Search This Blog

29.9.14

பன்னீர்செல்வம் முதல் அமைச்சரானது வரவேற்கத்தக்கதே!-கி.வீரமணி

பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஓ. பன்னீர்செல்வம் முதல் அமைச்சரானது வரவேற்கத்தக்கதே!
எதிர்க்கட்சிகளையும் மதித்து  நீதியான ஆட்சி நடைபெற வாழ்த்துகிறோம்!
தமிழர் தலைவரின் அறிக்கை
பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த திரு ஓ. பன்னீர் செல்வம் அவர்கள் முதல் அமைச்சராக வந்திருப்பது வரவேற்கத்தக்கதே!

எதிர்க்கட்சிகளையும் மதித்து, நீதியான, நிலையான ஆட்சியைத் தர வாழ்த்துகிறோம் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

பெங்களூரு தனி நீதிமன்றத்தில் முன்னாள் முதல்வர் செல்வி ஜெ. ஜெயலலிதாமீதான சொத்துக் குவிப்பு வழக்கில் ஊழல் தடுப்புச் சட்டப் பிரிவுகளின்படி தலா 4 ஆண்டுகள் தண்டிக்கப்பட்டு, நூறு கோடி ரூபாய் அபராதம் (இதற்கு ஜாமீன் கோரியும், தண்டனைக்கு தடைகோரியும் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் அவர் சார்பில் மேல் முறையீடு (அப்பீல்) இன்று செய்யப்படுகிறது) விதித்துள்ள தாலும், இப்படி தண்டனை பெற்றதால் அவர்கள் வகிக்கும் பதவிகள் உடனடியான இழப்புக்கு உள்ளாகும், அடுத்து தண்டனைக் காலத்திற்குப் பிறகும் 6 ஆண்டுகள் தேர்தலில் நிற்கத் தடை என்று உச்சநீதிமன்றம் 2013இல் வழங்கிய தீர்ப்பின் காரணமாக ஏற்பட்ட சட்டப் படிக்கான விளைவு ஆகும்.

இதற்குமுன் நாடாளு மன்றத்தில் பதவி களில் இருந்த  நான்கு பேர்கள் லாலுபிரசாத் உட்பட இத் தீர்ப்பின் அடிப்படையில் பதவி இழப்புக்கு ஆளாகி யிருக்கிறார்கள்.

இதற்குமுன்பு (2013க்கு முன்பு) இருந்த நிலை வேறு.

முதல் அமைச்சர் பொறுப்பில் உள்ள ஒருவர் இப்படி தண்டனை பெற்று உடனடி பதவி இழப்புக்கு ஆளாவது இதுவே இச்சட்டத்தின் கீழ்  முதல் நிகழ்வு இந்திய அரசியலில்!

அதிமுகவுக்குப் பெரும்பான்மை உண்டு என்றாலும் அதிமுக போதிய பெரும்பான்மையும், கட்டுக்கோப்புடனும் உள்ள ஆளுங் கட்சியாக இருக்கிற காரணத்தாலும், அதிமுகவின் ஆற்றல், அதிகாரம் மிக்க தலைவராக பொதுச் செயலாளர் என்ற பொறுப்பில் அம்மையார் ஜெயலலிதா அவர்கள் இருக்கின்ற காரணத்தாலும் அவரது ஆணைப்படி நேற்று (28.9.2014) அக்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள்கூடி, நிதியமைச்சராக இருந்த திரு. ஓ. பன்னீர்செல்வம் அவர்களை சட்டமன்றக் கட்சித் தலைவராக ஒரு மனதாகத் தேர்வு செய்து, அவர் தலைமையில் புதிய அமைச்சரவை செயல்படும் என்பதற்கு தமிழக ஆளுநர் திரு. ரோசய்யா அவர்களைச் சந்தித்து, அவரும் சட்டப்படி அழைப்பு விடுத்து, இன்று அமைச் சர்கள் பதவியேற்று, அரசியல் சட்டப்படி கடமையாற்ற விருக்கின்றனர்.

நீதியான ஆட்சி தருக!

அமைதியும், அடக்கமும் நிறைந்தவர் திரு. ஓ. பன்னீர் செல்வம். அவர் ஏற்கெனவே ஒரு முறை இப்பதவியில் அமர்த்தப்பட்டும் உள்ளார். அவரது தொடர் விசுவாசத் திற்கு அத்தலைமை தந்த அங்கீகாரப் பரிசு இது!

ஜனநாயகத்தில் எதுவும் நிரந்தரமோ, மாறாததோ அல்ல.

பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த ஒருவர் மீண்டும் (இரண்டாவது முறையாக) அ.தி.மு.க. முதல்வர் ஆவது சமூகநீதிக் கண்ணோட்டத்தில் பெரிதும் வரவேற்கத்தக்கது.

அவரது தலைமையில் அமைந்த புதிய அரசு அனைத்து மக்கள் நலத்திலும் அக்கறை காட்டி, எதிர்க் கட்சிகளையும் மதித்து, தமிழகத்தில் ஒரு நிலையான ஆட்சி, நீதியான ஆட்சி என்ற பெயரை எடுத்து வரலாறு படைக்க வாழ்த்துகிறோம்.

------------------------- கி.வீரமணி தலைவர்திராவிடர் கழகம் சென்னை  
29.9.2014

35 comments:

தமிழ் ஓவியா said...

வழிகாட்டும் கருநாடகா கணவனை இழந்த தாழ்த்தப்பட்ட பெண்கள் அர்ச்சகர்களாக நியமனம்

மங்களூரு, செப்.30- கருநாடக மாநிலத்தின் மங்களூருவிலுள்ள குத்ரோலி சிறீ கோகர்ண நாதேஸ்வரர் கோயிலில் கணவனை இழந்த தாழ்த்தப் பட்ட இனப் பெண்கள் இருவர் அர்ச்சகர்களாக திங்கள் கிழமை நியமிக்கப்பட்டனர்.

நூறாண்டுகள் பழமைவாய்ந்த இந்தக் கோயிலில், கணவனை இழந்த எஸ்.சி. - எஸ்.டி. சமூகத்தைச் சேர்ந்த சந்திராவதியும், லட்சுமியும் அர்ச்சகர்களாக நியமிக்கப் பட்டுள்ளனர். இவர்களை நுழைவு வாயிலில் வந்து வரவேற்ற கோயில் நிர்வாகத்தினர், பின்னர் கோயில் கருவறைக்குள் அழைத்துச் சென்றனர். பின்னர் இந்த 2 பெண்களும் பூஜைகள் நடத்தியதுடன், பிரசாதங் களும் வழங்கினர். முன்னதாக, இதேபோன்று கடந்த ஆண்டு கணவனை இழந்த 2 பெண்களை அர்ச்சகர் களாக இந்தக் கோயில் நிர்வாகத்தினர் நியமித்திருந் தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more: http://viduthalai.in/e-paper/88463.html#ixzz3Eqs00vJf

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

சரஸ்வதி தேவி

சரஸ்வதி தேவியின் உடம்பை தத்துவமாகக் கூறுவதுண்டு. சரஸ்வதி யின் முகம் பிரம்ம வித்தை கொண்டது.

அவள் கைகள் நான்கு வேதங்களையும், கண்கள் எண்ணையும், எழுத்தை யும், உடையது. இயல் இலக்கியங்களை மார்பும், திருவடிகள் இரண்டும் இதிகாச புராணங்களையும் குறிக்கிறதாம்.

இந்தக் காரணங்களுக் காகவே பார்ப்பனர் அல் லாதார் ஒவ்வொருவரும் இந்த சரஸ்வதியையும் ஆயுத பூஜையையும் கண் டிப்பாக வெறுத்து ஒதுக்க வேண்டும் என்பது விளங் குகிறதல்லவா! வேதங் களும், இதிகாசங்களும், புராணங்களும் பார்ப்பனர் அல்லாதார்களைச் சூத்தி ரர்கள் என்று சொல்லக் கூடியவை தானே!

Read more: http://viduthalai.in/e-paper/88452.html#ixzz3Eqs9nILC

தமிழ் ஓவியா said...

மோடி மகிமை !


மோடி! மோடி! என்று மகிமை உண்டாக்க அரும் பாடுபட்டு அமெரிக்காவை ஆர்.எஸ்.எஸ். கும்பல் ஆட்டிவைக்கப் பார்த்தனர். குஜராத்தியர் நல்ல வியாபாரிகள். அனைத்துத் தந்திரங்களையும், மந்திரங் களையும் பயன்படுத்தினர். கூட்டத்தையும் சேர்த்தனர். அரசியல்வாதிகளையும் கொண்டுவந்து படம் காட்டினர்.

மோடி ஒன்றும் அமெரிக்காவிற்குப் புதிதானவர் அல்லர். 1990ஆம் ஆண்டுகளிலேயே அமெரிக்காவின் பல நகரங்களிலே பலருடன் தங்கியிருந்து ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை வளர்த்தவர். நியூயார்க்கைத் தளமாகப் பயன் படுத்தி வாழ்ந்தவர்.

மோடி, தான் ஒரு ஆர்.எஸ்.எஸ்.காரர் என்பதை நன்கு வெளிப்படுத்தினார். பேச்சில் "பாரத்" "இந்துஸ்தான்"தான் மிகுதி. "இந்தியா"வையேக் காணோம். பெரிய மனதுடன் வந்திருந்த இஸ்லாமியத் தோழர்களைப் பற்றி ஒரு வார்த்தைகூட இல்லை. ஏமாற்றம் அவர்களது முகங்களில் என்று சென்றவர்கள் சொன்னார்கள். இந்தியாவின் வரலாற்றைப் புகழ்ந்தவர் இந்தியரில் பலருக்கு ஆர்.எஸ்.எஸ். தலைவர்களுக்கும் கூடச் சரி சமமாகப் படிப்புக் கொடுத்ததே கிருத்துவக் கல்விக்கூடங்கள்தானே. அதை மறைக்க முடியுமா?

அமெரிக்காவின் பணம் வேண்டும், தொழில் வேண்டும் ஆனால் இந்துத்துவாதான் இந்தியா என்று சொல்லி இந்தியாவை விற்றுக் கொண்டுள்ள மோடி மகிமை எடுபடுமா? இந்தியா "இந்துஸ்தான்" என்றால் அமெரிக்கா "கிருஸ்துஸ்தான்" என்பதுதான் உண்மை. பணம் எவ்வளவு தூரம் பாயும் என்பது தெரிந்து விடும். மோடிக்கு வரலாறு காணாத கூட்டம் என்று இந்திய இதழ்கள், இணைய மக்கள் சொன்னாலும், பல இருக்கைகள் காலியாகவே உள்ளன.... கடந்த ஒரு வாரமாக என்று சொல்லி சொல்லி வேறு...!!!

இதோ நிழற் படம்.... பாரத் மாதாகீ ஜே!!!

Read more: http://viduthalai.in/page-8/88476.html#ixzz3EqtiT8Cb

தமிழ் ஓவியா said...

செய்தியும் சிந்தனையும்

அக்டோபர் 2

செய்தி: காந்தியார் பிறந்த நாளில் தூய்மையான இந் தியா என்ற திட்ட அறிவிப்புக் காக காந்தியார் பிறந்த நாள் (அக்டோபர் 2) விடுமுறை ரத்து!

சிந்தனை: காந்தியார் பிறந்த நாளுக்கு விடுமுறையும் ரத்து செய்ததாக இருக்கும் - திட் டத்தையும் அறிமுகப்படுத்திய தாகவும் இருக்கும் - ஒரே கல்லால் இரண்டு காய் எப்படி (ஆர்.எஸ்.எஸ்.) தந்திரம்?

Read more: http://viduthalai.in/page-8/88484.html#ixzz3Eqttmsuf

தமிழ் ஓவியா said...

பீகார் முதலமைச்சருக்கே தீண்டாமைக்கொடுமைகள்: தீண்டாமைக்கு எதிரான தீவிர தேசிய இயக்கத்தை மேற்கொள்ள வேண்டும் தொல்.திருமாவளவன் அறிக்கை!


சென்னை, செப். 30_- பீகார் முதலமைச்சருக்கே தீண் டாமைக் கொடுமையா, தீண்டாமைக்கு எதிரான தீவிர தேசிய இயக்கத்தை மேற்கொள்ள வேண்டும் என விடுதலை சிறுத்தை கள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் இன்று (30.9.2014) அறிக்கை விடுத் துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:_

பீகார் மாநிலத்தில் தீண்டாமைக்கொடுமைகள் தலைவிரித்தாடுகின்றன என்பதற்குச் சான்றாக பீகார் முதலமைச்சர் ஜிதன் ராம்மஞ்ஜி விளங்குகிறார். அவர், அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசும் போது, தனக்கு நேர்ந்த அவ மானத்தைக் குறிப்பிட்டு வேதனைப்பட்டிருக்கிறார்.

அதாவது, பீகார் மாநிலத் தில் அண்மையில் நடந்த இடைத்தேர்தலில்போது மதுபானி மாவட்டத்தில் ஒரு கோவிலுக்குச் சென்ற தாகவும் கோவிலைவிட்டு அவர் வெளியேறிய பின் னர் அந்தக் கோவிலின் நிர் வாகத்தினர் கோவிலைக் கழுவி சுத்தம் செய்ததாக வும் குறிப்பிட்டிருக்கிறார். இந்தியாவில் சாதி எவ் வளவு ஆழமாக வேரூன்றி இருக்கிறது என்பதையும் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

ஒரு முதலமைச்சருக்கே இந்த நிலை என்றால், சாதா ரண மக்கள் கிராமப்புறங் களில் எத்தகைய சாதிக் கொடுமைகளுக்கு உள்ளா கிறார்கள் என்பதை அறிந்துகொள்ளலாம். அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு சில கோவில் களில் மட்டும்தான் அனைத்துத் தரப்பினரும் வழிபாடு செய்யமுடியும் என்கிற நிலை உருவாகி யுள்ளது. அதுவும் பெரு நகரங்களில் மட்டும்தான் இந்த மாற்றத்தைக் காண முடிகிறது.

நகர்ப்புறங்களி லும் கிராமப்புறங்களிலும் உள்ள பெரும்பான்மை யான கோவில்கள் சாதிய வாதிகளின் கட்டுப்பாட்டி லேயே இயங்கிவருகின்றன. அக்கோவில்களுக்குள் தாழ்த்தப்பட்ட மக்கள் நுழையவே முடியாத நிலை உள்ளது. கோவில் விழாக் களில்கூட தலித்துகள் கலந்துகொள்ளவும் முடியாத அளவுக்கு சாதிக் கொடுமைகள் தமிழகம் உள்ளிட்ட இந்தியாவின் அனைத்து மாநிலங்களி லும் நிலவுகின்றன. பீகார் முதலமைச்சர் தனக்கு நேர்ந்த அவமானத்தைச் சில மாதங்கள் கழித்து வெளிப்படையாகப் பேசியி ருக்கிறார்.

அதனால், தற் போது இது வெளிச்சத் திற்கு வந்திருக்கிறது. ஆனால், அன்றாடம் கிரா மப் புறங்களில் நடக்கும் குறிப்பாக, கோவில்களில் நடக்கும் தீண்டாமைக் கொடுமைகள் வெளிச்சத் திற்கு வருவதேயில்லை. இந்திய நாடு விடுதலை பெற்று சுமார் 67 ஆண்டு களை எட்டியுள்ள நிலையி லும் சாதிக் கொடுமை களை இன்னும் கட்டுப் படுத்த இயலவில்லை என்பதே வெட்கக்கேடான ஒன்றாகும்.

ஊழலுக்கு எதிராகவும் வறுமைக்கு எதிராகவும் போராடும் மனித உரிமை ஆர்வலர் கள், பிற சனநாயகச் சக் திகள் சாதிக்கொடுமைக ளுக்கு எதிராகப் போரா டத் தயங்குவது ஏனென்று விளங்கவில்லை. சாதியத் திற்கு எதிராகவும் தீண்டா மைக் கொடுமைகளுக்கு எதிராகவும் சனநாயகச் சக்திகள் ஒருங்கிணைந்து போராட வேண்டும். மைய, மாநில அரசுகள் வன்கொ டுமைத் தடுப்புச் சட்டத் தைத் தீவிரமாக நடை முறைப்படுத்தவேண்டும்.

இந்தியாவில் சாதியவா திகளின் பிடியில் உள்ள கோவில்கள் அனைத்தை யும் அரசுடைமையாக்க வேண்டும். கோவில் மட்டு மின்றி கோவில் சொத்துக் கள் யாவற்றையும் அரசு டைமை ஆக்குவது கோவில் களில் சாதிக் கொடுமை களைக் கட்டுப்படுத்துவ தற்கு வழிவகுக்கும்.

எனவே, மைய, மாநில அரசுகள் பீகார் முதல்வருக்கு நேர்ந்த தீண்டாமைக் கொடு மையை கவனத்தில் கொண்டு தீண்டாமைக்கு எதிரான தீவிர தேசிய இயக்கத்தை மேற்கொள்ள வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கேட்டுக் கொள்கிறது. பீகார் முதல் வருக்கு எதிரான தீண்டா மைப்போக்கை கடைப் பிடித்த சாதியவாதிகளை விடுதலைச்சிறுத்தைகள் மிக வன்மையாகக் கண்டிக்கிறது.

Read more: http://viduthalai.in/page-8/88478.html#ixzz3Equ1zsmj

தமிழ் ஓவியா said...

சும்மா ஆடுமா சோ குடுமி?


கே: ஆசிரியர் தினம் குரு உத்ஸவ் என்று பெயர் மாற் றப்படுவதை வரவேற்கிறீர்களா? தமிழகத்தில் பா.ஜ.க.வைத் தவிர, அனைத்துக் கட்சிகளும் இந்த அறிவிப்புக்குக் கண்டனம் தெரி வித்துள்ளனவே

ப: ஏதோ இதற்கு முன்பு ஆசிரியர் தினத்திற்கு நாடு முழுவதும் ஆசிரியர் தினம் என்ற பெயர் இருந்தது போலவும், இப்போதுதான் நாடு முழுவதும் இருந்த அந்தத் தமிழ்ப் பெயர் மாறி, ஸம்ஸ்கிருதப் பெயர் வந்து விட்டதைப் போலவும், இது பெரும் சதி என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஆனால், இதற்கு முன்பு இதே ஆசிரியர் தினத்திற்கு ஷிக்ஷக் திவஸ் என்கிற பெயர் இருந்திருக்கிறது. அதற்கு குரு உத்ஸவ் எவ்வளவோ மேல், தமிழில் குருவும் சரி, உத்ஸவமும் சரி, எல்லோரும் அறிந்த வார்த்தைகள்தான். இந்தப் பெயரை வைப்ப தால் தமிழுக்கு எந்தவிதமான ஆபத்தும் வந்துவிடப் போவதில்லை. ஆனால் ஒன்று, இந்தப் பெயர் மாற்றம் என்பதெல்லாம் தேவையே இல்லாத விஷயங்கள். இதில் எல்லாம் கவனம் செலுத்தவே வேண்டியதில்லை என்பது என்னுடைய கருத்து. (துக்ளக் 17.9.2014 பக்கம் 8.9)

புரிகிறதா? இதற்குப் பெயர்தான் பூணூல் புத்தி என்பது; சொல்லு வதையெல்லாம் சொல்லி விட்டு, கடைசியில் ஒப்புக்காக சில சொற்கள்.

இந்தப் பெயர் மாற்றம் எல்லாம் தேவையே இல்லாத விஷயங்கள் என்று பெரிய மேதாவி போல உதார்!

கடைசியில் சொன்ன அந்த ஒரே வார்த்தையைச் சொல்லி விட்டுப் போக வேண்டியதுதானே?

இந்த மகா யோக்கியர்தான் கோயிலுக்குள் வழிபாடு தமிழில் நடத்த வேண்டும் என்று சொன்னால் அவரின் பதில் என்ன தெரியுமா?

நாயன்மார்களும், ஆழ்வார்களும் இயற்றிய தமிழ்ப் பாடல்களை ஸம்ஸ்கிருதத்தில் மொழி பெயர்த்தால் அர்த்தம் இருக்கும். அருள் இருக்காது. ரிஷிகளும் பக்த சீலர்களும் இயற்றிய ஸம்ஸ் கிருத துதிகளைத் தமிழில் மொழி பெயர்த்தால் பொருள் இருக்கும். புனிதம் இருக்காது. அதாவது இங்கே முக்கியத்துவம் மொழிக்கு அல்ல, ஒலிக்கு? மொழி ஆர்வமா? மத துவேஷமா? என்ற தலைப்பில் இதே சோ. ராமசாமி தான் துக்ளக்கில் (18.11.1998) தலையங்கமாகத் தீட்டினார் என்பது நினைவிருக்கட்டும்!

பிரச்சினையே தமிழில் வழிபாட்டுக்கு உரிமை இருக்க வேண்டும் என்பதுதான். அப்படி இருக்கும் பொழுது ஆழ்வார்களும், நாயன்மார்களும் இயற்றிய தமிழ்ப் பாடல்களை ஸம்ஸ்கிருதத்தில் மொழி பெயர்க்க வேண்டும் என்ற பிரச்சினை எங்கே வந்தது?

வழிபடுவதற்குத் தமிழிலேயே இருக்கும் பொழுது அர்ச்சனை பாட்டே! என்ற ஆதாரம் இருக்கும் பொழுது ஸம்ஸ்கிருதம் எங்கே வந்து குதித்தது? ஸம்ஸ்கிருதமே இல்லாவிட்டால் - அந்த ஒலிக்கே வாய்ப்பு இல்லாவிட்டால் சாமிகள் எல்லாம் வெறும் சோற்றாலடித்த பிண்டங்களாகத்தான் இருக்குமா?

தமிழ் ஒலிக்குச் சக்தியில்லை - ஸம்ஸ்கிருத ஒலிக்குத்தான் சக்தி என்ற இந்த சோ அய்யர் எப்படி கண்டுபிடித்தாராம்? என்னென்ன சோதனைகளைச் செய்து இந்தப் பூணூல் திருமேனி என்ற கொலம்பஸ் இதைக் கண்டுபிடித்தார். கடவுள் என்றால் ஓசைக்கும் ஒலிக்கும் மயங்கக் கூடியவர்தானா? ஸம்ஸ்கிருத ஒலிதான் எனக்குப் பிரீதி என்று சோவி டம் வந்து மயிலை கற்பகாம்பாள் இரவு நேரத்தில்வந்து சொன்னாளா?

பார்ப்பன மொழியான ஸம்ஸ்கிருதத்துக்காக எதை எதையோ சுற்றி வளைத்துச் சொல்லி, உளறி வக்காலத்து வாங்கும் இந்தப் பார்ப்பனக் கூட்டம்தான் நம்மைப் பார்த்து மொழித் துவேஷி என்கிறது; விழித்திருக்கும் போதே விளையாடும் இந்த விஷமிகளிடம் எச்சரிக்கை தேவை!

Read more: http://viduthalai.in/page3/88331.html#ixzz3EqvGBruk

தமிழ் ஓவியா said...

பார்ப்பனர் சூழ்ச்சியே சாதிப் பிரிவுகள் மறைமறையடிகளின் ஆராய்ச்சி உரை

இவ் ஆரியப் பார்ப்பனர் ஏனைய வகுப்பினர் எல்லோரும் ஒன்று சேர்ந்துவிடாதபடி அவர் கட்குள் பல்வேறு சமயப்பிரிவு, சாதிப்பிரிவுகளை உண்டாக்கி அவ் வொவ்வொரு பிரிவினரும் தத்தம் சமயமே. தத்தம் சாதியே உயர்ந்த தென்று சொல்லி ஒருவரையொருவர் பகைத்துப் போராட வைத்து, அப் போராட்டத்துக்கு இடமாக இராமன் கதை. கண்ணன் கதை. கந்தன் கதை. விநாயகன் கதை, காளி கதை முத லிய பல்வேறு கட்டுக்கதைகளைத் தமது வடமொழியில் உண்டாக்கி வைத்து அவற்றை இராமாயணம், பாரதம், பாகவதம், காந்தம், முதலிய புராணங்களாக உயர்த்தி வழங்கி அவைதம்மை மற்றையெல்லா வகுப்பினரும் குருட்டு நம்பிக்கை யால் விடாப்பிடியாய்ப் பிடித்துக் கொள்ளும்படிச் செய்து விட்டார்கள்.

- அறிவுரைக் கொத்து

Read more: http://viduthalai.in/page3/88390.html#ixzz3EqvNuMKA

தமிழ் ஓவியா said...

சோவின் பார்வையில் டெசோகே: கருணாநிதி தலைமையில் சமீபத்தில் நடந்த டெஸோ அவசரக் கூட்டம் பற்றி...?

ப: எத்தனையோ லயன்ஸ் கிளப், ரோட்டரி கிளப்களில் எல்லாம் ஏதேதோ கூட்டங்கள் நடக்கின்றன. அவற்றை எல்லாம்பற்றி நாம் உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருக்க முடியுமா, என்ன? பொழுது போக்குச் சங்கங்கள் பொழுதைப் போக்குகின்றன. அவ்வளவுதான். துக்ளக் 17.9.2014 பக்கம் 13)

ஈழத் தமிழர் பிரச்சினை என்றால் இந்தப் பார்ப்பனர்களுக்கு எவ்வளவு கேலி, கிண்டல், நக்கல், நையாண்டி என்பதைப் பார்த்தீர்களா?

ஏதோ, கலைஞர், டெசோ என்று வார்த்தைகளோடு நின்றுவிடாதீர்கள். இவற்றை பார்ப்பனக் கூட்டம் எப்படிப் பார்க்கிறது என்பதுதான் முக்கியம்!

இந்த டெசோதான் அதனுடைய முறையான செயல்பாடுகளால்தான் ஒரு கட்டத்தில் இந்திய அரசை இலங்கைக்கு எதிராக ஜெனிவா மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்திற்கு ஆதரவுக் குரலைக் கொடுக்கச் செய்தது? இன்னொரு கட்டத்தில் இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலைபற்றி பன்னாட்டு விசாரணையை நடத்திட அய்.நா. உத்தரவிட்டது. உலக நாடுகளின் பிரதிநிதிகளையெல்லாம் சென்னையில் மிகப் பெரிய எழுச்சி மாநாட்டை நடத்தியதும் இந்த டெசோ தான் (முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் வயிற்றில் புளியைக் கரைத்ததற்குக் காரணமாக இருந்ததும் இந்த டெசோதான்) அப்படிப்பட்ட டெசோ பார்ப்பனர்களின் பார்வையில் ரோட்டரி கிளப்பாம்! ஏனிந்த கிண்டல் கேலி தெரியுமா?

அவாளின் ஆத்திரம் அந்த அளவுக்கு அவர்களைப் பாடாய்ப் படுத்தியிருக்கிறது என்று பொருள். உலக அரங்கில் தமிழனுக்கு ஒரு நாடு கிடைத்து விட்டால் பார்ப்பனர்களுக்கு ஆபத்து என்று கருதுகிறார்கள். ஏனெனில் தங்களுக்கென்று சொல்லிக் கொள்ள இயலாத நாடற்ற கும்பல் அல்லவா அது!

Read more: http://viduthalai.in/page4/88333.html#ixzz3EqwQOshT

தமிழ் ஓவியா said...

செவ்வாய் பற்றிய ஒரு குறிப்பு


சூரியனில் இருந்து 4 ஆவதாக உள்ள பூமியை விட சிறிய கோள்

சூரியனின் உயிர் வளையத்தில் செவ்வாய் இருப்பதால் இங்கு ஒரு காலத்தில் நீரோட்டம் இருந்ததுள்ள தாகவும் ஆனால் உயிர்கள் இருந்ததா என்ற உறுதியான சான்று இன்றுவரை கிடைக்கவில்லை என்று அறிவியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்த கோளும் பூமியைப் போலவே கிட்டத்தட்ட 24 மணிநேரத்திற்குள் சூரியனைச் சுற்றிவருகிறது.

இக்கோளில் தண்ணீர் மாத்திரம் இல்லை. தண்ணீர் திரவநிலையில் இருப்பின் இக்கோளில் தாவரங்கள் வளர 80 விழுக்காடு வாய்ப்பு உள்ளது. இதன் துருவங்களில் கார்பன் டை ஆக்ஸைடு உறைந்த நிலையில் உள்ளது. (Dry Ice).


செவ்வாய்க்கோள் பற்றி சுமேரிய, எகிப்திய ஏடுகளில் குறிப்புகள் உள்ளது. தொலைநோக்கிமூலம் செவ்வாயை முதல் முதலாக ஆராய்ந்த அறிவியல் அறிஞர் கலிலியோ

செவ்வாய் பற்றி தன்னுடைய 12-ஆவது வயதில் ஆய்வுக்கட்டுரை எழுதி ஆங்கில இதழ் ஒன்றில் வெளியிட்டவர் எட்வின் ஹப்பிள் இவர் பிற்காலத்தில் பிரபல வான் இயற்பியல் ஆய்வாள ராகத் திகழ்ந்தார். இன்று விண்வெளி யில் அமைந்திருக்கும் தொலை நோக்கிக்கு ஹப்பிள் என்ற இவருடைய பெயர் தான் சூட்டப்பட்டுள்ளது. செவ்வாயில் ஒலிம்பஸ் என்ற மலை நமது எவரெஸ்ட் சிகரத்தை விட 22 மடங்கு உயரமானதாகும்.

செவ்வாயில் ஏற்பட்ட பருவமாற்றத் தால் நீர் ஆவியாகிவிட்டது. செவ்வா யின் தரைத்தளம் பலகோடி ஆண்டு களாக ஈரப்பதமாக இருந்ததால் தரை யில் உள்ள இரும்புடன் வினைபுரிந்து இரும்பாக்ஸைடாக மாறிவிட்டது. இதுதான் செவ்வாய் சிகப்பு வண்ணத் தில் தெரியக் காரணமாகும். செவ்வாயில் தரைக்கு அடியில் நீர் திரவநிலையில் இருக்க வாய்ப்பு உள்ளதாக நாசா கூறினாலும். அது அமிலத்தன்மையுடன் கூடியதாக இருக்ககூடும் என்றும், அந்த நீரினால் உயிரினங்களுக்கு எந்த ஒரு பயனு மிருக்காது என்று அமெரிக்க வானியல் நிபுனர்கள் கூறுகின்றனர். இது வரை 11 செயற்கைக்கோள்கள் செவ்வாய் வட்டப்பாதையில் சுற்றி வரு கிறது. அவை செவ்வாய் ரெகொனன் சசி (Mars Reconnaissance Orbiter), செவ் வாய் (Mars Odyssey),செவ்வாய் எக்ஸ் பிரஸ் (Mars Express).

மரைனர் 9. , வைகிங் 1 மற்றும் 2, செவ்வாய் 3 செவ்வாய் 4 நேற்று முன் தினம் செவ்வாய் வட்டப்பாதையில் நிறுத்தப்பட்ட மார்ஸ் மாவன், மற்றும் இந்தியாவின் செவ்வாய் வட்டப்பாதை ஆய்வுக்கலன் (MOM-Mars Orbiter Mission) .

அமெரிக்கா 2019-ஆம் ஆண்டு மனிதர்களை செவ்வாய்க்கு அனுப்பும் திட்டம் ஒன்றை 2004 ஆண்டில் இருந்து தொடர்ந்து ஆய்வு செய்து வரு கிறது. 80 விழுக்காடு முடிந்துவிட்ட இந்த ஆய்வின் படி 2019-ஆம் ஆண்டு ஜூலை 2 அமெரிக்க தினத்தன்று 3 பேர் கொண்ட குழு செவ்வாயை நோக்கி பயணிக்கும். இவர்களுக்கு உணவிற்காக விண்வெளி ஓடத்திலேயே பயிரிடும் முறையை சோதனை ஓட்டமாக செய்து அதில் வெற்றியும் பெற்று விட்டார்கள்.

Read more: http://viduthalai.in/page8/88396.html#ixzz3EqxcqeZk

தமிழ் ஓவியா said...

ஜாதி ஒழிய பார்ப்பனர் ஒழிய வேண்டும் விஞ்ஞானியின் கூற்று


இன்றைய சமுதாய அமைப்பில் பார்ப்பனர் களுக்கு இருந்துவரும் உயர்ந்த நிலை மதத்தின் பேரால் அவர்கள் அனு பவித்துவரும் உயர்நிலை தகர்த்தெறியப் படாத வரையில் இந்தியாவி லிருந்து இந்த ஜாதி முறையை ஒழிக்க முடி யாது. மதச்சடங்குகளில் பார்ப்பனர்களுக்கு இருந்துவரும் தனி உரிமை ஒழிக்கப்பட வேண்டும்

- டாக்டர் அய்யப்பன்
(10.1.1958 இல் சென்னை விஞ்ஞானிகள் மாநாட்டுச் சொற்பொழிவு)

Read more: http://viduthalai.in/page8/88397.html#ixzz3EqxqzE8N

தமிழ் ஓவியா said...

இழந்த மூக்கு திரும்பியது


இன்றைய ஆன்மிகம்?

இழந்த மூக்கு திரும்பியது

குரு பகவானை தேவர்களுக்கெல்லாம் குருவாக ஈசன் நியமனம் செய்த தலம் நாகப் பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறையில் இருந்து 9 கி.மீ. தொலைவிலுள்ள பெருஞ்சேரி வாகீஸ்வரர் ஆலயம். ஒரு முறை ஈசனை மதிக்காமல் யாகம் நடத்தினான் தட்சன். அதில் பிரம்மனும் சரஸ் வதியும் கலந்து கொண் டனர். அதனால் கோபம் கொண்ட ஈசனின் அம்சமான வீரபத்திரர், பிரம்மனை தலையில் குட்டியும் சரஸ்வதி தேவியின் மூக்கை அறுத்தும் கோபத்தை வெளிப்படுத்தினார்.

தனக்கு ஏற்பட்ட அங்கக் குறைபாடு நீங்க வேண்டும் என சரஸ்வதி தேவி தவம் இருந்து தன் இழந்த மூக்கைத் திரும்பப் பெற்ற தலம் இந்த பெருஞ்சேரி வாகீஸ்வரர் ஆலயமாம்.

கடவுள்களுக்குள் ஆணவம், தன் முனைப்பு சண்டை சச்சரவு என்றால் இது எந்த வகையில் ஒழுக்கமானது? சிந்திப்பீர்.

Read more: http://viduthalai.in/page1/88441.html#ixzz3EqyAOkM3

தமிழ் ஓவியா said...

பார்ப்பானே வெளியேறு


பார்ப்பானே வெளியேறு பார்ப்பனரின் நடத்தையும், கொடுமையும், அக்கிரமும்தான் நம்மைப் பார்ப்பானே வெளியேறு என்று கூறும் முடிவுக்கு வரச் செய்தது.
(விடுதலை, 22.7.1965)

Read more: http://viduthalai.in/page1/88422.html#ixzz3EqyQ9Z80

தமிழ் ஓவியா said...

காக்க! காக்க!! இதயம் காக்க!!!

இன்று உலக இதயப் பாதுகாப்பு நாள்!

இது ஒரு வரலாற்றில் அதன் தேவையை, முக்கியத்துவத்தை வலி யுறுத்த ஒரு பிரச்சார நாள்.

மற்றபடி என்றும் இதயப் பாதுகாப்பு என்பது எல்லோருக்கும் எந்த நாளும் இன்றியமையாத ஒன்றல்லவா?

அண்மைக் காலத்தில் பல ஆண்டு களுக்கு முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு. 25, 30 வயதுள்ள இளைஞர் களுக்குக்கூட இதய நோய் தாக்குதல், மாரடைப்பு மரணங்கள் ஏற்படுவது அதிர்ச்சிக்கும் வேதனைக்கும் உரியதாக உள்ளது!

அதற்குரிய காரணங்கள் என்ன வென்று ஆராய்ந்து மருத்துவர்களும், நல்வாழ்வத் துறை விற்பன்னர்களும் கூறும் விளக்கம்:

இளைஞர்கள் பலரும் வாழும் இன் றைய நவீன வாழ்க்கை முறையே யாகும் சதா உட்கார்ந்து கொண்டு மணிக்கணக்கில் டி.வி. என்ற தொ(ல்)லைக் காட்சியில், திளைத்து படுக்கை உருளைக்கிழங்குகளாக இருப்பது பல மணி நேரம் இணையத்தி லும் - கைத் தொலைப்பேசியிலும் மூழ்கி இருப்பது, எல்லாவற்றையும் விட மோசம் - இந்த வேக உணவுகள் என்ற கொழுப்புகளையும், கேடுகளை யும் அவர்கள் உடலில் ஏற்றும் மோசமான ரசாயனக் கலவைகளைக் கொண்ட சுவைமிக்க (விலை அதிகம் - என்றாலும்) சாப்பிடும் உணவு - பிட்சா, பர்கர், குடிக்கும் பானங்களோ பெப்சி கோலா,7up - இப்படி உடலுக்குக் கேடு செய்யும் ஆட்கொல்லி திட, திரவ உணவுகள் ஆகும்!

முன்புபோல கால்பந்து, சடுகுடு என்ற கபாடி, கைப்பந்து, கூடைப்பந்து, ஹாக்கி போன்றவைகளின் முக்கியத்துவத்தைக் குறைத்து, சோம்பேறி விளையாட்டு - இங்கிலாந்து நாட்டில் சில மாதங்களே வரும் சூரிய வெளிச்சத்தில் நளினிமாக மகிழ, 11 பேர்கள் கொண்ட விளையாட் டான கிரிக்கெட் போதை கிராமத்து இளைஞர்கள் மத்தியில்கூட பரவியுள்ள கொடுமை!

அதன்மீது நடக்கும் சூதாட்டக் கொள்ளை வியாபாரம் என்ற ஒழுக்கக் கேடுகளில் பெரும் பெரும் அரசியல் தலைகளுக்கெல்லாம் பங்கு என்ற தொத்து நோய் - இத்தியாதி! இத்தியாதி!

திரைப்படங்கள், சின்னத்திரைகளைப் பார்த்து, புகைபிடித்தல், மது குடித்தல், இப்படி இதயத்தை மெல்லக் கொல்லும் நச்சுகள்! நாளும் இளைஞர்கள் மத்தியில் பரவி வருகின்றன.
பொது இடங்களில், அலுவலகங்களில் புகைபிடிப்பது பெரிதும் குறைந்துள்ளது என்றாலும்கூட இன்னமும், இந்த பழக் கங்கள் தொலைந்து விடாத நிலைதான் தொடருகிறது!

உடற்பயிற்சி, நடைப்பயிற்சி என்பது வெகுவாகக் குறைந்து விட்டது. சைக்கிள்களைப் பயன்படுத்துவது பெரிதும் காணாமல் போய் விட்டது!

சிலர் சின்னச்சின்ன, அலட்சியப் படுத்தப்பட வேண்டிய செய்திகளை மேல் போட்டுக் கொண்டு மன உளைச்சலுக்கு ஆளாகுவதும் ஒரு முக்கியக் காரணம் அதையும் தவிர்த்தல் அவசியம்.

அய்ரோப்பாவில், நெதர்லாந்து நாட்டில் சைக்கிள்களை அதிகம் பயன்படுத்துகின்றனர்.

சீனாவில் - பீகிங் போன்ற தலைநகர் பகுதியிலேயே பெரிதும் பயன்படுத்துகின்றனர் சைக்கிள்களை.

இப்பழக்கத்தை நம் பொது நல நிறுவனங்களும், தலைவர்களும் வற்புறுத்த வேண்டும். சாலைகளில் சைக்கிள்களுக்கென, நடைமேடை போலத் தனியே உருவாக்கினால் அது அவர்களுக்கும் பாதுகாப்பு மற்ற வாகன ஒட்டிகளுக்கும் தொல்லை - விபத்து ஏற்படுத்தாமல் காப்பாற்றிட உதவக் கூடும்.

ஒவ்வொரு கல்வி நிலையத்திலும் (பிளஸ் 2) முதல் கல்லூரி பல்கலைக் கழக வகுப்புகள்வரை ஆண்டு தோறும் மாணவர்களுக்குக் கட்டாய மருத்துவப் பரிசோதனை (Compulsory Medical Checkup) செய்து அறிக்கையை ஆவணப்படுத்தினால் நல்லது!

வருமுன்னர் காப்பது நல்லது என்பதால், பல வகையான இதய நோய் - மாரடைப்பு, - இவைகளைப் பற்றி பெரிய மருத்துவர்கள் அவ்வப் போது விளக்குவதால் அதைத் தவிர்த்து, பொதுவாக எழுதியுள்ளேன்

Read more: http://viduthalai.in/page1/88424.html#ixzz3Eqyiwv8z

தமிழ் ஓவியா said...

குருதியைச் சுத்திகரிக்கும் பாகற்காய்


பெயரைக் கேட்டவுடனேயே கசப்பை சாப்பிட்ட தைப் போல நமது முகம் சுருங்கும். ஆனால், உண்மையில் மிகவும் சிறந்த காய்கறிகளில் இது சிறப்பு வாய்ந்தது. இந்தியாவைத் தாயக மாகக் கொண்ட காயும் இதுவே. இதில் உடலுக்கு பலன் தரும் விஷயங்கள் பல உள்ளன.

இதை சாப்பிடும்போது நமது நாக்குக்குத்தான் கசப்பு தெரியும். ஆனால், உடலுக்கு இது அளிக்கும் பலன்கள் அதிகம். தலை முதல் கால்வரை இதனால் கிடைக்கும் பலன்கள் பலப்பல!

கசப்பை சகித்துக் கொண்டு அடிக்கடி பாகற்காயை உணவில் சேர்த்துக் கொண்டால் சாதாரண புண்கள் முதல் உயிரைக் கொல்லும் புற்றுநோய் வரை நம்மை அண்டாமல் பார்த்துக் கொள்ள முடியும். சித்த மருத்துவம் உணவை மருந்தாகக் கருதுகிறது. கசப்புத் தன்மை இருந்தாலும், இதில் பல வகையான இந்திய உணவுகளை சமைக்க முடியும்.

பாகற்காயில் உடலுக்கு நலன் தரும் பல விசயங்கள் உள்ளன. இதில் பல்வேறு நலன் தரும் காரணிகள் உள்ளன. உடலுக்கு மட்டுமல்ல, பாகற்காய் சாறு மது அருந்தியவர்கள் விரைவில் போதை தெளிவதற்கும் உதவுகிறது.

பாகற்காய் இயற்கையான மருந்துப் பொருளாகும். இது கபம் மற்றும் பித்தத்தை கட்டுப்படுத்தக் கூடியது. பாகற்காய் குடல் புழுக்களை நீக்கிவிடும் என்பது பொதுவாக அனைவரும் அறிந்ததே.

நீரிழிவு நோயாளிகளுக்கு மிகச் சிறந்த உணவு. இது மலச்சிக்கலைப் போக்கக் கூடியது. பாரம்பரிய மருத்துவத்தில் இது காய்ச்சல், தீப்புண், தீரா இருமல், வலியுடன் கூடிய மாதவிடாய் ஆகியவற்றை குணப்படுத்த அளிக்கப்பட்டது.

இதில் உள்ள கசப்புப் பகுதி தலையில் பொடுகு வருவதைத் தடுப்பதால் முடி வளர்ச்சிக்கு உதவுகிறது. இது கண் கோளாறுகளைக் குணப்படுத்தவும் உதவுகிறது. அதற்கு இதில் உள்ள பீட்டா கரோட்டின் உதவி புரிகிறது.

வாய்ப்புண்ணுக்கு இது மிகச் சிறந்த மருந்தாகும். குருதியை சுத்திகரிக்கிறது. சரும நோய்களுக்கு மிகச் சிறந்த நிவாரணி. தோல் வியாதிகளையும் குணப்படுத்தக் கூடியது.

எடை குறைக்க விரும்புவோர் இதைச் சாப்பிடலாம். உடலில் கொழுப்பு சேர்வதைத் தடுக்கும். இது மார்பு புற்றுநோயாளிகளுக்கு மிகச் சிறந்த உணவாகும்.

Read more: http://viduthalai.in/page1/88401.html#ixzz3EqzAluey

தமிழ் ஓவியா said...

பல நோய்களுக்குத் தீர்வாக வெண்டைக்காய்


வெண்டைக்காய் சாப்பிட்டால் மூளை வளரும் கணக்கு நல்லாப் போடலாம் என்று சொல்லிச் சொல்லியே குழந்தைகளுக்கு ஊட்டும் அம்மாக்களை பார்த்துள்ளோம். வெண்டைக் காய்க்கும் அறிவு வளர்ச்சிக்கும் நேரடி தொடர்பு இருக்கிறதோ இல்லையோ இரத்த சோகை, மூச்சிரைப்பு, கொலஸ்ட்ரால், மலச்சிக்கல், புற்றுநோய், நீரிழவு வயிற்றுப்புண், பார்வைக் குறைபாடு என அனைத்து நோய்களையும் தீர்க்கும் சிறந்த மருந்தாக வெண்டைக்காய் உள்ளது.

ஆங்கிலத்தில் லேடிஸ் ஃபிங்கர்ஸ் என வெண்டைக்காய் அழைக்கப்படுகிறது. கர்ப்பிணிப் பெண்களுக்கு மிகவும் அவசியமான ஃபோலிக் அமிலம் வெண்டைக் காயில் அதிகமாக உள்ளது. கர்ப்பத்ததில் உள்ள குழந்தையானது உள்ளே நல்லபடியாக வளரவும் முதல் ட்ரைமெஸ்டரின் போதான குழந்தையின் நரம்பு குழாய்களின் வளர்ச்சிக்கும் இந்த ஃபோலிக் அமிலமானது மிகவும் அவசியம்.

வெண்டைக்காயின் சிறப்பே அதன் கொழகொழப்புத் தன்மைத்தான். ஆனால் அந்தக் கொழகொழப்பு பிடிக்காமலே பலரும் அதை சேர்த்துக் கொள்ளவதில்லை. உண்மையிலே அந்த வழவழப்புத் தன்மையில்தான் வெண்டைக்காயின் அத்தனை மருத்துவப் பலன்களும் மறைந்துள்ளன.

இந்த வழவழப்பில் உள்ள நார்ச்சத்து அல்சர் பாதித்தவர்களுக்கு அருமருந்து. தவிர மலச்சிக்கல், வயிற்றுப் போக்கு உள்ளிட்ட வயிற்று உபாதைகள் அனைத்தையும் குணப்படுத்த கூடியது.

நோய் எதிர்ப்பாற்றல் அதிகமுள்ள வெண்டைக்காய் சிறந்த உடல்நல ஊக்கி என்றே சொல்லாம். இதிலுள்ள கரையும் நார்ச்சத்தானது கொல்ஸ்ட்ராலின் அளவைக் கட்டுப்படுவதன் மூலம் இதய நோய்கள் வருவதற்கான ஆபத்தை குறைக்கின்றது.

இந்த ஆன்ட்டி ஆக்சிடன்ட்ஸ், புற்றுநோய்க்குக் காரணமான செல்களின் வளர்ச்சியை தவிர்க்க கூடியவை. வெண்டைக்காயில் உள்ள வைட்டமின் சி, ஆஸ்துமாவின் தீவிரத்தைக் குறைக்க கூடியது. இதில் உள்ள ஃபோலேட், எலும்புகள் உறுதியாக்கி, ஆஸ்டியோபொரோசிஸ் பாதிப்பைக் குறைக்கிறது.

ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுபாட்டில் வைக்கவும் வெண்டைக்காய் உதவுகிறது. உணவில் வெண்டைக்காய் அதிகமாக சேர்த்துக் கொண்டால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, அடிக்கடி சளி, இருமல் வருவதும் தவிர்க்கப்படுகிறது. எடை குறைப்பு முயற்சியில் இருப்போருக்கு மிகவும் உகந்தது வெண்டைக்காய்.

Read more: http://viduthalai.in/page1/88404.html#ixzz3EqzJYFQb

தமிழ் ஓவியா said...

செய்தியும் சிந்தனையும்

புரிகிறதோ!

செய்தி: நவராத்திரியை முன்னிட்டு தி இந்து சுண் டல் போட்டி நடத்துகிறது. அட்டகாசமான பரிசுகள் காத்திருக்கின்றன. - தி இந்து அறிவிப்பு

சிந்தனை: பார்ப்பான் உயிர் அவன் கடவுளிடத்திலும் மதத்திலும்தான் இருக்கிறது என்பதைத் தந்தை பெரியார் ஏன் சொன்னார் என்பது இப்பொழுது புரிகிறதா?

Read more: http://viduthalai.in/page1/88345.html#ixzz3Er0nfhH5

தமிழ் ஓவியா said...

தினமணியின் வயிற்றுப்போக்கு?


- குடந்தை கருணா

இன்றைய எல்லா பத்திரிகைகளும், சொத்துக் குவிப்பு வழக்கின் செய்திகளை வெளியிட்டுள்ளன. சில பத்திரிகைகள், அரசியல் சாதக, பாதகத்தை வெளியிட்டுள்ளன.

ஆனால், தினமணியில் முதல் பக்கத்தில் கார்ட்டூன் போட்டு செய்தி வெளியிட்டுள்ளது. அதில் 65 கோடிக்கு 4 ஆண்டு தண்டனைன்னா, ரூ.1.76,000 கோடிக்கு எவ்வளவு ஆண்டுன்னு கணக்கு போட்டு, சந்தோஷம் அடைகிறது. என்னே ஒரு பார்ப்பன வன்மம்.

65 கோடி சொத்துக் குவிப்பு வழக்கு என்பது தனது வருமானத்திற்கு மீறிய சொத்து உள்ளது கண்டுபிடிக்கப்பட்டு, அதற்கான தண்டனையாக இந்த தீர்ப்பு வந்துள்ளது என்று எல்லோருக்கும் புரிகிறது.

2ஜி ஒதுக்கீட்டில் ரூ.1,76,000 கோடி இழப்பு என்று தானே, வினோத் ராய் தனது தணிக்கை அறிக்கையில் கூறி இருந்தார். அதுவும் ஒரு ஒப்பீட்டு முறையில் அந்த கணக்கை தெரிவித்துள்ளார். தனது அறிக்கையில் ரூ.1,76,000 கோடி ஊழல் என்று எங்கேயும் கூறாதபோது, தினமணி வைத்திய நாதனுக்கு மட்டும் அது எப்படி ஊழலாக தெரிகிறது.

அரசியல் கட்சிகள் தங்களது அரசியலுக்காக, அப்படி ஊழல் என்ற வார்த்தையை சொல் கிறார்கள் என்றால், தினமணியும் அந்த வகையில் சேர்ந்ததா? என்பதை முதலில் வைத்தியநாதன் தெளிவுபடுத்த வேண்டும். இல்லையென்றால், தான் ஒரு அரசியல் கட்சிக்கான பத்திரிகை என்பதை யாவது சொல்ல வேண்டும்.

ரூ.1,76,000 கோடிக்கான இழப்பு சம்பந்தமான வழக்கில், இதுவரை, எங்கேயாவது, நீதிமன்றமோ, வழக்கை எடுத்துச் செல்லும் சிபிஅய் நிறுவனமோ கண்டுபிடித்திருக்கிறதா? இதுவரை இந்த வழக்குக்காக கைதாகி தற்போது பிணையில் வழக்கை வாதாடிக் கொண்டிருக்கும் ஆ.ராசாவிடமிருந்து வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக ஏதேனும் நிரூபணம் ஆகியிருக்கிறதா? இவற்றிற் கெல்லாம் தினமணி வைத்தியநாதன் பதில் சொல்லவேண்டும்.

2ஜி வழக்கு தொடர்ந்து விசாரிக்கப்பட வேண்டும்; தங்களுக்கு எல்லாவித வாய்ப்பும் வழங்கப்பட வேண்டும் என்று வாய்தா வாங்காமல் வழக்கை சந்தித்துக் கொண்டிருப்பவர்களும், பதினெட்டு ஆண்டுகள் வழக்கை பல வழிகளிலும் இழுத்தடித்துக் கொண்டிருந்தவர்களும் ஒன்றா? தினமணி வைத்தியநாதன் பதில் சொல்ல வேண்டும்.

அலுவலகப் பணியில் தன்னிடம் வரும் கோப்புகளை அரசின் கொள்கைகள் சார்ந்து முடி வெடுத்து, அதன் அடிப்படையில் தணிக்கையாளர் அரசுக்கு இழப்பு என அறிக்கை தருவது 2ஜி வழக் கில் மட்டுமல்ல; பல துறைகளிலும் நடந்துள்ளது. நடந்து வருகிறது. நாளையும் வரும்
குஜராத்தில் மோடி ஆட்சியில் ஒரு குறிப்பிட்ட திட்டத்தின் காரணமாக ரூ.5,000 கோடி இழப்பு என இதே தணிக்கைத்துறை அறிக்கை அளித்ததே; அது இழப்பா? ஊழலா?

ரூ.1 ஊதியம் பெற்று வந்தவரிடம் ரூ.65 கோடிக்கு சொத்து குவிந்ததை, கண்டுபிடித்து, அந்த சொத்துகளின் பட்டியலை வெளியிட்டது நீதி மன்றம். அது முறைகேடாக சம்பாதித்தது என உறுதிப்படுத்தப்பட்டு, இப்போது தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதுபோல், ரூ.1,76,000 கோடி இழப்பு என்று சொல்லப்படும் வழக்கில், தீர்ப்பு வரட்டும். அதுவரை தினமணி வைத்தியநாதன் பொறுமை காட்டலாம்; அல்லது அது ஊழல் என்றால், விவாதம் ஒன்று ஏற்பாடு செய்யட்டும். அதில் விளக்கம் தர பலர் தயாராக இருக்கிறார்கள்.

அதைவிட்டு, சொத்துக்குவிப்பு வழக்கின் தண்டனையை வேறு ஒரு சம்பந்தமில்லாத வழக்கோடு முடிச்சுபோடுவது, தினமணி வைத்திய நாதனுக்கு மனதில் ஏற்பட்டுள்ள உள்ள பீதியையும் வயிற்றில் ஏற்பட்டுள்ள பேதியையும் காட்டுகிறது.

அய்ராவதம் மகாதேவன், சம்பந்தம் போன்ற சிறந்த ஆசிரியர்களை கொண்டு இயங்கிய அன்றைய தினமணிக்கு நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வை என்ற கொள்கை பொருத்தமானதாக இருந்திருக்கலாம்.

ஆனால், தேகம் முழுவதும் பார்ப்பன வன்மத்தை கொண்டுள்ள ஒருவரின் எழுத்தில் நாளும் பொய் யான செய்தியை வெளியிடும் இன்றைய தினமணிக்கு, அது பொருந்தாது என்பது மட்டுமல்ல; நேர் எதிராக கொண்டதாகத் தான் தமிழ் மக்கள் கருதுகிறார்கள்.

Read more: http://viduthalai.in/page1/88359.html#ixzz3Er1F7iLo

தமிழ் ஓவியா said...

பகத்சிங்


துப்பாக்கிகளும், குண்டுகளும் புரட்சியை ஏற்படுத்துவதில்லை. சிந்தனை என்னும் கல்லில் தீட்டப்படும் கத்திதான் புரட்சி! என்ற பகத்சிங்கின் பிறந்த நாள் இந்நாள் (1907).

1924ஆம் ஆண்டு பி.ஏ. படித்துக் கொண்டிருந் தான் அவன்; அவனது பாட்டியும் தந்தையும் - அவனைத் திருமணம் செய்து கொள்ளுமாறு வற் புறுத்தினர். அவர்களுக்கு அந்த மாணவன் கடிதம் ஒன்றை எழுதினான்.

இது திருமணம் செய்து கொள்வதற்கான கால மல்ல; நாடு என்னை அழைக்கிறது. என் உடல், உள்ளம், பொருள், ஆவி அனைத்தையும் நாட் டுக்கே அர்ப்பணிக்க வேண்டும் என்னும் முடி விற்கு நான் வந்துள்ளேன். இது ஒன்றும் நம் குடும் பத்திற்குப் புதிதும் அல்ல; நமது குடும்பம் முழுவ துமே நாட்டுப் பற்றினால் நிறைந்த ஒன்றாயிற்றே! நான் பிறந்த இரண்டு, மூன்று ஆண்டுகளில் என் சித்தப்பா சுவராஸ்சிங் சிறையில் மரணத்தைத் தழுவிடவில்லையா?

அஜீத்சிங் சித்தப்பா இப்போது வெளிநாடுகளில் தங்கி இருக்க வேண்டிய நிலை! நீங்களும் பலமுறை கொடுஞ் சிறை வாசத்தை அனுபவித்தவர்கள் தானே உங்கள் எல்லோருடைய அதே வழியைத்தான் - நானும் பின்பற்றிக் கொண் டிருக்கிறேன். அதனால் என்னைக் குடும்ப வாழ்க்கையில் கட்டிப் போட வேண்டாம்; மாறாக என் நோக்கம் நிறை வேறுவதற்காக உங்களின் வாழ்த்தைத் தெரிவி யுங்கள் என்று கடிதம் எழுதிய இளம் சிங்கம் தான் நமது பகத்சிங்.

இந்து சனாதன உணர் வோடு தீவிரவாதத்துடன் நடந்து கொண்டவர்கள் உண்டு - வாஞ்சிநாதன் போல ஆனால் பகத்சிங் அதற்கு நேர்மாறான இலட்சியவாதி - பகுத் தறிவுவாதி.

1928இல் சைமன் கமி ஷனுக்கு எதிராகப் போராட்டங்கள் கனன்று எழுந்தபோது லாகூரில் ஊர்வலத்திற்குத் தலைமை வகித்துச் சென்ற லாலா லஜபதிராய் காவல்துறை யினரால் சுட்டுக் கொல்லப் பட்டார். பழி வாங்க சூளுரைத்தான் பகத்சிங், சரண்டர்ஸ் என்ற ஆங்கில அதிகாரியைச் சுட்டுப் பழியும் தீர்த்தான். அதே நேரத்தில் லஜபதிராயின் இந்துத்துவா வெறியைத் தம் ஏற்கவில்லை என்றும் சொல்லத் தவறிடவில்லை.

தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் கால கட்டத்தில்கூட லெனினின் வாழ்க்கை வரலாற்றைப் படித்துக் கொண்டிருந் தான்; தூக்குக் கயிற்றை முத்தமிடும்போதுகூட எங்கள் முகத்தை மூட வேண்டாம் என்ற வீரஞ் செறிந்த சொற்களைச் சொன்னவன் அவன்! இளைஞர்கள் என்றால் இப்படியல்லவா இருக்க வேண்டும்! வாழ்க பகத்சிங்!

- மயிலாடன்

Read more: http://viduthalai.in/page1/88289.html#ixzz3Er2OGWcE

தமிழ் ஓவியா said...

ஜாதி ஆதிக்க சுயராஜ்யம்


வடமாகாணத்தில் சுயராஜ்யத்திற்காக என்று செய்யப்படும் சத்யாக்கிரக ஆர்ப்பாட்டம் பிரமாதமாக விளம்பரப்படுத்தப்பட்டாலும் ஜாதி ஆதிக்கத்தை நிலைநிறுத்த வருணாசிரம சுயராஜ்ய சூழ்ச்சிகளும் அங்கு தாராளமாய் நடந்து கொண்டுதான் வருகின்றன. அங்கு வர்ணாசிரம சுயராஜ்ய மகாநாடு என்பதாக ஒன்று பெருத்தமுறையில் ஏற்பாடு செய்து வருணாசிரமமும், ஜாதி உயர்வு தாழ்வும்,

மனுதர்ம சட்டங்களும் அவசியம் என்றும் அவைகளை நிலை நிறுத்த பிரச்சாரம் செய்ய வேண்டுமென்றும் பிரயத்தனங்கள் செய்யப்பட்டதை அறிந்து தாழ்த்தப்பட்ட மக்களாகிய ஆதிதிராவிடர்கள் என்போர்கள் அம்மகாநாடு நடக்க முடியாமல் சத்தியாக் கிரகம் செய்ததாகவும் அதற்காக, அவர்களில் பலரைச் சிறைப்படுத்தி இருப்பதாகவும்,

பொது ஜனங்கள் எல்லாம் கூடி வருணாசிரமத்தை நிலை நிறுத்துபவர்களைக் கண்டித்ததாகவும் காணப்பட்டிருக்கின்றன. வெள்ளைக் காரர் ராஜ்ஜியமாகிய பட்டப்பகலில் இந்த அக்கிரமம் நடக்கும்போது இனி வர்ணாசிரம சுயராஜ்ய ராஜ்யத்தில் என்ன வித அக்கிரமம் நடக்காது என்பதை யோசித்துப் பார்க்கும்படி நினைப்பூட்டுகிறோம்.

குடிஅரசு - செய்திக் கட்டுரை - 04.01.1931

Read more: http://viduthalai.in/page1/88313.html#ixzz3Er3SJhp6

தமிழ் ஓவியா said...

சண்டமாருதம்

கோட்டையூரிலிருந்து வெளிவரும் சண்டமாருதம் என்னும் தமிழ் வாரப்பத்திரிகையின் முதல் இதழ் வரப்பெற்றோம். இது சுயமரியாதைத் தொண்டர் பூவாளூர் அ. பொன்னம்பலனார் அவர்களால் எழுதப்பட்டு வெளியிடுவதாகும். இதன் கொள்கை அதன் பெயருக்கு ஏற்ப சுயமரியாதைக் கொள்கைக்கு எதிரான எதையும் சிறிதும் அஞ்சாமல் எதிர்த்து அடிப்பதேயாகும்.

அதன் ஆசிரியரான திரு.அ. பொன்னம்பலனாரைப் பற்றி நாம் சுயமரியாதை உலகத்திற்கு அதிகம் எடுத்துச் சொல்ல வேண்டியதில்லை. அவர் முதலில் ஒரு பெரிய சைவ சித்தாந்த அழுக்கு மூட்டையாய் இருந்தவர். எந்நேரமும் அடிக்கடி விபூதி பூசிக்கொண்டு ருத்திராட்ச மாலை பூண்டு தேவார, திருவாசக, ராமலிங்கசாமி முதலாகிய பாடல் களைக் கண்களில் நீர் ஒழுக தேம்பித்தேம்பி அழுதுகொண்டு இசையோடு பாடிப்பாடி சைவப் பிரச்சாரம் செய்தவர்.

பூவாளூர் சைவசித்தாந்த கழகத்தின் முக்கிய பண்டிதர்களில் ஒருவராய் இருந்தவர். அப்படிப்பட்டவர் சுயமரியாதையில் திரும்பி சண்ட மாருதம் போல் எதிரிகளைத் தாக்கி சுயமரியாதையைப் பரப்ப ஆசை கொண்டே சண்டமாருதம் என்ற பத்திரிகையின் ஆசிரியராயிருக்கிறார். ஆகவே, தமிழ்மக்கள் சிறப்பாக சுயமரியாதையில் கவலையுள்ள மக்கள் யாவரும் அதற்கு சந்தாதாரராய் சேர்ந்து ஆதரிக்க வேண்டியது கடமையாகும்.

அதன் வருட சந்தா ரூ. 3-0-0

வெளிநாட்டு சந்தா ரூ. 4-0-0

விலாசம்: சண்டமாருதம், ஆபிஸ், கோட்டையூர், ராமநாதபுரம் ஜில்லா.

குடிஅரசு - கட்டுரை - 04.01.1931

Read more: http://viduthalai.in/page1/88313.html#ixzz3Er3a4IYa

தமிழ் ஓவியா said...

மூடர்களே! மூடர்களே!! - சித்திரபுத்திரன்-

மூடர்களே! மூடர்களே! ஒரு சின்ன சங்கதி. கோவிலின் மீதிருக்கும், கலசம் திருட்டு போகின்றன. அம்மன்கள் விக்ரகங்களின் கழுத்திலிருக்கும் தாலிகள் திருட்டுப் போகின்றன. விஷ்ணு விக்ரகத்தின் நெற்றியிலிருக்கும் நடு நாமம் (தங்கத்தில் வைத்தது) திருட்டுப் போகின்றது, சிவன் விக்ரகத்திலிருக்கும் நெற்றிப்பட்டை மற்ற விக்ரகங்களை கீழே தள்ளி அதிலிருக்கும் தங்கம், முத்து, ரத்தினம் திருட்டுப் போகின்றது.

இவைகளின் வாக னத்தில் தேரில் நெருப்பு பிடிக் கின்றது. அச்சு ஒடிகின்றது. இவை களின் பயனாய் பலர் சாகின் றார்கள். மூடர்களே! இவற்றைப் பார்த்தும் கேட்டும் கூடவா அந்த இடங்களில், அந்த விக்ரகங்களில், அந்தத் தேர் வாகனங்களில் புனிதத்தன்மை, தெய்வத்தன்மை, அருள்தன்மை, ஆண்டவனை ஞாபகப்படுத்தும் தன்மை முதலி யவைகள் இருக்கின்றதாக நினைக் கின்றீர்கள்? உங்களிலும் மூடர் கள் இனியும் எங்காகிலும் உண்டா? தயவு செய்து சொல் லுங்கள்.

இன்னும் ஒரே குட்டி சங்கதி, வட்டி வாங்குகிறவன் கோடீசுவரனாகிறான், வட்டி கொடுப்பவன் நாசமாய்ப் பாப்பராய்ப் போகிறான் என்பதைப் பார்த்தும், கேட்டும் இன்னமுமா பாழாய்ப் போன கடவுள் இருக்கிறார் என்று கருது கின்றீர்கள்? இன்னும் ஒன்றுதான், அப்புறம் ஒன்றுமில்லை. துளியுண்டு சங்கதி... காவடி எடுத்துக் கொண்டு போனவன் காலராவில் செத்தபிறகு கூடவா நாசமாய்ப் போன சாமி இருக்குதுன்னு நினைக்கின்றீர்கள்..

மூடர் : சும்மா இப்படியெல்லாம் பேசிவிட்டால் போதுமா? இந்த உலகத்தைப் படைத்ததற்கு ஏதாவது ஒரு காரணம் வேண்டாமோ? அதுதான், கடவுள்.

பதில் : சரி, அப்படியானால் அந்தக் காரணத்தைக் கடவுளை உண்டாக்கினதற்கு மற்றொரு காரணம் வேண்டாமா? அது தான் சுயமரியாதை இயக்கம் (பகுத்தறிவு)

மூடர் : கடவுளைப் படைப் பதற்கு ஒரு காரணம் கேட்பது, முட்டாள் தனமாகும்.

பதில் : அப்படியானால், உலகப்படைப்புக்குக் காரணம் தேடிக் கொண்டிருப்பது அதை விட இரட்டிப்பு முட்டாள்தன மாகும்.

மூடர் : உங்களோடு யார் பேசுவார்கள்?

பதில் : சரி நல்ல காரியமாச்சுது. சனியன் தொலைந்தது. ஆனால், காணாத இடத்தில் குலைக்காதே.

குடிஅரசு - கற்பனை உரையாடல் - 04.01.1931

Read more: http://viduthalai.in/page1/88316.html#ixzz3Er3hs1a0

தமிழ் ஓவியா said...

புதிய பத்திரிகைகள்

திரு. அ. பொன்னம்பலனார் ஆசிரியத் தலைமையில் சண்டமாருதம் பத்திரிகையும், திரு.எஸ். குருசாமி அவர்கள் ஆசிரியத் தலைமையில் புதுவை முரசு பத்திரிகையும் துவக்கப்பட்டிருப்பது தமிழ் மக்களுக்கு, உண்மை சுயமரியாதை உணர்ச்சி உள்ளவர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியைக் கொடுக்கும். இன்று சுயமரியாதை இயக்கத் திற்குச் சில பத்திரிகைகளே இருக்கின்றன.

அதாவது, குடி அரசு, குமரன், நாடார் குலமித்திரன், முன்னேற்றம், தமிழன், புதுவை முரசு, சண்டமாருதம் ஆகிய வாரப்பத்திரிகை களேயாகும். திராவிடன் தினசரி ஒன்று இருந்தாலும் அது இருக்குமோ, போய் விடுமோ, இருந்தாலும் சுயமரியாதைக் கொள்கைக்கே உழைக்குமோ என்பது பற்றி பலருக்குச் சந்தேகமும் ஏற்பட்டுவிட்டது. ஆனாலும், அதையும் சேர்த்தே பார்த்தாலும் இவை மாத்திரம் போதாது என்போம். சீக்கிரத்தில் சுயமரியாதைத் தொண்டனும் கிளம்பி விடுவான் என்றே தெரிகின்றது.

ஏனெனில், அதன் ஆசிரியர் தனக்கு மறுபடியும் வேலையும், அவசியமும் வந்துவிட்டதாகக் கருதி முயற்சி எடுத்துக் கொண்டிருக்கிறார். இனியும் ஜில்லாதோறும் ஒரு பத்திரிகை சுயமரியாதை இயக்கப்பிரச் சாரத்திற்கு ஏற்பட வேண்டும் என்பதே நமதாசை. அன்றி யும், நமதியக்கத்தால் பலருக்கு வயிற்றுப் பிழைப்புப்போய் புஸ்தக வியாபாரமும், கேட் லாக் வியாபாரமும் போய், யோக்கியதையும் போய் திண்டாட ஏற்பட்டு விட்ட தாலும் அப்படிப்பட்டவர்களுக்கு நமது இயக்கம் எமனாய் தோன்றி விட்டதாலும் தங்கள் ஜீவ வாழ்வை உத்தேசித்து எதிர்க்க வேண்டிய அவசியமுள்ள பத்திரிகைகள் பல இன்னும் தோன்றலாம். தோன்றியும் இருக்கின்றன.

ஆதலால், அதனதன் யோக்கியதைக்குத் தகுந்தபடி அதனதன் பாஷா ஞானத்தில் நடைபெற இன்னும் பல பத்திரிகைகள் வேண்டியது அவசியமுமேயாகும். ஆதலால், சுயமரியாதை மக்கள் இவை களை ஆதரிப்பார்கள் என்றும், இன்னும் பல பத்திரிகைகள் தோன்ற உதவி அளிப்பார்கள் என்றும் எதிர்பார்க்கின்றோம்.

குடி அரசு - கட்டுரை - 04.01.1931

Read more: http://viduthalai.in/page1/88316.html#ixzz3Er3rM8i9

தமிழ் ஓவியா said...

மௌலான முகம்மதலி


மௌலான முகம்மதலி அவர்கள் லண்டனில் காலமாய் விட்டதைக் கேட்டு வருந்தாதார் யாருமே இருக்க மாட்டார்கள். அவர் ஒரு உண்மையான வீரர். தனக்குச் சரியென்று பட்டதைத் தைரியமாய் வெளியில் சொல்லு பவர்களில் அவரும் ஒருவர், ஏழை மக்களை ஏமாற்றி பணக்காரர்களும், படித்தவர்களும் அனுபவிக்கும் போக்கிய மாகிய சுயராஜ்யம் அவருக்கு எப்போதுமே பிடிக்காது.

தேசியப் பிரபலத்துக்காக தனது சமூக நலனை விட்டுக்கொடுக்கும் கொலைபாதகத்தனம் அவரிடம் கிடையவேகிடையாது. தான் சாகப்போவது உறுதி யென்று தெரிந்தே சீமைக்குப் போய் தனது கட்சித் தொண்டை ஆற்றிவிட்டு சாகத் துணிந்தவர். அவர் சீமைக்குப் போகாமல் இந்தியாவில் இருந்திருந்தால் இவ்வளவு சீக்கிரம் செத்திருக்க மாட்டார்.

அவர் ஈரோட்டிற்கு வந்திருந்த போது சொன்ன ஒரு வாக்கியம் நமக்கு நன்றாய் ஞாபகமிருக்கின்றது அதாவது,

நேற்று இருந்தவர்கள் இன்றைக்கு இல்லாமல் போவதைச் சிலர் ஆச்சரியமாய் கருதுகிறார்கள். ஆனால் நானோ, நேற்று இருந்தவர்கள் இன்றைக்கும் இருக்கிறார்களே! என்பதை ஒரு ஆச்சரியமாய்க் கருதுகிறேன். என்று சொன்னார்.

சாவது அதுவும் எந்த நிமிஷத்திலும் சாவது தான் கிரமம் என்றும் உண்மையென்றும் முடிவு செய்து கொண்டு சாகாமல் இருக்கும் ஒவ்வொரு வினாடியையும் லாபமாய் கருதிக்கொண்டு சாவதற்கு வருத்தப்படாமலும், கவலைப் படாமலும் இருக்கவேண்டும் என்கின்ற இயற்கையைக் கண்டுபிடித்து கவலையற்றிருந்தவர் அவரேயாவர். வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் வேண்டும் என்பதில் மிக்க பிடிவாதமும் உறுதியும் கொண்டவர்.

அன்றியும் முதலில் நான் முஸ்லீம், பிறகுதான் நான் இந்தியன் என்று அடிக்கடி சொல்லுபவர். தன்னைப்பற்றி தனது எதிரிகள் எவ்வளவோ பழிகளைக்கட்டிவிட்டும் அவற்றிற்குப் பதில் சொல்ல வேண்டுமே என்கின்ற லட்சியம் கூட இல்லாமல் மற்றவர்கள் என்ன நினைப் பார்கள் என்று கூட லட்சியம் செய்யாமல் தன் இஷ்டப்படி நடக்கும் வீரகுணமுடையவர். இவ்வருங் குணங்கள் கொண்ட ஒரு கலங்கா வீரர் மாண்டது உலக இயற்கையே யாயினும் வருந்தாமல் இருக்க முடியாது.

குடிஅரசு - துணைத்தலையங்கம் - 11.01.1931

Read more: http://viduthalai.in/page1/88312.html#ixzz3Er3zDKRL

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

அதர்மம்

கிருஷ்ணன் மகா விஷ்ணுவின் எட்டாவது அவதாரமாம். உலகில் எப்பொழுதெல்லாம் அதர்மம் தலைதூக்குகிறதோ அப் பொழுதெல்லாம் பகவான் கிருஷ்ணன் அவதரிக்கிறார். சங்கு, சக்கரம், தாமரை, கதாயுதம் ஏந்திய கைகளு டன் அவதரிப்பாராம்.

சரி... இப்பொழுது அதர்மம் தலைதூக்கவில் லையா? கொலைகளும், கொள்ளைகளும், யுத்தங் களும் தலைதூக்கி நிற் கின்றனவே! கிருஷ்ணன் ஏன் இவற்றை நிக்ரகம் செய்ய அவதாரம் எடுக்க வில்லை? அப்படி ஒருவன் இருந்தால் அல்லவா வரு வான்?

Read more: http://viduthalai.in/page1/88265.html#ixzz3Er4Jd6bN

தமிழ் ஓவியா said...

பார்ப்பனரும் அல்லாதாரும்

ஆண்களும் பெண்களும் கோயில் களுக்குச் சென்று தலை மொட்டை அடித்துக் கொள்வதும், காவடிக் கட்டையைத் தூக்கிக் கொண்டு தெருவில் குதிப்பதும் புண்ணியக் காரியம் என்கிறார்கள். எந்தப் பார்ப் பனராவது பார்ப்பனப் பெண்ணாவது மொட்டை அடித்துக் கொள்ளவோ, தெருவில் குதிக்கவோ வருகிறார்களா?
(விடுதலை, 29.8.1950)

Read more: http://viduthalai.in/page1/88271.html#ixzz3Er4fB3ZM

தமிழ் ஓவியா said...

நீர் பொங்குமாம்!

12 ஆண்டிற்கு ஒருமுறை மகாமகக் குளத்தில் நீர் பொங்கி வருவதாக நேரில் பார்த்ததாகவே சிலர் கூறுகிறார்கள்.

தண்ணீரை நெருப்பில் வைத்துக் காய்ச்சினாலல்லது, பொங்குகிற வஸ்துவை அதில் போட்டாலல்லது தண்ணீர் எப்படி பொங்க முடியும்? மாமாங்க தினத்தன்று தண்ணீர் குளத்தில் விட்டு வைத்த அளவுக்கு மேல் அதிகமாகக் காணப்படுவதாக சில பார்ப்பனர்கள் கதை கட்டி விடுகிறார்கள்.

மக்களைத் தண்ணீருக்குள் இறங்கவிடாமல் தடுத்து நிறுத்தி பிறகு தண்ணீரை பார்த்தால் அப்போது அது பொங்குகிறதா இல்லையா என்பதின் உண்மையை கண்டுபிடிக்க முடியும்.

அப்படிக்கில்லாமல் பதினாயிரக் கணக்கான மக்களை குளிக்க விட்டு அதன்பிறகு தண்ணீர் அதிகமாகி இருக்கிறது என்று சொன்னால் அதை எப்படி தண்ணீர் என்றே சொல்ல முடியும்? குளிக்கப்போகும் மக்கள் அந்தக் குளிரில் தங்கள் சிறுநீரைக் கழிக்க அந்தக் கூட்டத்தில் குளக்கரையில் எங்கு இடம் காணமுடியும்?

ஆதலால் குளிக்கிறவர்கள் அவசர அவசரமாகத் தண்ணீரில் இறங்கி அங்கு சிறுநீர் கழிக்க ஏற்பட்டு விடுவதன் மூலம் குளத்தின் தண்ணீர் பெருகி இருக்கலாம். அந்த சிறுநீரின் தன்மையால் குளத்தில் குமிழிகள் காணப்படலாம். அன்றியும் மக்கள் ஏராளமாகத் தண்ணீரில் இறங்குவதாலும் தண்ணீர் உயர்ந்து இருக்கலாம்.

இந்த மாதிரி காரணங்களால் தண்ணீர் மட்டம் 4, 2 படிக்கட்டுகளுக்கு உயர்ந்து விட்டால், அதைப் பொங்கிற்று என்று சொல்லுவது அறிவுடைமையாகுமா என்று கேட்கிறோம்.

- தந்தை பெரியார்

எப்போது உங்கள் மனச் சாட்சியும், பகுத்தறிவும் இடங் கொடுத்து, நீங்கள் கழகத்தில் அங்கத்தினர்களாகச் சேர்ந்து விட்டீர்களோ அப்போதிலிருந்து உங்கள் பகுத்தறிவையும், மனச் சாட்சியையும் ஒருபுறத்தில் ஒதுக்கி வைத்துவிட்டு கழகக் கோட்பாடுகளைக் கண்மூடிப் பின்பற்றி நடக்க வேண்டியது தான் முறை.

- தந்தைபெரியார்

Read more: http://viduthalai.in/page1/88254.html#ixzz3Er5KKF00

தமிழ் ஓவியா said...

திருவாசகத்தில் திரளும் காமச்சுவை!

திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார் என ஆத்தீக நண்பர்கள் மிக்க பெருமையுடன் கூறிக் கொள்வதும், சைவப் பற்றாளர்கள் இறைவனின் சிறப்பையும், அடியார்களின் உள்ளத்தை உருக்கி இறைப்பணிக்கு ஏற்புடையதாக்கியும் நிற்கும் பெருநூல் என்றும் கூறுவர்.

சைவ குரவர் நால்வரில் பாண்டி மாமன்னனிடம் அமைச்சராகப் பணியாற்றி, அரசுப் பணத்தை பக்திப் பரவசத்தால் திருப்பணிக்குச் செலவிட்டு அதன் காரணமாக மன்னன் தண்டனை வழங்க, இறைவனின் அருளால் பெருமை கொண்டதாகக் கூறப்படும் மாணிக்கவாசகர் பாடிய நூல் பக்திச் சுவையைப் பரப்புவதை விட பாமரரும் படிப்பதைப் பக்கம் நின்று கேட்பதால் மயங்கும் காமச்சுவையை அதிகம் பரப்பி நிற்கிறது.

மயக்கம் தரும் அபின் என்ற போதைப் பொருள் சீன நாட்டிற்குள் விற்கக்கூடாது என்பதற்காக நடைபெற்ற போரைப் போல, இந்த மயக்கம் தரும் காமச்சுவையை ஆரியம் பயன்படுத்தி தமிழினத்தை அடிமை கொண்டது. அதைப் போலவே நுண்கலைகளையும் கருவிகளாகப் பயன்படுத்தி ஆரியம் ஆட்சி மன்றம் ஏறியது. அந்த மயக்கத்தைப் போக்குவதுதான் நமது நோக்கமே தவிர, காமச்சுவையின் பால் கொண்ட காதலால் அல்ல என்பதை முதலில் தெளிவுபடுத்த விரும்புகிறோம்.

ஆத்திகத்தின் மோசடி வேலை

ஆத்திகத்தின் பெயரால் எத்தனையோ மோசடிகள் நடைபெறுவதைப் போலவே காமச்சுவையும் ஒன்று என்பதை விளக்கும் போது விரசம் ஏற்படுவதை உணர்ந்தாலும், உள்ளதை உள்ளபடி உரைப்பது இன நலத்திற்கு ஏற்புடையது என்பதால் எழுதுகிறோம்.

காமம் என்பது திருக்குறளிலும் கையாளப்பட்ட சொல் என்றாலும் காமத்து பாலில் உணவிற்கு உப்பைப் போல் பயன்படுத்தப்பட்ட காமம் ஆண்டவனின் பெருமையை - உயர்வை உரைக்க எழுந்ததாகக் கூறப்படும் திருவாசகத்தில் காமச்சுவை ஆறெனப் பெருகி, பெருவெள்ளமாகப் பெருக்கெடுத்தோடுவதை காண் கிறோம்.

எனவே ஆண்டவன் பெயரால் ஆரியர்களும், ஆரிய அடிவருடிகளும் நடத்தும் காமச்சுவை மிகுந்த நாடகத்தில் பல காட்சிகள் உண்டு. அவைகளில் ஒன்று இவண் காட்சிக்கு வருகிறது. காட்சி மாணிக்கவாசகரின் மணிமொழிகள் என்று பக்தகோடிகள் கூறும் திருவாசகத்திலிருந்து-

காமத்தைப் பரப்பும் கருவி

அணங்குகளின் அழகிற்கு அணி செய்வது கருங்கூந்தல் அதற்கு மெருகூட்டுவது செவ்வாய். கார்காலத்து ஆண்மயில் நடையினையும் கூறி பெண்ணினத்தைப் போற்றிய மாணிக்கவாசகர் போதும் என்று நிறைவு கொண்டாரா? இல்லையே பக்தர்களின் உள்ளத்தை உருக்க வேண்டுமல்லவா? ஆகவே, மேலும் பெருக்குகிறார் பாருங்கள். ஒன்றோடொன்று நெருங்கி, இறுமாப்புக் கொண்டு உள்ளே களிப்புக் கொண்டு, பட்டிகையறும் படாமிகைத்து, இணைத்து எழுந்து ஒளிவீசி எதிரே பருத்து, இடுப்பானது இளைப்புற்று வருந்தி நிற்கும் அளவிற்கு எழுந்து கொங்கைகளின் நடுவே ஈர்க்கும் கூட நுழைய முடியாத அளவிற்கு வாரித்து, விம்மிப் புடைத்து எழுந்து நிற்கும் கொங்கைகளையுடைய பெண்கள் என்று எழுத்தோவியத்தால் இறைவன் புகழ்பாடி இறையடி யார்களின் நெஞ்சில் இன்பப் பெருக்கைத் தாராளமாகப் பாயவிட்ட திருவாசகத்தைப் போல் வாழ்க்கைக்கு ஒரு வாசகம் உண்டா?

இல்லை என்பதற்கு எடுத்துக்காட்டாக திருவாசகப் பாடலையே தருகிறோம். படித்துப் பயன்பெறுங்கள்.

கருங்குழற் செவ்வாய்

வெண்ணகைக் கார்மயில்

ஒருங்கிய சாயல் நெருங்கிஉள் மதர்த்துக்

கச்சற நிமிர்ந்து கதிர்த்துமுன் பணைத்(து)

எய்திடை விருந்த எழுந்து புடைபாத்(து)

ஈர்க்கிடை போகா இளமுலை மாதர்தம்

மாணிக்கவாசகர், திருவாசகம் அடியார்கள் ஆண்டவனுக்கு புனைந்த பாமாலையில் பாவையர்களின் உறுப்பு நலம் பாராட்டி புனையப்பட்ட பாமாலைகள் ஆண்டவனைக் காட்டுவதற்கு பதில் ஆரணங்குகளின் மீது மோகங்கொள்ளச் செய்வதற்குக் காரணமாக அமைந்து விட்டது.

எனவே! ஆண்டவனும் இல்லை! அவன் புகழ்பாட எழுதப்பட்ட பாமாலைகள் ஒழுக்கத்தைக் கொடுக்ககவுமில்லை. தமிழனத்தைக் கெடுத்த குற்றவாளிகளில் மாணிக்க வாசகரும் ஒருவர், அவர் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்படுகிறார். மக்கள் மன்றம் கூறும் தீர்ப்பிற்குக் காத்திருப்போமாக!

-தஞ்சை ஆடலரசன்

Read more: http://viduthalai.in/page1/88253.html#ixzz3Er5U8sPl

தமிழ் ஓவியா said...

மகாமகத்தின் வரலாறு


ஆதிகாலத்தில் உலகப் பிரளயம் நேரிடுவதற்கு முன்பு, பிரம்மதேவர் அப்பிரளயத்தினால் சகல சிருஷ்டிகளும் அழிந்து போகக் கூடிய நிலைமையைக் குறித்து கவலையுற்று, அதைத் தவிர்க்க கருதி, கைலாசநாதனான சிவபெருமானைக் குறித்து துதித்தார்.

அவரும் பிரம்மதேவனின் வேண்டுகோளுக்கிணங்கி அவ்வித அழிவை நிவர்த்திக்கும் பொருட்டு, சிருஷ்டி பீஜத்தை அமிர்தத்துடன் கலந்து அமிர்தம் நிறைந்த ஒரு குடத்திற்குள் வைத்து குடத்தைத் தேங்காய், மாவிலை, வில்வம், பூணூல் இவைகளால் அலங்கரித்து மூடி, மகா பிரளயத்தில் விட்டு விடும்படி பிரம்மதேவரிடம் சொன்னார்.

அவ்வாறே பிரம்மதேவரும் பிரளயகாலத்தில் அந்த அமிர்த குடத்தை மிதக்க விட்டதாகவும், அக்கும்பம் இந்த சேத்திரத்தில் மிதந்து வந்து தங்கலுற்றதாகவும், பிரளய முடிவில் பிரம்மதேவர் முதலியோர் அக்குடத்தைக் கண்டு மறுமுறை சிவபிரானைத் துதிக்கவும், அவர் அச்சமயம் வேடரூபத்துடன் பிரசன்னமாகி, ஓர் பாணத்தை எய்து, அவ்வமிர்த கும்பத்தை உடைக்கவே, அதனுள்ளிருந்த அமிர்தம் இப்பிரதேசத்தில் பரவியது பற்றி இச்சேத் திரத்திற்கு கும்பகோணம் எனப் பெயர் வழங்கலாயிற் றென்பது புராண வரலாறு.

அக்குடத்தினின்றும் வெளிப்பட்ட அமிர்தமானது இருகூபங்களாக (கிண றுகள்) தங்கலுற்றது. அவைகளில் ஒன்று மகாமகக் குளம் என்றும், மற்றொன்று ஹேம புஷ்கரணி (பொற்றாமரை) என்று வழங்கப் பெற்று வருகின்றன.

முன்பு விவரித்தபடி சிவபெருமானால் உடைக்கப்பட்ட குடத்தின் பாகங்கள் அதிலிருந்த அமிர்தத்தைக் கொண் டே பிசையப் பெற்று, ஓர் லிங்கபூர்வமாகப் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜிக்கப்பட்டதாகவும், அவரே கும்பேஸ்வரர் என்று வழங்கப் பெற்றதாகவும் புராணம் சொல்லுகிறது.

அமிர்த குடத்தின் மேல் மூடப்பட்ட அலங்கார சாமான்களான தேங்காய், மாவிலை, வில்வம், பூணூல் முதலியவை முறையே இப்பிரதேசத்தைச் சுற்றிப் பரவி எழுந்து அவை யாவும் அங்கங்கே சிவசேத்திரங் களாக ஏற்பட்டு, பூஜார்ஹமாக விளங்கி வருகின்றன.

இந்நகரம் முக்கிய சிவசேத்திரமாக இருப்பதுமன்றி, முக்கிய விஷ்ணுசேத்திரமாகவும், புண்ணிய தீர்த்தங் களையுடையதாகவும், தொன்று தொட்டு விளங்கி கொண்டாடப்பட்டு வருகிறது.

குறிப்பு: இது சுதேசமித்தரன் 19.2.1945ஆம் தேதி இதழில் காணப்படுகிறது. இதைக் கண்ணுறும் எவரும் இது எவ்வளவு ஆபாசக்களஞ்சியம் என்பதையும், இதையும் இந்த 20ஆம் நூற்றாண்டில் நம் மக்கள் நம்பி வருகிறார்களே என்றும் எவர்தான் வருந்தாமல் இருக்கமுடியும்?

இவ்வளவு கூட பகுத்தறிவு இல்லாத மக்கள் அடிமையாக இருப்பதில் ஆச்சரியமென்ன?

(24.2.1945 குடிஅரசு இதழில் தந்தை பெரியார் அவர்கள் எழுதிய கட்டுரை)

Read more: http://viduthalai.in/page1/88252.html#ixzz3Er5dDqm4

தமிழ் ஓவியா said...

தீண்டாமை நோய்!


பிகார் முதலமைச்சர் ஜிதன் ராம்மஞ்ஜி, மது மானி மாவட்டம் மகா சிவன் கோவிலுக்குள் சென்று வந்ததால், கோவில் தீட்டாகிவிட்டது - சன்னிதானம் தீட்டாகி விட்டது - கர்ப்பக்கிரகம் தீட்டாகி விட்டது என்று கூறி, கோவிலை இழுத்து மூடி கங்கையிலிருந்து தண்ணீரைக் கொண்டு வந்து கழுவி, சிறப்பு யாகங்கள் செய்து சுத்தி கரித்த பிறகே கோவிலைப் பொதுமக்களுக்குத் திறந்து விட்டுள்ளனர்.

ஒரு முதலமைச்ச ருக்கே இந்த நிலை! அர்த்த முள்ள இந்து மதத்தின் அழுக்கு நிறைந்த அர்த்தம் இதுதான்!

தீண்டாமை அதிகாரப் பூர்வமாக கோவிலுக்குள் - அதன் கருவறைக்குள் அட்டாணிக்கால் போட்டு உட்கார்ந்துகொண்டு இருக் கிறது என்பது இப்பொழுது புரிகிறதா? தந்தை பெரி யார் கோவில் கர்ப்பக்கிரகப் போராட்டத்தை அறிவித் ததன் அடிப்படை இப் பொழுது விளங்குகிறதா?

இதில் கைவைத்தால் மற்ற மற்ற இடங்களில் எல்லாம் இந்தத் தீண் டாமை இருள் பஞ்சாய்ப் பறந்துவிடுமே!

கேரள மாநிலத்தில் பதிவுத்துறை அதிகாரியாக (அய்.ஜி.) இருந்தவர் ஏ.கே. ராமகிருஷ்ணன். இவர் 2011 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதியோடு ஓய்வு பெற்றார். அவர் ஓய்வு பெற்றுச் சென்ற பிறகு, அவர் பயன்படுத்திய அறை, மேசை, நாற்காலி, அலுவலகக் கார் ஆகிய வற்றின்மீது பசுவின் சாணி யைக் கரைத்து ஊற்றி சுத்திகரித்தனர்.

இதனை இந்த அதி காரியே மனம் நொந்து சொன்ன சேதி தினமணி யில் வெளிவந்தது (8.4.2011).

நான் தலித் சமுதாயத் தைச் சேர்ந்தவன் ஆகை யால், இதுபோன்ற செயல் களில் ஈடுபட்டுள்ளனர். இது மனித உரிமைகளை யும் குடிமக்கள் சுதந்திரத் தையும் மீறுவதாகும். இது தொடர்பாக மனித உரிமை ஆணையம் தக்க நடவடிக் கைகள் எடுக்கவேண்டும் என்றும் கூறினார்.

இந்த வழக்கைப் பதிவு செய்த மனித உரிமை ஆணையத்தின் தலைவர் நீதிபதி என்.திலகர் சம் பந்தப்பட்ட துறை ஆணை யருக்குத் தாக்கீது ஒன்றைப் பிறப்பித்தார். புகார் தொடர் பாக விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அதில் கூறியிருந்தார்.

தனிப்பட்ட நபரை இழிவுபடுத்தவேண்டும் என்ற நோக்கத்தோடு மட் டும் இவ்வாறு செய்யப்பட வில்லை. சமுதாயத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் மீது நடத்தப்பட்ட தாக்கு தலாகவே இதைக் கருத வேண்டியிருக்கிறது. அர சில் உயர்பதவி வகித்த வருக்கே இதுபோன்ற தீண்டாமைச் சம்பவங்கள் என்றால், சாதாரண பொது மக்களின் நிலைமை என்ன வென்று சொல்லுவது? என்றும் அவர் கூறினார்.

பெரியாரியலை சமு தாயம் புரிந்து, பெரியாரி யலை உள்வாங்கச் செய் வது ஒன்றே முடிவான தீர்வு என்பதைக் கருத வேண்டும் - அடுத்து செயல் படுத்தவும் வேண்டும் - புரிகிறதா?

- மயிலாடன்

Read more: http://viduthalai.in/e-paper/88501.html#ixzz3EttAFLWO

தமிழ் ஓவியா said...

இதற்குத் தீர்வுதான் என்ன?


கோவிலுக்குள் சென்று வந்த பிகார் முதலமைச்சர் தாழ்த்தப்பட்டவர் என்பதால், கோவிலைத் தீட்டுக் கழித்துள் ளார்களாம். இந்த இழிவுகளுக்கு நிரந்தர தீர்வுதான் என்ன?

அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்ற தந்தை பெரியார் அவர்களின் கருத்துக்குச் செயல்வடிவத்தைக் கிடைக்கச் செய்வதுதானே! சிந்திப்பீர்!

Read more: http://viduthalai.in/e-paper/88507.html#ixzz3EttVNtgg

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?நவராத்திரி - ஏழாம் நாளான இன்று 8 வயது சிறுமியை சாம்பவி அம்மனாகப் பாவித்து வழி பட்டால், புருசன் - பெண் ஜாதிக்குள் அன்யோன் யம் ஏற்படுமாம்.

அப்படியானால், குடும்ப நீதிமன்றத்தை இழுத்து மூடிவிடலாம் - அப்படித்தானே?

Read more: http://viduthalai.in/e-paper/88511.html#ixzz3Ettdb127

தமிழ் ஓவியா said...

செய்தியும் சிந்தனையும்


வித்தியாசம்!

செய்தி: நம் நாட்டுக்கு 10 ஆண்டுகளுக்குப் பின் இப்பொழுதுதான் பேசும் பிரதமர் கிடைத்துள்ளார்.
- அமித்ஷா (பி.ஜே.பி. தலைவர்)

சிந்தனை: ஆமாம்; அவர் பேசாமல் கெடுத்தார் - இவர் பேசிக் கெடுக்கிறார். அவ்வளவுதானே வித்தி யாசம்!

Read more: http://viduthalai.in/e-paper/88509.html#ixzz3Etto1AUM

தமிழ் ஓவியா said...
ஆன்மிகத் தலைநகரமாக ஆக்குவார்களாம்!

உத்தரப்பிரதேசத்தில் கோமதி நதியைச் சுத்தப்படுத்தும் பணியின் தொடக்க விழாவில் பங்குகொண்ட உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், இந்தியாவை உலகின் ஆன்மிகத் தலைநகராக்குவோம் என்று திருவாய் மலர்ந்தருளி யுள்ளார்!

ஆமாம், பாபர் மசூதியை இடித்துவிட்டு ராமன் கோவிலைக் கட்டி இந்து ராஜ்ஜியத்தை ஏற்படுத்துவதற்கு இவர்கள் கொடுத்துள்ள பெயர்தான் இந்த ஆன்மிகம்!

இதுதான் கல்வியா?

நாய்க்கூண்டில் நான்கு வயது குழந்தை

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் 4 வயது குழந்தையை நாய்க் கூண்டில் பள்ளி ஆசிரியை அடைத்தாராம். அந்தக் குழந்தை செய்த தவறு என்ன? அடுத்த குழந்தையுடன் பேசிக்கொண்டு இருந்ததாம்.

அந்தப் பள்ளியை கேரள அரசு இழுத்து மூடிவிட்டது.

இந்த ஆசிரியை அதிக மதிப்பெண் பெற்று பணியில் சேர்ந்தாலும், சேர்ந்திருக்கக்கூடும்;

இப்பொழுது தகுதியெல்லாம் வெறும் மார்க்தானே!

Read more: http://viduthalai.in/e-paper/88504.html#ixzz3EttypMLc

தமிழ் ஓவியா said...

சமூக ஒற்றுமை


ஒரு பெரும் சமூகம் ஒற்றுமையும், சீர்திருத்தமும் பெறவேண்டுமானால், அதிலுள்ள பிரிவுகளான ஒவ்வொரு சிறு சமூகமும் தங்களுக்குள் முதலில் ஒற்றுமையையும், சீர்திருத்தத்தையும் பெற்றாகவேண்டியது மிகவும் அவசியமாகும்.
_ (குடிஅரசு, 3.3.1929)

Read more: http://viduthalai.in/page-2/88512.html#ixzz3EtuXYIEn

தமிழ் ஓவியா said...

வாழ்வியல் சிந்தனை

அய்யா,

தங்களது வாழ்வியல் சிந்தனைகள் மூன்றாம்பாகம் படித்தேன். வாழ்க்கை முறை எப்படிப்பட்டது என்பதை அனை வரும் அறிந்து கொள்ள வேண்டிய அற்புதமான நூல்.
மனித சமூகத்திற்கு எழுதப்பட்ட சிறப்பான நல்ல நூல். இந்த நூலைப் படித்து மனநிறைவு அடைந்தேன்.

இன்பம் வரும்போதும், துன்பம் வரும்போதும் துலாக்கோல் போல சமநிலையுடன் மனதைப் பக்குவப் படுத்திக் கொண்டால் எப்போதும் மகிழ்ச் சியாகவே மனிதன் வாழலாம் என்று முக்கியமாக சொல்லப்பட்டிருக்கிறது,

நான் சிறு வயதில் கஷ்டப்படும் காலத்தில் தமிழ்வாணனின் துணிவே துணை என்ற தலைப்பில் கற்கண்டு நூலைப் படிப்பேன். துன்பம் என்றால் என்ன என்பதே தெரியாமல் வாழ்ந்த வன். அதுமட்டுமல்ல, ஏவிஎம் மெய் யப்பச் செட்டியார் அவர்கள் முயற்சி திருவினையாக்கும் என்ற சொல்லைக் கேட்டிருக்கிறேன்.

என்னுடைய சிறு முன்னேற்றத்தி லும் வாழ்வியல் சிந்தனையின் பெரும் பங்கு எனக்கு உண்டு என்பது தெளிவு. பார்த்தேன்; படித்தேன்; சிந்தித்தேன். படிக்கப் படிக்க தேன்போல் இனிமை யாகத் தித்தித்தது. பகுத்தறிவுப் பணிக்கு என் இனிய வாழ்த்துகள். நன்றி!

- ம.ச.நாராயணன்

Read more: http://viduthalai.in/page-2/88517.html#ixzz3EtvRClDI