எமது அசையாச் சொத்துகள் பெரியார் தந்த கொள்கைகள்!
அசையும் சொத்துக்கள் அர்ப்பணிப்போடு உழைக்கும் கழகத் தோழர்கள்
பெரியார் உலகைக்காண சீரிளமைத் திறத்தோடு உழைப்பேன்! தமிழர் தலைவரின் பிறந்த நாள் சூளுரை!
திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் விடுத்துள்ள பிறந்த நாள் சூளுரை வருமாறு:
எனக்கு நாளை 81ஆம் ஆண்டு பிறக்கிறது! அது இயற்கையின்பாற்பட்டது.
வயது கணக்குப்படி முதுமையை நோக்கிய பயணம்
அது என்ற போதிலும், வாழுவது இலட்சியங்களுக்காக என்று கருதி, வாழ்க்கைப்
பயணத்தைத் தொடர்ந்து அது அனுபவப் பாடங்களை அதிகம் பெற்று திளைக்கும்
வாய்ப்பான பருவம் என்று கொள்ளலாம். கடந்த 25 ஆண்டுகளில் ஏற்பட்ட நலிவுகள் -
மருத்துவ வளர்ச்சி யாலும் சில மருத்துவ நண்பர்களின் ஆற்றல் மிக்க
சிகிச்சைகளாலும், சரி செய்யப்பட்டதால் என் கடன் பணி செய்வதே என்றும் என்று
கூவி, பணி செய்வதில் குன்றா ஆர்வம் தொடர்ந்து வருகிறது.
எனது உற்சாகப் பணிக்குக் காரணிகள்
உடல் நலம், உள்ள நலம் இவைகளைப் பெற்று மேலும் தீவிரமாக உழைக்க உறுதியுடன் தொடர்வதற்கு காரணி களாக அமைந்தவை இவை:
1. என் வாழ்விணையர், எனது குருதிக்
குடும்பத் தவர்கள் அனைவரும் எனக்கு எந்த மன உளைச்சலையோ, சங்கடத்தையோ
தராதவர்கள் மட்டுமல்ல; என் கொள்கை வழியை ஏற்று என்றும் துணையாக நிற்பவர்
கள், எனது கொள்கைப் போருக்கு என்றும் ஊக்க மூட்டு பவர்கள்.
2. எனது கொள்கைக் குடும்பத்து உறவுகள்
அவர்களின் நாளும் வளரும் பாசமும், வற்றாத அன்பும், மாறாத நம்பிக்கையும்
லட்சியப் பயணத்தைத் துணிவைத் தருவ தோடு - பெரியார் பணி முடிக்க, பெரியார்
புத்துலகம் காண எம்மை சதா ஊக்கப்படுத்திய வண்ணமே உள்ளனர்.
3. சிறந்த மருத்துவர்களின் கொடைதான் இந்த
வாழ்வு நீண்டு கொண்டு, பயணம் செய்திட உடல் வலிமை யோடு, வயதை மறந்து,
ஓய்வைத் தேடாமல், உழைத்துக் கொண்டே இருக்க உதவியாக அமைந்துள்ளது.
இயக்கத்தின் செயற்பாடுகளை எம்மால் இயன்ற மட்டும் - செய்து கொண்டே இருக்க இந்த ஆயுள் வளர்ச்சி அற்புத வாய்ப்பாக அமைந்துள்ளது!
அறிவு ஆசான் அளித்த அரும் கொடைகள்
நன்றி பாராப் பணி, மானம் பாராத தொண்டு
பதவி - புகழ் தேடாத எதிர்நீச்சல், உள்ளுக்குள் ஒன்று வைத்துப் புறமொன்று
பேசிடும் இரட்டை வாழ்க்கையை அறவே அறியாத ஓர் எளிய வாழ்க்கை - இவை களில்
அடையும் எல்லையற்ற மன நிறைவு, மகிழ்ச்சி ஆகிய இவை அனைத்தும் நம் அறிவு
ஆசான் தலைவர் தந்தை பெரியார் அவர்கள் எமக்க ருளிய அருட்கொடைகள்!
பயனடைபவன் என்ற முறையில் அக்கடன்
தீர்க்கவே, நாளும் அலுப்பு, சலிப்பின்றி அவர்கள் விட்ட பணியை முடிக்க,
உழைப்பதில் தனி இன்பம் கண்டு, மகிழ்பவனாக உள்ளேன்.
அசையாச் சொத்துகளும், அசையும் சொத்துக்களும்
சுயமரியாதையும், பகுத்தறிவும் அய்யா தந்த
கொள்கை களும் எம்மிடமிருந்து இறுதி மூச்சடங்கும் வரை எவராலும் பறிக்கப்பட
முடியாத அழியாச் சொத்துக்கள்! ஆம் அவை தான் நான் சம்பாதித்த அசையாச்
சொத்துக்கள்!
அப்படியானால் அசையும் சொத்துக்கள் இல்லையா
என்று நீங்கள் கேட்பது காதில் விழுகிறது; உண்டு. உண்டு. தன்னலம் துறந்து,
கட்டுப்பாடு காப்பதில் இராணுவமும் தோற்கும் என்பதான எமது இயக்கத் தோழர் -
தோழியர்கள் - இளைஞர்கள் அனைவரும் தான் அந்த அசையும் சொத்துக்கள்!
பெரியார் விட்டுச் சென்ற சொத்துக்கள்
எவ்வளவு இருக்கும் என்று அடிக்கடி கேட்கும் ஆவலாதிகளான அன்பர்களுக்கும்கூட
இது தெளிவுபடுத்தும் விடையாகும்.
பெரியார் சொல்லிக் கொடுத்த இலக்கணம்!
இயக்கத்திற்கு வந்து உழைக்க எங்களைப்
போன்ற தொண்டர்களுக்கு, நமது அறிவு ஆசான் சொல்லிக் கொடுத்த இலக்கணம் -
எமக்கு என்றும் சிறந்த மறக்க இயலாத பாடமாக இருக்கும்!
இப்போது இந்த ஸ்தாபனத்தில் இருக்க வேண்
டியவர்கள் முக்கியமாக மனதில் வைக்க வேண்டிய காரியம் ஒன்று உண்டு. அதாவது,
பொது ஜனங் களிடத்தில் நல்ல பேர் எடுக்க வேண்டுமே என்கின்ற கருத்தோடு இந்த
மாதிரியான ஸ்தாபனங்களில் வேலை செய்யவே கூடாது.
நல்ல பேர் எடுக்க கொஞ்சமும்கூட முயற்சிக் கவே கூடாது. இதுதான் என்னுடைய பொது நலத்தின் குறிக்கோள்.
பொது ஜனங்களின் யோக்கியதை எனக்குத்
தெரியும். 100-க்கு 85 பேர் தற்குறிகள். தங்களுக்கு வேண்டியவை
என்னவென்பதைக் கூடத் தெரியாத வர்கள். தங்கள் முன்னோர்கள் யார்? தங்கள் நாடு
எது? தங்கள் (ஜாதி) இனம் என்ன? என்பதையே உணராதவர்கள்.
மீதியுள்ளவர்கள் 15 பேர்கள்
சுயநலக்காரர்கள் பக்கத்து வீடு தீப்பிடித்து எரிந்தால் அதை அணைக்க ஒரு
செம்பு தண்ணீர்கூடக் கொடுக்க மனம் வராதவர்கள், அதுவும் நம் வீடு
எரியும்போது அணைக்கத் தண்ணீர் வேண்டாமா? என்று கருதிக் கொண்டு, அதை
மிச்சப்படுத்திவைத்திருக்கும் அவ்வளவு புத்திசாலிகள்!
இந்த மாதிரி ஜனங்களிடத்தில் ஒரு மனிதன்
நல்ல பேர் வாங்குவதென்றால், அது உண்மையான பொதுத் தொண்டு ஆகுமா? அந்த நல்ல
பேர் பொதுத் தொண்டினால் ஏற்பட்டதாக இருக்க முடியுமா?
இவர்களில் நல்ல பேர் வாங்க அநேக பித்தலாட்
டங்களும், அயோக்கியத்தனங்களும், ஏமாற்றல்களும் செய்தாக வேண்டியிருக்கும்.
ஆதலால் தான் பொது ஜனங்களிடம் நல்ல பேர் எடுக்க முயற்சிப்பவன், பொதுத்
தொண்டுக்கு லாயக்கற்றவனாவான் என்று சொல்லி வருகிறேன்.
பாமர மக்களையும், சுயநலக்காரரையும்
திருப்திப் படுத்துவதுதான் பொது நலத் தொண்டு என்று எண்ணினால், உண்மையான
நல்ல காரியம் ஒன்றும் செய்ய முடியாது. இவர்களை லட்சியம் செய்யாமல் நமக்குச்
சரியென்று பட்டதை, தைரியமாகச் செய்து கொண்டு போனால், அவை இன்றுள்ள
மக்களால் போற்றப்படா விட்டாலும் இவர்களது பின் சந்ததியார் நன்மையடைந்து
அவர்களால் போற்றப்படத் தக்கவையாக இருக்கும்
-----------------------(குடிஅரசு பெரியார் உரை 18.12.1943)
70 ஆண்டுகளுக்குமுன்பு அய்யா தந்த பாடம்
10 வயது சிறுவனாக இருந்து, மேடையின்மீது ஏற்றப்பட்ட காலம் முதல், 80 வயது
முடிந்து 81ஆம் ஆண்டு தொடரும் இன்று வரை, எம்மை காய்ச்சிய உலைக் கூடத்தில்
அடித்து பக்குவப்படுத்தப்பட்ட கருவியாக ஆக்கியுள்ளது. மலைபோல் வரும்
எதிர்ப்பும், அவ்வப்போது துளிர்க்கும் துரோகமும், பனி போல் விலகிடும்
வகையில் பணி தொடரும் பக்குவத்தை எமக்கு அளித்துள்ளது!
தந்தை பெரியாருக்குப் பேருருவச் சிலை!
நம் வாழ்நாளில் நம்மை வாழ வைக்கும் தந்தை
கண்ட புது உலகத்திற்கு உருவம் கொடுத்து, ஆங்கே 95 அடி உயரச்சிலை - பீடம்
உட்பட 135 அடியில் உருவாக்கி, வரலாற்றுச் சின்னமாக்கிடும் திட்டத்திற்கு
வாரி வாரி வழங்கும் இயக்கக் குடும்பத்தினர், பெரியார் பற்றாளர்கள், மானம்
பாராது உழைக்கும் எமது கூட்டுப் பணியாளர் களான தோழர்கள் ஆகியவர்களுக்கு
மகிழ்ச்சி கலந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எனது சூளுரை!
ஜாதீய சக்திகள், மதவாத சக்திகள்,
மூடநம்பிக்கை வியாபாரிகள், பெண்ணடிமை போற்றும் பிற்போக்கு சக்திகளை
எதிர்த்திடும் போரில் என்றும் இளையவ ராகவே இருந்து பயணிப்போம் என்று
சூளுரையேற்று சுயமரியாதை உலகு காண வயதை மறந்து, சீரிளமைத் திறத்தோடு
போராடுவேன் என்ற உறுதியை உங்களுக் குச் சொல்கிறேன்.
உருவத்தால் நாம் பலர்; உணர்வால்,
உள்ளத்தால், உழைப்பால் நாம் ஒருவரே! என்பதால் இறுதி மூச்சடங்கும் வரை
இயக்கப் பணியில் திளைப்போம்! உழைப்போம்.
நன்றி! நன்றி!!
வாழ்க பெரியார்!
வருக அவர் காண விரும்பும் புது உலகம்!!
-----------------------கி.வீரமணி தலைவர்,திராவிடர் கழகம் 1.12.2013 சென்னை
தந்தை பெரியாருக்குப் பேருருவச் சிலை!
நம் வாழ்நாளில் நம்மை வாழ வைக்கும் தந்தை
கண்ட புது உலகத்திற்கு உருவம் கொடுத்து, ஆங்கே 95 அடி உயரச்சிலை - பீடம்
உட்பட 135 அடியில் உருவாக்கி, வரலாற்றுச் சின்னமாக்கிடும் திட்டத்திற்கு
வாரி வாரி வழங்கும் இயக்கக் குடும்பத்தினர்,
பெரியார் பற்றாளர்கள், மானம் பாராது
உழைக்கும் எமது கூட்டுப் பணியாளர் களான தோழர்கள் ஆகியவர்களுக்கு மகிழ்ச்சி
கலந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
15 comments:
தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்களை கழகத் தலைவர் சந்தித்தார்
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் இன்று (1.12.2013) காலை சென்னை கோபாலபுரத்தில் தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்களைச் சந்தித்தார். கழகம் வெளியிட்ட 14 நூல்களையும் கலைஞர் அவர்களிடம் அளித்து ஒவ்வொரு நூலின் சிறப்புகளையும் எடுத்துக் கூறினார். சிறுகனூரில் நிறுவப்பட விருக்கும் தந்தை பெரியாரின் 95 அடி உயர சிலை பற்றியும் பெரியார் உலகத்தில் இடம் பெறும் அம்சங்கள் குறித்தும் எடுத்துக் கூறினார்.
முதலாவதாக நாளை 81ஆம் பிறந்த நாள் காணும் தமிழர் தலைவர் அவர்களுக்கு முத் தமிழ் அறிஞர் சால்வை அணிவித்து வாழ்த் துக்கள்! வாழ்த்துக்கள்!! என்று கூறினார். கலைஞர் அவர்களுக்குத் தமிழர் தலைவர் சால்வை அணிவித்தார். நாளைய விழாவின் அழைப்பிதழை துணைத் தலைவர் கலி. பூங் குன்றன் கலைஞர் அவர்களிடம் அளித்தார்.
பிறந்த நாள் விழா காணும் தலைவர் பதில் அளிக்கிறார்
2.12.2013 அன்று 81ஆம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் தமிழர் தலைவர் அவர்கள் அன்று முற்பகல் வல்லத்தில் நடக்கவிருக்கும் கருத் தரங்கின் முடிவில் 20 நிமிடங்கள் பார்வையாளர்களின் கேள்வி களுக்கு விடை அளிக்கிறார்.
வேக வினாக்களும் விரைவான பதில்களும்!
இது ஒரு புதிய அம்சமாகும்.
- தலைமை நிலையம்
தமிழர் தலைவருடன் சந்திப்பு
81 ஆம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் தமிழர் தலைவர் சந்திப்பு - நாளை காலை 9 மணி முதல் 11 மணி வரை வல்லத்தில் நடைபெறும். கழகத் தலைவரை சந்திப்பவர்கள் சால்வைகளுக்குப் பதில் பெரியார் பேருருவச் சிலைக்கு நிதி வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
- கலி. பூங்குன்றன், துணைத் தலைவர், திராவிடர் கழகம்
பெரியார் நூலக வாசகர் வட்டம் 2000ஆவது நிகழ்ச்சி
கேளுங்கள் தரப்படும் - புதிய அறிமுகம் கேள்விக்குப் பெரியார் பதில் சொல்லும்முறை
தமிழர் தலைவர் எடுத்துக்காட்டு
சென்னை, டிச.1- கூட்டங்களில் கேள்விகளுக்குத் தந்தை பெரியார் பதில் சொல்லும் முறையை எடுத்துக்காட்டுடன் விளக்கினார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள்.
பெரியார் நூலக வாசகர் வட்டத்தின் 2000 - நிகழ்ச்சிகள் நிறைவு விழாவின் முதல் நாள் நிகழ்ச்சி 29.11.2013 வெள்ளி மாலை 6 மணிக்கு சென்னை பெரியார் திடலில், கலை நிகழ்ச்சிகளுடன் தொடங் கப்பட்டது.
திராவிடர் கழக மகளிர் பாசறை செய லாளர் டெய்சி மணியம்மை கலை நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தார்.
பெரியார் நூலக வாசகர் வட்ட செய லாளர் கி. சத்திய நாராயணன் வரவேற் புரை ஆற்றினார். வாசகர் வட்டம் தொடங் கப்பட்ட வரலாற்றை எடுத்துக் கூறினார்.
நிகழ்ச்சிக்குத் திராவிடர் இயக்க ஆய் வாளர் க. திருநாவுக்கரசு தலைமை வகித்தார்.
பெரியார் நூலக வாசகர் வட்டத்தில் 25 சொற்பொழிவுகள் நடத்தியதை பெருமை யாகக் கருதுவதாகக் கூறினார்.
கேளுங்கள் தரப்படும்
வாசகர்கள் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் என்கிற முறையில் நிகழ்ச்சியில் புதுமை புகுத்தப்பட்டது. இவ்வமைப்பின் புரவலர் மானமிகு கி.வீரமணி அவர்கள் தான் இந்தப் புது ஆலோசனையை வழங்கினார். அதன்படி முதல் நிகழ்ச்சியாக அறிமுகப்படுத்தப்பட்டது.
ஒவ்வொரு துறையிலும் கற்றுத் துறை போகிய அறிஞர் பெரு மக்கள் நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
ஒவ்வொருவரிடமும் வினாக்கள் கேட்கப்பட்டன. ஒவ்வொரு வினாவிற்கும் அவர்கள் விடை அளித்தனர். மகளிர் உரிமை மற்றும் சட்டம் சம்பந்தமான கேள்விகளுக்கு திராவிடர் கழகப் பிரச் சார செயலாளர் வழக்குரைஞர் அருள் மொழி பதில் அளித்தார். அறிவியல் தொடர்பான வினாக்களுக்கு இயற்பிய லாளர் அ. பாலகிருஷ்ணன் பதில் அளித் தார்; வரலாறு தொடர்பான வினாக் களுக்கு வரலாற்றுப் பேராசிரியர் அ. கருணானந்தன் விடையளித்தார். பெரியா ரியல் தொடர்பான கேள்விகளுக்கு. பெரியார் பேருரையாளர் புலவர் முனைவர் மா. நன்னன் விடையளித்தார்.
இந்தப் புதிய முறை பார்வையாளர் களைப் பெரிதும் கவர்ந்தது. பல புதிய புதிய தகவல்களை அறிய முடிந்ததாகப் பார்வையாளர்கள் கூறினர். கேள்விகளை வாசகர் வட்ட மூத்த உறுப்பினர்களுள் ஒருவரான அருணகிரி படித்தார்.
தமிழர் தலைவர் கி.வீரமணி
நிறைவாக திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.
கேளுங்கள் தரப்படும் என்ற புதிய அறிமுகம் சிறப்பாக அமைந்ததற்கு தம் பாராட்டுகளை தெரிவித்துக் கொண்டார்.
இந்த முறையைத் தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். பெரியார் நூலக வாசகர் வட்டத்தில் நடக்கும் சொற்பொழிவுகள் 20 நிமிடம் உரை 20 நிமிடம் கேள்வி பதில் பகுதியை அறிமுகப்படுத்தலாம் என்ற ஆலோசனை யையும் தந்தார். பொதுக் கூட்டங்களில் கேள்விகளுக்குப் பதில் சொல்லும் முறையை அறிமுகப்படுத்தியது திராவிடர் இயக்கமே என்று கூறிய திராவிடர் கழகத் தலைவர் அவர்கள் தந்தை பெரியார், கேள்விக்குப் பதில் சொல்லும் முறையை எடுத்துக் கூறினார்.
நியாயமான கேள்விக்கு நேர்மையான பதிலையும், குறும்புத்தனமான கேள்விக்கு அதே முறையில் பதிலும் தந்தை பெரியார் கூறியதற்கு உதாரணமாக பொன்மலை யில் தந்தை பெரியாரிடம் கேட்கப்பட்ட கேள்வியை நினைவூட்டினார்.
நேரு பிரதமராக இருந்தபோது இரயில்வே துறையில் அகில இந்திய வேலை நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டது. அது அரசியல் உள்நோக்கம் கொண்ட தாக இருந்ததால் அந்த வேலை நிறுத் தத்தைத் தந்தை பெரியார் எதிர்த்துப் பேசினார். கூட்டம் முடியும் நேரத்தில் ஒருவர் கேள்வி ஒன்றைப் பெரியாரிடம் அளித்தார். நேரு அரசாங்கத்திடம் 10 லட்சம் ரூபாய் பணம் வாங்கிக் கொண்டு தானே நீ வேலை நிறுத்தத்தை எதிர்த்துப் பேசு கிறாய்? என்பது கேள்வி. பெரியார் கோபப் படவில்லை. சிரித்துக் கொண்டே பதிலடி கொடுத்தார்.
நான் பணம் வாங்கிக் கொண்டு பேசக் கூடியவன் என்று நீங்கள் தெரிந்து கொண் டிருப்பதால், புத்திசாலியாக இருந்தால் நீங்கள் என்ன செய்திருக்க வேண்டும்?
காங்கிரஸ்காரன் பத்து லட்சம் ரூபாய் எனக்குப்பணம் கொடுத்தால் நீ 11 லட்சம் ரூபாய் எனக்கு கொடுத்து உன் பக்கம் பேசச் செய்திருக்க வேண்டாமா? என்று திருப்பிப் பதிலடி கொடுத்தார் - கேட்டவன் வாயடைத்துப் போனான்!
இதுபோன்ற நிகழ்வுகள் தந்தை பெரியார் அவர்களின் பொது வாழ்வில் ஏராளம் என்று குறிப்பிட்டார் திராவிடர் கழகத் தலைவர்.
தங்க தனலட்சுமி நன்றி கூறிட கூட்டம் இரவு 8.45 மணிக்கு நிறைவுற்றது.
நிகழ்ச்சியில் பங்கேற்ற பெருமக் களுக்கு பெரியார் நூலக வாசகர் வட் டத்தின் சார்பில் திராவிடர் கழகத் தலை வர் கி. வீரமணி அவர்கள் பயனாடைகள் அணிவித்து, நூல்களையும் அன்பளிப்பாக வழங்கினார்.
அன்பர்கள் இருவரின் கடிதங்கள்
திராவிடர் கழக தலைவரான தங்கள் 81ஆவது பிறந்த நாளையொட்டி தமிழ்நாட்டில் சாக்ரடீசா லெனினா, ரூசோவா அல்லது அந்த மூவரும் சேர்ந்த ஒரு புதிய வார்ப்படமா என்று சிந்தனையாளர்கள் எண்ணி ஆராயும் அற்புத தலைவர் தந்தை பெரியா ருக்கு 95 அடி உயர வெண்கல சிலையும் அவருடைய கருத்துக்களை இளைய சமுதாயத்திற்கு அறிமுகப் படுத்தி பெரியார் பெயரில் ஒரு உலகத்தையே நிர் மாணிக்கும் மறக்க முடியாத பணிக்காக சேர்க்கப்படும் 1000 பவுன் நிதிக்கு நான் 1 பவுன் 8 கிராம் அன்பளிப் பாக அளிப்பதை தயவு செய்து ஏற்றுக் கொள்ள வேண்டுகிறேன்.
12 நல்ல கனமான இலாக்காக்கள் என் பொறுப்பில் இருந்தாலும் எனக்கு தலைநகர் சென்னையில் ஒரு வீட்டு மனைகூடக் கிடையாது எங்கும் எந்த சொத்தும் வருமானம் வரும் வேறு தொழிலும் கிடையாது. 88 வயதை நெருங்கும் நான் எம்.எல்.ஏ., எம்.பி. பென்ஷனில் தான் நானும் என் மனைவியும் வாழ்ந்து வருகிறோம்.
- வி.வி. சுவாமிநாதன்
முன்னாள் அமைச்சர் எம்.பி., சிதம்பரம்
2.12.2013 தஞ்சையில் நடக்கும் விழா சிறப்பாக நடைபெறவும் நிறைந்த ஆரோக்கியம் நீண்ட ஆயுள் தாங்கள் பெற்று வாழ்வும் என் இதயம் நிறைந்த வாழ்த்துக்கள்!
அன்புக்கும் மிகுந்த மதிப்புக்கும் உரிய தோழர் கி.வீரமணி அவர்களுக்கு,
வணக்கம். தொண்டால் பொழுதளக்கும் என்று சொல்லுவார்களே அந்த வரிக்கு நூற்றுக்கு நூறு எடுத்துக்காட்டாக, பெரியார் ஏந்திப் பிடித்த சுயமரியாதைப் பெருஞ்சுடரைக் கடும் உழைப்பால் மேலும் பிரகாசமாக எரிய வைத்து, தமிழகத்துக்கு மட்டுமல்ல, உலகின் பல பகுதிகளுக்கும் ஒளி ஏற்றிக் கொண்டி ருக்கும் தங்களைத் தங்கள் 81ஆம் பிறந்த நாளான இன்று மனமார வாழ்த்துகிறேன்.
இன்னும் நூறாண்டு காலம் முழு நலத்தோடு வாழ்ந்து, சுயமரியாதைச் சுடரொளியை எங்கும் பரப்புங்கள். தந்தை பெரியாருக்கு 95 அடி உயர வெண்கலப் பேரு ருவச் சிலை அமைப்பது பெருமைக்குரியது. பெரியாரின் அறிவொளி மேலும் மேலும் நாடெங்கும் பரவ இந்தச் சிலை ஒரு நல் அடையாளமாக நிமிர்ந்து நிற்கும்!
அருமையான விழாவும் ஏற்பாடு செய்திருக்கிறீர்கள் பெரு மக்கள் பலர் கலந்து கொள்கிறார்கள். விழா புதிய வரலாறு சமைக்கும் நூறு பவுனுக்காக நிதி வழங்கும் சுயமரியாதை உள்ளங்கள் அனைத்தையும் வாழ்த் துகிறேன். வணங்குகிறேன். ரூ.1000 என்னுடைய எளிய பங்கையும் இத்துடன் அனுப்புகிறேன்.
- பொன்னீலன்
தலைவர், அகில இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்கம்
பேராசிரியர் சுப. திண்ணப்பன் வாழ்த்துகிறார்
பேரன்புமிக்க தமிழர் தலைவர் வீரமணி அய்யா அவர்களுக்கு வணக்கம். பிறை ஆயிரம் கண்ட பெருநாள் - முத்துவிழா நாள் ஆகிய உங்கள் 81ஆம் பிறந்த நாள் அன்று வாழ்த்துக்களை உங்களுக்குத் தெரிவிப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.
பகுத்தறிவுப் பகலவன் ஆகிய பெரியார் பெருமையையும், கொள்கைகளையும் பாரெங்கும் பரப்பும் பணி தொடர நீங்கள் உடல் நலத்துடன் பல்லாண்டு பல்லாண்டு வாழ வேண்டும் என்பதுதான் என் விழைவு. பெரியார் உலகம் காண விரும்பும் உங்கள் கனவு நனவாகட்டும்.
- சுப. திண்ணப்பன்
பேராசிரியர் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக் கழகம்
பெரியார் நூலக வாசகர் வட்டத்தின் 2000 நிகழ்ச்சிகள் நிறைவு விழா
இளைஞர்களுக்கு இது ஒரு பயிற்சிப் பாசறை தமிழர் தலைவர் புகழாரம்
சென்னை, டிச. 1- பெரியார் நூலக வாசகர் வட்டம் அமைப்பு என்பது, இளைஞர்களுக்கு அறிவுப்பூர் வமான தகவல்களை அளித்து, ஒரு பயிற்சி பாசறையாக நடைபெற்று வருகின்றது என இந்த அமைப்பு 2000 நிகழ்ச்சிகள் நிறைவு விழாவில் தமிழர் தலைவர் பேசியபோது புகழாரம் சூட்டினார்.
பெரியார் நூலக வாசகர் வட்டத்தின் 2000 நிகழ்ச்சிகள் நிறைவு விழாவின் இரண்டாம் நாள் நிகழ்வு நேற்று (30.11.2013) இரவு 7 மணியளவில் சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர். இராதா மன்றத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
மலர் வெளியிட்டு
இந்நிகழ்வில் பெரியார் நூலக வாசகர் வட்டத்தின் 2000 நிகழ்ச்சிகள் நிறைவு விழா மலரை, இதன் புரவலரும் திராவிடர் கழகத்தின் தலைவரு மான தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் வெளியிட்டு சிறப்புரையாற்றுகையில்:-
பெரியார் நூலக வாசகர் வட்டம் 2000 நிகழ்ச்சி களின் நிறைவு விழா என்பது பெருமைமிகுந்த நிகழ்ச்சி, அறிவார்ந்தவர்கள் பங்கேற்ற நிகழ்ச்சி, இந்த அமைப்பின் ஒரு சிறப்பு என்பது 2000 நிகழ்ச்சிகளை தொடர்ந்து தொய்வின்றி நடத்தும் தமிழகத்தில் பெரியார் நூலக வாசகர் வட்டம் அமைப்பு மட்டும்தான்.
இந்த அமைப்பின் மூலம் நடைபெறும் கூட்டங் களில் அறிவுபூர்வமான தலைப்புகளில் அறிஞர் பெருமக்கள் தொடர்ந்து பேசுவார்கள், இக்கூட்டத் திற்கு வரும் இளைஞர்கள் இதன் மூலம் பேசும் கலையை கற்றுக் கொள்வது இதன் சிறப்பாகும். அந்த அளவிற்கு சிறப்பான அமைப்பு பெரியார் நூலக வாசகர் வட்டம் ஆகும்.
மாணிக்க சண்முகம்
மறைவுற்ற மாணிக்க சண்முகம் அவர்களை இந்நாளில் நினைவு கூர்கிறோம். காரணம் பல நண்பர்களின் உழைப்பு இந்த அமைப்புக்கு அஸ்திவாரம். பெரியார் திடல் கதாகாலட்சேபம் நடத்தும் இடமல்ல இது, அறிவுப்பூர்வமான நிகழ்ச்சிகள் மட்டுமே நடத்தும் அமைப்பு இது. இது இளைஞர்களுக்கு இது ஒரு பயிற்சி பாசறையாகவும் செயல்பட்டு வருகிறது.
வாசகர் வட்டம் - ஏன்?
ஏன் பெரியார் நூலக வாசகர் வட்டம் தேவைப்படுகின்றது என்றால்? யாரும் பேச முடியாத கருத்துகளை பெரியார் திடலில் அமைந்துள்ள இந்த அமைப்பு கூட்டத்தில் பேசலாம். குறிப்பாக, திராவிடர் இயக்கம், பெரியார், அண்ணா, கலைஞர், காமராசர் ஆகியோரின் தொண்டுகளும், அதற்கு நீதிக்கட்சி அடித்தளமாக இருந்த முயற்சிகளின் வரலாறு இங்குதான் தெரிந்துகொள்ள முடியும்.
பல உண்மைகளை வெளிகொண்டுவரும் அமைப்புதான் பெரியார் நூலக வாசகர் வட்ட பாசறை என தமிழர் தலைவர் புகழாரம் சூட்டினார்.
இந்நிகழ்வில் அறிமுகவுரை ஆற்றிய திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன்:-
நெருக்கடி காலத்தில் பேச்சுரிமை - எழுத்துரிமை இல்லாத அந்த காலகட்டத்தில் நம்முடைய பெரியார் திடலில் ஒவ்வொரு செவ்வாய்க் கிழமையும் நூலகத்தில் கலந்து பேசுவோம். பின்னர் தமிழர் தலைவரின் ஆலோசனைப்படி வாரம் தோறும் வியாழக் கிழமை ஒரு தலைப்பில் கூட்டம் நடத்த வழிவகுத்தார்.
பெரியார் நூலக வாசகர் வட்டத்தில் பேசுவதே பெரிய வாய்ப்பு, தற்போது 2000 நிகழ்ச்சிகள் நடத்தி முடித்து கின்னஸ்சில் இடம்பெற இருக்கிறது. இதன்மூலம் திராவிடர் இயக்க சிந்தனைகள் வளர வாய்ப்பு இருந்திருக்கிறது. இளைஞர்களிடையே நல்ல சிந்தனைகள் ஏற்பட பெரியார் நூலக வாசகர் வட்டம் செயலாற்றி வருகிறது என்றார்.
இந்நிகழ்வில் கருத்துரை வழங்கிய தொழிலாளர் முன்னேற்றச் சங்கப் பேரவை பொதுச் செயலாளர் மு.சண்முகம் அவர்கள்:-
1980ஆம் ஆண்டு முதல் பெரியார் நூலக வாசகர் வட்டத்தில் பங்கேற்று வருகிறேன். தொழிலாளர்கள் சமுதாயத்திற்கு பெரியாரின் கருத்துகள் முக்கிய மானதாக கருதி, அதைப் பெற இக்கூட்டத்திற்கு வரவேண்டும் என தொழிலாளர்களிடம் சொல் வேன். இங்கு வந்தால் அறிவுத் திறன் பெறலாம். மனிதனை மனிதனாக நேசிக்க வேண்டும், தொழிலாளர்களின் உரிமைகளை பாதுகாக்க பெரியார் சொன்ன கருத்துகள் இந்த அமைப்பில் தெரிந்து கொள்ளலாம் என கருத்துரையாற்றினார்.
திராவிடர் இயக்கத்திற்கு ஆணிவேர் படிப்பகங்கள்தான்
இந்நிகழ்வில் கருத்துரை வழங்கிய திராவிடர் இயக்க தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன்:-
திராவிடர் இயக்கங்களுக்கு ஆணிவேராக இருப்பது படிப்பகங்கள்தான்! அந்த வகையில் பெரியார் நூலக வாசகர் வட்டம் கடந்த 35 ஆண்டுகளுக்கு மேலாக 2000 கூட்டங்களை நடத்தி அறிவு சிந்தனைக்கு வித்திட்டிருப்பது வியக்கத்தக்க சாதனையாகும்.
படித்துக் கொள்வதற்கும், அறிந்து கொள்வ தற்கும் கருத்துரிமை பெறுவதற்கும் சிறந்த இடம் பெரியார் நூலக வாசகர் வட்டம்தான். வாரா வாரம் நடப்பது இது வகுப்பு, இதில் நல்ல மாணவர்களை உருவாக்கிக் கொண்டு வருகிறார்கள்.
பார்ப்பனர்கள் படிப்பாளிகள்தான், இருந் தாலும் அவர்கள் அறிவாளிகள் அல்ல! யார் மக்கள் சமுதாயத்திற்கு சேர்ந்து படிக்கிறார்களோ அவர்கள்தான் அறிவாளிகள். அந்த வகையில் ராஜாஜி படிப்பாளியாக இருக்கலாம். ஆனால் தந்தை பெரியார்தான் அறிவாளியாக இருந்தார் என்றார்.
அறிவு நாணயம் இருக்கும் இடம்
இந்நிகழ்வில் கருத்துரை வழங்கிய தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.எஸ்.இளங்கோ வன்:
அறிவு நாணயம் என்பது பெரியார் நூலக வாசகர் வட்டத்தில் இருக்கும். ஏன் என்றால் இங்கு மதங்களை பற்றி பேசுவதில்லை, மதத்தை எதிர்த்து தான் பேசுவார்கள் அதனால் அறிவு நாணயம் ஏற்படும். பல்வேறு அரிய தகவல்கள் அள்ளித்தரும் கூட்டம்தான் பெரியார் நூலக வாசகர் வட்டம். திராவிட இனம் இழந்த நாகரிகம் மற்றும் கலாச் சாரத்தை மீட்டெடுப்பதற்கான கருத்துகளை பெறவும், பகுத்தறிவு மற்றும் சுயமரியாதை கருத்துக் களை பெறும் களமாக தளமாக இந்த அமைப்பு செயல்பட்டு வருகிறது என்றார்.
2000 நிகழ்வுகள் வரலாற்று சாதனை
இந்நிகழ்ச்சியில் கருத்துரை வழங்கிய, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி. அவர்கள்:-
பெரியார் நூலக வாசகர் வட்டம் 2000 நிகழ்வுகளை தொடர்ந்து நடத்தியிருப்பது வரலாற்று சாதனை. நான் கல்லூரி மாணவனாக இருந்த காலத்தில் இருந்தே இந்த கூட்டங்களில் பங்கேற்று இருக்கிறேன்.
ஒரு இயக்கம், அமைப்பு எவ்வாறு இயங்க வேண்டும் என்பதற்கு? இந்த அமைப்பே சிறந்த எடுத்துக்காட்டு. முறையான பயிற்சி, தொடர்ச்சியான நிகழ்வுகளை நடத்தி வரும் இப்படி ஒரு அமைப்பு செயல்படுவது இந்தியாவிலேயே பெரியார் நூலக வாசகர் வட்டம்தான். அந்த வகையில் பெரியார் விட்டு சென்ற பணிகளை இவ்வளவு சிறப்பாக வழிநடத்தி செல்கிறார் தமிழர் தலைவர் அவர்கள்.
ஓர் அமைப்பு எப்படி இயங்க வேண்டும் என்பதற்கு - தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் நடத்திவரும் நிறுவனங்கள் சாட்சியாகும் என்றும் மேலும் அவர் குறிப்பிட்டார்.
நிர்வாகிகளுக்கு சிறப்பு செய்யப்பட்டது
பெரியார் நூலக வாசகர் வட்டத்தின் 2000 நிகழ்ச்சிகள் நிறைவு விழா இரண்டாம் நாள் நிகழ்விற்கு வந்திருந்தவர்களை இதன் நிர்வாகி த.சுப்பிரமணியன் வரவேற்று பேசினார். இதன் தலைவர் மயிலை நா.கிருஷ்ணன் தலைமையுரை யாற்றி, கருத்துரை வழங்க வந்திருந்தவர்களுக்கு பயனாடை அணிவித்தும், பெரியார் நூல்களை வழங்கியும் சிறப்பித்தார். இணைப்புரையை கு.மனோகரன் வழங்கினார். ச.சேரன் நன்றி கூறினார்.
பொறுப்பாளர்களுக்கு தமிழர் தலைவர் சிறப்பு செய்தார்
பெரியார் நூலக வாசகர் வட்டம் சார்பில் 2000 நிகழ்ச்சிகளை நடத்திய சாதனையாளர்களான இதன் தலைவர் மயிலை நா.கிருஷ்ணன், செயல் வீரர் செயலாளர் கி.சத்தியநாராயணன், நிர்வாகிகள் த.சுப்பிரமணியன், கு.மனோகரன் ஆகியோருக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து சிறப்பித் தார். இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பெரியார் பன்னாட்டு அமைப்பின் இயக்குநர் டாக்டர் சோம.இளங்கோவன் அவர்களுக்கு சிறப்பு செய்யப்பட்டது.
சென்னை பெரியார் திடல் எம்.ஆர்.இராதா மன்றத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் பகுத்தறி வாளர் கழகப் பொதுச் செயலாளர் வீ.குமரேசன், அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் கூட்ட மைப்பின் தலைவர் கோ.கருணாநிதி, திராவிடர் கழக இளைஞரணித் துணைச் செயலாளர் தமிழ் சாக்ரடீசு, மாணவரணி துணைச் செயலாளர் மு.சென்னியப்பன், வடமாவட்டங்களின் அமைப்புச் செயலாளர் வெ.ஞானசேகரன், தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், எழுத் தாளர்கள் கயல் தினகரன், பாலகிருஷ்ணன், க.திரு நாவுக்கரசு, கழக தலைமைச் செயற்குழு உறுப்பினர் திருமகள், பார்வதி மற்றும் மோகனா பிரியா, திராவிடர் இயக்க தமிழர் பேரவை சென்னை மாவட்டச் செயலாளர் மாறன், மற்றும் திரளாக கழக தோழர் தோழியர்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.
சு.சாமியின் வாய்க் கொழுப்பு!
t
காஞ்சி மடாதிபதி மீது பொய் வழக்கு போட்டதற்குப் பொறுப்பேற்றுத் தமிழக முதல்வர் ஜெயலலிதா, காஞ்சி சங்கரமடத்துக்கு வந்து மன்னிப்புக் கேட்கவேண்டும் என்று ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரத்தில் உள்ள சங்கர மடத்துக்கு ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி சனிக்கிழமை வந்தார். அங்கு மடாதிபதி ஜெயேந்திரர் மற்றும் இளைய மடாதிபதி விஜயேந்திரர் ஆகியோரைச் சந்தித்துப் பேசினார்.
முன்னதாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது.
சங்கரராமன் கொலை வழக்கில், புதுச்சேரி சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு இந்து மதத்துக்குக் கிடைத்த வெற்றி; இந்த விவகாரத்தில் காஞ்சி மடாதி பதிகள்மீது தமிழக அரசு தொடர்ந்த வழக்கு பொய் யானது. இந்து மதத்தை இழிவுபடுத்தும் நோக்கத்தில் தொடரப்பட்ட வழக்கு. இதற்குத் தமிழக அரசு சார்பில் முதல்வர் ஜெயலலிதா பொறுப்பேற்று மடத்துக்கு நேரில் வந்து மன்னிப்புக் கேட்கவேண்டும். தீர்ப்பு இப்படித் தான் வரும் என்று 8 ஆண்டுகளுக்கு முன்பே எனக்குத் தெரியும்.
சங்கரராமன் கொலை செய்யப்பட்டது உண்மை தான். உரிய விசாரணை நடத்தி உண்மைக் குற்றவாளி களைக் கைது செய்ய வேண்டும் என்றார் அவர். அப்போது முன்னாள் அய்.ஏ.எஸ். அதிகாரி சந்திர லேகா உடன் இருந்தார்.
வழக்கு நடந்தது செஷன்ஸ் கோர்ட்டில் - அதுவும் புதுவையில், அது ஒருபுறம்!
2ஜி வழக்கில் சி.பி.அய். ஸ்பெஷல் கோர்ட் முதல் உச்சநீதிமன்றம்வரை நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை இணைக்க வழக்குத் தொடர்ந்து, தோற்றுவிட்ட சு.சாமி, சிதம்பரத்திடம் மன்னிப்புக் கேட்பாரா?
பேசுநா இரண்டுடையாய் போற்றி! போற்றி!!
முதல்வரின் முக்கிய கவனத்திற்கு...
கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மடாதிபதியும், அவரது சார்பில் ஒரு பெண்ணும் நீதிபதியிடம் லஞ்சப் பணம் கொடுக்கக் கால அவகாசம்பற்றிப் பேசியதாகச் சொல்லப்பட்ட ஓர் ஒலிப்பதிவு ஆவணம் வெளியானதை இப்போது மறுபடியும் நினைவுபடுத்திக் கொள்ளலாம்.
அது அசல் ஒலிப்பதிவுதானா, இல்லை போலியானதா என்பதை மூவரின் குரல் பதிவுகளையும் எடுத்து ஒப்பிட்டுப் பார்த்து உண்மையைக் கண்டறியும்படி காவல் துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. சில மாதங்கள் கழித்துக் காவல்துறை அளித்த பதிலின்படி, அந்த ஒலிப்பதிவு ஆவணம் கரெப்ட் ஆகிவிட்டதால் அதில் எதையும் கேட்க முடியவில்லை.
அதே ஒலிப்பதிவு துல்லியமாகக் கேட்கும் விதத்தில் இன்றும் இணையத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறது. ஆனால் நீதிமன்றம், காவல்துறையைப் பொறுத்தமட்டில் அசல் ஆவணம் கரெப்ட் ஆகி விட்டதால் அதன் உண்மைத் தன்மையைக் கண்டறியவே முடியாமல் விஷயமே காலாவதியாகிவிட்டது.
- ஞானி, இந்து, தமிழ்நாளேடு, 1.12.2013
பெரியார் பேருருவச் சிலைக்கு ரூ.25,000 நன்கொடை
சென்னை, டிச.2- திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் தி.மு.க. பொதுச் செயலாளர் பேரா சிரியர் க. அன்பழகன் அவர்களை நேற்று (1.12.2013) மாலை 6.15 மணிக்கு சந்தித்து இயக்கம் வெளி யிட்ட 14 நூல்களை வழங்கினார். பேராசிரியர் அவர்கள் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர் களுக்குச் சால்வை அணிவித்து அய்யா போல நீண்ட காலம் வாழ்க! என்று கூறி பிறந்த நாள் வாழ்த்துகளைக் கூறினார். பேரா சிரியர் அவர்களுக்குக் கழகத் தலைவர் சால்வை அணிவித்தார்.
ரூ.25,000 நன்கொடை
சிறுகனூரில் அமையவிருக்கும் தந்தை பெரியார் பேருருவச் சிலைக்குத் தமது சார்பில் பேரா சிரியர் ரூ.25 ஆயிரத்தைக் கழகத் தலைவரிடம் அளித்தார் கழகத் தலைவர் நன்றி கூறினார். கழகத் தலைவருடன் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் உடன் சென்றிருந்தார்.
பெண்களின் தர்மம்...
சாத்திரச் சம்பிரதாயங்களில் பெண்களின் தர்மம் என்ன என்று பார்த்தால் நிபந்தனையற்ற அடிமையாக அடங்கி ஒடுங்கி வாழ்பவளே மோட்சத்திற்குப் போவாள் என்று கூறப்பட்டுள்ளது. - (விடுதலை,5.4.1961)
வளர முடியும்
நமது நாட்டில் மனிதனுக்கு மனிதன் வெறுப்பும், பேதமும் உண்டாக்கவே கடவுள், மதம், ஜாதி ஏற்படுத்தப்பட்டுள்ளன. இவை ஒழிந்த இடத்தில்தான் மனிதனுக்கு அன்பு வளர முடியும். - (விடுதலை, 20.9.1968)
மாற்றுத் திறனாளிகளுக்காக திமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள்: கலைஞர் பட்டியல்
சென்னை, டிச.3- சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு அவர்களுக்காக திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட் டங்களை அக்கட்சியின் தலைவர் கலைஞர் பட்டியலிட்டுள்ளார்.
இது குறித்து திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
டிசம்பர் 3-ஆம் தேதி உலக மாற் றுத் திறனாளிகள் தினம் கொண்டா டப்படுகிறது. இந்நாளில் அவர் களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த ஆண்டு மாற் றுத் திறனாளிகள் தினத்தில் 50-க்கும் அதிகமானோர் என்னைச் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். அதுபோல இந்த ஆண்டும் சந்திக்க பலர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
ஊனமுற்றோர் என்பதை மாற்றுத் திறனாளிகள் என மாற்றி அவர்களுக் காக தனித் துறை திமுக ஆட்சியில் உருவாக்கப்பட்டது.
1974 திமுக ஆட்சியில் மாற்றுத் திறனாளிகள் நலவாழ்வுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு மூன்று சக்கர சைக்கிள்கள், சக்கர நாற் காலிகள், அலுமினியத் தாங்கிகள், கறுப்புக் கண்ணாடிகள், ஊன்று கோல்கள், காதுகேட்கும் கருவிகள் ஆகியவை இலவசமாக வழங்கப்பட்டன.
திமுக ஆட்சியில் 1-11-1974-இல் மாற்றுத் திறனாளிகளுக்கு ஓய்வூ தியம் வழங்கும் திட்டம் அறிமுகப் படுத்தப்பட்டது. 1989-90 திமுக ஆட்சியில் மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தும் தாங்கிகள், சக்கர நாற்காலிகள், மோட்டார் வண்டி கள், ஊன்றுகோல்கள் போன்ற பொருள்களுக்கான வரி முற்றிலும் நீக்கப்பட்டது.
அப்போதைய சமூக நலத்துறை அமைச்சர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு மாற்றுத் திறனாளி களுக்கு 3 சதவீத இட ஒதுக்கீட்டின் படி வேலைவாய்ப்புகள் உறுதி செய்யப்பட்டன. 2010-11 திமுக ஆட்சியில் மாற்றுத் திறனாளிகளுக் கான நிதி நான்கு மடங்காக அதாவது ரூ. 176 கோடியாக உயர்த்தப்பட்டது.
கடுமையாகப் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப் படும் மாதாந்திர பராமரிப்பு உதவித் தொகை 2006 திமுக ஆட்சியில் ரூ. 200-லிருந்து ரூ. 500 ஆக உயர்த்தப் பட்டது.
மாற்றுத் திறனாளிகள் தங்களுக் குள் திருமணம் செய்து கொண்டால் திருமண உதவித் தொகை வழங்கும் திட்டம் 2009-10 திமுக ஆட்சியில் தொடங்கப்பட்டது. 2007 திமுக ஆட்சியில் மாற்றுத் திறனாளிகள் நலவாரியம் அமைக்கப்பட்டது. இதன் மூலம் அவர்களுக்கு ஏராளமான உதவிகள் செய்யப்பட்டன.
"இளைஞன்' படத்துக்கு கதை, வசனம் எழுதியதற்காக எனக்குக் கிடைத்த ரூ. 45 லட்சத்தை முதல மைச்சர் பொது நிவாரண நிதி மூலம் மாற்றுத் திறனாளிகள் நலவாரியத் துக்கு வழங்கினேன்.
திமுக ஆட்சியில் மாற்றுத் திற னாளிகளுக்காக அறிவிக்கப்பட்ட திட்டங்களை இந்த ஆட்சியிலும் தொடர்ந்து வருகிறார்கள் என கலை ஞர் தெரிவித்துள்ளார்.
மாற்றுத் திறனாளிகளுக்காக திமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள்: கலைஞர் பட்டியல்
சென்னை, டிச.3- சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு அவர்களுக்காக திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட் டங்களை அக்கட்சியின் தலைவர் கலைஞர் பட்டியலிட்டுள்ளார்.
இது குறித்து திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
டிசம்பர் 3-ஆம் தேதி உலக மாற் றுத் திறனாளிகள் தினம் கொண்டா டப்படுகிறது. இந்நாளில் அவர் களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த ஆண்டு மாற் றுத் திறனாளிகள் தினத்தில் 50-க்கும் அதிகமானோர் என்னைச் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். அதுபோல இந்த ஆண்டும் சந்திக்க பலர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
ஊனமுற்றோர் என்பதை மாற்றுத் திறனாளிகள் என மாற்றி அவர்களுக் காக தனித் துறை திமுக ஆட்சியில் உருவாக்கப்பட்டது.
1974 திமுக ஆட்சியில் மாற்றுத் திறனாளிகள் நலவாழ்வுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு மூன்று சக்கர சைக்கிள்கள், சக்கர நாற் காலிகள், அலுமினியத் தாங்கிகள், கறுப்புக் கண்ணாடிகள், ஊன்று கோல்கள், காதுகேட்கும் கருவிகள் ஆகியவை இலவசமாக வழங்கப்பட்டன.
திமுக ஆட்சியில் 1-11-1974-இல் மாற்றுத் திறனாளிகளுக்கு ஓய்வூ தியம் வழங்கும் திட்டம் அறிமுகப் படுத்தப்பட்டது. 1989-90 திமுக ஆட்சியில் மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தும் தாங்கிகள், சக்கர நாற்காலிகள், மோட்டார் வண்டி கள், ஊன்றுகோல்கள் போன்ற பொருள்களுக்கான வரி முற்றிலும் நீக்கப்பட்டது.
அப்போதைய சமூக நலத்துறை அமைச்சர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு மாற்றுத் திறனாளி களுக்கு 3 சதவீத இட ஒதுக்கீட்டின் படி வேலைவாய்ப்புகள் உறுதி செய்யப்பட்டன. 2010-11 திமுக ஆட்சியில் மாற்றுத் திறனாளிகளுக் கான நிதி நான்கு மடங்காக அதாவது ரூ. 176 கோடியாக உயர்த்தப்பட்டது.
கடுமையாகப் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப் படும் மாதாந்திர பராமரிப்பு உதவித் தொகை 2006 திமுக ஆட்சியில் ரூ. 200-லிருந்து ரூ. 500 ஆக உயர்த்தப் பட்டது.
மாற்றுத் திறனாளிகள் தங்களுக் குள் திருமணம் செய்து கொண்டால் திருமண உதவித் தொகை வழங்கும் திட்டம் 2009-10 திமுக ஆட்சியில் தொடங்கப்பட்டது. 2007 திமுக ஆட்சியில் மாற்றுத் திறனாளிகள் நலவாரியம் அமைக்கப்பட்டது. இதன் மூலம் அவர்களுக்கு ஏராளமான உதவிகள் செய்யப்பட்டன.
"இளைஞன்' படத்துக்கு கதை, வசனம் எழுதியதற்காக எனக்குக் கிடைத்த ரூ. 45 லட்சத்தை முதல மைச்சர் பொது நிவாரண நிதி மூலம் மாற்றுத் திறனாளிகள் நலவாரியத் துக்கு வழங்கினேன்.
திமுக ஆட்சியில் மாற்றுத் திற னாளிகளுக்காக அறிவிக்கப்பட்ட திட்டங்களை இந்த ஆட்சியிலும் தொடர்ந்து வருகிறார்கள் என கலை ஞர் தெரிவித்துள்ளார்.
Post a Comment