வாழ்க தமிழர் தலைவர்!
செப்டம்பர்
17 நம்மால் மறக்கப்பட முடியாத நாள் அது! திராவிடர் சமுதாயத்தின் ஆயிரம்
ஆயிரம் ஆண்டு அடிமைத்தளையை ஆணி வேரோடு வீழ்த்தி அறிவுலக ஆசான் - புரட்சி
சகாப்தத்தின் பூபாளமான தந்தை பெரியார் பிறந்த நாள் அது.
அறிஞர் அண்ணா அவர்கள் செறிவோடு சொன்னது போல பெரியார் ஒரு சகாப்தம் - கால கட்டம் - ஒரு திருப்பம்!
தந்தை பெரியார் அவர்களைத் தொடாமல் கடந்த ஒரு நூற்றாண்ட்டில் எந்தவித முற்போக்கு அசைவும் நடந்ததில்லை.
அந்தச் சகாப்தத் தலைவரால் அடையாளங்
காட்டப்பட்ட அரும்பெரும் தலைவர்தான் - தமிழர் தலைவர் என்று தமிழுலகத்தால்
போற்றி மதிக்கப்படும் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள்.
இவரின் பிறந்த நாள் இந்நாள் (2.12.1933)
ஏசுநாதராக இருந்தாலும் சரி, கவுதம புத்தராக இருந்தாலும் சரி
அவர்களுக்குப்பின் அவர்களின் சீடர்களால்தான் மூலவர்களின் கருத்துகள்,
தத்துவங்கள் முன்னெடுக் கப்பட்டு வந்திருக்கின்றன.
ஏசு - மத குறியீடு என்பதால் அது பரவியதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை.
கவுதம புத்தரின் கருத்துகள் பிற்காலத்தில் திரிபுக்கு ஆளாக்கப்பட்டன. ஆரியத்தை அதன் சனாதனத்தைத் தரை மட்டமாக்கத் துவக்கப்பட்ட அந்த மார்க்கம் ஆரி யத்தின் சதியால், சூழ்ச்சியால் அது பிறந்த இந்தியாவில் ஆழமாக வேர்ப்பிடிக்க முடியாமல் வெளி நாடுகளுக்கு விரட்டப்பட்டது.
இந்தியாவில் பிறந்த புத்த மார்க்கத்தைச்
சேர்ந்த வர்களை இந்து மதப்பட்டியலில் சேர்த்த கொடுமையும் இங்கு! ஆரியம்
ஊடுருவி அதன் உயிர்க் கருத்தை உறிஞ்சிக் குடித்து விட்டது.
புத்தருக்குப் பின் அதே அச்சில் வார்க்கப்பட்டது போல தோன்றிய தலைவர் தான் தந்தை பெரியார்.
அவர் மறைவிற்குப் பின் அவரால்
உண்டாக்கப்பட்ட இயக்கம் இருக்குமா என்ற கேள்வி எழுப்பியவர்கள் உண்டு. அன்னை
மணியம்மையார் தலைமையேற்று நான்காண்டுகள் வழி நடத்தினார்கள்.
தந்தை பெரியாரால் அடையாளம் காட்டப்பட்டு,
அன்னை மணியம்மை யாரால் வழி மொழியப்பட்ட தளபதியாக சமுதாயக் களத்தில் உறுதிபட
நின்ற வீரர் இவர்.
தந்தை பெரியார் அவர்களால் உருவாக்கப்பட்ட
அறக்கட்டளைக்குச் சவால் எழுந்தது. நியாயத்தின் அடிப்படையிலும் தமக்கே
உரித்தான சட்ட ஞானத்தாலும் அது அறக்கட்டளைதான் என்று நீதிமன்றத்திலும்
வெற்றி பெறச் செய்தாரே - நிலை நிறுத்தினாரே அந்த ஒன்றுக் காகவே எத்தனையோ
நன்றிப் பெருக்கு விழாவை நடத்திடலாம்.
இயக்க அமைப்பு முறையில் அவர் செலுத்திய
கவனம் - பிரச்சாரத்தடத்தில் அவர் மேற்கொண்ட அணுகு முறைகள், பெரியார் கல்வி
நிறுவனங்களை அவர் வளர்த்தெடுத்த பெருந்திறன் - நேர்மையாக சிந்திக் கின்ற
எவரையும் விந்தைக் குறியாக மாற்றச் செய்யும்! இவ்விடயத்தில் பெரு மலைப்பை
ஏற்படுத்தும் இந்த இடத்தில் இன்னொரு வரை நினைத்தே பார்க்கவே முடியாது.
அனைத்துத் துறைகளிலும் வளர்ச்சி! வளர்ச்சி!! வளர்ச்சியன்றி வேறு ஒன்றும் இல்லை! இல்லை!! இல்லவே இல்லை!!!
குறிப்பாக இயக்க ஏடுகளை எழில் பொங்க
மாற்றி அமைத்தும் வெளியீடு என்னும் திசையில் மிகப் பெரிய சகாப்தம் என்று
சொல்லும் வகையில் சாதித்தும் இருக்கின்றவை சாதாரணமானவையல்ல!
சமூகநீதித் திசையில் இந்தியா முழுமைக்கும்
பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27 சதவீத இடஒதுக்கீடு சட்டப்படி நிலை
நிறுத்துவதற்கு மண்டல் குழுப் பரிந்துரைகளைத் தூக்கிக் கொண்டு இந்தியா
முழுவதும் இவர் அலைந்து திரிந்த பணி இருக்கிறதே - அதனை விவரிக்க
சொற்களுக்குச் சக்தி போதாது.
அது போலவே தமிழ்நாட்டில் 69 சதவிகிதம் இன்றைக்கு நிலைத்து நிற்பதற்கும் பொறுப்பு இந்தத் தலைவரல்லால் வேறு யார்?
அடுத்துத் தனியார்த் துறையில் இடஒதுக்கீடு
என்னும் பதாகையை உயர்த்திப் பிடித்துள்ளார். அதிலும் அவர் வெற்றி பெற்றே
தீருவார் அதுதான் அவரை அடியொற்றிவரும் வரலாறு.
தந்தை பெரியார் இறுதியாக அறிவித்த அனைத்து
ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்னும் நிலைப் பாட்டை நீதிமன்றங்கள்
இன்றைக்கு முடக்கியிருக்கலாம்.
அடுத்து இந்தத் தலைவர் வெகு மக்கள்
கருத்தைப் பெருஞ்சக்தியாகத் திரட்டி, தடைகளைத் தகர்த்து தந்தை பெரியார்தம்
இறுதி ஆணையை நிறைவேற்றிக் கொடுப்பார் என்பதில் எட்டுணையும் அய்யமில்லை.
மற்றொரு மகத்தான சாதனைத் திசையில் பாதம்
பதித்துள்ளார். அதுதான் பெரியார் உலகம் - அதில் தந்தை பெரியார் அவர்களின்
95 அடி உயரப் பேருருவச் சிலை!
தமிழர்கள் தங்கள் நன்றி உணர்ச்சியைக்
காட்டி வரு கிறார்கள். நிதிகள் குவிந்து வருகின்றன. அதனையும் சாதித்துக்
காட்டி அசாதாரண மாமனிதர் மானமிகு வீரமணி என்னும் முத்திரையைப் பொறிப்பார்
என்பதில் அய்யமில்லை. வாழ்க தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி.
----------------------------------”விடுதலை” தலையங்கம் 2-12-2013
****************************************************************************
சென்னை திருவல் லிக்கேணி கடற்கரையில் ஒரு பொதுக் கூட்டம் (30.10.1960).
உயர்நீதிமன்ற நீதிப் போக்கிற்குக் கண்டனப் பொதுக் கூட்டம் அது.
சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிப் போக்கை
இக்கூட் டம் வன்மையாகக் கண் டிப்பதோடு பார்ப்பன வழக்குரைஞர்களின் ஆத்திர
மூட்டத் தகுந்த, நேர்மைக்கும், மனிதத் தன்மைக்கும் கேடான போக்கை,
இக்கூட்டம் வெறுப்பதோடு இந்நிலை மாறாதிருக்குமானால் பார்ப்பன வழக்குரைஞர்
கள் பெருங்கேடுகளை சமாளிக்க வேண்டியி ருக்குமென எச்சரிக்கை செய்கிறது என்று
இது தொடர்பாக திருச்சியில் நடைபெற்ற 10 ஆயிரம் பேர் பங்கேற்ற திருச்சி
பொதுக் கூட்டத்தில் தீர் மானமே நிறைவேற்றப் பட்டது (17.10.1960).
அதனைத் தொடர்ந்து தான் சென்னை கடற்
கரைக்கூட்டம். அந்தக் கூட்டத்தில் தந்தை பெரி யார் விடுதலை ஆசிரியர்
குத்தூசி குருசாமி ஆகியோர் பேசினார்கள்.
அந்தப் பொதுக் கூட்டத்தில் நமது கடலூர்
கி. வீரமணி அவர்களும் உரையாற்றினார்கள். அவருடைய பேச்சு ஆணி ரத்தரமாகவும்,
நீதிமன்ற அவமதிப்பைப் பற்றிச் சற்றும் யோசிக்காமலும் அனல் பறந்தது.
அதுபற்றி தந்தை பெரியார் இதோ பேசு கிறார்:
திரு. கி.வீரமணி வெறும், ஆள் அல்ல. நம்
தலைவர் போல, குருசாமி (குத்தூசி)யைப் போல வீரமணி பேச வில்லை சற்றுத் துணி
வாகப் பேசி விட்டார். திரு. வீரமணி நம்மைப் போன்றவர் அல்ல. அவர் ஒரு
வக்கீல் எவ்வ ளவோ வாய்ப்பு அவரை அணுகக் காத்திருக் கிறது அவற்றுக்குத் தடை
ஏற்படலாம். என்னைப் பொறுத்த வரை அவருக்கு அப்படி ஏற்பட்டால், நமக்கு நல்லதாகி விட்டது என்று தான்கருதுவேன். ஏன்? நம் இயக்கத்திற்கு முழு நேரத்
தொண்டன் நமக்குக் கிடைத்தாலும் கிடைக்கலாம் என்கிற ஆசை. இப்போது அவர்
தொண்டு அரை நேரம். இனி அது முழு நேர மாகி விடலாம் என்று தந்தை பெரியார்
பேசிய தும் கணித்ததும் பிற் காலத்தில் ஏன் இப்பொழுது உண்மையாகி விட்டதா
இல்லையா?
என்னே தந்தை பெரியார் தொலை நோக்கு!
என்னே தமிழர் தலைவரின் துணிவும் பணியும்!
---------------- மயிலாடன் அவர்கள் 2-12-2013 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை
10 comments:
பெரியார் பேருருவச் சிலைக்கு ரூ.25,000 நன்கொடை
சென்னை, டிச.2- திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் தி.மு.க. பொதுச் செயலாளர் பேரா சிரியர் க. அன்பழகன் அவர்களை நேற்று (1.12.2013) மாலை 6.15 மணிக்கு சந்தித்து இயக்கம் வெளி யிட்ட 14 நூல்களை வழங்கினார். பேராசிரியர் அவர்கள் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர் களுக்குச் சால்வை அணிவித்து அய்யா போல நீண்ட காலம் வாழ்க! என்று கூறி பிறந்த நாள் வாழ்த்துகளைக் கூறினார். பேரா சிரியர் அவர்களுக்குக் கழகத் தலைவர் சால்வை அணிவித்தார்.
ரூ.25,000 நன்கொடை
சிறுகனூரில் அமையவிருக்கும் தந்தை பெரியார் பேருருவச் சிலைக்குத் தமது சார்பில் பேரா சிரியர் ரூ.25 ஆயிரத்தைக் கழகத் தலைவரிடம் அளித்தார் கழகத் தலைவர் நன்றி கூறினார். கழகத் தலைவருடன் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் உடன் சென்றிருந்தார்.
பெண்களின் தர்மம்...
சாத்திரச் சம்பிரதாயங்களில் பெண்களின் தர்மம் என்ன என்று பார்த்தால் நிபந்தனையற்ற அடிமையாக அடங்கி ஒடுங்கி வாழ்பவளே மோட்சத்திற்குப் போவாள் என்று கூறப்பட்டுள்ளது. - (விடுதலை,5.4.1961)
வளர முடியும்
நமது நாட்டில் மனிதனுக்கு மனிதன் வெறுப்பும், பேதமும் உண்டாக்கவே கடவுள், மதம், ஜாதி ஏற்படுத்தப்பட்டுள்ளன. இவை ஒழிந்த இடத்தில்தான் மனிதனுக்கு அன்பு வளர முடியும். - (விடுதலை, 20.9.1968)
வெற்றி மாரத்தானைத் தொடங்கி விட்டோம்!
கழகத்தின் வரலாற்றில் மிக முக்கியமான நிகழ்ச்சிகள் எல்லாம் சிறப்பாக நடைபெற்ற அதே தஞ்சையில் நேற்று, பெரியார் உலகத்திற்கு (தந்தை பெரியார் 95 அடி உயர பேருருவ வெண்கலச் சிலை அமைப்பு) ஆயிரம் சவரன் தங்கத்திற்குச் சமமான நிதி அளிக்கும் விழாவும், திராவிடர் கழகத் தலைவர் - தமிழர்தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்களின் 81ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவும் தஞ்சை மண்ணிலே அந்த மண்ணுக்கே உரித்தான கம்பீரமாக - மிளிரோடு நடைபெற்றது என்று சொல்ல வேண்டும்.
காலை முதலே தமிழர் தலைவரைச் சந்தித்து வாழ்த்துக்களைக் கூறினார்கள். மாலைக் குப் பதிலாக நிதியை அளித்து மகிழ்ந்தனர்.
சிறப்பான கருத்தரங்கம், செழிப்பான உரைகள் கருத்தரங்கில் தனியம்சமாகும். பார்வையாளர்களின் கேள்விகளுக்கு விழா நாயகர் விடையளித்த பாங்கு இதுவரை எங்கும் கேள்விப்படாத தனி அம்சமாகும். வேகமான வினாக்களும், விரைவான பதில்களும் என்று அதற்குத் தலைப்பு அளிக்கப்பட்டிருந்தது. நல்ல பசி நேரத்தில்கூட வயிற்றுப் பசியைப் புறந்தள்ளி அறிவுப் பசிக்கு முன்னுரிமை கொடுத்தது மெச்சத் தகுந்த ஒன்றாகும்.
இந்த விழாவின் முக்கிய பகுதி என்பது - பெரியார் உலகிற்கு - தந்தை பெரியார் அவர்களுக்கு 95 அடி உயரத்தில் சிறுகனூரில் அமையவிருக்கும் முழு உருவ வெண்கலச் சிலைக்கு நிதி அளிக்கும் நிகழ்ச்சியாகும்.
முதற்கட்டமாக ஆயிரம் சவரன் தங்கத்திற்கான நிதி அளிப்பது (ஒரு சவரன் ரூ.25 ஆயிரம் என்று தோராயமாகக் கணக்கிடப்பட்டிருந்தது) என்ற திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழு, பொதுக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவினைக் கழகப் பொறுப்பாளர்கள் தோழர்கள் அரிதின் முயன்று அதனை வெற்றிகரமாகச் செயல்படுத்திக் காட்டி விட்டனர்.
ஆயிரத்திற்கும் மேலாக 1005 சவரன் தங்கத் திற்கான தொகையான ரூ.2 கோடியே 51 லட்சத்து 33 ஆயிரம் நிதியை தமிழர் தலைவரிடம் வழங்கியது சாதாரணமானதல்ல.
கழகம் எடுத்த எந்த முடிவும் வெற்றி இலக்கை அடைந்தது என்பதைத் தவிர அதன் வரலாற்றில் வேறு அத்தியாயத்தைப் பார்க்கவே முடியாது.
அதுவும் இதுவரை கழகம் எடுத்த திட்டங்களில் - இப்பொழுது பெரியார் உலகம் என்று கழகம் மேற்கொள்ளும் திட்டம் மிகவும் வித்தியாசமானது - கேட்பவர்களை மலைக்க வைக்கக் கூடியது என்பதை ஏற்றுக் கொள்கிறோம்.
மிகப் பெரிய அளவுக்கு நிதி திரட்டப்பட வேண்டும் என்பதும் உண்மைதான். பெரியார் உலகத்தைப் பொறுத்தவரை கழகப் பொறுப்பாளர்கள் தெரிவித்த தகவல்கள் மிகவும் நம்பிக்கை அளிப்பதாக உள்ளன.
எந்த இடத்தில் யாரிடம் வசூலுக்குச் சென்றாலும் 25,000 ரூபாயை பெரிய தொகை என்று நினைக்காமல் மிகவும் வரவேற்று, பெரியாருக்குக் கொடுக்காமல் வேறு யாருக்குக் கொடுக்கப் போகிறோம்? என்று வெளிப்படையாகவே உப சரித்து, நிதியையும் அளித்தனர் என்றால் - தமிழர்கள் மீது வைத்த நம்பிக்கை மிகவும் சரியானது தான் என்பதை மெய்ப்பிக்கிறது.
திராவிடர் கழகத் தலைவரின் 50 ஆண்டு விடுதலைப் பணிக்காக 50 ஆயிரம் விடுதலை சந்தாக்களை அளித்தோம் - என் ஆயுளும் நீளும் என்று புளகாங்கிதம் அடைந்தார்.
இப்பொழுது இந்த பிரம்மாண்டமான திட்டத்தை அவர் எண்ணத்தில் உதித்த இந்தக் கருவை - செயல்படுத்திக் காட்டுவதன் மூலம் மேலும் அவரின் ஆயுளை நீட்டித்துக் கொடுப்பார்கள் தமிழர்களும் கழகத் தோழர்களும் என்பதில் எட்டுணையும் அய்யமில்லை.
பெரியார் உலகம் என்பது 15 ஆண்டுக்கால திட்டம். இப்பொழுது நம் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்களுக்கு 81 என்றால் அவரின் 96ஆம் அகவையில் இது நிறைவடையும் என்று பொருள்.
அவர் தலைமையில் தான் அந்த விழா என்கிறபோது தந்தை பெரியார் அவர்களின் வயதை எட்டுவார் என்கிற அடி நீரோட்டமும் இதில் அடக்கமாகும்.
நேற்று நடைபெற்ற தஞ்சை விழா என்று சொல்லுகிறபோது கொட்டும் மழையிலும் பல்லாயிரக் கணக்கான கருஞ்சட்டைத் தோழர்கள் குடும்பம் குடும்பமாக வந்திருந்து திறந்த வெளியாக நடைபெற்ற விழாவை வெற்றியாக்கிக் கொடுத் தார்களே - இது வேறு எந்த அமைப்பாலும் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று. கொள்கைக் கூட்டத்தின் முன் கொட்டும் மழையும் தோற்றது.
வெற்றி மாரத்தானைத் தொடங்கி விட்டோம் - முழு வெற்றியைத் தங்கப் பேழையில் வைத்துக் கொடுப்போம் - வாழ்க பெரியார்! வாழ்க தமிழர் தலைவர்!!
மாற்றுத் திறனாளிகளுக்காக திமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள்: கலைஞர் பட்டியல்
சென்னை, டிச.3- சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு அவர்களுக்காக திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட் டங்களை அக்கட்சியின் தலைவர் கலைஞர் பட்டியலிட்டுள்ளார்.
இது குறித்து திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
டிசம்பர் 3-ஆம் தேதி உலக மாற் றுத் திறனாளிகள் தினம் கொண்டா டப்படுகிறது. இந்நாளில் அவர் களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த ஆண்டு மாற் றுத் திறனாளிகள் தினத்தில் 50-க்கும் அதிகமானோர் என்னைச் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். அதுபோல இந்த ஆண்டும் சந்திக்க பலர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
ஊனமுற்றோர் என்பதை மாற்றுத் திறனாளிகள் என மாற்றி அவர்களுக் காக தனித் துறை திமுக ஆட்சியில் உருவாக்கப்பட்டது.
1974 திமுக ஆட்சியில் மாற்றுத் திறனாளிகள் நலவாழ்வுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு மூன்று சக்கர சைக்கிள்கள், சக்கர நாற் காலிகள், அலுமினியத் தாங்கிகள், கறுப்புக் கண்ணாடிகள், ஊன்று கோல்கள், காதுகேட்கும் கருவிகள் ஆகியவை இலவசமாக வழங்கப்பட்டன.
திமுக ஆட்சியில் 1-11-1974-இல் மாற்றுத் திறனாளிகளுக்கு ஓய்வூ தியம் வழங்கும் திட்டம் அறிமுகப் படுத்தப்பட்டது. 1989-90 திமுக ஆட்சியில் மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தும் தாங்கிகள், சக்கர நாற்காலிகள், மோட்டார் வண்டி கள், ஊன்றுகோல்கள் போன்ற பொருள்களுக்கான வரி முற்றிலும் நீக்கப்பட்டது.
அப்போதைய சமூக நலத்துறை அமைச்சர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு மாற்றுத் திறனாளி களுக்கு 3 சதவீத இட ஒதுக்கீட்டின் படி வேலைவாய்ப்புகள் உறுதி செய்யப்பட்டன. 2010-11 திமுக ஆட்சியில் மாற்றுத் திறனாளிகளுக் கான நிதி நான்கு மடங்காக அதாவது ரூ. 176 கோடியாக உயர்த்தப்பட்டது.
கடுமையாகப் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப் படும் மாதாந்திர பராமரிப்பு உதவித் தொகை 2006 திமுக ஆட்சியில் ரூ. 200-லிருந்து ரூ. 500 ஆக உயர்த்தப் பட்டது.
மாற்றுத் திறனாளிகள் தங்களுக் குள் திருமணம் செய்து கொண்டால் திருமண உதவித் தொகை வழங்கும் திட்டம் 2009-10 திமுக ஆட்சியில் தொடங்கப்பட்டது. 2007 திமுக ஆட்சியில் மாற்றுத் திறனாளிகள் நலவாரியம் அமைக்கப்பட்டது. இதன் மூலம் அவர்களுக்கு ஏராளமான உதவிகள் செய்யப்பட்டன.
"இளைஞன்' படத்துக்கு கதை, வசனம் எழுதியதற்காக எனக்குக் கிடைத்த ரூ. 45 லட்சத்தை முதல மைச்சர் பொது நிவாரண நிதி மூலம் மாற்றுத் திறனாளிகள் நலவாரியத் துக்கு வழங்கினேன்.
திமுக ஆட்சியில் மாற்றுத் திற னாளிகளுக்காக அறிவிக்கப்பட்ட திட்டங்களை இந்த ஆட்சியிலும் தொடர்ந்து வருகிறார்கள் என கலை ஞர் தெரிவித்துள்ளார்.
மாற்றுத் திறனாளிகளுக்காக திமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள்: கலைஞர் பட்டியல்
சென்னை, டிச.3- சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு அவர்களுக்காக திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட் டங்களை அக்கட்சியின் தலைவர் கலைஞர் பட்டியலிட்டுள்ளார்.
இது குறித்து திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
டிசம்பர் 3-ஆம் தேதி உலக மாற் றுத் திறனாளிகள் தினம் கொண்டா டப்படுகிறது. இந்நாளில் அவர் களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த ஆண்டு மாற் றுத் திறனாளிகள் தினத்தில் 50-க்கும் அதிகமானோர் என்னைச் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். அதுபோல இந்த ஆண்டும் சந்திக்க பலர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
ஊனமுற்றோர் என்பதை மாற்றுத் திறனாளிகள் என மாற்றி அவர்களுக் காக தனித் துறை திமுக ஆட்சியில் உருவாக்கப்பட்டது.
1974 திமுக ஆட்சியில் மாற்றுத் திறனாளிகள் நலவாழ்வுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு மூன்று சக்கர சைக்கிள்கள், சக்கர நாற் காலிகள், அலுமினியத் தாங்கிகள், கறுப்புக் கண்ணாடிகள், ஊன்று கோல்கள், காதுகேட்கும் கருவிகள் ஆகியவை இலவசமாக வழங்கப்பட்டன.
திமுக ஆட்சியில் 1-11-1974-இல் மாற்றுத் திறனாளிகளுக்கு ஓய்வூ தியம் வழங்கும் திட்டம் அறிமுகப் படுத்தப்பட்டது. 1989-90 திமுக ஆட்சியில் மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தும் தாங்கிகள், சக்கர நாற்காலிகள், மோட்டார் வண்டி கள், ஊன்றுகோல்கள் போன்ற பொருள்களுக்கான வரி முற்றிலும் நீக்கப்பட்டது.
அப்போதைய சமூக நலத்துறை அமைச்சர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு மாற்றுத் திறனாளி களுக்கு 3 சதவீத இட ஒதுக்கீட்டின் படி வேலைவாய்ப்புகள் உறுதி செய்யப்பட்டன. 2010-11 திமுக ஆட்சியில் மாற்றுத் திறனாளிகளுக் கான நிதி நான்கு மடங்காக அதாவது ரூ. 176 கோடியாக உயர்த்தப்பட்டது.
கடுமையாகப் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப் படும் மாதாந்திர பராமரிப்பு உதவித் தொகை 2006 திமுக ஆட்சியில் ரூ. 200-லிருந்து ரூ. 500 ஆக உயர்த்தப் பட்டது.
மாற்றுத் திறனாளிகள் தங்களுக் குள் திருமணம் செய்து கொண்டால் திருமண உதவித் தொகை வழங்கும் திட்டம் 2009-10 திமுக ஆட்சியில் தொடங்கப்பட்டது. 2007 திமுக ஆட்சியில் மாற்றுத் திறனாளிகள் நலவாரியம் அமைக்கப்பட்டது. இதன் மூலம் அவர்களுக்கு ஏராளமான உதவிகள் செய்யப்பட்டன.
"இளைஞன்' படத்துக்கு கதை, வசனம் எழுதியதற்காக எனக்குக் கிடைத்த ரூ. 45 லட்சத்தை முதல மைச்சர் பொது நிவாரண நிதி மூலம் மாற்றுத் திறனாளிகள் நலவாரியத் துக்கு வழங்கினேன்.
திமுக ஆட்சியில் மாற்றுத் திற னாளிகளுக்காக அறிவிக்கப்பட்ட திட்டங்களை இந்த ஆட்சியிலும் தொடர்ந்து வருகிறார்கள் என கலை ஞர் தெரிவித்துள்ளார்.
தஞ்சை!
கொட்டு மழை
முத்தில் குளித்த
கொள்கையூர்
தங்கங்களே!
குவலயத்தின்
உச்சியிலன்றோ
குடியேறி
விட்டீர்கள்!
அடடா, என்ன
காட்சி அது!
கண்டது கனவா -
நனவா!
மழையப்பனை
விரட்டி
வாலைச் சுருட்டச் செய்தீர்களே!
மேடையில்
வீற்றிருந்த
தலைவர்கள்
என்ன பேசினார்கள்?
தணல் தொட்டியில்
எப்படி உருக்கி
வார்த்திருக்கின்றார்
தந்தை பெரியார்?
இந்தக் கருஞ்சட்டைகள்
சுவாசிப்பதெல்லாம்
இலட்சியத் தீயின்
துண்டங்களா?
இந்தத் தொண்டர்
குழாம் உண்பதெலாம்
தியாக நெருப்பின்
பண்டங்களா?
ஆசா பாசங்கள்
அண்டாதா?
ஆசையால்
அடிதான் சறுக்காதா?
சபலங்கள்
சேட்டை செய்யாதா?
சஞ்சல நோய்களும்
தீண்டாதா?
கட்டுப்பாடெனும்
கட்டிலின்
நான்கு கால்கள்
இவர்கள் தானோ!
பெரியாரோடு
ஒழிந்ததா?
நரியார் எண்ணங்கள்
பலித்ததா?
பெரியார் விட்டுச்
சென்ற வித்து
வீரமணி யெனும்
பெருஞ் சொத்து!
அவர்தம்
கண்ணசைப்பில்
கருஞ்சட்டைப்
பட்டாளம்
கண்டது காண்
தஞ்சையெனும்
கொள்கை அருவியின்
குற்றாலம்!
- மயிலாடன்
என்ன?
காட்டுமிராண்டித்தன்மை என்றால் என்ன? மனிதன் அறிவுப் பக்குவம் அடையாமல் மிருகப் பிராயத்தில் இருக்கும் தன்மையைக் குறிப்பிடும் சொல். இது உலகத்தில் எல்லா நாடுகளிலும் எந்தச் சமூகத்திலும் இருந்து வந்த நிலைமையேயாகும்.
(விடுதலை, 24.1.1968)
நேற்றைய ஆயுத எழுத்து நிகழ்ச்சியில் சிதம்பரம் கோயில்
நேற்றைய (03.12.2013) ஆயுத எழுத்து நிகழ்ச்சியில் (தந்தி தொலைக்காட்சி) சிதம்பரம் கோயில் தொடர்பான விவாதம் பார்த்தேன். தொடர்புடைய நால்வரைப் பங்கேற்க வைத்தது சரிதான்.அவர்கள் தங்கள் தரப்பு வாதங்களை வைத்ததும் சரிதான் என்றாலும், ஆயுத எழுத்து நிகழ்ச்சியை நடத்திய ரங்கராஜ் பாண்டே, ஆயுதத்தை கையிலெடுக்காத குறையாய் அவரும் வெங்கடேச தீட்சிதரோடு சேர்ந்து குரல் கொடுத்து தனது இனப் பாசத்தை வெளிப்படையாகக் காட்டிக்கொண்டதோடு அவருக்கும் ஒரு படி மேலே சென்று, விட்டேனா பார் எனத் துள்ளித் குதித்து அடேயப்பா!என்ன ஒரு இனப்பற்று. மேலும் எழுச்சி தமிழர் தொல்.திருமாவளவன் அவர்களை பேசவிடாமல் அவரது கருத்துக்களை திசைதிருப்பியும் திரு.செந்தில்நாதன் சொன்ன அனைத்து ஜாதியினரும் அர்ச்சகரானால்தான் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு என்றதை மிக லாவகமாக புறந்தள்ளி ஒரு வழியாக விவாதத்தை முடித்தார்.இடையில் பேசிய அந்த தீட்சிதர் போகிற போக்கில் சும்மா தமிழ்,தமிழ்னு இனியும் பேசிக்கிட்டு இருக்காதீங்க என்று சொல்கிறார். இத்தனையும்வெல்க தமிழ் என்று தனது நாளிதழில் அடைமொழி போட்டுக்கொள்ளும் நம் தமிழர் நடத்திய தந்தி தொலைக்காட்சியில் தான்.இதுதான் தமிழ் தேசியத்தின் இறுதி வடிவம் என்று சொல்லாமல் சொல்லும் தந்தி தொலைக்காட்சி.
கொடுமை! கொடுமை!!
- தி. என்னாரெசு பிராட்லா, மாவட்ட செயலாளர், காரைக்குடி
காமன்வெல்த் மாநாட்டில் சல்மான் குர்ஷித்: கலைஞர் பேட்டி
சென்னை, டிச.24- இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்றது தொடர்பாக நடைபெறும் விவாதத்தில் தி.மு.க. பங்கேற்கும் என்றார் டெசோ தலைவர் கலைஞர்.
செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
செய்தியாளர் :- தமிழகம் முழுவதும் மீண்டும் மின்வெட்டு நடைமுறைக்கு வந்துவிட்டதே; சென்னையிலேயேஅன்றாடம் இரண்டுமணிநேரம் மின்வெட்டு செய்யப்படுகிறதே?
கலைஞர் :- சந்தோஷம்!
செய்தியாளர் :-ஆனால் மின் வெட்டு ஏற்படும் போதெல்லாம், முதலமைச்சர் ஜெயலலிதாஅதற்கு தி.மு. கழகத்தின் மீது பழிபோடுகிறாரே? மேலும் மத்தியஅரசும், தி.மு. கழகமும் சேர்ந்து சதிசெய்வதாகச் சொல்லியிருக்கிறாரே?
கலைஞர் :- அது அவர்களுடைய வாடிக்கை. தாங்கள் செய்கிற தவறை மறைக்க பிறர் மீது பழி போடுவது என்பது ஜெயலலிதாவுக்கு இன்று நேற்றல்ல; என்றுமே வாடிக்கை.
செய்தியாளர் :- கெயில் எரிவாயுக் குழாய்கள் பதிக்கும் பிரச்சினையில் இரு தரப்பினருடன் பேசி சுமூகமான முடிவெடுக்க வேண்டுமென்று சொல்லி யிருந்தீர்கள். ஆனால் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருக்கிறதே?
கலைஞர் :- நாட்டின் பொருளாதாரம் அல்லது விஞ்ஞான வளர்ச்சிக்காக சிலநடவடிக்கைகள் மேற் கொள்ளப்படுகின்றன. விவசாயத் துறையின் வளர்ச்சிக் காக இயந்திரமயம் என்றபெயரால் சில காரியங்கள் நடக்கின்றன. அதேநேரத்தில் விவசாயத்திற்கு கேடு விளைவிக்காமல் இருக்க மற்ற துறையினரும், தொழில் துறையினரும் அக்கறைகாட்டவேண்டும். அதனால் தான் இரு சாராரும் பேச்சுவார்த்தைநடத்தி அதனை ஒரு முனைப்படுத்த வேண்டும் என்று நான் தெரி வித்தேன்.
செய்தியாளர் :- மத்தியஅமைச்சர் சல்மான் குர்ஷித் இலங்கைசென்றது பற்றி வருகின்ற நாடாளு மன்ற குளிர் காலக் கூட்டத் தொடரில் விவாதம் வருமென்றுசொல்கிறார்களே?
கலைஞர் :- அப்படியொரு விவாதத்திற்கு அங்கே அனுமதிக்கப்படுமானால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எங்கள் நாடாளுமன்ற உறுப் பினர்கள் அங்கே விவாதத்தில் பங்கேற்பார்கள். செய்தியாளர் :- நேற்றையதினம் கேப்டன் தொலைக் காட்சியைச் சேர்ந்த செய்தியாளர்களை ஒருகுழுவினர் சேர்ந்து அடித்திருக்கிறார்கள். ஆனால் காவல்துறையினர் தொலைக்காட்சிநிறுவனத்தைச் சேர்ந்தவர்களையே கைது செய்திருக்கிறார்கள். 200 பேருக்குமேல்பத்திரிகையாளர்களைபோலீசார் கைதுசெய்திருக்கிறார்களே?
கலைஞர் :- இதனை வன்மையாகக் கண்டிக் கிறேன்.
இவ்வாறு கலைஞர் அவர்கள் செய்தியாளர் களுக்குப் பேட்டியளித்தார்.
Post a Comment