Search This Blog

25.1.13

உங்களுக்கு கடவுள் நம்பிக்கை உண்டா? இல்லையா? பெரியார் பதில்

லாகூரில் பெரியாரிடம் சிக்கினார்
லாகூரில் ஒரு ரீடிங் ரூமில் நானும் அண்ணாதுரையும் போன போது ஒரு பிரசங்கம் செய்யச் சொன்னார்கள். நானும் ஒப்புக் கொண்டு பேசினேன். என்ன பேசினேன் என்றால் நாம் அறிவிற்கு மதிப்புக் கொடுக்காததால், சிந்திக்காத தால் இழி மக்களாக ஆகி விட்டோம். இதற்குக் காரணம் நமக்கிருக்கும் கடவுள் நம்பிக்கை, மத நம்பிக்கை, புராண நம்பிக்கை இவைகளே ஆகும்.

நம் இழிவு நீங்க வேண்டுமானால் இந்த கடவுள், மதம், சாஸ்திரம், தர்மம், புராணம் இவைகள் யாவும் ஒழிக்கப்பட வேண்டுமென்று பேசிக் கொண்டிருக்கும் போது ஒருவர் குறுக்கே எழுந்து, உங்களுக்கு கடவுள் நம்பிக்கை உண்டா? இல்லையா? என்று கேட்டார். உடனே நான் பேப்பர், பேனாவை எடுத்தேன். நீங்கள் கேட்டது ரொம்ப சரி. எனக்கு புரியவில்லை. கடவுள் என்றால் என்ன? அதன் குணம் என்ன? அது எப்படிப்பட்டது என்பதைத் தெளிவாக எழுதிக் கொடுங்கள். அதன்பின் நான் ஒவ்வொன்றாக விளக்கம் கொடுக்கிறேன்.

அதிலிருந்து நீங்கள் புரிந்து கொள்ளலாம் என்றேன். கேள்வி கேட்டவர் எதுவும் செய் யாமல் விழித்துக் கொண்டு நின்றார். தலைவர், அவரைப் பார்த்து நீயாகப் போய்த்தானே மாட்டிக் கொண்டாய், இப்போது அவர் கேட்கிறாரே எழுதிக் கொடு இவர்கள் நமது எதிரிகளின் கையாள்கள்; அதனால் தான் அவர் இப்படி பேசுகிறார் என்று சொன்னார்.

பிறகு தலைவர், அவரை உட்காரச் செய்து அவர் சொன்னார், இப்போது கேள்வி கேட்டதனால் கேட்டவருடைய அறிவை வெளிப்படுத்தி விட்டார் என்று சொல்லி என்னை மேலே பேச அனுமதித் தார். கேள்வி கேட்டவர் ஒரு அய்.சி.எஸ். காரரின் சகோதரர்.
-----------------------------தந்தை பெரியார் உரையிலிருந்து "விடுதலை" 30.5.1967

14 comments:

தமிழ் ஓவியா said...


புரட்சிக்கவிஞரின் சிந்தனைகள்

உடம்பில் மட்டுமல்லாது. உலகிலுள்ள எல்லாப் பொருளிலும் முப்பட்டை போடும் அறியாமையைக் கவிஞர்-

காடி உப்புச்சட்டி கூழ்ப்பானை சீப்பே,
கண்ணாடி குமிழ் ஊசி அரிவாள் கத்தி
கரியடுப்பு மின் விசிறி மின் விளக்கு
நண்ணுமதின் மேற் கவிழ்ப்புத் துடைப்ப கட்டை
நடையன்கள் மாடாடு தொழுவம் தொட்டி
பிண்ணாக்கு வைக்கோற் போர் பந்தற் கால்கள்
பின்னியபாய் தலையணைகள் போர்வை வேட்டி
தண்ணீர்ச்சால் கிணறு சாக்கடைகள் திண்ணை
தப்பாமல் முப்பட்டை போட வேண்டும்

- எனக் காட்டிச் சிரிப்போடு சிந்தனையையும் தூண்டுகிறார்.

இயற்கையின் படைப்பாகிய மலைமீதும் நாமத்தைப் போட்டு, பல நூற்றாண்டுகளாய் மலை வைணவருக்கே உரியது எனக் கூறுவோரையும் நெற்றியில் மார்பில் தோளில் நெடுங்கழுத்தில் சுண்ணாம்பு பற்றிடப் பூசிச் செம்மண் கோடுகள் பாய்ச்சி மூளை அற்றான் போல் வான் பருந்தைப் அண்ணாந்து பார்த்து அரிகரீ என்று சொல்லி ஒரு பேதை மனிதன் நானல்லன் என்றோர் மடத்தம்பிரான் வந்தான் எனப் பழமையிலும் அறியாமையிலும் ஆழ்ந்து கிடக்கும் நிலையினைக் கூறுவது சிறப்புக்குரியது.

தமிழ் ஓவியா said...


சங்கராச்சாரியின் சக்தியும்; மணியனின் புளுகும்!


இதயம் பேசுகிறது 16.1.1983 இதழில் உங்களுடன் நான் என்ற பகுதியில் திரு. மணியன் அவர்கள் கீழ்கண்டவாறு எழுதுகிறார்.

இந்த வாரம் உங்களுடன் நான் பேசும் போது மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். காரணம் 4.1.1983 அன்று நான் பெற்ற தெய்வ தரிசனம் ஆம்; நடமாடும் தெய்வமான ஜகத் குரு காஞ்சி காமகோடி பரமாச்சாரியார்களான பெரியவர்களை, அவர்கள் தற்போது தங்கியிருக்கும் கருநாடக மாநிலத்தில் குல்பர்க்கா மாவட்டத்தில் மகா காவ்ன் என்ற கிராமத்திற்குச் சென்று தரிசிக்கும் போது கிடைத்ததைத்தான் குறிப்பிடுகிறேன்.

ஒரு முறை செங்கல்பட்டு மாவட்டத்தில் மிகுந்த வறட்சி நிலை ஏற்பட்டு மதுராந்தகம் ஏரியெல்லாம் வறண்டு போயிருந்தது. அப்போது திரு. கிருஷ்ணமூர்த்தி (முன்பு செங்கல்பட்டு மாவட்டத்தில் கலெக்டராக இருந்தவர்) தேனம்பாக்கத்திலிருந்த பெரியவர்களை சந்தித்து, பெரியவர்களின் ஆசி வேண்டும். மக்கள் தவிக் கிறார்கள் என்று விண்ணப்பித்துக் கொண்டாராம். பெரியவர்கள் அருளாசி வழங்க உடனடியாக மழை கொட்டி தண்ணீர் பஞ்சம் நீங்கியதாம்!

மகா காவ்ன் கிராமத்தில் அந்த மகானை ஞான பூமிக்காகத் தரிசித்து நிற்கும்போதே தண்ணீர்ப் பஞ்சத்தாலும், மின்சார பற்றாக்குறையாலும் பாதிக்கப்பட்டிருக்கும் நம் தமிழ்ப் பூமியின் நினைவும் மனதில் கனத்திருந்தது

பெரியவர்கள் சந்நிதியில் நிலைமையைக் கூறி, தமிழ்நாட்டில் இந்தப் பற்றாக்குறைகள் நீங்கப் பெரியவர்களின் ஆசி வேண்டும் என்று விண்ணப் பித்தேன்.

பரப் பிரம்மமாக எழுந்தருளியிருந்த பெரியவர்களின் தேஜோமயமான முகத்தில் ஒரு புன்னகை மென்மையாக அரும்பியது.

பெரியவர் புன்னகைக்கு நிச்சயம் அர்த்தம் உண்டு. ஒரு மாசத்துக்குள் பாருங்கோ...! என்று கூறி மகிழ்ந்தனர் அருகிலிருந்தவர்கள். அந்தப் புன்னகை அந்தக் கருணை.... கோடானு கோடி அர்த்தங்கள் பொருந்திய அந்தப் புன்னகையில் திளைத்து நின்றோம் இவ்வாறு முடிக்கிறார் திரு. மணியன் அவர்கள். அவர் தெய்வத் தரிசனம் பெற்ற நாள் 4.1.1983 அன்று. இப்போது ஒன்றரை மாதம் தாண்டிய நிலையில் எந்த மாறுதலும் காணோம். சங்கராச்சாரியாரின் சக்தி தெரிஞ்சாச்சு - மணியனின் புளுகும் வெளியாச்சு.

ஏ.எஸ்.முருகேசன், உடுமலை.

தமிழ் ஓவியா said...


கருநாடக பிஜேபி ஆட்சி ஒன்று போதாதா?


அடுத்து மத்தியில் நாங்கள்தான் ஆட்சியை அமைக்கப் போகிறோம் என்று மார் தட்டும் பிஜேபி, கொஞ்சம் கருநாடக மாநிலத்தையும் நினைத்துப் பார்க்கட்டும் - திரும்பியும் பார்க்கட்டும்!

தென் மாநிலங்களில் கருநாடக மாநிலத்தில் தான் பிஜேபி கால் ஊன்றி ஆட்சியையும் பிடித்தது. அந்த ஆட்சியின் தன்மை மதிக்கத் தக்கதாக இருக்கிறதா? மக்கள் மனங்களில் நல்லதோர் இடம் பெற்றதா - என்ற கேள்விக்கு விடை பரிதாபகரமானதுதான்!

ஊழல் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் மாநிலமாக பிஜேபி ஆளும் கருநாடகம் திகழ் கிறது. சாதாரண மக்களும் இதனைத் தெரிந்து வைத்துக் கொள்ளும் நிலை ஏற்பட்டு விட்டது.

அமைச்சர்கள் மட்டுமல்ல, முதல் அமைச்சர் எடியூரப்பாவை ஊழல் வழக்கில் சிக்கி சிறை செல்லும் நிலை ஏற்பட்டது - பிணையில்தான் வெளியில் உள்ளார்.

நான் மட்டும்தான் முதல் அமைச்சராக இருப்பேன்; அதற்கு வாய்ப்பு இல்லையென்றால் இந்த ஆட்சியையே கவிழ்ப்பேன் என்ற போக்கில் எடியூரப்பா நடந்து கொண்டு வந்துள்ளார்.

பிஜேபியின் தலைமைப் பீடம் எவ்வளவோ முயன்றும் சமாதானம் ஏற்படுத்தப்பட முடியாத நிலையில், புதிய கட்சியையே தொடங்கி விட்டார். இப்பொழுது பிஜேபி சட்டமன்ற உறுப்பினர்களைத் தம் பக்கம் இழுப்பதில் முயன்று ஓரளவுக்கு வெற்றி பெற்றும் உள்ளார்.

எந்த அளவுக்கு வெற்றி பெற்றுள்ளார் என்றால், அம்மாநிலத்தில் கருநாடக பி.ஜே.பி. ஆட்சி கவிழும் அளவுக்கு வெற்றி பெற்றுள்ளார்.

சட்டமன்ற உறுப்பினர் தங்கள் விலகல் கடிதத்தைக் கொடுக்க சட்டப் பேரவைத் தலைவரிடம் சென்ற நிலையில் அவர் வெளிநாடு போய்விட்டார் என்று சொல்லப்படுகிறது.
இதுதிட்டமிட்டே, வேண்டுமென்றே செய்யப் பட்ட ஏற்பாடு என்று எடியூரப்பாவும், அவர்தம் ஆதரவாளர்களும் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சூழ்நிலையில் ஆளுநரின் பங்கு என்ன என்பது சட்டரீதியாகச் சிந்திக்கப் படலாம். ஏற்கெனவே அங்குள்ள ஆளுநர் எம்.ஆர். பரத்வாஜ் அவர்களுக்கும், மாநில ஆட்சிக்கும் நல்ல உறவு கிடையாது.

சட்டப் பேரவை உறுப்பினர்கள் விலகல் கடிதத்தை ஆளுநரிடம் அளித்துள்ளனர்.

ஆளுநர் நடவடிக்கை எடுத்தாலும் சரி, சட்டப் பேரவைத் தலைவர் நாடு திரும்பிய நிலையில், 11 உறுப்பினர்களின் விலகல் கடிதத்தை ஏற்கும் நிலை ஏற்பட்டாலும் சரி, கருநாடகாவில் பாரதீய ஜனதா ஆட்சிக்குக் கெடு நெருங்கிவிட்டதாகவே கருதும் நிலை.

பாரதீய ஜனதா கட்சிக்குள் ஒரு பக்கம் உள்நாட்டுக் குழப்பம், கட்சித் தலைவர் தேர்தலில் நிதின் கட்காரி மறுமுறையும் தலைவராகத் தேர்வு செய்யப்பட முடியாமல் போனதற்குக் காரணமே அவர் ஊழல் வழக்கில் சிக்கியதுதான்.

இதன் காரணமாக காங்கிரஸ் மீதோ, அது தலைமை வகிக்கும் மத்திய ஆட்சியின் மீதோ ஊழல் புகார் கூறும் தார்மீக உரிமையை இழந்துவிட்டது பி.ஜே.பி.

ஏற்கெனவே பிஜேபியின் கையில் இருந்த இமாசலப் பிரதேச ஆட்சியையும் இழக்கும்படி நேரிட்டது. குஜராத் மாநிலத்தை எடுத்துக் கொண்டாலும், கடந்த சட்டப் பேரவைத் தேர்தலைவிட இம்முறை வாக்கு வங்கியில் சரிவு ஏற்பட்டுள்ளது.

காங்கிரஸ் தலைமையிலான அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி, பிஜேபிக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி யோடு ஒப்பிடும்பொழுது சாதாரணமானது தான்.

ஓராண்டுக்குள் விலைவாசிப் பிரச்சினையில் கவனம் செலுத்தி, கூட்டணிக் கட்சிகளோடு நல்லிணக்கத்தோடு மதவாதக் கட்சியை வீழ்த்துவதற்கான திசையில் செயல்பட வேண் டிய கட்டாயம் காங்கிரசுக்கு ஏற்பட்டுள்ளது என்பது மட்டும் உண்மையாகும்.25-1-2013

தமிழ் ஓவியா said...


பயத்தால்...


அறிவுக்கும், அனுபவத்திற்கும் ஒத்துவராததைப் பயத்தால் நம்பு கிறவன் பக்குவமடைந்த மனிதனா கான்.

(விடுதலை, 20.3.1956)

தமிழ் ஓவியா said...


இந்தியா?


தமிழ் நாடெங்கும் இந்தி எதிர்ப்பு வீர வணக்க நாள் பொதுக் கூட்டங்கள் ஒரு பக்கத் தில் நடந்து கொண்டி ருக்கும் இந்தக் கால கட்டத்தில் மதுரையிலி ருந்து வெளி வந்துள்ள ஒரு சேதி திடுக்கிட வைக்கிறது.

மதுரை மாநகரம் வீதி, சாலைகளுக்கான பெயர் கள் தமிழ், இங்கிலீஷ், இந்தியில் பொறிக்கப் படும் என்று மதுரை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ள தகவலை பகுத்தறிவாளர் கழக மாநிலத் தலைவர் மான மிகு வா. நேரு தெரி வித்துள்ளார்.

தமிழ்நாட்டைப் பொருத்தவரை தமிழ், இங்கிலீஷ் இரண்டையும் தவிர இந்திக்கு இட மில்லை என்பது அறிஞர் அண்ணா அவர்கள் முதல் அமைச்சராக இருந்த கால கட்டத்திலேயே சட்ட ரீதியாகவே ஆக்கப்பட்டு விட்ட ஒன்று.

இப்பொழுது அண்ணா பெயரால்தான் ஆட்சி நடைபெறவதாகச் சொல்லப்படுகிறது; இனக் கலாச்சாரத்தைக் குறிக்கும் திராவிட என்ற முன்னொட்டும் வேறு;

எந்த நோக்கத்துக் காக இப்படி ஒரு முடிவை மாநகராட்சி ஆணையர் எடுத்தார் என்று தெரிய வில்லை. இது வீண் வம்பை விலைக்கு வாங் கும் விபரீதமான வேலை.

ஒரு கால கட்டத்தில் இரயில்வே நிலையங் களில் இந்தியில் ஊர்ப் பெயர்கள் முதலிடத்தைப் பிடித்திருந்தன. தந்தை பெரியார் தலைமையில் திராவிடர் கழகம் கிளர்ந் தெழுந்து தொடர்ந்து மூன்று ஆண்டுகள் இந் திப் பெயர்ப் பலகையை அழித்ததன் காரண மாகவே (திராவிடர் கழகம் பூசிய தாரை மண் ணெண்ணெய் கொண்டு அழித்தவர் ம.பொ.சி. என்பது வேறு பிரச்சினை) தமிழ் முதலிடத்தைப் பிடித்தது.

சில ஆண்டுகளுக்கு முன் தேசிய நெடுஞ் சாலையில் மைல் கற் களில் இந்தி வந்தபோது திராவிடர் கழகம் சுட்டிக் காட்டி எச்சரித்த நிலை யில் அது உடனடியாக அகற்றப்பட்டது.

தமிழ்நாட்டு மண் ணுக்கென்று (Soil Psychology) தனிக் குணம், மணம் உண்டு. இவற்றை யெல்லாம் தெரிந்து கொள்ளாமல் அரசு அதிகாரி எப்படி இப்படி அறிவிக்கலாம்? அரசின் அனுமதியோடு இதை நடத்தப் போகிறதா? மாநகராட்சி மேயரும் இதற்குப் பச்சைக் கொடி காட்டி விட்டாரா? என்று தெரியவில்லை.

இந்த எண்ணம் கருவிலேயே சிதைக்கப் பட்டாக வேண்டும். இல்லையென்றால் என்ன செய்ய வேண்டும் என் பதை திராவிடர் கழகத் தலைவர் - தமிழர் தலைவர் முடிவு செய்வார்.

எச்சரிக்கை! எச்ச ரிக்கை!! எச்சரிக்கை!!! -

மயிலாடன்

தமிழ் ஓவியா said...


செவ்வாயில் உயிர்கள் வாழ்ந்தமைக்கான அறிகுறி கண்டுபிடிப்பு


செவ்வாய்க் கிரகத் தில் நிலப்பரப்புக்கு கீழேயுள்ள கிடைக்கப் பெறுகின்ற தாதுக்கள் அந்த கிரகத்தில் முன் னொரு காலத்தில் உயிர் கள் வாழ்ந்திருக்கக் கூடும் என்பதற்கு இது வரையில் கிடைத்திருப் பதில் வலுவான ஆதாரம் என புதிய ஆய்வு ஒன்று கூறுகிறது.

செவ்வாய்க் கிரகத் தின் சரித்திரத்தில் பெரும்பான்மையான காலங்க ளுக்கு அதன் மேற்பரப்பிலிருந்து ஐந்து கிலோமீட்டர் வரையான ஆழங்களில் உயிர்கள் வாழ்ந்திருக்கக் கூடும் என்று சுட்டிக் காட்டும் தாதுக்கள் அங்கு காணப்படுவதாக ஆய்வை நடத்தியவர்கள் கூறுகின்றனர்.

லண்டனின் நேச்சுரல் ஹிஸ்டரி அருங்காட்சி யகம் மற்றும் அபெர் டீன் பல்கலைக்கழகம் ஆகியவற்றை சேர்ந்த வர்கள், அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாஸா மற்றும் ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ஈசா ஆகி யவற்றின் தரவுகளைக் கொண்டு நடத்திய இந்த ஆய்வின் முடிவுகள் நேச்சர் ஜியோசயன்ஸ் அருங்காட்சியகத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

கிரகங்களை விண் கற்கள் மோதும்போது, நிலப்பரப்புக்கு அடியில் இருக்கின்ற பாறைகள் மேற்பரப்புக்கு கொண்டு வரப்படுகின்றன.

செவ்வாய்க் கிரகத் தில் அவ்வாறு விண்கல் மோதி ஏற்பட்ட ஒரு பள்ளத்தில் காணப்படும் பாறைகளில் உள்ள தாதுக்களை ஆராயும் போது அங்கே உயிர்கள் வாழ்ந்திருக்கக்கூடும் என்பதற்கான அறிகுறி கள் தெரிவதாக ஆய் வாளர்கள் கூறுகின் றனர். பூமியில் உயிர்கள் எவ்வாறு தோன்றின என்று இன்னும் தெரி யாத நிலையில், செவ் வாய்க் கிரகத்தில் நிலத் துக்குள்ளே நுண்ணியிர் கள் வாழ்ந்தது உறுதி செய்யப்படுமானால் அது பூமியில் உயிர்கள் தோன்றிய விதத்தை புரிந்துகொள்ளவும் உதவியாக இருக்கும் என்று ஆய்வை நடத் தியவர்களில் ஒருவரான டாக்டர் ஜோசஃப் மிச்சால்ஸ்கி கூறுகிறார்.

தமிழ் ஓவியா said...

டெசோ கூட்டத்தில் முக்கிய முடிவு-திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறிக்கை

தமிழர்கள்மீதான போர் ஓய்ந்து நான்கு ஆண்டுகள் ஆகியும்

எஞ்சிய ஈழத் தமிழர்கள் இன்றும் என்றும் இராணுவத்தின் கட்டுப்பாட்டிலா கிடந்துழலுவது!

அய்.நா.வும் உலக நாடுகளும் இந்தியாவும் தலையிட வேண்டாமா?

இந்தியாவில் இலங்கைக்கு ராணுவப் பயிற்சியைக் கண்டிக்கிறோம்

4ஆம் தேதி டெசோ கூட்டத்தில் முக்கிய முடிவெடுப்போம்!


இலங்கையில் ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்த போர் முடிந்து நான்கு ஆண்டுகள் ஓடிய நிலையிலும், எஞ்சியுள்ள ஈழத் தமிழர்கள் இன்னும் இராணுவக் கட்டுப்பாட்டில்தான் இருக்க வேண்டிய நிலையில் உள்ளது. இந்த நிலையிலிருந்து ஈழத் தமிழர்கள் விடுவிக்கப்பட, தமிழர்கள் ஒரே குரலில் முழங்க வேண்டும் - பிப்ரவரி 4ஆம் தேதி நடக்க இருக்கும் டெசோ கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

இலங்கையில் உள்ள சிங்கள வெறியர், சர்வாதிகாரத்தையே தனது நடைமுறையாகக் கொண்டு நடத்தும் ராஜபக்சேயின் அரசு, தமிழர்களின் வாழ்வுரிமைப் போராட்டத்தை நசுக்கி ஒடுக்கிட, உலக நாடுகளின் கண்களில் நன்றாக மிளகாய்ப் பொடித் தூவி ஏமாற்றினார்.

ராஜீவ் கொலையை மனதில் நிறுத்தி செயல்பாடு!

தீவிரவாதத்திற்கு எதிராகத்தான், தான் போர் நடத்துவதாகவும், விடுதலைப்புலிகள் போன்ற தீவிரவாதிகளுக்கு எதிரானதே தனது நிலைப்பாடு என்றும் கூறி, இந்திய அரசையும் நம்ப வைத்தார்; ராஜீவ்கொலை என்ற ஒன்றினையே மனதிலிருந்து அகற்றாமல், இலங்கை இராஜபக்சே அரசின் இராணுவத்திற்கு வேண்டிய ராடார் கருவிகள், ஆயுதங்கள், பயிற்சிகள் எல்லாவற்றையும் தந்தது இந்திய அரசு

விளைவு...? லட்சக்கணக்கான அப்பாவி ஈழத் தமிழர்கள் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்ற வேறுபாடு இன்றி குண்டு மழை பொழிந்து ஈவிரக்கம் சிறிதும் இன்றி, கொன்று குவித்தார்கள். தப்பியோடிய தமிழ் சனங்கள் தம் சொந்த இனத்தின் பிணங்கள்மீது கூட நடந்தே சென்றனர். அடக்கம் செய்யக்கூட வாய்ப்பில்லை, நேரமில்லை. பாதுகாப்புப் பகுதிக்கு வாருங்கள் என்று போர் நடக்கும்போது (வன்னிப் பகுதி) சிவலியன் மக்களை வரச் சொல்லி, ஒட்டு மொத்தமாக அவ்விடத்திலேயே ஒரு சேர அழித்து இனப்படுகொலை செய்தனர்!

தமிழ் ஓவியா said...

அந்தத் தீவிரவாதிகளை ஒழித்து விட்டோம்; விடுதலைப்புலிகளை முற்றாக அழித்தொழித்து விட்டோம் என்று எக்காளம் செய்கின்றனர்!

தமிழ்த் தாய்களும், சகோதரிகளும், இளம்பெண்களும் சொல்லொணா பாலியல் வன்கொடுமைக்கும் (வன்புணர்ச்சி உட்பட) பல்வேறு அருவருக்கத்தக்க. வார்த்தைகளால் எழுதப்பட முடியாத அளவுக்கு மனித இதயமே இல்லாதவர்களாக நடந்து கொண்டது சிங்கள அரசு.

இன்னும் இராணுவ முகாம் கட்டுப்பாட்டில்தான் தமிழர்கள்

போர் முடிந்து ஏறத்தாழ 4 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், அரசியல் தீர்வு கண்டாகி விட்டதா? அங்கு எஞ்சியுள்ள தமிழர்கள் இன்னமும் முள்வேலி மற்றும் இராணுவ முகாம்களுக்குள் சிறைபிடிக்கப்பட்ட வேற்று நாட்டு பிணைக் கைதிகளைப் போலத் தானே நடத்தப்படுகின்றனர்!

வடக்கு, கிழக்கு பகுதிகளில் (தமிழர் பிரதேசங்கள்) இராணுவம் நிறுத்தப்பட்டு, இராணுவ அரசு அங்கு நடந்து கொண்டு அரச பயங்கரவாதம் கொடி கட்டிப் பறக்கிறது!

தமிழ் ஊர்ப் பெயர்கள் சிங்களமாக மாற்றம்

வீடு திரும்பிய நிலையில் தமிழர்களின் பகுதிகளில் ஏராளமான சிங்களக் குடியேற்றங்கள் ஒருபுறம்; இவர்கள் வீடுகளையும் சிங்களவர்கள் ஆக்கிரமித்ததோடு, தமிழர் பகுதியில் இருந்த தமிழ்ப் பெயர்களையெல்லாம் சிங்களப் பெயர்களாக மாற்றி விட்டனர். இதுபற்றி டெசோ தலைவர் மானமிகு கலைஞர் அவர்கள் சில நாள்களுக்கு முன் அறிக்கை விடுத்து கண்டனம் எழுப்பி, இந்திய அரசின் பொறுப்பில் உள்ளோருக்கும், வழிகாட்டும் தலைமைக்கும் கடிதம் எழுதியுள்ளார்கள். விடுதலை ஏட்டில் நீண்ட ஆதாரபூர்வ பட்டியலே வெளியிட்டுள்ளோம்.

தமிழ் ஓவியா said...

அய்.நா. உலக நாடுகள் ஏன் இன்னமும் வேடிக்கை பார்த்துக் கொண்டு மவுன விரதம் இருக்க வேண்டும்?

எம் தமிழர்கள், தொப்புள் கொடி உறவுகள் ஆயிற்றே! அவர்களைக் காப்பாற்ற வேண்டாமா? கொல்லப்பட்டவர்கள், இனப்படுகொலைக்கு ஆளானவர்கள் போக, எஞ்சியவர்களுக்காவது வாழ் உரிமை தரப்பட இலங்கை அரசினை வற்புறுத்தும் கடமை இந்திய அரசுக்கு உண்டே!

அதுபற்றியெல்லாம் கவலைப்படாது, யாருக்கோ வந்த கொடுமை என்று இருப்பது எவ்வகையில் நியாயம் ஆகும்?

பல்லாயிரக்கணக்கான எமது மக்களின் வரிப் பணத்தை, இலங்கைத் தமிழர் மறுவாழ்வுக்கு என்று கொடுத்தீர்களே அது இப்போது யாருக்குப் பயன்படுகிறது? சிங்கள நரிகளுக்குத்தானே!
சர்வதேச சமூகம் வேடிக்கை பார்க்கலாமா?

1. போர் முடிந்து 4 ஆண்டுகள் ஓடி விட்டதே, சிதைக்கப்பட்ட எம் தமிழர் பகுதிகளில் (வடக்கு, கிழக்கு மாகாணங்களில்) மறுவாழ்வு மீள் குடியமர்த்தம், பணிகள் சரி வர நடக்கவில்லையே!

2. இன்னமும் முகாம்கள் கலைக்கப்பட வில்லையே! இராணுவக் கட்டுப்பாட்டில் கொத்தடிமைகளைவிடக் கேவலமாக அல்லவா ஈழத் தமிழர்கள் ஆண், பெண், குழந்தைக் குட்டிகள் அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீர் கடலில் மிதக்கின்றனவே! இலங்கை அரசியல் சட்டத்தின் 13ஆவது திருத்தத்தின்படி தமிழர்களுக்கு அதிகாரம் வழங்கப்படும் என்று முன்பு இந்திய அரசிடம் இலங்கை அரசு ஒப்புக் கொண்டதே - போர்க் கால உதவிகள் கேட்ட போது - மறந்துபோய் விட்டதா? சிங்களவர்களைப்போல, தமிழர்களும் அம்மண்ணின் மைந்தர்கள் அல்லவா? அதிகப்படி உரிமை உடையவர்கள் அல்லவா?

3. தமிழர் பகுதிகளின் இராணுவத்தை விலக்கிக் கொண்டு தமிழர்களை சுதந்திரக் காற்றை சுவாசிக்க வழி செய்வது மனிதநேயம் - மனித நாகரிகம் அல்லவா?

இதுபற்றி அனைவரும் ஓங்கிக் குரல் எழுப்ப வேண்டாமா?

4. யாழ். பல்கலைக் கழக மாணவர்கள் தமிழ் மாணவர்கள் என்பதால் அவர்களின் கல்விக் கண்களைக் குத்தி, காராக்கிரகத்தில் அல்லவா அடைத்து, பாழ்படுத்துகிறது - சிங்கள ராஜபக்சே அவரது குடும்பத்தினரின் சர்வாதிகார ஆட்சி. அய்.நா. உலக நாடுகளும், உலக மனித உரிமை அமைப்புகளும் உடனே இப்பிரச்சினைகளின்மீது ஓங்கிக் குரல் கொடுத்து, தமிழர்களைப் பாதுகாக்க வேண்டும்!

கடுமையாகக் கண்டிக்கிறோம்!

இந்த லட்சணத்தில் எம் தமிழர்களைக் கொன்று குவிக்கும் இலங்கை ராணுவத்திற்கு இந்தியாவில் (தமிழ்நாடு தவிர) மற்ற மாநிலங்களில் இராணுவப் பயிற்சி தருவோம் என்று கூறும் இந்திய இராணுவ அமைச்சரின் பேச்சுகளை கடுமையாகக் கண்டிக்கிறோம்!

இராணுவத்தை விலக்க மாட்டோம் என்று இலங்கை அமைச்சர் இறுமாப்புடன் கூறுகிறார்.

தமிழ்நாட்டிற்கு மட்டும் என்றால் இந்திய ஒருமைப்பாடுபற்றி முழக்கமிடுவோர் இதில் மட்டும் வேறு கண்ணோட்டமா? தமிழனை ஏமாளியாக்க முயலுகிறார்களா?

அக்கிரமத்தை, அநியாயத்தை இந்திய அரசு மற்ற மாநிலங்களில் நடத்தி, அதன் மூலம் ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்திட இலங்கை இராணுவத்திற்குப் பயிற்சி என்பது மனிதாபிமான விரோதம் அல்லவா?

டெசோ கூட்டத்தில் முடிவெடுப்போம்!

எனவே தமிழ் மக்கள் உணர்வுகளைப் பகிரங்கமாக வெளிப்படுத்த நாம் அனைவரும் ஒரே குரலில் முழங்குவோம்!

மானமிகு கலைஞர் அவர்கள் தலைமையில் டெசோ கூட்டம் 4ஆம் தேதி கூடவிருக்கிறது. இவைபற்றி நல்ல முடிவுகளை எடுத்து மூடிய உலக நாடுகளின் கண்களைத் திறக்கச் செய்வோம், ஆயத்தமாவீர்!


கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்

25.1.2013
சென்னை

தமிழ் ஓவியா said...


நாத்திகனாக இருப்பதால் சாரணர் இயக்கத்தில் இடமில்லையா?


ஒரு 11 வயது சிறுவன் சாரணர் இயக்கத்தில் சேருவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளான். காரணம், அவன் கடவுள் நம்பிக்கை இல் லாதவன்!

இங்கிலாந்து நாட்டில் உள்ள சாமர்செட் என்ற ஊரில் உள்ள ஜார்ஜ் பிராட் உள்ளூர் சாரண இயக்கத்தில் கடந்த 10 மாதங்களாக பங்கு கொண்டிருந்தான்.

சாரண இயக்கத்தின் முழுமையான உறுப்பினராவதற்கு, சாரணர்களுக்கான உறுதிமொழி ஏற்க வேண்டும்.

என்னுடைய கவுரவத்தின் பேரில், நான், என்னால் முடிந்தவற்றைச் செய்வேன் சென்று உறுதியளிக்கிறேன். அதன்படி, கடவுளுக்கும் ராணிக்கும் உண்டான என் கடமையையும், மற்ற மனிதர்களுக்கு உதவி செய்வதையும், சாரணர் சட்டத்தின்படி நிறை வேற்றுவேன் என்பதுதான் அந்த உறுதிமொழி.

ஒவ்வொரு மதத்துக்கும் தக்கவாறு, உறுதிமொழியில் சிறுமாற்றங்கள் செய் யப்பட்டுள்ளன இஸ்லாமியர்களுக்கு கடவுள் என்ற சொல்லுக்குப் பதிலாக அல்லா என்று குறிப்பிடலாம்.

ஜார்ஜ் பிராட்டின் தந்தையான நிக் (45 வயது) மிகவும் கோபப்பட்டு உள்ளார். கிறித்துவ இயக்கம் மிகவும் பொதுமை யற்றதாக இருப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். கிருத்துவம், பொறுமை, மன்னிப்பு, புரிந்து கொள்ளுதல் ஆகிய பண்புகளுக்காக உள்ளது. நீங்கள் கிறிஸ்துவராகவோ, இஸ்லாமியராகவோ இருந்தால், சாரண இயக்கத்தில் சேர்த்துக் கொள்ளப் படுகிறீர்கள்.

ஆனால் கடவுளை நம்பாமல் இருக்கக் கூடாது. இது, உணர்ச்சியுள்ளவராக, பெருந்தன்மை யுள்ளவராக, அன்புள்ளவராக, உண்மையிலேயே நல்ல மனிதராக இருப்பதைப் புறந்தள்ளி விடுகிறது. பல கிறித்துவ அமைப்புகள் யாரையும் வெளியேற்றுவது இல்லை. ஆனால், இந்தப் பகுதி சாரணர் இயக்கம் மட்டும் அவ்வாறு இல்லை என்று தோன்றுகிறது என்று கூறியுள்ளார்.

பாதிக்கப்பட்ட ஜார்ஜ், நான் மிகவும் ஏமாற்றம் அடைந்துள்ளேன். தொடர்ந்து நான் அங்கு செல்ல முடியாததற்கு நான் கடவுளை நம்பாததைக் காரணம் காட்டுகிறார்கள். சாரண இயக்கத் தலைவருடன் நாங்கள் பேசிப் பார்த்து விட்டோம். அவர் தனது முடிவை மாற்றிக் கொள்ள விரும்பவில்லை. இது நியாயமானது அல்ல.

மற்ற எல்லோரும், நான் பார்த்து இராத ஓரிடத்துக்குப் போக இருக் கிறார்கள். நானும் ஆசைப்படுகிறேன். ஆனால் அனுமதி மறுக்கப்படுகிறேன். அதற்காக, நான் என் முடிவை மாற்றிக் கொள்வதாக இல்லை என்று சொல்கிறான்.

சாரண இயக்கம் 1907ஆம் ஆண்டில் ராபர்ட் பேடன், பவ்வல் என்பவர்களால் ஆரம்பிக்கப்பட்டது. பியர் கிரிலிஸ் என்ற சாகச வீரர்தான் பிரிட்டனின் இன்றைய சாரண இயக்கத் தலைவர் அவர், தனது கிருத்துவ உணர்வுகளைப் பற்றி முன்பு நிறைய பேசி இருக்கிறார்.

சாரண இயக்கத்தைச் சார்ந்த சைமன் கார்ட்டர் என்பவர் சிறு வர்கள் அனைவரும் சாரணராக வேண்டுமென்றால் அதற்கான உறுதிமொழியை ஏற்க வேண்டும் என்று சொல்லியுள்ளார்.

அவர்கள் வளர்ந்து பெரியவர்களான பிறகு சில இளைஞர்கள் சிந்தனை வளர்ந்த பிறகு கடவுள் இருப்பதை கேள்வி கேட்கவோ சந்தேகப்படவோ செய்யலாம். இதை சாரணர் இயக்கம் ஒப்புக் கொள்ளுகிறது என்று சொன்னார். இந்த முறைப்படி சாரண இயக்கத்தில் இணைந்தவர்கள், எப்பொழுதும் சாரணராகவே இருக்க வேண்டும் என்றும் அவர் சொன்னார்.

தமிழ் ஓவியா said...


கடவுள் பக்திக்காரனே! மானம் வேண்டாமா!


நான் ஒருவன்தான் மனிதத் தொண்டு என்றால், மனித சமுதாயத் திலுள்ள இழிவைப் போக்குவதும் மக்களுக்கு அறிவை ஏற்படுத்துவ துமே உண்மை யான தொண்டாகும் என்று கருதி அதில் ஈடுபட்டேன். அதற்காகவே சுய மரியாதை இயக்கத்தை ஆரம்பித்தேன்.

அந்த இயக்கத்தின் கொள்கை மனித சமுதாய இழிவிற்கும் அறிவற்ற தன்மைக்கும் அடிப்படைக் காரண மான கடவுள், -- மதம் - சாஸ்திரம் ஆகியவை ஒழிக்கப்பட வேண்டும்.

இவற்றைப் பரப்பி மக்களை மடையர்களாக்கி வரும் காங்கிரஸ், - காந்தி,- பார்ப்பான் ஆகியவைகளை ஒழிக்க வேண்டுமென்பதுமாகும்.

இக்கொள்கையோடு தொண் டாற்ற ஆரம்பித்த நான் பலமுறை செருப்படி பட்டிருக்கிறேன்.

மிக இழிவாக எல்லாம் என்னைப் பேசினார்கள். அதைப்பற்றி எல்லாம் இலட்சியம் செய்யாமல் தொண் டாற்றிக் கொண்டு வருகின்றேன்.

இப்போதுகூட என்னை நேரில் அடிக்கவில்லையென்றாலும் எனது சிலையை, படத்தை செருப்பாலடித் தார்கள்; இழிவுபடுத்தினார்கள்.

நான் அவற்றையெல்லாம் இலட் சியம் செய்யாமல்தான் இப்பணி யினை ஆற்றிக் கொண்டு வரு கின்றேன்.

நமது இயக்கம் ஆரம்பிக்கப்பட்ட போது என்ன நிலை இருந்த தென்றால் பறையன் சக்கிலியன் ரோடுகளில் நடக்க முடியாது. பொதுக் கிணற்றில், குளத்தில் தண்ணீர் எடுக்க முடியாது.

பள்ளிக்கூடத்தில் அவர்கள் வெளியில்தான் உட்கார வேண்டும்.

பஞ்சாயத்து, முனிசிபாலிட்டி மெம்பர்களாக இருப்பவர்கள் மீட்டிங் ஹாலுக்கு வெளியேதான் இருக்க வேண்டும். பியூன் போய் அவர்களிடம் கையெழுத்து வாங்கி வருவான்.

பெரும் பதவி உத்தியோகங்கள் எல்லாம் பார்ப்பானுக்கே ஏகபோக உரிமையாக இருந்தது.

அய்ந்து வயது பார்ப்பனச் சிறுவன் முதற்கொண்டு, நம்மில் எவ் வளவு பெரியவர்களாக இருந்தாலும் அவர்களை டேய் என்றுதான் கூப்பிடுவான்; நம்மவன் அவனைச் சாமி என்றுதான் அழைப்பான்.

நம் இயக்கத் தொண்டின் காரண மாக இன்றைக்கு இந்த நிலை அடியோடு மாறிவிட்டதே!

நாங்கள் ஆட்சிக்குப் போய் இதனை மாற்றவில்லை; வெளியி லிருந்து கொண்டு போராடித்தானே மாற்றி னோம். இன்றைக்கு பொது வாழ்க் கையில் பெயர் சொல்லக் கூட ஒரு பார்ப்பான் இல்லையே!

இராஜாஜி இருக்கிறாரென்றால், பத்திரிகைகள் விளம்பரத்தால் பெரிய மனிதராக இருக்கிறாரே ஒழிய வேறு எதனாலும் இல்லையே!

இப்போது பார்ப்பனர்கள் எப்படி யாவது நம்மை நசுக்க சந்தர்ப்பம் பார்த்துக் கொண்டு இருக்கின் றார்கள்.

இனி நாம் சிக்க மாட்டோம்.

நாம் அடைய வேண்டிய அளவு வெற்றி பெறவில்லை என்றாலும் நல்ல அளவிற்கு வளர்ச்சி பெற்றிருக் கின்றோம். கடவுள் நம்பிக்கைக் காரனுக்கு மானமிருக்காது. தன்னை சூத்திரன் என்பதை ஒப்புக் கொண் டவனே ஆவான்.

நம்மோடு சேர்ந்தவன்தான் சூத்திரன் என்றால் ஆத்திரப்படு வானே தவிர, பக்தன். கடவுள் நம்பிக்கைகாரன் தன்னை சூத்திரன் என்பதை ஒப்புக் கொண்டுதான் அதற்கு அடையாளமாக மதக்குறி களை (நாமம் - விபூதி) அணிந்து கொள்கின்றான்.

- தந்தை பெரியார்
அய்யாவின் அடிச்சுவட்டில்.. பாகம் 2 145 ஆம் பக்கத்தில் இருப்பது...

க. பழநிசாமி, தெ.புதுப்பட்டி

தமிழ் ஓவியா said...

பெரியார் பெருந்தொண்டரின் இறுதி விருப்பம்

திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருவரங்கம் வட்டம் மணிகண்டம் ஒன்றியம் கே. கள்ளிக்குடி கிராமம்2/328 வடக்கு தெருவில் வசிக்கும் தீத்தான் மகன் தையல் (எ) நாத்திகன் வயது 81. பிறப்பு 25.10.1929 பொன் மலை ரயில்வே பணிமனை ஓய்வு 31.10.1989 பெரியார் பெருந் தொண்டராகிய நாத்திகன். தையல் அன்று எழுதிய விருப்ப மடல்

என்னுடைய 18ஆவது வயதில் தோழர் ஆண்டி (30) அவர்களோடு அய்யா பெரியாரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு கருப்பு சட்டை அணிந்து ஆரம்பித்த தன்மானம், சுயமரியாதை, கடவுள் மறுப்பு, சாதி மத வேறுபாடு, சமுதாய சீர்திருத்தம், மூடநம்பிக்கை ஒழிப்பு, அறிவியல் சார்ந்த பகுத்தறிவு சமூக நீதியுடன் கூடிய அரசியல், பதவி பககம் போகாத பகுத்தறிவு சமூக தொண்டு போன்ற அய்யாவின் அடிப் படை கொள்கைகளை விட்டுக் கொடுக்காத சாமானியனாக வாழ்ந் தாலும், இவற்றைத் தன் வாழ்நாளில் வாழ்க்கை நெறியாகவே பின்பற்றி வந்துள்ளேன்.

என்னுடைய இரண்டு மகன்கள் அம்பேத்கர் (1960) காமராஜர் (1966) இருவருக்கும் அய்யா அவர்கள்தான் பெயர் சூட்டினார்கள். என்னுடைய பணி (ரயில்வே) காலத்தில் சந்தித்த அனைவருக்கும் என்னைவிட என் கொள்கையைப் பற்றியே அதிகம் தெரிந்திருக்கும். பணிக் காலத்தில் ஷி. யிஷீலீஸீ கினீதீறீணீஸீநீமீ சேர்ந்து மருத்துவம் பற்றியவற்றை அறிந்து அதன் மூலம் என்னால் இயன்ற அளவு சேவைகள் செய்துள்ளேன். உடல் கொடை வழங்குவதற்கு இதுவும் ஒரு காரணமாக அமைந்தது.. பணி நிறைவிற்குப்பின் முழுமையான அய்யாவின் கொள்கை வெளிப்பாடாம். கருப்பு சட்டையைத் தவிர எந்த சட்டையையும் அணிவதில்லை என்று தொடர்ந்து பின்பற்றி வருகின்றேன். குடும்பத்தில் என மனைவி இறப்பு, இல்ல அறிமுக தலைமை (கோ. சாமிதுரை) 1992 தை. அம்பேத்கர் தங்கமணி திருமணம் (தலைமை: ஆசிரியர் கி.வீரமணி) 1985 இளைய மகன் தெ. காமராஜ் - தங்கமணி திருமணம் (தலைமை பொருளாளர் கா.மா. குப்புசாமி) மற்றும் பேர்த்திகள் கனிமொழி, கவி எழில், பேரன் முகிலன் ஆகியோரோடு சுயமரியாதை வாழ்வே சுகவாழ்வு என வாழ்ந்து வருகிறோம்.

ஒவ்வொரு மனிதனின் இறப்பிற்கு பிறகு, தேவையில்லா சடங்குகள் சம்பிரதாயங்கள், மறுபிறப்பு என்ற மூடநம்பிக்கை இவற்றையெல்லாம் முறியடிக்கின்ற வகையில் அய்யா பெரியாரின் பகுத்தறிவு கொண்டு பார்க்கையில் இறப்பிற்குப் பிறகு உடல் கொடை என்பது மிகவும் உன்னதம் என்று என்னுடைய இறப்பிற்கு பிறகு உடலை கொடையாக வழங்கிட முடிவு செய்து எனது உடலை கி.ஆ.பெ. விசுவநாதன் அரசு மருத்துவக் கல்லூரி மெய்யியல் துறைக்கு மருத்துவக் கல்லூரி மாணவர்களின் மருத்துவப் படிப்பிற்கு பயன்படத்தக்க வகையில் 22.1.2010-ல் உடல் கொடை அளிக்க பதிவு செய்துள்ளேன். உடல் கொடையினை நிறைவேற்றுபவராக எனது மனைவியில்லாததால் எனது மூத்தமகன் தை. அம்பேத்கர், இளைய மகன் தை காமராஜ் ஆகிய இருவரும் என்னுடைய இறுதி விருப்பத்தை நிறைவேற்ற ஒப்புதல் அளித்துள் ளார்கள். இதை மாற்ற வேறு யாருக்கும் உரிமையில்லை என்பதுடன் எந்தவித மத, சாதி, சமய சடங்குகள் நடத்தக் கூடாது. அன்பு உள்ளம் கொண்ட உறவினர் நட்பினர்க்கு தெரிவித்து உடன் சரியான நேரத்தில் ஒப்படைக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இது எனது சுய சிந்தனையுடன் எழுதப்பட்ட விருப்பம்.

இவண்

வேறுபட்ட சமுதாயத்தில் மாறுபட்ட சிந்தனைகளைக் கொண்டு என்னை செதுக்கிய சீர்திருத்தச் செம்மல் பெரியாரின் வழி வந்த நாத்திகன். விடுதலையும் உண்மையும் பிரிக்க முடியாத சொந்தங்கள்.

தமிழ் ஓவியா said...


பெரியாரின் அறிவுக் கூர்மை!

பெரியார்தான் திருக்குறளின் புகழ்ப ரப்பப்
பெரியதொரு மாநாட்டை முதலில் கூட்டி,
இருக்கின்ற இலக்கியத்துள் நான்ம திக்கும்
ஈடில்லா நூல்குறளே! என்று சொன்னார்!
ஒருநண்பர் அவரிடத்தில் கேட்டார்: நீங்கள்
ஒப்பாத இறைவாழ்த்தை ஏற்கின் றீரா?
திருக்குறளார் பலசரக்குக் கடைவைத் துள்ளார்;
தேவைகளை வாங்குகிறேன்! பெரியார் சொன்னார்.

பொதுவுடைமைப் பூஞ்சோலை ரஷ்ய நாட்டைப் போய்ப் பார்த்துத் திரும்பியபின் குழந்தைக் கெல்லாம்
புதுமையுடன் பெயர்சூட்டி, ரஷ்யா என்றும்
புகழ் மாஸ்கோ என்றெல்லாம் அழைக்கச் சொன்னார்!
இதுவென்ன? மண்பெயரா மழலை கட்கே?
எப்படித்தான் ஏற்பதென்றார் சிலரோ! அய்யா,
சிதம்பரத்தைப் பழனியினை, மதுரை தன்னைத்
திருப்பதியை ஏற்பதுபோல் ஏற்பீர்! என்றார்!

கூட்டத்தை முடித்தபின்னர், கழகத் தோழர்
கொண்டுவந்த புலால் உணவைப் பெரியார் உண்ணக்
கேட்டார்ஓர் வீரசைவர், ஆட்டைக் கொல்லல்
கேடான பாவமன்றோ? என்றே! உங்கள்
வீட்டுணவும் என்ன? என்றார் பெரியார்; அன்னார்,
விளைத்திட்ட முளைக்கீரை மசியல் என்றார்;
ஆட்டின்உயிர் ஒன்றைத்தான் கொன்றோம்; நீங்கள்
அழித்தஉயிர் ஆயிரங்கள்! என்றார் அய்யா!- கவிவேந்தர் கா.வேழவேந்தன்

தமிழ் ஓவியா said...


பெரியாரின் அறிவுக் கூர்மை!


பெரியார்தான் திருக்குறளின் புகழ்ப ரப்பப்
பெரியதொரு மாநாட்டை முதலில் கூட்டி,
இருக்கின்ற இலக்கியத்துள் நான்ம திக்கும்
ஈடில்லா நூல்குறளே! என்று சொன்னார்!
ஒருநண்பர் அவரிடத்தில் கேட்டார்: நீங்கள்
ஒப்பாத இறைவாழ்த்தை ஏற்கின் றீரா?
திருக்குறளார் பலசரக்குக் கடைவைத் துள்ளார்;
தேவைகளை வாங்குகிறேன்! பெரியார் சொன்னார்.

பொதுவுடைமைப் பூஞ்சோலை ரஷ்ய நாட்டைப் போய்ப் பார்த்துத் திரும்பியபின் குழந்தைக் கெல்லாம்
புதுமையுடன் பெயர்சூட்டி, ரஷ்யா என்றும்
புகழ் மாஸ்கோ என்றெல்லாம் அழைக்கச் சொன்னார்!
இதுவென்ன? மண்பெயரா மழலை கட்கே?
எப்படித்தான் ஏற்பதென்றார் சிலரோ! அய்யா,
சிதம்பரத்தைப் பழனியினை, மதுரை தன்னைத்
திருப்பதியை ஏற்பதுபோல் ஏற்பீர்! என்றார்!

கூட்டத்தை முடித்தபின்னர், கழகத் தோழர்
கொண்டுவந்த புலால் உணவைப் பெரியார் உண்ணக்
கேட்டார்ஓர் வீரசைவர், ஆட்டைக் கொல்லல்
கேடான பாவமன்றோ? என்றே! உங்கள்
வீட்டுணவும் என்ன? என்றார் பெரியார்; அன்னார்,
விளைத்திட்ட முளைக்கீரை மசியல் என்றார்;
ஆட்டின்உயிர் ஒன்றைத்தான் கொன்றோம்; நீங்கள்
அழித்தஉயிர் ஆயிரங்கள்! என்றார் அய்யா!- கவிவேந்தர் கா.வேழவேந்தன்