Search This Blog

27.7.11

பக்தர்களே, பக்தர்களே இதைக் கொஞ்சம் படியுங்கள்!


மறைந்த சாயிபாபாவுக்கு உலகம் முழுவதும் பக்தர்கள், சீடர்கள் பல்லாயிரக்கணக்கில் உள்ளதோடு, பல லட்சக்கணக்கான பொருள்களைக் கொட்டியும் கொடுக்கிறார்கள்!

ஆன்மீகம் என்றால் லவு கீகம் - உலக வாழ்வு - பொருள் உள்ளிட்ட எல்லா ஆசைகளை யும் துறந்து, மோட்ச உலகத் திற்கு வழிகாட்டுவதற்காக இவரை நாடுகிறோம், நாடினோம் என்று கூறும் பக்தர்களே!

அவரது ஆசிரமத்தில் (?) அவரது அறைகளிலிருந்து கண்டு எடுக்கப்பட்ட பண கத்தைகளை- அவரது சீடகோடிகள் லாரியில், வேன்களில் ஏற்றியதை கையும் மெய்யுமாகப் பிடித்துள்ள நிலையில் - அரசு தலையிட்ட நிலைக்குப் பின், அதன் அறக்கட்டளையின் முக்கியஸ்தர் ஆன ஒரு தமிழ் நாட்டுப் பார்ப்பனர் தொழில் அதிபர் ஏதோ ஒரு நொண்டிச் சமாதானத்தைக் (பலநாள்கள் கழித்து) கூறினார்;

அவரது சமாதியைக் கட்ட அந்த ஒப்பந்தக்காரருக்குக் கொடுக்க எடுத்துச் செல்லப்பட்டது என்று ஏதோ ஒன்றைச் சொன்னார். தென்னை மரத்தில் ஏறிப் புல் பிடுங்கப் போனேன் என்று - மாட்டிக் கொண்ட பிறகு - சொன்ன பொய் சொல்லான் போல சொன்னார்கள்.

அவரது பல அறைகளிலிருந்தும் பொன், தங்கம், வெள்ளி, வைர நகைகள், பல்வேறு அறைகளிலி ருந்து ஏராளமான ரொக்கத்தொகை இவை எல்லாம் மூன்று ரவுண்டுகள் வேட்டையாடியபின், சாய்பாபாவின் தனித்த குடியிருப்பான யஜுர் மந்திர் (நல்ல பெயர்தான்) உள் சென்று (பிரசாந்தி நிலையத்தில்!) சோதனை நடத்தி அதிகாரிகள் எடுத்தவைகளைக் கண்டு அதிகாரிகள் மயக்கம் போட்டு விழாத குறைதான்!

(1) இறக்குமதி செய்யப்பட்ட முகச் சவர செட்டுகள்

(2) வாசனைத் திரவியங்கள் - சென்ட்டுகள்

(3) சுத்தி, ஆடையலங்காரத்துக் கான பொருள்கள் (Toiletries)

(4) ஷாம்பு (Shampoo) பாட்டில்கள்

(5) சோப்புகள், கைதுடைக்கும் சிறு கைத் துண்டுகள்

(6) விலை உயர்ந்த கை கடி காரங்கள் (Expensive Watches) (சர்வதேச புகழ் வாய்ந்த பிராண்ட் வாட்சுகள்).

(7) பதப்படுத்தப்பட்ட உலர்ந்த பழங்கள்

பக்தர்களைச் சந்திக்க அந்த அறையிலிருந்து வரும் போது மிக விலை உயர்ந்த ரக செண்ட் அடித் துக் கொண்டு வந்துதான் பக்தர், பக்தைகளுக்குக் காட்சி தந்து, ஆன்மீக குரு ஆசி வழங்குவார் என்று உடன் இருப்பவர் கூறினார் என்று கூறுகிறது டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளேடு (24-7-2011).

காற்று நிரப்பப்பட்ட வசதியான எளிமையான படுக்கையே சாய்பாபா பயன்படுத்தும் படுக்கை.

8) வாழும் கடவுளான இந்த சாய்பாபா அறையில் கண்டெடுக்கப் பட்ட தங்க மாலைகள் இரண்டு - 6 முதல் 7 கிலோ எடை உடையவை. (இது மேஜைக்குக் கீழே வைக்கப் பட்டிருந்ததை அதிகாரிகள் கண்டு எடுத்தார்கள்!)

75 வெள்ளி டம்ளர்கள் - ஒரு பக்தர் 75 ஆம் ஆண்டு பிறந்தநாளுக்குத் தந்தவை என்கிறார்கள்! (ஒவ்வொன்றும் 700 கிராம் எடை)

9) பல்லாயிரக்கணக்கில் மோதி ரங்கள் (அவர் வரவழைத்துத் தர இவை தேவைப்பட்டிருக்கலாமோ?)

10) 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டுப் புடவைகள் (விலை உயர்ந் தவை)

(11) வேட்டிகளும் சட்டைகளும் நிறைய.

ஆன்மிகத் தேடலுக்கும் பரப்புதலுக்கும் எவ்வளவு முக்கியமான முற்றும் துறந்த முனிபுங்கவருக்கு கடவுள் அவதாரத்திற்கு இவை ஏன் தேவைப்பட்டன?

பட்டுப் புடவைகள், சட்டைகள், துணிக் கடைகளில் கூட இவ்வளவு (ஸ்டாக்) இருப்பு இருக்குமா என்பது சந்தேகமே என்கிறார் நாளேட்டைப் படித்த நமது நண்பர் ஒருவர்.

அவரது தனி மனித ஒழுக்கம் பற்றி அமெரிக்க சீடர் ஒருவர் எழுதிய Avatar of Night அவதார் ஆஃப் நைட்- இரவில் எடுக்கும் அவதாரம் என்ற தலைப்பில் ஒரு நூலே எழுதியுள்ளார்!

அவர் பெயர் Tal Brooke என்பதாகும். Tal Brooke - The Hidden Side of the Sai Baba Avatar of Night - (Tarang paperbacks - a division of Vikas Publishing House Pvt.Ltd.1982)

அவரது குற்றச்சாட்டு உண்மையாகவே இருக்கலாம் என்பதற்கு மற்றொரு ஆதாரம் மலேசியாவிலிருந்து அவரது ஆசிரமத் திற்கு (?) ஆன்மிகம் கற்றுக் கொள்ள அனுப்பப்பட்ட மாணவ இளைஞர்களிடையே அதே மாதிரி ஓரினச் சேர்க்கை கையாண்டதைக் கண்டு பதறிய பக்தர்கள் - வெறுத்து, திராவிடர் கழகத் தலைவருக்குக் கடிதம் எழுதி அம்பலப் படுத்தினார்கள்.

இதற்குப் பிறகும் விளக்கை நோக்கிய விட்டில் பூச்சிகளாகச் சென்று வீழ்வதற்குத் தயாராக இருக்கும் பக்தர்களே, நீங்கள் விழிப்புணர்வு பெறவேண்டாமா?

பிரேமானந்தாவின் லீலைகள் இரட்டை ஆயுள் தண்டனை பெற வைத்த பிறகும் பக்திப் போதை தீரவில்லையே!

வெட்கப்பட வேண்டாமா?

இன்னொரு ஆனந்தா வந்து துணிச்சலுடன் மீண்டும் ஒரு ரவுண்ட் அடிக்கிறார்! உலகப் பணக்காரனாக - ஒழுக்கக் கேட னாக வந்து உலா வருகிறார்.

ஏமாறும் மக்களின் பக்தியின் மீது மய்யம் கொண்டு ஏற்றங் கொண்டு அலைகிறார்களே!

பக்தி வந்தால் புத்தி போகும் என்ற பெரியார் பொன்மொழி எவ்வளவு அருமையான அனுபவ மொழி!

யோசியுங்கள்! திருந்துங்கள்! உங்கள் ஒழுக்கத்தை, அறிவைச் சேதாரப்படாமல் காப்பாற்றிக் கொள்ளுங்கள்!

--------------- உண்மை விளம்பி -"விடுதலை” 26-7-2011

2 comments:

ப.கந்தசாமி said...

இத எப்படீய்யா படிக்கிறது. கருப்பில வெள்ளை. எல்லாமே இருண்டு போய் கெடக்குது?

முன்பனிக்காலம் said...

கடவுள் என்று சொல்லிக் கொள்ளும் துறவி இல்வாழ்க்கையில் ஈடுபடுபவர்களை விட அதிகமான சொத்து சேர்ப்பது ஏன்? இவ்வளவு நடந்த பின்னும் மக்கள் கண்மூடித்தனமாக இவர்கள் பின்னால் போவதும் ஏன்? பெரியார் இற்கு பிறகு மக்களை சரியான முறையில் வழி நடத்தவும் மூட நம்பிக்கைகளிடம் இருந்து காப்பாற்றவும் சரியானதொரு தலைவர் இல்லாமல் போனதும் ஒரு காரணமாக இருக்கலாம். உங்கள் பதிவுகள் அனைத்தும் காலத்தின் கட்டாய தேவைகள்.