Search This Blog

4.4.15

பெண்களுக்கு மட்டும் தாலி-திருமணமான ஆம்பளையைப் பார்த்து எப்படிக் கண்டுபிடிப்பாய்?

ஆணுக்குப் பெண்ணை அடிமையாக்குவதே திருமணம்இந்த நிகழ்ச்சி புதிய முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. பழைய முறையை மாற்றிப் புதிய முறையை மாற்றிப் புதிய முறையைப் புகுத்த வேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டதென்றால், பழைய முறையிலிருந்த அறியாமை - மூடப் பழக்க வழக்கம் - ஜாதி இழிவு, பெண்ணடிமை இவை ஒழிக்கப்பட வேண்டுமென்பதற்காகவே பழைய முறையை விட்டு, புதிய முறையில் ஏற்பாடு செய்ய வேண்டியதாயிற்று. அரசாங்க முறையில் செய்யப்படும் பதிவுத் திருமண முறைப்படியே இதுவும் நடைபெறுகிறது. என்றாலும், இதில் இருவரும் சம உரிமை உடையவர்கள் என்பது உறுதி செய்யப்படுகிறது.


இதுவரை பல்லாயிரக்கணக்கான திருமணங்கள் இம்முறையில் நடைபெற்று வந்திருக்கின்றன. நடைபெற்று வருகின்றன என்றாலும், இதுவரை இருந்த அரசானது பெரிதும் பார்ப்பனர்களின் - பார்ப்பன சார்புடையவர்களின் அரசாக இருந்த காரணத்தால், இம்முறைத் திருமணம் சட்டப்படிச் செல்லுபடி அற்றது என்று சட்டம் செய்து வைத்திருந்ததை, இப்போது அமைந்திருக்கும் தமிழர்களின் பகுத்தறிவாளர்களின் ஆட்சியான தி.மு.க ஆட்சி அதனை மாற்றிச் சுயமரியாதைத் திருமணம் சட்டப்படி செல்லும் என்று சட்டமியற்றி இருக்கிறது.


அதனை நாம் பாராட்டுகின்றோம். இந்தியாவிலேயே இந்த மாறுதலைப் பற்றிச் சிந்திக்காதவன் நான் தான். இந்தப் பெண்களை வேலைக்காரியாக ஆண்களுக்குச் சேர்த்து வைக்கும் தரகர்களாக இருப்பது பெரிய கொடுமை. பெண்கள் ஆசைகளைப் போன்ற ஜீவன்; அவர்களுக்கும் ஆண்களைப் போன்று எல்லா உரிமைகளும் கொடுக்கப்பட வேண்டுமென்பதற்காக இம்முறையைத் துவக்க வேண்டியதாயிற்று.


நம் நாட்டிலிருக்கிற நம் இலக்கியத்திலோ, புராணத்திலோ, நீதி நூல்களிலோ எதை எடுத்துக் கொண்டாலும் சரி, பெண்களுக்கு அறிவுரை கூறுவதாகப் பெண்களை அடிமைப்படுத்துவதாக இருக்கின்றனவே தவிர, ஒன்று கூட பெண்களைப் பெருமைப்படுத்துவதாக இல்லை. பெண்கள் அப்படி நடந்து கொள்ள வேண்டும், இப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று கட்டுப்பாடு செய்தது போல, ஆண்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென்று கட்டுப்பாடு விதிக்கவில்லை. நான் இவற்றையெல்லாம் குறை கூற வேண்டுமென்பதற்காகச் சொல்லவில்லை. இவை ஏற்பட்ட காலம் பெண்ணடிமையாக இருந்த காலம். அதற்கேற்றாற் போல அக்காலச் சூழ்நிலைக்கேற்ப ஏற்பாடு செய்யப்பட்டதாகும்.


திருமணம் என்பதே ஓர் ஆணுக்கு ஒரு பெண்ணை அடிமைப்படுத்துவது என்பது தான் பொருள். நீங்கள் இன்னும் பத்தாயிரக்கணக்கில் நகை போட்டாலும் அந்தப் பெண் ஆணுக்கு அடிமையாக இருக்க வேண்டுமென்பது, "தெய்வம் தொழா அள் கொழுநன் தொழு தெழுவாள்" என்கிறான் வள்ளுவன். நாம் கடவுளே வேண்டாமென்று சொன்னால், அப்புறம் கணவன் என்ன வெங்காயம், எதற்காக ஒரு பெண் தன் கணவனை வணங்க வேண்டும்? அவன் என்ன அவ்வளவு உயர்ந்தவனா என்பதைச் சிந்திக்க வேண்டும்.


பொதுவாக ஏன் இராமாயணம், பாரதம், வடமொழி சம்பந்தமான இலக்கியம் கடவுள்? எதை நம்பினாலும் அவன் பெண்களை அழுத்தி அடிமையாக்கத்தானே செய்வான். அத்தனையும் பெண்ணடிமையை நிலைநிறுத்தக் கூடிய வகை தானே!


மரியாதையாகக் கண்டித்தால் நம் மக்களுக்கும் புத்தி வருமோ இல்லையோ என்பதால் மிகக்கடுமையாகக் கண்டிக்க வேண்டியதாயிருக்கிறது. அப்போது தான் கொஞ்சம் ரோஷம் - உணர்ச்சி வருகிறது.


ஆணும் பெண்ணும் ஜீவனில் ஒன்று தான். ஒன்றுக்கொன்று உயர்வு - தாழ்வு கிடையாது. இரண்டும் மனித ஜீவனேயாகும். உலகிலிருக்கிற மற்ற எந்த ஜீவராசிகளிடத்தும் இந்தப் பேதத்தைக் காண முடியாது. அந்த ஜீவன்களையெல்லாம் விட உயர்ந்த பகுத்தறிவினை உடைய மனித ஜீவனில் மட்டும் எதற்காக ஆண் - பெண் என்பதில் உயர்வு - தாழ்வு இருக்க வேண்டும் என்பதைச் சிந்திக்க வேண்டும். முட்டாள்தனத்தினால் தான் பிடிவாதமாக அதைப் பிடித்துக் கொண்டிருக்கிறார்களே தவிர, வேறில்லை. கொஞ்ச நாளைக்கு முன்னே 30, 40- வருஷங்களுக்கு முன்வரை கிராப்பு வைத்தவனைப் பள்ளிக்கூடத்தில் சேர்க்க மாட்டார்கள். வீட்டிலேயே கூடக் கிராப்பு வைத்துக் கொண்டால் சண்டை போடுவார்கள். நான் எங்கள் வீட்டாருக்குத் தெரியாமல் கிராப் செய்து கொண்டேன். என் தந்தையார் நாவிதனைக் கூட்டி வந்து மொட்டையடிக்கச் சொல்லி விட்டார். அது மாறி இன்று யாரைப் பார்த்தாலும் கிராப் தலையாக இருக்கிறது. குடுமி வைத்தவனைக் கண்டால் கேலி செய்கிறார்கள். சவுகரியத்தை முன்னிட்டாவது இதே காரியத்தைப் பெண்களுக்கும் செய்திருக்கலாம். ஆனால், அதை அவர்கள் அழகாகக் கருதுகின்றனர். ஆண்களை அவர்கள் அடிமை கொள்வதற்காக நகையையும், துணியையும் இலஞ்சம் கொடுத்து அவர்களை அடக்கி வைத்திருக்கிறார்கள். பெண்கள் அவற்றைக் கண்டு ஏமாந்து தாங்களாகவே அடிமையாகச் சம்மதிக்கின்றனர். காரணம், நம் பெண்களுக்குப் போதுமான கல்வி அறிவு இல்லாததேயாகும்.


நம் மக்களுக்கு எது படிப்பு என்று தெரியவில்லை! பள்ளிக் கூடத்தில் படிப்பதைப் படிப்பு என்று கருதிக் கொண்டிருக்கின்றார்கள். இந்தப் படிப்பு அறிவாகாது. அறிவிற்குரிய படிப்பு பள்ளிகளில் இல்லை. உலகத்தைப் படிக்க வேண்டும். வளர்ச்சியைப் படிக்க வேண்டும். நம் கண் முன்னே நடைபெறும் விஞ்ஞான அறிவு அற்புதங்களைப் பார்த்துப் படிக்க வேண்டும். அதுதான் அறிவை வளர்க்கும். பள்ளிப் படிப்பு உத்தியோகத்திற்காகப் பயன்படும் தன்மையில் அமைந்திருக்கிறதே தவிர மக்கள் அறிவை வளர்க்கக் கூடிய வகையில் அமையவில்லை. நம் கல்வித் திட்டத்தை மாற்றியமைக்க வேண்டும்.


நம் நாட்டிலிருக்கிற பெரிய அறிவாளிகள், மேதைகள், விஞ்ஞானத்தில் பட்டம் பெற்றவர்கள், பரிசு பெற்றவர்கள் எல்லாம் பழைமையைப் பின்பற்றுபவர்களாக இருக்கின்றார்களே தவிர, அறிவோடு சிந்திப்பவர்களாக இல்லை. சாம்பலை அடித்துக் கொள்வதும், மண்ணைக் குழைத்துப் பூசிக் கொள்வதும், எல்லாம் அவன் செயல், அவனின்றி அணுவும் அசையாது என்று சொல்லக் கூடியவர்களாக இருக்கின்றார்களே தவிர சிந்தனை அறிவு உடையவர்களாக இல்லை. நம் கல்வி முறையில் உள்ள கேடுதான் இதற்குக் காரணமாகும்.


பெண்களுக்கு மட்டும் தாலி கட்டுகிறாயே, ஏண்டா என்றால், பெண் திருமணமானவள் என்பதை மற்றவர்கள் தெரிந்து கொள்வதற்கு என்கின்றான். அப்படியானால் திருமணமான ஆம்பளையைப் பார்த்து எப்படிக் கண்டுபிடிப்பாய் என்றால், நம்மை நாத்திகன் என்று ஏசுகிறான்.


நெடுஞ்செழியன் தங்கைக்கு என் தலைமையில் திருமணம் நடைபெற்றது. அந்தப் பெண்ணிற்கு மணமகனாக இருப்பவரின் தாய், என் காலை வந்து கட்டிப்பிடித்துக் கொண்டு, "எதை வேண்டுமானாலும் செய்து கொள், தாலி கட்டுவதை மட்டும் நிறுத்தி விடாதே" என்று கெஞ்சிக் கேட்டுக் கொண்டார். தாலி என்றால், அது என்னமோ பெரிய "இதாக"ப் பெண்கள் கருதுகின்றனர்! தோழர்கள் சிந்திக்க வேண்டும். நமக்குத் தாலி எதற்குப் பயன்படுகிறது? புருஷன் செத்தால் அறுத்தெறிவதற்கு, தன்னை "முண்டச்சி", சகுனத் தடையானவள் என்பதைக் காட்டிக் கொள்வதற்கு அல்லாமல், அதனால் வேறு என்ன அவசியம் என்பதை நம் பெண்கள் உணர வேண்டும். நம் இயக்கத்தில் உள்ள குடும்பங்களில் பல பெண்கள் தாலி கட்டிக் கொள்ளவில்லை. சில பெண்கள் கட்டியிருந்த தாலியை அவிழ்த்து விட்டார்கள். அதனால் அவர்கள் ஒன்றும் கெட்டுப் போய் விடவில்லையே! பெண்களுக்குத் துணிச்சல் வரவேண்டும். நமக்கு மட்டும் எதற்காக இந்தத் தாலி என்ற உணர்வு வரவேண்டும்.


மனுதர்மப்படி பார்த்தால் நமக்குத் திருமணம் செய்து கொள்ளும் உரிமையே கிடையாது. நமக்குத் திருமணமிருந்ததாக 3,000-வருடங்களுக்கு முன்னுள்ள எந்த ஆதாரமும் கிடையாது. பார்ப்பான் புளுகுவான். நாரதனுக்கு, வசிஸ்டனுக்கு மனைவி இருந்ததாக. அவையெல்லாம் 3,000- வருடங்களுக்குப் பின் எழுதப்பட்டவையே யாகும். தமிழர்கள் புருஷன் பெண்டாட்டியாக வாழ்ந்தார்கள் என்பதற்கு எந்த ஆதாரமும் கிடையாது. இந்நிகழ்ச்சியினைக் குறிப்பிட்டுக் காட்டும்படியான சொல்லோ, வார்த்தையோ தமிழில் இல்லை. இதுபோன்ற நிகழ்ச்சியானது நம்மிடையே இருந்திருக்குமானால், அதற்காகத் தமிழில் பெயர் இல்லாமல் இருக்குமா என்பதைச் சிந்திக்க வேண்டும். பார்ப்பான் வந்து குடியேறிய பின் அவனுடைய சவுகரியத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்தது தான் இத்திருமண முறையாகும். அதற்கு முன் தமிழர்கள் வாழவில்லையா என்றால், வாழ்ந்தார்கள். காதலன் - காதலியாக, சம உரிமையுடையவர்களாக வாழ்ந்திருக்கின்றனர். மற்ற மேல்நாடுகளில் பெற்றோர்கள் பார்த்துத் திருமணம் செய்விப்பது கிடையாது. ஆணும், பெண்ணும் தாங்கள் யாரை விரும்புகின்றார்களோ, அவர்களோடு இருந்து வாழ்கின்றனர். பிடிக்கவில்லையென்றால் தாங்களாகவே விலகிக் கொள்கின்றனர்.


நாம் இப்போது மாறுதல் காலத்தில் இருக்கின்றோம். அறிவின் எல்லை இன்னும் முற்றுப் பெறவில்லை. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அற்புதங்களைப் பார்க்கின்றோம். விஞ்ஞானத்தின் மூலம் எது எது மனிதனால் முடியாது என்று இதுவரை கருதி வந்தோமோ, அவையெல்லாம் நடைபெற்றுக் கொண்டு வருவதைக் கண்ணால் பார்க்கிறோம். நாமும் மாறுதலுக்குத் தகுந்தவாறு நம்மை மாற்றிக் கொள்ள வேண்டும். அதுதான் மனிதன் பகுத்தறிவு உடையவன் என்பதற்குப் பொருளாகும்.


மணமக்கள் தங்கள் தகுதிக்கு மேல் ஆடம்பரமாக இருக்க வேண்டுமென்று ஆசைப்படக் கூடாது. எளிமையான வாழ்வு வாழ வேண்டும். தங்கள் வாழ்வில் முட்டாள்தனமான மூட நம்பிக்கைக் கருத்துக்களுக்கு இடம் கொடுக்கக் கூடாது. கோயில், குளம், தேர், திருவிழா, உற்சவம், பண்டிகை என்று தங்கள் பொருளையும், நேரத்தையும், அறிவையும் பாழாக்கிக் கொள்ளக் கூடாது. கடைசியாகக் குழந்தைகளே பெறாமல் இருந்தால் நல்லது. இல்லை ஒன்று மிஞ்சினால் இரண்டோடு நிறுத்திக் கொள்ள வேண்டும்.


                   ------------------------ 16.06.1968- அன்று பொத்தனூரில் நடைபெற்ற திருமண விழாவில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய அறிவுரை. ”விடுதலை”, 08.07.1968

40 comments:

தமிழ் ஓவியா said...

இளநீர் அபிஷேகம் செய்தால் மழை வருமா?


கன்னியாகுமரி குகநாதீஸ்வரர் கோவிலில் மழைக்கு வேண்டி 1008 இளநீரை அபிஷேகம் என்ற பெயரில் அந்த சாமி பொம்மைமீது கொட்டி வீணாக்கி உள்ளனர்.

சாமி என்ற கல்பொம்மைமீது இளநீரைக் கொட்டினால் மழை வருமா? மழைக்கும்- அந்த கல் பொம்மைக்கும் என்ன தொடர்பு? உணவில்லாமல் பல கோடி மக்கள் பசியில் தவிக்கையில் அந்த உணர்ச்சியற்ற பொம்மைக்கு இளநீர் அபிஷேகம் தேவையா?

Read more: http://viduthalai.in/e-paper/99086.html#ixzz3WLGzh8Ua

தமிழ் ஓவியா said...

மதச் சார்பற்றவர்கள்

எந்த மதத்தையும் பின்பற்றாதவர்கள் மக்கள் தொகையில் உலகில் மூன்றாவது இடத்தில் உள்ளனர். முதல் இடம் கிறித்துவர்கள் - 290 கோடி. இரண்டாம் இடம் முசுலீம்கள் - 280 கோடி.

எச்சரிக்கை

சென்னையில் உள்ள புற்று நோயாளிகள் புகையிலையைப் பயன்படுத்தியதால் புற்று நோய்க்கு ஆளானோர் 38.6 விழுக்காடாகும்.

த(க)ண்ணீர்!

சென்னையில் இப்பொழுதே குடிநீர்ப் பஞ்சம் வந்துவிட்டது. கவியரசு கண்ணதாசன் நகரில் ஒரு குடம் குடிநீர் ரூபாய் ஏழுக்கு விற்பனையாம்!

அதிர்ச்சி

மத்திய மனிதவளமேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி ராணி கோவா சென்றபோது துணிக் கடையில் ஆடையை மாற்றும் போது, அங்கு ரகசிய காமிரா இருந்ததைக் கண்டு அதிர்ச்சியுற்றாராம்.

கோவாவில் ஆள்வது பிஜேபிதான்.

பிஜேபியில் உள்ள பெண் அமைச்சர்களாவது பெண்களுக்கு எதிரான போக்குகளை ஒழிப்பதில் தீவிரம் காட்டக் கூடாதா!

Read more: http://viduthalai.in/e-paper/99095.html#ixzz3WLH9dDv9

தமிழ் ஓவியா said...

அழைக்கிறது பெரியார் திடல்!


இந்துத்துவா போர்வையில் உலவும் சில காவிகளும், சில உதிரிகளும் - அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 125ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவில் திராவிடர் கழகம் நடத்த இருக்கும் இருபெரும் நிகழ்ச்சிகளைக் கண்டு, அறிவைச் செலுத்தாமல், வெறும் விளம்பர வெளிச்சத்துக்காக எதிர்ப்பு அரட்டைக் கச்சேரிகளை அரங்கேற்றுகின்றனர். காவல் நிலையத்திற்குக் காவடி எடுக்கின்றனர். சட்டப்படி நாம் செய்கின்ற கொள்கைப் பூர்வமான செயல்களில் யார்தான் தலையிட முடியும்?

மாட்டுக்கறி விருந்து சட்டப்படி குற்றம் அல்லவே! தாலி அகற்றலும் அந்த வகையைச் சார்ந்தது தானே? இதில் என்ன குற்றத்தைக் கண்டுபிடித்து விட்டன இந்தக் கொழுக்கட்டைகள்.

உண்மையைச் சொல்ல வேண்டுமானால், வெகு மக்களின் உணவுப் பிரச்சினையில் தலையிடுபவர்கள் தான், அவர்கள் யாராக இருந்தாலும் குற்றவாளிகள் - சட்ட விரோதச் செயலில் ஈடுபடுபவர்கள்.

மாட்டுக் கறியில்கூட பசு மாட்டுக் கறியை மட்டும்தான் சாப்பிடக் கூடாதாம். எருமை மாட்டுக் கறியைச் சாப்பிடலாமாம்! அதற்கு ஆட்சேபணை கிடையாதாம்! - தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள் கூறியதுபோல அதிலும்கூட எருமை கருப்பு என்பதால் அலட்சியப்படுத்துகிறார்கள் போலும்! அதிலும் வர்ண தர்மம்தான் போலும்!

மத்தியில் உள்ள ஆட்சி என்னதான் மூடி மறைத்தாலும், அது அப்பட்டமான இந்துத்துவா ஆட்சி என்பதை இதன் மூலம் காட்டிக் கொண்டு விட்டார்கள்; பசு புனிதம் என்று இந்து மதம் சொல்லுவதாக அவர்கள் கூறுகிறார்கள்; அதன் மூலம் பசு உணவுப் பிரச் சினையில் அவர்கள் இந்துத்துவா மத மூக்கை நுழைய விடுகிறார்கள் என்பது அம்பலமாகி விட்டது.

அப்படியே பார்த்தாலும், அவர்களுக்குச் சாட்சி யமாக அவர்களின் இந்து மத சாத்திர நூல்களேகூட ஒத்துழைக்கவில்லை என்பதுதான் பரிதாபம்!

சுருதிகளிலும் ஸ்மிருதிகளிலும் யாகத் தீயில் பசுவைப் போட்டுப் பொசுக்கி, வயிறு முட்ட சாப்பிட்டு, மது குடித்து உண்டாட்டில் திளைத்துக் கிடந்தவர்கள் தான் இந்த ஆரியப் பார்ப்பனர்கள் என்பதற்கு அடுக் கடுக்கான ஆதாரக் குவியல்கள் வண்டி வண்டியாக இறைந்து கிடக்கின்றனவே!

இவர்களின் சங்கராச்சாரியாரே பசுவதையை சாஸ்திர ரீதியாக அங்கீகரித்துள்ளாரே! பார்ப்பனர் பசு மாமிசம் சாப்பிட்டதற்குச் சான்று கூறுகிறாரே - பின் எந்த யோக்கியதையில் கோட்டான்கள்போல சிலர் குதிக்கிறார்களோ தெரியவில்லை. (தெய்வத்தின் குரல் இரண்டாம் பகுதி காண்க)

அனாமதேயங்களுக்கெல்லாம் வெளிச்சம் கொடுக்கிற பொறுப்பற்ற ஏடுகள் நாட்டில் இருப்பதால் சிலர் முண்டாதட்டிப் பார்க்கிறார்கள்.

இவர்கள் இப்படி எல்லாம் பேசப் பேச, புகார்கள் கொடுக்க, கொடுக்க 14ஆம் தேதி நிகழ்ச்சி மிகவும் களைகட்டப் போகிறது. எளிமையாக நடத்த இருந்த நிகழ்வுகளை பொலிவு மிக்கதாக, மக்கள் வெள்ளம் திரண்டு வரும் அரும்பெரும் நிகழ்ச்சிகளாக உருமாற்றி விட்டனர். அந்த வகையில் அவர்களுக்கு நன்றி கூடக் கூறத்தயார்!

மாட்டுக் கறிப் பிரச்சினை ஒரு பக்கம் என்றால் அடிமைச் சின்னமாம் தாலி என்ற தளையை அகற்றிக் கொள்ள முன் வருவதும் அவரவர்களின் தனி உரிமையைப் பொறுத்ததேயாகும்.
இன்னும் சொல்லப் போனால் சட்ட அங்கீகாரம் பெற்ற சுயமரியாதைத் திருமணத்தில் தாலி கட்டாயம் ஆக்கப்படவில்லையே!

அப்படி இருக்கும் பொழுது இதில் மூன்றாவது பேர் வழிகள் தலையிட உரிமையும் இல்லை - அதற்கான சட்டமும் அவர்கள் வசம் கிடையாதே!

தமிழ்நாட்டில்கூட வைதிகத் திருமணங்களில் எல்லா மாவட்டங்களிலும் தாலி கட்டுகிறார்களா என்றால் அதுதான் கிடையாது. தாலி என்றால் என்ன என்றே பல மாவட்டக்காரர்களுக்குத் தெரியாதே!

தாலி அணியும் பெண்கள்கூட சிந்தித்துப் பார்க்க வேண்டும்; கணவன் மரணம் அடைந்து விட்டால் பெண்ணை அவமானப்படுத்துவதற்காகவே தாலி அறுப்பு என்னும் அவமானச் சடங்கை நடத்து கிறார்கள்.

பெண்களின் வளையல்களை உடைத்து, நெற்றியில் குங்குமம் வைத்திருந்தால் அதனை அழித்து, கூந்தலில் பூ வைத்திருந்தால், அதனையும் பிடுங்கித் தூக்கி எறிந்து, அந்தப் பெண்ணை விதவை என்று கரும்புள்ளி செம்புள்ளி குத்தத்தானே இந்தச் சடங்கை வைத் திருக்கிறார்கள்?

அதே நேரத்தில் மனைவியை இழந்தால் அந்த ஆணுக்கு எந்த சடங்கை வைத்துள்ளனர்?

மனைவி செத்து அவரின் கல்லறையின் ஈரம் உலருவதற்கு முன்னதாகவே இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள அகலமான கதவைத் திறந்து வைத்திருப்பதுதானே இந்த அர்த்தம் கெட்ட இந்து மதம்? இல்லை என்று மறுக்க முடியுமா?

கணவன் இறந்தாலும், அந்தப் பெண்ணின் வாழ்வு மரணம் அடைந்து விடக் கூடாது; இன்னொரு வாழ்வும் இருக்கிறது என்ற துணிச்சலைக் கொடுக்கும் சுய மரியாதை உணர்வை ஊட்டுவதுதான் தாலி தேவை யில்லை என்ற கருத்து என்பதை - சிந்தித்துப் பார்த்தால் தெளிவடையலாமே!

அடிமைத்தளையை அகற்றிட விரும்பும் அருமைமிகு பெண் குலத்தை அன்புடன் வரவேற்கிறது பெரியார் திடல்!

Read more: http://viduthalai.in/page-2/99076.html#ixzz3WLHW0ckH

தமிழ் ஓவியா said...

கலாச்சாரப்படி...

பார்ப்பானைத் தவிர்த்த மற்ற மக்கள் எல்லாம் திராவிடர்கள்தான். பார்ப்பனர்கள் என்பவர்கள் ஆரியர்கள்தான். இதை அவர்கள் பின்பற்றுகிற கலாச்சாரப்படிக் கூறுகிறோம்.
(விடுதலை, 24.2.1954)

Read more: http://viduthalai.in/page-2/99071.html#ixzz3WLHpS9kk

தமிழ் ஓவியா said...

மாட்டுக்கறி விருந்து நமக்குப் புதிதல்ல


- பேராசிரியர் பூ.சி.இளங்கோவன்
கடலூர் மண்டல செயலாளர், திராவிடர் கழகம்


தந்தை பெரியார் 1971-ஆம் ஆண்டு சேலத்தில் நடத்திய மாபெரும் மாநா டும், மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வல மும் நம் இயக்க வரலாற்றில் மிக முக்கிய நிகழ்வாகும். அம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட பல தீர்மானங்களில் பெண்ணடிமையை ஒழிக்கும், பெண் விரும்பினால் தனக்கு மண விலக்கு பெறவும், மறுமணம் செய்து கொள்ள வும் உரிமை வேண்டும் என்ற கருத் தமைந்த மய்யமாக வைத்த தீர்மானம் குறிப்பிடத்தக்கதாகும் ஆனால், இத்தீர்மானத்தை பார்ப்பன ஏடுகள் யார் வேண்டுமானலும் யார் மனைவி யையும் அடித்துக்கொண்டு போகலாம் என்று திரித்து எழுதி புழுதிவாரித் தூற்றினர். நம் கழகச் சார்பில் இந்து ஏட்டின் மீது வழக்குத் தொடுக்கப் பட்டது. வழக்கு தொடர்ந்து நடை பெற்றது, நமது ஆசிரியரே வாதாடி னார். இந்து ஏடு நிபந்தனையற்ற மன்னிப் புக்கோரியது வழக்கு முடிவுக்கு வந்தது.

அதுபோலவே இன்று பார்ப்பன ஏடுகள் நம் கழகத்தின் மீது புழுதிவாரித் தூற்றி தங்கள் வயிற்றெரிச்சலைக் காட்ட தொடங்கிவிட்டன. வருகிற ஏப்ரல்-14 ஆம் நாள் சென்னை பெரியார் திடலில் நடைபெறவுள்ள மாட்டுக்கறி விருந் தையும், பெண்களின் அடிமைச் சின்ன மான தாலியைத் தாங்களே விருப்புக் கொண்டு அகற்றும் நிகழ்ச்சியைத் தூற்றத் தொடங்கிவிட்டன. ஏதோ தெருவில் போகும் பெண்களின் தாலியை திராவிடர் கழகத்தினர் அறுப்பார்கள் என்கிற உணர்வு வரும்படியான நாணயமற்ற பிரச்சாரத்தினைத் தொடங்கி விட்டனர். இது போன்ற அறிவு நாணயமற்ற பிரச்சாரத்திற்கு கழகத்துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் தினமணியில் விளக்கம் கொடுத்துள்ளார்.

24.2.2015 அன்று சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் தலைமை உரையாற்றி விளக்கமளித்த தமிழர் தலைவர் ஆசிரியர் யார் தாலியை அகற்ற முன்வந்தாலும், யாருடைய கட்டாயத்திற்காகச் செய்கிறீர்களா? என்று கேட்டு பிறகு தான் அகற்ற அனு மதிப்பேன் என்று விளக்கமளித்தார்கள். இவ்விளக்கத்திற்குப் பின்பும், மதவெறி யர்களின் கூப்பாடு, பூச்சாண்டி தந்தை பெரியாரின் வழியில் ஆசிரியர் தடம் மாறாமல் செல்கிறார், என்பதைத்தான் காட்டுகிறது.

ஏதோ, மாட்டுக்கறி உண்ணும் நிகழ்ச்சி இப்பொழுதுதான் முதன் முதலாக நடைபெறுவதுபோல மத வெறியர்கள் கூச்சலிடுகின்றனர். 1970-ஆம் ஆண்டிலேயே தந்தை பெரியார் இந்நிகழ்ச்சியை நடத்தினார். இந்நிகழ்ச் சியில் ஆந்திராவைச் சேர்ந்த கோரா போன்ற அறிஞர்கள் கலந்து கொண் டனர். பிறகு தமிழகம் முழுவதும் இந்நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இச் செய்திகள் மதவெறி என்ற கண்ணாடி அணிந்துள்ள சங்பரிவார் அமைப்புக் களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

14.4.2015 அன்று சென்னை பெரியார் திடலில் நடைபெற உள்ள நிகழ்ச்சி, தந்தை பெரியார் வழியில் தடம் மாறா மல் ஆசிரியர் செல்கிறார், கழகத்தை வழி நடத்துகிறார், என்பதற்கான எடுத்துக்காட்டாகு

Read more: http://viduthalai.in/page-2/99077.html#ixzz3WLHz4Y79

தமிழ் ஓவியா said...

மோடியின் செல்வாக்கு சரிவும், மதசார்பற்ற அமைப்புகளின் கடமையும்

- குடந்தை கருணா

மத்தியில் மோடி ஆட்சி அமைந்து முன்னூறு நாட்கள் ஆனதன் அடிப்படையில் மோடி ஆட்சி பற்றி மக்களிடம் எத்தகைய எண்ணம் உள்ளது என இந்தியா டுடே ஆங்கில நாளிதழ் மற்றும் இன்னொரு தனியார் நிறுவனம் சிசேரோ மூட் ஆப் தி நேஷன் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பில், மோடி ஆட்சியில் மத வாத சக்திகளுக்கு ஊக்கம் அளித்து கர் வாப்சி போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டதன் காரணமாக மோடியின் தனிப்பட்ட செல்வாக்கே சரிந்துள்ளது என எடுத்துக்காட்டி யுள்ளது.

கடந்த ஆண்டு நடந்த நாடாளு மன்றத் தேர்தலின்போது நாடு முழுவதும் மோடி அலை வீசியது. தமிழ்நாடு, மேற்கு வங்காளம் தவிர, அனைத்து மாநிலங்களிலும் பாஜக அமோக வெற்றி பெற்று மிகப் பெரும் பலத்துடன் ஆட் சியைப் பிடித்தது.

இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையில் பாஜக ஆட்சிக்கு வந்து 10 மாதங்கள் நிறைவடைந்து விட்ட நிலையில் மோடியின் செல் வாக்கு எப்படி? அரசின் செயல் பாடுகள் எப்படி உள்ளது? என்பது குறித்து பிரபல ஆங்கில வார இதழ் ஒன்று மக்களிடம் கருத்து கணிப்பு நடத்தியது. அதன் முடிவு இன்று வெளியிடப்பட்டது. அதில் கடந்த 300 நாள் ஆட்சியில் பிரதமர் மோடி யின் செல்வாக்கு சரிந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் கருத்து கணிப்பு நடத்தியபோது மோடியின் செயல்பாடு பிரமாதம் என்று 11 சதவீதம் பேர் தெரிவித்து இருந்தனர். தற்போது 22 சதவீதம் பேர் பிரமாதம் என்று தெரிவித்து உள்ளனர். அதே போல் சிறப்பான ஆட்சி என்று கடந்த ஆகஸ்ட் மாதம் 51 சதவீதம் பேர் கூறியிருந் தனர். தற்போது அது 38 சதவீதமாகக் குறைந்துள்ளது.

ஆட்சி சராசரியாக உள்ளது என்று முன்பு 28 சதவீதம் பேர் தெரிவித்து இருந்தனர். இப்போது அது 26 சதவீதமாகக் குறைந்துள்ளது.

மிகவும் மோசம் என்று ஆகஸ்ட் மாதம் 6 சதவீதம் பேர் கருத்து தெரிவித்தனர். தற்போது மிகவும் மோசம் என்று 11 சதவீதம் பேர் கூறியுள்ளனர்.

இதே போல் கடந்த 6 மாதத்தில் வாழ்க்கை தரம் மேம்பட்டுள்ளதா? என்று கேட்ட போது, அதுவும் கடந்த ஆண்டைக் காட்டிலும் 1 சதவீதம் பேர் குறைந்து இருப்பதாக தெரிவித்து உள்ளனர்.

இப்போதைய சூழ்நிலையில் நாடாளுமன்றத் தேர்தல் நடத்தி னால் பாஜகவுக்கு ஏற்கெனவே கிடைத்த தொகுதிகளில் 27 தொகுதிகள் குறையும் என்றும், அதே சமயம் காங்கிரசுக்கு 9 தொகுதிகள் கூடுதலாகக் கிடைக்கும் என தெரிய வந்துள்ளது.

மோடி அரசில் பாதுகாப்பாக உணர்கிறீர்களா? என்று கேட்கப் பட்டதற்கு கடந்த ஆகஸ்ட் மாதம் 78 சதவீதம் பேர் ஆம் என்று தெரி வித்தனர். தற்போது அது 61 சதவீத மாகக் குறைந்துள்ளது.

பாதுகாப்பு இல்லை என்று ஏற்கனவே 19 சதவீதம் பேர் தெரி வித்து இருந்தனர். அது 26 சதவீத மாக அதிகரித்து உள்ளது.

வளர்ச்சி திட்டம் தொடர்பாக முன்பு 70 சதவீதம் ஆதரவு இருந்தது. இப்போது 47 சதவீதமாகக் குறைந் துள்ளது. மதரீதியான விமர்சனங்கள் முன்பு 21 சதவீதமாக இருந்தது. இப் போது 39 சதவீதமாக அதிகரித் துள்ளது. சிறந்த முதல்வர் யார்? என்று கேள்விக்கு நாடு முழுவதும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 17 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்து உள்ளனர். டெல்லியில் மட்டும் 56 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

நவீன் பட்நாயக்குக்கு நாடு முழுவதும் 5 சதவீதம் பேரும், சொந்த மாநிலத்தில் 69 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். மதரீதி யான விமர்சனங்கள், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலையீடு, விலைவாசி உயர்வு ஆகியவற்றை பெரிய பிரச்னையாக பெரும்பாலானவர்கள் கருதுகிறார்கள்.

இவற்றில் தலை யிட்டு தீர்வு காண பிரதமர் மோடி முயலாமல் இருப்பதே, பிரதமர் மோடியின் செல்வாக்கு சரிவுக்கு காரணம் என்று அந்த கருத்துக் கணிப்பு கூறுகிறது.

மோடியின் அணுகுமுறை, இப் போது உள்ளதுபோல் தொடர்ந்து மதவாத சக்திகளுக்கு ஊக்கம் அளிக்கும் போக்கு நீடித்தால்,பீகார் மற்றும் உத்தரபிரதேசம் மாநிலத்தில் வர இருக்கும் சட்ட மன்ற தேர்தலில், பாஜகவிற்கு மக்கள் தக்க பாடம் அளிப் பார்கள் என்பதற்கான முன்னோட் டமே இந்த கருத்துக் கணிப்பு.

மக்களின் இந்த மன ஓட்டத்தை, மதசார்பற்ற அமைப்புகள் ஒன்று பட்டு பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இத்தகைய நிலையில், தமிழ் நாட்டில் திராவிடர் கழகத் தால் மாநிலம் முழுவதும் நடை பெற்று வரும் திராவிடர் விழிப் புணர்வு மாநாடும், ஏப்ரல் 14-ஆம் தேதி பாபாசாகிப் அம்பேத்கரின் 125-ஆம் ஆண்டு பிறந்த நாளில் நடை பெற உள்ள தாலி அகற்றல் மற்றும் மாட்டிறைச்சி விருந்து விழாவும் பாசிச சக்திகளை தமிழ் நாட்டில் தடுத்து நிறுத்திடும் கேடயம் என்பதையும் இங்குள்ள அனைத்து மதசார்பற்ற அமைப்புகளும் புரிந்து, அதற்கான முழு ஒத்துழைப்பையும் தர வேண்டியது சமூகக் கடமை யாகும்

Read more: http://viduthalai.in/page-2/99081.html#ixzz3WLIIIgRv

தமிழ் ஓவியா said...

மூடநம்பிக்கைளுக்கு எதிராக புரட்சி வெடிக்க வேண்டிய காலம் ஆரம்பித்துவிட்டது

இந்திய பகுத்தறிவாளர் சங்கத் தலைவர் டாக்டர் நரேந்திர நாயக் அறைகூவல்

புதுடில்லி, ஏப்.4_ மக்களிடையே அறிவியல் மனப்பான்மையை வளர்த்தெடுப்பது மிகவும் முக்கியமானத் தேவையாகும். மதக்கருத்துகள் குறித்து கேள்வி எதுவும் எழுப்பக்கூடாது என்றும், அப்படி கூறப்படும் எல்லாவற்றையும் அப்படியே ஏற்க வேண்டும் என்றும் நிர்ப்பந்தங்களை ஏற்படுத்தி வருகிறார்கள். மூடநம்பிக்கைளுக்கு எதிராக வெடிக்க வேண்டிய புரட்சிக்கான காலமாக இன்று உள்ளது என்று இந்திய பகுத்தறிவாளர்கள் சங்கத்தின் தலைவர் டாக்டர் நரேந்திர நாயக் கூறியுள்ளார்.

இந்திய பகுத்தறிவாளர்கள் சங்கத்தின் உறுப்பினர்களுக்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப தேசியக்குழுவின்சார்பில் நடைபெற்ற அற்புதங்கள் குறித்த அறிவியல் விளக்கங்கள் பயிற்சிப்பட்டறையில் பேசும்போது டாக்டர் நரேந்திர நாயக் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

நீலகண்டநகரில் உள்ள சிசு வித்யாமந்திர் பள்ளியில் அய்ந்து நாள்கள் நடைபெற்ற அறிவியல் பயிற்சி முகாமில் பல்வேறு பள்ளிகளிலிருந்தும் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.

அற்புதங்களின் பின்னணியில் அறிவியல் உள்ளது என்பதை நரேந்திர நாயக் இப்பயிற்சி முகாமில் விளக்கினார்.

அறிவியல் விளக்க பயிற்சி முகாம்குறித்து டாக்டர் நரேந்திர நாயக் கூறும்போது, மக்களிடையே அறிவியல் மனப்பான்மையை வளர்க்க வேண்டும் என்று நம் அரசமைப்புச் சட்டத்தில் 51 எச் பிரிவு ஒவ்வொரு குடிமகனின் அடிப்படைக் கடமை என்று கூறுகிறது.

51(h) To develop the scientific temper, humanism and the spirit of inquiry and reform.

மதங்களை உயர்த்திப்பிடிப்போரின் அற்புதங்கள் என்று சொல்லப்படுவதன் பின்னணியில் இருக்கும் தந்திரங்களை மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.

அதற்கான விழிப்புணர்வை மக்கள் பெற வேண்டும் என்பதற்காக முதலில் ஆசிரியர்களுக்கு இந்த பயிற்சி முகாம் மூலம் அளிக்கப்படுகிறது. இங்கு பயிற்சி பெறும் ஆசிரியர்கள் சமுதாய அளவில் மற்றவர்களுக்கும் விழிப்புணர்வை பரப்புவார்கள் அல்லவா?கஞ்சம் மாவட்டத்தில் கதா வித்யா என்கிற முறையில் இந்திய சமூகத்தில் இன்னமும் எண் ணிலடங்காத அளவில் ஏராளமான மூட நம்பிக் கைகள் இருந்துவருகின்றன. கஞ்சம் மாவட்டத்தில் உள்ள கிராமப்பகுதிகளில் தாந்திரீகர்கள் கதா வித்யா முறையில் திருடர்கள் அல்லது மந்திரவாதிகள் என்பவர்களை மக்களிடத்தில் களமிறக்கியுள்ளனர்.

இதற்கு ஒரே தீர்வு கண்மூடித்தனமான நம்பிக்கை களை விலக்கி, விழிப்புணர்வை ஏற்படுத்துவதுதான். கடவுளின் பெயராலும், அற்புதங்கள் என்கிற பெயராலும் மதவாதிகள் என்ன வித்தைகளை எல்லாம் செய்துவருகிறார்கள் என்பதுகுறித்து மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும். மூட நம்பிக்கைளுக்கு எதிரான இந்த புரட்சிகரமான செயலில் ஒவ்வொரு வரின் பங்களிப்பும் இருக்க வேண்டும். வெறும் சட்டங்களினால் மட்டும் மூடநம்பிக்கை களை நம்பக்கூடாது என்று மக்களிடம் சொல்லிக் கொண்டிருந்தால் போதாது. எங்களோடு இணைந்து போராடுவதற்கு ஒவ்வொருவரும் முன்வரவேண்டும் என்று நரேந்திர நாயக் கூறினார்.

இப்போது நரேந்திர நாயக் செய்துவரும் மூடநம்பிக்கைகளுக்குஎதிரான விழிப்புணர்வுப் பணிகளை தேசிய குழந்தைகள் அறிவியல் அமைப்பின் தலைவர் டாக்டர் ராணாசிங் நிர்மன்லெண்டு ராய் தொடங்கினார். பகுத்தறிவாளர்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை கிராமங்களிலும், பள்ளிகளிலும் நடத்த வேண்டும்.

டாக்டர் ராய் குறிப்பிடும்போது, இதுபோன்ற மூடநம்பிக்கைகள் மக்களின் வாழ்வைமட்டும் பாதிக்கவில்லை. மாறாக, மக்களின் உடல்நலப் பிரச்சினைகளிலும் பாதிப்பை ஏற்படுத்து கின்றன. இன்றுவரை இதுபோன்ற பயிற்சி முகாம்களை 40 மாவட்டங்களில் நடத்திவருகிறோம். மேலும் பல மாவட்டங்களில் நடத்தவும் திட்டமிட்டுவருகிறோம் என்றார்.

Read more: http://viduthalai.in/page-3/99106.html#ixzz3WLIfXlR7

தமிழ் ஓவியா said...

ஓட்டைப் பற்றிக் கவலைப்படாமல் மக்களைப் பற்றிக் கவலைப்படும் ஆசிரியர்

மதவாத சக்திகள் தூக்கி எறியப்பட வேண்டும்

ஓட்டைப் பற்றிக் கவலைப்படாமல் மக்களைப் பற்றிக் கவலைப்படும் ஆசிரியர் போன்றவர்கள் இதை முன்னெடுக்க வேண்டும்

தமிழக மூதறிஞர் குழுக் கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஈ.வெ.கி.ச.இளங்கோவன் கருத்துரை


சென்னை, ஏப்.4- மதவாத சக்திகள் ஆட்சியிலிருந்து தூக்கி எறியப்பட வேண்டும் என்றார் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள்.

சென்னை பெரியார் திடலில் 17.3.2015 அன்று தமிழக மூதறிஞர் குழுவின் சார்பில் மதவாதமும் - இந்திய அரசியலும் எனும் தலைப்பில் நடைபெற்ற சிறப்புக் கருத்தரங்கத்தில் தமிழகக் காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அவர்கள் ஆற்றிய உரை வருமாறு:

தமிழக மூதறிஞர் குழுவின் சார்பில், மதவாதமும், இந்திய அரசியலும் என்ற தலைப்பின்கீழ் நடை பெறுகின்ற இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்வதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

ஒரு முக்கியமான காலத்தில், தேவைப்படுகின்ற விவாதம் அல்ல முடிவு எடுக்கவேண்டிய ஒரு நிலை யில், காலகட்டத்தில் நாம் இருக்கின்றோம் என்று சொன்னால், அது மிகையாகாது.

தமிழக அரசியலில் இன்றைக்கு மதவாத சக்திகளி னுடைய ஆதிக்கம் உச்சக்கட்டத்தில் இருக்கிறது என்று சொன்னால், அது மிகையாகாது. மதவாத சக்திகள் மட்டுமல்ல, முதலாளித்துவச் சக்திகளும் சேர்ந்து, இன்றைக்கு இந்திய நாட்டு மக்களுக்கு மிகப்பெரிய சவாலாக இருந்துகொண்டிருக்கிறது.

நாள்தோறும் நடைபெறுகின்ற செயல்களைப் பார்த்தீர்கள் என்று சொன்னால், எவ்வளவு சீக்கிரம் இந்த மதவாத சக்திகளுக்கு இந்தியாவில் முடிவு கட் டப்படுகிறதோ, அவ்வளவு சீக்கிரம் இந்திய மக்களுக்கு விமோசனம் ஏற்படும் என்பதை நீங்கள் மறந்துவிடக் கூடாது.

தமிழ் ஓவியா said...

ஆங்கிலேயன் ஆண்ட காலத்தில், அடிமைத்தனத்தை எதிர்த்துப் போராடினோமோ, அதைவிட ஒரு மடங்கு அதிகமாக...

இது ஏதோ, பகுத்தறிவாளர்களுக்கும், மற்றவர் களுக்கும் நடைபெறுகின்ற ஒரு விவாதமாக அல்லது ஒரு சமூகப் போராக நான் கருதவில்லை. இதை இந்திய மக்களுக்கும், மதவாத சக்திகளுக்கும், முதலாளித்துவ சக்திகளுக்கும் நடைபெறுகின்ற போராக, மிகப்பெரிய போராட்டமாக நான் கருதுகின்றேன்.

எப்படி ஆங்கிலேயன் ஆண்ட காலத்தில், அடிமைத்தனத்தை எதிர்த்துப் போராடினோமோ, அதைவிட ஒரு மடங்கு அதிகமாக, தீவிரமாக இந்த மதவாத சக்திகளை எதிர்க்கவேண்டிய சூழ்நிலை இப்பொழுது வந்திருக்கிறது.

ஆண்டார்கள், இதே மதவாதிகள் ஒரு காலத்தில் வாஜ்பேயி தலைமையில். அப்பொழுது ஒன்றிரண்டு நிகழ்ச்சிகள் நடந்தனவே தவிர, இதுபோன்ற திட்ட மிட்ட சதி வேலைகளோ, அழுத்தங்களோ மக்களை மடையர்களாக்கி, அவர்களைச் சுரண்டி வாழ வேண்டும் என்ற ஒரு நிலை அப்பொழுதுகூட ஏற் பட்டதாக நான் கருதவில்லை.

தமிழ் ஓவியா said...

ஒருவேளை மரியாதைக்குரிய ஆசிரியர் அவர்கள் ஒத்துக்கொள்கின்றார்களோ, இல்லையோ, என்னைப் பொறுத்தவரை வாஜ்பேயி, இந்துத்துவத்தில் நம்பிக்கை யுள்ளவர். ஆனால், அதனை மக்கள்மீது திணிக்க வேண்டும் என்று அவர் விரும்பாதவராக இருந்தார் என்று நான் நினைக்கின்றேன்.

தமிழ் ஓவியா said...

மதவாதத்தால் எதையும் செய்ய முடியும்; எதையும் செய்துவிட்டுத் தப்பிக்க முடியும் என்பதை ஏற்கெனவே குஜராத்தில் கண்டுகொண்டவர்கள்

ஆனால், இன்றைக்கு மோடியின் அரசு என்பது, மதவாதத்தில் ஊறித் திளைத்தவர்கள் என்பதோடு மட்டுமல்ல, மதவாதத்தால் எதையும் செய்ய முடியும்; எதையும் செய்துவிட்டுத் தப்பிக்க முடியும் என்பதை ஏற்கெனவே குஜராத்தில் கண்டுகொண்டவர்கள், இன்றைக்கு நாடு முழுவதும் செய்தாகவேண்டும் என்ற முனைப்போடு செய்துகொண்டிருக்கின்றார்கள்; தடுக்கப்படவேண்டும் என்பதோடு மட்டுமல்ல, அவர்கள் தூக்கி எறியப்படவேண்டும் என்பதை நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

மக்களைப் பொறுத்தவரையில் அன்றைக்கு நாம் வெள்ளையரை எதிர்த்தோம். அதற்குப் பிறகு நாடு சுதந்திரமடைந்த பிறகு, நடுவில் ஒன்றிரண்டு காலம் மதவாத சக்திகளின் ஆட்சி இருந்தது; ஆனால், அப் பொழுதுகூட அபாயம் நமக்குக் கிடையாது. காந்தி கொலையில் இருந்து ஆரம்பித்துப் பார்த்தீர்கள் என்றால், அவ்வப்பொழுது சில சம்பவங்கள் நடை பெறும்.
காந்தி கொலை, மதவெறி பிடித்த கோட்சேவின் அரக்கத்தனம், மிருகவெறி, அதற்குப் பிறகு, நிர்வாண சாமியார்கள் ஆடிய ஆட்டம்; காமராசரின் உயிருக்கே உலை வைத்த அந்த அயோக்கியத்தனங்கள். பிறகு அப்படியே பார்த்தீர்கள் என்று சொன்னால், ஒரிசாவில் கிறிஸ்தவ பாதிரியாரையும், குழந்தைகளையும் ஜீப்பில் வைத்து உயிரோடு எரித்த சம்பவங்கள். இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்றன, இடைவெளி இருந்தது.

ஆனால், என்றைக்கு இந்த மோடி ஆட்சிக்கு வந் தாரோ, என்றைக்கு இந்த மோடி இந்த நாட்டினுடைய பிரதமராக பதவியேற்றுக் கொண்டாரோ, அன்றிலிருந்து தொடர்ந்து திட்டமிட்டு இந்த நாட்டை மதவாத சக்திகள் தங்களின் கைக்குள் வைத்துக்கொள்ளவேண்டும் என்று துடிக்கின்றார்கள். அதற்கான முயற்சியில், வரிசையாக, வேகமாக செயல்பட்டுக் கொண்டிருக் கின்றார்கள், மாநிலம் மாநிலமாக.

இங்கே பேசினாரே, ராமகிருஷ்ணன் அவர்கள், மகராஷ்டிராவில் மாட்டிறைச்சி சாப்பிடக்கூடாது என்று. அது ஒரு வெள்ளோட்டம். ஒன்றும் எதிர்ப்பு அதிகமாக இல்லையா, பிறகு எல்லா மாநிலங்களிலும் அந்தச் சட்டத்தைக் கொண்டு வரலாம். டில்லியில் அய்ந்து கிறித்துவக் கோவில்களை இடித்துப் பார்ப்பது; எதிர்க் கின்றவர்களின் குரல் பலமாக ஒலிக்கவில்லையா? நாடு முழுவதும் உள்ள கிறித்துவக் கோவில்களை இடியுங் கள்; முஸ்லிம்களைத் தீண்டிப் பார்ப்பது, சீண்டிப் பார்ப்பது; சென்னையில்கூட, ஒதுக்குப்புறமாக இருக் கின்ற இந்துக்களை எல்லாம் மிரட்டுவது; நீங்கள் பாரதீய ஜனதா கட்சியில் சேரவேண்டும்; ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் சேரவேண்டும் என்று மிரட்டுவது.

கிறித்தவர்களையும், முஸ்லிம்களையும் நீங்கள் எல்லாம் இந்த நாட்டில் தொடர்ந்து இருக்கவேண்டும் என்று சொன்னால், இந்துக்களாக மாறுங்கள் என்று சொல்வது. இவையெல்லாம் அங்கொன்றும், இங்கொன் றும் நடைபெறுகின்ற சம்பவங்கள் என்று நினைக்காதீர் கள் அருமைத் தோழர்களே, திட்டமிட்டு நடைபெறு கின்ற சதிச்செயலாகும்! கேட்பதற்கு ஆளில்லை என்று சொன்னால், கண்டிப்பாக இந்த நாட்டைக் குட்டிச்சுவ ராக்கி விடுவார்கள் என்பதை நீங்கள் மறந்துவிடக்கூடாது.

என்னென்ன சொல்கின்றார்கள்? காந்தியைக் கொன்ற அயோக்கியனுக்கு, கொலைகார வெறிய னுக்கு, மிருகத்துக்குச் சிலை வைக்கவேண்டும் என்று சொல்லிப் பார்க்கின்றார்கள். பெண்கள் 10 குழந்தை பெற் றுக் கொள்ளவேண்டும் என்று ஒரு சாமியார் சொல்கிறார்.

மதவாதத்தை மக்களிடம் திணிக்கவேண்டும் என்று முதலாளித்துவ ஆணையோடு நடைபோட்டுக் கொண்டிருக்கின்றது

தமிழ் ஓவியா said...

எங்கே போய் முடியும்? என்று நீங்கள் நினைத்துப் பாருங்கள். நாட்டிலே இதுவரையில் அங்கொரு சம்பவம், இங்கொரு சம்பவம்; அந்த மடத்து சங்க ராச்சாரியார், இந்த மடத்து சங்கராச்சாரியார் இவர்கள் தான் அயோக்கியத்தனம் செய்தார்கள் என்று செய் திகள் வந்தனவே தவிர, இப்பொழுது ஒட்டுமொத்த மத்திய அரசாங்கமே அயோக்கியத்தனத்தில் ஈடு பட்டுக் கொண்டிருக்கிறது. மதவாதத்தை மக்களிடம் திணிக்கவேண்டும் என்று முதலாளித்துவ ஆணை யோடு நடைபோட்டுக் கொண்டிருக்கின்றது என்பதை நீங்கள் மறந்துவிடக்கூடாது.

தயவுசெய்து எண்ணிப்பாருங்கள், இது ஒரு முக்கியமான காலகட்டம்; தொடர்ந்தால் எதிலே போய் முடியும்? இன்னும் ஒரு நான்காண்டுகள் இவர்களை ஆளவிட்டால் என்னாகும் என்பதை நீங்கள் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

எனக்கு ஆசிரியர்மீது மரியாதை மிகவும் அதிக மாகிக் கொண்டிருக்கிறது. ஏனென்றால், இதனை அவர் கையிலே எடுத்துக்கொண்டிருக்கின்றார், எல்லோரை யும் சேர்க்கவேண்டும் என்பதற்காக.

தமிழக அரசியல்வாதிகளுக்கு நான் ஒன்றைச் சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன். தமிழக அரசியலை நினைக்கும்பொழுது, கொஞ்சம் வேகமாக, கோபமாக, இன்னும் சொல்லப்போனால், கொஞ்சம் கேவலமாகக்கூட இருக்கின்றது.

இதற்காகவா பெரியாரைப் போன்றவர்கள், காமராசரைப் போன்றவர்கள் உழைத்தார்கள்? பாடுபட்டார்கள்? தியாகங்கள் செய்தார்கள்?

காரணம், இன்றைக்கு அரசியல் என்றால் பணம்; தமிழகத்தில் தேர்தல் என்றால் பணம்; எவ்வளவு பெரிய வசதி படைத்தவர்களாக இருந்தாலும் சரி, 50 ஆயிரம், 60 ஆயிரம், 70 ஆயிரம் சம்பளம் வாங்கு கின்றவர்களாக இருந்தாலும் சரி, தேர்தலின்போது, கைநீட்டி பணம் வாங்கிக்கொண்டு வாக்களிக்கின்றார் களே, இதற்காகவா பெரியாரைப் போன்றவர்கள், காமராசரைப் போன்றவர்கள் உழைத்தார்கள்? பாடுபட்டார்கள்? தியாகங்கள் செய்தார்கள்? என்று நான் கேட்கின்றேன்.

மக்களைத் திருத்தவேண்டும்; 4 ஆயிரம் ரூபாயை வாங்கிக்கொண்டு வாக்களித்தால், இரண்டு நாள்களுக்கு ஜம்பமாக இருக்கலாம்; ஆனால், அவர்களுடைய வாழ்க்கை எவ்வளவு கேவலமாகப் போய்விடும் என்பதை சிந்திக்கத் தவறுகின்றார்கள் தமிழர்கள், அதனை நாம் அவர்களுக்கு உணர்த்தவேண்டும். 4 ஆயிரம் ரூபாய் வாங்குவது பெரிதல்ல; ஆனால், அதனால் எவ்வளவு பெரிய ஆபத்துகள்.

தமிழ் ஓவியா said...

இன்றைக்கு எல்லாத் தட்டு மக்களையும் சுரண்டப் பார்க்கின்றார்கள். மதத்தின் பெயரால் மக்களைப் பிரிக் கின்றார்கள் என்று சொன்னால், முதலாளித்துவத்தின் மூலமாக மக்களை ஏழைகளாக்க முயலுகின்றனர். அதுமட்டுமல்ல, நாட்டின் முதுகெலும்பமாக இருக்கின்ற விவசாயிகளின் நிலத்திற்கே உத்தரவாதம் இல்லை என்ற நிலையை ஏற்படுத்தி வருகின்றனர்.

இது ஏதோ, தேர்தல் முடிந்துவிட்டது; இன்னும் நான்காண்டுகள் கழித்துதானே நாடாளுமன்றத் தேர்தல், அப்பொழுது பார்க்கலாம் என்று நாம் ஈசி சேரில் உட்கார்ந்துகொண்டு வேடிக்கை பார்க்க முடியாது தோழர்களே! முடிவு கட்டவேண்டும். தூக்கி எறியப் படவேண்டும் இவர்கள். எப்படி ஆபத்து சூழ்ந்திருக் கிறது என்பதை நீங்கள் சிந்தித்துப் பாருங்கள்.

இந்தியர்களே வெளியேறுங்கள் என்று சொல்லக்கூடிய அளவிற்குப் போகின்றார்கள்

டில்லியில் அய்ந்து கிறித்துவக் கோவில்கள் தாக் கப்படுகின்றன; அதிலுள்ள செங்கல்கள் பிடுங்கப்படு கின்றன என்று சொன்னால், உடனே அமெரிக்காவில் ஒரு கோவிலை இடிக்கின்றார்கள்; இடித்ததோடு மட்டுமல்ல, இந்தியர்களே வெளியேறுங்கள் என்று சொல்லக்கூடிய அளவிற்குப் போகின்றார்கள்.

இதனைச் செய்தால், உலகம் முழுவதும் எப்படி யெல்லாம் எதிரொலிக்கும் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள். இந்துக்களைத் தவிர மற்றவர்கள் எல்லாம் இந்த நாட்டினுடைய அடிமைகள் என்று சொல்லக் கூடிய நிலைமை வந்தால், அய்ரோப்பிய நாடுகளிலும், அமெரிக்காவிலும், கனடாவிலும், ஆஸ்திரேலியா விலும், இஸ்லாமிய நாடுகளிலும் வாழுகின்ற நம்மு டைய உறவுகள், இலங்கையில் ஏற்பட்ட ஒரு சின்ன விபத்துக்கே நம்மால் தாங்க முடியாமல், இத்தனை ஆண்டுகளாக நாம் குரல் கொடுத்து வருகின்றோம்.

அமெரிக்காவில் இருக்கின்ற இந்தியர்களுக்கும், ஆஸ்திரேலியாவில் இருக்கின்ற இந்தியர்களுக்கும், அதேபோல, துபாய், சவுதி அரேபியா போன்ற நாடுகளில் இருக்கின்ற இந்தியர்களுக்கும், அவர்களின் உயிர்களுக்கும், உடைமைகளுக்கும் அந்தந்த நாடு களில் உத்தரவாதம் கிடையாது என்கிற நிலை ஏற் பட்டால், நாம் என்ன செய்ய முடியும்? என்பதை யோசித்துப் பாருங்கள். இது மிகவும் சிந்தித்துப் பார்க்கவேண்டிய விஷயம் அருமைத் தோழர்களே!

இது ஏதோ, தேர்தலில் தோற்றுவிட்டோம்; பதவிக்கு வரவேண்டும் என்கிற அங்கலாய்ப்பில் காங்கிரசுக் காரனாக நான் இதனைச் சொல்லவில்லை. இந்தியா வினுடைய ஒரு குடிமகனாக இருந்து நான் சொல்கின் றேன் என்னுடைய அருமைத் தோழர்களே! என்னதான் முன்னேறி, எவ்வளவுதான் சம்பாதித்தும், நாம் சாலை யில் சுதந்திரமாகச் செல்ல முடியாது; வெளியில் போய் விட்டு, வீட்டிற்கு வரும்வரை உயிர் இருக்குமா? இருக் காதா? என்ற ஒரு சந்தேகத்துடன் வாழுகின்ற ஒரு நிலை பல நாடுகளில் இருப்பதைப்போல நம் நாட் டிலும் ஏற்பட்டால், அது என்ன வாழ்வு என்பதைச் சிந்தித்துப் பாருங்கள்.

உண்ண உணவு இல்லை என்று சொன்னாலும்கூட, அமைதியான வாழ்வு, உயிருக்கு உத்தரவாதம் உண்டு என்ற நிலை ஏற்பட்டால்தானே ஒரு மனிதன் சுதந் திரமாக இருக்க முடியும். கோடி கோடியாக செல்வம் இருந்தும், நீ எப்பொழுது வேண்டுமானாலும் உயிரி ழப்பாய் என்ற நிலை ஏற்படுமேயானால், மதத்தின் பெயரால் கலவரங்கள் ஏற்படுமேயானால், என்னாகும் என்பதை யோசித்துப் பாருங்கள். ஆக, இதனை நாம் ஒன்றும் விளையாட்டாக எண்ணிப் பார்த்துவிடக்கூடாது.

மோடியைப் பொறுத்தவரை அவர் பிரதமர். அவர் வயதில் சிறியவராக இருந்தாலும், மரியாதையோடு, அவர், இவர் என்றுதான் நான் அழைப்பேன். இந்த மோடியைப்பற்றி உங்களுக்கு மிக நன்றாகத் தெரியும். குறிப்பாக, இங்கே இருக்கின்றவர்களுக்கும், மாதந் தோறும் இந்தக் கூட்டங்களுக்கு வருகின்ற உங்களுக்கு நன்றாகத் தெரியும். இருந்தாலும், மக்களுக்கு எடுத்துச் சொல்லவேண்டிய கட்டாயம் இப்பொழுது வந்திருக்கிறது.
மோடி எப்படிப்பட்டவர்!

தமிழ் ஓவியா said...

மோயைடிப் பொறுத்தவரை அவர் சாதாரண மனிதர் கிடையாது; சாதாரண மனிதர் இல்லை என்றால், என்ன அர்த்தம்? அந்த மனிதர் என்ன செய்கின்றார் என்பதை நீங்கள் யோசித்துப் பார்க்கவேண்டும். நாளாக, நாளாக அவர் என்ன செய்துகொண்டிருக்கிறார்; மதவாதத்தைத் தூண்டிவிடுகின்றார்; முதலாளித் துவத்திற்கு ஆதரவு தருகின்றார் என்று சொன்னால், அவரே லட்சக்கணக்கான ரூபாய் செலவு செய்து, கோட்டையும், சூட்டையும் மாட்டிக்கொண்டு அழகு பார்க்கின்ற ஒரு சைக்கோ!

இந்த மனிதரைப் பிரதமராகச் சொல்கின்றோம் என்று சொன்னால், எனக்கு வெட்கமாக இருக்கின்றது அருமை நண்பர்களே! எனக்கு மோடி என்கின்ற மனிதர்மீது தனிப்பட்ட வெறுப்பு கிடையாது. ஆனால், மோடியின் மனதில் ஊறித் திளைத்து கிடக்கின்ற அந்தக் கருத்துகளும், அந்த நோக்கங்களும்தான் எனக்கு எதிரியாக மட்டுமல்ல, இந்திய நாட்டு மக்களுக்கு எதிராக இருக்கின்றது.

தூக்கி எறியவேண்டும், நம்முடைய எதிர்காலம் நலமாக இருக்கவேண்டும் என்று சொன்னால். ஜன நாயக நாட்டில் ஆட்சிக்கு வருவதற்கு யாருக்கும் உரிமை உண்டு; நான் இல்லை என்று சொல்லவில்லை. ஆனால், அந்த ஜனநாயகத்தையே ஆட்டிப் பார்த்து, ஜனநாயகத்திற்குக் கேடு விளைவிக்கக்கூடிய ஒரு மனிதன், முதன்மையான இடத்தில் இருப்பது ஆபத்து என்பதை நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும் நண்பர்களே!

மோடி அரசாங்கத்தைத் தூக்கி எறியவேண்டும் என்பதில், எல்லோரும் ஒன்றுபடவேண்டும்

இன்றைக்குத் தமிழகத்தைப் பொறுத்தவரையில் எல்லோரும் ஒன்று சேரவேண்டும். சிலரைப் பற்றி கவலையில்லை. வர முடியாது அவர்களால். மக்களை அடகு வைத்தாவது, தன்னுடைய தண்டனையைக் குறைத்துக் கொள்ளலாம் என்று சிலர் நினைக்கலாம்; அவர்களைப்பற்றி எனக்குக் கவலையில்லை. ஆனால், மற்றவர்கள் ஒன்று சேரவேண்டும். தேர்தலின்போது எப்படி வேண்டுமானாலும் இருந்துகொள்ளலாம் என்பது அது வேறு. ஆனால், இந்த மோடி அரசாங் கத்தைத் தூக்கி எறியவேண்டும் என்பதில், எல்லோரும் ஒன்றுபடவேண்டும் நண்பர்களே!

தமிழ் ஓவியா said...

இந்தத் தலைப்பைப் பொறுத்தவரையில், மதவாத சக்திகளும், இந்திய அரசியலும் என்பதைவிட, இந்திய அரசியலில் மதவாத சக்திகளும், முதலாளித்துவ சக்தி களும் என்று வைத்திருந்தால், மிகச் சரியாக இருந் திருக்கும். ஏனென்றால், இன்றைக்கு மக்களை மதத்தால் அடிமையாக்குவது; முதலாளித்துவத்தால் மக்களை ஆண்டிகளாக்குவது. இப்படி மக்களுடைய சக்திகளை அவர்களிடமிருந்து பிரித்துவிட்டால், மக்களை எப்படி வேண்டுமானாலும் ஆட்டி வைக்கலாம் என்கிற எண்ணத்தில்தான் இந்த அரசாங்கம் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது.

தமிழ் ஓவியா said...

நான் மரியாதைக்குரிய ஆசிரியர் அவர்களை கேட்பது என்னவென்றால், எதற்கும் அஞ்சாதவர் நீங்கள். அது எனக்குத் தெரியும். யாரிடமும் உரிமை யோடு பேசுகின்ற தகுதி உங்களுக்கு இருக்கின்றது; அதற்கு உரிமையும் இருக்கின்றது. அது எந்தக் கட்சி யானாலும். ஒருவேளை இன்றைக்குப் பெரியார் இருந் திருந்தால் என்ன செய்வாரோ, அதனை நம்முடைய மரியாதைக்குரிய ஆசிரியர் அவர்கள் செய்தாக வேண்டும். ஒன்று திரட்டுங்கள் இந்த சக்திகளை! மதவாத சக்திகளையும், முதலாளித்துவ சக்திகளையும் தூக்கி எறிவதற்கு என்ன செய்யவேண்டுமோ, அதனை நீங்கள் செய்வதற்கு முனைப்போடு வாருங்கள்; நீங்கள் தான் அதனைச் செய்ய முடியும்; செய்யவேண்டும்; அன்புக் கட்டளை இது. ஏனென்றால், அவ்வளவு கேவலமாக போய்க்கொண்டிருக்கிறது நம்முடைய நாடு. எப்படியெல்லாம் போய்க் கொண்டிருக்கிறது என்பதைப் பாருங்கள், நிலம் கையகப்படுத்தும் சட்டத்தைக் கொண்டு வந்திருக்கிறார்களே, இது எவ்வளவு பெரிய நஷ்டம் விவசாயிகளுக்கு, எவ்வளவு பெரிய அடி விவசாயிகளுக்கு.

தமிழ் ஓவியா said...

மக்களுக்காகப் பேசுகின்றவர்கள் நீங்கள்; ஓட்டுக்காகப் பேசுவதில்லை நீங்கள்!

யார் வேண்டுமானாலும், எப்பொழுது வேண்டு மானாலும் நிலத்தை எடுத்துக்கொள்ளலாம்; விவசாயி களைக் கேட்கவேண்டியதில்லை. இதுபோன்ற அப் பட்டமான, மக்களுக்குக் கெடுதலான திட்டங்களைக் கொண்டு வந்திருக்கிறார்கள். இவர்களை எதிர்க்கக் கூடிய சூளுரையைத் தமிழகத்தில் முழுமையாக உருவாக்கவேண்டிய கடமை உங்களுக்கு இருக்கிறது. ஏனென்றால், மக்களுக்காகப் பேசுகின்றவர்கள் நீங்கள்; ஓட்டுக்காகப் பேசுவதில்லை நீங்கள்.

பெரியாரின் புகழையும், காமராசரின் புகழையும் பாடிக்கொண்டிருப்பவர்கள் நீங்கள்; காரணம், அவர்கள் இரண்டு பேரும் இந்த நாட்டிற்குச் செய்துள்ள நல்ல காரியங்களை வைத்து. ஆகவே, எல்லா சக்திகளையும் ஒன்று திரட்டி, இந்த மதவாத சக்திகளை முறியடிக்க வேண்டிய வேலை, மன்னிக்கவேண்டும் இந்த இடத் தில் அதை சொல்வது சரியாக இருக்காது; இருந்தாலும், உங்களுக்குப் புரியவேண்டும் என்பதற்காக, புரிய வேண்டும் என்றால், உங்களுக்காக அல்ல; இவர்களுக் காக. இதற்கு வேண்டிய பிள்ளையார் சுழியை நீங்கள்தான் போடவேண்டும்.

ஏனென்றால், வீட்டிற்குச் சென்று சாப்பிட்டுவிட்டு தூங்கும்பொழுது யோசித்துப் பாருங்கள், மோடி என்ன என்ன செய்கிறார் என்று. முன்பு மதவாதம் என்று சொன்னால், ஒரு சிறிய சிறிய நிகழ்வுகளால் முடிந்துவிட்ட ஒன்றாகும். ஆனால், இன்றைக்கு ஒரு அரசாங்கமே மதவாத அரசாங்கமாக மாறினால், இந்த நாட்டில் மக்கள் நிம்மதியாக வாழ முடியுமா என்பதைச் சிந்தித்துப் பாருங்கள்.

தூக்கி எறிவதற்கு என்ன வழி என்பதை, இங்கே உள்ளவர்கள்தான் சொல்லவேண்டும். ஏனென்றால், மிகவும் ஒரு ஆபத்தான காலகட்டத்தில் நாம் இங்கே இருக்கின்றோம்.
நான் ஏற்கெனவே சொன்னதுபோல, டில்லியில் நான்கு கிறித்துவக் கோவில்கள் தாக்கப்பட்டன; தாக் கப்பட்டன என்று சொன்னால், கடப்பாரையை வைத்து இடித்துப் பார்த்தார்கள். நாம் இங்கே இடித்துப் பார்த்தால், அமெரிக்காவில் கோவிலை இடித்துக் காட்டுகிறார்கள். நாம் இங்கே ஒன்று செய்தால், எங்கே எதிரொலிக்கிறது என்பதைப் பாருங்கள்.

நூற்றுக்கணக்கில் அல்ல; லட்சக்கணக்கில் நம் முடைய உறவினர்கள், நம்முடைய நண்பர்கள் வெளிநாடுகளிலே குடியேறி இருக்கிறார்கள். அங்குள்ள மக்களோடு மக்களாக கலந்துவிட்டால்தான், அவர் களுக்கு அது வசதியே தவிர, இங்கிருந்து மோடி சென்ற வுடன், 30 ஆயிரம் பேர், 40 ஆயிர பேர் சேர்ந்து ஒரு கூட்டத்தைக் கூட்டினால், அந்த நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்வார்களா? செய்கின்ற ஒவ்வொரு காரியமும் அயோக்கியத்தனமான காரியங்கள். எப்படி யாவது இந்த மக்களை ஏமாற்றி, தொடர்ந்து ஆட்சியில் இருக்கவேண்டும் என்பதைத் தவிர வேறு எந்த எண் ணமும் கிடையாது என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

சமுதாயத்திற்காக உழைத்துக் கொண்டிருக்கின்ற பெரியவர்கள், ஆசிரியர் போன்றவர்கள் முடிவெடுக்கவேண்டும்

ஆகவே, நண்பர்களே, இந்தக் கூட்டத்தைப் பொறுத்தவரையில், நான் உங்களைக் கேட்டுக் கொள்வது, இதுபோன்ற கூட்டங்கள் அதிகமாக நடைபெறவேண்டும். அதோடு மட்டுமல்ல, இந்த ஆட்சியை விரைவில் நாம் முடிவுக்குக் கொண்டு வரவேண்டும். அதற்கான வழிகளை எதையும் எதிர்பார்க்காமல் சமுதாயத்திற்காக உழைத்துக் கொண்டிருக்கின்ற பெரியவர்கள், ஆசிரியர் போன்ற வர்கள் முடிவெடுக்கவேண்டும் என்று சொல்லி விடைபெறுகின்றேன். நன்றி, வணக்கம்!

- இவ்வாறு தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உரையாற்றினார்.

Read more: http://viduthalai.in/page-4/99111.html#ixzz3WLIwIGr0

தமிழ் ஓவியா said...

பரோடா பெண்கள் முன்னேற்றம் புதிய சட்டவிபரம்

பரோடா சமஸ்தானத்திலுள்ள இந்துப் பெண்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக இந்து சமுதாயச் சட்டத்தை பின்வருமாறு திருத்தி புதிய சட்டம் ஏற்படுத்தியிருக்கிறார்கள். திருத்தப்பட்ட அந்தப் புதிய சட்டப்படி ஒரு இந்து பொதுக் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் இறந்துபோனால் அவருடைய விதவை அந்தக் குடும்பத்தில் ஒரு பங்காளி ஆகிவிடுகிறாள்.

விதவைகளின் முந்தின நிலைமையில் இந்தச் சட்டம் ஒரு பெரிய மாறுதலை உண்டுபண்ணி விட்டிருக் கிறதென்று சொல்லலாம். முந்தியெல்லாம் ஒரு விதவைக்கு அவள் புருஷன் குடும்பத்திலே சோறும், உடையும்தான் கிடைக்கும். வேறு எவ்வித உரிமையும் கிடையாது.

இந்தச் சட்டப் படி ஒரு விதவையானவள் தன் புருஷன் குடும்பத்தின் மற்ற நபர்களைப்போல் ஒரு சமபங்காளி ஆகி விடுகிறாள். சொத்தில் தனக்குள்ள பாகத்தைப் பிரித்துக் கொடுக்கும்படி கேட்பதற்குக் கூட இந்தச் சட்டத்தினால் உரிமை ஏற்பட்டிருக்கிறது.

புருஷனுடைய சொத்து அவர்தானே சம்பாதித்த தனி சொத்தாயிருந்தால் பழைய சட்டப்படி அவருடைய மகனுக்கும், பேரனுக்கும், பேரன் மகனுக்கும்தான் கிடைக்கும். இந்த வாரிசுகள் இல்லாமலிருந்தால் மாத்திரம் விதவைக்குக் கிடைக்கும்.

இப்போது இந்தப் புதிய சட்டத்தினால் மகன், பேரன் முதலியவர்களைப் போலவே விதவையான பெண்ணுக்கும் சமபாகம் கிடைக்க உரிமை ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. விதவை யான ஒரு மருமகளுக்கும், தாய்க்கிழவிக்கு அதாவது மாமியாருக்கு அடுத்தபடியான அந்தஸ்து ஏற்படுகிறது.

இதற்கு முன்னெல்லாம் ஒரு பெண்ணைக் கலியாணம் செய்து கொடுத்துவிட்டால் அதன்பின் அவளுடைய தகப்பன் குடும்பத்தில் அவளுக்கு எவ்வித உரிமையும் கிடையாது. புருஷன் வீட்டில் சாப்பாட்டுக்குக் கஷ்டமாயிருந்தாலும்கூட அவளுடைய தகப்பன் குடும்பத்திலிருந்து சம்ரட்சணை பெற அவளுக்கு உரிமை இருந்ததில்லை. இதனால் பல பெண்கள் கஷ்டம் அனுபவிக்க நேரிட்டிருக்கிறது.

இந்தப் புதிய சட்டப்படி இந்த நிலைமை மாற்றப்பட்டி ருக்கிறது. எப்படியெனில் புருஷன் இறந்த பின் ஒரு பெண் தன் தகப்பன் வீட்டிலேயே வசித்து வருவாளானால், அவளுடைய மாமனார் வீட்டில் அவளுக்குச் சம்ரட்சணை செலவு கொடுக்க வழியில்லாமல் இருக்கும்போதும் தகப்பனுக்கு அவளை வைத்துக் காப்பாற்ற சக்தி இருக்கும்போதும் தகப்பன் குடும்பத் தாரே அவளுடைய ஜீவனத்துக்குப் பணம் கொடுக்க வேண்டும் என்று இந்தப் புதிய சட்டம் கூறுகிறது.

கலியாணமாகாத பெண்ணுக்கு இதுவரையில் சம்ரட் சணையும் கலியாணச் செலவும்தான் கொடுக்கப் பட்டு வந்தது. சொத்து பாகப் பிரிவினைக் காலத்தில் இவ்விரண்டுக்கும் பதிலாக சகோதர னுடைய பங்கில் நாலில் ஒரு பாகம் கொடுக்கப்படுவதும் உண்டு, ஆனால் சொத்து பங்கு போட்டுக் கொடுக்கும்படி கேட்க உரிமை கிடையாது.

இந்தப் புதிய சட்டப்படி அவள் தன் பாகத்தைத் தனியாகப் பிரித்துக் கொடுத்துவிடும்படி கேட்கலாம். இதனால் கலியாணமாகாத பெண்களுக்கு அதிக சுதந்தரமும், சுயா தீனமும் ஏற்பட்டிருக்கிறது. சீதன விஷயமான பாத்திய தையைப் பற்றி பழைய சட்டத்திலிருந்த சில சிக்கல்களும் நீக்கப்பட்டிருக்கின்றன.

முந்தின சட்டப்படி பெண்கள் தங்களுக்குக் கிடைக்கிற சொத்துக்களை அனுபவிக்க மாத்திரம் செய்யலாம்-விற்பனை செய்ய முடியாது. இப்போது பெண்கள் 12,000 ரூபாய் வரையில் தங்கள் சொத்துக்களை விற்பனை செய்யவோ, அல்லது வேறுவிதமாக வினியோகிக்கவோ மேற்படி புதிய சட்டம் பூரண உரிமை அளிக்கிறது.

இந்தப் புதிய சட்டத்தினால் பரோடா நாட்டுப் பெண்களுக்கு அதிக உரிமைகளும், பாதுகாப்புகளும் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. இவ்விதமே பிரிட்டிஷ் இந்தியாவிலும், மற்ற சமஸ்தானங்களிலும், இந்து சட்டம் திருத்தப்படுமாயின் பெண்கள் முன்னேற்றத்துக்குப் பெரிதும் அனுகூலமாயிருக்கும்.

- புரட்சி - கட்டுரை - 04.02.1934

Read more: http://viduthalai.in/home/viduthalai/history-.html#ixzz3WLKGBpTI

தமிழ் ஓவியா said...

ஈ.வெ. ராமசாமிக்கும், சா.ரா. கண்ணம்மாளுக்கும் ஜே (ஈ.வெ.கி)

நமதியக்கங்கண்ட தோழர் ஈ.வெ. இராமசாமி அவர்கள் மீதும், தோழர் சா.ரா. கண்ணம்மாள் அவர்கள் மீதும் சென்ற அக்டோபர் மாதம் 29ஆம் தேதியில் குடிஅரசில் எழுதிய இன்றைய ஆட்சி ஏன் ஒழிய வேண்டும் என்கிற தலையங் கத்தின் காரணமாக சர்க்காரால் தொடரப்பட்ட ராஜநிந்தனை வழக்கை விசாரித்து வந்த கோவை ஜில்லா நீதிவான் ஆகிய தோழர் ஜி. டபிள்யூ. வெல் அய்.சி.எஸ் அவர்கள் சென்ற ஜனவரி மாதம் 24-ந் தேதியன்று கீழ்க்கண்டவாறு தீர்ப்பளித்திருக்கிறார்.

அதாவது தோழர் ஈ.வெ. இராமசாமி அவர்களுக்கு 6 மாதம் வெறுங்காவல் தண்டனையும் 300 ரூபாய் அபராதமும் தோழர் சா.ரா. கண்ணம்மாள் அவர்களுக்கு 3- மாதம் வெறுங்காவல் தண்டனையும் 300 ரூபாய் அபராதமும், மேற்படி அபராதத் தொகை செலுத்தாத பட்சம் மேற்கொண்டு தலா ஒவ்வொரு மாதத் தண்டனையென்றும் தீர்ப்பளிக்கப்பட்டு காவலிலிருந்து வருகிறார்கள்.

எழுதப்பட்ட விஷயம் தப்போ, சரியோ என்றாவது தண்டிக்கப்பட்ட விஷயம் தப்போ, சரியோ என்றாவது - தற்போது நாம் கூற முன்வரவில்லை. ஏனெனில் அவைகளை வாசகர்களே நன்கறிந்திருக்கலாமென்கிற நம்பிக்கையேயாகும்.

ஆயினும் நமதியக்கத்தவர்களும் நமதியக்கத்தில் அபிமானமும், அனுதாபமும் கொண்டவர்களும் இனி என்ன செய்ய வேண்டுமென்பதுதான் தற்போது எழ வேண்டிய முக்கிய பிரச்சினையாகும். இவ்விதப் பிரச்சினையைத் தீர்க்கத் தற்சமயத்தில் நாம் ஆராய்ந்து அதற்கேற்றபடி நடத்த வேண்டிய பொறுப்புக்குட்பட்டிருக்கிறோம் என்றால் அது மிகையாகாது.

தமிழ் ஓவியா said...

அதாவது நமது தமிழ்நாட்டில் நமதியக்கத்தின் பேரால் நிறுவப்பட்டிருக்கும் சங்கங்களின் எண்ணிக்கை யானது நமது காரியாலயத்திற்கு இதுகாறும் கிடைத்திருக்கும் தகவல்களிலிருந்து அறியக் கூடியது சுமார் 110 என்பதாகும். நமது தோழர்கள் சிறைப்பட்டதிலிருந்து இனிமேல் ஒவ்வொரு கிராமந் தோறும் நமதியக்கச் சங்கங்கள் நிறுவப்பட்டு அவைகளுக்குத் தலைமையாக ஒரு சங்கம் அவைகளின் தாலுகா தலைநகரில் ஏற்பட வேண்டும்.

அப்படி ஏற்படுகிற தாலுகாக்களின் சங்கங்களுக்குத் தலைமைச் சங்கமாக தாலுகாக்களின் ஜில்லாக்களின் தலைநகர் களில் தலைமைச் சங்கங்களாக நிறுவப்பட்டு, ஒவ்வொரு சங்கத்திலும் அங்கத்தினர்கள் ஏராளமாகச் சேர்க்கப்பட்டும் பிரச்சாரங்களை முன்னிலும் அதிகமாக மக்களுக்கு சமதர்ம உணர்ச்சியுண்டாகும்படியாகவும் சர்க்கார் மீது எவ்வித துவேஷம் உணர்ச்சி உண்டாக்காமலும் நமதியக்க உணர்ச்சி யையே முன்னிலுமதிக ஊக்கங்களுடன் முன்னேறும்படி உண்டாகுமாறு பிரச்சாரம் செய்து வரவேண்டும்.

அதனால் மக்களுக்குள் ஒரு வித வித்தியாசமற்ற ஒற்றுமையை உண்டாக்கி அறியாமையையும் அடிமைப்புத்தியையும், மூடப்பழக்க வழக்கங்களையும் வேரோடுகளையும்படியான திறன் உண்டாகும்படிக்கும் பிரச்சாரங்கள் நடைபெற வேண்டியதே முக்கியமான கடமையாகும்.

அப்பொழுதுதான் நமதியக்கத் தத்துவங்களையும், கொள்கைகளையும் சர்க்கார் உள்ளபடி அறிந்து தாம் (சர்க்கார்) நமதியக்கத்தின் பேரில் கொண்டுள்ள தப்பபிராயங் களை மாற்றிக் கொள்ளவும் நம்முடன் சேர்ந்துழைத்து நமது இயக்கத்திற்கேற்ற சட்டங்களையும், திட்டங்களையும் உண்டாக்க முற்படவும் எத்தனிப்பார்கள்.

நமது நாட்டு மக்களுக்கு ஒரு விதப் புத்துணர்ச்சியும் உண்டாகலாம். நமதியக்கத்தின் கொள்கை களையும் தத்துவங்களையும் நம் மக்களிடையில் பரப்பி வருவதில் செய்ய வேண்டிய பிரச் சாரத்தின் மூலமும், எழுத வேண்டிய பிரச்சாரத்தின் மூலமும் எழுத வேண்டிய கட்டுரைகள் முதலியவைகளின் மூலமும் நமக்கேற்படுகிற அநேகமாயிரக்கணக்கான எதிர்ப்புகளுக்கும்,

முட்டுக்கட்டைகளுக்கும் சர்க்கார் தண்டனை முதலிய இன்னல் களுக்கும் எதிர்பார்த்துத் தயாராகவுள்ள தியாகத்தோடுள்ள வர்களுக்கேதான் அவைகள் கைகூடிவரும் என்பது ஒவ்வொரு இயக்கத்தின் தாபகர்களுடைய சரித்திர வாயில்களால் நன்கறிந்தவைகளானபடியால் அதை நாம் இங்கு சொல்லத் தேவை இராதென்றே நினைக்கிறோம்.

ஆகையால் நமதியக்கத் தத்துவங்களையும், கொள்கை களையும் நம்நாட்டு மக்களிடையில் பரப்பி அவர்கள் யாவரும் மற்ற நாட்டு சமதர்ம இயக்கத்தவர்களுடன் சமமாக பசி, தரித்திரம், அறியாமை, அடிமைத்தன்மை முதலிய பிணிகள் அணுகாமல் சுகமாக அதாவது செல்வவான்களுக்கொப்ப தங்கள் வாழ்க்கையை நடத்தி சுகம் பெற்று வாழ்ந்து வரவேண்டுமென்கிற ஒரு கருத்துகொண்டு தான்,

தமது உடல், பொருள், ஆவிகளைத் துறந்து மனமொழிக்காயங்களால் இராப்பகலின்றி உழைத்து வந்தவர்கள். இன்று அதே காரணத்திற்காக சிறையிலிருக்க நேர்ந்திருக்கிறது என்றால், எந்த இயக்கத்திற்காகவும், எந்தக் கொள்கைக்காகவும், எந்த எண்ணத்திற்காகவும், எந்த நலன்களுக்காகவும் சிறைப் பட்டார்களோ அந்தந்த கொள்கையும்,

எண்ணமும், நலன்களும் நம்நாட்டு மக்களுக்கு உண்டாகி வாழவேண்டும் என்கிற எண்ண முடைய ஒவ்வொருவரும் இனிச் செய்ய வேண்டியதென்ன வென்பதில் தங்கள் தங்கள் கருத்தைச் செலுத்திப் பார்த்தால் எவ்வித முன்னேற்றங்களுக்கும் சங்கங்களும், பிரச்சாரங் களுமே உற்றதுணையாகும்.

ஆகையால் அவைகளை முன் தெரிவித்துக் கொண்டபடி நிறுவி பிரச்சார மூலம் நமது மக்களுக்கு விடுதலையளிக்குமாறு நமது இயக்கத் தோழர் களையும், நமதியக்கத்தில் அனுதாபமும், அபிமானமும் உள்ள தோழர்களையும் வணக்கத்துடன் கேட்டுக் கொள்ளுகிறோம்.

மற்றும் நமது கொள்கைச் சமதர்மமும், சமத்துவமுமான தற்கேற்றபடி நமதியக்கத்தவர் களும் ஒருவருக்கொருவர் சமானமானவர்களேயாவர்கள்.

நமது ஈ.வெ.ரா. உடனும் சா.ரா.க.வுடனும் மற்றுமுள்ள இயக்கத்தவர்களும் சமமேயாவார் களாகையால் தற்பொழுது நமது இயக்கப் பிரச்சாரங்களிலும் மற்ற நிர்மாண வேலைத் திட்டங்களிலும் ஒரு ஈ.வெ.ரா.வும், சா.ரா.க.வும் இல்லாதபோது நமதியக்கத்திலுள்ள அனைவரும் அவர்களைப் போலராகி அவர்கள் தற்போது நம்மிடையி லில்லாத குறையை நிவர்த்திக்க முற்படுவார்களென்றே நம்புகிறோம்.

- புரட்சி - தலையங்கம் - 28.01.1934

Read more: http://viduthalai.in/home/viduthalai/history-.html#ixzz3WLKaYmoP

தமிழ் ஓவியா said...

ஆதிதிராவிடர் இல்லையா?

அடுத்த மார்ச்சு, ஏப்ரல் மாதத்தில் நிர்வாக சபையில் ஓர் இடம் காலியாகும் என்று ஏஷ்யம் கூறப்படுகிறது. இக்காலியாகும் இடத்தில் யார்? உட்காருவது என்பதுபற்றி எல்லாப் பத்திரிகைகளும் ஏஷ்யம் கூறி, சிலர் பெயரை சிபார்சும் செய்கிறது.

வகுப்புத் துவேஷத்தை வெறுக்கும் சகவர்த்தமானியான சுதேசமித்திரன் ஒரு அய்யங்கார், அல்லது அய்யர் கனவான் பெயரைச் சிபார்சு செய்வதுடன், முன்பு பனகல் காலத்தில் காபினெட்டில் ஒரு பிராமணர் இருக்க வேண்டு மென்பதற்காகவே மந்திரியாக ஒரு பிராமணரை நியமித்ததாகவும் அந்நியாயப்படி இன்று ஒரு பிராமணர் அவசியம் என்று கூறுகிறது.

இதுவரை பெரிய உத்தியோகங்களில் அய்யர், அய்யங்கார், ஆச்சாரியார் எல்லாம் நீண்ட நாள் இருந்து பார்த்துவிட்டார்கள். அதைப்போன்றே முஸ்லிம், கிருஸ்துவர், முதலியார், நாயுடு, தமிழர், தெலுங்கர், கேரளர் முதலிய யாவரும் இருந்து பார்த்து விட்டார்கள் என்று நமது சகவர்த்த மானிக்கு இவைகளைக் கூறுகிறோம்.

ஆனால், இதுவரை இந்நாட்டில் ஜனசங்கையில் நாலில் ஒரு பாகத்தினரான ஆதிதிராவிடர் என்பவர்களில் ஒருவர்கூட இதுவரையில் அங்கு இருந்து பார்த்ததில்லை. இன்று ஆதிதிராவிட முற்போக்கைக் குறித்து எங்கும் பலத்த கிளர்ச்சி இருக்கிறது. ஆதலால் சகலரும் ஒன்றுசேர்ந்து ஆதிதிராவிட கனவான் ஒருவர் அங்கு வர முயற்சிக்கக் கூடாதா? என்பதே!

நமது மாகாண ஆதிதிராவிட சமுகத் தலைவர்கள் தங்களுக்குள்ள அற்ப அபிப்பிராய பேதங்களை விட் டொழித்து ஒரு ஆதிதிராவிட கனவான் அங்குவர முயற்சிப்பார்களா? அல்லது இன்றுள்ளதுபோன்ற உயர்தர ராஜதந்திரிகளின் முன்னோடும் பிள்ளையாக மட்டும் இருந்தும் தங்கள் காலத்தைக் கடத்த ஆசைப்படு கிறார்களா? ஆதிதிராவிடர்கள் ஒன்றுபட்டால் இது கிட்டாது போகுமென்று நாம் நினைக்கவில்லை.

- புரட்சி - செய்தித்துணுக்கு - 04.02.1934

Read more: http://viduthalai.in/home/viduthalai/history-.html#ixzz3WLKpgn8k

தமிழ் ஓவியா said...

கருத்து

கேரளாவின் அதிரபள்ளியில் நீர்மின் நிலையம் அமைக்க மத்திய அரசு அனுமதி அளிக்கக்-கூடாது. இதனால் சுற்றுச்-சூழலுக்குப் பெரும் கேடு ஏற்படும். இந்த விசயத்தில் முடிவு எடுப்பதற்கு முன் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் நீர்மின் நிலையம் அமைக்கப் போவதாகக் கூறப்படும் இடத்துக்கு வந்து நிலைமையை ஆய்வு செய்ய வேண்டும்.

- ஜெய்ராம் ரமேஷ், காங்கிரஸ் மூத்த தலைவர்.

குழந்தைத் தொழிலாளர் முறையை முற்றிலும் ஒழிக்கக்-கூடிய சட்டம் நம் நாட்டில் இப்போது இல்லை. தற்போது உள்ள சட்டம் 14 வயது வரை உள்ள குழந்தைகள் அபாயகரம் இல்லாத தொழில்களில் ஈடுபடுத்தப்படுவதை அனுமதிக்கிறது. கல்வி உரிமைச் சட்டம் மற்றும் சிறுவர் நீதிச் சட்டத்திற்கு முரண்பாடாக குழந்தைத் தொழிலாளர் சட்டம் உள்ளது.

- கைலாஷ் சத்யார்த்தி, நோபல் பரிசு பெற்ற இந்தியர்.

பெண்கள், குழந்தைகள் நலனுக்காக அரசு ஒதுக்கும் நிதியை அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் முறையாகச் செலவிடாமல் தங்கள் நலனுக்காகப் பயன்படுத்திக் கொள்வது பெரும் கவலையளிக்கும் விஷயம்.

- மேனகா காந்தி, மத்திய அமைச்சர்

நாட்டின் முன்னேற்றத்தில் பல்கலைக்கழகங்களுக்குப் பெரும்பங்கு உண்டு. ஒவ்வொரு பல்கலையும் குறைந்தபட்சம் 5 கிராமங்களையாவது தத்தெடுக்க வேண்டும். அவற்றை முன்மாதிரி கிராமங்களாக மாற்ற வேண்டும். ஜனநாயக நாட்டின் உரிமைகளைப் பெறும் நாம் நம் கடமைகளையும் சரிவர ஆற்ற வேண்டும். மாணவர்கள் அரசியலில் ஈடுபட வேண்டும்.

- பிரணாப் முகர்ஜி, இந்தியக் குடியரசுத் தலைவர்.


உணவு தானியத்தில் தன்னிறைவு பெற்ற நாடாகவும் ஏற்றுமதி செய்யக்கூடிய அளவிலும் இந்தியா வளர்ந்துள்ளது. இருந்தபோதும் குறைந்த நீர் இருப்பு, நிலம், பருவநிலை மாற்றம் உள்ளிட்ட கடுமையான சவால்களையும் இந்தியா சந்தித்து வருகிறது. உலக அளவில் 17 விழுக்காடு மக்கள் தொகையையும் 15 விழுக்காடு கால்நடைகளையும் கொண்டுள்ள இந்தியாவில் உற்பத்திக்குப் பிந்தைய இழப்பைக் குறைக்க வேண்டிய கட்டாயமும் உள்ளது.

- எஸ்.அய்யப்பன், இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத் தலைமை இயக்குநர்.

தமிழ் ஓவியா said...

பத்து மாதங்களில் பா.ஜ.க.வின் பாசிசப் பயணம்!

மின்சாரம்

1. ஜூன் : (2014) இந்தித் திணிப்பு மத்திய அரசு அலுவலகங்கள் அனைத் தும் இந்தி மொழியைப் பிரதான மொழியாக பயன்படுத்தவேண்டும் மத்திய அரசு பயன்படுத்தும் சமூக வலைத்தளங்கள் அனைத்தும் இந்தியில் மாத்திரமே இருக்கவேண்டும் ரயில்வே துறையில் உள்ள அனைத்து உயரதிகாரிகளும் கட்டாயம் இந்தி கற்க வேண்டும்.

இந்தி தெரியாத அதிகாரிகள் விரைவில் இந்தி கற்றுக்கொள்ளவேண்டும். அவர்களுக்கான சிறப்பு இந்தி வகுப்புகள்(தமிழகம்) துவக்கப்படும். இந்தி கற்றுக்கொண்ட அதிகாரிகளுக்கு சிறப்புப் பதவி உயர்வுகள்.

2. ஜூலை : சம்ஸ்கிருத வாரம் இந்தி விவகாரம் வட மாநிலத்தின் பெரிய கட்சிகளே எதிர்ப்புத் தெரிவித்த நிலையில் மத்திய மனிதவளத்துறை அமைச்சகம் ஜுலை மாதம் ஓர் அறிவிப்பு வெளியிட்டது. அதில் ஆகஸ்ட் முதல் வாரம் மத்திய அரசின் கீழ் இயங்கும் பள்ளிகள் அனைத்தும் கட்டாய சமஸ்கிருத வாரம் கொண்டாடவேண்டும் என்று அறிவித்தது. இதற்கும் பலத்த எதிர்ப்பு கிளம்பியது.

3. ஆகஸ்ட் : வரலாற்றுப் பாடங் களில் மாற்றம் சமஸ்கிருத வாரம் குறித்த சர்ச்சை அடங்கும் முன்பு கல்லூரி மற்றும் பள்ளிகளில் பாடத்திட்டங்களில் மாற்றம் கொண்டுவரும் குழு ஒன்றை அமைக்க முடிவு செய்தது. இந்த குழு வாய் மொழிக்கதையாக இருந்து பிறகு இதி காசங்களாக மாற்றி எழுதப்பட்ட ராமாயணம்,

மகாபாரதம் போன்ற நூல்களை அனைத்துக் கல்லூரி, பள்ளிகளில் முக்கிய பாடமாக கொண்டுவர முடிவு செய்தது. பள்ளிகளில் மதம் தொடர்பான பாடங் களைக் கொண்டுவருவது மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதிக்கும் என்ற வரலாற்று சமூக வரலாற்று அறிஞர்களின் வாதங் களைக் கணக்கில் கொள்ளாமல்,

அதற்கான பணியை தொடங்க குழுவிற்கு ஆணை யிட்டார் மனிதவளத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி. இந்தக் குழுவில் ஆர்.எஸ்.எஸ் மற்றும் சமயச்சார்பு கொண் டவர்கள் மாத்திரமே உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டனர். இதன் தலைவராக யெல்லப் பிரகத சுதர்ஷன ராவ் செயல் படுவார். இவர் மகாபாரத ஆராய்ச்சியை 32 ஆண்டுகளாக செய்துவருகிறார்.

பாடங்களாக சர்ச்சைக்குரிய தீவிர ஆர்.எஸ்.எஸ் தலைவர்களில் ஒருவரும், எழுத்தாளருமான தீனாநாத் பத்ராவின் நூல்களைச் சேர்ப்பது குறித்து இந்த குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

4. செப்டம்பர் : தனியார் மயமாக்கும் முடிவு செப்டம்பர் மாதம் முழுவதும் மோடி மேஜிக் வெளுத்து வாங்கியது, மேக் இன் இந்தியா என்று கூறியவர், இந்திய இளைஞர்களின் உழைப்பை கூலிக்காக மட்டுமே பயன்படுத்தும் தந்திரத்தைக் கையாள பல்வேறு துறைகளில் நேரடியாக அந்நிய முதலீட்டை அறிமுகப்படுத்தும் கொள்கையை முன்வைத்தார்.

அமெரிக்கா சென்ற மோடி இந்தியாவில் இருந்து கோஷம் போட ஆட்களை அழைத்துச் சென்ற விவகாரம் உலகத் தலைவர்களை எல்லாம் மூக்கில் விரலை வைக்க வைத்தது.

தமிழ் ஓவியா said...


5. அக்டோபர் காந்தி பிறந்த நாளைச் சிறுமைப் படுத்தும் விதமாக தெருக்களைக் கூட்டி அந்த நாளுக்கான முக்கியத்துவத்தைக் குறைத்தார். இந்த மாதம் இந்தியாவந்த சீனப்பிரதமர் முதலீடு பற்றிப் பேசிக்கொண்டு இருக்கும் போதே எல் லையில் சீனப்படைகள் இந்தியாவின் பல கிலோமீட்டர் தொலைவில் ஊடுருவி பதற்றத்தை ஏற்படுத்தின. வெளியுறவு கொள்கையில் மிகவும் அலட்சியமாக நடந்து கொண்ட்து.

நேரு பிறந்த நாள் விழாவைத் தவிர்க்க பிரதமர் சர்தார் வல்லபாய் படேல் பிறந்தநாளில் பல்வேறு திட்டங்களை அறிவித்தார். இந்த மாதம் சமஸ்கிருதம் கேந்திர வித்தியாலயாவில் மூன்றாம் பாடமாக இருக்கும் என்று புதிய அறிவிப்பு. மூன்றாம் இடத்தில் இருந்த ஜெர்மன் நீக்கம் போன்ற மாணவர்களின் எதிர்காலத்தை முடக்கும் விதமாக செயல்பட்டது.

இந்த முட்டாள் தனமான செயல் ஆஸ்திரேலியாவில் நடந்த மாநாட்டில் ஜெர்மன் பிரதமர் மோடியை சந்தித்து புகார் கூறும் அளவிற்கு சென்றது. ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்த மோடி இந்தியாவில் இருந்து 200 ஆட்டக்காரர்களை அழைத்துச்சென்ற சம்பவம் எதிர்கட்சிகளின் மூலம் பத்திரி கையில் வெளியானது.

தமிழ் ஓவியா said...

ஆனால் மோடி இது குறித்து கிஞ்சிற்றும் கவலைப்படவில்லை. ஆஸ்திரேலியாவில் நிலக்கரிச்சுரங்கம் துவங்க அதானி குழுமத்திற்கு ரூ.6200 கோடி நிபந்தனையின்றி கடனாக அள்ளிக் கொடுத்தார். இந்த கடன் விவகாரத்தில் எந்த ஒரு விதிமுறையும் பின்பற்றப் படவில்லை.

6. நவம்பர் ஆர்.எஸ்.எஸ் காரர்களின் தொடர் மதவெறிப்பேச்சைக் கண்டுகொள்ளாமல் இருந்ததால், பாஜக நாடாளுமன்ற உறுப் பினர்கள் கூட தங்கள் மனம்போன போக்கில் பேச ஆரம்பித்து விட்டனர். இது குறித்து மோடி மவுனம் சாதித்தார்.

7. டிசம்பர் கோட்சேவிற்கு நாடாளுமன்றத்தில் சிலை, நாடுமுழுவதும் மதமாற்றம், சி.பி,அய்.யை விட்டு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை மிரட்டும் விதமாக வழக்குகள் போட்டு அவரது கட்சிக்காரர் களை அச்சுறுத்தல் போன்ற செயல்களைத் தொடர்ந்து செய்தல்.

சிறுபான்மை யினருக்கு எதிரான இந்து மதச் சார்பு தன்மையைத் தொடர்ந்து கடைப்பிடித்தல் போன்ற செயல்களால் சமீபத்தில் நடந்த ஜார்கண்ட், ஜம்மு தேர்தலில் பாஜகவின் வாக்குவங்கி சரியத்துவங்கியது. மாநிலக் கட்சிகள் மெல்ல மெல்ல மீண்டும் பலம் பெறத் துவங்கி விட்டன.

பகவத் கீதையைப் படிக்கத் தொடங் கினால் மன அழுத்தம் என்பதே ஏற்படாது என்று தெரிவித்தஇந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் விரைவில் பகவத்கீதை தேசிய புனிதநூலாக அறி விக்கப்படும் என்றார் (8.12.2014 - டில்லி).

8. ஜனவரி 2015. கோட்சேவின் சிலைகளைத் தமிழகத் திலும் திறக்க வேண்டும். ஒவ்வோர் இந்துப் பெண்ணும் 4 குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும். தேவாலயங்கள் தொடர்ந்து தாக்கப் படுதல், மனிதவளத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானிபடித்த கிறிஸ்தவப் பள்ளிகள் மீதும் தாக்குதல்,

ராம் ரஹீம் பாபா என்ற சாமியாரின் திரைப்படத்தை வெளியிடு வதற்கு தணிக்கைத் துறையின் ஆலோ சனைகளைப் புறக்கணித்தனர். இதனால் தணிக்கைத்துறையில் ஒட்டு மொத்த குழுவினரும் பதவி விலகினர். இதனை அடுத்து மத்திய இணையமைச்சர் ராஜ்யவர்தர் ராதோட் தன்னுடைய ஆதரவாளர்களை நியமித்தார்.


தமிழ் ஓவியா said...

இதனை அடுத்து மூடநம்பிக்கைகள் மற்றும் வேதகாலத்தில் நடந்த அறிவியல் சாதனை போன்ற போலியான கற்பனைக் கதைகளை உண்மையாக்க பல்வேறு திரைப்படங்கள் உருவாயின அதில் ஒன்று ஹவாயிஜாதா (வேதத்தில் இருந்து விமான தொழில்நுட்பத்தின் மூலம் விமானம் தயாரிக்கும் திரைப்படம் போன்றவை உருவாயின) தொடர்ந்து மதவெறிப்பேச்சை பேசிவந்த பாஜகவிற்கு டில்லிமக்கள் சட்டமன்றத்தேர்தலில் படுதோல்வியைப் பரிசாக அளித்தனர்.

ஒட்டுமொத்த மத்திய அமைச்சரவை, மோடியின் தொடர் மேடைப்பேச்சு, பேரணி என்று பல மாயாஜாலங்களைக் காட்டியும் பாஜக படுதோல்வி அடைந்தது. பல்வேறு அவசரச் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டதை குடியரசுத்தலைவர் கண்டித்திருந்தார். குடியரசு தினத்தையொட்டி மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை சார்பில் வெளியிடப்பட்ட விளம்பரத்தில் அரச மைப்புச் சட்டம் முகவுரையில் குறிப்பட் டுள்ள Secular, Socialist என்ற சொற்களை நீக்கி விட்டனர்.

9. பிப்ரவரி மோடியின் அமைச்சரவை உறுப் பினர்கள் அனைவரும் தொடர்ந்து இந்து மதவெறி கொண்ட பேச்சைத் தொடர்ந்து பேசிக்கொண்டு வருகிறார்கள். இணைய மைச்சர் ஜோதி ராமரை வணங்குபவர்கள் ராம்ஜாதி, வணங்காதவர்கள் எல்லாம் அராம் ஜாதி (தவறானவழியில் பிறந்த வர்கள்) என்று கூறினார்.

ஆதித்யநாத் ஜோதி என்ற சாமியார் பள்ளிவாசல் மற்றும் கிறிஸ்தவ தேவாலயங்களில் எல்லாம் ராமர் சிலைகளை வைக்கவேண்டும் என்று கூறினார். பிராய்ச்சி என்ற பெண் சாமியார் முஸ்லீம்கள் நாய்போல் பிள்ளைகளை பெற்றுத் தள்ளுகிறார்கள்,என்று தொடர்ந்து வன்முறையைத் தூண்டும் விதமாக பேசி வருகிறார். தேர்தல் நேரத்தில் கறுப்புப் பணம் பற்றி மோடி பேசியது எல்லாம் தேர்தல் தந்திரமே என்றார் பி.ஜே.பி. தலைவர் அமித்ஷா.

தமிழ் ஓவியா said...

10. மார்ச் ஹரியானா, மகாராஷ்டிரா, ஜார்கண்ட், மத்தியபிரதேசம் போன்ற மாநிலங்களில் கிறிஸ்தவ தேவாலயங்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வருகின்றன. நாட்டின் விவசாயப் பெருங்குடிமக்களின் ஒட்டு மொத்த எதிர்ப்பையும் மீறி நில அபகரிப்புச் சட்டத்தைக் கொண்டுவருவது போன்ற மக்கள் விரோதச் செயல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இந்திய வரலாற்று ஆய்வு கவுன்சிலின் தலைவராக ஒய்.எஸ்.ராவ் நியமிக்கப்பட் டுள்ளார். இவர் ஆர்.எஸ்.எஸ். நடத்தும் பாரதீய இதிகாச சமிதியின் தலைவராக செயல்பட்டு வருகிறார். இந்த சமிதி, இந்து தேசிய நோக்கில் இந்திய வரலாறு எழுதப் பட வேண்டும் என்று குரல் கொடுக்கும் அமைப்பு. கலியுகத்தின் துவக்கத்திலிருந்து(!) வரலாறு எழுதப்பட வேண்டும் என்று இவர்கள் வலியுறுத்துகிறார்கள். ராவ், வேத இலக்கியம், பாரத கலாச்சாரம், இந்திய புராணங்களில் ஆய்வு செய்வதில் ஆர்வம் உள்ளவர்.

இந்திய/பாரத என்று வரும் இடங்களில் எல்லாம் இந்து என்று அர்த்தப்படுத்திக் கொள்ள வேண்டும். பன்முகத்தன்மை என்பதைப் பின்னுக்குத் தள்ளி, இந்தியா வுக்கு ஒரே கலாச்சாரம், ஒரே பண்பாடு, அதை உள்ளடக்கிய இந்துத் தேசியம் என்று கட்டமைக்கும் ஆர்.எஸ்.எஸ். கண்ணோட் டத்தின் வலுவான பிரச்சாரகர் தான் ராவ். சங் பரிவாரத்தின் மதவாத நிகழ்ச்சி நிரலுக்குத் தோதாக இந்திய வரலாறு இல்லை, எனவே அதைத் திருத்தும் பணியை ஒரு மய்யப் பணியாக அவர்கள் பார்க்கிறார்கள்.

வாஜ்பாய் ஆட்சியின் போது, முரளி மனோஹர் ஜோஷி, மனித வள மேம்பாட்டுத் துறையின் அமைச்ச ராகப் போடப்பட்டு, முக்கிய பொறுப்புகள் பலவற்றில் ஆர்.எஸ்.எஸ். நபர்களை நியமித்தார்.

உள்துறை அமைச்சகத்தின் ஆயிரக் கணக்கான கோப்புகள், பிரதமரின் உத்தரவின் பேரில் அழிக்கப்பட்டன, அதில் காந்தி கொலை செய்யப்பட்ட செய்தியை மக்களுக்குத்தெரிவிக்கும் முன் நடந்த மத்திய அமைச்சரவை கூட்ட மினிட்சும் அடங்கும். ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் முன்னாள் பேராசிரியர் புருஷோத்தம் அகர்வால், தகவல் உரிமை சட்டத்தின் கீழ் பல கேள்விகளை இது குறித்து அரசுக்கு அனுப்பியுள்ளார்.

தமிழ் ஓவியா said...

தேவையற்ற 11000 கோப்புகள் என்று கூறி அழிக்கப்பட்டன, அதில் காந்தி கொலை சம்பந்தப்பட்ட கோப்பு எதுவும் இல்லை என்று அரசு தரப்பில் கூறப்பட்டிருக்கிறது. இருப்பினும் இது குறித்த உண்மை ஆழமாகப் பரிசீலிக்கப்பட வேண்டியி ருக்கிறது.

இதுவும் வரலாற்றைத் திருத் துவதன் ஒரு பகுதி தான். ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ஆபத்தான பங்கு பாத்திரம் மறைக்கப்படும் முயற்சியே இது. மத்திய அரசு அலுவலகங்களில் இனி பினாயி லுக்குப் பதிலாக மாட்டு மூத்திரத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று மத்திய அமைச்சர் மேனகா காந்தி சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

இந்தியாவில் இசுலாமியர்கள் சிறு பான்மையினரல்லர் என்று அமைச்சர் நஜ்மா ஹெப்துல்லா கூறினார். காஷ் மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசி யல் சட்டப் பிரிவு 370அய் நீக்குவதற்கான நடைமுறை துவங்கிவிட்டது என்று அமைச்சர் ஜிதேந்தர் சிங் பேசுவது,

பொது சிவில் சட்டம் குறித்த விவாதத்தைக் கிளப்புவது என்று மதவாத அரசியலை வேகமாகவும், தீவிரமாகவும் பிஜேபி அரசு அமல்படுத்தத் துவங்கியுள்ளது. பிஜேபி ஆட்சிக்கு வந்த பிறகு 10 இடங்களில் மத மோதல்கள் நிகழ்ந்துள்ளன.

தமிழ் ஓவியா said...


ஒருமைப்பாட்டுக்கும் வர்க்க ஒற்றுமைக்கும் எதிரான சவால்

மோடி அரசின் இத்தகைய நடவடிக்கை கள், சிறுபான்மை மக்கள் மீதான தாக்குதல் மட்டுமல்ல, இந்திய ஒருமைப்பாட்டின் அஸ்திவாரமான மதச்சார்பின்மைக்கு விடப்பட்ட சவால். அனைத்தையும் செய்ய தயாராக சங் பரிவாரம் இருக்கிறது என்பதைத் துவக்கத்திலேயே தெளிவு படுத்தி விட்டார்கள் - இந்துத்துவா வாதிகள், மதச்சார்பின்மை என்ற வார்த் தையைக் கெட்ட வார்த்தைகளின் பட்டியலில் சேர்க்கிறார்கள்.

ஏனெனில் அவர்களது நிகழ்ச்சி நிரலுக்கு இது முரண்பட்டது. இந்தியா என்பது பல்வேறு தேசிய இனங்கள், மதங்கள், கலாச்சாரங்கள் கொண்ட நாடு. மதச்சார்பின்மைக் கோட் பாடு, இந்த வேறுபட்ட பிரிவுகளை ஒருங்கிணைப்பதில் ஒரு பிரதான பங்காற்ற முடியும். ஆனால் பிஜேபி ஆட்சியின் போக்கு இந்தியாவைச் சிதறடித்து விடும் என்பதில் அய்யமில்லை.

ஏழே மாதத்தில் கந்தாயமாகி விட்டது

ராஜினாமா செய்வேன் மோடி அறிவிப்பு ஆர்.எஸ்.எஸ்., மற்றும் சங் பரிவார் தலைவர்கள் மீதான அதிருப்தியால், பிரதமர் நரேந்திர மோடி, தன் பதவியை ராஜினாமா செய்வேன் என, மிரட்டியதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இந்து மதத்திலிருந்து பிற மதங்களுக்கு மாறியவர்களை,

தாய் மதத்திற்கு மாற்றும் முயற்சியில், ஆர்.எஸ்.எஸ்., ஆதரவு, சங் பரிவார் அமைப்புகள் மும்முரமாக ஈடுபட்டு உள்ளன. மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற கோட்சேவின் சிலையை, நாடு முழுவதும் வைக்கப் போவதாக, இந்து அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது. சில மாநிலங்களில், பா.ஜ., மூத்த தலைவர்கள் பலரும், சிறுபான்மையின மக்கள் மீது,

வேறுபாடு பாராட்டும் வகையில் பேசி உள்ளனர்.இதனால், அந்த அமைப்புகள் மற்றும் அவற்றின் செயல்பாட்டில்அதிருப்தி அடைந்த பிரதமர் மோடி, பதவியை ராஜினாமா செய்யப் போவதாக, ஆர்.எஸ்.எஸ்.,

தலைவர்கள் சிலரிடம், மிரட்டல் விடுத்ததாக, செய்தி வெளியானது.பா.ஜ.,வை சேர்ந்த, முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் தலைமையிலான மகாராஷ்டிர மாநிலத்தில் வெளியாகும், 'மகாராஷ்டிரா டைம்ஸ்' என்ற பத்திரிகையில், இந்த செய்தி வெளியாகி உள்ளது.

-தினமலர் நாளிதழ், 22.12.2014 பக்கம் 9

Read more: http://www.viduthalai.in/page-1/99082.html#ixzz3WLUN2pw0

தமிழ் ஓவியா said...

லீயும் கட்டாய ராணுவமும்

ஜூரோங்கில் உள்ள பாசிர் லாபா (PASIR LABA CAMP) ராணுவ முகாம்.கடந்த 8 மாதங்களில் சிறப்புப் பயிற்சி பெற்றுத் தேர்ந்த இளைய வீரர்களுக்கு, சிறப்பு அணிவகுப்பு மரியாதை (PARADE) நடந்தது. அதில் என் பேரன் ஆனந்தும் ஒரு இளைய பட்டாளத்துக்காரன். அரசின் அழைப் பின் பேரில், நான்,என் மனைவி, மகன் ஸ்ரீதர், மருமகள் லதா ஆகியோர் அதில் பெருமையுடன் கலந்து கொண்டோம்.

ஆயிரமாயிரம் இளைஞர்கள் மிடுக்காக அணி வகுத்துச் சென்றதும், ஒழுங்குமுறை தவறாமல் ஒருமித்த குரலில் நாட்டுறுதி எடுத்துக் கொண் டதும், வந்தவர்களுக்கெல்லாம் உத விக்கரம் நீட்டியதும்....நம் குழந்தைகளா இவர்கள் என வியந்தேன்.

1970களில் அன்றைய பிரதமர் லீ, கட்டாய ராணுவ சேவையைக் கொண்டு வந்தபோது, நியாயமான எதிர்ப்பை எதிர்நோக்கினார். ஈராண்டு காலக் கல்லூரிப் படிப்பைப் போக்கி, ராணுவப் பயிற்சி பெற வேண்டிய தில்லை என்று பெற்றோர்கள் வாதாடி னர். சின்ன ஊர் சிங்கப்பூருக்கு ராணு வம் தேவையா என்று கேட்டவர்கள் இருந்தனர்.

ஆனால் அமரர் லீ எதற்கும் மனம் தளரவில்லை. கல்லூரி செல்வதற்கு முன் இன்றைய மாணவர்களுக்கு சில ஒழுங்குமுறைகள் தேவை.அவற்றை போதிக்கக் கூடியது ராணுவப் பயிற்சி தான் என்றார். சின்ன நாடாக இருப் பதால், நமக்கு பெரிய ராணுவ பலம் தேவை என்றும் கூறினார்.

ஈராண் டுகள், அவரவர் படிப்புத் தகுதிக்கேற்ப ராணுவப் பயிற்சிகளைப் பெறுகின் றனர்.. ராணுவப் பயிற்சி முடித்த இளைஞர்கள் மட்டுமே கல்லூரிகளில் அனுமதிக்கப் படுகின்றனர். படிப்பு முடிந்ததும் 10 ஆண்டுகளுக்கு ஆண்டு தோறும் ஒரு சில வாரங்களுக்கு பயிற்சி மேற்கொள்வதும் அவசியமாக்கப் பட்டது..

உயர்நிலைக் கல்வி முடித்த மாணவர்கள் , ஒழுக்கம் ஒழுங்கு முறைகளைக் கற்று பின்னர் சமுதா யத்தில் நடமாடுவதை நாம் இப்போது காண்கிறோம். அதை அவர் அன்றே உறுதிப் படுத்தினார். கட்டாய ராணுவப் பயிற்சியைத் தவிர்ப்பவர்கள், எந்தக் காரணத்திற்காகவும் சிங்கப்பூரில் நுழைய முடியாத கடும் சட்டம் உள்ளது. - ஏ.பி. இராமன்

Read more: http://www.viduthalai.in/page3/99092.html#ixzz3WLVWeaYr

தமிழ் ஓவியா said...

மாட்டுக்கறியின் சத்துக்களும் அறிவியல் ஆய்வுகளும்

1. மாட்டிறைச்சியில் உள்ள கொழுப் பில் லினோலிக், பால்மிடோலிக் ஆசிடுகள் உள்ளன. கேன்சர் எதிர்ப்பு மிகுந்த இந்த ஆசிடுகள் வைரஸ் உள் ளிட்ட கிருமி எதிர்ப்பு சக்திகளையும் உள்ளடக்கியுள்ளது.

2. மாட்டுக்கறியில் அனைத்து விதமான சத்துக்களும் அடர்த்தியாக நிறைந்துள்ளன. அதிக அளவு சத்துக் களை கொடுத்தாலும் குறைந்த அளவு கேலரிகள் தான் அளிக்கிறது. 85 கிராம் மாட்டுக்கறியில் 179 கேலரிகள் தான் உள்ளன. ஆனால் 85 கிராம் மாட்டுக் கறியில் உடலுக்கு தேவையான பத்து சதவிகிதத்திற்கு மேலான உயிர்சத்துகள் நிரம்பியுள்ளன. உடல் எடையை குறைக்க நினைப்போருக்கு தேவை யானது மாட்டுக்கறி தான்.

3. கொழுப்பற்ற மாட்டுக்கறியை சாப்பிட்டு வந்தால் இதயக் கோளாறுகள் நீங்கும், இதயம் வலிமை பெறும். ஆங்கிலத்தில் இதனை லீன் பீப் (Lean Beef) என்பார்கள். இதனை 2012இல் அமெரிக்க ஜர்னல் சத்துணவு ஆய்வு மய்யத்தின் (American Journal Clinical Nutrition) ஆய்வறிக்கையில் ஆதாரங்களு டன் நிறுவியுள்ளனர்.

கொழுப்பற்ற மாட்டுக்கறியை தினமும் சாப்பிட்டு வந்தால் கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்தும். மாட்டுக்கறியில் உள்ள ஸ்டீரிக் ஆசிடு நல்ல கொலஸ்ட்ராலை (HDL) அதிகரிக்கிறது. மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. பாதிக்கும் மேற்பட்ட மாட்டுக் கொழுப் புகளில் இதயத்திற்கு தேவையான ஓலிக் ஆசிடுகள் நிரம்பியுள்ளன.

இதயத்திற்கு வலு சேர்க்கும் சத்துக்கள் மாட்டுக் கறியில் கிடைப்பது போல வேறெந்த உணவிலும் இல்லை. உங்களால் முட்டை அல்லது மீன்களில் இருக்கும் கொழுப்பை அகற்ற முடியாது. ஆனால் மாட்டிறைச்சியில் எளிதாக கொழுப்பை அறுத்து நீக்கலாம். இதை தான் லீன் பீப் (Lean Beef) என்பார்கள். ((LDL என்பது கெட்ட கொலஸ்ட்ரால்.

தமிழ் ஓவியா said...

இரத்த ஓட்டத்தை நாளடைவில் தடை படச் செய்கிறது. என்பது நல்ல கொலஸ்ட்ரால் இரத்தத்தில் படிகங்கள் உருவாவதைத் தடுக்கிறது. இதனுடைய அளவு ரத்தத்தில் கூடுவது மிகவும் நன்மையானதாக கருதப்படுகிறது.)

4. மனித இனம் மாட்டுக்கறியையும் உள்ளடக்கிய சிவப்பு இறைச்சிகளை உண்ணாமல் இருந்திருந்தால் மனித னின் மூளை இப்போதிருக்கும் அளவில் கால் பங்கு தான் இருந்திருக்கும் என அறிவியல் ஆய்வுகள் கூறுகின்றன. பரிணாம வளர்ச்சியில் மனித இனத்தின் மூளைக்கு கிடைத்த புத்திக் கூர்மைக்கு சிவப்பு இறைச்சிகளே பெரும் பங் காற்றியுள்ளன.

5. உலகில் நீண்ட ஆயுள் வாழும் பகுதிகளை பார்த்தால் இறைச்சி உணவே முதன்மையாக இருப்பது தெரியும்.

6. மாடு மற்றும் ஆட்டில் கிடைக்கும் புரத சத்தினால் தசைகள் வலுவாவது மட்டுமல்ல நமக்கு ஹார்மோன்களும் ஆரோக்கியமாக சுரக்கின்றன.

7. தானியங்களில் கிடைக்கும் ஸின்க், மெக்னீசியம், இரும்பு சத்துக்களை விட சிவப்பு இறைச்சிகளில் கிடைக்கும் சத்துக்களை நமது உடல் எளிதாக முழுமையாக உறிஞ்சிக் கொள்கிறது. வசதியற்றவர்களுக்கு ஏற்ற உணவு மாட்டிறைச்சி. குறைந்த அளவு சாப் பிட்டு வந்தாலும் சத்துக் குறைவினை குறைக்கலாம். குழந்தை சத்து குறைவில் முன்னிலையில் இருக்கும் நம் நாட் டிற்கு அவசியமானது மாட்டிறைச்சி.

8. ஆரோக்கியமான நரம்பு மண் டலத்திற்கும், இரத்தத்திற்கும் வைட்ட மின் பி12 அவசியம். வைட்டமின் பி12 அசைவ உணவில் மட்டுமே உள்ளது. அதிலும் மாட்டுக்கறியில் வைட்டமின் பி12 37% நிரம்பியுள்ளது. மேலும் மனநோய்களை தவிர்க்கவும், கிழட்டுத் தன்மை மற்றும் மலட்டுத் தன்மையை குறைப்பதிற்கும் வைட்டமின் பி12 அவசியம். வைட்டமின் பி12 சிவப்பு இறைச்சிகளில் நிரம்பியுள்ளது.

நவீன உழைப்பு சுரண்டலில் அழுத்தம் நிறைந்த பணி சூழலில் வேலை செய்யும் கார்ப்பரேட் தொழிலாளர்களுக்கு அவசியமானது மாட்டிறைச்சி

9. அமெரிக்க விவசாயத் துறையின் 2002 ஆய்வறிக்கையின்படி, 1.1 கிலோ டுயுனா மீனில் கிடைக்கும் ஸின்க் சத்து 100 கிராம் மாட்டிறைச்சியில் கிடைக் கிறது. 750 கிராம் கோழியின் தோலற்ற நெஞ்சுக் கறியில் கிடைக்கும் வைட் டமின் பி12 100 கிராம் மாட்டிறைச்சி யில் கிடைக்கிறது. 300 கிராம் கோழி யின் தோலற்ற நெஞ்சுக் கறியில் கிடைக்கும் பி விட்டமினான ரைபோப்ஃலேவின் 100 கிராம் மாட்டிறைச்சியில் கிடைக்கிறது.


தமிழ் ஓவியா said...

மூன்று கட்டு பாலக்(தரைப் பசலி) கீரையில் கிடைக்கும் இரும்புச் சத்து 100 கிராம் மாட்டிறைச்சியில் கிடைக்கிறது. மாட்டிறைச்சியில் சத்துக்கள் அடர்த்தியாக உள்ளன. 450 கிராம் டுயுனா மீனில் கிடைக்கும் பி விட்ட மினான ரைபோப்ஃலேவின் 100 கிராம் மாட்டிறைச்சியில் கிடைக்கிறது. ஆறரை கட்டு பாலக் (தரைப் பசலி) கீரை யில் கிடைக்கும் இரும்புச் சத்து 100 கிராம் மாட்டிறைச்சியில் கிடைக்கிறது.

மனிதஇனம் தொன்று தொட்டு மாட்டிறைச்சியை சாப்பிட்டு வருவ தால் பரிணாம வளர்ச்சிக்கு உதவியது என அறிவியல் ஆய்வுகள் கூறுகின்றன. அதனால் தான் நமது உடலும் மாட்டுக்கறியின் சத்துக்களை எளிதாக ஏற்று கொள்கிறது. 'அசைவ உணவு உடம்பிற்கு நல்லது மேலும் வலி மையான இந்தியாவிற்கு அசைவ உணவு அவசியம்' என்றார் விவேகானந்தர். அமெரிக்கா சென்ற போது மாட்டுக் கறியை கேட்டு வாங்கி சாப்பிட்டுள் ளார் அசைவப் பிரியரான விவேகானந்தர்.

இந்தியாவில் மாட்டிறைச்சி

மாட்டிறைச்சி ஏற்றுமதியின் மூலம் இந்தியாவிற்கு ரூ.3500 கோடிக்கும் அதிகமான தொகை வருமானமாகக் கிடைக்கிறது.உலக அளவில் மிக அதிகம்பேர் இந்தியாவில் இருந்து ஏற்றுமதியாகும் மாட்டிறைச்சியை விரும்பி உண்ணுகிறார்கள். இந்தியா வின் தோல் தொழில் உலக அளவில் பிரசித்திபெற்றதாகும். 2.5 மில்லியன் தொழிலாளர்கள் இந்தத் துறையில் வேலை பார்க்கிறார்கள்.

இதில் 30 சதவீதம் பெண்களாகும். இந்திய மக்கள் தொகையில் 60 சதவீதத்தினர் மாமிசம் உண்பவர்களாவார்கள். மாமிசம் உண்ணாதவர்கள் 31 சதவீதத்தினர். மீதம் 9 சதவீதத்தினர் கோழி முட்டை உண்பவர்களாவார்கள்.

அய்க்கிய நாடுகள் உணவு தானியக் கழகம் நடத்திய ஆய்வில் அதிகம்பேர் மாட்டிறைச்சி உண்பவர் களே என்று அறிவித்துள்ளது. (இந்த ஆய்வில் கோழி இறைச்சி சேர்க்கப்பட வில்லை).ஆண்டிற்கு 24 லட்சம் டன் மாட்டிறைச்சி நுகரப்படுகிறது.

இந்தியாவில் மாமிச உணவு உண் பவர்களில் அதிகம் பேர் விரும்புவது மாட்டிறைச்சியையே என்பது இதன் மூலம் தெளிவாகும்.வயதான, உற்பத்தி சக்தியை இழந்த கால்நடைகள் விவ சாயிகளைப் பொறுத்தவரையில் பெரும் பாராமாகும்.இவற்றை இறைச்சிக்காக விற்பதற்கு பசுவதைத் தடைச் சட் டத்தை அமல்படுத்தியுள்ள மாநிலங் கள் அனுமதிப்பதில்லை.

அதனால் கால்நடைகளை வளர்ப்பவர்கள் அவற் றைத் தெருவில் விட்டுவிடுகிறார்கள். ஹரியானா முதலான மாநிலங்களில் தெருவில் அலைந்து திரியும் கால் நடைகள் உண்டாக்கும் பிரச்சினைகள் கொஞ்ச நஞ்சமல்ல. நாட்டின் ஆண் டுக்கு மக்கள் தொகை உயர்வு1.58 சதவீதமாகும்.

ஆனால் கால்நடைகளில் இது 4.48 சதவீதமாகும். பசுவதைத் தடை இந்த எண்ணிக்கையில் எவ்வித பின் விளைவுகளை உண்டாக்கும் என்பது நாம் உணரவேண்டிய ஒன்றாகும். கால்நடை வளர்ப்போரைப் பொறுத்த வரையில் ஆயிரக்கணக்கில் பணம் செலவழித்து வளர்க்கும் பசு கறவை வற்றி உற்பத்தித்திறனை இழந்த பிறகு அதை விற்பது என்பது எதார்த்தம்.

அவ்வாறு விற்பதுவும் பசுவின் மூலம் விவசாயிக்குக் கிடைக்கும் ஒரு வருமானம் ஆகும்.இவை எல்லாவற்றை யும் விட மனிதன், சிங்கம், புலி, ஆடு, பன்றி, கோழி போன்று மாடுகளும் ஒரு உயிரினம்தான்.விலங்குதான். மாடுகள் தரும் பலன் அதிகம்தான் .ஆனால் அதை ஒரு உணவாக கொள் வோரை இதை சாப்பிடாதே,

அதை சாப்பிடாதே என்று தடை போட அவர்கள் அளித்த வாக்குகளையே பயன்படுத்துவது சரியாகுமா? பசுவதைத் தடைச் சட்டம் என்பது மக்களின் உணவுப் பழக்கத்தின் மீதான அத்துமீற லாகும். அது தனி மனித சுதந்திரத்தைக் கசாப்பு செய்வதாகும்.

உலக அளவில் மாட்டிறைச்சியை உணவிற்காக பயன்படுத்தும் 10 நாடுகள்

1. அமெரிக்க அய்க்கிய நாடுகள் 11,172,000

2. பிரேசில் 7,925,000

3. அய்ரோப்பிய கூட்டமைப்பு 7,720,000

4. சீனா 6,263,000

5. அர்ஜண்டினா 2,700,000

6. ரஷ்யா 2,388,000

7. இந்தியா 2,125,000

8. மெக்சிகோ 1,875,000

9. பாகிஸ்தான் 1,626,000

10. ஜப்பான் 1,285,000

குறிப்புகள்

உலகில் 63 விழுக்காடு மக்கள் தினசரி 2 கிலோ மாட்டிறைச்சியை உண்கின்றனர்.
1. பிரேசில், 2. இந்தியா 3. அர்ஜண் டினா 4. சீனா 5. அமெரிக்கா போன் றவை மாட்டிறைச்சி ஏற்றுமதி யில் இடம் பெற்றுள்ளன.
பன்றி மற்றும் கோழி இறைச்சியை விட மிக விரைவில் உடலில் சேர்ந்து கொள்ளும் புரதச்சத்து மாட்டி றைச்சியில் தான் உள்ளது.

- சரவணன் ராஜேந்திரன்

Read more: http://www.viduthalai.in/page4/99093.html#ixzz3WLViu2QP

தமிழ் ஓவியா said...

இப்படியும்கூட....

சமீபத்தில் உத்தரப்பிரதேசத்தில் எடுக்கப்பட்ட படம் இது. எட்டு வயது மதிக்கத்தக்க ஒரு பெண் குழந்தையை தன்னுடைய பைக் பில்லியனில் கட்டி வைத்து சாலையில் இழுத்துச் சென்று கொண்டிருந்தார் இந்த மனிதர்.

பார்த்ததுமே பதறிப் போனவர்கள் காவல்துறைக்கு தகவல் சொல்லியிருக் கிறார்கள்.

காவல் விசாரணையில் கிடைத்த தகவல்தான் ட்விஸ்ட்.

அந்த குழந்தை, அவருடைய சொந்த மகள். செக்யூரிட்டி கார்டாக பணியாற்றும் அவர், பரீட்சை எழுத அடம்பிடித்து மறுத்த மகளை இப்படி கட்டி வைத்து பள்ளிக்கு இழுத்துச் சென்றதாக வாக்கு மூலம் கொடுத்தார்.

இப்படி என் குழந்தையைக் கட்டி வைத்து அழைத்துச் செல்வதால் அவள் செத்துவிட மாட்டாள். ஆனால், கல்வி கற்காவிட்டால் அவளுக்கு எதிர் காலமே இருக்காது.... என்று அந்த மனிதர் சொன்னபோது விசாரித்த காவல்துறையினருக்கே கண்கள் கலங்கியிருக்கிறது.

இந்த வழக்கை எப்படி நடத்துவது என்று தெரியாமல், சிறிய வழக்காகப் பதிவு செய்து இனிமேல் இப்படியெல் லாம் செய்யக் கூடாது என்று எச்சரித்து அனுப்பியிருக்கிறார்கள்.

இந்த செய்தியை என்னவென்று விளங்கிக் கொள்வது?

Read more: http://www.viduthalai.in/page8/99110.html#ixzz3WLWQjLZs

தமிழ் ஓவியா said...

குஜராத்தில் நீர்க் கொள்ளை!

கோகோ கோலா நிறுவனம் குஜராத் மாநிலத்தின் ஸனன்த் என்ற பகுதியில் 500 கோடி மதிப்பில் தொடங்கியுள்ள பாட்டில் தயாரிக்கும் தொழிற்சாலைக்கு, சர்தார் சரோவர் அணையிலிருந்து நாளொன்றுக்கு முப்பது இலட்சம் லிட்டர் தண்ணீரை வழங்க ஒப்புக் கொண்டிருப்பதற்கு காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் அஹ்மத் படேல் கவலை தெரிவித்துள்ளார்.

குஜராத் முதல்வர் ஆனந்திபென் படேலுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், மாநிலத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு முன் னுரிமை அளித்துத் தண்ணீரை வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

சர்தார் சரோவர் அணைத் திட்டம், வறட்சி நிலவும் வடகுஜராத், சௌ ராஷ்ட்ரா, கட்ச் ஆகிய பகுதிகளுக்குத் தண்ணீரை வழங்குவதற்காகவே திட்ட மிடப்பட்டிருந்தது. அப்படியிருக்க, கோகோகோலா போன்ற பன்னாட்டுத் தனியார் நிறுவனங்களுக்கு நாளொன் றுக்கு முப்பது இலட்சம் லிட்டர் தண்ணீரை வழங்க அரசு எடுத்துள்ள முடிவு வியப்பைத் தருகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

குஜராத்தின் வளர்ச்சி மாடல் என்ன என்பது அஹ்மத் படேலுக்குத் தெரி யாது போலும்.

Read more: http://www.viduthalai.in/page8/99112.html#ixzz3WLWbY95H

தமிழ் ஓவியா said...

ஆதாரப்பூர்வ மறுப்பு

அவதூறு செய்யத் துடிக்கும் ஆரியம்

- கி.வீரமணி

அம்பேத்கரைப் போய் அரசமைப்புச் சட்ட மேதை; அரசமைப்புச் சட்டக் கர்த்தா என்று சொல்கின்றார்களே; இந்திய அரசமைப்புச் சட்டத்தை அவர்தான் உருவாக்கினாரா?

அவர் ஒன்றும் இந்திய அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கவில்லையே. அவர் என்ன செய்தார்? ஒன்றும் செய்யவில்லையே என்று சொன்னார்கள்.

நண்பர்களே! இதற்குப் பதில் ஆதாரத்தோடு சுட்டிக் காட்டக் கடமைப்பட்டிருக்கின்றேன்.

அம்பேத்கர் அவர்கள் அவருடைய உரையில் சுட்டிக் காட்டியிருக்கின்றார். அவர் எவ்வளவு பெரிய பேருள்ளம் படைத்தவர் என்பதை இதன்மூலம் நீங்கள் தெரிந்து-கொள்ளலாம்.

அவருடைய டிபேட்ஸ் எல்லா வால்யூம்-களும் என்னிடத்திலே இருக்கின்றன. அதிலே அவர் புரிந்த வாதங்களிலேயே மிகத் தெளிவாகச் சொல்லியிருக்கின்றார்.
அம்பேத்கர், அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர், கே.எம். முன்ஷி, கெய்த்தான், முகமது சாதுல்லா, இப்படி அரசமைப்புச் சட்டத்தை உருவாக்க ஏழு பேரைப் போடுகிறார்கள். அதிலே ஒருவர் அமெரிக்காவில் இறந்து விடுகின்றார். இன்னொருவர் விலகி விடுகிறார். ஆக, அந்த இடத்திற்கு டி.டி.கிருஷ்ணமாச்சாரியார் போடப்படுகின்றார். ஆகக் கடைசியில் அது ஆறு பேரோடு நிற்கின்றது.

அரசமைப்புச் சட்ட வரைவுக் குழுவிலே கடைசியாக 6 பேர் இருந்தார்கள். அந்த 6 பேரில் டி.டி. கிருஷ்ணமாச்சாரி ஒருவர்; டி.டி.கிருஷ்ணமாச்சாரியாருடைய உரையோ என்னிடத்தில் இருக்கின்றது. இதுவே மிகப்பெரிய ஆதாரமாகும்.

டி.டி.கிருஷ்ணமாச்-சாரியார் என்ன சொன்னார் என்பதை உங்களுக்கு எடுத்துச் சொல்கின்றேன்.

நாங்கள் இத்துணைபேர் இருந்தாலும், எங்களால் இந்தப் பணிகளைச் சரிவரச் செய்ய முடியவில்லை. இதனை முழுமையாக அரசமைப்புச் சட்டத்தின் இத்துணைத் திருத்தங்களையும், இத்துணை வரைவுகளையும் செய்த பெருமை அம்பேத்கர் அவர்களையே சாரும் என்று மிகத் தெளிவாகச் சொன்னார்.

ஆனால், அம்பேத்கர் என்ன சொல்கின்றார்? அதைக் கவனியுங்கள். நான்தான் இதை எல்லாம் செய்தேன் என்று என்னைப் பாராட்டாதீர்கள். எனக்கு மிகப்பெரிய துணையாக இருந்தது பி.என். ராவ் என்று சொல்லுகின்றார்.

அவர்தான் அரசமைப்புச் சட்ட ஆலோசகர். அவருடைய அறிவுத்துணைதான் எனக்கு ரொம்ப அளவுக்குப் பயன்பட்டது. அவருக்கு நான் மிகுந்த நன்றி உடையவனாக இருப்பேன் என்று சொல்லுகின்றார்.

அல்லாடி கிருஷ்ணசாமி அய்யரைச் சொல்கின்றார். கடைசியில் டி.டி. கிருஷ்ணமாச்சாரியைச் சொல்லுகின்றார். தான் மட்டுமே இதை எல்லாம் செய்யவில்லை என்று மற்றவர்-களையும் பெருமைப்பட உயர்த்திச் சொல்லுகின்றார்.

நூல் : அம்பேத்கர்பற்றிய அருண்ஷோரி நூலுக்கு மறுப்பு

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

மூடத்தனம்

சாமி சிலைகள் திருட்டு என்பது அன் றாடம் வெளிவரும் செய்தியாகும். இதற்கு மேலும் கோயில்களுக் குச் செல்லுவதும், கும் பிடுவதும், நேர்த்திக் கடன் கழிப்பதும், உண்டி யலில் பணம் போடுவதும், கடவுள் காப்பாற்றுவார் என்று நம்புவதும் முரட்டு மூடத்தனம் அல்லாமல் வேறு என்னவாம்?

Read more: http://viduthalai.in/e-paper/99161.html#ixzz3WQzdGLtC

தமிழ் ஓவியா said...

கிறிஸ்தவ ஆலயம் - கோவில் பூசாரி வீட்டில் கொள்ளை


சிறீவைகுண்டம், ஏப்.5 சிறீவைகுண்டம் அருகே உள்ள செய்துங்கநல்லூர் சாலையில் சி.எஸ்.அய். ஆலயம் உள்ளது. நேற்று முன்தினம் பிரார்த்தனை முடிந்ததும் அங்கு தங்கி யிருக்கும் பெண் ஊழியர் ஒருவர் கதவை லேசாக மூடிவிட்டு தூங்கினார். அப்போது ஆலயத்திற்குள் புகுந்த நபர்கள் உண்டி யலை உடைத்து அதில் இருந்த பணத்தை திருடி யுள்ளனர். சத்தம் கேட்டு எழுந்த அந்த பெண் கூச்சலிடவே அந்த நபர்கள் தப்பி சென்று விட்டனர். உண்டியல் பணத்தையும் எடுத்துச் சென்று விட்டனர். இதனிடையே அதே பகுதியை சேர்ந்த கோவில் பூசாரி சோமசுந்தரம் வீட்டை பூட்டி விட்டு கோவிலுக்கு சென்று விட்டார். இந்த சந்தர்ப் பத்தைப் பயன்படுத்தி கொண்ட திருடர்கள் வீடு புகுந்து தங்கள் கைவரி சையை காட்டியுள்ளனர். அவர்கள் ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள மோதிரம் மற்றும் வெள்ளி பொருட் களை திருடி சென்றுள் ளனர். இந்த சம்பவங்கள் குறித்து செய்துங்கநல்லூர் காவல்துறையினர் விசா ரணை நடத்தி வருகின்றனர்.

Read more: http://viduthalai.in/e-paper/99160.html#ixzz3WQzlCoPl

தமிழ் ஓவியா said...

ஊடக விவாதமும், நடுநிலை நக்கிகளும்

-குடந்தை கருணா

புதிய தலைமுறை தொலைக்காட்சியில் முன் கூட்டியே தமிழகத்தில் தேர்தல் வந்தால் யாருக்கு சாதகம் என ஒரு விவாதம். அதிமுக சார்பில் ஒருவர், திமுக சார்பில் ஒருவர், இன்னொருவர் ஞானி, அடுத்தவர் மணி. இதில் ஞானி, ஆம் ஆத்மி கட்சியில் சென்ற தேர்தலுக்கு முதல் நாள் சேர்ந்து, அடுத்த நாள் தேர்தலில் நின்று, தோற்று, அதற்கு அடுத்த நாள், ஆம் ஆத்மி கட்சியிலிருந்து விலகியவர். அது அவர் சொந்த விருப்பம். அடுத்தவர் மணி. இவர் சமூக சிந்தனையாளராம்? எல்லாம் இவங்களே ஒரு பட்டத்தை வச்சிக்கிறாங்க.

முதல்ல முன்கூட்டியே தேர்தல் ஏன் வரணும்? 2014 தேர்தலில் அதிமுக பெரிய கட்சிகள் எதுவும் இல்லாம, சில சின்ன அமைப்புகளை சேர்த்துக் கொண்டு, 44% வாக்கு வாங்கியுள்ளது. சென்ற சட்டமன்ற தேர்தலில், விஜயகாந்த் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சியோடு சேர்ந்து மிக அதிகமான இடங்களை வைத்துள்ளது. பின்னர் அவர்களை அடித்து விரட்டிவிட்டது வேறு விஷயம். பண பலத்தைக் கொண்டும், ஊடகங்களை, விளம்பரம் என்ற தூண்டிலை வைத்து, மிரட்டியும், ஆசைகாட்டியும் தங்கள் ஆட்சிமீது எந்தவித எதிர்ப்பும் தோன்றாத வகையில் ஓர் எண்ணத்தை உருவாக்கி வைத்திருக் கிறது. இந்த நிலையில் இப்படி திடீர் என முன் கூட்டியே தேர்தல் என்கிற ஓர் பேச்சை ஏன் துவங்க வேண்டும்?

ஞானி சொல்கிறார்: ஜெயலலிதா மீதான வழக்கைப் பொறுத்து இது முடிவாகும் என்கிறார்; அத்துடன் நின்றால் பரவாயில்லை; 2ஜி வழக்கின் முடிவையும் சேர்த்து, அது திமுகவை பாதிக்கலாம் என்கிறார்.

மணி சொல்கிறார்: ஜெயலலிதாவின் அதிமுக வின் எதிர்ப்பை, திமுக சரியாக கொண்டு செல்ல வில்லை; ஆகவே, அதிமுகவிற்கு சாதகம் என்கிறார்.

ஆனால், அதிமுகவின் இந்த நான்காண்டு ஆட்சியில், மிகப் பெரும்பான்மையான என்பதை விட, மிருகபலம் கொண்ட ஓர் ஆட்சியில், நடந்த திட்டங்கள் எது? சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் எந்த கதியில் உள்ளன? மெட்ரோ ரயில் முதல் கொண்டு, இவர்கள் சொன்ன மோனோ ரயில் திட்டம் வரை என்ன நிலையில் உள்ளது? 2023 விஷன் என்று பிரம்மாண்டமாக அறிவித்த தொழிற்புரட்சி என்ன ஆனது? மைனாரிட்டி திமுக ஆட்சியில் பதிமூன்று விழுக்காட்டிற்கும் அதிகமாக இருந்த தொழில் வளர்ச்சி, தற்போது மிருக பலம் கொண்ட அதிமுக ஆட்சியில் நான்கு சதவிகிதத்திற்கும் குறைவாக ஆனதே ஏன்?

இரண்டு மணி நேர மின்வெட்டிற்கு குதித்த ஜெயலலிதா, தற்போது இந்த நான்காண்டில் மின்சாரம் கிடைத்திட செய்த திட்டங்கள் என்ன?

இவற்றையெல்லாம் பட்டியலிட்டு என்றைக் காவது இந்த ஊடகங்கள் ஏதேனும் ஒரு விவாதம் நடத்தியது உண்டா?

மைனாரிட்டி திமுக ஆட்சியில் எதிர்க்கட்சி களுக்கு அய்ந்து ஆண்டுகளில் சட்டமன்றத்தில் பேசுவதற்கு எத்தனை மணி நேரம் ஒதுக்கப் பட்டது? எந்தெந்த பிரச்சினைகளில் வெளி நடப்பு நடந்தது? இப்போது, மிருகபலம் கொண்ட அதிமுக ஆட்சியில் எதிர்க்கட்சிகளுக்கு இந்த நான்காண்டுகளில் பேசுவதற்கு எத்தனை மணி நேரம் கொடுக்கப்பட்டது; எந்தெந்த காரணத் திற்காக, எதிர்க்கட்சிகள் வெளியேற்றப்பட்டன என்ற விவரங்கள் எல்லாம் இந்த ஊடகங்கள் எங்கேயாவது ஒப்பிட்டது உண்டா?

சொத்துக் குவிப்பு வழக்கு என்று கூட சொல்லமுடியாமல், சொத்து வழக்கு என்று தொடர்ந்து சொல்லி, ஏதோ ஒரு சொத்து பிரிப்ப தில் தகராறு என்பது போல ஒரு தோற்றத்தை உருவாக்கும் முயற்சிதானே நடந்து கொண் டிருக்கிறது.

சமூக சிந்தனையாளர் மணியும்? சரி, ஆக பெரும் அரசியல் விற்பன்னரான ஞானியும் சரி, அதிமுகவை விமர்சிப்பதைவிட, திமுகவிற்கு எந்த நிலையிலும் ஆதரவு இல்லை என்று சொல்வதில் அப்படி ஒரு மகிழ்ச்சி. கேட்டால், அவ்வப்போது அவர்களே, தாங்கள் நடுநிலையில்? நின்று பேசுவதாக அறிவித்துக் கொள்கிறார்கள்.

ஒரே ஒரு வருத்தம். இந்த நடுநிலை நக்கிகளுக்கு அதிர்ச்சியூட்டும் விதமாக, மக்கள் கணிப்பில், இப்போது தேர்தல் வந்தால், திமுகவிற்கு சாதகம் என 47% மக்களும், அதிமுகவிற்கு சாதகம் என 36% விழுக்காடு மக்களும் சொல்லிவிட்டார்கள். அல்லது ஒருவேளை, இப்படி கணிப்பு சொல்லி, திமுகவினர் மகிழ்ச்சியடைந்து, மல்லாக்கப் படுத்துக்கிடப்பார்கள் என்று கூட எடுத்துக் கொள்ளலாம். விவாதத்தில் தெரிந்து அதிமுக சார்பில் ஒருவர், மறைமுகமாக இருவர், திமுக சார்பில் ஒருவர் என்று விவாதம் சுபமாக முடிந்தது

Read more: http://viduthalai.in/page-2/99165.html#ixzz3WR0bbV22

தமிழ் ஓவியா said...

வட்டார மாநாட்டின் கொடியினை வழக்குரைஞர் கி.தணிகாசலம் ஏற்றினார். கூட்ட நிகழ்வில் வாலாசா நகர திமுக நகரச் செயலாளர் த.க.பா.புகழேந்தி தலைமையில் இராணிப்பேட்டை நகரச் திமுக நகர செயலாளர் பிஞ்சி டி.பிரகாஷ் முன்னிலையில் கவிஞர் உள்பட கழகப் பொறுப்பாளர்கள் அனைவருக்கும் சால்வை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. அவர்களுக்கு திராவிடர் கழகத் துணைத் தலைவர் இயக்க நூல்களைப் பரிசாக வழங்கினார்.

கவிஞர் கலி.பூங்குன்றன் சிறப்புரை ஆற்றுவதற்கு முன்பாக அரக்கோணம் கழக மாவட்டத் துணைத்தலைவர் பொன்.வெங்கடேசன் இணையரின் பெண்ணடிமைச் சின்னமான தாலி அகற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இறுதியில் கழக துணைத் தலைவர் கவிஞர் தன் சிறப்புரையில், திராவிடர்களின் கலாச்சாரம், பண்பாடு, மொழி ஆகியவற்றை வரலாற்று ஆவணங்களோடு எடுத்துரைத்தார்.

பாசிச வெறிபிடித்த இந்து மதவெறியன் கோட்சே காந்தியாரை துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தியபோது மகாத்மா என்று போற்றப்பட்ட காந்தியார் அவர்கள் இறக்கும்போது ராம்! ராம் என்று கூறிக்கொண்டே இறந்தார்.

காந்தியார் அவர்கள் இறக்கும்போது ராம் ராம் என்று கூறியது அயோத்தி ராமனை அல்ல! இந்து மதத்தை தாக்கிப் பேசினால் உங்களை உயிரோடு விடமாட்டார்கள் என்று தந்தை பெரியார் அவர்கள் 1927 இல் பெங்களூரில் காந்தியாரிடமே நேருக்கு நேராகக் கூறியதை நினைத்து, இருந்த ராமசாமியைத்தான் ராம்! ராம் என்று கூறினார் காந்தியார். ராமசாமி கூறியதை நான் கேட்காமல் போயிட்டேனே என்று சாகும் போது காந்தி வருத்தப்பட்டுக் கூறியதாக நயமாக எடுத்துரைத்தார்.

Read more: http://viduthalai.in/component/content/article/37-dravidar-kazhagam-news/99140-2015-04-04-12-20-03.html#ixzz3WR2UlI9r