Search This Blog

31.8.11

வல்லபைக் கணபதி சிலை வழிபாடு-அரசு சிந்திக்குமா?


கோவில்களில் ரெக்கார்டு டான்ஸ், சினிமாவுக்காக எடுக்கப்படும் குரூப் டான்ஸ் போன்றவைகளுக்கு அனுமதி மறுப்பதுபற்றி பரிசீலிக்கப்படும் என்று அற நிலையத் துறை அமைச்சர் சண்முகநாதன் அவர்கள் நேற்று சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.

வரவேற்கத்தகுந்த முடிவு தான். அதோடு தொடர்புடைய வேறு சில தகவல்களும் இருக்கின்றன.

கோயில்களில், கோபுரங்களில், தேர்களில் ஆபாசம் நிரம்பி வழியும் சிற்பங்களும், சுதைகளும் இடம் பெற்றுள்ளனவே!

ஆண் - பெண் உறவு - அதிலே பல வகையான கொக்கோகங்களே வெட் கப்படும்படிக்கு கண்ணராவிக் காட்சிகள் பக்தர்களை நிலைகுலையச் செய்கின்ற னவே - இருபால் இளைஞர்களையும் சுண்டி சுண்டி இழுக்கின்றனவே - அவற் றின்மீது கை வைத்தால் மக்களுக்கு எவ்வளவோ நல்லது செய்ததாகுமே! ஒழுக்கத்தை வளர்ப்பது ஆகுமே!

இதைப்பற்றியும் அரசு சிந்திக்கக் கூடாதா? கோயில் என்றால் - வழிபாடு என்றால் மன அமைதிக்குத்தான்; மனதை ஒருமுகப் படுத்துவதற்குத்தான் என்று ஒரு பக்கத்தில் சொல்லிக் கொண்டே, இன்னொரு பக்கத்தில் மன அமைதியைச் சாகடித்து ஒழுக்கத்தை ஓட விரட்டி, பேரின்பத்தை மறந்து, சிற்றின்பப் பக்கம் மனதை அலைக்கழிக்க வைக்கும் ஏற்பாடுகள் அல்லவா இவை!

இந்து மதக் கோயில்களைத் தவிர்த்து மற்ற மற்ற மத வழிபாட்டு நிறுவனங்கள் இப்படியா இருக்கின்றன?

சிவலிங்கம் என்ற ஒரு குழவிக் கல்லை கர்ப்பக்கிரகத்தில் கடவுளாக நட்டு வைத்துள்ளார்கள். ஓம் என்ற பிரணவ மந்திரம் அதற்குள் புதைந்து கிடப்பதாகக் கதை விடுகிறார்கள்.

லிங்கமும் (ஆண் குறி) யோனியும் (பெண் குறி) இவற்றின் இணைப்பு அடை யாளங்கள்தான் சிவசக்தி என்று கூறப்படும் சிவலிங்க பூஜையாகும்.

ஆண் - பெண் பாலியல் சேர்க்கையே தலைமையான படைப்பாற்றலின் வாழ்க் கையின் விருப்பாற்றலின் அடிப்படை என்று வெண் டைக்காய் விளக்கெண் ணெய் விளக்கங்களைக் கூறித் திரிகிறார்கள்.

--------------ஆதாரம்: கோல்டன் எஃப்டி கொலாபவாலா எழுதிய தந்திரமா - காமம் சார்ந்த வழிபாடு (Tantar The Erotic cult vD« Orient Paper Backs)

அந்தரங்கங்களை அம்பலத்துக்குக் கொண்டு வந்து தத்துவ முலாம் பூசும் ஏற் பாடுதான் இது. காட்டு விலங்காண்டிக்கால நாகரிகத்தின் அடையாளமும்கூட!

சிவன்கூட புலித்தோல், கபால ஓடு, பாம்பு இவற் றைத்தானே கையாளுகிறான் - இதிலிருந்தே தெரியவில்லையா - காட்டுமிராண் டிக்கால கண்டுபிடிப்பு என்று.

இன்னொன்று - வல்லபைக் கணபதி. விநாயகன் தனது தும்பிக்கையை ஒரு பெண்ணின் குறியில் (வல்லபையின்) வைப்பது போன்ற சிலையை வைத்து வழிபாடு நடத்துகிறார்களே - இவற்றில் எல்லாம் கைவைக்குமா அரசு - ரெக்கார்டுடான்சை விட இவை ஆபாசமாயிற்றே!

-------------- மயிலாடன் அவர்கள் 31-8-2011 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

1 comments:

தமிழ் ஓவியா said...

விக்னேஷ்வரன் - விக்னம் இல்லாமல் காப்பவன் என்று வித்தாரமாகப் பேசுகிறார்கள் - விநாயகனுக்குத் தோப்புக் கரணம் போட்டுச் சென்றால் நினைத்தது நடக்கும் என்றெல்லாம் புராண புழுதிகளைக் கொட்டி வைத்துள்ளனர்.

அதேநேரத்தில் இந்த விநாயகனால் இரண்டு வெள்ளைக்கார அதிகாரிகள் கொல்லப்பட்டனர் என்ற வரலாறு தெரியுமா?

மகாராட்டிர மாநிலம் புனேயில் பிளேக் நோய் கடுமையாக பரவிய காலகட்டம். எலிகள் செத்து விழுந்து அதிலிருந்து கிருமிகள் பரவி பிளேக் நோயைக் கொடுத்துவிடும்.

பிளேக் நோய்க்குக் காரணமான எலிகளைக் கொல்லும் இயக்கத்தை வெள்ளைக்கார அரசு தீவிரப்படுத்தியது - மனிதாபிமானத்தோடு, மக்களை நோயிலிருந்து காப்பாற்றவேண்டிய கடமையைத்தான் பிரிட்டீஷ் அரசு செய்தது.

திலகர் பெருமான், திலகர் பெருமான் என்று தேள் கடிக்கு ஆளானவர்கள்போல் கதறுகிறார்களே - அந்த லோகமான்ய பால கங்காதரர் என்ற, கொழுத்த மீசைக்காரத் திலகர் பெருமான் என்ன வேலை செய்தார் தெரியுமா?

நமது பகவானாகிய விநாயகனின் வாகனம் எலி. அதன்மீது மிலேச்சர்களான - கிறிஸ்துவ வெள்ளைக்காரர்கள் கை வைத்துவிட்டனர் - வேட்டையாடி ஒழிக்கக் கிளம்பிவிட்டனர்! போச்சு! போச்சு!! நமது மதம் போச்சு - கலாச்சாரம் போச்சு என்று மதவெறியைக் கிளப்பி விட்டார்.

இதன் விளைவு என்ன தெரியுமா?

புனே நகரில் எலி ஒழிப்புப் பணியில் ஈடுபட்டு இருந்த இரு வெள்ளைக்கார அதிகாரிகள் கொல்லப்பட்டனர். இந்தக் கொலைக்குக் காரணமாக தூண்டி விட்டவர் என்ற முறையில் திலகருக்குப் பதினெட்டு மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

வெள்ளைக்காரன்தான் கணவன் செத்தால், அவன் மனைவியையும் அவனோடு சேர்த்து எரிக்கவேண்டும் என்றிருந்த சதி என்ற உடன்கட்டை முறையை ஒழித்தான்.

குழந்தைப் பருவத்திலேயே பெண்களுக்குக் கலியாணம் செய்யும் கொடுமைக்கு முட்டுக்கட்டை போட்டான்.

இந்த இந்துத்துவாவாதிகளோ பழைமைக் குட்டையில் ஊறிய பாசிகளாக இருந்து மக்களைப் படுபாதாளத்தில் தள்ளினார்கள்.

விநாயகனை முதன்மைப்படுத்தி ஊர்வலம் நடத்தி, மக்களிடம் பெரும் அளவில் புழக்கத்திற்குக் கொண்டு வந்தவர் இந்தத் திலகர்தான். இவர்தான் ஆர்.எஸ்.எஸ்.வெறியின் மூலத்துக்கு வித்து போட்ட ஆலகால விஷம்!

அதனைக் கையில் எடுத்துக்கொண்டுதான் விநாயக சதுர்த்தி ஊர்வலம் என்று கூறி மற்ற மற்ற மாநிலங்களிலும் அதனை அரங்கேற்றி வன்முறை வெறியாட்டங்களை நடத்திக் கொண்டும் திரிகிறார்கள்.

ஆக, விநாயகன் என்பவன் விக்னேஷ்வரன் அல்ல. விக்னங்களைக் களைபவனும் அல்ல. மாறாக விக்னங்களை, வன்முறைகளை உற்பத்தி செய்வதற்கு இந்து வெறிக்கூட்டத்துக்குக் கையில் கிடைத்த மதக் கருவி - எச்சரிக்கை!

----"விடுதலை” 31-8-2011