Search This Blog

1.12.13

பொது வாழ்க்கையில் ஆசிரியர் கி.வீரமணியின் ஆளுமை

பொது வாழ்க்கையில் ஆசிரியரின் ஆளுமை
ஆசிரியர்க்கு 80 வயது நிறை வடைந்துவிட்டது. 81-ஆவது வயது தொடங்கி விட்டது. 70 ஆண்டு பொது வாழ்க்கை அனுபவம் உடையவர் அவர். பெரியார்தான் அவர் உள்ளங்கவர் கள்வன். பெரியார் என்பது இங்கே பட்டம் அல்ல.

அது ஒரு தத்துவம், அறிவியக்கம், பகுத்தறிவு வாழ்வு, நாத்திக நெறி, இங்கே அரசியல் வாழ்வோ, பதவியோ, பவிசோ பெற முடியாது. ஆனால் இங்கே அரசியல் அதிகாரத்தை நெறிப்படுத்துகிற வீரம் நிறைந்த இயக்கம் உண்டு.
துன்பம் உறவரினும் செயலூக்கம் குறையாமல் கடமையாற்றும் மனத்திட்பம் உடைய வர்க்கே இங்கே வேலை. அந்த வேலையைச் சிறுவனாக இருக்கிற போதே விரும்பிச் செய்தவர் ஆசிரியர்.

பல ஆண்டுகள் ஓடி மறைந்து விட் டன. ஆசிரியர் பால் இளமையொழிந்த முதுமை படர்ந்துவிட்டது. ஆனால் அவர் வாய்மைப் போரில் இளைஞராய் தமிழ்நாட்டைச் சுற்றிச் சுற்றி வருகிறார். தென்றலும் புயலுமாய் வீசுகிறார். சில வேளைகளில் இதம்தரும் தெம்மாங்கு பாடுகிறார்.

எதற்கும் அழிவு இல்லை. ஆனால் மாற்றம் உண்டு என்கிற இயற்கையின் கோட்பாட்டை - இயல்பி யலை நிதம் குழைத்துத் தரும் ஆசிரியர் - திராவிட இயக்கத்தின் வேராய்த் திகழுபவர். அவருக்கு பிறந்த நாள் என்கிறபோது மகிழ்ச்சி இரட்டிப்பாகிறது.

அறிவு அவிழ இன்பந்தாக்கும் என்பார் தாயுமானார். நம்பிக்கை யாளரைப் பற்றிய முழு விடை அல்ல  இது! அவர்களுக்கு அது ஆரம்பக்கல்வி! 

நம்பிக்கையற்ற அறிவுவாதிகளுக்கோ சூத்திரமே இதுதான்! அந்தச் சூத்தி ரத்தைக் கொண்டு மனித குலத்தை அறிவார்ந்த சமூகமாக மாற்ற வேண் டும் என்கிற நோக்கில் பெரியாரின் கருத்தியலை ஏற்றுக்கொண்டு அதை வாழ்நெறி ஆக்கிக்கொண்டவர் ஆசிரி யர். தலைமை, கொள்கை, இயக்கம் ஆகிய இம்முப்பரிமாணங்கள் ஒரு கருத் தியலின் இயங்கு விசையாய் இருப்பவை என விளக்கி வருபவர் ஆசிரியர்.

சமூகம், அரசியல், பொருளாதாரம், கலை, பண்பாடு, நாகரிகம், மொழி, இனம், நாடு ஆகியவை பற்றி துல்லியமான அறிவியல் பார்வையோடு பெரியார் இயலை மய்யப் புள்ளி யாகக்கொண்டு அவர் விளக்கப் புகுந்தால் அறிவின் மாட்சி பேரறிவு துலக்கமாகத் தெரிவதை உணரலாம். ஆசிரியரின் எழுத்து, பேச்சு, நடைமுறை பெரியாரின் ராஜபாட்டையில் நடைப்போடுவன. அவை பிறழ்ந்தது இல்லை.

பெரியாரின் ராஜபாட்டை தெரியாதவர்களுக்கு அது காட்சிப் பிழையாகிவிடும் .

எத்தனையோ பேர் பி.ஏ. ஹானர்சில் பல்கலைக்கழகங்களில் தேர்ச்சிப் பெற்று இருக்கிறார்கள். ஆசிரியர் போலவே தங்க (மெடல் களைக் கூட பெற்று இருக்கிறார்கள். அவர்களெல்லாம் ஆசிரியர் போல் பன்முகத் திறமையைப் பெற்று இன நலன் காக்க முற்பட்டார்களா என்றால் இல்லை. வேலை களைத் தேடிப் போய் விட்டவர் களாக இருப்பார்கள்.

பதவிகளைத் தேடிப்போய் விட்டவர்களாக இருப் பார்கள். பெரியாரின் கொள் கைகளைப் பரப்புவதால் பதவி கிடைக்காது. பெரியாரின் கொள்கைகளைப் பரப்புவதற்குப் போராடினால் சிறைச்சாலைகளில் வதிய நேரிடும். ஆசிரியர் அவர்கள் இதுவரை 60 முறைகளுக்கு மேலாகச் சிறைசென்று விடுதலையாகி இருக்க வேண்டும்.

பெரியாரின் கொள்கையை பரப்புவதால் எதிரிகளின் சகல தாக்குதல் களுக்கும் ஆளாக நேரிடும். ஒவ்வொரு நாளும் செத்து, செத்து பிழைக்க வேண்டும் என்று சொல்லுவார்களே அது போன்ற வாழ்க்கை. இது தேவையா? என்றால் தேவை என்று ஏற்றுக்கொண்டு வாழ்ந்து வருபவர் ஆசிரியர்.
இவ்வளவு துன்பம் ஏன் மேற் கொள்ள வேண்டும்? பெரியார் விரும்பியது போல தமிழர்களை மானமும் அறிவும் உள்ளவர்களாக மாற்ற வேண்டும். அதற்காக ஆசிரியர் கடும் உழைப்பைத் தந்துவருகிறார். ஆசிரியர் விடுதலை, உண்மை, மார்டன் ரேஷனலிஸ்ட் பெரியார் பிஞ்சு போன்ற ஏடுகளின் ஆசிரியர் மட்டு மில்லை. அவர் பன்னூல் ஆசிரியர் மட்டுமில்லை, தமிழர்களின் மீட்சிக்காக அறிவு விதையை விதைக்கிறவர். அவர் விதைக்கிற விதைகள் வீரியமுள்ளவை.

நல்ல நிலத்தில் அவரால் சரியாகத்தான் விதைக்கப்படுகின்றன. சேதாரங்களைக் கூட ஆசிரியர் இயல்பாக எடுத்துக் கொள்கின்ற பழக்கமுடையவராக இருந்து வருகிறார். அய்யாவின் அடிச்சுவட்டில் ஓர் ஆயிரம் அனுபவங்களைக் கண்டவர். தெரிந்த எதிரிகளும், தெரியாத எதிரிகளும் தாக்கும்போதுகூட கடலலை மீது கட்டுமரச் சவாரி செய்வது மாதிரியாக அவரது வாழ்க்கை அமைந்துவிட்டு இருக்கிறது.
அதற்காக அவர் அலுத் துக்கொண்டது மாதிரி தெரியவில்லை. சலிப்போ, சோர்வோ அடைந்ததில்லை. ஒதுங்கிவிட வேண்டும் என்ற எண் ணம் வந்ததில்லை. ஆகவே தான் ஆசிரி யர் வாழ்வியல் சிந்தனைகளையும் எழுதத் தொடங்கினார்.

பெரியார் இயலைத் தொட்டவர் எவரும் அறிவின் நிமிர்ச்சியோடு அதன் உச்சியைத்தொட்டவர்களாகவே இருப்பர். அதற்கு ஒரு சான்று ஆசிரியரின் கீதையின் மறுபக்கம். சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்பு முரசொலி பொங்கல் மலர் - சிறப்பிதழ் தயாரிக்கும் பொறுப்பு எனக்கு வழங்கப்பட்டது.

பேராசிரியர் ஒரு கட்டுரையை அனுப்பி இருந்தார். அக் கட்டுரையின் தலைப்பு திருக்குறளும் கீதையும் - ஓர் ஒப்பீட்டு ஆய்வுக் கட் டுரை. ஒரு கட்டுரையில் அவ்வளவு செய்திகளைப் பேராசிரியர் குவித்துக் காட்டி இருந்தார். அதில்தான் எத் தனை கோடி இன்பம்!

இடதுசாரி எழுத்தாளர்கள் பலர் கீதை விடுதலைப் போராட்டக் காலத்தில் பயன்பட்ட விதத்தை எழுதி யிருந்தார்கள். சிவகீதை, பாரதியின் கீதை உரை, வினோபாவின் கீதை, கீதை ஆய்வுகள், சொற்பொழிவுகள், கீதை பதினெட்டு அத்தியாயங்களின் அப் பட்ட மொழி பெயர்ப்பு என பலவற்றைப் படித்தேன். அதன் நோக்கம் வர்ணாசிரம சநாதன தர்மத்தை நிலை நாட்டுவது என்பது எல்லார்க்கும் தெரிந்த ஒன்றே.

ஆனால் ஆசிரியர் எழுதிய கீதையின் மறுபக்கம் அவர் யார் என்பதை நமக்கு உணர்த் தியது. 1975-ஆம் ஆண்டு ஆங்கிலத்தில் Premananth Bazaz  எழுதிய The Role of Bhagavad Githa in Indian History எனும் நூல் கீதையின் அத்தனை பரிமாணங் களையும் சுட்டிக்காட்டின. இந்நூலை யும் கீதையின் மறுபக்கத்தில் ஆசிரியர் சுட்டிக்காட்டி இருக்கிறார்.

கீதையைப்பற்றி அதன் மறுபக்கத்தை பற்றி எழுதுவது ஒரு கனமான, சுவைமிக்கபணி. அதனை ஆசிரியர் எப்போது செய்து இருக்கிறார் என்பதை முன் னுரையில் இப்படி தெரிவித்து இருப்பார்.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேல் அவ்வப்போது கிடைத்த ஆய்வினைப் பயன்படுத்தி - அதிலும் குறிப்பாக எனது மூத்த மகள் திருமதி அருள் - பாலகுரு அவர் களது இல்லத்தில் கிடைத்த சீரிய ஓய் வினைப் பயன்படுத்தி - இப்படி ஒரு நூலை எழுதி மேலும் பல புதிய அத்தியாயங்களை தாயகம் வந்து எழுதி உருவாக்கி வெளியிட்டுள்ளேன்

கீதையின் மறுபக்கத்தை ஓய்வு எடுத்துக்கொள்ள வேண்டும் எனச்சென்ற இடத்தில் எழுதி இருக்கிறார். இப்பொருள் (Subject)
மிகக்கடினமானது. எழுதுவோரும், படிப்போரும் இதைப் பற்றிய புரிதல் இருந்தால் மட்டுமே அதன்பின் செல்ல முடியும். எழுத்து வன்மை உடையவர் மட்டு மல்ல ஆசிரியர், வண்மையான எழுத்து களையும் எழுத வல்லவர் என்பதை இந்நூல் வெளிப்படுத்துகிறது.

அவரது எழுத்துக்கு மற்றொரு சான்று அன்றாடப் பிரச்சினைகள் தொடர்பாக ஆசிரியர் விடுக்கும் அறிக்கைகள், எந்தப் பிரச்சினை அல்லது சிக்கல்பற்றி அவரின் அறிக்கை இருக்குமோ அதைப்பற்றிய செய்திகளின் உள்ளடக்கம் அதில் சிறப்பாக இருப்பதைக்காணலாம். தெளிவு, திட்பம், செயல்திறன் மூன்றும் கொண்டதாக அவ்வறிக்கைகள் திகழும். இன்னும் தெளிவாகச் சொல்வதானால் எவரும் கருத்துகள் சொல்லாத வழங்காத நிலையில் இவரது அறிக்கைகள் ஊடகங்களில் வெளி வரும். இத்தனைக்கும் இவர் அதிகாரப் பதவிகளை அலங்கரிக்கும் தலைவர் இல்லை.

நான் 40 ஆண்டுகளுக்கு மேலாக அவர் பேச்சைக் கவனித்து வருபவன். சில கூட்டங்களை மயிலையில் ஏற்பாடு செய்தும் இருக்கின்றேன். மயிலாப்பூர் கோகலே ஹாலில் On Brahmins எனும் தலைப்பில் ஆங்கிலத்தில் பேசினார். கூட்டம் அங்கே நிரம்பி வழிந்தது. ஆற்றொழுக்காய், ஈர்க்கும்படி பேசினார்.
எத்தனையோ புத்தக வெளியீட்டு விழாக்கள், திராவிடர் கழகக் கூட்டங்கள், திமுக மாநாடுகள் என இப்படி ஆசிரியர் பேச்சுகளைக் கேட்ட அனுபவம் எனக்கு உண்டு. ஒன்றுக்கொன்று ஈடு சொல்ல முடியாத - ஒப்பிட்டுக் காட்ட முடி யாத பேச்சுகளாக அவை இருந்தன. இரண்டு பேச்சுகளை என்னால் மறக்க முடியாது. ஒன்று சங்கராச்சாரியார் யார் எனும் தொடர் சொற்பொழிவு. இன்னொன்று கம்யூனிஸ்டு தலைவர் பி.இராமமூர்த்தி எழுதிய நூலுக்கு மறுப்புரைத்த பேச்சு.

சங்கராச்சாரியார் யார்?  எனும் தொடர் சொற்பொழிவு 10 நாட்கள் பெரியார் திடலில் நடைபெற்றது. ஒவ்வொரு நாளும் கூட்டத்திற்கு ஓர் அறிஞர் தலைமை ஏற்றார். தலைமை உரைக்குப் பிறகு ஆசிரியர் ஆய்வுரையை வழங்கத் தொடங்கினார். திடல் நிரம்பி வெட்ட வெளியில் கூட்டம் வழிந்தது.

பி.இராமமூர்த்திக்கு கூறிய மறுப்புரையில் ஆசிரியரின் வாதங்கள் ஆதாரத்தை வரிசைப்படுத்தின. பொதுவாக ஆசிரியரின் எழுத்தும் பேச்சும் ஓர் அரசியல் அதிகாரத்தை நிறுவக்கூடிய தலைவரின் ஆளுமையைப் பெற்றிருந்தன. ஆனால் பெரியார் இயல் அதில் துறவு மனப் பான்மையைக் கொண்டு இருந்தது.

பிற தலைவர்களுக்கு அரசியல் வாழ்நெறியைக் கற்பித்தது, எடுத்துக்கூறியது. தேவையானால் வழிகாட்டவும் முன்வந்து கடமை யாற்றவும் செய்தது. ஆனால் ஆட்சி அதிகாரத்தில் பங்கேற்கவில்லை. இந்த நடைமுறையே ஆசிரியரின் அரசியல் வாழ்நெறி.

நீதிக்கட்சியின் உள்ளமைப்பு விவ காரங்களைப் பார்த்துப் பார்த்து கவலை கொண்ட பெரியார் 1927-இல் கட்சி அமைப்பு ஆளுவதற்கும் ஆளு வதற்கு வெளியேயும் இரண்டு நிலை களில் பணியாற்ற வேண்டும் என்று எழுதினார். அவர் முதல் நிலையில் நின்றார்.

இது பெரியாரின் அறி வாண்மை, பெரியார் இயலின் அரசியல் பிரிவின் முதல் சூத்திரம். இச்சூத் திரத்தையே பெரியார் திராவிடர் கழகத் திற்கு இயங்கு விசையாக ஆக்கினார். அதனை அந்த அறி வாண்மையை அப்படியே கைக் கொண்டார் ஆசிரியர். அக்கொள் கையின் மறுபதிப்பு ஆனார். பொது வாழ்க்கையில் சிறந்த ஆளு மையைப் பெற்றார். அவர் வாழ்க!

                     ---------------------------30-11-2013 ”விடுதலை”  இதழில் க.திருநாவுக்கரசு அவர்கள் எழுதிய கட்டுரை

33 comments:

தமிழ் ஓவியா said...

முதல் தலையங்கம் வரியில்லாமல் ஆட்சி நடக்குமா?

நிலைமையில் அபிவிருத்தி காண வேண்டுமானால் வரி போடவேண்டும், கடன் வாங்க வேண்டும். கடனும் வாங்காதே, வரியும் வாங்காதே என்றால் அது நடைமுறைக்கு ஒத்ததாக இருக்கமுடியுமா? என்று பேசியுள்ளார் தமிழ்நாட்டு முதலமைச்சர் திரு.காம ராசர் அவர்கள்.

எந்த நாட்டில் எந்தக் கட்சி ஆட் சிக்கு வந்தபோதிலும், அரசாங்கத்தை நடத்த நிதி தேவை. நிதியைப் பெருக்க பெரும்பாலும் நான்கு வழிகள்தான் உள்ளன.

1. வரி

2. கட்டண வருமானம் (ரயில், தபால், ரிஜிஸ்டிரேஷன் மூலம் வருவது)

3. கடன்

4. நோட்டு அச்சடித்தல்

நமக்குத் தெரிந்தவரையில் இதைத்தவிர வேறு வழிகள் கிடையாது என்றே கருதுகிறோம். இந்த உண்மை எதிர்க்கட்சி நாற்காலியில் உள்ள தலைவர்களுக்குத் தெரியாது என்று நாம் சொல்ல மாட்டோம். தெரிந்தும் மறைத்து, திரித்துக் கூறினால் தான் ஆளுங்கட்சியை வீழ்த்த முடியும் என்பது அவர்களது முடிவு.

சென்ற நூற்றாண்டில் அரசாங்கம் என்றால் உள்நாட்டுக் கலவரங்களிலி ருந்தும் வெளிநாட்டுப் படையெடுப் புகளிலிருந்தும் மக்களைப் பாதுகாப் பதற்கும், சட்டம், ஒழுங்கை நிலை நிறுத்துவதற்கும், உடைமைகளைக் காப்பதற்குமே என்ற கருத்து நிலவி வந்தது.

ஆனால் இந்நூற்றாண்டில் அக்கடமைகளோடு, மக்கள் நலனைப் பெரிதும் பெருக்கக்கூடிய சமுதாய நல்வாழ்வுத் திட்டங்களை அமுல் செய்து எல்லார்க்கும் எல்லாமும் இருப்பதான இடம் நோக்கி நடக்கட்டும் இந்த வையம் என்ற அடிப் படையில் பல கடமைகளும் பெருகி உள்ளன.

இந்நிலையில் அரசாங்க வருமானத் தைப் பெருக்காமல் எந்த அரசாங்கம் தான் மக்களுக்கு நன்மை செய்யமுடியும்?

தனி மனிதனின் பட்ஜெட் என்பது வரவுக்கேற்ப செலவை அமைத்துக் கொள்வதாகும். அரசாங்க பட்ஜெட் என்பது செய்ய வேண்டிய செலவினங் களைக் கணக்கிட்டு அதற்கேற்ப வருமானத்தைப் பெருக்குவது என்ப தாகும். இது பொருளாதார தத்துவத் தின் பால பாடம்.

கொடுமை, கொடுமை, தாள முடியாத வரிக்கொடுமை என்று பிரச்சாரம் செய்யும் கோயபெல்ஸ் கூட்டத்தார்க்கு இதுகூடவா தெரியாது? உதாரணத்திற்கு ஒன்று காட்டுவோம்.

தமிழ்நாட்டின் கல்வித்துறை வளர்ச்சி பிரமிக்கத்தக்க அளவில் வளர்ந்து வந்திருக்கிறதென்பதை கல்விக்காக ஆண்டுதோறும் செலவான கணக்கைப் பார்த்தால் தெரியும்.

சென்னை ராஜதானியில் (24 ஜில்லாக்கள் இருந்த காலத்தில்)

கல்விக்கான செலவு

ரூ. 1 கோடியே 33 லட்சம் 1921-22இல் செலவு -

ரூ. 1 கோடி 33 லட்சம் 1922-23இல் செலவு - ரூ. 1 கோடியே 54 லட்சம் 1923-24இல் செலவு -

ரூ. 1 கோடிய 63 லட்சம் 1924-1925இல் செலவு ரூ. 1 கோடியே 73 லட்சம்

பிறகு ஜஸ்டீஸ் ஆட்சியின் போது கட்டாய இலவசக் கல்வி புகுத்தியதால் 2 கோடியே 25 லட்ச ரூபாய் செல வழித்தனர்.

(ஆச்சாரியார் 1935-37 ஆட்சியிலும் ரூ. 2 கோடியே 52 லட்சம்; 1952-54இல் 11 கோடி ரூபாய் கல்விச் செலவை கணிச மாகப் பெருக்கவில்லை)

இன்று தமிழ்நாட்டின் மற்ற மொழிப் பகுதிகள் பிரிந்த நிலையில் (சுமார் 12 ஜில்லாக்கள் உள்ள நிலையில்) கல்விக்கான செலவு சமீபத்தில் மலை யென உயர்ந்து இந்த ஆண்டு சுமார் 25 கோடி ரூபாய் அளவுக்கு உயர்ந்துள்ளது.

தமிழ் ஓவியா said...

கல்வித்துறையில் இந்த அதிச யிக்கத்தக்க சாதனையை தமிழ்நாடு இதுவரை கண்டதில்லை. இன்னும் மென்மேலும் பெருகிக்கொண்டே போகும். இந்த ஒரு துறையின் செல வினமே இப்படி என்றால் ஊர்தோறும் மருத்துவமனைகள், சாலை வசதிகள், முதலியவை பெருகுவதால் எவ்வளவு செலவு அதிகரிக்கும் என்பதை எவரும் எளிதில் புரிந்து கொள்ளலாமே!

வரியை உயர்த்தாமல் எப்படி இதைச் செய்ய முடியும்? பஸ் முதலியவற்றை அரசாங்கமே எடுத்து நடத்தினால் வரி தேவையிருக்காது என்று கூறுகின்றனர். அவற்றை எடுத்துக் கொண்டால் பல நூறு கோடி ரூபாய்களை நஷ்ட ஈடாகத்தர வேண்டுமே! அரசாங்கத்தின் ஆண்டு வருமானமே 113 கோடி ரூபாய்தானே?

அதோடுகூட, அத்துறைக்கு அதிகாரி களுக்குப் பயிற்சியளித்து அவர்களைத் திறமையாக நடத்தச் செய்யும் பிரச்சினை வேறு உள்ளதே?

எல்லா உடமைகளையும் தேசிய மயமாக்கி உள்ள சோவியத் ரஷ்யா போன்ற நாடுகளிலே வரியே வசூலிக் கப்படுவதில்லையா?

தேசீய மயமாக்குதலே சர்வரோக நிவாரண சஞ்சீவி என்று கூறும் கொலம்பஸ்கள் கவனத்திற்கு இவை ஏன் வரவில்லை?

தேசியமயமாக்கப்பட்டால் கூட வரியில் பங்கு என்பதையும் எந்த அரசாங்கமும் தள்ளிவிடமுடியாது என்பதை விளக்கத்தான் இதைக்கூறுகிறோம்.

சென்னை நகர கார்ப்பரேஷனில் நிர்வாகப் பொறுப்பேற்றுள்ள ஒரு கட்சியின் தலைவர், கார்ப்பரேஷனில் நீங்கள் வந்தவுடன் பாலும் தேனும் பெருக்கெடுத்தோடும் என்று கூறினீர்கள், அரசாங்கத்தின் வரி உயர்வைக் கண்டிக்கும் உங்களது நிர்வாகத்தில் சுமார் 1 கோடிக்கு மேல் வரியை உயர்த்தியுள்ளீர்களே என்று சென்னை வாழ் மக்கள் கேட்டால், வய லுக்கு வரப்பு போல, வேட்டிக்குக் கரை போல ஆட்சிக்கு வரி என்று உவமை காட்டிப் பேசினார்.

இந்த ஞானோதய ஒளி ஏன் இவர்கள் சென்னை கோட்டையில் இருக்கும்போது வருவதில்லை? ரிப்பன் கட்டடத்தில் ஒரு மனப்பாங்கும், கோட்டையில் மற்றொரு மனப்பாங்கும் இருக்கலாமா?

மாமியார் உடைத்தால் மண்சட்டி, மருமகள் உடைத்தால் பொன்சட்டி என்பதுதானே இது?

நிஷ்காமிய கர்மயோகியான திரு.ஆச் சாரியாரின் வரி எதிர்ப்பின் ரகசியமும் இதே தத்துவத்தைக் கொண்டதுதான்.

அவர் முதலமைச்சராக இருந்த போது வரி கொடுப்பதைப் பற்றி குறிப் பிடுகையில் நல்ல காரியத்திற்காக நீங்கள் ஆண்டவன் சந்நிதியில் பக்தன் பயபக்தி யோடு காணிக்கை செலுத்துவதுபோல் செலுத்தி வரவேண்டும் என்றார்.

அவர் ஏன் இப்போது வரியைக் கண் டிக்கிறார் என்கிறீர்களா? அதற்குப் பெயர் தான் அரசியல்! அரசியல்!! அரசியல்!!!

- ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் எழுதிய முதல் தலையங்கம்

தமிழ் ஓவியா said...


வீரமணிபற்றி உலக இதழ்கள்


ஆனந்த விகடன் பார்வையில் வீரமணி

திராவிடர் கழகத் தலைவர் வீரமணி போன்றவர் பேசும்போது குறுக்கே பேச மாட்டார் கவன மாக சில சமயம் தன் கைகளைக் கட்டிக் கொண்டு கூர்மையாகக் கேட்பார். வயதில் சின்னவர் களைக்கூட வாங்க போங்க என்று தான் சொல்வார்.

நன்றி: ஆனந்த விகடன் 22.5.1983

சிந்தனைத் தெளிவும், கொள்கை நெறி பிசகாது, மலிவான விமர்சனங்களில் இறங்காது, தொய்வு தட்டாமல் பேசக் கூடிய நா. வல்லவர்களில் மூன்று நான்கு பேர்களில் வீரமணியும் ஒருவர்.

நன்றி: சிங்கப்பூரிலிருந்து வெளிவரும் தமிழ்முரசு 1983

பிராமணர்கள் மனிதர்களாகத்தான் இருக்கவேண்டும்; தங்களை மற்றவர்களை விட உயர்ந்தவர்களாகக் கருதக் கூடாது என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறுகிறார்.

நன்றி: நியூயார்க் டைம்ஸ் நவம்பர் 3, 1982

தமிழ்நாட்டில் திராவிடர் கழகம் என்ற இயக்கம் பார்ப்பனீய எதிர்ப்பு கொள்கையில் வலிமை மிக்கதாகவும், சக்தி வாய்ந்த இயக்கமாகவும் இருக்கிறது. அதன் தலைவர் கி.வீரமணி.

நன்றி: இந்தியா டுடே ஜனவரி 15, 1983.

தமிழ் ஓவியா said...


தந்தை பெரியாரின் கணிப்பு!

வீரமணி அவர்கள் எம்.ஏ.பி.எல்., பட்டம் பெற்றவர். நல்ல கெட்டிக்காரத் தன்மையும் புத்திக் கூர்மையும் உள்ளவர். அவர் எம்.ஏ., பி.எல்., பாஸ் செய்து வக்கீல் தொழிலில் இறங்கியவுடன் மாதம் ரூ. 300, ரூ.400 வரும்படி வரத்தக்க அளவுக்குத் தொழிலில் வளர்ந்ததோடு கொஞ்சக் காலத்திலேயே மாதம் ரூ. 500, 1000 தொழில் வளம் பெற்றுவரும் நிலையைக் கண்டவர். இந்த நிலையில் அவர் ஒரு சாதாரண ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவராகவும் இருந்து வந்தவர்.

இந்த நிலையில் சுயநலமில்லாது எவ்விதப் பொருள் ஊதியத்தையும் கருதாமல் பொதுத்தொண்டு செய்ய ஒருவர் வந்தார் என்றால், இதுபோல மற்றொருவர், வந்தார் வருகிறார் வரக்கூடும் என்று உவமை சொல்லக்கூடாத ஒரு மாபெரும் காரியம் என்றே சொல்லவேண்டும்.

அப்படிப்பட்ட ஒருவரை நாம் தக்கபடி பயன்படுத்திக் கொள்ளாவிட்டால் அது நம்முடைய அறியாமையாகவே முடியும் என்ற எண்ணத்தின் மீதே அவரை நம் இயக்கத் தலைமைப் பிரச்சாரகராகவும், நமது விடுதலை ஆசிரியராகவும் பயன்-படுத்திக் கொள்ள முன்வந்து அவருடைய ஏகபோக ஆதிக்கத்தில் விடுதலையை ஒப்படைத்து விட்டேன்.

விடுதலை பத்திரிகையை நிறுத்திவிடாததற்கு இதுதான் காரணம்!

- விடுதலை 6.6.1964)

தமிழ் ஓவியா said...


கண்மணி வீரமணியின் அரும்பணி


பனிமொழி பகர்ந்து தனி அன்பினைக் கலந்து என்றும் எனை வரவேற்கத் தவறாத என் ஆருயிர் இளவல், இன்று தன்மானத் தோழர் களால் தமிழர்க்குத் தலைவரென அழைக்கப்படும் வீரமணியாரின் தீரம் மிக்க திறனால் போற்றிப் பாது காக்கப்படும் தந்தை பெரியார் தந்து விட்டுச் சென்ற மாட மாளிகை அல்ல; கூட கோபுரம் அல்ல;

அவற்றையும் மிஞ்சும் வண்ண மிகு எண்ணங்கள் - தமிழ் வசீகர வளாகத்தைக் கண்டேன்; ஆங்கமைந்த கலைவாணர் அரங்கம் ஒன்றில் ஓங்கு கதிர் சூரியனாம் உண்மை ஒளிர் தலைவனாம் உலகம்போற்றும் பெரியாரை, ஒவ்வொரு இளங்கலைஞர் களின் இசையில், நடனத்தில், ஆட்டத்தில் அனைத்திலும் அடியேன் கண்டு ஆனந்தப் பரவசமுற்றேன். அருவியில் குளித்தோர்க்கும் அந்த இன்பம் கிடைப்பதில்லை.

அடாத அரசியல், கொடும் வெயிலில் காய்ந்திடும் எனக்கு அந்த அருவிச் சோலையில் கிடைத்த புத்துணர்ச்சியைத்தான் என் னென்று புகழ்வேன்?

இருபது ஆண்டின் முன்னே இளவல் வீரமணி எனையழைத்து, அங்கே சோலை நடுவே அய்யாவின் சிலையை நாட்டச் சொன்னார். அந்த சிலை இன்றைக்கும் அங்கேயிருந்து என்னை அருகணைத்து உச்சி முகர்ந்தது போல் கண்ட உணர்வு எத் துணை மகிழ்ச்சியானது! எப்படி என் உடலைச் சிலிர்க்க வைத்தது?

அய்யாவுக்குப் பிறகு அவர் ஆரம்ப காலந்தொட்டு சேர்த்து வைத்த ஆஸ்தி, பாஸ்தி, கட்டிவைத்த கட்டடங்கள், அறிவுக் கூடங்கள், விட்டுச் சென்றுள்ள கொள்கைகள், வீரம் மிக்க அறை கூவல்கள் இத்தனையையும் கட்டிக் காக்க, யாருளர் என்று நமக்கெலாம் எழுந்த அய்யப்பாட்டை, இதோ நானிருக்கிறேன் என்று எடுத்துக்காட்டி ஏறுபோல் நம்மை நிமிர்ந்து பார்க்கின்ற என்னரும் இளவல், பெரியாரின் பெருந்தொண்டர், சுயமரியாதைச் சுடர், தன் மான முரசு வீரமணியார்.

என் கண்ணிலும் அவர் கண்ணிலும் நீர் துளிக்க, அது ஆனந்தப் பன்னீராக இருக்க, ஒருவரையொருவர் தழுவிக் கொண்டோம். உமது முயற்சிகள் வெல்க! இங்கு வளரும் பூங்கொடி கள், பூஞ்செடிகள், புதுமை மணம் பெறுக! இன்றுபோல் என்றென்றும் இது பகுத்தறிவுப் பண்ணையாகத் திகழ்க! என்று வாழ்த்தினேன். அவரும் வாழ்த் தினார்.

அறிவுப் பணி, அதற்குத் தேவையான அமைப்புப் பணி, அதிலும் ஒரு கட்டுப் பாட்டுப் பணி என இப்படி கடமைப் பணியாற்றுகிற சுயமரியாதை இயக்கக் கண்மணியாம் வீரமணியாரின் நிருவாகப் பணியை நேரிலே காணும் வாய்ப்பு இனியும் பலமுறை இந்த வாய்ப்பு எனக்குக் கிட்ட வேண்டும் என பேராவலுடன் விடை பெற்றுக்கொண்டேன்.

ஆங்கொரு நூலகத்திற்கு விழா மேடையில்இறுதிக் கட்ட மாக ஓர் அறிவிப்பு: கலைஞர் கருணாநிதி நூலகம் என்று அது அழைக்கப்படும் என்று! திணறிப் போனேன். தேன்குடத்தில் தூக்கிப் போட்டு விட்டார் களேயென்று!

பெரியாருக்குக் காலணியாய் இருப்பது போல், பெரியார் பெயரில் அமைந்துள்ள அந்தப் பூங்காவில் நூலகம் என்ற ஒரு நுண்ணிய கொடியாக இருந்து விட்டுப் போகிறேன். அது எனக்கு பிறவிப் பெரும் பயன் தான்.

(முரசொலி 15-10-2008, திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரி நூலகத் திறப்பு விழாவில் - முதலமைச்சர் கலைஞர்.)

தமிழ் ஓவியா said...


தமிழர் தலைவரைப் பாராட்டி லண்டனிலிருந்து ஒரு கடிதம்


இனமானத் தமிழினத்தின் நலத் திற்கும் பாதுகாப்பிற்கும் உயர்வுக் கும் தன்னையே அர்ப்பணித்துப் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் விட்டுச் சென்ற சீரிய பணியைத் தொய்வின்றித் தொடர்ந்து நடத்தி வரும் பெரியாருக்குப் பெரியாராய் பேரும் புகழும் ஈட்டிக் கொண்டி ருக்கும் தமிழினத் தலைவர்களில் பகுத்தறிவுத் தமிழராகத் திகழும் அய்யா கி.வீரமணி அவர்கள், நீதி மன்றங்களில் திருக்குறள் தேசிய நூலாக வைக்கப்பட வேண்டும் என அனைவருக்கும் முகாமை யான வேண்டு கோளாக விடுத்திருப்பதை உலகத் தமிழர் முன்னேற்றத்திற்கு நெம்புகோலாகத் திகழும் லண்டன் த.மு.க. வழி மொழிந்து நெஞ்சார வரவேற் கின்றது.

திருக்குறள் நீதி நூல் நேர்மையில்லா செயலுக்கு நெற்றியடி கொடுத்து நீதியை (பக்க சார்பற்ற முறையில்) நிலை நிறுத்தும் ஒப்பற்ற அரிய நூல்.

உலகின் மூத்தகுடியான தமிழ்க்குடி, தமிழ் செம்மொழி என அறிவிக்க ஆதாரமாக இருப்பவை திருக்குறளே. 2000 ஆண்டு களுக்கு மேலான வாய்மைச் சிறப்பு மிக்க நூல் என உலகமாந்த இனமே நெஞ்சார ஏற்றுச் சிறப்படையும் சிறந்த நூல் என்பதை தமிழக அனைத்து மக்களும் சமய வேறுபாடு களின்றி தர்க்க வாதங்கள் செய்திடாது, பகுத்தறிவுச் சிந் தனையோடு முழு ஆதரவு நல்கி அறிவு நூலான திருக்குறளை நீதி மன்றங்களில் வைத்துப் போற்றிட வேண்டும் என மீண்டும் மீண்டும் வலியுறுத்துகின்றோம்.

தமிழர்களின் எண்ணம் ஈடேறிட! வாழ்வு முன்னேறிட வாய்மை வெல்லும் என்பதை நெஞ்சில் நிறுத்துவோம்!


லண்டன்
10.9.2004

- ம. தேவதாசு,
லண்டன் தமிழர்
முன்னேற்றக் கழகம்

தமிழ் ஓவியா said...


அவருக்குள்ள தகுதி

-முனைவர் பேராசிரியர் ந.க.மங்களமுருகேசன்

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி தான் அனைவரின் பாராட் டுக்கும் உரியவர். தந்தை பெரியார் முதல் தலைமை அமைச்சராய் விளங் கிச் சமூக நீதியை மண்டல்கமிஷன் வாயிலாக நிறைவேற்றி நிலைத்த புகழ் பெற்ற வி.பி.சிங் வரை பாராட்டி மகிழ்ந்த பெருமைக்கு உரியவர் தமிழர் தலைவர்.

பத்து வயது முதல் இன்று 81 அகவை வரை அரசியல் வானில் சிறகடித்துப் பறந்து மேடைகளில் பகுத்தறிவு சமதர்மம், சுயமரியாதை எனும் முப்பெருங் கொள்கை விளக்கேற்றிய தலைவர் யாரும் உளரா என்று தேடிப்பார்த்தால் இல்லை, இல்லவே இல்லை என்ற பதில் தான் கிடைக்கும்.

கி.சாரங்கபாணியாக இருந்த தமிழர் தலைவரை வீரமணியாக மாற்றியவர் அவருடைய ஆசான் திராவிட மணிதான் என்பதை அறிவோம். ஆனால் இந்த வீரமணி என்ற பெயரை அவருடைய ஆசிரியர் தேர்வு செய்து சூட்டியது எப்படி என்பது பலரும் அறியாத ஒன்று.

அண்ணாவின் திராவிட நாடு ஏட்டில் வந்த கலிங்கராணியில் வீரமணி ஒரு பாத்திரம். நான் சாரங்க பாணி வீரமணி என்று அழைக்கப் பெற்றேன் என்று குறிப்பிட்டவர் கடலூர் எஸ்.வி.கி உயர்நிலைப் பள்ளியில் முதல் பாரத்தில் ஆறாவது வகுப்பில் ஆசிரியர் திராவிடமணி அவர்களால் சேர்க்கப்பெற்று என் பெயரை அவரே வீரமணி என்று மாற் றினார் என்பதையும் குறிப்பிடுகிறார்.

ஓர் இலக்கியவாதியின் அரசியல் அனுபவங்கள் எனும் நூலைப்படைத்த எழுத்தாளர் ஜெயகாந்தன் வியந்து பாராட்டிக் கூறியவை அவை கடைத் தெருவில் கோயிலுக்குப் பக்கத்திலுள்ள திடலில் ஒரு பிரம்மாண்டமான பொதுக்கூட்டத்தில் பன்னிரண்டு வயது நிரம்பாத அந்தச் சிறுவன் ஏறி நின்று பிராமணர்களையும், புராணங் களிலுள்ள ஆபாசங்களையும் கிழிகிழி என்று கிழிப்பதை வாயைப்பிளந்து கொண்டு நானும் பார்த்தேன் என்று ஒப்புதல் வாக்குமூலம் வழங்குகிறார் புகழ்பெற்ற சிறுகதை எழுத்தாளர் ஜெயகாந்தன்.

மேடையேறி முழங்குகின்ற தலைவர்கள் பலருக்குத் நாங்கள் ஏறிய முதல் மேடை எது என்பது பெரிதும் நினைவிருக்காது. ஆனால் நம் தமிழர் தலைவர் தாம் மேடை ஏறிய நாள், ஆண்டு எது என்பதை மறக்காமல் நினைவு கூர்ந்து கூறியிருக்கிறார்.

தமிழ் ஓவியா said...


கடலூர் பட்டினத்தில் செட்டி கோவில் திடலில் திராவிட நாடு இதழுக்கு நன்கொடை திரட்டி நிதி வழங்கும் பொதுக்கூட்டம் 1943 ஜூன் மாதம் 27-ஆம் தேதி என்னை அந்த மேடையில் உள்ள மேஜை மீது ஏற்றி என் ஆசிரியர் அரங்கேற்றம் செய்தார்.

என்பதை நினைவாற்றல் மிக்க நம் தமிழர் தலைவர் கூறுகிறார். அது மட்டுமல்லாது எண்பது அகவை நிறை வடைந்த அவருடைய நினைவாற்றல் வியப்பான ஒன்று எந்த நிகழ்வு ஆயினும் மறக்காமல் எடுத்துக்கூறும் சிறப்பை அவரிடம் காண்கிறோம்.

எனவே தான் அய்யாவைத் தாம் சந்தித்த அந்த நாள் அந்த அனுப வத்தையும் எடுத்து அழகாகக் கூறுகிறார். 1944 ஜூலை 29-ஆம் தேதி ஆசிரியர் வாழ்வில் மறக்கவொண்ணா நாள் 11 வயதுச் சிறுவனான அவர் திருப்பாதிரிப் புலியூரில் சந்தித்த அந்தத் தொடர்பு பிரிக்க முடியாத சங்கிலித் தொடர் உறவாக மலர்ந்து இருக்கிறது.

மணமேடையில் மணாளனை, மாலை சூட்டுவோனைச் சந்திக்க மங்கை ஒருத்தி என்ன தவிப்புடன் இருந்திருப்பாளோ அத்தகைய தவிப்புடன் அய்யாவைச் சந்திக்க அந்தப் பதினோர் வயது சிறுவ னான கி.வீரமணி அவர்களின் தவிப்பு இருந்திருக்கிறது.

இரவில் தோரணங்கள் கொடிகள் கட்டிய, ஒட்டிய அயர்வும் உறக்கமும் ஒரு பக்கம் இருந்த போதிலும் அய்யா அவர்களைப் பார்க்கப்போகிறோம். எப்போது விடியும் என்ற ஆவல் என் உறக்கத்தினை ஓடோடச் செய்தது. பொழுது விடிந்ததும் நண்பர் ஏ.பி. ஜனார்த்தனம் அய்யாவைப் பார்க்க என்னை அழைத்துப்போனார்.

அய்யா அவர்கள் தங்கியுள்ள சத்திரத்தை நெருங் கினோம். எனக்கு ஆசை ஒரு பக்கம். என்னை அறியாத திகில் கொண்ட அச்சம் ஒருபுறம், அய்யாவிடம் சென்று வணக்கம் தெரிவித்தேன்.

இந்தப் பையன் நம் கழகத்தில் ஈடுபட்டுள் ளான். நண்பர் திராவிடமணியின் தயாரிப்பு மேடைகளில் நன்றாகப் பேசுகிறான் என்று அய்யாவுக்கு அறிமுகப்படுத்தினார் தோழர் ஏ.பி.ஜே. நான் அய்யாவைப் பார்த்துக்கொண்டே ஊமையாக நின்றிருந்துவிட்டு மீண்டும் வணக்கம் கூறி வெளியே வந்து விட்டேன் என்று அந்தச் சந்திப்பைப் பதிவு செய்திருக்கிறார்.

ஆசிரியர் அவர்கள் குறிப்பிட்ட அந்தச் சந்திப்பு திருப்பாதிரிப் புலியூரில் தென் ஆர்க்காடு மாவட்ட திராவிடர் மாநாட்டின் போது நடைபெற்றது.

ஆசிரியர் அவர்கள் நம் அய்யா, அன்னை மணியம்மையார் ஆகியோ ரின் அன்புச்சிறையில் அகப்பட்டுப் பாராட்டு மழையில் நனைந்து பாராட்டுப்பெற்ற நிகழ்வுகள் ஏராளம் என்றாலும் பதினோர் வயதுச் சிறு வனாக முதலில் பாராட்டப் பெற்றது அண்ணா அவர்களால் தான். அதனால் தான் அய்யாவின் தளபதியாக விளங்கிய அண்ணாவின் இடத்தில் ஆசிரியர் அவர்களைத் தலைமைத் தொண்டராகத் தந்தை பெரியாரின் தளபதியாகக் காலம் உருவாக்கியது.

1944-இல் திருப்பாதிரிப்புலியூரில் மாநாட்டில் இவர் பேசிய பிறகு அண்ணா அவர்கள் பேசுகையில் இப்போது பேசிய இச்சிறுவன் காதிலே குண்டலம், நெற்றியிலே நீறு, கழுத்திலே ருத்திராட்சம் அணிந்து இப்படிப் பேசியிருந்தால் இவரே இந்தக்கால ஞானப்பால் உண்ட திருஞான சம்பந்தராக ஆக்கியிருப்பார்கள். இவர் பேசியதிலிருந்து இவர் உண்டதெல்லாம் ஞானப்பால் அல்ல, பெரியாரின் பகுத்தறிவுப் பால் என்று ஊரறிந்த பாராட்டை முதலில் அண்ணாதான் வழங்கியிருக்கிறார்.

தமிழ் ஓவியா said...


1962-இல் அய்யா அவர்களின் வேண்டுகோளுக்கும், விருப்பத்திற்கும் இணங்க வக்கில் தொழிலில் ஈடுபட்ட சிறிது நாட்களுக்குள் மாதம் ஒன்றுக்கு ரூ.200/- மற்றும் ரூ.300/- என்ற கணக்கில் வருமானமும் அதிகாரிகளின் அதாவது நீதிபதிகளின் பாராட்டும் மதிப்பும் பெறத்தக்க நிலையை அடைந்தும் திராவிடர் கழகத்திற்கு முழுநேரத் தொண்டராய் இருக்கத்துணிந்து பத்திரிகைத் தொண்டையும் பிரச்சாரத் தொண்டையும் ஏற்றுக் கொண்டு குடும்பத்துடன் சென்னைக்கு வந்த போது நமது கழகத்திற்குக் கிடைக்க முடியாத ஒரு பெரும் வாய்ப்பு என்றே கருதி திரு.வீரமணி அவர்களை மனதார வரவேற்பதோடு கழகத் தோழர்களுக்கும் இந்த நற்செய்தியைத் தோழர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியதோடு மனைவி, குழந்தை குட்டி இல்லாத வாலிபப்பருவத்தில் பொதுத் தொண்டு உற்சாகம் பலருக்கு ஏற் படுவது இயற்கை.

ஆனால் மனைவி, குழந்தை குடும்பப்பொறுப்பு, நல்ல எதிர்காலம், தொழில் ஆதரவு ஆகி யவை உள்ள நிலையிலும் நாளைக்கும் அவர் (வீரமணி ஒப்புக்கொள்வதானால் (எம்.ஏ.பி.எல் என்பதனாலும் பரீட் சையில் உயர்ந்த மார்க் வாங்கியிருக்கும் தகுதியாலும்) மாதம் 1க்கு ரூ. 250/- க்கு குறையாத சம்பளமுள்ள அரசாங்க அல்லது ஆசிரியர் பதவி அவருக்குக் காத்திருந்து ஆசை காட்டிக் கொண்டிருக்கும்போது அவைகளைப் பற்றிய கவலை இல்லாமல் முழுநேரப் பொதுத் தொண்டில் இறங்குவ தென்றால் இது இயற்கையில் எப்படிப்பட்ட மனிதரிடமும் எளிதில் எதிர்பார்க்க முடியாத விஷயமாகும் என்று கூறியதற்கு, எழுதியதற்குமிஞ்சிய பாராட்டுவேறு ஏதேனும் இருக்க முடியுமா?

அய்யாவிற்கு அடுத்து அன்னை மணியம்மையார் ஆசிரியர் அவர்களை ஒரு பெறாத பிள்ளையாகத்தானே கருதினார். அள்ள அள்ளக்குறையாத அன்பையும் பாசத்தையும் கழகத்தில் சிலர் வெற்று பொறாமைத் தீயில் வேகும் அளவிற்குக் கொட்டினார். அய்யா தந்தை பெரியார் அவர்கள் கூடச் சிற்சில நேரங்களில் உரிமை எடுத்துக்கொண்டு மகிழ்ச்சி பொங்க வீரமணி என்னைவிட அம்மா சொன்னால் தான் தட்டாமல் கேட்பான் என்று கூற உம், நீங்கள் தான் அவனுக்கு முதலில் எல்லாம். நான் எல்லாம் அப்புறம் தான் என்று மாறி மாறிப் பாராட்டியவை எல்லாம் இப்போதும் நினைத்துப் பெருமை கொள்ளத் தக்கவை என்பதில் அய்யமில்லை.

திரு. வீரமணி அவர்கள் சமுதாயத்தொண்டு குறித்த பணிகளிலே எப்போதும் ஈடுபடுவார், அவர் வீண்பொழுது போக்கை விரும்பாதவர் பிறரைப் போல் நண்பர்களுடன் கூடிப்பேசிக்காலம் கழிக்கும் நடை முறைகளைக் கூடச்சிறிதும் விரும் பாதவர்.

இத்தகைய குணம் அவருக்குச் சிறு வயது முதலே இயல்பாக அமைந்து விட்டது. அதனைத் துல்லியமாகக்கண்டு கொண்டவர் புரட்சிக்கவிஞர் பாரதி தாசன். தந்தை பெரியார் அவர்களுடைய தலைமையில் அவருடைய கொள்கைக்கு ஏற்பச் சாதியை எதிர்த்து எந்தவிதச் சம்பிரதாயச் சடங்கும் இன்றிக் குறிப்பாகத் தாலியில்லாமல் 1958, டிசம்பர் 7-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 5 மணிக்குச் சரியாக இராகு காலநேரத்தில் திருமதி.மோகனா அம்மையாரைத் திரு.வீரமணி தமது வாழ்க்கைத் துணையாக ஏற்ற பொழுது புரட்சிக் கவிஞர் அவர்கள் வீரமணியைப் புகழ்ந்து பாடிய வாழ்த்துப் பாடலில்

இளமை வளமையை விரும்பும் என்பர்

இளமை எளிமையை விரும்பிய புதுமையை

வீரமணியிடம் நேரில் கண்டுள்ளேன்

பாடிக் கைவீசிப் பலருடன் உலவி

வேடிக்கை வேண்டும் வாடிக்கை தனை

அவன் பாற் காண்கிலேன் அன்றும் இன்றும்

என்று அன்று பாடியது இன்றும் என்றும் திரு. வீரமணிக்குப் பொருந்து வதாக அமைந்திருக்கும் என்று ஆசிரியரின் 75-ஆம் ஆண்டு அகவையில் நுட்பமாகத் துல்லியமாகப் பாராட்டு கிறார் தலைவர் கலைஞர்.

தமது 65-ஆம் ஆண்டு நீண்டகால பொது வாழ்க்கையின் மூலம் தமிழ் நாட்டிற்கும், தமிழ்ச் சமுதாயத்திற்கும் ஆருயிர் இளவல் திரு.வீரமணி அவர்கள் ஆற்றிய பணிகள் என்றும் போற்றத்தக்கவை. அவர் மேலும் பல்லாண்டு காலம் வாழ வேண்டும். தந்தை பெரியார் அவர்களின் கொள்கை கள் மேலும் மேலும் வெற்றி பெற அவர் உழைப்பும் தொண்டும் என்றும் தொடர வேண்டும் என்று வாழ்த்திய பாராட்டிய உரைகளுக்கு மேல் ஏதேனும் இருக்க இயலுமா?

தமிழ் ஓவியா said...


ஆதி திராவிடர் தனிப் பிரிவு உண்டா?


கேள்வி: திராவிடர் கழகத்தில் ஆதிதிராவிடர் பிரிவு என்று ஒன்று உண்டா?

பதில்: திராவிடர் கழகத்தில் அப்படி ஒரு பிரிவு நிச்சயம் இல்லை. இருக்க முடியாது. காரணம், திராவிடர் கழகம் என்ற அமைப்பில் உறுப்பினர் ஆனாலே ஆதிதிராவிடர், மீதித் திராவிடர் என்ற பேதம் தானே பறந்துவிட வேண்டுமே!

சென்னை மாநாடு ஒன்றில் தந்தை பெரியார் அவர்களிடம் திராவிட நாடு திராவிடருக்கானால் ஆதிதிராவிடர்களுக்கு என்ன லாபம்? என்று கேள்வி கேட்கப்பட்ட போது, அய்யா அவர்கள் சொன்ன பதில் லாபம் இல்லை. நட்டம்தான். ஆதி என்ற இரண்டு எழுத்துக்களை வெட்டியெறிந்து விடுவோம் என்றார்கள்.

அரசியல் கட்சிகளால் இப்படி ஒன்று வாக்குகளை வைத்தே உருவாக்கப்படுகிறது. உண்மையான சமுதாயப் புரட்சி இயக்கத்தில் எப்படி அது இருக்க முடியும்? அதே நேரத்தில், சமுதாயத்தில் அழுத்தப்பட்டு அடித்தளத்தில் கிடக்கும் மக்களின் உரிமைகளுக்கு முன்னுரிமை கொடுத்து திராவிடர் கழகம் அன்று முதல் இன்று வரை பாடுபட்டுக் கொண்டிருக்கிறது.

தமிழர் தலைவர் கி.வீரமணியின் பதில்
(விடுதலை ஞாயிறு மலர் 21.8.1994)

தமிழ் ஓவியா said...


வடகிழக்கு மாநிலங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு அறவே கிடையாதாம்! மசோதாவைத் தடுத்து நிறுத்துவீர்!


மத்திய மனிதவள அமைச்சக மான கல்வி அமைச்சு நாடாளு மன்றத்தில் தற்போது தாக்கல் செய்துள்ள மசோதாவில், வடகிழக்கு மாகாணங்களில் OBC என்ற இதர பிற் படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு நீக்கப் பட்டுள்ளது. அங்கே OBC பிற் படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு கிடையாது என்றால், இந்தியத் துணைக் கண்டத்திலிருந்து வட கிழக்கு மாநிலங்கள் பிரிந்து சென்று விட்டதாக, மத்திய கல்வி அமைச்சகம் கருதுகிறதா?

இது சரியான தகவலாக இருப்பின் இது வன்மையான கண்டனத் திற்குரியதே!

சமூக நீதி, இட ஒதுக்கீடு இந்தியா முழுவதற்கும்தான். இந்திய அரசியல் சட்டப்படி இட ஒதுக்கீடு அமலில் உள்ள நிலையில் இப்படி ஒரு நிலைப் பாடு எடுப்பது தவறான சட்ட விரோத நடவடிக்கை அல்லவா?

வடகிழக்கு மாநிலங்களில் இட ஒதுக்கீடு 50 சதவிகிதத்தைத் தாண்டு வதால், அதனைச் சரி செய்ய பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை அறவே நீக்கி விடுகிறார் களாம். இது ஓர் ஆபத்தான ஆரம்பமாகும்; முளையிலேயே இது கிள்ளி எறியப்படவேண்டும்.

உடனடியாக சமூக நீதிக்கான அனைத்து அமைப்புகளும், இதனை எதிர்த்துக் குரல் கொடுக்க வேண்டும். சமூகநீதியில் நம்பிக்கை உள்ள அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர் களும் முன் வரிசையில் நின்று இந்த ஆபத்தைத் தடுத்து நிறுத்த வேண் டும்.

- கி. வீரமணி திராவிடர் கழகத் தலைவர் (விடுதலை: 5.8.2011)

தமிழ் ஓவியா said...


குடும்பங்களின் வாழ்த்துக்கள்!


உள்ளமெல்லாம் நிறைந்தே தான்

நன்றியுடன் வாழ்த்துகின்றோம்!

உறவுக்குப் பலர் இருப்போர்

உங்களிடம் அன்பு பெற்று

குடும்பத்து மூத்தவர் போல்

உங்களிடம் கலந்து பேசி

தாங்கள் பெறும் ஆறுதலை

குடும்பம் குடும்பமாய்

நன்றியுடன் நினைத்தேதான்

வாழ்த்துகின்றோம் இன்றும்மை!

எப்படித்தான் உணர்வீரோ

ஆறுதல் தேவையுள்ளோர்

கேட்குமுன்னே அறிந்திடுவீர்

அன்பான வார்த்தைகளே

அருமருந்தாய் கவலைபோக்கக்

கனிவான கருத்துக்கள்

குடும்பங்கள் ஏற்றிடுமே!

எத்தனைத் தொண்டர்கள் எங்கெங்கோ இருந்திடினும்

அத்தனையும் அத்துபடி

அவர் பெயரை அழைத்திடுவீர்!

அவர் தொல்லை தீர்த்திடுவீர்!

அத்தனைக் குடும்பங்களும்

அகமகிழ்ந்து வாழ்த்துகின்றோம்

ஆசிரியர் வாழ்க வென்றே!

நூறாண்டு வாழவேண்டும்!

நூற்றாண்டு நாயகனின்

நிழல்போலத் தொடர்ந்திடுவோம்!

- சோம.இளங்கோவன்.

தமிழ் ஓவியா said...


உமை நினைப்பது இன்றா?

இல்லை இல்லை என்றும் எப்போதும்!

அஞ்சா நெஞ்சனே, எங்கள் அண்ணனே

பதவிக்கோட்டை தேடாத பட்டுக்கோட்டையே!

வளையாத லட்சியமே!

வரவு நாடா தியாகமே!

எதிர்ப்பில் சிலிர்க்கும் சிங்கமே

எங்கள் வழிகாட்டிக் கருவியே

உம்மை நினைப்பது - இன்றா, நேற்றா?

என்றும் எப்போதும் தான்!

எங்கள் லட்சிய நடையின் வேகமே

தொண்டறத்துக்கு ஏது சாவு? எம்

தொண்டுப் பழத்தின் துவளாத துணையே

உம்மை நினைப்பது - இன்றா, நேற்றா?

இல்லை என்றும் எப்போதும்!

எங்களின் குருதி ஓட்டமே, கொள்கைச்

சட்டாம்பிள்ளையே, உம் நினைவு

எமக்கு என்றும் எப்போதும் தான்

- கி.வீரமணி

தமிழ் ஓவியா said...


அருண்ஷோரி நூலுக்கு மறுப்புரை: தோழரின் உணர்ச்சிக் காவியம்!


டாக்டர் அம்பேத்கர்பற்றி பார்ப்பன எழுத்தாளர் அருண்ஷோரி எழுதிய நூலை விமர்சித்து திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் ஆற்றிய உரையைச் செவிமடுத்த தோழர் ஒருவரின் உணர்ச்சிக் காவியம்!

அன்புத் தலைவ! ஆகஸ்ட் திங்கள் 5,6 தேதிகளில் (1997) பெரியார் திடலில் அருண்சோரிக்கு தங்களின் ஆணித்தரமான மறுப்பும், அவருக்கு ஆதரவு தருவோருக்கு, வெட்கித் தலைகுனிகின்ற வகையில் தங்களின் ஆழ்ந்த சிந்தனைத் துளிகளின் தெளிவும், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, அண்ணல் அம்பேத்கரின் உண்மை உள்ளத்தை, தியாகத்தை, சேவையை உணர்ந்த எந்த சமுதாயத்து நல்லவர்களும், தங்களின் மறுப்பை பெருமை யுடனும், மகிழ்வுடனும் வரவேற்கின்றனர்.

பத்திரிகை பலம் இல்லாத சமுதாயம் என உணர்ந்து வரும் துன்பங்களை, தாங்கள் ஏற்றுக் கொண்டு, உள்ளம் குமுற, ஆனால், எதிர்ப்பவர்களின் நெஞ்சம் பதற தங்களின் பேச்சும், எழுத்தும், நீண்ட காலத்திற்கு தேவை. இந்தப் பேச்சும், எழுத்தும் மற்ற மாநில பத்திரிகைகளிலும் வரச் செய்தால் மிகவும் நலம் பயக்கும்.

ஏனென்றால் ஒரு முறை ஹிந்து பத்திரிகையில் தாழ்த்தப்பட்டவருக்கு இருக்கும் இட ஒதுக்கீடு குறித்து கேலி செய்து, துணுக்கு வெளியிட, அதை வடபுலத்து கேரவான் பத்திரிகை மீண்டும் தமிழகத்து கல்கி பத்திரிகையும் வெளியிட்டது.

எனவே நீங்கள், இதை மற்ற மாநில மொழி பத்திரி கைகளுக்கு அனுப்புவதும் நேரம் இல்லையென்றால் அதையே சிறு புத்தகமாக ஆங்கிலத்தில் அல்லது தமிழில் வெளியிட்டால், உங்கள் அரிய கருத்துக்களை நிறைய பேர் புரிந்து கொள்ள வாய்ப்பு ஏற்படும். தங்களின் உயர்ந்த உள்ளத்தை, சமுதாய மக்கள் உணர இவை மேலும் வலுவூட்டும்.

நன்றி வணக்கம்.

- எம்.சீனிவாசன்
For the Scheduled Caste/Tribes REsidents Welfare Association Villivakkam, Madras - 600 049.

தமிழ் ஓவியா said...

நாம் பிறருக்கு உதவும்போது ஏற்படும் இன்பம்தான் நமது மனிதநேயத்தினை அளக்கும் கருவி.
ஒருவரது தவறைச் சுட்டுவது தவறல்ல; பலர்முன் சுட்டிக் காட்டி அவரை மிகக் கேவலமாக மற்றவர் நினைக்கும்படி செய்வது தவறு.
பெற்றோர்கள், குழந்தைகளை வளர்க்கும் போதே நன்றி என்பதைச் சொல்லிக் கொடுத்துப் பழக்கப் படுத்திவிட வேண்டும்.

- கி.வீரமணி

தமிழ் ஓவியா said...


பல்லாண்டு பாடுதும்! - புலவர் குறளன்பன் -

பல்லாண்டு பாடுதும் பல்லாண்டு பாடுதும் .........பல்லாண்டு
மீனாட்சி மாண்பர் கிருட்டிண சாமியின்
தேனாட்சி நன்மகனாய்த் தென்கடலூர்த் தோன்றியார்க்குப் .........பல்லாண்டு

ஆசிரியர்

முன்னைப் பயிற்றிய மூத்தமணி ஆசானைப்
பின்னை மறவாமல் பேசி வரும் பண்பார்க்கு .........பல்லாண்டு

பெரியார் சந்திப்பு

திருப்பா திரிப்புலியூர் சந்திப்பில் தந்தை
தருமுரை தான்போற்றித் தானுயர்ந்த தோளார்க்கு .........பல்லாண்டு

அண்ணா பாராட்டு

அண்ணா புகழ் ஞான சம்பந்தன் ஆகிநிலம்
கண்ணாய் பரப்புரை செய் காதல் குறியார்க்கு .........பல்லாண்டு

விடுதலை வீரர்

பள்ளி வகுப்புமுதல் பல்கலை நாள்வரைக்கும்
துள்ளி விடுமுறையில் தொண்டு தொடர்ந்தார்க்கு .........பல்லாண்டு

வளர்ப்பு மகன்

வளர்பெரியார் நெஞ்ச வளர்ப்புமகன் என்ன
வளர்கேள்வி ஆளும் படிவளர்ந்த வீரர்க்கு .........பல்லாண்டு

பெரியார் பரிசு

வெல்ல விடுதலையும் மோகனாவும் தானளித்த
நல்ல பெரியாரின் நன்மதிப்பு நெஞ்சார்க்கு .........பல்லாண்டு

பொதுச் செயலாளர்

புதுமை செயவிரும்பிப் போர்ப் பெரியார் நல்கு
பொதுச் செய லாளர் பொறுப்பேற்ற பெற்றியார்க்கு .........பல்லாண்டு

மலர்மணம்

பிறந்த நாள் காண்பெரியார் பேசுமலர் எல்லாம்
சிறந்தார்க்கும் வண்ணத்தில் செய்தளித்த சீர்த்தியார்க்கு .........பல்லாண்டு

நினைவு மன்றம்

நல்ல நடிகவேள் நம் இராதா பேர்விளங்க
நல்ல நினைவுமன்றம் வார்த்தாள வைத்தார்க்கு .........பல்லாண்டு

பெரியார் திடல்

பெரியார் பெருந்திடலைப் பேரியக்கமாக்கி
உரியார் பணிபுரிய ஊக்கிவரும் ஒள்ளியார்க்கு .........பல்லாண்டு

வகுப்புரிமை

வகுப்புவாரிப் போரியற்ற வாழ்வுரிமை பாடி
மிகுவகுப்புத் தானூக்கும் மீட்சி மனத்தார்க்கு .........பல்லாண்டு

கடவுள் மறுப்பு

ஏறு திராவிடர்க் கில்லை மதம்சாதி
ஊறு கடவுளென ஓயா துழைப்பார்க்கு .........பல்லாண்டு

அறிவியல்

ஒவ்வா மடமூடம் ஓட்டும் அறிவியலால்
ஒவ்வும் வழிகூறி ஊக்கி ஒளிர்வார்க்கு .........பல்லாண்டு

தன்மானம்

பொய்மை உடைத்தாளப் போராடும் தன்மானம்
மெய்மை விடுதலைக்கு வேரென்னும் வீச்சார்க்கு .........பல்லாண்டு

தூண்டுதொண்டு

தீங்கு தகர்பெரியார் தேர்ந்த மணியம்மை
தாங்கு பணிதாங்கித் தானாளும் தூயார்க்கு .........பல்லாண்டு

தமிழ் ஓவியா said...


சிம்பதியா - எம்பதியா?


பிறர்க்கு உதவி செய்திட ஒவ்வொருவரும் முன்வர வேண்டும்.

சிம்பதி (Sympathy) என்பதைவிட எம்பதி(Empathy) என்பது வாழ்வில் மிக முக்கியம்.

சிம்பதிக்கும் எம்பதிக்கும் மிகப் பெரிய வேறுபாடு உண்டு.

சிம்பதி என்பது மற்றொருவரிடம் நாம் காட்டக் கூடிய இரக்கம். எம்பதி என்பது மற்றொருவர் படுகிற துன்பத்தின் நிலையை அவர் நிலையில் நம்மை நிறுத்திக் கொண்டு உணர்வது ஆகும்.

சிம்பதியைவிட, எம்பதி என்பதே மனித நேயத்தின் முக்கிய அம்சம்.

_ கி.வீரமணி
(திண்டுக்கல் ரோட்டரிக் கிளப்பில் -_ 3.1.1998)

தமிழ் ஓவியா said...


நீங்கள் மாமனிதர்


கருப்புச் சட்டை வெள்ளை இதயம்
நெஞ்சில் உரம் நேர்மைத் திறம்
மூச்சில் தமிழ் பேச்சில் நெருப்பு
உயர்ந்த சிந்தனை தெளிவான பார்வை
இவற்றுக்கு சொந்தக்காரர்
ஈரோட்டுத் திண்ணைக் காரர்
சமூக நீதிக் காவலர் - அவரே
எங்கள் அன்பு ஆசிரியர் அய்யா

கடலூரின் கருத்துக் கனல் - என்றும்
அடங்கா எழுத்துப் புனல் -
எழுதிய நூல்கள் எழுபத்தைந்து
அத்தனையும் அரு மருந்து
60 ஆண்டுகள் அயராத சமூகப் பணி
சமுதாயப் பிணியை நீக்கும் பணி

அதிகாரம் பேசும் பூமியில்
அரிதாரம் பூசாத மனிதர்
விடுதலை மூலம் மூடப்பழக்கங்களுக்கு
மூட்டை கட்டும் ஆசிரியர்
உண்மை உரைத்து புதிய
உலகம் செய்யும் போராளி
அகில உலகில் முதன் முதலாய்
பாவையருக்கு தொழில் நுட்ப கல்லூரி
கண்ட கல்விக் காவலர்
பெண்களைப் போற்றும் கண்மணி
பெண்களே போற்றும் வீரமணி
மூடநம்பிக்கை ஒழிப்பதே மூச்சு
மனிதாபிமானம் வளர்ப்பதே பேச்சு
பெண் உரிமை பெண்களுக்குச் சொத்துரிமை கண்ட
பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு காண தூண்டிய
பெரியாரின் இளவல்
பெண் உரிமைக் காவலர்

தடம் பார்த்து நடப்பவன் மனிதன்
தடம் பதித்து நடப்பவன் மாமனிதன்

(கோவை கே.ஜி. அறக்கட்டளை சார்பில் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களுக்கு ஆயிரமாண்டில் செயலாற்றல் மிக்க தலைவர் விருது - டாக்டர் கே.ஜி. பாலகிருஷ்ணன் படித்தளித்த புகழாரக் கவிதை இது - 25.2.20011).

தமிழ் ஓவியா said...


நீங்கள் மாமனிதர்


கருப்புச் சட்டை வெள்ளை இதயம்
நெஞ்சில் உரம் நேர்மைத் திறம்
மூச்சில் தமிழ் பேச்சில் நெருப்பு
உயர்ந்த சிந்தனை தெளிவான பார்வை
இவற்றுக்கு சொந்தக்காரர்
ஈரோட்டுத் திண்ணைக் காரர்
சமூக நீதிக் காவலர் - அவரே
எங்கள் அன்பு ஆசிரியர் அய்யா

கடலூரின் கருத்துக் கனல் - என்றும்
அடங்கா எழுத்துப் புனல் -
எழுதிய நூல்கள் எழுபத்தைந்து
அத்தனையும் அரு மருந்து
60 ஆண்டுகள் அயராத சமூகப் பணி
சமுதாயப் பிணியை நீக்கும் பணி

அதிகாரம் பேசும் பூமியில்
அரிதாரம் பூசாத மனிதர்
விடுதலை மூலம் மூடப்பழக்கங்களுக்கு
மூட்டை கட்டும் ஆசிரியர்
உண்மை உரைத்து புதிய
உலகம் செய்யும் போராளி
அகில உலகில் முதன் முதலாய்
பாவையருக்கு தொழில் நுட்ப கல்லூரி
கண்ட கல்விக் காவலர்
பெண்களைப் போற்றும் கண்மணி
பெண்களே போற்றும் வீரமணி
மூடநம்பிக்கை ஒழிப்பதே மூச்சு
மனிதாபிமானம் வளர்ப்பதே பேச்சு
பெண் உரிமை பெண்களுக்குச் சொத்துரிமை கண்ட
பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு காண தூண்டிய
பெரியாரின் இளவல்
பெண் உரிமைக் காவலர்

தடம் பார்த்து நடப்பவன் மனிதன்
தடம் பதித்து நடப்பவன் மாமனிதன்

(கோவை கே.ஜி. அறக்கட்டளை சார்பில் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களுக்கு ஆயிரமாண்டில் செயலாற்றல் மிக்க தலைவர் விருது - டாக்டர் கே.ஜி. பாலகிருஷ்ணன் படித்தளித்த புகழாரக் கவிதை இது - 25.2.20011).

தமிழ் ஓவியா said...


தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்களை கழகத் தலைவர் சந்தித்தார்


திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் இன்று (1.12.2013) காலை சென்னை கோபாலபுரத்தில் தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்களைச் சந்தித்தார். கழகம் வெளியிட்ட 14 நூல்களையும் கலைஞர் அவர்களிடம் அளித்து ஒவ்வொரு நூலின் சிறப்புகளையும் எடுத்துக் கூறினார். சிறுகனூரில் நிறுவப்பட விருக்கும் தந்தை பெரியாரின் 95 அடி உயர சிலை பற்றியும் பெரியார் உலகத்தில் இடம் பெறும் அம்சங்கள் குறித்தும் எடுத்துக் கூறினார்.

முதலாவதாக நாளை 81ஆம் பிறந்த நாள் காணும் தமிழர் தலைவர் அவர்களுக்கு முத் தமிழ் அறிஞர் சால்வை அணிவித்து வாழ்த் துக்கள்! வாழ்த்துக்கள்!! என்று கூறினார். கலைஞர் அவர்களுக்குத் தமிழர் தலைவர் சால்வை அணிவித்தார். நாளைய விழாவின் அழைப்பிதழை துணைத் தலைவர் கலி. பூங் குன்றன் கலைஞர் அவர்களிடம் அளித்தார்.

தமிழ் ஓவியா said...


பிறந்த நாள் விழா காணும் தலைவர் பதில் அளிக்கிறார்


2.12.2013 அன்று 81ஆம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் தமிழர் தலைவர் அவர்கள் அன்று முற்பகல் வல்லத்தில் நடக்கவிருக்கும் கருத் தரங்கின் முடிவில் 20 நிமிடங்கள் பார்வையாளர்களின் கேள்வி களுக்கு விடை அளிக்கிறார்.

வேக வினாக்களும் விரைவான பதில்களும்!
இது ஒரு புதிய அம்சமாகும்.

- தலைமை நிலையம்

தமிழ் ஓவியா said...

தமிழர் தலைவருடன் சந்திப்பு



81 ஆம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் தமிழர் தலைவர் சந்திப்பு - நாளை காலை 9 மணி முதல் 11 மணி வரை வல்லத்தில் நடைபெறும். கழகத் தலைவரை சந்திப்பவர்கள் சால்வைகளுக்குப் பதில் பெரியார் பேருருவச் சிலைக்கு நிதி வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

- கலி. பூங்குன்றன், துணைத் தலைவர், திராவிடர் கழகம்

தமிழ் ஓவியா said...

பெரியார் நூலக வாசகர் வட்டம் 2000ஆவது நிகழ்ச்சி
கேளுங்கள் தரப்படும் - புதிய அறிமுகம் கேள்விக்குப் பெரியார் பதில் சொல்லும்முறை
தமிழர் தலைவர் எடுத்துக்காட்டு

சென்னை, டிச.1- கூட்டங்களில் கேள்விகளுக்குத் தந்தை பெரியார் பதில் சொல்லும் முறையை எடுத்துக்காட்டுடன் விளக்கினார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள்.

பெரியார் நூலக வாசகர் வட்டத்தின் 2000 - நிகழ்ச்சிகள் நிறைவு விழாவின் முதல் நாள் நிகழ்ச்சி 29.11.2013 வெள்ளி மாலை 6 மணிக்கு சென்னை பெரியார் திடலில், கலை நிகழ்ச்சிகளுடன் தொடங் கப்பட்டது.

திராவிடர் கழக மகளிர் பாசறை செய லாளர் டெய்சி மணியம்மை கலை நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தார்.

பெரியார் நூலக வாசகர் வட்ட செய லாளர் கி. சத்திய நாராயணன் வரவேற் புரை ஆற்றினார். வாசகர் வட்டம் தொடங் கப்பட்ட வரலாற்றை எடுத்துக் கூறினார்.

நிகழ்ச்சிக்குத் திராவிடர் இயக்க ஆய் வாளர் க. திருநாவுக்கரசு தலைமை வகித்தார்.

பெரியார் நூலக வாசகர் வட்டத்தில் 25 சொற்பொழிவுகள் நடத்தியதை பெருமை யாகக் கருதுவதாகக் கூறினார்.

கேளுங்கள் தரப்படும்

வாசகர்கள் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் என்கிற முறையில் நிகழ்ச்சியில் புதுமை புகுத்தப்பட்டது. இவ்வமைப்பின் புரவலர் மானமிகு கி.வீரமணி அவர்கள் தான் இந்தப் புது ஆலோசனையை வழங்கினார். அதன்படி முதல் நிகழ்ச்சியாக அறிமுகப்படுத்தப்பட்டது.

ஒவ்வொரு துறையிலும் கற்றுத் துறை போகிய அறிஞர் பெரு மக்கள் நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

ஒவ்வொருவரிடமும் வினாக்கள் கேட்கப்பட்டன. ஒவ்வொரு வினாவிற்கும் அவர்கள் விடை அளித்தனர். மகளிர் உரிமை மற்றும் சட்டம் சம்பந்தமான கேள்விகளுக்கு திராவிடர் கழகப் பிரச் சார செயலாளர் வழக்குரைஞர் அருள் மொழி பதில் அளித்தார். அறிவியல் தொடர்பான வினாக்களுக்கு இயற்பிய லாளர் அ. பாலகிருஷ்ணன் பதில் அளித் தார்; வரலாறு தொடர்பான வினாக் களுக்கு வரலாற்றுப் பேராசிரியர் அ. கருணானந்தன் விடையளித்தார். பெரியா ரியல் தொடர்பான கேள்விகளுக்கு. பெரியார் பேருரையாளர் புலவர் முனைவர் மா. நன்னன் விடையளித்தார்.

இந்தப் புதிய முறை பார்வையாளர் களைப் பெரிதும் கவர்ந்தது. பல புதிய புதிய தகவல்களை அறிய முடிந்ததாகப் பார்வையாளர்கள் கூறினர். கேள்விகளை வாசகர் வட்ட மூத்த உறுப்பினர்களுள் ஒருவரான அருணகிரி படித்தார்.

தமிழர் தலைவர் கி.வீரமணி

நிறைவாக திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

கேளுங்கள் தரப்படும் என்ற புதிய அறிமுகம் சிறப்பாக அமைந்ததற்கு தம் பாராட்டுகளை தெரிவித்துக் கொண்டார்.

இந்த முறையைத் தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். பெரியார் நூலக வாசகர் வட்டத்தில் நடக்கும் சொற்பொழிவுகள் 20 நிமிடம் உரை 20 நிமிடம் கேள்வி பதில் பகுதியை அறிமுகப்படுத்தலாம் என்ற ஆலோசனை யையும் தந்தார். பொதுக் கூட்டங்களில் கேள்விகளுக்குப் பதில் சொல்லும் முறையை அறிமுகப்படுத்தியது திராவிடர் இயக்கமே என்று கூறிய திராவிடர் கழகத் தலைவர் அவர்கள் தந்தை பெரியார், கேள்விக்குப் பதில் சொல்லும் முறையை எடுத்துக் கூறினார்.

நியாயமான கேள்விக்கு நேர்மையான பதிலையும், குறும்புத்தனமான கேள்விக்கு அதே முறையில் பதிலும் தந்தை பெரியார் கூறியதற்கு உதாரணமாக பொன்மலை யில் தந்தை பெரியாரிடம் கேட்கப்பட்ட கேள்வியை நினைவூட்டினார்.

நேரு பிரதமராக இருந்தபோது இரயில்வே துறையில் அகில இந்திய வேலை நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டது. அது அரசியல் உள்நோக்கம் கொண்ட தாக இருந்ததால் அந்த வேலை நிறுத் தத்தைத் தந்தை பெரியார் எதிர்த்துப் பேசினார். கூட்டம் முடியும் நேரத்தில் ஒருவர் கேள்வி ஒன்றைப் பெரியாரிடம் அளித்தார். நேரு அரசாங்கத்திடம் 10 லட்சம் ரூபாய் பணம் வாங்கிக் கொண்டு தானே நீ வேலை நிறுத்தத்தை எதிர்த்துப் பேசு கிறாய்? என்பது கேள்வி. பெரியார் கோபப் படவில்லை. சிரித்துக் கொண்டே பதிலடி கொடுத்தார்.

நான் பணம் வாங்கிக் கொண்டு பேசக் கூடியவன் என்று நீங்கள் தெரிந்து கொண் டிருப்பதால், புத்திசாலியாக இருந்தால் நீங்கள் என்ன செய்திருக்க வேண்டும்?

காங்கிரஸ்காரன் பத்து லட்சம் ரூபாய் எனக்குப்பணம் கொடுத்தால் நீ 11 லட்சம் ரூபாய் எனக்கு கொடுத்து உன் பக்கம் பேசச் செய்திருக்க வேண்டாமா? என்று திருப்பிப் பதிலடி கொடுத்தார் - கேட்டவன் வாயடைத்துப் போனான்!

இதுபோன்ற நிகழ்வுகள் தந்தை பெரியார் அவர்களின் பொது வாழ்வில் ஏராளம் என்று குறிப்பிட்டார் திராவிடர் கழகத் தலைவர்.

தங்க தனலட்சுமி நன்றி கூறிட கூட்டம் இரவு 8.45 மணிக்கு நிறைவுற்றது.

நிகழ்ச்சியில் பங்கேற்ற பெருமக் களுக்கு பெரியார் நூலக வாசகர் வட் டத்தின் சார்பில் திராவிடர் கழகத் தலை வர் கி. வீரமணி அவர்கள் பயனாடைகள் அணிவித்து, நூல்களையும் அன்பளிப்பாக வழங்கினார்.

தமிழ் ஓவியா said...


அன்பர்கள் இருவரின் கடிதங்கள்

திராவிடர் கழக தலைவரான தங்கள் 81ஆவது பிறந்த நாளையொட்டி தமிழ்நாட்டில் சாக்ரடீசா லெனினா, ரூசோவா அல்லது அந்த மூவரும் சேர்ந்த ஒரு புதிய வார்ப்படமா என்று சிந்தனையாளர்கள் எண்ணி ஆராயும் அற்புத தலைவர் தந்தை பெரியா ருக்கு 95 அடி உயர வெண்கல சிலையும் அவருடைய கருத்துக்களை இளைய சமுதாயத்திற்கு அறிமுகப் படுத்தி பெரியார் பெயரில் ஒரு உலகத்தையே நிர் மாணிக்கும் மறக்க முடியாத பணிக்காக சேர்க்கப்படும் 1000 பவுன் நிதிக்கு நான் 1 பவுன் 8 கிராம் அன்பளிப் பாக அளிப்பதை தயவு செய்து ஏற்றுக் கொள்ள வேண்டுகிறேன்.

12 நல்ல கனமான இலாக்காக்கள் என் பொறுப்பில் இருந்தாலும் எனக்கு தலைநகர் சென்னையில் ஒரு வீட்டு மனைகூடக் கிடையாது எங்கும் எந்த சொத்தும் வருமானம் வரும் வேறு தொழிலும் கிடையாது. 88 வயதை நெருங்கும் நான் எம்.எல்.ஏ., எம்.பி. பென்ஷனில் தான் நானும் என் மனைவியும் வாழ்ந்து வருகிறோம்.

- வி.வி. சுவாமிநாதன்
முன்னாள் அமைச்சர் எம்.பி., சிதம்பரம்
2.12.2013 தஞ்சையில் நடக்கும் விழா சிறப்பாக நடைபெறவும் நிறைந்த ஆரோக்கியம் நீண்ட ஆயுள் தாங்கள் பெற்று வாழ்வும் என் இதயம் நிறைந்த வாழ்த்துக்கள்!

அன்புக்கும் மிகுந்த மதிப்புக்கும் உரிய தோழர் கி.வீரமணி அவர்களுக்கு,

வணக்கம். தொண்டால் பொழுதளக்கும் என்று சொல்லுவார்களே அந்த வரிக்கு நூற்றுக்கு நூறு எடுத்துக்காட்டாக, பெரியார் ஏந்திப் பிடித்த சுயமரியாதைப் பெருஞ்சுடரைக் கடும் உழைப்பால் மேலும் பிரகாசமாக எரிய வைத்து, தமிழகத்துக்கு மட்டுமல்ல, உலகின் பல பகுதிகளுக்கும் ஒளி ஏற்றிக் கொண்டி ருக்கும் தங்களைத் தங்கள் 81ஆம் பிறந்த நாளான இன்று மனமார வாழ்த்துகிறேன்.

இன்னும் நூறாண்டு காலம் முழு நலத்தோடு வாழ்ந்து, சுயமரியாதைச் சுடரொளியை எங்கும் பரப்புங்கள். தந்தை பெரியாருக்கு 95 அடி உயர வெண்கலப் பேரு ருவச் சிலை அமைப்பது பெருமைக்குரியது. பெரியாரின் அறிவொளி மேலும் மேலும் நாடெங்கும் பரவ இந்தச் சிலை ஒரு நல் அடையாளமாக நிமிர்ந்து நிற்கும்!

அருமையான விழாவும் ஏற்பாடு செய்திருக்கிறீர்கள் பெரு மக்கள் பலர் கலந்து கொள்கிறார்கள். விழா புதிய வரலாறு சமைக்கும் நூறு பவுனுக்காக நிதி வழங்கும் சுயமரியாதை உள்ளங்கள் அனைத்தையும் வாழ்த் துகிறேன். வணங்குகிறேன். ரூ.1000 என்னுடைய எளிய பங்கையும் இத்துடன் அனுப்புகிறேன்.

- பொன்னீலன்
தலைவர், அகில இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்கம்

தமிழ் ஓவியா said...

பேராசிரியர் சுப. திண்ணப்பன் வாழ்த்துகிறார்



பேரன்புமிக்க தமிழர் தலைவர் வீரமணி அய்யா அவர்களுக்கு வணக்கம். பிறை ஆயிரம் கண்ட பெருநாள் - முத்துவிழா நாள் ஆகிய உங்கள் 81ஆம் பிறந்த நாள் அன்று வாழ்த்துக்களை உங்களுக்குத் தெரிவிப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

பகுத்தறிவுப் பகலவன் ஆகிய பெரியார் பெருமையையும், கொள்கைகளையும் பாரெங்கும் பரப்பும் பணி தொடர நீங்கள் உடல் நலத்துடன் பல்லாண்டு பல்லாண்டு வாழ வேண்டும் என்பதுதான் என் விழைவு. பெரியார் உலகம் காண விரும்பும் உங்கள் கனவு நனவாகட்டும்.

- சுப. திண்ணப்பன்
பேராசிரியர் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக் கழகம்

தமிழ் ஓவியா said...


சு.சாமியின் வாய்க் கொழுப்பு!
t

காஞ்சி மடாதிபதி மீது பொய் வழக்கு போட்டதற்குப் பொறுப்பேற்றுத் தமிழக முதல்வர் ஜெயலலிதா, காஞ்சி சங்கரமடத்துக்கு வந்து மன்னிப்புக் கேட்கவேண்டும் என்று ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரத்தில் உள்ள சங்கர மடத்துக்கு ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி சனிக்கிழமை வந்தார். அங்கு மடாதிபதி ஜெயேந்திரர் மற்றும் இளைய மடாதிபதி விஜயேந்திரர் ஆகியோரைச் சந்தித்துப் பேசினார்.

முன்னதாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது.

சங்கரராமன் கொலை வழக்கில், புதுச்சேரி சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு இந்து மதத்துக்குக் கிடைத்த வெற்றி; இந்த விவகாரத்தில் காஞ்சி மடாதி பதிகள்மீது தமிழக அரசு தொடர்ந்த வழக்கு பொய் யானது. இந்து மதத்தை இழிவுபடுத்தும் நோக்கத்தில் தொடரப்பட்ட வழக்கு. இதற்குத் தமிழக அரசு சார்பில் முதல்வர் ஜெயலலிதா பொறுப்பேற்று மடத்துக்கு நேரில் வந்து மன்னிப்புக் கேட்கவேண்டும். தீர்ப்பு இப்படித் தான் வரும் என்று 8 ஆண்டுகளுக்கு முன்பே எனக்குத் தெரியும்.

சங்கரராமன் கொலை செய்யப்பட்டது உண்மை தான். உரிய விசாரணை நடத்தி உண்மைக் குற்றவாளி களைக் கைது செய்ய வேண்டும் என்றார் அவர். அப்போது முன்னாள் அய்.ஏ.எஸ். அதிகாரி சந்திர லேகா உடன் இருந்தார்.

வழக்கு நடந்தது செஷன்ஸ் கோர்ட்டில் - அதுவும் புதுவையில், அது ஒருபுறம்!

2ஜி வழக்கில் சி.பி.அய். ஸ்பெஷல் கோர்ட் முதல் உச்சநீதிமன்றம்வரை நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை இணைக்க வழக்குத் தொடர்ந்து, தோற்றுவிட்ட சு.சாமி, சிதம்பரத்திடம் மன்னிப்புக் கேட்பாரா?

பேசுநா இரண்டுடையாய் போற்றி! போற்றி!!

தமிழ் ஓவியா said...


முதல்வரின் முக்கிய கவனத்திற்கு...


கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மடாதிபதியும், அவரது சார்பில் ஒரு பெண்ணும் நீதிபதியிடம் லஞ்சப் பணம் கொடுக்கக் கால அவகாசம்பற்றிப் பேசியதாகச் சொல்லப்பட்ட ஓர் ஒலிப்பதிவு ஆவணம் வெளியானதை இப்போது மறுபடியும் நினைவுபடுத்திக் கொள்ளலாம்.

அது அசல் ஒலிப்பதிவுதானா, இல்லை போலியானதா என்பதை மூவரின் குரல் பதிவுகளையும் எடுத்து ஒப்பிட்டுப் பார்த்து உண்மையைக் கண்டறியும்படி காவல் துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. சில மாதங்கள் கழித்துக் காவல்துறை அளித்த பதிலின்படி, அந்த ஒலிப்பதிவு ஆவணம் கரெப்ட் ஆகிவிட்டதால் அதில் எதையும் கேட்க முடியவில்லை.

அதே ஒலிப்பதிவு துல்லியமாகக் கேட்கும் விதத்தில் இன்றும் இணையத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறது. ஆனால் நீதிமன்றம், காவல்துறையைப் பொறுத்தமட்டில் அசல் ஆவணம் கரெப்ட் ஆகி விட்டதால் அதன் உண்மைத் தன்மையைக் கண்டறியவே முடியாமல் விஷயமே காலாவதியாகிவிட்டது.

- ஞானி, இந்து, தமிழ்நாளேடு, 1.12.2013

தமிழ் ஓவியா said...

பெரியார் பேருருவச் சிலைக்கு ரூ.25,000 நன்கொடை

சென்னை, டிச.2- திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் தி.மு.க. பொதுச் செயலாளர் பேரா சிரியர் க. அன்பழகன் அவர்களை நேற்று (1.12.2013) மாலை 6.15 மணிக்கு சந்தித்து இயக்கம் வெளி யிட்ட 14 நூல்களை வழங்கினார். பேராசிரியர் அவர்கள் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர் களுக்குச் சால்வை அணிவித்து அய்யா போல நீண்ட காலம் வாழ்க! என்று கூறி பிறந்த நாள் வாழ்த்துகளைக் கூறினார். பேரா சிரியர் அவர்களுக்குக் கழகத் தலைவர் சால்வை அணிவித்தார்.

ரூ.25,000 நன்கொடை

சிறுகனூரில் அமையவிருக்கும் தந்தை பெரியார் பேருருவச் சிலைக்குத் தமது சார்பில் பேரா சிரியர் ரூ.25 ஆயிரத்தைக் கழகத் தலைவரிடம் அளித்தார் கழகத் தலைவர் நன்றி கூறினார். கழகத் தலைவருடன் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் உடன் சென்றிருந்தார்.

தமிழ் ஓவியா said...


பெண்களின் தர்மம்...


சாத்திரச் சம்பிரதாயங்களில் பெண்களின் தர்மம் என்ன என்று பார்த்தால் நிபந்தனையற்ற அடிமையாக அடங்கி ஒடுங்கி வாழ்பவளே மோட்சத்திற்குப் போவாள் என்று கூறப்பட்டுள்ளது. - (விடுதலை,5.4.1961)

தமிழ் ஓவியா said...


வளர முடியும்


நமது நாட்டில் மனிதனுக்கு மனிதன் வெறுப்பும், பேதமும் உண்டாக்கவே கடவுள், மதம், ஜாதி ஏற்படுத்தப்பட்டுள்ளன. இவை ஒழிந்த இடத்தில்தான் மனிதனுக்கு அன்பு வளர முடியும். - (விடுதலை, 20.9.1968)

தமிழ் ஓவியா said...


வெற்றி மாரத்தானைத் தொடங்கி விட்டோம்!


கழகத்தின் வரலாற்றில் மிக முக்கியமான நிகழ்ச்சிகள் எல்லாம் சிறப்பாக நடைபெற்ற அதே தஞ்சையில் நேற்று, பெரியார் உலகத்திற்கு (தந்தை பெரியார் 95 அடி உயர பேருருவ வெண்கலச் சிலை அமைப்பு) ஆயிரம் சவரன் தங்கத்திற்குச் சமமான நிதி அளிக்கும் விழாவும், திராவிடர் கழகத் தலைவர் - தமிழர்தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்களின் 81ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவும் தஞ்சை மண்ணிலே அந்த மண்ணுக்கே உரித்தான கம்பீரமாக - மிளிரோடு நடைபெற்றது என்று சொல்ல வேண்டும்.

காலை முதலே தமிழர் தலைவரைச் சந்தித்து வாழ்த்துக்களைக் கூறினார்கள். மாலைக் குப் பதிலாக நிதியை அளித்து மகிழ்ந்தனர்.

சிறப்பான கருத்தரங்கம், செழிப்பான உரைகள் கருத்தரங்கில் தனியம்சமாகும். பார்வையாளர்களின் கேள்விகளுக்கு விழா நாயகர் விடையளித்த பாங்கு இதுவரை எங்கும் கேள்விப்படாத தனி அம்சமாகும். வேகமான வினாக்களும், விரைவான பதில்களும் என்று அதற்குத் தலைப்பு அளிக்கப்பட்டிருந்தது. நல்ல பசி நேரத்தில்கூட வயிற்றுப் பசியைப் புறந்தள்ளி அறிவுப் பசிக்கு முன்னுரிமை கொடுத்தது மெச்சத் தகுந்த ஒன்றாகும்.

இந்த விழாவின் முக்கிய பகுதி என்பது - பெரியார் உலகிற்கு - தந்தை பெரியார் அவர்களுக்கு 95 அடி உயரத்தில் சிறுகனூரில் அமையவிருக்கும் முழு உருவ வெண்கலச் சிலைக்கு நிதி அளிக்கும் நிகழ்ச்சியாகும்.

முதற்கட்டமாக ஆயிரம் சவரன் தங்கத்திற்கான நிதி அளிப்பது (ஒரு சவரன் ரூ.25 ஆயிரம் என்று தோராயமாகக் கணக்கிடப்பட்டிருந்தது) என்ற திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழு, பொதுக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவினைக் கழகப் பொறுப்பாளர்கள் தோழர்கள் அரிதின் முயன்று அதனை வெற்றிகரமாகச் செயல்படுத்திக் காட்டி விட்டனர்.

ஆயிரத்திற்கும் மேலாக 1005 சவரன் தங்கத் திற்கான தொகையான ரூ.2 கோடியே 51 லட்சத்து 33 ஆயிரம் நிதியை தமிழர் தலைவரிடம் வழங்கியது சாதாரணமானதல்ல.

கழகம் எடுத்த எந்த முடிவும் வெற்றி இலக்கை அடைந்தது என்பதைத் தவிர அதன் வரலாற்றில் வேறு அத்தியாயத்தைப் பார்க்கவே முடியாது.

அதுவும் இதுவரை கழகம் எடுத்த திட்டங்களில் - இப்பொழுது பெரியார் உலகம் என்று கழகம் மேற்கொள்ளும் திட்டம் மிகவும் வித்தியாசமானது - கேட்பவர்களை மலைக்க வைக்கக் கூடியது என்பதை ஏற்றுக் கொள்கிறோம்.

மிகப் பெரிய அளவுக்கு நிதி திரட்டப்பட வேண்டும் என்பதும் உண்மைதான். பெரியார் உலகத்தைப் பொறுத்தவரை கழகப் பொறுப்பாளர்கள் தெரிவித்த தகவல்கள் மிகவும் நம்பிக்கை அளிப்பதாக உள்ளன.

எந்த இடத்தில் யாரிடம் வசூலுக்குச் சென்றாலும் 25,000 ரூபாயை பெரிய தொகை என்று நினைக்காமல் மிகவும் வரவேற்று, பெரியாருக்குக் கொடுக்காமல் வேறு யாருக்குக் கொடுக்கப் போகிறோம்? என்று வெளிப்படையாகவே உப சரித்து, நிதியையும் அளித்தனர் என்றால் - தமிழர்கள் மீது வைத்த நம்பிக்கை மிகவும் சரியானது தான் என்பதை மெய்ப்பிக்கிறது.

திராவிடர் கழகத் தலைவரின் 50 ஆண்டு விடுதலைப் பணிக்காக 50 ஆயிரம் விடுதலை சந்தாக்களை அளித்தோம் - என் ஆயுளும் நீளும் என்று புளகாங்கிதம் அடைந்தார்.

இப்பொழுது இந்த பிரம்மாண்டமான திட்டத்தை அவர் எண்ணத்தில் உதித்த இந்தக் கருவை - செயல்படுத்திக் காட்டுவதன் மூலம் மேலும் அவரின் ஆயுளை நீட்டித்துக் கொடுப்பார்கள் தமிழர்களும் கழகத் தோழர்களும் என்பதில் எட்டுணையும் அய்யமில்லை.

பெரியார் உலகம் என்பது 15 ஆண்டுக்கால திட்டம். இப்பொழுது நம் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்களுக்கு 81 என்றால் அவரின் 96ஆம் அகவையில் இது நிறைவடையும் என்று பொருள்.

அவர் தலைமையில் தான் அந்த விழா என்கிறபோது தந்தை பெரியார் அவர்களின் வயதை எட்டுவார் என்கிற அடி நீரோட்டமும் இதில் அடக்கமாகும்.

நேற்று நடைபெற்ற தஞ்சை விழா என்று சொல்லுகிறபோது கொட்டும் மழையிலும் பல்லாயிரக் கணக்கான கருஞ்சட்டைத் தோழர்கள் குடும்பம் குடும்பமாக வந்திருந்து திறந்த வெளியாக நடைபெற்ற விழாவை வெற்றியாக்கிக் கொடுத் தார்களே - இது வேறு எந்த அமைப்பாலும் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று. கொள்கைக் கூட்டத்தின் முன் கொட்டும் மழையும் தோற்றது.

வெற்றி மாரத்தானைத் தொடங்கி விட்டோம் - முழு வெற்றியைத் தங்கப் பேழையில் வைத்துக் கொடுப்போம் - வாழ்க பெரியார்! வாழ்க தமிழர் தலைவர்!!

தமிழ் ஓவியா said...


மாற்றுத் திறனாளிகளுக்காக திமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள்: கலைஞர் பட்டியல்

சென்னை, டிச.3- சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு அவர்களுக்காக திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட் டங்களை அக்கட்சியின் தலைவர் கலைஞர் பட்டியலிட்டுள்ளார்.

இது குறித்து திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

டிசம்பர் 3-ஆம் தேதி உலக மாற் றுத் திறனாளிகள் தினம் கொண்டா டப்படுகிறது. இந்நாளில் அவர் களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த ஆண்டு மாற் றுத் திறனாளிகள் தினத்தில் 50-க்கும் அதிகமானோர் என்னைச் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். அதுபோல இந்த ஆண்டும் சந்திக்க பலர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

ஊனமுற்றோர் என்பதை மாற்றுத் திறனாளிகள் என மாற்றி அவர்களுக் காக தனித் துறை திமுக ஆட்சியில் உருவாக்கப்பட்டது.

1974 திமுக ஆட்சியில் மாற்றுத் திறனாளிகள் நலவாழ்வுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு மூன்று சக்கர சைக்கிள்கள், சக்கர நாற் காலிகள், அலுமினியத் தாங்கிகள், கறுப்புக் கண்ணாடிகள், ஊன்று கோல்கள், காதுகேட்கும் கருவிகள் ஆகியவை இலவசமாக வழங்கப்பட்டன.

திமுக ஆட்சியில் 1-11-1974-இல் மாற்றுத் திறனாளிகளுக்கு ஓய்வூ தியம் வழங்கும் திட்டம் அறிமுகப் படுத்தப்பட்டது. 1989-90 திமுக ஆட்சியில் மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தும் தாங்கிகள், சக்கர நாற்காலிகள், மோட்டார் வண்டி கள், ஊன்றுகோல்கள் போன்ற பொருள்களுக்கான வரி முற்றிலும் நீக்கப்பட்டது.

அப்போதைய சமூக நலத்துறை அமைச்சர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு மாற்றுத் திறனாளி களுக்கு 3 சதவீத இட ஒதுக்கீட்டின் படி வேலைவாய்ப்புகள் உறுதி செய்யப்பட்டன. 2010-11 திமுக ஆட்சியில் மாற்றுத் திறனாளிகளுக் கான நிதி நான்கு மடங்காக அதாவது ரூ. 176 கோடியாக உயர்த்தப்பட்டது.

கடுமையாகப் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப் படும் மாதாந்திர பராமரிப்பு உதவித் தொகை 2006 திமுக ஆட்சியில் ரூ. 200-லிருந்து ரூ. 500 ஆக உயர்த்தப் பட்டது.

மாற்றுத் திறனாளிகள் தங்களுக் குள் திருமணம் செய்து கொண்டால் திருமண உதவித் தொகை வழங்கும் திட்டம் 2009-10 திமுக ஆட்சியில் தொடங்கப்பட்டது. 2007 திமுக ஆட்சியில் மாற்றுத் திறனாளிகள் நலவாரியம் அமைக்கப்பட்டது. இதன் மூலம் அவர்களுக்கு ஏராளமான உதவிகள் செய்யப்பட்டன.

"இளைஞன்' படத்துக்கு கதை, வசனம் எழுதியதற்காக எனக்குக் கிடைத்த ரூ. 45 லட்சத்தை முதல மைச்சர் பொது நிவாரண நிதி மூலம் மாற்றுத் திறனாளிகள் நலவாரியத் துக்கு வழங்கினேன்.

திமுக ஆட்சியில் மாற்றுத் திற னாளிகளுக்காக அறிவிக்கப்பட்ட திட்டங்களை இந்த ஆட்சியிலும் தொடர்ந்து வருகிறார்கள் என கலை ஞர் தெரிவித்துள்ளார்.

தமிழ் ஓவியா said...


மாற்றுத் திறனாளிகளுக்காக திமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள்: கலைஞர் பட்டியல்

சென்னை, டிச.3- சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு அவர்களுக்காக திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட் டங்களை அக்கட்சியின் தலைவர் கலைஞர் பட்டியலிட்டுள்ளார்.

இது குறித்து திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

டிசம்பர் 3-ஆம் தேதி உலக மாற் றுத் திறனாளிகள் தினம் கொண்டா டப்படுகிறது. இந்நாளில் அவர் களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த ஆண்டு மாற் றுத் திறனாளிகள் தினத்தில் 50-க்கும் அதிகமானோர் என்னைச் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். அதுபோல இந்த ஆண்டும் சந்திக்க பலர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

ஊனமுற்றோர் என்பதை மாற்றுத் திறனாளிகள் என மாற்றி அவர்களுக் காக தனித் துறை திமுக ஆட்சியில் உருவாக்கப்பட்டது.

1974 திமுக ஆட்சியில் மாற்றுத் திறனாளிகள் நலவாழ்வுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு மூன்று சக்கர சைக்கிள்கள், சக்கர நாற் காலிகள், அலுமினியத் தாங்கிகள், கறுப்புக் கண்ணாடிகள், ஊன்று கோல்கள், காதுகேட்கும் கருவிகள் ஆகியவை இலவசமாக வழங்கப்பட்டன.

திமுக ஆட்சியில் 1-11-1974-இல் மாற்றுத் திறனாளிகளுக்கு ஓய்வூ தியம் வழங்கும் திட்டம் அறிமுகப் படுத்தப்பட்டது. 1989-90 திமுக ஆட்சியில் மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தும் தாங்கிகள், சக்கர நாற்காலிகள், மோட்டார் வண்டி கள், ஊன்றுகோல்கள் போன்ற பொருள்களுக்கான வரி முற்றிலும் நீக்கப்பட்டது.

அப்போதைய சமூக நலத்துறை அமைச்சர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு மாற்றுத் திறனாளி களுக்கு 3 சதவீத இட ஒதுக்கீட்டின் படி வேலைவாய்ப்புகள் உறுதி செய்யப்பட்டன. 2010-11 திமுக ஆட்சியில் மாற்றுத் திறனாளிகளுக் கான நிதி நான்கு மடங்காக அதாவது ரூ. 176 கோடியாக உயர்த்தப்பட்டது.

கடுமையாகப் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப் படும் மாதாந்திர பராமரிப்பு உதவித் தொகை 2006 திமுக ஆட்சியில் ரூ. 200-லிருந்து ரூ. 500 ஆக உயர்த்தப் பட்டது.

மாற்றுத் திறனாளிகள் தங்களுக் குள் திருமணம் செய்து கொண்டால் திருமண உதவித் தொகை வழங்கும் திட்டம் 2009-10 திமுக ஆட்சியில் தொடங்கப்பட்டது. 2007 திமுக ஆட்சியில் மாற்றுத் திறனாளிகள் நலவாரியம் அமைக்கப்பட்டது. இதன் மூலம் அவர்களுக்கு ஏராளமான உதவிகள் செய்யப்பட்டன.

"இளைஞன்' படத்துக்கு கதை, வசனம் எழுதியதற்காக எனக்குக் கிடைத்த ரூ. 45 லட்சத்தை முதல மைச்சர் பொது நிவாரண நிதி மூலம் மாற்றுத் திறனாளிகள் நலவாரியத் துக்கு வழங்கினேன்.

திமுக ஆட்சியில் மாற்றுத் திற னாளிகளுக்காக அறிவிக்கப்பட்ட திட்டங்களை இந்த ஆட்சியிலும் தொடர்ந்து வருகிறார்கள் என கலை ஞர் தெரிவித்துள்ளார்.