Search This Blog

19.8.13

சமுதாயப் புரட்சியாளர்களில் முதலிடம் வகிப்பவர் தந்தை பெரியார்!


  • சமுதாயப் புரட்சியாளர்களில் முதலிடம் வகிப்பவர் தந்தை பெரியார்!
  • சமுதாயத்தின் தலை மகன்களில் ஒருவர் பன்னீர்செல்வம்
இடஒதுக்கீட்டைத் தடுக்க சிலர் வித்தைகளைக் காட்டுகிறார்கள்
அவற்றையும் சந்தித்து முன்னேற வழி வகுப்போம்!
சர். ஏ.டி. பன்னீர்செல்வம் சிலையைத் திறந்து மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் ஆற்றிய உரை
நீடாமங்கலம் ஆக.19- சமு தாயப் புரட்சியாளர்களில் முதன் மையானவர் தந்தை பெரியார் என்று புகழாரம் சூட்டிய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் அவர்கள். இடஒதுக்கீட்டுப் பாதையில்  குறுக்கிட்டுச் சிலர் வித்தைகளைக் காட்டுகிறார்கள். அவற்றையும் சந்தித்து சமூகநீதியை வென் றெடுப்போம் என்றார். நீடாமங் கலத்தையடுத்த வையகளத்தூரில் நீதிக்கட்சித் தலைவர் சர். ஏ.டி. பன்னீர்செல்வம் பார்-அட்-லா அவர்களின் முழு உருவச் சிலையை திறந்து உரையாற்றுகையில் அவர் குறிப்பிட்டதாவது (17.8.2013).

சமுதாயப் புரட்சியாளர்களிலே தந்தை பெரியார் முதலிடம் வகிக்கிறார்

ஆண்டொன்று போனால், வயதொன்று போகும் என்று சொல்வார்கள், அதேபோலத்தான், ஆண்டொன்று போனால், பழைய நினைவுகள் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்துவிடும். நம்முடைய வரலாறு நமக்குத் தெரியாமல் இருக்கக் கூடாது. அந்த வரலாற்றை உருவாக்கி யவர்களுடைய அற்புதமான செயல் கள் நம்முடைய நெஞ்சைவிட்டு அகலக்கூடாது என்பதற்காகத்தான் இதுபோன்ற விழாக்கள் நடைபெறு கின்றன. அந்த வகையிலே, சுதந்திரப் போராட்டக் காலத்தில், அரசியல் விடுதலைக்கு மட்டும் போராடாமல், சமுதாய விடுதலைக்கும் ஒரு போராட்டம் வேண்டும் என்று ஒரு இயக்கம் தமிழகத்திலே உருவாகியது.

அந்த இயக்கத்தினுடைய தனிப் பெரும் தலைவர் தந்தை பெரியார் என்பதிலே யாருக்கும் கருத்து வேறு பாடு இருக்க முடியாது. இன்னும்  சொல்லப்போனால், அகில இந்திய அளவிலே, விரல்விட்டு எண்ணக் கூடிய சமுதாயப் புரட்சியாளர்களிலே தந்தை பெரியார் அவர்கள் முதலிடம் வகிக்கிறார் என்பதையும் யாரும் மறுக்க முடியாது. 

கரும்பு தின்ன கூலி கேட்பார்களா?

அவரை தலைவராக ஏற்றுக் கொண்டு, அந்த இயக்கத்தோடு தன்னை இணைத்துக்கொண்டு, தன்னுடைய வாழ்நாள் முழுவதும் சமுதாய விடுதலைக்காகப் போராடிய மிகப்பெரிய தலைவர்களில் ஒருவர் சர்.ஏ.டி.பன்னீர்செல்வம் அவர்கள். அவருடைய 125ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவைக் கொண்டாடு கிறோம்; நீங்களும் வாருங்கள் என்று அழைத்தால், கரும்பு தின்ன கூலியை யாராவது கேட்பார்களா? ஆகவே தான் மகிழ்ச்சியோடு நான் வந்திருக் கிறேன். என்னுடைய இயக்கத் தோழர் கள் வந்திருக்கிறார்கள். குறிப்பாக, அருமை சகோதரர் திரு.திருநாவுக்க ரசர் அவர்களும், முன்னாள் நாடாளு மன்ற உறுப்பினர் ராஜேந்திரன் அவர்களும் வந்திருக்கிறார்கள்.
திராவிடக் கட்சிகள், தேசியக் கட்சிகள் என்று வழக்கமாக ஒரு கோட்டைக் கிழித்து, இந்தக் கோட் டிற்கு ஒருபுறம் இருப்பவர்கள் திரா விடர்கள்; அந்தப் பக்கம் இருப்ப வர்கள் தேசியம் என்று பிளவுபட்டோ அல்லது பிளக்கப்பட்டோ பேசுவ தும், எழுதுவதும் தமிழகத்தில் ஒரு பழக்கமாக ஆகிவிட்டது. ஆனால், வரலாறு அப்படி சொல்லவில்லை. வரலாறு என்ன சொல்கிறது? நீதிக்கட்சிக்கும், காங்கிரசு கட்சிக்கும் போட்டி என்று சொல்கிறது. திராவி டத்திற்கும், தேசியத்திற்கும் பகை, போட்டி, பொறாமை என்று எந்த வரலாற்றுக் குறிப்பும் கிடையாது. நீதிக்கட்சிக்கும், காங்கிரசு கட்சிக்கும் போட்டி இருந்தது உண்மைதான். நான் இல்லை என்று சொல்லவில்லை. அன்றைய காங்கிரசு கட்சி, அரசியல் விடுதலை முக்கியம் என்று போரா டியது. அன்றைய நீதிக்கட்சி சமுதாயப் புரட்சி முக்கியம் என்று போராடியது.
ஒரு மனிதனைப் பார்த்து, இடது கண் முக்கியமா? வலது கண் முக் கியமா? என்று யாராவது கேட்டால், கேட்பவன்தான் முட்டாள். இன்று அந்தப் போராட்டங்கள் எல்லாம் முற்றுப் பெற்று, ஒரு நிலையை அடைந்து, சுதந்திர நாட்டிலே, ஓரளவு சமுதாயப் புரட்சி ஏற்பட்ட நாட்டிலே வாழ்ந்து கொண்டி ருக்கும் நாம், திரும்பிப் பார்க்கும் பொழுது, அரசியல் விடுதலை முக்கிய மான குறிக்கோளா? சமுதாயப் புரட்சி முக்கியமான குறிக்கோளா? என்று கேள் வியை கேட்பது கிடையாது; அப்படிக் கேட்டால், நாம்தான் முட்டாள். இரண் டும் தேவை; இரண்டும் முக்கியமாகும்.

அந்த வகையில், அந்தக் காலத்திலே வாழ்ந்தவர்கள், அவரவர்களுக்கு எது முக்கியமாகப்பட்டதோ, சிலருக்கு அரசியல் விடுதலை முக்கியம் என்று நினைத்தவர்கள், காங்கிரசு இயக்கத்திலே தன்னை இணைத்துக் கொண்டனர்.
சிலர் இல்லை, இல்லை, அரசியல் விடுதலை மட்டும் கிடைத்தால் போதாது. சமுதாயத்திலே ஒரு புரட்சி ஏற்பட வேண்டும்; சமுதாயத்திலே ஒரு மாறுதல் ஏற்படவேண்டும்; சமுதாயத்திலே ஜாதி யின் பெயரால், மதத்தின் பெயரால் இருக் கக்கூடிய ஏற்றத்தாழ்வுகள் ஒழிய வேண் டும்; அதுதான் முக்கியம் என்று போராடி யவர்கள் தங்களை நீதிக்கட்சியிலே இணைத்துக் கொண்டார்கள்.
ஆக, நீதிக்கட்சிக்கும், காங்கிரசு கட்சிக்கும் போட்டி நடந்ததேயொழிய, திராவிட இயக்கத்திற்கும், தேசிய இயக் கத்திற்கும் போட்டி, பொறாமை, பகை என்பது கிடையாது என்பதை நான் வலி யுறுத்திச் சொல்லக் கடமைப்பட் டுள்ளேன்.
இரண்டு இயக்கங்களுக்கும் உள்ள வேறுபாடுகளை அவர் வலியுறுத்தவில்லை!
இன்னும் சொல்லப்போனால், ஒரு முறை தந்தை பெரியார் அவர்கள் உரையாற்றும்பொழுது சொல்கிறார், அரசியலிலே எங்களைப் பிற்போக் காளர்கள் என்று சிலர் சாடுகிறார்கள்? நாங்கள் எந்த வகையில் பிற்போக் காளர்கள். அரசியல் துறையில் காங்கிரசுக் காரர்கள் ஆங்கிலேயர்கள் அந்நியர்கள்; அவர்கள் இந்நாட்டைவிட்டு விரட்டப் படவேண்டும் என்று சொன்னால், நாங்கள் அதனை வேண்டாம் என்றா சொல்கிறோம்? காங்கிரசு பூரண சுயாட்சி வேண்டும் என்று சொன்னால், நாங்கள் கூடாது; கால் சுயாட்சி, அரை சுயாட்சியா வேண்டும் என்றா சொல்கிறோம்? காங்கிரசுகாரர்கள் குடிமக்களுக்கு வரி போடக்கூடாது என்றால், நாங்கள் வரி போட்டுத்தான் ஆகவேண்டும் என்றா சொல்கிறோம்? காங்கிரசுக்காரர்கள் மக்கள் எல்லாம் எழுத, படிக்கத் தெரிந்து கொள்ளவேண்டும் என்று சொன்னால், இல்லை, இல்லை அது தப்பு, ஒரு ஜாதியினர் மட்டும்தான் படிக்க வேண்டும்; மற்றவர்கள் படிப்பது குற்றம் என்றா சொல்கிறோம்? காங்கிரசுக் காரர்கள் மக்கள் எல்லாம் கோவிலுக்குள் யாதொரு தடையுமின்றி நுழையலாம் என்று சொன்னால், நாங்கள் அதை தவறு என்று சொல்கிறோமா?

காங்கிரசுக்காரர்கள் இந்த நாட்டில் வரி கொடுக்கும் சகல ஜாதி, மத வகுப்பு களுக்கும், நிர்வாகத்திலும், நீதியிலும்,
பதவியிலும் சம உரிமை அளிக்கப்படவேண்டும்; அதற்குள்ள குறைகள் தகர்க்கப்படவேண்டும் என்று சொன்னால், நாங்கள் அதைக் கூடாது என்றா சொல்கிறோம் என்று இரண்டு இயக்கங்களுக்கும் உள்ள ஒற்றுமைகளை வலியுறுத்தினாரே ஒழிய, இரண்டு இயக்கங்களுக்கும் உள்ள வேறுபாடுகளை அவர் வலியுறுத்தவில்லை.

இன்னும் சொல்லப்போனால், இரண்டு இயக்கங்களுக்கும் நிறைய ஒற்றுமை இருக்கிறது. அந்த ஒற்றுமைதான் பல நேரங்களில், இரண்டு இயக்கங்களையும் ஒன்று சேர்க்கிறது. இரண்டு இயக்கங்களையும் நெருங்கி வரச் செய்கிறது. சில நேரங்களில் இரண்டு இரண்டு இயக்கங்களும் நெருங்கி வருகின்றன; சில நேரங்களில் இரண்டு இயக்கங்களும் விலகி நிற்கின்றன. ஆனால், விலகி நிற்கும் நேரத்தில், திராவிடத்திற்கும், தேசியத்திற்கும் பகை என்று யாரும் கருதக்கூடாது என்று நான் மெத்த அன்போடும், பணிவோடும் கேட்டுக் கொள்ளக் கடமைப்பட்டுள்ளேன்.

படிப்பறிவினை நாம் கற்றுக்கொள்ளவேண்டும்!

சர்.ஏ.டி.பன்னீர்செல்வம் அவர்களைப்பற்றிய வரலாற்றுக் குறிப்பினை எல்லாம் இங்கே எடுத்துரைத்தார்கள். குறிப்பாக, திராவிடர் கழகத் தலைவர் பெரியவர் வீரமணி அவர்களும், அருமைச் சகோதரர் திருநாவுக்கரசு அவர்களும் பல வரலாற்றுக் குறிப்புகளைச் சொன்னார்கள், அருமைத் தம்பி ராஜேந்திரன் அவர்களும், டாக்டர் கனிமொழி அவர்களும் தங்களுடைய நேரடி அனுபவங்களையெல்லாம் இங்கே பகிர்ந்து கொண்டார்கள். 

அவற்றையெல்லாம் இங்கே விரிவாகச் சொல்லவேண்டிய அவசியம் இல்லை. அதற்கான கால அவகாசமும் இல்லை. ஆனால், ஒன்றிரண்டு செய்திகளை மட்டும் நான் உங்களுக்குச் சொல்லவேண்டும்.
முதல் செய்தி, அந்தக் காலத்திலேயே, சர்.ஏ.டி. பன்னீர்செல்வத்தினுடைய தந்தையார் அவர்கள், தன்னுடைய மூன்று மகன்களையும் எப்படி வளர்த்தார்? எப்படி படிக்க வைத்தார்? அதிலிருந்து என்ன படிப்பறிவினை நாம் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதை நான் சொல்ல விரும்புகிறேன்.
மூத்த மகன் பொறியாளர்; பணியாற்றச் சென்றது உத்தரப்பிரதேச மாநிலம்; இரண்டாவது மகன் மருத்துவர்; புகழ் பெற்ற மருத்துவர்; சென்னையில் கண் மருத்துவத்துறையில் மிகவும் புகழ் பெற்ற மருத்துவர் ஆவார். மூன்றாவது மகன் வழக்கறிஞர்; சர்.ஏ.டி.பன்னீர்செல்வம் அவர்களை அந்தக் காலத்திலேயே இங்கிலாந்திற்கு அனுப்பி, பாரிஸ்டர் பட்டம் பெற்றவர்.

கல்வி முக்கியம்; கல்வியைவிட முக்கியமானது ஒன்றுமில்லை.

ஆக, நான் சொல்வது, 20 ஆம் நூற்றாண்டு தொடக்கம்; 20 ஆம் நூற்றாண்டு தொடக்கத்தில், அன்றைய ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில், திருவாரூருக்கும், நீடாமங்கலத்திற்கும் இடையில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் பிறந்த ஒருவர், ரயில்வே துறையில் எழுத்தராகப் பணியாற்றியவர்; பிறகு கிராம முன்சீப்பாகப் பணியாற்றியவர். தன்னுடைய மூன்று மகன்களுக்கும் கல்வி முக்கியம் என்பதை வலியுறுத்தி,, அன்று எல்லோராலும் ஏற்றுக்கொள் ளப்பட்ட மூன்று முக்கிய துறைகளில், ஒன்று, மருத்துவத் துறை; இரண்டு, நீதித்துறை; மூன்று பொறியியல் துறை. இம்மூன்று துறைகளிலேயே மூன்று மகன்களையும் புகுத்தி, அதிலே அவர்களை தலைசிறந்த படிப்பாளிகளாக உருவாக்கி, தலை சிறந்த குடிமக்களாக உருவாக்கினார் என்றால், நூறாண்டுகள் கழித்தும், இன்னும் பல சமுதாயங் கள் கல்வியினுடைய முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்ளவில்லையே என நான் உண்மையாக வருத்தப்படுகிறேன். கல்வி முக்கியம்; கல்வியைவிட முக்கியமானது ஒன்றுமில்லை. எல்லோருக்கும் அந்தக் உயர்ந்த கல்வி கிடைக்கவேண்டும் என்பதற் காகத்தான், இங்கே தொடர்ந்து வரும் அரசுகள் பல காரியங்களைச் செய்து வருகின்றன.
பெருந்தலைவர் காமராசர் அவர்கள் தமிழ கத்திலே கல்வித் துறையிலே பெரிய புரட்சியினை ஏற்படுத்தினார்; மதிய உணவுத் திட்டம் வந்தது; சத்துணவுத் திட்டமாக உருவாகியது; பிறகு கல்விக் கடன் திட்டம் என்று ஒரு மகத்தான திட்டத்தை உருவாக்கி, இன்று 50 ஆயிரம் கோடி ரூபாய் நாடு முழுவதும் கல்விக் கடனாகப் பெறப்பட்டிருக் கிறது. கல்வியை சட்ட உரிமையாக்கி இருக்கிறோம்; எந்தக் குழந்தையும் பள்ளிக்குப் போகாமல் இருக்கக்கூடாது என்று பல வகையிலே நம்முடைய அரசுகள் கல்விக்கு முக்கியத்துவம் தருகின்றன.

ஆனால், இன்னும் சில சமுதாயத்தினர் கல்வியினு டைய முக்கியத்துவத்தை உணராமல் இருக்கிறார் களே என்பதற்காக நான் கவலைப்படுகிறேன், வருந்துகிறேன்; கல்வி முக்கியம் என்பதை சர்.ஏ.டி .பன்னீர்செல்வம் அவர்களுடைய தந்தையார் உருவாக்கிய அந்தப் பரம்பரையில் இருந்து நாம் உணர்ந்துகொள்ளவேண்டும்.

இட ஒதுக்கீடு இல்லை என்றால், எப்படி  வாய்ப்புகளைப் பகிர்ந்தளிக்க முடியும்?

இரண்டாவது செய்தி, கல்வி முக்கியம் என்றால், அந்தக் கல்வியினுடைய உண்மையான பயன் கிடைக்கவேண்டும் என்றால், எல்லோருக்கும் அந்த வாய்ப்புகள் பகிர்ந்தளிக்கப்படவேண்டும். பள்ளிக் கூடங்களிலே, கல்லூரிகளிலே, குறிப்பாக, மருத்துவக் கல்லூரியிலே, பொறியியல் கல்லூரி யிலே, உயர் பட்டப் படிப்பு நிறுவனங்களிலே, இட ஒதுக்கீடு இல்லை என்றால், எப்படி அந்த வாய்ப்புகளைப் பகிர்ந்தளிக்க முடியும்?

ஒருபுறத்தில், நம்முடைய பிள்ளைகளை 10 ஆவது படிக்க வைத்து, 12 ஆம் வகுப்புவரை படிக்க வைக்கிறோம். கல்லூரி படிப்பையும் முடிக்கிறார்கள். ஆனால், உயர் படிப்புகளில், இட ஒதுக்கீடு வேண்டுமா? வேண்டாமா? என்ற சர்ச்சையில், இட ஒதுக்கீடு கூடாது என்று சொல்பவர்கள் அன்றும் இருந்தார்கள்; இன்றும் சிலர் இருக்கிறார்கள். நான் இட ஒதுக்கீடு வேண்டும் என்று சொல்கிறேன். இட ஒதுக்கீடு வேண்டாம் என்று சொல்பவர்கள், எல்லா வகையான வித்தைகளையும் கையாள்கிறார்கள். அய்யா வீரமணி அவர்கள் சொன்னார்கள், சில வங்கிகளில் நம்முடைய பிள்ளைகளுக்கு கல்விக் கடன் வழங்குவதில்லை என்று சொன்னார்கள். நான் அதற்காக வருத்தமடைகிறேன். அது ஒரு வித்தை; ஒரு லட்சத்திற்கும் மேல் வங்கிக் கிளைகள் உள்ளன; ஒவ்வொரு வங்கிக் கிளையிலும் ஒரு அதிகாரி இருக்கிறார். நான் ஒரு லட்சம் அதிகாரிகளையும் கட்டி வைக்க முடியாது. ஆனால், ஒரு வங்கிக் கிளையில் இருக்கக்கூடிய ஒரு அதிகாரி, கல்விக் கடன் கொடுப்பதில், உயர்ந்த ஜாதி, பிற்படுத் தப்பட்ட ஜாதி, தாழ்த்தப்பட்ட ஜாதி என்று பேதம் பார்த்து, கல்விக் கடன் தந்தால், உயர்ந்த ஜாதியினருக்குக் கல்விக் கடன் கிடைக்கிறது; பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட ஜாதியினருக்குக் கல்விக் கடன் கிடைக்கவில்லை என்றால், இது நம்முடைய இட ஒதுக்கீடு கொள்கையை முறியடிப்பதற்கான ஒரு வித்தை; அதிலே ஒரு வித்தைதான் நீதிமன்றத்தை அணுகுவது.

ஒரு நீதிமன்ற தீர்ப்பு வந்து அதில் நுழைந்து...

நாம் சட்டங்களை வடிக்கிறோம்; விதிகளைப் போடுகிறோம்; திடீரென்று ஒரு நீதிமன்ற தீர்ப்பு வந்து அதில் நுழைந்து, நம்முடைய சட்டத்தை, நம்முடைய விதியை முனை மழுங்கச் செய்கிறது. அகில இந்திய மெடிக்கல் சயின்ஸ் (எய்ம்ஸ்) என்று மிகப்பெரிய உயர்கல்வி மருத்துவ நிறுவனம் ஒன்று டில்லியில் இருக்கிறது. அதில் தொடர்ந்து ஒரு வழக்கு; ஸ்பெஷாலிட்டி; சூப்பர் ஸ்பெஷா லிட்டி; அதாவது, எம்.பி.பி.எஸ்.,சை, எம்.டி.,யைத் தாண்டி ஸ்பெஷாலிட்டி; சூப்பர் ஸ்பெஷாலிட்டி. அதிலே இட ஒதுக்கீடு வேண்டுமா? வேண்டாமா? என்பது வழக்கு. இது ஒன்றும் புதிய வழக்கு அல்ல; ஏற்கெனவே தொடரப்பட்ட வழக்குதான். அந்த வழக்கில்திடீரென்று ஒரு தீர்ப்பு வெளிவருகிறது.

ஸ்பெஷாலிட்டி, சூப்பர் ஸ்பெஷாலிட்டி

அந்தத் தீர்ப்பு என்ன சொல்கிறது. ஸ்பெஷாலிட்டி, சூப்பர் ஸ்பெஷாலிட்டி, அதாவது எம்.பி.பி.எஸ்., அதிலே அல்ல; அதைத் தாண்டி எம்.டி.,  அதிலே அல்ல; அதனையும் தாண்டி ஸ்பெஷாலிட்டி, சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஆகிய துறைகளில், சாதாரணமாக இட ஒதுக்கீடு கூடாது என்று அந்தத் தீர்ப்பு சொல்கிறது. அந்தத் தீர்ப்பு சரியா? இல்லையா? என்பதை நாம் விவாதிக்கலாம்.
அந்தத் தீர்ப்பை சொன்னார்களே, அதோடு நிறுத்திக் கொள்ளலாம் அல்லவா! கேட்கப்பட்ட கேள்வி, ஸ்பெஷாலிட்டி, சூப்பர் ஸ்பெஷா லிட்டியில் இட ஒதுக்கீடு செல்லுமா? செல்லாதா? இதற்கு ஆம் என்றும் பதில் சொல்லலாம்; இல்லை என்றும் பதில் சொல்லாம்.

மூன்று நீதிபதிகளிலே, ஸ்பெஷாலிட்டி, சூப்பர் ஸ்பெஷாலிட்டிலே இட ஒதுக்கீடு கூடாது என்று சொன்னார்கள்; அந்தத் தீர்ப்பு அதோடு நின்றுவிடவில்லை.

தீர்ப்பினுடைய கடைசி இரண்டு பத்திகளில், இந்த வழக்கு, ஸ்பெஷாலிட்டி, சூப்பர் ஸ்பெஷாலிட்டி பொறுத்த வழக்கு, இதில் நாங்கள் முன்னுதாரணத்தை வைத்து, முக்கோலை தீர்ப்பு சொல்லியிருக்கிறோம். ஆனால், பொறியியல் துறை, மருத்துவத் துறை இன்னும் பல துறைகளில் இட ஒதுக்கீட்டின் காரணமாக, தரம் குறைந்துவிடுகிறது என்று நாங்கள் கவலைப்பட்டு, இந்தத் தரக்குறைவை நிறுத்துவதற்காக அரசு வழிவகைகளைக் கண்டு, அதற்கான காரியங்களைச் செய்யவேண்டும் என்று கூறுகிறோம் என்று, தேவையில்லாமல், இரண்டு பத்திகளில் சொல்லியுள்ளார்கள். அதன் காரணமாக, நாடு முழுவதும் கொந்தளிப்பு ஏற்பட்டுவிட்டது.

நீங்கள் கேட்கின்ற இடத்தில் இருக்கிறீர்கள்;  கோபப்படலாம்; நான் பேசுகின்ற இடத்தில் இருக்கின்றேன்; அதனை அந்நீதிபதிகள் எழுதவேண்டிய அவசியமும் கிடையாது; அந்தக் கேள்வி எழவும் இல்லை; அப்படி எழுந்தால், அதற்கு ஏற்கெனவே 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பளித்து விட்டது. அந்த 9 நீதிபதிகள் அமர்வு தீர்ப்பின்படி, எல்லாக் கல்லூரிகளிலும், அரசு நடத்தக்கூடிய அனைத்துக் கல்லூரிகளிலும், அரசு நிதியுதவி பெறக்கூடிய அனைத்துக் கல்லூரிகளிலும் இட ஒதுக்கீடு இருக்கிறது. திடீரென்று இரண்டு பத்திகள், ஒரு 150 வார்த்தைகளை வைத்து, நாட்டிலே 10, 15 ஆண்டுகளாக ஏற்பட்டிருந்த ஒரு முன்னேற்றத் தினை, தடை போட்டு நிறுத்திவிடலாம் அல்லது முனை மழுங்கச் செய்துவிடலாம் என்று ஒரு தீர்ப்பு வந்தால், சிலருக்குக் கோபம் வருகிறது; சிலருக்கு வருத்தம் ஏற்படுகிறது. நீங்கள் கேட்கின்ற இடத்தில் இருக்கிறீர்கள்; ஆகவே கோபப்படலாம்; நான் பேசுகின்ற இடத்தில் இருக்கின்றேன்; ஆகவே வருத்தம்தான்பட முடியும்.
அரசியல் சாசனத்தை மீண்டும் திருத்துவது என்று நம்முடைய அரசு முடிவெடுத்துள்ளது.

ஆகவே, இதற்கு ஒரு வழிவகை காணவேண்டும் என்பதற்காகத்தான் நம்முடைய அரசு தெளிவான முடிவை எடுத்திருக்கிறது. மீண்டும் நீதிமன்றத்தினை அணுகி, நீங்கள், உங்கள் தீர்ப்பின் பிற்பகுதியில் கூறியுள்ளவை தேவையற்ற வார்த்தைகள்; அந்த வார்த்தைகளை, அந்தத் தீர்ப்பிலிருந்து நீக்க வேண்டும். அந்தத் தீர்ப்பு, எந்தக் கேள்வி எழுப்பப் பட்டதோ, அந்தக் கேள்விக்கு மட்டும்தான் நீங்கள் தீர்ப்பு அளிக்கவேண்டுமே தவிர, எழுப்பப்பட்ட கேள்விக்கு அப்பால், தேவையில்லாத ஒரு பொருளை எடுத்துக்கொண்டு, தேவையில்லாத ஒரு கருத்துக்களைச் சொல்லி, அரசின் நடவடிக்கை களை நீங்கள் தடை செய்தது தவறு; எனவே, அந்தப் பாராக்களை நீக்கவேண்டும் என்று மறுஆய்வு மனுவை தாக்கல் செய்தது. அந்த மனுவினை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டு, தன்னுடைய தீர்ப்பினை மறு ஆய்வு செய்து, நாம் விரும்பும் தீர்ப்பு வந்தால் நல்லது; வரவில்லை என்றால், அரசியல் சாசனத்தை மீண்டும் திருத்துவது என்று நம்முடைய அரசு முடிவெடுத்துள்ளது.

முதல் திருத்தத்திற்கு ஆதரவாக, நாடு முழுவதும் கருத்தை உருவாக்கியவர் தந்தை பெரியார்

அரசியல் சாசனத்தின் முதல் திருத்தத்தினைப் பற்றியெல்லாம் இங்கே சொன்னார்கள்; முதல் திருத்தத்திற்கு ஆதரவாக, நாடு முழுவதும் கருத்தை உருவாக்கியவர் தந்தை பெரியார். அந்த முதல் திருத்தத்தினைக் கொண்டுவர வேண்டும் என்று, சட்ட வல்லுநர்களைக் கலந்து, அதனை வடித்து, டில்லிக்கு எடுத்துச் சென்றவர் பெருந்தலைவர் காமராசர். அந்த முதல் திருத்தத்தினை ஏற்றுக் கொண்டு, நாடாளுமன்றத்தில் திருத்தத்தினை முன்மொழிந்து, அரசியல் சாசனத்தை முதன் முதலாகத் திருத்தியவர் பண்டிதர் ஜவகர்லால் நேரு.

தந்தை பெரியாரும், பெருந்தலைவர் காமரா சரும், பண்டிதர் ஜவகர்லால் நேரும், 1951 ஆம் ஆண்டு, சண்பகம் துரைராஜன் என்ற பெண் தொடர்ந்த வழக்கில் தரப்பட்ட தீர்ப்பினை முறியடிப்பதற்காகக் கொண்டு வந்த திருத்தத் தைப்போல, இப்போது, ஏறத்தாழ 62 ஆண்டு களுக்குப் பிறகு, இன்னொரு திருத்தத்தினைக் கொண்டுவர வேண்டும் என்றால், பரமபத விளையாட்டா நாம் விளையாடிக் கொண்டிருக் கிறோம்? 62 ஆண்டுகளுக்கு முன்னால் அரசியல் சாசனத்தைத் திருத்தி, இந்த திசையில்தான் அது பயணப்படவேண்டும். பிற்படுத்தப்பட்டவர்கள், தாழ்த்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு அரசியல் சட்டத்திலே இருக்கிறது; அதுபோல, சமுதாய ரீதியாக, கல்வி ரீதியாக பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு என்பது நம்முடைய நாட்டிற்குத் தேவை என்று, 1951 ஆம் ஆண்டு அரசியல் சாசனத்தில் முதல் திருத்தம் செய்யப்பட்டது. மீண்டும் மீண்டும் அதேபோன்ற திருத்தங்கள்; மீண்டும் மீண்டும் அதையொட்டியே திருத்தங் களைச் செய்யவேண்டிய அவல நிலை ஏற்பட்டுள் ளதற்காக நான் வருந்துகிறேன். ஆனால், நம்முடைய அரசு தெளிவாக இருக்கிறது. உச்சநீதிமன்றத் தினுடைய அண்மைக்கால தீர்ப்பு மறு ஆய்வு செய்யப்படாவிட்டால், கண்டிப்பாக அரசியல் சாசனம் திருத்தப்படும் என்பதிலே நாங்கள் தெளிவாக இருக்கிறோம்; திருத்தவேண்டும் என்பதிலே நாங்கள் தெளிவாக இருக்கிறோம் என்பதை இங்கே நான் சொல்லக்கடமைப்பட்டு இருக்கிறேன்.

சர்.ஏ.டி.பன்னீர்செல்வம் அவர்களுடைய வாழ்க்கை வரலாற்றைப்பற்றி விரிவாகச் சொல் வதற்கு இங்கே வாய்ப்பில்லை. ஆனால், அவர்கள் எங்களுக்கு நிறைய செய்திகளைத் தந்திருக் கிறார்கள்; அவற்றை எல்லாம் படிப்பதற்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அவற்றை எல்லாம் படித்துப் பெரும் பயன் அடைந்தேன் என்று சொல்ல நான் கடமைப்பட்டிருக்கிறேன். சர்.ஏ.டி.பன்னீர்செல்வம் அவர்கள் இளம் வயதிலேயே அவர் மறைந்துவிட்டார்; அவர் மறையும்பொழுது அவருக்கு வயது 52. அவர் இங்கிலாந்திற்கு புதிய பொறுப்பினை ஏற்பதற்காக செல்லும்பொழுது, விமான விபத்தில் அவர் மரணமடைந்தார். பேரறிஞர் அண்ணா அவர்கள் தீட்டிய தலையங்கம் சர்.ஏ.டி.பன்னீர்செல்வம் இங்கிலாந்திற்குப் புறப்படுவதற்கு முன்னால், பேரறிஞர் அண்ணா அவர்கள் ஒரு தலையங்கம் எழுதினார், அதிலே, சர்.ஏ.டி.பன்னீர்செல்வம் அவர்களுடைய பெருமைகளையெல்லாம் குறிப்பிட்டுவிட்டு, நமது சர்.செல்வம் அவர்கள், பொறுப்புள்ள பதவிக்கு அழைக்கப்பட்டிருக்கிறார்; பொறுப்புள்ள நிர்வாகம் அவருக்குப் புதிதா?
எனக்கு வாதாடத் தான் தெரியுமே தவிர, எனக்கு நாடாளத் தெரியாது என்று கூறவேண்டிய நிலையில் உள்ளவர் அல்லர் என்றெல்லாம் சொல்லிவிட்டு, இறுதியில், பேரறிஞர் அண்ணா அவர்கள் சொல்கிறார்கள், பொறுப்பும், புகழும் பொருந்திய பதவி அவருக்கு வழங்கப்பட்டு, அவர் இங்கிலாந்து சீமை சென்று, இந்திய அரசின் ஆலோசகராக வீற்றிருக்கப்போவதைக் கேட்டு, நாம் மிகமிக மகிழ்ந்தோம். சர்.பன்னீர்செல்வம், தமிழர்களின் செல்வம்; அவருக்குக் கிடைத்துள்ள பதவி தமிழருக்கு அளிக்கப்பட்டுள்ள பதவி; அவருடைய உயர்வு தமிழர் உயர்வு; அவர் மகிழ்வு தமிழர் மகிழ்வு; எனவே, அவரை வாழ்த்துகிறோம் எனில், தமிழ்நாட்டாரை வாழ்த்துகிறோம் என்று பொருள் என்று முடிக்கிறார். பெரும் பேற்றினை எனக்குத் தந்த அனைவருக்கும்  நன்றி
அந்த வகையிலே, தமிழகத்தின் தலைசிறந்த அரசியல் தலைவர்களில் ஒருவர்; சமுதாய இயக்கத்தினுடைய தலைமகன்களில் ஒருவர்; சமுதாயப் புரட்சிக்கு வித்திட்டவர்; தன்னுடைய வாழ்நாளில் சமுகப் புரட்சிக்காக, அனைத்து சமுதாயமும் நீதி பெறவேண்டும் என்பதற்காக, தன்னுடைய வாழ்நாளை அர்ப்பணித்தவர்; கடுமையான உழைப்பாளியாக இருந்து, அந்த இயக்கத்தை வளர்த்தவர் சர்.ஏ.டி.பன்னீர்செல்வம் அவர்களுக்கு நான் என்னுடைய மரியாதையை செலுத்தி, அவருடைய உருவச் சிலையை திறந்து வைக்கக்கூடிய பெரும் பேற்றினை எனக்குத் தந்த அனைவருக்கும் தலைவணங்கி நன்றி சொல்லி, சர்.ஏ.டி.பன்னீர்செல்வம் அவர்களுடைய புகழ் வாழ்க; புகழ் என்றென்றைக்கும் நிலைத்து நிற்க என்று சொல்லி விடை பெற்றுக்கொள்கிறேன்.

வணக்கம்.
- இவ்வாறு மத்திய அமைச்சர் ப.சிதம்பம் அவர்கள் உரையாற்றினார்.

                    -------------------------"விடுதலை” 19-8-2013

28 comments:

தமிழ் ஓவியா said...


செய்தியும் சிந்தனையும்பு(யு)த்தி!

செய்தி: பிஜேபி வெற்றி பெற சிறுபான் மையினரின் ஆதரவும் தேவை!
-நரேந்திரமோடி

சிந்தனை: அடடே! எப்படிப்பட்ட ஞானோ தயம்! இது தேர்தல் கால பு(யு)த்தி என்று யாருக் குத் தான் தெரியாது!

தமிழ் ஓவியா said...


இதுதான் பிஜேபிமத்திய பிரதேசத்தில், பிஜேபி ஆட்சியில் இருக் கிறது. பழங்குடியின மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராக இருந்தவர் விஜய்ஷா.

முதல் அமைச் சரின் மனைவியை இவர் ஆபாசமாக விமர்சித்தார் என்பதற்காகப் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

இப்பொ ழுது மீண்டும் அவர் அமைச்சர் ஆக்கப்பட்டார்.

முதல் அமைச்சர் மனை வியைப் பற்றி சொன்ன ஆபாசம் என்னாயிற்றோ!

தமிழ் ஓவியா said...


பட்டுப் புடவையை இரவல் கொடுத்து பாயைத் தூக்கிக் கொண்டு அலைந்த கதை கச்சத்தீவை ஒப்படைக்க முடியாதாம்! இலங்கை அமைச்சர் பெரீஸ் திமிர்


புதுடில்லி, ஆக.19- கச்சத்தீவை இந்தியா விடம் திரும்ப ஒப்ப டைக்கும் பேச்சுகே இடமில்லை என்று இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜி.எல். பெரீஸ்தெரிவித்தார்.
இலங்கைத் தலை நகர் கொழும்பில் காமன் வெல்த் நாடுகளின் தலைவர்கள் கூட்டம் வரும் நவம்பர் மாதம் 15 முதல் 17-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

காமன்வெல்த் நாடு கள் கூட்டத்தில் பங் கேற்க வருமாறு இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே சார்பில், பிரதமர் மன்மோகன் சிங்கை அழைப்பதற் காக பெரீஸ் ஞாயிற்றுக் கிழமை டில்லி வந்தார். அவர் மன்மோகன் சிங்கை திங்கள்கிழமை காலையிலும் வெளி யுறவு அமைச்சர் சல் மான் குர்ஷிதை பிற்பக லிலும் சந்தித்துப் பேச வுள்ளார்.

இது தொடர்பாக டில்லியில் செய்தியாளர் களிடம் பெரீஸ் ஞாயிற் றுக்கிழமை கூறியது:

"காமன்வெல்த் நாடு கள் அமைப்பில் அங் கம் வகிக்கும் ஆசியா வின் மிகப் பெரிய நாடு இந்தியா. அதன் பிரத மர் என்ற முறையில் கொழும்பில் நடை பெறும் கூட்டத்தில் மன்மோகன் சிங் பங் கேற்பதை முக்கியமான தாகக் கருதுகிறோம்.

கச்சத்தீவு விவகா ரம்: கச்சத்தீவு ஒப் பந்தம் தொடர்பாக தமிழகக் கட்சிகள் பிரச்சினை எழுப்புவது சரியல்ல. அது முடிந்து போன விவகாரம்.

கச்சத்தீவை இலங்கை வசம் ஒப்படைக்கும் ஒப்பந்தத்தில் முறைப் படி அப்போதைய இந் தியப் பிரதமர் இந்திரா காந்தி தான் கையெழுத் திட்டுள்ளார். அதன்படி, சர்வதேச எல்லைக்குள் பட்ட கச்சத் தீவு இலங் கையின் கட்டுப்பாட் டில் உள்ளது.

மேலும், ஒப்பந்தத் தில் இலங்கை மீனவர் களுக்கும், இலங்கைக் கும் கச்சத் தீவில் உள்ள உரிமைகள் தெளிவாகக் குறிப்பிடப் பட்டுள்ளன. இந்த விஷ யத்தில் இந் திய அரசின் நிலை தெளி வாக உள்ளது. எனவே, கச்சத்தீவை இந்தியா விடம் திரும்ப ஒப் படைக்கும் பேச்சுக்கே இடமில்லை.

மீனவர்கள் விவ காரம்: இலங்கை கடல் பகுதிக்கு வெகு அருகே, கரையில் இருந்து 700 மீட்டர் தொலைவு அள வுக்குத் தமிழக மீனவர் கள் வந்து மீன்பிடிக்கின் றனர். ஏற்கெனவே, இலங்கையில் உள்நாட் டுப் போரின் போது கடற்புலிகளால் (விடு தலைப்புலிகள் அமைப்பின் கடல் பிரிவு) இலங்கைத் தமி ழக மீனவர்கள் பாதிக் கப்பட்டனர். போருக் குப் பின்பு அவர்கள் சார்ந்துள்ள கடல் பகு திக்குத் தமிழக மீன வர்கள் வருவதால், தங் களின் மீன்பிடி வாழ்வா தாரம் பாதிக்கப்படுவ தாக எங்கள் நாட்டு மீன வர்கள் கருதுகின்றனர்.

மனிதாபிமானம் தொடர்புடைய இரு நாட்டு மீனவர்கள் விஷ யத்தில் இரு தரப்பும் தங்களுக்குள்ளாகவே பரஸ்பரம் பேச்சு நடத்தி தீர்வு காண முயல வேண் டும் என்றார் பெரீஸ்.

தமிழ் ஓவியா said...


காரணம்வட நாட்டு மக்களையும், தென்னாட்டு மக்களையும், அவர்களின் திறமை, அபிலாஷைகளையும் புரிந்து கொள்ள முடியாதவாறு பார்ப்பனர்கள் சூழ்ச்சி செய்து கொண்டே வந்திருக்கிறார்கள். பத்திரிகைகள் என்ற ஒரே ஆயுதம் அவர்களிடம் சிக்கிவிட்டிருப்பதே அதற்குக் காரணம்.
(விடுதலை, 28.8.1963)

தமிழ் ஓவியா said...


சபாஷ் நிதி அமைச்சர் ப. சிதம்பரம்!

இந்தியாவின் நிதி அமைச்சராக இருக்கக் கூடிய ப. சிதம்பரம், தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் - தமிழர்! அந்த வகையில் நமக்குப் பெருமை உண்டு.
நீடாமங்கலத்தையடுத்த வையகளத்தூர் எனும் ஊரில், நீதிக்கட்சித் தலைவராக விளங்கி அரும் பெரும் சாதனைகளைக் குவித்த - பார்ப்பனர் அல்லாதார் சமூகத்திற்குப் பல நன்மைகளைச் செய்த பெருமகன் சர். ஏ.டி. பன்னீர்செல்வம் அவர் களின் சிலையைத் திறந்து வைத்து, உரையாற்றி யுள்ளார், இந்தியாவின் நிதி அமைச்சர் (17.8.2013).

அந்நிகழ்ச்சியில் பங்கேற்று அவர் ஆற்றிய உரையில் சில முக்கியமான கருத்துகளும், அறி விப்புகளும் சமூகநீதிச் சிந்தனையாளர்கள் மத்தி யில் மகிழ்ச்சியை ஏற்படுத்தக் கூடியவையாகும்.

முதலாவதாக உயர் கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு கிடையாது என்று உச்சநீதிமன்றம் சில வாரங்களுக்குமுன் அளித்த தீர்ப்பைப் பற்றியதாகும்.

அந்தத் தீர்ப்பு இந்தியா முழுமையும் உள்ள சமூக நீதியாளர்கள் மத்தியிலும் ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியிலும் கடுமையான எதிர்ப்பு அலைகளைத் தோற்றுவித்தது.
திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் டில்லியில் போராட்டம் நடத் துவோம் என்று அறிவித்தார். நாடாளுமன்றத் திலும் உறுப்பினர்கள் கொந்தளித்து எழுந்தனர் - நாடாளுமன்றமே முடங்கி விட்டது. அதனைத் தொடர்ந்து, மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில்சிபல் அவையில் முக்கிய அறிவிப்பினை உறுதியைக் கொடுத்தார். உச்சநீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு மத்திய அரசின் சார்பில் தாக்கல் செய்யப்படும்; அதிலும் நியாயம் கிடைக்காவிடின் இந்திய அரசமைப்புச் சாசனத்தில் திருத்தம் கொண்டு வரப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

ஏ.டி. பன்னீர்செல்வம் அவர்களின் சிலை திறப்பு விழாவில், மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் அவர்களும் அதற்கு உறுதியளித்து, உரை யாற்றியது வரவேற்கத்தக்கது.

தன் பொது வாழ்வை சமூகநீதிக்காக ஒப்படைத்த தலைவர் ஏ.டி. பன்னீர்செல்வம் பார்-அட்-லா அவர்களின் சிலை திறப்பு விழாவில் அதுவும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் கலந்து கொண்டு விழாவில் உரையாற் றுகையில் அந்த நிகழ்ச்சியில் அறிவித்தது மிக மிகப் பொருத்தமே!

இரண்டாவதாக இடஒதுக்கீடு கூடாது என்பவர்கள் யார் என்பதை நம்மைப் போல் வெளிப்படையாகக் கூறாவிட்டாலும், கேட்பவர்கள் புரிந்து கொள்ளும் வகையில் அடையாளம் காட்டிப் பேசினார். பல யுக்திகளைக் கையாளக் கூடியவர்களாகவும், நீதிமன்றத்திற்கும் சென்று காரியங்களைச் சாதிக்கக் கூடியவர்களாகவும் அவர்கள் இருக்கிறார்கள். நிருவாகத்தில் முக்கிய பொறுப்புகளில் அவர்கள் இருந்து கொண்டு அந்த வேலையைச் செய்கிறார்கள் என்பதை அவருக்கே உரித்தான முறையில் நயமாகச் சுட்டிக் காட்டி யுள்ளார்.

தமிழ்நாட்டு மக்கள் இதனைப் புரிந்து கொள்ளக் கூடியவர்களே; அந்த அளவுக்குத் தந்தை பெரியாரால், திராவிடர் இயக்கத்தால், நம் மக்கள் பக்குவப்படுத்தப்பட்டவர்கள் தானே!

காரைக்குடியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் (16.3.2013) ஏடுகள் எல்லாம் அவாள் ஆதிக்கத்தில் இருப்பதைச் சுட்டிக்காட்டி நிதி அமைச்சர் ப. சிதம்பரம் அவர்கள் பேசியிருந் ததையும் இந்த நேரத்தில் நினைவுபடுத்திக் கொள்ளலாம்.

பொதுவாக, தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றாலே, டில்லியிலே ஒரு கணிப்பு உண்டு. அவர்கள் பெரியாரின் தாக்கத்தைப் பெற்றவர்கள் - பார்ப்பனர் அல்லாதார் எனும் உணர்வை ஏதோ ஒரு வகையில் உள் வாங்கிக் கொண்டவர் களாகவே இருப்பார்கள் என்ற கணக்கு - மதிப்பீடு உண்டு.

நிதி அமைச்சர் ப. சிதம்பரம் அவர்களின் உரையில் அந்த உணர்வு மேலிட்டது - வரவேற்கத் தக்கது. உண்மை நிலையைத்தான் அவருக்கே உரிய தனித்தன்மையில் பேசி இருக்கிறார். அதற் காக அவரைப் பாராட்ட கடமைப்பட்டுள்ளோம்; மிக முக்கியமான பொறுப்பில் இருப்போர்க்கு இத்தகு உணர்வு இருந்தால் கோடானு கோடி மக்களின் மத்தியிலே நல்ல நம்பிக்கை ஏற்படும் அல்லவா!

தமிழ் ஓவியா said...


பைலட்டாக விரும்பிய எனது கனவு நிறைவேறவில்லை : அப்துல்கலாம்


புதுடில்லி, ஆக.19- இந்திய விமானப் படை பைலட்டாக விரும் பியதாகவும், ஆனால், அந்த முயற்சி தோல்வியில் முடிந்ததாகவும் முன் னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் தெரிவித்துள்ளார்.

"கனவுகளை நனவாக்குவதற்கான எனது பயணம்' என்ற அவரது புதிய புத்தகத்தில் இந்தத் தகவலை தெரி வித்துள்ளார். புத்தகத்தில் அவர் இது தொடர்பாக தெரிவித்திருப்பதாவது:

இந்திய விமானப்படையில் பைலட்டாக வேண்டும் என்பது எனது கனவாக இருந்தது. எனக்கு டேராடூனில் உள்ள இந்திய விமா னப்படை அலுவலகத்திலிருந்தும், டில்லியில் உள்ள பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் டில்லி யில் தொழில்நுட்ப மேம் பாடு மற்றும் உற்பத்தி இயக்குநரகம் (டிடிடிபி) ஆகியவற்றிலிருந்து நேர் முகத் தேர்வில் கலந்து கொள்வதற்கான அழைப்பு வந்தது.

இதில், டிடிடிபி நடத் திய தேர்வில் எளிதாக வெற்றி பெற்றேன். ஆனால், இந்திய விமானப் படை நடத்திய தேர்வில் பங்கேற்ற 25 பேரில் நான் 9-ஆவது இடத்தைப் பிடித்தேன்.

மொத்தம் 8 இடங்களே இருந்த தால், விமானப்படை பைலட்டாக வேண்டும் என்ற எனது கனவு தோல் வியடைந்தது' என குறிப் பிட்டுள்ளார் கலாம்.
147 பக்கங்கள் கொண்ட இந்தப் புத்தகத்தில், தன் மீது ஆழமான அன்பு வைத்திருந்தவர்களைப் பற்றி கலாம் எழுதியுள் ளார். தன் தந்தை ஒரு படகை உருவாக்கியதைப் பார்த்த அனுபவம், தனது 8 வயதில் நாளிதழ்கள் விற்பனையில் ஈடுபட்ட அனுபவம் உள்ளிட்ட பல விஷயங் களை இந்நூலில் குறிப் பிட்டிருக் கிறார் கலாம்

தமிழ் ஓவியா said...


பகுத்தறிவு சமுதாயம் மலர...


மானமிகு ஆசிரியர் அவர்களுக்கு, வணக்கம்

நூலகத்தில் படித்துக் கொண்டி ருந்த போது, நண்பர், ஒரு பார்ப்பன இதழைத்தந்து என்னய்யா இது... பெரிய மோசடியா இருக்கு. இதைப் படித்துப் பாருங்கள் என கோபம் கொப்பளிக்கக் கூறினார்.

பார்த்தேன், படித்தேன் அதில் திராவிட மாயை - ஒரு பார்வை - 73 அபத்தமான கொள்கை என்ற தலைப் பில் ஒரு கட்டுரை. தென்னாட்டில் சாதி வேற்றுமையே இல்லாமல் இருந்ததென்றும், வட நாட்டு ஆரியர் களாகிய பிராமணர்கள் அதைக் கொண்டு வந்து புகுத்தி விட்டார்கள் என்றும் சிலர் கூறுகிறார்கள்.

இதைப் போன்ற அபத்தமான கொள்கை வேறு எதுவும் இருக்க முடியாது என ஒரு பச்சைப் புளுகை கல்கி எழுதியதாக மேற்கோள் காட்டி எழுதப்பட்டி ருந்தது!
அதை என்னிடமிருந்து வாங்கிப் படித்த இன்னொரு தோழர், அது உண்மை தானே சார்! எனக்கேட்க.. நான் உடனே அவரிடம் கூறினேன். இது ஒரு பார்ப்பனர் ஏடுதானே? இது ஒரு பொது நூலகம் தானே? மக்கள் வரிப்பணத்தில், இயங்குவது தானே? அப்படியானால், இந்த நூலகத்திற்கு ஏன், பகுத்தறிவு இதழ்களான விடுதலை வருவதில்லை? உண்மை வருவதில்லை? முரசொலி வருவதில்லை? தினமணி, தினமலர் விகடன், கல்வி மற்றும் பக்தியின் பெயரால் பகுத்தறிவைப் பாழ்படுத்தும் யாருமே பிரித்துக்கூட பார்க்காமல் மூலையில் கிடக்கிற ஏராளமான மாத, வார, நாளிதழ்கள் மட்டும் மேசையில் கிடக்கிறதே... இதற்கு என்ன பொருள்? அவைகள் திராவிடர் நலன்காக்கும் ஏடுகள்! இவைகள் பார்ப்பனர்களை கொழுக்க வைக்கும் ஏடுகள். இது தானே பொருள்? நன்றாக சிந்தித்துப் பாருங்கள்! என்றேன்.

அதோடு மட்டுமல்ல, மானமிகு கவிஞர் கலி.பூங்குன்றனார் எழுதிய பார்ப்பனர் புரட்டுக்குப் பதிலடி! என்ற என்னிடமிருந்த நூலை அவரிடம் தந்து இதையும் படியுங்கள் உங்கள் சந்தே கத்தைத் தீர்க்கும் பதில்கள் இதில் ஆதா ரங்களோடு விளக்கப்பட்டிருக்கின்றன என வேறொரு நண்பருக்கு எடுத்துச் சென்ற புத்தகத்தை அவரிடம் தந்தேன்! நூலகத்தில் (அது கிராம நூலகமாக இருந்ததால் எல்லோருமே எனக்கு அறிமுகமானவர்களாக இருந்ததால் தான் நூலகரும் எனக்கு நண்பர் என்பதாலே தான் இப்படி மனம் திறந்து பேச முடிந்தது) இது கிடைக்குமா அய்யா? என ஒருவர் கேட்க திராவிடர் ஆண் டால் இது கிடைக்கும்! என்றேன். அனை வரும் சிரித்தனர்! அந்தச் சிரிப்பிலே... சிந்தனையும் கலந்திருந்தது!

ஆம்! கொள்கைப் பரப்புரையே... நமது தலையாய தொண்டறமாக இருந்தால் விரைவிலே தமிழினம் மீண்டும் விழித் தெழும்! மறுநாள் மாலை அந்த புத்தகத் தோடு வந்த நண்பர், அய்யா இது போன்ற நூல் வேறு ஏதாவது இருந்தால் தாருங் கள் எனக்கேட்க என்னிடமிருந்த அய்யா, ஆசிரியர், அண்ணா, கலைஞர் ஆகி யோர் நூல்களைக்காட்டி ஒவ்வொன் றாகப் படியுங்கள் என்று சொன்னேன். ஒரு நூலே ஒருவரது உள்ளத்தை மாற்றும் திறன் படைத்தது என்றால் ஏனைய நூல்கள்?
போகின்ற கூட்டங்களிளெல்லாம், அய்யா புத்தகங்களை மலிவு விலையில் விற்பனை செய்து வந்ததும், இப்பொ ழுது தாங்களும் அதனை பின்பற்றி வருவதும் எதற்கென்பது இது போல், அனுபவப்பட்டவர்கள் நன்கு உணர் வார்கள்! படித்து தெளிவும் பெறு வார்கள்.

எழுத்தும், பேச்சும், ஏடுகளும் தான் திராவிடர் இயக்கங்களின் ஆணிவேர் என்பதை இளைஞர்கள் புரிந்து கொள்வார்களேயானால் பார்ப் பனீயம் வெகு விரைவில் இந்நாட்டை விட்டு ஒழியும்! பகுத்தறிவு சமுதாயம் மலரும் என்பதில் சிறிதும் அய்ய மில்லை!

- நெய்வேலி க.தியாகராசன், கொரநாட்டுக் கருப்பூர்

தமிழ் ஓவியா said...


ஆடி மூடநம்பிக்கை ஆயுளை முடித்ததே!


ஆம்பூர், ஆக. 19- ஆம்பூர் அருகே கார்மீது லாரி மோதியதில், காரில் பயணம் செய்த ஒரே குடும் பத்தை சேர்ந்த மூவர் இறந்தனர்.
சென்னை, ராஜகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயச்சந்திரன் (வயது 55). இவரது மனைவி சாந்தி (வயது 45). இவர்களுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். மகள் பிரியங்கா (வயது 19) சென்னையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வருவதாக கூறப்படுகிறது. இவர் களது மகன் கார்த்திக் (வயது 25) என்பவருக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

பெங்களூருவைச் சேர்ந்த கீதா (வயது 23) என்பவரை கார்த்திக் திருமணம் செய்து கொண்டார். ஆடி மாதம் வந்ததை அடுத்து கார்த்திக் குடும்பத்தினர் கீதாவை தாய் வீட் டிற்கு அனுப்பி வைத்திருந்தனர். இந்நிலையில் ஆடி மாதம் முடிந்த தால், கீதாவை தாய் வீட்டிலிருந்து கூட்டி வர நேற்று கார் ஒன்றில் ஜெயச்சந்திரன், சாந்தி, பிரியங்கா, மற்றும் கார்த்திக் ஆகிய நால்வரும் பெங்களூவுருக்கு பயணித்தனர். காரை கார்த்திக் ஒட்டி சென்றார்.

பிறகு பெங்களூருவிலிருந்து கீதாவை அழைத்துக் கொண்டு மீண்டும் சென்னைக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். நேற்று அதிகாலை சுமார் 4 மணி அளவில் கார் ஆம்பூரை கடந்து வாணியம்பாடியை நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென்று கார் கட்டுப் பாட்டிழந்து சாலையை பிரித்திருக் கும் சிறிய தடுப்புச் சுவர்மீது ஏறியது. அப்போது எதிரே சென்னையி லிருந்து பெங்களூர் சென்று கொண் டிருந்த கண்டெய்னர் லாரிமீது மோதியது. இதில் கார் அப்பளம் போன்று நொறுங்கியது. மேலும் காரில் பயணித்த சாந்தி சம்பவ இடத்திலேயே இறந்தார்.

தகவல் அறிந்த ஆம்பூர் காவல் துறையினர் விரைந்து வந்தனர்.

விபத்தில் காயமடைந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட் டனர். ஆனால் கொண்டு செல்லும் வழியிலேயே பிரியங்கா மற்றும் கீதா ஆகியோர் மரணம் அடைந்தனர். ஜெயச்சந்திரனும், கார்த்திக்கும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து ஆம்பூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

தமிழ் ஓவியா said...


மூழ்குவதும் சாவதும் தொடர் கதையா?சுற்றுப் பயணம் செய்வோர், நீர் நிலை களில் மூழ்குவதும், சாவதும் தொடர் கதையாக உள்ளனவே.

கும்பகோணம் அருகே, குணசீலம் கோயிலுக்கு வந்த மூன்று இளைஞர் கள் காவிரியில் குளிக்கச் சென்று, சுழலில் சிக்கி, மரணம் அடைந்தனர். பழவேற்காடு ஏரியில் சாவு; சென்னை கோவளம் கடலில் குளிக்கச் சென்றோர் சாவு; என்று தொடர்கின்றனவே - இதன்மீது அரசு கவனம் செலுத்து கிறதா? தடுப்பு நடவடிக்கையை மேற் கொள்கிறதா? என்று தெரியவில்லை. மனித உயிர்கள் அதுவும் பொறியியல் படிக்கும் இளைஞர்கள் மரணம் என்பது எத்தகைய கொடுமை!

தமிழ் ஓவியா said...


சிறுமியைச் சீரழித்த சாமியார்


சென்னை, ஆக.19-மெரினாவில் 6 பேரால் பாலியல் வன்முறை செய் யப்பட்ட சிறுமி பர பரப்பு வாக்கு மூலம் அளித்துள்ளார். சிறு மியை பாலியல் தொழி லுக்கு தள்ளிய சித்தர் கைது செய்யப்பட்டுள் ளர். சிபிசிஅய்டி காவல் துறையினரிடம், சிறுமி கொடுத்த வாக்குமூலம்:

என் பெயர் சுதா (14). (பெயர் மாற்றப்பட் டுள்ளது) தந்தை இறந்து விட்டார். என் அம்மா திருமலர் என்னை வளர்த் தார். கடந்த ஆண்டு 7 ஆம் வகுப்பு படித்தேன். படிப்பு சரியாக வர வில்லை என்று கூறி வயா சர்பாடி பி.வி. காலனி 24 ஆவது தெருவில் ஜோதிட நிலையம் மற்றும் ஆசி ரமம் அமைத்து குறி சொல்லும் அறவழி சித்தர் (48) என்பவரிடம் என் அம்மா அழைத்து சென்றார்.

அவர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஒருநாள் நடு இரவு பூஜை செய் வதாகக் கூறி, தனி அறை யில் என் ஆடைகளை கழற்றி உடலில் விபூ தியை தடவி, தீர்த்தம் கொடுத்தார். நான் மயங்கி விழுந்ததும், என்னை அவர் பாலியல் வன்முறை செய்து விட் டார்.

அப்போது, என் அம்மா வீட்டுக்கு வெளி யில் காத்திருந்தார். நடந்த சம்பவத்தை அம்மாவிடம் கூறினேன். அதற்கு அவர், சித்தர் எது செய்தாலும், நமக்கு நன்மைதான் செய்வார் என்று கூறினார். இதன் பின்னர், அடிக்கடி என்னை சித்தரிடம் என் அம்மா அழைத்து செல்வார்.

அவரும் என்னை அடித்து மிரட்டி பல முறை பாலியல் வன் முறை செய்தார். பின்னர், சென்ட்ரல் ரயில் நிலை யம் அருகே கடிகார கடை வைத்து இருக்கும் குமார் என்பவரிடம் ஒப்படைத்தார். அவரும் என்னை அடித்து பல முறை பாலியல் வன் முறை செய்தார். பின்னர், அவர் என்னை செல்வம் என்பவரிடம் ஒப்ப டைத்தார்.

செல்வம் குடிபோதை யில் என்னுடன் பல முறை தவறாக நடந்து கொண்டார். பின்னர் செல்வம், அவரது மனைவி ஜெயா, அவரது தோழி லதா ஆகியோர் என்னை வைத்து பாலி யல் தொழிலில் ஈடுபடுத் தினர்.

இந்த நிலையில், கடந்த மாதம் செல்வத் தின் வீட்டில் இருந்த போது, அதிகாலையில் எழுந்து, அவர் சட்டைப் பையில் இருந்து ரூ.300 அய் எடுத்துக்கொண்டு, ரயில் மூலம் திருப்பதி சென்றேன்.

கையில் வைத்திருந்த பணத்தில் மாங்காய் வாங்கி, கோயில் வளாகத்தில் வியாபாரம் செய்தேன். நாள் ஒன் றுக்கு ரூ.200வரை சம் பாதித்தேன். ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு, இர வில் சாமி தரிசனம் செய் யும் வரிசையில் சென்று தூங்கிவிடுவேன்.

தினமும் சாமி தரி சனத்துக்கு இரவில் வரி சையில் நிற்பதை பார்த்த அங்குள்ளவர்கள், சந் தேகப்பட்டு என்னை காவல்துறையில் பிடித் துக் கொடுத்து விட்ட னர். அவர்கள் மூலம் சைல்டு ஹெல்ப் லைன் நிர்வாகிகளிடம் ஒப்ப டைக்கப்பட்டு, சென் னைக்கு அழைத்து வரப் பட்டேன். என்னை அம் மாவிடம் ஒப்படைக்கா தீர்கள். அவர் என்னை மீண்டும் பாலியல் கும்ப லிடம் விட்டு விடுவார். என்னை காப்பாற்றுங் கள். இவ்வாறு சிறுமி சுதா கூறி, கதறி அழுத தாக காவல்துறையினர் கூறினர்.

இதையடுத்து, சிபிசி அய்டி விபச்சார தடுப்பு பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அறவழி சித்தரையும் கைது செய்து தீவிர விசா ரணை நடத்தினார்கள்.

பின்னர் அவரை சைதாப்பேட்டை 4வது குற்றவியல் நடுவர் நீதி மன்றத்தில் (பொறுப்பு) நீதிபதி ஆர்.சங்கர் முன்பு காவல்துறையினர் ஆஜர்படுத்தினர். இதை யடுத்து அறவழி சித்தர் 15 நாள் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக் கப்பட்டார்.

தமிழ் ஓவியா said...


சிறுநீரக பிரச்சினை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்


சிறுநீரகத்தில் கற்கள் உள்ளவர்கள் உணவு கட்டுபாட்டை மேற்கொள்வது அவசியம். எந்த உணவுகளை சாப்பிடவேண்டும் என்பதை தெரிந்து கொண்டு சாப்பிட்டால் சிறுநீரக கல் பிரச்சினையை சரிசெய்து விடலாம். எந்தெந்த உணவுகளை சாப் பிடலாம் என்பதை பார்க்கலாம்

காரட், பாகற்காய், இளநீர்: இதில் பொட்டாசியம், மெக்னீஷியமும் அதிகம் உள்ளன. இவை சிறுசீரகக் கற்களின் முன்னோடிகளான படிகங்களைக் கரைத்து படிய விடாமல் தடுக்கும் சக்தியுடையது. கேரட், பாகற்காய்களில் பொதுவாக சிறுநீரகக் கற்களின் படிகங்களை தடுக்கும் பலவித தாது உப்புக்கள் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

வாழைப்பழம், எலுமிச்சை: இவற்றில் விட்டமின் சத்தும், சிட்ரேட் சத்தும் அதிகம் உள்ளன. இவை சிறு நீரகக் கற்களின் ஒரு முக்கிய அங்கமான ஆக்சலேட் என்ற இரசாயனத்துடன் சேர்த்து அதைச் சிதைத்து படிய விடாமல் தடுத்து சிறுநீரகக் கற்கள் உருவாகாமல் தடுக்க வல்லவை.

அன்னாச்சி பழம்: இதில் சிறுநீரக கற்களின் கருவாக இருக்கும் ஃபைப்ரின் எனப்படும் சத்தை சிதைக்கும் நொதிகள் உள்ளன. இது சிறுநீரக கற்களை கரைக் கும் தன்மை கொண்டுள் ளது.

கொள்ளு, பாதாம் பருப்பு, பார்லி ஓட்ஸ்: கொள்ளில் உள்ள சில நீர்ப் பொருட்கள் சிறுநீரகக் கற்கள் உருவாவதை தடுக்கும் திறன் கொண்டவை. நார்ச்சத்து உள்ள உணவுகள். பாதாம் பருப்பு, பார்லி ஓட்ஸ் போன்ற வற்றில் சிறுநீரக கற்கள் வராமல் தடுக்கும் பலவித சத்துகள் உள்ளன. பொதுவாக சில காய்கறிகள், பழங்களைத் தவிர தினமும் உணவில் நார்ச்சத்து உள்ள காய்கறிகள், பழங்கள், முழு தானியங்களை அதிகமாக சேர்த்துக் கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.கற்கள் வருவதையும் தடுக்கும்.

உப்பு: உணவில் உப்பையும் பெருமளவு குறைத்துக் கொள்வது சிறுநீரில் கால்சியம் சத்து வெளியாவதை தடுத்து சிறுநீரகக் கற்கள் வரும் வாய்ப்பை குறைப்பதாக இப்போது கண்டறியப்பட்டுள்ளது.

தமிழ் ஓவியா said...


மூடநம்பிக்கை மோசடி ஒழிப்புப் பிரிவு ஒன்றை தமிழ்நாடு அரசு ஏற்படுத்துவது அவசியம்!


ஜோதிடம், குறி சொல்லுதல் என்ற பெயரில் போதை ஊசிகளைப் போட்டு பெண்களை மயக்கும் - சீரழிக்கும் கும்பல்!

மூடநம்பிக்கை மோசடி ஒழிப்புப் பிரிவு ஒன்றை தமிழ்நாடு அரசு ஏற்படுத்துவது அவசியம்!

அறவழி சித்தர் என்ற பெயரில் உள்ள சாமியார் - ஜோதிடரின்

பின்னணியில் உள்ள முக்கிய புள்ளிகள் தப்பி விடக் கூடாது!

தமிழ்நாடு அரசுக்குத் தமிழர் தலைவர் வேண்டுகோள்!

8ஆம் தேதி தமிழர் பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தை எழுச்சியுடன் நடத்திட அணி திரண்டு வாரீர்! வாரீர்!!

அறவழி சித்தர் என்ற பெயரில் ஜோதிடம் கூறுவதாகத் தம்மை விளம்பரப்படுத்திக் கொண்டு இளம் பெண்களை விபச்சாரத்துக்குப் பயன்படுத்தும் பேர் வழி கைது செய்யப்பட்டுள்ளது வரவேற்கத் தக்கது என்றாலும் - இந்த ஆசாமியின் பின்னணியில் உள்ள பெரும் புள்ளிகளும் கண்டுபிடிக்கப் பட வேண்டும் என்றும் மூடநம் பிக்கை ஒழிப்பு என்ற ஒரு தனிப் பிரிவை தமிழக முதலமைச்சர் உருவாக்க வேண்டும் என்றும் திரா விடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

சென்னையில் அறவழி சித்தர் என்ற பெயரில் ஜோதிடத் தொழில் செய்த ஒரு மோசடிப் பேர் வழி, இளம் பெண்களை மயக்கியதும், தாயாரும் இதில் உடந்தையாய் இருந்ததும் மகாமகா நம்ப முடியாத மானக்கேடு! - விபச்சாரம் முதலியவற்றில் ஈடுபடுத்தி, கூட்டு வன்புணர்ச்சி, அதையே தொழிலாக்கி, கமிஷன் பெற ஏஜெண்டுகளை அமர்த்தி, இப்படி பல பெண்களை மயக்க ஊசிகளைப் போட்டு, அருவருப்பும் ஆபாசமும் வழியும் இத்தொழிலை நடத்தி வந்துள்ளான். (இதுபற்றி பிற ஏடுகளில் வந்துள்ள கொடுமையான செய்தியை அப்படியே 3ஆம்பக்கத்தில் வெளியிட்டுள்ளோம்). பாராட்டத்தக்க காவல்துறையின் நடவடிக்கை!

பாதிக்கப்பட்ட இந்தப் பெண் திருப்பதிக்கு ஓடிப்போய் மாங்காய் வியாபாரம் செய்ததையும் கண்டுபிடித்து, இந்த ஜோதிட வேடமணிந்த மானிடக் கழுகு மற்றும் இவன் கூட்டாளிகள் உட்பட 5 பேர்களை கைது செய்துள்ளார்கள் - தமிழக காவல்துறையினர்.

தமிழகக் காவல்துறைத் தலைவர் (டி.ஜி.பி.) திரு. ராமானுஜம் அவர்கள் ஆணைப்படி, சி.பி.சி.அய்.டி. விபச்சாரத் தடுப்புப் பிரிவு காவல்துறை யினர் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர் என்பது மிகவும் பாராட்டத் தகுந்தது.

டி.ஜி.பி. அவர்களும், காவல்துறை யினரும் இதில் மிகவும் கடுமையாக இருக்க வேண்டும் என்பதே நமது வற்புறுத்தல் - வேண்டுகோள் ஆகும்.
வரும் செய்திகளைப் பார்க்கும்போது, இதில் ஒரு பெரிய ராக்கெட்டே இருந்திருக்கும் போலிருக்கிறது.

முக்கிய புள்ளிகள்சிக்குவார்களா?

அறவழி சித்தர் (செருப்புக்கு பட்டுக்குஞ்சம் கட்டியது போன்று பெயர்! - மகா வெட்கக்கேடு) வீட்டைச் சோதனையிட்டு, ஆபாச சி.டி. உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களையும் கைப்பற்றியுள்ளனர் சி.பி.சி.அய்.டி. காவல் துறையினர்.

தமிழ் ஓவியா said...


அந்த ஆவணங்களின் மூலம் அவருக்குப் பல அரசியல் பிரமுகர்கள், பணபலம் படைத்தவர்கள் சினிமா பிரபலங்களுடன் தொடர்பிலிருப்பது தெரிய வந்துள்ளது. அவர்கள் பட்டியலையும் தயாரித்து வரு கின்றனர் என்பது மிகவும் நம்பிக்கையூட்டக் கூடிய செய்தியாகும்.

தேவை - மூடநம்பிக்கை ஒழிப்புப் பிரிவு!

இத்தகைய ஜோதிடர்கள், குறி சொல் லுதல் என்ற போர்வையில் உள்ளவர்கள், மயக்க மருந்து, போதை ஊசி போடும் கும்பல் போன்றவர்களையெல்லாம் கண்டுபிடிக்க ஒரு தனிப்படை காவல் பிரிவை - Q பிராஞ்ச் போல மூடநம்பிக்கை ஒழிப்பு - மோசடி தடுப்புப் பிரிவு என்ற ஒரு பிரிவை தமிழக அரசும் முதல் அமைச்சரும் உருவாக்க முன் வர வேண்டும்; இது அவசர அவசியமாகும், அப்படிச் செய்வதின்மூலம்தான் அப்பாவி இளம் பெண்கள், அறியாமையில் உழலும் இல்லத்தரசிகள் பலரும்கூட ஏமாற்றப்பட்டு, வாழ்க்கையில் தவறான திசைக்கும், நிலைமைகளுக்கும் தள்ளப்படும் கொடுமை யிலிருந்து காப்பாற்ற முடியும்.
வந்தபின் தண்டிப்பதைவிட, வரும் முன்னர் தடுப்பதே சாலச் சிறந்தது.

இந்திய அரசியலமைப்புச் சட்டம் என்ன கூறுகிறது?

இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் உள்ள அடிப்படைக் கடமைகளில் ஒன்று - முக்கியமானது.

அறிவியல் மனப்பான்மையை வளர்ப்பது, கேள்வி கேட்டு ஆராய்வது, மனிதநேயம், சீர்திருத்தம் என்பது ஆகும்.

Article 51a(h) “It shall be the duty of every citzen to develop scientific temper, sprit of enquiry, humanism, and reform” என்பதை நடைமுறைப்படுத்த இப்படி ஒரு தனி அடிப்படைப் பிரிவு பெரிதும் உதவிடக் கூடும்.

கடந்த திமுக ஆட்சியில் அறிமுகப் படுத்தப்பட்ட சமூக சீர்திருத்தக் குழு இவ்வாட்சியில் என்னாயிற்றோ தெரிய வில்லை!
தமிழ்நாடு அரசு மற்றும் காவல்துறையின் கவனத்துக்கு...

இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பனிப்பாறையின் முனைதான் (Only tip of the ice berg) இனிமேல் தான் அரசியல் திமிங்கலங்களும், சுறாக்களும் சிக்குவர்; அவர் களைத் தப்பிக்க விட்டு விடக் கூடாது; மக்கள் இப்போது கூர்ந்து கவனிக்கின்றனர் என்பதை அரசும், காவல் துறையும் கவனத்தில் கொள்ளுதல் முக்கியம்.

கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

சென்னை
20.8.2013

தமிழ் ஓவியா said...


அட, கடவுளே!பிகார் - சாகர் சாவில் இருந்து பாட் னாவை நோக்கி நேற்று வந்து கொண்டிருந்த விரைவு ரயில் வண்டியில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற 37 பேர் பலியானார்கள் என்ற செய்தி குருதியை உறை யச் செய்யக் கூடிய அதிர்ச்சியூட்டுவதாகும்.

இவர்கள் யார் என்றால் தமரா என்னும் ஊரில் உள்ள பிரசித்தி பெற்ற சிவன் கோயி லுக்குச் சாமி கும்பிடச் சென்ற சிவபக்தர் களாம்.

இந்தச் செய்தியை விடுதலை சொல்ல வில்லை. அனேகமாக எல்லா ஏடுகளும், தொலைக்காட்சிகளும் கூட்டியோ குறைக் கவோ இல்லாமல் உள்ளது உள்ளபடியே தெரிவித்துள்ளன.

சில வாரங்களுக்கு முன் உத்தரகாண்டில் வழி படச் சென்ற பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கடும் மழை யிலும், வெள்ளத்திலும் சிக்கிப் பரிதாபகரமான முறையில் தங்கள் இன்னுயிரைப் ப(றி)லி கொடுத்தனர்.

பெங்களூருவில் ஆடி மாதத்தில் அம்மா வீட்டுக்குச் சென்ற புதுமண மகளை, ஆடி முடிந்து அழைத்து வரு கையில் மூன்று பெண் கள் உட்பட சாலை விபத்தில் மரணத்தைத் தழுவிக் கொண்டனர் என்பது செய்தி.

பழனி முருகனுக்குக் காவடி எடுத்துச் சென்ற பக்தர்கள் பலி என்று மற்றொரு பக்கத்தில் செய்தி!

இப்படி நாள்தோறும் செய்திகள்.

இவற்றையெல்லாம் படித்து பகுத்தறிவு வாதிகளாகிய நாங்கள் மனம் மகிழ்ந்து போய் விடவில்லை. கடவுள் மீது நம்பிக்கை கொண்ட பக்தர்கள் - கடவுளைக் கும்பிடுவதாக சென்ற நிலையில் பலியாகி இருக்கிறார்களே! இதற் குப் பிறகாவது கடவுள் நம்மைப் படைப்பித்தார் காப்பாற்றுகிறார் - அவர் கருணையே கருணை என்று நம்பும் மூடத்தனத்திலிருந்து அப்பாவித்தனத்திலிருந்து விடுபட மாட்டார்களா? என்ற பரிதாப உணர் வோடு, மனிதநேய நெகிழ்ச்சியோடுதான் இதனை அணுகுகி றோம்.
ஏழுமலையானின் பாதார விந்தத்தில் ஆவணங்களை வைத்து விண்ணுக்கு ராக் கெட்டை ஏவுகிறார் - அதன் இயக்குநர் இராதா கிருஷ்ணன் - இந்த முறை ஊத்திக்கிட்டதே - என்ன பதில்?

- மயிலாடன்

தமிழ் ஓவியா said...


வரவேற்புக்கு ஏன் கேரள ஜெண்டா மேளக் குழு? தமிழ்நாட்டில் ஒரு புதிய படையெடுப்புத் தேவையா?


பண்பாட்டுப் படையெடுப்பைப் பல துறைகளிலும் முறியடிக்கவே அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்கள், சுயமரியாதைத் திருமணத்தை உருவாக் கினார்கள்.
ஆரியப் பண்பாட்டு முறையில் திருமணங்கள் தமிழர் வீட்டில் நடைபெற்று வந்தன. தமிழன் இல்லத்தில் நடைபெறும் திருமணங்களில் அவனது தாய் மொழியான தமிழில் நிகழ்வுகள் இல்லை; தமிழர்களல்லாதவர்கள்தான் நடத்தி வைக்கிறார்கள் - அதுவும் யாருக்கும் புரியாத மொழியில், செத்த மொழியான சமஸ்கிருதத்தில் மந்திரங்கள்.

கடவுள்களில்கூட கொஞ்ச காலமாக கேரளத்து அய்யப்பன் தேவைப்படுகின்றான் தமிழனுக்கு!

கர்நாடக மூகாம்பிகைக் கடவுள் தேவைப்படுகிறாள்,

தமிழ்நாட்டில் என்ன கடவுளுக்கா பஞ்சம்? டஜன் கணக்கில் குரோஸ் கணக்கில் பல்லாயிரக் கணக்கில் உள்ளனவே. இவை தவிர, தெருவெல்லாம் நடைபாதைகளில் எல்லாம்கூட கடவுள்கள்!

அப்படியிருக்கையில் கேரளக் கடவுள், கர்நாடகக் கடவுளுக்கு என்ன தேவை? தவித்த வாய்க்குத் தண்ணீர் ஒரு சொட்டுக் கூடத் தர முடியாது என்கிறவர்களுக்கு, கோடி கோடியாக தமிழ்நாட்டுப் பணத்தை அய்யப்பன் கோயிலுக்குச் சென்று கொட்டிக் கொடுப்பது நியாயம்தானா?

பாடல் என்றால் தெலுங்கு இசை தியாகய்யர்வாள் கீர்த்தனங்களே நம்பர் ஒண்ணாம்! அதில் பாடினால் தான் கர்நாடக இசைக் கலைஞர் என்று முத்திரை குத்திக் கொள்ள முடியுமாம்!

இப்போது மற்றொரு வகை ஒரு புதிய படையெடுப்பு - ஊடுருவல்!

கட்சித் தலைவர்களை வரவேற்க, நம்மூர் நாதஸ்வர வித்வான்கள் உள்ளனர்; தவில் மேள தாளக்காரர்கள் உள்ளனர்.

பாரம்பரியமாக அவர்களை அழைத்தே விழாக் களை நடத்தியதைக் கைவிட்டு விட்டு, கேரள ஜண்டா மேளக்காரர்களை வரவழைக்கும் ஒரு கலாச்சாரம் வேகமாகப் புகுந்து வருகிறது! நமது நாதஸ்வர மேளதாளக் கச்சேரி வாத்தியக்காரர்களை ஒதுக்கி விட்டு, இவர்களை அழைத்துப் பயன்படுத்தும் போக்கு அங்கிங்கெனாதபடி எங்கும் காணப் படுகிறதே - நியாயந்தானா?

நமது இயக்கத்தவர்கள் கட்சிக்காரர்கள் - தமிழ் நாட்டவர்கள் இதுபற்றி சிந்திக்க வேண்டாமா?

தஞ்சாவூர், ரெட்டிப்பாளையம் நையாண்டி மேள பக்கவாத்தியக்காரர்கள் எதில் குறைந்தவர்கள்? நமது வாடிப்பட்டி மேளம் மட்டமா? ஏன் அவர்களை நாம் ஒதுக்கி, கேரளத்து வாத்தியமுறைக்காரர்களுக்கு அழைப்புத் தந்து, இவர்கள் வயிற்றில் அடிக்க வேண்டுமா? இன்னொரு கலாச்சாரத்துக்கு அடிகோல வேண்டுமா?

எனவே இதை நிறுத்தி, வரவேற்புகளில் - விழாக் களில் நமது இசைக் கருவியாளர்களையே, கலைஞர் களையே பயன்படுத்தும் இயக்கம் ஒன்றை, நாம் துவக்கி அவர்களது வேலை வாய்ப்பை உறுதிப்படுத்த வேண்டும் போலும்! ஒரு புதிய ஊடுருவலுக்கு வழி திறக்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.

தஞ்சை சாக்ரட்டீஸ் - கலைமகள் மணவிழாவில் தமிழர் தலைவர் உரையிலிருந்து (18.8.2013) ஒரு பகுதி

தமிழ் ஓவியா said...


பிரச்சினைகளை வரவேற்கக் கற்றுக் கொள்ளுவோம்!


வாழ்க்கையில் பிரச்சினைகள் ஏற்படும்போது, நம்மில் பலர் அஞ்சி நடுங்கி, ஒதுங்கி, பதுங்கி ஓடித் தப்பித்துக் கொள்ளலாமா என்று தான் நினைக்கிறோம்!
இன்னும் சிலர், அற்ப நிகழ்வு களைக் கூடத் தாங்க முடியாத, கோழிக் குஞ்சு இதயம் படைத்தவர் களாக மாறி, தற்கொலை செய்து கொண்டால் பிரச்சினைகளிலிருந்து விடுபடலாம் என்ற தவறான முடிவுகள் அவசர முடிவுக்கு வந்து, பிரச்சினை களிலிருந்து தப்புவதாக தவறாக எண்ணிக் கொண்டு வாழ வேண்டிய வாழ்க்கையிலிருந்தே விடுபட்டுக் கொள்கிறார்கள்.

முதிர்ச்சியில்லாத நிலைதான் பிரச்சினைகள் கண்டு அஞ்சுவது; எதிர்கொள்ள பயப்படுவதும் ஆன மனநிலை.

மனிதர்களிடம் உள்ள பகுத் தறிவைவிட, சிறந்த போர் ஆயுதம் வேறு உண்டா?

அதைப் பயன்படுத்தினால், மலை போல் வரும் பிரச்சினைகளையெல் லாம் பனி போல் போகும்படித் தீர்த்து விடலாமே!

வரும் பிரச்சினைகளை வரவேற்கக் கற்றுக் கொள்ளுங்கள் நமது மூளைக்கு - இதோ ஒரு அரிய வாய்ப்பு என்று நினைத்து துணிவுடன் எதிர்கொள்ளுங்கள்; எப்படிப்பட்ட பிரச்சினையாக இருந்தாலும், எவ்வளவு சிக்கலான பிரச்சினையாக இருந்தாலும் நம்முடைய அறிவால் - அனுபவத்தால் - ஆற்றலால் இவையெல்லாம் கலந்த அணுகுமுறையினால் தீர்க்க - விடை காண நம்மால் முடியும் என்ற நம்பிக்கை யுடன் அதனை அணுகுங்கள்.

எவ்வளவுக்கெவ்வளவு பிரச்சினையோ அதன் பரிமாணத்திற்கு மகிழ்ச்சி பொங்க வரவேற்று, தீர்வு காண உங்கள் மூளையை முழுமையாகப் பயன்படுத்துங்கள்.
பிரச்சினைகளைக் கண்டு தீர்க்க முயலுமுன், அவற்றை ஒரு தொல்லையாக நினையாதீர், மாறாக, புதிய வரவாகக் கொள்ளுங்கள்.

பல நேரங்களில் நல்ல மகிழ்ச்சியோடு நாம் இருக்கும்போது, நமது மகிழ்ச்சியைப் பறிக்கும் வகையில் சோக நிகழ்வுகள் - இழப்புகள் ஏற்படலாம். இது கண்டு மன முடைந்து மூலையில் போய் உட்கார்ந்து கொண்டு அழுது கொண்டே இருந்தால், பிரச்சினைக்குத் தீர்வு கண்டு விட முடியுமா? அந்த சோகத்தினால் - இழப் பினால் ஏற்படும் தீய விளைவுகளிலிருந்து பாதிக்கப்பட்டவர்களை விடுவிப்பதற்கு நமது ஆக்க பூர்வ வழியென்று சிறிது உணர்ச்சி வயப்பட்ட துக்கத்திலிருந்து மீண்டு விட்டு, ஆழ்ந்து துணிவுடன் நின்று அந்த இழப்பைத் தாண்டியும் வாழ்ந்து காட்ட முடியும் என்று இழந்தோர், கதறியோர், பதறியோர் உள்ளங்களில் ஆழப் பதியும் வண்ணம் ஆக்க சிந்தனை களை விதையுங்கள்; துக்கம் துயரம் தானே புதையும்; அவைகளையே எருவாக்கிக் கொண்டு, நம்பிக்கைப் பயிர் செழித்தோங்கி வளரவே செய்யும்.
பிரச்சினை இல்லை என்றால் மூளைக்கு வேலை கொடுக்கவே முடியாது; மூளைக்கு வேலை கொடுக்கவில்லை யானால்; உடல் எப்படி ஊளைச் சதையினால் பல்வேறு பருமன் முதல் நோய்கள் வரை ஆகிறதோ அதுபோன்று மூளையும் பழுதடைந்து சோம்பல் நோய் தாக்கப்பட்ட மூளையாகி விடும்! முழு மூளையை இன்னும்கூட 21ஆம் நூற்றாண்டில் மனிதன் முழுமையாக பயன்படுத்திக் கொள்ளாது குறைந்த அளவு விழுக்காடுதானே இன்னமும் பயன்படுத்திக் கொண்டுள்ளான்.
எண்ணிப் பார்த்தீர்களா? பயம், கவலை, - இவைகளால் எந்தப் பிரச் சினையும் தீர்ந்து விடாது. மாறாக, பிரச் சினையை ஒரு வாய்ப்பாகக் கருதி(Opportunity)என்று எண்ணி, முன்னேறிட இதையே தடைக்கல் என்று நீங்கள் பயந்ததைப் படிக்கல் நினைத்து, அதனை மிதித்து, மதித்து, (ஆனால் மிதிக்கும் போது எச்சரிக்கையுடன் கால் வைப்பது எவ்வளவு அவசியமோ அது போல) அதன்மீது ஏறி, வெற்றியின் தீர்வின் உச்சத்தை அடையுங்கள்.

சிறைச் சாலையும் அதன் மூலம் துன்பப்படுத்தப்படுவதும் பலருக்கு வாய்ப்பாக அமைந்த காரணத்தால் தானே பல அரிய இலக்கியங்கள் நமக்குக் கிடைத்துள்ளன! பகத்சிங், நேரு போன்றவர்களின் சிந்தனைகள் காலமெல்லாம் அழியாதவைகளாகப் போற்றப் படவில்லையா?

நெருக்கடி கால சிறைக் கொடு மைகள் எங்களைப் போன்ற மிசாக் கைதிகளுக்கு - பக்குவப்படுத்தியே - பழுக்கக் காய்ச்சி கொல்லன் உலைக் களத்தில் அடிக்கப்பட்ட - வார்ப் படங்களாக ஆவதற்கு வழிகாட்ட வில்லையா?

1. பணமில்லை - பலருக்குப் பிரச்சினை

2. உருத் தோற்றம் - சிலருக்குப் பிரச்சினை

3. தொடர் நட்டங்கள் - பலருக்கு நம்பிக்கையை அடியோடு இழக்கும் அவலப் பிரச்சினை.

4. உடல் நோய் - நலம் கெடுதல் எனும் உளைச்சல்.

இந்த நான்குதான் அடிப்படையாக அமைந்து பலருக்குத் தீராப் பிரச்சினை களாகி அவர்களை மனந் தளர வைக்கிறது.

அவற்றை வெல்ல வழி உண்டா? உண்டு! உண்டு! அடுத்து விளக்கு வோம்.

தமிழ் ஓவியா said...


சென்னை அய்.அய்.டி. இயக்குநர் நியமனம் நடுவண் அமைச்சகப் பணி நியமனக் குழுவின் ஒப்புதல் தேவையில்லையா?


சென்னை இந்திய தொழில் நுட்பக் கல்விக் கழகத்தின் இயக்குநர் பதவிக்கு, அமைச்சரவைப் பணி நியமனக் குழுவின் ஒப்புதல் தேவை யில்லை என்று சென்னைத் தொழில் நுட்பக் கல்விக் கழகம் தெரிவித் துள்ளது. த நியூ இந்தியன் எக்ஸ் பிரஸ் இதழின் 26 ஜூலை இதழில் அது சென்னை இந்திய தொழில் நுட்பக் கழகத்தின், வர இருக்கின்ற ஆணையர் பேராசிரியர் பாஸ்கர் ராம மூர்த்தி பற்றி குறிப்பிடப்பட்டிருந்தது. அந்தச் செய்திக்கு இந்திய தொழில் நுட்பக் கழகப் பதிவாளர் பூமா, இந்தப் பணி நியமனத்துக் குழு மத்திய அமைச்சரவைப் பணி நியமனக் குழுவின் ஒப்புதல் பெறத் தேவை யில்லை என்று சொல்லியுள்ளார்.

அய்.அய்.டி. என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய தொழில் நுட்பக் கழகத்தின் இயக்குநர்கள் நியமனம் தொழில் நுட்பக் கல்விக் கழகத்தின் சட்டம் பிரிவு 17(1)இன் பாற்பட்டதாகும். அந்தச் சட்டத்தின்படி இந்தியக் குடியரசுத் தலைவரின் முன்கூட்டிய அனுமதியுடன் அய். அய்.டி. குழுவினரால் இயக்குநர்கள் நியமிக்கப்பட வேண்டும். பதிவாளர் பூமா, 3.7.2006 தேதியின் படி, வெளியிடப்பட்ட சுற்றறிக்கை எண் 28/13/2006 - ளுஆ ஐஐ பத்தி ஏஐஐஐஇன்படி, இந்த நியமன ஆணைகள் பணியாளர் மற்றும் பயிற்சி இலாகாவில் குறிப்பிடப்பட்ட தாகாது என்று கூறியுள்ளார். இந்தியன் எக்ஸ்பிரஸ், பேரா. இராமமூர்த்தியின் நியமன ஆணை அமைச்சரவை பணி நிய மனக் குழுவின் அனுமதி பெறப்படாதது என்று குறிப்பிட்டு இருந்தது.

(இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியாளர்) அய்.அய்.டி.க்களின் குழுக்களின் நிலைப்பாட்டிற்கு பதிவாளரின் விளக்கம் முரண்பட்டு நிற்பதாகவும், அய்.அய்.டி. யின் குழுக்கள் தான் அவற்றின் உயர்நிலை நிர்வாக அமைப்பு என்றும், அது, தொழில் நுட்பக் கழகத்தின் 1961ஆம் ஆண்டு சட்டப்படி, நடுவண் மனித வள முன்னேற்ற அமைச்சகத்தின் தலைமையில் செயல்படுவதாகும்.

2009ஆம் ஆண்டு ஜனவரி 28ஆம் தேதியன்று புதுடில்லியில் அன்றைய மனிதவள மேம்பாட்டு நடுவண் அமைச்சர் அர்ஜூன்சிங், அய்.அய்.டி. குழுக்களின் தலைமையை ஏற்றுப் பேசு கையில், அமைச்சரவை பணி நியமனக் குழுவின் பங்கு இயக்குநர்களை நியமிப்பது தொடர்பாக விளக்கமாக எடுத்துரைக் கப்பட்டிருக்கிறது என்று கூறியுள்ளார். மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சரின் பத்திரிகை செய்திக் குறிப்பில், ஆந்திரப் பிரதேசம், பீகார், ராஜஸ்தான், ஒரிசா, பஞ்சாப் மற்றும் குஜராத் ஆகிய ஆறு அய்.அய்.டி.க் களின் ஆணையர் பெயர்களைக் கொண்டுள்ள நியமனம் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்று குறிப் பிட்டுச் சொல்லியிருக்கிறது.

தவிர, பணியாளர் மற்றும் பயிற்சி இலாகாவின் சுற்றறிக்கை பற்றி ஆறில், இந்த ஆணைகள், எல்லாவித அமைச் சர்களின் தன்னாட்சி நிறுவனங்களுக் கும் பொருந்தும் என்று குறிப்பிட்டுள் ளது. பணியாளர் மற்றும் பயிற்சி இலா காவினால் தொகுக்கப்பட்டுள்ள தன்னாட்சி நிறுவனங்களுள் சென்னை அய்.அய்.டி. 172-ஆவது இடத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ் ஓவியா said...


இன்று ஆவணி அவிட்டமாம் விவேகானந்தர் விழா கொண்டாடுவோரே - உங்களைத்தான்! பூணூல் அல்ல-கோவணக் கயிறு!


இந்துமதத் துறவி என்று கூறப்படும் விவே கானந்தரின் 150ஆவது ஆண்டு விழாவைக் கொண்டாடும் பார்ப்பனர்களே - சங்பரிவார்க் கும்பலே, உங்களைத் தான்.. உங்களைத் தான்...

இன்று ஆவணி அவிட்டம் என்று கூறிப் பூணூலைப் புதுப்பித்துக் கொள்கிறீர்களே - இந்தப் பூணூல் குறித்து விவேகானந்தர் என்ன கூறு கிறார்? இதோ கேளுங்கள்! கேளுங்கள்!!

இன்று வங்காள சகம் 1303ஆம் ஆண்டு வைசாக மாதம், 19ஆம் தேதி சுவாமிஜி சிஷ்யருக்கு தீக்ஷை செய்ய உடன்பட்டிருக்கிறார். ஆனபடியால், அவர் அதிகாலையில் ஆலம் பஜார் மடத்தை அடைந்தார். சுவாமிஜி சிஷ்யரை நோக்கிக பரிகாசமாக, இன்று நீ பலியாக்கப்படப் போகிறாய் அல்லவா? என்றார்.

இந்தக் குறிப்புக்குப் பின்பு சுவாமிஜி புன்னகை யோடு அமெரிக்க நாட்டைக் குறித்த விஷயங் களைப் பற்றிப் பிறரோடு பேசிக் கொண்டிருந்தார். அந்த சம்பாஷணையிலே ஆன்மீக வாழ்க்கையை வளர்ப்பதற்கு விரும்பும் ஒருவன் பக்தியோடும், முழு மனத்தோடும் இருக்க வேண்டும் என்பதும், குரு பக்தியானது எவ்வளவு உறுதி பெற்றிருக்க வேண்டும் என்பதும், குருவினுடைய வார்த்தையிலே ஆழ்ந்த நம்பிக்கை வைக்க வேண்டும் என்பதும், குருவுக்காக வேண்டுமாயின் உயிரையும் தியாகஞ் செய்ய வேண்டும் என்பதும் பேசப்பட்டன. சிஷ்யருடைய மனத்தைப் பரிசோதிக்கும் பொருட்டுச் சுவாமிஜி சில வினாக்களை வினவினார்.

என்ன நேர்ந்தாலும், எதுவாயிருந்தாலும், என்னுடைய கட்டளையை உன்னால் இயன்றவரை கைக்கொண்டு ஒழுக ஆயத்தமாயிருக்கிறாயா? உன்னுடைய நலத்தைக் கருதி உன்னைக் கங்கையில் குதிக்கச் சொன்னாலும், வீட்டுக் கூரையிலிருந்து கீழே குதிக்கச் சொன்னாலும் தடையின்றி அவற்றைச் செய்வாயா? இவற்றை எல்லாம் இப்பொழுது சிந்தித்துப் பார். இந்தக் கணத்தில் உன் உள்ளத்தில் ஏற்பட்ட ஓர் எண்ணத்தினாலே என்னைக் குருவாகக் கொள்ள வேண்டும் என்று அவசரப்படாதே இந்த வினாக்களுக்கெல்லாம் சிஷ்யர் ஆம் என்று தலையசைத்தார்.

சுவாமிஜி மேலும் சொல்கிறார்: முடிவில்லாத பிறப்பாகிய மாயையைக் கடக்கும் பொருட்டு ஜீவனுடைய சோகங்களையும் துன்பங்களையும் கருணையினால் அழித்து விடுகின்றவரே உண்மைக் குரு. பழைய காலத்திலே சிஷ்யனானவன் கையில் சமித்துகளை எடுத்துக் கொண்டு குருவினுடைய குடிலுக்குப் போவான்.

குருவும் அவனுடைய தகுதியை அறிந்து, உளம், சொல், செயல் ஆகிய மூன்றையும் அவன் அடக்கி வைத்திருப்பதற்கு அடையாளமாக முப்புரியாகிய முஞ்சா என்னும் புல்லினை அவனு டைய இடுப்பிலே கட்டி அவனுக்கு தீக்ஷை செய்து வேதங்களைப் போதிப்பார். அரையிலே கட்டிய முப்புரியாகிய அப்புல்லிலே சிஷ்யன் கோவணத் தைக் கட்டிக் கொள்ளுவான். முஞ்சா என்னும் அப்புல்லினால் ஆக்கப்பட்ட கயிற்றுக்குப் பதிலாக முப்புரி நூலை அணிந்து கொள்ளும் வழக்கம் பின்னாளில் ஏற்பட்டது.

(ஆதாரம் நூல்: சுவாமி விவேகானந்தர் சம்பாஷணை)

மேலே எடுத்துக் காட்டப்பட்டது ஈரோட்டுக் கைச் சரக்கல்ல; விடுதலை ஏட்டின் விடுகதையல்ல. சாட்சாத் விவேகானந்தர் கூறியதுதான் - ஆதாரத்தோடு கூறப்பட்டுள்ளது.

பூணூல் என்பது கோவணம் கட்டும் வெறும் அரை ஞாண் கயிறு தானே? இது எப்படி பார்ப்பனர்கள் தோளில் அணியும் பூணூல் ஆயிற்று? பார்ப்பனர் பதில் சொல்ல மாட்டார்கள் - சொல்லவும் முடியாது. பார்ப்பனர் அல்லாதாரே சிந்திப்பீர் - சீர் தூக்கிப் பார்த்து!

தமிழ் ஓவியா said...


மராட்டிய மாவீரர் - கொள்கைக்காக உயிர் ஈந்த மூட நம்பிக்கை ஒழிப்புப் போர்த் தளபதி - நரேந்திர தபோல்கருக்கு வீர வணக்கம்!


மராத்தியம் தந்த மாவீரர்; சீரிய பகுத்தறிவுவாதி நரேந்திர தபோல்கர் (65) அவர்கள் நேற்று புனேயில் காலை நடைப்பயிற்சிக்குச் சென்றபோது, இரண்டு மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து இவரை நோக்கி இருமுறை சுட்டுள்ளனர்.

குண்டுகள் பாய்ந்து இவர் அந்த இடத்திலேயே மாண்டுவிட்டார் என்ற அதிர்ச்சியான சோகச் செய்தியை நேற்றே விஜயவாடாவிலிருந்து கோரா நாத்திக மய்யத்தின் இயக்குநர் நண்பர் டாக்டர் விஜயம் அவர்கள் நமக்கு தொலைப்பேசி வாயிலாக தெரிவித்தார். நாங்கள் இருவரும் துக்கத்தை, துயரத்தை ஆற்றிடும் வகையில் இதுபற்றிய வேதனையைப் பகிர்ந்துகொண்டோம்.

மதவெறி சக்திகளின் சதியினால்...

சுட்டுக் கொல்லப்பட்ட டாக்டர் (இவர் ஒரு மருத்துவர்) மராத்திய மாநிலத்தின் தலைசிறந்த பகுத்தறிவாளர்; மூட நம்பிக்கைகள், கடவுளர் அவதாரமாகக் கூறிக்கொண்ட மோசடிப் பேர்வழிகளின் முகமூடிகளைக் கிழிப்பவர்; பில்லி சூன்யம் மற்றும் மாந்திரீகவாதிகளை அம்பலப்படுத்த அயராதவர். 1989 இல் மகாராஷ்டிர அந்தராஷ்டிராத நிர்மூலன் சமிதி - மகாராஷ்டிர மூட நம்பிக்கை ஒழிப்புச் சங்கம்மூலம் இவரது பகுத்தறிவுப் பிரச்சாரத்தினால் பாதிக்கப்பட்ட மதவெறி சக்திகளின் சதியினால் இவர் கொல்லப்பட்டிருக்கக் கூடும் எனத் தெரிகிறது.

புரூடா விட்ட மத வியாபாரிகளைச் சவால் விட்டு அழைத்தவர்

விழியற்றவர்களுக்குப் பார்வையை மீட்டுக் கொண்டு வருவதாக புரூடா விட்ட மத வியாபாரிகளைச் சவால் விட்டு அழைத்து அத்தகைய தெய்வீக புருஷர்களை அம்பலப்படுத்தியதுதான் முக்கிய காரணம்.

மகாராஷ்டிர சட்டமன்றத்தில் மூட நம்பிக்கைகளுக்கு எதிராக மசோதா கொணரக் காரணமானவர் இவரும், இவரது பகுத்தறிவு இயக்கமும்!
இவரது குடும்பமே பகுத்தறிவாளர் குடும்பம்!

மகாராஷ்டிர, அகமது நகரில் உள்ள ஷானி சிங்கனாப்பூர் கோவிலுக்குள் பெண்களுக்கு அனுமதி இல்லை என்பதை எதிர்த்து 2000 ஆம் ஆண்டில் போராடி, வெற்றி கண்டவர். பிற்போக்குப் பக்தர்கள் வழக்குப் போட்டு, தோற்றார்கள். மிகுந்த நகைச்சுவை உணர்வுடையவர் இவர்!

இவரது துணைவியார் ஒரு டாக்டர். திருமதி ஷர்மிளா தபோல்கர் ஒரு பகுத்தறிவுவாதி. இவரது தந்தையாரும் பகுத்தறிவாளர். மொத்தக் குடும்பமே பகுத்தறிவாளர் குடும்பம் ஆகும்!

இவருக்குப் பலமுறை அச்சுறுத்தல் வந்தும், காவல்துறை யினரின் பாதுகாப்பை மறுத்து, தனது பணி அறியாமையை எதிர்ப்பதே என்று காவல்துறையினரின் பாதுகாப்பை ஏற்க மறுத்தார்.

ஒட்டுமொத்த பகுத்தறிவு உலகத்திற்கே இழப்பு!

அவரது மறைவு, அவரது குடும்பத்திற்கு மட்டும். ஈடு செய்ய முடியாத இழப்பு அல்ல; மகாராஷ்டிர மாநிலத்திற்கு மட்டுமல்ல; ஒட்டுமொத்த பகுத்தறிவு உலகத்திற்கே - (நம்மைப் போன்றவர்கள் உள்பட) மிகப்பெரிய இழப்பு!

பகுத்தறிவை வளர்க்க மூட நம்பிக்கைகளை, அறியாமையை, பக்திப் போதையை அழிக்க தன்னைத்தானே ஈந்துகொண்ட மாபெரும் லட்சிய வீரர் நரேந்திர தபோல்கருக்கு நமது வீரவணக்கம்!

திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகங்கள் சார்பாக நமது ஆழ்ந்த இரங்கலை அவரது குடும்பத்தினருக்குத் தெரியப்படுத்துகிறோம்.

நரேந்திர தபோல்கர் சட்டம்

அந்த மூட நம்பிக்கை ஒழிப்பு மசோதாவை விரைந்து சட்டமாக்குவதோடு, அச்சட்டத்தின் பெயராக நரேந்திர தபோல்கர் சட்டம் என்றே பெயர் சூட்ட வேண்டுமென்று மகாராஷ்டிர முதல்வரை, அந்த அரசினை நாம் கேட்டுக்கொள்கிறோம்.


கி.வீரமணி
தலைவர்,திராவிடர் கழகம்

சென்னை
21.8.2013

தமிழ் ஓவியா said...


ஆசிரியர் தகுதித் தேர்வு குளறுபடிகள் தந்தை பெரியார் கொள்கைக்கு எதிரானவை

தி.மு.க. தலைவர் கலைஞர் குற்றச்சாற்று

சென்னை, ஆக.21- ஆசிரியர் தகுதித் தேர்வில் அ.தி. மு.க. அரசின் செயல்பாடுகள் தந்தை பெரியார் அவர் களின் சமூகநீதி கொள்கைக்கு எதிரானவை என்று தி.மு.க. தலைவர் கலைஞர் கூறியுள்ள கடிதம் வருமாறு:

கேள்வி: ஆசிரியர் தகுதித் தேர்வில், தாழ்த்தப்பட்ட வர்களுக்குச் சலுகை மதிப்பெண்கள் வழங்கிடக் கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளதே?
கலைஞர்: அனைத்து வகைப் பள்ளிகளிலும் முதலாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்புவரை பணி நியமனம் செய்யப்படும் ஆசிரியர்கள், இந்த ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டுமென் பது, இலவச மற்றும் கட்டாயக் கல்விச் சட்டத்தின் படியான விதியாகும். அரசுப் பள்ளிகளில் சுமார் 23 ஆயிரம் ஆசிரியர் பணி இடங்களை நிரப்புவதற்காகக் கடந்த ஆண்டு, ஜூலை மற்றும் அக்டோபர் மாதங் களில் ஆசிரியர் தகுதித் தேர்வினை இரண்டு முறை தேர்வு வாரியம் நடத்தியது. முதலில் நடைபெற்ற தேர் வில் வெறும் 2,448 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். இதனால் அக்டோபரில் மீண்டும் தேர்வு நடத்தப்பட்டது. அப்போது தேர்வு நேரத்தை ஒன்றரை மணி நேரத்திலிருந்து மூன்று மணி நேரமாக அதிகரித் ததுடன், கேள்வித்தாள் கடினமாக இல்லாத அளவில் பார்த்துக் கொள்ளப்பட்டது.

ஏறத்தாழ ஆறரை லட்சம் ஆசிரியர்கள் தேர்வு எழுதியதில், 10,397 இடைநிலை ஆசிரியர்களும், 8,849 பட்டதாரி ஆசிரியர்களும் தேர்ச்சி பெற்றனர்.

காலியாக உள்ள ஆசிரியர் பணி இடங்கள் அடுத்த தகுதித் தேர்வு மூலமாக நிரப்பப் படும் என்று அரசு ஏற்கெனவே அறிவித்திருந்தது. அதன்படிதான் தற்போது அந்தத் தேர்வுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு இடை நிலை ஆசிரியர் பணிக்கான தேர்வு நடைபெற்று முடிந்துள்ளது. தகுதித் தேர்வுக்கு மொத்த மதிப்பெண் 150. தேர்ச்சி பெறுவதற்கு 90 மதிப்பெண்கள் பெறவேண்டும், அதாவது 60 சதவிகிதம். இரண்டு முறை ஏற்கெனவே நடத்தப்பட்ட தகுதித் தேர்வில் தேர்ச்சி விகிதம் குறைவாக இருந்ததால், அதிலும் குறிப்பாக, தாழ்த்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் மிகக் குறைந்த எண்ணிக்கையில் இருந்ததால், குறைந்தபட்சம் இட ஒதுக்கீட்டுப் பிரிவி னருக்காவது சலுகை வழங்கப்படும் என்று எதிர்பார்க் கப்பட்ட போதிலும், தேர்ச்சி மதிப்பெண்ணில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. தேர்ச்சி பெற அனைத் துப் பிரிவினருமே 90 மதிப்பெண்கள் பெற வேண்டும் என்றுதான் கூறப்பட்டது. பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் ஆகி யோர், உயர் வகுப்பினரைப் போலவே 60 சதவிகிதம் மதிப்பெண் பெறவேண்டும் என்பது தமிழகத்திலே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது தேசிய ஆசிரியர் கல்விக் கழகத்தின் வழிகாட்டுதலுக்கு விரோத மானதாகும். தேசிய ஆசிரியர் கல்விக் கழகத்தின் வழி காட்டுதலின்படி, ஆந்திராவில் உயர் சாதியினருக்கு 60, பிற்படுத்தப்பட்டோருக்கு 50, தாழ்த்தப்பட்டோ ருக்கு 40 சதவிகிதம் மதிப்பெண்கள் என்றும் - அசாமில் உயர் சாதியினருக்கு 60, மற்றவர்களுக்கு 55 சதவிகிதம் என்றும்- ஒரிசாவில் உயர் ஜாதியி னருக்கு 60 சதவிகிதம், மற்றவர்களுக்கு 50 சத விகிதம் மதிப்பெண்கள் என்றும் தகுதி மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாட்டில் மட்டும் அ.தி.மு.க. அரசு அனைத்துப் பிரிவினருக்கும் 60 சதவிகித மதிப்பெண் என்று நிர்ணயித்துள்ளது என்பது, தந்தை பெரியார் அவர்களின் சமூக நீதிக் கொள்கைக்கு எதிரானதும், இட ஒதுக்கீட்டுக் கொள் கைக்கு விரோதமானதுமாகும்.

தமிழர் தலைவர் கண்டனம்

எனவே தமிழக அரசு இந்த முறையாவது இடஒதுக்கீட்டுக் கொள்கைக்கு முக்கியத்துவம் அளித்து தேர்வுக்கான மதிப்பெண்களில் மாற்றம் செய்து, சமூக நீதி காத்திட முன்வர வேண்டும் என்று நான் ஏற்கெனவே எழுதியிருந்தேன். தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களும், தம்பி தொல். திருமாவளவன், எம்.பி., அவர்களும் அறிக்கை விடுத்திருந்தார்கள். ஆனாலும் தமிழக அரசின் சார்பில் எந்த முடிவும் எடுக்கப்படாததால், உயர் நீதிமன்றத்தில் இது குறித்து மத்திய, மாநில தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின அரசு ஊழியர்கள் கூட்டமைப்பின் நிறுவனர் திரு. எஸ். கருப்பையா பொது நல மனு ஒன்றினைத் தாக்கல் செய்திருக்கிறார். இந்த மனு தலைமை நீதிபதி ஆர்.கே. அகர்வால், நீதிபதி எம். சத்தியநாராயணன் ஆகியோரைக் கொண்ட முதன்மை அமர்வில் விசா ரணைக்கு வந்து, இந்த மனு தொடர்பாக ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவை வெளியிட தடை விதிக்கா விட்டாலும், அரசுத் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டுமென்று நீதிபதிகள் உத்தரவிட்டிருக்கிறார்கள். தமிழகத்தில் இட ஒதுக்கீட்டுக் கொள்கைக்கு இப்படி யொரு சோதனை ஏற்பட்டுவிட்டதே என்று சமூக நீதி ஆர்வலர்கள் கொதித்துப் போயிருக்கிறார்கள்.
- இவ்வாறு தி.மு.க. தலைவர் கடிதத்தில் கூறியுள்ளார்.

தமிழ் ஓவியா said...


சரியான முடிவை எடுக்குமா இந்தியா?இலங்கை அரசின் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, இலங்கை அரசின் அயலுறவுத் துறை அமைச்சர் பெரீஸ் ஆகியோரின் பேட்டி ஒரே சமயத்தில் வெளிவந்துள்ளது.

இன்றைய ராஜபக்சே தலைமையிலான அரசின் நிலையைக் குறித்து அந்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவரான ரணில் விக்ரமசிங்கே கூறியிருப்பதை அலட்சியப்படுத்திவிட முடியாது.

இலங்கையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் வடக்கு மாகாணத்தில் அடுத்த மாதம் தேர்தல் நடக்க உள்ளது. என்றாலும் தேர்தல் அங்கு நியாயமாக நடக்குமா என்பது சந்தேகமாகவே உள்ளது. ஏனென்றால், முறையான வாக்காளர் பட்டியலை அரசு வெளியிடவில்லை. தேர்தலுக் கான சிறப்புப் பார்வையாளர்களை இன்னும் நியமிக்கவில்லை. நியமிக்கப்பட்டுள்ள ஒரு சிலரும் நியாயமாக நடந்துகொள்ளவில்லை. இதைப் போன்ற பார்வையாளர்கள் ராணுவ சார்பு இல்லாமல் சிவிலியன்களாக நியமிக்கப்பட வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. அதை மீறி ராணுவ சார்புடையவர்களாகவே நியமிக்கப் பட்டுள்ளனர். இப்படி இருந்தால் தேர்தல் எப்படி அமைதியாக, நேர்மையாக நடக்கும்? என்ற நியாயமான சந்தேகத்தையும், வினாவையும் எழுப்பியுள்ளார்.

சர்வதேச நாடுகளை ஏமாற்றிட காமன்வெல்த் மாநாடு இலங்கையில் நடக்க இருக்கும் சூழலில், தமது அரசு ஜனநாயக நடைமுறைகளைக் கடைப் பிடிக்கிறது என்று

காட்டிக் கொள்ளவும், பிற நாடுகளை நம்பச் செய்யவும், இந்த நாடகத்தை அரங்கேற்றம் செய்கிறார் ராஜபக்சே என்பது வெளிப்படை.

தேர்தலை அறிவித்துள்ள சூழ்நிலையில், மாநிலங்களுக்குள்ள உரிமை பறிக்கப்படக் கூடிய அறிவிப்புகளையும் இன்னொரு பக்கத்தில் அறிவித்துக்கொண்டே இருக்கிறது சிங்கள அரசு.

வடக்கு - கிழக்கு மாகாணங்களை இணைத்துத் தேர்தல் நடத்தாமலும், தேர்தல் நடக்கும்முன்பே சிங்களக் குடியேற்றத்தைத் திட்டமிட்டுச் செய்வதும், ராஜபக்சேவின் நயவஞ்சக நடவடிக்கைகளுக்கான செயல்முறையாகும். இவ்வளவையும் திட்டமிட்டுச் செய்துவிட்டு, இலங்கையில் நடக்கவுள்ள காமன்வெல்த் மாநாட்டுக்கு, இந்தியப் பிரதமரை அழைக்க இலங்கையின் வெளியுறவுத் துறை அமைச்சரை அனுப்பி வைக்கிறார் என்றால், இதன் பொருள் என்ன?
இந்தியாவைக் கேலி செய்யும் செயல் இல்லாமல், இது வேறு என்னவாம்?

ராஜீவ் - ஜெயவர்த்தனே ஒப்பந்தப்படி வடக்கு - கிழக்கு மாகாணம் இணைக்கப்பட்டு இருக்க வேண்டுமே - அதனைச் செய்யாமல் இந்தியாவுக்கு இன்றைய சூழலில் அழைப்புக் கொடுப்பது விருந்துக்கு இலை போட்டுப் பக்கத்தில் அசிங்கத்தை வைப்பது போன்றதேயாகும்.

இலங்கையின் வெளியுறவுத் துறை அமைச்சர் பெரீஸ் இந்தியப் பிரதமரைச் சந்தித்து, அழைப்புக் கொடுத்துவிட்டு, இந்தியாவின் தலைநகரிலேயே இந்திய நாட்டுச் செய்தியாளர்களைச் சந்தித்து கச்சத்தீவை இந்தியாவிடம் ஒப்படைக்கும் பேச்சுக்கே இடமில்லை என்று திமிரடியாகப் பேசுகிறார் என்றால், இந்தியாவைப்பற்றி சிங்கள அரசுக்கு இருக்கும் இளக்காரத்தைத்தானே இது காட்டுகிறது!

தமிழ்நாடு அரசின் எதிர்ப்பையும் தூக்கி எறிந்து, இந்திய அரசு கச்சத்தீவை தாரை வார்த்தது எவ்வளவுப் பெரிய தவறு என்பதை இப்பொழுதாவது இந்தியா உணருமா என்று தெரியவில்லை.

உணரவேண்டும்; உணர்ந்த நிலையில் மீண்டும் அத்தீவை மீட்பதற்கான முயற்சியில் இறங்க வேண்டும்; அதுதான் 120 கோடி மக்களுக்கான சுய மரியாதையாகும். அப்படி இல்லையென்றால், இலங்கைத் தீவு இளக்காரமாக இந்தியாவை எடை போடுவது சரியானதுதான் என்பதை ஏற்றாக வேண்டும்.

உள்நாட்டிலும் கெட்ட பெயர், வெளிநாட்டு விவகாரத்திலும் அவமானம் என்கிற இரு தண்ட வாளத்தில் இந்திய அரசு பயணிக்கப் போகிறதா?

கச்சத்தீவு இலங்கைக்கு அளிக்கப்பட்டுள்ளதை எதிர்த்து திராவிடர் கழகம், டெசோ, தமிழக அரசு போட்டுள்ள வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்திய அரசு சரியான முடிவை எடுக்குமானால், நீதிமன்றத்திலும் அதன் தாக்கத்தைக் காண முடியும். இதுவரை எப்படியோ இந்தியா தவறு செய்தது; நடந்தவை நடந்தவைகளாக இருக்கட்டும்; இப்பொழு தாவது சரியானதொரு முடிவை எடுக்குமா? எங்கே பார்ப்போம்!

தமிழ் ஓவியா said...


நல்லாசிரியர்சரியான தலைவரை அடையாளம் கண்டு ஏற்றுக் கொண்டோமே - சரியான கொள்கையை ஏற்றுக் கொண்டோமே - சரியான இயக் கத்தில் நம்மை நாம் ஒப்படைத்து கொண்டோமே... என்பதை எண்ணி எண்ணி நம்மை நாம் பாராட்டிக் கொள்ளலாம்... (12.8.2013 விடுதலை யில்) வேலூர் கலந்துரையாடலில் நம் தலைவர் ஆற்றிய சத்தான சொல் லாடல் இது. பலத்த கர ஒலி! இருக் காதா பின்னே...

படித்தேன். மெய் சிலிர்த்தேன். கற்றுத் தருபவரே நல் ஆசிரியர். அவர்தான் நம் ஆசிரியர். அவர்தான் நம் ஆசிரியர்.

- சிவகாசி மணியம்

தமிழ் ஓவியா said...


உடலில் தீப்பிடிக்கும் குழந்தை குழந்தைக்கு எந்த பாதிப்பும் இல்லை 30 வகையான பரிசோதனை முடிவில் மருத்துவர்கள் தகவல்


சென்னை, ஆக.21- உடலில் தீப் பிடிக்கும் இரண்டரை மாதக் குழந்தை ராகுல் சிகிச்சை முடிந்து அடுத்த வார இறுதியில் வீடு திரும்ப வாய்ப்புள்ளது என சென்னை கீழ்ப்பாக்கம் மருத்து வமனை குழந்தைகள் சிகிச்சைப் பிரிவு தலைவர் மருத்துவர் நாராயண பாபு தெரிவித்தார்.

உடலில் தீப்பிடிப்பதாக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் கடந்த ஆகஸ்ட் 8-ஆம் தேதி இந்த குழந்தை சேர்க்கப்பட்டது.

குழந்தையின் உடலில் இருந்து தீப்பிடிக்கக் கூடிய வாயுக்கள் வெளி யாகவதாக முதலில் கூறப்பட்டது. உல கிலேயே அரிதான நோய் என்றும் அதற்கான சிகிச்சை முறைகள் இதுவரை வரையறுக்கப்படவில்லை என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து குழந்தைக்கு சுமார் 30 வகையான பரிசோதனைகள் மேற் கொள்ளப்பட்டன. மேற் கொள்ளப் பட்ட அனைத்து பரிசோதனைகளிலும் குழந்தைக்கு எந்த பாதிப்பும் ஏற்பட வில்லை. இறுதியாக ரத்தத்தில் கீடோன் பரிசோதனை (ரத்தத்தில் அமிலங்களின் அளவை தெரிந்து கொள்ளும் பரி சோதனை) முடிவு மட்டும் தெரிய வேண்டி இருந்தது. செவ்வாய்க்கிழமை கீடோன் பரிசோதனை முடிவும் வெளியானது.

இது குறித்து மருத்துவர் நாராயண பாபு கூறியது: ரத்த கீடோன் பரிசோதனையிலும் குழந்தைக்கு பாதிப்பு ஏதும் இல்லை. குழந்தையின் தீக்காயங்கள் முழுவதுமாக ஆறி விட்டன. குழந்தையை அடுத்த வார இறுதியில் வீட்டுக்கு அனுப்பலாம் எனத் தீர்மானிக்கப் பட்டுள்ளது. எனி னும் அரசு அதிகாரிகள், மருத்துவ மனை நிர்வாகத்திடம் கலந்து ஆலோசிக் கப்படும்.

குழந்தையின் பெற்றோர், பாட்டிக்கு தொடர்ந்து மனோவியல் ஆலோசனைகள் வழங்கப்பட்டு வரு கின்றன என்றார் அவர்.

தமிழ் ஓவியா said...


வீராங்கனை!

ஜமைக்கா நாட்டு வீராங் கனை -இவர் பெயர் நல்லென் வில்லியம்ஸ் - வயது 31.

சிறு வயது முதல் எதை யாவது சாதிக்க வேண்டும் என்ற வெறியில் இருந்தவர் - விளையாட்டுப் போட்டி களில் ஆர்வம் இருந்ததால், ஒலிம்பிக் போட்டியில் பங்கு பெற வேண்டும் - பதக்கங்களை வெல்ல வேண்டும் என்ற கிளர்ச்சி, அவரின் ஆழ் மனதில் சிறுமியாக இருந்தபோதே, கொள்ளை கொண்டது.

இலண்டனில் நடை பெற்ற ஒலிம்பிக் போட்டியில் பங்கு பெறும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது - ஆனால் திடீர் நோய்க்கு ஆளானார் - உடல் சோர் வுற்றது.

சோர்வு ஏற்படாமல் என்ன செய்யும்? அவரைப் பிடித்திருந்தது மார்பகப் புற்று நோயாயிற்றே! மருத்துவமனை சொன்ன போது அவர் இடிந்து போனது உண்மைதான்.

ஒரு நொடி திகைத்தார். பின் கம்பீரமாக எழுந்தார் - என்ன நடந்தாலும் சரி மைதானத்திலேயே எம் உயிர் பிரிந்தாலும் சரி, பந்தயத்தில் பங்கேற்பேன் என சூளுரை கொண்டார் - பயிற்சியைத் தொடர்ந் தார்.

400 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் அந்தப் பந்தயக் குதிரை பாய்ந்தது. தங்கம் கிட்டவில்லை என் பது அவருக்கு ஏமாற்றம் என்றாலும் வெண்கலம் வெற்றிப் பதக்கமாக அவரைத் தேடி வந்து பெருமை பெற்றது.

வெற்றி பெற்ற அந்த வீராங்கனை என் சபதம் முடிந்தது. அறுவைச் சிகிச்சைக்கு இதோ நான் தயார் என்று மருத்து வரிடம் கூறினார்.

மருத்துவர்களே ஒரு கணம் திகைத்துப் போனார் கள்; அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்து, அடுத்த போட்டிக்குத் தயாராகிறார்.

வீராங்கனை வில்லி யஸ் சொல்கிறார் ஒரு வேளை உயிருக்கு அஞ்சி ஒலிம்பிக் போட்டியில் இருந்து நான் விலகி இருந்திருந்தால் எனக்குப் பதக்கம் கிடைத்திருக் குமா? என் இளவயது கனவுதான் நனவாகி இருக்குமா? என்றாரே அந்தத் தன்னம்பிக்கையை என்னென்று சொல்ல!

நம் நாட்டில் பிறந்திருந் தால், இந்தப் பாழாய்ப் போன இந்து மதத்தைக் கட்டி அழுதிருந்தால் இந் தத் தன்னம்பிக்கை உணர்வு பிறீட்டுத்தான் கிளம்பி இருக்குமா?
பெண்ணென்றால் அடங்கி இருக்க வேண்டும்; பொட்டைக் கழுதை என்று பெண்ணே பெண்ணை இழிவுபடுத்தும் கேவலம் இங்குதானே உண்டு.

பெண்ணென்றால் கோலம் போடுதல், கோலாட் டம், கும்மி இவற்றைத் தானே கற்றுக் கொடுத்துள் ளோம். இவற்றைக் கை விட்டுப் பெண்களுக்குக் குஸ்தி, கைக் குத்து இவற்றைச் சொல்லிக் கொடுங்கள் என்று சொன்ன தந்தை பெரியாரை ஒரு கணம். நினையுங்கள்!

- மயிலாடன்

தமிழ் ஓவியா said...


காந்தியைக் கொன்றவர்கள் தான் தபோல்கரையும் கொன்றுள்ளார்கள் .....!


மகாராட்டிர முதலமைச்சர் குற்றச்சாட்டு!

மும்பை, ஆக.22-டாக்டர். நரேந்திர தபோலகர் செவ்வாய்க் கிழமை காலை நடைப் பயிற்சிக்கு போகும் போது சுட்டுக் கொல்லப்பட் டார் !

புனே நகரத்தில் நடந்த இந்த சம்பவம் மராட்டிய மாநிலத்தை பரபரப்பில் ஆழ்த்தி உள்ளது !
மாநில முதலமைச்சர் பிருத்விராஜ் சவான் காந்தியைக் கொன்றவர் கள் தான் தபோல்கரை யும் கொன்றுள்ளார் கள் என்று குறிப்பிட் டுள்ளார்!

மிராஜ் நகரத்தில் மருத்துவக் கல்லூரியில் படித்து பட்டம் பெற்ற தபோல்கர் மருத்துவ சேவையை விட்டு மக் களின் மூட நம்பிக் கையை ஒழிக்க பணி செய்ய ஆரம்பித்தார்!

அவருடைய அண் ணன் தேவதத்தா சோச லிஸ்கட்சியில் இருந்தார்!

தபோல்கர் மக்களி டையே செல்வாக்கு செலுத்திவரும் போலிச் சாமியார்கள், பூசாரிகள் ஆகியவர்களை எதிர்த்து இயக்கங்களை நடத்தி வந்தார். இதற்காக அகில பாரதிய மூட நம் பிக்கை ஒழிப்பு சங்கத் தில் சேர்ந்து பணியாற் றினார்! இந்த அமைப் பின் தலைமை பா.ஜ.க விடம் இருந்தது! திருட னிடமே சாவியைக் கொடுத்த நிலைமையை உணர்ந்த தபோல்கர் மராட்டிய மூட நம் பிக்கை ஒழிப்பு இயக் கத்தை ஆரம்பித்தார் !

சர்வதேச பகுத்தறி வாளர் அமைப்புகளு டன் தொடர்பு கொண் டார் ! மூட நம்பிக்கை யினை ஒழிக்க சட்ட மன்றத்தில் ஒரு மசோ தாவை கொண்டுவரச் செய்தார்! எல்லா கட்சி களும் அதனை ஆதரித் தன! பா.ஜ.கவும், சிவ சேனை மட்டும் அதனை கடுமையாக எதிர்த்தன !

விநாயக பூஜை செய்யும் பக்தர்களிடம் சிலையை ஆற்றிலோ குளத்திலோ போடா தீர்கள் என்று பிரச்சாரம் செய்தார்! அதுவும் புனே நகரத்தில் கடுமை யாக செய்தார்! விநாயக சதுர்த்தி அடுத்தமாதம் வரவிருக்கும் நேரத்தில் பலநகரங்களில் இவரு டைய குரல் பிரதி பலித்தது!

பொதுக் குளத்தில் தலித்துகள் தண்ணீர் எடுக்கக் கூடாது என்று மேல் ஜாதியினர் குரல் கொடுத்த மாநிலம் இது! ஒவ்வொரு கிராமத் திலும் ஒரு பொதுக் கிணறு தோண்ட வேண் டுமென்று இயக்கம் நடத்தினார் தபோல்கர் ! ஒரே கிணறு தான் என் றால் எல்லாப் பயல் களும் ஒரே இடத்தில் தானே தண்ணீர் எடுக்க வேண்டும் !

தபோல்கரின் இத்த கைய செயல்பாடுகள் இந்து வெறியர்களின் பகையை சம்பாதித்தி ருக்கக் கூடும் என்று சமூக ஆர்வலர்களும், செயல்வீரர்களும் கருது கிறார்கள் !
செவ்வாய்கிழமை காலை நடைப் பயிற் சிக்கு சென்றவரை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் சுட்டுக் கொன்றிருக்கிறார்கள் !

மதத்தின் பெயரால் ,மூட நம்பிக்கையை வளர்த்து மக்களைச் சுரண்டும் போக்கை எதிர்த்து இயக்கம் நடத் திய டாக்டர்.நரேந்திர தபோல்கர் என்ற உண் மையான பகுத்தறிவா ளர் அதற்காக தன் உயிரையே கொடுத்திருக் கிறார் !

(லண்டன் பி.பி.சி தமிழோசை செய்தியா ளர் தபோல்கர் பற்றி நேற்று மாலை கேட்ட போதும் இதனையே என் பேட்டியில் குறிப் பிட்டேன் - சிறுகதை எழுத்தாளர் காஸ்யபன் )

தமிழ் ஓவியா said...

மராட்டியத்தில் பில்லி சூனியம், மூட நம்பிக்கைக்கு எதிராக சட்டம்


இந்தியாவின் மராட்டிய மாநிலம் பில்லி சூனியம் மற்றும் மூட நம்பிக்கைக்கு எதிரான சட்டத்தை அவசர அவசரமாக கொண்டுவந்துள்ளது.

அம்மாநிலத்தில் மூட நம்பிக்கைக்கு எதிராக போராடி வந்த செயற்பாட்டாளர் நரேந்திர தபோல்கர் செவ்வாய்கிழமை கொலை செய்யப் பட்ட நிலையில், அரசின் இந்த நடவடிக்கை வந்துள்ளது. புனே நகரில் தனது காலை நடைப் பயிற்சியை மேற்கொண்டிருந்த போது 71 வயதான தபோல்கர் அடையாளம் தெரியாத நபரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

மிருகங்கள் பலி கொடுக்கப்படுவது, மதத்தின் பெயரால் மக்களை வழிபடுவது போன்ற பழக்கங் களுக்கு எதிராக அவர் போராடி வந்தார்.

மாநில அமைச்சரவை நேற்று ஒருமனதாக நிறைவேற்றியுள்ள சட்டத்தின்படி, சடங்குகள், மூட நம்பிக்கைகள் மற்றும் பில்லி சூனியம் ஆகியவை தடை செய்யப்படுகின்றன.
எனினும் இந்தச் சட்டம் மாநில சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டும், இல்லையென்றால் அது காலாவதியாகிவிடும்.

இதனிடையே அவரது கொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து நூற்றுக்கணக்கானவர்கள் நேற்று புனே நகரில் ஊர்வலம் ஒன்றை நடத்தினர்.

தமிழ் ஓவியா said...


அஸ்திவாரம் கிடையாது!பார்ப்பனர்களால் போற்றி வளர்க்கப்படும் இந்து மதம் என்று சொல்லப்படுகிற மதத்துக்கு அஸ்திவாரமே கிடையாது. -(விடுதலை, 11.7.1954)

தமிழ் ஓவியா said...


வி.எச்.பி. மீண்டும் பேரணியா?


உத்தரப்பிரதேச மாநிலத்தில் சங்பரிவார்க் கும்பல், தன் வாலாட்டத்தைத் தொடங்கி விட்டது. குறிப்பாக விசுவ ஹிந்து பரிஷத் அயோத்தி நோக்கிப் பேரணி நடத்திட, முண்டாதட்டி எழுந்துள்ளது.

முதல் அமைச்சர் அகிலேஷ் அனுமதி மறுத்துள்ளது சரியான நடவடிக்கையே!

பொதுவாக 1992 டிசம்பர் 6 - பாபர் மசூதி இடிக்கப்பட்ட பிறகுதான் இந்தியத் துணைக் கண்டத்தில் மதவாதம் நிர்வாண தோரணை யில், தன் கோரமான வன்முறையைக் கையில் எடுத்துக் கொண்டு, வெறியாட்டம் போடத் தொடங்கியது. அன்று தொடங்கி வைக்கப்பட்ட மதவாத வன்முறை இன்னும் ஓய்ந்த பாடில்லை.

1990-இல் சோமநாதபுரத்திலிருந்து அத்வானி ரத யாத்திரை நடத்தி - செல்லும் இடமெல்லாம் ரத்தக் களரியை ஏற்படுத்தினர். குஜராத்தின் ராஜ்கோட்டில் குடம் நிறைய ரத்தத்தை நிரப்பி ரத யாத்திரை கதாநாயகரான அத்வானியின் ரத யாத்திரைக்குச் சாட்சியம் அளித்தனர்.

சென்ற இடங்களில் எல்லாம் கலவரத்துக் கான விதைகளைத் தூவிச் சென்றனர்; சங்பரிவார்க் கும்பல் தங்கள் கைகளைக் கிழித்துக் கொண்டு, அந்த ரத்தத்தால் கதா நாயகன் அத்வானியின் நெற்றியிலே திலகமிட்டனர்.

பீகாரில் ஒரு பெண் ஒரு குழந்தை உட்பட ஏழு பேர் உயிருடன் எரிக்கப்பட்டனர். அத் வானியின் ரத யாத்திரை குறித்து மேற்கு வங்க நாளிதழ், அத்வானியின் ரத யாத்திரையை நெருப்பு ரதம் என்று வருணித்தது. உத்தரப்பிரதேசத்தில் நுழையும் முன்பே உயிர்ப் பலிகளின் எண்ணிக்கை 44 ஆனது.

கருநாடகாவை ஒட்டியுள்ள மகாராட்டிராவின் எல்லையான கோலாப்பூர் வழியாக, அத்வானி ரத யாத்திரை நடத்திய வகையில் பெரும் கலவரம் மூண்டது. வகுப்பு மோதலில் கோலார், சென்னய்னா, ராமநகரத்தில் 20 பேர்களும், தாவண்கரே பகுதியில் 12 பேரும், கொல்லப் பட்டனர். அக்டோபர் 20 அன்று மேற்கு வங்க மாநிலம் புரூலியா வழியாக அத்வானி ரதம் சென்றபோது வன்முறை வெடித்து ஒன்பது பேர்களின் உயிர் பறிக்கப்பட்டது.

80 நாள் ரத யாத்திரையில் கொல்லப் பட்டவர்கள் 564 பேர். இந்த அனுபவங்களுக்குப் பிறகும்கூட, அயோத்தி நோக்கி விசுவ ஹிந்து பரிஷத் பேரணி நடத்திட, எந்த மாநில அரசுதான் அனுமதி கொடுக்கும்?

பாபர் மசூதி இடிக்கப்பட்டதற்கு முன் இந்துத்துவா வெறியர்களைத் தயாரிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட, திட்டமிடப்பட்ட யாத்திரை இது.

2014 - மக்களவைத் தேர்தலுக்குமுன் பேரணி நடத்தி கலவரத்தை உண்டாக்கி, வாக்காளர்களை இந்துக்கள், முஸ்லிம்கள் என்று கூறுபோட்டு (Polarisation)
வாக்குகளை அள்ளிக் குவித்திடலாம் என்பது தான் இந்தப் பேரணியின் பின்புலத்தில் உள்ள சூழ்ச்சியும், சதியுமாகும்.

பாபர் மசூதி இடிப்புக் குற்றவாளிகள் தண்டிக்கப்படாதவரை, இதுபோன்ற விஷ மங்களில், வன்முறைகளில் சங்பரிவார்க் கும்பல் ஈடுபட்டுக் கொண்டே தானிருக்கும். இது கல்லின் மேல் எழுத்து.

கிரிமினல் குற்றங்களில் சிக்கியவர்கள் தேர்தலில் நிற்கக் கூடாது என்று உச்சநீதி மன்றம் தீர்ப்புக் கூறிய நிலையில், பிஜேபியின் பெருந்தலைகளில் ஒருவர்கூட (பாபர் மசூதி இடிப்புக் குற்றவாளிகள்) தேர்தலில் நிற்கத் தகுதி உடையவர்கள் ஆக மாட்டார்களே!

மத்திய அரசு இதனை ஏன் செய்யக் கூடாது? குற்றவாளிகள் ராஜ நடைபோட்டு அல்லவா திரிகிறார்கள்! வெட்கக் கேடு! மகா வெட்கக்கேடு!!