Search This Blog

19.1.13

பெரியார் ஆங்கிலேயருக்கு வக்காலத்து வாங்கினாரா? பார்ப்பனரைப் புரிந்து கொள்வீர்!


ஒவ்வொரு துளியும் விஷம்!

திருவாளர் சோவின் துக்ளக் - அ.இ.அ.தி.மு.க. ஆட்சி அதிகாரமே தன் சுட்டு விரலில் வைத்திருப்பது போல ஆண வத்துடன் திமிர் முறித்து நடைபோடுகிறது!

பொங்கலன்று சென்னையில் அவர் பேசிய பேச்சும், உடல் நளினங்கள் (Body Language) அத்தன்மையில் எகிறி இருந்ததைப் பார்வையாளர்கள் உணர்ந்திருந்தனர்; - பலரும் இந்த வகையில் நம்மிடம் கருத்துத் தெரிவித்தனர். (அவருக்கே உரித்தான கோமாளித்தனத்துக்குப் பஞ்சமில்லை, மேடையில் சட்டையைக் கழற்றி விகடக் கச்சேரியும் நடத்தியுள்ளார்)

16.1.2013 நாளிட்ட ஒரே ஒரு துக்ளக் இதழை எடுத்துக் கொள்ளலாம்.

1. ஆளும் கட்சி எடுத்துள்ள முடிவின் பின்னணி - எனும் தலைப்பில் ஒரு கட்டுரை. நடக்க இருக்கும் மக்களவைத் தேர்தலில் தமிழ்நாடு - புதுச்சேரியையும் சேர்ந்து அ.இ.அ.தி.மு.க. வெற்றி பெற்று, செல்வி ஜெயலலிதா இந்தியாவின் பிரதமர் ஆகப்   போகிறாராம்.  போகட்டும் போகட்டும்.

எந்தக் கட்சியுடனும் கூட்டணியின்றி அ.இ.அ.தி.மு.க. அறிவித்திருப்பது சரியில்லையாம். என்ன செய்ய வேண்டுமாம்?

கருத்துத்தானம் செய்கிறது துக்ளக். இடதுசாரிகள் மற்றும் சில சிறிய கட்சி களுக்கு அதிமுக அணியில் நிச்சயம் இடம் இருக்கும் என்றே பத்திரிகையாளர்கள் பலரும் இடது கட்சிகளைச் சேர்ந்தவர் களும் நினைக்கிறார்கள் - என்கிறது துக்ளக்

நேரிடையாகச் சொல்வது போல் இருக்கக் கூடாது; அதே நேரத்தில் இந்தக் கருத்தையும் சொல்ல வேண்டும் - அதற்காக யாரோ சிலர் நினைக்கிறார்கள் - என்பதை எவ்வளவு தளுக்காக தந்திரமாக சோ சொல்லுவதைக் கவனிக்க வேண்டும்.

இது திருவாளர் சோவின் பாணி. பிஜேபி அதிமுக பற்றி சில நேரங்களில் குறை சொல்வதுபோல எழுதும்போதுகூட, அக் கட்சி எப்படி நடந்து கொண்டால் நல்லது என்கிற உள்ளடக்கம் கொண்ட வாசகங் களும் இடம் பெற்றிருக்கும் - அவ்வளவு அக்கறை துள்ளிக் குதிக்கும்; ஆசாபாசம் அத்தகையது!

2. கேள்வி: கர்நாடக துணை முதல்வர் ஈஸ்வரப்பா வீட்டிலிருந்து பணத்தை எண்ணும் இயந்திரம் கைப்பற்றப்பட்டுள்ளது பற்றி...?

பதில்: அவர் வீட்டிலிருந்து கைப்பற்றப் பட்ட மற்ற  விஷயங்கள்தான் பெரும் மதிப்புடையனவே தவிர, இந்த மிஷின் விவகாரம் பெரிதல்ல. இது சாதாரணமாகக் கடைகளிலேயே கிடைக்கிற விஷயம். 2000, 3000 ரூபாய்க்கு இந்த மாதிரி மிஷின்கள் கிடைக்கின்றன. ஓரளவு சுமாராகப் பணத்தைக் கையாளும் நிலையில் இருப்பவர்கள்கூட, இவற்றை வாங்கி வைத்துக் கொண்டு பணத்தை எண்ணுகிறார்கள். ஆகையால், இது ஏதோ விபரீதமான விஷயம் என்பது போல நினைத்துக் கொண்டு, பணம் எண்ணுகிற மிஷன் கைப்பற்றப்பட்டது - என்பதை ஒரு பரபரப்புச் செய்தியாகப் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. - இப்படி ஒரு துக்ளக்கில் பதில்!

எப்படிப்பட்ட சாமர்த்தியமான பதில்! சம்பந்தப்பட்டவர் பிஜேபியைப் சேர்ந்தவர், - ஒரு மாநிலத்தின் துணை அமைச்சர் என்று வரும் பொழுது எவ்வளவு வக்கணையாக எழுதுகிறார்.

பணத்தை எண்ணும் அளவுக்கு மெஷின் வைத்திருந்தார் _ ஒரு துணை முதல் அமைச்சர் என்றால், அது சாதாரணமா? இந்த மெஷின் வீட்டுக்கு வீடு இருக்கிறது என்கிறார். (சோகூட வாங்கி வைத்துள்ளாரா என்று தெரியவில்லை)

அமைச்சராக இருக்கக் கூடியவருக்கு மாதச் சம்பளம் மட்டும் தானே இருக்க முடியும்; மெஷின் வைத்து எண்ணும் அளவுக்கு வருமானம் இருக்க முடியாதே - கூடாதே! _ படிப்பவர்களின் காதில் பூ சுற்றப் பார்க்கிறார். இந்தப் பார்ப்பனர்.

வருமான வரித்துறை - வேறு ஒரு கட்சிக்காரரின் வீட்டில் சோதனை செய்தபோது, பணம் எண்ணும் மெஷினைப் பறி முதல் செய்தால், இந்தக் கண்ணோட்டத்தோடு எழுதுவாரா சோ? சோவின் (வி)வாத முறை எப்படிப்பட்டது என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டே!)

3. கேள்வி: சேது சமுத்திரத் திட்டம் நிறைவேறினால், தமிழகத்தின் வாணிபம் செழிக்கும். வெளிநாட்டுத் தொடர்புகள் அதிகரிக்கும். அதன் மூலம் தமிழகப் பொருளாதாரம் வளரும். இந்தத் திட்டத்தை நிறைவேற்ற ப. சிதம்பரம்  முயற்சிக்க வேண்டும். அவரது பிறந்த நாள் பரிசாக இந்த வேலையை அவருக்கு நான் அளிக் கிறேன் - என்று கருணாநிதி பேசியுள் ளாரே..?

பதில்: சேது சமுத்திரத் திட்டம் பொருளாதார ரீதியாக எந்த நன்மையையும் தரப் போவதில்லை. அதை முடிப்பது தண்டச் செலவு. ஏற்கெனவே பணம் வீணாகியிருக்கிறது. இன்னமும் அங்கே கொண்டு போய் பணத்தைக் கொட்டினால்,  மேலும் பணம்தான் வீணாகுமே தவிர, அதனால் தமிழகத்திற்கு எந்தப் பெரிய நன்மையும் கிடைக்காது என்பதெல்லாம் பொருளாதார நிபுணர்களால் விளக்கிச் சொல்லப்பட்டிருக்கின்றன. இதைத் தவிர, ஒரு புராதனச் சின்னத்தை, ஹிந்துக்கள் புனிதமாகக் கருதுகிற இடத்தை, வேண்டு மென்றே சிதைக்க வேண்டும் என்ற கெட்ட நோக்கமும் இதில் இருக்கிறது என்ற சந்தேகத்திற்கும் இந்தத் திட்டம் இட மளித்து விட்டது. இந்தக்  காரணங் களினால் மத்திய அரசேகூட, இதை நிறை வேற்றுவதில் ஆர்வம் காட்டாமல்தான் இருக்கிறது.

ஆகையால், இதை மத்திய அரசு நிறை வேற்றும் என்ற நம்பிக்கையில், கலைஞர் நீங்கள் குறிப்பிட்டுள்ளபடி பேசவில்லை. எதிர்காலத்தில் ஒரு வேளை  காங்கி ரஸுடன் உறவு வைத்துக் கொள்ள முடியாமல் போனால், அப்போது அதற்குச் சில காரணங்களைக் காட்ட வேண்டும். இலங்கை தமிழர் பிரச்சினையை ஒரு காரணமாகக் காட்டலாம்; அது அவ் வளவாக எடுபடாது. ஏனென்றால், அதில் கலைஞரே பத்துப் பதினைந்து நிலைகளை எடுத்திருக்கிறார். அத்துடன்கூட சேது சமுத்திரத்தையும் ஒரு காரணமாகக் காட்டினால், தான் காங்கிரஸ் கூட்டணியைக் கை விட்டதற்குக் கொள்கைதான் காரணமே தவிர, குடும்பப் பிரச்சினை காரண மல்ல என்று வாதிடலாம் என்பதுதான் அவருடைய திட்டமாக இருக்கும். அதனால்தான் நீங்கள் குறிப்பிட்ட மாதிரி பேசியிருக்கிறார். (துக்ளக் 16.1.2013).

150 ஆண்டுகளுக்கும் மேலாகப் பேசப்படும் திட்டம் இது. இந்தத் திட்டத்தினால் ஏற்படும் நலன்கள், வளங்கள் குறித்து ஏதோ கலைஞர்  அவர்கள் கற்பனையாகச் சொல்வதுபோல் எழுதுவது திருவாளர் சோவின் வழக்க மான நரித்தன வார்த்தைகள்; பொருளாதார நிபுணர்கள், பல்வேறு ஆய்வுக்குழுக்கள் தான் அறிக்கைகளாகக் கொடுத்துள்ளன.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் 9 குழுக்கள் அதன்பின் இந்திய ஆட்சியில் மூன்று குழுக்கள், நிபுணர்களைக் கொண்ட 12 குழுக்கள் இந்தத் திட்டத்தின் அரு மையை - நலனை விரிவாக எடுத்துக் கூறி யுள்ளன.

1) மேற்குக் கடற்கரையிலிருந்து கிழக்குக் கடற்கரைக்கு கப்பல்களின் பயண தூரம் 480 முதல் 840 கிலோ மீட்டர்  குறையும்.

2) இலங்கையைச் சுற்றிச் செல்லாமல் கப்பல்கள் குறுக்கு வழியில் வருவதால் 12 மணி நேரம் முதல் 20 மணி நேரம் வரை கப்பல் பயண நேரம் குறையும். ஒரு மணி நேர கப்பல் பயணத்திற்கு  ஆகும் செலவு தோராயமாக ரூ.50,000/-

3) சேது சமுத்திரத் திட்டத்தில் போடப் படும் முதலுக்கு இத்திட்டம் முடிந்த முதலாண்டில் நாலரை சதவிகித வருமானம் கிடைக்கும் 11ஆவது ஆண்டில் இந்த வருவாய் 7 சதவிகிதமாகவும், 15ஆவது ஆண்டில் இது எட்டரை சதவிகிதமாகவும் உயரும் 30 அடி ஆழ கால்வாய் 16ஆம் ஆண்டிலிருந்தும்  31 அடி  ஆழ கால்வாய் 17ஆவது ஆண்டிலிருந்தும் 35 அடி ஆழ கால்வாய் 24 ஆவது ஆண்டிலிருந்தும் லாபத்தில் இயங்கும்.

4) மிகக் குறைந்த செலவில் சேது கால்வாயைப் பராமரிக்க முடியும். கால்வாய் துவக்கப்பட்ட ஆண்டில் ஆண்டிற்கு ரூ.13.80 கோடி வருமானமும்,  ரூ.4.30 கோடி ரூபாய் பராமரிப்பு செலவும் ஏற்படும்.

5) சேதுக் கால்வாயில் செல்லும் கப்பல் களின் மூலம் கிடைக்கும் வருமானத்தில் 80 சதவிகிதம் அன்னியச் செலாவணி கிடைக்கும்.
6) இக்கால்வாய் வெட்டப்பட்டு பயனுக்கு வருமானால் தூத்துக்குடி துறைமுகம் பெரிய வளர்ச்சி அடையும்.

7) தூத்துக்குடி துறைமுகமும் சேதுக் கால்வாயும் சேர்ந்து இந்திய நாட்டிற்கும் குறிப்பாக தென் மாவட்டங்களிலிருந்து மிகப் பெரிய பொருளாதார வளர்ச்சியை உருவாக்கும்.

8) ஏற்றுமதி, இறக்குமதி பெருகும், வாணிபமும் வளரும். இப்பகுதியில் புதிய தொழில்கள் தோன்றும். மக்களின் வாழ்க்கைத் தரம் உயரும்.

9) பயணிகள் - கப்பல்களுக்கும், வணிகக் கப்பல்களுக்கும் பாதுகாப்பான கால்வாயாக சேதுக் கால்வாய் விளங்கும்.

10) புயல் அபாயமுள்ள இலங்கைக் கடற்கரையைச் சுற்றிக் கொண்டு செல்வது கப்பல்களுக்கு ஆபத்தை விளைவித்துக் கொண்டிருக்கிறது. இது தவிர்க்கப்படும்.

11) சேதுக் கால்வாயின் இருபுறமும் உள்ள துறைமுகங்கள் இதன் மூலம் வளர்ச்சி அடையும்  எண்ணூர். பாம்பன், வலிநோக்கம், குளச்சல், தூத்துக்குடி, ராமேசுவரம், நாகப்பட்டினம், கன்னியாகுமரி, புன்னைக் காயல், வேம்பார், திருக்கடையூர், புதுச்சேரி, சென்னை ஆகிய தமிழ் நாட்டுத் துறை முகங்கள் மிகுந்த வளர்ச்சியை அடையும்.

12) இந்தியாவில் தமிழ்நாடு, இலங்கையில் தமிழர் வாழும் ஈழப் பகுதியும் அனைத் துலகச் சுற்றுலாப் பயணிகளை அதிகமாகக் கவரும் பகுதிகளாக மாறும்.

13) நிலக்கரி, உப்பு, சிமெண்ட் போன்ற பெருமளவில் கொண்டு செல்லப்படும் பொருள்கள் கடல் மார்க்கமாக  இக்கால் வாய் மூலம் குறைந்த செலவில் கொண்டு செல்ல வழியேற்படும். தற்போது ஆண்டு தோறும் கிழக்குக் கடற்கரையோரமாக 25 லட்சம் டன் நிலக்கரியும் 30 லட்சம் டன் உப்பும், 20 லட்சம் டன் பிற  சரக்குகளும் கொண்டு செல்லப்படுகின்றன.

14) இதன் மூலம் தென் மாவட்டக் கடற்கரைப் பகுதிகள் பொருளாதார ரீதியில் வளம் பெறும்.

15) கரையோர வர்த்தகம் பெருகி, 2000 முதல் 3000 டன் எடையுள்ள கப்பல்களின் போக்குவரத்து அதிகமாகும்.

16) மீன்பிடிக்கும் தோணிகள், கப்பல்கள் அதிக  அளவில் தொழில் செய்ய பயன ளிக்கும்.

இவ்வளவு அருமையான திட்டம் தொடர்ந்து கிடப்பில் போடப்படுகிறது என்றால் இதற்குக் காரணம் என்ன? சிந்திக்க வேண்டிய நேரம் இது!
இப்படியெல்லாம் தெரிவித்திருப்பது நிச்சயமாக மானமிகு கலைஞர் அவர்களோ; மானமிகு கி.வீரமணி அவர்களோ அல்ல.

இந்த நிபுணர்களைவிட மே(ல்)தாவியா திருவாளர் சோ?

பாரதீய ஜனதாவைத் தோளில் தூக்கி வைத்துக் கொண்டு கூத்தாடுகிறாரே திருவாளர் சோ, அந்த ஆட்சிக் காலத்தில்தானே இத்திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்தத் திட்டத்திற்கான வரைபடம் உள்படத் தயாரித்துக்  கொடுத்ததும் வாஜ்பேயி  பிரதமராக இருந்த ஆட்சிக் காலத்தில்தானே?

அதிமுகவின் இரண்டு தேர்தல் அறிக் கையிலும் இத்திட்டத்தின் அவசியத்தை  வலியுறுத்தவில்லையா - செல்வி ஜெயலலிதா?

அப்பொழுதெல்லாம் கனவில் வராத ராமபிரான் இப்பொழுதுதான் சோ கூட்டத் தின் முன் தோன்றி என்னைக் காப்பாற் றுங்கள், காப்பாற்றுங்கள்! என்று அப()யக் குரல் கொடுத்தாரா?

ஓர் அறிவியல் திட்டத்தில் புராணக் குப்பையைக் கொண்டு வந்து போட்டுக் குறுக்குச் சால் ஓட்டுபவர்கள், வேறு எந்தப் பிரச்சினையிலும்கூட கருத்துகள் கூறத் தகுதி படைத்தவர்கள்தானா என்பது அறிவுக்கு விருந்தளிக்கும் வினாவே!

4. கேள்வி: வெறும் இரண்டு, மூன்று மணி நேர மின்வெட்டிற்கே தி.மு.க.வை மக்கள் தோல்வியுறச் செய்தார்களே! தற்போது 18,19 மணி நேர மின்வெட்டு நிலவும் போது, அ.தி.மு.க.வை மக்கள் எப்படி தண் டிக்கப் போகிறார்களோ தெரியவில்லையே...? என்று மு.க. ஸ்டாலின் பேசியுள்ளாரே?

பதில்: ஒருவன் மற்றொருவனைக் கத்தியால் குத்தி  விடுகிறான். அப்படி சீரியஸாகக் காயப்பட்ட மனிதன். ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படுகிறான். ஆஸ்பத்திரியில் டாக்டர், அவனுக்கு ரண சிகிச்சை செய்கிறார். அதற்காக கத்தியை பல இடங்களில் அவர் பயன்படுத்த வேண்டி இருக்கிறது. அப்பொழுது அந்த நபரைக் கத்தியால் குத்தியவன் அநியாயம், நான் ஒரு முறை குத்தியதற்கே என்னைக் கைது செய்து விட்டார்கள்; வழக்குப் போட்டிருக்கிறார்கள். நான் பெரிய குற்றம் செய்துவிட்டதாகக் கூறுகிறார்கள். அந்த டாக்டரோ பலமுறை கத்தியால் அவனைக் குத்துகிறார். குத்தி விட்டு ஊசி கொண்டு தையல் வேறு போடுகிறார். பிறகு மீண்டும் குத்துகிறார், அறுக்கிறார். என்னென்னவோ செய்கிறார். அதெல்லாம் பரவாயில்லை. நான் குத்தியதுதான் தவறா?  இதை யாரும் ஒப்புக் கொள்ள மாட்டார்கள்  என்று கூறினால் எப்படி இருக்குமோ, அப்படி இருக்கிறது ஸ்டாலினுடைய பேச்சு.
இப்படி ஒரு கேள்வி பதில் துக்ளக்கில் (16.1.2013 பக்கம் 31)

கேட்ட கேள்விக்கு நேரிடையாகப் பதில் உண்டா? பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால் கொட்டைப் பாக்கு கிலோ இன்ன விலை என்று கூறுவதுதான் அக்ரகார அறிவாளி சோவின் பாணி.

நான் ஆட்சிக்கு வந்தால் மூன்று மாதத்தில் மின்வெட்டை வெட்டி வீழ்த்திடுவேன் என்ற வீராப்புப்பற்றி சோவின் பேனா வாய் திறக்காதது ஏன்?
திமுக ஆட்சிக் காலத்தில் மேற்கொள் ளப்பட்ட மின் திட்டங்களை விரைந்து முடிக்காததற்குக் காரணம் என்ன?

மின்சாரத்தில்கூட திமுக மின்சாரம் என்று தரம் பிரித்து விட்டனரா?
ஆசை வெட்கம் அறியாது என்பார் கள்; அக்கிரகார அம்பிகளுக்கோ இனப் பற்று என்று வந்து விட்டால் கண் மண் தெரியாமல் அம்மணமாக ஓடக் கூடத் தயா ராக இருக்கக் கூடியவர்கள்தான் போலும்!

அறுவை சிகிச்சை செய்யக் கூடிய மருத்துவர் சிலர் அறுவை சிகிச்சை செய் யும் கத்தியையே உள்ளே வைத்து விட்டு மேலே தையல் போட்டு விடுகிறார்களே _- அப்படிப்பட்டவர்களும் டாக்டர்கள் தானே! திருவாளர் சோ கூறும்  டாக்டர் இந்தப் பட்டியலைச் சேர்ந்தவராக இருக் கிறாரே என்பதுதான் பிரச்சனையே! (சோவுக்குத் தான் எழுதத் தெரியுமா? இடக்கு முடக்காக மற்றவர்களாலும் எழுத முடியும் என்பதை முதலில் சோ அய்யர் உணரட்டும்!)
ஒரே ஒரு துக்ளக் இதழில்  குடிநீரில் நஞ்சு கலப்பதுபோல தமிழர்களுக்கு எதிராக சோ கூட்டம் எழுத்துக்களைக் கொட்டித் தீர்க்கும் என்பதைத் தமிழர்கள் அறிய வேண்டாமா?

பாழாய்ப் போன அரசியலுக்காக பாஷாணத்தைப் பாயசம் என்று பருகலாமா? இந்த 2013லும் பார்ப்பனர்கள் எத்தகைய பயங்கரவாதிகள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டாமா?

துக்ளக்கில் சொட்டும் ஒவ்வொரு துளியும் ஆரியத்திற்கு ஆரிரரோ! திராவிடத்திற்கோ தீங்கானது என்பது நினைவிருக்கட்டும்! நினைவிருக்கட்டும்!!

நீஷப்பாஷை!

சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞர் ஒருவர் தமிழில் வாதிட்டாராம். துக்ளக் குடுமிக்கு எரிச்சல் வியாதி வந்து விட்டது. இந்தத் தமிழ் உளறலுக்கு மருந்து தேவை என்று ஒரு துர்வாசர் கிளம்பி விட்டார். தமிழ்நாட்டில் உள்ள ஒரு நீதிமன்றத்தில் தமிழில் வழக்காடுவது என்பது பஞ்சமா பாதகமா? ஏன் தாண்டிக் குதிக்கிறது துக்ளக்?

தமிழ் என்றால் அப்படி ஒரு வெறுப்பு! நீஷப்பாஷை என்று தானே அவாளின் பெரிய வாள் கருதுகிறார்.

தமிழ்நாட்டை விட்டுத் தள்ளுங்கள். வடமாநிலத்தில் உயர்நீதிமன்றத்தில் தாய் மொழியில் வாதிடும் நிலை இருக்கத்தானே செய்கிறது - அதுபற்றியெல்லாம் எழுதுவதில்லையே -_ ஏன்?

இப்படி எழுதுகிற இந்தக் கூட்டத்துக்கு அவாளின் தாய் மொழியான சமஸ்கிருதத்தின்மீது பாசம் இல்லையா _ பற்று இல்லையா? ஏன் வெறி இல்லையா?

கோயில்களில் ஏன் சமஸ்கிருதம்? என்று கேட்டுப் பாருங்கள். 

தாண்டிதோண்டியில் குதிப்பார்கள். செத்த மொழிமீதே அவ்வளவு வெறி என்றால் உயிரோட்டம் உள்ள தமிழ்மீது தமிழர்கள்பற்றுக் கொள்ளக் கூடாதா? செத்துச் சுண்ணாம் பாகிப் போன சமஸ்கிருதத்துக்கு என்றே அவாள் ஆட்சிக் காலத்தில் ஓர் ஆண்டை அறிவித்து கோடிக்கணக்கில் மக்கள் பணத்தை வாரி இறைக்கவில்லையா?
           ******************************************

ஆங்கிலேயருக்குவக்காலத்தா? 

வழக்கமாக ஒரு பல்லவியைப் ப டுவது பார்ப்பனர்களின் வழக்கம்! ஆங்கிலேயருக்கு வக்காலத்து வாங்கிய ஈ.வெ.ரா. என்று ஒரு சுப்பு எழுதுகிறது (துக்ளக் 16.1.2013 பக்கம் 9)

எங்கே வாங்கினார்? எப்பொழுது வாங்கினார்? எப்படி வாங்கினார்?
என்ற கேள்விகளையெல்லாம் கேட்கக் கூடாது. அக்னியைக் கையில் வைத்துக் கொண்டல்லவா எழுதுகின்றனர்? எதிர்க்கேள்வி கேட்கலாமா? 

இன்றைய ஆட்சி ஏன் ஒழிய வேண்டும்? என்று குடிஅரசில் (29.12.1933) தலையங்கம் தீட்டியதற்காக வெள்ளையர் ஆட்சியால் 124ஆ அரச வெறுப்புக் குற்றத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர் தந்தை பெரியார்; வழக்கின் முடிவில் ரூ.300 அபராதமும் 9 மாதத் தண்டனையும் அளிக்கப்பட்டார் பெரியார் கோவை மாவட்ட ஆட்சியர் (வெள்ளைக்காரர்) ஜீ. டபுள்யூ வெல்ஸ் அய்.சி.எஸ். என்பவரால் என்ற வரலாறு எல்லாம் தெரியாமல் பார்ப்பனக் கொழுப்பெடுத்து எழுதலாமா? 

தந்தை பெரியாரின் தங்கை எஸ்.ஆர். கண்ணம்மாள் அவர்களும் தண்டனைக்கு உள்ளானாரே!

 அதே நேரத்தில் அவாளின் ஆச்சாரியார் (ராஜாஜி) 1942இல் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின்போது அண்டர் கிரவுண்ட் ஆனாரே  அதையெல்லாம் வசதியாக மறந்து விடுவார்கள். மறையவர்கள் அல்லவா!

இந்தியரில் முதல் நீதிபதி என்று ஏற்றிப் போற்றுகின்றனரே, அந்த ஜஸ்டிஸ் முத்துசாமி அய்யர் சென்னை பட்டதாரிகளுக்குக் கூறிய அறிவுரையையும் அய்யன்மார்களே கேண்மின் கேண்மின்!!

நமது மாட்சிமை மிக்க அரசுக்கும், பிரிட்டானியா நாட்டிற்கும் ஆழ்ந்த விசுவாசம் காட்டும் வகையில் உங்கள் எண்ணமும், செயலும் அமையட்டும். எக்காலத்தும் போதிய அளவில் திரும்பச் செலுத்த முடியாத வகையில் நாம் அவர்களுக்குக் கடமைப்பட்டிருக்கிறோம். ஆரிய இனத்தில் இரு பிரிவுகளும் கடவுளின் விதிப்படி இந்தியாவில் ஒன்று சேர்ந்திருக்கின்றன. அதனுடைய பெருங் கடமையை இந்தியாவிற்கு ஆற்ற பிரிட்டானிய ஆட்சிக்குத் திறமை இருக்கிறது என்று துக்ளக்கின் முன்னோரான அக்ரகாரத்து நீதிபதி முத்துசாமி அய்யர் பேசினாரா இல்லையா? (Politics and Nationalist Awakening in South India) தமிழில் மனித உரிமைப் போரில் பெரியார் பேணிய அடையாளம் பக்கம் 44 -_ பேராசிரியர் கு.வெ.கி. ஆசான்).

ஆரியர்களும் வெள்ளைக்காரர்களும் ஓரினத்தவர்களாம்; கடவுளின் விதிப்படி அவர்கள் ஒன்று சேர்ந்திருக்கிறார்களாம். இந்த யோக்கிய சிகாமணிகள் தான் தியாகத் திருவுருவமாம் தந்தை பெரியார்மீது சேற்றைவாரி இறைக்கத் துடிக்கிறார்கள்! வெட்கக் கேடு!

பார்ப்பனரைப் புரிந்து கொள்வீர்!

 ------------------- மின்சாரம் அவர்கள் 19-1-2013 “விடுதலை” ஞாயிறுமலரில் எழுதிய கட்டுரை

21 comments:

தமிழ் ஓவியா said...


கமலகாசன் கவிதை

(1996-ல் சேலம் மாவட்டத்தை சேர்ந்த தலித் சிறுமி தனம், ஆசிரியர் அடித்ததில் ஒரு கண் இழந்தார்.

அந்த சிறுமியின் கண் சிகிச்சைக்கு 1996-ல் ரூ 10000/- நிதி உதவி அளித்து, அந்த சிறுமி யின் அவலநிலையை உணர்த்தும், கமல்ஹாசன் எழுதிய கவிதை இது.)

தமிழ் மகளுக்கு,
தேடித் தேடி மருத்துவம் செய்தும்
மாறாது இந்த சாதி சுரம்

கேடிகள் ஆயிரம் கூட்டணி சேர்ந்து
கேட்டில் வந்து முடிந்தது காண் !

காவியும் நாமமும் குடுமியும் கோசமும்
கண்டு மயங்கும் மந்தைகளாய்

ஆகிப் போனதில் வந்த விளைவுகள்
சொல்லி புரியும் வேளையிலே

ஆரிய வேடத்தை திராவிடன் பூண்டதில்
காரியம் கெட்டு போனது காண் !

ஓசையும் பூசையும் பார்ப்பனன் சொல்படி
ஆயிரம் ஆண்டுகள் செய்ததனால்
ஆகமம் பழகிப் போனது காண் !

அன்றொரு பெரியவர் சாடிய சாடலில்
காவியின் வண்ணம் சற்றே மாறி
கருப்பாய் சிவப்பாய் திரியுது காண் !

சாதியும் சாமியும் சாராயம் போல்
சந்தை கடையில் விற்குது காண் !

சர்கார் எத்தனை மாறி வந்தாலும்
மாறா வர்ணம் நாலும் காண் !

புத்தன் சொன்ன தம்மிம பதத்தில்
பாதி மட்டுமே பிரபலம் காண்!

தமிழ் ஓவியா said...


கர்நாடக அணையை உடைத்தவன்


செய்தி: தமிழகத்துக்கு காவிரியிலிருந்து ஒரு சொட்டு தண்ணீர்கூட கர்நாடகம் கொடுக்க இயலாது!

சிந்தனை: காவிரி நீர் இரு மாநிலத்துக்கும் பொதுவானது. கர்நாடகம் காவிரி நீரைத் தர மறுத்தபோது, சோழ மன்னன் படையெடுத்துச் சென்று கர்நாடக அணையை உடைத்துவிட்டுத் திரும்பினான். மதுரையை ஆண்ட இராணி மங்கம்மா காலத்திலும் காவிரி நீரைத் திறந்துவிட மறுத்தபோது, மங்கம்மா படையெடுத்துச் சென்று, கர்நாடக அணையை உடைத்து விட்டுத் திரும்பினாள் என்பது வரலாறு.

(முகம் சனவரி 2013)

தமிழ் ஓவியா said...


அண்ணாவின் இனப்பற்று


ஒரு அல்லாடி கிருஷ்ணசாமியைவிட ஒரு வி.எல். எத்திராஜ் சிறந்த வழக்கறிஞர் என்று கூறுகிறது என் இனப்பற்று.

ஒரு அரியக்குடி அய்யங்காரைவிட ஒரு நாயனாப் பிள்ளை சிறந்த பாடகர் என்று கூறுகிறது எனது இனப்பற்று.

ஒரு ரெங்காச்சாரியைவிட ஒரு லட்சுமணசாமி சிறந்த டாக்டர் என்று கூறுகிறது எனது இனப்பற்று;

ஒரு சத்தியமூர்த்தி அய்யரைவிட ஒரு ஆர்.கே. ஷண்முகம் சிறந்த பேச்சாளர் என்று கூறுகிறது என் இனப்பற்று.

ஒருபாரதியாரைவிட ஒரு கனகசுப்புரத்தினம் சிறந்த கவிஞர் என்கிறது என் இனப்பற்று (விடுதலை 15.10.1958) என்று சொன்னார் அறிஞர் அண்ணா என்பதை ஆரியர் மறக்க வேண்டாம். (பார்ப்பனர் புரட்டுக்குப் பதிலடி! நூலில் 230ஆம் பக்கத்தில் இருப்பது)

க. பழநிசாமி, திண்டுக்கல்

தமிழ் ஓவியா said...


கிளம்பிட்டாங்கய்யா... கிளம்பிட்டாங்க!


திருச்சி மத்தியப் பேருந்து நிலையம். ஒரே கூட்டமாக இருந்தது. தலையா, கடல் அலையா என நானே வசனம் பேசிக் கொண்டேன். என்ன ஆச்சு இவர்களுக்கு? ஏன் ஒரே இடத்தில் கூடியிருக்கிறார்கள்...? கோக-கோலா, பெப்சியில் நஞ்சிருப்பதை எதிர்த்து நெஞ்சுயர்த்தும் போராட்டமா? அல்லது இட ஒதுக்கீட்டை மறு பேச்சின்றி அமுல்படுத்தக்கோரும் போராட்டமா? அல்லது வேறு என்னதான் போராட்டம்? எதற்குத்தான் கூடியுள்ளார்கள்? சதா கேள்வியே கேட்டுக் கொண்டிராமல், சற்று அருகில் போய் பார்த்தால்தான் என்ன? என என் சிந்தனை என்னை உசுப் பேற்றியது. நானும் என் சிந்தனைக்குக் கட்டுப்பட்டு (நாம் தாம் சாமிக்குக் கட்டுப் படாத அடங்காப்பிடாரிகளாச்சே!) அருகில் சென்றேன். காவி வேட்டியும், காவி சேலையும், காவி பெர்முடாசுமாக (இளைஞர் சாமிகள்) குழுமியிருந்தனர். என்னங்க எல்லோரும் எங்க போறீங்க? என்று சாதாரணமாகக் கேட்டேன். நாம பாட்டுக்கு நக்கலா கேட்டு, அது சாமிக் குத்தம் ஆயிடுச்சுண்ணா? அதற்கு ஒரு பாவி சொன்னார். (குறிப்பு : பாவி என்பதை சாமி என்று திருத்தி வாசிக்கவும். தவறுக்கு வருந்தவில்லை) நாங்கள் வேளாங்கண்ணி போறோம், அடுத்த வாரம் கொடியேற்றம் நடக்குது என்றார். அதுதான் போன வாரமே கொடி ஏற்றியாச்சே, இப்ப என்ன வாம்? என்றேன். யோவ்! போன வாரம் ஏத்தினது ஆகஸ்டு --15 சுதந்திரக் கொடி, இப்ப ஏத்தப் போறது வேளாங்கண்ணி மாதா கொடி என்றார்.

தமிழ் ஓவியா said...


அப்ப வேளாங் கண்ணி விழாவிற்குத்தான் கூட்டம் கூட்டமா நிக்கிறாங்களா? நான் கூட ஏதோ போராட்டம் அது இதுன்னு தப்பா நினைக்சுட்டேன். என் நினைப்புக்கும், இவுங்கப் பொழப்புக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லையோ சரி... சரி... பேருந்துப் பிடித்து ஊர் போற வேலையைப் பார்ப்போம் என்ற முடிவுக்கு வந்தேன். அப்பொழுது ஒரு நண்பர் அருகில் வந்து, அண்ணே! இங்க என்ன ஒரே கூட்டமா இருக்கு எனக் கேட்டார். கிளம்பிட் டாங்கய்யா... கிளம்பிட்டாங்க... என்றேன். ஏங்க இப்படிக் கோபப்படுறீங்க? என்றார். நான் உங்களைச் சொல்லலை, இவுங்க எல் லோரும் வேளாங்கண்ணி போறாங்கண்ணு சொல்ல வந்தேன். அப்படியாண்ணே! நீங்களும் போறீங்களா எனக் கேட்டார். சரியாப் போச்சுப்போ! இனி இங்க நிற்கக் கூடாது, உடனே பேருந்தில் இடம் பிடித்தாக வேண்டும். சரி இவ்வளவுக் கூட்டமா இருக்கே, பேருந்தில் உட்கார இடம் கிடைக்காதோ என அருகில் இருந்த வரைக் கேட்டேன். அவனவன் வேளாங் கண்ணிக்குத் தொங்கிட்டுப் போறான், இவுங்களுக்கு இடம் வேணூமாமில்ல இடம் என நக்கல் பேச்சு பேசினார். பக்தர்கள் அந்தரத்தில் தொங்கிட்டுப் போகலாம். அவர்களுக்கு ஒரு விபத்து என்றால் பரலோகத்திலிருந்து வந்து இயேசு காப்பாற்றுவார். நமக்கு யாரு இருக்கா? எனவே பொறுமை காத்து நின்றேன்.

காட்சி - 2

அப்பாடா! ஒரு வழியா பேருந்தில் ஏறி இடம் பிடிச்சாச்சு. நீண்ட நேரம் பேருந்து நிலையத்தில் நின்றதால் கால் வலித்தது. பயணச்சீட்டை வாங்கிவிட்டு கொஞ்சம் துங்கலாம் என்று நினைத்தேன். (பயணச் சீட்டு வாங்காமல் துங்கினால் நடத்துனர் ஏதாவது நினைப்பாரல்லவா?) பேருந்தில் ஒரே கூட்டம். சத்தமும் அதிகமாக இருந் தது. என் அருகிலும், சுற்றிலும் ஒரே பாவிகள் கூட்டம். பேருந்தில் அய்ந்து, ஆறு பேர்தான் அப்பாவிகள் இருப்போம். நல்ல களைப்பாக இருந்ததால் எப்போது துங்கினேன் என்று தெரியவில்லை. திடீரென கண் விழித்துப் பார்த்த போது, துவாக்குடி வந்திருந்தது. எனக்கோ கோபம் வந்துவிட்டது. காலை 8 மணிக்குத் திருச்சி யில் புறப்பட்ட பேருந்து 10 மணிக்குத்தான் துவாக்குடி வந்துள்ளது. நானோ நாகப் பட்டினம் போயாக வேண்டும், நிறைய வேலை இருக்கிறது. பேருந்து ஏன் இவ்வளவு மெதுவாகச் செல்கிறது என முன்னாடி கண்ணாடி வழியே பார்க்கிறேன். சாலையின் இருபுறமும் மக்கள் சாரை சாரையாக நடந்துச் செல்கின்றனர். வேகாத வெயிலில் வெந்து நடந்து போகிறார்கள்... எங்கே போகிறார்கள் எனக்கு உடனே தெரிந்தாக வேண்டும், இல்லாவிட்டால் தொப்பை வெடித்துவிடும். முகத்தை அப்பாவியாக வைத்துக் கொண்டு, அருகிலிருந்த பாவியைக் கேட்டேன்.

ஏன் இந்த மக்கள் சாலையில் நடந்து போறாங்க-? -அவங்க வேளாங்கண்ணி போறாங்க என்றார். அப்ப நீங்க எங்க போறீங்க...? - நாங்களும் வேளாங்கண்ணி தான் போறோம். அவங்க வேளாங் கண்ணிக்கு எதுக்குப் போறாங்க? மாதாவை வழிபட. சரி.... நீங்க எதுக்குப் போறீங்க? நாங்களும் வழிபடத்தான். (ம்ம்..... அதாவது யோசிக்கிறேன்னு அர்த்தம்) எனக்கு எங்கோ இடிக்குதே என்றேன் உங்களுக்கு எங்கேயும் இடிக்கல, என்னைத்தான் நீங்க இடிக்கிறீங்க. கொஞ்சம் தள்ளி உக்காருங்க என்றார். மன்னிக்கணும் பாவி, தள்ளி இருக்கேன் என்றேன். யாரைப் பார்த்துப் பாவின்னு சொன்னே! என்று குதித்து விட்டார். நான் ஒருத்தன் திருச்சியிலிருந்து மனசுக்குள்ளேயே பாவி, பாவின்னு சொன்னவன், உணர்ச்சி வசப்பட்டு இவருகிட்ட உளறிட்டேன். இருந்தாலும் சமாளிக்கணுமே! அதாவதுங்க...

தமிழ் ஓவியா said...

நானா உங்களைப் பாவின்னு சொல்லலை. பாதர்ஸ் முன்மொழிவதை நான் வழிமொழிஞ்சேன், அவ்வளவுதான். அவரும் கொஞ்சம் சமாதானமானார். மீண்டும் பேச்சுத் தொடங்கியது, நீங்களும் மாதாவை வழிபடப் போறீங்க... அவங்களும் மாதாவை வழிபடப் போறாங்க, உங்க நோக்கமும். அவுங்க நோக்கமும் ஒரே மாதிரிதான் இருக்கு. அப்ப நீங்க ஏன் பேருந்தில் போறீங்க? அவங்க ஏன் நடந்து போறாங்க? எனக் கேட்டேன். அவங்களுக்கு ஏதாவது வேண் டுதல் இருக்கும், நடக்குறாங்க என்றார். அப்ப உங்களுக்கு எதுவும் வேண்டுதல் இல்லையா? எங்களுக்கும் வேண்டுதல் இருக்கே! அப்ப நீங்க ஏன் பேருந்தில் போறீங்க? யோவ்! அது அவங்க விருப்பம். இது எங்க விருப்பம், உனக்கு என்னய்யா வந்துச்சு... எனக் கத்திவிட்டார். இப்படிச் சொன்னா எப்படிண்ணே?

தமிழ் ஓவியா said...

இப்ப உங்க சொந்த ஊர் எது? என் சொந்த ஊர் திருச்சி, சரி! அடுத்த வாரம் தஞ்சாவூர்ல ஒரு திருமணம். உங்க உறவி னர்கள் ஒரு 10 பேர் போறீங்க, எல்லோரும் நடந்தே போவீங்களா? என்றேன். என்னய்யா கேள்வி கேக்குற...? நடந்து போறதுக்கு நாங்க என்ன கூமுட்டையா என்றார். 50கி.மீ. துரமுள்ள திருச்சிக்கும். தஞ்சாவூருக்கும் நடப்பீங்களான்னு கேட்டால், நாங்க என்ன கூமுட்டையான்னு கேக்குறீங்க... 150 கி.மீ. துரமுள்ள திருச்சிக் கும் வேளாங்கண்ணிக்கும் நடக்கிறாங்களே! அதுக்குப் பேரு என்ன அய்யா என்றேன். யோவ்! அது மாதாவை வழிபட வேண்டிக் கிட்டு, பயபக்தியா நடக்குறது. அப்ப உங் களுக்கு வேண்டுதல், பயபக்தி இல்லையா...? எங்களுக்கும் இருக்கே... அப்ப நீங்க ஏன் நடக்கல என்றேன். அய்யோ... தாங்க முடியலையே! இந்த ஆளை வெளியேத் துங்களே என அலறினார். பேருந்தில் எல்லோரும் என்னை ஒரு மாதிரியாகப் பார்க்க, நான் சன்னல் வழியே பார்த்தேன். வல்லம் வந்திருந்தது. சரி! நாம பேசாம தஞ்சாவூர் வரை நடந்தே போவோம் என பேருந்திலிருந்து இறங்கிவிட்டேன்.
இறுதிக் காட்சி

நான் பாட்டுக்கு சாலையில் சும்மா நடந்து போனேன், ஒருவர் வந்து, அண்ணே! ஏன் நடந்து போறீங்க என்றார்? நான் எதுக்கோ போவேன், உனக்கு என்னய்யா என்றேன்? அதுக்கு இல்லைண்ணே! பேண்டு போட்டுகிட்டு நடக்குறீங்களே, அதான் கேட்டேன். காவிச்சாமி, கண்ணுச் சாமி, (இவரு குருடர்களுக்குப் பார்வை தர்றவர்) கை கால் சாமி (இவரு நுடவர் களை நடக்க வைப்பவர்) எனப் பல சாமிகள் இருப்பது மாதிரி, நான் பேண்ட் சாமின்னு வச்சுக்க போ என்றேன். ஏன்ணே! இப்படி கிறுத்துவமா பேசிறீங்க என்றார். ஆமா! நீங்க மட்டும் கிறிஸ்தவம் பேசலாம், நாங்க கிறுத்துவம் பேசக் கூடாதோ? சரி.. சரி.. நீங்க எங்கதான் போறீங்கன்னு சொல்லவே இல்லையே என்றார். நான் தஞ்சாவூர் போறேன். என்னண்ணே விளை யாடுறீங்களா ? 100 பேருந்து போகுது. இப்படி நடந்து போறீங்களே என்றார். ஆமா! நீங்க எங்க போறீங்க? நாங்க வேளாங் கண்ணி போறோம். ஏன் உங்களுக்குப் பேருந்தே இல்லையா? அப்படியெல்லாம் பேசாதீங்க சாமி, நாங்க மாதாவுக்கு வேண்டிக்கிட்டு நடக்கிறோம்.

அப்ப ரொம்பப் பேரு பேருந்துல போராங்களே, அவங்க? அவுங்களுக்கு என்ன சாமி, அவுங்க வசதியானவங்க, பஸ்ல வாராங்க. நாங்க ஏழைங்க... நடக்கிறோம். எத்தனை வருசமா நடக்குறீங்க 40 வருசமா நடக்கு றோம். அப்ப 40 வருசமா ஏழையாகவே இருக்கீங்க அப்படித்தானே. சரி! இன்னும் எத்தனை வருசம் இப்படியே நடப்பீங்க? சாவுற வரைக்கும் நடப்போம். அப்ப சாகிற வரை ஏழையாகவே இருக்கப் போறீங்களா என்றேன். ஏங்க இப்படியெல்லாம் பேசுறீங்க வேறெப்படி பேசச் சொல்றீங்க.. .சொல்லுங்க?

இங்க நடக்குற அத்தனை பேரும் அன்றாடம் வேலைக்குப் போனால்தான் சாப்பாடு, ஒரு வாரம் வர்ற வருமானம் போச்சு. நடைப் பயணத்திற்குத் தேவையான பணத்தை வட்டிக்குக் கடன் வாங்கி யிருப்பீங்க. இனிமேல் வேலைக்குப் போய் அன்றாடம் வரும் வருமானத்தில் வயிற்றுக்கு சாப்பிடுவீங்களா... வட்டிக்கு அழுவீங்களா... இந்த வட்டி போடுற குட்டி களையே சமாளிக்கத் திணறும் நிலையில், உங்கள் குழந்தைக் குட்டிகளுக்கு நீங்க என்ன செய்துவிட முடியும்? இந்தக் கடனை அடைக்கிறதுக்குள்ள நல்ல வெள்ளி, கெட்ட வெள்ளி, இயேசு பிறப்பு, இயேசு இறப்பு, ஆணி அறையப்பட்டது, ஸ்குரு கழற்றப்பட்டது என அடுத்தடுத்த நிகழ்ச்சிகளும், விழாக்களும் உங்கள் விலா எலும்பை நொறுக்கிவிடுமே... நீங்க சொல்றதுல நியாயம் இருக்குண்ணே, இருந் தாலும் எல்லாம் ஒரு நம்பிக்கைதானே...

என்ன நம்பிக்கை? பொல்லாத நம்பிக்கை... நீங்க 40 வருசமா நடக்குறீங்க, உங்க அப்பா 50 வருசம் நடந்தாரு, உங்க தாத்தா 80 வருசம். அதுக்கும் முன்னால உங்க தாத்தா, கொள்ளு தாத்தான்னு 100, 200 வருசமா நடக்குறீங்க...? என்ன பலனைக் கண்டீங்க? இருக்கிறதெல்லாம் வெளியில போச்சே தவிர, உள்ள என்ன வந்துச்சு சொல்லுங்க பார்ப்போம்? உங்க தாத்தா கடனை உங்க அப்பா அடைச்சு, உங்க அப்பா கடனை நீங்க அடைச்சு, உங்க பிள்ளைக்கு நீங்க கடனைச் சேர்த்து வைக்குறீங்க.. சல்லிக்காசுக்குப் பயனில்லாவிட்டாலும், பலநூறு வருசமா நம்பி நடக்குறீங்க பாருங்க... உங்க வலிமைக்கு முன்னால அம்மன் முறுக்குக் கம்பிகளெல்லாம் தோத்துப் போச்சு போங்க...! இனிமேலாவது உழைக்கணும்னு நம்பிக்கை வைங்க, உயரணும்னு நம்பிக்கை வைங்க, வாழ்க்கையில சிறக்கணும்னு நம்பிக்கை வைங்க...! 100, 200 வருசமா எது எதுக்கோ நம்பிக்கை வச்ச நீங்க ஒரு 10 வருசத்திற்கு இதுல மட்டும் நம்பிக்கை வைங்க! நிச்சயம் ஜெயிப்பீங்க! சந்தோசமா இருப்பீங்க! போய்ட்டு வரவா !

- வி.சி. வில்வம்

தமிழ் ஓவியா said...


பெரியாரின் பேரறம் தமிழர் தலைவர் வீரமணி நீடு வாழ்க

- தூயவன்

காத்திடும் தமிழர் நாட்டில் கயமையைத் துரத்தி மாய்த்து
சாத்திரம் சடங்கு நோயை
சலிக்காமல் மிரட்டி ஓட்டும்
பாத்திறத் தந்தை எங்கள்
பெரியாரின் தொண்டைப் பற்றி
பூத்திடும் ஒதுக்கீட்டு மேன்மை
பேரறம் வீரமணியே வாழ்க!

சிறுவனாய் வளரும் போதே
சேரிடம் கண்ட செம்மல்
மறுவிலா சேவை காக்கும்
மாண்புறு தமிழர் தலைவர்
பெரியாரின் வடிவாய் இன்றும்
புகழேணி தாங்கும் நெஞ்சம்
வறியவர் வாழ்வு ஓங்க
வாழும் வீரமணியே வாழ்க

உலகினில் பறந்து சுற்றி
ஒப்பற்ற பெரியார் கொள்கை
பலமோடு பரப்பி எங்கும்
பகுத்தறிவு ஓங்கச்செய்தார்
தலைநகர் தில்லி இன்று
தந்தையின் கொள்கை செய்யும்
கலை உயர் கோட்டம் கண்ட
கோமகன் வீரமணியே வாழ்க!

சாதியால் தமிழன் சாகும்
சதியினைப் போக்க இன்றும்
மதிஉயர் கலப்பு மணமாம்
மாப்புரட்சி காணும் செம்மல்
விதியிலா நம்மின் பெண்கள்
வித்தகக் கல்வி தந்தார்
மதிஉயர் பிஞ்சைக் காக்கும்
மாத்தமிழ் வீரமணியே வாழ்க!

நதியினில் தவழும் நீராய்
நற்றிழிழ் மேடைப் பேச்சு
சாதிமூடம் மடமை சாய்க்கும்
வீச்சினில் அருவி வேகம்
மதிநல அறிவின் ஊற்றாம்
மாத்தமிழ் நூற்கள் கற்றோன்
கதியலா நம்மோர் வாழ்வை
காத்திடும் வீரமணியே வாழ்க!

ஈழத்துத் தமிழர் வாழ்வில்
இனமான உணர்வைக் கூட்டி
வேழம் நம் கலைஞர் எண்ணம்
வேதனை போக்கும் தீரர்
காலத்தின் கொடையாம் டெசோ
கண்டனக் கணைகள் சேர்த்து
ஓலத்தின் அவலம் தீர்க்கும்
ஓய்விலா வீரமணியே வாழ்க

பகுத்தறிவு இதழ்கள் எல்லாம்
பாரினில் வழங்கும் சான்றோன்
வகுத்தநல் விடுதலை இன்றும்
வியத்தகு கொள்கைக் குன்றம்
தகுதியாய் மன்றம் கூட்டும்
தக்கநல் இராதா கூடம்
மிகுதியால் அறிவுக் கோட்டம்
மீட்டிடும் நூலகம் கண்டார்!

கழகத்தின் இரும்புக்கோட்டை
கற்பகத் தருவே வாழ்க
போலிமை என்றும் போக்கும் பொன்னொளிர் தலைவா வாழ்க
எண்பதைக் கடந்து இன்றும்
எழுச்சியின் வடிவே வாழ்க!
மானுடம் காக்கும் பண்பே
மாசறு தொண்டே வாழ்க!

(நன்றி: தமிழ்ப் பணி டிசம்பர் 2012)

தமிழ் ஓவியா said...


கற்போம் கணினியை!


புதிதாகக் கணினி வாங்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன?

நண்பர்கள் பலரும் அலை பேசியில் அழைக்கும் போது, என்ன மாதிரி கணினி வாங்கலாம் என்று கேள்வி கேட்கின் றார்கள். நன்றாக கணினியில் இயங்கும் நண்பர்கள் என்ற போதும், நிறைய நண்பர்களுக்கு கணினி Configuration குறித்த செய்திகள் தெரிவது இல்லை. அவற்றைப் பற்றி விரிவாக காண்போம். ஒரு புதிய கணினி.

மடிக்கணினி நீங்கள் வாங்கும் போது இவற்றை தான் கட்டாயம் பார்க்க வேண்டும்.

Monitor என்ற ஒன்றைத் தவிர மேசை கணினிக்கும், மடிக் கணி னிக்கும் எந்த வேறுபாடும் இல்லை. நாம் இங்கு பார்க்க இருக்கும் செய்திகள் இரண்டுக்கும் பொதுவானவையே இவை அனைத்தும் இன்றைய நிலைக்குச் சிறந்தவை. நீங்கள் கணினி வாங்கும் நேரத்தில் புதிதாக மார்க் கெட்டில் என்ன உள்ளது என்று பார்த்து வாங்கவும்.

1. Processor

இது தான் உங்கள் கணினியின் மூளை போன்றது. நீங்கள் செய் யும் அத்தனை விசயங்களையும் இயக்குவது இது தான். இது இல்லை என்றால் எதுவுமே இல்லை. புதிதாக கணினி வாங்கும் நண்பர்கள், இதில் முக்கியமாக கவனம் செலுத்த வேண்டும். தற்போதைய நிலையில் எது புதிதாக வந்துள்ளது என்று பார்த்து வாங்குதல் நலம். இப்போதைக்கு நீங்கள் வாங்கும் கணினியில் Processor Intel Core 2 Duo என்பதை கடைசியாக கொள்ள லாம். Pentium (1,2,3,4) வரிசை என்றால் தவிர்க்க முயலவும். அவை கொஞ்சம் பழையவை. சமீபத்திய ஒன்று Core i7. அத்தோடு இதில் கவனிக்க வேண்டிய இன் னொரு அம்சம், Processor Speed. இதைப் பொறுத்தே உங்கள் கணினியின் செயல்பாடு அமையும். இது குறைந்த பட்சம் 2.2 GHz என்ற அளவில் இருக்க வேண்டும் (ஏன் என்று தனியே ஒரு கட்டுரையே வேண்டும், எனவே அதை பிறகு சொல்கிறேன்.).

2. RAM

உங்கள் கணினியின் இதயம் என்றால் அது இது தான். Processor சொல்லும் வேலைகளை என்ன வேகத்தில் முடிக்க வேண்டும் என்று தீர்மானிப்பதும் இதுவே. எனவே இது மிகச் சிறந்த அளவில் இருந்தால் மட்டுமே உங்களால் வேகமாக இயங்க முடியும். இல்லை என்றால் SETC பேருந்துகள் போல மெதுவாகத் தான் உங்கள் கணினி இயங்கும். தற்போதைய நிலையில் 4GB RAM என்பது சரியான ஒன்று. 2 GB என்பது மெதுவான கணினிக்கு என்று மாறிவிட்டது. ஆனாலும் ஏற்கெனவே கணினி உள்ளவர்கள் 2GB--யை பயன்படுத்தலாம். அதற்கும் குறைவாக இருந்தால் மாற்ற முயற்சித்தல் நலம். Photoshop போன்ற பணிகளில் ஈடுபடுவோர் 8GB RAM உள்ள கணினி வாங்குதல் நலம்.

அதே போல DDR என்ற ஒன்றை சொல்லித் தருவார்கள். புதிதாக வாங்கும் நண்பர்கள் DDR 3 தெரிவு செய்யலாம். DDR2 கூட நல்லதே.

இங்கே ஒன்றை கவனிக்க வேண்டும். புதிய கணினி வாங்கும் போது Processor
மற்றும் RAM போன்றவற்றை ஒப்பிட்டுப் பார்த்து வாங்க வேண்டும். Core 2 Duo என்றால் 4 GB RAM போதும், I-7 என்றால் 8GB RAM சரியாக இருக்கும்.

மிகக் குறைந்த அளவு என்றால் 2 GB க்கு கீழே மட்டும் புதியவர்கள் செல்ல வேண்டாம்.

3. Hard Disk or HDD

உங்கள் தகவல்கள் அனைத் தையும் சேமித்து வைக்கும் இதன் பணி அளப்பரியது. புதிதாக கணினி வாங்கும் நண்பர்கள் குறைந்த பட்சம் 320GB HDD வாங்கவும். தகவல்கள் அதிகம் சேகரிக்க குறைந்த பட்சம் 320GB தேவை.

அதிக பட்சம் எவ்வளவு என்பதை தெரிவு செய்வது உங்கள் விருப்பம்.

4. DVD R/W Drive

DVD Drive உங்கள் கணினியில் வன்தட்டு எனப்படும் CD, DVD, களை இயக்க உதவுகிறது. இதற்கு Configuration என்று ஒன்றும் சொல்ல இயலாது. ஆனால் கேபிள் மட்டும் SATA எனப்படும் 4- -Pin உள்ளதா என்று கேட்டுக் கொள்ளவும். இன்றும் 23---pin உள்ளவற்றை தள்ளி விடும் ஆட்கள் உள்ளார்கள்.

5. Mouse/Keyboard.

உங்கள் வேலைகளை நீங்கள் இவை இரண்டையும் பயன்படுத் தியே செய்கிறீர்கள். மௌஸ் இப் போது எல்லா இடத்திலும் Optical வகைதான் வருகிறது அதில் பிரச்சினை இல்லை. Keyboardஉங்கள் விருப்பம்.

6. Graphics Card

இது, Gaming, Graphic Design போன்றவற்றில் அதிக ஈடுபாடு உள்ளவர்களுக்கு பயன்படும். இதை 1 GB தெரிவு செய்யலாம்.

7. Monitor

கணினி என்றால் 17 Inch என் பதை மிகக் குறைவாக கொள்ள லாம். மடிக்கணினி உங்கள் விருப் பத்திற்கு ஏற்ப தெரிவு செய்யலாம்.

8. Pen Drive

பல ஆயிரம் போட்டு கணினி வாங்கும் பலரும், இதில் தவறு செய்வார்கள். 2GB Pen Drive வாங்கிட்டு வந்துட்டு பத்தாமே போயிடுச்சே என்று யோசிப்பார் கள். எனவே பென் டிரைவ் வாங்கும் போது தற்போதைய நிலையில் 16 GB வாங்கலாம். இதனை வாங்கும் போது நல்ல நிறுவனத்தின் பென் டிரைவ் ஆக வாங்கவும். இவைதான் புதிதாக கணினி வாங்கும் போது மிக முக்கியமாக கவனிக்க வேண்டி யவை. நீங்கள் படிக்கும்போது ஏதேனும் சந்தேகம் என்றால் என்னை . prabuk@live.in என்ற முகவரியில் தொடர்பு கொண்டு மின்னஞ்சல் செய்யலாம். [புதிய கணினி குறித்த கேள்விகளுக்கு மட்டும் இந்த முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்]. உடனடியாக பதிலளிக்க முயற்சி செய்கிறேன்.

- பிரபு கிருஷ்ணா (கற்போம்)

தமிழ் ஓவியா said...


பெரியாரின் பேரறம் தமிழர் தலைவர் வீரமணி நீடு வாழ்க

- தூயவன்

காத்திடும் தமிழர் நாட்டில் கயமையைத் துரத்தி மாய்த்து
சாத்திரம் சடங்கு நோயை
சலிக்காமல் மிரட்டி ஓட்டும்
பாத்திறத் தந்தை எங்கள்
பெரியாரின் தொண்டைப் பற்றி
பூத்திடும் ஒதுக்கீட்டு மேன்மை
பேரறம் வீரமணியே வாழ்க!

சிறுவனாய் வளரும் போதே
சேரிடம் கண்ட செம்மல்
மறுவிலா சேவை காக்கும்
மாண்புறு தமிழர் தலைவர்
பெரியாரின் வடிவாய் இன்றும்
புகழேணி தாங்கும் நெஞ்சம்
வறியவர் வாழ்வு ஓங்க
வாழும் வீரமணியே வாழ்க

உலகினில் பறந்து சுற்றி
ஒப்பற்ற பெரியார் கொள்கை
பலமோடு பரப்பி எங்கும்
பகுத்தறிவு ஓங்கச்செய்தார்
தலைநகர் தில்லி இன்று
தந்தையின் கொள்கை செய்யும்
கலை உயர் கோட்டம் கண்ட
கோமகன் வீரமணியே வாழ்க!

சாதியால் தமிழன் சாகும்
சதியினைப் போக்க இன்றும்
மதிஉயர் கலப்பு மணமாம்
மாப்புரட்சி காணும் செம்மல்
விதியிலா நம்மின் பெண்கள்
வித்தகக் கல்வி தந்தார்
மதிஉயர் பிஞ்சைக் காக்கும்
மாத்தமிழ் வீரமணியே வாழ்க!

நதியினில் தவழும் நீராய்
நற்றிழிழ் மேடைப் பேச்சு
சாதிமூடம் மடமை சாய்க்கும்
வீச்சினில் அருவி வேகம்
மதிநல அறிவின் ஊற்றாம்
மாத்தமிழ் நூற்கள் கற்றோன்
கதியலா நம்மோர் வாழ்வை
காத்திடும் வீரமணியே வாழ்க!

ஈழத்துத் தமிழர் வாழ்வில்
இனமான உணர்வைக் கூட்டி
வேழம் நம் கலைஞர் எண்ணம்
வேதனை போக்கும் தீரர்
காலத்தின் கொடையாம் டெசோ
கண்டனக் கணைகள் சேர்த்து
ஓலத்தின் அவலம் தீர்க்கும்
ஓய்விலா வீரமணியே வாழ்க

பகுத்தறிவு இதழ்கள் எல்லாம்
பாரினில் வழங்கும் சான்றோன்
வகுத்தநல் விடுதலை இன்றும்
வியத்தகு கொள்கைக் குன்றம்
தகுதியாய் மன்றம் கூட்டும்
தக்கநல் இராதா கூடம்
மிகுதியால் அறிவுக் கோட்டம்
மீட்டிடும் நூலகம் கண்டார்!

கழகத்தின் இரும்புக்கோட்டை
கற்பகத் தருவே வாழ்க
போலிமை என்றும் போக்கும் பொன்னொளிர் தலைவா வாழ்க
எண்பதைக் கடந்து இன்றும்
எழுச்சியின் வடிவே வாழ்க!
மானுடம் காக்கும் பண்பே
மாசறு தொண்டே வாழ்க!

(நன்றி: தமிழ்ப் பணி டிசம்பர் 2012)

தமிழ் ஓவியா said...


எது சுதந்திரம்?


நமது அரசியல் ஜீவநாடிகளை யெல்லாம் டெல்லியில் ஒப்புவித்து விட்டு நமது மதச் சீவநாடியைப் பார்ப்பானிடம் ஒப்புவித்து விட்டு, கருட தரிசனத்துக்கு ஆகாயத்தைப் பார்த்து நிற்கும் பக்தனைப் போல் தொட்டதற்கெல்லாம் டெல்லி நோக்கி, பார்ப்பானை நோக்கி தண்டனிமிடுவதுதானா நமது சுதந்திரத்திற்கு அறிகுறி?

- (விடுதலை 15.10.1947)

தமிழ் ஓவியா said...


பெரியார் தத்துவ நிலை போற்றுவோம்....(திருச்செங்கோடு தமிழ் ஆய்வு மாநாட்டில் வெளியிடப்பட்ட கவிஞர் மனோ இளங்கோவின் குடை மகுடம் எனும் நூலிலிருந்து...)

விடுதலை விடுதலை முழங்கியவர் நினைவை
விழிகளில் ஏந்தி விடுதலைக்கு எழுதுகிறேன்
தொடுதலை தீட்டென்று விளம்பியவர் உறவை
தொடாம லிருக்கப் புலம்பியவரைப் பாடுகிறேன்
பெறுதலை, உரிமை பெறுதலை - உயிர் மூச்சுப்
பெருங்காற்றில் உள்ளடக்கி விழித்தவர் பெரியார்
கெடுதலை செய்து பிழைப்போர் - மேலோர்
கீழோரெனப் பிரித்தவரைக் கிழித்தவர் பெரியார்

எவரெவரோ பிறந்தார் தமிழ் மண்ணில் - இவர்
ஒருவரே... இழிநிலைக்கு முதல் குரல் கொடுத்தார்.
நிகரெவரோ சமதர்மப் பணி செய்தமைக்கு
நினைத்தாலே அதிர்கிறது அந்த ஆரியக் கூட்டம்..
அவரெவரோ மறைத்தே தாக்குகிறார் இன்னும்..
இனமானத் தலைவர் வீரமணி படைபகை வெல்லும்
சுவரெவரோ, சூழ்ச்சிச் சித்திரம் - வரைந்தாலென்ன
சுயமரியாதைச் சுடர் அதை மிகப் பொசுக்கும்....
- கவிஞர் மனோ. இளங்கோ, காரைக்குடி

தமிழ் ஓவியா said...


பாரத ஸ்டேட் பாங்கா - பஞ்சாங்கக் குப்பையா?


பாரத ஸ்டேட் பாங்கு என்பது நாட்டு டைமையாக்கப்பட்ட முக்கிய வங்கியாகும். எல்லா மதங்களைச் சார்ந்தவர்கள், சாராதவர்கள் அதன் வாடிக்கையாளர்களாக உள்ள நிலையில் இந்த வங்கி வெளியிட்டுள்ள மாதாந்திரக் காலாண்டரைப் பார்த்து அதிர்ச்சி அடைய நேரிட்டது.

மதச் சார்பற்ற ஓர் அரசின் நிறுவனம் வெளியிட்ட காலண்டராக அது தோற்றமளிக்கவில்லை.

மாறாக காஞ்சி மடத்தில் தயாரிக்கப்பட்டது போன்ற பஞ்சாங்கக் குப்பையாகவும், இந்துமத சம்பந்தப்பட்ட சமாச்சாரங்களின் அடங்கலுமாகவே இருக்கின்றன.

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் அடிப்படைக் கடமை என்று குடிமக்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ள விஞ்ஞான மனப்பான்மையை வளர்க்க வேண்டும் (51A(h)
என்ற கோட்பாடு ஒன்று இருக்கிறது என்ற நினைப்புக் கொஞ்சம்கூட இல்லாத புராணக் குப்பைத் தொட்டியாக இந்தக் காலண்டர் வெளி யிடப்பட்டுள்ளது.

இராகு காலம், எம கண்டம், குளிகை என்பதோடு நிற்காமல் வாஸ்து நாள் வரை குறிப்பிடப்பட்டுள்ளது. அசல் கஞ்சனூர் பஞ்சாங்கமே தான்!

மாதம் ஒன்று வீதம் 12 தாள்கள் அடங்கியுள்ளன. அவற்றின் பின் பக்கங்களில் இடம் பெற்றுள்ள கிடைத்தற்கரிய சிறப்பான தகவல்கள் என்ன தெரியுமா?

1) யஷ்கானம் எனும் நாட்டியம்பற்றியது. அதைப் பற்றிய குறிப்புகள் என்னென்ன?

கதையில் நல்லவர்கள் கண்ணுக்கு இனிமையான வண்ணங்களிலும், தீயவர்கள் அல்லது ராட்சச வேடம் ஏற்பவர்கள் அதற்கேற்ற வண்ணங்களில் பயங்கரமாகத் தோற்றம் அளிக்கும் வகையில் ஒப்பனை செய்து கொள்கிறார்களாம்.

தீயவர்கள் அல்லது ராட்சசர்களாம் - இதன் பொருளைப் புரிந்துதான்வெளியிட்டு இருக் கிறார்களா? அல்லது அறியாமையின் அடிப்படையில் வெளியிட்டுள்ளார்களா?

புராணங்களில், இதிகாசங்களில் ராட்சசர்கள் என்று சொல்லப்படுபவர்கள் எல்லாம் திராவிடர்கள் என்று வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிட்டு இருக்க வில்லையா? தமிழ்நாட்டில் இயங்கிக் கொண்டே அந்த நாட்டுக்குரிய மக்களைக் கேவலப்படுத்துவதை அனுமதிக்கலாமா?

இன்னொரு பக்கத்தில் குலசேகர ஆழ்வார் பற்றியதாகும். திருமாலைப் பற்றிப் புகழ்ந்து தள்ளும் பாடல்களும் - விளக்கமும் வெளியிடப்பட்டுள்ளன.

அடுத்த பக்கத்தில் இடம் பெற்றிருப்பது என்ன தெரியுமா? வாரணாசி என்னும் காசிபற்றி சிலாகித்துக் கூறப்பட்டுள்ளது.

கங்கைக்கு நிகரான நீருமில்லை. காசிக்கு நிகரான ஊருமில்லை என்ற பீடிகையுடன் இந்து மதத் தலப் புராணக் குப்பை கொட்டப்பட்டுள்ளது - பட விளக்கங்களுடன் அதோடு நிற்கவில்லை. முக்கியமாகக் குறிப்பிட்டு காட்டப்பட வேண்டியது ஒரு பக்கம் முழுவதும் மறைந்த காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதியின் பிரதாபங்கள் முழுக்க முழுக்க பல்வேறு தோற்றப் படங்களுடன்

தீண்டாமை க்ஷேமகரமானது என்று கூறிய; சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டிய மகா குற்ற வாளிபற்றி அரசு வங்கி வெளியிட்ட காலண்டரில் சாங்கோ பாங்கோமாக வெளியிட்டது எந்த அடிப்படையில்?

இன்னும் உண்டு; அற்புதங்கள் ஆற்றிய திருஞானசம்பந்தர் பற்றி முழு பக்கத்தில் பல வகை படங்களுடன்;

சட்டப்படி நியாயப்படி இப்படி காலண்டர் வெளியிடப்பட்டதற்குக் காரணமானவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இத்தகைய காலண்டர் அச்சிட்டதற்காக செலவு செய்யப்பட்ட பெருந் தொகையையும் சம்பந்தப்பட்டவர்களிட மிருந்து பறி முதல் செய்ய வேண்டும். இந்தியா முழுமைக்கும் என்றால் எத்தனைக் கோடி பிரதிகள் அச்சடிக்கப்பட்டு இருக்க வேண்டும்? அரசு செலவில் இந்துத்துவா பிரச்சாரம் நடைபெற்றுள்ளது. இதன் பின்னணியில் இந்துத்துவா சக்திகள் கண்டிப்பாக இருக்க வேண்டும் - நிதித்துறை இதுபற்றி முழு அளவில் விசாரணை நடத்திட ஏற்பாடு செய்ய வேண்டும்.

அரசமைப்புச் சட்டத்தில் கண்டுள்ள மதச் சார்பின்மை கொள்கைக்கு விரோதமாக நடந்து கொண்டதற்காக சட்டப்படியாக நடவடிக்கையையும் மேற்கொள்வது மிகவும் அவசியமாகும்; நடந்திருப்பது சாதாரண விஷயமல்ல!

ஸ்டேட் பாங்கு என்பது தனியாருடையதோ - குறிப்பிட்ட மதத்தைச் சார்ந்தவருடையதோ அல்ல - எல்லோருக்கும் பொதுவான அரசு சொத்து! அதனை முறை கேடாகப் பயன்படுத்தியுள்ளதால் சட்டப் படியான நடவடிக்கை அவசியம் தேவை! தேவை!!19-1-2013

தமிழ் ஓவியா said...


விஷ்ணு ஏன் கொலை செய்தான்?

ஒரு சமயம் பிரும்மாவானவன் தூங்கிக் கொண்டு இருக்கும்போது ஓர் அசுரன் வேதங்கள் எல்லாவற்றையும் திருடிக் கொண்டு கடலுக்குள் சென்று ஒளித்து விட்டான். அது கண்டு தேவர்கள் விஷ்ணுவிடடம் முறையிட்டார்கள். உடனே விஷ்ணு மச்சாவதாரம் எடுத்து கடலுக்குள் சென்று அந்த ராட்சதனைக் கொன்று வேதத்தை மீட்டுக் கொண்டு வந்தானாம்.

இந்தக் கதையின் உட் கருத்து என்னவென்றால் ஓர் அரசன் தன் ஆட்சி எல்லைக்குள் வேதத்தை யாரும் படிக்கக் கூடாது என்று தடை செய்து பறிமுதல் செய்திருக்கின்றான். அதற்காகவே விஷ்ணு அவனைக் கொலை செய்திருக் கிறான்.ஆனால் ஆரியர்கள் பகுத்தறிவிற்கு ஒவ்வாத முறையில் கதை எழுதி விட்டனர். பிரும்மா வேதத்தை உண்டாக்கியவன் என்கின்றனர். வேதமோ ஒலி வடிவமானது என்கின்றனர். எப்படி பிரும்மா தூங்கும்போது ஒலி வடிவான வேதத்தை அந்த அசுரன் அடித்துக் கொண்டு போய் இருக்க முடியும்? அப்படித்தான் அவன் கொண்டு போய் விட்டாலும் வேதத்தையே உண்டாக்கிய பிரும்மா ஏன் வேறு வேதத்தைப் புதிதாக உண்டாக்கி இருக்கக் கூடாது? (பெரியார் களஞ்சியம் தொகுதி 12 பக்கம் 168)

தமிழ் ஓவியா said...


திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுவில் தீர்மானங்கள்


ஜாதி தீண்டாமை எதிர்ப்பு, தனியார்த் துறைகளில் இடஒதுக்கீடு - பெண்ணுரிமை மூன்றையும் முதன்மைப்படுத்தி ஏப்ரலில் குமரி முதல் தொடர் பிரச்சாரப் பயணம்

மே 4 - ராஜபாளையத்தில் மாநில இளைஞரணி மாநாடு
திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுவில் தீர்மானங்கள்

சென்னை, ஜன.19- ஏப்ரல் மாதத்தில் குமரி முதல் தொடர் பிரச்சாரத் திட்டத்தை திராவிடர் கழக தலைமைச் செயற்குழு அறிவித்துள்ளது.

19.1.2013 சனியன்று காலை 11 மணிக்குத் திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுக் கூட்டம் சென்னை - பெரியார் திடலில், துரை. சக்ரவர்த்தி நிலையத்தில், திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

தீர்மானம் எண் 1:

ஜாதி அடிப்படைவாத சக்திகளுக்குக் கண்டனம்!

ஜாதி அடிப்படையில் மக்களைப் பிளவுபடுத்துவது - குறிப்பாக தலித்துகள் - தலித்து அல்லாதவர்கள் என்ற பிரிவை ஏற்படுத்துவது மனிதப் பண்பின் கோட்பாட்டுக்கும், நாகரீக சமத்துவ சமூகத்திற்கும் - குறிப்பாக முக்கால் நூற்றாண்டுகளுக்கு மேலாகத் தமிழ்நாட்டில் தந்தை பெரியார் அவர்களாலும், அவர்களை அடித்தளமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட அமைப்புகளாலும் உருவாக்கி வைக்கப்பட்டுள்ள ஜாதி எதிர்ப்பு ஒழிப்பு உணர்வுகளுக்கு மாறாகவும் செயல்படுவது புதுவகை நவீன பார்ப்பனீயம் ஆகும். எனவே, இச்சக்திகளை இச்செயற்குழு கண்டிப்ப தோடு, அந்தச் சக்திகளை நிராகரிக்குமாறு தமிழ்நாட்டு மக்களை இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் எண் 2(அ):

பெண்கள்மீதான வன்கொடுமையாளர்களுக்கு தண்டனை

பெண்களுக்கு எதிராக பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுவோர் - காலதாமதத்திற்கு இடமின்றி குறிப்பிட்ட கால வரையறைக்குள் தண்டிக்கப்படும் வகையில் செயல் பாடுகளை - நடவடிக்கைகளை உருவாக்குமாறு மத்திய, மாநிலஅரசுகளை இச்செயற்குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம் 2(ஆ):

பெண்களுக்குக் கல்வி நிலையங்களில் தற்காப்பு உள்ளிட்ட பயிற்சிகளை - குறிப்பாக கராத்தே பயிற் சியையும், துப்பாக்கிச் சுடும் பயிற்சியையும் அளித்து, அதற்கான உரிமத்தை அரசு வழங்குவதை எளிமைப் படுத்தும் வகையில் ஆணைகளைப் பிறப்பிக்குமாறு மத்திய - மாநில அரசுகளை இச்செயற்குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண் 3(அ):

2013 ஆம் ஆண்டுக்கான வேலைத் திட்டங்கள்

2013 ஆம் ஆண்டின் கழக வேலைத் திட்டங்களாக 2012 டிசம்பர் முதல் தேதி அன்று சென்னையில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் செயல்படுவது என்று தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் எண் 3(ஆ):

1. தனியார்த் துறைகளிலும் இட ஒதுக்கீடு

2. பெண்ணுரிமைக் கோட்பாடுகள்

3. ஜாதி - தீண்டாமை ஒழிப்பு இவற்றை முன்னிறுத்தி கழகத்தினரும், குழுவினரும் தொடர் பிரச்சாரம் ஒன்றினை வரும் ஏப்ரலில் கன்னியாகுமரியில் தொடங்கி நடத்துவது என்று தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் எண் 3(இ):

தேனி மாவட்டம் கம்பத்தில் ஒத்தி வைக்கப்பட்ட மாவட்ட திராவிடர் கழக மாநாட்டை வரும் 28.2.2013 வியாழக்கிழமையன்று நடத்துவது என்று தீர்மானிக்கப் படுகிறது.

தீர்மானம் எண் 3(ஈ):

கோவையில் வரும் 13.4.2013 சனிக்கிழமையன்று புரட்சிப் பெண்கள் மாநாட்டை நடத்துவது என்று தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் எண் 3(உ):

மாநில இளைஞரணி மாநாட்டினை மே 4 சனிக்கிழமை யன்று ராஜபாளையத்தில் எழுச்சியுடன் நடத்துவது என்று தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் எண் 3(ஊ):

சனவரி 30 அன்று காந்தியார் நினைவு நாளையொட்டி மதவெறி கண்டனப் பொதுக் கூட்டங்களை நடத்துவது என்று தீர்மானிக்கப்படுகிறது. சென்னையில் சனவரி 30 அன்று தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் உரையாற்றுவது என்று முடிவு செய்யப்படுகிறது.

தீர்மானம் எண் 4:

கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்களின் 50 ஆண்டு விடுதலைப் பணியைப் பாராட்டும் வகையில் 50 ஆயிரம் விடுதலை சந்தாக்களை - கழகப் பொறுப் பாளர்களும், தோழர்களும் முன்னின்று பெருஞ் சாதனையாகச் செய்து முடித்தனர்.

அந்தச் சந்தாக்கள் 2012 டிசம்பர் மாதத்தோடு முடிவுற்ற நிலையில், பழைய சந்தாக்களைப் புதுப்பித்தல், புதிய சந்தாக்களைத் திரட்டுதல் ஆகிய பணிகளுக்கு முன்னுரிமை கொடுத்து, எந்தக் காரணத்தை முன்னிட் டும் சந்தாக்களின் எண்ணிக்கை குறைந்துவிடாமலும், மேலும் அதிகரிக்கும் வகையிலும் தீவிரமான வகையில் செயல்படவேண்டுமாய் கழகப் பொறுப்பாளர்களையும், கழகத் தோழர்களையும் இச்செயற்குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண் 5:

டீசல் விலையை, எண்ணெய் வியாபாரிகள் அமைப்பே உயர்த்திக் கொள்ளும் உரிமையை மத்திய அரசு தருவது - மக்கள் விரோத முடிவு ஆகும். செப்டம்பர் மாதத்தில் உயர்த்திவிட்டு, இப்போது டீசல் விலையை உயர்த்துவது மூலம் விவசாயிகளையும், விலைவாசி ஏற்றத்தின்மூலம் பொதுமக்களையும் பாதிக்கும் என்பதால் உடனே அதைத் திரும்பப் பெறவேண்டும் என இச்செயற்குழு மத்திய அரசை கேட்டுக் கொள்கிறது.

தமிழ் ஓவியா said...


எங்கே திராவிடம் என்போருக்கு!


"வெளிச்சம்"

ஆஸ்திரேலியா கண்டத்தில் வாழும் பழங் குடியினரோடு தென்னிந்தியாவில் வாழும் திராவிட இனத்தவர் சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன்னால் தொடர்பு வைத்திருந்ததாக சமீபத்தில் வெளியான மரபணு ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது.

இவ்வாய்வுக்கு முன்புவரை, நம்பப்பட்ட கருத்தானது, சுமார் 40000 ஆண்டுகளுக்கு முன்னால் மனித இனம் ஆஸ்திரேலியாவில் குடிபெயர்ந்திருக்க வேண்டும். சமீப காலம் வரை, அதாவது 200 ஆண்டுகள் முன் அய்ரோப்பியர்கள் குடி பெயரும் வரை ஆஸ்திரேலியா கண்டம் தனித் தீவாக யாரும் சென்று வரமுடியாத நாடாக இருந்தது. ஆனால் இக்கருத்தில் சில முக்கிய முரண்பாடுகள் இருந்து வந்தன. உதாரணத்திற்கு ஆயுதங்கள் பயன்படுத்தும் முறை, உணவு தயாரிப்பு, டிங்கே (காட்டு நாய்) இவையெல்லாம் ஆஸ்திரேலிய பழங்குடியினரோடு சுமார் 4000 ஆண்டுகளாகத் தான் அறிய முடிகிறது. இவை எப்படி இவர்களின் வாழ்வோடு நுழைந்திருக்க முடியும் என்ற கேள்வி பல ஆண்டுகளாக ஆராயச்சியாளர்களை துளைத்து எடுத்தது. சமீபத்திய ஆய்வு முடிவுகள் இக்கேள்விகளுக்கு விடை அளித்துள்ளன. சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன்னால் இந்தியாவில் இருந்து அலைஅலையாக மக்கள் கூட்டம் இடம் பெயர்ந்திருக்க வேண்டும் என்று இவ்வாய்வில் கூறப்பட்டுள்ளது. மரபணு தரவுகள் திராவிட ஆஸ்திரேலிய இன தொடர்பினை வெளிப்படுத்தினாலும், எந்த வழியாக இன குழுக்கள் ஆஸ்திரேலியா சென்று இருக்கும் என்று சொல்ல இயலாது.

இந்தியா என பொதுவாக பல இடங்களில் சொல்லபட்டிருந்தாலும் (ஆங்கிலேயர்கள் நம்மை ஆள வந்த பிறகுதானே இந்தியா, இந்து, வெங்காயம் எல்லாம்) ஆய்வுக்கு தொடர்பான ஆவணங்களில் திராவிட இனக் குழு என்றே கூறப்பட்டுள்ளது. ஆகவே எங்கே திராவிடம் என்று கேட்கும் நவீன அறிவு ஜீவிகளுக்கு சம்மட்டியடி கொடுக்கும் வகையில் இவ்வாய்வு அறிக்கை வெளிவந்துள்ளது . இதைப் பற்றிய செய்தி வெளியிடும் பொழுது ஆங்கில செய்தித்தாள்கள் (டைம்ஸ் ஆப் இந்தியா தவிர்த்து) கவனமாக 'திராவிடம்' என்ற வார்த்தையினை இருட்டடிப்பு செய்து வெளியிட்டது 'அவாளின் ' நாணயத்தைக் காட்டுகிறது.

தமிழ் ஓவியா said...


அளவற்று பணம் சேர்ப்பது எதற்கு? விரைந்து பிணமாவதற்கா?


பயணம் செய்வதற்கு மகிழ் உந்து (பிளஷர் கார்) தேவை என்று கருதி, அவரவர் நிலைக்கு தன்மைக்கு ஏற்ப, கார்களை சிலர் வாங்கி வைத்துள் ளனர்; பயன்படுத்துகின்றனர்.

கார்களில் எத்தனையோ ஆடம் பரங்கள்; எனக்கு அதிகம் அதுபற்றித் தெரியாது என்றாலும், சில செவி வழிச் செய்திகள் மூலம் ஒன்றரைக் கோடி ரூபாய் மதிப்புள்ள கார் பற்றியெல்லாம் கூறு கிறார்கள் - அதற்கு மேலும் உண்டாம்.

ஏதோ ஃபெராரி Ferreri என்று எல்லாம் கூறி பணம் இருப்போர் வாங்கி வைத்து பயன்படுத்து கிறார்கள். ஆனால் அதற்காக அதிலேயே குடி யிருக்க, தூங்கி, எப்போதும் வாழ்ந்து கொண்டிருக்க முடிகிறதா?

பழைய காரில் எவராவது இடித்து விட்டால் உரிமையாளருக்கு அதிகச் சங்கடம் ஏற்படாது; மிக உயர்ந்த விலையில் உள்ள கார்மீது பட்டாலோ வாங்கிய சொந்தக்காரர் மனம் அமைதி யடையுமா சுலபத்தில்? நிம்மதியை இழப்பதற்குத்தான் வழி வகையைக் காட்டும் அது!

அதுபோல பணத்தை எதற்கு சேர்க்கிறோம், ஏன் சேர்க்கிறோம் என்பதைப்பற்றிக் கவலைப்படாமல் எப்படியும் நாம் உலகப் பணக்காரர் வரிசையில் வந்துவிட வேண்டும் என்று சதா திட்டமிட்டு உழைத்துக் கொண்டே, தங்களது வாழ்வில் நிம்மதியை அன்றாடம் தொலைத்துக் கொண்டிருக்க; பலருக்கு, இலக்குத் தெரியாத பயணத்தைச் செய்யும் பரிதாப நிலை தானே?

இன்றைய உலகில் பணத்தாசை எல்லையற்றது. அதன்மூலம் மகிழ்ச்சியை வாங்க முடியுமா? விலை உயர்ந்த படுக்கையை சில லட்ச ரூபாய் கொடுத்து வாங்கி விடலாம் அத்தகைய புதிய கோடீஸ்வரர்கள், ஆனால் அதில் படுத்துப் புரளும் அவர்களால் அதன் மூலம் நிம்மதியான தூக்கத்தை வாங்கிவிட முடியுமா?

அன்றாடங் காய்ச்சியானவன் உழைத்துவிட்டு அயர்ந்து படுத்து கட்டாந் தரையில் பாயோ, தலையணையோ இன்றி வானமே கூரை; கையே தலை யணை, தரை பட்டு மெத்தை எனக் கருதி படுத்து தூங்கும் போது நன்றாக அயர்ந்து அல்லவா தூங்குகிறான்?

அந்தத் தூக்கத்தை எல்லையற்று பணம் மாய்ந்து மாய்ந்து சம்பாதிக்கும் இந்த பணத் திமிங்கலங் களால் எளிதில் பெற்று விட முடியுமா? 5 நட்சத்திர ஓட்டலில் தங்கி, ஆடம்பர உணவை ஆர்டர் செய்வது எளிது; ஆனால் அதே தெருவில் நாயை விரட்டி விட்டு வீசி யெறியப்பட்ட எச்சில் இலைகளிலுள்ள மிச்ச உணவை வழித்து வழித்துத் தின்று சுவை கண்டுள்ள இந்நாட்டு மன்னர் களில் ஒருவன் பெறும் பசி நிறைவை அந்த லட்சாதிபதி பெறுகிறாரா?

சாப்பாட்டிற்கு முன்பு, பசியெடுக்க மாத்திரை; சாப்பிட்ட பின் ஜீரணிக்க மாத்திரைகள் இப்படி எத்தனையோ உண்டு!

இறுதியில் இச்செல்வத்தை இவருடன் வைத்துப் புதைக்கவா போகிறார்கள்? அப்படியே புதைத்தாலும் அவருக்குத் தான் அது எவ்வகையில் பயன்படப் போகிறது?

எவராவது பணத்தை தேவைக்குமேல் வழி முறை - வகை தொகை தெரியாமல் சேர்த்துக் குவித் துள்ள குபேரப் பிரபுக்கள் சிந்திக்கிறார்களா?

அளவுக்கு அதிக பணம், மன அமைதியை வழியனுப்பும் ஒரு அற்புத மான விசித்திர கருவியாகும்!

நேற்று சீனாவிலிருந்து ஒரு செய்தி. ஷாங்காய் நகரத்திலிருந்து வந்திருக் கிறது. அச்செய்தி இதோ.

பணம் இருந்தால் மட்டும் மகிழ்ச்சியை விலை கொடுத்து வாங்கி விட முடியாது என சீனாவில், பெரும் தொழிலதிபர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது!

சீனாவில் 500-க்கும் மேற்பட்ட பெரும் தொழிலதிபர் களிடம், ஹுருன் என்ற தன்னார்வ அமைப்பு ஒன்று, ஆய்வு ஒன்றை நடத்தியது.

அதில் பணம் பல்வேறு பிரச்சி னைகளை கொண்டுவரும் என்று பெரும்பாலானவர்கள் கருத்துத் தெரிவித்துள் ளார்கள்.

பணத்தைச் சேர்ப்பவர்களில் பலர், தானும் துய்க்காது; மற்றவர்களுக்கும் அதன் மூலம் மகிழ்ச்சி ஏற்படுத்தாது இருப்பவர்கள் - செத்த பிணங்கள், வாழும் மனிதர்கள் அல்ல என்கிறார் வள்ளுவர்!

வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள் அஃதுண்ணான்
செத்தான் செயக்கிடந்தது இல் - குறள் 1001

தன் வீடு நிறைய பெருஞ் செல் வத்தைச் சேர்த்துள்ள ஒருவன் அதனைக் கொண்டு வயிறார உண்டு; அவனும் பிறரும் அதை நுகரவில்லை என்றால், அவன் உருப்படியாகச் செய்யத்தக்கது என்று வேறொன்றும் இல்லையாதலால், அவன் உயிரோடு இருந்தும், செத்த ஒருவனாகவே கருதப்படுவான்

இப்போது சொல்லுங்கள் பணம் சேர்ப்பது பிறர் நலன் பேணாது வாழும் மனிதர்கள் பிணமாவதற்கு இவ்வளவு பெரிய போட்டி இவ்வுலகில்! அந்தோ! வெட்கம்! வேதனை!!

தமிழ் ஓவியா said...

தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் தலைவர் தந்த 20 அம்ச திட்டங்கள்திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் (19.1.2013) திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் தெரிவித்த கருத்துக்களும், திட்டங் களும் வருமாறு:

1. 2013ஆம் ஆண்டின் முதற் பருவத்தில் விடுதலை சந்தா சேர்ப்பதற்குத்தான் முன்னுரிமை.

2. விடுதலை ஆசிரியராக 50 ஆண்டுகள் பணியாற்றியதற்காக கொடுக்கப்பட்ட விடுதலை சந்தாக் கள் எண்ணிக்கை 50 ஆயிரம். சந்தா முடிவு காலம் வந்து விட்டமையால் அந்த எண்ணிக்கையில் எந்தக் காரணத்தை முன்னிட்டும் குறைவு ஏற்பட்டு விடக் கூடாது. அரசு நூலகங்களில் விடுதலை நிறுத்தப் பட்டதால் சில ஆயிரம் சந்தாக்கள் இழப்பு ஏற்பட்டுள் ளது. அரசு விளம்பரமும் அறவே கிடையாது. இவற்றை எல்லாம் சவாலாக ஏற்றுக் கொண்டு சாதித்து முடிக்க வேண்டும்.

3. கழக உறுப்பினர்கள் அனைவரும் விடுதலை சந்தாதாரராகவும், வாசிப்பாளராகவும் இருந்திட வேண்டும். விடுதலை வாசகர்கள் எல்லாம் கழக உறுப்பினர்கள் அல்லர்; அதே நேரத்தில் கழக உறுப் பினர் ஒவ்வொரும் விடுதலை சந்தாதாரர், வாசகர் என்பது கட்டாயம்.

4. மாநிலப் பொறுப்பாளர்கள் தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் இவ்வளவு சந்தாக்களுக்குப் பொறுப்பு என்று ஆக்கப்பட வேண்டும்.

5. விடுதலை விநியோகத்தில் புகார் வந்தால் உடனடியாக காலதாமதம் செய்யாமல் சரி செய்யப்பட வேண்டும். (குடிடிட ஞசடிடிக ஆயஉநேசல ளுலளவநஅ).

6. அஞ்சல் மூலம் அனுப்பப்படுவதால் சந்தாதாரர் களுக்கு அன்றாடம் விடுதலை கிடைப்பதில்லை. எனவே முகவர்கள் மூலம் விடுதலை அன்றாடம் கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். குறைந்த பட்சம் 25 விடுதலை சந்தாக்கள் இருக்கும் ஊர்களில் எல்லாம் முகவர் முறை கடைப் பிடிக்கப்பட வேண்டும்.

விடுதலை எல்லாத் தரப்பு மக்களும் பாராட்டும் வகையில் பல அம்சங்களுடன் வந்து கொண்டிருப் பது பாராட்டத்தக்கது. மேலும் பல புதிய அம்சங்கள் இடம் பெற உள்ளன.

7. ஜாதி - தீண்டாமை ஒழிப்புப் பிரச்சாரம், பெண்ணுரிமைக் கோட் பாடுகள் இவை இயக்கத்தின் அடிப் படைக் கொள்கைகள் - இவற்றை பற்றிப் பிரச்சாரம் செய்வதற்கு இந்தக் காலக் கட்டம் கழகத்திற்குக் கிடைத்துள்ள வாய்ப்பும் - கடமையும் ஆகும். கோவையில் புரட்சிப் பெண்கள் மாநாடு ஏப்ரலில் நடைபெற உள்ளது.

தமிழ் ஓவியா said...


பார்ப்பனர் அல்லாதோர் இயக்கத்தைத் தந்தை பெரியார் தொடங்கினார். அதன் காரணமாக பார்ப்பனர் அல்லாதார் குறிப்பாக தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் சமுக அந்தஸ்தும், கல்வி, வேலை வாய்ப்பும் பெற்றனர். அதற்கு மாறாக தாழ்த்தப்பட்டோர் - தாழ்த்தப் பட்டோர் அல்லாதார் என்று பிளவுபடுத்துவது கடைந் தெடுத்த பிற்போக்குத்தனமும் தமிழர் ஒற்றுமையைச் சிதைப்பதும் ஆகும். இதனைக் கையில் எடுத்துக் கொள் பவர்கள் யாராக இருந்தாலும் மிகப் பெரிய வீழ்ச்சியை அடை வார்கள் என்பதில் அய்யமில்லை. நம் பிரச்சாரம் தொடர்ந்து கொண்டே இருக்கும்.

8. ஜாதி பற்றிய கண்ணோட்டம், பெண்கள் மீதான பாலியல் வன்முறை பிரச்சினைகளில் ஆர்.எஸ்.எஸ். வசமாகச் சிக்கிக் கொண்டு விட்டது. இதுதான் சந்தர்ப்பம் என்று ஒரு கல்லால் இரண்டு காய்களை வீழ்த்த வேண்டும்.

9. இயக்க வெளியீடு நமது பிரச்சாரக் களத்தில் மிக முக்கியமானது. சிறு சிறு வெளியீடுகளும், அதே நேரத் தில் அய்யா பற்றிய ஆவணங்களும் கொண்டு வரப்பட வேண்டும். தொழில் ரீதியாகப் பதிப்பகம் நடத்துபவர்களே கூட நமது வெளியீடுகள், நூல்களின் நேர்த்தியைக் கண்டு வியந்து பாராட்டுகின்றனர். புத்தகச் சந்தைகள் இடையறாது நடந்து கொண்டே இருக்க வேண்டும்.

10. என்னைப் பொறுத்தவரை கொஞ்சம் சுற்றுப் பயணத்தைக் குறைத்துக் கொண்டு, நூல்கள் எழுதுவதில் அதிகம் கவனம் செலுத்தவே விரும்புகிறேன்.

11. மாநிலக் கழகப் பொறுப்பாளர்கள், தலைமைச் செயற்குழு உறுப்பினர்களிடமிருந்து அடுத்து என்ன செய்ய வேண்டும் - எந்த கிளர்ச்சியை நடத்த வேண்டும்? பிரச்சாரத்துக்கு இப்பொழுது எதற்கு முன்னுரிமை என்ற ஆலோசனை எனக்கு வரவேண்டும். அது ஒரு வகையில் மற்றவர்களுக்குப் பயிற்சியும் கூட!

12. தனியார் துறையில் இட ஒதுக்கீடு என்பது சமூக நீதித் திசையில் இந்தக் காலக் கட்டத்தில் நாம் கையில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டிய முக்கியப் பிரச்சினையாகும்.

13. வட மாநிலங்களில் சமூக நீதியைக் கையில் எடுத்துக் கொண்டு அதன் மூலம் தந்தை பெரியார் கருத்துகளைப் பரப்புதல் வேண்டும். வெளிநாடுகளில் கல்வி மூலம் தந்தை பெரியார் அவர்களின் கருத்துக் களைக் கொண்டு செல்ல வேண்டும்.

14. நமது பிரச்சாரத்தில் தென் மாவட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். அதற்கு மதுரையை மய்யப்படுத்தி தென் மாவட்டங்களில் மாவட்டத்திற்கு 2 நாட்கள் என்று எனது நிகழ்ச்சிகள் அமையும் வகையில் திட்டமிடப்படவேண்டும்.

15. மகளிர் அணி, மருத்துவ அணி தனிக் கலந்துரை யாடல் கூட்டம் விரைவில் கூட்டப்பெற்று அவற்றின் பணிகள் முடுக்கி விடப்படும்.

16. சுயமரியாதைத் திருமண நிலையத்தின் செயல் பாடுகள் விரிவுபடுத்தப்பட வேண்டும். சென்னையிலும், திருச்சியிலும் நாம் நடத்திய ஜாதி மறுப்பு, மத மறுப்பு, மணமுறிவு பெற்றோர் மற்றும் விதவைத் திருமணங் களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. அனைத்துப் பகுதிகளுக்கும் அதனை விரிவுபடுத்துவோம்.

17. கழக உறுப்பினர்களைச் சேர்க்கும் பணியில் அமைப்புச் செயலாளர் உரத்தநாடு குணசேகரன் சிறப்பாக ஈடுபட்டு வருகிறார். 31 கழக மாவட்டங்களில் முடிக்கப்பட்டுள்ளன. எஞ்சிய மாவட்டங்களில் இன்னும் ஒரு மாதத்தில் முடிக்கப்படவேண்டும்.

18. இளைஞரணி மாநில மாநாடு மே 4ஆம் தேதி இராசபாளையத்தில் நடைபெற உள்ளது. ஆயிரக்கணக் கில் இளைஞர்கள் - மாணவர்களின் அணிவகுப்பு நடத்தப்பட வேண்டும். போதிய அவகாசம் இருப்பதால் திட்டமிட்டுப் பணியை நேர்த்தியாகச் செய்ய வேண்டும்.

19. மாவட்டக் கழகப் பொறுப்பாளர்கள் கண்டிப்பாக மாவட்ட அளவில் சுற்றுப் பயணம் செய்ய வேண்டும். கிளைக் கழகக் கூட்டங்களை நடத்தவேண்டும். கூட்டம் நடக்கும் ஊர்களிலேயே மீண்டும் மீண்டும் நடத்தக் கூடாது. கிராமப் பகுதிகளிலும், புதிய இடங்களிலும் பிரச்சாரக் கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும். அறிவியல் கண்காட்சி ஒன்றியத் தலைநகரங்களில் நடத்தப்பட வேண்டும்.

20. இலவச சட்ட முகாம்களை மூன்று மாதங் களுக்கு ஒரு முறை வெவ்வேறு இடங்களில் நடத்தலாம். வேறு யாரும் சிந்திக்காத துறை இது. மேற்கண்ட 20 அம்ச திட்டங்களை திராவிடர் கழகத் தலைவர் அளித்தார்.திராவிடர் கழக சட்டத் துறை

தலைவர்: த.வீரசேகரன்

துணைத் தலைவர்கள்: ஓய்வுபெற்ற நீதிபதிகள் மதுரை பொ. நடராசன், சென்னை இரா. பரஞ்சோதி.

மாநில செயலாளர்: ச.இன்பலாதன், சிவகங்கை

அமைப்பாளர்: தெ.வீரமர்த்தினி.

இணைச் செயலாளர்: ப. இராசேந்திரன், மதுரை

துணைச் செயலாளர்கள்: தம்பி பிரபாகரன், சத்தியமூர்த்தி.

பொருளாளர்: கரூர் மு.க. இராசசேகரன்.


கூட்டம் நடத்துவோர்களுக்கும், பிரச்சாரகர்களுக்கும்...

நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வோர் சொற் பொழிவாளர்களின் ஒப்புதல் இல்லாமல் பெயர்களை விளம்பரப்படுத்தக்கூடாது. நிகழ்ச்சிகளுக்கு இசைவு தந்த சொற் பொழிவாளர்கள் எந்தக் காரணத்தை முன்னிட்டும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமலும் இருக்கக் கூடாது. - இவை மிக முக்கியம்! - தலைமை நிலையம்

தமிழ் ஓவியா said...


பெண்களின் தர்மம்...


சாத்திரச் சம்பிரதாயங்களில் பெண்களின் தர்மம் என்ன என்று பார்த்தால் நிபந்தனையற்ற அடிமையாக அடங்கி ஒடுங்கி வாழ்பவளே மோட்சத்திற்குப் போவாள் என்று கூறப்பட்டுள்ளது. ----------பெரியார்(விடுதலை,5.4.1961)

தமிழ் ஓவியா said...


பெண்ணுரிமைக் கோட்பாடுகள்


திராவிடர் கழகத்தின் தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் (19.1.2013) மூன்று முக்கியப் பிரச்சினை களை முன்னிறுத்தித் தொடர் பயணம் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. அதில் ஒன்று பெண்ணுரிமைக் கோட்பாட்டை முன்னிறுத்துவதாகும்.

பெண்கள் மனித சமூகத்தின் சரி பகுதி - ஆண்களுக்கு நிகரானவர்கள் என்பதை மதங்கள் பெரும்பாலும் ஏற்றுக்கொள்வதில்லை.

இந்தியாவில் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதிகளாக இருந்தவர்கள்கூட - பெண்கள் என்றால் அவர்கள் அடுப்பங்கரைக்குள் முடங்கிக் கிடக்கவேண்டும் என்றே எதிர்பார்க்கிறார்கள்.

இப்படிப் பெண்களை ஒன்றுக்கும் உதவாதவர் களாக அடிமைப்படுத்திய காரணத்தால் மனதள விலும், உடல் அளவிலும் பலகீனமானவர்களாக ஆக்கப்பட்டு விட்டனர்.

கடும் போராட்டங்களின் காரணமாக பல வகையான உரிமைகள் கல்வி, வேலை வாய்ப்பில் கிட்டி வந்தாலும் ஆண்களின் ஒடுக்குமுறை ஓய்ந்த பாடில்லை.

அதன் தீய விளைவுதான் புதுடில்லியில் மருத் துவக் கல்லூரி மாணவி ஓடும் பேருந்தில் வன் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாகும்.

அதனைத் தொடர்ந்து இந்தியாவின் பல பகுதிகளிலும் பெண்கள் பாலியல் வன்புணர்ச்சிக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இந்தக் காலகட்டத்தில் தமிழ்நாட்டில்தான் அதிக எண்ணிக்கையில் பெண் கள் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர்.

ஆனாலும், உயர்ஜாதி ஊடகங்கள் அவற்றை இருட்டில் பதுக்கிவிட்டன; ஆம், இந்த ஊடகப் பூனைகள் கண்களை மூடிக்கொண்டு பூலோகம் இருண்டு போய்விட்டதாகக் கற்பனையுலகில் சஞ்சரித்துக் கொண்டுள்ளன.

பெண்களுக்கு இழைக்கப்படும் வன்கொடுமை யிலிருந்து அவர்கள் மீட்கப்படவேண்டும்; நிரந்தரப் பரிகாரம் காணப்படவேண்டும் என்ற கருத்து ஓங்கி ஒலிக்கப்பட்டுக் கொண்டு இருக்கிறது.

எதற்கும் முதற்படி என்பது விழிப்புணர்வும், தன்னம்பிக்கையும், தன் பலமும்தான். படித்த பெண் களாக இருந்தாலும் உடல் அளவில் ஆண் களுக்கு நிகராகப் பலம் பெற்றிருக்கவில்லை. அதற்குப் பல வகையான வரலாற்றுக் காரணங்கள், உளவியல் ரீதியான காரணங்கள் சொல்லப்படலாம்.

எவ்வளவு காலத்திற்கு இந்தச் சமாதானங்களைச் சொல்லிக் கொண்டு இருக்க முடியும்? திராவிடர் கழகம் தீர்மான வடிவமாகச் சொல்லும் தற்காப்புப் பயிற்சி - குறிப்பாக கராத்தே பயிற்சி கல்வி நிறு வனங்களில் தொடக்கப்பள்ளி முதலே கட்டாயமாக அளிக்கப்படவேண்டும். (பெரியார் கல்வி நிறுவனங் கள் இதனைச் செய்து வருகின்றன) துப்பாக்கி சுடும் பயிற்சி அளித்து உடனடியாக அதற்கான அனுமதி யையும் அளிக்கவேண்டும்.

நான்கு இடங்களில் பெண்களிடம் வாலாட்டிய கொடியவர்கள் பதிலடி கொடுக்கப்பட்டனர் என்ற செய்தி வந்தால் போதும், இந்த ஆண் சூராதி சூரர்கள் இருந்த இடம் தெரியாமல் ஓடி ஒளியக் கூடியவர்கள்தாம்.

மற்றொரு முக்கிய வாய்ப்பு என்பது சட்டமன்றங் களிலும், நாடாளுமன்றத்திலும் பெண்களுக்குரிய 33 சதவிகித இட ஒதுக்கீட்டுக்கான சட்டத்தை நிறை வேற்றி, பெண்கள் தங்களுக்கான உரிமைகளுக்காக அவர்களே குரல் கொடுக்கும் பொழுதுதான் அதற்கான விடிவு விரைவில் கிடைக்கும்.

மொத்த உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்கு பெண் உறுப்பினர்கள் என்பது குறைந்தபட்சமாகும். அந்த நிலை ஏற்பட்டால், நாடாளுமன்றமே கிடுகிடுக்காதா?

எருதின் புண் காக்கைக்குத் தெரியாது. பெண் களுக்கான உரிமைகள், குறைபாடுகள் எந்த அள வுக்கு ஆண்களால் உணரப்பட முடியும்? அப்படியே உணர்ந்தாலும் அவர்கள் பெண்களுக்காக முன்வந்து போராடுவார்கள் என்று எதிர்பார்க்க முடியாதே!

1996 ஆம் ஆண்டு முதல் இதற்கான மசோதா நிலுவையில் உள்ளதே. மாநிலங்களவையில் மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளது.

மக்களவையிலும் நிறைவேற்றப்படவேண்டும். அய்க்கிய முற்போக்குக் கூட்டணித் தலைவர் திருமதி சோனியா காந்தி அவர்கள் அந்தச் சட்டம் விரைவில் நிறைவேற்றப்படும் என்று உறுதி அளித்துள்ளார்.

தேர்தல் நேரம்... அந்தச் சட்டத்தைக் கொண்டு வந்தால், அனேகமாக எந்த அரசியல் கட்சியும் பெண்களுக்கு எதிராகச் செயல்படாது என்று எதிர்பார்க்கலாம்.

பெண்கள் அமைப்புகளும் இத்திசையில் குரல் கொடுப்பார்களாக! திராவிடர் கழகம் தொடர் பிரச்சாரத்தில் இதனை முன்னெடுத்துச் செல்ல உள்ளது - ஆதரவு தாரீர்! 23-1-2013