Search This Blog

10.8.13

டெசோ ஆர்ப்பாட்டம் பூணூல்களை வெகுவாக குடைந்துள்ளது !


பார்ப்பனர்களுக்கு எப்போதும் பின்புத்தி என்பார் தந்தை பெரியார் அவர்கள். இன்றைய (8.8.2013) பூணூல் மலரான தினமலர் இன ஏடு அதனை, தான் போட்டுள்ள கேலிச் சித்திரம் - கார்ட்டூன் மூலம் நிரூபித்துள்ளது.

பிரதமர் மன்மோகன்சிங்கை மிரட்டுவதற்காக பூனை முகமூடியை அணிந்து, கலைஞர் என்ற புலி உருவம் கொண்டவர் டெசோ ஆர்ப்பாட்டத்தில், காமன்வெல்த் மாநாட்டில் - இலங்கைக்குப் போகக் கூடாது - இந்தியப் பிரதமர் கலந்து கொள்ளக் கூடாது என்று கூறி மிரட்டு கிறாராம். அதைக் கண்டு இது பூனைதானே என்று அலட்சியம் காட்டுகிறராம் பிரதமர். நான் (கி.வீரமணி) என்ன இப்படிச் சொல்லிட்டாரே என்று கலைஞருக்குப் பின்னால் நின்று கொண்டு கூறுகிறேனாம்!

நான் எப்போதும் கலைஞருக்குப் பின்னால் இருக்கும் உடன் பிறப்பு - (இரட்டைக் குழல் துப்பாக்கி) என்பதை நாட்டோருக்கு அவ்வேடு அறிவித்துள்ளது. எனக்குப் பெருமையே தவிர, சிறுமை அல்ல.

புலி உருவத்தை கார்ட்டூனிஸ்ட் போட்டு காட்டிவிட்டு (கலைஞரை -) பூனை முகமூடியைப் போட்டுக் காட்டலாமா? புலியைப் பூனையாகப் பார்த்தால் - பார்த்தவருக்குத்தான் பார்வைக் கோளாறே தவிர, கேடே தவிர - புலிக்கல்ல என்பது சாதாரண அறிவுள்ளவர்களுக்குக்கூட விளங்குமே! அதோடு மிரட்டுவதற்காக என்றால் பூனை உருவம் போட்டவர் வேண்டுமானால், புலி முகமூடி போடுவாரே தவிர, பூனை முகமூடியா போடுவார்கள்?

அட அதிபுத்திசாலிகளே, இந்த அடிப்படை உண்மையைக் கூடவா புரிந்து கொள்ளத் தெரியாமல் கார்ட்டூன் வரைகிறீர்கள்? எங்களிடம் அனுப்புங்கள் சொல்லிக் கொடுத்தாவது அனுப்புகிறோம்!

ஆனால் ஒன்று, டெசோ ஆர்ப்பாட்டம் உங்களைப் போன்ற பூணூல்களை வெகுவாக குடைந்துள்ளது என்பது மட்டும் நன்றாகவே புரிகிறது. ஏனெனில் நீங்கள் ராஜபக்சேக்களின் மூதாதையர்கள் அல்லவா? உங்கள் வம்ச பரம்பரை என்பதால்தானே ஈழத் தமிழர்கள் வாழ்வினை கொச்சைப்படுத்துவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளீர்! திராவிடர்கள் புரிந்து கொண்டுதான் உள்ளார்கள்! எச்சரிக்கை!

--------------------------- மதுரை டெசோ தமிழர் பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தலைவர் கி.வீரமணி உரையிலிருந்து - 8.8.2013

30 comments:

தமிழ் ஓவியா said...


மூடத்தனத்துக்குச் சவுக்கடி! குழந்தை தீப்பற்றி எரிவது பில்லி சூன்யம் அல்ல


மருத்துவர் மறுப்பு இது ஒரு வகை நோயே!

சென்னை, ஆக.10- யாரும் பில்லி, சூன்யம் வைக்கவில்லை. உலகில் கடந்த 300 ஆண்டுகளில் 200 பேருக்கு மட்டுமே வந்த அதிசய நோயின் பாதிப்பு இது என்று குழந்தைக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர் நாராயண பாபு கூறினார்.

தானாக தீப்பற்றி எரியும் குழந் தைக்கு சிகிச்சை அளிக்கும் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் குழந்தை கள் நல தீவிர சிகிச்சை பிரிவின் தலைவர் மருத்துவர் நாராயண பாபு இதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறியதாவது:
குழந்தை ராகுலுக்கு வந்துள்ள நோய் ஸ்பொன்டேனியஸ் ஹியூமன் கம்பஸ்டன் என்ற அதிசய நோய் ஆகும். இது உலகில் கடந்த 300 ஆண்டுகளில் 200 பேருக்கு மட்டுமே வந்துள்ளது.அதாவது ஒரு வகையான வாயு உடலின் உள்ளே இருந்து குழந்தையின் தோல் வழியாக வெளியே வருகிறது. அந்த வாயு எளிதில் தீப்பற்றக்கூடியதாகும். இதன் காரணமாக குழந்தையின் அருகே வெப்பமாக இருந்தாலும், அடுப்பு எரிந்து கொண்டிருந்தாலும், யாரா வது சிகரெட் போன்றவற்றை பிடித் துக்கொண்டிருந்தாலும் குழந்தையின் உடம்பில் தீப்பிடித்துவிடும். வியர்வை வியர்க்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.இந்த அபூர்வ நோய்க்கான காரணம் இன்னும் கண்டுபிடிக்கப் படவில்லை. இன்னும் ஆராய்ச்சி அளவில் தான் உள்ளது.

இந்த நோயால் பாதிக்கப்பட்ட வர்கள் குளிரூட்டப்பட்ட அறையில் இருந்தால் தீப்பிடிக்காது. காற்றோட் டமான இடத்தில் இருந்தாலும் தீப்பிடிக்காது. இதன் அடிப்படையில் பாதிக்கப்பட்ட அந்த குழந்தையை பார்த்துக் கொள்கிறோம். தீக்காயங் களுக்கு மருந்துபோடுகிறோம். மற்றபடி குழந்தை ஆரோக்கியமாக உள்ளது. இது பில்லியோ, சூன்யமோ இல்லை. தெய்வக்குற்றமும் இல்லை. அறிவியல் ரீதியில் இது ஒரு நோய்.நான் 30 ஆண்டாக மருத்துவ தொழிலில் இருக்கிறேன். இப்படி தானாக உடலில் தீப்பற்றி எரிவதை கேள்விப்பட்டது இல்லை. பாடத்தில்தான் படித்திருக் கிறேன். இவ்வாறு மருத்துவர் நாராயண பாபு தெரிவித்தார்.

விழுப்புரம் மாவட்டம் திண்டி வனம் அருகே உள்ள டி.பரங்குனி கிராமத்தைச் சேர்ந்தவர் கர்ணன் (வயது 26). கூலித்தொழிலாளி. இவரு டைய மனைவி ராஜேஸ்வரி (23). இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் ராஜேஸ் வரிக்கு கடந்த மே மாதம் 22ஆம் தேதி ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. குழந்தைக்கு ராகுல் என்று பெயர் வைத்தனர். ராகுல் பிறந்த 9ஆவது நாள் அன்று வீட்டில் பகலில் கட்டிலில் படுக்கவைத்திருந்தனர். அருகில் பெற்றோர் இருந்தனர். அப்போது திடீர் என்று குழந்தையின் உடலில் தீப்பற்றி எரிந்தது. ஏதாவது விளக்கு தீ பட்டுவிட்டதா வேறு எப்படி தீப்பிடித்தது என்று பெற் றோர் அக்கம்பக்கம் சுற்றிப்பார்த்தனர். ஆனால் அப்படி எந்த வித அறிகுறியும் தெரியவில்லை. 13ஆவது நாள் அன்று குழந்தையின் உடலில் மீண்டும் தீப்பற்றி எரிந்தது. 30ஆவது நாள் அன்றும் அப்படியே தீப்பற்றி எரிந்தது. இவ்வாறு தீப் பிடித்தபோது குழந்தையின் உடலில் தீக்காயம் ஏற்பட்டது. குழந்தை வலியால் துடித்தது.இதனால் மிகவும் பதறிப்போன பெற்றோர் உடலில் தீக்காயம் ஏற்பட்ட ராகுலுக்கு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச் சைக்கு பின்னர் வீடு திரும்பிய ராகுலின் உடலில் மீண்டும் தீப்பற்றி எரிந்தது.

இந்த நிலையில் விழுப்புரம் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் கிருஷ்ணணமூர்த்தி தலை மையில் மருத்துவர்கள் கொண்ட குழு குழந்தையின் உடலை பரிசோதித் தனர். மருத்துவர்கள் கூறுகையில் குழந்தை ஆரோக்கியமாக இருப்ப தாகவும், உடலில் ஏற்பட்டுள்ள தீக்காயங்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் உத்தரவுப்படி குழந்தை ராகுல், சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்து வமனைக்கு கொண்டுவரப்பட்டான்.

சிறப்பு மருத்துவக்குழு குழந்தை ராகுலை குழந்தைகள் நலத்துறை தலைவர் பேராசிரியர் மருத்துவர் நாராயண பாபு பரிசோதித்தார். அந்த குழந்தை மீது மேலும் தீப்பிடிக்காத அளவுக்கு குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவில் சிறப்பு ஏற்பாடு செய்து அனுமதித்துள்ளனர். குழந்தை குளி ரூட்டப்பட்ட அறையில் உள்ளது.

தீப்பிடித்தால் அணைக்க தீயணைப்பு கருவியும் வைக்கப்பட்டுள்ளது. ராகுலை கண்காணித்து சிகிச்சை அளிக்க இரவும் பகலும் தனித்தனி யாக ஒரு மருத்துவர் ஒரு நர்சு ஆகி யோர் சிறப்பு பணியில் ஈடுபடுத் தப்பட்டுள்ளனர். தற்போது குளூக் கோஸ் ஏற்றப்படுகிறது. குழந்தையின் உடல், தலை, கால் ஆகிய இடங்களில் தீக்காயம் உள்ளன. அந்த காயங் களுக்கு மருந்து போடப்பட்டு உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறது

தமிழ் ஓவியா said...


ஏழை - பணக்காரத் தன்மைக்குக் காரணம் ஜாதி முறையே! முதல் அமைச்சர் சித்தராமையா படப்பிடிப்பு


பெங்களூரு, ஆக.10- சமுதாயத்தில் ஏழை-பணக்காரர் இடையே இடைவெளி அதிகரிப் புக்கு காரணம் ஜாதி முறையே என்று சித்தரா மையா பேசினார்.

பெங்களூரு சிறீ லட்சுமிநரசிம்மசாமி ஆன்மிக அமைப்பு சார் பில் நடைபெற்ற விழா வில் கலந்து கொண்டு முதல் அமைச்சர் சித்த ராமையா பேசும்போது கூறியதாவது:- பிற்படுத்தப்பட்ட பிரிவு மக்களின் குழந்தை களுக்குக் கல்வி வசதி கிடைக்க வேண்டும். அவர்கள் முன்னேற வேண்டும் என்ற நோக் கத்தில் மாநிலத்தில் பல தலைவர்கள் செயல் பட்டு வந்துள்ளனர்; சமீபகாலமாக நான், எனது குடும்பம் என்ற மனோபாவம் மக்களி டையே அதிகரித்து வரு கிறது.

இத்தகையவர்களால் எந்தப் பயனும் இல்லை. சுயநலத்துக்காக வாழ் பவர்களை

மரணத்துக்கு பிறகு யாருமே நினைக் கப் போவதில்லை. அர சியலில் முறைகேடாக பணம் சம்பாதித்தவர் கள் என்ன ஆகி இருக் கிறார்கள் என்பது அனை வருக்கும் தெரியும். இந்த ஜாதி முறை யால் ஏராளமானவர் களுக்குக் கல்வி வாய்ப்பு கிடைக்கவில்லை. முந் தைய காலத்தில் மேல் தட்டு உயர் ஜாதி மக் களுக்கு மட்டுமே கல்வி கிடைத்தது. வஞ்சிக்கப் பட்டவர்களுக்கு அந்த கல்வி கிடைக்காததால் தான் இன்று சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகள் ஏற் பட்டுள்ளன. சமுதாயத் தில் ஏழை-பணக்காரர் இடையே இடைவெளி அதிகரித்து உள்ளதற்கு காரணம் ஜாதி முறையே.

வஞ்சிக்கப்பட்ட மக்களின் குழந்தைகளுக் கும் நல்ல கல்வி கிடைக்க வேண்டும். அவர்களும் மற்றவர்களைப் போன்று வளர வேண்டும். இத் தகைய மக்களின் மேம் பாட்டுக்காக காங்கிரஸ் அரசு பல்வேறு திட்டங் களை தீட்டி செயல் படுத்தி வருகிறது.
இவ்வாறு சித்தரா மையா பேசினார்.

தமிழ் ஓவியா said...


பழையவற்றைக் கிளறினால்...நான்கு தீர்மானங்களை முன்னிறுத்தி டெசோ அமைப்பு, தமிழ்நாடு தழுவிய அளவில் எழுச்சி ஆர்ப்பாட்டத்தை நடத்தியது.

முதல் தீர்மானம்: இலங்கையில் 13ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்தம் பற்றியதாகும். அந்தத் தீர்மானத்திலேயே ஒரு விஷயம் தெளிவுபடுத்தப் பட்டுள்ளது.

13ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்தம், ஈழத் தமிழர் பிரச்சினைக்கு முழு அரசியல் தீர்வாக அமையாது என்பதும்; இலங்கை உள்ளிட்ட - அனைத்து நாடுகளிலும், வாழும் ஈழத் தமிழர்களி டையே பொது வாக்கெடுப்பு நடத்தி, அவர்களுடைய கருத்தினைக் கேட்டுத் தீர்வு காண்பதுதான் ஈழத் தமிழர்களின் நலனுக்கு உகந்த தீர்வாக இருக்கும், என்பதுதான் டெசோ அமைப்பின் நிலைப்பாடாகும். இருப்பினும், தற்காலிகத் தீர்வாகாது, ராஜீவ் ஜெயவர்த்தனே ஒப்பந்தம் பயன்பட வேண்டும் என்று டெசோ அமைப்பு கருதுகிறது எனத் தெளிவாகவே குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுபற்றி தொலைக்காட்சிகளில் விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றன.
1987இல் ராஜீவ் ஜெயவர்த்தனே என்பது ஒரு வரப் பிரசாதம்; அதனைப் பயன்படுத்திக் கொள்ளத் தவறி விட்டனர் என்ற குற்றச்சாற்று காங்கிரஸ் தரப்பில் வைக்கப்படுகிறது.
26 ஆண்டுகள் ஓடி விட்ட காரணத்தால் அதன் உண்மைகள், தகவல்களை மறந்து போயிருப் பார்கள் மக்கள் என்ற மனப்பான்மையில் துணிந்து சொல்லப்படும் கருத்தாகவே இது கருதப்பட வேண்டும்.

இந்த ஒப்பந்தம் தயாரிக்கப்படுவதற்குமுன் ஈழத் தமிழர்களுக்காகப் போராடிக் கொண்டிருக்கும் அமைப்புகளின் கருத்துக்கள் பெறப்படவில்லை. இலங்கை அரசும், இந்திய அரசும் (குறிப்பாக உளவுத் துறையும் சேர்ந்து) தயாரித்த சரத்துக்களைக் கொண்டதாகும்.

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனை டெல்லி அசோகா ஒட்டலில் கிட்டத்தட்ட சிறைக் கைதிபோல் வைத்துப் பேசப்பட்டதாகும். தீட்சித் போன்றவர்கள் மிரட்டல் தொனியில் பேசியும், பிரதமர் ராஜீவ்காந்தி கேட்டுக் கொண்டும் ஒப்பந்தத்தில் உள்ள சரத்துகள் ஈழத் தமிழர்களின் உரிமைகளுக் குப் பாதகமாக இருந்ததால் பிரபாகரன் ஏற்றுக் கொள்ளவில்லையே!
கடைசியில் பிரதமர் ராஜீவ்காந்தியின் வார்த்தை களை நம்பத் தகுந்ததாகக் கருதி ஏற்றுக் கொள்ளும் ஒரு சூழ்நிலை (அதில்கூட பிரபாகரன் கையொப்ப மிடவில்லை) ஏற்பட்டது என்பதுதான் உண்மை.
ஒப்பந்தத்தில் கையொப்பமிட்ட அதிபர் ஜெயவர்த் தனே (29.7.1987) கையொப்பம் போட்ட மை காய் வதற்கு முன்னதாகவே வானொலி, தொலைக்காட்சி ஊடகங்கள் மூலம் என்ன கூறினார்? (6.8.1987).
வடக்கு - கிழக்கு இணைப்புத் தற்காலிகமானது தான். இதைக் கண்டு ஏன் எதிர்ப்பைக் காட்டு கிறீர்கள்? நானே இந்த இணைப்பை எதிர்த்துப் பிரச்சாரம் செய்ய இருக்கிறேன். தற்காலிகமான இந்த ஏற்பாட்டிற்கு என்னைப் புரிந்து கொள்ளாது சிங்களச் சகோதரர்களே, ஏன் ரகளை செய் கிறீர்கள்? என்று பேசவில்லையா?
அந்த இணைப்புக்கூட கிழக்கு மாகாணத்தில் வாக்கெடுப்பு நடத்தித்தான் முடிவு செய்யப்படுமாம்.

கிழக்கு மாகாணத்தில் சிங்களவர்களும், (குடி யேற்றப்பட்டு விட்டார்களே) முசுலிம்களும் எதிராக வாக்களித்தால் அந்த இணைப்பு இல்லாமலேயே போய்விடும்.
அதற்குப்பின் ராஜபக்சே என்ன செய்தார்? தமது கூட்டணியில் உள்ள மார்க்ஸிய அமைப்பான ஜெ.வி.பி மூலம் உச்சநீதிமன்றத்தில் வழக்கொன்றைத் தொடுக்கச் செய்து, வடக்கு - கிழக்கு இணைப்புக் கூடாது என்ற ஒரு தீர்ப்பை பெற்றும் வைத்துள்ளார்.

சிங்களமும், தமிழும் ஆட்சிமொழி ஆகும் என்று ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளதே என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியாளர் கேட்டதற்கு அதிபர் ஜெயவர்த்தனே சொன்ன பதில் என்ன தெரியுமா? இரண்டு மொழிகள் இலங்கைக் கல்வி முறையில் தேவையா என்பது பற்றி இனிமேல்தான் ஆராய வேண்டும் (இந்தியன் எக்ஸ்பிரஸ் - 30.7.1987 பக்கம் 9) என்று ஒப்பந்தத்தின் மறுநாளே சொல்ல வில்லையா?

இலங்கைக் குடியரசுத் தலைவரால் பொது மன்னிப்பு வழங்கப்பட்ட நிலையில் புலேந்திரன் குமரப்பா உட்பட 17 பேர்களை இலங்கைக் கடற்படை கைது செய்ததே - அவர்களைக் காப்பாற்ற இந்திய அரசு முனையவில்லை என்பதைவிட தலையிட மறுத்தது என்பதுதானே உண்மை. அதன் காரணமாக விடுதலைப்புலிகள் அவர்களுக்கே உரிய பாணியில் சையனைடு குப்பிகளை பயன்படுத்தித் தற்கொலை செய்து கொண்டனரே! ராஜீவ் - ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தின் கெதி இதுதானா?

பழையனவற்றைக் காங்கிரஸ்காரர்கள் கிளற வேண்டாம் - அவை அவர்களுக்குச் சாதகமாக இருக்காது! இப்பொழுது 13ஆவது சட்டத் திருத் தத்தைக் கொண்டுவரச் செய்ய முடியுமா என்பதில், மத்திய அரசு கவனம் செலுத்தட்டும்!

தமிழ் ஓவியா said...


தானே வீழ்ந்துவிடும்!


பார்ப்பான் என்கின்ற பெரிய மரத்திற்கு வேர் கடவுளும், மதமும் ஆகும். இந்த வேரை அழித்தால் மரம் தானாகவே வீழ்ந்துவிடும்.
(விடுதலை, 20.11.1964)

தமிழ் ஓவியா said...


சங்கரநாராயணர் கோவிலுக்குள் கக்கூசும் மிதியடியும்


திருநெல்வேலி ஜில்லாவிலுள்ள சங்கரன்கோவி லென்னும் சங்கரநாராயணன் கோவிலானது அச்சில் லாவில் உள்ள முக்கிய கோவில்களுள் ஒன்று. அக் கோவிலுக்கு ஏராளமான சொத்துக்கள் வரும்படி உண்டு. லோககுரு என்றும் சங்கராச்சாரியார் சுவாமிகள் என்றும் சொல்லப்பட்ட ஸ்மார்த்தர்களின் குருவானவர் இம்மாதம் அவ்வூருக்கு வந்து அக்கோவிலை தனக்கும் தனது பரிவாரத்திற்கும் ஜாகையாக வைத்துக் கொண்டார்.

அதோடல்லாமல் சுவாமிகளின் திருக்கக்கூசும் அக்கோவிலுக் குள்ளாகவே கட்டப்பட்டு சுவாமிகளின் திருமலமும் கோவிலிலேயே சமர்ப்பிக்கப்பட்டுவிட்டது. அக்கோவில் டிரஸ்டி கனவான்களில் பார்ப்பனரல்லாதார் அதிகமாய் (மெஜாரிட்டியாய்) இருந்தும் இதை ஆட்சேபிக்கத் தைரியமில்லை. ஏனென்றால் அவ்வூர் அதிகாரிகள் எல்லாம் குட்டி சுவாமிகள் குழாங்களாகவே இருக்கின்றன.

அதோடு மாத்திரமில்லாமல் சுவாமிகள் சங்கர நாராயண சுவாமியை திருக்கண் பார்ப்பதாயிருந்தாலும், திரு மிதியடியை தாங்கிய திருப்பாதத்துடனே தான் மூலஸ்தானத்திற்குப் போய் திருக்கண் பார்த்தருளி னாராம். அதோடு மாத்திரமல்லாமல் சுவாமிகள் கோவி லுக்குள் நுழையும் போது திருமேனாவில் திருப்பள்ளி கொண்ட கோலத் துடனேயே சென்றாராம். மாமிக்கோர் மாமியுண்டானால் சுவாமிக்கோர் சுவாமி வேண்டாமா? அதுதான் நமது லோக குரு சங்கராச்சாரியார், சுவாமிகள் போலும்.

சுவாமிகளின் இந்த வைபவங்களையும், தெய்வத் தன்மையையும் கண்ட திருநெல்வேலி நெல்லையப்பர் சுவாமி கோவில் பக்தர் களும், தர்மகர்த்தாக்களும் குறைந்தபட்சம் நெல்லை யப்பர் கோவிலுக்குள் சுவாமிகளின் திருக் கக்கூசாவது கட்டப்படாமல் இருக்கவேண்டுமென்று கருதி லட்சக் கணக்கான துண்டு விளம்பரங்கள் போட்டும் தர்மகர்த் தாக்களுக்கு நோட்டீசு விட்டும் சத்தியாக்கிரகம் செய்வதாய் பயமுறுத்தியும் ஆர்ப்பாட்டம் செய்து சுவாமிகளின் திருக் கக்கூசை திருக்கோவிலுக்குள் கட்டாமலிருக்க தக்க ஏற்பாடு செய்துவிட்டார்கள்.

இது தவிர, நெல்லையப்பர் சுவாமி கோவிலுக்கு முன்னால் சங்கராச்சாரிய சுவாமிகள் வருகையை முன்னிட்டு போடப்பட்ட அலங்காரப் பந்தல்கள் போட அனுமதித்ததின் பலனாய் அஷ்டமி உற்சவத்தின்போது நெல்லையப்பர் சுவாமி எழுந்தருளுகையில் பந்தல் சமீபம் வந்தவுடன் தாழ்ந்தும் குனிந்தும் வெளியே வரவும் உள்ளே போகவும் ஏற்பட்டது.

இதைப் பற்றி பல பக்தர்களுக்கு மனவருத்தமிருந் தாலும் சங்கராச்சாரிய சுவாமிகளும் அவரது திருக் கூட்டத்தாரும் இல்லாவிட்டால் நெல்லையப்பருக்கு இவ்வளவு மகத்துவமும், இவ்வளவு வேலி நிலமும், இவ்வளவு சொத்துக்களும் சுகங்களும் ஏது? ஆதலால் சங்கராச்சாரிய சுவாமிகளின் பந்தலுக்கு நெல் லையப்பர் தாழ்ந்து குனிந்து வணங்க வேண்டியது
தான்.

- குடிஅரசு - கட்டுரை - 05.12.1926

தமிழ் ஓவியா said...

இதுகூட வகுப்புத் துவேஷமா?

திருநெல்வேலி ஜில்லா தென்காசியிலுள்ள ஒரு சிவன் கோவிலில் சமஸ்கிருதத்தில் வேத பாராயணம் செய்த பிறகு, தமிழில் தேவார பாராயணம் செய்த பிறகு எல்லோருக்கும் விபூதி பிரசாதம் கொடுக்க வேண்டும் என்பதாக கோவில் அதிகாரிகள் ஏற்பாடு செய்தார்களாம்.

அங்கு வேத பாராயணம் செய்து வந்த பார்ப்பனர்கள் தேவார பாராயணம் செய்த பிறகு விபூதி பிரசாதம் வாங்குவது தங்கள் உயர்வுக்குக் குறைவு தேடினதாக ஆகுமென்று நினைத்து கலகம் செய்து கொண்டிருக்கிறார்கள் என்று செய்தி வந்திருக்கிறதை வேறு இடத்தில் பிரசுரித்திருக் கிறோம். கோவிலில் தேவாரம் படிக்க வேண்டுமென்று சொன்னால்கூட அது நமது பார்ப்பனர்களுக்கு வகுப்புத் துவேஷமாய்ப் படுகிறதாயிருந்தால் பிறகு எங்கு போய்த்தான் பிழைக்கிறது?

தேவாரம் படிக்காததினால் மோட்சம் கெட்டுப் போய்விட்டது என்பதாக நாம் பயப்படவில்லை. மக்களிடம் அன்பு செய்வதைத்தான் கடவுள் பக்தி என்று நினைக்கிறோமே அல்லாமல் வேத பாராயணமும் தேவார பாராயணமும்தான் கடவுள் பக்தி என்று நாம் நினைப்பதில்லை.

ஆனாலும் தமிழ் மொழி என்றால் இந்தப் பார்ப்பனர்களுக்கு இவ்வளவு ஆத்திரம் வருவானேன் என்பதுதான் நமது கவலையே தவிர வேறில்லை. நமது தென்னாட்டுப் பிரயாணத்தில் ஒரு சமயம் அங்கு போக நேரிடினும் நேரும்.

- குடிஅரசு - செய்திக்குறிப்பு - 21.11.1926

தமிழ் ஓவியா said...


தென்காசியில் பார்ப்பனர்கள்


ஒத்துழையாமையும் பகிஷ்காரமும் கதவடைப்பும்

தென்காசி சிவன் கோவிலில் பார்ப்பனர்களின் வேத பாராயணத்தைப் போலவே தமிழ் மக்களின் தேவாரப் பாராயணமும் செய்யப்பட வேண்டும் என்பதாகக் கருதி தேவாரப் பாராயணம் ஆன பிறகு பிரசாதம் கொடுக்கப்பட வேண்டும் என்று தேவதான போர்டாரும் கமிட்டியாரும் தர்மகர்த் தாக்களும் உத்தரவு போட்டதினால் அப்பேர்ப்பட்ட சுவாமி தரிசனமும் பிரசாதமும் தங்களுக்கு வேண்டியதில்லை என்று சொல்லி அதோடு ஒத்துழையாமையும் பகிஷ்காரமும் செய்து அவ்வூர் பார்ப்பனர்கள் எல்லாம் ஒன்று கூடி பார்ப்பன ஸ்த்ரீகள்,

புருஷர்கள், குழந்தை குட்டிகள் சகிதம் யாரும் அக்கோவிலுக்குப் போகக் கூடாது என்றும், சுவாமியை தரிசிக்கக் கூடாதென்றும் பரிசாரகம் முதலிய வேலையைச் செய்யக் கூடாது என்றும், சுவாமி தங்கள் வீதிக்கு எழுந்தருளி வந்தாலும் ஒவ்வொரு பார்ப்பனரும் வீதி தெருக்கதவை அடைத்துக் கொள்ள வேண்டும் என்றும் தீர்மானம் செய்து கொண்டு அந்தப்படி அமலிலும் நடத்தி வருகிறார்கள் என்கின்ற விபரம் அறிய மிகவும் சந்தோஷமடைகிறோம்.

ஏனெனில் பார்ப்பனர்கள் பகிஷ்காரம் செய்த வேலைகளை ஆதி சைவ குருக்கள் பட்டமார்களைக் கொண்டு கோவிலதி காரிகள் வேலை வாங்கி வருகிறார்கள். இது போலவே மற்ற ஊர்களிலும் உள்ள பார்ப்பனர்களும் மற்ற கோவில்களோடும் சுவாமிகளோடும் ஒத்துழையாமையும் பகிஷ்காரமும் செய்து விடுவார்களேயானால் நமது தெய்வங்களைப் பிடித்த சனியனும் நமது மதங்களைப் பிடித்த கிரகங்களும் அடியோடு ஒழிந்து யோக்கியமானதும் உண்மையானதுமாக விளங்கும்.

- குடிஅரசு - செய்திக்குறிப்பு - 12.12.1926

தமிழ் ஓவியா said...

பார்ப்பனியத்தை ஒழித்த கலியாணங்கள்

சேலம் அடுத்த தாதம்பட்டி என்னும் கிராமத்தில் பல்ஜிய நாயுடு வகுப்பைச் சேர்ந்த வீடுகளில் மூன்று கல்யாணங்கள் வெகு விமரிசையாய் நடந்தன. அம்மூன்று கலியாணங்களுக்கும் பார்ப்பன புரோகிதர் கள் இல்லாமல் பார்ப்பனரல்லாதாரைக் கொண்டே முகூர்த்தம் செய்விக்கப்பட்டது.

இவைகளில் ஒரு கலியாண வீட்டுக்காரருக்கு மாத்திரம் ஆரம்பத்தில் நாம் ஏன் இதை முதன் முதலாகச் செய்ய வேண்டும், மற்றும் யாராவது செய்து பிறகு நாம் செய்யலாம் என்கிற எண்ணம் மனதுக்குள்ளாக இருந்திருக்கிறது. அதற் கேற்றாற்போல் அவர் ஒரு பார்ப்பனப் புரோகிதரையும் தருவித்து விட்டார்.

ஆனால் மற்ற இரண்டு கலியாண வீட்டுக்காரரும் தைரியமாய்ச் செய்ய ஆரம்பித்த பிறகும் ஈரோட்டிலிருந்து கலியாணத்திற்கு வந்திருந்த ஸ்ரீமான்களான அ.கோவிந்த நாயக்கர், வெ.முத்து நாயக்கர், ரா.துரைசாமி நாயக்கர், வெ. எல்ல நாயக்கர், எ.எல்ல நாயக்கர், கே. ராமசாமி நாயக்கர், ஈ.வெ. ராமசாமி நாயக்கர் முதலிய இன்னும் பல கனவான்கள் சொன்ன பிறகும் தான் தருவித்த பார்ப்பனப் புரோகிதருக்கு ஏதோ பணம் கொடுத்தனுப்பிவிட்டு அவரும் பார்ப்பனரல்லாதாரைக் கொண்டே தனது வீட்டு முகூர்த்தத்தையும் நடத்திக் கொண்டார்.

ஆகவே, இந்த மூன்று கலியாணங்களும் எவ்வித சடங்கும் பார்ப்பன சம்பந்தமில்லாமலே இனிது நிறைவேறிற்று. அதோடு அங்கு வந்திருந்த மற்ற பந்து மித்திரர்களும் தங்கள் தங்கள் வீட்டு சுபா சுப காரியங் களையும் இனி பார்ப்பனரல்லாதாரைக் கொண்டே செய்து கொள்வது என்னும் அபிப்பிராயத்தையும் தெரிவித்துக் கொண்டார்கள்.

இந்த வகுப்பார் பார்ப்பனியத்தை நீக்கி கலியாணம் செய்த கவுரவம் சேலம் தாதம்பட்டிக்கே கிடைத்ததோடு மற்றவர்களுக்கும் வழிகாட்டின பெருமையும் அவர் களுக்கு கிடைத்ததைப் பற்றி நாம் மிகுதியும் மகிழ்ச்சி அடைகிறோம். அதோடு இதற்கு முக்கியமாய் நின்று வேலை செய்த ஸ்ரீமான்கள் எல்ல நாயக்கர், கே. ராமசாமி நாயக்கர் முதலிய கனவான்களையும் பாராட்டுகிறோம்.

- குடிஅரசு - செய்திக்குறிப்பு - 21.11.1926

தமிழ் ஓவியா said...

சுயமரியாதைக்கு ஜே!

சர்க்கார் உத்தரவு

எல்லா கிராமம் கிராமாதிகாரிகளுக்கும் - பொதுச் சாவடி, பொதுக்கட்டடம், கச்சேரி, பள்ளிக்கூடம், பொதுக் கிணறு, பகிரங்கமான பாதை, சந்தை முதலிய எல்லா இடங்களிலும் ஆதிதிராவிடர் களுக்கும் பிரவேசிக்கச் சுதந்திரமுண்டு என்ற விஷயத்தையும், மேற்படி ஆதிதிராவிடர்களைப் பறையர், சக்கிலியர், பள்ளர் என்று அழைக்காமல் ஆதிதிராவிடர்கள் என்றே அழைக்க வேண்டும் என்பதையும், பத்திரங்களிலும் ஆதிதிராவிடர் என்றே பதியவேண்டியதையும் கிராமத்தில் பரவச் செய்து அமலுக்குக் கொண்டு வரவேண்டியது. மேற் படியார்களுக்குப் பூமி அடமான விஷயங்களில் வேண்டிய உதவி புரிய வேண்டியது.

- குடியரசு - 21.11.1926

தமிழ் ஓவியா said...


ரயில்வே வாரியம் கேரளத்தின் ஆசைக்கு அடிபணியக்கூடாது!


இந்தியன் ரயில்வே நிர்வாக வசதிக்காக தெற்கு ரயில்வே, தென்மேற்கு ரயில்வே என பல மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மண்டலங்களும் பல கோட்டங்களாகவும் பிரிக்கப்பட்டுள் ளன. தெற்கு ரயில்வேயில் சென்னை, திருச்சி, மதுரை, சேலம், திருவனந்தபுரம், பாலக்காடு ஆகிய கோட்டங்கள் அடங்கியுள்ளன.
ரயில்வே வாரியம் மேலும் ஓரிரு ரயில்வே மண்டலங்களை உருவாக்கும் திட்டத்தில் இருக்கின்றது. அவ்வாறு உருவாக்கும் மண்டலங்களில் ஒன்று கேரளத்தை தலைமையிடமாகக் கொண்டு அமைய வேண்டும் என்பது அங்கேயுள்ள அரசியல்வாதிகள், பத்திரிகைகளின் கோரிக்கை. அது அவர்கள் உரிமை. கேட்கட்டும்; போராடட்டும்; நல்லது நடக்கட்டும் நாம் வாழ்த்துவோம்.

ஆனால், பிரச்சினை என்னவென் றால், தெற்கு ரயில்வே கேரளத்தைப் புறக்கணிக்கின்றது என்று கூப்பாடு போடுகின்றன அங்கேயுள்ள பத்திரி கைகள். ஆனால், உண்மை நிலை என்ன? கேரள மாநிலத்திலுள்ள தெற்கு ரயில்வேயில் அடங்கிய கோட் டங்கள் தங்கள் பணியை சரிவர செய்வது இல்லை.

தமிழ் ஓவியா said...

தெற்கு ரயில்வே கேரளாவைப் புறக்கணிக்கின்றதா? இல்லை என்பதே உண்மை. எடுத்துக்காட்டு: மதுரைக் கோட்டத்தில் திருநெல்வேலி - திருச் செந்தூர் பகுதியில் செய்ய வேண்டிய பல பணிகளை திராவிடர் கழகம் தெற்கு ரயில்வே தலைமை அலுவலகத்தின் கவனத்துக்குக் கொண்டு வந்ததும், மதுரைக்கோட்டம் விரைந்து செயல்பட்டது. முதற்கட்டமாக காவல் துறையின் பணிகள் முடுக்கி விடப்பட்டன. அடுத்ததாக, வாரவிடுமுறை இன்றி தவித்த பயணச்சீட்டு வழங்குகின்ற பணியில் இருந்தவர்களுக்கு வார விடுமுறை கிடைக்கும் வகையில் மாற்றங்கள் செய்யப்பட்டன. பிற தேவைகள் மதுரைக் கோட்டத்தால் ரயில்வே வாரியத்துக்குத் தெரிவிக்கப்பட்டன. இதன் விளைவாக, திராவிடர் கழகம் முன்வைத்த சென்னை - திருச்செந்தூர் பகல் நேர இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் சேவை விரைவில் தொடங்கும் நிலையில் இருக்கின்றது. இதை தெற்கு ரயில்வே இணை இயக்குநர் அலுவலகம் நம்மிடம் அறிவித்தது.

ஆனால் கேரள மாநிலத்தில் அடங்கிய திருவனந்தபுரம் கோட்டத் தின் நிலைமை என்ன? அந்தக் கோட்டத்தில் அடங்கிய தமிழ்நாடு - கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோயில் டவுன் 00 தொடர்வண்டி நிலையத்தின் நிலைமையைச் சுட்டிக் காட்டி இணை இயக்குநர் அலுவலகத் தில் மனு வழங்கியது திராவிடர் கழகம். விடுதலையும் இதைச் சுட்டிக்காட்டியது.

இதற்கு திருவனந்தபுரம் கோட்டம் எந்த நடவடிக்கையை மேற்கொண்டது தெரியுமா? ஆழ்ந்த தூக்கத்தில் அந்தக் கோட்டம் இருக்கின்றது என்று தான் சொல்ல வேண்டும். நாம் நேரில் திருவ னந்தபுரம் கோட்ட அலுவலகத்தைத் தொடர்பு கொண்ட பொழுது, நம்மை அவர்கள் அலைக்கழித்தது தான் மிச்சம்! எந்தப்பதிலும் கிடைக்கவில்லை. இப்படி இருந்தால் அங்கே எந்தப்பணி நடைபெறும்?

தமிழ் ஓவியா said...


நிலைமையை அறிந்த தெற்கு ரயில்வே பொது மேலாளர் திருமிகு. ராகேஷ் மிஸ்ரா அவர்கள் மே 4-ஆம் நாள் நேரில் கன்னியாகுமரி மாவட் டத்துக்கு வருகை புரிந்து பார்வை யிட்டார். நாகர்கோயில் டவுன் நிலையத்தை மேம்படுத்த ஏற்கெனவே ரூ. 2 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது என்ன ஆனது என்பது மக்களுக்கோ பத்திரிகைகளுக்கோ தெரியாத செய்தி என்பதை இங்கே நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
தெற்கு ரயில்வே பொது மேலாளர் அவர்கள் செய்தியாளர்களிடையே பேசும்பொழுது கூறியவற்றில் முக்கிய மானவை:
1. கன்னியாகுமரி மாவட்டம் புறக்கணிக்கப்படுவதாக புகார்கள் வருகின்றன.
2. இந்த மாவட்டத்தின் ரயில்வே பகுதிகளை மதுரைக் கோட்டத்துடன் இணைக்கும் ஆலோசனை உள்ளது.
3. நாகர்கோயில் முதல் திருவனந்த புரம் வரை இரட்டை பாதை அமைக் கும் திட்டம் இருக்கின்றது.
(இரட்டை ரயில் பாதை அமைப்பது சம்பந்தமாக நாம் திருவனந்தபுரம் கோட்டத்தில் விசாரித்த பொழுது, அந்தத் திட்டம் எங்களிடம் இல்லை என்று அங்கே ஏற்கெனவே கூறியிருந் தார்கள் என்பது இங்கே குறிப்பிடத் தக்கது.)
தெற்கு ரயில்வே பொது மேலாளர் அவர்களின் கன்னியாகுமரி மாவட்ட வருகையும், அவரது பேச்சும் பொது மக்களின் மனதில் தென்றலை வீசச் செய்திருக்கின்ற இந்தத் தருணத்தில், பேரிடியாக கேரளப் பத்திரிகைகள் களத்தில் இறங்கியிருக்கின்றன. கேரளத் தில் உள்ள கண்ணூர், கோழிக்கோடு, பாலக்காடு, எர்ணாகுளம், திருவனந்த புரம் ஆகிய ஊர்களில் ஒன்றைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய கோட்டத்தை உருவாக்க வேண்டும் என்றும் நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வருவதால் ஆளுங்கட்சிகளும் எதிர்க் கட்சிகளும் குரல் கொடுத்தால் கோரிக்கை உடனே நிறைவேறும் என்றும் அங்கே பத்திரிகைகள் எழுதிக் கொண்டே இருக்கின்றன.

நிலைமை இதனுடன் நின்றுவிட் டால் பரவாயில்லை. தொடர்ந்து அவை கூறுவது என்ன தெரியுமா?

கேரளத்தை தலைமையிடமாகக் கொண்டு உருவாக்குகின்ற ரயில்வே மண்டலத்தில் சேலம் ரயில்வே கோட் டத்தையும் மதுரை ரயில்வே கோட் டத்தையும் இணைக்க வேண்டும்.

மேற்படி கோரிக்கையை வலியுறுத்தி மனுக்கள் பல மத்திய அரசுக்கும் ரயில்வே வாரியத்துக்கும் அனுப்பப் பட்டிருப்பதாகவும் பத்திரிகைச் செய்திகள் கூறுகின்றன.

தமிழர்களிடம் மோதுவதும் தமிழர்களிடம் மோத மலையாளிகளை உருவாக்குவதுமே கேரளப் பத்திரி கைகளின் முழுநேர வேலையாகி விட்டன. 1996-97-களில் முல்லைப் பெரியாறு அணையைக் கைப்பற்ற வேண்டும் என்று கேரளப் பத்திரி கைகள் மலையாளிகளைத் தூண்டின. இதை அப்படியே மொழி பெயர்த்து அன்றைய அமைச்சர் மாண்புமிகு ஆர்க்காடு வீராசாமி அவர்களிடம் கொடுத்தோம். இரண்டு வாரங்களுக்குப் பின் அதே பத்திரிகைகள் எழுதின: நாம் எழுதுவதையெல்லாம் தமிழ்நாடு அரசுக்கு மொழிபெயர்த்துக் கொடுக்க அங்கே ஆள்கள் இருக்கின்றார்கள்.

அதுபோல இன்று ரயில்வே கோட் டங்களைத் துண்டாட நினைக் கிறார்கள். தெற்கு ரயில்வே இதற்கு ஒப்புக்கொள்ளக் கூடாது. தமிழ் நாட்டிலுள்ள கோட்டங்கள், என்றும் தெற்கு ரயில்வே மண்டலத்துடன் தான் இருக்க வேண்டும்.

கேரளாவின் கோரிக்கைக்கு ரயில்வே போர்டும், மத்திய அரசும் செவி சாய்க்கக் கூடாது. தமிழர்கள் வந்தாரை வாழ வைத்தவர்கள். ஏமாளிகள் அல்ல. மீறி ரயில்வே வாரியமும் மத்திய அரசும் தேவையற்ற முடிவை எடுத்தால், ரயிலின் சக்கரங்களைச் சுழல விட மாட்டோம் என்கிறார்கள் தமிழர்கள்.

- - த.அமலா, திருச்செந்தூர்

தமிழ் ஓவியா said...


காலணிகளின் ஊமைக்குரல்மனித நேயம் வெளிப்படாத
ஆடை அலங்காரத்தோடு
மனித இனம் பிரிக்கும் சாதி
சமய உணர்வோடு
கள்ளம் கபடம் நிறைந்திருக்கும்
அழுக்கு மனதோடு
குறுக்கு வழியில் பதுக்கி வைத்திருக்கும்
அளவிலா பொருளாசையோடு
சொத்து சுகங்களால் சேர்ந்திருக்கும்
பகட்டான முகப்பொலிவோடு
உண்மைக்கு நேர்மாறாக பேசும் பொய்நாவோடு
ஐம்புலனுள் எல்லாம் மறைத்து
போலி பக்தியோடு
கோவிலுள் நுழையுமுன் வெளியே
எங்களை கழட்டி விடுவது ஏன்?
நீங்கள் கும்பிடும் காட்சிகளை நாங்கள் பார்த்துவிடக் கூடாது
என்பதற்காகத்தானே! ஆமெனில்
இதுவும் ஒரு நாடகம் தானே!
இதில் இறையருளுக்கு இடமேது?
அருள். கிரகோரி
தலைமை ஆசிரியர் பணிநிறைவு
விமான நிலையம்

தமிழ் ஓவியா said...

இராமனை வீழ்த்துவோம்! இராவணன் புகழை நிலை நாட்டுவோம்!பரமத்தி சண்முகம்
தி.மு.க. கொள்கை பரப்பு இணைச் செயலாளர்

இராமன் யோக்கியமானவன், தரும நெறி தவறாதவன் என்றெல் லாம் இராமதாசர்களும், பக்த கோடிகளும் பிரசங்கம் செய்து வருகிறார்கள்.

அதனை ஏமாந்த திராவிட மக்களும் இதுவரை நம்பி ஏமாந்து வந்தது மட்டுமின்றி இன்னமும் ஏமாந்து வருகிறார்கள். இராமன் என்கின்ற கதாபாத்திரம் வால்மீகி முனிவனால் படைக்கப்பட்டுப் பரப்பப்பட்டு வந்தாலும் கம்பனால் மேலும் அதிகமான அளவிற்கு இராமபாத்திரத்துக்கு பளப்பளவென ஈயம் பூசிப் பரப்பப்பட்டு வந்துள்ளது. இன்றைய அரசியலிலும் அந்த இராம நாமம் அகில இந்திய அளவிலும் குறிப்பாகத் தெற்கே தமிழ்நாட்டிலும் பரப்பப்பட்டு வந்துள்ளது.

இந்து மதத்தைப் பரப்புவதற்காகவே இராமாயண காவியம் வால்மீகியாலும், கம்பனாலும் பரப்பப்பட்டது. அந்த ராமன் எந்த வகையில் யோக்கிய மானவன்? இராமாயணத்தை தந்தை பெரியார் அவர்களைப் போல ஆராய்ந்தவர்கள் யாருமில்லை.

இராமனுடைய கேவலமான பிறப்பு, நடவடிக்கை, நம்பிக்கை மோசடி, துரோகச் செயல்பற்றியெல்லாம் தந்தை பெரியார் அக்கு வேறு ஆணி வேறாகப் பிய்த்துப் பிளந்து காட்டியுள்ளார். பேரறிஞர் அண்ணா அவர்கள் தந்தை பெரியார் வழியில் இராமா யணம் எவ்வளவு மோசமான தன்மை கொண்ட இதிகாசம் என்பதை எழுத்து மூலமாகவும், தமது ஆழ்ந்த பேருரைகள் மூலமாகவும், இராமா யணம் பற்றித் தமது வாழ்நாள் முழுதும் ஆய்ந்து, எழுதி, பிரச்சாரம் செய்து வந்தார். மாபெரும் அறிஞர் பெரு மக்களுடன் நேரடியாக வாதம் செய்து வென்று இருக்கிறார்.
இது தவிர, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் தலைவர்களில் ஒருவரும், சிறந்த எழுத்தாளரும், ஆராய்ச்சியாள ருமான தோழர் கே. முத்தையா அவர்கள் இராமாயணம் உண்மையும் புரட்டும் என்ற ஓர் நூலினை 1981ஆம் ஆண்டே வெளியிட்டுள்ளார்.
அவர் மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், ஆராய்ச்சி யாளருமான அமிர்தலிங்க அய்யர் அவரது சகோதரர் பரமசிவ அய்யர் எச்.டி. சங்காலியா போன்ற அறிஞர் களின் துணை கொண்டு ஆய்ந்து இராமாயணப் புரட்டுக்களை வெளிக் கொணர்ந்துள்ளார்.

தமிழ் ஓவியா said...

இன்றைக்குத் தமிழக முதல்வர் ஜெயலலிதா திடீரென இராமனைக் கொண்டு வந்து நிறுத்தி சேதுக் கால்வாய்த் திட்டமே வேண்டாம் என உச்சநீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துவிட்டு அறிஞர் அண்ணா அவர்களின் இலட்சியக்கனவான ஓர் அருமையான திட்டத்துக்கு எதிராக தமிழ் இனத்துக்கே துரோகியாய், விரோதியாகியுள்ளார்.
முதல் நூலாகவும், மூல நூலாகவும் வால்மீகியால் படைக்கப்பட்ட இராமன் பற்றிய இதிகாசத்தையும் கம்பன் புழுகித் தள்ளிய கம்பராமாயணத்தையும் ஆய்வு செய்து தந்தை பெரியார் அவர்கள் தந்துள்ள அரிய ஆராய்ச்சி முடிவுகளின் படி நாம் கேட்கிறோம். சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்திற்கு தடையாக இராமன் என்ற பெயரை உச்சநீதி மன்றம் வரை சுமந்து சென்று தமிழக மக்களின் வாழ்வாதாரமானதும், தென் தமிழக மக்களின் பெரும் பொருளாதார வளர்ச்சிக்கும் தொழிற் பெருக்கத்துக்கும் உதவிடக் கூடிய 2500 கோடி ரூபாய் செலவில் முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களது ஆட்சியில் உருவாக்கப்பட்டு, அன்றைய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் மானமிகு டி.ஆர். பாலு வசம் ஒப்படைக்கப்பட்டு ஏறத்தாழ முடிவுறும் நேரத்தில் சுப்பிரமணியசாமி என்ற ஒற்றைப் பார்ப்பனரின் பின்னால் சென்று இன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா ராமன் பெயர் கூறி சேதுக் கால்வாய்த் திட்டமே வேண்டாம் என்று தமிழ் இனத்துக்கே துரோகம் செய்து கொண்டிருக்கிறாரே தமிழக முதல்வர் ஜெயலலிதா. அந்த இராமனின் யோக்கியதை என்ன? இராமன் கடவுள் அவ தாரமா? என்று அறி வாரா? ஏன் இராமா யணம் பற்றி ஏதாவது தெரியுமா? கோடிக் கணக்கான இந்துக்கள் வழிபடும் தெய்வமா? முதல்வர் மூதாட்டி ஜெயலலிதா அம்மை யார் பதில் கூற வேண் டும் தமிழக மக்களுக்கு.

தந்தை பெரியார் அவர்களின் ஆராய்ச்சிப்படி, இராமன் யாருக்குப் பிறந்தவன்? அவனது அப்பன் பெயர் என்ன? சுப்ரமணிய சாமியோ, ஜெயலலிதா அம்மையாரோ பதில் கூறட்டும்.

இராமன் முதலில் மனிதனுக்கு பிறந்தவனா? அவனது தந்தை பெயர் தெரியுமா? மூன்றுபட்ட மகிஷிகளும் தசரதனுடன் கூடிப் பெற்ற குழந் தைகளா? இல்லையா, 60,000 பேர் வைப்பு மனைவிகளுடன், பட்டத்து மனைவி கூடிக் கருத்தரித்துப் பிறந் தவர்களா? இல்லை. தசரதனுக்கு பிள்ளை உண்டாக்கும் ஆண்மைத் தன்மையே கிடையாதே.

அதனால் புத்திர காமேட்டி யாகம் என்ற ஒன்றினை ஏற்பாடு செய்து அதில் தனது மூன்று மனைவிகளையும் யாகத்தில் குதிரைகளை கொடுத்தும், குதிரைகளின் மாமிசத்தைத் தின்றும் இரவு முழுதும் படுத்து அந்த குதிரை களோடு அணைத்துக் கிடந்தும் பலனின்றி பிள்ளையை உண்டாக்கும் பொலிகாளைகளை போன்ற அதர்வயூ. ஹோதா, உத்காதா என்ற பேருடன் உடலுறவு கொள்ளச் செய்து அதன் மூலம் தசரதன் மனைவிகளாகிய கைகேயி சுமித்ரா, கோசலை போன் றோர் நான்கு குழந்தைகளைப் பெற்றெடுத்தார்கள்.

நான்கு குழந்தைகளும் ஒரே நேரத்தில் பிறந்தன. இதில் மூத்தவன் இராமன் மற்றவர்கள் இராமனுக்குத் தம்பிகள் என்று எவ்வாறு கூற முடியும்?

வால்மீகி இராமாயணம் சுத்தமான சமஸ்கிருதத்தில் இருந்ததால் அந்த நாட்களில் தமிழ் மக்கள் மத்தியில் பரவியிருந்த புத்த, சமய மதங்களுக்கு எதிராக கம்பனை அழைத்து தமிழில் வால்மீகி ராமாயணத்தை எழுதச் சொன்னார்கள் பிற்காலச் சோழ அரசர்கள் ஆம் கம்பராமாயணம் மளமளவென்று பரவுவதற்கு பிற்காலச் சோழன் மன்னர்களே காரணம். ஏராள மான புலவர்களுக்குத் தாராளமாக வாரி வழங்கி கம்பராமாயணத்தை பரப்பினார்கள்.

(ஆதாரம்: கே. முத்தையா எழுதிய இராமாயணம் உண்மையும் புரட்டும்)

அந்தக் காலச் சோழப் பேரரசர்கள் நிலை எப்படியிருந்ததென்றால், மறைந்த சிந்தனை சிற்பி சிற்றரசு அவர்கள்தான் கூறுவார். ஒரு விலையுயர்ந்த மோதி ரத்தை முட்டாள் ஒருவன் நீர் நிறைந்த கிணற்றுக்குள் வீசி விட்டான். அதனை மூழ்கி எடுக்க நூற்றுக்கணக்கான திறமைசாலிகள் தேவைப்பட்டனர்.

இதனை நமது தலைவர் கலைஞர் அவர்கள் தான் எழுதிய நச்சுக் கோப்பை நாடகத்தில் ஓரிடத்தில் கூறுவார்.

கம்பரும் கிழாரும் நம் அருந் தமிழகத்தில் வெம்பிய கலை வகுத் தார்கள். கருத்துக்கு கலையா, கட்டுப் பாட்டுக்குக் கலையா? என்ற கம்பனும் சேக்கிழாரும் தங்கள் கவித்திறத்தை ஆரியர்க் கடிமையாக இருந்து காவியமியற்றினர். அவை தமிழர்க்கும் இனத்துக்கும் கேடாகவே முடிந்தன. தமிழ் இனம் கலை கலாச்சாரத்தின்மீது தொடுக்கப்பட்ட போராகவே முடிந்தன.

அதன் விளைவுதான் இராமாயணம் பரவிற்று. இராமன் தெய்வமாக்கப்பட்டு இன்றைக்குத் தமிழர் வாழ்வையே அழிக்கும் அபத்தமான சின்னமாகி விட்டான். இதனை எதிர்த்து நம் தலை வர் போர்க்குரல் தொடுத்து விட்டார்.

இராவணன் அழைத்து விட்டார் இராமனை வீழத்த திராவிடர் அனைவரும் திரள்வோம்.

மானமொன்றே நல்வாழ்வாகக் கொண்டு
வாழ்ந்த என் மறவேந்தர்
பூனைகள் அல்லர்; அவர் வழி வந்தோர்
புலி நிகர் தமிழ் மாந்தர்
என்பதை வையத்துக்குணர்த்துவோம்!
இராமனைக் காட்டி அரசியல் நடத்தும் இனத்துரோகிகளை வீழ்த்தி திராவிட இனத்தின் மாப்புகழை நிலை நாட்டுவோம்.

தமிழ் ஓவியா said...


கைவிடப்பட்ட காதலர்கள்! - சிவகாசி மணியம்


உலக மக்கள் அத்தனை பேரும் ஆதாம் ஏவாளிலிருந்து வந்தவர்கள் என்கிறது கிறிஸ்துவம் இதன்படி பார்த்தால் கூட தொன்று தொட்டு எல்லாம் சொந்தங்கள் என்றாகிறது. யாரை ஏற்பது? யாரை விலக்குவது?

ஜாதி என்ன, சமயம் என்ன, குலம் என்ன, கோத்திரம் என்ன என்றெல் லாம் காதல் கிளர்ந்தெழும்போது தேடிக் கொண்டிருக்கவா முடியும்? இயற்கை, பருவம் இவற்றோடு சந்தர்ப் பமும், சூழ்நிலையும் காதலுக்குத் துணை செய்கின்றன. இரு பாலரை இணைக் கின்றன. பயமும் பின் தொடர்கிறது. மன உறுதியும் தன்னம்பிக்கையும் தொலைந்து போனதற்கு அதுவே காரணம்.

தமிழகத்தையே உலுக்கி எடுத்த தர்மபுரி திவ்யா - _ இளவரசன் காதல் விவகாரத்தைப் போலவே கடலூர் மஞ்சக் குப்பத்தைச் சேர்ந்த சவுமியா, பெரியார் குறிச்சி அம்பேத்ராஜன் காதலும்! காதலித்து கைப்பிடித்தவனை வேண்டாம் என்று உதறிவிட்டு மீண்டும் பெற்றோர்களிடம் சென்று விட்டாள் அந்தப் பெண்.

தமிழ் ஓவியா said...


இவர்களைப் போலவே விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே உள்ள பள்ளிப் புதுப்பட்டி கிரா மத்தைச் சேர்ந்த 23 வயது கனிமொழி (ஊராட்சி மன்றத் தலைவி) கதையும்!

இந்த மூன்று இணைகள் மட்டும் தான் என்றில்லை. அடுத்தடுத்து வர விருக்கும் காதலர்களின் கதைகளிலும் குறிப்பிடத் தகுந்த ஒற்றுமை ஒன்று கட்டாயம் இடம் பெறும். நடந்த முடிந்த, நடக்க இருக்கிற காதல் எல்லாம் சாதாக் காதலோ, நாத்திகக் காதலோ அல்ல. தெவிட்டாத தெய்வீகக் காதல்! அதை விளக்கவே இக்கட்டுரை.

கடந்த அக்டோபர் மாதம் 14ஆம் தேதி வீட்டை விட்டு வெளியேறிய திவ்யாவும் இளவரசனும் முதலில் தேடிப் போன இடம் (தெய்வத்) திருப்பதி. அங்கேதான் திருமணம் பிறகு பதிவு!

நாங்க மூன்று ஆண்டுகளாகக் காதலித்தோம். வீட்டில் எதிர்ப்பு தெரிவிக்கவே, வீட்டை விட்டு வெளி யேறி குன்றத்தூர் முருகன் கோயிலில் திருமணம் செய்து கொண்டோம். என்னைக் காணவில்லை என்று அப்பா புகார் கொடுத்திருப்பது அறிந்து பாதுகாப்புத் தேடி காவல் நிலையம் வந்தோம். இப்போது என் குடும்ப சூழ்நிலை, பெற்றோர்களின் நிலை அறிந்து மனதை மாற்றிக் கொண்டேன். பெற்றோரிடம் செல்கிறேன் என்கிறார் சவுமியா. பிரிவால் மனம் உடைந்த அம்பேத் ராஜன் அளவுக்கு அதிகமாகத் தூக்க மாத்திரைகளை விழுங்கி தற்கொலைக்கு முயன்று தற்போது மருத்துவமனையில்.

எங்கேயாவது கூட்டிட்டுப் போயிருனு கனிமொழி அமுதா. போன 18ஆம் தேதி (ஜூலை) மைலம் முருகன் கோயில்ல கல்யாணம் பண்ணிக் கிட்டோம். இப்ப நாங்கள் ஊருக்குப் போனா நிச்சயம் எங்க உயிருக்கு உத்தரவாதம் கிடையாது. எங்களுக்குப் பாதுகாப்புத் தரணும்னு எஸ்.பி. கிட்ட மனு கொடுத்தோம் என்கிறார் வேல்முருகன்.

இச்செய்திகளைக் கேள்விப்படுகிற போது அனுதாபம் ஏற்பட்டாலும் இன்னொரு பக்கம் ஆத்திரமும் பிறக்கிறது. காதலிக்கும் முன் இருந்த துணிச்சலும் மன வலிமையும் எங்கே போனது? ஜாதியை மறுக்கத் தூண்டிய இவர்களின் அறிவு கடவுளை மறுக்கத் தூண்டவில்லையே. அச்சமும், கோழைத்தனமும் கோயிலை நோக்கி நடக்க வைத்தது. கையாலாகாத கடவுளை நம்பியவர்கள் பாதுகாப்பு கேட்டு காவல் நிலையம், நீதிமன்ற வாசல்களில் தவம் கிடக்கிறார்கள். கோயில் திருமணத்தின் அர்த்தம்தான் என்ன? பலன்தான் என்ன?

இடையூறுகளை, இன்னல்களை எதிர்கொள்ளத் திராணியற்ற மனிதன், இச்சமூகத்தின் மீது காட்டும் எதிர்ப்பே தற்கொலையும், அதற்கான முயற்சியும். ஒரு தீங்கும் செய்யாத ஏசு கிறிஸ்துவையும், ஹேராம் என்று கூவி அழைத்த காந்தியையும் கைவிட்ட கருணையே வடிவான கடவுள்களின் யோக்கியதையை இன்னுமா தெரிந்து கொள்ளவில்லை?
காதலிப்பவர்கள் அற்பமாய்க் கரு தாமல் அரிதாய் கிடைத்த வாழ்க் கையைக் காதலிக்க முதலில் கற்றுக் கொள்ள வேண்டும். தற்கொலையைத் தவிர்க்க அது ஒன்றுதான் வழி.
பணத்துக்காகத் தாலி கட்டிய வனைப் போன்ற அயோக்கியனும் இல்லை. காதலுக்காக மட்டும் கல் யாணம் செய்து கொண்டவனைப் போல் முட்டாளும் இல்லை என்று எப்போதோ படித்த ஞாபகம்!

தமிழ் ஓவியா said...


பேட்டரியின் ஆயுட்காலம்


மனிதனும், அலை பேசியும் பிரிக்க முடி யாத ஒன்றாகவே மாறிவிட்டனர். அதனிடம் அடிமைப்பட்டு கிடக்கும் காலம் வெகு விரை வில் இல்லை என்று கூட சொல்ல முடியாது அப்படிப்பட்ட அலைபேசி உயிர்நாடி என்று சொன்னால் அது பேட்டரிதான். அத்தகைய பேட்டரியை, நாம் சரிவர பராமரிக்காவிட்டால் பேட்டரியின் ஆயுட்காலம் குறைந்து மிக விரைவில் அது தன் செயல் திறனை இழந்து விடும். பேட்டரியின் ஆயுட்காலத்தை கூட்ட சில யோசனைகள்: புதிய கைபேசி வாங்கும்போதோ அல்லது புதிய பேட்டரி வாங்கும் போதோ முதலில் 8 மணி நேரம் சார்ஜ் செய்வது மிகவும் அவசியம். ஒரு மணி நேரம் அல்லது 2 மணி நேரத்தில் பேட்டரி புல் என காட்டினாலும் சார்ஜ்செய்வதை நிறுத்தாதீர்கள் 8 மணிநேரம் முடிந்த பின்னரே சார்ஜரை நீக்குங்கள். முதல் சார்ஜிக்கு பிறகு எப்போது கைபேசி பேட்டரி எம்டி என காட்டு கிறதோ அப்போதுதான் சார்ஜ்செய்ய ஆரம்பிக்க வேண்டும் ஒரு பாயின்ட் அல்லது இரண்டு பாயின்ட் குறைந்தாலோ உடனே சார்ஜ் செய்ய ஆரம்பிக்கக் கூடாது மொபைலின் பேட்டரி அஹா mah (Milliamp Hours ஆயிரத்திற்கும் அதிகமான திறன் உடைய பேட்டரியா எனசோதித்து பார்த்து வாங்குங்கள். ஏனெனில் ஆடியோ, வீடியோ, இணையவசதி உள்ள மல்ட்டிமீடியா மொபைலுக்கு ஆயிரத்திற்கும் அதிகமான திறன் உடைய பேட்டரி தேவை. இரவு நேரங்களில் மொபைலை சார்ஜரில் போட்டுவிட்டு காலையில் எடுக்கும் வழக்கத்தை முற்றிலுமாக தவிர்த்து விடுங்கள். ஏனெனில் நீங்கள் இப்படி சார்ஜ் செய்வதால் உங்களது பேட்டரி விரைவில் பயன்படாமலே போய் விடும். புளூடூத் வசதி, வை-பை வசதி மற்றும் இணையதள வசதிகளைத் தேவைப்படும் போது மட்டும் பயன்படுத்துங்கள் மற்ற நேரங்களில் அணைத்து வைப்பதே சிறந்தது.

எப்போதும் திறந்தே வைத்திருந்தால் பேட்டரியின் திறன் குறைந்து கொண்டே வரும் ரிங்டோனுக்கு முழு பாட்டையும் வைக்காமல் கட்சாங்ஸ் எனப்படும் குறுகிய பாடல்களை ரிங்டோனாக வைத்தால் பேட்டரியின்திறன் அதிகமாக செலவழிக்கப்படுவது தவிர்க்கப்படும் கைபேசியை FM ரேடியா போல் எப்போதும் பாடல்களை பாட விடாதீர்கள்.

உங்களது மொபைலின் திரை வெளிச்சத்தை குறைத்து வையுங்கள். அனேகமாக அனைத்து மொபைல்களிலும் பவர்சேவர்மோட் (Power Saver Mode) இருக்கும் அதை ஆக்டிவேட் (Activate) செய்யுங்கள் இதனால் உங்களது பேட்டரி நீண்ட காலத்திற்கு வரும். வால்பேப்பர் மற்றும் ஸ்கீரீன்சேவர்களில் பிக்ஸ்ல்கள் (Pixels) அதிகமுடைய படங்களை வைக்காதீர்கள் இதனால் பேட்டரி சார்ஜ் விரைவில் தீரும் அதிக வெப்பமுள்ள இடங்களில் மொபைலையோ, பேட்டரியையோ வைக்காதீர்க்கள். இதனால் உங்களது பேட்டரியின் திறன் குறையக்கூடும் கூடுமான வரையில் கம்பெனிகளின் ஒரிஜினல் பேட்டரிகளையே வாங்குங்கள். நூறு ரூபாயில் கிடைக்கிறது, 200 ரூபாயில் கிடைக்கிறது என்று மலிவான, தரமற்ற பேட்டரிகளை வாங்காதீர்கள் இத்தகைய பேட்டரிகள் வெடித்து உங்களுக்கு அபாயகரமான விளைவுகளை ஏற்படுத்தும். அது போல கம்பெனிகளின் ஒரிஜினல் சார்ஜர்களையே பயன்படுத்துங்கள் இதனால் ஏற்படும் மின் விபத்துக்களையும் தவிர்க்க முடியும்.

நன்றி: -விக்கிரவாண்டி-

தமிழ் ஓவியா said...

நலம்தானா? உடலும் உள்ளமும் நலம்தானா?


1. உயிர் என்பது என்ன?
உயிர் என்பது பொருளின் ஓர் இன் றியமையாத குணம். குறிப்பிட்ட ஒரு சூழ்நிலையால் இது வெளிவருகிறது. இந்த சூழ்நிலை மாறினால் இந்த குணம் மங்கிவிடும்.
ஒரு மனிதன் இறந்தான் என்றால் உயிர் என்று குணம் தணிந்து விடுகிறது. உயிர் என்பது ப்ரோட்டீன்களின் ஜீவ உருவம். -_- எங்கெல்ஸ்
உடலில் ஒரு சிறப்பு நிலையே உயிர் எனலாம். ஒரு செல் உயிரினங்களுக்கும் உயிர் உண்டு. இதிலிருந்து உயிர் என்பது அணுக்களால் ஆன உயிரியம் மூலக்கூறுகளின் தனித்தன்மை என்பதை அறிந்து கொள்ளலாம்.

2. செல்பற்றி கூறுக?
செல்கள் திறமையுள்ள சிறிய உலைக்கலன் ஆகும். செல் குளு கோஸை எரித்து சக்தியை உண்டாக் குகின்றன. அதற்கு தேவையான எரிபொருளை இன்சுலின் தருகின்றது.

அயோடின் சத்து மனித உடலில் செல்கள் வளரவும், செல்கள் எண் ணிக்கையால் பெருகிடவும் மிகவும் அவசியம். உயிருக்கு அஸ்திவாரம் (அல்லது) உயிருள்ள அமைப்பை செல் என்கிறோம்.

செல்கள் தானாகவே சந்ததிகளை உற்பத்தி செய்து கொள்ளவும் முடியும். இவ்வாறு ஏற்படுபவை குரோமோ சோம்ஸ் எனப்படும்.

3. உடம்பு என்பது பற்றி கூறுக?
உடல் அய்ந்து அடுக்குகளால் ஆனது.

1. சிற்றறைகள், 2. இரத்த ஓட்டம், 3. நரம்பு மண்டலம், 4. காற்று, 5. உயிர்

நமது உடல் எப்பொருள்களால் ஆக் கப்பட்டு உள்ளதோ அப்பொருள்கள் யாவும் நாம் உட்கொள்ளும் உணவிலும் இருக்க வேண்டும்.

உழைப்பு அதிகம் இல்லாதபோது சத்துள்ள உணவும், இனிப்பும் அதிக மாக உட்கொள்வது ஊளைச்சதையை உண்டாக்குகிறது. அதிக சதை இதயத் தில் சரியான வேலையைத் தடுக்கிறது.

4. என்சைம்ஸ் என்றால் என்ன?

அமைப்பற்ற உயிர் துளிகள் கண் ணுக்கு புலப்படாதவை. என்சைம்ஸ் இருப்பதால்தான் மனிதன் உயிருடன் வாழ்கிறான்.

5.. புதிய சிவப்பு செல்கள் எங்கு தயாரிக்கப்படுகிறது?
எலும்பின் உட்புறம் உள்ள மஜ்ஜையில் தயாரிக்கப்படுகிறது.

6. எலும்பு எதனால் ஆனது?
எலும்பு உயிருள்ள செல்களாலும், மெல்லிய இரத்த நாளங்களாலும், நரம்புகளாலும் ஆனது.

7. குரோமோசோம் -பற்றி கூறுக?
குரோமோசோம் என்பது வேதி மூலக்கூறு ஆகும்.

8. ஜீன்கள் பற்றி கூறுக?
ஜீன்கள் தனிவகை மூலக்கூறுகள்.

9. நீர் பற்றி கூறுக?
நீருக்கு சுவை இல்லை. நீரின் பிர தான குணம் பொருட்களை கரைப்பது.

10. காற்று நமது உடலில் கொண் டுள்ள தொடர்பு பற்றி கூறுக?
மனித உடலில் ஒவ்வொரு பகுதியி லும் காற்று உள்ளது. மூளை செயல் படுவதற்கு முக்கியமாக காற்றில் உள்ள ஆக்ஸிஜன் நமக்கு தேவைப்படுகிறது.

தமிழ் ஓவியா said...

11. குழந்தைகளுக்கு மூளை வளர்ச்சி பாதித்தல் எப்போது ஏற்படும்?
குழந்தை பிறந்தது முதல் இரண்டு வயதுவரை மூளை வளர்ச்சி வேகமாக நிகழ்கிறது. இந்த சமயத்தில் சத்துணவு குறைபாடு ஏற்பட்டாலும், கடும் நோய் தாக்கினாலும் மூளை வளர்ச்சி பாதிக்கப்படலாம்.
12. மூளை உற்சாகம் அடைய என்ன செய்யலாம்?
1. மூளை உற்சாகம் அடைய:- பழைய வேலையை புதிய முறையில் செய்.
13. இதயம் பற்றி கூறுக?
இதயத்தில் மேற்புறத்தில் ஆரிக் கிள்கள் உள்ளன. கீழ்புறம் வெண்டிரிக் கள் உள்ளன. இதயத்தை நோக்கி இரத்தத்தை கொண்டு செல்வது சிரை.
இதய பலத்துக்கு சுற்றுப்புற சுகா தாரம் அவசியம். உடலை வலுப்படுத் துதல், உடற்பயிற்சி, ஒழுங்கான வாழ்க்கை முறை தேவை. நாம் அசைவின்றி இருக் கும்போது இதயம் சற்று அதிகமாக உழைக்க வேண்டியிருக்கிறது. 14. இதய நோய் வராமல் இருக்க நாம் மேற்கொள்ள வேண்டியவை தவிர்க்கவும்.
நொறுக்கு தீனிகள், பொறித்த உணவுகள், துரித உணவுகள், போன்ற வற்றைத் தவிர்க்கவும்.
கொழுப்பை முடிந்த அளவு உணவிலிருந்து நீக்கிவிடுவது நல்லது.
_- ஹேமா மாலினி, சத்துணவு நிபுணர், விடுதலை 22.9.2012
15. உயிர்த் தாது என்பது என்ன?
உயிர்த்தாது என்பது புரோட் டோபிளாசம் ஆகும். இது உயிர் உள்ள பொருள் ஆகும். உயிரணுக்கள் எல்லாம் இப்பொருளால் தான் உயிரோடு இருக்கின்றன.
16. சுத்தமான இரத்தத்தை உருவாக்க வழிமுறை யாது?
உணவு, குடிநீர், மூச்சுக்காற்று, தூக்கம், உழைப்பு ஆகிய அய்ந்தையும் ஒழுங்குபடுத்த வேண்டும்.
17. ஹீமோகுளோபின் அவசியம் என்ன?
சுத்த இரத்தம் உடலின் பகுதிகளுக்கு செல்லும்போது அங்கு ஆக்ஸிஜன் அளவு குறைவாய் உள்ளமையால் இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் தான் கொண்டு வந்த ஆக்ஸிசனை அங்கு கொடுத்துவிடுகிறது. ஆகவே ஹீமோகுளோபினை நாம் இழக்கக் கூடாது.
ஹீமோகுளோபின் என்னும் புரதத் தில் முக்கிய செயல்படு பொருள் இரும்பு சத்துதான். ஆக்ஸிஜனை எடுத்துச் செல்ல கார்பன்-டை-ஆக்ஸைடு வெளி யேற்றல் வேலையை ஹீமோகுளோபின் செய்கிறது.
18. நகம் பற்றி கூறுக?
உடலின் உள்ளே என்ன நடக்கிறது என்பதை அறிந்து கொள்ள நமது நகம் பயன்படுகிறது. _- ஆர்சார்டு
நகத்தில் சிறு ரத்த சிறாய்வுகள் இருப்பின் இதயம் அல்லது ரத்தத்தில் தொற்றுநோய் என உணரலாம்.
நகத்தின் மீது சிறு குழிவுகள் இருப் பின் அது சோரியாசிஸ் அறிகுறியாகும். எங்கெங்கே அழுத்தம் இருக்கிறதோ அங்கெல்லாம் உண்டாகும் அழுத் தத்தை தாங்குவதற்கு வசதியாக சர்மம் நகமாக வளர்கிறது. நகச்சுற்று (கீலீவீ லிஷீஷ்): நல்லவேளை என்ற மூலிகை இலைகளை கசக்கிவைத்து கட்டினால் குணமாகும்.
19. தோலின் சுருக்கம் ஏற்படுவது ஏன்?
வயது முதிர்வு அடையும்போது தோல் எலாஸ்டிக் தன்மையை இழக்கிறது. செல்களும் செயல்படாமல் போகின்றன. ஆகவே விரிவடைந்த தசை திரும்ப பழைய நிலைக்கு வர மறுக் கவே தோலில் சுருக்கம் ஏற்படுகின்றன.

தமிழ் ஓவியா said...

மனிதனின் அன்பின் வளர்ச்சியையும், அறிவின் வளர்ச்சியையும் எடுத்துக்காட் டும் அளவுகோல்தான் நகைச்சுவை.
_- கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்
20. சிரிப்பின் தன்மை யாது?
வலிகளை குறைப்பது என்டார்பின் என்ற வேதிப்பொருளாகும். சிரிப்பதால் உடலில் இது அதிகம் சுரக்கும். நமது உடலில் உருவாகும் கான்சர் செல்களை அழிக்கும் செல் பெயர் என்.கே.செல் ஆகும். இது அதிகரிக்க தாராளமாக சிரிக்க வேண்டும்.
21. இதயம் கடைசிவரை நன்கு வேலை செய்ய எதை பின்பற்றலாம்?
கரிசாலாங்கண்ணி கீரையுடன் பூண்டு சேர்த்து உண்பதால் ரத்த அழுத்தம் தேவையான அளவு பாது காக்கப்படும். இதயம் கடைசிவரையில் நன்கு வேலை செய்யும்.
22. அயோடின் அவசியம் யாது?
அயோடின் பச்சை இஞ்சியில் உள்ளது. அயோடின் குறைந்தால் புத்திமந்தம் ஏற்படும்.
23. வலி என்றால் என்ன?
சோர்வுற்ற உறுப்பின் (அல்லது) உடலின் அழுகுரல்.
24. நோய் என்றால் என்ன?
நோய் என்பது அன்னிய பொருளை நீக்குவதற்காக வாழ்க்கை நடத்தும் போராட்டம். இப்படி நீக்குவதற்கு சக்தி தேவை. இந்த சக்தி ஜீவாதார சக்தி. நோயுள்ளவன் ஜீவாதாரசக்திக்கு உதவ வேண்டும்.
25. தொந்தி வரக்காரணம் என்ன?
உடலில் உள்ள கொழுப்புச்சத்து எரிக்கப்படாமல் லேயர் லேயராக சருமத்தின் இடைவெளிகளில் சேமிக் கப்படுகிறது. அந்த சேமிப்பு தான் தொந்தி.
26. அலர்ஜி என்றால் என்ன?
உடலில் நோய் எதிர்ப்பு சக்தியில் உண்டாகும் குறைபாடுதான் அலர்ஜி எனப்படும். உடலின் ஒவ்வொரு பாகத் திலும் ஒவ்வொருவிதமாக ஒவ்வாமை தடம் பதிக்கும்.
27. நாள் ஒன்றுக்கு ஒருவர் அய்ந்து கிலோ மீட்டர் நடந்தால் எவ்வளவு கலோரிகள் எரிக்கலாம்?
250 கலோரிகள் எரிக்கப்படும்.
28. இன்சுலின் அவசியம் என்ன?
நாம் சாப்பிடும் உணவில் கார் போஹைட்ரேட் இருக்கிறது அது இரத்தத்தின் வழியே பயணிக்கும் போது குளுக்கோசாக மாறுகிறது. இந்த குளுகோஸ் நம் உடலுக்கு பயன்படக் கூடிய சக்தியாக மாறவேண்டுமானால் அதற்கு இன்சுலின் தேவை.
இரத்தத்தில் வருகிற குளுக்கோஸ் அளவும் அதை சக்தியாக மாற்றி பயன்படுத்த தேவையான இன்சுலின் அளவும் சரியான விகிதத்தில் இருக்கும் வரை பிரச்சினை இல்லை.
29. மனிதன் - வரையறு?
பொதுப்பெயர் - மனிதன், புலம் - விலங்குகள், பகுப்பு (பைலம்) -_ முது கெலும்பிகள்
உட்பகுப்பு தண்டுவடம் உடையன
வரிசை - _ முதனிலை பாலூட்டிகள்
துணைவரிசை _- மண்சாயல்
உள்வரிசை -_ காட்டரினி
பெருங்குடும்பம் -_ மன்பதை
குடும்பம் (மனுபு) _ --பிளிவிழிளிமிஞிகி
பேரினம் - மனு - (பிளிவிளி)
இனம் -_ மனிதன்
உள் இனம் - வளர்மதி மனிதன் (இன்றைய மனிதன்)
பொதுப்பெயர் _- மனிதன்
30. நமது செயல்முறை எப்படி உள்ளது?
நமது 70 ஆண்டு வாழ்க்கையில்
இளமை -_ 5 ஆண்டுகள்
உறக்கம் -_ 22 ஆண்டுகள்
உழைப்பு, முதுமை _- 22 ஆண்டுகள்
கேளிக்கை -_ மீதிகாலம்


கண்ணாடி பார்ப்பது _- 2.5 ஆண்டுகள்
சுமார் 6 மாதங்கள் மட்டுமே சிந்திக் கிறோம்!
இதையும் தெரிஞ்சுக்குங்க
உடலுக்கு தேவையான ஆக்சிஜனை அளிப்பதில் வைட்டமின் பி.2 (க்ஷிஙி2) முக்கிய பங்கு வகிக்கின்றது. இது வாழைப்பழம், தக்காளி, கறிவேப்பிலை, புதினா போன்றவற்றில் உள்ளது.
மருத்துவக் குறிப்புகள் மேலும் சில:-

1. முதியோர்கள் அவசரஅவசரமாக வேலை செய்வதை தவிர்க்க வேண்டும்.
மெதுவாக எச்சரிக்கையோடு பணியாற்ற வேண்டும்.
2. குறைகாணும் போக்கை நிலையாக வடிவமைத்துக் கொள்பவர்களுக்கு வலியோடு கூடிய மூட்டு வீக்கம் (கிக்ஷீலீக்ஷீவீவீ) வரும்.

3. மனிதனுக்கு தேவையான 10 உடை மைகள்:-
1. அன்புடைமை, 2. அருளுடைமை, 3. அறிவுடைமை, 4. அடக்கமுடைமை, 5. ஆள்வினையுடமை, 6. ஒழுக்க முடைமை, 7. ஊக்கமுடைமை, 8. நாண் உடைமை, 9. பொறையுடைமை, 10. பண்புடைமை.

4. மூட்டுவலி, முழங்கால் வலி, பாதவலி, உள்ளவர்கள் அந்தந்தப் பகுதியில் புற்றுமண் பூசி நலம் பெறலாம். வலி, உபாதை உடனடியாக குறையும்.

5. சோர்வை நீக்குவது எது?
பொட்டாசியம் அளவை சமப்படுத் துவது எது?
பதற்றத்தை குறைப்பது எது?
உடலில் இரும்பு சத்து எதன் மூலம் அதிகரிக்கின்றது?
நெஞ்செரிச்சலை எது போக்கும்?
முடக்கு வாதத்தை எது போக்கும்-
விடை: வாழைப்பழம்

6. கழிவுகளின் தேக்கமே புற்று நோயாக மாறுகிறது. ஆனி ஆடியில் வேப்பம்பழம் நாள்தோறும் சாப் பிடுவது நலம்.
(விருத்தாசலம் மாவட்ட திராவிடர் கழக துணைத்தலைவர் தங்க.இராசமாணிக்கம் விஜயா மணிவிழாவையொட்டி வெளி யிடப்பட்ட அரிய சிறிய வெளியீடு)

தமிழ் ஓவியா said...


ஏ.டி.எம். ரகசியம்!நீங்கள் ஏ.டி.எம். இயந்திரத்தில் பணம் எடுக்கும்போது திடீரென ஒரு திருடன் வந்து உங்களிடம் பணம் எடுத்துத் தருமாறு மிரட்டினால், உங்கள் நுழைவு எண் பின்னை தலைகீழாக அடிக்கவும். அதாவது 1 2 3 என்றால் 3 2 1 என்று அடிக்கவும். நீங்கள் அடிக்கும்போது உங்கள் பணம் பாதிலேயே சிக்கிக் கொள்ளும். அதனால் காவல் நிலையத்திற்கு தகவல் சென்று விடும். எல்லா ஏ.டி.எம்.மிலும் இந்த வசதி உண்டு. அதனால் இதை மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்!

தமிழ் ஓவியா said...


உணவு மசோதாவை ஆதரிக்க தி.மு.க. தலைவர் கலைஞர் நிபந்தனை


சென்னை, ஆக.10- மாநில அரசுகளின் உரிமை களுக்கு இம்மியளவும் பாதிப்பு ஏற்படாதளவு, உணவுப் பாதுகாப்பு மசோதா இருந்தால் மட்டுமே அதனை ஆதரிப்போம் என்று மத்திய அரசுக்கு, திமுக தலைவர் கலைஞர் நிபந்தனை விதித்துள்ளார்.

இது தொடர்பாக வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை வருமாறு:- உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை அமல்படுத் துவதற்கான வழிமுறைகளை மாநில அரசுகள் மீது மத்திய அரசு திணிக்கக் கூடாது. அந்தந்த மாநிலங்களின் நிலைமைகளுக் கேற்ற செயலாக் கத்துக்கான விருப்புரிமையை மாநில அரசு களுக்கு வழங்கிட மத்திய அரசு முன் வரவேண் டும். சுதந்திரம் பெற்று 60 ஆண்டுகள் ஆகின்றன.

இதற்குப் பிறகாவது உணவுக்கான உரிமையை வழங்கி, மக்களின் வாழ்க்கை நிலையை உயர்த்த வேண்டும் என்ற எண்ணம் பிறந்திருப்பது ஆக்க பூர்வமானது. எனவே, உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை முழுமையாக எதிர்க்கவும் இல்லை. முழுமையாக ஆதரிக்கவும் இல்லை.

அவசரமாக மேற்கொள்ள வேண்டிய அவ சியமான திருத்தங்களுடன், மாநிலங்களில் உள்ள நடைமுறைக்கேற்ப உணவு மசோதாவை மத்திய அரசு கொண்டு வர முன் வரவேண்டும்.

தமிழகத்தைப் பொறுத்தவரை ஏற்கெனவே இருக்கும் மாநில உரிமைகளுக்கு இம்மியளவும் பாதிப்பு ஏற்படாதளவு, உணவு மசோதா இருந் தால் மட்டுமே அது நிறைவேற திமுக ஆதரிக்கும்.

எந்த மாநிலத்திலும் ஏற்கெனவே நடைமுறை யில் இருக்கும் உணவுப் பொருள் வழங்கு முறை யினைச் சீர்குலைப்பதாக உணவு மசோதா இருக் கக் கூடாது. மேம்படுத்துவதாக இருக்க வேண் டும்.

இந்திய மக்கள் தொகையில் 67.5 சதவீத மக்கள் மட்டும் பயன்படும் வகையில் இந்தத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

ஆனால், தமிழகத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் 90 சதவீத மக்கள் பயன் பெற்று வருகின்றனர். இதனால் தமிழக மக்கள் பாதிக்கப் படுவர் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள் ளார்.

முதல்வர் தெரிவித்துள்ள குறைபாடுகளும் கோரிக்கைகளும் அலட்சியப்படுத்தக் கூடியவை இல்லை. உணவு மசோதாவினால் ஏற்படக்கூடிய விளைவுகளை ஒட்டுமொத்தமாக தமிழக அரசு தான் சீர்தூக்கிப் பார்த்து கருத்துகளைத் தெரி விக்க முடியும்.

இந்த மசோதாவால் தமிழகத்துக்குப் பாதகம் தான். சாதகம் இல்லை என்று முதல்வர் உறுதி யாக இருந்தால், சில்லறை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை தமிழகம் ஏற்காது என்று அறிவித்ததைப் போல், இதையும் ஏற்காது என்று அறிவித்து விடலாம்.

ஆனால் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு எழுதிய கடிதத்தில் ஜெயலலிதாவும் மசோதா வில் திருத்தங்கள் தேவை என்றே கூறியுள்ளார். அனைத்து அரசியல் கட்சிகளும் திருத்தங் களையே கோருகின்றன. சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்று யாரும் குரல் எழுப்ப வில்லை என்று கலைஞர் கூறியுள்ளார்.

தமிழ் ஓவியா said...


கொலை செய்வது தான் கடவுளா?தமிழில் பக்தி நுரை தள்ளும் ஏடுகள் உண்டு. ஒன்றை வெளியிடுவதால் மக்களுக்கு என்ன பயன் என்று ஏனோ அவர்கள் கருதுவதில்லை.
இதோ ஒரு பட்டியல். சிவபெருமானின் வீரச் செயல்கள் நடந்த தலங்கள்
திருக்கண்டியூர் - பிரம்மனின் தலையைக் கொய்தது
திருப்பறியல் - தக்கன் தலை கொய்தது
திருவதிகை - திரிபுரம் எரிப்பு
திருக்குறுக்கை - காமன் எரிப்பு
திருக்கடவூர் - காலனை உதைத்தது
திருவிற்குடி - க(ச)ந்தராசுரன் சம்ஹாரம்
திருக்கோவிலூர் - அந்தகாசுரன்வதம்
இப்படி கொலை செய்வதும், எரிப்பதும், வதம் செய்வதும்தான் கடவுளா?
இந்தக் கடவுளை நம்பும், பக்தி செலுத்தும் பக்தனின் புத்தி விளங்குமா?
தான் நம்பும் கடவுளின் வழிகாட்டுதல்படி நடந்து கொள்வதால்தான் நாட்டில் இத்தனைக் கொலை பாதகங்கள் - வன்முறைகள் என்பதை ஒப்புக் கொள்வார்களா?

தமிழ் ஓவியா said...


அர்ச்சகர் பிரச்சினைமானமிகு திராவிடர் கழக தலைவர் அவர் களுக்கு என் ஆசான் பொருளாளராக இருந்து வரும் கோ.சாமிதுரை அவர்களின் குமாஸ்தா பாலு பணிவன்புடன் எழுதிக்கொண்டது. நானும் என் ஆசான் அவர்களிடமும், அவரின் குமாரர் ஜி.எஸ்.பாஸ்கர் அவர்களிடமும் சுமார் 1962 முதல் குமாஸ்தாவாக பணிபுரிந்து கொண்டு வருகிறேன்.

அய்யா நானும் சபரிமலைக்கு 48 ஆண்டுகள் சென்றுள்ளேன். கள்ளக்குறிச்சியில் அய்யப்பன் ஆலயமும் பலர் உதவியுடன் கட்டியுள்ளேன். அர்ச்சகர் பிரச்சினைபற்றி தங்களின் விளம்பரம் டீ..வி. பேப்பர் மற்றும் செய்திகள் மூலம் கேள்வி பட்டேன். தங்களின் நல்லதொரு கோரிக்கை அற்புதம், போராட்டம் அற்புதம் அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் ஆக வேண்டும் என்ற தங்களின் கோரிக்கை போற்றத்தக்கது. மேலும் ஊர் என்றால், பள்ளிக்கூடம், குளம் மற்றும் கோவில் இருக்க வேண்டும் என்பார்கள். பள்ளிக் கூடத்தில் ஆசிரியர் மற்றும் மாணவ, மாணவியர் கள் என அனைத்து ஜாதியினர் இருக்கிறார்கள். குளம் இருப்பின் அனைவரும் தண்ணீர் அருந்து கிறர்கள், கோவில் என்றால் பார்ப்பனர்கள் தான் ஆதிக்கம். அவர்களன்றி மற்ற இனத்தினர் அவர் களுக்கு அடிமைபோல் இருந்துவர வேண்டியுள்ளது. இதனை தந்தை பெரியார் அவர்கள் வைக்கம் முதல் அனைத்து இடங்களிலும் எதிர்த்து போராடினார்கள். அதே போல் தாங்கள் தற்போது நடத்தும் போராட்டம் போற்றக்கூடியது. எல்லா மதத்தினரும் நன்றாகவே ஆதரவு அளிப்பார்கள். தாங்கள் நடத்தும் இந்த போராட்டம் எல்லாம் வல்ல நம் முன்னோர்கள் ஆசீர்வாதத்தினாலும், அனைத்து ஜாதியினர்கள் ஆதரவாலும், நான் வணங்கும் என் தாய் தந்தையர்கள் ஆசீர்வாதத் தினாலும் சீரும் சிறப்புமாக நடக்க வேண்டும் என்று வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.

- கே.பி. பாலு (வக்கீல் கிளர்க்) கள்ளக்குறிச்சி

தமிழ் ஓவியா said...


மனித சமுதாயத்தில்...நாம் உண்மையான பகுத் தறிவுவாதிகளாக ஆகிவிடுவோ மேயானால், நம் மனிதத் தன்மை வளர்ச்சி மட்டுமல்ல, சமுதாய வளர்ச்சியும் ஏற்பட்டுவிடும்; மனித சமுதாயத்தில் ஒழுக்கமும், நாணயமும் ஏற்படும்.
(விடுதலை, 16.11.1971)

தமிழ் ஓவியா said...


முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வும் குழப்பமும்


21.7.2013 அன்று TRB,, 2800 முதுகலை ஆசிரியர் களைத் தேர்வு செய்வதற்காக நடத்திய தேர்வில் 150 மதிப்பெண்களுக்கான வினா பட்டியல் வழங்கப்பட்டது. அதில் பெரும்பாலான வினாக்கள் எழுத்துப் பிழைகளுடன் இருந்தன. இதுபற்றிய செய்திகள் ஒரு சில நாளிதழ்களில் அப்போதே வெளிவந்தது. அனைவருக்கும் தெரிந்ததே!

மேலும் குறிப்பாக, பிரதமர் பெயர் டாக்டர் மன்மோகன் சிது என்றும், இந்திய திட்டக் கமிஷன் துணைத் தலைவர் மான்டெக் சிது அலுவாலியா என்றும், நிதிக் குழு தலைவர் பெயர் ரெதுகராஜன் என்றும், தவறாக எழுத்துப் பிழையுடன் அச்சிடப்பட்டு இருந்தது.
மேலும், பல்வேறு கேள்விகளில் எழுத்துப் பிழைகள் அதிகமாக இருந்தன. இதனால் தேர்வு எழுதியவர் களுக்கு குழப்பமும், மன உளைச்சலும் ஏற்பட்டன. தேர்வு முடிந்து ஒரு வாரத்திற்குப் பிறகு அதற்குரிய விடைகள் (Answer Key) TRB மூலம் இணையதளத்தில் வெளியிடப் பட்டன. அதில் பல்வேறு கேள்விகளுக்கு தவறான விடைகள் அளிக்கப்பட்டிருந்தன. எடுத்துக்காட்டு: மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்திய திட்டக் குழுவின் துணைத் தலைவர் பெயர், மான்டெக் சிங் அலுவாலியா என்பதற்குப் பதிலாக ரெங்கராஜன் என்று தவறாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதைப் பார்க்கும் போது நமது பிரதமருக்கு அடுத்த, முக்கியத்துவம் வாய்ந்த இந்திய திட்டக் குழுத் துணைத் தலைவர் பதவியாகும். இவர் பெயரையே TRB தேர்வு வாரியம் தவறாக வெளியிட் டுள்ளது. இதனால் தேர்வு எழுதியோர் மத்தியில் மிகவும் வியப்பும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளன.

தமிழ் ஓவியா said...


கிராமப்புறங்களில்... ஏழை - பணக்காரர் இடைவெளி அதிகரிப்பு


ஆய்வுத் தகவல்

புதுடில்லி, ஆக.11-இந்தியாவில் ஏழைகள் கடந்த 2004-05 இருந்த அளவைவிட 2011-2012இல் குறைந் துள்ளனர். இருந்தபோதிலும் கிராமப் பகுதிகளில் கடந்த 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பணக்காரர்களுடன் அவர்களது இடைவெளி அதிகரித்துள்ளது. அதேபோல், நகர்புறங்களில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது.

கடந்த 2011-2012ஆம் ஆண்டில் வீட்டு உபயோகப்பொருள் செலவு பற்றிய தேசிய மாதிரி ஆய்வு நடத்தப் பட்டது. புள்ளிவிவர ஆய்வில் கடைப்பிடிக்கப்படும் கினி விகிதம் அடிப்படையில் கணிக்கப்பட்டது. கிராமப்புறங்களில் கினிவிகிதம் 2011 2012இல் 0.28 ஆக அதிகரித்துள்ளது. இது 2004-2005ல் 0.26 ஆக இருந்தது. நகர் பகுதிகளில் முன்எப்போதும் இல்லாத அளவிற்கு 0.35லிருந்து 0.37 ஆகி உயர்ந்துள்ளது. கினிவிகிதம் பூஜ்யத்திலிருந்து ஒன்று என்று வரிசைப் படுத்தப்படுகிறது. பூஜ்யம் என்பது சரி சமமானது என்பதை குறிக்கும். ஒன்று என்பது சரிசம மற்றது என்பதை குறிக்கும்.

ஏழை பணக்காரர் இடைவெளி உயர்ந்து உள்ளது குறித்து பொரு ளாதார நிபுணர்கள் வியப்பு தெரி வித்துள்ளனர். அரசு பல்வேறு நலத் திட்டங்களை கிராமங்களில் செயல் படுத்தி வந்தபோதிலும் இந்த இடை வெளி அதிகரிப்பு ஆச்சரியத்தை அளித்துள்ளது என்று டில்லி ஜவ ஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் பிராந்திய மேம்பாடு பற்றிய கல்வி மய்யத்தின் பேராசிரியர் அமிதாப் குந்து தெரிவித்துள்ளார். கிராமப் பகுதியில், வேளாண்மை துறையைத் தவிர பிற தொழில்களிலும் வேலை வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது என்பதைத்தான் இது காட்டுகிறது என்று மேலும் கூறினார்.
1977 -1978ஆம் ஆண்டுக்கு பிறகு கிராமப் பகுதிகளில் சரி சமமற்ற நிலைமை அதிகரித்துள்ளது. 1973 -1974இல் 0.27 ஆக இருந்த கினிவிகிதம் அப்போது 0.34 ஆக அதிகரித்தது. இது கடந்த 1993 -1994ஆம் ஆண்டில் இது 0.28 ஆக இருந்தது. விவசாய தொழிலாளர்களின் நுகர்வு முறையில் சுணக்கம் இருந்தது. இது எதைக் காட்டுகிறது என்றால், நுகர்வு செலவு அதிகரித்துள்ளது சரிசமமற்ற வினி யோகம் மற்றும் திட்டங்களின் பயன் பாடு வசதியானவர்களுக்கு மட்டுமே கிடைத்துள்ளது என்பதைக் காட்டு கிறது என்றும் குந்து கூறினார்.

வேலைவாய்ப்பை உருவாக்குதல் மற்றும் வருமான பகிர்வு ஆகியவை சரிசமமற்ற நிலையால் கடந்த 1990ஆம் ஆண்டுகளில் இருந்து சமு தாயத்தில் சரிசமமற்ற நிலைமை அதிகரித்து வந்துள்ளது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த நிலையை மாற்ற வேண்டியது அவசி யம். நகர்புறங்களில் இருப்பதைவிட கிராமப் பகுதிகளில் வறுமை சத வீதம் குறைந்துள்ளது. சரிசமமற்ற நிலைமை, நகரங்களைவிட கிராமங் களில் குறைவு என்பதையே இது உணர்த்துகிறது.

திட்ட கமிஷன் புள்ளிவிவரப்படி பார்த்தால், கடந்த 2004-2005ஆம் ஆண்டில் கிராமப்பகுதிகளில் 42 சதவீதம் பேர் வறுமைக் கோட்டிற்கு கீழே இருந்தனர். ஆனால், 2011-2012ல் 25.7 சதவீதமாக குறைந்துள்ளது. அதேவேளையில் நகரங்களில் 25.5 சதவீதத்தில் இருந்து 13.7 சதவீதமாக குறைந்துள்ளது.

இந்தியாவில் சரிசமமற்ற நிலை பிரிக்ஸ் நாடுகளுடன் ஒப்பிடுகையில் அவ்வளவு ஒன்றும் அதிகமாக இல்லை என்றுதான் சொல்லலாம். பிரிக்ஸ் நாடுகள் (பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென் ஆப் ரிக்கா) கினி விகிதம், தென் ஆப்ரிக்கா வில் கடந்த 2008இல் அதிகபட்சமாக 0.67 ஆக இருந்தது. இதற்கு அடுத்த படியாக பிரேசிலில் (2012இல் 0.51), சீனாவில் (2012இல் 0.47), ரஷ்யாவில் (2011ல் 0.41) என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் சரிசமமற்ற நிலைமை வருமானத்தை வைத்து கணக்கிடுவது இல்லை. நுகர்வு செலவை வைத்து கணக்கிடப்படு கிறது. கினிவிகிதம் தேசிய புள்ளி விவரம் கடந்த 2011-2012இல் கணக் கிடப்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழ் ஓவியா said...


நரிக்குறவர்கள் இனத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் மத்திய அமைச்சருக்கு கலைஞர் கடிதம்


சென்னை, ஆக.12- தமிழகத்தில் வசிக்கும் நரிக் குறவர்கள் இனத்தை, அவர்களுடைய சமூக, கல்வி முன் னேற்றத்திற்காக பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க தகுந்த நட வடிக்கை எடுக்க வேண்டும் என திமுக தலைவர் கலைஞர் வலி யுறுத்தியுள்ளார். இது தொடர்பாக மத்திய அரசின் பழங்குடியினர் விவகாரம் மற்றும் பஞ்சாயத்துராஜ் அமைச் சர் வி. கிஷோர் சந்திரதோவ்வுக்கு 11.8.2003 அன்று அவர் எழுதிய கடிதத்தில்

கூறியிருப்பதாவது: தமிழகத்தில் நரிக்குறவர் என்ற இனம் பரிதாபகரமான, இரக்கப் படக் கூடிய வாழ்க்கை நிலைகளை கொண்டுள்ளனர். அவர்கள் வசிப் பதற்கு நிலையான இருப்பிடம் இன்றி அடிக்கடி இடங்களை மாற்றும் நாடோடி வாழ்க்கை வாழ்ந்து கொண் டுள்ளனர்.

அவர்கள் சமூகம் மற்றும் கல்வியில் மற்ற இனத்தவரை விட பின்தங்கி இருப் பதுடன் பழங் குடியினத்தவருக்கு சமமாக வாழ்ந்து வருகின்றனர். எனவே இரக்கத்து டன் இந்த இனத்த வர்களுக்கு அனைத்து உதவிகளும் வழங்க வேண்டியது அரசின் கடமையாகும்.
தி.மு.க. அரசானது அவர்களின் முன்னேற்றத்திற்கு எல்லா உதவி களையும் செய்துள்ளது. 1970-இல் நரிக்குறவர்கள் ஒரே இடத்தில் வசிக்கவும் வாழ்வாதாரங்களுக் காகவும் தொகுப்பு வீடுகளை கட்டிக் கொடுத்துள்ளது. 2008-2009இல் நல வாரியங்கள் தி.மு.க. அரசால் உருவாக்கப் பட்டு, பல்வேறு நலத் திட்ட உதவிகள் அவர்களுக்கு வழங் கப்பட்டுள்ளன.

சமூகம் மற்றும் கல்வியில் முன்னேற்றமடைய தங்களை பழங்குடியினர் பட்டி யலில் சேர்க்க வேண்டும் என்று தமிழகத்தில் வசிக்கும் நரிக்குறவர் கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். வரலாற்று ரீதியாகவும் அவர்கள் பழங்குடி யினர் ஆவார்.

பழங்குடியினரின் பட்டியலில் தங்களை சேர்க்க வேண்டும் என்ற அவர்களின் கோரிக்கை மத்திய அரசால் பரிசீலிக்கப்பட வேண்டும் என்பது எனது கருத்தாகும். எனவே தமிழ்நாட்டில் வசிக்கும் நரிக் குறவர்களை பழங்குடியினர் பட்டி யலில் சேர்க்க வேண்டும் என்ற அவர்களின் நீண்ட கால கோரிக் கைகளை கனிவுடன் பரிசீலித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டு மென்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். உங்களுடைய உடன் நடவடிக்கையை நான் பெரிதும் விரும்புகிறேன் என்று அக்கடிதத் தில் கலைஞர் தெரிவித்துள்ளார்.

தமிழ் ஓவியா said...


அமர்த்தியாசென் சொன்னதும் சோக்களின் புழுக்கமும்!

நோபல் பரிசு பெற்ற பொருளாதார மேதை அமர்த்தியாசென் அவர்கள் குஜராத் மாநில முதல் அமைச்சர் நரேந்திரமோடி குறித்து கருத்தினை வெளியிட்டார். அமர்த்தியாசென் அவர்கள் எந்த அரசியல் கட்சியின் வண்ணத்துக்கும் ஆட்பட்டவர் அல்லர்.

பொது நிலையில் நின்று நாட்டுப் போக்குகளைக் கணித்துக் கருத்துகள் சொல்பவர்கள் நாட்டுக்கு அவசியம் தேவை. மத நல்லிணக்கத்துக்கு எதிரான ஒரு மனிதரை இந்தியாவின் பிரதமராக எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? ஓர் இந்தியக் குடிமகன் என்கிற முறையில் அவர் பிரதமர் ஆவதைக் கடுமையாக எதிர்க்கிறேன். சிறுபான்மை மக்கள் தாங்கள் பாதுகாப்புடன் இருக்கிறோம் என உணரும் வகையில் மோடி எதையுமே சொல்லவில்லை. சிறுபான்மை மக்களுக்கு மட்டுமல்ல; பெரும்பான்மை மக்களுக்கும்தான் மோடி அப்படி என்னதான் செய்து விட்டார்? என்ற அறிவார்ந்த வினாவையும் எழுப்பினார்.

இப்படி கூறும் பொருளாதார நிபுணருக்கு எந்தவித அரசியல் வண்ணமும் பூச முடியாது. அமர்த்தியாசென்னின் இந்தக் கருத்து இந்தி யாவைத் தழுவி மட்டுமல்ல; உலகம் முழுவதும் பேசப்படும் - பெரும் அளவுக்குத் தாக்கத்தையும் உண்டாக்கும். இதனைப் புரிந்து கொண்ட பிஜேபியைச் சேர்ந்தவர்களும், பிர்மா முகத்தில் பிறந்ததாகத் தங்களைக் கருதிக் கொள்ளும் பார்ப்பனர்களும், அமர்த்தியாசென் அவர்கள் கூறிய கருத்துக்களுக்குத் தக்கவகையில் பதில் சொல்ல வக்கில்லாத நிலையில் அவரை சிறுமைப்படுத்த முயற்சி செய்கிறார்கள்.

பார்ப்பன சங்கத்தின் அதிகாரப் பூர்வமற்ற தலைவராக விளங்கிக் கொண்டுள்ள திருவாளர் சோ ராமசாமி தமது இதழில் (துக்ளக் 7.8.2010) தலையங்கம் தீட்டியுள்ளார். அமர்த்தியா சென் கூறிய கருத்து இந்த இந்த வகையில் தவறு? மோடி உண்மையிலேயே இந்திய அரசமைப்புச் சட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ள மதச் சார்பின்மைக் கொள் கையில் நூற்றுக்கு நூறு உடன்பாடு உடைய பிடிவாதக்காரர் - அடுத்து அவர் பிரதமர் நாற் காலியில் சட்டமாக உட்கார்ந்தால் தான் மதச் சார்பின்மை என்பது முழுமையடைந்து மணம் வீசும் என்று எழுதியுள்ளாரா?

மோடி என்ற பெயரைச் சொன்னாலே, எல்லோரும் ஏன் இப்படி நிதானம் இழக்கிறார்கள் என்று புரியவில்லை. அவ்வளவு சக்தி படைத்தவரா மோடி! அவரை விமர்சிக்கும் உரிமையோ, அவரை ஏற்க முடியாது என்று கூறுகிற உரிமையோ கோடிக்கணக்கான இந்தியர்களுக்கு உண்டு. அமர்த்தியாசென் அப்படிப் பேசியதால் என்ன வந்து விட்டது. மோடிக்கு ஒரு ஓட்டுக் குறைவு அவ்வளவு தானே! இதுதான் அறிவு ஜீ(சீ)வி திரு சோ. ராமசாமி அய்யரின் பதில்.

இதன் மூலம் ஒன்று தெளிவாகி விட்டது. அமர்த்தியா சென் அவர்கள் ஆழமாக எடுத்து வைத்த குற்றச்சாற்றுக்கு பி.ஜே.பி. மற்றும் பார்ப்பனர் தரப்பில் எந்தவித உருப்படியான பதிலும் இல்லை - கை வசம் இல்லை என்பது உறுதியாகி விட்டது.
அமர்த்தியசென் ஓட்டுப் போடாவிட்டால் என்ன ஆகிவிடப் போகிறது என்கிற ஏளனம்தானே இதில் தொக்கி நிற்கிறது. துக்ளக் வாங்கும் தமிழர்கள் இந்த இடத்தை நிதானமாக, ஆழமாக நோக்கட்டும்!
சோ வகையறாக்கள் மோடியைப் பிரதமராகக் கொண்டு வரத் தவிப்பதன் நோக்கத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.
பார்ப்பனராக ஒரு பிரதமர் வந்து இந்து ராஜ்ஜியத்தை உருவாக்குவதைவிட பார்ப்பனர் அல்லாதாரான மோடி. அதனைச் செய்தால் அவர்களுக்கு மிகவும் வசதியாகும். பார்ப்பனர் பிரதமராக இருந்து அதனைச் செய்தால் மிக எளிதில் முத்திரை குத்திக் கீழே தள்ளி விடுவார்கள்.

மோடி என்னும் பார்ப்பனர் அல்லாதாரைப் பிரதமர் ஆக்கினால். அவர்மீது அத்தகு முத்திரையைக் குத்தி வீழ்த்தி விட முடியாதே! இந்தத் தந்திரம் தான் மோடியை முன்னிலைப்படுத்துவதன் பின்னணியில் பதுங்கியுள்ள சூழ்ச்சியாகும். அதுவும் குஜராத்தில் மோடி அரங்கேற்றிய அந்தப் பாணி சூரத்தனம் - மனித வேட்டை இந்தியா முழுமையும் நடைபெற்றால் அது பிஜேபி சங்பரிவார்க் கும்பலுக்கும், பார்ப்பனர்களுக்கும் பால் பாயாசம் சாப்பிட்ட மாதிரி இருக்கும் அல்லவா!

மோடி பிரதமர் ஆனால் ஏதோ சிறுபான்மை மக்களுக்குத்தான் ஆபத்து என்று மேம் போக்காக கருதிவிட வேண்டாம்; ஒட்டு மொத்த சமூகத்தையே அமளிக்காடாக்கும் ஆபத்தான ஒரு நிலை என்பதை மறந்துவிட வேண்டாம்.
அமர்த்தியாசென்கள் கொடுக்கும் குரல் பொது நிலையானது. வழிகாட்டும் திசை விளக்குப் போன்றது - கவனியுங்கள்! கருத்தூன்றுங்கள்!