Search This Blog

22.1.13

காவி தீவிரவாதம் இதோ ஆதாரங்கள் - பதில் கூறட்டும் பார்க்கலாம்!


காவி தீவிரவாதம் குறித்து உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே கூறியதில் தவறு என்ன?
அடுக்கடுக்கான நிகழ்வுகள் உண்டே!
மன்னிப்புக் கோர வேண்டிய அவசியம் இல்லை
காவி தீவிரவாதம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே கூறிய கருத்துக்கு அடுக்கடுக்கான நிகழ்வுகள் உண்டே. அப்படிக் கூறியதற்காக அவர் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று பி.ஜே.பி. கூறுவது பொருட்படுத்தப்பட வேண்டிய ஒன்றல்ல என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள முக்கிய அறிக்கை வருமாறு:

ஆர்.எஸ்.எஸ். போன்ற இந்துத்துவா அமைப்புகள் இந்து பயங்கரவாதத்தினை முன்னிறுத்தி நடத்துவதாகவும், அதற்காக பயிற்சிகள் அளிப்பதாகவும் உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே அவர்கள் கூறியிருப்பதை எதிர்த்து பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்., அமைப்பினர் வானத்திற்கும் பூமிக்குமாக குதித்து ஆர்ப்பாட்டம் செய்கின்றனர்; அதற்கு அவர் மன்னிப்புக் கோர வேண்டும்; இல்லையேல் 24ஆம் தேதி கிளர்ச்சி, கண்டன ஆர்ப்பாட்டம் செய்வோம்; ஷிண்டே பதவி விலக வேண்டும் என்றும் உடனே ஆர்ப்பரித்துள்ளனர்!

அவர் ஏதோ ஆதாரமில்லாமல் பேசியதைப் போல ஊடகங்கள் உயர்ஜாதி, பார்ப்பன, ஹிந்துத்வாவாதிகளின் ஆயுதங்களாக இருப்பதால், இதற்காக ஓங்காரக் கூச்சல் இடுகின்றனர்!

இதோ ஆதாரங்கள் - பதில் கூறட்டும் பார்க்கலாம்!

தங்களை சுத்த சுயம் பிரகாசிகளாகக் காட்டிக் கொள்ளும் இந்த வீராதி வீரர்கள், நமது சில கேள்விகளுக்கு விடை கூறட்டும்!

1. மாலேகான் குண்டுவெடிப்பில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டுள்ள இவர்கள் எல்லாம் லேபிளை மாற்றிக் கொண்ட ஹிந்துத்துவா வாதிகள் அல்லாமல் வேறு யார்?

இந்திய இராணுவத்தில் ஊடுருவி, அங்குள்ள RDX என்ற சக்தி வாய்ந்த வெடி மருந்து, பொருள்களைக் கடத்தி, பயிற்சி தந்து பிறகு சிக்கிக் கொண்டு, சிறைவாசம் அனுபவிப்பதோடு, காவி அணிந்த சந்நியாசி வேடம் தரித்து தாங்கள் செய்த வன்முறைகளை - இஸ்லாமியர்கள் மீது பழி போட்டவர்கள் இவர்களைத் தவிர வேறு யார்?

2. அண்மையில் வெளியான செய்தியில் இவர்களின் முக்கிய புள்ளியான ஒருவர்தான் (உயர்ஜாதி பார்ப்பனர் அவர்) குஜராத் சம்ஜுத்தா எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ வைத்து கொளுத்தியது (கோத்ரா ரயில் எரிப்பு) அய்தராபாத் குண்டு வெடிப்பு ஆகிய எல்லாவற்றுக்கும் சூத்திரதாரிகளாக இருந்தனர் என்ற செய்தி சென்ற வாரம் வரவேயில்லையா? (டைம்ஸ் ஆஃப் இந்தியா 13.1.2013).
புலன் விசாரணை செய்த ஆய்வு நிறுவனம் இச்செய்தியை வெளியிட்டு ஏடுகளில் வெளி வந்துள்ளதே!

3.பாபர் மசூதியை இடித்த குற்றவாளிகளின் பட்டியலில் இவர்கள் அமைப்பினர் சம்பந்தப்பட்டுள்ளார்களா - இல்லையா?

உ.பி. முதல்வர் கல்யாண்சிங் என்ன கூறினார்?

4. அந்நாள் உ.பி. முதல் அமைச்சர் கல்யாண் சிங் தந்த ஒரு பேட்டியில், இவர்களை நம்பித்தான் நான் உத்தரவாதம் அளித்தேன்; ஆனால் இவர்கள் இடித்து தரைமட்டமாக்கி என்னை குற்றம் புரிந்தவர்கள் பட்டியலில் இடம் பெற வைத்தனர் என்று மனம் நொந்து கூறவில்லையா? அந்த இடிப்பின் எதிர்வினையாகத் தானே நாட்டில் 3000, 4000 பேர்கள் கொல்லப்பட்டதும், ரத்த ஆறு ஓடியதுமான கோரத் தாண்டவம்! இது நடைபெற்றதற்கு மூல காரணம் யார்? தென்காசியில் சொந்த ஆர்.எஸ்.எஸ். அமைப்பு - இந்து முன்னணியினர் ஒருவரைக் கொன்று, அதை முஸ்லீம்கள்மேல் பழி போட்டு, மதக் கலவரம் ஏற்பட்டு மோதல்களுக்குப்பிறகு, இவர்களே நடத்திய நாடகம் என்ற உண்மை ஒப்புதல் வாக்குமூலம் வரவில்லையா?

காந்தியாரைக் கொன்றவன் யார்?

5. தேசப்பிதா காந்தியாரை சுட்டுக் கொன்ற கோட்சேவுக்கு பயிற்சிக்கூடம் ஆர்.எஸ்.எஸ். என்பதும், அவர் சம்பவத்திற்குமுன் விலகியிருந்தார் என்பது புறத்தோற்றம் அல்லவா! அதனை மறுத்த நிலையில், அவரது தம்பி கோபால் கோட்சே - பூனாவில் தனது அண்ணன் நாதுராம் விநாயக் கோட்சே ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் இருந்தவர் என்பதை ஏன் இவர்கள் மறைக்கிறார்கள் என்று பிரண்ட் லைன் ஆங்கில ஏட்டிற்குப் பேட்டி அளித்த போது சொல்லவில்லையா?

6. ஆர்.எஸ்.எஸ். அமைப்பைப் போல இந்தியாவில் மூன்று முறை தடை செய்யப்பட்ட அமைப்பு வேறு உண்டா?

7. டெல்லியில் பச்சைத் தமிழர், அ.இ.காங்கிரஸ் தலைவர் காமராஜரை பட்டப் பகலில் அவர் வீட்டிற்குத் தீ வைத்து உயிருடன் கொளுத்த முயன்றவர்கள் ஹிந்துத்துவா தீவிரவாதிகளும், நிர்வாண சாமியார்களும், ஆன (பசுவதைத் தடுப்புப் போராட்டம் என்ற பெயரில்) இந்துத்துவா தீவிரவாதிகள் அல்லாமல் வேறு யார்?

8. டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் தங்கியிருந்த அன்றைய முதல் அமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்களை நேரில் சந்தித்து, விவாதித்துக் கொண்டு இருக்கையில் கையை முறுக்கி வன்முறையில், ஈடுபட்டு பிறகு விரட்டப்பட்டவர் ஆர்.எஸ்.எஸ். காரர்கள் அல்லவா?

ஆதாரம் இல்லாமலா பேசுகிறார்- உள்துறை அமைச்சர் ஷிண்டே?

உண்மையை ஊடகங்களின் ஓங்காரச் கூச்சல் மூலமாக, மறைத்துவிட முடியாது.

திரு. ஷிண்டே அவர்கள் உள்துறை அமைச்சர்; ஆதாரங்கள் இல்லாமலா அவர் பேசுவார்? நடைபெற்ற நிகழ்வுகள் எதைக் காட்டுகின்றன? ஹிந்துத்துவா பேசுவோர்தானே! வழக்கு நீதிமன்றத்தில் மாலேகான் குண்டுவெடிப்பு சம்பந்தமாக நடக்கும் நிலையில் இதுபற்றி உள்துறை அமைச்சர் பேசலாமா? என்ற அருள் உபதேசம் செய்கிறது ஆர்.எஸ்.எஸ்.காரரை - உணர்வாளரை ஆசிரியராகக் கொண்டுள்ள தினமணி நாளேடு?

என்னே திடீர் ஞானோதயம்! ஏன் இதே வாதம் 2ஜி வழக்கு உச்சநீதிமன்றத்திலும், டில்லி தனி நீதிமன்றத்திலும் நடைபெற்று வருகிற நிலையில் இவர்கள் எவ்வளவு எழுதினார்கள் - பேசினார்கள் - விமர்சித்தார்கள்? பேசு நா இரண்டுடையாய் போற்றி போற்றி என்ற அண்ணாவின் ஆரிய மாயை வரிகள்தான் இவர்களைப்பற்றி நம் நினைக்கு வருகிறது.

தாழ்த்தப்பட்டவர் என்பதாலா?

மாண்புமிகு ஷிண்டே அவர்கள் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தவர் உள்துறை அமைச்சராக இருப்பது என்பது பார்ப்பன உயர் ஜாதி வர்க்கத்திற்கு  உறுத்தலாகத் தானே இருக்கும்; அதற்காகத்தான் இந்தப் பதவி விலகல் கூச்சல் போலும்!

ஷிண்டேவின் கருத்துகண்டு இப்படிக் கூறுவது எதைக் காட்டுகிறது? நடுநிலையாளர்கள் ஆழ்ந்து சிந்திக்கட்டும்!


-------------------------------கி.வீரமணி தலைவர்,  திராவிடர் கழகம் சென்னை"விடுதலை”22.1.201

14 comments:

தமிழ் ஓவியா said...


காவல்துறையின் சரியான நடவடிக்கை கோவையில் அனுமதியின்றி வைக்கப்பட்ட விநாயகர் சிலை அகற்றம்!


கோவை,ஜன.22- கோவை ரத்தினபுரியில் அனுமதியின்றி வைக்கப் பட்ட விநாயகர் சிலையை காவல்துறை யினர் அகற்றினார்கள். இதற்கு எதிர்ப்பு தெரி வித்து இந்து அமைப் பினர் முற்றுகையிட்ட னர்

கோவை ரத்தினபுரி, எம்.ஜி.ஆர். நகரில் மாநக ராட்சிக்கு சொந்தமான இடம் உள்ளது. கடந்த 13ஆம் தேதி திடீரென்று அந்தப் பகுதியை சேர்ந் தவர்கள் விநாயகர் சிலையை அங்கு வைத் தனர். விநாயகர் சிலை வைப்பதற்கு எந்த அனு மதியையும் பெற வில்லை என்று கூறப் படுகிறது. மாவட்ட நிரு வாகமும், மாநகராட்சி நிருவாகமும் அந்த சிலையை அகற்ற உத்தரவிட்டன. ஆனா லும் சிலையை அகற் றாமல் தொடர்ந்து பூஜை செய்து வந்தனர். சிலையை அகற்றுவதற் காக காலஅவகாசமும் வழங்கப்பட்டது. விநாய கர் சிலை தொடர்ந்து அங்கேயே இருந்தது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் அதிகாலை 4 மணியளவில் கோவை வடக்கு வட்டாட்சியர் ரபி அகமது, உதவி ஆணையர் முத்தரசு, உள்பட காவல்துறை யினர் நூறு பேர் அந்தப் பகுதிக்குச் சென்று 2 அடி உயரம் உள்ள விநாயகர் சிலையை அகற்றினார்கள். இந்து மக்கள் கட்சி பாரதீய ஜனதாவை சேர்ந்த மற்றும் சிலர் சிலை அகற்றப்பட்ட பகுதிக்குச் சென்று காவல்துறையிடம் பேச்சுவார்த்தை நடத் தினார்கள். மாவட்ட ஆட்சியரிடம் முறை யிட்டு தீர்வு காணுமா றும், அனுமதிப் பெறப் படாதவரை சிலையை வைக்க அனுமதி அளிக்க முடியாது என்றும் காவல்துறையினர் தெரிவித்துவிட்டனர். இதைத் தொடர்ந்து இந்து அமைப்பினர் அங்கிருந்து சென்றுவிட் டனர்.

தமிழ் ஓவியா said...


எச்சரிக்கை

மக்களை ஏமாற்றும் போலி நிறுவனங்கள் ஏற்பட்டு வருகின்றன. (எடுத்துக்காட்டு - ஈமு கோழி வளர்ப்புத் திட்டம்) ரிசர்வ் வங்கியில் பதிவானவையா? என்பதை உறுதி செய்க! பதி வான நிதி நிறுவனங்களின் பெயர், முகவரி விவரங்களை இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். (commonman/english/scripts/nbfcs.aspk).

தமிழ் ஓவியா said...


தனியார்த்துறைகளிலும் இட ஒதுக்கீடு!


திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுக் (19.1.2013) கூட்டத்தில் மூன்று முக்கிய பிரச்சினை களை முன்னிறுத்தி குமரி முதல் தொடர் பிரச்சாரப் பயணம் ஒன்றை மேற்கொள்ள முடிவு செய்துள்ளது.

1) தனியார்த்துறைகளில் இடஒதுக்கீடு 2) பெண்ணுரிமைக் கோட்பாடுகள் 3) ஜாதி - தீண்டாமை ஒழிப்பு - இம்மூன்றையும் முன்னெடுத்துச் செய்வது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

அரசுத்துறைகளைப் பொறுத்தவரை ஒரு சதவிகிதம்தான் வேலை வாய்ப்பு என்ற கருத்துண்டு தற்போது அரசுத் துறைகள், பொதுத்துறைகள்

இளைத்து, தனியார்த்துறைகளும், பன்னாட்டு நிறுவனங்களும் நாளும் விரிவடைந்து வரும் நிலையில், சமூக நீதிக் கண்ணோட்டத்தில் இடஒதுக்கீடு என்பது இயல்பாகவே இவர்களிடம் பெறுவது என்பதாகி விட்டது.

தனியார்த்துறை என்பது தனியே ஆகாயத்தி லிருந்து தொங்கிக் கொண்டிருக்கவில்லை. அரசின் பல்வேறு உதவிகளைப் பெற்றுத்தான் இயங்கி வருகின்றது. நிலம், நீர், மின்சாரம், வங்கிக் கடன் என்று எதை எடுத்துக் கொண்டாலும் அரசின் உதவியோடு தான் தனியார்த்துறைகள் இயங்கி வருகின்றன. இந்த நிலையில் அரசுத் துறைகளில் வழங்கப்பட்டு வரும் இடஒதுக்கீடு தனியார்த் துறைகளிலும் கொடுக்கப்பட வேண்டும் என்பது சொல்லாமலேயே விளங்கக் கூடியதாகும்.

இன்றைய நிலையை எடுத்துக் கொண்டால் அரசுத்துறைகளிலும்கூட தாழ்த்தப்பட்டவர்களுக்கும், பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் சட்டப்படியாக அவர்களுக்குரிய விகிதாச்சாரப்படி இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை. பதவிகளின் தரம் உயர உயர இவர்களுக்கான இடஒதுக்கீட்டின் சதவிகிதம் இறங்குமுகமாகவே இருந்து வருகிறது.

தனியார்த்துறைகளிலோ கேட்கவே வேண்டாம். முக்கியமான கேந்திரப் பதவிகளிலும், பணியாளர் களை நியமனம் செய்யும் இடத்தில் பெரும்பாலும் பார்ப்பனர்களே இருந்து வருகின்றனர். இதன் காரண மாக தனியார்த்துறை என்பது உயர்ஜாதியினர் நிறைந்து வழியும் இடமாகி விட்டது.

தனியார்த் துறைகளில் பணியாற்றும் இயக்குநர் களின் எண்ணிக்கை 8,327;

இதில் உயர் ஜாதிப் பார்ப்பனர்கள் 4037 (44.6 %)

வைசியர் 4167 (46%) சத்திரியர் 46 (0.5%) பிற முன்னேறியோர் 132 (1.5%)

இதர பிற்படுத்தப்பட்டோர் 346 (3.8%)

தாழ்த்தப்பட்டோர் மற்றும் மலைவாழ் மக்கள் 319 (3.5%)

இதில் வைசியர், சத்திரியர் என்பதெல்லாம் வட மாநிலங்களில் உள்ள உயர்ஜாதியினர்தான். தென் மாநிலங்களில் கிடையாது.

இந்தப் புள்ளி விவரங்களைப் பார்க்கும் பொழுது, தனியார்த் துறைகளில் தாழ்த்தப்பட்டோர், மலைவாழ் மக்கள் மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்படுவதன் அவசியம் எத்தகையது என்பது சொல்லாமலேயே எளிதில் விளங்கும்.

இந்தியாவில் தனியார்த் துறைகளில் இட ஒதுக்கீட்டை அளிக்க மறுத்துவரும் இந்திய முத லாளிகள் வெளி நாடுகளில் தொழிற் சாலைகளைத் தொடங்கும் போது அந்த நாடுகளில் மட்டும் இடஒதுக்கீடு அளிக்க ஒப்புக் கொள்கிறார்கள். குறிப்பாக தென்னாப்பிரிக்காவில் வெளிநாட்டினர் தொழில் தொடங்குவதாக இருந்தால் தென்னாப் பிரிக்க அரசு விதித்துள்ள சட்ட திட்டங்களுக்குக் கட்டுப்பட்டே ஆக வேண்டும்.

கருப்பர் ஒருவர் தலைமைச் செயல் அலுவலராக இருக்க வேண்டும். குறிப்பிட்ட சதவிகிதத்தில் கருப்பர்கள் மேலாண்மை உடையவர்களாக இருக்க வேண்டும். அந்தத் தொழில் நிறுவனங்களின் பங்கு களை கருப்பின மக்களுக்கும் அளிக்கப்பட வேண் டியது கட்டாயமாகும். இந்தியாவில் முதலாளிமார்கள் உள்நாட்டில் ஒரு கொள்கை - வெளிநாட்டில் இன்னொரு கொள்கை; ஏனிந்த இரட்டை வேடம்?

தெ. ஆப்பிரிக்க அரசு நடைமுறைப்படுத்தும் அதே சட்டத்தை இங்கும் இந்திய அரசு ஏன் நிறைவேற்றக் கூடாது? தந்தை பெரியார் அவர்களின் நினைவு நாள் அறிக்கையில் (24.12.2012) திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் தனியார்த் துறைகளில் இடஒதுக்கீடு என்பதுதான் தந்தை பெரியார் நினைவு நாள் சூளுரை என்று குறிப்பிட் டுள்ளார். அதையேதான் இம்மாதம் 19ஆம் தேதி கூடிய திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுவும் தீர்மானித்துள்ளது.

ஏப்ரலில் தொடர் பிரச்சாரம் குமரிமுனையில் திராவிடர் கழகத்தால் மேற்கொள்ளப்படும்; கட்சிக்கு அப்பாற்பட்ட இந்த சமூக நீதிக் கொள்கைக்குத் தந்தை பெரியாரால் பக்குவப்படுத்தப்பட்ட தமிழ்பூமி ஆதரவுக் கரம் நீட்டும் என்பதில் அய்யமில்லை.

தமிழ் ஓவியா said...


மதமும் - பக்தியும்!


இன்று மதமாவது ஒருவரை ஒருவர் ஏய்க்கவே பயன்படுத்தப் படுகிறதே அல்லாமல், தொல்லை யில்லாதிருக்க, நிம்மதியான வாழ்வு வாழ உதவுவதாக, மதம் இல்லையே! போலி வாழ்க்கைக்காரருக்குத் திரை யாகவே மதமும், பக்தியும் உதவுகிறது. (விடுதலை, 27.2.1965)

தமிழ் ஓவியா said...


போராடிப் பெற்ற செம்மொழித் தகுதியை யாராலும் வீழ்த்த முடியாது!


சென்னை, ஜன. 22- போராடி செம்மொழி தகுதியைப் பெற்று இருக்கிறோம். அதை யாராலும் வீழ்த்த முடியாது என்றார் முத்தமிழ் அறிஞர் கலைஞர்.

சென்னை அண்ணாமலைப்புரத்தில் உள்ள திரு வாவடுதுறை ராஜரத்தினம் கலையரங்கில் நேற்று (21.1.2013) நடை பெற்ற முத்தமிழ்ப் பேரவையின் 35ஆம் ஆண்டு விழாவில் விருதுகள் வழங்கி தி.மு.க. தலைவர் கலை ஞர் அவர்கள் உரையாற்றுகையில் குறிப்பிட்டதாவது:-

தமிழ் என்ற இந்தச் சொல்லே, எப்படி உருவா னது என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். தமிழ் என்பது எப்படி உருவாக்கப்பட்டிருக்க முடியும், உருவாக்கப் பட்டிருக்கக் கூடும். அது எப்படி திட்டமிட்டு உருவாக் கப்பட் டதோ இல்லையோ, அதைப் பற்றிக் கவலையில்லை. ஆனால் நான் எண்ணிப் பார்க்கிறேன். தமிழில் வல்லினம், மெல்லினம், இடையினம் என்று மூன்று இனங்களை நாம் சொல்கிறோம். இந்தத் தமிழ் என்ற சொல்லை நீங்கள் எழுதிப் பார்த்தால் த முதல் எழுத்து - வல்லினம் - கசடதபற என்ற வல்லின எழுத்துக்களில் த இடம் பெறும். அடுத்த எழுத் தான மி - மெல்லின எழுத்துக்களில் ஙஞணநமன - என்பதில் வருகின்ற ம என்ற எழுத்துத் தான் மி யாகி த மி என்றாகிறது.

அடுத்து ழ் என்ற எழுத்து இடையினம் - யரலவழள என்ற எழுத்துக்களில் இடம் பெற்ற ழ என்ற எழுத்து, ழ் என்பது த மி என்பதோடு இணைந்து - தமிழ் என்ற வல்லினம், மெல்லினம், இடையினம் ஆகிய இந்த மூன்று இனங் களையும் கொண்ட ஒரு சொல்லாக அன்றைக்கே ஆச்சரியமாக வியப்பாக நம்முடைய ஆன்றோர் களால் அமைக்கப்பட்டிருப்பதை எண்ணிப் பார்க் கும்போது இந்தப் பெருமை, வேறு எந்த மொழிக்கு உண்டு என்றால் இல்லை. அந்தப் பெருமைகள் எல்லாம் தமிழ் மொழிக்குத்தான் உண்டு.

தகுதி இருப்பதால் தமிழுக்கு
செம்மொழித் தகுதி வேண்டிப் பெற்றோம்!

தமிழ் ஓவியா said...

இவைகளை யெல்லாம் சொல்லித் தான் செம்மொழி என்ற தகுதியை இந்த மொழிக்கு நாம் பெற்றோம். செம்மொழி தகுதி என்பது சாதாரண மானதல்ல. யாரோ எழுதி நாளைக்கு அழித்து விட்டுப் போகின்ற ஒரு சொல் அல்ல. அத்தகைய தகுதியைப் பெற்ற மொழி நம்முடைய மொழி. உலகத்திலே இருக்கிற ஆறு மொழிகள் தான், ஹிப்ரு உட்பட்ட ஆறு மொழிகள் தான் செம்மொழி தகுதி பெற்றவை. அந்தச் செம்மொழி தகுதி, தமிழ் மொழிக்கும் உண்டு என்ற காரணத் தினால் செம்மொழி என்ற அந்தத் தகுதியை வேண்டிப் பெற்றோம். செம்மொழி தகுதியை நாம் பெற்றதும், இந்தியாவிலே உள்ள வேறு மொழிக்காரர்கள் எல்லாம், அது எப்படி கருணாநிதி மாத்திரம் செம்மொழித் தகுதியை தமிழுக்குப் பெறலாம், எங்கள் மொழிக்குக் கிடையாதா என்றெல்லாம் போர்க்குரல் கொடுத்தது எனக்குத் தெரியும். இருந்தாலும், அம்மையார் சோனியா காந்தி அவர் களிடம் நான் வாதாடி - நாம் எடுத்துச் சொன்ன ஆதாரங்களுக்கு மதிப்பளித்து - அம்மையார் அவர்கள் செம்மொழி தகுதி, தமிழுக்கு உண்டு என்று அறிவித்த பெருமையான நிலை ஏற்பட்டது மத்தியிலே உள்ள இந்த அரசிலேதான்.

தமிழ் ஓவியா said...

மத்தியிலே உள்ள அரசுக்கும் நமக்கும் வேறு சில பிரச்சினைகளில் கருத்து வேறுபாடு இருந்தாலுங் கூட, மொழிப் பிரச்சினையிலே தமிழைச் செம்மொழி யாக ஆக்க வேண்டுமென்ற பிரச்சினையிலே நம் முடைய வேண்டுகோளை - நம்முடைய வலியுறுத் தலின் காரண மாக - வற்புறுத்தலின் காரணமாக - ஆதாரங்களை எடுத்து வைத்ததின் காரணமாக வெற்றிகரமாக செம்மொழி என்ற தகுதி நம் மொழிக்குக் கிடைத்திருக் கின்றது.

வெறும் பெயரால் மாத்திரம் தகுதி வந்து விடாது. செம்மொழியாக ஆகக் கூடிய தகுதி இந்த மொழிக்கு இருக்கிறது என்பதை எல்லா அறிஞர்களும் ஒத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்தியாவிலே உள்ள அறிஞர்கள் மாத்திரமல்ல, வெளி நாடுகளிலே உள்ள அறிஞர்கள் எல்லாம் ஒத்துக் கொண்டிருக்கிறார் கள். அப்படி ஒத்துக் கொண்டிருக்கின்ற காரணத் தால்தான், கோவை யில் நடைபெற்ற செம்மொழி மாநாட்டிற்கு, வந்தவர்கள், அதைப்பற்றிப் பேசி, அதை ஏற்றுக் கொண்டு அங்கே நாம் அளித்த விருதுகளையெல்லாம் பெற்றுக் கொண்டார்கள். அப்படிப்பட்ட பெருமைக் குரிய செம்மொழி, தமிழ் மொழி. அந்தத் தமிழ் மொழிக்கு இன்றைக்கு இந்த இசை விழாவிலே நம்முடைய நண்பர் ஜெகத்ரட்சகன் எடுத்துக்காட்டி யதைப் போல ஆன்மீகமானாலும், அல்லது அறிவுல கம் ஆனாலும், எல்லா இடங்களிலும் இடம் பெறக் கூடிய ஒரு மொழியாக தமிழ் மொழி இருக்கின்ற காரணத்தினால்தான் செம்மொழியாக இந்த மொழி விளங்க வேண்டுமென்ற நம்முடைய கருத்து ஏற்கப் பட்டது.
ஆனால் சோனியா காந்தி அம்மையார் நம் முடைய கருத்துகளை ஆராய்ந்து தெளிவு பெற்று முடிவு செய்து அறிவித்தது மாத்திரமல்ல, அத்துடன் ஒரு கடிதமும் எனக்கு எழுதினார்கள். செம்மொழிக் காக தமிழ்நாட்டிலிருந்து எழுந்த குரல்களில் பல குரல்களை நான் அறிவேன். இருந்தாலும், செம் மொழிக்காக விடேன், தொடேன் என்று தொடர்ந்து பாடுபட்டு, அந்த வெற்றி யைப் பெற்ற பெருமை உங்களைத் தான் சாரும் (பலத்த கைதட்டல்) என்று அம்மையார் எழுதிய கடிதம் இன்ன மும் என்னுடைய கோப்பில் பத்திரமாக இருக்கிறது.

தமிழ் ஓவியா said...

இதை நான் என்னுடைய பெருமைக்காகச் சொல்லவில்லை. சோனியா காந்தி அவர்களே என்னைப் பாராட்டி எழுதியிருக்கிறார், பார்த் தீர்களா என்பதற்காக அல்ல. இப்படியெல்லாம் அரும்பாடுபட்டு, நாம் தேடிய சொத்து, தமிழுக்கு செம்மொழி என்ற அந்தத் தகுதியை - இன்றைக்கு தகுதியற்றவர்கள் சிலர் மறுக்கிறார்களே என்பதை எண்ணும்போதும், அதற்கு உரிய இடத்தைத் தரா மல் அதை ஒழிக்க எண்ணுகிறார்களே என்பதை எண்ணும்போதும் நான் அமர்ந்திருக்கின்ற இடம் தமிழிசைக்காக ஒரு மன்றம் ஆனாலுங்கூட, வேதனைப்படுகிறேன். மகிழ்ச்சியடைய முடியவில்லை. தமிழுக்கு இவ்வளவு பெரிய தாழ்வும், இவ்வளவு பெரிய பின்ன டைவும் ஏற்பட்டிருக்கின்ற இந்தக் கால கட்டத்தில் நாம் தமிழில் பாடும்போதும், தமிழில் இசையைப் பொழி யும்போதும், தமிழர்களாக நாமெல்லாம் இங்கே கூடி யிருக்கின்ற போதும், நம்மை அறியாமல் ஏதோ வொன்று நம்முடைய உள்ளத்தை அறுத்துக் கொண் டிருக்கின்றது. அந்த அறுக்கின்ற முயற்சியில் யார் யார் ஈடுபட்டிருக் கிறார்கள் என்பதையெல்லாம் நான் இங்கே விவரிக்க விரும்பவில்லை. ஏனென்றால் இசை விழா. இந்த இசை விழா, தமிழ் விழாவாக நடைபெறும் போது, அந்தத் தமிழுக்கு ஏற்றம், அந்தத் தமிழுக்கு உரிய பெற்றி, அந்தத் தமிழுக்குரிய பெருமை - இவைகளையெல்லாம் நாம் அடைய வேண்டும். அடைய முடியாமல், அணை போட்டுத் தடுக்கிறார் கள் என்பதையும் உங்களிடம் சொல்லாமல் நான் வேறு யாரிடம் சொல்லப் போகிறேன். உங்களிடம் பகிர்ந்து கொள்ளாமல் வேறு யாரிடம் பகிர்ந்து கொள்ளப் போகிறேன். தமிழர்கள் கூடியிருக்கின்ற இடத்திலே அல்லா மல், தமிழுக்கு ஏற்படுகின்ற தீமையை, தமிழுக்கு ஏற்படுகின்ற கேட்டினை, தமிழுக்கு ஏற்படுகின்ற இன்னலை, தமிழுக்கு ஏற்படுத்தப்படுகின்ற இழி வினை வேறு யாரிடத்திலே சொல்வேன்? யாரிடத் திலே கேட்க முடியும். ஆகவே வாய்ப்பாக இந்த இடம் கிடைத்தது. கிடைத்த இடத்திலே நான் சொல்ல வேண்டியதை உங்களிடத்திலே சொல்லி, உங்கள் காதுகளிலே போட்டு வைத்து, உங்கள் கருத்துக்களில் ஒரு தெளிவை ஏற்படுத்தினால் இன்றில்லாவிட்டால் நாளை, நாளை தவறினால் நாளை மறுநாள், அதுவும் தவறினால் அடுத்த திங்கள், அந்தத் திங்களும் தவறினால் அடுத்த ஆண் டாவது நம்முடைய தமிழகத்திலே தமிழ் செழித் தது, தமிழுக்கு உரிய தகுதி அகற்றப்பட வில்லை, தமிழுக்கு நாம் போராடிப் பெற்ற செம்மொழித் தகுதியை யாராலும் வீழ்த்த முடியவில்லை (கைதட்டல்) என்கின்ற அந்த நிலையை உருவாக்க வேண்டும், அப்படி உருவாக்குவதற்கு ஏற்றதொரு நிகழ்ச்சியாக இந்த நிகழ்ச்சியிலே கூடியிருக்கின்ற தமிழ்ப் பெருங்குடி மக்களாகிய உங்களையெல்லாம் காணுகின்றேன். உங்களிடத்திலே நான் இரங்கிக் கேட்டுக் கொள்வது, நான் விரும்பி வேண்டிக் கேட் டுக் கொள்வதெல்லாம் தமிழனாக இருப் போம் - தமிழை வாழ வைப்போம் - தமிழிசை ஆனாலும், தமிழ் அநடனம் ஆனாலும், தமிழால் எதை உணர்த் துகிறோமோ அந்த உணர் வானாலும், பட்டுப் போகாமல் பாதுகாக்க நாம் நம்மையே அர்ப்பணிப் போம் என்று இங்கே தெரி வித்துக் கொள்ள விரும்புகிறேன்.

என்றைக்கும் சுயமரியாதைக்காரராக வாழ்ந்து மறைந்தவர் ராஜரத்தினம்!

இது ராஜரத்தினம் பெயரால் அமைந்துள்ள மண்ட பம். ராஜரத்தினம் ஒரு சுயமரியாதைக்காரர் - ராஜரத்தினம் ஒரு தன்மான வீரர் - ராஜரத்தினம் பணக் காரர்களுக்குப் பயந்து தோளில் போட்ட துண்டை எடுக்க மாட்டேன் என்று சொன்னவர் - ராஜரத்தினம் என்றைக்கும் சுயமரியாதைக்காரராக வாழ்ந்து மறைந்த வர். அப்படிப்பட்ட ராஜரத்தினம் பெயரால் அமைந் துள்ள இந்த மாமன்றத்தில் நாம் சபதம் ஏற்றுக் கொள் வோம். நீங்களும் உறுதி மொழி எடுத்துக் கொள்ளுங்கள் - என்றென்றும் தன்மானத்தோடு இருப்போம் - தமிழைக் காப் போம் என்ற உறுதிமொழியை எடுத்துக் கொள்ளுங் கள் என்று கூறி விடைபெறுகிறேன். இவ்வாறு கலைஞர் அவர்கள் உரையாற்றினார்.

Anonymous said...

மதங்கள் தீவிரவாதங்களை வளர்க்கும் போது அவர்களுக்கு மதம் சார்ந்த பெயர்களோடு குறிப்பிடுவது தவறில்லையே.. இந்து, இஸ்லாம், கிறிஸ்தவ, புத்த தீவிரவாதங்கள் இருக்கவே செய்கின்றன, அவ்வாறு குறிப்பிடுவதில் தவறில்லையே.

தமிழ் ஓவியா said...


பெண்களின் தர்மம்...


சாத்திரச் சம்பிரதாயங்களில் பெண்களின் தர்மம் என்ன என்று பார்த்தால் நிபந்தனையற்ற அடிமையாக அடங்கி ஒடுங்கி வாழ்பவளே மோட்சத்திற்குப் போவாள் என்று கூறப்பட்டுள்ளது. ----------பெரியார்(விடுதலை,5.4.1961)

தமிழ் ஓவியா said...


பெண்ணுரிமைக் கோட்பாடுகள்


திராவிடர் கழகத்தின் தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் (19.1.2013) மூன்று முக்கியப் பிரச்சினை களை முன்னிறுத்தித் தொடர் பயணம் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. அதில் ஒன்று பெண்ணுரிமைக் கோட்பாட்டை முன்னிறுத்துவதாகும்.

பெண்கள் மனித சமூகத்தின் சரி பகுதி - ஆண்களுக்கு நிகரானவர்கள் என்பதை மதங்கள் பெரும்பாலும் ஏற்றுக்கொள்வதில்லை.

இந்தியாவில் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதிகளாக இருந்தவர்கள்கூட - பெண்கள் என்றால் அவர்கள் அடுப்பங்கரைக்குள் முடங்கிக் கிடக்கவேண்டும் என்றே எதிர்பார்க்கிறார்கள்.

இப்படிப் பெண்களை ஒன்றுக்கும் உதவாதவர் களாக அடிமைப்படுத்திய காரணத்தால் மனதள விலும், உடல் அளவிலும் பலகீனமானவர்களாக ஆக்கப்பட்டு விட்டனர்.

கடும் போராட்டங்களின் காரணமாக பல வகையான உரிமைகள் கல்வி, வேலை வாய்ப்பில் கிட்டி வந்தாலும் ஆண்களின் ஒடுக்குமுறை ஓய்ந்த பாடில்லை.

அதன் தீய விளைவுதான் புதுடில்லியில் மருத் துவக் கல்லூரி மாணவி ஓடும் பேருந்தில் வன் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாகும்.

அதனைத் தொடர்ந்து இந்தியாவின் பல பகுதிகளிலும் பெண்கள் பாலியல் வன்புணர்ச்சிக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இந்தக் காலகட்டத்தில் தமிழ்நாட்டில்தான் அதிக எண்ணிக்கையில் பெண் கள் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர்.

ஆனாலும், உயர்ஜாதி ஊடகங்கள் அவற்றை இருட்டில் பதுக்கிவிட்டன; ஆம், இந்த ஊடகப் பூனைகள் கண்களை மூடிக்கொண்டு பூலோகம் இருண்டு போய்விட்டதாகக் கற்பனையுலகில் சஞ்சரித்துக் கொண்டுள்ளன.

பெண்களுக்கு இழைக்கப்படும் வன்கொடுமை யிலிருந்து அவர்கள் மீட்கப்படவேண்டும்; நிரந்தரப் பரிகாரம் காணப்படவேண்டும் என்ற கருத்து ஓங்கி ஒலிக்கப்பட்டுக் கொண்டு இருக்கிறது.

எதற்கும் முதற்படி என்பது விழிப்புணர்வும், தன்னம்பிக்கையும், தன் பலமும்தான். படித்த பெண் களாக இருந்தாலும் உடல் அளவில் ஆண் களுக்கு நிகராகப் பலம் பெற்றிருக்கவில்லை. அதற்குப் பல வகையான வரலாற்றுக் காரணங்கள், உளவியல் ரீதியான காரணங்கள் சொல்லப்படலாம்.

எவ்வளவு காலத்திற்கு இந்தச் சமாதானங்களைச் சொல்லிக் கொண்டு இருக்க முடியும்? திராவிடர் கழகம் தீர்மான வடிவமாகச் சொல்லும் தற்காப்புப் பயிற்சி - குறிப்பாக கராத்தே பயிற்சி கல்வி நிறு வனங்களில் தொடக்கப்பள்ளி முதலே கட்டாயமாக அளிக்கப்படவேண்டும். (பெரியார் கல்வி நிறுவனங் கள் இதனைச் செய்து வருகின்றன) துப்பாக்கி சுடும் பயிற்சி அளித்து உடனடியாக அதற்கான அனுமதி யையும் அளிக்கவேண்டும்.

நான்கு இடங்களில் பெண்களிடம் வாலாட்டிய கொடியவர்கள் பதிலடி கொடுக்கப்பட்டனர் என்ற செய்தி வந்தால் போதும், இந்த ஆண் சூராதி சூரர்கள் இருந்த இடம் தெரியாமல் ஓடி ஒளியக் கூடியவர்கள்தாம்.

மற்றொரு முக்கிய வாய்ப்பு என்பது சட்டமன்றங் களிலும், நாடாளுமன்றத்திலும் பெண்களுக்குரிய 33 சதவிகித இட ஒதுக்கீட்டுக்கான சட்டத்தை நிறை வேற்றி, பெண்கள் தங்களுக்கான உரிமைகளுக்காக அவர்களே குரல் கொடுக்கும் பொழுதுதான் அதற்கான விடிவு விரைவில் கிடைக்கும்.

மொத்த உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்கு பெண் உறுப்பினர்கள் என்பது குறைந்தபட்சமாகும். அந்த நிலை ஏற்பட்டால், நாடாளுமன்றமே கிடுகிடுக்காதா?

எருதின் புண் காக்கைக்குத் தெரியாது. பெண் களுக்கான உரிமைகள், குறைபாடுகள் எந்த அள வுக்கு ஆண்களால் உணரப்பட முடியும்? அப்படியே உணர்ந்தாலும் அவர்கள் பெண்களுக்காக முன்வந்து போராடுவார்கள் என்று எதிர்பார்க்க முடியாதே!

1996 ஆம் ஆண்டு முதல் இதற்கான மசோதா நிலுவையில் உள்ளதே. மாநிலங்களவையில் மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளது.

மக்களவையிலும் நிறைவேற்றப்படவேண்டும். அய்க்கிய முற்போக்குக் கூட்டணித் தலைவர் திருமதி சோனியா காந்தி அவர்கள் அந்தச் சட்டம் விரைவில் நிறைவேற்றப்படும் என்று உறுதி அளித்துள்ளார்.

தேர்தல் நேரம்... அந்தச் சட்டத்தைக் கொண்டு வந்தால், அனேகமாக எந்த அரசியல் கட்சியும் பெண்களுக்கு எதிராகச் செயல்படாது என்று எதிர்பார்க்கலாம்.

பெண்கள் அமைப்புகளும் இத்திசையில் குரல் கொடுப்பார்களாக! திராவிடர் கழகம் தொடர் பிரச்சாரத்தில் இதனை முன்னெடுத்துச் செல்ல உள்ளது - ஆதரவு தாரீர்! 23-1-2013

தமிழ் ஓவியா said...


இரிடியமா?


அய்யய்யோ, கோவில் கலசங்களில் இருப்பது இரிடி யம் அல்ல, அல்ல! என்று இந்து அறநிலையத் துறை அலறுகிறதே, ஏன்? அவசர அவசரமாக அந்தத் துறை அறிவிப்புகளை அளிக்கிறதே - ஏன்?

வேறு ஒன்றும் இல்லை. இரிடியம் என்பது மிகவும் விலை உயர்ந்த பொருள். அதைத் திருடிக் கொண்டு போய் விற்றால் கொள்ளைப் பணம் கிடைக்கும் என்று சிலர் வாயூறி நிற்கின்றனர்.

இதற்கு இப்பொழுது ஏற் பட்டுள்ள அவசியம் என்ன தெரியுமா? விருத்தாசலத் தையடுத்த மங்கலம்பேட்டை - எடைச்சித்தூரில் கேசவப் பெருமாள் கோவில் இருக் கிறது. அந்தக் கோவில் கல சத்தில் இரிடியம் இருக்கிறது என்று நினைத்து அதனைத் திருடுவதற்கு முயற்சி செய் ததாக சென்னையைச் சேர்ந்த கணவனும், மனைவி யும் கைது செய்யப்பட்டுள்ள னர்.

இதுபோன்ற முயற்சிகள் பல இடங்களிலும் மேற் கொள்ளப்படுகின்றன என் பதை அறிந்த நிலையில்தான், இந்து அறநிலையத் துறை, அதெல்லாம் இரிடியமும் கிடையாது - ஒரு மண்ணாங் கட்டியும் கிடையாது - கோவில் கலசத்தில் இருப்ப தெல்லாம் என்ன தெரியுமா? கம்பு, கேழ்வரகு, அரிசி, எள், கொள் போன்ற நவதானி யங்கள்தான் கலசத்தில் வைக்கப்படுகின்றன; மேலும், அந்தக் கலசம் என்பது வெறும் செம்பாலானது! என்று இந்து அறநிலையத் துறை அறிக்கை கொடுத் துள்ளது.

இதனை நினைத்தால் வயிறு குலுங்க சிரிப்புதான் வருகிறது. ஒரு கோவிலின் கலசத்தைக் காப்பாற்றிட, அந்தக் கோவிலில் குடி கொண்ட கடவுளுக்குத் துப்பு இல்லை - சக்தியில்லை என்பதை இதன்மூலம் இந்து அறநிலையத் துறை அதி காரபூர்வமாக அறிவிப்ப தாகத்தானே அர்த்தம்!

இன்னொன்று, அப்படித் திருட நினைப்பவர்களும் கடவுள் மறுப்பாளர்கள் - கடவுள் நம்பிக்கையற்றவர் களும் அல்லவே!

அப்படி இருந்தும் அவர் கள் திருடுகின்றனர் என் றால், அவர்களுக்கு ஒன்று நன்றாகவே தெரிந்திருக் கிறது - கடவுளாவது கத் தரிக்காயாவது - வெறும் பொம்மை என்பதை நூற் றுக்கு நூறு தெரிந்து வைத் துள்ளனரே!

குமுதம்: பெரிய மற்றும் சிறு கோவில்களில் அடிக்கடி கொள்ளை, கொலை போன்ற விரும்பத்தகாத செயல்கள் நடைபெறுகின்றன. இதற்கு என்ன காரணம்? மக் களுக்குக் கடவுளின்மீது உள்ள பக்தி போய்விட்டதா?

காஞ்சி ஜெயேந்திர சரஸ்வதி: கொலை, கொள்ளை செய்யத் துணிகிறவர்களில் அனேகம் பேர் பக்தர்களா கவே இருந்து ஆண்டவனி டத்தில் பிரார்த்தனை செய்து கொண்டு தப்பித்துக் கொள் வதற்கு வழி தேடுகிறார்கள். நாத்திகத்திற்கும், இப்படி எடுத்துப் போவதற்கும் சம் பந்தம் இருப்பதாக நான் நினைக்கவில்லை. பொது வாக பேராசை ஜாஸ்தியாகி விட்டது... பணமுடை அதி கரித்துள்ளது. (குமுதம், 12.9.1996)

நாம் சொல்லுவதைத் தானே சங்கராச்சாரியாரும் வேறு வார்த்தைகளில் சொல்லுகிறார், புரிகிறதோ!

- மயிலாடன் 23-1-2013

தமிழ் ஓவியா said...


ஷிண்டேமீது குதறுபவர்கள், இதற்கென்ன பதில் சொல்வார்கள்?


தீவிரவாதத் தாக்குதலில் ஆர்.எஸ்.எஸ். தொடர்பு

பட்டியலிட்டார் மத்திய உள்துறை செயலாளர்

புதுடில்லி, ஜன.23- சம்ஜாவ்தா எக்ஸ்பிரஸ், மெக்கா மசூதி மற்றும் அஜ்மீர் தர்கா குண்டு வெடிப்பு தீவிரவாத தாக் குதல்களில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்துக்குத் தொடர் புள்ளதாக அறிவித் துள்ள மத்திய அரசு அவற்றில் தொடர்பு டைய 10 பேர் பெயர் களையும் வெளியிட் டுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில், காங்கிரஸ் கட்சியின் சிந்தனை அமர்வு மாநாடு நடை பெற்றது. இந்த மாநாட் டில் பங்கேற்று பேசிய மத்திய உள்துறை அமைச் சர் சுஷில்குமார் ஷிண்டே, இந்துத் தீவிரவாதம் குறித்து வெளியிட்ட தக வலை வைத்து சர்ச்சையை ஏற்படுத்தினர்.

இந்தக் கருத்துக்கு காங்கிரஸ் கட்சி உடன டியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், உள் துறை அமைச்சர் ஷிண் டேவை பதவியிலிருந்து நீக்கவேண்டும் என்றும், பாரதீய ஜனதா வற் புறுத்தி வருகிறது. இந்த நிலையில் வெளியுறவுத் துறை அமைச்சர் சல் மான் குர்ஷித், ஷிண்டே வின் கருத்தை நேற்று ஆதரித்தார்.

ஆர்.எஸ்.எஸ். தொடர்புள்ள 10 பேர்

இதற்கிடையில், தீவி ரவாத தாக்குதல்களில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத் துக்குத் தொடர்பு இருப் பதற்கான ஆதாரங்கள் உள்ளதாக, மத்திய உள் துறை செயலாளர் ஆர்.கே.சிங் நேற்று மாலை அறிவித்தார். சம்ஜாவ்தா எக்ஸ்பிரஸ், மெக்கா மசூதி மற்றும் (அஜ்மீர்) தர்கா ஷரீப் பில் நடந்த தீவிரவாத குண்டு வெடிப்பு தாக்கு தல்களில், குறைந்தபட் சம் ஆர்.எஸ்.எஸ். இயக் கத்துடன் தொடர்பு டைய 10 பேர் ஈடுபட்ட தற்கான ஆதாரங்கள் உள்ளன என்று, அவர் தெரிவித்தார்.
ஆர்.எஸ்.எஸ். அமைப் பைச் சேர்ந்த சுனில் ஜோஷிக்கு (இவர் இப் போது உயிருடன் இல்லை) சம்ஜெதா ரயில் குண்டு வெடிப்பு மற்றும் அஜ் மீர் ஷெரீப் தர்கா குண்டுவெடிப்பில் தொடர்புள்ளது.

இவர் 1990 முதல் 2003 வரை மத்தியப் பிரதேச மாநிலத்தில் ஆர்.எஸ்.எஸ். இயக்கப் பணிகளை மேற்கொண்டார். சந்தீப் தாங்கே என்பவருக்கு (தலைமறைவாக உள்ளார்) சம்ஜெதா, மெக்கா மசூதி, அஜ்மீர் ஷெரீப் தர்கா குண்டு வெடிப்பில் தொடர்புள்ளது. இவர் இந்தூர் உள் ளிட்ட பகுதிகளில் ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரக ராகச் செயல்பட்டார். அதே போன்று லோகேஷ் சர்மா, சுவாமி அசீமானந்த், ராஜேந்தர் என்ற சமுந்தர், முகேஷ் வாசனி, தேவேந்தர் குப்தா, சந்திரசேகர், கமல் செகான், ராம்ஜி கல்சங்ரா ஆகியோருக்கு இந்த மூன்று குண்டு வெடிப்பு சம்பவங்களிலோ அல்லது ஏதாவ தொன்றிலோ தொடர்புள்ளது. இவர்களில் ராம்ஜியை தவிர மற்ற அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்'' என்றார் ஆர்.கே. சிங். ஜனார்த்தன் திவிவேதி

உள்நாட்டின் காவி தீவிரவாத சர்ச்சை ,தீவிரம் அடைந்து வரும் நிலையில், தீவிரவாதத்துக்கு ஜாதியோ மதமோ இல்லை என்ற தனது கருத்தில் காங்கிரஸ் கட்சி உறுதியாக இருந்து வருகிறது. இந்தத் தகவலை தெரிவித்த கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஜனார்த்தன் திவிவேதி, இந்த பிரச்சினையை நீண்ட காலத்திற்கு முன்பே காங்கிரஸ் கட்சி தெளிவுபடுத்தி இருப்பதாக தெரிவித்தார். தீவிரவாதத்திற்கு எந்த மதமும் இல்லை என்பதே காங்கிரசின் கருத்து என்று ஜனார்த்தன் திவிவேதி தெரிவித்தார்.

உதயம் said...

பாவப்பட்ட முஸ்லிம் பலி ஆடுகள்!!

http://meiyeluthu.blogspot.com/2013/01/blog-post.html