Search This Blog

28.8.13

கிருஷ்ணனுக்கு ஜெயந்தி கொண்டாடலாமா? கோபப்படாதீர் - சிந்திப்பீர்!


தமிழர் தலைவர் கேள்வி


பாவ யோனியிற் பிறந்தவர்கள் பெண்கள் என்று கூறுகிற கீதையை அருளியதாகக் கூறப்படும் கிருஷ்ணனுக்கு, விழா (ஜெயந்தி) கொண்டாட லாமா? - சிந்திப்பீர் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

நாளை *(28.8.2013) கிருஷ்ணன் பிறந்த நாளாம்! கோகுலாஷ்டமி என்ற பெயரால் ஒரு நாள் அரசு விடுமுறை - அதுவும் மதச் சார்பின்மை முத்திரையை அரசியல் சட்டத்தின் முகப்பிலேயே ஏற்றிப் பிரகடனப்படுத்தியுள்ள அரசுகள் - விடுமுறை - பல கோடி ரூபாய்கள் நட்டம்! 

ஹிந்து மதத்தவரில் கிருஷ்ணனைக் கடவுளாகக் கொண்டாடும் மதத்தில் ஒரு பிரிவினர் தவிர, மற்றவர்கள் எல்லோரும் பேன் குத்திக் கொண்டு, சோம்பல் முறித்துக் கொண்டிருக்கும் பக்தி போதை ஏற்பாடு இது; மதச் சார்பின்மையை கேலிக் கூத்தாக்கும் செயல் இது!

பிள்ளை விளையாட்டே!

1. பிறப்பும் இறப்பும் இல்லாத கடவுள். (ஹிந்து மதத்தில்) பிறப்பதும், இறப்பதும் எல்லாம் வள்ளலார் கூறியபடியே பிள்ளை விளையாட்டு அல்லாமல் வேறு என்ன?

2. கடவுள் கற்பனைதான் என்றாலும் மனிதர்களுக்கு ஒழுக்கத்தைப் பரப்ப இப்படி ஒன்று தேவையில்லையா? என்று கேட்கும் அதிமேதாவிகள் உள்ளனர். அவர்களைக் கேட்க விரும்புகிறோம்.

அ) கண்ணன் ஒழுக்கத்தைச் சொல்லிக் கொடுத்த கடவுளா? சின்ன வயதில் வெண்ணெய் திருடி, பெரிய வயதில் குளத்தில் குளித்த பெண்களின் புடவைகளைத் திருடி, மரத்தின் மீதேறி அமர்ந்து, நிர்வாண நிலைப் பெண்களை அப்படியே நீரினை விட்டு வெளியேறிடச் சொல்லி, அதை ரசித்து, சுவைத்து, பெண் கேலியை முதன் முதலில் துவக்கி  வைத்தவன் - சராசரி மனிதன் கூட செய்ய வெட்கப்படும் செயலைச் செய்து, கிருஷ்ண லீலை என்று கொண்டாடுவது ஒழுக்கத்தை வளர்ப்பதா? ஒழுக்கத்தைச் சிதைப்பதா? பக்தர்கள் சிந்திக்கட்டும்!

சண்டை மூட்டிய கடவுள்!

ஆ) பகவத் கீதை உபதேசம் என்ற பெயரால் சகோதரர்களிடையேகூட சண்டை போர் துவக்கி ஒருவரை ஒருவர் அழிக்கும் வண்ணம் தூபம் போட்ட செயல் அருவருக்க, கண்டிக்கத்தக்க செயல்கள்.

(இ) வன்முறை மட்டுமல்ல, மனித குலத்தைப் பிளவுபடுத்தும் ஜாதி - வர்ண தர்மத்தை சதுர்வர்ணம் மயாஸ்ருஷ்டம் - நான்கு ஜாதிகளை நானே உண்டாக் கினேன்; நானே நினைத்தாலும்கூட ஜாதிக்கென்ற தர்மங்களை - குலதர்மத்தை - மாற்றிடவே முடியாது என்று கூறி, ஜாதி - வர்ணாஸ்ரமக் கொடுமையை நிலை நாட்டிய சமத்துவ விரோதியான ஒருவரைவிட சமூகத்திற்குக் கேடு செய்தவர்கள் யார் இருக்க முடியும்?

கோபப்படாதீர் - சிந்திப்பீர்!

இப்படிப்பட்ட மனித குலத்திற்குரிய சமத்துவம், சகோதரத்துவத்திற்கு எதிராகவும், பெண்களை பாவயோனிகள் என்று வர்ணித்தவருமான ஒருவரை கடவுளாக வணங்கிடுவது அறியாமை, மூடநம்பிக்கை காட்டுமிராண்டித்தனம் அல்லாது வேறு என்ன?

கோபப்படாமல் சிந்தியுங்கள் - பக்தி வந்தால் புத்தி போகும் என்ற பெரியார் மொழி எவ்வளவு சரியானது என்று உணருகிறீர்களா?

---------------------------------------------கி.வீரமணி தலைவர், திராவிடர் கழகம் சென்னை  27.8.2013

54 comments:

தமிழ் ஓவியா said...

""கோகுல அஷ்டமி "" கொண்டாடுவோர் சிந்தனைக்கு !!

பாஞ்சாலிக்கு அவ்வளவு துணியை ஏதோ ஒரு பெரும்

ஆலையில் இருந்து துணி நெய்து தருவது போல தம் கருணையாலும் ,மிக பெரிய சக்தியாலும் ""அற்புதம் "" செய்ததாக கூறப்டுகிற கண்ணன் தான் -பிறர் முன் பெண்களின் துகில் -சேலை -உரியப் படகூடாது என்ற மிகப் பெரிய "' நாகரிக "'மனித நேய தத்துவவாதியாக காட்டபடுகிற கண்ணன்தான் -குளத்தில் குளித்துகொண்டிருந்த 'கோபியர்களின் " புடவைகளை கரையிலிரிருந்து அபகரித்தான் .கோபியர்கள் வெட்கத்தால் உடலை நீரில் புதைத்துக்கொண்டு தலையைமட்டும் வெளியே வைத்து கெஞ்சி சேலை தானம் கேட்க்க ,அவர்களிடம் தண்ணீருக்கு மேலே வாருங்கள் ,வந்தால் தான் சேலையை தருவேன் என்று கூறினான் .அந்த காரியத்தை கவுரவர்கள் செய்தால் மான பங்கம் அதையே கிருஷ்ணன் செய்தால் குறும்பு என்றும் ""லீலை ""என்றும் வர்ணித்து மகிழ்ந்து .அதனையே படமாக்கி பூஜை அறைகளில் வைத்து வணங்குவதா ? இது போன்ற எண்ணற்ற நடவடிக்கைகள் அவர்கள் எழுதிவைத்த கதைகளில் இருந்தே நிருவபடுவதால் ""கிருஷ்ணன் ஒரு கபட வேடதாரி "" என்பது நிரூபணமாகிறது..( தமிழர் தலைவர் கி .வீரமணியின்"" கீதையின் மறுபக்கம் "" நூலிலிருந்து )

தமிழ் ஓவியா said...


நரியைப் பரியாக்கிய லீலை!


அரசியல் பிரச்சினை என்றால் அடேயப்பா - வானத்தை வில்லாக வளைத்து, எழுதும் வக்கணையைப் பாருங்கள். அணுவைத் துளைத்து ஏழு கடலைப் புகுத்தும் திறமையைப் பாருங்கள்.

அதேநேரத்தில், ஆன்மீகச் சமாச் சாரம் என்றால், ஆமைபோல அய்ந் தவித்து, அடங்கி விடும் மர்மம் ஏன்?

தன் காலை முதலை கவ்விய போது, ஆதிமூலமே என்று யானை அலறி அழைத்தபோது, மகாவிஷ்ணு தன் கருட வாகனத்தில் விரைந்தோடி வந்து சக்ராயுதத்தால் முதலையை அழித்து கஜராஜனாகிய யானைக்கு விடுதலை அளித்தான் என்று புராணம் சொன்னால், அந்த இடத்தில் மட்டும் அவாளின் அறிவு வேலை செய்யாது.

அதனை அண்டப் புளுகு என்று அலச மாட்டார்கள். மாறாக .........என்பது அய்தீகம்.... என்பது நம்பிக்கை என்று நைசாக நழுவிவிடுவார்கள்.

தன் சீடனான பட்டரைக் காப் பாற்றுவதற்காக திருக்கடையூரில் உள்ள அபிராமி அம்மை தன் காதில் இருந்த குண்டலத்தைக் கழற்றி எறிந்தவுடன், அப்படியே அமாவாசை பவுர்ணமியாக பரிணமித்துவிட்டது என்று அபிராமி அந்தாதி சொன் னால், அந்த இடத்தில் அறிவு ஆராய்ச்சிக்கு இடம் தரமாட்டார்கள். மாறாக, ........என்பது அய்தீகம் ..........என்பது நம்பிக்கை என்று நழுவி விடுவார்கள்.

மதுரை இருக்கிறதே, அங்கு நடப்பது மீனாட்சி தர்பார் என்பார்கள். ஆண்டு ஒன்றுக்கு 365 நாள்களில் 294 நாள்கள் அந்தக் கோவிலில் ஏதாவது திருவிழா என்று, கூத்தடிப் பார்கள். அப்பொழுதுதானே அவாள் வயிற்றில் அறுத்துக் கட்ட முடியும்.

ஸ்ரீமீனாட்சியம்மன் கோவிலில் நரியைப் பரியாக்கிய லீலை என்று ஒரு நாள் கூத்து அங்கே - முழு பக்கம் ஒதுக்கி எழுதுகிறார்கள்!

அது என்ன நரியைப் பரியாக்கிய கதை?

மதுரையை ஆண்ட பாண்டிய மன்னன் அரிமர்த்தன பாண்டியன். மாணிக்க வாசகன் அங்கே அமைச்சர்; படைக்காகக் குதிரைகள் வாங்க பொருளைக் கொடுத்து மந்திரியாகிய மாணிக்க வாசகரை அனுப்பி வைத்தார் மன்னர்.

குதிரை வாங்கச் சென்ற அமைச் சர் குதிரைகளுடன் திரும்பி வருவார் என்று மன்னர் எதிர்பார்த்தார். நாட் கள் ஓடின; ஓடிக்கொண்டே இருந் தன. குதிரைகளையும் காணோம் - மந்திரி மாணிக்கவாசகனையும் காணோம்.

அப்பொழுதுதான் தெரிந்தது. மன்னன் குதிரை வாங்கக் கொடுத்த பொருளைக் கொண்டு திருப்பெருந் துறைக் கோவிலுக்குத் திருப்பணி செய்துவிட்டான் அமைச்சர் மாணிக்க வாசகன்.

பாண்டிய மன்னனின் மகாகோபத் துக்கு ஆளானான் மாணிக்கவாச கன். என்ன செய்வதென்று அறியா மல், கைப்பிசைந்து நின்றான்; கடவு ளிடம் கசிந்துருகிப் பாடினான்.
என்ன ஆச்சரியம் - சினிமாவில் விட்டலாச்சாரியாவின் மாய தந்திரக் கதைபோல, சிவகணங்களைக் குதி ரைப் பாகர்களாகவும், நரிகளைப் பரிகளாகவும் (குதிரைகளாகவும்) ஆக்கி மதுரைக்கு அனுப்பி வைத் தான் சிவபெருமான்.

மன்னனும் மகிழ்ந்தான்; ஆனால், அன்று இரவு என்ன நடந்தது? மறு படியும் அந்தப் பரிகள் எல்லாம் நரிகளாகி ஓடிவிட்டன.

இம்முறை கட்டுக்கடங்கா கோபம் பாண்டியனுக்கு - மாணிக்கவாச கனை சுடு மணலில் கட்டிப் போட்டா னாம். ஆனால், இறைவன் திருவரு ளால் வைகையில் வெள்ளம் கரை புரண்டு ஓடியதாம். சுடுமணல் என்ன செய்யும்?

இதனைக் கண்டு அரசன் ஆண் டவன் அருள்பெற்றவன் தம் அமைச்சர் என்ற பெருமைப்பட்டு அவனை விடு வித்ததாக தலபுராணம் கூறுகிறது.

நரியைப் பரியாக்க முடியுமா? எந்தப் பத்திரிகைக்காரர் எழுது கிறார்? கடவுள் சக்தியால் முடியும் என்றால், அந்த நரிகளை நிரந்தரமாக ஏன் பரிகளாக்கவில்லை? என்ற கேள்வி எழுமே!

அதைக்கூட விட்டுத் தள்ளுங்கள்!

ஒரு அமைச்சராக இருக்கக் கூடியவன் அவன் எவ்வளவுதான் சிவபக்தி உடையவனாக இருந்தாலும், மன்னவன் கட்டளையை மறந்து, மன்னன் கொடுத்த பொருளைக் கொண்டு கோவில் திருப்பணி செய்தது முறையானதுதானா?

அமைச்சர் செய்தது மோசடியல் லவா? தண்டிக்கப்பட வேண்டியவ னல்லவா? அந்தக் குற்றவாளிக்குக் கடவுள் துணை போனது நேர்மை யானதுதானா?

இப்படியெல்லாம் சோ ராம சாமியை எழுதச் சொல்லுங்கள் பார்ப்போம் - கல்கி ராஜேந்திரனைக் கேள்வி கேட்கச் சொல்லுங்கள் பார்ப்போம் - ஆனந்தவிகடன் அறிவு வினாவை இந்த வகையில் தொடுக் குமா?

பக்தி என்ற போர்வையில் ஒழுக் கக்கேட்டை வளர்க்கலாமா? கடமை பிறழலாமா?

ஆம், ஒழுக்கக்கேடாக நடக்கலாம்; கடமை தவறலாம் என்கின்றனரே - இவர்களை என்ன சொல்ல - இவர் கள் நம்பும் ஆன்மிகத்தின் யோக்கி யதைதான் என்ன?

சிந்திப்பீர்!

தமிழ் ஓவியா said...


செய்தியும் சிந்தனையும்அவர்கள் பாணியில்

செய்தி: திருப்பதி ஏழுமலையான் கோவி லுக்கு ரூ.25 கோடி செலவில் தங்கத் தேர்.

சிந்தனை: தினமலர் துக்ளக் பாணியில் சொல்ல வேண்டுமானால் இனிமேல் வீட்டுக்கு வீடு பிரியாணிப் பொட் டலம் வரும் பாருங்கள். காவிரியாற்றில் நீர் கரை புரண்டு ஓடி வரும் பார்க்கப் போகிறீர்கள்.

தமிழ் ஓவியா said...


செய்தியும் - விமர்சனங்களும்


உயருகிறது

இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி காரணமாக நிதிச் சுமையைச் சரிக் கட்ட சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றுக்கு மாதா மாதம் ரூ.10 ஏற்றுவதுபற்றி மத்திய அரசு பரிசீலித்து வருகிறதாம்.

(உலகிலேயே தேர்தல், மக்கள் வாக்குபற்றிக் கவலைப்படாது கடமையாற்றும் மிகப் பெரிய கட்சி காங்கிரஸ்தான்; அப்படித்தானே?)

மனித உரிமை

மனித உரிமை ஆணையர் நவநீதம்பிள்ளை இலங்கை வருவதற்கு -அங்குள்ள புத்த துறவிகள் போராட்டம். (பிறகு என்ன? மனித உரிமை என்றால் சிங் களவர்களுக்குப் பிடிக்குமா என்ன?)

நீட்டிப்பு

இந்திய நாடாளுமன்றம் செப்டம்பர் 6ஆம் தேதி வரை நீட்டிப்பு.

(வேறு வழி என்ன? நாடாளுமன்றத்தை நடக்க விடக் கூடாது என்று கங்கணம் கட்டிக் கொண்டு நிற்கும்போது வேறு வழிதான் என்ன? நீட்டித்துதான் ஆக வேண்டும். அப்பொழுதாவது அவையை நடத்த விடுவார்களா? என்பதும் நியாயமான கேள்வியே!)

அத்துமீறல்

காஷ்மீரில் பாகிஸ்தான் அத்துமீறல்! ஒவ்வொரு நாளும் இதுபோன்ற செய்தி வெளிவந்து கொண்டு தானிருக்கிறது.

(சிறு துளி பெரு வெள்ளமாகி இந்தியா - பாகிஸ்தான் சண்டை என்று செய்தி வராமல் இருந்தால் சரி!)

மனிதநேயம்

வேலூரில் மூளைச்சாவு அடைந்த வாலிபரின் இதயம் நுரையீரல் - 90 நிமிடத்தில் சென்னைக்குக் கொண்டு வரப்பட்டு 2 பேர்களுக்குப் பொருத்தப்பட்டது.

(மனிநேயம் என்று இதற்குத்தான் பெயர். மண்ணுக்குள் புதைக்கப்படுவதைவிட, தீக்கு இரையாக்கப்படுவதைவிட செத்தும் உயிர் வாழக் கூடிய, இந்த மாந்தநேயம் பாராட்டப்பட வேண் டியது. பின்பற்றப்பட வேண்டியது ஆகும். திராவிடர் கழகம் உடற்கொடை இயக்கத்தையே நடத்துகிறதே!)

பட்டாசு

விருதுநகர் அருகே, முதலிப்பட்டியில் ஏற்பட்ட தீ விபத்தால், 4 பெண் தொழிலாளிகள் படுகாயம்.

(இதுபோன்ற சேதிகள் அவ்வப்பொழுது வருவதும், அந்த நேரத்தில் மட்டும் அரசு அதி காரிகள் சூடாக செயல்படுவதும், வாடிக்கையா கவே போய்விட்டது. ஏதாவது உருப்படியாக தொலைநோக்கோடு செய்யுங்கள் அய்யா! மக்களுக்குத் தேவையில்லாத, காசு பணத்தைக் கரியாக்கும், இதுபோன்ற தொழில்களுக்கு மாற் றாக, மக்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் தொழிற்சாலைகளைத் தொடங்குவது பற்றி, அரசுகள் சிந்திக்கக் கூடாதா? சிங்கப்பூரில் பட்டாசு வெடிக்கக் கூடாது தெரியுமா?)

எந்தப் பொந்தில்?

முகவரி கேட்பது போல் நடித்து பெண்ணிடம் சங்கிலிப் பறிப்பு.

(எந்தப் பொந்தில் எந்தப் பாம்போ! பெண்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய கால கட்டம் இது. எதற்கும் சட்டத்திற்கு உட்பட்ட பாதுகாப் புக் கருவியை வைத்துக் கொள்வது நல்லது).

தமிழ் ஓவியா said...


முயற்சிக்க வேண்டும்

தமது வாழ்க்கையால் பிறர் துன்பம் அடையா வண்ணம் நடந்துகொள்ளவேண்டும். இதையே மனித வாழ்க்கையின் இலட்சியமாகக் கொண்டு ஒவ்வொருவரும் வாழ்க்கை நடத்த முயற்சிக்கவேண்டும். - (விடுதலை, 20.3.1950)

தமிழ் ஓவியா said...


சிறுபான்மையினர் ஏமாளிகள் அல்லர்


டில்லியில் பிஜேபியின் தேசிய பிரச்சாரக் குழுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பிஜேபியின் முக்கிய தலைவர்கள் எல்லாம் கலந்து கொண்டனர்.

அக்கூட்டத்தில் பேசிய குஜராத் முதல் அமைச்சர் நரேந்திரமோடி, ஒரு கருத்தைத் தெரிவித்துள்ளார். நடக்க இருக்கும் மக்களவைத் தேர்தலில் சிறு பான்மையினரின் ஆதரவு தேவை என்று கூறியுள்ளார்.

இந்தியத் துணைக் கண்டத்தைப் பொறுத்தவரை சிறுபான்மை மக்கள் 20 சதவீதத்துக்கும் அதிகமாக இருக்கிறார்கள். இவர்கள் கண்டிப்பாக பிஜேபி என்ற இந்துத்துவா கட்சிக்கு எதிர்ப்பாகத்தான் தேர்தலில் நடந்து கொள்வார்கள் என்பது புரிந்து கொள்ளப்படக் கூடியதுதான்.

பாரதிய ஜனதா கட்சியின் கொள்கைகள், அது ஆட்சியிலிருக்கும் மாநிலங்களில் சிறுபான்மையி னருக்கு எதிராக மேற்கொள்ளப்படும் நடவடிக்கை களை சிறுபான்மையினர் எளிதில் மறந்திட முடியாது.

குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற முஸ்லிம் மக்களுக்கு எதிரான வன்முறைகள், ஒடிசா மாநிலத் தில் கிறித்தவர்களுக்கு எதிராக பிஜேபியினரும், சங்பரிவார்க் கும்பலும் நடத்திய வன்முறை வெறியாட்டங்களும் சிறுபான்மையினரை உறுதியான ஒரு முடிவுக்கு வரச் செய்திருப்பதில் ஆச்சரியம் இல்லை. பிஜேபி ஆட்சிக்கு வந்தால் தங்களின் வாழ்வாதாரத்துக்கு ஆபத்து என்பதை உணர்ந்து, தங்களின் வாக்குகள் சிதறப் படாமல் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டிய அவசியம் அவர்கள்மீது திணிக்கப்பட்டுள்ளது. சிறுபான்மையினர் தங்கள் மதத்தை இந்து மயமாக்கிக் கொள்ள வேண்டும்; சிறுபான்மையினர் தங்கள் கடவுள்களை மறந்துவிட்டு கிருஷ்ணனை யும், இராமனையும் வணங்க வேண்டும் என்று கூறு கிறவர்கள், எப்படி சிறுபான்மையினரின் வாக்கு களை எதிர் பார்க்கிறார்கள் என்று தெரியவில்லை.

அதுவும் பிஜேபியின் பிரதமருக்கான வேட்பாளர் என்று கூறும் நரேந்திர மோடியின் சிந்தனையும், செயல்பாடுகளும், ஆட்சி அதிகாரத்தைப் பயன் படுத்தி அவர் மேற்கொண்ட நரவேட்டையும், எளிதில் மறக்கப்படக் கூடியவையும் அல்ல. சிறுபான்மை மக்கள் மத்தியில் மட்டுமல்ல - உலகளாவிய அளவில் பெரும் அதிர்வுகளை அது ஏற்படுத்தி விட்டது.

குஜராத் கலவரத்தின் போது, அது பொடா சட்டத்தின் கீழ் 287 பேர் கைது செய்யப்பட்டனர் என்றால் அதில் 286 பேர் முசுலிம்கள், ஒருவர் சீக்கியர் பாதிக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் மோடி ஆட்சியில் என்கிறபோது அவர் நோக்கு - போக்கு எத்தகையது என்பதற்கு எந்தவித ஆராய்ச்சியும் தேவைப்படாது.

குஜராத் கலவரத்தின்போது அகதிகள் முகாம் களில் சரணடைந்த முசுலிம்களை எவ்வளவுக் கேவலமாகக் கொச்சைப்படுத்தினார் முதல் அமைச்சர் மோடி!

முசுலிம்கள், முகாம்களை தங்கள் இனப் பெருக்கத்திற்குப் பயன்படுத்திக் கொள்கின்றனர் என்று பேசிடவில்லையா?

தேர்தல் நெருங்கும் நேரத்தில் சிறுபான்மையினர் வாக்குகளைப்பற்றி அவர்களுக்குப் பெரும் கவலை ஏற்பட்டுள்ளது என்பதைத்தான் மோடியின் கருத்து வெளிப்படுத்துகிறது.

கடந்த 2009 மக்களவைத் தேர்தலுக்குமுன் புதுடில்லியில் பிஜேபி சார்பில் பெண்கள் மாநாடு ஒன்று கூட்டப்பட்டதை (13.7.2008) நினைவில் கொள்ள வேண்டும்.

முஸ்லிம்களில் எத்தனை சதவீதம் பேர் எங்களுக்கு வாக்களிக்கிறார்கள் என்பதைப் பொருட்படுத்தாமல், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்களின் முன்னேற்றத்திற்காகப் பாடுபடு வோம் அவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிப்போம் என்று எல்.கே. அத்வானி பேசினார்.

அப்பொழுது தேர்தலுக்கு முன்பு மேற்கொண்ட அதே உத்தியைத்தான் இந்தத் தேர்தலுக்கு முன்பும் பயன்படுத்திட எத்தனித்துள்ளனர்.

சிறுபான்மையினர் ஒன்றும் ஏமாளிகள் அல்லர். வரும் தேர்தலில் அவர்கள் பிளவுபடாமல் வாக்கு களைச் சிதறடித்துக் கொள்ளாமல் ஒன்றுபட்டு எழுந்து பிஜேபியையும் அதன் கூட்டாளிகளையும் வீழ்த்துவார்கள் என்பதில் அய்யமில்லை.

தமிழ் ஓவியா said...

அய்யய்யோ.. புரோட்டாவா...?


இன்று (27.8.2013) தீக்கதிர் நாளிதழில் 8ஆம் பக்கத்தில் - விரும்பி உண்ணப்படும் நச்சு உணவு என்ற தலைப்பில் வெளிவந்துள்ள ஒரு முக்கிய கட்டுரையை நமது வாசக நேயர்களுக்காக அப்படியே வெளி யிடுகிறோம்.

தமிழகத்தில் நகரங்களில் மட்டும் அல்லாது பட்டிதொட்டியெங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் கடைகளில் புரோட்டா கடைகளுக்கு முக்கிய இடம் உண்டு. தமிழகம் மற்றும் கேர ளாவில் மக்களால் விரும்பி உண்ணப் படும் உணவு புரோட்டாவாகும். இதிலும் எத்தனை வகை உண்டு. முட்டை புரோட்டா, கொத்து புரோட்டா, விருதுநகர் எண்ணெய் புரோட்டா, தூத்துக்குடி புரோட்டா, சில்லி புரோட்டா என்று கூறும் போதே நாக்கில் எச்சில் ஊறும். குற்றாலம் செல்லும் அனைவரும் தவறாமல் பிரானூர் பார்டரில் கிடைக்கும் புரோட்டா கடைகளுக்குச் சென்று ஒருகை பார்க்காமல் திரும்புவதில்லை.

கோதுமையில் இருந்து தயாரிக்கப்படும் மைதாவில் இருந்து புரோட்டா தயாரிக்கப்படுகிறது. நமது ஊர்களில் அரிசி போல் அன்றாட உணவில் கோதுமையை பயன்படுத்தி வரும் வட இந்தியாவில் புரோட்டா விரும்பி சாப்பிடப்படுவதில்லை என் பது கவனிக்கப்பட வேண்டிய தகவ லாகும். இரண்டாம் உலகப் போரின் போது கோதுமை பற்றாக்குறையைக் களைய மைதா அதிகமாக பயன் படுத்தப்பட்டது. அவ்வேளையில் புரோட்டா தமிழகத்தின் உணவு வகை களில் ஒன்றாக மாறியது. மைதாவின் தூய வெண்மை, நம் மனதைக் கொள்ளை கொள்ளச்செய்யும்.

ஒரு நாகம் படம் எடுத்தால் பார்க்க அழகாக இருக்கும் . அதற்காக அதை கையில் எடுத்து விளையாட முடியுமா? ஆனால் வெண்மையான மைதாவில் மறைந்திருக்கும் நச்சுப்பொருட்களை நாம் விரும்பி உண்கிறோம். அதன் மூலம், நச்சை நாமே நமது உடம்பில் ஏற்றிக் கொள்கிறோம். இந்த மைதாவில் இருந்து புரோட்டா மட்டுமல்ல, சிறியோரில் இருந்து பெரியோர் வரை விரும்பி உண்ணும் கேக் உள்ளிட்ட பல பொருட்கள் தயார் செய்யப்படு கின்றன. புரோட்டா எவ்வாறு தயாரிக்கப்படுகிறது என்பதை இங்கு விளக்க வேண்டியதில்லை. அது அனைவரும் நேரில் பார்த்த விஷயம்தான். ஆனால் மைதா எவ்வாறு தயாரிக்கப்படு கிறது என்பதுதான் இங்கு கூறப்பட வேண்டிய தகவலாகும்.

அங்குதான் நச்சுத்தன்மை கொண்ட வேதிப்பொருட்கள் அதில் சேர்க்கப்படு கின்றன. அவைதான் உடம்பில் சேரும் நச்சுப்பொருட்களாகும் .முதலில் கோது மையை நன்றாக தீட்டுகிறார்கள். கோது மையில் இருந்து தவிடும் நுண்ணுயிரி களும் தீட்டுதலின் மூலம் நீக்கப்படுகின் றன. பின்னர் அதை மாவாக அரைக் கிறார்கள். அந்த மாவு நல்ல மஞ்சள் நிறத்தில் இருக்கும். பின்னர் அந்த மாவில் பென்சாயில் பெராக்சைடு (Benzoyl Perozide) எனும் வேதிப் பொருளை கலக்குகிறார்கள். இந்த வேதிப்பொருள் கோதுமை மாவில் உள்ள மஞ்சள் வண்ணத்தை நீக்கி தூய வெண் மையாக மாற்றுகிறது.

தமிழ் ஓவியா said...

இந்த வேதிப்பொருள் ஒரு நச்சாகும். தலைமுடியை கறுப்பாக மாற்றும் சாயத் தில் சேர்க்கப்படும் வேதிப்பொருள் இது. இது மைதாவில் உள்ள மாவுப்பொரு ளுடன் இணைந்து உருவாக்கும் நச்சுப் பொருள் - சர்க்கரை வியாதிக்கு காரணி யாகிறது. மைதாவை மிருதுவாக மாற்று வதற்கு அல்லோக்சான் (Alloxen) எனும் வேதிப்பொருள் கலக்கப்படுகிறது. இது கலக்கப்பட்டவுடன் மைதா வெகு மிருதுவாக மாறுகிறது.

சர்க்கரை வியாதிக்கு மருந்து தயா ரிக்கும் ஆலைகளில் உள்ள சோதனைச் சாலைகளில் தயாரிக்கப்படும் மருந்துகள் முதலில் வெள்ளெலி, சிறுபன்றி, குரங்கு ஆகிய விலங்கினங்களிடம் சோதித்துப் பார்க்கப்படுகின்றன. இந்த மிருகங் களுக்கு சர்க்கரை வியாதியை உண் டாக்க இந்த அல்லோக்சான் ஊசி மூலம் செலுத்தப்படுகிறது. இந்த அல்லோக் சான் சேர்க்கப்படும் மைதாவை உண்பவர் களுக்கு சர்க்கரை நோய் உருவாகத் தானே செய்யும்.

இவை தவிர மைதாவில் செயற்கை வண்ணங்கள், தாது எண்ணெய்கள், சுவையூட்டிகள், பதனப்பொருட்கள், வெள்ளைச் சீனி, சாக்கரின், அஜினோ மோட்டோ ஆகிய பொருட்களும் சேர்க்கப்படுகின்றன. இவை மைதாவை மேலும் அபாயகரமானதாக மாற்றுகின் றன. இவை தவிர குளோரின் டை-ஆக்சைடு, பொட்டாசியம் புரோமைட், அம்மோனியம் கார்பனேட், சுண்ணாம்பு, சார்பிடன் மோனோ சாச்சுரேட் போன் றவைகளும் கலக்கப்படுகின்றன. கோதுமை தீட்டப்படும் போதே 76 விழுக் காடு வைட்டமின்களும், தாதுப் பொருட் களும் அகற்றப்படுகின்றன. அத்துடன் 97விழுக்காடு நார்ச்சத்தும் களையப்படு கிறது. களையப்பட்ட சத்துகளை மீண்டும் சேர்க்க செயற்கையாக உருவாக்கப்படும் வைட்டமின்களும், தாதுப்பொருட்களும் கூட்டப்படுகின்றன. ஆனால் இவை இயற்கையாக கிடைப்பவற்றுக்கு இணை யானவை அல்ல.

நார்ச்சத்து இல்லா உணவு நமது செரிமான சக்தியை அழித்து விடு கின்றன. எனவே இவற்றை குழந்தை களுக்கு அளிப்பதை தவிர்ப்பது நல்லது. மைதாவில் சத்துக்கள் எதுவும் இல்லை. வெறும் சக்கையைத்தான் நாம் உண்கிறோம். ஐரோப்பிய ஒன்றியம், பிரிட்டன், சீனா ஆகிய நாடுகளில் மைதாவில் தயாராகும் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நீரிழிவு நோய் மருத்துவர்களும், இருதய நோய் மருத்துவர்களும் புரோட்டா சாப்பிடுவதை எதிர்த்துக் குரல் கொடுத்து வருகின்றனர். நாம் என்ன உண்ண வேண்டும் என்பதை நாம்தான் தீர்மானிக்க வேண்டும். இன்றைய கார்ப்பரேட் நிறுவனங்கள் தொலைக் காட்சிகளில் வெளியிடும் விளம்பரங் களைக் கண்டு நாம் ஏமாந்து விடக் கூடாது. மைதா நமக்கு நன்மை பயக் காது. அதன் உற்பத்தியாளர்களுக்கு அள்ளிக்கொட்டும் காமதேனு. நமக்கு அது நச்சாகும்.

கேரளாவில் புரோட்டாவின், மைதாவின் தீமைகள் குறித்துப் பிரச்சாரம் தொடங்கி விட்டனர். புரோட்டா குறித்து ஒரு ஆய்வு செய்ய வேண்டும் என்று அப்போல்லோ மருத்துவமனை இதயநோய் மருத்துவர் ஏ.மாதவன் ஒரு பேட்டியில் கூறி யுள்ளார். இப்போதாவது நாம் விழித்துக்கொண்டு நம்மையும், நமது அடுத்த தலைமுறையையும் காப்போம். பாரம்பரியமான கேப்பை, கம்பு, சோளம், வரகு, திணை ஆகியவற்றில் இருந்து தயாராகும் உணவுகளை உட்கொண்டு ஆரோக்கியமாக வாழ்வோம்.

இதற்கு மேலும் புரோட்டாவைச் சாப்பிடத் துணிகிறீர்களா? சுவைக்கும், சுகாதாரத்திற்கும் என்றுமே ஒத்துப் போவதில்லை. எதிரும் புதிரும் தானே! veramani

தமிழ் ஓவியா said...


தமிழ்ச்செல்வன், கோமதி ஆகியோரின் ஜாதிமறுப்பு - காதல் திருமணம்


தமிழர் தலைவர் நடத்தி வைத்துப் பாராட்டு

நெய்வேலி, ஆக. 27- தன.தமிழ்ச்செல்வன், குண.கோமதி போன்றோர் கழகத்தின் அசையும் சொத்துகள். அசையா சொத்து என்பது மானத் தையும், அறிவையும் சொல்லிக்கொடுத்த இலட்சிய சொத்து எனத் தமிழர் தலைவர் உரையாற்றினார். நெய்வேலியில் (ஆக. 23-ஆம் தேதி) நடைபெற்ற விருத்தாசலம் கழக மாவட்ட மாணவரணித் தலைவர் தன.தமிழ்ச்செல்வன் வாழ்க்கை இணை யேற்பு விழாவில் தமிழர் தலைவர் பேசியதாவது: மணமக்கள் தன.தமிழ்ச்செல்வன், குண.கோமதி ஆகியோர் இயக்கத்தின் வெற்றிகளை சுட்டி காட்டுகிற கொள்கை மலர்கள். அவர்கள் பூத்து, காய்த்துக் கனிவார்கள். அறிவாசன் தலைவர் தந்தை பெரியார் அவர்கள் மறைந்த நேரத்திலே அய்யா அவர்கள் விட்டுச்சென்ற சொத்து என்ன என்று கேட்டார்கள். அய்யா அவர்கள் விட்டுச் சென்ற சொத்து அசையும் சொத்து, அசையா சொத்து என்று தெரிவித்தேன். அதிலே, தமிழ்ச்செல்வன் போன்ற எண்ணற்ற இளைஞர்கள் கொள்கையிலே உறுதியாக இருந்து, அந்த கொள்கையை வாழ்க்கை முறையாகவும், பிறருக்கும் எடுத்துச் செல்பவர் களாகவும் உள்ளனர். இதுபோன்ற ஒப்பற்ற இளைஞர்கள் பெரியாரின் அசையும் சொத்துகள். அசையா சொத்து என்பது மானத்தையும், அறிவையும் சொல்லிக்கொடுத்த லட்சிய சொத்து. இதை யாராலும் பறிக்க முடியாது. தமிழ்ச்செல்வன் திருமணத்தை பொறுத்த வரையிலே இது ஒரு ஜாதி மறுப்புத் திருமணம். அதிலும், காதல் திருமணம் எனும் போது நாம் பெருமைப்படுகிறோம். சிக்கல் இல்லாமல், பெற்றோர் மற்றும் உறவினர் உள்ளிட்டோரின் ஒத்துழைப்போடு இந்தத் திருமணம் மகிழ்ச்சியுடன் நடைபெறுகிறது. காதல் திருமணங்களிலே சிக்கல் இல்லை. சிலர் சிக்கல் இருப்பதாகப் பேசி, அதை தங்கள் வளர்ச்சிக்காக ஏணிப்படிகாளக பயன் படுத்துகின்றனர். இந்த திருமணத்துக்கு வருகின்ற வழியிலே தாமதம் ஏற்பட்டது. அதுவும் கூட ஒரு வகையிலே கொள்கை பிரச்சாரம் தான். மனிதன் என்பதற்கு அடையாளமே சிரிப்புதான். வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டுப் போகும். ஆனால், இங்கே என்ன நிலை பொம்பள சிரித்தால் போச்சு, பொகையில விரிச்சா போச்சு என எழுதி வைத்தார்கள். மிருகங்களுக்குதான் சிரிக்கத் தெரியாது. ஆனால், பெண்கள் சிரிக்கக் கூடாது என மிருகங்களைவிட கேவலமாகப் பெண்களை நடத்தினார்கள். தந்தை பெரியாரும், திராவிடர் இயக்கமும் தான் பெண்களை மனிதர்களாக்கியது. இன்று பெண்கள் வழக்குரைஞர்களாக, நீதிபதி களாக, மருத்துவர்களாக மாறியிருக்கிறார்கள். அந்த வகையில் மணமகள் கோமதி, தமிழ்ச்செல்வன் படித்திருக்கிறார்கள். ஆண், பெண் சமவாய்ப்பை பெற்றிருக்கிறார்கள். தமிழ்ச்செல்வன் நூறுக்கு, நூறுக்குமேல் மதிப்பெண் பெற்றிருக்கிறார். காரணம் ஜாதி மறுப்புத் திருமணம், காதல் திருமணம். மேடையிலே கருப்பு சட்டையோடு அமர்ந்திருக்கிறார். இதற்காக அவர்களது பெற்றோர்களை பாராட்டுகிறோம். தமிழ்ச்செல்வன் மணவிழா எல்லா வகையிலும் சிறப்பான விழா. இது மட்டுமல்ல, இந்தத் திருமணத்திலே தாலி இல்லை. திருமண அவசரத்திலே தாலிகட்ட மறந்தது போல என எழுதிவைத்தார்கள். ஆனால், எங்கள் தோ ழர்கள் தாலி கட்டுவதில்லை. தமிழர் திருமணத்திலே தாலி இல்லை. தாலி என்பது ஜாதியைப் பாதுகாக்க இடையிலே பார்ப்பனர்களால் புகுத்தப்பட்டது. இத்தகைய நிலையிலே தாலி இல்லாமல் திருமணம் நடந்தது பாரட்டத்தக்கது. இல்லறம் சிறக்க தொண் டறம் மிக முக்கியமானது. யார்யாரெல்லாம் நமக்கு உதவி செய்தார்களோ அவர்களுக்கு நாம் நன்றி செலுத்த வேண்டும். பெற்றோர்களை மதிக்க வேண்டும். அவர் களிடத்திலே அன்பு, பாசம் ஆகியவற்றை செலுத்த வேண்டும். அதுவே நமது தலையாயக்கடமை. மணமக்கள் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து, புரிந்துணர்வுடன் வாழ வேண்டும். மூடநம்பிக்கை யற்ற வாழ்வு வாழ வேண்டும். சிக்கனமாக, எளிமை யாக, சிறப்பாக வாழ வேண்டும் எனப் பேசினார்.

தமிழ் ஓவியா said...


காதலுக்குள் ஜாதியா? ஜாதிக்குள் காதலா? ஜாதிக்கு என்ன அடையாளம் சொல்வீர்?

திருப்பனந்தாள் வட்டார மாநாட்டில் தமிழர் தலைவர் விடுத்துள்ள அறிவு விருந்தான கேள்வி

திருப்பனந்தாள், ஆக. 27- காதலுக்குள் ஜாதியா? ஜாதிக்குள் காதலா? ஜாதிக்கு என்ன அடையாளம் என்று அறிவார்ந்த வினாவை எழுப்பினார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள்.

25.8.2013 அன்று மாலை குடந்தை மாவட்டம், திருப்பனந்தாளில் நடைபெற்ற வட்டார மாநாட்டில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரை வருமாறு:

திராவிடர் கழகத்துக்காரர்கள் துறவியினும் மேலானவர்கள்

இந்த உலகத்திலே இருக்கிற மதவாதிகள், சாமியார்கள் எல்லாம் இவ்வுலக வாழ்வில் அனுபவிக்கும் உரிமைகள் எல்லாம் சிற்றின்பம் என்று நம்பக்கூடியவர்கள். அவர்களுக்கு உண்மை யான உலகம் என்பது மேலோகம், மோட்சம் போன்றவைதான். அதுதான் பேரின்பம் தரக் கூடியது என்று கருதுபவர்கள்.

அதனால்தான் சில துறவிகள் இந்த லோகத்தில் சிற்றின்ப பொழு திற்காக பல வேண்டாத வேலைகளை எல்லாம் செய்துவிட்டு ஜெயிலுக்கும், பெயிலுக்குமாக அலைந்து கொண்டு இருக்கிறார்கள். ஆகவே நண்பர்களே! இந்த உலக ஆசைகளையெல்லாம் வெறுத்துவிட்டோம் என்று கூறும் துறவிகள் கூட மேலுலக இன்பத்திற்காக ஏங்கி வாழ்ந்து கொண் டிருக்கிறார்கள்.

ஆனால் எந்தவித சலனங்களுக் கும் ஆளாகாமல் மானிடப் பற்று ஒன்றை மட்டும் கொண்டு, தொண்டறத்தோடு பின்னிப் பிணைந்து, ஜாதி இல்லாத, மதம் இல்லாத அனைத்து மக் களும் ஒன்று என்று எண்ணி வாழும், வாழ்வுக்கு சொந்தக்காரர்களான திராவிடர் கழகத்துக் காரர்கள்தான் துறவிக்கும் மேலானவர்கள் என்று தந்தை பெரியார் அவர்கள் சொல்லுவார்.

காதலுக்குள் ஜாதியா?ஜாதிக்குள் காதலா?

இந்த நாடு சுதந்திரம் அடைந்து 66 ஆண்டுகள் ஆகிறது. இன்னமும் இந்த நாட்டில் தொடக் கூடாத ஜாதி, தொடக்கூடிய ஜாதி என்று இருக் கலாமா? உலகத்தில் எவ்வளவோ நாடுகள் சுதந்திரம் பெற்று உள்ளனவே! எந்த நாட்டி லாவது இப்படிப்பட்ட பிறப்பால் ஜாதி வேறு பாடுகள் உண்டா?

பார்ப்பான் - பறையன், சூத்திரன், பஞ்சமன் என்று கேவலமான வேறுபாடுகள் உண்டா? இரண்டு வெவ்வேறு ஜாதிகளுக்குள் திருமணம் செய்யக் கூடாதா? சிலர் சொல்லுகிறார்களே! ஜாதிக் குள்ளேயே காதல் செய்ய வேண்டுமென்று! உறவு களுக்குள்ளே என்னய்யா காதல்!

காதலுக்குள் ஜாதியா? ஜாதிக்குள் காதலா? என் பதை எண்ணிப் பாருங்கள் தோழர்களே! இரண்டு ஜாதிகளுக்குள் திருமணம் செய்யக் கூடாதா?

ஜாதிக்கு என்ன அடையாளம்?

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே திருவள் ளுவர் காலத்திலேயே ஜாதி மறுப்பாளர்களுக்கு கண்டனங்கள் இருந்த காரணத்தினாலேதான்

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று பிறப்பில் பேதமில்லை என்று வள்ளுவரே பதிவு செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

நடக்க உரிமை இல்லை. பேச உரிமை இல்லை. வீடுகட்ட உரிமை இல்லை. திருமணம் செய்து கொள்ள உரிமை இல்லை. பொதுக் கிணற்றிலே நீர் எடுக்க உரிமை இல்லை. படிக்க உரிமை இல்லை.

தமிழ் ஓவியா said...

தமிழ்நாட்டிலேயே டாக்டர் சிதம்பரனார், டாக்டர் மு.வரதராசனார், டாக்டர் இராசமாணிக் கனார் போன்ற தமிழர்களைத் தவிர 50, 60 ஆண்டு களுக்கு முன்னால் முனைவர் பட்டம் பெற்றவர்கள் ஏது?

நம்மவர்களுக்குக் கல்வியில் மறுக்கப்பட்ட உரிமையை மீட்டுக்கொடுத்தது, இந்த திராவிடர் இயக்கம். கல்வி வாய்ப்பு வழங்கப்பட்டதற்கும் பிறகு இன்றைக்கு நமது கழகத்திலே கூட எவ்வளவு முனைவர்கள் வந்து விட்டார்கள். தடுக்கி விழுந்தால் முனைவர்கள் என்ற அளவிலே பெருகிவிட்டது.

அய்யர் ரத்தமும், ஆதிதிராவிடர் ரத்தமும் ஒன்றுதான்!

உலகம் முழுவதும் ரத்த வகை ஒரே மாதிரியாகத் தான் பிரிக்கப்பட்டுள்ளது. A, B, AB, O என நான்கு வகையான இரத்தங்களே பாஸிட்டிவ், நெகட்டிவ் எனவும் சில துணைவகை பிரிவுகளாகவும் அறி வியல் ரீதியாக ஆய்வு செய்துள்ளார்கள்.

நம்முடைய ரத்தம் எந்த வகையைச் சார்ந்ததோ. அந்த வகை ரத்தம் உள்ளவர்கள். அவர் எந்த நாட்டுக்காரர் என்றாலும் அவரது தேவைக்கு நாம் ரத்தம் கொடுக்கலாம். இதில் அய்யங்கார் ரத்தமும், ஆதிதிராவிடர் ரத்தமும் ஒன்று தான்.

ஒரு அய்யங்கார் அடிபட்டு விட்டார். அடிபட்ட அய்யங்காருக்கு அறுவை சிகிச்சை செய்ய ரத்தம் தேவைப்படுகிறது. அய்யங்காருக்கு தேவையான ரத்தத்திற்கு மருத்துவர் மூலம் விளம்பரம் செய்யப் படுகிறது. விளம்பரம் செய்யப்பட்டவுடன் அதைப் பார்த்த இளைஞர் ஒருவர் ரத்தம் கொடுக்க முன் வந்துள்ளார்.

அய்யங்காரிடம், நீங்களோ அய்யங்கார், ரத்தம் கொடுக்க வந்துள்ள இளைஞரோ ஆதிதிராவிடர். அவர்களைத் தொட்டாலே நீங்கள் குளிக்க வேண் டும் என்று சொல்வீர்களே, அவருடைய ரத்தத்தை உங்கள் உடம்பில் ஏற்றலாமா? என டாக்டர் கேட்டால் உடனே அய்யங்கார் அய்யய்யோ ஆதிதிராவிடர் ரத்தம் வேண் டவே வேண்டாம் என சொல்வாரா?

தமிழ் ஓவியா said...

என்ன டாக்டர் நீங்க? நான் பெரியார் கட்சியில் சேர்ந்து எவ்வளவு நாளாயிற்று! ஏன் தயக்கம் காட்டுகிறிர்கள்? உடனே அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யுங்கள் என்றுதானே சொல்வார், அப்படியென்றால் அய்யங்காரைக் காப்பாற்றுவதற்கு ஆதிதிராடர் இரத்தம் தேவை!

கோவில் கட்டுவதற்கும், குளம் வெட்டுவதற்கும், சமுதாயம் வளர்வதற்கும் ஆதிதிராவிடர்களுடைய உழைப்பு தேவைப்படுகிறது. ஆனால் அவர்கள் பிறப்பால் தாழ்ந்தவர்கள் என கூறுவது நியாயமா?

இரட்டைக் குவளை முறை

சில பகுதிகளில் இன்னமும் டீக்கடைக்குச் சென்றால், இரட்டை குவளை முறை கடைப்பிடிக் கப்படுகிறதே. ஏன் இப்படி செய்கிறீர்கள் எனக் கேட்டால் மற்ற ஜாதிக்காரர்கள் டீ சாப்பிட வர மாட்டார்கள் என்று சொல்கிறார்கள். சரி டீ கடைகளில் இரட்டை குவளை முறை உள்ளதே - சாராய கடைகளில் இரட்டைக் குவளை முறை உள்ளதா?

முதல் கிளாஸ், ஏற்றிய உடனேயே சாதாரண மாக இருக்கிறான். இன்னொரு கிளாஸ் உள்ளே போன உடனேயே இவனும் அவனும் கட்டிப் பிடித்து கொண்டு பிரதர் என்று சொல்லுகிறான். இந்த சரக்கு உள்ளே போகாமலேயே எல்லா ஜாதிகளும் பிரதர்களாக இருக்க வேண்டுமென்று தானய்யா நாங்கள் சொல்லுகிறோம்.

எதுவரை இட ஒதுக்கீடு!

ஜாதி ஒழிந்தால்தான் அமைதி வழியிலே இந்நாடு இருக்கும். இல்லை என்றால் ஜாதி மோதல்கள் ஏற்பட்டு ரத்தக்களறிதான் ஏற்படும். எனவே ஜாதியும், தீண்டாமையும் ஒழிக்கப்படவேண்டும்.

ஜாதி கூடாது என்கிறீர்கள்; ஆனால், இட ஒதுக்கீட்டில் ஜாதியைக் கேட்கிறார்களே என்று சிலர் புரியாமல் கேட்கிறார்கள்.

ஒரு சாலையிலே பாலம் கட்டுகிறோம்; பாலம் கட்டுவதற்கு திட்டம் போட்டதும் மாற்றுப் பாதைக்கு திட்டமிடுகிறோம், இட ஒதுக்கீடு என்பது மாற்றுப்பாதை மாதிரி.
ஜாதி ஒழிப்பு என்ற பாலம் கட்டி முடிக்கப் படுகிற வரையிலே இட ஒதுக்கீடு என்ற மாற்றுப் பாதை தேவை! எவ்வளவு காலத்திற்கு மாற்றுப்பாதைப் பயணம் என்று சொன்னால் எவ்வளவு காலத்திற்கு நீங்கள் ஜாதி ஒழிப்பைத் தாமதப்படுத்துகின்றீர்களோ அதுவரையில் இட ஒதுக்கீடு இருந்தே தீரும்!

குலக்கல்வித் திட்டம்

1954-ஆம் ஆண்டு ராஜாஜி அவர்களால் கொண்டு வரப்பட்ட குலக்கல்வி திட்டம் தந்தை பெரியார் அவர் களால் ஒழிக்கப்படவில்லை என்றால் இன்றைக்கு தமிழர்களின் நிலை என்னவாகி இருக்கும் என்று யோசிக்க வேண்டும்.

அவரவர்களுடைய அப்பன் தொழிலை மகன் செய்யவேண்டும் என்ற நிலை கொண்டுவரப்பட்ட தே! அந்த திட்டத்தை ஒழிக்க தீப்பந்தத்தையும், தீப்பெட்டி யையும் தயார் நிலையில் வைத்துக் கொள்ளுங்கள் என கடுமையான போராட்டத்தை தந்தை பெரியார் அறிவித்தார்.

அந்தச் சட்டங்கள் முறியடிக்கப்பட்டதால்தான் இன்றைக்கு நம் வீட்டுப்பிள்ளைகள் படித்து பட்ட தாரிகளாக ஆகி இருக்கிறார்கள் என்பதை மறுக்க முடியுமா?

திராவிடத்தால் வீழ்ந்தோமா?

வட சென்னை யானை கவுனி பகுதியில் லட்சுமி விலாஸ் நாடக சபை சார்பில் 1891-இல் அபிராம சுந்தரி நாடகம் பார்ப்பதற்குரிய கட்டணங்கள் என்ன என்ற விவரங்களை போட்டுவிட்டு கடைசியாக குறிப்பு என்று எழுதி அதிலே பஞ்சமர்களுக்கு நாடகம் பார்க்க அனு மதி இல்லை, இடமில்லை என்று போட்டிருந்தார்கள்.

தோழர்களே! நூறு வருடத்திற்கு முன்பு இருந்த இந்த நிலைகள் எல்லாம் இன்றைக்கு மாறி இருக்கிறதே! இதற்குக் காரணம் யார்?

திராவிடத்தால் வீழ்ந்தோம் என்று சிலர் சொல்லிக் கொண்டிருக்கிறர்களே! அதில் துளியாவது உண்மை இருக்கிறதா? தந்தை பெரியார் அவர்களும், அவர்களது இயக்கமும் இல்லை என்றால் இவ்வளவு பெரிய தலைகீழ் புரட்சி ஏற்பட்டிருக்குமா?

பெரியார் தத்துவ மூச்சுக்காற்று!

திராவிடர் கழகம் ஒரு பொதுநல அமைப்பு. திராவிடர் கழகம் ஒரு மருத்துவமனை போன்றது. உங்களுடைய மூடநம்பிக்கை நோய்களுக்கெல்லாம் அதுதான் மாமருந்து போலாகும்.

திராவிடர் கழகம், ஒரு பள்ளிக்கூடம் போன்றது. அதுதான் உங்கள் கல்லாமையை, உங்கள் அறியாமையை, போக்கக்கூடியதாக இருக்கும். திராவிடர் கழகம் ஒரு தீயணைப்பு நிலையம் போன்றது. ஜாதிச்சண்டை, மதச்சண்டை தீ வைப்புகள் வந்தால் அவைகளை போக்கக் கூடியதாக இருக்கும் என்று பேசினார்.

தமிழ் ஓவியா said...


வாழும் மனிதர்க்கெல்லாம் வயிற்றுக்குச் சோறிடும் கருணைத் திட்டம்!


உணவுப் பாதுகாப்புச் சட்டம்:

வாழும் மனிதர்க்கெல்லாம் வயிற்றுக்குச் சோறிடும் கருணைத் திட்டம்!

தமிழர் தலைவர் வரவேற்பு

பெண்களைப் பாவ யோனியில் பிறந்தவர்கள் என்கின்ற கிருஷ்ணனுக்கு ஜெயந்தி கொண்டாடலாமா?

அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசு கொண்டு வந்து நிறைவேற்றிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை வரவேற்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

அய்க்கிய முற்போக்குக் கூட்டணி என்ற காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி அமைந்து, இரண்டாவது முறை யும் முழுமையாக அய்ந்தாண்டுகளைப் பூர்த்தி செய்யப் போகிறது. மத்தியில் அமைந்துள்ள ஆட்சியின் மகுடத்தில் பொறிக்கப்பட்டுள்ள ஒரு ஒளி முத்தாகத்தான் இந்த உணவுப் பாதுகாப்புச் சட்டம் என்ற ஒரு சட்டம் - ஏழை, எளியவர்களின் பசி தீர்க்கும் மனிதநேயச் சட்டமாக மக்களவையில் திருத்தங்கள் பலவற்றை எதிர்க்கட்சிகள் தந்த நிலையில், அவைகளில் முக்கியமானவைகளையும், அவசியமானவைகளையும் ஏற்று நிறைவேற்றியுள்ளனர்!

அய்க்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் திருமதி சோனியா காந்தியும், அவரது பொறுப்பாளர்களும் பாராட்டுதலுக்குரியவர்கள்.

கருணைச் சட்டம்!

அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் செயல்பாடு கள் எல்லாமே நமக்குத் திருப்தி அளிக்கக் கூடியவை களோ, மன நிறைவைத் தருபவைகளாகவோ இல்லை என்ற போதிலும், விருப்பு - வெறுப்புகளை ஒதுக்கிவிட்டுப் பார்க்கும் நமது கண்ணோட்டத்தில் இச்சட்டம் மிகவும் பாராட்டி வரவேற்கவேண்டிய வாழும் மனிதர்க்கெல் லாம்வயிற்றுக்குச் சோறிடும்!

கருணைச் சட்டம்!

66 ஆண்டுகால சுதந்திரத்திற்குப் பின்பும் வறுமை, ஏழ்மை போகவில்லை என்பதை அதிகாரபூர்வமாக ஒப்புக்கொண்டு, அதற்குப் பரிகாரமாக முடிந்த அளவுக்கு, 82 கோடி மக்கள் பயனடையும் திட்டம் இது!

அந்த ஏழை, எளியவர்களுக்கு கிலோ அரிசி மூன்று ரூபாய்க்கும், கோதுமை கிலோ ஒன்று இரண்டு ரூபாய்க்கும், தானியம் ஒரு ரூபாய்க்கும் இனி கிடைக்கும் வாய்ப்புகள் இச்சட்டம் மூலம், இந்தியா முழுவதும்; இதனை நடைமுறைப்படுத்தும்போது ஏற்படும் சிக்கல்களை அனுபவ ரீதியாகப் பார்த்து மேலும் சில திருத்தங்களைச் செய்வது இன்றியமையாததே!

மாநில உரிமைகள் பறிபோய்விடக் கூடாது!

தமிழ்நாடு போன்ற பல மாநிலங்கள் ஏற்கெனவே இலவச அரிசி வழங்கும் (PDS) பொது விநியோகத் திட்டத்தினைச் செயல்படுத்திவரும் நிலையில், அது பாதிக்கப்படாத பாதுகாப்பு இருப்பதும் அவசியமாகும்.

மாநில உரிமைகள் பறிபோகாமல் இதனைச் செயல் படுத்துதல் முக்கியமாகும்!

தி.மு.க. பொறுப்பான - ஆக்கபூர்வமான எதிர்க் கட்சியாக உள்ளது என்பதை உரிய திருத்தங்களைத் தந்ததன்மூலம் நிரூபித்துள்ளது. அவைகளில் பல ஏற்கப்பட்டு சட்டமாகி வரும் நிலையில், அதனை வரவேற்பதுதான் சரியான அணுகுமுறை; தி.மு.க. தலைவர் மானமிகு கலைஞர் அவர்கள் இதனை மிகவும் பாராட்டி, மக்கள் பசி போக்கும் மாபெரும் திட்டம் என்று வரவேற்றுள்ளார்கள்.

பெரும்பாலான எதிர்க்கட்சிகள் - அவர்கள் கூறிய அத்தனைக் கருத்துக்களும் அப்படியே ஏற்கப்படாவிட் டாலும்கூட, இதன் மனிதாபிமானக் குறிக்கோளை எண்ணி வரவேற்று ஆதரித்துள்ளனர்!

தேர்தல் கண்ணோட்டமா?

இது தேர்தல் கண்ணோட்டத்தில்தான் கொண்டு வரப்பட்டுள்ளது என்று சில அரசியல் கட்சிகளும், இந்த அரசின் செயல்பாடுகளை எதிர்த்துப் பிரச்சாரம் செய்வதையே தமது புனித தார்மீகக் கடமையாகக் கொண்ட ஊடகங்களும் கூறுகின்றன; எழுதுகின்றன!

ஆளும் கட்சி - ஆட்சி 5 ஆண்டுகாலத்திற்குள், கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவது தவறல்லவே!

அதுமட்டுமா? எல்லா அரசியல் கட்சிகளும் தேர்தல் - வாக்கு வங்கிக்கண்ணோட்டத்தைப் புறந்தள்ளி, தங்களது செயல்பாடுகளை அமைத்துக் கொள்கின் றனவா? இல்லையே!

எனவே, இதில் ஓட்டுக் கண் ணோட்டம் இருந்தாலும், தவறு இல்லை; நாட்டு மக்கள் கண்ணோட்டம் இருக்கிறதே! மறுக்க முடியுமா?

அடிப்படைத் தேவை பூர்த்தி - சிறையில்தானா?

உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம் - இம்மூன்றும் மனித வாழ்வின் அடிப்படைத் தேவை; இந்த சுதந்திர நாட்டில் இன்றும்கூட, வெளியில் இருக்கும் குடிமக்களுக்கு இவைகளுக்கு உத்தரவாதம் உண்டா? இல்லையே!

சிறைக்குப் போனால்தான் அங்கே இம்மூன்றுக்கும் உத்தரவாதம் உண்டு!

இதுதான் யதார்த்தமான நிலை. இதில் முக்கியமாக பசிக்குத்தான் முன்னுரிமை தரப்படல் வேண்டும்; பசி போக்கிடும் திட்டம் இது.

காலந்தாழ்ந்தாலும்...

பல்லாயிரக்கணக்கில் கோடி ரூபாய்கள் இதற்குச் செலவழிக்கப்பட்டாலும்கூட, காலந்தாழ்ந்தாவது (Better late than never) எத்தகைய மனச் சங்கடங்கள் - ஈழத் தமிழர் வாழ்வுரிமைப் பிரச்சினை - தமிழக மீனவர்களை இலங்கை கொடுமைப்படுத்தும் நிலை - பெண்களுக் கெதிரான பாலியல் வன்முறை இருட்டுக்கிடையில் இது ஒரு ஆறுதல் வெளிச்சம்.

எனவே, வரவேற்கிறோம்!

கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

சென்னை
28.8.2013

தமிழ் ஓவியா said...


நவநீதம்பிள்ளைக்கு எதிர்ப்பு ஏன்?


அய்.நா. மனித உரிமை ஆணையத்தின் இயக்குநர் அதிகாரபூர்வமாக, இலங்கைத் தீவு சென்று ஒரு வார கால சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

அவரது வருகையையும், சுற்றுப்பயணத்தையும் ஒழுங்குபடுத்தவேண்டிய பொறுப்பு - கடமை - பாது காப்பு - இலங்கை அரசுக்குக் கண்டிப்பாக இருக்கிறது.

ஆனால், இப்பொழுது அங்கு என்ன நடந்து கொண் டுள்ளது? புத்த பிக்குகள், அவரின் வருகையைக் கண்டித்து ஆர்ப்பாட்டங்களை நடத்திக் கொண்டுள் ளனர்.

கொழும்புவில் உள்ள அய்.நா. அலுவலகத்துக்குள் அத்துமீறி உள்ளே நுழைய முயற்சித்துள்ளனர். நவநீதம் பிள்ளையின் சுற்றுப் பயணம், இலங்கை நலனுக்கு எதிரானது என்பது அவர்களின் கருத்து. இது ஏதோ அங்குள்ள புத்த பிக்குகளின் நிலைப்பாடு என்று யாரும் தப்புக் கணக்குப் போட்டுவிடக்கூடாது. இலங்கை அரசின் - இலங்கை அதிபர் ராஜபக்சேவின் கருத்தும் அதுதான் என்பதை முதலில் புரிந்துகொண்டால் இந்தப் போராட்டத்தின் பின்னணியில் பதுங்கியுள்ள விஷமம் எத்தகையது என்பது எளிதில் விளங்கிவிடுமே!

அய்.நா. பிரதிநிதிகளையே இலங்கைக்குள் செல்லத் தடை செய்தவர்கள்தானே அவர்கள். பன்னாட்டுப் பத்திரி கையாளர்களை செய்தி சேகரிக்கச் செய்யவிடாமல் தடுத்தவர்களும் அவர்கள்தானே? உள்நாட்டிலும் எத்தனை எத்தனைப் பத்திரிகையாளர்கள் படுகொலை செய்யப்பட்டனர்?

அதைவிடக் கொடுமை என்னவென்றால், ஜெனீவா வில் 2012 மார்ச் மாதத்தில் நடைபெற்ற அய்.நா. கூட்டத் தில் பங்கேற்க வந்த மக்கள் உரிமைக் கண்காணிப்பக இயக்குநர் ஹென்றி டிஃபேன் தெரிவித்தது என்ன?

இலங்கை விவகாரத்தைப் பேசுவதற்காக ஒரு தனி அமர்வு இருந்தது. இலங்கையிலிருந்து வந்த மனித உரிமையாளர்கள் சுனிலா, நிமல்கா ஃபெர்னாண்டோ ஆகியோர் இலங்கையில் இறுதிக்கட்டப் போரின்போது நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்துப் பேசினார்கள்; அமர்வுக்கு நேரில் வர முடியாத சரவணமுத்து என்பவர் ஸ்கைப்மூலம் பேசினார். அதே சமயம் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்கக் கோரி அய்ரோப் பாவைச் சேர்ந்த தமிழ்ச் சமுதாயத்தினர் சுமார் 500 பேர் மாநாட்டு அரங்குக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இலங்கை அரசும் அங்கே தனியே ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்தது. இதற்காக இலங்கையிலிருந்து 126 பேர்களை அவர்களே அழைத்து வந்தார்கள். அவர் களைத் தவிர, அடியாட்களையும் அனுப்பி வைத்திருந்தது இலங்கை அரசு. அக்கூட்டத்தில் கலந்துகொள்ள வந்த தமிழ் ஆர்வலர்கள், அந்த அடியாட்களால் அடித்து விரட்டப்பட்ட சம்பவங்களும் நடந்தன. இலங்கைக்கான ஜெனீவா தூதர் தலையிட்ட பிறகே தாக்குதல் நிறுத்தப் பட்டது. அமர்வு தொடங்கியதுமே அய்.நா.வுக்கான மனித உரிமைக் கவுன்சிலின் தலைவர் நவநீதம் பிள்ளை நேற்று நடந்த சம்பவங்கள் அய்.நா. மன்றத்தையே அவமதிக்கக் கூடியது. அதற்காக உங்களிடம் நான் மன்னிப்புக் கோருகிறேன். இனிமேல் இதுபோன்று நடக்காது என்று சொல்லவில்லையா?

அந்த நவநீதம்பிள்ளை இப்பொழுது இலங்கை சென்று நேரடியாகப் பிரச்சினைகளை, இலங்கைத் தீவின் பிரத்தியட்ச நிலைமைகளைக் கண்டாய்ந்து நடக்க இருக்கும் மனித உரிமைக் கூட்டத்தில் அறிக்கை அளிக்கக் கடமைப்பட்டுள்ளார். அவரை வரக்கூடாது என்பதோ, அவர் பணிகளைத் தடுப்பதோ எந்த வகையில் சரி?

இதற்காகவே கூட இலங்கை அரசு க(த)ண்டிக்கப் படவேண்டாமா?

2013 பிப்ரவரி 11 ஆம் தேதி மனித உரிமை மன்றக் கூட்டத்தில் மனித உரிமைக் குழுவின் தலைவர் நவநீதம் பிள்ளை அளித்த அறிக்கை மிகவும் முக்கியமானது.

இலங்கையில் போர் நடந்த நேரத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட வர்கள் காணாமல் போய் உள்ளனர். அவர்களை மீட்கும் பணியை இலங்கை அரசு அறவே செய்யவில்லை. போர் முடிந்த பிறகும் ஆள் கடத்தல் நிகழ்வுகள் தொடர்ந்து கொண்டுதான் உள்ளன. தமிழர்கள் வாழும் பகுதிகளில் இன்னும் இராணுவக் கட்டுப்பாடுதான் இருந்து வரு கிறது. இராணுவம் ஏன் வெளியேற்றப்படவில்லை? இராணுவத்தால் தமிழ்ப் பெண்கள் பாலியல் துன்பத் துக்கு ஆளாக்கப்பட்டு வருகின்றனர். இலங்கை அரசே நியமித்துக் கொண்ட எல்.எல்.ஆர்.சி. பரிந்துரைகளில் ஒரு சில மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளன என்றெல்லாம் மனித

உரிமை ஆணையர் நவநீதம்பிள்ளை அறிக்கையில் காணப்பட்டன.
அடுத்து ஜெனீவாவில் நடக்க இருக்கும் மனித உரிமைக் குழுக் கூட்டத்தில் இலங்கை சென்று நேரிடையாக ஆய்வு செய்யும் நவநீதம்பிள்ளை, உண்மை நிலைகளை விரிவாக எடுத்துச் சொல்லி விடுவார் என்ற அச்சத்தின் காரணமாக புத்த பிக்குகளை இலங்கை அரசே தூண்டி விடுகிறது என்பதுதான் உண்மையான நிலை.

சிங்கப்பூர் முன்னாள் அதிபர் லீக்வான்யூ சொன்னதுபோல, ராஜபக்சே திருத்தப்படவே முடியாத ஜென்மம்.

நடக்க இருக்கும் ஜெனீவா கூட்டத்தில் வழவழா கொழகொழா முடிவுகளை எடுக்காமல், இலங்கை அதிபரை கூண்டிலேற்றும் வைபவத்திற்குக் கால்கோள் விழா நடத்துவது அவசியமாகும்.

தமிழ் ஓவியா said...


மூட மக்கள்ஒவ்வொருவனும் தன்னை அன்னியன், கீழ்ச் சாதி என்று கூப்பிடுவதைச் சகித்துக் கொண்டுதான் மற்றவனைக் கீழ்ச்சாதி என்று கூப்பிடுவதில் திருப்தியும், பெருமையும் அடைகிறான். அதுதான் மூட மக்கள் என்பதற்கு அடையாளம்.
(விடுதலை, 24.9.1950)

தமிழ் ஓவியா said...


வேண்டாம் இரட்டை வேடம்


ஆசிரியருக்குக் கடிதம்

வேண்டாம் இரட்டை வேடம்

அன்புள்ள ஆசிரியருக்கு வணக்கம்!

தந்தை பெரியார் பிறந்த செப்டம்பர் மாதத்தில் கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தியும், பெரியார் இறந்த டிசம்பர் மாதத்தில் அல்லோலப்படும் அய்யப்பா பக்தியும் தற்செயல் நிகழ்வுகள் அல்ல, எங்கு திரும்பினும் ஆரவாரம், பஜனை சத்தம், பக்திப் பரவசம் என்று மக்களைத் திசை திருப்பும் திருவிழாக்கள் இவை.

அதுபோல் தந்தை பெரியார், புரட்சியாளர் அம்பேத்கர், பேரறிஞர் அண்ணா, டாக்டர் கலைஞர் போன்ற பெரும் பகுத்தறிவாளர் களின் பெயர்களை ஊர்களுக்கும், நகர் களுக்கும் வைத்துக்கொண்டு, பகுத்தறி வுக்கு ஒவ்வாத செயல்பாடுகளை ஆண்டு தோறும் நிலைப்படுத்தி வருகிறார்கள். ஆடி மாதத்தில் அம்மனுக்கு கூழ் ஊற்றுவது, தீ மிதிப்பது, அலகு குத்தி தேர் இழுத்தல், கோழி, ஆடு வெட்டுதல், பொங்கல் வைப்பது, மொட்டை அடித்தல் போன்ற மூடப் பழக்க வழக்கத்திற்கு ஆளாகி பகுத்தறிவுக்கு முர ணாக இந்த 21 ஆம் நூற்றாண்டிலும் பின் பற்றுகிறார்கள் என்றால் என்னவென்று சொல்வது?

தந்தை பெரியாரும், அண்ணல் அம்பேத் கரும் வரலாறு பேசும் சிறப்புப் புரட்சியாளர் கள். மதப் பண்டிகைகளைக் கொண்டாடும் நோக்கமே, ஜாதியை நினைவுப்படுத்தத்தான் என்றும். சுதந்திர நாட்டில் ஜாதிகள் இருக்க லாமா? அப்படி இருக்கும் நாடு சுதந்திர நாடா? என்று தந்தை பெரியார் கேட்டாரே!

நான் இந்துவாகப் பிறந்துவிட்டேன் ஆனால் சாகும்போது இந்துவாக சாக மாட் டேன் என்று சபதம் எடுத்து பவுத்தம் தழுவி வரலாற்றில் தமது எதிர்ப்பைப் பதிவு செய் தாரே, புரட்சியாளர் அம்பேத்கர், இதை யெல்லாம் உணர்ந்து மக்கள் செயல்பட்டால் பெரியாருக்கும், அம்பேத்கருக்கும் செய்யும் நன்றி ஆகும். அதை விட்டு மாறாக மதப் பண்டிகைகளையும், மதம் சார்ந்த ஜாதி களையும் கடைப்பிடித்தால் அவர்களுக்கு நீங்கள் செய்யும் துரோகமே தவிர, வேறென்ன?

அம்பேத்கருக்கும், பெரியாருக்கும், அண் ணாவுக்கும், கலைஞருக்கும் பிறந்த நாள், அந்தந்த இயக்கத்தின்பால் கொண்டாடப் படும் விழாவை எண்ணிப்பாருங்கள். மதப் பண்டிகைகளை கொண்டாடுபவர்களும், ஜாதியை நிலைப்படுத்துகிறவர்களும்தான் மேற்சொன்ன தலைவர்களுக்கு விழா எடுக்கிறார்கள், சிந்தித்துப்பாருங்கள் எதற்கு இந்த இரட்டை வேடம்?

தந்தை பெரியாரால் வாழ்கிறோம், புரட்சியாளர், அம்பேத்கரால் வாழ்கிறோம். அவர்கள் காட்டிய பகுத்தறிவுப் பாதையில் சென்று அவர்களுக்கு நாடெங்கும் சிலை கள் வைத்து நகர்களுக்கு பெயர் வைத்து பெருமை பேசுவோம்! புகழ்பாடுவோம்! அதை விட்டு, போட்டி போட்டுக்கொண்டு செய்யும் மதப்பண்டிகைகளால் கண்ட பலன் என்ன? எண்ணிப்பாருங்கள். உங்களுக்காகப் பாடுபட்ட தலைவர்களின் விழாவை சிறப் பாகச் செய்யுங்கள் உன்னை இழிவுப்படுத் தியும், கேவலமாகவும், மனித குலத்தில் வைத்திருக்கும் கடவுளுக்கு விழா எடுத்ததில் உனக்கு பெருமை சேரும் என்றால், தயவு செய்து தலைவர்களின் பெயர்களை எடுத்து விட்டு உங்கள் விருப்பமான தெய்வங்களின் பெயர்களை வைத்துக் கொண்டு கொண் டாடுங்கள் என் போன்ற பகுத்தறிவாளர் களுக்கு எந்த வித ஆட்சேபனையும் இல்லை தோழர்களே!

உணருங்கள்! செயல்படுங்கள்!!

குறிப்பு:

1) தலையில் தேங்காய் உடைப்பது.
2) குழந்தையை தோளில் உட்கார வைத்து தீ மிதித்தல்
3) மண்ணைத் தோண்டி உயிரோடு புதைப்பது
4) சாட்டையால் அடிப்பது
5) குழந்தைகளை நரபலி கொடுப்பது

போன்ற உயிருக்கு ஆபத்தான முட்டாள் தனமான செயல்களை செய்வதால் இது வரை உங்களுக்கு என்ன பயன் கிடைத்தது என்பதை உங்களால் நிரூபிக்க முடியுமா?

இப்படியெல்லாம் செய்யச் சொல்லி தூண்டி விடுபவனை, செய்யச் சொல்லுங் களேன் பார்க்கலாம்?

உங்களுக்கு பகுத்தறிவு இருக்கிறது அதைச் சரியாக உபயோகித்து இது போன்ற முட்டாள்தனத்தையும், மூட நம்பிக்கையையும் கைவிடுங்கள் தோழர்களே!

நன்றி!

நாத்திகர்களைவிட மதவாதிகளின் அறிவு குறைவானதே!

ராச் செஸ்டர் பல்கலைக்கழகம் - ஆய்வு - முடிவு
(தலைப்பு செய்தி - விடுதலை, 14.8.2013)

- ச.இரணியன்
(பகுத்தறிவாளர் கழகம், திருமுல்லைவாயில்)

தமிழ் ஓவியா said...

வி.சி.வில்வம்- புனிதா இணையரின் கியூபா இல்லம் திறப்பு விழா


தமிழர் தலைவர் திறந்து வைத்து பாராட்டு

திருவெறும்பூர், ஆக. 28- வி.சி.வில்வம்- புனிதா இணையரின் கியூபா இல்லத் திறப்பு விழா 25.8.2013 ஞாயிறு அன்று காலை 11 மணிக்கு திருச்சி திரு வெறும்பூரில் நடைபெற்றது. அதனையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சிக்கு திருச்சி மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் மு.சேகர் தலைமை வகித்தார். சென்னை தொழிலதிபர் க.இராஜன் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். விழாவிற்கு திருச்சி மண்டல திராவிடர் கழகத் தலைவர் ஞா.ஆரோக் கியராஜ், திருச்சி மாவட்ட தி.க. செயலாளர் ச.கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் சாமி.திராவிடமணி, திருச்சி பெரியார் கல்வி நிறுவனங்களின் ஒருங் கிணைப்பாளர் பேராசிரியர் ப.சுப்பிரமணியன், பெரியார் சிந்தனை உயராய்வு மய்ய துணை இயக்குநர் அதிரடி அன்பழகன் ஆகியோர் வாழ்த்தி உரை யாற்றினர்.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலை ஞர்கள் சங்கத்தின் துணைத் தலைவர் கவிஞர் நந்தலாலா தன்னுடைய உரையில், பெரியார் கொள்கைகளைப் பின்பற்றுவோர் வாழ்விலும் உயர்ந்து, சமூகத்திற்கும் பயனளிப்பார்கள் என்பதற்கு வில்வம்-புனிதா இணையர் சிறந்த எடுத்துக்காட்டு. அவர் தன்னுடைய மகளுக்கும் இந்த இல்லத்துக்கும் கியூபா என்று பெயரிட்டுள்ளார். அமெரிக்கா என்கிற உலக வல்லாதிக்க நாட்டின் கீழேயே இருந்துகொண்டு, அத்தனை பொருளாதாரத் தடைகளையும் தாண்டி பிடல் காஸ்ட்ரோ என்ற மாமனிதனால், புரட்சி யாளனால் வழிநடத்தப்பட்டு, உண்மையான மக்கள் - விவசாயிகளின் ஒத்துழைப்போடு, அறிவியல் முறையைப் பின்பற்றி வென்ற நாடு கியூபா.

வில்வம் தன்னுடைய மகளுக்கு அந்தப் பெயரைச் சூட்டிய தோடு, அது குறித்து பிடல் காஸ்ட்ரோவுக்கு கடிதம் எழுதியிருந்தார். அந்த மகிழ்வில் கியூபாவினுடைய அதிபர் பிடல் காஸ்ட்ரோ வில்வம் அவர்களுக்கு ஒரு பதில் கடிதத்தை எழுதியிருக்கிறார். இந்தியாவில் தமிழகத்தில் சாதாரண ஒரு ஊரில் பிறந்த வில்வம் தந்தை பெரியாரின் வழியில் உலக வல்லாதிக்கத்தை எதிர்த்து நிற்கும் கியூபா என்கிற தேசத்தைப் பார்க்கிறார். அந்தப் பார்வையைத் தந்தது பெரியார் என்னும் பெரு மனிதன் என்று குறிப்பிட்டார்.

கியூபா இல்லத்தைத் திறந்துவைத்த தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றும் போது குறிப்பிட்டதாவது: இந்த நிகழ்ச்சி நம்முடைய இயக்க தோழர்கள் பெருமைபட கூடிய ஒரு நிகழ்ச்சியாகும். இந்த அரங்கத்தில் உள்ளவர்கள் சிந்திக்க வேண்டும். கடவுள் இல்லை என சொல்லக் கூடியவர்கள் ஜாதி, மதம் இல்லை என சொல்ல கூடியவர்கள் அறிவார்ந்த பெரியாரின் சிந்தனைக்கு ஆளாகி அந்த கொள் கைகளையே தன்னுடைய வாழ்க்கை நெறிகளாக கொண்டவர்கள். வளருவார்களா? வாழ்வார்களா? முன்னேறுவார்களா? சிறப்புறுவார்களா? என்ற சந்தேகம் பல பேருக்கு உண்டு. அந்த சந்தேகத்தை வாயினால் சொல்வதை விட வாழ்க்கையினாலே வாழ்ந்து காட்டி நாங்கள் வெற்றி பெற்றிருக்கிறோம்? இல்லையா, பாருங்கள் என்பதற்கான அறிமுகம் தான் இந்த இல்ல விழா.

தமிழ் ஓவியா said...

இது ஒரு பிரச்சார திருவிழா, வெற்றிக்கனியை நாங்கள் பறித்திருக்கிறோம். ஒரு எல்லைக்கு சென்றிருக்கிறோம் என்று மற்றவர்களுக்கு தெளிவாக உணர்த்தகூடிய ஒரு அற்புதமான நிகழ்ச்சி. இது ஒரு பிரச்சார நிகழ்ச்சி. எல்லாரையும் சந்திக்க கூடிய நிகழ்ச்சி, சமூக மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் ஒரு வாய்ப்பு. இதுதான் இந்த அறிமுகவிழா - இயக்கத் தோழர்கள் பெருமைபட கூடிய தெளிவான சிறந்த கொள்கை உள்ளம் படைத்தவர் வில்வம். அவருக்கு ஒரு நல்ல ஏற்பாடு சென்னையிலே நம்முடைய தோழர்கள் செய்தார்கள்.

புனிதா பெரியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்த எங்கள் கல்லூரியின் முன்னாள் மாணவி. எனக்கு இரட்டை வகையில் மிகுந்த மகிழ்ச்சி. குடும்பம் குடும்பமாக பெரியார் கொள்கையில் இருக்கிறார்கள். அப்பேர்ப்பட்ட குடும்பங்களில் ஒன்று தான் வில்வம் அவர்களின் குடும்பம் என்பதை பாராட்டி மகிழ்கிறோம்.

கியூபாவிற்கு போக வேண்டுமென்று நாமெல்லாம் ஆசைப்பட்டிருக்கிறோம். ரொம்ப செலவழிக்காமல் கியூபாவிற்கு போயிட்டு வந்துடலாம். நான் கியூபாவிற்கு போய்விட்டுதான் வந்தேன். அந்த இல்லத்து பெயரே கியூபா இல்லம்தான். நந்தலாலா எங்கே போயிட்டு வருகிறீர்கள் என கேட்டபோது கியூபா போய்ட்டு வரேன் என்றேன். அடுத்து அவர் கியூபாவிற்கு போய்ட்டு வருவார்னு நினைக்கிறேன். எல்லாரும் செலவில்லாமல் கியூபா போவதற்கு நம்முடைய வில்வம் வழி வகுத்திருக்கிறார். அதற்காக அவருக்கு நன்றி செலுத்தனும். ரொம்ப சிறப்பானது. வெளிநாட்டு அனுபவங்களை பெற்றவர் வில்வம். நிறைய எழுதுவார் - அவருக்கு நிறைய ஆற்றல் உண்டு. இங்கே திராவிடமணி அவர்கள் குறிப்பிட்டார்.

அவர் ஜப்பானுக்கு போனார் - ஜப்பானிலிருந்து நிறைய கடிதங்கள் எழுதுவார். இப்படி வெளிநாட்டு அனுபவம் மிக்கவர். பல்கலைக் கழகம் சென்று படிப்பதைவிட வெளிநாடுகளுக்கு சென்று அங்குள்ள மக்களை படித்து தெரிந்து கொள்வதை விட மிகச் சிறந்த ஒரு படிப்பு வேறு கிடையாது. அதை பெற்றவர் வில்வம் அவர்கள். அவருக்கு ஒரு நலல வாழ் விணையராக புனிதா அவர்கள் அமைந்திருக்கிறார்.

நம்முடைய பெரியார் பாலிடெக்னிக்கிற்கு பெண்கள் படிக்க வரும்போது பயந்த சுபாவத்துடன் வரு வார்கள். திரும்பி செல்லும் போது மிகுந்த தைரியத் துடன் செல்வார்கள். அந்த வகையில் அவர் குடும்பம் ஒரு நல்ல குடும்பமாக இருந்து கொண்டு இருக்கிறது. தன்னுடைய திருமணத்தை சிறப்பாக செய்து கொண்டார். நல்ல குடும்பம் - நல்ல ஏற்பாடு நல்ல வாழ்க்கை. அதற்கடுத்து தனக்கென்று ஒரு இல்லம். அது மிகவும் அவசியம். இல்லத்தை அவர் கட்டி இருக்கிறார். தொழிலதிபர் இராசன் வரவேற்புரையில் நன்றாக சொன்னார். வெளிநாட்டுக்கு போனாலும் நம்மாள் மூடநம்பிக்கையோடு இருக்கிறான். அதையெல்லாம் தவிர்க்கணும். அந்த வகையில் இந்த கொள்கையை ஏற்றுக் கொண்டதால் தான் கியூபா இல்லம் திறப்பு விழா இன்றைக்கு இவ்வளவு சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது. உங்களுக்கு மூடநம்பிக்கை இருக்க வேண்டிய அவசியமில்லை தாய்மார்கள் துணிச்சலா இருங்க, சிக்கனமாக இருங்க, விழாக் கோலம், பண்டிகை அதன் மூலமாக பணத்தை நிறைய வீணாக்காதீங்க - சிக்கனமாக செலவு செய்யணும். மிச்சபடுத்துங்க. ஆகவே இந்த வாய்ப்பை பயன்படுத்தி சிறப்பான கொள்கையாளராக வாழ்ந்து காட்டுவதன் மூலமாக இவர்கள் வெற்றி பெற்றவர்கள் - நம்முடைய கொள்கை குடும்பம். ஆகவே இந்த நிகழ்ச்சியிலே எது நடந்தாலும் அதிலே நாங்கள் பங்கேற்க உரிமை பெற்றுள்ளோம் என்ற முறையிலே நான் இங்கே மகிழ்ச்சியோடு பங்கேற்று இந்த இல்லத்தையும் அறிமுகப்படுத்தி உங்களிடம் இருந்து விடை பெறுகிறேன். நன்றி வணக்கம் என குறிப்பிட்டார்.

கியூபா இல்லத்தைத் திறந்துவைத்த தமிழர் தலைவர் அவர்களுக்கு வில்வம்-புனிதா இணையரின் மகள் கியூபா நினைவுப் பரிசினை வழங்கினார். விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் புனிதா நினைவுப்பரிசு வழங்கினார். விழா நாள் அன்று கவிஞர் நந்தலாலாவுக்கு 59-ஆம் பிறந்தநாளாகும். அவருக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்துக் களைத் தெரிவித்தார்.

தமிழ் ஓவியா said...


கே.கம்மாப்பட்டி ஒரு எச்சரிக்கை


இராசபாளையம் அருகே, கே.கம்மாப்பட்டி கிராமத்தில் 200 குடியிருப்புகள் உள்ளன. இந்த ஊரில், அரசு தொடக்கப்பள்ளி ஒன்றுள்ளது. 50 மாணவர்களும் 25 மாணவிகளும் படிக்கின்றனர். மதிய உணவு திட்டம் செயல்பாட்டில் உள்ளது. சமைக்கும் பெண் மரகதவள்ளி என்பவர் தாழ்த்தப் பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் பெரும் பாலும் வேறு ஜாதியைச் சேர்ந்த மாணவ - மாணவிகள் மதிய உணவைச் சாப்பிட மறுக் கிறார்கள் என்ற செய்தி வெளி வந்துள்ளது.

இது குறித்துத் தகவல் அறிந்த மேல் அதிகாரிகள், சம்பந்தப்பட்ட பள்ளிக்குச் சென்று, ஊர் பெரியவர் களைச் சந்தித்துச் சமாதானம் சொல்லியுள்ளனர். கட்டுப்படாத நிலையில், சத்துணவுத் திட்ட இணை இயக்குநர் வசந்தி என்பவரே, நேரடியாக அந்தக் கிராமத்திற்குச் சென்றுள்ளார். ஒரு வழியாகக் கிராமத்துப் பெரியவர்களை இசைய வைத்துள்ளார். அப்படியும்கூட மாணவர்கள் மட்டும்தான் மதிய உணவைச் சாப்பிடுகிறார்களாம். மாணவிகள் சாப்பிட மறுக்கிறார்களாம்.

2013ஆம் ஆண்டிலும் தமிழ்நாட்டில் இப்படி ஒரு கொடுமையா என்ற கேள்விதான் எழுகிறது. வேதனையாகவும் உள்ளது.

உலகத்தில் வேறு எந்த நாட்டிலும் இல்லாத பிறப்பின் அடிப்படையில் உயர்வு - தாழ்வு கற்பிக்கும் கொடுமை இந்தப் பாழாய்ப் போன இந்து மதத்தில் தான் இருக்கிறது; ஜாதிகளுக்குள் தாழ்த்தப்பட்ட வர்கள் என்றால் அவர்கள் தீண்டத்தகாதவர்களாம்.

தீட்டு என்றால் என்ன? அதன் தன்மை என்ன? தொட்டால் என்னதான் ஆகும் என்று எவரேனும் - சிந்தித்ததுண்டா?

ஜாதிக்கே அடையாளம் இல்லாதபோது தீட்டுக்கு என்ன அடையாளம் இருக்க முடியும்? தாழ்த்தப்பட்ட பெண் சமைத்தால் மிளகாய் உரைக்காதா? சர்க்கரை இனிக்காதா? பாகற்காய் கசக்காதா?

உணவு விடுதிகளில் சாப்பிடச் செல்லுபவர்கள் சமைப்பவர்கள் எந்த ஜாதி என்று தெரிந்து கொண்டா சாப்பிடுகிறார்கள்?

தொடக்கப் பள்ளியில் பயிலும் சிறுவர் சிறுமிகளிடம் இப்படிப்பட்ட வேற்றுமை நச்சு விதை திணிக்கப்பட்டால், எதிர்காலம் எந்த நிலையில் இருக்கும்?

பிள்ளைகளுக்கு என்ன தெரியும்? பெற்றோர்கள், பெரியோர்கள் செய்யும் தவறுகளுக்குச் சிறுவர் களைக் குற்றம் சொல்லிப் பயன் இல்லை.

இன்னும் சில கிராமங்களில் குறிப்பாக தென் மாவட்டங்களில் தேநீர்க் கடைகளில் இரட்டைக் கிளாஸ் முறை இருக்கிறது. தீண்டாமை ஒழிப்புக்கு என்ற தனிக்காவல் பிரிவு இருந்தும் என்ன பயன்?

தீண்டாமை எந்த வடிவத்தில் கடைப்பிடித்தாலும் அது தண்டனைக்குரிய குற்றம் என்கிறது இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 17ஆவது பிரிவு.

இது வெறும் ஏட்டுச் சுரைக்காயாகத் தானிருக்கிறது. இந்தச் சட்டத்திற்கு நகமும், பல்லும் இருக்குமானால், தீண்டாமைப் பாம்பு படம் எடுத்து ஆடுமா? அதற்கான தைரியம்தான் ஏற்படுமா?

இந்தத் தீண்டாமை எங்காவது நிலவுமானால், அந்தப் பகுதியில் இந்தத் துறையில் பணியாற்றும் காவல் துறையினர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்பொழுதுதான் அவர்கள் தங்களின் கடமையைச் செய்வார்கள்.

தருமபுரி மாவட்டத்தில் சத்துணவு சமையல் செய்த பெண் தாழ்த்தப்பட்டவர் என்ற காரணத் துக்காக வேறு ஊருக்கு மாற்றப்பட்ட பொழுது, அதனைக் கண்டித்து எழுதியது விடுதலை - தீர்மானம் போட்டது திராவிடர் கழகம். அதன் காரணமாக, அந்த வெளியூர் மாற்ற ஆணை விலக்கிக் கொள்ளப்பட்டது.

இராசபாளையம் அருகே இந்த ஒரு பள்ளியில் கடைப்பிடிக்கப்படும் தீண்டாமை என்பது, ஏதோ ஒரே ஒரு இடத்தில் அத்திப் பூத்தது போல நடைபெற்ற சம்பவம் என்று அலட்சியப்படுத்தாமல், தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் பணியாற்றும் இடங்களில் எல்லாம் உள்ள நிலையை நேரில் கண்டறிந்து தீண்டாமையைக் கடைப்பிடிக்கும் சக்திகள்மீது சட்டப்படியான தண்டனையை அளிக்க வேண்டும்.

சத்துணவு சமையற்காரர்களாக, அதிக அளவு தாழ்த்தப்பட்டவர்களை நியமிப்பது என்பதை, ஒரு கொள்கை முடிவாக அரசு எடுத்தால்கூட நல்லது தான்.

தீண்டாமை நடமாடினால், அந்தப் பகுதிக்கே ஒட்டு மொத்தமாக பொது அபராதம் விதிக்க வேண்டும். தண்ட வரி விதிக்க வேண்டும்! இது போன்ற பிரச்சினையில் மயிலே மயிலே என்றால் இறகு போட மாட்டார்கள்; சட்டம் தன் கடமையைக் கூர்மையாகச் செலுத்த வேண்டும். இரண்டு ஊர்களில் இவ்வாறு நடந்தால் போதும்; மற்ற மற்ற பகுதிகளில் உள்ள வர்கள் வாலைச் சுருட்டிக் கொண்டு விடுவார்களே!

தந்தை பெரியார் பிறந்த மண் இந்த வகையிலே வழிகாட்டட்டுமே!

தமிழ் ஓவியா said...


தி.மு.க. ஆட்சியில் முதல்வர் கலைஞரின் கடும் முயற்சியால் தமிழ் செம்மொழியான நிலையில், அதனைச் சீர்குலைப்பதா?


செம்மொழி செயல் குழுவுக்கு அய்.அய்.டி. அதிகாரியைப் பதிவாளராக நியமிப்பது சரியானதுதானா?

தமிழ் உணர்வாளர்களே என்ன செய்யப் போகிறீர்கள்?
தமிழ்நாட்டு எம்.பி.களே தடுத்து நிறுத்த முன் வாரீர்!

தமிழர் தலைவரின் காலங்கருதி விடுக்கப்படும் அறிக்கை

பெண்களைப் பாவ யோனியில் பிறந்தவர்கள் என்கின்ற கிருஷ்ணனுக்கு ஜெயந்தி கொண்டாடலாமா?

அரும்பாடுபட்டு தி.மு.க. ஆட்சியில் கிடைக்கப் பெறச் செய்த செம்மொழி என்னும் தமிழுக்கான உயர் தகுதியைச் சீர்குலைக்கும் வகையில் அ.இ.அ.தி.மு.க. ஆட்சி நடந்து கொண்டு வருவதையும், செம்மொழி செயல் குழுவுக்கு அய்.அய்.டி. அதிகாரியைப் பதிவாளராக நியமித்ததைச் சுட்டிக் காட்டியும் தமிழுணர்வுக்கு எதிராக செயல்படும் போக்குகளைத் தடுத்து நிறுத்த அனைவரும் பாடுபட வேண்டும் என்று அழைப்பு விடுத்தும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத் துள்ள அறிக்கை வருமாறு:

தமிழுக்குச் செம்மொழித் தகுதி பெற கடந்த தி.மு.க. ஆட்சிக் காலத்தில் அன்றைய முதல்வர் கலைஞர் அவர்கள் பெரு முயற்சி எடுத்தார்கள்; அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் அங்கம் வகித்த வாய்ப்பையும், முழுமையாகப் பயன்படுத்தி இடையறாத அழுத்தத்தை மத்திய அரசுக்குக் கொடுத்து வந்ததன் விளைவே, பல்லாயிரம் ஆண்டுகளில் தமிழ் மொழி பெறாத ஏற்றத்தை செம்மொழித் தகுதி பெற்றதன் மூலம் அடைந்தது! தமிழர்களைத் தலை நிமிரச் செய்த ஒரு வரலாற்றுச் சாதனை அது!

தமிழ்மொழியால், செத்த மொழி சமஸ்கிருதத்துக்குக் கிடைத்த தகுதி!

தமிழுக்கு செம்மொழித் தகுதி வந்ததன் விளைவாகவே, நெல்லுக் கிறைத்த நீர், புல்லுக்கும் கிடைத் தது போன்று சமஸ்கிருதம் (இம் மொழி தமிழ்மொழி போல் பேச்சு மொழி அல்ல என்ற போதிலும்) அதிகார பூர்வமாக, செம்மொழித் தகுதியைப் பெற்றது.

தமிழ்நாட்டில் ஆட்சி மாறிய வுடன், செம்மொழியான தமிழின் பெயரால் இயங்கிய புரட்சிக் கவிஞர் பாரதி தாசன் பெயரில் அமைந்த - கோட்டையில் இயங்கிய அருமையான செம்மொழி நூலகம் காணாமற் போயிற்று! தனியார் வசமிருந்த அரசு நிலத்தை தமிழக அரசு கையகப்படுத்தி - அன்று - செம்மொழிப் பூங்காவை மிக அருமையாக ஏற்படுத்தியதற்கும் கூட பல வகை சோதனைகள்!

கர்நாடகத்தில் இருந்த அதன் தலைமையகம் தமிழ்நாட்டிற்கு வந்த பெருமையைக் குலைக்கும் வண்ணம் தொடர் முயற்சிகள் தொடர்ந்து கொண்டுள்ளன!

செம்மொழிச் செயல் குழுவுக்கு அய்.அய்.டி. அதிகாரி பதிவாளரா?

அந்த செயல் குழு இயங் கவே இல்லை; தலையே இல்லாத நிலை ஒருபுறம்!

இன்னொரு கொடுமை - வெந்த புண்ணில் வேலைச் செருகுவது போன்று, இதற் குத் தலைமை அதிகாரி யாக, தமிழுக்குச் சற்றும் தொடர்பில்லாத ஒரு சென்னை அய்.அய்.டி. அதிகாரியையா பதிவாளராக, பொறுப்பாளராகப் போடுவது?

அந்தோ கொடுமை! கொடுமை!! இதை நமது தமிழ்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறிப்பாக தி.மு.க.வினரும், தோழமையினரும் தடுத்து நிறுத்தி தமிழ் ஆய்ந்தவர்தான் பொறுப்பாளராக வர ஏற்பாடு செய்ய முன்வர வேண்டும்.

இது அவசர அவசியம்! தி.மு.க.வின்மீது உள்ள கோபத்தை, கலைஞர் மீதுள்ள ஆத்தி ரத்தை, மத்திய மாநில அரசுகள் அதன் பார்ப்பன ஆதிக்கத்தை செம்மொழி மீது காட்டலாமா?

தமிழுணர்வாளர்களே உங்கள் கடமை என்ன?

ஏற்கெனவே மத்திய அரசு, செம்மொழி (Classical Language) என்பதற்காக பழைமை அளவு கோலான காலக் கணக்கை மாற்றி மலையாளம், கன்னடம், தெலுங்கு போன்ற மொழிகளையும், செம்மொழிப் பட்டியலில் கொண்டு வந்து, செம்மொழி தகுதியை மிகவும் கேலிக் கூத்தாக்கி விட்டனரே!

தமிழ் செம்மொழி என்று அறிவிக்கப்பட்ட நிலையில் பார்ப்பன ஏடுகள் எப்படியெல்லாம் கேலி செய்து எழுதின! இதனால் வீட்டுக்கு வீடு பிரியாணி வருமா? கிடந்தது கிடக்கட்டும் கிழவனைத் தூக்கி மணையில்வை என்றெல்லாம் எழுதியதை மறக்க முடியுமா?

தமிழ்ப் புலவர்களே, தமிழன் என்று சந்து முனையில் சிந்துபாடி நிந்தாஸ்துதியில் ஈடுபடும் அரசியல்வாதிகளே உங்கள் கடமை என்ன? மவுனம்தானா? தமிழா தமிழனாக இரு!

தமிழா தன்மானத்தோடு உரிமைக்குப் போராடு!!

சிந்தியுங்கள் - செயல்படுங்கள்.

சென்னை
29.8.2013

கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

தமிழ் ஓவியா said...


சட்டம் - ஒழுங்கு?


விழுப்புரம் மாவட்டம் திருநாவலூர் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வருபவர் ரமேஷ், அவருக் குச் சொந்தமான இரு சக்கரவண்டியில் (மோட் டர் பைக்) சேகுவாரா படத்தினை (ஸ்டிக்கர்) ஒட்டியுள்ளார். கடந்த 4 ஆண்டு காலமாகவே அந் தப் படம் அவர் வாகனத் தில் இடம் பெற்றிருந்தது.

திடீரென்று அக்கா வல் நிலைய ஆய்வாளர் அந்தப் படத்தினை அகற் றுமாறு ஆணை பிறப்பித் தார். காரணம் கேட்டார், உகந்த முறையில் பதில் இல்லை. ஆய்வாளர் கடு மையாகப் பேசவே வேலையை விட்டு விலகு வது என்று முடிவு செய்து சீருடையை ஒப்படைக்க விழுப்புரம் மாவட்ட காவல் துறைக் கண்காணிப்பா ளர் அலுவலகத்திற்குச் சென்றுள்ளார். நண்பர் கள் அந்த முடிவைக் கை விடக் கோரவே, சீரு டையை அளிக்காமல் திரும்பி விட்டார்.

திருநாவலூர் காவல் நிலைய ஆய்வாளர் பிரச் சினையைக் கைவிடுவ தாக இல்லை. ரமேஷை பற்றிப் புகார் செய்து கண்காணிப்பாளருக்கு எழுதினார். அதன் விளைவு - திருநாவலூர் காவல் நிலையத்திலிருந்து ஆயுதப் படைப் பிரிவுக்கு மாற்றப்பட்டு விட்டார்.

இது என்ன கொடுமை! இரு சக்கர வாகனங் களில் கடவுள் படங்களை ஒட்டி வைத்திருக்கின்ற னர். இதே ரமேஷ் சேகு வாரா படத்துக்குப் பதி லாக ஒரு விநாயகர் படத்தை ஒட்டியிருந்தால் அதனை எடுக்கச் சொல்லி ஆணை பிறப்பித்திருப் பாரா?

ஒரு போராளியின் படத்தை ஒட்டக் கூடாது - ஒரு கற்பனை - களி மண் கடவுள் படத்தை ஒட்டலாம் என்ற வகை யில் ஏதாவது அரசு ஆணையிருக்கிறதா? ஆய்வாளர்தான் புகார் செய்து கடிதம் எழு தினார் என்றால் மாவட் டக் காவல்துறை கண் காணிப்பாளர் அது குறித்து தம் சிந்தனை யைச் செலுத்தி இருக்க வேண்டாமா?

காவல் நிலையத்திற் குள்ளேயே சட்ட விரோத மாக கோயில்களைக் கட் டலாம்; இந்திய அரச மைப்புச் சட்டத்தில் கூறப் பட்டுள்ள மதச் சார்பின் மைக்கு விரோதமாக காவல் நிலையங்களில் ஆயுத பூஜை கொண்டாட லாம் அதெல்லாம் குற்றம் இல்லை; தமக்குப் பிடித்த ஒரு போராளியின் படத்தை தம் சொந்த வாகனத்தில் ஒட்டுவது தான் குற்றமா?

சட்டம் ஒழுங்கு என் பது ஒரு வழிப்பாதையா?

- மயிலாடன்

குறிப்பு: திரு ரமேஷ் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் என்பது குறிப் பிடத்தக்கது.

தமிழ் ஓவியா said...

பெண்ணின் தந்தை கதறல்: என் மகளை அசராம்பாபு கெடுத்து விட்டாரே!

ஷாஜகான்பூர், ஆக. 29-உத்தர பிரதேசத்தில் 15 வயது சிறுமியை 72 வயது சாமியாரான அசராம் பாபு பாலியல் வன்முறை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது பற்றி பெண்ணின் தந்தை கூறியதாவது:

என் மகளுக்கு உடல்நிலை சரியில் லாமல் இருந்ததால் சாமியார் அசராம் பாபுவின் ஆசிரமத் துக்கு அழைத்து சென்றோம். கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக அவரை நாங்கள் தெய்வமாக வணங்கி வந்தோம். என் மகளை பிடித் துள்ள தீய சக்தியை விரட்ட பூஜைகள் செய்ய வேண்டும் என்று கூறி, ஜோத்பூரில் உள்ள தனது வீட்டுக்கு அழைத்து சென்று பாலியல் வன்முறை செய்து விட்டார். அப்போது அவர், சத்தம் போட்டால், உன்னையும் வெளியே இருக்கும் உன் பெற்றோரை எனது பாதுகாவலர்கள் சுட்டுக் கொன்று விடுவார்கள் என்று மகளை மிரட்டியுள்ளார்.

அவர் மீது புகார் கொடுத்து 2 வாரங்களாகி விட்டது. இதுவரை காவல்துறையினர் அவரை கைது செய்யவில்லை. விசாரணைக்கு வரும்படி இப்போதுதான் காவல் துறையினர் அவருக்கு சம்மன் கொடுத்துள்ளனர். அசராம் பாபுவின் ஆசிரமத்தில் இருந்து எங்களுக்கு மிரட்டல் வருகிறது. நாங்கள் எதற்கும் பயப்பட மாட்டோம். அவரை சிறையில் அடைக்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய ஒரே குறிக்கோள்.

நாங்கள் பொய் சொல்ல வில்லை. எந்த பெற்றோராவது தனது மகளின் மானத்தை காற்றில் பறக்கவிட்டு, இதுபோன்ற குற்றச் சாட்டை கூறுவார்களா? உண் மையை கண்டறிய சிபிஅய் விசா ரணைக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

தமிழ் ஓவியா said...

பெண்ணுக்கு பாலியல் தொல்லை பாதிரியார்மீது புகார்

தாம்பரம், ஆக. 29- பெண் ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பாதிரியார் மீது பரபரப்பு புகார் கொடுக்கப்பட் டுள்ளது. இதுகுறித்து பாதிரியாரி டம் காவல்துறையினர் விசாரிக் கின்றனர்.

தாம்பரம் அடுத்த சந்தோஷ புரத்தைச் சேர்ந்தவர் ஜானி. இவரது மனைவி மரியாள் (39) (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளது). சந்தோஷபுரத்தில் அன்னை வேளாங்கண்ணி மாதா ஆலயம் உள்ளது. இங்கு விசேஷ காலங் களில் உணவு வழங்கப்படும். இதற்கு உதவியாக மரியாள் இருந்து வருகிறார்.

கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி ஆலயத்தில் இருந்த சமையல் பாத்திரங்களை கழுவி சுத்தம் செய்துள்ளார் மரியாள். அருகில் வந்த பாதிரியார் அமலதாஸ், ஆபாசமாக பேசி மரியாளுக்கு தொல்லை கொடுத்ததாக கூறப் படுகிறது. இதை அவர் கண்டு கொள்ளவில்லை.

இதையடுத்து வேலை முடிந்து செல்லும் போது, அவரது கைகளை பிடித்து இழுத்து தவறாக நடக்க முயன் றுள்ளார். இதனால் பயந்துபோன அவர், பாதிரியாரை கீழே தள்ளி விட்டு தப்பினார். பின்னர் நடந்தவற்றை கணவரிடம் கூறியுள்ளார். உடனே அவர் அக்கம்பக்கத்தினருடன் சென்று பாதிரியாரை கண்டித்துள் ளார்.

இதைத் தொடர்ந்து அதே மாதம் 20ஆம் தேதி நடந்த வழி பாட்டில் எந்த காரணமும் இல் லாமல் ஜானியையும், மரியாளை யும் பாதிரியார் ஒதுக்கி வைத்தார். இது குறித்து செங்கல்பட்டு பிஷப் பிடம் அவர்கள் புகார் செய்தனர். அதற்கு அவர், நிர்வாகிகளிடம் புகார் செய்யுங்கள் என கூறி அனுப்பினார். நிர்வாகிகளிடம் கூறியும் எந்த நடவடிக்கையும் இல்லை. தொடர்ந்து மரியாளுக்கு பாதிரியாரிடம் இருந்து மிரட்டல் வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த 11ஆம் தேதி ஆலயத்துக்கு சென்ற மரியாளை, எனது ஆசைக்கு இணங்கு. இல்லாவிட்டால் நீ தவ றானவள் என செய்தி பரப்பி, உன்னையும் உன் குடும்பத் தினரையும் ஊரை விட்டு துரத்தி விடுவேன் என பாதிரியார் அமல தாஸ் மிரட்டி யுள்ளார். அப் போதும் அவரிடம் இருந்து மரியாள் தப்பியுள்ளார்.

இது குறித்து கடந்த 13ஆம் தேதி காவல் ஆணையர் ஜார்ஜி டம் புகார் செய்யப்பட்டது. அதில் பணம், அரசியல் செல் வாக்கு உடைய பாதிரியார் என்னை ஆசைக்கு இணங்கும்படி வற்புறுத்துகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மரியாள் கூறியிருந்தார். அதுகுறித்து விசாரிக்க சேலையூர் காவல்துறையினருக்கு ஆணையர் உத்தரவிட்டார். இதையடுத்து காவல்துறையினர் வழக்குபதிவு செய்து நேற்று முன்தினம் பாதிரி யாரிடம் விசாரித்தனர்.

தமிழ் ஓவியா said...


பெரியார் ஆயிரம் வினா - விடை போட்டியா? பிரளயமா?


பெரியார் ஆயிரம் வினா விடைப் போட்டி நடத்துவது தொடர்பாக கடந்த 14.07.2013 அன்று மதுரையில் கலந்துரையாடல் கூட்டத்தை பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்கள் கூட்டியிருந்தார்கள்.

காரைக்குடி கழக மாவட்டத்தின் சார்பில் அய்ந்து பேர் கலந்து கொண்டு விவரம் கேட்டறிந்தோம். இது எப்படி சாத்தியமாகுமா? என்று எங்களுக்குள்ளே ஒரு கேள்வி எழுந்தது. குறிப்பாக நூறு மாணவர்களுக்கு மேல் பங்கேற்றாலே பெரிது என எண்ணினோம். அறிவிப்பும் வந்தது.

அதை 120-க்கும் மேற்ப்பட்ட பள்ளிகளுக்கு நேரிலும், அஞ்சல் மூலமும் அனுப்பினோம். தலைமை கழகத்திலிருந்து எத்தனை புத்தகம் வேண்டும் என கேட்டபோது 150 போதும் என்று கூறினோம். அவர்களும் அனுப்பிவைத்தனர். புத்தகங்களை நேரில் சென்று கொடுக்க ஆரம்பித்ததுதான் தாமதம். பிறகு ஒவ்வொரு பள்ளியாக கேட்க ஆரம்பித்தனர். வந்த 150 புத்தகங்களும் தீர்ந்து விடவே மீண்டும் நேற்று 300 புத்தகங்கள் தேவைப்பட அதையும் அனுப்பி வைத்தனர்.

இன்று மீண்டும் பள்ளிகளில் இருந்து அலை அலையாக தொலைபேசி அழைப்புகள் கழகத் தலைவர் ச.அரங்கசாமி அவர்களுக்கும், எனக்கும் வந்து கொண்டே இருக்க புத்தகங்களின் எண்ணிக்கையை காலை 11 மணிக்கு 200 என்று சொல்லி, நண்பகல் 12 மணிக்கு 300 என்று சொல்லி, மதியம் 2 மணிக்கு 400 என்று சொல்லி, மாலை 4 மணிக்கு 500 புத்தகம் கண்டிப்பாக தேவை என்று தலைமை கழகத்தில் சொல்லியுள்ளோம்.

எங்களுக்கு சற்று மலைப்பாகத் தான் இருக்கிறது. இருந்தாலும் இது எவ்வளவு பெரிய பணி! இளம் சிறார்களிடம் அறிவுலகப் பேராசான் அய்யா பெரியார் அவர்களை கொண்டு சேர்க்கும் பணியல்லவா? என நாங்கள் எண்ணிக் கொண்டு, களத்தில் இறங்கியிருக்கிறோம்.இதற்கிடையில் காரைக்குடி ஒரு மய்யம் மட்டும் போதும் என்று இருந்த நிலை மாறி,தேவகோட்டையிலும் ஒரு மய்யத்தில் நடத்துவது என்று மாற்றி ஏற்ப்பாடுகள் செய்து வருகிறோம். போகிற நிலைமையை பார்க்கும் போது மூன்றாவதாக ஒரு மய்யத்தை உருவாக்கும் நிலை வரும் என எதிர்பார்க்கிறோம்.

எங்களையும் அறியாத ஓர் உற்சாகம் எங்களுக்கு கிடைத்திருக்கின்றது.இப்படி ஒரு நிகழ்ச்சியை கழக வரலாற்றில் உருவாக்கி கொடுத்த கழக பொதுச் செயலாளர் மானமிகு வீ.அன்புராஜ் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.புத்தகங்களை கொண்டு சென்று பள்ளிகளில் தரும்போது அங்கே நாங்கள் காணும் மரியாதை அளவிட முடியாதது.

ஆம்! அந்த மரியாதை எல்லாம் நம்மை மனிதனாக்கி மானமும் அறிவும் பெற வேண்டும் என வாழ்நாளெல்லாம் உழைத்த தத்துவத் தலைவர் தந்தை பெரியார் அவர்களுக்கும், அவர் தம் தன்னலமல்லாத கொள்கைகளுக்கும் கிடைக்கும் மரியாதை அல்லவா! இந்த அனைத்து சிறப்புகளுக்கும் முழு முதற் காரணம் தமிழர் தலைவர் அவர்களின் ஓய்வில்லா உழைப்புதான் என்பதிலே இரு வேறு கருத்துக்கு இடமிருக்காது.போற்ற வேண்டியவர்கள் தூற்றிக் கொண்டிருக்க, தூற்ற வேண்டியவர்கள் போற்றுகிறார்கள் நம் தலைவர் அவர்களை.

ஆம்! அய்யா பெரியார் அகிலம் முழுமைக்கும் பயணிக்க காரணம் வணக்கத் திற்குரிய தமிழர் தலைவர் அவர்களின் மானம் பாரா, நன்றி பாரா தொண்டுகள்தான். அது என்றென்றும் வளர்ந்து வீறு கொண்டெழ நாமும் சேர்ந்து உழைப்போம்.

இழிவை ஒழிக்கும் போரினிலே என்றும் அய்யா வழி நடப்போம்!

அழிவை அணைக்க நேர்ந்தாலும், அய்யா கொள்கை மலர வைப்போம்!! அதற்கு தமிழர் தலைவரின் தலைமையில் சூளுரைப்போம்.

- தி. என்னாரெசு பிராட்லா மாவட்ட கழக செயலாளர், காரைக்குடி

தமிழ் ஓவியா said...


அழிக்காமல்...


ஜாதியையும், அதற்கு ஆதாரமான மதத் தன்மையையும் அழிக்காமல், வேறு எந்த வழி யிலாவது முதலாளி - தொழிலாளித் தன்மையை மாற்றவோ அல்லது அதன் அடிப்படையை அணுகவோ நம்மால் முடியுமா?

(குடிஅரசு, 12.5.1935

தமிழ் ஓவியா said...


உரத்த சிந்தனை


இன்று தேசிய விளையாட்டு தினமாம்!

இந்தியா விளையாட்டுத்துறையில் இன்றுவரை எந்த ஒரு முன்னேற்றமும் எடுக்காததற்கு காரணம் என்ன?, இதற்காக நாம் வேதகாலம் காலூன்ற தோன்றிய காலத்திலிருந்து வந்த மாற்றத்தை கவனிக்கவேண்டும். இது நீண்டகால பரம்பரை நோய் என்று கூறினால் கூட மிகையாகாது.

எல்லாதுறைகளிலும் அனைத்திலும் மனிதர்களின் உழைப்பு 6-ஆம் நூற்றாண்டு வரை நிறைந்து இருந்தது, ஆனால் வேதகாலம் தோன்ற ஆரம்பித்த பிறகு சமூகத்தில் பிரிவினை ஏற்பட்டது, உழைப்பவர் ஒருபுறம் அவர்களின் உழைப்பைச் சுரண்டி தின்பவர்கள் ஒருபுறம்; இந்த இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் மலைக்கும் மடுவிற்கும் உள்ள வேறுபாடாய் மாறத்துவங்கியது, இதன் விளைவு உழைக்கும் மக்கள் அடிமைகளாய அவர்களுக்கு இட்ட பணிகளை இரவு பகல் என்று பார்க்காமல் தங்களது தனித்திறமைகளை வளர்த்துக்கொள்ள இடமின்றி பல நூற்றாண்டுகளாக கழித்தனர்.

அதே நேரத்தில் உழைப்பைச்சுரண்டி வாழும் வர்க்கமோ சோம்பேறிகளாய் கொழுத்து ஓய்வுநேரத்தில் சுகபோகமாய் வாழ்வதையே முறையாகக் கொண்டு வாழ்ந்து கொண்டிருந்தனர். இவர்கள் பொது வாழ்க்கையில் கலக்காமல் தங்களை தனிப்பட்டவர்களாக கருதிக்கொண்டு இருந்ததால் வெளிவுலகம் தெரியாமல் உண்பதும் உறங்குவதுமாக கழித்துக்கொண்டு இருக்க விளையாட்டு மற்றும் அதுகுறித்த அறிவு முற்றிலும் தேங்கிப்போனது. முகலாயர்களின் ஆட்சிக் காலத்தில் போர் முறையி னாலான விளையாட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன, ஆனால் அவை முகலாய அரச வம்சத்தினருக்கும், படைத் தளபதி அமைச்சர்கள் போன்ற மேம்பட்ட சமூகத்தோடு நின்று விட்டது. ஆங்கிலேயர்கள் இந்தியாவைக் கைப்பற்றிய போது இங்கு பாரம்பரிய நடனங்கள் என்றும் சம்பிரதாயங்கள், சடங்குகள் என்ற பெயரில் மூடநம்பிக்கை பழக்க வழக்கங்கள் தான் விளையாட்டுகளாக நடத்தப்பட்டன. அதுவும் இறுதியில் இரத்தக்களறியாக முடிவுற்றது. வலியவர்கள் தோற்றாலும், வென்றாலும் கொலையில் தான் முடியும். ஆகையால் பொதுமக்கள் பலர் இது போன்ற சடங்கு விளையாட்டுகளில் கலந்து கொள்ளமாட்டார்கள். ஆங்கிலேயர்கள் நாட்டைக் கைப்பற்றி தங்களது ஆட்சியை நிலைப்படுத்திய பிறகு பள்ளிக்கூடங்களில் விளையாட்டைப் புகுத்தினர். ஆனால் பாரம்பரிய குணத் தால் கல்விகற்று தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை முறையை வளப்படுத்துவதிலேயே பார்ப்பன மற்றும் முதலாளி வர்க்கம் அதிகம் அக்கறை காட்டியது, ஆரம்ப காலங்களில் ஆங்கிலேயர்களின் பள்ளிக்கூடங்களில் விளையாட்டுப்போட்டிகளில் அதிகம் பங்கேற்று வெற்றி பெறுபவர்கள் பெரும்பாலும் வசதியற்ற சூழலில் இருந்து வரும் மாணவ - மாணவிகளே.

இந்தியாவில் 18-ஆம் நூற்றாண்டின் துவக்கம் கல்வியுகம் என்று கூறலாம் ஆனால் இங்கு அதிகம் தனிப்பட்ட முறையில் வாழ்க்கையை அமைக்க கல்வியைக் கற்க ஆரம்பித்தனர். அதனால் தான் சர் சிவி இராமன், கணித மேதை இராமானுஜம் மற்றும் சுப்ரமணியம் சந்திரசேகர் ஜிடி நாயுடு போன்ற திறன்மிகுந்த அறிவியல் மேதைகள் தோன்றினார்கள், ஆனால் இந்திய வரலாற்றில் விளையாட்டுத்துறையில் முத்திரைபதித்தவர்கள் இதுவரை தோன்றவில்லை என்பது வேதனைக்குரியது. இந்தியாவும் விளையாட்டுத்துறையில் பிற நாடுகளைப்போல் சிறந்து விளங்கவேண்டும் என்ற ஒரு நிர்பந்தத்தின் காரணமாக விளையாட்டு அமைச்சரவை உருவாக்கப்பட்டது, இருப்பினும் அதன் சிறந்த பணிகள் என்று இன்றுவரை எதுவுமே இல்லாதது வேதனைக்குரிய செய்தியாகும். இதற்குப் பெரிய உதாரணமாக கூற வேண்டுமென்றால் தேசிய விளையாட்டுதினத்தை எப்போது உருவாக்கினார்கள் என்று விளையாட்டுத்துறை அமைச்சகத்திற்கே தெரியாமல் இருக்கிறது, 2002இல் இருந்து தியான்சந்த் பெயரில் விருதுவழங்கப்பட்டு வருகிறது என்று தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் தெரிவிக்கிறது. ஆனால் முடிவு செய்யப்பட்ட ஆண்டு தெரியவில்லை.

ஒரு தேசிய விளையாட்டு தினத்தையே இப்படி கேலிக்கூத்தாக மாற்ற முக்கிய காரணம் கிரிக்கெட். கிரிக்கெட்டில் பணம் பார்த்த பிறகு பல அரசியல் வாதிகளும், பணமுதலாளிகளும் மற்ற விளையாட்டுத் துறைகளில் மக்களின் கவனம் சென்றுவிடாமல் இருக்க கிரிக்கேட்டை மாத்திரமே மக்களிடையே ஒரு விளை யாட்டுப்போல் மாயப்பிம்பத்தை காட்டி வருகின்றனர். சமீபத்தில் வில்வித்தையில் தங்கம் வென்று வந்த வீரங்கனைகளை மரியாதையுடன் வரவேற்க அரசு தரப்பில் டில்லி விமான நிலையத்திற்கு ஒருவர் கூட செல்லாதது இங்கு குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

உண்மையில் இந்திய தேசிய விளையாட்டுத்தினம் என்பது ஒரு தினசரி சடங்கு போல் கடமைக்காக நடத்தப்படும் நாளே அன்றி உண்மையில் இந்தியாவில் விளையாட்டிற்கு மரியாதைத் தரப்படும் ஒரு நாளே அல்ல என்று கூறலாம்

தமிழ் ஓவியா said...


கைதட்டி வரவேற்போம்!


ஒரு பெண் விவாகரத்துப் பெற்று விட்டாலும் அந்தப் பெண்ணுக்கும், குழந்தைகளுக்கும் இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்பதை உறுதி செய்யும் வகையில் திருமண சட்டத் திருத்த மசோதா மாநிலங்களவையில் கடந்த திங்களன்று (26.8.2013) நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்திய மக்கள் தொகையில் பெண்கள் எண்ணிக்கை 50 விழுக்காடு இருந்தாலும், இந்தியாவில் உள்ள சொத்துகளில் பெண்களுக்கு உரிமை உடையது வெறும் இரண்டே இரண்டு விழுக்காடுதான் என்று மத்திய சட்டத்துறை அமைச்சர் கபில்சிபல் கூறியிருப்பது மிகவும் கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

இந்த நிலையில் இப்படி ஒரு சட்டம் கொண்டு வரப்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

பெண்ணை, ஒரு சொத்தாகப் பாவிக்கும் மனப்பான்மை நம் நாட்டு மக்களுக்கு உண்டு. பெண்களை உயிருள்ள ஜீவன் என்று நினைப்ப தில்லை. அதனால்தான் வரதட்சணை என்ற ஆரியக் கலாச்சாரமே இங்கு புகுந்தது.

பெண்களைப் பெற்றவர்கள் ஏன் பெற்றோம் என்று கண்ணீர் விடும் கொடுமை இந்தப் பாரத புண்ணிய பூமியில்! தான்

பெண் சிசுக்கள் கருவிலேயே அழிக்கப்படு வதும் இந்தச் சுமையால்தான்! மணமகன் டாக்டராக இருந்தால் அதற்கொரு தொகை, வெறும் ஆசிரியராக இருந்தால் தொகையில் கொஞ்சம் சலுகை.. - இத்தியாதி இத்தியாதி விலைவாசிப் பட்டியலை (மார்க்கெட் நிலவரம்) ஆண் ஆதிக்க உலகம் கையில் வைத்துள்ளது - வெட்கக்கேடு!

பெண் என்றால் திருமணம் செய்து கொடுத்து விட்டாலே போதும்.. அவருக்கு ஏன் சொத்து பத்துகள் என்று நினைக்கிற இந்துத்துவ மனப்பான்மை உள்ளவரை பெண்ணுலகம் தலை நிமிர்ந்திட முடியவே முடியாது.

இப்படிப்பட்ட சமூக அமைப்பில் பெண்கள் வளர்ச்சி பெற வேண்டும் என்றால் அடிப்படைத் தேவை கல்வியே! இந்த உரிமையை ஈட்டித் தருவதற்காக - இந்தப் பிரச்சினைகளை மய்யமாக கொண்டு - அதனை ஓர் இயக்கமாகவே நடத் தினார் தந்தை பெரியார்.

பெண்களுக்குச் சொத்துரிமைபற்றி, 1928ஆம் ஆண்டிலேயே தந்தை பெரியார் தலைமையில், நடைபெற்ற தென்னிந்திய சீர்திருத்தக்காரர்கள் மாநாட்டில், தீர்மானமே நிறைவேற்றப்பட்டது. பெண்களுக்குக் கல்வி உரிமை; இராணுவத்தில் கூட பெண்களுக்குப் பணிகள், என்று 1929ஆம் ஆண்டு செங்கற்பட்டில் நடைபெற்ற முதல் மாகாண சுயமரியாதை மாநாட்டிலேயே தீர்மா னத்தை, நிறைவேற்றச் செய்தார் தந்தை பெரியார்.

தேவதாசி ஒழிப்புச் சட்டம் முதல், பெண்களின் சுயமரியாதையைக் காப்பாற்றும் நடவடிக்கைகளை, மேற்கொண்டது திராவிடர் இயக்கமே.

சமூகத்தில் உண்டாக்கப்பட்ட விழிப்புணர்வே, பெண்கள் வளர்ச்சிக்கான உரிமைக்கான சட் டங்கள், அரசு தரப்பில் நிறைவேற்றப்பட்டதற்குக் காரணம்.

பெண்கள் சொத்துரிமைப் பற்றிய மசோதாவை, மய்யப்படுத்தியே சட்ட அமைச்சர் அண்ணல் அம்பேத்கர், அமைச்சர் பதவியைத் தூக்கி எறிய நேர்ந்தது. நாடாளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் பெண்களுக்கும் சொத்துரிமைக்கு வழி வகுக்கும் சட்டம் இயற்றப்பட்டாலும்கூட, நடைமுறையில் எந்த அளவுக்கு, அது செயல்பாட்டில் இருக்கிறது, என்பது கேள்விக்குறியே!

இந்தச் சூழலில் விவாகரத்துப் பெற்ற பெண்ணுக்கும், அவரின் குழந்தைகளுக்கும் இழப்பீடு கொடுக்கப்பட வேண்டும் என்ற சட்டம் மகளிர் முன்னேற்றத் திசையில் சிறப்பானதோர் மைல் கல்லே!

சட்டம் வந்தால் மட்டும் போதாது - நடை முறையில் எந்த அளவுக்குச் செயற்பாட்டில் இருக் கிறது என்ப தற்கான உத்தரவாதம்தான் மிக மிக முக்கியமாகும்.

சட்டத்தைத் திராவிடர் கழகம் கை தட்டி வரவேற்கிறது.

தமிழ் ஓவியா said...


கேட்டீர்களா சேதியை? கலாச்சார எல்லையாமே!


விசுவ ஹிந்து பரிஷத்துக்காரர்கள் அயோத்தியை நோக்கி யாத்திரை புறப்பட இருந்ததும் - உ.பி. அரசு அனுமதி மறுத்ததும் - அதனை எதிர்த்து நீதிமன்றம் சென்ற நிலையில் உ.பி. அரசின் தடை செல்லும் என்று தீர்ப்பு வந்ததும் அனைவருக்கும் தெரியும்.

தடையை மீறிய வி.எச்.பி. பொதுச் செயலாளர் ப்ரவீன் தொகாடியா என்ன சொன்னார் தெரியுமா?

அயோத்தியைச் சுற்றி எங்கள் கலாச்சார எல்லை இருக்கிறது. எனவே அங்கு முஸ்லீம்களின் சின்னங் களை அனுமதிக்க முடியாது என்று கொக்கரித் துள்ளார்.

சட்டீஸ்கர் மாநில வி.எச்.பி.யின் அமைப்புச் செயலாளர் அம்பரீஷ் சிங் என்பவரோ, அயோத்தியைச் சுற்றி 252 சதுர கிலோ மீட்டர் எங்களின் கலாச்சார எல்லை; இந்த வட்டாரத்தில் முசுலிம்களின் எந்த ஒரு சின்னமும் இருக்கக் கூடாது; இருக்கவும் விட மாட்டோம் என்று நீட்டி முழங்கி இருக்கிறார். இந்தக் கூட்டத்தின் கையில் ஆட்சி சென்றால் என்ன ஆகும்? சிந்திப்பீர்.

தமிழ் ஓவியா said...


மனிதனின் பூர்விகம் செவ்வாய் கிரகமாம்! விஞ்ஞானிகள் தகவல்


லண்டன், ஆக.30- பூமியிலுள்ள மனிதர்கள் எல்லோருக்கும் செவ்வாய் கிரகம்தான் பூர்விகம் என்று ஆய்வறிக்கை ஒன்றில் விஞ்ஞானிகள் கருத்து தெரிவித் துள்ளனர்.

ஃப்ளோரன்ஸில் நடைபெறும் 23-ஆவது கோல்டுஷ்மித் கருத்தரங்கில் சமர்ப்பிக்கப்பட்ட ஒரு ஆய்வறிக்கையில், உயிர்களின் தொடக்கத்துக்கு மூலகாரண மான மாலிப்டினம்' என்ற ஆக்ஸிஜன் நிரம்பிய கனிமம், செவ்வாய் கிரகத்தில் மட்டுமே இருப்பதாகவும், புவிப்பரப்பில் அவை கிடையாது என்பதால் உயிர்கள் தோன்றியது செவ்வாய் கிரகத்தில்தான் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த ஆய்வில் பங்கேற்ற அமெரிக்க விஞ்ஞானி ஸ்டீவன் பென்னர் கூறியதாவது:

மாலிப்டினத்தில் அதிக அளவில் ஆக்ஸிஜனேற்றம் நிகழ்ந்ததுதான் உயிரி னங்கள் உருவாவதன் தொடக்கமாக இருந்தது. இந்த மாலிப்டினம் பூமியில் உயிர்கள் தோன்றிய காலத்தில் இருந் திருக்கவே முடியாது. காரணம், 300 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் மிகக் குறைவான அளவே ஆக்ஸிஜன் இருந்தது. ஆனால் அதே நேரம் செவ்வாய் கிரகத்தில் போதுமான அளவு ஆக்ஸிஜன் இருந்தது.

செவ்வாய் கிரகத்திலிருந்து பூமியில் வந்து மோதிய விண்கல்லால்தான் பூமியில் உயிர்கள் தோன்றியிருக்க முடியும் என்ற தத்துவத்துக்கு இந்த ஆதாரம் வலு சேர்ப் பதாக உள்ளது. உயிரிகள் உருவாக செவ் வாய்தான் பொருத்தமான கிரகம் என்றா லும், அவை பரிணாம வளர்ச்சியடை வதற்கு பூமி ஏற்ற கிரகமாக இருந்தது.

இந்த ஆதாரங்களிலிருந்து நாமெல்லோ ரும் செவ்வாய் கிரகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெளிவாகிறது. அங்கு உருவாகி, ஒரு பாறை மூலமாக பூமிக்கு வந்த உயிரிகளின் வழித்தோன்றல்கள்தாம் நாம் என்கிறார் ஸ்டீவன் பென்னர்.

தமிழ் ஓவியா said...

பழங்குடியினர் பட்டியலில் நரிக் குறவர்கள் இனம் மத்திய அமைச்சரவை ஒப்புதல்

புதுடில்லி, ஆக.30- பழங்குடியினர் பட்டி யலில் (எஸ்.டி.) நரிக் குறவர்கள் இனத்தவரைச் சேர்க்க மத்திய அமைச் சரவை வியாழக்கிழமை ஒப்புதல் தெரிவித்தது.

இது தொடர்பாக கடந்த சில நாள்களுக்கு முன்பு திமுக தலைவர் கலைஞரும், தமிழக முதல்வரும் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு எழுதியிருந்த கடிதங் களில் கோரிக்கை விடுத் திருந்தனர்.

இந்நிலையில், பிரத மர் மன்மோகன்சிங் தலைமையில் டில்லியில் வியாழக்கிழமை இரவு நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத் தில் நரிக்குறவர்கள் இனத் தவரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க ஒப் புதல் தெரிவிக்கப்பட்டது.

அமைச்சரவையின் அனுமதியைத் தொடர்ந்து, அரசியலமைப்புச் சட் டத்தின் 342 (1) மற்றும் (2) பிரிவுகளில் நரிக் குறவர்கள் இனத்தை பழங்குடியினர் பட்டிய லில் சேர்க்க மத்திய அரசு சட்டத் திருத்த மசோதா தயாரிக்க வேண்டும். அந்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பிறகு இதற்கான அறி விப்பு அரசிதழில் வெளி யிடப்படும். அதன்பிறகு பழங்குடியினருக்கான அனைத்து சலுகைகள், பலன்கள் நரிக்குறவர் களுக்குக் கிடைக்கும்.

தமிழ் ஓவியா said...


தகுதி - திறமையைப் பாரீர்! 30-க்கு ஒரே ஒரு மதிப்பெண் பெற்ற நால்வருக்கு வங்கி செயல் தலைவர் பதவியாம் எல்லாம் ஜாதிக் குறிதான்!


புதுடில்லி, ஆக.30- பொதுத் துறை வங்கிகளில் செயல் இயக்குநர் (Executive Director) பொறுப்புகளுக்கு 4 அதிகாரிகள் பரிந்துரை செய்யப்பட்டிருக்கின்றனர். ஆனால், அவர்கள் நேர்முகத் தேர்வில் பெற்றுள்ள மதிப்பெண்களோ, 30-க்கு ஒன்றே ஓன்றுதான்!

ஒரு செயல் இயக்குநர் (Executive Director) வங்கியின் மிக உயர்ந்த நிர்வாகத்தின் ஒரு பங்கு. வங்கித் தலைவர், நிர்வாக இயக்குநர் ஆகிய பணிகளுக்கு அடுத்த இடம்தான் செயல் இயக்குநர்.

எல்லா வங்கி அதிகாரிகளும் அவர்களது ஆண்டு ரகசிய அறிக்கைகளில் முழு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

நேர்முகத் தேர்வில் 30-க்கு ஒரே ஒரு மதிப்பெண் பெற்று, நீங்கள் வேலை பெற முடியுமா? முடியும். நீங்கள் பொதுத்துறை வங்கியின் செயல் இயக்குநராக ஆசைப் பட்டால் முடியும்.

நான்கு பொதுத் துறை வங்கிகளின் பொது மேலாளர்கள் செயல் இயக்குநர்களாக பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர். அவர்கள், இந்தியப் பொருளாதாரப் பணிகள் செயலாளர் ராஜீவ் தக்ரூ என்பவரால் ஜூன், ஜூலை மாதங்களில் நடத்தப்பட்ட நேர்முகத் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர்.

அவ்விதம் அறிவிக்கப்பட்டவர்கள் பி.எஸ். ராமராவ், ஆந்திரா வங்கியின் பொது மேலாளராக இருப்பவர், விஜயா வங்கியின் செயல் இயக்குநராகவும், சென்ட்ரல் பாங்கு ஆஃப் இந்தியாவின் பொது மேலாளரான அப்துல் அகர்வால், இந்தியன் ஒவர்சீஸ் வங்கியின் செயல் இயக்குநராகவும் சிண்டிகேட் வங்கி பொது மேலாளர் மகேஷ் ஜெயின், இந்தியன் வங்கி செயல் இயக்குநராகவும், ஒரியண்டல் வங்கி ஆஃப் காமர்ஸ் பொது மேலாளராக இருந்த தக்கர், தேனா வங்கி செயல் இயக்குநர் பதவிக்கும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர்.

செயல் இயக்குநர் பதவி, வங்கித் தலைவர், மற்றும் நிர்வாக இயக்குநருக்கு அடுத்த பதவி. செயல் இயக்குநர் பதவிக்கு, பணி அமர்த்தும் பொறுப்பு ரிசர்வ் வங்கி ஆளுநர் தலைமையில் நடைபெறும். ஆளுநர் வர முடியாமல் போகும் பட்சத்தில், பொருளாதாரப் பிரிவுச் செயலாளர் நியமிக்கும் ஒரு துணைக் குழு, வேட்பாளர்களைப் பேட்டி கண்டு பொருளாதாரப் பிரிவு செயலாளர் தலைமையில் வேட்பாளர்கள் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும்.

ஆனால், இந்த குறைந்த மதிப்பெண் பெற்ற பொது மேலாளர்கள் பணி நியமனக் குழுவை எப்படி ஏமாற்றி வந் தனர் என்பது புரியவில்லை. (எல்லாம் ஜாதிக் குறிதானே).

தகவல்: டைம்ஸ் ஆஃப் இந்தியா 28.8.2013)

தமிழ் ஓவியா said...


தீவிரவாதம் ஒழிய, மாணவர்கள் பகுத்தறிவாளர்களாகட்டும்!


இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு. மதம் சாராத அறிவியற் கொள்கைகளை, மக்கள் மனதில் நிலைநிறுத்த வேண்டி யது அரசின் கடமை. ஆனால் உண்மை நிலையென்ன? நாட்டில் மதக்கலவரங் கள், தீவிரவாதங்கள், கொலைகள், கொள்ளைகள், கற்பழிப்பு சம்பவங்களென நாளும் பெருகி வருகின்றது. மக்களின் வாழ்க்கையில் சமத்துவம், சகோதரத்துவம், சுதந்திரம் போன்ற தன்மைகள் உண்டாக அரசாங்கத்திடம் எந்த விதமான கொள் கைகளோ, கோட்பாடுகளோ, எதுவும் இல்லை. மக்கள் வெளியே நடமாட அஞ்சு கின்றனர். பெண்கள் ஆபரணங்களுடன் சென்று திரும்ப முடியவில்லை.

இளம் பெண்கள் தனியாக வெளி இடங்களுக் குச் சென்று வர முடியவில்லை. 1947-இல் கிடைத்ததாகச் சொல்லப்படும் சுதந்திரம் 2013-ஆம் ஆண்டிலும் மக் களுக்கு கிடைத்ததாகத் தெரியவில்லை. இந்தியா ஜனநாயக நாடு என்று சொல் லப்படுகிறதே தவிர ஜனங்களுக்குப் பாதுகாப்பில்லை. நாயகர்களுக்கும் (தலைவர்களுக்கும்) பாதுகாப்பில்லை. எங்கும் பணநாயகமே மேலோங்கி நிற்கிறது. இலஞ்சம் தலை விரித்தாடு கிறது. இலட்சியவாதிகள் அலட்சியப் படுத்தப்படுகின்றனர். இந்நிலை நீடித்தால், நாட்டில் அமைதிக்குப் பங்கம் தான் விளையும். இன்று தமிழ்நாடு அமைதிப்பூங்கா என்று சொல்லுவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை.

தமிழ்நாட்டில் தண்ணீர் தட்டுப்பாடு தண்ணீருக்கு டில்லிக்கும் சென்னைக் கும் நாயாய் அலைய வேண்டியிருக்கிறது. தப்பித்தவறி தண்ணீர் வந்துவிட்டால், அதைச்சேமிக்க எந்த துப்புமில்லை. கொடநாட்டில் கொடி நாட்டினால் போதுமா? தமிழ்நாட்டில் நாற்று நட வேண்டாமா? கொள்ளிடம் ஆற்றில் மேலணைக்கும் (முக்கொம்பு) கீழணைக் கும் (அணைக்கரை) இடையில் தஞ்சை மாவட்டத்தில் கோவிலடி, சுக்காம்பார், வைத்தியநாதன் பேட்டை, தேவன்குடி, கருப்பூர், புத்தூர், குடிதாங்கி, திருவைக் காவூர் ஆகிய இடங்களில் கதவணைகள் அமைத்தால் 30 டி.எம்.சி. நீரை தேக்கி வைக்கலாமென்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனரே!

இதுபற்றி அரசுக்கு ஏதேனும் அக்கறை உண்டா? பார்ப்பனர் பண்ணையம் கேட்பாரில்லை என்ற நிலைதானா? மேட்டூர் அணை 16 கதவணையிலிருந்து இடைப்பாடிக்கு தண்ணீர் கொண்டு வர கால்வாய் வெட்டி யிருந்தால், பெரிய ஏரி நிரம்பியிருக்குமே. மக்கள் நலன் பற்றி அக்கரை இல்லாத அரசு; திராவிடர் கழகங்களின் ஆர்ப் பாட்டங்களை அலட்சியப்படுத்தினார் ஆட்சி அதிகாரம் ஆட்டம் காணக்கூடும் என்றாரே நம் தமிழர் தலைவர், உண்மை தானே!

சேது சமுத்திரக் கால்வாய் திட்டத் திற்கு, தமிழ்நாட்டு முதலமைச்சரே முட்டுக்கட்டை போடுகின்றார் என்றால், ஓட்டுப் போட்ட தமிழ்நாட்டு மக்கள் தலையில் முக்காடு போட்டுக் கொண்டு போகவேண்டிய நிலைதானா! இஞ்சி தின்ற குரங்காக இன்று மக்கள் விழிபிதுங்கி நிற்கின்றார்கள். மந்திரி மார்கள், வாய் திறக்கவே பயப்படுகிறார் கள். பதவி ஆசையில் பட்டத்து ராணியின் காலடியில் விழுந்து கிடக்கிறார்கள். இதையெல்லாம் தட்டிக்கேட்கும் திராணி யுள்ள தலைவர் நம் தமிழர் தலை வரன்றோ! அவரணியில் தமிழ்மக்கள் ஒன்று சேர வேண்டாமா! சிந்திப்பீர். இன்னும் உறக்கம் வேண்டாம். விழித் தெழுங்கள்!

எல்லாப் பிரச்சினைகளுக்கும் தமிழர் தலைவர் காலத்திலேயே முடிவு கட்ட வேண்டும். இன்றைய மாணவர்கள் நாளைய குடிமக்கள். இன்றைய மாண வர்கள் நாளை நாடாளும் மந்திரிகள். அவர்கள் பகுத்தறிவாளர்களாக ஆக்கப் படவேண்டும். அவர்கள் சுயசிந்தனையா ளர்களாக மாற்றப்பட வேண்டும். நாம் வரலாற்று ரீதியாக திராவிடர்கள் என்பது உணரப்படவேண்டும்.

இதற்காகத் தான், தந்தை பெரியார் 135-ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பெரியார் மணி யம்மை பல்கலைக்கழகத்தின் பெரியார் சிந்தனை உயராய்வு மய்யம் மற்றும் பெரியார் பிஞ்சு இணைந்து வழங்கும் பெரியார் 1000 மாபெரும் வினா - விடைப் போட்டியாகும் பரிசுகளைத் தட்டிச் செல்வீர்!

வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!

- கா.நா.பாலு (தலைவர் நகர தி.க., இடைப்பாடி)

தமிழ் ஓவியா said...


மனித சமுதாயம்


நாட்டினுடைய வளப்பம் மனித சமுதாயத்தின் அத்தனைப் பேரை யும் பொறுத்ததே ஒழிய, மூன்றே முக்கால் பேர்களைப் பொறுத்தது அல்ல.

(விடுதலை, 2.4.1966)

தமிழ் ஓவியா said...


மனப்பாடம் செய்வீர்!


பார்ப்பனரைப் புரோகிதராக அழைத்து நடைபெறும் திருமண வீடுகளிலே புரோகித பார்ப்பான் கூறும் மந்திரம் கீழே தரப்படுகின்றது. இந்த மந்திரத்தை மனப்பாடம் செய்து நமது இயக்கப் பேச்சாளர்களும், பகுத்தறிவாளர்களும் ஒவ்வொரு திருமணத்திலும் கூறக் கேட்டுக் கொள்கின்றோம்.

சோமஹ ப்ரதமோ
விவிதே கந்தர்வ
விவிதே உத்ரஹ
த்ருதியோ அக்னிஸ்டே
பதிஸ துரியஸ்தே
மனுஷ்ய ஜாஹ.

இதன் பொருள்: இங்கு மணமகளாக இருக்கும் பெண்ணை முதலில் சோமனும், பின்னர் முறையே கந்தவர்வனும், உத்திரனும், அக்னியும் அடைந்து அனுபவித்தார்கள். இப்போது அய்ந்தாவதாக மண மகனாகிய உனக்குத் தானம் செய்து கொடுக்கிறேன் என்று புரோகிதர் சொல்லுகிறார்.

நமது பெண்களையும், ஆண்களையும் பார்ப்பனர்கள் எவ்வளவுக் கேவலப்படுத்துகிறார்கள் என்கிற உண் மையை நாம் அம்பலப்படுத்தி பார்ப்பனர்களின் சூழ்ச்சிகளை உணர வைக்க வேண்டும். புரியாத மொழியால் வரும் கேட்டைப் பார்த்தீர்களா? மந்திரங்கள் எல்லாம் வடமொழியில் தான் இருக்க வேண்டும் என்று பார்ப்பனர்கள் சொல்லும் சூட்சுமம் புரிகிறதா?

தமிழ் ஓவியா said...

புத்தர் பற்றி ரசல்!

கிறிஸ்துவுக்கு 623 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய கவுதம புத்தர் கூறாத நல்லொழுக்கம் எதையும் கிறித்து புதிதாக கூறவில்லை

- பெர்ட்ரண்டு ரசல்

தமிழ் ஓவியா said...


மதத்திற்குள் ஒருமைப்பாடு


இந்து சந்நியாசிகள் எதை துறந்தாலும் பொறாமையைத் துறக்க மாட்டார்கள் என்று எழுத்து வேந்தர் சுகி.சுப்பிரமணியம் ஒரு தடவை எழுதியிருந்தார். இந்திய நாட்டுச் சாதாரண சந்நியாசிகளிலிருந்து மடாதிபதிகள் வரை இதற்கு விதி விலக்கல்லர். ஜகத்குரு என்பதெல்லாம் கூட ஒப்பனைப் பெயர்களே தவிர, உணர்வுப் பெயர்களல்ல.

இந்தியாவில் ஜகத்குரு என்ற பெயரில் அரை டஜன் மடாதிபதிகள் இருக்கிறார்கள். இதில் சிருங்கேரி ஜகத்குரு, காஞ்சி காமகோடி ஜகத்குரு மடத்தை, ஆதிசங்கரர் நிர்மாணித்த மடமே இல்லை என்பார். சைவ மடங்கள் பற்றிக் கேட்பானேன்? திருவாவடுதுறையும், திருத்தரும புரமும் வடக்கு - தெற்குத்துருவங்கள் போல நெடுந் தொலைவுக்குப் போவானேன்? உங்கள் நல்லூர் ஞான சம்பந்தராதீனம் சுவாமிநாத சுவாமிகளுக்கும், மதுரை ஆதீனத்துக்குமே இப்பொழுது இராசிப் பொருத்த மில்லையாம்!

இந்த பழைய மடங்கள்தான் அப்படி என்றால், புதிய நிறுவனங்களிடையிலும் கூட ஒருங் கிணைப்பு இல்லை. இராம கிருஷ்ண மிஷனில் சுவாமி சிவா னந்தர் சேரவில்லை. சிவானந்த தபோவனத் திலோ இராமகிருஷ்ண மிஷனிலோ சுவாமி சின்மயானந்தர் சேரவில்லை.

எல்லாம் தனித்தன்மைகள்! இந்த அவலச் சூழ்நிலையில் எப்படி உலக நிறுவனம் தோன்ற முடியும்?

ஜாதி வேற்றுமைகள், வழக்கு நெறிகள், விளம்பர ஆசைகள், ஆதிபத்திய உரிமைகள் ஆகியன சைவத்திற்கு ஒரு உலகந் தழீஇய நிறுவனத்தை படைப்பதில் தடையாக உள்ளன. இந்த தடையை உடைத்து ஒருமைப்பாடு காண நாம் எடுத்த முயற்சிகள் போதிய பலன் தர வில்லை.

- குன்றக்குடி அடிகளார் - (நமது சிந்தனை 1.11.1980 இதழில்)

தமிழ் ஓவியா said...

இங்கல்ல... யூகோஸ்லாவியாவில்....

யூகோஸ்லாவியா பயணக்கதை எழுதி வரும் திரு.மணியன் அங்கு தான் சந்தித்த ஒரு முஸ்லிம் ஜோடிகளுடன் நடந்த உரையாடலை எழுதுகிறார்.

நீங்கள் தினமும் பிரார்த்தனை செய்வீர்கள் இல்லையா? என்று கேட்டேன் அந்த இளம் ஜோடியை.

இல்லை, எங்களுக்குக் கடவுள் மீது நம்பிக்கை இல்லை! என்று பதில் சொன்னார்கள்.

கடவுள் நம்பிக்கை இல்லை என்றால் முஸ்லீமாக இருக்க முடியாதே! என்றேன்.

இந்த நாட்டில் அப்படி நிறைய பேர் இருக்கிறார்கள். நான் முஸ்லீம் இல்லை; கிறிஸ்டியன் இல்லை; நான் ஹ்யூமன்... இங்கே இரண்டு மனிதர்கள்தான் சந்தித்துக் கொள்வார்கள். இரண்டு மதங்கள் சந்தித்துக் கொள் ளாது. கிறிஸ்தவர் குடும்பத்தில் பிறந்த பெண், முஸ்லிம் குடும்பத்தில் பிறந்த பிள்ளையைக் காதலித்து கல் யாணமும் செய்து கொள்வாள். எங்கள் திருமணமெல்லாம் பதிவுத் திருமணம்தான்... என்று விளக்கமாக சொன்னாள்.

நன்றி: இதயம் பேசுகிறது மே (5-11) 1985
தகவல்: வே.அன்புராஜ், திருலோக்கி

தமிழ் ஓவியா said...

நாத்திகம் பற்றி வினோபா?

நான் எந்தக் கட்சியையும் சேர்ந்தவனல்ல. எல்லாக் கட்சியினரும் எனக்கு வேண்டும். நாஸ்திகன் தான் மக்களுக்கு உண்மையான சேவை செய்பவன், ஆத்தி கனால் சேவை செய்ய முடி யாது. உதாரணமாக ஒருவன் பீடி குடிக்கிறான் என்றால், அவனுக்கு பீடி கொடுத்துக் கொண்டிருப்பது சேவை செய்வதாகாது.

அவனுடைய மனதை மாற்றி, பீடி குடிப்பதை நிறுத்துவதுதான் உண்மையான சேவையாகும். எந்த அரசாங்கமும் நாத்திகத் தன்மையில் இருந்தால் தான் மக்களுடைய தேவைகளை அனுசரித்து சேவை செய்ய முடியும்.

(22.8.1956 காலை 10 மணிக்கு பவானி கூடு துறையில் உள்ள திருமுறை கழகக் கட்டடத்தில் நடந்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக் கூட்டத்தில் ஆச்சாரியார் வினோபா உரையாற்றுகையில் குறிப்பிட்டது

தமிழ் ஓவியா said...


கிருஸ்தவர்கள் பாதரட்சை அணியலாமா?

(அப்போஸ்தலர்: 7:33)இல் பின்னும் கர்த்தர் அவனை நோக்கி: உன் பாதங்களிலிருக்கிற பாதரட்சைகளைக் கழற்றிப் போடு; நீ நிற்கிற இடம் பரிசுத்த பூமியாயிருக்கிறது என்றும்.

(அப்போஸ்தலர்: 12:79)இல் தூதன் பேதுருவை எழுப்பி; பேதுருவை நோக்கி: உன் அரையைக் கட்டி, உன் பாதரட்சைகளைத் தொடுத்துக் கொள் என்றான். அந்தப்படியே அவன் புறப்பட்டு அவனுக்குப் பின் சென்று.... என்றும் இருக்கிறது. இதிலிருந்து பேதுரு இயேசுவின் கட்டளையை நம்பவில்லை என்றுதானே தெரியவருகிறது?

ஒரு வானொலி நிலையத்தின் ஒலிபரப்பில் கிருஸ்தவர்கள் கோவிலுக்குள்ளும் செருப்பு அணிந்து செல்கின்றனரே? என்ற கேள்வி எழுந்தது. இதிலிருந்து இயேசுவை கிருஸ்தவர்கள் கூட நம்பவில்லை என்று தெரியவில்லையா?

(ஆதாரம்: இந்திய வேதாகமச் சங்கத்தாரால் 1978இல் வெளியிடப்பட்ட புதிய ஏற்பாடு)

தமிழ் ஓவியா said...

ஆளை விடய்யா!

திருடர்களுக்கு: வீண் சிரமப்பட்டு பூட்டை உடைக்க வேண்டாம். விலை மதிப்புள்ள பொருள்கள், பொன், வெண்கலச் சிலைகள் மற்றும் மதிப்புள்ள பொருள்கள் எதுவும் இல்லை என அறிவிக்கப் பட்டுள்ளது. இப்படி எழுதப்பட்டுள்ள கோவில் நெல்லை மாவட்டம் காருகுறிச்சியின் கீழ் பகுதியில் கால்வாய் கரையில் அமைந்துள்ளது.

ஆளைவிடய்யா... என் கையிலே மடியிலே ஒன்றுமில்லை என்று கடவுள் கெஞ்சுவது போல் இல்லையா?

தகவல்: நெல்லை சந்திரன், மீனவன்குளம்

தமிழ் ஓவியா said...


ரெண்டும் ஒன்னு தான்! - சிவகாசி மணியம்


அம்மாவின் கரத்தைப் பற்றிய படி கோயில் வளாகம் முழுக்க சுற்றி வந்தபோது அங்கிருக்கும் சிலைகள் ஒவ்வொன்றையும் அம்மா செய்வது போலவே கும்பிட்டு வந்தது குழந்தை.

இடது காலைச் சற்று சாய்த்தபடி புல்லாங்குழல் ஊதும் கிருஷ்ணன் சிலையை குழந்தைக்கு காட்டி ஏதோ சொன்னாள் தாய். கொண்டு வந்த உதிரிப் பூக்களை சிலையின் மீது தூவி விட்டு மூன்று முறை சுற்றி வந்தாள். பூஜை முடித்து ஒரு வழியாக வெளியே வந்தார்கள்.

கோயிலின் நுழைவாயிலில் வளையல் கடை, புத்தகக்கடை, பூக்கடை என்று பல இருந்தாலும் குழந்தையைக் கவர்ந்தது பொம்மைக் கடை தான்! அம்மாவிடம் அந்தக் கடையைச் சுட்டிக் காட்டியபடி அங்கே இழுத்துப் போனது.

கரடி பொம்மையிலிருந்து கடவுள் பொம்மைகள் வரை அங்கே குவிந்து கிடந்ததைப் பார்த்த குழந்தைக்கு கோயிலுக்குள் பார்த்தது போன்ற ஒன்று கண்ணில் பட்டது. வண்ண மயமாய் முரளி கிருஷ்ணன் முழு உருவத்தில் இருந்தார்.

குழந்தைக்கு ரொம்பவும் பிடித்துப்போக அதை வாங்கித் தரும்படி அம்மாவிடம் கேட்டது. கோயிலுக்குள்ள பார்த்தோமே அதே மாதிரி இல்ல.
அங்கே பார்த்தது சாமிடி

அப்ப இது,,?

பொம்மை.,,!

தமிழ் ஓவியா said...


மனிதனின் ஆயுளை கண்டறியும் சோதனை!


ஒருவர் இன்னும் எத்தனை ஆண்டுகாலம் உயிரோடு இருப்பார் என்பதைக் கூறக் கூடிய "இறப்பை அறியும் சோதனை'யை பிரிட்டனைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

உலகிலேயே முதன் முறையாக இந்தச் சோதனை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனைச் சேர்ந்த லங்காஸ்டர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்களாக இருக்கும் அனீடா ஸ்டெஃபனோவ்ஸ்கா, பீட்டர் மெக்கிளிண்டாக் ஆகியோர் இந்தச் சோதனைக்கான காப்புரிமையைச் சமீபத்தில் பதிவு செய்தனர். இதன்படி, கைக்கடிகாரம் போன்ற சாதனத்தின் மூலம் மனிதர்களின் தோல் மீது வலியில்லாத லேசர் ஒளிக்கற்றை பாய்ச்சப்படும்.

இது, உடலில் உள்ள எண்டோதீலியல் செல்கள் எனப்படும் உட்புற செல்களை ஆராய்ந்து, வயது அதிகரிக்கும்போது குறிப்பிட்ட நபரின் உடல் எப்போது சிதைவுறும் (இறப்பு) என்பதை மதிப்பிடும். இந்த செல்கள் ரத்த நாளங்கள் உள்ளிட்ட உள் உறுப்புகளில் காணப்படுகின்றன.

லேசர் ஒளிக்கதிர் பாய்ச்சப்படும்போது இந்த செல்களில் ஏற்படும் அதிர்வுகளை மதிப்பிடுவதன் மூலம் தங்களால் குறிப்பிட்ட நபர் இன்னும் எத்தனை ஆண்டுகள் உயிர் வாழ முடியும் என்று கூற முடியும் என மேற்கண்ட ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். மேலும், புற்றுநோய் போன்ற நோய்கள் தாக்கக் கூடிய ஆபத்து குறித்தும் கூற முடியும் என்று அவர்கள் கருதுகின்றனர்.

இந்தச் சோதனையை டாக்டர்களால் எளிதில் பயன்படுத்தத் தக்க தொழில்நுட்பம் அடுத்த 3 ஆண்டு களில் உருவாக்கப்பட உள்ளது. இத்தொழில் நுட்பத்தைக் கொண்டு பல்வேறு மனிதர்களின் ஆயுள்காலத்தை அறிந்து ஒரு தகவல் பெட்டகம் உருவாக்க முடியும் என்று நம்புவதாக விஞ்ஞானி ஸ்டெஃபனோவ்ஸ்கா தெரிவித்தார்.

தமிழ் ஓவியா said...


களங்காண வாருங்கள் காளையரே!


போர்க்களம்! போர்க்களம்!! சாதி யொழிப்புப்
போர்க்களம் சனாதனம் காக்கும்
பார்ப்பனர்க் கெதிரான போர்க்களம்! பெரியார்
நெஞ்சில்முள் அகற்றும் போர்க்களம்!
இருமுறை தமிழ்நாடு சட்டமன்றம் இயற்றிய
தீர்மானம் ஏற்காததால் போர்க்களம்!
பெரும்பான்மை மக்களை இன்னும் பஞ்சம
சூத்திர ராக்குவதால் போர்க்களம்!
அரசமைப்புச் சட்டத்தில் தீண்டாமை ஒழிக்கப்
பட்டது தீண்டாமை ஒழிந்ததா?
அரசை நடத்துவோர் அதிகார மய்யங்கள் சிந்திந்து சீர்செய்ய மனமில்லை
தேர்ந்தெடுக்கப் படாது நியமனம் பெற்றோரால்
உருவானதே அரசமைப்புச் சட்டம்
பார்ப்பனரே அதிகார மய்யமாய் இருந்ததால்
வெகுமக்கள் உரிமை முடக்கம்!
சட்டத்தின் முன்னே அனைவரும் சமமென்று
சாற்றுவது வெறும் சொல் விளையாட்டு
சட்டப் படியும் சாத்திரப் படியும்
சூத்திர ரென்பது இழிவன்றோ!
ஓட்டை உடைசல் உரிமை மீறலே
இந்நாட்டில் அரசமைப்புச் சட்டம்
கோட்டை கொத்தளம் கொலு மண்டபம் வேதபுரிகள் வேட்டைக் காடாகியே!
தகுதித் திறமை தமக்கு மட்டும்
இருப்பதாக எண்ணிக்கொண்டு
மிகுதியாக பீற்றித் திரியும் பார்ப்பனரே
தமிழர்க்கும் அருச்சகர் தகுதியுண்டு
முட்டுக் கட்டைப் போடும் மூடர்காள்
தன்னலம் மட்டுமே தகுதியாகா
வட்டியும் முதலுமாய் வாங்கிக் கட்டிக்
கொள்வீர்! எச்சரிக்கை செய்கிறோம்!
வீர வணக்கம் வீர வணக்கம்
சாதி யொழிப்புச் சமரினில்
சரித்திரம் படைத்த ஈகியர்க்கு வீர வணக்கம்! வீர வணக்கம்!!
களங்காண வாருங்கள் காளையரே அய்யா
முன்னெடுத்த போர்க்களம்! தமிழர்
தலைவர் அழைக்கின்றார்! தோழமை துணையுடன்
அய்யா பணிமுடிப்போம் ஆர்த்தெழுவீர்!

- இனியன், திருச்சி--_14

தமிழ் ஓவியா said...


உணர்வுக்கு உரம் ஈட்டிய உடுமலை


- மு.வி.சோமசுந்தரம்

உடுமலைப்பேட்டை என்ற ஊரை நினைத்தாலும் உச்சரித்தாலும், உச்சரிக்கக் கேட்டாலும் ஏற்படும் உற்சாகத்துக்கும், பொங்கி எழும் உணர்வுக்கும் அணை கட்ட முடியாது.

காலை அரும்பி பகலெல்லாம் போதாகி
மாலை மலரும்

என்று வள்ளுவர், வேறு சூழ் நிலையை விளக்க வந்த கருத்து, தந்தை பெரியார், அறிஞர் அண்ணா ஆகி யோரின் ஆழிசூழ் உலகின் அழியா சிந்தனைப் பெருஞ்சுடர், என் பள்ளி வாழ்க்கையில் அரும்பி, கல்லூரி வாழ்க்கையில் போதாகி, உடுமலை அதன் விரிவாக்கம் அமராவதிநகரில் மலர்ந்தது என்று கூறும் வகையில், உடுமலை தனிச்சிறப்பைப் பெறுகிறது.

அமராவதி நகரிலிருந்து 25 ஆண்டுகள் பணி ஆற்றிய காலத்தில், பெற்ற நட்புகள் (கு.வெ.கி.ஆசான், பொறியாளர் து.பரமசிவம், அ.ப. நட ராசன் கபிலன் செகன்னாதன், வசந்தம் இராமச்சந்திரன், தென்மொழி ஞானபண்டிதன், வழக்கறிஞர் கஸ்தூரி புலவர் மருதவாணன் மற்றும் பலர்) நிகழ்ந்த நிகழ்வுகள் (தந்தை பெரியார், ஜி.டி.நாயுடு, நிகழ்ச்சி மண்டல் கமிஷன் விளக்க பயிற்சி முகாம் (தமிழர் தலைவர் பங்கேற்பு) மதுரை ஆதீனம் ஆசிரியர் கூட்டம், இறையன் - செல் வேந்திரன் பட்டிமன்றம், முத்துக்கூத் தன் பொம்மலாட்டம், ஜோசப், முனைவர் நெடுஞ்செழியன், ஆசான் - தமிழ்க்குடிமகன், கண்மணி - தமிழரசன், கோரா, ஞானபண்டிதன், திருக்குறள் முனுசாமி, சாலை இளந்திரையன், முனைவர் அருணா ராஜகோபால், பெரியார் பிறந்தநாள் விழாக்கள், இந்தி எதிர்ப்பு ஊர்வலம், கலந்துரையாடல் கள் நடிகவேள் இராதா நாடகம்) பள்ளியுடன் இணைந்த விழாத் தொடர்புகள் (முத்தமிழ் அறிஞர் கலைஞர், சாதிக்பாட்சா, நாவலர் நெடுஞ்செழியன், பாபு ஜெகஜீவன்ராம், ப.உ.சண்முகம், மதியழகன்)

இவற்றைத் தொகுத்துப் பார்க்கும் நேரத்தில் தொண்டு செய்து பழுத்த பழத்தின் சுவையைக் கண்டவனாகத் தான் எண்ண வேண்டியுள்ளது. களம் கண்டோ, போராட்ட ஏர் பிடித்தோ பணியாற்றியதில்லை.

இவற்றை இன்று நினைத்துப்பார்க்க வேண்டிய வாய்ப்பை ஏற்படுத்தியது, சைனிக் பள்ளியின் என் பழைய மாணவர்களின் இரண்டு (1988-இல் படித்து முடித்தவர்கள்) நாள்கள் வெள்ளி விழா நிகழ்ச்சிகள். அவர்கள் கற்ற காலத்திலிருந்த ஆசிரியர்களைக் குடும்பத்துடன் பார்க்க வேண்டும்.

அவர்களுக்கு சிறப்பு செய்ய வேண்டும் என்ற விழைவில் அன்பு அழைப்பு விடுத்தார்கள், தொலைபேசி மூலமும் நினைவுபடுத்தினார்கள். பல ஆண்டு களுக்குப் பிறகு, இணையருடன், உடுமலை, அமராவதிநகரைப் பார்க்க, உடன்பணியாற்றியவர்களையும் சந்திக்க, ஜூன் 28இல் புறப்பட்டோம். (தனியாக, மகிழுந்தை ஏற்பாடு செய்து கொடுத் தார்கள்). இரண்டு நாள் நிகழ்ச்சிகளும் மகிழ்ச்சியையும், மன நிறைவையும் அளிக்கும் வகையில் அமைந்திருந்தன.

இக்கட்டுரையை எழுதுவதற்கு முக்கிய காரணமே வேறு. உடுமலைக்கு செல்வது என்ற எண்ணம் ஏற்பட்ட வுடன், தமிழர் தலைவர் ஆசிரியர் அய்யா அவர்கள் பெரிதும் வியந்து பாராட்டி எழுதிய உடுமலை தமிழறிஞர், தெளிந்த சிந்தனையாள ரான, 99 அகவையை அடைந்துள்ள ந.சுப்ரமண்யன் அவர்களைக் காண வேண்டும், உரையாட வேண்டும் என்ற அவா மிகுந்திருந்தது.

ஆசிரியர் அய்யா அவர்கள் உடுமலை பெரியவர் எழுதிய பல நூல்களைப் பற்றியும், குறிப்பாக உரத்த சிந்தனை என்ற நூலைப் பற்றி விடுதலை இதழில் இரண்டு நாள்கள் எழுதியதும், என் அவாவை மேலும் உயர்த்தியது.

எண்ணிய எண்ணம் கைகூட நம் கழக பெரியார் தொண்டரும், நண்பரு மான அய்யா நடராசன் துணையிருந்து அழைத்துச் சென்றார். நல்லதொரு மகிழ்ச்சி அளித்த சந்திப்பு என்றும் நினைவில் நிற்கும் சந்திப்பு, இணைய ருடனும், என்னுடனும் அன்பாக 20 நிமிடங்கள் உரையாடினார். உரையாட லின் போது, எழுப்பிய வினாக்களுக்கு அவர் கூறிய விளக்கங்களை இங்கு பதிவு செய்வது நல்லது என்று கருதுகிறேன்.

1) எனக்கு தமிழ்மொழி தாய் (Mother),ஆங்கிலம் காதலி (Love) தாய்க்கு கட்டுப்பட்டவன், சொல்படி நடப்பவன், காதலியுடன் எப்படியும் இருப்பேன்(Flexible)

2) உ.வே.சாமிநாதன் தமிழில் வல்லவர் ஆங்கிலம் தெரியாது, சமஸ்கிருதமும் தெரியாது.

3) என் தந்தையார் தாம்பரம் கிறித்துவக்கல்லூரியில் சூர்ய நாராயண சாஸ்திரி மாணவர், டாக்டர் மில்லர் டென்னிசனின் பாடலில் உள்ள இயற்கைக் காட்சிக்கு இணையா வேறு இருக்காது என்று கூறினார். என் தந்தை, கம்பராமாயணத்தில் உள்ள பாடலை விளக்கினார்.

4) கிறித்துவக்கல்லூரி பேராசிரியர் டாக்டர் சந்திரன் தேவனேசன் வலிய என்னை ஷிலாங் பல்கலைக் கழகத் துக்கு அழைத்துச் சென்றார்
(Dr. சந்திரன் தேவனேசன் என் விடுதி காப்பாளர்)

5) பாரதிதாசனின் கருத்துக்களை ஏற்றுக் கொண்டவர்கள் இருவர் என்று கூறினார். பாரதியார், மனோன்மணியம் சுந்தரனார்.

6) பார்ப்பனர்கள் பிறவி அலுவலக ஊழியர்கள் (Born clerk like Robert Clive)

7) பார்ப்பனர்களுக்கு நாட்டுப்பற்று என்பது கிடையாது.

8) யூதர்களுக்கு முதலீடு பணம் பார்ப்பனர்களுக்கு அறிவு.

9) பார்ப்பனர்களுக்கு ஒழுக்கம் கிடையாது. (No character)

அன்பு விடை பெற்று அவரின் மூன்று நூல்களைப் பெற்று மகிழ் வுடன் திரும்பினோம்.

தமிழ் ஓவியா said...


எரிந்த தாளில் எழுத்துக்கள் தெரிவது ஏன்?


காகிதங்கள் எரிந்த பின்னாலும், அதிலுள்ள எழுத்துக்கள் தெரிவதை நீங்கள் கவனித்து இருப்பீர்கள். அது ஏனென்று தெரியுமா?

காகிதம், தாவர செல்லுலோஸ் என்னும் கரிமப் பொருளால் ஆனது. இது எரியக் கூடியது. அச்சு மையிலும் கரிமப் பொருட்களும், வண்ணம் தரும் நிறமிகளும் இருக்கும். இரும்பு சல்பேட் போன்ற சில ரசாயன பொருட்களும் மையில் காணப்படும்.

காகிதம் எரியும்போது, கரிமப் பொருட்களும், நிறமியும் எரிந்து போகும். ஆனால் இரும்பு சல்பேட் மட்டும் எரியாமல் இருக்கும். இதுவே எழுத்து இருந்த இடத்தில் இருந்து எழுத்துக்களை அடையாளம் காட்டுகிறது.

தமிழ் ஓவியா said...

அதிகம் காபி குடிப்பவரா நீங்கள்?

ஒரு நாளைக்கு நான்கு கோப்பைக்கும் அதிகமாக காபி குடிக்கும் நாற்பதாயிரம் பேரிடம் நடத்திய ஆய்வில், காபி குடிக்கும் பழக்கம் அதிகரிப்பதால் உடல் சார்ந்த பிரச்சினைகள் அதிகம் ஏற்படுவதாகவும், 32 விழுக்காட்டினர் இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இப்பழக்கத்தால் 2500-_க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளதாகவும், 55 வயதிற்கு உட்பட்டவர்களே அதிகம் பாதிக்கப்படுவதாகவும், இதயம் எளிதில் பலவீனம் அடைவதாகவும் கடந்த 17 ஆண்டுகள் தொடர்ந்து நடத்திய ஆய்வில் கண்டுபிடித்துள்ளனர்.

தமிழ் ஓவியா said...


வளர முடியும்


நமது நாட்டில் மனிதனுக்கு மனிதன் வெறுப்பும், பேதமும் உண்டாக்கவே கடவுள், மதம், சாதி ஏற்படுத்தப்பட் டுள்ளன. இவை ஒழிந்த இடத்தில்தான் மனிதனுக்கு அன்பு வளர முடியும்.

(விடுதலை, 20.9.1968)

தமிழ் ஓவியா said...


ஏழைகளுக்கு வழங்கப்படும் இலவசத் திட்டங்கள் பொருளாதார ஏற்றத் தாழ்வைக் குறைக்கின்றன


தமிழகத்தில் ஏழை மக்களை இலவசத் திட்டங்கள் மூலம் திரா விடக் கட்சிகள் சோம்பேறிகளாக்கி விட்டன (தினமணி 12.8.2013) என்று காங்கிரஸ் அமைச்சர் ஒருவர் கண் டனம் தெரிவித்திருக்கிறார். ஆனால் பொருளாதார மேதைகள் ஏழை களுக்கு வழங்கப்படும் இலவசத் திட் டங்கள் சமூகத்தில் நிலவும் பொருளா தார ஏற்றத் தாழ்வைக்குறைக்க உதவுகின்றன என்று கூறுகிறார்கள்.

20-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி யில் அரசாங்கத்தின் தலையாய குறிக்கோள் குடிமக்களின் வாழ் வைக் கருவிலிருந்து கல்லறை வரை பராமரித்து அவர்களின் வாழ்க் கையை வளமிக்கதாக ஆக்குவதே ஆகும். அத்தகு அரசைப் பொதுநல அரசு Welfare State என்று கூறுகி றோம். 1930-ஆம் ஆண்டு மே 10, 11 நாட் களில் ஈரோட்டில் நடந்த சுயமரி யாதை இயக்கத்தின் 2-ஆவது மாநில மாநாட்டில் தந்தை பெரியாரின் உரை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந் தவை,

உரை வருமாறு: ஒருவன் உழைப்பில் ஒருவன் நோகாமல் சாப்பிடுவது என்கின்ற தன்மை இருக்கின்ற வரையில், ஒருவன் தினம் ஒரு வேளைக் கஞ்சிக்கு மார்க்கமில்லாமல் பட்டினி கிடந்து சாவதும், மற்றொருவன் தினம் ஐந்து வேளை சாப்பிட்டுவிட்டு இருக்கின்ற வரையில், ஒருவன் இடுப்புக்கு வேட்டி இல்லாமல் திண்டாடுவதும், மற்றொருவன் மூன்று வேட்டி போட்டுக் கொண்டு உல்லாசமாகத் திரிவதுமான தன்மை இருக்கின்ற வரையில், பணக்காரர்கள் எல்லாம் தங்கள் செல்வம் முழுதும் தங்களுடைய சுக வாழ்விற்கே என்று கருதிக்கொண்டு இருக்கின்ற வரையில் சுயமரியாதை இயக்கம் இருந்தே தீரும்.

காமராசர் தமிழக முதல்வராக இருந்த போது 14 இலட்சம் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவுத் திட்டம் அமல்படுத்தப்பட்டது. எந்த மனித நேய முள்ள அரசியல் தலைவராவது இதைக் குறை கூற முடியுமா?

இதைப்போலவே தான் முதியோர் உதவித்தொகை, கருவுற்ற ஏழைப் பெண்களுக்கு உதவித்தொகை. பத்தாம் வகுப்பு வரை படித்த ஏழைப்பெண்களுக்கு திருமண உதவித் தொகை ஆகியவை ஏழைகளின் வாழ்வில் வளம் சேர்க்கும் திட்டங்கள்.

கலைஞர் ஆட்சிக்காலத்தில் மருத் துவக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் 2 லட்சத்து 70 ஆயிரம் பேர் பயன் அடைந் துள்ளனர். இதனால் அரசுக்கு ரூபாய் 700 கோடி செலவாகி உள்ளது.

உலக வங்கி World Bank தனது சென்ற ஜூன் மாத அறிக்கையில் உலகம் முழுவதும் 120 கோடி ஏழைகள் ஏழ்மையில் வாடுகின்றனர் என்றும், இந்தியாவில் மட்டும் 40 கோடி ஏழைகள் உள்ளனர் என்றும் அறிவித்துள்ளது. இந்த ஏழை மக்களுக்கு உணவு, உடை, உறையுள், மருத்துவ வசதி முதலிய அடிப்படைத் தேவைகளை அளித்து அவர்களின் வாழ்வில் ஓரளவு நிம்மதியை அளிப்பது தான் பொது நல அரசின் கடமை ஆகும்.

தந்தை பெரியார் ஈரோடு சுயமரி யாதை மாநாட்டில் கூறிய கருத்தையே திருவள்ளுவர் ஈராயிரம் ஆண்டு களுக்கு முன், பின் வருமாறு கூறு கிறார்:

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை.

கிடைத்ததைப் பகுத்து கொடுத்துத் தானும் உண்டு பல உயிர்களையும் காப் பாற்றுதல் அற நூலோர் தொகுத்த அறங்கள் எல்லாவற்றிலும் தலையான அறமாகும்.

ஏழைகளுக்கு இலவச திட்டங்கள் வழங்குவதன் மூலம் திராவிட கட்சி கள் அவர்களை சோம்பேறிகளாக்கி விட்டன என்று கூறுவது உண்மைக் கும் புறம்பான கூற்றாகும்.

- இர.செங்கல்வராயன் (முன்னாள் துணைத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம், செய்யாறு)

தமிழ் ஓவியா said...


பதவி உயர்வும், தகுதி, திறமையும்

பொதுத்துறை வங்கிகளில் செயல் இயக் குநர் பதவிக்கு நான்கு பேர் தேர்வு செய்யப்பட்டது பற்றி நேற்றைய விடுதலையில் (30.8.2013) முதல் பக்கத்தில் தலைப்புச் செய்தியாக வெளியிடப்பட்டுள்ளது.

இந்த நான்கு பேர்களும் ஏற்கெனவே பொதுத்துறை வங்கிகளில் பணிகளில் இருந்தவர்கள்தாம். இவர்களுக்கு நடத்தப்பட்ட நேர்முகத் தேர்வில் மொத்தம் 30 மதிப்பெண் களுக்கு, ஒரே ஒரு மதிப்பெண்தான் பெற்றுள் ளனர் என்றாலும் அவர்களுக்குப் பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.

மதிப்பெண்கள்தான் தகுதி திறமைகளை நிர்ணயிக்கக்கூடிய அளவுகோல் என்று கதறி வந்தவர்கள் இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?

பார்ப்பனர்கள் தொடக்கத்தில் சொல்லி வந்த ஒவ்வொரு காரணமும் பொருளற்றவை என்று நிரூபிக்கப்பட்டு வருகிறது.

இடஒதுக்கீட்டால் ஜாதி வளரும் என்றனர். இடஒதுக்கீட்டின் காரணமாக கல்வி வளர்ச்சி பெற்று - ஜாதி உணர்வு மழுங்கடிக்கப்படுகிறது. படித்தவர்களிடையே ஜாதி கடந்த திருமணங் கள் நாட்டில் பெருகி வருகின்றன.

இடஒதுக்கீட்டால் தகுதி திறமை பாதிக்கப் படுகிறது - தகுதிக்கு அளவுகோல் தேர்வு களில் பெறும் மதிப்பெண்கள் என்றும் சொல்ல ஆரம்பித்தார்கள். அது வெறும் வார்த்தை ஜாலமே தவிர, உண்மையல்ல என்பதும் நிதர் சனமாகி விட்டது. தேர்வில் அதிக மதிப்பெண் கள் பெறுபவர்கள் அவர்களின் துறைகளில் பரிணமிக்கவில்லை; அதே நேரத்தில், தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறாதவர்கள்கூட, அவர்கள் சார்ந்திருக்கும் துறைகளில் சாதனை முத்திரைகளைப் பொறித்து வருகின்றனர்.

சிவ அய்யாத்துரை என்ற தமிழர் கிராமப் பள்ளியில் படித்து - இடஒதுக்கீட்டின் காரண மாக வாய்ப்பைப் பெற்றவர்தான். ஆனாலும் மின்னஞ்சலை அவர்தான் கண்டுபிடித்துக் கொடுத்து உலக அளவில் போற்றப்படுகிற மனிதராகி விட்டார்.

இடஒதுக்கீட்டுக்கு எதிராகப் பார்ப்பனர்கள் கூறி வந்த ஒவ்வொரு காரணமும், தோல்வி அடைந்து - இப்பொழுது வேறு வழியின்றிப் பார்ப்பனர்களே மாநாடு போட்டு தங்களுக்குரிய இடஒதுக்கீடு தேவை என்று தீர்மானம் போடும் அளவுக்கு கீழே இறங்கி வந்துவிட்டனர். இதனை நாம் வரவேற்கிறோம். மக்கள் தொகையில் அவர்கள் இருக்கும் 3 சதவீத அளவு இடஒதுக்கீட்டை ஒத்துக் கொள்வார் களேயானால், அனேகமாக இடஒதுக்கீடு பிரச்சினையே ஒரு முடிவுக்கு வந்து விட்ட தாகக் கருதப்படும்.

பதவி உயர்வில், இடஒதுக்கீடு தேவை என்பதையும் உயர் ஜாதியினர் எதிர்த்து வருகின்றனர். டில்லியில் வங்கிப் பணிகளில் பதவி உயர்வு பெற்றவர்கள் நேர்முகத் தேர்வில் மிகக் குறைந்த அளவு (30-க்கு ஒன்று) மதிப்பெண்கள் பெற்றவர்களே. இவர்கள் பெரும்பாலும் உயர்ஜாதிக்காரர்கள்தான். இதற்குப் பிறகாவது பதவி உயர்வில் இட ஒதுக்கீடு என்பது சரியானதுதான் மதிப்பெண் ணெல்லாம் தேவையில்லை என்று ஒத்துக் கொள்வார்கள் என்று எதிர்ப்பார்க்கலாமா?

தாழ்த்தப்பட்டவர்களுக்கு பதவி உயர்வில் இடஒதுக்கீடு என்கிற வரவேற்கத்தக்க சட்டத் திருத்தம் செய்யப்பட்டு விட்டது. அதனை யொட்டி பிற்படுத்தப்பட்டவர்களுக்குப் பதவி உயர்விலும் இடஒதுக்கீடு அளிக்கப்பட வேண் டும் என்ற நியாயத்தை அனைத்துத் தரப் பினரும் ஏற்றுக் கொள்வார்கள். பிற்படுத்தப் பட்டவர்களுக்கான நாடாளுமன்றக் குழு இதில் கவனம் செலுத்தி ஆவன செய்ய இதுதான் சரியான நேரம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

தமிழ் ஓவியா said...


கடவுள் சக்தி அவ்வளவுதான்! வைத்தீஸ்வரன் கோவில் மண்டபம் இடிந்து விழுந்தது


கோவில் திருஷ்டி சுத்தி மண்டபத்தின் மேல்தளம் இடிந்து விழுந்திருப்பதைக் காணலாம்

சீர்காழி, ஆக.31- சீர் காழி அருகே உள்ள வைத்தீஸ்வரன் கோவி லில் உள்ள மண்டபம் இடிந்து விழுந்தது. நாகை மாவட்டம் சீர்காழி அருகே தரும புரம் ஆதீனத்துக்குச் சொந்தமான வைத்தீஸ் வரன் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் வைத் தியநாதசாமி, தையல் நாயகி, விநாயகர், செல்வ முத்துக்குமரசாமி, அங் காரகன் ஆகிய சுவாமி களுக்கு தனித்தனி சன் னதிகள் உள்ளனவாம்.

இந்தக் கோவிலுக்கு தின மும் உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து வந்து செல்கின்றனர். மேலும், இந்தக் கோவில் நவக்கிரகங்களில் ஒன் றான செவ்வாய் தலம் என்பதால் திருமண தோஷம் உள்ளவர்கள் இந்த கோவிலுக்கு வந்து நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனராம்.

இந்த கோவிலில் விழாக்காலங்களின் போது விழா முடிவ டைந்தவுடன் பஞ்ச மூர்த்திகளை திருஷ்டி சுத்தி மண்டபத்தில் வைத்து திருஷ்டி கழிப் பது வழக்கமாம். சில ஆண்டுகளாக கோவி லின் பல்வேறு இடங் கள் வலுவிழந்து காணப் பட்டதாம். இந்த நிலை யில் கடந்த சில மாதங் களுக்கு முன்பு மேற்கு கோபுரவாசல் பகுதியில் உள்ள திருஷ்டி சுத்தி மண்டபத்தின் இடது பக்க மேல்தளம் இடிந்து விழுந்தது.

நேற்று (30.8.2013) மதியம் இந்த மண்ட பத்தின் வலது புற மேல் தளம் இடிந்து விழுந்தது. இதைத்தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த கோவில் நிர்வாகிகள் மண்டபம் இடிந்த பகுதி யைச் சுற்றி கம்பிவேலி அமைத்தனர். கோவில் மண்டபம் இடிந்து விழுந்த சம்பவத்தால் வைத்தீஸ்வரன் கோவில் பகுதியில் பெரும் பர பரப்பு ஏற்பட்டது.

தன்னுடைய கோபு ரத்தையும், மண்டபத் தையும் காக்க முடியாத வைத்தீசுவரன் எப்படி பக்தர்களைக் காப்பான்.

தமிழ் ஓவியா said...


திமுகவில் எந்த கோஷ்டியும் இல்லை அடக்கும் வல்லமை எனக்கு உண்டு: தி.மு.க. தலைவர் கலைஞர்


சென்னை, ஆக. 31- திமுகவில் எந்தக் கோஷ்டியும் இல்லை. கோஷ்டி இருந்தாலும் அடக்கக்கூடிய வல்லமை என்னிடம் உண்டு என்று கலைஞர் பேசினார்.

வேலூர் மாவட்ட திமுக செயலாளர் ஆர்.காந்தி இல்ல திருமணத்தை திமுக தலைவர் கலைஞர் நேற்று (30.8.2013) தலைமை தாங்கி நடத்தி வைத்தார். மணமக்களை வாழ்த்தி கலைஞர் பேசியதாவது:

ஒரு மனிதன் என்னதான் பெரும்புகழ் செல்வம் பெற்றிருந்தாலும், எல்லாவற்றையும்விட பெரும் செல்வம், அவன் அதிகமாக நண்பர்களைப் பெற்றி ருப்பதுதான். அந்த வகையில் காந்தி அளவற்ற நண் பர்களைப் பெற்றிருக்கிறார். இந்தத் திருமண விழா வில் துரைமுருகன், காந்தி பற்றி பாராட்டியதைவிட, துணைவியாரைத்தான் அதிகமாகப் பாராட்டினார்.

காந்தி வீட்டுக்குப் போனால், தங்களுக்கு நல்ல இனிய உணவு விருந்தளிப்பார் என்பதை அவர் சொன்னபோதுதான், எனக்கு உண்மையான விஷயம் புரிந்தது. இவர்கள் ராணிப்பேட்டை காந்தி வீட்டைச் சுற்றி வந்தததற்குக் காரணம், அங்கே கிடைக்கின்ற நல்ல உணவுதான். அவர்களுக்கு உணவு கிடைக்கிறது. என்னைப் பொறுத்தவரையில், காந்தியிடம் நான் காண்பது, திராவிட உணர்வு, தமிழ் உணர்வு, சுயமரியாதை உணர்வு.

சட்டமன்றத்தில் அவர் இருந்தபோது நானும் இருந்திருக்கிறேன். சட்டமன்றத்தில் காந்தி பேசி னால், காங்கிரஸ்காரர்கள் அதை பாராட்டி மகிழ்ச்சி தெரிவிப்பார்கள். திமுக அரசாக இருந் தாலும், காந்தி, தான் நினைத்ததை சொல்லத் தவறு வதில்லை.

உண்மைக்காக தொண்டாற்றக் கூடிய ஒருவர். உண்மையைச் சொல்லி, திமுகவில், ஆட்சி யில் இருக்கின்ற குறைபாடுகளை எடுத்து சொன்ன வர். மாவட்ட செயலாளர் என்ற பதவி காரணமாக இந்த மாவட்டத்தில் எந்தவிதமான பூசலும் இல் லாமல், எல்லோரும் நண்பர்களாகப் பழகுகின்ற நிலையை உருவாக்கியிருக்கிறார் என்று துரை முருகன் சொன்னார்.

துரைமுருகன் சாதாரணத் தொண்டரல்ல துணைப் பொதுச் செயலா ளர். அவர் சொன்னார் தமிழ்நாட்டில் கோஷ்டி இல்லாத ஒரு மாவட்டம், வேலூர் மாவட்டம்தான் என்றார். துரைமுருகன் அவருடைய மாவட்டமும் அது என்பதால் அப் படிச் சொல்லிக் கொண்டாரோ என்று எனக்குத் தெரியவில்லை.

வேலூர் மாவட்டத்தில்தான் கோஷ்டி இல்லை என்றால், மற்ற மாவட்டங்களில் கோஷ்டி இருப் பதைப் போல சிலர் நினைக்கக் கூடும். தி.மு.க.வில் எந்தக் கோஷ்டியும் எங்கும் இல்லை. எந்தக் கோஷ்டி இருந்தாலும், அந்தக் கோஷ்டிகளை அடக்கக் கூடிய வல்லமையும், வாய்மையும் என்னிடமும், திமுகவில் உள்ள தலைவர்களிடத்திலும் உண்டு. மணமக்க ளுக்கு நான் சொல்லுகிற அறிவுரை குடும்ப வாழ்வை சீராக, செம்மையாக, சிக்கனமாக எளிய முறையில் வாழ வேண்டும் என்பதுதான்.

- இவ்வாறு கலைஞர் பேசினார்

தமிழ் ஓவியா said...


இன்னுமா நமக்கு சூத்திரப் பட்டம்?

நமது நாட்டில் ஆதியில் வருணாசிரம தர்மம் என்பது இல்லையென்றும், மக்கள் பிறவியில் உயர்வு தாழ்வு இல்லையென்றும், இப்போது வருணாசிரம தர்மம் என்பதன் மூலமாய் வருணாசிரம முறையில் மிகவும் தாழ்ந்த நிலைமை யில் நாம் அழைக்கப்படுகிறோம் என்றும், அதாவது பார்ப்பனர்களால், சூத்திரர்கள், பஞ்சமர்கள், மிலேச்சர்கள் என்று கருதப்படுகிறதும் 100க்கு 97 பேருக்கு மேலான எண்ணிக்கை கொண்ட நாம் இப்பெயரை வகிப்பது மிகவும் சுயமரியாதையற்ற தென்றும், சூத்திரன் என்கிற பதம் பார்ப்பனர்களின் அடிமை, பார்ப்பனர்களின் வேசிமக்கள் என்னும் கருத்தையே கொண்டது என்றும்,

பஞ்சமன் என்கிற பதம் ஜீவ வர்க்கத்தில் பூச்சி, புழு, பன்றி, நாய் கழுதை முதலியவைகளுக்கு இருக்கும் உரிமை கூட இல்லாததும் கண்களில் தென்படக் கூடாததும் தெருவில் நடக்கக் கூடாததுமான கொடுமை தத் துவத்தைக் கொண்டது என்றும், மிலேச்சர்கள் என்பது துலுக்கர், கிறிஸ்தவர், அய்ரோப்பியர் முதலிய அன்னிய நாட்டுக்காரரை குறிப்பது என்றும்,

அவர்களைத் தொட்டால் தொட்ட பாகத்தை வெட்டி எறிந்து விட வேண்டிய கருத்தைக் கொண்டதென்று உண்டாக்கி அந்தப்படியே பார்ப்பனர்களால் ஆதாரங்களும் ஏற்படுத்தி வைத்துக் கொள்ளப்பட்டு அதுதான் இந்து மதத்திற்கு ஆதாரமென்று காட்டப்படுகிறதென் றும் அநேக தடவைகளில் ஆதார பூர்வமாய் எடுத்துச் சொல்லி வந்திருக்கிறோம். அதற்காக எவ்வளவோ கிளர்ச்சிகளும் செய்து வந்திருக்கிறோம்.

இவ்வளவும் நடந்துவரும் இந்தக்காலத்தில் இன்னமும் முனிசிபாலிட்டி, ஜில்லா போர்டு, தாலுகா போர்டு முதலிய ஸ்தாபனங்கள் சூத்திரன், பஞ்சமன், பிராமணன் என்னும் பதங்களை உபயோகப்படுத்தி வருகிறதென்றால் இதன் தலைவர்களுக்கு மானம், வெட்கம், சுயமரியாதை உணர்ச்சி, சுத்த ரத்த ஒட்டம் ஆகியவை இருக்கிறதா என்று கேட்கிறோம்.

சமீபத்தில் மதுரையில் நடந்த பார்ப்பனரல்லாதார் மகாநாட்டில் பொது ஜனங்களுக்கு ஏற்படுத்தப்பட்ட உணர்ச்சியே இதுதான். இப்படியிருக்க, அம்மதுரைப் பட்டணத்திலே மங்கம்மாள் சத்திரங்களில் சூத்திரன் என்னும் வாசகங்கள் கொண்ட போர்டுகள் எழுதி தொங்க விடப்பட்டிருக்கின்றன. இது எவ்வளவு அநியாயம்? ஆதலால் மதுரை ஜில்லா போர்டாரோ, முனிசிபாலிட்டியாரோ உடனே இதைக் கவனித்து இவ்வித இழி மொழிகள் கொண்ட போர்டு களையும், வாசகங்களையும் அப்புறப்படுத்தி இவ்வித வித்தியாசங் களையும் ஒழித்துவிடுவார்கள் என்று நம்புகிறோம்.

இதுபோலவே இன்னும் மற்ற ஊர்களிலும் இம்மாதிரி வாசகங்களோ, சொற்களோ காணப்பட்டால் அதை உடனே அடியோடு நிவர்த்திக்க வேண்டியது உண்மை யான மக்களின் முதல் கடமை என்பதாக தெரிவித்துக் கொள்ளுகிறோம்.

- குடிஅரசு - கட்டுரை - 06.02.1927

தமிழ் ஓவியா said...


நன்றி கெட்ட தன்மை


சென்னையில் வர்த்தகர்கள் சங்கம், வியாபாரச் சங்கம் என்பதாக இரண்டொரு சங்கங்கள் இருந்து வந்தாலும் அவை முழுவதும் அய்ரோப்பியர்கள் ஆதிக்கமாகவே இருந்து வருவதோடு, இந்திய வியாபாரிகளுக்கு அவற்றில் போதிய செல்வாக்கும், சுதந்திரமும் இல்லை என்பதாகக் கண்டு காலஞ்சென்ற பெரியார் சர். பி. தியாகராய செட்டியார் அவர்கள் பெருமுயற்சி செய்து தென் இந்திய வர்த்தக சங்கம் என்பதாக ஒன்றை ஏற்படுத்தி அது நிலைத்திருப்பதற்கு வேண்டிய சகல சவுகரியங்களும் செய்து கொடுத்து அதன் மூலம் அய்ரோப்பிய சங்கங் களுக்கு இருப்பது போலவே சென்னை முனிசி பாலிடிக்கும், சென்னை சட்டசபைக்கும் இந்திய சட்டசபைக்கும் அங்கத் தினர்களை தெரிந்தெடுக்கும் உரிமைகள் முதலிய பெருமைகளையும் வாங்கிக் கொடுத்து அதற்கு ஒரு யோக்கியதையையும் உண்டாக்குவதற்கு எவ்வளவோ கஷ்டமும் பட்டார்.

இப்போதும், மற்ற எல்லா ஸ்தாபனங்களையும் நமது பார்ப்பனர்கள் தங்கள் ஆதிக்கத்திற்காக சூழ்ச்சிகளாலும், தந்திரங்களாலும் சுவாதீனப்படுத்திக் கொண்டது போலவே, இதையும் கைப்பற்றிக்கொண்டு இருப்பதோடு அச்சங்கத்திற்கு இவ்வளவு பெருமையும், யோக்கியதையும் சம்பாதித்துக் கொடுத்த சர் தியாகராயரின் வாரிசான ஸ்ரீமான் பி.டி. குமாரசாமி செட்டியார் அவர்களையே அச்சங்கத்தில் சேர்த்துக்கொள்ள மறுத்து விட்டார்கள்.

இக் கூட்டத்தாரின் கல்னெஞ்சத்தையும், நன்றிகெட்ட தன்மையும் காட்ட இதைவிட வேறு ஏதாவது உதாரணம் வேண்டுமா? ஆகவே, நமது பொது நன்மைக்காக என்று எந்த ஸ்தாபனங்களை ஏற்படுத்தினாலும் மெள்ள மெள்ள அதில் வேலைக் காரராக வந்து சேர்ந்து குமாஸ்தாவாகி, மேனேஜராகி, எஜமான்களாகி நம்மை கூலிக்காரர்களாக செய்து விடுகிறார்கள்.

இக்காரணங்களால்தான் நாம் செய்யும் தியாகமோ, உழைக்கும் உழைப்போ, ஏற்படுத்தும் ஸ்தாபனங்களோ, நமக்கே பலன்தர வேண்டுமானால் கண்டிப்பாய் அவற்றில் பார்ப்பனர்களைச் சேர்க்கக்கூடாது என்று வாதாடி வருகிறோமே அல்லாமல் மற்றபடி அவ்வகுப்பார்மீது துவேஷம் கொண்டல்ல.

இந்த விஷயத்தை அறியாமல் இருப்பவர்களும், பார்ப்பனர் களிடம் கூலி வாங்கிப் பிழைப்பவர்களும், பார்ப்பனர் விரோதம் கொண்டால் வாழ முடியாதவர்களும், தங்களைப் பெரிய தேசபக்தர்கள் போல காட்டிக்கொண்டு உபதேசம் செய்யவந்து விடுகிறார்கள். ஆனபோதிலும், பொது ஜனங்கள் இதை ஏதோ அறியாமையாலும், வயிற்றுக் கொடுமையாலும், இப்படி உளறுகிறார்கள் என்பதாக மதித்து கூடியவரையில் பார்ப்பனச் சம்பந்தமில்லாமலே முற்போக்கான வழி தேடவேண்டுமென்றும், அதற்கேற்ப ஸ்தா பனங்களையும், ஏற்படுத்த வேண்டும் என்றும் விரும்புகிறோம்.

- குடிஅரசு - கட்டுரை - 06.02.1927

தமிழ் ஓவியா said...


இன்னும் பிராமணியமா?

திருவாங்கூரைச் சேர்ந்த கொட்டாரக்கரையில் காலஞ் சென்ற ஸதாநந்த சுவாமிகள் கண்ட ஆசிரமமொன் றுள்ளது. அதில் தற்பொழுது சுவாமி ஆத்மாநந்தபாரதி அவர்கள் தலைமை வகித்து வருகிறார்கள். அன்னார் இப்பொழுது ஒரு குருகுலங் கண்டிருக்கிறார்கள். அதில் இப்பொழுது தாழ்த்தப்பட்டவர்கள் சேர்க்கப்பட வில்லை.

இதைப்பற்றி, சுவாமிகள் குருகுல நிதி திரட்ட நாகர்கோவில் வந்தபொழுது ஸ்ரீமான் டாக்டர் ஆ.நு. நாயுடு அவர்கள் பேட்டி கண்டு பேசினார்கள். அதற்குச் சுவாமிகள் பிறப்பினாலேயே பிராமணர்கள் உயர்ந்த வர்களென்றும், ஏனையோர் ஸம்ஸ்காரத் தினாலேயே உயரவேண்டு மென்றும் கூறி சேரமாதேவிக் குருகுலம் நாசமாவதற்குக் காரணம் தாழ்த்தப் பட்டவர்களைச் சேர்த்ததினாலேயே என்றுங்கூறினார்கள். அதற்கு டாக்டர் அவர்கள் தாழ்த்தப்பட்ட இந்துக்களை ஏனைய மதத்தவர் வலிந்து இழுக்கும் போது இந்து மதத்தவரான நாம் அகற்றுவது அழகாகுமாவென்று கேட்டார்கள்.

அதற்குச் சுவாமி அவர்கள் ஸம்ஸகாரமடைந்தால் யாவரையும் எடுத்துக்கொள்ளப்படுமென்றும் அக்காலம் தனக்குத் தெரியுமென்றும், அதற்கு ஆயிரம் ஆண்டுகள் ஆயினும் பரவாயில்லை யென்றும் கூறினார்கள். இதைக் கேட்டவுடன் மனிதனை மனிதனுக்கு அடிமையாக்கும் உங்கள் இந்து மதம் அழிந்து ஒழிகவென்று கூறி வெளிவந்தார்கள். இதைப்பற்றி டாக்டர் அவர்கள் சமுதாயத் தலைவர்களில் ஒருவரான ஸ்ரீமான் மன்னத்துபத்மனாப பிள்ளை அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதிக் கேட்டார்கள்.

அதற்கு பிள்ளையவர்கள் சுவாமிகளின் வைதிகப் பார்ப்பனியம் தனக்குப் பிடிக்கவில்லை யென்றும் இதை முன்னிட்டுத்தான் இதற்கு முன் தான் ஒரு அபிப் பிராயமும் கொடுத்த தென்றுங்கூறி பதிலிறுத்தனர். ஜாதி பேதமும், தீண்டாமையும், நீங்கவேண்டு மென்று மும்முரமாக வேலைநடந்து வருமிவ் வேளையில் இந்துமதம் இத்தீண்டாமை யெனுங்கொடுமையால் ஆயிரக்கணக் கான மக்களை ஆண்டுதோறும் அன்னிய மதத்திற்குக் கொடுத்துவரு மிக்காலத்தில் பாலர்களுடைய மாசற்ற இருதயங்களில் பேதநிலையை உண்டாக்காதவாறு காப்பதற்கு மாறாக பேத நிலையை உண்டு பண்ணுவது கூடாது.

சுவாமிகள் ஒரு பிராமணரல்லாதாராகவிருந்தும் பார்ப்பனியத்தை ஆதரிப்பது கண்டு ஆச்சரியப் படுகிறார்கள். சுவாமிகளும் சேர மாதேவி குரு குலத்தின் பேத நிலையால் வசூலான பணத்தைக் கொடுக்க மறுத்துவிட்ட செட்டி நாட்டுக்குச் செல் வாரென்று தெரிகிறது. மாணவர்களுக்கிடையே பேதநிலைமையுண்டு பண்ணாதிருந்தால் தான் அங்கே செல்வாக்கு கிடைக்குமேயொழிய அல்லதில்லை.

தன் குருகுலம் நல்ல நிலையையடைய வேண்டு மானால் தன் கொள்கையை அடியோடு விட்டு விடவேண்டும். இனியாவது சுவாமிகள் தங்கள் கொள்கையை மாற்றி விடுவார்களென்று நம்புகிறேன்.

- குடிஅரசு - கட்டுரை - 30.01.1927