Search This Blog

10.8.14

வடமொழிக்கு வக்காலத்து?-பெரியார்

வடமொழிக்கு வக்காலத்து


இன்றுகூட சூத்திரரான திராவிடர் 100-க்கு 8 அல்லது 10 பேர்தானே படித்திருக்கிறோம்.  நாம் வரி கொடுக்கவில்லையா?  நமக்கு ஏன் படிப்பில்லை? நமக்கு வாய்ப்புகள் கொடுக்கப்பட வில்லை. கிராமத்தில் இருப்பவனெல்லாம் ஊரிலுள்ளவனுக் கெல்லாம் செய்யும் பொறுப்பு பல வசதிகளும் ஆக்கித் தருகிறோம். ஆனால் நமக்குப் படிப்பில்லை. நாம் சூத்திரர்தானே. சாத்திரமே நமக்கு அத்தகைய சாதனங்களை மறுக்கின்றனவே. சில ஆண்டுகளுக்கு முன்னே படிப்பவனும், சொல்லிக் கொடுப்பவனும்,  மார்க் போடுபவனும் அவனே. (பார்ப்பானே) நம்மவர் மிக மிகச் சிலர்தான்;  சூத்திர நிலையிலிருந்து கல்வி பெற முடிந்தது.
இவ்வளவு விழிப்பு இருக்கும் இப்பொழுதுகூட ஒரு மந்திரி வடமொழிக்கு  வக்காலத்து வாங்கிக்கொண்டு சமஸ்கிருதத்தின் கலைப் பண்புகளைப் பாராட்டி, அம்மொழிக்கும் பார்ப்பனருக்கும் விரோதமாக தமிழ்ப் பண்டிதர்களும், ஏனைய ஆசிரியர்களும் பேச ஆரம்பித்து இருக்கிறார்கள் என்பதை வன்மையாகக் கண்டித்து உஷராக இருக்கவேண்டும் என்று எச்சரிக்கை விடுத்திருக்கிறார். அறிவில்லையா நமக்கு?  நம்மவர்கள் அறிவில்லாதவர்களா? சுப்பராயன், செங்கோட்டையா முதலியவர்கள் கவுண்டர்கள் தானே? செங்கோட்டையா சீமையில் வாக்குவாதக்காரர் ((Wrangler)) ஆக படித்துச் சிறப்புறவில்லையா? நமக்கு வாய்ப்புத் தரவில்லை என்று கேட்டால் அது குற்றமா? நம்மவன் வேலை செய்துவிட்டுக் கூலிப்பணம் கேட்டாலும், அகவிலையைக்  காட்டிக் கெஞ்சி சற்று அதிகக் கூலி கேட்கிறான். பார்ப்பானோ பிச்சைக் கேட்டால்கூட காப்பி சாப்பிட வேண்டும், கல்வி கற்க வேண்டும் என்று  அதிகாரமாகக் கேட்கிறான்.  இது ஏன்? அவன் உயர்ந்தவன்; நாம் தாழ்ந்தவன்.

நம் போலீஸ் இன்ஸ்பெக்டர்கூட பிள்ளையைப் படிக்க வைக்க முடியாது.  பிள்ளையைப் படிக்கவைக்க வழியில்லையே என்றால், அவனுக்கு மேலிருப்பவன் ஒன்னுக்கு இரண்டுக்கு இருக்கிறவனைப் பார் என்பான். பார்ப்பானுக்கோ உயர்வு இருப்பதால் பணம் திரட்ட வாய்ப்பு உண்டு. ஜாதி இருப்பதால் தானே துவேஷம் உண்டாகிறது; ஏன் வைத்துக் கொண்டிருக்கிறாய் என்று கேட்டால் வெள்ளையர் தாசர் என்றும், வகுப்புத்துவேஷிகள் என்றும் கூறுகிறார்களே! இது நியாயமா? ஜாதிகள் இருக்கலாம்; ஆனால் அதைப்பற்றிப் பேசுவது தவறா? ஏன் ஜாதியை வைத்துக்கொண்டிருக்க வேண்டும்? இன்று இருப்பது ஆரிய ராஜ்யம் அல்லது இந்து ராஜ்யம் என்று பச்சையாகச் சொல். ஏன் நம் ராஜ்யமென்கிறாய்?
இன்று இங்கு ஜாதியில்லையென்றால் அதைக்கூறும் சாத்திரத்தையும் கொளுத்து. அதை ஆதரிக்கும் சாமியை உடைத்து ஜல்லிபோடு. சட்டத்தில் ஒருவரி ஜாதியில்லை என்று எழுது என்றுதானே கேட்கிறோம். ஆனால் இன்றைக்குச் சட்டம் எழுதுகிறவர் யார்? அல்லாடி கிருஷ்ணசாமி, என்.கோபால்சாமி அய்யங்கார் போன்றவர்கள்தானே? சாதாரணமாக ஒருவன் போனான் என்று கூறுகிறார்கள்.

எதற்குத் தெரியுமா? கைதூக்க தூங்குகிறவனைக் கொண்டுவா  என்ற போது எழுப்பிப்போன மெம்பர்கள், (உறுப்பினர்கள்) அலவன்ஸ்படி வாங்கிக் கொண்டு, தனக்கெனக் கொடுக்கப்பட்ட ரூமையும் (அறையையும்) வாடகைக்கு விட்டுவிட்டு, எங்கேயோ ஓசியாகச் சாப்பிட்டுவிட்டுத் தூங்கும் பொழுது  கூப்பிட்டால் வந்து எவனெவன் எப்படிப்பட்ட காரியங்களைச் செய்து வந்தானோ அதையே அனுஷ்டிக்கலாம். எங்கே வேண்டு மென்றாலும் போய் எதைவேண்டுமென்றாலும் செய்து எப்படியாவது சம்பாதிக்கலாம்.  ஆனால் சம்பிர தாயத்தை மாற்றக் கூடாது. என்று சட்டம் இயற்றுவதற்குச் சம்மதம் கொடுத்து விட்டுத் திரும்பும் நம்மவர் அங்கு (சட்டமன்றத்தில்) இருந்தென்ன, போயென்ன, இல்லாதிருந்தால் தான் என்ன?

சம்பிரதாயங்களை மாற்றவேணும் என்பதற்காக நாம் போராடுகிறோம்  அதற்குச் சட்டம் தேவை என்கிறோம். அவர்களோ சம்பிரதாயங்களைக் காப்பாற்ற வேண்டு மென்பதற்காகச் சட்டம் இயற்றுகிறார்கள். நமது போராட்டம் இன்னும் அதிகமாதல் வேண்டும். நான் மனிதனாக மதிக்கப்பட வேண்டும். சம்பிரதாயத்தைப்பற்றி எனக்கு அக்கறையில்லை.  மதம், சமுதாய மேடு பள்ளத்தை நிலைநிறுத்துவதனால் அதை ஒரு கை பார்ப்பேன்  என்று கூறவேண்டும்.

பெருமாள் என்பவன் பேரை மாற்றிக் கொள்ள வேண்டும். உயர் குலத்தினருக்கு உரிய அப்பெயர் உனக்கு உதவாது என்று கூறினார்களாம். அப்படிப் பெயரை மாற்றுவதனால் அதற்குச் சம்பிரதாயப்படி செய்யும் சடங்கிற்குச் செலவுத் தொகையும் கொடுக்கப்பட்டதாம். ஆனால் பெருமாளோ அப்பணத்தைப் பெற்றுக் கொண்டு தன் பெயரைப் பெரிய பெருமாள் என்று மாற்றினானாம்.

அவ்வாறு வர்ணாசிரமம், சாத்திரம், கடவுள் இவைகள் ஒழியத்தான் வேண்டும். நம்மை இழிவுபடுத்தும் இராமாயணம், பாரதம் இவைகளை நாம் போற்றுதல் கூடாது என்றால்,  நம்மவர்களில் சிலரைப் பிடித்து அதைக் கொண்டாடும்படி செய்கிறார்கள். அத்தகைய  நூல்களின் உயர்வைப் பேசும் அவர்களுக்கு _- நமது திராவிட இனத்துரோகிகளுக்கு ஆஸ்தான கவிப்பட்டம், பணம், சம்பளம், சன்மானம் முதலியவை கிடைக்கின்றன. நம்மவர்கள் அவர்களிடத்தில் பதவி பெற்றால், அவர்கள் நம் இனத்தைக் காட்டிக் கொடுக்கும் கையாட்கள் என்று புரிந்து கொள்ள வேண்டும்.

முன்பு நான் காங்கிரஸ் தலைவனாய் இருந்தேன். சிறை சென்றேன். நாட்டிற்காகப் போராடுபவர்கள் முன்னணியில் முதல்வனாக இருந்தேன். நான் வர்ணா சிரமத்தை எதிர்க்கையில், அன்று சி.ஆர். (இராஜகோ பாலாச்சாரி) போன்ற என் நண்பர்கள் உன் எண்ணம் எமக்கு உண்டு. வெளியாளை முதலில் விரட்டுவோம். பிறகு பார்ப்போம், நமக்குள் இருக்கும் வேற்றுமை ஒழிக்கும் வேலையை என்று கூறியதுண்டு. எனக்கு அவர்கள் கூற்றில் போதிய நம்பிக்கையில்லாமல் வெளியேறினேன்.  25 ஆண்டுகளாக எனது முறையில் பிரச்சாரமும் செய்தேன். பிரச்சாரத்திற்குப் பயனும் இருந்தது.
பாழாய்ப்போன சுயராஜ்யம் வந்து சற்று நமது உழைப்பின் பயனை அமிழ்த்துகிறது. நம்ம ராஜ்யம் வந்துவிடட்டும், அப்புறம் வேற்றுமை களை ஒழிப்போம் என்ற சி. ஆர். போன்றவர்கள் இன்று சும்மாதான் இருக்கிறார்கள் ஆகையால்தான் நாங்கள் பேசுகிறோம். இடையறாது பேசுகிறோம். நாங்கள் ஓட்டுக் கேட்கவில்லை.

மந்திரிகளாகும் முயற்சி எங்களிடம் கிடையாது. பதவி ஆசை உள்ளவர்களுக்கு எங்களிடம் இடம் கிடையாது. நமது நாட்டு ஓட்டர்கள் (வாக்காளர்கள்) தற்குறிகள். தங்களது மேலான வாக்குரிமைகளைத் தகுதியற்றவர்களுக்குக் கொடுத்து நாட்டைக் கெடுத்து நம் நிலைக்குக் கேடு சூழ்கிறார்கள். இதற்காகத்தான் எதிர்த்துப் பிரச்சாரம் செய்கின்றோம்.
இன்றைய நிலையில் இப்பொழுது நானே தேர்தலுக்கு நின்றாலும் சாமி இல்லை என்றும், சாமிகளை உடைத்து சல்லிபோடு என்றும், கூறுகிற இவனுக்கு ஏன் ஓட்டுப்போடுகிறாய் என்று கூறுவார்களே தவிர, நாட்டிற்கு நலன் தேடுவது யார்? என்பதையறியாத தற்குறிகளிடத்தில் அறிவுப் பிரச்சாரம் செய்து, அறிவியல் உணர்வுடையவர்களாக்கி, அரசியலில் கலந்துகொள்ளும் நிலையை ஓட்டர்களுக்கு உண்டாக்காமல் ஓட்டு வேட்டையாடுவது ஏமாற்றமல்லவா?

------------------------------23.3.1950-இல் காங்கேயம் கூட்டத்தில் தந்தை பெரியார் ஆற்றிய சொற்பொழிவு (விடுதலை 26.3.1950

36 comments:

தமிழ் ஓவியா said...

மதம் மாறினானா ஏழுமலையான்?


இன்றைய தினம் ஏடுகளில் ஒரு செய்தி நான்கு பத்தி தலைப்பிட்டு வெளியாகியுள்ளது.

வாய் பேசாத லண்டன் வாலிபருக்கு திருப்பதி கோயிலில் பேசும் சக்தி கிடைத்ததாம். பரபரப்புத் தகவல்கள் - என்பது தலைப்பு.

இலண்டனில் வாழும் தீபக் என்ற வாலிபருக்கு திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வந்து தரிசனம் செய்ததால் பேசும் சக்தி கிடைத்ததாம். சிறு வயது முதலே இவனுக்குப் பேச்சு வரவில்லையாம் - 18 வயது உள்ள இவன் திருப்பதி ஏழுமலையானைக் கும்பிட்டதும் பேசும் சக்தி பெற்றானாம். திருப்பதி தேவஸ்தானமே இதனை செய்திக் குறிப்பாக வெளியிட்டுள்ளது என்பதுதான் இதில் உள்ள பித்தலாட்டம்!

அற்புதங்களைச் சொல்லித்தான் கடவுளைக் காப்பாற்ற வேண்டிய கையறு நிலை இன்று.

திருப்பதி கல் முதலாளியான ஏழுமலையானுக்குத்தான் ஆண்டு ஒன்றுக்கு 650 கோடி ரூபாய் வருமானம் வருகிறதே - அதற்கு மேலும் ஏன் இந்தப் பேராசை?

அற்புதங்களைக் கிளப்பி விட்டு பக்தர் கூட்டத்தை வரவழைத்துச் சுரண்டலாம் என்ற எண்ணமா?

அதுவும் திருப்பதி தேவஸ்தானக் குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பதவி விலக வேண்டும் என்று தெலுங்கு தேசக் கட்சி ஆட்சிக்கு வந்துள்ள நிலையில், ஆணை பிறப்பித்துள்ளது.

ஏழுமலையானிடம் சத்தியம் செய்துள்ளேன் - எனவே பதவி விலக மாட்டேன் என்று தேவஸ்தான தலைவர் அடம் பிடித்து வருகிறார். இத்தகைய சூழலில் இப்படி ஒரு தகவலை தேவஸ்தானம் அவிழ்த்து விட்டுள்ளது.

இதே திருப்பதி கோயில் வளாகத்தில் கொலைகள் வீழ்ந்ததுண்டு. விடுதியில் தங்கி இருந்த பெண்களிடம் தவறாக நடக்கும் செய்திகள் அலை அலையாக வந்து கொண்டிருக்கின்றன. திருப்பதி தரிசனம் முடித்துத் திரும்பிய பக்தர்கள் சாலை விபத்துக்கு ஆளாகிப் பலியானவர்கள் எண்ணிக்கையில் அடங்காது.

தன்னை நாடி வந்த பக்தர்களை, மொட்டையடித்து கோயில் உண்டியலில் பணத்தையும் கொட்டி வந்த பக்தர்கள் நடு வழியில் பிணமாகி இருக்கிறார்கள் - அவர்களை எல்லாம் காப்பாற்றாத ஏழுமலையான், ஏதோ இலண்டனில் வாழும் வாய் பேசாத பக்தனுக்குப் பேசும் சக்தி கொடுத்து விட்டானாம்! ஏழுமலையான் என்ன ஈ.என்.டி. டாக்டரா?

சில ஆண்டுகளுக்கு முன் இப்படித்தான் ஒரு கதைக் கட்டி விடப்பட்டது. திருப்பதி வெங்கடாசலபதியின் கலியுக அவதாரம் என்ற பெயரால் ஏராளமான துண்டு அறிக்கைகளை நாடெங்கும் புழங்க விட்டார்கள்.

நாகப் பாம்பு ஒன்று திருப்பதி ஆலயத்திற்குள் புகுந்ததாம்; அர்ச்சகர்கள் அஞ்சி நடுங்கினர். கதவின் பின்புறம் நுழைந்தார்களாம். அப்பொழுது அந்தப் பாம்பு பிராமணர் உருவெடுத்து (பாம்பு - பார்ப்பான் - கொஞ்சம் பொருத்த மாகத்தானிருக்கிறது). அஞ்சாதீர் பக்தர்காள் கொஞ்ச நாட்களுக்குள் இப்பூவுலகில் தோன்றி கொடியவர்களைச் சம்ஹாரம் செய்வேன்.

கடவுள் வழிபாடு செய்யாமல் தூஷிப் பவர்களைக் கொடிய வியாதியால் எமலோகத்திற்கு அனுப்புவேன். நான் சொல்லும் இந்தச் செய்தியை 2000 துண்டறிக்கைகளாக அடித்து ஒவ்வொருவரும் பரப்ப வேண்டும். அவ்வாறு செய்தால் பக்தர்களுக்கு நினைத்தது கை கூடும் - இதைத் தெரிந்திருந்தும் அப்படி செய்யாதவர்களுக்கு மனக்கிலேசமும் அதிக துன்பங்களும் உண்டாகும் என்று சொல்லி விட்டு, அந்தப் பாம்பாகிய பிராமணன் மறைந்து விட்டான் என்பது தான் அந்தச் செய்தி.

இதைப் பார்த்து வேளாங்கன்னி, மேல் மருவத்தூர் பங்காரம்மா கோயில்களிலும் காப்பி அடித்து உலவ விட்டார்கள். நாகப் பாம்பு சொன்னபடி ஸ்ரீமான் வெங்கடா சலபதி அவதாரம் எடுத்தானா? அதற்குப்பின் என்ன நடந்தது?

இது கடுமையான விமர்சனத்துக்கு ஆளாகிய நிலையில் காரைக்குடியைச் சேர்ந்த தோழர் ஆர். குமரப்பா திருப்பதி தேவஸ்தானத்துக்கு எழுதிக் கேட்டபோது, அதன் நிர்வாக அதிகாரி எஸ்.வி. சுப்பிரமணியம் அய்.ஏ.எஸ். அதிகாரி அந்தத் துண்டறிக்கை பொய்யான தகவல் கொண்டது. நம்ப வேண்டாம் என்று எழுதினாரே (8.3.1974).

வாய்ப்பேசாதவன் ஏழுமலையான் சக்தியால் பேசினான் என்பது தகவல் அல்ல - புரளியாகத்தானிருக்க முடியும்.

முடவன் நடந்தான், குருடன் விழி பெற்றான் என்று கிறிஸ்தவர்கள் செய்த சுவிசேஷத்தை இவாளும் பின்பற்றத் தொடங்கி விட்டனரோ! ஏழுமலையான் தான் மதம் மாறி விட்டானா? அற்புதப் பித்தலாட்டப் பிரச்சாரத்தால் தான் கடவுளைக் காப்பாற்ற முடியும் போலும்! வெட்கக் கேடு!

இந்த ஏழுமலையானுக்கு அவ்வளவு சக்தி இருந்தால் கோயிலுக்குள் நகைகளும் பணமும் கொள்ளை போகிறதே அவற்றைத் தடுக்க முடிந்ததா?

தமிழ் ஓவியா said...


திருப்பதி கோயிலில் கோடிக்கணக்கான வைர நகைகள் மாயம் என்று தலைப்புச் செய்தி வெளியிட்டதும் தினத்தந்தி குழுமத்தைச் சேர்ந்த மாலைமுரசு தானே! (28.8.2009).

பிரஜாராஜ் கட்சியின் தலைவர் நடிகர் சிரஞ்சீவி தலைமை யில் 17 சட்டமன்ற உறுப்பினர்கள் கடும் போராட்டத்தில் கூட ஈடுபட்டார்களே - ஒரு கோடி தந்திகளை பிரதமருக்கு அனுப்பி வைத்தனரே!

தெலுங்கு தேச கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு (இன்றைய முதல் அமைச்சர்) ஏழுமலையான் கோயிலில் நடக்கும் மோசடிகளை சி.பி.அய். விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தியதுண்டே!

ஆந்திர மாநில உயர்நீதிமன்றம், திருப்பதி ஏழுமலையான் கோயில் நகைகளைக் கணக்கிட்டு அதன் விவரத்தைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று ஆணை பிறப்பிக்க வில்லையா?

500 கிராம் எடையுள்ள 300 ஏழுமலையான் டாலர் மோசடியில் ஈடுபட்டாரே சேஷாத்திரி என்ற பார்ப்பான் (அந்த ஆளுக்குப் பெயரே டாலர் சேஷாத்திரி என்று ஆகிவிட்டது) அந்த ஆசாமிமீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? ஓய்வு பெற்ற பிறகும் நகைப் பாதுகாப்புப் பிரிவில் பணியாற்ற அனுமதிக்கப்படவில்லையா?

ஏழுமலையானுக்கு அவ்வளவு சக்தியிருந்தால் கோயில் உண்டியல் பணத்தை எண்ணும்போது சக்தி வாய்ந்த காமிராக்களைப் பொருத்துவது ஏன்? ஏழுமலையான் சக்தியின்மீது நம்பிக்கையில்லாத் தன்மையை இது வெளிச்சம் போட்டுக் காட்டவில்லையா? தீவிரவாதிகளின் அச்சுறுத்தலிலிருந்து தப்பிக்க அர்ச்சகர்களுக்கு ஆயுதப் பயிற்சி கொடுக்கப்பட்டது ஏன்? (மாலைமலர் - 22.8.2010)

இவற்றைவிடக் கேவலமான தகவல்களும் உண்டு. திருமலையில் விபச்சார அழகிகள் நடமாட்டம் செக்ஸ் மய்யங்கள் 20-25 உள்ளன. 3500 விபச்சார அழகிகள் அத்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

2008 மே மாதம் திருப்பதியில் 7604 ஆண்களிடம் மருத்துவப் பரிசோதனை செய்ததில் 208 பேர்களுக்கு எச்.அய்.வி. (எய்ட்ஸ் நோய்) தொற்றியிருப்பது தெரிந்தது. (புண்ணிய தலங்களின் யோக்கியதை இதுதான் - நினைவில் வையுங்கள்).

எய்ட்ஸ் தடுப்பு அதிகாரி ஆர்.வி. சந்திரவதனன் இதனைத் தெரிவித்தார் என்ற செய்தியை வெளியிட்டதும் இதே தினத்தந்தி தான் (21.6.2008 சென்னைப் பதிப்பு - பக்கம் 17).

இந்தக் கேவலத்தை எல்லாம் தடுக்க முடியாத குத்துக் கல்லு தானே ஏழுமலையான்?

இந்த லட்சணத்தில் 18 வயது வரை பேசாதவனை ஏழுமலையான் காப்பாற்றினானாம் - கேழ்வரகில் நெய் வடிகிறதாம் - பீப்பாய்களை எடுத்துக் கொண்டு ஓடி வாருங்கள் என்கிறது திருப்பதி தேவஸ்தானம் - வெட்கக் கேடு! கடவுளின் பரிதாப நிலையை என்னென்பது!

Read more: http://viduthalai.in/e-paper/85617.html#ixzz39zpGDLMd

தமிழ் ஓவியா said...


நாம் செய்யக் கூடிய அனைத்தும் மதச் சார்பின்மையைப் பாதுகாப்பதாக இருக்க வேண்டும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கண்டிப்பு!


புதுடில்லி, ஆக.10- நம்முடைய நாடு மதச் சார்பற்ற நாடு. மதச்சார் பற்றத் தன்மையை அனைத்துவகைகளிலும் பாதுகாக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. உச்சநீதிமன்றத்தில் ஒரு தொண்டு நிறுவனம் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றத்தின் நீதி பதிகள் தங்கள் கருத்தைக் கூறுகையில் இவ்வாறு கூறியுள்ளனர்.

உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஆர்.எம். லோதா, நீதிபதிகள் குரியன் ஜோசப் மற்றும் ரோஹின்டன் நாரிமன் ஆகியோரைக் கொண்ட அமர்வு ஜயதி பாரதம் என்னும் அமைப்பின் சார் பில் அளிக்கப்பட்ட மனுவை விசாரணைக்கு ஏற்று, வழக்கு விசாரணை யின்போது, இந்துப் பெண்களை முஸ்லீம் பெண்களாக மாற்றம் செய்யப்படுவது குறித்த சம்பவங்கள்மீதான சிறப்புப் புலனாய்வு விசா ரணையை ஜயதி பாரதம் அமைப்பு கோரியது. இந்தக் கோரிக்கைக்கான ஆதாரங்கள் என்று எதை யும் அளிக்காமல் மதச் சார்பின்மைக்கு இடை யூறு விளைவிக்கும் நோக் கில் கூறப்பட்டது.

மதச் சார்பின்மைக்கு இடையூறு கூடாது!

ஜயதி பாரதம் அமைப் புக்கான வழக்குரைஞர் விஷ்ணு சங்கர் ஜெயினி டம் தலைமை நீதிபதி கூறும்போது, இது ஒரு மதச்சார்பற்ற நாடு. மதத்தை நீதிமன்றத்துக் குள் கொண்டு வர முயற்சி செய்ய வேண்டாம். நீங்கள் கூறியுள்ள விஷயத்தில் நாங்களும் கவலை கொள் கிறோம். நீங்களும் அதை அபாயகரமானது என்று கூறியுள்ளீர்கள். ஆனால், அதற்கு சாயத்தை பூசுவது எங்களை கவலைக்கு உள்ளாக்குகிறது.

தமிழ் ஓவியா said...


நாம் செய்யக் கூடிய அனைத்தும் மதச் சார்பின்மையைப் பாதுகாப்பதாக இருக்க வேண்டும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கண்டிப்பு!


புதுடில்லி, ஆக.10- நம்முடைய நாடு மதச் சார்பற்ற நாடு. மதச்சார் பற்றத் தன்மையை அனைத்துவகைகளிலும் பாதுகாக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. உச்சநீதிமன்றத்தில் ஒரு தொண்டு நிறுவனம் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றத்தின் நீதி பதிகள் தங்கள் கருத்தைக் கூறுகையில் இவ்வாறு கூறியுள்ளனர்.

உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஆர்.எம். லோதா, நீதிபதிகள் குரியன் ஜோசப் மற்றும் ரோஹின்டன் நாரிமன் ஆகியோரைக் கொண்ட அமர்வு ஜயதி பாரதம் என்னும் அமைப்பின் சார் பில் அளிக்கப்பட்ட மனுவை விசாரணைக்கு ஏற்று, வழக்கு விசாரணை யின்போது, இந்துப் பெண்களை முஸ்லீம் பெண்களாக மாற்றம் செய்யப்படுவது குறித்த சம்பவங்கள்மீதான சிறப்புப் புலனாய்வு விசா ரணையை ஜயதி பாரதம் அமைப்பு கோரியது. இந்தக் கோரிக்கைக்கான ஆதாரங்கள் என்று எதை யும் அளிக்காமல் மதச் சார்பின்மைக்கு இடை யூறு விளைவிக்கும் நோக் கில் கூறப்பட்டது.

மதச் சார்பின்மைக்கு இடையூறு கூடாது!

ஜயதி பாரதம் அமைப் புக்கான வழக்குரைஞர் விஷ்ணு சங்கர் ஜெயினி டம் தலைமை நீதிபதி கூறும்போது, இது ஒரு மதச்சார்பற்ற நாடு. மதத்தை நீதிமன்றத்துக் குள் கொண்டு வர முயற்சி செய்ய வேண்டாம். நீங்கள் கூறியுள்ள விஷயத்தில் நாங்களும் கவலை கொள் கிறோம். நீங்களும் அதை அபாயகரமானது என்று கூறியுள்ளீர்கள். ஆனால், அதற்கு சாயத்தை பூசுவது எங்களை கவலைக்கு உள்ளாக்குகிறது.

தமிழ் ஓவியா said...


நாம் செய்யக் கூடிய அனைத்தும் மதச் சார்பின்மையைப் பாதுகாப்பதாக இருக்க வேண்டும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கண்டிப்பு!


புதுடில்லி, ஆக.10- நம்முடைய நாடு மதச் சார்பற்ற நாடு. மதச்சார் பற்றத் தன்மையை அனைத்துவகைகளிலும் பாதுகாக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. உச்சநீதிமன்றத்தில் ஒரு தொண்டு நிறுவனம் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றத்தின் நீதி பதிகள் தங்கள் கருத்தைக் கூறுகையில் இவ்வாறு கூறியுள்ளனர்.

உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஆர்.எம். லோதா, நீதிபதிகள் குரியன் ஜோசப் மற்றும் ரோஹின்டன் நாரிமன் ஆகியோரைக் கொண்ட அமர்வு ஜயதி பாரதம் என்னும் அமைப்பின் சார் பில் அளிக்கப்பட்ட மனுவை விசாரணைக்கு ஏற்று, வழக்கு விசாரணை யின்போது, இந்துப் பெண்களை முஸ்லீம் பெண்களாக மாற்றம் செய்யப்படுவது குறித்த சம்பவங்கள்மீதான சிறப்புப் புலனாய்வு விசா ரணையை ஜயதி பாரதம் அமைப்பு கோரியது. இந்தக் கோரிக்கைக்கான ஆதாரங்கள் என்று எதை யும் அளிக்காமல் மதச் சார்பின்மைக்கு இடை யூறு விளைவிக்கும் நோக் கில் கூறப்பட்டது.

மதச் சார்பின்மைக்கு இடையூறு கூடாது!

ஜயதி பாரதம் அமைப் புக்கான வழக்குரைஞர் விஷ்ணு சங்கர் ஜெயினி டம் தலைமை நீதிபதி கூறும்போது, இது ஒரு மதச்சார்பற்ற நாடு. மதத்தை நீதிமன்றத்துக் குள் கொண்டு வர முயற்சி செய்ய வேண்டாம். நீங்கள் கூறியுள்ள விஷயத்தில் நாங்களும் கவலை கொள் கிறோம். நீங்களும் அதை அபாயகரமானது என்று கூறியுள்ளீர்கள். ஆனால், அதற்கு சாயத்தை பூசுவது எங்களை கவலைக்கு உள்ளாக்குகிறது.

தமிழ் ஓவியா said...


நாம் செய்யக் கூடிய அனைத்தும் மதச் சார்பின்மையைப் பாதுகாப்பதாக இருக்க வேண்டும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கண்டிப்பு!


புதுடில்லி, ஆக.10- நம்முடைய நாடு மதச் சார்பற்ற நாடு. மதச்சார் பற்றத் தன்மையை அனைத்துவகைகளிலும் பாதுகாக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. உச்சநீதிமன்றத்தில் ஒரு தொண்டு நிறுவனம் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றத்தின் நீதி பதிகள் தங்கள் கருத்தைக் கூறுகையில் இவ்வாறு கூறியுள்ளனர்.

உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஆர்.எம். லோதா, நீதிபதிகள் குரியன் ஜோசப் மற்றும் ரோஹின்டன் நாரிமன் ஆகியோரைக் கொண்ட அமர்வு ஜயதி பாரதம் என்னும் அமைப்பின் சார் பில் அளிக்கப்பட்ட மனுவை விசாரணைக்கு ஏற்று, வழக்கு விசாரணை யின்போது, இந்துப் பெண்களை முஸ்லீம் பெண்களாக மாற்றம் செய்யப்படுவது குறித்த சம்பவங்கள்மீதான சிறப்புப் புலனாய்வு விசா ரணையை ஜயதி பாரதம் அமைப்பு கோரியது. இந்தக் கோரிக்கைக்கான ஆதாரங்கள் என்று எதை யும் அளிக்காமல் மதச் சார்பின்மைக்கு இடை யூறு விளைவிக்கும் நோக் கில் கூறப்பட்டது.

மதச் சார்பின்மைக்கு இடையூறு கூடாது!

ஜயதி பாரதம் அமைப் புக்கான வழக்குரைஞர் விஷ்ணு சங்கர் ஜெயினி டம் தலைமை நீதிபதி கூறும்போது, இது ஒரு மதச்சார்பற்ற நாடு. மதத்தை நீதிமன்றத்துக் குள் கொண்டு வர முயற்சி செய்ய வேண்டாம். நீங்கள் கூறியுள்ள விஷயத்தில் நாங்களும் கவலை கொள் கிறோம். நீங்களும் அதை அபாயகரமானது என்று கூறியுள்ளீர்கள். ஆனால், அதற்கு சாயத்தை பூசுவது எங்களை கவலைக்கு உள்ளாக்குகிறது.

தமிழ் ஓவியா said...


நாம் செய்யக் கூடிய அனைத்தும் மதச் சார்பின்மையைப் பாதுகாப்பதாக இருக்க வேண்டும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கண்டிப்பு!


புதுடில்லி, ஆக.10- நம்முடைய நாடு மதச் சார்பற்ற நாடு. மதச்சார் பற்றத் தன்மையை அனைத்துவகைகளிலும் பாதுகாக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. உச்சநீதிமன்றத்தில் ஒரு தொண்டு நிறுவனம் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றத்தின் நீதி பதிகள் தங்கள் கருத்தைக் கூறுகையில் இவ்வாறு கூறியுள்ளனர்.

உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஆர்.எம். லோதா, நீதிபதிகள் குரியன் ஜோசப் மற்றும் ரோஹின்டன் நாரிமன் ஆகியோரைக் கொண்ட அமர்வு ஜயதி பாரதம் என்னும் அமைப்பின் சார் பில் அளிக்கப்பட்ட மனுவை விசாரணைக்கு ஏற்று, வழக்கு விசாரணை யின்போது, இந்துப் பெண்களை முஸ்லீம் பெண்களாக மாற்றம் செய்யப்படுவது குறித்த சம்பவங்கள்மீதான சிறப்புப் புலனாய்வு விசா ரணையை ஜயதி பாரதம் அமைப்பு கோரியது. இந்தக் கோரிக்கைக்கான ஆதாரங்கள் என்று எதை யும் அளிக்காமல் மதச் சார்பின்மைக்கு இடை யூறு விளைவிக்கும் நோக் கில் கூறப்பட்டது.

மதச் சார்பின்மைக்கு இடையூறு கூடாது!

ஜயதி பாரதம் அமைப் புக்கான வழக்குரைஞர் விஷ்ணு சங்கர் ஜெயினி டம் தலைமை நீதிபதி கூறும்போது, இது ஒரு மதச்சார்பற்ற நாடு. மதத்தை நீதிமன்றத்துக் குள் கொண்டு வர முயற்சி செய்ய வேண்டாம். நீங்கள் கூறியுள்ள விஷயத்தில் நாங்களும் கவலை கொள் கிறோம். நீங்களும் அதை அபாயகரமானது என்று கூறியுள்ளீர்கள். ஆனால், அதற்கு சாயத்தை பூசுவது எங்களை கவலைக்கு உள்ளாக்குகிறது.

தமிழ் ஓவியா said...

சட்டம் கூறுவதன்படி, நாங்கள் கவலை கொள்கிறோம். அமைதியை சீர்குலைக்கும் வகையில் நீங்கள் எதையும் பேசவோ, எதையும் செய் யவோ கூடாது. நாம் மதச் சார்பற்ற அரசில்தான் இருக்கிறோம். நாம் செய்யக்கூடிய அனைத் துமே மதச்சார்பின்மை யைப் பாதுகாப்பதாக இருக்க வேண்டும். மதச் சார்பின்மைக்கு இடை யூறு விளைவிப்பதில் எவருமே ஈடுபடக்கூடாது என்று உச்ச நீதிமன்றத் தின் தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா கூறினார்.

ஜயதி பாரதம் அமைப் புக்கான வழக்குரைஞர் விஷ்ணு சங்கர் ஜெயின் கூறும்போது, மேற்கு உத்தரப்பிரதேசத்தில் 40 முதல் 50 பெண்கள் கடத்தப்பட்டு, பாலியல் வன்முறைக்கு உட் படுத்தப்பட்டு முஸ்லீம் மதத்துக்குக் கட்டாயப் படுத்தி மாற்றியுள்ளதாக வும், அதற்கு சிறப்புப் புலனாய்வு விசாரணை கோரி மனு தாக்கல் செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இதைக்கேட்ட தலைமை நீதிபதி தேசிய மகளிர் ஆணையத்தில் இதுகுறித்து புகார் தெரி விக்கப்பட்டதா என்று கேட்டார்.

வாக்கு வங்கி அரசியல்!

அதற்கு வழக்குரைஞர் விஷ்ணு சங்கர் ஜெயின், புகார் கொண்டு செல்லப் பட்டதாகவும், மாநில அரசு நடவடிக்கை எடுக்க வில்லை என்றும், வாக்கு வங்கி அரசியல், நட வடிக்கை எடுப்பதற்குத் தடையாக இருந்துள்ள தாகவும், உத்தரப்பிரதேசத் தில் உள்ள மதரசாக்கள், மதம் மாற்றும் மய்யங் களாக இருப்பதாகவும் கூறினார்.

தலைமை நீதிபதி கூறும்போது, நீங்கள் தேசிய மகளிர் ஆணையத் தில் அளித்த புகார் குறித்து எவ்வித ஆதாரங் களையும் அளிக்கவில்லை. ஆவணங்கள் ஏதுமில் லாத மேம்போக்கான கருத்துக்களை அளித்துள் ளீர்கள். 40 முதல் 50 பெண்கள் வரையிலும் கடத்தப்பட்டு, பாலியல் வன்முறைக்கு உள்ளாக் கப்பட்டிருந்தும் பெற் றோரில் ஒருவர் கூட புகார் கொடுத்ததாக இல்லை என்று காட்ட மாகக் கூறினார்.

இதனைத் தொடர்ந்து ஜயதி பாரதம் அமைப் புக்கான வழக்குரைஞர் விஷ்ணு சங்கர் ஜெயின் ஆட்சேபனைக்குரியவற்றை நீக்கிவிட்டு மனுவை அளிப்பதாகக்கூறி தனது மனுவைத் திரும்பப் பெற்றார்.

Read more: http://viduthalai.in/e-paper/85619.html#ixzz39zpmSzRc

தமிழ் ஓவியா said...


இந்த நாள் (10.8.1942) முரசொலிக்கு வயது 72

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் கலைஞர் அவர்களால் 10.8.1942 இல் தொடங்கப் பெற்ற முரசொலி இதழுக்கு இன்றுடன் 71 வயது நிறைவடைந்து 72 ஆவது வயது தொடங்குகின்றது.

முரசொலி இதழ் திருவாரூரில் நடைபெற்று வந்த தமிழ் மாணவர் மன்றத்தின் சார்பில் சேரன் என்ற புனைப்பெயர் கொண்ட நமது கலைஞர் அவர்களால் தொடங்கப்பெற்று இலவசமாக வழங்கப்பெற்று வந்துள்ளது. (குடிஅரசு -_ 6.5.1944 பக்கம் 2)

முரசொலி ஒலிக்குது பாரீர்! என்ற வாசகத்துடன் அறிவியக்கக் கொள்கைகளை அறிவுறுத்துவது ஆரியத்தை அலறவைப்பது, வைதீகத்தை வாட்டுவது, பண்டிதர்களைப் பதறவைப்பது என்ற கொள்கைகளைக் கொண்டு தொடங்கி 71 ஆண்டுகளைக் கடந்து வந்துள்ளது என்பதை அறியும் பொழுது உவகை மேலிடுகிறது. இடையில் எத்தனை சோதனைகள், வேதனைகளைக் கடந்து வந்துள்ளது.

இதழினை ஆதரிக்க வேண்டிய வேண்டுகோளுடன் இளம் எழுத்தா ளர்களின் வெளியீடுகள் ஆரியருக்கு நல்ல டார்ப்பிடோக்கள் ஆதரிக்க வேண்டுவது திராவிடர்களின் கடமையாகும் என்று அன்றே அறிவித்தது.

முரசொலி என்ற சுயமரியாதைக் கொள்கைகள் அடங்கிய துண்டுப்பிரசுரத்தை மாதமொருமுறை வெளியிடுவதெனத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. பெரியாரின் கொள்கைகளை சுயமரியாதை இயக்கத்துடன் இணைந்து பரப்பி வந்துள்ளது.

கலைஞர் அவர்கள் எப்பொழுதும் மூத்த பிள்ளையாக முரசொலியைத் தான் முதலில் கூறுவார் என்பது நாம் அறிந்த உண்மை. எனவே, முரசொலியின் முகப்பு வாசகமான வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும் என்று அன்றே தமிழ் மாணவராக இருந்து இன்றும் தமிழர்களின் ஒப்பற்ற தலைவராக விளங்கும் கலைஞர் அவர்களுக்கும் தலைவரின் மூத்த பிள்ளையான முரசொலிக்கும் வாழ்த்துகளை வழங்கி மகிழ்கிறோம்.

Read more: http://viduthalai.in/page-2/85589.html#ixzz39zqQLxQR

தமிழ் ஓவியா said...


பெர்னாட்சா


ஜார்ஜ் பெர்னாட்சா தந்தை பெரியார் போலவே 94 ஆண்டுகள் வாழ்ந்து மறைந்தவர் (1856-1950) மிகச் சிறந்த இலக்கியப் படைப்பாளர். ஆங்கிலத்தில் அவர் எழுதிய நாடகங்கள் காலங்கடந்து நிற்கக் கூடியவை. இலக்கியத் தொண்டுக்காக நோபல் பரிசு அளிக்கப்பட்டது (1925). நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவர் - பள்ளிப் படிப்பில் ஆர்வம் இல்லை - ஆனாலும், நூல்களைப் படிப்பதில் கட்டுக் கடங்கா ஆர்வம் கொண்டவர்.

பல எழுத்தாளர்களுக்கு ஏற்பட்ட அனுபவம் போலவே தொடக்கத்தில் அவர் எழுதிய எழுத்துகள் ஈர்க்கப்படவில்லை. விடா முயற்சியால் வெற்றி பெற்றார். ஆங்கில இலக்கியத்தில் நாடகப் பஞ்சம் என்ற விமர்சனத்தை வீழ்த்தும் வகையில் அரிய சாதனைகளைப் படைத்தவர் ஆவார். 50-க்கும் மேற் பட்ட நாடகங்களை எழுதினார்.

புராண மய்ய கருத்துகளைத் தூக்கி யெறிந்து சமூக மாற் றத்துக்கான கருத்து களை, சமூகச் சிக்கல்களை மய்யப் படுத்தி நாடகங்களைத் தீட்டினார். கருத்தும், வசீகர நடையும் காந்தமாக மக்களை ஈர்த்தது. இசை, நாடகங்களைத் திற னாய்வு செய்வதில் விற்பன்னர் என்ற பெய ரெல்லாம் இவருக்கு வந்து சேர்ந்தது. நல்ல பேச்சாளராக மிளிர வேண்டும் என்ற ஆசை அவருக்கு உண்டு. ஆனாலும், சபைக் கோழைத்தனம் என்பது அவரைப் பிடித்து உலுக்கியது. தானாகப் பேசிக் கொண்டு போக ஆரம்பித்தார். அதன்பின் கூட்டம் உள்ள இடத்தில் உரக்கப் பேச ஆரம்பித்தார். அதன் விளைவு தலைசிறந்த ஆங்கிலப் பேச்சாளர் என்ற புகழின் உச்சியில் பளபளப்பாகப் பறந்தார்.

மிகுந்த நகைச்சுவை உணர்வைக் கொண்டவர். பேச்சிலும், எழுத்திலும் அவை போட்டி போடும். கிறித்துவக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தாலும், கார்ல் மார்க்சின் தத்துவம் இவரைக் கவர்ந்தது. அமைதி வழியில் சோசலிசக் கொள்கை களைப் பரப்புவதற்காக நிறுவப்பட்டிருந்த ஃபேபியன் கழகத்தில் (திணீதீவீணீஸீ ஷிஷீநீவீமீஹ்) சேர்ந்தார். பெர்னாட்சாவைப்பற்றி ஏராள மான துணுக்குகளும், தகவல்களும் உலகம் பூராவும் பரவியுள்ளன. பத்திரிகை யாளர் ஒருவர் உலகில் மிகச் சிறந்த அறிவாளி யார்? என்று ஷாவைக் கேட் டார். இரண்டாவது இடத்தில் ஸ்டாலின், மூன்றாவது இடத்தில் அய்ன்ஸ்டீன், முதல் இடத்தில் உள்ளவரின் பெயரைச் சொன் னால் என்னைத் தற்பெருமைக்காரன் என்று சொல்லிவிடுவீர்கள் என்றாராம்.

அழகு கொழிக்கும் பெண் ஒருவர் ஷாவைச் சந்தித்து, நான் உங்களைத் திருமணம் செய்துகொள்ள விரும்புகிறேன். நம்மிருவருக்கும் திருமணம் நடந்தால், என்னைப் போன்ற அழகும், உங்களைப் போன்ற அறிவும் கொண்ட குழந்தை பிறக்கும் அல்லவா?

என்றார் அந்தப் பெண்மணி. நீ சொல்வது சரியென் றாலும், என்னைப் போன்ற அழகும், உன்னைப் போன்ற அறிவும் கொண்ட குழந்தை பிறந்தால் என்னாவது? என்றாராம். பெர்னாட்ஷா எழுதி வைத்த உயில் புகழ் பெற்றது. சொத்தின் சரி பகுதியை அவரது நூலகத்திற்கு எழுதி வைத்தார்.

Read more: http://viduthalai.in/page2/85561.html#ixzz39zrCxG4o

தமிழ் ஓவியா said...


செக்யூலரிஸம் என்றால் என்ன?
செக்யூலர் செக்யூலரிஸம் என்ற சொற்கள். இந்தியா சுயாட்சி என்பது அடைந்தது முதல் அதிகமாக அடிபட்டு வருகின்றன. இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திலும் இவை இடம் பெற் றுள்ளன.

இந்த செக்யூலர் செக்யூலர் கவர்ன் மெண்ட் என்பதற்கு ஆளும் குழுவினர் கூறும்பொருள், சமய சந்தர்ப்பத்துக் கேற்றபடி மாறுபடுகிறது.

மதமற்ற அரசாங்கம் என்று அடி நாளிலும்; பின்னர் மதச்சார்பற்ற அரசாங்கம் என்றும் கருத்து விளக்கம் தெரிவிக்கப்பட்டது.

குழப்பம்

ஆனால், அண்மையிலோ ஆட்சி பீடாதிபதிகள் மத விழாக்களிலும், கும்ப மேளாக்களிலும் கலந்துகொண்டதனை பொது மக்கள் உலகம் குற்றம் கூறவே, செக்யூலர் என்றால் மதங்கள் மீது வெறுப்புக் கொண்டு ஒதுக்கித் தள்ளுவ தல்ல- _ எல்லா மதங்கள் பாலும் சமரச நோக்குடன் நடந்து கொள்வதேயாகும் என்று பச்சோந்தி விரிவுரை கூறப் பட்டது. இது செக்யூலரிஸம் என்பதை குழப்பமாக்கி விட்டதுடன் -_ அதன் நற்பயனில் சந்தேகம் கொள்ளவும் செய்து விட்டது.

செக்யூலரிஸம் என்றால் ஆங்கில அகராதியில் தரப்பட்டுள்ள பொருள் -_ இந்த உலகானது -_ மறுவுலக சம்பந்தமில்லாதது என்பது. இதனை ஆரிய வடமொழியில் லோகாயிதம் என்கின்றனர். தமிழ் அகராதியிலும் இதே சொல் தரப்பட்டுள்ளது. இது பொருத்தமல்ல. ஏனெனில் இந்த லோகாயிதத்தின் தொடர்ச்சியாக பர மார்த்திகம் என்பதையும் பிணைத்துள் ளனர். அதாவது லோகாயித் வாழ்க்கையை அடுத்து பரமார்த்திகத்தை அடைய வேண்டுமென்றும் கருத்து விளக்கம் செய்து, லோகாயிதம் என்ப தன் உண்மைக் கருத்தையும் நோக்கத் தையும் பாழாக்கி விட்டனர். இந்தச் சொல்லுடன் மத இயலையும் கடவுளி யலையும் பிணைத்து விட்டனர்.

உண்மை விளக்கம்

செக்யூலரிஸம் என்பதன் உண்மை விளக்கப் பொருள் என்ன? இதன் மொழித்துறை வரலாறு என்ன? என்று அறிவியல்வாதிகளும் பகுத்தறிவுவாதி களும் ஆராய்ந்து பார்க்க வேண்டியுள் ளது. பகுத்தறிவியல் என்பது அறிவைப் பயன்படுத்தி மெய்யை உணர்தல். இவ்விதம் பகுத்தறிவு கொண்டு அறிந்த மெய்மைகளை நடைமுறையில் நடத்திக் காட்டுவதே செக்யூலரிஸம் ஆகும்.

இந்த செக்யூலரிஸம் என்ற ஆங்கிலச் சொல்லை முதன் முதல் கையாண்டவர் பகுத்தறிவு மேதை ராபர்ட் இங்கர்சால் அவர்களின் அறிவியல் தோழர்களில் ஒருவரான ஜார்ஜ் ஜாகப்ஹோலியோக் என்பவர். இவரும் குழந்தை வயதில் மதத் துறையில் வளர்க்கப்பட்டவர். அறிவு விரிவடைந்ததும் இந்த மதப் புரட்டு களையும் மதமடமைக் கொள்கைகளை யும் எதிர்த்துப் புரட்சிக் கொடி தூக்கி னார். நாத்திகர் என்ற குற்றத்துக்காக 1841_42ஆம் ஆண்டு வாக்கில் இங்கி லாந்தில் சிறை வாசமும் செய்தவர்.

நடைமுறையில் பரப்பியவர்

தோழர் ஜார்ஜ்ஜாகப் ஹோலி யோக்தான் முதன் முதல் தமக்கும் தம் கோட்பாட்டினருக்கும் செக்யூலரிஸம் என்ற தனி இடு குறிப்பெயர் இட்டுக் கொண்டார். இந்தப் பகுத்தறிவு நடைமுறை இயல் கழகங்களும் லண் டனில் பல இடங்களில் தோற்றுவித்து நடத்தினார். பகுத்தறிவு இயல் பத் திரிகைகள் பலநடத்தினார். பகுத்தறிவு பத்திரிகையாளர் கழகமும் ஏற்படுத் தினார். இதற்கு முதல் தலைவரும் இவரே.

பிரிட்டிஷ் செக்யூலர் யூனியன் என்ற பேரவைத் தலைவராகவும் இவர் பல்லாண்டுகளிருந்து பணியாற்றி, கோட்பாட்டையும், கழகத்தையும் பரப்பி, வலுப்படுத்தினார்.

இந்த செக்யூலரிஸம் என்ற சொல்லுக்கு இவர்தந்த விளக்கப் பொருள் இந்த உலக வாழ்க்கை சம் பந்தமான கடமை வழிக் கோட்பாடு அமைப்பு என்பதாகும்.

இங்கர்சால் விளக்கம்

மேதை இங்கர்சால் இந்தச் சொல்லுக்குத் தந்துள்ள விளக்கப் பொருள் இந்த உலக விஷயங்களில் மனிதப் பண்பாட்டுடன் மனித அனு தாபத்துடன் நடந்து கொள்ளும் நெறி; அறியும் உணர்ச்சி கொண்டவர்களின் நலனுக்கான ஒவ்வொரு விஷயத்திலும் நடப்பிலும் கருத்துச் செலுத்துவது; அனுபவ உலக ஆய்வு அறிவு என்பதற்கு மறுபெயரும் இதுவாகும். அதாவது அவரவர்கள் புரிந்து கொண்ட முறையிலும் விருப்ப வாய்ப்புகளுக்கு ஏற்ற வகையிலும் வாழ்க்கைத் துறையை செப்பனிட்டு அமைத்துக் கொள்ளச் செய்வது இது. இங்கு இந்த உலகில் அவரவர்களுக்கான நல் வீட்டை அமைத்துக் கொள்வதில் நம்பிக்கை கொள்ளச் செய்வது இந்த செக்யூ லரிஸம்

ஒவ்வொருவர் தனி முயற்சி ஊக்கம், அறிவு, ஆற்றல், ஆராய்ச்சி அனுபவம் ஆகியவற்றில் நம்பிக்கை கொள்ளச் செய்வது.

நாமறியாததும் அமானுஷியமானது மான ஏதோ ஒன்றில் (கடவுள்) நம் பிக்கை கொள்வதைத் தவிர்ப்பது இது. இந்த வாழ்க்கையில், இந்த உலகில் மகிழ்ச்சியுடன் நல்வாழ்வு அனைவரும் வாழ வேண்டுமென்பதே இதன் குறிக்கோள் என்பதாகும். இந்த பகுத்தறிவியக்க செக்யூலரிச மேதைகளின் விளக்கத்திலிருந்து இந்த செக்யூலர் -_ செக்யூலரிஸம் என்பன மத இயல், கடவுளியல் மறுப்புக் கோட்பாடு _- மதம் கடவுள் என்பதனை ஒழித்துக் கட்டுவது என்பது தெளிவுபடுகிறது.

Read more: http://viduthalai.in/page3/85563.html#ixzz39zrPHtqA

தமிழ் ஓவியா said...


வணிக நூலகம்: கடவுள் வாங்கலயோ கடவுள்.. கடவுள்...!

- டாக்டர் ஆர்.கார்த்திகேயன்மேக்ஸ் வெபர் எனும் சமூகவியல் மேதை அறிவியல் வளர்ச்சியும் பொருளாதார முன்னேற்றமும் ஏற்பட ஏற்பட உலகில் கடவுள் நம்பிக்கை பெருமளவு குறையும் என்றார். மாறாக கடவுள் நம்பிக்கையும் அதைச் சார்ந்த வாழ்வியல், வியாபாரக் கூறுகளும் அதிகரித்துள்ளன என்கிறார் அம்பி பரமேஸ்வரன்.

For God’s Sake An Adman on the business of religionஎன்ற அவரின் புத்தகம் இதை ரசமாய் படம் போட்டுக் காட்டுகிறது. நுகர்வோர் உளவியல் பற்றி இந்திய ஆசிரியர்கள் எழுதியுள்ள புத்தகங்கள் குறைவு. அதிலும் தமிழ் நாட்டைச் சேர்ந்த ஒரு அனுபவஸ்தர் எழுதியுள்ளதால் இரண்டாம் சிந்தனை இல்லாமல் உடனே வாங்கினேன். தன் 35 வருட விளம்பர உலக அனுபவத்தின் மூலமாக இந்திய வியாபார நிறுவனங்களையும், இந்திய நுகர்வோர்களையும் சுவாரசியமாக அலசுகிறார். ஒரு பக்கம் கூட அலுப்புத் தட்டாத அளவிற்கு, ஒரு நாவல் படிக்கும் மன நிலைக்கு வாசகனைத் தள்ளி கடைசி வரை தன் வசம் வைத் திருக்கும் இவரின் அபார நடை குறிப் பிடத்தக்கது. தன் பி.ஹெச்.டிக்காக திரட்டிய விஷயங்களைப் புத்தகமாக்கியதால், வெறும் அபிப்பிராயங்களாக இல்லா மல் புள்ளிவிவரக் குறிப்பும், ஆராய்ச்சி சார்ந்த கருத்துக்கள் என்பதால் ஒரு நம்பகத்தன்மை தெரிகிறது. ஆதாரச் செய்தி ஒன்றுதான்.

இந்தியன் ஒரு பக்கம் நவீனம் ஆக ஆக இன்னொரு பக்கம் மதம் சார்ந்த நம்பிக்கைகளை முன்பை விட தூக்கிப் பிடிக்க ஆரம் பித்துள்ளான். இந்த முரண்பாடான வளர்ச்சி ஒரு சந்தை வாய்ப்பு. இதை எல்லா நிறுவனங்களும் பயன்படுத்திக் கொள்ளலாம் எவ்வளவு பெரிய வண்டி வாங்கினாலும் பிள்ளையார் கோயில் முன் பூஜை உண்டு. ஸ்கிரீன் சேவர் களிலும் அதிகமுள்ள கடவுளும் விநாய கர்தான்! திருப்பதி பாலாஜிதான் இந்திய கடவுள்களில் வசூல் ராஜா. அடுத்து வைஷ்ணவோ தேவி. பின் சபரி மலை. எல்லா கோயில் பிரசாதங்களையும் ஆன்லைன் மூலம் பெறும் வசதிகளும் வந்துள்ளன. திருப்பதியில் வழிக்கப் படும் தலை முடி அனைத்தும் அய்ரோப் பிய நாடுகளில் விக் தயாரிப்புக்கு விற்கப்படுகின்றன. அதுவும் ஈ- ஆக்சன் எனும் வலைதள ஏலத்தில் சென்ற ஆண்டு 133 கோடி ரூபாய் வருமானம் ஈட்டப்பட்டது. இது தவிர விசா பாலாஜி கோயில் என ஹைதராபாத் அருகில் ஒரு கோயில் உள்ளதாம். விசா கிடைக்க வேண்டினால் விசா உறுதி என அப்ளிகேஷனும் கையுமாக ஒரே கூட்டமாம். உலகிலேயே அதிக மக்கள் பங்கு கொள்ளும் மகா உற்சவம் கும்பமேளா. இதைப் பற்றி ஹார்வர்ட் நிர்வாகப் பள்ளி ஒரு ஆராய்ச்சிக் கட்டுரை வெளி யிட்டுள்ளது. இதை முறைப்படுத்திச் செய்தால் எவ்வளவு சந்தைப்படுத்த லாம் என்று அதில் விளக்குகிறது. ஒரு நகரையே இதற்காக உருவாக்கிக் கலக்கலாம் எனத் தெரிகிறது. ஹெலி காப்டர் தர்ஷன் எல்லாம் வைக்கலாம் என டைரக்டர் ஷங்கர் ரேஞ்சுக்கு யோசித்திருக்கிறார்கள். அக்ஷய திருதியை என்று யாரோ ஒரு புத்திசாலி நகைக்கடைக்காரர் கண்டு பிடிக்க அது மக்களை வரிசையில் நின்று தங்கம் வாங்க வைக்கிறது. அது போல விற்பனைக்கு மந்தமான ஆடி, மார்கழி மாதங்களில் ஆடித்தள்ளுபடி, மார்கழி இசை விழா எனத் தமிழர்கள் புத்திசாலித்தனமாக வியாபாரம் செய்கிறார்கள் என்கிறார். இந்தியாவின் 80% மதம், இந்து மதம் என்பதால் பெரும்பாலான விற்பனை உத்திகளும் இந்துக்களை நோக்கியுள்ளன என் கிறார் அம்பி. வீடுகளில் வாஸ்து, கல்யாணத்திற்கு முன் மணப்பொருத் தத்திற்கு ஜோதிடம், அசுப காரியங்கள் நடந்தால் ஹோமங்கள் என இந்து வணிகம் நடக்கிறது என்கிறார். அது போல நம் ஊரில் ஏன் சைக்கியாட்ரி பெரிதாக போணியாகவில்லை என்று அம்பி கூறுவதில் உண்மை இல்லாமல் இல்லை. அவர்கள் வேலையை கார்ப ரேட் சாமியார்கள் எடுத்துக் கொண்டு விட்டார்கள். அதுபோல யோகா, ஆயுர்வேதா போன்றவையும் பக்தி சந்தையின் விரிவாக்கங்கள்தான். ஆனால் முஸ்லிம்களை இந்திய வணிகம் சரியாகப் புரிந்து கொள்ள வில்லை. கறுப்பு பர்தா அணியும் வங்கதேசத்தில்தான் பெண்களுக்கான நவ நாகரிக உடைகள் தயாரிக்கிறார்கள். அதை அவர்கள் உள்ளே அணி கிறார்கள்! அதுபோல பெண்களை அவர்கள் சமமாக நடத்துவதில்லை என்பதும் சர்ச்சைக்குரிய விஷயம். இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் முஸ்லிம்களின் ஆண்- பெண் விகிதம் இந்துக்களின் ஆண்- பெண் விகிதத்தை விட ஆரோக்கியமாக உள்ளது!


தமிழ் ஓவியா said...

2050ல் உலகில் 50% ஜனத்தொகையை எட்டிப்பிடிக்கவிருக்கும் அவர்களை சரியாகப் புரிந்தால் நல்ல சந்தை வாய்ப்புகள் உள்ளன. Islamic Banking போன்ற விஷயங்கள் இந்தியாவில் பெருகலாம் என்கிறார் ஆசிரியர். புடவை, தாலி, திலகம் என அனைத்தும் டி.வி விளம்பரங்களில் வழக்கொழிந்து போனாலும் சீரியல் களில் அவை அனைத்தும் புத்துயிர் பெற்று ஜெகஜோதியாக வருவது யோசிக்க வைக்கும் விஷயம். பக்தி சார்ந்த படங்கள், சீரியல்கள், பத்திரி கைகள் என்றுமே தோற்றதில்லை. வெளியூர் செல்கையில் டிபனுக்கு நுழைந்தால் கல்லா ஆசாமி விபூதியும் ஊதுபத்தி வாசனையாக இருந்தால் நல்ல ஓட்டல் என நுழைகிறோம். பார்ஸி வைத்திருந்த கார் என்றால் நல்ல விலைக்குப் போகுமாம். முஸ் லிம்கள் என்றால் வீடு கொடுக்க மாட் டோம். கர்னாடக சங்கீதம் என்றால் பிராமணர்கள் ஆசிரியர்களாக இருக்க வேண்டும். நர்ஸ் என்றால் கேரள கிறித்துவ சேச்சிகள். வடக்கில் டேக்ஸி ஓட்டுனர்கள் என்றால் சிங்கை நம்பி ஏறுவோம். அது போல உச்ச கட்ட வியாபார சீஸன் ஹோலியா, விஷுவா, ரம்ஜானா, கிறிஸ்துமஸா, பொங்கலா, தீபாவளியா, கணேஷ சதுர்த்தியா என்பதை வாழும் மக்களிடம் மதம் சார்ந்த நம்பிக்கைகள் நிச்சயிக்கின்றன. ஆனால், வருங்காலத்தில் சாதி, மதப் பிரிவுகள் வேலையிடங்களில் பார்க்க மாட்டார்கள்; எல்லாம் மாறிவிடும் என்ற இவர் கணிப்பு மட்டும் மணி ரத்னம் படத்து கிளைமாக்ஸ் போல இடிக்கிறது. நீங்கள் எந்த வியாபாரம் செய்தாலும் நம் மக்களின் மதம் சார்ந்த நம்பிக்கைகளை விற்பனை உத்திகளில் இணைப்பது முக்கியம். உதாரணத்திற்கு 2013 ஆய்வுப்படி, இந்தியாவின் திரு மணச் சந்தை மட்டும் 1.5 லட்சம் கோடி ரூபாய். அதில் உங்கள் தொழில் எவ் வளவு பைசா பார்க்கிறது? கடவுள் தேவையில்லை என நாத்திகர்கள் சொல்லலாம். ஆனால் வியாபாரி களுக்கு கடவுள் அவசியம் தேவை. கடவுளை நம்பினோர் கைவிடப்படார்! குறிப்பு: கடவுள், பக்தி என்பது எல்லாம் மக்களின் மடமையை நம்பி வியாபார யுக்திக்கான கருவி என்பது தான் இக்கட்டுரையின் அடிநாதம் என்பதுதான் உண்மை பக்தி என்பது ஒரு ஃபேஷன் பிசினஸ் என்று சங்கராச்சாரியார் குறிப்பிட்டதையும் நினைவுப்படுத்திக் கொள்க.

Read more: http://viduthalai.in/page4/85564.html#ixzz39zrwS09U

தமிழ் ஓவியா said...


வாஷிங்டன் வட்டார முன்னாள் தமிழ்ச் சங்க தலைவர் எம்.எம். இராஜ் பேட்டிவாஷிங்டன் வட்டார தமிழ்ச் சங்கத்தின் முன்னாள் தலைவரும், வாஷிங்டனில் வெளிவந்த முதல் தமிழ் மாத இதழான குமரி இதழின் நிர் வாக இயக்குநருமாகிய எம்.எம். இராஜ் அவர்கள் விடுதலை இதழுக்கு அளித்த நேர்காணல்:

சமீபத்தில் நடந்த வேட்டிப் பிரச்சினையில் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் வேட்டிக்கு ஆதரவாகக் குரல் கொடுத்திருப்பது மிகவும் வரவேற்கத்தக்கது. அதுபோல இந்துக் கோவில்களில் ஆண்கள் சட்டை அணிந்து செல்லக் கூடாது என்ற பழக்கம் இருந்து வருகிறது. இது மிகவும் கண்டிக்கத்தக்கது. சட்டை அணிய கோவில் நிர்வாகிகள் அனுமதிக்க வேண்டும். அதற்காக அனைத்து அரசியல் கட்சிகளும் குரல் கொடுக்க வேண்டும்.

அதுபோல் கோவில்களில் தமிழ் இன்னும் நுழைய வில்லை. சமஸ்கிருதம்தான் உள்ளது. அனைத்து கோவில் களிலும் தமிழில் வழிபடும் உரிமை வேண்டும். கோவில் வியாபார இடமாக மாறி விட்டது. பூஜை பொருட்கள், மலர் மாலைகள்கூட அதிக விலைக்கு ஏழை மக்களிடம் விற்பனை செய்வது கண்டிக்கத்தக்கது.

திருவனந்தபுரம் பத்மனாப சாமி கோவிலில் இருக்கும் நகைகள் குமரி மாவட்ட மக்களுடை யது. அன்றைய திருவிதாங்கூர் அரசு இளை ஞர்கள் மீசை வைத்தால் அதற்கு வரி, இது போன்று பல வரிகள் போட்டும் தற்போதைய குமரி மாவட்ட மக்களின் உழைப்பு, பொருள் அனைத்தும் பத்மனாபசாமி கோவிலில் நகையாக உள்ளது. அங்கு இருக்கும் நகைகளில் சரிபாதி நகைகளை தமிழக அரசுக்கு கோவில் நிர்வாகம் வழங்க வேண்டும். தமிழக அரசு அந்தத் தொகையினை முழுக்க முழுக்க குமரி மாவட்ட மக்களின் வளர்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும். பத்மனாபபுரத்தில் இருக்கும் அரண்மனை தற்போது கேரள அரசிடம் உள்ளது. இதனை மீட்டு அந்த அரண் மனையை தமிழக அரசின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர வேண்டும் என்று அவர் கூறினார்.

நேர்காணல்: கோ. வெற்றிவேந்தன், மாவட்ட செய்தியாளர்

Read more: http://viduthalai.in/page4/85565.html#ixzz39zs785kJ

தமிழ் ஓவியா said...


உலகளாவிய மொழிப் போராட்டங்களும் அதன் விளைவுகளும்


மொழிப்போராட்டம் என்பது நதிக்கரை நாகரிகம் அழியத்துவங்கிய காலகட்டத்திற்கு பிறகு ஏற்பட்டது, காரணம் மனித வாழ்விட விரிவாக்கம் தொடர்பான போராட்டம் போரில் துவங்குகிறது. இங்கு வலிமையான இனக்குழு செய்யும் முதல் காரியம் தோல்வியடைந்த இனக்குழுவின் மொழியை சிதைத்து அழிப்பது தான். மேலும் உலகில் பேசப்படும் மொழி களைப் பின்வருமாறு குடும்பங்களாக வகுத்து நோக்க முடியும்.

1. செமித்திய ஹமிட்டே மொழிக் குடும்பம்.
2. இந்தோ ஐரோப்பிய மொழிக் குடும்பம்.
3. திராவிட மொழிக் குடும்பம்.
4. மலாய - யோலீசியன் மொழிக் குடும்பம்.
5. துரோனிய மொழிக் குடும்பம்.
6. பாண்டூ மொழிக் குடும்பம்.
7. சீன - திபேத்திய மொழிக் குடும்பம்.
8. ஆசிய மொழிக் குடும்பம்.

முதலில் மொழி வரலாறு பற்றி சில தகவல்கள்


தமிழ் ஓவியா said...

மனிதன் தனது உணர்வுகளை தேவைகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள உருவான மொழி முழுவடி வம் எழுத்து மற்றும் நடைவடிவம் பெற்றது கிமு25 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரை இருக்கலாம் என்று கருது கின்றனர். ஆதிச்ச நல்லூரிலேயே பல சான்றுகள் உள்ளன. முக்கியமாக ஒவ்வோரு முதுமக்கள் தாழியிலும் சில எழுத்துக்குறியீடுகள் உள்ளன. அவை கிட்டத்தட்ட சிந்து சமவெளி எழுத் துக்கு ஒப்பாக அமைந்திருக்கிறது, ஆதிச்ச நல்லூர் நாகரிகம் கி.மு.10000 முதல் கி.மு. 7000 வரை என்கிறனர். அதாவது ஒரு நாகரிகமான நாகர்கள் இனம் 10000 ஆண்டுகளுக்கு முன்பே வாழ்ந்தது என்றால் அவர்களின் மொழி யின் வளர்ச்சி 15 ஆயிரம் ஆண்டுகளாக இருக்கலாம் என்று கருதுகின்றனார். பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நாகர்கள் இந்தியத்தீபகற்பம் முழுவதும் பரவி வாழ்ந்தனர். இது நாகர் என்ற பெயரில் ஆரம்பிக்கும் ஊர்களின் மூலம் இன்றும் சான்றுகளோடு நம் முன் உள்ளது. எடுத்துக்காட்டாக நாகர் கோவில், நாகப்பட்டினம் (தமிழ்நாடு) நாகமங்களம் நாகனூர்(கேரளா) நாக்டானே, நாக்பூர்(மராட்டியம்) நாகேகோர், நாகரோர்(பாகிஸ்தான்) நாகமோதி, நாகாலாந்து என இந்தியா பாகிஸ்தான் பங்களாதேஷ் போன்ற நாடுகள் முழுவதும் சுமார் 8000 பெயர்களில் ஊர்கள் உள்ளது. இந்தியா முழுவதும் வாழ்ந்த நாகர்கள் காலம் செல்லச்செல்ல அவர்களில் மொழியில் சில மாற்றங்கள் பிற்காலத்தில் இந்த மொழிகளை திராவிடமொழிக்கிளை என்று அடையாளம் சூட்டப்பட்டது. வடக்கில் சென்ற திராவிடமொழிகள் மீண்டும் ஒன்றினைந்து பாலி என்ற ஒரு புதிய மொழியினை உருவாக்கியது, இது கிமு 1000-ங்களில் தமிழ் போல இலக் கணம் மற்றும் பொதுச்சொற்களுடம் பரவலாக பேசப்பட்டுவந்த மொழியா கும். தட்சசீலத்திலும் நாலந்தாவிலும் செயல்பட்டுவந்த பல்கலைக்கழக நூல்கள் அனைத்தும் பாலியில் தான் இருந்த்ன, பாலி இலக்கணம் இலக்கியம் என செழித்து இருந்தது, பவுத்த சமண நூல்கள் அனைத்தும் பாலியில் தான் இயற்றப்பட்டன. அசோகர் காலத்து மிகவும் உயரிய இடத்தில் இருந்தது பாலிமொழிதான். வேதகாலம் துவங்கிய பிறகு இந்திய தீபகற்பபகுதிகளில் கலாச்சாரம் மற்றும் மொழித்தொடர்பான போராட்டம் கி.மு. 2ஆம் நூற்றாண்டில் மிகவும் குறுகிய காலகட்டத்தில் சமணமும் பவுத்தமும் தமிழகத்தில் வலுவாக கால் ஊன்றக்காரணமும் பாலியின் சொற்கள் பல நமது தமிழுக்கு நெருக்கமாக இருந்த தால் தான்,


தமிழ் ஓவியா said...

கி.பி. 7-ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு, பவுத்த ஜைன மதத்தினர் செல்வாக்கு இழந்து, பிராமணர்கள் செல்வாக்குப் பெற்ற காலத்தில், பிராகிருத மொழி களுக்குச் செல்வாக்குக் குறைந்து சமஸ் கிருத மொழியின் ஆதிக்கம் ஏற்பட்டது.

பிற்காலச்சோழர்காலத்தில் தமிழ் எழுத்தில் திடீர் மாற்றம் காணப்பட் டது. சோழர்களின் பேராதரவுபெற்ற பார்ப்பனர்கள் தமிழை வடமொழி வடிவில்.எழுத ஆரம்பித்தனர். இக்காலகட்டத்தில் மிகவும் தந்திரமாக பல்வேறு சமஸ்கிருத வார்த்தைகளை தமிழில் கொண்டுவந்தனர். எடுத்துக் காட்டு வணக்கம் இந்த இடத்தில் நமஸ்காரம் சோழன் காலத்தில் தான் பரவலாக பேசப்பட்டது.

புழக்கத்தில் இருந்த வட்டெழுத்துக் களை மாற்றி, புதிய வடமொழிவடிவில் தமிழ் எழுத்துக்கள் எழுதப்பட்டன. சோழ அரசர்கள் கி.பி. 10ஆ-ம் நூற்றாண் டில் கிரந்தத் தமிழ் எழுத்தைப் பாண்டி நாட்டில் புகுத்தியதற்கு, குற்றாலத்தில் உள்ள குற்றாலநாத சுவாமி கோவில் சாசனங்களே சான்று என்று கூறும் மயிலை சீனி.வேங்கடசாமி, பழைய வட்டெழுத்தில் எழுதப்பட்ட சாசனங்களைப் புதிய எழுத்தில் பெயர்த்து எழுதி ராஜராஜன் அமைத் தான் என்று கூறுகின்றன என்பதை சுட்டிக்காட்டுகிறார். இந்திய வரலாற்று அறிஞர் டி.டி. கோசாம்பி, தனது பண்டைய இந்தியா என்ற நூலில், கி.பி.150இ-ல் தான் முதன் முதலாக சமஸ்கிருத மொழி எழுதப் பட்ட கல்வெட்டுகள் கிடைத்ததாகக் குறிப்பிடுகிறார். கி.பி. 2-ஆம் நூற்றாண் டுக்கு முன், சமஸ்கிருத மொழிக்கு எழுத்து வடிவம் இல்லை. அந்தக் காலத்திய கல் வெட்டுக்கள் எதிலும் சமஸ்கிருத எழுத்துக்கள் இல்லை என்பதும் குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று. பிராமி, கரோஷ்டி முறைகள் இன்று நடைமுறையில் இல்லை. பிராமி எழுத்து முறையில் இருந்து பல்வேறு விதமான எழுத்து முறைகள் தோன்றி இருக்கின்றன. குறிப்பாக, தென்னிந்தியாவில் இது வட்டெழுத் தாக உருவானது. வடமாநிலங்களில் கோண வடிவில் எழுதப்படுவதாக மாறியிருக்கிறது.

பிராகிருதம் என்பது பண்டைய இந்தியாவில் பேசப்பட்டு வந்த மொழி களையும் அதன் வழக்கு களையும் குறிக்கிறது. பிராகிருதம் என்பது ஒரு மொழி அல்ல; அது ஒரு மொழிக் குடும்பம். இந்த மொழிக் குடும்பத்துக் குள் நிறையக் கிளைகள் இருக்கின்றன. பிராகிருதம் வெகுமக்களால் பேசப் பட்டு வந்த ஒன்றாகும். பேச்சுவழக்கில் இல்லாத செம்மொழியாகவே சமஸ் கிருதம் இருக்கிறது. இந்த மொழி லத்தீன் போலவே வழிபாட்டுக்குரிய மொழியாகவும் கருதப்படுகிறது. கிழக்கிந்தியக் கம்பெனியில் நீதி பதியாகப் பணியாற்றுவதற்காக வங்காளத்துக்கு வந்த வில்லியம் ஜோன்ஸ் லத்தீன், கிரேக்கம் இரண்டையும் தெளிவாகக் கற்றவர்.

தமிழ் ஓவியா said...


இந்தியச் சட்டங்களை அறிந்து கொள்வதற்காக சமஸ்கிருதம் படிக்கத் தொடங்கினார். லத்தீன் மொழிக்கும் சமஸ்கிருதத்துக்கும் இடையே நிறைய ஒற்றுமைகள் இருப்பதை உணர்ந்தார். அதுபற்றி தொடர்ந்து ஆய்வுகள் செய்து இவை ஒரு பொது மொழியை வேராகக்கொண்டவை என்ற கருத்தை முன்மொழிந்தார். இந்தக் கருத்தாக்கம் தொடர்ந்து ஆராய்ச்சி செய்யப்பட்டு, இந்திய - ஐரோப்பிய மொழிக் குடும்பம் ஒன்றில் இருந்துதான் இந்த மொழிகள் தோன்றி இருக்கக்கூடும் என்ற நிலைப் பாடு உருவானது.

சுமேரிய மொழிப் போராட்டம்

கிமு மூன்றாயிரம் ஆண்டுகளின் நடுப்பகுதியில், சர்கன் (Sargon) என்பவனால் மெசொபொதேமியாவில் அகேத் (Agade) அல்லது அக்காத் (Akkad) என்னும் அரசவம்சம் நிறுவப்பட்டது. அப்போது தான் முதன்முறையாக முழுப் பிரதேசமும் ஒரு மய்ய அரசின் ஆட்சியின் கீழ் ஒருமைப்படுத்தப்பட்டது. அக்காத்தியர் செமிட்டிக் இன மக்களாவர். இவர்கள் பற்றிய குறிப்பிடத்தக்க அக்காத் மொழி ஆவணங்கள் கி.மு 2300 இலிருந்து கிடைக்கின்றன. சுமேரிய மொழி நிர்வாகம் மற்றும் இலக்கியங்களுக்கான மொழியாகத் தொடர்ந்து வந்தபோதும், மற்றெல்லா வகைகளிலும் அக்காத் மொழியே ஆதிக்கம் செலுத்தியது. இவ் வம்சம் கி.மு 2000 வரை தொடர்ந்தது.

மெசபடோமியா, சுமேரியர், அக்காத்தியர், பாபிலோனியர் மற்றும் அசிரியர் போன்றோரின் நாகரிகங் களையும் உள்ளடக்கிய பல பண்டைய நாகரிகங்கள் வளர்ந்தோங்கிய ஒரு இடமாகும்

ஆனால், அவர்களுக்குள்ளான தொடர் போர்கள் காரணமாக அவர் களின் கலாச்சாரம் அழிந்ததுடன் மொழிவளமும் முற்றிலுமாக அழிந்து போனது. .

இவைகளுள் மிகப் பழமைவாய்ந்த மொழிகளாக

1. எபிரேயம், 2. வல்காத்து (Valagath) 3. ஷிட்டா, 4. அரமைக், 5. சால்ட்டியம்.
மொழிப்போராட்டத்தில், தோல்வியடைந்த மொழிகள்

மொழிப்பொராட்டத்தில் தோல்வி யடைந்த மொழிகள் என்றால் அது முதலில் சம்ஸ்கிருதம் என்றே கூறலாம். காரணம் குறிப்பிட்ட இனத்தவர் தங்களுக்கு என்று மாத்திரம் சொந்த மாக வைத்து அதை மதங்களின் பயன் பாட்டிற்கு மாத்திரம் பயன்படுத்தியது. முக்கியமாக அலக்சாண்டர் துவங்கி ஆங்கிலேயர்கள் வரை தொடர் வரவால் சமஸ்கிருதம் மிகவும் சுருங்கி செத்துப்போன மொழிவரிசையில் இணைந்துகொண்டது. காரணம் சமஸ்கிருதம் பொதுப்பயன்பாட்டிற்கு ஏற்கும் வகையில் இல்லை.

கிரேக்கம் மற்றும் லத்தீன்

தமிழ் ஓவியா said...

கிரேக்கம் மற்றும் லத்தீன் மொழி கள் இன்று வழக்கில் இல்லை என் றாலும் காலஓட்டத்தில் அவை பரிணாம வளர்ச்சி பெற்று இன்று இத்தாலி, ஜெர்மன், ஆங்கிலம், பிரான்ஸ், ஸ்பானிஸ் மற்றும் போர்ச்சு கல், என பல்வேறு வடிவங்களில் பரிணாமம் பெற்றுத் திகழ்கிறது, அரமைக் மற்றும் சுமேரிய மொழிகள் கீரேக்கத்துடன் கலந்து ருஷ்ய, லித்தி வேனியான், போன்றவையும், எபிரேயம் அரபி ஹிப்ரு, துருக்கிய மொழியாகவும் புதிய பரிமாணம் எடுத்தது.

புதிய பரிணாமத்தில் வாழும் மொழிகள்

அரபி: அரபி மொழியின் வரலாறு சுமேரிய நாகரிகம் அழிவுற்றதில் இருந்தே துவங்குகிறது, அரமைக் என்ற மொழியின் ஆரம்பவடிவம் சிதையாமல் இன்று அரபியாக மாறி இருக்கிறது என்று மொழியியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். காரணம் சுமேரியர் களின் பல்வேறு அறிவியல் கண்டு பிடிப்பு வார்த்தைகள் அரபிச் சொற்களோடு ஒத்துப்போகிறது. பல்வேறு கலாச்சார மாற்றங்கள் ஏற்பட்ட பிறகு முகமது நபிகள் அவர்களால் சீர்திருத்திற்கு உட்பட்டு இன்று மத்திய ஆசியா, கிழக்கு மற்றும் சஹாரா பாலைவன நாடுகளில் பரவலாகப் பேசப்பட்டு வரும் மொழி யாக அரபி திகழ்கிறது, சீனம்: சீன மொழியும் நம் தமிழ் போல் நீண்ட தொரு வரலாற்றைக் கொண்டது. 1987-ஆம் ஆண்டில் ஹாங்காய் நகர விரிவாக்கத்தின் போது ஒரு கிடைத்த ஆமை ஓட்டு எழுத்துப் படிவத்தை ஆய்வு செய்த போது அது 5ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட் டவையாக இருந்த்து, சுமார் 130 பல்வேறு மொழிகளாக இருந்த மொழிக்குழுமத்தை ஒன்றாக மாற்றிய பெருமை சீன மன்னர் ஷீன் என்பவரைச்சாரும் இவரின் காலம் கிமு 3000. இவரது மறைவிற்கு பிறகு தான் மன்னரின் பெயரே சீன் என்றும் மொழிக்கு சீனமொழி என்று பெயர் வந்தது, உலக மொழிப்போராட்டம் என் பதுமே தமிழ் தான் முதலில் நினை விற்கு வரும் தமிழ் தொன்று தொட்டு வடமொழியுடன் போராடி வந்தது.

தமிழ் ஓவியா said...

சோழப்பேரரசு காலத்தில் தமிழில் அளவிற்கு அதிகமாக வடமொழிச் சொற்கள் உட்புகுந்தது மாத்திரமல் லாமல் தமிழின் போக்கையே மாற்றி யமைத்தது, நல்வாய்ப்பாக சாமானியர் களை அந்த வேத மொழிஉருமாற்றம் ஒன்றும் செய்யவில்லை. இதன் தாக்கத்தால் ஏற்பட்ட பெரிய பாதிப்பு தமிழையே அழிவு நிலைக்கு கொண்டு சென்று விட்டது. நீதிக் கட்சியில் பெரியாரின் நுழைவிற்கு பிறகு தமிழ் புதிய பரிணாமத்துடன் வட மொழிக்கு எதிராக ஒரு பெரும் போராட்டத்தை முன்னேடுத்தது. சுமார் இரண்டு தலைமுறையாக நடந்த இந்தப்போராட்டத்தின் பலனால இன்று தனித்தமிழ் சீருடன் திகழ்கிறது, உலக மொழிப்போராட்டத்தில் எந்த ஒரு மொழியும் இவ்வகைப் போராட் டத்தை முன்னேடுத்துச்சென்றதில்லை.

டன்கன் பி ஃபொரச்டெர் (Forrester, Duncan B.) என்ற கொலம்பிய பல்கலை கழக வரலாற்றுப்பேராசிரியர் தனது "The Madras Anti-Hindi Agitation” என்ற நூலில் குறிப்பிட்டதாவது, ஒரு மொழி நீண்ட பாரம்பரியத்தை வரலாற்றை கலாச்சாரத்தை உயரிய இலக்கியத்தை கொண்ட மொழிக்காக ஒட்டுமொத்த தமிழினமே திரண்டது உலக வரலாற்றில் மொழிப் போராட் டத்திற்கு கிடைத்த மிகப்பெரிய உந்துசக்தியாகும் என்று எழுதியுள்ளார். தமிழ் காலத்தால் வென்று நிற்கும் மொழி நீண்டகாலப்போராட்டத்தின் விளைவு தனித்தமிழாய் நிற்கிறது.

தமிழ் ஓவியா said...

சீனம் அரபி தமிழ் போன்ற மொழி கள் தொன்மையானதெனக் கருதப் படுவதோடு, வாழும் தன்மையுள்ளதாக வும் கருதப்படுகின்றன.இம்மொழிகளின் இன்னுமொரு தன்மை என்னவெனில், தேவையேற்படின் வேறு மொழிச் சொற்களையும் தன்னுள் உள்வாங்கிக் கொள்ளும் தன்மையுள்ளதாகும்.

யூனஸ்கோ ஆய்வின்படி உலகில் சில மொழிகள் அழிந்து விட்டன. அதாவது, செட்டிடே, எஸ்ருக்கன் ஆகிய மொழிகள் வழக்கிழந்து இல்லாமல் போய்விட்டன.

சுமேரியன், ஒல்லாந்து, அரமை ஆகிய மொழிகள் வேறு மொழிகளாக உருமாறித் தங்களை அழித்துக் கொண் டுள்ளன. சில மொழிகள் அழிவடையும் நிலையில் உள்ளன
இம்மொழியின் அழிவோடு இம் மொழிகளில் உள்ள கலை, கலாசாரம் என்பனவும் அழிந்து விடும்.மொழி மனிதனின் கண்களுக்குச் சமமானது. மனிதனை அழிக்க வேண்டுமென்றால் அவர்களின் தாய் மொழியை சிறுகச் சிறுக அழித்தால் போதும் எனகிறார் அறிஞர் பெர்னாட்ஷா.

இன்று பேசப்படும் பிரபல மொழிகளின் எழுத்து எண்ணிக்கை

தமிழ் எழுத்து _ 247; சீனம் _ 216; பாரசீகம் _ 31; ஸ்பாநியம் _ 27; ஆங்கிலம் _ 26; இத்தாலி _ 22; துருக்கி _ 28; பிரஞ்சு _ 26; கிரேக்கம் _ 24; சமஸ்கிருதம் _ 48; அரபி _ 28; ஜேர்மன் _ 26; இலத்தீன் _ 27; ரஸ்யன் _ 33; ஜப்பான் _ 22

தென் அமெரிக்க மொழிகளின் அழிவு என்பது அவர்களின் ஒற்றுமை யின்மை மற்றும் அதிதீவிர மூட நம்பிக்கையே ஆகும்.

உலகிலேயே அதிகமாக பழங்குடி யின மொழிபேசும் மக்கள் ஆப்ரிக்கா வில் மாத்திரமே உள்ளனர். ஆப்பிரிக் காவில் மொத்தம் 1700 வகை பொதுப் பிரிவு பழங்குடி மொழிகளும் அதன் உட்பிரிவாக பல்வேறு மொழிகளும் உள்ளன. இவற்றிற்கு எழுத்து வடிவம் கிடையாது. தான்சானியாவில் குடேக் என்ற பழங்குடியின மொழியைப் பேசும் மக்கள் வெறும் 8 பேர்கள் தான் இன்று உயிருடன் உள்ளனர். ஆப்பிரிக் காவின் காலனிஆதிக்கம் ஆப்பிரிக்க கலாச் சாரத்தை மாத்திரம் அல்லாமல் அதன் மொழியினையும் முற்றிலுமாக சிதைத்து அழித்து விட்டது. இந்தியாவில் இந்தியின் ஆதிக்கத் தால் ஹரியானி, ராஜஸ்தானி, போஸ்பூரி, மடேக், மார்வாடி, மற்றும் போனி போன்ற மொழிகள் முற்றிலும் அழிந்துவிடும் நிலையில் உள்ளன. முக்கியமாக தனித்து எழுத்து வடிவம் பெற்ற போஜ்புரியும் மராட்டியும் இந்தி எழுத்துருவை இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் எடுத்துக்கொண்ட்து. இதன் விளைவாக மராட்டிய நகரங் களில் அழிந்து கிராமங்களில் மாத் திரமே வாழ்கிறது. தற்போதைய தலை முறை போஜ்பூரியை புறக்கணித்து விட்டது. மொழிப் போராட்டத்தில் பரிணாம மாற்றங்களை தன்னுள் எடுத்துக் கொண்டு தன்னுடைய தனித் தன்மையை விட்டுக்கொடுக்காத மொழியே அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும். இல்லையென்றால் சமஸ்கிருதம் போன்று வழக்கொழிந்து செத்துப் போய்விடும்.

- சரவணா இராஜேந்திரன்

Read more: http://viduthalai.in/page5/85566.html#ixzz39zsJ3f3R

தமிழ் ஓவியா said...


புதிய உயிரினங்கள் கண்டுபிடிப்புஉலகம் முழுவதும் 18 ஆயிரம் புதிய உயிரினங்களை, விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அவற்றில், பூனையை போன்ற கரடியும், தரைக்கு கீழ், 3,000 அடிக்கு கீழ் இருக்கும் கண்ணில்லாத நத்தையும் அடங்கும். இதுகுறித்து, நேஷனல் மியூசியம் ஆப் நேச்சுரல் சயின்ஸ் என்ற அமெரிக்க நிறுவனத்தின் உயிரியல் விஞ்ஞானி, அண்டோனியோ வால்டேகேசஸ் தலைமையிலான விஞ்ஞானிகள் குழுவினர் கூறியதாவது: உலகில் 20 லட்சம் உயிரினங்கள் இருப் பதாகவும், இவற்றில் தற்போது 18 ஆயிரம் உயிரினங்கள் கண்டறியப் பட்டுள்ளன. இன்னும் 1 கோடி உயிரி னங்கள் கண்டுபிடிக்க வேண்டியுள் ளது. அவற்றில் பல அழிவின் விளம் பில் உள்ளன. இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

Read more: http://viduthalai.in/page6/85570.html#ixzz39ztDruUb

தமிழ் ஓவியா said...


பெரியாரைப் பின்பற்று


விஞ்ஞான அறிவுக்கு முதன்மை கொடு
அஞ்ஞானக் குப்பையை விடு!
குழந்தைக்கு தமிழில் பெயரிடு
பகுத்தறிவைப் பாலோடு ஊட்டிடு!
நெருப் பாய் இரு
அதுவே உனக்கு திரு!
ஆரியம் வீழும் வரை
வீரியம் இழக்காதே!
கள்வன்கண்ணுக்கு கடவுள் உண்டியல் கற்கண்டு
காலத்தே திருந்து இதைக் கண்டு!
நூலைப் படி
அறிவின் வழிநூலைப் படி!
மானுடம் உயர்ந்திட பாடுபடு
மடமையை ஆழ் குழியிலிடு!
பெரியாரைப் பின்பற்று
அதுவே நம் வாழ்வின் பற்று!

- இரா. முல்லைக் கோ
பெங்களூர் - 43

Read more: http://viduthalai.in/page7/85572.html#ixzz39ztQqVEa

தமிழ் ஓவியா said...


பொருளியல் வணிகவியல் படித்த ஆசிரியர் சமுதாயம் பாழ்பட்டு நிற்கும் பரிதாபம்!


- வி. மருதவாணன், தஞ்சாவூர்

தமிழகத்தில் ஆசிரியர் நியமனத்தில் உரிய முறைகள் பின்பற்றாத காரணத் தால், மிகப் பெரிய அளவில் பொரு ளியல் மற்றும் வணிகவியல் முதுகலை பட்டதாரிகள் பாதிக்கப்பட்டிருக் கிறார்கள். கண்ணீருக்கும், வருத்தத் திற்கும் உரிய இந்தச் செய்தி, அரசின் காதுகளுக்கு எட்டாதது மிகுந்த வேத னைக்குரியது. கடந்த 25 ஆண்டுகளாக பதிவு செய்து காத்திருக்கிறார்கள் இந்தப் பட்டதாரிகள், 50 வயதைக் கடந்தும் இவர்களுக்கு இன்னும் பணி வாய்ப்பு கிடைக்கவில்லை, கிடைத்தால், ஒரு சில ஆண்டுகள் தான் இவர்கள் பணிபுரிய வாய்ப்புண்டு இந்த கொடுமைக்கு என்ன காரணம்?

2000 ஆண்டு-க்குப் பிறகு வந்த அதிமுக அரசு, ஆசிரியர் நியமனத்தில் பதிவு மூப்பு முறையை (seniority) ரத்து செய்துவிட்டு, போட்டித் தேர்வு முறையை (TRB)கொண்டுவந்தது. அரசு ஒரு புதிய முறையை கொண்டு வரும் போது, ஏற்படும் பாதிப்புகள் குறித்து மனிதநேயக் கண்ணோட்டத்தோடு அணுகி இருக்க வேண்டும். அவ்வாறு செய்யாததால், 2000-க்கு முன்பே 10 ஆண்டுகளாக பணிக்காக காத்திருந்த வர்களும் போட்டித் தேர்வு எழுத நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். வரிசையில் கால்கடுக்க நின்றவனுக்கு ஒரு வழி சொல்ல வேண்டாமா? நியாயமாக அவர்களுக்கு ஒரு மாற்று ஏற்பாட்டை அரசு செய்திருக்க வேண்டும். ஆனால் என்ன நடக்கிறது? மைதானம் ஒன்றுதான், ஆனால் தாத்தாவும் பேரனும் ஒரு சேர ஓடனும். அதற்கு பந்தயம் என்று பெயரென்றால் எந்த நியாயவாதி ஏற்றுக்கொள்வான்?

அரசு அப்படி காத்திருப்போருக்கு சலுகையாக (weightage marks) 10 ஆண்டுகளுக்கு மேலாக பதிவு செய் திருந்தால் வெறும் 4 மதிப்பெண்கள் தருகிறது. 10 ஆண்டுகள் காத்திருப்புக்கு 4 மதிப்பெண் சலுகையாக அளிப்பது எந்த விதத்தில் ஈடாகும்? சரி 25 ஆண்டுகள் காத்திருப்பவர்களுக்கு அதே மதிப்பெண்தானா? நடுநிலையாளர்கள் சிந்திக்கட்டும்,

சமூக அறிவியல் பாடங்களாக பொருளியல், வணிகவியல் இருந்தும், அதைப் படித்தவர்கள் பட்டதாரி ஆசிரியர்களாக நியமிக்கப்படுவதில்லை. இதனால் 55% மதிப்பெண்கள் சலுகை யும் இவர்களுக்கு இல்லை. எனவே முது கலை ஆசிரியர் போட்டித்தேர்வு மட்டும் எழுத வேண்டியிருக்கிறது. அந்த ஓட்டப்பந்தயத்தில் முதலில் வருபவர்கள் பெரும்பாலும் தற்போது படித்தவர்களே. தோள்கள் அழுத்த குடும்பச் சுமையோடு, வயது முதிர்ச்சி வாரிக்கொடுத்த நோயோடு, பிள்ளைகளின் எதிர்காலம் குறித்த கவலையோடு, இந்த pre-senior citizen- கள் படும்பாடு இவர்களை தேர்விற்கு தயார்படுத்துமா? என்பதை கல்வியா ளர்கள் சிந்திக்கட்டும், இல்லையென் றால் கல்வி என்பதற்கு கல்லுதல் வேர்ச் சொல்லாகி, தோண்டுதல், ஆராய்தல் என்பது பொருளாக இருக்கமுடியாது.

இன்னொரு கொடுமையைக் கேளுங் கள், பொருளியல் வணிகவியல் தவிர்த்து, பிற பாடங்களை எடுத்தவர்கள் பட்ட தாரி ஆசிரியர்களாக முதலில் உள்ளே போய்விடுகிறார்கள். பிறகு அஞ்சல் வழியில் முதுகலை பொருளியல், வணிக வியல் பாடங்களை படித்துவிட்டு, முது கலை ஆசிரியர்களாக (P.G. Assistants) பதவி உயர்வு பெற்று இருக்கிறார்கள். இதனால் நேரடியாக (Regular) இளங் கலை, முதுகலை இந்தப் பாடத்தை படித்தவர்கள் பணிவாய்ப்பு இழந்துள் ளார்கள். இந்த Gross Major எப்படி கல்விதரத்தை உயர்த்தி இருக்கும்?


தமிழ் ஓவியா said...

சரி, எப்படியாவது வயிற்றை கழுவியாக வேண்டுமே என்று, தனியார் கல்லூரிகளில் விரிவுரையாளர் பணிக்கு போக முயற்சித்தால், தனியார் கல்வி வியாபாரிகள் ஏற்கனவே அரசு ஊதி யத்தில் வாழ்ந்துவிட்டு, ஓய்வூதியம் பெறும் ஆசிரியர்களை மிகக்குறைவான ஊதியத்திற்கு பணியமர்த்தி விடுகி றார்கள். பெருந்தொகையை பென்சனாக பெறும் இவர்களுக்கே பணிக்கு போக வேண்டிய தேவையிருந்தால், அண்டா குண்டா அடகுவைத்து, பட்டம் பெற்று, பதியவைத்து பணி தேடுவதே வாழ் வாகிப் போனவர்களின் நிலையை சமூக நோக்குடைய ஆசிரிய சமுதாயம் சற்று சிந்திக்கட்டும். இனிமேலும் வயது கடந்தவர்களை போட்டித்தேர்வு எழுத கட்டாயப்படுத்துவது, அவர்கள் மீது கட்டவிழ்த்து விடப்படும் ஒருவித உள வியல் ரீதியான வன்முறையாகத்தான் இருக்க முடியும். மேலும் தந்தை பெரி யாரின் இடஒதுக் கீட்டு கொள்கையால் பட்டம் பெற்ற இவர்கள், பணிவாய்ப்பு பெறமுடியாத சூழல் தொடர்ந்தால் இடஒதுக்கீட்டுப் பயனை முழுமையாக பெற முடியாத நிலையே ஏற்படும். சரி இனி தீர்வு குறித்து சிந்திக்கலாம்.

1) பதிவு செய்து காத்திருப்பவர்களில் 50 வயதைக் கடந்து இருப்பவர்கள் எந்த பாடத்தை எடுத்திருந்தாலும், மனரீதி யாக பாதிக்கப்பட்டிருப்பதால் அவர் களுக்கு மனித நேய அடிப்படையில் சிறப்புத் தேர்வு வைத்து உடனடியாக பணிவாய்ப்பு வழங்கி, அவர்களது கண்ணீரைத் துடைக்கலாம்.

2) பட்டதாரி ஆசிரியர் தேர்விற்கும், 55% சலுகை மதிப்பெண் பெறவும் வாய்ப்பற்ற பொருளியல், வணிகவியல் முதுகலை பட்டதாரிகளுக்கு போட்டித் தேர்வு முறையை (TRB) ரத்து செய்து விட்டு, பதிவுமூப்பு அடிப்படையில் பணி நியமனம் செய்யலாம்.

3) பொருள் இல்லார்க்கு இவ்வுல மில்லை என்ற வள்ளுவன் வாய்மொழிக் கேற்ப, வாழ்வியலின் மூலாதாரமான பொருளியல் மற்றும் வணிகவியல் பாடங் களை தனிப்பாடங்களாக உயர்நிலைப் பள்ளிகளிலிருந்தே வைக்கலாம்.

இறுதித் தீர்வாக

இந்த ஆசிரியர் போட்டித்தேர்வுகள் தேர்வு எழுதுவோரின் ஞாபக சக்தியை மட்டும் தான் காட்டுமே தவிர, பாடம் நடத்தும் திறனை (Teaching skills), வாழ்க்கை அனுபவத்தை (Life experience) கண்டறிய ஒரு போதும் உதவாது. எனவே ஒரு இலட்சிய ஆசிரியரை (Unideal teacher) அடையாளம் காட்டத் தெரியாத இந்த போட்டித் தேர்வை ரத்து செய்துவிட்டு, பதிவு மூப்பு முறையை மீண்டும் கொண்டுவருவதே மிகுந்த பொருத்தமானதாகும்.

Read more: http://viduthalai.in/page8/85574.html#ixzz39ztihyHK

தமிழ் ஓவியா said...
இன்றைய ஆன்மிகம்?

அம்மை

ஆடி வந்து விட்டாலே ஆன்மீக விதிகளைச் சொல்லிக் கொண்டு பெண்கள் அதிக அளவில் ஆலயங்களிலும் தோழியர் இல்லங்களிலும் நடமாடு வதைக் காணலாம். கூழ் வார்த்தல் எனப்படுகிற முக்கிய நிகழ்ச்சியும் பூஜையும் எல்லா அம்மன் கோவில்களிலும் நடை பெறும். இதற்கு ஒரு புராணச் செய்தி உள்ளது. ஒரு சமயம் கார்த்த வீர் யன், ஜமதக்கினி முனிவர் மீது பகை உணர்வு கொண் டிருந்தான். அவனது மகன்கள் இருவர் முனி வரைக் கொன்று விட் டனர். கணவன் இறந்த துக்கம் தாங்க முடியாத ரேணுகாதேவி தீயை உண்டாக்கி அதில் விழுந்து விட்டாள். இதைக் கண்டு வருந்திய இந்திரன், வருண பக வானை அழைத்து மழையை பெய்விக்கும் படி கூறினான். மூட்டிய தீயில் விழுந்த ரேணு காவை மழை வந்து நனைத்துவிட வெற்று உடலோடு இருந்தவள் அருகிலிருந்த வேப்பமர இலைகளால் தன் உடலை மூடிக் கொண்டாள்.

வயிற்றுப் பசி ஏற்பட்ட போது அருகிலிருந்த கிராம மக்களிடம் உணவு கேட்டாள். அப்போது அவர்கள் மகரிஷி மனை வியான நீங்கள், எமது உணவை சாப்பிட வேண்டாம் என்று கூறி, பச்சரிசி மாவு, வரகு, வெல்லம், பானகம், இளநீர், காய், கனிகளைக் கொடுத்தனர். அவற்றைக் கொண்டு கூழ் தயாரித்துச் சாப் பிட்டுத் தன் பசியைத் தீர்த்துக் கொண்டாள் ரேணுகாதேவி.

அச்சமயம் சிவபெரு மான் அவள் முன் தோன்றி, சக்தியின் அம்ச மாக இந்தப் புவியில் அவரித்த நீ பூமியில் பாவங்களைக் களைந்து மனிதர்களுக்கு ஏற்படும் தீ நோய்களைக் கட்டுப் படுத்துக. உனக்கு ஏற் பட்ட அம்மைக் கொப் புளங்கள் உன் பக்தர் களுக்கு வரும் போது, உடனே நீங்கிட உன் வேப்பிலையே கண் கண்ட மருந்து, பச்சரிசி மாவு பானகம், வெல்லம், இளநீர், கூழ் படைக்கும் போது.. நீ மாரிதேவியாக அருள் காத்து அவர் களுக்கு வந்த நோய் களை நீக்குவாயாக என் றார். எனவே தான் மாரித் தாயின் சன்னதிகளில் கூழ் படைக்கிறார்களாம்.

அம்மை வருவது ஒருவகை கிருமியால், அது தடுக்கப்பட்டது அம்மைத் தடுப்பூசியால்; இதில் எங்கு வந்தாள் ரேணுகாதேவி?

அம்மைக்குக் கார ணம் கடவுளா? கிருமியா? ஆன்மிகவாதிகளுக்கு நோய் வந்தால் கோயி லுக்குச் செல்வார்களா? மருத்துவரிடம் செல் வார்களா? சிந்திப்பீர்!

Read more: http://viduthalai.in/page1/85490.html#ixzz39zuHNJLm

தமிழ் ஓவியா said...


மதவாத மூடநம்பிக்கைவாதிகளுக்கு ஓர் அதிர்ச்சி தகவல்!


மதவாத மூடநம்பிக்கைவாதிகளுக்கு ஓர் அதிர்ச்சி தகவல்!

அமெரிக்காவில் நாத்திகத் தொலைக்காட்சி உதயம்

மதவாதம், அஞ்ஞான கருத்துக்களைக் கடுமையாக விமர்சிக்கும்!

அமெரிக்க நாத்திக அமைப்பின் தலைவர் டேவிட் சில்வர்மேன் அறிவிப்பு

நியூயார்க், ஆக.9-_ உலகில் முதல் நாத்திகத் தொலைக்காட்சி அமெரிக் காவில் தொடங்கப்பட் டுள்ளது. மதவாதம் உள்ளிட்ட அஞ்ஞான, பிற்போக்குத்தனமான வற்றை இத்தொலைக் காட்சி கடுமையாக விமர் சிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

கடவுள் நம்பிக்கை இல்லாதவன் அல்லது நாத்திகர் என்றதுமே இன்றைய கால கட்டத் திலும் பலரின் எதிர்ப்பை நீங்கள் எதிர் கொள்ள வேண்டி இருக்கும். இவர் களுக்கு கடவுளை எதிர்க்க ஒரு சாதனம் கிடைத்தால் அந்த சாதனம் மூலம் எதிர்ப்பையும் வெற்றிகர மாக எதிர்கொள்ளலாம் அப்படி ஒரு சாதனம் தான் நாத்திக தொலை காட்சி மூலமாக அமெரிக் காவில் உதயமாகத் துவங்கியுள்ளது. இந்த நாத்திகத் தொலைக்காட்சி ஒளிபரப் பின் துவக்கத்தின் போது அமெரிக்க நாத்திகர் அமைப்பின் தலைவர் டேவிட் சில்வர்மேன் கூறியதாவது, இந்த தொலைக்காட்சி அறிவியல் அரசியல் மற் றும் நகைச்சுவை அனைத் தும் உள்ளடக்கிய ஒரு பொதுவான தொலைக் காட்சி ஆகும். அதே நேரத்தில் இவை அனைத் திலும் மதம் தொடர்பாக தங்களின் எதிர்ப்பை நாத்திக கருத்தைக் கூற முழுச் சுதந்திரம் உண்டு நாத்திக கருத்தின் மீது தான் தொலைகாட்சி நிகழ்ச்சிகளின் கவனம் இருக்கும்.

நாத்திகர்கள் என்றால்...

நாத்திகர் என்றாலே ஏதோ சுதந்திர மற்றவர் கள் போன்ற ஒரு பார் வைக்கு பலரால் பார்க்கும் நிலைக்குத் தள்ளப்படு கின்றனர். நாத்திகம் என்றவுடன் இந்தியா தான் நமக்கு நினைவிற்கு வரும் நாத் திகப்புரட்சி இந்தியாவில் தோன்றியது அதாவது கிமு 300 அல்லது 400 களில் தான்(புத்தரின் காலம்)


தமிழ் ஓவியா said...

உலகமும் கிமுவிற்கு முன்பாகவே நாத்திகம் இந்தியாவில் பிறந்து விட்டதாக ஒப்புக் கொண்டு உள்ளது. புத் தரின் சீடர்களுள் ஒருவராக கருதப்படுபவர் அஜந்த கோசம்பி இவரை அஜந்தா கோசம்பலி என்றும் அழைப்பார்கள். நாத்திகக் கொள்கையில் முழுவதுமாக நம்பிக்கைக் கொண்டு இருந்தார். சொர்க்கம் நரகம் மற்றும் கடவுளர்கள் வாழும் உலகம் போன்ற கூற்றைக் கடுமையாக எதிர்த்தார். அதே போல் உடலில் உயிர்போனபிறகு மண் ணோடு மண்ணாகிவிடும், ஆன்மா போன்றவை எல்லாம் முட்டாள் தன மானது என்றும் கூறினார்.

இன்று நவீன உலகின் அறிவியல் வளர்ச்சி எல்லாம் நாத்திகர்களின் அறிவார்ந்த பார்வையில் உருவானது. மிட்செல் ஸ்டீவன் பார்வையில் இந்தியாவில் தான் நாத்திகத்துவம் முதல் முதலில் துவங்கியது, இந் தியாவில் தான் கடவுள் சக்தி, மற்றும் மூடநம்பிக் கைகளை எதிர்க்கும் கொள்கையான உண்மை யான நாத்திகம் உருவா னது. ஆனால் இன்றைய நிலை என்ன? இந்தியா வில் அமெரிக்காவை விட அதிகமாக மூடநம்பிக் கையை கடவுள் செயல் என்றபெயரில் நம்பும் மனிதர்கள் அதிகம் உள்ளனர். ஆனால், உலகில் தற்போது நாத்திகர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நவீன சாத னங்கள் மற்றும் முதலில் இருந்ததை விட அதிக எண்ணிக்கையில் நாத்தி கர்கள் உருவாகி வரு கின்றனர். 2012-ஆம் ஆண்டு எடுத்த ஆய்வின் படி உலகின் கடவுள் மறுப்பாளர் மற்றும் மூடநம்பிகைக்கு எதிரான மக்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டு வருகிறது. முக்கியமாக நாத்தி கர்கள் என்று பலர் தங்களை நேரடியாக பதிவு செய்யத்தயங்குகின்றனர். காரணம் அவர்கள் சமூகத்தில் தனித்து விடப் பட்டு விடுவார்கள் என்ற நம்பிக்கை ஆனால் அவர் கள் கடவுள் நம்பிக்கை மற்றும் மூடநம்பிக்கை

தமிழ் ஓவியா said...

இதர அறிவிலித்தனமாக அனைத்துக் கொள்கை களுக்கும் கடுமையான எதிரியாக உள்ளனர். நாத்திகத் தொலைக் காட்சி மக்கள் மத்தியில் நாத்திகர்களின் தனிமையைப் போக்கவும் நாத்திகத்தன்மையில் இருக்கும் மக்கள் தங்கள் கொள்கைகளில் மேலும் தீவிரம் காட்ட வுமே உதயமாகிறது. கடுமையாக எதிர்ப்போம் அறிவியல் அல்லாத எந்த ஒரு கருத்து கொள்கை மற்றும் நட வடிக்கைகளை நாத்திகத் தொலைக்காட்சி கடுமை யாக எதிர்த்துப்பிரச்சாரம் செய்யும் அதே வேளையில் தங்களை அறிஞர்கள் என்று கூறிக்கொண்டு திரியும் மதம் தொடர்பானவர்கள் மற்றும் மதவெறி கொண்ட நபர்களின் கூற்றுக்களை எல் லாம் பொய் யாக்கும் விதமாக நமது நாத்திகத் தொலைக்காட்சி திகழும். இன்றைய அறிவியல் உலகின் முதல் படி நாத் திகம் ஆகும், தற்போது மருத்துவத்துறை, நவீனக் கருவிகள் கண்டுபிடிப் புகள் மற்றும் பல்வேறு அறிவியல் பரிமாணங்கள் அனைத்தும் நாத்திகத்தில் இருந்துதான் ஆரம்பிக்கின்றன. நாத்திகம் என்றாலே பொய்யில் இருந்து விலகி உண்மையைத்தேடுவதாகும். மத நம்பிக்கைகள் மனிதநேயத்தைக் கெடுத்து மனிதர்களுக்கு இடையே பிளவை ஏற்படுத்துகின்றன. ஆனால் நாத்திகம் உலகில் உள்ள அனைத்து மனிதர்களையும் ஒன்றாக இணைக்கும் மனிதநேயச் சங்கிலியாகும்.நாத்திகத்தின் அடித்தளம் மனித நேயமாகும், பிரிட்டிஷ் தத்துவஞானி ஏசி கார்லின் தனது நூலான கடவுளின் வாதம் (ஜிலீமீ நிஷீபீ கிக்ஷீரீனீமீஸீ) என்ற நூலில் எழுதுகிறார். அறிவு என்பது முடிவில்லாத ஒன்றாகும், கேள்வி அதன்மூலம் கிடைக்கும் பதில் போன்றவை -_ மனித நாகரிகத்தின் வளர்ச்சிக்கு முக்கிய காரணியாக இருந்த ஒன்றாகும். மனித அறிவாற்றல் வளர்ச்சியின் காரணமாக எது உண்மை? எது தவறு என்பதைப் புரிந்து கொள்கிறான். மதங்கள் மனிதர்களை கவலை மறந்து வாழவைக்கும் போலியான ஒரு தத்துவத்தைக் கூறுகின்றன. நீ இங்கே சிரமப்பட்டால் வானுலகில் மகிழ்வாக வாழ்வாய் என்ற ஒரு போதையை மனிதர்களின் உள்ளத்தில் புகுத்திவிடுகிறது. கடவுள் நம்பிக்கை தீர்வாகாது மதங்கள் சொல்கின்றன எது நடந்தாலும் அது கடவு ளுக்குத்தெரிந்தே நடக்கிறது, ஆகவே சிரமப்படுவதை நன்மையாக ஏற்றுக்கொள்ளுங்கள் என்கிறது. ஆனால் உண்மையில் கடவுள் பக்தி உங்களின் வாழ்க்கையில் ஏற் படும் பல்வேறு சிக்கல்களுக்கு எந்த ஒரு தீர்வையும் தராது. மனிதநேயம் மட்டுமே மனித குலத்தைக் காப்பாற்றும். குறிப்பு: *அஜித் கோசம்பி அல்லது அஜித் கோசம்பலி கவுதம புத்தரின் நேரடிச்சீடர் ஆவார் இவர் புத்தரின் கொள்கைகளை மக்களிடையே எடுத்துச் சென்றவர். அப்போது இருந்த பல்வேறு வேதமத நம்பிக்கைகளை கடுமையாக எதிர்த்தவர் ஓவ்வொரு மதம் தொடர்பான மடங்களுக்குச்சென்று நேரடியாக பல்வேறு விவாதங்கள் நடத்தி மதநம்பிக்கையா ளர்களைத் திணறடித்தவர். கடவுள் நம்பிக்கை, மூடநம்பிக்கை, மற்றும் கடவுள் பெயரால் செய்யப்படும் அனைத்தும் மடத்தனமான செயல் என்று கூறினார். அதே நேரத்தில் உடல் இறந்த பிறகு மண்ணோடு மண்ணாகிவிடும். ஆன்மா மறுபிறப்பு கர்மபலன் எல்லாம் மூட்டாள்களின் வாதம் என்று கூறியவர்.

Read more: http://viduthalai.in/page1/85495.html#ixzz39zuQE2Hw

தமிழ் ஓவியா said...

கோயிலில் தங்கக் குவியல்

குட்டி மாநிலமான இமா சலப் பிரதேசத்தில் 29 கோயில் களில் 400 கிலோ தங்கம், 15,800 கிலோ வெள்ளிக் கட்டிகள் தூங்குகின்றனவாம்! (இவற்றை எடுத்து மக்கள் நலனுக்குப் பயன்படுத்தக் கூடாதா?)

Read more: http://viduthalai.in/page1/85499.html#ixzz39zukPWp2

தமிழ் ஓவியா said...


மோடியின் விமானப் பயணச் செலவை பா.ஜ.க. செலுத்துமா? காங்கிரஸ் கேள்வி

அகமதாபாத், ஆக.9- குஜராத் மாநில காங்கிரஸ் தலைவர் அர்ஜுன் மோத்வாடியா, மோடியின் விமானப் பயண செலவு குறித்த விவரங்களை வெளியிடுமாறு கணக்கு கேட்டுள்ளார்.

இது தொடர்பாக, நேற்று அறிக்கை ஒன் றினை வெளியிட்ட மோத் வாடியா, குஜராத்தின் முதல் அமைச்சராக இருந்த நரேந்திர மோடி, கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது பிரச்சாரம் செய்வதற்காக 56 முறை மாநில அரசின் விமானத்தில் பயணித் துள்ளார்.

அந்த பயணங்களுக் கான விமானச் செலவை குஜராத் மாநில அரசின் கருவூலத்துக்கு இப்போதே பா.ஜ.க. திருப்பி செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.

தனிப்பட்ட பழி வாங்கும் நோக்கத்தில் முன்னாள் ஆளுநர் கமலா பெனிவால் மீது குற்றம் சாட்டப்படும் நில ஆக்கிரமிப்பு தொடர்பாக தற்போது மீண்டும் ஊழல் புகார் கூறப்படுவதாக குறிப்பிட்ட மோத்வாடியா, இந்த பிரச்சினை 25 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்ததாக கூறப்படுகிறது.

அதற்கு பின்னர் ராஜஸ்தான் மாநிலத்தில் 2 முறை ஆட்சி அமைத்த பா.ஜ.க. அரசு இதுவரை நடத்திய விசாரணையில் அந்த குற்றச்சாட்டு தொடர் பாக எந்த ஆதாரத்தையும் கண்டுபிடிக்கவில்லை.

அரசியல் தலைவர்கள் ஆகட்டும், அரசு அதி காரிகள் ஆகட்டும், தனக்கு எதிரான எண்ணம் கொண்ட யாரையும் மோடிக்கு பிடிப்பதில்லை. தங்களது கருத்துகளை வெளிப்படையாக கூறும் அனைவருக்கும் அவர் எதிரானவர். அவர்களை ஏதாவது வகையில் தண் டிப்பது மோடியின் வழக் கமாகி விட்டது.

பா.ஜ.க. தலைவர்களான அத்வானி, ஜஸ்வந்த்சிங், கேஷுபாய் பட்டேல் ஆகியோரை அவர் எப்படி நடத்தினார் என்பதை இந்த நாட்டு மக்கள் கண் கூடாக பார்த்திருக்கிறார் கள் என்று கூறியுள்ளார்.

Read more: http://viduthalai.in/page1/85497.html#ixzz39zurj2Xe

தமிழ் ஓவியா said...

பெண்களுக்கு அறிவுரை கூறும் பெம்மான்கள்!


அறிவுரைதான் இந்த நாட்டில் மிகவும் மலிவானது; அதுவும் பெண்களுக்கு ஆண்கள் அதிகம் அறிவுரை சொல்லுவதில் இந்தியாவை வெல்ல உலகில் எந்த நாடும் கிடையாது.

பெண்கள் எந்த மாதிரி உடையை அணிய வேண்டும் என்று அறிவுரை சொல்லும் அருகதை ஆண்களுக்கு உண்டா என்பது அர்த்தமுள்ள முதல் கேள்வி.

ஆனாலும், யாரையும் கேட்காமலேயே ஆண்கள் தாங்களே முன்வந்து வலிய அந்த உரிமையை எடுத்துக் கொண்டு அருளுபதேசம் செய்ய ஆரம்பித்து விடுகிறார்கள்.

நாடாளுமன்றத்தில் தெலுங்குதேச மக்களவை உறுப்பினர் முரளி மோகன் மகந்த் பெண்கள் இந்தியக் கலாச்சாரத்துக்கு ஏற்ப கண்ணியமான உடை அணிய வேண்டும் என்று பேசப் போக, அவையில் கடுமையான எதிர்ப்புச் சுனாமியை அவர் எதிர் கொள்ளும் நிலை ஏற்பட்டு விட்டது; வேறு வழியின்றிப் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டுக் கொண்டார். (வாழ்க மகளிர் உறுப்பினர்கள்!)

இதற்கு முன்னதாக கோவா மாநில பொதுப் பணித்துறை மூத்த அமைச்சர் சுதின் துவாலிகர் என்பவர் கூறிய கருத்தும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது..

நமது நாட்டில் தற்போது பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்து வருவது கவலைக்குரியது. பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரிப்ப தற்குக் காரணம் பெண்கள்தான் முக்கியப் பங்கு வகிக்கின்றனர். பெண்கள் நாகரிக ஆடை அணிந்து கேளிக்கை விடுதிக்குச் செல்லுவதாலும் ஆண் துணை யின்றி துணிச்சல் என்ற பெயரில் தனியாக செல்லுவ தாலும்தான் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரிக்கின்றன என்று பேசியிருக்கிறார்.

தமிழ் ஓவியா said...

கருநாடக மாநிலம் மங்களூரில் இயங்கி வரும் ராம்சேனா அமைப்பின் தலைவர் முத்தலிப் என்பவர் பெண்கள் கேளிக்கை அரங்குக்குச் செல்லுகிறார்கள் என்ற பெயரில் மங்களூரில் உள்ள பல கேளிக்கை அரங்குகளில் வலிய நுழைந்து பெண்களைத் தாக்குகின்றனரே என்று செய்தியாளர்கள் சுட்டிக் காட்டியபோது, கோவா அமைச்சர் அதனை நான் ஆதரிக்கிறேன்; அவர்கள் ஒன்றும் தவறு செய்யவில்லை என்றும் பதில் சொல்லியிருக்கிறார்.

மும்பையில் மும்பை கிழக்கு பகுதி சட்டப் பேரவை உறுப்பினர் பாலா சாலந்த் (சிவசேனா) என்பவர் முஸ்லிம் பெண் ஒருவரை வழிமறித்து அத்து மீறியதும் அண்மையில் மக்கள் கவனத்துக்கு வந்தது.

இவர்மீது குற்றப் பிரிவு 506, 509 மற்றும் 504 சட்டப் பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டதே தவிர கைது செய்யப்படவில்லை.

இவற்றையெல்லாம்விட ஒரு முக்கியமான செய்தி! பிரமுகர், ஒருவர் மத்தியில் ஆட்சியிலிருக்கும் பிஜேபி ஆட்சிக்கான மூக்கணாங் கயிற்றினைக் கையில் வைத்திருப்பவர் என்று சொல்லும் மாத்திரத்திலேயே அவர் ஆர்.எஸ்.எஸ்-இன் அகில இந்தியத் தலைவர் மோகன் பகவத்துதான் என்று மக்கள் எளிதில் புரிந்து கொள்வார்கள்.

அவர் இந்தூரில் ஆர்.எஸ்.எஸ். பொதுக் கூட்டத்தில் வெளிப்படையாகவே பேசினாரே!

பெண்கள் கல்வி கற்க ஆரம்பித்து விட்டனர்; திருமணத்தின்போது கணவன் மனைவி இருவரின் கல்வியும் சமமாக இருந்து வருகிறது. சில வேளைகளில் கணவனைவிட மனைவி அதிகம் படித்தவராக இருக்கிறார்; அல்லது திருமணத்திற்குப் பிறகு படித்துப் பட்டம் பெற்று விடுகிறார். சிலர் கணவனைவிட உயர் பதவிக்குச் சென்று விடுகிறார்கள். வருமானமும் கணவனைவிட அதிகம் வரத் துவங்கி விட்டது. இந்த இடத்தில் கணவனின் மன நிலைக்கு ஏற்ப நடக்காத சூழல் மனைவிக்கு ஏற்பட்டு விடும். இங்கு ஈகோவும் தோன்று விடுகிறது. இந்த ஈகோதான் இந்தியாவில் தற்போது நடக்கும் அதிகமான விவாகரத்திற்குக் காரணமாக அமைந்து விடுகிறது. மனைவி கணவனுக்குச் சேவகம் செய்வதையே கடமையாகக் கருத வேண்டும்.பெண்கள் இந்தக் கடமையில் இருந்து விலகி விட்டால் அந்தப் பெண்ணை விலக்கி விடுவது நல்லது என்றும் பேசினாரே! இந்தச் செய்தியை குறைந்தபட்சம் எந்த ஒரு ஏடு அல்லது இதழ் தமிழ்நாட்டில் வெளியிட்டது - விடுதலையைத் தவிர!

இந்துத்துவாவின் கொள்கை என்பது இன்னும் பழைய மனுதர்ம காலத்திலேயே சஞ்சரித்துக் கொண்டு இருக்கிறது என்பது அகில இந்திய ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவரின் பேச்சிலிருந்து விளங்கவில்லையா?

பால்யத்தில் தகப்பன் ஆக்ஞையிலும், யௌவனத்தில் கணவன் ஆக்ஞையிலும் கணவன் இறந்தபின் பிள்ளைகள் ஆக்ஞையிலும், இருக்க வேண்டியதல்லாமல் ஸ்திரீகள் தன் சுவாதீனமாக ஒரு போதும் இருக்கக் கூடாது என்று தானே மனு தர்மம் (அத்தியாயம் 5 சுலோகம் 148) கூறுகிறது. அதனைத் தானே இவர்கள் இன்றும் கூறுகிறார்கள்.

நியாயமாக ஒட்டு மொத்தமான பெண்கள் அனைவரும் இந்த இந்துத்துவா மனப்பான்மைக்கு எதிராக ஒன்று திரண்டு எழுந்து குரல் கொடுக்கவில்லையென்றால், போராடவில்லையென்றால் பெண்களுக்கு அறிவுரை - அருளுரை என்ற போர்வையில் பெண்களை ஆண்களின் உடைமை - எப்படி வேண்டுமானாலும் பெண்களை நடத்தலாம் என்கிற ஆண்களின் மமதை மனப்பான்மை - எஜமானத்துவம் மேலும் மேலும் கொம்பு முளைத்துத்தான் சீறிக் கொண்டு எழும் - எச்சரிக்கை!

இந்தப் பிரச்சினைக்கு ஒரே தீர்வு இந்த நாட்டில் பெரியாரியலே என்பதையும் பெண்கள் உணர்ந்து கொள்வார்களாக!

வாழ்க பெரியார்!

Read more: http://viduthalai.in/page1/85501.html#ixzz39zv2RWba

தமிழ் ஓவியா said...


அழித்தாக வேண்டும்
எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மக்களைச் சுயமரியாதை இல்லாமல் செய்து மிருகங்களாக்கி, நாய், பன்றிகளைவிட இழிவாய் நடத்த ஆதாரமாய் இருக்கும் மதம் எது வானாலும் அதை அழித்தாக வேண்டும்.
(குடிஅரசு, 18.12.1927)

Read more: http://viduthalai.in/page1/85500.html#ixzz39zx7FdTY

தமிழ் ஓவியா said...


காந்தியார்


திரு. காந்தியார் சிறையில் மூன்று வேலைகள் செய்கிறார். அவற்றுள் ஒன்று தக்ளியில் நூல் நூற்பது. மற்றொன்று பகவத் கீதையை ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பது. வேறொன்று இந்த இரண்டும் செய்து மீதி இருக்கும் நேரத்தில் ராமநாம பஜனை செய்வது.

ஆகவே அவரது பகுத்தறிவுக்கு நாம் வேறு உதாரணம் காட்ட வேண்டிய தில்லையென்றே நினைக்கின்றோம். இம் மூன்று காரியங்களும் இந்தியாவின் பொது வாழ்க்கையையும் முன்னேற்றத்தையும் முன்னுக்குக் கொண்டு போகுமா? பின்னுக்குக் கொண்டு போகுமா வென்பதை யோசிக்கத் தக்கது.

திரு. காந்தியிடம் குருட்டுப் பக்தியுள்ளவர்களுக்கு நாம் இப்படிக் கேட்பது சற்று கஷ்டமாக இருக்கலாம். தக்ளியில் நூல் நூற்பது எதை உத்தேசித்து என்று இதுவரை யாராவது தெரிந்தார்களா? தக்ளிநூல் வெள் ளைக்கார ஆட்சியின் கொடுமையையும் இந்தியாவின் பொருளாதார கொள்ளையையும் என்ன செய்து விடக்கூடும் என்பது நமக்கு விளங்கவில்லை.

என்ன சொன்னாலும் தட்டிச் சொல்லாமல் கேட்பதற்குச் சில மக்கள் இருக்கின்றார்கள் என்பதைத் தவிர மற்றபடி அதில் என்ன உண்மை இருக்கின்றது. இரண்டாவதாக பகவத்கீதைக்கு ஆங்கில மொழி பெயர்ப்பு வேலை. இதுமுன் ஒரு தடவை டாக்டர் பெசன்டம்மையால் செய்தாய் விட்டது.

இரண்டாவதாக திரு திலகரால் ஒரு தடவை கீதா ரகசியம் என்பதாக ஒரு மொழி பெயர்ப்பும் செய்தாய் விட்டது. இப்போது திரு. காந்தியும் இதையே ஆரம்பித்து விட்டார். கீதையின் தத்துவம் என்ன? அதன் பயனென்ன? என்பதைப் பற்றிய உண்மை யாராவது தெரிந்து அதை மதிக்கின்றார்களா?

கீதையை ஒரு மனிதன் ஒப்புக் கொள்ளுவதானால் முதலாவதாக பாரதக் கதையை ஒப்புக் கொள்ள வேண்டும்.

பிறகு கிருஷ்ணனையும், அவனது செய்கைகளையும், அவனையே கடவுளாகவும் ஒப்புக் கொள்ள வேண்டும்.

இம்மூன்றிலும் சந்தேக முள்ளவர்கள் கீதையைப் பகவான் வாக்காகக் கொள்ள முடியாது. இது ஒரு புறமிருக்க அதிலுள்ள விஷயங்கள் வாழ்க்கைக்குப் பொருத்த மானதாகவோ அல்லது அனுபவத்திற்குச் சாத்தியமான தாகவோ இருக்கின்றதா? நிற்க மூன்றாவது காரியமாக பஜனை செய்து கொண்டி ருக்கிறாராம்.

பஜனை என்பது புராணங்களில் உள்ள கடவுள்களைப் புராணக் கதைகளைச் சொல்லிக் கொண்டோ நினைத்துக் கொண்டோ இருப்பதாகும்.

ஆகவே இம்மூன்று காரியங்களும் எவ்வளவு பகுத்தறிவும் பொது நல நன்மையுமான காரியம் என்பதை முடிவு செய்யும் விஷயம் வாசகர்களுக்கே விட்டுவிடு கின்றோம்.

- குடிஅரசு - துணைத்தலையங்கம் - 27.07.1930

Read more: http://viduthalai.in/page1/85536.html#ixzz39zzQpXqh

தமிழ் ஓவியா said...


சுயமரியாதைத் திருமணம்

பெண்கள் முன்னேற்றத்தில் கவலை உள்ளவர்கள் பெண்களைப் படிக்கவைக்கும் முன் இந்தக் கழுத்துக் கயிற்றைத் (தாலியை) அறுத்தெறியும் வேலையையே முக்கியமாய் செய்யவேண்டுமென்று சொல்லுவேன். நிற்க, இதுவரை மணமக்களுக்கு ஆசீர்வாதமோ வாழ்த்தோ என்பது மணமக்கள் நிறைய அதாவது 16 பிள்ளைகள் பெற்ற வேண்டுமென்று சொல்லுவார்கள்.

ஆனால் நான் மணமக்களுக்குச் சொல்லு வதென்ன வென்றால் அவர்கள் தயவு செய்து பிள்ளைகள் பெறக்கூடாது என்பதும், மிக்க அவசியமென்று தோன்றினால் ஒன்று அல்லது இரண்டுக்கு மேல் கூடாது என்றும் அதுவும் இன்னும் அய்ந்து ஆறு வருடம் பொறுத்துத்தான் பெற வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளுகின்றேன்.

அன்றியும் அப்படிப் பெறும் குழந்தைகளையும் தாய்மார்கள் குரங்குக் குட்டிகள்போல் சதா தூக்கிக் கொண்டு திரிந்து போகின்ற இடங் களுக்கெல்லாம் அழைத்துப் போய் அழ வைத்துக் கொண்டு கூட்டமும் நடவாமல் தங்களுக்கும் திருப்தியில் லாமல் சபையோருக்கும் வெறுப்புத் தோன்றும் படியாய் செய்யாமல் குழந்தைகளை ஆயம்மாள் வைத்து வளர்க்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

அவைகளுக்கு ஒழுங்கும் அவசி யமான கட்டுப்பாடும் பழக்கிக் கொடுக்க வேண்டும். இந்தக் கூட்டத் தில் நான் பேசமுடியாதபடி எத்த னைக் குழந்தைகள் அழுகின்றனர் பாருங்கள். அவற்றின் தாயார் முகங்கள் எவ்வளவு வாட்டத்துடன் வெட்கப் படுகின்றது பாருங்கள்.

அந்தத் தாய்மாரும் தகப்பன்மாரும் இந்தக் கூட்டத்தில் ஒருவரையொருவர் பார்த்து வெறுப்பதைத் தவிர அவர் களுக்கு இங்கு வேறு வேலையே இல்லாமல் இருக்கின்றது. இன்பமும் அன்பும் என்பது சுதந்திரத்தோடு இருக்க வேண்டுமே அல்லாது நிபந்தனையோடும் தனக்கு இஷ்டமில்லாத சௌகரிய மில்லாத கஷ்டத்தைச் சகித்துக் கொண்டு இருப்பதாய் இருக்கவே முடியாது.

ஆகவே இப்போதைய குழந்தை இன்பம் என்பது ஒருக்காலமும் உண்மையான இன்பமாகாது. ஆகையால் அவைகளை மாற்றிவிட வேண்டும். தவிர அதிக நகை போடாமலும் தாலி கட்டாமலும் மூடச் சடங்குகள் இல்லாமலும் மாத்திரம் நடைபெற்ற திருமணம் சுயமரியாதைத் திருமணமாகி விடாது.

பெண்ணின் பெற்றோர் இப்பெண்ணுக்குத் தங்கள் சொத்தில் ஒரு பாகம் பங்கிட்டுக் கொடுக்க வேண்டும். புருஷர்களைப் போலவே பெண்களுக்கும் சொத்துரிமை உண்டு; தொழில் உரிமை உண்டு, என்கின்ற கொள்கை ஏற்படாவிட்டால் எப்படி அவர்கள் சுயமரியாதை உடையவர்களாவார்கள்? ஆகையால் அவர்களுக்குச் சொத்துரிமையும் அவசியமானதாகும்.

தவிர பெண்களுக்கு இப்போது பொது நல சேவை என்னவென்றால் எப்படியாவது ஒவ்வொரு விதவையையும் ஒவ்வொரு புருஷனுடன் வாழச் செய்ய வேண்டும். அதுவே அவர்கள் இப்போது செய்ய வேண்டியது.

தவிர பெண்களும் புருஷர் களைப் போலவே தினமுமோ அல்லது வாரத்திற்கு ஒன்று இரண்டு நாளோ ஒரு பொது இடத்தில் கூடி மகிழ்ச்சியாய் பேசி விளையாட வேண்டும். பத்திரிகைகளைப் படிக்க வேண் டும். படிக்காத பெண்களுக்குப் படித்தவர்கள் படித்துக் காட்ட வேண்டும்.

வீட்டு வேலை செய்வதுதான் தங்கள் கடமை என்பதை மறந்து விட வேண்டும். புருஷனுக்குத் தலைவியாய் இருப்பதும் குடும்பத்துக்கு எஜமானியாய் இருப்பதும் தங்கள் கடமை என்று நினைத்து அதற்குத் தகுந்தபடி நடந்து கொள்ள வேண்டும். இந்த உணர்ச்சியோடேயே பெண்மக்களை வளர்த்து அவர்களுக்குத் தக்க பயிற்சி கொடுக்க வேண்டும்.

- குடிஅரசு - சொற்பொழிவு - 13.07.1930

Read more: http://viduthalai.in/page1/85538.html#ixzz39zzbay7j