Search This Blog

13.8.13

குடி அரசு - துணுக்குகள் - பெரியார்

உதிர்ந்த மலர்கள்

1. “கண்ணுக்கும், மனதிற்கும், அறிவிற்கும் எட்டாததும், வாயினால் விவரிக்க முடியாததுமாக ஒன்று உண்டு. அது தான் கடவுள்” என்று சொல்லு வார்களானால் அவர்கள் தான் பகுத்தறிவற்றவர்கள் ஆவார்கள், ஏனெனில் அவர்கள் தாங்கள் சொல்லுவதிலிருந்தே முன்னுக்குப் பின் முரணாயிருப் பதை அறிகிறார்களில்லை.

2. தான் செய்யும் அக்கிரமங்களுக்கு பரிகாரமும் மன்னிப்பும் கிடைப் பதற்காகவும், அடுத்த ஜன்மத்தில் சுகமடைவதற்காகவும் என்று நினைத்துக் கொண்டு கடவுள் பக்தி செலுத்துகின்றவர்களும் சமயச் சின்னங்கள் அணிபவர்களும் திருடர்கள் அல்லது மூடர்களே ஆவார்கள்.

3. “மோட்சத்திற்காக நாமம், விபூதி தரித்து தாரகம், பஞ்சாட்சரம் ஜெபிப்பவர்களும், சுயேச்சையாக கதர் உடுத்தி, கதர்க் குல்லாய் போட்டுக் கொண்டு இராட்டினம், தக்ளி, நூல் நூற்பவர்களும் ஒரேவிதமான மூட நம்பிக்கையின் பாற்பட்டவர்களும், சுய அறிவற்ற செம்மறியாட்டுக் கூட்டத் தில் சேர்ந்தவர்களுமேயாவார்கள்”.

4. “கடவுள் தங்களுக்கு “நன்மை” செய்ததற்காக நன்றி செலுத்த வேண்டுமென்று சிலர் சொல்லுவதனால் கடவுள் பலருக்குத் “தீமை” செய்ததற்காக தீமையை அனுபவிப்பவர்கள் கடவுளை என்ன செய்ய வேண்டும்?”

5. “கடவுள் தன்னை பணக்காரனாகப் பிறப்பித்ததற்காக ஒரு பணக் காரன் கடவுளுக்குக் கோயில் கட்டினால் ஏழையாகப் பிறப்பித்ததற்காக அந்த ஏழை மகன் அக்கோயிலை இடித்துத் தகர்க்க வேண்டாமா? அல்லது அந்தச் சாமியை . . . . . வேண்டாமா?”

6. “நமது நாட்டில் வெள்ளைக்கார ஆதிக்கம் பார்ப்பனனின் தயவிலி ருக்கின்றது. பார்ப்பன ஆதிக்கம் மதத்தின் தயவில் இருக்கின்றது. மத ஆதிக்கம் சாஸ்திரத்தின் தயவிலிருக்கின்றது. சாஸ்திரத்தின் ஆதிக்கம் கடவுள் தயவிலிருக்கின்றது. ஆகவே கடவுளின் ஆதிக்கத்தை முதலில் ஒழித்தால்தான் மற்ற ஆதிக்கங்கள் குறைந்து நாட்டை நலமடையச் செய்ய முடியும்”.

7. “அரசாங்க வரியையும், மதவரியையும் கணக்குப் பார்த்தால் அரசாங்க வரியைவிட மதவரியே அதிகமாகும்”.

8. “வெள்ளைக்காரர்களின் கொள்ளையையும், நமது கடவுள்களின் கொள்ளையையும் கணக்குப் பார்த்தால் நமது கடவுள்கள் கொள்ளையே வெள்ளைக்காரர்கள் கொள்ளையைவிட பல மடங்கு அதிகமாகும்”

9. “இந்த வைகாசி மாதத்தில் மாத்திரம் தென்னாட்டில் ஒன்றரை லட்சம் ரூபாய் செலவில் மூன்று கும்பாபிஷேகங்கள் நடந்திருக்கின்றன. இந்தக் கோயில்கள் மூன்றும் சுமார் 10 அல்லது 12 லட்சம் ரூபாய் செலவு செய்து கட்டப்பட்டவைகளாகும்”.

10. “இன்றைய தினம் நமது தமிழ்நாட்டில் மாத்திரம் சுமார் 2 கோடி ரூபாய்க்கு மேல் எஸ்டிமேட்டுகள் (திட்டம்) போடப்பட்ட பல கோவில்களின் திருப்பணி வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன”.

இவைகளுக்கு பல லட்ச ரூபாய் முதலாக வைத்து பல கடைகளில் லேவாதேவி முதலிய வியாபாரங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

11. “பணக்காரர்களிடம் போய்ச் சேரும் பணங்கள் பெரும்பான்மை யும், கோயில் கட்டுதல் கும்பாபிஷேகம் செய்தல், உத்சவம் செய்தல், லட்சம் பார்ப்பன போஜனம் செய்தல் முதலாகிய இந்த தேசத்தின் நாச வேலைக்கே போய்ச் சேருவதால், பணக்காரர்களின் மீதும் போர் தொடுக்க வேண்டியது அவசரமான அவசியமாகின்றது”.

12. “பெண்கள் மீது சுமத்தப்பட்டுள்ள “கற்பு”த் தான் ஆண்களின், ஒழுக்கக் கேட்டிற்கும், மிருக சுபாவத்திற்கும் முதற்காரணமாயிருக்கிறது”.

13. “இந்தியாவில் சரியான கல்வி இல்லாமல் போனதற்குக் காரணம் மதக் கொள்கையும், கடவுள் செலவுமேயாகும்”.

14. “புருஷர்கள் தாசி, வேசி, வைப்பாட்டி வைத்துக் கொள்வது சகஜ மாயிருப்பது போலவே, ஒவ்வொரு பெண்ஜாதிகளும் ஆசை நாயகன் வைத்துக் கொள்வது சகஜமென்று ஆகிவிட்டால் புருஷர்கள் தாசி முதலியன வைத்துக் கொள்வதை உடனே நிறுத்தி விடுவார்கள்”.

15. “தீண்டாமையை ஒழிக்கும் படி மேல் ஜாதியார் என்பவர்களிடம் 40 வருஷம் பணிந்து பணிந்து செய்த வேலையை விட “நீங்கள் தீண்டாத வர்கள்” அல்ல என்பதாக “தீண்டப்படாதவர்கள்” என்பவர்களிடம் ஒரு வருஷம் செய்த வேலையானது எத்தனையோ பங்கு அதிகமான பலனைக் கொடுத்திருக்கின்றது”.

16. “பெண்களுக்குச் சுதந்திரம் கொடுக்கும்படி ஆண்களிடம் 40 வருஷம் கெஞ்சிக் கெஞ்சி வேலை செய்ததின் பலனை விட பெண்களிடம் “நீங்கள் அடிமைகள் அல்ல, ஆண்களைப் போலவே உங்களுக்கும் எல்லா வித சுதந்திரமும் உண்டு” என்று ஒரு வருஷம் செய்த வேலையால் எவ்வளவோ பயன் விளைந்திருக்கின்றது”.

17. “இந்தியாவின் ஈன நிலைமைக்கு அர்த்தமற்ற முறையில் சமய சந்தர்ப்பமில்லாமல், தொட்டதற்கெல்லாம் அரசாங்கத்தையே வைது கொண்டி ருக்கும் வரை நாங்கள் பெரிய தேச பக்தர்களாகவும், தியாகிகளாகவும் கருதப் பட்டோம். ஆனால் இப்போது அந்த ஈன நிலைமைக்கு உண்மையான காரணத்தைக் கண்டு பிடித்து அதன் அஸ்திவாரத்தில் கையை வைத்து அடி யோடு சாய்க்க ஆரம்பித்தவுடன், பார்ப்பனர்களாலும், அவர்கள் தாசர்களான சமயப் பிழைப்புக்காரர்களாலும் நாங்கள் பார்ப்பன துவேஷிகளாகவும், நாஸ்திகர்களாகவும், மதத் துரோகிகளாகவும் தேசத்துரோகிகளாகவும் கருதப்படுகிறோம்”.

18. “இந்து மதம் என்பதற்கு ஆங்கில அகராதியில் “மகமதியர்கட்கு விரோதமானது” என்று அர்த்தம் எழுதப்பட்டிருக்கின்றது”.

தமிழ் அகராதியில் மகமதியர்கள் என்பதற்கு “மிலேச்சர்” என்று அர்த்தம் எழுதப் பட்டிருக்கின்றது.

வட மொழி நூல்களில் “ஒரு மகமதியனைத் தொட்டால், தொடப்பட்ட நமது பாகத்தை வெட்டித் துண்டித்து விட வேண்டும்” என்று குறிப்பிட்டிருப் பதாகச் சொல்லப்படுகிறது.

மகமதிய மத ஆதாரங்களில், ஒரு கடவுளுக்கு மேல் வணங்குகிறவர் களையும், கடவுளுக்கு உருவம், பெண்டு பிள்ளைகளைக் கற்பிக்கின்றவர் களையும் “காபர்” என்றும், அவர்களைக் கொன்றால் கூடக் குற்றமில்லை என்றும் இருப்பதாகவும் சொல்லப்படுகின்றது.

இந்த நிலைமையில் இரு மதத்தையும் வைத்துக் கொண்டு இந்து -முஸ்லிம் ஒற்றுமை ஏற்படுத்த முடியுமா?”

19. “கோவில் கட்டவும் தேர் செய்யவும் உத்சவம் நடத்தவும் பணம் கொடுக்கும் ஜனங்கள் எவ்வளவு பகுத்தறிவுடனும் நல்ல காரியம் என்கின்ற பிரதி பலன் உணர்ச்சியுடனும் கொடுக்கின்றார்களோ அந்த அளவு பகுத்தறி வும் அந்த அளவு பிரதி பலனுடைய உணர்ச்சியோடு தான் தேசீய காரியத்திற் கும் ஜனங்கள் பணம் கொடுக்கிறார்கள்”.

20. “கோவில் டிரஸ்டிகளின் உண்டிகையில் போடும் பக்தர்களின் காணிக்கைகள் என்ன பலன் அடைகின்றதோ அந்த பலன் தான் தேசீய “டிரஸ்டிகள் வைத்திருக்கும்” தேசிய நிதி” உண்டிகையில் போடும் காணிக் கைப் பணங்களும் அடைகின்றன”.

21. “சாமி பேரால் கோவில் பூசாரிகளின் தட்டத்தில் போடப்படும் பணம் என்ன பலனடைகின்றதோ அந்தப் பலன் தான் தேசீயப் பூசாரிகளின் தட்டத்தில் (கையில்) போடும் பணமும் அடைகின்றது.”

22. “கோவில் உர்ச்சவத்திற்கு என்றும், அபிஷேகத்திற்கென்றும், பஜனைக்கென்றும், கட்டளைக்கென்றும், வேல், மணி செய்வதற்கென்றும் பணம் கேட்கவும் வசூலிக்கவும் யாருக்கு வேண்டுமானாலும் எப்படி உரிமை யுண்டோ அப்படியே தான் தேசீயத்திற்கு பணம் வசூலிக்கவும் யாருக்கும் உரிமையுண்டு”.

-------------------------------------------- ஈ.வெ.ரா . - குடி அரசு - துணுக்குகள் - 22.06.1930

13 comments:

தமிழ் ஓவியா said...


அடேடே, கிடுகிடு அரசியல் பிரளயம் இதோ!

- ஊசி மிளகாய்


இந்திய அரசியலில் மிகப் பெரியதொரு அரசியல் பூகம்பம் விரைவில் ஏற்படவிருக்கிறது!
நல்ல காலம் பொறக்குது; நல்ல காலம் பொறக்குது;

ஜக்கம்மா குறி சொல்லுதாயே

ஆமாம். சு.சாமி,யே - அவருடைய மிகப் பெரிய பல கோடி மக்களையும் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பரந்து, விரிந்து பல லட்சக் கணக்கான கிளைகள், இலைகள், தழைகள் எல்லாம் உடைய - மாபெரும் தனி (ஆளான) தன்மையுடைய வம்படி வழக்குப் புகழ் வாய் வீச்சு வல்ல சாமியான சு.சாமியே அவருடைய ரத, கஜ, துரக, பதாதிகளுடன் பா.ஜ.க.வுக்கு வந்து விட்டார்! பராக்! பராக்!!

இனி என்ன கவலை?

ஏற்கெனவே மோடியைப் பிரதமராக்கும் அறிவிப்பையே ஆர்.எஸ்.எஸ். தள்ளி தள்ளி மற்ற நான்கு, மாநிலத் தேர்தல்கள் நவம்பரில் முடிந்த பிறகே, வாக்காளர் தலையில் மிளகாய் அரைக்க முற்படுவதுபோல - அறிவிக்கவிருக்கிறோம் என்று கூறிவிட்டார்கள்!
இந்த நிலையில் அந்தக் கட்சி மேலும் பலங் கொண்டு வெற்றி மேல் வெற்றி குவிக்க சு.சாமியும் சோ சாமிகளும், குருமூர்த்தி ஜீகளும் சேர்ந்து எப்படியும் மோடிஜியை பிரதமராக்கியே தீருவது என்று வீரசவர்க்கார், நாதுராம் விநாயக் கோட்சே அஸ்தி முன்னால் பஸ்கி போட்டு ச...ப...தம் எடுத்துள்ளார்கள் எனத் தெரிய வருகிறது!
இந்த லட்சணத்தில் மோடி தலைமையில் அடுத்துவரும் ஆட்சி பி.ஜே.பி. கூட்டணியோ, குழம்பணியோ கொண்ட ஆட்சி எப்படி ஊழலை அறவே ஒழிக்கும் ஆட்சியாக அமைக்கப்பட வேண் டும் என்பதை முன்னிலைப்படுத்த பெங்களூரு எடியூரப்பா என்ற பரிசுத்த பரமாத்மாவை பாவ மன்னிப்புக் கொடுத்து தீட்சை தந்து மீண்டும் பா.ஜ.க.வில் சேர்த்து விடப் போகிறார்களாம்!

பலே பலே!

இதற்கு, முன்பே சிறுபான்மையினரான இஸ்லாமியர்களின் வாக்கு பா.ஜ.க.வுக்கு குறைந்து கொண்டே வருவதாக பல நாளேடுகள் எழுதுகின்றன.

எடுத்துக்காட்டாக
மக்களவை தேர்தலில் (பா.ஜ.க. வாக்குகள் தமிழ்நாட்டில்)

1998 6.9%

2004 5.07%

2009 2.33%

2014 ???

- டைம்ஸ் ஆஃப் இந்தியா என்ற நாளேடு இப்படி சொல்லுகிறது.

பா.ஜ.க. எத்தனை அழைப்பு விடுத் தாலும் அதனுடன் கூட்டுச் சேர எந்த தமிழ் நாட்டுக் கட்சியும் தயாராக இல்லை!

ஏதோ சில லட்டர்பேடு கட்சிகள் வடக்கே யிருந்து வரும் லாபமான வரவுக்காக கூட்டு சேருகிறோம் என்று கூறி சேரக் கூடும்!

போதாக் குறைக்கு அரசியல் புரோக்கர்களும் இப்படிச் சேருவதன்மூலம், முயற்கொம்பு வாங்க மூணே முக்கால் பணம் முன் பணமாகக் கேட்ட பழைய பழமொழியை ஞாபகப்படுத்தும் நிலைதான் இன்று!

புருடா சாமிகள் வரவு சில செய்தி தேடி பசியோடிருந்த பசியேப்ப ஏடுகளுக்கு மிரட்டுக் கடை அல்வா போல் இனிப்பாக இருக்கும் என்பது உறுதி! உறுதி!!
உன் நண்பன் யார் என்று சொல்! பிறகு
உன்னை யார் என்று சொல்கிறேன்
என்பது ஆங்கிலப் பழமொழி.
பா.ஜ.க.வை ஒரு வழியாக
வழி பண்ணிட்டார்கள்! பலே, பலே!

தமிழ் ஓவியா said...


தேன்மொழி


வேலூர் மண்டல திரா விடர் கழகக் கூட்டத்தில் (11.8.2013) கழகத் தலைவர் கூறிய கருத்துக்களை கழ கத் தோழர்களே கவனித் தீர்களா?

ஒவ்வொரு சொல்லும் முத்து தான் - நாம் கடைப் பிடிக்க வேண்டிய கருத்துக் கள்தான் - கொடுக்கப்பட்ட வரைபடம்தான் - நம் நாள் குறிப்பின் முதல் பக்கத்தில் கொட்டை எழுத்துக்களில் எழுதி வைக்கப்பட வேண் டியவைதான்.

காலத்திற்கேற்ப கழகச் செயல்பாட்டின் முறைகளில் மாற்றங்கள் தேவைதான் - வேகக் கூடுதலும் அவசியம் தான். கழகத்திற்கு மகளிர் பேச்சாளர் கூடுதலாகத் தேவைப்படும் (கழகப் பிரச் சார வழக்குரைஞர் அருள் மொழியின் கவனத்திற்கு இது) நேரம் இது.
சொன்னதோடு மட்டு மல்லாமல் உடனடியாக அறிவிப்பும்கூட; ஏலகிரியில் மகளிருக்கென்று மட்டும் இரு நாள் பயிற்சிப் பட்டறை.

தமிழ்நாடெங்கும் உள்ள கழகத் தோழர்கள் அடை யாளம் கண்டு பேச்சில் ஆர்வமுடைய மகளிரை, மாணவிகளை அனுப்பி வைப்பது அவசியம்.

ஏன் ஏலகிரியை நமது தலைவர் தேர்வு செய்தார்? கழக மகளிர் அணியினரும், பாசறையினரும் கணிச மான அளவுக்கு நிறைந் திருக்கும் பாசறைப் பகுதி இது! வேலூர் புரட்சிப் பெண்கள் மாநாட்டில் அடையாளம் காணப்பட்டது - அதனுடைய தொடர்ச்சி யாக இதனைக் கருதலாம்.

குடியாத்தம் சகோதரி தேன்மொழியார் வேலூர் கலந்துரையாடல் கூட்டத் தில் பேசினார்.
பெரியார் பிறந்த நாள் விழாவை வீட்டுக்கு வீடு கொண்டாடுவோம் - இதில் மகளிரின் பங்கு மகத்தான தாக இருக்க வேண்டும்; ஒவ்வொருவர் வீட்டு முகப் பிலும் ஊரின் முக்கிய பகுதிகளிலும் அறிவுலக ஆசானின் உருவப் படத்தை மின் விளக்குகளால் அலங் கரித்து வைப்போம்!

கட்சிக்கு அப்பாற்பட்டு அனைவரையும் அழைப் போம் - அவரவர்களின் கருத்துக்களைக் கேட்போம்; ஒலி பெருக்கி வைத்து அய்யாவின் உரைகளை ஒலி பரப்புவோம், கழகப் பாடல் களை ஒலி பரப்புவோம்.

நம் பகுதிகளில் உள்ள பள்ளிக்கூடங்களுக்குச் சென்று இனிப்புகளை வழங்குவோம்! பேச்சுப் போட்டிகளை நடத்துவோம்! பெரியார் வினா விடைப் போட்டிகளை நடத்த ஆவன செய்வோம்.

இது பெரியார் நாடு என் பதை உறுதிபடுத்துவோம்.

தமிழனுக்கென்று ஒரு விழா - தேசிய விழா - அது தந்தை பெரியார் பிறந்த நாள் விழா என்பதை நிலை நிறுத்துவோம்! இந்தக் கால கட்டம்தான் இதற்குப் பொருத்தமானது!
காலம் கெட்டுப் போய் விட்டது; இளைஞர்கள் திசை மாறிச் செல்லு கிறார்களே என்று ஒப்பாரி வைப்பதில் பயனில்லை. தந்தை பெரியார் சிந்தனை களை மூளைகளில் ஊடுரு வச் செய்வோம்! நோய்கள் ஓடும் நொடிப் பொழுதில்!

- மயிலாடன்

தமிழ் ஓவியா said...


விடுதலை! விடுதலை!! விடுதலை!!!


விடுதலை நமது போர்வாள்! என்றார் தந்தை பெரியார்! 78 ஆண்டுகளைக் கடந்து ஆனை நடைபோட்டுச் செல்லுகிறது.

இந்த வீரன் சந்தித்த களங்கள் எத்தனை எத்தனையோ! குவித்த சாதனை முத்துக்கள் கணக்கில் அடங்கா.

இவன் ஏறிய உயரத்தை அளக்க எவரால்தான் முடியும்?

பஞ்சமனையும். சூத்திரனையும் அவர்களுக்குக் கீழே இடித்துத் தள்ளப்பட்ட மகளிரையும். தன் தோளை ஏணியாக்கி உயர்த்திப் பிடித்தவன் இந்தப் பெருமை மிக்க விடுதலை வீரன்.

சமூகக் களமா?

பொருளாதாரக் களமா?

அரசியல் தளமா?

சமத்துவத் திசையா?

அப்பப்பா! இந்த மாவீரனின் வாள் வீச்சுமுன் ஆதிக்கக் கோட்டைகள் சரிந்தன! ஆன்மீகப் போர்வையில் ஆட்டம் போட்ட ஆரியத்தின் ஆணி வேர்கள் அறுந்து வீழ்ந்தன.

சுருக்கமாகச் சொன்னால் பிற்போக்கு சாம்ராஜ்ஜியக் கோட்டைகள் இந்தச் சூரிய நெருப்பால் சாம்பல் மேடாகின!

சமூகநீதித் திசையில் இவன் படைத்த சரித்திரத்தை சரித்திரம், தன் பேழையில் பத்திரமாக வைத்துக் கொள்ளும்.

எவ்வளவோ எழுதலாம்! என்றாலும் நம் தமிழர்கள் இதன் அருமையை முற்றிலும் உணர்ந்தனர் என்று மார்தட்டிக் கொள்ள முடியவில்லை.

தமிழன் இல்லம் என்பதற்கு அடையாளம் விடுதலையே என்றார் தவத்திரு குன்றக்குடி அடிகளார்.

இந்த அளவுகோலில் இன்னும் தமிழன் இல்லங்களாக இல்லாதது கோடானுகோடியே! நன்றியை எதிர் பார்க்காது, நாட்டுக்கும், இனத்துக்கும் ஆற்ற வேண்டிய கடமையில் சோர்ந்ததில்லை.

எத்தனை எத்தனை ஜாம்பவான்கள் இந்த ஏட்டின் ஆசிரியர்கள்! டி.ஏ.வி.நாதன், பண்டித முத்துசாமிப்பிள்ளை, அறிஞர் அண்ணா, குத்தூசி குருசாமி, சாமி சிதம்பரனார், அ. பொன்னம் பலனார், அன்னை மணியம்மையார், தமிழர் தலைவர் கி.வீரமணி என்ற பட்டியலை ஒரு தரம், ஆம் ஒரே ஒரு தரம் மீண்டும் கவனித்துப் பாருங்கள்.

இவர்களை மிஞ்சி யார் எழுத்தாளர்கள்? யார் கருத்தாளர்கள்? அறிவுலகச் சூரியன் அய்யாவின் சிந்தனைத் தோட்டத்தில் பூத்த குறிஞ்சி மலர்கள் அல்லவா இவர்கள்!

ஒன்றைக் குறிப்பிட்டே ஆகவேண்டும். உலகில் ஒரு நாத்திக ஏடு - இத்தனை ஆண்டுகள் ஏறு நடை போட்டது என்பதற்கு எடுத்துக்காட்டுகள் உண்டா? அத்தகைய புரட்சி ஏட்டில் அரை நூற்றாண்டு காலம் ஒருவர் தொடர்ந்து ஆசிரிய ராக இருந்தார் என்பதற்குத்தான் ஆதாரம் உண்டா? இது ஒருகின்னஸ் சாதனையே!

ஆசிரியர் என்று சொன்னால் தமிழ்நாட்டில் அது விடுதலை ஆசிரியரை மட்டுமே குறிப்பது ஏன்?

ஆம், ஆசானாக - ஆசிரியனாக இருந்து இந்த ஒரு ஏடு தானே தமிழர்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கிறது. அறியாமை இருளை விரட்டியடிக்கும் ஆதவனாக சுடர் விடுகிறது! அதனால்தான் ஆசிரியர் என்றால் விடுதலை ஆசிரியரை மட்டுமே குறிக்கிறது.

வேறு எந்த ஒரு கட்சியும், இயக்கமும் சாதிக்க முடியாத இவற்றை நாம் சாதித்துள்ளோம்.

நம்மால் முடியாதது வேறு யாராலும் முடியாது. வேறு யாராலும் முடியாதது நம்மால் மட்டுமே முடியும் என்று நமது ஆசிரியர் சொன்னது வெற்றுச் சொற்கள் அல்ல என்பதை - விடுதலை ஆசிரியராக 50 ஆண்டுகள் சாதனை பொறித்த அவர் விஷயத்திலேயே அதனை நிரூபித்துக் காட்டினோம்.

ஒரே நேரத்தில் 50 ஆயிரம் விடுதலை சந்தாக்களைத் திரட்டிக் கொடுத்தோமே. ஒரு கணம் நினைத்துப் பாருங்கள் - நம்மை அறியாமலேயே நம் தோள்கள் நிமிர்கின்றன - மார்பு புடைக்கிறது - கண்களில் ஆனந்தக் கண்ணீர் அரும்புகிறது.

அதனைத் தொடர வேண்டாமா? அந்தச் சந்தாக்களின் எண்ணிக்கையில் ஒரு தொய்வு ஏற்படலாமா?

நம் எதிரிகள் ஏதோ புதுவாழ்வு வந்ததுபோல ஆட்டம் போடும் ஒரு கால கட்டத்தில் விடுதலை வீரனின் அம்பறாத் தூணியில் கணைகள் பூட்டப்பட வேண்டாமா?

பெருமைகள் தேவைதான் - அது வீண் பெருமையாக ஆகிவிடக் கூடாதல்லவா! செயலில் பூத்து நறுமணம் கமழும் போதுதானே அந்தப் பெருமைக்குப் பீடு மிகு பொருள் கிடைக்கும்.

இதோ தந்தை பெரியார் பேசுகிறார் கேளுங்கள்! கேளுங்கள்!!

1927ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் குடிஅரசு பிரதியின் எண்ணிக்கை 5,000த்தை யாவது தாண்டிவிட வேண்டாமா! அப்படியானால் ஒவ்வொருவரும் மும்மூன்று புது சந்தாதாரர் களைச் சேர்த்துக் கொடுங்கள். அப்படிக்கில்லாமல், குடிஅரசே! குணக் குன்றே! அஞ்சாவீரமே!

உண்மை அவதாரமே!

சுயமரியாதைச் சூரியனே!

...என்று கவி பாடுவதில் ஒரு பலனுமில்லை.

காரியத்தில் காட்டுங்கள்

(குடிஅரசு 26.12.1926)

அன்று பெரியார் சொன்னதை இன்று சொன்னதாகவும் எடுத்துக் கொள்வோம்.

நாம் வாய்வீச்சு வீரர்களா? காரியத்தில் சாதித்துக் காட்டும் தீரர்களா?

எங்கே பார்ப்போம்!13.8.2013
சென்னை

- கலி. பூங்குன்றன்
துணைத் தலைவர்,திராவிடர் கழகம்

குறிப்பு: சேலம் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் மானமிகு ஜவகர் அவர்கள் தன் மூலம் முன்பு சேர்த்துக் கொடுத்த 30 சந்தாக்களையும் மீண்டும் புதுப்பித்துக் கொடுத்து வழி காட்டுகிறார். கடந்த முறை சேர்க்கப்பட்ட சந்தாதாரர்களின் முகவரிப் பட்டியல் மாவட்டத் தலைவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. தொடர்பு கொள்வீர்! தொடர் சந்தாதாரர்களாக ஆக்குவீர்! ஆக்குவீர்!!

தமிழ் ஓவியா said...

மதுரை மீனாட்சிமீது நம்பிக்கை இல்லை!

மதுரை மீனாட்சியம்மனை இந்து அறநிலையத்துறை அவமானப்படுத்துவது போல, வேறு யாராலுமே, அவமானப்படுத்திட முடியாது.

பக்தர்களின் உடைமைகளைத் தெளிவாக தெரிந்து கொள்ள, ரூ.85 லட்சத்தில் நவீன ஸ்கேனர்கள் பொருத் தப்படும். 24 மணி நேரமும் 150 காவலர் நிறுத்தப் பட்டுள்ளனர். நாள்தோறும் மூன்று முறை வெடிகுண்டு சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
கிழக்கு மேற்கு தெற்கு மற்றும் வடக்கு கோபுரவாசல் களில் மெடல் டிடக்டர் வைத்து சோதனை செய்து பக்தர் களைக் கோயிலுக்குள் அனுப்புகின்றனர். மீனாட்சியாவது வெங்காயமாவது அது வெறும் பொம்மை என்று சொல் லாமல் சொல்லி விட்டதே - இந்து அறநிலையத்துறை - ஆகா! மீனாட்சியம்மன் மகிமையே மகிமை.

தமிழ் ஓவியா said...

ராமராஜ்ஜியமா?

இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராக ரகுராம் என்பவர் நியமனம் செய்யப் பட்டுள்ளார். கல்கி இதழ் (18.8.2013 பக்கம் 3) ஒரு பக்கம் அளவுக்கு சிலாகித் துள்ளது படத்துடன்.
சரி, இருக்கட்டும். சந்தடி சாக்கில் கந்தப் பொடி.. குசும்பு என்ன தெரியுமா? நிதித்துறையில் ராமராஜ்ஜியம் ஆரம்பமாகப் போகிறதாம்.. புரிகிறதா? ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநரின் பெயர் ரகுராம் - அதனால்தான் இந்தக் கு(சு)றும்பு! சம்பூகன் தலைகள் வெட்டப்படுமா/ தெரியவில்லை.

தமிழ் ஓவியா said...


நாத்திகர்களைவிட மதவாதிகளின் அறிவு குறைவானதே! ராச் செஸ்டர் பல்கலைக் கழக ஆய்வு - முடிவு


ராச்செஸ்டர், ஆக.13- நாத்திகர்களைவிட மத வாதிகளின் அறிவு குறை வானதே என்று ராச் செஸ்டர் (அமெரிக்கா) பல்கலைக் கழக ஆய்வு கூறுகிறது.
பல பத்தாண்டு களாகத் தொடர்ந்த அறிவியலின் ஆராய்ச்சி முடிவுகள் தொடர்பாக, மத நம்பிக்கையுடைய மக்கள், மதநம்பிக்கை இல்லாதவர்களைவிடக் குறைந்த அறிவாற்றல் உடையவர்கள் என்று கண்டறியப்பட்டு இருக்கிறது.

மிரான் ஜீக்கர்மேன் என்ற, ராச் செஸ்டர் பல்கலைக் கழகப் பேராசிரியரின் தலை மையின்கீழ் நடத்தப் பட்ட ஆராய்ச்சியில், அறிவாற்றலுக்கும், மதப் பழக்கத்திற்கும் ஏற்பட் டுள்ள வேறுபாடு களைப் பற்றிய 63 ஆய்வு களில் 53, ஆய்வுகள் மத நம்பிக்கையுடையவர்கள் குறைந்த அளவு அறி வாற்றல் உடையவர்கள் எனக் கருத்து தெரிவித் துள்ளது. வயது அதிக மானதன் காரணமாக, அதிக மூளை ஆற்றல் கொண்டவர்கள், நம்பிக்கை கொள்ள மறுக்கிறார்கள். ஏன் என்பதற்கான காரணங் கள், நாம் முன்பு நினைத் திருந்ததைவிட எளிதாக இருந்தது.

உதாரணமாக, அதிக அறிவாற்றல் உள்ளவர் கள், திருமணம் செய்து கொள்பவர்களாகவும், வாழ்வில் வெற்றி அடைந்தவர்களாகவும், இருப்பதால், அவர் களுக்கு மதம் மிகக் குறைந்த அளவில் தான் தேவைப்படுகிறது.
இதுபற்றிய ஆய்வுகள் ஜீக்கர் மேனின் ஆய்வுக் கட்டுரையையும் சேர்ந்து 135 அய்.க்யூ புள்ளிகளுக்கு மேல் உள்ள 1500 அறி வாளிக் குழந்தைகளுடன் 1921இல் ஆரம்பிக்கப் பட்டு இன்றளவும் தொடர்ந்து வரும் ஆய் வுகளைச் சார்ந்ததாகும்.
மனிதர்களின் வயது அதிகரிக்க அதிகரிக்க, கடவுள் நம்பிக்கை அதி கரிக்கும் என்ற பொதுக் கருத்துக்கு மாறாக லூயி டெமானின் ஆராய்ச்சி முடிவுகள் 75-லிருந்து 91 வயது வரை மத நம்பிக் கைகள் குறைந்து வரு வதைத் தெரிவிக்கின்றன. மதம் தொடர்பான ஈடு பாடுகள் வயது ஆக ஆகக் குறைந்து வருகின் றன என்பதை நிரூபிக்க வேறு ஆய்வுகள் தேவைப் படும்.

1958-லேயே மைக் கேல் ஆக்கியேல், மத நம்பிக்கையுடைய குழந் தைகள் முற்காலத்தில் மதம் தொடர்பான வற்றை எளிதில் கிர கித்து விடுகின்றன. ஆனா லும், அவர்கள்தான் அது தொடர்பான அய் யங்கள் எழுப்புபவர் களாகவும், புத்திசாலி மாணவர்கள் பழங்கால நம்பிக்கைகளை ஏற்க இயலாதவர்களாகவும், மத நம்பிக்கை தொடர் பானவற்றை ஏற்றுக் கொள்ள இயலாதவர் களாகவும் உள்ளனர்.

ஜீக்கர் மேனின் 1916ஆம் ஆண்டு ஆய் வில் பொதுப் படை யாகத் தேர்ந்தெடுக்கப் பட்ட 58 விழுக்காடு அமெரிக்க அறிவியலா ளர்கள் கடவுள் இருப்பை அய்யப்படுகிறவர்களாகவும், நம்பிக்கையற்றவர்களாகவும் இருக்கின்றார்கள் இந்த அளவு எழுபது விழுக் காடாக ஆக, மிக வல்லுநர்களாக உள்ள அறிவியலாளர்களிடம் உயர்ந்து உள்ளது. ஆளு மையும் சமூக மனவியல் பற்றியுமான மறு கண் ணோட்டம் என்ற கல்வி ஏட்டில் இந்தக் கட்டுரை வெளியா யிற்று. அதிகம் அறிந் திருந்த அறிவாளி களுக்கு, மதநம்பிக்கை கள் அறிவுக்கேற்றதாக இல்லாததாலும், அறி வியலில் பொருந்தாததாக வும், ஆய்வுக்கு உட் படுத்த முடியாதனவாக வும் இருந்த காரணத் தால் சுவையற்றுப் போயிருந்தது.
அறிவாளிகள் இயற் கையாகவே பள்ளிகளில் அதிக நேரத்தைச் செல வழிக்கக் கூடியவர் களாக இருக்கிறார்கள்.

அவை ஒருவித தன்னடக் கத்திற்கும், நீண்ட கால லாபத்திற்கும் பயன ளிப்பன. ஆய்வாளர்கள் அதிக அறிவு படைத்த வர்கள் உயர்ந்த உத்தி யோகங்களையும், அதனால் அதிக வரு வாய், சுயமரியாதையை யும், கொண்டிருப்ப தனால் நம்பிக்கைகளை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருகின்றனர். இளவயதிலேயே அறி வில் சிறந்து விளங்குப வர், முதியவனாகும் போது, அதிகப் பலன் பெறுகின்றனர். மதத்தின் செயல் பாடுகள்பற்றிய மேலும் ஆய்வுகள் தேவை என்று வல்லுநர்கள் கருது கின்றனர். ஆய்வாளர் கள், மதம் அளிக்கின்ற செயல்பாடுகளை ஏற்பவர்கள் நம்பிக்கை உடையவர்களாகவும் அவை குறைந்தவர்கள், உதவியற்றோர் ஏழைகள் ஆகியோர், கடவுள் நம்பிக்கைகளைக் கைக் கொள்கிறார்கள் என் றும், ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

தமிழ் ஓவியா said...


உயிர் நாடி...மதங்களுக்கு உயிர் நாடியா யிருப்பது பிரச்சாரமும், பணமுமே யல்லாமல், அவற்றின் கடவுள் தன்மையோ, உயர்ந்த குணங்களோ அல்லவே அல்ல.
(விடுதலை, 1.4.1950)

தமிழ் ஓவியா said...


தேர்தல் பிரச்சாரத்திற்கான துருப்புச் சீட்டா?


பாரதீய ஜனதாவுக்கு ஏதாவது பிரச்சினை என்னும் தீனி அவசியமாகிறது. அதுவும் அவர்களின் அடிப்படைவாதமான சிறுபான்மையினர் சம்பந்தப் பட்ட பிரச்சினை ஒன்று கிடைத்து விட்டால் அல்வா சாப்பிட்ட மாதிரிதான்.

இந்திய எல்லையில் பாகிஸ்தான் படையினரால் 5 இந்திய இராணுவ வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட் டுள்ளனர். இந்த நிலையில், பாகிஸ்தானுக்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப்புடன், இந்தியப் பிரதமர் பேச்சு வார்த்தை நடத்தக் கூடாது என்று பி.ஜே.பி.யின் அகில இந்தியத் தலைவர் ராஜ்நாத்சிங், அக்கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரான முரளிமனோகர் ஜோஷி போன்றவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த பிஜேபி பிரமுகர்கள் கூட பாகிஸ்தானோடு இந்தியா பேச்சு வார்த்தையில் ஈடுபடுவது இந்தியாவின் சுயமரியாதைக்குக் கேடானது என்றெல்லாம் நீட்டி முழங்கிக் கொண்டு இருக்கிறார்கள்.

பாகிஸ்தானோடு எப்பொழுதுமே பேச்சு வார்த்தை நடத்தக் கூடாது என்று சொல்கிறார்களா? அல்லது இந்தியாவின் சுயமரியாதையைக் காப்பாற்றுவதற்கு ஏதாவது காலக்கெடு நிர்ணயித்துள்ளார்களா? எவ்வளவுக் காலத்துக்குப் பிறகு பாகிஸ்தானோடு பேச்சு வார்த்தை நடத்தினால் இந்தியாவின் சுயமரியாதை காப்பாற்றப்படும் என்று கருதலாம் என்பதுபற்றி திட்டவட்டமாக பிஜேபி தரப்பில் சொல்லப்படவில்லை.
இந்திய எல்லையில் பாகிஸ்தான் மேற்கொண்ட நடவடிக்கையை யாரும் நியாயப்படுத்த முடியாது.

ஆனால் அதே நேரத்தில் இரு நாடுகளுக்கு மிடையே உள்ள பிரச்சினையைப் பேச்சு வார்த்தை யால்தான் தீர்க்கப்பட முடியும் என்பது, ஒப்புக் கொள்ளப்பட்ட ஒரு முறையாகும்.

பாகிஸ்தான் என்பது முஸ்லிம் நாடு என்பதை மனதிற் கொண்டு, அதற்கு எதிர்ப்பான ஒன்றைப் பிரச்சார யுக்தியாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது தான் பிஜேபியின் யுக்தியாகும்.

பிஜேபி மத்தியில் ஆட்சியில் இருந்தபோது நாடாளுமன்ற வளாகத்துக்குள்ளேயே புகுந்து தாக்குதல் நடத்தப்பட்டதுண்டு. இந்திய தரப்பில் ஏழு பேர் கொல்லப்பட்டனர். இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் தீரவிவாதி களால் காந்தகாருக்குக் கடத்தப்பட்டது. தீவிர வாதிகளால் வைக்கப்பட்ட நிபந்தனையை ஏற்று, இந்தியச் சிறையில் இருந்த பயங்கரவாதிகளை விடுதலை செய்து இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சராக இருந்த ஜஸ்வந்த் சிங்கே உடன் சென்று அவர்களைப் பாதுகாப்பாகக் கொண்டு சேர்த்து விட்டு வந்தார்.

இவற்றோடு இணைத்துப் பார்க்கும் போது, இப்பொழுது எல்லையில் நடைபெற்ற நிகழ்வு பெரியது என்று கூறிவிட முடியாது. பி.ஜே.பி. மத்தியில் ஆட்சியில் இருந்தபோது நடைபெற்ற மிக மோசமான அதிர்ச்சியளிக்கக்கூடிய தாக்குதலுக்குப் பிறகு வாஜ்பேயி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பாகிஸ்தானோடு பேச்சு வார்த்தை நடத்தவில்லையா?

அருணாசலப் பிரதேசத்தைச் சேர்த்து சீனா வரைபடம் (ஆஹஞ) வெளியிட்டுள்ளது. விசாக்களை வழங்கிக் கொண்டு இருக்கிறது. எவ்வளவுத் தலைபோகும் பிரச்சினை என்றாலும் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டே தீர்வு காணப்பட வேண்டிய கால கட்டம் இது.
யுத்தத்தின் மூலம்தான் தீர்வு காண வேண்டும் என்று ஆரம்பித்தால், இன்றைய அணுயுகத்தில் வெற்றி என்று சொல்லுவதற்குக்கூட ஒரே ஒரு மனிதன் உயிரோடு இருக்கப் போவதில்லை. இதையெல்லாம் புறந்தள்ளி சிறுபிள்ளைத்தனமாக பிஜேபியின் மூத்த தலைவர்களே பேசுவது அந்தக் கட்சியின் பொறுப்பற்ற தன்மையையும், எதனையும் அரசியலாக்கி இலாபம் என்ற குளிர்காய வேண்டும் என்கிற அவர்களின் குறுகிய சுயநல நோக்கத்தை யும்தான் அப்பட்டமாக வெளிப்படுத்துகிறது.
எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற மனப்பான்மையில், அடுத்த ஆட்சி என்கிற போதை ஏறி பிஜேபி யூகங்களை வகுப்பதில் வெகு மக்கள் ஏமாந்து விடக் கூடாது! கூடாது!!

தமிழ் ஓவியா said...


ஜாதிகள் ஒழிய வேண்டும்! சமத்துவம் மலரவேண்டும்!


ஆசிரியருக்குக் கடிதம்

ஜாதிகள் ஒழிய வேண்டும்! சமத்துவம் மலரவேண்டும்!

தமிழர் தலைவர் அய்யா அவர்களுக்கு வணக்கம்!
15.6.2013-இல் நிறைவேற்றிய திண்டுக்கல் தீர்மானம் மிகவும் அற்புதமான தீர்மானம். விஞ்ஞானமும் நாகரிகமும் வளர வளர அதற் கேற்ற மாற்றங்களைக் கொண்டு வரவேண் டியது நாட்டிற்கு மிகவும் அவசியமான ஒன்றாகும். இந்தியாவில் இந்தியன் இல்லை. தமிழ்நாட்டில் ஒன்று கூடும்போது தமிழன், தனித்தனியாக பிரிந்து செல்லும் போது தமிழன் இல்லை. எல்லாம் இந்த பாழாய்ப் போன ஜாதி வந்து இன்னமும் இந்த நாட்டைக் கேடுகெட்ட நிலைக்குக் கொண்டு செல்லு கிறது. ஜாதி வன்மம் சில அரசியல்வாதி களாலும் தூண்டப்பட்டு கோரத் தாண்ட வமாடுகிறது. இதற்கெல்லாம் முடிவு கட்டும் வகையில் திண்டுக்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

என்னுடைய நீண்டகால அவாவும் இது தான். பள்ளிக்கூடங்களில் மாணவர் சேர்க் கையின் போது, இடஒதுக்கீடு காரணத்திற்காக மட்டுமே ஜாதிப்பெயர்களுக்குப் பதிலாக குறியீடுகளை SC, ST.SC(A). MBC, OBC, OBC(M) போன்று குறிப்பிட வேண்டும் - ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டோரின் குழந்தை களுக்கு ஜாதியற்ற பிரிவினர் I.C. (Quota) என்பதை சிறிய அளவில் தொடங்கி படிப் படியாக உயர்த்தலாம். ஒரே ஜாதியில் திருமணம் புரிந்தோர், மனமாற்றமடையும் போது, அவர்களது குழந்தைகள் ஜாதி யற்றோர் என்று பதிவு செய்யலாம். 69 சதவீத இடஒதுக்கீட்டில் கை வைக்கக்கூடாது. காலப்போக்கில் ஜாதியற்றோர், ஜாதியற்ற பிரிவினர்I.(Inter Caste Quota)சதவீதத்தை அதிகரித்துக் கொண்டே போகலாம். முன் னேறிய வகுப்பினர் ஜாதியற்றோர் பட்டி யலில் விரும்பினால் சேரலாம். முன்னேறிய வகுப்பினருக்கு தனி ஒதுக்கீடு கூடவே கூடாது. 69 சதவீதம் + 31 (ஜாதியற்றோர் + ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டவர்) சதவீதம் என்று அரசு அறிவிக்கலாம். இந்த 31 சதவீதம் காலப்போக்கில் அதிகரித்து 100 சதவீதத்தை எட்டினால, நாட்டில் ஜாதி ஒழிந்து விட்ட தாகக் கருதலாம். இந்த இடஒதுக்கீடு எல்லாத் துறைகளிலும் - நீதித்துறை, அறநிலையத்துறை உட்பட பின்பற்ற வேண்டும்.

நாட்டிற்கு நல்வழிக்காட்டும் தமிழர் தலைவர் அவர்களின் வழிகாட்டுதலோடு, நிறைவேற்றப்பட்டிருக்கும் திண்டுக்கல், தீர்மானம். பாராட்டுக்குரியது. வரவேற்கத் தக்கது. நன்றி! வணக்கம்.

வாழ்க பெரியார்! வாழ்க தமிழர் தலைவர்!

-கா.நா.பாலு (தலைவர், இடைப்பாடி)

தமிழ் ஓவியா said...


தினமணியின் பத்திரிகா தர்மம்

துறைமுகம் - மதுரவாயல் மேம்பாலத் திட்டம் நிறுத்தப்படலாம் என்பது தினமணியின் தலைப்பு (13.8.2013 பக்கம்-4) உள்ளே என்ன தெரியுமா? துறைமுகம் - மதுரவாயல் மேம்பாலச் சாலைத் திட்டத்தில் இப்போதுள்ள நிலையே நீடித்தால் அந்தத் திட்டத்தை நிறுத்தும் நிலைக்கு தேசிய நெடுஞ் சாலைகள் மேம்பாட்டு ஆணையம் தள்ளப்படும் என மத்திய அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இரண்டுக்கும் இடையே உள்ள வேறுபாட்டைக் காணத் தவறக்கூடாது.

தலைப்பு என்ன சொல்லுகிறது? மத்திய அரசே முடிவு செய்திருப்பதாகத் தெரிவிக்கிறது.

உள்ளே செய்தி எப்படி இருக்கிறது... மத்திய அரசு அந்த நிலைக்கு தள்ளப்படுவதாக இருக்கிறது.

இரண்டும் ஒன்றுதானா? முடிவு எடுப்பதற்கும், தள்ளப்படுவதற்கும் இடையே உள்ள வேறுபாடு - தினமணிக்குத் தெரியாதா? இந்த மேம்பாலம் உருவாவதற்கு தடையாக அதிமுக அரசு இருப்பதைத் திசை திருப்பும் வேலையைக் கவனிக்கவும்.

தமிழ் ஓவியா said...


மதுபானம் படைத்து நேர்த்திக்கடனாம்!


சின்னமனூர், ஆக.14- தேனி மாவட்டம், குச்சனூர் சனீஸ்வரர் கோயில் ஆடித் திருவிழாவையொட்டி, உப தெய்வமான சோணை கருப்பசாமி கோயிலில் நடந்த பொங்கல் விழாவில், பக்தர்கள் நள்ளிரவில் கிடா வெட்டி, மதுபாட்டில்களை படைத்து, நேர்த்திக் கடன் செலுத்தினராம். குச்சனூரில் சுயம்பு சனீஸ்வரர் கோயில் ஆடித் திருவிழாவின், 4 ஆவது சனி வாரம் முடிவடைந்துள்ள நிலையில், உப தெய்வமான சோணை கருப்பசாமிக்கு, சிறப்பு செய்யும் பொங்கல் விழா நேற்று (13.8.2013) முன்தினம் நள்ளிரவில் நடந்தது. சனீஸ்வரர் கோயிலுக்கு வரும் பக்தர்கள், சோணை கருப்பசாமியை தரிசித்து, தங்களது வேண்டுதல்களை முன்வைப்பார்களாம். வேண்டுதல் அடுத்த ஆண்டு திருவிழாவிற்குள் நிறைவேறும் என்பது அய்தீகமாம். வேண்டுதல் நிறைவேறியவர்கள், அவரவர் தகுதிக்கு ஏற்ப, ஆட்டு கிடாக்கள், கோழிகள், மதுபாட்டில்களை கோயில் நிர்வாகத்திடம் வழங்குவர். இதன்படி, 10 முதல் 15 கிடாக்கள், 500 கோழிகள், 5000 மதுபாட்டில்கள்வரை படைக்கப்படுகின்றனவாம். நேற்று நடந்த திருவிழாவில் பக்தர்கள் வழங்கிய ஆடு, கோழிகளை அறுத்து, அதன் உறுப்புகளையும், நள்ளிரவில், ஆயிரக்கணக்கான மதுபாட்டில்களையும் கருப்பசாமி முன்படைத்து, சிறப்பு பூஜைகள் நடைபெற்றதாம். பின்னர், மதுபாட்டில்களை உடைத்து, குதிரை சிலையின்கீழ் உள்ள துவாரத்தில் ஊற்றினர். வெட்டப்பட்ட கிடா, கோழி களுடன், நள்ளிரவில் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அசைவ அன்னதானம் நடந்ததாம்.

தமிழ் ஓவியா said...


பதவி ஆசைபதவி ஆசையில் மிதக்கிறவர்கள் எப்படிப்பட்ட அற்ப இழிவான அயோக்கியத்தனமான காரியத்தையும் செய்து வெற்றி பெறவே பார்ப்பார்கள். அவர்களிடம் சுயநலம் தவிர மனிதப் பற்றோ நாட்டுப் பற்றோ சிறிதளவும் காண முடியாது. - (விடுதலை, 3.5.1965)

தமிழ் ஓவியா said...


மோடிக்குப் பொறுப்பில்லையா?


2002 - கோத்ரா ரயில் பெட்டி எரிப்பு என்பதைக் காரணம் காட்டி நரேந்திர மோடி அரசால் கட்ட விழ்த்து விடப்பட்ட திட்டமிடப்பட்ட வன்முறையால் சிறுபான்மை மக்களான முஸ்லிம்கள் கொன்று குவிக்கப்பட்டனர்.

சுதந்திரத்திற்குப் பிறகு மதக் கலவரத்தில் பலியானோர் எண்ணிக்கை என்று பார்க்கும்போது மோடி அரசில் நடத்தப்பட்ட மனித வேட்டைதான் முதல் இடத்தில் இருக்கும்.

மோடி குற்றமற்றவர் என்ற ஒரு பெருமழைப் பிரச்சாரத்தை பார்ப்பன மேல் ஜாதி ஊடகங்கள் செய்துகொண்டு இருக்கின்றன. பண முதலைகளும் மோடியின் பக்கம் வலுவாக நின்று கொண்டுள்ளன.

2002 முதல் குஜராத்தில் நடைபெற்ற வன் முறைக்குக் காரணமான குற்றவாளிகளுக்குத் தண்டனைகள் ஒவ்வொன்றாக நீதிமன்றத்திலிருந்து வந்துகொண்டுள்ளன.
மோடி அமைச்சரவையில் உயர்கல்வித் துறை அமைச்சராக இருந்த மாயாபென் கோட்நானி என்னும் பெண் அமைச்சர் (அவர் ஒரு டாக்டரும்கூட!) பாட்டியா மாவட்டம், நரோடா என்னும் கிராமத்தில் 95 முசுலிம்கள் (குழந்தைகள் 35 பேர்) கொல்லப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியாவார். குற்றம் நிரூ பிக்கப்பட்டு 28 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட் டுள்ளார். அவரோடு மேலும் 31 பேர்களுக்கு ஆயுள் தண்டனை!
இப்படி தண்டனைகள் ஒவ்வொன்றாக வெளி வந்து கொண்டிருக்கின்றன. இன்று ஒரு தகவல்:

குஜராத் மாநில கூடுதல் காவல்துறைத் தலைமை இயக்குநர் (டிஜிபி) பாண்டே இப்பொழுது சிறையில் இருக்கிறார்.

2004 ஆம் ஆண்டில் இஸ்ரத் ஜகான் என்ற பெண் உள்பட நான்கு பேர் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் இந்தப் பாண்டே குற்றவாளி என்கிற அடிப்படையில்தான் இந்தத் தண்டனை; அவரின் பிணை மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.
கோத்ரா சம்பவத்திற்குப் பிறகு அவசர அவசரமாக முதலமைச்சரால் கூட்டப்பட்ட அவசரக் கூட்டத்தில் பங்கேற்ற காவல்துறை உயர் அதிகாரிகள் சிறீகுமார், ஷர்மா, சஞ்சீவி பட் ஆகியோர் மோடி கட்டளை யிட்டதை அம்பலப்படுத்தினரே!
நாளை நடக்கும், கொலை, கொள்ளை, தீ வைப்பு, சூறையாடல் சம்பவங்களின்போது காவல்துறை கண்டுகொள்ளக் கூடாது; தலையிடக் கூடாது என்று முதலமைச்சர் மோடி ஆணையிட்டார் என்று கூறி யுள்ளனரே!

முதலமைச்சர் நரேந்திர மோடி கூட்டிய கூட்டத்தில் கலந்துகொண்டவர் அமைச்சர் ஹிரேன் பாண்டியா. விசாரணை ஆணையத்திடம் கூட்டத்தில் நடந்தவை களைக் கூறியவர் இவர்.

விளைவு என்ன? ஹரேன் பாண்டியா நடைப் பயிற்சியில் ஈடுபட்டு இருந்தபோது படுகொலை செய்யப்பட்டுவிட்டாரே! தன் மகன் படுகொலைக்குக் காரணம் முதலமைச்சர் நரேந்திர மோடிதான் என்று அவரின் தந்தையார், நீதிபதி நானாவதி ஆணை யத்திடமும் கூறியுள்ளாரே!

குஜராத் வன்முறையில் பதிவு செய்யப்பட்ட வழக் குகளின் எண்ணிக்கை 4252; 2000 வழக்குகளை மோடி அரசு விலக்கிக் கொண்டுவிட்டது. அந்த வழக்குகள் மீதும் மீண்டும் புலனாய்வு மேற்கொள்ளப் படவேண்டும் என்று உச்சநீதிமன்றம் அழுத்தமாகக் குட்டு வைத்ததால், அந்த வழக்குகள் பெயர் அளவுக்கு விசாரணைக்கு உட்பட்டுத்தப்பட்டன.
இவ்வளவும் குஜராத் மாநிலத்தில் முதலமைச்சர் மோடியின் காலத்தில்தான் நடைபெற்றது. இதற்கு யார் பொறுப்பு? எனக்குச் சம்பந்தம் இல்லை என்று ஒரு முதலமைச்சர் கூறுவாரேயானால், அவரைவிடப் பொறுப்பற்றவர், கடமை என்ற சொல்லை அசிங்கப் படுத்துபவர் யாராகத்தான் இருக்க முடியும்?

அரியலூரில் ரயில் கவிழ்ந்ததால் மத்திய அமைச்சர்கள் லால்பகதூர் சாஸ்திரியும், தமிழகத் தைச் சேர்ந்த ஓ.வி.அளகேசனும் பதவி விலக வில்லையா?
அந்தப் பண்பாடு பா.ஜ.க.வில் அறவேயில்லை என்பதற்கு மிகப்பெரிய எடுத்துக்காட்டு குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடிதான்.

இந்தத் தன்மையில் உள்ளவர்தான் இந்தியா வுக்குப் பிரதமராக வரக் கங்கணம் கட்டிக் கொண்டு குதிக்கிறார்.

வாக்காளர்கள் ஏமாந்துவிட வேண்டாம்! எச்சரிக்கை!!