Search This Blog

26.8.11

பேரறிவாளன், சின்ன சாந்தன், முருகன் தூக்குத் தண்டனை-சட்டவிதிகளைவிட மனிதநேயம் முக்கியம்


முதல் அமைச்சர் இதில் முயற்சிகளை மேற்கொள்ள வாய்ப்புண்டு

சட்ட விதிகளைவிட மனிதநேயமே முக்கியம்

திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அறிக்கை

பேரறிவாளன், சின்னசாந்தன், முருகன் ஆகியோர் மீதான தூக்குத் தண்டனை குறித்து திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் வெளியிட்டுள்ள சட்ட அம்சங்களைச் சுட்டிக்காட்டும் அறிக்கை வருமாறு:

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை, அளிக்கப்பட்ட மூன்று பேர்களான பேரறிவாளன், சின்னசாந்தன், முருகன் ஆகியோரது தூக்குத் தண்டனையை ரத்து செய்து கருணை காட்ட வேண்டும் என்று விடுக்கப்பட்ட கோரிக்கை - மனித உரிமை அமைப்புகள், மனிதநேயர்கள் அனைவரது (மக்கள்) சார்பில் விடுக்கப்பட்ட வேண்டுகோள் ஆகும்.

கருணை மனுவை நிராகரித்தது ஏன்?

இதனை ஏற்கெனவே பதவியிலிருந்த இரண்டு குடிஅரசுத் தலைவர்கள் நிராகரிக்காமல் வைத்திருந்தனர். இப்போது மூன்றாவதாக வந்துள்ளவர் (உள்துறை அமைச்சகத்தின் கருத்துப்படி) நிராகரித்து விட்டதோடு, அந்த ஆணையினை வேலூர் மத்திய சிறைச்சாலைக்கும் அனுப்பியுள்ளார். இதனால் விரைவில் அவர்களது தூக்குத் தண்டனையை நிறைவேற்றிட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும் நிலையில், இக்கடைசி நிமிடத்தில்கூட அத்தண்டனையை நிறுத்தி, மாற்றிட வேண்டும் என்ற கோரிக்கை வட இந்தியத் தலைவர்களாலும்கூட வற்புறுத்தப்படுகிறது. இதில் மனிதநேயம் பொங்கி, மனிதாபிமான அணுகுமுறை காட்டப்படல் வேண்டும் என்ற சூழலை உருவாக்கியுள்ளது.

இம்மூவரும் சுமார் 20 ஆண்டுகளாக சிறையில் இருந்துள்ளனர். இதுவே ஓர் ஆயுள் தண்டனைக் காலமாகும். தூக்குத் தண்டனையை ஏற்பதைவிட மிகவும் கொடூரமான சித்ரவதையாகும். இதை எண்ணிப் பார்க்க ஏனோ தவறியது குடிஅரசுத் தலைவரின் முடிவு. இதுபற்றி காங்கிரஸ் கட்சி தவிர தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான கட்சிகள், அமைப்புகள், தமிழ் இன உணர்வாளர்கள், மனிதநேய அடிப்படையில் தமிழக முதல் அமைச்சர் அவர்களுக்கும் ஒரு வேண்டுகோளை வைத்துள்ள நிலையில், அவர்களது கருணையும், மனிதாபிமானமும் இந்த மூவர் விஷயத்தில் மிகவும் தேவைப்படும் ஒன்றாகும்.

முதல் அமைச்சருக்கு வேண்டுகோள்

மற்ற பல்வேறு செய்திகளில் அணுகுமுறை, முடிவுகளில் முதல் அமைச்சரிடம் நாம் மாறுபட்ட நிலையிலும், வாக்களித்தவர்கள், வாக்களிக்காதவர்கள் முதலிய அனைவருக்கும் அவர் இப்போது முதல் அமைச்சர் என்ற முறையில் கருணை காட்டுவதை - கடமையாகக் கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை நாமும் வலியுறுத்துகிறோம்.

அடுத்து, சட்டரீதியாகவே இவர்கள் மூவர் விஷயத்தில் மீண்டும் விசாரிக்கப்பட வேண்டிய வழக்கின் பல்வேறு சட்ட அம்சங்கள் உள்ளன என்பதால், நீதிமன்றங்களிலும்கூட அரசு சார்பிலேயே ஆலோசனைகள் வழங்க இடம் உள்ளது.

இங்கிலாந்து நாட்டின் நடைமுறை

எடுத்துக்காட்டாக,
இந்த மன்னிப்பு - கருணை வழங்கும் விதிகள் இந்திய அரசியல் சட்டத்தில் புகுத்தப்பட்டதே, பிரிட்டிஷ் பாராளுமன்ற, நடவடிக்கைகள் - விதிகள் - அங்குள்ள நீதிமுறைகளின் அடிப்படையில் என்பது விவரம் தெரிந்த அனைவரும் அறிந்த ஒன்று.

1907இல் இங்கிலாந்து நாட்டின் உள்துறை அமைச்சர் (Home Secretary என்று அழைக்கப்பட்டவர்) ஹெர்பட் கிளாட்ஸ்டன் அவர்கள் பிரிட்டனின் அவுஸ் ஆஃப் காமன்ஸ் என்ற மக்கள் அவையில், இந்த மன்னிப்பு வழங்குதல், கருணை காட்டுதல் சம்பந்தமான விதிகளின் பயன்பாடு பற்றி விளக்குகையில், குறிப்பிட்டார். அது சட்டப் புத்தகங்களிலும் வெளியாகியுள்ளது.

Earlier in 1907, Herbert Gladstone, Home Secretary, in a speech in the House of Commons, emphasised that numerous considerations are relevant and that the exercise of the prerogative does not depend in principles of strict law and justice, still less of sentiment. “It is a question of policy and judgment in each case, and in my opinion, a capital execution which in the circumstances, creates horror and compassion for the culprit rather than a sense of indignation at his crime is a great evil.”

1907 ஆம் ஆண்டிலே இங்கிலாந்து நாட்டின் உள்துறைச் செயலாளர் ஹெர்பர்ட் கிளாட்சன் பொது மக்கள் அவையில் (House of Commons) பேசும்போது, இதில் பல்வேறுபட்ட விஷயங்கள் பரிசீலனை செய்யப்படுவது பொருத்தமானதாக இருக்கும் என்பதையும், முடிவு எடுக்கும் அதிகாரத்தை பயன்படுத்துவது நீதி மற்றும் சட்டக் கொள்கைகளையே சார்ந்திருப்பது அல்ல என்பதையும், அதைவிட மன உணர்வுகளை சார்ந்திருப்பது மிகவும் குறைவானதே என்பதையும் வலியுறுத்தினார். ஒவ்வொரு வழக்கிலும் அடங்கியிருப்பது கொள்கை மற்றும் மதிப்பீடு பற்றிய ஒரு கேள்வியேயாகும். மரண தண்டனை என்பது அதன் சூழ்நிலைகளில் பெரும் பீதியைக் கிளப்புவதே என்பதும், அவரது குற்றம் மிகப் பெரும் கொடுமையானது என்று குற்றம் சாட்டுவதை விட, கருணை காட்டுவதே சிறந்தது என்பதும் எனது கருத்தாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதுமட்டுமல்ல, நமது இந்திய சட்டக் கமிஷன் அறிக்கைகளில்கூட இந்தக் கருணை காட்டுதலில் பல்வேறு முக்கிய அம்சங்களைக் கணக்கில் எடுத்த பிறகே முடிவு எடுக்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது (1967) Vol I, பக்கங்கள் 317-18.

கொலைக் குற்றம் புரிந்து தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டிருப்பவர்கள்.

(1) ஏற்கெனவே திட்டமிட்டு பேசினர். Pre-meditation

(2) அவர்களது வயது

(3) அவர்களது மனது, உடல் நிலை,

(4) அவர்களது பழைய வரலாறு பழைய குற்றவாளியா என்பன

(5) வெளியே இருந்துவந்த நிர்பந்தச் சூழ்நிலை.

இத்தகைய அம்சங்களையெல்லாம்கூட ஆய்வுக்கு எடுத்து பரிசீலிக்கப்பட்டுத்தான் இறுதி முடிவு (நிராகரிப்பது போன்ற) வர வேண்டும் என்று அதில் குறிப்பிட்டுள்ளார்கள்.

பிரிட்டிஷ் பாராளுமன்றத்தின் மேலவை கருணை அப்பீலை முடிவு செய்யுமுன்பு, உள்துறை அமைச்சகம், இந்த வழக்கில் சரியாக, முறையாக விசாரிக்கப்படாமல் உள்ளது என்ற ஒரு துளிசந்தேகம் ஏற்பட்டாலும், ஜூரிகள் (அங்கு ஜூரிகள் முறை உண்டு) குற்றவாளி என்று தீர்ப்பளித்துத் தூக்குத் தண்டனையை பரிந்துரை செய்து ஏற்ற நிலையிலும்கூட, மறுபரிசீலனை - மறுவிசாரணை செய்தாக வேண்டும் என்பதே சட்டப் பூர்வ நிலையாகும்.

இங்கிலாந்து நீதிமன்றத்தில் இப்படி தவறு நடந்துள்ளதை திருத்தும் மறுவிசாரணை வழக்கேகூட நடந்துள்ளது.

அங்குள்ள தலைமை நீதிபதி Lord Chief Justice லார்டு கோடர்ட் (Lord Goddard) என்பவர் முன்னால் கிரிமினல் அப்பீல் மறுவிசாரணைக்கு வந்து (மன்னருக்குத் தரப்பட்ட கருணை மனு வழக்கில்) நடைபெற்ற வழக்கில், தூக்குத் தண்டனை அளிக்கப்பட்டவர் நிரபாரதி என்பது வெளியாக்கப்பட்டது.

இதுபோன்ற ஒரு நிலைப்பாட்டினை சட்ட ரீதியாக, நியாய அடிப்படையில் எடுத்து வைக்கவும் இடம் உண்டு.

மற்ற அமெரிக்கா போன்ற நாடுகளில் ஓர் ஆலோசனை வாரியம் (Advisory Board) அமைக்கிறார்கள். இங்கு அதுபோன்ற எதுவும் இல்லாததால் அவர்கள் கருத்தறிந்தே, குடியரசுத் தலைவரோ, கவர்னரோ முடிவு எடுக்கும் நிலை இல்லை என்பதும் சுட்டிக் காட்டப்பட வேண்டியதாகும்.

சட்டவிதிகளைவிட மனிதநேயம் முக்கியம்

சட்டம் - விதிகளைவிட மனிதநேயம் முக்கியம். சிறைத் தண்டனைகளின் தத்துவமே வெறும் தண்டிப்பு (Mere Punishment) என்பது மாறி, இப்போது Reformation குற்றம் செய்திருந்தாலும்கூட அவர்களைத் திருந்தி நல்வாழ்வு வாழச் செய்வதுதான் என்கிறபோது, இந்தக் கருணைப் பிரச்சினையில் அந்த அடிப்படையும் முக்கியம் அல்லவா?

மனமிருந்தால் மார்க்கம் உண்டு. நளினிக்குக் காட்டிய அதே கருணையை இம்மூவருக்கும் காட்டுவது மனிதநேய அடிப்படையில் தேவையல்லவா?

நமது அரசியல் சட்டப்படி பால் அடிப்படையில் வித்தியாசம் காட்டப்படுவதுகூட விரும்பத்தக்கதல்லவே. எனவே மத்திய, மாநில அரசுகள் மீண்டும் தங்களது மனிதாபிமானத்தினைக் காட்ட இந்த அரிய தருணத்தைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டுகிறோம் - கேட்டுக் கொள்கிறோம்.

------------------கி. வீரமணி , தலைவர் திராவிடர் கழகம் --"விடுதலை” 26-8-2011

18 comments:

koomaganblogspot.fr said...

இவர்களைப் பெரிய மனிதர்கள் ஆக்க நாங்கள் விரும்பவில்லை. இளப்புகள் எங்களுக்குப் புதிது இல்லை. சிங்களம் ஆப்படிக்கும்பொழுது இவர்கள் இருக்கமாட்டார்கள். நாம் இருப்போம் அகிம்சைக்கே அர்த்தம் தெரியாதவர்களிடம் கருணையா???????????? அப்படி ஒரு பிச்சை எங்களுக்கு வேண்டாம்.

koomaganblogspot.fr said...

இவர்களைப் பெரிய மனிதர்கள் ஆக்க நாங்கள் விரும்பவில்லை. இளப்புகள் எங்களுக்குப் புதிது இல்லை .சிங்களம் ஆப்படிக்கும்பொழுது இவர்கள் இருக்கமாட்டார்கள். நாம் இருப்போம் அகிம்சைக்கே அர்த்தம் தெரியாதவர்களிடம் கருணையா??????? அப்படி ஒரு பிச்சை எங்களுக்கு வேண்டாம்.

புகல் said...

இந்த மூன்றுபேரும் குற்றமற்றவர்கள் ஆதலால் இவர்களை விடுதலை செய்ய வேண்டும். அதையும் மீறி தூக்கில்போடுவதென்றால் ராசிவ்காந்தி என்ற கொடுங்கோல் கொலைகாரனை கொன்ற வழக்கில் தண்டனையை நிறைவேற்றட்டும். மானங்கெட்ட இந்திய அரசு தமிழ் மீனவர்களை பாதுகாக்க வக்கில்லை, முதல்ல இந்த இந்திய நடுவன அரசு தலைவர்களை தூக்கில் இடவேண்டும்.
தமிழா நீ இந்திய நாட்டில் அடிமையாய் இருக்கிறாய்
என்பதற்கு பல சான்று உண்டு அதில் இது ஒன்று.
துரோகி இந்தியாவை ஈழம் நம்பி சீரழிந்தது
தமிழர்களும் இந்தியாவை நம்பியிருந்தால் நாம் அழிவது நிச்சயம்,
இந்தியாவின் சுயருபத்தை உணர்ந்துகொள் தமிழா,
இந்தியா என்றுமே தமிழனுக்கு நண்பனாக இருந்ததில்லை
காலம் தரும் பாடத்தை கற்றுகொள்.

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

தமிழ் ஓவியா said...

ஜெயேந்திரிடம் கேட்கலாமே!


செய்தி: திராவிடர் கழகத் தலைவர் வீரமணி: கடைசி நிமி டத்தில்கூட, ராஜிவ் வழக்கில் மரண தண் டனையை மாற்றி, நிறுத் திட வேண்டும் என்ற கோரிக்கை, வட மாநி லத் தலைவர்களாலும் வற்புறுத்தப்படுகிறது. இதில் மனிதநேயம் பொங்கி, மனிதாபிமா னம் காட்டப்பட வேண் டும்.

டவுட் தனபாலு: மனிதநேயம் காட்டப்பட வேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது... ஆனா, சம்பந்தப்பட்ட ராஜிவ் கொலை வழக்கில் குற்றச்சாட்டப் பட்ட வங்க, அன்னிக்கு மனிதநேயம் பொங்கி, மனிதாபி மானத்தோட செயல்பட்டிருந்தா, 15 உயிர் போயிருக்கா துல்ல...! (தினமலர் 27.8.2011)

சிந்தனை: காஞ்சி சங்கரராமன் கொலை வழக்குக் குற்றவாளிகள் காஞ்சிபுரம் சங்கராச் சாரிகள் ஜெயந்திர சரஸ்வதி, விஜயேந்திர சரஸ்வதிகளிடம் போய் இந்த இதோபதேசத்தைச் செய்வது தானே?
---”விடுதலை” 28-8-2011

நம்பி said...

மரணம் என்பது தண்டனையல்ல அது ஒரு முடிவு. அதை எவரும் தண்டனையாக அனுபவிக்க முடியாது. அப்படி அனுபவித்தவரும் இல்லை. அதை நீக்குவதே மிகவும் சிறந்தது.

மரண தண்டனை ஒழிக்கப்பட்ட நாட்டில் நடக்கும் குற்றங்களைவிட மரணதண்டனை அமலில் உள்ள நாடுகளில் தான் குற்றம் அதிகம் நடைபெறுகிறது, என்பதை புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றது. என்னதான் இந்நாட்டின் மக்கள் தொகையை காரணம் காட்டினாலும் இது தேவையற்றது.

இதைவிட கொடுமையான தண்டனைகள் நாட்டில் நிறைய இருக்கிறது.

200 வருடங்கள் சிறை, 300 வருடங்கள் சிறை என்று பிறநாடுகளில் தண்டனை வழங்குகிறார்கள். இதுதான் கொடுமையான தண்டனை. ஒரு மனிதனின் ஆயுள் அவ்வளவு காலமாகவா இருக்கிறது?

இப்போதைக்கு இதைக்கூட இந்திய அரசாங்கம் பின்பற்றலாம். (இதுவும் மனிதநேயமற்றது தான்)

ஒவ்வொரு குற்றத்திற்கு பின்னாடியும் குற்றவாளி தரப்பில், அவன் மனநிலைப்படி நியாயம் இருந்தாலும், குற்றத்தை தடுக்க, கட்டுப்படுத்த சமூகத்திற்கு தண்டனை என்ற ஏற்பாடு அவசியம் தான். ஆனால் இது முழுக்க முழுக்க கொலை.

என்னதான் தங்கத்தட்டில் சாப்பாடு போட்டாலும் சிறை என்பது சிறைதான். அதைவிட மனநிலையை பாதிக்கக்கூடிய தண்டனை வேறொன்றுமில்லை.

பாதிக்கப்பட்டவருக்கு அவர் சாகவேண்டும் என்ற எண்ணமிருக்கும். அது இயற்கை. அதற்குத்தான் நீதிபதி, நீதிமன்றம், தீர்ப்பு, நீதிபரிபாலணை என்ற அமைப்புகள் நாட்டில் மூன்றாவது மனிதரைக்கொண்டு, மூன்றாவது மீடியத்தைக் கொண்டு நடத்தப்படுகிறது.

பாக்கிஸ்தானில் குண்டுவைத்த சரப்ஜித் சிங்கை பாக்கிஸ்தான் தூக்கிலிடக்கூடாது என்று இந்தியா வலியுறுத்தும் பொழுது, இதை ஏன் வலியுறுத்தக் கூடாது.

ஒரு குற்றசெயல் அந்தந்த நாட்டினரின் பார்வையில் வேறுபடுகிறது.

பின்லேடன் அமெரிக்காவை பொறுத்தவரை தீவிரவாதி, பாக்கிஸ்தானைப் பொருத்தவரை போராளி.

நேதாஜி இந்தியாவில் இப்பொழுது தியாகி! 1947 க்கு முன்பு அராசாங்கத்தினரால் தேட்ப்பட்ட, தண்டனையளிக்கப்பட்ட, ஏன் இன்றுவரை அந்த தண்டனை நிலுவையில் இருக்கிற ஒரு தீவிரவாத குற்றவாளி! இதை கருத்தில் கொண்டாவது இந்திய அரசு இவர்களின் மரணதண்டனையை ரத்து செய்யவேண்டும்.

மரண தண்டனை நிறைவேற்றம் என்பது அப்துல் கலாம் இருந்தவரை சாத்தியமில்லாததாக இருந்தது. அப்படித்தான் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர் இந்திய அமைச்சரவை கொடுத்த பல தூக்குத்தணைடனை கருணை மனுக்களின் நிராகரிப்பு கோரிக்கையை, அமைச்சரவை இருமுறை ஏற்க சொல்லி பரிந்துரைத்தும், இருமுறையும் ஏற்க மறுத்துவிட்டார். இது போல் பல பேருக்கு அவரது பதவிக்காலத்தில் செய்துள்ளார்.

"கொலைக்கு கொலைத் தீர்வாகாது".

"அவரைத் திருத்தும் முயற்சியில் ஈடுபடுங்கள். அவர் செய்த தவற்றை உணரச்செய்யுங்கள் அதுவே அவருக்கு கொடுக்கும் மிக்ப்பெரிய தண்டனை" என்று நிராகரிப்பு மனுக்களை ஏற்க மறுத்து குறிப்பெழுதி அனுப்பிவிட்டார்.

அதுபோல் இந்த முதல் பெண் குடியரசுத்தலைவரான பிரதீபா பாட்டீல், காங்கிரஸ் அமைச்சரவையின் பரிந்துரையை நிராகரிக்காதது வருத்தமே!

அப்துல் கலாம் அரசியல் சார்பற்று, இருவேறு கட்சிகளால் குடியரசுத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். குடியரசுத் தலைவர் பதவி ஒரு "டம்மி போஸ்ட்" என்ற கருத்தினையும் உடைத்தெரிந்தவர். அது போல் இவரிடமும் நாம் எதிர்பார்க்கமுடியாது தான்.

ஆனால், குறைந்த பட்சம் முன்னாடி இருந்த குடியரசுத் தலைவரின் (அப்துல் கலாமின்) மனிதநேயத்தையாவது பின்பற்றியிருக்கலாம்.

இந்த தண்டனைக்குப் பதில் கட்டாயமாக போரில் ஈடுபடவேண்டும், என்ற விதியைக் கூட தண்டனையாக வைக்கலாம்.

இது பண்டைய காலத்திலேயே இம்முறை பின்பற்றி வரப்பட்டுள்ளது. போரில் மரக்கலங்களை (கப்பல்) இயக்க பண்டைய காலத்தில் இப்படி கொடுஞ்செயல் புரிந்த குற்றவாளிகளை பயன்படுத்துவது, நாட்டுக்கு ஊழியம் செய்வதை தண்டனையாக வைத்து விடுதலை செய்வது, என்பது எல்லாம் வரலாறு.

"உயிர்" என்பது உன்னதமானது. அதை பறிக்க எவருக்கும் உரிமை இல்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் என்று கூறிக்கொண்டு நாமே அந்த மரணத்தை தண்டனையாக வழங்குவது ஜனநாயக விரோதமானது. இதை இந்திய உச்சநீதிமன்ற நீதிபதியும் தனது தனிப்பட்டக் கருத்தாக தெரிவித்துள்ளார். "மரணதண்டனை தேவையற்றது" "மனிதநேயமற்றது". பகுத்தறிவாளர்கள் எப்போதுமே இதற்கு உடன்படுவதில்லை.

நம்பி said...

மரணதண்டனை பற்றி ஏற்கனவே எண்டமூரி வீரேந்திரநாத் என்ற எழுத்தாளர் "தூக்குத்தண்டனை" என்று வங்காள மொழியில் எழுதியுள்ளார். அதை தமிழில் "சுசீலா கனகதுர்கா" என்ற எழுத்தாளரும் மொழிபெயர்த்துள்ளார்.

அதில் மரணதண்டனை அடைந்தவர், எப்படியெல்லாம் அவதியுறுவார்கள், ஒன்னுக்கு, இரண்டுக்கு என்று தன்னாலேயே போய் விடுவார்கள், தொடர்ந்தார் போல் கடும்காய்ச்சல் எல்லாம் மரணபீதியில் வரும்! (கடவுள் பக்தியே மரணபீதியில் தானே வருகிறது) என்பது பற்றியெல்லாம் விவரமாக எழுதியிருப்பார். அதை எப்படி கொடூரமான முறையில் நிறைவேற்றுகிறார்கள் என்பதை பற்றி அறியாதவர்களுக்கு கூட அறியும் படியாக எழுதப்பட்டுள்ளது. தமிழில் அந்தக்கதை திரைப்படமாக "சட்டத்தை திருத்துங்கள்" என்று வெளிவந்துள்ளது. (ஜெய்சங்கர், மோகன், நளினி நடித்தபடம்)

மரணதண்டனையை கைவிடுவோம்! மனிதநேயம் காப்போம்!

நம்பி said...

//Blogger புகல் said...

இந்த மூன்றுபேரும் குற்றமற்றவர்கள் ஆதலால் இவர்களை விடுதலை செய்ய வேண்டும். அதையும் மீறி தூக்கில்போடுவதென்றால் ராசிவ்காந்தி என்ற கொடுங்கோல் கொலைகாரனை கொன்ற வழக்கில் தண்டனையை நிறைவேற்றட்டும். //

"ராஜீவ் காந்தி என்ற கொடுங்கோல் கொலைகாரனை...."...அது அப்படியே இருக்கட்டும்....கூட இருந்த 14 பேரையும் எதற்காக கொல்லவேண்டும்! அவர்கள் தமிழர்கள் இல்லையா?

அந்த 14 பேர் வீட்டு பொஞ்சாதிகளின் தாலிகள் ஏன் கீழே இறங்கவேண்டும்?! அவர்கள் பிள்ளைகள் அவரவர் தந்தைகளை இழந்து ஏன்? அனாதைகளாக ஆகவேண்டும்? அவர்கள் தமிழர்கள் இல்லையா?

ஏன்? அரசியல் கட்சித்தலைவரின் உயிர்கள் மட்டும் தான் உயிரா? அப்புறம் எப்படி? தமிழக மீனவர்களுக்காக இரக்கப்படுவது போல் காட்டிக்கொள்ளமுடியும்?

இதுக்கு அது சரியாகாது! அதுக்கு இது சரியாகாது! இதை யாரும் நினைவில் கொள்வதில்லை.

...."ஒரு கண்ணில் வெண்ணை இன்னொரு கண்ணில் சுண்ணாம்பு".....

புகல் said...

@நம்பி
//"ராஜீவ் காந்தி என்ற கொடுங்கோல் கொலைகாரனை...."...அது அப்படியே இருக்கட்டும்....கூட இருந்த 14 பேரையும் எதற்காக கொல்லவேண்டும்! அவர்கள் தமிழர்கள் இல்லையா?//
திரு நம்பி அவர்களே, நான் இங்கு பதில் உறைப்பதால் உங்களிடம் எதிர்வாதம் செய்வதாக தப்பாக எண்ணிவிட வேண்டாம்.

குற்றம் புரிந்தவர்கள்(இந்திய பார்வையில்) ராசிவ்காந்தியோடு செத்துவிட்டார்கள்,
அவர்களின் நோக்கம் ராசிவ்காந்தியே தவிர 14பேர் அல்ல என்பதை நிங்கள் உணர வேண்டும்
14பேர் மாண்டதை நான் இங்கு நியாயம் என்றோ இயற்கை என்றோ அல்லது அநியாயம் என்றோ நான் வாதிடவில்லை.

இதுவே இந்த வெடிகுண்டு தண்டனையில் ராசிவ்காந்தி தப்பிருந்தால் நாளிதழ்களில் என்ன செய்திவரும்
பாரத பிரதமர் மயிர் இழையில் உயிர் தப்பினார்,
செத்ததவர்கள் யாரையும் பற்றி இந்த உலகம் கவலைபடாது.
கடவுள் நம் பிரதமரை காப்பாற்றவிட்டார் என மதவாதிகள் தன்பங்க்கு கூவிகொள்ளும்
அப்ப அதே கடவுள் ஏன் அந்த 14பேர் உயிரை கொன்றார் என்று கேட்டால் விடையிருக்காது.

புகல் said...

@நம்பி
//அந்த 14 பேர் வீட்டு பொஞ்சாதிகளின் தாலிகள் ஏன் கீழே இறங்கவேண்டும்?! அவர்கள் பிள்ளைகள் அவரவர் தந்தைகளை இழந்து ஏன்? அனாதைகளாக ஆகவேண்டும்? அவர்கள் தமிழர்கள் இல்லையா? //

அந்த 14பேரின் குடும்பத்தின் இழப்பை பற்றி தாங்கள் கூறியபோது
அதேபோல் ஆயிரக்கண்கான இலங்கை அப்பாவி தமிழர்களின் வாழ்க்கை சிதைந்துபோனதை அந்த குடும்பம் அறிந்திருக்குமா
("ஒரு கண்ணில் வெண்ணை இன்னொரு கண்ணில் சுண்ணாம்பு".)
அறிந்திருந்தால் அந்த கொலைகாரனுக்கு துனை நின்றிருப்பார்களா,
இல்லை இப்ப உள்ள தமிழர்களின் நிலைபோல் என்ன இருந்தாலும் என் பிரதமருக்கு யார் வாழ்கையையும் அழிக்க உரிமையிருக்கிறது என்ற இருமாப்பு இருந்திருக்குமா.


இந்தியர்களை பார்வையில் பாக்கிசுதான் படைவீரர்கள் குற்றவாளிகள் சாகவேண்டியவர்கள்,
அதுபோல்தான் அவர்கள் பார்வையிலும்,
பாக்கிசுதான் வீரர்கள் 100பேர் செத்துவிட்டார்கள் என்று படிக்கும்போது
இந்தியர்களின் அனைவரின் முகத்திலும் மகிழ்ச்சிதானே பொங்குகிறது என்றாவது
அவர்களுக்கும் ஒரு குடும்பம் உண்டு, பிள்ளைகள் உண்டு என்று எண்ணியதுண்டா.

புகல் said...

@நம்பி
இன்று அந்த 14பேரின் மரணத்துக்கான இந்த மரணதண்டனை என்று நிங்கள் நினைத்தால்
*கண்ணை முடிக்கொண்டு உலகம் இருண்டுவிட்டது என்று சொல்வதற்க்கு ஒப்பாகும், *
ராசிவ்காந்தி மரித்துபோகாதிருந்தால் இந்த 14பேருக்காக
இந்தியா அரசாங்கம் செயல்பட்டிருக்கமா என்றால் நிச்சயமாக இருப்பாது.
வரலாறு வேறுவிதமாக கூட மாறியிருக்ககலாம்
(காங்கிரசவிட்டு ஒரு படம் எடுக்க சொல்லலாம் அதில் ராசிவ்காந்தி தப்பித்து தன் தவறை உணர்ந்து தமிழிழ நாடு அமைத்துகொடுப்பதாக ஒரு அதிரடி படம் செய்யலாம் மக்களிடையே ராசிவ்காந்தியின் தமிழர்பற்றை பரப்புரை செய்ய ஏதுவாக இருக்கும்).

புகல் said...

@நம்பி
நாட்டின் தலைவன் என்று சொல்லிகொண்டு எந்த நியாயமும் இல்லாமல்
இராணுவத்தை அனுப்பி தன் தார்மிக உரிமைக்காக போராடி கொண்டிருக்கும்
அப்பாவி மக்களை கொன்று, பெண்களின் கற்பை சூரையாடி கொன்ற கயவனை
இந்தியாவின் பிரதமர் என்ற பெயரில் நியாயபடுத்துவது எந்தவிதத்தில் நியாயம்.

புகல் said...

இல்ல தெரியாம கேட்கிறேன்
பாக்கிசுதானுக்கும் தமிழனுக்கும் என்ன பிரச்சனை தண்ணிர் பிரச்சனையா,
நம் மீனவர்களை கொன்று குவித்தார்களா,
பின்ன என்ன இதுக்காக நம் தமிழர்கள் பாக்கிசுதானை தன் பிறவி எதிரிபோல் பாவிக்கவேண்டும்
எல்லாம் இந்திய மாயயை என்ற போதைதான் வேறு என்ன சொல்ல

இலங்கை தமிழ் மீனவர்களை நாயயை சுடுகிறமாதிரி சுடுகிறான்
ஆனால் இந்தியா அதை கண்டுகொள்ளமால் வேடிக்கை பார்க்கிறது
போதாத குறைக்கு இலங்கை ராணுவத்துக்கு பயிற்ச்சி வேறு,
பலே நல்லாயிருக்கு உங்க இந்திய ஒருமைபாடு ஆனால் தமிழன் பாடுதான் பெரும்பாடாய் உள்ளது.

இங்கு தமிழர்கள் மேல் கன்னடகாரன் வன்முறை வெறியாட்டம் ஆடுகிறான், தமிழ் மீனவர்களை இலங்கைகாரன் கொன்றுகுவிக்கிறான் இப்படி இங்கு நம் மக்கள் பாதுகாப்பில்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கையில்
தமிழ் வீரர்கள் காசுமீரில் யாருடன் யாருக்காக சண்டைபோட வேண்டும்.
மாவோயிசுடன் இவர்கள் ஏன் சண்டையிட்டு மாண்டுபோக வேண்டும்.

நம்பி said...

Blogger புகல் said.//குற்றம் புரிந்தவர்கள்(இந்திய பார்வையில்) ராசிவ்காந்தியோடு செத்துவிட்டார்கள்,
அவர்களின் நோக்கம் ராசிவ்காந்தியே தவிர 14பேர் அல்ல என்பதை நிங்கள் உணர வேண்டும்
14பேர் மாண்டதை நான் இங்கு நியாயம் என்றோ இயற்கை என்றோ அல்லது அநியாயம் என்றோ நான் வாதிடவில்லை.//

யார் உணரவேண்டும்? பாதிக்கப்பட்டவர்களின், கொலையுண்டவர்களின் குடும்பங்களா?

இது எல்லாம் நீதியின் முன் செல்லாது...எந்த நாட்டு நீதியின் முன்னும் செல்லாது.அங்கே கூறிய அதே கருத்தின் படிதான் இங்கும் விளக்கப்பட்டுள்ளது.

"குற்றம் புரிந்தவர்களின் குறி ராசீவ் காந்தியே தவிர வேறொருவர் இல்லை"...ஆகையால் ராசீவ் காந்திக்கு வைத்த குறியில் மற்றவர் மாட்டிக்கொண்டு இறந்தது விபத்து என்று எடுத்துக்கொள்ளலாமா?

இல்லை இதையும் மனிதாபிமானமாக எடுத்துக்கொள்ளலாமா? (அப்படித்தான் வெளிப்படுத்துகிறது)

"கொலைக்கு கொலை தீர்வாகாது" என்று வைத்துவிட்டு மீண்டும் இதையே ஞாயப்படுத்த முடியுமா?இந்த செயலை நிகழ்த்தும் பொழுது இதெல்லாம் நடைபெறாது என்று தெரிந்து தான் நிகழ்த்தப்பட்டதா? எல்லாம் தெரிந்து தான் நிகழ்த்தப்பட்டுள்ளது.


நிகழ்ந்தவைகளை எந்த வகையிலும் சட்டத்தின் முன் ஞாயப்படுத்த முடியாது. ஞாயப்படுத்தினால் அனைத்து கோரிக்கையும் அடிபட்டு போய்விடும். இப்பொழுது, மனிதாபிமான அடிப்படைகளில், அவர் "மூவரின் தூக்குத்தண்டனைகளை ரத்து செய்யவேண்டும்", இன்னும் தூக்குத்தண்டனையை எதிர்நோக்கி காத்திருப்பவர்களுக்காகவும் சேர்த்து வைக்கப்படும் கோரிக்கையும் அடிபட்டு விடும்.

(அடுத்து காத்திருப்பவர்...தமிழ் நாட்டளவில் (தர்ம்புரி பேருந்து எரிப்பு வழக்கு....கருணை மனு செய்யப்பட்டுள்ளது.)

மேற்குறிப்பிட்ட விளக்கம் இங்கு வைப்பதற்கு முன்பே தெளிவாக முந்தய பின்னூட்டத்தில் வைக்கப்பட்டுள்ளது.

நாட்டிற்கு "சுத்ந்திரம்" என்ற பெயரில் "ஆஷ் துரையை" வாஞ்சிநாதன் சுட்டுக் கொன்றது, அன்றைய நிலையில் சுத்ந்திரப் போராட்டக்குழுவுக்கு வெற்றி....ஆனால் "அரசுக்கும், சாமான்யனுக்கும் (சிவிலியனுக்கும்) அன்றைய நிலையில் தீவிரவாதிகளால் செய்யப்பட்ட படுகொலை.

அப்துல் கசாப்புடன், இன்னும் இதர பாக்கிஸ்தானியர்கள் சேர்ந்து மும்பையில் அப்பாவிகள் மீது நடத்திய தாக்குதல் என்பது பாக்கிஸ்தானில் இருக்கும் போராட்டக்குழுவைப் பொருத்தவரை, ஏன் பாக்கிஸ்தானுக்கே கூட வெற்றிதான்! "போராளிகளின் வெற்றி".....ஆனால், இந்தியாவைப் பொருத்தவரை தீவிரவாதிகளின் மனிதாபிமானமற்ற, ஈவுஇரக்கமற்ற படுகொலை....இப்படித்தான் பார்வையிருக்கும்...அதே பார்வையின் அடிப்படையில் தான் இங்கேயும் பழைய முறையில் விளக்கப்பட்டுள்ளது.

ரயிலைக் கவுத்தால் நக்சலைட் கும்பலுக்கு வெற்றி! அரசுக்கும், மக்களுக்கும் தீவிரவாதிகளின் அநியாயமான செயல்!

மீண்டும் மீண்டும் "இயக்க ரீதியிலேயே" இது விளக்கப்பட்டுக் கொண்டே வருகிறது. இதற்கு "சிவிலியன்" எப்படி உடன்படுவான். சிவிலியன் அனுபவிப்பது அரசின் சலுகைகளை....மக்களின் வரிப்பணத்தை...அதில் ஒவ்வொருவருடைய பங்கும் அடங்கியிருக்கிறது.

எல்லா நாடுகளும் இப்படிப் போராடி, போராடித்தான் ஒவ்வொரு நாட்டிடம் இருந்து சுதந்திரம் பெற்றுள்ளன...அப்படி சுதந்திரம் பெற்ற எந்த நாடும் இது மாதிரி செயல்களை செய்யலாம் என்று சட்டமியற்றாது. (கியூபா உட்பட)

அதுமாதிரி சிவிலியன்களால், அங்கிகரிக்கப்பட்ட நாட்டில் உருவாக்கப்பட்ட அரசின் சட்டத்தினால் தான் இப்பொழுது தூக்குத்தணைடனை வழங்கப்பட்டுள்ளது. அதை மனிதாபிமான முறையில் ரத்து செய்ய கோரிக்கை வைக்கிறோமே தவிர! மீண்டும் மீண்டும் இந்த குற்றத்தை மக்கள் முன் ஞாயப்படுத்தினால்...இந்த கோரிக்கையேத் தவறு! என்று தான் மக்கள் முன் வெளிப்படையாகத் தெரியும்.


தூக்குத்தணைடனை பெற்றவர்களுக்காகவும், இனிமேல் பெறப்போகிறவர்களுக்காகவும் தான் இந்த மனிதாபிமான கோரிக்கை.

நம்பி said...

தொடர்ச்சி...1

ஆகையால், நிறைய தகவல்களை இங்கே தரத்தேவையில்லை....எல்லாம் இணையத்தில் வேண்டிய அளவு இருக்கிறது...வேண்டாத அளவுக்கும் இருக்கிறது....

இப்போது இந்த பிரச்சினை பற்றி விவாதித்தால் கூட இந்த கோரிக்கை தோல்வியுர அதிகபட்சமான வாய்ப்பு உண்டு. ஆனால், இப்போதும் மேதாவித் தனமான இணைய மக்கள் இருந்த இடத்தில் இருந்து கொண்டு, இதை இப்படித்தான் வலியுறுத்தி எழுதிக்கொண்டிருக்கின்றனர்.....

இவர் செய்யவில்லை...அவர் காப்பாற்றவில்லை...என்று கூறிக்கொண்டு பெத்த ஆத்தா அப்பனுக்கே சோறு போடுவதில்லை....ஆனால் கடல் கடந்து கவலைப்படுபவர்கள் போல் காட்டிக் கொள்பவர்கள நிறையபேர் இங்கு உண்டு. எங்கும் உண்டு. உறவுகளிலேயே உண்டு.

"ஏம்பா நானும் தமிழன் தானேப்பா!" இந்த இரண்டு தமிழர்களைப் பற்றி எப்பப்பா? கவலைப்பட போறே?" என்று தங்களது பிள்ளைகளை கேட்கின்ற தாய்மார்கள், தகப்பன் மார்கள் நிறைய உண்டு....அப்படிக் கூறினாலும் கவலைப்படாமால் "சும்மாக் கிட கிழவி" "சும்மாக் கிடக் கிழவா!" "இன்னும் ஏன் உயிரோட இருந்து கொண்டு உயிரை வாங்கிறே!" என்று உதாசீனப்படுத்துகின்ற தமிழினப் பற்றாளர்களும் இங்கு நிறைய உண்டு.

*******************

இப்போது இன்னொரு இயக்கப் பார்வை பற்றி பார்ப்போம்....

"ஏம்பா படிக்கிற புள்ளைங்களை உயிரோட வைச்சிக் கொன்னே! அதுவும் கோர்ட்டு தானே தீர்ப்பு கொடுத்திச்சி! அந்த பொம்பளைக்காக என் வீட்டு பெண்களை எரிப்பியா?" நீ நாசமாப் போக! இதையெல்லாம் தட்டிக்கேட்க எவரும் இல்லையா?"....இது பாதிக்கப்பட்டவர்கள் குரல்....


இப்போது இயக்கப்பார்வை.....

"என் தலைவி....எங்களுக்காக கர்நாடகாவிலேயிருந்து இங்கே வந்து தமிழர்களுக்காக கஷடப்படுறா!....எங்கம்மா ஜெயலலிதாவை ஒழிக்கணும்னே! இந்த கருணாநிதி வழக்குப் போட்டு தண்டனை வாங்கி கொடுக்கிறான்!....எங்கம்மாவை ஒழிக்கிறதுக்குன்னே கங்கணம் கட்டிகிட்டு இருக்கான்..கொளுத்துடா பஸ்ஸை இனி எவனும் நிம்மதியா வாழக்கூடாது...கருணாநிதிக்கு ஒட்டு போட்டவனும் வாழக்கூடாது.....சொல்வது திராவிடன்....கொளுத்துவதும் திராவிடன்...தமிழன்..கொளுத்தப்பட்டதும் ...தமிழச்சிகள்...வாடியது தமிழன்கள்.....

தூக்குத் தண்டனை வழங்கியது இந்திய தண்டனைச் சட்டம்....பாராட்டியது மக்கள் மன்றம்.....

இப்போது இதை இயக்கப்பார்வையில் பார்க்கலாமா?

அல்லது இந்திய தண்டனைச்சட்ட பார்வையில் பார்க்கலாமா?

அல்லது சமான்யனின் பார்வையில்....?

.... அல்லது ஒட்டு மொத்தமாக சிவிலியனின் பார்வையில்...எப்படி இதை பார்க்கலாம்....?
*****************

"அம்மாவுக்காகத்தான் அவன் பஸ்ஸைக் கொளுத்தினான்....கருணாநிதி போன்ற.....அதிமுக எதிரிகள் பொய் வழக்கு போட்டு இந்த மூன்று பேருக்கும் தூக்குத் தண்டனை வாங்கி கொடுத்துவிட்டான்"

"அவனை முதலில் ஒழிக்கணும்"...எங்கம்மாவுக்காக நாங்க உயிரையும் கொடுப்போம் மயிரையும் எடுப்போம்!".இது இயக்கப் பார்வை...அது போக்கத்த இயக்கமாக இருந்தாலும்...இயக்கப் பார்வை தான்.


இது இயக்கப் பார்வை....

கீழே பாதிக்கப்பட்டவர்கள் பார்வை....

"அய்யோ! என் பிள்ளைகளை படிக்க அனுப்பிச்சனே! அதுங்களே இப்படி! கரிக்கட்டையா கொண்டு வந்து போட்டுட்டாங்களே! பாவிங்க அவனுங்களே அதே மாதிரி கொல்லணும்" இது பாதிக்கப்பட்ட பெத்தவங்களோட பார்வை. இதுவும் இயற்கை...

இதில் சம்பந்தப்படாத மக்கள் பார்வை...


"நிச்சயமாக இந்த ஈவுஇரக்கமற்ற மனிதர்களை கொடூரமான முறையில் கொல்ல வேண்டும்"...

மேலே குறிப்பிட்ட.....

இதுதான் சாமன்யனின் பார்வை...

இதுதான் சிவிலியன் பார்வை.

இதுதான் இயற்கையான பார்வை. வழக்கமான பார்வை.

இதுதான் அதிகபட்சமான பார்வையும் கூட.

****************


தொடரும்...2

நம்பி said...

தொடர்ச்சி...2

இதிலிருந்து நடுநிலையான பகுத்திறிவுப் பார்வை...மரணதண்டனை என்பது தண்டனை அல்ல! அவர்களுக்கு தண்டனை வழங்கி திருந்தி வாழ வையுங்கள்....இதைவிட கொடுமையான தண்டனை சிறைத்தண்டனை தான்...என்பது நடுநிலையான, பகுத்தறிவுப்பார்வை...இந்தக்குரல் கணிசமான அளவுக்கு இருக்கிறது...!

(குறிப்பு: இயக்கப்பார்வையின்படி பார்த்தால் உண்மையில் ராஜூவ் காந்திக்கு மரணதண்டனை தான் வழங்கப்பட்டது...இது இயக்கத்தின் சட்டதிட்டம், இதையும் அந்த ஆவணச்சுவடி வலைத்தளத்தில் சென்று பார்வையிட்டு தெரிந்து கொள்ளலாம்)

ஆனால், இந்த மாதிரிப்பார்வை அதிகப் பெரும்பான்மையாக இல்லை! இணையத்தில் சுத்தமாக இல்லை!


இந்தப்பார்வையை வைச்சுத்தான், தூக்குத்தண்டனை ரத்துக்கான கோரிக்கையேத் தவிர! மேலே குறிப்பிட்ட பார்வையில் அல்ல. அந்த பார்வைப்படி பார்த்தால் தூக்குத் தண்டனை சரி என்றாகிவிடும். ஏனென்றால் உங்க இயக்கத்திலேதான மரணதண்டனை வைச்சிருக்கிஈங்களே! என்ன சரிதானே!

****************

இந்த தூக்குத்தண்டனை போராட்டாம், தூக்குத்தண்டனை பெற்றவர்களின் மனநிலையை உள்வாங்கி போராடுவது.

முழுவதுமாக உணர்வுப்பூர்வமாக, மனநிலையுடன் ஒருவரும் போராட முடியாது. அதாவது, மனோதத்துவ ரீதியில் போராடுவது.

அதற்கு உதாரணம்...கிழே!....

இந்த போராட்டங்களை பற்றி சம்பந்தப்பட்ட தூக்குத்தண்டனை கைதிகள் மூன்று பேரிடமும் கேட்கப்பட்ட பொழுது....அவர்கள் கூறியது....

எங்களுக்குகாக கலைஞர்....வீரமணி..
வைகோ...என
பல்வேறு கட்சியினர் குரல் கொடுக்கின்றனர். ஜெயலலிதா அம்மாவும் கருணை உள்ளம் கொண்டவர், எங்கள் மக்களின் துயரத்திற்காக சட்டசபையில் தீர்மானம் போட்டவர்...இதையும் கவனிப்பார்!....என்று மரணபயத்தில் பேட்டி அளிக்கின்றனர்...ஏன்?

அவங்களுக்குத்தான் தண்டனை..அவங்களுக்குத்தான் அந்த பயம் இருக்கும்!....சப்போர்ட் பண்ணி போராடுகிறவனுக்கு இல்லை...

அதனால், சம்பந்தப்படாத இவனுங்க என்ன பன்றானுங்க?

இதையும் இன உணர்வு...தமிழர்கள்...
தமிழன்...
கலைஞர்...
ஜெயலலிதா...
திமுக..
அதிமுக..
மதிமுக..
விசி...
போசி..பசி...
என்று இங்கு வந்து அவங்கவுங்களோட இயக்கப்பார்வையை வெளிப்படுத்திகிட்டு இருக்கானுங்க!

இது என்ன விளைவை ஏற்படுத்தும்? தூக்குத் தண்டனை சரி! என்கிற விளைவைத்தான் ஏற்படுத்தும்! அவங்களுக்கு (மூன்று பேருக்கும்) மறைமுகமாக வைக்கிற "ஆப்பைத்தான்" இது வெளிப்படுத்தும். மேலே வைக்கப்பட்ட வாதங்களும் இதைத்தான் நிருபிக்கின்றன.
*********************

தொடரும்...3

நம்பி said...

தொடர்ச்சி...3

எங்கேயாவது தொலைக்காட்சியில் இதை ஞாயப்படுத்தி பேட்டி வந்திருக்கிறதா? வராது...! முதலில் இதை புறிஞ்சுக்குங்க மக்களே!

பொதுவாக டெல்லி வரை போராடுகிறார்கள் எப்படி? போராடுகிறார்கள்! ராஜீவ் கொலை சரி! என்றா போராடுகிறார்கள்....இத்தனை ஆண்டுக்காலம் தண்டனை பெற்று விட்டார்கள்!....இந்த வழக்கு இன்னும் நிலுவையில் இருக்கிறது என்று ஒரு தொய்வை, சட்ட சூட்சுமத்தை வைத்து போராடுகிறார்கள். இது தான் நடுநிலையாளர்கள், சாமன்யர்களின் போராட்டம். சாமான்யர்கள் இதற்குத் தான் ஒன்று சேருவார்கள். மேற்குறிப்பிட்ட இயக்கச்சார்பு வாதத்திற்கு அல்ல!

வழக்கு எப்படி போடப்பட்டிருக்கிறது!? தூக்குத்தண்டனை கூடாது என்றா? கருணை மனு 11 ஆண்டு காலம் கிடப்பில் போடப்பட்டு இப்போது நிராகரிக்கப்பட்டிருக்கிறதே? இரண்டு ஆண்டுகாலம் நிலுவையில் வைத்திருந்தாலே! தண்டனை குறைப்பு செய்யலாமே? என்ற சூட்சுமத்தை உள்வைத்து தான்...(இது சட்டவிதி அல்ல) வழக்குப் போடப்பட்டுள்ளது.


ஆகையால் இந்த இயக்கப்பார்வை விவாதங்கள் தேவையற்றது. இது இயக்க சட்டதிட்டத்தின்படி வழங்கப்பட்ட தண்டனையல்ல. (விடுதலைப் புலிகள் இயக்க சட்டதிட்டத்தின்படி மரணதண்டனை உண்டு...நிறைவேற்றியிருக்கிறார்கள்.

இன்னும் பல பேருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்படாமல் அந்த இயக்க சட்டதிட்டத்தின்படி
நிலுவையில் இருக்கிறது.


அவர்கள் தலைவர் பார்வையில், ஒரு கட்சி ஆட்சி தான் ஸ்திரமானது என்று நம்பக்கூடியவர் .

பல கட்சி ஜனநாயகத்தில் அந்த தலைவருக்கு உடன்பாடு கிடையாது...

இது எல்லாம் அவர் விடுத்த ஆதாரப்பூர்வ அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது....

எல்லாவற்றையும் அந்த தளம் சென்று காணலாம்)

இந்த தண்டனை வேறொரு நாட்டில், வேறொரு நாட்டு இயக்கத்தினர் சார்பாக நிகழ்த்தப்பட்ட படுகொலைக்கு, அந்த நாட்டில் (இந்திய) உள்ள சட்டதிட்டங்களின் அடிப்படையில், நீதிபரிபாலணையில் வழங்கப்பட்ட தண்டனை.

அந்த சட்டதிட்டத்தின் உச்சப்பட்ச தண்டனையை எதிர்த்து தான் இங்கு போராட்டம்.

மாற்ற சொல்லி, குறைக்க சொல்லி போராட்டம்.

அந்த மூவரும் "குற்றமற்றவர்கள்" என்று சொல்லி நடத்தப்படும் போராட்டமல்ல!

அப்படி வலியுறுத்தி நடத்துனா...

ரெடியா இன்னும் 3 பேர் பஸ்ஸை கொளுத்திட்டு தூக்குத்தண்டனைக்காக வைட்டிங் லிஸ்ட்டுல இருக்கானுங்க!

யாரு?

அதிமுக அள்ளக்கைங்க தான்..

தரும்புரி பஸ் எரிப்பு....

அந்த மனிதாபிமான செயலை ஞாயப்படுத்திடுவானுங்க!

அதுனால ஞாயப்படுத்துவது நோக்கமில்லை....

நல்லா....யோசிங்க!...

நீங்க யோசிக்கலைன்னா என்ன?

கோர்ட்டு எல்லாவற்றையும் யோசிக்கும்..

இன்னும் சில கட்சிக்காரங்களும் யோசிக்கிறாங்க...அது எந்த கட்சிக்காரங்க? என்று சொல்லித் தெரியவேண்டியது இல்லை!
-----------------

நம்பி said...

//Blogger புகல் said...

@நம்பி
நாட்டின் தலைவன் என்று சொல்லிகொண்டு எந்த நியாயமும் இல்லாமல்
இராணுவத்தை அனுப்பி தன் தார்மிக உரிமைக்காக போராடி கொண்டிருக்கும்
அப்பாவி மக்களை கொன்று, பெண்களின் கற்பை சூரையாடி கொன்ற கயவனை
..................

August 30, 2011 2:59 AM
Blogger புகல் said...

இல்ல தெரியாம கேட்கிறேன்
பாக்கிசுதானுக்கும் தமிழனுக்கும் என்ன பிரச்சனை தண்ணிர் பிரச்சனையா,
.......................

August 30, 2011 3:00 AM//

மேலே குறிப்பிட்ட அத்துணையுமே இயக்க சார்பாக வைக்கப்படும் நியாய வாதங்கள் இப்போது அந்த வாதம் செல்லுபடியாகாது. அதை வைத்து மரணதண்டனயை ரத்து செய்ய கோர முடியாது.

இதே போன்ற வாதங்கள்
ஜிகாத் அமைப்பாலும் வைக்கமுடியும், மதவாத இயக்கங்களாலும் வைக்கமுடியும். இன்னும் பல சகோதர யுத்தம் புரிந்த இயக்கங்களாலும் வைக்கமுடியும்.

இந்த வாதங்கள் இந்த மூவரையும் காப்பாற்ற எந்த வகையிலும் பயன்படாது.

இது போன்ற வாதங்கள் இயக்கங்களுக்கிடையே நடத்தப்பட்ட கொலைவெறித் தாக்குதல்களைத் தடுக்கவேப் பயனபடவில்லை. சகோதரத யுத்தத்தை தடுக்கவே பயன்படவில்லை.

ராஜூவ் காந்தி செய்தது தவறு என்பதால், ராஜீவ் காந்தியின் அம்மா இந்திரா காந்தி தயவால் இந்திய ராணுவத்திடம் பல இயக்கங்களும் சண்டை பயின்றதை மறந்து விட்டு, அதற்கு அடுத்த வந்த விபி சிங்கால், கலைஞர் வலியுறுத்தலின் பேரில் பரிகாரம் செய்யப்பட்டதையும் மறந்துவிட்டு, குறுக்கு வழியில் அந்நிய நாட்டுக்குள் புகுந்து போட்டுத்தள்ளுவேன் என்று கூறுவதை சாமன்யர்களாலும், இந்த நாட்டு பிரஜைகளாலும் ஜிரணிப்பது என்பது கடினம்.

இத்தனைக்கும் இந்த திட்டங்கள் அந்த இயக்கத்தை சேர்ந்தவர்களுக்கே தெரியாது. அந்த இயக்கத்தின் உளவுப் பிரிவைத் தவிர.

அதுமட்டுமில்லாமல் இந்த இயக்கத்தினர், சமூக நீதிக்காவலர் வி.பி.சிங் பிரதமராக இருக்கும் பொழுதே இந்த நிகழ்வை, வெற்றிகரமாக செய்திட ஒத்திகை பார்த்துள்ளனர். அதன்பிறகே திருப்பெரும்புதூரில் நிறைவேற்றப்பட்டது.

இயக்கத்தினர் இதை நியாயப்படுத்தலாம். சாமான்யனிடமும், சிவிலியனிடமும், இந்திய நீதிமன்றத்திடமும் எல்லாம் இந்த பாச்சா பலிக்காது. அது அவனுக்கே, ஏன்? நாட்டுக்கே வேட்டாக முடிந்து விடும். அப்புறம் எல்லா விஷயங்களையும், எல்லா குற்றங்களையும், எல்லா அசம்பாவிதங்களையும் ஆதரிக்கவேண்டும். இது சாத்தியமா?

வழக்கமாக எந்த அசாம்பாவித சம்பவங்கள் நடைபெற்றாலும் அதற்கு அந்தந்த இயக்கங்கள் பொறுப்பேற்கும். இது செய்திகளை கொண்டு அறியலாம்.

இது விடுதலை புலிகள் அமைப்பிலும் பின்பற்றி வந்த ஒன்று தான். இயக்கத்தின் வீரியத்தை வெளிப்படுத்துவதற்காக..இந்த முறை...

ஆனால் இந்த விஷயம் அப்படி வெளிப்படுத்தப்படவேயில்லை. மாறாக நாங்களும் இந்த கொலை நிகழ்வை கண்டுபிடிக்க உதவுகிறோம் என்றே அறிக்கை வெளியிடப்பட்டது. உதவ்வும் முன்வந்தார்கள்.

காரணம் அவ்வளவு ரகசியமாக அந்த திட்டம் அந்த இயக்கத்தின் உளவுப்பிரிவின் மூலமாக நிறைவேற்றப்பட்டது.

இதற்கு இன்று வரை இந்த இயக்கம் பொறுப்பேற்கவில்லை.

அந்த இயக்கத்தின் தலைவர் அறிக்கைபடி.... "நம்கொள்கைக்கு எதிராக, குறுக்காக தாயே வந்தாலும் கொல்லத் தயங்கமாட்டேன்" என்று கூறி அந்த இயக்கத்தினரை பின்பற்றச் செய்வது அந்த இயக்கத்தின் சட்டதிட்டம்.

ஆகையால் இதை இந்திய சட்டத்திட்டத்திடம் நீட்டமுடியாது.


இந்த பிரச்சினையெல்லாம் வேண்டிய அளவுக்கு இணையத்தில், இணையத்திற்கு வெளியிலும் வாதிட்டுவிட்டார்கள்...இந்த விவாதங்கள் ஒவ்வொரு இயக்கத்திற்கும் வேறுபடும்.

டெலோ, டெசோ, ஈபிஆர்எல் எப், விடுதலைக் கூட்டணி,....... முன்னணி...தமிழ் தேசியக் கூட்டணி....என்று போய்க்கொண்டேயிருக்கும்.

அதைத்தான் தமிழ்த் தேசிய ஆவணச் சுவடிகள் இணையதளத்தில் எல்லா இயக்கங்கள் பற்றியும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

அதனால் தான் தலைவர்கள் இந்த மூவருக்கும் மனிதாபிமான அடிப்படையில் தூக்குத் தண்டனையை ரத்து செய்ய சொல்கிறார்கள்...

இதை ராஜீவ் காந்தி இருந்தாலும் (ஒருவேளை அவர் சாகாமல் மற்றவர்கள் மட்டும் இறந்திருந்தால்) வரவேற்றிருப்பார்....முதலில் தூக்குத்தண்டணையிலேயிருந்து காப்பாற்ற வேண்டும்.

அப்புறம் அவர்கள் இவ்வளவு காலம் அனுபவித்த தண்டனையை வைத்து விடுதலையடைய முயற்சிக்கவேண்டும்.