Search This Blog

21.1.13

ஆதிதிராவிட கிருஸ்தவர்கள் மாநாட்டில் பெரியார்

லால்குடி – தாலூகா ஆதிதிராவிட கிறிஸ்தவர்கள் மகாநாடு
தலைவரவர்களே! தோழர்களே!! இன்று உங்களை இவ்வளவு பெரிய கூட்டமாகக் காண்பது எனக்கு மிகுந்த சந்தோஷமாக இருக்கிறது. நீங்கள் எல்லோரும் இங்கு எதற்காக இந்த வெய்யில் காலத்தில் கஷ்டப்பட்டு வந்து சேர்ந்து கூடியிருக்கின்றீர்கள். உங்களுடைய இன்றைய நோக்கமெல்லாம் இந்து மதத்தில் எவ்வளவோ காலமிருந்து கீழான ஜாதியாய் கருதப்பட்டு நீங்கள் அடைந்து வந்த இழிவைப் போக்கிக் கொள்வதற்காக வேறு மதத்தில் வந்துசேர்ந்தும் அங்கும் அந்த இழிவு இருந்து உங்களைப் பழைய கருப்பனாகவே நடத்தி வந்தால் எப்படியாவது அந்த இழிவை போக்கிக் கொள்ள வேண்டுமென்ற உணர்ச்சியின் மீது இந்த மகாநாட்டைக் கூட்டி நீங்கள் எல்லோரும் இங்கு வந்து சேர்ந்திருக்கிறீர்கள். ஆனால் இந்த மகா நாட்டில் பலர் ஆவேசமாய் பேசிவிடுவதினாலும், பலர் அதிதீவிரமான தீர்மானங்கள் செய்து விடுவதினாலும் உங்களுக்கு ஏதாவது ஒரு பெரிய பலன் கிடைத்து விடுமா? என்று பார்த்தால் அது முடியாது என்றுதான் தோன்றுகிறது. ஏனெனில் இம்மாதிரி தீர்மானங்களும், இம்மாதிரி ஆவேசப் பேச்சுகளும் வெகுகாலமாக நடந்துகொண்டேதான் வருகிறது. ஆனால் இவையெல்லாம் மேல்ஜாதிக்காரர்கள் என்பவர்களால் அலட்சியமாக கருதி அசட்டை செய்யப்பட்டுதான் வருகிறது. உங்களுக்கு மதப்பித்தின் பயனாக சு. ம. உணர்ச்சி இல்லை யென்பதை உங்கள் பாதிரிமார்கள் நன்றாய் உணர்ந்தி ருக்கிறார்கள். கட்டுப்பாட்டை மீறி நீங்கள் ஏதும் செய்யமாட்டீர்களென்று அவர்களுக்கு நன்றாகத் தெரியும். நீங்களும் மதத்திற்காகவும், கடவுளுக் காகவும் எவ்வளவு கஷ்டங்களையும் , இழிவுகளையும் பொறுத்துக்கொண்டு வெறும் வாயினாலே மாத்திரம் எதையாவது பேசிக்கொண்டிருப்பீர்களே யொழிய கட்டுப்பாடுகளை மீறவோ உங்கள் இழிவுக்குக் காரணமானவற்றை உதறித் தள்ளவோ அதை அழிக்க முயற்சிக்கவோ ஒரு நாளும் சம்மதிக்க மாட்டீர்கள்.

உண்மையான விடுதலை உங்களுக்கு வேண்டுமானால் உங்கள் இழிவுக்கும், அடிமைத் தன்மைக்கும் அஸ்திவாரமான ஆதாரத்தை அழிக்க நீங்கள் தைரியம் கொள்ள வேண்டும். அந்த தைரியம் எவ்வித கட்டுப்பாடு களையும், நம்பிக்கைகளையும் உடைத்தெரிய தக்கதாகயிருக்கவேண்டும். அப்படிக்கில்லாமல் வீணே வாய்ப்பேச்சிலும், காகிதத் தீர்மானத்திலும் சாதித்து விடலாமென்று கருதுவது பைத்தியகாரத்தனமாய் தான் முடியும். நீங்கள் கீழ் ஜாதி என்பதும், தொடக்கூடாதவர்களென்பதும், சமத்துவமளிக் காமல் தனியாய் வைக்கப்பட வேண்டியவர்களென்பதும் ஆகிய காரியங் களுக்குவென்றும் மதமோ, பழக்கவழக்கமோ, சாஸ்திரமோ, கடவுள் செயலோ என்பதெல்லாம் வெறும் பித்தலாட்டமேயாகும். உங்களுடைய கீழ் சாதி தன் மைக்கும் மேற்கண்ட காரியங்களுக்கும் யாதொரு சம்பந்தமுமே கிடையாது. உண்மையான காரணத்தைச் சொன்னால் ஒரே நிமிஷத்தில் நீங்கள் அவர்கள் மீது பாய்ந்து சின்னாபின்னமாய்க் கிழித்தெறிந்து விடுவீர்களென்று கருதி ஏதேதோ சாக்கு போக்குகளைச் சொல்லி உங்களை ஏமாற்றுவதற்கு கடவு ளையும், மதத்தையும், பழக்க வழக்கத்தையும் சொல்லி வருகிறார்கள். கடவுள் மதத்தினர் கட்டளை என்றபடி பழக்க வழக்கங்கள் என்ற முறைப்படி யார் நடக்கிறார்கள்? அவர்கள் சொந்த விஷயத்தை பொறுத்த மட்டில் எவ்வித கட்டுப்பாட்டிற்கும் பழக்க வழக்கத்திற்கும் கடவுள் மத கட்டளைக்கும் கீழ்படியாமல் தங்கள் இஷ்டம் போலவே சமயத்திற் கேற்றபடியே நடந்து கொள்கிறார்கள். ஆனால் பிறத்தியானை அடக்கி ஆண்டு அடிமை கொள்வதற்காக மாத்திரம் இந்தப்படி சொல்லி பயன் பெறுகிறார்கள்.

கீழ் ஜாதி என்பதாக ஒரு பிரிவு எதற்காக? யாரால் ஏற்படுத்தப்பட்டது என்பதின் ரகசியத்தை உணர்ந்தால் பிறகு அதை அழிக்கும் விஷயம் வெகு சுலபமாக விளங்கி விடும்.

கீழ் ஜாதி, மேல் ஜாதி என்று சொல்வதின் தத்துவம் என்பதைப் பாருங்கள். ஒரு பார்ப்பானையும், ஒரு பறையனையும் கூட்டிவந்து நிறுத்தி கீழ் ஜாதி, மேல் ஜாதி என்பது அவர்களிடத்தில் எப்படி விளங்குகிற தென்று பார்த்தால் மேல் ஜாதி என்பவன் பாடுபடாமல் சோம்பேறியாய் இருந்து ஊரார் உழைப்பில் வாழ்கிறவன் என்பதும், கீழ் ஜாதி என்பவன் பாடுபட்டு உழைத்து உழைப்பின் பயனையெல்லாம் அன்னியருக்கே அழுதுவிட்டு வீடில்லாமல், துணியில்லாமல், கஞ்சியில்லாமல், கல்வியில்லாமல், மிருகத்திலும் கேடாய் வாழ்கிறவன் என்பதும் நன்றாய் விளங்கும். ஆகவே கீழ் ஜாதி தன்மை ஒழிய வேண்டும் என்று கருதுகிற ஒருவன் அன்னியருக்காக நாம் உழைக்கப் பிறந்தோமென்கிற எண்ணத்தை விட்டு விட்டு நமது உழைப்பின் பயனை சோம்பேறிகள், பாடுபடாத மக்கள் அனுபவிக்க விடக்கூடாது என்கிற உறுதி கொண்டு, பிறவியில் நமக்கும் மற்றவருக்கும் எவ்வித வித்தியாமுமில்லை என்கின்ற உறுதியோடு சோம்பேறி கூட்டத்தோடு எவன் போர் தொடுக்க முனைந்து நிற்கின்றானோ அவனே இவ்வித இழிவுகளை நீக்கிக்கொள்ள அருகதையுள்ளவனாக ஆகிறான். அதைவிட்டு விட்டு மதக்கட்டளையை மதிப்பவன், பாதிரிகளின் சொல்லுக்கு கீழ்படிந்துதான் ஆக வேண்டும். கடவுள் நம்பிக்கையை கொண்டவன் அவனவன் தற்கால நிலைமைக்குக் காரணம் “கடவுள் சித்தம்” என்பதை ஒப்புக்கொண்டு தான் ஆகவேண்டும். மத கட்டளையையும், கடவுள் நம்பிக்கையையும் கொண்ட ஒரு அடிமை ஒரு தாழ்ந்த ஜாதிக்காரன் ஒரு நாளும் விடுதலை அடையவோ, முன்னேற்ற மடையவோ முடியவே முடியாது. மத கட்டளையும், கடவுள் நம்பிக்கையும், மேல்ஜாதிக்காரனுக்கும், பாதிரிகளுக்கும், முதலாளிகளுக்கும் தான் மேன்மை யையும், அனுகூலத்தையும் அழிக்கக் கூடியதாகும். இந்த நாட்டில் 1000 கணக் கான வருஷங்களாக ஏழை மக்களும் தாழ்ந்த ஜாதிக்காரர்களும் இருந்துதான் வருகிறார்கள். அவர்கள் அன்று முதல் இன்றுவரை மத பக்தியும், கடவுள் பக்தியும் கொண்டு அதற்காக எவ்வளவோ பணத்தையும், நேரத்தையும், செலவு செய்து தங்கள் கஷ்டங்களும், இழிவுகளும் ஒழிய வேண்டுமென்று பிரார்தனை செய்து கொண்டு தான் வந்திருக்கிறார்கள். ஏழைகளின் எண்ணிக்கை குறைந்ததா? கீழ் ஜாதிக்காரர்களின் எண்ணிக்கை குறைந்ததா? அல்லது இவர்களுடைய கஷ்டமாவது ஒழிந்ததா? யோசித்துப் பாருங்கள்.

உலகில் எவ்வளவோ அதிசயங்களும், அற்புதங்களும், முன்னேற்ற மான காரியங்களும் நாளுக்குநாள் விருத்தியடைந்தும் அதற்கு தகுந்த படி தொழில் முறைகளும், யந்திர சௌகரியங்களும், ஒன்றுக்குப் பத்து நூறாய் உயர்ந்தும் இவற்றின் பயனாய் லட்சாதிபதிகள் பத்துலட்சாதிபதியாகவும், பத்து லட்சாதிபதிகள் கோடீஸ்வரர்களாகவும்தான், முடிந்ததேயொழிய உங்களு டைய நிலைமை அன்றும் இன்றும் ஒரே மாதிரியாகத்தான் இருந்து வருகிறது. நீங்கள் ஒரு உயிருள்ள இயந்திரம் போல் தான் இருக்கிறீர்கள். இயந்திரங் களுக்கு எப்படி எண்ணை ஊற்றினால் எண்ணையிருக்கிற வரையில் ஓடுகிறதோ அதுபோல் உங்களுக்கு ஏதாவது ஆகாரம் கொடுத்தால் அது ஜீரணமாகிறவரையில் வேலை செய்துவிட்டு மடிவது என்கிற முறையில் தானிருக்கிறீர்கள்.

உங்களுக்கு உங்களுடைய பிரதி பிரயோஜன மெல்லாம் உங்களு டைய வயிற்றுக்கு எவ்வளவு வேண்டுமோ அவ்வளவுதான். அதுவும் நீங்கள் சாகாமலிருப்பதற்கு எவ்வளவு வேண்டுமோ அவ்வளவு தான் என்பதாகப் பதினாயிர வருஷங்களுக்கு முன்பதாகவே நிர்ணயிக்கப் பட்டுவிட்டது. இந்த நிர்ணயத்தை மீறி நீங்கள் அதிகம் கேட்காமல் இருக்க வேண்டுமென் பதற்காகத்தான் உங்களை பறையர், சக்கிலியர் என்று சொல்லி தீண்டாத சாதியார்களென்று ஆக்கியும் உங்கள் அண்ணன்மார்களை யெல்லாம் ‘அடிமை’ ‘பார்ப்பானின் வைப்பாட்டி மகன்’ ‘சூத்திரன்’ என்று சொல்லி தாழ்ந்த ஜாதியும் ஆக்கிவைக்கப்பட்டிருக்கிறது. உங்களுக்கு ஜீவனத்திற்காக என்று கொடுக்கப்படும் கூலிகளும் உங்கள் மீதுள்ள கருணையினால் என்று நினைத்து விடாதீர்கள். இந்த ஆகாரமும் இல்லாமல் மடிந்து போவீர் களேயானல் நாளைக்கு மேல் ஜாதிக்காரர்களுக்கும் முதலாளிமார்களுக்கும் வேலை செய்ய ஆள் இல்லாமல் போகுமே என்கின்ற சுயநல கருணை கொண்டுதான் மாடு வளர்க்கிறவன் தீனி போடாவிட்டால் பால் கறக்காதே. பாடுபடாதே என்று கருதி அதற்கு தீனிபோடுவது போல் உங்களுக்கும் ஜீவனத்திற்கும் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலை மாறவேண்டு மென்பதில் தான் உங்களுடைய முக்கிய வேலையாக இருக்க வேண்டுமே யொழிய சும்மா பறையர் பட்டம் போனால் போதும், கிறாதியை எடுத்து விட்டால் போதும், கோயிலுக்குள் நுழைய விட்டால் போதும் என் றெல்லாம் கருதுவதில் பிரயோசனமில்லை. கிறாதி வித்தியாசமில்லாமலும் பறஜாதி பட்டம் இல்லாமலும் கோயிலுக்குள் போய் தொழுகிற உரிமை யுடனும் இருக்கின்ற கோடிக்கணக்கான மக்கள் கஞ்சிக்கு வகையில்லாமல் இருக்க, வீடில்லாமல் ஊர் ஊராய் பிச்சைக்காரர்கள் போல் லம்பாடிகள் போல் திரிவ தையும் மரத்து நிழல்களில் தலைக்கு கல்லையோ, கையை மடக்கியோ வைத்து படுத்துக்கொண்டிருப்பதை இன்றையதினம் எங்கும் பார்க்கலாம். இதற்குக் காரணம் என்ன என்று கருதுகிறீர்கள்.

ஆகவே உங்களுடைய கிளர்ச்சியானது பொருளாதாரத் துறையில் நீங்கள் மற்றவர்களால் ஏமாற்றப்படுவதும் வஞ்சிக்கப்படுவதும் ஒழிய வேண்டுமென்பதையே அஸ்திவாரமாகக் கொண்டிருக்கவேண்டும். அதில் தான் உங்கள் விடுதலை இருக்கிறது. எந்தக்கடவுளும், எந்த பாதிரியும் இதற்கு வகை செய்ய முடியாது?

உங்கள் மதங்களை எல்லாம், உங்கள் கடவுள் கட்டளை எல்லாம் “பொறு பொறு” “அவசரப்படாதே” “ஆத்திரப்படாதே” உனது வாழ்வில் உள்ள எல்லா துன்பங்களையும், எல்லா இழிவுகளையும் பொருமையோடு பொறுத்துக் கொண்டிருந்தால் நீ செத்த பிறகு மேல்லோகத்தில் கடவுள் உன்னுடைய பொறுமைக்காக நல்லசன்மானம் கொடுப்பார். அடுத்த ஜன்மத்தில் நல்ல பிறவி பெறுவாய் பொறுத்தார் பூமியாள்வார் என்று தான் உபதேசிக்கும் இந்த உபதேசத்தை ஆயிரக்கணக்கான வருஷங்களாக கேட்டு கேட்டு அதன்படி பொறுமையாய் இருந்து வந்ததின் பலன் தான் இன்றும் இன்னமும் நீங்கள் பொறுமையாகவே இருந்து இழிவடைந்து கஷ்டப்பட்டு சீக்கிரம் செத்து கடவுளிடம் சன்மானம் பெற வேண்டியவர்களாக இருக் கின்றீர்கள்.

ஆகவே செத்த பிறகு மேல் லோகத்தில் அல்லது அடுத்த ஜன்மத்தில் பயன் பெறலா மென்கின்ற பித்தலாட்ட, சுயநல சூட்சியான உபதேசத்தை அடியோடு மறந்து இந்த ஜன்மத்தில் நீங்கள் சாவதற்கு முன் உங்கள் இழிவுக்கும், கஷ்டத்திற்கும் என்ன பரிகாரம் என்பதைக் கவனித்து அதற்குத் தக்கது செய்ய முன் வாருங்கள். இந்தப்படி நினைத்து தைரியமாய் முன் வந்த மக்கள் தான் இன்று உலகில் ஒருபக்கத்தில் அடிமையாய் கூலியாய் இழி ஜாதியாய் ஏழையாய் இல்லாமல் மனிதனாய் கவலையற்று தேசமே ஒரு குடும்பமாகவும் எல்லோரும் ஒரு தாய் வயிற்று சகோதரர்களாகவும் வாழ்ந்து வருகின்றார்கள்.

ஆகவே இந்த விஷயங்களை கவனித்து நன்றாய் ஆலோசித்து தங்களுக்கு சரி என்று பட்டதை பின்பற்றுங்கள் என்பதை தெரிவித்துக் கொண்டு இத்துடன் முடித்துக் கொள்ளுகிறேன்.


-------------------------------------- 23.04.1933 இல் களத்தில் வென்றான் பேட்டை கிராமத்தில் நடைபெற்ற இலால்குடி தாலூக்கா ஆதிதிராவிட கிருஸ்தவர்கள் மாநாட்டில் தந்தைபெரியார்  சொற்பொழிவு."குடி அரசு' - சொற்பொழிவு - 07.05.1933

41 comments:

தமிழ் ஓவியா said...


சரிதான்!


லக்னோவில் நடந்த காங்கிரஸ் கருத்தரங்கில் கட்சியின் மூத்தத் தலை வரான மத்திய நிலக்கரித் துறை மூத்த அமைச்சர் சிறீபிரகாஷ் ஜெய்ஸ்வால் கூறியதாவது:

குஜராத் முதல் அமைச்சர் நரேந் திர மோடியைப் பாராட்டிப் பேசுவது காந்தியைக் கொன்ற கோட்சேயைப் பாராட்டுவது போன்றது என்று பேசியுள்ளார்.

உண்மைதானே! காந்தியைக் கொன்ற ஆர்.எஸ்.எஸின் அரசியல் பிரிவான பிஜேபியை சேர்ந் தவர் தானே மோடி! இவுர் பிரதமராக வரவேண்டும் என்று துடிப்பதும் ஆர். எஸ்.எஸ். வட்டாரம்தானே!

அடிப்படைவாத அமைப்பான ஆர்.எஸ்.எஸின் முக்கிய கொள்கை சிறு பான்மையினரை ஒழிப்பது தானே!

கோத்ரா ரயில் பெட்டி எரிப்பில் கரசேவகர்கள் எரிந்தனர் என்பதை மய்யப் படுத்தி, பழியை முஸ்லீம்கள்மீது போட்டு ஆயிரக் கணக்கான சிறுபான்மை முசுலீம் மக்கள் படுகொலை செய்யப்படுவதற்கு அரசு அதிகாரத்தை பயன்படுத்தி யவர் தானே இந்த மோடி!

பொடா சட்டத்தின்கீழ் 287 பேர்கள் குஜராத்தில் சிறையில் தள்ளப்பட்டனர். என்றால் அதில் அதில் 286 பேர் முசுலிம், ஒருவர் சீக் கியர். பாதிக்கப்பட்ட மக் களுக்குச் சிறை; பாதிப் புக்குக் காரணமானவர் களோ வெளியிலே உல்லாசம்!

காந்தியாரைக் கொன்ற கோட்சேகூட அந்தப் பழியை முசுலிம் சமூகத்தின்மீது போடுவதற்குத் தனது கையில் இஸ்மாயில் என்று பச்சைக் குத்திக் கொள்ளவில்லையா? சுன்னத்தும் செய்து கொள்ளவில்லையா?

மை நாதுராம் கோட்சே போதல்தா என்ற நாடகத்தை நடத்திய கூட் டம் தானே ஆர்.எஸ்.எஸ்? கோட்சேயைக் கடவுளாக வும் காந்தியாரை அரக்க னென்றும் சித்திரிக்கும் நாடகம்தானே அது.

குஜராத் மாநில அரசு ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் அரசு ஊழியர்களாக இருக் கலாம் என்று சொல்ல வில்லையா?

குஜராத்தின் கோத்ரா நிகழ்வைத் தொடர்ந்து அரசு அதிகாரத் துணை யோடு, சங்பரிவார்களால் முசுலிம்கள் படுகொலை வேட்டையாடப்பட்ட போது இந்த மோடி என்ன சொன்னார்?

எந்த ஒரு செயலுக்கும் ஒரு எதிர் விளைவு உண்டு என்ற நியூட்டன் கொள் கையை முதல் அமைச்சர் என்ற மிகப் பொறுப்பு வாய்ந்த பதவியில் இருந்த நரேந்திரபாய் தாமோ தரதாஸ் மோடி சொன்னார் என்றால் அதன் பொருள் என்ன?

குஜராத்தில் சிறுபான் மையினர் படுகொலை செய்யப்பட்ட அதே பாணியை இந்தியா முழுவதும் அரங் கேற்ற வேண்டும் என்பது தான் சோ போன்ற பார்ப் பனர்களின் அடக்க முடி யாத ஆரிய வெறியாகும்.

அந்த வகையில் காங் கிரசின் மூத்த தலைவர் களுள் ஒருவரான மத்திய சுரங்கத் துறை அமைச்சர் மோடியைப் பற்றி சொன் னது சாதாரண வாசகமல்ல - திருவாசகமே!

- மயிலாடன்

தமிழ் ஓவியா said...

கனடாவிலுமா?

கனடா - பர்ன்பையில் துர்க் காதேவி கோவிலில் அய்யப்பனுக்கு மகரஜோதி பூஜை நடைபெற்றது. அய்யப்பனுக்கு நெய், தயிர், விபூதி, சந்தனம் முதலிய பொருள்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

மகரஜோதி என்பது மோசடி - கேரள மாநிலம் மின்வாரிய ஊழியர் களால் பொன்னம்பல மேட்டிலிருந்து செயற்கையாகக் (சூடம் கொளுத்தி) காட்டப்படுகிறது என்பது நிரூபிக்கப் பட்டு விட்டது. கேரளப் பகுத்தறி வாளர்கள் நேரில் சென்று கையும், களவுமாகப் பிடித்து, நிழற்படங்கள் எடுத்து அம்பலப்படுத்தி விட்டனர்.

கேரள மாநில முதல் அமைச்சர் ஈ.கே. நயினர், தேவசம் போர்டு, இந்து அறநிலையத்துறை அமைச்சர், அறக் கட்டளைக்காரர்கள் ஆகிய அத் தனைப் பேரும் மகரஜோதி என்பது உண்மையல்ல என்று ஒப்புதல் வாக்கு மூலம் கொடுத்துள்ள நிலையில், கனடா வரை குடியேறிய பார்ப்பனீயம் தன் பித்தலாட்டக் கடையை விரித்துப் போனி செய்கிறது - இதுதான் பார்ப்பனர்களின் பச்சையான - அம்மணமான யோக்கியதை!

பொதுவாக வெளிநாடுகளில் தமிழ்ச் சங்கம், பாரதி சங்கம் - என் றாலே தமிழர்கள் விழிப்பாக இருக்க வேண்டும் - அவை பெரும்பாலும் பார்ப்பனர்களின் முகமூடிகளே!

தமிழ் ஓவியா said...

காம -க் கே(கோ)டி!

டில்லியில் நடப்பது போன்ற பெண் கள்மீதான பாலியல் வன்முறை சம்ப வங்கள் திடீரென நிகழ்ந்து விடுவ தில்லை. கொஞ்சம் கொஞ்சமாக ஏற் பட்ட கலாச்சார மாற்றமும், பண்பாட்டுச் சீரழிவும், நாம் பின்பற்றிவரும் மேற் கத்திய கலாச்சாரமும்தான் இத்தகைய பாலியல் பலாத்கார வன்முறை சம்பவங்களுக்கு முக்கிய காரணம்.
- பூரி சங்கராச்சாரியார் நிஸ்சலானந்தா

மேற்கத்திய கலாச்சாரம் தான் காரணமா? இந்து மதக்கலாச்சாரத் தில் என்ன வாழ்கிறது? இந்து மதத் தில் கற்பழிக்காத கடவுள் உண்டா? தாருகாவனத்து ரிஷிப் பத்தினிகளின் கற்பைச் சூறையாடியவன்தானே அவர் களின் சிவன்? இந்த யோக்கியதையில் மேல் நாட்டுக் கலாச்சாரம்தான் பாலி யல் வன்முறைக்குக் காரணம் என்று சொல்லித் தப்பிக்கப் பார்க்கலாமா?

பெற்ற மகளையே பெண்டாட்டி ஆக்கியவன்தானே இந்து மதத்தின் படைத்தல் கடவுளான பிர்மா?

புராணக் குகைகளுக்குள் நுழை வானேன்? காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதியின் காமம் (கோடி) ஊர் சிரிக்கிறதே! பார்ப் பனக்குல அம்மையாரான - எழுத் தாளர் அனுராதா ரமணன் என் கையைப் பிடித்து இழுத்தார் காஞ்சி சங்கராச்சாரியார்! என்று தொலைக் காட்சியிலேயே கண்ணீரும் கம்பலை யுமாக அழுது புலம்பவில்லையா! என் எதிரிலேயே ஒரு பெண்ணைப் புணர்ந்தார் என்று புட்டுப் புட்டு வைக்க வில்லையா?

தமிழ் ஓவியா said...

பெண்கள் ஒன்லி

ஏற்காட்டில் வெள்ளக் கடை கிராமம். ஒவ்வொரு ஆண்டும் பொங் கல் விழா முடிந்தவுடன் அங்குள்ள மாரியம்மன் கோவிலில் ஊர் மக்கள் ஒன்றுகூடி, பூஜை நடத்துவார்கள். அப்பொழுது ஆண்கள் எல்லாம் ஊரை விட்டு வெளியேறிட வேண்டும், கார ணம் - பெண்கள் எல்லாம் நிர்வாண மாகப் பூஜை செய்வதுதான்.
கடவுளை வணங்கு கிறவன் காட்டு மிராண்டி என்றால் கத்தோ கத்தோ என்று கதறும் பக்த சிகாமணிகள் இந்தக் கேவலத்துக்கு, ஆபாசத்துக்கு எந்த செல்லப் பெயரைச் சூட்டப் போகிறார்களாம்.

சென்னையையடுத்து பெரிய பாளையத்தம்மன் கோயிலிலும் பெண்கள் வேப்பிலை ஆடையை அணிந்து கொண்டு வழிபட்டு வரு கின்றனரே (வேப்பிலை என்ன உறுப் புகளை மறைக்கும் அளவுக்கு பெரிய இலையா - ஆடையா?)

உருவமற்றவன் கடவுள் என்று ஒரு பக்கத்தில் சொல்லிக் கொண்டு இப்படி பெரியபாளையத்தம்மன் என்றும், மாரியம்மன் என்றும், காளியம்மன் என்றும், கபாலீஸ்வரன் என்றும் (பிச்சைக்காரன் போல கையில் கபால ஓட்டை ஏந்திக் கொண்டுள்ளான்) கூறி அந்தந்த கோயில்களுக்கும் ஆபாச மான தலப் புராணங்களை அள்ளி விட்டு, மக்களிடத்தில் மறைந்திருக்கும் பாலியல் உணர்வுகளைத் தூண்டுவது தான் பக்தியாம்! வாயாலா சிரிக்க முடிகிறது?

தமிழ் ஓவியா said...

அம்மா பேசுகிறார்...

இப்பொழுது ஆண்கள் எல்லாம் அம்மாவாகி விட்டார்கள்; மேல் மரு வத்தூரில் ஓர் அம்மா - இப்பொழுது வேலூர் - அரியூரில் இன்னொரு அம்மா! அம்மாவா? - சும்மாவா! எல்லாம் போட்டிக் கடைதான்!

54 புரோகிதர்களுக்குக் கோதா னம் செய்து புரோகிதர்கள் பற்றி உச்சிமோந்து பேசித் தள்ளியுள்ளார்.

தெய்வ அருள் இருந்தால்தான் புரோகிதர் ஸ்தானம்; மனிதருக்கும், தெய்வத்திற்கும் பாலமாக இருப்ப வர் கள் தான் புரோகிதர்கள் என்று அம்மா, சும்மா பொரிந்து தள்ளி யுள்ளார். அதெல்லாம் சரிதான்; இந்த அம்மா பார்ப்பனர் அல்லவே - அப்படி இருக்கும் பொழுது எப்படி புரோகிதர் அர்ச்சகர் ஆனார்? ஆகமத்தில் இடம் இல்லாதபோது எப்படி தனியே தங்கத்தால் கோயில் கட்டி சூத்திரர் ஒருவர் அர்ச்சகர் ஆக முடியும்? - அது ஒரு முக்கிய கேள்விதான் - முடிந் தால் அவர் பதில் சொல்ல முயலட்டும்.

தெய்வ அருள் இருந்தால்தான் புரோகிதர் ஆக முடியும் என்று சிலாகித்துள்ளாரே - காஞ்சிபுரத்தில் மச்சேஸ்வரர் மச்சேஸ்வரர் என்று ஒரு கோயில் இருப்பது வேலூர் அம்மா வுக்குத் தெரியுமா?

அங்கே தேவநாதன், தேவநாதன் என்று ஒரு அர்ச்சகப் பார்ப்பான் இருந்தானே தெரியுமா? அவன் கதை நாடு முழுவதும் நாறியதே நினைவு இருக்கிறதா?

அவன் என்ன செயதானாம்? கோயிலுக்குச் சாமி கும்பிட வந்த பக்தைகளை மயக்கி கோயில் கரு வறைக்குள்ளேயே அய்யய்ய... எழுதக் கை கூசுகிறதே!

கர்ப்பக் கிரகம் என்ற பெயரும் பொருத்தம் தானோ! கர்ப்பத்தை உண்டாக்கும் வேலையை அல்லவா செய்தான்! அந்தக் கேவலத்தைக் கைப்பேசி மூலம் நிழற்படம் எடுத்து குறுந் தகடாக்கி (சிடி) விலைபேசி இருக்கிறானே - அதனை அந்தப் பாதிக் கப்பட்ட பெண்களிடம் காட்டிக் காட்டி அச்சுறுத்தி, மீண்டும் மீண்டும் அந்தப் பக்தைகளைக் கோயில் கர்ப் பக்கிரகத்தில் காமவேட்டை நடத் திடவில் லையா? அதன்பின் சிறைக் கம்பிகளை எண்ணவில்லையா?

தெய்வ அருள் பெற்றிருந்தால்தான் புரோகிதன், அர்ச்சகன் ஆக முடியும் என்பது இதுதானோ!

தமிழ் ஓவியா said...


தலைவர் தந்த 20 அம்ச திட்டங்கள்!


திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழு கூட்டத் தில் (19.1.2013) கழகத் தலைவர் 20 அம்ச திட்டங்களைத் தந்துள்ளார்.

கழகத் தோழர்களே! அவை ஒவ்வொன்றும் முத்தானவை - முன்னெடுத்துச் செல்லப்பட வேண் டியவை - முடித்துக் காட்டப்பட வேண்டியவை!

கழகத்துக்காக என்பது இரண்டாவது தான்; நமது சமுதாயத்துக்காகத்தான் என்பதே முதல் நிலை!

விடுதலை சந்தா சேர்ப்பு என்றால் வியாபாரத் துக்காகவா, கழகத்துக்காகவா? தமிழின மக்களின் விடுதலைக்காகத்தானே! மூடநம்பிக்கையிலிருந்து ஜாதீய மனப்பான்மையிலிருந்து - பழமைப் பிற் போக்குத் தனங்களிலிருந்து - பெண்ணடிமைத் தனத்திலிருந்து அடிமைப்படுத்தும் ஆரியப் பண்பாட்டுப் படையெடுப்பிலிருந்து விடுதலை என்று அர்த்தம்.

தமிழன் வீடு என்பதற்கு அடையாளம் விடுதலை என்று மறைந்த தவத்திரு குன்றக்குடி அடிகளார் சொன்னது அழகுச் சொற்கோவையல்ல - ஆழமான பொருளில் ஆணி அடித்ததுபோல உதிர்க்கப்பட்ட ஒப்பரும் கருத்துக் கருவூலமாகும்.

ஆசிரியர் அவர்களின் 50 ஆண்டு விடுதலைப் பணியின் அருமையைக் காலக் கல்வெட்டாகப் பதிக்கும் வகையில், 50 ஆயிரம் விடுதலை சந்தாக் களை அரும்பாடுபட்டுத் திரட்டியதால் விடுதலைக் குக் கிடைத்த புதிய வாசகர்களைக் கேட்டுப் பாருங்கள் - விடுதலை மூலம் அவர்கள் பெற்ற உணர்வுகளை, முற்போக்கு எண்ணங்களை உசாவிப் பாருங்கள் - உள்ளந் திறந்து பாராட்டுகிறார்கள். சந்தா முடிவடைந்த நிலையில் அவர்களே முன்வந்து சந்தாவைப் புதுப்பிக்கக் காட்டும் ஆர்வத்தைக் கொஞ்சம் அசை போட்டுப் பாருங்கள். அப்பொழுது தெரியும் - தவத்திரு அடிகளாரின் அருஞ் சொற் களில் பதவுரை பொழிப்புரையின் அருமையும் பெருமையும்.

கழகப் பிரச்சாரத்தைப் பற்றி கழகத் தலைவர் எடுத்துரைத்தது - கறாராகப் பின்பற்றத்தக்கவை யாகும். காலத்துக்கேற்ற பிரச்சார அணுகுமுறைகள் தேவை! தேவை!! அறிவியல் கண்காட்சி என்பதும் வெளியீடுகள் என்பதும், புத்தகச் சந்தை என்பதும் பெரும் பாய்ச்சலாகும். ஆப்பிள் முறையில் விடுதலை, இணையதள விடுதலை, வீடியோ புத்தகம் என்பதெல்லாம் காலத்தின் பசியை ஆற்றும் சிறப்பு விருந்தாகும்.

தேவையானவற்றைச் செய்து கொடுத்தாகி விட்டது, தேவையெல்லாம் கழகப் பொறுப்பாளர் களும், கழகத் தோழர்களும், பிரச்சாரகர்களும் எடுத்துக்கட்டிக் கொண்டு களத்தில் இறங்க வேண்டியது தான்.

கருஞ்சட்டைத் தோழர் என்றால் அவன் 24 மணி நேர சேவகன்தான்! கண்மூடாக் கடிகாரம்தான் - கருத்து பிரச்சாரத்தின் மூலம் பழைமைகளைத் தலைகீழாகப் புரட்டியடிப்பவன்தான்!

களப்பணியில் கருஞ்சட்டைக்காரர்களுக்கு இல்லாத அனுபவமா? ஒரு கரித்துண்டு மூலம் சுவர்களில் எழுதப்பட்ட பெரியாரின் கருத்துக்கள் பல இடங்களில் பிரளயத்தை உண்டு பண்ணிய தில்லையா!

ஒரு சுவர் எழுத்தாளர் சுப்பையனால் தார் கொண்டு எழுதப்பட்ட தந்தை பெரியாரின் நெருப்புத் துண்டக் கருத்துக்கள் படித்தோரைக் கிறுகிறுக்கச் செய்யவில்லையா! அதுவரை மண்டைக்குள்ளிருந்த பிற்போக்குக் களிமண் வெளியே தள்ளப்பட்டு புத்தம் புதிய புரட்சிச் சிந்தனை மலர்கள் பூத்து மணம் கமழச் செய்யவில்லையா!
கழகம் வெளியிட்ட ஒரு சிறு துண்டறிக்கை ஆரியக் கோட்டையைத் தூள் தூளாக்கிட வில்லையா?

நம்மால் முடியும் தோழர்களே! நமது தலைவர் சொன்னது வெற்றுச் சொற்கள் அல்ல.

நம்மால் முடியாதது மற்றவர்களால் முடியவே முடியாது; - மற்றவர்களால் முடியாதது நம்மால் மட்டுமே முடியும் என்பது - நமது கொள்கை உரம் - அதனைச் சாதித்திட எந்த விலையும் கொடுக்கத் தயாராக இருக்கும் நமது உறுதியை எடை போட்டுத்தான் கழகத் தலைவர் சொன்னார்.

சொன்னபடி நடந்தும் வருவதால் - சாதித்துக் காட்டி வருகிறோம்.

அடுத்து என்ன செய்வது - எதை முன்னெடுப்பது என்கிற திகைப்பு - தயக்கம் மற்றவர்களுக்கு; நமக்கோ அப்படியல்ல. நம் முன் பணிகளும் கடமைகளும் கொட்டிக் கிடக்கின்றன.

தந்தை பெரியார் என்ற தத்துவச் சுடரை கையில் ஏந்திப் புறப்பட்டோமானால், சமுத்திரமும் கால் முழம்தான் - மாமலையும் சிறு கடுகுதான்.
2013இல் நமது பணிகள் கண்டு எதிரிகள் நடுங்க வேண்டும் - துரோகிகள் திருந்த வேண்டும் - தமிழர்கள் மகிழ வேண்டும்.

புறப்படு தோழா புறப்படு!

புது நானூறு படைப்போம்! - புது முறுக்கோடு!


தமிழ் ஓவியா said...

பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் விண்வெளி தொழில்நுட்பத் திருவிழா!


ஆராய்ச்சித் திறன் மேம்பட்டு மாணவர்களே,

நீங்கள் எல்லாம் விண்வெளியில் பறக்க வேண்டும்!

மேனாள் குடியரசுத் தலைவர் மேதகு ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் ஊக்கவுரை

பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தில் விண்வெளி தொழில் நுட்ப திருவிழாவை மேனாள் இந்திய குடியரசுத் தலைவர் மேதகு டாக்டர் ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் அவர்கள் தொடங்கி வைத்தார்கள். இடமிருந்து வலம்: பெங்களூரு பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனத்தின் விஞ்ஞானி மற்றும் தலைமை நிர்வாகி டாக்டர் கு. தமிழ்மணி, துணைவேந்தர் டாக்டர் நல். இராமச்சந்திரன், வேந்தர் டாக்டர் கி.வீரமணி, இந்தியாவின் மேனாள் குடியரசுத் தலைவர் மேதகு டாக்டர் ஆ.ப.ஜெ. அப்துல்கலாம், ரஷ்யன் கவுன்சில் ஜெனரல் நிக்கோலஸ் லிஸ்டபோவ், புதுடில்லி இந்தியா ரஷ்யா கூட்டுத் திட்டம் பிரமோஸ் ஏவுகணை தலைமை நிர்வாகி விஞ்ஞானி டாக்டர் ஏ. சிவதாணுப்பிள்ளை, அமெரிக்கா மேரிலாண்ட் மாகாண துணைச் செயலாளர் டாக்டர் ராஜன்நடராஜன், இணைவேந்தர் டாக்டர் வீகேயென் கண்ணப்பன் ஆகியோர் உள்ளனர். (தஞ்சை,வல்லம் - 21.1.2013)

வல்லம். ஜன. 21 விண்வெளியில் நம் மாலும் பறக்க முடியும் என்ற தன்னம்பிக்கை மாணவர் களுக்கு ஏற்பட வேண்டும் என்றார் இந்தியாவின் மேனாள் குடியரசுத் தலைவர் மேதகு ஆ.ப.ஜெ. அப்துல்கலாம் அவர்கள்.

பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தில் விண்வெளி தொழில்நுட்ப திருவிழா தொடங்கியது. தொடக்க விழா நிகழ்ச்சிக்கு பல்கலைக்கழக வணக்கத் திற்குரிய வேந்தர் டாக்டர் கி.வீரமணி தலைமை வகித்தார். புதுதில்லி இந்தியா ரஷ்யா கூட்டுத்திட்டம் பிரமோஸ் ஏவுகணை தலைமை நிர்வாகி மற்றும் புகழ் பெற்ற விஞ்ஞானி டாக்டர் ஏ.சிவதாணுப்பிள்ளை பெங்களுரு பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனத்தின் மேன்மை வாய்ந்த விஞ்ஞானி, மற்றும் தலைமை நிர்வாகி டாக்டர் கு.தமிழ்மணி ரஷ்யன் கவுன்சில் ஜெனரல் நிக்கோலஸ் லிஸ்டபோவ் ஆகி யோர் சிறப்புரை யாற்றினார். பல்கலைக்கழக இணைவேந்தர் டாக்டர் வீகேயென் கண் ணப்பன் முன்னிலை வகித்தார். விண்வெளி தொழில்நுட்ப திருவிழாவை மேனாள் இந்திய குடியரசு தலைவர் மேதகு டாக்டர் ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் அவர்கள் தொடங்கி வைத்து உரையாற்றினார். அவர் தமது உரையில் இங்கு வருகை தந்துள்ள மாணவர்களை ஆராய்ச்சி திறன் மேம்பட்டு விண்வெளியில் பறக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். சிறந்த சக்தியுடன் பிறந்துள்ள நீங்கள் என்னால் முடியும் நம்மால் முடியும் இந்தியாவில் முடியும் என்ற வார்த்தைகளை நினைவில் நிறுத்திக்கொண்டு செயல் பட்டால், நிச்சயமாக இந்தியாவை முன்னேற்ற முடியும் எனக்கூறி தான் எழுதிய நான் பறந்து கொண்டே இருப்பேன் என்னும் கவிதை வரிகளை மாணவர்களிடையே வாசித்து, அவர்களையும் கூற வைத்து, இவ் வரிகளை அனைவரும் ஏற்று நல்ல எண்ணங் களுடனும், உயர்ந்த குறிக்கோளுடனும், ஆகாய உலகில் நான் பறப்பேன் என்றும் பூமியில் ஒருபோதும் தவழ மாட்டேன் என்றும், ஆகாயத்தில் பறந்துகொண்டே இருப்பேன் என்னும் வரிகளை கூறி விழா பேருரையாற்றினார். முன்னதாக வருகை தந்த அனைவரையும் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் நல்.இராமச்சந்திரன் வர வேற்று உரையாற்றினார்.

தமிழ் ஓவியா said...

தானியங்கி தொழில் நுட்ப உயராய்வு மய்யம் திறப்பு

பல்கலைக்கழக ஆராய்ச்சி புல முதன்மை யர் டாக்டர் குமார் நன்றி கூறினார். முன்ன தாக பெரியார் தொழில்நுட்ப வணிக காப் பகத்தில் நடைபெற்ற தானியங்கி தொழில் நுட்ப உயராய்வு மய்ய திறப்பு விழாவை மேனாள் இந்திய குடியரசு தலைவர் மேதகு டாக்டர் ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் அவர்கள் தொடக்கி வைத்தார். இந்நிகழ்ச் சியில் பல்கலைக்கழக வணக்கத்திற்குரிய வேந்தர் டாக்டர் கி.வீரமணி, ஜெர்மனி பாஸ் ரெக்ஸ்ராத் டிரைவ் அன்டு கன்ட்ரோல் அகாடமி இயக்குநர் பீட்டர் கார்சைசா, புது தில்லி இந்தியா ரஷ்யா கூட்டுத்திட்டம் பிரமோஸ் ஏவுகணை தலைமை நிர்வாகி மற்றும் புகழ் பெற்ற விஞ்ஞானி டாக்டர் ஏ.சிவதாணுப்பிள்ளை, பூனா நவீன தொழில் நுட்ப தற்காப்பு நிறுவனத்தின் துணை வேந்தர் டாக்டர் ஆர். பிரகலாத, பெங்களுரு இந்திய அறிவியல் கழகத்தின் விண்வெளி துறை பேராசிரியர் டாக்டர் ஜி.ஜெகதீஷ், பாஸ்ரெக்ஸ்ராத் இந்தியா பிரைவேட், லிமிடெட் துணைத்தலைவர் ஆர்.எஸ்.இராஜ் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பின்னர் முதன்மை வளாகத்தில் நடைபெற்ற கருத்துக்கண்காட்சிகளை துவக்கி வைத்து பார்வையிட்டார். பின்னர் பல்நோக்கு உள்விளையாட்டு அரங்கில் இடம்பெற்றுள்ள பிரமோஸ் ஏவுகணை மற்றும் உள்ள கண்காட்சிகளை துவக்கி வைத்து பார்வையிட்டார். நிகழ்ச் சியில் திருவனந்தபுரம் விஎஸ்எஸ்சி, இஸ்ரோ இயக்குநர் டாக்டர் பி.எஸ்.வீரராகவன், சென்னை டிஆர்டிஓ இயக்குநர் டாக்டர் பி.சிவக்குமார், பெங்களூரு விண்வெளித் துறை பேராசிரியர் ஜி.ஜெகதீஷ், அமெரிக் காவின் மெரிலன் ஸ்டேட் செகரிட்ரி ராஜன், ஆர்.நடராஜன் ஆகியோர் கலந்து கொண் டனர். விழாவில் பல்கலைக்கழக பதிவாளர் டாக்டர் மு.அய்யாவு, ஆட்சி மன்றக் குழு உறுப்பினர் வீ.அன்புராஜ், வருமான வரி ஆலோசகர் ராசரத்தினம், டாக்டர் சுந்தர ராஜன், பல்கலைக்கழக கூடுதல் பதிவாளர் கே.சுவாமிநாதன் கல்விப் புல முதன்மையர் டாக்டர் மு.அசோக்குமார், பவர் அமைப்பு இயக்குநர் டாக்டர் உ.பர்வீன், பெரியார் மருந்தியல் கல்லூரி தாளாளர் ஞான செபாஸ்டின், முதல்வர் டாக்டர் செந் தாமரை, பெரியார் நூற்றாண்டு பாலிடெக் னிக் கல்லூரி முதல்வர் டாக்டர் மல்லிகா, பல்கலைக்கழக அமைப்பு வரைவு முறைகள் இயக்குநர் டாக்டர் எம்.தவமணி மற்றும் புரா கிராம ஊராட்சி மன்ற தலைவர்கள் சகோதர கல்வி நிறுவனங்களின் பொறுப்பாளர்கள், தஞ்சை மாவட்ட அனைத்துப் பள்ளி, கல்லூரி மாணவ, மாண விகள் பொதுமக்கள், பல்கலைக்கழக பேராசிரியர்கள், மாணவர் கள், பணியாளர்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

தமிழ் ஓவியா said...


வீழ்ந்துவிடும்


பார்ப்பான் என்கிற பெரிய மரத்திற்கு வேர் கடவுளும், மதமுமே யாகும். இந்த வேரை அழித்தால் மரம் தானாகவே வீழ்ந்துவிடும். - (விடுதலை, 20.11.1964)

தமிழ் ஓவியா said...


இலங்கையில் நடப்பது என்ன?


ஈழத் தமிழர் பண்பாடு மற்றும் பொருளாதாரத்தை சீர்குலைக்கும் இலங்கை அரசைத் தடுத்து நிறுத்த வேண்டும்

பிரதமருக்கும், சோனியாவுக்கும் கலைஞர் கடிதம்

சென்னை, ஜன. 21- திமுக தலைவர் கலைஞர் அவர்கள் பிரதமர் மன்மோகன்சிங் அவர் களுக்கும், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி அவர்களுக்கும் நேற்று கடிதம் ஒன்றை அனுப்பி யுள்ளார். அதில் இலங்கையில் தமிழர் வாழும் பகுதிகளில் சிங் கள அரசு திட்டமிட்டு மேற் கொண்டு வரும் அத்து மீறல் மற்றும் அராஜக நடவடிக்கை களை தடுத்து நிறுத்த வேண்டும்;

தொடர்ந்து அந்தக் கடிதத்தில் தமிழ் மொழி கலாச்சாரங்களை நீர்த்துப் போகச் செய்வதிலும், தமிழர்களின் பொருளாதார வாழ்வை சீர்குலைத்திட முயற் சித்து வருவதையும் எடுத்துக் காட்டியுள்ளார். 89 கிராமங் களுக்கு சிங்களப் பெயரை சூட் டியுள்ளது என்றும் ஆதாரத்து டன் அந்தக் கடிதத்தில் கலைஞர் அவர்கள் விவரித்துள்ளார்.

பிரதமர் மன்மோகன்சிங் அவர்களுக்கும் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி அவர் களுக்கும் தலைவர் கலைஞர் அவர்கள் அனுப்பியுள்ள கடி தம் வருமாறு:-

இலங்கையில் தமிழர் பகுதி யில் ஏற்பட்டு வரும் இன்னல் கள் குறித்து தங்களின் மேலான கவனத்திற்கு கீழ்க்காணும் தக வல்களை கொண்டு வருகிறேன்.

இலங்கை அரசாங்கம் தமிழ் மொழி, தமிழ்க் கலாச்சாரம், தமிழர் மதம் ஆகியவைகளை அடியோடு ஒழிக்கும் நடவடிக் கைகளை தீவிரமாகவும் முனைப்போடும் மேற்கொண்டு வருகிறது. அத்துடன் காலங் காலமாக சரித்திரத்துடன் பின்னிப் பிணைந்து வாழ்ந்து வரும் தமிழர்களின் நிலையை நீர்த்துப் போகச் செய்வதில் அதிக அக்கறை கொண்டு செயல் படுகிறது.

தமிழர்கள் வாழும் கிராமங் களின் பெயர்களை மாற்றுவது, மாவட்ட, நகர,கிராமங்களின் எல்லை களை மாற்றி அமைப் பது, இந்துக் கோயில்களை அழிப்பது, உள்நாட்டில் இடம் பெயர்ந்து வாழும் தமிழர் குடும்பங்களுக்கான உதவித் தொகை மற்றும் மறுவாழ்வுக் கான உரிய நிதியை ஒதுக்காதி ருப்பது, அத்துடன் அங்குள்ள பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றுமுள்ள உள்கட்டமைப் புகளுக்கு உரிய சீரமைப்பு நிதியை ஒதுக்காதது, தமிழர் வாழும் பகுதிகளில் சிங்களர் களை குடியமர்த்துவது, தமிழர் பகுதிகளில் பொருளாதார வாழ்வில் சிங்களவர்கள் தலை யிட்டு அவ்வாறு செய்வதன் மூலம் தமிழர்களை ஏழ்மையில் தள்ளுவது, தமிழர்களை துன் புறுத்தும் வண்ணம் ஏராள மான சிங்கள ராணுவ முகாம் களை உருவாக்குதல் உள்ளிட்ட ஏராளமான தந்திர நடவடிக் கைகளை இலங்கை அரசாங் கம் மேற்கொண்டு வருகிறது.

அங்கு வாழும் தமிழர்கள் ஒடுக்கப்பட்ட சூழ் நிலைகளில் வாழ்ந்து வருகிறார்கள்.

இலங்கையில் வாழும் தமி ழர்கள் எந்த அளவிற்கு ஒடுக் கப்பட்டு, நசுக்கப்பட்டு, துன் புறுத்தப்பட்டு அவல நிலையில் இருந்து வருகிறார்கள் என்ப தற்கு இங்கே சில புள்ளி விப ரங்களை தெரிவிக்கின்றேன். தமிழர்கள் வாழும் 89 கிராமங் களின் பெயர்கள் சிங்களப் பெயருக்கு மாற்றப் பட்டு உள்ளன.

367 இந்து ஆலயங்கள் இடிக்கப்பட்டுள்ளன. முல்லைத் தீவு மாவட்டத்தில் மட்டும் 148 சிறிய மற்றும் 13 பெரிய இராணுவ முகாம்கள் உள்ளன. (89 கிராமங்களின் பட்டியல் அருகே இணைக்கப் பட்டுள்ளன).

ஒரு மாபெரும் கலாச்சார மும் பழங்கால மதமும் நம் கண்முன்னே நிர்மூலமாக்கப் பட்டு வருகிறது. உலகின் மிகப் பெரும் ஜனநாயகமும் பல்வேறு மொழி, இனங்களைக் கொண் டதுமான இந்தியா தன்னுடைய நல்லுறவைப் பயன்படுத்தி சிங் கள அரசின் இத்தகைய கொடூர நடவடிக்கையை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டிய தார் மீக கடமை கொண்டுள்ளது.

இதன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டு மாய் கேட்டுக் கொள் கிறேன்.

இவ்வாறு பிரதமர் மன் மோகன்சிங் அவர் களுக்கும், காங்கிரஸ் தலைவர் திருமதி சோனியாகாந்தி அவர்களுக்கும் கலைஞர் அவர்கள் கடிதம் எழுதியுள்ளார்.

தமிழ் ஓவியா said...


சென்னை புத்தகக் காட்சியில் வெளியிடப்பட்ட புதிய புத்தகங்கள்


சென்னை, ஜன. 21- சென் னையில் நடைபெற்று வரும் 36ஆவது புத்தகக் காட்சியில் பெரியார் புத்தக நிலையம் சார்பில் (கடை எண்: 227) மறு பதிப்பில் வெளியிடப்பட்ட புதிய புத்தகங்கள் கிடைக்கும். அதன் விவரம் வருமாறு:

தமிழன் தொடுத்த போர்

சிதைக்கப்பட்ட தமிழர் பண்பாட்டின் மீட்சிக்கான முதல் மக்கள் போராட்டமான 1937 முதல் 1939 வரை நடைபெற்ற இந்தி எதிர்ப்பு போராட்ட வரலாற்றை விளக் கும் ஒரு சுவையான இலக்கி யமே இந்த நூல்.

தமிழனின் மொழியை சிதைக்க அன்றைய முதலமைச் சரான ஆச்சாரியாரின் கட்டாய இந்தி திணிப்பை கண்டித்து நடைபெற்ற இந்தி எதிர்ப்பு மாநாடுகள், அதில் தலைவர் களின் உரைகள், தமிழனை தட்டி எழுப்பிய தந்தை பெரியார் அவர்களின் போர் பிரகடனம், மறியல் நிகழ்வுகள், அதில் பங்கேற்ற வீரர்கள் பற்றிய குறிப்புகள், தாளமுத்து நடராசன் ஆகியோரின் மரணம் உள்ளிட்ட ஏராளமான தகவல் கள் அடங்கிய நூல்.

இந்தி எதிர்ப்புப் போராட் டத்தில் ஈடுபட்ட தலைவர்கள் பற்றிய குறிப்புகள், தளபதி பட்டுக்கோட்டை அழகிரி தலைமையிலான தமிழர் பெரும்படையின் பணிகள், வீராங்கனைகளின் போர் முரசு, தந்தை பெரியார் மீதான வழக்கு, தண்டனை, பெரியார் விடு தலை, இந்தி நீக்கப்பட்ட வெற்றி செய்தி ஆகியவை விளக்கப் பட்டுள்ளன. திராவிடர் இயக்க இளைஞர்கள் கையிலும் இருக்க வேண்டிய வரலாற்று ஆய்வா ளர்கள் சுவையான காவியமாகும். நன்கொடை: 80/-.

பொன்மொழிகள் (தடை நீக்கப்பட்டது)

1950ஆம் ஆண்டு வெளி வந்து தடை செய்யப்பட்ட நூல். இந்நூலுக்காக தந்தை பெரியார் அவர்களும், ஆரிய மாயைக்காக அண்ணாவும் கைது செய்யப்பட்டனர் என்பது ஒரு வரலாற்றுப் பதி வாகும்.

இதற்கான தடை திராவிடர் கழகத்தின் வேண்டுகோளுக்கு இணங்க எம்ஜிஆர் அரசால் அவரது நூற்றாண்டையொட்டி 1979இல் நீக்கப்பட்டது. அதை தற்போது திராவிடர் கழகம் ஆறாம் பதிப்பாக வெளியிடு கிறது. தந்தை பெரியாரின் பொன்மொழிகள் அரசியல், மதம், கடவுள், சமுதாயம், இயக்கம், காங்கிரஸ், ஆட்சி, மொழி, தொழிலாளி, திருக் குறள், திராவிடர் கழகம், தீண்டாமை, பகுத்தறிவு, சீர்திருத்தம், பொருளாதாரம் ஆகிய தலைப்புகளில் தொகுக் கப்பட்டுள்ளன.

இந்நூல் மாணவர்களுக்கு பரிசளிக்கத்தக்க வகையில் ஒவ்வொரு இயலுக்கும் தனித் தனியே பல்வேறு அய்யா படங் களுடன் அழகிய வடிவமைப் புடன் அமைக்கப்பட்டுள்ளது. அனைவரும் வாங்கி படிக்க வேண்டிய நூலாகும். மொத்த பக்கங்கள்: 64; நன்கொடை: ரூ. 25/-.

மதமும் - மூடநம்பிக்கையும்

இறுதி மூச்சடங்கும் வரை மாறாத, மாற்றப்பட முடியாத ஒரு சீரிய பகுத்தறிவாளராக வாழ்ந்து மறைந்த நாவலர் இரா.நெடுஞ்செழியன் அவர் களால் எழுதப்பட்ட நூல்.

கடவுள் நம்பிக்கையின் தோற்றம், தன்மைகள், ஆய்வு செய்து இவற்றை அறிவியல் பூர்வமாகவும், தத்துவ ரீதியா கவும் பல்வேறு வினாக்களை எழுப்புகிறது இந்நூல்.

அதிசயம், ஆவிகள், தேவதை கள், நல்ல காலம், கெட்ட காலம் போன்ற மூடநம்பிக்கை களை பகுத்தறிவு அடிப்படை யில் விளக்குகிறது இந்நூல். மனிதனின் முன்னேற்றப் பாதைக்கு மூட நம்பிக்கை களும், கடவுள் மத கோட்பாடு களும் எவ்வாறு தடைக்கற் களாக உள்ளன என்பதை இந்நூல் நன்கு விளக்குகிறது. பக்கங்கள்: 96; நன்கொடை: ரூ. 35/-

மேற்கண்ட மறுபதிப்பு நூல்கள் சென்னையில் நடை பெறும் 36ஆவது புத்தக சந்தை யில் கிடைக்கும். மேலும் விவரங்களுக்கு:

பெரியார் புத்தக நிலையம் பெரியார் திடல், 84/1, (50) வேப்பேரி, சென்னை - 600 007

தொலைபேசி: 044-26618163 பெரியார் மாளிகை, புத்தூர், திருச்சி - 620 017.

தொலை பேசி: 0431-2771815

தமிழ் ஓவியா said...

தந்தையின் ஸ்தானத்திலிருந்து தம் குடும்பத்தை உயர்த்தியவர் டாக்டர் சரோஜா பழனியப்பன் தமிழர் தலைவர் பாராட்டு!

சென்னை, ஜன. 21- தமது தந்தையார் மறைந்தபின் அந்த ஸ்தானத்திலிருந்து தம் சகோதரிகளை, சகோதரர்களை ஆளாக்கி உயர்நிலைக்குக் கொண்டு வந்தவர் டாக்டர் சரோஜா பழனியப்பன் என்றார் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி.

சென்னை சவேரா ஓட்டலில் நேற்று (20.1.2013) மாலை நடைபெற்ற டாக்டர் சரோஜா மருத்துவப் பணி பொன் விழாவில் உரையாற்றுகையில் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் குறிப்பிட்ட தாவது:

நட்பு வட்டம், உறவு வட்டம், தொண்டு வட்டம் என்று மூன்று வட்டங்களைச் சேர்ந்தவர்கள் கூடி மகிழும் தொண்டறத்தைப் போற்றும் விழா இது.

தந்தை பெரியார் அவர்கள் எத்தனையோ வகையில் தொண்டு விதைகளை விதைத்தார்கள்; அவை பூத்துக் காய்த்து, கனி கொடுக்கும் நிலை ஏற்பட்டது. அப்படிப் பூத்துக் காய்த்த குடும்பங்களுள் டாக்டர் சரோஜா பழனியப்பன் குடும்பமும் ஒன்று நன்றி மறவாத குடும்பம் இது!

நண்பர் பழனியப்பன்

நானும், டாக்டர் சரோஜா அவர்களின் இணை யர் பழனியப்பனும் அண்ணாமலைப் பல்கலைக் கழகக் கல்வித் தொட்டிலிலே தாலாட்டப்பட்ட வர்கள். திராவிடர் மாணவர் கழகத்தில் இணைந்து செயல்பட்டவர் நண்பர் பழனியப்பன்.

தில்லை தந்த முத்து அவர். டாக்டர் சரோஜா அவர்களின் தந்தையார் அய்யா தியாகராசன் அவர்கள் உழைப்பின் உருவம் - தியாகத்தின் வடிவம்.

தன் பெண் பிள்ளைகளை பெண்ணாக வளர்க்க வில்லை - ஆணாக வளர்த்தார் - துணிச்சல் உள்ளவ ராக வளர்த்தார் - அந்த வளர்ப்பின் பலன்தான் நமது டாக்டர் சரோஜா.

நல்ல குடும்பம் ஒரு பல்கலைக் கழகம்

நல்ல குடும்பம் ஒரு பல்கலைக் கழகம் என்றார் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன். இந்தக் குடும்பம் அத்தகையதோர் குடும்பமாகும். அய்யா தியாக ராசன் அவர்களும், அவர்களின் இணையர் தில்லை யம்மாள் அவர்களும் தங்களை வருத்திக் கொண்டு பிள்ளைகளை வளர்த்தார்கள்; படிப்பைக் கொடுத் தார்கள்.

அஸ்திவாரம் எப்பொழுதும் கண்களுக்குத் தெரியாது - பூமிக்குள் புதைந்து கிடக்கும். வெளியில் நிமிர்ந்து நிற்கும் கட்டடம்தான் கம்பீரமாகத் தெரியும். அந்த நிலைதான் இந்தக் குடும்பத்திலும்.

தந்தையார் ஸ்தானத்திலிருந்து...

தம் தந்தையார் மறைந்த நிலையில், அந்தக் குடும்பத்தில் மூத்த பெண்ணாகிய டாக்டர் சரோஜா பழனியப்பன் அவர்கள் கடுமையாக உழைத்து, பொருளீட்டி, தம் தங்கைகளை, தம்பிகளைப் படிக்க வைத்து ஆளாக்கிய பெருங்கடமையைச் செய்திருக்கிறார். இந்த உணர்வு எத்தனைப் பேருக்கு வரும்?

டாக்டர் சரோஜா பழனியப்பன் அவர்களின் வளர்ச்சியில் எங்களுக்கு முக்கியப் பங்குண்டு. அவர் பூந்தமல்லியில் அரசு மருத்துவமனையில் பணி யாற்றிய குறுகிய காலத்திலேயே மருத்துவத் தொண் டால் பொதுமக்கள் மத்தியிலே நற்பெயரைச் சம்பாதித்தார்.

இந்த நிலையில், பண்ருட்டிக்கு மாற்றப்பட்டார். புதிய இடத்திற்குச் சென்றுவிடலாமா - இல்லை அரசுப் பணியைத் துறந்துவிட்டு, பூந்தமல்லியி லேயே தனியாக மருத்துவப் பணியை தொடர லாமா என்ற ஊசலாட்டம்.
அந்த நிலையிலே துணிந்து அரசுப்பணியைத் தூக்கி எறிந்தார். பூவிருந்தவல்லியிலேயே மருத்துவப் பணியை மேற்கொண்டு வளர்ச்சி அடையலாம் என்று நாங்களெல்லாம் தைரியம் சொன்னோம். தந்தை பெரியாருக்கோ அதில் உடன்பாடில்லை. அரசுப் பணி -மாத சம்பளம் ரூ.500 (அந்தக் காலத் தில் அது பெரிய சம்பளம்தான்!) அதைப் போய் இழக்கலாமா என்று கேட்டார்.

தந்தை பெரியாரிடம் நாங்கள் எடுத்துச் சொன்னோம் - டாக்டர் சரோஜா பழனியப்பன் அவர்களும் அப்பொழுது அங்கு இருந்தார். அய்யா, உள்ளூரில் டாக்டர் சரோஜாவுக்கு நல்ல பெயர் இருக்கிறது. கெட்டிக்கார டாக்டர். அரசு சம்பளத் திற்கு மேலாகவே சம்பாதிக்க முடியும் என்று அய்யாவிடம் எடுத்துச் சொன்னவுடன், ஏதோ ஏற்றுக் கொண்டார். அதுபோலவே, டாக்டர் சரோஜா அவர்களின் தந்தையாரு அரசுப் பணியை விட்டுவிடுவதை விரும்பவில்லை. எப்படியோ ஒரு வகையில் அரசுப் பணியைத் துறந்து பூவிருந்தவல்லி யிலேயே தங்கி மருத்துவப் பணியைக் கடந்த 50 ஆண்டுகளாகச் செய்து வெற்றிகரமாக ஒளிவீசிக் கொண்டிருக் கிறார்.

ஈதல், இசைப்பட வாழ்தல்

ஈதல், இசைப்பட வாழ்தல் பற்றி திருவள்ளுவர் குறிப்பிட்டுள்ளார். அதற்கு எடுத்துக்காட்டானவர் தான் நமது டாக்டர் சரோஜா அவர்கள்.

தமிழ் ஓவியா said...

பெரியார் மணியம்மை இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜிக்காக இந்த விழாவில் ஒரு லட்ச ரூபாய் நன்கொடை அளித்துள்ளார்.

அதற்காக நன்றியினைத் தெரிவித்துக் கொள் கிறேன். இப்படி தெரிந்தும் நன்கொடை செய்வார் - விளம்பரம் இல்லாமலும், வெளியில் தெரியா மலும் மற்றவர்களுக்குப் பொருளுதவி செய்யும் கொடை உள்ளத்துக்குச் சொந்தக்காரர்.
கை கொடுப்பார்

கஷ்டப்படுபவர்களுக்குக் கை கொடுப்பார் - கையும் கொடுத்துத் தூக்கியும் விடுவார். யாரிடமும் கைகொடுத்து அன்பைப் புலப்படுத்துவார். எத்தனைப் பெண்களுக்கு இந்தத் துணிவு வரும்? பெற்றோர்களுக்கு நல்ல மகளாக, துணைவருக்கு நல்ல இணையராக, பிள்ளைகளுக்குச் சிறந்த தாயாக, தங்கைகளுக்குத் தக்க சகோதரியாக, நாட்டுக்கு நல்ல குடிமகளாக பெரியார் கூறும் பெண் விடுதலைக் கொள்கைக்கு ஓர் எடுத்துக்காட் டாகத் திகழக்கூடிய சகோதரி டாக்டர் சரோஜா பழனியப்பன் அவர்களின் தொண்டறப்பணி வளர்க! வளர்க!! வாழ்க பெரியார்!! என்று கூறி முடித்தார்.

தமிழ் ஓவியா said...


டாக்டர் சரோஜா பழனியப்பன் மருத்துவப் பொன்விழா - பெருமக்கள் பாராட்டு -


பூவிருந்தவல்லி டாக்டர் சரோஜா பழனியப்பன் அவர்களின் 50 ஆண்டு மருத்துவப் பணிக்கான பாராட்டு விழா சென்னை சவேரா ஓட்டலில் 20.1.2013 மாலை 7 மணிக்கு நடை பெற்றது.

உற்றார், உறவினர்களும், நண்பர் களும், மருத்துவத் துறையைச் சேர்ந் தவர்களுமாக பல்துறை பெருமக் களும் அவ்விழாவில் கலந்துகொண் டனர்.
டாக்டர் சுகுணா அவர்களால் எழுதப்பட்ட தமிழ் வாழ்த்துப் பாட லுடன் விழா தொடங்கப்பட்டது. டாக்டர் சரோஜா பழனியப்பன் அவர் களின் பெயர்த்தி ராஜலட்சுமியின் நடன நிகழ்ச்சி இடம்பெற்றுவிட்டது.

டாக்டர் சரோஜா பழனியப்பன் அவர்களின் சகோதரர் டாக்டர் நடராசன் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். அவர் தன் உரையில் இது பெரியார் கொள்கை வழிப் பகுத்தறிவுக் குடும் பம் என்பதை அறிமுகப்படுத்திக் கொண்டார்.

டாக்டர் முத்து சேதுபதி

சிறுநீரகவியல் வல்லுநர் டாக்டர் மு.ஆ. முத்துசேதுபதி அவர்கள் தன் உரையில் குறிப்பிட்டதாவது:

நான் இந்தக் குடும்பத்தை 32 ஆண்டுகளாக அறிவேன். அவர்களின் அன்பு, பண்புகளால் பெரிதும் ஈர்க் கப்பட்டு குடும்ப நண்பர்களாக ஆகி விட்டோம். இந்தக் குடும்பத்தின் அன்பு மழையில் நனைந்தவர்கள் என்னை விட யாரும் இருக்க முடியாது.

மருத்துவப் பணிகளில் மகப்பேறு மருத்துவத் துறை என்பது மிகவும் கடுமையான ஒன்றாகும்.

அத்தகைய ஒரு துறையில் ஒருவர் 50 ஆண்டுகள் பணியாற்றினார் என்பது சாதாரணமானதல்ல.

மருத்துவப் பணிகளுக்கு இடையே எழுத்துப் பணியிலும் ஈடுபட்டு வருகிறார்.

நோய் தீர்ப்பதோடு மட்டுமல்லா மல், அவர்களின் குடும்பப் பிரச்சினை களில்கூட ஈடுபட்டு மூட நம்பிக்கைக்கு இடமின்றி அறிவார்ந்த வகையில் தீர்த்து வைக்கும் இவரின் சமூகநோக் குப் பணி பாராட்டத்தக்கதாகும்.

இந்தக் குடும்பத்துக்கும், பெரியா ருக்கும் இடையே இருந்த தொடர்பும், கொள்கைப்பற்றும் பெருமிதத்துக் குரியது.

எல்லா சாலைகளும் ஈரோடு சந்திப் போடு இணைந்துதான் தீரவேண்டும். அங்கிருந்துதான் தமிழ்நாடு முழு வதும் அறிவு வெளிச்சம் கிடைக்கிறது.

இவருக்குச் சேவை செய்யும் உணர்வு பெரியார் அவர்களின்மூலம் கிடைத்திருக்கிறது. பெரியார் வணக் கத்திற்குரிய தலைவர் ஆவார் - அவரின் தியாகம் மிகப்பெரியது - மனிதநேயம் மிகுந்தவர்.

ஆழ்ந்த அறிவும், ஆள்வினை உடைமையும் இருந்தால் எவரும் வெற்றி பெறுவார். டாக்டர் சரோஜா அம்மையார் அத்தகையவர் என்று குறிப்பிட்டார்.

வழக்குரைஞர் எம். இரவீந்திரன்

மூத்த வழக்குரைஞர் எம். இரவீந் திரன் அவர்கள் தம் பாராட்டுரையில் குறிப்பிட்டதாவது:

சமூகத் தொண்டு நோக்கின் கார ணமாக அரசு பணியைத் துறந்தவர் டாக்டர் சரோஜா பழனியப்பன் அவர்கள். தந்தை பெரியார் வழியைப் பின்பற்றி சாதனைகளைப் படைத்து வருகிறார்.

பெண்கள் முன்னேற்றத்திற்காக - பெரியார் பாடுபட்டார். அவர் வழி யைப் பின்பற்றியதால் புன்முறுவல் பூத்த முகத்துடன் மருத்துவத் தொண்டை செய்து வருகிறார்.

இந்த விழாவில் வீரமணி அவர்கள் பங்கேற்றுள்ளார்.

தம் கருத்துகளைக் கேட்பவர்கள் ஏற்கும் அளவிற்குப் பேசக்கூடிய ஆற்றல் படைத்தவர். இவர் மட்டும் எங்கள் வழக்குரைஞர் தொழிலுக்கு வந்திருந்தால், எங்கள் பிழைப்பு அதோகதிதான் என்று குறிப்பிட்டார்.

தமிழ் ஓவியா said...


டாக்டர் சரோஜா பழனியப்பன் நெகிழ்ச்சி - நன்றியுரை

தந்தை பெரியாரின் தொண்டால் கிடைக்கப் பெற்ற இட ஒதுக்கீடு - உபகாரத் தொகையால்தான் என்னைப் போன்றோர் டாக்டர் ஆனோம்!

சென்னை, ஜன. 21- தந்தை பெரியார் அவர்களின் உழைப் பால், தொண்டால் கிடைக்கப் பெற்ற இட ஒதுக்கீடு - உபகாரச் சம்பளம் இவற்றால்தான் என்னைப் போன்றவர்கள் டாக் டர்களாக ஆக முடிந்தது என்று மிகுந்த நெகிழ்ச்சியோடு குறிப்பிட்டார் - டாக்டர் சரோஜா பழனியப்பன்.

டாக்டர் சரோஜா பழனியப்பன் ஏற்புரை

ஏற்புரையாக டாக்டர் சரோஜா பழனியப்ப;ன அவர் கள் கூறியதாவது:

பத்து வயதுவரை பாட்டி யின் வீட்டில் வளர்ந்தேன். 11 வயது முதல் பெற்றோர்களோடு வாழ்ந்தேன். கூட்டுக் குடும்பத் தில் வளர்ந்தேன். சிறு வயதில் ஆண் பையன்களோடுதான் விளையாடுவேன். பம்பரம், கோலிக் குண்டு, கிட்டிப் புள் விளையாட்டுகள்தான்.

வறுமையிலும் செம்மை என்பார்கள் - அது என் அப்பா வுக்கு மிகவும் பொருந்தும்.

கடலூர் செயின்ட் அன்னீஸ் பெண்கள் உயர்நிலைப்பள்ளி யில் படித்தேன். பள்ளியில் நான் நன்றாகப் படிப்பதைப்பார்த்து என் பெற்றோர்களுக்குத் தலைமை ஆசிரியை கடிதம் ஒன்றை எழுதினார். உங்கள் மகளின் படிப்பை முடக்கி விடாதீர்கள். மேலே படிக்க வையுங்கள் என்று எழுதப் பட்ட கடிதம் அது. என் வாழ் நாளில் இதனை மறக்கவே முடியாது.

இன்னொருவரை நான் மறக்காமல் நினைவூட்ட வேண் டும். கடலூர் டாக்டர் பூஷணம் அவர்கள் நூறு ரூபாயை எடுத் துக் கொடுத்து என் கல்விக்கு ஊக்கம் கொடுத்தார்.

மிக முக்கியமாகக் குறிப் பிடவேண்டியது. பிற்படுத்தப் பட்டோருக்கு இட ஒதுக்கீடு, உபகாரச் சம்பளம் (ஸ்காலர் ஷிப்) இவையெல்லாம் கிடைக் காமல் இருந்தால் நான் டாக்ட ராக ஆகியிருக்க முடியாது. என் சகோதரிகளும் படித்திருக்க முடியாது. இதற்குக் காரண மான தந்தை பெரியார் அவர் களுக்கு என்றென்றும் கடமைப் பட்டுள்ளோம் - அந்த நன்றியை வாழ்நாள் முழுவதும் மறக்கவே மாட்டேன் (மிகவும் உணர்ச்சி வயப்பட்டுக் கண் கலங்கினார்).

இன்றும் என் அறையில் என் தலைக்குமேல் தந்தை பெரி யார் படத்தைத்தான் வைத்திருக் கிறேன்.

நான் படிக்கவேண்டும் என்று சொன்னபோது, இவள் என் னத்தப் படித்துக் கிழிக்கப் போகிறாள்? இவள் படித்துச் சம்பாதித்துக் கொடுக்கப் போகிறாளா? என்று கேள்வி மேல் கேள்வி கேட்டவர்கள் உண்டு. அவற்றையெல்லாம் சவால்களாக ஏற்றுக்கொண்டு வெற்றி பெற்றுக் காட்டியுள் ளேன்.

பழனியப்பன் அவர்கள் எனக்கு மாமன்... அவருக்கும், எனக்கும் திருமண ஏற்பாடு என்ற போது, ஜாதகப் பொருத் தம் சரியில்லை என்றார்கள். எனது துணைவர் பழனியப் பனோ பகுத்தறிவுவாதி. ஜாத கத்தைப்பற்றியெல்லாம் எனக்குக் கவலையில்லை என்று கூறினார். எங்கள் திருமணம் நடைபெற்றது. சிறப்பாகத்தான் வாழ்ந்து காட்டினோம். எங்கள் பிள்ளைகளும் நன்கு படித்து நல்ல முறையில்தான் வாழ் கிறார்கள்.

நான் சிறுமியாக இருந்த போது எங்கள் வீட்டுக்கு வந்து, டார்பிடோ ஏ.பி. ஜனார்த் தனம், எம்.கே. குப்தா போன்ற திராவிடர் கழகப் பேச்சாளர்கள் நாள் கணக்கில் தங்குவார்கள்.

அப்பொழுதுமுதலே கொள்கை ஈர்ப்பு எங்களுக்கு இயல்பாகவே வந்துவிட்டது. திராவிட நாடு, விடுதலை, குடிஅரசு எங்களுக்கு அறி முகமாகிவிட்டது. பகுத்தறிவுப் பாதை என்பது என் இளமை யில் தொடங்கப்பட்ட ஒன்று.

தந்தை பெரியார் அவர்க ளோடு முதல் சந்திப்பே என்னை மிகவும் பாதித்துவிட்டது.

சென் னைப் பொது மருத்துவமனை 42 ஆவது வார்டில் தந்தை பெரியார் அவர்கள் அனுமதிக் கப்பட்டு இருந்தார். பெரியா ரிடம் என்னை அறிமுகப்படுத் தினார்கள்.

பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த பெண்ணா? டாக்டர் படிப்பா? என் கையைப் பிடித்துக் கொண்டு வெகுநேரம் குலுக்கி மகிழ்ந் தார்கள். அப்படியொரு சந்தோ ஷம் அய்யா அவர்களுக்கு.

பூந்தமல்லியில் நான் பணி யில் சேர்ந்தது - பண்ருட்டிக்கு மாறுதல் ஆனது பற்றியெல் லாம் ஆசிரியர் வீரமணி அவர் கள் விரிவாகவே எடுத்துக் கூறி விட்டார். அனைவருக்கும் நன்றி என்று ஏற்புரையாற்றினார்.

டாக்டர் சரோஜா பழனி யப்பன் அவர்களின் மகன் வழக்குரைஞர் ராஜ்மோகன் அனைவருக்கும் நன்றி கூறினார்.

அனைவருக்கும் விருந்து அளித்து உபசரிக்கப்பட்டது. இரவு 9.30 மணியளவில் விழா சிறப்பாக நிறைவு பெற்றது.

தமிழ் ஓவியா said...

விழாத் துளிகள்

ஊ மருத்துவர் சரோஜா பழனியப்பன் மருத்துவப் பணி பொன் விழா மலரை, திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் வெளியிட, டாக்டர் ஜெயராமன் பெற்றுக் கொண்டார்.

ஊ விழா நாயகி டாக்டர் சரோஜா அவர்களுக்கும், அவரது அன்னை மூதாட்டி தில்லையம்மாள் அவர்களுக்கும் தமிழர் தலைவர் கி.வீரமணி சால்வைகள் அணிவித்தார். இயக்க நூல்களையும் பரிசளித்தார்.

ஊ விழா நாயகி டாக்டர் சரோஜா பழனியப்பன் அவர்களுக்கு அவரது குடும்பத்தைச் சார்ந்த சகோதரர்கள், சகோதரிகள் சார்பாக 50 கிராம் தங்கச் சங்கிலி பரிசாக அளிக்கப்பட்டது.

ஊ கவிஞர் குடந்தையான் கவிதை நடையில் டாக்டர் சரோஜா பழனியப்பன் அவர்களுக்குப் புகழாரம் சூட்டினார். அறிவின் வழி இதழின் சார்பில் மாண்புறு மனிதநேயர் விருது டாக்டர் சரோஜா அம்மையாருக்கு அளிக்கப்பட்டது. குடந்தை வய்.மு.கும்பலிங்கன் அதை வாசித்து அளித்தார்.

ஊ சிறுநீரகவியல் நிபுணர் டாக்டர் ஏ. இராசசேகரன் முதல் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பெருமக்கள் விழா நாயகி அவர்களுக்குச் சால்வைகள் போர்த்தினர் - பரிசுகள் அளிக்கப்பட்டன.

ஊ விழாவிற்கு வந்திருந்த அனைவருக்கும் டாக்டர் சரோஜா பழனியப்பன் அவர்களின் மருத்துவப் பணி பொன் விழா மலர், ஒரு மருத்துவரின் சமுதாயப் பார்வைகள் எனும் நூல், ஆடிவோடல ஆடிவைடிச 2013-2014 ஆகியவை நினைவுப் பரிசாக அளிக்கப்பட்டன.

தமிழ் ஓவியா said...

அடுத்த புளுகு .... ஆரம்பம்


கடந்த 2012 ல் மாயன் நாட்காட்டி என்று கதைவிட்டு உலகம் அழியுது... அழியுது...எனக் கூச்சல் போட்டு அது பொய்யாய்ப் போனது. இந்த ஆண்டு பிறந்த சில நாட்களிலேயே அடுத்த பொய்யைக் கட்டவிழ்த்துவிட்டுள்ளார்கள் .இது கிளம்பியிருப்பது மேற்கத்திய நாடுகளிலிருந்து. அங்குதான் 13 ஆம் எண் குறித்த மூடநம்பிக்கைகள் அதிகம் அல்லவா! 2013-என்ற எண்களில் 13 என்ற எண் இருக்கிறதாம்.அது ஆபத்தாம்.அதனால்,உலகில் பல அழிவுகள் ஏற்படுமாம், 13 எண் வீடு, 13-ஆம் மாடி, 13 தேதி,13 டாலர்கள் மிச்சம் கொடுக்கக் அஞ்சுதல் என மூடத்தன்ங்கள் அங்கு அதிகம். இந்த 13 எண் மீதான அச்சம் பைபிளின் யூதாஸ் கதையில் தொடங்கியது.1813 ஆண்டு நெப்போலியன் போனாபார்டின் கொடுங்கோல் போரால் அழிவு என்றும் 1613-ல் சேக்ஸ்பியரின் குளோப் தியேட்டர் தீக்கிரையானது எனப் பல கதைகள் கட்டப்படுகின்றன.போரும்,தீ விபத்துகளும் பல நூறு ஆண்டுகளில் உண்டு.அது இயல்புதான்.போர்கள் கூட உலகின் ஏதாவது ஒரு பகுதியில் எப்போதுமே நடந்துகொண்டு தானிருக்கிறது. இந்த ஆண்டு முழுதும் அழிவு அழிவு என்று அச்சுறுத்த கண்டு பிடித்து விட்டார்கள் 13 அய்.ஆமா...எனக்கொரு கேள்வி. ஏம்ப்பா... இந்த 2013 வரப்போறது போன வருசமே தெரியுமே அப்பவே சொல்லியிருக்கலாமே...?ஏம்ப்பா சொல்லல..?

தமிழ் ஓவியா said...

அன்னக்கி செஞ்சாங்களோ...?


பெண்களை இழிவாகப் பேசிய மதுரை ஆதீன கர்த்தரைக் கண்டித்து இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் மதுரை ஆதீன மடத்தை முற்றுகையிட்டு கைகளில் செருப்புகளை காட்டியபடி ஆர்ப்பாட்டம் செஞ்சிருக்காங்க.

சரிதான் ஆர்ப்பாட்டம் செய்யவேண்டியதுதான். வரவேற்போம்;பாராட்டுவோம்.

ஆனா,வேலைக்குப் போகும் பெண்கள் ஒழுக்கம் இல்லாதவர்கள்ன்னு காஞ்சி சங்கராச்சாரி சொன்னபோது காஞ்சி மடத்துக்கு முன்னால் கையில் செருப்புடனோ,பெண்கள் வேதம் படிக்ககூடாதுன்னும் பூரி சங்கராச்சாரி சொன்னபோது அவர் மடத்துக்கு முன்னால் செருப்புடனோ,இவங்க ஆர்ப்பாட்டம் செஞ்சாங்களா...?

தமிழ் ஓவியா said...

அவுஸ் ஒய்ப்


நான் நானாக இருக்க

விடுவதில்லை யாரும்.

என் கருத்தைச் சொல்லச் சொன்னாலும்

முடிவெடுப்பது வேறு யாரோ.

ஆனால்... இன்று... இப்பொழுது

என் கருத்தைக் கேட்பதோடு

என் விருப்பத்தையும் நிறைவேற்றுகின்றனர்.

முன்பு அவுஸ் ஒய்ப்பாக இருந்தேன்.

இன்று ஆசிரியர் பணிக்குப் போகிறேன்

அவுஸ் ஒய்ப் என்றால் மட்டும்

யாரும் சும்மா இருப்பதில்லை வீட்டில்.

தண்ணீர் தெளித்து

பெருக்கி, கோளமிட்டு,

சமைத்து, துணித் துவைத்து

நாள் முழுவதும் வேலைதான்.

முன்பு சம்பளம் இல்லாத வேலைக்காரி

இப்பொழுது சம்பளம் கொடுத்து வேலைக்காரி.

சமையலறைக்கும், கட்டிலறைக்கும்

நடந்த நடை.

இன்று வகுப்பறைக்கும் தொடர்கிறது.

அவுஸ் ஒய்ப்பிற்கு

ஒரு பக்க அடி

வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு

மத்தளம் போல

இரு பக்கமும் அடி.

என் குடும்பம் தான்

இருந்தாலும் சொல்லத் தோன்றியது

யாரையும் அவுஸ் ஒய்ப் என்று

ஏளனப் படுத்தாதீர்.- புதுவை பெ. குமாரி

தமிழ் ஓவியா said...


அரங்கநாதன் கோவிந்தா!


சிறீரங்கம், ஜன.21- ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலை சுற்றிலும் மதில் சுவர் உள்ளது. இதில் மேல சித்திரை வீதிக்கும், மேல அடையவளஞ்சான் வீதிக்கும் இடைப்பட்ட பகுதியில் சிறீரங்கம் கோவிலின் நீண்ட உயரமான மதில் சுவர் உள்ளது. அந்த மதில் சுவர் அருகே 100-க்கும் மேற்பட்ட ஓடு மற்றும் ஆஸ்பெஸ்டாஸ் கூரை வேயப்பட்ட வீடுகள் உள்ளன.

இந்த நிலையில் நேற்று அதிகாலை சுமார் 6 மணி அளவில் வெடி வெடித்தது போன்று பயங்கர சத்தம் கேட்டது. அப்போது கோவிலின் மதில்சுவரில் இருந்த கருங்கற்களும், காரையினால் பூசப்பட்ட செங்கல்களும் கீழே விழுந்து கிடந்தன. இதில் மேரி என்பவரின் வீட்டின் ஆஸ்பெஸ்டாஸ் கூரையை உடைத்துக் கொண்டு வீட்டின் உள்ளே கற்கள், செங்கல்கள் விழுந்தன.

கோவில் மதில் சுவர் இடிந்து விழுந்த சத்தத்தைக் கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்தவர்களும் அங்கு ஓடிவந்து பார்த்தனர். அப்பொழுது மேரி வீட்டில் இல்லை. இதனால் மேரி உயிர் தப்பி உள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியது.

தமிழ் ஓவியா said...

இந்தியா முழுதும் பேசப்பட்ட மொழி எது?


தமிழ் மொழி இந்தியா முழுமைக்குமாக பேசப்பட்ட மொழி. தமிழ் என்ற சொல் சமற்கிருதமய மாக்கப்பட்ட பிறகு தமிழா என்றும் தமிளா என்றும் உருமாறி பிறகு திராவிடமாகிவிட்டது. திராவிடம் என்பது தமிழர்களின் மொழியைக் குறிப்பிடுகின்றது. அது அம்மக்களின் இனத்தை அல்லது திராவிடம் என்பது தென்னிந்தியாவின் மொழி மட்டும் அன்று, ஆரியர் வருகைக்கு முன் தமிழ் மொழி இந்தியத் துணைக்கண்டம் முழுக்க பேசப்பட்ட மொழியாகும்.

தமிழ் காஷ்மீரத்தில் இருந்து குமரி வரையில் பேசப்பட்ட மொழி. இது உண்மையில் இந்தியா முழுவதும் நாகர்களால் பேசப்பட்ட மொழியாகும். ஆரியர்கள் நாகர்கள் மீதும், அவர்களின் மொழி மீதும் ஏற்படுத்திய தாக்கத்தினால் தான், வட இந்தியாவில் வாழ்ந்த நாகர்கள் தங்கள் தாய்மொழியான தமிழை விட்டு அதற்குப் பதிலாக சமற்கிருத்ததோடு கலந்தனர்.

-அண்ணல் அம்பேத்கர்

தமிழ் ஓவியா said...

இலக்கியங்கள் போற்றும் "தை'யில் தமிழ்ப் புத்தாண்டு - கி.தளபதிராஜ்


தைம்மதி பிறக்கும் நாள்; தமிழர்தங்கள்
செம்மை வாழ்வின் சிறப்புநாள்; வீடெலாம்
பாலும் வெல்லப் பாகும் பருப்பு நெய்
ஏலமும் புதுநெருப் பேறி, அரிசியைப்
பண்ணிலே பொங்கப் பண்ணித் தமிழர்
எண்ணிலே மகிழ்ச்சி ஏற்றும் இன்பநாள்!
தலைமுறை தலைமுறை தவழ்ந்து வரும் நாள்!

என்றார் புரட்சிக்கவிஞர்!

தமிழரின் கலாச்சார பழக்க வழக்கங்களை அடியோடு அழித்து மறைத்து விட்டார்கள். தமிழன் கலாச்சாரம், பண்பு, வரலாறு அற்ற ஒரு அடிமை ஜீவனாக விளங்குகிறான்.இப்படி விளங்குவது மாத்திரமல்லாமல் இன்று தமிழன் கொண்டாடும்-நடத்தும் கலாச்சார பண்பு, வரலாறு என்பவைகள் எல்லாம் தமிழனுக்கு இழிவும் அடிமைத்தன்மையும் தந்து அவற்றை நிலைநிறுத்துபவைகளாகவே இருந்து வருகின்றன.

தமிழர் விழா (பண்டிகை) என்பதாக நான் எதைச் சொல்ல முடியும்? ஏதாவது ஒன்று வேண்டுமே! அதை நாம் கற்பிப்பது என்பது எளிதில் ஆகக் கூடியது அல்லவே என்று கருதிப் பொங்கல் பண்டிகை என்பதைத் தமிழன் விழா வாகக் கொண்டாடலாம் என்று முப்பது ஆண்டு களுக்கு முன் நான் கூறினேன். மற்றும் யாராவது கூறியும் இருக்கலாம். இந்தப் பண்டிகையும் அறுவடைத் திருவிழா (பிணீக்ஷீமீ திமீவீஸ்ணீறீ) என்ற கருத்தில் தானேயொழிய சங்கராந்திப் பண்டிகை, போகிப் பண்டிகை, இந்திரவிழா என்ற சொல்லப் படும் கருத்தில் அல்ல. இந்தப் பொங்கல் பண்டிகை யைத் தமிழர் எல்லோரும் கொண்டாட வேண்டும்" (1959) என்றார் அறிவுலகஆசான் தந்தை பெரியார்.

பொங்கல்விழாவை "மே தின" த்திற்கே முன்னோடி என்றார் பேரறிஞர் அண்ணா! மற்ற விழாப்போல இந்த விழா, மாயவாழ்வை நம்பாதே! ஈசன் பாதம் சேர்ந்திடுவாய்! என்ற வாழ்க்கை நிலையாமை பற்றிய எண்ணத்தின் மீது எழுந்ததன்று. வாழ்க்கைப் பெறும்பொறுப்பு, தூய கடமை என்று கொண்டு அதில் சுவையைத் துய்ப்பதுடன், பயன்பெறும் முறையும், கண்டுபெற்ற பயன் பிறருக்கும் பகிர்ந்தளிக்கும் வகை கண்டு அதற்கேற்ப நாம் நடந்து செல்ல வேண்டிய நன்னெறியாகும். எனவேதான் இந்த விழாவினிலே ஏற்புடைய கருத்துகட்கு நெஞ்சம் இடமளித்திடும் பாங்கு காண்கிறோம். வாழ்த்துகிறோம்! வாழ்த்துப்பெற்று மகிழ்கிறோம்! என்றார்.

தைஇத் திங்கள் தண்கயம் படியும் - (நற்றிணை)
தைஇத் திங்கள் தண்ணிய தரினும் - (குறுந்தொகை)
தைஇத் திங்கள் தண்கயம் போல் - (புறநானூறு)
தைஇத் திங்கள் தண்கயம் போல் - (ஐங்குறுநூறு)
தையில் நீராடி தவம் தலைப்படுவாயோ-(கலித்தொகை)
என பற்பலஆண்டுகளுக்கு முற்பட்ட இலக்கியங் களிலேயே தை திங்களின் சிறப்புகள் இடம்பெற்றி ருப்பதாக தமிழ் ஆசிரியர்கள் குறிக்கின்றனர்.

மதுக்குலாம் அலங்கல் மாலை
மங்கையர் வளர்த்த செந்தீப்
புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்''

எனும் சீவகசிந்தாமணி பாடலிலிருந்து கி.பி 9ம் நூற்றாண்டிலேயே பொங்கல்விழா வெகுசிறப்பாக நடைபெற்றதற்கான ஆதாரங்கள் காட்டப்படுகிறது.
இளவேனில், முதுவேனில், கார், கூதிர், முன்பனி மற்றும் பின்பனி என ஒரு ஆண்டை ஆறு பருவமாக கனித்த தமிழன் இளவேனில் பருவ துவக்கத்தை புத்தாண்டின் தொடக்கமாய் கண்டான்.
சீனர், ஜப்பானியர், எனப் பலகோடி மக்களும் இளவேனில் துவக்கத்தையே தங்கள் புத்தாண்டின் தொடக்கமாக கொண்டுள்ளனர்.

தமிழன் வாழ்வில் "தை" முக்கியத்துவம் வாய்ந்த மாதமாக கொள்ளப்படுகிறது.இன்றளவும் கிராமப்புறங்களில் எந்த ஒரு நிகழ்வையும் "தை"யை ஒட்டியே பேசப்படுகிறது. "தை பிறந்தால் வழி பிறக்கும்" எனும் முதுமொழியும் இதை பறைசாற்றும்.

கி.பி.16ம் நூற்றாண்டில் தென்னிந்தியாவிற்கு வந்த அப்போ டூபாய் எனும் போர்ச்சுக்கீசியர் இந்துக்களின் பழக்க வழக்கங்களும் வாழ்க்கை முறையும்'' எனும் நூலினை எழுதியுள்ளார்

தமிழ் ஓவியா said...

அதில் தென்னகத்தில் கொண்டாடப்படும் `பொங்கல் விழா' உழவர்களுடைய அறுவடைத் திருநாளாக ஊர்கள் தோறும் சிறப்பாக கொண்டாடப்பட்டதை விவரித்துள்ளார்.

தமிழ் ஓவியா said...

சோவியத் தமிழறிஞர் விதாலி புர்னீகா என்பவர் 1980 களில் தமிழ்நாட்டிற்கு வருகைதந்து பல்வேறு நிகழ்வுகளில் கலந்து தன் அனுபவங்களை "பிறப்பு முதல் இறப்புவரை தமிழகக் காட்சிகள்" என்ற நூலை 1986 ம் ஆண்டில் எழுதியுள்ளார். "வாழ்வைப் புதுப்பிக்கும் பொங்கல்" என தமிழகத்தில் கொண்டாடப்படும் பொங்கல் விழாவினை சிறப்புற மேன்மை படுத்தியுள்ளார்.இவ்விழா தமிழகம் மட்டுமின்றி இலங்கை, மலேசியா,சிங்கப்பூர் போன்ற தமிழர்கள் வாழும் நாடுகளிலும் முக்கியத்துவம் பெற்றிருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

குப்தர் வம்சத்தில் வந்த இரண்டாம் சந்திர குப்தன் தான் தனது பெயரை விக்கிரமாதித்தன் என்று மாற்றிக் கொண்டு - தனது பெயரால் விக்கிரம சகம் என்ற ஆண்டு முறையை உருவாக்கிக் கொண்டான். வானவியலில் - ஜாதகம், சோதிடத்தைப் புகுத்தும் முயற்சிகள் அவனது காலத்தில் மேற்கொள்ளப்பட்டன.அப்படி விக்கிரமாதித்தன் உருவாக்கிய விக்கிரம சகம் எனும் ஆண்டு முறையில் சித்திரை முதல் நாளே ஆண்டின் முதல் நாளாக்கப்பட்டது. விக்கிரம சகம் 60 ஆண்டுகளை வரையறுத்தது. "பிரபவ" ஆண்டில் தொடங்கி "அட்சய" ஆண்டில் முடியும்.

இவைகளில் ஒரு பெயர்கூட தமிழில் இல்லை. 60 ஆண்டுகளுக்கும் வடமொழிப் பெயர்கள்தான்!

"கிருஷ்ணனுக்கும் நாரதருக்கும் பிறந்த பிள்ளைகளின் பெயர்கள் தான் 60 ஆண்டுகளின் பெயர்கள்" என்று அவர்கள் கூறும் கூற்றை எந்த மானமுள்ள தமிழனும் ஏற்றுகொள்ள முடியாது.

1921ஆம் ஆண்டு சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் மறைமலை அடிகள் தலைமையில் ஐந்நூறுக்கு மேற்பட்ட தமிழ் அறிஞர்கள் கூடி திருவள்ளுவர் பெயரில் தொடர் தமிழ் ஆண்டு பின்பற்றுவது என்றும், தை மாதம் முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கம் என்றும் முடிவு செய்தார்கள். திரு.வி.க, கா.சு.பிள்ளை,சோமசுந்தர பாரதியார்,கி.ஆ.பெ.விசுவநாதம்,மற்றும் பல பேரறிஞர்கள் கலந்துகொண்டனர்.

தமிழ் ஓவியா said...

1939 ஆம் ஆண்டு திருச்சியில் அகில இந்திய தமிழர் மாநாடு சோமசுந்தர பாரதியார் தலைமையில் கூடியது. அதில் தந்தை பெரியார், புரட்சிக்கவிஞர் பாரதிதாசன், திரு.வி.க.,மறைமலையடிகளார் உமாமகேசுவரனார், கா.சுப்பிரமணியம், தெ.பொ.மீனாட்சி சுந்தரனார்,எனப் பலரும் பங்கேற்றனர். தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என்றும், பொங்கல் திருநாளே தமிழர் திருநாள் என்றும் அந்த மாநாட்டிலும் தீர்மானங்கள் முன்மொழியப்பட்டன.

தையே முதற்றிங்கள்; தைம் முதலே ஆண்டு முதல்
பத்தன்று; நூறன்று; பன்னூ றன்று
பல்லாயி ரத்தாண்டாய்த் தமிழர் வாழ்வில்
புத்தாண்டு தைம்முதல்நாள், பொங்கள் நன்னாள்
நித்திரையில் இருக்கும் தமிழா !
சித்திரை அல்ல உனக்குத் தமிழ்ப்புத்தாண்டு
அண்டிப் பிழைக்க வந்த ஆரியக் கூட்டம் காட்டியதே
அறிவுக்கு ஒவ்வாத அறுபது ஆண்டுகள்
தரணி ஆண்ட தமிழர்க்கு
தை முதல்நாளே தமிழ்ப் புத்தாண்டு!

என்றார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்! திராவிடர் கழகமும் பல்வேறு அமைப்புகளும் தை முதல் நாளை தமிழ்ப்புத்தாண்டின் முதல் நாளாய் அறிவிக்க வேண்டி தொடர்ந்து தமிழக அரசை வலியுறுத்தி வந்ததன் பேரில் அய்ந்தாம் முறையாக தமிழக ஆட்சிக்கட்டிலில் அமர்ந்த அன்றைய தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள் தமிழர்களின் கோரிக்கையை ஏற்று "தை" முதல் நாளை தமிழ்ப்புத்தாண்டின் தொடக்கமாக அறிவித்தார்.

தேனில் விழுந்த பலாச்சுலை போல் "தமிழர் திருநாள் பொங்கல்" எத்திக்கும் தித்தித்திட தமிழர் வாழ்வில் தன்னிகரில்லா இடம்பெற்றது. மக்களிடையே மகிழ்ச்சி பெருவெள்ளம் கறைபுறன்டது.

தமிழன் வாழ்வில் மீட்சியா? கலாச்சாரப் புரட்சியா? அடுக்குமா அக்கிரஹார கும்பலுக்கு? பார்ப்பன ஏடுகள் ஒன்று கூடி ஒப்பாரிவைத்து ஓலமிட்டன!

ஆரியம் ஆட்சியைப் பிடித்தது ! மீண்டும் அரியனையில் சித்திரை ! ஆடலில் பாடலில் வீடுகள் சிறந்தன!

ஊடலில் கூடலில் உவந்தனர் மடவார்!

தெருவெலாம் இளைஞர் திறங் காட்டுகின்றனர்

சிரித்து விளையாடிச் செம்பட் டுடைகள்

அமைத்தபடி நிறைவேற்றி வைத்தல் வேண்டும்!

ஆள்வோர்க்குத் தமிழர்விடும் அறிக்கை இஃது!

தமிழ்முரசு கொட்டினோம் இணங்கா விட்டால் சடசடெனச் சரிந்துபடும் ஆட்சிக் கோட்டை!

எனும் புரட்சிக்கவிஞரின் வரிகளை நினைவு கொள்வோம்!

ஆரியம் அழியும்! தமிழர் வாழ்வும் மானமும் வீறுகொண்டெழும்!

என ஓங்காரக்குரல் எழுப்பி வீடுதோறும் பொங்கிடுவோம் இனஉணர்வுப் பொங்கல்!

தமிழ் ஓவியா said...

கடவுளைக் கற்பழியுங்கள்!


பெண்கள் ஒழுங்காக உடை உடுத்திச் சென்றால் ஏன் கற்பழிப்புச் சம்பவம் நடக்கப் போகிறது? எனச் சிலர் கேட்கின்றனர்.

6 வயது, 7 வயது சிறுமிகளைக் கூட பாலியல் பலாத்காரம் செய்கிறார்களே, அதற்கு என்ன காரணத்தை இவர்கள் சொல்லப் போகிறார்கள்.

தன் வீட்டில் சிறுமிகள் நிர்வாணமாகக் கூட இருப்பார்கள். அதுசமயம் இதுபோன்ற செயல்களில் இவர்கள் ஈடுபடுவார்களா?

40, 50 ஆண்டுகளுக்கு முன்னர், நம் பெண்கள் இரவிக்கை அணியக்கூட உரிமை இல்லாமல் இருந்தார்களே? அப்போதெல்லாம் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்றதா?

பெண்களின் மார்பு, இடுப்பு, கால்கள் தெரிவதால்தான் உணர்ச்சி வசப்பட்டு கற்பழிக்கிறார்கள் என்றால், தமிழ்நாட்டின் அனைத்துக் கோவில்களிலும் பெண் கடவுள்களை முழு நிர்வாணத்தில் அப்படியே நிற்க வைத்துள்ளார்களே... அங்கே போய் உங்கள் கடவுளைக் கற்பழிக்க வேண்டியதுதானே?

- வி.சி.வில்வம்

தமிழ் ஓவியா said...

களப்பிரர் ஆட்சி இருண்ட காலமா?


களப்பிரர் ஆட்சியால் தமிழகத்தில் விளைந்தவை யாவை? அமைதி கெட்டது; கலகங்கள் தோன்றின; மக்கள் வாழ்க்கை சீர்குலைந்தது; தமிழ் மரபு நூல்கள் அழிந்தன போன்ற குற்றச்சாட்டுகளே களப்பிரர் ஆட்சியைப் பற்றிக் கூறப்படுகின்றன. சைவத்தில் நாட்டம் கொண்டவரே இத்தகைய குற்றச்சாட்டுகளைக் கூறுகின்றனர். களப்பிரரால் தமிழ்க் கழகம் அழியவில்லை. ஏற்கெனவே கழகக் காலம் முடிந்து, கழகமருவிய காலம் தொடங்கியிருந்தது. களப்பிரர் வேற்று மொழியினர்; சமண, சாக்கிய சமயங்களைப் பின்பற்றியவர்கள்; அவர்கள் தமிழகத்தில் ஆளுமை பெற்ற போது இச்சமயங்கள் சாய்காலுடன் இருந்தன. ஆகவே, அவர்களின் தொடக்ககால ஆக்கம் அச்சமயங்களின் கொள்ளிட மொழிகளாய் விளங்கிய பாலி, பிராகிருதம், சமற்கிருதம் ஆகிய மொழிகளுக்கே பயன்பட்டது. இது வரலாற்றுப் போக்கில் வளர்ந்த புதிய இயலேயன்றிக் களப்பிரரால் விளைந்த கேடு எனில் முற்றும் பொருந்தாது. ஆயின், பின்னர் வந்த பல்லவர் காலத்தில் சமற்கிருதம் ஆக்கம் பெற்றதேன்?

களப்பிரர் ஆட்சியில் சமணர்கள் தமிழைப் பேணிக் காத்தனர். தமிழில் பல அரிய இலக்கண, இலக்கிய நூல்கள் இவர்களால் எழுதப்பெற்றன. ஏற்கெனவே கி.பி. 470இல் வச்சிரநந்தி என்பான் அமைத்த திரமிளசங்கம் சமண சமய வளர்ச்சிக்கு உறுதுணையாக நின்று இத்தகைய நூல்கள் வெளிவர உதவியது. நாலடியார் போன்ற பதினெண்கீழ்க்கணக்கு நுல்களும், சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய நூல்களும் சமண சாக்கிய சமயச் சார்புடைய நூல்களே. இவை கழகம் மருவிய காலத்தில் தோன்றியவையே. ஆகவே, களப்பிரர் ஆட்சியால் தமிழகத்தில் புதிய பொலிவு ஏற்பட்டது, மொழி வளர்ச்சியேற்பட்டது என்பதையே உணரமுடிகிறது.

ஆனால், களப்பிரர் தமிழகத்தில் இருண்ட காலத்தை ஏற்படுத்தி விட்டனர் எனப் பலரும் புலம்புகின்றனர். அவ்வாறே எழுதியும் நம்பவைத்து விட்டனர். இவர்களின் புலம்பலுக்கும் காரணம் இல்லாமலில்லை, களப்பிரர் வருகையால், தமிழகத்தில் கால்கொண்டிருந்த வருணாசிரம தருமம் ஆட்டங்கண்டது; பார்ப்பனியம் நசிந்து போயிற்று. சமணமும், புத்தமும் இவற்றை ஒழிக்கவே வீறிட்டெழுந்த சமயங்களென்பதையும், களப்பிரர் இச்சமய வீரர்களென்பதையும் மனத்திற்கொண்டு நோக்கினால் உண்மை ஒளி தெரியும்.

இந்திய வரலாற்றில் எப்பொழுதெல்லாம் எங்கெல்லாம் பார்ப்பனியம் செழித்துக் காணப்படுகிறதோ அப்பொழுதெல்லாம் அங்கெல்லாம் பொற்காலம் எனப் போற்றப்படுவதையும், பார்ப்பனியத்திற்கு மாறாகத் தோன்றும் ஆட்சி, அல்லது மாறாகத் திளைக்கும் கருத்துச்சுடர் நிலவும் போதெல்லாம் இருண்ட காலம் என இழித்துரைக்கப்படுவதையும் காண்கிறோம். உலக வரலாற்றிலேயே சிறந்த இடத்தைப் பெறுவது அசோகர் காலம்.

இந்திய வரலாற்றில் புத்தம் தலைசிறந்து விளங்கியதும் அசோகர் காலமே. ஆனால், இதனைப் பொற்காலம் எனப் போற்றினரா? இல்லை. ஆரியம் செழித்து, மிளிர்ந்த குப்தர் காலத்தையே பொற்காலம் என்கின்றனர். மௌரியர் காலத்தில் புத்தக் கலைகளும், அறிவியல் நூல்களும் ஏராளமாய்த் தோன்றின; உலக நாடுகளிலெல்லாம் பரவின;

உலக நாடுகளிலிருந்து பல்வேறு பண்பாடுகள் இந்தியாவிற்குள் நுழைந்தன. ஆயினும், இதனைப் பொற்காலம் என்றனரில்லை. இதைப் போலவே புத்தம் புகழ்பெற்ற குசானர் காலமும், வர்த்தனர் காலமும் பொற்காலமாகவில்லை, இவை யாவும் ஆரியரின் வருணாசிரம தருமத்திற்கும் வேள்வி முறைக்கும் மாறாகச் செயல்பட்ட ஆட்சியமைப்புகள்.

தமிழகத்திலும் ஆரியத்திற்கு ஏற்றமளித்த பல்லவர் ஆட்சிக் காலத்தையும், சோழர் ஆட்சியின் ஒரு பகுதியையும் பொற்காலம் என்றனர். ஆகவே, சமணமும் புத்தமும் தழைக்கவும், வருணாசிர தர்மம் ஒழியவும் பாடுபட்ட களப்பிரர் ஆட்சிக் காலத்தை இருண்ட காலம் என்று அழைப்பதைக் கண்டு வியப்படையத் தேவையில்லை. ஆரியம் சிறந்தோங்கி நின்ற காலங்களையே இந்திய வரலாற்றில் பொற்காலம் என்பர். இது கண்மூடித்தனமாகக் கையாளப்படும் பொது நெறி.

(நூல்: தமிழக வரலாற்று வரிசை _ 9, தாய்நில வரலாறு- _ 1)


- பேரா.முனைவர் கோ.தங்கவேலு

தமிழ் ஓவியா said...

நால்வருணம் பேணும் நான்காம் தூண்


குஜராத்துக்கும் இமாச்சலப் பிரதேசத்துக்கும் தேர்தல் முடிவுகள் ஒரே நாளில் வந்தன. பத்திரிகைகள்(இங்கிலீஷ்,தமிழ் எல்லோரும்தான்) குஜராத் மோடி பற்றி முன் பக்கமும்,இமாச்சல் வீரபத்ர சிங் பற்றி உள் பக்கங்களிலும் செய்தியை வெளியிட்டன.

இமாச்சலில் வீரபத்ர சிங் வெற்றி;காங்கிரஸ் தோல்வி என்று தலைப்பிட்ட இந்தியா டுடே, மோடி மீண்டும் வெற்றி என்பதோடு நிறுத்திக் கொண்டது; பா.ஜ.க.தோல்வி என்று எழுத மனம் வரவில்லை.
டெல்லியில் நிகழ்ந்த பாலியல் வன்முறை பற்றி தினமணியில் மதி என்பாரின் கார்ட்டூன் ஒன்று.அதில்,அரசியல் கொலைகளைப் பற்றிப் பட்டியலிட்டுள்ளார்.இந்திராகாந்தி கொலை செய்யப்பட்டபோது டெல்லியில் சீக்கியர்களைக் கொன்றது பற்றிக் குறிப்பிட்டவர், பாபர் மசூதி இடிப்பு,குஜராத் கலவரம், குஜராத் பெஸ்ட் பேக்கரி எரிப்பு, மும்பைக் கலவரம்,கோத்ரா சம்பவம், ராம ஜென்ம பூமிக்காக அத்வானியின் ரத்த யாத்திரை உள்ளிட்ட நிகழ்வுகளின் போது இந்துத்துவாக்கள் கொல்லப்பட்ட சிறுபான்மையினர் பற்றி ஒற்றைவரிகூட குறிப்பிடவில்லை.

ப.சிதம்பரம் மரியாதை நிமித்தமாக கலைஞரைச் சந்தித்த செய்தியை இட்டுக்கட்டி எழுதிய ஜீனியர் விகடன்,டெல்லியில் தேசிய வளர்ச்சிக்குழுக் கூட்டத்தில் உள்ளே நான் வெளிநடப்பு செய்கிறேன் என்று சொல்லாமல் தனக்கு அளிக்கப்பட்ட 10 நிமிடம் பேசிவிட்டு,(அதுவும் தான் சென்னைக்குச் செல்லவேண்டும் என்று சிறப்பு அனுமதி கேட்டு,பிரதமரால் பெருந்தன்மை யோடு அனுமதியில் பேசி) வெளியே வந்து பத்திரிகைகளிடம் வெளிநடப்பு செய்ததாகச் சொல்லிய முதலமைச்சர் ஜெயலலிதாவைப் புகழ்ந்து `தி ரிபல் லேடிஎன்று தலைப்பிட்டுள்ளது.
இதற்குப் பெயர்தான் பத்திரிகா தர்மாம்... புடலங்காயாம்.

தமிழ் ஓவியா said...

பலமொழிகளை அழித்த வடமொழிசமயத்துறையில் பண்டைத் தமிழர் வழிபட்ட கடவுள், ஜாதி, இனம், நாடு, காலம், இடம் ஆகிய வேறுபாடுகளற்ற கடவுள் மட்டுமல்ல; சமய பேதமும் மொழி பேதமும் கடந்த கடவுள். சமய பேதம் கடந்த கடவுளை வழிபட்ட அவர்கள் தேசியச் சமயமும் சமயம் கடந்த சமயமாய் இருந்தது. இன்றைய அரசியல் மொழிப் பாணியில் கூறுவதானால் அவர்கள் கடவுளும் சமயச் சார்பற்ற கடவுளே, சமயமும் சமயச் சார்பற்ற சமயமே. அத்துடன் அவர்கள் அரசியல், சமயம், சமுதாயம், குடும்பம், கலை, இலக்கியம், நாகரிகம், அறிவியல் ஆகிய யாவுமே சமயச் சார்பற்றவை ஆகும். இப்பண்பை ஆரியருக்கு முற்பட்ட சிந்து வெளி நாகரிக கால இந்திய மாநிலப் பண்பாக (தற்போதைய) இந்திய மாநில முதல் அமைச்சர் பண்டித ஜவகர்லால் நேரு அழகுபட விளக்கிக் கூறியுள்ளார். அவர் கருத்து வருமாறு:

அந்நாளைய சமய வாழ்வு பேரளவில் இந்நாளைய இந்திய மக்கள் சமய வாழ்வையே பெரிதும் ஒத்திருந்தது. இந்நாளைய சமயக் கருத்துக்கள் மட்டுமன்றி, இந்நாளைய மூட நம்பிக்கைகளில் பல கூட அன்று நிலவியிருந்தன. ஆனால் இந்நாளைய சமயத்துக்கும் அந்நாளைய சமயத்துக்கும் இடையே ஓர் உயர் முக்கியத்துவம் வாய்ந்த வேறுபாடு உண்டு. அந்நாளைய வாழ்வில் சமயம் ஒரு பகுதி. இன்றோ நம் வாழ்வு சமயத்தின் ஒரு பகுதியாக உள்ளது. அத்துடன் அந்நாளில் குருமார் இருந்தனராயினும், அவர்கள் சமயப் பணியாளர், தொண்டர்களாகவே இருந்தனர். சமய வாழ்விலோ, அரசியல், சமுதாய வாழ்வுகளிலோ, கலை இலக்கிய, அறிவியல் துறைகளிலோ, நாகரிகத்திலோ அவர்கள் ஆட்சியும் ஆதிக்கமும் கிடையாது. குருமாரும் அன்று மற்ற மனிதரைப் போல மனிதராகவே சரிசம நிலையில் வாழ்ந்தனர்.

பண்டித நேரு அவர்கள் தீட்டிக் காட்டும் ஆரியருக்கு முற்பட்ட கால இந்திய நாகரிகம் இதுவே. புத்த சமயத்தில் ஆரிய குருமார் ஆதிக்கம் ஏற்படும்வரை அதாவது வடகிழக்கிந்தியாவில் ஆந்திரப் பேரரசர் ஆண்டகாலம் வரை நிலவிய பழைய இந்திய நாகரிகமும் இதுவே. சங்ககாலத்திலும் ஓரளவு சோழப் பேரரசர் காலம் வரையும் நிலவிய தமிழர் நாகரிகமும் இதுவே.

இந்த உயர் நாகரிகம் படிப்படியாகக் கெட்டழிந்து வந்த போக்கு உண்மையில் இந்நாளைய சீர்திருத்தவாதிகள் படிப்படியாக சீர்திருத்த விரும்பும் படிகளின் நேர் எதிர்போக்கேயாகும்.

முதலாவது சமயம் சாராத கடவுள் _ ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்_ என்ற கருத்து, சமயங்கள் சார்ந்த கடவுள்கள்; சமயச் சார்பான பல கடவுள்களைக் கொண்ட புராண சமயக் கருத்துக்கு வழிவிட்டது.

மொழி வாழ்வின் சீர்குலைவு: இலக்கிய வாழ்வின் பண்பு கேடு:

மொழி சாராக் கடவுள் _ மக்கள் தாய் மொழிகளிலேயே அவர்கள் பக்திப் பாடலைக் கேட்டு வந்த கடவுள் _ மொழி சார்ந்த கடவுளாய் _ மக்கள் தாய் மொழிகள் எதனையும் பயின்றறியாத கடவுளாய் _ தனிமொழி, தனக்கென ஒரு தனி மொழி யுடைய கடவுள் ஆயினார். கடவுளுக்காக சமஸ்கிருத மொழி என்று ஒரு புதிய தெய்வீக மொழி படைத்து உருவாக்கப்பட்டது.

சங்க காலத்தில் தெய்வமொழி என்ற பெயர் வேத மொழிக்கு மட்டுமே பெயராய், புத்தர், சமணர், வேத நெறியினர் ஆகிய மூவகுப்பினருக்கு மட்டுமே சமயச் சார்பான மொழியாய் இருந்தது. ஆனால் தமிழ் வாழ்வை இம்மொழி பாதிக்கவில்லை. ஏனெனில் அந்நாளில் தமிழைப் போன்ற இலக்கிய இலக்கண வளம் அதில் இல்லை. ஆனால் வடதிசையில் ஆந்திரப் பேரரசராலும், பல்லவர் முதலிய தென்னாட்டரசராலும் தொடக்கத்தில் பாளி மொழியும், அதன்பின் 4_5ஆம் நூற்றாண்டிலிருந்து புதிய சமஸ்கிருத மொழியும் தமிழைப் பின்பற்றி இலக்கிய மொழியாக வளர்க்கப்பட்டன. அது உயிரிலாச் செயற்கை மொழியானாலும் அது கி.பி. 9ஆம் நூற்றாண்டுக்குள் தமிழுடன் போட்டி யிடவல்ல இலக்கிய மொழியாயிற்று.

பல்லவர் காலத்திலிருந்து பாளியும், சமஸ்கிருதமும் தென்கிழக்காசியா வெங்கும், இந்திய மாநிலத்திலும் தாய் மொழி வாழ்வை முழுதும் துடைத்தழிக்கத் தொடங்கின. சிறப்பாகச் சமஸ்கிருதம் தமிழின் பண்பாட்டுக்கும் தாய் மொழிகளின் வாழ்வுக்கும் தடங்கலாக ஆதிக்கம் செலுத்தலாயிற்று. இந்த ஆதிக்கம் தமிழ் மொழியின் பண்பாட்டையும் தமிழர் பண்பாட்டையும் மாற்றியமைத்த அளவுக்கு, தமிழரின் வளத்தையோ வீரத்தையோ கெடுக்க முடியவில்லை.

அத்துடன் தமிழகம் சூழ்ந்த மலையாளம், கன்னடம், தெலுங்கு முதலிய தமிழின மொழிகளிலும், சிங்களத்திலும் _ ஓரளவு இவை கடந்து மராத்தி, வங்காளி, இந்தி ஆகிய மொழிகளிலும், தமிழின் ஆற்றலே ஓரளவு புது வாழ்வு அளித்தது. ஆனால் இவற்றில் அரைகுறையாகச் செலுத்தப்பட்ட சமஸ்கிருதத்தின் ஆதிக்க அழிவாற்றல் இவ்வெல்லை கடந்து வடமேற்கு, வடக்கு இந்தியாவில் தாய்மொழி வாழ்வுகளின் தடத்தையே அழித்துவிட்டது.
(நூல்:தென்னாட்டுப் போர்க்களங்கள்)

- பன்மொழிப் புலவர் கா.அப்பாதுரையார்

தமிழ் ஓவியா said...

புத்தர் ஆசை நிறைவேறும்


சமயத்துறையில் பண்டைத் தமிழர் வழிபட்ட கடவுள், ஜாதி, இனம், நாடு, காலம், இடம் ஆகிய வேறுபாடுகளற்ற கடவுள் மட்டுமல்ல; சமய பேதமும் மொழி பேதமும் கடந்த கடவுள். சமய பேதம் கடந்த கடவுளை வழிபட்ட அவர்கள் தேசியச் சமயமும் சமயம் கடந்த சமயமாய் இருந்தது. இன்றைய அரசியல் மொழிப் பாணியில் கூறுவதானால் அவர்கள் கடவுளும் சமயச் சார்பற்ற கடவுளே, சமயமும் சமயச் சார்பற்ற சமயமே. அத்துடன் அவர்கள் அரசியல், சமயம், சமுதாயம், குடும்பம், கலை, இலக்கியம், நாகரிகம், அறிவியல் ஆகிய யாவுமே சமயச் சார்பற்றவை ஆகும். இப்பண்பை ஆரியருக்கு முற்பட்ட சிந்து வெளி நாகரிக கால இந்திய மாநிலப் பண்பாக (தற்போதைய) இந்திய மாநில முதல் அமைச்சர் பண்டித ஜவகர்லால் நேரு அழகுபட விளக்கிக் கூறியுள்ளார். அவர் கருத்து வருமாறு:

அந்நாளைய சமய வாழ்வு பேரளவில் இந்நாளைய இந்திய மக்கள் சமய வாழ்வையே பெரிதும் ஒத்திருந்தது. இந்நாளைய சமயக் கருத்துக்கள் மட்டுமன்றி, இந்நாளைய மூட நம்பிக்கைகளில் பல கூட அன்று நிலவியிருந்தன. ஆனால் இந்நாளைய சமயத்துக்கும் அந்நாளைய சமயத்துக்கும் இடையே ஓர் உயர் முக்கியத்துவம் வாய்ந்த வேறுபாடு உண்டு. அந்நாளைய வாழ்வில் சமயம் ஒரு பகுதி. இன்றோ நம் வாழ்வு சமயத்தின் ஒரு பகுதியாக உள்ளது. அத்துடன் அந்நாளில் குருமார் இருந்தனராயினும், அவர்கள் சமயப் பணியாளர், தொண்டர்களாகவே இருந்தனர். சமய வாழ்விலோ, அரசியல், சமுதாய வாழ்வுகளிலோ, கலை இலக்கிய, அறிவியல் துறைகளிலோ, நாகரிகத்திலோ அவர்கள் ஆட்சியும் ஆதிக்கமும் கிடையாது. குருமாரும் அன்று மற்ற மனிதரைப் போல மனிதராகவே சரிசம நிலையில் வாழ்ந்தனர்.

பண்டித நேரு அவர்கள் தீட்டிக் காட்டும் ஆரியருக்கு முற்பட்ட கால இந்திய நாகரிகம் இதுவே. புத்த சமயத்தில் ஆரிய குருமார் ஆதிக்கம் ஏற்படும்வரை அதாவது வடகிழக்கிந்தியாவில் ஆந்திரப் பேரரசர் ஆண்டகாலம் வரை நிலவிய பழைய இந்திய நாகரிகமும் இதுவே. சங்ககாலத்திலும் ஓரளவு சோழப் பேரரசர் காலம் வரையும் நிலவிய தமிழர் நாகரிகமும் இதுவே.

இந்த உயர் நாகரிகம் படிப்படியாகக் கெட்டழிந்து வந்த போக்கு உண்மையில் இந்நாளைய சீர்திருத்தவாதிகள் படிப்படியாக சீர்திருத்த விரும்பும் படிகளின் நேர் எதிர்போக்கேயாகும்.

முதலாவது சமயம் சாராத கடவுள் _ ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்_ என்ற கருத்து, சமயங்கள் சார்ந்த கடவுள்கள்; சமயச் சார்பான பல கடவுள்களைக் கொண்ட புராண சமயக் கருத்துக்கு வழிவிட்டது.

மொழி வாழ்வின் சீர்குலைவு: இலக்கிய வாழ்வின் பண்பு கேடு:

மொழி சாராக் கடவுள் _ மக்கள் தாய் மொழிகளிலேயே அவர்கள் பக்திப் பாடலைக் கேட்டு வந்த கடவுள் _ மொழி சார்ந்த கடவுளாய் _ மக்கள் தாய் மொழிகள் எதனையும் பயின்றறியாத கடவுளாய் _ தனிமொழி, தனக்கென ஒரு தனி மொழி யுடைய கடவுள் ஆயினார். கடவுளுக்காக சமஸ்கிருத மொழி என்று ஒரு புதிய தெய்வீக மொழி படைத்து உருவாக்கப்பட்டது.

சங்க காலத்தில் தெய்வமொழி என்ற பெயர் வேத மொழிக்கு மட்டுமே பெயராய், புத்தர், சமணர், வேத நெறியினர் ஆகிய மூவகுப்பினருக்கு மட்டுமே சமயச் சார்பான மொழியாய் இருந்தது. ஆனால் தமிழ் வாழ்வை இம்மொழி பாதிக்கவில்லை. ஏனெனில் அந்நாளில் தமிழைப் போன்ற இலக்கிய இலக்கண வளம் அதில் இல்லை. ஆனால் வடதிசையில் ஆந்திரப் பேரரசராலும், பல்லவர் முதலிய தென்னாட்டரசராலும் தொடக்கத்தில் பாளி மொழியும், அதன்பின் 4_5ஆம் நூற்றாண்டிலிருந்து புதிய சமஸ்கிருத மொழியும் தமிழைப் பின்பற்றி இலக்கிய மொழியாக வளர்க்கப்பட்டன. அது உயிரிலாச் செயற்கை மொழியானாலும் அது கி.பி. 9ஆம் நூற்றாண்டுக்குள் தமிழுடன் போட்டி யிடவல்ல இலக்கிய மொழியாயிற்று.

பல்லவர் காலத்திலிருந்து பாளியும், சமஸ்கிருதமும் தென்கிழக்காசியா வெங்கும், இந்திய மாநிலத்திலும் தாய் மொழி வாழ்வை முழுதும் துடைத்தழிக்கத் தொடங்கின. சிறப்பாகச் சமஸ்கிருதம் தமிழின் பண்பாட்டுக்கும் தாய் மொழிகளின் வாழ்வுக்கும் தடங்கலாக ஆதிக்கம் செலுத்தலாயிற்று. இந்த ஆதிக்கம் தமிழ் மொழியின் பண்பாட்டையும் தமிழர் பண்பாட்டையும் மாற்றியமைத்த அளவுக்கு, தமிழரின் வளத்தையோ வீரத்தையோ கெடுக்க முடியவில்லை.

அத்துடன் தமிழகம் சூழ்ந்த மலையாளம், கன்னடம், தெலுங்கு முதலிய தமிழின மொழிகளிலும், சிங்களத்திலும் _ ஓரளவு இவை கடந்து மராத்தி, வங்காளி, இந்தி ஆகிய மொழிகளிலும், தமிழின் ஆற்றலே ஓரளவு புது வாழ்வு அளித்தது. ஆனால் இவற்றில் அரைகுறையாகச் செலுத்தப்பட்ட சமஸ்கிருதத்தின் ஆதிக்க அழிவாற்றல் இவ்வெல்லை கடந்து வடமேற்கு, வடக்கு இந்தியாவில் தாய்மொழி வாழ்வுகளின் தடத்தையே அழித்துவிட்டது.

(நூல்:தென்னாட்டுப் போர்க்களங்கள்)

தமிழ் ஓவியா said...

பெயர்க் காரணம்

கேள்வி: திருவாரூரில் கருணையானந்த பூபதி என்ற சித்தர் இருந்ததாகவும், அவருடைய நினைவாக உங்கள் பெற்றோர் கருணாநிதி என்று பெயரிட்டதாகவும் கேள்விப்பட்டோம். இது உண்மையா?

பதில்: உண்மைதான், என்னுடைய தந்தை, கருணையானந்த பூபதி என்ற சித்தரிடம் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். அவர் நினைவாகத்தான் எனக்குப் பெயர் சூட்டினார். அந்த சித்தரின் மகன் கருணை எம். ஜமால்தான் முதன்முதலில் முரசொலியை அச்சடித்துக் கொடுத்தவர்.

முத்தமிழறிஞர் கலைஞரின் இலக்கியப் பேட்டியிலிருந்து..

நன்றி: இனிய உதயம் (ஜனவரி 2013)

தமிழ் ஓவியா said...

மதக்கல்வி கூடாது!


ஒற்றையடிப் பள்ளியில் 39 பேர்களுடன் உட்கார்ந்திருந்த அந்தச் சிறுவன் தாமஸ் ஆல்வா எடிசன் அவர்களை மண்டு என்று ஆசிரியர் சொன்னது முதல்அடி. அந்த அடி விளைவித்த தழும்பு கடைசிவரை ஆறவில்லை. எனவே பள்ளிக் கல்வி முறையை வன்மையாகச் சாடினார் தாமஸ் ஆல்வா எடிசன்.

மதக்குருமார்கள் பள்ளியில் 6, 7 வயதுச் சிறுவர்களின் மனத்தை மதபோதனை என்ற பெயரில் பாழடிப்பதை எதிர்த்தார். மதக்கல்வியே பள்ளிகளில் கூடாது! என்றார்.

நூல்: தாமஸ் ஆல்வா எடிசன், பக்கம் 140 தகவல்: ப. கல்யாணசுந்தரம்

தமிழ் ஓவியா said...

மனுதர்ம நீதியும் - கரிகாலன் நீதியும்


நீதிமன்றத்திற்கு அரசன் வர இயலாதபோது அரசனது இருக்கையில் பிராமணன் அமர்ந்து நீதி வழங்கலாம். அந்தப் பிராமணன் வேத விதிமுறைகளைக் கல்லாதவனாயினும் சரியே. மிகமிக இழிந்த பிராமணனாயினும் சரியே! அவன் எப்படிப்பட்டவனாயினும் அதுபற்றிக் கவலையில்லை! அவன் பிராமணனாயிருக்க வேண்டும். அவ்வளவுதான்! ஆனால் நான்காம் வருணத்தவன் (சூத்திரன்) அரசனது இருக்கையில் அமர்ந்து நீதி சொல்லக் கூடாது; அவன் அறிஞனே என்றாலும் சூத்திரன் ஆகையால் அரசன் சார்பாக நீதியுரைக்கக் கூடாது.

“The judicial officer of a king must be a Brahmin, even if he be a mere Brahmana by birth (and bereft of the virtues of his order) or a mere professional adjudicator of issues, and not a sudra under any circumstances what so ever”. என்கிறது மனுதருமம்.

மன்னன் இயற்ற வேண்டிய விசாரணைகள் எந்த நாட்டில் சூத்திரனால் நடைபெறு கின்றதோ அந்த நாடு சேற்றில் அகப்பட்ட பசுவைப்போல் கண்முன்னே துன்பமுறுவதாகின்றது என்று மனுதருமம் தொழிலாளர்கள் (நான்காம் வருணத்தவர்) சான்றோர்களாயினும் நீதி விசாரணையில் ஈடுபடக்கூடாது என்று வற்புறுத்துகின்றது.

“The realm of a king where in a sudra Official administers Justice, is destroyed under his very eyes, like a cow merged in the mud”

இதனால் நீதிமன்றம் என்பது பார்ப்பனர் மன்றமே என்பதும் நீதிபதிகளாவோர் பார்ப்பனர்களே என்பதும் பார்ப்பனரைத் தவிர வேறு எவரும் நீதிமன்றத்தில் அமரமுடியவில்லை என்பதும் மன்னர்களும் பார்ப்பனர் சொற்படியே நீதி வழங்கினர் என்பதும் மனு தருமத்தால் தெளிவாக்கப்படும் உண்மைகளாகின்றன.

புதையல் கிடைத்தால்:

மக்களின் பொருள்களைக் கண்டெடுக்கும் அரசு அலுவலர்கள் அதை மன்னரிடம் சேர்ப்பிக்க வேண்டும். அரசன் அவற்றைத் தன் காவலில் வைத்துப் பாதுகாக்க வேண்டும். காவல் புரிவோர் எவரேனும் அப்பொருளை எடுத்துக்கொண்டால் அவர்களை யானையின் காலால் இடறச் செய்ய வேண்டும். கற்றறிந்த ஒரு பிராமணனுக்குப் புதையல் கிடைத்தால் அதனை அவனே முழுமையும் எடுத்துக் கொள்ளலாம்! ஏனெனில் அவன் மேலானவனன்றோ! ஆனால் மன்னனுக்குப் புதையல் கிடைத்தால், அதில் பாதியைப் பிராமணர்க்கு வழங்கிவிட்டு மீதியை அரசன் தன் கருவூலத்தில் சேர்த்துக் கொள்ளலாம் என்கிறது மனுதருமம்.

தமிழ் ஓவியா said...

பார்ப்பனர் புதையல் எடுத்தாலும் அரசன் புதையல் எடுத்தாலும் அது சேருமிடம் பார்ப்பனர் வீடுதானே!

பழந்தமிழ் மக்களின் பண்பாட்டுப் பெருமையை விளக்குவதற்காகப் பள்ளிப் பருவத்தில் எங்கள் தமிழாசிரியர் சொன்ன ஒரு நிகழ்ச்சியை இவ்விடத்தில் குறிப்பிடுதல் நலம் பயக்கும்.

கரிகாற்சோழன் காலத்தில் நடந்தது இது! ஓர் உழவன் தனது நிலத்தை இன்னோர் உழவனுக்கு விற்று விட்டான். நிலத்தை வாங்கியவன் அதனை ஆழ உழுதபோது நிலத்திற்கடியில் பொற்காசுகள் நிறைந்த ஒரு புதையல் கிடைத்தது. புதையலைக் கண்டெடுத்த அந்த உழவன், புதையல் நமக்குரியதன்று; யார் நமக்கு நிலத்தை விற்றார்களோ அவர்களுக்குரியது என்று உணர்ந்தவனாய் அதனைத் தூக்கிக் கொண்டு நிலத்தை விற்றவன் வீட்டிற்குப் போனான்.நிலத்தை விற்றவனோ, நான் நிலத்தை உங்களுக்கு விற்று விட்டேன். ஆதலால் அதில் உள்ள எதுவும் எனக்கு உரிமையுடைய தாகாது. எனவே புதையல் உங்களுக்குரியதுதான்! என்றான்.

வாங்கியவனோ விடாப்பிடியாக, நான் நிலத்தின் மேற்பகுதியில் உள்ளவற்றை மட்டுமே வாங்கினேன். உள்ளே கிடந்த புதையலுக்கு நான் விலை பேசவில்லையே! ஆதலால் பூமிக்கடியில் கிடந்த இந்தப் புதையல் உங்களுக்குத்தான் உரியது. நீங்கள் இதனைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றான். நிலத்தை விற்றவனோ புதையலை வாங்க மறுத்துவிட்டான். வழக்கு அரசனிடம் சென்றது. கரிகாற் சோழன் கம்பீரமாக அரியணையில் அமர்ந்திருந்தான். வழக்கைக் கேட்டு மன்னன் மட்டற்ற மகிழ்ச்சியடைந்தான். சிறிது நேரம் அமைதி நிலவியது.

கரிகாலன் சொன்னான் என் அன்புக்குரிய குடிமக்களே! இந்தப் புதையலை நான்கு கூறுகளாகப் பிரித்து, இரண்டு கூறுகளை நீங்கள் இருவரும் வைத்துக் கொள்ளுங்கள், ஒன்று அரசின் கருவூலக் கணக்கில் சேர்க்கப்படும். எஞ்சியுள்ள பகுதியை வைத்து உங்கள் ஊரில் ஓர் ஊருணி அமைத்திடுங்கள்.

கல்லணை கட்டியவனாயிற்றே! ஊருணி யமைக்கச் சொன்னதும், உழவர் இருவரும் ஒரே நேரத்தில் மன்னிக்க வேண்டும் அரசே! எங்கள் பங்கினை எங்கள் ஊரில் பள்ளிக்கூடம் அமைக்கப் பயன்படுத்திக் கொள்கிறோம் என்றார்கள்.

மன்னனைத் திருத்திய மக்களே நீங்கள் நீடு வாழ்வீர்களாக என்று வாழ்த்தினான் கரிகாலன். தமிழ் மக்கள் எவ்வளவு பண்பட்ட மக்களாக இருந்தார்கள் என்பதற்கு இஃதோர் எடுத்துக்காட்டாகும்.

நீதிமன்றத்தில் அமர்ந்து தீர்ப்புரைக்கும் அரசன் நெறிமுறை தவறாது, இன்னார் இனியார் என்று பாராது, கடுகளவு கூடக் கணக்குத் தவறாமல் நடுநிலையில் நின்று நீதி வழங்க வேண்டும் என்று திருக்குறள் பேசுகின்றது. ஆனால் மனுநீதியோ மக்கள் நீதிக்கு மாறுபட்ட நீதியாக விளங்குகிறது.

பார்ப்பனர் கூறும் குலதருமம், குலஒழுக்கம், குலவழக்கம், ஜாதிமுறை ஆகியவற்றிற்கு மாறுபடாமல் நீதிமன்றம் தீர்ப்புரைக்க வேண்டும் என்று மனுதருமம் கூறுகின்றது. ஜாதிக்கு ஒரு நீதி என்பதுதான் மனுநீதி என்பது எவ்வளவு வெளிப்படையாகக் கூறப்படுகிறது என்பதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.

(நூல்: மனுநீதி _ ஒரு மறுபார்வை)

மனுதர்ம நீதியும் - கரிகாலன் நீதியும்

தமிழ் ஓவியா said...

மாற்றம்


வயல்வெளி
நிலங்களில்,
வரப்புகள் விரிந்து
சந்துகளானது,
வாய்க்கால் சுருங்கி
வாறுகால் ஆனது.
நாற்று நட்ட
இடங்களிலெல்லாம்
நடு கற்கள்
பாத்திகட்டிய
இடங்கள்
வீடு கட்டிய
நிலங்களாய்,
உயிர்கள்
அடைக்கலமானது,
பயிர்களோ
அடக்கமானது!

-ஆல.தமிழ்ப்பித்தன், புனல்வேலி

தமிழ் ஓவியா said...

யோசிச்சுப் பேசுங்கோண்ணா.....


``பாலியல் குற்றங்களுக்கு மேற்கத்திய கலாச்சாரம்தான் காரணம்
- _ அசோக் சிங்கால் (விஷ்வ இந்து பரிஷத் தலைவர்)

ரிஷிபத்தினிகளைக் கற்பழிச்ச சிவன்; குளத்தில் குளித்த பெண்களின் ஆடைகளைத் தூக்கிச் சென்று அவர்களை மேலே வரவைத்து ரசித்த கிருஷ்ணன்; மகளையே மணந்த பிரம்மா... இப்படி ஏராளமான பேர் இருக்காங்களே... இவங்களெல்லாம் மேற்கத்தியக் கடவுள்களா?

தமிழ் ஓவியா said...


எச்சரிக்கை

மக்களை ஏமாற்றும் போலி நிறுவனங்கள் ஏற்பட்டு வருகின்றன. (எடுத்துக்காட்டு - ஈமு கோழி வளர்ப்புத் திட்டம்) ரிசர்வ் வங்கியில் பதிவானவையா? என்பதை உறுதி செய்க! பதி வான நிதி நிறுவனங்களின் பெயர், முகவரி விவரங்களை இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். (commonman/english/scripts/nbfcs.aspk).

தமிழ் ஓவியா said...


தனியார்த்துறைகளிலும் இட ஒதுக்கீடு!


திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுக் (19.1.2013) கூட்டத்தில் மூன்று முக்கிய பிரச்சினை களை முன்னிறுத்தி குமரி முதல் தொடர் பிரச்சாரப் பயணம் ஒன்றை மேற்கொள்ள முடிவு செய்துள்ளது.

1) தனியார்த்துறைகளில் இடஒதுக்கீடு 2) பெண்ணுரிமைக் கோட்பாடுகள் 3) ஜாதி - தீண்டாமை ஒழிப்பு - இம்மூன்றையும் முன்னெடுத்துச் செய்வது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

அரசுத்துறைகளைப் பொறுத்தவரை ஒரு சதவிகிதம்தான் வேலை வாய்ப்பு என்ற கருத்துண்டு தற்போது அரசுத் துறைகள், பொதுத்துறைகள்

இளைத்து, தனியார்த்துறைகளும், பன்னாட்டு நிறுவனங்களும் நாளும் விரிவடைந்து வரும் நிலையில், சமூக நீதிக் கண்ணோட்டத்தில் இடஒதுக்கீடு என்பது இயல்பாகவே இவர்களிடம் பெறுவது என்பதாகி விட்டது.

தனியார்த்துறை என்பது தனியே ஆகாயத்தி லிருந்து தொங்கிக் கொண்டிருக்கவில்லை. அரசின் பல்வேறு உதவிகளைப் பெற்றுத்தான் இயங்கி வருகின்றது. நிலம், நீர், மின்சாரம், வங்கிக் கடன் என்று எதை எடுத்துக் கொண்டாலும் அரசின் உதவியோடு தான் தனியார்த்துறைகள் இயங்கி வருகின்றன. இந்த நிலையில் அரசுத் துறைகளில் வழங்கப்பட்டு வரும் இடஒதுக்கீடு தனியார்த் துறைகளிலும் கொடுக்கப்பட வேண்டும் என்பது சொல்லாமலேயே விளங்கக் கூடியதாகும்.

இன்றைய நிலையை எடுத்துக் கொண்டால் அரசுத்துறைகளிலும்கூட தாழ்த்தப்பட்டவர்களுக்கும், பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் சட்டப்படியாக அவர்களுக்குரிய விகிதாச்சாரப்படி இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை. பதவிகளின் தரம் உயர உயர இவர்களுக்கான இடஒதுக்கீட்டின் சதவிகிதம் இறங்குமுகமாகவே இருந்து வருகிறது.

தனியார்த்துறைகளிலோ கேட்கவே வேண்டாம். முக்கியமான கேந்திரப் பதவிகளிலும், பணியாளர் களை நியமனம் செய்யும் இடத்தில் பெரும்பாலும் பார்ப்பனர்களே இருந்து வருகின்றனர். இதன் காரண மாக தனியார்த்துறை என்பது உயர்ஜாதியினர் நிறைந்து வழியும் இடமாகி விட்டது.

தனியார்த் துறைகளில் பணியாற்றும் இயக்குநர் களின் எண்ணிக்கை 8,327;

இதில் உயர் ஜாதிப் பார்ப்பனர்கள் 4037 (44.6 %)

வைசியர் 4167 (46%) சத்திரியர் 46 (0.5%) பிற முன்னேறியோர் 132 (1.5%)

இதர பிற்படுத்தப்பட்டோர் 346 (3.8%)

தாழ்த்தப்பட்டோர் மற்றும் மலைவாழ் மக்கள் 319 (3.5%)

இதில் வைசியர், சத்திரியர் என்பதெல்லாம் வட மாநிலங்களில் உள்ள உயர்ஜாதியினர்தான். தென் மாநிலங்களில் கிடையாது.

இந்தப் புள்ளி விவரங்களைப் பார்க்கும் பொழுது, தனியார்த் துறைகளில் தாழ்த்தப்பட்டோர், மலைவாழ் மக்கள் மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்படுவதன் அவசியம் எத்தகையது என்பது சொல்லாமலேயே எளிதில் விளங்கும்.

இந்தியாவில் தனியார்த் துறைகளில் இட ஒதுக்கீட்டை அளிக்க மறுத்துவரும் இந்திய முத லாளிகள் வெளி நாடுகளில் தொழிற் சாலைகளைத் தொடங்கும் போது அந்த நாடுகளில் மட்டும் இடஒதுக்கீடு அளிக்க ஒப்புக் கொள்கிறார்கள். குறிப்பாக தென்னாப்பிரிக்காவில் வெளிநாட்டினர் தொழில் தொடங்குவதாக இருந்தால் தென்னாப் பிரிக்க அரசு விதித்துள்ள சட்ட திட்டங்களுக்குக் கட்டுப்பட்டே ஆக வேண்டும்.

கருப்பர் ஒருவர் தலைமைச் செயல் அலுவலராக இருக்க வேண்டும். குறிப்பிட்ட சதவிகிதத்தில் கருப்பர்கள் மேலாண்மை உடையவர்களாக இருக்க வேண்டும். அந்தத் தொழில் நிறுவனங்களின் பங்கு களை கருப்பின மக்களுக்கும் அளிக்கப்பட வேண் டியது கட்டாயமாகும். இந்தியாவில் முதலாளிமார்கள் உள்நாட்டில் ஒரு கொள்கை - வெளிநாட்டில் இன்னொரு கொள்கை; ஏனிந்த இரட்டை வேடம்?

தெ. ஆப்பிரிக்க அரசு நடைமுறைப்படுத்தும் அதே சட்டத்தை இங்கும் இந்திய அரசு ஏன் நிறைவேற்றக் கூடாது? தந்தை பெரியார் அவர்களின் நினைவு நாள் அறிக்கையில் (24.12.2012) திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் தனியார்த் துறைகளில் இடஒதுக்கீடு என்பதுதான் தந்தை பெரியார் நினைவு நாள் சூளுரை என்று குறிப்பிட் டுள்ளார். அதையேதான் இம்மாதம் 19ஆம் தேதி கூடிய திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுவும் தீர்மானித்துள்ளது.

ஏப்ரலில் தொடர் பிரச்சாரம் குமரிமுனையில் திராவிடர் கழகத்தால் மேற்கொள்ளப்படும்; கட்சிக்கு அப்பாற்பட்ட இந்த சமூக நீதிக் கொள்கைக்குத் தந்தை பெரியாரால் பக்குவப்படுத்தப்பட்ட தமிழ்பூமி ஆதரவுக் கரம் நீட்டும் என்பதில் அய்யமில்லை.

தமிழ் ஓவியா said...


பெண்களின் தர்மம்...


சாத்திரச் சம்பிரதாயங்களில் பெண்களின் தர்மம் என்ன என்று பார்த்தால் நிபந்தனையற்ற அடிமையாக அடங்கி ஒடுங்கி வாழ்பவளே மோட்சத்திற்குப் போவாள் என்று கூறப்பட்டுள்ளது. ----------பெரியார்(விடுதலை,5.4.1961)

தமிழ் ஓவியா said...


பெண்ணுரிமைக் கோட்பாடுகள்


திராவிடர் கழகத்தின் தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் (19.1.2013) மூன்று முக்கியப் பிரச்சினை களை முன்னிறுத்தித் தொடர் பயணம் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. அதில் ஒன்று பெண்ணுரிமைக் கோட்பாட்டை முன்னிறுத்துவதாகும்.

பெண்கள் மனித சமூகத்தின் சரி பகுதி - ஆண்களுக்கு நிகரானவர்கள் என்பதை மதங்கள் பெரும்பாலும் ஏற்றுக்கொள்வதில்லை.

இந்தியாவில் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதிகளாக இருந்தவர்கள்கூட - பெண்கள் என்றால் அவர்கள் அடுப்பங்கரைக்குள் முடங்கிக் கிடக்கவேண்டும் என்றே எதிர்பார்க்கிறார்கள்.

இப்படிப் பெண்களை ஒன்றுக்கும் உதவாதவர் களாக அடிமைப்படுத்திய காரணத்தால் மனதள விலும், உடல் அளவிலும் பலகீனமானவர்களாக ஆக்கப்பட்டு விட்டனர்.

கடும் போராட்டங்களின் காரணமாக பல வகையான உரிமைகள் கல்வி, வேலை வாய்ப்பில் கிட்டி வந்தாலும் ஆண்களின் ஒடுக்குமுறை ஓய்ந்த பாடில்லை.

அதன் தீய விளைவுதான் புதுடில்லியில் மருத் துவக் கல்லூரி மாணவி ஓடும் பேருந்தில் வன் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாகும்.

அதனைத் தொடர்ந்து இந்தியாவின் பல பகுதிகளிலும் பெண்கள் பாலியல் வன்புணர்ச்சிக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இந்தக் காலகட்டத்தில் தமிழ்நாட்டில்தான் அதிக எண்ணிக்கையில் பெண் கள் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர்.

ஆனாலும், உயர்ஜாதி ஊடகங்கள் அவற்றை இருட்டில் பதுக்கிவிட்டன; ஆம், இந்த ஊடகப் பூனைகள் கண்களை மூடிக்கொண்டு பூலோகம் இருண்டு போய்விட்டதாகக் கற்பனையுலகில் சஞ்சரித்துக் கொண்டுள்ளன.

பெண்களுக்கு இழைக்கப்படும் வன்கொடுமை யிலிருந்து அவர்கள் மீட்கப்படவேண்டும்; நிரந்தரப் பரிகாரம் காணப்படவேண்டும் என்ற கருத்து ஓங்கி ஒலிக்கப்பட்டுக் கொண்டு இருக்கிறது.

எதற்கும் முதற்படி என்பது விழிப்புணர்வும், தன்னம்பிக்கையும், தன் பலமும்தான். படித்த பெண் களாக இருந்தாலும் உடல் அளவில் ஆண் களுக்கு நிகராகப் பலம் பெற்றிருக்கவில்லை. அதற்குப் பல வகையான வரலாற்றுக் காரணங்கள், உளவியல் ரீதியான காரணங்கள் சொல்லப்படலாம்.

எவ்வளவு காலத்திற்கு இந்தச் சமாதானங்களைச் சொல்லிக் கொண்டு இருக்க முடியும்? திராவிடர் கழகம் தீர்மான வடிவமாகச் சொல்லும் தற்காப்புப் பயிற்சி - குறிப்பாக கராத்தே பயிற்சி கல்வி நிறு வனங்களில் தொடக்கப்பள்ளி முதலே கட்டாயமாக அளிக்கப்படவேண்டும். (பெரியார் கல்வி நிறுவனங் கள் இதனைச் செய்து வருகின்றன) துப்பாக்கி சுடும் பயிற்சி அளித்து உடனடியாக அதற்கான அனுமதி யையும் அளிக்கவேண்டும்.

நான்கு இடங்களில் பெண்களிடம் வாலாட்டிய கொடியவர்கள் பதிலடி கொடுக்கப்பட்டனர் என்ற செய்தி வந்தால் போதும், இந்த ஆண் சூராதி சூரர்கள் இருந்த இடம் தெரியாமல் ஓடி ஒளியக் கூடியவர்கள்தாம்.

மற்றொரு முக்கிய வாய்ப்பு என்பது சட்டமன்றங் களிலும், நாடாளுமன்றத்திலும் பெண்களுக்குரிய 33 சதவிகித இட ஒதுக்கீட்டுக்கான சட்டத்தை நிறை வேற்றி, பெண்கள் தங்களுக்கான உரிமைகளுக்காக அவர்களே குரல் கொடுக்கும் பொழுதுதான் அதற்கான விடிவு விரைவில் கிடைக்கும்.

மொத்த உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்கு பெண் உறுப்பினர்கள் என்பது குறைந்தபட்சமாகும். அந்த நிலை ஏற்பட்டால், நாடாளுமன்றமே கிடுகிடுக்காதா?

எருதின் புண் காக்கைக்குத் தெரியாது. பெண் களுக்கான உரிமைகள், குறைபாடுகள் எந்த அள வுக்கு ஆண்களால் உணரப்பட முடியும்? அப்படியே உணர்ந்தாலும் அவர்கள் பெண்களுக்காக முன்வந்து போராடுவார்கள் என்று எதிர்பார்க்க முடியாதே!

1996 ஆம் ஆண்டு முதல் இதற்கான மசோதா நிலுவையில் உள்ளதே. மாநிலங்களவையில் மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளது.

மக்களவையிலும் நிறைவேற்றப்படவேண்டும். அய்க்கிய முற்போக்குக் கூட்டணித் தலைவர் திருமதி சோனியா காந்தி அவர்கள் அந்தச் சட்டம் விரைவில் நிறைவேற்றப்படும் என்று உறுதி அளித்துள்ளார்.

தேர்தல் நேரம்... அந்தச் சட்டத்தைக் கொண்டு வந்தால், அனேகமாக எந்த அரசியல் கட்சியும் பெண்களுக்கு எதிராகச் செயல்படாது என்று எதிர்பார்க்கலாம்.

பெண்கள் அமைப்புகளும் இத்திசையில் குரல் கொடுப்பார்களாக! திராவிடர் கழகம் தொடர் பிரச்சாரத்தில் இதனை முன்னெடுத்துச் செல்ல உள்ளது - ஆதரவு தாரீர்! 23-1-2013

தமிழ் ஓவியா said...


ஷிண்டேமீது குதறுபவர்கள், இதற்கென்ன பதில் சொல்வார்கள்?


தீவிரவாதத் தாக்குதலில் ஆர்.எஸ்.எஸ். தொடர்பு

பட்டியலிட்டார் மத்திய உள்துறை செயலாளர்

புதுடில்லி, ஜன.23- சம்ஜாவ்தா எக்ஸ்பிரஸ், மெக்கா மசூதி மற்றும் அஜ்மீர் தர்கா குண்டு வெடிப்பு தீவிரவாத தாக் குதல்களில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்துக்குத் தொடர் புள்ளதாக அறிவித் துள்ள மத்திய அரசு அவற்றில் தொடர்பு டைய 10 பேர் பெயர் களையும் வெளியிட் டுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில், காங்கிரஸ் கட்சியின் சிந்தனை அமர்வு மாநாடு நடை பெற்றது. இந்த மாநாட் டில் பங்கேற்று பேசிய மத்திய உள்துறை அமைச் சர் சுஷில்குமார் ஷிண்டே, இந்துத் தீவிரவாதம் குறித்து வெளியிட்ட தக வலை வைத்து சர்ச்சையை ஏற்படுத்தினர்.

இந்தக் கருத்துக்கு காங்கிரஸ் கட்சி உடன டியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், உள் துறை அமைச்சர் ஷிண் டேவை பதவியிலிருந்து நீக்கவேண்டும் என்றும், பாரதீய ஜனதா வற் புறுத்தி வருகிறது. இந்த நிலையில் வெளியுறவுத் துறை அமைச்சர் சல் மான் குர்ஷித், ஷிண்டே வின் கருத்தை நேற்று ஆதரித்தார்.

ஆர்.எஸ்.எஸ். தொடர்புள்ள 10 பேர்

இதற்கிடையில், தீவி ரவாத தாக்குதல்களில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத் துக்குத் தொடர்பு இருப் பதற்கான ஆதாரங்கள் உள்ளதாக, மத்திய உள் துறை செயலாளர் ஆர்.கே.சிங் நேற்று மாலை அறிவித்தார். சம்ஜாவ்தா எக்ஸ்பிரஸ், மெக்கா மசூதி மற்றும் (அஜ்மீர்) தர்கா ஷரீப் பில் நடந்த தீவிரவாத குண்டு வெடிப்பு தாக்கு தல்களில், குறைந்தபட் சம் ஆர்.எஸ்.எஸ். இயக் கத்துடன் தொடர்பு டைய 10 பேர் ஈடுபட்ட தற்கான ஆதாரங்கள் உள்ளன என்று, அவர் தெரிவித்தார்.
ஆர்.எஸ்.எஸ். அமைப் பைச் சேர்ந்த சுனில் ஜோஷிக்கு (இவர் இப் போது உயிருடன் இல்லை) சம்ஜெதா ரயில் குண்டு வெடிப்பு மற்றும் அஜ் மீர் ஷெரீப் தர்கா குண்டுவெடிப்பில் தொடர்புள்ளது.

இவர் 1990 முதல் 2003 வரை மத்தியப் பிரதேச மாநிலத்தில் ஆர்.எஸ்.எஸ். இயக்கப் பணிகளை மேற்கொண்டார். சந்தீப் தாங்கே என்பவருக்கு (தலைமறைவாக உள்ளார்) சம்ஜெதா, மெக்கா மசூதி, அஜ்மீர் ஷெரீப் தர்கா குண்டு வெடிப்பில் தொடர்புள்ளது. இவர் இந்தூர் உள் ளிட்ட பகுதிகளில் ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரக ராகச் செயல்பட்டார். அதே போன்று லோகேஷ் சர்மா, சுவாமி அசீமானந்த், ராஜேந்தர் என்ற சமுந்தர், முகேஷ் வாசனி, தேவேந்தர் குப்தா, சந்திரசேகர், கமல் செகான், ராம்ஜி கல்சங்ரா ஆகியோருக்கு இந்த மூன்று குண்டு வெடிப்பு சம்பவங்களிலோ அல்லது ஏதாவ தொன்றிலோ தொடர்புள்ளது. இவர்களில் ராம்ஜியை தவிர மற்ற அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்'' என்றார் ஆர்.கே. சிங். ஜனார்த்தன் திவிவேதி

உள்நாட்டின் காவி தீவிரவாத சர்ச்சை ,தீவிரம் அடைந்து வரும் நிலையில், தீவிரவாதத்துக்கு ஜாதியோ மதமோ இல்லை என்ற தனது கருத்தில் காங்கிரஸ் கட்சி உறுதியாக இருந்து வருகிறது. இந்தத் தகவலை தெரிவித்த கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஜனார்த்தன் திவிவேதி, இந்த பிரச்சினையை நீண்ட காலத்திற்கு முன்பே காங்கிரஸ் கட்சி தெளிவுபடுத்தி இருப்பதாக தெரிவித்தார். தீவிரவாதத்திற்கு எந்த மதமும் இல்லை என்பதே காங்கிரசின் கருத்து என்று ஜனார்த்தன் திவிவேதி தெரிவித்தார்.