Search This Blog

4.12.13

இந்துத்துவாவாதிகளின் கரசேவை - தி.க.தோழர்களின் கரசேவை

கழகத் தோழர்களின் கரசேவை!


கழகத் தோழர்களே! தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்களின் 81ஆம் ஆண்டு பிறந்த நாளில் (2.12.2013) பெரியார் உலகத்திற்கு ஆயிரம் சவரன் தங்கத்திற்கான நிதியை அளிப்பது என்று கழகத்தின் தலைமைச் செயற்குழு, பொதுக் குழுவின் முடிவின்படி இயக்கத்தின் செயல்திறனை வெளிப்படுத்திக் கொண்டுள்ளோம்.

இதில் சில மாவட்டங்கள் தங்கள் ஒதுக் கீடுகளை விஞ்சி பல மடங்கு நிதியை அளித்துள்ளன. வேறு சில மாவட்டங்கள் தங்களுக்குரிய இலக்கை முடிக்கவில்லை. விழா முடிந்துவிட்ட காரணத்தால் தமது கடமையும் முடிந்து விட்டதாக பொறுப்பாளர்கள் கருதி விடக் கூடாது.

இந்த நிதி திரட்டுவதில் நமது தோழர்கள் தெரிவித்துள்ள அனுபவங்கள் மிகவும் முக்கியமானவை.

பெரியார் பேருருவச் சிலைக்காக நிதி திரட்டச் சென்ற இடங்களில்  எல்லாம் எவரும் முகம் சுளிக்கவில்லை; தந்தை பெரியார் அவர்களுக்கு நாம் செய்ய வேண்டியது நமது  அடிப்படைக் கடமை, நாம் செலுத்தும் நன்றி உணர்ச்சி என்று உள்ளமும், முகமும் மலர்ந்து நிதியை அளித்துள்ளனர்.

இதுவரை தங்கள் இலக்கை முடிக்காத மாவட்டக் கழகப் பொறுப்பாளர்களுக்கு இந்தத் தகவல் கூடுதல் தன்னம்பிக்கையை அளிக்கும் என்பதில் அய்யமில்லை. பெரியார் உலகத் திற்குத் தேவைப்படும் நிதி மிகப் பெரியது. இப்பொழுது அளித்திருப்பதோ வெறும் 5 விழுக்காடே! இத்திசையில் நாம் பயணிக்க வேண்டிய தூரம் அதிகம்.

நம்மால் முடியாதது வேறு எவராலும் முடியாது; வேறு எவராலும் முடியாதது நம்மால் மட்டுமே முடியும் என்று கழகத் தலைவர் சொன்னதை மெய்ப்பிப்பதற்கு இது ஒரு முக்கியமான தேர்வு.

இதுவரை வைக்கப்பட்ட தேர்வுகளில் இது மிகப் பெரியது; இதிலும் முதல் நிலையில் வெற்றி பெற்றோம் என்று காட்டிக் கொள்ள வேண் டாமா?
இதுவரை எப்படி இருந்தாலும் கொட்டும் மழையிலும்  நாற்காலிகளையே குடையாகப் பிடித்துக் கொண்டு கடைசிவரை விழாவில் ஆற்றப்பட்ட உரைகளைச் செவி மடுத்தவர்கள் நம் கழகத் தோழர்கள் மட்டுமல்ல - நம் தமிழினப் பெருங்குடி மக்களும்தான்.

இந்த உணர்வை நாம் சரியாகப் புரிந்து கொண்டு, இன்று முதலே எஞ்சிய இலக்கினை முடிக்க, கழகப் பொறுப்பாளர்களே, கழகத் தோழர்களே முந்துவீர்!
பெரியார் உலகம் பேரலைகளை எழுப்பப் போகிறது. இதுவரை பெரியார்பற்றி அறிந்திராத இருண்ட பகுதிகளில் எல்லாம் ஒளி பாய்ச்சப் போகிறது.
வெளிநாட்டுக்காரர்கள் எல்லாம்கூட வந்து பார்க்கும் பகுத்தறிவுச் சுற்றுலாத் தலமாக  ஆகப் போகிறது!

இந்தியாவில் சுற்றுலாத்தலம் என்றால் வெறும் கோயில் குளங்களுக்குத்தான் அழைத் துச் செல்வார்கள். அரசு சுற்றுலாத் துறையும் அதனைத் தான் செய்து கொண்டிருக்கிறது.

சிறுகனூரில் பெரியார் உலகம் உருவாக் கப்படும்பொழுது, இந்த நிலை மாற்றப்படக் கூடிய நிலை  பிறக்கும் என்பதில் அய்யமில்லை.
நாம் வாழும் காலத்தில் இப்படிப்பட்ட ஓர் அரும்பெரும் சாதனையை நமது இயக்கக் குடும்பத் தலைவர் நிகழ்த்திக் காட்டப் போகிறார்.
அந்தக் கரத்தைப் பலப்படுத்த நமக்கான கரசேவையாக இது இருக்க வேண்டாமா? இது நமக்குக் கிடைத்திட்ட மிகப் பெரிய வாய்ப்பும் பேறும் அல்லவா!

இந்துத்துவாவாதிகளின் கரசேவை என்பது நாசப் பணியைச் சேர்ந்தது; கழகத் தோழர் களின் கரசேவை என்பது ஆக்கபூர்வமானது, அறிவுப் பூர்வமானது, மனித சமூக வளர்ச்சிக் கானது, சமத்துவச் சிந்தனையை மூச்சுக் காற்றாகக் கொண்டது,  முற்போக்குத் தன்மையைக் கொண்டது.

களப்பணி ஆற்றுவோம், கடமையை நிறைவேற்றுவோம்.

தோழர்களே தயார்; தயார் தானா?

வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!

                                   ----------------------------- ”விடுதலை” தலையங்கம் 4-12-2013

21 comments:

தமிழ் ஓவியா said...


தஞ்சை!

கொட்டு மழை
முத்தில் குளித்த
கொள்கையூர்
தங்கங்களே!

குவலயத்தின்
உச்சியிலன்றோ
குடியேறி
விட்டீர்கள்!

அடடா, என்ன
காட்சி அது!
கண்டது கனவா -
நனவா!

மழையப்பனை
விரட்டி
வாலைச் சுருட்டச் செய்தீர்களே!

மேடையில்
வீற்றிருந்த
தலைவர்கள்
என்ன பேசினார்கள்?

தணல் தொட்டியில்
எப்படி உருக்கி
வார்த்திருக்கின்றார்
தந்தை பெரியார்?

இந்தக் கருஞ்சட்டைகள்
சுவாசிப்பதெல்லாம்
இலட்சியத் தீயின்
துண்டங்களா?

இந்தத் தொண்டர்
குழாம் உண்பதெலாம்
தியாக நெருப்பின்
பண்டங்களா?

ஆசா பாசங்கள்
அண்டாதா?
ஆசையால்
அடிதான் சறுக்காதா?

சபலங்கள்
சேட்டை செய்யாதா?
சஞ்சல நோய்களும்
தீண்டாதா?

கட்டுப்பாடெனும்
கட்டிலின்
நான்கு கால்கள்
இவர்கள் தானோ!

பெரியாரோடு
ஒழிந்ததா?
நரியார் எண்ணங்கள்
பலித்ததா?

பெரியார் விட்டுச்
சென்ற வித்து
வீரமணி யெனும்
பெருஞ் சொத்து!

அவர்தம்
கண்ணசைப்பில்
கருஞ்சட்டைப்
பட்டாளம்

கண்டது காண்
தஞ்சையெனும்
கொள்கை அருவியின்
குற்றாலம்!

- மயிலாடன்

தமிழ் ஓவியா said...

சிதம்பரம் நடராஜர் கோயில் : தீட்சிதர்கள் உரிமை கொண்டாட முடியாது


உச்சநீதிமன்ற வழக்கில் மூத்த வழக்குரைஞரை தமிழ்நாடு அரசு நியமனம் செய்ய வேண்டும் கொட்டும் மழையில் சிதம்பரத்தில் தமிழர் தலைவர் முழக்கம்!

சிதம்பரம், டிச.4- சிதம்பரம் கோயிலுக்கு தீட்சதர்கள் உரிமை கொண்டாட முடியாது - அக் கோயில் தனிப்பட்டவர்களின் சொத்து அல்ல. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் நடக்கும் வழக்கில் மூத்த வழக்குரைஞரை தமிழ்நாடு அரசு நியமிக்க வேண் டும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி.

சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர் கையிலா? என்பதை முன்னி றுத்தி, சிதம்பரம் மக்கள் மன்றம் சார்பில், சிதம்பரம் காந்தி சிலை அருகில் இன்று (4.12.2013) காலை 11 மணியளவில் கொட்டும் மழையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஓதுவார் ஆறுமுகசாமி அவர் களின் முன்னிலையில் முன்னாள் அமைச்சர் வி.வே. சுவாமிநாதன் ஆர்ப் பாட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை யேற்று கண்டன உரையாற்றி திரா விடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் குறிப்பிட்டதாவது:

தமிழ் ஓவியா said...

சிதம்பரம் நடராஜர் கோயில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப் பாட்டுக்குக் கீழ் 2009 பிப்ரவரி 2ஆம் தேதி முதல் வந்து சேர்ந்தது - தி.மு.க. ஆட்சியில். இதனை எதிர்த்துத் தீட்ச தர்கள் உயர்நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கு அவர்களுக்குப் பாதகமாகவே முடிந்தது. இப்பொழுது உச்சநீதி மன்றம் சென்றுள்ளார்கள்.

நவம்பர் மாதம் 25ஆம் தேதி முதல் உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. சுப்பிரமணிய சாமி என்ற பார்ப்பனரு ம் உச்சநீதி மன்றத்தில் இந்த வழக்கில் இணைந்து கொண்டு தானே உச்சநீதி மன்றத்தில் வாதாடியுள்ளார். திராவி டர் இயக்கத்தைப் பற்றி தேவையில்லா மல் உச்சநீதிமன்றத்தில் புழுதிவாரித் தூற்றியுள்ளார். சீரங்கநாதனையும், தில்லை நடராசனையும் பீரங்கி வைத் துப் பிளக்கும் நாள் எந்நாளோ என்று பாரதிதாசன் பாடினார் என்றெல்லாம் நீதிமன்றத்தில் கூறியிருக்கிறார் (பாரதி தாசன் இந்தப் பாடலைப் பாடினாரா? ஆதாரம் காட்ட முடியுமா?) சிதம்பரம் நடராஜன் கோயில் தீட்சதர்களுக்குச் சொந்தமானது தானா? உண்மை வரலாறு என்ன? முதலாம் ராஜராஜன் முதலாவது ராஜேந்திர சோழன் ஆகியோரின் மனைவிகள், தங்கைமார்கள் 50 வேலி நிலங்களை சிதம்பரம் நடராஜன் கோயிலுக்கு எழுதி வைத்தார்கள். எதற்காகத் தெரியுமா? நடராஜன் கடவுள் சிலை முன் தேவாரம், திருவாசகம் ஓதுவதற்காகத்தான்.

அவ்வாறு அங்கு ஓதப்படுகிறதா? தேவாரம், திருவாசகம் பாடிய ஆறுமுகசாமி என்கிற முதியவரான ஓதுவாரை இதே சிதம்பரம் நடராஜன் கோயில் தீட்சதர்கள் அடித்து உதைக்கவில்லையா? நீதிமன்றம் உத்தரவுப்படியல்லவா தேவாரம் திருவாசகம் ஓதுவதற்கு அனுமதி கிடைத்தது (2.3.2008).

சிதம்பரம் நடராஜன் கோயிலில் நடக்கும் அட்டூழியங்கள் குறித்து சிதம்பரத்தில் தனிக் கூட்டம் போட்டு பொது மக்களுக்கு உண்மை நிலவரங்களை எடுத்துக் கூறினேன் (5.4.1982) அது சிதம்பர ரகசியம் எனும் நூலாகவும் வெளிவந்துள்ளது. 1922ஆம் ஆண்டு நீதிக்கட்சி ஆட்சியில் இந்து அறநிலையத்துறை ஏற்படுத்தப்பட்டது. அப்பொழுதே சிதம்பரம் தீட்சதர்கள் கூக்குரல் போட்டதுண்டு.

அப்பொழுது இந்து அற நிலையத்துறை தலைவராக இருந்து நீதிபதி சதாசிவ அய்யர் தீட்சதர்களின் மனுவின்மீது 31.12.1925 அன்று கீழ்க்கண்ட தீர்ப்பினை அளித்தது குறிப்பிடத்தக்கது.

இந்தக் கோயிலுக்கு நகைகள் தவிர வேறு சொத்துக்கள் எதுவுமேயில்லையென்று தீட்சதர்கள் சொல்லுவதும் சரியல்ல. ஆகவே தீட்சதர்கள் உண்மைக்குப் புறம்பாக மனு கொடுத்துள்ளனர். மேற் கண்ட ஆலயத்திற்கு எந்தவித வரவு - செலவு கணக்கு களையும் வைக்காமல், தீட்சதர்கள் நம்பிக்கைத் துரோகக் குற்றச் சாட்டிற்கு உள்ளாகிறார்கள் என்று இந்து அறநிலையத்துறைப் பாதுகாப்புக் குழுத் தலைவராக இருந்த சதாசிவ அய்யரே எழுத்துப் பூர்வமாகக் கூறிவிட்டாரே! 1883இல் இந்தக் கோயில் தீட்சதர்களிடையே இரு குழுக்கள்- பிளவுகள் ஏற்பட்டன. குத்தகை வசூல், சிப்பந்திகளுக்குச் சம்பளம், ஆலய பழுது பார்த்தல், கோயில் திருவிழா நடத்துதல் ஆகியவற்றில் செலவு செய்தது தொடர்பாக ஏற்பட்ட பிணக்கு அது. வழக்கு நீதிமன்றம் சென்றது. தென்னாற்காடு மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றது (ஓ.எஸ்.எஸ்.7/1887) அதன் பின் சென்னை உயர்நீதிமன்றத்திற்கும் சென்றது.

1888இல் நடைபெற்ற இந்த வழக்கினை திருவாரூர் டி.முத்துசாமி அய்யர், ஷெப்பர்டு என்ற வெள்ளைக்காரர் அடங்கிய அமர்வு விசாரித்துத் தீர்ப்பும் கூறியது.

முற்காலம் தொட்டே இக்கோயில் ஒரு பொது வழிபாட்டுக்குரிய இடமாக உபயோகப்பட்டு வந்து இருக்கிறது. இக்கோயில் தீட்சதர்களுக்கு சொந்த சொத்து என்பதற் குச் சிறுதுளியும் ஆதாரம் கிடையாது என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டார்களே! 2009இல் திமுக ஆட்சியில் சிதம்பரம் நடராஜர் கோயில் இந்து அறநிலையத் துறையின் ஆளுகைக்குக் கீழ் கொண்டு வரப்பட்ட நிலையில், சிதம்பரம் தீட்சதர்களுடன் சுப்பிரமணியசாமி இணைந்து கொண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்; தள்ளுபடி செய்யப்பட்டது. அதன் பின் மேல் முறையீடு செய்தனர்; இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு நீதிமன்றமும் நிராகரித்து விட்டது.

உச்சநீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞரை நியமித்து தீட்சதர்களின் பொய் வழக்கை முறியடித்து, கோயில் சொத்துக்கள் தனிப்பட்டவர்களுக்குக் கொள்ளை போகாமல் காப்பாற்ற வேண்டியது தமிழ்நாடு அரசின் கடமையாகும் என்பதை வலியுறுத்துகிறோம்.

இந்த கண்டன ஆர்ப்பாட்டம் மனுநீதிக்கும் மனித உரிமைக்குமான போராட்டம், எனவே சிதம்பரம் நடராஜர் கோயிலை மீண்டும் தீட்சிதர்களிடம் ஒப்படைக்கக் கூடாது என வலியுறுத்தி தமிழர் தலைவர் கண்டன உரை நிகழ்த்தினார்.

திராவிடர் கழக செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு, பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன், பாட்டாளி மக்கள் கட்சி மாநில துணைத் தலைவர் சவுந்திரபாண்டியன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் வ.க.செல்லப்பன், விவசாயிகள் விடுதலை முன்னணி மாவட்டத் தலைவர் ந.அம்பிகாபதி ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

தமிழ் ஓவியா said...


என்ன?



காட்டுமிராண்டித்தன்மை என்றால் என்ன? மனிதன் அறிவுப் பக்குவம் அடையாமல் மிருகப் பிராயத்தில் இருக்கும் தன்மையைக் குறிப்பிடும் சொல். இது உலகத்தில் எல்லா நாடுகளிலும் எந்தச் சமூகத்திலும் இருந்து வந்த நிலைமையேயாகும்.
(விடுதலை, 24.1.1968)

தமிழ் ஓவியா said...

கொட்டும் மழையும், குடைகள் ஆன நாற்காலிகளும்

பெரியார் உலகம் (தந்தை பெரியார் 95 அடி உயர பேருருவ வெண்கலச் சிலை அமைப்பு) திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்களின் 81ஆம் ஆண்டு பிறந்த நாள் மகிழ்வாக தஞ்சை மாநகரம் எங்கும் கழகக் கொடிகள் கட்டப்பட்டு - நகரமே கழகத் தில் பாசறை வீடாகக் காட்சியளித்தது. சுவர் எழுத்துக்கள் தூள் பரப்பின வண்ண வண்ணச் சுவரொட்டிகளும், பதாகை களும் பிரச்சாரத்தின் வீச்சுகளாகப் பொலிவு கூட்டின.

இடை இடையே மழை ஓடி விளையாடிக் கொண்டு இருந்தது. காலை முதல் இரவு வரை கழகத் தோழர்களும் பொது மக்களும் தமிழர் தலைவரைச் சந்தித்து வாழ்த்துகளை கூறிய வண்ணமே இருந்தனர். முற்பகல் நிகழ்ச்சி வல்லத்தில் பயனுறு கருத்தரங்கமாக நடைபெற்றது.

காலை நிகழ்ச்சி கருத்தரங்கம், மாலை திலகர் திடல் நிதி அளிப்பு நிகழ்ச்சி. மேடைகளுக்கு மறைந்த கழகப் பொரு ளாளர்கள் பழைய கோட்டை அர்ச்சுனன், தஞ்சை கா.மா. குப்புசாமி, கல்லை வழக் குரைஞர் கோ. சாமிதுரை ஆகியோரின் பெயர்கள் நன்றி கூரும் முகமாக சூட்டப்பட்டு அவர்களின் உருவங்கள் தீட்டப்பட்டு இருந்தன. திலகர் திடலில் மாலை 5 மணிக் கெல்லாம் கழக இசை நிகழ்ச்சிகள் தொடங்கப்பட்டு தொடர்ந்து பெரியார் கல்வி நிறுவனங்களின் கலை நிகழ்ச்சிகள் இடம் பெற்றன.

பிற்பகல் முதல் சிறுசிறு தூரலை, வானம் தன் பங்காகக் கொடுத்துக் கொண்டிருந்தது. கழகத் தோழர்கள் குடும்பம் குடும்பமாக வந்து கொண்டே இருந்தனர்.

வாகனங்கள் மூலம் பல மாவட்டங் களிலிருந்தும் தோழர்கள் வந்திருந்தனர். திருவாரூர் மாவட்டத்திலிருந்து மட்டும் 20 வாகனங்களில் தோழர்கள் - குறிப்பாக கழக விவசாய அணித் தோழர்கள் குடும்பம் குடும்பமாக வந்திருந்தனர்.

தமிழ் ஓவியா said...

மாலை 6 மணிக்கெல்லாம் பல்லாயி ரக்கணக்கான மக்கள் நாற்காலிகளில் அமர்ந்துவிட மேலும் வருகை தந்த மக்கள்அமர நாற்காலிகள் இல்லாமல் திலகர் திடல் மைதானத்தின் ஓரத்தில் எல்லாம் நின்று கொண்டிருந்தனர்.

மழை கொஞ்சம் அதிகமாகப் பொழிய ஆரம்பித்ததும் தயாராகக் குடையைக் கொண்டு வந்தவர்கள் பயன்படுத்திக் கொண்டனர். குடை இல்லாதவர்கள் தாங்கள் அமர்ந்திருந்த நாற்காலி களையே குடைகளாகப் பயன்படுத்திக் கொண்டனர்.

வேறு எந்த கட்சித் தொண்டர்களும், தோழர்களும் மழையையும் பொருட்படுத் தாமல் நிகழ்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து, கடைசி வரை நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டிருக்க மாட்டார்கள் என்பதைப் பல தரப்பினரும் கூறியதைக் கேட்க முடிந்தது.

சரியாக இரவு ஏழு மணிக்கு விழா தொடங்கியது. தஞ்சாவூர் மாவட்ட திரா விடர் கழகத் தலைவர் வழக்குரைஞர் சி. அமர்சிங் வரவேற்புரையாற்றிட, தலை மைச் செயற்குழு உறுப்பினர் ராஜகிரி கோ.தங்கராசு தொடக்கவுரை ஆற்றி னார். பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் தலைவர் முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் பொத்தனூர் க. சண்முகம் அவர்கள் விழாவுக்குத் தலைமை வகித்தார்.

திராவிடர் கழகப் பொருளாளர் டாக்டர் பிறைநுதல் செல்வி பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ், இரா. செயக் குமார், உரத்தநாடு இரா. குணசேகரன், மாநில வழக்குரைஞர் அணி தலைவர் த. வீரசேகரன், மாநில விவசாய தொழிலா ளரணி செயலாளர் குடவாசல் கணபதி, மாநில இளைஞரணி செயலாளர் இல. திருப்பதி, மாநில மாணவரணி செயலாளர் பிரின்ஸ் என்னாரெசு பெரியார், மாநில மகளிரணி செயலாளர் தஞ்சை கலைச் செல்வி, தலைமைச் செயற்குழு உறுப்பி னர்கள் க. பார்வதி, க. திருமகள், மதுரை தே. எடிசன்ராஜா அமைப்புச் செயலாளர் கள் வெ. ஞானசேகரன், மதுரை வே. செல்வம், ஈரோடு த. சண்முகம், மாநில தொழிலாளரணி இணைச் செயலாளர் திருவொற்றியூர் பெ. செல்வராசு, தஞ்சாவூர் மண்டல திராவிடர் கழகத் தலைவர் வெ. செயராமன், செயலாளர் தஞ்சை மு. அய்யனார், தஞ்சை நகர திராவிடர் கழகத் தலைவர் வ. ஸ்டாலின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி. பூங்குன்றன் அறிமுகவுரையாற் றினார். அனைத்து மாவட்ட, மண்டல திராவிடர் கழகத் தோழர்களின் சார்பில் தஞ்சாவூர் மண்டல திராவிடர் கழகத் தலைவர் வெ. செயராமன், ஒடிசா மாநில பகுத்தறிவாளர் கழகத் தலைவரும், பல்கலைக் கழகப் பேராசிரியருமான தானேஸ்வர் சாகு (ஆங்கில உரையை பகுத்தறிவாளர் கழகப் பொதுச் செய லாளர் வீ. குமரேசன் தமிழாக்கம் செய்து பேசினார்). தஞ்சை வழக்குரைஞர் அ. இராமமூர்த்தி திராவிடர் இயக்கத் தமிழர் பேரவைப் பொதுச் செயலாளர் பேரா சிரியர் சுப. வீரபாண்டியன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தமிழ் மாநிலத் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொய்தீன், பெரியார் பன்னாட்டு மய்யத்தின் இயக்குநர் டாக்டர் சோம இளங்கோவன் (அமெரிக்கா) திராவிட முன்னேற்றக் கழக தேர்தல் பணிக் குழுச் செயலாளர் எல். கணேசன் தஞ்சாவூர் மாவட்ட தி.மு.க. செயலாளரும், மேனாள் மத்திய அமைச்சருமான எஸ்.எஸ். பழனி மாணிக்கம், திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் டாக்டர் துரை. சந்திரசேகரன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன், தி.மு.க. பொருளாளர் தளபதி மு.க. ஸ்டாலின் ஆகியோரின் உரைகளுக்குப் பிறகு விழா நாயகர் - தமிழர் தலைவர் கி.வீரமணி ஏற்புரை, கருத்துரை வழங்கியபின், தஞ்சாவூர் மாவட்ட திராவிடர் கழகச் செயலாளர் வழக்குரைஞர் அ. அருணகிரி நன்றி கூறினார். நிகழ்ச்சி இரவு 9.50 மணிக்கு மழையையும் புறந்தள்ளி சிறப்பாக நிறைவுற்றது.


கலைநிகழ்ச்சிகள்

தமிழர் தலைவரின் 81ஆம் ஆண்டு பிறந்த நாள் மகிழ்வாக தஞ்சை திலகர் திடலில் மாபெரும் பொதுக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

முன்னதாக கருங்குயில் உரந்தை கணேசன் - முருகு தமிழினியன் ஆகியோர் இணைந்து வழங்கிய இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் பெரியார் பித்தன், இராம. அன்பழகன், பிரின்சு என்னா ரெசு பெரியார் ஆகியோரும் பாட்டுப் பாடி உற்சாகம் கொடுத்தனர்.

தொடர்ந்து பெரியார் கல்வி நிறுவனங்களில் மாணவ, மாணவியர் வழங்கிய தப்பாட்டம், நாடகம், விழிப்புணர்வு நறுக்குகள், நாட்டியம் ஆகியவை இடம் பெற்றன. சிறுக னூரில் உருவாகவுள்ள பெரியார் உலகம் குறித்த காட்சிகளை ஒலி, ஒளிக் காட்சிகளாக திரையில் ஒளி பரப்பியது அனைவரையும் மகிழ்ச் சியில் சிலிர்க்க வைத்தது.

தமிழ் ஓவியா said...


நேற்றைய ஆயுத எழுத்து நிகழ்ச்சியில் சிதம்பரம் கோயில்

நேற்றைய (03.12.2013) ஆயுத எழுத்து நிகழ்ச்சியில் (தந்தி தொலைக்காட்சி) சிதம்பரம் கோயில் தொடர்பான விவாதம் பார்த்தேன். தொடர்புடைய நால்வரைப் பங்கேற்க வைத்தது சரிதான்.அவர்கள் தங்கள் தரப்பு வாதங்களை வைத்ததும் சரிதான் என்றாலும், ஆயுத எழுத்து நிகழ்ச்சியை நடத்திய ரங்கராஜ் பாண்டே, ஆயுதத்தை கையிலெடுக்காத குறையாய் அவரும் வெங்கடேச தீட்சிதரோடு சேர்ந்து குரல் கொடுத்து தனது இனப் பாசத்தை வெளிப்படையாகக் காட்டிக்கொண்டதோடு அவருக்கும் ஒரு படி மேலே சென்று, விட்டேனா பார் எனத் துள்ளித் குதித்து அடேயப்பா!என்ன ஒரு இனப்பற்று. மேலும் எழுச்சி தமிழர் தொல்.திருமாவளவன் அவர்களை பேசவிடாமல் அவரது கருத்துக்களை திசைதிருப்பியும் திரு.செந்தில்நாதன் சொன்ன அனைத்து ஜாதியினரும் அர்ச்சகரானால்தான் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு என்றதை மிக லாவகமாக புறந்தள்ளி ஒரு வழியாக விவாதத்தை முடித்தார்.இடையில் பேசிய அந்த தீட்சிதர் போகிற போக்கில் சும்மா தமிழ்,தமிழ்னு இனியும் பேசிக்கிட்டு இருக்காதீங்க என்று சொல்கிறார். இத்தனையும்வெல்க தமிழ் என்று தனது நாளிதழில் அடைமொழி போட்டுக்கொள்ளும் நம் தமிழர் நடத்திய தந்தி தொலைக்காட்சியில் தான்.இதுதான் தமிழ் தேசியத்தின் இறுதி வடிவம் என்று சொல்லாமல் சொல்லும் தந்தி தொலைக்காட்சி.
கொடுமை! கொடுமை!!

- தி. என்னாரெசு பிராட்லா, மாவட்ட செயலாளர், காரைக்குடி

தமிழ் ஓவியா said...


காமன்வெல்த் மாநாட்டில் சல்மான் குர்ஷித்: கலைஞர் பேட்டி


சென்னை, டிச.24- இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்றது தொடர்பாக நடைபெறும் விவாதத்தில் தி.மு.க. பங்கேற்கும் என்றார் டெசோ தலைவர் கலைஞர்.

செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

செய்தியாளர் :- தமிழகம் முழுவதும் மீண்டும் மின்வெட்டு நடைமுறைக்கு வந்துவிட்டதே; சென்னையிலேயேஅன்றாடம் இரண்டுமணிநேரம் மின்வெட்டு செய்யப்படுகிறதே?
கலைஞர் :- சந்தோஷம்!

செய்தியாளர் :-ஆனால் மின் வெட்டு ஏற்படும் போதெல்லாம், முதலமைச்சர் ஜெயலலிதாஅதற்கு தி.மு. கழகத்தின் மீது பழிபோடுகிறாரே? மேலும் மத்தியஅரசும், தி.மு. கழகமும் சேர்ந்து சதிசெய்வதாகச் சொல்லியிருக்கிறாரே?

கலைஞர் :- அது அவர்களுடைய வாடிக்கை. தாங்கள் செய்கிற தவறை மறைக்க பிறர் மீது பழி போடுவது என்பது ஜெயலலிதாவுக்கு இன்று நேற்றல்ல; என்றுமே வாடிக்கை.

செய்தியாளர் :- கெயில் எரிவாயுக் குழாய்கள் பதிக்கும் பிரச்சினையில் இரு தரப்பினருடன் பேசி சுமூகமான முடிவெடுக்க வேண்டுமென்று சொல்லி யிருந்தீர்கள். ஆனால் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருக்கிறதே?

கலைஞர் :- நாட்டின் பொருளாதாரம் அல்லது விஞ்ஞான வளர்ச்சிக்காக சிலநடவடிக்கைகள் மேற் கொள்ளப்படுகின்றன. விவசாயத் துறையின் வளர்ச்சிக் காக இயந்திரமயம் என்றபெயரால் சில காரியங்கள் நடக்கின்றன. அதேநேரத்தில் விவசாயத்திற்கு கேடு விளைவிக்காமல் இருக்க மற்ற துறையினரும், தொழில் துறையினரும் அக்கறைகாட்டவேண்டும். அதனால் தான் இரு சாராரும் பேச்சுவார்த்தைநடத்தி அதனை ஒரு முனைப்படுத்த வேண்டும் என்று நான் தெரி வித்தேன்.

செய்தியாளர் :- மத்தியஅமைச்சர் சல்மான் குர்ஷித் இலங்கைசென்றது பற்றி வருகின்ற நாடாளு மன்ற குளிர் காலக் கூட்டத் தொடரில் விவாதம் வருமென்றுசொல்கிறார்களே?

கலைஞர் :- அப்படியொரு விவாதத்திற்கு அங்கே அனுமதிக்கப்படுமானால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எங்கள் நாடாளுமன்ற உறுப் பினர்கள் அங்கே விவாதத்தில் பங்கேற்பார்கள். செய்தியாளர் :- நேற்றையதினம் கேப்டன் தொலைக் காட்சியைச் சேர்ந்த செய்தியாளர்களை ஒருகுழுவினர் சேர்ந்து அடித்திருக்கிறார்கள். ஆனால் காவல்துறையினர் தொலைக்காட்சிநிறுவனத்தைச் சேர்ந்தவர்களையே கைது செய்திருக்கிறார்கள். 200 பேருக்குமேல்பத்திரிகையாளர்களைபோலீசார் கைதுசெய்திருக்கிறார்களே?

கலைஞர் :- இதனை வன்மையாகக் கண்டிக் கிறேன்.

இவ்வாறு கலைஞர் அவர்கள் செய்தியாளர் களுக்குப் பேட்டியளித்தார்.

தமிழ் ஓவியா said...


சிதம்பரம் நடராஜர் கோயில் : தீட்சிதர்கள் உரிமை கொண்டாட முடியாது


உச்சநீதிமன்ற வழக்கில் மூத்த வழக்குரைஞரை தமிழ்நாடு அரசு நியமனம் செய்ய வேண்டும் கொட்டும் மழையில் சிதம்பரத்தில் தமிழர் தலைவர் முழக்கம்!

சிதம்பரம், டிச.4- சிதம்பரம் கோயிலுக்கு தீட்சதர்கள் உரிமை கொண்டாட முடியாது - அக் கோயில் தனிப்பட்டவர்களின் சொத்து அல்ல. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் நடக்கும் வழக்கில் மூத்த வழக்குரைஞரை தமிழ்நாடு அரசு நியமிக்க வேண் டும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி.

சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர் கையிலா? என்பதை முன்னி றுத்தி, சிதம்பரம் மக்கள் மன்றம் சார்பில், சிதம்பரம் காந்தி சிலை அருகில் இன்று (4.12.2013) காலை 11 மணியளவில் கொட்டும் மழையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஓதுவார் ஆறுமுகசாமி அவர் களின் முன்னிலையில் முன்னாள் அமைச்சர் வி.வே. சுவாமிநாதன் ஆர்ப் பாட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை யேற்று கண்டன உரையாற்றி திரா விடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் குறிப்பிட்டதாவது:

சிதம்பரம் நடராஜர் கோயில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப் பாட்டுக்குக் கீழ் 2009 பிப்ரவரி 2ஆம் தேதி முதல் வந்து சேர்ந்தது - தி.மு.க. ஆட்சியில். இதனை எதிர்த்துத் தீட்ச தர்கள் உயர்நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கு அவர்களுக்குப் பாதகமாகவே முடிந்தது. இப்பொழுது உச்சநீதி மன்றம் சென்றுள்ளார்கள்.

நவம்பர் மாதம் 25ஆம் தேதி முதல் உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. சுப்பிரமணிய சாமி என்ற பார்ப்பனரு ம் உச்சநீதி மன்றத்தில் இந்த வழக்கில் இணைந்து கொண்டு தானே உச்சநீதி மன்றத்தில் வாதாடியுள்ளார். திராவி டர் இயக்கத்தைப் பற்றி தேவையில்லா மல் உச்சநீதிமன்றத்தில் புழுதிவாரித் தூற்றியுள்ளார். சீரங்கநாதனையும், தில்லை நடராசனையும் பீரங்கி வைத் துப் பிளக்கும் நாள் எந்நாளோ என்று பாரதிதாசன் பாடினார் என்றெல்லாம் நீதிமன்றத்தில் கூறியிருக்கிறார் (பாரதி தாசன் இந்தப் பாடலைப் பாடினாரா? ஆதாரம் காட்ட முடியுமா?) சிதம்பரம் நடராஜன் கோயில் தீட்சதர்களுக்குச் சொந்தமானது தானா? உண்மை வரலாறு என்ன? முதலாம் ராஜராஜன் முதலாவது ராஜேந்திர சோழன் ஆகியோரின் மனைவிகள், தங்கைமார்கள் 50 வேலி நிலங்களை சிதம்பரம் நடராஜன் கோயிலுக்கு எழுதி வைத்தார்கள். எதற்காகத் தெரியுமா? நடராஜன் கடவுள் சிலை முன் தேவாரம், திருவாசகம் ஓதுவதற்காகத்தான்.

அவ்வாறு அங்கு ஓதப்படுகிறதா? தேவாரம், திருவாசகம் பாடிய ஆறுமுகசாமி என்கிற முதியவரான ஓதுவாரை இதே சிதம்பரம் நடராஜன் கோயில் தீட்சதர்கள் அடித்து உதைக்கவில்லையா? நீதிமன்றம் உத்தரவுப்படியல்லவா தேவாரம் திருவாசகம் ஓதுவதற்கு அனுமதி கிடைத்தது (2.3.2008).

சிதம்பரம் நடராஜன் கோயிலில் நடக்கும் அட்டூழியங்கள் குறித்து சிதம்பரத்தில் தனிக் கூட்டம் போட்டு பொது மக்களுக்கு உண்மை நிலவரங்களை எடுத்துக் கூறினேன் (5.4.1982) அது சிதம்பர ரகசியம் எனும் நூலாகவும் வெளிவந்துள்ளது. 1922ஆம் ஆண்டு நீதிக்கட்சி ஆட்சியில் இந்து அறநிலையத்துறை ஏற்படுத்தப்பட்டது. அப்பொழுதே சிதம்பரம் தீட்சதர்கள் கூக்குரல் போட்டதுண்டு.

தமிழ் ஓவியா said...

அப்பொழுது இந்து அற நிலையத்துறை தலைவராக இருந்து நீதிபதி சதாசிவ அய்யர் தீட்சதர்களின் மனுவின்மீது 31.12.1925 அன்று கீழ்க்கண்ட தீர்ப்பினை அளித்தது குறிப்பிடத்தக்கது.

இந்தக் கோயிலுக்கு நகைகள் தவிர வேறு சொத்துக்கள் எதுவுமேயில்லையென்று தீட்சதர்கள் சொல்லுவதும் சரியல்ல. ஆகவே தீட்சதர்கள் உண்மைக்குப் புறம்பாக மனு கொடுத்துள்ளனர். மேற் கண்ட ஆலயத்திற்கு எந்தவித வரவு - செலவு கணக்கு களையும் வைக்காமல், தீட்சதர்கள் நம்பிக்கைத் துரோகக் குற்றச் சாட்டிற்கு உள்ளாகிறார்கள் என்று இந்து அறநிலையத்துறைப் பாதுகாப்புக் குழுத் தலைவராக இருந்த சதாசிவ அய்யரே எழுத்துப் பூர்வமாகக் கூறிவிட்டாரே! 1883இல் இந்தக் கோயில் தீட்சதர்களிடையே இரு குழுக்கள்- பிளவுகள் ஏற்பட்டன. குத்தகை வசூல், சிப்பந்திகளுக்குச் சம்பளம், ஆலய பழுது பார்த்தல், கோயில் திருவிழா நடத்துதல் ஆகியவற்றில் செலவு செய்தது தொடர்பாக ஏற்பட்ட பிணக்கு அது. வழக்கு நீதிமன்றம் சென்றது. தென்னாற்காடு மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றது (ஓ.எஸ்.எஸ்.7/1887) அதன் பின் சென்னை உயர்நீதிமன்றத்திற்கும் சென்றது.

1888இல் நடைபெற்ற இந்த வழக்கினை திருவாரூர் டி.முத்துசாமி அய்யர், ஷெப்பர்டு என்ற வெள்ளைக்காரர் அடங்கிய அமர்வு விசாரித்துத் தீர்ப்பும் கூறியது.

முற்காலம் தொட்டே இக்கோயில் ஒரு பொது வழிபாட்டுக்குரிய இடமாக உபயோகப்பட்டு வந்து இருக்கிறது. இக்கோயில் தீட்சதர்களுக்கு சொந்த சொத்து என்பதற் குச் சிறுதுளியும் ஆதாரம் கிடையாது என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டார்களே! 2009இல் திமுக ஆட்சியில் சிதம்பரம் நடராஜர் கோயில் இந்து அறநிலையத் துறையின் ஆளுகைக்குக் கீழ் கொண்டு வரப்பட்ட நிலையில், சிதம்பரம் தீட்சதர்களுடன் சுப்பிரமணியசாமி இணைந்து கொண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்; தள்ளுபடி செய்யப்பட்டது. அதன் பின் மேல் முறையீடு செய்தனர்; இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு நீதிமன்றமும் நிராகரித்து விட்டது.

உச்சநீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞரை நியமித்து தீட்சதர்களின் பொய் வழக்கை முறியடித்து, கோயில் சொத்துக்கள் தனிப்பட்டவர்களுக்குக் கொள்ளை போகாமல் காப்பாற்ற வேண்டியது தமிழ்நாடு அரசின் கடமையாகும் என்பதை வலியுறுத்துகிறோம்.

இந்த கண்டன ஆர்ப்பாட்டம் மனுநீதிக்கும் மனித உரிமைக்குமான போராட்டம், எனவே சிதம்பரம் நடராஜர் கோயிலை மீண்டும் தீட்சிதர்களிடம் ஒப்படைக்கக் கூடாது என வலியுறுத்தி தமிழர் தலைவர் கண்டன உரை நிகழ்த்தினார்.

திராவிடர் கழக செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு, பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன், பாட்டாளி மக்கள் கட்சி மாநில துணைத் தலைவர் சவுந்திரபாண்டியன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் வ.க.செல்லப்பன், விவசாயிகள் விடுதலை முன்னணி மாவட்டத் தலைவர் ந.அம்பிகாபதி ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

தமிழ் ஓவியா said...


ஆதாரமே இல்லை

சரித்திரத்தைப் புராணத்தை எடுத்துக்கொண்டால் பார்ப்பனர்கள் மற்றெவரையும் வாழ வைத்ததாக ஆதாரமே இல்லை. - (விடுதலை, 26.8.1967)

தமிழ் ஓவியா said...


போர்க் குற்றங்கள்மீது நடவடிக்கை:


இலங்கைக்கு,அமெரிக்காஎச்சரிக்கை

சர்வதேச சமூகம் பொறுமை காக்காது!

இலங்கை உள்நாட் டுப் போரில், ராணுவத் தின் அட்டூழியம் மற் றும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக அந்நாடு நடவடிக்கை எடுக்கா விடில், சர்வதேச சமூகம் இனியும் பொறுமையாக இருக்காது என்று தெற் காசிய விவகாரங்களுக் கான அமெரிக்க வெளி யுறவுத் துறை துணை அமைச்சர் நிஷா பிஸ் வால் கூறினார்.

போர்க் குற்றங்கள் தொடர்பாக இலங்கை அரசின் நடவடிக்கை யில் வரும் மார்ச் மாதத் துக்குள் எந்த முன்னேற் றமும் இல்லாவிட்டால் அய்.நா. தலைமையி லான விசாரணை கோரு வோம் என்று இங்கி லாந்து பிரதமர் டேவிட் கேமரூன் கடந்த மாதம் கூறியிருந்தார். இக் கருத்தை பிரதிபலிக்கும் வகையில் நிஷா பிஸ் வால் இவ்வாறு கூறி யுள்ளார்.

அய்.நா. அறிக்கை

2009-ஆம் ஆண்டு, இலங்கை உள்நாட்டுப் போரின் இறுதி மாதங் களில், சிங்கள ராணுவத் தால் சுமார் 40 ஆயிரம் தமிழர்கள் கொல்லப் பட்டிருக்கலாம் என் றும், ராணுவத்தினர் கடும் போர்க் குற்றங் களில் ஈடுபட்டதாகவும், அய்.நா. அறிக்கை கூறு கிறது.

இந்நிலையில், போர்க் குற்றங்களுக்கு சம்பந்தப்பட்டவர்கள் பொறுப்பேற்கும் விவகாரத்தில் இலங்கை அரசு தாமாக முன்வந்து உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நிஷா பிஸ்வால் கூறியுள் ளார்.

இந்த விவகாரத்தில் இலங்கை தங்கள் நாட்டு சட்ட திட்டங்கள் மூலம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். அவ் வாறு நடந்து கொள்ளும் என்றும் நம்புகிறோம். மேலும் போருக்குப் பிறகு நியமிக்கப்பட்ட நல்லிணக்க ஆணையத் தின் பரிந்துரைகளையும் இலங்கை அரசு நிறை வேற்ற வேண்டும். இந்த நடவடிக்கைகளில் முன்னேற்றம் இல்லா விட்டால் சர்வதேச சமூகம் இனியும் பொறு மையாக இருக்காது என்றார் நிஷா பிஸ்வால்.

இலங்கை ராணுவத் தின் போர்க் குற்றங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணையை அனு மதிக்க முடியாது என்று கூறிவரும் இலங்கை அதிபர் ராஜபக்சே, உள் நாட்டு விசாரணைக்கும் உத்தரவிட மறுத்து வருகிறார். ராணுவத்தின் அத்துமீறல் குற்றச்சாட் டுகளையும் அவர் மறுத்து வருகிறார்.

அதிகாரப் பகிர்வை நோக்கி சிறு நடவடிக் கையாக கடந்த செப் டம்பர் மாதம் நடை பெற்ற இலங்கை வடக்கு மாகாணத் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டணி வெற்றி பெற்ற போதி லும், அங்கு ஊடகங்கள் மீதான நெருக்குதல், மனித உரிமை மீறல்கள் போன்ற சமீபத்திய செய் திகள் அதிர்ச்சி அளிக் கின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

தமிழ் ஓவியா said...


மோடிக்கான விசா வழங்கும் கொள்கையில் மாற்றம் எதுவும் செய்யவில்லை அமெரிக்கா மீண்டும் அறிவிப்பு


வாஷிங்டன், டிச.5- அடுத்த ஆண்டு நடை பெறவுள்ள இந்திய நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் எப்படி இருந் தாலும் அந்நாட்டுடன் இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாக வும், மோடிக்கு விசா வழங்குவது தொடர் பான கொள்கையில் மாற்றம் எதுவும் செய் யப்படவில்லை என்றும் அதிபர் ஒபாமாவின் அமெரிக்க நிர்வாகம் மீண்டும் தெரிவித்துள் ளது.

இதுகுறித்து தெற்கு மற்றும் மத்திய ஆசியா விற்கான அமெரிக்க வெளியுறவுத் துறை துணை அமைச்சர் நிஷா தேசாய் பிஸ்வால் செய்தி யாளர்களிடம் கூறிய தாவது:

அமெரிக்க விசா விதிமுறைகள் மற்றும் நடைமுறைகளில் எந்தவிதமான மாற்றமும் இல்லை என்பதை சுட்டிக் காட்ட விரும்புகின் றேன். அனைவரது விசா விண்ணப்பத்தின் மீதும் உரிய ஆய்வு நடத்தப் படும். அதன்படி விசா விண்ணப்பம் சமர்ப்பிக் கும் அனைவரது விண் ணப்பமும் ஆய்வுக்கு உட்படுத்தப்படும். அந்த நடைமுறையின் இறுதி முடிகள் குறித்து பேச இயலாது என்றார் பிஸ் வால்.

அப்போது நரேந்திர மோடிக்கு விசா வழங் குவது குறித்து செய்தி யாளர்கள் திரும்பத் திரும்ப கேள்வி எழுப் பினர். அதற்கு பதில் அளித்த பிஸ்வால், "அமெரிக்க விசா கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை. விசா விண்ணப்பங்கள் எப்போதும் விண்ணப் பத்துக்கு தகுந்தவாறு பரிசீலனை செய்யப் படுகின்றன.

அரசு விசா, அரசு அதிகாரிகளுக்கான விசா, சுற்றுலா விசா என விசாக்களில் பல்வேறு விசாக்கள் உள்ளன.

எனவே, விசா விண் ணப்பத்தின் தன்மை மற்றும் யார் விசாவிற்கு விண்ணப்பித்துள்ளார்கள் என்பதைப் பொறுத்தே அதன் மீதான முடிவுகள் இருக்கும்' என்று கூறினார்.

கடந்த 2002ஆம் ஆண்டு குஜராத் கலவ ரத்தைத் தொடர்ந்து, 2005ஆம் ஆண்டு மார்ச் மாதம் நரேந்திர மோடிக்கு விசா வழங்க அமெரிக்கா மறுத்தது. அதே நிலைதான் தற்போ தும் நீடித்து வருகிறது என்பதை அமெரிக்கா சுட்டிக் காட்டியுள்ளது.

தமிழ் ஓவியா said...


பெரியார் சமத்துவபுரத்தில் கோயிலா?


கரூர் மாவட்டம், வெள்ளியணையில் இம்மாவட்டத்தில் முதல் பெரியார் சமத்துவபுரம் உள்ளது. இச்சமத்துவபுரத்தில் கடந்த 2010 ஆண்டு மாவட்ட முன்னாள் ஆட்சியர் ஜெ. உமாமகேஸ்வரி அவர்கள் மார்பளவு பெரியார் சிலையை நிறுவினார். சிலையின் அருகில் புற்றுக் கண் கோயில் திடீரென முளைத்துள்ளது. சமத்துவபுரத்தின் உள்ளே பால நாகம்மா கோயில் என இரண்டு கோயில்கள் சமத்துவபுரத்தில் உள்ளன. இந்த இரண்டு கோயில்களிலும் பாம்பு புற்றின் அருகில் சாமி படங்களும், மஞ்சள் துணி கட்டி மஞ்சள், சந்தனம், குங்குமம் தெளித்து தினம் பூஜைகள் நடைபெறுகின்றன.

இந்த கோயில் அருகே வேப்ப மரம், மற்றும் கோயிலை கீற்றுக் கொட்டகை அமைத்து பெரியார் சமத்துவபுரத்தின் நுழைவு பகுதியில் பெரியார் சிலை அருகே கோயில் அமைத்து சில சமூக விரோதிகள் தீய செயலில் ஈடுபட்டுள்ளனர். உடனடியாக அந்த கோயிலை அப்புறப்படுத்தி ஜாதி சமய ஏற்றத் தாழ்வுகளை அகற்ற முன்னால் முதல்வர் கலைஞர் அவர்களால் கட்டப்பட்ட பெரியார் சமத்துவபுரம் அனைவருக்கும் சமம் என்ற அடிப்படையில் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். இல்லையென்றால் கழகத் தோழர்களையும், பகுத்தறிவு சிந்தனை யாளர்களையும் ஒன்று திரட்டி பெரிய போராட்டம் நடைபெறுவதை தவிர்க்க உடனடியாக மாவட்ட ஆட்சியர் தலையிட வேண்டும். எந்த நோக்கத்துக்காக பெரியார் நினைவு சமத்துவபுரம் உருவாக்கப்பட்டதோ அதை உருக்குலைக்க சதி நடக்கிறது. அரசு தலையிடட்டும்.

தமிழ் ஓவியா said...


செய்திக்குப் பின்னால்...!


உலகளவில் கணினிகளில் தீங்கிழைக்கும் மென்பொருள் அதிகமாகக் கொண்டுள்ள நாடு களின் பட்டியலில் இந்தியாவுக் குள்ள இடம் மூன்று.

(இதுபோன்றவற்றில் இந்தியா தானே பொதுவாக முதலிடத்தைப் பிடிக்கும். கோட்டை விட்டுவிட்டதோ!).

நாடாளுமன்றம் நேற்று கூடி யது.

(கூடியது சரி... நடக்குமா என்பதுதான் கேள்வி)

டில்லியில் தேர்தலில் இரவிலும் வாக்குப் பதிவு.

(இரவில் வந்த சுதந்திர மாயிற்றே!)

மின் கணக்கீட்டில் முறைகேடு களைத் தடுக்க ரிமோட் மீட்டர்கள்.

(பெரும்பாலோருக்கு அதிர்ச்சி (ஷாக்)யாக இருக்குமே!)

ஒரே நாளில் மூன்று இடங் களில் சென்னை மாணவர்கள் தகராறு.

(படித்துக் கிழிப்பது என்பது இதுதானோ!).

லஞ்சம் கேட்கும் அதிகாரி களைக் கண்டித்து டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்.

(இலஞ்சமே ஒருவகைப் போதைதானே!).

கூட்டுறவு சர்க்கரை ஆலை யில் சாராய உற்பத்திக்கு எதிர்ப்பு!

(சர்க்கரை இல்லாவிட்டால் என்ன? சாராயத்தை உற்பத்தி செய்ய வேறு மார்க்கங்கள் இல்லையா, என்ன?)

மது அருந்த மாட்டோம்; போனில் பேச மாட்டோம்! - ஆம்னி பேருந்து ஓட்டுநர்கள் உறுதிமொழி!

(ஓடுற தண்ணீரில் எழுதிய எழுத்தாக இருக்கக்கூடாது!)

கடுங் குற்றங்களுக்கு எஃப்.அய்.ஆர். பதிவு கட்டாயம்.

(அப்படி எஃப்.அய்.ஆர். செய்யாத அதிகாரிகள்மீது எஃப்.அய்.ஆர். பதிவு செய்வார்களா?)

சவுதியில் தவிக்கும் 30 தமிழர்கள் இந்தியத் தூதரகத்தில் அடைக்கலம்!

(உலகுக்கு இளைத்தவர்கள் இந்தத் தமிழர்கள்தானே!)

தென்னக ரயில்வேக்கு ஒதுக் கீடு குறைகிறது.

(ஒழுங்காக டிக்கெட் வாங்கிப் பயணம் செய்கிறவர்கள் இவர்கள்தானே - அதற்குத் தண்டனை வேண்டாமா?)

ராட்சத பளு தூக்கும் லிப்ட் அறுந்து விழுந்தது - வாலிபர் பலி!

(ராட்சத பளு தூக்கியைவிட வாலிபர் கனபாடியோ!)

மின்வெட்டுக் காரணமாக தமிழ்நாட்டில் ரூ.65 கோடி ஜவுளி உற்பத்தி பாதிப்பு!

(மின்வெட்டா? தமிழ்நாட்டிலா? இருக்காதே, ஆட்சிக்கு வந்து மூன்றே மாதத்தில் சரி செய்துவிட்டார்களே, ஹி....ஹி...)

தமிழ் ஓவியா said...


அந்தோ, தென்னாப்பிரிக்க விடுதலைச் சிங்கத்தின் குரல் ஓய்ந்துவிட்டதே!


உலகின் மனித உரிமைப் போரில் கறுப்பினத்தின் மறுக்கப்பட்ட உரிமை களுக்காக, மண்டியிடாத போர் முழக்கத்தை உரிமை முழக்கமாகச் செய்து, அதற்குரிய கடும் விலையாக 27 ஆண்டு வெஞ்சிறையில் வாடி, இருட்டினை சுவைக்கவேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்று, இறுதிவரை போராடி, எந்த வெள்ளை இனம் நிறத்தைக் காட்டி அதிகாரம் செய்ததோ அவர்களுக்கும் சேர்த்த அதிபராக, அமர்ந்து, தனது இயக்கத்தின் வெற்றிக்கொடியைப் பறக்கவிட்ட மாவீரர் நெல்சன் மண்டேலாவின் (வயது 95) மறைவு, தென்னாப்பிரிக்க மக்களுக்கு மட்டுமல்ல; உலகம் முழுவதும் உள்ள சமத்துவ, சமவாய்ப்பு, சமூகநீதிப் போராளிகள் அனைவருக்குமே இழப்பு ஆகும்!

இளைய தலைமுறைகள் இவர்தம் லட்சியத் தியாகத்திலிருந்து பாடம் கற்றுக் கொள்ளட்டும்!

நெல்சன் மண்டேலாவை வெறும் படமாகப் பார்க்காதீர்கள் இளைஞர்களே,

பாடமாகக் கொண்டு, நெல்சன் மண்டேலாவின் நெறியில் நடைபோட உறுதியேற்று, சூளுரையுங்கள்!

நெறியோடு சுதந்திரப் போர் நடத்தி, வெற்றி கண்ட அம்மனிதகுல மாணிக்கத்திற்கு எமது வீர வணக்கம்! வீர வணக்கம்!!

- கி.வீரமணி,
தலைவர், திராவிடர் கழகம்



சென்னை
6.12.2013

தமிழ் ஓவியா said...


மறக்க முடியாத டிசம்பர் 6


டிசம்பர் 6 என்றால் மனித உரிமை ஆர்வலர்கள் அண்ணல் அம்பேத்கரை நினைவு கூர்வார்கள்.

சங்பரிவார் கும்பலோ பாபர் மசூதி இடிப்பு நாள் என்று மகிழ்ந்து கொண்டாடும்; உலக நாடுகள் முன் இந்தியா தலைகுனிய பல நிகழ்வுகள் நடந்துள்ளன. ஒன்று காந்தியார் படுகொலை, இரண்டு பாபர் மசூதி இடிப்பு, மூன்று குஜராத் படுகொலைகள்.

இந்த மூன்றுக்கும் காரணமானவர்கள் இந்துத் துவா நஞ்சு கக்கும் சங்பரிவார்க் கும்பல்!

பிஜேபியின் பிரதமருக்கான வேட்பாளர் என்று முன்னிறுத்தப்படும் நரேந்திர மோடிக்கு பிரிட்டனும், அமெரிக்காவும் இன்றுவரை விசா கொடுக்க மறுப்பது ஏன்? அதன் பின்னணி அவமானகரமானது அல்லவா!

ஒரு பட்டப்பகலில் பல்லாயிரக்கணக்கான மத வெறியர்களை ஒன்று திரட்டி, 500 ஆண்டு கால வரலாறு படைத்த சிறுபான்மை மக்களின் வழிபாட்டுத் தலத்தை இடித்து நொறுக்கித் தள்ளி விட்டார்கள். அதன் மூலம் இந்தியாவின் மானம் மரியாதை எல் லாம் அடித்து நொறுக்கப்பட்டு விட்டன என்று பொருள்.

இதுகுறித்து அமைக்கப்பட்ட நீதிபதி லிபரான் தலைமையிலான விசாரணை ஆணையம் 68 பேர்கள் மீது குற்றவாளிகள் என்று பட்டியலிட்டது.

அதில் அடல் பிஹாரி வாஜ்பேயும் ஒருவர். இதில் வெட்கக் கேடு என்னவென்றால் வாஜ்பேயியை அந்தக் குற்றச்சாற்றுப் பட்டியலில் எப்படி சேர்க்கலாம் என்று கூறி நாடாளுமன்றத்தை முடக்கினார்களே அதுதான்! சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை பிஜேபி உள்ளிட்ட சங்பரிவார் கும்பல் எப்பொழுதும் ஏற்றுக் கொள்வதில்லை. ஏனெனில் ஒரு குலத்துக்கொரு நீதி சொல்லும் மனுதர்மவாதிகள் அவர்கள்.

பாபர் மசூதி இடிக்கப்படுவதற்கு முதல் நாள் இதே வாஜ்பேயி உ.பி. தலைநகரமான லக்னோவில் என்ன பேசினார்?

நாளைய தினம் அயோத்தியில் என்ன நடக்கும் என்று எனக்குத் தெரியாது. கூரிய கற்கள் மீது அமர்ந்து கொண்டு பஜனைப் பாடல்களைப் பாட முடி யாது. மண்ணை சமன்படுத்தி அமர்வதற்கு ஏற்றபடி சமன் செய்யவேண்டும் - என்று பேசினாரே!

இதுபற்றி அவுட்லுக் நிருபர் பின்னர் வினா எழுப் பியபோது வாஜ்பேயி சொன்ன பதில் அபாயகரமானது.

நான் லக்னோவில் பேசியது உண்மைதான். அது நகைச்சுவைக்காக கூறப்பட்ட - வேடிக்கையான பேச்சு - என்றாரே பார்க்கலாம்.

500 ஆண்டுகால வரலாறு படைத்த சிறுபான்மை மக்களுக்கான வழிபாட்டுத் தலத்தை இடிக்கச் சொன்னது வாஜ்பேயிகளுக்கு வேடிக்கையானதாம். அதன் விளைவாக நாடெங்கும் கலவரங்கள் நடை பெற்று பன்னூறு பேர்கள் கொலையுண்டது - நகைச் சுவையா!

இவர்தான் அவர்கள் கட்சியிலேயே யோக்கிய மான மனிதராம். தந்தை பெரியார் ஒன்றைக் கூறுவார் என் வீட்டுப் பிள்ளைகளிலேயே மிகவும் நல்லவன் - அதோ கூரை மீது ஏறிக் கொள்ளி வைக்கிறானே அவன்தான்! என்றானாம் ஒருவன். அதுதான் இப்பொழுது நினைவிற்கு வந்து தொலைக்கிறது.

பாபர் மசூதி இடிப்புக் குற்றவாளி அதற்குப்பின் இந்தியாவில் துணைப் பிரதமராகக் கூட (எல்.கே.அத்வானி) வந்துவிட்டார். இன்னொருவர் முரளி மனோகர் ஜோஷி; அவர் இந்தியாவின் மனித வள மேம்பாட்டுத் துறை (கல்வி) அமைச்சகராகவே வந்து விட்டார்.
இவர்கள் மீது போடப்பட்ட கிரிமினல் வழக்கு களும் சாதாரணமானவையல்ல. இந்தியன் குற்ற வியல் சட்டம் 147, 153(ஜெ), 153(பி) மற்றும் 505 பிரிவுகள்; கலகம் விளைவித்தல், மக்களிடையே குரோத உணர்ச்சிகளைத் தூண்டுதல், சட்ட விரோத மாகக் கூடுதல், தேசிய ஒருமைப்பாட்டுக்குக் குந்தகம் விளைவித்தல், ஒரு சமுதாயத்துக்கு விரோதமாகக் குற்றம் செய்யத் துணிதல், பிரிவினை உண்டாக்கும் என்ற குற்றங்கள் இதில் அடங்கும்.

21 ஆண்டுகள் ஓடிவிட்டன; ஆனாலும் பெரிய மனிதர்களாக பெரிய பதவிக்காரர்களாக இவர்கள் நாட்டில் ராஜ நடை போட்டுத் திரிகிறார்களே, எப்படி?

இதில் குறிப்பிட்டுக் காட்டப்பட வேண்டிய ஒன்று - பிஜேபியின் பிரதமருக்கான வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நரேந்திர மோடி பாபர் மசூதி இடிப்புக் குறித்து என்ன சொன்னார் தெரியுமா?

இந்துக்கள் ஆண்மையுள்ளவர்கள்; பேடிகள் அல்லர் என்று நிரூபித்து விட்டார்களாம்.
இந்தத் தன்மை உள்ளவர்களின் கைகளில் ஆட்சி சென்றால் நாடு என்னவாகும்? சுடுகாடாகும்- எச்சரிக்கை!

பாபர் மசூதியை இடித்தவர்கள் மீதான வழக்கு விசாரணையைத் துரிதப்படுத்த வேண்டும் என்று திராவிடர் கழக பொதுக் குழுவும், தலைமைச் செயற் குழுவும் பலமுறை தீர்மானங்களை நிறைவேற்றி யுள்ளன என்பதையும் இந்த இடத்தில் சுட்டிக்காட்ட வும் விரும்புகிறோம்.

தமிழ் ஓவியா said...


மனிதக் கொடுமை

தன் இனத்தையே அடிமைப்படுத்தி, அதைக் கொடுமைப்படுத்தி வாழும் கெட்ட குணம் மனித ஜீவனிடத்திலேயே அதிகமாய் இருந்து வருகின்றது.
(உண்மை, 15.5.1977)

தமிழ் ஓவியா said...


கலைவாணர் பற்றி பெரியார்


புராணம், மோட்சம், நரகம், சாஸ்திரம், கடவுள்கள் ஆகியவை பற்றிய அபிப்பிராயங்கள் மக்கள் உயிரோடு கலந்தும், வாழ்வோடு கலந்தும், மதத்தோடு கலந்தும் பலவிதமான ஸ்தாபனங்களோடு செல்வாக்காய் பத்திரமாய் அனேக காவலாளிகளோடு இருப்பதை வெறுக்கும்படியாக சிரிப்பாய்ச் சிரிக்க வைக்கும் படியில் - அதுவும் இதைப் பார்க் கவும் கேட்கவும் பணங்கொடுத்து விட்டு வந்து பகலும் இரவும் காத்துக்கிடக்கும்படியாகச் செய்து வருகிறார் என்.எஸ். கிருஷ்ணன்.

சாகும்வரை செய்துகொண் டே இருக்கப் போகிறார் என்றால் இதைவிட ஒரு புரட்சி வீரனை நாம் எங்கு காணமுடியும்? வேறு எத்தனை பேர்தான் இருக் கிறார்கள்? நீங்கள் தான் சொல்லுங்களேன் பார்ப்போம்.

(பேராசிரியர் அன்புக் கொடி நல்லதம்பி எழுதிய சிரிப்பில் மலர்ந்த சிந்தனை மலர்கள் என்ற நூலிலிருந்து....)

தமிழ் ஓவியா said...


பிறப்பில் தீண்டாமை கருதலாமா?


தீண்டாதாரிடையே ஒழுக்கமில்லை என்று சிலர் சொல்கிறார்கள். மற்றவரெல்லாரும் ஒழுக்கமுடையரா? என்று அச்சகோதரரைக் கேட்கிறேன்.

தீண்டாதார் என்று சொல்லப்படுவோரும் எத்தனையோ பேர் ஒழுக்க சீலராயிருக்கிறார்கள். உயர் வகுப்பாரென்று சொல்லப்படுவோருள், எத்தனையோ பேர் ஒழுக்க ஈனராயிருக்கிறார்கள்.

அவரைப் பார்ப்பனரென்றும் இவரைத் தீண்டாதாரென்றும் ஏன் கொள்ளுதல் கூடாது? பிறப்பில் தீண்டாமை கருதுவது கொடுமை! வன்கண்; அநாகரிகம். பிறப்பில் தீண்டாமை கருதப்படுமிடத்தில் தேசபக்தி எங்ஙனம் இடம் பெறும்?

-திரு.வி.க.
(சீர்திருத்தம் அல்லது இளமை விருந்து பக்கம் -79)

தமிழ் ஓவியா said...


மூன்று ஆண்டுகளுக்குள் சிறுகனூரில் பெரியார் சிலை அமையும் விடுதலை வாசகர் வட்டத்தில் தமிழர் தலைவர் அறிவிப்பு


மதுரை, டிச. 6- மதுரையில் விடுதலை வாசகர் வட்டம் முதலாம் ஆண்டு விழா மாட் டுத்தாவணி பேருந்து நிலை யத்தின் எதிரில் உள்ள செய் தியாளர் அரங்கத்தில் 5.12.2013 அன்று மாலை 7 மணிக்கு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழின எழுச்சிப் பாடகர் இளைய இசைமுரசு இராசா முகமதுவின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. அனைவரையும் வரவேற்று விடுதலை வாசகர் வட்டத் துணைத் தலைவர் ச.பால்ராஜ் உரையாற்றினார்.

விடுதலை வாசகர் வட்டத் தலைவரும் ஓய்வு பெற்ற நீதிபதியுமான பொ.நடராசன் தலைமை உரை நிகழ்த்தினார். தலைமைச் செயற்குழு உறுப்பினர் தே.எடிசன் ராசா, மதுரை செல்வம், எஸ்.முனிய சாமி, மா.பவுன்ராசா, க.அழகர், அ.வேல்முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

திராவிட முன்னேற்ற கழக பேச்சாளர் துரை.எழில்விழியன், விடுதலை வாசகர் வட்ட அமைப்பாளர் முனைவர் நம்.சீனிவாசன், மாநில பகுத்தறிவாளர் கழகத் தலைவர் முனைவர் வா.நேரு ஆகியோ ரது வாழ்த்துரைக்கு பின்னர் இந்துத்துவா நேற்று இன்று நாளை என்ற தலைப்பில் தமி ழர் தலைவர் உரையாற்றினார்.

மாமுத்து மகள் பெரியார் பிஞ்சு சர்மதி கடவுள் மறுப்பு

அவர் தமது உரையில் நேர நெருக்கடியைப் பற்றி சொன் னார்கள். நெருக்கடி காலத்தையே (Emergency Period) சமாளித்த வர்கள் நாங்கள். இந்த நேர நெருக்கடி காலத்தையும் சமா ளிப்போம். பெரியார் உலகத் தைப் பற்றி சொல்லும்போது எங்களின் உயரம் பற்றி துரை. எழில்விழியன் குறிப்பிட்டார்.

நான் உயரமானவன் அல்ல. உயரம் குறைவானவன். ஆயிரக் கணக்கான பெரியார் தொண் டர்களின் உயரத்தால் நான் உயர்வாக நிற்கின்றேன். அதற் கும் மேலாக தந்தை பெரியாரின் தோள்களுக்கு மேலாக நிற்ப தால் நான் உயரமாக இருக்கி றேன். தந்தை பெரியாரின் தன் னலமற்ற உழைப்பால் தியாகத் தால் அவர்களின் தோள்களுக்கு மேலாக இருக்கக் கூடிய நாங் கள் உயரமாக இருக்கின்றோம்.

தமிழின எழுச்சிப் பாடகர் இளைய இசைமுரசு இராசா முகம்மதுவின் இசை நிகழ்ச்சி அனைவரையும் வெகுவாக கவர்ந்தது

பெரியார் உலகம் என்பது 15 ஆண்டுகால திட்டம். ஆனால் மூன்று மூன்று ஆண்டுகளாக வேலை நடைபெறும். அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் பெரி யார் சிலை அமையும். பெரியார் உலகம் முடியும்போது உள்ளே சென்று வெளியே வருபவர்கள் ஒரு விழிப்புணர்வைப் பெறு வார்கள் அறிவியல் மனப்பான் மையைப் பெறுவார்கள். அவர் களுக்கு மிகப்பெரிய தெளிவு ஏற்படும்.

இந்துத்துவா என்பது நேற்று கொடுமையான சட்டங்களால் ஆனது. பார்ப்பனர்களுக்கு ஒரு நீதி; மற்றவர்களுக்கு ஒரு நீதி என்று ஆனது. திருவாங்கூர் சமஸ்தானத்தில் பார்ப்பனர்கள் ஏமாற்றிய விதத்தை ஆதாரங்க ளோடு எடுத்துரைத்தார். சூத்திர னுக்கு எது கொடுத்தாலும் கல் வியைக் கொடுக்காதே என்பது நேற்றைய இந்துத்துவா.

இன்று ஊடகங்களில் இணைய தளங்களில் கோய பல்ஸ் பிரச்சாரம் செய்கிறார் கள். மோடி வந்தால் அனைத் தும் மாறிவிடும் என்கிறார்கள். 2002 கோத்ரா சம்பவம் அதற் குப் பிறகு நடைபெறும் தொடர்ச் சியான சம்பவங்கள் மோடி யார் என்பதை உலகத்திற்கு வெளிச்சம் போட்டு காட்டியுள் ளது. ஆனால் ஏதோ வெளிநாட் டில் உள்ள பேருந்து நிலை யத்தை போட்டு அது குஜராத் தில் உள்ளது என்று பிரச்சாரம் செய்கிறார்கள்.

இதைப் போன்ற பொய்ப் பிரச்சாரத்தின் மூலம் பதவிக்கு வரத்துடிக்கின் றார்கள். இவர்கள் வரமாட் டார்கள். ஆனால் நாளை இவர் கள் வந்தால் பழைய மனுதர்ம ஆட்சி மறுபடியும் வரும். ஜாதி அடிப்படையிலான வேலைக்கு கட்டாயப்படுத்தப் படுவோம்; அண்ணல் அம்பேத் கர் குறிப்பிட்ட சமமில்லாத பாகுபாடு என்பதுதான் அவர் களுடைய அடிப்படை தத்து வம்.

வர்ணதருமத்தை நியாயப் படுத்துவார்கள்; அதைப்புகுத் துவார்கள் எனக் குறிப்பிட்டு ஆர்.எஸ்.எஸினுடைய அதிகா ரப்பூர்வ புத்தகங்களிலிருந்து மேற்கோள்கள் காட்டி விளக் கினார். இந்துத்துவாக்களின் அபா யத்தை உணர்வோம் என்று குறிப்பிட்டு தமிழர் தலைவர் உரையாற்றினார்.

நிறைவாக விடுதலை வாசகர் வட்ட செயலாளர் ஆ.முருகா னந்தம் நன்றி கூறினார். நிகழ்ச்சி யின் துவக்கத்தில் பெரியார் பிஞ்சு கடவுள் மறுப்பு கூறியது அனைவரையும் வியக்கவைத்தது. விழாவில் பங்கேற்ற சிறப்பு விருந்தினர்களுக்கு விழாக் குழுவின் சார்பில் பயனாடை அணிவிக்கப்பட்டது. இந் நிகழ்ச்சியில் பெரி.காளியப்பன், வழக்குரைஞர் ந.தமிழ்மணி, விடுதலை ராதா, பொ.தனராசு, வழக்குரைஞர் மு.சித்தார்த்தன், இரா.வே.சுசீலா, மு.கனி, திருமதி மோகனா வீரமணி, ஆசிரியர் இராமசாமி மற்றும் ஏராளமா னோர் பங்கேற்றனர்.