Search This Blog

4.8.11

ஆடி 18 இன் அபாய சங்கு!


ஆடி பதினெட்டு! பெண்கள் எல்லாம் ஆற்றுக்குச் சென்று பூஜை புனஷ்காரங்களில் தட புடலாக ஈடுபடுகின்றனர். புதுமணப் பெண்ணுக்குத் தாலி பிரித்துக் கட்டுகிறார்கள். பழைய பெண்கள் தாலிக் கயிறு மாற்றுவதும் உண்டு.

இந்த நாளில் இப்படி செய்தால் பூவும் பொட் டுமாக கணவனுடன் நீண்டகாலம் நோய் நொடியில்லாமல், குழந்தைப் பேற்றுடன் சந்தோஷமாக வாழ்வார்கள் என்றெல்லாம் ஏடுகள் எழுதுகின்றன. தொலைக்காட்சிகளும் பெண்களை நேரில் சந்தித்து அவர்களின் பேட் டிகளையும் ஒளிபரப்புகின்றன.

நம் நாட்டுப் பெண்கள் மகிழ்ச்சியாக வாழ்வது மகிழ்ச்சிக்குரியதே! அவர்கள் வாழ் நாளில் எல்லாம் இன்பமும் குதூகலமும் பூத்துக்குலுங்கட்டும் - நமது வாழ்த்துகள் கூட!

அதே நேரத்தில் இந்த நாளில் ஆற்றில் முழுக்குப் போடுவதாலோ, தாலி பிரித்துக் கட்டுவதாலோ, காவேரி அம்மனை வணங்குவதாலோ மகிழ்ச்சியெல்லாம் கிடைக்கும் - பூவும் பொட்டும் நிலைக்கும் என்பதெல்லாம் பாட்டி வடை சுட்ட பழைய கதை என்பதை என்றைக்குதான் உணரப் போகிறார்களோ?

ஆடி 18ஆம் நாளை எத்தனை நூற்றாண்டுக் காலமாக கொண்டாடிக் கொண்டு இருக்கிறோம்? அப்பொழுதெல்லாம் நமது பெண்களின் சராசரி வயது என்ன? ஆண்களின் சராசரி என்ன?

30-க்கு மேல் கிடை யாதே! இப்பொழுது சராசரி வயது என்ன தெரியுமா? பெண்களின் சராசரி வயது 66.3; ஆண்களின் சராசரி வயது 63.3.

இந்த வளர்ச்சிக்கு என்ன காரணம்? யாது காரணம்? யார் காரணம்?

மருத்துவ வளர்ச்சி தானே காரணம்? காவேரி அம்மனை ஆடி 18 இல் வழி பட்டதால் ஏற்பட்டதில்லையே! சிந்தித்துப் பார்க்க வேண்டாமா?

வீண் பண விரயமும், கால விரயமும் அல்லாமல் வேறு காதொடிந்த ஊசி முனை அளவுக்காவது பயன் உண்டா?

காலம் காலமாகக் கடைபிடித்த எத்தனையோ மூடவழக்கங்கள் காலாவதி யாகிவிடவில்லையா?

பாட்டன் வெட்டிய கிணறு என்பதற்காக உப்புத் தண் ணீரைக் குடிக்க முடியுமா?

தாய்மார்களே, நீங்கள் கட்டியழும் மூடத்தனங்களை உங்களோடு முடித்துக் கொள்ளாமல், அந்த நோயை உங்கள் வாரிசுகளிடமும் ஒட்ட வைத்துச் செல்கிறீர்களே - இது நியாயமா? உங்கள் வாரிசுகளுக்குச் செய்யக்கூடிய நலன் தரும் செயலா? சிந்திப்பீர்!

இன்னொரு தகவல் உண்டு. இந்த ஆடி 18இல் பழைய ஓலைச் சுவடி களையெல்லாம் ஆற்றில் விட வேண்டுமாம். தமிழ் நாட்டின் அரிய ஓலைச் சுவடியான கருவூலங்களை ஆற்றில் விடச் செய்யும் பார்ப்பனர் சூழ்ச்சி இதன் பின்ணனி பதுங்கி இருக்கிறது.

ஒவ்வொரு செயலுக்கும், பின் திரையில் ஒருவர்க்க உணர்வு ஒளிந்திருக்கிறது என்பார்கள் பொதுவுடைமைத் தோழர்கள்! இந்தியாவிலோ வேறுவிதமாகச் சொல்ல வேண்டும். ஒரு வருண உணர்வு வட்டமிட்டுக் கொண்டு இருக்கிறது என்பதுதான் வடி கட்டின உண்மையாகும்.

சமணர்களுக்கும் திருஞான சம்பந்தனுக்கும் வாதப்போர் மதுரையில் நடந்த கதை தெரியுமா? திருஞானசம்பந்தன் எழுதி ஆற்றில் விடப்பட்ட சமஸ் கிருத சுலோகங்கள் அடங்கிய தமிழ்ச் செய்யுள் ஏடு மட்டும் எதிர்நீச்சல் போட்டு கரையை அடைந்ததாம்.

வாழ்க அந்தணர்
வானவர் ஆனினம்
வீழ்க தண்புனல்
வேந்தனும் ஓங்குக!
ஆழ்க தீயதெல்லாம் அர நாமமே!
சூழ்க வையகமும்
துயர் தீர்கவே!

என்பதுதான் அந்த தேவார திருஞானசம்பந்தன் என்னும் பார்ப்பனரின் பாடல்.

இந்தப் பாடல் அடங்கிய ஏடுதான் ஆற்றின் வெள்ளத்தை எதிர்த்து சிறிது தூரம் சென்று கரை ஒதுங்கிற்றாம். அப்படி கரை ஒதுங்கிய அந்த ஊர்தான் திருவேடகம் என்று இப்பொழுது அழைக்கப்படுகிறதாம்.

சமணர்களின் ஏடு ஆற்றோடு போய் விட்டதாம். அதனால் வாதப் போரில் தோற்ற சமணர்களை அரசன் கழுவில் ஏற்றிக் கொலை செய்தானாம்!

தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு சிவன் கோயிலிலும் ஆண்டுதோறும் பிரமோற்சவம் நடக்கும் பொழுது ஆறாம் திருவிழா என்று கூறி சமணர்களைக் கழுவேற்றிய விழாவைக் கொண்டாடுகிறார்களே இன்றுவரை.

திருவத்திபுரம் சிவன் கோயிலில் சமணர்களை கழுவில் ஏற்றும் காட்சி தத்ரூமாகக் கல்லில் செதுக்கி வைத்துள் ளனரே! இப்பொழுதும் போய்ப் பார்க்கலாமே!

இந்த ஆடி 18இல் இவ்வளவுக் கொலைக்கார சங்கதிகள் பதுங்கி இருக்கின்றன.

சூத்திரத் தமிழர் களே, தாய்மார்களே, கொஞ்சம் மூளைக்கு வேலை கொடுங்கள்.

-------------------- ”விடுதலை” 4-8-2011

2 comments:

தமிழ் ஓவியா said...

மூடத்தனத்துக்கு மூக்குடைப்பு!


இந்த ஆண்டு அமர்நாத் குகைக் கோயிலுக்கு யாத்ரீ கர்கள் அதிகம் வந்ததால் பனி லிங்கம் முன்கூட்டியே உருகி ஓடி விட்டது என்று ஏடுகளில் செய்தி வெளி வந்துள்ளது.

கடந்த சில வாரங்களாக காஷ் மீர் பகுதியில் வெப்ப நிலை அதிகரித்துள்ளதால் பனி லிங்கம் உருகி விட்டது என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

பனிலிங்கத்துக்குச் சக்தியி ருப்பது உண்மையானால் வெப்பத்தால் எப்படி உருக முடியும்? இயற்கையில் நடக் கும் ஒன்றைக் கடவுளாகக் கற்பிக்கும் மூடத்தனத்துக்கு மூக்குடைப்பு

நம்பி said...

அவ்வளவு தொலைவுப் போய் காசு செல்வுப் பண்ணி, உயிரைப்பணயம் வைச்சு எதுக்கு பனிலிங்கத்தை பார்க்கணும்?

இங்கேயே வீட்டுல "பிரிட்ஜில" (குளிர்சாதனப் பெட்டி) "டம்ளர்ல" தண்ணி ஊத்தி வைச்சா, பத்து நிமிசத்துல பனிலிங்கம் கிடைச்சுடப்போகுது!

365 நாளும் பனிலிங்கத்தை "பிரிட்ஜிலேயே" "ரிஸ்க்" இல்லாம பார்த்துட்டு இருக்கலாம். ''கரண்ட "கட்" ஆகாம இருந்தா!''