Search This Blog

26.1.13

பார்ப்பனர்களைத் திட்டித் தீர்க்கிறீர்களே! அவாளால் என்ன தொந்தரவு?

அன்றும் - இன்றும் - என்றும் பார்ப்பனர்கள்

பார்ப்பனர்களைப் பாழும் சொற்களால் திட்டித் தீர்க்கிறீர்களே. அவாளால் என்ன தொந்தரவு? தான் உண்டு தன் குடும்பம் உண்டு என்று ஒதுங்கித் தானே போகிறார்கள்.
இப்பொழுதெல்லாம் அவர்கள் பரம சாதுவாகி விட்டார்கள்  எல்லாம் கலந்து  போச்சு! முனியாண்டி ஹோட்டலில் சாப்பிடுறா... சகஜமாகப் பழகுறா... இன்னும் அவர்களின் மேல் தூஷணையா என்று வக்காலத்துப் போட்டுப் பேசும் ம.பொ.சி.யின் மிச்ச சொச்ச  வகையறாக்கள் இன்று வரை இருக்கத்தானே செய்கிறார்கள்?

ஒரே ஒரு கேள்வி, தமிழ் _ தமிழர் _ தமிழர் பண்பாடு தளத்திலே அவர்கள் இன்றுவரை தமிழர்களோடு எந்த அளவு ஒன்றி கலந்திருக் கிறார்கள் என்று சொல்ல முடியுமா?

இம்மாதம் 13ஆம் தேதி (13.1.2013) தினமலர் ஏட்டில் 3ஆம் பக்கத்தில் வெளிவந்த விளம்பரம் இதோ ஒன்று.

இதற்கு என்ன பொருள் என்று விளக்குவார்களா?
ஆந்திர மாநிலத்தில் -  அய்தரா பாத் அருகில் ஒரு கிராமம் உரு வாக்கப்பட்டுள்ளது. அதன் விவரம் இதோ:

21ஆம் நூற்றாண்டு அக்கிர(ம)காரம்!

ஆந்திரப் பிரதேச தலைநகர் அய்தராபாத்துக்குப் பக்கத்தில் அக்கிர(ம)காரம் ஒன்று உருவாகிறது. அய்தராபாத்துக்கு 90 கி.மீ., தூரத்தில் நாக்பூர் சாலையில் 1200 ஏக்கர் பரப்பளவில் பார்ப்பனச் சேரியாம். 1000 பார்ப்பனக் குடும்பங்கள் வீடு கட்டி வசிக்கும். ஒவ்வொரு வீட்டுக்கும் 1000 சதுர அடி மனையாம். 4 லட்ச ரூபாய் விலையாம்.

அங்கு மனை வாங்க சில பாரதீய ஜனதாக் கட்சிக்காரர்கள்கூட முயன்றனராம். பார்ப்பனர் அல்லாதவர் என்பதால் விற்க முடியாது என்று கூறிவிட்டார்களாம். அவ்வளவு ஜாதி வெறி! டாக்டர் பி. கமலாகரசர்மா என்ப வர் இதன் உரிமையாளராம்; வெளிநாடு வாழ் இந்தியராம்! _ இது செய்தி.
எவ்வளவு பச்சைப் பார்ப்பன ஜாதி வெறி! பார்ப்பனர்கள் திருந்தி விட் டார்கள் என்கிறார்களே! உண்மையா?

எந்த ஜாதியினால் படிக்கக் கூடாத, வேலை பார்க்கக் கூடாத ஜாதியாக ஆக்கப்பட்டோமோ, அந்த ஜாதியின் அடிப்படையில் ஒதுக்கீடு தரக்கூடாது என்று கூச்சல் போடும் ஜாதித் திமிர் கொண்டவர்கள் இந்தப் பார்ப்பன ஜாதித் திமிர்  கொண்ட செய்கைக்கு என்ன சமாதானம் கூறுவார்கள்?

பாம்பு சீறிட மறந்தாலும் இந்தப் பண்டாக்கள் தம் பண்பை மறவார் -  என அண்ணா சொன்னது சரிதானே!

அப்பொழுதே விடுதலை (5.1.2008) வெளியிட்டு வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தது.

மற்றொரு விளம்பரமும் உண்டு தினமணியில் (20.10.1993) வெளிவந்த அந்தச் செய்தி இதோ:

தற்போது பலருக்கும் பலவிதமான வியாதிகளும் திடீர் மரணங்களும், ஜலக் கஷ்டத்தினால் அவதிகளும் இப்படி பல வகையான துன்பங்கள் தனி மனிதனிலிருந்து, குடும்பம், நாடு வரையில் உள்ளவற்றை குறைப்ப தற்காக ஒவ்வொரு பிராமணரும் ஸந்தியாவந்தனம் செய்த பிறகு ஒரு மண்டல காலம் (45 தினங்கள்). ஸஹஸ்ர காயத்ரி ஜபம் (1008 முறை காயத்ரி ஜபம்) தங்கள் குடும்ப ஷேமத்திற்காகவும், நாட்டின் ஷேமத் திற்காகவும் என மனதில் ஸங்கல்பம் செய்து ஜபம் செய்ய வேண்டும். ஜபம் முடிந்தபிறகு 12 முறை சூர்யனுக்கு நமஸ்காரம் செய்ய வேண்டும். ஒவ்வொரு ஊரிலுள்ள பிராமண ஸமாஜம் இதற்கு முழு முயற்சி எடுத்து இது வரையில் தொடங்காதவர்களை விஜயதசமிக்கு தொடங்கிவிட முயற்சி செய்யவும் என்று ஸ்ரீகாஞ்சி காமகோடி ஸ்வாமிகளின் அபிப்ராயம் என்று ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் ஜகத்குரு ஸ்ரீஜயேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் மூலமாக அறிவிக்கப்படுகிறது. இப்படி தொடங்கின விபரத்தை கீழ்க்கண்ட விலாசத்திற்கு தெரிவித்தால் ஸ்ரீ ஆசார்ய ஸ்வாமிகளிடம் தெரிவித்து விசேஷ பிரசாதம் அனுப்பி வைக்கப்படும்.
பிராமண ஸமாஜம்,
3, கொல்லா சத்திரம் தெரு,
காஞ்சிபுரம், 631 502
                          -------------------------------தினமணி 20.10.1993

நாட்டின் க்ஷேமத்துக்காக பிராமணோத்தமர்கள் மட்டும்தான் ஸந்தியாவந்தனம் செய்ய வேண்டுமா? (இவர்கள் ஸந்தியா வந்தனம் செய்வதால் ஆகப் போவது ஒன்று மில்லை என்பது வேறு  செய்தி!)
லோகக்குரு என்று அவாள் கூறும் சங்கராச்சாரியார் அக்கிரகார சம்பந்தப்பட்டவராக இருக்கிறாரே தவிர, மற்றவர்களிடமிருந்து ஒதுங்கி தானே இருக்கிறார்கள் என்பதற்கு இந்த எடுத்துக்காட்டுப் போதாதா?
ராஜபாளையம் சேதி ஒன்றும் இருக்கிறது. ராஜபாளையம் நகரத்தில் அமைக்கப்பட்டுள்ள வேத பாட சாலையில் மாணவர்கள் சேர்க்கைக் கான விளம்பரம் இதோ:
இவ்வாண்டு முதல் நமது வேத பாடசாலையில் 15 வயது முதல் 20 வயதிற்குட்பட்ட சமஸ்கிருத நுழைவு/ தமிழக அரசின் 10ஆம் வகுப்பு தேர்வு அதற்குச் சமமான சமஸ்கிருத கல்வியுடன் கூடிய கல்வித் தகுதி யுடன் உபநயனமான மாணவர்கள் மேற்கண்ட அய்ந்தாண்டு கால குரு குல அமைப்பில் அத்வைத வேதாந்த சாஸ்திரம் என்ற புதிய வகுப்புக்கு சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். (தினமலர் 19.4.2002 பக்கம் 7).

வேதங்களை சூத்திரர்கள் படிக்கக் கூடாது, படித்தால் நாக்கை அறுக்க வேண்டும், கேட்டால் ஈயத்தைக் காய்ச்சி ஊற்ற வேண்டும் என்கிறது மனுதர்ம சாஸ்திரம். இப்பொழுது அப்படி யாரும் செய்ய முடியாது என்பதால் மறைமுகமாக பார்ப்பனர்கள் மட்டுமே படிக்க வேண்டும் என்ற தன்மையில் எவ்வளவு சூழ்ச்சியாக செயல்படுகிறார்கள்.

உபநயனமான மாணவர்கள் தான் பங்கு பெற வேண்டுமாம்.
பொருள் புரிகிறதா? உபநயனம் ஆனவர்கள் என்றால் பூணூல் கல் யாணம் நடத்தி வைக்கப்பட்ட பார்ப் பனர்கள் மட்டும்தான் சேர்க்கப்படு வார்கள் என்பதை எப்படியெல்லாம் சுற்றி வளைத்துச் சொல்லுகிறார்கள்.
தினமணி ஏட்டில் (7.2.1983 வெளிவந்த விளம்பரம் இதோ ஒன்று:
கீழ்க்கண்ட விளம்பரம் பார்ப்பனர்கள் யார் - அவர்களுடைய இனவெறி எத்தகையது என்பதற்கு அடையாளமாகும்.

தேவை

கோவையிலுள்ள பிரபல இன்ஜீனியரிங் கம்பெனிக்குக் கீழ்க்கண்ட உத்தியோகங்களுக்கு விண்ணப்பங்கள் படித்த பிராமணர்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம்.

1. Accountants: B.Com
பட்டதாரிகள் மூன்று வருட அனுபவம் தேவை.
2. Typists: நன்கு படித்தவர்கள் சுயமாக லெட்டர்கள் தயாரித்து அனுப்பும் திறமை உள்ளவர்கள் குறைந்தது மூன்று வருட அனுபவம் தேவை.
3. Saler Representatives:
வியாபாரத்தில் திறமையும் அனுபவம் உள்ள பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கிறோம்.
மேற்கண்ட வேலைக்கு சமீபத்தில் ஓய்வு பெற்றவர் களும் விண்ணப்பிக்கலாம். திறமைக்கு ஏற்ற ஊதியம் உண்டு.
ஒவ்வொரு வேலைக்கும் தனித்தனியாக விண்ணப்பித்து அனுப்ப வேண்டும்.
Raj & Co Post Box No 9
Coimbatore - 641 001.

தமிழ்நாட்டில் இருந்து கொண்டு, தமிழால் பிழைத்துக் கொண்டு, தமிழர்களிடம் வியாபாரம் செய்து வயிற்றை கழுவிக் கொண்டு இருக்கக் கூடிய பார்ப்பனர்கள் தங்கள் நிறுவனத்தில் பணிக்கு அமர்த்த பார்ப்பனர்களை மட்டும் விளம்பரம் செய்து கூவி அழைப்பதை நம் தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டாமா?

இவர்களை விட்டுத் தள்ளுங்கள். அவாளின் ஜெகத் குருக்கள் இருக்கிறார்களே _ அவர்கள்தானே ஜப்பானுக்கும், கனடாவுக்கும், எகிப்துக்கும், எத்தியோப்பாவுக்கும், ருசியாவுக்கும், சீனாவுக்கும், அமெரிக்காவுக்கும் குரு! (கடலைத் தாண்டிச் செல்வது தோஷம் என்று சொல்லுபவர்கள் எப்படி லோகக் குரு ஆவார்கள் என்று எவரும் கேள்வி எழுப்பிட வேண்டாம்) அவாளை நோக்கிக் கேள்வி எல்லாம் கேட்கக் கூடாது; காரணம் மகாபெரிய வா(ல்)ள்
மறைந்த காஞ்சி சூப்பர் சீனியர் பெரியவாள் இருக்கிறாரோ, இல்லியோ - அவா(ள்) எப்படிப்பட்டவாள்?

தெய்வத்தின் குரல் என்று அவாளின் பேச்சுகள் எழுத்துக்கள் பல தொகுதிகளாக வெளிவந்தன. (அவற்றை ஆதாரமாகக் கொண்டுதான் தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் பெரிய வாள்களைத் தோலுரித்துத் தொங்கப் போட்டுள்ளார் - சங்கராச்சாரி _- யார்? என்று நூலாகவும் வெளி வந்துள்ளது)

காஞ்சி மடத்திலே பல டிரஸ்டுகளை உருவாக்கி வைத்துள்ளார்கள்.
றீ ஸஸ்டியப்த பூர்த்தி ட்ரஸ்ட், வேத பாஷ்யங்களைப் படிப்பதற்கு உற்சாக மூட்டுவதற்காக ஏற்படுத்தப்பட்ட ட்ரஸ்ட்!

வேத  ரக்ஷண நிதி ட்ரஸ்ட், வேதமாத நிதி  ட்ரஸ்ட் இந்தியா முழுவதும் வேதப் பாடசாலைகளை நடத்து வதற்கு
றீ கன்னிகாதான ட்ரஸ்ட் - _ பிராமணப் பெண்களை உத்தேசித்தே இந்த ட்ரஸ்ட் இப்படி ஜெகத் குரு என்று சொல்லப்படுபவரே பார்ப்பன வெறித்தனத்தில் ஊறிக் கிடக்கிறார் என்றால் மற்ற மற்ற பார்ப்பனர் களைப் பற்றிக் கேட்கவா வேண்டும்?

பார்ப்பனர் அல்லாதார் களிடத்தில் தட்சணை வாங்குவது --_ பயன்பாடோ பார்ப்பனர்களுக்கு என்னே சாமர்த்தியம்!

இப்பொழுது சென்னை யில் அக்கிரகார பகுதிகளில் புதிய தந்திரத்தைக் கையாளுகின்றார்கள். பிராமணர்களுக்கு மட்டும் வீடு வாடகைக்கு ஒதுக்கப்படும் என்ற பச்சையாக விளம்பரம் செய்வது சற்றுக் கடினமானது என்று கருதி “For Vegetarian  Only” என்று வீட்டு வாசலில் விளம்பரம் செய்துவிட்டு, நேரில் வரும்போது பிராமணாளா இல்லையா என்று விவரம் அறிந்து பார்ப்பனர்களாக இருந்தால் மட்டும் வாடகைக்கு விடும் தந்திரத்தை மேற்கொள்கிறார்கள்.

பார்ப்பனர்கள்பற்றி இன்னுமா பேச வேண்டும் என்று வாய் நீளம் காட்டும் பெரிய மனிதர்கள் இவ்வளவு எடுத்துக்காட்டுக்குப் பிறகு என்ன சொல்லப் போகிறார்கள்?

---------------------------- மின்சாரம் அவர்கள் 26-1-2013 “விடுதலை” ஞாயிறுமலரில் எழுதிய கட்டுரை

39 comments:

தமிழ் ஓவியா said...


நரேந்திரமோடிபற்றி


இந்திய பத்திரிகை கவுன்சில் தலைவர் மார்க்கண்டேய கட்ஜு

இந்திய பத்திரிகை கவுன்சிலின் தலைவர் மார்க்கண்டேய கட்ஜு ஞாயிறன்று குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் வளர்ச்சிபற்றிய பேச்சு பொய்யானது. மாநிலத்தின் ஊட்டப் பற்றாக்குறை சோமாலியா நாட்டைவிட மோசமானது என்றார்.

மோடியின் வளர்ச்சி சாதனையாகப் பெருமளவில் பேசுகிறார். ஆனால் சாதாரண குடிமகனின் வாழ்க்கைத் தரம் மிகவும் அஞ்சத்தக்க நிலையில் கீழ் நிலையில் உள்ளது.

புள்ளி விவரங்களைக் குறிப்பிட்டுக் காட்டிய கட்ஜு, ஆப்பிரிக்காவில் உள்ள சோமாலியா நாட்டைவிட, குஜராத்தின் ஊட்டச் சத்து பற்றாக்குறை அதிகமாக உள்ளதாக, அவர் நிருபர்களிடம் கூறினார்.

வளர்ச்சி பற்றிய சாதனை கோடு தான் பொய்யானதாக இருப்பதால் சாதா ரண குடிமகனுக்கு எந்தவொரு நன்மை யுமில்லை என்று கட்ஜு கூறினார்.

மாநிலத்தின் (மக்கள்) மோடியின் பெருமை பீற்றிக் கொள்ளும் சாதனை கள், அவர்களுக்கு எந்த விதத்திலும் பலனளிக்கப் போவதில்லை என்பதை உணரும் காலம் வரும் என்றார்.

மேலும் 2002ல் நடந்த கோத்ரா சம்பவத்திற்குப் பிற்பட்ட காலத்தில், 2002ல் குஜராத்தில் நடந்த வகுப்புக் கலவரங்கள் அவர்மீதான களங்கக் கறையைத் துடைப்பதாக இல்லை என்றார்.

மோடியின் மாநிலச் சட்டமன்ற மூன்றாம் முறை வெற்றியைப் பற்றிக் கேட்டதற்கு இக்காலத்தில் நாட்டில் தேர்தல்கள் எவ்வாறு நடத்தப்படு கின்றன; எவ்வாறு வெற்றி பெறப்படு கிறது என்பது எல்லோருக்கும் தெரியும் என்றார்.

இதில் பெரும் வேறுபாடு என்ன வென்றால், நாட்டின் மற்றொரு பாரதீய ஜனதா ஆளும் மாநிலமான மத்திய பிரதேசத்திற்கு முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் மீது எந்தக் கறையும் இல்லை என்று அவர் சொன்னார்.

கட்ஜு, இரு தினங்களுக்கு முன் அவர் சவுகானைச் சந்தித்து உருது மொழிக் கவியரங்கத்திற்கு வருமாறு அழைத்ததாகவும், அதற்கு அவர் 15 நிமிடங்களுக்கு மட்டுமே வார இயலும் என்று சொன்னார் என்றும் கட்ஜு குறிப்பிட்டார்.

ஆனால் சவுகான் வந்து 50 நிமி டத்திற்கு மேலேயே இருந்து உருது கவிதைகளை பாராட்டியதாக கட்ஜு சொன்னார். சவுகான் ஒரு சாதுவான, எளிய மனிதர் என்று கூறினார். மத்தியப் பிரதேச மாநிலத்தில், உருது மொழி வளர்ச்சிக்குத் தன்னாலான உதவிகளைச் செய்வதாக சவுகான் உறுதி கூறினார் என்று சொன்னார்.

- (பி.டி.அய். செய்தி நிறுவனம் நாள் 23.12.2012)

தமிழ் ஓவியா said...


கூவி அழைக்கின்றோம்


மனித சமுகத்தினிடம் அன்பு கொண்டு சமநோக்குடன் மக்களுக்குச் சேவை செய்ய வேண்டுமென்ற ஆசையுள்ள மக்களை அப்படிப்பட்ட சமதர்ம நோக்கமுள்ள உண்மைத் தொண்டர்களை இரண்டு கையையும் நீட்டி மண்டியிட்டு வரவேற்க சமதர்ம இயக்கம் காத்திருக்கிறது. அது உலக மக்கள் எல்லோரையும் பொறுத்த இயக்கம், ஜாதி, மதம், வருணம், தேசம் என்கின்ற கற்பனை நிலைகளை எல்லாம் தாண்டிய இயக்கம். பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன், ஹரிஜனன் என்கின்ற வருணங்களை ஒழித்து எல்லோரும், எப்பொழுதும் மனிதரே என்று கூவும் இயக்கம். ஏழை என்றும், பணக்காரன் என்றும், முதலாளி என்றும், தொழிலாளி என்றும், எஜமான் என்றும், கூலி என்றும், ஜமீன்தாரன் என்றும், குடியானவன் என்றும், உள்ள சகல வகுப்புகளையும், வேறுபாடுகளையும் நிர்மூலமாக்கி தரைமட்டமாக்கும் இயக்கம். மற்றும் குரு என்றும், முன் ஜென்மம், பின் ஜென்மம் என்றும் சிஷ்யன் என்றும், பாதிரியென்றும், முல்லாவென்றும் கர்ம பலன் என்றும்; அடிமையையும், எஜமானனையும், மேல் ஜாதிக்கரனையும், கீழ்ஜாதிக்காரனையும், முதலாளியையும், ஏழையையும், பணக்காரனையும், சக்கரவர்த்தியையும், குடிகளையும், மகாத்மாவையும், சாதாரண ஆத்மாவையும், அவனவனுடைய முன் ஜென்ம கர்மத்தின்படி அல்லது ஈஸ்வரன் தம் கடாட்சப்படி உண்டாக்கினார் என்றும் சொல்லப்படும் அயோக்கியத்தனமான சுயநலங்கொண்ட சோம்பேறிகளின் கற்பனைகளை எல்லாம் வெட்டித் தகர்த்து சாம்பலாக்கி எல்லோருக்கும் எல்லாம் சமம், எல்லாம் பொது என்ற நிலையை உண்டாக்கும் இயக்கம், ஜாதி - சமயம் - தேச சண்டையற்று உலக மக்கள் யாவரும் தோழர்கள் என்று சாந்தியும், ஒற்றுமையும் அளிக்கும் இயக்கம். ஆதலால் அதில் சேர்ந்து உழைக்க வாருங்கள்! வாருங்கள்!! என்று கூவி அழைக்கின்றோம்.

- தந்தை பெரியார்
குடிஅரசு - தலையங்கம் - 30.07.1933

தமிழ் ஓவியா said...


ஆன்மிகம் எனப்படுவது யாதெனின்...


பக்தித் தொடர் என்று அறி வித்து விட்டு யாரைப்பற்றியாவது, எதைப் பற்றியாவது எழுதிக் குவித்து விட்டால் அதை வரவேற்கவும் வாசிக்கவும் ஒரு கூட்டம் காத்திருக்கிறது என்பது தெரியும். புட்டபர்த்தி சாய்பாபாவின் புகழ் பரப்பும் கைங்கர்யம். சத்யம் சிவம் சாய்பாபா என்றொரு பக்தித் தொடர். பொய்ப் புரட்டுகளைக் கட்டவிழ்த்து காசு பண்ணும் காரியம்! 16 .1.2013 குமுதம் இதழில் வந்தது இது: 45 வயதான சன்னியாசி உருவில் புட்டபர்த்திக்கு வந்த ஒருவர் காவி உடை, ருத்தி ராட்சம், மொட்டைத் தலை, பட்டை பட்டையாய் விபூதி அணிந்திருக்க பாபா அவரை மட்டும் உள்ளே அழைத்துச் சென்றார். சன்னி யாசியை உற்றுப் பார்த்தார் பாபா. அப்பா கல்பகிரி நீ என்னதான் காவி கட்டி சன்னியாசி ஆனாலும் நீ செய்த கொலைப் பாவம் உன்னைவிட்டுப் போகுமா? நான்கு ஆண்டுகளாக இந்த வேசத்தில் நீ தலைமறைவானது போதும். இப்போதே போலீசில் சரண டைந்துவிடு. கர்மாவை அனுப வித்துவிடு, அஞ்சி அஞ்சி வாழும் உனக்கு இது தான் நிம்மதி. நீ செய்த கொலைக்கு மரண தண்டனை தருவார்களே என்று பயப்படாதே.

நான் துணை நிற்கிறேன். இந்த ஜென்மத்திலேயே பிராயச் சித்தம் செய்ய என் னுடைய காப்பு உனக்கு இருக்கிறது. கவலைப்படாதே. நான் உனக்கு கருணை செய்கிறேன். நிச்சயமாக நீ தூக்கில் தொங்க மாட்டாய். நான் வாக்குத் தரு கிறேன். போலீஸ் நிலையத்திற்குப் போ. இந்தப் புனிதமான காவி உடை உனக்கு உதவாது. வெள்ளை வேட்டியை இங்கேயே பெற்றுக் கொள் என்றார்.

அதன்படி காவல் நிலையத்தில் சரணடைந்தான் கல்பகிரி. வழக்கு நடந்தது. குற்றத்தை ஒப்புக் கொண்டான். அவனுக்குத் தூக்குத் தண்டனை வழங்கி தீர்ப்பு எழுதினார் நீதிபதி. பாபாதான் துணை நிற்கிறாரே இவன் ஏன் அஞ்ச வேண்டும்? பாபாவின் சொற்படி ராஷ்டிரபதிக்கு க்ளெமென்ஸி (கருணை மனு) பெட்டிசன் அனுப்பப்பட்டது. சிறைக்குள் சாயி பஜனை துவங் கியது. பாபாவின் புகைப்படம் காராக்கிரகத்தை கர்ப்பக் கிரகமாக்கிற்று. மரண தண்டனை ஆயுள் தண்டனையாக மாறிற்று. எல்லாக் கைதிகளுக்கும் பாபா மேல் நம்பிக்கை வந்தது. பங்காரு என்றுதான் பாபா என்னை அழைத்தார் பங்காரு என்றால் தங்கம். இரும்புபோல் துருப் பிடித்துக் கிடக்கும் என்னைப் போன்றவர்களைக் கூடத் தங்கமாக ஆக்க பாபாவால் முடியும். தனியாக விரதம் , தவம், பூஜை எதுவும் வேண்டாம். தங்கத்தைப் போல், ஊது உலையில் அவதிப் படாமல் சிரமமின்றி குளிர்பதனப் பெட்டிக்குள் வைத்தே பத்தரை மாற்றுத் தங்கமாக மாற்றி விடுவார் பாபா என்றான் அந்தக் கொலையாளி. கல்லாக கிரியாக இருந்த கல்பகிரியைக் கனியாக்கி விட்டாராம் பாபா! கட்டுரையின் ஒரு பகுதி இது.

தமிழ் ஓவியா said...


நாம் கேட்க விழைவது இதுதான்: எவ்வளவு பெரிய கொடூரக் குற்றவாளியாக இருந் தாலும் திறமையான வழக்கறிஞர் ஒருவரை அணுகியிருந்தால், பணமும் செலவழித்திருந்தால் குறைந்த தண்டனை கூடப் பெறாமலே வழக்கிலிருந்து தப்பிவிட வாய்ப்பிருக்கிறதே, பாபாவின் யோசனை தேவைப் பட்டிருக்காதே! கொலை, கற் பழிப்பில் ஈடுபடுபவர்கள் சந்நியாசி ஆவதில் வியப்பொன்றும் இல்லை. நேரில் பார்த்த சாட்சி இல்லாமலும், பிறழ் சாட்சியாலும், வழக்கறிஞரின் வாதத் திறமையாலும், சட்டத் திலுள்ள சந்து பொந்துகளினாலும் தண்டனையிலிருந்து தப்பிப் பிழைத்தவர்கள் உண்டே! இன்னும் சொல்லப் போனால் பஞ்சமா பாதகங்கள் செய்த பலர் கோர்ட் படி ஏறாமலே வீதி உலா வரு வதும் நிகழக் கூடியதே. கொலை தற்கொலை என சித்தரிக்கப்பட்டு சட்டத்தின் பிடியில் உண்மை சிக்காமல் போவதும் உண்டு. சாயிபாபாக்களின் சாதுர்யங்கள் வெறும் வெற்று வேட்டுகளே.

அடுத்து சொல்லப்படும் நிகழ்வு தான் அதீத அற்புதங்களைக் கொண்டது. விட்டலாச்சாரியின் கதைகளை விஞ்சும் தன்மை யுடையது. தமிழ்த் திரையுலகில் முடிசூடா மன்னனாக, முதல் சூப்பர் ஸ்டாராகப் புகழ் பெற்றவர் எம்.கே. தியாகராஜ பாகவதர். சிவபெருமான் கிருபை வேண்டும். திருவடி தொழ வேண்டும். வேறென்ன வேண்டும்? உன்னை அல்லால் ஒரு துரும்பசையுமோ? என்றெல்லாம் திரையில் பாடி பக்தி பரவசமூட்டியவர். பாகவதரின் இனிய குரலில் பற்றுக் கொண்ட அறிஞர் அண்ணா அவர்கள் சொர்க்கவாசல் திரைப்படத்தில் நடிக்க வைக்கும் ஆவலுடன் அவரை அணுகியபோது பக்திப் படங்களிலே நடித்து பழகி விட்டேன் என்று கூறி தட்டிக் கழித்தவர். நடிப்பிசைப் புலவர் கே.ஆர். ராமசாமியின் இனிய பாடல்களில் நடிப்பில் அந்தப் படம் வெளிவந்தது. இதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். குமுதம் கல்யாணராமனின் கதைக்கு வருவோம்.

தமிழ் ஓவியா said...


புகழுடன் வாழ்ந்த பாகவதரின் கடைசிக் க லம் கண்ணீர் நிரம்பியதாய் இருந்தது. வறுமை, வழக்கு, நோய் என்று படாத பாடுபட்ட அவரின் கண் பார்வை யும் முற்றிலும் பறிபோனது. சிகிச் சைகள் எதுவும் பலனளிக்க வில்லை. (அவரது பாட்டுக்களில் பூஜிக்கப்பட்ட சாமிகளைச் சரணடையாமல்) பாபாவிடம் சரணடைந்தார். பல தவறுகளைச் செய்து பாவங்களைத் தேடிக் கொள்கிறோம் என்றெல்லாம் தத்துவார்த்தமாகப் பாபா பேசினாரே தவிர பாகவதரின் பார்வைக் குறைபாட்டைப் போக்குவதுபற்றி வாயே திறக்கவில்லை. ஞானக் கண் ஊனக் கண் பற்றியெல்லாம் சிந்தாமணி படத்தில் பாடியவர் என்னுடைய இந்தக் கண்களால் பார்த்ததெல்லாம் போதும். தங்களைத் தரிசித்ததே இல்லை. இந்த ஊனக் கண்ணால் தங்களைத் தரிசிக்கும் பாக்கியம் கிட்டினால் போதும் என்று விண்ணப்பித்தார் எம்.கே.டி.

உற்றுப் பார்த்த பாபா சரி இந்த தரிசனத்துக்கு மட்டும்தான் உமக்குப் பார்வை தருகிறேன். என்னைப் பார் என்றார் பாபா. பாகவதரின் கண்களில் பார்வை சக்தி பாய்ந்தது. ஆனந்தத்தில் அலறிய பாகவதர் இது நிஜமா? நான் உங்களை முழுமையாகப் பார்க்கிறேனே. தெய்வீக முகம் என குருட்டுக் கண்களுக்குத் தெரிகிறதே. இந்த அடிமைக்கு காட்சி தந்து புனிதப்படுத்தி விட்டீர்களே என்று நெகிழ்ந்து போனார். பார்க்கிறபடி பார்த்துவிட்டால் ஒரே தரிசனத்தில் பாவம் முழுதும் தொலைந்து போய் விடுமாம்!

நிஜ(!) பக்தரான பாகவதர் பாபாவைப் பார்த்துக் கொண்டார். போதுமா? என்றார். போதும் சாமி என்றார் பாகவதர். அவ்வளவுதான்! பார்வையை திரும்ப வாங்கிக் கொண்டார் பாபா.

பழைய நிலைக்கு ஆளானார் பாகவதர். ஆனாலும் அவர் முகத்தில் ஒரு வித மலர்ச்சி சந்தோசமாக (!) கைகூப்பியபடியே அந்த இடத்தை விட்டுத் தட்டுத் தடுமாறி நடந்தார். கூட வந்த ஒருவர் பாகவதரின் உடல் நலமும் சீர் கெட்டிருப்பதைச் சொல்லி, அவரைக் குணப்படுத்த வேண்டும் என்று வேண்டினார். உடனே பாபா கொத்த சரீரமு இஸ்தானு என்றார். அதாவது புது உடம்பு தருகிறேன் என்று பொருள்.

பாகவதர் ஊருக்குத் திரும்பிய சில தினங்களில் இறைவனடி (!) சேர்ந்தார். செய்தியைக் கேள்விப்பட்ட ஒருவர் பாபாவின் வாக்கு பலிக்கவில்லையே என்று பாபாவிடமே கேட்டார். அதற்குப் பதிலளித்த பாபா நான் என்ன சொன்னேன்? பாகவதரின் பழைய உடம்பு போய் வேறு ஒரு இடத்தில் புது உடம்பில் பிரவேசித்து விட்டார் என்று பாபா கூற கட்டுரை முடிகிறது.

பார்வை இழந்த நிஜ பக்தனுக்குத் தற்காலிகப் பார்வை தரிசனமாம்! எத்தகைய பித்தலாட்டம்! நோயைக் குணப்படுத்தி வாழ வழி செய்யும் யோக்யதையாவது பாபாவிடம் இருந்ததா? புது உடம்பு எங்கே? என்று கேட்டவருக்கு அதுதாண்ணே இது என்ற கவுண்டமணி செந்தில் காமெடி போன்ற பதிலா தருவது? தனக்கே புது உடம்பு பெற்றுக் கொள்ள முடியாமல் நடமாட்டமின்றி நோய் வாய்ப்பட்டு செத்தவர்தானே பாபா!

நாத்திகம் பேசும் சொர்க்கவாசல் படத்தில் நடிக்க விரும்பாத பழுத்த ஆன்மிகவாதியான பாகவதர் இதுநாள் வரை நம்பி வந்த கடவுள்களையும் நம்பாமல் கட்ட சந்நியாசியின் காலில் வந்து விழுந்ததுதான் சோகம். பக்தி பரப்புரைகள் பல எழுதி பாமரர்களை ஆன்மிக வழிக்குத் திருப்பும் அதே குமுதம். அதேஇதழில் 141ஆம் பக்கத்தில் அரசு பதில்கள் பகுதியில் சொல்லப்படுவதை வாசகர் கவனத்திற்கு வைக்கிறோம்.

நம் நாட்டில் இன்று ஆன்மிகம் எப்படி? என்பது கேள்வி

முதலீடு போடாமலே லாபம் சம்பாதிக்கும் ஒரே தொழில். இதற்கு படிப்பு முக்கியமில்லை. ஏன் அனுபவம்கூடத் தேவை இல்லை. ஆசிர்வாதம் செய்யத் தெரிந்தால் போதும்! இதுதான் பதில்.

ஒருபக்கம் பகுத்தறிவு - இன்னொரு பக்கம் பக்தி! நல்ல பொழப்பு!

- சிவகாசிமணியம்

தமிழ் ஓவியா said...


குடியரசு தலைவர் மாளிகை


இந்தியாவின் குடியரசுத் தலைவர் மாளிகையில் அறைகள் 340.

1930களில் 1 கோடியே 60லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டது. அம்மாளிகை எல்லா அறைகளிலும் ஆளில்லா வேளையிலும் மின்விசிறி, விளக்குகள் பயன்பாட்டில் உள்ளன.

(நமது நல்லாசிரியர் குரல்)

- தகவல்: கணேசன்

தமிழ் ஓவியா said...


குடியரசு தலைவர் மாளிகை


இந்தியாவின் குடியரசுத் தலைவர் மாளிகையில் அறைகள் 340.

1930களில் 1 கோடியே 60லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டது. அம்மாளிகை எல்லா அறைகளிலும் ஆளில்லா வேளையிலும் மின்விசிறி, விளக்குகள் பயன்பாட்டில் உள்ளன.

(நமது நல்லாசிரியர் குரல்)

- தகவல்: கணேசன்

தமிழ் ஓவியா said...

கடவுள் செய்த அக்ரமம்

கேள்வி: கடவுள் செய்த அக்கிரமம் என்ன?

பதில்: மூட்டைப்பூச்சி, கொசு இரண் டையும் அவர் உற்பத்தி செய்த அக்கிரமம் ஒன்றே போதாதா?

குடிஅரசு கேள்வி பதில் 15.01.1949

தமிழ் ஓவியா said...


நாத்திகனாக இருப்பதால் சாரணர் இயக்கத்தில் இடமில்லையா?


ஒரு 11 வயது சிறுவன் சாரணர் இயக்கத்தில் சேருவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளான். காரணம், அவன் கடவுள் நம்பிக்கை இல் லாதவன்!

இங்கிலாந்து நாட்டில் உள்ள சாமர்செட் என்ற ஊரில் உள்ள ஜார்ஜ் பிராட் உள்ளூர் சாரண இயக்கத்தில் கடந்த 10 மாதங்களாக பங்கு கொண்டிருந்தான்.

சாரண இயக்கத்தின் முழுமையான உறுப்பினராவதற்கு, சாரணர்களுக்கான உறுதிமொழி ஏற்க வேண்டும்.

என்னுடைய கவுரவத்தின் பேரில், நான், என்னால் முடிந்தவற்றைச் செய்வேன் சென்று உறுதியளிக்கிறேன். அதன்படி, கடவுளுக்கும் ராணிக்கும் உண்டான என் கடமையையும், மற்ற மனிதர்களுக்கு உதவி செய்வதையும், சாரணர் சட்டத்தின்படி நிறை வேற்றுவேன் என்பதுதான் அந்த உறுதிமொழி.

ஒவ்வொரு மதத்துக்கும் தக்கவாறு, உறுதிமொழியில் சிறுமாற்றங்கள் செய் யப்பட்டுள்ளன இஸ்லாமியர்களுக்கு கடவுள் என்ற சொல்லுக்குப் பதிலாக அல்லா என்று குறிப்பிடலாம்.

ஜார்ஜ் பிராட்டின் தந்தையான நிக் (45 வயது) மிகவும் கோபப்பட்டு உள்ளார். கிறித்துவ இயக்கம் மிகவும் பொதுமை யற்றதாக இருப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். கிருத்துவம், பொறுமை, மன்னிப்பு, புரிந்து கொள்ளுதல் ஆகிய பண்புகளுக்காக உள்ளது. நீங்கள் கிறிஸ்துவராகவோ, இஸ்லாமியராகவோ இருந்தால், சாரண இயக்கத்தில் சேர்த்துக் கொள்ளப் படுகிறீர்கள்.

ஆனால் கடவுளை நம்பாமல் இருக்கக் கூடாது. இது, உணர்ச்சியுள்ளவராக, பெருந்தன்மை யுள்ளவராக, அன்புள்ளவராக, உண்மையிலேயே நல்ல மனிதராக இருப்பதைப் புறந்தள்ளி விடுகிறது. பல கிறித்துவ அமைப்புகள் யாரையும் வெளியேற்றுவது இல்லை. ஆனால், இந்தப் பகுதி சாரணர் இயக்கம் மட்டும் அவ்வாறு இல்லை என்று தோன்றுகிறது என்று கூறியுள்ளார்.

பாதிக்கப்பட்ட ஜார்ஜ், நான் மிகவும் ஏமாற்றம் அடைந்துள்ளேன். தொடர்ந்து நான் அங்கு செல்ல முடியாததற்கு நான் கடவுளை நம்பாததைக் காரணம் காட்டுகிறார்கள். சாரண இயக்கத் தலைவருடன் நாங்கள் பேசிப் பார்த்து விட்டோம். அவர் தனது முடிவை மாற்றிக் கொள்ள விரும்பவில்லை. இது நியாயமானது அல்ல.

மற்ற எல்லோரும், நான் பார்த்து இராத ஓரிடத்துக்குப் போக இருக் கிறார்கள். நானும் ஆசைப்படுகிறேன். ஆனால் அனுமதி மறுக்கப்படுகிறேன். அதற்காக, நான் என் முடிவை மாற்றிக் கொள்வதாக இல்லை என்று சொல்கிறான்.

சாரண இயக்கம் 1907ஆம் ஆண்டில் ராபர்ட் பேடன், பவ்வல் என்பவர்களால் ஆரம்பிக்கப்பட்டது. பியர் கிரிலிஸ் என்ற சாகச வீரர்தான் பிரிட்டனின் இன்றைய சாரண இயக்கத் தலைவர் அவர், தனது கிருத்துவ உணர்வுகளைப் பற்றி முன்பு நிறைய பேசி இருக்கிறார்.

சாரண இயக்கத்தைச் சார்ந்த சைமன் கார்ட்டர் என்பவர் சிறு வர்கள் அனைவரும் சாரணராக வேண்டுமென்றால் அதற்கான உறுதிமொழியை ஏற்க வேண்டும் என்று சொல்லியுள்ளார்.

அவர்கள் வளர்ந்து பெரியவர்களான பிறகு சில இளைஞர்கள் சிந்தனை வளர்ந்த பிறகு கடவுள் இருப்பதை கேள்வி கேட்கவோ சந்தேகப்படவோ செய்யலாம். இதை சாரணர் இயக்கம் ஒப்புக் கொள்ளுகிறது என்று சொன்னார். இந்த முறைப்படி சாரண இயக்கத்தில் இணைந்தவர்கள், எப்பொழுதும் சாரணராகவே இருக்க வேண்டும் என்றும் அவர் சொன்னார்.

தமிழ் ஓவியா said...


கடவுள் பக்திக்காரனே! மானம் வேண்டாமா!


நான் ஒருவன்தான் மனிதத் தொண்டு என்றால், மனித சமுதாயத் திலுள்ள இழிவைப் போக்குவதும் மக்களுக்கு அறிவை ஏற்படுத்துவ துமே உண்மை யான தொண்டாகும் என்று கருதி அதில் ஈடுபட்டேன். அதற்காகவே சுய மரியாதை இயக்கத்தை ஆரம்பித்தேன்.

அந்த இயக்கத்தின் கொள்கை மனித சமுதாய இழிவிற்கும் அறிவற்ற தன்மைக்கும் அடிப்படைக் காரண மான கடவுள், -- மதம் - சாஸ்திரம் ஆகியவை ஒழிக்கப்பட வேண்டும்.

இவற்றைப் பரப்பி மக்களை மடையர்களாக்கி வரும் காங்கிரஸ், - காந்தி,- பார்ப்பான் ஆகியவைகளை ஒழிக்க வேண்டுமென்பதுமாகும்.

இக்கொள்கையோடு தொண் டாற்ற ஆரம்பித்த நான் பலமுறை செருப்படி பட்டிருக்கிறேன்.

மிக இழிவாக எல்லாம் என்னைப் பேசினார்கள். அதைப்பற்றி எல்லாம் இலட்சியம் செய்யாமல் தொண் டாற்றிக் கொண்டு வருகின்றேன்.

இப்போதுகூட என்னை நேரில் அடிக்கவில்லையென்றாலும் எனது சிலையை, படத்தை செருப்பாலடித் தார்கள்; இழிவுபடுத்தினார்கள்.

நான் அவற்றையெல்லாம் இலட் சியம் செய்யாமல்தான் இப்பணி யினை ஆற்றிக் கொண்டு வரு கின்றேன்.

நமது இயக்கம் ஆரம்பிக்கப்பட்ட போது என்ன நிலை இருந்த தென்றால் பறையன் சக்கிலியன் ரோடுகளில் நடக்க முடியாது. பொதுக் கிணற்றில், குளத்தில் தண்ணீர் எடுக்க முடியாது.

பள்ளிக்கூடத்தில் அவர்கள் வெளியில்தான் உட்கார வேண்டும்.

பஞ்சாயத்து, முனிசிபாலிட்டி மெம்பர்களாக இருப்பவர்கள் மீட்டிங் ஹாலுக்கு வெளியேதான் இருக்க வேண்டும். பியூன் போய் அவர்களிடம் கையெழுத்து வாங்கி வருவான்.

பெரும் பதவி உத்தியோகங்கள் எல்லாம் பார்ப்பானுக்கே ஏகபோக உரிமையாக இருந்தது.

அய்ந்து வயது பார்ப்பனச் சிறுவன் முதற்கொண்டு, நம்மில் எவ் வளவு பெரியவர்களாக இருந்தாலும் அவர்களை டேய் என்றுதான் கூப்பிடுவான்; நம்மவன் அவனைச் சாமி என்றுதான் அழைப்பான்.

நம் இயக்கத் தொண்டின் காரண மாக இன்றைக்கு இந்த நிலை அடியோடு மாறிவிட்டதே!

நாங்கள் ஆட்சிக்குப் போய் இதனை மாற்றவில்லை; வெளியி லிருந்து கொண்டு போராடித்தானே மாற்றி னோம். இன்றைக்கு பொது வாழ்க் கையில் பெயர் சொல்லக் கூட ஒரு பார்ப்பான் இல்லையே!

இராஜாஜி இருக்கிறாரென்றால், பத்திரிகைகள் விளம்பரத்தால் பெரிய மனிதராக இருக்கிறாரே ஒழிய வேறு எதனாலும் இல்லையே!

இப்போது பார்ப்பனர்கள் எப்படி யாவது நம்மை நசுக்க சந்தர்ப்பம் பார்த்துக் கொண்டு இருக்கின் றார்கள்.

இனி நாம் சிக்க மாட்டோம்.

நாம் அடைய வேண்டிய அளவு வெற்றி பெறவில்லை என்றாலும் நல்ல அளவிற்கு வளர்ச்சி பெற்றிருக் கின்றோம். கடவுள் நம்பிக்கைக் காரனுக்கு மானமிருக்காது. தன்னை சூத்திரன் என்பதை ஒப்புக் கொண் டவனே ஆவான்.

நம்மோடு சேர்ந்தவன்தான் சூத்திரன் என்றால் ஆத்திரப்படு வானே தவிர, பக்தன். கடவுள் நம்பிக்கைகாரன் தன்னை சூத்திரன் என்பதை ஒப்புக் கொண்டுதான் அதற்கு அடையாளமாக மதக்குறி களை (நாமம் - விபூதி) அணிந்து கொள்கின்றான்.

- தந்தை பெரியார்
அய்யாவின் அடிச்சுவட்டில்.. பாகம் 2 145 ஆம் பக்கத்தில் இருப்பது...

க. பழநிசாமி, தெ.புதுப்பட்டி

தமிழ் ஓவியா said...

பெரியார் பெருந்தொண்டரின் இறுதி விருப்பம்

திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருவரங்கம் வட்டம் மணிகண்டம் ஒன்றியம் கே. கள்ளிக்குடி கிராமம்2/328 வடக்கு தெருவில் வசிக்கும் தீத்தான் மகன் தையல் (எ) நாத்திகன் வயது 81. பிறப்பு 25.10.1929 பொன் மலை ரயில்வே பணிமனை ஓய்வு 31.10.1989 பெரியார் பெருந் தொண்டராகிய நாத்திகன். தையல் அன்று எழுதிய விருப்ப மடல்

என்னுடைய 18ஆவது வயதில் தோழர் ஆண்டி (30) அவர்களோடு அய்யா பெரியாரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு கருப்பு சட்டை அணிந்து ஆரம்பித்த தன்மானம், சுயமரியாதை, கடவுள் மறுப்பு, சாதி மத வேறுபாடு, சமுதாய சீர்திருத்தம், மூடநம்பிக்கை ஒழிப்பு, அறிவியல் சார்ந்த பகுத்தறிவு சமூக நீதியுடன் கூடிய அரசியல், பதவி பககம் போகாத பகுத்தறிவு சமூக தொண்டு போன்ற அய்யாவின் அடிப் படை கொள்கைகளை விட்டுக் கொடுக்காத சாமானியனாக வாழ்ந் தாலும், இவற்றைத் தன் வாழ்நாளில் வாழ்க்கை நெறியாகவே பின்பற்றி வந்துள்ளேன்.

என்னுடைய இரண்டு மகன்கள் அம்பேத்கர் (1960) காமராஜர் (1966) இருவருக்கும் அய்யா அவர்கள்தான் பெயர் சூட்டினார்கள். என்னுடைய பணி (ரயில்வே) காலத்தில் சந்தித்த அனைவருக்கும் என்னைவிட என் கொள்கையைப் பற்றியே அதிகம் தெரிந்திருக்கும். பணிக் காலத்தில் ஷி. யிஷீலீஸீ கினீதீறீணீஸீநீமீ சேர்ந்து மருத்துவம் பற்றியவற்றை அறிந்து அதன் மூலம் என்னால் இயன்ற அளவு சேவைகள் செய்துள்ளேன். உடல் கொடை வழங்குவதற்கு இதுவும் ஒரு காரணமாக அமைந்தது.. பணி நிறைவிற்குப்பின் முழுமையான அய்யாவின் கொள்கை வெளிப்பாடாம். கருப்பு சட்டையைத் தவிர எந்த சட்டையையும் அணிவதில்லை என்று தொடர்ந்து பின்பற்றி வருகின்றேன். குடும்பத்தில் என மனைவி இறப்பு, இல்ல அறிமுக தலைமை (கோ. சாமிதுரை) 1992 தை. அம்பேத்கர் தங்கமணி திருமணம் (தலைமை: ஆசிரியர் கி.வீரமணி) 1985 இளைய மகன் தெ. காமராஜ் - தங்கமணி திருமணம் (தலைமை பொருளாளர் கா.மா. குப்புசாமி) மற்றும் பேர்த்திகள் கனிமொழி, கவி எழில், பேரன் முகிலன் ஆகியோரோடு சுயமரியாதை வாழ்வே சுகவாழ்வு என வாழ்ந்து வருகிறோம்.

ஒவ்வொரு மனிதனின் இறப்பிற்கு பிறகு, தேவையில்லா சடங்குகள் சம்பிரதாயங்கள், மறுபிறப்பு என்ற மூடநம்பிக்கை இவற்றையெல்லாம் முறியடிக்கின்ற வகையில் அய்யா பெரியாரின் பகுத்தறிவு கொண்டு பார்க்கையில் இறப்பிற்குப் பிறகு உடல் கொடை என்பது மிகவும் உன்னதம் என்று என்னுடைய இறப்பிற்கு பிறகு உடலை கொடையாக வழங்கிட முடிவு செய்து எனது உடலை கி.ஆ.பெ. விசுவநாதன் அரசு மருத்துவக் கல்லூரி மெய்யியல் துறைக்கு மருத்துவக் கல்லூரி மாணவர்களின் மருத்துவப் படிப்பிற்கு பயன்படத்தக்க வகையில் 22.1.2010-ல் உடல் கொடை அளிக்க பதிவு செய்துள்ளேன். உடல் கொடையினை நிறைவேற்றுபவராக எனது மனைவியில்லாததால் எனது மூத்தமகன் தை. அம்பேத்கர், இளைய மகன் தை காமராஜ் ஆகிய இருவரும் என்னுடைய இறுதி விருப்பத்தை நிறைவேற்ற ஒப்புதல் அளித்துள் ளார்கள். இதை மாற்ற வேறு யாருக்கும் உரிமையில்லை என்பதுடன் எந்தவித மத, சாதி, சமய சடங்குகள் நடத்தக் கூடாது. அன்பு உள்ளம் கொண்ட உறவினர் நட்பினர்க்கு தெரிவித்து உடன் சரியான நேரத்தில் ஒப்படைக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இது எனது சுய சிந்தனையுடன் எழுதப்பட்ட விருப்பம்.

இவண்

வேறுபட்ட சமுதாயத்தில் மாறுபட்ட சிந்தனைகளைக் கொண்டு என்னை செதுக்கிய சீர்திருத்தச் செம்மல் பெரியாரின் வழி வந்த நாத்திகன். விடுதலையும் உண்மையும் பிரிக்க முடியாத சொந்தங்கள்.

தமிழ் ஓவியா said...


குறும்பா...!அய்யப்பசாமி
கோயிலுக்கு
போகும்போது...
சாகின்றனர் சிலர்...!
வரும்போதும்
சாகின்றனர் சிலர்..!
பக்தி வழி என்ன..
பயண மார்க்கமா...?
மரண மார்க்கமா...?? றீறீறீ
கல்லேதான்..
கடவுளப்பா..
பக்தர்களுக்கு...!
காசேதான்
கடவுளப்பா...
அர்ச்சக பார்ப்பானுக்கு!!!
கடவுளேதான்
கல்லப்பா
பகுத்தறிவுவாதிகளுக்கு!!!- கோ. கலியபெருமாள் மன்னார்குடி

தமிழ் ஓவியா said...


இராமாயணம்பற்றி
மனோன்மணியம் சுந்தரம்பிள்ளை

ஆரியர்களது வலிமையைப் பறைசாற்றவும், அக்காலத்தில் மிகச் சிறந்த பண்பாட்டினைக் கொண்டிருந்தவர்களும், ஆரி யர்களுக்குப் பகைவர்களுமான திராவிடர்களை இழித்துக் கூறவே எழுதப்பட்டது இராமாயணம்.

It must be stated at the outset, that the learned Professor Sundaram Pillai hadno faith in the authenticity of the story of Ramayana. He was of opinion that it was meants to proclaim the prowess of the Aryans and represent their rivals and enemies, the Dravidians who had attained a high degree of civilization at that period in the worst possible colour. ‘‘The Morality of Ramayans by P. Ponampala Pillai in the Tamilian Antiquary No.7.

தமிழ் ஓவியா said...


பெரியாரின் அறிவுக் கூர்மை!

பெரியார்தான் திருக்குறளின் புகழ்ப ரப்பப்
பெரியதொரு மாநாட்டை முதலில் கூட்டி,
இருக்கின்ற இலக்கியத்துள் நான்ம திக்கும்
ஈடில்லா நூல்குறளே! என்று சொன்னார்!
ஒருநண்பர் அவரிடத்தில் கேட்டார்: நீங்கள்
ஒப்பாத இறைவாழ்த்தை ஏற்கின் றீரா?
திருக்குறளார் பலசரக்குக் கடைவைத் துள்ளார்;
தேவைகளை வாங்குகிறேன்! பெரியார் சொன்னார்.

பொதுவுடைமைப் பூஞ்சோலை ரஷ்ய நாட்டைப் போய்ப் பார்த்துத் திரும்பியபின் குழந்தைக் கெல்லாம்
புதுமையுடன் பெயர்சூட்டி, ரஷ்யா என்றும்
புகழ் மாஸ்கோ என்றெல்லாம் அழைக்கச் சொன்னார்!
இதுவென்ன? மண்பெயரா மழலை கட்கே?
எப்படித்தான் ஏற்பதென்றார் சிலரோ! அய்யா,
சிதம்பரத்தைப் பழனியினை, மதுரை தன்னைத்
திருப்பதியை ஏற்பதுபோல் ஏற்பீர்! என்றார்!

கூட்டத்தை முடித்தபின்னர், கழகத் தோழர்
கொண்டுவந்த புலால் உணவைப் பெரியார் உண்ணக்
கேட்டார்ஓர் வீரசைவர், ஆட்டைக் கொல்லல்
கேடான பாவமன்றோ? என்றே! உங்கள்
வீட்டுணவும் என்ன? என்றார் பெரியார்; அன்னார்,
விளைத்திட்ட முளைக்கீரை மசியல் என்றார்;
ஆட்டின்உயிர் ஒன்றைத்தான் கொன்றோம்; நீங்கள்
அழித்தஉயிர் ஆயிரங்கள்! என்றார் அய்யா!- கவிவேந்தர் கா.வேழவேந்தன்

தமிழ் ஓவியா said...


பெரியார் விருது நோபல் பரிசைவிட உயர்ந்தது! - விருது பெற்றோர் பெருமிதம்


தந்தை பெரியார் முத்தமிழ் மன்றத்தின் சார்பில் சென்னை பெரியார் திடலில் திராவிடர் திருநாள் பொங்கல் தமிழ்ப் புத்தாண்டு விழா!

பல்வேறு கலை நிகழ்ச்சிகள் - தமிழ்ப் பெரு மக்களுக்கு
பெரியார் விருது - பொங்கல் வழங்கி மகிழ்ச்சி!

எங்களின் சாதனைத் தமிழர்களை எங்கள் தோளில் தூக்கி உயர்த்துவோம்! - தமிழர் தலைவர்

பெரியார் விருது நோபல் பரிசைவிட உயர்ந்தது!
- விருது பெற்றோர் பெருமிதம்

சென்னை, ஜன.26- தந்தை பெரியார் முத்தமிழ் மன்றம் - பெரியார் நூலக வாசகர் வட்டம் இணைந்து திராவிடர் திருநாளாம் பொங்கல் விழா சிறப்பாக சென்னை பெரியார் திடலில் நேற்று (25.1.2013) கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

தமிழர்கள் எவ்வளவு உயரமாக இருந்தாலும் அவர்களை எங்கள் தோள்மீது ஏற்றி இன்னமும் உயர மாகக் காட்டுவதுதான் பெரியார் திடலின் பணி என்று பெரியார் விருது வழங்கிய நிகழ்ச்சியில் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

சென்னை பெரியார் திடலில் ஜனவரி 25,26,27 ஆகிய மூன்று நாட்களும் தந்தை பெரியார் முத்தமிழ் மன்றத்தின் சார்பில், தமிழ்ப் புத் தாண்டு மற்றும் பொங்கல் நிகழ்ச்சிகள் கடந்த ஆண்டைப் போலவே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதற்காக பெரியார் திடலே விழாக்கோலம் பூண்டுள்ளது. முதல் நாள் விழா 25.1.2013 வெள்ளியன்று மாலை சரியாக 5 மணிக்கு கோலாகல மாகத் தொடங்கியது.

பெரியார் நெடுஞ்சாலையிலுள்ள அன்னை மணியம்மையார் சிலைக்கு முன்பாக பொது மக்களும், இயக்கத் தோழர்களும் ஏராளமானவர்கள் கூடியிருக்க, பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ் அவர்கள் பறையடித்து கலை நிகழ்ச்சிகளைத் தொடங்கி வைத்தார். பொதுச் செயலாளர் பறையடித்துத் தொடங்கிய போது, உணர்வு பொங்கிட தோழர்கள் தந்தை பெரியார் வாழ்க! தமிழர் தலைவர் வாழ்க! அன்னை மணி யம்மையார் வாழ்க! என்று முழக்க மிட்டனர்.

களைகட்டிய தமிழ்ப் புத்தாண்டு

புத்தர் கலைக்குழுவினரின் கலை நிகழ்ச்சிகள் அன்னை மணியம்மை யாரின் சிலையிலிருந்து தாரை தப்பட்டை துந்துபி முழக்கங்களோடு மக்கள் திரளினூடே ஊர்வலமாக பெரியார் திடலுக்குள் வந்தது. தொடக்க நிகழ்ச்சியில் சென்னை மண்டல செயலாளர் நெய்வேலி ஞானசேகரன், ஆவடி மாவட்டச் செயலாளர் தென்னரசு, மாநில கலைத்துறைச் செயலாளர் தெற்கு நத்தம் சித்தார்த்தன் வீதி நாடக வித்தகர் பெரியார் நேசன். மாநில இலக்கியச் செயலாளர் மஞ்சை வசந்தன், சத்திய நாராயண சிங், உமா செல்வராஜ் மற்றும் ஏராளமான தோழர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

ஆவலைத் தூண்டிய கரும்பு வீடு

தமிழ்ப் புத்தாண்டு பொங்கலை யொட்டி, பெரியார் திடலின் நுழைவு வாயிலில் கரும்புகளை மட்டுமே கொண்டு கட்டப்பட்ட வீடு பார்ப்பவர் களின் உள்ளத்தில் ஆவலைத் தூண்டியது. பார்த்த உடனேயே எப்போது கரும்பு சாப்பிடுவது என்ற எண்ணம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை என்று பலரும் குறிப்பிட்டனர். அவர்களுக்காகவே தனியே கரும்பு வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத் தக்கது.

தமிழ் ஓவியா said...

பொங்கலோ பொங்கல்

கரும்பு வீட்டின் முன்பு பொருத்த மாக இனிப்பான பொங்கல் தயாரிக் கும் பணி அனைவரையும் ஈர்த்தது. பொங்கல் பொங்குவதற்காக ஏராள மான பேர் காத்திருத்தனர். பொங்கல் தயாரான உடன் தமிழர் தலைவர் தன் கையிலேயே பொங்கலைக் கிண்டி பிறகு அனைவருக்கும் கொடுத்து தானும் உண்டார். கரும்பின் சுவையை யும் மிஞ்சிவிட்டது

பொங்கல் சுவை.

வெற்றிச்செல்வி, ஏ.பி.ஜே. மனோரஞ்சிதம் திருமகள் இறையன், மீரா ஜெகதீசன், கனகா ஆகியோர் பொங்கல் தயாரிப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்தனர். பொங்கல் பொங் கியவுடன் தமிழர் தலைவர் கூடியிருந்தவர்களுக்குப் பொங்கல் வழங்குவதைத் தொடங்கி வைத்தார்.

உறியடித்ததில் சில்லுசில்லாக சிதறிய ஜாதி

ஒரு பக்கம் பொங்கல் சுவையில் தோழர்களும், பொது மக்களும் திளைத் திருக்க அதற்கு பக்கத்திலேயே உறியடிக்கும் நிகழ்ச்சியில் ஏராள மானோர் கலந்து கொண்டு உறி யடிப்பதில் முனைந்து கொண்டி ருந்தனர். அந்த உறியில் இந்த ஆண்டு புதுமையாக ஜாதீ என்று எழுதியிருந்தது. அறிவிப்பு கொடுக் கும் போதே ஜாதியை உடைக்கப் போவது யார் - என்றே சொல்லப் பட்டது. தோழர்கள் போட்ட, போட்டா போட்டியில் ஆரவாரம் அளவில்லாமல் போய்விட்டது.

இறுதியில் சட்டக் கல்லூரி மாணவி கவிநிலவு, சஞ்சய் ஆகிய இருவரும் தனித்தனியாக அந்த ஜாதியை சுக்கல் சுக்கலாக உடைத்து அனைவரின் பாராட்டையும் பெற்றனர். இந்த நிகழ்ச்சியை சித்தார்த்தன், பெரியார்நேசன் ஆகிய இருவரும் ஒருங்கிணைத்தனர்.

உணவுத் திருவிழா

ஒரு பக்கம் புத்தர் கலைக் குழுவின் ஆட்டம் பாட்டம் கொண் டாட்டம், மற்றொரு பக்கம் சுவையான பொங்கலில் மயங்கி மீண்டும் மீண்டும் பெற்று உண்ட இனிப்பான காட்சி, மற்றொரு பக்கம் ஜாதீ என்கிற உறியைத் தகர்க்கும் ஆரவாரம். இவையெல்லாம் போதாதென்று வகை வகையான உணவுகள் அடங்கிய அங்காடித் தெரு மக்களை கொண்டாட்டத்தின் உச்சிக்கே சென்றது. தமிழ்ப் புத்தாண்டு பொங்கல் திருவிழா நடந்தால் கிராமங்களில் எப்படிப்பட்ட மகிழ்ச்சி கரைபுரண்டு ஓடுமோ, அப்படி பெரியார் திடலிலும் மகிழ்ச்சி கரைபுரண்டு ஓடிக் கொண்டிருந்தது.

கவனத்தை ஈர்த்த கவனக நிகழ்ச்சி

பொங்கல் திருவிழாவில் அறிவுத் திருவிழாவாக திருக்குறள் திலீபனின், கவனக நிகழ்ச்சி - மிகச் சிறப்பான கவனத்தைப் பெற்றது. தமிழர் தலைவரும் இந்நிகழ்ச்சியில் ஆர்வமுடன் கலந்து கொண்டு திலீபனிடம் கேள்விகள் கேட் டார் தமிழர் தலைவர் மற்றும் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் பெரியார் செல்வி, கண்ணப்பன், திவாரி, தொண்டறம் ஆகியோரும் பல்வேறு கேள்விகளைக் கேட்டனர். அனைத் துக்கும் திலீபன் சரியாக பதில் கொடுத்து அசத்தினார்.

ஆசியாவின் நோபல் பரிசு பெரியார் விருது

தமிழ்ப் புத்தாண்டு கொண் டாட்டத்தின் முக்கிய நிகழ்வான பெரியார் விருது வழங்கும் நிகழ்ச்சி இரவு 7 மணியளவில் தொடங்கியது. திராவிடர் கழகத்தின் மாநில இலக்கிய அணிச் செயலாளர் மஞ்சை வசந்தன் அறிமுக உரை வழங்கினார். அவர் தனது அறிமுக உரையை ஓர் ஆய்வுரையைப் போல வழங்கியது அனைவரின் கருத் தையும் ஈர்த்தது.

முன்னதாக, வை. கலையரசன் அனை வரையும் வரவேற்றுப் பேசினார். தொடர்ந்து பொறியாளர் அ. முருகானந் தத்திற்கு பெரியார் விருது வழங்கப் படுகிறது என்று இணைப்புரை வழங்கிக் கொண்டிருந்த தமிழ் சாக்ரடீஸ் அறி வித்தார். அ. முருகானந்தம், அவர்களின் தன் விளக்கக் குறிப்பை பெரியார் செல்வி வாசித்தார். அரங்கத்தில் திரண்டிருந்த வர்களின் பெருத்த கரவொலிக்கிடையில் தமிழர் தலைவர் அவருக்கு பெரியார் விருது வழங்கி சால்வை அணிவித்து சிறப்பித்தார்.

ஏற்புரையை ரத்தினச் சுருக்கமாக வழங்கிய, பொறியாளர் அ. முருகானந்தம், தான் இதுவரையில் எத்தனையோ பரிசுகளை பாராட்டினையும் பெற்றிருக் கிறேன். ஆனால், இந்த மேடையில், தமிழர் தலைவர் அவர்களின் கைகளில் பெற்ற இந்த விருது உன்னதமான ஒன்று. ஏனெனில், ஆசியாவின் நோபல் பரிசு பெரியார் விருது என்று சொல்லி அமர்ந்துவிட்டார். ஆனால், அரங்கத்தில் கையொலி அவர் அமர்ந்த பிறகும் எழுந்து கொண்டிருந்தது.

நமது அறிவும், ஆற்றலும் யாருக்கும் குறைந்ததல்ல

தொடர்ந்து அ. முருகானந்தத்தைப் பாராட்டிப் பேசும்போது தமிழர் தலைவர் நமது அறிவும், ஆற்றலும் யாருக்கும் குறைந்ததல்ல. இன்னமும் ஆயிரம் முருகானந்தங்கள் இருக்கிறார்கள்.

தமிழ் ஓவியா said...

அவர்களும் இப்படி வர வேண்டும். இவர்கள் எவ்வளவு உயரத்தில் இருந்தாலும் பெரியார் திடலின் பணி என்பது இவர்களை தமிழர்களை எங்கள் தோள்மீது ஏற்றி இன்னமும் உயரமாகக் காட்டுவதுதான் என்று பலத்த கைதட்டல்களுக்கிடையே அறிவித்தார். அதைத் தொடர்ந்து தமிழ் சாக்ரடீஸ் அறிவிக்க, மனுஷ்ய புத்திரனின் தன் விளக்கக் குறிப்பை இறைவியும், கவிஞர் நந்தலாலாவின் தன் விடைக் குறிப்பை - தெற்கு நத்தம் சித்தார்த்தனும், சீனுராமசாமியின் குறிப்பை புருனோவும், ஏ.எல். கண்ணனின் தன் விளக்கக் குறிப்பை இசையின்பம், நர்த்தகி நடராஜ் அவர்களின் குறிப்பை கோவி. கோபாலும் வாசித்தனர். தமிழர் தலைவர் அனைவருக்கும் பெரியார் விருது வழங்கி பயனாடை அணிவித்து சிறப்பு செய்தார். பெரியார் விருது பெற்ற அனைவருக்கும் இயக்க நூல்களும் அளிக்கப்பட்டன. இவர்கள்பற்றிய படக்காட்சியும் காட்டப் பட்டது.

இதற்கிடையில், திருக்குறள் திலீபன், கபடி ஜெகன்சாமிநாதன் குழுவினர் கவிநிலவு, சஞ்சய் ஆகியோருக்கு தமிழர் தலைவர் சிறப்பு செய்தார்.

நான் தனியாக இல்லை மனுஷ்ய புத்திரனின் பிரகடனம்

விருது வழங்கிய பிறகு, விருது பெற்ற பெருமக்களின் ஏற்புரை தொடங்கியது. முதலில் ஏற்புரை வழங்கிய எழுத்தாளர், கவிஞர், பதிப்பாளர், மனுஷ்யபுத்திரன், என்னுடைய அறிவுலக ஆசானின் பெயரில் இந்த விருது வழங்கப்படுகிறது என்றே தொடங்கினார். தொடர்ந்து அவர் பேசும்போது, சன் தொலைக்காட்சியில், என்னிடம், உங்கள் சிந்தனைகளின் அடித்தளமாக இருப்பது எது? என்று கேட்டனர். நான் ஒற்றை வார்த்தையில் பதில் சொன்னேன். அந்த வார்த்தை, தந்தை பெரியார் பெரியாரின் தனித் தன்மை அச்சமின்மை, அதனால்தான் மதவாதிகளின் எதிர்ப்பு எனக்கு ஒரு பொருட்டாகத் தெரியவில்லை. காரணம், பெரியார் சந்திக்காத எதிர்ப்பா? இந்த விருது பெற்றது நான் தனியாக இல்லை. எனக்குப் பின்னால் பெரியார் திடல் இருக்கிறது என்பதைக் காட்டுகிறது. இது எனக்கு மிகப் பெரிய ஊக்கமாகவும், உற்சாகமாகவும் இருக்கிறது என்று பேசி அமர்ந்தார்.

எதற்காக இந்த விருது!

தொடர்ந்து ஏற்புரை வழங்கிய கவிஞர் நந்தலாலா, தமிழர் தலைவர் இப்படிப் பட்ட பெரு மக்களுக்கு ஏன் விருது வழங் குகிறார் என்று என்னைக் கேட்டால், இப்படிச் சொல்லத் தோன்றுகிறது என்று பட்டுக்கோட்டையாரின் பொல்லாத மனிதன் சொல்லாமல் திருந்த நல்லோர் எல்லாரையும் கொண்டாடுங்கள் என்ற பாடலைச் சொன்னார். தொடர்ந்து அவர் தனது உரையில் திராவிடர் இயக்கத்தின் சாதனைகளை தன் தாத்தா, தந்தை ஆகியோரின் வாழ்க்கையில் இடம் பெற்ற சம்பவத்தை சுட்டிக் காட்டி தன்மான இயக்கத்தின் பெருமையை சிகரத்தில் ஏற்றி வைத்து அமர்ந்தார்.

அநீதி நடந்தால் தட்டிக் கேட்டும், நீதி நடந்தால் தட்டிக் கொடுப்பதும் தமிழர் தலைவரின் வழமை

கவிஞர் நந்தலாலாவைத் தொடர்ந்து பெரியார் விருது பெற்ற திரைப்பட இயக்குநர் சீனு ராமசாமி ஏற்புரை வழங்கினார். அவர் தனது உரையில், என் தாயின் தந்தை பெயர் ராமசாமி, என் அறிவுலக ஆசானின் பெயர் ராமசாமி, என் பெயரும் சீனு ராமசாமி என்று கலகலப்பாகத் தொடங்கினார். தொடர்ந்து பேசிய அவர், சமூகத்தில் அநீதி நடக்கும் போது தட்டிக் கேட்டும், நீதி நடக்கும் போது கை கொடுத்து தூக்கிவிடும் பணியைத்தான் தமிழர் தலைவர் செய்து கொண்டிருக்கிறார் என்று கூறிவிட்டு, முத்தாய்ப்பாக அவர், நான் பெற்ற தேசிய விருதைவிட சிறப் பான இந்த பெரியார் விருது. ஏனெனில், தேசிய விருது பகுத்தறிவாளர்களால் வழங்கப்படுவதில்லை என்று பலத்த ஆரவாரத்திற்கிடையே பேசி அமர்ந்தார்.

தமிழ் ஓவியா said...


பெரியாரைக் கேட்டும் படித்தும் வளர்ந்தவன் நான்

தொடர்ந்து, பிரபலங்களை பதற்ற மடைய வைக்கும் கேள்விக் கணை களுக்குச் சொந்தக்காரரான மக்களுக் காக ஏ.எல்.கண்ணன் அவர்களும் ரத்தினச் சுருக்கமாக, நான் பெரியாரின் கருத்துக்களை கேட்டும், அவரின் புத்தகங்களைப் படித்தும் வளர்ந்தவன். நான் மதிக்கின்ற ஆசிரியரின் கையால், பெரியார் விருது பெற்றதை மிகவும் பெருமையானதாகக் கருதுகிறேன். நான் இந்த விருதுக்கு தகுதியுடையவனா என்று தெரியாது. ஆனால், இனிமேல் தகுதி உடையவனாக ஆக்கிக் கொள் வேன் என்று கூறி அமர்ந்தார்.

தமிழ் ஓவியா said...

தன்மானத்திற்கும், சுயகவுரவத்திற்கும் கிடைத்த விருது

ஏ.எல்.கண்ணனைத் தொடர்ந்து, ஏற்புரை வழங்க வந்த நடனக் கலைஞர் திருநங்கை நர்த்தகி நடராஜ் அவர்கள் மிகவும் உணர்வு வயப்பட்டு பேசினார். தான், உலக அளவில் ஏராளமான விருதுகளை பெற்றிருக்கிறேன். ஆனால், இந்த விருது, எனது தன்மானத்திற்கு, சுய கவுரவத்திற்கு கிடைத்த அங்கீகார மாகவே கருதுகிறேன். நான் பல முகமூடிகள் அணிந்து கொண்டு பல மேடைகளில் ஏறியிருக்கிறேன். இங்கு தான் உள்ளத்தைத் திறந்து உண்மையைச் பேசுகிறேன் என்று அவர் உணர்வு வயப்பட்டதை, உண்மை வயப்பட்டதைப் பார்த்து அரங்கத்திலிருந்தவர்களும் உணர்வு வயப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து, பாராட்டுரை வழங்கவிருக்கும் திராவிடர் இயக்க ஆய்வாளர் க.திருநாவுக்கரசுவுக்கும், முன்னதாக நிகழ்ச்சியின் தொடக்கத்தில் தலைமையுரையாற்றிய வரியியல் அறிஞர் இராஜரத்தினம் ஆகியோருக்கும் தமிழர் தலைவர் சிறப்பு செய்தார். அதைத் தொடர்ந்து, க.திருநாவுக்கரசு பெரியார் விருது பெற்ற பெருமக்களைப் பாராட்டிப் பேசினார்.

மனுஷ்ய புத்திரன் மட்டுமல்ல மனுஷ்ய புத்திரிகளும் வரவேண்டும்

திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் பரிசு பெற்ற பெரு மக்களைப் பற்றி பேசும்போது, இந்த இடம் உண்மையை பேசக் கூடிய இடம். பல பேருடைய முகமூடிகளை கழட்டுகிற இடம் என்று சிந்திக்கவும் சிரிக்கும் விதமாகத் தொடங்கினார். தொடர்ந்து, ஏ.எல்.கண்ணன், கவிஞர் நந்தலாலா, மனுஷ்ய புத்திரன், சீனு இராமசாமி, நர்த்தகி நடராஜ் ஆகியோரின் சிறப்பு களைத் தனித்தனியாக குறிப்பிட்டு விட்டு, பெரியாரின் அச்சமின்மையையும், தன் னுடைய கருத்தை எந்தவித எதிர்ப்பு வந்தாலும் சொல்கிற பாங்கையும், 45 ஆண்டுகளுக்கு முன்னால், சென்னை எஸ்.எஸ்.அய். மைதானத்தில் ஜி.டி.நாயுடு, தன் கண்டுபிடிப்புகளை அடித்து நொறுக் கிய நிகழ்ச்சியில் தலைமையேற்ற தந்தை பெரியார் பேசிய துணிச்சலான சம்பவங் களை படம் பிடித்துக் காட்டியும், கோபி செட்டிபாளையத்தில் கைவல்யம் சாமியார் உணவு உண்ணும் நேரத்தில் சூத்திரன் என்று அழைத்த பார்ப்பனரை உணவு உண்ட கையாலேயே அறைந்ததைச் சுட்டிக்காட்டியும், 60 ஆண்டுகள் தமிழ்ப் புத்தாண்டு எப்படி ஆபாசக் களஞ்சியமாக இருக்கின்றது என்பதையும் தந்தை பெரியார், தமிழ் அறிஞர்கள் பேரறிஞர் அண்ணா, கலைஞர் ஆகியோரின் முயற்சியில் தமிழ்ப் புத்தாண்டு தை முதல் நாள் ஆனதையும், எடுத்துக் காட்டினார். தொடர்ந்து பேசிய அவர், அப்படி, பண்பாட்டு மீட்டுருவாக்கத்தில் ஈடுபட்டு வெற்றி கண்ட சிறந்த தமிழர்களுக்குத் தான் இங்கு பெரியார் விருது அளிக்கப் பட்டிருக்கிறது என்று உரையை நிறைவு செய்தார்.

தொடர்ந்து புத்தர் கலைக் குழுவின் கலை நிகழ்ச்சிகள்

புத்தர் கலைக் குழுவின் கலை நிகழ்ச்சிகள் தொடர்ந்தன, இடையில் தமிழர் தலைவர் கலைக் குழுவினர் அனை வரையும் தனித்தனியாக சிறப்பித்தார். அதன் பிறகும், கலை நிகழ்ச்சிகள் தொடர்ந்தன. நிகழ்ச்சியில், திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பெரியார் நூலக வாசகர் வட்டத் தலைவர் மயிலை கிருட்டிணன், திருமகள் இறையன், மாவட்ட பொறுப் பாளர்கள், தோழர்கள், ஊடகவியலாளர் கோவி.லெனின் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

மு. சென்னியப்பன் நன்றியுரை ஆற்றினார்.பெரியார் திடல் விழாக்கோலத்தில் திணறியது

திராவிடர் திருநாளையொட்டி பெரியார் திடலில் ஆங்காங்கே பனை மரங்கள், விவசாயிகள் உழவுக்கு பயன்படுத்தும் பொருள்கள், ஏர்கலப்பை, மந்திக்கலப்பை, மண்வெட்டி, மரக்கால் போன்றவை திடலெங்கும் தென்னை மர ஓலைகளின் வரவேற்புக்காக நிறுத்தப்பட்டிருந்தன.

அய்வகை நிலங்களின் குறிப்புகள் படங்களோடு இடம் பெற்றிருந்தன. கரைமாநகர் சதானந்தபுரம் அம்பேத்கர் கபடிக் குழு பார்வையாளர்களோடு ஆடிய சடுகுடு ஆட்டம்.

பெரியார் சிலை அருகே கரும்புகளால் வேயப்பட்ட குடிசை வீடு. கரும்பு வீட்டின் வாசலில் தமிழர் தலைவர் தலைமையில் மகளிரணி யினர் பொங்கல் வைத்தனர் தமிழர் தலைவருடன் நந்தலாலா, ச.இராசரத்தினம், கவிஞர் கலி.பூங்குன்றன் ஆகியோர் பார்வையிட்டு மகிழ்ந்தனர்.

சட்டக்கல்லூரி மாணவி கவிநிலவு, வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்த 8 வயது மாணவன் சஞ்சய் ஆகியோர் உறியடித்து வெற்றி பெற்றனர் (ஜாதீ என்று எழுதப்பட்ட பானை).

புத்தர் கலைக்குழு பறை இசை மணியம்மையார் சிலையிலிருந்து ஊர்வலமாக வந்தது.

தமிழ் ஓவியா said...


நீதிபதி வர்மா குழுவின் பரிந்துரைகள்


பாலியல் வன்கொடுமை தொடர்பாக ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி வர்மா தலை மையில் மத்திய அரசு நியமித்த குழு, தன் பரிந்துரைகளை மத்திய அரசிடம் அளித் துள்ளது.

630 பக்கங்களைக் கொண்ட அறிக்கை இது. குழுவினிடத்தில் 80,000 யோசனைகள் வந்தனவாம். இதிலிருந்து பெண்கள் உரிமைப் பிரச்சினையில் நாட்டு மக்கள் மத்தியில் எந்த அளவுக்கு ஈடுபாடும், அக்கறையும் உண்டு என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

பாலியல் குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்கலாம் என்று கூறப்பட்ட யோசனையை வர்மா குழு நிராகரித்து விட்டது. இப்பொழுது இத்தகைய குற்றங்களுக்கு 7 ஆண்டு காலம் வரை சிறைத் தண்டனை விதிக்க சட்டத்தில் இடம் உண்டு.

வர்மா குழு இதனை ஆயுள் தண்டனையாக விரிவுபடுத்தலாம் என்று பரிந்துரை செய் துள்ளது. பாதிக்கப்பட்ட பெண் மரணமும் அடைந்தால் 20 ஆண்டு காலம் அல்லது வாழ்நாள் வரை தண்டனை அளிக்கலாம் என்பது வர்மா குழுவின் பரிந்துரைகளுள் ஒன்றாகும்.

இந்தப் பிரச்சினையில் வழக்கைச் சரியாக கையாளாத அரசு அதிகாரிகளுக்கு 10 ஆண்டுகள் வரை தண்டனை விதிக்கவும் வழி செய்யப்பட்டுள்ளது.

தூக்குத் தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று கூறும் அளவுக்கு நாட்டில் கொந்தளிப்பு இருக்கும் இக்கால கட்டத்திலேயே டில்லி வன்கொடுமையைத் தொடர்ந்து, நாட்டில் ஏராளமான எண்ணிக்கையில் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை அதிகரித் துள்ளது என்பதை அலட்சியப்படுத்தக் கூடாது. குறிப்பாக தமிழ்நாட்டில் அதிக எண்ணிக் கையில் பாதிக்கப்பட்ட பெண்கள் மரணத்தைத் தழுவும் அளவுக்குச் சென்றுள்ளது. டெல்லி அருகே பன்னிரெண்டாம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை காரணமாக மரணம் அடைந்தாள் என்று இன்றுகூட ஒரு செய்தி வெளிவந்துள்ளது.

இதன் பொருள் என்ன? சட்டத்தைப்பற்றி கவலை இல்லை என்கிற மனப்பான்மை வளர்ந்து வருகிறதா? ஏட்டளவில்தான் சட்டம் இருக்கும் அதற்கு நகமும், பல்லும் கிடையாது என்று கருதப்படுகிறதா?

இதையும் கடந்து ஆண்கள் மத்தியில் பாலியல் உணர்வு என்ற இயற்கைத் தன்மையைக் கடந்து விபரீதமான கட்டத்தை அடைந்து விட்டது என்று கருதுவதா?

எப்படியாக இருந்தாலும் கடுமையான தண்டனை தாட்சண்யமின்றி அளிக்கப்பட்டு சிறைத் தண்டனை அளிக்கப்படுமானால், மக்கள் மத்தியில் இந்தப் பிரச்சினையில் விழிப்புணர்வு ஏற்பட வழியுண்டு.

அரசு அலுவலகங்களில் பெண்களிடம் தவறாக நடந்து கொண்டால் என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்ப தற்கான விதிமுறை எல்லாம் இருக்கத்தான் செய்கின்றன. அவையும் ஏட்டளவில்தான் உள்ளன.

கல்வி நிறுவனங்களில், விடுதிகளில் கேலிக்குத் தண்டனை என்பதெல்லாம்கூட ஏட்டுச் சுரைக்காயாகத் தானிருக்கிறது.

சட்டங்கள் ஒரு பக்கம் இருந்தாலும் இளைஞர்களிடம் பாலியல் உணர்வுகளைக் கூர்படுத்தும் மூலாதாரங்கள் என்னென்ன என்பது முக்கியமாகும்.

பெரிய திரை, சின்னத் திரைகளுக்கு அடுத்தபடியாக ஏடுகளும், இதழ்களும் இந்தப் பிரச்சினைக்குக் காரணங்களாக இருந்து வருவதையும் புறந்தள்ளி விட முடியாது இந்தத் திசையில் தணிக்கை முறைகள் தேவைப்படத் தான் செய்கின்றன.

கல்லூரி அளவுக்காவது பாலியல் தொடர் பான கல்வி இடம் பெறுவது அவசியமாகும்.

நீதிபதி வர்மா குழு மேலும் என்னென்ன பரிந்துரைகளைக் கூறியுள்ளது என்பதை மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்க்கிறோம். அவைபற்றி நாடு தழுவிய விவாதங்கள் எழ வேண்டியதும் அவசியமாகும். 26-1-2013

தமிழ் ஓவியா said...


நீதிபதி வர்மா குழுவின் பரிந்துரைகள்


பாலியல் வன்கொடுமை தொடர்பாக ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி வர்மா தலை மையில் மத்திய அரசு நியமித்த குழு, தன் பரிந்துரைகளை மத்திய அரசிடம் அளித் துள்ளது.

630 பக்கங்களைக் கொண்ட அறிக்கை இது. குழுவினிடத்தில் 80,000 யோசனைகள் வந்தனவாம். இதிலிருந்து பெண்கள் உரிமைப் பிரச்சினையில் நாட்டு மக்கள் மத்தியில் எந்த அளவுக்கு ஈடுபாடும், அக்கறையும் உண்டு என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

பாலியல் குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்கலாம் என்று கூறப்பட்ட யோசனையை வர்மா குழு நிராகரித்து விட்டது. இப்பொழுது இத்தகைய குற்றங்களுக்கு 7 ஆண்டு காலம் வரை சிறைத் தண்டனை விதிக்க சட்டத்தில் இடம் உண்டு.

வர்மா குழு இதனை ஆயுள் தண்டனையாக விரிவுபடுத்தலாம் என்று பரிந்துரை செய் துள்ளது. பாதிக்கப்பட்ட பெண் மரணமும் அடைந்தால் 20 ஆண்டு காலம் அல்லது வாழ்நாள் வரை தண்டனை அளிக்கலாம் என்பது வர்மா குழுவின் பரிந்துரைகளுள் ஒன்றாகும்.

இந்தப் பிரச்சினையில் வழக்கைச் சரியாக கையாளாத அரசு அதிகாரிகளுக்கு 10 ஆண்டுகள் வரை தண்டனை விதிக்கவும் வழி செய்யப்பட்டுள்ளது.

தூக்குத் தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று கூறும் அளவுக்கு நாட்டில் கொந்தளிப்பு இருக்கும் இக்கால கட்டத்திலேயே டில்லி வன்கொடுமையைத் தொடர்ந்து, நாட்டில் ஏராளமான எண்ணிக்கையில் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை அதிகரித் துள்ளது என்பதை அலட்சியப்படுத்தக் கூடாது. குறிப்பாக தமிழ்நாட்டில் அதிக எண்ணிக் கையில் பாதிக்கப்பட்ட பெண்கள் மரணத்தைத் தழுவும் அளவுக்குச் சென்றுள்ளது. டெல்லி அருகே பன்னிரெண்டாம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை காரணமாக மரணம் அடைந்தாள் என்று இன்றுகூட ஒரு செய்தி வெளிவந்துள்ளது.

இதன் பொருள் என்ன? சட்டத்தைப்பற்றி கவலை இல்லை என்கிற மனப்பான்மை வளர்ந்து வருகிறதா? ஏட்டளவில்தான் சட்டம் இருக்கும் அதற்கு நகமும், பல்லும் கிடையாது என்று கருதப்படுகிறதா?

இதையும் கடந்து ஆண்கள் மத்தியில் பாலியல் உணர்வு என்ற இயற்கைத் தன்மையைக் கடந்து விபரீதமான கட்டத்தை அடைந்து விட்டது என்று கருதுவதா?

எப்படியாக இருந்தாலும் கடுமையான தண்டனை தாட்சண்யமின்றி அளிக்கப்பட்டு சிறைத் தண்டனை அளிக்கப்படுமானால், மக்கள் மத்தியில் இந்தப் பிரச்சினையில் விழிப்புணர்வு ஏற்பட வழியுண்டு.

அரசு அலுவலகங்களில் பெண்களிடம் தவறாக நடந்து கொண்டால் என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்ப தற்கான விதிமுறை எல்லாம் இருக்கத்தான் செய்கின்றன. அவையும் ஏட்டளவில்தான் உள்ளன.

கல்வி நிறுவனங்களில், விடுதிகளில் கேலிக்குத் தண்டனை என்பதெல்லாம்கூட ஏட்டுச் சுரைக்காயாகத் தானிருக்கிறது.

சட்டங்கள் ஒரு பக்கம் இருந்தாலும் இளைஞர்களிடம் பாலியல் உணர்வுகளைக் கூர்படுத்தும் மூலாதாரங்கள் என்னென்ன என்பது முக்கியமாகும்.

பெரிய திரை, சின்னத் திரைகளுக்கு அடுத்தபடியாக ஏடுகளும், இதழ்களும் இந்தப் பிரச்சினைக்குக் காரணங்களாக இருந்து வருவதையும் புறந்தள்ளி விட முடியாது இந்தத் திசையில் தணிக்கை முறைகள் தேவைப்படத் தான் செய்கின்றன.

கல்லூரி அளவுக்காவது பாலியல் தொடர் பான கல்வி இடம் பெறுவது அவசியமாகும்.

நீதிபதி வர்மா குழு மேலும் என்னென்ன பரிந்துரைகளைக் கூறியுள்ளது என்பதை மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்க்கிறோம். அவைபற்றி நாடு தழுவிய விவாதங்கள் எழ வேண்டியதும் அவசியமாகும். 26-1-2013

தமிழ் ஓவியா said...


பதவி ஆசை


பதவி ஆசையில் மிதக்கிறவர்கள் எப்படிப்பட்ட அற்ப இழிவான அயோக்கியத்தனமான காரியத்தையும் செய்து வெற்றி பெறவே பார்ப்பார்கள். அவர்களிடம் சுயநலம் தவிர மனிதப் பற்றோ நாட்டுப் பற்றோ சிறிதளவும் காண முடியாது.
(விடுதலை, 3.5.1965)

தமிழ் ஓவியா said...


ஈழத்தமிழர் வாழ்வில், நல்லொளி பரவிட...உடன்பிறப்பே,

ஈழத்தமிழர்களின் வேதனைகள் தீர்ந்த பாடில்லை; அவை தொடர்ந்து துன்பத்தைக் கொடுத்துக் கொண்டே இருக்கின்றன. திராவிட முன்னேற்றக் கழகமும் தன்னால் இயன்ற அளவிற்கு என்னென்ன செய்ய முடியுமோ, அவற்றையெல்லாம் இலங்கைத் தமிழர்களின் நலனை மனதிலே கொண்டு செய்து கொண்டுதான் உள்ளது. 1956ஆம் ஆண்டு முதல் ஆட்சி யிலே இருந்தாலும், இல்லாவிட்டாலும், ஈழத்தமிழர் களுக்காகத் தொடர்ச்சியாக ஓங்கிக் குரல் கொடுத்து வருகிறோம் என்பதை உண்மையை நேசிப்ப வர்கள் உணர்ந்தே இருப்பார்கள்.

நமது பல்வேறு கோரிக்கைகளுக்கு இந்திய அரசு உதவிட முன்வருவதாக உறுதி கூறிய போதிலும், உலக நாடுகளின் மத்தியில் நடுநிலை நாடுகளில் ஒன்று இந்தியா என்ற பெயரைத் தக்க வைத்துக் கொள்வ தற்காக, சிலவற்றில் விட்டுக் கொடுத்துப் போகிறதோ இந்திய அரசு என்று சிலர் சந்தேகம் கொள்ளக் கூடிய அளவிலேதான் செயல்படுகிறது.

உதாரணமாக இலங்கைத் தமிழர்களைக் கொல் வதற்குக் காரணமாக இருக்கும் இலங்கை ராணுவத் தினருக்கு இந்தியாவிலே எந்தப் பகுதியிலும் பயிற்சி அளிக்கக் கூடாது என்பதுதான் தமிழகத்திலே உணர்வுள்ள தமிழர்களின் கோரிக்கை, வேண்டுகோள். அந்த வேண்டுகோளை இந்திய அரசிடம் நாம் பலமுறை விடுத்து விளக்கியுள்ளோம்.

இந்தியாவிலே இலங்கை ராணுவத்திற்கு பயிற்சி அளிக்க மாட்டோம் என்று இந்திய அரசின் சார்பில் திட்டவட்டமாகத் தெரிவிக்க அவர்களால் இயல வில்லை. நேற்றையதினம் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே. அந்தோணி அவர்கள், இலங்கையில் தமிழர் மறுவாழ்வுப் பணிகள் எதிர்பார்த்த வேகத்தில் இல்லை என்று கூறியிருக்கிறார்.

இலங்கையின் வெளியுறவுத் துறை
அமைச்சரின் கூற்று

தற்போது இந்தியாவில் சுற்றுப் பயணத்தில் உள்ள இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் ஜி.எல். பெரிஸ் இந்தியாவில் இலங்கை ராணுவத்தினருக்கு அளிக்கப்படும் பயிற்சியை தமிழ்நாட்டு அரசியல் வாதிகள் எதிர்ப்பது பற்றிக் கவலையில்லை. அந்த அரசியல் வாதிகள் எழுப்பும் விவகாரங்கள் வெறுப் புணர்வால் ஏற்பட்டவை என்று கூறியிருக்கிறார்.
அதற்குப் பதிலளித்த மத்திய அமைச்சர் அந் தோணி அவர்கள், தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் தெரிவித்த ஆட்சேபங்கள் வெறுப் புணர்வின் அடிப்படையில் எழுப்பப்பட்டவை என்று நான் கருதவில்லை. இலங்கையில், அரசு சில நடவடிக் கைகளை எடுத்த போதிலும், இப்போதும் தமிழர் களுக்கான மறுவாழ்வுப் பணிகள் எதிர்பார்த்த அளவில் இல்லை. ஒருபுறம் தமிழகத்தின் உணர்வு களையும் நாம் மதித்து நடந்து கொள்வோம். எனவே தமிழகப் பகுதிகளில் ராணுவப் பயிற்சி அளிக்காமல் தவிர்ப்போம். அதே சமயம் மற்ற பகுதிகளில் உள்ள ராணுவ அமைப்புகளில் இலங்கை வீரர்களுக்குப் பயிற்சி அளிப்போம் என்று கூறியிருக்கிறார்.

இலங்கையிலே ஒற்றுமையும் அமைதியும் ஏற்பட வேண்டுமென்று பெரிதும் விரும்புகின்ற அய்.நா. மன்றம் போன்ற சர்வதேச நிறுவனங்கள் ஈழப் பகுதி சிங்களமயமாக்கப்படும் உண்மையைப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத் தான் நாம் நடத்திய டெசோ மாநாட்டிலே; பதினான்கு தீர்மானங்களை நிறைவேற்றினோம்.


தமிழ் ஓவியா said...

நமது டெசோ மாநாட்டில் ஒருமனதாக நிறை வேற்றப்பட்ட அந்தத் தீர்மானங்களைத் தான் நமது கழகப் பொருளாளர் தம்பி மு.க.ஸ்டாலினும், நாடாளு மன்றக் கழகக் குழுவின் தலைவர் தம்பி டி.ஆர். பாலு வும் எடுத்துச் சென்று அய்.நா. சபையிடமும், அய்.நா. மனித உரிமைகள் ஆணையத்திடமும் ஒப்படைத் தார்கள்.

தீர்மானங்களை டெசோ அமைப்பின் சார்பில் நடைபெற்ற ஈழத் தமிழர் வாழ்வுரிமைப் பாதுகாப்பு மாநாட்டிலே நிறைவேற்றியதோடு இருந்துவிடாமல், இந்தியப் பிரதமர் அவர்களுக்கும் அதனை அனுப்பி வைத்தேன். அந்தக் கடிதத்தில் இலங்கையிலுள்ள தமிழர்கள் கோரி வரும் அரசியல் தீர்வை, அவர்களே முடிவு செய்யும் வகையில் அவர் களுக்குத் தேவை யான உரிமைகள் வழங்கும் தீர்மானத்தை அய்.நா. பொதுச் சபையிலும், மனித உரிமைகள் ஆணை யத்திலும் கொண்டுவர மத்திய அரசு உதவிட வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டிருந்தேன்.

நான் அனுப்பியிருந்த கடிதத்தைப் படித்து விட்டு, பிரதமர் அவர்கள் உரிய நடவடிக்கைகள் மேற்கொள் வதாக உறுதி அளித்ததோடு, ஏற்கெனவே அய்க்கிய நாடுகள் மனித உரிமை ஆணையத்தில் இலங்கைக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை இந்தியா; நமது வேண்டுகோளை ஏற்று ஆதரித்தது என்பதையும் நினைவு கூர்ந்தார்கள். பிரதமர் அவர்களுக்கு எழுதிய கடிதத்தின் நகலை அய்க்கிய முற்போக்குக் கூட் டணியின் தலைவர்திருமதி சோனியா காந்தி அவர் களுக்கும் கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேரில் சென்று அளித்தனர்.

பிரதமரின் பதில்

நமது கழக உறுப்பினர்களிடம் நேரில் உறுதி அளித்ததோடு, என்னுடைய கடிதத்திற்கு எனக்குப் பதில் எழுதிய பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்கள், இலங்கைத் தமிழர்களின் நலனுக்கும், நல்வாழ்வுக்கும் தேவையான பணிகளில் இந்திய அரசு அக்கறை காட்டி வருகிறது என்றும், ஈழத் தமிழர் களின் மறு குடி அமர்வு மற்றும் மறு வாழ்வுக்கு இந்திய அரசு மிகுந்த முன்னுரிமை வழங்கிச் செயல் படுகிறது என்றும் தெரிவித்திருந்தார். மேலும் அந்தக் கடிதத்தில், அதிகாரப் பகிர்வு குறித்து ஈழத் தமிழர் களின் அரசியல் பிரதிநிதிகளுடன் பேச்சு வார்த்தை களை முன்னெடுத்துச் செல்ல வேண்டியதன் அவசியத் தையும் இலங்கை அரசுக்குத் தெரிவித்திருப்ப தாகவும், எதிர்காலத்தில் ஈழத் தமிழர்கள் சம உரிமை, கவுரவம், சம நீதி மற்றும் சுயமரியாதையுடன் வாழக் கூடிய நிலையை உருவாக்கிட இலங்கை அரசுடன் இந்திய அரசு தொடர் முயற்சிகளை மேற் கொள்ளும் என்றும் தெரிவித்திருந்தார்.

தமிழ் ஓவியா said...

அதன் பின்னர் 3-10-2012 அன்று என்னுடைய தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற தமிழ் ஈழ ஆதரவாளர் (டெசோ) அமைப்பின் கலந் துரையாடல் கூட்டத்தில்; ஈழத் தமிழர்களின் வாழ் வுரிமையைப் பாதுகாத்திட அய்.நா.மன்றத்தின் தலையீட்டைக் கோரும் தீர்மானத்தை இந்திய அரசு முன்மொழிவதன் மூலம் இலங்கையில் தற்போதுள்ள நிலைமைக்கு விரைந்து முற்றுப் புள்ளிவைத்து, ஈழத் தமிழர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்திடவும், தங்களுடைய உரிமைகள் குறித்து விவாதித்துத் தாங்களே தீர்மானித்துக் கொள்ளவும் இந்திய அரசு முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும்என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இலங்கைச் சிங்கள அரசு, ஈழத்தந்தை செல்வா அவர்கள் காலந்தொட்டே, தொடர்ந்து தமிழினத்தை ஏமாற்றி வரும் கபட நாடகத்தை, நாம் புரிந்து கொண்டிருப்பதால்தான்; ஈழத் தமிழர்களுக்குத் தேவையான அரசியல் தீர்வினை பொது வாக்கெடுப்பு மூலமாக முடிவு செய்து நடைமுறைப்படுத்த வேண்டு மென்று வலியுறுத்தி வருகிறோம். சிங்கள அரசின் மனித நேயமற்ற அணுகுமுறையினை உலக நாடுகள் ஒவ்வொன்றாகப் புரிந்து கொள்ளத் தொடங்கி விட்டன என்பதையே அய்.நா. மனித உரிமை ஆணைய நிகழ்வுகள் புலப்படுத்துகின்றன.

எனக்கு அனுப்பப்பட்ட தகவல்

சில நாட்களுக்கு முன்பு இலங்கையில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் திரு.செல்வ ராஜா, லண்டனில் இருந்து திரு.கண்ணன், நார்வேயிலிருந்து திரு.சிவகணேசன் ஆகியோர் எனக்கு ஒரு தகவலை அனுப்பியிருந்தனர். அதன்படி, 2009 போர் முடிந்த வுடன் திரு.இளங்குமரன் என்ற பேபி சுப்பிர மணியம், திரு.யோகி, கவிஞர் புதுவை இரத்தினகிரி, திரு.பால குமார், இளம்பரிதி ஆகியோருடன் 18 ஆயிரம் தமிழர்கள் சிறை வைக்கப்பட்டனர்.

அவர்களுடைய தற்போதைய நிலை என்ன என்று தெரியவில்லை. இதுகுறித்து திரு.யோகியின் மனைவி திருமதி யோகரத்தினம் யோகி; கவலையுடன் கேள்வி எழுப்பியிருந்தார். தற்போது, ஈழக் கவிஞர் புதுவை இரத்தினகிரி எங்குள்ளார் என்று தெரியவில்லை என்றும், ஒரு சிலர் அவர் சாகடிக்கப்பட்டு விட்டார் என்றும் சொல்கின்றனர். ஈழப் பிரச்சினையில் ஆர்வத் தோடு களப்பணியாற்றிய கவிஞர் ரத்தின கிரியின் உயிர், கேள்விக்குறியாக உள்ளது என்றெல்லாம் தெரிவித்து இதைப்பற்றி நான் வினா எழுப்ப வேண்டுமென்று கேட்டுக் கொண்டுள்ளார்கள்.

தமிழ் ஓவியா said...

20-1-2013 அன்று நான் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களுக்கும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அவர்களுக்கும் எழுதிய நீண்ட கடிதத்தில், இலங் கையில் தமிழர் வாழும் பகுதிகளில் சிங்கள அரசு திட்டமிட்டு மேற்கொண்டு வரும் அத்துமீறல் மற்றும் அராஜக நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்த வேண்டு மென்று கேட்டுக் கொண்டிருக்கிறேன். மேலும் அந்தக் கடிதத்தில் தமிழ் மொழி மற்றும் தமிழர் கலாச் சாரத்தை நீர்த்துப் போகச் செய்வதிலும், தமிழர்களின் பொருளா தார வாழ்வை சீர்குலைத்துச் சிதைப்பதிலும் சிங்கள அரசு வேகமாக ஈடுபட்டு வருவதை யும் எடுத்துக்காட்டி, இலங்கையிலே உள்ள தமிழர்கள் வாழும் 89 கிராமங்களுக்கு ஏற்கெனவே இருந்த பெயர்களை மாற்றி விட்டு சிங்களப் பெயர்களைச் சூட்டியிருப்பது பற்றியும் விரிவான அறிக்கையில் எழுதியிருந்தேன். அந்தக் கடிதத்தின் முழு விவரமும், அந்தக் கிராமங்களின் பெயர்களும் ஏடுகளில் விரிவாக வெளிவந்தன. ஆங்கில நாளேடுகள் உட்பட; அந்தச் செய்திக்கு மிகவும் முக்கியத் துவம் கொடுத்து வெளியிட்டிருந்தன.

பிரித்தானியா, கனடா, அமெரிக்கா மற்றும் அய்ரோப்பாவில் வாழும் ஈழத் தமிழர்களுக்கு இந்தச் செய்தி வழக்கறிஞர், தம்பி கே.எஸ். ராதாகிருஷ்ணன் முயற்சியால் அதிர்வு இணையம் வழியாகச் சென் றுள்ளது. அதனைப் பல்லாயிரக்கணக்கான மக்கள் படித்ததோடு, அதனை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து ஆங்கில இணையங்களிலும் வெளி யிட்டிருக்கிறார்கள்.

அதனைப் படித்துவிட்டு நேற்று ஒரு நாளில் மட்டும் சிலர் அனுப்பிய பதில்களின் சுருக்கம் வருமாறு :-

சுதாகரன் (ஜெர்மனி):- உங்கள் செய்தியைப் பார்த்தேன். மிகவும் கவலையாக உள்ளது. இனி நான் பிறந்து வளர்ந்த ஊரின் பெயர் சிங்களத்தில் மாற்றப்படவிருக்கிறதா? என் பிள்ளைகளுக்கு நான் இனி எங்கே பிறந்தேன் என்று சொல்ல முடியாத நிலை. இதனைச்சுட்டிக்காட்டி கடிதம் எழுதிய முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களுக்கு எனது நன்றி.

ஜெயசங்கரி (சுவிஸ்):- சில இணையத்தின் செய்திகளைப் பார்த்து நானும் ஒரு காலத்தில் கலைஞர் அவர்களை குறை சொல்லியிருக்கிறேன். ஆனால் அவர் இப்போது செய்வ தெல்லாம் ஈழத் தமிழர்களுக்கு நிம்மதியைத் தருகிறது.

திருநாவுக்கரசு (லண்டன்):- நல்ல ஒரு விஷயத்தை கலைஞர் அய்யா அவர்கள் சுட்டிக் காட்டியுள்ளார். இவ்வளவு வயதாகியும் அவர் செயல்படும் விதம் பிரமிக்க வைக்கிறது. இதனை வேறு தமிழகத் தலைவர்கள் ஏன் செய்யவில்லை?

தமிழ் ஓவியா said...


நிதர்ஷன் (அமெரிக்கா):- 89 தமிழ் நகரங் களையும், சிங்களத்தில் மாற்றினால், இனி நமது அம்மாவைக் கூட நாம் அம்மே என்று சிங்களத்தில் தான் கூப்பிட வேண்டும் போல இருக்கே அண்ணா! இதில் கலைஞர் அவர்கள் செய்த வேலை பாராட்டத்தக்கது. அவராவது கடிதம் எழுதினார். மற்றவர்கள் எல்லாம் எங்கே போனார்கள்? அவர்கள் ஈழப் பிரச்சினையிலாவது இணைய மாட்டார்களா? எங்களுக்கு ஒரு விடிவு வராதா?

நிலா சுதன் (முன்னாள் போராளி) ஈழம் :- மட்டக்களப்பில் நாம் காலம் காலமாகக் கூப்பிட்டு வரும், குடுமி மலை என்னும் இடத்தை தொப்பிகல என்று சிங்களம் மாற்றி விட்டதே! இப்போது தமிழ் ஊடகங்கள்கூட தொப்பிக்கல என்றுதான் எழுதுகிறார்கள். எங்கே போய் முடியப்போகிறதோ தெரிய வில்லை. ஆனால் நல்ல வேளையாக கலைஞர் அண்ணா அவர்கள் இந்தப் பிரச்சினையை கையில் எடுத்திருக்கிறார். அவரால் ஏதாவது நடந்தால் நாங்கள் இங்கே நிம்மதியாக வாழலாம்.

விக்டர் (கனடா):- இதுவரை கலைஞர் அவர்கள் ஈழப் பிரச்சினைக்காக ஆட்சியை இரண்டு முறை இழந்தும், பல்வேறு இழப்புகள், துயரங்களைச் சுமந்த போதும், தற்போதும் கலைஞர் அய்யா அவர்கள் எங்களின்பால் நேசம் கொண்டு குரல் கொடுப்பதை ஈழத்துச் சொந்தங் களால் மறக்க முடியாது. எங்கள் நன்றிகள்!

நா.சிற்றரசு (ஜெர்மனி):- ஈழப்பிரச்சினையில் அய்யா கலைஞர் அவர்கள் எடுக்கின்ற நடவடிக் கைகள் எங்களுக்கு ஆறுதல் அளிக் கின்றன. ஐ.நா. மன்றத்திற்கும், அய்.நா. மனித உரிமை ஆணையத் திற்கும் தி.மு.க. பொருளாளர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர் களையும், டி.ஆர். பாலு அவர்களையும், எங்க ளோடு நீண்ட காலம் தொடர்பில் உள்ள வழக்கறிஞர் கே.எஸ். இராதா கிருஷ்ணன் அவர்களையும் அனுப்பி பிரிட்டன் மாநாட்டில் கலந்து கொண்டு, எங் களுக்காக குரல் கொடுக்கச் சொன்னார். இந்திய நாடாளுமன்றத்தில் கவிஞர் கனிமொழி அவர்களும் எங்களுக்காக குரல் கொடுத்ததை மறக்க முடியாது. நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும், நடக்கப் போவது நல்லவையாக இருக்கட்டும். கலைஞர் அய் யாவின் முன்னெடுப்புகளால் எங்களுக்கு மறுவாழ்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

இதுபோன்ற ஏராளமான கடிதங்கள் வந்து கொண்டே இருக்கின்றன. முதலில் வந்ததை மட்டும் இங்கே குறிப்பிட்டுள்ளேன். தமிழ்ச் சொந்தங்களின் எண்ண ஓட்டம்

இந்தச் செய்திகளை எல்லாம் ஏதோ என் பெருமைக்காக நான் இங்கே எழுதிடவில்லை. உலகம் முழுவதிலும் உள்ள நம் முடைய தமிழ்ச் சொந்தங் களின் எண்ணவோட்டம் எவ்வாறு உள்ளது என் பதைக் குறிப்பிடத்தான் சிலவற்றை மட்டும் எடுத்துக் காட்டியிருக்கிறேன். இப்படி சுமார் நூற்றுக்கணக் கான மின்னஞ்சல்கள் தமக்குக் கிடைத்துள்ளதாகவும், ஆனால் அவை அனைத்தையும் இங்கே இணைக்க முடியாது என்பதால் சிலவற்றை மட்டும் இணைத்துள்ளோம் என்றும் இலண்டனிலிருந்து நண்பர் குகதாசன் குகநேசன் என்கிற கண்ணன் அனுப்பியிருக்கிறார்.

வரும் மார்ச் திங்களில் ஜெனிவாவில் நடை பெறவிருக்கும் அய்.நா. மனித உரிமை சபையின் கூட்டத் தொடர் இலங்கைத் தமிழர் பிரச்சினை பற்றி விரிவாக விவாதிக்கும் என்ற நம்பிக்கை நமக்கு உள்ளது. உலக நாடுகளின் கடுமையான கண்டனங்கள் இலங்கை அரசுக்கு எதிராக அப்போது தெரிவிக்கப் படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அந்த நேரத்தில் நம்முடைய இந்தியா, இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக உறுதியான நிலைப்பாட்டினை மேற் கொள்ள வேண்டுமென்பதே தமிழகத்தில் வாழும் தமிழர்களின் விருப்பமும் வேண்டுகோளுமாகும்.

இதைப் பற்றியெல்லாம் விரிவாக விவாதித் திடத்தான் பிப்ரவரித் திங்கள் 4ஆம் நாள் அன்று மாலையில் அண்ணா அறிவாலயத்தில் டெசோ உறுப்பினர்களின் கலந்துரையாடல் கூட்டம் நடை பெறவுள்ளது. இந்த மடலில் நான் எழுதியுள்ள பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் அந்தக் கூட்டத்தில் விவாதித்து; துன்பச் சூறாவளியில் துவண்டு கொண்டி ருக்கும் இலங்கைத் தமிழர்களின் வாழ்வில் நல்லொளி பரவிட நல்ல முடிவுகளை எடுப்போம்! என்று டெசோ அமைப்பின் தலைவர் கலைஞர் அவர்கள் முரசொலியில் எழுதியுள்ள கடிதத்தில் குறிப் பிட்டுள்ளார்.

தமிழ் ஓவியா said...


நிதர்ஷன் (அமெரிக்கா):- 89 தமிழ் நகரங் களையும், சிங்களத்தில் மாற்றினால், இனி நமது அம்மாவைக் கூட நாம் அம்மே என்று சிங்களத்தில் தான் கூப்பிட வேண்டும் போல இருக்கே அண்ணா! இதில் கலைஞர் அவர்கள் செய்த வேலை பாராட்டத்தக்கது. அவராவது கடிதம் எழுதினார். மற்றவர்கள் எல்லாம் எங்கே போனார்கள்? அவர்கள் ஈழப் பிரச்சினையிலாவது இணைய மாட்டார்களா? எங்களுக்கு ஒரு விடிவு வராதா?

நிலா சுதன் (முன்னாள் போராளி) ஈழம் :- மட்டக்களப்பில் நாம் காலம் காலமாகக் கூப்பிட்டு வரும், குடுமி மலை என்னும் இடத்தை தொப்பிகல என்று சிங்களம் மாற்றி விட்டதே! இப்போது தமிழ் ஊடகங்கள்கூட தொப்பிக்கல என்றுதான் எழுதுகிறார்கள். எங்கே போய் முடியப்போகிறதோ தெரிய வில்லை. ஆனால் நல்ல வேளையாக கலைஞர் அண்ணா அவர்கள் இந்தப் பிரச்சினையை கையில் எடுத்திருக்கிறார். அவரால் ஏதாவது நடந்தால் நாங்கள் இங்கே நிம்மதியாக வாழலாம்.

விக்டர் (கனடா):- இதுவரை கலைஞர் அவர்கள் ஈழப் பிரச்சினைக்காக ஆட்சியை இரண்டு முறை இழந்தும், பல்வேறு இழப்புகள், துயரங்களைச் சுமந்த போதும், தற்போதும் கலைஞர் அய்யா அவர்கள் எங்களின்பால் நேசம் கொண்டு குரல் கொடுப்பதை ஈழத்துச் சொந்தங் களால் மறக்க முடியாது. எங்கள் நன்றிகள்!

நா.சிற்றரசு (ஜெர்மனி):- ஈழப்பிரச்சினையில் அய்யா கலைஞர் அவர்கள் எடுக்கின்ற நடவடிக் கைகள் எங்களுக்கு ஆறுதல் அளிக் கின்றன. ஐ.நா. மன்றத்திற்கும், அய்.நா. மனித உரிமை ஆணையத் திற்கும் தி.மு.க. பொருளாளர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர் களையும், டி.ஆர். பாலு அவர்களையும், எங்க ளோடு நீண்ட காலம் தொடர்பில் உள்ள வழக்கறிஞர் கே.எஸ். இராதா கிருஷ்ணன் அவர்களையும் அனுப்பி பிரிட்டன் மாநாட்டில் கலந்து கொண்டு, எங் களுக்காக குரல் கொடுக்கச் சொன்னார். இந்திய நாடாளுமன்றத்தில் கவிஞர் கனிமொழி அவர்களும் எங்களுக்காக குரல் கொடுத்ததை மறக்க முடியாது. நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும், நடக்கப் போவது நல்லவையாக இருக்கட்டும். கலைஞர் அய் யாவின் முன்னெடுப்புகளால் எங்களுக்கு மறுவாழ்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

இதுபோன்ற ஏராளமான கடிதங்கள் வந்து கொண்டே இருக்கின்றன. முதலில் வந்ததை மட்டும் இங்கே குறிப்பிட்டுள்ளேன். தமிழ்ச் சொந்தங்களின் எண்ண ஓட்டம்

இந்தச் செய்திகளை எல்லாம் ஏதோ என் பெருமைக்காக நான் இங்கே எழுதிடவில்லை. உலகம் முழுவதிலும் உள்ள நம் முடைய தமிழ்ச் சொந்தங் களின் எண்ணவோட்டம் எவ்வாறு உள்ளது என் பதைக் குறிப்பிடத்தான் சிலவற்றை மட்டும் எடுத்துக் காட்டியிருக்கிறேன். இப்படி சுமார் நூற்றுக்கணக் கான மின்னஞ்சல்கள் தமக்குக் கிடைத்துள்ளதாகவும், ஆனால் அவை அனைத்தையும் இங்கே இணைக்க முடியாது என்பதால் சிலவற்றை மட்டும் இணைத்துள்ளோம் என்றும் இலண்டனிலிருந்து நண்பர் குகதாசன் குகநேசன் என்கிற கண்ணன் அனுப்பியிருக்கிறார்.

வரும் மார்ச் திங்களில் ஜெனிவாவில் நடை பெறவிருக்கும் அய்.நா. மனித உரிமை சபையின் கூட்டத் தொடர் இலங்கைத் தமிழர் பிரச்சினை பற்றி விரிவாக விவாதிக்கும் என்ற நம்பிக்கை நமக்கு உள்ளது. உலக நாடுகளின் கடுமையான கண்டனங்கள் இலங்கை அரசுக்கு எதிராக அப்போது தெரிவிக்கப் படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அந்த நேரத்தில் நம்முடைய இந்தியா, இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக உறுதியான நிலைப்பாட்டினை மேற் கொள்ள வேண்டுமென்பதே தமிழகத்தில் வாழும் தமிழர்களின் விருப்பமும் வேண்டுகோளுமாகும்.

இதைப் பற்றியெல்லாம் விரிவாக விவாதித் திடத்தான் பிப்ரவரித் திங்கள் 4ஆம் நாள் அன்று மாலையில் அண்ணா அறிவாலயத்தில் டெசோ உறுப்பினர்களின் கலந்துரையாடல் கூட்டம் நடை பெறவுள்ளது. இந்த மடலில் நான் எழுதியுள்ள பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் அந்தக் கூட்டத்தில் விவாதித்து; துன்பச் சூறாவளியில் துவண்டு கொண்டி ருக்கும் இலங்கைத் தமிழர்களின் வாழ்வில் நல்லொளி பரவிட நல்ல முடிவுகளை எடுப்போம்! என்று டெசோ அமைப்பின் தலைவர் கலைஞர் அவர்கள் முரசொலியில் எழுதியுள்ள கடிதத்தில் குறிப் பிட்டுள்ளார்.

தமிழ் ஓவியா said...


தமிழக மூதறிஞர் குழுவின் சார்பில் பாலியல் வன்கொடுமை ஓர் ஆய்வும் தீர்வும்! கருத்தரங்கம்

சென்னை, ஜன.26- நாட்டில் நடைபெற்று வரும் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளைத் தடுக்க, சமூக சிந்தனையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும், பெண் அடிமைச் சட்டங்களை உடைத் தெரிய வேண்டும், பாலியல் குற்றவாளிக்கு ஆண்மை நீக்கம் செய்ய வேண்டும் என்று அறிஞர் பெருமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

சென்னை, வேப்பேரி பெரியார் திடலில் நேற்று முன்தினம் (24.1.2013) மாலை தமிழக மூதறிஞர் குழுவின் ஜனவரி மாதக்கூட்டம் நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் நடைபெற்றது.
இந்திய அளவில் சமீபத்தில் அதிகரித்து வரும் பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளை தடுக்கவும், இனிமேலும் அது போன்ற சம்பவங்களை எப்படி பெண்கள் எதிர்கொள் வதற்கான வழிமுறை களை பின்பற்றப்பட வேண்டும். அதற்கான புதிய சட்டங்களை இயற்ற வேண்டும் என்ற கருத் துக்களை மத்திய - மாநில அரசுகளும் நீதித்துறை, சட்டத் துறை, காவல் துறைகளுக்கு ஆலோசனைகள் வழங்குவதற் கான அறிஞர் பெருமக்கள் பங்கேற்ற கூட்டம் நடை பெற்றது.

பாலியல் வன்கொடுமை ஓர் ஆய்வும் தீர்வும்

பாலியல் வன்கொடுமை ஓர் ஆய்வும் தீர்வும் என்ற தலைப்பில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு மேனாள் உச்ச நீதிமன்ற நீதிபதியும், தமிழக மூதறிஞர் குழுவின் தலை வருமான நீதியரசர் எஸ்.மோகன் தலைமையேற்று உரை நிகழ்த்தினார். திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர் களும், தமிழ்நாடு பெண் வழக்கறிஞர் கூட்டமைப்பின் தலை வர் வழக்கறிஞர் கே.சாந்தகுமாரி ஆகியோர் சிறப்புரை யாற்றினார்.

முன்னதாக இக்கூட்டத்திற்கு வந்திருந்தவர்களை தமிழக மூதறிஞர் குழுவின் துணைத் தலைவர் வரியியல் அறிஞர் எஸ்.ராஜரத்தினம் வரவேற்று பேசினார். தமிழக மூதறிஞர் குழுவின் செயலாளர், மேனாள் மாவட்ட நீதிபதி இரா.பரஞ் சோதி நன்றியுரை கூறினார். இக் கூட்டத்தில் சிறப்புரை யாற்றிய வழக்கறிஞர் கே.சாந்த குமாரிக்கு, தமிழர் தலைவர் தந்தை பெரியாரின் நூல்களை வழங்கி சிறப்பித்தார்.

பாலியல் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும்

தமிழ் ஓவியா said...

இக்கூட்டத்தில் நீதியரசர் எஸ்.மோகன் பேசு கையில்:- பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் இன்று நேற்றல்ல, தொன்று தொட்டு நடந்து வருகிறது. சிறுமி முதல் 70 வயது பெண்கள் மீதும் பாலியல் பலாத்காரங்கள் நடத்தப் படுகிறது. மக்களிடையே ஒழுக்கமில்லை, ஏன் காவல்துறை அதிகாரிகள், நீதித்துறையினர், ஆசிரியர்கள் என ஆங் காங்கே அனை வரும் பாலியல் குற்றம் செய்து கொண்டிருக் கின்றனர்.

பெண்கள் தற்காப்புக்காக கத்தி வைத்துக் கொள்ள வேண்டும். பெண் அடிமைச்சட்டங்களை உடைத் தெரிய வேண்டும் என்றார் தந்தை பெரியார். பெண் களை பாலியல் பலாத்காரம் செய்யும் குற்றவாளி களுக்கு தூக்குத் தண்டனை வழங்க வேண்டும் என்றார் நீதியரசர் எஸ்.மோகன்.

சமூக சிந்தனையில் மாற்றம் தேவை

இக்கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் பேசுகையில்:- தந்தை பெரியாரின் பெண்ணுரிமை கருத்துகள் உலக அளவில் என்றைக்கும் தேவைப்படு பவையாகும். பெண்கள் அனைவரும் தங்களது உரிமையைப் பெற போராட வேண்டும். பெண்கள் பாரதி கண்ட புதுமைப் பெண்ணாக இருக்க வேண்டும் என்று சொல்கின்றனர். ஆனால் தந்தை பெரியார் தான் பெண்கள் புரட்சி பெண்ணாக இருக்க வேண்டும் என்று சொன்னார். புதுமை எதிர்காலத்தில் பழமையாகி விடும். புரட்சியோ என்றும் புரட்டிப்போடும். பெண்களை பாலியல் வன்கொடுமை செய்யும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க கூடாது என்பது என் கருத்து. பாலியல் வன்கொடுமை செய்யும் குற்றவாளி ஆயுள் முழு வதும் தண்டனை அனுபவிக்க வேண்டும். பெண் களை பலாத்காரம் செய்யும் குற்றவாளிகளை அவமானப்படுத்த வேண்டும். பெண்கள் மீது நடைபெறும் பாலியல் வன்கொடு மைகள் இனி நடைபெறாமல் இருக்க முதலில் சமூகத்தில் புரட்சி ஏற்படுத்தப்பட வேண்டும். அதற்காக சமூகவியல் துறை மூலம் விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தப்பட வேண்டும்.

தந்தை பெரியார் காலத்தில் இருந்து திராவிடர் கழகம் பெண்கள் உரிமைக்காக சமூகப் பணியை அடிப்படை பணியாக ஆற்றி வருகிறது. பெண் களின் விடுதலைக்கு எதிராக இருக்கும் மதம் - சாஸ்திரம் எதுவாக இருந்தாலும் அவை மாற்றப்பட வேண்டும். பழைமைக் கருத்துகளுக்கு இடம் கொடுக்கக் கூடாது என்று தமிழர் தலைவர் பேசினார்.
பாலியல் குற்றவாளிகளுக்கு

ஆண்மை நீக்கம் செய்ய வேண்டும்

இக்கூட்டத்தில் தமிழ்நாடு பெண் வழக்கறிஞர் கூட்டமைப் பின் தலைவர் வழக்கறிஞர் கே.சாந்தகுமாரி பேசுகையில்:-

பெண்களை பாலியல் வன்கொடுமை செய்யும் குற்றவாளி களுக்கு மரண தண்டனையோ, ஆயுள் தண்டனையோ தேவையில்லை. இராசயன முறையிலான ஆண்மை நீக்கம் செய்யப்பட வேண்டும்.

பெண்களை அவர்களின் பெற்றோர்கள் துணிச் சலாக வளர்க்க வேண்டும். தந்தை பெரியார் சொன்னது போல பெண்கள் தங்களின் அறிவை வளர்த்துக் கொண்டு தலை நிமிர்ந்து நடைபோட வேண்டும். இன்றைக்கு இருக்கின்ற சட்டங்கள் பாலியல் வன்புணர்ச்சிகளை குற்றமாக எடுத்து கொள்வது இல்லை. அய்ரோப்பா நாடுகளில் உள்ள சட்டங் களை போல் பெண்களின் உரிமைகளை பாதுகாக்கும் சட்டங் களை இந்தியாவில் இயற்ற வேண்டும் என்றார்.

மூதறிஞர் குழுவிற்கு துணைத் தலைவர் நியமனம்

மூதறிஞர் குழுவில் பேசிய தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் இனிமேல் மாதத்தின் இரண் டாவது சனிக்கிழமை மாலை 6.30 மணி முதல் 8.30 மணி வரை இக்கூட்டம் நடைபெறும்.

மூதறிஞர் குழுவின் துணைத் தலைவராக பொறியாளர் சுந்தர ராசுலு அவர்கள் செயல்படுவார் என அறிவித்தார்.

தமிழ் ஓவியா said...


துக்கம் கொண்டாடும் வகை

ஸ்ரீமான் வ.வே.சு. அய்யர் அவர்கள் காலமானதை ஆதாரமாகக் கொண்டு அனுதாபக் கூட்டங்கள் கூட்டிப் பேசுவோர், இந்த அக்கிரம உலகில் அய்யர் இருக்கக்கூடாது என்று கடவுள் அழைத்துக் கொண்டார் என்போரும், வரதராஜுலு நாயுடுவும், ராமசாமி நாயக்கரும் செய்யும் கிளர்ச்சியில் மனமுடைந்து இம்மாதிரி ஜனங்கள் முன் இருக்கக்கூடாது என்று நினைத்தும் போய்விட்டீர்களோ என்றும், பணம் எவ்வளவு வேண்டுமானாலும் சம்பாதிக்க லாம் ஒரு அய்யரை சம்பாதிக்க முடியுமா என்று வரதராஜுலு நாயுடுவைக் கேட்பது போலவும் எத்தனையோ விதமாய்ப் பெண்கள் ஜாடை பேசுவதுபோல் பேசி மகிழ்கிறார்கள்.

இதே ஆசாமிகள், இதே சமயத்தில், வரதராஜுலு நாயுடுவும், ராமசாமி நாயக்கரும் பிரயாணத்தில் ரயில் எங்காவது விழுந்து ஒழிந்து போயிருப்பார்களானால் அப்போது என்ன பேசியிருப்பார்கள்? டாக்டர் நாயர் லண்டனில் இறந்தபொழுது சிலர் பேசியதையும் பொது ஜனங்கள் நினைத்துப் பார்க்கட்டும்.

இவர்கள் இப்படிப் பேசி மகிழ்ந்தால் எதிர்க்கட்சியி லிருக்கிறவர்கள் என்ன பேசி மகிழ்வார்கள் என்பதையும், இப்படிப் பேசுகிறவர்கள் இறந்தவர்களுக்கு நன்மை செய்கிறார்களா? தீமை செய்கிறார்களா? என்பதையும் யோசித்துப் பார்க்கட்டும்.

- குடிஅரசு - கட்டுரை - 14.06.1925

தமிழ் ஓவியா said...


சுயராஜ்யக் கட்சிக்கு கருவேப்பிலை


வங்காள சுயராஜ்யக் கட்சியிலிருந்த முஸ்லீம் களெல்லாம் ஒருவர் பின் ஒருவராய் விலகிக் கொண்டே வரு கிறார்கள். கடைசியாக வங்காள முஸ்லீம்களின் தலைவரும் வங்காள நகர சபையின் டிப்டிமேயருமான டாக்டர். அப்துல்லா சுக்ராவர்த்தி சுயராஜ்யக் கட்சியின் மெம்பர் தானத்தை ராஜிநாமாக் கொடுத்து விட்டார்.

அவர் மேற்படி ராஜிநாமாவுக்குக் காரணம் கூறு கையில், சுயராஜ்யக்கட்சியின் தத்துவம் தமக்குப் பிடிக்கவில்லையென்றும், அதனால்தான் தாம் ராஜிநாமாக் கொடுத்து விட்ட தாகவும் தாம் இன்னமும் தேசத்திற்கு உழைக்கத் தயாராயிருப்ப தாகவும், தாம் ராஜிநாமாக் கொடுத்ததின் காரணமாக தனக்கு ராஜிய உலகிலிருந்த செல் வாக்குகள் குறைந்தபோதிலும் ஒரு புதிய கொடுமைக்கு உட்பட்டு உயிரை வைத்துக் கொண்டிருப்பதைவிட அரசியல் தற்கொலை செய்து கொள்வதுமேல் என எண்ணுகிறேன் என்று கூறியிருக்கிறார்.

வங்காளத்தில் இப்படி யென்றால், பம்பாயிலும் சுயராஜ்யக் கட்சியாருக்கும், இந்து முஸ்லீம் களுக்கும் ஒற்றுமை இல்லாமல் இருவருக்குள்ளும், ஒத்துழைக்க முடியாதெனக்கூறி அவர்களுடன் ஒத்துழையாமை ஆரம்பித்திருப்பதாய் தெரிய வருகிறது. நமது மாகாணத்திலும் மதுரையில் சில சுயராஜ்யக் கட்சியார் சில முஸ்லீம்கள் விஷயமாய் நடந்து கொண்டது மதுரையில் சுயராஜ்யக் கட்சியின் பிரச்சாரம் என்ற தலைப்பின்கீழ் தினசரிப்பத்திரி கைகளில் பார்த்தால் தெரியவரும்.

அதுமாத்திரம் அல் லாமல் முஸ்லீம்களுக்குப் பெரிய உத்தியோ கங்கள் வருகிறகாலத்தில் இவர்கள் எப்படி நடந்து கொள்ளுகிறார் களென்பதை முஸ்லீம் பெரிய உத்தி யோகஸ்தர்களைக் கேட்டால் தெரிய வரும்.

குழம்பு, காய்கறி முதலிய பதார்த்தங் களுக்கு வாசனை உண்டாக்கிக் கொள்ள வேண்டி தாளிதம் செய்யும்போது கருவேப்பிலை யை உபயோகித்துக் கொண்டு, சாப்பிடுகிற போது அதை எடுத்து தூரஎறிந்து விடுவதுபோல் சமயத்திற்குச் சேர்த்துக்கொண்டு சமயம் தப்பிய வுடன் வெளியில் தள்ளிவிடுவதை நமது நாட்டு முஸ்லீம்கள் மாத்திரம் அல்லாமல் நமது நாட்டு இதரமக்களும் அறியவேண்டுமாய் ஆவல் கொள்ளுகிறோம்.

- குடிஅரசு - துணைத் தலையங்கம் - 23.08.1925

தமிழ் ஓவியா said...


தந்தை பெரியார் முத்தமிழ்மன்றம் நடத்திய திராவிடர் திருநாள் - பொங்கல் விழாவில் பாராட்டப்பட்ட தமிழ் பெருமக்கள்


கவிஞர் மனுஷ்யபுத்திரன்

இன்றைய நவீன தமிழ் இலக்கியத்தின் அடையாள மாக திகழும் பெயர் இது. கவிஞர், எழுத்தாளர், பத்திரி கையாளர், பாடலாசிரியர், ஊடகங்களில் தனது கருத்து களை ஆழமாகவும் ஆணித்தர மாகவும் முன் வைக்கும் சிந் தனையாளர் என இவருக்குத் தான் எத்தனை எத்தனை முகங்கள்.

திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி என்ற கிராமத் தில் 1968இல் பிறந்த இவர் இன்று உலகெங்கிலும் உள்ள தமிழ்கூறும் சிந்தனையாளர்களின் இதயங்களில் இடம் பிடித்ததற்கு அவர் கண்ட கனவுகளும் அதற்கு பின்னே இருந்த அவரது உழைப்புமே சாட்சியங்கள்.

தமிழில் மிக இளம் வயதிலேயே கவிதைகள் எழுதிய கவிஞர் இவர் இவருடைய பதினாறாம் வயதில் இவரது முதல் புத்தகம் வெளிவந்தது. மனுஷ்ய புத்திரன் கவிதைகள் என்ற தலைப்பில் வெளிவந்த இந்தப் புத்தகம் ஒரு மிகச் சிறந்த கவிஞரின் வருகையை தமிழுக்கு அறிவித்தது.

1993ஆம் ஆண்டு இவரது இரண்டாம் கவிதைத் தொகுப்பு என் படுக்கையறையில் யாரோ ஒளிந்திருக் கிறார்கள் வெளிவந்தபோது மிகப் பரவலான கவனத்தைப் பெற்றார்.

1994ல் காலச்சுவடு இலக்கிய இதழில் ஆசிரியர் குழுவில் இணைந்து பணியாற்றத் தொடங்கினார்.

1998இல் வெளிவந்த இடமும் இருப்பும் என்ற கவிதைத் தொகுப்பும் 2001இல் வெளிவந்த நீராலானது என்ற தொகுப்பும் அவரைத் தமிழின் தனித்துவமான கவிஞராக அடையாளம் காட்டின.

2004இல் மணலின் கதை, 2006ல் கடவுளுடன் பிராத்தித்தல், 2009இல் அதீதத்தின் ருசி, 2010இல் இதற்கு முன்பும் இதற்குப் பிறகும் 2011இல் பசித்த பொழுது, 2012இல் அருந்தப்படாத கோப்பை ஆகிய கவிதைத் தொகுப்புகளையும் காத்திருந்த வேளையில், எப்போதும் வாழும் கோடை, என்ன மாதிரியான காலத்தில் வாழ்கிறோம், தோன்ற மறுத்த தெய்வம், எதிர்க்குரல், டினோசர்கள் வெளியேறிக் கொண்டிருக் கின்றன ஆகிய கட்டுரைத் தொகுப்புகளையும் வெளி யிட்டுள்ளார்.

2002-ல் உயிர்மை பதிப்பகத்தைத் தொடங்கினார். இந்தப் பதிப்பகம் இன்று தமிழின் முன்னணி பதிப்பகமாக 400க்கும் மேற்பட்ட நூல்களைப் பதிப்பித்து தனித்த இடம் பெற்றுள்ளது. உயிர்மையின் நூல்கள் அதன் உள்ளடக்கம், வடிவம் சார்ந்து தமிழ்ப் பதிப்புலகில் ஒரு மறுமலர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

2003ஆம் ஆண்டு உயிர்மை என்ற இலக்கிய மாத இதழை அவர் துவங்கினார். சமூகம், இலக்கியம், அரசியல், கலை என பல துறை சார்ந்த அரிய ஆக்கங் களை உயிர்மை தொடர்ந்து வெளியிட்டு வருகிறது.

2008இல் உயிரோசை என்ற இணைய வார இதழைத் தொடங்கி உலகெங்கும் அதற்கு வாசகர்களை உருவாக்கியிருக்கிறார்.

2002ஆம் ஆண்டு தேசிய அளவில் 35 வயதிற்குள் தமது துறை சார்ந்து மிகச் சிறந்த பங்களிப்பினை செய்பவர்களுக்கு வழங்கப்படும் சன்ஸ்கிருதி சன்மான் விருது மனுஷ்ய புத்திரனுக்கு வழங்கப்பட்டது.

2003ஆம் ஆண்டில் இந்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வழங்கும் மிகச் சிறந்த தனிநபர் படைப் பாற்றலுக்கான விருது அப்போதைய குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களால் வழங்கப் பட்டது.

2009இல் இவர் உன்னைப் போல் ஒருவன் திரைப் படத்திற்காக எழுதிய அல்லா ஜானே என்ற பாடல் உலகெங்கிலும் பெரும் புகழ்பெற்றது.

2010இல் தமிழகத்தின் 10 செல்வாக்குமிக்க மனிதர் களில் ஒருவராக இவரை இந்தியா டுடே இதழ் தேர்வு செய்தது.

2010ஆம் ஆண்டு வெளிவந்த மிகச் சிறந்த நூலாக மனுஷ்ய புத்திரனின் அதீதத்தின் ருசி நூலை ஆனந்த விகடன் தேர்வு செய்தது இவரது சாதனைப் பயணத்தில் இன்னொரு அடையாளமாகும். எண்ணற்ற கனவுக ளோடும் புதிய சாதனை களோடும் இவரது இடை யறாத பயணம் இன்னும் தொடர்ந்து கொண்டிருக் கிறது.

(இந்த குறிப்பை படித்தவர் இறைவி)


தமிழ் ஓவியா said...


தந்தை பெரியார் முத்தமிழ்மன்றம் நடத்திய திராவிடர் திருநாள் - பொங்கல் விழாவில் பாராட்டப்பட்ட தமிழ் பெருமக்கள்


கவிஞர் மனுஷ்யபுத்திரன்

இன்றைய நவீன தமிழ் இலக்கியத்தின் அடையாள மாக திகழும் பெயர் இது. கவிஞர், எழுத்தாளர், பத்திரி கையாளர், பாடலாசிரியர், ஊடகங்களில் தனது கருத்து களை ஆழமாகவும் ஆணித்தர மாகவும் முன் வைக்கும் சிந் தனையாளர் என இவருக்குத் தான் எத்தனை எத்தனை முகங்கள்.

திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி என்ற கிராமத் தில் 1968இல் பிறந்த இவர் இன்று உலகெங்கிலும் உள்ள தமிழ்கூறும் சிந்தனையாளர்களின் இதயங்களில் இடம் பிடித்ததற்கு அவர் கண்ட கனவுகளும் அதற்கு பின்னே இருந்த அவரது உழைப்புமே சாட்சியங்கள்.

தமிழில் மிக இளம் வயதிலேயே கவிதைகள் எழுதிய கவிஞர் இவர் இவருடைய பதினாறாம் வயதில் இவரது முதல் புத்தகம் வெளிவந்தது. மனுஷ்ய புத்திரன் கவிதைகள் என்ற தலைப்பில் வெளிவந்த இந்தப் புத்தகம் ஒரு மிகச் சிறந்த கவிஞரின் வருகையை தமிழுக்கு அறிவித்தது.

1993ஆம் ஆண்டு இவரது இரண்டாம் கவிதைத் தொகுப்பு என் படுக்கையறையில் யாரோ ஒளிந்திருக் கிறார்கள் வெளிவந்தபோது மிகப் பரவலான கவனத்தைப் பெற்றார்.

1994ல் காலச்சுவடு இலக்கிய இதழில் ஆசிரியர் குழுவில் இணைந்து பணியாற்றத் தொடங்கினார்.

1998இல் வெளிவந்த இடமும் இருப்பும் என்ற கவிதைத் தொகுப்பும் 2001இல் வெளிவந்த நீராலானது என்ற தொகுப்பும் அவரைத் தமிழின் தனித்துவமான கவிஞராக அடையாளம் காட்டின.

2004இல் மணலின் கதை, 2006ல் கடவுளுடன் பிராத்தித்தல், 2009இல் அதீதத்தின் ருசி, 2010இல் இதற்கு முன்பும் இதற்குப் பிறகும் 2011இல் பசித்த பொழுது, 2012இல் அருந்தப்படாத கோப்பை ஆகிய கவிதைத் தொகுப்புகளையும் காத்திருந்த வேளையில், எப்போதும் வாழும் கோடை, என்ன மாதிரியான காலத்தில் வாழ்கிறோம், தோன்ற மறுத்த தெய்வம், எதிர்க்குரல், டினோசர்கள் வெளியேறிக் கொண்டிருக் கின்றன ஆகிய கட்டுரைத் தொகுப்புகளையும் வெளி யிட்டுள்ளார்.

2002-ல் உயிர்மை பதிப்பகத்தைத் தொடங்கினார். இந்தப் பதிப்பகம் இன்று தமிழின் முன்னணி பதிப்பகமாக 400க்கும் மேற்பட்ட நூல்களைப் பதிப்பித்து தனித்த இடம் பெற்றுள்ளது. உயிர்மையின் நூல்கள் அதன் உள்ளடக்கம், வடிவம் சார்ந்து தமிழ்ப் பதிப்புலகில் ஒரு மறுமலர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

2003ஆம் ஆண்டு உயிர்மை என்ற இலக்கிய மாத இதழை அவர் துவங்கினார். சமூகம், இலக்கியம், அரசியல், கலை என பல துறை சார்ந்த அரிய ஆக்கங் களை உயிர்மை தொடர்ந்து வெளியிட்டு வருகிறது.

2008இல் உயிரோசை என்ற இணைய வார இதழைத் தொடங்கி உலகெங்கும் அதற்கு வாசகர்களை உருவாக்கியிருக்கிறார்.

2002ஆம் ஆண்டு தேசிய அளவில் 35 வயதிற்குள் தமது துறை சார்ந்து மிகச் சிறந்த பங்களிப்பினை செய்பவர்களுக்கு வழங்கப்படும் சன்ஸ்கிருதி சன்மான் விருது மனுஷ்ய புத்திரனுக்கு வழங்கப்பட்டது.

2003ஆம் ஆண்டில் இந்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வழங்கும் மிகச் சிறந்த தனிநபர் படைப் பாற்றலுக்கான விருது அப்போதைய குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களால் வழங்கப் பட்டது.

2009இல் இவர் உன்னைப் போல் ஒருவன் திரைப் படத்திற்காக எழுதிய அல்லா ஜானே என்ற பாடல் உலகெங்கிலும் பெரும் புகழ்பெற்றது.

2010இல் தமிழகத்தின் 10 செல்வாக்குமிக்க மனிதர் களில் ஒருவராக இவரை இந்தியா டுடே இதழ் தேர்வு செய்தது.

2010ஆம் ஆண்டு வெளிவந்த மிகச் சிறந்த நூலாக மனுஷ்ய புத்திரனின் அதீதத்தின் ருசி நூலை ஆனந்த விகடன் தேர்வு செய்தது இவரது சாதனைப் பயணத்தில் இன்னொரு அடையாளமாகும். எண்ணற்ற கனவுக ளோடும் புதிய சாதனை களோடும் இவரது இடை யறாத பயணம் இன்னும் தொடர்ந்து கொண்டிருக் கிறது.

(இந்த குறிப்பை படித்தவர் இறைவி)


தமிழ் ஓவியா said...


தந்தை பெரியார் முத்தமிழ்மன்றம் நடத்திய திராவிடர் திருநாள் - பொங்கல் விழாவில் பாராட்டப்பட்ட தமிழ் பெருமக்கள்


கவிஞர் மனுஷ்யபுத்திரன்

இன்றைய நவீன தமிழ் இலக்கியத்தின் அடையாள மாக திகழும் பெயர் இது. கவிஞர், எழுத்தாளர், பத்திரி கையாளர், பாடலாசிரியர், ஊடகங்களில் தனது கருத்து களை ஆழமாகவும் ஆணித்தர மாகவும் முன் வைக்கும் சிந் தனையாளர் என இவருக்குத் தான் எத்தனை எத்தனை முகங்கள்.

திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி என்ற கிராமத் தில் 1968இல் பிறந்த இவர் இன்று உலகெங்கிலும் உள்ள தமிழ்கூறும் சிந்தனையாளர்களின் இதயங்களில் இடம் பிடித்ததற்கு அவர் கண்ட கனவுகளும் அதற்கு பின்னே இருந்த அவரது உழைப்புமே சாட்சியங்கள்.

தமிழில் மிக இளம் வயதிலேயே கவிதைகள் எழுதிய கவிஞர் இவர் இவருடைய பதினாறாம் வயதில் இவரது முதல் புத்தகம் வெளிவந்தது. மனுஷ்ய புத்திரன் கவிதைகள் என்ற தலைப்பில் வெளிவந்த இந்தப் புத்தகம் ஒரு மிகச் சிறந்த கவிஞரின் வருகையை தமிழுக்கு அறிவித்தது.

1993ஆம் ஆண்டு இவரது இரண்டாம் கவிதைத் தொகுப்பு என் படுக்கையறையில் யாரோ ஒளிந்திருக் கிறார்கள் வெளிவந்தபோது மிகப் பரவலான கவனத்தைப் பெற்றார்.

1994ல் காலச்சுவடு இலக்கிய இதழில் ஆசிரியர் குழுவில் இணைந்து பணியாற்றத் தொடங்கினார்.

1998இல் வெளிவந்த இடமும் இருப்பும் என்ற கவிதைத் தொகுப்பும் 2001இல் வெளிவந்த நீராலானது என்ற தொகுப்பும் அவரைத் தமிழின் தனித்துவமான கவிஞராக அடையாளம் காட்டின.

2004இல் மணலின் கதை, 2006ல் கடவுளுடன் பிராத்தித்தல், 2009இல் அதீதத்தின் ருசி, 2010இல் இதற்கு முன்பும் இதற்குப் பிறகும் 2011இல் பசித்த பொழுது, 2012இல் அருந்தப்படாத கோப்பை ஆகிய கவிதைத் தொகுப்புகளையும் காத்திருந்த வேளையில், எப்போதும் வாழும் கோடை, என்ன மாதிரியான காலத்தில் வாழ்கிறோம், தோன்ற மறுத்த தெய்வம், எதிர்க்குரல், டினோசர்கள் வெளியேறிக் கொண்டிருக் கின்றன ஆகிய கட்டுரைத் தொகுப்புகளையும் வெளி யிட்டுள்ளார்.

2002-ல் உயிர்மை பதிப்பகத்தைத் தொடங்கினார். இந்தப் பதிப்பகம் இன்று தமிழின் முன்னணி பதிப்பகமாக 400க்கும் மேற்பட்ட நூல்களைப் பதிப்பித்து தனித்த இடம் பெற்றுள்ளது. உயிர்மையின் நூல்கள் அதன் உள்ளடக்கம், வடிவம் சார்ந்து தமிழ்ப் பதிப்புலகில் ஒரு மறுமலர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

2003ஆம் ஆண்டு உயிர்மை என்ற இலக்கிய மாத இதழை அவர் துவங்கினார். சமூகம், இலக்கியம், அரசியல், கலை என பல துறை சார்ந்த அரிய ஆக்கங் களை உயிர்மை தொடர்ந்து வெளியிட்டு வருகிறது.

2008இல் உயிரோசை என்ற இணைய வார இதழைத் தொடங்கி உலகெங்கும் அதற்கு வாசகர்களை உருவாக்கியிருக்கிறார்.

2002ஆம் ஆண்டு தேசிய அளவில் 35 வயதிற்குள் தமது துறை சார்ந்து மிகச் சிறந்த பங்களிப்பினை செய்பவர்களுக்கு வழங்கப்படும் சன்ஸ்கிருதி சன்மான் விருது மனுஷ்ய புத்திரனுக்கு வழங்கப்பட்டது.

2003ஆம் ஆண்டில் இந்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வழங்கும் மிகச் சிறந்த தனிநபர் படைப் பாற்றலுக்கான விருது அப்போதைய குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களால் வழங்கப் பட்டது.

2009இல் இவர் உன்னைப் போல் ஒருவன் திரைப் படத்திற்காக எழுதிய அல்லா ஜானே என்ற பாடல் உலகெங்கிலும் பெரும் புகழ்பெற்றது.

2010இல் தமிழகத்தின் 10 செல்வாக்குமிக்க மனிதர் களில் ஒருவராக இவரை இந்தியா டுடே இதழ் தேர்வு செய்தது.

2010ஆம் ஆண்டு வெளிவந்த மிகச் சிறந்த நூலாக மனுஷ்ய புத்திரனின் அதீதத்தின் ருசி நூலை ஆனந்த விகடன் தேர்வு செய்தது இவரது சாதனைப் பயணத்தில் இன்னொரு அடையாளமாகும். எண்ணற்ற கனவுக ளோடும் புதிய சாதனை களோடும் இவரது இடை யறாத பயணம் இன்னும் தொடர்ந்து கொண்டிருக் கிறது.

(இந்த குறிப்பை படித்தவர் இறைவி)


தமிழ் ஓவியா said...

கவிஞர் நந்தலாலா

இவரது இயற்பெயர் சி. நெடுஞ்செழியன். பெற்றோர் பெயர் தி. சிங்காரவேலு, சி. தனம் அம்மாள். இவர் புதுக் கோட்டை மாவட்டம் குன்று ஆண்டாள் கோயில் பகுதி யைச் சேர்ந்தவர். இவரின் தந்தையார் அவர்கள் பெரி யார் பற்றாளர். குடும்பத்தின் அனைத்துத் திருமணங்களையும் சுயமரியாதைத் திருமணமாகவே நடத்தியுள்ளார். திராவிடன் உள்ளிட்ட திராவிட இயக்க இதழ்களில் தொடர்ந்து எழுதியவர்.

கவிஞர் நந்த லாலா அவர்களுக்கு புத்தகங்கள் மூலமாகவே சமூகம் பற்றிய பார்வை அறிமுகமாகியது. இவர் திருச்சி தேசியக் கல்லூரியில் இளங்கலை இயற்பியல் பயின் றுள்ளார். திருச்சி இந்தியன் வங்கியில் பணியாற்று கிறார். தற்போது வயது 56 ஆகும் இவர் தமிழ்நாடு முற்போக்கு எழுத் தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவராக இருக்கிறார்.

பள்ளி நாட்களிலேயே அறிவு என்ற கையெழுத்து இதழை நடத்தியுள்ளார். கல்லூரி நாட்களில் கவிதையும், கட்டுரையும் கைவரப்பெற்றன. கல்லூரிக் காலத்தில் இவர் எழுதிய கவிதைகளுக்கு மாணவர்களிடையே தனி வரவேற்பு ஏற்பட்டது.

சோலைக்குயில்கள் என்ற கவிதை இயக்கத்தை இவர் கவிஞர் முகிலுடன் இணைந்து திருச்சியில் தொடங்கினார். அதன் விளைவாக சோலைக்குயில்கள் என்ற கவிதை இதழ் பல ஆண்டுகளாக வெளிவந்தது. தமிழகத்தின் மிக முக்கிய படைப்பாளிகள் பலர் அதன் மூலமே வெளிவந்தனர்.

இதன் மூலமாகவே திருச்சியில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் வீச்சோடு இயங்கத் தொடங்கியது. சோலைக் குயில்களில் இவருடைய பல ஆக்கங்கள் வெளிவந்தன. கவிஞராக இவர் அடையாளம் பெற்றது அப்போதுதான்.

1980-90களில் கவியரங்கங்கள் வாயிலாக பல கல்லூரிகள், தமிழ் அமைப்புகள், முற்போக்கு மேடை களில் பெரியாரிய கருத்துகளையும், மார்க்சிய கருத்து களையும் இளைஞர்களிடம் கொண்டு சென்றவர்.

நாகப்பட்டிணத்தில் பணி செய்த காலத்தில் (1988-90) ஒரு பேச்சாளனாக அடையாளம் பெற்றார். குறிப்பாக நாகையில் பெரியார் சிலை திறப்பதற்கு குறுக்கீடாக செயல்பட்டு வந்த பா.ஜ.க.வினரை எதிர்த்து இவர் ஆற்றிய உரை, அனைத்துக் கட்சியினரும் ஒன்றிணைந்து பெரியார் சிலை திறக்க ஏதுவாக அமைந்தது.

தமுஎகச வின் கலை இரவு மேடைகள்தான் இவரை வளர்த்தெடுத்தன - அடை யாளப்படுத்தின. தொடர்ந்து சமூக நீதியின் குரலாய் கவிஞராக மட்டுமன்றி சிறந்த பேச்சாளனாகவும் அடையாளம் காணப்பெற்ற இவர் பெரியாரின் சிந்தனைகளை எளிமையும், வலிமையும் கலந்த மொழியில் மக்களிடம் கொண்டு சென்றார். குறிப்பாக முற்போக்கு மேடைகளில் பெரியாரின் கருத்துக்களை அதிகம் கொண்டு சென்றவர் என்று இயக்கங்களால் பாராட்டப்பட்டவர்.

திரு. லியோனியுடன் இணைந்தும் எல்லா தொலைக்காட்சிகளிலும் பட்டிமன்றங்கள் நடத்தி யுள்ளார். கால ஓட்டத்தில் தனித்து நடுவராக இருந் தும் பல தொலைக்காட்சிகளிலும் பொது நிகழ்விலும் பட்டிமன்றங்கள் நிகழ்த்துகிறார். இவர் பட்டி மன்றங்கள் பொதுவாக முற்போக்கு எண்ணங் களையும், பெரியாரிய சிந்தனைகளையும் எளிய மக்களிடம் கொண்டு செல்பவை.

கலைஞர் தொலைக்காட்சியில் ரமேஷ் பிரபா நடத்திய நேர்காணலில் நான் சொன்னதைச் சொல்ல லாம் பொதுவாக, தமிழ்நாட்டில் நல்லது எல்லாம் போர் அடிக்கும், சுவையானது எல்லாம் மலினமான தாக (சீப்) இருக்கும். நான் நல்லதையே சுவையானதாக சொல்லிவிடுகிறேன் என்றார். அதுதான் இவர் நிலை - பார்வை. இவரின் உரைகள் பல ஒலிநாடா, குறுந்தகடு வடிவங்களில் வெளிவந்துள்ளன.

10க்கும் அதிகமான நாடுகள் சென்றுள்ளார். மலேசிய தமிழர் மாநாட்டில் (ஆசிரியர் கலந்து கொண்ட மாநாடு) வழக்காடு மன்றம் நடத்த அழைக்கப்பட்டு சென்றார். கடந்த ஆண்டு பக்ரைன், குவைத், மலேசியா சென்று வந்தார். பரிசுகள்: மனிதநேயம் - குன்றக்குடி அடிகளார் தந்தது. கவிராசன் பாரதி விருது 2012 - புதுக்கோட்டை பாரதி அமைப்பும், உலக திருக்குறள் பேரவையும் தந்தது.

சோலைக் குயில்கள் கவிதைத் தொகுப்பு நூலினை வெளியிட்டுள்ளார்.

நமது தமிழர் தலைவரோடு பல மேடைகளில் பேசிய அனுபவமுண்டு. குறிப்பாக திருச்சி மன்றல் நிகழ்ச்சியில் பேசிய வாய்ப்பினையும் மிகவும் பெருமையாகக் கருதும் இவர் தற்போது நடிகவேள் எம்.ஆர்.ராதா குறித்த ஆவணப்பட தயாரிப்பில் ஈடுபட்டிருக்கிறார்.

(இந்த குறிப்பை படித்தவர் தெற்கு நத்தம் சித்தார்த்தன்

தமிழ் ஓவியா said...

பொறியியல் கண்டுபிடிப்பாளர் அ.முருகானந்தம்

இவர் கோவையில் 02-11-1961-ஆம் ஆண்டு பிறந்தவர். பெற்றோர் அருணாச்சலம், வனிதா. இவரது தந்தையார் கைத்தறி தொழில் செய்தவர். அம்மா விவசாயத் தொழிலாளி. கோவை வடபள்ளியில் உள்ள, மருதமலை தேவஸ்தான பள்ளியில் பள்ளிப் படிப்பை பயின்ற இவருடைய இணையர் சாந்தி, மகள் பிரீத்திசிறி L.K.G. பயின்று வருகிறார்.

இவர் இயந்திர வடிவமைப்பாளர். மிகக் குறைந்த விலையில் சேனட்டரி நாப்கின் தயாரிக்கும் இயந்திரத் தை 10 லட்சம் பெண்களுக்கு வேலை வாய்ப்பு அளிக் கும் ஒரே நோக்குடன் இவர் கண்டுபிடித்துள்ளார்.

இந்தியாவைப் பொறுத்தவரையில் பெண்கள் பயன்படுத்தும் சானிட்டரி நாப்கின் பயன்பாட்டில் இருப்பது வெறும் 7ரூ தான். 93ரூ இன்றும் பல மாநிலங்களில் பெண்களுக்கு இது இன்னும் போய்ச் சேரவில்லை. பீகார், ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் பெண்கள் இலை, மரத்தோல், சாம்பல் ஆகியவற்றை பயன்படுத்துகிறார்கள்.

சானிட்டரி நாப்கின் சரியாக பயன்படுத்தாததால் பெண்களுக்கு கர்ப்பப்பை புற்று நோய் வர வாய்ப்புண்டு என்று மருத்துவர்கள் கூறு கின்றனர். இந்த அவல நிலையைப் போக்க வேண்டி இவர் ஒரு இயந்திரத்தை கண்டுபிடித் திருக்கிறார். சானிட்டரி நாப்கின் தயாரிப்பதற்கு தேவைப்படும் இயந்திரத்தின் விலை சுமார் 3½ கோடி. இது சாதா ரணமாக எளிய தொழில் முனை வோர்களால் செயல்படுத்த முடியாது. ஆனால் இவர் கண்டுபிடித்த இயந்திரத்தின் விலை வெறும் 65- ஆயிரம்தான்.

தொடக்கத்தில், இந்த கண்டுபிடிப்பில் ஈடுபட்ட போது, இவர் தாயார், இணையர் உட்பட இவரை விலக்கி வைத்து விட்டனர். ஆனால், இன்று இவரது கண்டுபிடிப்பு உலகமெல்லாம் பரவியிருக் கிறது. இப்பொழுது இவர் சொந்த ஊரில் இழந்த மரியாதை அனைத்தும் திரும்பப் பெற்றிருக்கிறார்.

இவரைப்பற்றிய ஒரு ஆவணப்படம், மாதவிலக்கு ஆண் - என்ற பெயரில் You Tube-ல் பதிவேற்றம் செய்யப்பட் டிருக்கிறது. இதுவரையில் சுமார் 10 லட்சம் முறைக்கு மேல் இது பார்வையிடப்பட்டிருக்கிறது. இவருடைய கண்டுபிடிப்பு இன்று அமெரிக்கா உட்பட லண்டன், பிரான்சு என்று ஏறக்குறைய எல்லா நாடுகளிலும் பயன்பாட்டுக்கு வந்திருக்கிறது.

இந்த கண்டுபிடிப்பின் மூலம் இவர் மிகப் பெரிய அளவில் பொருளை ஈட்டியிருக்க முடியும். ஆனால், அப்படிச் செய்யாமல், கிராமப்புற பெண்களும், மகளிர் சுயஉதவிக் குழுவைச் சேர்ந்த பெண்களும் இதன் மூலம் பொருளீட்ட முடியும் என்பதை செயல்பாட்டளவில் செய்து வருகிறார்.

இந்த நாப்கின்கள் தயாரிப்பதில் Jonson & Jonson போன்ற பெரிய முதலாளிகள் செய்து வரும்போது அதே தரத்தில் குறைந்த விலையில் எல்லாதரப்பு பெண்களையும் போய்ச் சேரும்படியான சிறப்புக் குரியது இவரது கண்டுபிடிப்பு.

இவர் 2005ஆம் ஆண்டு சென்னையில் IIT -யில், சமுதாய முன்னேற்றத்திற்கான சிறந்த கண்டுபிடிப் பாளர் - என்ற விருதைப் பெற்றிருக்கிறார். பள்ளிப் படிப்பை மட்டுமே முடித்த இவர் IIT-யில் வருகைப் பேராசிரியர் (Guest Lecturer) ஆக சென்று வருகிறார்.

குடியரசுத் தலைவர் மூலம் விருது பெற்றது முதல் ஏராளமான விருதுகளை பெற்றிருக்கிறார்.

(இரா.பெரியார் செல்வி இந்த வாழ்க்கைக் குறிப்பைப் படித்தார்

தமிழ் ஓவியா said...

ஊடகவியலாளர் ஏ.எல்.கண்ணன்

இவர் சேலத்தில் மிகவும் சாதாரண ஏழை விவசாயக் குடும்பத்தில் 22-03-1963 பிறந் தார். இவருடைய பெற் றோர் அழகன், மாரியாயி. பெற்றோர் கூலி வேலை செய்தவர்கள். இப்படிப்பட்ட சூழலில் வளர்ந்த ஏ.எல்.கண்ணன் தன்னம்பிக்கையோடு இதழியல் கல்வியை கற்றவர்.

இவருடைய இணையர் லலிதா. மகன் அருண் பி.டெக். அய்.டி. மூன்றாவது ஆண்டு படித்துக் கொண்டிருக்கிறார். மகள் - ஜனனி 10ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறார். பாலிமர் தொலைக் காட்சி உள்ளூர் தொலைக்காட்சியாக இருக்கும் பொழுதே இவர் அதில் தனது பணியைத் தொடங் கியவர். இன்று சேட்டிலைட் தொலைக்காட்சியாக மாறிய பிறகும் பணியில் தொடர்கிறார்.

பத்திரிகைத் துறையில் 25 ஆண்டு கால அனுபவம் உள்ளவர். இன்று இவர், பாலிமர் தொலைக்காட்சியில், மக்களுக்காக - நிகழ்ச்சியை தொடர்ந்து மிகச் சிறப்பாக நடத்தி வருகிறார். ஏறக்குறைய இந்த நிகழ்ச்சி 100ஆவது வாரங்களை நெருங்கிக் கொண்டிருக்கிறது.

இந்த, மக்களுக்காக நிகழ்ச்சியில், இவர் ஏறக் குறைய தமிழ்நாட்டின் மிக முக்கியமான பிர முகர்கள் அனைவரையும் நேர் கண்டி ருக்கிறார். இந்த நிகழ்ச்சி மக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றிருப்பது குறிப் பிடத்தக்கது. நிறைய புத்த கங்கள் படிப்பது என்பது இவருடைய பணிகளில் ஒன்று.

ஊடகங்களில் நடத்தப்படும் நேர் காணல்களில் இல்லாத தனிச்சிறப்பு இவருக்கு உண்டு. நேர் காண லுக்கு முன், அந்த சிறப்பு விருந்தினர் பற்றிய முக்கிய மான தகவல்களை சேகரித்து படித்த பிறகுதான் நேர்காணல் செய்கிறார்.

குறிப்புகளை எழுதி வைத்துக் கொள் வதில்லை. பேசுகிறவர்களின் பதில்களில் இருந்து கேள்விகளைக் கேட்பது இவரது சிறப்புத் தன்மையாகும். அடுத்த மாதம் இவர் தனது அரை நூற் றாண்டு வயதை எட்டிப் பிடிக்க இருக்கும் இவருக்கு இந்த விருதுடன் நம் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வோம்.

(தன்குறிப்பைப் படித்தவர் இசை இன்பன்

தமிழ் ஓவியா said...

நடனக் கலைஞர் நர்த்தகி நடராஜ்

இவரது பெயர் நர்த்தகி நடராஜ். பெற்றோர் பெயர் பெருமாள் பிள்ளை, சந்திரா. இவரது பிறந்த ஊர் மதுரை. பிறந்தநாள் ஜூலை 6ஆம் நாள். இவர் மேல் நிலைக் கல்வி வரை பயின்றுள்ளார். இவர் முழுநேர தமிழிசை நடனக் கலைஞர்.

இவர் பெற்ற விருதுகளும் பட்டங் களும் எண்ணற்றவை. குறிப்பாக, ராஜ் தொலைக் காட்சி அளித்த மகளிர் தின சாதனையாளர் விருதை பெற்றுள்ளார். கவிஞர் தாராபாரதி நினைவு அறக் கட்டளை விருது, முதல் தரவரிசைக் கலைஞர் விருது. இது இந்திய அரசின் தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் அளித்தது.

ஆறாம் உலக இணையத் தமிழ் மாநாட்டில் சிறந்த தமிழ் நடன நினைவுப் பரிசு, இந்திய அரசின் அங்கீகாரக் கலைஞர் என்ற விருதை இந்திய அரசு வெளியுறவுத் துறை அளித்த விருது, நற்றமிழ் நடனமணி என்ற அமெரிக்கா வட கரோலினா தமிழ்ச்சங்கம் அளித்த விருது ஆகியவை உட்பட 30க்கும் மேற்பட்ட பட்டங் களையும், விருதுகளையும் பெற்றுள்ளார்.

இவர் பரத நாட்டிய உலகின் தந்தை எனப் போற்றப்படும் சின்னய்யா, பொன்னய்யா, சிவானந்தம் வடிவேலு ஆகியோரின் வழி வந்த நடனமேதை, இசைப் பேரறிஞர் தஞ்சாவூர் கே.பி.கிட்டப்பா பிள்ளை ஆகியோரின் நேரடி மாணவி. இவரது நடனத்திறமைக்கு அணி சேர்க்கும் வகையில் கலைஞர்கள் பெருமையாகக் கருதும் இந்திய அரசின் சங்கீத நாடக அகாடமி - 2011ன் புரஸ்கார் விருதுக்கு இவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தனக்கு கிடைக்கின்ற பெருமைகள் அனைத்தும் இவரது தன்னம்பிக்கை, உழைப்பிற்கு கிடைத்த மற்றுமொரு பரிசாக கருதி, நடனக்கலைக்கே தன்னை அர்ப்பணித்து வாழ்ந்து வருகிறார்.

இப்படிப்பட்ட சிறப்புக்குரிய இவருக்கு இந்த மாமன்றம் பெரியார் விருதை அளித்து சிறப்பு செய்கிறது.

(இந்த குறிப்பை படித்தவர் கோ.வி.கோபால்