Search This Blog

22.8.11

அன்னாஹசாரே பின்னணி என்ன?


பின்னணி என்ன?

அன்னாஹசாரே என்பவரை மய்யப்படுத்தி - ஊழலுக்கு எதிர்ப்பாக அரங்கேற்றப்பட்டுள்ள பட்டினிப் போராட்டம் திட்டமிட்ட ஒரு நாடகம் என்பதில் அய்யமில்லை. அடுத்த மக்களவைத் தேர்தலை முன்னிறுத்தி மேற்கொள்ளப்படும் ஒத்திகையாகும்.

பாரதிய ஜனதா என்னும் ஆர்.எஸ்.எஸின் முகமூடியை அதிகார பீடத்தில் அமர்த்துவதற்கான ஏற்பாடு. பாரதிய ஜனதா கட்சிக்குள் முட்டல் - மோதல்கள் ஆயிரம் ஆயிரம்.

பா.ஜ.க. ஆளும் மாநிலங்கள் மக்கள் விரோதத்தால் முற்றுகையிடப்பட்டுள்ளன. குறிப்பாக கருநாடக மாநிலத்தில் அக்கட்சியின் ஆட்சி எந்தக் கதிக்கு ஆளானது என்பது யாருக்குத் தெரியாது.

ஊழல் குற்றச்சாற்றுக்குப் பெரிய அளவுக்கு ஆளான அம்மாநில முதல் அமைச்சர் எடியூரப்பாவை வெளியேற்றுவதற்குள் பா.ஜ.க. தலைமை பட்டபாடு கொஞ்ச நஞ்சமல்ல.

ஆனாலும் பெயரளவில் எடியூரப்பா வெளியேறினாலும் அவருடைய பினாமிதான் முதல் அமைச்சராகப் பதவியேற்கும் நிலைமை கேலிக்குரியது.

ஒரு மாநில முதல் அமைச்சரிடம் பாரதிய ஜனதாவின் தலைமை எந்த அளவுக்குச் சரணாகதி அடைந்திருக்கிறது என்பதற்கு இது ஒன்றே போதும்.

கொக்கு ஒட்டகத்தைப் பழித்த கதையாக இந்தப் பா.ஜ.க. நரி அய்க்கிய முற்போக்குக் கூட்டணியைப் பார்த்து ஊழல் ஊழல் என்று ஊளையிடுகிறது.

பா.ஜ.க. ஆட்சிக் காலத்தில் சவப் பெட்டியில் கூட ஊழல் நடந்ததே! கட்சியின் தலைவர் பங்காரு லட்சுமணன் கத்தை கத்தையாகப் பணத்தைப் பெற்றுக் கொண்டதை தெகல்கா அம்பலப்படுத்த வில்லையா?

13 நாள் பிரதமராக வாஜ்பேயி அந்தக் குறுகிய கால கட்டத்தில்கூட என்ரான் ஒப்பந்தம் எந்த அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது?

அன்னாஹசாரே என்ற முன்னாள் ஆர்.எஸ்.எஸ். ஊழியரின் பின்திரையில் பா.ஜ.க., குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறது என்பதுதான் உண்மை. தேசியக் கொடியிலோ பா.ஜ.க.வின் தாமரை பறந்து கொண்டிருக்கிறது. காலிகள் நடமாட்டம் அதிகம். ஆர்.எஸ்.எஸின் அபிமான பாடலான முஸ்லிம்களைச் சிறுமைப்படுத்தும் வந்தே மாதரம் பாடல் பட்டினிப் போராட்டம் வளாகத்தில் கலக்கிக் கொண்டு இருக்கிறது. ஊழலை முன்னிறுத்தி அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியைப் பலகீனப்படுத்தி - அதன் மூலம் கிடைக்கும் லாபத்தை பி.ஜே.பி. அனுபவிப்பது அல்லது பயன்படுத்திக் கொள்வது என்பதுதான் இதற்குள் புதைந்திருக்கும் மெகா திட்டமாகும். ஊழலைவிட மகாமோசமான மதவாதத்தை எதிர்த்து இந்த ஹசாரேக்கள் எப்பொழுதாவது குரல் கொடுத்ததுண்டா?

பாபா மசூதி இடிக்கப்பட்டபோது நாட்டில் நடைபெற்ற கலவரங்களால் எத்தனை மக்கள் கொல்லப்பட்டார்கள்? அப்பொழுதெல்லாம் இந்த ஆசாமிகள் எந்தப் பொந்துக்குள் பதுங்கி இருந்தனர்? பாபர் மசூதி இடிப்புக் குற்றவாளிகள் துணைப் பிரதமராக, உள்துறை அமைச்சராக, மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சராக இருக்கக் கூடாது என்று குறைந்த ஒரு கருத்தாவது தெரிவித்ததுண்டா? ஊழல் என்று எடுத்துக் கொண்டாலும் எடியூரப்பாவுக்கு எதிர்ப்பாகப் பேசியதுண்டா? இலஞ்சம், ஊழலுக்கு எதிராகப் பேசப்பட்டால் வெகு மக்கள் பெரும்பாலும் ஈர்க்கப்படுவார்கள் என்ற எண்ணத்தில் இப்படி ஒரு திட்டம் அரங்கேற்றப்பட்டுள்ளது.

மதச் சார்பின்மைக்கும், சமூகநீதிக்கும் எதிரான அணி அடுத்த மக்களவைத் தேர்தலை மனதிற் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தப் பின்னணியை - சூழ்ச்சியை - அரசியல் தெரிந்தவர்கள் என்று கருதப்படும் இடதுசாரிகள் புரிந்து கொள்ள வேண்டும். பி.ஜே.பி.யோடு கைகோத்து போராட்டத்தில் ஈடுபடுவதால் ஏற்படும் விளைவு யாருக்குச் சாதகமானது?

நான் உமி கொண்டு வருகிறேன் நீ அரிசி கொண்டு வா ஊதி ஊதி சாப்பிடுவோம் என்கிறது பி.ஜே.பி. இதில் இடதுசாரிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டாமா?

சீசரின் மனைவி சந்தகத்துக்கு அப்பாற்பட்டு இருக்க வேண்டும் என்பார்கள்; பட்டினிப் போராட்டத் தலைவர் அன்னா ஹசாரே சந்தகத்துக்கு அப்பாற் பட்டவரா? இல்லை இல்லை என்பதற்கு ஆதாரங்கள் இருக்கவே செய்கின்றன.

பொது மக்களே ஏமாந்து விடாதீர்கள்!

-------------------”விடுதலை” தலையங்கம் 22-8-2011


8 comments:

தமிழ் ஓவியா said...

அன்னா ஹசாரேயின் இயக்கம் சமூக நீதிக்கு எதிரானது - மனுதர்மத்தை ஆதரிப்பது


ஊழலுக்கு எதிரான அன்னா ஹசாரேயின் இயக்கத்திற்கு நாடு முழுவதிலும் பெரும் ஆதரவு உள்ளது என்றாலும், பல முன்னணி தாழ்த்தப் பட்ட தலைவர்கள், அறிஞர்கள், தலித் பிரச்சினைகள் பற்றி அடிக்கடி எழுதுபவர்கள் இந்த இயக்கத்தைக் கடுமையாகக் கண்டித்துள்ளனர். அது ஜாதிய வெறித் தன்மை கொண்டது என்றும், நாடாளுமன்ற ஜனநாயக நடைமுறைக்கு எதிரானது என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

அன்னாவின் குழு அரசியலமைப்புச் சட்ட நடைமுறையின் மீது பெரும் வெறுப்பு கொண்டிருப்பதாகவே தோன்றுகிறது என்று பத்திரிகையாளர் சந்தர பான் பிரசாத் கூறுகிறார்.

அன்னா ஹசாரேயின் தத்துவம் நாடாளு மன்ற ஜனநாயக நடைமுறையையே நிராகரிப் பதற்கு வழி வகுப்பதாக உள்ளது. அதுவுமன்றி, தேர்ந்தெடுக்கப்படாத ஒரு தனிமனிதரான லோக்பாலிடம் இவ்வளவு அதிகமான அதிகாரங்களை ஒப்படைப்பது ஆபத்தான சூழ்நிலை களை உருவாக்கிவிடும் என்று அவர் கூறுகிறார்.

காஞ்சை அய்லய்யா

அய்தராபாத்தைச் சேர்ந்த தாழ்த் தப்பட்ட பகுஜன் சிந்தனையாளர் காஞ்சை அய்லய்யாவும் இதுபோன்ற கருத்துகளையே தெரிவிக்கிறார். அன்னாவின் இயக்கம் சமூக நீதிக்கு எதிரானதும், மனுதர்மத்தை ஆதரிப் பதும் ஆகும். தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடிகள், பிற்படுத்தப்பட்டவர்கள் மற்றும் சிறுபான்மை மக்களுக்கும் இந்த இயக்கத்துக்கும் எந்தத் விதத் தொடர்பும் இல்லை. நாங்கள் அதை எதிர்க்கிறோம் என்று கூறுகிறார்.

அன்னா இயக்க ஆதரவாளர்கள் பயன்படுத்தும் சொற்றொடர்கள் தெளிவாக ஒரு ஜாதிய உணர்வைக் கொண்டதாக இருக்கிறது. அவர்கள் பயன்படுத்தும் மொழி, அடையாளங்கள் இயல்பாகவே உயர்ஜாதி இந்துத் தன்மையை தெளிவாக எதிரொலிப்பதா கவே இருக்கின்றன. ஊழலுக்கு எதிராக நாட்டு மக்கள் அனைவரையும் தூண்டிவிடுவதற்கு வலதுசாரி இந்து தேசப்பற்று பயன்படுத்தப்படுகிறது என்று கேரி கூறுகிறார்.

ஜாதிவெறிதான் ஊழல்!

ஊழல் என்பது வெறும் கையூட்டு, லஞ்சம் மட்டுமே அல்ல; எங்களைப் பொறுத்தவரை ஜாதிவெறிதான் ஊழல், ஜாதிவேறுபாடு காட்டப்படுவதுதான் ஊழல்; அரசமைப்புச் சட்ட விதிகளின் படி இட ஒதுக்கீட்டுக்கான பல இடங்களை நிரப்பாமல் இருப்பதுதான் ஊழல்; இவைப்பற்றி எல்லாம் பேசுவதற்கு அன்னாவின் குழு தயா ராக இருக்கிறதா? என்று தாழ்த்தப் பட்ட சமூகத் தலைவர்கள் கேட்கின் றனர், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மாணவர்களுக்கு உயர்கல்வியில் உதவும் இன்சைட்ஃபவுன்டேஷன் என் னும் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அனூப் கேரி கூறுகிறார்.

ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத் தலைவரின் எதிர்ப்பு

தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடி யினர் மற்றும் சிறுபான்மையின மக்களி டையே இந்த இயக்கம் அச்ச உணர் வைத் தோற்றுவித்துள்ளது. எதிர் காலத்தில் தங்களுக்கு எதிராக சட்டங் களை இயற்ற இத்தகைய வழிகள் கடைபிடிக்கப்படலாம் என்பதே தாழ்த் தப்பட்ட என்ற முறையில் எங்களது அச்சம் என்று ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக முனிவர் ராஜேஷ் பாஸ்வான் கூறுகிறார்.

ஊழலுக்கு எதிராகப் போரிடுவதில், அதனை ஒரு சமூகப் பிரச்சினையாகக் காண்பதற்கும் மேலாக, ஒருங் கிணைந்த சமூக விவாதங்களை, கலாச் சார மாற்றங்களை மேற்கொள்ளப் படுவது இன்றியமையாதது என்று தாழ்த்தப்பட்ட சமூகத் தலைவர்கள் கருதுகின்றனர். ஆனால், அரசியல் வாதிகள் மட்டுமே ஊழல் பேர்வழிகள் என்று எல்லா மக்களும் நம்பவேண்டும் என்று அன்னா இயக்கத்தின் ஆதர வாளர்கள் விரும்புகிறார்கள்.

இது ஒரு தவறான ஊகமாகும். பிறரைக் குற்றம் கூறி தாங்கள் தப்பித்துக் கொள் ளும் இந்த வழி நமது ஜனநாயக நடை முறைக்கு ஆபத்தானது என்று கேரி கூறுகிறார்.
--"விடுதலை” 22-8-2011

அருள் said...

அசாரேவுக்கு எதிராக அருந்ததி ராய், அருணா ராய்: சுற்றுலா போராளிகளுக்கு உண்மை போராளிகள் எதிர்ப்பு!

http://arulgreen.blogspot.com/2011/08/blog-post_22.html

வெங்காயம் said...

காங்கிரஸ் எதிர்ப்பு ஓட்டு அப்ப்டியே பிஜேபி பக்க ம் போயிட கூடாது அப்படிங்கறதுக்காக அன்னா ஹசாராவ காங்கிரஸே கிளப்பி விட்டு இருக்காதான்னு கேட்கிறேன்

வெங்காயம் said...

ஜனநாயகத்துக்கு எதிரான ஜன்லோக்பால்...

இறைகற்பனைஇலான் said...

உங்களின் பல செய்திகளை ஏற்கலாம். ஊழலுக்கு நாங்கள் ஆதரவானவர்கள் அல்ல என்ற நிலைப்பாடு தேவை. தமிழர்கள் பலரும் ஊழலில் திலைப்பதால் அவர்கல் சாதீயவதிகளுடன் கைகுலுக்கவே விரும்புகிறார்கள்.
ஏன் நீங்கள் போய்வந்த டென்மார்க் நாட்டில் உள்ளது போல் வாரிசுகளுக்கு சொத்தில் உரிமை இல்லை என்ற சட்டத்தைக் கொண்டுவர வேண்டும் என்று வலியுருத்தக்கூடாது? பெரியார் விரும்பிய சமூக அமைப்பு அங்கே இதனால் நிலவுகிறதே?

நம்பி said...

//அன்னா ஹசாரேயின் இயக்கம் சமூக நீதிக்கு எதிரானது - மனுதர்மத்தை ஆதரிப்பது//

அன்னா ஹாசாரேயின் இயக்கம் மதவாத அமைப்புகளுக்கு ஆதரவானது, மனுதர்மத்தை ஆதரிப்பது என்பதெல்லாம் உண்மை தான். ஆனால் அதை கொம்பு சீவி விட்டு கொண்டிருப்பது காங்கிரஸ்தான்.

எல்லோரும் வலியுறுத்துவது என்ன? கேட்பது என்ன? பிரதமைரையும், நீதிபதியையும் சேர்க்க வேண்டுவது தானே? அதை ஏன்? சேர்க்காமல் இழுத்தடிக்கவேண்டும்.

கொல்கத்தா நீதிபதி சவுமித்ரா சென் இப்போது பாராளுமன்றத்திலேயே வந்து தனக்கெதிரான ஊழல் புகாரை எதிர்க்க வாதாடவில்லையா?

முன்னால் பிரதமர் ராஜூவ்காந்தியின் போபர்ஸ் பீரங்கி பேர ஊழலை சமூகநீதிக்காவலர் வி.பி.சிங் வெளிக்கொணர வில்லையா?

ஊழலுக்கு யாரும் விதிவிலக்கல்ல. ஒவ்வொரு தனிமனிதனும் ஊழலோடு சம்பந்தபட்டிருக்கிறான் என்பது முழுமுழுக்க உண்மை.

(குறைந்தபட்சம் அனைவரும் ஊழல் என்ற விஷயத்தையாவது சமமாக பார்க்கும் மனப்பான்மை வளரட்டும்...இது அதைத்தவிர வேறொன்றையும் இப்போதைக்கு உணர்த்தவில்லை...)

தனிமனிதன் தினம் தினம் ஊழலோடு சம்பந்தபட்டு கொண்டுதான் வருகிறான்.

அப்படி சம்பந்தப்பட்ட தனிமனிதர்கள் விரும்புவதும், அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த "இருவரும்" (பிரதமர், நீதிபதிகள்) இந்த சட்டவடிவில் சேரவேண்டும் என்பது தான்.

இதை காங்கிரஸ் மட்டும் தட்டிக்கழிப்பது எதற்காக? இது பா.ஜ.க வுக்கும் பொருந்தும், ஆகையால அவர்கள் ஆதரிப்பது அவர்கள் தலையில் மண்ணை வாரிப்போட்டுக் கொள்கிறார்கள் எனக்கருத முடியுமா?

முகாந்திரமே இல்லாமல், ஆதாரமே இல்லாமல், ஆதாரம் எதையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்காமல்..... மத்தியில் ஆட்சியில் பங்கு வைத்திருக்கும் பிரதான (தி.மு.க) கட்சியினரையே, அதுவும் ஒரு பெண் என்றும் பாராமல், பிரதமரின் கீழ் இயங்கும் சி.பி.ஐ கைது செய்து சிறையில் வைத்து இழுத்தடித்து கொண்டிருப்பதையே பிரதமரால் ஒன்றும் செய்ய முடியாத பொழுது?

லோக்பாலில் சேர்த்தால் மட்டும் என்ன? குறைந்து விடப்போகிறது. இதற்குள் வர ஏன்? தற்போதைய பிரதமர் (மன்மோகன் சிங்) தயங்கவேண்டும்? (இவர் வாழ்நாள் முழுவதுமான நிரந்தரப்பிரதமர் இல்லையே!) அப்புறம் எதற்கு இந்த கேள்வி.........."என்னை சேர்த்தால் மட்டும் ஊழல் குறைந்துவிடுமா?"

இந்த சிறுப்பிள்ளைத்தனமான கேள்வி எதற்கு?

காவல் நிலையம் இருந்தும் குற்றங்கள் நடைபெறுகின்றன? ஆகையால், காவல் நிலையம் இருந்தால் மட்டும் போதுமா? என்று அவற்றை எல்லாம் நாட்டிலிருந்து ஒழித்துகட்டிவிடலாமா? (இப்பொழுது உண்மையில் ஒழிக்க வேண்டிய கட்டாயத்தில் தான் காவல் நிலையங்கள் இருக்கின்றன அது வேறு விஷயம்....)

எந்த? ஆதிக்க வர்க்கத்தினர் இப்பதவிக்கு வந்தாலும் இந்த சட்டம் பொருந்தும். அவர்களும் அடிபடப்போவது உறுதி!

இந்த லோக்பாலில் அமைக்கப்பட்ட குழுவில் அனைவரும் பங்கு பெறவேண்டும் (சாதி மத பேதமற்ற உறுப்பினர்கள்...அனைவரும்) என்ற மையக்கருத்தை வலியிறுத்தாலாமேயொழிய, முழுவதும் இவர்கள் இருவரையும் (பிரதமர், நீதிபதிகள்) விலக்கிவைத்து சட்டமியற்றுவது என்பது என்றைக்குமே காங்கிரஸ் மட்டுமே மத்தியில் ஆட்சியில் பங்கு பெற்றிருக்கும் என்ற மனநிலையை உருவாக்குவது போல் உள்ளது.


ஆதிக்க சக்திகள் காங்கிரஸிலும் உண்டு தானே! அதனால் தானே பெரியார் வெகுண்டு எழுந்தார்! எல்லாவற்றிற்கும் முன்னோடி இந்த பாழாய்ப்போன இயக்கம் தானே!

அனைவருக்கும் குல்லா கவுத்தது இந்த இயக்கம் தானே!

சுதந்திரம் வாங்கி 65 ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் "நான்தான் சுத்ந்திரம் வாங்கினேன்" நான் தான் சுதந்திரம் வாங்கினேன்" என்று இன்றைய "காங்கிரஸ் அல்லக்கை பேரன்கள்" மார்தட்டிக்கொண்டே ஊரை ஏமாற்றுவது என்ன ஞாயம்?

சுத்ந்திரம் வாங்கும் பொழுது அனைவருமே சுதந்திரத்திற்காக பாடுபட்டவர்கள் தான். இதில் கட்சி எங்கேயிருந்து வந்தது?


.....தொடரும்...

நம்பி said...

தொடர்ச்சி...

பிரதமர் பெயர் உள்நுழைத்தாலும் ஊழல் ஒழியப்போவதில்லை...
அதேபோல் பிரதமர் அடிபட்டாலும் வேறு ஒரு பிரதமர் உள்நுழையப்போகிறார் இதில் என்ன குறை வந்துவிட்டது. இங்கு எதுவுமே நிரந்தமில்லை.

ஆகையால் அன்னா ஹாசாரே வை கை தூக்கி விட்டது காங்கிரஸ் தான், அதுவும் " பிரதமரை உள்நுழைக்க எங்களுக்கு தடையில்லை!, தயக்கமில்லை!" என்று ஒரு குரல்......... "ஏன் நுழைக்கவேண்டும்...
தேவையில்லை..பிரதமர் பதவி கேலிக்குரியதாகிவிடும்"....என்று மற்றோரு குரல்...இப்படி, கோஷ்டி காங்கிரசின் குரல்கள் மாறி மாறி ஒலித்ததினால், "அன்னா ஹாசாரே" தன்னாலேயே பெரிதாகிவிட்டார். இப்பொழுது அதற்கான பலனை கோஷ்டி காங்கிரஸ் அனுபவிக்கிறது.

நம்பி said...

//பா.ஜ.க. ஆட்சிக் காலத்தில் சவப் பெட்டியில் கூட ஊழல் நடந்ததே! கட்சியின் தலைவர் பங்காரு லட்சுமணன் கத்தை கத்தையாகப் பணத்தைப் பெற்றுக் கொண்டதை தெகல்கா அம்பலப்படுத்த வில்லையா?//

இதுவே இந்துத்துவா அமைப்பின் மனுதர்மத்திற்கு ஒரு சாட்சி....இந்த தெகல்கா அமைப்பு சுட்டிக்காட்டியது உண்மைதான், ஆனால் அது ஒன்றும் பெரிய விஷயமில்லை. வழக்கமாக கட்சிக்காரர்களுக்கு கொடுக்கும் நன்கொடை தான், அந்தப்பணம்!. அதை இன்றுள்ள அனைத்து கட்சிகளும் வாங்குகின்றன. அன்றும் அப்படித்தான் வாங்கி கொண்டிருந்தன. அப்படி பெற்றுத்தான் கட்சிகள் இன்றுவரை இயங்குகின்றது.

அப்படியென்றால் பி.ஜே.பி வாங்கினால் ஏன்? பெரிது படுத்த வேண்டும்.

இங்குதான் மனுதர்மம் வருகிறது.

பி.ஜே.பி இருந்தாலும் ஆர்.எஸ்.எஸ் ஆக இருந்தாலும் தலித், பிற்படுத்தப்பட்டவன் தலைமை இடத்திற்கு வந்துவிடக்கூடாது. அதில் பார்ப்பன்ன மிக கவனமாக இருப்பான்.

ஆகையால் தான் இந்துத்துவா பார்ப்பனனால் வெறிகொண்டு கடைப்பிடிக்கப்படுகிறது...புராணங்கள் அவன் எழுதியவை...எல்லா இழிவுகளையும் அவன் திராவிடர்களுக்கு எதிராக எழுதியது. ஏன்? திராவிடனான, பெரும்பான்மை பெற்றுள்ள இவன்கள் மேலே வந்துட்டா, குறைந்த சதவீதமா இருக்கிற நாம உடல் உழைக்கணும்! ஏய்ச்சி பொழைக்க முடியாது? என்ற ஒரே காரண்த்திற்காக இந்த திராவிடன்களை அமுக்குவதற்காக, பயமுறுத்துவதற்காக எழுதப்பட்டது.

இதையும் மீறி வந்தா இப்படி அவனை பழிசுமத்தி கீழே தள்ளவேண்டும் என்ற ஒரே கொள்கைதான் பார்ப்பனன்களுக்கு இருக்கும்.

பார்ப்பனன்களுக்கு ஒரேக் கொள்கை தான் அதைத்தவிர வேறு கொள்கை கிடையாது. எவன் வந்த்தாலும் கீழேத் தள்ளுவது. அதற்கு எந்த விலையும் கொடுப்பான்.

பங்காரு லட்சுமணன் தலித், தலைவராக வந்துவிட்டால் என்ன ஆவது. அதனால் பதவிக்கு வந்த கொஞ்சநாளில், அந்த தலித் தலைவரை ஒழிக்க நடத்தப்பட்ட சாதாரணமான நாடகம் தான் அது.

அது என்ன "லஞ்சப்பணம்" சும்மா சாதாரணமாக வாங்கும் கட்சி நன்கொடைதான். அதை வீடியோ பண்ணி போட்டு பார்ப்பனன்க அவரை தூக்கிட்டாங்க!

இது புரியாம இந்த திராவிடர்கள் இந்துத்துவாவை புடிச்சு தொங்கிட்டிருக்காணுங்க!

இங்கேய பார்க்கலாம் பா.ஜ.க...கோஷ்டி.... ராஜா ஜெயலலிதாவுக்கு சப்போர்ட்டு ஏன்? ...... ப்பப்பப்பூ....பூனூ......ல்.....பொன் ராதாகிருஷ்ணன்.....கலைஞருக்கு சப்போர்ட்டு...ஏன்?

குறைந்தபட்ச பார்ப்பன சதவீதக்குள்ளே ஒன்றிரண்டு அக்கிரகாரத்து அதிசயங்கள் இருக்கும்! ஆனாலும், பெரும்பாலும் இருக்காது!

அடிவாங்கினாலும் பார்ப்பனன் கையாலே தான் அடிவாங்கணும்னு நினைக்கிற ஊத்தைங்க நிறைய இங்கிருக்குது.

குறைந்த சதவீத பார்ப்பனர்களால் பெரும்பான்மையாக உள்ள திராவிடர்களை எதிர்க்கமுடியாது. அதற்காக திராவிடர்கள் சிலரை மதத்தின் பெயரால், புராண இதிகாச முடநம்பிக்கையின் பெயரால் சேர்த்துக்கொள்வான். அவர்களோடு ஒட்டி உறவாடுவாடுவான். ஆனால் அப்படி மதத்தினால் இணைந்த திராவிடர்களை மேலே வரவிடமாட்டான்.


அதற்கு உதாரணம் கருவறைக்குள் அர்ச்சகர்களை உள்ளே விடமறுப்பது.....இன்னும் நிறைய தெரிந்த விஷயங்களே இருக்கின்ற பொழுது....?????? இதை கண்டுபிடிக்கறதா? கஷ்டம்?

பா.ஜ.க வுக்கும் பெரியாரிசம் தேவைப்படுகிறது....ஏன் எல்லா கட்சிக்கும் பெரியாரிசம் தேவைப்படுகிறது.