Search This Blog

1.1.13

திரு.வி.க. பார்வையில் பெரியார் - 2


அதில் இடம் பெற்றிருக்கும் ஒரு நிகழ்ச்சி பெரியார் என்ற மாமனிதரின் மற்றொரு பக்கத்தைக் காட்டுவதோடு பெரியார் மறைந்து நாற்பது ஆண்டு களுக்குப் பின்னும் பெரியாரின் பெருமையை நினைத்து நினைத்து போற்றச் செய்யும். பெரியாரின் மெய்யான பெருமை நாற்பது ஆண்டுகள் என்ன நானூறு ஆண்டுகளுக்குப் பின்னும் பேசச் செய்யும்.

பிள்ளையார் பொம்மை உடைப்பு

அ.ச.ஞா. தமிழ்த்தென்றலுடன் தமது தொடர்பு குறித்து எழுதும்போது குறிப்பிட்ட தகவல் களஞ்சியம் இது.

ஈ.வெ.ரா. பெரியார் அவர்கள் திரு.வி.க.விடம் மிக நெருங்கிப் பழகிப் பேரன்பு பூண்டிருந்தார். எனக்குப் பெரியாரை நேரடியாகத் தெரியாது. என்னுடைய கலப்பு மணம் பற்றிக் குடிஅரசு பத்திரிகையில் எழுதிச் சிறு பூசை செய்கின்ற என் தந்தையாரைப் பற்றிச் சற்று தாழ்வாக எழுதியிருந்தமையின் பெரியார் பற்றிய பொறுப்பு என்னுள் வளர்ந்தது எனும் பீடிகை யுடன் அ.ச.ஞா. குறிப்பிடும் தகவல்கள் இவை:

இராயப்பேட்டையிலுள்ள தம் முடைய வீட்டின் முன்னர் உள்ள தாழ் வாரத்தில் ஒரு சாய்வு நாற்காலியில் திரு.வி.க. பிள்ளையா அமர்ந்திருந்தார். அவருக்கு எதிரே சில நாற்காலி களும் வலப்புறம் நீண்ட விசிப் பலகை (Bench) போடப்பட்டிருக்கும். அந்தப் பலகையில் நான் அமர்ந்திருப்பேன். அந்தப் பலகைக்குப் பின்னர் ஒரு ஜன்னல் உண்டு. உள்ளே சென்று அந்த ஜன்னல் அருகில் அமர்ந்து விட்டால் வெளியே பேசிக் கொள்ளும் அனைத்தையும் கேட்க முடியும். இப்பொழுது நான்  எழுதப் போவது பெரியார் தொண்டர்களுக்கு அதிர்ச்சியைத் தரலாம். ஆனால் இந்த உரை யாடல் நடந்தது உண்மை என்று மற்றொரு பீடிகையுடன் அவர் எழுதி யிருக்கும் நிகழ்வு இது.

இது நடைபெறுகின்ற காலத்தில் பிள்ளையார் சிலை உடைக்கும் செயல் தமிழகத்தில் பெரிதாக நடந்து கொண் டிருந்தது. பெரியாரைக் கண்ட திரு.வி.க., அய்யா நீங்கள் செய்வது சரியே இல்லை. விநாயகர் சிலையின் தத்துவம் என்ன என்று தெரியாமல் உடைப்பது எப்படி நியாயம்? என்று உணர்ச்சிப் பெருக்குடன் கேட்டார். இப்போது பெரியாரின் விடை எனக்கும் ஏன் சின்னையாவிற்கும்கூட ஓர் அதிர்ச்சியைத் தந்தது.

டேய் கல்யாணசுந்தரம், என்ன பயித்தியக்காரன் போல பேசுகிறாய், நீ சொல்லும் கோயில் வினாயகரையோ, அரச மரத்தடியில் வைத்து ஜனங்கள் வழிபடும் வினாயகரையோ தொடக் கூடாது என்று உத்தரவிட்டிருக்கிறேன். அவனவன் மண்ணிலோ மாக்கல்லிலோ பிள்ளையார் சிலை செய்து அதை உடைக்க வேண்டும் என்றுதான் உத்தரவு இட்டிருக்கிறேன். மருந்து சார்த்தி பண்ணப்படும் பிள்ளையாரைத் தொட்டால் கையை முறித்து விடுவேன்  எனக்கடுமை யான உத்தரவு. அவனவன் பண்ணிக் கொண்டு வந்து உடைக்கட்டுமே? இதைப் பண்ணித் தருகிறவனுக்குக் கொஞ்சம் காசு சேருமல்லவா? என்று சொல்லி விட்டுச் சிரித்தார். பெரியார் என்ற மாமனிதரின் பக்கம் இது.

ஒரு முறை அ.ச.ஞா திரு.வி.க. வீட்டில் இருக்கும் போது பெரியார் வந்தார் சமய எதிர்ப்பை அய்யாவும், அவருடைய தொண்டர்களும் விரிவாக நடத்திய வேளை அது. சைவ சமயம் பெரியோர்கள் ஏதேனும் விழா நடத்தினாலும் திரு.வி. க.வை அழைப்பது இல்லை. பெரியார் அடிக்கடி திரு.வி.க.வின் வீட்டிற்கு வருகிறார் வரப் பேசிக் கொண்டிருக்கிறார் என்றும் அறிந்த சைவப் பெரு மக்கள் திரு.வி.க.வை ஒதுக்கியே விட்டனர். மேலும் திரு.வி.க.விற்குக் கண் பார்வை பெரிதும் குன்றி விட்டது.

அந்த நிலையில் தான் மேடையில் பேசுமாறு பெரியார் திரு.வி.கவை அழைக் கத் திரு.வி.க.வும் ஒத்துக் கொண்டு விட்டார்.

எனவே திரு.வி.க. விடம் அ.ச.ஞா. பெரியார் கூட்டத்திற்குப் போகுமளவிற்கு உங்கள் நிலை இறங்கி விட்டதா? இது என்ன நியாயம்? என்று பொங்கியபோது திரு.வி.க. அவரிடம் கூறியவை இவையாம்.

சம்பந்தா என் மனத்தில் புதிய புதிய சிந்தனைகள் தோன்றிக் கொண்டே இருக்கின்றன. உடனுக்குடன் எழுதவோ வாய்ப்பு வசதி இல்லை. மேடையில் பேச வேண்டும். இக்கருத்துக்களை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்ற வெறி என்னுள்ளே பொங்கிக் கொண்டே  இருக்கிறது. சைவப் பெருமக்களோ என்னை அழைப்பதில்லை. இந்த நிலையில் பெரியார்தான் என்னை அழைத்தார். என் பேச்சு வெறி தணிய அவர்தான் இதற்கு ஒரு வடிகால்!

தமிழ்த் தென்றலின் மூச்சு நின்றபின் நடைபெற்ற நிகழ்ச்சியில் பெரியார் பங் கேற்ற பண்பாட்டு நிகழ்வு இது. 

மரியாதை செய்ய வேண்டும் என்று சொல்லித் தொழிற்சங்கத்தவர் அவருடைய உடலைப் பெரம்பூருக்கு எடுத்துச் சென்று விட்டனர். போகிற போக்கில் அவர்கள் அன்று மதியம் ஜெமினி வரை தாங்கள் உடலைக் கொணர்வதாகவும் அதன் பிறகு உடலை பெற்றுக் கொண்டு இறுதிச் சடங்கைச் செய்யலாம் என்று கூறிச் சென்று விட்டனர். ஜெமினியில் பெரியாரும் அவர்தம் தொண்டர் படையும் நின்று கொண்டிருந்தது.

வண்டியில் வந்த திரு.வி.க. உடலும் அய்.ஜி. அலுவலகச் சுடுகாட்டில் சிதை யில் வைக்கப்பட்டது. பெரியாரின் தொண் டர்கள் பத்துப் பேர் தடியை ஊன்றிக் கொண்டு நின்ற பெரியாருக்குப் பின் கொள்ளி வைப்பதற்குரிய சிறு சிறு பந்தங் களை ஏந்தி நின்றனர்.

கூடியிருந்த கூட்டம் முழுவதும் பெரியாரின் தொண்டர் கூட்டம். 

திரு.வி.க.வைக் கொண்டாட சைவப் பெருமக்கள் யாருமோ தமிழ்ப் புலவர்கள் யாருமோ ஒருவர் இருவர் தவிர வர வில்லை.

பெரியாரிடம் சென்று நாமிருவரும் தான் கொள்ளி வைக்க வேண்டும். இது தான் திரு.வி.க.வின் விருப்பம் என் பதைச் சொல்லுமாறு மு.வ. வேண்டிட அ.ச.ஞா. பெரியாரிடம் அதனைத் தெரிவித்தார்.

அ.ச.ஞா. எழுதுகிறார்: இப்பொழுது பெரியாரின் பெருமை வெளிப்பட்டு நின்றது அப்படியா சொன்னான் கல்யாண சுந்தரம் அப்படீன்னா நீங்களே செய்யுங்க என்று சொல்லி விட்டுத் தீப்பந்தங்களோடு சிதையைச் சுற்றி நின்ற தம் தோழர்களை மீண்டு வந்து விடுமாறு எச்சரித்தார். ஆனால் அவர்களோ வருவதாக இல்லை. உடனே பெரியாருக்குச் சினம் வந்தது. டேய்! சொல்றேனே காதில் விழலை? தீப்பந்தங்களை ஒரமா வச்சிட்டு வாங்கப்பா என்று கர்ஜித்தார்.

பக்கத்தில் நின்று கொண்டிருந்த அ.ச.ஞா.வைப் பார்த்து தம்பி! நீங்க எப்படிச் செய்வீங்க இதை என்று இறுதிச் சடங்குகள் குறித்துக் கேட் டார். அய்யா! சின்னய்யா அவர்களுக் குப் பிடித்த திருவாசகத்தில் சிவபுராணத்தைச் சொல்லிச் சிதைக்குத் தீ முட்டுவோம் என்றார்.

அப்படியே செய்யுங்க தம்பி என்று சொல்லிய பெரியார் அவ்விடத்தை விட்டுப் புறப்படாமல் அங்கே நின்றார். அ.ச.ஞாவும் மு.வ.வும் தலை மாட்டில் அமர்ந்து சிவபுராணத்தைத் தொடங்கினர். 17 வரிகள் பாடுகிற வரையில் இருந்து கேட்டு பெரியார் தம் அருமை நண்பருக்கு இறுதியாக ஒரு கும்பிடு போட்டு விட்டுத் தொண்டர் படை சூழப் புறப்பட்டுச் சென்றார்.

கழகத் தொண்டு தமிழ்த் தொண்டு சைவ சமயத் தொண்டு ஆகியவற் றிற்காக வாழ்நாள் முழுவதையும் அர்ப் பணித்த திரு.வி.க.வின் இறுதி ஊர்வலத்தில் தேச பக்தித் தொண்டர்கள் தமிழ்ப் புலவர்கள், தம்மைச் சைவர்கள் என்று சொல்லிக் கொள்கிறவர்கள் யாரும் வர இல்லை. எதிரிக் கட்சியினர் என்று குறிக்கப் பெற்ற பெரியாரும் அவருடைய தொண்டர்கள் நூற்றுக் கணக்கானவர்களும் இறுதி வரை நின்று இறுதி வணக்கம் செய்து போயினர். தொண்டில் பழுத்த பழம் மரியாதையையும் வணக்கத்தையும் செய்தது. அவர்தான் பெரியார்.

 --------------------- முனைவர் பேரா. ந.க. மங்களமுருகேசன் அவர்கள் 1-1-2013 “விடுதலை” யில்  எழுதிய கட்டுரை

4 comments:

தமிழ் ஓவியா said...


மாலேகான் குண்டு வெடிப்புக்குக் காரணம் யார்?


முஸ்லிம்கள் அல்ல, இந்துத்துவ தீவிரவாதிகளே காரணம்!
தேசிய புலனாய்வுக் குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு

மாலேகான் குண்டு வெடிப்புக்குக் காரணம் யார்?


புதுடில்லி, ஜன.1- 2006ஆம் ஆண்டு மாலே கான் என்ற இடத்தில் நடந்த குண்டு வெடிப் பில் 37 பேர் பலி யானதற்கும் 100 பேர் படுகாயம் அடைந் ததற்கும் காரணம் முஸ் லிம் அடிப்படைவாதி கள் அல்ல, இந்துத்துவ தீவிரவாதிகள்தான் என்று தேசிய புலனாய் வுக் குழு தனது அதி காரபூர்வமான அறி விப்பை 28.12.2012 அன்று வெளியிட்டது.

சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் ரயில் குண்டு வெடிப்பு தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள ராஜிந்தர் சொவுத்ரிக்கு அய்தராபாத் மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப் பிலும் தொடர்பு இருக் கலாம் என்று தேசிய புலனாய்வு அமைப்பு (என்அய்ஏ) தெரிவித் துள்ளது.

2007ஆம் ஆண்டு பிப்ரவரி 18ஆம் தேதி ஹரியானா மாநிலம் பானிபட் அருகே சம்ஜ வுதா எக்ஸ்பிரஸ் ரயிலில் குண்டு வெடித்ததில் 68 பேர் உயிரிழந்தனர்.

இது தொடர்பாக ராஜிந்தர் சவுத்ரி என்ப வரை கடந்த வாரம் தேசிய புலனாய்வு அமைப்பினர் கைது செய்தனர். இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட 4ஆவது நபர் ராஜிந்தர் சவுத்ரி. ஏற்கெனவே அசீம் ஆனந்த், லோகேஷ் சர்மா, தேவிந்தர் குப்தா ஆகியோரை தேசிய புல னாய்வுக் குழு அதி காரிகள் கைது செய் துள்ளனர்.

தலைமறைவாக இருந்த ராஜிந்தர் சவுத்ரி பற்றித் தகவல் கொடுப் போருக்கு ரூ.5 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்து வலது சாரி தீவிரவாதியான அவர், தனது பெயரை மாற்றிக் கொண்டு மத்தியப்பிர தேச மாநிலம் உஜ்ஜைனி அருகே தலைமறைவாக வாழ்ந்து வந்தார்.

2007ஆம் ஆண்டு மக்கா மஸ்ஜிதில் குண்டு வெடித்ததில் 9 பேர் உயிரிழந்தனர். அதைத் தொடர்ந்து காவல் துறையினருடன் ஏற் பட்ட மோதலில் 5 பேர் உயிரிழந்தனர்.

இந்த இரு குண்டு வெடிப்பு சம்பவங்களி லும், வெடிகுண்டை சம்பந்தப்பட்ட இடங் களில் பொருத்தியது ராஜிந்தர் சவுத்ரி என குற்றம் சாற்றப்பட் டுள்ளது.

இந்த நிலையில் 2006ஆம் ஆண்டு 37 பேர் பலியானதற்கும் 100 பேர்கள் படுகாயம் அடைந்ததற்கும் காரண மான மாலேகான் குண்டு வெடிப்பிலும் ராஜிந்தர் சவுத்ரிக்கு தொடர்பு இருப்பதாக அந்த வழக்கு குறித்து விசாரணை நடத்தி வரும் தேசிய புலனாய்வுக் குழு அறிவித்துள்ளது.

இந்தத் தகவலை அந்த வழக்கை விசா ரித்து வரும் சிறப்பு நீதி மன்றத்தில் தேசிய புலனாய்வுக் குழுவினர் தெரிவித்தார்கள். எனவே ராஜிந்தர் சவுத் ரியை ஜனவரி மாதம் 3ஆம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று விசாரணை நீதி மன்றம் உத்தரவிட்டது.
அதன்படி அவர் அன்றைய தினம் விசா ரணை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார். அப்போது ராஜிந்தர் சவுத்ரியை விசாரணைக் காக தேசிய புலனாய்வுக் குழு பாதுகாப்பில் விட வேண்டும் என்று தேசிய புலனாய்வு க் குழு மனு தாக்கல் செய்யப்படும்.

ராஜிந்தர் சவுத்ரியை தேசிய புலனாய்வுக் குழு வினர் தங்கள் பாது காப்பில் எடுத்துக் கொண்டு வெடிகுண்டு வெடிப்பு தொடர்பாக புலன் விசாரணையை அவரிடம் நடத்துவார்கள்.

2006ஆம் ஆண்டு மாலேகானில் நடந்த பயங்கர குண்டு வெடிப் புக்கு ஏற்கெனவே கூறப் பட்டதைப்போல முஸ் லிம் அடிப்படைவாதி கள் காரணம் அல்ல என்றும் அதற்கு இந்துத் துவ தீவிரவாதிகள்தான் காரணம் என்று தேசிய புலனாய்வுக் குழு கடந்த வெள்ளிக்கிழமை அன்று அதிகாரப்பூர்வ மாக அறிவித்தது.

எனவே 2006இல் நடைபெற்ற மாலேகான் குண்டு வெடிப்பிற்கும், 2007ஆம் ஆண்டு நடை பெற்ற சம்ஜவுதா எக்ஸ் பிரஸ் ரயில், அதே ஆண் டில் மக்கா மஸ்ஜிதில் நடந்த வெடிகுண்டு வெடிப்பிற்கும் காரண மானவர்கள் முஸ்லிம் அடிப்படைவாதிகள் அல்ல அந்த குண்டு வெடிப்புகளுக்கு இந் துத்துவா தீவிரவாதிகள் தான் காரணம் என்பது வெளிச்சத்திற்கு வந்தது.

தமிழ் ஓவியா said...


துளிகள்...

மறுபடியும் வம்பா?

முகம்மதலி ஜின்னாவை மதச் சார்பற்றவர் என்று எல்.கே. அத்வானி சொல்லப் போய் சங்பரிவார்க் கும்பலிடம் சரியாக வாங்கிக் கட்டிக் கொண்டார் அதன் காரணமாக பிஜேபி தலைவர் பதவியையும் ராஜினாமா செய்தார்.

திருவனந்தபுரத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்கச் சென்ற அத்வானி தான் அன்று சொன்னதை நியாயப்படுத்திப் பேசியுள்ளார். கராச்சி நகரில் உள்ள இராம கிருஷ்ண மட அதி பர் சுவாமி ரங்கநாதானந்தரின் அறிவு ரையைக் கேட்டே அந்த முடிவுக்கு வந்ததாகக் கூறினார். சங்பரிவார் என்ன செய்யப் போகிறதோ!
இருப்பு

அ.இ.அ.தி.மு.க.வின் கையிருப்பு எம்.ஜி.ஆர். காலத்தில் ஒரு லட்ச ரூபாய்கூட இல்லை. இப்பொ ழுது 118.56 கோடி என்று கட்சியின் பொதுச் செயலாளர் ஜெ. ஜெயலலிதா அ.இ.அ.தி.மு.க. பொதுக் குழுவில் கூறியுள்ளார். நல்ல வளர்ச்சி தான்!
குட்டைப் பாவாடை

ராஜஸ்தான் பிஜேபி சட்டமன்ற உறுப்பினர் பன்வாரி லால்சிங், பள்ளி மாணவிகள் குட்டைப் பாவாடை அணிந்து வரக் கூடாது என்று சொல்லப் போய் நன்றாக வாங்கிக் கட்டிக் கொண்டார். பையன்கள் அரை டிரவுசர் அணிந்து வரக் கூடாது என்று ஏன் அவர் சொல்லவில்லை என்ற எதிர் வினாவை எழுப்பியுள்ளனர் மாணவிகள். அந்த எம்.எல்.ஏ.வுக்குக் குட்டைப் பாவாடை ஒன்றினை மாணவி ஒருவர் அனுப்பி வைத்துள்ளார். பொட்டச்சி என்றும் நான் வளையலா அணிந்திருக்கிறேன் என்றும் சொன்ன காலம் மலை ஏறி விட்டது அப்பனே!
நான் தலைவி!

மைசூர் அருகே ஆனத்தூர் ஊராட்சி மன்ற தலைவராக மனைவியும், துணைத் தலைவராக கணவரும் இருக்கின்றனர்.

வீட்டில்தான் கணவனுக்கு நான் அடக்கம், ஊராட்சி மன்றம் என்று வந்துவிட்டால் இங்கு நான் தான் தலைவி. அவர் என் கட்டளைக்குக் கட்டுப்பட்டவர் என்று கூறி இருக்கிறார் ஊராட் சித் தலைவி. தொட்டிலை ஆட்டும் கை தொல் லுலகை ஆளும் கை என்று புரட்சிக் கவிஞர் சொன்னது இதுதானோ! அணி மாறும் கொள்கை

நடைபெற்ற குஜராத் மாநில சட்டப் பேரவைத் தேர்தலில் தங்கள் கட்சியை காங்கிரஸ் அவமதித்து விட்டதால் நாங்கள் அணி மாற ஆயத்தமாகி விட்டோம் என்கிறார் தேசியவாதக் காங்கிரஸ் தலைவர் சரத்பவார்.

இதன் பொருள், பிஜேபியோடு கூட்டு என்பது தானே? இதுவரை கூறி வந்த மதச் சார்பின்மை என்னாயிற்று? என்னே சந்தர்ப்பவாத அரசியல்!

காங்கிரசும் தம் கூட உள்ளவர்களை எதிர்ப் பக்கம் தள்ளிவிடும் அணுகுமுறையை கைவிட வேண்டாமா? கையில் இருப்பதை விட்டு விட்டு பறக்கிறதுக்கு ஆசைப்படலாமா?
கறுப்புப் பேட்ஜ்

பிறக்கும் புத்தாண்டை பெண்கள் பாதுகாப்பு ஆண்டாக அறிவிக்க வேண்டும் என்றும், புத்தாண்டு அன்று அனைவரும் கறுப்புப் பேட்ஜ் அணிய வேண்டும் என்றும் இந்தியக் கம்யூ னிஸ்டுக் கட்சியின் அகில இந்திய மகளிர் பிரிவுத் தலைவர் சீமா எம்.பி. கூறியுள்ளார்.

நல்லவிதமான குரல்தான் இது. அதே நேரத் தில் சட்டமன்றங்கள் மற்றும் நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு உள் ஒதுக்கீட்டுடன் கூடிய 33 விழுக்காடு மசோதாவை நிறைவேற்ற முயற்சியை மேற்கொள்ள வேண்டாமா?

உப்பு சப்பு இல்லாதவற்றிற்கெல்லாம் நாடாளு மன்றத்தை முடக்கத் தெரிந்தவர்களுக்கு, இந்த அதி முக்கியமான பிரச்சினை கருத்துக்கு விளங்கவில்லையா?
காசேதான்...

புத்தாண்டையொட்டி சென்னை அம்பேத்கர் கொற்றவை பத்திரகாளி அம்மனுக்கு ரூ.1000, ரூ.500, ரூ.100, ரூ.50, ரூ.20 நோட்டுகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ.5 லட்சமாம். காசேதான் கடவுளடா என்பது இதுதானா!

இன்னொரு சேதி இப்படி ரூபாய் நோட்டு மாலை போடக் கூடாது என்று சில நாட்களுக்கு முன் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது தெரியுமா? சட்டப்படி இதன்மீது நடவடிக்கை எடுக்கலாம் அல்லவா!

தமிழ் ஓவியா said...


2013ஆம் ஆண்டே வருக!

2012ஆம் ஆண்டை சாதனை ஆண்டு என்பதை விட சோதனை - வேதனைகள் நிறைந்த ஆண்டு என்று சொல்லுவதே மிகவும் பொருத்தமானதாகும்.

உலகளவில் பொருளாதாரத்தில் வீழ்ச்சி - அது இந்தியாவரை பாதித்துள்ளது. மிகவும் வெட்கப் படத்தக்கது என்னவென்றால் ஈழத் தமிழர்கள் பல்லாயிரக்கணக்கில் அரசப் பயங்கரவாதம் என்று சொல்லப்படுகிறதே - அந்த வகையில் படுகொலை செய்யப்பட்டனர் - உலகமே அதிர்ந்தது. அந்தப் படுகொலை செய்யப்பட்டபோது உலக அமைதியைக் காப்பதில் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டிய அய்.நா. அந்தக் கால கட்டத்தில் தன் கடமையைச் செய்யத் தவறிவிட்டது என்பதை எப்படி ஜீரணித்துக் கொள்ள முடியும்? வேலியே பயிரை மேயும் என்பது இதுதானோ!

பான்-கீ-மூன் அய்.நா. செயலாளராக இருந்த இந்தக் கால கட்டம் இருள் சூழ்ந்ததாகி விட்டதே!

அய்.நா. அனைத்து நாடுகளாலும் உலக மக்களாலும் மதிக்கத் தகுந்த நிலையை இதன் மூலம் இழந்து விடவில்லையா? இரண்டாவதாக ஒரு பெரிய இனப்படுகொலை நடைபெற்று மூன்று ஆண்டுகள் ஓடிய நிலையில், எஞ்சி உயிரை வைத்துக் கொண்டிருக்கும் ஈழ மக்கள் வாழ்வாதார அடிப்படையின்றி திறந்த வெளி சிறை வாழ்க்கைதானே ஈழத் தமிழர்களுடையது இன்ற ளவும். டெசோ அமைப்பு மூலம் ஈழத் தமிழர் பிரச் சினை உலகளவில் முக்கியமான இடத்திற்குக் கொண்டு வரப்பட்டது.

இரண்டாவதாக தமிழ்நாட்டின் அவல நிலை தமிழ்நாட்டின் மிக முக்கிய தொழிலான விவசாயம் மிகவும் நலிவடைந்து விட்டது. அதற்கு முக்கிய காரணம் தேசிய நீரோட்டம் பேசும் கருநாடக மாநில அரசு சட்டத்தையும், நியாயத்தையும் மதிக்காத ஒரு நிலையில் தமிழ்நாட்டுக்குக் கிடைக்க வேண்டிய காவிரி நீர் கிடைக்காத காரணத்தால் விவசாயத் தொழிலில் ஈடுபட்டுள்ள மக்கள் மட்டுமல்ல, தமிழ்நாட்டின் பொருளாதாரமே நசிந்துவிட்டது.

ஏழை - எளிய விவசாயிகள் பலர் தற்கொலை செய்து கொண்டுள்ள பரிதாபம்! இதில் மத்திய அரசு என்பது, மத்திய அரசாக இல்லாமல் கழுவும் நீரில் நழுவும் மீனாக நடந்து கொள்வதும் கண்டிக்கத் தக்கதாகும்.

தமிழ்நாடு அரசே குறைந்தபட்சம் அனைத்துக் கட்சிக் கூட்டத்தையும் கூட்டக்கூட முன்வராதது விமர்சனங்களைச் சந்திக்கத் தயங்கும் போக்கைத் தான் வெளிப்படுத்தும்.
மூன்றாவதாக பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை - நாகரீக உலகத்தில் தான் நாம் இருக்கிறோமா என்ற வினாவை எழுப்புகிறது.

அதுவும் சமூக மறுமலர்ச்சி வித்து ஊன்றப்பட்ட தமிழ் மண்ணில் இந்தக் கொடுமை - அதுவும் பெண் ஒருவர் முதல் அமைச்சராக இருக்கும் இந்த நிலையில் இந்த அவலம்!

இதற்கு மூல காரணமான ஊடகங்கள், சின்னத் திரை, பெரிய திரைகள் கட்டுப்படுத்தப்பட வேண்டும்; கல்வித் திட்டங்களில் தேவையான மாறுதல்களும் அவசியமாகும்.

நான்காவதாக குஜராத் மாநிலத்தில் இந்துத்துவா வெறியர் ஒருவர் தலைமையின்கீழ் நான்காவது முறையாக ஆட்சி அமைந்திருப்பதாகும்.

2002 ஆம் ஆண்டில் கோத்ரா ரயில் பெட்டி எரிப்பைத் தொடர்ந்து அரச பயங்கரவாத அடிப் படையில் இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட சிறுபான்மை மக்கள் கொன்று குவிக்கப்பட்டனர். அவர்களின் பொருளாதார ஆதாரமும் எரித்து முடிக்கப்பட்டன.

இந்தியாவின் மதச் சார்பின்மைக்கு விரோதமான கொள்கையுடைய மதவெறி ஆட்சி குஜராத்தில் அமைந்துள்ளது - இந்தியாவின் எதிர் காலத்துக்கே இது மிகப் பெரிய அச்சுறுத்தலாகும்.

மரண வியாபாரி என்று கணிக்கப்பட்ட - நீரோ மன்னன் என்று உச்சநீதிமன்றத்தால் அடையாளம் காட்டப்பட்ட ஒருவர் குஜராத் மாநிலத்தில் தொடர்ந்து வெற்றி பெற்று வருவதால் இவர்தான் அடுத்த பிரதமர் என்ற பேச்சானது - அபாயகரமானதல்லவா?
அடுத்த ஆண்டு மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற இருக்கும் கால கட்டத்தில், மதச் சார்பற்ற சக்திகள், மற்ற மற்ற பிரச்சினைகளையெல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு, ஒரே இலக்கு மத வெறி சக்திகளை வீழ்த்துவதே என்ற நோக்கில் செயல்பட வேண்டும். வேறு வேறு காரணங்களைக் காட்டி மதச் சார்பற்ற சக்திகள் கோணல் கழி வெட்டினால் அதை விட தற்கொலை முயற்சி வேறுஒன்றும் இருக்க முடியாது - முடியவே முடியாது.

அய்ந்தாவதாக உலக மக்கள் அமைதியும், வளமும் செறிந்து வாழ வேண்டுமானால் மதங்களைத் துறந்து மனிதநேயத்தினை மணந்து வாழ முயற்சிப்பதே ஒரே வழியாகும்.

வாழ்க பெரியார்!
வளர்க பகுத்தறிவு!!

தமிழ் ஓவியா said...


அவசியம்


கருத்து வேற்றுமை ஏற்படுவது மனித இயல்பு; இது இயற்கையே. நமக்கே சில விசயங்களில் நாம் முன்பு நினைத்தது, செய்தது தவறு என்று தோன்றும். இது அதிசயமல்ல. என்னதான் கருத்து வேறு பாடு இருந்தாலும் மனிதத் தன்மை யோடு நடந்துகொள்வதே முக்கியமும், அவசியமுமாகும். (விடுதலை, 17.6.1970)