Search This Blog

6.4.15

ஜோசியனை ஜெயிலில் போட வேண்டும்-பெரியார்

ஜோசியனை ஜெயிலில் போட வேண்டும்


பேரன்புள்ள தாய்மார்களே! தோழர்களே! இன்றைய தினம் நாம் எல்லோரும் டாக்டர் மனோகரன் - கஸ்தூரி இவர்களின் வாழ்க்கைத் துணை ஒப்பந்த நிகழ்ச்சி குறித்து இங்குக் கூடி இருக்கின்றோம். இந்நிகழ்ச்சி இதுவரை நம்மிடையே நடைபெற்று வரும் நிகழ்ச்சிகளுக்கு மாறாகவும், அறிவிற்குப் பொருத்தமானதும், மூடநம்பிக்கை அற்றதுமானதுமாகும். இதுவரை நடைபெற்ற முறைகளின் உட்பொருளைப் பற்றி சிறிதும் கருதாமல், அதனால் ஏற்படும் பலனைப் பற்றியும் கவனிக்காமல் தொடர்ந்து பழைய முறையையே பெரும்பாலோர் பின்பற்றி வருகின்றனர்.

பழைய புரோகித முறை என்பது மூன்று தன்மைகளை அடிப்படையாகக் கொண்டது; சிறுபான்மையினர் பலன் அனுபவிக்கவும், பெரும்பான்மையினரை அடிமைகளாக்கி தாங்கள் பாடுபடாமல், உழைக்காமல் வாழ்ந்து கொண்டு வருவதுமாக இருக்கின்றனர்.

முதலாவது காரியமாக ஜாதிப் பிரிவுகளை ஏற்படுத்தி, அதன் காரணமாகத் தங்களை உயர்ந்தவர்களாக்கிக் கொண்டு, அந்த ஜாதிப் பிரிவுகள் கலைந்து விடாமல் இருக்க, இதுபோன்ற சடங்குகளையும் முறைகளையும் ஏற்படுத்திப் பலன் அனுபவித்துக் கொண்டு வருகின்றனர்.

சுயமரியாதைக்காரர்களாகிய நாங்கள் ஜாதியை ஒழிக்க வேண்டுமென்று பாடுபட்டு வருவதில், சமுதாயத் துறைகளில் பலவற்றில் சீர்திருத்தம் செய்வது போல ஜாதியைக் காப்பாற்றுகின்ற திருமணத் துறையிலும் மாற்றம் வேண்டுமென்று கருதி, இம்முறையினை மாற்றி அமைத்து, புது முறையைக் காண வேண்டியதாயிற்று. இதுவரை நடைபெற்று வந்த முறைகள் யாவும்,

1. மக்களை அறிவற்ற மடையராக்குவது;

2. பெண்களை நிரந்தர அடிமைகளாக்குவது;

3. ஜாதி இழிவைக் காப்பது -

ஆகிய மூன்று காரியங்களை அடிப்படையாகக் கொண்டவையே யாகும். 
 நான் பொதுத் தொண்டிற்கு வந்ததற்குக் காரணமே அடிப்படையே,

1. மனிதன் பகுத்தறிவுவாதியாக வேண்டும்.

2. நம் நாட்டில் இருக்கும் பெண்ணடிமை ஓழிக்கப்பட வேண்டும்.

3. மனிதனுக்குள் உள்ள ஏற்றத் தாழ்வுகள் ஒழிக்கப்பட வேண்டும் என்பதாகும்.

ஆகவே தான், இம்முறையிலும் மாற்றம் செய்ய வேண்டியதாயிற்றே தவிர, இதில் வேறு எந்தக் காரியமோ, உட்கருத்தோ இல்லை.

வாழ்த்துரை என்பது மூட நம்பிக்கையில் சார்ந்ததே ஆகும். வாழ்த்துவதாலே நன்மை வரும் என்று நம்புவதானால் தூற்றுதலால் கெடுதல் வரும் என்பதையும் நம்பித்தானே ஆக வேண்டும்? வாழ்த்துதலுக்கு என்ன பலனோ, அதுதான் தூற்றுதலுக்கும் உண்டு. மனிதன் நல்ல மனிதனாக, பெருமையோடு வாழ வேண்டுமென்று சொன்னால், அவன் உலகத்தோடு ஒட்டி வாழ வேண்டும். இதைத் தான் வள்ளுவரும், "உலகத்தோடு ஒட்ட ஒழுகல்" என்ற குறளில் கூறி இருக்கின்றார்.

இன்னும் அவர் "வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் - வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்"

என்று குறிப்பிட்டிருக்கிறார். வள்ளுவர் ஒரு பகுத்தறிவுவாதியாக இருந்தும், மனதறிந்து இரண்டு பொய்களைத் தெரிந்தே கூறி இருக்கிறார். அந்த இரண்டு பொய்கள் வானுரையும் - தெய்வம் என்பதாகும். அவருக்கு வானுலகம் என்பதாக ஒன்றில்லை. தெய்வம் என்பதாக ஒரு பொருள் இல்லை என்பது நன்கு தெரியும். பின் ஏன் அவ்வாறு கூறினார் என்றால், அவர் வாழ்ந்த காலத்தில் உள்ள மக்கள் இவற்றைக் கூறினால் தான் பயந்து நடப்பார்கள் என்று கருதி அவ்வாறு கூறியுள்ளாரே தவிர, அதை நம்பி அவர்கள் அவ்வாறு கூறவில்லை. மனிதன் உலகத்துக்கு ஏற்றபடி வாழ வேண்டுமென்பதே அவரது கருத்தாகும்.

மேல்நாட்டு விஞ்ஞானிகள் பூமியிலிருந்து சூரியன் இருக்கிற வரை வான்மண்டலத்தில் ஆராய்ச்சி நடத்தி வருகின்றார்கள். அவர்கள் எவரும் மத்தியில் ஓர் உலகம் இருக்கிறது என்பதாகவோ, தெய்வங்கள் இருக்கின்றன என்பதாகவோ கூறவில்லை. இவ்வளவு தூரத்தில் சூரியன் இருக்கும் போதே உஷ்ணம் அதிகமாகி மனிதன் மயங்கி விழுகிறான். வீடுகள் தானாகவே தீப்பற்றி எரிந்து போகின்றன. அப்படி இருக்க பூமிக்கும், சூரியனுக்கும் இடையில் எப்படி ஓர் உலகம் இருக்க முடியும்? இருந்தால் எரிந்து சாம்பலாகி இருக்காதா? இதை எல்லாம் சிந்திக்க வேண்டும்.

இன்றைய அரசாங்கம் (தி.மு.க அரசு) சுயமரியாதைத் திருமணங்களை செல்லுபடியாக்கச் சட்டம் கொண்டு வருவதாக இருக்கிறது. "கலப்பு மணம்" (ஜாதி மறுப்பு) செய்து கொள்பவர்களுக்குப் பரிசளிக்கப் போவதாக அறிவித்திருக்கிறது. இவையெல்லாம் வரவேற்க வேண்டியவையே ஆகும்.

இன்னும் இந்த அரசாங்கம் ராகு காலத்தில் கல்யாணம் செய்து கொள்பவர்களுக்கு அரசாங்க உத்தியோகங்களில் முதலில் சலுகைக் கொடுக்க வேண்டும். ராகு காலம் என்பதெல்லாம் பிறருக்குத் தான் சொல்கிறானே தவிர, எவன் தன் வாழ்க்கையில் கடைப்பிடிக்கிறான்? இராகு காலத்தில் நம்பிக்கை உள்ள ஒருவன் ரயில் ராகு காலத்தில் கிளம்புகிறது என்று அதில் பிரயாணம் செய்யாமலிருக்கின்றானா? கோர்ட்டில் அமீனா ராகு காலத்தில் கூப்பிட்டால், 'இப்போது ராகு காலம் வர முடியாது' என்று சொல்கின்றானா? இதற்கெல்லாம் ராகு காலம் பார்க்காதவன் மற்றவற்றிற்கு ஏன் பார்க்க வேண்டுமென்று கேட்கிறேன்? மூட நம்பிக்கை என்பதே பிடிவாதத்தாலே தான் ஆகும். இதெல்லாம் அரசாங்கம் கவலையெடுத்துக் கொள்ளாததால் தானாகும். மூட நம்பிக்கையைக் கொள்கையாகக் கொண்ட அரசாங்கமே இதுவரை ஆட்சியிலிருந்து வந்தாலும், மக்களை அறிவுடையவர்களாக்க வேண்டுமென்ற எண்ணமில்லாமல் மக்களை மடையர்களாக, பகுத்தறிவற்றவர்களாக வைத்திருந்தால் தான் நாங்கள் வாழ முடியும் என்று ஆட்சியினர் கருதி இருந்ததாலும், இதைப் பற்றிய கவலையே இல்லாமலிருந்ததோடு, மூட நம்பிக்கையை மக்களின் இரத்தத்தில் ஊறச் செய்து விட்டனர். அதை உறிஞ்சி எடுத்துப் போக்க வேண்டியிருப்பதால் மக்களுக்குச் சங்கடமாக இருக்கிறது. நம்மைப் பின்பற்றுபவர்கள் இந்த மூட நம்பிக்கையை ஒழிக்க வேண்டுமென்று பாடுபட்டு வருபவர்களே ஆவார்கள்.

மனிதனுக்குச் சொத்துரிமை இருக்கும் வரையும் பெண்கள் அறிவு பெறுகிற வரை, பகுத்தறிவு பெறுகிற வரை தான் இந்தத் திருமணம் இருந்து வரும். அதன் பின் திருமணம் என்ற முறையே இருக்காது. மேல்நாடுகளைப் போல் பெண்களும் ஆண்களும் தாங்கள் விரும்பியவர்களோடு நண்பர்களாகவே வாழ்க்கை நடத்தும் படியான நிலை ஏற்பட்டு விடும். இப்போது நான் இப்படி சொல்வது சிலருக்குச் சங்கடமாக, வியப்பாக இருந்தாலும், இன்னும் சில ஆண்டுகளில் அந்த நிலை வரத்தான் போகிறது. அதைத் தடுக்க யாராலும் முடியாது.

நம் நாடு கடைசி நாடானதால் இப்போது தான் கொஞ்சம் வெளிச்சம் வருகிறது. நாடு இன்னும் நிறைய வளர்ச்சி அடைய வேண்டும். மக்கள் அறிவு பெற வேண்டும். நம் நாட்டில் அறிவாளிகளுக்கு நிறைய பஞ்சம். ஒரு புத்தர், ஒரு வள்ளுவர் இவர்களைத் தவிர, வேறு அறிவாளிகளே தோன்றவில்லையே! தோன்றியவனெல்லாம் முதுகைப் பார்த்துக் கொண்டே, பின்னாலே பார்த்துக் கொண்டே போய் விட்டானே தவிர, தங்களுக்கு முன்னாலுள்ள வருங்காலத்தைப் பற்றிச் சிறிது கூடக் கவலைப்படவில்லை.

நல்ல அரசாங்கமாக இருந்தால் இந்த ஜோசியனை எல்லாம் பிடித்து ஜெயிலில் போட வேண்டும். இது ஒன்றும் அதிசயமில்லை. இப்போது எல்லாம் பிடித்து ஜெயிலில் போடவில்லையா? அதுபோல இவர்களை நேற்று வந்தவன் கமால் பாட்சா, முல்லாக்களை எல்லாம் பிடித்து ஜெயிலில் போட வேண்டும். அப்போது தான் திருந்தும். அதுபோலவே நம் எழுத்துக்களையும் சீர்திருத்தம் செய்ய வேண்டும். இந்த அண்ணாத்துரை ஆட்சி இருந்தால் நிச்சயம் இவை நடக்கும் என்று நம்புகிறேன்.

பழைய பாசி பிடித்த அறிவை விட்டு விட்டுச் சிந்தியுங்கள். பெண்களை எல்லாம் நன்றாகப் படிக்க வையுங்கள். அவர்களை எல்லாம் பகுத்தறிவுவாதிகளாக்குங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்.

----------------------------09.07.1967 அன்று நாகரசம்பட்டியில் நடைபெற்ற திருமண விழாவில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய அறிவுரை."விடுதலை", 20.07.1967)

27 comments:

தமிழ் ஓவியா said...

மாட்டிறைச்சித் தடையால் மிருகக் காட்சி விலங்குகளும் பட்டினி!

பொருளாதார பாதிப்பு - வேலை இழப்பு

எச்சரிக்கிறது லண்டன் கார்டியன் இதழ்

மும்பை, ஏப்.6_ மாட்டிறைச்சித் தடை யால் பொருளாதார இழப்பும் வேலைவாய்ப்புப் பாதிப்பும் ஏற்படும் என்று லண்டன் கார்டியன் இதழ் கூறுகிறது.

மகாராட்டிர மாநிலத் தில் பசுக்களை புனிதம் என்று அறிவிப்பு மாட்டி றைச்சிக்குத் தடை விதிக் கப்பட்டுள்ளதானது முசுலீம்கள், கிறித்தவர்கள் மற்றும் ஏராளமான தொழில்களில் ஈடுபட் டுள்ளவர்கள் ஆகியோ ருக்கு மாட்டிறைச்சித் தடையின்மூலமாக பாதிப் புகளை ஏற்படுத்தியுள்ளது.

நித்தின் தரோட் என்ப வர் உரிய நேரங்களில் மழைப் பொழிவு இன்மை யால் ஏற்பட்ட வருவாய் இழப்பால், தன்னிடம் உள்ள மாடுகளை விற் பனை செய்து கிடைக்கும் பணம், தன் சகோதரியின் திருமணத்தை நடத்த உதவியாக இருக்கும் என்று நினைத்தார். ஆனால், மோடியின் இந்து தேசியவாதக் கட் சியான பா.ஜ.க. ஆளும் இந்தியாவின் மேற்குப் பகுதி மாநிலமான மகாராட்டிர மாநிலத்தில் பசு மாடு மற்றும் எருது, காளைகளைக் கொல்வ தற்குத் தடை விதிக்கப் பட்டுள்ளதன் காரண மாக மாடுகளை உரிய விலை கொடுத்து வாங்கு பவர்களை அவர் தேடுவ தற்கு போராட வேண்டி யுள்ளது.

வேதனையுடன் தரோட் கூறும்போது, இப்போதைக்கு நான் கடன் வாங்குவதைத் தவிர வேறு வழி இல்லை என்கிறார். மும்பையி லிருந்து 370 மைல்கள் தொலைவில் உள்ள அகோலாவில் உள்ள அவர் குடும்பத்தில் உடன் பிறந்தவர்கள் வயதானவர் களாக 5 பேர் உள்ளனர். அவர் வருவாயை மட் டுமே குடும்பம் நம்பியுள் ளது.

மோடியின் பாஜக, இந்துக்களால் வழிபடக் கூடியது, பசுவைப் பாதுகாப்பது என்று கூறிவருவதால், மகாராட் டிர மாநிலத்தில் இறைச் சிக்கூடங்கள் மூடப்பட் டுள்ளன. விவசாயிகள் தங்களிடம் உள்ள விலங் குகளை விற்பனை செய்ய முடியாதவகையில் கட்டுப் பாடுகள் விதிக்கப்பட்டுள் ளன. இந்த நிலை மேலும் மற்ற மாநிலங்களிலும் பரவிவிடும்.

விலங்குகளும் பட்டினி

மும்பை தேசியப் பூங் காவில் உள்ள சிங்கங்கள், புலிகள், சிறுத்தைகள் ஆகிய விலங்குகளின் வழமையான உணவான மாட்டிறைச்சி வழங்கப் படாமல், கோழி, ஆட் டிறைச்சி உணவாக வழங்கப்படுகிறது.

இறைச்சிக்கூடங்கள் இதுபோன்ற பாஜகவின் அறிவிப்பை எதிர்த்து இரண்டு வாரங்களுக்கும் மேலாக கடையடைப்பு செய்தன.

தமிழ் ஓவியா said...

இந்தியாவில் இரண் டாமிடத்தில் உள்ள மாநிலத்தில் பசுவைக் கொல்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பாஜக ஆளும மாநிலங் களான ஜார்கண்ட் மற் றும் அரியானா மாட்டி றைச்சி வணிகத்தில் கடும் கட்டுப்பாடுகளை விதித் துள்ளன.

முசுலீம்கள், கிறித் தவர்கள் மற்றும் தாழ்த் தப்பட்டவர்கள் ஆகி யோர் குறைந்த விலையில் கிடைக்கும் சத்தான இறைச்சியாக உண்கிறார் கள் என்பதாலேயே பாகு பாடுகளை உருவாக்கும் வகையில் மாட்டிறைச்சிக் குத் தடை என்பது தேசிய அளவில் ஆயிரக்கணக் கான வேலை வாய்ப்பு களில் அச்சுறுத்தலை உண்டாக்கியுள்ளது.

மாட்டிறைச்சி வணிகம் மற்றும மாட்டிறைச்சி சார்ந்த தோல் பொருள் கள் உள்ளிட்ட தொழில் களில் ஈடுபட்டுள்ள முசு லீம்கள் பல்லாயிரக்கணக் கில் வேலைவாய்ப்புகளை இழக்கும்நிலை ஏற்பட் டுள்ளதாக அந்த வணிகத் தில் உள்ள தலைவர்கள் மிகுந்த கவலையை வெளிப்படுத்தி உள்ளனர்.

மகாராட்டிரத்தில் பாராமதிப் பகுதியில் கால்நடைகளை விற் பனை செய்து வருபவரான ஆசிப் குரேஷி என்பவர் கூறுகையில், என்னுடைய தொழில் முற்றிலும் அழிந்து விட்டது. விவசாயிகள் தங்களிடமுள்ள கால் நடைகளை குறைந்த விலைக்கு தருவதற்கு முன்வந்துவிட்டார்கள். ஆனால், வெட்டுவது சட்டவிரோதம் என்று ஆனபிறகு என்னால் அந்தக் கால்நடைகளை வாங்கமுடியவில்லை என்று கூறினார்.

ஆளும் பாஜக அரசின் மாட்டிறைச்சித் தடைக்கு எதிராக முழு வேலை நிறுத்தப் போராட்டத்தை இறைச்சிக்கடைக்காரர்கள் செய்தார்கள். தடை இல் லாத எருமை மாடு களையும் வெட்டாமல் போராடி வந்தனர். இந்துக்களில் பசுவை புனிதம் என்பவர்கள் எருமையைப் புனிதம் என்று கூறுவதில்லை.

பாஜக ஆளும் பிற மாநிலங்களில் மாட்டி றைச்சித் தடையைக் கட்டாயப்படுத்தவில்லை. பாஜக ஆளும் கோவா மாநிலத்தில் தடையைக் கொண்டுவருவதற்கு மறுத்த அம்மாநில முதல் வர் 40 விழுக்காட்டினர் உணவாக சாப்பிடுவதை, சிறுபான்மையர் உரிமையை மதிக்க வேண்டும் என்று கூறியுள் ளார்.

இதற்கிடையே இந்து தேசியவாதக் குழுக்கள் பாஜகவுடன் இணைந்து அதிக அளவில் கால் நடைகளுக்கான முகாம் களை அமைத்து, விவ சாயிகள் நீண்ட காலத் துக்கு பராமரிக்க முடியாத பசுவையும், மற்ற வீட்டு விலங்குகளையும் பரா மரிக்கவும் வேண்டும் என்று அதற்கான ஏற் பாடுகளை செய்து வரு கின்றன.

300 மில்லியன் கால்நடைகள்

இந்தியாவில் சுமார் 300 மில்லியன் கால் நடைகள், வயதான உண வுக்கு மட்டுமே பயன் படக்கூடிய பசுக்கள், நகரங்கள் மற்றும் கிராமங்களின் வீதிகளில் திரிய விடப்படுகின்றன. அப்படி தெருவில் விடப் படும் மாடுகளின் எண் ணிக்கை மகாராட்டிர மாநிலத்தில் மட்டும் சுமார் இரண்டு லட்சம் ஆகும். மாட்டிறைச்சி வணிகத்தைப் பொறுத் தவரை விவசாயிகள் அந்த மாடுகளை விற்க முடியாமல் அப்படியே தெருவில் திரியும்வகையில் பராமரிக்காமல் கைவிட்டு விடுகின்றனர்.

Read more: http://viduthalai.in/e-paper/99231.html#ixzz3WY41DWqo

தமிழ் ஓவியா said...

பரிதாபமே!

இந்து மத எதிர்ப்புக்கோ, இந்துஸ்தான் எதிர்ப்புக்கோ, ஆரியர் - திராவிடர் என்கின்ற உணர்ச்சிக்கோ பார்ப்பனத் துவேசம் காரணமல்ல. மக்கள்மீதுள்ள பரிதாபமே காரணம்.
(குடிஅரசு, 8.9.1940)

Read more: http://viduthalai.in/page-2/99222.html#ixzz3WY4O6pDa

தமிழ் ஓவியா said...

பிற்படுத்தப்பட்டோர்இடஒதுக்கீடு புறக்கணிக்கப்படுகிறது


தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் உறுப்பினரான எஸ்.கே.கார்வேந்தன் மத்திய அரசு பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீட்டைப் புறக்கணித்துவருவதாகக் கூறியுள்ளார்.

அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவராகவும், மக்களவை யின் காங்கிரஸ் உறுப்பினராக இரண்டு முறையும் இருந்த எஸ்.கே. கார்வேந் தன் தற்போது தேசிய பிற்படுத்தப் பட்டோர் ஆணையத்தின் உறுப்பின ராக இருக்கிறார்.

அவர் தி இந்து இதழுக்கு (5.4.2015) அளித்த பேட்டி விவரம் வருமாறு:

கேள்வி: தேசிய பிற்படுத்தப்பட் டோர் ஆணையம் எப்போது, என்ன நோக்கத்துக்காக உருவாக்கப்பட்டது?

பதில்: இந்திய அரசியலமைப்புச் சட்டம் 1950-ஆம் ஆண்டு அமல்படுத் தப்பட்டபோது தாழ்த்தப்பட்டவர் மற்றும் மலைவாழ்மக்கள் பட்டியல் அரசிடம் இருந்தது. ஆனால், யாரெல்லாம் பிற்படுத்தப்பட்டவர்கள் என்ற பட்டியல் அரசிடம் இல்லை. அதற்காக, அம்பேத்கர் ஆலோசனை யின்படி பிற்படுத்தப்பட்ட மக்களின் நிலையை அடையாளம் காண ஒரு ஆணையம் உருவாக்கப்பட வேண்டும் என்று அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 340-இல் தெளிவாக்கப்பட்டது. அதன் அடிப்படையில் முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய் 1978இ-ல் பி.பி. மண்டல் தலைமையில் ஒரு ஆணை யம் அமைத்தார். அந்த ஆணையம் அனைத்து மாநிலங்களுக்கும் சென்று ஆய்வு நடத்திப் பல தரப்பினரையும், மாநில அரசுகளையும் விசாரித்து 31.12.1980 அன்று தனது அறிக்கையைத் தாக்கல் செய்தது.

பல ஆண்டுகளாக அமல்படுத்தப் படாமல் இருந்த அந்த அறிக்கையை, நாடு முழுவதும் நடந்த மாபெரும் போராட்டங்களுக்குப் பின், 1989-இல் அப்போதைய பிரதமர் வி.பி. சிங் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அதைத் தொடர்ந்து வி.பி. சிங் 1990-இல் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு அரசுப் பணியில் 27 சதவீத இடஒதுக்கீட்டுக்கு ஆணை பிறப்பித்தார். அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் இந்திரா சஹானி தொடுத்த வழக்கில் உச்ச நீதிமன்றம் இதர பிற்படுத்தப்பட்டோருக்காக தேசிய அளவில் ஒரு ஆணையம், அனைத்து மாநிலங்களிலும் மாநில அளவில் ஆணையங்களும் அமைக்க வேண்டும் என வலியுறுத்தியது. இதற்குப் பிறகு உருவாக்கப்பட்டதுதான் தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம்.

கேள்வி: உங்கள் ஆணையத்தின் முக்கியப் பணிகள் என்ன?

பதில்: சமூக ரீதியாக, கல்விரீதி யாகப் பின்தங்கிய சமுதாயத் தினரை இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்ப்பதும், தவறாகச் சேர்க்கப்பட்டு விட்டதாகப் புகார்கள் வந்தால் அந்தச் ஜாதியினரைப் பட்டியலிலிருந்து நீக்குவதும்தான் எங்கள் பணிகள்.

கேள்வி: நாடு முழுவதும் மாநில வாரியாக எத்தனை ஜாதியினர் தேசிய அளவில் இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்?

மண்டல் கமிஷன் நாடு முழுவதும் 3,743 ஜாதியினரைப் பிற்படுத்தப்பட் டோராக அடையாளம் காண்பித்தது. எங்கள் ஆணையம் முறையான விசா ரணைக்குப் பின்னர் இதுவரை மொத்தம் 2,418 சாதியினரைப் பட்டியலில் சேர்த் துள்ளது. இவற்றில் 47 ஜாதியினரை நீக்குவது குறித்தும், மேலும் 298 சாதி யினரைச் சேர்ப்பது குறித்தும் பரிசீலித்துக் கொண்டிருக்கிறோம்.

கேள்வி: ஒரு ஜாதியினரை இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கவும் நீக்கவும் உங்கள் ஆணையம் பின்பற்றும் வழிமுறைகள் என்ன?

தமிழ் ஓவியா said...

பதில்: ஜாதிய அமைப்பினரிடம் அல்லது மாநில அரசிடம் இருந்தோ கோரிக்கை வருமானால் அதைப் பதிவு செய்து மாநில அரசிடமும், மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திடமும் அந்த சாதியைப் பற்றி அறிக்கை கேட்கிறோம். அறிக்கை பெற்ற பின்னர் அந்த மாநிலத்துக்கே சென்று கோரிக் கையாளரையும், சம்பந்தப்பட்ட மாநில அரசையும் விசாரித்து, குறிப்பிட்ட ஜாதி யினர் சமூகரீதியாக, கல்விரீதியாகப் பின்தங்கியவர்களாக இருந்தால் அவர் களைப் பட்டியலில் சேர்க்க மத்திய அரசுக்குப் பரிந்துரைக்கிறோம். எங்கள் பரிந்துரையை ஏற்று மத்திய அரசு, அரசாணை வெளியிடும். பட்டியலி லிருந்து ஒரு சாதியை நீக்குவதற்கும் இதே முறைதான் பின்பற்றப்படுகிறது.

கேள்வி: உங்களுடைய பரிந்துரை இறுதியானதா? அதை அரசு நிராகரிக்க லாமா?

பதில்: எங்களுடைய பரிந்துரை அரசைக் கட்டுப்படுத்தும் என தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையச் சட் டத்தில் தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளது. அரசு எங்கள் பரிந்துரையை நிராகரிக்க வேண்டுமென்றால் அதற்கு தகுந்த கார ணங்களைத் தெளிவுபடுத்த வேண்டும்.
எங்கள் பரிந்துரையையும் மீறிக் கடந்த ஆட்சியில் ஜாட்டுகளுக்கு ஒதுக்கீடு அளிக்கப்பட்டதுதான் இந்த ஒதுக்கீட்டை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்ய முக் கியக் காரணமாக அமைந்தது.

கேள்வி: இதர பிற்படுத்தப்பட்டோ ருக்கான 27% இடஒதுக்கீடு மத்திய அரசின் பணிகளில் கடைப்பிடிக்கப் படுகிறதா?

பதில்: இதர பிற்படுத்தப்பட்டோருக் கான மத்திய அரசுப் பணிகளில் 27சதவீத இடஒதுக்கீடு 1993-ஆம் ஆண்டு முதல் அமலுக்கு வந்தது, ஆனால், மத்திய அரசின் சில துறைகளில் ஏ பிரிவில் ஒருவர்கூட பணியில் இல்லை. அனைத் துத் துறைகளிலும் பார்த்தால் 0 சதவீதம் முதல் 10 சதவீதம் பேர் மட்டும் உள்ளனர். காரணம் பெரும்பாலான துறைகளில் ஏ, பி, சி ஆகிய பிரிவுகளில் பல பதவிகள் காலியாகவே உள்ளன. அவற்றைப் பூர்த்திசெய்ய எவ்வித நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை என்பதுதான் வேதனைக்குரியது.

தமிழ் ஓவியா said...


கேள்வி: இந்த 27சதவீத ஒதுக்கீடு, குறைந்தபட்சம் மத்திய அரசின் கல்வி நிறுவனங்களிலாவது அமல்படுத்தப் பட்டுள்ளதா?

மத்திய அரசின் கீழ் நடைபெறும் பல கல்வி நிறுவனங்கள் இதுவரையிலும் இதர பிற்படுத்தப்பட்ட சமுதாய மாணவ, மாண வியருக்கு முழுமையாக இடஒதுக்கீடு வழங்கவில்லை. உதாரணத்துக்குச் சொல்ல வேண்டுமானால் மத்திய அரசின் கேந்திர வித்யாலயா பள்ளிகள் மற்றும் இந்திய ராணுவ அமைச்சகத்தின் சைனிக் பள்ளிகளில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடிகளுக்கான இடஒதுக்கீடு வழங் கப்படுகிறது. ஆனால், இதுவரை இதர பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை. பலமுறை வேண்டுகோள் விடுத்தும் பலனில்லை. அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 15(5)-க்குப் புறம்பாக அவை செயல்படுகின்றன.

கேள்வி: அரசுப் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் பிற்படுத்தப் பட்ட ஊழியர்களின் உரிமைகள் முறைப் படி காக்கப்படுகிறதா?

பதில்: அரசுப் பொதுத்துறை நிறுவ னங்களில் பணியாற்றும் பிற்படுத்தப்பட்ட ஊழியர்களின் உரிமைகளைக் காக்க இந்திய அரசின் பணியாளர் நலத் துறை அமைச்சகம் பல வழிகாட்டுதல்களை அறிவித்துள்ளது. உதாரணமாக, ஒவ் வொரு துறையும் இதர பிற்படுத்தப்பட்ட ஊழியர்களுக்கென்று தனி ஒருங் கிணைப்பு அதிகாரியை, அதுவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திலிருந்தே நியமிக்க வேண்டும்; குறைந்தபட்சம் ஆண்டுக்கு இருமுறை கூட்டம் நடத்த வேண்டும்; ஊழியர்களுக்கு அனைத்து வசதிகளுடன் கூடித் தனி அலுவலக அறை ஒதுக்கித்தர வேண்டும்; பணி நியமனங்களுக்கான குழுவில் ஒரு பிரதிநிதி நியமிக்கப்பட வேண்டும், என் றெல்லாம் அறிவுறுத்தியுள்ளது. ஆனால், பல பொதுத்துறை நிறுவனங்கள், வங் கிகள், காப்பீட்டு நிறுவனங்கள் இதில் எந்த வழிகாட்டுதலையும் பின்பற்றவில்லை.

கேள்வி: பிற்படுத்தப்பட்ட சமுதா யத்தைச் சேர்ந்த வசதி படைத்த முன் னேறியவர்களை இடஒதுக்கீடு சலுகை பெறாமல் தடுக்க என்ன வழி பின்பற்றப்படுகிறது?

மண்டல் வழக்கு எனப்படும் இந்திரா சஹானி வழக்கில் இந்திய உச்ச நீதி மன்றம் பிற்படுத்தப்பட்டோரில் முன்னேறி யவர்களை கிரீமிலேயர் பிரிவினர் என அடையாளம் காட்டியுள் ளது. இட ஒதுக்கீடு சலுகையிலிருந்து நீக்கப்பட வேண்டிய கிரீமிலேயர் பிரி வினரைக் கண்டுபிடிக்க இந்தியஅரசு ஒரு நிபுணர் குழுவை அமைத்தது. இந்த நிபுணர் குழு (1) பிரதமர், குடியரசுத் தலைவர் நீதிபதிகள் போன்ற அரசியல் சாசன தகுதி பதவி வகிப்பவர்கள் (2) அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ்.

குரூப் ஒன்று பணியில் உள்ளவர்கள் (3) இராணுவ உயர் அதிகாரிகள் (4) தொழில் துறையில் கிரீமிலேயர் வருமான வரம்புக்குமேல் வருமானம் சம்பாதிப் பவர்கள். (5) 85சதவீத பாசன நிலம் வைத்துள்ள விவசாயிகள் ஆகிய அய்ந்து பிரி வினரையும் அடையாளப் படுத்தியது. இதில் 2- வது பிரிவில் பொதுத்துறை நிறுவனங்கள், வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்களில் பணியாற்றுப வர்களில் அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ் அதிகாரிகளுக்கு இணையான அந்தஸ் தில் உள்ளவர்கள் கிரீமிலேயர் பட்டி யலில் வருவார்கள்.

சமமான பதவியில் உள்ளவர்கள் யார் யார் என்பதை மத்திய அரசு முடிவு செய்யும். அதுவரை அவர்களின் வருமானம், மற்றும் சொத்து மதிப்பின் அடிப்படையில் அவர்கள் நிலை தீர்மானிக்கப்பட வேண்டும் என அறிவு றுத்தப்பட்டுள்ளது. இதில் அவர்களின் சம்பளத்தைக் கணக்கில் எடுத்துக் கொள்ளக்கூடாது என விதிவிலக்கு அளித்துள்ளது.

இதன் விளைவாகப் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் உயர்பதவி வகிப்பவர்கள் அதுவும் ஆண்டுக்கு ரூ. 15 இலட்சத்துக்குமேல் சம்பளம் வாங் குபவர்கள்கூட இடஒதுக்கீடு சலுகை பெறுகிறார்கள். அதன் விளைவாக ஏழ்மையில் வாழும் உண்மையான பின்தங்கிய சமுதாயத்தினர் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். இதில் கொடுமை என்னவென்றால் கடந்த 23 ஆண்டு காலமாக மத்திய அரசின் முதல் நிலைப் பணியாளர்களுக்கு இணையாகச் சம அந்தஸ்தில் உள்ள பதவி வகிப்பவர்கள் யார் யார் என்பதைத் தீர்மானிக்க எவ் வித நடவடிக்கையும் எடுக்காதது தான்.

தற்போது புதிய அரசு மத்தியில் பொறுப்பேற்ற பின்னர் அந்தப் பணியை எங்களிடம் கொடுத்துள்ளது. கிரீமிலேயர் சம்பந்தமாக அனைத்துக் குறைகளையும் களையவும், கிரீமிலே யருக்குத் தற்போது உள்ள 6 லட்சம் ரூபாய் வரம்பை 10.5 லட்சமாக உயர்த் தவும் பல தரப்பினரின் கருத்துக்களைப் பெற்று அரசுக்கு கடந்த மார்ச் 2இ-ல் அறிக்கை சமர்ப்பித்துள்ளோம். நமது பிரதமர் பிற்படுத்தப்பட்ட சமுதா யத்தைச் சேர்ந்தவர் என்பதால் நம் முடைய கோரிக்கைகளுக்கு செவி சாய்ப்பார் என்று நம்புகிறோம்!

- இவ்வாறு கார்வேந்தன் பேட்டியில் கூறியுள்ளார்.

நன்றி: தி இந்து - 5.4.2015

Read more: http://viduthalai.in/page-2/99225.html#ixzz3WY4YmsO8

தமிழ் ஓவியா said...

இரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள...

உடலில் உள்ள இரத்தம் சுத்தமில்லாமல் இருந்தால் உடல் அசதி, காய்ச்சல், வயிற்றுப்பொருமல், சுவாசக் கோளாறுகள் போன்றவை உண்டாகலாம். அதனால் உடலின் அடிப்படை சக்தியான இரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்வது அவசியமாகும். இயற்கை உணவுகள்மூலம் இரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்வது எப்படி? இரத்தத்தை விருத்தி செய்வது எப்படி என்பதை பார்ப்போம்.

பீட்ரூட் கிழங்கு சாப்பிட்டு வந்தால் புதிய இரத்தம் உற்பத்தியாகும். இதுதவிர, செம்பருத்திப் பூவை வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர வெட்டை சூடு தீர்ந்து இரத்தம் விருத்தியாகும். முருங்கைக் கீரையை துவரம் பருப்புடன் சமைத்து ஒரு கோழி முட்டை உடைத்து விட்டு கிளறி நெய் சேர்த்து 41 நாள்கள் சாப்பிட்டு வர இரத்தம் விருத்தியாகும்.

நாவல் பழம் தினமும் சாப்பிட்டால்கூட இரத்தம் விருத்தியாகிறது. இஞ்சிச் சாற்றுடன் தேன் கலந்து சாப்பிட்டால் இரத்தம் சுத்தப்படுத்தப்படுகிறது. தக்காளிப் பழம் சாப்பிட்டு வந்தால்கூட இரத்தம் சுத்தமாகும். ஆனால், வாத நோய் உள்ளவர்கள் தவிர்த்தல் நல்லது.

இலந்தைப் பழம் சாப்பிட்டால் இரத்தத்தை சுத்தம் செய்வது மட்டும் அல்லாமல், சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளும். பசியையும் தூண்டும் தன்மை கொண்டது.

இன்றைய காலக்கட்டத்தில் பெரும் அச்சுறுத்தல் இரத்தக் குழாய் அடைப்பு. இதனை சாதாரணமாக தவிர்த்துவிடலாம் என்கிறது இயற்கை வைத்தியம். தினமும் ஒரு கப் தயிர் சாப்பிட்டு வந்தால் போதும் இரத்தக் குழாய் அடைப்பு நீங்கும்.

இதற்கடுத்தது இரத்த அழுத்தம். இதனை முற்றிலுமாக போக்க வழி உண்டு. கொதிக்க வைத்து ஆறிய நீரில் சீரகப்பொடி 12 மணி நேரம் ஊறவைத்து குடித்து வந்தால் போதும். மேலும் ஒரு டம்ளர் மோரில் எலுமிச்சம் பழச்சாறு பிழிந்து சாப்பிட்டால் இரத்த அழுத்தம் சீராகும். இது தவிர அகத்திக் கீரையை வாரம் 2 முறை சாப்பிட்டு வந்தாலும் இரத்தக் கொதிப்பு குணமாகும்.

இரத்தக்கட்டுகளுக்கு நிவர்த்தியாக மஞ்சள், உப்பு, சுண்ணாம்பு ஆகியவற்றை வெந்நீர் விட்டு அரைத்து அந்த விழுதை சூடு செய்து சுளுக்கின் மீது பற்றுபோட்டால் போதும். விளாம்பழம் சாப்பிட்டால் இரத்தத்தில் உள்ள கிருமிகள் அழிந்துபோகும்.

Read more: http://viduthalai.in/page-4/99239.html#ixzz3WY5IMSNM

தமிழ் ஓவியா said...

கோடை நோய்களை தடுப்பது எப்படி?

கோடைக்காலம் ஆரம்பித்துவிட்டது. கோடைக் காலம் தொடங்குவதற்கு முன்னரே வெயில் நம்மை மிரட்ட தொடங்கிவிட்டது. அடுத்த மூன்று மாதங்களுக்கு அனல், அரிப்பு, வியர்வை, சோர்வு என்று பல தொல்லைகளும் சேர்ந்து கொள்ளும். இத்தகைய பாதிப்புகளிலிருந்து நம்மை பாதுகாத்து கொள்வது எப்படி? மனித உடலின் இயல்பான வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ்.

கோடையில் வளிமண்டல வெப்பநிலை சர்வ சாதாரணமாக 40-லிருந்து 45 டிகிரியை தொடுகிறது. அப்போது உடலை குளிர்விக்க அதிக அளவில் வியர்வை சுரக்கிறது. உடலை சுத்தமாக பராமரிக்காவிட்டால் தோலில் உள்ள வியர்வைச் சுரப்பிகளில் அழுக்கு அடைத்துக்கொள்ளும். இதனால் வியர்க்குரு வரும். இதை தவிர்க்க தினமும் இரு வேளை குளித்தால் நல்லது.

தோலின் மூலம் வெளியேற வேண்டிய உப்பு, யூரியா போன்றவை சரியாக வெளியேற முடியாமல் அழுக்கு போல் தங்கிவிடும். அப்போது அங்கு பாக்டீரியா தொற்றிக்கொள்ள அந்த இடம் வீங்கி புண்ணாகும். உடலில் ஈரமுள்ள பகுதிகளில் பூஞ்சை கிருமிகள் எளிதில் தொற்றிக்கொள்ளும். குறிப்பாக வியர்க் குருவில் இத்தொற்றும் சேர்ந்துகொண்டால் அரிப்புடன் கூடிய படை, தேமல் தோன்றும்.

தமிழ் ஓவியா said...

படையை குணப்படுத்தும் களிம்பு அல்லது பவுடரை தடவிவர இது குணமாகும். கோடையில் சிறுநீர் கடுப்பு அதிக தொல்லை தரும். அளவுக்கு மீறி வியர்வை வெளியேறுதல் மற்றும் தேவையான அளவு தண்ணீர் குடிக்காதது இதற்கு முக்கிய காரணம். உட்கொள்ளும் தண்ணீர் அளவு குறையும்போது சிறுநீரின் அளவும் குறைந்துவிடும்.

இதனால் சிறுநீரின்மூலம் வெளியேற வேண்டிய உப்புகள் கடினமாகி சிறுநீர் பாதையில் படிகங்களாக படிந்துவிடும். இதன் விளைவுதான் நீர்க்கடுப்பு. நிறைய தண்ணீர் குடித்தால் இந்த பிரச்சினை வராது. வெயில் காலத்தில் சமைத்த உணவு வகைகள் விரைவில் கெட்டு விடும். அவற்றில் நோய் கிருமிகள் அதிகமாக பெருகும்.

இந்த உணவுகளை சாப்பிட்டால் பலருக்கு வாந்தி, வயிற்று போக்கு, சீதபேதி, காலரா, டைபாய்டு, மஞ்சள் காமாலை போன்ற நோய்கள் வரும். இதனால் வெயில் காலத்தில் சமைத்த உணவுகளை உடனுக்குடன் பயன்படுத்திவிடுவது நல்லது. உணவுமீது ஈக்கள் மொய்க்காமல் மூடி பாதுகாக்க வேண்டியதும் அவசியம். தண்ணீரை கொதிக்க வைத்து ஆற வைத்து குடிக்கவேண்டும்.

வெயிலின் தாக்கம் அதிகரிக்கும்போது உடலின் வெப்பம் 106 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் தாண்டிவிடும். அப்போது உடல் தளர்ச்சி அடையும். களைப்பு உண்டாகும். தண்ணீரின் தாகம் அதிகமாக இருக்கும். இதில் தலைவலி, வாந்தி, மயக்கம், தலைச்சுற்றல் போன்ற அறிகுறிகள் தோன்றும்.

அளவுக்கு மீறிய வெப்பத்தின் காரணமாக உடலின் உப்புகள் வெளியேறிவிடுவதால் இந்தத் தளர்ச்சி ஏற்படுகிறது. வெயில் காலத்தில் காபி, தேநீர் குடிப்பதை குறைத்து கொள்ளுங்கள். பாட்டில் குளிர்பானங்களைக் குடிக்கவேண்டாம். காரணம்? குளிர்பானங்களை வரம்பின்றி குடிக்கும்போது அவற்றில் உள்ள குளிர்ச்சியானது ரத்தக் குழாய்களை சுருக்கி உடலின் வெப்பத்தை இன்னும் அதிகமாக்கிவிடுகிறது.

இதற்கு பதிலாக இளநீர், மோர், சர்பத், பானகம், பதநீர் முதலிய வற்றை குடிக்கலாம். இளநீரில் உள்ள பொட்டாசியம், சோடியம், கால்சியம், மெக்னீசியம் முதலிய தாதுக்கள் உடலின் வெப்பத்தை உள்வாங்கி சுற்றுச்சூழல் வெப்ப நிலைக்கு ஏற்றபடி உடலின் வெப்பத்தை குறைகின்றன.

இதனால் உடலில் நீரிழிப்பால் ஏற்படுகின்ற பாதிப்புகள் உடனடியாக குறைகின்றன. எலுமிச்சை பழச்சாற்றில் உப்பு அல்லது சர்க்கரை கலந்து சாப்பிடுவது குறைந்த செலவில் நிறைந்த பலனை பெற உதவும்.

உணவு வகைகள்: இட்லி, இடியாப்பம், தயிர்சாதம், மோர்சாதம், கூழ், அகத்திகீரை, முருங்கைக்கீரை, பொன்னாங் கண்ணிக்கீரை, கேரட், பீட்ரூட், பீர்க்கங்காய், வெண் டைக்காய், முள்ளங்கி, பாகற்காய், புடலை, அவரை, முட்டைகோஸ், வாழைத் தண்டு, வெங்காயபச்சடி, தக்காளி கூட்டு போன்றவை கோடைக்கால உணவு வகைகள்.

தர்பூசணி, வெள்ளரி, கொய்யா, பப்பாளி, சாத்துக்குடி, ஆரஞ்சு, திராட்சை போன்ற நீர்ச்சத்து உள்ள பழங்களை அதிகமாக சாப்பிடுங்கள். இவற்றில் பொட்டாசியம் வியர்வையுடன் வெளியேறிவிடும். தவிர்க்க வேண்டியவை: கோடையில் எண்ணெயில் பொரிக்கப்பட்ட, வறுக்கப்பட்ட கொழுப்பு அதிகமுள்ள உணவு வகைகளை தவிர்க்க வேண்டும்.

சர்க்கரை அதிகமுள்ள இனிப்பு பலகாரங்கள், கிரீம் மிகுந்த பேக்கரி பண்டங்கள், பர்கர், பீட்சா, அய்ஸ்கிரீம் போன்றவை தண்ணீர் தாகத்தை அதிகப் டுத்தும் என்பதால் இவற்றையும் தவிர்ப்பது நல்லது. அதேபோல் சூடான, காரமான மசாலா கலந்த உணவுகளை யும் குறைத்துக்கொள்ளவேண்டும்.

கோடையில் 2 மணி நேரத்திற்கு மேல் தொடர்ந்து வெயிலில் இருப்பதை தவிர்க்க வேண்டும். பகல் 12 மணியிலிருந்து மாலை 4 மணி வரை வெளியில் செல்லாமல் இருப்பது நல்லது. அவசியம் செல்ல வேண்டும் என்றால் குடையை எடுத்து செல்லுங்கள். முடிந்தவரை நிழலில் செல்வது நல்லது.

குழந்தைகள், முதியோர்கள் உடல்நலம் குறைந்தோர் வெயிலில் அலைவது ஆபத்தை வரவழைக்கும். வெயிலில் அதிக நேரம் பயணிக்க வேண்டியிருந்தால் கண்களுக்கு சன்கிளாஸ் அணிந்து கொள்ளலாம். உடைகளை பொறுத்தவரை கோடைக்கு உகந்தது பருத்தி ஆடைகளே, அவற்றில்கூட இறுக்கமான ஆடைகளை தவிர்த்து தளர்வான ஆடைகளை அணிய வேண்டியது முக்கியம்.

கருப்பு உள்ளிட்ட அடர் நிறங்கள் வெப்பத்தை கிரகிக்கும். ஆகவே இத்தன்மையுள்ள ஆடைகளைத் தவிர்ப்பது நல்லது. அதுபோல் செயற்கை இழைகளால் ஆன ஆடைகளையும் தவிர்க்க வேண்டும். வெண்மை நிற ஆடைகள் கோடைக்கு உகந்தவையாம்

Read more: http://viduthalai.in/page-4/99242.html#ixzz3WY5QewZh

தமிழ் ஓவியா said...

அசிடிட்டியை குணப்படுத்தும் எளிய வழிகள்!

அசிடிட்டி எனப்படும் வயிற்றில் ஏற்படும் அமில சுரப்பி பிரச்சினையால், அவதியுறுவோர் ஏராளம்!

குறிப்பாக மசாலா அதிகம் சேர்க்கப்பட்ட உணவுகளை உண்ட பின்னர் இத்தகையோருக்கு நெஞ்செரிச்சல் போன்றவை ஏற்படுவது அதிகம். இவற்றை தடுப்பதற்கும், குணப்படுத்துவதற்கான எளிய வழிகள் இதோ! பாட்டில்களில் அடைக்கப்பட்ட பானங்கள் மற்றும் காஃபின் பொருள்களை அறவே தவிர்த்துவிட்டு, அதற்கு பதிலாக மூலிகை தேனீர் அருந்தலாம். மேலும் தினமும் வெதுவெதுப்பான வெந்நீர் ஒரு டம்ளர் அருந்தலாம்.

தினசரி உணவில் வாழப்பழம், தர்பூசணி, வெள்ளரி போன்றவற்றை கட்டாயம் சேர்த்துக்கொள்ளவேண்டும். இளநீர் அருந்தினால் இன்னமும் நல்லது. அது அமிலசுரப்பி பிரச்சினையை தீர்க்கும். தினமும் ஒரு டம்ளர் பால் அருந்துவதும் நல்லதுதான். இரவு உணவை நீங்கள் தூங்கப்போவதற்கு இரண்டு அல்லது மூன்று மணி நேரத்திற்கு முன்னதாகவே முடித்துவிடுங்கள்.

ஒவ்வொரு உணவு இடைவேளைக்கும் நீண்ட இடைவெளி விடுவதும் அமில பிரச்சினைக்கு மற்றொரு காரணமாக அமைந்துவிடுகிறது. எனவே கொஞ்சமே என்றாலும் அந்தந்த நேரத்தில் உணவை எடுத்துக் கொள்ளுங்கள். ஊறுகாய், கார சட்னி வகைகள், வினிகர் போன்றவற்றை கண்ணால் பார்க்காமல் இருப்பதே உசிதம்.

Read more: http://viduthalai.in/page-4/99243.html#ixzz3WY5fZB4W

தமிழ் ஓவியா said...

கடவுள் சக்தி இவ்வளவுதான்!
தேவாலயத்திற்கு தாயுடன் சென்ற சிறுமி சாலை விபத்தில் உயிரிழப்பு

அம்பத்தூர், ஏப்.6_- அம் பத்தூர் அருகே தாயுடன் தேவாலயத்திற்கு சென்ற சிறுமி, டிராக்டர் சக்கரத் தில் சிக்கி உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்திய டிராக்டர் ஓட்டுநரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

சென்னை பாடி டி.எம்.பி. நகர் வி.ஓ.சி.தெருவை சேர்ந்தவர் பாண்டியராஜ் (வயது 46). இவர் குவைத் தில் வேலை செய்து வருகி றார். இவருடைய மனைவி இல்கா (43). இவர்களுக்கு ஜோஸ்வா (13) என்ற மகனும், ஜெனிதா (6) என்ற மகளும் உள்ளனர். ஜோஸ்வா 9- ஆம் வகுப்பு படித்து வரு கிறான். சிறுமி ஜெனிதா யூ.கே.ஜி படித்து வந்தாள்.

நேற்று ஈஸ்டர் நாள் என்பதால் காலையில் இல்கா தனது மொபட்டில் மகள் ஜெனிதாவை அழைத் துக் கொண்டு, மதியழகன் நகரில் உள்ள தேவாலயத் திற்குச் சென்றார். பின்னர் விழா முடிந்ததும் மொபட் டில் வீடு திரும்பினார்.

அவருக்குப் பின்னால் சிறுமி ஜெனிதா அமர்ந்தி ருந்தாள். தேவாலயத்தில் இருந்து சிறிது தூரம் சென்றபோது, அதே வழியில் பின்னால், தண்ணீர் டேங்கர் ஏற்றி கொண்டு வேகமாக வந்த டிராக்டர் திடீரென இல் காவின் மொபட்மீது மோதியது.

இதில் சிறுமி ஜெனிதா தூக்கி வீசப்பட்டு டிராக்டரில் சிக்கிக் கொண் டாள். இல்கா சாலையோ ரம் விழுந்து உயிர் தப் பினார். ஆனால், டிராக்ட ரில் சிக்கிய ஜெனிதா மீது சக்கரம் ஏறி இறங்கியதில், அவள் உடல் நசுங்கி சம் பவ இடத்திலேயே உயிரி ழந்தார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு பூவிருந்தவல்லி போக்குவரத்துப் புலனாய்வு பிரிவு காவல்துறையினர் விரைந்து சென்றனர். உயிரிழந்த சிறுமியின் உடலை மீட்டு உடற்கூறு பரிசோதனைக்காக போரூ ரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுபற்றி வழக்குப் பதிவு செய்த காவல்துறை யினர் விபத்தை ஏற்படுத் திய டிராக்டரை பறிமுதல் செய்து, தப்பியோடிய ஓட் டுநரை தேடிவருகின்றனர்.

Read more: http://viduthalai.in/page-4/99249.html#ixzz3WY6T9Ncc

தமிழ் ஓவியா said...

கோவில் திருவிழாவில்
தீக்குழியில் விழுந்த பெண் சாவு

விருதுநகர், ஏப் 6 -விருதுநகர் மாவட்டம், திரு வில்லிபுத்தூரில் நடைபெற்ற பெரியமாரியம்மன் கோவில் தீக்குழி உற்சவத்தில், தீயில் விழுந்து காயமடைந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.திருவில்லிபுத்தூர் அருகேயுள்ளது பொட்டல்பட்டி. இப்பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி சக்கரைத்தாய் (40). இவர் திருவில்லிபுத்தூரில் உள்ள பெரிய மாரியம்மன் கோவில் தீக்குழி உற்ச வத்தில், கடந்த மார்ச் 20-ஆம் தேதி நடைபெற்ற தீ மிதித்தல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தீ மிதித்தார். அப்போது கால் சறுக்கி கீழே விழுந்தார். இதில் உடல் முழுவதும் தீக்காயம் ஏற்பட்டது. இதை யடுத்து, சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி சக்கரைத்தாய் ஞாயிறன்று உயி ரிழந்தார்.திருவில்லிபுத்தூர் நகர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Read more: http://viduthalai.in/e-paper/99237.html#ixzz3WY6dvFvG

தமிழ் ஓவியா said...

கொல்லிமலை அருகே திருவிழா வெடிவிபத்தில் நான்கு பேர் சாவு

நாமக்கல், ஏப்.6-_ நாமக்கல் மாவட்டம் கொல்லி மலை அருகே நடைபெற்ற கோவில் திருவிழாவில் நிகழ்ந்த வெடிவிபத்தில் நான்கு பேர் பலியாயினர். கொல்லிமலை அருகே உள்ள தின்னனூர்நாடு ஊர்ப்புரத்தில் அமைந்துள்ள மாரியம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்று வந்தது. விழாவில் ஒரு பகுதியாக பட்டாசுகள் வெடிக்கச் செய்யப்பட்டது. பட்டாசு வெடித்து சிதறிய விபத்தில் நான்கு பேர் பலியாயினர். மூன்று பேர் படுகாயம் அடைந்தனர்.

Read more: http://viduthalai.in/e-paper/99237.html#ixzz3WY6kuGlU

தமிழ் ஓவியா said...

இதோ - மாட்டுப் புத்திரர்கள் உஷார்!

- ஊசிமிளகாய்

இன்று மக்கள் நல்வாழ்வு நாள் (7.4.2015) நம் நாட்டில் நமது மக்களின் சராசரி ஆயுள் ஆண்களுக்கு 69.47 ஆகவும், பெண்களுக்கு 75.08 ஆகவும் ஆயுள் வளர்ந் துள்ளது எதனால்?

மூடநம்பிக்கைகளைப் பெரிதும் ஒழித்து, கிராமப்புறங்களில் நோய் நொடி என்றால், உடனடியாக மருத்து வரிடம் அழைத்துச் செல்லாமல், நோயாளிகளை,

மாந்திரீகர்களிடமும், கோயில், பூஜை, வேண்டுதல் என்றும் இருந்த நிலை மாறி,

மருத்துவ அறிவியல் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்த துணிந்து ஈடுபட்டதால்தான் இன்று நோய்களை விரட்டி, சராசரி ஆயுளைக் கூட்டும் முயற்சி வெற்றி பெற்றுள்ளது.

மந்திர உச்சாடனங்களால் அல்ல; ஆனால் இன்னும் அறிவியல் பரப்ப வேண்டிய சாதனங்களான சில தொலைக்காட்சிகளில் சில பேய்க் கதைகளைத் திட்டமிட்டுப் பரப்பி, அறி யாமையை, பக்தி மூடநம்பிக்கையை வளர்க்கவே உதவுகின்றன.

இரவு 10 மணிக்குமேல் நம்ம ஊர் டி.வி.களுக்கே பேய்பிடித்து விடுகிறது!

சின்னத் திரையோடு போட்டி போட்டு பெரிய திரைகளும் பேய்க் கதைகளை ஒளிபரப்புகின்றன.

இதன் விளைவு - பாதிப்பு - இன்றுகூட சென்னை தியாகராயநகர் பிரபல துணிக்கடையில் பணிபுரியும் பெண்களில் சிலர் பேய் வந்து ஆடி தங்களை அழைத்து வந்த ஊருக்கே திருப்பி அனுப்ப இப்படி பேய் பிடித்து, (சாமி ஆடுதல் போல) வித்தைகள் செய்துள்ளனர் என்ற செய்தி எவ்வளவு அறிவைப் பறி முதல் செய்யும் அபத்தச் செய்தி!

அது மட்டுமா? ஆட்சியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர், புகையிலை முதலாளிகளின் வயப்பட்டோ என்னவோ, புகைபிடிப்பதினால் புற்றுநோய் வருகிறது என்பதை பெரிய எழுத்துக்களில் விளம்பரப்படுத்தத் தேவையில்லை என்று கூறி, அது நாட்டில் உள்ள மருத் துவர்கள், மக்கள் நல்வாழ்வு நல விரும்பிகளை அதிர்ச்சி அடையச் செய்து ஆவேசம் கொள்ளவும் செய்தது!

எதிர்ப்பலை கிளம்பியவுடன் பிரதமர் மோடி, அதை மறுத்துப் பேசி, புதிய ஆணை ஒன்றையே போடும் அளவுக்கு நிலைமை வந்தது!

டில்லி வட்டாரத்தில், இந்த புகையிலை வியாபார பெரு முதலாளிகளுக்கு பணிய மறுத்ததால்தான் டாக்டர் அர்ஷவர்த்தன் அவர்களது பதவி பறி போய் விட்டது என்ற பேச்சு பரவலாக அடிபடுகிறதே!

புகையிலையால் புற்று நோய் வந்து உயிர்க் கொல்லி ஆவது என்பது எவராலும் மறுக்க முடியாத விஞ்ஞான உண்மை. அதையே கபளீகரம் செய்து புற்று நோய் வருவதற்கு வேறு பல கார ணங்கள் உண்டு என்று திசை திருப்பும் பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் உண்டு.

நெய்யை ஊற்றி விளக்கேற்றினால் நிறைய பிராண வாயுவை அது தருகிறது என்று அறிவியலுக்குப் புறம்பான ஒரு செய்தியை ஒரு ஆர்.எஸ்.எஸ். தலைவர் கூறியுள்ளார்.

இவர் இப்படிக் கூறியதற்குக் காரணம் இவர் அகில பாரத கோ (பசு) சேவா சமிதி என்ற ஆர்.எஸ்.எஸ். சங்பரிவார அமைப்பின் பிரிவுத் தலைவராக உள்ளவராம் (சங்கர்லால் என்பவர்)

இதை எக்னாமிக் டைம்ஸ் நாளேடு (7.4.2015) மறுத்து விஞ்ஞானத்தை இப்படி இவர்கள் கொச்சைப்படுத்துவதற்குக் காரணம் பசு மாட்டிற்கு பெருமையை உயர்த்துவதற்காகவாம்!

18 விதிகளை ஆர்.எஸ்.எஸ். பசு பாதுகாப்புக்காக செய்துள்ளது

1. பசு மாட்டைப்பற்றி, பல்கலைக் கழகங்கள் ஸ்காலர்ஷிப் தந்து ஆராய்ச்சிக் கூட்டங்கள்.

2. ‘Cow Science’ மாட்டு விஞ் ஞானம் என்ற புதுத்துறையை உரு வாக்குவது, ஒவ்வொரு மாநிலத்திலும். எருமைக்கு இவ்வித பாதுகாப்பு எதுவும் கிடையாதாம்!

மனுஷ்ய பிள்ளைகளாக வாழுபவர்கள் மாட்டுப் பிள்ளைகளான கோமாதாவின் புதல்வர்களாக்கிடும் 5 அறிவுக்குக் கீழிறக்கத்திற்குக் கொண்டு செல்லும் பணியை வேகவேகமாகச் செய்யத் துணிந்து விட்டார்கள்!

நாடு முன்னோக்கிச் செல்லுகிறதா? பின்னோக்கி - 5ஆம் அறிவு யுகத்திற்குச் செல்லுகிறதா என்று பாருங்கள்!

மாட்டுக் கறியைவிட சாதாரண ஏழை, எளிய மக்களை வாழ வைக்கும் சத்துணவு வேறு உண்டா? அட மண்டூகங்களே! இருட்டைத் தேடி வெளிச்சத்தை ஒழிக்க நினைப்பதா விவேகம்?

Read more: http://viduthalai.in/e-paper/99294.html#ixzz3WciorbDv

தமிழ் ஓவியா said...

சமஸ்கிருதம்


மொழிப் பிரச்சினைக்கு ஒரே தீர்வு சமஸ்கிருதத்தை இந்தியாவின் ஆட்சி மொழி யாக ஆக்குவதுதான் என் றார் ஆர்.எஸ்.எஸின் குரு நாதரான எம்.எஸ்.கோல் வால்கர்.

ஜனகல்யாண் - ஜன ஜாக்ரன் என்ற ஓர் அமைப்பை காஞ்சி சங்க ராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி துவங்கினார் அல்லவா - அதன் குறிக் கோள்கள் என்ன தெரி யுமா? பசுவைத் தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும், இந்தியாவை ஹிந்துஸ்தான் ஆக்க வேண் டும், சமஸ்கிருதத்தைத் தேசிய மொழியாக்க வேண் டும். சத்யமேவ ஜயதே என்ற வாசகத்துடன் தர் மோர க்ஷ்தி, ரக்ஷ தஹ என்ற வாக்கியமும் அரசு இலச்சினையில் இடம் பெற வேண்டும். அனைவருக் கும் பொதுவான சிவில் சட்டப்படி இயற்றப்பட வேண்டும் என்பதுதான் ஜெயேந்திர சரஸ்வதியால் தொடங்கப்பட்ட அந்த அமைப்பின் நோக்கம். அதுபற்றி தினமணி அன்று எழுதிய தலையங்கத்தில் (5.101987) இவ்வாறு குறிப் பிடப்பட்டிருந்தது.

இந்த அம்சங்களை உற்று நோக்கினால், விசுவ ஹிந்து பரிஷத், இந்து முன்னணி போன்ற தீவிர மதவாத இயக்கங்களின் கொள்கையின் தாக்கம் இத்திட்டத்தின்மீது ஏற்பட் டுள்ளது தெளிவாகத் தெரி கிறது என்று தினமணியே தலையங்கத்தில் ஆதங்கப் பட்டு எழுதி இருந்தது.

இப்பொழுதுகூட மத்திய பிஜேபி அரசு இந்தியாவில் உள்ள அனைத்துப் பல்கலைக் கழகங்களிலும் சமஸ்கி ருதத் துறையைத் துவக்கு கிறது - மத்திய அமைச்சர் ஸ்ருதிராணியே அறிவித் தார். உண்மையிலேயே இப்படி தொடங்கப்படும் சமஸ்கிருதத் துறைகளின் நிலைதான் என்ன? இதோ ஓர் எடுத்துக்காட்டு.

தேஜ் நாராயணன் டண் டன் என்பவர் லக்னோ வைச் சேர்ந்தவர். அவர் இந்தி மொழியில் ஜெய கிருஷ்ணா ஜெய கன்யா குமரி என்ற ஒரு பயண நூலை எழுதினார்.

ஆந்திராவைப்பற்றிக் குறிப்பிடும்பொழுது வெங் கடேஸ்வரா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பேரா சிரியர் டாக்டர் நரசிம்மாச் சாரி தன்னிடம் சொன்ன ஒரு தகவலை அந்நூலில் குறிப்பிட்டுள்ளார்.

இங்கே சமஸ்கிருத மொழிப் பிரிவில் ஒரு புரபசர், 11 ரீடர்கள் உட்பட 12 ஆசிரியர்கள் இருந்தார் கள். புரபசருக்கு மாதச் சம்பளம் ரூ.1200, ரீடருக்கு மாதம் ரூ.900, மாதம் ஒன் றுக்குச் சம்பளம் மட்டம் ரூ.11,100. ஒரு முறை பல் கலைக் கழகத்தில் சமஸ் கிருதம் படிக்க ஒரு மாண வர்கூட இல்லையாம். 12 ஆசிரியர்களும் வேலை யின்றிச் சம்பளம் பெற்று வந்தனர். துணைவேந்தரை அணுகி, நாங்கள் வேலை இல்லாமல் வெறுமனே பொழுதுபோக்கிக் கொண்டு இருக்கிறோமே - என்ன செய்ய? என்று குறைபட் டுக் கொண்டார்கள்.

துணைவேந்தர் அதற்குச் சொன்ன பதில்: உங்களுக் கெல்லாம் முழுச் சம்பளம் முதல் தேதியன்றே கிடைத்து விடுகிறது அல்லவா? பிறகு என்ன குறை? வேண்டுமா னால், பல்கலைக் கழகத் தில் உள்ள பெரிய சமஸ் கிருத நூலகத்திற்குச் சென்று ஏதாவது படித்துக் கொண்டு இருங்கள் என்று அறிவுரை வழங்கினாராம்!

எப்படி? செத்த மொழி பெயரால் எவ்வளவுப் பணம் விரயம்?

- மயிலாடன்

Read more: http://viduthalai.in/e-paper/99288.html#ixzz3Wcj5vqH2

தமிழ் ஓவியா said...

பசுக்கள், எருதுகள் மட்டும்தான் கொல்லப்படக் கூடாதா?

எருமைகள், ஆடுகள் கொல்லப்படலாமா?

மும்பை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சரமாரியான கேள்விகள் மும்பை, ஏப். 7 பசு, எருது கொல்லப்படக் கூடாது என்று தடை விதிக்கும் சட்டம், எருமைகள், ஆடுகளை தவிர்த்தது ஏன் என்று வினா எழுப்பினார் மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி.

-மகாராஷ்டிர மாநிலத் தில் பசுக்கள், மற்றும் எருதுகள் மட்டும் கொல் லப்படுவதற்கு தடை விதித்திருப்பது ஏன்? என்று அம்மாநில அரசி டம் மும்பை உயர் நீதி மன்றம் கேள்வியெழுப் பியுள்ளது. அண்மையில் பாரதீய ஜனதா கட்சி, ஆட்சி செய்யும் மகாராஷ் டிராவில் பசுவதைக்கு தடைவிதிக்கப்பட்டது. இதற்காக மகாராஷ்டிர விலங்குகள் பாதுகாப்புச் சட்டத்திலும் திருத்தம் கொண்டுவரப்பட்டது.

இச்சட்டத்தை மீறி யாராவது மாட்டு இறைச் சியை விற்பனை செய்தால் அவர்கள் கைது செய்யப் படுவார்கள். அவ்வாறு கைது செய்யப்பட்டால் அவர்கள் பிணையிலும் வெளிவர முடியாது. இதில் குற்றம் நிரூபிக்கப் பட்டால் 5 ஆண்டுகள் தண்டனை அல்லது 10000 ரூபாய் அபராதம் அல்லது இரண்டையும் சேர்த்து தண்டனையாக வழங்க முடியும். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பல்வேறு அமைப்பைச் சேர்ந்த வர்கள் மும்பை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். இவற்றின் மீதான விசா ரணை, நீதிபதிகள் வி.எம். கானடே, ஏ.ஆர்.ஜோஷி தலைமையிலான அமர்வு முன் மும்பை உயர் நீதி மன்றத்தில் நேற்று நடைபெற்றது. மனுவை பரிசீலித்த நீதிபதிகள் மகாராஷ்டிரத்தில் பசுக் கள், மற்றும் எருதுகள் மட்டும் கொல்லப்படுவ தற்கு தடை விதிக்கப்பட் டிருப்பது ஏன்? ஆடுகள் எருமைகள் உட்பட மற்ற விலங்குகள் கொல்லப்படு வதில் ஆட்சேபம் இல் லையா? என கேள்வி யெழுப்பினர்.

இதற்குப் பதிலளித்த அரசு வழக் குரைஞர் சுனில் மனோகர் அரசின் இந்த நடவ டிக்கை ஒரு தொடக்கம் தான். பசு, எருது ஆகியவற்றைப் போல் மற்ற விலங்குகள் கொல் லப்படுவதைத் தடுப்பது குறித்தும் அரசு பரிசீ லிக்கும். தற்போது பசு, எருதுகள் பாதுகாக்கப்படு வது அவசியமானதென அரசு கருதுகிறது என்றார். இதற்கு எதிர்ப்புத் தெரி வித்த மூத்த வழக்குரை ஞர் அஸ்பி சினாய் அரசின் இந்த நடவ டிக்கை தன்னிச்சையா னது. மேலும், குடிமக் களின் அடிப்படை உரி மைக்கு எதிரானது. குறிப்பாக, வெளி மாநி லங்களிலிருந்து மாட்டு இறைச்சி கொண்டு வரப்படுவதற்கும் தடை விதிக்கப்பட்டிருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், "இந்த மனுக் கள் தொடர்பாக அரசு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். மேலும், வெளி மாநிலங்களிலிருந்து மாட்டிறைச்சி கொண்டு வரப்படுவதை உரிமங்கள் வழங்குவதன் மூலம் அனுமதிப்பது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும் என்றனர். இதையடுத்து, இந்த வழக்கு விசாரணை, வருகிற 20-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

Read more: http://viduthalai.in/e-paper/99289.html#ixzz3WcjIvtPD

தமிழ் ஓவியா said...

காசிருந்தால் கபாலி!


இந்தத் தலைப்பு விடு தலையில் வெளி வந்த தல்ல - தினமலர் இன்று வெளியிட்ட தலைப்பு!

மயிலாப்பூர் கபாலீஸ் வரர் கோயில் விழாவில் ஏகப்பட்ட குளறுபடிகளாம்.

காசிருந்தால் தான் கபாலியாம் சொல்லுவது தினமலர்

Read more: http://viduthalai.in/e-paper/99292.html#ixzz3Wck0bvc6

தமிழ் ஓவியா said...

இதோ - மாட்டுப் புத்திரர்கள் உஷார்!

- ஊசிமிளகாய்

இன்று மக்கள் நல்வாழ்வு நாள் (7.4.2015) நம் நாட்டில் நமது மக்களின் சராசரி ஆயுள் ஆண்களுக்கு 69.47 ஆகவும், பெண்களுக்கு 75.08 ஆகவும் ஆயுள் வளர்ந் துள்ளது எதனால்?

மூடநம்பிக்கைகளைப் பெரிதும் ஒழித்து, கிராமப்புறங்களில் நோய் நொடி என்றால், உடனடியாக மருத்து வரிடம் அழைத்துச் செல்லாமல், நோயாளிகளை,

மாந்திரீகர்களிடமும், கோயில், பூஜை, வேண்டுதல் என்றும் இருந்த நிலை மாறி,

மருத்துவ அறிவியல் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்த துணிந்து ஈடுபட்டதால்தான் இன்று நோய்களை விரட்டி, சராசரி ஆயுளைக் கூட்டும் முயற்சி வெற்றி பெற்றுள்ளது.

மந்திர உச்சாடனங்களால் அல்ல; ஆனால் இன்னும் அறிவியல் பரப்ப வேண்டிய சாதனங்களான சில தொலைக்காட்சிகளில் சில பேய்க் கதைகளைத் திட்டமிட்டுப் பரப்பி, அறி யாமையை, பக்தி மூடநம்பிக்கையை வளர்க்கவே உதவுகின்றன.

இரவு 10 மணிக்குமேல் நம்ம ஊர் டி.வி.களுக்கே பேய்பிடித்து விடுகிறது!

சின்னத் திரையோடு போட்டி போட்டு பெரிய திரைகளும் பேய்க் கதைகளை ஒளிபரப்புகின்றன.

இதன் விளைவு - பாதிப்பு - இன்றுகூட சென்னை தியாகராயநகர் பிரபல துணிக்கடையில் பணிபுரியும் பெண்களில் சிலர் பேய் வந்து ஆடி தங்களை அழைத்து வந்த ஊருக்கே திருப்பி அனுப்ப இப்படி பேய் பிடித்து, (சாமி ஆடுதல் போல) வித்தைகள் செய்துள்ளனர் என்ற செய்தி எவ்வளவு அறிவைப் பறி முதல் செய்யும் அபத்தச் செய்தி!

அது மட்டுமா? ஆட்சியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர், புகையிலை முதலாளிகளின் வயப்பட்டோ என்னவோ, புகைபிடிப்பதினால் புற்றுநோய் வருகிறது என்பதை பெரிய எழுத்துக்களில் விளம்பரப்படுத்தத் தேவையில்லை என்று கூறி, அது நாட்டில் உள்ள மருத் துவர்கள், மக்கள் நல்வாழ்வு நல விரும்பிகளை அதிர்ச்சி அடையச் செய்து ஆவேசம் கொள்ளவும் செய்தது!

எதிர்ப்பலை கிளம்பியவுடன் பிரதமர் மோடி, அதை மறுத்துப் பேசி, புதிய ஆணை ஒன்றையே போடும் அளவுக்கு நிலைமை வந்தது!

டில்லி வட்டாரத்தில், இந்த புகையிலை வியாபார பெரு முதலாளிகளுக்கு பணிய மறுத்ததால்தான் டாக்டர் அர்ஷவர்த்தன் அவர்களது பதவி பறி போய் விட்டது என்ற பேச்சு பரவலாக அடிபடுகிறதே!

புகையிலையால் புற்று நோய் வந்து உயிர்க் கொல்லி ஆவது என்பது எவராலும் மறுக்க முடியாத விஞ்ஞான உண்மை. அதையே கபளீகரம் செய்து புற்று நோய் வருவதற்கு வேறு பல கார ணங்கள் உண்டு என்று திசை திருப்பும் பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் உண்டு.

நெய்யை ஊற்றி விளக்கேற்றினால் நிறைய பிராண வாயுவை அது தருகிறது என்று அறிவியலுக்குப் புறம்பான ஒரு செய்தியை ஒரு ஆர்.எஸ்.எஸ். தலைவர் கூறியுள்ளார்.

இவர் இப்படிக் கூறியதற்குக் காரணம் இவர் அகில பாரத கோ (பசு) சேவா சமிதி என்ற ஆர்.எஸ்.எஸ். சங்பரிவார அமைப்பின் பிரிவுத் தலைவராக உள்ளவராம் (சங்கர்லால் என்பவர்)

இதை எக்னாமிக் டைம்ஸ் நாளேடு (7.4.2015) மறுத்து விஞ்ஞானத்தை இப்படி இவர்கள் கொச்சைப்படுத்துவதற்குக் காரணம் பசு மாட்டிற்கு பெருமையை உயர்த்துவதற்காகவாம்!

18 விதிகளை ஆர்.எஸ்.எஸ். பசு பாதுகாப்புக்காக செய்துள்ளது

1. பசு மாட்டைப்பற்றி, பல்கலைக் கழகங்கள் ஸ்காலர்ஷிப் தந்து ஆராய்ச்சிக் கூட்டங்கள்.

2. ‘Cow Science’ மாட்டு விஞ் ஞானம் என்ற புதுத்துறையை உரு வாக்குவது, ஒவ்வொரு மாநிலத்திலும். எருமைக்கு இவ்வித பாதுகாப்பு எதுவும் கிடையாதாம்!

மனுஷ்ய பிள்ளைகளாக வாழுபவர்கள் மாட்டுப் பிள்ளைகளான கோமாதாவின் புதல்வர்களாக்கிடும் 5 அறிவுக்குக் கீழிறக்கத்திற்குக் கொண்டு செல்லும் பணியை வேகவேகமாகச் செய்யத் துணிந்து விட்டார்கள்!

நாடு முன்னோக்கிச் செல்லுகிறதா? பின்னோக்கி - 5ஆம் அறிவு யுகத்திற்குச் செல்லுகிறதா என்று பாருங்கள்!

மாட்டுக் கறியைவிட சாதாரண ஏழை, எளிய மக்களை வாழ வைக்கும் சத்துணவு வேறு உண்டா? அட மண்டூகங்களே! இருட்டைத் தேடி வெளிச்சத்தை ஒழிக்க நினைப்பதா விவேகம்?

Read more: http://viduthalai.in/e-paper/99294.html#ixzz3WckICcdO

தமிழ் ஓவியா said...

ஆரியர் - திராவிடர் போராட்டம்

சென்னை சாஸ்திரி பவனில் மார்ச் 26 வியாழனன்று நிறுவனங்கள் விவகாரத்துறை இந்தி நாள் கொண்டாடியிருக்கிறது. பொதுவாக செப்டம்பர் 14இல் தான் இந்தி நாள் கொண்டாடப்படுவது வழக்கம்.

ஆனால், இந்த முறை செப்டம்பரில் அதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்று சாக்கு சொல்லி இப்போது கொண்டாடியிருக்கிறது.

அதில் பேசிய நிறுவன விவகாரங்களுக்கான மத்திய அமைச்சகத்தின் தென் மண்டல இயக்குநர் பி.கே. பன்சால், தமிழக ஊழியர்களை கிட்டத்தட்ட மிரட்டியிருக்கிறார். இந்தி தினத்தைக் கட்டாயமாக கொண்டாட வேண்டும் என்றும், இந்தி தெரியாத ஊழியர்கள் இந்தியைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்றும் இந்தியில் தான் தொடர்பு கொள்ள வேண்டும் என்றும், ஆவணங்களில் இந்தியில்தான் குறிப்பெழுத வேண்டும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

இதை தமிழ் மொழியுரிமைக் கூட்டு இயக்கம் கண்டித்துள்ளது.

இத்தகைய இந்தித் திணிப்பு முயற்சியை கடுமையாக கண்டிப்பதுடன், அலுவல் மொழிகள் சட்ட விதிகளின் படி தமிழகத்தின் அனைத்து மத்திய அரசு அமைப்பு களிலும் கட்டாயமாக இந்தி பயன்படுத்தப்படுவதை தடை செய்ய வேண்டும் என்று அமைப்பின் ஒருங் கிணைப்பாளர் ஆழி செந்தில்நாதன் கூறியுள்ளார்.

2014 மே 22ஆம் தேதி மத்தியில் ஆட்சி அமைத்த பிஜேபி அரசு அடுத்த அய்ந்தாம் நாளிலேயே (மே 27) இந்தி மொழி பற்றிய ஒரு சுற்றறிக்கையை உள்துறை அமைச்சகம் அனைத்து மத்திய அரசுத் துறைகளுக்கும் அனுப்பியது.

மத்திய அரசின் அனைத்து அமைச்சகங்கள், அனைத்துத் துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள், வங்கிகள், சமூக ஊடகங்களைக் கையாளும் அதி காரிகள் இந்தி மற்றும் ஆங்கிலத்தைப் பயன்படுத்தலாம். எனினும் இந்தி மொழிக்கு அதிக முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். அரசு அலுவலகங்கள் முழுக்க இந்தி மொழியையே பயன்படுத்தும் அரசு அதிகாரிகளுக்கு பரிசுத் தொகை அளிக்கப்படும். இது முதல் சுற்றறிக்கை அதற்கு அடுத்த மாதம் ஜூனில் (2014) வெளிவந்த அறிவிப்பு: மத்திய அரசு அலுவலகங்களில் அரசு அதிகாரிகளுக்குச் சிறப்பு இந்தி பயிற்சி, சுற்றறிக்கைகள் இந்தியில் அனுப்பப்பட வேண்டும் என்ற ஆணையும் பிறப்பிக்கப்பட்டது.

தமிழ் ஓவியா said...


அதற்கு அடுத்த மாதமான ஜூலையிலோ மத்திய அரசின் இடைநிலைக் கல்வி வாரியத்துடன் இணைக்கப்பட்டுள்ள பள்ளிகளில் சமஸ்கிருத வாரம் கொண்டாடப்பட வேண்டும் என்று சுற்றறிக்கை வெளியிடப்பட்டது.

இதன் மூலம் பள்ளிகள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஆகியோர் சமஸ்கிருத மொழி பற்றி தங்களது அறிவைப் பகிர்ந்து கொள்ள ஒரு வாய்ப்பு உருவாகும் என்றும் சுற்றறிக்கை கூறியுள்ளது. மாணவர்கள் மத்தியில் மொழியியல் படைப்பாற்றலை வளர்ப்பதற்கு இத்தகு சமஸ்கிருத வாரக் கொண் டாட்டங்கள் உதவும் என்றும், அதனால் நெறி முறைப்படுத்தப்பட்ட கல்வி தரத்தை உயர்த்திட அது வழி வகுக்கும் என்றும் இந்தச் சுற்றறிக்கையில் வியாக்கியானமும் செய்யப்பட்டு இருந்தது.

ஜூலை மாதம் முடிந்து ஆகஸ்டில் ஓர் அறிவிப்பு. வழக்கமாக மத்திய அரசு அறிவிக்கும் ஆசிரியர் தினத்தை குரு உத்சவ் கொண்டாட வேண்டும் என்று ஆணையிடப்பட்டது.

அவ்வப்போது கடும் எதிர்ப்பு குறிப்பாக தமிழ் நாட்டில் வெடித்துக் கிளம்பும் போதெல்லாம் பொருத்த மில்லாத வகையில் வெண்டைக்காய் விளக்கெண் ணெய் வழ வழா குழ குழா விளக்கங்கள் மத்திய அரசு தரப்பில் சொல்லப்படுவது வழக்கமாகவே இருந்து வருகிறது.

சமஸ்கிருதம், சீனம், ருசிய மொழி, உருது, அய்ரோப் பிய மொழிகள் ஆகியவற்றைப் பயிற்றுவிப்பதற்கான மய்யங்களை அமைக்க மத்திய அரசு நிதி உதவி செய்கிறதா என்று பிஜேபி நாடாளுமன்ற உறுப்பினர் சிவகுமார் உதாசி வினா ஒன்றை எழுப்பினார்.

அதற்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி அளித்த பதில் கவனிக்கத் தக்கது.

சமஸ்கிருதத் துறை இல்லாத மத்தியப் பல்கலைக் கழகங்களில் அத்துறையை உருவாக்குவது தொடர்பாக பரிசீலிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

அய்ந்து சமஸ்கிருதப் பல்கலைக் கழகங்களுக்கும் இரண்டு நிகர் நிலைப் பல்கலைக் கழகங்களுக்கும் திட்டம் சார்ந்த, திட்டம் சாராத மானியங்களை பல்கலைக் கழக மானியக் குழு (யூ.ஜி.சி.) அளித்து வருகிறது என்றார் அமைச்சர்.

கேந்திர வித்யாலயா பள்ளிகளில் இதுவரை கற்பிக்கப்பட்டு வந்த ஜெர்மன் மொழிக்குப் பதிலாக இன்று மூன்றாவது மொழியாக சமஸ்கிருதம் கற்பிக்க வேண்டும் என்று அமைச்சர் ஸ்மிருதி இரானி பதில் அளித்தார்.

இந்தப் போக்குகள் எல்லாம் எதை நோக்கி என்பதைச் சிந்திக்க வேண்டும். பார்ப்பனீய ஆதிக்கக் கலாச்சாரத்திற்கான கால்கோள் விழாக்கள் என்பதை மறந்து விடக் கூடாது.

பாரதிய ஜனதா என்றாலே பார்ப்பனீய ஆதிக்க நோக்கத்தை உள்ளடக்கமாகக் கொண்ட ஆரிய ஆட்சி என்பதை உணர்ந்து, ஆரியர் - திராவிடர் போராட்டம் என்பதை அய்யமறந் தெளிந்து, களத்தில் சந்திக்கத் தயாராக வேண்டும்.

நாட்டில் நடப்பது வெறும் அரசியல் போராட்டம் அல்ல; ஆரியர் - திராவிடர் போராட்டம்தான் என்று தந்தை பெரியார் அழுத்தத்திருத்தமாகச் சொன்னதை இப்பொழுது பொருத்திப் பாருங்கள் - புரியும்.

Read more: http://viduthalai.in/page-2/99280.html#ixzz3WckdE72f

தமிழ் ஓவியா said...

நான் பசுமாமிசம் சாப்பிட்டவன், இன்றும் சாப்பிடுவேன், தேவைப்பட்டால் நாளையும் சாப்பிடுவேன்

மார்கண்டேய கட்சு பேச்சு


புதுடில்லி, ஏப்.7_ பசு மாமிசத்தில் அதிகப்படி யான புரதச்சத்து உள்ளது, என்னிடம் யாரும் நீ இதைச்சாப்பிடாதே, நான் சொல்வதை மாத்திரம் சாப்பிடு என்று கூற உரிமையில்லை என்று முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி மார்கண்டேய கட்சு கூறியுள்ளார். நாடு முழுவதும் பசுமாமிசம் தொடர்பான சர்ச்சைகிளம்பிக்கொண்டு இருக்கும் போது முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி மார் கண்டேய கட்சு பரபரப் பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன் விபரம் வருமாறு பசுமா மிசத்தில் அதிக அளவு புரதச்சத்து உள்ளது. ஒருவரின் உணவுப்பழக்கம் என்பது அவரது தனிப் பட்ட உரிமையாகும். இந்த அரசியல் சாசனம் இந்தி யாவில் உள்ள அனைத்து மக்களின் தனிப்பட்ட உணவு விவகாரம் குறித்து சிறப்பான விதிகளை வகுத் துள்ளது. அரசு சட்ட மியற்றி ஒருவரின் தனிப் பட்ட உணவு விவகாரத் தில் தலையிடமுடியாது. நான் பசுமாமிசம் சாப் பிட்டு இருக்கிறேன், இன்றும் சாப்பிடுகிறேன், வாய்ப்பு கிடைத்தால் நாளையும் சாப்பிடுவேன் என்று கூறியுள்ளார். மேலும் மாட்டிறைச்சி தடைச்சட்டத்தை தவ றானது என்று குறிப்பிட் டுள்ளார்.

உலகில் அதிகம் பேர் சாப்பிடும் உணவு மாட்டிறைச்சியாகும் மாட்டிறைச்சி உண்பதில் தவறு ஒன்றுமில்லை. மிகவும் குறைந்த விலையில் கிடைப்பதால் இதை அதிக மானோர் உண்கின்றனர். வடகிழக்கு மாநிலங்களில் கேரளா மற்றும் தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் மாட்டிறைச்சி முக்கிய உணவாக உண்ணப்படு கிறது. நான் பசுமாமிசம் சாப்பிடுபவன் தான், எனது குடும்பத்தார் எதிர்ப்பு தெரிவிப்பதால் வீட்டில் சாப்பிடமாட்டேன் ஆனால் உணவகங்களில் நான் செல்லும் போது எனது முதல் தேர்வு மாட் டிறைச்சியில் செய்யப்பட்ட உணவுதான் இருக்கும் மத ரீதியான விவகாரங்களில் நுழைந்து மாட்டிறைச்சியை தடைசெய்வது தவறான தாகும் வேண்டுமென்றால் உலகமெங்கும் உங்கள் பிரச் சாரத்தை முன்னிலைபடுத்தி மாட்டிறைச்சி சாப்பிடு வதை கைவிட முயற்சி செய்யலாம், ஆனால் அது இயலாத காரியம் மட்டு மல்ல சர்வதேச அளவில் நாட்டிற்கு அவப்பெயரை ஏற்படுத்தி கொடுக்கும் பசு மாமிசம் தொடர்பாக தொண்டை வற்ற கத்தும் நபர்கள் முதலில் பட்டினி யால் குப்பைகளையும் சில சமயங்களில் அசிங்கமான வைகளையும் உண்ணும் பசுக்கள் பற்றி கவலையடை யட்டும். நான் பலமுறை பசுக்கள் குப்பைகளை தின்பதைப் பார்த்திருக்கிறேன். அந்தக் குப்பைகள் மூலம் அசிங்கங் களும் பசுக்களின் வயிற்றில் செல்கிறது.

நரேந்திர மோடி தலை மையில் ஆன அரசு முக்கிய மாக அரசியல் காரணத் தினால் மாத்திரமே இந்த பசு வதை தடைச்சட்டம் கொண்டு வரப்பார்க்கிறது. 1950-களிலேயே நீதிமன்றம் தனிமனித உணவு விவகா ரத்தில் அரசின் சட்டங்கள் எதுவும் செய்ய முடியாது என்று கூறியுள்ளது. மேலும் மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டும் மாட் டிறைச்சி தடைச்சட்டத் தால் 15 லட்சம் பேர் வேலையிழந்துள்ளனர் என்று தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

Read more: http://viduthalai.in/page-3/99298.html#ixzz3Wcli6aS6

தமிழ் ஓவியா said...

ஆந்திரக் காட்டில் அப்பாவி தமிழர்கள் 20 பேர் சுட்டுக்கொலை - நெஞ்சைப் பிளக்கக் கூடியதாகும்

உச்சநீதிமன்றம் அல்லது உயர்நீதிமன்ற நீதிபதியின்மூலம் மட்டுமே நீதிவிசாரணை நடத்திடவேண்டும்!

தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை

இரயில்வே நிதி நிலை அறிக்கை (பட்ஜெட்) தமிழ்நாட்டுக்குப் பட்டை நாமம்!

ஆந்திர மாநிலத்தில், ஆந்திர காவல்துறையினரால் அப்பாவித் தமிழர்கள் 20 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்; இதற்கு உடனடியாக உச்சநீதிமன்றம் அல்லது உயர்நீதிமன்ற நீதிபதியின்மூலம் நீதி விசாரணை நடத்திடவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கை வருமாறு:
காக்கை, குருவிகள் போல சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்

திருப்பதி அருகே சேஷாசலம் காட்டில், செம்மரம் வெட்டச் சென்றவர்களான தமிழ்நாட்டைச் சேர்ந்த, திருவண்ணாமலை, வேலூர், சேலம், விழுப்புரம் மாவட்டங் களைச் சேர்ந்த அப்பாவித் தமிழர்கள் 12 பேர்கள் உள்பட, மொத்தம் 20 பேர்கள் காக்கை, குருவிகள் போல சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்கள் என்ற செய்தி - நம் நெஞ்சைப் பிளக்கும் செய்தியாகும்!

இது ஒரு அரச பயங்கரவாதம்!

அவர்கள் தொழிலாளர்களாக அழைத்துச் செல்லப்பட்ட ஏழைக் கூலித் தொழிலாளர்கள்; தவறு செய்தவர்களை சட்டப்படி ஆந்திர அரசும், அதன் காவல்துறையும் தண்டிக்கவேண்டுமே தவிர, இப்படி என்கவுண்டர் என்று சொல்லி, திட்டமிட்டு சுட்டுக் கொன்றுவிட்டு, அவர்கள் தாக்கினார்கள் என்று பழி போடுவது, எவ்வகையில் ஏற்கத்தக்கது? தமிழர்கள் என்றால் நாதியற்ற மக்களா?

அண்டை மாநிலங்களில் இப்படிப்பட்ட அவலங்களும், அக்கிரமமான முறையில் உயிர்ப் பறிப்புகளும் ஏற்பட்டால், அதன் எதிர்வினை இங்கே தொடங்கப்பட்டால் என்ன வாகும் என்று ஆந்திர அரசும், காவல்துறையும், முதல மைச்சரும் எண்ணிப் பார்க்கவேண்டாமா?
தமிழர்கள் என்று பார்ப்பதுகூட ஒருபுறம் இருக்கட்டும்; அவர்கள் மனிதர்கள் அல்லவா?
திட்டமிட்டு நடத்தப்பட்ட படுகொலை!

மனித உயிர்களைப் பறிப்பது என்ன ஆந்திரக் காவல்துறைக்குப் பிள்ளை விளையாட்டா?

தவறு செய்தவர்கள் என்றால், அவர்கள் நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்படவேண்டுமே தவிர, இப்படி ஒரு பாசிசப் போக்கினை மேற்கொண்டிருப்பது எவ்வகையில் ஜனநாயகத்தில் ஏற்கத்தக்கது?

ஆந்திரக் காவல்துறை நினைத்திருந்தால் சம்பந்தப் பட்டவர்களை சுட்டுக்கொல்லாமல் சுற்றி வளைத்துக் கைது செய்திருக்க முடியாதா? சுட்டுத் தள்ளவேண்டும் என்ற மூர்க்கத்தனத்துடன்தான் திட்டமிட்டே இதில் செயல் பட்டுள்ளது என்பதில் சந்தேகமேயில்லை.

இது அப்பட்டமான படுகொலை என்று தமிழகக் காவல்துறை மாத்திரமல்ல; ஆந்திர மாநிலம் திருப்பதியைச் சேர்ந்த முன்னாள் எம்.பி., அமைச்சர் சிந்தாமோகன் போன்றவர்களும், ஏனைய நடுநிலையாளர்களும் இது திட்டமிட்டு நடத்தப்பட்ட படுகொலை - (ஜாலியன் வாலாபாக் போன்ற) என்றே கூறியுள்ளனர்!

1. உடல்களுக்குப் பக்கத்தில் தண்ணீர்ப் பாட்டில்கள், பிஸ்கெட் பாக்கெட்டுகள், அறுபடாத செருப்புகள் திட்ட மிட்டு வைக்கப்பட்டவை - எல்லாம் ஜோடிக்கப்பட்டவை!

2. பழைய செம்மரக்கட்டைகளை உடல்களுக்கு அருகில் வைத்துள்ளனர்; அவை புதிதாக வெட்டப் பட்டவை அல்ல.

3. சுடப்பட்டவர்கள் 20 பேர்களும் நெற்றிப் பொட்டு, மார்பு பகுதியில் துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளனர் என்று தகவல்கள் வருகின்றன!

4. பெருங்கூட்டம், பெரும் கலவரங்களில்கூட முதலில் எடுத்த எடுப்பிலேயே, துப்பாக்கிச் சூடு என்று நடத்தி விடுவதில்லையே!

காவல்துறையினரைத் தாக்க வந்திருந்தால், அவர்களை அடக்க இப்படியா நெற்றிப் பொட்டில்; மார்பில் குறி வைத்துச் சுட முடியும்?

இந்த ஆந்திராவின் அத்தை - பாட்டிக் கதையை அறிவுள்ள எவரும் ஏற்கமாட்டார்கள்!

உடனடியாக இதற்கு உச்சநீதிமன்றம் அல்லது வெளிமாநில உயர்நீதிமன்ற நீதிபதியின்மூலம் நீதி விசாரணை நடத்திடவேண்டும்.

தமிழ்நாடு அரசும் - ஆந்திர அரசும் இழப்பீடு வழங்குக!

மனித உரிமை அமைப்புகள், ஆர்வலர்கள் இங்கு சட்ட நடவடிக்கைகளை ஆந்திரக் காவல்துறை, பொறுப்பாளர் கள்மீது தொடங்கவேண்டும்.

இவர்களுக்கு ஆந்திர அரசும், தமிழ்நாடு அரசும் பெருந்தொகைகளை, உயிர் இழந்த ஏழைத் தொழிலாளர் கள் குடும்பங்களுக்குத் தர முன்வரவேண்டும் (பணம் உயி ருக்கு ஈடாகாது என்ற போதிலும்கூட, ஏழைக் குடும்பத்தி னரின் வாழ்வாதாரத்திற்கு அது ஓரளவு உதவக்கூடும்).

அண்டை மாநிலம், இப்படி நடந்துகொள்ளலாமா? உயிர் இழந்தவர்களின் குடும்பத்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

தமிழர்கள், தமிழ்நாட்டவர்கள், திருப்பதிக்குச் செல் வதை இனி புறக்கணிக்கவேண்டும்.


கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்.

சென்னை
8.4.2015

Read more: http://viduthalai.in/e-paper/99313.html#ixzz3Widxkatd

தமிழ் ஓவியா said...

தாலிபற்றி தகர டப்பா சத்தம் போடுவோர்க்கு அர்ப்பணம்!

அமெரிக்காவில் இந்து முறைப்படி நடந்த ஆண்களின் ஓரினச் சேர்க்கை திருமணம்!

வேத சடங்குகளுடன் தாலி கட்டி நடைபெற்ற கூத்து!

கேரளாவைச் சேர்ந்த 2 ஓரினச்சேர்க்கை இளைஞர்கள் அமெரிக்காவில் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த சந்தீப் என்பவருக்குக் கடந்த 2012 ஆம் ஆண்டு டேட்டிங் இணையதளம் ஒன்றின்மூலம் கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்த கார்த்திக் என்ற பார்ப்பனர் அறிமுகமாகியுள்ளார்.

முதலில் நட்பாக தொடங்கிய அவர்களின் பழக்கம் காலப் போக்கில் காதலாக மாறியுள்ளது.

இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவுக்கு சென்ற அவர்கள், தங்களின் காதல் பற்றி பெற்றோர், உறவினர்களிடம் தெரிவித்துள்ளனர்.

இதனைக் கேட்ட இருவீட்டார்களில் சிலர் அதிர்ச்சியடைந்தாலும், சிலர் அவர்களின் காதலை ஏற்றுக் கொண்டுள்ளனர்.

இறுதியில் இரு வீட்டாரும் அவர்களின் ஆசையை நிறைவேற்றி வைக்க முடிவு செய்ததையடுத்து, கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.

இதையடுத்து இந்த மாதம் கலிஃபோர்னியாவில், சந்தீப் மற்றும் கார்த்திக் பாரம்பரிய இந்து முறைப்படி தங்கள் குடும்பத்தார் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில், புரோகிதர் வேத சடங்குகளுடன் தாலி கட்டித் திருமணத்தை நடத்தி வைத்தார்.

Read more: http://viduthalai.in/e-paper/99323.html#ixzz3Wie5vJWp

தமிழ் ஓவியா said...

யார்வீட்டுப் பணம்?

திருப்பதி தரிசனத்துக்காக ரூ.4 கோடி செலவு செய்த ஆளுநர்


ஆந்திரம், ஏப்.8_ ஆந் திரா, தெலங்கானா மாநிலங்களின் ஆளுநர் ஈ.எஸ்.எல்.நரசிம்மன் பதவியேற்றது முதல் 37 முறை திருப்பதிக்குப் பய ணம் செய்து சுவாமி தரி சனம் செய்துள்ளார். இதற் காக அரசின் பணம் ரூ. 4 கோடி செலவிடப்பட்டுள் ளது தெரியவந்துள்ளது.

ஒருங்கிணைந்த ஆந் திர மாநிலம் பிரிக்கப்படு வதற்கு முன் காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் ஆளுந ராக நியமனம் செய்யப் பட்டவர் ஈ.எஸ்.எல்.நரசிம் மன். ஒருங்கிணைந்த ஆந் திர மாநிலத்தின் கடைசி ஆளுநரான நரசிம்மன், திருப்பதி ஏழுமலையா னின் தீவிர பக்தர். இவர் தான் பதவியேற்ற பிறகு மட்டும் 37 முறை திருப் பதிக்கு வந்து சுவாமி தரி சனம் செய்துள்ளார். ஆந் திர ஆளுநர்களாக இருந்த வர்களிலேயே அதிக முறை திருப்பதி கோயிலுக் குச் சென்றவர் இவர்தான்.

ஆளுநர்களுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு அளிக் கப்படுகிறது. எனவே, நரசிம்மன் திருப்பதிக்கு வரும்போதெல்லாம் குண்டு துளைக்காத 3 கார் கள், காவல்துறை பாது காப்பு, ஆம்புலன்ஸ், தீய ணைப்பு வாகனம், மருத் துவர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் உடனி ருப்பர்.

இந்நிலையில், இசட், இசட் பிளஸ் பிரிவில் உள்ள விவிஅய்பிகள் திருப்பதி வருவதால் அரசு அதிகமாக செலவு செய்ய வேண்டியிருப்பதாக பெயர் வெளியிட விரும் பாத அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது: முதல்வர் பதவியில் இருப்பவர்கள் வந்தால், சுமார் ரூ.30 லட்சம் முதல் 70 லட்சம்வரை செல விடப் படுகிறது. ஆளுநர் பதவி யில் உள்ளவர்களுக்கு ரூ.7 லட்சம்முதல் ரூ.10 லட்சம் வரை செலவிடப்படுகிறது. ஆளுநர் ஈ.எஸ்.எல். நரசிம் மன் இதுவரை திரு மலைக்கு 37 முறை வந் துள்ளார். அந்த வகையில் சுமார் ரூ.3.70 கோடி அவரின் வருகைக்காக செலவிடப்பட்டுள்ளது.

ஆளுநர் நரசிம்மன் தன்னுடன் தனது குடும் பத்தினர், ராஜ்பவன் அதி காரிகள் என குறைந்தது 5 பேரை அழைத்து வரு கிறார். அய்தராபாத்தில் இருந்து ஏர் இந்தியா விமானத்தில் திருப்பதிக்கு 5 பேர் சென்று வர (எக்ஸிகியூட்டிவ் கிளாஸ்) டிக்கெட் விலை ரூ.72 ஆயிரம். இதுவரை 37 முறை வந்துள்ளதால் சுமார் ரூ.26.6 லட்சம் செலவாகியுள்ளது. ஆக ஆளுநர் நரசிம்மனின் திருப்பதி தரிசனங்களுக் காக மட்டும் ஆந்திர அரசு சுமார் ரூ.4 கோடிக் கும் அதிகமாக செலவிட் டுள்ளது. _ இவ்வாறு அவர் தெரிவித்தார்

Read more: http://viduthalai.in/e-paper/99318.html#ixzz3WieCXaeu

தமிழ் ஓவியா said...

மாட்டிறைச்சி தடை விவகாரம்: ஜனநாயகமா?

பாஜக தோல்வியுற்ற ஏராளமான மாநில மக்களின் கருத்துக்கு என்ன மரியாதை?

மும்பை, ஏப்.8_ மாட்டிறைச்சி விவகாரத்தில் தொடக்கத்திலேயே மற்றவர்கள் பேசாமல் இருந்ததாலேயே பாஜகவினர் மாட்டிறைச் சியைத் தடைசெய்கின்றனர் என்று மும்பை யிலிருந்து வெளிவரக்கூடிய ஆங்கில இதழான டி.என்.ஏ.காம் கூறுகிறது.

பாஜக தேர்தல் அறிக்கையில்...

2014ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலின்போது பாஜக தேர்தல் அறிக்கையில் பசு மற்றும் அதன் கன்றுகளைப் பாதுகாப்ப தற்குத் தேவையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று குறிப்பிட்டிருந்தது.

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், மணிப்பூர், மிசோரம், நாகாலந்து, ஒடிசா, திரிபுரா மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்களில் தேர்தலில் பாஜக கடும் தோல்வியைத் தழுவியது.
30.32015 அன்று ராஜ்நாத்சிங் கூறுகையில் பசுவை இறைச்சிக்குக் கொல்வதை இந்த நாடு ஏற்றுக்கொள்ளாது என்று கூறியுள்ளார்.

நாடு முழுவதும் மாட்டிறைச்சிக்குத் தடை விதிப்பதில் அதிகப்படியான முயற்சியை அரசு மேற்கொள்ளும் என்றும் குறிப்பிடுகிறார்.

மேற்கூறப்பட்ட மாநிலங்கள் ராஜ்நாத்சிங் பார்வையில் இந்தியாவின் அங்கங்களாக இல்லையா? அல்லது ஜனநாயகரீதியில் அம் மாநில மக்களின் கருத்துகளை ஒரு பொருட் டாக எடுத்துக்கொள்ள மாட்டாரா?

இதுபோன்ற மாட்டிறைச்சியே இல்லாதவாறு தடைசெய்வது என்பதில், டில்லி தொடங்கி பாஜக அல்லாத அரசுகள் உள்ள மாநிலங்களில் இந்தி, இந்து, இந்துஸ்தானி என்பதன்கீழ் நாட்டை ஒன்றுபடுத்துவதாகக் கூறுவது நாடு குறித்த அக்கறை மற்றும் புரிதலைக் கேலிக் கூத்தாக்குவதாகும். இதில், நீரோட்டத்துக்கு பல முகத்துவாரங்கள் உள்ளதுபோல், சிலர் மாட்டிறைச்சித் தடைகுறித்தும், சிலர் இணைய சுதந்திரம் குறித்தும், இன்னும் இந்தியாவுக்கான கொள்கை என்றும் நீண்டுகொண்டே இருக்கிறது.

மத்திய அரசின்கீழ் இயங்கும் ஏர்_இந்தியா விமான சேவையில் முட்டை இல்லாத கேக், வெங்காயம் இல்லாத பாலாடைக்கட்டி(பனீர்) பஃப்ஸ் ஆகியவைகளை எந்த கருத்துகளும் இல்லாத பொதுவானவர்களுக்கும் வழங்கப் பட்டது. அவர்கள் புனிதம் என்று சொல்லி விடுவதாலேயே மாட்டிறைச்சியையோ, மாட்டிறைச்சி உணவையோ தடுத்து நிறுத்திவிட முடியாது. ஆகவேதான் அவர்கள் மாட்டிறைச்சியைத் தடைசெய்வதை முதலில் எடுத்துக்கொண்டுள்ளனர்.

மாட்டிறைச்சித் தடை விவகாரத்தில் பாஜக தோல்வியுற்ற ஏராளமான மாநிலங்களில் உள்ள மக்களின் கருத்துக்கு என்ன மரியாதை? ஜனநாயகமா?

Read more: http://viduthalai.in/e-paper/99316.html#ixzz3WieKQUf2

தமிழ் ஓவியா said...


கர்மா, விதியை நம்பினால்...


கர்மாவை நம்பினவன் கடைத்தேற மாட்டான். விதியை நம்பினவன் மதியை இழப்பான்.
_ (குடிஅரசு, 12.4.1931)

Read more: http://viduthalai.in/page-2/99329.html#ixzz3Wieo3tXH

தமிழ் ஓவியா said...

ஏழைகளின் புரோட்டின் சத்துணவு மாட்டிறைச்சியைத் தடை செய்வதா?
மகாராட்டிர பால்வளர்ச்சித் துறையின் எதிர்ப்பு

மும்பை, ஏப்.8_ ஏழை களின் சத்துணவு மாட்டி றைச்சியைத் தடை செய்வதா? என்று மகாராட் டிர மாநிலத்தில் மாட்டி றைச்சித் தடைக்கு எதிர்ப் புத் தெரிவிக்கும்வகையில் கேரளாவிலும், டில்லியிலும் இளைஞர்கள் மாட்டி றைச்சித் திருவிழா நடத்தி உள்ளனர்.

மாட்டிறைச்சித் திரு விழா கடந்த மாதத்தில் இந்திய கம்யூனிஸ்ட் மார்க் சிஸ்ட் கட்சியின் இளைஞர் அமைப்பாகிய இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (டிஒய்எப்அய்) கேரளா வைத் தொடர்ந்து டில்லி யிலும் நடைபெற்றது. மகாராட்டிர மாநிலத்தில் மாட்டிறைச்சிக்கு விதிக்கப் பட்டுள்ள விற்பனை மற்றும் நுகர்வுக்கான தடையை எதிர்த்தே மாட்டிறைச்சித் திருவிழா நடைபெற்றுள்ளது.

கேரளா, டில்லி கடந்த மாதம் பத்தாம் தேதி அன்று கேரளாவில் திருவனந்தபுரத்திலும், கடந்த மாதம் 19ஆம் தேதி அன்று டில்லியிலும் மாட்டிறைச்சித் திருவிழா நடைபெற்றுள்ளது.

மாட்டிறைச்சித் திரு விழா, சுதந்திரம்குறித்து மக்களவை நாடாளுமன்ற உறுப்பினரும், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத் தின் தலைவருமாகிய எம்.பி. ராஜேஷ் கூறும்போது, எதை ஒருவர் உண்பது? எதை உடுப்பது? அல்லது எந்த மொழியில் பேசுவது-? என்பதை தாங்களாக தேர்வு செய்து கொள்வ தாகும். அதை எவரும் திணிக்கக் கூடாது. எங்களு டைய கவலை எல்லாம் இத்தடை நாடுமுழுவதும் பரவிவிடக்கூடாது என்பது தான் என்றார்.

மனுஸ் மிருதியில் மாட்டிறைச்சி

மேலும், எம்.பி.ராஜேஷ் கூறும்போது, இந்த மாட் டிறைச்சித் திரு விழாவுக்கு கட்சிகளைக் கடந்து அனைத்துதரப்பினரையும் அழைத்தோம். பாஜகவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களையும் மாட்டி றைச்சித் திருவிழாவில் எங்களுடன் இணைந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்தோம். காய்கறி உண வை மட்டுமே உண்ணக் கூடியவர்களுக்குகூட இந்தப் பிரச்சினையில் ஒற் றுமையைக் காட்டும்வகை யில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுத்திருந்தோம். மாட்டிறைச்சித் தடை என்பது மதத்தின் அடிப் படையில் விதிக்கப்படுவது எவ்விதத்திலும் நியாயமான தாக இல்லை.

மனுஸ்மிருதியில், ஒட் டகத்தைத் தவிர, அனைத்து விலங்குகளையும் உண்ண லாம் என்று வெளிப்படை யாகவே கூறப்பட்டுள்ளது. வலதுசாரிகளின் தலைவர் வினாயக் தாமோதர் சா வர்க்கார் மாட்டிறைச்சியை உண்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். தர்ம சாஸ்திரங்களிலும்கூட மாட்டிறைச்சி உண்பது குறித்து குறிப்புகள் உள் ளன என்று கூறினார்.

மாட்டிறைச்சிகுறித்த ஆய்வு அரசியல்தான்: கோல்வால்கர்

கேரளாவின் சுயேச்சை நாடாளுமன்ற உறுப்பி னரான வழக்குரைஞர் ஜாய்ஸ் ஜார்ஜ் கூறும் போது, ஜவஹர்லால் நேரு மாட்டிறைச்சி குறித்து ஆய்வு செய்வதற்காக ஏ.கே.சர்க்கார் குழுவை அமைத்தார். அக்குழுக் கூட்டத்தில் வலதுசாரி அமைப்பைச் சேர்ந்தவரும் கொள்கை வகுத்தவருமான எம்.எஸ்.கோல்வால்கர் அதில் ஒன்றுமே கிடை யாது. முற்றிலும் அரசியல் தான் உள்ளது என்று கூறியது புகழ்பெற்றதாகும் என்று கூறினார்.

ஏழைகளின் புரோட்டின் சத்து

அண்மையில் மாநிலங் களவையில் திரிணாமுல் காங்கிரசு கட்சியின் தலைவரான தேரேக் ஓபி ரையன் மாட்டிறைச்சி குறித்து பிரச்சினை எழுப் பியபோது, இந்த பிரச்சி னையில் மதக் கண்ணோட் டத்துடன் பார்க்கக்கூடாது. வடகிழக்கு மாநிலங்களில் உள்ள ஏராளமான சிறு பான்மை மக்கள், தாழ்த் தப்பட்டவர்கள் மாட்டி றைச்சியை சாப்பிடுகி றார்கள். இது ஏழைகளின் புரோட்டின் சத்தாகும் என்றார்.

மாடுகளைப் பராமரிக்கும் கோகுல் கிராமம்

மகாராட்டிர மாநில சட்டமன்றத்தில் கேள்வி நேரத்தின்போது எழுந்த கேள்விக்கு பதில் அளித்த பால் வளர்ச்சித்துறை அமைச்சர் ஏக்நாத் கட்சே கூறும்போது, மகாராட்டிர மாநிலத்தில் கோரேகான் கிழக்குப்பகுதியில் உள்ள ஆரே குடியிருப்புப் பகுதி யில், பால் வளர்ச்சித் துறைக்குச் சொந்தமான நிலப்பகுதியில் கோகுல் கிராமம் எனும் பெயரில் 200 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டு பழைய பசுக்கள், எருதுகள் ஆகிவைகளுக்கு மறுவாழ்வு அளித்திட, அவைகளின் பராமரிப்புக்காக பயன் படுத்துவதற்காக ஒதுக்கப் பட்டு உள்ளது என்று கூறினார்.

மேலும் அவர் கூறும் போது, கோகுல் கிராமம் மத்திய அரசின் நிதி உதவியுடன் செய்லபடுத்தப் பட உள்ளது. மாட்டிறைச் சித் தடையால் வயதான மாடுகள் தொடர்பாக அரசு அதிக பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டிய தாகவுள்ளது.

வீண் வேலை கோகுல் கிராமம் திட்டம் ஆரே பாது காப்புக்குழுவின் சார்பில் விமர்சனம் முன் வைக்கப் பட்டுள்ளது. வயதான மாடு களைவைத்து பராமரிப்பது, பசும்புல் வளர்ப்பது வீணான வேலை என் கிறார்கள். கட்சே கூறும் போது, பால் வளர்ச்சித் துறைக்குச் சொந்தமான நிலங்கள் உள்ள தானே மற்றும் பால்கர் மாவட்டங் களில் தப்சேரி பகுதிகளில் கோகுல் கிராமங்கள் அமைக்கப்பட உள்ளன என்றார்.

Read more: http://viduthalai.in/page-3/99346.html#ixzz3Wifbkm7x