Search This Blog

1.8.13

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகக் கூடாதா? சோக்களுக்கு சுரீர் என்று ஏறுகிறதோ!



இன்று வெளிவந்துள்ள துக்ளக் ஏட்டில் (7.8.2013 இதழ்) சோ இராமசாமி அய்யர்வாளுக்கு கலைஞர்மீது ஆத்திரம் (எப்போதும் உள்ளதுதான் என்றாலும்) அதிகமாக சுரீரென்று ஏறி யுள்ளது!

காரணம் இந்தக் கேள்வி - பதிலைப் படியுங்கள்!

கேள்வி: அனைத்து ஜாதி யினரும் அர்ச்சகராகலாம் என்ற கலைஞரின் நிலைப்பாட்டை நீங்கள் ஆதரிக்கிறீர்களா?

பதில்: இது வெற்று அரசியல். அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர்கள் ஆக விரும்புகிறார்களா? மற்றப் பணிகளைவிட மிகவும் குறைந்த ஊதியம் தரக்கூடிய இந்தப் பணியை இன்றைய இளைஞர்களில் எத்தனைப் பேர் விரும்புவார்கள்? அர்ச்சகர்களின் குடும்பங்களிலேயே மற்ற படிப்புகளில் தேறி, ஏதாவது நல்ல ஊதியம் தரக் கூடிய வேலைக்குப் போகவேண்டும் என்றுதான் இளைஞர்கள் முயற்சிக்கிறார்கள். இதில் இன்னொரு விஷயம்; அர்ச்சகர்கள் என்றால், அய்யர்கள் என்பது கழக நினைப்பு. அது தவறு. அய்யர்கள் அர்ச்சகர் ஆக முடியாது.

சிவாச்சாரியார்கள் என்ற பிரிவினர்தான் அர்ச்சகர்கள் ஆக முடியும் என்பதுதான் இதுவரை இருந்துள்ள விதிமுறை. அவர்களுக்கு உள்ள வசதி போதும் என்று நினைத்து, அந்தப் பணிக்குரிய பயிற்சியையும், வாழ்க்கை முறைகளையும் முழு மையாக ஏற்கிற மற்ற ஜாதியினர், அர்ச்சகர்கள் ஆனால் ஆகட்டுமே!
----------------------------------------- இதுதான் சோவின் பதில்.

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் என்ற பிரச்சினையில் வெகு குறைவான சம்பளம் தானாம்!

அனைவரும் விரும்புவார்களா?

என்றெல்லாம் கூறி ஆத்திரம் அறிவுக்குச் சத்ரு என்ற பழ மொழிக்கொப்ப எழுதியுள்ளார்!

அர்ச்சகராகவேண்டும் என்று நாம் கூறுவது வெறும் ஊதியத்தை மட்டும் வைத்தா?

இது ஜாதி ஒழிப்பு - தீண்டாமை ஒழிப்பு என்ற கொள்கையை அடிப் படையாகக் கொண்டதல்லவா?

அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ். அதி காரிகளின் சம்பளத்தைவிட, கார்ப்பரேட் கம்பெனி நிர்வாகத் தில் அதிக சம்பளம் கிடைக்கிறது என்றாலும், ஏன் முன்னவைகளை விரும்புகிறார்கள்? வெறும் சம் பளம் மட்டுமா அளவுகோல்?
அதன் அதிகாரம், செல்வாக்கு, சமவாய்ப்பு இவை எல்லாம் உள்ளடங்கியுள்ளனவே!

அதுபோலத்தானே இதுவும்? ஏற்கெனவே தேர்வு பெற்ற 206 பேர் வேலை வேண்டும் என்று கேட்டு உச்சநீதிமன்றத்தில் உள்ள வழக்கிலேயே தங்களை இணைத் துக் கொண்டுள்ளார்களே, அதை வசதியாக சோக்கள் ஏனோ மறந்து அல்லது மறைத்து விடு கிறார்கள்?

இவர் சொல்லும் வாதம் உண்மை என்றால், அர்ச்சகர்கள் சங்கத்தவர்தானே, உச்சநீதிமன் றத்தில் வழக்குப் போட்டுள்ள வர்கள் - அவர்களிடம் உபதே சித்து வழக்கை வாபஸ் வாங்கிட சோ அய்யர்வாள் முயற்சி எடுப் பாரா?
கலைஞர் அரசியல் செய் கிறாராம்!

இதில் என்ன அரசியல் இருக்கிறது? இப்படி திசை திருப்பும் பூணூல் கூட்டம் தமது ஏகபோகம் இதில் பறிக்கப்பட்டு விடுகிறதே என்று ஆலாய்ப் பறக் கிறார்கள்; பரிதவிக்கிறார்கள்!

போராட்டம் சூடு பிடித்து விட்டது என்பதன் அடையாளமே இந்த ஜன்னி கண்ட உளறல்கள்!

புரிந்துகொள்வீர்!
--------**********************************************************************
 
முதல் அமைச்சரை மட்டம் தட்டும் அண்ணா திமுக ஏடு
அண்ணா திமுகவின் அதிகாரப்பூர்வ ஏடு டாக்டர் நமது எம்.ஜி.ஆர்., புராணம், ஆன்மீகம் பற்றி அரைகுறையாகத் தெரிந்துகொள்ள வேண்டும் என்றால் அந்தப் பத்திரிகையைப் படிக்கலாம் (வாழ்க அண்ணா நாமம்!)

திராவிடர் கழகம் தமிழ்நாடு முழுவதும் நாளை நடத்த விருக்கும் அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தை தமிழ்நாடு தழுவிய அளவில் நடத்த உள்ளது. தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, திரா விட இயக்கத் தமிழர் பேரவை மற்றும் பல்வேறு தமிழின உணர் வுள்ள  அமைப்புகள் ஆர்வமுடன் பங்கேற்க இருக்கின்றனர்.
இதில் நமது எம்.ஜி.ஆருக்கு என்ன வந்ததாம்?

ஆலயங்களில் சமத்துவம் வேண்டும் என்று கோருவதற்கு முன் அறிவாலயத்திலும், பெரியார் திடலிலும் அதனை நிறை வேற்றுங்கள் என்று அக்கிரகார (அ) திமுக எழுதுகிறது? (இந்த இடங்களில் சமத்துவத்துக்கு என்ன குறைவாம்? விளக்குவார்களா?). மொட்டைத் தலைக்கும் விளக்கெண் ணெய்த் தடவிய முழங்காலுக்கும் முடிச்சு போடப் பார்க் கிறார்களே! முதலில் இந்தப் பிரச்சினையில் எம்.ஜி.ஆர். அவர்களின் நிலைப்பாடு என்ன என்று தெரியுமா? 

முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் செயல்பாடு என்ன என்று தெரியுமா?
அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமையைச் செயல்படுத்த வேண்டி நீதியரசர்கள் மகாராஜன், கிருஷ்ணசாமி ரெட்டியார் தலைமையில் குழுக்களை அமைத்துப் பரிந்துரை களைப் பெற்றவர் முதல் அமைச்சர் எம்.ஜி.ஆர். என்பது தெரியுமா? 69 சதவீத அடிப்படையில் தாழ்த்தப்பட்டவர் உட்பட அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் பயிற்சி அளிக்கப் படும்; அதற்கு திருச்சியையடுத்த கம்பரசம்பேடடையில் பயிற்சி நடப்பதற்கு இடம் தேர்வு செய்யப்படுவது என்று அறிவித்தவர் அந்நாளைய முதல் அமைச்சர் மாண்புமிகு செல்வி ஜெய லலிதா என்ற தகவலாவது புரியுமா?

திராவிடர் கழகம் நடத்தும் ஆர்ப்பாட்டத்தை கொச்சைப் படுத்துவதாக நினைத்துக் கொண்டு எம்.ஜி.ஆரையும், ஜெயலலிதாவையும் மட்டம் தட்டும், இழிவுபடுத்தும் வேளையில் அண்ணா தி.மு.க.வின் நமது எம்.ஜி.ஆர். ஏடு ஈடுபடலாமா?

அடிப்படைகளையே அறிந்திராதவர்கள் தான் அந்த ஏட்டின் எழுத்தாளர்களா? அல்லது முதல் அமைச்சர் ஜெயலலிதாவை வம்புக்கு இழுக்க வேண்டும் என்ற குழிபறிப்பு வேலையில் ஈடு படுவோர் அந்த ஏட்டில் ஊடுருவி இருக்கிறார்களா? முதல் அமைச்சர் ஜெயலலிதா எதற்கும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

                           ---------------------------------------விடுதலை” 31-7-2013

45 comments:

தமிழ் ஓவியா said...


பெரியார் சுயமரி யாதைத் திருமண நிலை யத்தின் சார்பில் தமிழகம் முழுக்க நடத்தப்படும் ஜாதி மறுப்பு இணை தேடல் நிகழ்ச்சியான மன்றல் - நெல்லை மண்ட லத்தில் 28.7.2013 அன்று திருநெல்வேலி மாநகரில் ஆர்.கே.வி. மஹாலில் நடைபெற்றது. காலை முதலே ஏராளமானோர் ஆர்வத்துடன் பங்கேற் றனர். பகல் முழுவதும் பதிவுகள் ஏற்கப்பெற்று மணமக்களின் அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது. மதிய உணவுக்குப் பின் னும் அறிமுக நிகழ்ச்சிகள் தொடர்ந்தன. ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்ட இணை யருக்கான பாராட்டும் நிகழ்ச்சியின் இடையி டையே செய்யப்பட்டது. ஜாதி மறுப்பு இணை யர்களான திருநெல்வேலி இ.தமிழ்மணி- இ.சுகந்தி, தூத்துக்குடி பொ.முருகன் - இ.அருணா, கீழப்பாவூர் ச.தமிழன் - த.கலாவதி, நாகர்கோவில் மு.இராசேந் திரகுமார் - வி.விஜி, நெல்லை பொ.சக்திவேல் - திருமலைகுமாரி ஆகி யோருக்கு பெரியார் சுய மரியாதைத் திருமண நிலையத்தின் மாநில அமைப்பாளரும், தலை மைச் செயற்குழு உறுப் பினருமான திருமகள் பாராட்டுக் கேடயத்தினை வழங்கினார். அனைவருக் கும் கழகப் பொதுச் செய லாளர் வீ.அன்புராஜ் அவர் கள் பாராட்டுத் தெரி வித்தார்.

நிறைவு விழாவில் ஜாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்டோரைப் பாராட்டியும், மன்றல் நிகழ்ச்சி சிறக்க உழைத் தோரைப் பாராட்டியும் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்கள் உரையாற்றினார். அவர் தனது உரையில் "கூட்டுமுயற்சியால் வெற்றி பெற முடியும் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு இந்த நெல்லை மன்றல். நமது தோழர்கள் கடுமை யாக உழைத்து இந்த நிகழ்ச்சியைச் சிறப்பாக நடத்தியிருக்கிறார்கள். அடுத்த மன்றல் நெல் லையில் நடத்தப்பட வேண்டும் என்று தமிழர் தலைவர் அவர்கள் ஆண யிட்டபோது, நெல்லை யிலா? என்று சிலர் வியந் தார்கள். எங்கே தேவைப் படுகிறதோ, அங்கே தானே நடத்த வேண்டும். எனவே நெல்லையில் தான். ஆனால் உடனடி பலன் கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள். அவசியமாக நடத்தப்பட வேண்டிய பகுதி என்றார் தழிழர் தலைவர் அவர்கள். அதன் படி தான் இங்கே அதற்கான பணிகள் தொடங்கப்பட்டன. மற்ற ஊர்களோடு ஒப்பிடுகை யில் நெல்லையில் பதிவு குறைவாக இருக்கிறதே என்று கூட நம் தோ ழர்கள் வருத்தப்பட்டார் கள்.

ஆனால், இது ஒரு நல்ல தொடக்கம். ஜாதி யினாலும், மூடநம்பிக்கை யாலும் சூழப்பட்டுள்ள மக்களை அதிலிருந்து வெளிக்கொண்டு வருவது என்பது சாதாரண பணி யல்ல. இதே பகுதியில் தோழர்கள் எதிர்பார்த் ததை விட அதிகமான பதிவுகள் வரும் வரை, இந்தப் பணியை நாங்கள் விடுவதாக இல்லை. தொடர் பிரச்சாரத்தின் வாயிலாகவும், அடுத் தடுத்த தலைமுறையிட மும் இந்தக் கொள்கை யையும், தந்தை பெரியா ரையும் கொண்டு செல்வ தன் வாயிலாகவும் மட்டு மே நாம் வென்றெடுக்க முடியும். அதற்கான திட்ட மிடலோடு செயலாற்று வோம். மீண்டும் மீண்டும் இப்பகுதியில் மன்றல் நடத்தப்படும். தமிழகத் தின் அனைத்துப் பகுதி களிலும் மன்றல் நிகழ்வு களை தொடர்ந்து வெற்றி கரமாக நடத்தி நாம் செய்துவரும் சமூகப் புரட்சி தொடரும் என்று குறிப்பிட்டார். மன்றல் சிறக்க உதவிய, தொண் டாற்றிய அனைவருக்கும் பயனாடை அணிவித்துச் சிறப்பித்தார்.

தமிழ் ஓவியா said...


அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைக்கான ஆர்ப்பாட்டம்!


ஆர்ப்பரித்து எழுகிறது அரிமா தமிழினம்!

சென்னையில் தமிழர் தலைவர் தலைமை தாங்குகிறார்


சென்னை, ஜூலை 31- திராவிடர் கழகத்தின் சார்பில் நாளை (1.8.2013) காலை தமிழகம் முழுவதும் கழக மாவட்டத் தலைநகரங்களில் அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைக்கான ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

சென்னையில் நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டத் தில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி., (தி.மு.க.), தொல்.திருமாவளவன் எம்.பி., (வி.சி.க.), சுப.வீரபாண் டியன் (தி.இ.த.பே.) ஆகியோர் பங்கேற்கின்றனர்.

ஆர்ப்பாட்டத்தின் நோக்கம்

தந்தை பெரியார்தம் வாழ்நாளில் இறுதியாக அறிவித்த தீண்டாமை ஒழிப்பு - ஜாதி ஒழிப்புப் போராட்டமான அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமையை வலியுறுத்தும் வகையிலும், தமிழ்நாடு அரசு இதனைச் செயல்படுத்தும் வகை யில் நடவடிக்கை எடுக்கவேண்டும்; உச்சநீதிமன் றத்தில் வழக்கைச் சிறப்பாக நடத்தவேண்டும்; வெற்றி பெறவேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையிலும் பல கட்டப் போராட்டங்களை நடத்து வது என்று சென்னையில் 9.7.2013 அன்று நடை பெற்ற திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கடந்த 43 ஆண்டுகளுக்குமேல் இந்தப் பிரச்சினை யில் திராவிடர் கழகம் - ஜாதி - தீண்டாமை ஒழிப்பு என்பது இந்த இயக்கத்தின் உயிர் மூச்சுக் கொள்கை என்பதால், உறுதியாக நின்று வென்றே தீருவது என்ற திட சித்தத்துடன், எந்த விலையையும் கொடுக்கத் தயார் என்று நாளும் பாடுபட்டு களங்காண, களைப்பின்றிக் கடமையாற்றி வருகின்றது.

அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை ஏன் வேண்டும் என்பதை விளக்கி திராவிடர் கழகப் பேச்சாளர்கள் தமிழகமெங்கும் பட்டிதொட்டி யெல்லாம் சென்று தெருமுனைக் கூட்டங்களை நடத்திப் பிரச்சாரம் செய்து வந்தனர்.

இந்நிலையில், அதனடிப்படையில் முதற்கட்ட மாக நாளை (1.8.2013) திராவிடர் கழகத்தின் அனைத்துக் கழக மாவட்டத் தலைநகரங்களில் (புதுச்சேரி, காரைக்கால் உள்பட) ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

61 இடங்களில் ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் உள்ள கழக மாவட்டங்களான 61 இடங்களில் நடைபெறும், இந்தத் தீண்டாமை ஜாதி ஒழிப்புப் போராட்டமான அனைத்து ஜாதி யினருக்கும் அர்ச்சகர் உரிமைக்கான போராட்டத் தில் திராவிடர் கழகத்துடன் இணைந்து திராவிட முன்னேற்றக் கழகம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, திராவிட இயக்கத் தமிழர் பேரவை மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் பங்கேற் கின்றனர்.

அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை கோரி தமிழ்நாடெங்கும் நாளை நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழகத் தோழர்கள், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொண்டர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன் னாள் மத்திய - மாநில அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், விடுதலை சிறுத்தைகள் கட்சி உறுப்பினர்கள், நிர்வாகிகள், திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொறுப்பாளர்கள் என பெருந் திரளாக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கின்றனர்.

சென்னை - சேப்பாக்கத்தில் ஆர்ப்பாட்டம்!

சென்னை - சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பு நாளை (1.8.2013) காலை 11 மணியளவில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ்.இளங் கோன் எம்.பி., விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி., திராவிடர் இயக்கத் தமிழர் பேரவை பொதுச்செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன், திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், தென் சென்னை தி.மு.க. மாவட்டச் செயலாளர் ஜெ.அன் பழகன் எம்.எல்.ஏ., வடசென்னை மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் ஆர்.டி.சேகர் ஆகியோர் பங்கேற் கின்றனர்.

தமிழ் ஓவியா said...


கிரிக்கெட் சூதாட்டம்: மூக்கை உடைத்தது மும்பை நீதிமன்றம்



மும்பை, ஜூலை 31-சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கவுரவ உறுப்பினர் குருநாத் மெய்யப்பன், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான ராஜ்குந்த்ரா ஆகியோர் மீது சூதாட்ட குற்றச்சாட்டு கூறப்பட்டது.

இதுகுறித்து முன்னாள் நீதிபதிகள் ஜெயராம் சவுதா, பாலசுப்பிரமணியன் ஆகியோர் அடங்கிய விசாரணை குழுவை கிரிக்கெட் வாரியம் நியமித்தது.

இந்த விசாரணை அறிக்கையில் குருநாத் மெய்யப்பன், ராஜ்குந்த்ரா ஆகியோர் மீதான சூதாட்ட புகாருக்கு ஆதாரம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் கிரிக்கெட் வாரியத்தின் இந்த விசாரணை குழுவை எதிர்த்து ஜார்க்கண்ட், பீகார் மாநில கிரிக்கெட் சங்கங்கள் சார்பில் மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.
இந்த வழக்கை விசாரித்த மும்பை உயர்நீதிமன்றம் கிரிக்கெட் வாரியத்துக்குக் கண்டனம் தெரிவித்து கிரிக்கெட் வாரியத்தின் இந்த விசாரணை குழு சட்ட விரோதமானது. ஒரு தலை பட்சமானது என்று தெரிவித்தது.

மேலும் புதிய குழுவை நியமித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் நீதிமன்றம் கிரிக்கெட் வாரியத்துக்கு உத்தர விட்டது.

அய்.பி.எல். சூதாட்ட வழக்கில் குற்றப்பத்திரிகை அய்.பி.எல். சூதாட்டம் தொடர்பாக டில்லி காவல்துறையினர் விசாரண நடத்தி வருகின்றனர். சூதாட்டத்தில் ஈடுபட்டு கைதான கிரிக்கெட் வீரர்களின் தொலைபேசி உரையாடல்களை மத்திய தடயவியல் ஆய்வு செய்தபோது, இந்த சூதாட்டத்தில் நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் மற்றும் அவனது கூட்டாளிகள் சம்பந்தப்பட்டிருப்பது தெரியவந்தது. அதன் அடிப்படையில் விசாரணை நடத்திய டில்லி காவல்துறை, நேற்று டில்லி கூடுதல் அமர்வு நீதிபதி வினய்குமார் கன்னா முன்னிலையில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. 6000 பக்கம் கொண்ட இந்த குற்றப்பத்திரிகையில், தாவூத் இப்ராகிம், அவனது நெருங்கிய கூட்டாளி சோட்டா ஷகீல், பணி நீக்கம் செய்யப்பட்ட கிரிக்கெட் வீரர்கள் சிறீசாந்த், அன்கீத் சவான், அஜித் சண்டிலா, ஏஜெண்டுகள் அஷ்வனி அகர்வால், ரமேஷ் வியாஸ், தீபக் குமார், சுனில் பாட்டியா மற்றும் பைரோஸ் பாரித் அன்சாரி, முன்னாள் ரஞ்சி வீரர் பாபுராவ் யாதவ் உள்ளிட்ட 39 பேரின் பெயர்கள் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளன.

இந்த 39 பேரில் 8 பேர் நீதிமன்றக் காவலில் உள்ளனர். 21 பேர் பிணையில் வெளியே வந்துவிட்டனர். 10 பேர் தலை மறைவாக உள்ளனர்.

தமிழ் ஓவியா said...


பணிபுரியும் இடங்களில் பாலியல் வன்முறைத் தடுப்புச் சட்டம்


பணி புரியும் இடங்களில் பெண்களைப் பாது காக்கும் வகையில் சட்டத்தில் புதிய விதிகள் உரு வாக்கப்பட்டுள்ளன. அதன்படி பெண்களுக்குப் பாலியல் தொல்லை தருபவர்கள் பணி நீக்கம் செய்யப்படுவர்.

இதுதொடர்பாக, கடந்த பிப்ரவரி மாதம் முதல் நடை முறைக்கு வந்துள்ள பணிபுரியும் இடத்தில் பாலியல் தொல்லைகள் (தடுப்பு, தடை மற்றும் தீர்வு) சட்டம்-2013 இல், பெண்கள் மற்றும் குழந் தைகள் மேம்பாட்டு அமைச்சகம் உருவாக்கியுள்ள வரைவு சட்ட விதிகள் வருமாறு:

பெண் பணியாளர்களை பாலியல் தொல்லை களுக்கு உள்படுத்துபவர்களுக்கு பணி நீக்கம், பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வை நிறுத்தி வைத்தல் போன்ற தண்டனைகள் வழங்கப்படும்.

பாலியல் புகார் அளிக்கும் பெண் பணியாள ருக்கு தகுந்த இழப்பீட்டுத் தொகை வழங்குவது என்றும் கூறப்பட்டுள்ளது.

பாலியல் தொல்லை குறித்து பொய்யான தகவல் அளித்தால், பாலியல் குற்றத்துக்கு குற்றவாளிக்கு என்ன தண்டனை அளிக்கப்படுமோ, அதே தண்டனை பெண்ணுக்கும் கிடைக்கும்.

புகார்களை பெறுவதற்காக உள்ளூர் புகார்கள் குழுவை அமைக்கவேண்டும். அதில் சம்பந்தப்பட்ட துறையில் குறைந்த பட்சம் 5 ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த சமூகசேவகர் ஒருவரும், தொழிலாளர், வேலைவாய்ப்பு, சிவில் மற்றும் கிரிமினல் வழக்கு களில் நன்கு கைதேர்ந்த ஒருவரும் நியமிக்கப்பட வேண்டும் எனப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

தவிர, ஒருங்கிணைந்த குழந்தைகள் பாது காப்புத் திட்டத்தின் கீழ், மாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு சங்கத்தை நிறுவி, மேற் கண்ட குழுவிற்கு தார்மிக ஆதரவு அளிக்க வேண்டும்.

விசாரணையின் போது குற்றம் சாட்டியவர், குற்றம்சாட்டப்பட்டவர் இருவரையும் நேருக்கு நேர் வைத்து விசாரிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

குற்றச்சாட்டுக்கு ஆளானவர், புகார் அளித்த பெண்ணுக்கு நேரடியாகவோ அல்லது மறைமுக மாகவோ மிரட்டல் விடுக்கவோ, ஆசை வார்த்தை கள் கூறவோ முயற்சிக்கக் கூடாது என எச்சரிக் கப்பட வேண்டும் போன்ற விதிமுறைகள் உருவாக்கப் பட்டுள்ளன.

இது உண்மையில் வரவேற்கப்படவேண்டிய சட்டமாகும். பெண்கள் என்றால், பாலியல் பதுமை என்ற மனப்பான்மை, ஆண்களிடத்தில் உள்ளது. ஆண் ஒருவன் 7 நிமிடத்திற்கு ஒருமுறை, பாலுணர்வுபற்றி யோசிக்கிறான்- என்கிறது ஓர் ஆய்வு.

பெண்கள் குடும்ப வன்முறைத் தடுப்புச் சட்டம் என்பது அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் கொண்டு வரப்பட்ட அருமையான சட்டம். அது எந்த வகையில் செயல்வடிவத்தில் இருக்கிறது என்பது கேள்விக்குறிதான்.

பாதிப்புக்கு ஆளான பெண்கள் காவல் நிலையத்திற்குச் சென்று துணிவாகப் புகார் கொடுப்பது போன்ற துணிவு, போதுமான அளவுக்கு ஏற்படவில்லை.

இதில் இன்னொன்று - இப்படி ஒரு சட்டம் இருக்கிறது என்கிற விழிப்புணர்வுகூட சமுதாயத்தில் ஏற்படவில்லை. வெறும் சட்டத்தை நிறைவேற்றினால் மட்டும் போதாது - அதுபற்றிய விழிப்புணர்வுப் பிரச்சாரம் நாடு தழுவிய அளவில் செய்ய அரசே திட்டங்களை வகுத்துச் செயல்படுத்த வேண்டும்.

அரசு தொலைக்காட்சியிலாவது இதுகுறித்து, விளக்கம் அளிக்கலாமே! நாடு தழுவிய அளவில் விவாதங்களை உருவாக்கலாமே!

பல்கலைக் கழகம் போன்ற கல்வி நிறுவனங்கள், இதுகுறித்துக் கருத்தரங்குகளை நடத்திடவேண்டும்.

அரசு அலுவலகங்களில் பணியாற்றும் பெண்கள் பாலியல் தொல்லைக்கு ஆளாவது சர்வசாதாரணம். அதனைத் தடுக்கவும் சம்பந்தப்பட்டவர்களுக்குத் தண்டனை வழங்கவும் ஏற்கெனவே சட்டம் இருக்கத்தான் செய்கிறது.

2012 டிசம்பரில் இத்தகைய சட்டம் குறித்து உள்துறை இணை அமைச்சர் ஆர்.பி.என். சிங் கூறியது இங்கு நினைவூட்டத்தக்கதாகும்.

பெண்களுக்கு எதிரான பாலியல் தாக்குதல்களில் ஈடுபடுவோருக்கு, ஏழு ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனைவரை, சிறைத் தண்டனை விதிக்க வகை செய்யும் சட்ட (திருத்த) மசோதா, நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று கூறினார்.

பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தல் தடுப்பு மசோதா ஒன்றும் 2011 ஆம் ஆண்டிலேயே பேசப்பட்ட ஒன்று.

குழந்தைத் திருமணத்தைத் தடுக்கும் பணியில் ஈடுபட்ட ராஜஸ்தான் அரசு ஊழியர் பான்வாரி கன்னத்தில் அறையப்பட்ட நிகழ்ச்சி இந்திய அளவில் பெரிய அதிர்வை உண்டாக்கியது. அது தொடர்பான வழக்கில் 1997 இல் உச்சநீதிமன்றத்தால் வழிகாட்டுதல் அம்சங்கள் தெரிவிக்கப் பட்டுள்ளன.

அதன் அடிப்படையில் உருவாக்கப்பட்ட சட்டம் அலுவலக நடைமுறைக்கே உரித்தான தாமதத்துடன் சட்டம் இப் பொழுதுதான் தலைகாட்டுகிறது.

ஒவ்வொரு நிறுவனத்திலும் புகார்க் குழு அமைக்கப்பட வேண்டும். புகார்க் குழுவின் தலைவராக மூத்த (சீனியர்) பெண்மணி நியமிக்கப்படவேண்டும். தன்னார்வ அமைப்புப் பிரதிநிதி ஒருவரும் அதில் இடம்பெறவேண்டும் என்றெல் லாம் தாராளமாக விதிமுறைகள் உண்டு.

இவை வெறும் ஏட்டுச் சுரைக்காயாக இல்லாமல் உயிருள்ள மின்னோட்டமாக இருப்பது அவசியமாகும்.

தமிழ் ஓவியா said...


பொது மக்கள் நலன்!



இது நம்முடைய நாடு; இதன் நலனில் நமக்குப் பொறுப்பும், அக்கறையும் உண்டு. நாம் பொதுமக்கள் நலனுக் காகத் தொழில் செய்கிறோமே ஒழிய, அரசாங்க அதிகாரிகள் நலனுக்காக அல்ல.
(குடிஅரசு, 25.8.1940)

தமிழ் ஓவியா said...


திருமுல்லைவாயல் வாசிகளின் குறைபாடு


ஆசிரியருக்குக் கடிதம்

திருமுல்லைவாயல் வாசிகளின் குறைபாடு

கடந்த 2.7.2011 அன்று திருமுல்லைவாயலில் (ஆவடி மாவட்டம்) தந்தை பெரியார் அறிஞர் அண்ணா இவர்களின் பெயரில், சாலைகள் திறக்கப்பட்டன. துணைப் பொதுச்செயலாளர் கவிஞர் கலி.பூங்குன்றன், நகராட்சி தலைவர் ச.மு.நாசர், முன்னாள் நகராட்சி தலைவர் எம்.விக்டரிமோகன் மற்றும் கழகப் பொறுப்பாளர்கள், ஊர்ப் பெரியவர்கள் முன்னிலையில் சிறப்பான விழா எடுத்து திறந்து வைக்கப்பட்ட சாலையில், 7 ஆவது வார்டு அ.தி.மு.க. நகர மன்ற உறுப்பினர், வேறு ஒரு பெயரில் சாலைக்கு பெயர் வைத்து போர்டு நடப்பட்டுள்ளது (அதன் பெயர் குளக்கரை சாலை, திருமுல்லைவாயல், ஆவடி நகராட்சி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது) என்பதைத் தங்கள் மேலான கருத்திற்கு தெரியப்படுத்துகிறேன்.

மேலும் அய்யா அறிவது, திருமுல்லைவாயல் பகுதியில் சுமார் 5 லட்சம் மக்கள் வசிக்கிறார்கள், அவர்கள் போக்குவரத்திற்கு பேருந்து வசதி கிடையாது. கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் ஒரு பேருந்து வந்தது; அதுவும் இப்பொழுது இல்லை, காரணம் சாலை சரியில்லை, குண்டும் குழியுமாக இருக்கிறது என்று நிறுத்தி விட்டார்கள், கல்லூரிக்குச் செல்லும் மாணவர்கள், மேற்படிப்புக்குச் செல்லும் மாணவர்கள், அலுவலகம் செல்பவர்கள் மற்றும் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகிறார்கள். மழைக் காலங்களில் சாலையில் நடக்க முடியவில்லை. வயதானவர்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். ஒரு முதியவர் நடந்து வரும்போது வழுக்கி விழும்போது, லாரி ஒன்று அவர் காலில் ஏறியதில் கால் முறிந்து கொஞ்சம் நாள் கால் வலியால் துயரப்பட்டு இறந்து விட்டார். பல பேர் விழுந்து எழுந்து செல்கிறார்கள். இன்னும் அந்தச்சாலை சீர் செய்யப்படவில்லை. பொது மக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள் என்பதைத் தங்கள் கவனத்திற்கு கொண்டு வருவதோடு, திருமுல்லைவாயல், பேரறிஞர் அண்ணாவின் துணைவியார் ராணி அண்ணாதுரை வாழ்ந்த ஊர் என்பதும், பேரறிஞர் அண்ணா எங்கள் ஊரின் மருமகன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

குறிப்பு: எல்லா இடங்களுக்கும் பேருந்து வசதி உண்டு, திருமுல்லைவாயலில் மட்டும் இதுவரை பேருந்து இல்லை என்பது வருந்தத்தக்க ஒன்றாகும். தவறாமல் வாக்குப்பதிவு அதிகமாக நடப்பதும் இந்த ஊரில்தான். தேர்தல் வாக் குறுதி இலவசங்கள் கடந்த 15 ஆண்டுகளாக பெறாத ஊரும் இதுதான். இந்த மக்கள் இலவசத்தை இதுவரை கேட்டது கிடையாது. ஆனால் கொடுத்தால் வாங்குவதற்குத் தயார்! ஏன் கொடுக்கவில்லை என்பதுதான் கேள்வி!

- க.இரணியன், பகுத்தறிவாளர் கழகம், திருமுல்லைவாயல்

தமிழ் ஓவியா said...

நாகை மாவட்ட திராவிடர் கழக முன்னாள் தலைவர் வி.எஸ்.டி. அழகப்பன் அவர்கள் தமக்குப் பிறகு தமது மகன் இந்த இயக்கத்தில் தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என்று மருத்துவமனையில் அவர் இருந்த போது கையைப் பிடித்து என்னிடம் ஒப்படைத்தார் - அதனை உறுதி செய்யவே இங்கு வந்துள்ளேன் என்றார் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள்.

நாகப்பட்டினம் மாவட்டம் திராவிடர் கழக முன்னாள் தலைவர் வேளாங்கண்ணி வி.எஸ்.டி. அழகப்பன் அவர்களின் நினைவுநாளையொட்டி படத்திறப்பு நிகழ்ச்சி 19.7.2013 அன்று காலை 10.30 மணிக்கு அவரது இல்லத்தில் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்ட கொட்டகையில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் தலைமையில் நடைபெற்றது.

படத்தினை திறந்து வைத்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார். உரையில் குறிப்பிட்டதாவது:

இயக்க வரலாற்றில் நாகை

நாகைக்கு இயக்க வரலாற்றில் பல சரித்திர சிறப்புகள் உண்டு. ஆர்.வி.கோபால், நாகை மணி, வழக்குரைஞர் டி.கே.விஜயராகவலு, வி.பி.கே.காயா ரோகணம், எஸ்.ஆர். ஆறுமுகம், நாகை கணேசன், பாவா நவநீதகிருஷ்ணன், நாத்திகன் நாகூர் ஆர்.சின்ன தம்பி, அவரது இணையர் ருக்மணியம்மாள், சோழங்க நல்லூர் அந்தோணிசாமி என்று எண்ணற்ற வீரர்கள் பாடுபட்ட தியாகம் செய்த பகுதி நாகைப் பகுதி.

இந்த நாகையில் குலக்கல்வி திட்ட எதிர்ப்பு மாநாடு நடைபெற்றது. இங்கிருந்துதான் குலக்கல்வி திட்ட ஒழிப்பு பிரச்சாரப் படை புறப்பட்டது.

மறைந்த வி.எஸ்.டி.அழகப்பன் அவர்கள் உடல் நலம் பாதிக்கப்பட்டு, சென்னை போரூர் இராமச்சந்திரா மருத்துவமனையில் இருந்த போது, அவரது மகன் நெப்போலியனின் கைப் பிடித்து என்னிடம் ஒப் படைத்தார். இயக்கத்திற்கு தமக்குப் பிறகு இவர் பயன் படுவார், பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்றார்.

அதனை உறுதி செய்து கொள்வதற்காகவே இங்கு நான் வந்திருக்கிறேன்.

கொள்கை இருப்பிடம் என்றால்...

சில வீடுகளில் தான் மட்டும் கொள்கைவாதிகளாக இருப்பார்கள்; அவர் மறைந்ததற்கு பிறகு நெற்றியில் 1 ரூபாய் நாணயத்தை வைத்து விடுவார்கள், திருநீறு பூசி விடுவார்கள், நாமமும் போட்டு விடுவார்கள். சங்கு ஊதுவார்கள். ஆனால் நமது வி.எஸ்.டி. அவர்கள் குடும்பம் கொள்கை குடும்பம் - அவர் ஏற்று கொண்ட கொள்கை தொடர்கிறது.

அதற்காக இயக்கம் இந்த குடும்பத்தாருக்கு தலை தாழ்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறது.

மற்றவர்கள் தம்முடைய சொத்துக்களுக்காக உயில் எழுதி வைப்பார்கள். கழகக் கொள்கைகளை ஏற்று கொண்டவர்களோ தம் மறைவிற்குப் பிறகு தனது உடலுக்கு எந்தவித மதச் சடங்குகளும் நடைபெற்று விடக்கூடாது என்று உறுதி செய்யும் வண்ணம் உயில் எழுதி வைப்பார்கள். சிலர் தம் உடலை மருத்துவ மனைக்குக் கொடையாக வழங்குவதற்கு உயில் எழுதி வைத்துச் செல்வார்கள்.

வாழ்நாள் முழுவதும் கொள்கைக்காக வாழ்ந்தவர், கொள்கைக்காரராகவே மறைய வேண்டும் என்பதிலே உறுதியாக இருப்பவர்கள் கருஞ்சட்டைத் தோழர்கள்.

இந்த இயக்கம் கொள்கைகளை மட்டும் சொல்லிக் கொடுக்கவில்லை. தனி ஒழுக்கத்தையும், பொது ஒழுக்கத்தையும் சொல்லிக் கொடுக்கும் இயக்கம். கொள்கையும் - ஒழுக்கமும்

பெற்றோர்கள் கூட சொல்லுவார்கள் - எங்கள் பிள்ளைகள் தி.க.வில் இருக்க வேண்டும். அவர்கள் கடவுள் இல்லை என்று சொல்கிறவர்கள் ஆயிற்றே என்று சொன்னால், பரவாயில்லை. அங்கு சென்றால் ஒழுக்கத்தோடு இருப்பார்கள் என்று சொல்லக் கூடிய இயக்கம் இது.

120 கோடி பேர் உள்ள இந்தியாவில் 1 சதவிகித பேர் தான் இராணுவத்தில் இருக்கிறார்கள். அதைப் போல இந்தச் சமுதாயத்தைப் பாதுகாப்பது திராவிடர் கழகமே!

நாகைப் பகுதியயை மறுபடியும் கழகக் கோட்டை யாக்க வேண்டும். மறைந்த வி.எஸ்.டி.அழகப்பன் அவர்களுக்குச் செய்யக்கூடிய காட்டக்கூடிய மரி யாதை என்பது அது தான்.

அழகப்பனாரின் இரு ஆசைகள்

வி.எஸ்.டி. அவர்களின் இரு விருப்பம். ஒன்று அவரது மகன் நெப்போலியன் தமக்குப் பிறகு இந்த இயக்கத்தில் இருந்து கொள்கைகளோடு பணியாற்ற வேண்டும். இரண்டாவது நாகை கோட்டை வாசல் பெரியார் சிலைக்கு அருகில் பெரியார் படிப்பகம் அமைக்க வேண்டும் என்பதாகும். அதற்காக ரூ.50 ஆயிரம், தம் சொந்த பொறுப்பில் அளித்துள்ளார்.

அவரின் பெயரும் இடம் பெறும் வண்ணம் விரைவில் அமைக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள் கிறேன். அவர் இருந்தால் எப்படி இந்தக் குடும்பம் கழக குடும்பமாக இருக்குமோ அது தொடர வேண்டும் என்று கூறினார்.

தமிழ் ஓவியா said...


பெரியார் கொள்கை வெற்றிக்குப் புலவர் நன்னன்குடி! பின்பற்றத்தக்கது - பெருமைக்குரியது! தமிழர் தலைவர் பெருமித உரை


சென்னை, ஜூலை 31- பெரியார் கொள்கையின் வெற்றிக்கு நன்னன்குடி எடுத்துக்காட்டானது என்றார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள். சென்னை திருவாவடுதுறை இராசரத் தினம் கலையரங்கில் நன்னன்குடி சார்பில் நேற்று (30.7.2013) மாலை நடைபெற்ற விழாவிற்குத் தலைமை ஏற்றும் 5 நூல்களை வெளியிட்டும் உரையாற்றுகையில் அவர் கூறியதாவது:

மனநிறைவான நிகழ்ச்சியில் நாம் எல்லோரும் கலந்து கொண்டுள்ளோம்.

தந்தை பெரியார் கொள்கையை ஏற்றுக்கொண்டு அவற்றின்படி ஒழுகுபவர்கள் வெற்றி பெற்ற வாழ்க்கையை மேற்கொள்வார்கள் என்பதற்கு அடையாளமே இந்த நன்னன்குடி!

நன்னன் அவர்கள் தம் மகன் மருத்துவர் தலை சிறந்த மனிதநேயரான அண்ணலின் மறைவினை மறக்கக் கூடிய வகையில் இப்படி ஓர் அறிவார்ந்த நிகழ்ச்சியை ஆண்டுதோறும் நடத்தி வருகிறார்.

ஒவ்வொரு ஆண்டும் இந்நாளில் நூல்களை எழுதி வெளியிடுகிறார். சான்றோர்களை அழைத்துச் சொற்பொழிவு நிகழ்த்திட ஏற்பாடு செய்கிறார். கொள்கை வழிபட்ட கல்வியை ஊக்குவிக்கும் வண்ணம் மாணவர்களுக்குப் பரிசுகளை அளிக்கிறார்.

ஜாதி மறுப்பு இணையர்க்கு நிதி உதவி

ஜாதி மறுப்பு சுயமரியாதைத் திருமணங்களைச் செய்து கொள்ளும் இணையர்களுக்கு ஊக்கத் தொகை அளித்து உற்சாகம் ஊட்டுகிறார்.

அந்த வகையில் 5 இணையர்கள் இந்த மேடை யில் தோன்றிய அந்தக் காட்சி சாதாரணமானதல்ல.

ஜாதி மறுப்பு - சுயமரியாதைத் திருமணம் செய்துகொண்டவர்களுக்குப் பாராட்டு மற்றும் பரிசளிப்பு

ஜாதி மறுப்பு திருமணம் செய்துகொண்ட க.கலைமணி-செ.பாக்கியா, கே.விஜயக்குமார்-பாக்கியலட்சுமி, மல்லிகார்ஜுனா-துர்கா; சுயமரியாதை திருமணம் செய்துகொண்ட வை.கலையரசன் - உ.கனிமொழி, மு.சென்னியப்பன்-திலகவதி ஆகியோருக்கு நன்னன்குடி சார்பில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் சிறப்புச் செய்து பாராட்டுச் சான்றிதழும், ரூ.10 ஆயிரம் நிதியும் அளித்தார். உடன் அய்.ஓ.பி.யின் முன்னாள் அதிகாரி நமச்சிவாயம், மா.நன்னன் மற்றும் நன்னன்குடி குடும்பத்தார் உள்ளனர்.

ஜாதியைப் பிடித்துக் கரை ஏறலாம் என்று சிலர் நினைக்கிறார்கள். அவர்களுக்குச் சரியான பதிலடி இதுதான் - ஜாதி ஒழிப்புத் திருமணங்கள் தான். ஜாதியை ஏணியாக பற்றி கல்வி, வேலை வாய்ப்பு களைப் பெறுவதற்கு நாம் பாடுபடுகிறோம். சிலரோ அந்த ஜாதியினை மகுடமாகச் சூட்டிக் கொள்ள ஆசைப்படுகிறார்கள். அவர்கள் வெற்றி பெறப் போவதில்லை.

தாலியில்லாமல் திருமணம் செய்து கொண்டுள்ளனர். எம கண்டத்தில், இராகு காலத்தில் திரு மணம் செய்து கொண்டதாக அறிவிக்கப்பட்டனர்.
பழமொழி சொல்லுவார்கள் - கல்யாணத்தில் தாலி கட்ட மறந்தது போல என்று சொல்லுவார்கள். இவர்கள் மறக்காமல் தாலி கட்டக் கூடாது என்பதிலே உறுதியாக இருந்தவர்கள் பாராட்டுக் குரியவர்கள்!

எனக்குத் திருமணம் நடைபெற்று 56 ஆண்டுகள் ஆகிவிட்டன.

தந்தை பெரியார் தலைமையில் ஞாயிற்றுக் கிழமை மாலை 5 மணிக்கு நடைபெற்றது. 5 மணி என்றால் எல்லோருக்கும் தெரியும் - ஆம் பக்தர்கள் நடு நடுங்கும் இராகு காலம் என்று.

அதுவும் இராகு காலத்திலேயே கொழுத்த இராகு காலம் என்பார்கள். இராகு காலத்திலேயே கொழுத்த இராகு காலமாம், இளைத்த இராகு காலமாம்!

தாலிகட்டவில்லை; இரண்டு மாலைகள் - மோதிரம் மாற்றிக் கொள்ளப்பட்டன. எமது அண்ணாமலைப் பல்கலை கழகப் பேராசிரியர் அ.சிதம்பரநாதன் அவர்களும், புரட்சிக் கவிஞர் அவர்களும் என் திருமணத்தில் கலந்து கொண்டு வாழ்த்திப் பேசினார்கள்.

அந்தக் காலத்தில் நடைபெற்ற சுயமரியாதைத் திருமணம் என்பது சட்டப்படி செல்லாது, உயர்நீதி மன்றத்திலே அவ்வாறு தீர்ப்பும் கூறப்பட்டது.
கேட்டால் அக்னியைச் சுற்றி சப்தபதி - ஏழு அடி எடுத்து வைக்க வேண்டுமாம்!

முப்பத்து முக்கோடி தேவர்கள் சாட்சிக்கு வருவார்களா? எனக் கேட்டால் நாரதர் சொன்னார், யாக்ஞவல்கியர் சொன்னார், பராசரர் சொன்னார், வியாசர் சொன்னார், அவர்கள் சொன்ன மந்திரங் களை சொன்னால் தான் திருமணம் செல்லுபடியா குமாம்!

தமிழ் ஓவியா said...

தந்தை பெரியார் தான் பளிச் சென்று எல்லோருக் கும் புரியும் படி கேட்டார். நீ சொல்லுகிற ரிஷிகள் நாய்க்கும், கழுதைக்கும், கரடிக்கும் பிறந்தவர்கள் அல்லவா - உன் புராணப்படி அவர் சொன்னபடி எல்லாம் நடப்பதற்கு நாமெல்லாம் காட்டு மிராண்டிகளா என்று தந்தை பெரியார் அல்லவா கேட்டார்.

திமுக ஆட்சியில் அறிஞர் அண்ணா முதல் அமைச்சராக வந்து அல்லவா சுயமரியாதைத் திருமணத்திற்குச் சட்ட அங்கீகாரம் கிடைத்தது! இப்பொழுது நடக்கும் திருமணங்கள் மட்டுமல்ல; ஏற்கெனவே நடைபெற்ற திருமணங்களும செல்லும் என்று சட்டம் கொண்டு வந்து தந்தை பெரியார் அவர்களுக்கு நன்றிக் காணிக்கையாக் கினாரே!

அன்றைக்குச் சடங்குகள் இல்லாததால் திரு மணம் செல்லாது என்கின்றனர். இப்பொழுது சில நாட்களுக்கு முன் அதே உயர்நீதிமன்றத்தில் என்ன தீர்ப்பு வந்தது?

திருமணத்திற்குச் சடங்குகள் முக்கியமல்ல. ஆணும் பெண்ணும் விரும்பினாலே போதும் - அது திருமணம் தான் என்று உயர்நீதிமன்றம் தீர்ப்புக் கூறிவிட்டதே!

தந்தை பெரியார் வெற்றி பெற்று விட்டார் என்பதைத் தானே இது காட்டுகிறது.

பெரியார் செய்த புரட்சி!

இங்கே அய்ந்து பேராசிரியைகள் அய்ந்து நூல்களைப் பற்றி திறனாய்வு செய்தார்கள். இவர்கள் அத்தனைப்பேரும் முனைவர் பட்டம் பெற்றவர்கள். இது எத்தனை மகத்தான புரட்சி! நமது பெண்கள் என்றால் வருணதர்ம அடிப்படையில் கூட வர மாட்டார்கள்.

புற ஜாதி (Out Caste) என்று பஞ்சமர்களை ஆக்கி வைத்திருக்கிறார்களே - அந்த அய்ந்துக்கும் கீழே உள்ளவர்கள் தான் எல்லா ஜாதி பெண்களும், அப்படி அடிமைப்படுத்தப்பட்ட பெண்கள் இன்றைக்குப் பேராசிரியைகளாக, முனைவர் பட்டம் பெற்றவர்களாக நூல்களைத் திறனாய்வு செய்பவர்களாக உருவாகி இருக்கிறார் கள் என்றால், இது தந்தை பெரியார் கொள்கைக்குக் கிடைத்த மகத்தான வெற்றியல்லவா! சமூகப் புரட்டுகளை நொறுக்கித் தள்ளிய மகத்தான புரட்சி அல்லவா!

ஒரு துளி ரத்தம் சிந்தப்படாமல் இந்தப் புரட்சி இங்கே நடந்திருக்கிறது. நன்றி உணர்வோடு இங்கே பேசிய பேராசிரியைகள் தந்தை பெரியாரை நினைவு கூர்ந்தார்கள். ஆண்களைவிடப் பெண்கள் நன்றி உணர்ச்சிமிக்கவர்கள், அதனால்தான் பெண்கள் மாநாடு கூட்டி பெரியார் என்ற பட்டத்தையும் அளித்தனர் (பலத்த கைதட்டல்!).

இங்கு வெளியிடப்பட்ட அய்ந்து நூல்களும் அய்ம்பெரும் காப்பியங்கள் போன்றவை; சிறப்பான முறையிலே இங்கே நமது பேராசிரியைகள் திறனாய்வு செய்தனர்.

சும்மா இருக்க முடியவில்லை

சும்மா இருக்க முடியவில்லை என்ற நூலை நமது புலவர் நன்னன் அவர்கள் எழுதியுள்ளார். அதனைச் சிறப்பாகத் திறனாய்வு செய்தார்.

உண்மைதான் - பெரியார் தொண்டர்களால் சும்மா இருக்கவே முடியாது. 95ஆம் வயதில் கூட, தந்தை பெரியார் அவர்களால் சும்மா இருக்க முடியவில்லையே! மூத்திரச் சட்டியைச் சுமந்து கொண்டு ஒவ்வொரு ஊராகச் சுற்றிச் சென்று பகுத்தறிவுக் கருத்துகளை மக்கள் மத்தியில் அடை மழையாகப் பெய்து கொண்டு தானே இருந்தார்.

மானமும், அறிவும் உள்ள மக்களாக எம் மக்களை ஆக்கியே தீருவேன் என்று ஓய்வு ஒழிச்சல் இன்றி அலைந்து திரிந்து தொண்டு செய்து கொண்டுதானே இருந்தார்!

பெரியாருக்கென்று சலவையாளர் கிடையாது. சவரம் செய்து கொள்ள வேண்டி அவசியமும் அவருக்கு இல்லை.

பெரியார் சொன்ன தொண்டறம்!

இல்லறம், துறவறம் என்று சொல்லிக் கொண்டிந்த நாட்டிலே தொண்டறம் என்ற ஒன்றைச் சொன்னவர் - சொன்னபடி தொண்டறம் செய்தே தன் வாழ்வைக் கழித்தவர் அல்லவா தந்தை பெரியார்.

அத்தகைய தலைவர் தந்தை பெரியார் அவர் களின் தொண்டர்கள் வரிசையிலே முன்னிறுத்தப் பட வேண்டியவர்தான் மானமிகு நமது புலவர் நன்னன் அவர்கள் (பலத்த கர ஒலி!).

டாக்டர் அண்ணல் பற்றி

மகன் அண்ணல் இன்று இல்லை. ஆனால் அவரின் மருமகன்கள் அந்த இடத்தைப் பூர்த்தி செய்து கொண்டுள்ளார்கள். இதற்காகவே அவர்கள் மிகவும் பாராட்டப்பட வேண்டியவர்கள் (பலத்த கரவொலி).

தந்தை பெரியார் அவர்கள் எளிமை உலகறிந்த ஒன்று. எளிமைக்காக எளிமையை மேற்கொண்ட வர் அல்லர் பெரியார்; அதனைத் தம் இயல்பாகவே ஆக்கிக் கொண்டார்கள்.

நமது நன்னன் அவர்கள் அதேபோன்ற எளிமை சிக்கனம் - மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்து காட்டிக் கொண்டுள்ளார்.

அனைவரும் நல்லாரே!

அவரது இணையர், மகள்கள், மருமகன்கள், பேரப் பிள்ளைகள் அனைவரும் சிறந்தவர்கள். நன்னன்குடி பெருமைமிக்கது - பண்பாடுமிக்கது... தொண்டறம் ஓம்புவது - மற்றவர்களால் பின்பற்றத் தகுந்ததாகும்.

தமிழ் ஓவியா said...

நம்மைவிட நம் பிள்ளைகள் 15 ஆண்டுகள் முன்னேற்றமான கருத்தைக் கொண்டவர்கள்; நம் பேரப் பிள்ளைகளோ 30 ஆண்டுகள் முன்னேற்றச் சிந்தனை கொண்டவர்கள் - காலத்தின் வளர்ச்சி அப்படி!

புரட்சிக்கவிஞர் படைத்த மாந்தர்

எல்லா செல்வங்களும் நிறைந்த குடும்பம் நன்னன்குடி.

புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்கள் குடும்ப விளக்கில் முதல் பகுதியில் முதியோர் வாழ்வியல் பற்றிப் பாடி இருக்கிறார்

இந்தப்பாடலில் கடைசிபகுதி முக்கியமானது

தன்னலத்தால் என்ன நடக்கும்

தமிழரென்று சொல்லிக்கொள் கின்றோம் நாமும்;

தமிழ்நாட்டின் முன்னேற்றம் விரும்பு கின்றோம்!

எமதென்று சொல்கின்றோம் நாடோ றுந்தான்!

எப்போது தமிழினுக்குக் கையா லான
நமதுழைப்பை ஒரு காசைச்செலவு செய்தோம்?

நாமிதனை என்றேனும் வாழ்நாள் தன்னில்,

அமைவாகக் குந்திநினைத் தோமா? இல்லை;

அனைவருமிவ் வாறிருந்தால் எது நடக்கும்?

கரும்படியின் சாறுநிகர் மொழியாள் இந்தக்

கனிந்தமொழி சொன்னவுடன் அவன் உரைப்பான்

வரும்படிவீ தப்படிநான் தரும்ப டிக்கு

வாக்களித்த படிகணக்கர் திங்கள் தோறும்

கரம்படிவீதித் தமிழர் கழகத்தார்கள்

கடைப்படியை மிதித்தவுடன் எண்ணி வைப்பார்

பெரும்படியாய்ச் செய்ததுண்டு; படிக்க ணக்கைப்

பேசிவிட்டாய் கண்டபடி என்று சொல்ல.

அப்படியா! அறியாத படியால் சொன்னேன்.

அந்தமிழர் படிப்படியாய் முன்னேற் றத்தை

எப்படியா யினும்பெற்று விட்டால் மக்கள்

இப்படியே கீழ்ப்படியில் இரார்க ளன்றோ?

மெய்ப்படிநம் மறிஞரின்சொற் படிந டந்தால்,

மேற்படியார் செப்படி வித்தை பறக்கும்

தமிழ் ஓவியா said...

என்கிறார் புரட்சிக்கவிஞர். தமிழனுக்குச் கைக் காசைச் செலவழித்தோமா என்று தம் படைப்பு மாந்தர்களைப்புரட்சிக் கவிஞர் பேச வைத்துள்ளார். அதனைப் புலவர் நன்னன்குடி வழி இதோ காண்கிறோம்.

புலவர் நன்னன் அவர்கள் ஒன்றும் அம்பானி யில்லை, டாட்டா இல்லை, பிர்லா இல்லை ஆனாலும் தான் உண்டு, தன் குடும்பம் உண்டு என்கிற ... உள்ளத்தோடு இல்லாமல், தான் ஈட்டிய பொருளில் ஒரு பகுதிப் பொது பணிக்காக, தமிழ்ப் பணிக்காக பகுத்தறிவுப் பணிக்காக செலவிடும் பண்பு என்பது மிக பெரியது. ஒவ்வொருவரும் பின்பற்றத் தகுந்தது. இதனைத்தான் தொண்டறம் என்கிறார் தந்தை பெரியார்.

அந்தத் தொண்டறத்தின் நற்குடி தான் நன்னன் குடி - அக்குடி வாழ்க! வளர்க! என்றார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள்.

நிகழ்ச்சி

நன்னன்குடி நடத்தும் நன்னன் அண்ணல் நினைவுப் பரிசளிப்பு விழா - 10 சென்னை திருவாவடுதுறை என்.இராசரத்தினம் கலையரங்கில் 30.7.2013 நிகழ்ச்சி நிரலில் கண்டவாறு சரியாக 6 மணிக்கு பெரியார் பேருரையாளர் - நன்னன்குடி தலைவர் - புலவர் மா.நன்னன் அவர்களின் வரவேற் புரையுடன் தொடங்கப்பட்டது.

விழாவிற்குத் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமை வகித்தார்.

தமிழைத் தமிழாக்குவோம்! பள்ளி மாணவர் களுக்கான தேர்வு போட்டியில் வெற்றி பெற் றோருக்குப் பரிசுகளை விழாத் தலைவர் கி.வீரமணி வழங்கினார். மொத்தப் பரிசுத் தொகை ரூ. 70 ஆயிரம். முதல் பரிசு ரூ. 4000; இரண்டாம் பரிசு ரூ.3000; மூன்றாம் பரிசு ரூ.2000; நான்காம் பரிசு ரூ.500; அய்ந்தாம் பரிசு ரூ. 500. அய்ந்து குடும்பங்களைச் சேர்ந்த உயர்திணைத் திருமண வாழ்க்கையின் பதின்மருக்கு தலா ரூ.10000 வீதம் வழங்கப்பட்டுப் பாராட்டப் பெற்றனர்.

புலவர் மா.நன்னன் தொகுத்த

1. அருந்தமிழ் விளக்கம் - 1

2. இவர்தாம் பெரியார் (5 ஜாதி)

3. நாலடியார் மூலமும் விளக்கவுரையும்

4. சும்மா இருக்க முடியவில்லை

5. திராவிட இயக்கம் - 100 குறுந்தகடு மற்றும் பேராசிரியர் நன்னன் ஆளுமை புலமை தொண்டு ஆகியவற்றை விழாத் தலைவர் கி.வீரமணி அவர்கள் வெளியிட, ஓய்வு பெற்ற இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மேனாள் செயல் இயக்குநர் அ.நமச்சிவாயம் ரூபாய் 10 ஆயிரம் அளித்து பெற்றுக் கொண்டார்.

தமிழ் ஓவியா said...

பெரியார் பேருரையாளர் மா.நன்னன் எழுதிய அய்ந்து நூல்களை தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் வெளியிட அய்.ஓ.பி.யின் முன்னாள் அதிகாரி நமச்சிவாயம் பெற்றுக்கொண்டார்.

நூல்கள் திறனாய்வு

சென்னை இராணி மேரிக் கல்லூரியின் மேனாள் தமிழ்ப் பேராசிரியர் கலைமாமணி முனைவர் சரளா இராசகோபாலன், சென்னைப் பக்தவச்சலம் மகளிர் கல்லூரியின் முதல்வர் முனைவர் இரா.பிரேமா, சென்னை இராணி மேரிக் கல்லூரின் மேனாள் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் கு.மங்கையர்க் கரசி, சென்னை இராணி மேரிக் கல்லூரியின் தமிழ் இணைப் பேராசிரியர் முனைவர் சி.கலைமகள், சென்னை இராணி மேரிக் கல்லூரியின் தமிழ் இணையப் பேராசிரியர் முனைவர் சு.தமிழ்ச்செல்வி ஆகியோர் நூல்களை திறனாய்வு செய்தனர்.

நன்னன் அவர்களின் மகள் அவ்வை இணைப் புரை வழங்கினார். மூத்த மகள் வேண்மாள் நன்றி கூறிட இரவு 9 மணிக்க விழா நிறைவுற்றது. அனை வருக்கும் விருந்து அளித்து உபசரிக்கப்பட்டது.

அடுத்த விழா அடுத்த ஆண்டு வல்லம் பெரியார் மணியம்மைப் பல்கலைக்கழகத்தில்!

91ஆம் ஆண்டு அகவை காணும் புலவர் நன்னன் அவர்களுக்கும் அவர்தம் இணையர் பார்வதி அம்மையார் அவர்களுக்கும் கழகத்தின் சார்பில் சால்வை அணிவித்து வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார் தமிழர் தலைவர் கி.வீரமணி. இயக்க நூல்களையும் வழங்கினார்.

புலவர் நன்னன் அவர்களின் பேச்சும், எழுத்தும் தொடரவேண்டும்; நூல்களாக தொடர்ந்து வெளிவர வேண்டும், நம் மக்களுக்குப் பயன்படவேண்டும்.

அடுத்த ஆண்டு இந்த விழா இதே நாளில் வல்லம் பெரியார் மணியம்மைப் பல்கலைக்கழகத்தில் நடைபெறும். அதற்கான எல்லா ஏற்பாடுகளையும் பல்கலைக்கழகமே ஏற்றுக் கொள்ளும் என்று பலத்த கைதட்டலுக்கிடையே அறிவித்தார் தமிழர் தலைவர்.

விடுதலையை - படியுங்கள்! படியுங்கள்!

எங்கு கேடு நடந்தாலும் அதனை அடையாளங் கண்டு முதல் போர்க் குரல் கொடுப்பது பெரியார் திடல் - தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள்தான்.

இந்துத்துவா பற்றி பெரியார் திடலில் நமது ஆசிரியர் உரையாற்றினார். அதனைக் கேட்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது! இந்துத்துவா வந்தால் என்ன ஆகும்? என்பதை அவர் சொன்னபோது தான் அதன் ஆபத்தை முழுமையாக அறிய முடிந்தது.

நான் இந்த அவையில் கூடியுள்ளோரைக் கேட்டுக் கொள்கிறேன். நீங்கள் ஒவ்வொருவரும் நாள்தோறும் விடுதலையைப் படியுங்கள். எந்த ஏட்டிலும் வெளி வராத தகவல்கள், சேதிகளும், கருத்துகளும் அதில் ஒவ்வொரு நாளும் இடம் பெறுகின்றன.

சிந்திக்க வைக்கின்றது - சிந்தனையாளரராக்கு கிறது - செயல்படத்தூண்டுகிறது.

நான் ஒவ்வொரு ஆண்டும் இந்த நாளில் பல நூல்களை எழுதி வெளியிட்டு வருகிறேன் பெரியாரியல், மொழி, இலக்கியங்கள் பற்றி எல்லாம் எழுதி வெளியிட்டு வருகிறேன். அடுத்த ஆண்டு தமிழ் இலக்கணம் பற்றி ஒரு நூல் வெளியிட உள்ளேன்.

என்னுடைய நூல்களை பல்கலைக்கழகங்கள் கண்டு கொள்ளாததற்குக் காரணம் தெரியவில்லை; தமிழ்ப் பேராசிரியர்கள் அவை பற்றிக் கருத்துச் செலுத்துவதில்லை.

ஒன்று குறைகளைச் சுட்டிக் காட்டுங்கள் அல்லது சரி என்று சொல்லுங்கள். இதனைப் பல்கலைக் கழகங்களிலேயே நான் சுட்டிக் காட்டிப் பேசி இருக்கிறேன். ஆனாலும் எந்த விதப் பலனும் இல்லை ஆனாலும் என் எழுத்துப் பணி தொடரும்.

- வரவேற்புரையில் புலவர் மா.நன்னன்.

ஜாதி மறுப்பு - மற்றும் சுயமரியாதைத் திருமணம் இணையர்களுக்கு பாராட்டு - நிதி உதவி!

கீழ்க்கண்ட ஜாதி மறுப்பு மற்றும் சுயமரியாதைத் திருமணம் செய்து கொண்டவர்ககள் பாராட்டுச் சான்றிதழும், ரூ.10 ஆயிரம் நிதியும் அளித்துச் சிறப்பிக்கப்பட்டனர். நன்னன்குடி சார்பில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் சிறப்புச் செய்தார்.

ஜாதி மறுப்பு இணையர்கள்:

க.கலைமணி - செ.பாக்கியா, ஆவடி; விஜயக்குமார் - பாக்கியலட்சுமி, நாகல்கேணி, சென்னை- 44.

துர்கா - மல்லிகார்ஜுனா - சித்திராஜாகண்டிகை, கும்மிடிப்பூண்டி.

சுயமரியாதைத் திருமணம்

கலையரசன் - கனிமொழி, சென்னை-7; மு.சென்னியப்பன் - திலகவதி, சென்னை-84

தமிழ் ஓவியா said...


தமிழர் பெரும்படை!


சமஸ்கிருதத்தைப் படிப்படியாகப் புகுத்தத் தான் முதலில் இந்தியைத் திணிக்கிறேன் என்றார் அன்றைய சென்னை மாநிலப் பிரதமர் சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் (ராஜாஜி).

தந்தை பெரியார் தலை மையில் தமிழர்கள் கிளர்ந் தெழுந்தனர். முதல் அறி விப்பினை ஆகஸ்டு 10இல் (1937) கொடுத்தார் ராஜாஜி.

தமிழ் மண் கந்தகப் பூமி யாயிற்று! திருச்சி, காஞ்சி என்று மாநாடுகள் நடத்தப் பட்டு, தமிழர்கள் தங்கள் எரிமலை உணர்வை வெளிப்படுத்தினர்.

மக்கள் குரலை எல்லாம் மதிக்கும் மதியுடையோர் அல்லவே ஆச்சாரியார்! - மனு வழி வழி வந்தவரா யிற்றே! பிடிவாதம் காட் டினார் - அதன் விளைவு தான் வந்த வேகத்திலேயே வெளியேறும் நிலைக்கு ஆளானார்.

அந்த இந்தி எதிர்ப்பு வரலாற்றில் இந்நாள் (1.8.1938) எழுச்சிமிகு நாள். இந்நாளில் தான் திருச்சியிலிருந்து தமிழர் பெரும் படை புறப்பட்டது.

பட்டுக்கோட்டை அஞ்சா நெஞ்சன் அழகிரி, படைத் தளபதி! (இராணுவத்தில் பணியாற்றியவர் அல்லவா!) தஞ்சை அய். குமாரசாமி பிள்ளை, படைத் தலைவர். பெருந்சோற்றுத் தலைவி மூவலூர் இராமாமிர்தம் அம்மையார். அந்த நூறு பேரில் இவர் ஒருவரே பெண் போராளி. எண்ணிப் பாரீர்!

திருச்சியில் பய ணத்தைத் தொடங்கிய இந்தத் தமிழர் பெரும் படை வழி நெடுக இந்தியை எதிர்த்து எக்காளமிட்டு வந்தது. தந்தை பெரியார் தலைமையில் வழியனுப்பி விழா ஓகோ என்று திருச்சியில் நடைபெற்றது.

படை இன்ன தேதியில் இத்தனை மணிக்கு இந்த ஊருக்கு வரும் என்ற தகவலை விடுதலை நாள்தோறும் வெளியிட்டு அதன்படி அட்சரம் பிறழா மல் படை வீர நடைபோட்டு வந்தது.

வழி நெடுகத் தமிழர்கள் பெரும் படைக்குச் சீர்மிகு வரவேற்பு. ஆகஸ்டு முதல் தேதி திருச்சி உறையூரி லிருந்து புறப்பட்ட தமிழர் பெரும் படை செப்டம்பர் 11ஆம் தேதி சென்னையை வந்தடைந்தது.

திருவல்லிக்கேணி கடற்கரையிலே ஒன்றரை லட்சம் மக்கள் தமிழ்க் கடல் மறைமலை அடிகள் தலை மையில் கூடி மாபெரும் வரவேற்பினை அளித் தனரே!
இங்கே தலைகள்! அங்கே அலைகள்! அப்படி ஒரு காணரும் காட்சி! அந்தக் கூட்டத்தில்தான் முதன் முதலாக தமிழ்நாடு தமிழருக்கே! என்ற முழக்கத்தைத் தந்தை பெரியார் முன் வைத்தார் என்பதை அறிக!

- மயிலாடன்

குறிப்பு: ராமர் படம் எரிப்புப் போராட்டம் நடத்தப் பட்டதும் இதே ஆகஸ்டு ஒன்றில் தான் (1956).

தமிழ் ஓவியா said...


இன்னொரு சேரன்மாதேவியா!


காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் பல வகைகளிலும் பிரச்சினைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது. அக்கோயில் யானைக்கு வடகலை நாமம் போடுவதா? தென்கலை நாமம் போடுவதா? என்கிற பிரச்சினை வெள்ளைக்காரர்கள் இந்தியாவை ஆண்ட போதிலிருந்தே ஆரம்பித்தது. இலண்டன் பிரிவிகவுன்சில் வரை வழக்கு சென்றதுண்டு.

சென்னை உயர்நீதிமன்றமோ ஒரு வாரம் வடகலை நாமம் - இன்னொரு வாரம் தென்கலை நாமம் போட்டுக் கொள்ளலாம் என்ற சமரசத் தீர்ப்பினை வழங்கி வழக்கின் கோப்பை முடித்துக் கொண்டது. அக்கோயிலில்தான் மேலாளர் சங்கரராமன் பட்டப் பகலிலே படுகொலை செய்யப்பட்டார். அவ்வழக்கில் காஞ்சி சங்கராச்சாரியார்கள் குற்றஞ்சாட்டப்பட்டு சிறைச் சாலைக்குச் சென்று இப்பொழுது பிணையில் நடமாடிக் கொண்டு திரிகிறார்கள்.

அந்தக் கோயிலில் இன்று வரை பச்சையாக தீண்டாமை அனுசரிக்கப்படுகிறது என்பதுதான் மிகவும் சுட்டிக் காட்டப்பட வேண்டியதாகும்.

கோயிலுக்குள் செல்வதற்குக்கூட இரண்டு வாயில்களை வைத்துள்ளனர். ஒரு பாதையில் பிர்மாவின் நெற்றியில் பிறந்ததாகப் பம்மாத்து அடித்துக் கொள்ளும் பார்ப்பனர்கள் செல்லு கிறார்கள். இன்னொரு வாயில் வழியாகத்தான் பார்ப்பனர் அல்லாதார் கோயிலுக்குச் செல்லுமாறு ஏற்பாடுகள் செய்து வைத்துள்ளனர்.

கோயில் பிரசாதம் வழங்குவதில்கூடப் பாரபட்சம் காட்டப்படுகிறது. பார்ப்பனர்கள் மரியாதையாக அமர வைக்கப்பட்டு பவ்வியமாக பிரசாதத்தை வழங்கி வருகின்றனர், கோயில் அர்ச்சகர் பார்ப்பனர்கள்.

பார்ப்பனரல்லாதவர்களுக்கும், பெண்களுக்கும் கோயிலுக்கு வெளியே நிறுத்திப் பிரசாதம் வழங்கப்படுகிறது. (நேற்றைய விடுதலையில் படத்துடன் அதனை வெளிப்படுத்தினோம்!)

இன்றைக்கு 80 ஆண்டுகளுக்கு முன் காங்கிரஸ் சார்பில் நடத்தப்பட்ட திருநெல்வேலி மாவட்டம், சேரன் மாதேவியில்தான் இத்தகைய பாகுபாடுகள் காட்டப்பட்டன.

பார்ப்பன மாணவர்களுக்குத் தனிப் பந்தியும், பார்ப்பனர் அல்லாதாருக்குத் தனிப் பந்தியும் வைக்கப்பட்டன; பரிமாறுவதில் வழங்கப்பட்ட உணவில்கூட பாரபட்சம் காட்டப்பட்டது.
காங்கிரசின் செயலாளராகவிருந்த தந்தை பெரியாரும், தலைவராக இருந்த டாக்டர் வரதராஜூலு நாயுடுவும், திரு.வி.க.வும் கிளர்ந்தெழுந்தல்லவா அந்தப் பாரபட்சத்தை ஒழித்துக் கட்டினர்.

இப்பொழுது அண்ணா பிறந்த காஞ்சீபுரத்தில் உள்ள வரதராஜப் பெருமாள் கோயிலில் பார்ப்பனர், பார்ப்பனர் அல்லாதாரிடையே பச்சையான பாகுபாடு காட்டப்பட்டுள்ளது.

அர்ச்சகர் பயிற்சி பெற்ற பார்ப்பனர் அல்லாதாரே இந்த நிலையை வெளிப்படுத்தியுள்ளனர். கோயில் கருவறைக்குள் அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைக்காகப் போராடிக் கொண்டு இருக்கிறோம். ஒரு பக்கத்தில் - அதனை எதிர்த் துப் பார்ப்பனர்கள் நீதிமன்றம் சென்றுள்ளனர்.

இன்னொரு பக்கம் கோயிலில் பிரசாதம் என்ப தில்கூட நம் மக்கள் இழிவுபடுத்தப்படுகிறார்கள் என்றால் அதனை எப்படி அனுமதிக்க முடியும்? இது சட்டப்படியும் தவறு, நியாயப்படியும் தவறு அல்லவா; இந்து அறநிலையத்துறை இதில் தலையிட்டுப் பாகுபாட்டை ஒழிக்க வேண்டும்; இல்லையேல் இதற்காகவே தனிப் போராட்டத்தை நடத்த வேண்டிய அவசியம் ஏற்படும் என்று எச்சரிக்கின்றோம்.

இன்றளவிலும் பச்சையாக தீண்டாமையும், ஜாதியும் தலை விரித்தாடும் இடம் கோயிலாகத் தானிருக்கிறது.

கோயில் என்பது கடவுள் பக்திக்காக அல்ல - ஜாதியைப் பாதுகாக்கத்தான் என்பது விளங்க வில்லையா? தமிழர்களே, இவற்றை இன்னும் எவ்வளவு காலத்திற்கு அனுமதிக்கப் போகிறீர்கள்?

தமிழ் ஓவியா said...


சுயமரியாதைத் திருமணம்



சுயமரியாதைத் திருமணம் தந்தை பெரியார் வரலாற்றில் 1928-ஆம் ஆண்டு 28-ஆம் தேதி தொடங்கி அவருடைய கருத்துக்கள் 26.8.1953 சென்னை உயர்நீதிமன்றத்தில் இரண்டு பார்ப்பன நீதிபதிகள் சுயமரியாதைத் திருமணம் செல்லாது என்று தீர்ப்பளித்த பின்னும் தொடர்ந்து சுயமரியாதைத் திருமணத்தை நடத்தியே வந்தார் பெரியார்.
சிலர் சட்டத்தைக் கவனியாமலும் அதனால் சட்ட ரீதியான இழப்புகளைப் புறந்தள்ளியும் எல்லாவற்றிற்கும் துணிந்து பலர் சுயமரியாதைத் திருமணம் செய்து கொள்ள முன்வருவதை நாம் காண்கிறோம். ஆகவே இம்மாதிரித் திருமணங்களில் சுயமரியாதைக்காரர்களுக்கு கொள்கைப் பிசகோ, நியாயப்பிசகோ இருப்பதாக நமக்குத்தோன்றவில்லை என்று தலையங்கம் எழுதினார் (குடிஅரசு 12.10.1930) அந்த நீதியே 84 ஆண்டுகளுக்குப்பின்னும் நிலைத்து வெற்றி பெற்று வருகிறது.
நமது அறிஞர் அண்ணா தலைமையிலான திமுக ஆட்சியில் 21.8.1967-இல் சுயமரியாதைத் திருமணம் செல்லும் என்று சட்ட மன்றத்தில் முன் தேதியிட்டு நிறைவேற்றப்பட்டது. 17.6.2013-இல் நீதியரசர் கர்ணன் அவர்களின் தீர்ப்பு, பெரியார் கருத்து உலகமயமாகி வருகிறது என்பதற்கு அடையாளம் என்று 20.6.2013-ஆம் தேதி நமது விடுதலையில் தலைவர் கி.வீரமணி அவர்களின் பாராட்டு அறிக்கை மகிழ்ச்சியளிக்கிறது.

மேலும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.சதாசிவம் ஜெகதீஷ்சிங் ஆகியோர் உறுதிப்படுத்திய தீர்ப்பும் வரலாற்றுச் சிறப்புடையதாகும். இந்த வரலாறு வரிசைப்படுத்தி எங்கள் எல்லோருக்கும் நூல் வடிவில் வெளியிட வேண்டுகிறேன்.

- அ.இனியன் பத்மநாதன், ஈரோடு

தமிழ் ஓவியா said...


குறைந்துபோகும்!



மக்களின் அறிவைக் கிளறி விட்டு, மக்களுக்கு அறிவுச் சுதந் திரத்தை உண்டாக்கித் தாராளமாக எந்தச் சங்கதியையும் ஆராயும் படிச் செய்துவிட்டால், மூட நம்பிக்கைகள் நாளாவட்டத்தில் குறைந்தே போகும்.

- (விடுதலை, 16.10.1960)

தமிழ் ஓவியா said...

ஆகஸ்டு முதல் தேதி ஆர்ப்பாட்டம் வெற்றிகரமாக நடந்திட ஆதரவு அளித்த அத்தனை கட்சிகளுக்கும், தலைவர்களுக்கும் நன்றி! நன்றி!!


மூன்று முதல்வர்கள், மூன்று நீதிபதிகள் பரிந்துரை செய்துள்ளனர்

இது அரசியல் பிரச்சினையல்ல; மெத்தனம் காட்ட வேண்டாம்

தமிழக முதல் அமைச்சர் செயலாற்றிட முனைந்திட வேண்டும்!

தமிழர் தலைவர் விடுத்துள்ள அறிக்கை

அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை சட்டத்தை நிறைவேற்றச் செய்தால் ஜாதி - தீண்டாமை ஒழிப்புக்கு உறு துணையாக இருக்கும்; இது அரசியல் பிரச்சினை அல்ல. தமிழக அரசு முனைப்புக் காட்ட வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

ஜாதி - தீண்டாமை ஒழிப்பை அடிப்படையாகக் கொண்டு அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்கள் அறிவித்த இறுதிப் போராட்டமான அர்ச்சகர் போராட்டம் - இன்னும் தொடர்ந்து கொண்டுள்ளது!

கடந்த 44 ஆண்டுகளாக, பல்வேறு கட்டங் களில் தடை ஓட்டப் பந்தயம் போல நடந்து கொண்டுள்ளது.

1970ஆம் ஆண்டு முதல்

1970இல் தி.மு.க. ஆட்சியில் முதலமைச்சராக இருந்த மானமிகு கலைஞர் அவர்கள் சட்டம் இயற்றினார்கள்; இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்திற்கு பார்ப்பன மட அதிபதிகள், அர்ச்சகர்கள் வழக்குத் தொடர்ந்து, சட்டம் செல்லாது மத விஷயங்களில் அரசு குறுக்கிடுகிறது என்று வாதாடினார்கள்.

ஆனால், அந்த உச்சநீதிமன்றத்தின் அய்ந்து அமர்வு நீதிபதிகள் ஏற்காமல், சட்டம் செல்லுபடியாகும் என்று தீர்ப்பளித்து விட்டு, அந்த அர்ச்சகரின் தகுதி ஆகமம் படித்தவர்களுக்கு மட்டுமே உண்டு என்று கூறி ஒரு புள்ளி வைத்து விட்டனர்.
கிடப்பில் கிடக்கிறதே!

அதற்காக திராவிடர் கழகம் அய்யா, அன்னை மணியம்மையார், காலத்திற்குப் பின்னரும் தொடர்ந்து போராடியதால், எம்.ஜி.ஆர். முதல் அமைச்சராக இருந்த போதும், அதன் பிறகு செல்வி ஜெயலலிதா முதல்வராக இருந்த போதும், இதைக் கொள்கை அளவில் ஏற்று, 69 சதவிகிதப்படி அர்ச்சகர் பயிற்சிப் பள்ளியில் சேர்த்து அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகராக்க ஒப்புதல் தந்தனர். (9.4.1992 சட்டமன்றத்தில்)

ஆனால் நடைமுறைப்படுத்தவில்லை. கிடப்பில் இருந்தது; அய்ந்தாம் முறை (தி.மு.க.) முதல்வராக வந்த கலைஞர் அவர்கள் உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே. இராஜன் தலைமையில் குழு போட்டு, அவர்களே பல பரிந்துரைகளைத் தந்தார். சைவ, வைணவக் கோயில்களுக்குரிய ஆகமங்கள், சடங்குகள் பற்றி பயிற்சி அளிக்கப்பட்டு 69 சதவீத அடிப்படையில் 206 பேர்கள் படித்து பட்டயம் பெற்று விட்டு, அர்ச்சகராக நியமனம் பெறும் நுழைவாயிலில் செல்லும் நிலையில், தடையாணையைப் போட்டு விட்டனர். உச்சநீதிமன்றத்தில் படையெடுத்துள்ளனர்; இவ்வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் கடந்த 4 ஆண்டுகளாக உள்ளது.

இந்து அறநிலையப் பாதுகாப்புத் துறைதான் இதனை வற்புறுத்திட வேண்டிய துறை; ஏதோ வாய்தா வாங்கி நீதிமன்றத்திற்கு வெளியில் தீர்ப்பதாகக் கூறியுள்ளது.

இது அரசு சார்பில் மக்களுக்கு விளக்கப்பட வேண்டியதாகும்.

இரண்டு தீர்ப்புகள் உள்ளனவே!

ஏற்கெனவே உச்சநீதிமன்றத்தில் இப்பிரச்சினையை ஏற்று 2 முக்கிய சாதகமான தீர்ப்புகள் உள்ளன; எனவே வெற்றி அரசுக்கு உறுதியாகும். ஏனோ இப்படி ஒரு நிலை என்பதுதான் புரியவில்லை!

இப்பிரச்சினை 44 ஆண்டு கால தொடர் போராட்ட விளைவுகளை ஏற்படுத்தும் பிரச்சினை.
இரண்டு உச்சநீதிமன்ற தீர்ப்புகள், மூன்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் குழு பரிந்துரைகள், மூன்று முதல் அமைச்சர்களின் முயற்சிகளும், உறுதியும் உள்ளடக்கமாகக் கொண்டது - அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகும் ஜாதி - தீண்டாமை ஒழிப்புப் பிரச்சினை.

அன்றைய பிரதமர் திருமதி இந்திராகாந்தி அரசில் 1969 இளைய பெருமாள் கமிட்டி என்ற தீண்டாமை ஒழிப்பு (மத்திய அரசு போட்ட) கமிட்டியின் பரிந்துரையை செய லாக்கிய சட்டம் அனைத்து ஜாதியினரும் - ஆதி திரா விடர் உட்பட - நிறைவேற்றப்பட்ட சட்டம்!

ஜாதி - தீண்டாமை ஒழிப்புக்குப் பயன்படும்

தந்தை பெரியார் தம் இறுதி விருப்பத்தைச் செயலாக் கிட கோயில் கருவறைத் தீண்டாமை ஒழிக்கப்பட சட்ட பூர்வமாக - அமைதி அறவழியில் - தீர்க்கும் அருமையான சட்டத்தை உடனடியாகச் செயல்படுத்த தமிழக (அதிமுக) அரசு தயக்கம் காட்டாமல் உடனடியாக செயல்படுத் தினால், ஜாதி மோதல்கள், தீண்டாமையை அடிப்படை யாகக் கொண்ட கலவரங்கள் ஏற்படாமல் தடுக்க அதுவே உதவிடும் என்பதனை வற்புறுத்தவே ஆகஸ்ட் 1-இல் நாடு தழுவிய போராட்டம். மிக வெற்றிகரமாக எந்த ஒரு அசம்பாவிதமோ பொது மக்களுக்கு இடையூறோ இன்றி, அரசுக்கு சட்டம் ஒழுங்குப் பிரச்சினை ஏற்படுத்தாமல் பல்லாயிரக்கணக்கானவர்கள் திருத்தணி தொடங்கி, குமரி வரை சிறப்பாக நடத்தியுள்ளனர்!

திமுக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி

தமிழ் ஓவியா said...


தி.மு.க. தலைவர், முத்தமிழ் அறிஞர் கலைஞரின் ஆணையை ஏற்று தி.மு.க.வும்

இரட்டைக் குழலாக கிளர்ச்சியில் பல்லாயிரவர் பங்கேற்றுள்ளனர்.

அதுபோலவே எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன் அவர்கள் ஆணையை ஏற்று, விடுதலை சிறுத்தைகளும் சிறப்பாக ஆங்காங்கே பங்கேற்றுச் சிறப்பித்தனர்.

திராவிட இயக்கத் தமிழர் பேரவையினர் மானமிகு பேராசிரியர் சுப. வீரபாண்டியன் தலைமையில் அறிவித்தபடி பங்கேற்றுள்ளனர்!

ஒத்த கருத்துள்ள ஆத்திகர்கள், பக்தர்கள்கூட பல ஊர்களில் பங்கேற்றுள்ளனர்!

நன்றி! நன்றி!

முதற் கட்டம் முடிந்துள்ளது. தமிழக அரசு அலட்சிய மாகக் கருதாமல் உடனடியாக இதற்கு விடை காண வேண்டும்.

தந்தை பெரியார் நெஞ்சில் தைத்த முள்ளை அகற்றிட முனைப்புடன் உதவிடும் அனைவருக்கும் இயக்கத்த வருக்கும் பக்தர்களுக்கும் எமது உளங் கனிந்த நன்றியை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

இதுபோலவே நாட்டையே சமத்துவபுரமாக்கும் இந்த நல்ல முயற்சிக்கு தொடர் ஆதரவைத் தர வேண்டும் என்று அனைவரையும் தலை தாழ்த்திக் கேட்டுக் கொள்கிறோம்.
இது ஒரு கட்சிப் பிரச்சினை அல்ல,

இது மானப் பிரச்சினை - மனித உரிமைப் பிரச்சினை!

ஜாதி, தீண்டாமை ஒழிப்பு என்ற லட்சியப் பிரச்சினை,

புதியதோர் உலகு செய்ய, புது வெளிச்சம் இதன் மூலமே காண வேண்டிய பிரச்சினை.

தமிழக அரசு மெத்தனம் காட்ட வேண்டாம்!

எனவே அரசியல் பார்வையின்றி, சமூகப் புரட்சியைச் சரித்திரமாக்கிடும் மவுனப் புரட்சியாகும் இது!

எனவே, இனியும் தமிழக அரசு மெத்தனம் காட்டாமல் செயலாற்ற விரைந்திட வேண்டுகிறோம்.

கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

சென்னை
2.8.2013

தமிழ் ஓவியா said...


தமிழ்நாடு அரசின் கடமை


அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை எனும் மனித உரிமைப் போராட்டத்தை தந்தை பெரியார் தொடங்கினார்.

அந்தப் போராட்டம் இன்று வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது. நேற்று தமிழ்நாடு தழுவிய அளவில் 60 கழக மாவட்டங்களில் அறவழி ஆர்ப்பாட்டம் திராவிடர் கழகத்தால் நடத்தப்பட்டது.

தி.மு.க. தலைவர் முத்தமிழ் அறிஞர் மானமிகு கலைஞர் அவர்களும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் - எழுச்சித் தமிழர் மானமிகு தொல். திருமாவளவன் அவர்களும் திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் பேராசிரியர் மானமிகு சுப. வீரபாண்டியன் அவர்களும் ஆதரவு தெரிவித்து, அந்த அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் திராவிடர் கழகம் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் சிறப்பாகக் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு முழுவதும் பல லட்சக்கணக்கான வர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று தமிழர்களின் உணர்வை வெளிப்படுத்தினர்.

தமிழ்நாட்டில், தமிழர்கள் கட்டிய கோயிலில் தமிழன் அர்ச்சகனாக உரிமை வேண்டும் என்று போராட வேண்டிய நிலை ஏற்பட்டு இருப்பது வெட்கக் கேடானதே - மிகப் பெரிய இனத்தில் தன்மான உணர்வுக்கு மிகப் பெரிய சவால் இது.

இதனை எதிர்க்கக் கூடியவர்கள் பார்ப்பனர்களே தவிர வேறு யாருமிலர். ஆரியர் - திராவிடர் போராட்டம் இன்றும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது என்பதற்கு இது ஒன்றே போதுமானது.

மூன்று அரசுகள் ஆதரவாக இருந்தும், தி.மு.க. ஆட்சியில் இரண்டு முறை சட்டம் இயற்றியும், மூன்று நீதிபதிகள் எஸ். மகாராசன், கிருஷ்ணசாமி ரெட்டியார், ஏ.கே. ராஜன் ஆகியோர் பரிந்துரைகள் கொடுத்தும், இன்றைய தினம் உச்சநீதிமன்றத்தில் முட்டுக்கட்டை போடப்பட்டுள்ளது.

இதே உச்சநீதிமன்ற இரு நீதிபதிகள் கேரளா வழக்கு ஒன்றில் பார்ப்பனர் அல்லாதார் ஆகமங் களைக் கற்றுத் தேர்ந்திருந்தால் அவர்கள் அர்ச்சகர்களாக ஆகத் தடையில்லை என்று தீர்ப்பு வழங்கியுள்ளனர்.

குறிப்பிட்ட கடவுளுக்கு செய்ய வேண்டிய சடங்குகள், ஓத வேண்டிய மந்திரங்கள் தெரிந்த ஒருவர் பூசாரியாக (கேரளாவில் இவர்களுக்குப் பெயர் சந்திகாரன்) இருக்க வேண்டும் என்பதுதான் எதிர்பார்க்கப்படுகிறது. மரபுப்படி எந்த ஒரு கோயிலும் காலம் காலமாக பார்ப்பனர் மட்டுமே பூசை செய்து கொண்டிருக்கலாம், அல்லது சந்திக் காரனாக செயல்பட்டிருக்கலாம். அதற்காகப் பார்ப்பனர் அல்லாதார் பூசை செய்யக் கூடாது என்பது பொருள் அல்ல; சொல்ல வேண்டிய மந்திரங்களைக் கற்றுக் கொள்ள அவர்களுக்குத் தடை விதிக்கப்பட்டிருப்பதுதான் காரணம் பார்ப்பனர் அல்லாதவர்கள் வேதங்களைப் படிக்கவும், சடங்குகள் செய்யவும், பூணூல் அணியவும் தடை செய்யப் பட்டிருந்தனர். இந்தச் சூழ்நிலையில் பார்ப்பனர் அல்லாதார் சந்திகாரனாக (அர்ச்சகராக) நியமிக்கப் படாமல் இருக்கலாம். இதை வைத்துக் கொண்டு பார்ப்பனர் மட்டும்தான் கோயில்களில் சடங்குகள் செய்யலாம் எனக் கூறுவது நியாயம் அன்று. அரசமைப்புச் சட்டம் 17ஆவது சரத்தில் வெளிப் படுத்தப்பட்டிருக்கிறது (தீண்டாமை ஒழிக்கப்படு கிறது; அது எந்த வடிவத்தில் பின்பற்றப்பட்டாலும் குற்றமானது என்று அந்தப் பிரிவு கூறுகிறது)

என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் ராஜேந்திரபாபு, துரைசாமி ராஜு ஆகியோர் அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு 2002 அக்டோபர் முதல் வாரத்தில் தீர்ப்புக் கூறியது.

இப்பொழுது கேரள மாநிலத்தில் அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை வழங்கப்பட்டு, அர்ச்சகர்களாகவும் பணியாற்றி வருகின்றனர்.

அதன் அடிப்படையிலேயே தமிழ்நாட்டிலும் செயல்படுத்தலாமே! உச்சநீதிமன்றத்தில் நிலுவை யில் உள்ள அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்னும் தமிழ்நாடு அரசின் சட்டம் தொடர்பான வழக்கைத் துரிதப்படுத்தி, வழக்காடி, தந்தை பெரியார் இறுதியாக, மரண சாசனமாக அறிவித்த இந்த மனித உரிமைப் போரில் வெற்றி தேடித் தர வேண்டியது தமிழ்நாடு அரசின் கடமையாகும்.

இந்த உணர்வைத்தான் தமிழ்நாடு தழுவிய அளவில் திராவிடர் கழகத்தின் சார்பில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம் உணர்த்துகிறது. ஜனநாயக முறையில் வெளிப்படுத்தப்பட்டுள்ள இந்த உணர்வைத் தமிழ்நாடு அரசு புரிந்து கொண்டு செயல்பட வேண்டும் என்று வற்புறுத்துகிறோம். இது ஒரு கட்சிப் பிரச்சினையல்ல - ஒட்டு மொத்தமான மனித உரிமைப் போராட்டம் என்பதையும் அரசுக்கு தெரிவித்துக் கொள்கிறோம்.

தமிழ் ஓவியா said...


உண்டாக்க வேண்டும்


மொழியோ, நூலோ, இலக்கியமோ எதுவானாலும் மனிதனுக்கு மானம், பகுத்தறிவு, வளர்ச்சி, பண்பு ஆகிய தன்மைகளை உண்டாக்க வேண்டும்.

- (விடுதலை, 1.10.1967)

தமிழ் ஓவியா said...


மாணவர்கள் உண்டு ஆசிரியர்கள் இல்லை... டும்! டும்!! டும்!!!


கேள்வி :- 2012-2013ஆம் ஆண்டுக்கான மத்திய அரசின் அனைவருக்கும் இடை நிலைக்கல்வித் திட்டம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் பல பள்ளிகளில் தமிழகத்தில் ஆசிரியர்களே இல்லை என்ற குறைபாடு பெரிதாகச் சுட்டிக்காட்டப்பட்டி ருப்பதாகக் கூறுகிறார்களே?

கலைஞர் :- ஆமாம்; அந்த அறிக்கையில் விழுப்புரம், சென்னை, வேலூர், நீலகிரி, கோயம் புத்தூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள 16 பள்ளிக் கூடங்களில் ஆசிரியர்களே இல்லை என்று கூறப்பட் டுள்ளது. தமிழகத்திலே உள்ள 2,253 பள்ளிகளில்; ஒவ்வொரு பள்ளியிலும் ஒரே ஒரு ஆசிரியர் மட்டும் தான் பணியிலே இருக்கிறாராம்.

விழுப்புரம் மாவட் டத்தில் 113, சிவகங்கை 134, வேலூர் 127, திருவண்ணா மலை 159, தர்மபுரி 131, கிருஷ்ணகிரி 195 என்ற அள விற்கு பள்ளிகள், ஓராசிரியர் பள்ளிகளாகச் செயல் படுகின்றன. ஓராசிரியர் பள்ளிகளில் மட்டும் 83,641 மாணவர்கள் படிக்கிறார்களாம். ஆரம்பப் பள்ளி கள் ஓராசிரியர் பள்ளிகளாக இயங்குவதில் தவறில்லை. ஆனால் ப்ளஸ் 2 வரையிலே உள்ள இடை நிலைக் கல்விச் சாலை ஒன்றில் 765 மாணவர்கள் ஒரே ஒரு ஆசிரியரால் பயிற்றுவிக்கப்படுகிறார்கள் என்று அந்த அறிக்கையிலே தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தமிழகத்தில் உள்ள 16,421 பள்ளிகளில் இரண்டே இரண்டு ஆசிரியர்கள்தான் இருக்கிறார் களாம். மாநில, மத்திய, தனியார் பள்ளிக் கூடங்கள் அனைத்தையும் சேர்த்துப் பார்த்தால், மூன்றில் ஒரு பகுதிப் பள்ளிக் கூடங்களில் மூன்றுக்கும் குறைவான ஆசிரியர்கள்தான் பணியாற்றுகிறார்கள் என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.

கற்பிக்கும் ஆசிரியர்கள் தேவையான எண்ணிக்கையில் இல்லாத கல்வி, கடையாணி இல்லாத வண்டியைப் போல் திசை மாறிச் சென்று விடும் என்பதை எண்ணிப் பார்த்திட வேண்டும்.

-கலைஞர் (முரசொலி, 2.8.2013)

தமிழ் ஓவியா said...


இங்கர்சால் மணிமொழிகள்


தேவலோகம் என்று ஒன்று இருக்கு மானால் - அதில் எல்லையற்ற இறைவன் இருப்பது உண்மை யானால் அவர் கோழைகளின் வணக்கத்தை ஏற்றுக் கொள்ளமாட்டார். நயவஞ்சகர் களின் செயல்களைக் கண்டு மகிழ மாட்டார். இந்த வஞ்சகர்களைக் கண்டு ஒருக்காலும் திருப்தியடையமாட்டார்.

@@@@@@@@@@@@@@@

மனித இதயத்திலிருந்து உரிமையை - நியாய புத்தியை பிரித்து விடும் மதங்கள் அவற்றின் கொள்கைகள், கோட்பாடுகள், நூல்களைப் பாதுகாக்க நிற்கும் சட்டங்கள் இவைகளை தூக்கி, தூரப் போடுங் கள். சிந்திக்காதே அது பெரிய ஆபத்தான காரியம் என்ற அபிப்பிராயம் எந்த மூலையில் எந்த வடிவில் உங்கள் முன் வந்தாலும் அடித்து நசுக்குங்கள்

@@@@@@@@@@@@@@@

அறியாமை - இரகசியத்தின் தாய்; துன்பத்தின் பிறப்பிடம் குருட்டு நம்பிக்கையின் அன்னை; சங்கடம் தோன்றிய இடம்; அழிவும், மறுமையும் வாழும் தாயகம்.

@@@@@@@@@@@@@@@

முடிவில்லாத முதல்வன் இருப்பது உண்மை யானால் மக்கள் அனைவரும் ஒரே மாதிரியான எண்ணம் உடையவராய் இருக்க வேண்டும் என்று அவர் கருதுவாரானால் ஏன் அவன் ஒருவனுக்கு குறைந்த அறிவும், மற்றொருவனுக்கு அதிக அறிவும் கொடுத்தான். அனைவரும் ஒரே மாதிரியாக எண்ண வேண்டும்; ஒரே மாதிரியாக உணரவேண்டும் என்பது அவன் நோக்கமானால் அறிவு வித்தியாசங்கள் ஏன்?

@@@@@@@@@@@@@@@

எனக்கு இந்த உரிமைகள் வேண்டும் என்று கூறுகின்றவர் அதே உரிமையை மற்றவர் விரும்பும் போது அளிக்க மறுத்தால் அவன் எந்த பாகத்திலிருந்தாலும் அவன் எவ்வளவு உயர்ந்தவன் என்று கூறினாலும் அவன் காட்டுமிராண்டியின் நிலைக்குச் சமீபத்தில் வசித்தவன் என்று நான் கூறுவேன்.

@@@@@@@@@@@@@@@

மனித குலம் கூவிய கூக்குரலும் கோரிக்கைகளும் பக்தியும் பைத்தியகாரத் தன்மையும் கடவுள்களுக்குத் திருப்தியை உண்டு பண்ணியதா?இல்லை. இல்லவே இல்லை. மனித இனத்திற்கு வரவிருந்த எந்த விபத்தாவது தவிர்க்கப்பட்டுவிட்டதா? புதிய வரப்பிரசாதம் ஏதும் கிடைத்ததா? இல்லை அப்படியிருக்க இந்த ஆண்ட வனுக்கு - இந்தக் கண்மூடிக் கபோதி ஆண்டவனுக்கு நாம் நன்றி செலுத்தலாமா? கைகூப்பி வணங்கலாமா? தேவை இல்லை.

தொகுப்பு: மு.இராசசேகரன், கணியூர்.

தமிழ் ஓவியா said...


பார்ப்பனர் மதம் - தர்மம்


பார்ப்பனர்கள் எந்த காரியத்திலானாலும் எந்தத்துறையிலானாலும் தங்கள் சொந்த ஜாதி (உயர்வு) நலனை அடிப்படையாகக் கொண்டுதான் பார்ப்பார்களே தவிர, மக்களின் பொது நலனைப் பற்றிய கவலையே அவர்களுக்கு ஏற்படுவதில்லை. பார்ப்பனர்களுக்கு மதம் தர்மம் என்பதே அவர்களது ஜாதி பாதுகாப்பாகத்தான் ஆகிவிட்டது.

- தந்தை பெரியார், 22-5-1967 விடுதலை தலையங்கத்தில் ஒரு பகுதி

தமிழ் ஓவியா said...

ஆரியக் கூலி கம்பனால் விளைந்த கேடு!

கம்பர், நடவாத பொய்க் கதையாகிய இராமாயணத்தைத் தமிழில் மொழி பெயர்த்துச் செய்தமையால் வடமொழிப் பொய் வழக்கில் பழகிவிட்ட அவரது நா, அதன்கண் இலக்கியச்சுவை தோன்ற கூற வேண்டிய இடங்களிலும் பொய்யானவனவே புனைந்து கூறி இழுக்கினார்.

இங்ஙனமே, கம்பர்க்கு பின் வந்த தமிழ்ப்புலவர்களெல்லோரும், பொதுமக்களை ஏமாற்றுதற் பொருட்டுப் பார்ப்பனருங் கோயிற் குருக்கண் மாரும் வடமொழியில் வரைந்து வைத்த பொய்யான புராணங்களையும் தல புராணங்களையுமே பெரும்பாலும் தமிழில் மொழி பெயர்த்து வைத்துப் பண்டைத் தண்டமிழ் மெய் வழக்கினை அடியோடழித்து விட்டனர்.

இப்பிற்காலமொழி பெயர்ப்பு நூல்களிலும் ஒரோவிடங் களிலும் இலக்கியச் சுவை காணப்படுமேனும், முதலிலிருந்து முடிவரையில் அவற்றினைப் பொய்யாகவே தொடுக்கப்பட்டிருந்தலால், அவற்றின் பயிற்சி மக்கட்கு மெய்யுணர்வினையும் மெய்யறிவு விளக்கத்தினையுந்தராது.

- மறைமலையடிகள் (முற்கால பிற்காலத் தமிழ்ப் புலவர் பக்கம் -145

தமிழ் ஓவியா said...


பாத பூஜைக்கு வேண்டிய சாமான்கள்


மஞ்சள் பொடி -10 கிராம், குங்குமம் - 100 கிராம், பசும்பால் -அரை லிட்டர், பசும்தயிர் - அரை லிட்டர், தேன் - 250 கிராம், அ.ஜீனி (சர்க்கரை) - 250 கிராம், திராட்சை - 250 கிராம், பேரீட்சை - 250 கிராம், வாழைப்பழம் - 25, தேங்காய் - 4, வெற்றிலை -25, பாக்கு -10 கிராம், உதிரி புஷ்பம் - 2 அல்லது 4 கிலோ கிராம், அரை முழம் புஷ்ப மாலை -2, பழவகைகள்: (ஆப்பிள், ஆரஞ்சு, சாத்துக்குடி), நிவேதனம்: சர்க்கரைப் பொங்கல் (அல்லது) ரவா கேசரி, வடை.

குறிப்பு: (வஸ்திரம் சமர்ப்பணம் செய்வதாக இருந்தால்), சிறீசிறீ மஹாசந்நிதானம் அவர்களுக்கு மல் 10மீ சிறீசிறீ சந்நிதானம் அவர்களுக்கு ஜரிகை வேஷ்டி 8 முழம் 1 ஜோடி.

3.4.1980 அன்று உடுமலைக்கு வருகை தந்த சிருங்கேரி சங்கராச்சாரியாருக்கு பாதபூசை செய்ய விரும்புபவர்கள் மேற்கண்ட பொருள்களுடன் வரவேண்டுமென்று உடுமலையில் துண்டு வெளியீடு அச்சிடப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. (மாடர்ன் பிரிண்டர்ஸ், உடுமலை),

பாத பூசை செய்ய இவ்வளவு பொருள்களாம் உருப்படுமா நாடு?

தமிழ் ஓவியா said...


விஞ்ஞானியும் பார்ப்பானும்


ஒரு விஞ்ஞானி தன் ஆராய்ச்சி சாலையில் கண் டறிந்த உண்மையானது, மறு நாளே விளையாட்டுச் சாமான் செய்யும் தொழிலாளியையும் கூட 8 அணா சம்பாதிக்க வைக் கும்படி மேல் நாட்டில் வசதி ஏற்பட்டிருக்கிறது.

நமது நாட்டிலோ கோயில் பார்ப்பனன் ஏற்பாடு செய்த புஷ்பப் பல்லக்குக்கு மறுநாளே ஆயிரக்கணக் கான மைல் தூரமுள்ள ஏழைகளின் பணத்தையும் இழக்க வசதி உண்டு.

- புரட்சிக்கவிஞர்

தமிழ் ஓவியா said...

புரோகிதன் போடும் விலங்கு

அரசன் கைகளுக்கு விலங்கு போடுகிறான். புரோகிதன் அறிவுக்கு விலங்கு போடுகிறான்.

-இங்கர்சால்

தமிழ் ஓவியா said...

சாயிபாபா பற்றி ரஜனீஷ்?

பெண் இன்பத்தின் மூலமே இறைவனை அடைய முடியும் என்பதைத் தத்துவார்த்தமாக ஆக்கிக் கொண்டிருக்கும் பக வான் என்று பக்தர்களால் போற்றப்படும் புனே சாமியார் பகவான் ரஜனீஷ் சாயிபா பாவைப் பற்றி கூறியிருப்ப தாவது: சாயிபாபா ஆணிடம் ஆண் உடலுறவு கொள்ளும் (ஹோமோசெக்ஸ்) வகையைச் சேர்ந்தவர் மட்டுமல்ல; தன்னிடமே ஆண் - பெண் உறுப்புகளைக் கொண்டுள்ளவர் Herma Phrodite) ஆவார் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆண் -பெண் உறுப்பு ஒருவர் கொண்டுள்ளதற்கு மண்புழுவை உதாரணமாக சொல்லி இருக்கிறார். ரஜனீஷ் (மண்புழு தன் உடலிலேயே ஆண் -பெண் ஆகிய உறுப்புகளைக் கொண்டு உடலுறவு செய்து இன விருத்தி செய்யும் பல உயிரினங்களில் ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது)

ஆதாரம்: சண்டே 11.2.1979.

தமிழ் ஓவியா said...

பர்தாவா? டிரவுசரா?

ஜூலை 14 அன்று புனேவில் உள்ள ஃபெர்குசன் கல்லூரியின் நிரம்பி வழிந்த அரங்கத்தில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி உரையாற்றினார். 30 நிமிட உரையில் காங்கிரஸ் போலி மதச்சார்பின்மையை கடைபிடிப்பதாகக் கூறித் தாக்கினார். காங்கிரஸ் அரசு எப்போதெல்லாம் தோல்வியுறுகிறதோ, எப்போதெல்லாம் அதன் தவறுகள் வெளிச்சத்துக்கு வருகின்றனவோ அப்போதெல்லாம் மதச்சார்பின்மை என்ற முகத்திரைக்குள் ஒளிந்து கொள்கிறது காங்கிரஸ். இதை கேள்வி கேட்காமலேயே இருக்க முடியாது என்றார் மோடி. 1,400 கி.மீ.க்கு அப்பால் ரோடக் தொகுதி காங்கிரஸ் எம்.பி.யான தீபேந்தர் சிங் ஹூடாவின் தில்லி இல்லத்தில் இருந்த 4 ஆய்வாளர்கள் உடனடியாக பதிலடியில் இறங்கினார்கள். ஹூடாதான் கட்சியின் சமூக வலைத்தள உத்திகளைக் கையாள்பவர். இவற்றில் இயங்கும் திக்விஜய் சிங், சசிதரூர், மணிஷ்திவாரி, அஜ்ய்மேக்கன் போன்றோருக்கு தொலைபேசியில் அழைப்பு விடுத்து மோடிக்கு உரிய பதில் தர கேட்டுக் கொள்ளப்பட்டது. சமூக வலைத் தள ஆய்வுக் குழுவிடமிருந்து எல்லா தலைவர்களுக்கும் நாம் காக்கி டிரவுசர் என்ற பதத்தை வைத்து மோடியை தாக்க வேண்டும் என்று குறுஞ்செய்தி பறந்தது. மாலைக்குள் தரூர் எதிர்வினை எழுதி அனைவருக்கும் அனுப்பினார். மதச்சார்பின்மை என்கிற பர்தாவுக்குள் நாங்கள் ஒளிந்து கொள்வதாக மோடி சொல்கிறார். சகிப்பின்மை மற்றும் வெறுப்பு என்கிற அவரது காக்கி டிரவுசரைவிட இது தேவலாம் என்றது ட்வீட்.

அன்று தாக்குதல் மேலும் கூர்மைப்பட்டது. 10.30 மணிக்கு திக் விஜய் சிங், மோடியின் பர்தா பேச்சுக்கு எதிர்வினையாக பண்டல்கண்ட் கவிஞர் அகில் அர்ஜரியாவின் இந்தி கவிதையொன்றை ட்வீட் செய்தார். 12 மணிக்கு காங்கிரஸ் கட்சியின் தகவல் தொடர்பு மய்யத்தின் தலைவரான அஜய்மேக்கன் செய்தியாளர் சந்திப்பு நடத்தினார். உண்மையின் தாக்குதல் என்று பெயருள்ள இந்த முயற்சி சூடு பிடித்து. ஜூலை 22 அன்று ராகுல் காந்தி சற்றே மாறுபட்ட அறிகுறி காட்டினார். நாடு முழுவதுமிருந்து வந்திருந்த 240 தொண்டர்கள் கலந்து கொண்ட 2 நாள் தில்லி பயிலரங்கில் பேசிய ராகுல் ஒரே குரலில் பேசுங்கள். ஒற்றுமையாய் இருங்கள். பாசிடிவான அரசியலில் கவனம் செலுத்துங்கள் என்றார் மோடி குறித்த கவலையோ, அவரை ஒரு சவாலாகவோ காங்கிரஸ் பார்க்கவில்லை.

- இந்தியா டுடே 7.8.2013

தமிழ் ஓவியா said...


மோடி ஆட்சியில் பொருளாதார வளர்ச்சியா? தேசிய சாம்பிள் சர்வே அம்பலப்படுத்தியது


மாநில முதல்வர்களிடம் ஒரு புதுப்போக்கு காணப்படுகிறது. சிலருக்கு தேசிய ஆசை இருக்கிறது அவர்கள் தங் களது முன்னேற்ற மாதிரிகளை வீறு கொண்டு முரசறைந்து வருகின்றனர். ஒரே கட்சியைச் சேர்ந்த மாநில முதல் வர்கள் சில நேரங்களில் தனிமனிதச் செயல் வீரர்களாகி விடுகின்றனர். ஆனால் அந்த மாநிலங்களின் மக்கள் எவ்வாறு செயல்படுகின்றனர்? ஒரு குறிப்பிட்ட மாதிரி மற்றதை விடச் சிறந்ததா என்ற கேள்விகள் எழுகின்றன.

அதைக்கண்டு பிடிப்பத்தில் ஒரு முறை: சராசரியாக ஒரு மனிதன் ஒரு மாதத்தில் எவ்வளவு செலவு செய் கிறான் என்பது. இது மக்கள் எவ்வளவு சம்பாதிக்கிறார்கள் என்பதற்கான ஒரு எடுத்துக்காட்டாகும். நுகர்வோர் பற்றி அண்மையில் வெளியிடப்பட்டுள்ள தகவல்கள், பத்தாண்டுகளுக்கு முன்பு வெளியிடப்பட்டவற்றுடன் ஒப்பீடு செய்யப்பட்டால் எந்த மாநில அரசு பயன் அளித்திருக்கிறது அல்லது கீழே தள்ளியிருக்கிறது என்பது தெளிவாகும்.

சில ஆச்சரிய விவரங்களைப் பார்ப் போம்.

கிராமப்புறச் செலவினங்களில் தரவரிசைப் பட்டியலில் குஜராத் நான்காம் இடத்திலிருந்து 8-ஆம் இடத்திற்கு இறங்கி இருக்கிறது. நகர்ப்புறச் செலவினத்திலிருந்து 7ஆம் இடத்திலிருந்து 9ஆம் இடத்திற்கு இறங்கியிருக்கிறது. இது தேசிய சாம்பிள் சர்வே நிறுவனம் கொடுத்துள்ள புள்ளி விவரம் அதன் அடிப்படையில் 2011-_12 மற்றும் 1999-_2000 ஆண்டுகளின் ஓப்பீட்டு ஆய்வில் இந்த உண்மை வெளியாகியிருக்கிறது.

பொருளாதார வளர்ச்சியைப் பற்றி குஜராத் ஏகமாக விளம்பரப்படுத்திக் கொண்டிருக்கலாம். ஆனால் பொரு ளாதாரத்தரத்தில் இறங்கிக் கொண்டே இருக்கும் மாநிலங்களில் அதுவும் ஒன்றாக இருக்கிறது. 2011-_2012, 1999-_2000 ஆகிய ஆண்டுகளின், ஒரு தனி மனிதனின் மாதாந்திரச் செலவுக் கணக்கை ஒப்பீடு செய்து ஆராய்ந்தால், குஜராத் மக்களின் நுகர் பொருள் செலவு மிகக்குறைவான அளவீட்டி லேயே வளர்வது தெரியவரும்.

நன்கு செயல்படும் மாநிலமாக ஆந்திரா விளங்குகிறது. 2000-இல் 11-ஆம் இடத்திலிருந்து 2012-இல் அய்ந்தாம் இடத்திற்கு கிராமப்புற செலவு வளர்ச்சியில் முன்னேறியிருக்கிறது. நகர்ப்புற வாசிகளின் செலவு முறையில் 11-ஆம் இடத்திலிருந்து ஆறாம் இடத்திற்கு முன்னேறியிருக்கிறது.

தரவரிசைப்பட்டியலில் பெரும் மாற்றம் அடைந்துள்ள மற்றொரு மாநிலம் தமிழ்நாடு. நகர்ப்புற தனி மனித வருமானத்தில் இரண்டாம் இடத்திலிருந்து ஏழாம் இடத்திற்கு இறங்கி இருக்கிறது. ஆனால் கிராமப் புற செலவுகளில், ஆறாம் இடத்திலிருந்து நான்காம் இடத்திற்குத் தரம் உயர்ந்து இருக் கிறது.

கிராமப்புற பொருளாதார வளர்ச் சியில் கேரளா, பஞ்சாப், ஹரியானா, தமிழ்நாடு மற்றும் ஆந்திரா, முதல் ஐந்து மாநிலங்களாக இடம் பிடித்திருக்கின் றன.

ஹரியானா, கேரளா, மகாராஷ்டிரா, கர்நாடகா, பஞ்சாப் ஆகிய 5 மாநி லங்கள் நகர்ப்புற பொருளாதார வளர்ச்சியில் முதல் 5 இடம் பெற்ற மாநிலங்கள்.

அந்தக்கால கட்டத்தில் வீட்டுச் செலவுக்கான வளர்ச்சி விகிதத்தின் உண்மை நிலையும் பிரதிபலிகின்றது. தேசிய அளவில் தனி மனிதனின் செலவு வளர்ச்சி கிராமப்புறங்களில் 165 விழுக்காடு ஆகவும் 2000--_2012 ஆண்டு களில் இருந்தது.

தேசிய சராசரியை விட நகர்ப்புற குடும்பங்களின் வருமானம் குறைந்து இருக்கும் மாநிலங்களில் குஜராத்தும், ராஜஸ்தானும் உள்ளன (177 விழுக் காடு) ஆனால் அவை உத்தரபிரதேசம், மேற்குவங்கம் ஆகிய வற்றைவிட குறைவான தாகவும், அஸ்ஸாம், தமிழ் நாடு ஆகியவற்றுடன் உயர்ந்தும் இருக்கிறது.

கிராமப்புறம் குடும் பங்களில் குஜராத்தில் தனி நபர் வருமானம் 165 விழுக்காடாக உயர்ந்துள் ளது. அது தேசிய அள வான 170 விழுக்காட்டை விடக்குறைவு. பல ஏழ்மை மிகுந்த மாநிலங்களான உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், ஒடிசா ஆகிய வைகளும் தேசிய சராசரியை விடக் குறைந்த வருமானம் கொண்டவையே. ஹரியானாவிலும் கூட கிராமப்புற வருமானம் தேசிய சராசரியை விட சற்றே அதிகம்.

சுருக்கமாகச் சொன்னால் அதிக செலவுக்குண்டான வருமானம் உடைய வளர்ச்சியற்ற மாநிலங்கள், ஆந்திர பிரதேசம், கேரளா, பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா ஆகும். இவை கிராம மற்றும் நகர்ப்புற வருமானங்களில் வளர்ச்சி பெற்றவை.

தமிழ் ஓவியா said...


பெரியார் - அவர் புகழைப் பாடு...!


தாடிப் பெரியாரைச் சாந்துணையும் தொண்டாற்றிக்
கோடிப் பயன்விளைத்த கோமகனை -_ நாடுங்கள்
நெஞ்சில் நினையுங்கள்! நம்முடைய ஈனங்கள்
பஞ்சாய்ப் பறந்துவிடும் பார்.
பேருக்கே நாம்தமிழர் பிச்சைக்கே நாம்தமிழர்
நாருக்கும் கேடின்று நம்நிலைமை -_ ஊர்தோறும்
வெண்தாடி வேந்தர் வரலாற்றைக் கற்பிப்போம்
காண்போம் எழுச்சி கனிந்து.
வள்ளுவர்க்குப் பின்வந்த தெள்ளுதமிழ்ச் சீயம்
கள்ளத் தனத்தார்க்குக் காட்டுத் தீ _ வெல்ல
வரும்பகையின் வால்நறுக்கி ஓடவிட்டார்: என்றும்
பெரியார்! அவர் புகழைப் பாடு.

- கவிமாமணி முனைவர் வேலூர் ம. நாராயணன்

தமிழ் ஓவியா said...

நமது பத்திரிக்கை

பள்ளிக்கூட படிப்பில்லாமலும் பத்திரிகை அனுபவம் சிறிதுமில்லாமலும் உள்ள நிலையில் இப்பத்திரிக்கை ஆரம்பிக்கப்பட்டதும் நமக்கெதிராக அநேக பத்திரிகைகள் ஒன்று சேர்ந்து சதியாலோசனை செய்து எதிர்த்துக் கொண்டிருந்தன.

உதாரணமாக நமது பத்திரிகை விளம்பரத்தைக்கூட எவ்வளவு பணம் கொடுத் தாலும் விளம்பரப்படுத்த சுதேசமித்திரன் நவசக்தி போன்றவை மறுத்து விட்டன.

பத்திரிகை வெளிப்படுத்தும் விஷயத்தில் தபால் ரயில் இலாகாவிலும்கூட சகிக்க முடியாத தொல்லைகள் அனுபவிக்க வேண்டியதாயிற்று.

(குடிஅரசு தொகுதி 8 177ஆம் பக்கத்தில் இருப்பது)

-_ க. பழநிசாமி, தெ. புதுப்பட்டி

தமிழ் ஓவியா said...


இறையனார்பற்றி இன்குலாப்


அந்த அமீதியா ஆரம்பப் பாடசாலையில்தான் அப்பொழுது பேராசிரியர் அ. இறையன் அவர்களும் பணியாற்றினார். அவர் எனக்கு நேரடியாக வகுப்புகள் எடுக்காவிட்டாலும் அவர் கூட்டங்களில் நிகழ்த்திய உரைகளால் ஈர்க்கப்பட்டிருந்திருக்கிறேன்.

(பேராசிரியர் அ. இறையனார் திராவிடர் கழகத்தில் முக்கியப் பொறுப்பில் இருந்தார். பெரியார் சிந்தனைகளுக்குத் தெளிவும், உணர்வும் மிக்க உரை விளக்கம் செய்தவர். திராவிடர் கழகத் தலை மையகம் அமைந்துள்ள சென்னை - _ பெரியார் திடலில் சுயமரியாதைத் திருமண நிறுவனத்தை இறைய னாரின் துணைவியார் திருமகள் பொறுப்பாளராக இருந்து நடத்தி வருகிறார். நூற்றுக்கணக்கான சாதி மறுப்பு, சுயமரியாதைத் திருமணங் களை இந்நிறுவனம் நடத்தி வைத் துள்ளது. என் இளையமகன் இன்குலாபுக்கு இந்த நிறுவனத்தின் மூலமாகத்தான் மணப்பெண்ணைத் தேர்வு செய்தோம்).

காக்கை சிறகினிலே மாத இதழில் ஆகஸ்டு 2013 - _ தோழர் இன்குலாப்

தமிழ் ஓவியா said...


ஆசிரியருக்குக் கடிதம் ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டம்

ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டம் சார்பில் 30-ஆம் மாத நிகழ் வாக நடைபெற்ற டாக்டர் கலைஞர் அவர்களின் 90 ஆவது பிறந்தநாள் கருத்தரங்கம் மற்றும் பன்மொழிப்புலவர் அப்பாதுரையார் படத்திறப்பு விழாவில் ''மானமிகு சுயமரியாதைக்காரர்'' என்கிற தலைப்பில் திராவிட இயக்க ஆய்வாளர் க.திருநாவுக்கரசு அவர்கள் பங்கேற்று மிகச் சிறப்பான ஆய் வுரையை நிகழ்த்தினார். டாக்டர் கலைஞர் அவர்கள் திராவிடர் இயக்கத்திற்கு ஆற்றிய பணிகள் குறித்தும், தமிழின எழுச்சிக்கு திராவிட இயக்கம் செய்த தொண் டுகள் குறித்தும் பல்வேறு வரலாற்றுப் பதிவுகளை தொகுத்து மிக சிறப்பா னதொரு கருத்துரையை ஆற்றினார் .அவ்வுரையை உலகத் தமிழர்கள் அனைவரும் அச் செய்தியினை அறிந்து கொள்ளும் வண்ணம் விடுதலை நாளேட்டில் தொடர்ந்து 6 கட்டுரைகளாக வெளியிட்ட விடு தலையின் ஆசிரியர் அவர்களுக்கும், திராவிட இயக்க ஆய்வாளர் க. திரு நாவுக்கரசு அவர்களுக்கும் ஊற்றங் கரை விடுதலை வாசகர் வட்டத்தின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் விரைவில் டாக்டர் கலைஞர், தமிழர் தலைவர் அவர் களின் அணிந்துரையை பெற்று ''மானமிகு சுயமரியாதைக்காரர்'' என்கிற தலைப்பில் புத்தகமாக வெளி யிடுகிற முயற்சியை விரைவில் ஊற்றங் கரை விடுதலை வாசகர் வட்டம் மேற்கொள்ளும் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

- தணிகை ஜி. கருணாநிதி தலைவர் , ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டம் மாவட்டஅமைப்பாளர்,

திமுக பகுத்தறிவு கலை இலக்கிய பேரவை

தமிழ் ஓவியா said...


மூடனே!


கடவுள் ஒருவர் உண்டு என்று சொல்லிச் சோம்பித் திரிந்துகொண்டு, தொட்டதற்கெல்லாம் கடவுள்மீது பழிபோட்டுத் திரிகின்றவன் ஒரு மூடனே! - (விடுதலை, 1.2.1969)

தமிழ் ஓவியா said...

துக்ளக்குக்கு ஓர் ஆன்மீகவாதியின் மனம் திறந்த மடல்



அன்புள்ள துக்ளக் ஆசிரியர் அவர்களுக்கு,

24.7.2013 தேதியிட்ட துக்ளக் இதழில் எல்லோரும் திராவிடர் கழகத் தலைவர்களே! என்ற துர் வாசர் எழுதிய கட்டுரை படித்தேன். இறை வழிபாடு என்பது அனை வருக்கும் உரித்தான ஒரு ஆன்மீகச் செயல்பாடு என்பதால் அது ஒரு தனிப்பட்ட சாதிப்பிரிவினருக்கு மட்டும் உரியதல்ல என்பதை நிலை நாட்டவும் சாதியை ஒரு இழிவாகக் கூறி கோயில் நுழைவு மறுக்கப்பட்ட நிலையை அடியோடு மாற்றவும் திராவிட இயக்கம் முன்னெடுத்த முயற்சிதான்அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்ற கோரிக்கை. இறைவழிபாட்டின் அர்த்தம் உணர்ந்து உள்ளுணர்வுடன் அதைச் சொல்லும்போது முழுமையான மனநிறைவு கிடைக்கவும் அதில் பயன்படுத்துகிற அறம், நெறி, அன்பு போன்ற விழுமியங்களை காதில் கேட்கும்போது இறைவனுடன் நெருக்கமும், வழிபாட்டு அறத்தை வாழ்வியல் அறமாக மாற்றிக் கொள்ளவுமே தமிழ் வழிபாடு என்ற கோரிக்கை முன் வைக்கப்படு கின்றது. கட்டுரையாளர் தமது தனிப் பட்ட கோபத்தையும், பகடியையும் கட்டுரை முழுக்க வெளிப்படுத்தியி ருக்கிறார். அர்ச்சகர் பயிற்சி முடித்த வர்கள் வேறு வேலை செய்வதனால் அந்தத் திட்டமே வீண் என்று சொல்வது ஆசிரியர் பயிற்சி போன்ற வெவ்வேறு பயிற்சிகளை முடித்தவர்கள் வாய்ப்பு கிடைக்கும் வரை, வாழ்க்கைத் தேவைக்காக வேறு பணிகளை செய்தால் அவர்களுக்கான பயிற்சித் திட்டமே வீணானது என்று கூறுவது போன்றதாகும்.

தமிழ் ஓவியா said...


புரோகிதம் செய்வதும், அர்ச்சகரா வதும் இயல்பாக வர வேண்டியது என்று கூறுகிற அதே நேரத்தில் சங்கீதம், நடனம் போன்றதுதான் என்றும் கூறுகிறார். சமஸ்கிருத, சாஸ்திர அறிவு தேவை என்றும் இவற்றை வகுப்பெடுத்து சொல்லித் தந்துவிட முடியாது என்றும் கூறுகிறார். சங்கீதம், நடனம், சமஸ் கிருதம் போன்ற எதுவானாலும் ஆர்வமும், பயிற்சியும் இருந்தால் கற்றுக் கொள்ளக் கூடியவையே. இத்துறைகளின் நிபுணர் கள்கூட ஏற்றுக் கொள்ளக் கூடிய கருத்து இது என்பதோடு அப்படி சாதித்தவர் களும் எவ்வளவோ பேர் இருக்கின்றனர். வழிபடுகிறவர்களும் புரிந்து கொண்டு அந்த வழிபாட்டில் ஈடுபட அந்த வழி பாட்டை நடத்துகிறவரான அர்ச்சகர் எளிமையான மக்களின் மொழியில் அதைச் செய்தால் அது இன்னும் சிறப்பாக இருக்கும் என்பது என் கருத்து. அர்ச் சனைக்கான சுலோகங்களைத் தமிழில் மொழிபெயர்த்து அதைப் படித்துப் பார்க் கும்போது எவ்வளவு ஆனந்தமாகவும், எளிமையாகவும் இறைவனோடு நெருக் கத்தை ஏற்படுத்துவதாகவும் இருக்கிறது என்பதை மறுக்க முடியுமா? அந்த ஆன் மீக அனுபவத்தை ஏன் நாம் மற்றவர் களுக்கு மறுக்க வேண்டும்? ஆன்மீக அனுபவம்தான் புனிதமானதும், முக்கிய மானதுமேயன்றி மொழி என்பது ஒரு தொடர்புக்கருவியே என்பதை உணர்ந்து கொண்டால் குழப்பமில்லை. சமஸ்கிருத அர்ச்சனை என்பது மக்களின் விருப்பம் என்பதில் எனக்கு உடன்பாடில்லை. அர்த்தம் புரிகிற வழிபாட்டைவிட அர்த்தம் புரியாத வழிபாட்டை மக்கள் விரும்பு கிறார்கள் என்பது உண்மையானால் அந்த நிலை மாற்றப்பட வேண்டும். குழந்தைகள் ஆங்கில வழியில் படிப்பதும், நம் இறைவழிபாட்டை சமஸ்கிருதத்தில் செய்வதும் சமமானதல்ல. முதலாவது வேலை வாய்ப்பு மற்றும் வாழ்க்கைத் தேவைகள் சார்ந்தது. ஆனால் இறை வழிபாடு என்பது, உள்ளுணர்வு, இறை யனுபவம், பக்தி, கடவுளோடு நெருங்கிய உறவு, வாழ்க்கை நெறி ஆகியவை தொடர்பானது. சுயநலம், ஊழல், பொய், ஏமாற்று, வஞ்சகம் ஆகியவை பெருகி யுள்ள இந்த காலங்களில் இறைபக்தி மற்றும் இறையனுபவமே அவற்றை மாற்றும் வழி என்பதும் புரிந்த மொழியில் வழிபாடு அதற்கான ஒரு மிகப் பெரிய வாய்ப்பு என்பதிலும் சந்தேகமில்லை. திராவிடர் கழகத்தில் இருக்கிறவர்களையெல்லாம் தலைவராக்குங்கள் என்றோ செயலாளர் ஆக்குங்கள் என்றோ போராடினால் என்னவாகும்? என்று துர்வாசர் கேட் கிறார். ஆர்வமும், தகுதியும் இருந்தும் ஒருவருக்கு வாய்ப்புகள் மறுக்கப்பட்டால், அது திராவிடர் கழகமானாலும், ஆன் மீகத் தலமானாலும், அவருக்கு இழைக் கப்படுவது சமூக அநீதியே என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஜாதியின் அடிப்படையில் இழிவுபடுத் துவதும், தனிமைப்படுத்துவதும், ஒதுக்கப்படுவதும், மாற வேண்டும். அதற்கு முதலில் தேவை, வாய்ப்புகள் மறுக்கப்பட்டவர்களுக்கு வாய்ப்புகள் அளிப்பதே. மொழி, தரம், முறைகள் ஆகியவற்றில் உள்ள குறைகள் நாளடைவில் பயிற்சிகளின் மூலம் சரி செய்து கொள்ள முடியும். இத்தகைய போராட்டங்களைக் குறை சொல்வதும் அதைச் செய்கிறவர்களை அவர்களின் பல்வேறு குறைகளைக்கூறி மற்ற தோல்விகளைச் சுட்டிக் காட்டி தனிப்பட்ட முறையில் வெறுப்போடு விமர்சிப்பதைவிட, அத்தகைய கோரிக்கையின் பின்னணி என்ன, அதில் உள்ள நியாயம் என்ன என்கிற பட்சத்தில் அதைச் செயல்படுத்தும் வழி என்ன என்று அலசி ஆலோசனை சொல்வதோ, ஆதரிப்பதோ சிறப்பான தாயிருக்கும்.
- ரமேஷ்குமார், பெங்களூரு

குறிப்பு: கட்டுரை ஆசிரியரின் கருத்துக்கள் சிலவற்றில் மாறுபாடு நமக்கு உண்டு என்றாலும். நம்பிக்கை யாளர் ஆன்மீகக் கண்ணோட்டத்தில் துக்ளக்கை எதிர்த்து தம் சிந்த னையை வெளிப்படுத்தியுள்ளார்.

- ஆர்

தமிழ் ஓவியா said...


சென்னை அய்.அய்.டியில் நடைபெற்றுள்ள அத்தனை குறைபாடுகளையும் சி.பி.அய்.வெளியில் கொண்டு வர வேண்டும் தலைவர்கள் வலியுறுத்தல்



சென்னை, ஆக.3- சென்னை அய்.அய்.டி.யில் நடைபெற்ற அத்தனை குறைபாடுகளையும் சி.பி. அய். விரைந்து விசாரணை நடத்தி வெளியில் கொண்டு வரவேண்டும் என சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற சிறப்பு பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய தலைவர்கள் வலியுறுத்தினர்.

சென்னை பெரியார் திடலில் உள்ள எம்.ஆர். ராதா மன்றத்தில் நேற்று (2.8.2013) மாலை 6.30 மணியளவில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் தலைமையில், சென்னை அய்.அய்.டி.யில் சமூக அநீதி தொடரலாமா? உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு வரவேற்பு என்ற தலைப்பில் சிறப்பு பொதுக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு வந்தவர்களை திராவிடர் கழகத்துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் வரவேற்று பேசினார். அகில இந்திய பிற்படுத்தப் பட்டோர் கூட்டமைப்பின் தலைவர் கோ.கருணா நிதி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிருவாகி வீரபாண்டியன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி., திராவிட முன்னேற்றக்கழக அமைப்பு செயலாளரும், நாடாளுமன்ற பிற்படுத்தப்பட்டோர் நிலைக்குழு உறுப்பினருமான டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகி யோர் பங்கேற்று உரையாற்றினார்.

கோ.கருணாநிதி

1961ஆம் ஆண்டு முதல் சென்னையில் தொடங் கப்பட்டு நடைபெற்று வரும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த சென்னை அய்.அய்.டி கல்வி நிறுவனம் என்பது மத்திய அரசின் மனித வளமேம்பாட்டுத் துறை என்ற கல்வித்துறையின் கீழ் இயங்கும் ஒரு மத்திய கல்வி நிறுவனமாகும்.

இந்த கல்வி நிறுவனத்தில் பணியாற்றும் அனைத்து பேராசிரியர்களும் பார்ப்பனர்கள் ஆவர். இவர்கள் மத்தியில் பல ஆண்டுகளாக பணி யாற்றி, சமூகநீதிக்காக போராடி பதவி உயர்வை தற் போது பெற்றுள்ளவர் டாக்டர் வசந்தா கந்தசாமி ஆவார்.

இக்கல்வி நிறுவனத்தில் தகுதியில்லாத பார்ப்பனர்களுக்கு அங்கு பதவி அளிக்கப்பட்டு, தகுதியுள்ள நம் வசந்தா கந்தசாமிக்கு பதவி உயர்வு அளிக்கப்படாமல் புறக்கணித்த நிலையில், தற்போது நீதிமன்றம் சென்று வாதாடி பதவி உயர்வு பெற்றுள்ளார். அவருக்கு சமூகநீதி அடிப்படையில் தீர்ப்பு வழங்கிய நீதியரசருக்கு பாராட்டு தெரிவித்து கொள்கிறேன் என்றார்.

தோழர் வீரபாண்டியன்

கடந்த 25 ஆண்டுகளாக நீதிமன்ற படிக்கட்டு களை ஏறி, இறங்கி நியாயமான தீர்ப்பை பெற்ற வீராங்கணை வசந்தா கந்தசாமி அவர்களை பாராட்டுகிறேன். சமூக நீதிக்காக உலத்திலேயே 80 ஆண்டுகளாக விடுதலை நாளிதழ் நடத்தப் படு வதும், அதற்கு 52 ஆண்டுகள் ஆசிரியராக பணி யாற்றி வரும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களுக்கு பாராட்டு தெரிவித்துக் கொள்கிறேன்.

உலகத்தில் உண்மையான சுயமரியாதை இயக்கம் நடத்தியவர் தந்தை பெரியார்தான். தந்தை பெரியார், டாக்டர் அம்பேத்கர், சிந்தனைச் சிற்பி சிங்கார வேலர், அய்யோத்தி தாசர் ஆகியோர் கருத்துகளை தொடர்ந்து பரப்பி அதன் மூலம் இதுபோன்ற சமூக அநீதிகளை எதிர்க்கவேண்டும் என்றார்.

தொல்.திருமாவளவன்

1988ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை தொ டர்ந்து சட்ட பூர்வமாக நீதிமன்றம் சென்று போரா டிய, வெற்றி பெற்றுள்ள சென்னை அய்.அய்.டியின் கணிதத்துறை பேராசிரியர் வசந்தா கந்தசாமி அவர்களை வாழ்த்துகிறேன் பாராட்டுகிறோம்.

சமூகநீதியின் அடிப்படையில் உயர்நீதிமன்றம் நல்ல தீர்ப்பை வழங்கியுள்ளது. நீதியரசர் எஸ்.நாக முத்து அவர்களுக்கு மனமார்ந்த நன்றி. இதன் மூலம் சென்னை அய்.அய்.டியில் நடைபெற்றுள்ள முறை கேடுகளை வெளியே கொண்டு வர உயர்நீதிமன்றம் வழி வகுத்துள்ளது.

600-க்கும் மேற்பட்ட ஆராய்ச்சி தாள்களை வெளியிட்டுள்ளவர், பல ஆராய்ச்சி மாணவர்களை உருவாக்கியவர் வசந்தா கந்தசாமி. அப்படிப் பட்டவருக்கு அநீதி இழைத்துள்ளனர். எப்படி இந்த நீதிமன்ற தீர்ப்பை மதிக்க போகிறார்கள் என்று தெரியவில்லை.

இந்த தீர்ப்பை வைத்து குடியரசுத் தலைவருக்கு மனு கொடுக்க வேண்டும் என்று தமிழர் தலைவர் விடுத்த வேண்டுகோளை ஏற்று குடியரசுத் தலை வரை நேரில் சந்தித்து விரைவில் மனு கொடுப்பேன் என்றார்.

டி.கே.எஸ். இளங்கோவன்

இந்த பிரச்சினையில் அய்.அய்.டி. சார்பாக வாதிட்ட வழக்குரைஞரின் வார்த்தைகள் ஒவ் வொன்றிற்கும் நீதியரசர் சரியான பதிலளித்திருக் கிறார். சென்னை அய்.அய்.டியில் திட்டமிட்டு ஆசிரியர், துணை பேராசிரியர், பேராசிரியர்கள் நியமனத்தில் முறைகேடுகளை செய்துள்ளனர். எனவே இதுபோன்ற முறைகேடுகள் இனி நடை பெறாமல் இருக்க பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப் பட்ட மக்களிடையே ஒற்றுமையை உருவாக்கிக் கொண்டால் நாம் எல்லாம் நல்ல நிலைக்கு வருவோம்.

இதுபோன்ற முறைகேடுகள் சிவில் சர்வீஸ் தேர்வுகளிலும் நடந்துள்ளது. எனவே இந்தப் பிரச்சினைக்காக நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பி போராடுவோம் என்றார்.

தமிழ் ஓவியா said...


மார்க்கெட் நிலவரம் - சித்திரபுத்திரன் -

சட்டசபை, ஓட்டு ஒன்றுக்கு 1 முதல் ரூ.5

ஒரு கிராமத்தின் மொத்த ஓட்டுகளுக்கு மணியக் காரருக்கு ரூ.100

கணக்குப் பிள்ளைக்கு ரூ.50

பள்ளிக்கூட உபாத்தியாயருக்கு ரூ.25

கிராமாந்திரங்களில் செல்வாக்குள்ள குடித்தனக் காரருக்கு ரூ.5000 முதல் 15000 வரை கடன்

முனிசிபல் சேர்மென்களுக்குரூ.1000 முதல் ரூ.1500 வரை கடன்

வைஸ்சேர்மென்களுக்கு ரூ.250 முதல் ரூ.500

போலீஸ் ஆபீசர்கள் நிலவரம், பஜாரில் இன்னும் புதுசரக்கு வராததால் வாங்கு வாரில்லை.

முனிசிபல் ஓட்டுகளுக்கு, இவ்வாரம் ஓட்டு ஒன்றுக்கு ரூ. 5 முதல் ரூ. 15 வரை

சேர்மென்களுக்கு ரூ.150

வைஸ்சேர்மென்களுக்கு ரூ.250

20 ஓட்டு 30 ஓட்டுள்ள தொகுதிகளில்,

ஓட்டு ஒன்றுக்கு ரூ.150 முதல் ரூ.250 வரை

*போலிங் ஆபீசர்கள் விஷயம், கேட்போருக்கு மாத்திரம் தெரிவிக்கப்படும்.

பஜார் நோக்கம் இன்னமும் தொகை உயரும் போல் இருக்கிறது.

- குடிஅரசு - விமர்சனம், 17.10.1926

தமிழ் ஓவியா said...

கல்பாத்தி

மலையாளத்தைச் சேர்ந்த பாலக்காட்டு கல்பாத்தி ரோடுகளில் ஈழவர், தீயர் சகோதரர்கள் நடக்கக் கூடாது என்கிற உபத்திரவம் இருந்து வருவதும், அதில் பிரவேசிக்கப் பல வருஷ காலமாய் பலர் முயற்சித்து வருவதும் வாசகர் அறிந்திருக்கலாம். இதை உத்தே சித்து சென்னை சட்டசபையில், பொதுத் தெருக்களில் யாரும் நடக்கலாம் என்று ஒரு தீர்மானம் நிறைவேற்றி யதும் ஞாபகமிருக்கலாம்.

அத்தீர்மானம் அமலுக்கு வருவதற்கில்லாமல் வேலையிருந்தால்தான் போக லாம் என்று சட்ட மெம்பர் வியாக்யானம் செய்ததும் ஞாபகமிருக்கலாம். ஆனால், சென்ற வருஷங்கூட தாழ்த்தப்பட்ட கனவான்களுள் பலர் செல்ல முயற்சித்தும் அவர் களுக்கு 144 உத்தரவு போடச் செய்ததும் ஞாபக மிருக்கலாம். மற்றும் சில சமயங்களில் சிலர் மீறிச் சென்று அவர்கள் பேரில் நடவடிக்கை நடத்தப்பட்டு கோர்ட்டுகளில் விசாரணையாகி விடுதலை ஆனதும் ஞாபகமிருக்கலாம்.

மற்றொரு சமயம் ஆரிய சமாஜி என்கிற முறையில் ஒருவர் சென்ற பொழுது அவரைத் தடுத்து உபத்திரவப்படுத்தியதற்காகச் சில பார்ப்ப னர்கள் பேரில் நடவடிக்கை நடத்தப்பட்டு தண்டிக்கப் பட்டதும் ஞாபகமிருக்கலாம். இப்போது இம்மாதம் கல்பாத்தியில் ரதோற்சவமான படியால் மறுபடியும் ஈழவர்கள் எங்கு பிரவேசித்துவிடப் போகிறார்களோ என்பதாக நினைத்து மலையாளப் பார்ப்பனர்கள் இப்பொழுதிருந்தே வேண்டிய சூழ்ச்சிகள் செய்து வருவதாய்த் தெரிகிறது.

அங்குள்ள ஒரு பார்ப்பன மேஜிஸ்திரேட்டு இப்போதிருந்தே 144 தடைபோட ஆசை உள்ளவராக இருக்கிறார். முடிவு என்னவாகுமென்பது தெரியவில்லை. பார்ப்பனரல்லாதார் நன்மை காங்கிரஸ் மூலம்தான் ஏற்படும் என்று சொல்லும் காங்கிரஸ் பார்ப்பனர்கள் இது சமயம் திருடனைத் தேள் கொட்டியது போல் மௌனம் சாதிக்கிறார்கள்.

பார்ப்பனரல்லாதார் கட்சியும், அவர்களுடைய பொதுமக்கள் உணர்ச்சியும் இவ்வளவு பலப்பட்டிருக்கிற போதும், சட்டங்களும் அனுகூலமாயிருக்கிற போதும், தேர்தல் சண்டை இருக்கிறபோதும் தெருவில் நடக்கும் உரிமைகூட இல்லாமல் நம்மைக் கொடுமைப்படுத்த தயாராயிருப்பார் களேயானால் இவர்கள் கைக்கு ராஜ்யமே வந்துவிட்டால் நம்மை என்ன செய்யமாட்டார்கள் என்பதை நன்றாய் யோசித்துச் சட்டசபைத் தேர்தலில் பார்ப்பனர்களுக்குத் தக்க புத்தி கற்பிக்கக் கோருகிறோம்.

- குடிஅரசு - கட்டுரை - 31.10.1926

தமிழ் ஓவியா said...


பார்ப்பனர்களால் வந்த வினை


மலையாளக் குடிவார மசோதாவை ஒழித்து விட்டார்கள். இனி தேவதான மசோதாவை ஒழிப்பதுதான் பாக்கி. இனியும் பார்ப்பனர் களுக்காவது அவர்களால் நிறுத்தப்பட்ட ஆட் களுக்காவது சட்டசபைக்கு ஓட்டுக் கொடுப்பீர் களானால் நமது கதி அதோ கதி தான்.

மலையாளக் குடிவார மசோதா சட்டசபையில் நிறைவேற்றக் கொண்டுவந்த காலத்தில் பார்ப்பன சட்ட மெம்பரான சர். சி.பி. ராமசாமி அய்யரவர்கள் ஆணவத் தோடு மிரட்டி இச்சட்டத்தை கவர்னரைக் கொண்டு நிராகரிக்கச் செய்து அமலுக்கு வராமல் செய்து விடுவேன் என்று வீரம் கூறியது வாசகர்கள் அறிந்திருக் கலாம்.

இப்போது அவர் சொன்னது போலவே சட்டசபையில் பெரும்பான்மையோரால் நிறைவேறின இச் சட்டத்தை ஏதோ சில நொண்டிச் சாக்குகளுடன் கவர்னர் பிரபு நிராகரித்து விட்டார். நமது நாட்டில் வெள்ளைக்கார அதிகார வர்க்க ஆட்சி, பார்ப்பன ஆதிக்க வர்க்க ஆட்சி என இரண்டு கொடுமையான ஆட்சிகளின் கீழ் நாம் பாசாணத்தில் புழு இருப்பது போல் காலந்தள்ள வேண்டியவர் களாயிருக்கிறோம்.

நம்முடைய மேன்மைகளும், முன்னேற்றங்களும் வெள்ளைக்காரருக்கோ, பார்ப்பனருக்கோ தங்களது ஆதிக்கத்திற்குக் கடுகளவு இடைஞ்சல் செய்வதா யிருந்தாலும், கொஞ்சமும் தயவு தாட்சண்யம் இல்லாமல் அடியோடு நசுக்கி விடுகிறார்கள். அரசாங்கத்தார் எந்தக் கட்சி ஜெயிக்குதோ அந்தக் கட்சியைத்தான் ஆதரிப்பார்களேயல்லாமல் நியாயம் சத்தியம் என்பவை களைக் கொஞ்சமும் கவனிக்க மாட்டார்கள்.

ஆதலால் அடுத்த சட்டசபையில் பார்ப்பனரல்லாதார் கட்சி வெற்றி பெறாமல் போய் பார்ப்பனர் வெற்றிபெற ஏற்படு மானால் பாக்கி இருக்கும் தேவதான மசோதாவையும் கண்டிப்பாய் ஒழித்து விடுவார்கள். இதை உத்தேசித் தாவது இனியும் பார்ப்பனர்களுக்காவது அவர்களால் நிறுத்தப்பட்ட ஆட்களுக்காவது சட்டசபைக்கு ஓட்டுக் கொடுப்பீர்களானால் நமது கதி அதோ கதிதான்.

- குடிஅரசு - செய்திக்குறிப்பு - 07.11.1926

தமிழ் ஓவியா said...

சுயராஜ்யக்கட்சிக்கு தேசத்திலுள்ள செல்வாக்கு சென்றவிடமெல்லாம் சிறுமை

சுயராஜ்யக் கட்சியார் இதுவரை தங்களுக்குத் தேசத்தில் பிரமாதமான செல்வாக்கு இருப்பதாகவும் செல்லுமிடங்களிலெல்லாம் தங்கள் கட்சிக்குப் பெரிய ஆதரவு இருக்கிறதென்றும் பறையடித்துக் கொண்டு வந்தது வாசகர்கள் அறிந்திருக்கலாம். ஆனால், இதனுடைய உண்மை கடந்த ஒருமாத காலமாக ஸ்ரீமான்கள் சத்தியமூர்த்தி, ஏ. ரெங்கசாமி அய்யங் கார், பண்டித நேரு முதலிய பார்ப்பனர்கள் பிரசாரத் திற்கென்று எங்கெங்கு செல்லுகிறார்களோ அங்கெல்லாம் இவர்களது இரகசியம் வெளியாகி பொது ஜனங்களால் கேட்கப்பட்ட கேள்விகளுக்குப் பதில் சொல்லமுடியாமல் கூட்டத்தைக் கலைத்து விட்டு ஓடின வண்ணமாகவே இருக்கிறார்கள்.

உதாரணமாக, கும்பகோணத்தில் ஸ்ரீமான் ரெங்க சாமி அய்யங்கார் அவர்கள் பொது தலங்களில் கூட்டம் போட முடியாமல் ஒரு கட்டிடத்திற்குள் கூட்டம் போட்டும் அங்கும் பொது ஜனங்கள் ஒரு அக்கிராசனரைப் பிரேரேபிக்க பார்ப்பனர்கள் வேறு ஒருவரைப் பிரேரேபிக்க கடைசியாய் அய்யங்கார் போலீசார் தயவு தேட வேண்டியதாயிற்று.

மதுரை, திருநெல்வேலி முதலிய இடங்களில் ஸ்ரீமான் சத்தியமூர்த்தி அய்யரவர்கள் சென்ற காலத்திலும் கூட்டங்களில் பொது ஜனங்கள் கேட்கும் கேள்வி களுக்குப் பதில் சொல்ல முடியாமல் கூட்டத்தைக் கலைத்து விட்டு ஓடும்படியாகி விட்டது. பண்டித நேரு அவர்களும் செல்லுகிற இடங்களிலும் கூட்டங்களிலும் கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாமல் திணறுகிறார்.

இவை சுதேசமித்திரன் பத்திரிகைகளில் பார்த்தால் தென்படாது. திராவிடன், வடநாட்டுப் பத்திரிகைகளில் காணலாம். இவர்கள் பேச்சைக் கேட்க இஷ்டமில்லாத ஜனங்களும் மற்றும் கேட்கும் கேள்விகளால் இவர்களது யோக்கியதையை வெளியாக்கும் ஜனங்களும் இவர்களுக்கு ஓட்டுப் போட்டு சட்டசபைக்கு அனுப்புவார்களா? பொது ஜனங்களே யோசித்துப் பார்க்கட்டும்.

- குடிஅரசு - செய்திக்குறிப்பு - 07.11.1926

தமிழ் ஓவியா said...


குஜராத் வளர்ச்சிபற்றி தற்பெருமை பேசும் மோடியின் முகத்திரை கிழிகிறது மனித உரிமை ஆர்வலர் ஷப்னம் ஆஸ்மியின் குற்றச்சாட்டு



சென்னை, ஆக.4- மற்ற மாநிலங்களுக்கு எடுத்துக் காட்டாக ஒரு முன் மாதிரி மாநிலமாக குஜராத் விளங் குகிறது என்று பெருமை பேசிக் கொள்வதை மனித உரிமை ஆர்வலர் ஷப்னம் ஆஸ்மி மறுத்தொதுக்கி நையாண்டி செய்கிறார். 2014ம் ஆண்டு நிகழவுள்ள நாடாளுமன்றத் தேர்தலை யொட்டி தன்னை பிரதமர் வேட்பாளராக காட்டிக் கொள் வதற்காக தான் முதல்வராக உள்ள குஜராத் மாநிலம் அனைத்து வளங்களும் பெற்று முன்மாதிரியான மாநிலமாக விளங்குவதாக நரேந்திர மோடி பிரச்சாரம் செய்து வருவதாக `ஷப்னம் ஆஸ்மி கூறியுள்ளார். மோடியின் கூற்றுகளை மக்கள் கவனமாகவும் நுணுக்கமாகவும் பார்க்க வேண்டும் என அவர் கூறுகிறார்.

ஒரு கருத்தரங்கில் பேசிய `ஷப்னம் ஆஸ்மி உண்மை நிலையை மோடியின் கூற்றுக்கு எதிராக இருப்பதாக கூறியுள்ளார். பிரதமர் வேட் பாளராக அவரை முன்நிறுத் தும் அவரது பொது மக்கள் தொடர்பு குழுவினர் கடந்த ஓர் ஆண்டாகவே குஜராத்தை பற்றி இத்தகைய உண்மைக்கு புறம்பான தகவல்களை மக் களுக்கு அளித்து வருவதாக ஆஸ்மி குற்றம் சாட்டியுள்ளார் மோடியின் பிரச்சாரங்களில் குஜராத் வளர்ச்சி பற்றி அவர்கள் அளித்து வரும் - தனிநபர் வருவாய் உயர்வு மாநிலத்தின் மொத்த உற்பத்தி திறன் வளர்ச்சி, கல்வி கற்போர் எண்ணிக்கை வளர்ச்சி குழந்தை பிறப்பின்போது தாய்சேய் இறப்பு விகிதம் குறைந் துள்ளது போன்ற சமுக பொரு ளாதார புள்ளி விபரங்கள் போலி யானவை என்று கூறும் ஆஸ்மி அவற்றை மெய்ப்பிக்க மோடி தயாராக உள்ளாரா என சவால்விட்டுள்ளார். குஜராத் மாநில லோகஆயுக்த அமைப்பின் நீதிபதியாக நீதியரசர் ஆர். ஏ. மேதா நியமிக்கப்பட்டதை எதிர்த்து குஜராத் மாநில அரசு தாக்கல் செய்த மனுவை அண்மையில் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை பற்றி குறிப்பிட்ட அவர் இந்தியாவின் தலைமை கணக்கு தணிக்கை அலுவலர் அறிக்கையில் மோடி அரசு எத்தகைய ஊழல் அரசு என்பது வெளிப்படுத்தப்பட் டுள்ளது என்று அவர் கூறினார். இந்த ஆண்டு மார்ச் மாதம் 31ஆம் தேதி குஜராத் சட்டசபை யில் தாக்கல் செய்யப்பட்ட இவ்வறிக்கையில் நிதி ஊழல் களால் - குறிப்பாக பொதுத் துறை நிறுவனங்கள் தவறாக நிருவகிக்கப்பட்டதால் - அர சுக்கு 16000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்று கூறும் ஆஸ்மி. மாநில ஆளுந ரால் நியமிக்கப்பட்ட லோகா யுக்தா அமைப்பின் நீதிபதி நியமனத்தைத் தடுத்துநிறுத்த மோடி அரசு மேற்கொண்ட முயற்சிகளை மறைக்க முயற்சிக் கும் அளவுக்கு மோடி அரசு ஊழல் புரிந்துள்ளது என்பதற்கு அத்தாட்சியாகும். நல்லிணக் கத்திற்காகவும் மக்களாட்சிக் காகவும் இப்போதே செயல் படுங்கள் என்ற அரசு சாரா அமைப்பை ஆஸ்மி நடத்தி வருகிறார். பா.ஜ.க. ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் கூட கலவரங்கள் பல நடந்துள்ளன என்னும் நிலையில் 2002ல் நடைபெற்ற குஜராத் கலவரங் களை பற்றியே மனித உரிமை ஆர்வலர்கள் ஏன் தொடர்ந்து வலியுறுத்திவருகின்றனர் என்று ஆர்.எஸ்.எஸ். கேட்டுள்ளதாக ஆஸ்மி கூறினார். குஜராத் கலவரத்தில் மிகவும் அதிர்ச்சி அளித்த அம்சம் என்ன வென்றால் ஒட்டு மொத்த அரசு இயந்திரமும் இந்த கலவரங் களுக்கு துணைபோனது என்ப துடன் இதற்கு அரசியல் ஆதரவு அளிக்கப்பட்டு அரசியல்வாதி களே இந்த காட்டுமிராண்டி தனத்தை அரங்கேற்றி யுள்ளனர் என்பது தான். கும்பல் கும்பலாக கலவரக்காரர்கள் பெண்களை பாலியல் வன் முறை செய்தது பற்றிய பல வழக்குகளை நான் ஆவணப் படுத்தியுள்ளேன். பல்வேறு பட்ட காரணங்களிற்காக இந்நிகழ்வுகள் பற்றி அறிக் கைகள் பதிவு செய்யப்படாத தால் வெளிவராமலேயே போய் விட்டன இக்கொடுமைகள் பல்வேறுபட்ட இடங்களில் ஒரே மாதிரி நடைப்பெற்றுள்ள நடைமுறையை பார்த்தால் இவையெல்லாம் திட்டமிட்டு செய்யப்பட்டவை என்று தெரி கின்றது என்று கூறுகிறார்.

மோடியின் புகழ் பாடும் வலதுசாரி கொள்கையாளர்கள் - குறிப்பாக உயர் மத்திய தர பிரிவு மக்களிடையே சமுக வலைதளங்களில் காணப்படும் மோடியின் மீதான காதலை பற்றி ஆஸ்மி புலம்பி தள்ளினார்.

தமிழ் ஓவியா said...


சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றினால் தமிழகம் முன்னேறும் கலைஞர் அறிக்கை


சென்னை, ஆக.4- சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றினால் தமிழகம் முன்னேற்றப் பாதையில் தொடர்ந்து செல்லும் என்று திமுக தலைவர் கலைஞர் கூறியுள்ளார்.

இது தொடர்பாக சனிக்கிழமை அவர் வெளி யிட்ட அறிக்கை:

நோபல் பரிசு பெற்ற அமர்த்யா சென் மற்றும் ஜீன் டி ரெஸ் ஆகிய இருவரும் சேர்ந்து எழுதிய நிலையில்லாப் புகழ் - இந்தியாவும் மற்றும் அதன் முரண்பாடுகளும் (ஹ ருஉநசவய ழுடடிசல-ஐனேயை யனே வைள உடிவேசயனஉவடிளே) என்ற புத்தகத்தைப் படித்தேன்.

அதில் இந்தியாவில் உள்ள மாநிலங்களை ஒப்பீட்டு நோக்கத்துக்காக தனித் தனி நாடுகளாகப் பார்த்தால், கேரளமும், தமிழகமும் மற்ற எல்லா மாநிலங்களையும்விட முதல் நிலையில் இருந் திருக்கும். உத்தரப் பிரதேசமும், மத்தியப் பிரதேசமும் மிகவும் கடைசி நிலையில் இருக்கும்.

பொருளாதார வளர்ச்சியிலும், வறுமைக் குறைப்பிலும் இந்தியா வெற்றிகரமான அத்தி யாயத்தைத் தொடங்கியிருக்கிறது. சர்வதேச அளவில் ஏழ்மையின் இருப்பிடமாக இந்தியா இருந்து வருவதை மறைப்பதற்கு இல்லை.

இந்தியாவில் உள்ள குழந்தைகளில் பாதிப் பேர் சத்தற்ற உணவையே சாப்பிட்டு வருகின்றனர். மிகப் பெரிய மக்கள் தொகையும், அளவுக்கு மீறிய வறுமையும்தான் இந்தியாவின் எதிரே உள்ள சவால்கள் என்று அவர்கள் கூறியுள்ளனர்.

இந்தியாவைப் பற்றி ஆய்வு நோக்குடன் அந்த நூலில் பல்வேறு கருத்துகள் கூறப்பட்டிருந்தாலும், கேரளமும், தமிழகமும் தனி நாடாக இருந்திருந் தால் எவ்வளவோ முன்னேற்றம் அடைந்த நாடாகத் திகழ்ந்திருக்கும் என்ற கருத்து ஆழ்ந்து சிந்திக்க வைக்கிறது. அதேபோல மாநிலங்கள் அனைத் தையும் ஒரே அளவில் சீர்தூக்கிடாமல், அந்தந்த மாநிலங்களில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியையும், வளர்ச்சிக்கான கூறுகளையும் அடிப்படையாகக் கொண்டு தனித்தனி அளவுகோல்கள் நிர்ணயிக்கப் பட வேண்டும் என்று கூறியிருப்பதும் சிந்திக்கத் தக்கதாகும். எனவே, சேது சமுத்திரத் திட்டம் போன் றவற்றை தடுக்க நினைக்காமல், அதனால் ஏற்படக் கூடிய நன்மைகளை மட்டும் எண்ணிப் பார்த்து நிறை வேற்ற அனைத்து தரப்பினரும் முன்வர வேண் டும். அப்படி முன்வந்தால், அமர்த்யா சென் எழுதியிருப்பதைப்போல, தமிழகத்துக்கு எதிரே உள்ள சவால்களைப் புறந்தள்ளி, முன்னேற்றப் பாதையில் வேகமாகச் செல்ல முடியும் என்று கலைஞர் கூறியுள்ளார்.

தமிழ் ஓவியா said...


ஒவ்வொரு ஊரிலும் ஒரு நூலகம் இருக்க வேண்டும்- நூலகம் இல்லாத ஊரில் குடியிருக்கக்கூடாது


ஈரோடு, ஆக.4- ஈரோடு, 03-08-2013 சனிக் கிழமை, மாலை 5.30 மணி யளவில் மக்கள் சிந்த னைப்பேரவை நடத்தும் ஈரோடு புத்தகத் திருவிழா வை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மாண்பமை நீதியரசர் பி.சதாசிவம் அவர்கள் புத்தகத் திருவிழா அரங் கினைத் திறந்து வைத்துப் பேருரை யாற்றினார். அவரது உரையில் குறிப் பிட்டதாவது:-

ஒவ்வொரு ஊரிலும் ஒரு நூலகம் இருக்க வேண்டும், நூலகம் இல்லாத ஊரில் குடியிருக்கக் கூடாது, திருமண நிகழ்ச்சி போன்றவற்றிற்கு நல்ல புத்தகம் அன்பளிப்பாக வழங்கலாம், சால்வை, மலர்கொத்து போன்ற வற்றைத் தவிர்க்கவேண்டும். ஒவ்வொரு வீட்டிலும் ஒரு சிறு நூலகமாவது இருக்கவேண்டும். நமது ஆசிரியர்களை மதிக்க வேண்டும், தாய், தந்தைக்கு அடுத்தபடி ஆசிரியர் கள்தான், நான் அரசு தொடக்கப்பள்ளியிலும்,அரசு உயர்நிலைப் பள்ளியிலும் படித்தேன். உயர்ந்த பதவி கிடைத்த வுடன் எனது கிராமத்திற்கு வந்து எனது ஆசிரி யர்களை ச்சந்தித்து வாழ்த்துப்பெற்றேன் என்று தெரிவித்தார். விழாவிற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் வே.க. சண்முகம் தலைமை தாங்கினார், தேசிய நல விழிப்புணர்வு இயக் கத்தின் தலைவர் எஸ்.கே. எம்.மயி லானந்தன் வாழ்த்துரை வழங்கி னார். அனைவரையும் வரவேற் றும் அறிமுகப் படுத்தியும், மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவர் ஸ்டாலின் குண சேகரன் உரையாற் றினார். இறுதியாக மக்கள் சிந்த னைப் பேரவைச் செயலாளர் பாலு நன்றி கூற, புத்தகத் திருவிழாவின் முதல் நாள் நிகழ்ச்சி இனிதே முடிவடைந்தது.