Search This Blog

8.8.13

தமிழ்நாட்டிலும் பூணூல் சிங்களவர்கள்!

தமிழ்நாட்டிலும் பூணூல் சிங்களவர்கள்!

தமிழ், தமிழன், தமிழர்நாடு என்றாலே பார்ப்பனர்களுக்குக் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. ஈழத் தமிழர் பிரச்சினையில் மறைந்த மணியன்களாக இருந்தாலும் சரி, உயிருடன் இருக்கின்ற திருவாளர் சோ ராமசாமியாக இருந்தாலும் சரி, சுருதி பேதம் இல்லாத எதிர்ப்பு இராகம்தான்.
தமிழ்நாட்டு மீனவர்கள் படுகொலை செய்யப் பட்டாலும், தாக்கப்பட்டாலும் சரி, அதற்கொரு எதிர் நியாயம் கைவசம் எப்பொழுதும் வைத்துக் கொண்டே இருப்பார்கள்.

இந்த வார துக்ளக்கில் கூட தமிழக மீனவர்கள் மீதுதான் குற்றப் பத்திரிகை. இலங்கைத் தரப்பில் தான் நியாயங்கள் இருப்பதாக வக்காலத்துப் போட்டு எழுதுகிறது துக்ளக்.

இலங்கை எல்லைக்குள் நுழைந்ததும் இலங்கைக் கடற்படை, இந்திய மீனவர்களைக் கைது செய்கிறது. சில நேரங்களில் கப்பற் படையினர் மற்றும் இலங்கை மீனவர்கள் தங்களைத் தாக்குவதாகத் தமிழக மீனவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். தமிழக மீனவர்கள் எல்லோருமே அப்பாவிகள் அல்லர்; விடுதலைப் புலிகள் இருந்த காலத்தில் அவர்களுக்கு டீசல், மருந்துகள், செயற்கைக் கால்கள் உள்ளிட்ட உபகரணங்களை கடத்திக் கொண்டு போய் கொடுத்தது ஒரு சில தமிழக மீனவர்கள்தான். இப்போதும் மீன்பிடித் தொழில் என்ற போர்வையில், இலங்கையில் கூடுதல் விலை கிடைக்கும் பொருட்களைக் கடத்திச் சென்று கொடுப்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

மேலும் தமிழக மீனவர்கள் எல்லை மீறுவதால், இலங்கை மீனவர்களின் மீன்பிடித் தொழிலுக்கும் பங்கம் விளைகிறது. இதனால் தமிழக மீனவர்கள்மீது நடவடிக்கை எடுக்கச் சொல்லி, அங்குள்ள மீனவர்கள் இலங்கை அரசை வலியுறுத்துகிறார்கள். இந்த நிலையில், தங்கள் எல்லைக்குள் வரும் தமிழகப் படகுகளை இலங்கைக் கடற்படை துரத்தி அடிப்பதை குறை கூற முடியாது என்று சற்றும் மனச் சான்று இன்றி, தமிழின வெறுப்பு வெறி நஞ்சைக் கக்குகிறது துக்ளக்.

தமிழக மீனவர்கள் கடத்தல் தொழிலைச் செய்கிறார்கள் என்று, கை நடுக்கமின்றி எழுதுகிறது. விடுதலைப்புலிகளுக்குப் பொருள்களைக் கடத்திச் சென்று கொடுத் தனர் என்றெல்லாம், இந்தச் சூழலில்கூட எழுதுகிறது. காரைக்கால் பகுதியைச் சேர்ந்த மீனவர் களை, வேளாங்கண்ணிக்கு அருகில் தமிழ்நாடு எல்லைக்குள் வந்து, இலங்கை மீனவர்கள் தாக்கிடவில்லையா? தாக்கியதோடு  அல்லாமல் இலங்கைக் கடற்படையினருக்கு, இலங்கை மீனவர்களால் தகவல் தெரிவிக்கப்பட்டு, தமிழக மீனவர்கள் 46 பேர்களை அய்ந்து படகுகளுடன் இலங்கைக்குக் கொண்டு சென்றதெல்லாம் சோ அய்யர்வாள்களுக்குத் தெரியவே தெரியாதா?

எல்லையைக் கடந்து சென்றதாகவே இருக்கட்டும்; என்ன செய்ய வேண்டும்? சட்டப்படி கைது செய்து நீதிமன்றத்தில்தானே நிறுத்த வேண்டும்.

இதுவரை 600-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனரே; இதுபற்றி ஒரே ஒரு வரி கண்டித்து எழுதியதுண்டா இந்தத் துக்ளக் கூட்டம்!

இலங்கை மீனவர்கள் தமிழக எல்லைக்குள் வந்து மீன்பிடிக்கிறார்களே - இந்திய கடற்படை அவர்களை சுட்டா கொன்றது?

தமிழக மீனவர்கள் படுகொலை செய்யப் படுவதுபோல் வேறு நாடுகளில் எல்லை தாண்டி மீன்பிடிக்கிற மீனவர்களை சம்பந்தப்பட்ட நாடுகளின் கடற்படை சுட்டுக் கொல்லு வதுண்டா?

தமிழ் நாட்டுக்குரிய கச்சத்தீவை பறி கொடுத்துவிட்டு, உதையும் படவேண்டும்; உயிரையும் பலி கொடுக்க வேண்டும் என்றால் இந்தக் கொடுமை தமிழர்களைத் தவிர உலகில் வேறு எந்த நாட்டு மக்களுக்காவது உண்டா?
சிங்கள இன வெறியர்களுக்குச் சற்றும் சளைக்காத இன வெறி பூணூல் கூட்டம் இங்கும் உண்டு. இதனைத் தமிழர்கள் மறந்து விடக்கூடாது!

                  ------------------------” விடுதலை” தலையங்கம்  8-8-2013

36 comments:

தமிழ் ஓவியா said...


அறிவோடு சிந்திக்க...புத்தர் அந்தக் காலத்திலேயே துணிந்து சொன்னார்; கடவுள் என்று ஒன்று இல்லை; அது இருக்கவேண்டிய அவசியமுமில்லை என்று சொன்னார். கடவுள் இல்லை என்பதை உணர்ந்ததால்தான் புத்தரால் அறிவோடு சிந்திக்க முடிந்தது.
(விடுதலை, 23.1.1968)

தமிழ் ஓவியா said...


ஈழ விடுதலை மாநாட்டை மதுரையில் நடத்தியது திராவிடர் கழகம்


நாம் தொடுத்துள்ள போராட்டம் ஓயாது!

மதுரையில் தமிழர் தலைவர் முழக்கம்

மதுரை, ஆக.8- நமது அமைப்பு வலிமை மிக்கது - ஈழத் தமிழர்களுக்காக நாம் தொடுத் துள்ள போராட்டம் வெற்றி கிடைக்கும் வரை ஓயாது என்றார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி.

மதுரையில் காட்ரோடு தலைமைத் தபால் அலுவலகம் எதிரில் இன்று (8.8.2013) காலை 10 மணியளவில் டெசோவின் ஆர்ப்பாட்டம் தமிழர் தலைவர் தலைமையில் நடைபெற்றது.
இந்த தமிழர் பெருந்திரள் ஆர்ப்பாட்டத்திற்குத் தலைமை வகித்து தமிழர் தலைவர் உரையாற் றுகையில் குறிப்பிட்டதாவது:

மதுரைக்கும் ஈழத் தமிழர் வாழ்வுரிமைப் போராட்டத்திற்கும் நீண்ட நெடிய வரலாறு உண்டு. டெசோ என்னும் அமைப்பு முதன் முதலில் மதுரையில் தான் தொடங்கப்பட்டது. திராவிடர் கழகம் சார்பாக ஈழ விடுதலை மாநாடு மதுரையில் நடைபெற்றது. குமரிநாடன் என்னும் ஈழத் தோழரே மாநாட்டில் கொடியை ஏற்றினார். இதில் லட்சக் கணக்கான மக்கள் கலந்து கொண்ட அந்த மாநாடு மதுரையில் நடைபெற்றதுண்டு.

மீண்டும் டெசோ புதுப்பிக்கப்பட்டு அதன் சார்பாக ஆர்ப்பாட்டம் இன்று (8.8.2013) நடை பெறுகிறது. காமன்வெல்த் மாநாடு இலங்கையிலே நடைபெற உள்ளது. அடுத்து இரு ஆண்டுகளுக்கு காமன்வெல்த் அமைப்பின் தலைவராக ராஜபக்சே இருக்கப் போகிறார். கனடா போன்ற நாடுகள் அங்கு நடத்தக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்தன. அங்கு காமன்வெல்த் மாநாடு நடந்தால் இந்திய அரசு சார்பாக பிரதமரோ, மற்ற யாருமோ கலந்து கொள்ள கூடாது.

டெசோ மீண்டும் புதுப்பிக்கப்பட்டபோது சிலர் கேலி செய்தார்கள். இதனால் என்ன பலன் என கேட்டார்கள். ஆனால் டெசோவின் சார்பாக ஈழத் தமிழர் வாழ்வுரிமைக்காக, தொடர்ச்சியான போராட்டங்கள் நடைபெறுகின்றன.

ஈழத் தமிழர்கள் மத்தியில் வாக்கெடுப்பு தேவை! உலகளவில் உள்ள ஈழத் தமிழர்கள் எல்லாம் வாக்களித்து எத்தகைய அரசியல் என்பதை முடிவு செய்ய வேண்டும். இதுதான் இறுதி முடிவு . ஆனால், அதற்கு இடைப்பட்ட நிலையில் கொடுங்கோலன் இராஜபக்சேவும், அவரது சகோதரர்களும் செய்கின்ற ஈழத் தமிழர் ஒழிப்பு நிகழ்வுகளைத் தடுக்க வேண்டும். சிங்களவர்களை ஈழப் பகுதியில் குடியேற்றுவதைத் தடுக்க வேண்டும். அன்றைய மத்திய அரசால் ராஜீவ் ஜெயவர்த்தனே ஒப்பந்தம் போடப்பட்டது. திராவிடர் கழகம் அப்பொழுதே அதில் உள்ள குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி அதனை எதிர்த் தது. ஆனால் அந்த ஒப்பந்தத்தில் சொல்லப்பட்ட 13ஆவது திருத் தத்தை இன்றும்கூட செயல்படுத்த மறுக்கிறது இலங்கை அரசாங் கம்! அதற்கு துணை போகிறது இந்திய அரசாங்கம்.

தமிழ் ஓவியா said...


ஆர்ப்பாட்டம் என்பது வெறும் சொல் அல்ல


போர்ப்பாட்டின் முன்னறிவிப்பு!

தமிழர் பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தில் கலைஞர் முழக்கம்!

சென்னை, ஆக.8- இந்த ஆர்ப்பாட்டம் என்ற அந்தச் சொல் இது வெறும் சொல் லல்ல; ஆர்ப்பாட்டம் என்பது போர்பாட்டின் முன்னறிவிப்பு என்றார் டெசோ தலைவர் கலைஞர்.

சென்னை - வள்ளுவர் கோட் டம் அருகில் டெசோ சார்பில் இன்று (8.8.2013) நடைபெற்ற தமிழர் பெருந்திரள் ஆர்ப்பாட் டத்திற்குத் தலைமை வகித்து தி.மு.க. தலைவர் டெசோ தலை வர் கலைஞர் உரையாற்றியதாவது:

குறுகிய காலத்தில் அறிவிக்கப் பட்டு தமிழர் பெருஞ்சேனை இந்தியத் திருநாட்டின் தலை நகராம் புதுடெல்லியிலும் - தமிழகத்தின் தலைலநகராம், சென்னை மாநகரத்திலும், மற்றும் மதுரையிலும், திருச்சியிலும், தஞ் சையிலும், நெல்லையிலும் இவ் வாறாக பல்வேறு மாவட்டத் தலைநகரங்களில் இலட்சக் கணக்கில் கூடி, இந்த ஆர்ப்பாட் டப் போர்ப்பாட்டை முழங்கிக் கொண்டிருக்கிற காட்சியை நான் கண்டும், எண்ணிப் பார்த்தும் - தமிழர்கள் எழுச்சிப் பெற்றிருக் கிறார்கள்; இந்த எழுச்சிக்கு பதில் சொல்ல வேண்டியவர்கள், டெல்லியிலே மத்திய அரசிலே வீற்றிருக்கின்றார்கள். விளக்கம் பெற வேண்டிய தமிழர்கள் வெளி நாடுகளிலே வாழ்ந்து கொண்டி ருக்கிறார்கள்.

அவர்களுக்கெல்லாம் நாம் சொல்லப் போகின்ற பதில் என்ன? நாம் எடுத்துக் காட்டவிருக்கின்ற நிலை என்ன? என்பதை விளக்கு கின்ற வகையில் எனக்கு முன்னால் இங்கே உரை நிகழ்த்திய நம் முடைய பேராசிரியர் சுப.வீ. அவர் களும், பொன்முடி அவர்களும், அன்பழகன், எம்.எல்.ஏ., அவர் களும், பூங்குன்றன் அவர்களும், பெருங்கவிக்கோ அவர்களும் எடுத்துரைத்திருக்கிறார்கள்.

1956ஆம் ஆண்டிலிருந்து நான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இலங்கைத் தமிழர்களுக் காக நிறைவேற்றப்பட்ட தீர்மா னங்களில், பேரறிஞர் அண்ணா அவர்களின் ஆணைப்படி பங்கேற் றவன். அதற்குப் பிறகு அண்ணா அவர்களுடைய ஆலோசனைப்படி பல்வேறு போராட்டங்களில், இலங்கைத் தமிழர்களுக்காக ஈடு பட்டவன். அண்ணா அவர்களின் மறைவுக்குப் பிறகும் கூட, இலங் கைத் தமிழர்களுக்காக நடை பெற்ற தமிழ்நாட்டுக் கிளர்ச்சி எதுவாயினும், அந்தக் கிளர்ச்சி களில் திராவிட முன்னேற்றக் கழகம் ஈடுபட்டதையும், அதன் தொடர்ச்சியாகத் தான் இன்றைக்கு உங்களையெல்லாம் சந்திக்கின்ற வாய்ப்பைப் பெற்றிருக்கிறது என்பதையும் நீங்கள் எல்லாம் நன்கறிவீர்கள்.
இதைப் பற்றி யார் யாரோ ஏதேதோ பேசுகிறார்கள் என்று முன்னால் பேசியவர்கள் குறிப்பிட் டார்கள். அதைப் பற்றி நான் கவலைப்படவில்லை. ஏனென்றால் அவர்கள் யார் யாரோ என்ற வரி சையிலே இருப்பவர்கள் (கை தட்டல்) அதனால் நான் கவலைப் படவில்லை.

தமிழ்நாடெங்கும் ஆர்ப்பாட்டம்!

உண்மையான தமிழர்கள் - தமிழ் ரத்தத்திலே ஊறியவர்கள் - தமிழ் ரத்தத்தின் எழுச்சி காரண மாக உணர்ச்சியைப் புரிந்தவர்கள் - தமிழர்களுக்கு வாழ்வு வேண்டு மென்று துடிப்பவர்கள் - தமிழன், தன்மானம் உள்ளவனாக உலவிட வேண்டும் என்று எண்ணுகிற வர்கள் இன்னமும் அழிந்து விட வில்லை; அவர்கள் இருக்கிறார்கள் என்ற எண்ணத்திலே தான் - அந்த நம்பிக்கையிலே தான் ஒரு பெரும் போராட்டம் இலங்கைத் தீவிலே நடைபெற்று முடிந்த பிறகும் - தம்பி பிரபாகரன் போன்றவர்களை இழந்து, அவர்களுடைய குடும்பத் தையும் இழந்து, அவர்களுடைய உற்றார் உறவினர்களையும் இழந்து, மாபெரும் தலைவர்கள் பலரை இலங்கையிலே இழந்து - இனி யாவது, இதற்குப் பிறகாவது, அனைத்திந்திய அளவிலே மாத் திரமல்ல; அனைத்து நாடுகளின் அளவிலும் நம் மீது இரக்கம் காட்டி, நம் மீது அனுதாபம் தெரிவித்து, நம்மை வாரி அணைத்து, வஞ்சகர்களால் வீழ்ந்த இந்த இனத்தை மீண்டும் தலைதூக்கி விட, கை தூக்கி விட வரமாட்டார்களா என்ற எண்ணத்தோடு தான் இன்றைக்கு நாம் இங்கே மாத்திரமல்ல; தமிழகத்தின் வீதி தோறும், தெருக் கள் தோறும், மைதானங்கள் தோறும் நடை பெறுகின்ற இது போன்ற ஆர்ப்பாட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறோம்.

தமிழ் ஓவியா said...

அறைகூவல்தான்!

இது ஏதோ திராவிட முன்னேற்றக் கழகத்தின் விளம்பரத்திற்காக அல்ல; இது ஒரு கட்சியினுடைய குறிப்பிட்ட கொள்கை அல்ல. இது தமிழர் களுடைய குரலை எதிரொலிக்கின்ற நிகழ்ச்சி. கடந்த சில நாட்களுக்கு முன்பு நம்முடைய டெசோ இயக்கத்தின் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை - குறிப்பாக நான்கு தீர்மானங்களை - செயல் வடிவம் கொடுக்க தமிழர்களுக்கு நினைவூட்டுவதற்காக நடைபெறு கின்ற நிகழ்ச்சி தான் இந்த ஆர்ப்பாட்டமாகும். டெசோ கூட்டத்தில் கழகத்தின் சார்பில் நானும், திராவிடர் கழகத்தின் சார்பில் தமிழர் தலைவர் வீரமணியும், விடுதலைச் சிறுத்தைகள் சார்பாக தம்பி திருமாவளவனும், திராவிடர் இயக்கத் தமிழர் பேரவை சார்பில் பேராசிரியர் சுப. வீரபாண் டியனும், டெசோ உறுப்பினர்களும் கலந்து கொண்ட கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் - இலங்கை அரசமைப்புச் சட்டத்தின் 13ஆவது திருத்தத்தை முழுமையாக நிறைவேற்ற வலியுறுத்தியும் - இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக் கூடாது என்பதை வற்புறுத்தியும் - தமிழ்நாட்டு மீனவர்களைப் பாதுகாக்க உடனடி யாக வெறும் பேச்சு இல்லாமல், தீவிர நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதைச் சுட்டிக் காட்டியும் - இலங்கையில் தமிழர் பகுதிகளில் சிங்களவர்களின் குடியேற்றம் தொடர் நிகழ்ச்சியாக ஆகி விட்டதைக் கண்டித்தும், அதைத் தடுக்க வேண்டுமென்பதை இந்திய அரசுக்கு எடுத்துக் காட்டியும் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் மொத்த வடிவம் தான் - அதைச் செயல்படுத்து வதற்கான அடையாளம் தான் - அந்த அறைகூவல் தான் - இந்த எழுச்சி மிக்க ஆர்ப்பாட்டம் - தமிழர் பெருந்திரள் என்பதையும் நான் சுட்டிக்காட்டக் கடமைப்பட்டிருக்கிறேன்.

இதற்கும் இந்தியப் பேரரசு வாய் மூடி மவுனமாக இருக்குமேயானால், நாம் வேறு யாரிடத்திலே சென்று, துணை புரியுங்கள் என்று கேட்பது? உதவி செய்யுங்கள் என்று கேட்பது? என்பதையெல்லாம் மிகுந்த மன உருக்கத்தோடு, மன வேதனையோடு நான் தெரிவித்துக் கொள்ளக் கடமைப்பட்டி ருக்கிறேன்.

ஏதோ சென்னை மாநகரத்திலே கூடினார்கள், திருச்சியிலே, மதுரையிலே, தஞ்சையிலே, நாகை யிலே, நெல்லையிலே, கோவையிலே, சேலத்திலே தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கூடினார்கள், ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள் என்ற அளவோடு - இதை ஒரு சாதாரண ஆர்ப்பாட்டமாக இந்தியப் பேரரசும் கருதக் கூடாது. இந்தியப் பேரரசின் தயவை நம்பி யிருக்கின்ற இலங்கை அரசும் எண்ணக் கூடாது. இலங்கை அரசு, ஒரு ஆணவம் பிடித்த அரசாக இன்றைக்கு இருக்கிறது. தனக்கு இருக்கின்ற ஆணவத்தால், தனக்கு இருக் கின்ற வலிமையால், தனக்கு சில நாடுகளிலே இருந்து கிடைக்கின்ற உதவியினால், அதை மூலதனமாக வைத்து, தமிழர்களை ஒடுக்கி, ஈழத்தமிழர்களுக்கு எந்தவிதமான நல்வாழ்வும் வழங்கிடாமல், அவர் களை நசுக்கி, தங்கள் எதேச்சாதிகாரத்தைத் தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கலாம் என்று இலங்கையிலே இருக்கின்ற அரசு கருதுமேயானால் - அந்த ராஜபக்சே அரசுக்கு நாம் தருகின்ற எச்சரிக்கையாக, இன்னும் எத்தனை தமிழர் களுடைய பிணங்கள் உங்களுக்குத் தேவை? ஆனால் தமிழனுக்குத் தேவை, தமிழ்நாட்டு மக்களுக்குத் தேவை, அவர்கள் வாழ்ந்த பொன்னாடு - ஒரு காலத்திலே எந்த மண்ணைத் தனக்குச் சொந்தமாக ஆக்கிக் கொண்டு வாழ்ந்தானோ அந்த நாட்டை, அவன் உரிமையோடு வாழ்வதற்கு அனுமதி தாருங்கள்! அந்த அனுமதியைப் பெறத் தான் திரா விட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் - தமிழகத் திலே இருக்கின்ற வேறு பல இயக்கங்களின் சார் பிலே - எந்தப் பெயரிலே அந்த இயக்கங்கள் இருந் தாலும் - அவர்கள், ஈழத் தமிழர்களுக்காக, இலங் கையிலே அவதிப்பட்ட தமிழர்களைத் தொடர்ந்து அவதிப்படாமல் காப்பதற்காக பாடுபடுகின்ற எந்த இயக்கமாக இருந்தாலும், அந்த இயக்கங்களின் சார்பிலே நான் கேட்டுக் கொள்ள விரும்புகிறேன். அனைத்துத் தமிழர்களும், எல்லா இயக்கங்களும் இந்தச் சிந்தனையிலே இருந்தாலும், செயல் பாடுகள் வேறாக இருக்கலாம், ஒரே சிந்தனை தான், இலங்கைத் தமிழர்களை வாழ வைக்க வேண்டும் என்ற சிந்தனை தான்! அந்தச் சிந்தனைக்கு இடம் தராமல் தடுக்கின்றவர்கள் யாராக இருந்தாலும் அந்தத் தடையை உடைத்தெறிந்து தமிழர் படை முன்னேறும், முன்னேறும், முன்னேறும் (கை தட்டல்) என்று நான் சொல்லி - இன்றில்லா விட்டால் நாளை, நாளை தவறினால் மறுநாள் - அதுவும் தவறினால் என்றோ ஒரு நாள் திரா விடர்கள், தமிழர்கள், இலங்கையிலே வாடுவோர், இலங்கையிலே சீரழிவோர் இவர்கள் எல்லாம் புத்துயிர் பெற்றுக் கிளம்ப, காலம் நிச்சயமாக உருவாகும். அப்படிப்பட்ட ஒரு காலத்திற்கு இன்றைக்கு நாம் அச்சாரம் போடுகின்ற நாள் தான் இந்த நாள் என்பதை உங்கள் அனைவருக்கும் தெரிவித்து, குறிப்பாக இதனை நம்முடைய மத்திய அரசுக்குத் தெரிவித்து - எவ்வளவு நாட்களுக்கு மத்திய அரசு மவுனமாக இருக்கப் போகிறது?

தமிழ் ஓவியா said...

ஒவ்வொரு நாளும் தமிழக மீனவர்கள் சுடப் படுகிறார்கள், கொல்லப்படுகிறார்கள், கடத்தப் படுகிறார்கள் - அவர்களுடைய மீன்கள் பறிக்கப்படு கின்றன. அவர்களுடைய படகுகள் நொறுக்கப்படு கின்றன - அவர்களுடைய மண்டைகள் உடைக்கப் படுகின்றன. இதை இன்னும் எத்தனை நாளைக்கு தமிழ்நாட்டு மீனவர்கள் தாங்கிக் கொண்டிருக்க முடியும்? மீனவர்கள் மாத்திரமல்ல; தமிழ்நாட்டு மக்களும் எவ்வளவு நாளைக்குத் தாங்கிக் கொண் டிருக்க முடியும்? ஆகவே பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு என்பதை எங்களை ஆட்டிப் படைப்போர், ஆணவத்தின் காரணமாக ஓர் அரசை நடத்த முடியும் என்று எண்ணியிருப்போர், தயவு செய்து சிந்தித்துப் பார்த்து செயல் பட வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

போர்ப்பாட்டின் முன்னறிவிப்பு!

இந்த ஆர்ப்பாட்டம் என்ற அந்தச் சொல், இது வெறும் சொல் அல்ல, ஆர்ப்பாட்டம் என்பது போர்ப்பாட்டின் முன்னறிவிப்பு (கைதட்டல்) என்பதை இங்கே நான் அவர்களுக்கு தெரிவித்து, இந்திய அரசு கேளாக்காதாக, தன்னுடைய காது களை வைத்துக் கொண்டிருக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டு, வருகின்ற காமன்வெல்த் மாநாட்டில், நீங்கள் இலங்கைக்குச் சென்று கலந்து கொண்டால், அது திராவிடர்களை, தமிழர்களை இழிவுபடுத்துகின்ற, கேவலப்படுத்துகின்ற ஒரு செயல் என்பதை எச்சரிக்கையாக அவர்களுக்கு எடுத்துச் சொல்லி, அந்தச் செயலுக்கு நீங்கள் ஆட்பட வேண்டாம் என்று அவர்களுக்கு அறிவுரை கூறி, இந்த அறிவுரையை நீங்கள் கேட்காவிட்டால் - ஏதோ ஆபத்து ஏற்படும் என்று நான் அவர்களை அச்சுறுத்த விரும்பவில்லை எதிர்காலத் தமிழ் இனம் உங்களைச் சபிக்கும் என்பதை மாத்திரம் உங்களுக்குக் கோடிட்டுக் காட்டி - அந்த நிலைக்கு நீங்கள் உங்களை ஆளாக்கிக் கொள்ள வேண்டாம் என்று கேட்டுக்

கொள்கிறேன். நான்கு தீர்மானங்கள்

டெசோ இயக்கத்தின் சார்பில் நிறைவேற்றப் பட்ட நான்கு தீர்மானங்களை நாங்கள் வற்புறுத்தி யிருக்கிறோம். முதலாவதாக இலங்கை அரசமைப்புச் சட்டத்தின் 13ஆவது திருத்தத்தை முழுமையாக நிறைவேற்ற வலியுறுத்தியிருக் கிறோம். அரை குறையாக நிறைவேற்றினால் அதனால் பயனில்லை. அதனால் தான் தீர்மான வாசகத்திலே மிகுந்த எச்சரிக்கையோடு, இலங்கை அரசமைப்புச் சட்டத் தின் 13ஆவது திருத்தத்தை முழுமையாக நிறைவேற்ற வலியுறுத்தி இருக்கிறோம். இலங்கையில் நடை பெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளவே கூடாது என்பதை வற்புறுத்தி ஒரு தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறோம். தமிழக மீனவர்களைப் பாதுகாக்க உடனடியாக முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்பதைச் சுட்டிக் காட்டி ஒரு தீர்மானத்தை வலியுறுத்தியிருக்கிறோம்.

தமிழ் ஓவியா said...

ஆறுதல் வெற்றி!

நான் இந்தக் கூட்டத்திலே கலந்து கொண்டு, நம்முடைய முடிவுகளை அறிவிப்பதற்கு முன்பே கூட - நேற்றையதினமே கூட, சிங்கள அரசின் கொடு மைகளைப் பற்றி - நாம் எடுத்து வைக்கின்ற கருத்து களையெல்லாம் எண்ணிப் பார்த்து - இந்திய அரசு, இலங்கைத் தூதரை அழைத்துப் பேசி கண்டனத் தைத் தெரிவித்திருப்பதாக செய்திகள் வந்திருக் கின்றன. தமிழக மீனவர்களின் துயரங்களைக் குறித்தெல்லாம் எடுத்துரைக்கப்பட்டிருக்கின்றன.

அந்தச் செய்திகள் உண்மையாக இருக்குமேயா னால், அது நமக்குக் கிடைத்துள்ள முதல் ஆறுதல் வெற்றி என்பதை மாத்திரம் எடுத்துச் சொல்லி, இலங்கையில் தமிழர் பகுதிகளில் சிங்களக் குடியேற்றம் - நம்முடைய பேராசிரியர் சுப. வீரபாண்டியன் எடுத்துக்காட்டியதைப் போல ஒரு புதிய மாவட்டத்தையே சிங்களவர்களுக்காகப் புதிதாக உருவாக்கியிருக்கிறார்கள். திரிகோண மலைக்கும், வவுனியாவிற்கும் இடையே வெளிஓயா என்ற ஒரு மாவட்டத்தை - அதற்கு இருந்த தமிழ் பெயரையே மாற்றி விட்டு - சிங்களவர்களுக்காக ஒரு புதிய மாவட்டத்தை உருவாக்கியிருக்கிறார்கள் என்றால், இன்னமும் சில நாட்கள் நாம் அமைதியாக இருந்தால், பெய்கிற மழை பெய்து கொண்டே இருக்கட்டும் என்று நாம் அதைத் தடுப்பதற்கோ, தாங்குவதற்கோ தயாராக இல்லாமலிருந்தால் - இலங்கைத் தீவு என்ற பெயர் தமிழ்நாட்டிற்கு சூட்டப்பட்டு விடும் - தமிழ் நாட்டின் பெயரே மாறி விடும் - தமிழ்நாட்டுக்கு பெயரே இல்லாமல் ஆகி விடும் - சேரன் ஆண்டான், சோழன் ஆண்டான், பாண்டியன் ஆண்டான் என்றெல்லாம் இருந்த பெயருக்கு இழுக்கு ஏற்பட்டு விடும். இழப்பு ஏற்பட்டு விடும். அந்தப் பெயர் நம்முடைய வரலாற்றிலிருந்து நீக்கப்பட்டு விடும். அதற்கு நாம் துணை போகப் போகிறோமா? வேடிக்கை பார்க்க போகிறோமா? என்கிற கேள்வி களுக்கெல்லாம் விடையளிக்க வேண்டிய கட்டாயத்தில் தமிழா, நீ இருக்கிறாய், தமிழனே நீ இருக்கிறாய், ஒவ்வொரு தமிழச்சியும், தமிழ்நாட்டில் இன்றைக்கு எழுப்பப்படுகின்ற இந்தக் குரலுக்கு மதிப்பளித்து, இதனை எச்சரிக்கையாகக் கருதி, இந்த எச்சரிக்கை வீண் போகாமல், இந்திய சர்க்கார், மத்திய சர்க்கார் முன் வர வேண்டும், பாடுபட வேண்டும், தமிழர்களைக் காப்பாற்ற, இந்திய மீனவர்களைக் காப்பாற்ற, தமிழ்க் கலையைக் காப்பாற்ற, கலாச்சாரத்தைக் காப்பாற்ற, எங்கள் பண்பாட்டைக் காப்பாற்ற மத்திய அரசே முன் வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டு, இந்த நிகழ்ச்சியிலே பெருந்திரளாக வந்து கலந்து கொண் டிருக்கின்ற உங்கள் அனைவருக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்து விடைபெறுகிறேன் என்று கூறினார் கலைஞர் அவர்கள்.

தமிழ் ஓவியா said...


அட, மூடத்தனமே!


வேப்பனஹள்ளி, ஆக.9- கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் கடந்த சில மாதங்களாக சிக்குன் குனியா காய்ச்சலால் ஏராளமான மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். ஏராளமானோர் வீடுகளிலேயே முடங்கினர்.

நோயிலிருந்து மக்கள் விடுபடவும், மழை பெய்து வறட்சி நீங்கவும் குருபரப்பள்ளி அருகே உள்ள கொல்லப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த மக்கள் ஊரை காலி செய்து விட்டு காட்டில் குடியேறி சிறப்பு வழிபாடு நடத்த முடிவு செய்தனர். அதன்படி, நேற்று காலை தங்களது வீடுகளைப் பூட்டி விட்டு, வனப்பகுதிக்குச் சென்றனர். அப்போது, சாமி சிலைகளையும் அலங்கரித்து தங்களுடன் எடுத்துச் சென்றனர். காட்டுக்குள் மாரியம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபட்டனர். தங்களது வளர்ப்புப் பிராணிகளான ஆடு, கோழி, நாய் ஆகியவற்றை தங்களுடன் பிடித்துச் சென்றனர். இது தொடர்பாக ஊர்ப் பெரியவர்கள் கூறும் போது, மக்களுக்கு பிணி மற்றும் வறட்சி ஏற்பட்டால் இவ்வாறு கிராம மக்கள் அனைவரும் கிராமத்தை விட்டு காலி செய்து வனப்பகுதிக்கு சென்று மாரியம்மனுக்கு பொங்க லிட்டு வழிபடு வதை எங்களது மூதாதையர்கள் வழக்கமாகக் கொண்டிருந்தனர். மூதாதையரை போன்று நாங்களும் இந்த வழிபாட்டினை மேற்கொண் டுள்ளோம் என்றனர். இதையடுத்து, மாலை அனை வரும் சாமி சிலைகளுடன் ஊர் திரும்பினராம்.

ஒரு சந்தேகம். இவ்வூர் மக்கள் நோய்க்கு மருந்தே சாப்பிட மாட்டார்களா?

தமிழ் ஓவியா said...


இந்நாள்... இந்நாள்....
எழுத்துரு அளவு Larger Font

தந்தை பெரியார் அவர்களின் தனிச் செயலாளராகப் பணியாற்றி - தனி வாழ்வைத் துறந்து பொதுப் பணிக்கே தம்மை அர்ப்பணித்துக் கொண்ட புலவர் கோ. இமயவரம்பன் அவர்களின் நினைவு நாள் இந்நாள்! (1994).

தமிழ் ஓவியா said...


புறக்கணிக்கச் சொல்லுவது பொருத்தமான கருத்தே!டெசோ சார்பில் நேற்று தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டத் தலைமை இடங்களிலும் தமிழர் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் வெகு எழுச்சியுடன் நடைபெற்றுள்ளது.

அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர் கோடிக்கணக்கில் இருக்கும் என்பதில் அய்யமில்லை.

நேற்றைய ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாட்டுக்கு வந்து நேரடியாக, கலந்து கொள்ள முடியாத தமிழர்கள் அதே நேரத்தில் இனவுணர்வோடு - சிந்தனையை எல்லாம் தமிழ் நாட்டை நோக்கிச் செலுத்திக் கொண்டிருப்பவர்களும் கோடானு கோடி பேர்கள்.

தமிழ்நாடு அரசின் காதுகளும், மத்திய அரசின் காதுகளும், ஏன் ராஜபக்சேயின் ஆட்களும் (சோ ராமசாமி, குருமூர்த்தி வகையறாக்கள்) நேற்று தமிழ்நாடு தழுவிய அளவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் - அதில் வெளிப்படுத்தப்பட்ட உணர்வு அலைகள் - தலைவர்கள் ஆற்றிய உரையின் வீச்சுகள் - முழக்கங்கள் - மக்கள் மத்தியிலே அவற்றின் எதிரொலி - இவற்றை அறிந்த பிறகாவது தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்ளாமல், ஈழத் தமிழர் பிரச்சினையில் மக்கள் மத்தியில் வேர்ப்பிடித்து நிற்கும் உணர்வின் கூர்மையான ஆழத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.

நேற்று தொலைக்காட்சிகளில் இந்த ஆர்ப் பாட்டத்தைப் பற்றிய விவாதங்கள் நடைபெற்றன. அதில் எதிர் தரப்பில் வைக்கப்பட்ட ஒரு கருத்து. இலங்கையில் நடைபெறவிருக்கும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொண்டால்தான் ஈழத் தமிழர்கள்பற்றி எடுத்து வைக்கப்படக் கூடிய வாய்ப்புக் கிட்டும்; போகாவிட்டால் அந்த வாய்ப்புப் பறி போகும் அல்லவா என்று காங்கிரஸ் தரப்பில் எடுத்துக் கூறப்பட்டது.

இதில் முதலாவது காமன்வெல்த் மாநாட்டில் ஈழத் தமிழர்களின் பிரச்சினைகள் பற்றி இந்தியா எடுத்து வைக்கும் என்பதற்கு என்ன உத்தரவாதம்? அப்படி நம்புவதற்கு - இதற்குமுன் ஈழத் தமிழர் பிரச்சினையில் இந்தியா நடந்து கொண்டு வந்திருக்கும் போக்கும் அணுகு முறைகளும் நம்புவதற்கான எண்ணத்தை ஏற்படுத்தவில்லையே!

அய்ரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த 17 நாடுகள் ஒரு தீர்மானத்தை முன்மொழிந்தன. இலங்கையின் போர்க் குற்றங்களை முன்னிறுத்தி இலங்கை அரசின்மீது விசாரணை நடத்தப்பட வேண்டும்; போரினால் பாதிக்கப்பட்ட ஈழத் தமிழர்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வு எட்டப்பட வேண்டும் என்பதுதான் அந்தத் தீர்மானம் (26.5.2009) அப்பொழுது இந்தியாவின் பிரதிநிதி கோபிநாத் அச்சங்குளங்கரே அவையில் என்ன பேசினார்?

இந்தக் கூட்டமே அவசியமற்றது - உலகின் மிகப் பெரிய பயங்கரவாத அமைப்பைப் போரில் தோற்கடித்ததற்காக இலங்கை அரசைப் பாராட்ட வேண்டுமே தவிர, தண்டிக்க, கண்டிக்க முயற்சி எடுக்கக் கூடாது என்று பேசிடவில்லையா?

பேசியதோடு மட்டுமல்லாமல், அந்தத் தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது, இலங்கைக்கு ஆதரவாகப் பாராட்டுத் தீர்மானம் நிறைவேறிட இந்தியா கை கொடுக்கவில்லையா?

இந்த நிலையில் உள்ள இந்தியா, இலங்கையில் நடக்க இருக்கும் காமன்வெல்த் மாநாட்டில், ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமைக்காகவும், ஈழத் தமிழர்களுக்கு எதிராக அங்கு இலங்கை அரசின் செயல்பாடுகளைக் கண்டிக்கவுமான, கருத்துக் களைச் சொல்லும் என்று எதிர்பார்க்க முடியுமா?

இந்தியா என்ற 120 கோடி மக்களைக் கொண்ட ஒரு பெரிய நாடு காமன்வெல்த் மாநாட்டைப் புறக்கணிக்கிறது என்றால், அதனால் ஏற்படக் கூடிய தாக்கம் இலங்கை அரசுக்கு நெருக்கடி யையும், பேரழுத்தத்தையும் கொடுக்குமே!

நேற்றைய டெசோ ஆர்ப்பாட்டத்தில் இலங்கை காமன்வெல்த் மாநாட்டினை இந்தியா புறக் கணிக்க வேண்டும் என்று வைத்த கோரிக்கை மிகச் சரியானதே!

தமிழ் ஓவியா said...


தமிழருக்குக் கேடு


இந்நாட்டில் அரசியல் கிளர்ச்சி என்னும் பேரால் நூறு ஆண்டுகளாக நடந்து வந்திருப்பதன் உள் தத்துவமே பார்ப்பனனின் உத்தியோகம், பதவி, ஆதிக்கம் இவற்றுக்காகவே தவிர, அரசியல் நீதியையோ, மனிதத் தர்மத்தையோ அடிப்படையாகக் கொண்டவை அல்ல. பார்ப்பனர் ஆதிக்கம் கிடைத்த போதெல்லாம் தமிழர்க்குக் கேடாகவே நடந்துள்ளனர்.

- (விடுதலை, 5.4.1965)

தமிழ் ஓவியா said...


பெரியார் தொலைக்காட்சி வேண்டும்


ஆசிரியருக்குக் கடிதம்

பெரியார் தொலைக்காட்சி வேண்டும்

ஆன்மீகவாதிகள் தனித்தனி தொலைக்காட்சி மூலம் ஆன்மீக பொய்களை மக்களுக்கு பரப்பி வருகின்றனர். ஆனால் அய்யாவின் சிந்தனைகள் பற்றி பெரியார் என்ற பெயரில் தனி தொலைக்காட்சி ஒளிபரப்பு ஏற்பாடு செய்ய வேண்டும். ஆன்மீக சிந்தனைகள் அதிகமாக இருப்பதால் ஒரு சமயம் சிறந்த நாடு அழிந்து போக சந்தர்ப்பம் அதிகம் இருக்கிறது.

இதற்கு எதிர் மறையாக பல கூட்டம் நடைபெற்ற பொழுதும், பிரச்சாரம் இருந்தாலும் இது மக்கள் இடம் போய் சேருவதே இல்லை. எல்லோரும் விடுதலை, முரசொலி, உண்மை, பம்பாய் தமிழ் இலக்கிய பத்திரிகைகளை படிப்பது இல்லை.

இலவச பதிப்பகம், குறைந்த விலை புத்தகம் போன்றவை மக்களிடம் போய் சேருவது இல்லை. ஆனால் தொலைக்காட்சி மட்டுமே மக்கள் மனதில் பதியும் நாடகம், அய்யாவின் சொற்பொழிவுகள், காவியம், கதை, விளக்கம் போன்றவை சினிமா கலக் காமல் தனி ஒளிபரப்பு அவசியம் இதுபற்றி தாங்கள் ஒரு நல்ல முடிவு எடுக்க வேண்டுகிறேன்.

மேலும் மிக விரைவில் தனி தொலைக்காட்சி ஒளிபரப்பு மக்களுக்கு தேவை. மன் னிக்கவும். நாங்கள் பம்பாயில் இருப்ப தாலும் தமிழ் அதிகம் எழுதுவதற்கு வாய்ப்பு இல்லாததால் தமிழ் எழுத்து களில் தவறுகள் இருக்க நேர்கிறது மன்னிக்கவும்.

- வி.பி. மோகன், கல்யாண் மும்பை

தமிழ் ஓவியா said...


இலங்கை தமிழர்களுக்காக தொடர்ந்து குரல் கொடுப்போம் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் பேச்சு


திருச்சி, ஆக.9- ஈழத் தமிழர்களுக்காக டெசோ தொடர்ந்து குரல் கொடுக்கும் என்று திருச்சியில் நடந்த டெசோ ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

இலங்கையில் அந்நாட்டு அரசமைப்பு சட்டத் தின் 13 ஆம் திருத்தத்தை முழுமையாக நிறைவேற்ற வேண்டும். இலங்கையில் நடைபெற உள்ள காமன் வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக் கூடாது. தமிழக மீனவர்களைப் பாதுகாக்க வேண் டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, திருச்சி சந்திப்பு காதி கிராப்ட் அருகில்டெசோ அமைப் பின் சார்பில் நேற்று (8.8.2013) ஆர்ப்பாட்டம் நடந்தது.

முன்னாள் அமைச்சர்கள் கே.என்.நேரு, செல்வ ராஜ் முன்னிலை வகித்தனர். திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமை வகித்து பேசியதாவது:

சென்னையில் கடந்த 16 ஆம் தேதி டெசோ கலந்தாய்வு கூட்டம் திமுக தலைவர் கலைஞர் தலை மையில் நடந்தது. அதில் இலங்கையில் அந்நாட்டு அரசமைப்பு சட்டத்தின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நிறைவேற்ற வேண்டும். இலங்கையில் நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக் கூடாது. தமிழக மீனவர்களை பாதுகாக்க வேண்டும்.

தமிழர்கள் பகுதியில் சிங்களர்கள் குடியேறுவதை தடுக்க வேண்டும் என்ற 4 தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டது. நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை மக்களிடம் எடுத்துச்செல்ல முடிவு செய்யப்பட்டது. அதன்படி தமிழக மக்கள் மற்றும் மத்திய அரசு கவனத்திற்கு எடுத்து செல்லும் வகையில் டெசோ சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

ராஜீவ்காந்தி ஜெயவர்த்தனே இடையே இலங்கை யில் மாகாண கவுன்சில் பகுதியில் அதிகாரம் வழங்குவது தொடர்பாக 13 ஆவது சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டது. தற்போது அந்த ஒப்பந் தத்தை நீர்த்துப்போகும் வகையில் இலங்கை அதிபர் ராஜபக்சே செயல்பட்டு வருகிறார்.

இதை நிறை வேற்ற இலங்கை அரசுக்கு பிரதமர் மன்மோகன் சிங் அழுத்தம் கொடுக்க வேண்டும். ஆனால் 13 ஆவது சட்ட திருத்தத்தில் உடன்பாடு இல்லை, 2 நாட்டின் இடையில் தன்னிச்சை திருத்தம் செய்ய அதிகாரம் இல்லை என அந்நாட்டு ராணுவ தளபதி கோத்தபய ராஜபக்சே கூறிவருகிறார். இதில் இரு நாட்டு நலன் அடங்கியுள்ளது.

ஈழத்தமிழர் பிரச்சினையில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பதே டெசோ அமைப்பின் நிலைப்பாடாகும். விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரனை கைது செய்து குற்றவாளி கூண்டில் நிறுத்த வேண்டும் என சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியவர் முதல்வர் ஜெயலலிதா. ஆனால் தற்போது இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக நீலிக்கண்ணீர் வடித்து வருகிறார்.

ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் எப்போதும் திமுக மக்களுக்காக பாடுபடும். இலங்கை தமிழர்களை வைத்து அரசியல் பிழைப்பு நடத்துவோர் தற்போது வயிற்றெரிச்சலோடு உள்ளனர். இலங்கை தமிழர்களுக்காக டெசோ தொடர்ந்து குரல் கொடுக்கும். டெசோ சார்பில் நடந்த ஆர்ப்பாட்டம் மிக எழுச்சியோடு நடந்துள் ளது. சிங்கள அரசின் கொடிய ஆட்சி தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.

- இவ்வாறு தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் பேசினார்

தமிழ் ஓவியா said...


சிந்தனைப்பூக்கள்


நமது புராணக்காரர்களுக்கு பார தத்தில் திருதராஷ்டிரனும், பாண்டுவும் அவர்களின் தகப்பனுக்குப் பிறந்தவர்கள் அல்லர் என்று சொன்னால் யாரும் கோ பித்துக் கொள்ளுவதில்லை. ஆனால், ராமாயணத்தில் ராமன் பிறந்தது அவனது தகப்பனுக்கா என்பது சந்தேகமாயி ருக்கின்றது என்றால் உடனே கோபித் துக் கொள்ளுகின்றார்கள். இதன் ரகசியம் தெரியவில்லை.

@@@@@@@@@@@@@@@@@@

மார்ச்சு மாதம் 31ஆம் தேதியின் ரயில்வே கெய்டானது ஏப்ரல் மாதம் 1ஆம் தேதி பிரயாணத்தில் ரயில் தப்பும்படி செய்து விட்டது. ஆனால், நாம் திரேதா யுகத்து கெய்டைப் பார்த்து, கலியு கத்தில் பிரயாணம் செய்ய வேண்டு மென்கின்றோம்.

@@@@@@@@@@@@@@@@@@

பத்து மாதக் குழந்தையைக் கக்கத்தில் வைத்து சாமியைக் காட்டி, அதைக் கும்பிடு என்று கைகூப்பச் செய்வதைவிட, இருபது வருஷத்து மனிதனைப் பார்த்து, நீ கடவுளைக் கும்பிடுவது முட்டாள்தனம் என்று சொல்வது குற்றமாகாது.

@@@@@@@@@@@@@@@@@@

மேல்நாட்டானுக்கு பொருளாதாரத் துறையில் மாத்திரம் சுயமரியாதை வேண்டும். நமக்கு மதம், சமூகம், கல்வி, அறிவு ஆராய்ச்சி, கைத்தொழில், அரசியல், பொருளாதாரம் முதலாகிய பல துறைகளிலும் சுயமரியாதை வேண்டும்.

- தந்தை பெரியார்

தமிழ் ஓவியா said...

மதமும் லெனினும்

மதம் மக்களுக்கு அபின் என்று மார்க்ஸ் கூறினார். இந்தக் கூற்று மதம் பற்றிய மார்க்சீய சித்தாந்தம் முழுவதற்கு உறைகல்யாகும். தற்கால மதங்கள், மத ஸ்தாபனங்கள், சகலவிதமான மத சங்கங்கள் ஆகிய அனைத்தும் தொழிலாளர் வர்க்கத்தை மூடத்தனத்தில் ஆழ்த்தி, தங்கள் சுரண்டலை ஆதரிக்கும் நோக்கம் படைத்த பூர்ஷ்வா பிற்போக்குப் பிண்டங்களின் கைக் கருவிகள் தான் என்று மார்க்சீயம் கருதி வந்துள்ளது.

உழைக்கின்ற மக்களை சமூக ஒடுக்குமுறைக்கு ஆளாக்கி முதலாளித்துவத்தின் கண்மூடித்தனமான சக்திகளுக்கு முன்னே அவர்கள் ஒன்றுமே செய்ய முடியாத வகையற்ற நிலையிலுள்ளவர்கள் போன்று நிற்கும்படி செய்யும் அளவுவரைக்கும், இன்றைய மதம் ஆழமாக வேர்விட்டிருக்கிறது.

முதலாளித்துவத்தின் இந்த கண் மூடித்தனமான சக்திகள் சாதாரண உழைப்பாளி மக்களுக்கு யுத்தம், பூகம்பம் போன்ற எப்பொழுதாவது நடக்கின்ற சம்பவங்களால் ஏற்படும் பயங்கரமான துன்பமும் வேதனையையும் விட ஆயிரம் மடங்கு அதிகமான துன்பத்தையும், வேதனையையும் நாள்தோறும் இடைவிடாமல் விளைவித்து வருகின்றன.

- மதத்தைப்பற்றி லெனின்

தமிழ் ஓவியா said...


மதத்துக்கு இசையும் விரோதமாம்!


மதம் ஆட்சி செய்யும் ஈரான் நாட்டில் - மேற்கத்திய இசைகளை கேட்பது பாவம் என்றும் மதத்திற்கு விரோதம் என்றும் அறிவிக்கப்பட்டு - முல்லாக்கள் அரசு சார்பில் பிரச்சாரம் செய்து வருகின்றனர். ஆனால் ஈரானிய இளைஞர்கள் பலர் மேற்கத்திய இசையில் மிகவும் ஆர்வம் கொண்டவர்களாக இருக்கிறார்கள்.

இந்த இசையைப் பதிவு செய்து விற்கும் ஒலிப்பதிவு நாடாக்கள் விற்பனை நிலையத்தின் முன்பு ஏராளமான இளைஞர்கள் இசை யைக் கேட்டு நடனம் ஆடிக்கொண்டிருந்தனர்.

அப்போது கடை உரிமை யாளர் முல்லாக்கள், இந்த காட்சியைப் பார்க்கட்டும் என்று அறை கூவல் விடுத் தார். நான்கு மாதங்களுக்கு முன்பு துவக்கப்பட்ட கடையில் ஒரு நாளைக்கு 100 இசைப்பதிவு நாடாக்கள் மட்டுமே விற்பனையானது; இப்போது நாளொன்றுக்கு 400 இசைப் பதிவு நாடாக்கள் விற்பனை ஆகிறதாம்.

தமிழ் ஓவியா said...

சரக்கு கேடு; டப்பி அழகு!

பிறநாட்டினர் இயற்கை முறையில் தமது முகப்பொலிவை உண்டாக்கி, உருவத்திலும் சமூக ஒற்றுமை கொண்டிருக்கின்றனர். நம்நாட்டினர் சரக்கு கேடாயிருந் தாலும் அதனுடைய டப்பியை அழகுபடுத்துவது போல், வற்றிய முகத்தில் நாமம், விபூதி முதலிய வைகளை எழுதிக் கொண்டு சமூக பேதத்தை வளர்த்துக் கொண்டு போகின்றனர்.

- புரட்சிக்கவிஞர்

தமிழ் ஓவியா said...

கடவுளும் மனிதனும்!

கடவுளுக்கும் மனிதனுக்கும் சம்பந்தம் உண்டு! உண்டு! உண்டு! உதாரணம்:- மனிதன் சுருட்டுப் பிடித்து விடும் புகை கடவுளிருக்கும் வானத்தை நோக்கிப் போகிறதல்லவா?

- புரட்சிக்கவிஞர்

தமிழ் ஓவியா said...


மனு தர்ம முரண்பாடு


சூத்திரன் தன் குலத்தில் மட்டும், வைசியன் தன் குலத்திலும் சூத்திர குலத்திலும், சத்திரியர்கள் குலத்திலும், சத்திரியர் தன் குலத்திலும் வைசிய, சூத்திரக் குலத்திலும் மற்ற மூன்று குலத்திலும் விவாகம் செய்து கொள்ளலாம்.

(மனுதர்மம், அத்தியாயம் 3, சுலோகம் 13)

படுக்கையில் சூத்திர கன்னிகையோடு சமமாய் படுத்திருக்கிற பிராமணன் நரகத்தை அடைகிறான்; பிள்ளையை உண்டுபண்ணுகிறவன் பிராமணத் தன்மை யினின்றும் நீங்கி விடுகிறான்.

(மனு, அத்தி.3, சு.17)

13ஆவது சுலோகத்தில் பிராமணன் தன் குலத்திலும் மற்ற மூன்று குலத்திலும் விவாகம் செய்யலாம் என்று சொல்லி விட்டு, 17ஆவது சுலோகத்தில் சூத்திர பெண்ணிடத்தில் சமமாய் படுக்கிற பிராமணன் நரகத்தை அடைவான் என்றும், பிள்ளையை உண்டுபண்ணினால் பிராமணத் தன்மையினின்றும் விடுபடுவான் என்றும் கூறுவது எவ்வளவு பெரிய முரண்பாடு.

இதுதான் பெரிய தரும நூலாம்; இதைத்தான் பிரம்மாவானவர் உபதேசித்தாராம்.

பார்ப்பானுடைய புத்திசாலித்தனம் 4 சுலோகங்கள் வரிசைகளுக்கிடையே முரண்பாடாக தொனிக்கிறது

தமிழ் ஓவியா said...

லாலாலஜபதி கூறுகிறார்!

சென்னை மாகாணத்தில் உள்ள கோவில்கள் அதன் பூஜை முதலிய நடைமுறைகள் நம்மை சமூக வீழ்ச்சி என்னும் நரகத்திற்குக் கூட்டிச் சென்று, அழுத்திக் கொண்டிருக் கிறது என்பது எனக்கு நன்றாய்ப் புலப்பட்டு விட்டது. நமது நாட்டுக்கு ஒரு சமுதாய விடுதலை வேண்டுமானால் எதற்கும் அஞ்சாத ஒரு சமுதாயச் சீர்திருத்த வீரன் தோன்றியாக வேண்டு மென்று எனக்கு ஏற்பட்டு விட்டது.

-லாலாலஜபதிராய்

தமிழ் ஓவியா said...

இருமுடி மகிமை!

அப்பா (சலூன்காரரிடம்): இந்தாப்பா! என் மகனுக்கு மொட் டையடி! கவனமா இரண்டு முடியை மட்டும் விட்டுடு! மறந்துடாதே.
சலூன்காரர்: அது என்னங்க? இரண்டு முடியை மட்டும் விட்டுடச் சொல்றீங்க?

அப்பா: பையன் இருமுடியோட அய் யப்பன் கோயிலுக்கு போறதா பிரார்த்தனை செஞ்சுக் கிட்டிருக் கான்பா?

- பெரியார் வளவன், திருத்தணி.

தமிழ் ஓவியா said...

ஒரு வழக்கு

வழக்கறிஞர்: யுவர் ஆனர்; எனது கட்சிக்காரர் மகாமக விழா வில் நகைக்காக ஆசைப்பட்டு ஒரு குழந்தையைக் கொன்றது உண் மைதான் என்றாலும் அதே நாளில் மகாமகக் குளத்தில் குளித்து அந்தப் பாவத்தை அவர் போக்கிக் கொண்ட காரணத்தால் கோர்ட்டு அவரை நிரபராதியாகக் கருதி விடுதலை செய்ய உத்தரவிடுமாறு வேண்டு கிறேன்.

- பொதட்டூர் புவியரசன், திருத்தணி

தமிழ் ஓவியா said...


காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்துகொள்ளக் கூடாது: நாடாளுமன்றம் எதிரே திமுக ஆர்ப்பாட்டம்

இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் டெசோ அமைப்பு சார்பில் நேற்று (8.8.2013) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக டில்லியில் தி.மு.க. நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, கனிமொழி ஆகியோர் தலைமையில் நாடாளுமன்ற பிரதான வாயிலில் உள்ள காந்தியார் சிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இவ்வார்ப்பாட்டத்தில் தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் முழக்கங்களை எழுப்பினர்.

புதுடில்லி, ஆக. 9- இலங்கையில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள காமன்வெல்த் நாடுகளின் மாநாட்டை இந்தியா புறக் கணிக்கவேண்டும். தமிழக மீனவர்களின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி நாடாளுமன்ற பிரதான வாயில் எதிரே திமுக உறுப்பினர்கள் நேற்று (8.8.2013) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ் ஈழம் ஆதரவாளர்கள் அமைப் பின் (டெசோ) கூட்டம் கடந்த 16.7.2013 அன்று சென்னை அண்ணா அறிவால யத்தில் டெசோ அமைப்பின் தலைவர் கலைஞர் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், நிறைவேற்றப்பட்ட நான்கு தீர்மானங்கள் அடிப்படையில்,

இலங்கை அரசமைப்புச் சட்டத்தின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நிறை வேற்ற வலியுறுத்தியும், இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்துகொள்ளக் கூடாது என்பதை வற்புறுத்தியும்,

தமிழக மீனவர்களைப் பாதுகாக்க வேண்டும் என்பதைச் சுட்டிக்காட்டியும், இலங்கையில் தமிழர் பகுதிகளில் சிங்களக் குடியேற்றத்தைத் தடுக்கவேண்டும் என் பதை எடுத்துக்காட்டியும்,

நிறைவேற்றப்பட்ட நான்கு தீர்மானங் களையும், தமிழக மக்களின் கவனத்திற்குக் கொண்டு செல்லவும், இந்திய மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கவும், சிங்கள ஆதிக்க வெறிக்கு எதிராக தமிழர் எழுச் சியை ஒன்று திரட்டவும், டெசோ இயக்கத்தின் சார்பில் நேற்று (8.8.2013) காலை தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் மாபெரும் ஆர்ப்பாட் டம் மிகுந்த எழுச்சியுடன் நடைபெற்றது.

அதையடுத்து, நாடாளுமன்றம் தொடங் கும் முன்பாக பிரதான வாயில் எதிரே உள்ள காந்தி சிலை முன் திமுக உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர். பாலு, மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி ஆகியோர் தலைமையில் இப்போராட்டம் நடைபெற்றது.

பின்னர் செய்தியாளர்களிடம் கனி மொழி கூறியதாவது: இலங்கைப் போரின் போது அப்பாவி மக்களைக் கொன்று குவித்துச் சொல்ல முடியாத அளவுக்கு மனித உரிமை மீறல் களில் இலங்கை அரசு ஈடுபட்டது. அதன் மீதான பன்னாட்டு விசாரணை கோரி உலக நாடுகள் குரல் கொடுத்து வருகின்றன.

இந்நிலையில், இலங்கையில் காமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் மாநாடு நடத்தப் பட்டால், அது அந்நாட்டு அரசுக்கு அளிக்கும் அங்கீகாரம் போல ஆகும். எனவே, இம்மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக் கூடாது. தமிழக மீனவர்களைக் குறி வைத்து இலங்கைக் கடற்படை தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. அவ்வப்போது மீனவர்களை நடுக்கடலில் சட்டவிரோதமாக சிறைப்பிடித்து அந் நாட்டு சிறைகளில் இலங்கைக் கடற்படை அடைத்து வைக்கிறது.

அதனால் தமிழக மீனவர்களின் வாழ் வாதாரம், உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட் டுள்ளது. இதற்கு நிரந்தரத் தீர்வாக கச்சத் தீவை மீட்க வேண்டும்.

இலங்கைத் தமிழர்களின் உரிமை களைப் பாதுகாக்கும் வகையில் 1987 இல் இந்தியாவும் இலங்கையும் மேற்கொண்ட ராஜீவ்-ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தை செயல்படுத்தவேண்டும் என்று திமுக கோருகிறது என்றார் கனிமொழி.

ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளுக்கும் சென்ற திமுக உறுப்பினர்கள் இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் இந்தியா பங் கேற்கக் கூடாது என்று குரல் கொடுத்தனர்.

அக்கட்சியின் ஏ.கே.எஸ். விஜயன் தலை மையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கள் மக்களவையின் மய்யப்பகுதிக்குச் சென்று அமளியில் ஈடுபட்டனர். பின்னர் மக்கள வைத் தலைவர் மீரா குமார் கேட்டுக் கொண்டதையடுத்து, அவர்கள் இருக் கைக்குத் திரும்பினர்.

தமிழ் ஓவியா said...


மூடத்தனத்துக்குச் சவுக்கடி! குழந்தை தீப்பற்றி எரிவது பில்லி சூன்யம் அல்ல


மருத்துவர் மறுப்பு இது ஒரு வகை நோயே!

சென்னை, ஆக.10- யாரும் பில்லி, சூன்யம் வைக்கவில்லை. உலகில் கடந்த 300 ஆண்டுகளில் 200 பேருக்கு மட்டுமே வந்த அதிசய நோயின் பாதிப்பு இது என்று குழந்தைக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர் நாராயண பாபு கூறினார்.

தானாக தீப்பற்றி எரியும் குழந் தைக்கு சிகிச்சை அளிக்கும் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் குழந்தை கள் நல தீவிர சிகிச்சை பிரிவின் தலைவர் மருத்துவர் நாராயண பாபு இதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறியதாவது:
குழந்தை ராகுலுக்கு வந்துள்ள நோய் ஸ்பொன்டேனியஸ் ஹியூமன் கம்பஸ்டன் என்ற அதிசய நோய் ஆகும். இது உலகில் கடந்த 300 ஆண்டுகளில் 200 பேருக்கு மட்டுமே வந்துள்ளது.அதாவது ஒரு வகையான வாயு உடலின் உள்ளே இருந்து குழந்தையின் தோல் வழியாக வெளியே வருகிறது. அந்த வாயு எளிதில் தீப்பற்றக்கூடியதாகும். இதன் காரணமாக குழந்தையின் அருகே வெப்பமாக இருந்தாலும், அடுப்பு எரிந்து கொண்டிருந்தாலும், யாரா வது சிகரெட் போன்றவற்றை பிடித் துக்கொண்டிருந்தாலும் குழந்தையின் உடம்பில் தீப்பிடித்துவிடும். வியர்வை வியர்க்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.இந்த அபூர்வ நோய்க்கான காரணம் இன்னும் கண்டுபிடிக்கப் படவில்லை. இன்னும் ஆராய்ச்சி அளவில் தான் உள்ளது.

இந்த நோயால் பாதிக்கப்பட்ட வர்கள் குளிரூட்டப்பட்ட அறையில் இருந்தால் தீப்பிடிக்காது. காற்றோட் டமான இடத்தில் இருந்தாலும் தீப்பிடிக்காது. இதன் அடிப்படையில் பாதிக்கப்பட்ட அந்த குழந்தையை பார்த்துக் கொள்கிறோம். தீக்காயங் களுக்கு மருந்துபோடுகிறோம். மற்றபடி குழந்தை ஆரோக்கியமாக உள்ளது. இது பில்லியோ, சூன்யமோ இல்லை. தெய்வக்குற்றமும் இல்லை. அறிவியல் ரீதியில் இது ஒரு நோய்.நான் 30 ஆண்டாக மருத்துவ தொழிலில் இருக்கிறேன். இப்படி தானாக உடலில் தீப்பற்றி எரிவதை கேள்விப்பட்டது இல்லை. பாடத்தில்தான் படித்திருக் கிறேன். இவ்வாறு மருத்துவர் நாராயண பாபு தெரிவித்தார்.

விழுப்புரம் மாவட்டம் திண்டி வனம் அருகே உள்ள டி.பரங்குனி கிராமத்தைச் சேர்ந்தவர் கர்ணன் (வயது 26). கூலித்தொழிலாளி. இவரு டைய மனைவி ராஜேஸ்வரி (23). இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் ராஜேஸ் வரிக்கு கடந்த மே மாதம் 22ஆம் தேதி ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. குழந்தைக்கு ராகுல் என்று பெயர் வைத்தனர். ராகுல் பிறந்த 9ஆவது நாள் அன்று வீட்டில் பகலில் கட்டிலில் படுக்கவைத்திருந்தனர். அருகில் பெற்றோர் இருந்தனர். அப்போது திடீர் என்று குழந்தையின் உடலில் தீப்பற்றி எரிந்தது. ஏதாவது விளக்கு தீ பட்டுவிட்டதா வேறு எப்படி தீப்பிடித்தது என்று பெற் றோர் அக்கம்பக்கம் சுற்றிப்பார்த்தனர். ஆனால் அப்படி எந்த வித அறிகுறியும் தெரியவில்லை. 13ஆவது நாள் அன்று குழந்தையின் உடலில் மீண்டும் தீப்பற்றி எரிந்தது. 30ஆவது நாள் அன்றும் அப்படியே தீப்பற்றி எரிந்தது. இவ்வாறு தீப் பிடித்தபோது குழந்தையின் உடலில் தீக்காயம் ஏற்பட்டது. குழந்தை வலியால் துடித்தது.இதனால் மிகவும் பதறிப்போன பெற்றோர் உடலில் தீக்காயம் ஏற்பட்ட ராகுலுக்கு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச் சைக்கு பின்னர் வீடு திரும்பிய ராகுலின் உடலில் மீண்டும் தீப்பற்றி எரிந்தது.

இந்த நிலையில் விழுப்புரம் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் கிருஷ்ணணமூர்த்தி தலை மையில் மருத்துவர்கள் கொண்ட குழு குழந்தையின் உடலை பரிசோதித் தனர். மருத்துவர்கள் கூறுகையில் குழந்தை ஆரோக்கியமாக இருப்ப தாகவும், உடலில் ஏற்பட்டுள்ள தீக்காயங்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் உத்தரவுப்படி குழந்தை ராகுல், சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்து வமனைக்கு கொண்டுவரப்பட்டான்.

சிறப்பு மருத்துவக்குழு குழந்தை ராகுலை குழந்தைகள் நலத்துறை தலைவர் பேராசிரியர் மருத்துவர் நாராயண பாபு பரிசோதித்தார். அந்த குழந்தை மீது மேலும் தீப்பிடிக்காத அளவுக்கு குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவில் சிறப்பு ஏற்பாடு செய்து அனுமதித்துள்ளனர். குழந்தை குளி ரூட்டப்பட்ட அறையில் உள்ளது.

தீப்பிடித்தால் அணைக்க தீயணைப்பு கருவியும் வைக்கப்பட்டுள்ளது. ராகுலை கண்காணித்து சிகிச்சை அளிக்க இரவும் பகலும் தனித்தனி யாக ஒரு மருத்துவர் ஒரு நர்சு ஆகி யோர் சிறப்பு பணியில் ஈடுபடுத் தப்பட்டுள்ளனர். தற்போது குளூக் கோஸ் ஏற்றப்படுகிறது. குழந்தையின் உடல், தலை, கால் ஆகிய இடங்களில் தீக்காயம் உள்ளன. அந்த காயங் களுக்கு மருந்து போடப்பட்டு உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறது

தமிழ் ஓவியா said...


ஏழை - பணக்காரத் தன்மைக்குக் காரணம் ஜாதி முறையே! முதல் அமைச்சர் சித்தராமையா படப்பிடிப்பு


பெங்களூரு, ஆக.10- சமுதாயத்தில் ஏழை-பணக்காரர் இடையே இடைவெளி அதிகரிப் புக்கு காரணம் ஜாதி முறையே என்று சித்தரா மையா பேசினார்.

பெங்களூரு சிறீ லட்சுமிநரசிம்மசாமி ஆன்மிக அமைப்பு சார் பில் நடைபெற்ற விழா வில் கலந்து கொண்டு முதல் அமைச்சர் சித்த ராமையா பேசும்போது கூறியதாவது:- பிற்படுத்தப்பட்ட பிரிவு மக்களின் குழந்தை களுக்குக் கல்வி வசதி கிடைக்க வேண்டும். அவர்கள் முன்னேற வேண்டும் என்ற நோக் கத்தில் மாநிலத்தில் பல தலைவர்கள் செயல் பட்டு வந்துள்ளனர்; சமீபகாலமாக நான், எனது குடும்பம் என்ற மனோபாவம் மக்களி டையே அதிகரித்து வரு கிறது.

இத்தகையவர்களால் எந்தப் பயனும் இல்லை. சுயநலத்துக்காக வாழ் பவர்களை

மரணத்துக்கு பிறகு யாருமே நினைக் கப் போவதில்லை. அர சியலில் முறைகேடாக பணம் சம்பாதித்தவர் கள் என்ன ஆகி இருக் கிறார்கள் என்பது அனை வருக்கும் தெரியும். இந்த ஜாதி முறை யால் ஏராளமானவர் களுக்குக் கல்வி வாய்ப்பு கிடைக்கவில்லை. முந் தைய காலத்தில் மேல் தட்டு உயர் ஜாதி மக் களுக்கு மட்டுமே கல்வி கிடைத்தது. வஞ்சிக்கப் பட்டவர்களுக்கு அந்த கல்வி கிடைக்காததால் தான் இன்று சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகள் ஏற் பட்டுள்ளன. சமுதாயத் தில் ஏழை-பணக்காரர் இடையே இடைவெளி அதிகரித்து உள்ளதற்கு காரணம் ஜாதி முறையே.

வஞ்சிக்கப்பட்ட மக்களின் குழந்தைகளுக் கும் நல்ல கல்வி கிடைக்க வேண்டும். அவர்களும் மற்றவர்களைப் போன்று வளர வேண்டும். இத் தகைய மக்களின் மேம் பாட்டுக்காக காங்கிரஸ் அரசு பல்வேறு திட்டங் களை தீட்டி செயல் படுத்தி வருகிறது.
இவ்வாறு சித்தரா மையா பேசினார்.

தமிழ் ஓவியா said...


பழையவற்றைக் கிளறினால்...நான்கு தீர்மானங்களை முன்னிறுத்தி டெசோ அமைப்பு, தமிழ்நாடு தழுவிய அளவில் எழுச்சி ஆர்ப்பாட்டத்தை நடத்தியது.

முதல் தீர்மானம்: இலங்கையில் 13ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்தம் பற்றியதாகும். அந்தத் தீர்மானத்திலேயே ஒரு விஷயம் தெளிவுபடுத்தப் பட்டுள்ளது.

13ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்தம், ஈழத் தமிழர் பிரச்சினைக்கு முழு அரசியல் தீர்வாக அமையாது என்பதும்; இலங்கை உள்ளிட்ட - அனைத்து நாடுகளிலும், வாழும் ஈழத் தமிழர்களி டையே பொது வாக்கெடுப்பு நடத்தி, அவர்களுடைய கருத்தினைக் கேட்டுத் தீர்வு காண்பதுதான் ஈழத் தமிழர்களின் நலனுக்கு உகந்த தீர்வாக இருக்கும், என்பதுதான் டெசோ அமைப்பின் நிலைப்பாடாகும். இருப்பினும், தற்காலிகத் தீர்வாகாது, ராஜீவ் ஜெயவர்த்தனே ஒப்பந்தம் பயன்பட வேண்டும் என்று டெசோ அமைப்பு கருதுகிறது எனத் தெளிவாகவே குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுபற்றி தொலைக்காட்சிகளில் விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றன.
1987இல் ராஜீவ் ஜெயவர்த்தனே என்பது ஒரு வரப் பிரசாதம்; அதனைப் பயன்படுத்திக் கொள்ளத் தவறி விட்டனர் என்ற குற்றச்சாற்று காங்கிரஸ் தரப்பில் வைக்கப்படுகிறது.
26 ஆண்டுகள் ஓடி விட்ட காரணத்தால் அதன் உண்மைகள், தகவல்களை மறந்து போயிருப் பார்கள் மக்கள் என்ற மனப்பான்மையில் துணிந்து சொல்லப்படும் கருத்தாகவே இது கருதப்பட வேண்டும்.

இந்த ஒப்பந்தம் தயாரிக்கப்படுவதற்குமுன் ஈழத் தமிழர்களுக்காகப் போராடிக் கொண்டிருக்கும் அமைப்புகளின் கருத்துக்கள் பெறப்படவில்லை. இலங்கை அரசும், இந்திய அரசும் (குறிப்பாக உளவுத் துறையும் சேர்ந்து) தயாரித்த சரத்துக்களைக் கொண்டதாகும்.

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனை டெல்லி அசோகா ஒட்டலில் கிட்டத்தட்ட சிறைக் கைதிபோல் வைத்துப் பேசப்பட்டதாகும். தீட்சித் போன்றவர்கள் மிரட்டல் தொனியில் பேசியும், பிரதமர் ராஜீவ்காந்தி கேட்டுக் கொண்டும் ஒப்பந்தத்தில் உள்ள சரத்துகள் ஈழத் தமிழர்களின் உரிமைகளுக் குப் பாதகமாக இருந்ததால் பிரபாகரன் ஏற்றுக் கொள்ளவில்லையே!
கடைசியில் பிரதமர் ராஜீவ்காந்தியின் வார்த்தை களை நம்பத் தகுந்ததாகக் கருதி ஏற்றுக் கொள்ளும் ஒரு சூழ்நிலை (அதில்கூட பிரபாகரன் கையொப்ப மிடவில்லை) ஏற்பட்டது என்பதுதான் உண்மை.
ஒப்பந்தத்தில் கையொப்பமிட்ட அதிபர் ஜெயவர்த் தனே (29.7.1987) கையொப்பம் போட்ட மை காய் வதற்கு முன்னதாகவே வானொலி, தொலைக்காட்சி ஊடகங்கள் மூலம் என்ன கூறினார்? (6.8.1987).
வடக்கு - கிழக்கு இணைப்புத் தற்காலிகமானது தான். இதைக் கண்டு ஏன் எதிர்ப்பைக் காட்டு கிறீர்கள்? நானே இந்த இணைப்பை எதிர்த்துப் பிரச்சாரம் செய்ய இருக்கிறேன். தற்காலிகமான இந்த ஏற்பாட்டிற்கு என்னைப் புரிந்து கொள்ளாது சிங்களச் சகோதரர்களே, ஏன் ரகளை செய் கிறீர்கள்? என்று பேசவில்லையா?
அந்த இணைப்புக்கூட கிழக்கு மாகாணத்தில் வாக்கெடுப்பு நடத்தித்தான் முடிவு செய்யப்படுமாம்.

கிழக்கு மாகாணத்தில் சிங்களவர்களும், (குடி யேற்றப்பட்டு விட்டார்களே) முசுலிம்களும் எதிராக வாக்களித்தால் அந்த இணைப்பு இல்லாமலேயே போய்விடும்.
அதற்குப்பின் ராஜபக்சே என்ன செய்தார்? தமது கூட்டணியில் உள்ள மார்க்ஸிய அமைப்பான ஜெ.வி.பி மூலம் உச்சநீதிமன்றத்தில் வழக்கொன்றைத் தொடுக்கச் செய்து, வடக்கு - கிழக்கு இணைப்புக் கூடாது என்ற ஒரு தீர்ப்பை பெற்றும் வைத்துள்ளார்.

சிங்களமும், தமிழும் ஆட்சிமொழி ஆகும் என்று ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளதே என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியாளர் கேட்டதற்கு அதிபர் ஜெயவர்த்தனே சொன்ன பதில் என்ன தெரியுமா? இரண்டு மொழிகள் இலங்கைக் கல்வி முறையில் தேவையா என்பது பற்றி இனிமேல்தான் ஆராய வேண்டும் (இந்தியன் எக்ஸ்பிரஸ் - 30.7.1987 பக்கம் 9) என்று ஒப்பந்தத்தின் மறுநாளே சொல்ல வில்லையா?

இலங்கைக் குடியரசுத் தலைவரால் பொது மன்னிப்பு வழங்கப்பட்ட நிலையில் புலேந்திரன் குமரப்பா உட்பட 17 பேர்களை இலங்கைக் கடற்படை கைது செய்ததே - அவர்களைக் காப்பாற்ற இந்திய அரசு முனையவில்லை என்பதைவிட தலையிட மறுத்தது என்பதுதானே உண்மை. அதன் காரணமாக விடுதலைப்புலிகள் அவர்களுக்கே உரிய பாணியில் சையனைடு குப்பிகளை பயன்படுத்தித் தற்கொலை செய்து கொண்டனரே! ராஜீவ் - ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தின் கெதி இதுதானா?

பழையனவற்றைக் காங்கிரஸ்காரர்கள் கிளற வேண்டாம் - அவை அவர்களுக்குச் சாதகமாக இருக்காது! இப்பொழுது 13ஆவது சட்டத் திருத் தத்தைக் கொண்டுவரச் செய்ய முடியுமா என்பதில், மத்திய அரசு கவனம் செலுத்தட்டும்!

தமிழ் ஓவியா said...


தானே வீழ்ந்துவிடும்!


பார்ப்பான் என்கின்ற பெரிய மரத்திற்கு வேர் கடவுளும், மதமும் ஆகும். இந்த வேரை அழித்தால் மரம் தானாகவே வீழ்ந்துவிடும்.
(விடுதலை, 20.11.1964)

தமிழ் ஓவியா said...


சங்கரநாராயணர் கோவிலுக்குள் கக்கூசும் மிதியடியும்


திருநெல்வேலி ஜில்லாவிலுள்ள சங்கரன்கோவி லென்னும் சங்கரநாராயணன் கோவிலானது அச்சில் லாவில் உள்ள முக்கிய கோவில்களுள் ஒன்று. அக் கோவிலுக்கு ஏராளமான சொத்துக்கள் வரும்படி உண்டு. லோககுரு என்றும் சங்கராச்சாரியார் சுவாமிகள் என்றும் சொல்லப்பட்ட ஸ்மார்த்தர்களின் குருவானவர் இம்மாதம் அவ்வூருக்கு வந்து அக்கோவிலை தனக்கும் தனது பரிவாரத்திற்கும் ஜாகையாக வைத்துக் கொண்டார்.

அதோடல்லாமல் சுவாமிகளின் திருக்கக்கூசும் அக்கோவிலுக் குள்ளாகவே கட்டப்பட்டு சுவாமிகளின் திருமலமும் கோவிலிலேயே சமர்ப்பிக்கப்பட்டுவிட்டது. அக்கோவில் டிரஸ்டி கனவான்களில் பார்ப்பனரல்லாதார் அதிகமாய் (மெஜாரிட்டியாய்) இருந்தும் இதை ஆட்சேபிக்கத் தைரியமில்லை. ஏனென்றால் அவ்வூர் அதிகாரிகள் எல்லாம் குட்டி சுவாமிகள் குழாங்களாகவே இருக்கின்றன.

அதோடு மாத்திரமில்லாமல் சுவாமிகள் சங்கர நாராயண சுவாமியை திருக்கண் பார்ப்பதாயிருந்தாலும், திரு மிதியடியை தாங்கிய திருப்பாதத்துடனே தான் மூலஸ்தானத்திற்குப் போய் திருக்கண் பார்த்தருளி னாராம். அதோடு மாத்திரமல்லாமல் சுவாமிகள் கோவி லுக்குள் நுழையும் போது திருமேனாவில் திருப்பள்ளி கொண்ட கோலத் துடனேயே சென்றாராம். மாமிக்கோர் மாமியுண்டானால் சுவாமிக்கோர் சுவாமி வேண்டாமா? அதுதான் நமது லோக குரு சங்கராச்சாரியார், சுவாமிகள் போலும்.

சுவாமிகளின் இந்த வைபவங்களையும், தெய்வத் தன்மையையும் கண்ட திருநெல்வேலி நெல்லையப்பர் சுவாமி கோவில் பக்தர் களும், தர்மகர்த்தாக்களும் குறைந்தபட்சம் நெல்லை யப்பர் கோவிலுக்குள் சுவாமிகளின் திருக் கக்கூசாவது கட்டப்படாமல் இருக்கவேண்டுமென்று கருதி லட்சக் கணக்கான துண்டு விளம்பரங்கள் போட்டும் தர்மகர்த் தாக்களுக்கு நோட்டீசு விட்டும் சத்தியாக்கிரகம் செய்வதாய் பயமுறுத்தியும் ஆர்ப்பாட்டம் செய்து சுவாமிகளின் திருக் கக்கூசை திருக்கோவிலுக்குள் கட்டாமலிருக்க தக்க ஏற்பாடு செய்துவிட்டார்கள்.

இது தவிர, நெல்லையப்பர் சுவாமி கோவிலுக்கு முன்னால் சங்கராச்சாரிய சுவாமிகள் வருகையை முன்னிட்டு போடப்பட்ட அலங்காரப் பந்தல்கள் போட அனுமதித்ததின் பலனாய் அஷ்டமி உற்சவத்தின்போது நெல்லையப்பர் சுவாமி எழுந்தருளுகையில் பந்தல் சமீபம் வந்தவுடன் தாழ்ந்தும் குனிந்தும் வெளியே வரவும் உள்ளே போகவும் ஏற்பட்டது.

இதைப் பற்றி பல பக்தர்களுக்கு மனவருத்தமிருந் தாலும் சங்கராச்சாரிய சுவாமிகளும் அவரது திருக் கூட்டத்தாரும் இல்லாவிட்டால் நெல்லையப்பருக்கு இவ்வளவு மகத்துவமும், இவ்வளவு வேலி நிலமும், இவ்வளவு சொத்துக்களும் சுகங்களும் ஏது? ஆதலால் சங்கராச்சாரிய சுவாமிகளின் பந்தலுக்கு நெல் லையப்பர் தாழ்ந்து குனிந்து வணங்க வேண்டியது
தான்.

- குடிஅரசு - கட்டுரை - 05.12.1926

தமிழ் ஓவியா said...

இதுகூட வகுப்புத் துவேஷமா?

திருநெல்வேலி ஜில்லா தென்காசியிலுள்ள ஒரு சிவன் கோவிலில் சமஸ்கிருதத்தில் வேத பாராயணம் செய்த பிறகு, தமிழில் தேவார பாராயணம் செய்த பிறகு எல்லோருக்கும் விபூதி பிரசாதம் கொடுக்க வேண்டும் என்பதாக கோவில் அதிகாரிகள் ஏற்பாடு செய்தார்களாம்.

அங்கு வேத பாராயணம் செய்து வந்த பார்ப்பனர்கள் தேவார பாராயணம் செய்த பிறகு விபூதி பிரசாதம் வாங்குவது தங்கள் உயர்வுக்குக் குறைவு தேடினதாக ஆகுமென்று நினைத்து கலகம் செய்து கொண்டிருக்கிறார்கள் என்று செய்தி வந்திருக்கிறதை வேறு இடத்தில் பிரசுரித்திருக் கிறோம். கோவிலில் தேவாரம் படிக்க வேண்டுமென்று சொன்னால்கூட அது நமது பார்ப்பனர்களுக்கு வகுப்புத் துவேஷமாய்ப் படுகிறதாயிருந்தால் பிறகு எங்கு போய்த்தான் பிழைக்கிறது?

தேவாரம் படிக்காததினால் மோட்சம் கெட்டுப் போய்விட்டது என்பதாக நாம் பயப்படவில்லை. மக்களிடம் அன்பு செய்வதைத்தான் கடவுள் பக்தி என்று நினைக்கிறோமே அல்லாமல் வேத பாராயணமும் தேவார பாராயணமும்தான் கடவுள் பக்தி என்று நாம் நினைப்பதில்லை.

ஆனாலும் தமிழ் மொழி என்றால் இந்தப் பார்ப்பனர்களுக்கு இவ்வளவு ஆத்திரம் வருவானேன் என்பதுதான் நமது கவலையே தவிர வேறில்லை. நமது தென்னாட்டுப் பிரயாணத்தில் ஒரு சமயம் அங்கு போக நேரிடினும் நேரும்.

- குடிஅரசு - செய்திக்குறிப்பு - 21.11.1926

தமிழ் ஓவியா said...


தென்காசியில் பார்ப்பனர்கள்


ஒத்துழையாமையும் பகிஷ்காரமும் கதவடைப்பும்

தென்காசி சிவன் கோவிலில் பார்ப்பனர்களின் வேத பாராயணத்தைப் போலவே தமிழ் மக்களின் தேவாரப் பாராயணமும் செய்யப்பட வேண்டும் என்பதாகக் கருதி தேவாரப் பாராயணம் ஆன பிறகு பிரசாதம் கொடுக்கப்பட வேண்டும் என்று தேவதான போர்டாரும் கமிட்டியாரும் தர்மகர்த் தாக்களும் உத்தரவு போட்டதினால் அப்பேர்ப்பட்ட சுவாமி தரிசனமும் பிரசாதமும் தங்களுக்கு வேண்டியதில்லை என்று சொல்லி அதோடு ஒத்துழையாமையும் பகிஷ்காரமும் செய்து அவ்வூர் பார்ப்பனர்கள் எல்லாம் ஒன்று கூடி பார்ப்பன ஸ்த்ரீகள்,

புருஷர்கள், குழந்தை குட்டிகள் சகிதம் யாரும் அக்கோவிலுக்குப் போகக் கூடாது என்றும், சுவாமியை தரிசிக்கக் கூடாதென்றும் பரிசாரகம் முதலிய வேலையைச் செய்யக் கூடாது என்றும், சுவாமி தங்கள் வீதிக்கு எழுந்தருளி வந்தாலும் ஒவ்வொரு பார்ப்பனரும் வீதி தெருக்கதவை அடைத்துக் கொள்ள வேண்டும் என்றும் தீர்மானம் செய்து கொண்டு அந்தப்படி அமலிலும் நடத்தி வருகிறார்கள் என்கின்ற விபரம் அறிய மிகவும் சந்தோஷமடைகிறோம்.

ஏனெனில் பார்ப்பனர்கள் பகிஷ்காரம் செய்த வேலைகளை ஆதி சைவ குருக்கள் பட்டமார்களைக் கொண்டு கோவிலதி காரிகள் வேலை வாங்கி வருகிறார்கள். இது போலவே மற்ற ஊர்களிலும் உள்ள பார்ப்பனர்களும் மற்ற கோவில்களோடும் சுவாமிகளோடும் ஒத்துழையாமையும் பகிஷ்காரமும் செய்து விடுவார்களேயானால் நமது தெய்வங்களைப் பிடித்த சனியனும் நமது மதங்களைப் பிடித்த கிரகங்களும் அடியோடு ஒழிந்து யோக்கியமானதும் உண்மையானதுமாக விளங்கும்.

- குடிஅரசு - செய்திக்குறிப்பு - 12.12.1926

தமிழ் ஓவியா said...

பார்ப்பனியத்தை ஒழித்த கலியாணங்கள்

சேலம் அடுத்த தாதம்பட்டி என்னும் கிராமத்தில் பல்ஜிய நாயுடு வகுப்பைச் சேர்ந்த வீடுகளில் மூன்று கல்யாணங்கள் வெகு விமரிசையாய் நடந்தன. அம்மூன்று கலியாணங்களுக்கும் பார்ப்பன புரோகிதர் கள் இல்லாமல் பார்ப்பனரல்லாதாரைக் கொண்டே முகூர்த்தம் செய்விக்கப்பட்டது.

இவைகளில் ஒரு கலியாண வீட்டுக்காரருக்கு மாத்திரம் ஆரம்பத்தில் நாம் ஏன் இதை முதன் முதலாகச் செய்ய வேண்டும், மற்றும் யாராவது செய்து பிறகு நாம் செய்யலாம் என்கிற எண்ணம் மனதுக்குள்ளாக இருந்திருக்கிறது. அதற் கேற்றாற்போல் அவர் ஒரு பார்ப்பனப் புரோகிதரையும் தருவித்து விட்டார்.

ஆனால் மற்ற இரண்டு கலியாண வீட்டுக்காரரும் தைரியமாய்ச் செய்ய ஆரம்பித்த பிறகும் ஈரோட்டிலிருந்து கலியாணத்திற்கு வந்திருந்த ஸ்ரீமான்களான அ.கோவிந்த நாயக்கர், வெ.முத்து நாயக்கர், ரா.துரைசாமி நாயக்கர், வெ. எல்ல நாயக்கர், எ.எல்ல நாயக்கர், கே. ராமசாமி நாயக்கர், ஈ.வெ. ராமசாமி நாயக்கர் முதலிய இன்னும் பல கனவான்கள் சொன்ன பிறகும் தான் தருவித்த பார்ப்பனப் புரோகிதருக்கு ஏதோ பணம் கொடுத்தனுப்பிவிட்டு அவரும் பார்ப்பனரல்லாதாரைக் கொண்டே தனது வீட்டு முகூர்த்தத்தையும் நடத்திக் கொண்டார்.

ஆகவே, இந்த மூன்று கலியாணங்களும் எவ்வித சடங்கும் பார்ப்பன சம்பந்தமில்லாமலே இனிது நிறைவேறிற்று. அதோடு அங்கு வந்திருந்த மற்ற பந்து மித்திரர்களும் தங்கள் தங்கள் வீட்டு சுபா சுப காரியங் களையும் இனி பார்ப்பனரல்லாதாரைக் கொண்டே செய்து கொள்வது என்னும் அபிப்பிராயத்தையும் தெரிவித்துக் கொண்டார்கள்.

இந்த வகுப்பார் பார்ப்பனியத்தை நீக்கி கலியாணம் செய்த கவுரவம் சேலம் தாதம்பட்டிக்கே கிடைத்ததோடு மற்றவர்களுக்கும் வழிகாட்டின பெருமையும் அவர் களுக்கு கிடைத்ததைப் பற்றி நாம் மிகுதியும் மகிழ்ச்சி அடைகிறோம். அதோடு இதற்கு முக்கியமாய் நின்று வேலை செய்த ஸ்ரீமான்கள் எல்ல நாயக்கர், கே. ராமசாமி நாயக்கர் முதலிய கனவான்களையும் பாராட்டுகிறோம்.

- குடிஅரசு - செய்திக்குறிப்பு - 21.11.1926

தமிழ் ஓவியா said...

சுயமரியாதைக்கு ஜே!

சர்க்கார் உத்தரவு

எல்லா கிராமம் கிராமாதிகாரிகளுக்கும் - பொதுச் சாவடி, பொதுக்கட்டடம், கச்சேரி, பள்ளிக்கூடம், பொதுக் கிணறு, பகிரங்கமான பாதை, சந்தை முதலிய எல்லா இடங்களிலும் ஆதிதிராவிடர் களுக்கும் பிரவேசிக்கச் சுதந்திரமுண்டு என்ற விஷயத்தையும், மேற்படி ஆதிதிராவிடர்களைப் பறையர், சக்கிலியர், பள்ளர் என்று அழைக்காமல் ஆதிதிராவிடர்கள் என்றே அழைக்க வேண்டும் என்பதையும், பத்திரங்களிலும் ஆதிதிராவிடர் என்றே பதியவேண்டியதையும் கிராமத்தில் பரவச் செய்து அமலுக்குக் கொண்டு வரவேண்டியது. மேற் படியார்களுக்குப் பூமி அடமான விஷயங்களில் வேண்டிய உதவி புரிய வேண்டியது.

- குடியரசு - 21.11.1926

தமிழ் ஓவியா said...


காலணிகளின் ஊமைக்குரல்மனித நேயம் வெளிப்படாத
ஆடை அலங்காரத்தோடு
மனித இனம் பிரிக்கும் சாதி
சமய உணர்வோடு
கள்ளம் கபடம் நிறைந்திருக்கும்
அழுக்கு மனதோடு
குறுக்கு வழியில் பதுக்கி வைத்திருக்கும்
அளவிலா பொருளாசையோடு
சொத்து சுகங்களால் சேர்ந்திருக்கும்
பகட்டான முகப்பொலிவோடு
உண்மைக்கு நேர்மாறாக பேசும் பொய்நாவோடு
ஐம்புலனுள் எல்லாம் மறைத்து
போலி பக்தியோடு
கோவிலுள் நுழையுமுன் வெளியே
எங்களை கழட்டி விடுவது ஏன்?
நீங்கள் கும்பிடும் காட்சிகளை நாங்கள் பார்த்துவிடக் கூடாது
என்பதற்காகத்தானே! ஆமெனில்
இதுவும் ஒரு நாடகம் தானே!
இதில் இறையருளுக்கு இடமேது?

----------------அருள். கிரகோரி
தலைமை ஆசிரியர் பணிநிறைவு
விமான நிலையம்

தமிழ் ஓவியா said...


ஏ.டி.எம். ரகசியம்!நீங்கள் ஏ.டி.எம். இயந்திரத்தில் பணம் எடுக்கும்போது திடீரென ஒரு திருடன் வந்து உங்களிடம் பணம் எடுத்துத் தருமாறு மிரட்டினால், உங்கள் நுழைவு எண் பின்னை தலைகீழாக அடிக்கவும். அதாவது 1 2 3 என்றால் 3 2 1 என்று அடிக்கவும். நீங்கள் அடிக்கும்போது உங்கள் பணம் பாதிலேயே சிக்கிக் கொள்ளும். அதனால் காவல் நிலையத்திற்கு தகவல் சென்று விடும். எல்லா ஏ.டி.எம்.மிலும் இந்த வசதி உண்டு. அதனால் இதை மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்!

தமிழ் ஓவியா said...


உணவு மசோதாவை ஆதரிக்க தி.மு.க. தலைவர் கலைஞர் நிபந்தனை


சென்னை, ஆக.10- மாநில அரசுகளின் உரிமை களுக்கு இம்மியளவும் பாதிப்பு ஏற்படாதளவு, உணவுப் பாதுகாப்பு மசோதா இருந்தால் மட்டுமே அதனை ஆதரிப்போம் என்று மத்திய அரசுக்கு, திமுக தலைவர் கலைஞர் நிபந்தனை விதித்துள்ளார்.

இது தொடர்பாக வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை வருமாறு:- உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை அமல்படுத் துவதற்கான வழிமுறைகளை மாநில அரசுகள் மீது மத்திய அரசு திணிக்கக் கூடாது. அந்தந்த மாநிலங்களின் நிலைமைகளுக் கேற்ற செயலாக் கத்துக்கான விருப்புரிமையை மாநில அரசு களுக்கு வழங்கிட மத்திய அரசு முன் வரவேண் டும். சுதந்திரம் பெற்று 60 ஆண்டுகள் ஆகின்றன.

இதற்குப் பிறகாவது உணவுக்கான உரிமையை வழங்கி, மக்களின் வாழ்க்கை நிலையை உயர்த்த வேண்டும் என்ற எண்ணம் பிறந்திருப்பது ஆக்க பூர்வமானது. எனவே, உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை முழுமையாக எதிர்க்கவும் இல்லை. முழுமையாக ஆதரிக்கவும் இல்லை.

அவசரமாக மேற்கொள்ள வேண்டிய அவ சியமான திருத்தங்களுடன், மாநிலங்களில் உள்ள நடைமுறைக்கேற்ப உணவு மசோதாவை மத்திய அரசு கொண்டு வர முன் வரவேண்டும்.

தமிழகத்தைப் பொறுத்தவரை ஏற்கெனவே இருக்கும் மாநில உரிமைகளுக்கு இம்மியளவும் பாதிப்பு ஏற்படாதளவு, உணவு மசோதா இருந் தால் மட்டுமே அது நிறைவேற திமுக ஆதரிக்கும்.

எந்த மாநிலத்திலும் ஏற்கெனவே நடைமுறை யில் இருக்கும் உணவுப் பொருள் வழங்கு முறை யினைச் சீர்குலைப்பதாக உணவு மசோதா இருக் கக் கூடாது. மேம்படுத்துவதாக இருக்க வேண் டும்.

இந்திய மக்கள் தொகையில் 67.5 சதவீத மக்கள் மட்டும் பயன்படும் வகையில் இந்தத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

ஆனால், தமிழகத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் 90 சதவீத மக்கள் பயன் பெற்று வருகின்றனர். இதனால் தமிழக மக்கள் பாதிக்கப் படுவர் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள் ளார்.

முதல்வர் தெரிவித்துள்ள குறைபாடுகளும் கோரிக்கைகளும் அலட்சியப்படுத்தக் கூடியவை இல்லை. உணவு மசோதாவினால் ஏற்படக்கூடிய விளைவுகளை ஒட்டுமொத்தமாக தமிழக அரசு தான் சீர்தூக்கிப் பார்த்து கருத்துகளைத் தெரி விக்க முடியும்.

இந்த மசோதாவால் தமிழகத்துக்குப் பாதகம் தான். சாதகம் இல்லை என்று முதல்வர் உறுதி யாக இருந்தால், சில்லறை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை தமிழகம் ஏற்காது என்று அறிவித்ததைப் போல், இதையும் ஏற்காது என்று அறிவித்து விடலாம்.

ஆனால் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு எழுதிய கடிதத்தில் ஜெயலலிதாவும் மசோதா வில் திருத்தங்கள் தேவை என்றே கூறியுள்ளார். அனைத்து அரசியல் கட்சிகளும் திருத்தங் களையே கோருகின்றன. சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்று யாரும் குரல் எழுப்ப வில்லை என்று கலைஞர் கூறியுள்ளார்.

தமிழ் ஓவியா said...


கொலை செய்வது தான் கடவுளா?தமிழில் பக்தி நுரை தள்ளும் ஏடுகள் உண்டு. ஒன்றை வெளியிடுவதால் மக்களுக்கு என்ன பயன் என்று ஏனோ அவர்கள் கருதுவதில்லை.
இதோ ஒரு பட்டியல். சிவபெருமானின் வீரச் செயல்கள் நடந்த தலங்கள்
திருக்கண்டியூர் - பிரம்மனின் தலையைக் கொய்தது
திருப்பறியல் - தக்கன் தலை கொய்தது
திருவதிகை - திரிபுரம் எரிப்பு
திருக்குறுக்கை - காமன் எரிப்பு
திருக்கடவூர் - காலனை உதைத்தது
திருவிற்குடி - க(ச)ந்தராசுரன் சம்ஹாரம்
திருக்கோவிலூர் - அந்தகாசுரன்வதம்
இப்படி கொலை செய்வதும், எரிப்பதும், வதம் செய்வதும்தான் கடவுளா?
இந்தக் கடவுளை நம்பும், பக்தி செலுத்தும் பக்தனின் புத்தி விளங்குமா?
தான் நம்பும் கடவுளின் வழிகாட்டுதல்படி நடந்து கொள்வதால்தான் நாட்டில் இத்தனைக் கொலை பாதகங்கள் - வன்முறைகள் என்பதை ஒப்புக் கொள்வார்களா?

தமிழ் ஓவியா said...


அர்ச்சகர் பிரச்சினைமானமிகு திராவிடர் கழக தலைவர் அவர் களுக்கு என் ஆசான் பொருளாளராக இருந்து வரும் கோ.சாமிதுரை அவர்களின் குமாஸ்தா பாலு பணிவன்புடன் எழுதிக்கொண்டது. நானும் என் ஆசான் அவர்களிடமும், அவரின் குமாரர் ஜி.எஸ்.பாஸ்கர் அவர்களிடமும் சுமார் 1962 முதல் குமாஸ்தாவாக பணிபுரிந்து கொண்டு வருகிறேன்.

அய்யா நானும் சபரிமலைக்கு 48 ஆண்டுகள் சென்றுள்ளேன். கள்ளக்குறிச்சியில் அய்யப்பன் ஆலயமும் பலர் உதவியுடன் கட்டியுள்ளேன். அர்ச்சகர் பிரச்சினைபற்றி தங்களின் விளம்பரம் டீ..வி. பேப்பர் மற்றும் செய்திகள் மூலம் கேள்வி பட்டேன். தங்களின் நல்லதொரு கோரிக்கை அற்புதம், போராட்டம் அற்புதம் அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் ஆக வேண்டும் என்ற தங்களின் கோரிக்கை போற்றத்தக்கது. மேலும் ஊர் என்றால், பள்ளிக்கூடம், குளம் மற்றும் கோவில் இருக்க வேண்டும் என்பார்கள். பள்ளிக் கூடத்தில் ஆசிரியர் மற்றும் மாணவ, மாணவியர் கள் என அனைத்து ஜாதியினர் இருக்கிறார்கள். குளம் இருப்பின் அனைவரும் தண்ணீர் அருந்து கிறர்கள், கோவில் என்றால் பார்ப்பனர்கள் தான் ஆதிக்கம். அவர்களன்றி மற்ற இனத்தினர் அவர் களுக்கு அடிமைபோல் இருந்துவர வேண்டியுள்ளது. இதனை தந்தை பெரியார் அவர்கள் வைக்கம் முதல் அனைத்து இடங்களிலும் எதிர்த்து போராடினார்கள். அதே போல் தாங்கள் தற்போது நடத்தும் போராட்டம் போற்றக்கூடியது. எல்லா மதத்தினரும் நன்றாகவே ஆதரவு அளிப்பார்கள். தாங்கள் நடத்தும் இந்த போராட்டம் எல்லாம் வல்ல நம் முன்னோர்கள் ஆசீர்வாதத்தினாலும், அனைத்து ஜாதியினர்கள் ஆதரவாலும், நான் வணங்கும் என் தாய் தந்தையர்கள் ஆசீர்வாதத் தினாலும் சீரும் சிறப்புமாக நடக்க வேண்டும் என்று வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.

- கே.பி. பாலு (வக்கீல் கிளர்க்) கள்ளக்குறிச்சி