன்ற நோய்களும் சிறுநீர்ப்பையில் கற்கள் ஏற்பட முக்கியமான காரணமாகும். சிறுநீரில் ஆக்ஸாலிக் அமிலம், சிஸ்டீன் போன்ற வேதியியல் பொருள்கள் மிகுதியாக வெளிவரும். இவைகளும் சிறுநீரகத்தில் கல் உருவாக காரணமாகிறது.
இரு முறை சிறுநீரகத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட கற்கள் வந்து விட்டால், அடுத்தடுத்து கற்கள் உருவாவதற்கான வாய்ப்பு கள் அதிகம் உண்டு என்றாலும், அதை நம் அக்குபஞ்சர் உணவுப்பழக்கம் மற்றும் வாழ்க்கை முறையில் மாற்றத்தைக் கொண்டு வந்து திரும்ப வராமல் தடுக்கலாம்.
Read more: http://viduthalai.in/page1/85648.html#ixzz3B2SN3l1x
நமக்கு நாமே மருத்துவராகி மருந்து கடைகளிலும் உள்ளூர் பெட்டிக்கடைகளிலும் வாங்கி விழுங்கும் மாத்திரைகள்... கொண்டாடவோ, துக்கத்தை போக்கவோ என ஏதாவது காரணத்திற்காக குடிக்கும் மது, சிகரெட், ஆகியவை மிக முக்கிய காரணங்கள்.... கவனிக்காமல் விட்ட நாட்பட்ட உயர் இரத்த அழுத்தம், சர்க்கரை வியாதிகள்.
இப்படியாக பற்பல காரணங்களால் சிறுநீரகம் பழுதடைகிறது. நாட்பட்ட சிறுநீரகம் செயலிழப்பு அல்லது கோளாறு என்பது சிறுநீரகமானது உடலின் கழிவுப் பொருட்களை, சிறுநீரினை வெளியேற்றும் தன்மை, மற்றும் உடலில் உள்ள கனிமப்பொருள்கள் சிறுநீரில் வெளி யேறாமல் தடுத்து பாதுகாக்கும் தன்மை போன்றவற்றை படிப்படியாக இழந்து, செயலற்ற தன்மை அடையும். உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய், மூட்டுவலி, தலைவலி, முதுகு வலிக்கு தொடர்ந்து எடுத்துக்கொள்ளும் வலி நிவாரணிகள் மற்றும் ஆன்டிபயாடிக் மருந்துகள் சிறு நீரகத்தை அதிகம் பாதிக்கும்.
சர்க்கரைநோய் மற்றும் உயர் இரத்த அழுத்தம் நோயால் பாதிக்கப்பட்டு, அதற்காக தொடர்ந்து எடுத்துக்கொள்ளப்பட்ட முறையற்ற மருந்து களினால் சிறுநீரகங்கள் செயலிழந்து, உடலில் திரவம் மற்றும் தேவையற்ற கழிவுகள் இரத்தத்தில் சேர்ந்து அசோடிமியா, மற்றும் யூரிமியா ஏற்படுகிறது.
அசோடிமியா என்பது எந்த அறிகுறியும் இன்றி இரத்தத்தில் யூரியா போன்ற நைட்ரஜன் பொருள்கள் அதிகரிப்பதாகும். யூரியா என்பது சிறுநீரகங்கள் செயல் இழப்பதினால் ஏற்படக்கூடிய ஆரோக்கிய குறைவு ஆகும்.
முக்கியமாக இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதை சரியாக கவனிக்காமல் விட்டு விடுவதால் சிறுநீரக பாதிப்புக்கு ஆளாகிறார்கள். ஆண்டுக்கணக்கில் சிறு நீரகங்களின் உள்ளமைப்புக் கூறுகள் சேதமடைதல் முக்கிய காரணமாகும்.
கருத்தடை மாத்திரைகளை தொடர்ச்சியாக எடுத்துக்கொள்பவர்களுக்கு சிறுநீரகங்கள் கண்டிப்பாக பாதிக்கும் வாய்ப்புள்ளது. நீண்ட நாள்களாக முதுகு வலி அல்லது மூட்டுவலி என்று தவிப்பவர்கள் வலி நிவாரணி களைச் சாப்பிட்டாலும் மாற்று மருத்துவர் துணையின்றி மற்றவர் கூறும் ஆலோசனைப்படி அதிக அளவில் உலோகங்கள் கலக்கக்கப்பட்ட தரமற்ற லேகியங்களை உட்கொண்டாலும் அதுவே சிறுநீரகத்தை பாதிக்கும்.
இணைப்பு திசுக்கள் நோய்களினாலும் எய்ட்ஸ் நோயி னாலும் சிறுநீரகம் பாதிக்கப்படலாம். உடல் வலியை போக்க உதவும் மருந்துகள், காசநோய்க்கான பல்வேறு வகையான மருந்துகள் ஆகியவற்றினாலும் சிறுநீரக நோய்கள் உண்டாகி சிறுநீரகம் பாதிக்கப்பட்டு செயலிழக்க நேரிடும்.
புகைபிடிக்கும் போது சிறுநீரகத்துக்குச் செல்லும் இரத்தத் தின் அளவு குறைந்துவிடும். தேவைக்கு குறைவான இரத்தம் சிறுநீரகத்துக்கு செல்வதால் சிறுநீரகத்தின் செயல் திறன் குறையும். சீரான இரத்த ஓட்டம் இல்லாததால் சிறு நீரகப் புற்று நோய், சிறுநீரகப்பை புற்றுநோய், வருவதற்கான வாய்ப்பையும் அதிகரிக்கும். புகை தான் சிறுநீரகம், சிறுநீரகப் பையின் முதல் எதிரி..
நாம் உண்ணும் உணவில் இருந்து தேவையான கால்சியம் நமக்கு கிடைக்கிறது. அதிகப்படியாக கால்சியம், நாம் மாத்திரைகளாகவோ, உணவாகவோ, எடுக்கும்போது அவை சிறுநீரில் கழிவு பொருளாக வெளியேறும் பாதை களில் படிந்து நாளடைவில் இவையே படிகங்களாக சிறுநீர் வெளியேறும் பாதைகளில் படிந்து, பின் கற்களாக மாறி விடும் வாய்ப்புள்ளது.
பாரா தைராய்டு மிகுதி நோயும், சிறுநீர்ப் பாதையில் தொற்றுகள், சிறுநீரகநோய்கள் போன்ற நோய்களும் சிறுநீர்ப்பையில் கற்கள் ஏற்பட முக்கியமான காரணமாகும். சிறுநீரில் ஆக்ஸாலிக் அமிலம், சிஸ்டீன் போன்ற வேதியியல் பொருள்கள் மிகுதியாக வெளிவரும். இவைகளும் சிறுநீரகத்தில் கல் உருவாக காரணமாகிறது.
இரு முறை சிறுநீரகத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட கற்கள் வந்து விட்டால், அடுத்தடுத்து கற்கள் உருவாவதற்கான வாய்ப்பு கள் அதிகம் உண்டு என்றாலும், அதை நம் அக்குபஞ்சர் உணவுப்பழக்கம் மற்றும் வாழ்க்கை முறையில் மாற்றத்தைக் கொண்டு வந்து திரும்ப வராமல் தடுக்கலாம்.
Read more: http://viduthalai.in/page1/85648.html#ixzz3B2SN3l1x
பீட்ரூட்டின் மருத்துவப் பயன்கள்
அழகிய நிறமும் நிறைய சத்துக்களும் கொண்ட காய் பீட்ரூட் இதனுடைய நிறத்திற்காகவே இதனை அனைவரும் விரும்பி உண்ணு கின்றனர். பீட்ரூட்டில் உள்ள கார்போஹைட்ரேட்ஸ் சர்க்கரை துகள்களாக இருப்பதால் இது விரைவில் செரிமானமாகி நம் ரத்தத்துடன் கலந்து விடுகிறது.
பீட்ரூட்டில் உள்ள இரும்புச்சத்து நம் உடலில், புதியதாக இரத்த அணுக்கள் உருவாகத் துணை புரிகிறது. பச்சைக் காய்கறிகள், கீரைகள், பழங்கள், பேரீச்சம் பழம், அத்திப் பழம் ஆகியவற்றை அதிக அளவு உண்டும், இரத்தத்தின் அளவு அதிகரிக்காமல் இருக்கும் பட்சத்தில் பீட்ரூட்டை வாரத்திற்கு நான்கு நாட்கள் உண்டால் நல்ல பலன் கிடைக் கும். சமையல் செய்து சாப்பிடுவதுடன் பச்சையாகவும் சாப்பிடலாம்.
கல்லீரல் கோளாறுகளுக்கும் பீட்ரூட் ஒரு சிறந்த டானிக். பித்தம் அதிகமாகி அடிக்கடி பித்த வாந்தி எடுப்ப வர்களுக்கு பீட்ரூட் ஒரு சிறந்த டானிக். பீட்ரூட் கீரையை யும் மற்ற கீரைகள் போல் சமையல் செய்து சாப்பிட அல்சர், மஞ்சள் காமாலை போன்ற நோய்கள் சரியாகும்.
பல மாதங்களாக மலச் சிக்கலினால் துன்பப்படு பவர்களும், மூலக் கோளாறினால் துன்பப்படுபவர்களும் பீட்ரூட் சாறை தண்ணீருடன் கலந்து அரை டம்ளர், இரவு படுக்கைக்கு முன் குடிக்கவேண்டும். பீட்ரூட்டை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொண்டால் சிறுநீரகத்தில் கற்கள் உருவாவதைத் தடுக்கலாம்.
தோலில் ஏற்படும் அரிப்பு, எரிச்சல் போன்றவற்றிற்கு இரண்டு பங்கு பீட்ரூட் ஜூசுடன் ஒரு பங்கு தண்ணீரைக் கலந்து தடவினால் பிரச்சினையிலிருந்து விடுபடலாம்.
புற்றுநோயினால் துன்பப்பட்டுக் கொண்டிருக்கும் நோயாளிகள், ஊட்டி பீட்ரூட் ஜூஸ் தினமும் ஒரு டம்ளர் பருகி வந்தால் புற்றுநோய் பரவுவது தடுக்கப்படும். ஆரம்ப நிலையிலுள்ள புற்றுநோயைக் குணமாக்கும் வல்லமை படைத்தது பீட்ரூட். பீட்ரூட் பலருக்குப் பிடிக்காது, சிலருக்கு மட்டுமே பிடிக்கும். குழந்தைகளில் பலருக்குப் பிடிக்கும்.
இது பலருக்கும் சுவை சம்பந்தப்பட்ட ஒன்றாகவே தெரிகிறது. ஆனால், இதற்கென்று தனிப்பட்ட மருத்துவப் பயன்கள் உண்டு. பீட்ரூட்டின் முக்கியப் பயன்கள்: புற்றுநோய் பரவு வதை தடுக்கும்.
* மலச்சிக்கலைப் போக்கும்.
* பித்தத்தைக் குறைக்கும்
* அரிப்பு - எரிச்சலைத் தவிர்க்கும்.
* சிறுநீரகத்தில் சேர்ந்துள்ள தேவையற்றவைகளைப் போக்கிவிடும்.
Read more: http://viduthalai.in/page1/85650.html#ixzz3B2Sbrpiw
ஓர் அறிவியல் தகவல் எரிநட்சத்திரப்பொலிவு (ஆகஸ்ட் 10-15)
நகர ஓட்டத்தில் நாம் இயற்கையின் அழகை காணத்தவறிவிடுகிறோம். நேற்றைய முழுநிலவை நாம் அனைவரும் பார்த்திருப்போம், சாதாரணமாகத் தெரியும் முழு நிலவைவிட இந்த நிலவும் 3 அல்லது நான்கு மடங்கு அதிக ஒளியுடன் மிகவும் பெரிதாகத் தோன்றியது மற்றுமொரு அழகு மிகவும் அதிக அளவில் எரிநட்சத்திரங்கள் தென்படும்.
உண்மையில் இவை நமது பூமியின் வளி மண்டலத்தில் புகும் எரிகற்கள் அல்ல; இவை சுமார் 300 ஒளியாண்டுகளுக்கு அப்பால் நடைபெறும் அற்புத வானியல் நிகழ்வாகும்.
பெர்சியஸ் விண்மீன் குழுமத்தில் உள்ள காமா (சிட்டா பெரிசி) என்ற விண்மீனின் வட்டப்பாதையில் நுழையும் விண்கற்கள்! அந்த விண்மீனின் ஈர்ப்பு விசையால் வேகமாக ஒன்றை ஒன்று மோதிக்கொண்டு செல்லும் அந்த நேரத்தில் ஏற்படும் ஒளிக்கீற்றுகள் வானம் முழுவதும் நிறைந்து காணப்படும்.
இயற்கையில் இந்த அழகிய தோற்றம் ஆகஸ்ட் மாதம் 10 ஆம் தேதியில் இருந்து 14 அல்லது 15- ஆம் தேதிவரை வானத்தின் வட பகுதியின் உச்சிப்பகுதியில் Taurus விண்மீன் குழுமத்தின் கீழாக உள்ள பெரிசியஸ் விண்மீன் குழுமத்தின் அருகில் காணப்படும்;
தற்போது தமிழகம் முழுவதும் மேகமூட்டமாக இருப்பதால் இந்த அழகைக் காணமுடியாது, இருப்பினும் மேகமூட்டம் இல்லாத இரவுகளில் இந்த இயற்கையின் அழகை கண்டு இரசிக்கலாம்.
Read more: http://viduthalai.in/page1/85685.html#ixzz3B2SoBHhl
இன்றைய ஆன்மிகம்?
வல்லப கணபதி
அம்பாள் - ஸ்வா மிக்குத்தான் திருக்கல்யா ணம் நடத்தும்போது திரு மாங்கல்யம், குங்குமம், மஞ்சள் என மங்கலப் பொருட்களைப் பிரசாத மாகக் கொடுப்பார்கள். ஆனால், மதுரை அருகே வாடிப்பட்டியில் உள்ள ஆண் கடவுளான வல்லப கணபதி கோயி லிலும் இவற்றைப் பிரசாத மாகக் கொடுக்கின்றனர். விநாயகருக்குப் பூஜை யின்போது இப்பொருட் களை வைத்தும் வழிபடு கிறார்கள். விநாயகர் அம்பிகையிடமிருந்து தோன்றியதால் இவரை சக்தி அம்சமாகக் கருதி இவ்வாறு செய்கின்றன ராம்.
இடையிலே வல்லப கணபதி என்ற ஒரு சமாச்சாரம் வருகிறதே அது என்னவாம்? சூரபத் மனுக்கும் -சுப்பிரமணிய னுக்கும் சண்டை நடந்த போது சகோதரன் சுப்பிர மணியனைக் காப்பாற்ற விநாயகன் முன்வந்தா னாம். சூரபத்மனுக்குப் படை வீரர்கள் வல்லபை என்ற அசுரப் பெண்ணின் உறுப்பிலிருந்து வந்து கொண்டே இருந்தார் களாம் - விநாயகன் என்ன செய்தான்? தன் தும்பிக்கையால் பெண் ணின் குறியின் பாதையை அடைத்தானாம்.
அதனால்தான் விநாய கனுக்கு வல்லப கணபதி என்று பெயராம். இந்த அசிங்கமான காட்சியை இன்றைக்கு சிலையாக மத்தூர் கோயிலில் பார்க் கலாம்! அட ஆபாசமே, உன் பெயர்தான் பக்தியா? இந்து மதமா?
Read more: http://viduthalai.in/page1/85702.html#ixzz3B5388ywQ
பெரியார் பணி முடிப்பவர்களுக்கு ஓய்வு, சலிப்பு கிடையாது!
விடுதலை ஆசிரியராகப் பொறுப்பேற்று 52 ஆண்டுகள்
பெரியார் பணி முடிப்பவர்களுக்கு ஓய்வு, சலிப்பு கிடையாது!
மணமக்களே விடுதலை சந்தா அளித்தது ஒரு முன் மாதிரியே!
தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை
விடுதலை ஆசிரியராகப் பொறுப்பேற்று 52 ஆண்டுகள் ஓடியுள்ள நிலையிலும், பெரியாரின் பணி முடிக்கும் அவர்தம் பணியில் ஓய்வோ, சலிப்போ ஏற்பட்டதில்லை என்பதைப் பெருமிதத்துடன் கூறும் திராவிடர் கழகத் தலைவர் விடுதலை ஆசிரியர் கி. வீரமணி அவர்களின் நெகிழ்ச்சியூட்டும் அறிக்கை:
பெரியார் நாடு என்று நம்மால் பெருமைப்பட அழைக்கப்படும் உரத்தநாட்டுப் பகுதியில் நேற்று முதல் நாள் (10.8.2014) அன்று காலை காவாரப்பட்டு என்ற சிறிய கிராமத்தில், நமது கழகப் பொதுச் செயலாளர்களில் ஒருவரான தோழர் இரா. குணசேகரன் தம்பி மகள் திருமண நிகழ்வில், விடுதலை ஆசிரியர் பொறுப்பேற்று 53ஆவது ஆண்டு தொடங்கும் நாள் என்பதை எனக்கு நினைவூட்டி மகிழ்ந்தனர்.
பெரியார் பணி முடிக்கும் பணியில் ஓய்வேது?
பெரியார் பணி முடிக்கும் இலக்கில் இது ஒரு சாதாரண நிகழ்வே தவிர - நம்மைப் பொறுத்த வரையில் - ஒரு பெரும் சாதனையல்ல! செல்ல வேண்டிய பயணங்கள் ஏராளம்!!
ஊதியத்திற்காகப் பணி செய்வோருக்கே ஓய்வு உண்டு. ஓய்வூதியம் உண்டு. ஓய்வு பெறும் கால அளவு உண்டு. மானம் பாராது, நன்றி நோக்காது பதவி, புகழ், பெருமை தேடாது, எதிர் நீச்சலிலேயே எப்போதும் உள்ளவர்களுக்கு - குடி செய்வார்க்கு பருவம் ஏது? கால நேரம் என்று காத்திருக்கும் குணம்தான் ஏது என்பது தானே பெரியார் தொண்டர்களின் இலக்கணம்! நமது அறிவு ஆசானின் பாடங்களைச் சரியாகக் கற்கும் எந்த மாணவருக்கும் மேற்சொன்னதுதான் பால பாடமாகும்.
அலுப்பு இல்லை - சலிப்பு இல்லை!
தன்னலம் அறியாத தன்மானப் பெரு வாழ்வு வாழ இந்தப் பாசறையில் இடம் கிடைத்து, அது பெரும் பேறு அல்லவா? இத்தனை ஆண்டு காலம் உழைத்தாலும், அலுப்போ, சலிப்போ, விரக்தியோ, வேதனையோ தோன்றவில்லை; மாறாக மாரத்தான் (Marathon) ஓட்டப் பந்தயத்தில் ஓடும் போட்டியாளனுக்கு இலக்குதானே முக்கியம்; எல்லோரையும் முந்தி ஓடி அதை அடைவதுதானே முக்கியம்! அதுபோன்றதே நமது இயக்கப் பணியும்.
ஓர் எடுத்துக்காட்டுத் திருமணம்
நமது தோழர்கள் - அன்பர்கள் - 53 ஆண்டு சந்தாக் களை விடுதலைக்குப் பரிசாக அளித்து ஊக்கப்படுத் தினார்களே, அதுதான் முக்கியம்!
மணமகனும் மணமகளும்கூட தனித்தனியே 14 விடுதலைச் சந்தாக்களை அளித்து நல்ல முன்மாதிரியாக - இனி வரும் நமது சுயமரியாதைத் திருமணங்களில் விடுதலை முதலிய நமது ஏடுகளுக்குச் சந்தா வழங்கு வதை ஒரு முக்கிய கடமை - நிகழ்வாகக் கொள்ள வேண்டும் என்று எடுத்துக் காட்டுவதுபோல் அமைந்தது அவர்களது பாராட்டத்தக்க நடவடிக்கை.
மாலைக்குப் பதில் சந்தா
1500 ரூபாய் செலவில் ரோசாப் பூக்கள் மாலை அணிவிக்க வந்தபோது, மிகுந்த வருத்தம் அடைந்தேன்; அதுபற்றிக் கூற எண்ணியிருந்தேன். எனது உரையில்; குறிப்பால் உணர்ந்த நம் தோழர்கள் அதனை மேடை யிலேயே ஏலம் விட்டு, திரு. நல். மெய்க்கப்பன் ரூ.2000/-க்கு ஏலம் எடுத்து அதனைக் கழக நிதியில் இணைத்து தப்பித்துக் கொண்டு மகிழச் செய்தனர்!.
சால்வைக்குப் பதில் சந்தா என்பதை அருள்கூர்ந்து அமுலாக்குங்கள்.
கட்டுப்பாடு காக்கும் அரிய பணி!
உரத்தநாட்டில் எல்லாத் தோழர்களும் ஓர் அணியாய் ஒன்றுபட்டுப் பணியாற்றுவதே எனக்கு மாலை சூட்டுவதைவிட பெரிதும் எம்மை மகிழ்விக்கும் கட்டுப்பாடு காக்கும் அரிய பணி என்று கூறிப் பாராட்டி மகிழ்கிறோம்.
கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்
சென்னை 12.8.2014
Read more: http://viduthalai.in/page1/85696.html#ixzz3B53QHmCd
சாமி நகையைத் திருடிய அர்ச்சகர்
மைசூரு, ஆக.12-_ மைசூரு, மேல் கோட்டை செலுவநாராயணசாமி கோவிலில், 800 கிராம் தங்க நகை திருடு போனது. இது தொடர்பாக, அர்ச் சகர் நரசராஜபட் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
விசாரணையில், தங்க நகைகளை, முரளிதர் ஜெகந்நாத் என்பவர் அன்பளிப்பாக கொடுத்த பின், மூன்று மாதங்கள் வரை, நரசராஜபட் அதை கோவில் செல்வத்தில் ஒப்படைக்காமல், வீட் டிலேயே வைத்திருந்தது தெரியவந்தது. அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச் சாட்டுக்களில், பல்வேறு சந்தேகங்கள் இருந்தன. இது குறித்து முறையான விசாரணை நடத்த வேண் டும் என, தலித் சங்கர்ஷ சமிதி அமைப்பாளர் சீனிவாஸ், பாண்டவபுரா நீதிமன்றத்தில் மனு தாக் கல் செய்தார். நீதிமன்றம் வழிகாட்டுதலின்படி, நரசராஜபட் மீது புதிய குற்றப்பத்திரிகையை காவல்துறையினர் தாக்கல் செய்துள்ளது. சமிதி அமைப்பாளர் சீனிவாஸ் கூறுகையில், "புதிய குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ததிலிருந்து முந்தைய விசாரணை, அர்ச்சகரை காப்பாற்றும் வகையில் தயாரித்திருப்பது நிரூபணமாகியுள்ளது. தற்போது எடுக்கப்பட் டுள்ள முடிவு, உண்மையை வெளி கொண்டுவரும் என, நம்புகிறேன், என்றார்.
Read more: http://viduthalai.in/page1/85700.html#ixzz3B53ZKrhi
இந்தியா இந்து நாடா?
ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன்பகவத் தெரிவித் துள்ள கருத்து - நாட்டில் தேவையில்லாத பிரச்சி னைக்குக் கொடியேற்றி வைத்துள்ளது. இந்தியா இந்து நாடு என்று அவர் தெரிவித்துள்ள கருத்துக் குறித்து திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் நேற்று விடுதலையில் மிக முக்கியமான அறிக்கையினை காலங் கருதி வெளியிட்டுள்ளார்கள்.
ஆர்.எஸ்.எஸ். தலைவர் தானே அறிவித்துள்ளார் என்று அலட்சியப்படுத்தி விடவும் முடியாது. ஆர்.எஸ்.எஸ். தான் பா.ஜ.க.வுக்குத் தாய் நிறுவனம்! இன்னும் சொல்லப் போனால் ஆர்.எஸ்.எஸ் ஆல் தேர்வு செய்து அறிவிக்கப்பட்டவர்தான் பிஜேபி வேட்பாளரான நரேந்திர மோடி என்பதைத் தெரிந்து கொண்டால் ஆர்.எஸ்.எஸ்-இன் தலைவர் தெரிவித்த கருத்தின் அபாயம் எத்தகையது என்பது எளிதிலேயே விளங்கி விடும்.
ஆர்.எஸ்.எஸ்-இல் தயாரிக்கப்பட்டவரே பா.ஜ.க.வின் பொதுச் செயலாளராக வர முடியும் என்பது ஆர்.எஸ்.எஸ்-இன் விதிமுறையாகும். 16ஆவது மக்களவைத் தேர்தலுக்கான பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவின் தலைவர் முரளி மனோகர் ஜோஷி பச்சையாக ஒப்புக் கொண்ட ஓர் உண்மை உண்டு.
ஆர்.எஸ்.எஸின் அறிவுரையைக் கேட்டுத்தான் தேர்தல் அறிக்கையைத் தயாரித்ததாகக் கூறிடவில் லையா? இதற்கு மேல் என்ன வேண்டும்? ஆர். எஸ்.எஸ்., என்ன சொல்லுகிறதோ, என்ன நினைக் கிறதோ, அதன்படி செயல்பட வேண்டிய கட்டாயம் மத்திய பிஜேபி அரசுக்கு இருக்கிறது.
இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டுமானால் அதனை நிறைவேற்றுவதைத் தவிர பிஜேபி தலைமை யிலான அரசுக்கு வேறு வழியும் கிடையாது - கிடையவே கிடையாது!
பிஜேபியின் தேர்தல் அறிக்கையை எடுத்துக் கொண்டாலும் 370ஆவது சட்டப் பிரிவு திருத்தம், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கென்றுள்ள சிறப்பு உரிமைகளை நீக்குவது, பசு பாதுகாப்பு, கங்கையைச் சுத்தப்படுத்துவது உள்ளிட்ட ஆர்.எஸ்.எஸ்-இன் அஜண்டா கம்பீரமாக இடம் பெற்று இருப்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.
இதில் முக்கியமாகக் கருத்தூன்றத் தக்க விடயம் உண்டு. இந்திய அரசமைப்புச் சட்டத்தின் மதச் சார்பின்மைக் கொள்கைக்கு உண்மையாக இருப்பதாக உறுதிமொழி எடுத்துக் கொண்டுதான் அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் பிரதமர் உள்ளிட்ட அனைத்து அமைச்சர்களும் பதவி ஏற்றனர்.
இந்தச் சூழலில் இந்தியாவை இந்து நாடாக அறிவிக்க வேண்டும் என்று கூறுவது பச்சையாக அரசமைப்புச் சட்டத்தை அத்துமீறுதல் ஆகாதா?
ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் வெளிப் படையாக அறிவித்த பிறகும்கூட, பிரதமரோ அல்லது பிஜேபியின் தலைவரோ ஆர்.எஸ்.எஸ். தலைவரின் கருத்தை அரசைக் கட்டுப்படுத்தாது; பிஜேபியைக் கட்டுப்படுத்தாது என்று சொல்லியிருக்க வேண்டும் அல்லவா? ஏன் சொல்லவில்லை? மவுனம் சம்மதத் துக்கு அடையாளம் என்கின்ற உலகியலை ஏற்றுக் கொண்டால் ஒரு மணித்துளி அளவுகூட ஆட்சியில் நீடிக்க முடியாது - கூடாது!
நாடாளுமன்றத்தில் மதச் சார்பற்ற கட்சிகள் இந்தப் பிரச்சினையைக் கையில் எடுத்துக் கொள்வார்கள் என்று எதிர்ப்பார்க்கிறோம்.
மத்தியில் ஆட்சி அமைத்து 60 நாட்களுக்குள் ளாகவே மத்திய ஆட்சியின் மதச் சார்பற்ற தன்மையின் மீது அய்யத்துக்கு இடமின்றி சந்தேக நிழல்கள் படரத் தொடங்கி விட்டன.
குடியரசு தலைவர் அழைத்த இப்தார் விருந்தையே பிரதமர் மோடி புறக்கணித்தது சாதாரணமானதல்ல.
இஸ்ரேல் - பாலஸ்தீன போரின் மீதான கருத்தை வெளிப்படையாக நாடாளுமன்றத்தில் தெரிவிக்கத் தயங்குவதும் இந்தப் பட்டியலில் வைக்கத் தகுந்ததே!
இந்திய வரலாற்று ஆய்வுக் கழகத்திற்குப் பச்சை யான இந்துத்துவாவாதியைப் பொறுக்கி எடுத்து அறிவித்திருப்பதும் அந்த வகையில்தான்.
சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் சமஸ்கிருத வாரம் கொண்டாட வேண்டும் என்று ஆணையிட்டு இருப் பதும், அதற்காக மக்கள் வரிப் பணத்தைக் கோடி கோடி யாகக் கொட்டுவதும், இந்துத்துவாவின் கூர்மையான நடவடிக்கையே!
சமஸ்கிருதக் குடும்பத்தைச் சேர்ந்த இந்தியில்தான் மத்திய அரசு பணியாளர்கள் கடிதத் தொடர்பு கொள்ள வேண்டும் என்று இதற்கு முன் ஆணை பிறப்பித்ததும் இந்துத்துவாவின் செயல்பாடே!
இத்தகைய செயல்பாடுகள் மூலம் பல்வேறு மதங்களைச் சார்ந்தவர்கள், மத நம்பிக்கையற்றவர்கள் 125 கோடி மக்கள் வாழும் இந்தியாவில் பிளவு மனப்பான்மையை உண்டாக்குவது - எத்தகைய விபரீதமானது!
வேற்றுமையில் ஒற்றுமை என்று பெருமையாகச் சொல்லிக் கொண்டதெல்லாம் பழங்கதைதானா? கட்சிகளை மறந்து இந்துத்துவாவாதிகளின் இத்தகைய மதவெறிப் போக்கை வன்மையாகக் கண்டிக்க முன்வர வேண்டும்.
திராவிடர் கழகத் தலைவர் வழக்கம் போலவே தக்கதோர் தருணத்தில் முன் குரல் கொடுத்து முழங்கியுள்ளார் - மதவாத சக்திகளை முறியடிக்க ஓரணியில் திரளுவோம்! திரளுவோம்!!
Read more: http://viduthalai.in/page1/85704.html#ixzz3B53tgcf4
அஸ்திவாரம் கிடையாது
பார்ப்பனர்களால் போற்றி வளர்க்கப்படும் இந்து மதம் என்று சொல்லப்படுகிற மதத்துக்கு அஸ்திவாரம் கிடையாது. - (விடுதலை, 11.7.1954)
Read more: http://viduthalai.in/page1/85703.html#ixzz3B543vJcV
ஏ! தாழ்ந்த தமிழகமே!
வணக்கம், தென்கிழக்கு ஆசியாவின் சாக்ரடீஸ் சமூக சீர்திருத்த இயக்கத்தின் தந்தை, அறியாமை, மூடநம்பிக்கை, இழிவான நடவடிக்கைகள் ஆகியவற்றின் கடும் எதிரி என்று யுனெஸ்கோ ஹிழிணிஷிசிளி நிறுவனத்தால் விருது வழங்கப்பட்ட பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் பிறந்த மண்ணில், தமிழர் தலைவர் முனைவர் மானமிகு கி.வீரமணியார் ஓயாது பகுத்தறிவுப் பிரச்சாரம் செய்து வரும் தமிழ் மண்ணில் இன்னும் சில ஊர்களில் வெட்கக்கேடான செயல்கள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன.
31.7.2014 தேதிய தொலைக்காட்சியில் தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகில் உள்ள பல்லேனஹள்ளி என்ற கிராமத்தில் முனியசாமிக்கு ஒரு கோயில். அந்தக் கோயிலுக்கு அருகில் ஒரு பெரிய அரச மரம் உள்ளது. அந்த அரசமரத்தில் நூற்றுக் கணக்கான வவ்வால்கள் தங்கி வருகின்றன. அந்த வவ்வால்கள் அந்த கிராம மக் களுக்குக் கடவுளாம்! அந்த வவ்வால்களின் கழிவுகளை அந்த கிராம மக்கள் பிர சாதமாக மதிக்கிறார்களாம்!
முனியசாமியை வேண்டிக் கொண்டு நேர்த்திக்கடன் செய்தால் நினைத்த செயல் கைகூடுகிறதாம். படிப்பில் மந்தமாக இருந்த சில பெண்கள் முனியசாமியை வேண்டிக் கொண்டதில் பட்ட வகுப்பில் தேர்ச்சி பெற்று பட்டதாரிகள் ஆகியிருக்கிறார்களாம்!
கோயிலில் உணவு அருந்திக் கொண்டிருக்கும் தாய்மார்களிடம் சில இளம் பெண்கள் குழந்தை வரம் வேண்டி மடிப் பிச்சை வாங்குகிறார்கள்! ஒரு கிராமத்தில் மழை வேண்டி இரு கழுதைகளுக்குத் திருமணம் செய்து வைக் கிறார்கள்! கழுதைக்கும் மழைக்கும் என்ன தொடர்பு என்று திருமணம் செய்து வைக்கும் அறிவிலிகள் சிந்திப்பதே இல்லை.
மற்றொரு கிராமத்தில் பெண்களுக்குப் பேய் பிடித்திருக்கிறது என்று பேயை விரட்ட பெண்களைக் கோயில் பூசாரி சவுக்கால் அடிக்கிறான்! எந்த பார்ப்பனப் பெண்ணா வது பேய் பிடித்திருக்கிறது என்று தன்னை பூசாரி சவுக்கால் அடிக்க சம்மதிப்பாளா?
கரூர் அருகே மேட்டு மகாதானபுரம் மகாலட்சுமி அம்மன் கோயிலில் பெண்கள் தலையில், நேர்த்திக் கடன் என்று சொல்லி பூசாரி தேங்காயை உடைக்கிறான். சில பெண்கள் தலையில் ஆழமான காயம் ஏற்பட்டு இரத்தம் வடிகிறது. அவர்களை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்கிறார்கள்!
ஒரு கோயில் தேர்த்திருவிழாவில் தேரின் சக்கரம் பக்தரின் உடலில் ஏறி பக்தர் இறந்தே போகிறார்.
முன்னாள் இந்தியப் பிரதமர் பண்டித நேரு பின்வரும் வேண்டுகோளை விடுத் துள்ளார். இந்தியா தனது மத மவுடீகங் களைக் களைந்து விஞ்ஞானப் பாதையில் திரும்ப வேண்டும். தேவையற்ற, பொருளற்ற எண்ணங்களும், சமூகப் பழக்க வழக்கங் களும் - இந்தியத் தாய்க்குச் சிறைச் சாலையை எழுப்பி இருக்கின்றன. இந்த மடமையே இந்தியாவின் வளர்ச்சியைத் தடுக்கின்றன.
திருவண்ணாமலை கார்த்திகைத் தீப விழாவிற்கும், திருச்செந்தூர் சூர சம்மாரத் திற்கும் பக்தர்கள் 15 இலட்சம், 20 லட்சம் என்று கூடுகிறார்கள்! இதனால் மக்களின் நேரம், நினைப்பு, உழைப்பு, பணம் ஆகி யவை செலவே தவிர தமிழகத்திற்கு எவ் வகை நன்மையும் கிடையாது. சேத்துப் பட்டை அடுத்த மேல்வில்லிவனம் பச்சை யம்மன் கோவிலில் தீமிதி விழாவில் தீ மிதிப் போரைப் பார்த்தால் பரிதாபமாக உள்ளது.
சொல்லப் பயன்படுவர் சான்றோர்; கரும்புபோல்
கொல்லப் பயன்படும் கீழ்.
என்பது வள்ளுவரின் பொன்மொழி, தந்தை பெரியார், மானமிகு கி.வீரமணியார் ஆகிய அறிஞர்களின் கருத்துக்களைக் கேட்டாலே சான்றோர் மூடநம்பிக்கைகளி லிருந்து திருந்திவிடுவார்கள். தமிழகத்தில் இலட்சக் கணக்கான இளைஞர்கள் திருந்தி இருக்கிறார்கள். ஆனால் கீழ்மக்கள் கரும்பு போல் பிழிந்தால் தான் திருந்துவார்கள். ஆகவே பகுத்தறிவுக் கொள்கையையும், ஆராய்ச்சி மனப்பான்மையையும் வளர்க்க வேண்டும் என்ற இலட்சியத்தைக் கொண்ட இந்திய அரசியல் சட்டத்தை பின்பற்றும் தமிழ்நாடு அரசு சட்டத்தின் மூலம் பெண்களுக்கு பேய் விரட்டுதல், தலையில் தேங்காய் உடைத்தல், நெருப்பு மிதித்தல் போன்ற மூடப்பழக்கங்களைத் தடை செய்ய வேண்டும். தந்தை பெரியாரையும் அறிஞர் அண்ணாவையும் கொடியில் ஏந்தி இருக்கும் அண்ணா திமுக அரசு செய்ய வேண்டிய கடமை ஆகும் இது.
- இர.செங்கல்வராயன்
முன்னாள் துணைத் தலைவர், ப.க.,
Read more: http://viduthalai.in/page1/85706.html#ixzz3B54D9GoN
ஆர்.எஸ்.எஸ். தலைவரின் இந்துத்துவா பேச்சுக்குக் கண்டனங்கள்
கட்டாக், ஆக. 12_ இந்தி யர்களின் கலாச்சார அடை யாளம் இந்துத்துவா என ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் கூறியுள் ளார். ஒடிசா மாநிலம், கட் டாக் நகரில் ஒடியா மொழி வாரப் பத்திரிகை ஒன்றின் பொன்விழா ஆண்டை யொட்டி நடந்த நிகழ்ச்சி யில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் கூறியதாவது:
இங்கிலாந்தில் இருப்ப வர்கள் ஆங்கிலேயர்கள், ஜெர்மனியில் இருப்பவர் கள் ஜெர்மானியர்கள், அமெரிக்காவில் இருப் போர் அமெரிக்கர்கள். ஆனால், இந்துஸ்தானில் இருப்பவர்கள் மட்டும் இந்துக்கள் என அழைக்கப் படவில்லை. இந்தியர்க ளின் கலாச்சார அடையா ளம் இந்துத்துவா. தற்போது இந்தியாவில் இருப்பவர் கள் எல்லாம் இந்த உயர்ந்த பண்பாட்டிலிருந்து வந்த வர்கள்தான்.
இந்துத்துவா தான் வாழ்க்கை வழிமுறை. இந்துக்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாகவும் இருக் கலாம், எந்த கடவுளையும் வணங்கலாம் அல்லது எந்த கடவுளையும் வழிபடா மல் இருக்கலாம். விவேகா னந்தர் எந்த கடவுளையும் வணங்கவில்லை. இதற்காக அவர் நாத்திகராக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. தன் மீது நம் பிக்கை இல்லாதவர்தான் நாத்திகர். பழங்காலத்தி லிருந்து பல வேறுபாடுகள் இருந்தாலும், இந்தியா ஒருங்கிணைந்து இருப்ப தற்கு அடிப்படையே இந் துத்துவாதான் என்பதை உலகம் உணர்ந்துள்ளது.
ஆனால், இதை இந் தியாவில் இருப்பவர்கள் உணராததுதான் கவலை அளிக்கிறது. இது தொடர் பாக எப்போது ஆலோ சனை நடந்ததாலும், இது பற்றி பேசுபவர் மதவாதி என தவறாக முத்திரை குத்தப்படுகிறது. எல்லா இடங்களில் இருள் சூழ்ந் துள்ள நிலையில் உலக நாடுகள் ஆறுதலுக்காக இந்தியாவை பார்க்கின் றன.
ஏனென்றால் இந்தியா சரியான பாதையில் முன் னேறிக் கொண்டிருக்கிறது. இந்தியாவில் தர்மம் நீடிக் கும் வரை, உலக நாடுகள் இந்தியாவை மதிக்கும். தர்மம் போய் விட்டால், பூமியில் எந்த சக்தியாலும் நாடு சிதைவதை தடுத்து நிறுத்த முடியாது என்றார்.
திக்விஜய் சிங் தாக்கு
உள்துறை அமைச்சகத் தின் செயல்பாடு குறித்து மாநிலங்களவையில் நேற்று பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங், நாடு சந்திக்கும் மிகப் பெரிய அச்சுறுத்தல் தீவிர வாதம். இதை வளர்ப்பது மதவாத கொள்கை. தலிபான் கொள்கை பிரச்சினை உருவாக்குகிறது. அதே போல் சங் பரிவார் கொள் கையும் அமைதியை கெடுக் கிறது.
சங் அமைப்பு நாட் டில் பதிவு செய்யப்பட வில்லை. அதில் யாரும் உறுப்பினர் கிடையாது. புத்தகங்கள் மற்றும் துண்டு பிரசுரங்கள் மூலம் மதவாத கொள்கை பரப் பப்படுகிறது. மைக்கேல் பார்க்கர் எழுதிய ஹார் வஸ்ட் ஆப் ஹேட், காந்த மால் இன் கிராஸ்பயர், பிரானன் எழுதிய ஒரிசா இன் கிராஸ்பயர் ஆகிய புத்தகங்களை இந்தியா பவுண்டேஷன் வெளியிட் டுள்ளது.
ஆனால் வெளி யீட்டாளர் பற்றி எந்த தகவலும் இல்லை. ஆனால் இந்த புத்தகங்களுக்கு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் முன்னுரை எழுதியிருக்கிறார். மதக் கலவரத்தை பரப்பும் இது போன்ற புத்தகங்களை தடை செய்து அரசு விசா ரணை நடத்த வேண்டும் என்றார்.
மக்களவை தேர்தலில் பா.ஜ அமோக வெற்றி பெற்றதற்கு மோடி, ராஜ் நாத், அமித்ஷா ஆகி யோரின் கூட்டணிதான் காரணம் என கடந்த சனிக் கிழமை நடந்த பா.ஜ தேசிய கவுன்சில் கூட்டத் தில் பாராட்டு தெரிவிக்கப் பட்டது.
இதற்கு மறுநாள் ஒடிசாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆர்.எஸ். எஸ் தலைவர் மோகன் பகவத், தேர்தல் வெற்றிக்கு எந்த ஒரு தனி மனிதரோ, தனிக் கட்சியோ, அமைப்போ காரணம் அல்ல. ஆட்சி மாற்றம் தேவை என மக்கள் விரும்பியதால், இந்த மாற்றம் ஏற்பட்டது என கூறினார்.
இந்த கருத் துக்கு பா.ஜ விளக்கம் அளிக்க வேண்டும் என காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது. இப்படி ஒரு கருத்தை ஆர்.எஸ்.எஸ் தலைவர் கூறியுள்ளது பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். இடையே நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.
மோகன் பகவத் கூறிய தற்கு அரசியல் கட்சி தலை வர்கள் பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மனீஷ் திவாரி:
அரசமைப்பு சட்டத்தை படிக்கும்படி மோகன் பகவத்துக்கு அறிவுறுத் தப்பட வேண்டும். அதில் இந்தியா பாரத் என்று தான் குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்துஸ்தான் என எங்கும் குறிப்பிடப் படவில்லை என்றார்.
சீதாராம் யெச்சூரி:
அரசமைப்பு சட்டத்தை நம்புகிறாரா இல்லையா என்பதை பகவத் தெளிவு படுத்த வேண்டும் என கூறியுள்ளார்.
சரத்யாதவ்:
சுதந்திரம் பெற்றதில் இருந்து அரசமைப்பு சட் டத்தின் மீது நம்பிக்கை வைத்துதான் இந்தியா செயல்பட்டுக் கொண்டிருக் கிறது. எதிர்காலத்திலும் இந்தியா இதே வழியைத் தான் பின்பற்றும் என்றார்.
மாயாவதி:
அரசமைப்பு சட்டம் பற்றி மோகன் பகவத்துக்கு சரியாக தெரியவில்லை. இந் தியாவில் உள்ள மக்கள் பல மதங்களை பின்பற்று கிறார்கள் என்பதை மன தில் வைத்துதான் அம்பேத் கர் அரசமைப்பு சட்டத்தை எழுதினார். அரசமைப்பு சட் டத்தை படித்தபின் மோகன் பகவத் தனது கருத்தை தெரி விக்க வேண்டும் என்றார்.
Read more: http://viduthalai.in/page1/85724.html#ixzz3B54paWaU
சமஸ்கிருதம் பேசுவோர் எங்கே?
பில்லியனுக்கும் அதிகமான அளவில் மக்கள் உள்ள இந்நாட்டில் 14 ஆயிரம் பேர் சமஸ்கிருதத்தைத் தங்கள் தாய் மொழியாகக் கூறியுள்ளதாக புள்ளி விவர எண்ணிக்கை கூறுகின்றது.
மத்திய அரசு மாவட்டந்தோறும் தேவ பாஷை என்று கூறி, சமஸ்கிருத வாரத்தைக் கொண்டாட முனைப்பு காட்டி வருகிறது. 2011 ஆம் ஆண்டின் புள்ளிவிவரங்கள் இன்னமும் வெளியிடப்படாத நிலையில், 2001 ஆம் ஆண்டின் புள்ளிவிவரத் தகவல்களின்படி, உத்தரப்பிரதேசத்தின் மய்யப்பகுதி, வட தெலங்கானா, தெற்கு ராஜஸ்தான், நாக்பூர் மற்றும் அரித்துவார் ஆகிய பகுதிகளில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் சமஸ்கிருதத்தைத் தாய் மொழியாகக் கொண்டுள்ளதாகக் கூறியுள்ளனர். உத்தரப்பிரதேசம் சீதாபூர் மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையாக 550 பேர் சமஸ்கிருதத்தைத் தாய்மொழியாகக் கொண்டுள்ளதாகக் கூறியுள்ளனர்.
Read more: http://viduthalai.in/page1/85756.html#ixzz3B55LF69a
சங்கராச்சாரி-யார்?
ஜெகத்குரு என்று சங்கராச்சாரியாரைக் கூறுகிறார்களே! உண்மையில் சங் கராச்சாரியார் ஜெகத்துக்கே (உலகத்துக்கே) குருவா? முதலில் உள்ளூரில் இவரை அனைவரும் குருவாக ஏற் றுக் கொள்வார்களா? இந்து மதத்தில்தானாகட்டும் வை ணவர்கள் இவரைக் குரு வாக ஒப்புக்கொள்வார்களா?
உண்மை இவ்வாறு இருக்க, இவரை லோகக் குரு என்றும், ஜெகத்குரு என்றும் ஜெய பேரிகை கொட்டுவதில் மட்டும் குறைச்சலில்லை.
சங்கராச்சாரியார்களி லேயே மறைந்த மூத்த காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி யைத் தூக்கி வைத்துப் பேசுவார்கள்; புனிதர் என்று போற்றுவார்கள்.
உண்மை என்னவென் றால், துவேஷத்தில் தும் பிக்கை யானையைவிடப் பலம் வாய்ந்தவர்.
தீண்டாமைபற்றிப் பேச பாலக்காடு சென்று, காந்தி யார் அவரைச் சந்தித்தார் (16.10.1927). மகாத்மா என்று மக்கள் போற்றும் அந்தத் தலைவரை மாட்டுக் கொட் டகையில் உட்கார வைத் துத்தான் பேசினார் அந்த சங்கராச்சாரியார்.
பேசி என்ன பயன்?
ஹரிஜன ஆலயப் பிர வேச விஷயத்தில் சாஸ்திரங் களையும், பழைய வழக்கங் களையும் நம்பி இருப்பவர் கள் நம் நாட்டில் பெரும் பாலோர் இருக்கிறார்கள் என்றும், அவர்கள் மனம் நோகும்படிச் செய்யும் எந்த மாறுதலும் - இம்சைக்கு ஒப்பாகுமென்று தாம் முடி வுக்கு வரவேண்டியிருக்கின் றது என்று ஸ்வாமிகள் (காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி) காந்தியடிகளிடம் தெரிவித் தார். (ஆதாரம்: தமிழ்நாட் டில் காந்தி, பக்கம் 575, 576).
தீண்டாமைக் கொடு மைக்கு ஆளாக்கப்பட்ட வர்களின் வலிகள் சங்கராச் சாரியார்களுக்கு முக்கிய மல்ல; மாறாக, அதற்குக் காரணமானவர்கள் மனம் நோவதுதான் சங்கராச்சாரி யார்களுக்கு முக்கியம்.
இருப்பதிலேயே மகாபுரு ஷர் என்று பார்ப்பனர்களால் போற்றப்படும் அவர் நிலையே இப்படி! அவர் குறித்து தந்தை பெரியார் தெரிவித்த கருத் தும், தகவலும் மிகப்பெரிய அதிர்ச்சிக்குரியவை!
12 வருடத்திற்கு ஒரு முறை ஈசன் தண்ணீர் விடு வதாகக் கூறியபடி, 12 வருடத் திற்கு ஒருமுறை (கும்ப கோணம்) மகாமகம் வரு கிறது. முன் மகாமகம் 1945 ஆம் ஆண்டில் வந்தது. அதற்குமுன் 1933 இல் வந்தது. அதன்படி 12 வருடத் துக்கு ஒருமுறை இருக்க, இப்போது 1957 ஆம் ஆண்டில் வரவேண்டும்.
ஆனால், 1956 ஆம் ஆண்டிலேயே வருகிறது. இதன் காரணம், சங்கராச் சாரிக்கு இப்போது உடல் நிலை சரியில்லையாம். அவர் அடுத்த வருடம்வரை உயி ருடன் இருப்பாரோ? இருக்க மாட்டாரோ? என்ற சந்தேகத் தின்மீது, அவர் இப்பொழுது இருக்கும்போதே கொண்டா டிவிடவேண்டும் என்பதற் காக அடுத்த வருடம் கொண் டாடவேண்டியதை, இந்த வருடம் முன்பாக ஒத்தி வைத்துக் கொண்டாடுகிறார் களாம்.
இதன்படி ஈசன் இப் போது சங்கராச்சாரியாருக்கு உடல்நிலை சரியில்லை என் பதற்காக, 11 வருடத்திலேயே தண்ணீர் விடுகிறார்கள் என்று ஆகிறது. இப்படிப் பார்ப்பான் மனது வைத்தால் ஈசனுடைய செய்கையையும் மாற்றிவிட முடியும். அப்படி யானால், கடவுளும், வெங் காயமும் எங்கே போனதோ தெரியவில்லை (திருவத்தி புரத்தில் தந்தை பெரியார் பேசியது, விடுதலை, 6.2.1956).
இதற்கு விளக்கமும் தேவையா? இந்து மதம், சங்கராச்சாரியார்களின் உண்மைத் தன்மைகளை அறிந்து கொள்வீர்! - மயிலாடன்
Read more: http://viduthalai.in/page1/85755.html#ixzz3B55RQ3AY
ஆசிரியருக்குக் கடிதம் >>>
உடைமை எது?
1.8.2014 விடுதலையில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் வாழ் வியல் சிந்தனைகள் கட்டுரையான உண்மையான உடைமை (சொத்து) எது? மனிதர்கள் அனைவரும் மிகவும் சிந்தித்துத் சீர்தூக்கி பார்க்க வேண்டிய சிறப்புக் கட்டுரை.
மனிதர்களான நம்மில் பலரும் உடைமை என்றால் செல்வம் என்று பொருள் கொள்ளும்போது பணத்தைத் தான் செல்வம் என்று இரு பொருள் கொள்கின்றனரே தவிர அதைவிட விரிவான அழியாச் செல்வங்களான பல பண்புகள் என்பதை ஏனோ மறந்து விடுகின்றனர் என்று ஆசிரியர் அவர் கள் கட்டுரையில் அழகாகக் குறிப்பிடு கிறார்.
குறளில் 133 அதிகாரங்களில் உள்ள தலைப்பில் உள்ள 10 உடைமைகளை விவரித்துக் குறிப்பிடுகிறார்.
தொடர்ந்து எழுதுகிறபோது ஒரு இலட்சிய மனிதன் சிறந்த மனிதரின் பண்பு நலன்களில் இந்த பத்தும் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் அவனை வெல்லுதல் - யார்க்கும் அரிதினும் அரி தாகும் என்று குறிப்பிடுகிறார். இன்றைய காலகட்டத்திலே மனிதர்களுக்குத் தேவையான அற்புதமான கட்டுரை.
அடக்கமின்மை, ஆடம்பரம், அதிகார போதை, தன்னை அசைக்க இனி எவராலும் முடியாது என்ற இறுமாப்பு முதலியவை அவர்களை விரைவில் குழியில் தள்ளிவிடும் என்ற நிலையை நாம் கண் எதிரிலேயே காண்கிறோமா இல்லையா? என்று கட்டுரையை நிறைவு செய்கிறார். இன்றைய கால கட்டத்திற்கு எவ்வளவு பொருத்தமாக உள்ளது- ஆசிரியர் அவர்களின் வாழ் வியல் சிந்தனைகள் அனைத்து மக் களின் நல வாழ்வுக்கும், வளவாழ்வுக் கும், சுயமரியாதை வாழ்வுக்கும், பகுத் தறிவுச் சூரியன். வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு! வெல்க வாழ்வியல் சிந்தனைகள்!
- தி.க.பாலு (மாவட்டத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம், திண்டுக்கல்)
Read more: http://viduthalai.in/page1/85780.html#ixzz3B55zmKFs
கடவுள் சக்திமீது நம்பிக்கை இல்லை
முக்கிய கோவில்களில் எல்லாம் கண்காணிப்பு கேமராக்களாம்!
இந்து அறநிலையத்துறை அறிவிப்பு!
மதுரை, ஆக.14-_- இந்து சமய அறநிலையத் துறை கோயில்கள் அனைத் திலும் பாதுகாப்புக்காக கட்டாயம் கண்காணிப்புக் கேமரா பொருத்தப்பட வேண்டும் என, அறநிலை யத் துறை உயரதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
மதுரையில் மீனாட்சி சுந்தரேசுவரர் கோயி லுக்கு தீவிரவாத அச்சுறுத் தல் தொடர்வதால், பாதுகாப்புப் பலப்படுத் தப்பட்டுள்ளது. மேலும், மக்கள் அதிகம் கூடும் திருக்கோயில்களின் பாது காப்பையும் உறுதிப்படுத்த வேண்டிய அவசியம் தற்போது எழுந்துள்ளது.
மதுரை மாவட்டத்தில் உள்ள மக்கள் அதிகம் கூடும் இந்து சமய அற நிலையத் துறைக்குச் சொந்தமான சுமார் நூற்றிற்கும் மேற்பட்ட கோயில்களில் பாதுகாப்பு காரணமாக, கண்காணிப் புக் கேமராக்கள் அமைக் கப்பட்டு வருகின்றன.
அந்த வரிசையில், திரு மோகூர் காளமேகப் பெருமாள் கோயிலில் புதன் மற்றும் சனிக் கிழமைகளில் பக்தர்கள் அதிகம் கூடுவர். எனவே, அக்கோயிலில் தற்போது 16 இடங்களில் கண் காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகின் றன. இதேபோன்று, கோயில் மய்யத்தில் இரும்புக் கோபுரம் அமைத்து, அதில் இடி தாங்கியும் பல லட்சம் ரூபாய் செலவில் அமைக் கப்பட்டு வருகிறது.
யா.ஒத்தக்கடை மலை அடிவாரத்தில் உள்ள யோக நரசிம்மர் கோயி லிலும் கண்காணிப்புக் கேமராவும், இடிதாங்கியும் அமைக்கப்பட உள்ளதாக, கோயில் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், திருவாதவூர் கோயில் உள்ளிட்ட அனைத்துக் கோயில் களிலும் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட் டுள்ளன. ஏற்கெனவே கண்காணிப்புக் கேம ராக்கள் உள்ள கோயில் களில் கூடுதலாக கேம ராக்களை பொருத்தவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதாக, இந்து சமய அறநிலையத் துறை வட்டாரங்கள் தெரிவித் தன.
கோயிலில் உள்ள கடவுள்கள் வெறும் சிலைகள்தான் அவை களுக்குச் சக்தியில்லை என்று இந்து அறநிலை யத்துறை கூறாமல் கூறு கிறது - அப்படித் தானே!
Read more: http://viduthalai.in/page1/85822.html#ixzz3B56ne2D6
காஸாவில் இனப்படுகொலை!
ஒருபுறம் எகிப்தையும், இன்னொருபுறம் இசுரேலையும் எல்லைப் பகுதியாகக் கொண்ட காஸா, இனப்படுகொலைக்குப் பெரிய அளவில் ஆளாகிக் கொண்டு வருகிறது.
இலங்கையில் ஈழத் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்ட பிறகு, சொன்னதுபோல அய்.நா. தன் கடமையைச் செய்ய தவறி விட்டது என்று இந்த காஸா பிரச்சினையிலும், சொன்னால் ஆச்சரியப்படுவதற் கில்லை. உலக நாடுகளும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டு இருக்கின்றன என்பது வெட்கக்கேடாகும்!
இவ்வளவுக்கும் ஒரு சிறிய பிரச்சினையில் ஆரம்பித்த விவகாரம் பெரிய அளவில் ஆயிரக்கணக் கான மக்கள் ஈவு இரக்கமற்ற முறையில் படுகொலை செய்யப்பட்ட நிலைக்குக் கொண்டு சென்றுள்ளது.
சில வாரங்களுக்கு முன் காஸா பகுதியில் மூன்று இசுரேலிய மாணவர்கள் காணாமல் போனார்கள். அவர்களைத் தேடி உள்ளே நுழைந்த இசுரேல் படையினர் அந்த மூன்று மாணவர்களும் குண்டடி பட்டு இறந்து கிடந்ததைக் கண்டனர். அந்தப் படுகொலைக்கு யாரும் பொறுப்பு ஏற்கவில்லை.
இந்தச் சூழ்நிலையில் பாலஸ்தீன இளைஞர் ஒருவர் இஸ்ரேலிய வலதுசாரி இயக்கத்தைச் சேர்ந்தவர்களால் உயிரோடு கொளுத்தப்பட்டார். இதிலிருந்து துவங் கியது தான் இன்றைக்குப் பெரும் போராக உரு வெடுத்து விட்டது என்று கூறப்படுகிறது.
இது ஏதோ ஒரு காரணம் என்றாலும் இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு - பாலஸ்தீனத்தின் ஒரு பகுதி யூதர்களின் குடியிருப்புப் பகுதியாக ஆக்கப்பட்டது.
ஒண்ட வந்த பிடாரி ஊர்ப் பிடாரியை விரட்டிய கதையாக, கொஞ்சம் கொஞ்சமாக பாலஸ்தீன மக்களின் நிலங்களை ஆக்ரமிக்கத் தொடங்கி விட்டனர் என்பது தான் உண்மை.
இசுரேல் மாணவர்கள் கொல்லப்பட்டதற்கு யார் காரணம் என்று தெரியாமலேயே, தானே நீதிபதியாகி தாதாவாக மாறி விட்டது இஸ்ரேல். அதற்கு முட்டுக் கொடுக்கிறது அமெரிக்கா.
கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள், மாற்றுத் திறனாளிகளுக்கான இல்லங்கள் என்று எதையும் கவனத்தில் எடுத்துக் கொள்ளாமல் சகட்டு மேனியாகத் தாக்குதலைத் தொடுத்து வருகிறது இஸ்ரேல். காஸா இனி அவ்வளவுதான் - அதன் கதை முடிந்தது என்று காட்டுத்தனமாகச் செயல்படுகிறது இசுரேல்.
இந்திய அரசு இதில் நடந்து கொள்ளும் போக்கு வெட்கப்படத்தக்கது. இலங்கையில் எப்படி சிங்கள வெறியர்களுக்கு இந்தியா கொடி பிடிக்கிறதோ அதே நிலைதான் இப்பொழுதும் இசுரேலுக்குக் குடை பிடித்துக் கொண்டு இருக்கிறது மறைமுகமாக.
மகாராட்டிர மாநிலம் மாலேகான் குண்டு வெடிப்பில் சம்பந்தப்பட்ட - முன்னாள் இராணுவ அதிகாரி சிறீகாந்த் புரோகித் என்பவரின் மடிக் கணினியை ஆய்வு செய்தபோது, திடுக்கிடும் தகவல் அம்பலமானது. இசுரேலில் தஞ்சம் புகுந்து அங்கிருந்து ஒரு போட்டி இந்துத்துவா ஆட்சியை இந்தியாவில் நடத்துவது உட்பட வரைபடங்கள், அரசமைப்புச் சட்டம், கொடி முதலியவை வடிவமைக்கப்பட்டு இருந்தன என்பதை நினைவு கூர்ந்தால் இன்றைய பி.ஜே.பி. அரசு - இசுரேல் மேற்கொண்டுள்ள இனப்படுகொலைபற்றி மூச்சு விடாமல் இருப்பதற்கான அந்தரங்கம் புரியும்.
மாநிலங்களவையில் இதுபற்றிப் பேச இருந்த நிலையில் வெளியுறவுத் துறைஅமைச்சரின் எதிர்ப்பால் அதுபற்றி விவாதம் நடைபெறவில்லை என்பது முக்கியமானதாகும்.
எது எப்படி இருந்தாலும், வலுத்தவன், இளைத் தவனை வேட்டையாடுவது என்பது இந்த 21ஆம் நூற்றாண்டிலும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இங்கு நியாயத்திற்கோ, மனித உரிமைகளுக்கோ கிஞ்சிற்றும் இடம் இல்லா தொழிந்து விட்டது. அய்.நா. இருந்தும் பயனில்லை; அது வெறும் கொலு பொம்மை என்கிற அளவுக்குத்தான் சுருங்கிப் போய் விட்டது.
கடவுள் எனக்கு ஆணையிட்டார் என்று கூறி ஈராக் கில் புகுந்து துவம்சம் செய்ததே அமெரிக்கா! அந்த நாட்டின் அதிபர் சதாம் உசேனைத் தூக்கில் போட்டுக் கொன்றதே அமெரிக்கா - யார் என்ன செய்ய முடிந்தது?
மொத்தத்தில் அறிவியல் வளர்ந்த அளவுக்கு மனிதம் வளரவில்லை என்பதும், இயந்திரத் தன்மை யுடைய விலங்காக பெரும்பாலும் மனிதன் ஆகி விட்டான் என்பதும் மறுக்கப்படவே முடியாது!
Read more: http://viduthalai.in/page1/85831.html#ixzz3B57EuJZd
தாண்டவமாடுகின்றன...
இந்திய மக்களின் கல்வி அறிவு வாசனை யற்ற தன்மையும், பாமரத் தன்மையும், அடிமைத்தன்மையும் எல்லாம் சேர்ந்து உலகத்தில் வேறு எந்தத் தேசத்திலும் இல்லாத அவ்வளவு மதங்களும், மத வேற் றுமைகளும், மத மாற்றமும் இங்குத் தாண்டவமாடுகின்றன. - விடுதலை, 30.4.1958
Read more: http://viduthalai.in/page1/85830.html#ixzz3B57M7xOw
பிரைமரி நிறங்கள் என்பவை என்னென்ன?
இந்த விஷயத்தில் நிறைய குழப்பங்கள் உள்ளன. உங்களுக்கு அந்தக் குழப்பம் ஏற் படாது. ஏனெனில் நீங்கள் ஒளி நிறங்களை பிரித்து தெரிந்துகொள்ளப்போகிறீர்கள். கணினி திரை, தொலைக்காட்சி திரை ஆகியவற்றிலிருந்து நாம் நேரடியாக ஒளியைப் பெறுகிறோம்.
புத்தகத்தில் பிரிண்ட் செய்யப்பட்டுள்ள கலர் படத்தைப் பார்க்கும்போது நாம் பிரதிபலிப்பு நிறங் களைப் பார்க்கிறோம். இந்த வித்தியாசம் மிகவும் முக்கியம்.
தொலைக்காட்சி திரையிலிருந்து வரும் நிறங்களில் பிரைமரி நிறங்கள் சிவப்பு, நீலம், பச்சை. சிவப்பு, நீலம், பச்சை நிற ஒளி களைக் கலந்தால் வெள்ளை ஒளி கிடைக்கும். இவை பிரைமரி நிறங்கள்.
இந்த நிறங்களை வேறு நிறங்களிலிருந்து பெற முடியாது. அதனால் இவை பிரைமரி நிறங்கள். மற்ற நிறங்களை இவற்றை பல அளவுகளில் கலப்பதன் மூலம் பெறமுடியும். அப்படி பெறப்பட்ட நிறங்கள் செகண்டரி நிறங்கள்.
Read more: http://viduthalai.in/page1/85857.html#ixzz3B58AjVCj
வைரத்தை ஏன் கேரட் என்ற அளவில் குறிப்பிடுகிறார்கள்?
தங்கத்தை கேரட்டில் குறிப்பிடும் போது அதன் தூய்மையை அது குறிக் கிறது. எந்த அளவுக்கு தங்கத்தில் செம்பு, வெள்ளி, கேட்மியம் சேர்க்கப்பட்டிருக் கிறது என்பதை கேரட் அளவு கோள் குறிப்பிடுகிறது.
வைரம் முதலான நவரத்தினங்களில் கேரட் அளவீடு எடையைக் குறிப் பிடுகிறது. ஒரு கேரட் என்பது இருநூறு (200 மி) மில்லி கிராம். ஒரு பாரகான் என்பது 100 கேரட் வைரம் அல்லது முத்து போன்ற வேறு கல்லாக இருக்கலாம். 100 கேரட் என்றால் 20 கிராம் என்று நீங்கள் இப்போது கணக்குப் போட்டிருப்பீர்கள்.
கேரட் என்பது கேரட் வகை செடியி லிருந்துதான் பெயரை எடுத்துக் கொண் டது. கேரட் செடிகள் கடுகு செடி இனத் தைச் சேர்ந்தது. இதன் கனிகள் சிலிக்குவா என்ற வகையைச் சார்ந்தது. சிலிக்குவா கனியாகாமல் காயாக இருக்கும் போதே இரண்டாகப் பிளந்து கொள்ளும்.
அதன் ஊடே பத்துப் பதினைந்து விதைகள் இருக்கும். ஒரு விதையின் எடை (தோரா யமாக 200 மில்லி கிராம்) இருக்கும். முன்காலத்தில் எடை கற்களுக்கு செடி களின் விதைகளையே தரமாகப் பயன் படுத்தினார்கள்.
விதைகள் எப்போதும் மாறாத எடையைப் பெற்றிருக்கும் என்று நம்பினார்கள். அது உண்மையல்ல. இருந்தாலும் இந்த காலத்து நேர்மையும் நம்பிக்கையும் எடையை சந்தேகிக்க இடம் தரவில்லை.
மேலும் ஒரு செடியின் விதையையே எப்போதும் பயன்படுத் தியதால் நாளுக்கொரு எடை மாறுதல் என்கிற பிரச்சினை கிடையாது. இதே போல் இந்தியாவிலும் தங்கத்தை எடைபோட குன்றி மணி என்ற விதை எடையாகப் பயன்படுத்தப்பட்டது. 1907ஆம் ஆண்டில்தான் விதைகளை எடைக்கற்களாகப் பயன்படுத்துவதை விடுத்து உலோகங்களைப் பயன்படுத்த ஆரம்பித்தனர்.
Read more: http://viduthalai.in/page1/85855.html#ixzz3B58V3SCv
உண்மையான தமிழன் யாரப்பா?
இந்த வார துக்ளக்கில் (13.8.2014) உண்மையான தமிழன் யார்? அதென்ன உண்மையான தமிழன்; பொய்யான தமிழன்; உண்மையும், பொய்யும் கலந்த தமிழன் என்றெல்லாம் வித்தியாசம் உண்டா என்ன? என்று பூணூலுக்கே உள்ள குயுக்தியுடனும், சேட்டையுடனும், கேவலப்படுத்தும் நோக்கத்துடனும் எழுதி இருக்கிறார் திருவாளர் சோ.
அவர் தமிழராக இல்லாததால் (வெளியில் அப்படி சொல்ல மாட்டார்கள்) இப்படியெல்லாம் இஷ்டத்துக்கு எழுதக் கூடிய வசதி இருக்கிறது.
தமிழ் பேசுவதால் தமிழன் ஆக மாட்டார் என்று கழகம் சொல்லுவது எவ்வளவுத் துல்லியமானது என்பது - இப்போதாவது நமது அப்பாவித் தமிழர்கள் புரிந்து கொண்டால் சரி.
இதுவே பார்ப்பனர் சம்பந்தப்பட்ட பிரச்சினையாக இருந்தால், சங்கரமடம் பிரச்சினையாக இருந்தால் இந்தக் கிண்டல், கேலி. நையாண்டி, விஷமம் இருக்குமா என்பதைத் துக்ளக்கைக் காசு கொடுத்து வாங்கும் நண்பர்கள்தான் சிந்திக்க வேண்டும்.
இப்பொழுது மட்டுமல்ல; தமிழ், தமிழர் என்று சொன்னாலே அக்ரகாரவாசிகளுக்கு அக்னிக் குண்டத்தில் விழுந்தது போலத்தான்.
கேள்வி: பெங்களூரில் திருவள்ளுவர் சிலை திறக்கப்படுவதன் மூலம் தமிழர் இடையே நல்லுறவு நல்லிணக்கம் ஏற்படும் என்று கர்நாடக முதல்வர் எடியூரப்பா கூறியுள்ளாரே
சோ பதில்: நல்லுறவா? நல்ல உறவுதான். யாராவது கன்னட வெறியர்கள் ஒரு சமயம் பார்த்து அந்தச் சிலையை அவமதிக்காமல் இருந்தால் போதுமே! (துக்ளக் 19.8.2009). புரிகிறதா?
கேட்ட கேள்வி என்ன? சோவின் பதில் என்ன?
ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா?
நீண்ட காலமாக பெங்களூரில் திறக்கப்படாமல் இருந்த திருவள்ளுவர் சிலையை திறப்பதற்கு எடியூரப்பா ஒத்துக் கொண்ட ஆத்திரம் இதில் பிரதிபலிக்கவில்லையா?
அவருடைய நோக்கம் திருவள்ளுவர் சிலையை அவமதிக்க வேண்டும் என்பதே - அதனை வேறொரு முறையில் எழுதுகிறார் தூண்டுகிறார் - அவ்வளவுதான்.
சென்னை மாநகரில் வணிக விளம்பரங்கள் தமிழில் எழுதினால்! இது என்ன மொழி நக்சலிசம் (துக்ளக் 15.9.2010) என்று எழுதிடவில்லையா?
அதே நேரத்தில் சமஸ்கிருதத்தைப்பற்றிச் சொல்லிப் பாருங்கள். கோயிலில் வழிபாட்டு மொழியாக சமஸ்கிருதம் இருக்கக் கூடாது என்று சொல்லிப் பாருங்கள் - அடேயப்பா பூணூல் துருத்திக் கொண்டு வந்து தண்டால் எடுக்கும். தமிழில் பாடினால் பொருள் இருக்கும். ஆனால், புனிதம் இருக்காது. மொழிக்கு முக்கியம் அல்ல - சமஸ்கிருத ஒலிக்குத் தான் முக்கியம் (துக்ளக் 18.11.1995). கடவுளுக்குக்கூட மொழி ஆசாபாசம் ஒலி ரசனைகள் உண்டாம்!
தமிழ் என்றால் அதற்கொரு விளக்கம் சமஸ்கிருதம் என்றால் சுற்றி வளைத்து அதற்கொரு வியாக்கியானம்!
உண்மையான தமிழன் யார்? பொய்யான தமிழன் யார்? என்று கேள்வி கேட்கிறாரே திருவாளர் சோ அதற்கான விடை இந்த இடத்தில் விளக்கமாகக் கிடைத்து விட்டதா இல்லையா?
இந்தப் பதிலில் இன்னொன்றையும் அதென்ன உண்மையான தமிழனின் கலாச்சாரம்?
அதுதான் மேற்கத்திய கலாச்சாரத்தைக் கடைப்பிடிக்க ஆரம்பித்து விட்டோமே என்று கேள்வி எழுப்புகிறார்.
மேற்கத்திய கலாச்சாரத்தை சோ கூட்டம் கடைப் பிடித்தாலும் - ஆவணி அவிட்டத்தை அனுஷ்டிக்காமல் இருக்கிறதா? பூணூலைப் புதுப்பிக்காது இருக்கிறதா?
திருமதி சிவசங்கரிக்குப் பதில் சொன்னாரே - நினைவிருக்கிறதா? சோ கேட்ட இதே கேள்வியைத் தான் தமிழர் தலைவரிடமும் கேட்டார் சிவசங்கரி.
கேள்வி: தமிழர் பண்பாடு தமிழர் பண்பாடு என்று அடிக்கடி சொல்கிறீர்களே, அப்படி என்றால் என்ன?
தமிழர் தலைவர் பதில்: இதுஒரு நல்ல கேள்வி. தாயை மகனும், மகளைத் தகப்பனும் போடி, வாடி என்று சொல்ல மாட்டோம் - அதுதான் தமிழர் பண்பாடு (குமுதம் 22.121983) என்று சொன்னதுதான் திருவாளர் சோ ராமசாமிக்கும் பதிலடி!
கொலை வழக்கில் சிக்கி சிறைச்சாலை வரை சென்று வந்த ஒருவரை ஜெகத் குரு என்று சொல்லும் இனப்பற்று பார்ப்பனர்களே, உங்களுக்கு இருக்கும் பொழுது, தமிழர்களுக்குத் தமிழ்ப் பற்றோ தமிழன் என்ற இனப் பற்றோ இருக்கக் கூடாதா?
இன்னும் பேசுங்கள் - இப்படியே எழுதுங்கள், அப்பொழுதாவது தமிழனின் தடித்த தோலுக்குச் சுயமரியாதை உணர்வு வருகிறதா என்று பார்ப்போம்!
- மின்சாரம்
Read more: http://viduthalai.in/page1/85891.html#ixzz3B59CpAoh
அடிமைப்படக்கூடாது...
உழைத்தவன் உழைப்பின் பயனை அடையவேண்டுமானால் - இப்படி யாகம், சாத்திரம், வேதம், மோட்சம், கர்மம், முன்ஜென்மம், கடவுள் செயல் என்கின்ற பித்தலாட்டங்களுக்கு அடிமைப்படக் கூடாது.
- விடுதலை, 26.2.1968
Read more: http://viduthalai.in/page1/85896.html#ixzz3B59Z1Xsb
இந்தியா என்பது இந்துஸ்தானா? ஆர்எஸ்எஸ் தலைவருக்கு, சீத்தாராம் யெச்சூரி பதிலடி!
புதுடில்லி, ஆக. 15_ -மாநிலங் களவையில் புதனன்று உள்துறை அமைச்சகத்தின் செயல்பாடுகள் மீதான விவாதத்தில் பங்கேற்று சீத்தாராம் யெச்சூரி பேசியதாவது:
உள்துறை அமைச்சகத்தின் புள்ளி விவரங்களின்படி 2013இல் 823 வகுப்புவாத வன்முறை நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன. இப்போதும் என்ன நடந்து கொண்டிருக்கிறது? உத்தரப் பிரதேசத்தில் மட்டும் 2013இல் 247 வன்செயல்கள் நடந்துள்ளன. 2014இல் ஏப்ரலுக்கும் ஜூனுக்கும் இடையில் 149 வகுப்புவாத மோதல்கள் நாடு முழுவதும் நடந்துள்ளன. சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெறவிருக்கும் தொகுதிகளில்தான் வகுப்புவாத மோதல்கள் அதிகரித்துள்ளன. இந்த அரசு ஆட்சிப்பொறுப்பை ஏற்ற மே 16க்குப் பின்னர், உத்தரப்பிரதேசத்தில் மட்டும் 605 வகுப்புவாத வன்செயல்கள் நடந்துள்ளன. இவற்றில் மூன்றில் இரு பங்கு நிகழ்வுகள் சட்டமன்றத்திற்கான இடைத்தேர்தல்கள் நடைபெறும் 12 தொகுதிகளில் நடந்துள்ளன. இதே போன்றே சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெறவிருக்கும் பீகாரிலும் நடை பெறுவதாக செய்திகள் வருகின்றன.
தேர்தல்களில் வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கத்துடன் இவ்வாறு மதவெறித் தீ விசிறிவிடப்படுகிறது. இது நாட்டின்ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட் டுக்கும் உதவாது.ஆர்எஸ்எஸ் தலைவர் கட்டாக்கில் ஒரு கூட்டத்தில் பேசிய பேச்சு செய்தித்தாள்களில் வெளியாகி யுள்ளது. சென்ற ஞாயிறு அன்று, இங்கிலாந்தில் வசிப்பவர்கள் ஆங்கி லேயர்கள் என்றால், ஜெர்மனியில் வசிப்பவர்கள் ஜெர்மனியர்கள் என்றால், அமெரிக்காவில் வசிப்பவர்கள் அமெரிக் கர்கள் என்றால், இந்துஸ்தானில் வசிப்பவர்கள் மட்டும் ஏன் இந்துக்களாக அறியப்படக்கூடாது என்று பேசி யிருக்கிறார். அனைத்து இந்தியர்களின் கலாச்சார அடையாளம் இந்துத்துவா. நாட்டில் இன்றையதினம் வசிப்போர் அனைவரும் இந்த மாபெரும் கலாச்சார மரபின் வழி வந்தவர்களாவர் என்று அவர் மேலும் பேசியிருக்கிறார்
.மாநிலங்களின் ஒன்றியம் இந்தியா
நம்முடைய அரசியல் நிர்ணய சபையில் நீண்ட நெடிய விவாதத்திற்குப் பின்னர் உருவாக்கப்பட்ட நம்முடைய அரசியலமைப்புச் சட்டத்தினை மதச்சார்பற்ற ஜனநாயக அடித்தளத்தின் மீதுதான் நிறைவேற்றியிருக்கிறோம். நமது நாடு இந்துஸ்தானா அல்லது பாரதமா அல்லது பரதவர்ஷாவா அல்லது பரதகண்டமா - எப்படி அழைப்பது என்பது குறித்து அரசியல் நிர்ணய சபையில் நீண்ட நெடிய விவாதமே நடந்தது. அரசியல் நிர்ணயசபையில் நடைபெற்ற விவாதங் களை முழுமையாக பார்த்தோமானால், இறுதியாக , 1950 ஜனவரி 26 அன்று அரசியலமைப்புச் சட்டத்தின் 1ஆவது பிரிவில் கூறியுள்ளபடி, இந்தியா, அதாவது பாரத், மாநிலங்களின் ஒன்றி யமாக இருக்கும், என்பதை நாமனை வரும் ஏற்றுக் கொண்டிருக்கிறோம்.
பாரத் என்றால் என்ன என்பது குறித்தும் இந்த அவையில் பல முறை நாம் வரையறுத்திருக்கிறோம். பாரத் அல்லது பாரதம் என்பதுதனிப்பட்ட எந்தவொரு மதத்திற்கோ, ஒரு சாதிக்கோ, ஓர் இனத்திற்கோ, ஓர் இனக்குழுவினருக்கோ சொந்தமான தல்ல, மாறாக அது மனிதகுலத்தின் முன்னேறிய பல்வேறு நாகரிகங்களின் கலவையால் உருவான ஓர் அற்புதம். இங்கே அனைத்து இனத்தினரும் பரஸ்பரம் கூடிப் பழகி வருகின்றனர். அனைத்துக் கலாச்சாரங்களும் ஒன்றுடன் ஒன்று இணைந்தும் பிணைந்தும் இந்தியா என்னும் சிந்தனையை உருவாக்கி இருக்கின்றன. இன்றையதினம் அத்தகைய சிந்தனைக்கு அச்சுறுத்தல் வருமானால், அது மிக மிக ஆபத்தான ஒன்று. அதனை நாம் நம் நாட்டில் அனுமதித்திடக்கூடாது.
நமது நாடு எல்லாவகைகளிலும் முன்னேற வேண்டும் என்று விரும்பு கிறோம், நமது நாடு பொருளாதாரத்தில் முன்னேற வேண்டும் என்று விரும்பு கிறோம். நமது நாடு ஜி-20எனப்படும் முன்னேறிய நாடுகளின் கூட்டமைப்பில் அமர வேண்டும் என்று விரும்புகிறோம். இவைஅனைத்துக்கும் நாம் ஆசைப் படுகிறோம். ஆனால், நாட்டின் ஒற் றுமையும் ஒருமைப்பாடும் சீர்குலையு மானால் இவை அனைத்தும் நாசமாகி விடும். குறுகிய தேர்தல் ஆதாயத் திற்காக அத்தகைய உயர்ந்த சிந் தனையை அழித்து விடாதீர்கள். இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி பேசினார்.
Read more: http://viduthalai.in/page1/85901.html#ixzz3B59hxBSo
ஜாதிப் புழுக்கள்!
கல்வி என்பது தண்ணீர் அதைச் சமூகமென்னும் பெரு மரத்தின் வேரில் ஊற்றினால் நம் வேலை ஆகி விட்டது என்று நினைத்தேன். ஆனால், இந்த மரத்தின் வேரிலுள்ள ஜாதி வேற்றுமையும், கெட்ட எண்ணமும், பணத்துக்கு அடிமைத்தனமாகிய புழுக் களா அதை வளர விடப் போகின்றன? இந்த புழுக்கள் சாக வேண்டும்.
- காண்டேகர்
Read more: http://viduthalai.in/page1/85890.html#ixzz3B5Aexenn
சிந்தனைக்குத் தடை
பகுத்தறிவுக்கு எதிரிகள் நம்நாட்டில் தான் எப்பொழுதும் இருந்து கொண்டு வருகிறார்கள் என்பதில்லை. உலகெங்கும் மதத்தரகர்களின் தாக்குதல்களுக்கு பகுத்தறிவாளர்கள் இலக்காகிக் கொண்டே இருந்துவர நேர்ந்துள்ளது. சுயசிந்தனையாளர்கள் கிளர்ந்தெழாமல் மதப்பிடியில் சிக்கித் தவிக்க நேரிட்டது.
ஒரு சுய சிந்தனையாளன் என்பவன் யார் என்று பொருள் கூறுமிடத்து மதத்தை மறுப்பவன்; நாத்திக வாதி என்று அகராதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. மதத்தின் கோரப்பிடியில் உலகின் மிகப்பெரும் சுயசிந்தனையா ளர்கள் எல்லாம் சிக்கி உழன்று விடுபட பெரும் பாடுபட நேர்ந்தது.
பெர்ட்ரண்ட் ரஸ்ஸலின் தந்தை சிறு குழந்தையான ரஸ்ஸல் மூட நம்பிக்கை இல்லாதவராக வளர இரண்டு சுயசிந்தனையாளர்கள் (பகுத்தறிவாளர்கள்) அவரை வளர்த்து ஆளாக்க வேண்டும் என்று உயில் எழுதி வைத்து விட்டு மறைந்தார்.
அதற்காக இரண்டு சிந்தனையாளர் களையும் நியமித்தார். ஆனால், இவ்வாறு நியமித்தது செல்லாது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்த தோடு கிறிஸ்து மத நம்பிக்கையின் அடிப்படையில் தான் அவரை வளர்த்து வர வேண்டும் என்றும் ஆணையிட்டது.
Read more: http://viduthalai.in/page1/85890.html#ixzz3B5AmCbyN
தந்தை பெரியார் அறிவுரை சீர்திருத்தக்காரர்கள் உயிர்துறக்க தயாராய் இருக்க வேண்டும்!
ஜாதி வித்தியாசமோ, உயர்வு தாழ்வோ கற்பிக்கின்ற பத்திரிகைகளைப் படிக்கக் கூடாது என்று சொல்லி விட வேண்டும். மீறிப் படிக்க ஆரம்பித்தால் அதைப் பறிமுதல் செய்து விடவேண்டும். உயர்வு - தாழ்வு வித்தியாசம் முதலி யவை கொண்ட மடாதிபதிகளையெல்லாம் சிறையில் அடைத்துவிட வேண்டும். பொது ஜனங்கள் கிளர்ச்சி செய்தால் மடாதிபதிகளைத் தீவாந்திரத்திற்கு அனுப்பிட வேண்டும்.
சுவாமிகளுக்குள்ள நகைகள், வாகனங்கள், பூமிகள் எல்லாவற்றையும் பறிமுதல் செய்து அவைகளை விற்றுப் படிப்பில்லாதவர்களுக்குப் படிப்பும், தொழில் இல்லாதவர்களுக்குத் தொழிலும் ஜீவன மும் ஏற்படுத்த உபயோகப் படுத்தி விட வேண்டும்.
இதுபோன்ற, காரியங்கள் செய்யத்தக்க உரம் கொண்ட வீர ஆட்சிக்கு நாட் டைக் கொண்டு வரவேண்டும். அப்பேர்ப்பட்ட வீரர்களின் ஆட்சிக்குட்பட்ட நாடுகள் தான் இன்று சுயமரியாதையையும் சீர்திருத்தமும் பொலிந்து விளங்குகின்றன.
அப்பேர்ப்பட்ட வீர ஆட்சிக்கு நாட்டைக் கொண்டு வரவேண்டுமானால் அநேக சீர்திருத் தக்காரர்கள் உயிர் துறக்கத் தயாராக இருந்து கொண்டு பாமர மக்களிடையில் உண்மையைப் பரப்ப முன்வர வேண்டும்
(இச்செய்தி 8.7.76 விடுதலை இதழிலிருந்து சென்சாரால் வெட்டப்பட்டதாகும்).
Read more: http://viduthalai.in/page1/85892.html#ixzz3B5B0RwY3
மூவரும் முழுப் பொய்யர்களே!
ஆசிரியருக்கு கடிதம் 15.10.78 ஆனந்த விகடனில் இருவரும் ஒரே தொழில் என்ற தலைப்பில் (பக்கம் 93) ஓடத்தில் ஏற்றிச் சென்ற தற்கான, கூலியை ராமன் கொடுக்க குகன் வாங்க மறுத் தான் என்று வாரியார் கூறியதைக் கேட்க நகைப்புத்தான் ஏற்பட்டது. ஏனெனில் அயோத்தியை விட்டு அடவிக்குச் செல்லும்போது ராமன், லட்சுமணன், சீதை மூவரும் அணிந்திருந்த ஆடையாபரணங்களை அந்தணர்களுக்கு அளித்து விட்டு மர உரிதரித்து சென்றான் என்று கம்ப ராமாயணத்தில் எழுதி இருக்கின்றது.
கள்ளுக்கடை மயக்கத்தில் கவிதைகள் எழுதி கம்பனார் கானகத்தில் கனமான மூட்டையை அனுமான் கொடுக்க, அம்மூட்டையில் உள்ள ஆடையாபரணங்கள் ராவணன் எடுத்துச் சென்ற சீதையின் பொருளே என்று விளக்கியுள்ளன.
இதை படித்த தந்தை பெரியார், மர உரி தரித்து வந்த மூவர்களுக்கும் குறிப்பாக, சீதைக்கும், காட்டில் எப்படி ஆடையாபரணம் கிடைத்தது என்றும், அதிலும் சீதையைச் தேடச் சென்ற அனுமானிடம் கணையாழி கொடுத்தனுப்பியதும் - அதனைப் பெற்ற சீதையும் பதிலுக்கு தன்னுடைய கணையாழியை ராமனிடம் கொடுக்கும்படி அனுமானிடம் கொடுத்ததையும் பற்றி கேள்வி மேல் கேள்வி போட்டு கம்பனின் கயமையைப் பற்றி சொல்லியதை நாம் அறிவோம்.
அதுபோதாதென்று மேலும் கம்பனை பழிக்கவோ என்னவோ ஆனந்த விகடனைக் கொண்டு கம்பனை மேலும் பொய்யனாக்க வாரியார் ராமன் கூலி கொடுக்க, குகன் மறுத்தான் என்று சொல்லுவது கம்பனுடைய ஞாபக மறதியை மேலும் காற்றாடிபோல் பறக்கச் செய்கிறது. அயோத்தி விட்டு மூவரும் மர உரி மட்டும் மாட்டிக் கொண்டு வந்தவர்களுக்கு கூலி கொடுக்க என்ன இருந்தது? அப்படி இருந்தால் அயோத்தியில் இருந்து திருடி வந்தார்களா? ஏனெனில், எல்லாம் பரதன் சொத்து தானே.
அப்படி திருடி வந்தால் பஞ்சமா பாதகத்தில் ஒரு பாதகமல்லவா? ஆனதால் முன்னுக்குப் பின் முரணாக எழுதுவது முழுப் பொய்யல்லவா? ஆகவே கள்ளுண்டு கவிதைகள் எழுதிய கம்பனும் பொய்யன்! அக்கம்பனின் கவிதைகளை படித்து மோட்சம் போக எடுத்துச் சொல்லும் வாரியாரும் ஒரு பொய்யன்!! அதனை பிரமாதமாக வெளியிடும் ஆனந்த விகடனும் ஓர் பொய்யன்!!! ஆகவே மூவரும் மகா பொய்யர்கள் என்பது நன்கு தெரிகின்றதல்லவா?
ஆம்பூர் சீ.கோ.வெற்றியழகன், சென்னை
Read more: http://viduthalai.in/page1/85892.html#ixzz3B5BAPly5
சுவாமிஜிக்கு ஏன் இந்த வேலை?
அண்மையில் பம்பாய் வந்த ஒரு ஹாலிவுட் நடிகை பூனாவில் உள்ள ஆச்சார்யா ரஜ்னீஷை சந்திக்கச் சென்றார். பகல் முழுவதும் அவருக்கு பக்திமிக்க பல்வேறு உபதேசங்கள் கொடுக்கப்பட்டது.
இரவு வந்ததும் ஒரு இருண்ட குகைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கே அவரது உடைகளை அவிழ்க் கும்படி கூறினார்கள். நிர்வாணமாக இருந்த ஒரு குறிப்பிட்ட நபருடன் படுத்துக் கொள்ளுபடி கட்டாயப் படுத்தினார்களாம்.
ஆனால் நடிகை மறுத்து விட்டார். உடனே அவர் உடைகள் வலுக்கட்டாயமாக கிழிக்கப்பட்டன. அடுத்தது நடப்பதற்குள் அவர் தப்பி ஓடிவந்து பம்பாய் காவல்துறை யினரிடம் புகார் கொடுத்துள்ளார்.
ஆனால் இந்த ஆசிரமத்திற்கு நடிகர் வினோத்கன்னா தொடர்ந்து செல்வதாக கூறப்படுகிறது; எதற்காக?
முருகனின் கோவண பிரசாதம்!
காலஞ்சென்ற வெற்றிப்படத் தயாரிப்பாளர் ஒரு முருக பக்தர். அவர் முருகன் சிலையில் உள்ள கோவணத்தைக் கொண்டு வந்து பன்னீரில் நனைத்துக் குடிப்பாராம்.
அவரைப் போல் வெற்றிப்படம் தயாரிக்க வேண்டும் என்று நினைத்து சில படத்தயாரிப்பாளர்கள் முருகன் கோவண பிரசாதத்திற்கு அலைகிறார்கள்.
சினிமா ஏரியா, அய்யப்பன் ஏரியா
திரைப்பட உலகில் நடிகர்கள், தொழில்நுட்ப நிபுணர்கள், சான்ஸ் கிடைக்காத நடிகர்கள் எல்லாரும் மாலை போட்டு அய்யப்பன் விரதம் பிடிக்க ஆரம்பித்துள்ளார்கள்.
நடிகர்களுக்கு மட்டும் ஒரு விதி விலக்கு. அவர்கள் முகத்தை ஷேவ் செய்து கொள்ளலாம், பெண்களைத் தொடலாம்? சாமியே சரணம் அய்யப்பா!
(மூக்குத்தி வார இதழிலிருந்து தருபவர் தமி.
Read more: http://viduthalai.in/page1/85895.html#ixzz3B5BHawKJ
சமயலறைத் தத்துவம்
மிகவும் சாஸ்திரோத்தமனான இந்துவின் தினப்படி வாழ்க்கையில், அவன் மிகவும் கவலைப்படுவது, எங்கே சாப்பிடுவது, எங்கே சாப்பிடக் கூடாது, யார் கூட அமர்ந்து சாப்பிடலாம், யாரை விரட்டி விட்டு சாப்பிட வேண்டும் என்பவைகளைப் பற்றித்தான்.
அவனுடைய வாழ்வில் ஆத்மீக கவலைகள் எதுவும் இப்படி ஆட்டிப் படைப்பதில்லை. அவனுடைய சமூக வாழ்க்கையில் - சமையல் அறையின் விதிகளும் சட்டதிட்டங்களுமே ஆட்டம் போடுகின்றன.
-நேரு, 1960, பக்கம் 393-5
Read more: http://viduthalai.in/page1/85895.html#ixzz3B5BP75LU
இன்றைய ஆன்மிகம்?
ரமண ரிஷி
கடவுள் பக்தன்மீது கருணை கொண்டு அவ னது முன்னேற்றத்திற்குத் தக்கபடி வெளிப்படு கிறார். பக்தன் கடவுளை மனிதனென்று நினைத்து எதிர்பார்த்து நிற்கிறான். ஆனால், கடவுள், பக்த னுக்குள் இருந்து அவன் தவறுகளை உணர்த்தி நல்வழியில் செல்ல உதவுகிறார். - ரமணரிஷி
கொலைகாரனுக்கு எப்படி உதவுகிறார்? பக்தர்கள் தந்த கொள்ளைப் பணத்தை தனது உறவின ருக்கு எழுதி வைத்த இந்த ரமண ரிஷியையும் இப்படித்தான் வழி நடத்தினாரோ!
Read more: http://viduthalai.in/page1/85948.html#ixzz3B5BtDFlI
சிந்தித்துப் பார்
நீ கிணற்றுத் தவளையாக இருக்க விரும்புகிறாயா? அல்லது வேடந் தாங்கலில் வந்து இளைப்பாறிப் போகும் வெளிநாட்டுப் பட்சியாக இருக்க விரும்புகிறாயா? மனிதனே சிந்தித்துப் பார்.
_ (விடுதலை, 22.9.1967)
Read more: http://viduthalai.in/page1/85949.html#ixzz3B5CUCaZ3
68 ஆம் ஆண்டு சுதந்திர நாள்: பலவிடங்களில் பலவிதம்!
68 ஆம் ஆண்டு சுதந்திர நாள்:
பலவிடங்களில் பலவிதம்!
நாமக்கல்லில் கருப்புக் கொடியேற்றிய கிராம மக்கள்
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தை அடுத்துள்ள பாதரை கிராமத்தில் உள்ள அண்ணா நகர், எம்ஜிஆர் நகர் பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரு கின்றன. இவர்களில் பெரும்பான்மையோர் விசைத்தறி மற்றும் சாயப்பட்டறைகளில் வேலை செய்யும் கூலித் தொழிலாளர்கள் ஆவர்.
கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக இங்கு வசித்து வரும் இந்த பொதுமக்கள் அப்பகுதியில் உள்ள காலி நிலத்தை வழித்தடமாக பயன்படுத்தி வந்தனர். மேலும், போதிய கழிப்பறைகள் இல்லாத நிலையில் அந்த காலி யிடத்தை திறந்தவெளி கழிப்பிடமாகவும் பயன்படுத்தி வந்துள்ளனர்.
இந்நிலையில், அந்த இடத்தை ஒரு தனியார் ஆக்கிர மித்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து பல முறை புகார் தெரிவித்தும் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் தரப்பில் புகார் தெரி விக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தராத கிராம நிர்வாகத்தை கண்டித்து தங்களின் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் சுதந்திர தினத்தில் வீடுகளில் கருப்புக் கொடிகளை ஏற்றி வைத்து எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இதனால், அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது. வருவாய்துறை அதிகாரிகள் அப்பகுதி மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
கடலூரில் கருப்பு கொடி ஏற்றம்
கடலூர் சூரப்ப நாயக்கன் சாவடியைச் சேர்ந்த பார்த்திபன் (வயது 34) என்பவர், நேற்று காலை 9 மணி அளவில் தனது வீட்டில் கருப்பு கொடி ஏற்றியிருந்தார். அவர் கூறுகையில், கடந்த ஆக., 15 இல், அதிகாலை எனது வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்த நபர், வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த எனது மனைவி கழுத்தில் அணிந்திருந்த நான்கரை சவரன் தாலிச் சங்கிலியைப் பறித்துச் சென்றார். திருப்பாதிரிப்புலியூர் காவல் நிலையத் தில் புகார் செய்தேன். அவர்களும் வழக்குப் பதிவு செய்தார்களே தவிர, ஓராண்டாகியும் குற்றவாளியை கைது செய்யவில்லை. இதைக் கண்டித்து, சம்பவம் நடந்த நாளான சுதந்திர தினத்தை கருப்பு நாளாக கடைப் பிடிக்கும் வகையில் கருப்புக் கொடி ஏற்றினேன் என்றார்.
தகவலறிந்த திருப்பாதிரிப்புலியூர் காவல்துறையினர் நண்பகல் 12 மணி அளவில் பார்த்திபன் ஏற்றியிருந்த கருப்பு கொடியை அகற்றினர்.
கரூரில் கருப்பு கொடியேற்றி போராட்டம்
கரூர் அருகே சுதந்திர தின நாளில், சுதந்திரமாக இருக்க முடியவில்லை எனக் கூறி, வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கரூர் அருகே கிருஷ்ணராயபுரம் பகுதியில் ஊர் பிரச்சினை காரணமாக கடந்த மூன்று ஆண்டுகளாக சுமார் 10-க்கும் மேற்பட்ட குடும்பங்களை ஊர் மக்கள் ஒதுக்கி வைத்துள்ளனர். இதனால் எந்தவொரு பொதுநிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ள முடியவில்லை என பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் நாட்டில் சுதந்திரமாக இருக்க முடிய வில்லை என கூறி, பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை துறைமுகத்தில் தலைகீழாக ஏற்றப்பட்ட தேசியக்கொடி சென்னை துறைமுகத்தில் தேசிய கொடி தலைகீழாக ஏற்றப்பட்டதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை துறைமுகத்தில் வெள்ளிக்கிழமை காலை 7.30 மணிக்கு சுதந்திர தினத்திற்கான நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சென்னை துறைமுக பொறுப்புக் கழகத்தின் தலைவர் அதுல்யா மிஸ்ரா தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். அப்போது தேசிய கொடி தலைகீழாகப் பறந்ததால், நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து தேசியக் கொடி கீழே இறக்கப்பட்டு, மீண்டும் சரியாக ஏற்றப்பட்டது. செல்பேசியில் பேசியபடியே தேசியக்கொடி ஏற்றிய அதிமுக நகர்மன்றத் தலைவர்
நேற்று 68 ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. நாடெங்கிலும் தேசியக்கொடி ஏற்றப்பட்டது. சென்னை அனகாபுத்தூரில் பம்மல் நகராட்சி அதிமுக நகர்மன்ற தலைவர் இளங்கோவன் செல்பேசியில் பேசியபடியே கொடியேற்றி அவமரியாதை செய்தார்.
Read more: http://viduthalai.in/page1/85983.html#ixzz3B5CzG4DZ
தீண்டாமையும் பார்ப்பன உபாத்தியாயர்களும்
தீண்டாமையும் பார்ப்பன உபாத்தியாயர்களும்
விருத்தாஜலம் தாலுகா பெண்ணாடம் போர்டு எலிமெண்டரி பாட சாலையில் ஒரு பார்ப்பன தலைமை உபாத்தியாயர் இருப்பதாயும் அப்பள்ளிக் கூடத்தில் வாசிக்கும் ஆதிதிராவிட பிள்ளைகளை மேற்படியார் அதிகக் கொடுமையாகவும், கொஞ்சமும் இரக்கமின்றியும் நடத்துவதாகவும் பலர் நமக்குச் செய்திகளனுப்பி பத்திரிகையில் வெளியிடும்படி வேண்டினர். இவ்விஷயத்தை மேற்படி போர்டு அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்திப் பின்னர் தக்கது செய்யலாமென்ற முடிவின் பேரில் அவ்வாறே போர்டு அதிகாரிகளுக்கு நிலைமையை விளக்கி எழுதியிருந்தோம். அவர்களிட மிருந்து வந்த பதிலில் முன்னமே ஒரு தரம் அது சம்பந்தமாய் கவனித்திருப்பதாயும் மீண்டும் அதை விசாரித்து உண்மையறிந்து தக்க நடவடிக்கை எடுத்துக் கொள்வதாயும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேற்படி பாடசாலையில் உண்மையாய் நடப்பவை என்ன? ஆதி திராவிடப் பிள்ளைகள் எவ்வாறு நடத்தப் படுகிறார்கள், எவ்வளவு காலமாக இவ்விதம் நடை பெறுகிறது, அது சம்பந்தமாக மேலதிகாரிகள் எவ்விதம் கவனித்து என்ன பரிகாரம் செய்திருக்கிறார்கள் என்ற முழு விவரத்தையும் நமக்கு எழுதியனுப்பும்படி அவ்வூர் அன்பர்களைக் கேட்டுக் கொள்ளு கிறோம்.
- குடிஅரசு - துணைத்தலையங்கம் - 07.09.1930
Read more: http://viduthalai.in/page1/85965.html#ixzz3B5DB7t76
மலாய் நாட்டு வக்கீல்களின் தேசியம்
மலாய் நாட்டில் மலாக்கர் என்கின்ற பட்டணத்தில் கள்ளிக்கோட்டை திருவாளர் கே.பி. கேசவமேனன் அவர்கள் சுமார் 3, 4 ஆண்டுகளாக பிரபல பாரிஸ்டராக இருந்து வருகின்றார்கள். அவர் இப்போது தன்னை கு.ஆ.ளு. பாரிலும் வக்கீலாக சேர்த்துக் கொள்ள வேண்டுமென்று கோலாலம்பூர் சீப் ஜட்ஜிக்கு விண்ணப்பம் போட்டதில் அவரைச் சேர்த்துக் கொள்வதற்குக் கோலாலம்பூர் வக்கீல்கள் ஜட்ஜிக்கு ஆட்சேபணை சொன்னதாகவும் அவ்வாட்சேபணை என்ன வென்றால் திரு. கே. பி. கே. மேனன் அவர்கள் ராஜத் துரோக விஷயமாய் சிறைசென்றவர் என்று சொன் னார்களாம். அதற்குப் பாரிஸ்டர் திரு. கே. பி. கே. மேனன் அவர்கள் தான் வைக்கம் சத்தியாகிரகத் தில் ஈடுபட்டதால் சிறை செல்ல நேரிட்டதென்றும் மதராஸ் ஹைகோர்ட்டில் மிக்க செல்வாக்குப் பெற்ற பாரிடர் என்றும் எடுத்துக் காட்டி னாராம். இதற்காக கனம் ஜட்ஜ் அந்த விண்ணப்பத்தைப் பைசல் செய்ய 2 மாதம் வாய்தா தள்ளிப் போட்டிருப்பதாகத் தெரியவரு கின்றது. மலாய் நாட்டு வக்கீல்கள் இந்த விஷ யத்தில் இவ்வித ஆட்சே பனைக் கொண்டு வந்ததை நாம் பலமாகக் கண்டிக் கின்றோம். வக்கீல்கள் அரசியல் சம்பந்த மான கிளர்ச்சிகளில் ஈடுபடு வதும், தண்டனைகள் அடை வதும் அவர்களின் இப்போ தையத் தொழில் முறையில் முக்கிய அம்சமாகி விட்டது. இந்தியாவில் அனேக வக்கீல் கள் தண்டனை அடைந்து இப்பொழுது வக்கீல்களாகவே இருக்கின்றார்கள். இது ஒருபுறமிருக்க திரு. மு. ஞ. கேசவமேனன் அவர்கள் ராஜத் துவேஷ விஷயமாய்ச் சிறைச் சென்றவர் அல்லவென்று உறுதியாய்ச் சொல்லு வோம் சென்னை ஹைகோர்ட்டில் அவர் மிக்க பிரபல வக்கீலாக இருந்தவர். இந்தியாவில் பிரபலமாயிருந்த கனவான்கள் யாராவது தேசச் சேவையின் பலனாய் உண்மையான தியாகம் செய்தவர்கள் இருப்பார்களானால் அவர்களில் திரு. மு.ஞ.மு.மேனன் முதன்மையான வராவார். மலையாள தேச முழுமையும் மு.ஞ.மு. மேனன் என்றால் கண்களில் நீர் விடுவார்கள். அப்பேர்பட்ட உண்மையான தியாகியானவர். திருவாங்கூர் ராஜியத்தில் வைக்கம் என்னும் ஒரு பிரபல கோயில் உள்ள ஊரில் உள்ள பொதுத் தெருவில் ஈழவர்கள், நாடார்கள், முதலியவர்கள் கூட நடக்கக் கூடாது என்று தடைசெய்யப்பட்ட தெருவில் அவர்களுக்குத் தெருப்பாத்தியம் வாங்கிக் கொடுக்கச் செய்யப்பட்ட முயற்சியில் திருவாங்கூர் அரசர் என்னும் சுதேச ராஜாவால் 6 மாதம் தண்டிக்கப்பட்டு ஜெயிலிலும் மிக்க மரியாதையாய் நடத்தப்பட்டவர். அத்தண்டனையின் போது நாமும் அவரும் திருவாங்கூர் ஜெயிலில் ஒன்றாகவே தண்டனை அனுப் பவித்தவர்களாவோம். கடைசி யாக காலாவதி தீருமுன் எங்களை விடுதலை செய்து விட்டதோடு திரு. கே. பி. கே. மேனனை எதற் காகத் தண்டித் தார்களோ அந்த காரியமான வைக்கம் ரோடுகளை எல்லோரும் நடக்கும் படியாக உத்தரவு கொடுத்து விட்டார்கள்.
ஆகவே திரு. கே. பி. கே. மேனன் அவர்கள் செய்த காரியம் குற்றமா? அல்லது திருவாங்கூர் அரசாங்கம் அவரைச் சிறைபடுத்தினது குற்றமா? என்பதை யோசித்துப் பார்த்தால் விளங்காமல் போகாது.
ஆகவே இப்படிப்பட்ட திரு. மேனன் அவர்களை மலாய் வக்கீல்கள் சிலர் ஆட்சேபித் திருப்பதிலிருந்து அவர்களது தேசியமும், சமுக சீர்திருத்தமும், அரசியல் முற்போக்கு முயற்சியும் எப்படிப்பட்டதாயிருக்கும் என்பதை ஒருவாறு உணரலாம். நம்மைப் பொறுத்தவரை இவ்வித ஆட்சேபணைகள் அறியாமையினாலோ அல்லது பொறாமையாலோ தான் ஏற்பட்டிருக்க வேண்டுமென்று கருதுகின்றோம். இது வக்கீல் தன்மையின் பிறவிக் குணமாம் போலும்.
- குடிஅரசு - துணைத்தலையங்கம் - 03.08.1930
Read more: http://viduthalai.in/page1/85965.html#ixzz3B5DPnImS
தந்தை பெரியார் பொன்மொழி
மேல்ஜாதி - கீழ்ஜாதி என்கிற அமைப்பை ஒழிக்க வேண்டும் என்று நான் சொல்லும்போது மேல்ஜாதி - கீழ்ஜாதி என்கிற தன்மையினால் ஒரு கூட்டம் அடைந்திருக்கும் அதிகப் பங்கையும் உரிமையையும் - போக போக்கியத்தையும் - கீழ்நிலையில் இருந்து கேடு அடையும் மக்கள் நிலைமையையும் ஒழிக்க வேண்டும் என்ற தத்துவத்தில் தான் நான் ஜாதியை ஒழிக்க வேண்டும் என்று சொல்லுகிறேன்.
Read more: http://viduthalai.in/page1/85965.html#ixzz3B5DWCYqc
சாரதா சட்டம்
சாரதா சட்டம் பிறந்து அமலுக்கு வந்து 3 மாதம் ஆகி 4ஆவது மாதம் முடிவதற்குள்ளாகவே அதற்கு பாலாரிஷ்டம் வந்துவிட்டது. என்னவெனில் ராஜாங்க சபையில் சட்டத்தின் ஜீவ நாடியை அறுத்தெரியும் மாதிரியில் அதாவது பெண் களுக்கு 14 வயதிற்குள்ளும் ஆண்களுக்கு 18 வயதிற் குள்ளும் விவாகம் செய்ய மனசாட்சியோ குடும்ப நிலையோ அவசியப்பட்டால் அந்தபடி செய்ய சட்டத்தில் இடம் கொடுக்க வேண்டும் என்று ஒரு திருத்த மசோதா கொண்டுவரப்பட்டு அதற்குச் சர்க்கார் சலுகை காட்டி அம்மசோதாவை மாகாண கவர்மெண்டு களுடையவும் பொதுஜனங்களுடையவும் அபிப்பிராயம் தெரிவதற்காக வெளியில் விநியோகிக்க வேண்டும் என்று சர்க்காரரே ஒரு திருத்தம் கொண்டு வந்து நிறைவேற்றி வைத்திருக் கின்றார்கள்.
இந்தப் பிரேரேபணை சர்க்காரர் கொண்டுவந்ததால் அவர்கள் அதற்கு அனுகூலமாய் ஓட்டுக் கொடுத்து நிறைவேற்றிக் கொண்டதில் அதிசயமொன்றுமில்லை. ஆனால் இப்படிப்பட்ட திருத்தம் கொண்டுவர வேண்டிய அவசியம் சர்க்காருக்கு என்ன ஏற்பட்டது என்பதுதான் நாம் இப்போது யோசிக்க வேண்டியதாகும். ஏதோ ஒரு சாக்கைச் சொல்லி இந்த சந்தர்ப்பத்திலிருந்து தப்புவித்துக் கொள்ளலாம் என்பதே அவர்களது எண்ணமாய் இருந்திருக்க வேண்டும்.
சட்டத்திற்கு அனுகூலமாய் இருந்து திருத்த மசோதாவை தோற்கடிக்கச் செய்து விட்டால் இந்த ஒரு நெருக்கடியான சந்தர்ப்பத்தில் வைதீகர்கள் (பார்ப்ப னர்கள்) சட்ட மறுப்புக் காரர்களுடன் சேர்ந்து விடுவார்கள் என்றும் அப்படிக்கில்லாமல் ஒரு சமயம் திருத்த மசோதாவை நிறைவேறும்படி செய்துவிட்டால் சீர்திருத்தக் காரர்கள் சட்டமறுப்பு இயக்கத்தில் சேர்ந்து விடுவார்கள் என்றும் கருதியே தந்திரமாக நெருக்கடியைச் சமாளித்துக் கொள்ளவே இந்தத் தந்திரம் செய்திருக்க வேண்டும் என்று நினைக்கின்றோம். நிற்க. மனசாட்சியை உத்தேசித்து நடக்க ஒவ்வொரு வருக்கும் இடம் கொடுக்கும் படி சட்டத்தைத் திருத்துவதனால் இந்தியன் பீனல்கோடும் சிறைச் சாலைகளும் அழித்து பொசுக்கவேண்டும் என்றுதான் சொல்லுவோம். திருடனுடைய மனச்சாட்சி திருடத்தான் சொல்லும். அயோக்கியனுடைய மனசாட்சி அயோக்கியத்தனம் செய்யத்தான் சொல்லும். மூடனுடைய மனசாட்சி முட்டாள்தனமான காரியத்தைத் தான்செய்யச் சொல்லும். ஆகவே இவர்களுடைய இஷ்டப்படி எல்லாம் நடக்க இடம் கொடுப்பதனால் சட்டமும் தண்டனையும் எதற்காக வேண்டும்? என்று கேட்கின்றோம். ஆகவே சர்க்கார் சாரதா சட்ட விஷயத்தில் ஏதாவது தளர்ச்சியைக் காட்டுவார்களானால் அது அவர்களது கேட்டிற்கே அறிகுறியாகும்.
- குடிஅரசு - துணைத்தலையங்கம் - 20.07.1930
Read more: http://viduthalai.in/page1/85965.html#ixzz3B5DcRM9t
பெரியாரை கொச்சைப்படுத்தலாமா?
சேலம் - பெரியார் பல்கலைக் கழகத்தில் நடைப்பாதை மற்றும் துணைவேந்தர் பஙகளா ரூ.25 லட்சம் செலவில் மாற்றி அமைக்கப்படு கிறதாம்.
எதற்காகத் தெரி யுமா? இப்பொழுதுள் ளவை வாஸ்துப்படி சரி யானதாக இல்லையாம். வாஸ்து சாத்திரப்படி மாற்றி அமைக்கிறார் களாம்.
கட்டடம் ஒன்றும் பழுதுபட்டு விடவில்லை. சிறப்பாகத்தான் இருக் கிறது; புதிய துணை வேந்தராக வந்துள்ள சுவாமிநாதன் என்பவர் சிறப்பாக உள்ள துணை வேந்தர் பங்களாவுக்குள் சென்று குடியேறாமல் விருந்தினர் மாளிகை யிலேயே தங்கி உள்ளாராம்.
கட்டடத்தை மாற்றி அமைக்கும் பணியைக் கூட பொதுப் பணித் துறையிடம் ஒப்படைக்கா மல் தனியார் வசம் ஒப் படைக்கப்பட்டுள்ளதாம்.
எப்படி இருக்கிறது? தந்தை பெரியார் பெய ரால் ஒளிரக் கூடிய ஒரு பல்கலைக் கழகத்தில் தந்தை பெரியார் அவர் களின் கொள்கைக்கு முற்றிலும் விரோதமாக - வாஸ்து பார்த்து, நல்ல கட்டடத்தை இடித்து விட்டுக் கட்டுகிறார்கள் என்றால் இந்தக் கொடு மைகளை என்னென்று சொல்லுவது!
இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி (51A(h)) மக்கள் மத்தியில் விஞ்ஞான மனப்பான்மையை வளர்ப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமை என்று கூறப்பட்டுள்ளது.
ஆனால், இங்கு துணைவேந்தராக இருக்கக் கூடியவரே வாஸ்து பார்க்கும் மூட நம்பிக்கைவாதியாக இருந் தால், எங்குப் போய் முட்டிக் கொள்வது?
வாஸ்து என்றால் என்ன என்று விளக்கு வாரா துணைவேந்தர்? வாஸ்து சாத்திரப்படி கழிப்பறை கட்டலாமா?
வாஸ்து சாத்திரத்தில் கழிப்பறைக்கு இடம் உண்டா? ஆந்திர மாநி லத்தின் முதல் அமைச் சராகவிருந்த என்.டி. ராமராவ் தலைமைச் செயலகத்தின் வாச லையே மாற்றி அமைத் தாரே - விளைவு என்ன?
விளக்கெண் ணெய்க்கும் கேடாய் முடிந்ததே தவிர, பிள்ளை பிழைத்த பாடில் லையே! அதுவும் அரசு பணத்தை மூடநம்பிக் கையின் வாயில் போடலாமா?
பெரியார் பல்கலைக் கழக சிண்டிகேட் என்ன செய்கிறது? ஒருவர்கூட பெரியார் சிந்தனை உள்ளவர் கிடையாதா? விஞ்ஞான நோக்குடை யோர் யாரும் இல் லையா? மக்கள் கிளர்ச்சி வெடிக்கும் எச்சரிக்கை!
- மயிலாடன்
Read more: http://viduthalai.in/page1/85997.html#ixzz3B5Dty2NM
தலைவரின் பயணங்கள் - தமிழின் பெருமையை உணர்த்தட்டும்
ஆசிரியருக்குக் கடிதம் >>>
தலைவரின் பயணங்கள் - தமிழின் பெருமையை உணர்த்தட்டும்
அண்மையில் தலைவர் வீரமணி அய்யா அவர்கள் ஆந்திர மாநிலத்தில் அய்தராபாத்தில் நடைபெற்ற நீதியரசர் பி.எஸ்.ஏ.சாமி அவர்களின் ஆறாம் ஆண்டு நினைவு நாளில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றிய நிகழ்வினை இரண்டு பாகமும் படித்து மகிழ்ந்தேன்.
ஆந்திர மாநில நீதியரசர்கள், அறிஞர் கள், சமூக ஆர்வலர்கள் எப்படியெல்லாம் நம் தலைவரைச் சிறப்பித்து உரையாற்றினர் என்பதை அறிந்து பெருமைப்படுகிறேன். எப்பொழுமே ஆந்திர மாநில மக்களுக்கும், தமிழக மக்களுக்கும் காங்கிரஸ் பேரியக்க காலமாகட்டும் - ஜஸ்டிஸ் கட்சி காலமா கட்டும் அல்லது பொதுவுடைமை இயக்க காலமாகட்டும் ஏன் நம் திராவிட இயக்க காலமாகட்டும் நல்லுறவே நிலவி வந்துள்ளது.
பண்டைய வரலாற்றுக்குள் புகுந்தால் ஒரு காலத்தில் ஒரே இனமாக - ஒரே மொழி பேசி வந்தவர்கள்தான் தமிழர் - தெலுங்கர், கன்னடர், மலையாளிகள் என மாறி வேற்று இனத்தவரோ என நினைக்கும் அளவுக்கு மாற்றம் ஏற்பட்டுவிட்டது. அந்த புண்ணி யத்தைக் கட்டிக்கொண்ட மொழிதான் சமஸ்கிருதம் எனும் செத்த மொழியாகும். வடபுலத்திலிருந்து பிழைப்பை நாடி தென்புலம் வந்த ஆரியர்களை... வந்தாரை வாழவைக்கும் பண்பால் வரவேற்று தகுந்த உதவிகள் செய்தவர்களை பல வகையிலும் மூளைச் சலவை செய்து புனைகதைகளின் மகத்துவம் கூறி அறிவை மழுங்கடித்தனர். ஆர்வமாக கதை கேட்டு அயர்ந்திருந்த நேரத்தில் தங்களின் பண்பாட்டைத் திணித்தனர். தங்கள் செயல்பாட்டில் இருக்க வேண்டும் என்ற சுயநலத்தால் - நம்மவர்கள் பேசி வந்த மொழியை சிதைக்கலாயினர். அப்படி ஏற்பட்ட தெலுங்கு - கன்னடம் - மலையாள மொழிகள். தங்கள் சொந்த மொழிச் சொல்லை மறந்து வடமொழிச் சொல்லைக் கையாள முற்பட்டனர், பெருமைப்பட்டனர்.
உதாரணத்திற்கு சொல்ல வேண்டு மானால் தமிழில் நீர் என இருப்பது போன்றே தெலுங்கு நீலு என்பர் எனினும் (கண்ணீர் - செந்நீர் என இலக்கிய மொழியில் தெலுங்கிலேயே வார்த்தைகள் உண்டு) ஜலம் என பேச எழுத விழைந் தனர். கன்னடத்தில் நீர் என்றே உள்ளது. மலையாளம் வெள்ளம் என்பதும் - தமிழ்தான். தந்தை திரிந்து தன்றி என்பதை விட்டு பிதா ஏன் ஆனது. அம்மா - தாய் மறந்து மாதாவாக மாற்றம் ஏன்? இப்படித் தான் தேவையில்லாமல் வலியப் போய் வடமொழிச் சொற்களை ஏற்று சிதைந் துள்ளோம்.
தமிழ்நாட்டு அறிவாளிகள் மட்டும் கொஞ்சம் ஆபத்தை உணர்ந்து தூய தமிழ் - வடமொழி கலவாத தமிழ் என்ற திசை நோக்கி செயல்பட்டதால் தமிழ் தனித்தியங்க முடிந்துள்ளது. தனித்தமிழியக்கத்தின் செயல் பாடுகளால் ஓரளவு நிம்மதி பெற்றிருந்த நாம் அண்மையில் மய்ய அரசு அறிவித்த சமஸ்கிருத வார விழா அறிக்கையால் எழுச்சி பெற்று போர் முழக்கம் செய்துள் ளோம். நாம் வெற்றி பெறுவது உறுதி. வழக்கம் போல் அவர்கள் தோல்வியை தான் காண்பர்.
ஆனால் தமிழ் அளவுக்கு தெலுங்கு கன்னட, மலையாள மொழியினை தனித் தன்மை கொண்ட மொழியாக செயல் படுத்த இயலுமா எனில் சிரமமான காரியம். தமிழ் தவிர மற்ற மொழிகள். வடமொழி சாயலில் தான் க ச ட த ப ற எழுத்துக்களை கொண்டுள்ளன. வடமொழி இலக்கணமாக ஏக வசனம் - பஹ வசனம் என பேசுகின்றன, இவற்றை கண்டிப்பாக மாற்ற முடியும்.
அங்கு தமிழ்நாட்டுத் தலைவர்களான பெரியார் - மறைமலை அடிகள், சோம சுந்தர பாரதியார் - பாரதிதாசன் அண்ணா போன்று உருவாக வேண்டும். அப்படி உருவாக்கும் தன்மையை நம் ஆசிரியர் தலைவர் வீரமணி அவர்களால் கண்டிப் பாக முடியும். கால்டுவெல் செப்பனிட்ட பாதை உள்ளது. குதர்க்கம் பேசாத தமிழ்நாட்டு நல்ல உள்ளங்கள் வேண்டும். சமஸ்கிருத பெருமையை நாம் நினைத் தால் சமஸ்கிருத சாயலையே தென்னாட் டிலிருந்து துரத்த முயற்சி நடக்கிறதே என்று அவர்கள் அடங்க வேண்டும். ஆசிரியரின் அடுத்தடுத்த பயணங்கள் தனித்தெலுங்கு, தனி கன்னடம், தனி மலையாளம் என்ற இலக்கை நோக்கி செயல்படட்டும். எல்லாம் தமிழாகவே மீண்டும் என என்கனவினை இணைக்கிறேன்.
- வேலை. பொற்கோவன், வேலம்பட்டி
Read more: http://viduthalai.in/page1/86065.html#ixzz3B5FdWRJb
தனிச் சலுகை
ஏழைகள் வாழ்வு மலரவே சமதர்மம் விழைகிறோம். எல்லா வகுப்பினரும் சம வாய்ப்புப் பெறும் வரையில் திட்டமிட்டுப் பரம்பரையாய்த் தாழ்ந்துள்ள சமூகத் தினர்க்குத் தனிச் சலுகை தரப்பட வேண்டும். - (விடுதலை, 8.12.1967)
Read more: http://viduthalai.in/page1/86056.html#ixzz3B5FlE8ko
சிறுநீரக நோயை குணப்படுத்த மாதுளம் பழச்சாறு சாப்பிடுங்க
சிறுநீரக நோய்களைத் தீர்ப்பதற்கு மாதுளம் பழச்சாறு சிறந்தது என ஆய்வில் தெரியவருகிறது, இதற்காக டயாலிஸிஸ் செய்வதற்கு முன்பாக சில சிறுநீரக நோயாளிகளுக்கு மாதுளம் பழச்சாறு அல்லது புரதச்சத்து அதிகம் உள்ள பிளாஸ்போ பானம் கொடுத்து பரிசோதனை செய்யப்பட்டது. மாதுளம் பழச்சாறு சிறுநீரக பாதிப்பையும், பக்கவிளைவான இதய நோயையும், சாவு விகிதத்தையும் குறைப்பது தெரியவந்தது.
ஏனெனில், மாதுளம் பழச்சாறு அருந்தியவர்கள் உடலில் இருந்த தீங்கு விளைவிக்கும் பொருள்களை மாதுளம் பழச்சாறில் உள்ள ஆண்டி ஆக்ஸிடெண்டுகள் செயல் இழக்கச் செய்ததால் அவர்கள் நோயின் பாதிப்பு மட்டுப்பட்டதாக உணர்ந்தனர். மாதுளம் பழம் சாப்பிட்டால் ரத்தக் கொதிப்பு, கொழுப்புச்சத்து குறையும், ஆண்மை பெருகும், வெயிலால் ஏற்படும் தோல் சம்பந்தமான நோய்கள் கட்டுக்குள் இருக்கும் என ஏற்கெனவே கண்டறியப்பட்டுள்ளது. புராஸ்ட்ரேட் புற்று நோயை மாதுளம் பழம் குறைக்கும் என அமெரிக்காவில் நடத்தப்பட்ட மருத்துவ ஆய்விலிருந்து கண்டறியப்பட்டது நினைவுகூரத்தக்கது.
Read more: http://viduthalai.in/page1/86094.html#ixzz3B5Gd0ncc
இனிப்புக்கு முதலிடம் கொடுங்க...
திருமணம் மற்றும் நிகழ்ச்சிகளில் கடைசியாக நாம் பாயாசம் என இனிப்பு வகை உணவுகளை சாப்பி டுகிறோம். ஆனால் இது தவறான முறையாகும். இனிப்பு வகைகளையே முதலில் எடுக்கவேண்டும். நாம் சாப்பிடும் முன்பு பசி காரணமாக வாயு அதிகரித்து காணப்படும்.
அப்போது நாம் இனிப்புகளை உண்பதால் அது வாயுவை தணித்து விடும். குறிப்பாக பழங்களைச் சாப்பிடும் முன்பே உண்பது நல்லது. நமது உடல் தேவையான உணவை செரித்த பின்னர் எஞ்சிய உணவுகள் வயிற்றில் தங்கியிருக்கும். அப்போது பழங்கள் தங்கியிருந்தால் அவை அழுகி வேதியியல் மாற்றம் காரணமாக இதர நோய்களை உருவாக்கும்.
தண்ணீர் குடிக்கும் முறை: சிலர் சாப்பிடும் முன்பு தண்ணீர் குடிப்பார்கள். சிலர் சாப்பிட்ட அரைமணி நேரம் கழித்து தண்ணீர் குடிப்பார்கள். ஆனால், ஆயுர்வேத கூற்றுப்படி சாப்பிடும்போது இடையிடையே அளவோடு தண்ணீர் அருந்தவேண்டும்.
Read more: http://viduthalai.in/page1/86094.html#ixzz3B5GsDEFP
கண்ணில் தெரியும் புற்றுநோயின் அறிகுறி
புற்றுநோயை காட்டிக் கொடுப்பதில் கண்களுக்கு மிகப் பெரிய பங்குண்டு என்றால் நம்ப முடிகிறதா?
உடலின் எந்த பாகத்தில் புற்றுநோய் வந்தாலும், அதன் அறிகுறிகள் கண்களில் பிரதிபலிக்குமாம். ஆச்சரி யமான, அந்தத் தகவல்களைப் பகிர்ந்து கொள்கிறார் கண் சிகிச்சை நிபுணர் பிரவீண் கிருஷ்ணா. கண்களில் பூச்சி பறக்கிற உணர்வு, தண்ணீர் கசிவது, விழித்திரை பிரச்சினை... வயசானவங்களுக்கு வரக்கூடிய இதையெல்லாம் பெரும் பாலும் முதுமையின் அறிகுறிகள் என்று அலட்சியப்படுத் தறவர்கள்தான் அதிகம்.
வயதானால் பார்வை மங்குவதும், பூச்சி பறக்கிறதும் இயல்புதான்னு விட்டுவிடுவார்கள்.
ஆனால், அதெல்லாம் அவங்க உடம்பில் எங்கயோ புற்றுநோய் தாக்கியிருக்கிறதுக்கான அறிகுறியாக இருக்கலாம் என்று யாருக்கும் யோசிக்கத் தோன்றாது. நடுத்தர வயசுக்குப் பிறகு பெண்களுக்கு மார்பகப் புற்றுநோயும், ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோயும் தாக்குகிற வாய்ப்புகள் அதிகம். திடீர்னு தென்படற கட்டி, எடை குறையறது, கழிவறைப் பழக் கங்கள் மாறிப் போறது, இருமல், ரத்தத்தோட வெளியேறும் சளி... இப்படி புற்றுநோய்க்கான பொதுவான அறிகுறிகளைத் தாண்டி, கண்களிலேயும், அதைக் கண்டுபிடிக்கலாம்.
மனித உடம்பில் அதிகப்படியான ஆக்சிஜன் ரெட்டினா என்று சொல்கிற விழித்திரைக்குத்தான் போகிறது. அந்த ஆக்சிஜன், விழித்திரைக்குப் பின்னாடி உள்ள கோரா யிடு-ங்கிற பகுதி மூலமாகத்தான் விழித்திரைக்குப் போகும். உடம்போட ரத்த ஓட்டம், உடல் முழுக்க ஒன்றோடு ஒன்று இணைந்து போகும். அதனால், ரத்தத்தில் உள்ள புற்று நோய் செல்கள், கோராயிடு மூலமாக, விழித்திரைக்கு போகும். விழித்திரையில் தண்ணீர் கசிஞ்சு, விழித்திரை முன்னாடி வரும். திடீர் பார்வைக் குறைபாடுதான் இதற்கான அறிகுறி.
சிலருக்கு ‘non hodgkin's lymphoma - என்று சொல்லக் கூடிய ரத்தப் புற்றுநோய் இருக்கும். கண்களில் பூச்சி பறக்கிறது, வெளிச்சம் அதிகமாகத் தெரிவதையும் முதுமையோட அறிகுறிகளாகவும், மறதி, நடக்கும்போது ஏற்படுகிற பிரச்சினைகளை அல்சீமர் நோயோடவும் தொடர்புப்படுத்திப் பார்த்து, வேறு வேறு சிகிச்சைகளை எடுத்திட்டிருப்பாங்க. விழித்திரை நிபுணரால்தான் அதை சரியாகக் கண்டுபிடிக்க முடியும்.
பி ஸ்கேன் மூலமாக விழித்திரையைப் பரிசோதித்து, கோராயிடுல கட்டி இருக்கா, அது எங்கிருந்து வந்ததுங்கிறதையும் கண்டுபிடிப்பாங்க. பிறகு விழித் திரவத்தை எடுத்து சோதனைக்குட்படுத்தி, புற்றுநோய் இருக்கிறதா என்பதை உறுதி செய்து, அப்படி உறுதியானால், அதற்கான சிகிச்சைகளை ஆரம்பிக்க வேண்டும் என்கிறார் மருத்துவர் பிரவீண்.
Read more: http://viduthalai.in/page1/86092.html#ixzz3B5Gzixy6
பெர்னாட்சா
ஜார்ஜ் பெர்னாட்சா தந்தை பெரியார் போலவே 94 ஆண்டுகள் வாழ்ந்து மறைந்தவர் (1856-1950) மிகச் சிறந்த இலக்கியப் படைப்பாளர். ஆங்கிலத்தில் அவர் எழுதிய நாடகங்கள் காலங்கடந்து நிற்கக் கூடியவை. இலக்கியத் தொண்டுக்காக நோபல் பரிசு அளிக்கப்பட்டது (1925). நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவர் - பள்ளிப் படிப்பில் ஆர்வம் இல்லை - ஆனாலும், நூல்களைப் படிப்பதில் கட்டுக் கடங்கா ஆர்வம் கொண்டவர்.
பல எழுத்தாளர்களுக்கு ஏற்பட்ட அனுபவம் போலவே தொடக்கத்தில் அவர் எழுதிய எழுத்துகள் ஈர்க்கப்படவில்லை. விடா முயற்சியால் வெற்றி பெற்றார். ஆங்கில இலக்கியத்தில் நாடகப் பஞ்சம் என்ற விமர்சனத்தை வீழ்த்தும் வகையில் அரிய சாதனைகளைப் படைத்தவர் ஆவார். 50-க்கும் மேற் பட்ட நாடகங்களை எழுதினார்.
புராண மய்ய கருத்துகளைத் தூக்கி யெறிந்து சமூக மாற் றத்துக்கான கருத்து களை, சமூகச் சிக்கல்களை மய்யப் படுத்தி நாடகங்களைத் தீட்டினார். கருத்தும், வசீகர நடையும் காந்தமாக மக்களை ஈர்த்தது. இசை, நாடகங்களைத் திற னாய்வு செய்வதில் விற்பன்னர் என்ற பெய ரெல்லாம் இவருக்கு வந்து சேர்ந்தது. நல்ல பேச்சாளராக மிளிர வேண்டும் என்ற ஆசை அவருக்கு உண்டு. ஆனாலும், சபைக் கோழைத்தனம் என்பது அவரைப் பிடித்து உலுக்கியது. தானாகப் பேசிக் கொண்டு போக ஆரம்பித்தார். அதன்பின் கூட்டம் உள்ள இடத்தில் உரக்கப் பேச ஆரம்பித்தார். அதன் விளைவு தலைசிறந்த ஆங்கிலப் பேச்சாளர் என்ற புகழின் உச்சியில் பளபளப்பாகப் பறந்தார்.
மிகுந்த நகைச்சுவை உணர்வைக் கொண்டவர். பேச்சிலும், எழுத்திலும் அவை போட்டி போடும். கிறித்துவக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தாலும், கார்ல் மார்க்சின் தத்துவம் இவரைக் கவர்ந்தது. அமைதி வழியில் சோசலிசக் கொள்கை களைப் பரப்புவதற்காக நிறுவப்பட்டிருந்த ஃபேபியன் கழகத்தில் (திணீதீவீணீஸீ ஷிஷீநீவீமீஹ்) சேர்ந்தார். பெர்னாட்சாவைப்பற்றி ஏராள மான துணுக்குகளும், தகவல்களும் உலகம் பூராவும் பரவியுள்ளன. பத்திரிகை யாளர் ஒருவர் உலகில் மிகச் சிறந்த அறிவாளி யார்? என்று ஷாவைக் கேட் டார். இரண்டாவது இடத்தில் ஸ்டாலின், மூன்றாவது இடத்தில் அய்ன்ஸ்டீன், முதல் இடத்தில் உள்ளவரின் பெயரைச் சொன் னால் என்னைத் தற்பெருமைக்காரன் என்று சொல்லிவிடுவீர்கள் என்றாராம்.
அழகு கொழிக்கும் பெண் ஒருவர் ஷாவைச் சந்தித்து, நான் உங்களைத் திருமணம் செய்துகொள்ள விரும்புகிறேன். நம்மிருவருக்கும் திருமணம் நடந்தால், என்னைப் போன்ற அழகும், உங்களைப் போன்ற அறிவும் கொண்ட குழந்தை பிறக்கும் அல்லவா?
என்றார் அந்தப் பெண்மணி. நீ சொல்வது சரியென் றாலும், என்னைப் போன்ற அழகும், உன்னைப் போன்ற அறிவும் கொண்ட குழந்தை பிறந்தால் என்னாவது? என்றாராம். பெர்னாட்ஷா எழுதி வைத்த உயில் புகழ் பெற்றது. சொத்தின் சரி பகுதியை அவரது நூலகத்திற்கு எழுதி வைத்தார்.
Read more: http://viduthalai.in/page-1/85561.html#ixzz3BDq1GIzq
செக்யூலரிஸம் என்றால் என்ன?
செக்யூலர் செக்யூலரிஸம் என்ற சொற்கள். இந்தியா சுயாட்சி என்பது அடைந்தது முதல் அதிகமாக அடிபட்டு வருகின்றன. இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திலும் இவை இடம் பெற் றுள்ளன.
இந்த செக்யூலர் செக்யூலர் கவர்ன் மெண்ட் என்பதற்கு ஆளும் குழுவினர் கூறும்பொருள், சமய சந்தர்ப்பத்துக் கேற்றபடி மாறுபடுகிறது.
மதமற்ற அரசாங்கம் என்று அடி நாளிலும்; பின்னர் மதச்சார்பற்ற அரசாங்கம் என்றும் கருத்து விளக்கம் தெரிவிக்கப்பட்டது.
குழப்பம்
ஆனால், அண்மையிலோ ஆட்சி பீடாதிபதிகள் மத விழாக்களிலும், கும்ப மேளாக்களிலும் கலந்துகொண்டதனை பொது மக்கள் உலகம் குற்றம் கூறவே, செக்யூலர் என்றால் மதங்கள் மீது வெறுப்புக் கொண்டு ஒதுக்கித் தள்ளுவ தல்ல- _ எல்லா மதங்கள் பாலும் சமரச நோக்குடன் நடந்து கொள்வதேயாகும் என்று பச்சோந்தி விரிவுரை கூறப் பட்டது. இது செக்யூலரிஸம் என்பதை குழப்பமாக்கி விட்டதுடன் -_ அதன் நற்பயனில் சந்தேகம் கொள்ளவும் செய்து விட்டது.
செக்யூலரிஸம் என்றால் ஆங்கில அகராதியில் தரப்பட்டுள்ள பொருள் -_ இந்த உலகானது -_ மறுவுலக சம்பந்தமில்லாதது என்பது. இதனை ஆரிய வடமொழியில் லோகாயிதம் என்கின்றனர். தமிழ் அகராதியிலும் இதே சொல் தரப்பட்டுள்ளது. இது பொருத்தமல்ல. ஏனெனில் இந்த லோகாயிதத்தின் தொடர்ச்சியாக பர மார்த்திகம் என்பதையும் பிணைத்துள் ளனர். அதாவது லோகாயித் வாழ்க்கையை அடுத்து பரமார்த்திகத்தை அடைய வேண்டுமென்றும் கருத்து விளக்கம் செய்து, லோகாயிதம் என்ப தன் உண்மைக் கருத்தையும் நோக்கத் தையும் பாழாக்கி விட்டனர். இந்தச் சொல்லுடன் மத இயலையும் கடவுளி யலையும் பிணைத்து விட்டனர்.
உண்மை விளக்கம்
செக்யூலரிஸம் என்பதன் உண்மை விளக்கப் பொருள் என்ன? இதன் மொழித்துறை வரலாறு என்ன? என்று அறிவியல்வாதிகளும் பகுத்தறிவுவாதி களும் ஆராய்ந்து பார்க்க வேண்டியுள் ளது. பகுத்தறிவியல் என்பது அறிவைப் பயன்படுத்தி மெய்யை உணர்தல். இவ்விதம் பகுத்தறிவு கொண்டு அறிந்த மெய்மைகளை நடைமுறையில் நடத்திக் காட்டுவதே செக்யூலரிஸம் ஆகும்.
இந்த செக்யூலரிஸம் என்ற ஆங்கிலச் சொல்லை முதன் முதல் கையாண்டவர் பகுத்தறிவு மேதை ராபர்ட் இங்கர்சால் அவர்களின் அறிவியல் தோழர்களில் ஒருவரான ஜார்ஜ் ஜாகப்ஹோலியோக் என்பவர். இவரும் குழந்தை வயதில் மதத் துறையில் வளர்க்கப்பட்டவர். அறிவு விரிவடைந்ததும் இந்த மதப் புரட்டு களையும் மதமடமைக் கொள்கைகளை யும் எதிர்த்துப் புரட்சிக் கொடி தூக்கி னார். நாத்திகர் என்ற குற்றத்துக்காக 1841_42ஆம் ஆண்டு வாக்கில் இங்கி லாந்தில் சிறை வாசமும் செய்தவர்.
நடைமுறையில் பரப்பியவர்
தோழர் ஜார்ஜ்ஜாகப் ஹோலி யோக்தான் முதன் முதல் தமக்கும் தம் கோட்பாட்டினருக்கும் செக்யூலரிஸம் என்ற தனி இடு குறிப்பெயர் இட்டுக் கொண்டார். இந்தப் பகுத்தறிவு நடைமுறை இயல் கழகங்களும் லண் டனில் பல இடங்களில் தோற்றுவித்து நடத்தினார். பகுத்தறிவு இயல் பத் திரிகைகள் பலநடத்தினார். பகுத்தறிவு பத்திரிகையாளர் கழகமும் ஏற்படுத் தினார். இதற்கு முதல் தலைவரும் இவரே.
பிரிட்டிஷ் செக்யூலர் யூனியன் என்ற பேரவைத் தலைவராகவும் இவர் பல்லாண்டுகளிருந்து பணியாற்றி, கோட்பாட்டையும், கழகத்தையும் பரப்பி, வலுப்படுத்தினார்.
இந்த செக்யூலரிஸம் என்ற சொல்லுக்கு இவர்தந்த விளக்கப் பொருள் இந்த உலக வாழ்க்கை சம் பந்தமான கடமை வழிக் கோட்பாடு அமைப்பு என்பதாகும்.
இங்கர்சால் விளக்கம்
மேதை இங்கர்சால் இந்தச் சொல்லுக்குத் தந்துள்ள விளக்கப் பொருள் இந்த உலக விஷயங்களில் மனிதப் பண்பாட்டுடன் மனித அனு தாபத்துடன் நடந்து கொள்ளும் நெறி; அறியும் உணர்ச்சி கொண்டவர்களின் நலனுக்கான ஒவ்வொரு விஷயத்திலும் நடப்பிலும் கருத்துச் செலுத்துவது; அனுபவ உலக ஆய்வு அறிவு என்பதற்கு மறுபெயரும் இதுவாகும். அதாவது அவரவர்கள் புரிந்து கொண்ட முறையிலும் விருப்ப வாய்ப்புகளுக்கு ஏற்ற வகையிலும் வாழ்க்கைத் துறையை செப்பனிட்டு அமைத்துக் கொள்ளச் செய்வது இது. இங்கு இந்த உலகில் அவரவர்களுக்கான நல் வீட்டை அமைத்துக் கொள்வதில் நம்பிக்கை கொள்ளச் செய்வது இந்த செக்யூ லரிஸம்
ஒவ்வொருவர் தனி முயற்சி ஊக்கம், அறிவு, ஆற்றல், ஆராய்ச்சி அனுபவம் ஆகியவற்றில் நம்பிக்கை கொள்ளச் செய்வது.
நாமறியாததும் அமானுஷியமானது மான ஏதோ ஒன்றில் (கடவுள்) நம் பிக்கை கொள்வதைத் தவிர்ப்பது இது. இந்த வாழ்க்கையில், இந்த உலகில் மகிழ்ச்சியுடன் நல்வாழ்வு அனைவரும் வாழ வேண்டுமென்பதே இதன் குறிக்கோள் என்பதாகும். இந்த பகுத்தறிவியக்க செக்யூலரிச மேதைகளின் விளக்கத்திலிருந்து இந்த செக்யூலர் -_ செக்யூலரிஸம் என்பன மத இயல், கடவுளியல் மறுப்புக் கோட்பாடு _- மதம் கடவுள் என்பதனை ஒழித்துக் கட்டுவது என்பது தெளிவுபடுகிறது.
Read more: http://viduthalai.in/page-1/85563.html#ixzz3BDqKQuz7
அமர்நாத் குகையில் அற்புத பனிலிங்கமா?
இமயமலையில் உள்ள அமர்நாத் குகையில் ஒவ்வொரு ஆண்டும் குறிப் பிட்ட சில மாதங்களில் அற்புத சிவலிங்கம் ஒன்று தோன்றி காட்சியளிக்கிறது என்றும், பின் அது தானே மறைந்து விடுகிறது என்றும், பக்தர்கள் போற்றிப் புகழ்ந்து வருகிறார்கள். ஆண்டுதோறும் இந்த அற்புத சிவலிங்கத்தைக் கண்டு வணங்கி வழிபாடு நடத்துவதற்காக பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் அந்த இடத்திற்கு புனிதப் பயணம் மேற்கொள்கிறார்கள். சிவனும் - பார்வதியும் வாழ்ந்த குகை அதுவென்றும், அந்தக் காலத்தில் பார்வதிதேவி வழிபாடு செய்து வந்த சிவலிங்கமே அதுவென்றும் கதைகள் புனைந்து பரப்பி வருகின்றார்கள். காஷ்மீரில் உள்ள வழிபாட்டு மய்யமான அமர்நாத்திற்கு பகல்ஹாமில் இருந்து கந்தன்வாடி வழியாக 38 கிலோமீட்டர் செல்ல வேண்டும். 12,729 அடி உயரத்தில் இந்த குகையில் இருந்து, புகழ்பெற்ற கோல்ஹாய் பனிச்சிகரம் அதிக தொலைவில் இல்லை. அமர்நாத்தில் உள்ள அந்தக் குகையில் குளிர்காலத்தின் தொடக்கத்தில் தோன்றுகின்ற ஒரு பனிக்கட்டியின் வடிவத்தைத்தான் சிவலிங்கமாகக் கருதி வழிபடுகிறார்கள். குகையின் மேல்புறத்தில் உள்ள ஒரு இடுக்கு வழியாக கசிந்து வருகின்ற தண்ணீர் துளித்துளிகளாக கீழே விழுகின்றன. பனிக் காலத்தின் கடும் குளிரில் தண்ணீர்ப் பனிக்கட்டியைத்தான் சிவலிங்கமாகக் கருதி வழிபட்டு வருகிறார்கள். நானும் ஒருமுறை பயணம் செய்து அந்தக் குகைக்குச் சென்றேன். அதைப் பார்வையிட்டேன். அப்போது அந்தப் பனிக்கட்டி லிங்கத்தை நிழற்படமும் எடுத்து வந்தேன். அந்த ஆண்டில் அப்போது நிலவிய குளிரின் தன்மைக்கேற்ப அமைந்த பனிக்கட்டியின் வடிவமே ஒளிப்படத்தில் பதிவானது.
குகைக்கு மேலேயிருந்து விழுகின்ற தண்ணீரின் அளவும், அன்றைய சூழ்நிலையில் உள்ள குளிரின் தன்மைக்கு ஏற்பவும் சிவலிங்கத்தின் வடிவம் சிறியதாகவோ, பெரியதாகவோ தோற்றம் அளிக்கிறது. ஜூன், ஜூலை மாதங்களில் சுற்றுப்புறச் சூழ்நிலை சூடாக - வெப்பமாக மாறும்போது பனிலிங்கம் உருகி இல்லாமலேயே போய்விடுகிறது. டிசம்பர், சனவரி மாதங்களில் அந்தப் பகுதி முழுவதும் பனியால் மூடப்பட்டு கிடக்கிறது. அமர்நாத் குகையில் உள்ள சிவலிங்கத்தின் அருகே ஒரு மின் வெப்பக் கருவியை (ஹீட்டர்) வைத்துப் பார்க்கட்டுமே. அப்போது தெரியும், அது கரைந்து தண்ணீராக மாறிப் போவதை. இப்படிப்பட்ட சிவலிங்கங்களை நாம் குளிர்சாதனப் பெட்டியில் (ஃபிரிஜ்)கூட உருவாக்கலாம்.
- ஜோசப் இடமருகு
குறிப்பு: 2014ஆம் ஆண்டில் அமர்நாத் சென்ற பக்தர்கள் 26 பேர் பலி!
Read more: http://viduthalai.in/page-1/86043.html#ixzz3BDsET3ht
வாய் நாற்றத்தால் அவதிபடுகிறீர்களா? இதோ இருக்குங்க மருந்து..!
நல்ல சுவையான உணவு களை உண்ட பின், வாயிலி ருந்து வரும் நாற்றத்தை தாங்கவே முடியாது. ஏனெனில் அதில் பூண்டு, வெங்காயம் போன்றவற்றை அதிகம் சேர்ப்பதால் நாற்றம் ஏற்படுகிறது.
ஆகவே நிறைய பேர் சாப் பிட்ட பின், வாய் நாற் றத்தைப் போக்க கடைகளில் விற்கும் நறுமணமிக்க பாக்கு களை, ஏதேனும் சுயிங் கம் களை வாங்கி மென்று கொண்டு இருப்பார்கள்.
ஆகவே அவ்வாறெல்லாம் கஷ்டப்பட்டு கடைகளில் விற்கும் வாய் நாற்றத்தைப் போக்கும் பொருட்களை வாங்குவதை விட, வீட்டில் இருக்கும் உடலுக்கு ஆரோக் கியத்தையும் தரும் ஒரு சில பொருட்களை மெல்ல லாமே!!!
ஏலக்காய்: உணவு உண்ட பின், பாக்குகளை போடாமல் அப்போது சமையலறையில் இருக்கும் ஏலக்காயை வாயில் போட்டு 20 நிமிடம் மென் றால், துர்நாற்றம் இல்லாமல் இருக்கும்.
கொத்தமல்லி: கொத்தமல்லியை சாப்பிட் டால் வாய் நாற்றம் போகும் என்பது நம்ப முடியாது தான். ஆனால் உண்மையில் கொத்தமல்லியை உணவுக்கு பின் சாப்பிட்டால் வாய் துர்நாற்றத்தை தடுக்கலாம்.
கிராம்பு/லவங்கம்: உணவில் காரம் மற்றும் மணத்திற்கு பயன்படும் பொருளான கிராம்பு மற்றும் லவங்கம், வாய் துர்நாற்றத் தையும் தடுக்கும்.
மேலும் ஆயுர்வேத மருத் துவத்தில் கிராம்பை சாப்பிட் டால், சளி மற்றும் இருமல் சரியாகிவிடும் என்று சொல் லப்படுகிறது.
அத்தகைய சிறப்பான கிராம்பு துர்நாற்றத்தை மட் டும் நீக்காமல், தொண்டை கரகரப்பையும் சரிசெய்யும்.
புதினா: நிறைய உணவில் மேலே அலங்கரிக்க புதி னாவை எதற்கு பயன்படுத் துகிறோம் என்று தெரியுமா? ஏனெனில் அதனால் உணவு நன்கு கலராக இருப்பதோடு, வாய் துர்நாற்றத்தையும் தடுக்கும் என்பதால் தான்.
கொய்யாப்பழம்: பழங் களில் ஒன்றான கொய்யா, வாய் துர்நாற்றதை நீக்கப் பயன்படுகிறது. ஆகவே வாய் நாற்றம் அடிக்கும் போது, ஆரோக்கியமற்ற பொருட் களை உண்பதை தவிர்த்து, இந்த கொய்யாப்பழத்தை சாப்பிட்டால், உடல் ஆரோக் கியமாக இருப்பதோடு, வாய் துர்நாற்றமும் நீங்கும்.
மாதுளை: அனைவருக் கும் மாதுளையின் நன்மைகள் தெரியும். இத்தகைய மாதுளை ஆரோக்கியமான இதயம் மற்றும் பளபளப்பான சருமத்தை தருவதோடு, இதன் விதையை சாப்பிட்டால், வாயில் நாற்றம் ஏற்படாமல் தடுக்கலாம்.
ஆகவே இனிமேல் கடைக்கு செல்லும் போது, இந்த பழத்தை வாங்கும் பழக் கத்தை வைத்துக் கொண் டால், வாய் துர்நாற்றத்தை தடுக்கலாம்.
ஆகவே மேற்கூறிய பொருட்களை சாப்பிட்டால்,
எந்த ஒரு பக்க விளைவும் ஏற்படாமல் இருப்பதோடு,
உடல் ஆரோக்கியமாக வும், வாய் துர்நாற்றம் இல்லாமலும் இருக்கும்.
Read more: http://viduthalai.in/page8/86412.html#ixzz3BDthW8Xk
வாய் நாற்றத்தால் அவதிபடுகிறீர்களா? இதோ இருக்குங்க மருந்து..!
நல்ல சுவையான உணவு களை உண்ட பின், வாயிலி ருந்து வரும் நாற்றத்தை தாங்கவே முடியாது. ஏனெனில் அதில் பூண்டு, வெங்காயம் போன்றவற்றை அதிகம் சேர்ப்பதால் நாற்றம் ஏற்படுகிறது.
ஆகவே நிறைய பேர் சாப் பிட்ட பின், வாய் நாற் றத்தைப் போக்க கடைகளில் விற்கும் நறுமணமிக்க பாக்கு களை, ஏதேனும் சுயிங் கம் களை வாங்கி மென்று கொண்டு இருப்பார்கள்.
ஆகவே அவ்வாறெல்லாம் கஷ்டப்பட்டு கடைகளில் விற்கும் வாய் நாற்றத்தைப் போக்கும் பொருட்களை வாங்குவதை விட, வீட்டில் இருக்கும் உடலுக்கு ஆரோக் கியத்தையும் தரும் ஒரு சில பொருட்களை மெல்ல லாமே!!!
ஏலக்காய்: உணவு உண்ட பின், பாக்குகளை போடாமல் அப்போது சமையலறையில் இருக்கும் ஏலக்காயை வாயில் போட்டு 20 நிமிடம் மென் றால், துர்நாற்றம் இல்லாமல் இருக்கும்.
கொத்தமல்லி: கொத்தமல்லியை சாப்பிட் டால் வாய் நாற்றம் போகும் என்பது நம்ப முடியாது தான். ஆனால் உண்மையில் கொத்தமல்லியை உணவுக்கு பின் சாப்பிட்டால் வாய் துர்நாற்றத்தை தடுக்கலாம்.
கிராம்பு/லவங்கம்: உணவில் காரம் மற்றும் மணத்திற்கு பயன்படும் பொருளான கிராம்பு மற்றும் லவங்கம், வாய் துர்நாற்றத் தையும் தடுக்கும்.
மேலும் ஆயுர்வேத மருத் துவத்தில் கிராம்பை சாப்பிட் டால், சளி மற்றும் இருமல் சரியாகிவிடும் என்று சொல் லப்படுகிறது.
அத்தகைய சிறப்பான கிராம்பு துர்நாற்றத்தை மட் டும் நீக்காமல், தொண்டை கரகரப்பையும் சரிசெய்யும்.
புதினா: நிறைய உணவில் மேலே அலங்கரிக்க புதி னாவை எதற்கு பயன்படுத் துகிறோம் என்று தெரியுமா? ஏனெனில் அதனால் உணவு நன்கு கலராக இருப்பதோடு, வாய் துர்நாற்றத்தையும் தடுக்கும் என்பதால் தான்.
கொய்யாப்பழம்: பழங் களில் ஒன்றான கொய்யா, வாய் துர்நாற்றதை நீக்கப் பயன்படுகிறது. ஆகவே வாய் நாற்றம் அடிக்கும் போது, ஆரோக்கியமற்ற பொருட் களை உண்பதை தவிர்த்து, இந்த கொய்யாப்பழத்தை சாப்பிட்டால், உடல் ஆரோக் கியமாக இருப்பதோடு, வாய் துர்நாற்றமும் நீங்கும்.
மாதுளை: அனைவருக் கும் மாதுளையின் நன்மைகள் தெரியும். இத்தகைய மாதுளை ஆரோக்கியமான இதயம் மற்றும் பளபளப்பான சருமத்தை தருவதோடு, இதன் விதையை சாப்பிட்டால், வாயில் நாற்றம் ஏற்படாமல் தடுக்கலாம்.
ஆகவே இனிமேல் கடைக்கு செல்லும் போது, இந்த பழத்தை வாங்கும் பழக் கத்தை வைத்துக் கொண் டால், வாய் துர்நாற்றத்தை தடுக்கலாம்.
ஆகவே மேற்கூறிய பொருட்களை சாப்பிட்டால்,
எந்த ஒரு பக்க விளைவும் ஏற்படாமல் இருப்பதோடு,
உடல் ஆரோக்கியமாக வும், வாய் துர்நாற்றம் இல்லாமலும் இருக்கும்.
Read more: http://viduthalai.in/page8/86412.html#ixzz3BDthW8Xk
சங்பரிவாரம், பா.ஜ.கட்சி, பா.ஜ.க. அரசு வெவ்வேறு வடிவங்கள் கொண்ட ஒரே மாதிரியான அமைப்புகளா?
சங்பரிவாரம், பா.ஜ.கட்சி, பா.ஜ.க. அரசு வெவ்வேறு வடிவங்கள் கொண்ட ஒரே மாதிரியான அமைப்புகளா?
இந்து ஆங்கில நாளேட்டின் தலையங்கம்
பா.ஜ.கட்சி ஆட்சியில் இருக்கும் போதெல்லாம், அதன் மீதான ராஷ்டிரிய சுயம் சேவக் சங்கத்தின் (ஆர்.எஸ்.எஸ்.) செல்வாக்கு அதிகமாகவே இருந்து வந்துள்ளது. இரு முறை மத்தியில் இக் கட்சி ஆட்சி அமைத்தபோது, ஆட்சி அதிகாரத்திலிருந்து விலகி இருப்பது போன்ற தோற்றத்தை அளிக்க சங்கம் சில நேரங்களில் தயாராக இருந்த போதிலும், கட்சி அமைப்பு விவகாரங் களில் கட்டுப்பாடு வைத்திருப்பதில் கவனமாக இருந்தது. எனவே, பா.ஜ. கட்சியின் தலைவராக புதிதாக நிய மிக்கப்பட்ட அமித் ஷா, அமைப்பின் தலைமைப் பொறுப்புகளில் சங்பரி வாரத்தினரையே நியமிப்பது என்ற முடிவெடுத்ததில் வியப்பேதும் இருக்க முடியாது. ஆர்.எஸ்.எஸ்.சின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் ராம் மாதவ் தற்போது பா.ஜ.கட்சியின் பொதுச் செயலாளராகவும், சங் கோட்பாட்டாளர் வினய் சஹஸ்ரபுத்தே துணைத் தலைவராகவும் நியமிக்கப்பட்டதுடன், கட்சியின் அமைப்புச் செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள நால்வரும் ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்கள் ஆவர். இவர்கள் பா.ஜ.கட்சிப் பணிகளை அதிக அளவில் ஆற்றியவர்கள் அல்ல. சங்பரிவார அமைப்புகளுடன் ஒரு குறிப்பிடத்தக்க தூரத்தை ஆர்.எஸ்.எஸ். கடைப்பிடித்து வந்த போதிலும், பா.ஜ. கட்சி மற்றும் பா.ஜ.க. மத்திய, மாநில அரசுகள் விவகாரங்களிலும், தங்களின் ஆணைகளை நடைமுறைப்படுத்துவதை உறுதிப் படுத்திக் கொண்டே வந்துள் ளது. அமைப்பு அளவிலான தனது பலத்தினாலும், அர்ப்பணிப்பு உணர்வு கொண்ட தொண்டர்களை ஒரு பெரும் எண்ணிக்கையில் கொண்டிருப்பதினா லும், பா.ஜ.கட்சியின் கோட்பாட்டு ஆசானாக மட்டுமன்றி, அதன் முதுகெ லும்பாகவும் ஆர்.எஸ்.எஸ். இருந்து வருகிறது. 2014 மக்களவைப் பொதுத் தேர்தலில் ஆர்.எஸ்.எஸ். மற்றும் அதன் துணை அமைப்புகளும் தங்களின் முழு பலத்துடன் பா.ஜ.கட்சியை ஆதரித்த துடன், உத்தரப் பிரதேசம், பிகார் போன்ற மாநிலங்களில் கட்சியை மறுபடியும் புத்துணர்வு பெறச் செய்வதில் அவர்களின் பங்களிப்பு மிகப் பெரிய அளவில் இருந்தது. பா.ஜ. கட்சி யும், குறிப்பாக உத்தரப்பிரதேச தேர்தல் கட்சி விவகாரங்களுக்குப் பொறுப்பேற்று கவனித்து வந்த அமித்ஷாவும் இந்த உண்மையை அங்கீகரித்து, கட்சியின் முடிவெடுக்கும் கட்டமைப்பில் ஆர்.எஸ்.எஸ். தலைவர்களை நியமித் திருப்பது இயல்பான ஒன்றே.
ஆனால் இதில் உள்ள பிரச்சினை என்னவென்றால், பா.ஜ.கட்சியின் மீது தனக்குள்ள செல்வாக்கை ஆர்.எஸ்.எஸ். எவ்வாறு பா.ஜ.க.அரசை ரிமோட் கன்ட்ரோல் மூலம் கட்டுப்பாட்டில் வைத்திருந்து பயன்படுத்திக் கொள்ளப் போகிறது என்பதுதான். பிரதமர் நரேந்திரமோடியின் நம்பிக்கையைப் பெற்று அவருடன் நெருக்கமாக இருப்பவர் கட்சியின் தலைவர் அமித்ஷா என்பதால், அரசமைப்பு சட்டத்திற்கு அப்பாற்பட்ட ஓர் அதிகார மய்யமாக அவர் செயல்படக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. இப்போது ஆர். எஸ்.எஸ். ஆட்களால் அதிக அளவில் பா.ஜ.கட்சி வழிநடத்திச் செல்லப்படுவதால், அரசின் மீதான பா.ஜ.கட்சியின் செல்வாக்கு அதிகரிக்கவே செய்யும். முடிவெடுப்பது என்பது அமைச்சரவை அளவிலும், நாடாளுமன்ற அளவிலும் மட்டுமே இல்லாமல், கட்சிக் கூட்டங்கள் மற்றும், சங் பரிவாரக் கூட் டங்கள் அளவிலும் நடைபெறுவதாக இருக்கக்கூடும். இந்துத்துவாதான் இந்தியாவின் அடையாளம் என்று ஆர்.எஸ்.எஸ்.தலைவர் மோகன் பகத் வெளியிட்ட அறிவிப்பின்படி பார்த்தால், பா.ஜ.கட்சியுடனான ஆர்.எஸ்.எஸ். அமைப்பு மற்றும் அதன் மூலமாக மத்திய அரசுடனான உறவுகளும் பற்றிய மாபெரும் கவலையை பொதுமக்களின் மனதிலும், குறிப்பாக சிறுபான்மை மத மக்களிடையேயும் தோற்றுவிக்கவே செய்யும். மக்களவையில் பா.ஜ.கட்சி பெற்றுள்ள பெரும்பான்மையின் அடிப் படையில் அல்லாமல், கருத்தொற்றுமை என்பதன் அடிப்படையிலேயே மத்திய அரசின் ஆட்சி இருக்கும் என்று பிரதமர் மோடி கூறிவருகிறார். ஆனால் இந்துத்துவாவை இந்தியத் தன்மை மற்றும் ஹிந்துஸ்தானிகளுடன் (இந்தி யர்கள்) சமப்படுத்தி மோகன் பகவத் வெளியிட்டது போன்ற அறிவிப்புகள், அறிக்கைகள், பிரிவினை உணர்வு கொண்ட பெரும்பான்மையினரின் செயல் திட்டத்திற்கு பா.ஜ,கட்சி திரும்புகிறதோ என்ற அய்யத்தையே ஏற்படுத்தும். அரசின் சிந்தனையாக இத்தகைய அறிவிப்புகள், அறிக்கைகள் எடுத்துக் கொள்ளப்படத் தேவையில்லை என்றால், இவைகளிலிருந்து மோடியும், பா.ஜ.கட்சியும் விலகி இருக்க வேண்டும். இல்லாவிட்டால், சங்பரிவாரம், பா.ஜ.கட்சி, பா.ஜ.க.அரசு ஆகிய மூன்றுமே ஒரே மாதிரியான அமைப்பின் மூன்று வடிவங்கள்தான் என்ற அளவில்தான் மக்களால் பார்க்கப்படும்.
நன்றி: தி இந்து 21-08-2014
தமிழில்: த.க.பாலகிருட்டிணன்.
Read more: http://viduthalai.in/page2/86397.html#ixzz3BDubhJxn
மதத்தின் வேர்கள்
மதச் சடங்குகள் உலகெங்கும் ஊதாரித்தனத்துடன் செய்யப்படுகின்றன; அவற்றால் காலமும், பொருளும் விரயமாகின்றன; அவை வலியையும், வறுமையையும் உண்டாக்குகின்றன. (இவற்றைக் காணும்) ஒரு பரிணாம வளர்ச்சி உளவியலாளருக்கு, மதம் (சூழலுக்குத் தக்க தன்னைச்) சரிப்படுத்திக் கொள்ளக் கூடியதாக இருக்கலாம் என, மண்ட்ரில் குரங்கின் அடிப்பகுதியைப் போன்று தெளிவாகத் தெரிகிறது.
- மரேக்கோன்
(ரிச்சர்டு டாகின்ஸ் எழுதியுள்ள கடவுள் ஒரு பொய் - நம்பிக்கை என்ற நூலிலிருந்து)
Read more: http://viduthalai.in/page4/86401.html#ixzz3BDvSEWDD
சூரிய வெப்பம் எவ்வளவு?
சூரியனின் மேல்தளம், தன்னருகில் வரும் உலோக விமானத்தையே உருக்கி விடும் அளவுக்கு வெப்பம் கொண்டது. கொதி நிலையை அடைந்த தண்ணீரைவிட 15 மடங்கு வெப்பம் நிறைந்தது எனவும் கூறலாம். மேல் தளத்தின் வெப்பம் சுமார் 5500 டிகிரி செல்சியஸ் அல்லது 9940 டிகிரி ஃபாரன்ஹீட் ஆகும். அதன் மய்யப் பகுதி மேல்தளத்தைவிட 2300 மடங்கு சூடானது.
Read more: http://viduthalai.in/page4/86401.html#ixzz3BDvYH6KL
விடுதலைக்கு நன்றி!
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருப்புகலூர் கிராமத்தில் விடுதலை நாளிதழ் காலதாமதமாகக் கிடைத்து வந்தது. தற்போது விடுதலை நாளிதழ் காலை ஆறரை மணிக்கே வந்து விடுவதால் விடுதலை நாளிதழில் வெளியாகும் செய்திகளை கிராம மக்கள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள முடிகிறது. எனவே திருப்புகலூர் மற்றும் சுற்று வட்டார கிராம மக்கள் சார்பில் விடுதலை நாளிதழ் நிறுவனத்தார் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர். இதுபற்றி திராவிடர் கழகப் பொதுக் குழு உறுப்பினர் கூறும்போது இப்பகுதி விவசாயிகள் நிறைந்த பகுதியாகும் பாமர மக்கள் அதிகம் உள்ளனர்.
இப்பகுதியில் பகுத்தறிவு சிந்தனையுடையவர்கள் அதிகம் பேர் உள்ளதால் அவர்கள் விடுதலை நாளிதழை மிகவும் விரும்பி படிக்கின்றனர். எனவே, இப்பகுதியில் காலையிலேயே காலத்தோடு விடுதலை நாளிதழ் கிடைப்பதால்தான் மக்கள் ஆர்வமுடன் வாங்கிப் படிக்கின்றனர். ஆதலால் நானும் இவர்களோடு சேர்ந்து நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். 21.08.2014 காலை 6.30 மணிக்கு திருப்புகலூர் கடைவீதியில் கிராமத்து மக்கள் விடுதலைநாளிதழை வாங்கி ஆர்வமுடன் படிப்பதை படத்தில் காணலாம்.
Read more: http://viduthalai.in/page5/86403.html#ixzz3BDvyFwlD
உனக்கு மற்றவர்கள்
உனக்கு மற்றவர்கள் எதைச் செய் யக்கூடாதென்று எதிர்பார்க் கிறாயோ, அதை நீ மற்றவர் களுக்குச் செய்யாதே! - டால்ஸ்டாய்
நேர்மை என்பது, செய்யும் செயலைப் பொறுத்தது. உண்மை யைப் பேசி உண்மையாக நடப்பது மட்டுமே நேர்மை ஆகாது! -சாக்ரடீஸ்
பொறுமையாக இருப்பது அவ்வளவு எளிதல்ல; ஆனால் அதன் விளைவோ பெரிது; இனிமையும் நன்மையும் பயக்கும். - ரூஸோ
உண்மை எதுவெனக் கண்டுபிடிப் பதைவிடச் சிறந்தது உலகில் வேறொன்றும் இல்லை. உண்மை தான் நிலைத்து நிற்கும். - இங்கர்சால்
உழைப்பே மூலதனம்; உழைப்பின்றி மூலதனம் இயங்க முடியாது! -கார்ல் மார்க்ஸ்
Read more: http://viduthalai.in/page5/86404.html#ixzz3BDw5IxUe
ஆராய்ச்சி விளக்கம்! (ஈ.வெ.ரா.)
ஏழை என்பவன் யார்? : தனது சரீரத்தால் வேலை செய்து அதன் கூலியினால் மாத்திரமே ஜீவனம் செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்திலுள்ளவன். இக்கூட்டத்தார் களுக்குத்தான் பார்ப்பன மதப்படி சூத்திரர்கள் என்கின்ற பெயர்.
முதலாளிகள் என்பவர்கள் யார்? : சரீரத்தினால் வேலை செய்யும் ஆள்களை வைத்து வேலைகளை வாங்கி, வேலை செய்தவர்களுக்கு ஒரு அளவுக்குள்பட்ட ஜீவனத்துக்கு மாத்திரம் போதுமான கூலி கொடுத்துவிட்டு அவ்வேலையின் மற்ற எல்லாப் பயன்களையும் எல்லையின்றி அனுபவிப்பவர்கள்.
குடியானவர்கள் என்பவர்கள் யார்? : பூமியைத் தானே உழுது தானே பயிர் செய்து தன் குடும்பம் முழுவதும் அதில் ஈடுபட்டு அதன் பயனை அனுபவிப்பவர்கள்.
மிராசுதாரர்கள் என்பவர்கள் யார்? : தாங்களே நேரில் விவசாயத் தொழிலில் ஈடுபடாமல் ஆள்களை வைத்து பயிர் செய்கிறவர்களும், மற்றவர்களுக்கு குத்தகைக்கோ, வாரத்துக்கோ விட்டு லாபத்தை மாத்திரம் அடைபவர்களான (பூமியை உடைய)வர்கள்.
- குடிஅரசு - கட்டுரை - 10.01.1948
Read more: http://viduthalai.in/page7/86409.html#ixzz3BDwtutD1
இந்திய அரசில் இராமன் கட்டளை!
இராவணனை எதிர்த்து வெற்றி அடையாதவன் இராமன்.
சுக்ரீவன் அனுமன், வீடணன் என்னும் மூவரின் துணையைக் கொண்டே இராமன் இராவணனைத் தோற்கடித்தான்.
தான் வெற்றி அடைவதற்குத் துணை செய்த வீடணனிற்கு இராமன் முடிசூட்டி இலங்கை ஆட்சியினைத் தந்தான்.
இராமன் வீடணனிற்கு முடிசூட்டிய கையோடு நான்கு கட்டளைகளை இட்டான்.
கட்டளை 01: தமிழ்நாட்டில் தமிழ் இனத்திற்கு உள்ளதுபோல எல்லா உரிமையும் எங்களுக்குத் (ஆரியப் பார்ப்பனர்) தர வேண்டும்.
கட்டளை 02: தமிழர்கள் எங்களை எதிர்க்காமல் தடுக்க வேண்டும்.
கட்டளை 03: தமிழ்நாட்டில் எங்கள் தாய்மொழியான சமற்கிருதத்தை எங்கள் இனத்தவர் பேசவும், பயிலவும் உரிமை தர வேண்டும்.
கட்டளை 04:
தமிழ்நாட்டுக் குறுநில மன்னர்கள் எங்கள் மேல் படை எடுக்காதிருப்பதற்குத் தகுந்த ஏற்பாடு செய்ய வேண்டும்.
எங்களை எதிர்த்து ஒழிக்க நினைப்பவரை (இராவணன்) எதிர்த்து ஒழிக்கவே தமிழ்நாட்டிற்கு வந்தேன்.
இராமனின் இந்த வாய்மொழிக் கட்டளையை இராமன் காவியத்தில் இடம் பெற்றிருக்கும் ஒப்பந்தப் படலத்தில் உள்ள 15 முதல் 19 வரையிலான பாட்டுக்களின் வாயிலாய்ப் புலவர் குழந்தை அவர்கள் நமக்குப் பதிவு செய்து அளித்திருக்கிறார்.
தொடர்ந்து, தொடர்ந்து வரும் சமற்கிருத ஏற்பாடு: வட ஆரிய இராமனின் திட்டம் அல்லவா?
றீ ஈரோட்டுப் பெரியார் வழியில் புலவர் குழந்தை இராமாயணத்தை எதிர்த்துப் பாடிய இராவண காவியம் தரும் தொலைநோக்கு ஆழம்தான் என்னே!
புலவர் குறளன்பன், கோவை
Read more: http://viduthalai.in/page6/86406.html#ixzz3BDxEDCtQ
இன்றைய ஆன்மிகம்?
மலர் வேண்டாம் மனம் போதும்!
சிவபெருமானுக்கு பூஜை செய்ய புன்னை, வெள்ளெருக்கு, செண் பகம், நந்தியாவட்டை, நீலோத்பவம், பாதிரி, அரளி, செந்தாமரை ஆகிய எட்டு வகையான மலர்களைப் பயன்படுத் தலாம். இம்மலர்கள் அஷ்ட புஷ்பங்கள் எனப்படு கின்றன. இவற்றில் சில இப்போது கிடைப்ப தில்லை. இம்மலர்களை படைத்து மட்டும்தான் சிவனை வழிபட வேண்டு மென்பதில்லை. நமசி வாய என அவர் திருநாமத்தை உச்சரித்து, மனம் என்னும் பூவால் வழி பட்டாலே போதும். மலர்களால் அர்ச்சித்து வணங்கிய பலன் கிடைத்து விடுமாம்!
இதைப் போல கோயி லுக்குச் செல்லாமல் வீணா கப் பணத்தை எதையும் செலவு செய்யாமல், உள்ளமே கோயில் என்று கருதி வீட்டில் இருந்த படியே மனதளவில் சிவனை வழிபட்டால் போதும் என்ற முடிவுக்கு வர வேண்டியதுதானே - கோயில்களையும் இழுத்து மூடிவிடலாம் அல்லவா!
Read more: http://viduthalai.in/e-paper/86360.html#ixzz3BDxdVC1r
கோவாவில் சிறீராம் சேனைக்கு தடை
பனாஜி, ஆக. 23_ கோவா மாநிலத்தில் சர்ச்சைக்குரிய இந்து அமைப்பான சிறீ ராம் சேனைக்கு தடை விதிக்கும் அரசின் முடிவினை கோவா மாநில கத்தோலிக்க சிறுபான்மை முன்னணி வரவேற்றுள்ளது. இதுபற்றி அந்த அமைப்பின் கன்வீனர் பெர்னாபே செபிகோ கூறியதாவது:- அமைதியான கோவா மாநிலத்தில் சிறீ ராம் சேனையின் தலைவர் பிரமோத் முத்தாலிக் தனது இயக்கத்தை ஆரம்பித்தால் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை மோசமடையும் என்று காவல்துறையும் குறிப்பிட்டுள்ளது. இந்துக்களின் காவலன் என்று தன்னை பிரபலப்படுத்துவதற்காக கோவாவில் அவர் சர்ச்சையை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்.
மத நல்லிணக்கத்திற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் முத்தாலிக் தனது அமைப்பை தொடங்குவதற்கு மதங்களைக் கடந்து அனைத்து மக்களும் எதிர்க்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார். சிறீராம் சேனா பற்றி காவல்துறை எதிர்மறையான அறிக்கை அளித்ததால் அதற்குத் தடை விதிக்கப்பட்டிருப்பதாக முதல்வர் மனோகர் பாரிக்கர் கூறியது குறிப்பிடத்தக்கது.
Read more: http://viduthalai.in/e-paper/86365.html#ixzz3BE0hWd2V
தமிழ்நாட்டை வஞ்சிப்பதில் மட்டும் ஒற்றுமையா?
மத்தியில் பிஜேபி ஆட்சி வந்தவுடன் பார்த்தீர்களா? இலங்கை தீவில் சிறை வைக்கப்பட்டிருந்த அத்தனைத் தமிழக மீனவர்களும் விடுதலை செய்யப்பட்டு விட்டனர். இதற்கு மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுதானே காரணம் என்று மார் தட்டுகின்றனர்.
விவாதத்துக்காகவே ஒத்துக் கொள்வோம். இனி தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படை கைது செய்யாது என்று உத்தரவாதம் கொடுக்க முடியுமா? என்பது முக்கிய கேள்வியாகும்.
தமிழக மீனவர்கள் அனைவரும் விடுதலை செய்யப் பட்டு விட்டனர் என்று செய்தி வெளி வரும் நாளன்றே ... ஜெகதாபட்டினத்தைச் சேர்ந்த தமிழக மீனவர்கள் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளனர் என்ற செய்தி வருகிறது. பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை எக்காரணம் கொண்டும் திருப்பிக் கொடுக்க மாட்டோம் என்று இலங்கை அமைச்சர் அழுத்தந் திருத்தமாகக் கூறியிருப்பதும் இப்பொழுதுதான்.
இதில் இன்னும் குறிப்பிடத்தக்க மிகப் பெரிய கொடுமை என்னவென்றால் ஜெகதாப்பட்டின மீனவர்கள் கச்சத் தீவுப் பகுதிக்குச் சென்று மீன் பிடிக்கவில்லை. இந்திய எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோதே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கிறது!
தமிழக மீனவர்கள் தங்கள் எல்லைகளைத் தாண்டி மீன்பிடிக்கிறார்கள் - அதனால்தான் இலங்கைக்கடற்படை கைது செய்கிறது என்று கிளிப் பிள்ளைப் பாடம் படிக்கிறார்களே - ஜெகதாப்பட்டினத் தமிழக மீனவர்கள் இந்திய எல்லைக்குள்ளேயே தாக்கப்பட்டுள் ளனரே, தாக்கப்பட்டவர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளாரே - இதற்கு என்ன சமாதானத்தைச் சொல்லுகிறது இந்திய அரசு?
இதுபோன்ற நேரங்களில் அமைதி காப்பதுதான் இந்திய அரசின் அரசத் தந்திரமாக இருந்து வந்திருக் கிறது.
இப்படி இந்திய அரசு நடந்து கொள்ளுமேயானால் இந்திய அரசின்மீது தமிழக மீனவர்களுக்கு எப்படி நம்பகத் தன்மை ஏற்படும்?
இந்திய எல்லைக்குள் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டனர் என்று சொல்லும்பொழுது இன்னொரு உண்மையும் அதில் பதுங்கி இருக்கிறது. இலங்கைக் கடற்படையோ அல்லது இலங்கை சிங்கள மீனவர்களோ இலங்கையின் எல்லை தாண்டி இந்திய எல்லைக்குள் வந்துதானே தாக்குதலைத் தொடுத் திருக்க முடியும்? அப்படி இந்திய எல்லைக்குள் வந்த சிங்களவர்களை இந்தியக் கடற்படை ஏன் கைது செய்யவில்லை என்பது நியாயமான கேள்வியா இல்லையா?
உலகம் முழுவதும் கடலில் மீன்பிடிக்கிறார்களே அங்கெல்லாம் இந்த எல்லைப் பிரச்சினையோ, மீனவர்களைத் தாக்கும் நிலையோ, சிறைபிடிக்கும் வழமையோ இல்லாதிருக்கும்போது, இந்தியத் தரப்பினில் மட்டும் மாறான நிலை தவறான அணுகு முறை இருப்பது சரியா? இதற்கு ஏதாவது காரணம் இருந்தால் அதனையாவது வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டியதுதானே!
ஒன்று மட்டும் புரிகிறது, இதற்கு முன் ஆட்சியதி காரத்தில் இருந்த அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசும் சரி, தற்போதைய தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசும் சரி ஈழத் தமிழர்கள் பிரச்சினையிலும், தமிழக மீனவர்கள் பிரச்சினையிலும் தமிழ்நாட்டு மக்களுக்கு எதிராகவே நடந்து கொள்வது ஏன்? இதில் என்ன அப்படியொரு ஒற்றுமை? மற்ற மற்ற பிரச்சினைகளில் எல்லாம் ஒருவரைப் பார்த்து இன்னொருவர் முண்டா தட்டும் நிலையில் ஈழத் தமிழர்கள் - தமிழக மீனவர்கள் பிரச்சினைகளில் மட்டும் நாங்கள் புதுசா கட்டிக்கிட்ட ஜோடி தானுங்க! என்று ஆடுவது ஏன்?
இப்படியொரு சூழலில் பிரதமர் நரேந்திர மோடியும் பிஜேபியின் அகில இந்தியத் தலைவர் அமித்ஷாவும் தனித்தனியாக தமிழ்நாட்டில் கட்சியை வளர்க்க பிரச்சாரத்திற்கு வருகிறார்களாமே, வரட்டும் - நன்றாகவே வரட்டும் அப்பொழுதாவது தமிழ்நாட்டு மக்களின் இன உணர்வையும், மதவாத எதிர்ப்புணர் வையும் எளிதாகத் தெரிந்து கொள்ள வாய்ப்புக் கிட்டும்!
தமிழ்நாட்டில் உள்ள சில ஏடுகள் காற்றுள்ள போதே தூற்றிக் கொள்! என்ற தன்மைக்கு ஏற்ப நடந்து கொள்வதை வைத்து தமிழ் மண்ணைத் தப்புக் கணக்குப் போட வேண்டாம்!
Read more: http://viduthalai.in/page-2/86353.html#ixzz3BE0sg0WK
கலெக்டர் கவனிப்பாரா?
கோபிசெட்டிபாளையம் டிப்டி கலெக்டரவர்கள் தேவஸ்தான மரங்களை கள்ளுக்கு விடும்படி தர்மகர்த் தாக்களை நிர்ப்பந்திக்கிறாரென்றும், கள்ளுக்கடை காரர்களுக்கு மரம் கிடைக்காவிட்டால் மணியக்காரர்கள் மீது நடவடிக்கை எடுத்துக்கொள்ளுவதாகச் சொன்ன தாகவும் நம்பத்தகுந்த இடங்களிலிருந்து செய்தி கிடைத்திருக்கிறது.
இது உண்மையானால் சர்க்காரிடத்தில் பொது ஜனங்களுக்கு துவேஷமும், பொது ஜனங்களுடைய வரிப்பணத்திலிருந்து வருடம் 4 லட்ச ரூபாய் செலவு செய்து சர்க்காரால் செய் யப்படும் மதுவிலக்கு பிரசாரத்தினிடத்தில் சந்தேகமும், கெட்ட எண்ணமும் ஏற்பட இடமுண்டாவ தோடு சர்க்காருக்கு நல்ல பேர் கிடைக்கும்படியாகச் செய்யப்பட்டு வரும் பிரசாரம் முதலியவைகளுக்கு இடைஞ்சலும் ஏற்படுமாகையால் நமது ஜில்லா கலெக்டர் அவர்கள் தயவு செய்து இந்த விஷயத்தைக் கவனித்து இந்தப்படி நடப்பதை நிறுத்தவும். இந்தப்படிக் கில்லையானால் ஓர் அறிக்கை வெளி யிடவும் முயற்சி செய்வாரென்று நம்புகிறோம்.
- குடிஅரசு - துணைத்தலையங்கம் - 28.09.1930
Read more: http://viduthalai.in/page-7/86385.html#ixzz3BE1r5BPR
நீலாவதி - ராமசுப்ரமணியம் திருமண அழைப்பு
அய்யா:- குடிஅரசு, திராவிடன், குமரன் பத்திரிகைகளுக்கு வியாசம் எழுதிவரும் மதிநிறைச் செல்வி திருச்சி
நீலாவதிக்கும்
மதிநிறைச் செல்வன் கொத்தமங்கலம்
ராம சுப்ரமணியத்திற்கும்
பிரமோ தூத வருஷம் புரட்டாசி மாதம் 19 ஆம் (5. 10. 30) தேதி ஞாயிற்றுக் கிழமை காலை 10 மணிக்கு திருச்சியில், தென்னூர் ரோட் 4 நெம்பர் இல்லத்தில் திருமணம் நடத்த ஏற்பாடாகி இருக்கிறபடியால், அதுபோது தாங்கள் தயவுசெய்து தங்கள் வாழ்க்கைத் துணையுடன் எழுந்தருளி சாட்சியளிக்க விழைகின்றோம்.
ஈரோடு ஈ. வெ. ராமசாமி
01. 10. 1930 ஈ. வெ. ரா. நாகம்மாள்
குடிஅரசு, 05.10.1930
Read more: http://viduthalai.in/page-7/86385.html#ixzz3BE1xrqEg
கடவுளின் நடவடிக்கை - சித்திரபுத்திரன்
உலகத்தை எல்லாம் உண்டாக்கி அதில் உள்ள எல்லாவற்றையும் நடத்தும் ஒரு சர்வசக்தியுள்ள கடவுள் ஒருவர் இருக்கிறார். அவரால் தான் (அவர் இஷ்டப்படி) உலகம் இயங்கு (நடைபெறு) கின்றது என்று சொல்லப்படுமானால் அவரை நடுநிலை யுடையவரென்று சொல்லுவதைவிட பாரபட்சமுடையவரென்று சொல் வதற்கே மிக மிக இடமிருக்கின்றன.
அவரை கருணையுடையவரென்று சொல்லுவதைவிட கருணையற்ற வரென்று சொல்லுவதற்கே ஏராளமான பிரதியட்ச உதாரணங்கள் இருக்கின்றன. அவரை நீதிவான் என்று சொல்லுவதைவிட அநீதிவான் என்று சொல்லு வதற்கே தாராளமான ஆதாரங்கள் அதிகமிருக்கின்றன.
அவரால் உலகுக்கு நன்மை ஏற்படுகின்றது என்று சொல்லுவதைவிட அவரால் அதிக தீமையே ஏற்படு கின்றது என்று சொல்லுவதற்குப் போதுமான ஆதார மிருக்கின்றது.
அவர் அறிவாளி என்று சொல்லுவதைவிட மூடர் என்று சொல்லுவதற்கே போதுமான ருஜுவு இருக்கின்றது.
(அதுவே முடிந்த முடிவானால்) அப்படிப்பட்டவரை யோக்கியர் என்று சொல்லுவதைவிட அயோக் கியர் என்று சொல்லுவதற்கே திருஷ்டாந்தங்கள் பல இருக் கின்றன.
அவர் ஜீவன்களுக்கு நன்மை யை செய்கின்றாரென்பதைவிட தீமையைச் செய்கின்றார் என்பதற்குப் போதிய காரணங்கள் இருக்கின்றன.
அவரால் நன்மையடைந்தவர்களைவிட தீமையடைந் தவர்கள் அதிகமாக இருக்கின்றார்கள் என்று சொல்லத் தகுந்த அத்தாட்சிகள் மிகுந்து கிடக்கின்றன.
அவர் நாகரிகமுடையவரென்று சொல்லுவதைவிட அவர் காட்டுமிராண்டி என்று சொல்லுவதற்கே அளவுக்கு மீறிய அனுபவங்கள் காணப்படு கின்றன.
அவர் இருந்தால் நல்லது என்று சொல்லுவதைவிட அப்படிப்பட்டவர் ஒருவர் இல்லாமல் இருந்தால் நல்லது என்று ஆசைப்படுவதற்கு அனேக காரணங்கள் இருக்கின்றன.
அப்படி ஒருவர் இருக்கிறார் என்று எண்ணிக் கொண்டு வாழ்க்கையை நடத்துவதைவிட அப்படி ஒருவர் இல்லை என்று வாழ்க்கை நடத்துவதே மனித சுதந்திரத்திற்கு அதிகமான நன்மை பயக்கத்தக்கது என்று கருதுவதற்கு வேண்டிய அவசியங்கள் பல இருக்கின்றன.
அறிஞர்களே, ஆராய்ந்து பாருங்கள்.
- குடிஅரசு - கட்டுரை 19.10.1930
Read more: http://viduthalai.in/page-7/86384.html#ixzz3BE2HvNuo
வைசிராய் பிரபுக்கு வேண்டுகோள்
லாகூரிலுள்ள ஜட்பட் ரோரக் மண்டலமென்னும் சங்க மானது இந்து சமூகத்தில் காணப்படும் ஜாதி வித்தியாச மென்னும் உயர்வு, தாழ்வை ஒழிக்க மிகவும் பாடுபட்டு வருகின்றது. அடுத்த சென்சஸின் போது (ஜனத் தொகைக் கணக்கு கொடுக்கும் போது) இந்துக்கள் தங்கள் ஜாதியைக் குறிப்பிடலாகாதென்பது அதன் கொள்கை.
ஆகவே அச்சங்க நிர்வாகிகள், இந்திய சென்சஸ் கமிஷனரைக் கண்டு தங்கள் தங்கள் ஜாதியைக் குறிப்பிட விரும்பாதவர்களை ஜாதியைக் கூறும்படி வற்புறுத்தலாகா தெனக் கேட்டுக் கொண்டதற்கு அவர் வைசிராயிடம் அறிவித்துக்கொள்ளும்படி சொன்னதால் மேற்படி சங்கத்தார் வைசிராய்க்குச் செய்து கொண்ட விண்ணப்பத்தின் சாராம்சமாவது:- பற்பல மாகாணங்களிலுமுள்ள இந்து சமூகத்தினரில் பலர் இந்து மதத்துக்கு ஜாதி வித்தியாசம் அவசியமில்லை யென்றும் அத்தகைய வித்தியாசத்தால் தான் உயர்வு தாழ்வு ஏற்பட்டு இந்து சமயத்தினர் முன்னேற்றமடைய முடியாமல் போய்விட்ட தென்றும் உணர்ந்திருக்கின்றனர்.
இத்தகைய ஜாதி வித்தியாசம் பண்டைக் காலத்தில் அவசியமாயிருந்த போதிலும் இன்றுள்ள நிலைமையில் அம்முறை தீமையே தரத்தக்கதாக இருக்கின்றது. அரசியல், சமூக விஷயங்களில் இப்போது தோன்றி யிருக்கும் புத்துணர்ச்சியால், பழைய காலத்தில் தோற்று விக்கப்பட்ட சில ஆதாரங்கள் இப்போது அவசியமில்லை யென்றும், அவற்றால் தற்காலம் கஷ்டங்களே ஏற்படுகின்றன வென்றும் பலர் நம்புகின்றனர்.
ஆதலின் அடுத்த சென்சசில் தங்கள் ஜாதியைக் குறிப்பிடலாகாதென்பது பலருடைய ஆவல். ஆதலின் தாங்கள் அப்படிப்பட்டவர்களை ஜாதியைக் கூறும்படி வற்புறுத்தலாகாதென அவ்விலாகா அதிகாரிகளுக்கு உத்திரவிடும்படி கேட்டுக் கொள்ளுகிறோம். இத்தகைய அனுமதி முன்னரே சீக்கியர்களுக்கும், பாஞ்சாலத்திலுள்ள ஆதி இந்துக்களுக்கும் அளித்திருப்பதால் மற்ற இந்துக்களுக்கும் இந்த அனுமதி குற்றமாகாது.
ஜாதி என்று கேட்டிருக்கும் இடத்தில் ஒன்றுமில்லை என்று குறிப்பிட்டு விடுவதும் தவறாகாது. ஆதலின் தாங்கள் சென்சஸ் எடுக்கும் அதிகாரிகள், அல்லது குமாஸ்தாக்கள் ஜாதியைக் கூறும்படி கட்டாயப் படுத்தலாகாதென்றும், ஜனங்கள் சொல்லாமலிருக்கும் போது அவர்களாகத் தங்களுக்குத் தோன்றியதைப் பதிவு செய்யாமலிருக்க வேண்டுமென்றும் கட்டளை பிறப்பித்து இந்து சமுகத்தின் முன்னேற்றத்துக்கு அடிகோலுவீர் களென்று எதிர் பார்க்கிறோம்.
- குடிஅரசு - துணைத்தலையங்கம் - 28.09.1930
Read more: http://viduthalai.in/page-7/86373.html#ixzz3BE2cSkEy
சங்கராச்சாரி-யார்?
ஜெகத்குரு என்று சங்கராச்சாரியாரைக் கூறுகிறார்களே! உண்மையில் சங் கராச்சாரியார் ஜெகத்துக்கே (உலகத்துக்கே) குருவா? முதலில் உள்ளூரில் இவரை அனைவரும் குருவாக ஏற் றுக் கொள்வார்களா? இந்து மதத்தில்தானாகட்டும் வை ணவர்கள் இவரைக் குரு வாக ஒப்புக்கொள்வார்களா?
உண்மை இவ்வாறு இருக்க, இவரை லோகக் குரு என்றும், ஜெகத்குரு என்றும் ஜெய பேரிகை கொட்டுவதில் மட்டும் குறைச்சலில்லை.
சங்கராச்சாரியார்களி லேயே மறைந்த மூத்த காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி யைத் தூக்கி வைத்துப் பேசுவார்கள்; புனிதர் என்று போற்றுவார்கள்.
உண்மை என்னவென் றால், துவேஷத்தில் தும் பிக்கை யானையைவிடப் பலம் வாய்ந்தவர்.
தீண்டாமைபற்றிப் பேச பாலக்காடு சென்று, காந்தி யார் அவரைச் சந்தித்தார் (16.10.1927). மகாத்மா என்று மக்கள் போற்றும் அந்தத் தலைவரை மாட்டுக் கொட் டகையில் உட்கார வைத் துத்தான் பேசினார் அந்த சங்கராச்சாரியார்.
பேசி என்ன பயன்?
ஹரிஜன ஆலயப் பிர வேச விஷயத்தில் சாஸ்திரங் களையும், பழைய வழக்கங் களையும் நம்பி இருப்பவர் கள் நம் நாட்டில் பெரும் பாலோர் இருக்கிறார்கள் என்றும், அவர்கள் மனம் நோகும்படிச் செய்யும் எந்த மாறுதலும் - இம்சைக்கு ஒப்பாகுமென்று தாம் முடி வுக்கு வரவேண்டியிருக்கின் றது என்று ஸ்வாமிகள் (காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி) காந்தியடிகளிடம் தெரிவித் தார். (ஆதாரம்: தமிழ்நாட் டில் காந்தி, பக்கம் 575, 576).
தீண்டாமைக் கொடு மைக்கு ஆளாக்கப்பட்ட வர்களின் வலிகள் சங்கராச் சாரியார்களுக்கு முக்கிய மல்ல; மாறாக, அதற்குக் காரணமானவர்கள் மனம் நோவதுதான் சங்கராச்சாரி யார்களுக்கு முக்கியம்.
இருப்பதிலேயே மகாபுரு ஷர் என்று பார்ப்பனர்களால் போற்றப்படும் அவர் நிலையே இப்படி! அவர் குறித்து தந்தை பெரியார் தெரிவித்த கருத் தும், தகவலும் மிகப்பெரிய அதிர்ச்சிக்குரியவை!
12 வருடத்திற்கு ஒரு முறை ஈசன் தண்ணீர் விடு வதாகக் கூறியபடி, 12 வருடத் திற்கு ஒருமுறை (கும்ப கோணம்) மகாமகம் வரு கிறது. முன் மகாமகம் 1945 ஆம் ஆண்டில் வந்தது. அதற்குமுன் 1933 இல் வந்தது. அதன்படி 12 வருடத் துக்கு ஒருமுறை இருக்க, இப்போது 1957 ஆம் ஆண்டில் வரவேண்டும்.
ஆனால், 1956 ஆம் ஆண்டிலேயே வருகிறது. இதன் காரணம், சங்கராச் சாரிக்கு இப்போது உடல் நிலை சரியில்லையாம். அவர் அடுத்த வருடம்வரை உயி ருடன் இருப்பாரோ? இருக்க மாட்டாரோ? என்ற சந்தேகத் தின்மீது, அவர் இப்பொழுது இருக்கும்போதே கொண்டா டிவிடவேண்டும் என்பதற் காக அடுத்த வருடம் கொண் டாடவேண்டியதை, இந்த வருடம் முன்பாக ஒத்தி வைத்துக் கொண்டாடுகிறார் களாம்.
இதன்படி ஈசன் இப் போது சங்கராச்சாரியாருக்கு உடல்நிலை சரியில்லை என் பதற்காக, 11 வருடத்திலேயே தண்ணீர் விடுகிறார்கள் என்று ஆகிறது. இப்படிப் பார்ப்பான் மனது வைத்தால் ஈசனுடைய செய்கையையும் மாற்றிவிட முடியும். அப்படி யானால், கடவுளும், வெங் காயமும் எங்கே போனதோ தெரியவில்லை (திருவத்தி புரத்தில் தந்தை பெரியார் பேசியது, விடுதலை, 6.2.1956).
இதற்கு விளக்கமும் தேவையா? இந்து மதம், சங்கராச்சாரியார்களின் உண்மைத் தன்மைகளை அறிந்து கொள்வீர்! - மயிலாடன்
Read more: http://viduthalai.in/page1/85755.html#ixzz3BE3gkiYI
இன்றைய ஆன்மிகம்?
கிருஷ்ண ஜெயந்தி
கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடவிருக்கும் பக்தர்களுக்குப் புராணம் கூறும் ஒரு செய்தி.
கிருஷ்ணன் பிறப்பு என்னவென்றால், தேவர்கள் எல்லாம் போய், உலகில் அதர்மம் அதிகமாகி விட்டது; இராட்சதர்கள் தொல்லை பொறுக்க முடியவில்லை; அதைப் போக்க வலிமையுள்ள ஒருவனை எங்களுக்கு அளிக்க வேண்டும் என்று விஷ்ணுவைக் கேட்டார்களாம்.
உடனே விஷ்ணு என்ன செய் தான் தெரியுமா?
தன் மார்பிலிருந்து இரண்டு மயிரைப் பிடுங்கிக் கொடுத்தானாம். அந்த இரண்டு மயிரில் ஒன்று கறுப்பு நிறமாம்; மற்றது வெண்மை நிறமாம்.
கறுப்பு மயிர் கிருஷ்ண னாகவும், வெள்ளை மயிர் அவன் அண்ண னாகவும் ஆயின என்றும் அபிதான கோசத்தில் உள்ளது.
நாங்கள் சொல்லுவ தல்ல - அபிதான கோசம் - புராணம் கூறுகிறது.
இந்தக் கிருஷ்ணனுக்குத்தான் ஜெயந்தியா?
சிந்திப்பீர்!
Read more: http://viduthalai.in/page1/85879.html#ixzz3BE4sX3iJ
உண்மையான தமிழன் யாரப்பா?
இந்த வார துக்ளக்கில் (13.8.2014) உண்மையான தமிழன் யார்? அதென்ன உண்மையான தமிழன்; பொய்யான தமிழன்; உண்மையும், பொய்யும் கலந்த தமிழன் என்றெல்லாம் வித்தியாசம் உண்டா என்ன? என்று பூணூலுக்கே உள்ள குயுக்தியுடனும், சேட்டையுடனும், கேவலப்படுத்தும் நோக்கத்துடனும் எழுதி இருக்கிறார் திருவாளர் சோ.
அவர் தமிழராக இல்லாததால் (வெளியில் அப்படி சொல்ல மாட்டார்கள்) இப்படியெல்லாம் இஷ்டத்துக்கு எழுதக் கூடிய வசதி இருக்கிறது.
தமிழ் பேசுவதால் தமிழன் ஆக மாட்டார் என்று கழகம் சொல்லுவது எவ்வளவுத் துல்லியமானது என்பது - இப்போதாவது நமது அப்பாவித் தமிழர்கள் புரிந்து கொண்டால் சரி.
இதுவே பார்ப்பனர் சம்பந்தப்பட்ட பிரச்சினையாக இருந்தால், சங்கரமடம் பிரச்சினையாக இருந்தால் இந்தக் கிண்டல், கேலி. நையாண்டி, விஷமம் இருக்குமா என்பதைத் துக்ளக்கைக் காசு கொடுத்து வாங்கும் நண்பர்கள்தான் சிந்திக்க வேண்டும்.
இப்பொழுது மட்டுமல்ல; தமிழ், தமிழர் என்று சொன்னாலே அக்ரகாரவாசிகளுக்கு அக்னிக் குண்டத்தில் விழுந்தது போலத்தான்.
கேள்வி: பெங்களூரில் திருவள்ளுவர் சிலை திறக்கப்படுவதன் மூலம் தமிழர் இடையே நல்லுறவு நல்லிணக்கம் ஏற்படும் என்று கர்நாடக முதல்வர் எடியூரப்பா கூறியுள்ளாரே
சோ பதில்: நல்லுறவா? நல்ல உறவுதான். யாராவது கன்னட வெறியர்கள் ஒரு சமயம் பார்த்து அந்தச் சிலையை அவமதிக்காமல் இருந்தால் போதுமே! (துக்ளக் 19.8.2009). புரிகிறதா?
கேட்ட கேள்வி என்ன? சோவின் பதில் என்ன?
ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா?
நீண்ட காலமாக பெங்களூரில் திறக்கப்படாமல் இருந்த திருவள்ளுவர் சிலையை திறப்பதற்கு எடியூரப்பா ஒத்துக் கொண்ட ஆத்திரம் இதில் பிரதிபலிக்கவில்லையா?
அவருடைய நோக்கம் திருவள்ளுவர் சிலையை அவமதிக்க வேண்டும் என்பதே - அதனை வேறொரு முறையில் எழுதுகிறார் தூண்டுகிறார் - அவ்வளவுதான்.
சென்னை மாநகரில் வணிக விளம்பரங்கள் தமிழில் எழுதினால்! இது என்ன மொழி நக்சலிசம் (துக்ளக் 15.9.2010) என்று எழுதிடவில்லையா?
அதே நேரத்தில் சமஸ்கிருதத்தைப்பற்றிச் சொல்லிப் பாருங்கள். கோயிலில் வழிபாட்டு மொழியாக சமஸ்கிருதம் இருக்கக் கூடாது என்று சொல்லிப் பாருங்கள் - அடேயப்பா பூணூல் துருத்திக் கொண்டு வந்து தண்டால் எடுக்கும். தமிழில் பாடினால் பொருள் இருக்கும். ஆனால், புனிதம் இருக்காது. மொழிக்கு முக்கியம் அல்ல - சமஸ்கிருத ஒலிக்குத் தான் முக்கியம் (துக்ளக் 18.11.1995). கடவுளுக்குக்கூட மொழி ஆசாபாசம் ஒலி ரசனைகள் உண்டாம்!
தமிழ் என்றால் அதற்கொரு விளக்கம் சமஸ்கிருதம் என்றால் சுற்றி வளைத்து அதற்கொரு வியாக்கியானம்!
உண்மையான தமிழன் யார்? பொய்யான தமிழன் யார்? என்று கேள்வி கேட்கிறாரே திருவாளர் சோ அதற்கான விடை இந்த இடத்தில் விளக்கமாகக் கிடைத்து விட்டதா இல்லையா?
இந்தப் பதிலில் இன்னொன்றையும் அதென்ன உண்மையான தமிழனின் கலாச்சாரம்?
அதுதான் மேற்கத்திய கலாச்சாரத்தைக் கடைப்பிடிக்க ஆரம்பித்து விட்டோமே என்று கேள்வி எழுப்புகிறார்.
மேற்கத்திய கலாச்சாரத்தை சோ கூட்டம் கடைப் பிடித்தாலும் - ஆவணி அவிட்டத்தை அனுஷ்டிக்காமல் இருக்கிறதா? பூணூலைப் புதுப்பிக்காது இருக்கிறதா?
திருமதி சிவசங்கரிக்குப் பதில் சொன்னாரே - நினைவிருக்கிறதா? சோ கேட்ட இதே கேள்வியைத் தான் தமிழர் தலைவரிடமும் கேட்டார் சிவசங்கரி.
கேள்வி: தமிழர் பண்பாடு தமிழர் பண்பாடு என்று அடிக்கடி சொல்கிறீர்களே, அப்படி என்றால் என்ன?
தமிழர் தலைவர் பதில்: இதுஒரு நல்ல கேள்வி. தாயை மகனும், மகளைத் தகப்பனும் போடி, வாடி என்று சொல்ல மாட்டோம் - அதுதான் தமிழர் பண்பாடு (குமுதம் 22.121983) என்று சொன்னதுதான் திருவாளர் சோ ராமசாமிக்கும் பதிலடி!
கொலை வழக்கில் சிக்கி சிறைச்சாலை வரை சென்று வந்த ஒருவரை ஜெகத் குரு என்று சொல்லும் இனப்பற்று பார்ப்பனர்களே, உங்களுக்கு இருக்கும் பொழுது, தமிழர்களுக்குத் தமிழ்ப் பற்றோ தமிழன் என்ற இனப் பற்றோ இருக்கக் கூடாதா?
இன்னும் பேசுங்கள் - இப்படியே எழுதுங்கள், அப்பொழுதாவது தமிழனின் தடித்த தோலுக்குச் சுயமரியாதை உணர்வு வருகிறதா என்று பார்ப்போம்!
- மின்சாரம்
Read more: http://viduthalai.in/page1/85891.html#ixzz3BE52FKMr
அடிமைப்படக்கூடாது...
உழைத்தவன் உழைப்பின் பயனை அடையவேண்டுமானால் - இப்படி யாகம், சாத்திரம், வேதம், மோட்சம், கர்மம், முன்ஜென்மம், கடவுள் செயல் என்கின்ற பித்தலாட்டங்களுக்கு அடிமைப்படக் கூடாது.
- விடுதலை, 26.2.1968
Read more: http://viduthalai.in/page1/85896.html#ixzz3BE5JQhdS
ஜாதிப் புழுக்கள்!
கல்வி என்பது தண்ணீர் அதைச் சமூகமென்னும் பெரு மரத்தின் வேரில் ஊற்றினால் நம் வேலை ஆகி விட்டது என்று நினைத்தேன். ஆனால், இந்த மரத்தின் வேரிலுள்ள ஜாதி வேற்றுமையும், கெட்ட எண்ணமும், பணத்துக்கு அடிமைத்தனமாகிய புழுக் களா அதை வளர விடப் போகின்றன? இந்த புழுக்கள் சாக வேண்டும்.
- காண்டேகர்
Read more: http://viduthalai.in/page1/85890.html#ixzz3BE60ZbQy
சிந்தனைக்குத் தடை
பகுத்தறிவுக்கு எதிரிகள் நம்நாட்டில் தான் எப்பொழுதும் இருந்து கொண்டு வருகிறார்கள் என்பதில்லை. உலகெங்கும் மதத்தரகர்களின் தாக்குதல்களுக்கு பகுத்தறிவாளர்கள் இலக்காகிக் கொண்டே இருந்துவர நேர்ந்துள்ளது. சுயசிந்தனையாளர்கள் கிளர்ந்தெழாமல் மதப்பிடியில் சிக்கித் தவிக்க நேரிட்டது.
ஒரு சுய சிந்தனையாளன் என்பவன் யார் என்று பொருள் கூறுமிடத்து மதத்தை மறுப்பவன்; நாத்திக வாதி என்று அகராதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. மதத்தின் கோரப்பிடியில் உலகின் மிகப்பெரும் சுயசிந்தனையா ளர்கள் எல்லாம் சிக்கி உழன்று விடுபட பெரும் பாடுபட நேர்ந்தது.
பெர்ட்ரண்ட் ரஸ்ஸலின் தந்தை சிறு குழந்தையான ரஸ்ஸல் மூட நம்பிக்கை இல்லாதவராக வளர இரண்டு சுயசிந்தனையாளர்கள் (பகுத்தறிவாளர்கள்) அவரை வளர்த்து ஆளாக்க வேண்டும் என்று உயில் எழுதி வைத்து விட்டு மறைந்தார்.
அதற்காக இரண்டு சிந்தனையாளர் களையும் நியமித்தார். ஆனால், இவ்வாறு நியமித்தது செல்லாது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்த தோடு கிறிஸ்து மத நம்பிக்கையின் அடிப்படையில் தான் அவரை வளர்த்து வர வேண்டும் என்றும் ஆணையிட்டது.
Read more: http://viduthalai.in/page1/85890.html#ixzz3BE66wZ2x
ஜாதி ஆச்சாரங்களைக் கை யாளும் மக்கள் குற்ற வாளிகளல்ல; ஜாதி புனிதமானது என்ற உணர்ச் சியை உண்டு பண்ணிய மதமே உண்மையிலே குற்றவாளி. ஆத லால் ஜாதி ஆச்சாரங்களைக் கையாளும் மக்கள் உங்கள் எதிரிகளல்ல.
ஜாதி ஆச்சாரங் களைப் புனித மென்று வற் புறுத்தும் சாஸ்திரங்களே உங்கள் எதிரி. எனவே அந்த எதிரியைத் தான் நீங்கள் ஒழிக்க முயற்சிக்க வேண்டும்.
- டாக்டர் அம்பேத்கர்
Read more: http://viduthalai.in/page1/85890.html#ixzz3BE6DK29A
மூவரும் முழுப் பொய்யர்களே!
ஆசிரியருக்கு கடிதம் 15.10.78 ஆனந்த விகடனில் இருவரும் ஒரே தொழில் என்ற தலைப்பில் (பக்கம் 93) ஓடத்தில் ஏற்றிச் சென்ற தற்கான, கூலியை ராமன் கொடுக்க குகன் வாங்க மறுத் தான் என்று வாரியார் கூறியதைக் கேட்க நகைப்புத்தான் ஏற்பட்டது. ஏனெனில் அயோத்தியை விட்டு அடவிக்குச் செல்லும்போது ராமன், லட்சுமணன், சீதை மூவரும் அணிந்திருந்த ஆடையாபரணங்களை அந்தணர்களுக்கு அளித்து விட்டு மர உரிதரித்து சென்றான் என்று கம்ப ராமாயணத்தில் எழுதி இருக்கின்றது.
கள்ளுக்கடை மயக்கத்தில் கவிதைகள் எழுதி கம்பனார் கானகத்தில் கனமான மூட்டையை அனுமான் கொடுக்க, அம்மூட்டையில் உள்ள ஆடையாபரணங்கள் ராவணன் எடுத்துச் சென்ற சீதையின் பொருளே என்று விளக்கியுள்ளன.
இதை படித்த தந்தை பெரியார், மர உரி தரித்து வந்த மூவர்களுக்கும் குறிப்பாக, சீதைக்கும், காட்டில் எப்படி ஆடையாபரணம் கிடைத்தது என்றும், அதிலும் சீதையைச் தேடச் சென்ற அனுமானிடம் கணையாழி கொடுத்தனுப்பியதும் - அதனைப் பெற்ற சீதையும் பதிலுக்கு தன்னுடைய கணையாழியை ராமனிடம் கொடுக்கும்படி அனுமானிடம் கொடுத்ததையும் பற்றி கேள்வி மேல் கேள்வி போட்டு கம்பனின் கயமையைப் பற்றி சொல்லியதை நாம் அறிவோம்.
அதுபோதாதென்று மேலும் கம்பனை பழிக்கவோ என்னவோ ஆனந்த விகடனைக் கொண்டு கம்பனை மேலும் பொய்யனாக்க வாரியார் ராமன் கூலி கொடுக்க, குகன் மறுத்தான் என்று சொல்லுவது கம்பனுடைய ஞாபக மறதியை மேலும் காற்றாடிபோல் பறக்கச் செய்கிறது. அயோத்தி விட்டு மூவரும் மர உரி மட்டும் மாட்டிக் கொண்டு வந்தவர்களுக்கு கூலி கொடுக்க என்ன இருந்தது? அப்படி இருந்தால் அயோத்தியில் இருந்து திருடி வந்தார்களா? ஏனெனில், எல்லாம் பரதன் சொத்து தானே.
அப்படி திருடி வந்தால் பஞ்சமா பாதகத்தில் ஒரு பாதகமல்லவா? ஆனதால் முன்னுக்குப் பின் முரணாக எழுதுவது முழுப் பொய்யல்லவா? ஆகவே கள்ளுண்டு கவிதைகள் எழுதிய கம்பனும் பொய்யன்! அக்கம்பனின் கவிதைகளை படித்து மோட்சம் போக எடுத்துச் சொல்லும் வாரியாரும் ஒரு பொய்யன்!! அதனை பிரமாதமாக வெளியிடும் ஆனந்த விகடனும் ஓர் பொய்யன்!!! ஆகவே மூவரும் மகா பொய்யர்கள் என்பது நன்கு தெரிகின்றதல்லவா?
ஆம்பூர் சீ.கோ.வெற்றியழகன், சென்னை.
Read more: http://viduthalai.in/page1/85892.html#ixzz3BE6KEXt1
சுவாமிஜிக்கு ஏன் இந்த வேலை?
அண்மையில் பம்பாய் வந்த ஒரு ஹாலிவுட் நடிகை பூனாவில் உள்ள ஆச்சார்யா ரஜ்னீஷை சந்திக்கச் சென்றார். பகல் முழுவதும் அவருக்கு பக்திமிக்க பல்வேறு உபதேசங்கள் கொடுக்கப்பட்டது.
இரவு வந்ததும் ஒரு இருண்ட குகைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கே அவரது உடைகளை அவிழ்க் கும்படி கூறினார்கள். நிர்வாணமாக இருந்த ஒரு குறிப்பிட்ட நபருடன் படுத்துக் கொள்ளுபடி கட்டாயப் படுத்தினார்களாம்.
ஆனால் நடிகை மறுத்து விட்டார். உடனே அவர் உடைகள் வலுக்கட்டாயமாக கிழிக்கப்பட்டன. அடுத்தது நடப்பதற்குள் அவர் தப்பி ஓடிவந்து பம்பாய் காவல்துறை யினரிடம் புகார் கொடுத்துள்ளார்.
ஆனால் இந்த ஆசிரமத்திற்கு நடிகர் வினோத்கன்னா தொடர்ந்து செல்வதாக கூறப்படுகிறது; எதற்காக?
முருகனின் கோவண பிரசாதம்!
காலஞ்சென்ற வெற்றிப்படத் தயாரிப்பாளர் ஒரு முருக பக்தர். அவர் முருகன் சிலையில் உள்ள கோவணத்தைக் கொண்டு வந்து பன்னீரில் நனைத்துக் குடிப்பாராம்.
அவரைப் போல் வெற்றிப்படம் தயாரிக்க வேண்டும் என்று நினைத்து சில படத்தயாரிப்பாளர்கள் முருகன் கோவண பிரசாதத்திற்கு அலைகிறார்கள்.
சினிமா ஏரியா, அய்யப்பன் ஏரியா
திரைப்பட உலகில் நடிகர்கள், தொழில்நுட்ப நிபுணர்கள், சான்ஸ் கிடைக்காத நடிகர்கள் எல்லாரும் மாலை போட்டு அய்யப்பன் விரதம் பிடிக்க ஆரம்பித்துள்ளார்கள்.
நடிகர்களுக்கு மட்டும் ஒரு விதி விலக்கு. அவர்கள் முகத்தை ஷேவ் செய்து கொள்ளலாம், பெண்களைத் தொடலாம்? சாமியே சரணம் அய்யப்பா!
(மூக்குத்தி வார இதழிலிருந்து தருபவர் தமி
Read more: http://viduthalai.in/page1/85895.html#ixzz3BE6UiKc0
இன்றைய ஆன்மிகம்?
ரமண ரிஷி
கடவுள் பக்தன்மீது கருணை கொண்டு அவ னது முன்னேற்றத்திற்குத் தக்கபடி வெளிப்படு கிறார். பக்தன் கடவுளை மனிதனென்று நினைத்து எதிர்பார்த்து நிற்கிறான். ஆனால், கடவுள், பக்த னுக்குள் இருந்து அவன் தவறுகளை உணர்த்தி நல்வழியில் செல்ல உதவுகிறார். - ரமணரிஷி
கொலைகாரனுக்கு எப்படி உதவுகிறார்? பக்தர்கள் தந்த கொள்ளைப் பணத்தை தனது உறவின ருக்கு எழுதி வைத்த இந்த ரமண ரிஷியையும் இப்படித்தான் வழி நடத்தினாரோ!
Read more: http://viduthalai.in/page1/85948.html#ixzz3BE6gZOO6
இன்றைய ஆன்மிகம்?
சுவாமி மலை
ஒவ்வொரு மனிதனுக் கும் கோபம் வருவதற்கு ஏதாவது ஒரு பிரச்சினை குடும்பத்தில் இருக்கிறது. அந்தப் பிரச்சினைகள் தீர கீழ்க்கண்ட கோவில் வழி பாடுகளை மேற்கொள் வது நல்லது.
நந்தனாருக்கு நந்தி விலகிய இடம் திருப்புன் கூர். இது வைத்தீஸ்வரன் கோவில் அருகில் உள்ளது.
பிரம்மா, விஷ்ணு, சிவன் மூம்மூர்த்திகளும் ஒன்றாக காட்சிதரும் தலம் சுசீந்திரம்.
சூரபத்மனை வென்ற பிறகு சுப்பிரமணியர் சினம் தணிந்து வள்ளியை மணம் புரிந்து அமர்ந்த இடம் திருத்தணி, சினம் கொண் டவர்கள் குணம் மாறவும், சிநேகம் கொள் ளவும் செல்ல வேண்டிய இடம் திருத்தணியாகும்.
தமிழ் வருடங்கள் அறுபதையும் படிகளாகக் கொண்ட படை வீடு சுவாமி மலை. தந்தை மகன் பிரச்சினைக்கு தீர்வு காணத் தரிசிக்க வேண்டிய தலம் இது.
சுவாமிமலை முருக னுக்கு இப்படி ஒரு விளம் பரம் தேவைப்படுகிறது; ஊருக்கு ஊர் கோயில் கள்தான் மண்டிக் கிடக் கின்றனவே போனியாக வேண்டுமானால் விளம்பர யுக்திகளைக் கையாள வேண்டாமா? கோயில் தல புராணங் கள் என்பவை இந்த வகையைச் சேர்ந்ததே.
ஒரு கேள்வி: கடவு ளுக்குக் கோபம் வர லாமா? கடவுள் சண்டை போட லாமா? இவை இருந்தால் இந்தக் கடவுள் கள் எப்படி மனிதர்களை விட உயர்ந் தவை.
மனிதன் தன் ஆசாபா சத்திற்கு ஏற்ப, அவனால் கற்பிக்கபபட்டவைதான் இந்தக் கடவுள்கள் என்பது இப்பொழுதாவது புரிகிறதா?
Read more: http://viduthalai.in/page1/86127.html#ixzz3BE8LaTvT
முருகன் என்ன செய்கிறானாம்?
பழனியில் மழை இல் லாததால் தண்ணீர் பற்றாக் குறை ஏற்பட்டுள்ளது. பழனி முருகனுக்கு மொட்டை போடும் பக்தர்கள் நீராட வேண்டும் என்பது அய்தீகமாம். தொட்டிகளில் கொண்டு வந்து ஊற்றப்படும் நீரில் காக்கைக் குளியல் போடு கின்றனராம். பக்தர்களின் தண்ணீர்ப் பஞ்சத்தைக்கூட போக்க முடியாத மொட்டை யாண்டி முருகனா பக்தர் களின் குறையைப் போக்கப் போகிறான்?
Read more: http://viduthalai.in/page1/86132.html#ixzz3BE8Smely
காந்தீய பல்டி வீரர் பற்றி...!
- ஊசி மிளகாய்
மணியனின் பல்டி-யும் ஒரு நாடகமே...
தமிழருவி மணியன் அவர்களின் நேர் காணலை அண்மையில் பார்த்தேன்... ரொம்ப பரிதாபகரமாக இருந்தது; எப்படி இருந்த அவர், இன்றைக்கு இப்படி தரமிழந்து நிற்கிறாரே... என்றுதான் மனத்தில் தோன்றியது.ஈழத் தமிழர்களுக்குத் துரோகம் இழைப்பதில், காங்கிரசை பிஜேபி விஞ்சிவிட்டது; அவர்களின் வஞ்சகத்தை உணர்ந்து கொள் வதற்கு 60 நாள் ஆட்சி போதும்; இனிமேல் அவர்கள் தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கோ அல்லது ஈழத் தமிழர்களுக்கோ நன்மை செய்வார்கள் என்ற நம்பிக்கை தனக்குத் துளியும் இல்லை என்று அந்த நேர்காணலில் அடுக்கித் தள்ளிவிட்டார். இப்போதுதான் பிஜேபியின் சுயரூபத்தை அறிந்து கொண் டேன் என்பதுபோல ஒப்பாரி வைத்தார். உண்மையில், தமிழருவியின் இந்த வாக்கு மூலம் ரொம்ப சாமர்த்தியமானது.
விமர்சனங்களிலிருந்து தப்பித்துக் கொள் ளும் தந்திரம் கொண்டது. குஜராத்தில், இஸ்லாமியர்கள் நரவேட்டை ஆடப்பட்ட தற்குக் காரணமான மோடி- அதற்காக குறைந்தபட்சம் மன்னிப்பைக் கூட கேட்காத மோடி, த