Search This Blog

6.7.11

தலைவெட்டி முனியப்பனா? புத்தர் சிலையா?

சேலம் அரசு மருத்துவ மனைக்கு எதிரே புத்தர் சிலை இருந்தது - பழைய பதிவேடுகளிலும் அச் சிலை புத்தர் டிரஸ்டுக்குச் சொந்த மானது என்றே உள்ளது.

இப்பொழுது அது தலை வெட்டி முனியப்பன் கோவிலாக மாறிவிட்டது. அல்ல, அல்ல மாற்றப்பட்டது. பழைய ஆவணங்கள் கிழிக்கப்பட்டு, திருத்தப்பட்டுள்ளன என்கிறார் புத்திஸ்ட் சொசைட்டி ஆஃப் இந்தியாவின் சேலம் மாவட்ட செயலாளர் ரெங்கநாதன்.

இந்தச் சிலையும் தலைவாசல் அருகே உள்ள நாராயணம்பாளையம் தியாகனூர் புத்தர் கோவில், ஆத்தூர் தாலுகா அலவலகத்தில் உள்ள புத்தர் சிலை எல்லாம் இந்த சொசைட்டிக்குச் சொந்தமானது என்றும் விவரித்துக் கூறுகிறார்.
இந்த நிலையில், சேலம் அரசு மருத்துவமனைக்கு எதிரே இருந்த புத்தர் சிலையை தலைவெட்டி முனியப்பன் கோயில் என்று கூறி கோழி, கிடாவெட்டி அபிஷேகம் செய்கின்றனராம்.

இந்தியாவில் ஆயிரக்கணக்கான பவுத்த விகாரங்களை இந்துக் கோயில்களாக மாற்றியவர்கள் பார்ப்பனர்கள் - அரசர்களைக் கைகளில் போட்டுக் கொண்டு இந்த அடாத காரியத்தைச் செய்தனர். எண்ணாயிரம் சமணர்களைக் கழுவில் ஏற்றிக் கொல்லவில்லையா? இப் பொழுதும் ஆண்டுதோறும் மதுரையில் இந்த நாளுக் கென்று தனிக் கோயில்விழா நடத்தவில்லையா?

சாத்தன், சாஸ்தா, விநாயகர் என்பதெல்லாம் கவுதமப் புத்தருக்கான பெயர்கள். இந்தப் பெயர்களையே திரிபு செய்து சாத்தனார், அய்யனார் என்று கிராம தெய்வங் களாக்கினர் என்று ஆய்வாளர் மயிலை சீனிவெங்கட சாமி அவர்கள் பவுத்தமும் - தமிழும் எனும் நூலில் குறிப்பிடுகின்றார்.

திருப்பதி ஏழுமலையான் கோயிலே புத்தரின் நின்ற திருக்கோலம் என்று ஆய்வு கள் வெளிவந்துள்ளன.

காஞ்சீபுரம் காமாட்சியம்மன் கோயில், கச்சீஸ்வரர் கோயில்கள் ஒரு காலத்தில் புத்தர் கோயில்களாகத் திகழ்ந்தன என்பதையும் ஆதாரத்துடன் கூறுகிறார் மயிலை சீனி. வெங்கடசாமி. இக்கோயில் உள்ள வீதி புத்தேரித் தெரு, ஏரி புத்தேரி என்று பெயர்களைத் தாங்கியுள்ளன.

இவ்வளவுப் பெரிய கோயில்களையெல்லாம் உரு மாற்றி இந்துக் கோயில்களாக மாற்றியவர்கள் சேலத்தில் ஒரு புத்தர் சிலையை தலைவெட்டி முனியப்பனாக ஆக்கியதில் ஆச்சரியம் என்ன?

யாகத்தில் மாடுகளையும், ஆடுகளையும் பலியிட இருந்ததைத் தடுத்து உங்களுக் குச் சொர்க்கம் செல்ல ஆவல் இருந்தால், நீங்களேயல்லவா பலி பீடத்தில் கழுத்தை வைக்கவேண்டும். உங்களுக்குத் தேவையானது சொர்க்கமா? சோமபானமும், ஆடு மாடுகளின் இறைச்சியா? என்று கேட்ட புத்தரை தலை வெட்டி முனியப்பனாக்கி ஆடு, கோழிகளைப் பலி கொடுத்து அபிஷேகம் செய்யும் கொடுமையை என் சொல்ல!

கடித்த உடனேயே சாகடிக்கும் பாம்புக்கு நல்ல பாம்பு என்று பெயர் சூட்டியுள் ளனர் - பார்ப்பனர்களும் அப்படியே!

----------- மயிலாடன் அவர்கள் 6-7-2011 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

1 comments:

suvanappiriyan said...

சிறந்த பதிவை தந்திருக்கிறீர்கள்.

693. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
"உங்களுக்குத் தலைவராக நியமிக்கப் படுபவர் கருப்பு நிறமுடைய (நீக்ரோவான) உலர்ந்த திராட்சைப் பழம் போன்ற தலையை உடையவராக இருந்தாலும் அவருக்குக் கட்டுப்படுங்கள். அவர்சொல்வதைக் கேட்டு நடங்கள்."
என அனஸ்(ரலி) அறிவித்தார்.
Volume :1 Book :10