Search This Blog

3.4.15

இதுதான் வால்மீகி இராமாயணம் -58

அயோத்தியா காண்டம்

மேலும் செத்தவர்களுக்குத் திதி முதலியவை செய்கிறார்கள். இதனாலென்ன பயன்? இங்கிருப்பவரில் அவர்கள் உணவுக்குக் கையேந்தி நிற்பதைக் கண்டவர் யார்? திதியைச் செய், இதை செய், அதை செய், சுவாமிக்குப் பணத்தைக் கொடு என்று பணம் தேடுவதற்குச் சாமர்த்தி யமான புத்திசாலிகள் நமக்கு வழியாக இந்த நூல்களை ஏற்படுத்தியிருக்கிறார்கள். செத்தவனால் என்ன தின்ன முடியும்? ஒருவன் உண்ணும் உணவு மற்றவனுக்குச் சேர்வதாக இருந்தால் வழிப்பயணம் போவானுக்கும் அயலூரிலிருக்கும் நம் நண்பனுக்குமாக நாம் இங்கு உண்ணலாமே? அதனால் அவர்களுடைய வயிறு நிரம்ப வேண்டுமல்லவா? அப்படி நிரப்புவதில்லை. உயிரோடி ருப்பவர்கள் நிலையே இவ்வாறிருக்கச் செத்தவனுக்கு அது எவ்வாறு உதவும்? ஒரு நாளும் உதவாது ஆதலின் நீ நாட்டை ஒப்புக்கொள் என்று கூறினான்.

இராமன் அது கேட்டு, நீர் கூறுவது செய்யத் தக்கதுபோலத் தோன்றினாலும் செய்யத்தகாததே. நான் அரசேற்கேன் எனச் சத்தியம் செய்துவிட்டு எவ்வாறு தவறுவேன்? என்னை உலகம் ஒப்பாது. இவ்வளவு கேவலமான நாத்திகப் புத்தியுடைய உம்மை வைத்திருந்த என் தந்தையின் செயலை நான் மிகவும் இகழ்கிறேன். நான் வாக்குறுதி செய்தபோது கைகேயியும் மகிழ்ச்சியடைந்தாள். வேதத்துக்கு உடன்பாடில்லாத உம் சொல்லை நான் வெறுக்கிறேன் என்றனன். முனிவன் எப்படியாவது இராமனை இணங்க வேண்டுமென்றே அவ்வாறு கூறியதாகவும், உண்மையில் வேதத்தில் தனக்குப் பற்றுண்டென்றும் கூறினார். வசிட்டன், சாபாலி சிறந்தவ னென்று கூறி இராமனுடைய குல வரிசையை யெடுத்துச் சொல்லி, மூத்தானே பட்டத்துக்குரியவனாதலால், அரசேற்க வேண்டினன். இராமன், ஆசிரியனிலும் தந்தையே சிறந்தவனாதலால் தந்தை கட்டளைப்படி காட்டிலேயே இருப்பேன் என்றான். உடனே பரதன் குடிசை வாயிலில் தருப்பையை விரிக்கும்படி சுமந்திரனிடம் சொன்னான். அவன் தாமதிக்கவே தானே விரித்துப் படுத்துக்கொண்டு பரதன், இராமன் அயோத்தி திரும்பும்வரை இங்கேயே படுத்திருப்பேன் என்றான். இராமன் அச்செயலைக் கண்டித்தான்.  உடனே பரதன் குடிகளைப் பார்த்து இராமனை வற்புறுத்த ஏவினன். அவர்கள் இராமன் சொல்வது சரியென்று எங்களுக்குத் தெரிகிறது. ஆகையால் அவனை வற்புறுத்துவது கூடாது என்றனர். எனக்குப் பதிலாக இராமன் நாடாளட்டும். நான் அவனுக்காகக் காட்டில் வாழ்கிறேன் என்றான். இராமன் உடனே, தசரதர் செய்தது சரியே. பரதன் மேலானவனென்று எனக்குத் தெரியும்.
நான் பதினான் காண்டுகள் காட்டில் வாழ்ந்தபின் அயோத்திக்குவந்து முடி சூட்டிக்கொள்ளுகிறேன் என்றனன். அங்கிருந்த முனிவர் களும் அதுசரி என்றனர். பரதன் திரும்பவும் இராமனை அப்போதே வரவேண்ட இராமன் கண்டிப்பாக மறுத்து ரைத்தனன். பரதன் பாதுகைகளில் இராமனைக் கால்வைக்கச் சொல்லித் தூக்கிக்கொண்டு, தான் அயோத்தியின் வெளியிலிருந்து பதினான்காண்டுகளும் பாதுகையை வைத்து நாடாளுவதாகவும், அக்கெடு கழிந்த மறுநாள் இராமன் வராது போனால் தான் தீயில் விழுவதாகவும் கூறினான். இராமன் அதற்கிசைந்து அவர்களுக்கு விடைகொடுத்தனுப்பினான். பரதன் பரிவாரங்களுடன் புறப்பட்டுப் பரத்துவாச முனிவனைக் கண்டு நடந்ததைப் புகன்று, சிருங்கபேரகபுரத்தையும் கடந்து அயோத்தியை அணுகினன். பின் அவன் அயோத்தியில் நுழைந்து தசரதனடைய அரண்மனையிற் புகுந்து கவலையுடன் பார்த்தான். அவன் தன் தாய்மார்களை அங்கேவிட்டு, நந்திக்கிராமத்துக்கு வந்து பாதுகைக்கு முடிசூட்டி நாடாண்டு, இராமன் வரும் நாளை எதிர்பார்த்தி ருந்தனன். இவ்வரலாற்றை ஆராய்வோம்.

தந்திரசாலியாகிய இராமன் தசரதனால் பட்டத்துக் குரியவன் பரதனே என்பதையறிந்தும் தனக்கு நாடுதர முயன்ற தசரதன் சூழ்ச்சியில் இணங்கி ஈடுபட்டன னெனவும், உண்மையறியாதவ ளேனும் கைகேயியால் அச்சூழ்ச்சி தற்செயலாகத் தடைபட்டதையுணர்ந்த வளேனும் கைகேயியால் அச்சூழ்ச்சி தற்செயலாகத் தடைபட்டதையுணர்ந்த இராமன் தனக்கு நாடு கிடைக்க வேண்டுமேல் அப்போது காடுபோவதுதான் அதற்கு வழி. ஏனெனில் இவர்களுடைய சூழ்ச்சி வெளிப்படில் உலகம் அத்தீயசெயலுக்கு இணங்காதெனத் துணிந்தன னெனவும், பின் இலக்குவனாலும் தசரதனாலும் தடித் தனத்தால் நாடுபெறுக என ஏவியும்கூட அதற்கு அது வழியன்றென நன்குணர்ந்த இராமன் இணங்காமல் காடுபோந்தனனெனவும். அவன் முதன்முதல் கைகேயி யிடத்திலும் பின்னர்த் தனித்தபோதும் அரசாட்சியில் மிகவும் ஆவல் காட்டினனென்பதும் முன்னர்த் தெளி வாக நிலைநாட்டினோம். இக்கட்டுரையில் இராமனுடைய ஒப்பற்ற சூழ்ச்சி எவ்வாறு பயனளித்ததென்பதை இப்போது எடுத்துக் கூறுவோம்.

தசரதன் கைகேயியை மணம் செய்யும்போது அவள் சிறு பெண்ணாக இருந்தாள். அவன் கேகய மன்னனிடம் அவளுடைய மகனுக்கே அரசாட்சியைத் தருவதாக வாக்களித்தபோது அவ்வாக்கையுணர்ந்தார் ஒரு சிலரே. அவர்களுள் கேகயன், தசரதன், சுமந்திரன், வசிட்டன் முதலியோரே முக்கியமானவர்கள். தசரதனுக்கு நெடுநாள் பிள்ளைகளே இல்லாதொழிந்தனராக இவ் வாக்குறுதியை உணர்ந்த சிலரும் அதனை மறந்தவ ராயினர். ஆனால் கேகயனாவது தசரதன், சுமந்திரன், வசிட்டனாவது இதனை மறப்பதற்கு ஏதுவேயில்லை. தசரதன் பிள்ளைகளைப் பெற்றபோதும் அவனுக்கும் பரதனுக்கே நாட்டைக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணமிருந்திருக்கலாம். ஆனால் அவனுக்கு இராம னிடத்தில் காதல் வீழ்ந்தபோழ்துதான் அவனுடைய மனம் மாறத்தொடங்கித் தன் மனம்போல் இசைந்து நடக்கும் தலைமகனுக்கே நாட்டைத் தரவேண்டுமென்ற எண்ணம் உண்டாகிறது. அதனால் தசரதன் பரதனைக் கேகயம் போக்கி இராமனுக்கு முடிசூட்ட வேண்டுவன செய் கிறான். இராமனும் பரதனை வஞ்சித்து நாடாள அவன் மனப்படியொழுகுகிறான். முடிசூட்டுக்கு முதல்நாள் இரவுகூட தசரதன் இராமனையழைத்துப் பரதன் கேகயத் திலிருக்கும் வரைதான் இராமனுக்குக் கேடுவராது எனவும், என்றாலும் உண்மையுணர்ந்த நீதியாளர் இச்சூழ்ச்சியையுணர்ந்து இராமனுக்குக் கேடுசெய்தலும் கூடுமெனவும், ஆதலின் எச்சரிக்கையுடனிருக்க வேண்டுமெனவும் எச்சரித்தனுப்புகிறான். முடிசூட்டுச் செய்தியைக் கைகேயி அறியாவண்ணம் கூடியவரை அவன் மறைக்கிறான். கைகேயி உண்மையை அறியாத வளேனும் எவ்வாறோ மனம் மாறிக்கூனியின் சொற்படி சம்பரப்போரில் அவன் தந்த இரண்டு வரங்களால் பரதனுக்கு நாடும், இராமனுக்குப் பதினான்காண்டு காடும் கேட்டுப் பெறுகிறாள்.
                                ----------------------------- "விடுதலை” 11-3-2015
Read more: http://viduthalai.in/page1/97622.html#ixzz3U4vhPnUp

**************************************************************************************
இதுதான் வால்மீகி இராமாயணம்

அயோத்தியா காண்டம்

பதின்நான்காம் அத்தியாயம் தொடர்ச்சி

கைகேயி உண்மையை அறிவள், ஆனால், அதனால் தன் கணவனுக்கு வரும் பழிச்சொல்லை நீக்குமாறு வேறு காரணம் காட்டித் தன் மகனுக்கு நாடு பெறுகிறாள் என்று சிலர் கூறுவனவெல்லாம் புனைந்துரைகளே. அவை உண்மையற்றன. என்னை?
கைகேயி அத்தகைய மனநிலையுடையவளெனின் தன் மனப்பான்மையைத் தன் கணவனிடம் கூறிச் சுலபமாக வெளிக்குத் தெரியாமல் பரதனுக்கு நாடு பெற்றிருப்பாள். அதற்காக இராமனைக் காட்டுக்கனுப்ப முயன்றிராள். தசரதனும் அவள் சொல் லுக்குக் கட்டுப்படாதிரான். மேலும் தன் கணவனுடைய வஞ்சகச் செயல்களை அவள் அப்போது வேறு காரணங் காட்டி மறைத்தாலும், கேகயன் முதலியோர் வரும்போது உண்மை வெளியாகாமற் போகாது. அப்போது உலகம் தசரதனுடைய வஞ்சனைக்காக அவனை இகழாதிராது. இச்சிறிய உண்மையை உணராதவாறு கைகேயி அவ்வளவு அறிவற்றவளா? நுண்ணிய அறிவினளான கைகேயி தன் மகனுக்கு நாடு பெற வேண்டுமென்ற நோக்கத்திலேயே இரண்டு வரங்களையும் கேட்டனள். மேலும் தசரதன் தந்த வாக்குறுதியை அவள் அறிந்திருப்பளேல், உடனே அவள் தசரதன் சூழ்ச்சியைத் தன் தந்தைக்கறிவித்து வேண்டுவன செய்திருப்பாள். மற்றும் அவள் இராமனிடம் உண்மையைக் கண்டித்துக் கூறியிருப்பாள். உண்மைக்குக் கட்டுப்படா திருக்க ஒருவராலும் முடியாது. குடிகள் அவ்வுண்மையை யறிந்தால், இராமனக்கு முடிசூட்ட ஒரு நாளும் இடங் கொடுத்திரார். பின்னர் இராமன் பரதனிடம் உண்மையை உணராதவாறு கைகேயி அவ்வளவு அறிவற்றவளா? நுண்ணிய அறிவினளான கைகேயி தன் மகனுக்கு நாடுபெற வேண்டுமென்ற நோக்கத்திலேயே இரண்டு வரங்களையும் கேட்டனள். மேலும், தசரதன் தந்த வாக் குறுதியை அவள் அறிந்திருப்பளேல், உடனே அவள் தசரதன் சூழ்ச்சியைத் தன் தந்தைக்கறிவித்து வேண்டுவன செய்திருப்பாள். மற்றும் அவள் இராமனிடம் உண்மையைக் கண்டித்துக் கூறியிருப்பாள்.

உண்மைக்குக் கட்டுப்படா திருக்க ஒருவராலும் முடியாது. குடிகள் அவ்வுண்மை யையறிந்தால், இராமனுக்கு முடிசூட்ட ஒரு நாளும் இடங்கொடுத்திரார். பின்னர் இராமன் பரதனிடம் உண் மையை உணராதவாறு கைகேயி அவ்வளவு அறிவற்ற வளா? நுண்ணிய அறிவினளான கைகேயி தன் மகனுக்கு நாடுபெற வேண்டுமென்ற நோக்கத்திலேயே இரண்டு வரங்களையும் கேட்டனள். மேலும் தசரதன் தந்த வாக்குறுதியை அவள் அறிந்திருப்பளேல், உடனே அவள் தசரதன் சூழ்ச்சியைத் தன் தந்தைக்கறிவித்து வேண்டுவன செய்திருப்பாள். மற்றும் அவள் இராமனிடம் உண்மையைக் கண்டித்துக் கூறியிருப்பாள். உண்மைக்குக் கட்டுபடா திருக்க ஒருவராலும் முடியாது. குடிகள் அவ்வுண்மை யையறிந்தால், இராமனுக்கு முடிசூட்ட ஒரு நாளும் இடங்கொடுத்திரார்.
- தொடரும்
                         -----------------------------------   "விடுதலை”17-03-2015
Read more: http://viduthalai.in/page-3/98024.html#ixzz3UdzXt2rR

*************************************************************************************
இதுதான் வால்மீகி இராமாயணம்

அயோத்தியா காண்டம்

பதின்நான்காம் அத்தியாயம் தொடர்ச்சி

பின்னர் இராமன் பரதனிடம் உண்மையையுரைத்த போது பரதன் தன்னுடன் வந்த குடிகளை நோக்கி இராமனையழைக்கக் கூற அவர்கள், இராமன் கூறுகிறது சரியாகவே இருக்கிறது, ஆதலின் நாங்கள் இராமனை அழையோம் என்று கண்டிப்பாகக் கூறியதை இக்கட்டுரையில் மலையிடை விளக்கெனக் காண்கிறோம். ஆதலின் அவர்கள் முன்னரே இவ்வுண்மையை யுணர்ந் திருப்பின், தசரதனைக் கண்டித்துப் பரதனையழைத்து முடிசூட்டச் செய்திருப்பரன்றோ?

கைகேயி தசரதன் வாக்குறுதியை உணர்ந்திருப்பளேல், பரதன் தன்னை இகழும்போது தான் மெய்ம்மையை வழுவாது நடந்த சால்பினை அவனுக்கு எடுத்துக் காட்டியிருக்கத் தவறாள். கைகேயிக்கு நியாயத்தை நிலைநாட்டித் தன்னுடைய கணவனைப் பழியற்றவனாக்க வேண்டுமென்பதே நோக்கமாயிருக்குமேல், அவள் தசரதனைக் கண்டித்துக் கொடியவளென்ற பேரெடாமலே பரதனுக்கு முடிசூட்டித் தசரதனை நல்லவனாக்கி யிருக்கலாம். தசரதனும் உண்மைக்குக் கட்டுப்படாதிரான். ஏதோ ஒரு சமயம் பெண்ணாகிய அவளுக்குக் கொடுத்த வரத்துக்குக் கட்டுப்படாதிருக்க இயலாத தசரதன், தன்னையொத்த முடிமன்னனிடம் கொடுத்த வாக் குறுதியைத் தட்டி நடக்க ஆற்றலுள்ளவனாவானோ? மேலும் கேகயனிடம் வாக்குறுதி தந்திரானேல், அவன் கைகேயி கேட்ட வரங்களை மறுத்திருத்தலும் கூடும்.

இராமனிடமிருந்த பித்தால் தன்னையும் நிராகரித்து அரசைக் கைப்பற்றுமாறு இராமனைத் தூண்டுகிற தசரதன் தன்னையொத்த முடிமன்னனாகிய கேகயனிடம் செய்த வாக்குறுதியை எணிணியிரானேல், அவன் கைகேயியைப் படாத பாடுபடுத்தித் தன் எண்ணத்தைக் கட்டாயம் ஈடேற்றியேருப்பான். நேரில் வாக்குறுதி வாங்கிய கேகயன், சூழ்ச்சியை யறிந்தால் என்செய்வது? என்ற பெரிய அச்சமே தசரதனுடைய வாயையும் கையையும் கட்டுப்படுத்திக் கைகேயி செய்த செயல்களையெல்லாம் வெறுப்புடன் பார்த்து வளாளயிருக்கச் செய்தது. இராமன் காடேகியவுடன் பரதனையழைத்து முடிசூட்ட வேண்டும்.  அப்போது கேகயனும் வருவான் சனகனும் வருவான், உடனே தசரதனுடைய இழி செயல்களையெல்லாம் உலகம் அறியும். அதனால் அவனை அனைவரும் நேரில் இகழ்ந்து நகையாடுவர் என்பதை நினைக்க நினைக்க தசரதனுடைய மனம் உடைவதாயிற்று.

மேலும் தன் காதலுக்குரிய இராமனும் சுயநலம் கருதித்தன் சொல்லுக்கெல்லாம் இணங்காமல் காடேகி விட்டான். இவ்விருதுன்பங்களும் தசரதனுடைய மனத்தை முற்றிலும் உடைத்து விட்டதனாலேயே தசரதன் மாண்டு மடிகிறான்.
                                         ---------------- தொடரும்- "விடுதலை” 20-03-2015

Read more: http://viduthalai.in/page-3/98202.html#ixzz3Uw7w77fr
 ***************************************************************************************
இதுதான் வால்மீகி இராமாயணம்

- அயோத்தியா காண்டம்

தசரதன் மடிந்தவுடன் அச்செய்தியைக் கேகய மன்னனுக்கு அறிவுறுத்த வேண்டுவது இன்றியமையாத கடமையாக இருக்க வழி வழி ஆசானும் ஆன்றமைந்த அறிவுடை முதியோனுமாகிய வசிட்டன் அக்கடமை யைச் செய்யாமல் பரதனை மட்டும் உண்மையைக் கூறாமல் அழைத்துவரச் செய்கின்றனன். தசரதன் மாய்ந்த செய்தியைப் பரதன் கேகயத்திலிருக்கும்போது தெரிவித் தால் எவ்வாறாவது பரதன் தானே பிறப்பால் நாட்டுக் குரிய மன்னவன் என்பதை அங்கே அறிந்து கொள்ளு வான்.
அதனால் தசரதனும் தானும் செய்த சூழ்ச்சி நிறை வேறாது போமென வசிட்டன் அவ்வாறு செய்தனன். அதிலும் வசிட்டன் வெற்றிபெறுகிறான், உண்மையு ணராத சிறுவனாகிய பரதன் மூத்தவனாகிய இராமனே பட்டத்துக் குரியவனாயிருக்கத் தன் தாய் கையேயி அநியாயமாக அவனை நாடிழக்கச் செய்ததோடு நில்லாமல் காட்டுக்கும் அனுப்பி விட்டாளே என்று மனம் துடித்து உலகம் தன்னை இகழுமே, அதிலும் முடியும் சூட்டிக் கொண்டால் மிகவும் அதிகமாக இகழுமே என உண்மையாகவே உணர்கிறான். அதனால் தகாத செயலைச் செய்த தன் தந்தையையும் தாயையும் இகழ்கிறான். தந்தை தப்பிதமான வழியில் நடந்தால் செம்மைப்படுத்த வேண்டியது மகனுடைய கடமையெனவும் அவன் கூறுகிறான். அவ்வாறே பரதன் இராமனை அழைத்துவந்து தான் கருதுமாறு அரசாள உரிய மூத்தவனாகிய அவனையே அரசனாக்க முந்துகிறான்.


சூழ்ச்சியில் வல்லவனாகிய இராமன் இவ்வளவையும் எதிர்பார்த்தே முரட்டுத்தனமாக நாடுபெற ஏவிய தசரதனுடைய சொல்லையும் தட்டி, நாட்டைப்பெற்று நிலை பெற வழி காடேகுவதே எனப் போகின்றனன். தான் எண்ணியபடி பரதன் தன்னை அழைத்துப் போக வருவதைக் கண்டு பெருமகிழ்ச்சியடைந்து, இலக்கு வனிடம் பரதன் வருவது தன்னை அழைத்துப் போகவே எனக்கூறுகிறான். பின்னால் வருவதையெல்லாம் நன்றாக எண்ணித்துணியும் தன்மையாளனாகிய இராமன் பரதனை எவ்வாறு கைவசப்படுத்தி நாட்டைப் பெறுவதெனத் தான் முன்னால் ஆராய்ந்துவைத்தபடியே நடக்கிறான்.


பரதனிடம் வாக்கு வாங்கிக்கொண்டு பின்னர் உண் மையை அவனுக்கும் பிறருக்கும் உரைக்க வேண்டு மென்பது இராமனுடைய சூழ்ச்சி. பரதன் வந்தவுடன் அவனை நோக்கி இராமன் , நீ ஏன் இங்கே வந்தாய்? உன்னைப் பிரிந்தால் தந்தை இறப்பாரே! உன்னைப் பிரிந்து அவர் இறந்துவிட்டனரா? குடிகள் உன்னிடம் அன்பு குறைந்து நாட்டைப் பிடுங்கிக் கொண்டு கைகேயி என்னைக் காட்டுக்குப் போகச் சொன்னதற்காக உன்னை நகரத்திலிருந்து துரத்தி விட்டார்களா? அல்லது தந்தைக்குப் பணிவிடை செய்ய மனமில்லாமல் வந்துவிட்டனையா?


உன் தாய் கைகேயி தன் எண்ணப்படி காரியம் முடிந்து நலமாக இருக்கிறாளா?
எனப் பரதனை மறுமொழி கூறுவதற்குக் கூட இடங்கொடுக்காமல் விடாது தொடர்ந்து பல வினாக்களை வினாவிப் பரதனுடைய மனத்தை மிகவும் புண்படுத்தித் துடிக்க வைக்கிறான். இவ்விடத்தில் மொழி பெயர்ப்பாளர் சீனிவாசய்யங்கார் குறிப்பு கவனிக்கத்தக்கது. அது வருமாறு: பக்கங்கள் 362, 363 குடிகள் பரதனைத் துரத்தியிருந்தால் பரதனுடன் சைனியமும் பரிவாரங்களும் சுமந்திரரும் மற்றவர்களும் எப்படி வந்திருக்க முடியும்? பரதனை விட்டுப் பிரிந்த துக்கத்தால் தசரதர் இறந்திருந்தால், அவன் கேகயத்துக்குப்போன உடனேயே இறந்திருக்க வேண்டும். தன்னை விட்டுப் பிரிந்ததால், அவருக்கு மரணம் நேரிடுமென்று இராமனுக்குத் தெரியாதா என்பதைக் கவனிக்கவும்... பரதனைப்பற்றி இப்படி இராமன் சந்தேகப் படுவதும் அதை அவனிடத்திலேயே சொல்லுவதும் ஆச்சரியமே.... இங்கே இராமன் கைகேயியைப்பற்றிக் குறிப்பிட்டு அழுத்திச் சொல்லுவது கவனிக்கத்தக்கது.


இதனை ஆராயுமிடத்துப் பரதனுடைய மனத்தைச் சுட்டுக் கைகேயியின் செயலில் தன் வெறுப்பைக் காட்டி விரைவில் பரதனிடமிருந்து நாட்டைத்தர வாக்குவாங்கவே இராமன் இவ்வாறு பேசியவன் என்பதைச் சிறுவரும் அறியாதிரார். இல்லையென்றால், இராமன் பரதனோடு சுமந்திரனும் பெருஞ்சேனையும் வந்திருப்பதை அறிந்து கொண்டே அவனைக் குடிகள் நாட்டைவிட்டுத் துரத்திவிட்டனரா என்று வினவுவானா?


இது ஒன்றே இராமனை வஞ்சகனென்று நிலைநாட்டுவதற்குத் தகுந்த சான்றாமன்றோ? பின் பரதன் தந்தையிறந்ததைக் கூறியது கேட்டுத் தண்ணீரிறைத்துவந்து தாய்மார்களும் சேனை முதல் யாவரும் வந்த பிறகு மறுபடியும் பரதனை எதற்காக வந்தனை என வினவினன் இராமன். பரதனோ பட்டத்துக்கு மூத்தவனாதலால், உரிமையுடைய இராமனை அழைத்துப் போக வந்ததாகக் கூறுகிறான். இராமன், உன்னைப்போலும் உத்தமன் நாட்டிற்கு ஆசைப்பட்டு அண்ணனுக்குத் தீங்கு செய்வானா?


இருந்தாலும் தந்தையின் கட்டளையின்றி எதையும் ஏற்றுக்கொள்ளேன் என்று பேசி நாட்டைத் திரும்பத்தர வாக்களிக்கும் நிலைமைக்குக் கொண்டு வருகின்றனன். இதனால் பரதன் அரசாள இராமனுக்கு ஒரு நாளும் எண்ணமிருந்திருக்காது என்பது வெள்ளிடை மலையே யன்றோ? இன்னும் இதனால் பரதன் அரசாள் வனேல், இராமனுக்குத் தீங்கு செய்தவனாவானெனப் பரதனுக்கு இராமன் எடுத்துக்கூறியவனுமாவான். பரதனும் இராமன் எதிர்பார்த்தபடியே உணர்ந்து, நீர் கொடுத்த அரசை நான் உமக்குத் திரும்பக் கொடுக்கின்றேன்.


கைகேயியைச் சமாதானப்படுத்தியிருக்கிறேன். அரசாளும் என்று வாக்களித்து வேண்டுகின்றனன். இதனையே இராமன் எதிர்பார்த்தது. இராமன் கைகேயியிடம் வாக்களித்து அரசைப்பரதனுக்குத் தந்ததைக் கைகேயியா லறிந்த பரதன் தனக்கு வந்த அரசாட்சியைத் திரும்ப இராமனுக்குத் தருவதாக வாக்களித்திருக்கின்றனன். இவ்வாக்கால் இராமன் அரசைத் தனதாக்கிக் கொண்டு திரும்பவும் தந்தை கட்டளையை மீறுதல் கூடாதென்று பாசாங்கு செய்கின்றான் பரதன் தசரதனை இகழ்ந்து மறுபடியும் இராமனை வேண்டுகின்றனன்.


தாய்மார்களும் குடிகளும் அவ்வாறே இராமனை வேண்டிக்கொள் கிறார்கள்.                              -------------------------தொடரும்"விடுதலை” 31-03-2015
Read more: http://viduthalai.in/page1/98868.html#ixzz3W3dY1whR

22 comments:

தமிழ் ஓவியா said...

கோவில் திருவிழாவில் நகைகள் கோவிந்தாசென்னை, ஏப்.3- சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் திருவிழாவில் பக்தர்கள் கூட்டத்தில் கொள்ளை யர்கள் புகுந்து 9 பெண் களிடம் தங்க சங்கிலி மற்றும் ரூ.1 லட்சம் ரொக்கப்பணத்தையும் பறித்துச்சென்று விட் டனர்.

சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் நேற்று அறுபத்து மூவர் திருவிழா நடந்தது. பக் தர்கள் கூட்டம் அதிகமி ருந்தது. இணை ஆணை யர் சிறீதர், துணை ஆணை யர் பாலகிருஷ்ணன் தலைமையில் பலத்த காவல்துறை பாது காப்பு போடப்பட்டிருந்தது. பாதுகாப்பு வளை யத்தையும் மீறி பக்தர்கள் கூட்டத்தில் சங்கிலி பறிப்பு கொள்ளையர்கள் புகுந்து விட்டனர்.

9 பெண்களிடம் 55 சவரன் தங்க நகைகளை பறித்துச் சென்று விட்ட தாக புகார்கள் வந்தன. கோவிலுக்கு உள்ளேயே 2 பெண்கள் கூட்ட நெரி சலில் சிக்கியதை பயன் படுத்தி அவர்கள் அணிந்திருந்த நகைகளை திருடிச் சென்றனர். கண வன் கண் முன்னேயே பெண் ஒருவர் தாலி சங் கிலியை பறிகொடுத்தார்.

மயிலாப்பூர் பஜார் வீதியைச் சேர்ந்த மோகன் என்பவர் பையில் வைத் திருந்த ரூ.1 லட்சம் ரொக்கப்பணத்தையும் கொள்ளைக்கும்பல் பறித் துச் சென்று விட்டனர்.

மயிலாப்பூர் கோவில் திருவிழாவில் பெரிய கலவரம் நடக்கிறது என் றும், கழுத்தில் தங்க சங்கிலி போட்டு செல்லா தீர்கள் என்று ஏமாற்றி அபிராமபுரத்தில் இளம் பெண் ஒருவர் அணிந் திருந்த 6 சவரன் தங்க சங்கிலியை அதே பகு தியைச் சேர்ந்த நபர் ஒருவர் அபகரித்து சென்று விட்டார். இதுதொடர் பாக அபிராமபுரம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

Read more: http://viduthalai.in/e-paper/99014.html#ixzz3WFw1u5G1

தமிழ் ஓவியா said...

பதவி ஆசை


பதவி ஆசையில் மிதக்கிறவர்கள் எப்படிப்பட்ட அற்ப இழிவான அயோக் கியத்தனமான காரியத்தையும் செய்து வெற்றி பெறவே பார்ப்பார்கள். அவர் களிடம் சுயநலம் தவிர மனிதப் பற்றோ நாட்டுப் பற்றோ சிறிதளவும் காண முடியாது.
(விடுதலை, 3.5.1965)

Read more: http://viduthalai.in/page-2/99000.html#ixzz3WFwHQUUE

தமிழ் ஓவியா said...

நிலவை விழுங்கும் பார்ப்பனியப் பாம்பு

4.4.2015 சந்திர கிரகணம்

பூமி சூரியனைச் சுற்றிவரும் 12 மாதங்களில், 12 முறை பூமியைச் சுற்றிவரும் நிலவு, 12 முறை சூரிய ஒளியை முழுமையாக பிரதிபலிக்கும்போது வெள்ளுவா அல்லது பௌர்ணமி.

12 முறை முழுமையாக பிரதிபலிக்காதபோது காருவா அல்லது அமாவாசை. பூமி 23 டிகிரி சாய்ந்திருப்பதுபோல், நமது பூமியைச் சுற்றிவரும் ஒரே ஒரு துணைக்கோளான நிலவு 5 டிகிரி சாய்ந்திருக்கிறது.

நிலவு பூமியின் ஒரு பாதியைச் சுற்றிவர 14 நாள்களும், மற்றொரு பாதியைச் சுற்றிவர 14 நாள்களும் ஆகிறது. நிலவில் ஒரு இரவு என்பது 14 நாள்கள் ஒரு பகல் என்பது 14 நாள்கள். 24 மணி நேரத்தில் இரவையும், பகலையும் உணர்ந்து வாழப்பழகிவிட்ட மனிதன், நிலவில் குடியேற முடியாததற்கு அதுவும் ஒருகாரணம்.

பூமியில் வாழும் அனைவரும் நிலவை மேலே பார்க்கவில்லை பக்கவாட்டில்தான் பார்க்கிறோம் என்பதை முதலில் உணரவேண்டும் 5 டிகிரி சாய்வாக உள்ள நிலவு சூரியனை நோக்கி எத்தனை அளவு கோணத்தில் திரும்பி, ஒவ்வொரு நாளும் நாளும் சூரிய ஒளியை பிரதிபலிக்கிறதோ அதைத்தான் வளர்பிறை, தேய்பிறை என்கிறார்கள். நிலவு வளர்வதோ தேய்வதோ இல்லை. சூரிய ஒளியின் பிரதி பலிப்பின் அளவீடுதான் அந்த தோற்றத்திற்கு காரணம் நிலவின் பூமியைச்சுற்றும் பெயர்ச்சியானது சுருள் வடிவ நீள்வட்ட பாதையாகும். பூமிக்கும், சூரியனுக்கும் ஆன நேர்கோட்டில் பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் நிலா வரும்போது சூரிய ஒளியை நிலா மறைத்து நகரும். அப்போது நிலவின் நிழல் பூமியின் மீது விழுந்து நகர்ந்து கொண்டே செல்லும். இது கதிரொளி மறைப்பு அல்லது சூரியகிரகணம்.

பூமி ஒரு நிமிடத்திற்கு 30 கி.மீ. வேகத்தில் சுற்றுகிறது. ஆனால் நிலவு ஒரு நிமிடத்திற்கு 1 கிலோ மீட்டர் வேகத்தில் பூமியைச்சுற்றுகிறது. அந்த அடிப்படையில் நிலவின் நிழல் பூமியில் நேர்க்கோட்டு நாடுகளின் மேல் நகர்ந்து கொண்டே இருக்கும். எல்லா நாடுகளின் மீதும் விழாது.

அதேபோல் நிலவுக்கும் சூரியனுக்குமான நேர் கோட்டில் நிலாவுக்கும் சூரியனுக்கும் இடையில் பூமி வரும்போது பூமியின் நிழல் நிலவின் மீது விழும். அதாவது நிலவொளி மறைப்பு அல்லது சந்திரகிரகணம். நிலவின் சூரியஒளி பிரதிபலிப்பை பூமியின் நிழல் மறைத்துக் கொணடே நகரும். இதுவும் எல்லா நாடுகளிலும் தெரியாது.

இப்படி கதிரெளி மறைப்பும் (சூரிய கிரகணம்) நிலவொளி மறைப்பும் (சந்திரகரணகம்) எந்தெந்த ஆண்டு, எந்தெந்த மாதம், எந்தெந்த நாடுகளில் எவ்வளவு நேரம் நீடிக்கும் என்பதை வரும் 2100 ஆம் ஆண்டுவரை வானியல் அறிவியல் துல்லியமாக குறித்து வைத்துள்ளது. கடந்த மார்ச் 20ஆம் தேதி நிகழ்ந்த கதிரொளி மறைப்பை அய்ரோப்பிய நாடுகளில் கண்டுகளித்தார்கள்.

இந்தியாவின் மீது நிலவின் நிழல் அந்த நாளில் விழாததால் இந்தியாவில் அதைப்பற்றி ஒன்று கண்டு கொள்ளாமல்விட்டது ஆன்மிகம். ஆனால் ஏப்ரல் 4 ஆம்தேதி நிலவொளி மறைப்பு (சந்திரகிரகணம்). இந்தியாவில் தெரிவதால் இந்திய மக்கள் மீது ஆரியப் பார்ப்பனியம் அடுக்கடுக்காக அமோக ஆதிக்கம் செலுத்தி, மக்களின் உழைப்பை சுரண்டிக் கொழுக்க தயாராகி வருகிறது.

நிலாவைப் பாம்பு விழுங்குகிறது என்றும் கிரகணத்தின் போது கோவில் நடைச்சாத்து என்றும், கர்ப்பிணிப் பெண்கள் வெளியே வரக்கூடாது என்றும் சமைத்த உணவை அந்த நேரத்தில் மூடி வைக்கவேண்டும் என்றும் அந்த நேரத்தில் பயணம் செய்யக்கூடாது என்றும் இன்னும் எத்தனை எத்தனையோ?

இந்தியாவில் தெரியாத கதிரொளி மறைப்பைக் கண்டுகொள்ளாத பார்ப்பனியமே, பூமியின் சுழற்சிக்கும் பெயர்ச்சிக்கும் நிலவின் சுழற்சிக்கும் பெயர்ச்சிக்கும் எந்தத் தொடர்புமே இல்லாத சனிப்பெயர்ச்சியையும், குருப் பெயர்ச்சியையும் மக்கள் பண்பாட்டின் மீது கட்டிப் போட்டிருக்கும் உனது கற்பனைக் கயிற்றை வருங்கால தலைமுறையினர் பூமி சுழற்சி பெயர்ச்சி புரிந்தறி வாளர்களாக மாறி உன்னை பொசுக்கும் காலம் தொடங்கி விட்டது. பூணூலும், குடுமியும் பூமிக்குள் புதையும் காலம் கனிந்து விட்டது.

- செந்தமிழ்ச்செல்வன், சேகுவேரா

Read more: http://viduthalai.in/page-2/99003.html#ixzz3WFwTnwx6

தமிழ் ஓவியா said...

தந்தி டிவி பாண்டேவின் முகத்திரை கிழிந்து தொங்குகிறது

-குடந்தை கருணா

தந்தி டிவியில், கேள்விக்கென்ன பதில் நிகழ்ச்சியில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை பேட்டி கண்ட ரங்கராஜ் பாண்டே,சில வாசகங்களை பெரியார் சொன்னதாக எடிட் செய்து வெளியிட்டார்; அம்பேத்கர் மாட்டுக்கறி சாப்பிடக் கூடாது என்று சொன்னார் என்றெல்லாம் எந்த வித ஆதாரமும் இல்லாமல் வெளியிடப்பட்டது.

இது தொடர்பாக, திராவிடர் கழகத்தின் சார்பில் வெளியிடப் பட்ட மறுப்புகளை, குறுந்தகடு மூலம் தந்தி டிவிக்கு அனுப்பப்பட்டு, தந்தி டிவி, தொடர்ந்து அந்த உண்மை விவரங்களை நாட்டுக்கு தெரிவிக்க வேண்டிய ஒரு கட்டா யத்தை உண்டு பண்ணியுள்ளது.

நேற்றும் இன்றும் பல முறை, திராவிடர் கழகத்தின் சார்பில் தரப்பட்ட விளக்கத்தை தந்தி டிவி தொடர்ந்து ஒளிபரப்பிக் கொண்டி ருக்கிறது என்றால், எந்த அளவு, அந்த நிர்வாகத்திற்கு எதிர்ப்பு வந்திருக்கும் என்பதை நாம் யூகிக்க முடிகிறது. நிகழ்ச்சி நடத்திய ரங்கராஜ் பாண்டேயின் முகத்திரை முற்றிலுமாக கிழிக்கப்பட்டுவிட்டது. பாண்டேவை தயார் செய்த சங் பரி வாரங்களுக்கு சரியான பதிலடி யாகவும் அமைந்து விட்டது.

இன்னொரு தொலைக்காட்சியில் தாலி தொடர்பான விவாதம் வரக் கூடாது என்று மறுப்பு தெரிவித்து, தொலைக்காட்சி முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தி, வெடிகுண்டு வீசிய கலவரக்காரர்களுக்கும்,

தந்தை பெரியார் சொல்லாததை சொன்னதாக திரிபுவாதம் செய்த பாண்டேவின் செய்கையை அதே தந்தி டிவி மூலம், மறுப்பு வாதத்தை வெளியிட செய்த திராவிடர் கழகத்தின் அணுகுமுறைக்கும், உள்ள வேறுபாட்டையும், ஜனநாயக பண்பையும் மக்கள் அறிந்து கொள்ள முடிகிறது. இந்த நல்ல வாய்ப்பையும், விளம்பரத்தையும் அளித்த ரங்கராஜ் பாண்டேவிற்கு நன்றி.

பாண்டேவின் முகத்திரையை கிழித்து எறிந்த தந்தி டிவிக்கு நன்றி.

Read more: http://viduthalai.in/page-2/99006.html#ixzz3WFwhwjWn

தமிழ் ஓவியா said...

மகளிரைக் கொச்சைப்படுத்துவதற்கு முடிவு கட்ட வேண்டும்!

நாடாளுமன்றத்தில் நிதிநிலை அறிக்கைமீதான விவாதம் நடந்த போது மனிதவளத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானியைப்பார்த்து அய்க்கிய ஜனதா கட்சித் தலைவர் சரத்யாதவ் உங்களுடைய குணநலன்கள் என்ன என்று அனைவருக்கும் தெரியும் என்று கூறியிருந்தார். இந்த பேச்சிற்கு சமாஜ்வாடி கட்சி எம்பி ஜெயாபச்சன் முதல் பல்வேறு பெண் உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். சரத்யாதவ்மீது மகளிர் உரிமை ஆணையம் வழக்கு தொடுக்கவேண்டும் என்று கூறியிருந்தனர்.

இந்த நிலையில் பீகாரில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் கிரிராஜ்சிங், ராஜீவ் காந்தி நைஜீரிய பெண்ணை மணந்திருந்தால் காங்கிரஸ் தலைவர் பதவி கிடைத்திருக்குமா? சோனியா வெள்ளை நிறமாக இருப்பதால்தானே அவருக்கு அந்தப் பதவி கிடைத்தது என்று கூறியிருந்தார். இந்த மட்டமான பேச்சுக்கு நாடு முழுவதும் கடும் கண்டனம் தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் போராட் டங்களை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் பாஜகவின் பெண் உறுப்பினர்களும், மகளிர் ஆணையமும் இந்த விவகாரத்தில் கள்ள மவுனம் சாதித்து வருகின்றன. அதுமட்டுமல்லாமல், ராஜஸ்தானைச் சேர்ந்த திருமதி சந்தோஷ் அஹல்வாட் என்ற பாஜக எம்பி பேசும் போது சில நேரங்களில் வாய்தவறி சில வார்த்தைகள் வந்துவிடும், இது மனித இயல்பு; இது போன்ற விவகாரங்களை எதிர்க்கட்சிகள் வேண்டு மென்றே ஊடகங்களின் உதவியால் பெரிதுபடுத்து கின்றன என்று கூறினார். இதே வாதம் சரத்யாதவுக்குப் பொருந்தாதா? மேலும் அன்று சரத்யாதவ் மீது வழக்குத் தொடரவேண்டும் என்று பேசிய பாஜக பெண் உறுப்பினர்கள் சோனியா குறித்து கிரிராஜ் சிங் பேசிய விவகாரத்தில் முக்காடிட்டுக்கொண்டு அமைதி காத்துக் கொண்டு வருகின்றனர்.

பெண் உரிமைத்தொடர்பான விவகாரங்களில் எப்போதும் முதலாவதாக இருக்கும் ஜம்மு-காஷ்மீர் பெண் எம்பி மஹபூபா முஃப்தி இந்த விவகாரத்தில் எந்த ஒரு கருத்தும் கூறாமல் அமைதியாக இருக்கிறார் விரைவில் இவருக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைக்கவிருப்பதாக பேச்சு அடிபடுகிறது, ஆகவே, பதவிக்காக பெண்ணுரிமையை தூக்கிஎறியவும் அவர் தயாராகிவிட்டார் என்றே தெரிகிறது. சோனியா குறித்து அவதூறாகப் பேசிய கிரிராஜ் சிங் நைஜீரியப் பெண்ணுடன் ஒப்பிட்டுப் பேசினார். இது குறித்து இந்தியாவுக்கான நைஜீரியத் தூதர் பொறுப்பை வகிக்கும் ஓ.பி. ஓகங்கர் தனது கண்டனத்தை வெளிப் படுத்தினார். இது குறித்து அவர் ஊடகவியலாளர் களிடம் கூறும் போது அமைச்சரின் கருத்து விரும்பத் தக்கதல்ல, மிக மோசமானது! இது தொடர்பாக வெளி யுறவுத்துறை அமைச்சகத்திடம் புகார் செய்வோம். அமைச்சர் தனது கருத்தை திரும்பப் பெறுவார்; நைஜீரியா மக்களிடம் மன்னிப்பு கேட்பார் என்று எதிர்பார்க்கிறோம். இது குறித்து எங்கள் அரசுக்கு அறிக்கை அனுப்புவோம் எனக் கூறி உள்ளார்.

புதன் கிழமை உள்துறை அமைச்சர் அயல்நாட்டி னருக்கு மாட்டிறைச்சிகொண்டுசெல்வதை தடை செய்ய வேண்டும் அந்நாட்டினர் மாட்டிறைச்சி கிடைக்காமல் வாடவேண்டும் என்று ஒரு கருத்தைக் கூறியிருந்தார். இவர்களின் பேச்சால் அயல்நாட்டு நட்புறவிற்கும் பங்கம் வரும் என்றே கருதப்படுகிறது.

பாவ யோனியில் பிறந்தவர்கள் பெண்கள் என்று கீதையிலே கிருஷ்ணன் சொல்லியுள்ளான். அத்தகைய நூலை இந்தியாவின் புனித நூலாக அறிவிக்கப் போகிறோம் என்று மத்திய அரசின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஒரு பெண்ணாக இருந்தும் கூறியுள்ளார்.

இது மேற்கண்ட எல்லாவற்றையும்விட கொடுமை யானது - கண்டிக்கத்தக்கது.

காரைக்குடி பகுதியில் கடந்த சில மாதங்களாக 200-க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளனர் என்றும், ஆனால், ஒரே ஒரு வழக்கு தான் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் காரைக்குடி வட்டாரத்தைச் சேர்ந்த பொது மக்கள் குமுறியுள்ளனர்.

ஒரு பெண் முதல் அமைச்சர் உள்ள தமிழ்நாட்டில் (மக்கள் முதல்வர் தானே) இந்தக் கொடுமைகளைத் தடுக்க, கொடுமைகளைச் செய்தோர்மீது கடுமையாகத் தண்டிக்க போதிய முயற்சிகளை எடுத்துக் கொள்ள வேண்டாமா!?

திராவிடர் கழகம் - திராவிடர் கழக மகளிரணி, மகளிர் பாசறை இந்தப் பிரச்சினைகளைக் கடுமையாகக் கருதுகிறது; பெண்களுக்குத் தொடர்ந்து இழைக்கப் படும். கொடுமைகள், பெண்கள் மீதான தரம் தாழ்ந்த விமர்சனங்கள் இவைகளைக் கண்டித்தும் எதிர்த்தும் உரிய முறையில் போராட திராவிடர் கழகம் - திராவிடர் கழக மகளிர் மற்றும் பாசறை அணி தயங்காது.

வரும் ஞாயிறன்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள் தலைமை யில் நடைபெற உள்ள மகளிரணி, மகளிர் பாசறைக் கூட்டத்தில் உரிய முடிவுகள் எடுக்கப்படும்.

Read more: http://viduthalai.in/page-2/99001.html#ixzz3WFwrWISe

தமிழ் ஓவியா said...

புகையிலை பயன்படுத்துவதால் புற்றுநோய் வராது என்ற நாடாளுமன்ற குழு தலைவர் கருத்து முழுமையான தவறு

மருத்துவர் வி.சாந்தா பேட்டி

சென்னை,ஏப்.3- புகையிலை பயன்படுத்துவதால் புற்றுநோய் வராது என்ற கருத்து முழுமையான தவறு என்று அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் மருத்துவர் வி.சாந்தா கூறினார்.

சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் தலைவர் மருத்துவர் வி.சாந்தா நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

புகையிலை சட்டங்களை ஆய்வு செய்வதற்கான நாடாளுமன்ற குழு தலைவர் திலீப் குமார் காந்தி புகையிலை பொருட்களை பயன்படுத்துவ தால் புற்றுநோய் வரும் என்பதற்கு ஆதாரம் இல்லை என்று கூறி உள் ளார்.

மேலும் புகையிலை விளைவிப் பதை தடை செய்தால் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என்றும் அவர் களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும் கருத்து தெரிவித்து இருக் கிறார். புகையிலை பயன்படுத்தினால் புற்றுநோய் வராது என்ற அவரது கருத்து ழுமுக்க முழுக்க தவறானது. டில்லியில் உள்ள டாடா இன்ஸ்டி டியூட் ஆப் பண்டமெண்டல் ரிசர்ச் என்ற ஆராய்ச்சி நிறுவனமும், அடையாறில் உள்ள புற்றுநோய் மருத்துவமனையும் பல ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து வருகிறோம். அதன் பயனாகத்தான் புற்றுநோய் வந்தவர் களில் 40 சதவீதத்தினர் புகையிலை பயன்படுத்தியவர்கள்தான் என்பது தெரியவந்துள்ளது. விளம்பரத்தை 85 சதவீதமாக்கவேண்டும் இந்தியாவில் ஆண்டிற்கு புகையிலை பொருட்களை பயன்படுத்தியதால் 10 லட்சம்பேர் இறக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் 55 ஆயிரம் பேர் சாகிறார்கள். தமிழ்நாட்டில் 5800 புதிய புற்றுநோயாளிகள் வருடத்திற்கு வருகிறார்கள்.

பீடி பிடிப்பதால் வாயின் ஓரத்தில் புற்றுநோய் ஏற்படுகிறது. புற்றுநோய் வந்தவர்களில் 40 சதவீதத்தினர் புகையிலை பயன்படுத்தியவர்கள் என்ற புள்ளிவிவரம் கிடைத்துள்ளது. நுரை யீரல் புற்றுநோய் புகை பிடிப்பவர் களுக்கே வருகிறது. புகையிலை பொருட்களை பயன்படுத்தாதீர்கள் என்று வாசகம் எழுதினால் அது படித்தவர்களுக்கு மட்டும்தான் தெரியும். அதுவும் ஆங்கிலத்தில் எழுதப்படுகிறது. இதை படிக்காத பாமரர்கள் படித்து பார்க்காமல் புகையிலை பொருட்களை பயன்படுத் துகிறார்கள். எனவே புற்றுநோய் பற்றிய படங்களை புகையிலை பொருட்களின் மீது சுற்றப்பட்ட தாளில் அல்லது கவரில் அச்சிட்டால் நல்லது. குறிப்பாக அந்த விளம்பரம் 40 சதவீதத்தில் இருந்து 85 சதவீதமாக உயர்த்த இருந்தது. ஆனால் அது உயர்த்தப்படவில்லை. மாறாக இப்படி எம்.பி. திலீப்குமார் காந்தி கூறியிருப் பது வேதனை தருகிறது.

அமெரிக்காவில் 20 ஆண்டுகளுக்கு முன்பு புற்றுநோய் பாதிக்கப்பட்டவர் களில் 40 சதவீதத்தினர் என்ற நிலை இருந்தது. ஆனால் அங்கு விழிப் புணர்வு ஏற்பட்டதால் நிறையபேர் புகையிலை பொருட்களை பயன்படுத் துவதை நிறுத்தி விட்டனர். புதிதாக பயன்படுத்துவோரும் குறைந்துவிட் டனர். அதனால் அமெரிக்காவில் இப்போது 40 சதவீதம் என்பது 20 சதவீதமாக குறைந்துவிட்டது. எனவே யாரும் புகையிலை பொருட்களை பயன்படுத்தவேண்டாம். பீடியும் குடிக்கவேண்டாம்.

ஏனென்றால் பீடி குடித்தாலும் புற்றுநோய் வர வாய்ப்பு உண்டு. புகையிலைவேறு புற்றுநோய் வேறு அல்ல. இரண்டும் ஒன்றுதான் என்பேன். இவ்வாறு மருத்துவர் சாந்தா கூறினார்.

Read more: http://viduthalai.in/page-2/99005.html#ixzz3WFx3Loum

தமிழ் ஓவியா said...

சமுதாய இழிவு மட்டுமல்ல- பொருளாதார சுரண்டலுங்கூட!

1981 மக்கட் தொகை - 68,3810051
11 சதவீதம் முஸ்லீம்கள் 3 சதம்

கிறிஸ்துவர்கள் ஆக 14 சதவீதம் - 9,5733409

மீதி இந்துக்கள் - 58,8076642

பார்ப்பனர்கள் மூன்று சதவீதம் - 2,0514301

மீது இந்துக்கள் - 56,7562341

இவர்களில் வாரம் ஒருநாள் கோவிலுக்கு சென்று 50 காசுகள் தட்சணையாக பார்ப்பன பூசாரிகளுக்கு கொடுப்பதானால் பார்ப்பனர் சமுதாய அர்ச்சக சவுண்டிகள் பெறும் வருடாந்திர தொகையாவது

(56,7562341 x0.5x52) ரூபாய் அதாவது 1475,6620000 ரூபாய்

(ஆயிரத்து நானூற்று எழுபத்து அய்ந்து கோடியே அறுபத்தி ஆறு லட்சத்து இருபது ஆயிரம் ரூபாய்)

குறிப்பு:-

இது பல இந்து நண்பர்கள் தந்த தகவலின்படி கணக்கிடப்பட்டது. இதுதவிர ஒருவனுடைய திருமணம், இறப்பு முதலியவற்றிலிருந்தும் பார்ப்பன சவுண்டிகள் பணம் பெறுகிறார்கள்.

இப்போது புரிகிறதா இந்துக்களே நீங்கள் குடும்பக் கட்டுப்பாடு செய்து கொள்ளாதீர் என்பதின் மர்மம்.
இந்துக்களின் எண்ணிக்கை பெருகினால் அவாளுக்கு வருவாய் அதிகம் என்பதுதானே இதன் பொருள்.

- மா.எ.தங்கராசு

Read more: http://viduthalai.in/page-7/99049.html#ixzz3WFxWm7Jy

தமிழ் ஓவியா said...

பாதிரி காட்டிய படங்கள்

பாதிரியார் ஒருவர் கடவுள் நம்பிக்கையில்லாத ஒருவனை அழைத்து வந்து, ஆலயத்தில் மாட்டப் பட்டிருக்கும் படங்களையெல்லாம் காட்டினார்.

ஆண்டவன் மீது நம்பிக்கையுடையவர்கள் நடுக் கடலில் போகும்போது, கப்பலில் மூழ்கி விட்டதையும், பிறகு அவர்கள் ஆண்டவன் அருளால் தப்பியதையும் காட்டும் படங்களையும் அவனுக்கு அந்த பாதிரியார் காட்டினார். அப்படியானால், ஆண்டவன் மீது நம்பிக்கை யில்லாதவர்கள், ஆண்ட வனைத் தொழ மறுத்து கடலில் மூழ்கி செத்ததைக் காட்டும் படங்கள் எங்கே? என்று கேட்டானாம்.

ஆதாரம்: அண்ணாவின் சிறுகதைகள்

Read more: http://viduthalai.in/page-7/99049.html#ixzz3WFxeiZ6p

தமிழ் ஓவியா said...

கலைவாணர் போட்ட மந்திரம்!

எங்கள் வீட்டில் வயதான பாட்டி இருந்தார்கள். அவர் காலில் ஒரு நாள் தேள் கொட்டி விட்டது. வீட்டில் தம் நண்பர் களுடன் பேசிக் கொண்டிருந்த போது அப்பாவிடம் இதைச் சொன்னோம்.

அவர் உடனே, இவ்வளவு தானே நானே குணப்படுத்தி விடுகிறேன். செம்பு நிறைய நீரும் ஒரு கொத்து வேப்பி லையும் கொண்டு வாருங்கள் என்றார்.

அவை கொண்டு வரப்பட்டன. வேப்பிலையை நீரில் தொட்டு கொட்டிய இடத்தில் பாட்டிக்கு வீச ஆரம்பித்தார். வாய் முணுமுணுத்துக் கொண்டிருந்தது. அப்பாவின் நண்பர்கள் ஒன்றும் புரியாமல் பார்த்துக் கொண்டிருந்தனர். இப்போது வலி இறங்கி இருக்க வேண்டும். எப்படி இருக்கிறது என்று பாட்டியிடம் கேட்டார். பாட்டி, சற்றுத் தேவல்லை இன்னும் மேலிடத்தில்தான் வலிக்கிறது என்றார்.

உடனே மறுபடியும் ஒரு தடவை மந்திரம் முணு முணுத்து வேப்பிலை நீர் அடித்தார். பின்பு, இப்போது எப்படி இருக்கிறது. மேலிடத்திலும் வலி குறைந்து இருக்க வேண்டுமே என்று கேட்டார். பாட்டியார், அந்த இடத்திலும் வலி குறைந்து விட்டது என்றார்.

அப்படியானால் வலிசுத்தமாக இறங்கி விட்டது என்று அர்த்தம். இனி வலியே இருக்காது. எங்கே காலை மடக்கு பார்க்கலாம். பாட்டி காலை மடக்கினார். எழுந்து நில் பார்க்கலாம் பாட்டி எழுந்து நின்றார். நட பார்க்கலாம் பாட்டி நடந்து காட்டினார்.

இனி உன்னால் ஓடவும் கூட முடியும் அவ்வளவுதான் என்றார் அப்பா.

அப்பாவின் நண்பர்கள், வியப்பினால், தேள் கொட்டினால் விஷத்தை இறக்க மருந்து வைத்துக் கட்டாமல் இப்படி மந்திரம் போடுகின்றாயே. மந்திரத்தில் ஏதும் பயனில்லை என்று பிரச்சாரம் செய்கிறாய். இந்த மந்திரத்தை யாரிடம் கற்றாய்? இத்தனை நாள் எங்களுக்கு தெரியாமல் மறைத்து விட்டாயே. அது என்ன என்று எங்களுக்கு சொல்ல வேண்டும் என்று கேட்டனர்.

அது ஒன்றும் இல்லை. அது பரம ரகசியம். இன்னொரு நாளைக்கு இன்னொரு இடத்தில் சொல்லுகிறேன். இப்போது இங்கு வேண்டாம்
நண்பர்கள் விடாப்பிடியாக, இல்லை இப்போதே எங்களுக்கு சொல்ல வேண்டும் என்று கேட்க, அப்பா சுற்றும் முற்றும் பார்த்து கொண்டு, பாட்டியார் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு அது ஒன்றும் கஷ்டமான மந்திரம் இல்லை.

உன்னை கடிச்சா எனக்கென்ன, உன்னை கடிச்சா எனக்கென்ன என்று அவசரமாகச் சொன்னேன். இவ்வளவு தான். மனோதத்துவ வைத்தியம் இது - அவ்வளவுதான். நீங்களும் கூட இதைச் செய்யலாம் என்றாரே பார்க்கலாம்.

இதைக் கேட்டு நண்பர்கள் அப்படியா சங்கதி என்று கூறிக் கொண்டு அப்பாவின் கருத்தியல்புகளை மேலும் ஒரு படி புரிந்து கொண்டார்கள்.

கேட்டவர்: உடுமலை நடராசன்

கூறியவர்: மறைந்த நகைச்சுவை நடிகர் கலைவாணர் அவர்களின் புதல்வர் திரு.நல்லதம்பி

இடம்: பயணிகள் விடுதி, அமராவதிநகர், உடுமலை வட்டம். நாள்: 11.4.1981

Read more: http://viduthalai.in/page-7/99052.html#ixzz3WFxnygkf

தமிழ் ஓவியா said...

மகாலட்சுமி குடியிருக்கும் இடமாம்

பிரம்ம தேவன் உபதேசித்த மோகினி கவசம் பவிஷ் யோத்ர புராணத்தில் உள்ளது.

’கரௌ மஹாலயா ரக்ஷேதங்குளிர் பக்த வத்ஸலா
வைஷ்ணவீபாது ஜங்கேச மாயா மேட்ரம் குதம் தாதா’

பொருள்: மஹாலய தொடைகளையும் வத்ஸலா கை விரல்களையும் வைஷ்ணவி ஆடு தசைகளையும், மாயா ஆண், பெண் குறியையும் மலத்துவாரத்தையும் காத்து ரட்சிக்க வேண்டும்.

’ஆரண்யே ப்ராந்தரே கோரே ஸத்ரு ஸங்கே மஹாஹவே
ஸஸ்த்ர காதே விஷே பீதே ஜபன் ஸித்தி மாவப்னுயாத்’

பொருள்: நடுக்காட்டில் அச்சப்பட்டாலும் திருடர்கள், எதிரிகள் நடுவில் மாட்டிக் கொண்டாலும், ஆயுதத்தால் தாக்கப்படும்போதும் போரிலும், விஷம் குடித்திருந்தாலும் இதைப் பாராயணம் செய்தால் உடனே காப்பாற்றப் படுகிறார்கள்.

’போஜயேத் ப்ராஹ்ணாம் ஸ்சைவ
லக்ஷ்மீர்வஸ்தி ஸர்வதா
பதிதம் கவசம் நித்யம் பக்த்யா தவ மயோதிதம்’

பொருள்: பிராமணர்களுக்கு யார் சாப்பாடு போட்டு ஆதரிக்கிறார்களோ அவர்களது இல்லத்தில் மகாலக்ஷ்மி நிரந்தரமாக குடியிருக்கிறாள்.

ஆதாரம்: பொன் பாஸ்கர மார்த்தாண்டன் எழுதிய தேவி தரிசனம் VIII சோட்டானிக்கரை பகவதி அம்மன்.

-போத்தனூர் இரா. உமாபதி

Read more: http://viduthalai.in/page-7/99052.html#ixzz3WFy2E3dQ

தமிழ் ஓவியா said...

கம்பன் புலமையில் சிறந்தவனா?

கம்பராமாயண இன் சுவைப் பெருநாவலரான சிதம்பர நாதர்க்கு கம்பர் கவிகளே இணையில்லா இன்பச் செல்வங்களாகும். அவைகளை அவர் கடவுளின்பமாகவே கண்டாரென்றால் அது முழு உண்மையாகும். ஆனால், அதற்கு நேர்மாறாக நம் அடிகளோ,

கம்பர் பாடல்கள் சிறந்த நல்லிசைப் புலமையால் எழுந்தன அல்லவென்றும், பண்டைத் தண்டமிழ்ச் சங்கப் பாடல்களோடு அப்பாடல் களை ஒப்பிட்டால் கம்பர் கவிகள் சிறந்து நில்லா என்றும், அவை பகுத்தறிவுக் கொவ்வாக் கதைகளால், ஆரவாரமான, ஏராளமான - பொருளற்ற -கற்பனைகளால் வரை துறையின்றி யாக்கப்பட்டவை என்றும்,

கம்பரைப் பின்பற்றி எழுந்த ஏனைய காவியங்களும் அவர் முறையைப் பின்பற்றி எழுந்த ஏனைய காவியங்களும் அவர் முறையைப் பின்பற்றிச் சிறப்பிழந்தன என்றும், பாட்டுப் பற்றிய பண்டைத் தமிழர் மரபே கம்பரால் புறக்கணிக்கப்பட்ட தென்றும் தமிழர் நாகரிக - இன உணர்வைத் தம் கதையால் கம்பர் கெடுத்து விட்டார் என்றும் கருதினார்.

கருதியது மட்டுமின்றித் தாமாக்கிய சாகுந்தல நாடக ஆராய்ச்சி என்ற திறனாய்வு நூலிலும், முற்கால பிற்காலத் தமிழ் புலவோர் என்ற நூலிலும், பிறநூல்களிலும் மேற்காட்டிய கருத்துகளைக் காட்டி கம்பர் ஓர் நல்லிசைப் புலவர் அல்லர் என்றும், அவர் கவிகள் அப்படி ஒன்றுஞ் சிறந்தன அல்ல என்றும் சான்றுகளுடன் எழுதியுள்ளார்.

அத்துடனில்லாது அடிகள் தமிழர் நாகரிக - சமய - இன உணர்வுக்கு மாறான கம்பராமாயணத்தை பயிலுதலும். அவைக்களங்களில் அதனை விரித்தெடுத்து ஓதிப்பரப்பு தலும், தவறென்று தம் சொற்பொழிவுகளிலும், எழுத்து களிலும் வெளியிட்டும், எழுதியும் வந்தார். சைவ, வைணவ, சமய நூல்களின் ஆசிரியர்களும், உரையாசிரியர்களில் எவரும் கம்பர் கவிகளைத் தமது நூல்களில் மேற்கோள்களாகக் கூட எடுத்தாளவில்லை என்றும் எழுதியுள்ளார்.

அடிகள் சிவநெறியாளரானபடியால் அந்நெறிப் பற்றின் காரணமாக இவ்வாறு கம்பர் கவிகளைப் பழிக்கின்றார் என்றெண்ணுதல் பொருந்தாது. சைவசமயத்தின் சிறந்த புராணங்களில் ஒன்றாகிய கந்தபுராணத்தையே அடிகள் ஒப்பவில்லை. விநாயகரைப் பற்றிய கதைகளையும், ஏனைய பல தலபுராணங்களையும், அவற்றின் கதைகளையும் கருத்தில்லாப் பாடல்களையும் அடிகள் ஒப்பாது மறுத் தெழுதியும், பேசியும் உள்ளார்.

இதனை அடிகளின் கடவுள் நிலைக்கு மாறான கொள்கைகள் சைவம் ஆகா பழந்தமிழ்க் கொள்கையே சைவ சமயம் சாகுந்தல நாடக ஆராய்ச்சி முற்காலப் பிற்காலத் தமிழ்ப் புலவோர் என்றும் நூல்களிலும், அவற்றின் முன்னுரைகளிலும் விரிவாக காணலாம்.

மறைமலை அடிகள் வரலாறு (மறைமலை அடிகள் மகன் வித்துவான் மறை திருநாவுக்கரசு எழுதியது) (பக்கம் 661-642)

Read more: http://viduthalai.in/page-7/99053.html#ixzz3WFyAD1IJ

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

ருத்ராட்சம்

கைலாயம் வந்த சனீஸ்வரர், சிவனிடம் சுவாமி தங்களுக்கு ஏழரைக் காலம் நெருங் குவதால், என் கட மையைச் செய்ய அனு மதிக்க வேண்டும் எனக் கேட்டார். என்ன விளை யாடுகிறாயா?

ஏழரை ஆண்டு அல்ல! ஏழரை நாழிகைகூட உன்னால் என்னை நெருங்க முடி யாது, என்ற சிவன், பார்வதி அணிந்திருந்த ருத்ராட்ச மாலைக்குள் புகுந்து விட்டார். சிறிது நேரம் கடந்ததும், சுய ரூபம் காட்டிய சிவன், சனீஸ்வரா! தோற்றுப் போனாயா? என்றார்.

ஈஸ்வரா! என் பார்வையில் இருந்து தப்பிக்க ருத்ராட்சத்தில் மறைந்து கொண்டு என் பணியை சுலபமாக்கி விட்டீர்களே என சிரித் தார் சனீஸ்வரர்.

யாரும் விதியை மீறக் கூடாது என்பதை நிலை நாட்டிய சனீஸ்வரரை சிவன் வாழ்த்தினார். ருத் ராட்சம் அணிந்து சிவ நாமம் ஜெபிப்போருக்கு, சனி பாதிப்பு குறையும் என்னும் உறுதி அளித்து விட்டு சனீஸ்வரர் புறப் பட்டார்.

சிவபெருமானே ஏழரை நாட்டுச் சனிக்கு ஆளாவான் என்றால் அவன் என்ன சர்வ சக்தி வெங்காயம்?

Read more: http://viduthalai.in/e-paper/99083.html#ixzz3WLGrxS7F

தமிழ் ஓவியா said...

இளநீர் அபிஷேகம் செய்தால் மழை வருமா?


கன்னியாகுமரி குகநாதீஸ்வரர் கோவிலில் மழைக்கு வேண்டி 1008 இளநீரை அபிஷேகம் என்ற பெயரில் அந்த சாமி பொம்மைமீது கொட்டி வீணாக்கி உள்ளனர்.

சாமி என்ற கல்பொம்மைமீது இளநீரைக் கொட்டினால் மழை வருமா? மழைக்கும்- அந்த கல் பொம்மைக்கும் என்ன தொடர்பு? உணவில்லாமல் பல கோடி மக்கள் பசியில் தவிக்கையில் அந்த உணர்ச்சியற்ற பொம்மைக்கு இளநீர் அபிஷேகம் தேவையா?

Read more: http://viduthalai.in/e-paper/99086.html#ixzz3WLGzh8Ua

தமிழ் ஓவியா said...

மதச் சார்பற்றவர்கள்

எந்த மதத்தையும் பின்பற்றாதவர்கள் மக்கள் தொகையில் உலகில் மூன்றாவது இடத்தில் உள்ளனர். முதல் இடம் கிறித்துவர்கள் - 290 கோடி. இரண்டாம் இடம் முசுலீம்கள் - 280 கோடி.

எச்சரிக்கை

சென்னையில் உள்ள புற்று நோயாளிகள் புகையிலையைப் பயன்படுத்தியதால் புற்று நோய்க்கு ஆளானோர் 38.6 விழுக்காடாகும்.

த(க)ண்ணீர்!

சென்னையில் இப்பொழுதே குடிநீர்ப் பஞ்சம் வந்துவிட்டது. கவியரசு கண்ணதாசன் நகரில் ஒரு குடம் குடிநீர் ரூபாய் ஏழுக்கு விற்பனையாம்!

அதிர்ச்சி

மத்திய மனிதவளமேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி ராணி கோவா சென்றபோது துணிக் கடையில் ஆடையை மாற்றும் போது, அங்கு ரகசிய காமிரா இருந்ததைக் கண்டு அதிர்ச்சியுற்றாராம்.

கோவாவில் ஆள்வது பிஜேபிதான்.

பிஜேபியில் உள்ள பெண் அமைச்சர்களாவது பெண்களுக்கு எதிரான போக்குகளை ஒழிப்பதில் தீவிரம் காட்டக் கூடாதா!

Read more: http://viduthalai.in/e-paper/99095.html#ixzz3WLH9dDv9

தமிழ் ஓவியா said...

அழைக்கிறது பெரியார் திடல்!


இந்துத்துவா போர்வையில் உலவும் சில காவிகளும், சில உதிரிகளும் - அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 125ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவில் திராவிடர் கழகம் நடத்த இருக்கும் இருபெரும் நிகழ்ச்சிகளைக் கண்டு, அறிவைச் செலுத்தாமல், வெறும் விளம்பர வெளிச்சத்துக்காக எதிர்ப்பு அரட்டைக் கச்சேரிகளை அரங்கேற்றுகின்றனர். காவல் நிலையத்திற்குக் காவடி எடுக்கின்றனர். சட்டப்படி நாம் செய்கின்ற கொள்கைப் பூர்வமான செயல்களில் யார்தான் தலையிட முடியும்?

மாட்டுக்கறி விருந்து சட்டப்படி குற்றம் அல்லவே! தாலி அகற்றலும் அந்த வகையைச் சார்ந்தது தானே? இதில் என்ன குற்றத்தைக் கண்டுபிடித்து விட்டன இந்தக் கொழுக்கட்டைகள்.

உண்மையைச் சொல்ல வேண்டுமானால், வெகு மக்களின் உணவுப் பிரச்சினையில் தலையிடுபவர்கள் தான், அவர்கள் யாராக இருந்தாலும் குற்றவாளிகள் - சட்ட விரோதச் செயலில் ஈடுபடுபவர்கள்.

மாட்டுக் கறியில்கூட பசு மாட்டுக் கறியை மட்டும்தான் சாப்பிடக் கூடாதாம். எருமை மாட்டுக் கறியைச் சாப்பிடலாமாம்! அதற்கு ஆட்சேபணை கிடையாதாம்! - தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள் கூறியதுபோல அதிலும்கூட எருமை கருப்பு என்பதால் அலட்சியப்படுத்துகிறார்கள் போலும்! அதிலும் வர்ண தர்மம்தான் போலும்!

மத்தியில் உள்ள ஆட்சி என்னதான் மூடி மறைத்தாலும், அது அப்பட்டமான இந்துத்துவா ஆட்சி என்பதை இதன் மூலம் காட்டிக் கொண்டு விட்டார்கள்; பசு புனிதம் என்று இந்து மதம் சொல்லுவதாக அவர்கள் கூறுகிறார்கள்; அதன் மூலம் பசு உணவுப் பிரச் சினையில் அவர்கள் இந்துத்துவா மத மூக்கை நுழைய விடுகிறார்கள் என்பது அம்பலமாகி விட்டது.

அப்படியே பார்த்தாலும், அவர்களுக்குச் சாட்சி யமாக அவர்களின் இந்து மத சாத்திர நூல்களேகூட ஒத்துழைக்கவில்லை என்பதுதான் பரிதாபம்!

சுருதிகளிலும் ஸ்மிருதிகளிலும் யாகத் தீயில் பசுவைப் போட்டுப் பொசுக்கி, வயிறு முட்ட சாப்பிட்டு, மது குடித்து உண்டாட்டில் திளைத்துக் கிடந்தவர்கள் தான் இந்த ஆரியப் பார்ப்பனர்கள் என்பதற்கு அடுக் கடுக்கான ஆதாரக் குவியல்கள் வண்டி வண்டியாக இறைந்து கிடக்கின்றனவே!

இவர்களின் சங்கராச்சாரியாரே பசுவதையை சாஸ்திர ரீதியாக அங்கீகரித்துள்ளாரே! பார்ப்பனர் பசு மாமிசம் சாப்பிட்டதற்குச் சான்று கூறுகிறாரே - பின் எந்த யோக்கியதையில் கோட்டான்கள்போல சிலர் குதிக்கிறார்களோ தெரியவில்லை. (தெய்வத்தின் குரல் இரண்டாம் பகுதி காண்க)

அனாமதேயங்களுக்கெல்லாம் வெளிச்சம் கொடுக்கிற பொறுப்பற்ற ஏடுகள் நாட்டில் இருப்பதால் சிலர் முண்டாதட்டிப் பார்க்கிறார்கள்.

இவர்கள் இப்படி எல்லாம் பேசப் பேச, புகார்கள் கொடுக்க, கொடுக்க 14ஆம் தேதி நிகழ்ச்சி மிகவும் களைகட்டப் போகிறது. எளிமையாக நடத்த இருந்த நிகழ்வுகளை பொலிவு மிக்கதாக, மக்கள் வெள்ளம் திரண்டு வரும் அரும்பெரும் நிகழ்ச்சிகளாக உருமாற்றி விட்டனர். அந்த வகையில் அவர்களுக்கு நன்றி கூடக் கூறத்தயார்!

மாட்டுக் கறிப் பிரச்சினை ஒரு பக்கம் என்றால் அடிமைச் சின்னமாம் தாலி என்ற தளையை அகற்றிக் கொள்ள முன் வருவதும் அவரவர்களின் தனி உரிமையைப் பொறுத்ததேயாகும்.
இன்னும் சொல்லப் போனால் சட்ட அங்கீகாரம் பெற்ற சுயமரியாதைத் திருமணத்தில் தாலி கட்டாயம் ஆக்கப்படவில்லையே!

அப்படி இருக்கும் பொழுது இதில் மூன்றாவது பேர் வழிகள் தலையிட உரிமையும் இல்லை - அதற்கான சட்டமும் அவர்கள் வசம் கிடையாதே!

தமிழ்நாட்டில்கூட வைதிகத் திருமணங்களில் எல்லா மாவட்டங்களிலும் தாலி கட்டுகிறார்களா என்றால் அதுதான் கிடையாது. தாலி என்றால் என்ன என்றே பல மாவட்டக்காரர்களுக்குத் தெரியாதே!

தாலி அணியும் பெண்கள்கூட சிந்தித்துப் பார்க்க வேண்டும்; கணவன் மரணம் அடைந்து விட்டால் பெண்ணை அவமானப்படுத்துவதற்காகவே தாலி அறுப்பு என்னும் அவமானச் சடங்கை நடத்து கிறார்கள்.

பெண்களின் வளையல்களை உடைத்து, நெற்றியில் குங்குமம் வைத்திருந்தால் அதனை அழித்து, கூந்தலில் பூ வைத்திருந்தால், அதனையும் பிடுங்கித் தூக்கி எறிந்து, அந்தப் பெண்ணை விதவை என்று கரும்புள்ளி செம்புள்ளி குத்தத்தானே இந்தச் சடங்கை வைத் திருக்கிறார்கள்?

அதே நேரத்தில் மனைவியை இழந்தால் அந்த ஆணுக்கு எந்த சடங்கை வைத்துள்ளனர்?

மனைவி செத்து அவரின் கல்லறையின் ஈரம் உலருவதற்கு முன்னதாகவே இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள அகலமான கதவைத் திறந்து வைத்திருப்பதுதானே இந்த அர்த்தம் கெட்ட இந்து மதம்? இல்லை என்று மறுக்க முடியுமா?

கணவன் இறந்தாலும், அந்தப் பெண்ணின் வாழ்வு மரணம் அடைந்து விடக் கூடாது; இன்னொரு வாழ்வும் இருக்கிறது என்ற துணிச்சலைக் கொடுக்கும் சுய மரியாதை உணர்வை ஊட்டுவதுதான் தாலி தேவை யில்லை என்ற கருத்து என்பதை - சிந்தித்துப் பார்த்தால் தெளிவடையலாமே!

அடிமைத்தளையை அகற்றிட விரும்பும் அருமைமிகு பெண் குலத்தை அன்புடன் வரவேற்கிறது பெரியார் திடல்!

Read more: http://viduthalai.in/page-2/99076.html#ixzz3WLHW0ckH

தமிழ் ஓவியா said...

மாட்டுக்கறி விருந்து நமக்குப் புதிதல்ல


- பேராசிரியர் பூ.சி.இளங்கோவன்
கடலூர் மண்டல செயலாளர், திராவிடர் கழகம்


தந்தை பெரியார் 1971-ஆம் ஆண்டு சேலத்தில் நடத்திய மாபெரும் மாநா டும், மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வல மும் நம் இயக்க வரலாற்றில் மிக முக்கிய நிகழ்வாகும். அம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட பல தீர்மானங்களில் பெண்ணடிமையை ஒழிக்கும், பெண் விரும்பினால் தனக்கு மண விலக்கு பெறவும், மறுமணம் செய்து கொள்ள வும் உரிமை வேண்டும் என்ற கருத் தமைந்த மய்யமாக வைத்த தீர்மானம் குறிப்பிடத்தக்கதாகும் ஆனால், இத்தீர்மானத்தை பார்ப்பன ஏடுகள் யார் வேண்டுமானலும் யார் மனைவி யையும் அடித்துக்கொண்டு போகலாம் என்று திரித்து எழுதி புழுதிவாரித் தூற்றினர். நம் கழகச் சார்பில் இந்து ஏட்டின் மீது வழக்குத் தொடுக்கப் பட்டது. வழக்கு தொடர்ந்து நடை பெற்றது, நமது ஆசிரியரே வாதாடி னார். இந்து ஏடு நிபந்தனையற்ற மன்னிப் புக்கோரியது வழக்கு முடிவுக்கு வந்தது.

அதுபோலவே இன்று பார்ப்பன ஏடுகள் நம் கழகத்தின் மீது புழுதிவாரித் தூற்றி தங்கள் வயிற்றெரிச்சலைக் காட்ட தொடங்கிவிட்டன. வருகிற ஏப்ரல்-14 ஆம் நாள் சென்னை பெரியார் திடலில் நடைபெறவுள்ள மாட்டுக்கறி விருந் தையும், பெண்களின் அடிமைச் சின்ன மான தாலியைத் தாங்களே விருப்புக் கொண்டு அகற்றும் நிகழ்ச்சியைத் தூற்றத் தொடங்கிவிட்டன. ஏதோ தெருவில் போகும் பெண்களின் தாலியை திராவிடர் கழகத்தினர் அறுப்பார்கள் என்கிற உணர்வு வரும்படியான நாணயமற்ற பிரச்சாரத்தினைத் தொடங்கி விட்டனர். இது போன்ற அறிவு நாணயமற்ற பிரச்சாரத்திற்கு கழகத்துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் தினமணியில் விளக்கம் கொடுத்துள்ளார்.

24.2.2015 அன்று சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் தலைமை உரையாற்றி விளக்கமளித்த தமிழர் தலைவர் ஆசிரியர் யார் தாலியை அகற்ற முன்வந்தாலும், யாருடைய கட்டாயத்திற்காகச் செய்கிறீர்களா? என்று கேட்டு பிறகு தான் அகற்ற அனு மதிப்பேன் என்று விளக்கமளித்தார்கள். இவ்விளக்கத்திற்குப் பின்பும், மதவெறி யர்களின் கூப்பாடு, பூச்சாண்டி தந்தை பெரியாரின் வழியில் ஆசிரியர் தடம் மாறாமல் செல்கிறார், என்பதைத்தான் காட்டுகிறது.

ஏதோ, மாட்டுக்கறி உண்ணும் நிகழ்ச்சி இப்பொழுதுதான் முதன் முதலாக நடைபெறுவதுபோல மத வெறியர்கள் கூச்சலிடுகின்றனர். 1970-ஆம் ஆண்டிலேயே தந்தை பெரியார் இந்நிகழ்ச்சியை நடத்தினார். இந்நிகழ்ச் சியில் ஆந்திராவைச் சேர்ந்த கோரா போன்ற அறிஞர்கள் கலந்து கொண் டனர். பிறகு தமிழகம் முழுவதும் இந்நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இச் செய்திகள் மதவெறி என்ற கண்ணாடி அணிந்துள்ள சங்பரிவார் அமைப்புக் களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

14.4.2015 அன்று சென்னை பெரியார் திடலில் நடைபெற உள்ள நிகழ்ச்சி, தந்தை பெரியார் வழியில் தடம் மாறா மல் ஆசிரியர் செல்கிறார், கழகத்தை வழி நடத்துகிறார், என்பதற்கான எடுத்துக்காட்டாகு

Read more: http://viduthalai.in/page-2/99077.html#ixzz3WLHz4Y79

தமிழ் ஓவியா said...

மோடியின் செல்வாக்கு சரிவும், மதசார்பற்ற அமைப்புகளின் கடமையும்

- குடந்தை கருணா

மத்தியில் மோடி ஆட்சி அமைந்து முன்னூறு நாட்கள் ஆனதன் அடிப்படையில் மோடி ஆட்சி பற்றி மக்களிடம் எத்தகைய எண்ணம் உள்ளது என இந்தியா டுடே ஆங்கில நாளிதழ் மற்றும் இன்னொரு தனியார் நிறுவனம் சிசேரோ மூட் ஆப் தி நேஷன் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பில், மோடி ஆட்சியில் மத வாத சக்திகளுக்கு ஊக்கம் அளித்து கர் வாப்சி போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டதன் காரணமாக மோடியின் தனிப்பட்ட செல்வாக்கே சரிந்துள்ளது என எடுத்துக்காட்டி யுள்ளது.

கடந்த ஆண்டு நடந்த நாடாளு மன்றத் தேர்தலின்போது நாடு முழுவதும் மோடி அலை வீசியது. தமிழ்நாடு, மேற்கு வங்காளம் தவிர, அனைத்து மாநிலங்களிலும் பாஜக அமோக வெற்றி பெற்று மிகப் பெரும் பலத்துடன் ஆட் சியைப் பிடித்தது.

இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையில் பாஜக ஆட்சிக்கு வந்து 10 மாதங்கள் நிறைவடைந்து விட்ட நிலையில் மோடியின் செல் வாக்கு எப்படி? அரசின் செயல் பாடுகள் எப்படி உள்ளது? என்பது குறித்து பிரபல ஆங்கில வார இதழ் ஒன்று மக்களிடம் கருத்து கணிப்பு நடத்தியது. அதன் முடிவு இன்று வெளியிடப்பட்டது. அதில் கடந்த 300 நாள் ஆட்சியில் பிரதமர் மோடி யின் செல்வாக்கு சரிந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் கருத்து கணிப்பு நடத்தியபோது மோடியின் செயல்பாடு பிரமாதம் என்று 11 சதவீதம் பேர் தெரிவித்து இருந்தனர். தற்போது 22 சதவீதம் பேர் பிரமாதம் என்று தெரிவித்து உள்ளனர். அதே போல் சிறப்பான ஆட்சி என்று கடந்த ஆகஸ்ட் மாதம் 51 சதவீதம் பேர் கூறியிருந் தனர். தற்போது அது 38 சதவீதமாகக் குறைந்துள்ளது.

ஆட்சி சராசரியாக உள்ளது என்று முன்பு 28 சதவீதம் பேர் தெரிவித்து இருந்தனர். இப்போது அது 26 சதவீதமாகக் குறைந்துள்ளது.

மிகவும் மோசம் என்று ஆகஸ்ட் மாதம் 6 சதவீதம் பேர் கருத்து தெரிவித்தனர். தற்போது மிகவும் மோசம் என்று 11 சதவீதம் பேர் கூறியுள்ளனர்.

இதே போல் கடந்த 6 மாதத்தில் வாழ்க்கை தரம் மேம்பட்டுள்ளதா? என்று கேட்ட போது, அதுவும் கடந்த ஆண்டைக் காட்டிலும் 1 சதவீதம் பேர் குறைந்து இருப்பதாக தெரிவித்து உள்ளனர்.

இப்போதைய சூழ்நிலையில் நாடாளுமன்றத் தேர்தல் நடத்தி னால் பாஜகவுக்கு ஏற்கெனவே கிடைத்த தொகுதிகளில் 27 தொகுதிகள் குறையும் என்றும், அதே சமயம் காங்கிரசுக்கு 9 தொகுதிகள் கூடுதலாகக் கிடைக்கும் என தெரிய வந்துள்ளது.

மோடி அரசில் பாதுகாப்பாக உணர்கிறீர்களா? என்று கேட்கப் பட்டதற்கு கடந்த ஆகஸ்ட் மாதம் 78 சதவீதம் பேர் ஆம் என்று தெரி வித்தனர். தற்போது அது 61 சதவீத மாகக் குறைந்துள்ளது.

பாதுகாப்பு இல்லை என்று ஏற்கனவே 19 சதவீதம் பேர் தெரி வித்து இருந்தனர். அது 26 சதவீத மாக அதிகரித்து உள்ளது.

வளர்ச்சி திட்டம் தொடர்பாக முன்பு 70 சதவீதம் ஆதரவு இருந்தது. இப்போது 47 சதவீதமாகக் குறைந் துள்ளது. மதரீதியான விமர்சனங்கள் முன்பு 21 சதவீதமாக இருந்தது. இப் போது 39 சதவீதமாக அதிகரித் துள்ளது. சிறந்த முதல்வர் யார்? என்று கேள்விக்கு நாடு முழுவதும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 17 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்து உள்ளனர். டெல்லியில் மட்டும் 56 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

நவீன் பட்நாயக்குக்கு நாடு முழுவதும் 5 சதவீதம் பேரும், சொந்த மாநிலத்தில் 69 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். மதரீதி யான விமர்சனங்கள், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலையீடு, விலைவாசி உயர்வு ஆகியவற்றை பெரிய பிரச்னையாக பெரும்பாலானவர்கள் கருதுகிறார்கள்.

இவற்றில் தலை யிட்டு தீர்வு காண பிரதமர் மோடி முயலாமல் இருப்பதே, பிரதமர் மோடியின் செல்வாக்கு சரிவுக்கு காரணம் என்று அந்த கருத்துக் கணிப்பு கூறுகிறது.

மோடியின் அணுகுமுறை, இப் போது உள்ளதுபோல் தொடர்ந்து மதவாத சக்திகளுக்கு ஊக்கம் அளிக்கும் போக்கு நீடித்தால்,பீகார் மற்றும் உத்தரபிரதேசம் மாநிலத்தில் வர இருக்கும் சட்ட மன்ற தேர்தலில், பாஜகவிற்கு மக்கள் தக்க பாடம் அளிப் பார்கள் என்பதற்கான முன்னோட் டமே இந்த கருத்துக் கணிப்பு.

மக்களின் இந்த மன ஓட்டத்தை, மதசார்பற்ற அமைப்புகள் ஒன்று பட்டு பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இத்தகைய நிலையில், தமிழ் நாட்டில் திராவிடர் கழகத் தால் மாநிலம் முழுவதும் நடை பெற்று வரும் திராவிடர் விழிப் புணர்வு மாநாடும், ஏப்ரல் 14-ஆம் தேதி பாபாசாகிப் அம்பேத்கரின் 125-ஆம் ஆண்டு பிறந்த நாளில் நடை பெற உள்ள தாலி அகற்றல் மற்றும் மாட்டிறைச்சி விருந்து விழாவும் பாசிச சக்திகளை தமிழ் நாட்டில் தடுத்து நிறுத்திடும் கேடயம் என்பதையும் இங்குள்ள அனைத்து மதசார்பற்ற அமைப்புகளும் புரிந்து, அதற்கான முழு ஒத்துழைப்பையும் தர வேண்டியது சமூகக் கடமை யாகும்

Read more: http://viduthalai.in/page-2/99081.html#ixzz3WLIIIgRv

தமிழ் ஓவியா said...

மூடநம்பிக்கைளுக்கு எதிராக புரட்சி வெடிக்க வேண்டிய காலம் ஆரம்பித்துவிட்டது

இந்திய பகுத்தறிவாளர் சங்கத் தலைவர் டாக்டர் நரேந்திர நாயக் அறைகூவல்

புதுடில்லி, ஏப்.4_ மக்களிடையே அறிவியல் மனப்பான்மையை வளர்த்தெடுப்பது மிகவும் முக்கியமானத் தேவையாகும். மதக்கருத்துகள் குறித்து கேள்வி எதுவும் எழுப்பக்கூடாது என்றும், அப்படி கூறப்படும் எல்லாவற்றையும் அப்படியே ஏற்க வேண்டும் என்றும் நிர்ப்பந்தங்களை ஏற்படுத்தி வருகிறார்கள். மூடநம்பிக்கைளுக்கு எதிராக வெடிக்க வேண்டிய புரட்சிக்கான காலமாக இன்று உள்ளது என்று இந்திய பகுத்தறிவாளர்கள் சங்கத்தின் தலைவர் டாக்டர் நரேந்திர நாயக் கூறியுள்ளார்.

இந்திய பகுத்தறிவாளர்கள் சங்கத்தின் உறுப்பினர்களுக்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப தேசியக்குழுவின்சார்பில் நடைபெற்ற அற்புதங்கள் குறித்த அறிவியல் விளக்கங்கள் பயிற்சிப்பட்டறையில் பேசும்போது டாக்டர் நரேந்திர நாயக் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

நீலகண்டநகரில் உள்ள சிசு வித்யாமந்திர் பள்ளியில் அய்ந்து நாள்கள் நடைபெற்ற அறிவியல் பயிற்சி முகாமில் பல்வேறு பள்ளிகளிலிருந்தும் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.

அற்புதங்களின் பின்னணியில் அறிவியல் உள்ளது என்பதை நரேந்திர நாயக் இப்பயிற்சி முகாமில் விளக்கினார்.

அறிவியல் விளக்க பயிற்சி முகாம்குறித்து டாக்டர் நரேந்திர நாயக் கூறும்போது, மக்களிடையே அறிவியல் மனப்பான்மையை வளர்க்க வேண்டும் என்று நம் அரசமைப்புச் சட்டத்தில் 51 எச் பிரிவு ஒவ்வொரு குடிமகனின் அடிப்படைக் கடமை என்று கூறுகிறது.

51(h) To develop the scientific temper, humanism and the spirit of inquiry and reform.

மதங்களை உயர்த்திப்பிடிப்போரின் அற்புதங்கள் என்று சொல்லப்படுவதன் பின்னணியில் இருக்கும் தந்திரங்களை மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.

அதற்கான விழிப்புணர்வை மக்கள் பெற வேண்டும் என்பதற்காக முதலில் ஆசிரியர்களுக்கு இந்த பயிற்சி முகாம் மூலம் அளிக்கப்படுகிறது. இங்கு பயிற்சி பெறும் ஆசிரியர்கள் சமுதாய அளவில் மற்றவர்களுக்கும் விழிப்புணர்வை பரப்புவார்கள் அல்லவா?கஞ்சம் மாவட்டத்தில் கதா வித்யா என்கிற முறையில் இந்திய சமூகத்தில் இன்னமும் எண் ணிலடங்காத அளவில் ஏராளமான மூட நம்பிக் கைகள் இருந்துவருகின்றன. கஞ்சம் மாவட்டத்தில் உள்ள கிராமப்பகுதிகளில் தாந்திரீகர்கள் கதா வித்யா முறையில் திருடர்கள் அல்லது மந்திரவாதிகள் என்பவர்களை மக்களிடத்தில் களமிறக்கியுள்ளனர்.

இதற்கு ஒரே தீர்வு கண்மூடித்தனமான நம்பிக்கை களை விலக்கி, விழிப்புணர்வை ஏற்படுத்துவதுதான். கடவுளின் பெயராலும், அற்புதங்கள் என்கிற பெயராலும் மதவாதிகள் என்ன வித்தைகளை எல்லாம் செய்துவருகிறார்கள் என்பதுகுறித்து மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும். மூட நம்பிக்கைளுக்கு எதிரான இந்த புரட்சிகரமான செயலில் ஒவ்வொரு வரின் பங்களிப்பும் இருக்க வேண்டும். வெறும் சட்டங்களினால் மட்டும் மூடநம்பிக்கை களை நம்பக்கூடாது என்று மக்களிடம் சொல்லிக் கொண்டிருந்தால் போதாது. எங்களோடு இணைந்து போராடுவதற்கு ஒவ்வொருவரும் முன்வரவேண்டும் என்று நரேந்திர நாயக் கூறினார்.

இப்போது நரேந்திர நாயக் செய்துவரும் மூடநம்பிக்கைகளுக்குஎதிரான விழிப்புணர்வுப் பணிகளை தேசிய குழந்தைகள் அறிவியல் அமைப்பின் தலைவர் டாக்டர் ராணாசிங் நிர்மன்லெண்டு ராய் தொடங்கினார். பகுத்தறிவாளர்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை கிராமங்களிலும், பள்ளிகளிலும் நடத்த வேண்டும்.

டாக்டர் ராய் குறிப்பிடும்போது, இதுபோன்ற மூடநம்பிக்கைகள் மக்களின் வாழ்வைமட்டும் பாதிக்கவில்லை. மாறாக, மக்களின் உடல்நலப் பிரச்சினைகளிலும் பாதிப்பை ஏற்படுத்து கின்றன. இன்றுவரை இதுபோன்ற பயிற்சி முகாம்களை 40 மாவட்டங்களில் நடத்திவருகிறோம். மேலும் பல மாவட்டங்களில் நடத்தவும் திட்டமிட்டுவருகிறோம் என்றார்.

Read more: http://viduthalai.in/page-3/99106.html#ixzz3WLIfXlR7

தமிழ் ஓவியா said...

கருத்து

கேரளாவின் அதிரபள்ளியில் நீர்மின் நிலையம் அமைக்க மத்திய அரசு அனுமதி அளிக்கக்-கூடாது. இதனால் சுற்றுச்-சூழலுக்குப் பெரும் கேடு ஏற்படும். இந்த விசயத்தில் முடிவு எடுப்பதற்கு முன் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் நீர்மின் நிலையம் அமைக்கப் போவதாகக் கூறப்படும் இடத்துக்கு வந்து நிலைமையை ஆய்வு செய்ய வேண்டும்.

- ஜெய்ராம் ரமேஷ், காங்கிரஸ் மூத்த தலைவர்.

குழந்தைத் தொழிலாளர் முறையை முற்றிலும் ஒழிக்கக்-கூடிய சட்டம் நம் நாட்டில் இப்போது இல்லை. தற்போது உள்ள சட்டம் 14 வயது வரை உள்ள குழந்தைகள் அபாயகரம் இல்லாத தொழில்களில் ஈடுபடுத்தப்படுவதை அனுமதிக்கிறது. கல்வி உரிமைச் சட்டம் மற்றும் சிறுவர் நீதிச் சட்டத்திற்கு முரண்பாடாக குழந்தைத் தொழிலாளர் சட்டம் உள்ளது.

- கைலாஷ் சத்யார்த்தி, நோபல் பரிசு பெற்ற இந்தியர்.

பெண்கள், குழந்தைகள் நலனுக்காக அரசு ஒதுக்கும் நிதியை அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் முறையாகச் செலவிடாமல் தங்கள் நலனுக்காகப் பயன்படுத்திக் கொள்வது பெரும் கவலையளிக்கும் விஷயம்.

- மேனகா காந்தி, மத்திய அமைச்சர்

நாட்டின் முன்னேற்றத்தில் பல்கலைக்கழகங்களுக்குப் பெரும்பங்கு உண்டு. ஒவ்வொரு பல்கலையும் குறைந்தபட்சம் 5 கிராமங்களையாவது தத்தெடுக்க வேண்டும். அவற்றை முன்மாதிரி கிராமங்களாக மாற்ற வேண்டும். ஜனநாயக நாட்டின் உரிமைகளைப் பெறும் நாம் நம் கடமைகளையும் சரிவர ஆற்ற வேண்டும். மாணவர்கள் அரசியலில் ஈடுபட வேண்டும்.

- பிரணாப் முகர்ஜி, இந்தியக் குடியரசுத் தலைவர்.


உணவு தானியத்தில் தன்னிறைவு பெற்ற நாடாகவும் ஏற்றுமதி செய்யக்கூடிய அளவிலும் இந்தியா வளர்ந்துள்ளது. இருந்தபோதும் குறைந்த நீர் இருப்பு, நிலம், பருவநிலை மாற்றம் உள்ளிட்ட கடுமையான சவால்களையும் இந்தியா சந்தித்து வருகிறது. உலக அளவில் 17 விழுக்காடு மக்கள் தொகையையும் 15 விழுக்காடு கால்நடைகளையும் கொண்டுள்ள இந்தியாவில் உற்பத்திக்குப் பிந்தைய இழப்பைக் குறைக்க வேண்டிய கட்டாயமும் உள்ளது.

- எஸ்.அய்யப்பன், இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத் தலைமை இயக்குநர்.

தமிழ் ஓவியா said...

லீயும் கட்டாய ராணுவமும்

ஜூரோங்கில் உள்ள பாசிர் லாபா (PASIR LABA CAMP) ராணுவ முகாம்.கடந்த 8 மாதங்களில் சிறப்புப் பயிற்சி பெற்றுத் தேர்ந்த இளைய வீரர்களுக்கு, சிறப்பு அணிவகுப்பு மரியாதை (PARADE) நடந்தது. அதில் என் பேரன் ஆனந்தும் ஒரு இளைய பட்டாளத்துக்காரன். அரசின் அழைப் பின் பேரில், நான்,என் மனைவி, மகன் ஸ்ரீதர், மருமகள் லதா ஆகியோர் அதில் பெருமையுடன் கலந்து கொண்டோம்.

ஆயிரமாயிரம் இளைஞர்கள் மிடுக்காக அணி வகுத்துச் சென்றதும், ஒழுங்குமுறை தவறாமல் ஒருமித்த குரலில் நாட்டுறுதி எடுத்துக் கொண் டதும், வந்தவர்களுக்கெல்லாம் உத விக்கரம் நீட்டியதும்....நம் குழந்தைகளா இவர்கள் என வியந்தேன்.

1970களில் அன்றைய பிரதமர் லீ, கட்டாய ராணுவ சேவையைக் கொண்டு வந்தபோது, நியாயமான எதிர்ப்பை எதிர்நோக்கினார். ஈராண்டு காலக் கல்லூரிப் படிப்பைப் போக்கி, ராணுவப் பயிற்சி பெற வேண்டிய தில்லை என்று பெற்றோர்கள் வாதாடி னர். சின்ன ஊர் சிங்கப்பூருக்கு ராணு வம் தேவையா என்று கேட்டவர்கள் இருந்தனர்.

ஆனால் அமரர் லீ எதற்கும் மனம் தளரவில்லை. கல்லூரி செல்வதற்கு முன் இன்றைய மாணவர்களுக்கு சில ஒழுங்குமுறைகள் தேவை.அவற்றை போதிக்கக் கூடியது ராணுவப் பயிற்சி தான் என்றார். சின்ன நாடாக இருப் பதால், நமக்கு பெரிய ராணுவ பலம் தேவை என்றும் கூறினார்.

ஈராண் டுகள், அவரவர் படிப்புத் தகுதிக்கேற்ப ராணுவப் பயிற்சிகளைப் பெறுகின் றனர்.. ராணுவப் பயிற்சி முடித்த இளைஞர்கள் மட்டுமே கல்லூரிகளில் அனுமதிக்கப் படுகின்றனர். படிப்பு முடிந்ததும் 10 ஆண்டுகளுக்கு ஆண்டு தோறும் ஒரு சில வாரங்களுக்கு பயிற்சி மேற்கொள்வதும் அவசியமாக்கப் பட்டது..

உயர்நிலைக் கல்வி முடித்த மாணவர்கள் , ஒழுக்கம் ஒழுங்கு முறைகளைக் கற்று பின்னர் சமுதா யத்தில் நடமாடுவதை நாம் இப்போது காண்கிறோம். அதை அவர் அன்றே உறுதிப் படுத்தினார். கட்டாய ராணுவப் பயிற்சியைத் தவிர்ப்பவர்கள், எந்தக் காரணத்திற்காகவும் சிங்கப்பூரில் நுழைய முடியாத கடும் சட்டம் உள்ளது. - ஏ.பி. இராமன்

Read more: http://www.viduthalai.in/page3/99092.html#ixzz3WLVWeaYr

தமிழ் ஓவியா said...

குஜராத்தில் நீர்க் கொள்ளை!

கோகோ கோலா நிறுவனம் குஜராத் மாநிலத்தின் ஸனன்த் என்ற பகுதியில் 500 கோடி மதிப்பில் தொடங்கியுள்ள பாட்டில் தயாரிக்கும் தொழிற்சாலைக்கு, சர்தார் சரோவர் அணையிலிருந்து நாளொன்றுக்கு முப்பது இலட்சம் லிட்டர் தண்ணீரை வழங்க ஒப்புக் கொண்டிருப்பதற்கு காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் அஹ்மத் படேல் கவலை தெரிவித்துள்ளார்.

குஜராத் முதல்வர் ஆனந்திபென் படேலுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், மாநிலத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு முன் னுரிமை அளித்துத் தண்ணீரை வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

சர்தார் சரோவர் அணைத் திட்டம், வறட்சி நிலவும் வடகுஜராத், சௌ ராஷ்ட்ரா, கட்ச் ஆகிய பகுதிகளுக்குத் தண்ணீரை வழங்குவதற்காகவே திட்ட மிடப்பட்டிருந்தது. அப்படியிருக்க, கோகோகோலா போன்ற பன்னாட்டுத் தனியார் நிறுவனங்களுக்கு நாளொன் றுக்கு முப்பது இலட்சம் லிட்டர் தண்ணீரை வழங்க அரசு எடுத்துள்ள முடிவு வியப்பைத் தருகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

குஜராத்தின் வளர்ச்சி மாடல் என்ன என்பது அஹ்மத் படேலுக்குத் தெரி யாது போலும்.

Read more: http://www.viduthalai.in/page8/99112.html#ixzz3WLWbY95H

தமிழ் ஓவியா said...

ஆதாரப்பூர்வ மறுப்பு

அவதூறு செய்யத் துடிக்கும் ஆரியம்

- கி.வீரமணி

அம்பேத்கரைப் போய் அரசமைப்புச் சட்ட மேதை; அரசமைப்புச் சட்டக் கர்த்தா என்று சொல்கின்றார்களே; இந்திய அரசமைப்புச் சட்டத்தை அவர்தான் உருவாக்கினாரா?

அவர் ஒன்றும் இந்திய அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கவில்லையே. அவர் என்ன செய்தார்? ஒன்றும் செய்யவில்லையே என்று சொன்னார்கள்.

நண்பர்களே! இதற்குப் பதில் ஆதாரத்தோடு சுட்டிக் காட்டக் கடமைப்பட்டிருக்கின்றேன்.

அம்பேத்கர் அவர்கள் அவருடைய உரையில் சுட்டிக் காட்டியிருக்கின்றார். அவர் எவ்வளவு பெரிய பேருள்ளம் படைத்தவர் என்பதை இதன்மூலம் நீங்கள் தெரிந்து-கொள்ளலாம்.

அவருடைய டிபேட்ஸ் எல்லா வால்யூம்-களும் என்னிடத்திலே இருக்கின்றன. அதிலே அவர் புரிந்த வாதங்களிலேயே மிகத் தெளிவாகச் சொல்லியிருக்கின்றார்.
அம்பேத்கர், அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர், கே.எம். முன்ஷி, கெய்த்தான், முகமது சாதுல்லா, இப்படி அரசமைப்புச் சட்டத்தை உருவாக்க ஏழு பேரைப் போடுகிறார்கள். அதிலே ஒருவர் அமெரிக்காவில் இறந்து விடுகின்றார். இன்னொருவர் விலகி விடுகிறார். ஆக, அந்த இடத்திற்கு டி.டி.கிருஷ்ணமாச்சாரியார் போடப்படுகின்றார். ஆகக் கடைசியில் அது ஆறு பேரோடு நிற்கின்றது.

அரசமைப்புச் சட்ட வரைவுக் குழுவிலே கடைசியாக 6 பேர் இருந்தார்கள். அந்த 6 பேரில் டி.டி. கிருஷ்ணமாச்சாரி ஒருவர்; டி.டி.கிருஷ்ணமாச்சாரியாருடைய உரையோ என்னிடத்தில் இருக்கின்றது. இதுவே மிகப்பெரிய ஆதாரமாகும்.

டி.டி.கிருஷ்ணமாச்-சாரியார் என்ன சொன்னார் என்பதை உங்களுக்கு எடுத்துச் சொல்கின்றேன்.

நாங்கள் இத்துணைபேர் இருந்தாலும், எங்களால் இந்தப் பணிகளைச் சரிவரச் செய்ய முடியவில்லை. இதனை முழுமையாக அரசமைப்புச் சட்டத்தின் இத்துணைத் திருத்தங்களையும், இத்துணை வரைவுகளையும் செய்த பெருமை அம்பேத்கர் அவர்களையே சாரும் என்று மிகத் தெளிவாகச் சொன்னார்.

ஆனால், அம்பேத்கர் என்ன சொல்கின்றார்? அதைக் கவனியுங்கள். நான்தான் இதை எல்லாம் செய்தேன் என்று என்னைப் பாராட்டாதீர்கள். எனக்கு மிகப்பெரிய துணையாக இருந்தது பி.என். ராவ் என்று சொல்லுகின்றார்.

அவர்தான் அரசமைப்புச் சட்ட ஆலோசகர். அவருடைய அறிவுத்துணைதான் எனக்கு ரொம்ப அளவுக்குப் பயன்பட்டது. அவருக்கு நான் மிகுந்த நன்றி உடையவனாக இருப்பேன் என்று சொல்லுகின்றார்.

அல்லாடி கிருஷ்ணசாமி அய்யரைச் சொல்கின்றார். கடைசியில் டி.டி. கிருஷ்ணமாச்சாரியைச் சொல்லுகின்றார். தான் மட்டுமே இதை எல்லாம் செய்யவில்லை என்று மற்றவர்-களையும் பெருமைப்பட உயர்த்திச் சொல்லுகின்றார்.

நூல் : அம்பேத்கர்பற்றிய அருண்ஷோரி நூலுக்கு மறுப்பு