Search This Blog

18.11.12

பார்ப்பனர்களும் பாரதிராஜாக்களும்

பாரதிராஜாவா இப்படி?
புரட்சி இயக்குநர் என்று திராவிடர் கழகத்தால் புரட்சிக் கவிஞர் விழாவில் பட்டம் அளிக்கப்பட்ட பாரதிராஜா அவர்களின் பேட்டி ஒன்று (ஆனந்தவிகடன் 14.11.2012) ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. புருவத்தை நெளியவும் வைத்தது.
என்ன ஆனார் நமது பாரதிராஜா என்ற கேள்வியும் செங்குத்தாக எழுந்தது.

வைகோ ஒரு அற்புதமான பேச்சாளி, இலக்கியவாதி, அறிவாளி. அவர்கிட்ட நான் கேக்கறது ஒண்ணே ஒண்ணுதான். திராவிடம்... திராவிடம்னு பேசி தமிழ்நாட்டை அழிச்சது போதும். ஒரு தமிழனா மாறுங்க... திராவிடம்னா அதைத் திருவனந்தபுரத்துலயோ, பெங்களூருலயோ, ஹைதராபாத்லயோ நின்னு பேச வேண்டியது தானே? எதுக்கு தமிழ் நாட்டுல மட்டும் பேசறீங்க? எவனாவது ஒரு தமிழன் மற்ற மாநிலங்கள் எதையாவது ஆள முடியுமா? தமிழ்நாட்டை தமிழன்தான்யா ஆளணும்... நான் பிறந்து வளர்ந்த இந்த மண்ணுக்காகத்தான் நான் பேசறேன். வைகோ தமிழன்தானே... அப்புறம் ஏன் தன் கட்சி பேர்ல திராவிடத்தை வெச்சுக்கணும்? அதை மாத்தச் சொல்லுங்க.. திராவிடன் பிராமண எதிர்ப்புனு சொல்லி ஊரை ஏமாத்துனது போதும். பிராமணனும் தமிழன்தானே? அவன் தமிழ் தானே பேசறான்? பார்ப்பனீய எதிர்ப்புனு சொல்லி இன்னமும் ஏமாத்தாதீங்க. இதனால, கலைஞர் கோவிச்சுக்கிட்டாலும் பரவாயில்லை. அவருக்கு இதுல உள்ள நியாயம் புரியும். அவர் என்னை விமர்சித்தால் விமர்சிக் கட்டும். ஆனால், நான் பின்வாங்க மாட்டேன். நான் திராவிடத்துக்கு எதிரி தான், எனக்குத் தமிழன்தான் முக்கியம்

(ஆனந்தவிகடன் 14.11.2012 பக்கம் 177-_178)

பாரதிராஜாவின் இந்தப் பேட்டிதான் ஆச்சரியத்தையும் தூண்டியது....
பொதுவாக தமிழனுக்குப் பணமும், பக்தியும் வந்தால் எதிரி கால்களைத் தேடு வான் என்று சொன்னார் தந்தை பெரியார்.

இப்பொழுது பாரதி ராஜாவுக்கு என்ன வந்தது? என்ன சேர்ந்தது என்றும் தெரியவில்லை. ஒரு நிகழ்ச்சியை நினைவூட்டினால் நமத்துப் போன பாரதிராஜா வின் சிந்தனை கொஞ்சம் சூடேற வாய்ப்புண்டு.

வேதம் புதிது என்ற மிகச் சிறப்பான படம் ஒன்றைத் தயாரித்தார் பாரதிராஜா.
ஆனால் அந்தப் படத்தை வெளியிடு வதில் தடங்கல்; படம் ஒன்றை எடுத்து உரிய காலத்தில் அதனைத் திரையிட வில்லையென்றால் தயாரிப்பாளன் நெற்றியில் நாமம்தானே.

படத்தில் பார்ப்பான் ஒருவன் பூணூலை அறுத்து எறிவது போன்ற காட்சி, ஆச்சாரமான அய்யர் குடும்பத்தில் பிறந்த ஒரு சிறுவன், தோப்பனார் இறந்த பிறகு தேவர் குடும்பத்தில் வளரும் சூழல்.

தேவர் வேடத்தில் நடித்த சத்யராஜ் சக்கைப் போடு போட்டார். நக்கல் ஏகடியம் எல்லாம் உண்டு.

பார்ப்பனர்கள் வட்டாரத்திலே சல சலப்பு! அப்பொழுது குடியரசு தலைவரோ பட்டுக்கோட்டை ஆர். வெங்கட்ராமய்யர்; முதல் அமைச்சரோ எம்.ஜி.ஆர். அவர்கள்.

முதல் அமைச்சரின் கதவைத் தட்டினார்கள். முதல் அமைச்சர் எந்தத் துருப்பைப் பயன்படுத்தினார், குடியரசு தலைவரிடம் தெரியுமா?
இந்தப் படத்தை உடனடியாகத் திரையிட அனுமதிக்காவிட்டால், பிரச் சினையை திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி கையிலே எடுத்துக் கொள் வதாக இருக்கிறார் என்று போட்டாரே ஒரு போடு! அப்புறம் என்ன? வேதம் புதிது திரையரங்குகளில் ஓட ஆரம்பித்து விட்டது.
 
இவை எல்லாம் மாஜி ராஜாக்களுக்கு வசதியாக மறந்து போய் விட்டதா? இப்பொழுது அவாளின் நேசமும், பாசமும் இரட்டைக் குதிரைகளாக வாசலில் வந்து நிற்கிறதா?

டி.வி. நேஷனல் புரோகிராமில் முதல் மரியாதை இடம் பெறுவதாகப் பரவலாகப் பேசப்பட்டு, பிறகு அது இடம் பெறாமல் போய் விட்டது. இதுகுறித்துப் பலர் பலவிதமாகக் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். ஏன் இடம் பெறவில்லை என்பது எனக்கும் புரியாத மர்மம். டி.வி.யில் முதல் மரியாதையைப் போடப் போவதாகத் தெரிவிக்கப்பட்டது. அதற்கு என்னுடைய இண்டர்வூவியூ வேண்டும் என்று சொல்லி ஸ்ரீ வித்யாவைக் கொண்டு என்னை ஒரு இண்டர் வியூவும் எடுத்தார்கள். குறிப்பிடப்பிட்டிருந்த தேதியில் முதல் மரியாதை ஒளிபரப்பாகவில்லை. விசாரித்தேன். படத்தை இரண்டு மணி நேரத்திற்குக் குறைக்க வேண்டியிருப்பதாகச் சொன்னார்கள். படத்தில் நீங்கள் கை வைத்து விட வேண்டாம். நானே குறைத்துத் தருகிறேன் என்று படத்தைத் தருவித்து, நானே இரண்டு மணி நேரத்துக்கு எடிட் பண்ணிக் குறைத்துக் கொடுத்தேன். மறுபடியும் குறிப்பிட்ட தேதியில் படம் ஒளிபரப்பாகவில்லை.
என்ன காரணம் என்று கேட்டுப் பார்த்ததில், நீங்க மேலே போய் ட்ரை பண்ணுங்க சார் என்று சொன்னார்கள். இங்கே இருக்கிறவர்கள்தான் அப்படிச் சொன்னார்கள். ட்ரை பண்ணுங்கள் என்றால் எப்படி? எனக்கு ஒன்றும் புரியவில்லை. என்னவோ லாபியாம். அப்படியெல்லாம் போக நான் விரும்பவில்லை; அது எனக்கு அவசியமும் இல்லை.

                             (தமிழ்நாடு திரைப்படப் பத்திரிக் கையாளர் சங்கத்தில் நடைபெற்ற கலந் துரையாடலில் பாரதிராஜா உதிர்த்த சில கருத்துக்கள்)
வெள்ளிமணி (தினமணி இணைப்பு) 9.1.1987 பக்கம் 2

இன்னொரு சேதியும் உண்டு.  அது என்னவாம்? பாரதிராஜா பூடக மாகச் சொன்னாரே - அந்த லாபி என்பது என்ன? சங்கராச்சாரியார் வரை வால் நீண்டு கொண்டு போகுமே - அந்த அக்ரகார லாபிபற்றி எப்படி எல்லாம் அவருக்கே உரித்தான முறையில் பற்களை நறநற என்று கடித்து இருப்பார்? - இவையெல்லாம் மறந்து போயிற்றா?

இன்றைக்குத் தமிழர்களுக்கு வந்த வாழ்வெல்லாம் தந்தை பெரியாரும் திராவிடர் இயக்கமும் ஊட்டி வளர்த்த பார்ப்பன எதிர்ப்புதான் என்பதை மறந்து விடலாமா?

பார்ப்பன எதிர்ப்பு என்னும் பாம்பின் நச்சுக்கடிக்கு ஆளாவது பெரியாரும் - திரா விடர் இயக்கமும்; அவற்றின் பலனைக் கூசாமல் நெளியாமல் அனுபவிப்ப வர்களோ பாரதிராஜா உள்ளிட்ட பார்ப்பனர் அல்லாதார் என்பதை மறந்து விட்டால் அதன் பொருள் பார்ப்பனப் போதை அவர்களின் தலையில் ஏறி விட்டதுதான் பழசை மறந்து விட்டதுதான்!

பாரதிராஜா என்ன சொல்லுகிறார்?

திராவிடன், பிராமணன் எதிர்ப்புனு சொல்லி ஊரை ஏமாத்தினது போதும்; பிரா மணனும் தமிழன்தானே? அவன் தமிழ்தானே பேசறான்? பார்ப்பனீய எதிர்ப்புனு சொல்லி இன்னமும் ஏமாத்தா தீங்க - என்று வரலாற்று அறிஞர் பாரதி ராஜாவே கூறி விட்டார். நம்ப வேண்டியது தான்
.
இவர் கூற்றுப்படி தந்தை பெரியார், அறிஞர் அண்ணா போன்ற நம்மினத் தலைவர்கள் ஏமாத்துக்காரர்கள் என்று சொல்லும் பொழுது பார்ப்பனர்களுக்குப் பால் பாயாசம் சாப்பிட்டது மாதிரி இருக்கும். இப்படி சொன்னதற்காக பாரதி ராஜாக் களுக்கு ஆழ்வார் பட்டம் கிடைத்தாலும் கிடைக்கக் கூடும்.
மலம் எடுப்பவர்களுக்கு அதன் வாடை மரத்து விட்டது போல. ஆயிரம் ஆயிரம் ஆண்டு காலமாக சூத்திர இழிவில் மூழ்கிக் கிடந்தவர்களுக்கு அந்த இழிவு என்பது ருசியாகக்கூட இருக்கும்.

ஈரோட்டிலே இன்றைக்கு 73 ஆண்டுகளுக்கு முன்பே தமிழன் யோக்கியதையை எடுத்துச் சொன்னார் தந்தை பெரியார் (11.11.1939 அன்று)
இன்று பார்ப்பன விஷ நோய் நம் நாட்டில் பெருகியதற்கும் நம் மக்கள் அதற்குப் பலியாவதற்கும் காரணம் பார்ப்பனர்கள் அல்ல; நாம்தான்; நம் முடைய அறிவீனம் என்ற அசுத்தத்தால் அந்நோய்க்கு ஆதாரமான பூச்சியை வளர்த்துக் கொண்டோம். அந்த அசுத்தம்தான் தமிழன் ஆரியப் பார்ப்பன மதத்தைத் தழுவியதாகும்.

தமிழன் என்று ஆரிய மதமாற்றம் அடைந்தானோ ஆரியனை (பார்ப் பானை) தமிழன் என்று தன்னுடைய நாட்டான் என்று கருதினானோ, அன்றே தமிழனுக்கு உள மாற்றமும் பிளேக்கும் ஏற்பட்டு விட்டன. அன்று முதலே தமிழனுக்கு இருந்த கொஞ்ச நஞ்ச மானமும் வீரமும், அறிவும், ஆற்றலும் அடியோடு அழிந்து ஆரியனுக்கு தமிழன் ஆண் பெண் அடங்கலும் உண்மை வைப்பாட்டி மக்கள் ஆக இருக்கும்படி மத ஆதாரங்கள் ஏற்படுத்தப்பட்டன. ஆதாரங்களே தமிழனுக்கு அரசியல் சட்டமாகவும் ஆயின என்று ஈரோட்டிலே இனவுணர்வுடன் சுட்டிக் காட்டினார். ஈரோட்டு ஏந்தல் (11.11.1939).

எப்பொழுது பாரதிராஜா வாயால் பிராமணன் என்று வந்ததோ, அந்தக் கணமே தன்னை சூத்திரன் என்று ஒப்புக் கொண்டு விட்டார் என்று பொருள்.
தமிழர்களே உங்கள் சூத்திரப் பட்டம் ஒழிய பார்ப்பானைப் பிராமணன் என்று அழைக்காதே! என்று தந்தை பெரியார் அவர்கள் எச்சரித்தது என்ன விளை யாட்டா?

பார்ப்பான் தமிழ் பேசுகிறானாம் - அதனால் அவன் தமிழனாம்.
அறிஞர் அண்ணா தான் மிக அழகாகச் சொன்னார். ரைட் ஆனரபிள் சீனிவாச சாஸ்திரி ஆங்கிலேயர்களைவிட அழகாக ஆங்கிலம் பேசுவார் -அவரை சில்வர் டங்க் சீனிவாசய்யர் என்று கூடச் சொல்லுவதுண்டு - அதற்காக அவர் என்ன ஆங்கிலேயர் ஆகி விட்டாரா? என்று கேட்டதைத்தான் மெத்த படித்த பாரதிராஜா அவர்களுக்கு நினைவூட்டு கிறோம்.

பாரதிராஜாக்களை கேட்கிறோம். நெடுஞ்செழியன் என்றும், கரிகாலன் என்றும், அறிவுடை நம்பி என்றும், அன்பழகன் என்றும், அறிவழகன் என்றும், எழிலரசன் என்றும், குலோத் துங்கன், தமிழரசன் என்றும், தமிழில் பெயர் சூட்டிக் கொண்டுள்ள ஒரே ஒரு பார்ப்பானைக் காட்டச் சொல்லுங்கள் பார்க்கலாம்.
வேண்மா என்றும், தமிழ்ச்செல்வி என்றும், கலைச் செல்வி என்றும், செந்தாமரை என்றும், அன்பரசி என்றும் பெயர் சூட்டிக் கொண்டுள்ள ஒரே ஒரு பார்ப்பனப் பெண்ணை கொண்டு வந்து நிறுத்த முடியுமா?

தமிழ் செம்மொழியாக அறிவிக்கப் பட்டபோது தினமலர் என்ன எழுதியது தெரியுமா - பாரதிராஜா அவர்களே?

காவிரி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும். ஏழை நெசவாளர் வீட்டுத் தறி நிற்காமல் இயங்கும். ஒரு வேளை கஞ்சிக்கே வழி இல்லாதவருக்கு மூன்று வேளையும் மட்டன் பிரியாணி கிடைக்கும் (தினமலர் வாரமலர் 13.6.2004) என்று பார்ப்பன ஏடு எழுதியதை அறிவாரா பாரதிராஜா?

பெங்களூர் திருவள்ளுவர் சிலை திறக்கப்படுவதன் மூலம் கன்னடர் தமிழர் இடையே நல்லுறவு ஏற்படும் என்று எடியூரப்பா கூறியுள்ளாரே? என்பது கேள்வி.

அதற்குத் துக்ளக் பார்ப்பனனின் பதில் என்ன தெரியுமா?

நல்லுறவா? நல்ல உறவுதான். யாராவது கன்னட வெறியர்கள் ஒரு சமயம் பார்த்து அந்தச் சிலையை அவ மதிக்காமல் இருந்தால் போதுமே (துக்ளக் 18.8.2009) என்று எழுதினாரே - தெரியுமா பாரதிராஜாக்களுக்கு?

அந்தச் சிலை அவமதிக்கப்பட வேண்டும் என்ற உள்ளக் கிடக்கையைத் தானே வேறு வார்த்தைகளில் கூறியுள்ளார் சோ!

சென்னை மாநகர மேயர் வணக்கத்துக்குரிய மா. சுப்பிரமணியம் அவர்கள் சென்னை - கடை வீதிகளில் வணிக நிறுவனங்களில் விளம்பரப் பலகைகளில் தமிழ் இடம் பெற வேண்டும் என்ற ஆணை பிறப்பித்து, அவரே வீதியில் இறங்கிப் பணியாற்றிய போது அதனை மொழி நக்சலிசம் என்று சொன்ன துக்ளக் சோ ராமசாமிகள் தமிழரே என்று நம்பச் சொல்லுகிறாரா அன்புக்கும், பாராட்டுக்கும் உரிய பாரதிராஜா?

இயக்குநர் பாரதிராஜா அவர்களே! காமராசரை - ஆச்சாரியார் கறுப்புக் காக்கை என்று சொன்னது எந்த அர்த்தத்தில்? அதே காமராசரை பச்சைத் தமிழர் என்று தந்தை பெரியார் சொன்னது எந்தப் பொருளில்? இரண்டுக்கும் இடையே இழைந்தோடும் அந்த மெல்லிய இழையைக் காண ஈரோட்டுக் கண்ணாடி தேவைப்படும்.

இன்றும்கூட கோயில்களில் வழி பாட்டு உரிமை தமிழில் என்றால் எதிர்த்து நீதிமன்றம் செல்பவர்கள் யார்? அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்று சட்டம் கொண்டு வந்தால் அதனை எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்றவர்கள் - _ இப்பொழுது சென்று சட்டத்தை முடக்கியவர்கள் முப்புரிப் பார்ப்பனர்கள் என்பது பச்சைத் தமிழரான பாரதிராஜாக்கள் தெரிந்து கொள்ளா விட்டால் நாம் என்ன செய்ய முடியும்?

திராவிட இயக்கத்தைக் கொச்சைப் படுத்தும் ராஜாக்களே! பொது வீதிகளில் தாழ்த்தப்பட்டவர் நடக்கும் உரிமைக்கு வழி செய்தது யார்?

அரசு பதிவேடுகளில் சூத்திரர்கள் (பார்ப்பனர்கள் வேசி மகன் மனு தர்மம் அத்தியாயம் 8 சுலோகம் 415) என்று இருந்ததை நீக்கியது யார்?

சென்னையில் அன்றைய மவுண்ட் ரோட்டிலும், ஜார்ஜ் டவுனிலும் இருந்த உணவு விடுதிகளில் பறையர்களும், நாய்களும், குஷ்ட ரோகிகளும் உள்ளே நுழையக் கூடாது என்று போர்டு வைத்திருந்தது தெரியுமா? அதனை மாற்றியது யார்?

மருத்துவக் கல்லூரிகளில் சேர சமஸ்கிருதம் படித்திருக்க வேண்டும் என்று வைத்திருந்த நிபந்தனையை தூக்கி எறிந்தது எந்தக் கட்சி ஆட்சி யில்?
பள்ளிகளில் தாழ்த்தப்பட்டவர்களைச் சேர்க்கா விட்டால் மானியம் கிடையாது; பேருந்துகளில் தாழ்த்தப்பட்டவர்களை அனுமதிக்கா விட்டால் உரிமம் ரத்து என்ற ஆணை பிறப்பித்தது திராவிடர் இயக்க ஆட்சி என்ற அரிச்சுவடியாவது தெரியுமா?

தாழ்த்தப்பட்டவர்களுக்கும் பிற்படுத்தப் பட்டவர்களுக்கும் கல்வி கற்க இட ஒதுக்கீடு சட்டத்தை முதன் முதலில் கொண்டு வந்தது எந்த அமைச்சரவை?
இன்றைக்குத் தமிழ் நாட்டில் 69 விழுக்காடு இடம் வந்தது யாராலே?
இதெல்லாம் தான் திராவிடர் இயக்கம் - அதன் தலைவர்கள் _ ஆட்சி _ மக்களை ஏமாற்றிய காரியங்களா?

சூத்திரன் என்றால் ஆத்திரம் கொண்டு அடி என்ற தன்மான உணர்வை ஊட்டிய தந்தை பெரியார் ஏமாற்றுக்காரரா?

அடக்கம் வேண்டாமா? நாக்கு இருக்கிறது என்பதற்காக எதை வேண்டும் என்றாலும் பேசுவீர்களா?

தந்தை பெரியார் மறைந்தபோது தலையங்கம் தீட்டாத ஒரே பார்ப்பன ஏடு இந்து என்பதை அறிவீர்களா?

புரட்சிக் கவிஞர் பாரதிதாசன். அன்னை மணியம்மையார் மறைவுகளை மரணக் குறிப்பு வெளியிடும் (Obituary) பகுதியில் வெளியிட்டு அவமானப்படுத் திய இந்து வகையறாக்கள் தமிழர்கள் ஆகி விட்டார்களா?

பத்திரிகை உலகில் ஜாம்பவனாகிய சி.பா. ஆதித்தனார் இறந்ததை உள்ளே மறைவு செய்தியாக வெளியிட்ட மவுண்ட் ரோடு மகாவிஷ்ணுவான இந்து ஏடு, அதே நாளில் மறைந்த மிருதங்க வித்வான் பாலக்காட்டு மணி அய்யர் பற்றி முதல் பக்கத்தில் வரிந்து தள்ளியிருந்தது தெரியுமா?

திராவிடர்கள் என்றாலும் தமிழர்கள் என்றாலும் எந்த வகையிலும் பொருள் வேறுபாடு கிடையாது. திராவிடர்கள் என்பது ஆரியர்கள் இயக்கத்திற்குள் உள்ளே நுழையக் கூடாது என்கிற தற்காப்பு ஏற்பாடு - எத்தனை விளக்கங் களைக் கூறி விளக்கி இருப்பவர் வெண் தாடி வேந்தரான தந்தை பெரியார்.
ஒரு குடும்பத்தில் பிறந்தவர்கள் வேறு வேறு இடங்களுக்குச் சென்று விட்டால் அவர்களின் குடும்பப் பெயரோ, பெற்றோர்களின் பெயர்களும் மாறி விடுமா?
ஆரிய ஏடுகளை படித்து விட்டு அரைகுறையாகத் தெரிந்து கொண்டு வரலாற்றுத் திருப்பத்தை ஏற்படுத்திய திராவிடர் இயக்கத்தையோ, அதன் ஒப்பற்ற பெருமை மிகுந்த தலைவர்களையோ இழிவுபடுத்த வேண்டாம்!
பாரதிராஜாக்களிடம் இதனை எதிர் பார்க்கவில்லை. வருத்தம்தான்! என்ன செய்வது? தந்தை பெரியாரையும் அவர்தம் திராவிட இயக்கத்தையும் ஏமாற்றுக்காரர்கள் என்று சொன்ன பிறகு சொரணையற்றவர்களாக நாம் இருக்க முடியாதே!

பாரதிராஜாக்கள் மீண்டும் மனுதர்மத் துக்கு முத்தமிட ஆசைப்பட வேண்டாம். இனம் எது? பகை எது என்று தெரிந்து கொள்வதில்கூட தடுமாற்றமா? தமிழர் உணர்வு இதுதானா?


----------------------- மின்சாரம் அவர்கள் 17-11-2012 “விடுதலை” ஞாயிறுமலரில் எழுதிய கட்டுரை

35 comments:

தமிழ் ஓவியா said...


கடவுளை மறுப்போம்! பண்டிகைகளை வெறுப்போம்!


- க.சிந்தனைச்செல்வன்


கடவுள் கொள்கை என்பது உலகம் தோன்றியதற்கான காரணங்களை விளங்கி கொள்ள இயலாத மானுடம் இந்த உலகை யாரோ படைத்திருக்கி றார்கள் என்றும் மலைகளும், காடுகளும், நதிகளும் இயற்கை வளங்களும் நிறைந்த இந்த அற்புத பூமி தானாக எப்படி தோன்றியிருக்க முடியும் என நினைத்து கடவுள் என்ற ஒருவர்தான் உலகைப் படைத்தான் என்ற முடிவுக்கு வந்தது மனித சமூகம்.
தன்னால் கட்டுப்படுத்த முடியாத- இயலாத இயற்கையை, சூரியனை, மழையை, இடியை, காற்றை, நெருப்பை பார்த்து பயந்த மானிடக் கூட்டம் அச்சத்தினால் அவற்றை வணங்கத் தொடங்கியது. அச்சமும் அறியா மையுமே கடவுளின்,- மதங்களின் தோற்றத்திற்கு முழு முதற்காரணியாய் அன்று முதல் இன்று வரை விளங்குகிறது.

மதத்திற்கும் உலக இயற்கைக்கும் எப்போதுமே சம்பந்தம் இருப்பதில்லை. ஏனெனில் அனேகமாக, எல்லா மதங்களுமே உலக இயற்கை மீது ஆதிக்கம் செலுத்தி அதை வழி மறித்து கண்மூடித்தனமாக செயற்கையில் திருப்புவதையே ஜீவநாடியாய் கொண் டிருக்கிறது. அதனால் இயற்கை அறி விற்கும் ஆராய்ச்சிக்கும் இடமில்லாமல் போய் விடுகின்றது என்றார் தந்தை பெரியார்.

அறிவிற்கும் ஆராய்ச்சிக்கும் இட மளிக்காத உலகத்தில் தோன்றிய மிகப்பெரிய மதங்கள் கடவுளை சர்வ வல்லமை படைத்தவராக அற்புதங் களை நிகழ்த்திக் காட்டுபவராக அதி சயங்களை, சாகசங்களை செய்பவராக, உருவாக்கி மனிதனுக்கு மேலான காரியங்களை செய்பவன்தான் கடவுள் என்று நமக்கு கற்பித்தார்கள். அதேசமயம் மனிதனின் உணர்ச்சிகளை, விருப்பு வெறுப்புகளை, கோபம், பழிவாங்குதல், தண்டித்தல் போன்ற குணங்களை கடவுளின் குணங்களாக நமக்கு போதித்தார்கள்.

இந்திய துணைக்கண்டத்தை பொறுத்தவரை கைபர்- போலன் கணவாய் வழியே ஆடுமாடு ஓட்டிவந்த ஆரியக்கூட்டம் அறியாமையில் இருந்த மக்களை அடிமைப்படுத்த இந்த கடவுள் மதக்கோட்பாடுகளை பயன்படுத் தினார்கள். தங்கள் இருப்பை நிலை நாட்டவும் உறுதிப்படுத்தவும் அப்பாவி மக்களை தங்கள் சூழ்ச்சியாலும், வஞ்சகத்தாலும் கடவுள் குறித்த கற்பனைகளை நம்பும்படியாக பரப்பி னார்கள். இயற்கையை வழிபட்ட மக்களிடம் ஏராளமான கடவுளர் கடவுளச்சிகளைப் புகுத்தினார்கள். தங்களுடைய இழிகுணங்களையும், காட்டுமிராண்டித் தனங்களையும் ஒழுக்ககேடுகளையும் காமச்சுவை சொட்டும் கதைகளாக்கி அவற்றை கடவுளின் லீலைகள் என்று செவி வழிச் செய்திகளாகவும், பின்னர் பக்தி இலக்கியங்களாகவும் பரப்பி மக்களை மயக்கத்தில் ஆழ்த்தினார்கள். மதம் என்றால் கடவுள் இருக்க வேண்டும் அந்த கடவுளை மக்கள் ஏற்க வேண்டும் என்பது எழுதப்படாத விதியாகிப்போனது.

தெய்வாதீனம் ஜெயத் சர்வம்
மந்த்ராதீனம து தெய்வதம்
தன்மந்திரம் பிரம்மாணாதீனம்
தஸ்மத் பிரம்மணம் பிரபுஜெயத்
(ரிக் வேதம் சுலோகம் 62ஆவது பிரிவு 10ஆவது சுலோகம்)

தமிழ் ஓவியா said...

பொருள்: உலகம் கடவுளுக்கு கட்டுப்பட்டது கடவுள்கள் மந்திரங் களுக்கு கட்டுப்பட்டவர்கள். மந்திரங் கள் பிராமணர்களுக்கு கட்டுப்பட்டவை. பிராமணர்களே நமது கடவுள் என்ப தாகும். கடவுளுக்கும் மனிதனுக்குமான இடைத்தரகர்களாகவும் மனிதக் கடவுளாகவும் கருதப்பட்ட பார்ப் பனர்கள் கோடிக்கணக்கான கடவுள்கள், ரிஷிகள் சிவன், பிரம்மா, விஷ்ணு அவர்களின் மனைவிகள், குழந்தை குட்டிகள், சொந்த பந்தங்கள் என்று எல்லாவற்றையும் கடவுளாக வணங்க செய்தான். சதுர்வர்ணம் மயாசிருஷ்டம் நான்கு வர்ணங்களை நானே படைத்தேன் என்று கடவுளின் பெயரால் சமூகத்தை வர்ணங்களாக, சாதிகளாக பிரித்தது ஆதிக்கக் கூட்டம் பிறவி ஏற்றத்தாழ்வுகளை நிலை நிறுத்தியது.

கடவுள் மறுப்பு ஏன்?

ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை உண்டு என்பதுபோல கடவுள் தத்துவம் தோன்றிய காலந்தொட்டே கடவுள் மறுப்பு தத்துவங்களும் தோன்றி கடவுள் கொள்கையை எதிர்த்து வருகிறது. கடவுளால் உலகம் படைக்கப்பட்டது என்ற தத்துவம் கேள்வி கேட்கப்பட்டது.

பூமியை படைத்தது கடவுள் என்றால் கட வுளை படைத்தது யார்? அதற்குமுன் இந்த பூமி இருந்ததா? இல்லையா? இல்லையெனில் கடவுள் எங்கேயிருந்து இந்த உலகைப் படைத்தார்? எது மற்றதிலிருந்து எதையும் படைக்க முடியுமா? கடவுள் தானாக தோன் றினால் பூமி தானாக தோன்ற முடியாதா? என்ற அறிவார்ந்த கேள்விகளுக்கு ஆத்திகவாதிகள் பதிலளிக்க முடியுமா? உலகம் படைக்கப்படவில்லை பரிணமித்தது என்பதுதான் அறிவியல். கடவுள்தான் உலகைப்படைத்தார் எனில் கடவுள் மறுப்பாளர்களை யார் படைத்தார்கள்? இன்றைக்கும் நாம் உபயோகிக்கும் அனைத்து வசதிகளோடும் கடவுள் உலகத்தை படைத்திருக்க வேண்டாமா? மனித குலத்தின் மாபெரும் பாய்ச் சலுக்கு காரணமான சக்கரம், கணினி இன்னபிற சாதனங்கள் மனித உழைப் பின் அறிவின் மகத்துவம் அல்லவா? உலகில் பலரை ஏழைகளாகவும் சிலரை பணக்காரர்களாகவும் படைத்தது கடவுள் என்றால் அந்தக்கடவுள் நமக்குத் தேவையா?

ஒருவன் உயர்ந்தசாதி மற்றவன் தாழ்ந்த சாதி இதை உருவாக்கியவன் கடவுள் எனில் அந்த தத்துவத்தை கட்டுடைக்க எல்லாம் அவன் செயல், அவனின்றி ஓர் அணுவும் அசையாது என்பதெல்லாம் உண்மையா? நாட்டில் நடக்கும் நன்மைகளுக்கு காரணம் கடவுள் என்றால் தீமைகளுக்கும் அவன்தானே பொறுப்பு! விபத்து, கொலை, கொள்ளை, பாலியல் குற்றங்கள் எல்லாம் அவன் செயல்தானா? அவன் ஆட்டுவிக்க நாம் ஆடுகிறோம் என்பது உண்மையானால் காவல்நிலையங்கள், நீதிமன்றங்கள் எதற்கு? சிந்திக்க வேண்டாமா? எல்லாம் வல்ல ஆண்டவன் என்கிறார்கள். பூகம்பத்தை, சுனாமியை ஏன் தடுக்கவில்லை?

எனவேதான் பெரியார் சொன்னார்

கடவுள் இல்லை கடவுள் இல்லை

கடவுள் இல்லவே இல்லை

கடவுளை கற்பித்தவன் முட்டாள் கடவுளை பரப்பியவன் அயோக்கியன்

கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி

இனியும் நாம் காட்டுமிராண்டிக ளாக வாழலாமா? கையாலாகாதவனுக் குத்தான் கடவுள் துணை; அறிவில் லாதவனுக்குத்தான் எல்லாம் ஆண்ட வன் செயல்; எனவே கடவுளை மறுப்போம். இல்லாத கடவுளுக்கு திருவிழாக்களும், பூசைகளும், பண்டி கைகளும் ஏன்? என்று கேள்வி கேட்போம்

பண்டிகைகள் ஏன்?

மாதந்தோறும் பண்டிகைகள் என ஆண்டு முழுவதும் பண்டிகைகள் கொண்டாடுவது எதற்காக? விநாயகர் சதுர்த்தி, ஆயுதபூசை, தீபாவளி, வைகுண்ட ஏகாதேசி, மாசி மகம், பங்குனி உத்திரம், திருவண்ணாமலை தீபம், கிரிவலம், நவராத்திரி, சிவராத்திரி, கிருத்திகை தீமிதி, தேர், காவடி எடுத்தல் என எத்தனை எத்தனை பண்டிகைகள். எங்கும் எப்போதும் அடைமழையென பக்தி பிரச்சாரம். இவற்றை விளம்பரப்படுத்தி மக்களை மயக்கத்தில் ஆழ்த்தும் ஊடகங்கள். பண்டிகை களால் ஏதேனும் பலன் உண்டா? சரஸ்வதி பூசை கொண்டாடும்நாட்டில் தற்குறிகள் இருக்கலாமா? ஆயுதபூசை கொண்டாடும் நம் நாடு உலகில் என்ன வல்லரசு நாடா? விநாயகர் சதுர்த்தி என்ற பெயரில் மதவெறியை பரப்பு வதற்கு ஒரு பண்டிகையா? தீபாவளி கதை நம் இனத்தை இழிவுபடுத்தி ஆரியத்தை உயர்த்துவதை அனுமதிக் கலாமா? பண்டிகைகளால் விரயமாகும் பணம் எவ்வளவு? குடிபோதையில் மதிப்பையும் தன்மானத்தையும் இழக்கச் செய்வது பண்டிகைகள் அல்லவா? பண்டிகைகள் கொண்டாடுவது மதத்தை, சாதியை, இழிவை நிலைநிறுத்த பார்ப்பான் செய்த தந்திரம் என்றார் பெரியார்.

ஆண்டவன் முன் அனைவரும் சமம் என்கிறான். ஆகமம் தடுக்கிறது என்று கூறி கருவறைக்குள் அனுமதி மறுக்கிறான். இவ்வளவு பண்டிகைகள் கொண்டாடும் நம்மைவிட பார்ப்பான் தான் மேலானவனாம். நாட்டுக்குத்தேவை நவீன கழிப்பறைகளே, கோவில்கள் அல்ல என்று மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கூறியதற்கு பா.ஜ.க துள்ளி குதிப்பது ஏன்? கடவுள்தான் பார்ப்பானின் உயிர்நாடி. மூலத்தை வேரறுப்போம். அடிமைத்தனத்தை உறுதி செய்யும் நிகழ்வுகள்தான் பண்டிகைகள் ஆதலால் தமிழர்களே இன இழிவுக்கு காரணமான கடவுளை மறுப்போம் பண்டிகைகளை வெறுப்போம்.17-11-2012

தமிழ் ஓவியா said...


பெற்றோர்களே! பெற்றோர்களே!


அமெரிக்காவில் கலிபோர்னியாவில் உள்ள -ஸ்ரீஇண்டர்நேஷனல் என்ற ஆராய்ச்சி நிறுவனம் எட்டாயிரம் குழந்தைகளிடம் இது குறித்து ஆய்வு மேற்கொண்டது. ஆய்வுக்குத் தலைமை வகித்த டாக்டர் எரிகா கெய்லர் கூறியதாவது.

ஆய்வு மேற்கொள்ளப்பட்ட குழந்தைகள் 9 மாத குழந்தைகளாக இருந்த போதிலிருந்து எவ்வாறு தூங்குகின்றன என்பது குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டன.
அதே குழந்தைகளுக்கு 4 வயதான பின்பும் விவரங்கள் சேகரிக்கப்பட்டன.

தினசரி இரவு சீக்கிரமே தூங்கச் செல்வதுடன் 11 மணி நேரம் தூங்கும் குழந்தைகள் சொல்வதை விரைவாகப் புரிந்து கொள்ளுதல், மொழிகளை எளிதாகக் கற்றுக்கொள்ளுதல் கணிதத்தில் புலியாக விளங்குதல் போன்றவற்றில் படுசுட்டிகளாக விளங்குகின்றன. குறித்த நேரத்தில் தூங்கச் செல்லாததுடன் 11 மணி நேரத்துக்கும் குறைவாக தூங்கும் குழந்தைகள் அவ்வளவு சுட்டிகளாக விளங்காததும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

எனவே தினசரி இரவு சீக்கிரமே குழந்தைகளைத் தூங்கச் செய்வதன் மூலம் அவர்களுக்குத் தேவையான அளவு தூக்கத்தை பெற்றோர்கள் உறுதி செய்ய வேண்டும். தூங்குவதற்கு முன் குழந்தைகளுடன் உரையாடுவது, கதைகள் சொல்வது ஆகியவை பயனுள்ளதாக அமையும் என்றார். குழந்தைகளை சீக்கிரமே தூங்கச் செய்ய வேண்டும் என்பதையே இதற்கு முந்தைய ஆய்வுகளும் வலியுறுத்தின என்பது குறிப்பிடத்தக்கது.17-11-2012

தமிழ் ஓவியா said...


தமிழைப் பற்றி தமிழர் மற்றும் பார்ப்பனர் கருத்துகள்


மனோன்மணியம் ஆசிரியர் பி. சுந்தரம்பிள்ளை தமிழைப் பார்த்து சொல்லுகிறார்:

ஆரியம் போலுலக வழக்கழிந் தொழிந்து சிதையா உன் சீரிளமைத் திறம் வியந்து செயல் மறந்து வாழ்த் துதுமே என்று சொல்லுகிறார்.

இது ஒரு தமிழ் மகனால் சொல்லப் பட்டது.

இனி சுப்பிரமணிய பாரதி தமிழ்த் தாயே சொல்லுவதாக சொல்லுவதைப் பாருங்கள்.

உயர் ஆரியத்திற்கு நிகரென வாழ்ந்தேன் என்று சொல்லுகிறார்.

இது ஒரு ஆரிய மகன் - பார்ப்பனரால் சொல்லப்பட்டது.

என்ன செய்தாலும் ஜாதிப் புத்தி போகாதய்யா ராஜகோபால மாலே என்று பெரியார் கூறிய அனுபவ மொழியை உறுதிப்படுத்த இவை உதவுகின்றன போலும்.
சுந்தரம் பிள்ளை அவர்கள் பேச்சு வழக்கில் இல்லாமல் அழிந்துபட்ட வடமொழி போல் உன் (தமிழின்) கதி ஏற்பட்டு விடாமல் என்றும் ஒன்றுபோல் இளமைத் தன்மையுடன் விளங்குகிறாய் என்று போற்றுகிறார்.

பாரதியோ போற்றாவிட்டாலும் தமிழ்த்தாய்.

உயர்ந்த மொழியான ஆரிய (வட) மொழிக்கு சமானமாக ஒரு காலத்தில் வாழ்ந்தேன் இப்போது சீரழிந்து கெட்டுப் போய் விட்டேன் என்று புலம்புவதாகத் தாழ்வுபடுத்திக் காட்டுவதோடு, ஆரியம் இன்றும் மேன்மையாக இருப்பதாகவும் தமிழ்த்தாயைக் கொண்டே சொல்லச் செய்கிறார்.

ஆகவே, சுப்பிரமணிய பாரதியின் தமிழ்ப் பற்றை அவரது நாளைக் கொண்டாடும் பண்டித முண்டங்கள் இதிலிருந்தாவது உணர்வார்களாக.

இனத்தின் பேரால் பார்ப்பனரும், மதத்தின் பேரால் இஸ்லாமியரும், வகுப்பின் பேரால் சட்டைக்காரர்களும் ஆகிய இவர்களுக்கு எவ்வளவுதான் இரத்தக் கலப்பு ஏற்பட்டாலும் புத்திக் கலப்பு மாத்திரம் ஏற்படவே ஏற்படாது.

ஒரே புத்திதான்.

அதாவது முறையே தங்கள் இனம், மதம், வகுப்பு ஆகியவைகளை சிறிதுகூட விட்டுக் கொடுக்காமலும் அவைகளையே உயர்வென பேசும் அபிமானமும் வேறு எவனாவது தாழ்த்திச் சொன்னால் ரோஷப்படும் குணமும் கொண்ட உயர்ந்த புத்தி மாறவே மாறாது.

தமிழனுக்கு அவை மாத்திரம் கிடையாது.

கம்பனைப் போல் ஒரு கை கூழுக்கு என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்.

இதனால்தான் அவர்கள் மேன்மை யாய் வாழுகிறார்கள்.

இவர்கள் கீழ்மையாய் (சூத்திரர் களால்) வாழுகிறார்கள்.

தமிழைக் குறைகூற வேண்டாம் என்று எந்த சமஸ்கிருதப் பண்டிதர்கள் வாயிலிருந்தாவது ஒரு வார்த்தையா வது வந்திருப்பதாக ஒரு பண்டித ராவது காட்ட முடியுமா? (குடிஅரசு தொகுதி 30 பக்கம் 49)

- க. பழநிசாமி, திண்டுக்கல் கோட்டகை

தமிழ் ஓவியா said...


நல்ல பெயர் வாங்க ஆசையில்லை


எனக்கு எந்த விதமான உணர்ச்சிக்கும் இடமில்லாத - மானத்தைப் பற்றிக் கவலை இல்லாத - திராவிட மக்களிடத்திலே நல்ல பேர் வாங்க வேண்டுமென்கிற கவலை சிறிதுமில்லை. அப்படிப் போலிநல்ல பெயரின்மீது எனது வாழ்வு ஏற்பட்டிருக்கவில்லை. திராவிடர்களுக்கு ஏதாவது தொண்டாற்ற வேண்டும். முதன்மையாகத் திராவிடன் இழிவு நீக்க வேண்டும் என்ற ஆசையும் கவலையுமே தவிர, வேறு ஒன்றுமே எனது கவலையாக இல்லை. என் வாழ்வைப் பற்றி எனக்குக் கவலை யில்ல; எனக்கு வேறு அடைய வேண்டிய சாதனமும் இல்லை.

- - தந்தை பெரியார்
குடிஅரசு தொகுதி 2 பக்கம் 239)

தமிழ் ஓவியா said...


சூனியம் வைப்பதும் ஏவல் செய்வதும் உண்மையா?


- பொதட்டூர் புவியரசன்

ஒருநாள் காலை ஏழுமணி இருக்கும். அன்றைய நாளேடுகளைப் புரட்டிக் கொண்டிருந்தேன். தொலைபேசி ஒலித்தது. மத்தூர் பன்னீர்செல்வம் என்பவர் பேசினார். அவர் ஊருக்குப் பக்கத்துக் கிராமத்தில் நடக்கும் ஒரு செய்தியைப் பற்றிக் கூறினார். எனக்கும் வியப்பாக இருந்தது. செய்தி இதுதான்.

பறக்கும் தட்டு திறக்கும் கதவு

திருத்தணிக்குப் பக்கத்தில் புச்சி ரெட்டிபள்ளி என்றொரு கிராமம். அங்கே ஒரு வீட்டில் யாரோ சூனியம் வைத்து ஏவல் செய்து விட்டிருக் கின்றனர். வீட்டில் உள்ளபொருட்கள் தெருவில் கிடக்கின்றன. புறக்கடையில் இருந்து கல்லும் கட்டையும் வீட்டுக்குள் வந்து விழுகின்றன. பாத்திரங்கள் எல்லாம் சிதைந்து கிடக்கின்றன. அவ்வீட்டில் எந்த பொருளும் வைத்தது வைத்த மாதிரி இருப்பதில்லை. வீட்டிலிருந்த குடை புறக்கடை மரத்தில் உள்ளது. மருமகள் சாப்பிடும்போது தட்டு கூடப் பறக்கிறது. கதவுகள் தானே திறந்து கொள்கின்றன. இதைப்போன்று அசாதாரண செயல்கள் இன்னும் பல நடப்பதாகக் கூறினார்.

தமிழ் ஓவியா said...

இந்தச் செய்திகளைக் கேட்கக் கேட்க வியப்பாகவும்இருந்தது. வேடிக்கை யாகவும் இருந்தது. என்னுடன் இருந்த பகுத்தறிவாளர் கழக நண்பர்கள் சிலருடன் அன்று பகல் பன்னிரண்டு மணிக்கெல்லாம் அங்குச் சென்றேன். ஒரு ஓடு போட்ட தட்டை வீடு. அய்ம்பது வயதுக்கு மேற்பட்ட கணவன் மனைவி. அவர்களுக்கு இரண்டு மகன்கள். ஒரு பெண், மூத்த மகனுக்குத் திருமணமாகி அந்தப் பெண் வாழ விரும்பாமல் விவாகரத்து போல சமுதாயத்தீர்ப்பு பெற்றுத் தாய்வீடு சென்று விடுகிறாள். இந்த மூத்த மகனுக்கு மறுமணம் செய்யப் பெண் தேடுகையில் முதல் பெண்ணைக் கொடுத்தவரே தன் இரண்டாவது மகளைத் தருவதாகக் கூற, திருமணம் முடிந்தது.

இந்த இரண்டாவது திருமணம் நடந்த பிறகுதான் குடும்பத்தில் பிரச் சினைகள் ஆரம்பமாயின. நாளெல்லாம் நெசவுத் தொழில், வேளைக்கு உணவு, வேளைக்கு உறக்கம் என்று அமைதி யான நீரோட்டம் போல் ஓடிக் கொண்டிருந்த குடும்பத்தில் சூறாவளி வீசத் தொடங்கியது.

துடிக்கும் கணவன்; தடுக்கும் ஏவல் திருமணமான மூத்த மகன் தன் மனைவியை ஆசையாகத் தொட முடியவில்லை அந்த நேரத்தில் தன்னை யாரோ அடிப்பதாகச் சத்தமிடுவாள். இரவு நேரம் வந்தால் ஏதோ ஒரு ஏவல் அவளை ஆட்டிப் படைக்கிறது. மருமகள் சாப்பிடும்போது சாப்பாட்டுத் தட்டைக் கணவனோ, மாமனாரோ அழுத்திப் பிடித்துக் கொள்கிறார்கள். இல்லாவிட்டால் தட்டு நகர்ந்து போய்விடுகிறதாம். வீட்டில் துணிகள் கிழிக்கப்பட்டிருக்கின்றன. அவர்களுடைய நெசவுத் தொழிலில் ஒரு இழை அறுந்தாலே தொழில் தடைப்படும்; ஒரே நேரத்தில் ஆயிரக் கணக்கான இழைகள் அறுக்கப்பட்டி ருக்கும்; அதைச் சரிசெய்து மீண்டும் தொழில் தொடங்க ஒரு வாரம் ஆகும்; மீண்டும் அறுக்கப்பட்டிருக்கும்.

யாரோ ஏவல் செய்து விட்டார்கள். அதனால்தான் இப்படி நடக்கிறது; கோயிலுக்குச் சேவை செய்து பார்த்தோம். பத்தாயிரம் இருபதாயிரம் செலவு செய்து சூனியம் எடுத்துப் பார்த்தோம். என்ன செய்தும் இன்னும் நின்றபாடில்லை என்று அவர்கள் வருத் தப்பட்டுக் கூறினார்கள். உன்னிப்பாகக் கேட்டு விசாரணையை முடித்துக் கொண்டோம்.

சிக்கிய இராட்டை; சிதறிய கட்டை
நாங்கள் இருந்த நேரத்தில் ஏதேனும் நடக்கிறதா என்று கவனித்துக் கொண்டிருந்தோம். மருமகள் நூல் சுற்றிக் கொண்டிருந்தாள். அவர் லேசாக இராட்டையைத் தட்டிவிட அதில் நூல் சிக்கிக் கொண்டது. யாருடைய கை பட்டாலும் நூல் சிக்கிக் கொள்வது இயல்பே. ஆனால், மிரண்டு போயுள்ள அந்தக் குடும்பம் இதையே மிகைப்படுத்தியது. இப்படித்தாங்க, ஏதோ ஒண்ணு நடக்குது என்றார்.

சில குறிப்புகளை எடுத்துக்கொண்டு அன்று நாங்கள திரும்பி விட்டோம். அடுத்த நாள் சென்ற போது புழக் கடையில் இருந்த கட்டைத்துண்டுகள், கற்கள் போன்றவை வீட்டுக்குள் வந்துவிழுந்து கிடந்தன. அவற்றைக் காண்பித்து எங்க மருமகதான் இங்க உட்கார்ந்துக்கிட்டிருந்துச்சு, அவ கண்ணெதிரிலேயே இதெல்லாம் வந்து விழுந்தது என்றார் மாமியார்.

அவற்றைச் சோதித்து அவற்றி லிருந்து கைரேகை எடுப்பதாகக் காட்டிக்கொண்டோம். அன்றைய விசாரணையில் இன்னொரு செய்தியும் கிடைத்தது. இந்தக்குடும்பத்தில் இவ்வாறு நடப்பதெல்லாம் இந்த மருமகள் இருக்கும்போது மட்டுமே; அவர் தாய்வீடு சென்றுவிட்டால் இங்கே நடப்பதில்லை என்பதுதான் அது. சரி, மருமகள் தாய்வீடு சென்றால் அங்கே நடக்கிறதா? என்று கேட்டேன்.

மருமகளைக் காதலிக்கும் ஏவல்

மருமகள் அங்கே தனியாகப் போகும் போது நடப்பதில்லை, இவளைப்பார்க்க என் மகன் சென்றால் அப்போது இப்படியெல்லாம் அங்கும் நடக்கிறது என்றார்கள். இப்போது உண்மை உடைய ஆரம்பித்தது; இந்த ஏவலின் நாயகி மருமகளே! இந்தக் கணவனோடு வாழப் பிடிக்கவில்லை; அதை வெளிப்படையாகச் சொல்ல முடியாமல் இப்படி ஏதோ செய்யக்கூடிய மனநிலையில் இருப்பதை உணர்ந்தோம். ஆனால் அதை உடனே நாங்கள் வெளிப்படுத்தாமல் அக்குடும் பத்தாருடைய கைரேகைகளைப் பதிவு செய்து கொண்டு மாமனார், மருமகள் ஆகிய இருவரை மட்டும் என் அலுவலகத்திற்கு வரவழைத்தோம்.

தமிழ் ஓவியா said...


உடைந்தது உண்மை

மாமனாரை ஒப்புக்கு விசாரித்து விட்டு, ஒரு பெண் மருத்துவரைத் துணைக்கு வைத்துக் கொண்டு மரு மகளுடன் கலந்தாய்வை ஆரம்பித்தேன். அவருடைய தனித்தன்மை, தாய்வீடு போன்றவற்றைக் கேட்டுவிட்டு உங்களுடைய கைரேகைகளைப் பரிசோதித்துவிட்டோம். அந்தப் பொருள்களில் இருப்பதெல்லாம் உன்னுடைய கைரேகை மட்டுமே; ஏவல் பெயரில் நடந்தவை அனைத்தும் உன்னால் நடந்துள்ளது. அந்தக்குடும் பத்தின் மீது உனக்கு அப்படி என்ன கோபம்? என்று கேட்டேன்.

முதலில் சிறிது நேரம் உறுதியாக மறுத்துவிட்டுப் பிறகு குலுங்கிக் குலுங்கி அழுது கொண்டே இவங்க எங்க அக்காவை என்ன கொடுமைப்படுத்தினாங்க தெரியுமா? அதனாலதான் இவங்களை இப்படி பண்ணேன் என்றார். அனைத்தையும் தான் செய்ததாக ஒப்புக் கொண்டு இன்னொரு குண்டைத் தூக்கி போட்டார். இந்த உண்மைகளை வெளியில் சொன்னால் நான் தற்கொலை செய்து கொள்வேன். என்றார். இந்த உண்மைகளை நாமும் வெளிப்படையாக உடைக்கமாட்டோம் என்பது உண்மையே. இருப்பினும் வெகுளித்தனமான குடும்பத்தில் விவரமான மருமகள் வாய்த்திருப்பதை அறிய முடிந்தது. பேதமை தந்த வேதனை

அதற்குப் பிறகு அந்தப் பெண்ணின் விருப்பப்படி மணமுறிவு கொடுத் தனுப்பி விட்டு மூன்றாவதாக யாரையோ திருமணம் செய்துகொண்டு இப்போது மகிழ்ச்சியாகவே இருக்கிறார் அந்த இளைஞர். இதிலே நாம் கவனிக்க வேண்டிய செய்தி, இத்தனையும் நடந்து, இந்த ஓராண்டுக்காலம் அந்தக் குடும்பத்தாரால் ஏவல், சூனியம் என்று நினைக்க முடிந்ததே தவிர, ஏதோ மனித சக்தியால்தான் இவையாவும் நடக் கின்றன என்று யோசிக்க முடியவில்லை.

முகத்தில் சலனமின்றி, அவ்வளவு திறமையாக இத்தனையும் செய்துவிட்டு, அப்பாவிபோல் நடித்து அவர்களோடு வாழ்ந்து வந்த அப்பெண்ணின் மன வலிமையை என்னவென்று சொல்வது? இப்படிப்பட்ட செயல்கள் எல்லாம் தாமே நடக்காது; மனிதர்களால் மட்டுமே நடக்கும் என்ற அறிவுப் பார்வை அக்குடும்பத்திற்கு இல்லாமற் போனதால் அந்த ஓராண்டில் இலட்சக்கணக்கான ரூபாயை இழந்து கடனில் சிக்கி அவதிப்பட்டனர். பசி பட்டினியோடு அவர்கள் பட்ட மன உளைச்சல் எவ்வளவு?

மந்திரவாதிகள் வந்து சூனியம் எடுப்பதாகக் கூறி ஆயிரக்கணக்கில் பறித்துச் சென்றனர். சூனியம் என்றால் ஒன்றுமில்லை என்று பொருள். அந்த ஒன்றுமில்லை என்பதைத்தான் சூனியம் எடுத்தேன் என்று மந்திரவாதி சொல்லிவிட்டுப் போகிறான். ஏமாளி கள் இருக்கும்வரை ஏமாற்றத்தான் செய்வார்கள்.

இந்த ஏவல் என் மருமகளைத்தான் பாடாய்ப்படுத்துகிறது என்று அப்பாவித்தனமாகக் கூறிக் கொண் டிருந்த மாமனாரையும், மாமியாரையும், தன்னை தொடமுடியாமல் அச்சத் தோடு தவித்துக் கொண்டிருந்த கண வனையும் எப்படியெல்லாம் ஏமாற்ற முடியுமோ அப்படியெல்லாம் ஏமாற்றி நம்ப வைத்துக் கொண்டிருந்த ஏவல் நாயகியான அந்த மருமகளும், இப் போது வேறு யாரையோ மணந்து கொண்டு மகிழ்ச்சியாக இருப்பதாகக் கேள்விப்பட்டேன்.

வெளிப்படையாகப் பேசிப் பிரச்சினையைத் தீர்த்துக் கொள்ள வாய்ப்பில்லாதபோது இப்படி ஒரு நாடகம் அரங்கேறியது. இதற்காக அந்த குடும்பம் கொடுத்தவிலை மிக அதிகம். பல்வேறு இழப்புக்கு ஆளான அந்தக்குடும்பத்தைப்போல இன்னும் பல பேர் இந்த ஏவல், சூனியம் என்பதை நம்பிக்கொண்டு தான்இருக்கின்றனர்.

மனிதம் அழிந்த பூமி

இப்படிச் சூனியம் வைத்தோ, ஏவல் செய்தோ ஒருவரை அழித்துவிட முடியுமென்றால் தீவிரவாதிகள் ஏன் வெடிகுண்டுகளோடு அலைந்து கொண்டிருக்கிறார்கள்? இன்றுள்ள அரசியல் தலைவர்களுக்கு எந்த அளவிற்கு ஆதரவாளர்கள் உண்டோ, அந்த அளவிற்கு எதிரிகளும் உண்டு. சூனியம் வைக்கப்படுவது உண்மை யென்றால் ஓர் அரசியல் தலைவர்கூட உயிரோடு இருக்க முடியாது. உலகில் மனித இனம் பூண்டோடு அழிந்து போய் இருக்காதா?

சூனியம் என்பது ஒன்றுமில்லாதது; ஏவல் என்பது யாரோ ஒரு தனிநபர் செய்வது என்பதைப் புரிந்து கொண்டு, எதையும் ஏன்? எதற்கு? எப்படி? என்று ஆய்ந்து பார்த்திருந்தால் உண்மை புரிந்திருக்குமல்லவா? கெட்டிக்காரன் புளுகுகூட எட்டு நாளைக்குத்தான் என்பார்கள். ஆனால், இந்தக்குடும்பம் ஓராண்டுக்கு மேலாக அறியாமை துரத்திய பாதையில் ஓடிக்களைத்துப் போனது.

உலகத்தின் மிகப்பெரிய சுமை மூடநம்பிக்கையே என்றார் மில்டன். அறிவைக் கெடுத்து வாழ்வைச்சிதைக்கும் அந்த மூடநம்பிக்கைகளை எதிர்கொள்ளும் தெளிவான பாதை காட்டுகிறார். ரட்சார்ட் கிப்லிவ் என்ற அறிஞர். என்னிடம் எங்கே? என்ன? எப்போது? ஏன்? எப்படி? யார்? என்ற ஆறு நேர்மையான உதவியாளர்கள் உள்ளனர் என்கிறார். அந்த ஆறு கேள்விகளை முன் வைத்து வாழ்க்கையை நடத்துவோர்க்கு இத்தகைய இழப்புகள் வாழ்க்கையில் ஏற்படாது.17-11-2012

தமிழ் ஓவியா said...


நூற்றாண்டு விழா நாயகர் நெ.து. சுந்தரவடிவேலு- முனைவர் பேராசிரியர் ந.க. மங்களமுருகேசன்

கல்வி நெறிக் காவலர், பத்மஸ்ரீ, டாக்டர் முதலிய பட்டங்களையெல் லாம்விட உயர்ந்த பட்டம் பகுத்தறி வாளர் என்னும் பட்டம் பெற்றவர். நெய்யாடுபாக்கம் துரைசாமி சுந்தர வடிவேலு என்பதன் சுருக்கமான நெ.து.சு. எனத் தமிழிலும் ழிஞிஷி என ஆங்கிலத்திலும் அழைக்கப் பெற்ற நெ.து. சுந்தரவடிவேலு அவர்கள்.

புதிய வரலாறு

சென்னை ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்ற சார்பில் நெ.து.சு. அவர்களுக்கு நடை பெற்ற பாராட்டு விழாவில் நம் தமிழர் தலைவர் அன்று குறிப்பிட்ட சிறப்புப் பட்டம் கல்வித் துறையில் புதிய வரலாறு படைத்த மய்யம் என்பது இந்தப் பாராட்டில் என்.டி.எஸ்ஸின் கல்விப் பணி மட்டுமல்ல, பகுத்தறிவுப் பணியும் பளிச்சிடுகிறது. தனியார் கல்வித் துறையில் தாம் ஆற்றியுள்ள அளவற்ற நல்ல தொண்டின் பயனாக அனைவருடைய பாராட்டுக்கும் உரித்தானவராகச் சுந்தரவடிவேலு அவர்கள் விளங்குகிறார். எதிரும் புதிருமான கொள்கைகளைப் படைத் தவர்களும் அவரைப் பாராட்டுவதில் ஒன்று சேருகின்றனர். வேற்றுமையிலும் ஒற்றுமை காணும் சிறப்பியல்புகளையும், சீரிய தொண்டினையும் அவர் கொண்டிருப்பதற்கு நல்ல எடுத்துக்காட்டு ஆகும். தமிழகத்தில் ஒரு சிலரிடம் மட்டுமே ஏகபோக மாக இருந்து வந்த கல்வித் துறையைப் பரவலாக்கி, அனை வருக்கும் பொதுமைப்படுத்திய புதிய வரலாறு படைத்த மய்யமாக நமது துணைவேந்தர் திகழ்கிறார் என்ற பாராட்டுரையிலேயே அவருடைய கல்விப் பணி வாயிலாக முகிழ்த்த பகுத்தறிவுப் பணி, பட்டம் போல உயரே, உயரே பறக்கிறது.

நாணயம், ஒழுங்கு

அந்தப் பேச்சிலே நம் ஆசிரியர் மறக் காமல் குறிப்பிட்டது, தொட்டுக் காட் டியது. நம் ஞானக் கிழவர், பகுத்தறிவுக் கதிரவன் தந்தை பெரியார் எழுத்தில் நெ.து.சு.வைப் பாராட்டி உரைத்த பாங்கான மொழிகளை

துணைவேந்தரது மணிவிழா மலருக்கென்று அண்மையில் தந்தை பெரியார் ஒரு கட்டுரை எழுதி அனுப் பினார். நாணயம், ஒழுங்கு, அப்பட் டமான தொண்டு ஆகிய குணங் களுடன் சொந்த ஜாதிப் பற்று சிறிதும் இல்லாத நல்ல மனிதர் என்று பெரியார் அவர்கள் இதுவரை எவருக் கும் அளிக்காத பெரும் பாராட்டினை அக்கட்டுரை மூலம் சுந்தரவடிவேலு அவர்களுக்கு அளித்திருக்கிறார். என்று சுட்டிக்காட்டுவதை இங்கே முதலில் குறிப்பிடுவது சரியாகவும், பொருத்த மாகவும் அமையும்.

பகுத்தறிவுப் பாதை நெ.து.சு. அவர்களை இங்கே நாம் எடுத்துப் பாராட்டிக் கூறுவது, தந்தை பெரியார் அளித்த கல்விப் பிச்சையின் பயனாய்த் துணைவேந்தர், உயர் கல்வி அலுவலர், அரசுப் பணியில் உயர் பதவி வகிப்போர், தாம் மேற்கொண்டுள்ள பணியில் நெ.து.சு. போல் பகுத்தறிவுக் கண்ணாடி அணிந்து, சமூகநீதி எழுதுகோல் கொண்டு செயல்பட்டு அவர்கள் உயர்ந்தது போல், அவர்கள் பிறந்து, தவழ்ந்து, நடந்து, உயர்ந்த சமூகத்தைத் தூக்கி நிறுத்த வேண்டும் என்று அறிவுறுத்துவதற்குத்தான்.

தமிழர் தலைவர் அதனால் தான் அன்றே சுந்தரவடிவேலு அவர்களைப் பாராட்டு முகத்தான் மூன்று பேரைச் சுட்டிக் காட்டவும் தவறவில்லை. தமிழர் தலைவர்

சுட்டிய மூவர்

துணைவேந்தரைப் பாராட்டும் இந்த நேரத்தில் இந்த நல்முத்தை நாட்டுக்கு அறிமுகப்படுத்திய மூவரைப் பாராட்டி நன்றி செலுத்தியாக வேண் டும். நாட்டுக்குப் பயன்படும் நல் முத்து என்று சுந்தரவடிவேலு அவர் களைத் தேர்ந்தெடுத்துத் தமிழகத்தில் கல்வித் துறை இயக்குநராக நியமித்த முன்னாள் முதல்வர் காமராசரைப் பாராட்டி நன்றி தெரிவித்துக் கொள் கிறேன்.

தமிழ் ஓவியா said...

அடுத்துத், தமிழகத்திலிருந்து சென்று மத்திய அரசுப் பணியில் ஈடுபட்டு இருந்த இவரை மீண்டும் தமிழகத் துக்குத் திரும்ப அழைத்துக் கல்விப் பணியில் தொடர்ந்து ஈடுபடச் செய்த பேரறிஞர்அண்ணா அவர்களுக்கு நாம் பெரிதும் கடமைப்பட்டிருக்கிறோம்.

இந்த நன்முத்தை எந்த இடத்தில் வைத்தால் நன்கு ஜொலித்துப் பயன் படும் என்பதைத் தெரிந்து துணை வேந்தர் பதவியில், இவரைத் தொண் டாற்றும் படி செய்வித்த முதல்வர் கலைஞர் அவர்களைப் பெரிதும் பாராட்டி நன்றி தெரிவித்துக் கொள் கிறோம்.

பெரியார் வழியில்

நெ.து.சு.வின் நூற்றாண்டில் நாம் நினைந்து பாராட்டுகிறோம் என்றால் தந்தை பெரியாரின் பெரு மதிப்பிற்கு உரியவராக விளங்கிய அவர் பெரியாரிடமிருந்து சிக்கனமும், ஆடம்பரமற்ற வாழ்க்கை முறையையும், நல்ல சகிப்புத் தன்மையையும், பகுத்தறி வையும், பிரதிபலனை எதிர்பாராமல் தொண்டாற்றும் பண்பினையும் பெற்றுக் கொண்டு அவற்றைத் தமது வாழ்வில் நன்கு கடைப்பிடித்து வந்தார் என்பதே இவருடைய சிறப்பிற்குப் பெரிதும் காரணமாய் விளங்கிற்று.

புரட்சியாளர் பெரியார் எனும் தம் நூலில் கூறுகிறார் நெ.து.சு.

அறுபது வயது வாக்கில் வாழும் நாம் அனைவரும் பிறந்தது எந்தச் சூழலில்) எட்டி இருந்து இணையாது வாழ்ந்த, தனித்தனிச் சாதிப் பற்றுச் சூழலில் வளர வேண்டியவர்களாக இருந்தோம். பெரிய சாதி என்னும் உணர்வில் முன்னணியில் இருந்த சிறிய தொருபிரிவில் பிறந்து வளர்ந்தவன் நான். அப்படிப்பட்ட என்னை இளமைப் பருவத்திற்கு முன்பே ஆட் கொண்டு, புதிய மனிதனாக்கி விட்டார். எந்த அளவு புதிய மனிதனாக்கி விட்டார். தந்தை பெரியாரே கூறட்டும்.

தான் யார்?

சாதியில் சைவராயிருந்தும், எந்தத் துறையில் எந்தச் சந்தர்ப்பத்திலும், சாதி உணர்ச்சியைக் காட்டினார் என்று சொல்ல முடியாத அளவுக்கு நடந்து வந்திருக்கிறார் என்றும் நான் சொல் லக் கூடும். அறிவுத் துறையில் பெரும் பகுத்தறிவுவாதியாகவும் சமுதாயத் துறையில் உண்மையாகவே சமதர்ம வாதியாகவே இருந்து வந்திருக்கிறார். 1972ல் பெரியார் பாராட்டியதை 1979ல் எடுத்துக் கூறினார்.

திராவிடத்தால்தான்

திராவிட இயக்கத்தால், தந்தை பெரியாரால் தலை நிமிர்ந்து, தோளில் துண்டு போட்டு, நடக்கும் காலில் செருப்புப் போட்டு நடக்கும் அரு கதையைப் பெற்றவரெல்லாம் திராவிடத்தால் வீழ்ந்தோம் என்று பிதற்றித் திரிகையில், மனிதனாக ஆக்கிய பெரியாரை மறந்து பேதமையோடு பேசுகையில் ஒன்றரைப் பார்ப்பன சாதி என்று பெரியார் குறிப்பிடும் வகுப்பில் பிறந்து கல்வி கற்று, கல்வித் துறையிலே உயர் பதவி பெற்ற சுந்தர வடிவேலு கூறுவது, ஒவ்வொருவரும் உணர வேண்டிய, தெரிந்து கொள்ள வேண்டிய உண்மை.

பள்ளியறியாத சிறிய பட்டிக் காட்டில் பிறந்த எனக்குக் கல்லூரிப் படிப்பில் நாட்டமும் ஆர்வமும் ஊட்டி வெற்றி பெறச் செய்தவர் தந்தை பெரியார். என்னை மட்டுமா படிப் பாளியாக்கினார்? இலட்சக்கணக்கான மக்களைப் பெரும் பட்டங்கள் பெறும் அளவிற்கு உயர்த்தியவர், பள்ளிப் படிப்பையும் முடிக்காத பெரியார் ராமசாமியே ஆவார்

இதை எங்கோ சந்திலோ பொந் திலோ நெ.து.சு. கூறவில்லை. 2,3,4,4-79ல் சென்னைப் பல்கலைக் கழகத்தில் கல்வியாளர் மத்தியில், எம்.ஏ., பிஎச்.டி. முதலிய பட்டங்களைப் பெற்றவர்கள் மத்தியில் ஓர் புரட்சியாளரின் மலர்ச்சி என்ற தலைப்பில் அறக்கட்டளைச் சொற்பொழிவுகளை நிகழ்த்துகையில் கூறினார் என்றால் பெரியாரின் பணி எத்தகைய மாபெரும் பணி.

கல்வி பரவலாக்கல்

இந்தக் கல்வி பரவலாக்கல் கண்டு நம் மாணவர்கள் மட்டுமல்ல, மாணாக்கியரும் கல்வியில் உயர்ந்து ஓங்கியது கண்டு கை தட்டிக் குதூக லித்துத் தோள் குலுங்க மகிழ்ந்த பேருள்ளத்திற்குச் சொந்தக்காரர் நம் பெரியார்.
திராவிடர் கழகத் துணைத் தலை வரும், கவிஞருமான கலி. பூங்குன்றன் அவர்கள் பெரியாருடன் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த காலை நடைபெற்ற நிகழ்வு இது. நம் ஞானக்கிழவர் பூரித்து மகிழ்ந்த நிகழ்வு இது.

அய்யா அக மகிழ்ந்த நிகழ்வு

தமிழ் ஓவியா said...

பெரியார் அவர்கள் ஈரோட்டி லிருந்து நாமக்கல் அருகே, பயணம் செய்து வருகையில் பள்ளி விடுகின்ற நேரம். உயர்நிலைப் பள்ளி ஒன்றைக் கடக்கிறார். அப்போது பள்ளியிலிருந்து பெண் சிறார்கள் பள்ளிச் சீருடையில் பட்டாம் பூச்சிகளைப் போல சுமார் நூறு பேருக்கு மேல் சைக்கிளில் வெளியே சிட்டெனப் பறந்து வரு கிறார்கள். பெரியார் தாம் பயணிக்கும் ஊர்தியை ஓரமாக நிறுத்தச் சொல் கிறார். ஊர்தியின் கதவு வழியே பத்து நிமிடம் அப்படியே அந்தப் பெண் குழந் தைகளை மகிழ்ச்சி ஆரவாரத்துடன் வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருக்கிறார்.

எல்லோரும் சென்று விட்டனர். அய்யா தம் தோளைக் குலுக்கி, கையைத் தட்டிக் கொண்டே, மகிழ்ச்சி பொங்கத் தம்வாய் மணக்கும் சிரிப்புப் பொங்கல். இதுதான், இதுதான் வேணும். இதுதான் நான் விரும்பினது என்று சொல்லிக் கொண்டே சொல் லொணாத மகிழ்ச்சியில் திளைக்கிறார்.

நம் சமூகம் கல்வியறிவு பெற வேண்டும் என்பதிலே எவ்வளவு ஆழ்ந்த பற்று, ஈடுபாடு பெரியாருக்கு. இப்போது கேட்டாலும் கவிஞர் சொன்ன அந்த நிகழ்வு பெரியாருக்கு ஒவ்வொரு பள்ளியிலும் சிலை வைத்துப் போற்றச் செய்யும்.

இவர்கள்தாம்

தமிழகத்தில் கல்விப் புரட்சி விளைச் சல் கண்டதற்குத் தந்தை பெரியார், தலைவர் காமராசர், கல்விநெறிக் காவலர் நெ.து.சு. காரணமாக விளங்கிய மூவர்.
இயக்கக் குடும்பத்தவர்களுக்கு மட்டுமல்ல, நம்மவர்க்கு அந்நாளில் எம்.ஏ. படிப்பில் சேருவது என்பது இன்றைய நாளில் மருத்துவத்தில் எம்.டி., எம்.எஸ். பட்டத்தில் சேருவது போல குதிரைக் கொம்பு, போல நன்றியோடு பலரும் துணைவேந்தர் ஒதுக்கீடு என்னும் ஒதுக்கீட்டின் கீழ் சுந்தர வடிவேலு அவர்கள் இடம் வழங்கிப் பயன் பெற்றிருக்கிறார்கள், அய்யா அவர்கள் பரிந்துரையின் பேரில் நெ.து.சு. அவர்கள் இடம் வழங்கிடப் படித்து கல்வித் துறையிலேயே முதன்மைக் கல்வி அலுவலர் (சி.ஈ.ஓ.) பதவி பெற்றவர் இராணி அவர்கள். அது போல் மிகவும் பிற்படுத்தப் பெற்ற குடும்பத்தைச் சேர்ந்த என் தங்கை சுசீலா அவர்கள் அய்யா பரிந்துரையின் பேரில் இடம் பெற்றார் என்று கவிஞர் நன்றியோடு குறிப்பிடுவது போல், கல்விப் பணியைக் சமுதாயப் பணியாக ஆற்றியவர் நெ.து.சு.

பூணூல் திருமேனிகள்

நெ.து.சு.வின் கல்விப்பணி, பகுத்த றிவுப் பணி கண்டு பாய்ந்தனர் பூணூல் திருமேனிகள், இதுகளெல்லாம் படிப்பதா? என்னும் இழிகுணம் கொண்ட சிலர் அதற்கான வாய்ப்புக்குக் காத்திருந்தனர்.

17.9.1974 அன்று சென்னையில் நடைபெற்ற தந்தை பெரியாரின் 96ஆவது பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டு பேசிய அந்நாளில் சென்னைப் பல்கலைக் கழகத் துணைவேந்தரா யிருந்த நெ.து.சு. அவர்கள் மூடநம்பிக் கைகளை ஒழிக்கத் தீவிரமான செயல்கள் செய்யப்பட வேண்டும் என்று வற்புறுத்தியதோடு, சோதிடம் முதலிய மோசடிகளை அரசு சட்டம் வாயிலாகத் தடை செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டார்.

மவுண்ட்ரோடு மகாவிஷ்ணு

பொறுக்குமா பூணூல் திருமேனி யர்க்கு, அது குறித்து அந்நாளைய மவுண்ட்ரோடு மகாவிஷ்ணு இந்துப் பத்திரிகையில் ஆசிரியர் கடிதப் பகுதி யில் துணைவேந்தர் எனும் தலைப்பில் கடிதம் ஒன்றை வெளியிட்டு, ஒரு சர்ச்சைக்குக் கால் கோளிட்டது.

மூடநம்பிக்கையை ஒழிப்பதற்காகச் சோதிடம் தடை செய்யப்பட வேண்டும் என்று பேசுவது அரைப்பைத்தியம் போன்றது என ஒரு பைத்தியம் எழுதி யதை வெளியிட்டது. துணைவேந்தர் பேச்சில் அறிவார்ந்த வாதம் இல்லை. அரசியல்தான் அதற்கு அடிப்படை என வேதம் ஓதும் சாத்தான் ஓதியதுடன் எவ்வளவ ஆத்திரத்தைக் கொட்ட முடியுமோ, அவ்வளவையும் அவாளின் பேனா கொட்டித் தீர்ந்தது. நெ.து.சு. போன்ற கல்வி வள்ளல்கள் தங்களைச் சீரிய பகுத்தறிவுவாதிகள் என அறிவித் துக் கொள்பவர்களாக இருப்பது கண்டு ஆரியம் குமுறும் எரிமலையாய்க் கொந்தளிக்கும் மாக்கடலாய், எரிச்சலின் ஏகபோக வடிவமாய் மாறியது.

தமிழ் ஓவியா said...

பூணூல்கள் பாய்ச்சலுக்குப் பதிலடி

எனவே 26.9.1974, 27.9.74, 29.9.74 ஆகிய இரு நாள்கள் விடுதலை பீரங்கி யிலிருந்து நெ.து.சு.வின் பேச்சிற்கு ஆதர வாகத் தந்தை பெரியார் துணை வேந்தர்மீது பூணூல்கள் பாய்ச்சல் என இரண்டு தலையங்கம் தீட்டினார் எனில் நெ.து.சு.வின் பணியின் உயர்வைப் புரிந்து கொள்ளலாம் தலையங்கத்தின் மேலே பெரியார் பொன்மொழிகள் தங்கள் ஆதிக்கத்திற்கு ஆபத்து என்றவுடன் பார்ப்பனர்கள் எவ் வளவு கட்டுப்பாடாக எதிர்க் கிறார்கள் என்பதைப் பார்த்தாவது நமது தமிழர்களுக்கு மானம் வர வேண்டாமா? சோதிடம் என்பதே மிகப் பெரிய புரட்டு அதைக் கிரிமினல் குற்றமாக்க வேண்டும் என்பன இடம் பெற்றன.

தந்தை பெரியாரின் பெரு மதிப்பைப் பெற்றவர் நெ.து.சு. நமது வைஸ்சான்சலர் என விடுதலையில் தலையங்கம் எழுதினார். பெரியார், ஈரோடு சிக்கையா கல்லூரியில் நெ.து. சுந்தரவடிவேலு பகுத்தறிவுப் போட்டிப் பரிசுகள் வழங்க அறக் கட்டளையை நிறுவினார். இச்சிறப்பினை நெ.து.சு. ஒருவருக்கே பெரியார் செய்துள்ளார்.

பெரியாருக்கே உரியது

இதனால் பெரு மகிழ்வுற்ற அவர் நெ.து. சுந்தரவடிவேலு, பகுத்தறிவுவாதி யாகவும் உண்மையான சமதர்மவாதி யாகவும், வாழ்வதன் பெருமை எனக்கா உரியது? இல்லை. தந்தை பெரியாருக்கும் அவருடைய தன்மான இயக்கத்திற்கும் உரியதாகும் என்றார்.

அது மட்டுமல்லாது நெ.து.சு. பெரியாரைக் குறித்துக் குறிப்பிட்ட உரைகள் உண்மையின் உயரிய வாக்கு தத்துவத்திற்குக் கிடைத்த தனிப் பெரும் சிறப்பு. ஏனென்றால் 1929ல் செங்கல் பட்டில் நடைபெற்ற சுயமரியாதை முதல் மாநில மகா நாட்டில் பங்கேற் றவர் அங்கே அன்றே நாடார் பெரு மக்கள் சமைத்த உணவை அனைவரும் ஒன்றாக அமர்ந்து சம பந்தி போஜன மாக உண்டதை வியந்து பாராட்டி மகிழ்ந்தவர்.

இவர்தாம் பெரியார்

ஈராயிரம் ஆண்டுகளாகத் தூங்கிக் கிடந்த தமிழ் மக்களைத் தட்டியெழுப்பி யவர் தன்மான இயக்கத் தந்தை பெரியார் ஈ.வெ. ராமசாமி ஆவார்.

தமிழ் ஓவியா said...

அடிமையிலும், இழிவிலும் நெடுங்காலம் ஆழ்ந்து கிடந்ததால் தன்மானமே இன்றி மரக்கட்டை களாகக் கிடந்த பார்ப்பனரல்லா தாரை உலுக்கி, நீ மனிதன், பகுத்தறிவு பெற்ற மனிதன். ஆகவே பகுத்தறிவுக்கே முதல் இடம் கொடு. கடவுளை மற; மனிதனை நினை; பிறப்பால் உயர்வும் இல்லை; தாழ்வும் இல்லை. ஆணும் பெண்ணும் சமம்; மனைவி மலிவான வேலைக் காரியல்ல; வெறும் விளையாட்டுப் பொம்மையல்ல; நகை மாட்டியல்ல; வாழ்க்கைத் துணை உயிருள்ள, உரிமையுள்ள வாழ்க்கைத் துணை. எனவே, இருவரும் தோழமையோடு வாழுங்கள் அன்று அய்ம்பது ஆண்டுகள் வேலை, அய்ம்பதாயிரம் கூட்டங்களிலாவது அறிவு புகட்டிய பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் ஆவார் என்று குறிப்பிடுகிறார். பகுத்தறிவுவாதியும், கலப்பு மணம், பதிவுத் திருமணம் செய்து கொண்ட இக்கல்வியாளர்.

பகலுணவுத் திட்டம் - புதிய பார்வை

திராவிட இயக்கம், தியாகராயர் காலத்தில் உருவான பள்ளிச் சிறார் களுக்கான மதிய உணவுத் திட்டம் பகல் உணவுத் திட்டமாக உருவெடுத்துக் காமராசருக்கும், நெ.து.சு.விற்கும் பெயர் பெற்றுத் தந்தது.

மதிய உணவுத் திட்டம் பசி மட்டும் போக்கும் திட்டமட்டும் அல்ல. இதைப் பகுத்தறிவாளர் நெ.து.சு. பார்த்த கண் ணோட்டம் பகுத்தறிவுக் கண்ணோட் டம் எனும் அமைதிப் புரட்சித் திட்டம்.

பல சாதியினரும் பள்ளியில் ஒன்றாக அமர்ந்து உண்டது சாதி முறையை முறித்தது. எல்லோரும் ஒரு குலம் எல்லோரும் ஓர் இனம் என்னும் மனப்போக்கை வளர்க்க உதவியது. பள்ளிச் சீரமைப்பு இயக்கம் எனும் பெயரில் நடந்த மாநிலம் தழுவிய மக்கள் உதவி கல்வியின் பால் கவனத்தைத் திரும்பியது. பல மைல் கற்கள் கடந்து தான் பள்ளிக்கூடம் என்னும் பெயர்ப் பலகை காணும் நிலை மாறித் தெரு வெங்கும் பள்ளிகள் கட்டுவோம், கல்வி தெரியாத பேர்களே இல்லை என்று நிலையாக்குவோம் என்னும் நிலை உருவாவதில் நெ.து.சு.வின் பங்கு இருந்தது.

தன்மான இயக்கத்தின் முதல்தலைமுறையினர்

பெரியாரைப் பின்பற்றுவோர் கடவுள் மறுப்பாளராக இருப்பது போதாது; சாதிக் கலைப்பாளராகச் செயல்பட வேண்டும். வகுப்புரிமைக்கும் போராடுவதோடு நிறைவு கொள்ளக் கூடாது; சமதர்ம முறையைக் கொண்டு வருவதற்கு முனைப்பாயிருக்க வேண்டும். அதுவே, எல்லா ஆதிக்கங்களையும் ஆவணங்களையும் தூக்கி எறிய முடியும் என்று பெரியாரும் சமதர்மமும் எனும் நூலில் கூறுபவர் கூறும் இக்கருத்தும் போற்றத் தக்கது. புகழத்தக்கது.

தன்மான இயக்கத்தின் முதல் தலைமுறையினன் என்னும் உரிமை யாலும், கட்சி தாவாத தன்மான இயக்கத்தவன் என்னும் தகுதியாலும் நாள் சொல்லிக் கொள்ள விரும்புவது ஒன்றே ஒன்று அது என்ன? தொடக்க கால சுயமரியாதை இயக்கத்தின் சாதாரண தொண்டரின் கனவிலும் சாதிப் பற்று எந்நேரத்திலும் பளிச்சிட்டதில்லை. மனித இனத்தைச் சேர்ந்தவர்கள், பகுத்தறிவுப் பெருங் குடும்பத்தவர்கள் என்னும் உணர்வே எங்கள் மூச்சாகும்.17-11-2012

தமிழ் ஓவியா said...


பாம்பா? பயமா?

பாம்பைப் பார்த்ததுமே பா...பா...பா... என்று வார்த்தைகளில் தந்தியடிக்கும் மனிதர்களைத் தான் இதுவரை பார்த்திருக்கிறோம். ஆனால் ஒரு சிறுமி பாம்பிடம் காட்டும் அலாதிப்பிரியம் நம்மை விய(ர்)க்க வைக்கிறது. வழக்கமாக பாம்பு பிடிக்கிறவர்களுக்குக் கூட சில நேரங்களில் சிம்ம சொப்பனமாக விளங்கும் ராஜநாகம் பாம்பை தன் நண்பன் என்கிறாள் இந்த சிறுமி. அவள் பெயர் கஜோல். வயது 8, உத்திரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்தவள். தன் பாம்பு தேசம் பற்றி அவள் கூறும்போது, எனக்கு பள்ளிக்கூடம் போகத்தான் பிடிக்காது. எப்போதும் பாம்புகளுடன் இருக்கப் பிடிக்கும். அவைகளுடன் நான் விளையாடும்போது சில பாம்புகள் என்னை செல்லமாக கடித்து வைப்பதுண்டு. சில நேரங்களில் பல் பதிந்து ரத்தம் வந்துவிடும். அப்போது மட்டும் நான் பயப்படுவதுண்டு. ஆனால் என் அப்பா மட்டும் பதறாமல் நேராக காட்டுக்கு சென்று பச்சிலை பறித்து வந்து வைத்தியம் பார்ப்பார். அப்போதே பயம் பறந்து மற்ற பாம்புகளுடன் விளையாடச் சென்று விடுவேன்என்கிறாள்.

இவளுக் பாம்பு பிடிக்கும் பின்னணியில், பாம்பு பிடிக்கும் இவளது தந்தை இருக்கிறார். காட்டில் இருக்கும் பாம்புகளை அடிக்கடி வீட்டில் பார்த்துப் பார்த்து பாம்பு பயம் போயே போச் என்கிறாள் கஜோல். அதுசரி, கஜோல் பள்ளிக்கூடம் எதற்காக போகவில்லையாம்? படிப்பு வரவில்லையா?
நல்லாத்தான் படிச்சேன். சில நாட்கள் நண்பர்களுடன் (பாம்புகள்) பள்ளிக்கூடத்துக்குப் போய்விடுவேன். அவர்கள் அலறியபடி காட்டிக் கொடுத்ததில் படிப்பா....பாம்பாநீயே முடிவு செய்து காள் என்று பள்ளியில் கண்டிப்பாக கூறி விட்டார்கள் எனகிறாள். அதற்குப்பிறகு தான் பள்ளிப்படிப்பு பாம்புப் படிப்பாகிவிட்டிருக்கிறது.

தமிழ் ஓவியா said...


பார்ப்பான் பண்ணையம் கேட்பாரில்லையா? அசைவம் சாப்பிடுபவர் - ஏமாற்றுப் பேர் வழிகளாம் சி.பி.எஸ்.இ. பாடம் சொல்லுகிறது


புதுடில்லி, நவ. 17-அசைவம் சாப்பிடுபவர்கள் பற்றி தவறான கருத்து 6ஆம் வகுப்பு பாடப் புத்தகத்தில் கூறப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நியூ ஹெல்த்வே என்ற தலைப் பில் வெளிவந்த 6ஆம் வகுப்பு அறிவியல் புத்தகத்தை பல சிபிஎஸ்இ பள்ளிகள் தேர்வு செய்து மாணவர்களுக்கு கற்பித்து வருகின்றன. இதில் ஆரோக்கியம், சுகாதாரம், மனோதத்துவம், பாது காப்பு, பாலியல் கல்வி, விளை யாட்டு மற்றும் உடற்பயிற்சி குறித்த பாடங்கள் இடம் பெற்றுள்ளன.

இந்தப் புத்தகத்தின் 56ஆவது பக்கத்தில் அசைவ உணவு பற்றி தவறான பிரசாரம் செய்யப்பட்டுள்ளது. சிக்கன், மட்டன் போன்ற அசைவ உணவு சாப்பிடுபவர்கள் ஏமாற்றுவர், பொய் பேசுவர், வாக்குறுதிகளை மறப்பர், கெட்ட வார்த்தை பேசு வர், திருடுவர், சண்டை போடுவர், வன்முறை மற்றும் பாலியல் குற்றங்களில் ஈடுபடுவர் என கூறப்பட்டுள்ளது.

மேலும் ஜப்பானியர்கள் சைவ உணவு சாப்பிடுபவர்கள். அவர்கள் நீண்ட ஆயுளுடன் வாழ்வதற்கு சைவ உணவுதான் காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பானி யர்கள் உணவில் மீன் உணவுக்கு முக்கியத்துவம் அளிப்பது பற்றி அந்தப் பாடப்புத்தகத்தில் குறிப் பிடவே இல்லை.

இது குறித்து சிபிஎஸ்இ தலை வர் வினித் ஜோஷியிடம் கருத்து கேட்ட போது, 9ஆம் வகுப்புக்கு மேல் உள்ள பாடப் புத்தகங் களைத்தான் சிபிஎஸ்இ பரிந்துரை செய்கிறது. மற்ற வகுப்புக்கான பாடப் புத்தகங்களை அந்தந்த பள்ளிகளே தேர்வு செய்கின்றன. பள்ளி பாடப் புத்தகத்தில் என்ன உள்ளது என்பதை பற்றி சிபி எஸ்இ கண்காணிப்பதில்லை என்றார்.

தனியார் நிறுவனங்கள் வெளி யிடும் பாடப்புத்தகங்களில் முரண் பாடான பல தகவல்கள் இடம் பெறுவது பற்றி கல்வியாளர்கள் பல அறிக்கைகளை கடந்த 2005ஆம் ஆண்டிலிருந்து சமர்ப் பித்து வருகின்றனர்.17-11-2012

தமிழ் ஓவியா said...


மாமிசம் சாப்பிடுவோர்பற்றி அவதூறு மத்திய பாடத் திட்டத்திலிருந்து நீக்குக!


மாமிசம் சாப்பிடுவோரை அசிங்கம் அவதூறு பரப்பும் சி.பி.எஸ்.சி. பாட நூல்களில் பாடத் திட்டக் குழுவினரால் வைக்கப்பட்டுள்ள ஒரு நூலில் (ஆறாம் வகுப்பு) உடல் நலக் கூறுகள் சம்பந்தமான ஒரு பாடம், மாமிச உணவு சாப்பிடுகின்றவர் (Non- Vegetarians) எல்லோரையும் சகட்டுமேனியாக, திருடர்களாக பொய் சொல்பவர் களாகவும், வன்முறையாளர்களாகவும் காமவெறி கொண்டவர்களாகவும் இருப்பார்கள் என்று எழுதி, அதை மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுப்பதால் புதிய கண்டனம் வெடித்துக் கிளம்பியுள்ளது நியாயமானதேயாகும்!

அறிவியல் ரீதியாகவோ, உளவியல் ரீதியாகவோ நிரூபிக்கப்பட முடியாத மிக மோசமான கூற்று இது. இந்தப் பாடத்தையும் உடனே மத்திய அரசு திரும்ப பெற வேண்டியது அவசர அவசியமாகும். தேவையற்ற வீண் சர்ச்சைகளை உருவாக்கும், ஜாதி மோதல்களையும், அரசியல் சண்டைகளையும் உண்டாக்கும் நிலையில் பாட புத்தகக் குழுவின் மிகவும் பொறுப்பற்ற முறையில் பணிபுரிந்துள்ளனர் எனத் தெரிய வருகிறது.

இதன்மீது உடனே நடவடிக்கை எடுத்து நீக்குவதோடு, இதற்குக் காரணமான பாட குழுவினர்மீது உரிய சட்டப்படிக்கான நடவடிக்கை எடுத்துத் தண்டிக்கத் தயங்கக் கூடாது. ஏற்கெனவே அம்பேத்கர் பற்றிய கேலிச் சித்திரங்கள், நாடார் மக்கள்பற்றி அவதூறு பரப்பும் பாடம், போன்ற அவலம் எல்லாம் எப்படி நீடிக்கலாம்? மத்தியக் கல்வித் துறை அமைச்சர் போதிய முன் எச்சரிக்கையுடன் செயல்பட தாக்கீது பிறப்பிக்க வேண்டும்.

சென்னை
17.11.2012

- கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

தமிழ் ஓவியா said...


அசல் நாத்திகம்!


தமிழ்நாடு இந்து சமய அற நிலையத் துறை திடீரென்று நாத்திகக் கொள்கையைக் கடைப் பிடிக்கத் தொடங்கியது ஆச்சரியமானது - ஆனா லும் அது உண்மைதான்.

கடவுளை மற - மனிதனை நினை என்ற தந்தை பெரியார் அவர் களின் வேண்டுகோளையும் ஏற்றுக் கொண்டது வியப்பை அளிக்கிறது.

சக்தியுள்ள சாமிக்குச் சாவியும் - பூட்டும் ஏன் என்று சுவர் எழுத்தாளர் சுப்பையா அன்று எழுதி னார்.

இந்தக் கருத்தையும் இந்து சமய அறநிலையத் துறை ஏற்றுக் கொண்டு இருப்பதாகத் தெரிகிறது.

நமது தமிழக முதல் அமைச்சர் திடீரென்று சென்று தரிசிக்கக் கூடிய ஒன்று உண்டென்றால் அது சென்னையை அடுத்த - திருவொற்றியூரில் உள்ள வடிவுடைஅம்மன் கோயில் தான்.

ஓகோ, அவ்வளவு சக்தியுள்ள (ஆ) சாமியோ - இருந்துவிட்டுப் போகட்டும் - அதனாலென்ன?

சரி, என்ன வந்தது அந்தக் கோயிலுக்கு? ஒன்றும் இல்லை - கோலி விளையாட்டுப் பையன்கள் தீபாவளியன்று வெடித்த பட்டாசு ஒன்று ராஜகோபுரத் தின்மீது போடப்பட்டு இருந்த கீற்றுக் கொட்டகை யின்மீது விழுந்து தீப் பிடித்து எரிந்து சாம்பலாகி விட்டது போலும்!

என்ன சொல்கிறீர்கள்? சக்திக் கடவுளான வடி வுடை அம்மன் கோயிலிலா இந்தச் சமாச்சாரம்!

வெடித்தது பட்டாசு. கடவுள் சக்தியோ புஸ் வாணமாகி விட்டது! தீபாவளி நாளில் மிகவும் பொருத்தம்தான் - பேஷ்! பேஷ்!!

வடிவுடை அம்மனுக்கு என்ன வந்தது? அதுதான் அடித்து வைத்த சிலை யாயிற்றே! சீறீரங்கத்தில் ரெங்கநாதன் கோயில் பற்றி எரிந்தபோது கடவுள் ரெங் கநாதன் சிலையும் வெடித் துச் சிதறவில்லையா?

முதல் அமைச்சர் பிரத்தியேகமாகக் கும்பிடும் சாமி ஆயிற்றே! அதிகாரி களால் சும்மா இருக்க முடியுமா?

உத்தரவு பறந்தது. இனிமேல் இது போன்ற கீற்றுக் கொட்டகைகளைக் கோயில்களில் போடக் கூடாது. தீப்பிடிக்காத ஆஸ் பெஸ்டாஸ் பொருள்களைத் தான் பயன்படுத்த வேண் டும் என்பது இந்து சமய அறநிலையத் துறை அதி காரிகளின் உத்தரவு சுற்றறிக்கை.

அது மட்டுமல்ல; கோயில் அதனைச் சுற்றி யுள்ள இடங்களில் அக்னி பகவானுக்கும் தடையாம். தீப்பெட்டி, பீடி, சுருட்டு, சிகரெட் போன்ற பொருட் களைப் பக்தர்கள் எடுத்து வரவும் தடையாம்.

மின் கசிவு ஏற்பட்டு பகவானுக்கு ஆபத்து வந்து விடக் கூடாது என்ப தற்காக மின் இணைப்பு களை உடனே சரி பார்க் கவும் உத்தரவாம்!

வடலூர் இராமலிங்க அடிகளார் சொன்னாரே நினைவு இருக்கிறதா? சாமி கும்பிடுவது என்பது பிள்ளை விளையாட்டே என்றாரே! அதனை இந்த இடத்தில் கொஞ்சம் நினைவு படுத்திக் கொண்டால், அதற்குப் பெயர்தான் புத்திசாலித்தனம் என்பது!

- மயிலாடன்17-11-2012

தமிழ் ஓவியா said...


1.76 லட்சம் கோடி 2ஜியில் ஊழல் என்று ஊரெல்லாம் கூச்சலிட்டவர்களே!
ஏலம் விடப்பட்டதால் இப்போது கிடைத்த லாபம் என்ன?

ஆ.இராசா குற்றவாளியா? நடு நிலையாளர்கள் சிந்திக்கட்டும்!
தமிழர் தலைவர் விடுத்துள்ள அறிக்கை

மத்திய அமைச்சர் ஆ. இராஜாவால் அரசுக்கு 1.76 லட்சம் கோடி நட்டம் என்று பிரச்சாரம் செய்தவர்கள் ஏல முறையால் அரசுக்கு வருவாய் ரூ.9400 கோடி என்ற இந்த நிலைக்குப் பிறகு என்ன செய்யப் போகிறார்கள் என்ற வினாவை எழுப்பியுள்ள திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை வருமாறு:

1. அய்க்கிய முற்போக்குக் கூட்டணியில் இடம் பெற்று, நாட்டின் குக்கிராமங்களில்கூட தொலைத் தொடர்பு வசதியை, ஏழை, எளியவர்கள்கூட பயன்படுத்திக் கொள்ள வாய்ப்பு அளித்த கொள்கை முடிவினை மிக வேகமாகச் செயல் படுத்தியும், தி.மு.க.வுக்கும் மத்திய அமைச்சர வைக்கும் பெருமை சேர்த்தவர் ஆ. இராசா அவர்கள்.

முதலாளிகளின் ஏகபோகம்!

2. அத்துறையில் நிலவிய சில பெரு முதலாளிகளின் ஏக போகத்தை உடைத்து, புதிதாக நுழைவோருக்கும் வாய்ப்பு என்பதை சிறப்பான வகையில் செயல்படுத்தியதால், தொலைபேசிக் கட்டணம் 30 காசுகளுக்குள் - உலகில் எங்கும் இவ்வளவு மலிவான கட்டணம் இல்லை என்ற சாதனைச் சரித்திரத்தை செய்தவர் அவர்!

3. அது மட்டுமல்ல - இராணுவத் துறையினர் பயன்படுத்தாத அலைக்கற்றையையும் போராடி வாங்கி அதனை சாமான்ய மக்கள் பயன்படுத்தும் வகையில் மலிவுப் பதிப்பாக்கி, நுகர்வோருக்கு மிகப் பெரும் பயன் விளைவித்தவரும் அவரே!

கொள்கை முடிவு

4. அதில்கூட முதலில் வருபவருக்கு முன்னுரிமை First Come First served) என்ற கொள்கைகூட இவரால் உருவாக்கப்பட்டதல்ல. ஏற்கெனவே ஆண்ட பா.ஜ.க. அரசினரால் - உருவாக்கப்பட்டதாகும் இதை பா.ஜ.க.வால் மறுக்க இயலாது. ஆ. இராசா இந்தக் கொள்கை முடிவினை சிறப்பான வகையில் செயல்படுத்தி, அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கும், குறிப்பாக தி.மு.க.வுக்கும் பெருமை சேர்த்தார்.

5. இதில் பாதிக்கப்பட்ட பெரு முதலாளிகள் - சந்தர்ப்பம் தேடி காத்திருந்தனர். அமைச்சர் இராசாவின் சாதனை கண்டு சிலர் பொறாமையும் பட்டனர். ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த ஒருவனுக்கு இவ்வளவு பெருமையா? உயர்ஜாதி தலைவர்கள், ஊடகங்களுக்கும், சகித்துக் கொள்ள முடியாத எரிச்சல் - எதிர்க்கட்சி யினருக்கு அரசியல் நடத்த ஏதாவது தீனியைத் தேடினர்.

தமிழ் ஓவியா said...


தீர்ப்பை முன் கூட்டியே எழுதும் ஏடுகள்

6. பத்திரிகை நடத்தும் பல பெருமுதலாளிகள் தொலை காட்சிகளையும் தங்கள் கையில் வைத்து, செய்திகளை மக்களுக்குத் தருவதற்குப் பதிலாக, செய்திகளை அவர்களே உருவாக்கித் தருவதும், இல்லாத ஒரு பிரச்சினையை பூதாகரமாக்கி ஊதி, குற்றம் சுமத்திடுவதோடு, அவ்வழக்கின் விசாரணையையும் அவாளே நடத்தியும் தீர்ப்பும்கூட எழுதிடும் போக்கும் அண்மைக் காலத்தில் மிகவும் மலிந்து வருகின்றன. (Trial by media, Judgement by media).

7. இவர்களில் உயர்ஜாதி அதிகார வர்க்கத்திடம் உள்ள பதவிப் பொறுப்புக்களைப் பயன்படுத்தி, திட்டமிட்டே வெகு மக்களுக்குப் பயன்படுபவைகளை அழிக்க, தவறான ஒரு செய்தியைக் கசிய விட்டு, விளம்பர வெளிச் சத்தை அதன்மீது வாரி விடுவதும், குற்றம் சுமத்து வதும் ஆன போக்கும் பிறகு இணைந்து கொள்வது.

CAG என்னும் உயர்ஜாதி பார்ப்பனர்

8. 2ஜி அலைக்கற்றை விவகாரத்தில் அமைச்சர் இராசாவைக் குற்றம் சுமத்தி, இதனால் ரூபாய் 1.76 லட்சம் கோடி நட்டம் ஏற்பட்டு விட்டது என்ற ஒரு ஆதாரமில்லாத, ஒரு புகாரை - CAG என ஒரு உயர்ஜாதி பார்ப்பனர் தணிக்கைக் குறிப்பில் எழுதியதோடு, அது அதிகாரப் பூர்வமாக வெளியிடுவதற்கு முன்பே, அச்செய்தி (மீடியாவில்) ஊடகங்களில் கசிய விட்டு - மிகப் பெரிய கொயபெல்ஸ் பிரச்சாரத்தைச் செய்தனர்.

தமிழ் ஓவியா said...

மத்திய அரசின் தவறு

9. இதனைத் திட்டவட்டமாக மறுத்து, இது கொள்கை முடிவு, இதில் எந்தவித நடைமுறை இழப்பும் ஏற்படவில்லை. இந்த சி.ஏ.ஜி. தணிக்கை அதிகாரி கூறுவது அனுமான இழப்பே தவிர உண்மையான இழப்பு அல்ல. (Only Presumptive Loss - No actual Loss) உண்மையான இழப்பு பூஜ்யமே. (இப்படி கபில்சிபல் போன்ற அமைச்சர் கூட கூறியிருக்கும் நிலையிலும்) துணிந்து எதிர்க்கட்சிகள், ஊடகங்கள், பிளாக்குமெயில் அரசியல் பேரக்காரர்கள் கூற்றுக்கள் என்பதை யெல்லாம், திராணியுடனும், துணிவுடனும் மேற்கொண்டு, தமது அமைச்சரவையும், அதன் கூட்டணிக் கட்சி அமைச்சரவையும் பாதுகாப் பதில் உறுதியானதொரு நிலைப்பாட்டினை எடுக்கத் தவறி, கரடி வந்தவுடன் மரத்தில் ஏறி தன்னை மட்டும் காப்பாற்றிய இரு நண்பர்களில் ஒருவனைப் போல், மத்திய அரசு, எதிர்க் கட்சிகளின் பிரச்சாரப் பெரும் புயலைச் சரியாகச் சந்திக்கத் தவறியது அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசு.

அது நாடாளுமன்ற கூட்டு விசாரணைக்குழு முடிவைக்கூட, துவக்கத்திலேயே துணிந்து சரியான நடவடிக்கையை எடுக்கத் தவறி, உச்சநீதிமன்றத்தின் ஆணை என்பதையே சாக்காக வைத்து, இராசாவை பதவி விலக வைக்க தி.மு.க.வை வற்புறுத்தியது தி.மு.க.வும் ஏற்றது; பிறகு அவரைக் கைது செய்து, ஓராண்டுக்கு மேல் டெல்லி சிறையில் வைத்தது. அதையொட்டி கலைஞர் தொலைக்காட்சியில் உண்மையான தொடர்பு இல்லாத நிலை யிலும்கூட கனிமொழி எம்.பி. அவர்களையும் சரத்குமார் என்பவரையும்கூட கைது செய்யப்பட்டு அவர்கள் திகார் சிறையில் பல மாதங்கள் கழித்தே ஜாமீனில் வந்தனர்.


தமிழ் ஓவியா said...

வழக்குகள் நடைபெறுவதால் அதனுள் புக விரும்பவில்லை - பல்வேறு அம்சங் கள் முரண்பட்ட நியாய விரோத நிலைப்பாடாக இருந்த போதிலும்கூட!

இப்பொழுது என்னாயிற்று?

10. ரூ. 1.76 லட்சம் கோடி இழப்பு என்பதையே ஏதோ மோசடி, சதியென்று கூறிய நிலையில் உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டும் முறைகளை யொட்டி மீண்டும் ஏலம் விடப்பட்டதே இரண்டு நாள்களுக்கு முன் - அதில் அரசுக்கு அதிக அளவில் லாபம் வரும் என்று பிரச்சாரம் ஊடகங்களால் செய்யப்பட்டதே. கிடைத்ததா?

கூவிக்கூவி ஏலம் போட்டும், கிடைத்தது 9400 கோடி ரூபாய்கள்தான். (ஜி.எஸ்.எம். பிரிவில் மட்டும் அரசுக்கு 28000 கோடி கிடைக்கும் என்று மதிப்பிடப்பட்டிருந்தது).

இதையும்கூட வரவு என்று சொல்லி விட முடியாது. 2ஜி அலைக்கற்றை வழக்கில் குற்றம் சாட்டப்படாத நிறுவனங்கள், தாங்கள் ஏற்கெ னவே உரிமம் பெற்றபோது செலுத்திய முன் பணத்தை இப்போது கழித்துக் கொள்ள முடியும். ஆகவே இந்த ஏலத்தின் மூலம் அரசுக்குக் கிடைக்கும் வருவாய் சுமார் ரூபாய் 5,000 கோடிதான்.

ஏலப்பாட்டுப் பாடி, ரூ. 1.76 லட்சம் கோடி நட்டம் என்ற இமாலயப் புளுகினைக் கட்டவிழ்த்து விட்டு, காலந்தள்ளிய ஊடகங்களும் உத்தம ஊழல் ஒழிப்பு அவதாரங்களும் இப்போது, ஏலம் எடுப்போர் கூட்டுச் சேர்ந்து சதி செய்ததால் (Cartel) இப்படி ஏலம் குறைந் திருக்கலாம் என்று நாகூசாமல் மறுபடியும் பேசுகிறார்கள். முன்பே ஏலம் விட்டிருந்தால், ஏலம் எடுப்போர் கூட்டுச் சேர்ந்து குறைந்த ஏலம் கோராமல் இருந்திருக்க மாட்டார்களா? என்னே மழுப்பல்கள். எனவே சதி அல்ல இதன் பின்னணி சாதி! சாதி!! சாதி!!! தி.மு.க. வெறுப்பு - அவ்வளவுதான்!

மத்திய அமைச்சர் கபில்சிபல் கூறுவதைக் கேளுங்கள்

அது மட்டுமல்ல. மத்திய தொலைத் தொடர்பு அமைச்சர் கபில்சிபல் நேற்று குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய ஏலத்தில் குறைந்த தொகை மட்டுமே, அரசுக்கு வருமானக் கிடைத்துள்ளது. உண்மை நிலை இவ்வாறிருக்க, ஏலத்தில் விட்டிருந்தால் கோடியில் லாபம் கிடைத்திருக்கும் எனக் கூறியது, எந்த அளவு உண்மை என்பதை இப்போதாவது புரிந்து கொள்ள வேண்டும். 2ஜி ஸ்பெக்ட்ரத்தை ஏலம் விட்டதின் மூலம் மிகப் பெரிய பாடம் கிடைத்துள்ளது.

கடந்த 2005 முதல் 2007 வரை, 2ஜி ஸ்பெக்டரம் மூலம் மக்களுக்குப் பயன் போய்ச் சேர, அரசு நடவடிக்கை எடுத்தது. கோடிக்கணக் கானோர் மொபைல் போன்களில் பேசும் வசதி கிடைத்தது. ஏல முறை இல்லாததால், தொலைத் தொடர்பு அடர்த்தி அதிகரித்தது. சாமான்ய மக்கள் ஏராளமானோருக்குப் பயன் கிடைத்தது. ஆனால் தற்போதைய ஏல முறையால் கிடைக்கா மற் போய் உள்ளது என்றும் கூறியுள்ளாரே மத்திய அமைச்சர் கபில் சிபல்

இப்போது பொய்த் திரை - ஊடகங்களின் எதிர்க்கட்சிகளின் கொயபெல்ஸ் பிரச்சாரப் பொய்த் திரை - மாய்மாலம் கிழிந்தும், உடைந்தும் சுக்கல் நூறாகி விடவில்லையா?

பாதிக்கப்பட்டவர் தாழ்த்தப்பட்டவர் என்றால்...

இறுதியில் நீதி வழங்க வேண்டியவர்களே பிராசியூட்டர்களாகி, சட்டத்தின் ஆட்சியின் இறக்கைகளை ஒடித்து, நியாயத்தினை மறுக்க லாமா? என்று கேட்டு, தன் தவறுக்கு மத்திய அரசு - அய்க்கிய முற்போக்கு கூட்டணி அரசு தக்க பரிகாரம் தேட வேண்டாமா?

பாதிக்கப்பட்டவர்கள் தாழ்த்தப்பட்டவர்கள், பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் என்பதால் அவர்களை நாதியற்றவர்களாக்கி வேடிக்கை பார்ப்பது சரியா? நியாயமா? நாம் இதனை ஓராண்டுக்கு முன்பே சொன் னோம்.
இந்த சி.ஏ.ஜி. என்ற அதிகாரி இதுபற்றி ஒரு அரசியல்வாதியைப் போல, தமிழ்நாட்டு அக்கிரகார வாரப் பத்திரிக்கை ஒன்றுக்கு பேட்டிகொடுத்து பிரச்சினைக்கு எண்ணெய் ஊற்றிப் பெரிதாக எரியச் செய்தது எதைக் காட்டுகிறது? உள்நோக்கத்தோடு இது திட்டமிட்டு சுமத்தப் பெற்ற குற்றச்சாட்டுதான்!

நடுநிலையாளர்கள் சிந்திக்கட்டும்

நீதிமன்றங்களில் அரசின் கொள்கை முடிவுகளில் தலையிட முடியாது; தலையிடக் கூடாது என்று உச்சநீதிமன்றத் தீர்ப்புகளே உள்ளனவே! அதை அலட்சியம் செய்யலாமா?
எனவே 2ஜி அலைக்கற்றை வழக்கும் அது சம்பந்தமான பல்வேறு நடவடிக்கைகளும் மீண்டும் மத்திய அரசின் மறுபரிசீலனைக்குட்படுத்துவதே தவறிய நியாயத்தை, வழங்கிட வாய்ப்பை ஏற்படுத்தும்.

இதுபற்றி நடுநிலையாளர்கள், நியாய உணர் வாளர்கள் சிந்திக்க வேண்டும். பாதிக்கப்பட் டவர்கள் பரிகாரம் தேடிட உரிமை உண்டே!

வேலிகளே பயிர்களை மேயும் நிலையை ஒரு போதும் அனுமதிக்கக் கூடாது.

சென்னை

17.11.2012

கி. வீரமணி
தலைவர்,திராவிடர் கழகம்

தமிழ் ஓவியா said...


நவம்பர் 25 அழைக்கிறது!


திராவிடப் பெருங்குடி மக்களே! வரும் 25ஆம் தேதி சென்னை பெரியார் திடலில் ஒரு புரட்சி விழா!

எத்தனையோ புரட்சி அத்தியாயங்களை நம் மக்களுக்கு உருவாக்கிக் கொடுத்த திராவிடர் கழகம் இப்பொழுது அதன் திசையிலே என்றென்றும் ஒளி உமிழும் ஓர் செயல்பாட்டுக்கு உங்களை அழைக் கிறது.

ஜாதி என்பது நமக்கு உரியதன்று. அது இடையில் வந்த ஒரு கூட்டத்தால் திணிககப்பட்ட தீய நஞ்சு.

திராவிடர் இனத்தின் ஒற்றுமையை உருக் குலைத்த எலும்புருக்கி நோய்! நாம் ஓர் இனம் என்ற உணர்வை ஒழித்துக் கட்டிய திட்டமிட்ட ஏற்பாடு அது.

பிறப்பின் அடிப்படையில் பேதம் பேசும் இந்த வருணாசிரம ஏற்பாட்டை ஒழித்துக் கட்டினால் ஒழிய நம் இனத்துக்கு மீட்சியில்லை.

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் தம் வாழ் நாள் முழுவதும் பிரச்சாரம் செய்ததும், பாடுபட்டதும் ஜாதி ஒழிப்பு சமத்துவ சமுதாயம் ஒன்றைப் படைப்ப தற்காகத்தான்; ஜாதியின் பாதுகாப்புக் கோட்டை யாக இருந்துவரும் கடவுள் மதம், சாஸ்திரம், ஏன் இந்திய அரசமைப்புச் சட்டம் முதலியவற்றின் ஆணி வேருக்கே சென்று அறிவாயுத அணுக்குண்டைப் போட்டவர் அறிவுலக ஆசான் அய்யா.

நாட்டில் ஏராளமான ஜாதி மறுப்புத் திருமணங்கள் - மத மறுப்புத் திருமணங்கள் நடக்கத் தொடங்கின. கோரிக்கையற்றுக் கிடக்கு தண்ணே வேரில் பழுத்த பலா என்று துணைவரை இழந்த பெண்களின் நிலையைக் கண்டு கவிதை வரியில் படம் படித்துக் காட்டினார் நமது இயக்கக் கவிஞர் பாரதிதாசன்.

துணைவரை இழந்தால் இன்னொரு துணை வியை தேடிக் கொண்டால் என்ன என்று துணிச்ச லாக வினா எழுப்பி மக்கள் மத்தியில் சிந்தனை அலைகளை எழுப்பி வந்திருக்கிறோம். அதன் விளைவு ஏராளமான திருமணங்கள் இந்தத் திசையில் நடந்து வருகின்றன.

சிவகாமி - சிதம்பரனார் ரெங்கம்மாள் - சிதம்பரம் என்று தொடங்கி நீண்ட பட்டியலே உண்டு.

மத மறுப்புத் திருமணங்களும் நடந்து வருகின்றன - நாமும் நடத்தியும் வைத்திருக்கிறோம்.

பார்ப்பனப் புரோகிதம் ஒழிந்த சுயமரியாதைத் திருமணங்கள் நாட்டில் நடக்கப் புதுமுறை ஒன்றை அறிமுகப்படுத்தியவர் புரட்சியின் சின்னமாம் தந்தை பெரியார்! சட்டப்படி அவை செல்லாது என்று நீதி மன்றம் தீர்ப்பு வழங்கியும், சட்டமா? சுயமரியாதையா? என்று வெடித்தெழுந்த வினாவுக்கு சுயமரியாதையே என்று பதில் அளித்ததோடு மட்டுமல்லாமல், புரோகித மறுப்புத் திருமணங்களை நடத்தித்தான் வந்தனர்.

அறிஞர் அண்ணா தலைமையில் அமைந்த திமுக ஆட்சியில் சுயமரியாதைத் திருமணம் சட்டப்படி செல்லுபடியாக்கப்பட்டு தந்தை பெரியார் அவர் களுக்கு காணிக்கையாக்கப்பட்டது.

இப்பொழுது அடுத்த கட்ட அத்தியாயத்தை பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையம் எழுதிட உள்ளது.

ஜாதி மறுப்புத் திருமணம், மத மறுப்புத் திருமணம் விதவையர் திருமணம், மாற்றுத் திறனாளிகளுடன் திருமணம், திருமண விடுதலை பெற்று மறு திருமணம் செய்து கொண்டோர்களுக்கு ஒரு பாதுகாப்பு என்று கூடச் சொல்லலாம். இந்த இணையர்களுக்குப் பிறந்த குழந்தைகளுக்குத் திருமணம் செய்ய ஏற்பாடு செய்யும்போது இடர்ப் பாடுகள் ஏற்படும் நடைமுறைச் சிக்கல்களிலிருந்து அவர்களைக் காப்பாற்றிடவும், ஜாதி மறுப்பு - மத மறுப்பு திருமணங்கள், விதவையர் திருமணங்கள், மறு வாழ்வு திருமணங்கள் இவற்றை ஊக்கப்படுத்தவும் வரும் நவம்பர் 25ஆம் தேதி காலை முதல் மாலை வரை முழு நாள் என்று சொல்லும் அளவுக்கு மன்றல் 2012 நிகழ்ச்சி சென்னை பெரியார் திடலில் நடைபெற உள்ளது.

ஜாதி மறுப்பு, மத மறுப்பு திருமணங்கள் விதவைப் பெண்கள் திருமணங்கள் விவாக விடுதலைப் பெற்றோர் திருமணம், மாற்றுத் திறனாளிகளுடன் திருமணம் இவற்றை செய்து கொள்ள விரும்புவோர் அன்று பெரியார் திடலில் கூடலாம்.

முன்னதாகவே பெரியார் சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநருக்குத் தகவல்களைத் தெரிவிக்க லாம்.

ஜாதிக்குள் சுயம்வரங்கள் நாட்டில் நடப்பதுண்டு. இந்த வகையில் நாட்டில் நடைபெறுவது இதுதான் முதல் முறை.

மேலும் மேலும் தொடர்ந்திடவும் வாய்ப்பு இருக் கிறது. திராவிடர் கழகம்தானே எல்லா மறு மலர்ச்சிக்கும் முன்னோடி!

வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்வீர்! வாகை மலர் சூட்டிக் கொள்வீர்!!

நவம்பர் 25 அழைக்கிறது! அழைக்கிறது!!17-11-2012

தமிழ் ஓவியா said...


எட்டடியும்கூட சொந்தமில்லையே! இப்போது


எங்கு பார்த்தாலும் நிலப்பறி நிலப் பறி என்ற வழக்குகள்; கிணறுகளைக் காணாமல் போயிற்று என்று நகைச் சுவை நடிகர் வடிவேலுவின் காமெடியையும் தாண்டி, மலைகள் காணாமற் போகின்றன.

ஒடிசா போன்ற மாநிலங்களில் சுரங்கங்களில் நடைபெறும் சுரண்டல் கள் தோண்டத் தோண்ட சுரங்கமாகி, இப்போது அரங்கங்களில் அதுபற்றி அலசி ஆராயப்படும் அவலங்கள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன!

சுரங்கக் காண்ட்ராக்ட்டில் எல்லா அரசியல் கட்சிகளுக்கும்கூட சமரச சன்மார்க்க அணுகுமுறை போல லஞ்சம் - இல்லை இல்லை நன் கொடைகள் - தாராளமாக பல ஆயிரம் கோடிகள் கொடுக்கப்பட்டுள்ளனவா?

இந்த ஒப்பந்தக் கம்பெனி, வெளி நாடோ, உள்நாடோ - எப்படியிருப் பினும் பெயர் வேதாந்தா என்பது - வேதத்தின் அந்தம் வேதனை கடைசி எல்லை இப்படியா சுரங்கத்தையும் விடாது சுரண்டுவதான ஊழலில் முடிவது என்ற கேள்வி ஒருபுறம்.

பலர் சொத்துக்களை வாங்கி, வாங்கி (திருடி திருடி) என்றெல்லாம் சிலர் கூறுவார்கள் சேர்க்கிறார்களே இவர்கள் கடைசியில் தங்களுக்கென்று மாய்ந்து சேர்த்துள்ள எப்படியெல்லாம் அனுபவிப் பார்கள்? இயலுமா?

பணம் சேர்ப்பது, சொத்து சேர்ப்பது என்பது குறிக்கோள் இல்லாது, ஒரு பழக்கமாகவே பலருக்கு ஆகி, அதுவே பிறகு வழக்கமாகி வம்பில், வாதில் முடிகிறது.
காலந் தாழ்ந்து உணர்ந்து என்ன பயன்? குதிரைக் காணாமல் போன பின்பு, காலி லாயத்தைப் பூட்டி வைப்பது பின்புத்தி அல்லவா?

பாட்டுக்கோட்டையாரான, புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் போன்றவர்களை கலங்கரை வெளிச்சமாகக் கொண்ட பொதுவுடைமைக் கவிஞர் பட்டுக் கோட்டை கல்யாணசுந்தரம் என்ற அந்த மகத்தான கவிஞர் திரைப்பட பாடல்கள் கூட, பல அருமையான தத்துவங்களை அகிலத்திற்கு அளித்து சிந்திக்க வைத்தன.

தத்துவக் கருத்துக்களை எளிமையில் தோய்த்து எவரும் எப்போதும் மனதிற் கொள்ளும்படி எழுதிய பாடல் ஒன்று இதோ:

குட்டி ஆடு தப்பி வந்தால்
குள்ள நரிக்குச் சொந்தம்
குள்ள நரி மாட்டிக்கிட்டா
குறவனுக்குச் சொந்தம்
தட்டுக் கெட்ட மனிதர் கண்ணில்
பட்டதெல்லாம் சொந்தம்
சட்டப்படி பார்க்கப் போனால்
எட்டடிதான் சொந்தம்.
கூட்டுல குஞ்சு பறக்க நினைத்தால்
குருவியின் சொந்தம் தீருமடா
ஆட்டுல குட்டி ஊட்டமறந்தால
அதோட சொந்தம் மாறுமடா
காலை நீட்டியே வைத்து
நெருப்பிடுபோது
நேசம் பாசம் பொருளாசைக்கெல்லாம்
காட்டிய ஒருபிடி வாய்க் கரிசியிலே
கணக்குத் தீர்த்திடும் சொந்தமடா
அடடா என்னே தத்துவ ஒளிக்கீற்றுகள்!
சட்டப்படி பார்க்கப் போனால்
எட்டடிதான் சொந்தம்
என்பதுகூட இப்போது மாறி வருகிறதே!

அதுகூட சொந்தமில்லை - கார ணம் மின்மயமனம் வந்து சடலத்தை எடுத்து நொடிப் பொழுதில் முடித்து, அடுத்தவர் அங்கும் க்யூ வரிசையில் காத்திருக்கிற காலமல்லவா இது!

எட்டடிக் கொட்டடியில் (சிறையில்) இருப்போர் பலரும்கூட

(சொத்துப்பறி - பணமோசடிக்காக) அதையே நிரந்தரமாகக் கொள்ள முடி யாதே - பின் ஏன் இப்படிப் பேராசை? புரியவில்லையே!

- கி.வீரமணி 17-11-2012

தமிழ் ஓவியா said...

தந்தை பெரியார், பிற நாத்திக அறிஞர் போல அல்லாமல்
துணிச்சலாக களம் இறங்கிப் போராடிய சமூகப் புரட்சியாளர்!
திராவிடர் இயக்க நூற்றாண்டு நிறைவு விழாவில் தமிழர் தலைவர் பேருரை

சென்னை, நவ.17-திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்தின் சார்பாக திராவிடர் இயக்க நூற்றாண்டு நிறைவு விழாவும் நீதிக்கட்சியின் 96ஆம் ஆண்டு விழாவும் சிறப்பாக நடைபெற்றது. சென்னை பெரியார் திடலில் 16.11.2012 அன்று நடைபெற்ற நிறைவு விழாவில் தமிழர் தலைவர் கி.வீரமணி பங்கேற்று நிறைவுப் பேருரையாற் றினார்.

அன்னை மணியம்மையார் அரங்கத்தில் மாலை 7 மணி அளவில் தொடங்கிய விழாவிற்கு திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்தின் தலைவர் பேராசிரியர் முனைவர் அ.இராமசாமி தலைமை தாங்கினார். சென்னைப் பல்கலைக் கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் முனைவர் அரங்க.இராமலிங்கம் தமிழ்ச் சித்தர் சிந்தனைகள் எனும் தலைப்பில் சிறப்புரையாற் றினார்.

திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்தின் துணைத் தலைவர் பேராசிரியர் முனைவர் பெ.ஜெகதீசன் வரவேற் புரையாற்றிட செயலாளர் பேராசிரியர் அ.கருணானந்தன் நன்றி கூறினார். மய்யத்தின் பொருளாளர் வீ.குமரேசன் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார்.

தமிழர் தலைவரின் நிறைவு விழா பேருரை

திராவிடர் இயக்க நூற்றாண்டு விழா நிகழ்வுகள் கடந்த ஓராண்டு காலமாக இயக்கத்தின் பல்வேறு அமைப்புகளின் சார்பாக நாடெங்கும் கொண்டாடப்பட்டு வந்துள்ளன. கொண்டாட்டம் எனச் சொல்லும்பொழுது கொள்கைப் பிரச்சாரம்தான் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சமூகத்தில் பல நூற்றாண்டுகளாக அடக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் பாடுபட்டு அவர்களின் மேம்பாட்டிற்குக் காரணமாக திராவிடர் இயக்கம் அமைந்துள்ளது.

நூறாண்டு கண்ட வேளையிலும் திராவிடர் இயக்கத் தின் பணி தேவைப்படுகிறது. காரணம், நூற்றாண்டைக் குறிப்பிட்டுப் பேசும் வேளையில் - குறிப்பாக ஊடகங் களில் - ஆரியப் போக்கிற்கு ஆட்பட்ட ஊடகங்களில் திரா விடர் இயக்கத்தினை உயர்த்துவது போன்ற தோற்றத்தில் சிறுமைப்படுத்தும் செயல்கள் நீடித்து வருகின்றன.

திராவிடர் இயக்கத்தின் செயல்பாட்டுத் தேவை இன்றும், வருங்காலத்திலும் தேவைப்படுகிறது என்பதைத்தான் இந்த ஆரியப் போக்கு காட்டுகிறது. ஈரோட்டுக் கண்ணாடி (பெரியார் கருத்தியல் பார்வையில்) போட்டுப் பார்த்தால்தான் ஊடகங்களின் சிறுமைப்படுத்தும் போக்கு புலப்படும். உயர்த்துவது போன்று தாழ்த்துவது; அரவணைப்பது போன்று அழிக்க முனைவது - இவை ஆதிக்க ஆரியத்தின் கடந்த கால செயல்கள் மட்டும் அல்ல; இன்றும் தொடரும் நிகழ்வுகளாகும்.

திராவிடர் இயக்க நூற்றாண்டு காலத்தில் திராவிடர் இயக்கத்தின் மய்ய பலமான பெரியாரைப் பற்றிக் குறிப்பிடும் பொழுது, பெரும்பாலான ஊடகங்கள் அவரை சிறுமைப்படுத்தும் நோக்கத்தில், தேடிப் பார்த்து இதுவரை தெரியாத நாத்திகர்களைப் பற்றிய குறிப்புகளை வெளியிட்டு - பெரியாருக்கு முன்பே நாத்திகர் பலர் இந் நாட்டில் இருந்திருக்கின்றார்கள் என ஆராய்ச்சி (?) செய்திகளாக வெளியிட்டு - ஆதிக்க மனநிலை ஆரியத் திடம் மங்கிவிடவில்லை என்பதை உணர்த்துவதாக நடந்து கொள்கின்றனர்.

ஆம். பெரியாருக்கு முன்பு பல நாத்திகர்கள் இந்த மண்ணில் வாழ்ந்திருக்கிறார்கள். தனிப்பட்ட சிந்தனையா ளர்களாக இருந்திருக்கிறார்கள். சிலர் அமைப்பு ரீதியிலும் செயல்பட்டிருக்கின்றனர். புத்தர் கடவுள் மறுப்பாளர்தான் - அமைப்புக்கட்டி செயல்பட்டவர்தான். இருப்பினும் அமைப்பில் ஆரிய ஊடுருவலால் புத்த நெறி உருவான இந்த நாட்டில் அதன் சிறப்பு அழிக்கப்பட்டு, மதம் எனும் நிலைக்கு மகத்துவம் குறைக்கப்பட்டது. பிறநாடுகளிலும் மதம் எனும் நிலையிலேயே புத்தநெறி போற்றப்படுகிறது.

ஆனால் பெரியாரைப் பொறுத்த அளவில் சமூகப் புரட்சிக்கு துணிச்சலாகக் களம் இறங்கிப் போராடி - ஆரியத்தின் சூழ்ச்சி வலைகளை அறுத்தெறிந்து - சமூக அடக்கு முறைக்கு ஆளான மக்களின் மேம்பாட்டுக்காக உழைத்துக் கண்ட வெற்றியால் மற்ற நாத்திகர்களிட மிருந்து வேறுபடுகிறார்; சிறப்புப் பெறுகிறார். தனது சுயசிந்தனையால் விளைந்த கருத்துகளை அமைப்பு ரீதியில் பிரச்சாரம் செய்து, கைக்கொண்ட அறிவார்ந்த அணுகுமுறையால் தனித்துவ வெற்றி கண்டார் தந்தை பெரியார். இத்தகைய வெற்றி, அணுகுமுறை முன்னாளில் வாழ்ந்த நாத்திகர்கள் கைக்கொள்ளவில்லை என்பதே உண்மை நிலை.

தமிழ் ஓவியா said...

ஆண்டவனைப் பற்றிப் பாடி வந்த வள்ளலார் பெருமகன் ஆறாம் திருமுறையில் சமூக மாயைகளைப் பற்றிப் பகுத்தறிவுக் கண்ணோட்டம் கொண்டு பதிவு செய்த பொழுது, ஆன்மீகவாதிகளின் ஆதிக்கத்தால் எதிர்ப்பு நிலைக்கு ஆளானார். இறுதியில் கடைவிரித் தேன்; கொள்வாரில்லை என உண்மைநிலை அறியா மாந்தர் பற்றி மனம் நொந்தார்.

ஆனால் பெரியாரோ - தமது கருத்துகள் எதிர்ப்புக்கு ஆளாகும்; மக்கள் எளிதில் ஏற்றுக்கொள்ள முடியாதவை என உணர்ந்தே கடைவிரித்தேன்; கொள்வாரில்லை என மனம் நொந்து போகாமல், களம் இறங்கி பிரச்சாரம் செய்து, கடைவிரிப்பேன், மக்கள் மனம் கொள்ளும்வரை போராடுவேன் என பொது வாழ்க்கை வாழ்ந்தவர்.

அந்தப் போராட்டம், தமது காலத்திற்குப் பின்பும் தொடர வேண்டும் என அதனை நடத்திட அமைப்பு - இயக்கம் கண்டவர் தந்தை பெரியார். பெரியாரின் சிறப்பை - தனித்துவத்தை - சமூகப் பணியினை யாரும் மறைத்துவிட முடியாது. சிறுமைப்படுத்திவிட முடியாது. பெரியாரின் பணியால் மேம்பாடு கண்ட மக்கள் எல்லாருமே, பெரியாரின் உழைப்பினை பறைசாற்றும் படைக் கருவி களாவர்.

இந்த நிறைவு விழாவில் சிறப்புப் பேச்சாளர் பேராசிரியர் அரங்க.ராமலிங்கம் தமிழ்ச்சித்தர் சிந்தனைகள் பற்றிய பல்வேறு கருத்துகளை எடுத்துரைத்தார். சமூக அவலங் களை எதிர்த்துப் பெரியார் போராடியதைப் போலவே சித்தர்களும் அந்நாளில் போராடியதாகக் கூறினார். ஆனால் நிறுவன ரீதியாக சித்தர்கள் போராடவில்லை; பெரியாருக்கும் சித்தர்களுக்கும் உள்ள வேறுபாட்டுத்தளம் என்பது கடவுள் பற்றியது. பாமர மக்களுக்கு ஒரு பிடிப்பு வேண்டும் என்பதற்காக கடவுள் நம்பிக்கை அவசியம் என சித்தர்கள் உணர்ந்தனர் எனக்குறிப்பிட்டுப் பேசினார்.

நமது நிலை என்னவென்றால், எத்தனை நாளைக்கு பாமரமக்கள், பாமர மக்களுக்காகவே இருப்பது; அவர்கள் படித்து உண்மை நிலை உணரவேண்டாமா? உண்மை நிலை உணர்ந்தால் கடவுள் நம்பிக்கை தகர்ந்து விடுமே! பேராசிரியர் பேசும்பொழுது பெரியாரையும் சித்தர்களையும் பிரிப்பது கடவுள் நம்பிக்கை விசயம்தான் என்றார். எங்களைப் பொறுத்த வரையில் எது நம்மைப் பிரிக்கிறது என்பதைவிட எது நம்மை இணைக்கிறது எனப் பார்ப்பவர்கள். அந்த வகையில் சமூக அவலங்களை எதிர்த்துக் குரல் கொடுப்பதில், போராடுவதில் சித்தர் சிந்தனையார்களும், பெரியார் இயக்கத்தினரும் இணைந்து போராட வேண்டியவர்கள்.

சித்தர்கள் பற்றிய, உயர்வான எண்ணங்களைக் கொண்டிருந்தார் பெரியார். எதையும் தெளிவாக, பாமர மக்களுக்கும் புரியம் வகையில் கருத்துகளைச் சொல்லும் ஆற்றல்பெற்ற பெரியார் தான் நிறுவிய உண்மை இதழின் முதல் வெளியீட்டிலேயே புத்தியைப் பயன்படுத்துபவர் புத்தர்;

சிந்தனையைப் பயன்படுத்துபவர் சித்தர் என மிக எதர்த்தமாகக் கூறினார். சித்தர்களைப் பற்றியக் குறிப்பிடும் பொழுது அவர்களைக் கலகம் (revolt) செய்பவர்கள்; கலக்காரர்கள் என்றே குறிப்பிட்டார் பெரியார். அழிவுப் பணியில் ஈடுபடும் கலக்காரர்கள் அல்ல அவர்கள்; சமூக அவலங்களை எதிர்த்துக் குரல் கொடுத்த கலகக்காரர்கள் - சித்தர் என பெருமை யாகவே குறிப்பிட்டார்.

சித்தர்கள் நிறுவன ரீதியாக செயல்படவில்லை என பேராசிரியர் குறிப்பிட்டார். சித்தர் போராடியது வேதாந்தத்தை எதிர்த்து; வேதாந்தத்திற்கு எதிர்ப்பு நிலை சித்தாந்தம். வேதாந்தத்திற்கு அடிப்படை வேதங்கள். வேதங்களைப் போற்றுவது இந்து மதம். மற்ற மதங்களான கிறித்துவ, முகமதிய மதங்களைப் போல நிறுவன மதமாக இந்து மதம் இல்லை. இருப்பினும் மற்ற மதங்களுக்கு இல்லாத கூடுதல் ஆதிக்க பலம் என்பது இந்து மதத்தின் கருத்துக்கட்டமைப்பில் உள்ளது.

கருத்துக் கட்டமைப்பில் தான் அதன் நிறுவன இயல்பு நீடிக்கிறது. வருணாசிரம் எனும் கருத்து நிறுவனத்தால் இந்து மதம் எனும்வேதமதம் மக்களை வேறுபடுத்தி மேல்தட்டு மக்களான பார்ப்பனர்களுக்கு அனுகூலமாக உள்ளது. அந்த வகையில் நிறுவன ரீதியில் செயல்படாவிட்டாலும், சிந்தனை அடிப்படையில் சமூக மேம்பாடை வலியுறுத்திய சித்தர்களின் சிந்தனை வழி அமைப்புகள், இன்றைய செயல்பாட்டாளர்கள் - கருத்து நிறுவன ஆதிக்க பலம் கொண்ட இந்து மதத்தை எதிர்த்து பெரியார் இயக்கத் துடன் இணைந்து போராட முன்வரவேண்டும்.

இணைந்து போராட வேண்டியவர்கள் நாம். ஆரியத்தின் சூது வலையில் சித்தர் சிந்தனையாளர்கள் சிக்கிவிடக் கூடாது. சிக்கிவிடாமல் அவர்களையும் இணைத்து வருங் காலத்தில் போராட பெரியார் இயக்கம் அணியமாகவே உள்ளது. ஒத்த மனிதநேய சிந்தனையாளர்கள் இணைந்து பணியாற்ற வேண்டும் என்பதே திராவிடர் இயக்க நூற்றாண்டு நிறைவு விழாவில் நாம் விடுக்கும் செய்தியாகும்.

-இவ்வாறு தமிழர் தலைவர் கி.வீரமணி தமது நிறைவுப் பேருரையில் குறிப்பிட்டார்.
(நிகழ்வில் பங்கேற்ற மற்ற பேச்சாளர்களின் உரை விபரங்கள் பின்னர் வெளிவரும்.)

கூட்டத்தில் கல்வியாளர்கள், பல்துறை வித்தகர்கள் என பல தரப்பட்ட மக்களும் வருகை தந்திருந்தனர். அரங்கம் முழுவதும் மக்கள் கூட்டமாக நிரம்பியது. அரங்கத்திற்கு வெளியிலும் மக்கள் நிரம்பி இருந்தனர்.

தமிழ் ஓவியா said...


சோழவந்தான் மகாநாடு!
எழுத்துரு அளவு Larger Font

நிறைவேறிய தீர்மானங்கள்

(1) சென்னை மாகாணத்தில் இந்தி பாஷையைக் கட்டாயப் பாடமாக பள்ளிகளில் வைக்கக் கூடாதென்று இம்மாகாணத் தமிழ் மக்கள் எவ்வளவோ தக்க காரணம் சொல்லி ஆட்சேபித்தும் லட்சியம் செய்யாமல், 125 பள்ளிகளில் இந்தியைக் கட்டாயப் பாடமாக வைத்திருக்கும் மந்திரி சபையின் செய்கையை இம்மகாநாடு கண்டித்து, தமிழ் மக்களின் அதிருப்தியை சர்க்காருக்குத் தெரிவிக்கிறது.

(அ) சர்க்காரின் செயலை வெற்றிபெறாமல் செய்ய பயனளிக்கத்தக்க முறையில் பலமான முயற்சி எடுத்துக்கொள்ளுமாறு திருச்சி தமிழர் மகாநாட்டில் நிறுவப்பட்ட கமிட்டியாரையும் காஞ்சிபுரத்தில் கூடிய சென்னை மாகாண இந்தி எதிர்ப்பாளர் மகாநாட்டாரால் நிறுவப்பட்ட கமிட்டியாரையும் காஞ்சிபுரத்தில் கூடிய சென்னை மாகாண இந்தி எதிர்ப்பாளர் மகாநாட்டாரால் நிறுவப்பட்ட கமிட்டியாரையும் இந்தி கட்டாயப் பாடமாவதை எதிர்க்கும் இதர பிரமுகர்களையும் கேட்டுக்கொள்கிறது.

2. மதுரை ஜில்லா சம்பந்தப்பட்ட வரை இந்தியைக் கட்டாயப் பாடமாக வைத்திருக்கிற கலாசாலைகளில் மாணாக்கர்கள் வாசியாமல் வேறு பள்ளிகளில் வாசிக்கு மாறு பெற்றோர்களைக் கேட்கும்படி தூண்டவும், அவசிய மானால் மறியல் செய்வது போன்ற இதர துறைகளில் வேலை செய்யவும் கீழ்க்கண்டவர்களடங்கிய தோழர்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறது.

1. டபிள்யு. பி. ஏ. சவுந்திரபாண்டியன், 2. டி. ஆவுடை யப்பன், 3. ப. வ. விநாயகமூர்த்தி, 4. எம். ஆர். மத்திரன், 5.எஸ். பாதம்பரி முதலியார், 6. சரவணை, 7. டி. சோமு நாடார்; அவசிய மேற்பட்டால் மேற்படி கமிட்டியார் வேண்டியவர்களையும் சேர்த்துக்கொள்ள அதிகாரம் கொடுக்கிறது. 3. இந்தி கட்டாய பாடமாவதைத் தடுக்க இந்தி எதிர்ப்புக் கமிட்டியாரால் செய்யப்படுகிற வேலைத் திட்டங்களை இந்த ஜில்லாவாசிகள் முழுமனதுடன் வரவேற்பதுடன் கூடிய விரைவில் கமிட்டியார்கள் கூடி இந்தி எதிர்ப்பு வேலை முறைகளைச் செய்யுமாறு இம்மகாநாடு கேட்டுக் கொள்கிறது. 4. மதுரையில் நடந்த மதுரை ஜில்லா சுயமரியாதை மகாநாட்டில் மீதியான பணத்தையும், இந்த மகாநாட்டில் மீதியான பணத்தையும் இந்தி எதிர்ப்பு நிதிக்கு வைத்துக்கொண்டு வேலைகள் ஆரம்பிக்குமாறு கமிட்டியாரைக் கேட்டுக்கொள்கிறது.குடிஅரசு - தீர்மானங்கள் - 22-05-1938

தமிழ் ஓவியா said...


பல்லடம் தோழர் பொன்னுசாமி உண்ணாவிரதம்


01-06-1938 முதல் சென்னை தியாகராய நகரில் கனம் முதன் மந்திரி வீட்டுக்கெதிரில் உண்ணா நோன்புடன் சத்தியாக்கிரகம் செய்துவரும் தோழர் பொன்னுச்சாமி மிக உறுதியுடன் இருக்கிறார்.

ஆனால், வெயில், காற்று, மழைகளில் இருந்து வருவதால் இளைப்புடன் காணப்படு கிறார். அவருக்குப் பக்கத்தில் ஒரு குடத்தில் குடிப்பதற் காகத் தண்ணீர் வைக்கப்பட்டிருக்கிறது. கயிற்றுக் கட்டிலும் அமைக்கப்பட்டிருக்கிறது. முன்னைய இரவைப் போலவே 02-06-1938 இரவிலும் கடுமழை பெய்தது. இரவு முழுதும் தோழர் அவர்கள் மழையில் நனைந்தார்.

அவருக்கு அருகில் சி.அய்.டி.களும் போலீஸ்காரரும் நிறுத்தப்பட்டிருக் கின்றனர். பொதுஜனங்களும் தோழர்களும் அவரை வந்து பார்த்துவிட்டுச் செல்கிறார்கள். நேற்று ராவ்பகதூர் எம். ராமன் அவர்களும் இன்று காலை தலைவர் மேடை தளவாய் குமரசாமி முதலியார் அவர்களும் வந்து பார்த்து விட்டுச் சென்றார்கள்.

குடிஅரசு - செய்தித்துணுக்கு - 03-06-1938

தமிழ் ஓவியா said...


இந்தி எதிர்ப்பு

சில பாடசாலைகளில் இந்தி மொழியைப் பரீட்சார்த்தமாகக் கட்டாய பாடமாக்கிய திரு.சி.ராச கோபாலாச்சாரியின் திட்டத்திற்கு அவரது அரசியல் எதிரிகளிடமிருந்து கிளம்பிய எதிர்ப்பைப் போல், அவரது அமைச்சரவையினர் கொண்டு வந்த வேறு எந்த திட்டத்திற்கும் அவ்வளவு எதிர்ப்பு தெரிவிக் கப்பட்டதில்லை. திரு. ஈ.வெ.ராமசாமி நாயக்கர் அவர்களின் தலைமையில் இயங்கி வந்த சுயமரியாதை இயக்கத்திடமிருந்துதான் மிகக் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது.

எனினும் நீதிக்கட்சி, முஸ்லீம் லீக், தாழ்த்தப்பட்டோர் கட்சி ஆகிய கட்சிகள் சுயமரி யாதை இயக்கத்திற்குத் தங்கள் முழு ஆதரவையும் அளித்தன.

சென்னை மாநகரத்திலும், தென்ஆர்க்காடு உட்பட தமிழகத்தின் எல்லா மாவட்டங்களிலும் நடந்த பொதுக்கூட்டங்களில் பிராமணர்களைத் தாக்கிச் சொற்பொழிவுகள் ஆற்றப்பட்டன; பிராமண ஆதிக் கத்தை நீட்டிப்பதற்காகவும், திராவிடக் கலாசாரத் தின் மீது ஆரியக் கலாச்சாரத்தைச் சுமத்துவதற் காகவுமே இந்தி மொழி திணிக்கப்படுவதாகக் குற்றம் சாட்டப்பட்டது.

பிரதம மந்திரியின் வீட்டிற்கும் முன்பும், சில பாடசாலைக் கட்டடத்திற்கு முன்பும் சுயமரியாதை இயக்கத்தின் தொண்டர்கள் அணி அணியாகச் சென்று மறியல் செய்தனர். சென்னை மாநகரத்தில் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு, மறியல் செய்தவர்களில் பெரும்பாலோர் தண்டிக்கப்பட்டு சிறை சென்றனர். திரு. ஈ.வெ. ராமசாமி நாயக்கரும் கைது செய்யப்பட்டு, ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டார். எனினும் போராட்டம் தொடர்ந்து நடந்து வந்தது.

1939இல் காங்கிரஸ் அமைச்சரவை பதவியிலிருந்து விலகியதும், அடுத்து வந்த மந்திரிசபை கட்டாய இந்தியை ஒழித்துக் கட்டி, இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறைவாசம் அனுபவித்து வந்தவர்கள் விடுதலை செய்யப்பட்ட பிறகுதான் போராட்டம் ஓய்ந்தது.

திரு. ஈ.வெ.ராமசாமி நாயக்கர் சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்து வரும் காலத்திலேயே, நீதிக்கட்சியானது 1938ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் அவரைத் தனது தலைவராக தேர்ந்தெடுத்துக் கொண்டது.


1965ஆம் ஆண்டு மலர், பக்கம் 108 ஆதாரம்: தென் ஆர்க்காடு மாவட்ட கெசட்டர்

தமிழ் ஓவியா said...


சுயமரியாதை இயக்கமும், கம்யூனிஸ்டு கட்சியும்


1932இல் சுயமரியாதை இயக்கமும், கம்யூனிஸ்டு கட்சியும் தமிழகத்தில் தழைக்கத் தொடங்கியது. சுயமரியாதை இயக்கத்தை நீதிக்கட்சியின் ஆதரவுடன் முழுக்க முழுக்க பார்ப்பனரல்லாத இயக்கமாகவே நடத்தி வந்தார்.

ஜாதி வேறுபாடுகளை ஒழிப்பதையே நோக்கமாக கொண்டு ஆரம்பத்தில் துவக்கப்பட்ட இது படிப்படியாகப் பொது உடமைப் பாதைக்குத் திசை திரும்பி, மதம், தனி உடைமை ஆகியவற்றை எதிர்க்கத் தொடங்கியது. 1933-1934இல் தமிழ்நாட்டிலுள்ள எல்லா மாவட்டங்களிலும் தனது தீவிரமான பிரச்சாரத்தை தொடங்கி வைத்தது.


1965ஆம் ஆண்டு மலர், பக்கம் 104-105

தமிழ் ஓவியா said...

கார்ப்பரேஷனில் உள்ள ஒரு பார்ப்பனன் ஆயிர ரூபாயைத் திருடிவிட்டால், திருவாங்கூரிலுள்ள திவான் கவர்னருக்குச் சிபாரிசு செய்ய வருகிறார், நமக்கு என்ன ஆபத்து வந்தாலும் கேட்க நாதியில்லை. நமது கொட்டகையைக் கொளுத்தினார்கள். நம் தோழர்களை அடித்தார்கள். கண்களைக் குத்தினார்கள். சட்ட சபையிலே இதைப்பற்றி யாராவது கேட்டார்களா? சட்ட சபையிலே காங்கிரஸ் கட்சிக்கு எதிரான கட்சிகள் இல்லையா? யாராவது ஒரு வார்த்தை கேட்டார்களா? நமது நிலைமை அவ்வளவு நாதியற்றதாக, கதியற்றதாக இருக்கிறது. பத்திரிகை வசதி யாராவது உண்டா? நமது செய்தியை ஒரு பத்திரிகைக் கூட போடுவதில்லை. இல்லை பத்திரிகை ரிப்போர்ட்டர்களாவது நம்மைப் பற்றிச் சரியாக எழுதுகிறார்களா? அவர்கள் இங்கே எதற்காக வருகிறார்கள் என்றால், நமது கூட்டத்தில் கல், செருப்பு விழுந்ததா? கலகம் நடந்ததா என்பவைகளைக் காணவும், எழுதவும் தான் வருகிறார்கள். இந்த ஊரில் எப்படி இருந்தாலும் வெளியூர்களிலேயுள்ள ரிப்போர்ட்டர்கள் அப்படித்தான், நம் இயக்கப் பத்திரிகைகள் என்பவைகளால் நமக்குத் தொல்லை தான் அதிகம். எனவே நமக்கு நாதியுண்டா? நமக்குள்ள குறைபாடுகள் அவ்வளவு இருக்கின்றன. இவைகளுக்கிடையே தான் நாம் வளரவேண்டியிருக்கிறது. இந்த நிலையில் தான் இயக்கத்தில் தொண்டாற்றி வருகிறோம். இயக்கமும் வளர்ந்து வருகிறது. ---- தந்தைபெரியார் - "குடிஅரசு" 30.05.1947

தமிழ் ஓவியா said...

" நான் மொட்டை மரம் ; என்னை மிரட்டுவதற்கு உங்களிடம் சரக்கு கிடையாது ! உத்தியோகமா பணமோ , பதவியோ எதிர் பார்த்து நான் பொதுச் சேவையில் இறங்க வில்லை . நான் பலமுறை ஜெயில் பார்த்தாகிவிட்டது . பார்ப்பனர்களின் அனைத்துத் தொல்லைகளையும் அனுபவித்தும் வ
ிட்டேன் .காடு வா வா என்கிறது ; வீடு போ போ என்கிறது ( இதற்குப் பிறகு அய்யா 40 ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறார் ) நான் செத்தால் எனக்காக அழுபவர்கள் கூட யாரும் இல்லை . நான் ஒற்றை ஆள் , நின்ற நாளைக்கு நெடுஞ் சுவர் ; விழுந்தால் குட்டிச்சுவர் . முழுகிப் போவது ஒன்றும் இல்லை ! "
(12 -10 - 1934 ல் , கோவை டவுன் ஹால் கூட்டத்தில் )

Unknown said...

பாரதிராஜாவின் இச்செயல் கண்டிக்கத்தக்கது.இவரா இப்படி என நினைக்க வைக்கிறது.ஆட்சி மாறியதால் அவரும் மாறிவிட்டார்போலும்,பாரதிராஜா என்பது கூடத்தான் தமிழ்ச் சொல் அல்ல அதற்காக அவர் தமிழர் அல்ல என்று எடுத்துக் கொள்ளலாமா?

தமிழ் ஓவியா said...


எல்லா வகை தவறுகளையும் திருத்துபவன் பிராமணனாம்!


ஒரு தொலைக்காட்சியில் விஷமப் பிரச்சாரம்

சீறி எழுகிறார் ஒரு வீராங்கனை


(தொலைக்காட்சிகளில் நடைபெறும் ஒருவிஷமப் பிரச்சாரம்பற்றி ஒருவீராங் கனை சீறி எழுந்துள்ளார். இணையதளம் ஒன்றில் அந்த வீராங்கனை செய் துள்ள பதிவு இதோ:)

கடந்த 14 ஆம் தேதி நான் மாலை 6 மணியளவில் விஜய் தொலைக்காட்சியில் வந்த சிவம் என்ற தொடரைக் கண்டு அதிர்ச்சி அடைந்தேன்.
அதில் உள்ள உரையாடல்:

ஒரு (பார்ப்பான்) பிராமணன் என்றால், எல்லாவித தவறான செயல்களையும் திருத்துவதற்காக வந்தவன். இப்பொழுது அவர்கள் அதைத்தான் செய்துகொண்டு இருக்கிறார்கள் என்பதுதான் இந்த உரையாடல்.

அது எப்படி முடியும்? அதனால் தான் அய்.அய்.டி (இந்தியன் இன்ஸ்ஷடியூட் ஆஃப் டெக்னா லஜி) முழுதும் பிராமணர்களாலும் மற்ற நடுவண் அரசு அலுவலகங் களின் உயர் அலுவலர்களும் பார்ப்பனராயுள்ளனர் போலும்!

பாதிக்கப்பட்டுள்ள அனைவரும் (உங்களையும், என்னையும் சேர்த்துதான்) இது வெட்கப்படக் கூடியது. பெரியார் பல நலங்களை நமக்குச் செய்திருந்தும், இன்னும் பார்ப்பனர்கள் நம்மை ஆண்டு கொண்டு தான் இருக்கிறார்கள்.

மேலும், ஜெயா, சன், ராஜ் தொலைக்காட்சிகள் மற்றவையும், நமது செலவில், அவர்களது எண் ணங்களையும் நம்பிக்கையையும் வளர்க்கிறார்கள். தற்போது தினகரனும், எழுதுகிறது. இதை அறியாத நிலையில் உள்ள பார்ப் பவர்களையும், படிப்பவர்களையும் மூளைச் சலவை செய்வதற்கே.

விஜய் மற்ற தொலைக்காட்சி களும், தினகரனும் செய்து வரும் இந்த மோசமான செயலைத் தடுக்க நாம் ஏதாவது செய்து ஆக வேண்டும்.

ராம் ஜெத் மலானி, ராமன் ஒரு மோசமான கணவன் என சொல்லியிருப்பது ஒரு நல்ல செய்தி என்று நான் கருதுகிறேன். ராம் ஜெத் மலானி மீது அவருக்கு எதிராக, யாராவது ஒருவர் வழக்கு தொடர நாம் ஆவன செய்ய வேண் டும். அவர் வழக்கு மன்றத்தில் மேலும் பற்பல உண்மைகளைச் சொல்லுவார்.

ஆகவே ஜெத்மலானி கோபம் அடையக் கூடிய முறையில் அவரைத் தூண்டி விட்டுச் செயல் பட வேண்டும்.

2ஜி ஊழல், சங்பரிவாரத்தின ரால்தான் உண்டாக்கப்பட்டது.

ராஜாவின் நவீன பங்களா வையும் பொய்யாகப் பரப்பி வரு கிறார்கள் அந்தப் பங்களா எங்குள்ளது? (உண்மை இதழ் அம்பலப்படுத்தி விட்டதே!)
நிலக்கரி ஊழலில், பிரதமர் பதவி விலகல் செய்ய வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். கூட்டம் முழங்கி வருகிறது. ஆனால் கட்காரி விவகாரத்தில் இரட்டை நாக்குடன் செயல்படுகிறது.

ராமன் மற்றும் அவன் செயல்கள் குறித்தவற்றை வெளிப்படுத்து வதன் மூலம் பார்ப்பனீயத்திற்கு எதிராக நாம் இந்தியாவில் வெற்றி கொள்ள முடியும்... செய்வோமாக!

- உங்கள் உடன் பிறந்தாள்
இராசம்மா செல்வி 18-11-2012

தமிழ் ஓவியா said...


புதுவையல்ல புரட்சியின் அழைப்பு

புதுச்சேரியைப் புதுவை என்று அழைக்கிறோம். உண்மையைச் சொல்லப் போனால் அது புரட்சிக் கவிஞரை ஈன்ற மண்ணாயிற்றே!

எத்தனையோ கவிஞர்கள் தந்தை பெரியார் அவர்களைப் பாட்டுப் பட்டாடைப் போர்த்தியிருந் தாலும், அந்தக் கவிஞன் நான்கே வைர வரிகளில் படம் பிடித்தானே! ஆகா அதற்கு நிகர் ஏது!

தொண்டு செய்து பழுத்த பழம்

தூய தாடி மார்பில் விழும்

மண்டைச் சுரப்பை உலகு தொழும்

மனக் குகையில் சிறுத்தை எழும்

என்றாரே - ஒவ்வொரு சொல்லும், ஒவ்வொரு வரியும் பொருள் காவியத்துக்கான கருப்பொருள் அல்லவா?

மண்டைச் சுரப்பை உலகு தொழும் என்றாரே, எத்தகைய தொலைநோக்கு!

மத அச்சுறுத்தல் என்னும் கோரப் பற்களால் மனிதக் குடலைப் பிடுங்கி மாலையாகப் போடப்பட்டு வரும் காலம் இது.

மதக் காரணங்களால் மனிதக் குருதி மண் முழுவதையும் செந்நிறமாக்கி விட்ட கொடுமை!

ஒரு மதத்துக்குள்ளேயே உட்பிரிவுகளுக்கிடையே குத்து வெட்டு!

மதம், பெண் உரிமைகளையும் காலில் போட்டு மிதிக்கும். மதவாதங்களும் இன்னொரு புறம்.

ஈராக்கில் பல்லாயிரம் மக்களைக் கொன்று குவித்த அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ், நான் கடவுளிடம் அனுமதி பெற்றே இந்தப் போரை நடத்தினேன் என்று

கடவுளைக் காரணமாக்கிப் படுகொலை செய்த கொடுமையை என்ன சொல்ல!

மதமற்ற உலகம் தேவை! அது ஒன்றுதான் மனித நேயத்தை வளர்க்கும், மனித உரிமையை மதிக்கும் சகோதரத்துவத்தை மலர்விக்கும்.

அந்த மதமற்ற உலகை உலகுக்குத் தருவது தந்தை பெரியாரியல்தான்! தத்துவப்போதகம் தான்.

மதமே மனிதனுடைய சுயமரியாதைக்கு விரோதி!

மதமே மனிதனுடைய சுதந்திரத்திற்கு விரோதி!

மதமே மனிதனுடைய அறிவு வளர்ச்சிக்கு விரோதி!

மதமே மனித சமூக சமதர்மத்துக்கு விரோதி!

மதமே கொடுங்கோலாட்சிக்கு உற்ற துணை!

மதமே முதலாளி வர்க்கத்துக்குக் காவல்!

மதமே சோம்பேறி வாழ்க்கைக்கு ஆதரவு!

மதமே உழைப்பவனைத் தரித்திரத்தில் ஆழ்த்தி, உழைக்காதவனை உச்சத்தில் வைப்பதற்கு உதவி
(புரட்சி, தலையங்கம், 26.11.1933)

மத ஓடத்தில் ஏறிய மாந்தரைப் பற்றியும் புரட்சிக் கவிஞர், தந்தை பெரியார் அடியொற்றிப் பாடியதுண்டே.

அந்தப் புரட்சிக் கவிஞர் பிறந்த புதுவையாம் புரட்சி மண்ணிலே வரும் 23ஆம் தேதி திராவிடர் கழக மாநாடு.

மாநில மாநாடோ என்று வியக்கும் அளவுக்கு தடபுடலான ஏற்பாடுகள். சுவர்கள் எல்லாம் மாநாட்டு விளம்பரப் பதாகைகளாகப் பறை சாற்றிக் கொண்டு இருக்கின்றன. கழக அலுவலகமாம் பெரியார் படிப்பகம். கருஞ்சட்டைத் தொண்டர்களின் பாடி வீடாகக் காட்சி அளிக்கிறது. தேனீக்கள் போல பறந்து, பரம்பரமாய்ச் சுழன்று பணிகள் வாயு வேகத்தில் நடந்து கொண்டு இருக்கின்றன.

23ஆம் தேதி காலையிலே கனல் பறக்கும் கருத்தரங்கம். காலத்திற்கேற்ற கருத்துரைகள் கனமாகக் கிடைக்கும்.

பேரணியை முக்கியமாகக் குறிப்பிட வேண்டும். திராவிடர் கழகம் ஒன்றுதானே கலாச்சாரப் புரட்சிப் பாட்டையை வகுத்துக் கொடுக்கிறது.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலம் புதுச்சேரியின் நீள - அகலத்தைக் கலக்கப் போகிறது கட்டுப்பாட்டுப் பேரணியைக் கண்ணுறும் இருபால் இளைஞர்கள் ஈர்க்கப்படுவார்கள்.

ஜாதி - தீண்டாமை ஒழிப்பு முழக்கங்கள் - விண்ணை முட்டும். சமூக நீதி சங்க நாதத்தைக் கேட்கப் போகிறீர்கள். மனித நேயத்தின் மணம் வீசும்.
திறந்த வெளி மாநாட்டில் தமிழர் தலைவர் உரை, புதிய செய்திகளைச் சுமந்து வரும்! அறிவிப்புகள் மிதந்து வரும்.

கழகத்துக்குப் புது முறுக்கு

தமிழக மக்களுக்கோ முக்கிய அழைப்பு.

ஆக புதுவை மாநாடு புரட்சி முழக்கமாக, எழுச்சியான இடியோசையாக,
சமூக நீதியின் சங்கநாதமாக, ஜாதிக் காட்டை அழிக்கும் எரிமலையாகச் சுழன்றடிக்கும்.

23ஆம் தேதி - உங்கள் வாழ்நாளில் பொன்னாளாக இருக்கும். பயனுடைய நாளாக எண்ணி அசை போடலாம்.

தனியாக வராதீர்கள் குடும்பத்தோடு வாருங்கள். கொள்கைச் சத்துணவு தாராளமாகக் கிடைக்கும்.

லட்சிய தூய காற்று இலவசமாகவே கிடைக்கும்.

புதுவை வாரீர்! வாரீர்!!

புன்முறுவலோடு தமிழர் தலைவர் உங்களுக்காகக் காத்திருப்பார் என்ன புறப்படத் தயார்தானே!

- மின்சாரம் -

தமிழ் ஓவியா said...


மாற்றுத் திறனாளிகள் கோயிலில் வழிபடத் தடையா?


மாற்றுத் திறனாளிகள் தோல் செயற்கை உறுப்புகளுடன்

கோயிலில் வழிபடத் தடையா?

மனித உரிமைக்கு எதிரான போக்குக்கு கண்டனம்!

தமிழர் தலைவரின் முக்கிய அறிக்கை

தமிழ்நாடு இந்து அறநிலையப் பாதுகாப்பு துறையின் சுற்றறிக் கையில்: மாற்றுத் திறனாளி தோல் செயற்கை உறுப்பு களுடன் கோயிலில் வழிபட வழி யில்லை என்று தெரிவித்திருப் பது, மனித உரிமைக்கு எதிரான போக்கு என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட் டுள்ள முக்கிய அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இந்து அறநிலையப் பாதுகாப்புத் துறையின் நோக்கம் - அது சட்டம் இயற்றிய நீதிக்கட்சி காலத்திலேயே தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

தணிக்கையே தவிர, இந்து மத பிரச்சாரம் செய்வதோ, பக்தியைப் பரப்புவதோ அல்ல.

(அ) இந்திய அரசியல் சட்டத்தில் கூட, மத விஷயங்களில், உள் தத் துவங்கள், முதலியவற்றைத் தவிர, பல வகையில் சீர்திருத்தம் செய்யவும் தெளிவாக இந்திய அரசியல் சட்ட அடிப்படை உரிமைகளில் பிரிவு 25இல் (Article) மதச் சார்பற்ற மற்ற விஷயங் களில் அரசுகள் தலையிட, மாற்றம் செய்ய உரிமை உள்ளது.

(ஆ) இந்த உரிமைகளில்கூட எல்லை வகுக்கப்படாத முழு உரிமை கள் (Absolute Rights) அல்ல, பொது அமைதி, பொது ஒழுக்கம், சுகாதாரம், இவற்றோடு இந்திய அரசியல் சட்டத்தின் இந்தப் பிரிவின் மற்ற விதிகள் இவைகளுக்குட்பட்டதே அவ் வுரிமைகள்.

இந்த நிலையில், தமிழ்நாடு இந்து அறநிலையப் பாதுகாப்பு துறையின் சுற்றறிக்கை, ஆணை - மாற்றுத் திறனாளிகளாக உள்ள பக்தர்கள் ஊன்றுகோல், மற்றும் செயற்கைக்கால் மற்றும் செயற்கை உபகரணங்களில் தோல் சம்பந்தப்பட்ட பொருட்களினால் செய்யப்பட்டுள்ளது என்பதனால், கோயில்களில் வழிபட அத்தகைய மாற்றுத் திறனாளிகளை கோயில் இறை சன்னதி வரை சென்று வழிபடச் செய்ய வழி இல்லை என்பது போன்ற நிலை - மனிதநேயத்திற்கும், மனித உரிமைக்கும் முற்றிலும் மாறுபட்டதாகும்.

தமிழ்நாடு உடல் ஊனமுற்றோர் சங்கங்களின் கூட்டமைப்பு இதுபற்றி 6.9.2012-இல் இந்து அறநிலையப் பாதுகாப்புத் துறைக்கு இந்த நிலையை அனுமதிக்காததை நீக்க வேண்டும் என்று கோரியுள்ளது.

இன்று கோயில் உள்ளே எண்ணெய் விளக்குக்குப் பதில் மின்சார விளக்கு களைப் போடுவதும், பெரிய கோயில் களில் ஏர்கண்டிஷன் உட்பட செய்துள்ள தும், பக்தர்களைக்கூட மெட்டல் டிடெக் டர் வைத்து சோதித்து அனுப்பும் முறை யும், திருப்பதி லட்டு, பழனி கோயிலில் இழுவை ரயில் மூலம் கோயிலுக்கு அனுப்புவதும், ஆகம விதிகளில் உண்டா?

ஆண்டவன் சேவைக்கு அனுமதிக் கட்டணம் வசூலிக்க ஆகமங்கள் கூறு கின்றனவா?

எல்லா கோயில்களும் ஆகம விதிப்படி கட்டப்பட்டுள்ளனவா?

ஆகம விதிப்படி கட்டப்படாத கோயில்கள் அறநிலையப் பாதுகாப்பு துறையின்கீழ் இருக்கலாமா? இருக் கிறதே - அதற்கென்ன பதில்?

மாற்றுத் திறனாளிகளுக்கு, மற்ற மனிதர்களுக்கு உள்ள உரிமை மறுக்கப் படக் கூடாது என்ற நியதி அடிப்படை யிலேயே நாம் இதனை சம்பந்தப்பட்ட துறைக்குத் தெரிவித்து கேட்கிறோம்.

உடனடியாகப் பரிகாரம் கிடைக்கா விட்டால், மனித உரிமை ஆணையம், நீதிமன்றங்கள் மூலம் தீர்வு காணப்பட நேரிடலாம். அந்நிலைக்கு முன்பே பரீசிலித்து நீதி வழங்கிடுவது அவசியம், அவசரம்.

கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்.

18.11.2012, சென்னை