மனிதர்களை படிக்கிறேன்
வழக்கறிஞர், ஆசிரியர் கி.வீரமணி 80ஆவது பிறந்த நாள் - வாழ்த்துப் பெறுவோம்
திராவிடர் கழகத் தலைவரும், விடுதலை
நாளிதழ் ஆசிரியரும், வழக்கறிஞருமான திரு. கி.வீரமணி அவர்கள் தனது 80ஆவது
பிறந்த நாளை டிசம்பர் 2ஆம் தேதி கொண்டாடினார்.
தமிழர் தம் பண்பாட்டில் - 80 வயதில்
வாழ்ந்து தொடர்ந்து வெற்றி நடைபோடும் மூத்த குடிமக்களிடம் வாழ்த்துப்
பெறுவது சமூக கடமையாக கருதப்படுகிறது. வாழ்த்துப் பெறுவது மன
மகிழ்ச்சியையும் உத்வேகத்தையும் அளிப்பதோடு மேலும் மேலும் உழைக்க வேண்டும்
என்கிற எண்ணம் மேலோங் கும். 80ஆவது பிறந்த நாள் விழாவை சென்ற டிசம்பர் 2ஆம்
தேதி தமிழ் கூறு நல்லுலகமே ஒன்று சேர்ந்து ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு
விழா எடுத்துக் கொண்டாடியது.
விடுதலை நாளிதழில் ஆசிரியராக 50
ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி வரும் இவரை ஆசிரியர் என்று கூறி அழைப்பதில்
தமிழ் கூறும் நல்லுலகம் மகிழ்ந்து பாராட்டுகிறது. தமிழர்
துன்பப்படும்போதெல்லாம் அவர்களுக்காக குரல் கொடுக்கவும், தமிழர் களுடைய
உரிமைகள் மறுக்கப்படுகிற போதெல்லாம் அவர்களுக்காக போராடுவதும்,
தமிழர்களுடைய பண்பாடு சிதைக்கப்படுகிறபோது அதை எதிர்த்து குரல் கொடுப்பதும்
இருவடைய நற்றொண்டு. தொடர்ந்து தன் இளம் பருவத்திலிருந்து இன்று வரை அயராது
உழைத்து வருபவர்தான் திரு. கி.வீரமணி.
தந்தை பெரியார் அவர்களுடைய
கொள்கையால் ஈர்க் கப்பட்டு, சுயமரியாதை பிரச்சார நிறுவனம், பகுத்தறிவு
இயக்கம், திராவிடர் கழகம் இணைந்த சமூக பொருளாதார மறுமலர்ச்சி இயக்கத் தில்
சேர்ந்து தன்னுடைய இளமைக் காலம் தொட்டு கடந்த 70 ஆண்டு காலமாக தொடர்ந்து
பணியாற்றி வருபவர்தான் திரு கி.வீரமணி அவர்கள்.
தந்தை பெரியார் அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட
திராவிடர் கழகம் தமிழர்களுடைய வளர்ச்சிக்காக, திராவிட இன மேம்பாட்டுக்காக,
திராவிடர்களுக்கு என்று தனி நாடு பெற வேண்டும் எனும் நோக்கத் திற்காக
இந்தியா விடுதலை அடையும் வரையில் போராடியது. இந்தியா விடுதலை பெற்ற பிறகு
கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படையில் திராவிடர்களை மேன்மை பெறச்
செய்யவும், திராவிட இன மக்கள் சுயமரியாதையுடன் வாழவும் அதன் மூலம் சமூக
அந்தஸ்தில், அரசியலில், அரசாங்கத்தில், உரிய இடத்தை பெற வேண்டும் எனும்
சமூக நீதிக்காக காலமெல்லாம் இயக்கம் நடத்தி வந்த தந்தை பெரியார்
அவர்களுக்கு உறுதுணையாக, சீடராக, தொண்டராக, செயலாளராக, திராவிடர்
கழகத்திற்கு பொதுச் செயலாளராக பணியாற்றி தலைவராக உயர்ந்தவர்தான் திரு.
கி.வீரமணி அவர்கள்.
அண்ணாமலைப் பல்கலைக் கழகத் தில் எம்.ஏ.
பொருளாதாரத்தில் தங்கப் பதக்கம் பெற்று முதலாவது மாணவராக பட்டம் பெற்று
தொடர்ந்து சென்னை சட்டக் கல்லூரியிலும் சட்டம் படித்து வழக்கறிஞராக
பணியாற்றியவர் திரு. கி.வீரமணி அவர்கள்.
10 வயது முதல் இன்றுவரை சமூகப் பணி,
பொதுப் பணி, சட்டப் பணி, சுய மரியாதைப் பணி என பல்வேறு பணி களில் முத்திரை
பதித்து, மனித இனத்தை சமநோக்கில் எடுத்துச் செல்லவும், உயர்ந்தவர் -
தாழ்ந்தவர் என்கிற பேதத்தை ஒழித்து, சமதர்ம சமுதாயத்தை படைக்க கடவுள்
மறுப்புமூலம்தான் மனித உரிமையை நிலைநாட்ட முடியும் என்ற தந்தை பெரியார்
கொள்கையை ஏற்று தீவிரமாக பணியாற்றியவர் திரு. கி.வீரமணி அவர்கள்.
1976இல் இந்தியாவில் அவசரக் காலச் சட்டம்
நடைமுறைப்படுத்தப்பட்ட போது போலீசாரால் கைது செய்யப்பட்டு ஓராண்டு மிசா
கைதியாக சிறைக்கூடத் தில் இன்னல்களை எதிர்கொண்டவர் திரு.கி.வீரமணி அவர்கள்.
தமிழ்நாட்டில் அனைத்து கிராமங் களுக்கும்,
குக்கிராமங்களுக்கும், நகரங் களுக்கும் பயணம் செய்து தமிழர்களைத் தட்டி
எழுப்பிய திறமைமிகு பேச்சாளர் திரு கி.வீரமணி அவர்கள். தந்தை பெரியார்
கொள்கையை இந்தியா முழுவதும், ஏன் உலகம் முழுவதும் தலைமைத் தளபதியாக
எடுத்துச் சென்று பணியாற்றி வந்தார், வருகிறார்.
திரு. கி.வீரமணி அவர்கள் சமூகநீதிக்
கொள்கையையும், அதை நடை முறைப்படுத்திய விதத்தையும் பாராட்டி 2003ஆம் ஆண்டு
காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகம் டாக்டர் பட்டம் வழங்கி அவரது
சாதனைகளுக்கு பல்கலைக் கழக அங்கீகாரம் வழங்கியது. தமிழ் நாட்டில் -
இந்தியாவில் வாழும் திராவிடர்கள் ஏன் உலகம் முழுவதும் வாழ்கிற
திராவிடர்களுடைய வளர்ச்சிக்காகவும், சமூக நீதிக்காகவும் பாடுபட்டு வரும்
தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள், திராவிடர் தலைவர் கி.வீரமணி என்று
அழைக்கவும் பொருத்தமானவராவார்.
ஆசிரியர் திரு. கி.வீரமணி அவர் களை நான்
மாநில கல்லூரியில் 1974இல் படித்துக் கொண்டிருந்தபோது முதன் முதலாக
சந்தித்தேன். அன்று முதல் இன்று வரை அவரை வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம்
சந்திப்பதையும், அவரிடம் சமூகநீதி, தமிழர் வளர்ச்சி குறித்து கருத்துப்
பரிமாற்றம் செய்து கொள்ளுவதையும் நான் எப்பொழுதும் வாடிக்கையாக
கொண்டிருப்பேன். தமிழர் களுள் எவரொருவர் திறமையானவராக இருந்தாலும் அவரை
அழைத்து ஊக்கு விப்பதும், பாராட்டி மகிழ்வதும் ஆசிரியர் கி.வீரமணி
அவர்களின் தலைசிறந்த பண்புகளில் ஒன்றாகும். அதன் அடிப் படையில் ஆசிரியர்
அவர்கள் பல நேரங் களில் சட்டக்கதிர் பணியினையும், அதைத் தொடர்ந்து 20 ஆண்டு
காலமாக நான் நடத்தி வருவதைக் கண்டும் மகிழ்ச்சி அடைவதோடு சுயமரியாதை
பிரச்சார நிறுவனம் சார்பில் சட்டக்கதிரை பாராட்டி விருதும் வழங்கி
மகிழ்ந்தார். நன்றி என்பதைப் பற்றி சிறிதும் கவலைப் படாமல் பிரச்சினைகள்
வருகிறபோ தெல்லாம் தமிழர்களுக்கெல்லாம், முரசாய், கேடயமாய் விளங்கி வருபவர்
திரு. கி.வீரமணி அவர்கள்.
வழக்கறிஞர் கி.வீரமணி அவர்கள் செல்வி
மோகனா அவர்களை திருமணம் செய்து கொண்டார். இது கலப்புத் திருமணம்.
இவர்களுக்கு இரண்டு மகன் களும், மகளும் உள்ளனர். இவர்களும் கலப்புத்
திருமணம் செய்துகொண் டனர். ஜாதி, மதம், கடவுள் மறுப்பு கொள்கையில் இவரது
குடும்ப உறுப்பி னர்கள் உறுதி யுடன் இன்றுவரை கடைப்பிடித்து வருகின்றனர்.
இவரது மகன் திரு.அன்புராஜ் தலைசிறந்த கல்வியாளராக தன்னை உயர்த்திக் கொண்டு
தன் தந்தையின் கொள்கைகளை தொடர்ந்து உலகமெல்லாம் உள்ள தமிழர்களிடம்
எடுத்துச் செல்லும் தளபதியாக விளங்கி வருகிறார்.
சமூகநீதிக் காவலராக விளங்கும்
திரு.கி.வீரமணி அவர்களுக்கு இந்தியாவின் உயரிய விருதான பத்மசிறீ விருது
வழங்கி அவர் செய்துவரும் பணியினை ஊக்குவிக்க வேண்டும். தமிழ்நாட்டை சார்ந்த
அரசியல்வாதி மணிசங்கர் அய்யர், நடிகைகள் வைஜயந்திமாலா, ஹேமமாலினி, ரேகா,
அறிவியல் அறிஞர் எம்.எஸ். சாமி நாதன், பத்திரிகையாளர் சோ ராமசாமி,
வழக்கறிஞர் பராசரன், அணுவிஞ் ஞானி கஸ்தூரிரங்கன் ஆகியோர் குடியரசுத்
தலைவரால் ராஜ்ய சபா உறுப்பினர் பதவிக்கு நியமிக்கப்பட் டுள்ளனர். சமூக
நீதிக்காக குரல் கொடுக்கும் திராவிடர்களின் கலை பண்பாட்டினை பிரதிபலிக்கும்
விடு தலை ஆசிரியர் கி.வீரமணி அவர்களை ராஜ்ய சபா உறுப்பினராக நியமிக்க
தமிழக தலைவர்கள் குடியரசுத் தலை வருக்கு பரிந்துரை செய்திட வேண்டும்.
80ஆவது ஆண்டில் அடிஎடுத்து வைக்கும் திரு.
வீரமணி அவர்கள் வழக்கறிஞராகவும், சமூக சேவையாளராகவும், கடவுள்
மறுப்பாளராகவும், சமுதாய சீர்திருத்தவாதியாகவும், திராவிடர்களின்
தலைவராகவும் தன் வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து பணி யாற்றி வருபவர். அவரை
வாழ்த்து வதிலே, வாழ்த்துப் பெறுவதிலே சட்டக் கதிர் மகிழ்ச்சி கொள்கிறது.
அவர் மேலும் பல்லாண்டு வாழ்ந்து தமிழ் கூறு நல்லுலகத்திற்கு பணியாற்ற
வேண்டும் என்பதனையே திராவிட இன மக்கள் என்றும் எதிர்நோக்கிக் காத்திருக்
கிறார்கள்.
வாழ்க, வாழ்க பல்லாண்டு.
--------------------நன்றி: ”சட்டக்கதிர்” சனவரி 2013
23 comments:
கோபிசெட்டிப்பாளை யத்தை அடுத்த பாரி யூரில் ஒரு காளியம்மன் கோயில்! இந்தக் காளி யம்மன் மிகவும் பிரசித்திப் பெற்றவளாம். எட்டு கை களுடன் மகிஷாசுரனை வதம் செய்தவாறும், கோபம் தணிந்த சாந்த சொரூபியாகவும் அருள் பாலிக்கிறாளாம். (வதம் செய்பவள்தான் சாந்த சொரூபியோ!)
ஆண்டுதோறும் தேர்த் திருவிழா, தீக் குண்டம் இறங்கும் விழா போன்றவை வெகு தடபுடலாக நடக்குமாம்.
இவ்வாண்டு 10ஆம் தேதி தீக்குண்டம் இறங்கி 11ஆம் தேதி தேர் ஓட்டம்! இந்த ஆண்டு என்ன விசேஷமோ!
விசேஷம் இல்லா மலா?
தீக்குண்டம் இறங்கும் போது ஏதேனும் அசம் பாவிதம் ஏற்பட்டால் அவர்களுக்கு நிதி உதவி செய்யும் வகையில் காளி யம்மன் கோயில் நிருவா கம் என்ன செய்தது தெரியுமா? 5 லட்சம் ரூபாய் இன்ஷ்யூரன்ஸ் செய்துள்ளதாம். இங்குதான் தமிழ் நாட்டிலே முதன் முதலாக இன்ஷ்யூரன்ஸ் செய்யப்படுவதாம் (இதில் பெருமை வேறா?)
இதில் பெருமைப்பட என்னவிருக்கிறது? என்னதான் விரதம் இருந்து பயபக்தியாக தீக்குண்டத்தில் இறங்கி னாலும் விபத்து நடக்க வாய்ப்புள்ளது என்பது இதன் மூலம் விளங்க வில்லையா? மொடச்சூர் தான் தோன்றியம்மன் கோவிலில் நடந்த தீக் குண்டம் இறங்கும் நிகழ்ச் சியில் தவறி விழுந்ததில் 20 பக்தர்களுக்கு மேல் தீக்காயம் ஏற்பட்டதாம்.
ஒன்றில் விவரமாக இருக்கிறார்கள். கடவுள் சக்தி - பக்தி என்பதெல் லாம் சுத்தப் பொய் புரட்டு என்பதில் தெளிவாகவே இருக்கிறார்கள். காளியம் மனின் சக்தியில் நம் பிக்கை இருந்தால் பக்தர் களுக்கு எந்த விபத்தும் நடக்காது என்பதிலும் உறுதியாக, தெளிவாக நம்பிக்கை கொண்டு இருப்பார்கள்.
ஒவ்வொரு கோயிலுக் கும் தலப் புராணங்கள் எழுதி அவற்றின் மகி மையை, சக்தியை எப்படி எப்படி எல்லாம் பில்டப் செய்கிறார்கள். நடை முறையில் வரும்பொழுது கடவுள் நம்பிக்கை எல் லாம் காற்றாய்ப் பறந்து விடுகிறதே - ஏன்?
கடவுளை மற - மனிதனை நினை என்று சொன்னார் தந்தை பெரி யார். அதனைப் பக்தர் களே - கோயில் நிரு வாகமே பின்பற்றத் தொடங்கி விட்டதே!
காளியம்மனின் சக்தி யில் நம்பிக்கை இல்லா மல் தானே காளியம் மனை மறந்து விட்டு இன்ஷ்யூரன்ஸ்காரரான மனிதர்களை நம்பு என்று சொல்லாமல் சொல்லி விட்டனரே!
இது பச்சை நாத்திகம் அல்லவா? எங்குச் சுற்றி னாலும் கடைசியில் ஈரோட்டுச் சந்திப்புக்குத் தான் வந்து சேர வேண் டும். - மயிலாடன் 4-1-2012
நாராயணகுருபற்றி அத்வானியின் புரிதல்?
கேரள மாநிலம், திருவனந்தபுரம் மாவட்டம் வர்காலாவில், ஸ்ரீநாராயண குருவால் அமைக்கப்பட்ட சிவகிரி மடம் உள்ளது. இங்கு நடைபெற்ற விழாவில் பங்கேற்ற பா.ஜ.க.வின் மூத்த தலைவர் எல்.கே. அத்வானி பேசியதாவது:-
இளைய சமுதாயத்தை உருவாக்க வேண்டிய உயரிய கடமையை செய்யும் கல்வி நிறுவனங்கள், தங்களின் பாடத் திட்டங்களில் போர் கர்த்தாக் களையும், ஆட்சியாளர்களையும் பற்றிய வரலாறு களை மட்டும் கற்பித்தால் போதாது. நாராயண குருவின் ஆன்மிக வரலாற்றை மாநில பாடத் திட்டத்தில் இணைத்துள்ள கேரள அரசை நான் மனமார பாராட்டுகின்றேன்.
கல்வியின் தரத்தை முன்னேற்றும் இதுபோன்ற பாடத்திட்டத்தை மத்திய அரசும் பின்பற்ற வேண்டும். நமது நாட்டில் வாழ்ந்து மறைந்த ஆன்மிக முனிவர்களைப் பற்றியும், குருக்களைப் பற்றியும் நமது இளைய சமுதாயத்திற்கு நாம் போதிக்க வேண்டும். மனித நேயத்தையும், நல்லொழுக்கத்தையும் போதிக்க மதத்தையோ, இனத்தையோ காரணம் காட்டி முட்டுக்கட்டை போடக்கூடாது.
மத்திய அரசும், அனைத்து மாநில அரசுகளும், பள்ளிப் பாடத்திட்டத்தில், நாராயண குரு, ஸ்ரீராம கிருஷ்ண பரமஹம்சர், சுவாமி விவேகானந்தர் போன்ற ஆன்மிக தத்துவவாதிகளின் போதனை களைப் பாடமாக இணைக்க வேண்டும் - இவ்வாறு அவர் பேசியுள்ளார்.
அத்வானி நாராயண குருவைப் பற்றி சரியாகத் தெரிந்து கொண்டு இந்தக் கருத்தைச் சொல்லி யிருக்கிறார் என்று சொல்ல முடியாது. அப்படி தெரிந்திருந்தால் இந்தக் கருத்தை அவர் கூறி இருக்கவும் மாட்டார்.
நாராயண குருவை பொறுத்தவரை ஒரே கடவுள், ஒரே குலம், ஒரே மதம் என்ற போதனைக்குச் சொந்தக்காரர். அத்வானிகள் நம்பும் இந்துத்வா என்பது இதற்கு நேர்மாறானது; வருணாசிரமம் இருக்க வேண்டும் என்ற கொள்கையை உடையது. அவர்களின் குருநாதரான கோல்வாக்கரும் அவ்வாறுதான் எழுதி இருக்கிறார்.
ஆனால் ஜாதிபற்றி நாராயணகுரு என்ன சொல்லுகிறார்? மனிதனின் மானிடத் தன்மை எப்படி விளக்க முடிகிறது? அவன் மானிடனாகப் பிறந்திருப்பதனாலேயே. மாடாகப் பிறந்துள்ளதன் மூலம் ஒரு பசுவின் மாட்டுத் தன்மை எப்படி வெளிப்படுகிறதோ அதே போல இதுவும். ஆனால் பார்ப்பனத் தன்மை என்பது இப்படிப்பட்டதாக இருக்கவில்லையே! அந்தோ! இந்த உண்மையை யாரும் காண்பதில்லையே என்று நாராயண குரு கூறும் இந்தக் கருத்துக்கு என்ன பதில்?
அவருடைய இன்னொரு கவிதை என்ன கூறுகிறது? மனித இனத்தில்தான் பார்ப்பானும் பிறக்கிறான். பறையன் பிறப்பதும் அதே மனித இனத் தில் தான். அப்படியானால் மனிதர்களுக்கிடையே ஜாதியில் வேறுபாடு ஏனிருக்க வேண்டும்?
இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லி விட்டு திரு எல்.கே. அத்வானி நாராயண குருவைப் பற்றிச் சிலாகித்தால் சரியானதாக இருக்கும்.
ஒரே கடவுள் என்று நாராயணகுரு கூறும்போது கூட நான் கூறும் சிவன் வேறு; மற்றவர்கள் கூறும் சிவன் வேறு என்கிறார். இது ஈழவர்களுக்கான சிவன் என்கிறார்.
கடவுள் மறுப்புக் கூறி தம் மக்களை ஒன்று சேர்ப்பது கடினமான ஒன்று என்று கருதிய அவர், தங்கள் மக்களுக்கென்று ஒரு சிவனை அடையாளம் காட்டுகிறார்.
கடவுள் பல அவதாரங்கள் எடுத்தார் என்று நம்பும் இந்துத்துவாவாதிகள், ராமன் பாலம் என்று பேசும் மத வெறியர்கள், ஒரே கடவுள் என்று பேசும் நாராயண குருவைப் பற்றிப் பேச உரிமைப் படைத்தவர்கள் தானா?
ஆன்மீகம் பற்றியும் பேசுகிறார் - என்ன அந்த ஆன்மீகம்? ஆன்மீகத்தை நம்ப வேண்டும் என்றால் ஆத்மாவை நம்ப வேண்டும். ஆத்மாவை நம்பினால் கர்ம பலனை, தலை எழுத்தை நம்ப வேண்டும்.
கர்ம பலனையும், தலையெழுத்தையும் நம்பினால், வெந்ததைச் சாப்பிட்டுவிட்டு விதி வந்தால் சாக வேண்டும் வளர்ச்சிக்கு வாய்ப்பு இல்லாத, சுயமரி யாதைக்கு இடம் இல்லாத, பிறவியிலேயே அடிமைப் பட்ட வாழ்க்கையை மேற்கொள்வது தானே அவர்கள் கூறும் ஆன்மீகம்?
தன் மலத்தையே தின்ற மன நோயாளியான ராம கிருஷ்ண பரமஹம்சர் பற்றி எல்லாம் பாடத் திட்டத்தில் சேர்த்துச் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்று கூறுவது எல்லாம் அசல் பிற்போக்குத்தனமே!
ஏதோ சென்ற இடத்தில் அறிவுரை கூறுவது என்ற போர்வையில் சில வார்த்தைகளை அத்வானி அள்ளி விடுகிறார் என்று மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டுமே தவிர அதில் ஒன்றும் பொருள் இல்லை என்பதுதான் உண்மை.4-1-2012
நேரிடும்
நமது அரசியல் வாழ்வு என் பதைப் பொதுவுடைமை வாழ்வாக ஆக்கிக் கொண்டால்தான் மக்கள் சமுதாயம் கவலையற்றுச் சாந்தியும், சமாதான மும் பெற்று வாழ முடியும். இல்லா விட்டால், மக்கள் சித்திர வதைக்கு ஆளாகத்தான் நேரிடும்.
(விடுதலை, 29.5.1973)
கோயில் சிலைகள் நிர்வாணமாக நிற்கின்றனவே!
ஆசிரியருக்குக் கடிதம்
கோயில் சிலைகள் நிர்வாணமாக நிற்கின்றனவே!
பெண்கள் ஒழுங்காக உடை உடுத்திச் சென்றால் ஏன் கற்பழிப்புச் சம்பவம் நடக்கப் போகிறது ? எனச் சிலர் கேட்கின்றனர். 6 வயது, 7 வயது சிறுமிகளைக் கூட பாலியல் பலாத்காரம் செய்கிறார்களே, அதற்கு என்ன காரணத்தை இவர்கள் சொல்லப் போகிறார்கள்? தன் வீட்டில் சிறுமிகள் நிர்வாணமாகக் கூட இருப்பார்கள். அதுசமயம் இதுபோன்ற செயல்களில் இவர்கள் ஈடுபடுவார்களா? 40, 50 ஆண்டுகளுக்கு முன்னர், நம் பெண்கள் இரவிக்கை அணியக்கூட உரிமை இல்லாமல் இருந்தார்களே ?
அப்போதெல்லாம் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்றதா?
பெண்களின் மார்பு, இடுப்பு, கால்கள் தெரிவதால்தான் உணர்ச்சி வசப்பட்டு கற்பழிக்கிறார்கள் என்றால், தமிழ்நாட்டின் அனைத்துக் கோவில்களிலும் பெண் கடவுள்களை முழு நிர்வாணத்தில் அப்படியே நிற்க வைத்துள்ளார்களே. அதற்கு என்ன சமாதானம்?
- வி.சி.வில்வம்
அவர் அந்த ஜாதி, இவர் இந்த ஜாதி என்று பேசிக் கொண்டிருந்தால் நாடு வாழாது - நலிவுகள் தீராது!
நாம் திராவிடர் என்று உறுதி கொள்வோம்!
தி.மு.க. தலைவர் கலைஞரின் இலட்சிய உரை
சென்னை, ஜன. 4 - நாம் திராவிடர் என்ற உணர்வு பெறுவோம். ஜாதி உணர்வு கொண்டால் நாடு வளராது - நலிவுகள் தீராது என்றார் தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள்.
வேலூர் மேற்கு மாவட்ட பா.ம.க. செயலாளர் சாமுவேல் செல்லப்பாண்டியன் தலைமையில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பா.ம.க.வினர் அந்தக் கட்சியிலிருந்து விலகி நேற்று அண்ணா அறிவா லயம் - கலைஞர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் முன்னிலையில் கழகத்தில் இணைந்தனர். கலைஞர் அவர்கள் ஆற்றிய உரை வருமாறு:-
உணர்ச்சி மிகுந்த நிலையில் அறிஞர் அண்ணா பெயரால் அமைந்துள்ள அறிவாலயத்தில் இந்த மண்டபத்திலே திரண்டுள்ள என் இனிய உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புக்களே, இந்த நாளில் இங்கே முன் மொழியப்பட்டு உங்களால் வழி மொழியப்பட்ட உறுதிமொழியை உங்களிடத் திலே எடுத்துக் காட்ட விரும்புகிறேன்.
நான் திராவிடன் என்பதை நிலைநாட்டவும், திராவிட இனத்தை முன்னேற்றவும், திராவிட முன் னேற்றக் கழகத்தில் இன்று முதல் என்னை இணைத்துக் கொள்கிறேன்.
திராவிட முன்னேற்றக் கழகத்தைக் கண்ட, அறிஞர் அண்ணா அவர்களுடைய பொன் மொழி களான கடமை, கண்ணியம், கட்டுப்பாடு
இவைகளை எந்த நிலையிலும் காத்து;
கழகத் தலைமைக்குக் கட்டுப்பட்டு;
சாதி, மதம் கடந்த சமத்துவ நிலைக்கு மக்க ளெலாம் ஒன்று திரள வேண்டும் என்ற எண்ணத்தை ஈடேற்றுவேன் என்று நீங்கள் உறுதிமொழி மேற் கொண்டிருக்கிறீர்கள். இது உங்களில் ஒவ்வொரு வருக்கும் தனித்தனியாக எடுத்துக் கொள்ளப்பட்ட உறுதிமொழியாகக் கருதாமல், இந்தச் சமுதாய முன்னேற்றத்திற்கு, சமுதாயத் தின் நல்வாழ்வுக்கு, அதன் ஏற்றங்களுக்கு, வழி வகுக் கின்ற வகையில் இந்த உறுதிமொழியை நாம் எடுத்துக் கொண்டி ருக்கிறோம் என்ற உணர்வோடு நீங்கள் கழகத்திலே தொடர்ந்து பணியாற்ற வேண்டு மென்று நான் கேட்டுக் கொள்கிறேன்.
உங்களையெல்லாம் இங்கே அழைத்து வருவ தற்கு தலைமையேற்று வழி நடத்தி வந்துள்ள சாமு வேல் செல்லப்பாண்டியன் அவர்கள் உரையாற்றி யதை நான் உன்னிப்பாகக் கவனித்தேன். நம்முடைய சுப. வீ. அவர்கள் உங்களை மாத்திரமல்ல, சாமுவேல் செல்லப் பாண்டியன் அவர்களையும் இன்றைக்கு அழைத்து வந்திருப்பதன் சிறப்பு - தி.மு. கழகத்திற்கு மேலும் ஒரு நல்ல சொற்பொழிவாளர் (கைதட்டல்), அழுத்தந் திருத்தமாக கருத்துக்களை எடுத்து வைக்கக் கூடிய - நல்ல தமிழிலே பேசக் கூடிய - கம்பீரமாகப் பேசக் கூடிய சாமுவேல் செல்லப் பாண்டியன் அவர் களையும் அழைத்து வந்திருக்கிறார்கள் என்பதை எண்ணும் போது, நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன், பெருமையடைகிறேன்.
குற்றம் - குறை இருந்ததால்தான்
அங்கிருந்து பிரிந்து வந்திருக்கிறீர்கள்
இன்றைக்கு ஒரு கட்சியின் அமைப்பிலே இருந்து விடுபட்டு இங்கே வந்திருக்கிறோம் என்பதை எண்ணிப் பார்க்கிற நேரத்தில் அந்த அமைப்பைப் பற்றி குறை கூறத் தேவையில்லை. அந்த அமைப்பைக் குற்றஞ்சாட்டத் தேவையில்லை. குற்றம் இருந்த காரணத்தால்தான், குறைகள் இருந்த காரணத் தால்தான் அங்கிருந்து பிரிந்து வந்து திராவிட முன்னேற்றக் கழகத்திலே இணைந் திருக்கிறோம் என்று முற்றுப்புள்ளிவைத்த பிறகு, அதைப் பற்றிப் பேச வேண்டிய அவசியமில்லை. உங்களையெல்லாம் பிரிந்திருக்கின்ற அந்தத் தலைமை, ஒரு காலத்தில் எனக்கு மிக மிக வேண் டிய, நட்பு கொண்ட, கொள்கையுடைய தலைமை யாகத் தான் இருந்தது. ஆனால் நீங்கள் பத்திரி கைகளைப் பார்த்திருப்பீர்கள். கூட்டங்களிலே கேட்டிருப்பீர் கள். என்றைக் காவது ஒரு நாள், அந்தத் தலை மை யைப் பற்றி நான் அவதூறாகவோ, அல்லது விமர்சனம் செய்தோ பேசியதாகக் காட்ட முடியுமா என்றால் முடியவே முடியாது. ஆனால் வீணாக என்னை வம்புக்கு இழுத்து நான் பதில் பேசா விட்டாலும் கூட என்னை தரக் குறைவாகத் தாக்கி உங்களையெல்லாம் இங்கே வருவதற்கு எளிதாக வழி செய்து கொடுத்த அந்த நண்பருக்கு - உங் களுடைய முன்னாள் தலைவருக்கு - நான் என் னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன். (கைதட்டல்)
மராட்டிய மாநிலத்தில் அம்பேத்கர் பல்கலைக் கழகம் அமைய நாம் எடுத்த முயற்சி! அவர் தாழ்த் தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, புறக்கணிக் கப்பட்ட ஒரு இனத்தைச் சேர்ந்தவர். ஆனாலும் யாராலும் புறக் கணிக்க முடியாத அறிவைப் பெற்றவர். (கை தட்டல்) அப்படிப்பட்ட அம்பேத்கருக்கு அவ ருடைய பெய ரால், அவர் பிறந்த மண்ணில் ஒரு பல்கலைக் கழகம் உருவாவதைக் கூட சில சாதி வெறியர்களால், சாதியில் உயர்ந்தவர்கள் என்று எண்ணிக் கொண்டிருக்கின்ற உலுத்தர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இதை உடனடி யாகத் தடுத்தாக வேண்டும் என்ற அந்த எண்ணத்தின் மீது தான் ஆயிரக்கணக்கான தந்திகள் இங்கிருந்து மராட்டிய மாநில கவர்னருக்கு அனுப்பப்பட்டு, அவர் உடனடியாகச் செயல்பட்டு, இங்கே கூட கவர்னராக இருந்த அலெக்சாண்டர் அங்கேயும் கவர்னராக இருந்த காரணத்தால், அவர் உடனடியாக அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு, இப்போது மராட்டியத் திலே அண்ணல் அம்பேத்கர் பெயரால் பல்கலைக் கழகம் அமைந்திருக்கிறது என் றால், அது நாம் இங்கே எடுத்த முயற்சிதான் என்பதை நான் உங்களுக்குத் தெரிவித்துக் கொள்ள விரும் புகிறேன்.
என் மருமகள்
நான் உங்கள் இனத்தைச் சேர்ந்த - உங்கள், எங்கள் என்று நான் பிரித்துப் பேச விரும்பவில்லை - நம்முடைய இனத்தைச் சேர்ந்த (கைதட்டல்) காந்தி என்ற பெண்ணுக்கு மாமனார். என்னுடைய மகன் மு.க. அழகிரிக்கு மனைவியாக வாய்த்திருப்பவர் - அப்படி மனைவியாக வாய்க்க வேண்டுமென்று நான் விரும்பி - செய்யப்பட்ட அந்தக் காரியம் - தமிழ்நாட் டில் ஒரு முதல் அமைச்சருடைய மகன் - ஒரு தாழ்த்தப்பட்ட சமுதாயம் என்று கூறப்படுகின்ற தலித் சமுதாயத்தின் பெண்ணை மணக்கிறார் என்றால், அன்றைக்கு எத்தனையோ பேர் மூக்கிலே விரலை வைத்தார்கள். ஆனால் நான் அதைச் செய்தே தீருவேன் என்று என்னுடைய மருமகளாக தலித் சமுதாயத்தை - நம்முடைய ஆதிதிராவிட சமுதாயத்தைச் சேர்ந்த அந்தப் பெண்ணைத்தான் மருமகளாக (கைதட்டல்) இன்றைக்கும் பெற்றிருக்கிறேன். அவர் என்னுடைய மனைவியை அத்தை என்று அழைக்கும்போது, என்னுடைய மனைவி, அந்தப் பெண்ணை தன்னு டைய மருமகளாக ஏற்றுக் கொண்டிருப்பதைப் பார்க்கும் போதும் நான் பெறுகின்ற மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
இப்படி சமுதாயத்திலே கலப்பு ஏற்பட்டு, எல்லோரும் மனிதர்கள் அவர் இன்ன சாதி, இவர் இன்ன சாதி என்றெல்லாம் பேசிக் கொண்டிருந்தால், நாடு வாழாது, நம்முடைய நலிவுகள் தீராது என்பதற் காகத்தான் சாதி மறுப்புத் திருமணங்கள் இன்றைக்கு நடைபெறுகின்றன. தந்தை பெரியார் அவர்களும், பேரறிஞர் அண்ணா அவர்களும், அவர்களுக்கெல் லாம் சமத்துவத்திலே ஒரு நம்பிக்கையையும் உறுதிப் பாட்டையும் ஏற்படுத்தக் கூடிய அளவிற்கு ஒத் துழைப்பு காட்டிய அறிவுலக மேதை அம்பேத்கர் அவர்களுடைய அந்தச் செயல்பாடுகளையும் போற்றிப் பாதுகாத்து நிற்பது தான் திராவிட முன்னேற்றக் கழகம் என்பதையும் நான் உங்களுக்குச் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்.
எனக்குப் பின்னால் மு.க. ஸ்டாலின்
தி.மு. கழகத்தில் நீங்கள் உங்களையெல்லாம் ஒப்படைத்துக் கொண்டிருக்கிறீர்கள். நான் உங்களை வரவேற்கிறேன். இந்தச் சமுதாய மேன்மைக்காக, எழுச்சிக்காக நான் என் ஆயுள் இருக்கிற வரை பாடுபடுவேன். (கைதட்டல்) அப்படியானால் அதற்குப் பிறகு என்ற கேள்விக்குப் பதில்தான் - இங்கே அமர்ந்திருக்கின்ற தம்பி ஸ்டாலின் (பலத்த கைதட்டல்) என்பதை நீங்கள் மறந்து விடக் கூடாது. நாம் ஓரினம், தமிழ் இனம், திராவிட இனம். நம்முடைய மொழி, தமிழ் மொழி. நாம் காப்பாற்ற வேண்டிய மொழி, பயில வேண்டிய மொழி, பாதுகாக்க வேண்டிய மொழி தமிழ் மொழி. அந்த மொழியையும் காத்து, இனத்தையும் காத்து எதுவரினும் அதைப் பற்றி கவலைப்படாமல் எந்தத் தியாகத்திற்கும் தயார் என்று நம்மை நாம் அர்ப்பணித்துக் கொண்டிருக்கின்ற ஒரு இயக்கத்திலே இன்று நீங்கள் உங்களை ஒப்படைத்துக் கொண்டிருக் கிறீர்கள். நீங்கள் இருந்த இடம் எப்படிப்பட்ட இடம் என்பதை நான் அறிவேன். அந்த இடத்திலிருந்து நீங்கள் இங்கே வந்திருக்கிறீர்கள் என்றால், உங்களை நீங்கள் ஒப்படைத்துக் கொண் டிருக்கிறீர்கள் என்றால், அதற்கு மூல காரணமாக நம்முடைய பேராசிரியர் தம்பி சுப. வீ. அவர்களும் சாமுவேல் செல்லப் பாண்டியன் அவர்களும் வழி காட்டியிருக்கிறார்கள். இந்த வழியிலே நீங்கள் நடக்கத் தொடங்கியிருக்கிறீர்கள். இந்த வழி உங்களையெல்லாம் நல்வாழ்வுக்கு இட்டுச் செல்கிற வழி. நம்முடைய இனத்தை மேலோங்கச் செய்கிற வழி. முன்னேற்றுகின்ற வழி. அந்த முன்னேற்ற வழியில் வந்து கால் பதித்து இருக்கின்ற உங்களையெல்லாம் நான் வரவேற்று, மகிழ்ந்து, உங்களுக்கும் எங்களுக்கும் ஏற்பட்டிருக்கின்ற இந்தத் தொடர்பு காலத்திற்கும் அழியாத தொடர்பாக விளங்கட்டும் என்று கூறி (கைதட்டல்) விடைபெறுகிறேன். -இவ்வாறு தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் உரையாற்றினார்.
எனக்குப் பின்னால் மு.க. ஸ்டாலின்
தி.மு. கழகத்தில் நீங்கள் உங்களையெல்லாம் ஒப்படைத்துக் கொண்டிருக்கிறீர்கள். நான் உங்களை வரவேற்கிறேன். இந்தச் சமுதாய மேன்மைக்காக, எழுச்சிக்காக நான் என் ஆயுள் இருக்கிற வரை பாடுபடுவேன். (கைதட்டல்) அப்படியானால் அதற்குப் பிறகு என்ற கேள்விக்குப் பதில்தான் - இங்கே அமர்ந்திருக்கின்ற தம்பி ஸ்டாலின் (பலத்த கைதட்டல்) என்பதை நீங்கள் மறந்து விடக் கூடாது. நாம் ஓரினம், தமிழ் இனம், திராவிட இனம். நம்முடைய மொழி, தமிழ் மொழி. நாம் காப்பாற்ற வேண்டிய மொழி, பயில வேண்டிய மொழி, பாதுகாக்க வேண்டிய மொழி தமிழ் மொழி. அந்த மொழியையும் காத்து, இனத்தையும் காத்து எதுவரினும் அதைப் பற்றி கவலைப்படாமல் எந்தத் தியாகத்திற்கும் தயார் என்று நம்மை நாம் அர்ப்பணித்துக் கொண்டிருக்கின்ற ஒரு இயக்கத்திலே இன்று நீங்கள் உங்களை ஒப்படைத்துக் கொண்டிருக்கிறீர்கள். தி.மு.க. தலைவர் கலைஞர் உரையிலிருந்து....
சாராயக் கடைகள்தானா?
நமது புத்தாண்டு சித்திரை 1 - திருக்கோயில்களில்;
அந்நியர் புத்தாண்டு ஜனவரி 1 சாராயக் கடைகளில்.
அந்நிய புத்தாண்டைப் புறக்கணிப்போம்
தமிழ்ப் பண்பாட்டைக் காப்போம்!
- இந்து முன்னணி, திருப்பூர்
- இப்படி ஒரு பதாகை.
பழனி முருகன் கோயில், திருப்பதி ஏழுமலையான் கோயில் உட்பட ஜனவரி முதல் தேதியில் திறந்து வைத்து தட்சணைகளை வாரி சுருட்டி யுள்ளார்களே - அப்படியென்றால் இந்தக் கோயில்கள் எல்லாம் சாராயக் கடைகள்தானா? இந்து முன்னணி சித்திரை முதல் தேதி தமிழ்ப் புத் தாண்டு; அதுதான் தமிழ்ப் புத்தாண்டு என்று கதைக்கிறதே! நாரதன் என்ற ஆண் கடவுளுக்கும் - கிருஷ்ணன் என்ற ஆண் கடவுளுக்கும் பிறந்தது தான் தமிழ் ஆண்டுகள் என்று கூறுகிறதே - ஆணுக்கும் ஆணுக்கும் பிள்ளைகள் பிறப்பதுதான் தமிழ்ப் பண்பாடா?
பலே, வியாபாரம் பலே!
கோயில் அசல் வியாபாரச் சந்தை என்றால் சிலருக்கு மூக்கின் மேல் கோபம். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடக்கும் ஒவ்வொரு காரியமும் அசல் வியாபாரத் தந்திரம் தான்.
ஏழுமலையானுக்குப் பக்தர்கள் எடைக்கு எடை துலாபாரம் அளிப் பார்கள் அல்லவா - இந்த வியாபாரம் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை தங்கு தடையின்றி நடைபெறும்.
இப்பொழுது என்ன செய் கிறார்கள் தெரியுமா? துலாபாரம் நேர்த்திக் கடன் செலுத்துபவர்கள் எடை மேடையில் நிற்பார்கள். அவர் எடைக்குரிய சாமான்களுக்கான பணத்தைக் கொடுத்து ரசீது பெற்றுக் கொள்ள வேண்டுமாம். பக்தர்கள் துலாபாரம் செய்ய விரும்பும் பொருள்களைச் சுமந்து கொண்டு வர வேண்டிய சிரமம் இல்லையாம்! உள்ளூர் மார்க்கெட் விலையின் அடிப்படையில் பணம் பறிக்கப்படுமாம்! தொட்டதற்கெல்லாம் ஆகமம் பேசும் பேர்வழிகள் இப்படியெல்லாம் செய் வதற்கு எந்த ஆகமவிதிகள் அனு மதிக்கின்றன என்று சொல்வார்களா?
அட மோசடியே!
சேலம் செவ்வாய்ப் பேட்டையிலும் யுகாதி, கர வருட புத்தாண்டு வாழ்த்துக்கள் என்றுகூறி கவுதமப் புத்தர், அண்ணல் அம்பேத்கர், புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் ஆகியோர் உருவங்களையும் இடம் பெறச் செய்த பதாகை ஒன்றை வைத்துள்ளனர் - பி.ஜே.பி.யினர்.
எப்படி இருக்கிறது? புத்தரையும் மகாவிஷ்ணுவின் அவதாரம் என்று சொல்பவர்கள் ஆயிற்றே! நான் இந்து வாக சாக மாட்டேன் என்று கூறி பல லட்சம் மக்களுடன் புத்தம் தழுவியர் ஆயிற்றே அம்பேத்கர்.
முகத்தில் பிறப்பார் உண்டோ முட்டாளே!
தோளில் பிறப்பாருண்டோ தொழும்பனே
இடுப்பில் பிறப்பார் உண்டோ எருமையே
காலில் பிறப்பாருண்டோ கழுதையே!
புளுகடா புளுகடா போக்கிலியே என்று பாடிய புரட்சிக் கவிஞர் பாரதி தாசனையும் அந்தப் பட்டியலில் சேர்த்துள்ளனரே - பலே மோசடிக் காரர்கள் பா.ஜ.க.வினர் என்பதற்கு இதற்குமேலா ஆதாரம் தேவை?
செய்தியும் சிந்தனையும்
நடக்குமோ!
செய்தி: சுவாமி நாராயண் கோயில் அமெரிக்கா வில் திறப்பு!
சிந்தனை: குஜராத் - தபேய் சுவாமி நாராயண் கோயிலுக்குள்ளேயே அர்ச்சகப் பார்ப்பனர்கள் பக்தைகளைக் கடத்தி காம லீலை நடத்தி சாதனை படைத்தார்களே - அது நடக்காமல் இருந்தால் சரி.
இளைஞர்களே உங்களுக்குத் தெரியுமா?
எழுத்துரு அளவு Larger Font Smaller Font
1942இல் அண்ணாமலைப் பல்கலைக் கழகப் பட்டமளிப்பு விழாவுக்கு வந்திருந்த திருவாங்கூர் மகாராணி சமஸ்கிருத வளர்ச்சிக்கு ரூ.1 லட்சம் நன்கொடை தந்த போது - தந்தை பெரியார் அதை எதிர்த்து போராடி _ அந்தப் பணத்தை மாணவர் விடுதி வளர்ச்சிக்குச் செலவிட ஏற்பாடு செய்தார் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?
####
நீதிக்கட்சி ஆட்சிக்கு முன்புவரை மருத்துவக் கல்லூரிப் பட்டப் படிப்பிற்கு சமஸ்கிருதம் தெரிய வேண்டும் என்று இருந்த நிலைபற்றி உங்களுக்குத் தெரியுமா?
####
1938இல் ஆச்சாரியார் கட்டாயமாக இந்தியைப் புகுத்தியதோடு _ இந்தியோடு _ சமஸ்கிருதத்தையும் சேர்த்துப் புகுத்த வேண்டும் என்று ஆனந்த விகடன் பார்ப்பன ஏடு தலையங்கம் தீட்டியது என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?
####
15.10.1927இல் பாலக்கோட்டில் காந்தியார் காஞ்சி சீனியர் சங்கராச்சாரியை சந்திக்கச் சென்றபோது தாழ்த்தப்பட்டோர் கோயில் பிரவேசம் சாஸ்திரங்களுக்கு எதிரானது என்று சமஸ்கிருதத்திலேயே காந்தியிடம் அவர் சொன்னார் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?
####
பார்ப்பனப் பெருச்சாளிகளிடமிருந்து கோயில் சொத்துக்களைக் காப்பாற்ற 1920இல் பனகல் அரசர் இந்துஅறநிலையத்துறை மசோதாவைக் கொண்டு வந்தபோது சத்தியமூர்த்தி அய்யர் சட்டசபையிலே காட்டுக் கூச்சல் போட்டு எதிர்த்து இந்துக் கோயில்கள் தங்கள் சமூகத்துக்காக உரியது என்று சமஸ்கிருதத்திலேயே பேசினார் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?
####
1927இல் திருச்சி தேசிய கல்லூரிக்கு வருகை தந்த காந்தியாருக்குப் பார்ப்பனர்கள் சமஸ்கிருதத்திலே வரவேற்பு தந்தார்கள் என்பதும் அதைக் காந்தியார் எதிர்த்தார் என்பதும் உங்களுக்குத் தெரியுமா?
உங்களுக்குத் தெரியுமா?
1935 ஆம் ஆண்டில் கும்பகோணம் நகராட்சியில் அக்கிரஹாரத்துக்கு மலம் எடுக்க தாழ்த்தப்பட்டவர்களை நியமிக்கக்கூடாது-அதற்குப் பதிலாக சூத்திரர்களை ஏற்பாடு செய்யவேண்டும் என்று பார்ப்பனர்கள் வலியுறுத்தினார்கள்.
இதன்மூலம் மலம் எடுக்கக்கூட அக்கிரஹாரத்திற்குள் தாழ்த்தப்பட்டவர்களை அனுமதிக்ககூடாது என்கிற அளவிற்கு தீண்டாமையைக் கடைப்பிடித்தார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா?
இதில் புதைந்திருக்கும் இன்னொரு உண்மை என்ன? தாழ்த்தப்பட்டவர்களையும்,சூத்திரர்களையும் பார்ப்பனர் ஒரே கீழ் நிலையிலேயே வைத்திருந்தனர் என்பதுதானே?
வாக்கு வங்கி அரசியல் ஓட்டுப்பயிற்சியாளர்களை ஓரங்கட்டுங்கள்!
கடும் நோய்க்கான கிருமிகளைக் கொல்லும் சக்தி வாய்ந்த மருந்துகளில்கூட அளவான அளவே பயன்படுத்தப்பட வேண்டிய ஜாதி என்ற விஷத்தை, மருந்தை மறந்து விட்டு விஷத்தை மட்டுமே குடித்தால் நீங்கள் என்னாவீர்கள்?
தந்தை பெரியாரும், அம்பேத்கரும் கூறியபடி, பிற்படுத்தப்பட்ட ஜாதி சூத்திரர்களும், அடுக்கின் வெளியே தள்ளப்பட்டு அவதிக்குள்ளாகும் பஞ்சமர்கள் என்ற இரு சகோதரர்களும் கைகோர்த்துப் போராட வேண்டிய சகோதரர்கள் அல்லவா? அதைவிட்டு உட்ஜாதி - அரசியல் லாபத்திற்காக - தேர்தல் அரசியலில் வாக்கு வங்கிகளைத் தேடி சந்தர்ப்பவாத சதிக்குப் பலியானால் இதுவரை நீங்கள் பெற்றுள்ள - இனி பெற வேண்டிய சமூக நீதி உரிமைகள் - இடஒதுக்கீடு கல்வி, வேலை வாய்ப்புகள் திடீரென்று காணாமற்போகும் என்பதை நினைத்து, வீடு எரிவதைப் பார்த்து, புரியாத சிறுபிள்ளைகள் கூத்தும் கும்மாளமும் கொள்வதுபோல ஆடாதீர்!
பார்ப்பனர்கள் - ஊடகங்கள் - உங்களில் சிலரை கொம்பு சீவி விட்டு மோத விட்டு, ரத்தம் குடிக்கக் காத்திருக்கும் நரிகளாகி உசுப்பேற்றுகின்றனர்! ஏமாறலாமா?
மண்டல் கமிஷனின் பரிந்துரைகள் முழுவதும் அமுலாகி விட்டவனவா? யோசித்துப் பார்த்தீர்களா?
இளைய பெருமாள் கமிட்டி (மத்திய அரசு கமிட்டி) செயல் வடிவம் கண்டு விட்டதா?
உச்சநீதிமன்றத்திலும், பல மாநில உயர்நீதிமன்றங்களிலும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட நீதியரசர்கள் போதிய அளவுக்கு Adequate Representation அடைந்து விட்டார்களா?
பொதுத்துறை நிறுவனங்களாக இருந்தால் இவர்கள் இடஒதுக்கீடு கேட்பார்கள்; பார் பார் இதோ இவற்றை தனியார் மயமாக்கி இடஒதுக்கீட்டிற்கு - சமூக நீதிக்குச் சமாதி கட்டுகிறோம் என்று ஓசைபடாமல் திட்டமிட்டு வெற்றி பெறுகிறதே ஆரியமும் அதில் நுழைந்த அதிகார வர்க்க ஆட்சியும்! புரிந்து கொண்டீர்களா?
மத்திய அரசுப் பதவிகளில் செயலாளர்கள் என்ற சக்தி வாய்ந்த பதவிகளில் 132ல் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் பூஜ்யம்தான் ராஜ்யம் என்பது போல ஒருவர்கூட இல்லை என்று துறை சார்ந்த அமைச்சரே 6.12.2012இல் நாடாளுமன்றத்தில் கூறியது கேட்டு, உங்களைத் தவறான வழிக்கு அழைத்துச் செல்ல முயலும் சிலர் அவர்கள் திருவாசகங்களில் கூறுவதானால் ஓட்டுப் பொறுக்கிகள் அந்தத் தலைவர் விரிக்கும் வலையில் வீழ்ந்து வாழ்வுரிமையை -வளர்ச்சியை - முன்னேற்றத்தை இழக்கத் துடிக்கலாமா?
மண்டல் குழுப் பரிந்துரைகளுக்காகவும், இளைய பெருமாள் கமிட்டி பரிந்துரைக்காகவும் திராவிடர் இயக்கம் போராடியபோது இவர்கள் எங்கே போய் இருந்தனர்? வீட்டின் கதவைச் சாத்திக் கொண்டு வீணைக் கச்சேரி அல்லவா கேட்டுக் கொண்டிருந்தனர்; இப்போது இப்படி வீண் கச்சேரி நடத்தி, மாயையை உருவாக்கி, உங்களுக்கு ஜாதிப் போதையை ஏற்றும் மயக்கப் பானங்களை அல்லவா தரத் துடிக்கிறார்கள்?
நியாயந்தானா? சிந்தியுங்கள்! 18 வயது வந்த பெண்ணுக்குத் தனது வாழ்விணையரைத் தேர்வு செய்யத் தகுதி இல்லை என்பது உங்கள் வாதமானால், 18 வயதில் வாக்குரிமையை - ஓட்டுப் போடும் வாய்ப்பை - மாற்றிட நாடு தழுவிய அளவில் பிரச்சாரம், போராட்டம் செய்ய முன் வருவீர்களா? சட்டத்தை மாற்றிடப் போராடுவீர்களா?
21 வயது பெண் மாற்று ஜாதியில் காதல் செய்தால் அதை ஏற்பீர்களா?
பெற்றோர்களைக் கேட்டுத்தான் காதல் திருமணம் வயது வந்தபெண் முடிவு செய்ய வேண்டும் என்றால், இது மகளிரை மறுபடியும் அடிமையாக்கும் சமூக அநீதி அல்லவா?
பெற்றோர்கள் கூறுகிறபடி 18 வயது வந்த ஆண் இளைஞர்கள், குறிப்பாக பெண்கள் பெற்றோர்கள் ஆணைப்படி- சம்மதம் பெற்ற பிறகே அவர்கள் கூறும் வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள் என்று கூறுவீர்களா?
அப்படிக் கூறுவது எப்படி நியாய விரோதம், சட்ட விரோதம், மனித உரிமைப் பறிப்புக் குற்றமோ, அது போன்றது தானே மகளிர் உரிமையைப் பறிப்பதும்?
தமிழ்ப் பாங்கு, தமிழன், தமிழினம் என்று கூறும் இவர்களால் காதல் இல்லாமல், குறுந் தொகைப் பாடல்கள் இல்லாத தமிழ் இலக்கியங்கள் உண்டா? குறளின் காமத்துப் பாடல் எழுதி, கண்ணொடு கண் நோக்கொக்கின் குறளும் குற்றமானதா?
வாக்குவங்கி அரசியலில் நடத்தும் ஒட்டுப் பசியாளர்களை ஓரங்கட்டுவீர்!
உண்மையான உரிமைகளை வென்றெடுக்க, திராவிடர் கழகத்தின் - திராவிடர் இயக்கத்தின் பெரியார் தத்துவங்களின் கொள்கையை ஏற்பீர்! வலங்கை, இடங்கைகளைப் பிரிக்காதீர்!
பல்வேறு ஒடுக்கப்பட்ட மக்களையும் மோதவிட்டு அரசியல் பதவிப் பசியைத் தீர்க்க எண்ணாதீர்!
இணைப்பீர்!
இணைப்பீர்!
இன்றேல் வீழுவது நாமே!
வாழ்வது ஆரியமே, அவாளே! புரிந்து கொள்வீர்.
சிந்திப்பீர், செயல்படுவீர் தனியார் துறை இடஒதுக்கீட்டுப் போர்க் குரல் கொடுக்க ஆயத்தமாவீர்!
பெரியார் நினைவு நாள் சூளுரை இதுவே!
கி.வீரமணி
ஆசிரியர்
திலகர் சொல்கிறார் . . .
சென்னை மாநிலத்தில் பார்ப்பனர் அல்லாதார் உணர்வு தோன்ற அதன் எதிரொலியாக மகாராட்டிரத்திலும் அந்த உணர்வு தலை தூக்கியது. அப்பொழுது (1918) இந்தத் திலகர் என்ன பேசினார் தெரியுமா?
"இப்பொழுது எல்லோரும் சட்ட சபைக்குச் செல்லல வேண்டுமென்று முயற்சி செய்கிறார்கள். செருப்புத் தைக்கிறவனும், எண்ணெய் செக்கு ஆட்டுகிறவனும், வெற்றிலைப் பாக்குக் கடை வைத்திருப்பவனும் () சட்டசபைக்குப் போக வேண்டுமென்று ஏன் முயற்சி செய்கிறார்கள்? யார் யார் எது எதற்குப் போக வேண்டுமென்று ஒரு வரைமுறை கிடையாதா?" என்று பேசினார்.
ஆதாரம்: டாக்டர் அம்பேத்கர் அவர்களின் ''காந்தியாரும் காங்கிரசும் தீண்டத்தகாத மக்களுக்குச் செய்தது என்ன?'' என்ற நூல்.
பார்ப்பனரின் இனப்பற்று
வட இந்திய நகர் ஒன்றில் சாலை விபத்தில் ஒருவன் இறந்து விட்டான். இறந்தவன் ஒரு நிறுவனத்தில் சுருக்கெழுத்துத் தட்டச்சராக இருந்தவன் என்பது அவனுடைய சட்டைப் பைக்குள் கிடந்த அடையாளச் சீட்டிலிருந்து தெரிய வந்தது. அதைப் பார்த்து அந்தக் கணத்திலேயே மற்றொரு பிராமணன் சைக்கிளில் அஞ்சல் நிலையத்துக்குப் பஞ்சாய்ப் பறந்தான் ""................ அலுவலகத்தில் சுருக்கெழுத்துத் தெரிந்த தட்டச்சர் வேலை காலியாக உள்ளது. உடனே புறப்பட்டு வா"" என்று திருவரங்கத்தில் உள்ள தன் தம்பிக்குத் தந்தி அடித்தானாம். இது கதை அன்று. நகைச்சுவைத் துணுக்கும் அன்று. இடையிடையே நிகழும் உண்மைச் சம்பவம்.
(ஆதாரம்: ""வட மாநிலங்களில் தமிழர்"" . - ஆசிரியர் சோமலே. பக்கம் 2)
சிங்கால்களின் திசை திருப்பங்கள்!
சந்தடி சாக்கில் கந்தப் பொடி தூவுவது என்ற பழமொழி உண்டு. அதனை அப்படியே பின்பற்றுபவர்கள்தான் சங்பரிவார கும்பலான ஹிந்துத்துவாவாதிகளான பார்ப்பனர்களும் அவர்தம் தாசானுதாசர்களும்!
பாலியல் வன்கொடுமைகளுக்கு நாட்டில் கடுமையான தண்டனை தர சட்டங்கள் திருத்தப்பட வேண்டும் என்ற குரல் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கிறது.
பெண்களை வெறும் உடைமையாக்கியும், அடிமையாக்கியும், கொச்சைப்படுத்திய நிலை ஆரிய சனாதன மத நூல்களான இராமா யணம், பாரதம், பகவத் கீதை மனுசாஸ்திரம் மற்றும் புராணங்களில் வண்டி வண்டியாக உள்ளன!
இந்துக் கடவுள்களின் லீலா வினோதங் கள் ஏராளம் உண்டு; அத்தனையும் இ.பி.கோ. என்ற இந்திய கிரிமினல் சட்டத்தின்கீழ் வராத குற்றங்களே அரிதேயாகும்.
இந்த லட்சணத்தில், விசுவ இந்து பரிஷத் தலைவர் அசோக்சிங்கால் (பார்ப் பனர்) நேற்று துறவிகள் (?) மாநாட்டில் பேசியுள்ளார். (இதில் சங்கராச்சாரியாரும் பாலியல் வன்கொடுமைபற்றி அலசிப் பேசிய கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளார்!)
மேற்கத்திய கலாச்சாரத் தினால் தான் இப்படிப் பல பாலியல் வன்கொடுமைகள் நடை பெறுகின்றன என்று கூறியுள்ள அசோக் சிங்கால்களுக்கும் அவரது தொண்டரடிப் பொடி களுக்கும் சில கேள்விகளை முன் வைக்க விரும்புகிறோம்.
1. ஆண்டவன் அவதாரமான பகவான் கிருஷ்ணன் இளவய திலேயே, ஆற்றில் குளிக்கும் பெண்களின் சேலைகளைத் திருடி, மரத்தின்மேல் வைத்துக் கொண்டு, நீருக்குள் இருந்த பெண்களை ஆடையில்லாத நிலையில் நீருக்கு மேலே வரச் சொன்னது, பாலியல் வன்கொடுமைக்கு முன்னோடி அல்லவா?
2. தாருகாவனத்து ரிஷி பத்தினிகளை (3000 பேர்கள் - அப்பாடி!) கற்பழித்த சிவ லீலை ஹிந்து தர்மத்தின் சிறப்புகளா?
3. அகலிகையைக் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கிட - தேவர்களின் தலைவன் இந்தி ரன் முனிவர் வடிவம் ஏற்று, தவறாக அகலி கையும் நடந்து கொண்ட கதை - மேற்கத்திய கலாச்சாரமா? ஹிந்து கலாச்சாரமா?
4. முன்பு இந்திய பிரிட்டனில் இந்திய ஹை கமிஷனராக இருந்த பண்டிட் விஜயலட்சுமி அவர் களுக்கு, பிரிட்டிஷ்காரர் ஒருவர் விருந்து வைத்தார். அப்போது அவரிடம் இந்த அம்மையார் உங்கள் படையெடுப்பில்தான் எங்கள் கலாச்சாரம் கெட்டது என்றாராம். அவர் அதற்கு மிகுந்த மரியாதையுடன், இருக் கலாம் மேடம், ஆனால் நாங்கள் அங்கே வந்திருக்காவிட்டால் நீங்களே உயிருடன் இருந்து இங்கே வந்து என்னுடன் தேநீர் அருந்த முடியாமற் போயிருக் கும் என்று பட்டென்று பதிலளித்தாராம்!
அதாவது விதவையான இவரை சதி என்ற உடன்கட் டையில் ஏற்றி எரித்திருப்பார் களே, அதைச் சட்டம் போட்டு, சதி அல்லது உடன்கட்டை ஏற்றுதலை ஒழித்துக் கட்டியது வெள்ளைக்கார ஆட்சிதானே! என்ற பொருளில் கூறியது கேட்டு, வெட்கி வெலவெலத்துப் போய் விட்டார் இந்த விதவையரான அம்மணி!
இன்னமும் ராஜஸ்தானில் ரூப் கன்வார்கள் எரிக்கப்பட்ட - சதி மாதா கோயில் உள்ளது! குழந்தை மணங்கள் குஜராத் உட்பட பல பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் நடைபெற்ற வண்ணமே உள்ளன!
இவை எல்லாம் மேற்கத்திய கலாச்சாரமா? மேற்கத்திய கலாச்சாரம்தான் காப்பாற்றியும் உள்ளது. மனுதர்மத்திலேயே மாதர், ஆடவர் நிலை பற்றி வெவ்வேறு விதமாகத் தண்டனை கூறியுள்ளதே! உபநிஷத்துக்களில் குருபத்தினி - சீடர்கள் ஒழுக்கக் கேட்டிற்குத் தண்டனை பற்றி வேறுவிதமாகப் பிரஸ்தாபிக்கப்பட்டுள் ளதே! அது எதைக் காட்டுகிறது?
இந்தப் பாலியல் வன்கொடுமை மிகவும் பழைமையான புராதன நடப்பு ஹிந்து கலாச் சாரத்தில் என்பதைத்தானே காட்டுகிறது?
இதனை ஏன் மேற்கத்திய கலாச்சாரத்தின் விளைவு என்று திசை திருப்புகின்றனர் - இந்த மதவாதிகள்? இன்னும் எத்தனையோ கூற முடியுமே!
- ஊசி மிளகாய்
கபடி - பல்லாங்குழி விளையாட்டா?
கேள்வி: உலகக் கோப்பை கபடிப் போட்டி யில் பாகிஸ்தானை வீழ்த்தி, இந்தியா மூன் றாவது முறையாகச் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளதே?
பதில்: ரொம்ப மகிழ்ச்சி. இதுபோல எப் படியாவது கஷ்டப்பட்டு பெண்கள் போட்டியில் பல்லாங்குழி ஆட்டத் தைச் சேர்த்து விட்டோ மேயானால், அதிலும்கூட இந்தியாதான் முதலிடத் தில் வரும்; சேம்பியன் பட்டத்தைப் பெறும். நாம் மீண்டும் சந்தோஷப்பட் டுக் கொள்ளலாம். (துக்ளக் 9.1.2013 பக்கம் 29)
எதிலும் பார்ப்பனர் - பார்ப்பனர் அல்லாதார் பார்வையா? இதுதான் தி.க.வின் வேலையா என்று சில அதிமேதாவி ஆசாமிகள் அவசரக் குடுக் கையாக பேசுவார்கள்.
ஆரியப் பண்பாட்டுப் படையெடுப்புப் போதையில் அகப்பட்டவர்கள் திரு சோவின் இந்தப் பதிலுக்கு என்ன பதிலைச் சொல்லப் போகிறார்கள்?
கபடி - என்பது பல்லாங் குழி விளையாட்டா? அப்படிச் சொல்லுகிற கூட்டத்தைச் சேர்ந்த பார்ப்பனர்களில் ஒரே ஒருவரை கபடி ஆடச் சொல்லுங்கள் பார்ப்போம் - பல்லாங்குழியா? பல் காணாமல் போகும் விளை யாட்டா என்பது அப்பொ ழுது தெரிந்து விடுமே!
முட்டாள்கள் விளை யாடுகிறார்கள் - 11 ஆயிரம் முட்டாள்கள் வேடிக்கை பார்க்கிறார்கள் என்று கிரிக்கெட்டைப் பற்றி அறி ஞர் பெர்னாட்ஷா சொன் னதுண்டு.
ஒரே நேரத்தில் இருவர் (விக்கெட் கீப்பரைச் சேர்த்து மூவர் என்றும் வைத்துக் கொள்ளலாம்) விளையாடுவர்; மற்றவர் களோ மைதானத்தில் பேன் குத்திக் கொண்டு இருப் பார்கள் - இந்த விளை யாட்டுக்குப் பெயர்தான் கிரிக்கெட் (டு).
கபடியோ, கால் பந்தோ அப்படியல்ல; மைதானத் தில் உள்ள அத்தனைப் பேரும் ஆவேசத்துடன் அதி சுறுசுறுப்புடன் விளை யாடியே தீர வேண்டிய வர்கள். கிரிக்கெட் சோம் பேறிகளின் கூடாரமாக இருப்பதால்தான் அந்த விளையாட்டைப் பார்ப் பனர்கள் தேடிக் கொண்டு விடுகிறார்கள். அதுவும் இல்லாமல் அது பணம் காய்ச்சி மரம். கொட்டிக் கொண்டே இருக்குமே!
தேர்வுக் குழுவிலும் பார்ப்பனர்கள் (பி.சி.சி.அய்) என்பதால் தோளைத் தட் டிக் கொடுத்து, பூணூலைத் தடவிப் பார்த்து தேர்வு செய்வார்கள்.
பல்லாங் குழியோடு கபடியை ஒப்பிட்டுச் சொல் கிறாரே திருவாளர் சோ. இதுவரை ஒரே ஒரு பார்ப்பனர் சடுகுடு பக்கம் தலை வைத்துப் படுத்ததாக எடுத்துக்காட்டுக்குகூடச் சொல்ல முடியுமா?
நாலு பேர் அமுக்கிப் பிடிப்பான் ஆவேசமாக; புளியோதரைகள் தாக்குப் பிடிக்குமா? ஏனிந்த வீண் வம்பு? நமக்குத்தான் இருக் கவே இருக்கு - கிரிக்கெட் என்னும் சோம்பேறி விளையாட்டு - பணம் கொட்டும் பிழைப்புக்கு வசதி இருக்கும்போது கால் முறியுமோ, கை முறியுமோ, விலா எலும்பு முறியுமோ என்னும் ஆபத்தான விளை யாட்டை வரித்துக் கொள்ள அவாள் என்ன பைத்தியக் காரர்களா?
ரவி சாஸ்திரி, சுனில் கவாஸ்கர், சச்சின் டெண் டுல்கர், ராகுல் டிராவிட், சவ்ரவ் கங்குலி, ஜவகர் சிறீநாத், வெங்கடேஷ் பிரசாத், அணில்கும்ளே, வி.வி.எஸ். இலட்சுமணன், கிருஷ்ணமாச்சாரி சிறீகாந்த், சுனில் ஜோஷி, மனோஜ் பிரபாகர், அஜீத் அகர்கர், ரோஹித் சர்மா, இஷாத் சர்மா, சிறீகாந்த், ரவீந்திர அஷ்வின், சடகோ பன் ரமேஷ், நிலேஷ் குல் கர்னி, சிவராமகிருஷ்ணன், வெங்சர்க்கார் டபுள்யூ வி. ராமன் = இப்படி ஒரு நீண்ட அக்கிரகாரப் பட்டியல். இவர்களையடுத்து இவர் களின் பிள்ளைகளும் களத்தில் இறக்கப்படுவதும் உண்டு. இதில் என்ன வேடிக்கை தெரியுமா? இவ்வளவுப் பார்ப்பனர்கள் இருந்தும் ஒரு கபில்தேவ், ஒரு எம்.எஸ். தோனி என்று பார்ப்பனர் அல்லாதார் (ஏதோ விதி விலக்காக இவர்கள்) அணிக்குத் தலைமையேற்றபோதுதான் உலகக் கோப்பை இந்தியா வுக்குக் கிடைத்தது!
(எம்.எஸ். தோனியை அணித் தலைவர் பதவி யிலிருந்து ஒழித்துக் கட்ட குழிபறிக்கும் வேலையில் பார்ப்பன ஊடகங்கள் இறங்கியுள் ளன).
அணி வெற்றி பெற வேண்டும் என்பதைவிட தன்னலத்தின், அடிப் படையில் விளையாடி பரிசுகளைத் தட்டிச் செல் லுவதும் பார்ப்பனர் களுக்கே உரித்தான ஒன்றாகும்.
விசுவநாதன், ஆனந்த் என்ற பார்ப்பனர் செஸ்லில் வெற்றி பெற்றால் சோ கூட்டத் திற்கு இனிக்கிறது; நம் பெண்கள் பல்லாங்குழி விளையாடினால் வேர்க் கிறதோ! அதில்கூட பெண்களை மட்டம் தட்டும் மனுதர்மப் புத்தி.
இந்த நுணுக்கங் களை எல்லாம் ஈரோட் டுக் கண்ணாடி போட்டுப் பார்த்தால்தான் துல்லிய மாக விளங்கும்.
இயற்கைத் தடைகள்
நாளைக்கு வேண்டும் என்று தேடும் தன்னம்பிக்கையற்ற தன்மை யும், எவ்வளவு கிடைத்தாலும் போதாது என்கிற ஆசை அடிமைத்தன்மையும், மனிதனின் பிறப்புரிமையாகிய தன் மானத்திற்கு இயற்கைத் தடைகள்.
(குடிஅரசு, 9.1.1927)
மோடிவித்தை!
இராமலிங்க விலாஸ் மிலிட்டரி ஓட்டல், அயூப்கான் சைவ உணவகம், காந்தியார் சாராயக் கடை, அன்னை தெரசா பயில்வான் கூடம்; திருவிக சுருட்டுக்கடை, சீனிவாச அய்யங்கார் கசாப்புக் கடை என்றெல்லாம் பெயர் இருந்தால் சிரிப்பு மட்டுமா வரும்? அடுத்த நொடியில் எரிச்சல்கூட பீறிட்டுக் கிளம்பும்.
இப்பொழுது ஒரு செய்தி குஜராத்திலிருந்து வெளிவந்திருக்கிறது.
உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டு வரப்படும் மணல் மற்றும் தண்ணீரைப் பயன்படுத்தி குஜராத் காந்திநகரில் காந்தி யாருக்குப் பிரம்மாண்டமான நினைவிடம் கட்டப்படும் என்பதுதான் அந்தச் செய்தி.
பரவாயில்லையே. நற்செய்தி தானே இதில் என்ன பிரச்சினை என்ற வினா எழக்கூடும்;
இந்த அறவிப்பைக் கொடுத்தவர் யார் என்பதுதானே முக்கியம். குஜராத் மாநில முதல் அமைச்சர் நரேந்திரபாய் தாமோதரதாஸ் மோடிதான். (மோடி வித்தை என்பது இது தானோ!) இந்த அறிவிப்புக்குச் சொந்தக்காரர்.
இராமலிங்க விலாஸ் மிலிட்டரி ஓட்டல் என்பதோடு இப்பொழுது இதனைப் பொருத்திப் பார்த்தால் உண்மை பட்ட வர்த்தனமாகப் புலப்பட்டு விடுமே!
பகவத் கீதையிலிருந்து சுலோகத்தை எடுத்துக்காட்டி காந்தியாரைச் சுட்டுக் கொன்றதை நியாயப்படுத்திய நாதுராம் கோட்சே கதை ஒருபுறம் இருக்கட்டும்.
நாட்டில் நல்லவர், வல்லவர் என்று பீற்றிக் கொள்ளும் அடல் பிஹாரி வாஜ்பேயி தலைமையில் மத்தியில் ஆட்சியில் இருந்தபோது இந்தக் கூட்டம் மும்பை, டில்லி போன்ற முக்கிய நகரங்களில் நாடகம் ஒன்றை அரங்கேற்றினார்களே நினைவிருக்கிறதா?
மை நாதுராம் கோட்சே போல்தா என்பதுதான் அந்த நாடகத்தின் பெயர். நான் தான் நாதுராம் கோட்சே பேசுகிறேன் என்பது தலைப்பு.
நான் காந்தியார் என்ற மனிதனைக் கொல்லவில்லை; காந்தியார் என்ற அரக்கனைக் கொன்றேன் என்று அந்த நாடகத்திலே கோட்சே கூறுகிறான். காந்தியாரைக் கொன்ற கோட்சே மகான் என்பது தான் அந்த நாடகத்தின் அடிநாதம் உச்சகட்டம் .
இந்தக் கூட்டம் காந்தியாருக்கு உலகப் பல பகுதிகளிலிருந்தும் மண்ணையும், தண்ணீரையும் கொண்டு வந்து பிரம்மாண்ட நினைவுச் சின்னம் எழுப்புகிறது என்றால் இதன் பொருள் என்ன?
படிப்பவர் புத்திக்கே விட்டு விடுவோம்!
---------------- மயிலாடன் அவர்கள் 29-4-2010 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை
கொல்லைப் புறவழி எச்சரிக்கை!
ஜாதி மறுப்புத் திருமணம் அல்லது கலப்புத் திருமணம் செய்து கொண்ட காதலருக்குப் பிறக்கும் ஒரு குழந்தை, தொடர்ந்து தன் தந்தையான ஜாதி அடையாளத்தை ஏற்கும் என்றால் என்ன பயன்? வெறும் இடஒதுக்கீடு சலுகை மட்டும் தானா? அப்படியானால் ஜாதி எப்படி ஒழியும்? என்ற வினாவை தினமணி (21.12.2012) நடு பக்கக் கட்டுரை ஒன்று தொடுத்திருக்கிறது.
முழு கட்டுரையைப் படிக்கும் பொழுது அதில் பதுங்கியிருக்கும் பார்ப்பனீயத்தை புரிந்து கொள்ளலாம்.
திராவிடர் கழகத்தைப் பொறுத்தவரையில் தொடர்ந்து தன் கருத்தைப் பதிவு செய்து வந்துள்ளது. கடந்த 9ஆம் தேதி தருமபுரியில் திராவிடர் கழகத்தின் சார்பில் நடத்தப்பட்ட ஜாதி ஒழிப்பு - தீண்டாமை ஒழிப்பு மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திலும் சரி.
போடிப் பகுதியில் ஜாதிக்கலவரம் நடைபெற்றபோது தமிழ் நாடு அரசு கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்திலும் சரி, ஒரு கருத்தினைத் தெளிவாக எடுத்துச் சொல்லி வந்திருக்கிறது. ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளை ஜாதியற்றவர் என்று பதிவு செய்து, அவர் களுக்குக் குறிப்பிட்ட அளவுக்கு இடஒதுக்கீடு வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும்.
ஜாதி மறுப்புத் திருமணத்தில் இணைய ருக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு அளிக்கப் படும் இடஒதுக்கீட்டின் அளவு வளர்ந்து கொண்டே போக வேண்டும். ஜாதி அடிப்படையி லான இடஒதுக்கீட்டின் அளவு குறைந்து கொண்டு வர வேண்டும் என்பதுதான் திராவிடர் கழகத்தின் நிலைப்பாடாகும்.
தினமணியின் கட்டுரை இடஒதுக்கீட்டைக் குறை கூறுவதில் தன் கவனத்தைச் செலுத்து கிறதே தவிர, இப்படி ஒரு கருத்தைக் கூற வரவில்லை என்பது கவனிக்கத்தக்கதாகும்.
இரண்டாவதாக தினமணி முன் வைக்கும் குற்றச்சாற்று - ஏற்கெனவே இடஒதுக்கீடு பெற்றுப் பயனடைந்து வசதியான நிலையில் உள்ளவர்கள் கலப்புத் திருமணத் தம்பதிகளின் குழந்தைகள்தான் இடஒதுக்கீடு சலுகையில் அதிக பலன் பெறுகின்றனர் என்பதைக் குற்றச்சாற்றாக முன் வைக்கிறது தினமணி.
இந்த வளர்ச்சிப் போக்கை வரவேற்க வேண்டுமே தவிர குறையாகக் கூறக் கூடாது. இதன் மூலம் ஜாதி மறுப்புத் திருமணங்களின் எண்ணிக்கை அதிகரிப்பது குறித்து மகிழ்ச்சி அடையத்தானே வேண்டும்.
எம்.ஜி.ஆர். கொண்டு வந்த வருமான வரம்பு என்ற அளவுகோலை ஆதரிக்கும் சன்னமான இழை இதற்குள் ஓடுவதையும் கவனிக்கத் தவறக் கூடாது.
இதற்குள்ளே இருக்கும் தந்திரம் என்ன வென்றால், பிற்படுத்தப்பட்டவர்களில் தகுதி உடையவர்கள் போதுமான எண்ணிக்கையில் இல்லை என்று கூறி அந்த இடங்களைப் பொது இடத்திற்கும் கொண்டு செல்வதாகும்.
மத்திய அரசு துறைகளில் 27 விழுக்காடு இடஒதுக்கீடு பிற்படுத்தப்பட்டோர்க்கு அளிக்கப்பட்டு இருந்தும் பிற்படுத்தப்பட்டவர் கள் இன்னும் ஏழு விழுக்காடு இடங்களைத் தாண்டவில்லையே!
பொருளாதார அளவுகோலைத் திணித்து இந்த 7 சதவிகிதத்தில்கூட எட்ட முடியாத அளவுக்குத் தந்திரக் குழியை வெட்டும் வேலைதான் இது.
ஜாதி ஒழிப்பில் ஆர்வம் உள்ளவர்கள்போல் ஒரு பக்கத்தில் காட்டிக் கொண்டு, இன்னொரு பக்கத்தில் இடஒதுக்கீட்டுக்குக் குழி பறிக்கும் எத்துவேலை இது.
இடஒதுக்கீட்டை வெளிப்படையாக எதிர்க்க முடியாது என்று உறுதிபட்ட நிலையில், அதனை கொல்லைப்புறமாக ஒழிக்கப் பார்க்கின்றனர் - எச்சரிக்கை! 22-12-2012
வெறும் ஜாதி அணி சமூகநீதிக்குக் கைகொடுக்குமா?
சென்னை வள்ளுவர்கோட்டம் அருகில் சமூக அமைதிக்கான படைப்பாளிகள் இயக்கம் சார்பில் தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது.
பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், படைப் பாளிகள், அரசியல் கட்சித் தலைவர்கள், சமூக அமைப்பு கள், கலைத் துறையைச் சேர்ந்தவர்கள் பங்குகொண்டு கருத்துகளை எடுத்துச் சொன்னார்கள்.
முக்கியமாக அந்தக் கூட்டத்தில் கூறப்பட்டுள்ள கருத்துகளின் சாரம் என்று எடுத்துக்கொண்டால்,
1. ஜாதி அடிப்படையில் அரசியல் நடத்துவது ஆபத்தானது; அதன் அடிப்படையில் தேர்தல் கூட்டணி அமைப்பது சமுதாயத்தை ஜாதி அடிப்படையில் கூறு போடுவதாகும் - பிளவு ஏற்படுத்துவதும் ஆகும்.
2. காதல் என்பது இயற்கையாக அமையக் கூடியதாகும். அதனை எதிர்ப்பது - மறுப்பது என்பது பிற்போக்குத்தனமாகும். இதன்மூலம் இளைஞர்களின் கடுமையான எதிர்ப்புக்கும், வெறுப்புக்கும்தான் ஆளாக நேரிடும்.
3. உலகம் அறிவியல் துறையில் எவ்வளவோ வளர்ச்சி அடைந்துள்ளது. ஒவ்வொருவர் கையிலும் அலைப்பேசி வந்தாகிவிட்டது. இணைய தளம், மடிக்கணினி என்று உலகம் வாயு வேகத்தில் முன்னேற்றத் திசையில் பயணித்துக் கொண்டு இருக்கிறது.
ஒருவருக்கொருவர் நேரில் சந்தித்துதான் காதல் புரியவேண்டும் என்ற நிலை இல்லை. அலைப்பேசி மூலமாகவும் நடந்துவிடுகிறது. அலைப்பேசியைத் தடை செய்யவேண்டும் என்று கூறப் போகிறார்களா?
4. ஆர்.எஸ்.எஸ்.காரர்கள்தான் காதலர் தினத்தை எதிர்க்கிறார்கள். காரணம் ஜாதி கலப்பு ஏற்பட்டுவிடுமே என்ற அச்சம்; ஜாதி - வர்ணதர்மத்தைக் காப்பாற்றுவது என்பதுதான் சங் பரிவார்களின் அடிப்படைக் கொள்கை யாகும். அதே உணர்வோடு பா.ம.க. செயல்படுவது இந்துத்துவா மனப்பான்மை கொண்டதாகும்.
5. தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், சிறு பான்மை மக்களை இணைத்து ஓர் அணியை உண்டாக்க இருப்பதாகக் கூறிக் கொண்டிருந்த பா.ம.க. தலைவர் இப்பொழுது அதிலிருந்து முரண்பட்டு, வெறும் ஜாதிய அமைப்புகளோடு அணி ஒன்றை வரவேற்பது கொள்கை ஏதும் அற்ற சிந்தனையைத்தான் வெளிப்படுத்தும்.
6. சமூகநீதி என்று வரும்பொழுதுகூட தாழ்த்தப் பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் ஒன்றிணைந்து போராடும் பொழுதுதான் அதன் பலனை ஈட்ட முடியும். அதைவிட்டு ஜாதிக்கட்சிகளை இணைத்துக் கொண்டு எப்படி உரிய உரிமையினை அடைய முடியும்? தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் என்று சொன்னால், அது அகில இந்திய அளவில் அதன் பிரதி பலிப்பைக் காண முடியும். அதை விட்டுவிட்டு தமிழ்நாடு அளவில் ஜாதிகளை இணைத்து எதனைச் சாதிக்க முடியும்?
இதில் இன்னொரு உண்மையும் கவனிக்கத்தக்க தாகும். மாநில அளவைப் பொறுத்தவரையில் ஓரளவு இட ஒதுக்கீட்டின் சதவிகிதத்தை பெற்று இருக்கிறோம். 50 சதவிகிதத்துக்குமேல் இட ஒதுக்கீடு போகக் கூடாது என்று இருந்த சட்ட நிலையையும் கடந்து 69 சதவிகித இட ஒதுக்கீடு சட்டப்படியே தமிழ்நாட்டில் உறுதி செய்யப் பட்டுள்ளது. அதற்காக திராவிடர் கழகம் அளித்த பங்களிப்பு உலகம் அறிந்ததே.
இப்பொழுது பிரச்சினையே மத்திய அரசுத் துறை களிலும், தனியார் துறைகளிலும் இட ஒதுக்கீட்டில் உரிய சதவிகிதத்தைப் பெறுவதுதான்; அகில இந்திய அளவில் அதன் தாக்கத்தை உருவாக்குவதற்கு ஜாதி அமைப்புகள் பயன்படுமா என்பதையும் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.
பதவி உயர்விலும் இட ஒதுக்கீடு என்ற பிரச்சினை முதற்கட்டமாக தாழ்த்தப்பட்டவர்கள் பெறுவதற்கே பெரும் பாடுபடவேண்டியுள்ளது. அடுத்து பிற்படுத்தப் பட்டவர்களுக்கும் இந்த வாய்ப்பு அளிக்கப்படவேண்டும் என்று வலியுறுத்தவேண்டுமானால் கண்டிப்பாக தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் ஒன்றிணைந் தால்தான் வெற்றி கிட்டும்.
சமூகநீதிபற்றிப் பேசும் பா.ம.க. நிறுவனர் இது குறித்தும் சிந்திக்க வேண்டியவர் ஆவார்.
7. தமிழ்த் தேசியம்பற்றி ஒரு பக்கத்தில் பேசிக் கொண்டு அதில் தாழ்த்தப்பட்டவர்களை இணைக்கா விட்டால் அது என்ன தமிழ்த் தேசியம்? திராவிடத்தால் வீழ்ந்தோம் என்று பேசும் தமிழ்த்தேசியவாதிகள் பா.ம.க. நிறுவனரின் இந்த நிலைப்பாட்டை எப்படி பார்க்கிறார்கள் என்று தெரியவில்லை. இந்த வகையில் கருத்தும் போதுமான அளவில் தமிழ்த் தேசியவாதிகளால் தெரி விக்கப்படவில்லை என்பதுதான் உண்மை.
நேற்றைய ஆர்ப்பாட்டத்தில் இறுதியாக உரையாற்றிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் மானமிகு தொல். திருமாவளவன் அவர்கள் பதற்றப்படாமல், உணர்ச்சி வயப்படாமல், சமூகநீதிக் களத்தில் கைகோர்க்க பா.ம.க.விற்கு அழைப்புக் கொடுத்தது அவரது முதிர்ச்சியைக் காட்டக்கூடியதாகும்.
தனிமைப்பட்டுப் போகாமல் பா.ம.க. நிறுவனர் சிந்திப்பாராக!
வேலைக்காரி
டில்லி, மும்பை, கொல் கத்தா, பெங்களூரு, சென்னை போன்ற மெட்ரோ நகரங்களில் கடந்த 15 நாட்கள்பற்றிய ஒரு கணிப்பு வெளி வந் துள்ளது.
அந்தக் கணிப்பை மேற்கொண் டுள்ள அமைப்பு அசொச் செம் என்பதாகும். 2500 பெண்களிடம் இந்த அமைப்பு ஆய்வு ஒன் றினை மேற்கொண்டுள் ளது.
கடந்த 15 நாட்களில் இந்நகரங்களில் 40 விழுக்காடு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாம். இதற்குக் காரணம் என்ன தெரியுமா? இந் நகரங்களில் பணியாற் றும் பெண்களில் 80 விழுக்காட்டினர் சூரியன் மறைவதற்கு முன்ன தாகவே வீடு வந்து சேர்ந்து விடுவதுதான்.
பெண்கள் மீதான வன்முறை என்பது தனிப் பட்ட பிரச்சினையல்ல. ஒட்டு மொத்தமான சமூ கப் பிரச்சினை. நாட்டின் பொருளாதாரத்தை, உற்பத்தியைப் பறிக்கச் செய்யும் பிரச்சினை என்பது இதன் மூலம் தெரிகிறதா - இல்லையா!
ஆர்.எஸ்.எஸின் தலைவர் மோகன் பகவத் என்ன சொல்லுகிறார்? ஆண்கள் வெளி வேலை களைப் பார்த்துக் கொள் வார்களாம் -பெண்கள் வீட்டு வேலைகளைப் பார்த்துக் கொள்ள வேண்டுமாம். இது ஓர் ஒப்பந்தமாம். பெண்கள் அந்த ஒப்பந்தத்தை மீறுவ தால் தான் இந்தப் பிரச் சினையே ஏற்படுகிறதாம்.
இதற்குள் குடி கொண்டிருந்த இந்துத்துவா மனப்பான்மை பளிச் சென்று வெளிப்படுகிறதா இல்லையா?
பெண்கள் என்றால் கூலி பெறாத சமையற் காரி என்பதுதானே இந்துத்துவாவின் கோட்பாடு? ஓர் ஆணுக்கு ஒரு சமையற்காரி - ஓர் ஆணின் வீட்டிற்கு ஒரு வீட்டுக்காரி - ஓர் ஆணின் குடும்பப் பெருக்கத்திற்கு ஒரு பிள்ளை விளைவிக்கும் பண்ணை - ஓர் ஆணின் கண் அழ கிற்கு ஓர் அழகிய அலங் கரிக்கப்பட்ட பொம்மை - என்பதல்லாமல் பெண்கள் பெரிதும் எதற்குப் பயன்படு கிறார்கள்? பயன்படுத் தப்படுகிறார்கள்? என்பதைச் சிந்தித்துப் பாருங்கள் (குடிஅரசு 27.1.1946 பக்கம் 2) என்றாரே தந்தை பெரி யார்.
அதனை இந்த மனு தர்ம சுவீகாரப் புத்திரர்களின் கூற்றோடு, கணிப் போடு பொருத்திப் பாருங் கள். புரியும் பெரியார் கூறும் பொருளின் ஆழம்! - மயிலாடன்
Post a Comment