Search This Blog

3.12.13

நான் நூறு வருஷம் உயிரோடிருந்தால்....பெரியார்



இன்றையத் தினம் உண்மையிலேயே நமக்கெல்லாம் பண்டிகை நாள் போன்றதாகும் என்றாலும், இதற்காக அவர் எடுத்திருக்கிற முயற்சியும், செய்திருக்கின்ற பெரிய ஏற்பாடும், செலவும் தான் பயமாக இருக்கிறது. நண்பர் முத்து அவர்கள் ஒரு காசு செலவு இல்லாமல் பெரிய வீரராகி விட்டார். தன்னுடைய திருமணத்தையும், ராகு காலத்தில் நடத்தி, அதன்பின் பல பெருமைகளை எல்லாம் பெற்று, அதைத் தன் பெண்ணும் அடைய வேண்டுமென்று அவளுடைய திருமணத்தையும், ராகு காலத்தில் அமைத்துக் கொண்டுள்ளார். இதைப் பார்த்து - காலம் பார்த்து, நேரம் பார்த்துத் திருமணம் செய்து கொண்ட பரிதாபத்திற்குரியவர்கள் பொறாமைப்படும்படியான அளவிற்கு அவர் வீரராகி விட்டார். நேரம், காலம், பொருத்தம் எல்லாம் பார்த்துத் தான் கண்ணகி - சீதை - சந்திரமதி - திரவுபதை ஆகியோரின் திருமணங்கள் நடைபெற்றன என்றாலும், இவற்றில் ஒழுக்கமாக நாணயமாக நடந்து கொள்ளவில்லை.

தமிழனுக்கு இதுபோன்ற ஒரு முறையே கிடையாது. இந்தக் கட்டுப்பாடு முறை எப்போது வந்தது என்றால், பார்ப்பான் வந்த பின் ஏற்பட்டது தானாகும். பார்ப்பான் இங்கு வரும்போது தேவையான பெண்களோடு வரவில்லை. இங்குள்ளவர்களைச் சரி செய்து கொண்டு வாழ்ந்தனர்.


இவர்கள் சரி செய்து கொண்ட பெண்கள் சரியாக நடந்து கொள்ளவில்லை. அவர்களிடையே ஒழுக்கக் கேடுகள் ஏற்பட்டன. அதனால் பார்ப்பான் தனக்கு ஒரு கட்டுப்பாட்டை ஏற்படுத்திக் கொண்டு பெண்களைத் தனக்கு அடிமையாக்கிக் கொண்டான். எப்படி அரசாங்கமானது நெருக்கடி நேரும்போது சட்டம் இயற்றிக் கொண்டு சமாளித்திருக்கிறதோ, அதுபோன்று பார்ப்பான் (சட்டம்) கட்டுப்பாடு ஏற்படுத்தினான். இதை நான் சொல்லவில்லை. தமிழனின் மிகச் சிறந்த இலக்கண நூல் என்று சொல்லப்படுகிற தொல்காப்பியத்தில் எழுதி இருக்கிறான். "பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் அய்யர் யாத்தனர் கரணம் என்ப" என்று. அய்யர் என்பது பார்ப்பனரைக் குறிப்பிடும் சொல் அல்ல. அக்காலப் பெரியவர்களை, அறிவில் சிறந்தவர்களைக் குறிப்பிடும் சொல்லாகும் என்று சில தமிழ்ப் புலவர்கள் கூறுவார்கள். இது சரியல்ல என்பதற்குத் தொல்காப்பியத்திலேயே இருக்கிறது. "மேலோர் மூவர்க்கும் புணர்த்த கரணங்கள் கீழோர்க்காகிய காலமும் உண்டே" என்று. பார்ப்பனர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட சடங்குகள் கீழேரான சூத்திரர்களுக்கும் ஆயிற்று என்று குறிப்பிடுகிறார். இவற்றிலிருந்து அய்யர் என்ற சொல் பார்ப்பானையே குறிப்பதாகும் என்பதை வலியுறுத்தியிருக்கின்றார்.


நானும் 100-வருடத்திற்கு இருந்து அவர்களும் (தி.மு.க அரசும்) 100- வருஷமிருந்தால் இத்திருமணத்தைக் கிரிமினலாக்கி விடுவார்கள். ஆண்கள், என்று அயோக்கியராயினரோ அன்றே பெண்களை அடிமையாக்கி விட்டான். நம் நாட்டிலே மட்டுமல்ல - உலகமே இப்படித்தான் இருக்கிறது. நம் நாட்டிலாவது நாகம்மாள், ராஜம்மாள் என்று பெண்கள் பெயரைக் குறிப்பிடுகின்றோம். ஆனால், வெள்ளைக்காரன் நாட்டில் எல்லாம் மிஸஸ் தான். பெண்ணிற்கு உரிமையில்லை. எனவே, பெண்ணடிமையைப் பற்றி எவனுமே கவலைப்படவில்லை. இந்தியாவிலேயே இதற்காகப் பாடுபடக் கூறயவர்கள் நாங்கள் ஒருவர் தான்.

பெண்கள் அச்சம், மடம், நாணம், பயிர்ப்புடையவளாக இருக்க வேண்டுமென்று வள்ளுவன் சொல்கிறான் - அவ்வை சொல்கிறாள். மற்ற எல்லா புலவனும் இதைத்தான் சொல்கிறான். இரண்டு பேர்களும் சமம் என்று இம்முறையில் இருவரிடமும் உறுதி வாங்குகிறோம். அவர்கள் அப்படி நடந்து கொள்கிறார்களோ, இல்லையோ. ஆனால் அப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று உறுதி வாங்குகிறோம். அவர்களும் நடந்து கொள்வதாக உறுதியளிக்கின்றார்கள்.


வழக்கம் என்பது காட்டுமிராண்டி காலத்ததும், சாஸ்திரம் என்பது மிருகப் பிராயத்ததும் ஆகும்.

பொருத்தம் பார்ப்பது - சாமி கேட்பதும், ஜாதகம் பார்ப்பது, ஜோசியம் பார்ப்பது இவை யாவும் முட்டாள்தனமானது. மூட நம்பிக்கையானது. பெரிய பி.ஏ., எம்.ஏ., படித்தவனெல்லாம் மேதாவி, அறிவாளி எல்லாம் இதைப் பார்த்துத் தான் திருமணத்தை ஏற்பாடு செய்கின்றனர். அவ்வளவு மூட நம்பிக்கை படிந்திருக்கிறது. அறிவு வளர்ச்சி இல்லை.


இப்போது நடைபெற்ற இத்திருமணமானது 68-ஆம் வருஷ மாடல் ஆகும். 1967-ஆம் வருட மாடல் - இத்திருமணம் செல்லாதென்றிருந்தது. 1968-ஆம் வருடத்தில் சட்டப்படிச் செல்லும் என்றாகி இருக்கிறது. நாளை 1969-இல் இத்திருமண முறை எப்படி மாறுமோ சொல்ல முடியாது.

மணமக்கள் தங்கள் வாழ்க்கையில் வரவுக்கடங்கி செலவு செய்ய வேண்டும். ஆடம்பரமான வாழ்வு வாழக் கூடாது. பிறர் கண்டு பொறாமைப்படும்படியாக வாழாமல் எளிய வாழ்வு வாழ வேண்டும். தங்களின் குடும்பத்தை மட்டும் நினைக்காமல் நம் சமுதாயத்தையே நினைக்க வேண்டும். நம் இனத்திற்கு நம்மாலான உதவியைச் செய்ய வேண்டும். மோட்சம் என்கின்ற வார்த்தைக்கு அர்த்தம் கவலையற்ற தன்மையாகும். பிள்ளைகள் இல்லாமலிருப்பதும் வரவிற்கு மேல் செலவிடாமலிருப்பதும், மனிதனுக்குக் கவலையற்ற வாழ்வாகும், மோட்சமாகும். சிலர் அறிவுள்ள குழந்தைகளைப் பெற்று பெருவாழ்வு வாழ வேண்டுமென்றார்கள். அறிவுள்ள பிள்ளையைப் பெற வேண்டுமானால் எந்தக் கடையிலே போய்ச் சாமான் வாங்குவது? பிள்ளை பிறந்த பின்தானே அதை அறிவுள்ளதாக்க நாம் தானே மாரடிக்க வேண்டும். பிறப்பதற்கு முன்பே - பெறும் போதே எப்படி அறிவுள்ளதாகப் பெற முடியும்?

-------------------------------------- 12.07.1968 அன்று நடைபெற்ற பெருமாள் - இலங்கனி திருமணத்தில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய அறிவுரை. "விடுதலை", 12.08.1968

20 comments:

தமிழ் ஓவியா said...


டிசம்பர் 2: சுயமரியாதை நாள்

81-இல்135-அய்உருவாக்கும்தமிழர்தலைவருக்கு

தலைவர்கள்-பல்துறைஅறிஞர்கள்-வெளிநாட்டவர்கள்வாழ்த்து!

தஞ்சை, டிச.2- 81 இல் 135 அய் உருவாக்கும் தமி ழர் தலைவர் கி.வீரமணி அவர்களுக்கு (81 ஆம் வயதில், பகுத்தறிவு பகல வனாம் தந்தை பெரி யாருக்கு திருச்சி சிறுக னூரில் 95 அடி உயர முள்ள சிலையையும், 40 அடி உயர பீடமும்) வெளிநாட்டவர்கள், பல்துறை அறிஞர்கள், அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் நேரிலும், தொலைப்பேசி வாயிலாகவும் பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

நேற்று (1.12.2013) சென்னையிலிருந்து புறப்பட்டு இன்று (2.12.2013) காலை தஞ்சை ரயில் நிலையத்திற்கு வருகை புரிந்த தமிழர் தலைவருக்கு கழகத் தோழர்கள் புடைசூழ மிகச் சிறப்பான வர வேற்பு அளிக்கப்பட் டது. தஞ்சை பெரியார் மணியம்மை பல்கலைக் கழக வளாகத்தில், திரா விடர் கழகத்தின் முப் பெரும் பொருளாளர் களான பழைய கோட்டை அர்ஜுனன், தஞ்சை கா.மா.குப்பு சாமி, கல்லை கோ.சாமி துரை ஆகியோர் பெயர் களில் அமையப்பெற்ற நினைவரங்கத்தில் பிறந்த நாள் நிகழ்ச்சிகள் தொடங்கின.

தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களுக்கு வளாக நுழைவு வாயி லிலிருந்தே நீண்ட வரி சையில் நின்று கொண்டிருந்த பல்துறை அறிஞர் பெருமக்கள், அரசியல் தலைவர்கள், பொதுமக்கள், கழகத் தோழர்கள் ஆகியோர் பிறந்த நாள் வாழ்த்து களைக் கூறியும், கை குலுக்கியும் தங்களது மகிழ்ச்சியைத் தெரி வித்துக் கொண்டனர்.

விழா மேடைக்கு வருகை புரிந்த கழகத் தலைவருக்கு தஞ்சை மாவட்ட தலைவர் வழக் கறிஞர் அமர்சிங் அவர் களும், தஞ்சை மண்டல தலைவர் ஜெயராமன் அவர்களும் மாலை அணிவித்து பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

விழா மேடையில், 81 ஆம் வயதில் 135 அய் உரு வாக்கும் தமிழர் தலைவருக்கு வாழ்த்து என்ற வாசகம் பொறிக்கப்பட்ட 3 அடிக்கு 2 அடி அகலத்தில் வைக் கப்பட்டிருந்த கேக் கினை- கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், கழகப் பொருளாளர் டாக்டர் பிறைநுதல்செல்வி, செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு, மோகனா வீரமணி, நாகம்மையார் குழந் தைகள் இல்லக் காப் பாளர் தங்காத்தாள், திராவிடன் நலநிதி இயக்குநர் டி.கே.என். நடராசன், டாக்டர் கவுதமன், கழக முக்கிய பொறுப்பாளர்கள், கழகத் தோழர்கள் புடை சூழ தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் வெட்டினார். கேக்கினை தமிழர் தலைவரின் துணைவியார் அவர்கள், தமிழர் தலைவருக்கு ஊட்டினார்.

தமிழ் ஓவியா said...


தமிழர் தலைவருக்கு வாழ்த்து!

பிறகு, மேடையில் அமர்ந்திருந்த தமிழர் தலைவர் அவர்களுக்கு, தி.மு.க. தேர்தல் பணிக் குழு செயலாளர் எல்.கணேசன், அவரது துணைவியார், பேராசிரி யர் அருணன், கோ.கரு ணாநிதி, அஞ்சுகம் பூபதி, ஆர்.ஜெயபால் (முன்னாள் நகர் மன்ற தி.மு.க. தலைவர்), பேரா சிரியர் நம்.சீனிவாசன், தஞ்சை டாக்டர் நரேந் திரன், தஞ்சை பத்திரிகை மற்றும் தொலைக் காட்சி சங்க ஊடக நண்பர்கள், தொழிலதி பர்கள், பல்வேறு அரசியல் கட்சியைச் சார்ந்த பிரமுகர்கள், பல்துறை அறிஞர்கள், கழகத் தோழர்கள், பொதுமக்கள் உள்பட பலர் வாழ்த்துக்கள் கூறினர்.

தமிழர் தலைவருக்கு தொலைப்பேசி வாயி லாக, மலேசிய திரா விடர் கழகத் தலைவர் மணியம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செய லாளர் இராமகிருஷ் ணன், திரைப்பட நடிகர் இனமுரசு சத்யராஜ் மற்றும் துணைவேந்தர் கள், கல்வியாளர்கள், எழுத்தாளர்கள், பல் வேறு கட்சி அரசியல் பிரமுகர்கள் பிறந்த நாள் வாழ்த்தை தெரி வித்தனர்.

பெரியார் மணியம்மை பல்கலைக் கழகம் துணைவேந்தர் நல். இராமச்சந்திரன், கூட்டுப் பணியாளர் சங்கத்தின் தலைவர் - முனைவர் அசோக்குமார் உள்ளிட்டோர் பெரியார் உலகத்திற்கு நிதி வழங்கினர்.

தமிழர் தலைவரிடம் பல்வேறு நன்கொடை - சந்தாக்கள்!

தமிழர் தலைவரிடம் திருச்சி சிறுகனூரில் அமையவிருக்கும் பெரி யார் உலகத்திற்காகவும், ஆசிரியர் பிறந்த நாள் நிதியாகவும், விடு தலை, உண்மை, பெரியார் பிஞ்சு, மாடர்ன் ரேஷனலிஸ்ட் ஆகி யவைகளுக்காக சந்தாத் தொகையும், பெரியார் பிஞ்சுகள் முதல் கழகத் தோழர்கள் வரை சேர்த்த உண்டியல் தொகையும் வழங்கப்பட்டது.

ஒளிப்படக் கண்காட்சி

அரங்கில் தந்தை பெரியார் வாழ்வும், பணிகளும் ஒளிப்படக் கண் காட்சி வைக்கப்பட்டிருந்தது. பார்ப் பவர்கள் வியந்து பாராட்டினர்.

மருத்துவ முகாம்

தமிழர் தலைவரின் பிறந்த நாளினையொட்டி, மருத்துவ சிறப்பு முகாம் நடை பெற்றது. இம் முகாமில், குருதிக்கொடை, விழிக்கொடை, உடற் கொடையினை ஏராளமான கழகத் தோழர்கள் அளித்தனர்.

கழகத் தோழர்களுக்கும், பொது மக்களும் காது, மூக்குத் தொண்டை உள்பட பல்வேறு சிறப்பு மருத்துவ முகாமில் கலந்துகொண்டு பயன் பெற்றனர்.

கருத்தரங்கம்

தமிழர் தலைவரின் முத்திரைகளும், சாதனை களும் என்ற பொதுத் தலைப் பில் கருத்த ரங்கம் நடைபெற்றது.

இக்கருத்தரங்கத்தில், அறிவியல் பகுத்தறிவு என்ற தலைப்பில் பேரா சிரியர் அருணன், இரா.பெரியார் செல்வன் ஆகியோரும்,

சமூகநீதி என்ற தலைப்பில் பேராசிரியர் முனைவர் நம்.சீனிவா சன், இராம.அன்பழகன் ஆகியோரும்,

தமிழ் ஓவியா said...

கல்வி - தொண்டறப் பணிகள் என்ற தலைப்பில் பழநிஅரங்கசாமி, டெய்சி மணியம்மை ஆகியோரும்,

பாலியல் நீதி என்ற தலைப்பில் நீதிபதி பொ.நடராசன், அயல் மாநிலங்களில் - நாடு களில் பெரியார் கொள்கை பரப் புதல் என்கிற தலைப்பில் ப.க. பொதுச் செயலாளர் வீ.குமரேசன், வழக்கரைஞர் பூவை. புலிகேசி ஆகியோரும் உரையாற்றினார்.
இக்கருத்தரங்கிற்கு திராவிடர் கழக செயலவைத் தலைவர் சு.அறி வுக்கரசு தலைமை வகித்தார். கருத் தரங்கத்தின் தொடக்கவுரையை கழகப் பொதுச்செயலாளர் முனை வர் துரை. சந்திரசேகரன் வழங்கினார்.

பெரியார் மருத்துவரணி செய லாளர் டாக்டர் பழ.ஜெகன்பாபு வரவேற்புரையாற்ற, பகுத்தறிவாளர் கழகத் தலைவர் வா.நேரு, திரா விடர் கழக வழக்குரை ஞரணி மாநில செய லாளர் வழக்குரைஞர் ச.இன்ப லாதன், பெரியார் மருத்துவரணி செயலாளர் டாக்டர் ஜி.எஸ்.குமார், பெரியார் வீரவிளையாட்டுக் கழகத் தலைவர் பேராசிரியர் ப.சுப்பிர மணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தமிழ் ஓவியா said...

கருத்தரங்கத்தின் இணைப் புரையை திராவிடர் கழக மாநில கலைத்துறை செயலாளர் தெற்கு நத்தம் ச.சித்தார்த்தன் வழங்கினார். திராவிடர் கழக நகர செயலாளர் சு.முருகேசன் நன்றியுரையாற்றினார்.

ஆயிரம் பவுன் நிதி வழங்கும் விழா

தமிழர் தலைவரின் 81ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டி இன்று (2.12.2013) மாலை தஞ்சை திலகர் திடலில் நடை பெறும் மாபெரும் விழா வில், பெரியார் உலகம் தந்தை பெரியார் 95 அடி பேருருவ வெண் கலச் சிலை அமைப்பதற்கு ஆயிரம் பவுன் நிதியை தமிழர் தலைவரிடம் வழங்கும் விழா நடைபெறுகிறது.

இப்பெருவிழாவில், தி.மு.க. பொரு ளாளர் மு.க. ஸ்டாலின், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி., மேனாள் அமைச்சர் கோ.சி. மணி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தமிழக பிரிவுத் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர்மொய்தீன், திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் பேராசிரியர் சுப. வீர பாண்டியன், ஒடிசா மாநில ப.க. தலைவர் பேராசிரியர் தானேஸ்வர் சாகு, அமெரிக்கா பெரியார் பன் னாட்டு அமைப்பு இயக்குநர் டாக் டர் சோம. இளங்கோவன், மூத்த வழக்குரைஞர் தஞ்சை அ. இராம மூர்த்தி ஆகியோர் தமிழர் தலைவ ருக்கு பாராட்டுரை வழங்குகின்றனர்.

நூல்கள் வெளியீடு

இப்பெருவிழாவில் 14 கழக நூல் கள் வெளி யிடப்படவுள்ளன.

இந்நூல்களை தஞ்சை மாவட்ட தி.மு.க. செயலாளர் முன்னாள் மத்திய அமைச்சர் எஸ். எஸ். பழநிமாணிக் கம், தி.மு.க. தேர்தல் பணிக் குழுச் செயலாளர் எல். கணேசன், பெரியார் பன்னாட்டு அமைப்பின் துபாய் கிளை துணைத் தலைவர் முனைவர் ஏ.எஸ். மூர்த்தி, மேனாள் அமைச்சர் எஸ்.என்.எம். உபயதுல்லா ஆகியோர் பெற்றுக் கொள்கின்றனர்.

முனைவர் பாரீஸ் என். கிளிண்டனிங் மேரிலேண்ட் மாநில மேனாள் ஆளுநர் மற்றும் தலைவர், ஸ்மார்ட் குரோத் அமெரிக்காஸ் லீடர்சிப் இன்ஸ்டிடியூட், அமெரிக்க அய்க்கிய நாடு ஆகியோர் தமிழர் தலைவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.

தமிழர் தலைவர் ஏற்புரை நிகழ்த்துகிறார்

விழாவில் தமிழர் தலைவரிடம் பெரியார் உலகத்திற்காக ஆயிரம் பவுனுக்கான நிதி வழங்கப்படுகிறது.. அதைப் பெற்றுக் கொண்டு தமிழர் தலைவர் ஏற்புரை நிகழ்த்தவுள்ளார். தஞ்சை மாவட்ட கழகச் செயலாளர் அ. அருணகிரி நன்றி கூறுகிறார்.

தமிழ் ஓவியா said...

பெரியார் பேருருவச் சிலைக்கு ரூ.25,000 நன்கொடை

சென்னை, டிச.2- திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் தி.மு.க. பொதுச் செயலாளர் பேரா சிரியர் க. அன்பழகன் அவர்களை நேற்று (1.12.2013) மாலை 6.15 மணிக்கு சந்தித்து இயக்கம் வெளி யிட்ட 14 நூல்களை வழங்கினார். பேராசிரியர் அவர்கள் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர் களுக்குச் சால்வை அணிவித்து அய்யா போல நீண்ட காலம் வாழ்க! என்று கூறி பிறந்த நாள் வாழ்த்துகளைக் கூறினார். பேரா சிரியர் அவர்களுக்குக் கழகத் தலைவர் சால்வை அணிவித்தார்.

ரூ.25,000 நன்கொடை

சிறுகனூரில் அமையவிருக்கும் தந்தை பெரியார் பேருருவச் சிலைக்குத் தமது சார்பில் பேரா சிரியர் ரூ.25 ஆயிரத்தைக் கழகத் தலைவரிடம் அளித்தார் கழகத் தலைவர் நன்றி கூறினார். கழகத் தலைவருடன் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் உடன் சென்றிருந்தார்.

தமிழ் ஓவியா said...


பெண்களின் தர்மம்...


சாத்திரச் சம்பிரதாயங்களில் பெண்களின் தர்மம் என்ன என்று பார்த்தால் நிபந்தனையற்ற அடிமையாக அடங்கி ஒடுங்கி வாழ்பவளே மோட்சத்திற்குப் போவாள் என்று கூறப்பட்டுள்ளது. - (விடுதலை,5.4.1961)

தமிழ் ஓவியா said...


இந்துத்துவா தண்டவாளத்தில் மோடியின் பயணம்

சமீபத்தில் ஒரு பிரபல பாரதீய ஜனதா பிரமுகரிடம் பேசும் வாய்ப்புக் கிடைத்தது. மோடி பற்றியப்பேச்சை எடுத்ததும் அவர் கூறினார் எல்லோரும் மோடியை இந்துத்துவா வெறியர் என்று கூறுகிறீர்களே. அவர் பிரதமராக அறி வித்த உடன் இன்றுவரை அனைத்து மேடையிலும், எதிர்கட்சியினரின் குறை கள் நாட்டின் தேவைகள் குறித்துதானே பேசினார்.மக்கள் எதை எதிர்ப் பார்க்கின்றனரோ அதைப்பற்றித்தான் பேசுகிறார், இது குறித்து யாருமே பேசவில்லை என்றார். மேலோட்டமாக பலரும் அப்படித் தான் நினைக்கின்றனர். நமது நாட்டில் மக்கள் இன்றைய சூழலில் நேற்று நடந்தவைகளைக்கூட மறந்துவாழும் நிலைக்கு தள்ளப்பட்டு விட்டார்கள், பெரும்பான்மையான ஊடகங்களும் மக்களிடம் முக்கிய செய்திகளை கொண்டு சேர்க்காமல் தேவையில்லாத மற்றும் அர்த்தமற்ற விளம்பரங்களையும் பொய்யான தகவல்களையுமோ கொண்டு சேர்க்கின்றன. தேர்தல் நாட்கள் நெருங்க நெருங்க நரேந்திர மோடியிடம் பல பிதற்றல்கள் உருவாகிக்கொண்டு இருக்கிறது. புதிய அதிர்ச்சியான தகவலும் வருகிறது. ஆனால் ஊடகங்கள் மிகவும் சாமர்த் தியமாக அவற்றை மறைத்து மக்களை திசைதிருப்பும் வேலைகளை செய்கின்றன. சரி மோடி பற்றிய பாஜக பிரமுகரின் கேள்விக்கு பதில்.

மோடி பிரதமர் வேட்பாளர் என்று பாஜக கட்சியினரால் தேர்ந்தெடுக் கப்படும் சில நாட்களுக்கு முன்பு இவ் வாறு கூறினார். அது நான் ஒரு இந் துத்துவவாதி பிறகு தான் தேசியவாதி என்றார்.

தமிழ் ஓவியா said...

அதாவது இவர் இந்துத்துவா என்ற ஆபத்துகள் நிறைந்த தண்டவாளத்தை அமைத்து விட்டு அதன் மீது தான் தற் போது தன்னுடைய வண்டியை ஓட்டிக் கொண்டு இருக்கிறார். உதாரணத்திற்கு சென்னையில் இருந்து மும்பை செல்ல வேண்டு மானால் தரைமார்க்கமாக பல வழிகள் இருக்கின்றன. ஆனால் ரயில் மார்க்கமாக செல்லவேண்டுமென்றால் ஒரே ஒரு மார்க்கம் தான். அதுதான் மோடிக்கும் பொருந்தும் அவர் ஆரம் பத்தில் இந்ததுத்வா என்ற தண்டவாளம் போட்டு விட்டார். அதுவும் ஒன்று திடீரென்று போடவில்லை, அவருக்கு முன்பிருந்த காவிக்கூட்டங்கள் எல்லாம் சேர்ந்து அமைத்த தண்டவாளங்கள், அவர் என்னதான் நடுநிலையாகத் தெரிந்தாலும் அவர் அதன் மீதுதான் பயணம் செய்யவேண்டும் அப்படி அவர் பாதை மாறினால் அவரது வண்டி ஊர் போய்ச்சேராது தண்டவாளத்தில் இருந்து இறங்கியதை வேறு எஞ்சீன் வந்து அதே பாதையில் தான் இழுத்துச் செல்லும், ஒழுக்க கேடுகளும் காவிக் கூட்டங்களும் காவிகளின் ஒழுக்க சீலங்களுக்கு பெரும் எண்ணிக்கையில் வரலாறு தொட்டு உதாரணங்கள் இருந்து கொண்டே இருக்கிறது. கடந்த அதன் அசிங்க முகம் கர்நாடக சட்டமன்றத்தில் கைப் பேசியில் ஆபாச படம் பார்த்தது (2012 பிப்ரவரி) 8ஆம் தேதி கூட்டுறவுத்துறை அமைச்சர் லட்சுமன் சாவதி,பெண்கள் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் சி.சி.பாட்டில் ஆகியோர் ஒரு ஆபாச இணையதளத்தில் இருந்து பச்சையான பாலுறவுப்படங்களை டவுன்லோட் செய்து பார்த்துக்கொண்டு இருந்தனர். இதை தனியார் சேனல் காமிராமேன் மயூர் என்பவர் தனது காமிராவில் படம் பிடித்து உலகத்தின் பார்வைக்கு கொண்டு வந்தார்.

தமிழ் ஓவியா said...

இவ்வளவு ஒரு கேவலமான நிகழ்வு நடந்த சில நாட்களில் மோடியின் முன்னணி மாநிலம் என்று அவர்களே பீற்றிக்கொள்ளும் குஜராத் சட்டமன்றத் தில் 2012-மார்ச் 28 ஆம் தேதி அதாவது கர்நாடக சம்பவம் நடந்த சரியாக ஒரு மாதம் கழித்து குஜராத் சட்டமன்றத்தில் மிக முக்கியமான பட்ஜெட் குறித்த விவாதம் நடந்து கொண்டு இருந்த போது பாஜக கட்சியைச்சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களான சவுத்தரி மற்றும் பர்வாத் இருவரும் ஒரு ஆபாச படத்தை பார்த்து ரசித்துகொண்டு இருந்தனர், இதை பிரபல இந்தி சேனல் காமிராமேன் ஜனக் தாவே என்பவர் உலகிற்கு கொண்டு வந்தார். இதிலிருந்து என்ன தெரிகிறது சில நாட்களுக்கு முன்பு கர்நாடகத்தில் சந்திசிரித்த ஒரு சம்பவம் பற்றி கவலைப்படாமல் அதே போன்று ஒரு நிகழ்வை தங்கள் மாநில சட்டமன்றத்திலும் சூடான பட்ஜெட் விவாதத்தில் குளிரான மேட்டரை பார்த்துக்கொண்டு இருந் தனர். அதுமட்டுமா மீண்டும் அதே கர்நாடக மாநிலத்தில் பிரபல பாஜக பிரமுகர் மற்றும் உள்ளூர் பாஜக நகரசபை உறுப்பினர்கள் மற்றும் சில பெண் உறுப்பினர்களுடன் சேர்ந்து பீகாரில் இருந்து மும்பைக்கு இரவு நேர நிர்வாண நடனம் ஆட வந்த பெண்ணை விலை கொடுத்து அழைத்து வந்து தங்களின் விருந்தில் ஆடைகள் இன்றி ஆட வைத்தார்கள், இதில் என்ன கொடுமை என்றால் அதை பெண் உறுப்பினர்களும் சேர்ந்து கைதட்டி ரசித்தார்கள், இதை ஒரு டீவி சேனல் ரகசியமாக படம் பிடித்து ஒளிபரப்பியது. சரி இவர்கள் மீது அந்த கட்சி என்ன நடவடிக்கை எடுத்தது என்று யாருக்காவது தெரியுமா? எப்படி தெரியும் நாம் தான் மறந்துவிடுவோமே, கர்நாடக சட்டசபையில் ஆபாச படம் பார்த்த அமைச்சர்களை பதவியில் இருந்து இறக்கியதோடு சரி, அதன் பிறகு கடந்த தேர்தலில் போட்டியிட சீட்டும் வழங்கியது. கர்நாடக பாஜக ஆட்சியில் நடந்த ஊழல் கொள்ளைக்காரணமாக காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பஞ்சு மூட்டை போல் காணாமல் போனார்கள், இவர்களிடம் நேர்மை மாத்திரமல்ல தனிநபர் ஒழுக்கமும் இல்லை, தலைமைக்கு தனிநபர் ஒழுக்கம் என்பது தேவையும் இல்லை என்ற பாலிசியோ என்னவோ என மக்கள் சந்தேகிக்கின்றனர். ஆனால் சமீபத்தில் ஒரு அதிர்ச்சி கரமான செய்தி ஒன்று பிரதம வேட் பாளராக அறிவிக்கப்பட்ட நரேந்திர மோடி மீது நேரடியாக சுமத்தப்பட்ட குற்றம் அது சுமார் 150 கோடியை அய் தொட்டுக் கொண்டு இருக்கும் இந்திய மக்கள் தொகையில் இரு தனிப்பட்ட பெண்ணை கண்காணிக்கக் கூறிய தலைமையின் உத்திரவு தான். அதை அந்த மாநிலத்தின் உள்துறை அமைச்சரும் நரேந்திர மோடியின் வலதுகரமாக திகழும் அமித் ஷாவும் சாஹேப் கூறினார் என்று சொல்லி மாநில அய்.பி.எஸ் அதி காரியான ஜி.அய்.சிங்காலுக்கு உத்தரவு பிறப்பிக் கிறார்.

தமிழ் ஓவியா said...

இந்த அய்.பி.எஸ் அதிகாரி இன்று சோராபுதீன் மற்றும் இர்ஷத் ஜஹான் போலி எண்கவுண்டர் கொலைவழக்கில் சிறையில் இருக்கிறார். நடந்தது இதுதான் கர்நாடகாவைச் சேர்ந்த ஒரு பெண் கட்டிட அழகுக் கலை நிபுனர் குஜராத் மாநிலத்தில் உள்ள பூன்ச் மாவட்டத்தில் அரசு கட்டடம் மற்றும் அதனை ஒட்டி உள்ள பூங்காவை அழகு பட உருவாக்கி தந்தார். அதற் கான பாராட்டுவிழாவில் கலந்து கொண்ட மோடிக்கு அந்த பெண்ணின் மீது ஏனோ ஒரு பாசம் ஏற்பட்டு விட்டது, உடனே அவரிடம் தனது தனிப்பட்ட பயன் பாட்டிற்கான அலை பேசி எண்ணைத்தந்துள்ளார். அந்தப் பெண்ணின் அலைபேசி எண் ணையும் வாங்கி வைத்துக் கொண்டார். அதன் பிறகு நரெந்திரமோடி அந்தப் பெண் ணிடம் ஒரு நாளைக்கு 18 முறை பேசியுள்ளார். மேலும் பல குறுஞ் செய்திகளையும் அனுப்பியுள்ளார். இதை தனது ஆண் நண்பரான பூன்ச் மாவட்ட ஆட்சியாளர் பிரதீப் சர்மா என்பவரிடம் அந்த பெண் கூறியுள்ளார். அந்த ஆட்சியாளரும் நரேந்திர மோடியின் எண்ணை வாங்கி வைத்துக்கொண்டார். பிறகு தற் செயலாக நரேந்திரமோடியின் அந்த ரகசிய எண்ணிற்கு அழைப்பு விடுத்து விட்டார். அதுவரை சரியாக சென்று கொண்டிருந்த நரேந்திரமோடியின் அரசியல் பயணத்தில் திருப்பம் ஒன்று வந்தது, தனக்கு வந்த அந்த அழைப்பை கவனித்த அவர் பிரதீப் சர்மாவின் எண் என்று தெரிந்து கொண்டு அவரைப் பற்றி விசாரித்தால் நரேந்திரமோடி தினசரி 18 முறை அழைப்பு விடுத்த பெண்ணும் பிரதீப் சர்மாவும் நண்பர்கள் என்ற தகவலை தெரிந்து கொள்கிறார். இப்போது அவர் தனது உள்துறை அமைச்சரிடம் அந்தப்பெண்ணை 24 மணி நேரமும் கண்காணிக்குமாறு உத்தரவிடுகிறார். அதுமட்டுமல்ல அவருக்கு மிஸ்டுகால் கொடுத்த குற்றத்திற்காக பிரதீப் சர்மா என்ற ஆட்சியாளர் மீது ஊழல் குற்றம் சாட் டப்பட்டு தற்போது சிறையில் உள்ளார். இசம்பவத்தை எல்லாம் அமித் ஷா மற்றும் அய் ஜி சிங்ஹால் இருவருக்கும் போனில் நடந்த உரையாடல்களை பதிவு செய்து கேப்ரா மற்றும் குலையில் போன்ற இணையதளங்கள் வெளி யிட்டது. இந்தப்பிரச்சனை அரசியல் கார ணங்களுக்கான பொய்யாக புனையப் பட்டுள்ளது என்று பாஜக தலைமைகள் கூறிக்கொண்டு இருக்கும் போது என் அப்பன் குதிருக்குள் இல்லை என்பது போல் அந்த பெண்ணின் அப்பா நரேந்திர மோடி எனது நண்பர் நான் தான் என் மகளை கண்காணிக்கும் படி மோடியிடம் வேண்டிக்கொண்டேன் என்றார். விடுமா ஊடகங்கள் பிரதம வேட் பாளர் மீது எழுந்த இந்த அப்பட்டமான பழியை மறைக்க முழுமையாக முயற்சி செய்து அதில் வெற்றியும் பெற்றுவிட் டது. இந்துத்துவவாதிகளின் தனிப்பட்ட வாழ்க்கையும் ஒரு மோசமான பக்கமாக இருக்கும் என்பதற்கு தலைமை முதல் கீழ் வரை இப்படித்தான் இருக்கும் என்று உலகிற்கு தெரியவந்து விட்டது, தற்போது வரலாற்றையே மாற்றி மேடைகளில் பேசும் புது அனுகுமுறை யையும் பயன்படுத்தி வருகிறார்கள் இதுவும் ஒரு உத்திதான்.

ஆதாரம்: மும்பை மிரர் நவம்பர் 17

தமிழ் ஓவியா said...


திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரியில் தமிழர் தலைவர் பிறந்தநாள்: குருதிக்கொடை முகாம் மற்றும் சிறப்புக் கருத்தரங்கம்


திருச்சி, டிச.2- திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரியில் தமிழர் தலைவர் டாக்டர் கி. வீரமணி அவர்களின் 81ஆம் ஆண்டு பிறந்தநாளினை முன்னிட்டு நாட்டுநலப்பணித்திட்டத்தின் சார்பில் 30.11.2013 அன்று காலை 9 மணியளவில் குருதிக் கொடை முகாம் நடைபெற்றது. இம்முகாமிற்கு பெரியார் மருந்தியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் இரா. செந்தாமரை வரவேற்புரை யாற்றினார்.

அவர்தம் உரையில்:-

இல்லறம், துறவறம் என்பதைக் கடந்து தொண் டறம் என்பதை நிலைநிறுத்திய அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்களின் கொள்கை வழித்தோன்றல் தமிழர் தலைவர் அவர்களின் பிறந்தநாளினை தொண் டறப் பணியாக மேற்கொள்ள வேண்டும் என்ற சமுதாய நோக்கோடு குருதிக் கொடை முகாம் ஏற்பாடு செய்யப் பட்டிருப்பதாகவும், ஜாதி மத வேறுபாடுகளைக் களைந்து மனித நேயத்தை முன்னிறுத்தும் குருதிக் கொடையை இளைய சமுதாயத்தினர் அனைவரும் வழங்கிட முன்வர வேண்டும் என்றும் உரையாற்றினார். திராவிடர் கழக பொருளாளர் மருத்துவர் பிறைநுதல் செல்வி குருதிக்கொடை முகாமினை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

அவர் தமது உரையில்:-

சமுதாயச் சிற்பி தந்தை பெரியார் அவர்களின் தொண்டறத்தை மேம்படுத்தும் விதமாக தமிழர் தலைவர் அவர்களின் பிறந்த நாளினை முன்னிட்டு குருதிக் கொடை முகாமினை ஏற்பாடு செய்த பெரியார் மருந்தியல் கல்லூரிக்கு பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொண்டார். மேலும் இன்றைய சூழலில் விபத்துக்கள் அதிகம் ஏற்பட்டு உயிருக்கு போராடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், குருதிக்கொடை வழங்கு வதன் மூலம் பொருளாதார நிலையில் பின்தங்கியுள்ள ஏழை, எளிய மக்கள் பயனடை வார்கள் என்றும் உரையாற்றினார்.

மேலும் குருதிக்கொடை அளிப்பதன் மூலம் ஏற்படும் பயன்கள் குறித்தும், அதன் தேவைகள் குறித்தும் எடுத்துரைத்தார். இந்நிகழ்ச்சியில் திருச்சி பிரீமியர் அரிமா சங்கத் தலைவர் செல்வ ரத்தினம் மற்றும் அண்ணல் காந்தி நினைவு அரசு மருத்துவ மனையின் இரத்த வங்கித் துறையின் மருத்துவர்கள், அரிமா சங்க பொறுப்பாளர்கள் மற்றும் பேராசிரியப் பெருமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 50-க்கும் மேற்பட்டோர் குருதிக்கொடை வழங்கினர்.

அதனைத் தொடர்ந்து பெரியார் மன்றத்தின் சார்பில் காலை 10 மணியளவில் தமிழர் தலைவர் அவர்களின் சமுதாயப் பணிகள் குறித்த சிறப்புக் கருத்தரங்கம் கல்லூரி அரங்கத்தில் நடைபெற்றது. இக்கருத்தரங்க நிகழ்ச்சிக்கு பெரியார் மருந்தியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் இரா. செந்தாமரை வரவேற்புரையாற்றினார். அவர் தமது உரையில்:- பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்களின் பகுத்தறிவு கருத்துக்களை உலகம் முழுவதும் எடுத்துச் செல்லும் சமுதாயப் பணியை மேற்கொள்பவர் நம் தமிழர் தலைவர், நிறுவனத் தலைவர் டாக்டர் கி. வீரமணி அய்யா அவர்கள் என்றும் அவர்களுடைய சமுதாயப் பணி, கல்விப்பணி மற்றும் பல பணிகளுக் கிடையேயும் வாழ்வியல் சிந்தனைகள் எனும் கருத்துக் கருவூலத்தை தொடர்ந்து விடுதலை நாளிதழில் எழுதி வருவதாகவும், இதனை இளைய சமுதாயத்தினர் படித்து பயன்பெறுவதுடன் தன் பெண்டு தன் பிள்ளை எனும் குறுகிய வட்டத்துக்குள் இளைய சமுதாயத் தினர் அடைபடாமல் தொண்டறம் எனும் பொது நலத்துடன் செயல்பட வேண்டும் என்றும் உரையாற் றினார்.

பெரியார் மருந்தியல் கல்லூரியின் தாளாளர் ஞான செபஸ்தியான் தனது தலைமையுரையில்:- உலகத் தலைவர் தந்தை பெரியார் அவர்களின் சமுதாயத் தொண்டுகள் குறித்து அனுபவ ரீதியான நிகழ்வுகளை மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். பெரியார் மருந்தியல் கல்லூரியின் துணை முதல்வர் முனைவர் அ.மு. இஸ்மாயில் முன்னிலை வகித்தார். திருச்சி பிரீமியர் அரிமா சங்கத்தின் தலைவர் செல்வ ரத்தினம் வாழ்த்துரை வழங்கினார்.

தமிழ் ஓவியா said...


அவர் தமது உரையில்:-

தமிழர் தலைவர் அவர்களின் பிறந்த நாளில் நடைபெறக்கூடிய சமுதாய பணிகளில் அரிமா சங்கத்தையும் இணைத்துக் கொண்டமைக்கு தனது நன்றிகளை தெரிவித்துக் கொண்டார். மேலும் தொண்டறப் பணிகள் தொய்வின்றி நடைபெற அரிமா சங்கத்தின் பங்களிப்பு மென்மேலும் தொடரும் என்று உரையாற்றினார். இக்கருத்தரங்க நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர் திராவிடர் கழகத்தின் பொருளாளர் மருத்துவர் பிறைநுதல் செல்வி சிறப்புரையாற்றினார்.

அவர் தமது உரையில்:-

சமுதாயத்திற்கு பயனுறும் வகையில் குருதிக் கொடை முகாம், முதிவயர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக பயனுள்ள பொருள்கள் வழங்கு தல், கல்விப் பணியை மேம்படுத்தும் புத்தகம் வழங்குதல் மற்றும் மாணவர்களை சிறப்பாக வழிநடத்தி பரிசுகள் வழங்குதல் என அடுக்கடுக்கான தொண்டறப்பணி களை செய்து அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர் களின் சமுதாயப் பணிகளை செய்து அனைவரின் மனதையும் நிறைவடையச் செய்த பெரியார் மருந்தியல் கல்லூரிக்கு தன்னுடைய பாராட்டுக்களை தெரிவித்துக் கொண்டார்.

மேலும் தந்தை பெரியார் அவர்கள் ஜாதி மத வேறுபாடுகள், பெண்ணடிமை மற்றும் மூட நம்பிக்கைகளை ஒழிக்க பாடுபட்ட விதத்தினையும், பெரியார் அவர்களின் மறைவிற்குப்பிறகு அவர்களின் அடிச்சுவட்டைப் பற்றி சிறிதும் பிறழாமல் அவர் காண விரும்பிய சமுதாயத்தை படைத்துக் கொண்டிருப்பவர் தமிழர் தலைவர் டாக்டர் கி. வீரமணி அவர்கள் என்றும் உரையாற்றினார். மேலும் சமூகநீதிக்கு எதிராக நடைபெறும் குற்றங்களுக்கு முதலில் குரல் கொடுக்கக்கூடியவர் தமிழர் தலைவர் என்றும், மண்டல் கமிஷன், ஈழத் தமிழர் வாழ்வுரிமை, காவிரி நீர் பிரச்சினை, சேது சமுத்திரத்திட்டம், பெண்களுக்கான இட ஒதுக்கீடு போன்ற தமிழர் நலன் காக்கும் சமுதாய நிகழ்வுகளில் தொடர்ந்து குரல் கொடுத்து வருபவர்.

அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்களை இழந்து வாழும் மானுடம் ஆறுதல் பெறும் இடமாக திகழக்கூடியவர் நம் தமிழர் தலைவர் அவர்கள் என்றும் தமிழினம் தலைநிமிர அய்யா அவர்கள் மேற்கொண்ட சமுதாயப் பணிகளை இளைய சமுதாயம் பயனுறும் வகையில் எடுத்துரைத்து தேசிய மருந்தியல் மற்றும் நூலக வாரவிழா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசினையும், சாமி கைவல்யம் மூத்த குடிமக்களுக்கு பாய், போர்வை, பயனாடை, சலவை மற்றும் குளியல் சோப்புகளை வழங்கினார்.

மேலும் குருதிக் கொடை வழங்கிய மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் களையும், தேசிய நூலக வாரவிழாவில் பேராசிரி யர்களால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட 20 தலைப் பில், பதினாறாயிரம் மதிப்பிலான 45 புத்தகங் களையும் நூலகத்திற்கு வழங்கி சிறப்பித்தார். நிறைவாக பெரியார் மன்றச் செயலாளர் முனைவர் கோ. கிருஷ்ணமூர்த்தி நன்றியுரையாற்ற கருத்தரங்கம் இனிதே நிறைவுற்றது.

இக்கருத்தரங்க நிகழ்வில் அரிமா சங்க உறுப்பினர்கள், சாமி கைவல்யம் முதியோர் இல்ல பெரியார் பெருந் தொண்டர்கள், திராவிடர் கழக உறுப்பினர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

தமிழ் ஓவியா said...


வளர முடியும்


நமது நாட்டில் மனிதனுக்கு மனிதன் வெறுப்பும், பேதமும் உண்டாக்கவே கடவுள், மதம், ஜாதி ஏற்படுத்தப்பட்டுள்ளன. இவை ஒழிந்த இடத்தில்தான் மனிதனுக்கு அன்பு வளர முடியும். - (விடுதலை, 20.9.1968)

தமிழ் ஓவியா said...


வெற்றி மாரத்தானைத் தொடங்கி விட்டோம்!


கழகத்தின் வரலாற்றில் மிக முக்கியமான நிகழ்ச்சிகள் எல்லாம் சிறப்பாக நடைபெற்ற அதே தஞ்சையில் நேற்று, பெரியார் உலகத்திற்கு (தந்தை பெரியார் 95 அடி உயர பேருருவ வெண்கலச் சிலை அமைப்பு) ஆயிரம் சவரன் தங்கத்திற்குச் சமமான நிதி அளிக்கும் விழாவும், திராவிடர் கழகத் தலைவர் - தமிழர்தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்களின் 81ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவும் தஞ்சை மண்ணிலே அந்த மண்ணுக்கே உரித்தான கம்பீரமாக - மிளிரோடு நடைபெற்றது என்று சொல்ல வேண்டும்.

காலை முதலே தமிழர் தலைவரைச் சந்தித்து வாழ்த்துக்களைக் கூறினார்கள். மாலைக் குப் பதிலாக நிதியை அளித்து மகிழ்ந்தனர்.

சிறப்பான கருத்தரங்கம், செழிப்பான உரைகள் கருத்தரங்கில் தனியம்சமாகும். பார்வையாளர்களின் கேள்விகளுக்கு விழா நாயகர் விடையளித்த பாங்கு இதுவரை எங்கும் கேள்விப்படாத தனி அம்சமாகும். வேகமான வினாக்களும், விரைவான பதில்களும் என்று அதற்குத் தலைப்பு அளிக்கப்பட்டிருந்தது. நல்ல பசி நேரத்தில்கூட வயிற்றுப் பசியைப் புறந்தள்ளி அறிவுப் பசிக்கு முன்னுரிமை கொடுத்தது மெச்சத் தகுந்த ஒன்றாகும்.

இந்த விழாவின் முக்கிய பகுதி என்பது - பெரியார் உலகிற்கு - தந்தை பெரியார் அவர்களுக்கு 95 அடி உயரத்தில் சிறுகனூரில் அமையவிருக்கும் முழு உருவ வெண்கலச் சிலைக்கு நிதி அளிக்கும் நிகழ்ச்சியாகும்.

முதற்கட்டமாக ஆயிரம் சவரன் தங்கத்திற்கான நிதி அளிப்பது (ஒரு சவரன் ரூ.25 ஆயிரம் என்று தோராயமாகக் கணக்கிடப்பட்டிருந்தது) என்ற திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழு, பொதுக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவினைக் கழகப் பொறுப்பாளர்கள் தோழர்கள் அரிதின் முயன்று அதனை வெற்றிகரமாகச் செயல்படுத்திக் காட்டி விட்டனர்.

ஆயிரத்திற்கும் மேலாக 1005 சவரன் தங்கத் திற்கான தொகையான ரூ.2 கோடியே 51 லட்சத்து 33 ஆயிரம் நிதியை தமிழர் தலைவரிடம் வழங்கியது சாதாரணமானதல்ல.

கழகம் எடுத்த எந்த முடிவும் வெற்றி இலக்கை அடைந்தது என்பதைத் தவிர அதன் வரலாற்றில் வேறு அத்தியாயத்தைப் பார்க்கவே முடியாது.

அதுவும் இதுவரை கழகம் எடுத்த திட்டங்களில் - இப்பொழுது பெரியார் உலகம் என்று கழகம் மேற்கொள்ளும் திட்டம் மிகவும் வித்தியாசமானது - கேட்பவர்களை மலைக்க வைக்கக் கூடியது என்பதை ஏற்றுக் கொள்கிறோம்.

மிகப் பெரிய அளவுக்கு நிதி திரட்டப்பட வேண்டும் என்பதும் உண்மைதான். பெரியார் உலகத்தைப் பொறுத்தவரை கழகப் பொறுப்பாளர்கள் தெரிவித்த தகவல்கள் மிகவும் நம்பிக்கை அளிப்பதாக உள்ளன.

எந்த இடத்தில் யாரிடம் வசூலுக்குச் சென்றாலும் 25,000 ரூபாயை பெரிய தொகை என்று நினைக்காமல் மிகவும் வரவேற்று, பெரியாருக்குக் கொடுக்காமல் வேறு யாருக்குக் கொடுக்கப் போகிறோம்? என்று வெளிப்படையாகவே உப சரித்து, நிதியையும் அளித்தனர் என்றால் - தமிழர்கள் மீது வைத்த நம்பிக்கை மிகவும் சரியானது தான் என்பதை மெய்ப்பிக்கிறது.

திராவிடர் கழகத் தலைவரின் 50 ஆண்டு விடுதலைப் பணிக்காக 50 ஆயிரம் விடுதலை சந்தாக்களை அளித்தோம் - என் ஆயுளும் நீளும் என்று புளகாங்கிதம் அடைந்தார்.

இப்பொழுது இந்த பிரம்மாண்டமான திட்டத்தை அவர் எண்ணத்தில் உதித்த இந்தக் கருவை - செயல்படுத்திக் காட்டுவதன் மூலம் மேலும் அவரின் ஆயுளை நீட்டித்துக் கொடுப்பார்கள் தமிழர்களும் கழகத் தோழர்களும் என்பதில் எட்டுணையும் அய்யமில்லை.

பெரியார் உலகம் என்பது 15 ஆண்டுக்கால திட்டம். இப்பொழுது நம் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்களுக்கு 81 என்றால் அவரின் 96ஆம் அகவையில் இது நிறைவடையும் என்று பொருள்.

அவர் தலைமையில் தான் அந்த விழா என்கிறபோது தந்தை பெரியார் அவர்களின் வயதை எட்டுவார் என்கிற அடி நீரோட்டமும் இதில் அடக்கமாகும்.

நேற்று நடைபெற்ற தஞ்சை விழா என்று சொல்லுகிறபோது கொட்டும் மழையிலும் பல்லாயிரக் கணக்கான கருஞ்சட்டைத் தோழர்கள் குடும்பம் குடும்பமாக வந்திருந்து திறந்த வெளியாக நடைபெற்ற விழாவை வெற்றியாக்கிக் கொடுத் தார்களே - இது வேறு எந்த அமைப்பாலும் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று. கொள்கைக் கூட்டத்தின் முன் கொட்டும் மழையும் தோற்றது.

வெற்றி மாரத்தானைத் தொடங்கி விட்டோம் - முழு வெற்றியைத் தங்கப் பேழையில் வைத்துக் கொடுப்போம் - வாழ்க பெரியார்! வாழ்க தமிழர் தலைவர்!!

தமிழ் ஓவியா said...


மாற்றுத் திறனாளிகளுக்காக திமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள்: கலைஞர் பட்டியல்

சென்னை, டிச.3- சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு அவர்களுக்காக திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட் டங்களை அக்கட்சியின் தலைவர் கலைஞர் பட்டியலிட்டுள்ளார்.

இது குறித்து திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

டிசம்பர் 3-ஆம் தேதி உலக மாற் றுத் திறனாளிகள் தினம் கொண்டா டப்படுகிறது. இந்நாளில் அவர் களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த ஆண்டு மாற் றுத் திறனாளிகள் தினத்தில் 50-க்கும் அதிகமானோர் என்னைச் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். அதுபோல இந்த ஆண்டும் சந்திக்க பலர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

ஊனமுற்றோர் என்பதை மாற்றுத் திறனாளிகள் என மாற்றி அவர்களுக் காக தனித் துறை திமுக ஆட்சியில் உருவாக்கப்பட்டது.

1974 திமுக ஆட்சியில் மாற்றுத் திறனாளிகள் நலவாழ்வுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு மூன்று சக்கர சைக்கிள்கள், சக்கர நாற் காலிகள், அலுமினியத் தாங்கிகள், கறுப்புக் கண்ணாடிகள், ஊன்று கோல்கள், காதுகேட்கும் கருவிகள் ஆகியவை இலவசமாக வழங்கப்பட்டன.

திமுக ஆட்சியில் 1-11-1974-இல் மாற்றுத் திறனாளிகளுக்கு ஓய்வூ தியம் வழங்கும் திட்டம் அறிமுகப் படுத்தப்பட்டது. 1989-90 திமுக ஆட்சியில் மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தும் தாங்கிகள், சக்கர நாற்காலிகள், மோட்டார் வண்டி கள், ஊன்றுகோல்கள் போன்ற பொருள்களுக்கான வரி முற்றிலும் நீக்கப்பட்டது.

அப்போதைய சமூக நலத்துறை அமைச்சர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு மாற்றுத் திறனாளி களுக்கு 3 சதவீத இட ஒதுக்கீட்டின் படி வேலைவாய்ப்புகள் உறுதி செய்யப்பட்டன. 2010-11 திமுக ஆட்சியில் மாற்றுத் திறனாளிகளுக் கான நிதி நான்கு மடங்காக அதாவது ரூ. 176 கோடியாக உயர்த்தப்பட்டது.

கடுமையாகப் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப் படும் மாதாந்திர பராமரிப்பு உதவித் தொகை 2006 திமுக ஆட்சியில் ரூ. 200-லிருந்து ரூ. 500 ஆக உயர்த்தப் பட்டது.

மாற்றுத் திறனாளிகள் தங்களுக் குள் திருமணம் செய்து கொண்டால் திருமண உதவித் தொகை வழங்கும் திட்டம் 2009-10 திமுக ஆட்சியில் தொடங்கப்பட்டது. 2007 திமுக ஆட்சியில் மாற்றுத் திறனாளிகள் நலவாரியம் அமைக்கப்பட்டது. இதன் மூலம் அவர்களுக்கு ஏராளமான உதவிகள் செய்யப்பட்டன.

"இளைஞன்' படத்துக்கு கதை, வசனம் எழுதியதற்காக எனக்குக் கிடைத்த ரூ. 45 லட்சத்தை முதல மைச்சர் பொது நிவாரண நிதி மூலம் மாற்றுத் திறனாளிகள் நலவாரியத் துக்கு வழங்கினேன்.

திமுக ஆட்சியில் மாற்றுத் திற னாளிகளுக்காக அறிவிக்கப்பட்ட திட்டங்களை இந்த ஆட்சியிலும் தொடர்ந்து வருகிறார்கள் என கலை ஞர் தெரிவித்துள்ளார்.

தமிழ் ஓவியா said...


மாற்றுத் திறனாளிகளுக்காக திமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள்: கலைஞர் பட்டியல்

சென்னை, டிச.3- சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு அவர்களுக்காக திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட் டங்களை அக்கட்சியின் தலைவர் கலைஞர் பட்டியலிட்டுள்ளார்.

இது குறித்து திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

டிசம்பர் 3-ஆம் தேதி உலக மாற் றுத் திறனாளிகள் தினம் கொண்டா டப்படுகிறது. இந்நாளில் அவர் களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த ஆண்டு மாற் றுத் திறனாளிகள் தினத்தில் 50-க்கும் அதிகமானோர் என்னைச் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். அதுபோல இந்த ஆண்டும் சந்திக்க பலர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

ஊனமுற்றோர் என்பதை மாற்றுத் திறனாளிகள் என மாற்றி அவர்களுக் காக தனித் துறை திமுக ஆட்சியில் உருவாக்கப்பட்டது.

1974 திமுக ஆட்சியில் மாற்றுத் திறனாளிகள் நலவாழ்வுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு மூன்று சக்கர சைக்கிள்கள், சக்கர நாற் காலிகள், அலுமினியத் தாங்கிகள், கறுப்புக் கண்ணாடிகள், ஊன்று கோல்கள், காதுகேட்கும் கருவிகள் ஆகியவை இலவசமாக வழங்கப்பட்டன.

திமுக ஆட்சியில் 1-11-1974-இல் மாற்றுத் திறனாளிகளுக்கு ஓய்வூ தியம் வழங்கும் திட்டம் அறிமுகப் படுத்தப்பட்டது. 1989-90 திமுக ஆட்சியில் மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தும் தாங்கிகள், சக்கர நாற்காலிகள், மோட்டார் வண்டி கள், ஊன்றுகோல்கள் போன்ற பொருள்களுக்கான வரி முற்றிலும் நீக்கப்பட்டது.

அப்போதைய சமூக நலத்துறை அமைச்சர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு மாற்றுத் திறனாளி களுக்கு 3 சதவீத இட ஒதுக்கீட்டின் படி வேலைவாய்ப்புகள் உறுதி செய்யப்பட்டன. 2010-11 திமுக ஆட்சியில் மாற்றுத் திறனாளிகளுக் கான நிதி நான்கு மடங்காக அதாவது ரூ. 176 கோடியாக உயர்த்தப்பட்டது.

கடுமையாகப் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப் படும் மாதாந்திர பராமரிப்பு உதவித் தொகை 2006 திமுக ஆட்சியில் ரூ. 200-லிருந்து ரூ. 500 ஆக உயர்த்தப் பட்டது.

மாற்றுத் திறனாளிகள் தங்களுக் குள் திருமணம் செய்து கொண்டால் திருமண உதவித் தொகை வழங்கும் திட்டம் 2009-10 திமுக ஆட்சியில் தொடங்கப்பட்டது. 2007 திமுக ஆட்சியில் மாற்றுத் திறனாளிகள் நலவாரியம் அமைக்கப்பட்டது. இதன் மூலம் அவர்களுக்கு ஏராளமான உதவிகள் செய்யப்பட்டன.

"இளைஞன்' படத்துக்கு கதை, வசனம் எழுதியதற்காக எனக்குக் கிடைத்த ரூ. 45 லட்சத்தை முதல மைச்சர் பொது நிவாரண நிதி மூலம் மாற்றுத் திறனாளிகள் நலவாரியத் துக்கு வழங்கினேன்.

திமுக ஆட்சியில் மாற்றுத் திற னாளிகளுக்காக அறிவிக்கப்பட்ட திட்டங்களை இந்த ஆட்சியிலும் தொடர்ந்து வருகிறார்கள் என கலை ஞர் தெரிவித்துள்ளார்.

தமிழ் ஓவியா said...


தஞ்சை!

கொட்டு மழை
முத்தில் குளித்த
கொள்கையூர்
தங்கங்களே!

குவலயத்தின்
உச்சியிலன்றோ
குடியேறி
விட்டீர்கள்!

அடடா, என்ன
காட்சி அது!
கண்டது கனவா -
நனவா!

மழையப்பனை
விரட்டி
வாலைச் சுருட்டச் செய்தீர்களே!

மேடையில்
வீற்றிருந்த
தலைவர்கள்
என்ன பேசினார்கள்?

தணல் தொட்டியில்
எப்படி உருக்கி
வார்த்திருக்கின்றார்
தந்தை பெரியார்?

இந்தக் கருஞ்சட்டைகள்
சுவாசிப்பதெல்லாம்
இலட்சியத் தீயின்
துண்டங்களா?

இந்தத் தொண்டர்
குழாம் உண்பதெலாம்
தியாக நெருப்பின்
பண்டங்களா?

ஆசா பாசங்கள்
அண்டாதா?
ஆசையால்
அடிதான் சறுக்காதா?

சபலங்கள்
சேட்டை செய்யாதா?
சஞ்சல நோய்களும்
தீண்டாதா?

கட்டுப்பாடெனும்
கட்டிலின்
நான்கு கால்கள்
இவர்கள் தானோ!

பெரியாரோடு
ஒழிந்ததா?
நரியார் எண்ணங்கள்
பலித்ததா?

பெரியார் விட்டுச்
சென்ற வித்து
வீரமணி யெனும்
பெருஞ் சொத்து!

அவர்தம்
கண்ணசைப்பில்
கருஞ்சட்டைப்
பட்டாளம்

கண்டது காண்
தஞ்சையெனும்
கொள்கை அருவியின்
குற்றாலம்!

- மயிலாடன்

தமிழ் ஓவியா said...


என்ன?



காட்டுமிராண்டித்தன்மை என்றால் என்ன? மனிதன் அறிவுப் பக்குவம் அடையாமல் மிருகப் பிராயத்தில் இருக்கும் தன்மையைக் குறிப்பிடும் சொல். இது உலகத்தில் எல்லா நாடுகளிலும் எந்தச் சமூகத்திலும் இருந்து வந்த நிலைமையேயாகும்.
(விடுதலை, 24.1.1968)

தமிழ் ஓவியா said...


நேற்றைய ஆயுத எழுத்து நிகழ்ச்சியில் சிதம்பரம் கோயில்

நேற்றைய (03.12.2013) ஆயுத எழுத்து நிகழ்ச்சியில் (தந்தி தொலைக்காட்சி) சிதம்பரம் கோயில் தொடர்பான விவாதம் பார்த்தேன். தொடர்புடைய நால்வரைப் பங்கேற்க வைத்தது சரிதான்.அவர்கள் தங்கள் தரப்பு வாதங்களை வைத்ததும் சரிதான் என்றாலும், ஆயுத எழுத்து நிகழ்ச்சியை நடத்திய ரங்கராஜ் பாண்டே, ஆயுதத்தை கையிலெடுக்காத குறையாய் அவரும் வெங்கடேச தீட்சிதரோடு சேர்ந்து குரல் கொடுத்து தனது இனப் பாசத்தை வெளிப்படையாகக் காட்டிக்கொண்டதோடு அவருக்கும் ஒரு படி மேலே சென்று, விட்டேனா பார் எனத் துள்ளித் குதித்து அடேயப்பா!என்ன ஒரு இனப்பற்று. மேலும் எழுச்சி தமிழர் தொல்.திருமாவளவன் அவர்களை பேசவிடாமல் அவரது கருத்துக்களை திசைதிருப்பியும் திரு.செந்தில்நாதன் சொன்ன அனைத்து ஜாதியினரும் அர்ச்சகரானால்தான் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு என்றதை மிக லாவகமாக புறந்தள்ளி ஒரு வழியாக விவாதத்தை முடித்தார்.இடையில் பேசிய அந்த தீட்சிதர் போகிற போக்கில் சும்மா தமிழ்,தமிழ்னு இனியும் பேசிக்கிட்டு இருக்காதீங்க என்று சொல்கிறார். இத்தனையும்வெல்க தமிழ் என்று தனது நாளிதழில் அடைமொழி போட்டுக்கொள்ளும் நம் தமிழர் நடத்திய தந்தி தொலைக்காட்சியில் தான்.இதுதான் தமிழ் தேசியத்தின் இறுதி வடிவம் என்று சொல்லாமல் சொல்லும் தந்தி தொலைக்காட்சி.
கொடுமை! கொடுமை!!

- தி. என்னாரெசு பிராட்லா, மாவட்ட செயலாளர், காரைக்குடி

தமிழ் ஓவியா said...


காமன்வெல்த் மாநாட்டில் சல்மான் குர்ஷித்: கலைஞர் பேட்டி


சென்னை, டிச.24- இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்றது தொடர்பாக நடைபெறும் விவாதத்தில் தி.மு.க. பங்கேற்கும் என்றார் டெசோ தலைவர் கலைஞர்.

செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

செய்தியாளர் :- தமிழகம் முழுவதும் மீண்டும் மின்வெட்டு நடைமுறைக்கு வந்துவிட்டதே; சென்னையிலேயேஅன்றாடம் இரண்டுமணிநேரம் மின்வெட்டு செய்யப்படுகிறதே?
கலைஞர் :- சந்தோஷம்!

செய்தியாளர் :-ஆனால் மின் வெட்டு ஏற்படும் போதெல்லாம், முதலமைச்சர் ஜெயலலிதாஅதற்கு தி.மு. கழகத்தின் மீது பழிபோடுகிறாரே? மேலும் மத்தியஅரசும், தி.மு. கழகமும் சேர்ந்து சதிசெய்வதாகச் சொல்லியிருக்கிறாரே?

கலைஞர் :- அது அவர்களுடைய வாடிக்கை. தாங்கள் செய்கிற தவறை மறைக்க பிறர் மீது பழி போடுவது என்பது ஜெயலலிதாவுக்கு இன்று நேற்றல்ல; என்றுமே வாடிக்கை.

செய்தியாளர் :- கெயில் எரிவாயுக் குழாய்கள் பதிக்கும் பிரச்சினையில் இரு தரப்பினருடன் பேசி சுமூகமான முடிவெடுக்க வேண்டுமென்று சொல்லி யிருந்தீர்கள். ஆனால் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருக்கிறதே?

கலைஞர் :- நாட்டின் பொருளாதாரம் அல்லது விஞ்ஞான வளர்ச்சிக்காக சிலநடவடிக்கைகள் மேற் கொள்ளப்படுகின்றன. விவசாயத் துறையின் வளர்ச்சிக் காக இயந்திரமயம் என்றபெயரால் சில காரியங்கள் நடக்கின்றன. அதேநேரத்தில் விவசாயத்திற்கு கேடு விளைவிக்காமல் இருக்க மற்ற துறையினரும், தொழில் துறையினரும் அக்கறைகாட்டவேண்டும். அதனால் தான் இரு சாராரும் பேச்சுவார்த்தைநடத்தி அதனை ஒரு முனைப்படுத்த வேண்டும் என்று நான் தெரி வித்தேன்.

செய்தியாளர் :- மத்தியஅமைச்சர் சல்மான் குர்ஷித் இலங்கைசென்றது பற்றி வருகின்ற நாடாளு மன்ற குளிர் காலக் கூட்டத் தொடரில் விவாதம் வருமென்றுசொல்கிறார்களே?

கலைஞர் :- அப்படியொரு விவாதத்திற்கு அங்கே அனுமதிக்கப்படுமானால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எங்கள் நாடாளுமன்ற உறுப் பினர்கள் அங்கே விவாதத்தில் பங்கேற்பார்கள். செய்தியாளர் :- நேற்றையதினம் கேப்டன் தொலைக் காட்சியைச் சேர்ந்த செய்தியாளர்களை ஒருகுழுவினர் சேர்ந்து அடித்திருக்கிறார்கள். ஆனால் காவல்துறையினர் தொலைக்காட்சிநிறுவனத்தைச் சேர்ந்தவர்களையே கைது செய்திருக்கிறார்கள். 200 பேருக்குமேல்பத்திரிகையாளர்களைபோலீசார் கைதுசெய்திருக்கிறார்களே?

கலைஞர் :- இதனை வன்மையாகக் கண்டிக் கிறேன்.

இவ்வாறு கலைஞர் அவர்கள் செய்தியாளர் களுக்குப் பேட்டியளித்தார்.