ஸ்ரீ பகவான் வாக்கியம்
பகவான் ஸ்ரீகிருஷ்ணன் பதில் என்ன சொல்லுகிறான். அதையும் கேளுங்கள் பக்தசிரோன்மணிகளே!
வாருங்கள் ஹே பெண்களே! நீங்களெல்லாரும் வெகுகாலமா யொன்றாகச் சேர்ந்து ஒரே மனதுடையவர்களாய் உங்கள் முன்னோர்களுக்குத் தெரியாமல் மனதிலொன்றும் வாக்கிலொன்றும் விரதங்களை யநுஷ்டிக்கின்றீர்கள். உங்களைப் போல விரத மனுஷ்டிப்பவர்கள் எந்த லோகத்திலுங் கிடையார்கள். உங்களுடைய மோசகரமான சித்த விர்த்தியைக் கொண்டு என்னைத் தூறு செய்வது என்ன சாதுர்யமோ? ஆம், நீங்கள் நன்றாய்த் தெரிந்தவர்களே? தயவு செய்து ஜலத்தைவிட்டு வெளியில் வந்து உங்கள் வஸ்திரங்களை வாங்கிக் கொள்ளுங்களென்றார், இப்படிச் சொல்லிய ஸ்ரீ கிருஷ்ண பகவானுடைய வசனங்களைக் கேட்ட மாத்திரத்தில் யமுனா நதி சலத்துடன் வேறுபாடு தெரியாமல் கலந்திருக்கின்ற கறுத்த அளதபாரத்தைப் படைத்த இந்தச் சோப கன்யா சிரோமணிகள் ஒருவருக்கொருவர் முகார விந்தங்களைப் பார்த்து அந்தந்த தாமரைப் புஷ்பங்களில் அந்தந்த மூன்றாம் பிறைகள் ஏககாலத்தில் காணப்பட்டாற்போலப் புன்னகை செய்துகொண்டு இவர் சொல்லுகின்ற மர்ம வசனங்களைக் குறித்து வெட்கியும் அதி குளிருக்கஞ்சியும் கழுத்தளவு சலத்திலிருந்து கொண்டு பதிலுரைக்கலாயினர்.
அப்படி கடவுள் உத்தமபுருஷன் அல்ல. காலிப்பயல், காலிப்பயல் என்றுதானே அது ஆகிறது?
அதற்கு கோபிகாஸ்திரிகள் என்ற உடையற்ற பெண்கள் நிர்வாண கோலத்து குளிக்கும் குளத்திலிருந்து பாதி வெளிவந்து மறுமொழி என்ன சொல்லுகின்றார்கள்.
ஆ கிருஷ்ணா! ஸ்திரீ ஜனங்கள் ஜலமாடும்போது அவ்விடத்திற்கு உத்தம புருஷர்கள் வரவேமாட்டார்கள். இப்படிப் பட்ட சாதுர்யங்கள் இப்பூமியில் முன்னம் நடந்ததென்று கேட்டதில்லை. இந்த நிகழ்காலத்திலும் இச்செய்கைகளை நீயொரு வன் மாத்திரம் துணிந்து செய்தாயே யல்லாமல், மற்றொருவரும் ஆசரிக்க மாட்டார்கள். ஆகையால் எங்கள் பிபுவே! உனக்கு அடிமை செய்கின்றோம். சந்தேகமில்லை. ஸ்ரீ யமுனாநதி பிரவாகத்தினின்றும் பிரமாணமாகச் சொல்லுகின்றோம். உனது கிருபாபிமான வஸ்திரங்களை எங்களுக்குக் கொடுத்தருள்வா யென்று துதித்து இன்று முதல் உனது ஆக்கனையின்படி அடிமைக்கடிமைகளாய் ஆள் செய்து எங்களுடைய சர்வேந்திரியங் களையும் உனக்கே காணிக்கையாகச் சமர்ப்பித்து, உனது ஆக்கினையைச் சிரசா வகித்து, அநுஷ்டித்துக்கொண்டு வருகின்றோ மென்று பிரார்த்தித்தார்கள். தங்கள் ஸ்தனபாரங்களிலணிந்த செஞ்சந்தனக் குழம்புகளோடு கலக்கப்பட்டுச் சோனை யாற்றுக் கொப்பாய் விளங்குகின்ற யமுனா நதியிலிருந்துகொண்டு இப்படி நானாவிதமாகப் பிரார்த்திக்கின்ற இவர்களைச் சம்பூரணமாகக் கடாக்ஷித்து ஸ்ரீ பாலகோபாலன் மலர்ந்த தாமரைக் கொப்பான முகமுடையவராய் ஸ்ரீ கோபகன்னி களுக்கு மர்மமான சில வார்த்தைகளைச் சொல்லுகின்றார்.
ஸ்ரீ பகவத் வாக்கியம்
சுகுண சுந்தரவதிகளே! நீங்கள் உங்கள் முன்னோர்களின் மீது பிரமாணப்படிக்கு எந்த புருஷனைப் பர்த்தாவாக வரிப்பதற்குப் பரிசுத்தை களாய் மிகவும் பக்தியுடன் நோன்புகளை யநுஷ்டித்தீர்களோ, அந்த அநுஷ்டானப்படி உங்களிடத்தில் சனித்த தவப்பலமே உங்களுக்கு லபித்தது, அப்படியிருக்க ஸ்ரீ நந்தகோபருடைய புத்திரனாகிய என்னை யேன் வெறுக்கின் றீர்கள். எந்த மகா புருஷனை வரித்து மோகித்தீர்களோ அவன் உங்களுடைய மர்மதனங்களை யபகரித்தான். வெகுகாலமாய் நீங்கள் உங்கள் மனோவீதியில் பக்தி பூர்வமாகச் சிந்தித்துக் கொண்டிருந்த புருஷார்த்த வாஞ்சைக்கு நான் அன்யனோ? பிரமாணமாகச் சொல்லுவீர்களென்றார். ஸ்ரீ ஸ்வாமியினாலே இவ்விதம் சொல்லப்பட்ட வசனங்களைக் கேட்டு, இந்தக் கோபிகா ரத்நங்கள் ஒருவர்க்கொருவர் தங்கள் முகமாகிய தாமரை புஷ்பங்களை பார்த்துக்கொண்டு மனதாகிய தாமரைகளில் முக்தியைக் கோரத்தக்க மன்மதன் தங்கள் இருதய முதலிய சர்வேந்திரியங்களையும் அபகரிக்க நிர்விண் விருதய நிருத்தரைகளாய், மௌனமாயி ருந்தார்கள். அப்படியிருக்கின்றவர்களைத் தமது பரம கிருபையினால் மறுபடியும் கடாக்ஷத்து லோகேந்திர பரம குரு சிகாமணியாகிய ஸ்ரீ ஹரியானவர் சாஸ்திரோக்த சர்வவியாபக கிரமப்படி சில நீதி வசனங்களோடு ஆத்ம ஸ்வரூப தர்மத்தையும் தமது குணாதிசயங்களையும், வெளியிட்டுச் சொல்லுகின்றார்.
சுகுணவதிகளே! இன்றுமுதல் எப்போதும் எனது கிருகத்தில் நித்தியமாக வசித்து, நந்தகோப யசோதா தேவிகளுக்குப் பணி செய்து, எனக்கு அடிமைகளாய் என்னுடைய ஆக்கினையைச் சிரசாக வகித்து, அநுஷ்டிப்பீர்களாகில், இப்பொழுதே உங்கள் வஸ்திரங்களைத் தருகின்றேன். ஜலமத்தியினின்றும் வெளியில் வந்து சிரத்தா பூர்வகமாக வாங்கிக் கொள்ளுங்க ளென்றார். இவ்வண்ணமாகச் சொல்லிய ஸ்ரீ பகவானுடைய மதுரமாகிய வார்த்தைகளைக் கேட்ட மாத்திரத்தில், குளிருக்கஞ்சி ஜல மத்தியில் இருக்கக் கூடாதவர்களா யிருக்கின்ற கோபஸ்திரீகளுக்குள் சிலர், குளிருக்கு சஹிக்கமாட்டாமல் சலத்தைவிட்டு வெளியிற் போகலாம் வாருங்கள் போனவுடனே ஸ்ரீ பகவான் நமது கலைகளை கிருபை செய்து தருவரென்று சொன்னார்கள். சிலர் நாம் சலத்தைட்டு வெளியிற்சென்ற மாத்திரத்தில் நமது அருந்தவப் பயனாகிய ஸ்ரீ கோவிந்த மூர்த்தியானவர் நம்முடைய லச்சைகளை யபகரிப்பரென்று சொன்னார்கள். இந்தப் பிரகாரம் அவரவர்களும் நானாவிசாரங்களை கொண்டவர்களாய், அந்த ஜலத்தினின்று சீதளஸ்பரிச வாய்வு வேகத்தினால் உண்டாகிய சரீர நடுக்கத்துடன் என் செய்வோமென்று சிந்தித்துக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது காற்றினால் அசைகின்ற தாமரைப் புஷ்பங்கள் இந்தக் கோபகன்யா ஸ்திரீகளினுடைய ஸ்தனங்களின் மேற்படுதல், ஸ்ரீ கண்ணபிரானுடைய கரங்கள் இவர்க ளுடைய ஸ்தனங்களைப் பற்றுதல் போலுமிருந்தது. சில முகூர்த்தகாலஞ் சென்றபின்பு தங்கள் இருதயங்களைத் திடஞ்செய்துகொண்டு, யாவருந் துணிந்து, அவனிட்ட வழக்காய் ஸ்ரீ பகவானிடத்தில் வைத்த மன முடையவர்களாய் மெதுநடையாய் புன்சிரிப்புடன் தீர்த்த பிரவாகத்தினின்றும் வெளியில் வந்து, வெட்கமில்லாதவர்களாய், அவதூதாசிரமிகளைப்போல நிஷ்களங்கமான மனதுடையவர்களாய் நின்றார்கள். இப்படி நிற்கின்ற இந்த கோபஸ்திரீகள் தங்களை ஒருவர்க்கொருவர் பார்த்துக் கொள்ளும்போது, வஸ்திர ஈனமாயிருக்கின்றோமே யென்கிற நினைப்பும், லஜ்ஜையும் தோன்றுகின்றதே யல்லாமல், மற்றையோர்களுக்கு வஸ்திர பூஷணாலங்காரத்துடனிருந்து, வார்த்தை சொல்லிக்கொண்டிருக்கிறதாய்க் காணும்படி, தமது கிருபாபிமான வஸ்திரங்களை இவர்களெல்லா ருக்குங் கொடுத்து, இவர்களைப் பார்த்து ஸ்ரீ பகவானானவர் மகோத்தம தர்ம யுக்தமான சில வார்த்தைகளைச் சொல்லுகின்றார்.
----------------- கி. விரமணி அவர்கள் “உண்மை” 16- 31 2012 இதழில் எழுதிய கட்டுரை
22 comments:
டாக்டர் முத்துலட்சுமி
இந்தியத் துணைக் கண் டத்தின் முதல் பெண் மருத் துவர் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அவர்களின் நினைவு நாள் இந்நாள் (1968).
அவருடைய வாழ்க்கை வரலாறு போராட்டம் நிறைந்த கரடு முரடானது! பள்ளியில் படிக்கும் பொழுது கூட மாணவர்களுக்கும் இவருக்கும் இடையில் ஒரு திரை இருக்கும். மாணவர்கள் கண்களில் ஒரு பெண்மணி பட்டு விடக்கூடாதாம்.
பள்ளி முடிந்தவுடன் இந்தப் பெண் வெளியில் சென்றதற்குப் பிறகுதான் மாணவர்கள் வெளியே வர வேண்டுமாம்.
அடுத்து கல்லூரியில் சேர்வதற்கு புதுக்கோட்டை மன்னரின் சிறப்பு ஆணை தேவைப்பட்டது. எல்லா நிலைகளிலும் கல்வியில் முதல் இடம் பெற்று, சென் னைக்கு வந்து மருத்துவப் படிப்பையும் முடித்தது அசாதாரண செயலே!
வெறும் மருத்துவராகத் தன் காலத்தைக் கழிக்காமல் பொதுப் பணிகளிலும் ஆர்வம் செழிக்க வாழ்ந்தார். அவரின் ஆற்றல் மேலும் பயன்படவேண்டும் என்ற எண்ணத்தில் எதிர்ப்பு ஏதுமின்றி ஒரு மனதாக சென்னை சட்டமன்றத்தின் மேலவைக்குத் தேர்வானார். பின்னர் அதன் துணைத் தலைவராகவும் ஆனார். இந்தியாவிலேயே இந்த வகையில் மிளிர்ந்த முதல் பெண்மணி இவர்தான்!
எத்தனையோ சாதனை கள் அவருக்கு உரியன என்றாலும் தேவதாசி ஒழிப்புச் சட்டம் நிறைவேற்றம் என்பது தான் மணி மகுடமாக என் றென்றும் ஒளி வீசித் திகழக் கூடியதாகும்.
குறிப்பிட்ட ஜாதியில் பிறந்த பெண்களைத் தேவ தாசி என்ற பெயரில் பொட் டுக் கட்டிக் கோவிலுக்கு விட்டு விடுவார்கள். வெளி உலகுக்குக் கடவுளின் அடிமை என்றாலும் நடை முறையில் வேறுவிதமாகவே நடத்தப்பட்டனர்.
இதனை ஒழித்துக் கட்டக் கடுமையாகப் போராடும்படி நேர்ந்தது. மசோதாவைத் தாக்கல் செய்தவர் டாக்டர் முத்து லெட்சுமி ரெட்டி.
அதனை எதிர்த்து காங்கிரஸ்காரரான திருவா ளர் சத்தியமூர்த்தி அய்யர் என்ன பேசினார் தெரியுமா?
மனித குலம் தோன் றியது நம்முடைய காலத்தில் அல்ல. வியாசர் பராசரர் காலத்திலிருந்து அந்தக் குலம் வாழ்ந்து கொண்டு வருகிறது. பலருக்கும் இன் பத்தை வாரி வழங்கிக் கொண்டும் இருக்கிறது. இப்படிக் கூறுவதால் என்னை தாசிக் கள்ளன் என்று கூறலாம். அதைப் பற்றி நான் கவலைப்படப் போவ தில்லை. தாசிகளை ஒழித் தால் பரத நாட்டியக் கலை அழிந்துவிடும்.
ஆண்டவன் கட்டளையை மீறுவது அடாத செயல். இன்று தேவ தாசித் தொழிலை நிறுத் தினால் ராமசாமி நாயக்கர் நாளை அர்ச்சகர் தொழிலை நிறுத்த சட்டம் செய்ய வந்து விடுவாரே! என்று பேசிய தும் சுட்டிக் காட்டத் தகுந் தது. இந்தச் சட்டத்தை வரவேற்று தந்தை பெரியார் குடிஅரசில் சிறப்புத் தலையங்கமே தீட்டினார். 84 ஆண்டுகள் வாழ்ந்து மறைந்த அம்மையாரின் பெயரை அடையாறு புற்று நோய் மருத்துவமனை சொல் லிக் கொண்டே இருக்கும். - மயிலாடன் 22-7-2012
டாக்டர் வரதராசுலு
நாயுடு, நாயக்கர், முத லியார் என்ற மும்மூர்த்தி கள் தமிழ்நாட்டின் பொது வாழ்வில் ஒளி வீசிய முத்துகள். நாயுடு என்றால் டாக்டர் வரதராசுலு நாயுடு.
நாயக்கர் என்றால் ஈ.வெ. ராமசாமி நாயக்கர்.
முதலியார் என்றால் திரு.வி. கலியாணசுந்தர முதலியார்.
இந்த மும்மூர்த்திகள் ஒன்றுபட்டு உழைத்த துண்டு - மாறுபட்டு மோதியதும் உண்டு.
ஆனாலும் இந்த அக்கேனாக்கள் (ஃ) தமிழ் நாட்டின் முத்துகள். குறிப் பாக சேரன்மாதேவி குரு குலத்தில் காட்டப்பட்ட வருணபேதம் - ஜாதி பேத ஒழிப்பில் டாக்டர் வரத ராசுலு நாயுடு அவர்கள் கூர்மைமிக்க போர்வாள் ஆவார்.
அப்பொழுது டாக்டர் வரதராசுலு நாயுடு தமிழ் நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவரும்கூட! அவர்மீது துவேஷ முத்திரை குத்தி பதவியிலிருந்து இறக்கு வதற்குப் பார்ப்பனர்கள் பஞ்சகச்சத்தை இறுக்கிக் கட்டி முரசு கொட்டினர் என்றால், டாக்டர் வரத ராசுலு நாயுடு அவர்களின் பார்ப்பன எதிர்ப்பின் சுணையை அறிந்து கொள்ளலாம்.
அந்தக் கூட்டத்தில் வரதராசுலுவின் தியாகம் எந்த மற்றொருவரின் தியாகத்துக்கும் குறைந்த தல்ல என்று கூறிய தந்தை பெரியார், வரதராசுலுவின் தலைமையில் நம்பிக்கைத் தீர்மானம் இயற்றாமல் எவரும் கூட்டத்தை விட்டு வெளியே போய்விட முடி யாது என்று மிரட்டவும் செய்தார் (பெரியார் நண்பர் டாக்டர் வரதராசுலு நாயுடு வரலாறு - பழ. அதியமான், பக்கம் 213).
ஆச்சாரியார் குலக் கல்வித் திட்டத்தைக் கொண்டு வந்ததால் தந்தை பெரியார் தலை மையில் தமிழ்நாடு கொந் தளித்து எழுந்த நிலையில் ஆச்சாரியாரான ராஜாஜி பதவி விலகிட நேர்ந்தது. அடுத்த முதல்வர் யார் என்ற வினா எழுந்தபோது ஏன் - டாக்டர் வரதராசுலு இல்லையா? காமராசர் இல்லையா? என்று தந்தை பெரியார் கேட்டார் என்றால், அதன்மூலம் வரதராசுலு அவர்களின் மேல் நிலையை அறிந்துகொள் ளலாம்.
கடைசியில் தந்தை பெரியார், டாக்டர் வரத ராசுலு ஆகியோர்தான் காமராசருக்குத் தைரியம் தந்து முதலமைச்சர் பொறுப்பை ஏற்கவும் செய் தனர் என்பது வரலாறு.
குறிப்பு: இன்று டாக்டர் வரதராசுலு நாயுடு அவர் களின் நினைவு நாள் (23.7.1957).
- மயிலாடன் 23-7-2012
தூக்குத் தண்டனையே கூடாது: கலைஞர் கருத்து
சென்னை, ஜூலை 23- தூக்குத் தண்டனை கூடாது என்பதுதான் தி.மு.க.வின் நிலை என்று கூறியுள்ளார் தி.மு.க. தலைவர் கலைஞர்.
செய்தியாளர்களிடம் நேற்று அவர் கூறியதாவது:-
கேள்வி: குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற பிரணாப் முகர்ஜி உங்களிடம் பேசினாரா?
கலைஞர்: ஆமாம், இன்று மாலையில் சில நிமிடங் களுக்கு முன்புதான் தொலைபேசி வாயிலாக என்னுடன் தொடர்பு கொண்டு இதயமார்ந்த நன்றியினைத் தெரி வித்தார். நான் அவருக்கு கழகத்தின் சார்பில் இந்தத் தேர்தலில் அவர் பெற்ற மகத்தான வெற்றிக்காக வாழ்த்துத் தெரிவித்தேன்.
கேள்வி: குடியரசுத் தலைவர் பதவியேற்பு விழா நிகழ்ச்சியில் நீங்கள் கலந்து கொள்வீர்களா?
கலைஞர்: குடியரசுத் தலைவர் பதவியேற்பு விழா நிகழ்ச் சியில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக நாடாளுமன்ற கழகக் குழுத் தலைவரான டி.ஆர்.பாலுவும் மற்ற கழக நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொள்வார்கள்.
தூக்குத்தண்டனை!
கேள்வி: பேரறிவாளன் உள்ளிட்ட மூன்று பேரின் தூக்குத் தண்டனையை ரத்து செய்யக் கோரி புதிய குடியரசுத் தலைவரிடம் நீங்கள் வலியுறுத்துவீர்களா?
கலைஞர்: நான் ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன். பொதுவாகவே தூக்குத் தண்டனையே கூடாது என்பது தான் என்னுடைய கருத்து. பேரறிவாளன் உள்ளிட்ட மூன்று பேர் தூக்குத் தண்டனை பற்றியும் ஏற்கெனவே கழகத்தின் சார்பில் வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளது.
கேள்வி: பிரணாப் முகர்ஜி அவர்களுக்கு எதிர் பார்த்ததை விட அய்க்கிய முற்போக்குக் கூட்டணியின் வாக்குகளைவிட, தேசிய ஜனநாயகக் கூட்டணியி லிருந்தும் வாக்குகள் கிடைத்திருக்கிறதே?
கலைஞர்: பிரணாப் முகர்ஜி அவர்கள் சிறந்த ஜனநாயக வாதி, நல்ல நிர்வாகி. அவர் மீது கொண் டுள்ள நம்பிக்கையின் காரணமாக அவருக்கு அதிக வாக்குகள் கிடைத்திருக்கிறது. கேள்வி: 2014ஆம் ஆண்டு நடைபெறும் நாடாளு மன்றத் தேர்தலிலும் இதே வெற்றி தொடரும் என்று நம்புகிறீர்களா?
கலைஞர்: நிச்சயமாக நம்புகிறேன். - இவ்வாறு தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.
23-7-2012
தண்டிக்க இயலாத சட்டங்கள் - தீர்ப்புகள்
காவிரி நதி நீர் ஆணையத்தை உடனே கூட்ட உத்தரவிடவேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளது. தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்களும் இதனை வரவேற்றுள்ளார்.
இந்த நிலை வரவேற்கத்தக்கதாகும். ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்ற வேறுபாடு இல்லாமல் தமிழ்நாட்டின் பொதுப் பிரச்சினையில் சுருதி பேதம் இல்லாமல் செயல்படவேண்டும் என்பதற்கு கலைஞர் அவர்கள் முன்மாதிரியாகத் திகழ்கிறார்.
இந்த உணர்வை மற்ற மற்ற அரசியல் கட்சிகளும் பின்பற்றினால் தமிழர்களின் உரிமைகள் பறிபோகா மல் காப்பாற்றப்பட உறுதியான வாய்ப்புகள் கிடைக்கும்.
2002 ஆம் ஆண்டில் காவிரி நதிநீர் ஆணையம் வறட்சிக் காலத்தில் எந்த அளவின் அடிப்படையில் தமிழகத்திற்குத் தண்ணீர் தரவேண்டும் என்ற வரன்முறைகள் வகுக்கப்பட்டன. ஆனால், அந்த வரன்முறைகளை கருநாடக அரசு கடைப்பிடிக்க வில்லை.
இதனால் தமிழ்நாடு வறட்சியால் பாதிக்கப்பட்டுள் ளது. விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
எனவே, காவிரி நதி நீர் ஆணையத்தின் உத்தர வின் அடிப்படையில் தமிழகத்துக்குத் தண்ணீரைத் திறந்துவிடுமாறு கருநாடக அரசை வலியுறுத்தும் வகையில் பிரதமர் தலைமையில் காவிரி நதிநீர் ஆணையத்தை உடனடியாகக் கூட்டுமாறு பிரத மருக்கு ஆணை பிறப்பிக்கவேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. அதேபோல் கருநாடக அரசு பல தடுப்பணைகளைக் கட்டியதால் தமிழ் நாட்டுக்கு வரும் தண்ணீர் தடுக்கப்படுகிறது. அவ்வாறு செய்யக்கூடாது என்று உத்தரவிடுமாறும் மனுவில் கேட்கப்பட்டுள்ளது.
இன்றைய நிலையில் இந்தப் பிரச்சினையைச் சட்ட ரீதியாகத்தான் அணுக முடியும் என்பதால் தமிழ்நாடு அரசு, நீதிமன்றம் சென்றுள்ளது.
தமிழ்நாட்டு மக்கள் பல்வேறு காலகட்டங்களில் இவற்றையெல்லாம் வலியுறுத்தும் வகையிலும், மக்களின் கருத்துகளை ஒன்று திரட்டும் வகையிலும் பல்வேறு போராட்டங்களும் தமிழ்நாட்டில் நடத்தி யுள்ளனர்.
உச்சநீதிமன்றம் கேட்டுக்கொண்டபடி கருநாட கம், தமிழ்நாடு ஆகிய இரு மாநிலங்களின் முதல மைச்சர்களும் மூன்று சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடத்தியதுண்டு.
பேச்சுவார்த்தை தோல்வியில்தான் முடிந்தது. 1997 இல் காவிரி நதிநீர் ஆணையம் ஒன்று உருவாக் கப்பட்டது.
நீதிமன்ற தீர்ப்பு, நடுவர் மன்ற தீர்ப்புகள் பின் பற்றப்படாவிட்டால் அந்த ஆணையம், அணைகளை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிடும்.
இந்த அமைப்பில் பிரதமர், கருநாடகா, தமிழ்நாடு, புதுவை, கேரளா மாநிலங்களின் முதலமைச்சர்கள் அங்கம் வகிப்பார்கள்.
இன்னொன்று காவிரி கண்காணிப்புக் குழு. இதில் பொறியாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் இடம்பெறுவார்கள். களத்தில் நிலவும் உண்மை நிலவரங்களைக் கண்டறிந்து அரசுக்கு இந்தக் குழு அறிக்கை அளிக்கும்.
எல்லாம் சரிதான் - இவையெல்லாம் ஏட்டுச் சுரைக்காய்களாக இருந்தனவே தவிர உருப்படியாக ஏதும் நடந்துவிடவில்லை.
இதில் பெரும்பாலும் அரசியல் கண்ணோட்டம் தான் தலைதூக்குகிறது. பிரதமராக இருந்தாலும் சரி, முதலமைச்சர்களாக இருந்தாலும் சரி பொது நிலை யிலிருந்து, உண்மையின் அடிப்படையில் முடிவுகள் எடுக்கப்படுவதில்லை.
காவிரி நதிநீர் ஆணையத்தின் வரைவுத் திட் டத்தை அரசிதழில் (கெஜட்) வெளியிடக் கூட அன் றைய பிரதமர் வாஜ்பேயி முன்வராத நிலையெல்லாம் கூட உண்டு (1998). அடுத்து நடக்க இருந்த மக்க ளவைத் தேர்தலில் அதிக இடங்களைக் கருநாடகத் தில் கைப்பற்றவேண்டும் என்ற அரசியல் நோக்கு தான் அதில் பதுங்கி இருந்தது.
நடுவர் மன்றம் சொன்னாலும் சரி, உச்சநீதிமன் றம் சொன்னலும் சரி, அதற்குக் கட்டுப்படுவதில்லை என்பதில், எஃகு உறுதியோடு இருக்கும் கருநாடக அரசு. காவிரி நதிநீர் ஆணையத்தின் முடிவுக்கு மட்டும் கட்டுப்படுமா என்பது கேள்விக்குறிதான்.
இவ்வகையில் சட்டத்தையோ, தீர்ப்பையோ மீறி னால் அதிகபட்ச தண்டனை என்ன என்பது நிர்ண யிக்கப்படாத வரை எந்த மன்றத்தைக் கூட்டித்தான் என்ன பயன்? 23-7-2012
இந்நாள்... இந்நாள்....
செக்காட்டுபவனும், பீடா கடைக்காரனும், வண் ணானும் எதற்காக சட்டசபைக்குச் செல்லவேண்டும் என்ற வினாவை விழுப்பிய வருணாசிரம வீரர்! திலகர் பிறந்த நாள் இந்நாள் (23.7.1859)
\\பகுத்தறிவு வினாக்கள்:\\ அதற்குப் பதில்கள்.
\\ உலகைப் படைத்தது கடவுள் எனில் கடவுளைப் படைத்தது யார்?\\உலகம் படைக்கப் படாமலேயே வரும் என்று முடிந்தால் நிரூபியுங்களேன், கடவுள் இல்லை என்றாகி விடுமே, இந்தக் கேள்வியே வராதே!!
\\நடமாடும் மனிதனுக்கு ஒண்டக் குடிசையில்லை. ஆனால் நடமாடாத கற்சிலைக்கு கோயில் ஒரு கேடா?\\ ஒண்டக் குடிசையில்லாமல் இருப்பவர்களுக்கு வீரமணி வீட்டில் இடம் தரலாமே. தி.க. சொத்துக்களை வீரமணி மகனுக்கே முழுதும் சேர வேண்டும் என்ற பேராசையை விடுத்து, மக்களுக்கும் கொஞ்சம் செலவழிக்கலாம். அப்புறம், அவரது நண்பர் கலைஞர் அவர்கள் சுவிஸ் வங்கியில் போட்டு வைத்துள்ள கள்ளப் பணம் மற்றும் குடும்பத்தினர், பினாமிகள் ஆகியோரிடமுள்ள சட்ட விரோத சொத்துக்கள்,எல்லாத்தையும் கொண்டு வந்தால் எல்லோருக்கும் வீடு கட்டிக் கொடுக்க முடியும்.
\\குழந்தை பெறுவது கடவுள் செயல் என்றால் விதவையும், வேசியும் குழந்தை பெறுவது யார் செயல்? ஏன்?\\ வேசி, விதவை என்பது நீங்கள் கண்டுபிடித்த பெயர்கள், மற்றபடி பருவம் எய்தி, உடல் தகுதியுள்ள எந்தப் பெண்ணுக்கும், தகுதியான ஆணுடன் கூடும் போது குழந்தை உண்டாகும். குழந்தை பெறுவது கடவுள் செயல் இல்லை என்றால் ஆணிடமோ, பெண்ணிடமோ எதையும் பெறாமல் கெமிக்கல்களை கொண்டு நீங்களாகவே ஒரு குழந்தையை உருவாக்கிக் காட்டுங்களேன் பார்ப்போம்.
\\எல்லாம் வல்ல கடவுளின் கோவிலுக்குப் பூட்டும் காவலும் ஏன்?\\ பக்தன் இறைவனுக்கு ஏதாவது சேவை சாதிக்க வேண்டுமல்லவா அதற்க்கு.
\\எல்லாம் அவன் செயல் என்றால் புயலும், வெள்ளமும், எவன் செயல்?\\ சரி நாத்தீகனுக்கு கடவுள் இல்லையே, அவன் வாழும் நாட்டில் மழை இல்லாமல் போகலாம், ஆனால் புயல் இல்லையா?
\\ஆண்டவன் படைப்பில் அனைவரும் சமம் எனில் முதலாளியும், தொழிலாளியும், பார்ப்பானும், பறையனும் ஏன்?\\ ஆத்தீகத்திற்கு நாத்தீகம் தான் மாற்று என்றால் வீரமணி கொண்டுள்ள கார், பங்களா, சொத்து பத்துக்கள் வசதியை ஒவ்வொரு தி.க. தொண்டனும் பெற்றிருக்கிறானா? வீரமணி எல்லாம் என்ஜாய் பண்றார், சாதாரணத் தொண்டன் அதே தரித்திரத்தில் தானே இருக்கிறான், அப்புறம் எதற்கு உங்கள் வெங்காய நாத்தீகம்? முதலில் தி.க.வுக்கு அடுத்த தலைவரை ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்க உங்களுக்குத் திராணி இருக்கிறதா? அதென்ன மகன் மட்டும் தான் அடுத்த தலைவராக வருவது என்றால் நீங்கள் என்ன மன்னராட்சியா நடத்துகிறீர்கள், இல்லை தி.க.வில் அவர் ஒருத்தருக்கு மட்டும் தான் தகுதி இருக்கிறதா? பதில் சொல் முடியுமா உங்களால்?
\\அவனின்றி ஓரணுவும் அசையாது எனில் கோவில் சிலை வெளிநாடு செல்வது எவன் செயல்?\\ இந்த பிரபஞ்சம் முழுவதும் இறைவனுக்குச் சொந்தம், வெளிநாடு என்ன உள்நாடு என்ன? சமூக விரோதிகள் சிலை கொண்டு செல்கிறான் என்றால் ஆளும் அரசு எதை பிடுங்கிக் கொண்டிருக்கிறது?
\\
அன்பே உருவான கடவுளுக்கு கொலைக் கருவிகள் எதற்கு?\\ மக்களைக் காக்க வேண்டிய அரசு சாராயம் விற்ப்பது எதற்கு, அதற்க்கு பெரியாரின் வாரிசு வாயை மூடிக் கொண்டிருந்தது எதற்கு? இங்க எல்லாம் நாறிப் போன நீங்க கடவுளைப் பற்றி கேள்வி கேட்க தகுதி என்ன இருக்கு?
\\முப்பத்து முக்கோடி தேவர்கள் இருந்தும் இந்தியாவில் மூன்று கோடிப் பேருக்கு உணவும் வேலையும் இல்லையே, ஏன்?\\ உங்க வீரமணியின் நண்பர் குடும்பம் ஆயிரமாயிரம் கோடி சொத்துகளோடு சொகுசாகத்தானே இருக்கிறது, மக்கள் தானே பிச்சைக் காரர்கலாகிவிட்டார்கள்? ஸ்பெக்ட்ரம் ஊழல், வீராணம் ஊழல், .......... எல்லா பணமும் சுவிஸ் வங்கியில். அப்புறம் மக்கள் எங்க போவான்?
\\ஆத்திகனைப் படைத்த கடவுள், நாத்திகனைப் படைத்தது ஏன்?\\ உன் புத்தி நாத்தீகமாய் இருக்கிறது. நீ முட்டாளாக இருக்க விரும்பினாய், அதை இறைவன் அனுமதிக்கிறார். ஆனாலும், கோவிலுக்கு போவது, நியூமராலாஜி பார்ப்பது, சகுனம், நல்ல நாள், கெட்டநாள் பார்ப்பது, ஜோசியக்காரன் சொன்னான் என்பதற்காக கண்ணகி சிலையை பிடுங்கி வீசியது என்று எல்லா மூடநம்பிக்கைகளையும் கொண்ட அரசியல்வாதிக்கு உங்க வீரமணி எதற்கு சிங்கியடித்தார் என்று நீங்கள் விளக்க முடியுமா?
\\மயிரை (முடி) மட்டும் கடவுளுக்கு காணிக்கை தரும் பக்தர்கள் கையையோ, காலையோ காணிக்கையாகத் தருவதில்லையே ஏன்?\\ அந்த மயிர் இருநூறு கோடி ரூபாய்க்கு ஏலம் போய் வருமானத்தைக் கொடுத்திருக்கிறது என்பது உமக்குத் தெரியுமா? உடலில் பிரதானம் தலை, அந்தத் தலையில் அழகு சேர்ப்பது முடி, அதை இழந்து அழகாக இல்லாத நிலையை ஏற்ப்பதும் ஒரு வித பக்திதான்.
\\நோய்கள் கடவுள் கொடுக்கும் தண்டனையே என்று கூறும் பக்தர்கள் நோய் வந்தவுடன் டாக்டரிடம் ஓடுவது ஏன்?\\ அந்த டாக்டரே, "என்னால் முடிந்ததை செய்துவிட்டேன், இனி கடவுள் விட்டா வழி" என்று பல முறை சொல்வது ஏன்? பிழைக்க மாட்டான் என்று மருத்துவர்களால் கைவிடப் பட்டவர்கள் பிழைத்து பல்லாண்டு காலம் வாழ்ந்து சென்ற கதைகள் உள்ளனவே அதெப்படி? டாக்டர்கள் தான் குணப் படுத்துகிறார்கள் என்றால், அங்கே செல்லும் எல்லோரும் நலமுடன் திரும்ப வேண்டுமே, பலர் சாகிறார்களே எப்படி? எல்லா ஆபரே ஷனும் வெற்றியடைவ்தில்லையே, பல உயிர்கள் ஆபரே ஷனின் போதே பிரிகிறதே ஏன்?
\\எல்லாம் அறிந்த கடவுளுக்கு தமிழ் அர்ச்சனை புரியாதா? தமிழ் புரியாத கடவுளுக்கு தமிழ்நாட்டில் என்ன வேலை?\\ கடவுளுக்கு, பறவைகளின் பாஷை கூட புரியும். எந்த மொழியில் அர்ச்சனை செய்தாள் என்ன, கடவுள் இல்லை என்று சொல்ல வந்த உங்களுக்கு இல்லை என்பதில் நிர்ப்பீர்களா, அதில் தமிழில் அர்ச்சனை செய்ய வேண்டும் என்று பல்டி அடிப்பீர்களா? இல்லாத கருமாந்திரத்திர்க்கு எதில் சொன்னால்தான் உங்களுக்கென்னையா?
\\அய்யப்பனை நம்பி கேரளாவுக்கு போகும் பக்தர்களே! தமிழ்நாட்டுக் கடவுள்களை என்ன செய்யலாம்?\\ எந்த ஊருக்குப் போனால்தான் என்ன? அதென்னது தமிழ் நாட்டுக் கடவுள்? டார்வின் தியரிப் படி தமிழ்க் குரங்குகள் என்று தனியாக இருந்துதான் தமிழன் உருவனானா? இதுதான் பகுத்தறிவா?
\\அக்கினி பகவானை வணங்கும் பக்தர்கள் வீடு தீப்பற்றி எரிந்தால் அலறுவது ஏன்?\\ பெரியாரின் தொண்டன் என்று சொன்ன ஒருத்தர் சாராயம் விற்று ஆட்சி செய்து பெண்டாட்டி பிள்ளைகளுக்குச் சொத்து சேர்த்தது ஏன்? தன் குடும்பத்தில் வாரிசே இல்லாமல் இருந்த பெரியாருக்கு அடுத்து வந்த தலைவர் தனது மகனையே அடுத்த தலைவராக்க எல்லா அட்டூழியங்களையும் செய்து வருவது ஏன்?
\\ சிவாயநம என்றால் அபாயம் இல்லை என்போர் மின்சாரத்தை தொடுவார்களா?\\ தொடலாம், ஏனெனில் தமிழகத்தில் மின்சாரம் எங்கே ஐயா உள்ளது? மின்சாரத்தைத் தொட்டால் உயிர் போகும் என்ற அறிவையும் அதே சிவன்தான் கொடுத்திருக்கிறான், மீறி தொட்டால் உனது முட்டாள் தனம்.
பதிவும் ஒருத்தர், அதற்க்கு பின்னூட்டமும் அவரே போடுறார். அதுவும் பதிவு பற்றி இல்லை, அவை ஒவ்வொன்றும் ஒரு பதிவு மாதிரி இருக்கிறது. இதென்ன கண்றாவி பிலாக்கோ தெரியவில்லை,உங்களிடம் stuff இருந்தால் என் கேள்விகளுக்கு பதில் போடவும்.
Post a Comment