Search This Blog

27.8.11

இதற்கு மேலும் கட வுளா? பக்தியா? சிந்திக்க வேண்டாமா?சென்னை ஜாபகர்கான் பேட்டையில் ஒரு நிகழ்வு... பக்திப் போதையில் சுருண்டு கிடக்கும் மக்களைக் கண் திறக்கச் செய்வதாகும்.
கடவுள் பக்தி, ஒழுக் கத்தை வளர்க்கும்; கடவுள் பயம் குற்றம் செய்யும் உணர்வை அச்சுறுத்தி அடக்கி வைக்கும். பக்தி இல்லாவிட்டால் தனி மனி தனுக்கும் சரி, சமூகத்துக்கும் சரி ஹானி விளைவிக்கும் என்று சங்கராச்சாரியி லிருந்து ஆன்மிகச் சொற்பொழிவாளர்கள்வரை உப தேசமும், உபந்நியாசமும் அன்றாடம் செய்து கொண்டே இருக்கிறார்கள்.

பார்ப்பன நாளேடுகள் ஒவ்வொரு நாளும் நடக் கும் ஆன்மிகச் சொற் பொழிவுகளின் அட்ட வணைகளையும் வெளி யிடுவதைக் கடமையாகக் கொண்டுள்ளன.

அதேநேரத்தில், ஆன் மிகப் போர்வையில் நடக்கும் ஆபாசங்களை அத்து மீறல்களை, அநியாயங்களை வெளிச்சத்துக்குக் கொண்டுவராமல் கழுத்தை நெரித்துக் கொன்று விடுகின்றன. இதன்மூலம் ஆன்மிகத்தை அக்குளில் வைத்துப் பாதுகாப்பதாக நினைப்பு.

இதனையும் தாண்டி தான் சென்னை ஜாபகர் கான் பேட்டையில் நடை பெற்றுள்ள ஒரு நிகழ்வு வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இதில் கதாநாயகன் ஒரு அர்ச்சகப் பார்ப்பான் - அவன் பெயர் ராமகிருஷ்ணன். இரவு நேரத்தில்கூட அல்ல - பட்டப் பகல் மணி 11.45.

அடுக்ககத்தின் மூன்றாவது மாடியில் உள்ள மாதவியம்மாள் வீட்டுக்குச் சென்றான். இவன் ஏற்கெனவே அறிமுகமானவன் என்பதால், அவனை வர வேற்று, சமையல் அறைக்குள் தேநீர் தயாரிக்கச் சென்றுள்ளார். அவனும் சமையலறைக்குள் நுழைந்து இருக்கிறான். சற்றும் எதிர்பாராத மாதவி வெளியே போகுமாறு கூறி யிருக்கிறார்.

உடனே என்ன செய்தான்? கத்தியை எடுத்து மிரட்டி அந்தப் பெண்ணி டம் இருந்த நகைகளைக் கேட்டு மிரட்டியுள்ளான்.

தொடக்கத்தில் நகைகளைக் கொடுக்கத் தயாராக இருப்பதுபோல பாவனை காட்டி, திடீ ரென்று இரண்டு கைகளாலும் அவனை மடக்கிப் பிடித்து உதவிக்கு வருமாறு கூச்சல் போட்டுள்ளார்.

அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் உதவிக்கு ஓடிவந்தனர். அந்த அர்ச்சகப் பார்ப்பானோ தப்பித்து ஓடினான். ஆஸ்பெஸ்டாஸ் ஓட்டின்மீது ஓடியதால், அது உடைந்து, கீழே விழுந்து அவன் விலா எலும்பும், கால் எலும்பும் முறிந்து போயின. காவல்துறை வழக்கைப் பதிவு செய்துள்ளது.

அர்ச்சகப் பார்ப்பானே திருடுகிறான்; அர்ச்சகப் பார்ப்பானே கோயிலுக்கு வரும் பெண்களை கோயில் கருவறைக்குள் வைத்து காமவேட்டை ஆடுகிறான். சங்கராச்சாரியாரே கொலை குற்றவாளியாகத் திரிகிறார்.

சாமியார்களே நடிகைகளோடு சல்லாபம் அடிக்கிறார்கள். பகவான் பாபா அறையைத் திறந்து பார்த்தால் பட்டுப் புடவைகளும், லேடீஸ் பேக்குகளும் குவிந்து கிடக்கின்றன.

இதற்கு மேலும் கட வுளா? பக்தியா? சிந்திக்க வேண்டாமா?

--------------- மயிலாடன் அவர்கள் 24-8-2011 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

********************************************************************


சென்னை மாகாணத் தில் சர்க்கார் உத்தியோகங்களுக்காக ஏற்படுத்தியிருக் கும் வகுப்பு வாரி பிரதிநிதித் துவம் என்பது சர்க்கார் உத்தரவாக மாத்திரம் இல்லாமல், சர்க்கார் சட்டத்திலேயே ஒரு விதியாகக் குறிக்கப்பட வேண்டுமென்று, இந்த மாநாடு தீர்மானிக்கிறது. தற்போதுள்ள வகுப்பு வாரி பிரதிநிதித்துவ எண் ணிக்கை திராவிடர்களுக்கும், ஆதி திராவிடர்களுக்கும் மிகவும் குறைவாக இருப் பதால் ஜனசங்கியைக்கு ஏற்றபடி அவ்விகிதங்கள் ஏற்படுத்தப்பட வேண்டுமென் றும் அவ்விகிதப்படி உத்தி யோகங்கள் அடையும் வரை அதிகமாகப் பிரதிநிதித்துவம் அடைந்திருக்கும் கூட்டத்தாருடைய நியமனம் நிறுத்தி வைக்கப்படவேண்டுமென்றும் சர்க்காரைக் கேட்டுக் கொள்கிறது. இந்த முறை அகில இந்திய சர்க்கார் உத்தியோகங்களிலும் கையாளப்பட வேண்டுமென்று தெரிவித்துக் கொள்வதுடன் வரப் போகும் சீர்திருத்த சட்டத் திலேயே இவை குறிக்கப்பட வேண்டுமென்று தீர்மானிக் கிறது.

- இதே நாளில் (1940) திருவாரூரில் தந்தை பெரியார் தலைமையில் நடைபெற்ற தென்னிந்திய நல உரிமைச் சங்க (நீதிக் கட்சி) 15 ஆவது மாகாண மாநாட்டில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்கள் தான் மேலே காணப்படுபவை.

71 ஆண்டுகளுக்கு முன்பு எவ்வளவு தொலை நோக்கோடு இந்தத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட் டுள்ளன என்பது கவனிக்கத் தக்கதாகும்.

இட ஒதுக்கீடு வெறும் ஆணையாக இல்லாமல் சட்ட மாக ஆக்கப்பட வேண்டும் என்ற கருத்து1994 ஆம் ஆண்டில் (டிசம்பர் 31) திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர் களால் தொகுத்து அளிக்கப் பட்ட 31(சி) மூலம் தமிழ்நாடு சட்டப் பேரவையில் அதிமுக ஆட்சியில் சட்டம் நிறைவேற் றப்பட்டது. (தமிழ்நாடு சட்டம் 45/1994) 76ஆவது சட்டத் திருத்தத்தின் கீழ் நாடாளு மன்றத்திலும் நிறைவேற்றப்பட்டது. அதே போல மத்திய அரசுத் துறைகளிலும் இட ஒதுக்கீடு என்பது திருவாரூர் மாநாடு நடந்து முடிந்த 50 ஆண்டுகளுக்குப்பின் திராவிடர் கழகத்தின் அரிய முயற்சியால், கழகத் தலைவரின் திட்டமிட்ட அறி வார்ந்த செயல்முறைகளால், நல்வாய்ப்பாக இந்தியத் துணைக் கண்டத்துக்கு வாராது வந்த மாமணியாய், வான் மழையாய் வந்து சேர்ந்த பிரதமர் வி.பி.சிங் அவர்களின் சமூக நீதி உணர்வால் (1990 ஆகஸ்ட் 7) நாடாளுமன்றத்தில் அறி விக்கப்பட்டது.

மண்டல் குழு பரிந்துரைகளின் அடிப்படையில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் இட ஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் என்கிற பரிந் துரையை செயல்பாட்டுக்குக் கொண்டு வர திராவிடர் கழகம் 42 மாநாடுகளையும், 16 போராட்டங்களையும் நடத்தி, இந்த சாதனை நிகழ்த்தப் பட்டது என்பது கல்லின் மேல் எழுத்தாகும்.

நீதிக்கட்சி என்ன செய்தது? திராவிடத்தால் வீழ்ந்தோம் என்று கரிக்கோடு கிழிக்கும் வீடணர்கள் இந்த வரலாற்றை யெல்லாம் தெரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும். கழகப் பிரச்சாரகர்களும், மக்கள் மத்தியில் குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் அழுத்த மாக இவற்றைப் பதிவு செய்ய வேண்டும்.

---------------- மயிலாடன் அவர்கள் 25-8-2011 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

5 comments:

காந்தி பனங்கூர் said...

சிந்திக்கறதா இவனுங்களா? ஒருவன் தன்னோட ஒரு பொருளை என்னிடம் கடனாக கொடுப்பதற்கு இன்று செவ்வாய் கிழமை நாளை தருகிறேன் என்கிறான். இப்படிப்பட்ட மனிதர்களை திருத்துவது ரொம்பவே கஷ்டம்.
www.panangoor.blogspot.com

Thamizhan said...

ஒரே வாரத்திலே இரண்டு நிகழ்ச்சிகள்.
உலகப் பெரும் பணக்காரரான பில் கேட்சும், அவரது துணைவியார் மெலிண்டா கேட்சும் ஒரு மாலைப் பொழுது முழுதையும் சென்னையிலே " எய்ட்ஸ்" நோயால் பாதிக்கப் பட்டக் குழந்தைகளுடன் செலவிடுகின்றனர்.

இரவு பகலாக அறுவைச் சிகிச்சை செய்து மருத்துவர்கள் அவர் உயிரைக் காப்பாற்றுகின்றனர். அவர் கோடிக்கணக்கான் விலை பெறும் வைர நகையையை நன்றிக்காணிக்கையாக அணிவிக்கின்றார். யாருக்கு திருப்பதி வெங்கடேசனுக்கு. யார் ? அமிதா பட்சன் எனும் சிறந்த நடிகர்.

மூளை உள்ளவருக்கும், மூளைச் சலவை செய்யப் பட்டவருக்கும் உள்ள வித்தியாசம் பாருங்கள் .

இதில் உண்மையானக் கடவுள் யாரிடம் அன்பு செலுத்துவார் என்று கொஞ்சமாவது சிந்திக்கும் திறனிருந்தால் தம்மைத் தாமே கேட்டுக் கொள்ள மாட்டார்களா?

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி காந்தி பனங்கூர்

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
Thamizhan

நம்பி said...

அமிதாபச்சன் இறந்தபோதும், அவர் சார்பாக யாராவது, அவரது உறவினர்கள், காணிக்கையளிப்பார்களா?

....என்றைக்காவது ஒரு நாள் இறந்து தானே ஆகவேண்டும். அப்போதும் மனதிருப்தியுடன் போய் அவர் சார்பாக அவர் குடும்பத்தினர் அல்லது அவர் மகன் அல்லது அவரது குடும்பத்தினர் எவராவது "எங்க! "அமிதாப்பச்சனை" சாகடிச்சதுக்கு நன்றி" என்று திருப்பதி பாலாஜிக்கு காணிக்கையளிப்பார்களா?

அப்ப மட்டும் வெறுப்பு வரும். அநியாயமா என் புருஷனை கொண்டுபோய்ட்டியே! நீ ஒரு கடவுளா? என்று கடவுளுக்கு சாபம் விடுவார்கள்.

எல்லாத்துக்கும் மரணபயம்..........

"காப்பாற்றியது கடவுள்! என்றால் சாகடிப்பதும் கடவுள் தானே!" அதற்கு ஏன்? காணிக்கையளிக்க மாட்டேன் என்கிறான்க! இந்த சமத்துவமற்ற மனிதர்கள்.

இங்கு தான் "காப்பதற்கும் கடவுள் இருக்கிறான்!, அழிப்பதற்கும் கடவுள் இருக்கிறான்!, கொலை செய்வதற்கும் கடவுள் இருக்கிறான்!, கொள்ளையடிப்பதற்கும் கடவுள் இருக்கிறான்!.........எல்லாவற்றையும் மன்னிப்பதற்கும் கடவுள் இருக்கிறான்!.... "

மனிதன் தான் கடவுளைக்கூட பிரித்து பிரித்து பார்க்கிறான்?????????????