நம்புங்கள் - சங்கரராமன் கொலைக்கும் சங்கராச்சாரியாருக்கும் சம்பந்தமே இல்லை
சங்கராச்சாரியார் ஸ்வாமிகள் விடுதலை - ஆகா எவ்வளவுப் பவ்ய மான வார்த்தைத் துண்டங்கள்.
அப்படி என்ன காரியம் செய்து விட்டு விடுதலை பெற்று வீராதி வீரராக வெளி வருகிறார்?
ஒரு கோயிலில் பட்டப்பகலில் நடைபெற்ற படுகொலை வழக்கில் சிக்கியவர்தான் திருவாளர் சோ எழுதும் (துக்ளக் 11.12.2013) அந்த சங்கராச் சாரியார் ஸ்வாமிகள்.
ஒரு காரணமும் இல்லாமலா சங்கரராமன் படு கொலையில் அந்த சங்கராச் சாரியார் ஸ்வாமிகள் கைது செய்யப்பட்டார்?
கைது செய்தவர் கலைஞர் கருணாநிதி அவர்கள்
அல்லவே! அப்படி அவர் ஆட்சியில் அந்த ஸ்வாமிகள் கைது செய்யப்பட்டு
இருந்தால், அடேயப்பா, செவ்வாய்க் கிரகத்துக்குப் போய் கல்லெடுத்து வந்து
கலைஞர் அவர்களின் மண்டையைக் குறி பார்த்து வீசி இருக்க மாட்டார்களா?
கைது செய்தது -_ அக்ரகாரத்து அம்மை
யாராயிற்றே! உப்புக் கண்டம் பறி கொடுத்த பார்ப்பனத்திபோல் அல்லவா அக்ரகாரம்
மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் பரிதவித்தது.
இப்பொழுது கூட என்ன நிலைமை? துக்ளக்கில்
சோ. ராமசாமி அய்யராக இருக்கட்டும் தினமணியில் (28.11.2013) முழுப் பக்கம்
கட்டுரையை எழுதித் தள்ளியுள்ளாரே திருவாளர் எஸ். குருமூர்த்தி அய்யராக
இருக்கட் டும், ஓரிடத்தில்கூட சங்கராச்சாரியார் ஸ்வாமிகளைக் கைது செய்த
ஆட்சி, செல்வி ஜெயலலிதா ஆட்சி என்று எந்த ஓர் இடத்திலாவது ஜாடையாகக் கூடக்
குறிப்பிடாத சாமர்த்தியத்தை என்ன சொல்ல! என்ன சொல்ல!!
அதை விட்டு விட்டார்கள்.. பின் எதைப் பிடித்துக் கொண்டார்கள் தெரியுமா?
சங்கராச்சாரியாருக்கு எதிராக என்னென்ன
விமர்சனங்கள் எழுதப்பட்டன? எப்படிப்பட்ட கிண்டலும், கேலியும் செய்யப்பட்டன
என்பதையும், திராவிடக் கொள்கை யாளர்களாலும், கட்சியினராலும், ஏன் தங்களை
மதச் சார்பற்றவர்கள் என்று கூறிக் கொள்ளும் ஊடகங்களாலும், சமுதாயப்
பிரமுகர்களாலும் காஞ்சி மடமும், சங்கராச்சாரியார்களும் தரம் தாழ்த்திச்
சித்தரிக்கப்பட்டனர் என் பதையும் இப்போது நினைத்தாலும் முகம் சுளிக்க
வைக்கின்றன என்று புலம்பித் தள்ளி இருக்கிறார். கோயங்கா வீட்டுக்
கணக்கப்பிள்ளை என்று அறிமுகமாகியுள்ள திருவாளர் எஸ். குருமூர்த்தி
அய்யர்வாள்.
குருமூர்த்தி அய்யர்வாளுக்குச் சளைத்தவரா திருவாளர் சோ ராமசாமி அய்யர்?
அவர் பங்குக்கு எதையாவது எழுதி ஆசுவாசப்பட வேண்டாமா?
இதோ சோ: சங்கராச்சாரியார் கொலையாளி
மட்டுமல்ல; மற்ற பல குற்றங்களைப் புரிந்தவர் என்று இங்கே பத்திரிகைகள்
ஒருபுறம் தீர்ப் பளித்து விட்டன. தீர்ப்பளித்தது மட்டு மல்ல, கடுமையான
நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று பல கட்சிகளும், அரசியல்வாதிகளும்,
கோருகிற ஒரே வழக்கு இது. இவை போதாது என்று கூட்டம் கூட்டமாக வக்கீல்கள்
நடவடிக்கை எடுக்க வேண்டும், ஜாமீனை மறுக்க வேண்டும் என்கிறார்கள், கோர்ட்
டுக்குப் போவதற்கு முன்பாக அவரை எப்படி வக்கீல்கள் அறையில் உட்கார
வைக்கலாம்? என்று கேட்கிறார்கள். நீதிமன்றத்தில் அந்த 70 வயதானவர்
உட்கார்ந்ததற்குக்கூட வக்கீல்களால் ஆட்சேபம் எழுப்பப்பட்டது -_ என்று
புலம்பித் தள்ளியுள்ளார்.
திராவிட இயக்கத்தவர்களையும், பத்திரிகையாளர்களையும், வக்கீல் களையும் சும்மா பொரிந்து தள்ளி யுள்ளனரே.
ஒரு கேள்விக்கு இந்தப் பூணூல் திருமேனிகள் முடிந்தால் பதில் சொல்லட்டும் பார்க்கலாம்.
கொலை செய்யப்பட்டவர் யார்? காஞ்சி
சங்கரமடத்தின் முன்னாள் மேலாளர். கொலை செய்யப்பட்ட நேரத்தில் காஞ்சி
வரதராஜப் பெருமாள் கோயில் மேலாளர்.
உத்தமப்புத்திரன் என்று உச்சிமேல் வைத்து
மாறி மாறி முத்தமழை பொழிகிறார்களே -_ அந்த பரிசுத்த யோவான் பற்றி கத்தை
கத்தையாக வண்டவாளங்களைத் தண்டவாளத்தில் ஏற்றியவர் அல்லவா -_ அந்த
சங்கரராமன். அவர் என்ன திராவிட இயக்கத்தவரா? அனுராதா ரமணன், பெண்
எழுத்தாளர் யார்? பார்ப்பனப் பெண்தானே.
பத்திரிகை நடத்துவது தொடர்பாக தன்னை சங்கர
மடத்துக்கு வரச் சொல்லி, பட்டப் பகலில் என் கையைப் பிடித்து இழுத்தார்
என்று தொலைக்காட்சியிலேயே கண்ணீரும், கம்பலையுமாகக் கதறினாரே.
என் எதிரிலேயே மைதிலி என்னும் பெண்ணுடன்
உறவு கொண்டார் என்று போட்டு உடைத்தாரே. இதற்குப் பிறகுமா பெரியவாள்?
சங்கராச்சாரியார் ஸ்வாமிகள்?
குண்டூர் காமாட்சி, குருவாயூர் வனஜா,
தாம்பரம் பேபி, திருவிடைமருதூர் சந்திரா என்று ஒரு நீண்ட பட்டியலைத்
தந்தவர் வேறு யாருமல்ல-ர் _ பிற்காலத்தில் கொலை செய்யப்பட்ட சங்கரராமன்
(புனைப் பெயர் சோமசேகர கனபாடிகள்).
ஒவ்வொரு நாளும், பிரம்ம முகூர்த்த
நேரத்தில் விடியற்காலை நாலரை மணிக்கு சிறீரங்கத்திலிருந்து உஷா என்ற பெண்
ஜெயேந்திரரோடு பேசிய கைப்பேசி உரையாடல் பிரசித்தி பெற்றதில்லையா?
இவற்றை ஒரு பக்கம் ஒதுக் கினாலும், மடத்து
சாமியார் என்ற லட்சணம் எந்தத் தரத்தில்? ஒரு நாள் நள்ளிரவில் தண்டத்தை
மடத்தில் விட்டு தலைமறைவான ரகசியம் என்ன?
அதனைத் தொடர்ந்து எப்போ தண்டத்தை
விட்டுவிட்டு, மடத்தை விட்டுவிட்டு ஓடி விட்டாரோ, அந்த க்ஷணமே
மடத்துக்கும், அவாளுக்கும் சம்பந்தம் இல்லை. உறவு அறுந்துபோய் விட்டது என்ற
மூத்த சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி திருவாய் மலர்ந்தாரே -_
அதன் பொருள் என்ன? மூத்த மடாதிபதியே ஜெயேந்திரரை தார்மீக ரீதியாக ஒழுக்கப்
பிசகானவர் என்று சொன்ன பிறகு சோ குருமூர்த்தி வகையறாக்களால் மகாஸ்வாமிகள்
என்று அழைப்பது எந்த வகையில் ஒழுக்கமானது. பண்பாடானது?
நீதிமன்றத்தில் விடு தலை ஆகிவிட்டதா லேயே அவர் குற்றமற்ற வர் என்று பொருளா?
காந்தியார் படுகொலை யில் முக்கிய
சூத்திரதாரியாரான சாவர்க்கார்கூட விடுதலை செய்யப் பட்டவர்தான். அதற்காக
அவரை நிரபராதி என்று கருத முடியுமா? தீர்ப்பு வழங்கிய நீதிபதியே அவர்
தப்பியது எப்படி என்ற ரகசியத்தை வெளியிடவில்லையா?
ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் மீதான கொலை முயற்சி வழக்கு ஒன்றும் இதே ஜெயேந்திரர்மீது இருக்கிறதே! ஆடிட்டர் பார்ப்பனர்தானே?
சங்கரராமன் கொலை வழக்குத் தொடர்பாக
புதுச்சேரி நீதிபதியின் உதவியாளரிடம் ஜெயேந்திரர் தொலைபேசியில் நடத்திய உரை
யாடல் ஊர் சிரிக்கவில்லையா? (அந்தப் பிரச்சினை கமுக்கமாகி விட்டதே!)
சம்பந்தப்பட்ட நீதிபதி வேறு இடத்திற்கு
ஏன் மாற்றப்பட்டார்? அதன் பின்னணி என்ன? விளக்கு வார்களா திருவாளர் சோவும்,
குரு மூர்த்தியும்?
படுகொலை செய்யப்பட்ட சங்கர ராமன்
மனைவியும், குடும்பத்தினரும், சங்கர மடத்தால் எப்படியெல்லாம்
அச்சுறுத்தப்பட்டனர்? (பெட்டிச் செய்தி காண்க)
குற்றமற்றவர் என்பது உண்மை யானால் ஜெயேந்திரருக்கு ஏன் இந்தக் குறுக்குப் புத்தி?
ஒரு வழக்கில் 83 பேர் பிறழ் சாட்சி, இந்த வழக்கைத் தவிர வேறு ஒன்று உண்டா?
பிறழ்சாட்சி சொன்னார்களா? சொல்ல வைக்கப்பட்டார்களா? அதற்காக மேற்கொள்ளப்பட்ட ஏற்பாட்டின் தொகைகள் என்ன?
வெளியே விட்டால் சாட்சிகளைக் கலைத்து
விடுவார்கள் என்பதற்காகத் தானே ஜாமீன் மறுக்கப்படுகிறது? இவர் விடயத்தில்
என்ன செய்திருக்க வேண்டும்? ஜாமீனை ரத்து செய்துவிட்டு சிறையில் மீண்டும்
தள்ளி இருக்க வேண்டாமா?
இத்தனை சாட்சிகளைக் கலைப் பதுவரை காவல்துறை என்ன செய்துகொண்டிருந்தது?
நியாயமாக இந்த வழக்கின்மீது தமிழ்நாடு அரசு மேல் முறையீடு செய்ய வேண்டும்; சட்டத்தின்முன் சங்கராச்சாரியாராக இருந்தாலும் சரி, சப்பாணியாக இருந்தாலும் சரி எல்லோரும் ஒன்றே!
இந்த வழக்கில் அப்பீல் செய்யக் கூடாது என்று திருவாளர் சோ பாவம் கெஞ்சுகிறார்.
வேறு எந்த வழக்கிலாவது இப்படி செய்தார்களா?
பேரறிவாளன், சாந்தன், முருகன் வழக்கில் நடந்த அநீதிபற்றி வாய் திறந்துள்ளனரா?
பார்ப்பனர்கள் மாறிவிட்டார்களா? பூணூல்
பாசம் பூண்டற்றுப் போய் விட்டதா? புத்தியைக் கொஞ்சம் செல விடுங்கள் - புரியும் புரிநூலோரின் புன்மைச் செயல்கள்!
ஜெயேந்திரர் பேரம் பேசினார்
உங்கள் கணவரை ஜெயேந்திரர்தான் கொலை செய்திருப்பார் என்று நம்புகிறீர்களா?
என் ஆத்துக்காரர் இறந்தப்போ பலரும்
அதுபற்றிப் பேசினா. வீட்ல அவர் எதையும் சொல்லாததால் எனக்கும் எதுவும்
தெரியலை. பெரியவா, சகல அதிகாரமும் படைச்சவா. அவாளப்பத்தி எப்படிச் சொல்ல
முடியும்? அந்தச் சமயத்துல போலீஸ் காட்டின கெடுபிடியைப் பார்த்து நாங்களே
மிரண்டு போயிட்டோம். போலீஸெல்லாம் அவாளோட ஆளோன்னுகூட சந்தேகப்பட்டோம்.
அவரோட பதிமூனாவது நாள் விசேஷத்தப்போ,
மகாப் பெரியவா அடக்கம் பண்ணின இடத்துக்குப் போனப்போ, என் மகனை பெரியவா
கூப்பிட்டுப் பேசினா. நீங்க எல்லாரும் குடும்பத்தோட சென்னைக்குப்
போயிடுங்க. இங்க இருந்தா போலீஸும், பத்திரிகைக்காரர்களும்
தொல்லைப்படுத்துவா. உனக்கு மாதவப் பெருமாள் கோயில்ல வேலை போட்டு தர்றேன்.
மாசா மாசம் செலவுக்கு மடத்துலிருந்து பணம் தர்றேன்னு சொல்லியிருக்கார்.
ஆத்துல அம்மா ஒத்துக்க மாட்டான்னு மகன் சொன்னதும். சங்கர்ராமன் அவனை
மாதிரியே புள்ளைய வளர்த்து வச்சிருக்கான்னு பக்கத்தில் நின்னவங்ககிட்ட
சொல்லியிருக்கார்.
ஆரம்பத்துல வந்த கணபதியும் மடத்துல பணம்
கொடுத்திருக்கா இத வாங்கிக்கோ, போலீஸோ, பத்திரிகைக் காரர்களோ வந்தா
மடத்தைப் பத்தி எதுவும் சொல்ல வேணாம்னு சொன்னார். இதையெல்லாம் அவா ஏன்
சொல்லணும்? அவர்தான் இதை செய்திருக்கணுமுன்னு போலீஸ் சொல்லுறத நம்பித்தானே
ஆகணும்!
சங்கரராமனின் மனைவி பத்மா பேட்டியிலிருந்து (குமுதம் ரிப்போர்ட்டர் 16.12.2004)
சங்கர மடத்தில் ஒழுக்கக் கேடுகள்
அமெரிக்கக் குடியரசுத் தலைவர் கிளிண்டன்
முறையற்ற பாலியல் நடத்தையில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டார். அப்போது
உலகமே பார்க்க அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. சட்டப்படி உண்மையைக்
கண்டறியும் நடவடிக்கைக்கு நீங்கள் முட்டுக்கட்டை போடப் போகிறீர்களா? உலகம்
போற்றும் நிறுவனங்கள் குற்றங்களின் கூடாரங்களாகி குழப்பத்தில் சிக்கிக்
கிடக்க வேண்டுமா? அவற்றின்மீது சட்டப்படியான நடவடிக்கை கூடாதா? தார்மீக
ரீதியான, சட்டரீதியான, தெய்வீக ரீதியான எந்தச் சட்டமாவது
சங்கராச்சாரியார்கள் கொலை செய்ய உரிமை அளித்துள்ளதா? அதன்பிறகு அவரை
விசாரிக்கக் கூடாது என்று வலியுறுத்துங்கள். தனது புனிதமான பாதையிலிருந்து
அவர் விலகி விட்டால் சங்கராச்சாரியார் என்ற உரிமையையும் இழந்து விடுகிறார்
விசாரணை நீடிக்கும் வரையில் மேலும் சர்ச்சைகளில் இருந்து மடத்தை காப்பாற்ற
அவர் தனது பதவியை துறக்க வேண்டும். தார்மீக மற்றும் ஆன்மீக சக்தியின்
அடையாளம் என சங்கராச்சாரியார்கள் கூறும் தண்டக்கோலை, அவர் வைததிருக்கவோ,
அதை ஜெயிலுக்கு எடுத்துப் போகவோ எந்த நியாயமும் இல்லை.
கேள்வி: ஜெயேந்திரரின் தவறான செயல்பாடுகள்பற்றி தாங்கள் என்ன கருதுகிறீர்கள்?
பதில்: ஜெயேந்திரரின் வளர்ச்சியைக்
கவனித்தால் அவரது தனி மனிதப் பண்புகளில் ஒரு ஒழுங்கற்ற தன்மை இருப்பது
தெரியும். அதுதான் அவரை முரட்டுத் துணிச்சலான முடிவுகளை எடுக்க
நிர்ப்பந்தித்தது. அவர் திடீர் உணர்ச்சிகளுக்கு ஆட்படுபவர் ராதாகிருஷ்ணனை
கேளுங்கள் அவர் ஒரு முக்கியமான சாட்சி.
கேள்வி: காஞ்சி மடத்தின் வரவு -_ செலவு குறித்து சங்கரராமன் எதிர்ப்பு தெரிவித்தார். அதுதான் கொலைக்கான நோக்கமா?
பதில்: மடத்தின் வரவு -_ செலவுக் கணக்குகளை தாண்டியும், அவர் மடத்தின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளைச் சுமத்தியுள்ளார்.
கேள்வி:: உதாரணமாக...?
பதில்: அங்கு ஏராளமான ஒழுக்கக்கேடான செயல்கள் நடைபெறுகின்றன.
(அரசு வழக்கறிஞர் துல்சி Rediff.Com பேட்டியில்)
-----------------------மின்சாரம் அவர்கள் 7-12-2013 “விடுதலை” ஞாயிறு மலரில் எழுதிய கட்டுரை
38 comments:
சிருங்கேரியார்?
சிருங்கேரி மடம்பற்றி ஒரு நூல் வெளி வந்துள் ளது. நூலின் பெயர் - சிருங்கேரி மடம் - ஓர் ஆய்வு; அதன் ஆசிரியர் முனைவர் இரா. இரா ஜேஸ்வரன்.
இந்த நூலைப்பற்றி கல்கி இதழ் (25.11.2013) நூல் அறிமுகம் என்ற பகுதியில் மதிப்புரை எழுதியுள்ளது.
வடக்கே பத்ரிநாத், தெற்கே சிருங்கேரி என்று குறிப்பிடப்பட் டுள்ள அதில் காஞ்சி மடம்பற்றி குறிப்பேதும் இல்லை என்பது ஒரு புறம் இருக்கட்டும்....
ஓர் அற்புதத்தை அவர் மீது ஏற்றிக் கூறுகிறது இந்நூல்.
பல ஆண்டுகளுக்கு முன்னால் ப்ளேக் என் னும் ஆட்கொல்லி நோய் பரவியபோது, சிறீ சச்சி தானந்த சிவாபிநவ நரசிம்மபாரதி சுவாமிகள் ஏதாவந்தம் ஸமயம் ஸர்வாபத் பயோசபி ரக்ஷ ணம் க்ருத்வா... என்று தொடங்கும் துர்காஸ் தவம் ஸ்லோகத்தை மனமுருகிப் பாடி நோய்ப் பரவாமல் காத்தார் என் றும் எழுதுகிறார் இந்த ஆய்வாளர்; நல்ல நூல் என்று குறிப்பிட்டுள்ளது கல்கி இதழ்.
ப்ளேக் என்னும் நோய்க்குக் காரணம் ஒரு வகைக் கிருமி. அதனைக் குணப்படுத்துவதற்கென அறிவியல் முறையில் மருத்துவம் உண்டு.
ஒரு சுலோகத்தை மன முருகிப் பாடி சங்க ராச்சாரியார் விரட்டினார் என்றால் அது எப்படி? என்ன நிரூபணம்? ஊருக் குள்ளேயே வரவிடாமல் விரட்டி விட்டாராமே?
சுலோகத்தால் இது போன்று நோய்களை விரட்ட முடியுமென்றால் கருநாடக மாநிலத்தில் உள்ள மருத்துவமனை களை யெல்லாம் இழுத்து மூடிவிடலாமே!
இந்தியா முழுமையும் இவரைச் சுற்றுப் பயணம் செய்யச் சொல்லி அல் லது காணொலி காட்சி (வீடியோ கான்பரன்ஸ்) மூலம் சுலோகத்தைச் சொல்லச் சொல்லி நோய் களை விரட்டலாம் அல் லவா!
ஆனால் இது போன்ற அற்புதங்களையெல்லாம் காஞ்சி சங்கராச்சாரியார் ஏற்றுக் கொள்வதில்லை.
கொல்கத்தாவில் சந்திரசேகரேந்திர சரஸ் வதி தங்கி இருந்தபோது மந்திர மாயாஜாலங்கள் பற்றி செய்தியாளர் ஒரு வர் கேட்ட கேள்விக்கு அவர் அளித்த பதில்:
மந்திரங்கள், மாயா ஜாலங்கள் மதத் துறை யைப் பிடித்த ஒரு சாபக்கேடு. ஆன்மீக உலகின் தூய்மைக்குக் களங்கம் விளைவிக்கும் இத்தகைய யுக்திகளும், தந்திரங்களும் சமயத் துறையின் அங்கங்க ளாகப் பாவிக்கப்படுவது பெருந் தவறு. இந்து மதம் வெறும் மாய வித்தைகள் கொண்டதல்ல (23.10.1974 செய்தி ஏடுகளில் வெளி வந்தது) என்றாரே - கல்கி என்ன சொல்லு கிறது?
- மயிலாடன்
நெல்சன் மண்டேலா மறைவிற்கு இரங்கல் தீர்மானம்!
6.12.2013 வெள்ளி மாலை, சென்னை பெரியார் திடல், நடிகவேள் எம்.ஆர். இராதா மன்றத்தில் நடைபெற்ற தமிழக மூதறிஞர் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட இரங்கல் தீர்மானம் வருமாறு: தென்னாப்பிரிக்காவில் நிறவெறியை எதிர்த்து அமைதி தவழும் முறையில் தொடர் போராட்டங்களை நடத்தி, அதன் காரணமாக 27 ஆண்டுகள் சிறையில் இருந்தவரும், அதன் விளைவாக தென்னாப்பிரிக்காவில் மனித உரிமையை நிலைநாட்டி, ஆட்சித் தலைவராக விளங்கியவரும், மனித குல வரலாற்றில் மிகச் சிறந்த மனித உரிமைப் போராளியாக நிலை பெற்றவருமான நெல்சன் மண்டேலா (வயது 95)வின் மறைவிற்கு (5.12.2013) இக்கூட்டம் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது. மனித குலத்திற்கு அவர் ஆற்றிய அரும்பெரும் தொண்டிற்கு வீர வணக்கத்தையும் செலுத்துகிறது.
(அனைவரும் எழுந்து நின்று இரு மணித்துளிகள் அமைதி காத்தனர்!)
மதச் சார்பின்மை பற்றிய மதி விளக்கம்!
நாட்டு மக்களுக்கு எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கின்றன. 77 சதவீத மக்களின், நாள் வருமானம் 20 ரூபாய் என்று கூறப்படுகிறது. சுதந்திர இந்தியாவில் குந்த குடிசைகூட இல்லாத மக்கள் 30 லட்சம் பேர் என்பது இன்னொரு புள்ளி விவரம்.
இன்னும் வறுமைக்கோடு பற்றிப் பேசிக் கொண்டு இருக்கிறோம். இதைப்பற்றியெல்லாம் பாரதீய ஜனதா கட்சிக்குக் கவலையில்லை; அவர்களின் எண்ண மெல்லாம் அடுத்த மதக்காரர்களின் வழிபாட்டுத் தலத்தை இடிப்பது, இடித்த இடத்தில் ராமன் கோயிலைக் கட்டுவது என்பதுதான்.
சென்னையில் நேற்று (6.12.2013) தமிழ்நாடு மூதறிஞர் குழுவின் சார்பில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி, உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதியும், தமிழக மூதறிஞர் குழுத் தலைவருமான நீதியரசர் திரு எஸ். மோகன், திரு மணிசங்கர அய்யர் எம்.பி., ஆகியோர் இந்தியாவில் மதச் சார்பின்மைக்கு ஏற்பட்டுள்ள அறைகூவல்கள் பற்றி சிறந்த கருத்துக்களை எடுத்துரைத்தனர்.
இந்து ராஜ்ஜியம் அமைப்போம் என்று சொல்லுகிறவர்கள் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையில் கூறப்பட்டுள்ள மதச் சார்பின்மையை எப்படிக் காப்பாற்றுவார்கள் என்ற வினாவை எழுப்பினர்.
மக்கள் தொகையில் 85 சதவீதத்தினர் இந் துக்கள் மற்ற 15 சதவீதத்தினர் வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள். இந்து ராஜ்ஜியத்தை அமைத்தால் மீதி 15 சதவீத மக்களின் நிலை என்ன? ஆட்சி அதி காரத்தில் அவர்களின் பங்களிப்பு என்ன? பாதுகாப்பு என்ன? என்ற வினாக்களும் எழுப்பப்பட்டன.
பாகிஸ்தான் பிரிந்தபோது - இந்தியாவில் உள்ள முசுலிம்கள் பாகிஸ்தான் பகுதிக்குச் செல்ல விரும்பினால் தாராளமாகச் செல்லலாம் என்ற வாய்ப்பு அளிக்கப்பட்டது. சென்றவர்கள் போக மீதி உள்ளவர்கள் இந்தியாவிலேயே தங்கி விட்டார்கள். உலகில் இந்தோனேசியாவை அடுத்து அதிக முசுலீம் மக்கள் வாழும் நாடு இந்தியா, அடுத்துதான் பாகிஸ்தான்.
சுதந்திரத்திற்குப்பின் பாகிஸ்தானுக்குச் செல்ல அவர்களுக்கு வாய்ப்பு இருந்தும், அங்கே செல்ல விரும்பாமல் இந்தியாவிலேயே தங்கினார்களே - அவர்களின் உணர்வினை மதிக்க வேண்டாமா? பாராட்ட வேண்டாமா? என்ற வினாவும் சிறப்புக் கூட்டத்தில் எழுப்பப்பட்டது.
இன்னொரு தகவல், திராவிடர் கழகத் தலைவர் அவர்களால் முன் வைக்கப்பட்டது. இந்தியாவில் வாழும் அந்த முசுலீம்கள்கூட, அரேபியாவிலிருந்து வந்தவர்கள் அல்லர்; கிறித்தவர்கள் இசுரேலிலி ருந்தும் வந்தவர்கள் அல்லர்.
இந்து மதத்தில் இருந்த அவர்களை வேற்று மதங்களுக்கு விரட்டியவர்கள் யார்? இந்து மத - வருணாசிர வெறியர்கள்தானே! கிட்டே வராதே! என்றாய், தொடதே என்றாய், தீண்டத்தகாதவன் என்றாய், தீட்டு! என்றாய். மற்ற மதக்காரர்களோ அவர்களைத் தீண்டினார்கள், கட்டியணைத்தார்கள் தழுவினார்கள்.
தங்களைச் சக மனிதர்களாக மதித்தவர்களின் மதங்களின் பக்கம் அவர்கள் சென்றார்கள். அது, அவர்கள் மீது குற்றமா? என்ற அறிவுப் பூர்வமான கருத்து எடுத்து வைக்கப்பட்டது.
தன்னை இந்து நேஷனலிஸ்ட் என்று சொல்லிக் கொள்பவர்தான் பிஜேபியின் பிரதமருக்கான வேட்பாளர் நரேந்திரமோடி.
இந்துவாக இருந்தால் தேசியவாதியாக இருக்க முடியுமா? தேசியவாதியாக இருந்தால் இந்துவாக இருக்க முடியுமா? இந்தியாவா? இந்துவா? என்ற வினாக்களை எடுத்து வைத்தார் திராவிடர் கழகத் தலைவர்.
ஒரு மதத்தைச் சேர்ந்த ஆட்சியாக இருந்தால் பாகிஸ்தானில் இப்பொழுது நடக்கும் குழப்பமும், அமைதியின்மையும்தான் மிஞ்சும். இந்தியாவில் அந்த அளவுக்கு இல்லாமல் இருப்பதற்குக் காரணம் மதச் சார்பின்மையை ஏற்றுக் கொண்டு இருப்பதுதான் என்றார் திரு மணிசங்கர அய்யர் அவர்கள்.
சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் நேற்றைய சிறப்புக் கூட்டத்தில் வெளிப்பட்ட கருத்துக்கள் நாடு தழுவிய அளவில் எடுத்துச் செல்லப்பட வேண்டியவை! மதச் சார்பற்ற சக்திகள் இணைந்து செயல்படட்டும்!
அவசியம்
மூட நம்பிக்கைகளை விடுத்துச் சிந்தனைச் செல்வத்தைப் பெருக்கி, அனைவரும் நாத்திகராக வேண்டியது அவசியம்.
(விடுதலை, 12.10.1967)
மக்கள் நீதிமன்றம்
நாடு தழுவிய லோக் அதாலத் என்னும் சிறப்பு மக்கள் நீதிமன்றம் அமைப்பின் மூலமாக நிலுவையிலுள்ள தேங்கிக்கிடக்கும் வழக்குகளை துரிதமாக முடிக்க வேண்டும் என்ற அரிய நோக்கில் உச்சநீதிமன்ற தலைமை நீதியரசர் பி.சதாசிவம் மேற்கொண்ட நடவடிக்கையை கருநாடகத் திராவிடர் கழகத்தின் சார்பில் பாராட்டி வரவேற்கிறது. வாகன விபத்துகளில் இழப்பீடு வழங்குதல், வங்கி செக் வழங்குதலில் மோசடி வழக்குகள், வங்கிகளில் கடன் பெற்றோர் வழக்குகள், சிறு குற்ற வழக்குகள், சொத்துகள் தொடர்பான சிவில் நடமுறை வழக்குகள் மற்றும் சமூக சமுதாய முக்கியத்துவம் வாய்ந்த வாழ்க் கையில் கணவன், மனைவி இருவருக்குமிடையே ஏற் படும் மன முறிவு வழக்குகள் போன்றவற்றை இரு தரப்பினரையும் நேருக்கு நேர் அழைத்து காலம் கடத்தாது பேச்சு வார்த்தைகளின் மூலமாக பேசி தீர்வு காணும் வகையில் நாட்டிலுள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் ஒரே நாளில் 39 லட்சம் வழக்குகளில் முடிவுக்கு கொண்டு வந்த நீதிமன்றங்களின் விரைவு நடவடிக்கை பாராட்டி வரவேற்கிறது.
ஆற்றலாளரும், சமூக அக்கறையாளரும் ஆட்சி அதிகாரப் பொறுப்புக்கு வந்தால்தான் குறிஞ்சிப்பூ பூப்பது போன்ற அதிசயம் நிகழும். அந்த வகையில் நாடு தழுவிய அளவில் நீதித்துறையில் அரிய செயல்புரிந்த உச்சநீதி மன்றத்தின் தலைமை நீதிதேவன் மாட்சிமைத் தாங்கிய அய்யா பி.சதாசிவம் அவர்களை கருநாடக மாநிலத் திராவிடர் கழகத்தின் சார்பில் பாராட்டி மகிழ்ந்து, இந்நிகழ்வினை வரவேற்கிறோம்.
- எம். ஜானகிராமன், தலைவர், கர்நாடக மாநில திராவிடர் கழகம்
என் வாழ்நாளில் நீக்கமற நிறைந்திருக்கும் முதல் நிகழ்ச்சி தந்தை பெரியார் - அறிஞர் அண்ணாவின் சந்திப்புத்தான்
முத்தமிழ் அறிஞர் கலைஞர்
சென்னை, டிச. 7 - என் வாழ்நாளில் நீக்கமற நிறைந்திருக்கும் நிகழ்ச்சி என்பது முதன்முதலில் தந்தை பெரியாரையும், அறிஞர் அண்ணாவையும் சந்தித்தது தான் என்றார் தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள். நியஸ் சைரன் வார இதழுக்கு கலைஞர் அவர்கள் அளித்த பேட்டி வருமாறு:-
கேள்வி :- தங்களது நீண்ட வாழ்வில் முதன்முதலாக நினைவில் பதிந்த நிகழ்ச்சி எது என்று நினைவலைகளில் தேடிச் சொல்ல முடியுமா?
கலைஞர் :- தந்தை பெரியார் அவர்களையும், பேரறிஞர் அண்ணா அவர்களையும் முதன் முதலாக நான் சந்தித்த நிகழ்ச்சிதான் என் நினைவில் என்றென்றும் நீக்கமற நிறைந் திருக்கும் நிகழ்ச்சியாகும்.
கேள்வி :- பகுத்தறிவுவாதியாக தங்களை மாற்றியது எது?
கலைஞர் :- சிறு வயதில் பள்ளிக்கூடம் போவது மட்டுமின்றி, இசைக் கல்விக்கும் என் தந்தை ஏற்பாடு செய்திருந்தார். ஆனால் இசைப் பயிற்சியில் எனக்கு நாட்டம் செல்லவில்லை. பெரிய மனிதர்கள் இருக்குமிடத்தில் சட்டை போட்டுக் கொண்டு போக முடியாது. மேல் துண்டையும் எடுத்து இடுப்பிலே கட்டிக் கொள்ள வேண்டும். செருப்பு அணிந்து கொள்வதும் தவறு. இப்படியெல்லாம் கடுமையான அடிமைத்தனம்; தெய்வீகத்தின் பெயராலும், ஜாதி, மத, சாத்திரச் சம்பிரதாயங்களின் பெயராலும் ஒரு சமுதாயத் தைக் கொடுமைக்கு ஆளாக்குவதை என் பிஞ்சு மனம் வன்மையாக எதிர்க்கக் கிளம்பியது. அதன் காரணமாகவே இசைப் பயிற்சியை வெறுத்தேன். இதுவே என்னை ஒரு பகுத்தறிவுவாதியாக அந்த வயதிலேயே மாற்றியது.
கேள்வி :- நண்பர்களுடன் கூடி கலாட்டா செய்த அனுபவம் உண்டா?
கலைஞர் :- கலாட்டா என்று கூற முடியாது. சிறு வயதிலேயே நண்பர்களுடன் இணைந்து ஈடுபட்ட சம்பவம் ஒன்றை வேண்டுமானால் கூறுகிறேன். ஏற்கனவே கூறியதுதான். கிருபானந்த வாரியார் பற்றி நான் சொல்ல வேண்டியதில்லை. ஆத்தீகப் பழம். அப்படிப் பட்டவர் நான் இளைஞனாக, பள்ளி மாணவனாக இருந்த போது அடிக்கடி திருவாரூருக்கு வருவார். திருவாரூரில் ஆலயத்தில் ஆயிரங்கால் மண்டபத்தில் அவருடைய நிகழ்ச்சி நடைபெறும். ஒரு முறை அப்பர் திருவிழாவிற்காகப் பேச வந்திருந்தார். நாங்கள் மாணவர்கள் எல்லாம் என் தலைமையிலே சென்று அங்கே அமர்ந்திருந்தோம். பேசும்போது அவர் ஜீவகாருண்யத்தைப் பற்றிப் பேசினார். அப்பர் திருநாள் என்பதால் புலால் சாப்பிடக் கூடாது, உயிர்களைக் கொல்லக்கூடாது என்று அவர் பேசிக் கொண்டு வரும்போதே, நான் எழுந்து - மனிதர்களுக்கு நீங்கள் இந்த உபதேசத்தைச் செய்கிறீர்கள். இது எல்லா உயிர்களுக்கும் பொது வானதா? என்று கேட்ட போது அவர் ஆமாம் என்று சொன்னார். சாப்பிடுவதற்காக எந்த உயிரையும் ஆண்டவன் படைக்கவில்லை, ஆடு - மாடு - கோழி போன்றவைகளையெல்லாம் சாப்பிடுவதற்காக ஆண்டவன் படைக்கவில்லை என்றார். நான் எழுந்து - சிங்கம், புலி சாப்பிடுவதற்காக ஆண்டவன் எந்த உயிரைப் படைத்தான்? என்று கேட்டேன். அவ்வளவு பெரிய அவையிலே ஒரு சின்னப் பையன் எழுந்து அப்படிக் கேட்டது தவறுதான். ஆனால் கேட்ட கேள்வியிலே இருந்த தத்துவம் தவறானது அல்ல. அதைப் புரிந்து கொண்ட வாரியார் அவர்கள், உட்கார், உட்கார் பிறகு சொல்கிறேன் என்று முதலில் சொல்லி விட்டு - பிறகு கூறும்போது, அந்த உயிர்கள் வாழ்வதற்காக எந்த உயிரையும் ஆண்டவன் படைக்கவில்லை என்று சொன்னேன், சில குறும்புக் கார பையன்கள் குறுக்கிட்டு ஏதோ கேட்டு விட் டார்கள். அவர்கள் எல்லாம் வேறு ஆட்கள் என்பது எனக்குத் தெரியும், அதனால் நான் பதில் சொல்ல வில்லை என்று சொல்லிவிட்டு, பிறகு சொன்னார்.
தாவரங்களிலே முருங்கைக்காய், கத்தரிக்காய் என்றெல்லாம் இருக்கிறது, தாவரங்களைச் சாப் பிட்டால் உயிருக்கு ஆபத்து இல்லையா என்றுகூட பையன் கேட்பான். அப்படி தாவரங்களைச் சாப் பிடுவதால் உயிர்களுக்கு ஆபத்தில்லை. ஏனென்றால் முருங்கைக்காயைச் சாப்பிடுவதால் மரம் சாகாது, கத்தரிக்காயை சாப்பிடுவதால் செடி சாகாது, ஆகவே அது பாவம் இல்லை என்றார். நான் விடவில்லை, எழுந்து அய்யா, கீரைத் தண்டை அப்படியே பிடுங்கி, அடியோடு குழம்பு வைத்துச் சாப்பிடுகிறார்களே; அப்போது செடி முழுதும் சாகவில்லையா என்று கேட்டேன். அப்போது அப்படிக் கேட்டாலும் நான் கிருபானந்த வாரியார் மீது கொண்ட ஆழமான மதிப்பை எப்போதும் மாற்றிக் கொண்டதில்லை. இப்போதும் மாற்றிக் கொள்ளவில்லை, இனியும் மாற்றிக் கொள்ளப் போவதில்லை.
இயக்க வரலாற்றில் தஞ்சைக்குள்ள சிறப்பு
தஞ்சை மாவட்ட திராவிடர் கழக தலைவர் வழக்குரைஞர் அமர்சிங்
தஞ்சை, டிச.7- தஞ்சாவூரில் வர லாற்றுச் சிறப்பு மிக்க கழக நிகழ்ச்சிகள் எல்லாம் நடைபெற்றுள்ளன. பெரியார் உலகம் நிகழ்ச்சிக்கு ஆயிரம் சவரன் தங்கம் வழங்கும் விழாவும், இங்கு நடைபெறுவது மகிழ்ச்சிக்குரியது என்றார் தஞ்சாவூர் மாவட்ட திராவிடர் கழக தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங்.
தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் 81ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா, பெரியார் பேருருவச் சிலைக்கு நிதி வழங்கும் விழாவின்போது (2.12.2013) தஞ்சாவூர் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங் அவர்கள் ஆற்றிய வரவேற்புரை:
வரலாற்றுச் சிறப்புமிக்க முப்பெரும் விழாக்களின் தலைவர் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் தலைவர் முதுபெரும் பெரியார் பெருந் தொண்டர் மானமிகு பொத்தனூர் க.சண்முகம் அவர்களே! தந்தை பெரியாரை இழந்த மானுடம் பெரும் ஆறுதல் பெறுவது இவரிடம் என்று சொல்லத்தக்க வண்ணம் - பெரியார் உலகைக் காண நாளும் உழைத்துக் கொண்டிருக்கக் கூடிய விழா நாயகர் தமிழர் தலைவர் அவர்களே! விரைவில் இங்கு வருகை தரவிருக்கும் திமுக பொருளாளர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களே! விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் - எழுச்சித் தமிழர் மானமிகு தொல்.திருமாவளவன் எம்.பி. அவர்களே! இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் தமிழ் மாநிலத் தலைவர் மதிப்பிற்குரிய பேராசிரியர் கே.எம்.காதர் மொய்தீன் அவர்களே! திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் பேராசிரியர் மானமிகு சுப.வீரபாண் டியன் அவர்களே!
தந்தை பெரியார் அவர்கள் கருத்துக் களை ஒடியா மொழியில் மொழி பெயர்த்த - பல்கலைக்கழக பேரா சிரியர், ஒடிசா மாநில பகுத் தறிவாளர் கழகத் தலைவர் தானேஸ்வர் சாகு அவர் களே! திமுகவின் மூத்த முன்னோடிகளில் ஒருவரும், மேனாள் அமைச்சருமான மானமிகு கோ.சி.மணி அவர்களே! நூல்களை வெளியிட்டுப் பெருமை சேர்க்கக்கூடிய மேனாள் மத்திய அமைச்சர் தஞ்சை மாவட்ட திமுக செயலாளர் மானமிகு எஸ்.எஸ். பழனி மாணிக்கம் அவர்களே! மூத்த வழக் குரைஞர் தஞ்சை அ.இராமமூர்த்தி அவர்களே, மேனாள் அமைச்சரும் தஞ்சை நகர திமுக செயலாளருமான மானமிகு எஸ்.என்.எம். உபயதுல்லா அவர்களே! பெரியார் பன்னாட்டு அமைப்பின் இயக்குநர் - இந்த விழா விற்காக அமெரிக்காவிலிருந்து வருகை தந்துள்ள டாக்டர் சோம.இளங்கோவன் அவர்களே! பெரியார் பன்னாட்டு மய்யத் தின் துபாய்க் கிளை துணைத் தலைவர் ஏ.எஸ்.மூர்த்தி அவர்களே! அறிமுகவுரை ஆற்றவரும் கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களே! தொடக்கவுரை ஆற்றவிருக்கும் முது பெரும் பெரியார் பெருந்தொண்டர் ராஜகிரி கோ.தங்கராஜ் அவர்களே! விழாவிற்கு முன்னிலை வகிக்கக்கூடிய கழகப் பொருளாளர் டாக்டர் பிறைநுதல் செல்வி அவர்களே! செய லவைத் தலைவர் மானமிகு சு.அறிவுக்கரசு அவர்களே! பொதுச் செயலாளர் டாக்டர் துரை.சந்திர சேகரன், வீ.அன்புராஜ், தஞ்சை இரா. செயக்குமார், உரத்தநாடு இரா.குண சேகரன் ஆகிய தோழர்களே! அமைப்புச் செயலாளர் களே, இளை ஞரணி, மாணவரணி, மகளிரணி, தொழி லாளர் அணி மற்றும் மண்டல மாவட்ட திராவிடர் கழகப் பொறுப்பாளர்களே! தலைமைச் செயற்குழு உறுப்பினர்களே! நன்றி யுரையாற்ற விருக்கும் மாவட்ட செயலாளர் வழக்குரைஞர் அருணகிரி அவர்களே, இணைப்புரை வழங்கிக் கொண்டி ருக்கும் டாக்டர் க.அன்பழகன் அவர்களே! வெள்ளம் போல கூடி யிருக்கும் தமிழ்ப் பெருமக்களே, மாநிலத்தில் பல்வேறு பகுதிகளிலிருந்து வருகை தந்திருக்கக் கூடிய கழகக் குடும்பத்தினரே!
உங்கள் அனைவருக்கும் மண்டல, மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் அன்புகனிந்த நல்வரவேற்பையும் வணக் கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தஞ்சைக்குள்ள தனிச்சிறப்பு
1957இல் தந்தை பெரியாருக்கு எடைக்கு எடை வெள்ளி ரூபாய்கள் அளிக்கப்பட்ட இதே தஞ்சையில்தான்! பெரியார் நூற்றாண்டு விழவில் 100 சவரன் தங்கத்தை இதே தஞ்சையில் தான் அளித்தோம். அது பெரியார் நூற்றாண்டு விழா பாலிடெக்னிக்காக ஒளி வீசித் திகழ்ந்து கொண்டு இருக்கின்றது.
இதே தஞ்சையில்தான் தமிழர் தலைவருக்கு எடைக்கு எடை தங்கம் அளிக்கப்பட்டது. அது இந்தியாவின் தலைநகரமான புதுடில்லியில் பெரியார் மய்யமாகப் பட்டொளி வீசிக் கொண் டிருக்கிறது.
தமிழர் தலைவர் அவர்களின் இந்த பிறந்த நாள் விழாவில் முதல் தவணையாக ஆயிரம் சவரன் தங்கத்துக்கான நிதியை அளிக்க இருக்கிறோம்.
அது பெரியார் உலகமாக - அங்கே 95 அடி உயரத்தில் தந்தை பெரியார் பேருருவச் சிலையாக நின்று உலகத் திற்கே புத்தொளிப் பரப்பும் பகுத்தறிவு பகலவனாக காட்சி அளிக்கப் போகிறார்.
பெரியார் உலகத்தை சிறுகனூரில் தமிழர் தலைவர் தலைமையில் நிறுவப் போகிறோம். அதற்கான அச்சார விழா வரலாற்றில் என்றென்றும் பதிவாகும் விழா இது.
அத்தகைய விழாவினை தஞ்சையில் நடத்திட சிறப்பான வாய்ப்பினைக் கொடுத்த தமிழர் தலைவர் அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்து, அனைவரையும் வருக வருக என மீண்டும் வரவேற்று விடைபெறுகிறேன்.
மதச்சார்பின்மைக்கு எதிரான அறை கூவல்கள்
தமிழக மூதறிஞர் குழு சார்பில் நடைபெற்ற அண்ணல் அம்பேத்கர் நினைவுநாள் சிறப்புக் கூட்டம்
மதச்சார்பின்மைக்கு எதிரான அறை கூவல்கள்
நீதியரசர் எஸ்.மோகன், மணிசங்கர் அய்யர் எம்.பி., தமிழர் தலைவர் உரையாற்றினர்
சென்னை, டிச.7- தமிழக மூதறிஞர் குழு சார்பில் நேற்று (6.12.2013) சென்னை பெரியார் திடலில், அண்ணல் அம்பேத்கர் நினைவுநாள் சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. இதில் மதச்சார்பின்மைக்கு எதிரான அறை கூவல்கள் என்ற தலைப்பில் நீதியரசர் எஸ்.மோகன், எம்.பி. மணி சங்கர்அய்யர், தமிழர் தலைவர் கி.வீரமணி ஆகியோர் உரையாற்றினர்.
தமிழக மூதறிஞர் குழுவின் சிறப்புக் கூட்டம் நேற்று (6.12.2013) சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில், அண்ணல் அம்பேத்கர் நினைவுநாள் கூட்டமாக மாலை 6.45 மணியளவில் நடைபெற்றது.
நெல்சன் மண்டேலாவிற்கு
இரங்கல் தெரிவிக்கப்பட்டது
இக்கூட்டத்தின் தொடக்கத்தில், மறைவுற்ற கறுப்பினத்தின் உரிமைப் போராளி நெல்சன் மண்டேலா அவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில், தமிழக மூதறிஞர் குழுவின் சார்பில் அதன் செயலாளர் மேனாள் மாவட்ட நீதிபதி இரா.பரஞ் ஜோதி இரங்கல் அறிக்கையை வாசித்தார். பின்னர் கூட்டத்திற்கு வந்திருந்த அனைவரும் எழுந்து நின்று இரண்டு மணித்துளிகள் அமைதி காத்தனர்.
மதச்சார்பின்மைக்கு எதிரான அறைகூவல்கள்
இதைத் தொடர்ந்து மதச்சார்பின்மைக்கு எதிரான அறைகூவல்கள் என்ற தலைப்பில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் தமிழக மூதறிஞர் குழுவின் துணைத் தலைவர் வரியியல் அறிஞர் எஸ்.ராஜரத்தினம் அவர்கள் வந்திருந்தவர்களை வரவேற்றுப் பேசினார். தமிழக மூதறிஞர் குழுவின் தலைவரும், மேனாள் உச்சநீதிமன்ற நீதிபதியுமான எஸ்.மோகன் அவர்கள் உரையாற்றுகையில், இந்தியா ஒரு சிறந்த மதச்சார்பற்ற நாடு என்ற பெயர் வரவேண்டும் என்றால் தந்தை பெரியார் அவர் களின் கருத்திற்கு ஏற்ப செயல்பட வேண்டும் என்றார்.
அதைத் தொடர்ந்து பேசிய, காங்கிரஸ் கட்சி யைச் சேர்ந்த திரு.மணி சங்கர் அய்யர் எம்.பி., அவர்கள், நாட்டின் அடையாளத்துக்கும், மதச்சார்பின்மைக்கும் தற்போது ஆபத்து ஏற் பட்டுள்ளதை பல்வேறு ஆதாரங்களுடன் எடுத்து ரைத்தார்.
நிறைவுரையாக திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் உரை நிகழ்த்தினார். தமிழக மூதறிஞர் குழுவின் செயலாளர் மேனாள் மாவட்ட நீதிபதி இரா.பரஞ்ஜோதி நன்றி கூறினார்.
மணிசங்கர் அய்யர் எம்.பி.க்கு
சிறப்பு செய்யப்பட்டது
இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பாக உரை யாற்றிய திரு. மணிசங்கர் அய்யர் எம்.பி., அவர் களுக்கு,தமிழக மூதறிஞர் குழுவின் சார்பில் அதன் தலைவர் நீதியரசர் எஸ்.மோகன், தமிழர் தலைவர் கி.வீரமணி ஆகியோர் சால்வை அணிவித்து பெரியார் நூல்களை வழங்கி சிறப்பித்தனர்.
தமிழர் தலைவருக்கு மணிசங்கர் அய்யர் சிறப்பு
81ஆம் ஆண்டு பிறந்தநாள் காணும் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர் களுக்கு, திரு. மணிசங்கர் அய்யர் எம்.பி., அவர்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து பயனாடை அணிவித்து, சிறப்பித்தார்.
இக்கூட்டத்திற்கு திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் நல அமைப்பின் தலைவர் கோ.கருணாநிதி, பெரியார் பன்னாட்டு அமைப்பின் இயக்குநர் டாக்டர் சோம.இளங்கோவன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் உ.பலராமன் (காங்கிரஸ்), தென்சென்னை மாவட்டக் கழகத் தலைவர் இரா.வில்வ நாதன், வழக்குரைஞர் வீரமர்த்தினி, முன்னாள் துணை வேந்தர் முத்துகுமரன் மற்றும் கல்வியாளர்கள், கழகத் தோழர் - தோழியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
யார் பொய்யர்?
ஸ்ரீமான் சத்தியமூர்த்தி அய்யர், ஸ்ரீமான் சாமி வெங்கடாசலம் செட்டியார் வீட்டில், ஸ்ரீமதி முத்துலட்சுமி அம்மாளின் தேவதாசிகளின் தீர்மானம் விஷயமாய்ப் பேசிக் கொண் டிக்கும்போது, கிறிஸ்தவ கன்னியாஸ்திரீகளைப் பற்றியும், மற்றும் பல விஷயங்களைப்பற்றியும் பேசிய பேச்சுக்களை இல்லை என்று மறுத்து ஒரு அறிக்கை வெளியிட்டார். தமிழ்நாடு பத்திரிகை, அய்யர் சொன்னதாக குறிப்பிட்ட விஷயங்களை ருஜுப்படுத்து வதாக பந்தயம் கூறிற்று. அய்யர் அடங்கிவிட்டார். ஸ்ரீமதி முத்து லட்சுமி அம்மாளும், அய்யர் கிறிஸ்தவ கன்னியாஸ்திரீ களைப்பற்றி பேசியதும், மற்றும் தமிழ்நாடு பத்திரிகையில் கண்ட விஷயங்களும் உண்மை யென்று ஒரு அறிக்கை வெளியிட்டார்கள். அதற்கு ஸ்ரீமான் சாமி வெங்கடாசலம் அவர்களும் மேலொப்பம் இட்டிருக்கிறார். இந்நிலையில், தமிழ்நாடு நிருபர், ஸ்ரீமதி முத்துலட்சுமி அம்மாள், ஸ்ரீமான் சாமி வெங்கடாசலம் செட்டியார் ஆகிய இம்மூவர்கள் சொல்வது பொய்யா அல்லது ஸ்ரீமான் சத்தியமூர்த்தி அய்யர் சொல்வது பொய்யா என்பதை உணர பொது ஜனங்கள் ஆவலாயிருப்பார்கள்.
ஸ்ரீமான் சத்தியமூர்த்தி அய்யர் இதற்குமுன் எத்தனையோ தடவைகளில் பொய்யர் பட்டம் வாங்கி தேறியிருக்கின்றார். அல்லாமலும், தமிழ்நாடு பந்தயம் கூறினபிறகும், ஸ்ரீமதி முத்துலட்சுமி அம்மாள் அய்யரின் யோக்கியதையை வெளிப் படுத்திய பிறகும், ஸ்ரீமான் சத்தியமூர்த்தி உலர்ந்த மாமிசம் திருட்டுக் கொடுத்த பார்ப்பனத்தி போல் பேசாமல் இருப்பதால், அய்யர்தான் பேசிவிட்டு இப்போது இல்லை என்று சொல்லுகின்றார் என்பதில் யாருக்கும் சந்தேகமிருக்க நியாயமில்லை. இம்மாதிரி அடிக்கடி பேசிவிட்டு இல்லை என்று சொல்லிக் கொண்டே வருவதைவிட கண்ணியமாய் மன்னிப்பு கேட்டுக் கொண்டிருந்தால் அது மிகுதியும் நன்மையாயிருந்திருக்கும். இப்போது பேசிய குற்றமொன்று, அதை மறுத்து இல்லையென்று பொய் சொல்லும் குற்றம் ஒன்று. ஆக இரண்டு குற்றத்தைச் சுமந்திருக்கிறார். இவர்தான் இந்திய அரசியல் கட்சியின் தலைவருள் பிரதானமானவராம். கவர்னருக்கும், சட்டமெம்பருக்கும் மந்திரிக்கும் அந்தரங்க விசுவாசியாம்.
- குடிஅரசு - கட்டுரை - 20-11-1927
பார்ப்பன சூழ்ச்சி
நீல் சத்தியாக்கிரக விஷயமாய் பார்ப்பனர்கள், நாட்டில் தங்களுக்கும், இக்காரியத்திற்கும் ஆதரவு இல்லையென்பது தெரிந்தே ஸ்ரீமான் காந்தியவர்கள் பெயரை வைத்துக்கொண்டு வெறும் ஆர்ப்பாட்டம் செய்து வருகிறார்கள். இது காங்கிரசின் போது வெளிநாட்டிலிருந்து வரும் ஜனங்களை ஏமாற்றுவதற்காகச் செய்யும் சூழ்ச்சியென்பதோடு, இம்மாதிரி அனாவசியமான காரியங்களில் சத்தியாக்கிரகம் செய்து சத்தியாக்கிரகம் என்பதின் யோக்கியதையைக் கெடுத்துவிட்டால், நாளைக்குப் பார்ப்பனக் கொடுமைகள் நீங்கச் செய்யப்படும் சுயமரியாதை சத்தியாக் கிரகத்திற்கும், ஜனங்களின் ஆதரவு இல்லாமல் போகட்டும் என்கின்ற கெட்ட எண்ணத்தின் பேரில் செய்யும் காரியமென்றுமே சொல்லுவோம். இனியும், எத்தனை நாளைக்குத் தான் இப்படி இவர்கள் சூழ்ச்சியும், ஏமாற்றமும் செய்யக் கூடுமென்பதையும், இக்கூட்டத்திற்கு எத்தனை நாளைக்குத்தான் ஸ்ரீமான் காந்தி உதவிசெய்து வருவார் என்பதையும் பொறுமையோடு பார்த்து வருவோமாக.
- குடிஅரசு - கட்டுரை - 13.11.1927
பார்ப்பன சூழ்ச்சி
நீல் சத்தியாக்கிரக விஷயமாய் பார்ப்பனர்கள், நாட்டில் தங்களுக்கும், இக்காரியத்திற்கும் ஆதரவு இல்லையென்பது தெரிந்தே ஸ்ரீமான் காந்தியவர்கள் பெயரை வைத்துக்கொண்டு வெறும் ஆர்ப்பாட்டம் செய்து வருகிறார்கள். இது காங்கிரசின் போது வெளிநாட்டிலிருந்து வரும் ஜனங்களை ஏமாற்றுவதற்காகச் செய்யும் சூழ்ச்சியென்பதோடு, இம்மாதிரி அனாவசியமான காரியங்களில் சத்தியாக்கிரகம் செய்து சத்தியாக்கிரகம் என்பதின் யோக்கியதையைக் கெடுத்துவிட்டால், நாளைக்குப் பார்ப்பனக் கொடுமைகள் நீங்கச் செய்யப்படும் சுயமரியாதை சத்தியாக் கிரகத்திற்கும், ஜனங்களின் ஆதரவு இல்லாமல் போகட்டும் என்கின்ற கெட்ட எண்ணத்தின் பேரில் செய்யும் காரியமென்றுமே சொல்லுவோம். இனியும், எத்தனை நாளைக்குத் தான் இப்படி இவர்கள் சூழ்ச்சியும், ஏமாற்றமும் செய்யக் கூடுமென்பதையும், இக்கூட்டத்திற்கு எத்தனை நாளைக்குத்தான் ஸ்ரீமான் காந்தி உதவிசெய்து வருவார் என்பதையும் பொறுமையோடு பார்த்து வருவோமாக.
- குடிஅரசு - கட்டுரை - 13.11.1927
சந்தேகம் உறுதியாய்விட்டது
ஸ்ரீமதிகள் துரைக்கண்ணு அம்மாள், பார்வதி அம்மாள் ஆகிய இரு பெண்கள் பேரால், பொட்டுக்கட்டும் வழக்கத்தை நிறுத்துவதால் தங்கள் சமூகத்திற்குக் கேடு வரும் என்று ஸ்ரீமதி முத்துலட்சுமி அம்மாள் அவர்களது மசோதாவுக்கு எதிர்ப்பிரச்சாரம் செய்ய வந்த காரியங்களை நாம் பார்த்த உடனேயே, இக்காரியங்கள் அவர்களால் நடைபெறுவதல்ல என்றும் இதற்கு பின்னால் ஏதோ ஒரு கூட்டம் ஆள்கள் இருந்து செய்திருக்க வேண்டும் என்றும் சந்தேகப்பட்டோம். அப்படி சந்தேகப்பட்டது சரி என்று மெய்ப்பிக்க இப்போது ஆதாரங்கள் கிடைத்துவிட்டன. என்னவென்றால், சுயராஜ்ஜிய கட்சி உயிர் நிலையான ஸ்ரீமான் சத்திய மூர்த்தி அவர்கள் சுயராஜ்ஜியக் கட்சி தலைவர் வீட்டில் பேசியபோது குறிப்பிட்ட வாசகங்களிலிருந்தே ஸ்ரீமான் சத்தியமூர்த்தி கூட்டத்தாருடைய தூண்டுதலாகத் தான் இருக்க வேண்டும் என்று நம்ப இடமேற்படுகிறது. ஆதலால் இம்மாதிரி ஆட்சேபங்களைப் பொது ஜனங்கள் லட்சியம் செய்ய மாட்டார்கள் என்றே எண்ணுகின்றோம்.
- குடிஅரசு - கட்டுரை - 13.11.1927
ராயல் கமிஷனும் சுயமரியாதையும்
ஜஸ்டிஸ் கட்சித் தலைவர்களுக்கு ராயல் கமிஷன் விஷயத்தில் அவர்கள் நடந்துகொள்ள வேண்டிய தன்மையைப்பற்றி ஸ்ரீமான் ஈ.வெ.ராமசாமி நாயக்கர் தனது அபிப்பிராயமாக தெரிவித்துக் கொண்டிருக்கும் செய்தியாவது:-
பிரிட்டிஷாரின் ஏகபோக ஆதிக்கத்தை இந்தியர்கள் ஒப்புக்கொண்டு இருக்கிற வரையில், இம்மாதிரியான ராயல் கமிஷன்களில் இந்தியர்களுக்குப் பதவி அளிக்காதது, நம்மவர்களின் சுயமரியாதையை பாதிக்கக் கூடியதாயிருக்கின்றது என்று எண்ணுவதில் கொஞ்சமாவது அர்த்தமில்லை.
பிரிட்டிஷ் ஆதிக்கத்தின் ஓர் அம்சமாகவே, இந்த கமிஷன் நியமிக்கப் பட்டிருக்கின்றது. இந்தியரின் சுயமரியாதையை அடியோடு அழித்ததான பஞ்சாப் அநீதிபோன்ற காரியங் களில் ஒன்று சேர்ந்து பரிகாரம் தேட சம்மதிக் காத ஒரு கூட்டத்தார், இப்போது பகிஷ்காரத் தைப் பற்றி வீண் கூப்பாடு போடுவது கேலிக் கிடமானதென்றே சொல்லவேண்டும்.
உண்மையில் ராயல் கமிஷனை பகிஷ் கரிப்பது என்பது, எந்த அரசாங்கத்தாரால் இந்த ராயல் கமிஷன் ஏற்படுத்தப்பட்டதோ, அதே அரசாங்கத்தின் அம்சங்களான சட்டசபை களையும், மந்திரி முதலிய பதவிகளையும் உத்தியோகங்களையும் பகிஷ்கரிக்கத்தக்க கொள்கையுடையதாயிருக்க வேண்டும். அப்படிக் கில்லாமல், ஒரு விதமான தியாகத்திற்கும் கட்டுப்பட வேண்டிய அவசியமில்லாத தான, வெறும் வார்த்தையளவில் பகிஷ்காரம் என்று கூச்சல் போடுவதானது சுயமரியாதை உள்ள தேசத்தார் என்பவர்களுக்குக் கொஞ்சமும் அழகாகாது. உண்மையிலேயே, முழு விடுதலைக்கும் நம்முடைய நாட்டார் தயாராயிருக்கின்றார்கள் என்கின்ற நிலைமை ஏற்பட்டு விடுமானால், அந்தக் காலத்தில் பார்ப்பனரல்லாதாரே முன்னணியில் நின்று விடுதலைப்போர் புரிவார்கள் என்பதில் சிறிதும் சந்தேகப்பட வேண்டியதில்லை.
ராஜீய விஷயங்களில் சாத்தியமானதும், காரியத்தில் நடக்கக் கூடியதுமான துறையில் பாடுபடும் ஜஸ்டிஸ் கட்சிக்காரர்கள், வேண்டு மென்றே பொது ஜனங்களை ஏமாற்றுவதற்காக மற்ற கட்சியார் செய்யும் சூழ்ச்சிகளில் கலந்து கொள்வது என்பது அறிவுடைமையாகாது.
கோயமுத்தூரில் கூடிய தென்னிந்திய நலவுரிமைச்சங்க மகாநாட்டில் மாகாண சுயாட்சி கிடைக்கும் வரையிலும் பதவிகளை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று தீர்மானித்திருக் கிறார்கள்.
ஆதலால், முழு சுதந்திரமும் கேட்கக் கூடியகாலம் வரும் வரை ஜஸ்டிஸ் கட்சிக் காரர்கள் மாகாண சுயாட்சிக்காகவும் நம்முடைய நாட்டிலுள்ள எல்லா வகுப்பாளர் களுக்கும் சமமான நீதியும், பங்கும் கிடைக்கும் படியாகவும், ஒரு வகுப்பார் மற்ற வகுப்பாரைவிட உயர்ந்தவர்கள் என்று கொண்டாடும் பாத்தி யதையை நிராகரிக்கவும் ஒரே நிலையாக இருந்து பாடுபட்டு வரவேண்டியவர்களாவார்கள், ஜஸ்டிஸ் கட்சியாரின் வெளிப்படையான இந்தக் கொள்கையை நம்முடைய தேசமக்களிடமும், மற்றும் அந்நிய நாட்டாரிடமும், அவர்களால் ஏற்படுத்தப்படும் சபைகளின் முன்னிலையிலும் ஸ்தாபிக்க கடமைப்பட்டிருக்கிறோம்.
கமிஷன் அங்கத்தினர்களில் இந்திய அங்கத்தினர்கள் ஒருவரும் இல்லாதது ஒரு கெடுதியாகக் கொள்ள வேண்டிய அவசிய மில்லை, கவர்ன்மெண்டார் ஒரு சமயம் இந்தியர் களில் யாரையாவது நியமிப்பதானால் இப்போ தைய நிலைமையில், நியமனம் பெறக்கூடிய இந்தியர்கள் பொதுவாக பிராமணரல்லா தாருக்கு தீங்கிழைக்கக் கூடியவர்களாகத்தான் இருக்க முடியும்.
தவிர, ஆதியில் ரவுலட் கமிட்டியில் இந்தியர் ஒரு அங்கத்தினராயிருந்துங் கூட அக்கமிட்டி யின் சிபாரிசானது இந்திய மக்களை அரசாங் கத்தோடு ஒத்துழையாமை செய்யவேண்டிய அளவுக்குக் கொண்டு வந்து விட்டுவிட்டது. பொதுவாக யோசிக்குமிடத்து கமிஷனில் அங்கம் பெறக் கூடியவர்கள் ஏகபோக உரிமையாளர் களான பார்ப்பனர்களாகவே இருந்து விடக்கூடும் என்கிறதை நினைக்கும்போது அக்கமிஷனில் இந்தியர்களை நியமிக்காதது ஒரு பாக்கிய மென்றே சொல்லவேண்டும்.
- குடிஅரசு -கட்டுரை - 27.11.1927
பாலியல் புகார்: நீதிபதி கங்குலிக்கு தேசிய மகளிர் ஆணையம் தாக்கீது
புதுடில்லி, டிச.7- சட்ட பயிற்சி மாணவி கூறிய பாலியல் புகார் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.கே. கங்குலிக்கு தேசிய மகளிர் ஆணையம் அதிரடியாக தாக்கீது அனுப்பியுள்ளது. சட்ட பயிற்சி மாணவி ஒருவர் ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தமக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தார் என்று தமது வலைபக்கத்தில் குறிப்பிட்டிருந்தார். இதைத் தொடர்ந்து உச்சநீதிமன்றம் ஒரு குழுவை அமைத்து விசாரிக்க உத்தரவிட்டது. இந்த விசாரணையில் பாலியல் தொந்தரவு கொடுத்தவர் நீதிபதி ஏ.கே. கங்குலி என தெரியவந்தது. இதன் பின்னர் உச்சநீதிமன்றத்தில் அக்குழு விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தது. இதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் வெளியிட்ட அறிக்கை யில், கங்குலி மீதான புகாருக்கு முகாந்திரம் இருக்கிறது. ஆனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க இயலாது என்று கூறியிருந்தார். இந்நிலையில் ஏ.கே. கங்குலி மீதான புகாரை தேசிய மகளிர் ஆணையம் தாமாகவே முன்வந்து இன்று விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது. மேலும் தம் மீதான புகார் குறித்து ஏ.கே. கங்குலி விளக்கம் அளிக்க வேண்டும் என்று தேசிய மகளிர் ஆணையம் அவருக்கு தாக்கீது அனுப்பி வைத்திருக்கிறது. அத்துடன் சட்ட பயிற்சி மாணவியின் புகார் மீது என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்று கேட்டு டில்லி காவல் துறையினருக்கும் மகளிர் ஆணையம் தாக்கீது அனுப்பி வைத்திருக்கிறது.
கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்
இஃது உலகநீதிச் செய்யுள்களில் ஒன்று. இதன் பொருள் வருமாறு:-
கோயில் - = அரசியல்; இல்லா -= இல்லாத ஒழுங்குமுறையமையாத ஊரில் = ஊரிலே குடியிருக்க வேண்டாம் =- குடியிருக்கக் கூடாது என்பது பொருள்
கோயில் என்பது அரசன்; அரண்மனை, அரசியல் என்று பொருள் தருவதை பழம் தமிழ் நூற்கள் நன்றாக விளக்கும்.
"மறத்துறை விளங்கிய மன்னவன் கோயிலும்
அறத்துறை விளங்கிய அந்தணர் பள்ளியும்"
என்ற சிலப்பதிகார அடிகளை நோக்குக!
அரசியல் அமைந்த இடம் என்றால் என்ன?
அது அமையாத இடம் என்றால் என்ன என்பதை ஆராய வேண்டும்.
பண்டைத் தமிழ்நாட்டில் துறவிகள் ஒழுங்குமுறை வகுத்தார்கள். அதைத் தான் மன்னன் தன் ஆட்சிமுறைக்கு அடிப்படையாக வைத்து ஆண்டு வந்தான்.
இவ்வாறு ஒழுங்கு முறை வகுக்கபடாத காலம் ஒன்றிருந்திருக்கும். அக்காலத்து வாழ்ந்த மக்கள் காட்டுமிராண்டிகளாக இருந்திருப்பர். அதைத்தான் அரசியல் அற்ற இடம் என்பது. அத்தகைய இடத்தில் மக்களின் வாழ்வு நல்லபடி நடக்கவே முடியாது. ஆதலால்தான் கோயில் இல்லா ஊரில் குடியிருக்கவேண்டாம் என்றருளிச் செய்யப்பட்டது.
_- பாரதிதாசன் கட்டுரை, குயில், 18-.10.-1960
இப்படி ஒரு அர்த்தத்தில் சொன்ன உலகநீதி செய்யுளை நம்ம ஆட்கள் கடவுளை, மதத்தை பரப்பப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்...ஏதும் அறியாத அப்பாவி மக்கள் கடவுள் என்று சொன்னாலே கண்ணை மூடிக் கொண்டு நம்புவதால் இப்படி எத்தனை புளுகுகள் புராணத்தில், வரலாற்றில் புதைத்து வைத்திருக்கிறார்களோ?
சிந்தியுங்கள் தோழர்களே!
- க. பரணீதரன்
ஓர் வயது முதிர்ந்த நாத்திகனின் கருத்துகள்
தந்தை பெரியாரின் ஆதாரபூர்வ மான கருத்தாழம் மிக்க நாத்திக, பகுத் தறிவு கொள்கைகளை 63 ஆண்டு களாக கேட்டு, படித்து, அறிவுபெற்ற நான் சில கருத்துகளை எழுத விழை கிறேன். தந்தை பெரியாரின் சொற் பொழிவுகள் குடி அரசு, உண்மை, விடுதலை ஆகிய இதழ்களில் வந் துள்ளதை பல தலைப்புகளில் நூல் களாக, சுயமரியாதைப் பிரச்சார நிறு வனம் குறைந்த விலையில் வெளியிட் டுள்ளதைப் படித்து லட்சக்கணக் கானோர் தெளிவுபெற்றுள்ளதை யாவரும் அறிவர்.
தந்தை பெரியாருக்குப் பிறகு அவ ரது மனிதாபிமான கொள்கைகளைத் தொடர்ந்து பட்டிதொட்டிகளிலும், திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் அவர்கள் தனது உடல் நலத்தையும் கவனியாது சூறாவளிப் பிரச்சாரம் செய்துவருகிறார்கள்.
தந்தை பெரியார் அவர்கள் கடவுள், மதம், முதலியவை பற்றிக்கூறிய பல கருத்துகள் ஆங்கில மொழியிலும் மொழி பெயர்க்கப்பட்டு இருப்பதால், வடநாட்டிலும், அமெரிக்கா போன்ற வெளிநாடுகளிலும் உள்ளவர்கள் தந்தை பெரியாரின் கொள்கைகளை அறிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் அவர்தம் கொள்கைகளை ஆய்வு செய்து, வெளிநாட்டுப் பல் கலைக்கழகங்களில் டாக்டர் பட்டங் கள் பெற்ற இந்தியரும், வெளி நாட்டவரும் உண்டு. இத்தொண்டு களினால் பொதுச் செயலாளர், தந்தை பெரியாரின் சிறந்த மனிதாபிமானக் கொள்கைகளை உலகம் பூராவும் பரப்பிவருவது மிகவும் போற்றத்தக்கது.
கழகப் பொதுச்செயலாளர் அவர்கள் தம் சொற்பொழிவுகளில் தந்தை பெரியாரின் கொள்கைகளுக்கு விஞ் ஞான ரீதியாக அளிக்கும் விளக்கங்கள், ஆழ்ந்து சிந்திக்கத் தூண்டும் தனித் தன்மை வாய்ந்தவை. அவர்கள் (பொதுச்செயலாளர்) மனிதாபிமான பகுத்தறிவு, நாத்திகம், பார்ப்பனியக் கலாச்சார ஆதிக்கம், இன்றைய அரசியல், சமுதாய நீதி, சட்ட நுணுக் கங்கள் ஆகிய எந்த பொருள்களில் சொற்பொழிவு ஆற்றினாலும் அவை, தக்க ஆதாரத்துடன் கேட்போருக்கு அலுப்பு ஏற்படாத வகையில், வார்த்தைகளை அளந்து பேசுவதில் அவருக்கு அவரே உதாரணம்.
இந்த வகையில் எடுத்துக்காட்டாகச் சொல்ல வேண்டுமானால், தந்தை பெரி யார்-சேலம் கல்லூரியில் சொற்பொழி வாற்றிய தத்துவ விளக்கங்கள் என்ற இந்த அரிய நூலின் ஆழ்ந்த கருத் துக்களைப்பற்றி பொதுச்செயலாளர் ஆற்றிய உரைகள், விளக்கங்கள் ஆகியவை. பொதுச்செயலாளரின் புலமை மிக்க சிறப்புகளை எடுத்துக் காட்டுவதாகும்.
அண்ணா பல்கலைக்கழகத்தின் இன்றைய துணைவேந்தர் டாக்டர் அனந்த கிருட்டிணன் அவர்கள் உலகில் பல பல்கலைக்கழகங்களின் பட்டங்களைப் பெற்ற ஓர் சிறந்த அறிஞர், அவர் சில மாதங்களுக்கு முன்னர் பெரியார் திடலில் நடந்த ஒரு சிறப்புக்கூட்டத்தில் சொற்பொழி வாற்றியபோது, அவருக்கு முன்னதாகப் பேசிய பொதுச்செயலாளரின் கருத் துக்களைப் புகழ்ந்து, பொதுச் செயலாளரின் பேச்சுக்களை எப்போதும் கேட்டுக்கொண்டே இருக்கலாம் என்று பெருமிதத்தோடு சொன்னார்கள் என்றால், வேறு விளக்கங்கள் தேவையில்லை. நீதி அரசர் அறிஞர் வேணுகோபால் அவர்களும், பொதுச்செயலாளரின் மேன்மையான சொற்பொழிவுகளைப் பற்றிப் பல சமயங்களில் புகழ்ந்துள் ளார்கள்.
ஆகவே, குறைந்தது சென்ற பத்து ஆண்டுகளாக, விடுதலை, உண்மை, போன்ற இதழ்களில் வெளியிடப்பட் டுள்ள பொதுச்செயலாளரின் சொற் பொழிவுகளையும், அறிக்கைகளையும், தலையங்கங்களையும், இவ்விதழ்களி லிருந்து மேற்படி பக்கங்களை எடுத்து, ஓர் ஆல்பமாக பைண்டு செய்து வைத்தால் அவைகளிலிருந்து நாத்திகம் மனிதநேயம், சமுதாய நீதி - அவை களுக்கெதிரான பார்ப்பனிய நூல்களின், தேன் கலந்த நச்சுகளை யாவரும் புரிந்து கொண்டு, அவைகளை வெறுத்து ஒதுக்கும் வண்ணம் பயன்படும். அந்த ஆல்பங்களிலிருந்து தனித்தனி தலைப் புகளில், பொதுச்செயலாளரின் ஆதார முள்ள கருத்துக்களை, நூல்களாக வெளியிடலாம். அவைகளை ஆங்கி லத்திலும், இந்தி முதலான மற்ற முக்கிய மொழிகளிலும் மொழிபெயர்த்து வெளியிடலாம்.
அதனால் தந்தை பெரியாரின் மனிதாபிமான கொள்கைகளுக்கு உண்மையான விளக்கங்கள், மேலும் உலகம் பூராவும் பரவ நல்ல வாய்ப் பாகும்.
இந்தப்பணிகளை உடனடியாகத் தொடங்கினால் மிக்க நன்மை பயக்கும் என்பது, என்னைப்போன்றோரின் தாழ்மையான எண்ணம்.
- விடுதலை (5.2.1993)
அடித்து நொறுக்காமல்....
- வா.நேரு -
சுத்தியலெடுத்து கல்லை
அடித்து நொறுக்குவதுபோல
மனதிற்குள் அந்த உணர்வை
அடித்து நொறுக்காமல்
அகலாது சாதி உணர்வு !
மூளைக்குள் போட்ட
விலங்கு என்றார் பெரியார்
மூர்க்கத்தனமாய்
உழைப்பவரை ஒடுக்க
பார்ப்பான் ஏற்படுத்திய
ஏணிப்படி அமைப்பே
சாதி என்றார் அண்ணல் .
வாழும்போதும்
வெந்து சாகும் போதும்
பின்னிப் பிணைத்திருக்கிறான்
பார்ப்பான் தமிழரின் பிணம் தின்னும் கழுகுகளாய்
சாதிக்கொரு சடங்குகளை! கை நகத்தில் மறைந்திருக்கும்
அழுக்குகள் போல
நீ செய்யும் சடங்குகள்
ஒவ்வொன்றிலும் உன்
ஜாதி இழிவு ஒளிந்திருக்கிறது !
பார்ப்பனன் உயர்வென்பதுவும்
உழைப்பவன் தாழ்வென்பதுமே
எழுதப்படாத விதி
எல்லாச்சடங்குகளிலும் !
சாதியால் கொழுக்கும்
பார்ப்பான்
சடங்குகளால் பிழைக்கிறான் !
நம்மை இன்னும்
கருவறைக்குள் விடுவதை
கடுமையாக எதிர்க்கிறான் !
பூணூலை எதிர்க்காமல்
ஒரு நூல் கூட
நம் இனத்தின்
முன்னேற்றம் இல்லை !
சடங்குகளை மறுத்து
அதன் மிச்ச சொச்சங்களைத்
தூக்கி நெருப்பில் போடு !
பார்ப்பானை வைத்துக்
கல்யாணம்,
காது குத்தல், கருமாதி,
தெவசம், திதி
அது இது, இது அது
அனைத்தையும் மறு !
அப்போதுதான்
தந்தை பெரியாரை
அண்ணல் அம்பேத்கரைச்
சொல்லும் தகுதி உண்டு
என்பதனை உணர் ! உணர்த்து !
நாத்திகத்தை ஆன்மீகம் நாடும் முறை
- மு.வி.சோமசுந்தரம்
பீட்டர் ஹிக்ஸ்யுடன் சேர்ந்த மற்றொரு விஞ்ஞானிக்கும் சேர்த்து இந்தாண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. பீட்டர் ஹிக்ஸ் (றிமீமீக்ஷீ பிவீரீரீ) ஒரு நாத்திகர். 1960-ஆம் ஆண்டு ஹிக்ஸ், அணுவில் உள்ளடக்கி யத்துகள் உள்ளது என்ற உண்மையை அவரின் ஆராய்ச்சி மூலம் கூறினார். இதனை ஹிக்ஸ் போசோன் (பிவீரீரீ - ஙிஷீஷீஸீ) என்று அழைத்தார்.
ஒன்றுமே இல்லை என்ற கூற்றி லிருந்து மாறுபட்டு, அறிவு பூர்வமாக ஒன்று உண்டு என்பதை ஹிக்ஸ் - போசோன் கூறுகிறது. சுவிட்சர்லாந் தில் விஞ்ஞானிகள் நடத்திய பிரமிக்க வைத்த ஆழ்துளை ஆய்வுக்கூட சோதனை மூலம் இந்த உண்மை நிரூபிக்கப்பட்டது.
இந்த நிரூபணத்திற்காக நோபல் பரிசு பெற்றவர், ஹிக்ஸ் - போசோன் துகள் என்பதைக் கடவுள் துகள் என்று அழைப்பதை அவர் ஏற்றுக் கொள்ள வில்லை. விஞ்ஞானியாகவும் நாத்திகரு மான, ஹிக்கிளின் எதிர்ப்பு (கடவுள் துகள்) என்று கூறுவதற்கு நியாய மானதே.
தனிப்பட்ட குறைகளுக்காகவோ, தனிப்பட்ட பாதிப்புக்காகவோ (எனக்கு ஏற்பட்டுள்ள துன்பங்களை, கடவுள் ஏன் அனுமதிக்கிறார்?) கடவுள் மறுப்பு கூறாமல், அழுத்தமான, அறிவு பூர்வ மான விவாதத்தின் அடிப்படையில் கடவுள் மறுப்பு கூறுவது, நாத்திகத் தத்துவமாக அமைகிறது. ஆன்மீக வழியில் உண்மையைத் தேடுவோர் கூறும் எல்லைக்கப்பால் என்ற கருத்து, இரண்டுக்கும் ஒரு பொதுத்தன்மை உள்ளதை உணர்த்துவதாக இருக்கிறது. எல்லை என்று ஒன்று இல்லாது, எப்பொழுதும் நீடித்துக்கொண்டே இருக்கும் உணர்வை எல்லைக்கப்பால் என்று கூறலாம். விஞ்ஞானிகள், அவர்களின் அறிவின் அடிப்படையிலும், ஆராய்ச்சிக் காரணத்தின் அடிப்படை யிலும் நாத்திகர்களாக விளங்குபவர்கள், எல்லை ஒன்று இல்லாத ஒன்றைத் தேடிச் செல்வதால், எல்லை கடந்த வர்கள் என்று அழைக்கப்படலாம். பீட்டர் ஹிக்ஸ் என்ற விஞ்ஞானி, தன் கண்டுபிடிப்பு முழுக்க முடிவின் நிரூபணம் என்பதை விட இந்த உலகில் புதைந்து கிடக்கும் பலவற்றைத் தேடும் துவக்கம் என்று கூறிய முதல் மனிதர்.
கடவுள் துகள் கண்டுபிடிப்பில் அமைந்த பிரச்சினை, கடவுள் என்ற எல்லையைத் தாண்டி, லட்சுமணன் கோடு உள்ளது போல் நினைத்து, கடவுள் நம்பிக்கையாளர்களை ஒதுக்கியிருக்கிறார்கள். கடவுள் நம்பிக்கையாளர்கள், கடவுளின் செயல்பாடுகளை அறிய வேண்டிய வேலை இல்லை. கடவுள் எண்ணத் துக்குக் கட்டுப்பட்டு போகவேண்டும். அனைத்தையும் கடவுளிடம் ஒப் படைத்து விடு என்பதாகும்.
நாத்திகத்தில் கூறுவது போல் விஞ்ஞானத்தில் கடவுள் இல்லை, எல்லை வரையறை கிடையாது. மணலில் கோடு போட்டு, அதைத் தாண்டிப் போகக்கூடாது என்று கூறுவது இல்லை, மணலில் தடை கோடு போடுவது, அதைத்தாண்டி போக வேண்டும் என்று தூண்டி விடுவதாக மாறி விடுகிறது. மேலும் செல்லத்தான் தூண்டிவிடும்.
இது போலவே, நாத்திக தத்துவம் உணர்வின் விரிவாக்கத்துக்கு எல்லை வகுப்பதில்லை. கல்லில் செதுக்கப் பட்டுள்ள விவாதத்திற்கு அப்பாற்பட்ட உண்மைகளைகேள்வி கேட்கக்கூடாது என்பதை ஏற்றுக் கொள்வதில்லை.
கடவுள் துகள், கடவுள் மறுப்புத் துகள் என்று பெயர் சூட்டப்படுமா னால் ஒரு வேளை ஹக்ஸ் அதனை ஏற்றுக்கொள்ளலாம்.
நன்றி: டைம்ஸ் ஆப் இந்தியா: 24.10.2013 இதழின், ஜிலீமீ ஜீமீணீளீவீஸீரீ க்ஷீமீ கட்டுரையின் தமிழாக்கம்.
ஓய்வறியா எம். தலைவர் திட்டம் வெல்க
எண்பத்தொரு வயதினிலும் இளமைத் தோற்றம்
எடுத்துவைக்கும் அடியிலெல்லாம் இனிமை தோன்றும்.
தொண்டு செய்து பழுத்தபழம் பெரியார் தன்னை
தொல்லுலக மக்களெல்லாம் போற்று கின்ற
பெரும்பணியை செய்துவரும் தலைவர், அய்யா
பேருருவ சிலைவடிக்கும்திட்டம் கண்டார்.
பெரும்வெற்றி அதில் கண்டார். நிகரே இல்லா
பெரியார் உலகத்தை, உலகே போற்றும்.
யார்க்குவரும் யார்க்குவரும் இந்த எண்ணம்
அகிலமெல்லாம் அகிலமெல்லாம் வியக்கும் வண்ணம்.
கூர்மதியால் தீட்டியவோர் திட்ட மன்றோ
பெரியார் கொள்கைதனை உலக மெல்லாம்
ஓர்வழியாய் கொண்டு செல்லும் நோக்க மன்றோ
ஓய்வறியா எம்தலைவர் திட்டம் வெல்க.
வேர்விட்டு வளர்ந்திடட்டும் பெரியார் கொள்கை
வெளிச்சத்தில் வாழ்ந்திடட்டும் உலக மக்கள்
தங்கத்தை தாவென்றால் தருவோம் நாங்கள்
தலைவணங்கா தலைவருக்கா இல்லை என்போம்.
எங்கள்மன மகிழ்ச்சியெல்லாம், தலைவர் என்றும்
இன்றுபோல் இளமையுடன் வாழ வேண்டும்
தங்குதடை இல்லாமல் பெரியார் கொள்கை
தரணியெங்கும் பரவி ஒளி வீச வேண்டும்
உங்கள்கை விரலசைவில் தமிழர் எல்லாம்
ஒன்றாகி ஓரணியில் நிற்க வேண்டும்.
- சி. சுப்பிரமணியன், (மாவட்ட தலைவர், சேலம்)
தமிழைக் கொண்டாடும் ரஷியா
தமிழ், கடல் கடந்தும் வாழும் என்ற நம்பிக்கையூட்டும் செய்தி இது. ஒன்று "ரஷியநாடு தமிழைக் கொண்டாடுகிறது' என்ற தலைப்பில் ஓர் இணையதளம் கீழ்க்காணும் செய்தியை வெளியிட்டுள்ளது. "தமிழன் தமிழில் எழுதினாலோ பேசி னாலோ பாராட்டுவது நாமாகத்தான் இருப்போம். நம் மொழியை நாம் பேசவே பாராட்டுகிறோம். அந்த அளவு போய் விட்டது நம் மொழி. ஆனால், தமிழ் மொழியின் அருமையை தமிழர்கள் அனைவரும் தெரிந்திருக்கிறார்களோ இல்லையோ, பிற நாட்டினர் நன்றாகவே தெரிந்து வைத்துள்ளனர். தமிழுக்குத் தொடர்பே இல்லாத ரஷிய நாடு தமிழைக் கொண்டாடுகிறது.
அங்கிருக்கும் ரஷிய அதிபர் மாளிகையான கிரெம்ளின் மாளிகையின் பெயரை அவர்கள் அழகுத் தமிழில் எழுதியுள்ளார்கள். முதலாவதாக அவர்கள் தாய்மொழியான ரஷிய மொழியிலும், இரண்டாவதாக அண்டை நாட்டு மொழியான சீனத்திலும், உலகத் தொடர்புமொழி என்ற நோக்கில் ஆங்கிலத்திலும், நான்காவதாக தமிழிலும் எழுதியிருக்கிறார்கள். தமிழைவிட எத்தனையோ உலக மொழிகள் பெரும்பாலான மக்களால் பேசப்படுகின்றன. ஆனால், அவற்றையெல்லாம் விட்டுவிட்டு தமிழ்மொழியில் அதிபர் மாளிகையின் பெயரை எழுதியதற்கு அவர்கள் கூறும் காரணம், தமிழர்களாகிய நம்மைச் சிந்திக்க வைப்பதாக இருக்கிறது. உலகில் 6 மொழிகள்தான் மிகவும் தொன்மையானவை. அவை கிரேக்கம், லத்தீன், எபிரேயம், சீனம், தமிழ், சமஸ்கிருதம். இந்த 6 மொழிகளில் நான்கு மொழிகள் இன்று வழக் கில் இல்லை. உலகில் உள்ள அனைத்து மொழிகளிலும் மிகச்சரியான, தகுதியான மொழியாக, வரலாற்றுச் சிறப்பும் இலக் கியச் செழுமையுமுள்ள மொழியான தமிழ்மொழி எங்களுக்குத் தென்பட்டது. அந்த மொழியைச் சிறப்பிக்கவே "கிரெம்ளின் மாளிகை' எனத் தமிழில் எழுதினோம்'' என்று கூறுகிறார்கள். மேலும், அங்கே வைக்கப்பட்டுள்ள அரிய நூல்களுள் நமது திருக்குறளும் ஒன்று. வெளிநாட்டில் உள்ளவர்களுக்குக் கூட நம் தமிழின் பெருமை தெரிந்துள்ளது. தமிழ் நாட்டில் பிறந்து, தமிழ் பேசத் தயங்கும் தமிழர்கள் இனியாவது தமிழ்மொழியின் அருமை பெருமையை உணர்ந்தால் சரி!
- முகநூல் நண்பர் (தென்னரசு - செப்டம்பர் 2013, பக்கம் - 2)
தாயாரின் இறுதிச் சடங்கில் மகனின் திருமணம்
அம்மாவின் கடைசி ஆசையை நிறைவேற்றும் வகையில் அவரது நல்லுடலின் முன்னிலையில் தாலி கட்டினார் மகன்.
இந்த திருமணம் மலேசியாவில் உள்ள பெர்சியாரான் ராஜா மூடா மூசா என்னும் இடத்தில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் நடந்தது என மலேசிய பத்திரிகைகள் தெரிவித்தன.
கோலக்கிள்ளானைச் சேர்ந்த நாராயணியின் (வயது 47) மகன் பி.சஞ்சீவிராஜனுக்கு இம்மாதம் 30-ஆம் தேதி அந்த ஊரில் உள்ள சிறீ பாலசுப்ரமணியர் ஆலயத்தில் திருமணம் நடைபெற இருந்தது.
மகனி; திருமணத்துக்காக புடவைகள், அணிகலன் கள் வாங்குவதற்காக கணவர் பெருமாளுடன் நாராயணி கடந்த வாரம் சென்னை சென்றார். அங்கு அவருக்குத் திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.
சென்னை தனியார் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்தார். அவரது நல்லுடல் செவ்வாய்க்கிழமை சொந்த ஊருக்கு எடுத்து வரப்பட்டது.
அவரது அகால மரணத்தால் பெரும் அதிர்ச்சிக் குள்ளாகி இருந்த மணமகன் குடும்பத்தினர், மண மகளின் குடும்பத்தினருடன் கலந்து பேசி புரோகி தர்களின் ஆலோசனைகளையும் கேட்டு தாயின் இறுதிச் சடங்குக்கு முன்னதாக திருமணத்தை நடத்த முடிவு செய்தார்.
காலையில் நல்லுடல் வீட்டுக்குக் கொண்டு வரப்பட் டதும் வரவேற்பறையில் உடல் வைக்கப்பட்டு சடங் குகள் நடத்தப்பட்டன. தாயின் சவப்பெட்டி அருகே தந்தை பெருமாள் நிற்க, மணமக்கள் இருவரும் பாதபூசை செய்தனர்.
பின்னர் இரு புரோகிதர்கள் மந்திரம் ஓத, மணமகள் சசிகலா (வயது 25) கழுத்தில் மணமகன் சஞ்சீவிராஜன் (வயது 28) தாலி கட்டி, சவப்பெட்டியை வலம் வந்தார். திருமணச் சடங்கு முடிந்ததும் நாராயணியின் நல்லுடல் அங் குள்ள இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது. உறவினர்கள், நண்பர்கள் என ஏறக்குறைய 2,000 பேர் இச்சடங்கில் பங்கேற்றனர்.
மரணமடைந்த நாராயணிக்கு இரு மகன்களும் மூன்று மகள்களும் உள்ளனர். ஒரு மகளுக்கு மணமாகி விட்டது. சஞ்சீவி ராஜன் இரண்டாவது மகன்.
- தகவல்: ஆரூர் சபாபதி (சிங்கப்பூர்)
அன்றிருந்த நிலை
1915-ஆம் ஆண்டில் சென்னை மாநிலத்தில் பார்ப்பனரல்லாதாரின் சமூக நீதி இயக்கம் தோன்றிய காரணத்தையும், அவசியத்தையும் நன்கு உணர முடியும். 1915-இல் கல்வி இலாகாவில் இருந்த மொத்த உத்தியோகங்கள் 518. அந்த 518 இடங்களில் அமர்ந்திருந்த பார்ப்பனர் 399 பேர், கிறித்துவர்களும், ஆங்கிலோ இந்தியர்களும் 73 பேர், முஸ்லிம்கள் 18 பேர் (ஆதிதிராவிடர் உட்பட).
ஆம்! அவ்வளவு உத்தியோகங்களிலும் நாட்டுக்குரிய திராவிட மக்களுக்கு 18 உத்தியோகங்கள் தான்.
மக்கள் தொகையில் 100-க்கு 3 பேராக உள்ள பார்ப்பனர்களுக்கு 399 உத்தியோகங்கள் கிடைத்திருக்கையில், 100க்கு 81 பேர்களாக உள்ள - பார்ப்னரல்லாத இந்துக்களுக்கு 18 உத்தியோகங்கள் தான் கிடைத்திருந்தன.
பார்ப்பனர்களுக்கு 399 உத்தியோகங்கள், அவர்களைப் போல் 30 மடங்கு மக்கள் தொகை கொண்ட சமூகத்தாருக்கு 18 உத்தியோகங்கள் தான். இதற்குப் பெயர்தான் அரசாங்கக் கல்வி இலாகா அக்கால நீதிப்படி 1915-இல் எழுதப்படிக்கத் தெரிந்தவர்கள் 100-க்கு 7 அல்லது 8 பேரே ஆவர். அதில் 3 சதவீதம் உள்ள பார்ப்பனரோ தங்களில் 100-க்கு 75 சதவீதத்திற்குக் குறையாமல் படித்திருந்தனர். மற்ற மக்கள் எல்லோருமே 100-க்கு 5 சதவீதத்தினரே படித்திருந்தனர். பார்ப்பனரல்லாத இந்துக்களோ 100-க்கு 3 சதவீதத்தினர் தான் படித்திருந்தனர்.
(பேராசிரியர் பெருந்தகை அவர்களின் வகுப்புரிமை போராட்டம் நூலில் 13-ஆம் பக்கத்தில்)
- க.பழநிசாமி, தெ.புதுப்பட்டி
மத்திய, மாநில அரசுகளின் நிதிப் பற்றாக் குறைக்கான தீர்வு தமிழர் தலைவரின் பொருளாதாரக் கண்ணோட்ட அறிக்கை
என்னை வாழ்நாள் கடனாளியாக்கிவிட்டீர்களே! தமிழர் தலைவரின் உருக்கமும், உயர்நோக்கமும் கொண்ட அறிக்கை
மத்திய அரசின் பொருளாதார நெருக்கடிகளைச் சரி செய்யவும், மாநில அரசு மேற்கொள்ள வேண்டிய அணுகுமுறை குறித் தும், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத் துள்ள அறிக்கை வருமாறு:
நமது மத்திய அரசு, பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளையெல் லாம் சிறிது சிறிதாக விற்று, தனியார் உடைமைகளாக அவை ஆவதற்கு வழி வகை செய்யும் வேதனையான போக்கு - அரசியல் சட்டத்தின் பீடிகையில் குறிப்பிடப்பட்ட குறிக்கோளான சமதர்மத்தைக் காணாமற் போகவே வழி வகுக்கின்றது.
காரணம் கூறும்போது, நிதிப் பற்றாக் குறை என்பதால், பல்வேறு துறைகளில் ஏழை, எளிய நடுத்தர வர்க்கத்தை, கசக்கிப் பிழியும் கொடுமையும் ஏற்பட்டு வருகின்றது.
சுவிஸ் வங்கியில் பல லட்சம் கோடி ரூபாய்
அதே நேரத்தில் சுவிஸ் வங்கிகளில் இந்தியாவி லிருந்து போடப்பட்டுள்ள பல லட்சம் கோடி ரூபாய்களைக் கொணர, நாடாளுமன்றத்தில் வாக்குறுதி கொடுக்கப்பட் டதே தவிர, உருப்படியான முயற்சிகள் இல்லை; பல லட்சம் கோடி ரூபாய்களை நம் நாட்டிற்குக் கொண்டு வந்தால், நமது நிதிப் பற்றாக்குறை சுமை என்பது பெரிதும் குறையும்.
அது மட்டுமா? நாட்டின் பெரும் பணத் திமிங்கலங் களும், பண முதலைகளுமான பலருக்கும் சலுகை களுக்கு மேல் சலுகை! சலுகையால் தொழில் வளர்ச்சிக்கு ஊக்கம் என்ற சாக்கில் தரப்பட்டு வாராக் கடன்களாக் கப்பட்டு, வசூலிக்கப்படாத நிலுவைத் தொகைகள் பல லட்சணக்கான கோடி ரூபாய்கள் ஆகும்!
அவர்களது (பெரிய மனிதர்கள்) கடன் பற்றி ரிசர்வ் வங்கியோ, துறைகளோ வெளிப்படையாக ஏன் விளம்பரம் தந்து, வசூலிக்கத் தயங்குகின்றன?
ஏழை விவசாயிக்குக் கொடுத்த கடன், அவனுடைய நட்டத்தால் திரும்பக் கட்ட முடியாத நிலை என்றால் உடனே துள்ளிப் பாய்கின்ற நடவடிக்கைகள்.
மாணவர்களுக்காக பெற்றோர் கள் கல்விக் கடன் பெற படாதபாடு படவேண்டியிருக்கிறது தேசியமய மாக்கப்பட்ட வங்கிகளில்!
கடனைத் திருப்பித் தராத திமிங்கலங்கள்
பெரும் கடன் வசூலாகாத வர்களில் 50 பேர்களின் பட்டியல் வெளியாகியிருக்கிறது; அதில் காணப்படும் முக்கிய விவரங்கள் இதோ.
வாராக்கடன் தொகை மொத்தம் ரூ.5 லட்சம் கோடி யாம்! (இந்திய ஊழியர்கள் சங்கம் தந்துள்ள தகவல் இது!)
கிங்பிஷர் என்ற விமான சேவை துவங்கிய விஜய் மல்லய்யா என்ற பெரு முதலாளி, மது உற்பத்தியில் நாட் டிலேயே நம்பர் ஒன் என்று பெயரெடுத்த சாராயத் தொழிற்சாலைகளுக்கு அதிபர், அவர் செலுத்த வேண்டிய தொகை 2,673 கோடி ரூபாய்கள்!
172 பெரிய தொழில் நிறுவனங்கள் ரூ. நூறு கோடிக் கும் மேல் கடன் பெற்று திருப்பிச் செலுத்தாமல் உள்ளன.
ஒரு கோடிக்கும் மேல் கடன் வைத்திருப்பவர்கள் 7,295 பேர்கள்.
இதில் மிகவும் அதிர்ச்சியூட்டக் கூடிய ஒரு செய்தி.
மத்திய ஜவுளித் துறை அமைச்சர் கே.எஸ். ராவ் என்பவர் கடன் பெற்று திருப்பித் தராமல் இருக்கும் தொகை ரூ.350 கோடியாம்!
இவை உதாரணத்திற்கு, ஒரு பானை அல்ல; ஒரு சில பருக்கைச் சோறுகள்.
அதே நேரத்தில் மற்ற ஏழை, எளிய, தொழிலாளர்கள், பாக்கிகளை வைத்தால் அவற்றை வசூலிப்பதில் அரசு காட்டும் மும்முரம் ஏன் இந்தப் பெரிய மனிதர்களிடம் மட்டும் பாய்வதில்லை?
விஜய்மல்லய்யா அவர்கள் திருப்பதி வெங்கடா ஜலபதிக்கு தங்கத்தில் நறுக்கென்று சுமார் ரூ.700 கோடி. (?) பக்தி காணிக்கை செய்கிறார்; மத்திய அரசுக்கும், அவரிடம் வேலை பார்த்த ஊழியர்களின் சம்பள பாக்கிக்கும் பட்டை நாமம் போடுகிறார்!
பக்தி எப்படியெல்லாம் பயன் தருகிறது பார்த்தீர்களா?
மணல் வியாபாரத்தை மாநில அரசே செய்யலாமே!
அதுபோலவே மாநில அரசு, தமிழக அரசு, மணல் வியா பாரக் கொள்ளையைத் தடுத்து நிறுத்த காலந்தாழ்ந்து கண் விழித்துக் கொண்டது. (உயர்நீதிமன்ற ஆணை காரணமோ என்னவோ)
மணலை அரசே எடுத்து விற்பனை செய்வதன்மூலம் பல்லாயிரக்கணக்கில் அதற்கே லாபம் வர வாய்ப்பு உண்டு.
அதற்கென ஒரு தனித் துறையை உருவாக்கிடலாம். அரசு, தன் நிதிப் பற்றாக்குறையைச் சமாளிக்கலாம்.
அரசு, மது விலக்கைச் செயல்படுத்தி சாராய வியா பாரத்தை ஒழித்து விட்டுக்கூட, மணல் போன்ற பல்லா யிரக்கணக்கான ரூபாய் லாப வருவாய் வரும் துறையை எடுத்து, ஓட்டை இன்றிச் செய்தால் அவ்வருமானமே பல்லாயிரம் கோடி ஒரு ஆண்டிற்கே வரக்கூடும்!
மக்களுக்கும் தட்டுப்பாடின்றி மணல் கிடைக்கும்; கட்டுமானப் பணிகளும் சீராக, சிறப்பாக நடைபெற உதவிடக் கூடும்.
வீண் விளம்பரச் செலவுகளைக் குறைக்கலாம்
மத்திய, மாநில அரசுகள் தேவையற்ற வீண் விளம்பரச் செலவுகளைக் குறைத்து இது போன்று, வருவாய் பெருக் கலையும், செலவைச் சுருக்கலையும் செய்தால், கல்விப் பணிகளை அரசு, பல வகையிலும் மேம்படுத்திட இயலும்.
மத்திய, மாநில அரசுகள் சிந்திக்கட்டும்!
சென்னை
8.12.2013
கி.வீரமணி
தலைவர்,திராவிடர் கழகம்
சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு பக்தர் அளித்த ரூ.3 கோடி மதிப்புள்ள பவள மாலை எங்கே? தீட்சிதர்களுக்கு அறநிலையத்துறை கடிதம்
சிதம்பரம், டிச.8- சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு பக்தர் ஒருவர் அளித்த ரூ.3 கோடி மதிப்புள்ள பவள மாலை பற்றிய விவரம் கேட்டு தீட்சிதர்களுக்கு அறநிலையத்துறை கடிதம் அனுப்பி உள் ளது. சிதம்பரம் நடரா ஜர் கோயில் ஆகாயத் தலமாக விளங்கி வரு கிறது.
பல ஆண்டுகளாக தீட்சிதர்கள் கட்டுப் பாட்டில் இருந்து வந்த இக்கோயில் பல்வேறு போராட்டங்களின் விளைவாக தமிழக அரசின் இந்து அற நிலையத்துறை கட்டுப் பாட்டில் சில ஆண்டு களுக்கு முன்பு வந்தது. பூஜை, வழிபாடுகளை தீட்சிதர்களே வழக்கம் போல் செய்து வருகின் றனர்.
இந்நிலையில், சென் னையை சேர்ந்த பக்தர் ஒருவர் அவரது குடும்பத் தினர் சார்பில் கடந்த மாதம் 21ஆம் தேதி சிதம் பரம் நடராஜனுக்கும் சிவகாமசுந்தரி அம்பா ளுக்கும் அணிவிப்பதற் காக ரூ.3.50 கோடி மதிப்பிலான இரு பவள மாலைகளைக் காணிக் கையாக வழங்கினார்.
இத்தாலியில் இருந்து வரவழைக்கப்பட்ட விலை உயர்ந்த பவள மணிகளைக் கொண்டு 20 பவுனில் இந்த மாலை கள் உருவாக்கப்பட்டன. இந்த பவளமாலைகள், அதன் மதிப்பு மற்றும் அதனை வழங்கிய உபய தாரர் ஆகிய முழு விவ ரத்தையும் பெறுமாறு சிதம்பரம் நடராஜர் கோயில் செயல் அலுவ லருக்கு அறநிலையத் துறை ஆணையர் கடிதம் அனுப்பியுள்ளார்.
அதன்பேரில் மேற் கண்ட விவரங்களை அளிக்குமாறு நடராஜர் கோயில் பொது தீட்சி தர்களின் செயலருக்கு கோயில் செயல் அலு வலர் முருகன் தாக்கீது அனுப்பி உள்ளார்.
சிதம்பரம் நடராஜர் கோயிலை தங்களிடம் ஒப்படைக்குமாறு பொது தீட்சிதர்கள் சார்பில் உச்ச நீதிமன்றத் தில் வழக்கு நடந்து வருகிறது. இந்நிலையில், ரூ.3 கோடி பவளமாலை குறித்து விவரம் கேட்டு தீட்சிதர்களுக்கு அரசு தாக்கீது அனுப்பி உள்ள விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சாய்பாபா கோயிலில் கொள்ளை
சிக்மகளூர், டிச. 8- கர்நாடக மாநிலம், சிக்மகளூர் சாய்பாபா கோயில் கொள்ளை தொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிக்மகளூர் மாவட் டம், மதுவனலே அவுட் டில் சாய்பாபா கோயில் உள்ளது. இந்த கோயி லுக்கு சுற்றுப்புறங் களைச் சேர்ந்த பக்தர் கள் சாமி தரிசனத்துக் காக வருகின்றனர். பக் தர்கள் நேர்த்திக் கடன் செலுத்தும் வகையில், கோயில் வளாகத்தில் உண்டியல் வைக்கப்பட் டுள்ளது.
நேற்று முன்தினம், பூசாரி நாகராஜ் கோயில் நடையை பூட்டி விட்டுச் சென்றார். நேற்று காலை கோயிலுக்கு வந்தபோது, பூட்டு உடைக்கப்பட்டு இருந் ததை கண்டு அதிர்ச்சி யடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, வளாகத்தில் இருந்த பீரோ, உண்டியல் உடைக்கப்பட்டிருந்ததும், அதிலிருந்த ரூ.25 ஆயி ரம் பணத்தை திருடிச் சென்றதும் தெரிந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில், சம்பவ இடத் துக்கு விரைந்து வந்த காவலர், துப்பறியும் மோப்ப நாய் உதவியு டன் திருடர்களை தேடும் பணியில் ஈடுபட் டனர். மேலும், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கூறுவது கல்கி
நேருவுக்குப் பதில் பட்டேல் பிரதமர் ஆகியிருந் தால் நாட்டின் தலையெழுத்து மாறியிருக்கும் என்று மோடி பேசியதை விமர்சித்து, மறக்கப்பட்ட வாக்குறுதி என்ற கட்டுரையை எழுதினார் ஹிந்து பத்திரிகையாளர் வித்யா சுப்பிரமணியம். அந்தக் கட்டுரையில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை விமர்சித்து பட்டேல் எழுதிய கடிதத்தைப் பற்றி ஆதாரபூர்வமாகக் குறிப்பிட்டிருந்தார்.
இதனால் கடுப்படைந்த சங்கக் குடும்பத்தினர் பத்திரிகையாளருக்கு அலைபேசி மூலமாக அசிங்கமாகப் பேசி கொலை மிரட்டலும் விட்டிருக்கின்றனர். வித்யா காவல்துறையில் புகார் செய்ய டில்லி காவல்துறை வழக்குப்பதிவு செய் திருக்கிறது. எந்தெந்த நம்பர்களில் இருந்து மிரட்டல் வந்தது என்று பார்க்கும்போது பெரும்பாலான அழைப்புகள், தமிழ் நாட்டிலிருந்து அதுவும் கோவை யிலிருந்து வந்திருப்பது தெரியவந்தது.
இதுபற்றிய விவரங்களை டில்லி காவல்துறை தமிழக அரசுக்கு அனுப்பியிருந்தும் கோவை காவல்துறை இந்த விவகாரம் குறித்து விசாரணை செய்வதில் ஆர்வம் காட்டாமல் சுணக்கம் காட்டுகிறது என்கிறார்கள். இது என்ன அரசியலோ?
சென்னையில் உள்ள சுமார் ஆயிரம் டாஸ்மாக் கடைகளில் கணக்கில் வராமல் புரளும் பணம் மாதத்துக்கு சுமார் ஐந்து கோடி என்கிறார்கள். போலி மது விற்பது, டாஸ்மாக் சரக்கையே அதிக விலைக்கு விற்பது போன்றவற்றால் வரும் வருமானம் இது. பொதுவாக கடை மூடும் போதும், கூட்டம் அதிகமாக இருக்கும் போதும் அதிக விலைக்கு விற்பது, போலி மதுவை விற்பது போன்றவை நடக்கின்றன.
அவசரத்திலும், பதற்றத்திலும் குடிமகன்கள் இதைக் கண்டு கொள் வதில்லை. இந்த வரும்படி மேல்மட்டம் வரை பாய்கிறதாம். டாஸ்மாக் ஏரியா மானேஜர்கள் லட்சக்கணக்கில் கொடுக்க வேண்டியவர்களுக்குக் கொடுத்து நல்ல ஏரியா போஸ்டிங் வாங்குகிறார் களாம்.
(கல்கி 8.12.2013 பக்கம் 16)
சடங்கு என்ற பெயரால் மனித குலத்துக்கு இழைக்கப்படும் அநீதி
பார்ப்பனர்கள் உணவருந்திய எச்சில் இலைகள்மீது மற்ற ஜாதியினர் உருளும் அவலம்!
சடங்கு என்ற பெயரால் மனித குலத்துக்கு இழைக்கப்படும் அநீதி
கர்நாடகாவில் மடாதிபதிகள், பிற்படுத்தப்பட்டோர் அமைப்புகள் கடும் கண்டனம்
மங்களூரு, டிச. 9- பார்ப்பனர்கள் உணவருந்திய எச்சில் இலைகள்மீது மற்ற ஜாதியினர் உருளும் அவலம் சடங்கு என்ற பெயரால் மனித குலத்துக்கு இழைக் கப்படும் அநீதி என கர்நாடகாவில் மடாதிபதிகள், பிற்படுத்தப்பட்டோர் அமைப்புகள் கடும் கண்டனம் தெரி வித்து பட்டினிப் போராட்டத்தில் ஈடு பட்டனர்.
பார்ப்பனர்கள் உணவருந்திய எச்சில் இலைகள் மீது மற்ற ஜாதியினர் உருளும் சடங்கு கர்நாடகாவின் பெருமைக்கு இழுக்கா கும் என்பதுடன் மனித குலத்துக்கு இழைக்கப் படும் அநீதியும், இந்திய பண்பாட்டின் மீது சுமத் தப்படும் களங்கமு மாகும் என்று தார் வாட் ரேவன சித்தேஸ்வர மடாதிபதி சிறீ பசவ ராஜா தேவாரு கூறினார். மங்களூர் அருகே உள்ள குக்கே சுப்ரமணியா கோவிலில் நடைபெற்று வரும் இந்த மூடநம்பிக்கை சடங்கினை எதிர்த்து நடைபெற்ற ஒருநாள் பட்டினி போராட்டத் தில் கலந்து கொண்ட அவர் இவ்வாறு கூறினார்.
கர்நாடகா ராஜ்ய இந்து லிடா வர்க்கலா ஜகுருடா வேதிக் பிற்படுத்தப்பட் டோர் நல அமைப்பு சனிக் கிழமையன்று மங்களூர் துணை ஆணையாளர் அலு வலகம் எதிரில் மடேஸ் நானாவை எதிர்த்து சனிக் கிழமை யன்று ஒருநாள் பட்டி னிப் போராட்டம் நடத் தியது. எச்சில் இலைகள் மீது உருளுவதால் யாரும் குணம் அடை வதில்லை. பார்ப்பனர் களின் அகந்தையின் அடையாளமாக இது இன்றும் நீடிக்கிறது. எச்சில் இலை மீது உருளும் மக்கள் அப் பாவிகள் என்றும் நம் பிக்கையின் பெயரால் அவர்கள் நசுக்கப்படு கிறார்கள் என்றும் உதவி யற்றவர்கள் ஆக ஆக்கப் படுகிறார்கள் என்றும் தேவாரு குறிப்பிட்டார். மாநில முதல்வர் உடன டியாக இதில் தலை யிட்டு இது போன்ற மனித விரோத செயல் களை நிறுத்த அவசரச் சட்டம் பிறப்பிக்க வேண் டும் என்றும் அவர் சொன்னார்.
இந்த மூடநம் பிக்கைப் பழக்கம் பல ஆண்டுகளாக நீடிக் கிறது. கடந்த நான்காண் டுகளாக தங்களது அமைப்பு இதை எதிர்த்து வருகிறது. இதற்காக தன்மீது தாக்குதல் நடத் தப்பட்டது இது இந்திய சமுதாயத்துக்கு விடுக்கப் படும் சவால் . இந்த பழக்கம் நிறுத்தப்படும் வரை தங்களுடைய எதிர்ப்பு தொடரும் என் றும் பிற்படுத்தப்பட் டோர் அமைப்பின் மாநில தலைவர் சிவ ராமு கூறினார். மைசூர் பேட்டாடபுரா மடாதி பதி சிறீரச்சோட்டி சிவாச் சார்ய சுவாமிஜியும் இந்த மடேஸ்நானா நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.
அமைச்சர் எதிர்ப்பு
தெற்கு கன்னடாவில் உள்ள குக்கே சுப்ர மணியா கோவிலில் நடைபெற்று வரும் மடேஸ்நானா போன்ற குருட்டுத்தனமான மூட நம்பிக்கைப் பழக்கங் களை மக்கள் ஆதரிக் கக்கூடாது என்று கர் நாடகா சமூக நலத்துறை அமைச்சர் எச்.ஆஞ்ச நேயா செய்தியாளர்களி டம் கூறினார். இது ஒரு மனித விரோத முட்டாள் தனமான நடைமுறை என்றும் அவர் கூறினார். இதில் கலந்து கொண் டவர்களை முட்டாள் கள் அல்லது அறி வாளிகள் என்று தன் னால் கூற இயலவில்லை என்றும் அவர் சொன் னார். எச்சில் இலைகள் மீது உருளுவதால், அவர் களின் தோல் மேலும் பாதிக்கப்படுமே தவிர அவர்கள் நம்புவது போல் தோல் வியாதிகள் குணம் அடைவதில்லை என்றும் அவர் கூறினார்.
இது போன்ற மூட நம்பிக்கைகளை சட்டங்களால் அகற்ற முடியாது என்றும் அவர் கூறினார். பல்வேறு மடாதிபதிகளும், மதத் தலைவர்களும் இது வொரு மனிதாபிமான மற்ற நடைமுறை என்று அறிவித்த பின்பும் மக்கள் இதில் ஈடுபடுவது வருந்தத்தக்கது என்றும் அவர் சொன்னார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மடேஸ்நானாவை எதிர்த்து இயக்கம் நடத் திய சிவராமுவை மத வெறி அமைப்புகள் கடு மையாக தாக்கின. இத னால் கடந்த இரண் டாண்டுகளாக பலத்த பாதுகாப்புடன் மடேஸ்நானா நடத்தப் பட்டு வருகிறது. இவ் வாண்டு கோவில் வளா கத்தில் நூற்றுக்கு மேற் பட்ட காவல்துறையினர் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்தனர்.
கடவுள் சக்தி இவ்வளவுதான்! கோயில் உண்டியல்கள் கொள்ளை
திட்டக்குடி,டிச.9- ராமநத்தம் அருகே கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடி சென்ற வர்களை காவல்துறையினர் வலைவீசி தேடிவரு கின்றனர்.
ராமநத்தத்தை அடுத்துள்ள எழுத்தூர் கிராம எல்லையில் நல்லதங்காள் கோவில் உள்ளது. சம்பவத்தன்று மாலை இந்த கோவில் பூசாரி ராஜா வழக்கம்போல் கோவிலை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்று விட்டார்.
மறுநாள் காலையில் வந்து பார்த்தபோது கோவி லின் முன்பக்க கதவுகளை உடைத்து அங்கிருந்த உண்டியலோடு பணம் திருடு போயிருந்தது தெரிய வந்தது. இதுபற்றி தகவல் அறிந்துதம் ராமநத்தம் காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், யாரோ சிலர் முன்புற இரும்பு கேட் மீது ஏறி உள்ளே புகுந்துள்ளனர். பின்னர் அங்கிருந்த முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். அங்கு 2 உண்டியல்களை தூக்கி அருகில் சோளக்காட்டு பகுதிக்கு சென்றுள்ளனர். அந்த இடத்தில் உண்டியல்களை உடைத்துப் போட்டுவிட்டு பணத்துடன் ஓடியது தெரியவந்தது.
இதுகுறித்து ராமநத்தம் காவல் நிலையத்தில் பூசாரி ராஜா புகார் செய்தார். இந்த புகாரின் பேரில் உதவி ஆய்வாளர் விஜி வழக்குப்பதிவு செய்து கொள்ளையடித்து சென்றவர்களை தேடி வரு கின்றார்.
மனிதன்
பலவிதக் கருத்துகளையும், நிகழ்ச்சி களையும்பற்றிச் சிந்தித்து இது நல்லது, இது தீயது என்று உணரக்கூடிய சக்தி பெற்று, நல்லனவற்றைக் கடைப்பிடிக்கக் கூடியவன் எவனோ அவனைத்தான் மனிதன் என்று கூற முடியும்.
(விடுதலை, 9.6.1962)
இளைஞர்களே, இயந்திரங்கள் வழி தானா?
உலகத்தின் தலைசிறந்த மனோ தத்துவ அறிவியல் சிந்தனையாளர் களில் ஒருவர் டேனியல் கோல்மென் (Daniel Goleman) அவர்கள்.
நியூயார்க் டைம்ஸ் என்ற பிரபல அமெரிக்க நாளேட்டின் அறிவியல் செய்தியாளராக நிருபராக இருந்தவர்; இதுவரை பல லட்சம் விற்பனையாகும் 13 புத்தகங்களை எழுதியவர்.
மக்கள் தொடர்புக்குரியதான நிறுவனங்கள், இயக்கங்கள், அமைப்பு களை நடத்துவோர் அனைவரும் எப்படி மனிதவளத்தைச் சீரிய முறை யில் நல்லுறவோடு பயன்படுத்தி முழுப் பயனைத் துய்ப்பது என்பதுபோன்ற கருத்துகளையே பலவித கோணங் களில் அந்த புத்தாக்கச் சிந்தனை ஊற்றான நூல்கள் நமக்குத் தருவன வாகும்.
அவர் 2013இல் எழுதி, 2014இல் வெளிவரவிருக்கும் ஒரு புதுப் புத்தகம் - (இப்போது கடைகளுக்கு வந்து விட்டது) வாங்கினேன். படித்தேன். சுவைத்தேன்.
‘Focus’ என்ற தலைப்பில் வெளி வந்துள்ளது அந்த புத்தகம் (‘The Hidden Driver of Exellence’) என்பது அதன் அடித்தலைப்பு ஆகும்.
இன்றைய இளைய தலைமுறையினர் அவசியம் படித்து, தங்கள் வாழ்வை மேம்படுத்திக் கொள்ள வேண்டிய மிக முக்கியமான அந்நூல் பல அரிய தகவல் களை அவர்களுக்கு அளிக்கிறது!
இன்றைய குழந்தை- வளர் இளம் பிராயத்தினர் எப்போதும் கைத் தொலைப் பேசி முதல் பல் வகை மின் கருவிகளோடு தான் வாழ்ந்த வண்ணம் உள்ளனர்.
இந்த உலகத்தைவிட டிஜிட்டில் உலகத்தில் (Digital World) தான் அவர்கள் சதா வாழ்கின்றனர்!
எங்கும் எதிலும் ‘Wifi’ - மின் இயந்தி ரங்களோடு இன்றைய இளையர்கள் தங்கள் வாழ்க்கையைச் செலவு செய் கின்றனர்!
உணவு, உறக்கம், படிப்பு - இவை களைக் கூட விட்டுவிட்டு - குடும்ப உறவுகளுடன் ஆசிரியர்களுடன்கூட உரையாடுவதைத் தவிர்த்து விட்டு, சதா சர்வ நேரமும் மின் இயந்திரக் கருவி களோடு, இணை பிரியா வாழ்வு வாழுகின்றனர்!
இவர் இதைப்பற்றி ஒரு அருமையான தேவையான எச்சரிக்கையை விடுத் துள்ளார்.
இப்போது இவர்களது நேரம் - காலம் - எல்லாம் அதிகம் நேரம் இந்தியரங் களுடன்; குறைந்த நேரமே மனித உறவு களுடன் என்ற போக்கு அண்மையில் பெரிதும் வளர்ந்துள்ளது.
இது விரும்பத்தக்கதல்ல; காரணம் குழந்தைகள், இளைஞர்களின் மூளை வளர்ச்சி என்பது, சமூக மற்றும் வளர்ச்சி பூர்வமான விஷயங்களைக் கற்று பெருக்கம் அடைவது என்பது மனிதத் தொடர்புகள் (Contacts) மற்றும் கலந்து உரையாடல்கள் (Conversatiion) மூலம்தான் ஒவ்வொரு நாளிலும் உருவாகிறது. இப்படி கலந்து பேசி உறவாடுதல் தான் மூளையின் ரத்த ஒட்டப் பாதையை பக்குவப்படுத்தி சிறப்பாக அமைய உதவி புரிகிறது. (Mold Brain Circutory)
குறைந்த நேரமே மனிதர்களுடன் பேசுவதில், விவாதிப்பதில் செலவிடப் படுமானால் மூளை வளர்ச்சி சிறப்பாக அமைவதற்கு அதுவே (அதாவது இயந்திரங்களை அதிக நேரம் செல விடப்படுதல்) பெருந்தடையேயாகும்.
அவ்வளவு தூரம் ஏன் போவா னேன்? நாம் வாய்ப்பாடு படித்தோம்; நினைவுவன்மையை அதிகப்படுத் தியது.
இப்போது Calculator கால் குலேட்டர் எதற்கெடுத்தாலும் பயன் படுத்துவது, அவசர விடை கிடைத்தா லும், மூளை வளர்ச்சிக்கு உதவவில் லையே! அது ஒன்றே போதாதா?
பல வகுப்பு நண்பர்களுக்கு உரை யாடல் சக்திகூட பலவீனமாகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
(எஞ்சியவை நாளை) --k.veramani
4 மாநில சட்டசபை தேர்தல் முடிவு தி.மு.க. தலைவர் கலைஞர் கருத்து
சென்னை, டிச.9- 4 மாநில சட்டசபை தேர்தல் முடிவை வைத்து பார்க்கும் போது, காங்கிரஸ் கட்சிக்கு இது பின்னடைவுதான் என்று தி.மு.க. தலைவர் கலைஞர் கூறினார்.
தி.மு.க. தலைவர் கலைஞர் சென் னை கோபாலபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று (8.12.2013) மாலை செய்தி யாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது செய்தி யாளர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு கலைஞர் அளித்த பதில்களும் வருமாறு:
கேள்வி:4 மாநில தேர்தல் முடிவுகளைப்பற்றி...!
கலைஞர்:அந்த மாநிலங்களில்இந்த தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு எல்லாம் என்னுடைய வாழ்த்துகள்.
கேள்வி:இந்த தேர்தல் முடிவுகளை பார்க்கும்போது, அடுத்து வரும் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரசுக்கு பின்னடைவு ஏற்படும் என்று நினைக்கிறீர்களா?.
கலைஞர்:யூகங்களுக்கு பதில் சொல்ல முடியாது. காங் கிரசை பொறுத்தவரையில் இது ஒரு பின்னடைவு தான்.
கேள்வி:ஏற்காடு இடைத்தேர்தலில் நடைபெற்ற அராஜகங்களை சுட்டிக்காட்டியிருக் கிறீர்கள். அதற்குப்பிறகும் கணிசமான வாக்குகள் தி.மு.க.விற்கு கிடைத்திருக் கிறது. ஆனால் தேர்தல் ஆணையம் உங்கள் புகார்களை கண்டு கொள்ள வில்லையே!.
கலைஞர்: தேர்தல் ஆணையம் முதல் அமைச்சரின் விளக்கத்தை ஏற்றுக் கொள்ளாமல் கண்டனம் தெரிவித் திருக்கிறதே தவிர, எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
கேள்வி:ஏற்காடு இடைத்தேர்தல் அராஜகங்களை பார்க்கும்போது, இடைத்தேர்தல் என்றாலே ஆளுங்கட்சி என்ற நிலை இருக்கிறது!
கலைஞர்:ஆளுங்கட்சியின் அராஜகங்களை தடுக்க முடியவில்லையே, என்ன செய்வது?
கேள்வி: இதற்கு முடிவுதான் என்ன?
கலைஞர்: உங்களைப் போன்ற பத்திரிகைகாரர்கள் இதைப் பற்றி விளக்கி எழுத வேண்டும். அப்படித் துணிந்து எழுதினால் பயன் கிடைக்கும்.
- இவ்வாறு அவர் கூறினார்.
தஞ்சை விழாவில் பெருமக்கள் கொட்டு முரசம்
தந்தை பெரியார் புகழ் உலகம் முழுவதும் பரவுவதற்குக் காரணமானவர் ஆசிரியர்
தி.மு.க. தேர்தல் பிரச்சாரக் குழு செயலாளர் எல்.கணேசன்
2.12.2013 அன்று மாலை தஞ்சையில் நடை பெற்ற திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களின் 81 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா - பெரியார் உலகத்திற்காக 1000 பவுனுக்குரிய தொகை வழங்கும் விழாவில் பாராட்டுரை வழங்கினார்கள்.
தி.மு.க.தேர்தல் பிரச்சாரக் குழு செயலாளர் எல்.கணேசன்
நான் ஒன்றே ஒன்றை மேற்குறிப்பிட்டு சொல்ல விரும்புகிறேன். ஒரு தலைவருடைய புகழ், ஒரு தலைவருடைய வரலாறு நிலைப்பது என்பது அந்தத் தலைவராலே என்று நான் நினைப்பது இல்லை. தந்தை பெரியார் அவர்களுடைய புகழ் இன்றைக்கு அகில இந்திய அளவில், ஏன் இந்த அகில அளவில் நிலை நாட்டப்படுகிறது என்று சொன்னால், அதற்கு அடிப்படையான காரணம், அவருடைய வழித்தோன்றலாக, அவருக்குப் பின்னாலே அந்த இயக்கத்தைக் கட்டிக் காத்து வருகின்ற தமிழர் தலைவர் ஆசிரியர் அவர் கள்தான்.
நான் இன்னும் சொல்லுவேன், அதுதான் உண்மை. உங்களுக்குத் தெரியும், அறிஞர் அண்ணா அவர்களுடைய புகழை, நிலை நிறுத்திய பெருமை அண்ணன் கலைஞர் அவர் களுக்குத்தான் உண்டு. அந்த மறுமலர்ச்சியை, யார் வேண்டுமானாலும், எங்கே வேண்டுமா னாலும் கொண்டு வந்திருக்கலாம். ஆனால், அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் என்று அண் ணாவின் பெயரை அந்த மறுமலர்ச்சித் திட்டத் திற்கு வைப்பதற்கு, ஒரு கலைஞர்தான் தேவைப் பட்டார் என்பதை நீங்கள் மறந்துவிடக் கூடாது.
அதைப்போலத்தான், நாம் சமத்துவம், சகோதரத்துவம் என்றெல்லாம் சொல்கிறோம் அல்லவா, இந்தச் சொற்களை நாம் எங்கேயிருந்து கடன் பெற்றோம் தெரியுமா? பிரெஞ்ச் புரட்சி யின் மூலப் பிதாக்களாக இருந்த ரூசோ, வால் டேர் போன்றவர்கள் முழங்கிய முழக்கம்தான் சமத்துவம். ஆனால், நண்பர்களே, தந்தை பெரி யார் நினைவு சமத்துவபுரம் என்று பெயர் வைக்க, ஒரு கலைஞர்தான் தேவைப்பட்டிருக்கிறார் என்பதை நீங்கள் மறந்துவிடக் கூடாது.
ஆகவேதான், என்னைப் பொறுத்தவரையில், திராவிடர் இயக்கம் - தந்தை பெரியார் அவர்கள் கொள்கையைத் தந்தார் - இலட்சியத்தைக் கொடுத்தார் - அதுவும் புரட்சிகரமான இலட் சியத்தையும், கொள்கைகளையும் கொடுத்தார். அதோடு நின்றிருந்தால், பெரியார் நிலைத்திருக்க மாட்டார் - பெரியார் நிலைத்து நிற்கிறார் என்பதற்குக் காரணம், அவர் விட்டுச் சென்ற சொத்துக்களில் தலையாய சொத்து - தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள்தான். அவர்களுக்கு இன்று 81 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா. இந்த பிறந்த நாள் விழாவில், இதயம் திறந்து வாழ்த்து கிறேன். வாழ்த்துவதற்கு வயதெல்லாம் வேண்டிய தில்லை - உள்ளம்தான் வேண்டும். எனக்கு நிரம்ப உள்ளம் உண்டு - அவர் வாழவேண்டும், வாழ வேண்டும் என்பதற்குத் தமிழ்ச் சமுதாயம் தந்தை பெரியார் வழியில் நடப்பதற்கு அவர் பாடுபட வேண்டும் என்பதற்காக அவர் வாழவேண்டும், வாழவேண்டும் என்று வாழ்த்தி விடைபெறு கிறேன், நன்றி, வணக்கம்!
- இவ்வாறு தி.மு.க. தேர்தல் பணிக்குழுச் செயலாளர் எல்.கணேசன் அவர்கள் உரையாற்றினார்.
கழக பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன்
தமிழர் தலைவர் அவர்கள் பாலப் பருவம் முதல் 81 வயது வரை 71 ஆண்டுகளுக்கும் மேலான பொது வாழ்க்கைக்குச் சொந்தக்காரராக - தந்தை பெரியாரால் அடையாளம் காணப்பட்டு 71 ஆண்டு காலம் ஒரே கட்சி - ஒரே கொடி - ஒரே தலைமை என்று இன்றைக்கும் ஒரு போர்க்கள நாயகராகத் திகழ்ந்துகொண்டிருக்கக்கூடிய உத்தமத் தலைவராக இந்தியத் துணைக் கண்டத்தில் திகழ்ந்து வருபவர் தமிழர் தலைவர் அவர்கள்தான்.
எந்த ஒரு தலைமைக்கும் இல்லாத சிறப்பும், பெருமையும் 71 ஆண்டுகால பொதுவாழ்க்கை. 10 வயதில் மேடை ஏறி பேசத் தொடங்கி, கம்ப ராமாயணத்திலும், கடவுள் காம லீலைகளிலும் ஊறித் திளைத்திருக்கும் என்னருமை தமிழகப் பெருமக்களே என்று தமிழ்நாட்டு மக்களுடைய உள்ளத்திலே ஒரு விழிப்புணர்ச்சியை, அறியா மைக்கு எதிரான ஒரு அறப்போர் உணர்வைத் தூண்டிவிட்ட அந்தத் தலைவர்தான், இன்றைக்கு ஒரு மாபெரும் தலைவராக உயர்ந்திருக்கிறார். அப்படிப்பட்ட தலைவரை வாழ்த்திப் பெருமை சேர்க்க வெறும் பிறந்த நாள் விழாவாக மட்டும் இல்லாமல், இந்த நிகழ்ச்சியை, பெரியார் உலகம் காண - 95 அடி உயர பெரியார் சிலை - பீடத்தை யும் சேர்த்து 135 அடி உயர பெரியார் சிலையை உருவாக்கி - அந்தச் சிலை உருவாக்கத்திற்காக இந்தப் பிறந்த நாள் விழாவைப் பயன்படுத்திக் கொள்ளக்கூடிய ஒரு தலைவராக, அப்பழுக்கற்ற ஒரு தலைவராக திகழ்ந்துகொண்டிருக்கக்கூடிய தத்துவப் பேராசான்தான் தந்தை பெரியாரின் அரிய கண்டுபிடிப்புதான் - இவர்! வழிகாட்டக் கூடிய ஒரு மாபெரும் தலைவராக அடையாளப் படுத்தி இருக்கக்கூடிய அந்தத் தலைவரை வாழ்க, வாழ்க என நெஞ்சார வாழ்த்தக் கூடிய வகையில், இன்றைக்கு மாமழை போற்றுதும், மாமழை போற்றுதும் என்று சொல்லக்கூடிய வகையில், இயற்கையே இன்றைக்கு எங்கள் தலைவரை வாழ்த்துகிறது.
இந்தத் தலைவர் வாழவேண்டும்; ஒரு புரட்சிக்காரராக, புதுமையாளராக, பெரியாரின் கொள்கையைப் பரப்புகின்ற ஒரு பணியாளராக, பெரியார் கொள்கையைப் பேசாத நாளெல்லாம் தன் வாழ்க்கையில் வெறும் நாள் என அறிவித்து, பெரியாரின் கொள்கையைப் பேசிக்கொண்டே யிருக்கக் கூடிய அந்தத் தலைவர் - இன்றைக்கு அவரைத் தமிழகமே வாழ்த்துகிறது என்று சொல்லி விடைபெறுகிறேன், நன்றி வணக்கம்!
- இவ்வாறு திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் உரையாற்றினார்.
கழகப் பொருளாளர் டாக்டர் பிறைநுதல் செல்வி
நம்மால் முடியாதது யாராலும் முடியாது
யாராலும் முடியாதது நம்மால் மட்டும் முடியும் என்று இன்று நிரூபித்துக் காட்டி, மிக அமைதியாக இருக்கும் திராவிட இயக்கத்தின் அருமை மிகு உறவுகளே உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கத்தினை தெரிவித் துக் கொள்கிறேன்.
தந்தை பெரியார் அவர்களின் வரலாற்று சிறப்புமிக்க சாதனைகளை - பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் அவர் செய்த மிகப்பெரிய சமூகப் பணிகளை இளைஞர் சமுதாயமும், மாணவர் சமுதாயமும் தெரிந்துகொள்வதற்கு ஏற்ற வகையில், தமிழர் தலைவர் அய்யா அவர்கள், சிறுகனூரில் தந்தை பெரியார் அவர்களுக்கு 95 அடி உயர வெண்கலச் சிலை அமைக்கவேண்டும் என்று, அக்டோபர் மாதம் 20 ஆம் தேதி பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அந்தத் தீர்மானத்தின்படி, சிறுகனூரில் பெரியார் உலகம் அமைய, பெரியாரின் 95 அடி உயர வெண்கலச் சிலை அமைக்கவேண்டுமானால், 500 டன் சிமெண்ட், 300 டன் இரும்பு, 146 டன் வெண்கலம் மேலும், நூலகம், ஆய்வகம், உணவு விடுதி, சிறுவர் பூங்கா இவை அனைத்தும் அமைய வேண்டுமென்று சொன்னால், 39 கோடியே 85 லட்சம் ரூபாய் தேவை என்ற நிலையில், இது முதல் ஆரம்பமாக, முதல் சுற்றாக, திராவிடர் கழகத்தின் தோழர்கள் தேனீக்கள் போல பறந்து பறந்து சேகரித்து, 43 நாள்களில் 2 கோடியே 51 லட்சத்து 33 ஆயிரம் (அதாவது 1005 பவுன்) ரூபாய் சேகரிக்கப்பட்டு முதல் தவணையாக இது அளிக்கப்பட்டிருக்கிறது. நம்முடைய தோழர்கள் தேனீக்களைப் போல சுற்றிச் சுற்றி இந்தத் தொகை யினை வசூலித்திருக்கிறார்கள். இது முதல் தொகை தான். இன்னும் 7 கோடி தமிழர்கள் இருக்கக் கூடிய சூழ்நிலையில், எல்லோரிடத்திலும் வசூ லித்து, இந்த 39 கோடியே 85 லட்சம் ரூபாயினை நாம் அடைவோம் என்று சூளுரைப்போம். இவ் வாறு திராவிடர் கழகப் பொருளாளர் டாக்டர் பிறைநுதல் செல்வி அவர்கள் உரையாற்றினார்.
தமிழர்க்கு உலகில் எந்த மூலையில் இடர்ப்பாடு வந்தாலும் முதலில் குரல் கொடுக்கக்கூடிய தலைவர் ஆசிரியர் வீரமணி - டாக்டர் சோம.இளங்கோவன் படப்பிடிப்பு
பெரியார் பன்னாட்டமைப்பின் இயக்குநர் டாக்டர் சோம.இளங்கோவன் (அமெரிக்கா) அவர்கள் உரையாற்றுகையில்,
அருமைத் தமிழ் நெஞ்சங்களே, தந்தை பெரியார் வாழ்கிறார், வாழ்ந்து கொண்டிருக் கிறார் - சிலையாக இல்லை, சிந்தனையாக உலகெங்கும் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பதை, தினந்தோறும் தமது கடும் உழைப் பால், தமிழகம் மட்டுமன்றி, உலகெங்கும் பரப்பி வரும் தமிழர் தலைவர் அவர்களே, கூடியுள்ள பெரியோர்களே, தாய்மார்களே, ஆர்வமிக்க தொண்டர்களே, உங்கள் அனைவருக்கும் வணக்கம்.
ஓரிரு செய்திகளைச் சொல்லி, தமிழர் தலைவர் அவர்களை வாழ்த்த விரும்புகிறேன். எந்தத் தமிழனுக்கு உலகத்தில் எந்த ஒரு மூலையில் கெடுதல் நடந்தாலும், முதலில் துடிக்கும் இதயம் நம்முடைய தமிழர் தலைவர் இதயமாகத்தான் இருக்கும். தமிழ்நாடு அறக்கட்டளை என்று அமெரிக்காவிலுள்ள நாங்கள் இங்கே நிறுவினோம்; அதற்கு ஒரு இடம் கொடுக்கப்பட்டது. அந்த இடத்திற்கு ஒரு ஆபத்து வந்தது. உடனே தமிழர் தலைவர் அவர்கள் எங்களை அழைத்து, அதற்கு ஆவன செய்ய அறிவுரை வழங்கினார். அந்த இடம் காப் பாற்றப்பட்டு, இன்றைக்கு தமிழ்நாடு அறக்கட் டளை பல பணிகளைச் செய்து வருகிறது.
அதேபோல், அமெரிக்காவில் ஒரு செய்தி வந்தது; ராஜபக்சே அப்பாவி தமிழர்களை கொன்று குவிக்கப் போகிறான் என்று; அந்தச் செய்தியைத் தெரிவித்தவுடனே தமிழர் தலைவர் அவர்கள் மிகவும் ஆத்திரத்துடன், முதல்வர் கலைஞர் அவர்களை நேரில் சந்தித்து, என் னென்ன செய்ய முடியுமோ, அத்தனையையும் செய்தார்கள். அடுத்த நாள் முதல்வர் கலைஞர் அவர்கள், யாருக்கும் தெரியாமல் உண்ணா விரதம் இருந்தார். ஆனால், கொடுங்கோலன் ராஜபக்சே, பொய் சொல்லி, ஏமாற்றி விட்டான்.
தந்தை பெரியார் அவர்களின் வாரிசு என்று சொன்னார்கள்; அது கொள்கை வாரிசாக இன்று உலகமெங்கும் பெரியாரின் கொள்கை யைப் பரப்புவதற்காக நாங்கள் எல்லாம் பாடுபடுகின்றோம் அவரின் தலைமையில்.
அவர் வெளிநாட்டிற்கு வந்துவிட்டால், ஈ மொய்க்கும் கும்பல்போல் தமிழர்களின் கூட்டம் அவரிடம் அன்போடு பழகுவதைப் பார்த்தால், ஆசிரியரும், பெரியாரும் என்றும் வாழ்வார்கள் என்பதை நாம் மிகவும் உறுதி யாகச் சொல்லிக் கொள்ளலாம்.
திராவிடர் கழகம், தமிழர் தலைவர் அவர்கள் ஒரு ஏணி போன்று. அந்த ஏணியில் ஏறியவர்கள் பலர் உண்டு.
மனநலம் மன்னுயிர்க்கு ஆக்கம் இனநலம்
எல்லாப் புகழும் தரும்
என்றார் திருவள்ளுவர்.
எல்லாப் புகழும் வேண்டாம் - தமிழர் தலை வரின் ஆணை மட்டும் போதும்; எங்களுக்குப் புகழ் வேண்டாம் - உங்கள் கடமைகளை நிறைவேற்றுவோம் என்று ஆயிரம் ஆயிரம் கருஞ்சட்டைப் படையினர் தயாராக உள்ளனர். ஆயிரம் பொற்காசுகள் ஒன்றும் பெரிய செய் தியல்ல - அவருடைய ஆணையை நிறைவேற்ற ஆயிரம் ஆயிரம் கருஞ்சட்டைத் தொண்டர்கள் உலகமெங்கும் இருக்கிறார்கள். அவர் நீண்டு வாழவேண்டும்; தமிழர்களுக்கு இன விடுதலை முக்கியம்; அந்த இன விடுதலை கிடைக்கும்வரை வாழ்ந்து அவர் சாதித்துக் காட்டவேண்டும் என்று வாழ்த்தி விடைபெறுகின்றேன்.
- இவ்வாறு அவர் உரையாற்றினார்.
ஸ்டெம்செல்கள் மூலம் செயல்பாட்டு நுரையீரல் செல்கள்: மருத்துவ உலகில் புதிய சாதனை
ஸ்டெம் செல்களைக் கொண்டு புதிய நுரையீரல் செல்களை உரு வாக்கி அமெரிக்க ஆராய்ச்சி யாளர்கள் புதிய சாதனை படைத் துள்ளனர். ஸ்டெம்செல்கள் மூலம் இதுவரை இதய செல்கள், கணைய பீட்டா செல்கள், குடல் செல்கள், கல்லீரல் செல்கள், நரம்பு செல்கள் போன்றவை உருவாக்கப் பட்டுள்ளன. இந்நிலையில், ஸ்டெம் செல்கள் மூலம் முதன்முறையாக செயல்பாட்டு நுரையீரல் செல்களை உருவாக்கி புதிய சாதனை நிகழ்த்தியுள்ளனர் அமெரிக்க ஆராய்ச்சி யாளர்கள்.
நுரையீரல் செல்கள்.... அமெரிக்காவின் கொலம் பியா மருத்துவ மய்யத்தின் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மனித ஸ்டெம்செல்களைக் கொண்டு முதன்முறையாக செயல்பாட்டு நுரையீரல் செல்களை உருவாக்கியுள்ளனர்.
முக்கியத்துவம் வாய்ந்தது.... இந்த ஆராய்ச்சியின் முடிவுகள், நுரையீரல் நோய் குறித்த மாதிரிகளை ஆய்வு செய்வதிலும், மருந்துகளைப் பரி சோதிப்பதிலும், மனித நுரையீரல் வளர்ச்சிகளைப் பற்றி அறிவதிலும், மாற்று நுரையீரல் திசு உருவாக்கு வதிலும் முக்கியத்துவம் பெறுவதாக கருதப்படுகிறது.
புதிய முன்னேற்றம்.... தனது ஆராய்ச்சி முடிவுகள் குறித்து மருத் துவ பேராசிரியர் ஹான்ஸ் வில்லியம் கூறுகையில், நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை என்பது பெரிய முன்னேற்றத்தை இதுநாள்வரை கொண்டிருக்க வில்லை. எனவே, தற்போதைய கண்டுபிடிப்பு இந்த சிகிச்சையில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும்.
நுரையீரல் மாற்றுச் சிகிச்சை.... இவற்றை முறையாகப் பயன்பாட்டிற்குக் கொண்டுவர பல வருடங்கள் ஆகும் என்றபோதிலும், ஒரு நோயாளிக்கு அவரது தோலைப் பயன்படுத்துவதன் மூலம் நுரையீரல் மாற்று சிகிச்சை அளிப்பது குறித்து நாம் யோசிக்கத் தொடங்கமுடியும்' எனத் தெரிவித்துள்ளார்.
உடல் நலம் காக்க...
கீரை சாப்பிடுங்க கீரைகளை உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் நோய்கள் நம்மை நெருங்காது. எல்லாவித கீரையிலும் மருத்துவ குணங்கள் உள்ளது.
வெந்தயக்கீரை: உடலுக்கு ஊக்கத்தை அளிக்கும். வயிற்றுப் புண்கள், பேதியை குறைக்கும். அதிகமாக இரும்புச்சத்து கொண்டது.
முருங்கை கீரை: உடலுக்கு சக்தியையும், வலிமை யையும் அளிக்கும். இரும்புச்சத்து அதிகம் உள்ளது. ஆண்மையை அதிகரிக்கச்செய்யும். மலச்சிக்கலை குறைக்கும். ரத்தத்தை சுத்தப்படுத்தும். மாதவிலக்கின் போது ஏற்படும் வலியை குறைக்கும். ரத்தசோகையை குறைக்கும்.
அரைக்கீரை: உடலில் இருக்கும் விஷங்களை முறிக்கும் சக்தி பெற்றது. தோல் சம்பந்தப்பட்ட நோய்களைப் போக்கும். தளர்ச்சியைப் போக்கும். குடல் புண்னை ஆற்றும். குடலுக்கு வலிமையை தரும். தொடர்ந்து அரைக்கீரை சாப்பிட்டால் தேமல், சிரங்கு, சொறி, போன்ற நோய்கள் வராமல் தடுக்கலாம்.
சிறுகீரை: மலச்சிக்கலைக் குறைக்கும். தொடர்ந்து இந்த கீரையைச் சாப்பிட்டால் உடலில் உள்ள அதிகப் படியான பித்தத்தைக் குறைக்கும். உடலுக்கு ஊக்கம் அழித்து தளர்ச்சியை போக்கும்.
அகத்திக்கீரை: உடலில் காணப்படும் அதிகஅளவு வெப்பத்தை குறைக்கும் குடற்புழுக்கலை அழிக்கும். பித்தம், தலைச்சுற்றல், மயக்கம், போன்றவை வராமல் தடுக்கும். ரத்தத்தை சுத்திகரிக்கும். அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் பேதி ஏற்படும்.
மணத்தக்காளி கீரை: வயிற்று புண்களை போக்கும். குடல் புண்களை குறைத்து குடலுக்கு பலம் அளிக்கும்.
பசலைக்கீரை: உடலுக்கு குளிர்ச்சி தரும். சிறுநீர் கட்டை குறைத்து நீரை வெளியேற்றும் சக்தி வாய்ந்தது. தாய்ப்பால் பெருகும்
இன்று (டிச. 9) சர்வதேச ஊழல் ஒழிப்பு தினம்
இன்றைய உலகில் ஒவ்வொரு நாட்டிற்கும், குறிப்பாக இந்தியாவுக்கு பெரும் ஆபத்தாக இருக் கக்கூடிய பிரச்சினைக ளில் முதலிடத்தை பிடித் திருப்பது ஊழல். இது நாட்டின் பொருளா தார, சமூக, அரசியல் முன்னேற்றத்தையே பாதிக்கக்கூடியது. ஊழல் ஒரு கடுமையான குற்றம். ஊழலை தடுக் கக்கூடிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக டிச., ஒன்பதாம் தேதி, சர்வதேச ஊழல் ஒழிப்பு தினம் கடைப்பிடிக்கப் படுகிறது.
"பொதுச் சொத்தை, தனியாரின் கைகளுக்கு போக விடுவது, அதிகா ரத்தை தவறாக பயன் படுத்துவது, பொதுப் பணத்தில் முறைகேடு செய்வது' ஆகியவை தான் ஊழல். இது பல வழிகளில் நடக்கிறது. லஞ்சம், மோசடி, டெண் டர்களில் விரும்பியவர்க ளுக்கு வளைந்து கொடுப் பது, சட்ட விதிகளை பின்பற்ற மறுப்பது ஆகியவற்றின் மூலம் ஊழல் பெருகுகிறது.
டிரான்ஸ்பெரன்சி இன்டர்நேஷன்ல்' 2013ஆம் ஆண்டுக்கான "ஊழல் குறைவு முதல் அதிகம் வரை' என்ற அடிப்படையில் பட்டி யலை சமீபத்தில் வெளி யிட்டது. மொத்தம் 177 நாடுகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. ஊழல் குறைவாக உள்ள இப்பட்டியலில் டென் மார்க், நியூசிலாந்து, பின்லாந்து, ஸ்வீடன், நார்வே ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன. இந்தியா, 94ஆவது இடத் தில் உள்ளது. அப்படி யெனில் இந்தியாவை விட, 93 நாடுகளில் ஊழல் குறைவாக உள்ளது.
லஞ்சம் வாங்குவதும், கொடுப்பதும் குற்றம் என்று சட்டம் இருந்தா லும், இதனால் தண் டனை பெற்ற அதிகாரி கள் எண்ணிக்கை மிகக் குறைவே. அரசு அலுவலங் களில் மட்டும் அல்ல, முக்கிய பொது இடங் களில், லஞ்ச ஒழிப்பு துறையினரின் முகவரி, போன் எண்களை தெளி வாக குறிப்பிட்டிருக்க வேண்டும். அதிகாரிகள் லஞ்சம் கேட்டால், மக் கள் தைரியமாக புகார் செய்ய முன்வர வேண் டும். ஊழல் வழக்கில் கைது செய்யப்படுபவர்க ளின் பெயர்களை, பொது இடங்களில் விளம்பரப் படுத்த வேண்டும். ஊழல் வாதிகளுக்கு கடும் தண் டனை வழங்க வேண்டும். அவர்களது வேலையை யும் பறிக்க வேண்டும். அப்போதுதான் மற்றவர் களிடம் அந்த எண் ணமே வராது.
Post a Comment