Search This Blog

8.4.15

கடவுள் குழப்பம்-பெரியார்

கடவுள் குழப்பம்


கடவுள் என்றால் என்ன என்பதைப் புரிந்து கொண்ட மனிதன் கடவுள் நம்பிக்கைக்காரர்களில் ஒருவருமே இல்லை. ஒரு வஸ்து இருந்தால்தானே அது இன்னது என்று புரிந்து கொள்ள முடியும். அது இல்லாததனாலேயே கடவுள் நம்பிக்கைக்காரர்கள் ஆளுக்கு ஒருவிதமாய் கடவுளைப் பற்றி உளறிக்கொட்ட வேண்டியிருக்கிறது.


அதற்கு பெயரும் பலப்பல சொல்ல வேண்டியிருக்கின்றது.
அதன் எண்ணிக்கையும் பலப்பல சொல்ல வேண்டியிருக்கின்றது.
அதன் உருவமும் பலப்பல சொல்ல வேண்டியிருக்கின்றது.
அதன் குணமும் பலப்பல சொல்ல வேண்டியிருக்கின்றது.
அதன் செய்கையும் பலப்பல சொல்ல வேண்டியிருக்கின்றது.


இந்த இலட்சணத்தில் கடவுளைப் பற்றிப் பேசும் பெரிய அறிவாளிகள் பெயரில்லான் - உருவமில்லான் - குணமில்லான் என்பதாக உண்மையிலேயே இல்லானை இல்லான் - இல்லான் - இல்லான் என்றே அடுக்கிக் கொண்டே போகிறார்கள்.


இப்படி அடுக்கிக் கொண்டே போகிறவர்களே பல பெயர், பல உருவம், பல குணம், பல எண்ணிக்கை முதலியவற்றைச் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். இவற்றையெல்லாம்விட கடவுள் நம்பிக்கைக்காரர்களிடம் இருக்கும் ஒரு அதிசய குணம் என்னவென்றால், எந்த கடவுளைக் கும்பிடுகிறவருக்கும் கடவுள்கள் யார்? தேவர்கள் யார்? இவர்களுக்கு ஒருவருக்கொருவருள்ள வித்தியாசம் என்ன என்பதில் ஒரு சிறு அறிவும் கிடையாது.


மற்றும் ஒரு அதிசயம் - கடவுள் என்பதற்கு ஒரு சொல் வடமொழியிலும் கிடையாது, தமிழிலும் கிடையாது. தமிழில் சொல்லப்படும் கடவுள் என்கின்ற சொல்லுக்கு உண்டான கருத்துக்கு தமிழிலும் ஒரு சொல் காணப்படுவதற்கு இல்லை. அதுபோலவே அதற்கு (கடவுள் என்பதற்கு) வடமொழியிலும் சொல் காணப்படுவதற்கு இல்லை. ஆரியர் (பார்ப்பனர்) தேவர்கள் என்ற சொல்லை வேத காலத்தில் உற்பத்தி செய்து கொண்டு அதுவும் மேல்நாட்டில் அய்ரோப்பாவிலும், மத்திய ஆசியாவிலும் இருந்த பழங்கால மக்கள் கற்பித்துக் கொண்ட பல தெய்வங்களை தேவர்களாக ஆக்கி வேதத்தில் சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள். எகிப்தியர்கள், கிரேக்கர்கள், காக்கேசிய மலைச்சாரலில் இருந்தவர்கள் முதலியவர்கள் வணங்கி வந்த தெய்வங்களே வேதத்தில் காணப்படும் அத்தனை தேவர்களுமாவார்கள்.

அதாவது,

சிவன், இந்திரன் ஆகிய இருவருக்கும் - ஜூபிடர்

பிரம்மாவுக்கு - சாட்டர்னஸ்

யமனுக்கு -  மைனாஸ்

வருணனுக்கு - நெப்டியூன்

சூரியனுக்கு - சோல்  

சந்திரனுக்கு - லூனஸ்

வாயுவுக்கு - சயோனஸ்

விஸ்வகர்மாவுக்கு - காண்டர்போல்வரஸ்

கணபதிக்கு - ஜூனஸ்

குபேரனுக்கு - புளூட்டர்ஸ்

கிருஷ்ணனுக்கு - அப்போலா

நாரதனுக்கு - மெர்குரியன்

ராமனுக்கு - பர்கஸ்

கந்தனுக்கு - மார்ஸ்

துர்க்கைக்கு - ஜூனோ

சரஸ்வதிக்கு - மினர்வா

ரம்பைக்கு - வீனஸ்

உஷாவுக்கு - அரோரா

பிருதிவிக்கு - சைபெல்வி

ஸ்ரீக்கு - சிரஸ்


என்கின்ற பெயருடன் இவை மேல்நாட்டிலிருந்த தெய்வங்களாகும்.

மற்றும் இவர்கள் நடத்தை முதலியவற்றை `புரட்டு இமாலயப் புரட்டு' என்கின்ற புத்தகத்தைப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.

சாதாரணமாக தமிழனுக்கு தொல்காப்பியத்திற்கு முந்திய இலக்கிய நூலோ, இலக்கண நூலோ கிடையாது என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது.

தொல்காப்பிய உரையாசிரியர்கள் ஏதோதோ இருந்ததாகச் சொல்லி அவை மறைந்துவிட்டன என்கிறார்கள். இது இன்றைய சைவ - பெரியபுராணம், வைணவ இராமாயணம் போன்ற புளுகுகளில் சேர்க்கப்பட வேண்டியவையே தவிர காரியத்திற்குப் பயன்படக்கூடியவை அல்ல.

இந்த கடவுள் என்னும் சொல்லும் தமிழனுக்கு ஆயிரம் இரண்டாயிரம் ஆண்டில் கற்பிக்கப்பட்ட சொல்லே அல்லாமல் பழங்காலச் சொல்லென்று சொல்ல முடியாது. தமிழனது இலக்கியங்களும் தொல்காப்பியத்திற்கும் பிற்பட்டவையேயாகும். தொல்காப்பியனையும் ஆரியன் என்றுதான் சொல்லவேண்டும். தொல்காப்பியமும் ஆரியன் வருகைக்குப் பிற்பட்டதேயாகும்.

இன்றைய நம் கடவுள்கள் அத்தனையும் பிர்மா, விஷ்ணு, சிவன், அவனது மனைவி பிள்ளைக்குட்டிகள் யாவும் ஆரியக் கற்பனை, ஆரிய வேத சாஸ்திரங்களில் கூறப்பட்டவை என்பதல்லாமல் தமிழர்க்குரியதாக ஒன்றுகூடச் சொல்ல முடியவில்லை. சிவனும், மாலும் (விஷ்ணுவும்) தமிழன் கடவுள்கள் என்கிறார்கள் சிலர்.

இந்த சிவன், விஷ்ணுக்களை இன்று வணங்கும் சைவ, வைணவர்கள் கோயில்களில் அவற்றுக்குக் கொடுத்திருக்கும் குணங்கள், செய்கைகள், உருவங்கள், சரித்திரங்கள் ஆகியவற்றில் எது, எந்தக் கடவுள், எந்தக் கோயில் தமிழுக்கு, தமிழனுக்கு உரியது என்று எந்த சைவ, வைணவராவது சொல்ல முடியுமா? சிவன் - தமிழன் என்றாலும் விஷ்ணு தமிழனென்றாலும், சைவம் - வைஷ்ணவம் என்னும் சொற்களும் அதன் இலக்கணங்களும் வடமொழி முறைகளேயாகும். லிங்கம், சதாசிவம் முதலிய சொற்கள், அதன் கருத்துகள் ஆரிய மொழிகளேயாகும். நமது கோயில்களிலே உள்ள கடவுள், அவற்றின் சரித்திரங்கள் புராணங்கள் எல்லாமுமே வடமொழி ஆரியக் கருத்துகளேயாகும். இன்றும் வடமொழிப் புராணங்கள் இல்லாவிட்டால் சைவனுக்கோ வைணவனுக்கோ கடவுள், மத இலக்கியங்கள் ஆதாரங்கள் ஏதாவது இருக்கின்றனவா? மத இலக்கியங்கள் ஆதாரங்கள் ஏதாவது இருக்கின்றனவா? ஒன்றும் காணமுடியவில்லையே? ஆரியம் இல்லையானால் சைவ, வைணவர்களுக்கு கடவுளும் இல்லை, சமயமும் இல்லை என்றுதானே சொல்ல வேண்டி இருக்கிறது?

இன்றும் நம்மில், 100-க்கு 99-பேர்களுக்கும் ராமனும், கிருஷ்ணனும், சுப்ரமணியனும் விக்னேஸ்வரனும்தானே பிரார்த்தனைக் கடவுள்களாக இருக்கிறார்கள்? எந்த சைவ, வைணவக்ஷேத்திரங்களை எடுத்துக் கொண்டாலும் காசி முதல் கன்னியாகுமரி வரை ஆரியக் கடவுள்கள் கோயில்களையும் தீர்த்தங்களையும் கொண்டவையாகத்தானே காண்கிறோம்? தமிழனுக்கு கோயில் ஏது? தீர்த்தங்கள் ஏது?

ஆகவே தமிழனுக்கு கடவுள்கள் இல்லை, கோயில்கள் இல்லை, தீர்த்தங்கள் இல்லை, திருப்பதிகள் இல்லை.

இருப்பதாக காணப்படும், சொல்லப்படும் அத்தனையும் பார்ப்பான் பிழைக்கவும், அவன் ஆதிக்கத்திற்கும் நம்மை இழி மகனாக்கவும் மடையனாக்கவும் ஏற்படுத்தப்பட்டவையேயாகும் என்பதை உணர்ந்து மக்கள் ஒழுக்கத்துடனும் நாணயத்துடனும் நன்றி அறிதலுடனும் வாழ்வதையே நெறியாகக் கொண்டு வாழ வேண்டுமென்பதாக திராவிடர் கழகத் தோழர்கள் கடவுள் மறுப்புப் பிரச்சாரம் செய்ய வேண்டும்.

          -------------------------07.10.1962 ”விடுதலை” நாளிதழில் தந்தை பெரியார் அவர்கள் எழுதிய கட்டுரை

28 comments:

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

பக்தி

சிலர் பக்திப் பழமாகவே இருக்கிறார்கள் - அவர் களிடம் மனிதநேயம் இல்லை; கடுகடு என்று இருக் கிறார்கள் - இந்தப் பக்தி நல்லுணர்வுகளை வளர்க்காதா?

Read more: http://viduthalai.in/e-paper/99375.html#ixzz3WoOQjro7

தமிழ் ஓவியா said...

ஆதரிப்பது...


எந்த முறையிலாவது புராணப் பண்டி தர்களைப் பொது மக்கள் ஆதரிப்பது, கொள்ளியை எடுத்துத் தலையைச் சொறிந்து கொள்வது போலாகும்.
(குடிஅரசு, 18.5.1930)

Read more: http://viduthalai.in/page-2/99365.html#ixzz3WoOtQvyK

தமிழ் ஓவியா said...

நாடு எங்கே செல்லுகிறது?


குஜராத்தில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து முஸ்லீம்களுக்கு எதிரான மிரட்டல்கள் அதிகரித்து வருகின்றன. இதன் காரணமாக இந்துக்கள் வாழும் பகுதியில் உள்ள முஸ்லீம்கள் தங்களது வீட்டை விற்றுவிட்டு வேறு இடங்களுக்கு இடம் பெயர ஆரம்பித்துள்ளனர்.

மத்தியில் மோடி அரசு வந்ததில் இருந்து சிறு பான்மை இனமக்கள்மீதான தாக்குதல்களும், மிரட் டல்களும் நாடு முழுவதும் தொடர்ந்து நடந்துகொண்டு இருக்கின்றன, முக்கியமாக இந்து அமைப்புகள் நேரடியாக தெருக்களில் இறங்கி முஸ்லீம் வியாபார தலங்களைத் தாக்குவதும், முஸ்லீம்கள் பணிபுரியும் இடங்களில் சென்று அவர்களை மிரட்டுவதும் தொடர்ந்து நடந்து கொண்டு இருக்கின்றன.

ஆங்கில பத்திரிகையான இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில் கடந்த சில மாதங் களில் சுமார் 700 குடும்பங்கள் தங்களது வீடுகளை விற்றுவிட்டுச் சென்று விட்டதாகத் தெரிவித்துள்ளது. குஜராத் மாநிலம் பாவ் நகரில் தொழிலதிபர் அலி அஸ்கர் என்பவர் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் பங்களா வீடு ஒன்றை வாங்கியிருந்தார். இந்த நிலை யில் மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு பிரவீன் தொகாடியா அந்தப்பகுதிக்குச் சென்று பொதுக்கூட்ட மேடையில், இந்தப் பகுதிக்கு முஸ்லீம்கள் வர தடைசெய்யப்பட வேண்டும். இங்கு சில முஸ்லீம்கள் பங்களாக்களை வாங்கி, குடியிருக்கிறார்கள். இவர்கள் வேண்டுமென்றால் பாகிஸ்தானுக்குச் சென்று பங்களா வாங்கி குடியிருக்கட்டும், இங்கே இருக்கத் தேவையில்லை, ஆகையால் அவர்களின் வீட்டின் வெளியே காவிக்கொடி ஏற்றுங்கள், அவர்களுடன் பேச்சுவார்த்தை வைக்க வேண்டாம், இந்துக்களின் கடைக்குச் சாமான் வாங்க வந்தால் அவர்களை விரட்டுங்கள் என்று பேசியிருந்தார். இந்த பேச்சிற்காக அவர்மீது முதல் குற்ற அறிக்கை தாக்கல் செய்யப் பட்டுள்ளது.

இந்துத்துவ சக்திகளின் தொடர் மிரட்டல் காரண மாக அலிஅஸ்கர் தன்னுடைய பங்களாவை விற்று விட்டு வேறுபகுதிக்குச் சென்றுவிட்டார். இவ்விவகாரம் குறித்து இந்தியன் எக்ஸ்பிரஸ் குறிப்பிட்டுள்ளதாவது: ஜனவரி மாதம் அலி அஸ்கர் தன்னுடைய பங்களாவை விற்க வேண்டிய நிர்ப்பந்தத் திற்கு ஆளானார், தினசரி அவரது பங்களாவின் முன்பு சமூக விரோதிகள் கேவலமான முறையில் நடந்து கொள்கின்றனர்.

அவர் பங்களா சுவரில் தகாத வார்த் தைகளை எழுதிச் செல்கின்றனர். மேலும் மறைமுகமாக நகராட்சி நிர்வாகத்தில் உள்ள சிலர் அந்தப் பங்களா விற்கு செல்லும் மின்சாரம் மற்றும் தண்ணீர் போன்ற அத்தியாவசிய தேவைகளைத் தடுத்து வருகின்றனர். இது குறித்து புகார் கொடுக்கச் சென்றபோது பங் களாவைக் காலி செய்து விட்டு வேறு இடத்திற்கு போய் விடச் சொல்லுங்கள் என்று நேரடியாகவே காவல்துறை யிடம் உள்ளூர் அரசு நிர்வாகமும் கூறியதால் வேறு வழியின்றி அவர் பங்களாவை விற்கும் நிலைக்கு ஆளானார்.

இந்த நிலையில் பூமதி அசோசியேசன் என்ற நிறுவனம் அவரது பங்களாவை வாங்கியுள்ளது. இது உள்ளூர் இந்து அமைப்பின் தலைவர் ஒருவரின் நிறுவனமாகும், இந்தப் பங்களா மற்றும் அருகில் உள்ள பல்வேறு முஸ்லீம்களின் வீடுகள் தொடர்ந்து விற்றுவிட்டு வேறு இடங்களுக்குச் செல்கின்றனர். இவர்களை விரட்டுவதில் அந்த உள்ளூர் இந்து அமைப்பின் தலைவர் முனைப்புக் காட்டி வருகிறார். அதே நேரத்தில் முஸ்லீம்களின் வீடுகளையும் அவரே தனது பினாமி பெயரில் வாங்கிவருகிறார். என்று அந்த பத்திரிகையில் எழுதப்பட்டுள்ளது.

இந்தியா இந்துக்களின் நாடு; இந்தியாவில் வாழ் வோர் அனைவரும் இந்துக்களே என்று ஆர்.எஸ்.எஸ். தலைவரே கூறுகிறார். முஸ்லிம்கள் கிருஷ்ணனை வணங்க வேண்டும் என்றும் கிறிஸ்தவர்கள் ராமனை வணங்க வேண்டும் என்றெல்லாம் மனம் போன போக்கில் உளறித் தள்ளுகின்றனர்.

இந்தச் சூழ்நிலையில் வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களின் வாழ்வு - கேள்விக்குறியாகி விட்டது.

முஸ்லிம்கள் அதிகம் வாழும் நாடுகளில் இந்தி யர்கள் வேலை வாய்ப்பைத் தேடிச் சென்று அங்கே தங்களின் வாழ்க்கைப் படகை ஓட்டி வருகின்றனர். இந்தியாவில் முஸ்லிம்களுக்கு அழுத்தம் கொடுத்தால், அதன் விளைவு வெளிநாடுகளில் வாழும் இந்தியர் களின் நிலை என்னாவாகும் என்று ஒரு கணம் நினைத்துப் பார்க்க வேண்டாமா?

இந்துத்துவா வெறி இந்தியாவில் வாழும் மக்களுக்கு மட்டுமல்ல; வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களுக்கும் ஆபத்தானதே - எச்சரிக்கை!

வெறி குறிப்பிட்ட நேரத்தில் சுகமாகத்தானிருக்கும் - அதன் விளைவு பெரும் விலையைக் கொடுக்கக் கூடியதாகவே இருக்கும் என்பதுதான் வரலாறு!

Read more: http://viduthalai.in/page-2/99366.html#ixzz3WoP20XPI

தமிழ் ஓவியா said...

உ.பி. மீரட்டையடுத்து, ராம்பூரில் தாழ்த்தப்பட்டோர் இஸ்லாம் தழுவுகின்றனர்

ராம்பூர்(உபி), ஏப்.10- தலித்துகளின் குடியி ருப்பை இடித்து விட்டு வணிகவளாகமாக்கும் செயலை தேசிய நெடுஞ் சாலைதுறை மேற் கொள்ளவிருக்கிறது, இதற்கு எதிர்ப்பு தெரி வித்து 200-க்கும் மேற்பட் டோர் இஸ்லாம் மதத் திற்கு மாறவுள்ளனர்.

நகரங்களுக்கு அருகில் உள்ள தேசிய நெடுஞ்சாலை கள் விரிவுபடுத்தப்பட்டு அங்கு வணிக வளாகங் களும், வாகனங்கள் நிறுத் தங்களும் அமைக்கப்படும் என்று தேசிய நெடுஞ் சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி கடந்த மாதம் அறிவித்திருந்தார்.

இதன் ஒரு பகுதியாக பதோனி-ஜவன்பூர் சாலை யில் உள்ள ராம்பூர் என்ற நகராட்சி நகரத்தில் எல்லையில் உள்ள தலித் துகளின் குடியிருப்பை சட்டவிரோத குடியிருப் பாக அறிவித்து, அதை இடிக்கும் நடவடிக்கையில் இறங்கியது.

வால்மிகி சேவா சங்கத்தினர்

அரசின் இந்த நட வடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்த வால்மிகி சேவா சங் உறுப்பினர் ஊடகவியலாளர்களிடம் கூறியதாவது, கடந்த 1980- ஆம் ஆண்டு அரசு நகர தூய்மைப் பணியில் ஈடு பட்டுள்ள எங்களுக்கான குடியிருப்புகளை ஒதுக்கிக் தந்தது, சுமார் 30 ஆண்டு களுக்கு மேல் நாங்கள் இங்கு குடியிருந்து வருகி றோம். நகராட்சி வரி, மின்சாரம் மற்றும் தண் ணீர் வரிகள் அனைத்தும் கட்டியுள்ளோம்.

இந்த நிலையில் அரசு எங்கள் குடியிருப்புகளை சட்ட விரோத குடியிருப்பு என்று கூறி எங்கள் வீடு களை இடிக்க உத்தரவிட் டுள்ளது. மேலும் இந்தப் பகுதியில் தேசிய நெடுஞ் சாலை வரவிருப்பதாலும் வாகன நிறுத்தம் மற்றும் வணிக வளாகங்கள் அமை யப்போவதாக கூறுகின்றனர்.

உயர் ஜாதி தொழிலதிபர்கள்

இது குறித்து மாவட்ட ஆட்சியாளரிடம் மனு கொடுத்த போது அவர் வாங்க மறுத்துவிட்டார். சுமார் 200 குடும்பங்கள் உள்ள எங்களது குடியி ருப்பை சட்டவிரோதம் என்று திடீரென்று எப் படி கூற முடியும்? இத் தனைஆண்டுகளாக எங்களிடம் வரிவாங்கும் போது தெரியவில்லையா? சாலை விரிவாக்கத்திற்கு எங்கள் குடியிருப்புதான் கிடைத்ததா?

பல கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சாலைக்கும் எங்கள் பகுதி குடியிருப்பிற்கும் தொடர்பில்லாத நிலையில் எங்கள் குடியி ருப்பை அகற்ற நினைப் பது சில தனியார் நிறு வனத்தின் அழுத்தத்தில் தான்; மத்திய மாநில அரசு இரண்டுமே இந்த விவகாரத்தில் எங்களுக் குத் துரோகம் செய்து விட்டன.

தொடர்ந்து இங் குள்ள அரசும் சில உயர் ஜாதி தொழிலதிபர்களும் எங்களுக்கு விரோதமா கவே செயல்பட்டு வரு கின்றனர்.

பல ஆண்டு களாக நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருந்த எங்களை விரட்ட நினைக் கிறார்கள். நாங்கள் அனைவரும் ஏழைகளாக இருப்பதால் எங்களின் வாழ்வாதாரத்தை சிதைக்க முயல்கின்றனர் என்று கூறினர். நீதியற்ற அரசின் போக்கை எதிர்த்து அம் பேத்கர் ஜெயந்தி அன்று நாங்கள் அனைவரும் இஸ்லாம் மதத்தைத் தழுவ உள்ளோம், என்று கூறினார்.

திங்கள் கிழமை முதல் குடியிருப்பில் உள்ள அனைவரும் நகரில் உள்ள அம்பேத்கர் மைதானத்தில் உண்ணா விரதமிருக்க உள்ளனர்.

மீரட்டில் கடந்த மாதம் தலித்துகளை ஆலயம் நுழைய அனுமதிக்காத தால் 300தலித் குடும்பங் கள் இஸ்லாத்திற்கு மாறி னார்கள். இதனை அடுத்து இரண்டாவது பெரிய மதமாற்ற நிகழ் வாக இது பார்க்கப்படுகிறது.

இதுகுறித்த மாநில அரசும் மத்திய நெடுஞ் சாலை துறை அதிகாரி களும் எந்த கருத்தும் கூற மறுத்து விட்டனர்.

Read more: http://viduthalai.in/e-paper/99445.html#ixzz3WzC8Otio

தமிழ் ஓவியா said...

கிறிஸ்துவ ஆலயத்தில் உண்டியல் உடைத்து பணம் கொள்ளை!


சென்னை, ஏப். 10 சென்னை கானாத்தூர் கிழக்கு கடற்கரைச்சாலை எம்.ஜி.ஆர் தெருவில் சூசையப்பர் கிறிஸ்துவ ஆலயம் உள்ளது. புனித வெள்ளி கொண்டாட்டத்தை அடுத்து நேற்று மாலை இந்த ஆலயத்துக்குள் சென்று பார்த்தபோது கதவு உடைக்கப்பட்டிருந்தது. பீரோவில் வைக்கப்பட்டிருந்த ரூ. 35,000 கொள்ளை போனது. இதுகுறித்து பாதிரியார் அமலோற்பவராஜாகாவல்நிலையத்தில் புகார் செய்தார். விசாரணை நடக்கிறது.

Read more: http://viduthalai.in/e-paper/99450.html#ixzz3WzCMNRYG

தமிழ் ஓவியா said...

முரளி மனோகர் ஜோஷியை காணவில்லை என்ற சுவரொட்டியால் பரபரப்பு

கான்பூர், ஏப்.10 பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் முரளி மனோகர் ஜோஷி. இவர் உ.பி.யில் உள்ள கான்பூர் தொகுதி யில் இருந்து எம்.பி.ஆக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரை காணவில்லை என்று அங்கு வீதியெங் கும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. கான்பூர் பகுதி பா.ஜனதா பிரிவு சார்பில் ஒட்டப் பட்ட இந்த சுவரொட்டி களில், முரளி மனோகர் ஜோஷியை கண்டுபிடித் துக் கொடுத்தால் பரிசு வழங்கப்படும் என்றும் அச்சடிக்கப்பட்டிருந்தது. ஜோஷி, வரும் 18 ஆம் தேதி தனது தொகுதியில் சுற்றுப்பயணம் மேற் கொள்ள திட்டமிட் டுள்ள நிலையில், இவ் வாறு ஒட்டி அவரை அவமதிக்கும் செயலுக்குக் கட்சியின் கான்பூர் பிரிவு தலைவர் சுரேந்திர மைதானி கண்டனம் தெரி வித்துள்ளார். இந்த சுவ ரொட்டிகளுக்கும் தங்க ளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும், பா.ஜனதா கட்சியில் உள்ள எதிர்ப்பு கோஷ்டி யினர் செய்த சதி என்றும் அவர் தெரிவித்தார்.

Read more: http://viduthalai.in/e-paper/99444.html#ixzz3WzCVL1Lc

தமிழ் ஓவியா said...

அண்ணா நூலகத்திலும் அரசியலா?

அண்ணா நூற்றாண்டையொட்டி சென்னை கோட்டூர்புரத்தில் தி.மு.க ஆட்சியில் ஆசியாவிலேயே சிறந்த நூலகம் ஒன்று ரூ.180 கோடி செலவில் 8 ஏக்கர் பரப்பில் உருவாக்கப்பட்டது. அன்றைய முதல் அமைச்சர் கலைஞர் அவர்கள் அண்ணா பிறந்த நாளிலேயே திறந்து வைத்தார் (15.9.2010).

12 லட்சம் நூல்கள் இடம் பெறக் கூடிய வசதியோடு இந்த நூலகம் உருவாக்கப்பட்டது. அன்றைய கல்வி அமைச்சர் திரு தங்கம் தென்னரசு அவர்கள் ஒவ்வொரு நாளும் அங்கு சென்று பார்த்துப் பார்த்து உருவாக்கினார் என்று கூடச் சொல்லலாம்.

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களும் அமைச்சரோடு ஆக்க ரீதியாகக் கலந்து பேசியதுண்டு பலமுறை நேரில் சென்று பார்த்ததும் உண்டு.

3 லட்சத்து 33 ஆயிரம் சதுர அடி கொண்ட அந்நூலகம் நவீன தொழில் நுட்பத்துடன் உருவாக்கப் பட்டது. தமிழ்நாட்டுக்கே பெருமை சேர்க்கும் அறிவுச் சோலையாக மணம் வீசியது.

சிறுவர்கள் அமர்ந்து படிப்பதற்கான சூழலும் உருவாக்கப்பட்டது. அய்.ஏ.எஸ். தேர்வுக்குத் தயா ராகும் மாணவர்களுக்குப் பெரும் உதவியாக இருந்தது. வெளியிலிருந்து நூல்களை எடுத்து வந்து படிப் போருக்கும் தனிப் பகுதி ஒதுக்கப்பட்டு இருந்தது.

அண்ணா பெயரில் உள்ள ஒரு கட்சி ஆட்சிக்கு வந்த நிலையில், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அண்ணா பெயரில் அமைந்த நூலகத்தையே சிதைக்க விரும்பியது என்றால் யாராவது நம்புவார்களா?

ஆனாலும், நம்பும்படியாக அவசர அவசரமாக வேலை நடந்தது. அந்த நூலகத்தைக் குழந்தைகள் சிறப்பு மருத்துவமனையாக மாற்றிட அ.இ.அ.தி.மு.க. அரசு துடித்தது.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டி.பி.அய் வளாகத்துக்கு மாற்றிட முடிவு செய்யப்பட்டது.

கட்சிக்கு அப்பாற்பட்ட முறையில் பொது மக்கள் பெரும் அதிர்ச் சிக்கு ஆளாயினர்; கல்வியாளர்கள், ஆய்வாளர்கள், நூலக விரும்பிகள் நொந்து போனார்கள்.

அ.இ.அ.தி.மு.க. அரசின் இந்த முடிவை எதிர்த்து பொது நல வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டன. மனித உரிமை ஆர்வலர்களான வழக்குரைஞர் பி. புகழேந்தி வழக்குரைஞர் பிரபாகரன் ஆகியோர் தனித் தனியாக பொது நல வழக்கினைத் தொடர்ந்தனர்.

சென்னை உயர்நீதிமன்றம் தமிழ்நாடு அரசின் முடிவுக்கு இடைக்கால தடையை வழங்கி நல்லோர் நெஞ்சில் எல்லாம் பாலை வார்த்தது.

நீதிமன்றம் தடை விதித்த நிலையில், நூலகக் கட்டடத்தைப் பாழ்படுத்த வேண்டாமா? என்ன செய்தது அஇஅதிமுக ஆட்சி?

திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கெல்லாம் கொடுக்க ஆரம்பித்தது. அதற்கும் உயர்நீதிமன்றம் தடை விதித்தது. திருமண நிகழ்ச்சி களுக்கு முன் பணம் வாங்கப்பட்டு இருந்தால், அது திருப்பித் தரப்பட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

ஓர் ஆட்சி இந்த நிலைக்கு ஆளானது எல்லாம் ஆட்சிக்குப் பெருமை சேர்க்கக் கூடியதுதானா?

நூலகம் சரிவரப் பராமரிக்கப்படவில்லை என்ற குற்றச்சாற்று பொது மக்கள் மத்தியில் எழுந்தது.

கடந்த நான்கு ஆண்டுகளாக எந்த அதிகாரியும் ஆய்வுக்கு வரவில்லை என்றால் இந்த அரசு அண்ணா பெயரில் அமைந்த நூலகத்தை எந்தப் பார்வையில் பார்த்தது என்பது சொல்லாமலே விளங்கும்.

நாள் ஒன்றுக்கு 2000 வாசிப்பாளர்கள் வந்த இடத்தில் இப்பொழுது மிகப் பெரிய சரிவுக்கு ஆளாகி விட்டது.

இந்த நிலையில் திமுக சார்பில் கண்டன ஆர்ப் பாட்டம் இன்று நடைபெறுகிறது. அண்ணாவின் பெயரில் அமைந்த நூலகத்தை சீரமைக்க வேண்டும் என்பது தான் இந்தப் போராட்டத்தின் நோக்கமாகும்.

தி.மு.க. முன்னின்று இந்தப் போராட்டத்தை நடத்தினாலும், இதில் பொது மக்களின் உணர்வும் அடங்கியுள்ளது என்பதுதான் உண்மை.

தி.மு.க ஆட்சியில் நடைபெற்ற நாட்டு மக்களுக் கான நற்பணிகள் எல்லாம், அதனைத் தொடர்ந்து வந்த அ.இ.அ.தி.மு.க. ஆட்சியில் சிதைக்கப்படுகின்றன - இது ஓர் ஆரோக்கியமான நிலையல்ல; ஓர் ஆட்சி போய் மற்றொரு ஆட்சி வருவது என்பது ஜனநாயகத்தின் அடிப்படை அம்சமாகும். நிர்வாகம் என்பது தொடர்ச்சி யாக அமைய வேண்டிய ஒன்று என்பதும் பால பாடமே!

ஆனால், இந்த அரசியல் ஜனநாயக நடைமுறை என்பது எல்லாம் அ.இ.அ.தி.மு.க.வுக்கு என்ன என்றே தெரியாது. அது தெரிந்து வைத்துள்ளதெல்லாம் அரசியல் காழ்ப்புணர்வே - அப்பட்டமான காழ்ப் புணர்வே!

ஊடகங்கள்கூட இது குறித்தெல்லாம் வாய்த் திறக்காதது வருந்தத்தக்கது.

இந்தப் போக்கை ஊடகங்கள் மேற் கொண்டால் ஊடகங்களின் மீதான பொது மரியாதையும் நம்பிக்கையும் கீழே போய்விடும் என்பதை மறந்து விடக் கூடாது.

எழுத்தாளர்களும், கல்வியாளர்களும் ஒன்று சேர்ந்து கூட பொதுவான அறிக்கைகளை வெளியிட லாம். அறிவை நேசிப்போம் - அழுக்காறைத் தூஷிப்போம்!

தமிழ் ஓவியா said...

நம் உரிமையை பறிக்க எவருக்கும் உரிமையில்லை
- குடந்தை கருணா

இந்திய நாட்டின் சூத்திர, பஞ்சம மக்களின் பெருவாரியான வாக்குகளை பெற்று ஆட்சிக்கு வந்துள்ள மோடி தலைமையிலான மத்திய அரசின் உள்துறை அமைச்சர், நாட்டில் பல்வேறு மாநிலங் களில் நிகழும் வன்முறைகள், அதன் காரணமாக ஏற்பட்டுவரும் மனித பலிகள், மராட்டிய மாநிலத்தில் விவசாயிகளின் தற்கொலைகள் இவற்றை பற்றியெல்லாம் மாநிலங் களோடு பேசி, தீர்வு காண்பதை விட்டு, நாட்டின் எல்லையோரத்தில் நின்று கொண்டு, பக்கத்து நாடான பங்களா தேஷ்க்கு மாடுகளை அனுப்பிவிடா தீர்கள் என்கிறார்; அனைத்து மாநில அரசும், பசுவதைத் தடை சட்டம் நிறைவேற்ற மத்திய அரசு வலியுறுத்தும் என்கிறார்.

அப்படி என்ன இதில் அவ்வளவு அக்கறை?

கேட்டால், பசு புனித மானது என்கிறது சங் பரிவார். வேத காலத்தில், பசுவை கொன்று யாகம் செய்தீர்களே என்று கேட்டால், அது அப்போ, இது இப்போ என வடிவேலு வசனம் பேசுகிறார்கள்.

பசு புனிதம்; மற்ற விலங்குகள் கொல்லப்பட்டால் பரவாயில் லையா? அவைகளால் எந்த நன்மையும் இல்லையா என்றால், அதற்கு பதிலைக் காணோம். காலங்காலமாக, மாடுகளை வளர்த்தும், வயல்களில் பயன்படுத்தியும், வணங்கியும், அவைகளுக்கு விழா எடுத்தும் இயற்கை வாழ்வு வாழ்ந்து வந்த இந்த திராவிட பெருங்குடி மக்களுக்கு, அந்த மாடுகளின் இறைச்சியும் உணவாக காலந்தொட்டு இருந்துதானே வருகிறது.

இதிலே, சம்பந்தமில்லாமல், மூன்று சதவிகிதம் உள்ள பார்ப்பனர்கள் உள்ளே நுழைந்து, இது புனிதம் அதை தொடாதே, சாப்பிடாதே என்றால், அதை ஏன் மீதம் உள்ள 97 விழுக்காடு மக்கள் ஏற்க வேண்டும்.

இப்படித்தானே, இந்த சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும், கல்வியைக் கொடுக்காதே என்று இந்த மூன்று சதவிகித பார்ப்பனர்கள் சட்டம் தயாரித்து, மன்னர்கள் துணையுடன் ஆயிரம் ஆண்டுகளாக நிறைவேற்றி வந்தனர். அதே சட்டத்தின் துணை யுடன், பஞ்சம மக்களை தொடக் கூடாது, பார்க்கக்கூடாது என ஆக்கி வைத்தனர்.

குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்த பெண்கள் மார்பு சீலை அணியக் கூடாது என்று சொன்னதும் இவர்கள் தானே; நம்மை கோயிலைக் கட்ட வைத்து, அதிலே நம்மை வெளியே நிறுத்தி, நம் இனப் பெண்களை நடனம் ஆட விட்டு ரசித்து, பின்பு அவர்களை கேவலப்படுத்தியதும் இந்த கூட்டம் தானே. மன்னர் ஆட்சி ஒழிந்து மக்கள் ஆட்சி வந்தாலும், ஆட்சியில் நமக்கான உரிமை என்கிற நமது குரலை நசுக் குவதும் இந்தக் கூட்டம் தானே.

அன்று மனுவின் பெயரால், ஆட்சியாளர்களை வளைத்துப்போட்டு, பெரும்பான்மை மக்களான சூத்திர, பஞ்சம மக்களின் உரிமையை நசுக்கிய, கல்வி உரிமையை மறுத்த அதே மூன்று விழுக்காடு பார்ப்பனர் கூட்டம்தான், இன்று மத்தியில் தங்களின் ஆட்சி வந்துவிட்ட தைரியத்தில் நாம் என்ன உணவு சாப்பிட வேண்டும் என்று சட்டம் போடத் துணிகிறது. நாம் என்ன மொழி பயில வேண்டும் என அதிகாரம் செய்கிறது. என்ன எழுத வேண்டும் என்று கட்டளையிடுகிறது.

பெரும்பான்மை மக்களாகிய நாம், எல்லோருமே, தினமும் மாட்டுக்கறியும், ஆட்டுக்கறியும், மீனும் சாப்பிடுவ தில்லை; பலர் சாப்பிடுகிறார்கள்; இன்னும் சொல்லப்போனால், இவற்றை சாப்பிடாமல் வாழக்கூடியவர்கள் நம்மில் சிலர் இருக்கிறார்கள். ஆனால் அதுவல்ல பிரச்சினை;

தமிழ் ஓவியா said...

மகாராட்டிர மாநிலத்தில் பார்ப் பனர் முதல்வராக வந்தவுடன், மாட் டுக்கறி சாப்பிடக்கூடாது என சட்டம் கொண்டு வருகிறார். இந்தியாவிலேயே, வேறு எந்த மாநிலத்திலும், வலுவான எதிர்ப்புக் குரல் இல்லை; தமிழ் நாட்டில், ஒரு தொலைக்காட்சியில் தாலி குறித்து விவாதம் நடத்த முடிவு செய்தால், அதனை எதிர்த்து வன் முறை செய்கிறார்கள். பெரியார் பிறந்த மண்ணில், கருத்துச் சுதந்திரம் தடை செய்வதை அனுமதிக்கக்கூடாது எனும் நோக்கில், திராவிடர் கழகம், தாலி அகற்றல் மற்றும் மாட்டுக்கறி உண்ணும் விழாவை ஏற்பாடு செய்கிறது.

இதற்குப் பார்ப்பனர்கள் கோபம் கொள்வதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், சில சூத்திரர்களும் அவர்களோடு சேர்ந்து ஆத்திரப்படுவதைப் பார்த்தால் வேடிக்கையாக இருக்கிறது.

மக்களாட்சி நடைபெறும் இந்தக் காலகட்டத்திலும், மிகச் சொற்பமாக இருக்கக்கூடிய பார்ப்பனர் கூட்டம், பெரும்பான்மை மக்களின் ஒவ்வொரு உரிமையையும் பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதை தோலுரிக்கவே, திராவிடர் கழகம் இந்த நிகழ்வை நடத்துகிறது.

பார்ப்பனர்களின் இந்த முயற்சியை நாம் முறியடிக்காவிட்டால், பிறகு, நான் வெங்காயம், பூண்டு சாப்பிடுவதில்லை; ஆகவே, நீங்கள் அனைவரும் சாப்பிடக் கூடாது என்பார்கள். நாம் இந்த நாளில் எந்த உடை அணிய வேண்டும் என்று சொல்வார்கள்.

நம் பிள்ளைகள் என்ன படிப்பு படிக்க வேண்டும் என்று சொல் வார்கள். அவற்றிற்கும் ஆயிரம் விளக்க மும் அவர்களால் சொல்ல முடியும்.

மிக நெடிய போராட்டத்தின் மூலம்தான், சூத்திர, பஞ்சம மக்களாகிய நாம் சில உரிமைகளை பெற்றிருக்கி றோம். குறிப்பாக தமிழ் நாட்டில், பெரியார் ஏற்படுத்திய தாக்கத்தால், இந்த விழிப்புணர்வு இருக்கிறது.

ஏப்ரல் 14 அன்று பெரியார் திடலில் நடைபெறும் நிகழ்வு, வெறும் உணவு உண்ணும் நிகழ்வு அல்ல; நம் உரிமையை பறிக்க எவனுக்கும் உரிமையில்லை என உரக்கச் சொல்லும் நிகழ்வு.

நீங்கள் சாப்பிடுகிறீர்களோ, இல் லையோ, நிகழ்வில் கலந்து கொண்டு, உங்களை அடையாளம் காட்டிக் கொள்ளுங்கள்.

Read more: http://viduthalai.in/page-2/99433.html#ixzz3WzDKDHcA

தமிழ் ஓவியா said...

முக்கியம்


தைரியம் இருந்தால் நல்ல காரியங்கள் செய்யலாம். நல்ல காரியங்களைச் செய்யும்போது எத்தகைய எதிர்ப் பிருந்தாலும் பயப்படத் தேவையில்லை. தைரியமே முக்கியம்.
(விடுதலை, 22.11.1964)

Read more: http://viduthalai.in/page-2/99426.html#ixzz3WzDo5CbQ

தமிழ் ஓவியா said...

நாத்திகம் பற்றி வெளிநாட்டு அறிஞர்கள்

நாத்திகன் வாழ்க்கையை நடத்த குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்கத் தெரியாதவன். கண்ணுக்குப் புலப்படாத வருவாய் இல்லாதவன்.
(ஜான் புச்சன், ஸ்காட்லாந்து வரலாற்று ஆசிரியர்)

நான் ஒரு நாத்திகன் பல அறிவிலிகள் கண்மூடித் தனமாக நம்புவதை நானும் நம்புவதாக நடிக்கமாட்டேன்.
(க்ளாரென்ஸ்டாரோ, வழக்கறிஞர்)

ஆண்களைக் கவரும் அழகை இழந்த பெண் முதுமையில் கடவுள் பக்கம் திரும்புகிறாள்
(பால்காக், ஃப்ரெஞ்சு நாவலாசிரியர்)

தோல்வி ஏற்படும் போது கடவுள் பெயரைச் சொல்லாதே, வெற்றி ஏற்படும் நேரம் பார்த்துச் செயலாற்று.
(ஆம்ப் ரோஸ் பியர்ஸ், அமெரிக்க எழுத்தாளர்)

கல்லினாலும் மரத்தினாலும் ஆண், பெண் கடவுள் களைப் படைப்பதால் எந்தப் பயனும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.
(ஜான் பில்லிங்ஸ் என்ற புனைப் பெயர் கொண்ட என்றி வீலர் ஷா என்னும் அமெரிக்க நகைச்சுவை எழுத்தாளர்)

கடவுள் என்பது அகராதியில் கடவு(வழி) என்னும் சொல்லுக்கு அடுத்து உள்ளது
(சாமுவேல் பட்லர், ஆங்கில நாவலாசிரியர்)

மருத்துவர் நோயை குணப்படுத்துகிறார். நன்றி ஆண்டவனைச் சேருகிறது.
(ஃப்ரங்களின், அமெரிக்க விஞ்ஞானி)

இருப்பவையெல்லாம் கடவுள் அல்ல. இல்லாத ஒன்றே கடவுள்
(கூர்மான்ட், ஃப்ரெஞ்சு தத்துவ நூலாசிரியர்)


Read more: http://viduthalai.in/page-7/99462.html#ixzz3WzE8fuv8

தமிழ் ஓவியா said...

பார்ப்பனர் பற்றி வேதநாயகம்!

ஒருநாள் இரண்டு பிராமணர்கள் மிஞ்சின போஜனம் அருந்தினதால் கீழே குனியக்கூட முடியாமல் அண் ணாந்து கொண்டு மேல்நோக்கின பார்வையாய்த் தெருவில் போகும் போது,

அவர்களில் ஒருவனுக்குக் காலில் மிதியடியிருக்கிறதா இல்லையா வென்கிற சந்தேகமுண்டாகி மற்றொரு வனை நோக்கி தம்பி, சுப்பு! என் காலில் மிதியடியிருக்கிறதா பார் என்றானாம் அந்த பிராமணனும் குனியமுடியாமல் அண்ணாந்து கொண்டு போனதால் அண்ணா! ஆகாச மண்டலம் வரையிலும் பார்த்தேன்; மிதியடியைக் காணோம் என்றானாம்,

- மாயூரம் ச.வேதநாயகம் எழுதிய சுகுண சுந்தரி (சமூக நாவல்)
தகவல்: ஆ.கணேசன், சென்னை -21

Read more: http://viduthalai.in/page-7/99462.html#ixzz3WzEFbWDn

தமிழ் ஓவியா said...

மோட்சம் வேண்டுமா?

இளம் பெண்களை விதவைகளாக வைத்திருப்பதைத் தடுக்க பிரம்மா, விஷ்ணு, மகேஸ்வரன் ஆகிய மூன்று கடவுளர்களாலுமே முடியாது. தங்கள் தங்கள் மனைவியர் இருக்க, பிறர் மனைவியர் - பெண்களுக்குப் பின்னால் அலைந்து திரியும் அந்தத் தெய்வங்கள் எந்த முகத்தைக் கொண்டு தடுக்க முடியும்?

இளம்பெண்களை விதவைகளாக வைத்திருப்பதின் தவிர்க்க முடியாத விளைவு கர்ப்பச்சிதைவு - ஏனெனில் மறுமணம் செய்து கொண்டு குழந்தைகளைப் பெற்று வளர்க்கத்தான் இவர்கள் அனுமதிக்கப்படுவதில்லையே! இந்தப் பயத்தினால், பிராமணர்களும், சத்திரியர்களும் சேர்ந்து தங்கள் உயர்வுத் தன்மையைக் காப்பாற்றிக் கொள்வதற்காகப் புதுவழியை கண்டுபிடித்தார்கள்.

அதுதான் கணவனை இழந்த பெண்களை உயிரோடு கொளுத்துவதை அவர்கள் மகாபாவம் என்று கருதவில்லை. பெரிய புண்ணியம் என்று கருதினார்கள். வருடந்தோறும் ஆயிரக்கணக்கான யுவதிகளை நெருப்பிலே போட்டுப் பொசுக்குவதைக் கண்டு மனமிளகாத தெய்வங்கள்,

அவற்றின் உருவங்களைப் போலவே உண்மையிலேயே கற்கள்தானா? அல்லது இல்லவே இல்லையா? பெண்கள் தங்கள் மனப்பூர்வமாகவே சதியாகிவிடுகிறார்கள் என்று இந்தப் பார்ப்பனர்கள் சொல்கிறார்கள் அயோக்கியர்கள்! சூழ்ச்சிக்கார நாரதர்கள்! ஏன் இவ்வளவு பொய்யைச் சொல்ல வேண்டும்? அரசர்களின் அந்தப்புரங்களிலே.

ஒரே ஒரு முறை தவிர அவன் முகத்தையும் பார்த்து அறியாத ஆயிரக்கணக்கான பெண்கள் தங்கள் ஆயுள் முழுவதும் கைதிபோல் வைத்திருக்கும் அந்த நரப்பிசாசுகளிடம் அன்பு செலுத்துகிறார்களா? அவனிடத்திலே காதல் கொண்டு அவன் பிரிவைத் தாங்க முடியாமல் நெருப்பிலே குதிக்கிறார்களா? சூழ்ச்சிக்காரப் புரோகிதர்களே! நீங்கள் நாசமாக போவீர்கள்! இது தற்கொலைத் தர்மமா?

பிரயாகையிலே ஆலமரத்திலிருந்து யமுனையில் குதித்து இறந்தால் சுவர்க்கத்திற்குப் போகலாம் என்று உபதேசம் செய்திருக்கிறீர்களே. அதைக் கேட்டு வருடந்தோறும் ஆயிரக்கணக்கான பயித்தியங்கள் ஆற்றிலே விழுந்து சாகின்றனவே:

கேதாரநாத்தின் உச்சியிலிருந்து பனிப்படலத் திலே வீழ்ந்து மடிவதும் மோட்சத்திற்கு வழியென்று உபதேசித்து, வருடந்தோறும் நூற்றுக்கணக் கானவர்களைக் கொல்லுகிறீர்களே இதெல்லாம் தர்மமா? - வால்காவிலிருந்து கங்கை வரை நூலில் பக்கம் 342 - 343.

Read more: http://viduthalai.in/page-7/99466.html#ixzz3WzEM1Vg7

தமிழ் ஓவியா said...

மாட்டிறைச்சிக்குத் தடையா!
பெங்களூரில் போராட்டம் பிரியாணி விருந்தும் நடைபெற்றது

பெங்களூரு, ஏப்.11_ டவுன் ஹால் வளகத்தில் நேற்று (9.4.2015) மகா ராட்டிர மாநிலத்தில் மாட்டிறைச்சிக்குத் தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன. போராட்டத்தின் ஓர் அங்கமாக மாட்டிறைச்சி பிரியாணியை அதே இடத் தில் சமைத்து அனை வரும் சாப்பிட்டார்கள். அந்தப் போராட்டத் தில் புகழ்பெற்ற எழுத் தாளரும், நாடக ஆசிரிய ருமான கிரிஷ் கர்னாட் கலந்துகொண்டார்.

அதைத்தொடர்ந்து கிரிஷ் கர்னாட் உறவினர் முறையில் உள்ளவரான எம்.வாசுதேவராவ் காஸ் யபா என்பவர் கிரிஷ் கர்னாட்டுக்கு எதிராக அளித்துள்ள புகாரில் அவர் மதத்துக்கு எதிராக தூண்டியுள்ளதாக புகார் கொடுத்துள்ளார். இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

மாட்டிறைச்சித் தடையை எதிர்த்து நடை பெற்ற போராட்டத்தை சிபிஎம் இளைஞர் அமைப்பு (டிஒய்எப்அய்) ஏற்பாடு செய்திருந்தது. இந்துத்துவவாதிகள் இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். போராட் டத்தில் அனைவருக்கும் வழங்குவதற்காக முதல் கட்டமாக சமைக்கப்பட்டி ருந்த மாட்டிறைச்சி பிரியாணியை காவல் துறை பறிமுதல் செய்தது. ஆனாலும் போராட்டக் காரர்கள் அதோடு அடங்கி விடாமல் விடுதி களிலிருந்து மாட்டிறைச்சி பிரியாணிப் பொட்டலங் களை வரவழைத்து அனை வருக்கும் வழங்கினார்கள். தொடர்ந்து போராட் டத்தையும் நடத்தினார்கள்.
உயர்நீதிமன்றத்தில் இந்துத்துவவாதிகள் இந்தப் போராட்டத்துக் குத் தடையை கோரியி ருந்த போதிலும், தடை உத்தரவு பெறுவதற்கு முன்பாகவே போராட்டக் காரர்கள் விருந்து உண்டு களித்துவிட்டார்கள்.

காவல்துறை ஆணை யர் எம்.என்.ரெட்டி கூறும் போது, வன்முறை ஏற் படாதவகையில் பாதுகாத் திட அந்த இடத்தில் சமைக்கப்பட்ட மாட்டி றைச்சி பிரியாணியைப் பறிமுதல் செய்தோம். போராட்டக்கரர்களிடையே கலவரத்தை ஏற்படுத்த முயன்ற பாஜகவினர் சிலரைக் கைது செய்தோம். ராம் சேனா தலைவர் பிரமோத் முத்தலிக் என்பவர் தாக்குதல் நடத் தப்போவதாக எச்சரித்து இருந்தார். ஆனால், போராட்டம் நடைபெற்ற இடத்தில் அவர் காணப் படவேயில்லை..

தமிழ் ஓவியா said...

நாத்திகன்


நாத்திகன் என்று சொன்னால், பகுத்தறிவைக் கொண்டு கடவுள், வேத சாத்திரங்களைப்பற்றி விவாதம் செய்கிறவன் என்று பொருள்.
(விடுதலை, 26.3.1951)

தமிழ் ஓவியா said...

அடுத்தக் கட்ட மோதல் தாஜ்மகாலை சிவன் கோவிலாக அறிவிக்கக்கோரி வழக்காம்

ஆக்ரா, ஏப். 11- தாஜ்மகாலை சிவன் கோவிலாக அறிவிக்கக் கோரிய வழக்கில், பதில் அளிக்கும்படி மத்திய அரசுக்கு ஆக்ரா நீதிமன்றம் நோட்டீஸ் அனுப் பியுள்ளது.

உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகாலை சிவன் கோவிலாக (தேஜோ மகாலயா) அறிவிக்க வேண்டும் எனக்கூறி வழக்குரைஞர் ஹரிசங்கர் ஜெயின் தலைமையில் வழக்குரைஞர் ஆக்ரா மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

அந்த மனுவில், 1212ஆ-ம் ஆண்டு ராஜா பரமர்திதேவ் தேஜோ மகாலயாவை கட்டினார். பின்னர் ஜெய்ப்பூர் மன்னர் ராஜா மான்சிங் இதை கைப்பற்றினார். அவருக்குப்பின் அதை ராஜா ஜெய்சிங் நிர்வகித்தார். 1632-ஆம் ஆண்டு ஷாஜகான் இதை கைப்பற்றினார். அதன் பிறகு அங்கு மும்தாஜின் நினைவு சின்னம் ஆக்கப்பட்டு, முகலாய பாணிக்கு கட்டிடங் களில் மாற்றம் செய்யப்பட்டது என்று கூறியுள்ளனர்.

இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிபதி, இது குறித்து அடுத்த மாதம் (மே) 5-ஆம் தேதிக்குள் பதிலளிக்குமாறு மத்திய அரசு, கலாசார அமைச்சகம், உள்துறை செயலாளர் மற்றும் இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறைக்கு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டார். மேலும், இந்த வழக்கின் அடுத்த விசாரணையை மே 13-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

முன்னதாக, தாஜ்மகாலுக்கு உரிமை கோரி வழக்கு தொடர அனுமதிக்கும்படி வழக்குரைஞர்கள் தாக்கல் செய்த மனுவை இதே நீதிமன்றத்தின் நீதிபதி தள் ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.

Read more: http://viduthalai.in/page-2/99526.html#ixzz3X18OfyoZ

தமிழ் ஓவியா said...

பெண்கள் ஜாம் விற்றால் அதிக லாபம் பார்க்கலாமாம் பிரதமர் மோடியின் பேச்சுக்குக் கண்டனம்!

புதுடில்லி ஏப்ரல் 11 விவசாயிகள் பயிர்செய்யவேண்டும் விவசாயி வீட்டுப் பெண்கள் வியாபாரத்திற்கு சென்றால் அதிக லாபம் பார்க்கலாம் என்று பேசிய மோடிக்கு நாடுமுழுவதும் கடுமையான எதிர்ப்பு கிளம்பிவருகிறது. புதன் கிழமையன்று முத்திரா வங்கி திட்ட துவக்க விழாவில் மோடி கூறியதாவது:

இன்னும் எத்தனை நாளைக்கு விவசாயி விவசாயம் செய்து கொண்டே இருப்பார், அவருக்கு சில மாற்றங்கள் தேவை, ஒரு விவசாயி மாம்பழம் விவசாயம் செய்தால் அதை விற்பனை செய்யவேண்டும். மாம்பழமாக விற்பனை செய்வதை விட மாம்பழங்களை ஜாம் செய்து விற்பனை செய்தால் அதிக லாபம் கிடைக்கும்,


விவசாயி தனது விவசாய வேலை களை விட்டுவிட்டு ஜாம் செய்ய வரக் கூடாது. ஜாம் செய்து அழகிய பாட்டில்களில் அடைத்து தனது வீட்டுப் பெண்களை வியாபாரத்திற்காக அனுப்பினால் மாம்பழ ஜாம்கள் அதிகம் விற்பனையாகும்.சாலையில் பெண்கள் ஜாம் பாட்டில்களை கையில் வைத்துக்கொண்டு நின்றால் அதிகம் விற்பனையாகும், இதனால் விவசாயி பொருளாதார வசதியைப் பெறு வார்கள். ஆகையால் விவசாயிகளின் வீட்டுப்பெண்கள் அனைவரும் விற்பனைப் பிரதிநிதிகள் ஆகவேண்டும் என்று கூறியிருந்தார். மோடியின் இந்த மட்டரகமான பேச்சிற்கு மக்களிடையே குறிப்பாக பெண்களிடையே கடுமையான எதிர்ப்பு துவங்கியுள்ளது. இது குறித்து டில்லியைச் சேர்ந்த பெண்ணுரிமை அமைப்பைச்சேர்ந்த அனுபம் என்பவர் தன்னுடைய சமூக வலைதளத்தில் கூறும்போது இந்தியா போன்ற நாட்டில் இன்றளவும் பெண்களின் மீதுசமூகத்தின் பார்வை ஒரு வியாபாரப் பொருளாகத்தான் இருக்கிறது,

சமமான வாய்ப்பு கிடைக்கவில்லை. அனைத்து அரசுகளும் பெண்களின் உரிமைக்காக பேசிக்கொண்டு இருக்கும் போது நாட்டின் பிரதமரே பெண்களைப் பற்றி பேசி இருப்பது பெண்களை பற்றிய அவரது தரம் தாழ்ந்த பார்வை யையே காண்பிக்கிறது.

நதி,மலை, இதர ஜடப்பொருட்களை மாதா என்று கூறும் பிரதமர் மோடி உயிருள்ள பெண்களைப் பற்றி இப்படி ஒரு வியாபார நிறுவன தலைவர் போல் பேசியிருப்பது கண்டிக்கத்தக்கதாகும். அவர் பார்வையில் பெண் என்பவள் பொருட்களை விற்கவும், பிள்ளை பெறவும், ஆண்களுக்கு அடிமையாக இருக்கத்தான் பெண்கள் என்று தோன்றுகிறதோ என்னவோ என்று கூறினார்.

முத்திரா வங்கி குறித்துப் பேசிய மோடி ஆண்கள் அனைவரும் பொருட்களைத் தயாரிப்பவர்களாகவும் பெண்களை விற்பனைப் பிரதிநிதி களாவும் வைக்கவேண்டும் அப்பொ ழுதுதான் நன்கு விற்பனையாகும் என்றும் கூறியிருந்தார்.

Read more: http://viduthalai.in/page-2/99530.html#ixzz3X18X4Eqj

தமிழ் ஓவியா said...

தாலி பற்றி அண்ணல் அம்பேத்கர் சொன்னது என்ன?


பாபா சாகேப் அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளில் (14.4.2015 காலை ) தாலி அகற்றிக் கொள்ளும் நிகழ்ச்சி வைத்திருக்கிறீர்கள்; தாலிபற்றி அம்பேத்கர் கருத்து என்ன? தகவல் என்ன? என்று சில ஆர்வம் உள்ள தோழர்கள் கேட்டுள்ள காரணத்தால் கீழ்க்கண்ட தகவலும், கருத்தும் தரப்பட்டுள்ளன.

Mr. C.A. Innes I.C.S., Editor of the Gazeteer of Malabar and Anjengo issed under the authority of the Government of Madras says:

‘Another institution found amongst all the classes following the marumakkattayam system, as well as amongst many of those who observe makkattayam, is known as ‘Tali-tying wedding’ which has been described as ‘the most peculiar, distinctive and unique’ among Malayali marriage customs. Its essence is the tyding of a tali (a small piece of gold or other metal, like a locket, on a string) on a girl’s neck before she attains the age of puberty. This is done by a man of the same or higher caste (the usages of different classes differ), and it is only after it has been done that the girl is at liberty to contract a sambandham. It seems to be generally considered that the ceremony was intended to confer on the tali tier or manavalan (bridegroom) a right to cohabit with the girl; and by some the origin of the ceremony is found in the claim of the Bhu-devas or *Earth-Gods,* (that is the Brahmins), and on a lower plane of Kshatriyas or ruling classes, to the first-fruits of lower caste womanhood, a right akin to the medieval droit de seigneurie.’ - Vol. I, p. 101.

இதன் தமிழாக்கம் வருமாறு:-

சென்னை அரசாங்கத்தின் ஆணைப்படி வெளியிடப்பட்ட மலபார் அஞ்சேங்கோ (Malabar and Anjengo) கெஜட்டின் பதிப்பாசிரியர் சி.ஏ. இன்னஸ், அய்.சி.எஸ். பின்வருமாறு சொல்கிறார்.

மருமக்கள் தாயம் என்ற முறையையும், மக்கள் தாயம் என்ற முறையையும் கடைபிடித்து வந்த எல்லாப் பிரிவு மக்களிடையிலும் வெறொரு திருமணச் சடங்கு முறை காணப்பட்டது. அந்தத் திருமண முறை தாலி கட்டுத் திருமணம் என்று சொல்லப்பட்டது. மலையாளிகளின் திருமணப் பழக்கங்களில், இந்தத் தாலி கட்டுத் திருமணம் என்பது தனித்தன்மை வாய்ந்தது;

புதுமையானது; வேறுபட்ட தன்மையுடையது என்றெல்லாம் சொல்லப்படுகிறது. ஒரு பெண் பூப்படைவதற்கு முன் அவள் கழுத்தில் ஒரு தாலியைக் கட்டுவதுதான் இந்தப் பழக்கத்தின் அடிப்படையாகும். அந்தப் பெண்ணின் ஜாதி அல்லது அவளைவிட உயர்ஜாதியைச் சேர்ந்த ஒரு மனிதனால் இந்தத் தாலி கட்டப்படுகிறது. அதற்குப் பிறகுதான் அந்தப் பெண் சம்பந்தம் என்னும் மண ஒப்பந்தம் செய்வதற்குரிய உரிமையைப் பெறுகிறாள். தாலி கட்டுகிறவன் அல்லது மணவாளனுக்கு அந்தப் பெண்ணுடன் இணையும் உரிமையை வழங்குவதற்காகத்தான் தாலி கட்டும் திருமணம் என்னும் சடங்கு நடத்தப்படுகிறது என்று பொதுவாகக் கருதப்படுகிறது. சத்திரியர்கள், அதற்கும் மேலாகப் பூதேவர்கள் என்று சொல்லப்பட்ட பிராமணர்கள் ஆகியோர் கீழ் ஜாதிப் பெண்களை முதலில் அனுபவிப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டதுதான் இந்தச் சடங்கு முறையின் தோற்றுவாயாக இருக்கக் கூடும் என்று சிலர் கருதுகிறார்கள். (தொகுதி பக்.101) (டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் எழுதிய காங்கிரசும், காந்தியும் தீண்டத்தகாதவர்களுக்குச் செய்ததென்ன? என்ற நூலின் பக்.205-206).

Read more: http://viduthalai.in/page-3/99542.html#ixzz3X18xVubk

தமிழ் ஓவியா said...

அதிமுக நடத்திய பூஜையில் மாவட்ட ஆட்சித் தலைவரா? திமுக தலைவர் கலைஞர் கருத்து


கேள்வி :- அ.தி.மு.க. நடத்திய "பூஜை" யில் புதுக் கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் கலந்து கொண்ட புகைப்படம் ஏடுகளில் வெளி வந்திருக் கிறதே?

கலைஞர் :- ஏற்கெனவே ஒரு சில மாவட்டங்களிலே உள்ள ஆட்சித்தலைவர்கள் அ.தி.மு.க. வினர் கட்சி சார்பில் நடத்தும் இதுபோன்ற அரசியல் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருக்கிறார்கள் என்பதைப்பற்றி ஏடுகளிலேயே செய்திகள் வந்திருந்தன. அதிலே ஒன்றுதான் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவரைப்பற்றியதும்! தற்போது நடைபெறும் ஆட்சியில், முதலமைச்சர் முதல், மற்ற அமைச்சர் களானாலும், மாவட்ட ஆட்சித்தலைவர்களானாலும் எப்போது தங்கள் பதவி பறிக்கப்படும், மாற்றப் படுவோம் என்ற நெருக்கடியிலேயே இருக்கிறார்கள் போலும்! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக் கோட்டை மாவட்டச்செயலாளர் இதைப் பற்றிக் கூறும்போது, "அனைத்துத்தரப்பு மக்களின் நலனுக் காகவும் பணியாற்றக்கூடிய மாவட்ட ஆட்சியர் ஒரு அரசியல் கட்சி நடத்துகின்ற யாக பூஜையில் கலந்து கொண்டது கடும் கண்டனத்திற்குரியது ஜன நாயகத்திற்கு விரோதமானது இது குறித்துத் தமிழக அரசு துறை ரீதியாக விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார். எனக்கு என்னவோ, அந்த மாவட்ட ஆட்சித் தலைவருக்குத்தான் இந்த ஆண்டின் சிறந்த மாவட்ட ஆட்சித் தலைவர் என்ற விருது, அடுத்த ஆண்டாவது மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மாநாடு நடை பெற்றால், அதிலே வழங்குவார்கள் என்று நம்புகிறேன்.
முரசொலி 11.4.2015

Read more: http://viduthalai.in/page-3/99541.html#ixzz3X19dMIqV

தமிழ் ஓவியா said...

தோழர் ஓ.சி. சீனிவாசன் மறைவு

கொச்சி ஈழச் சமுதாய வீரரும் பிராமணரல்லாதார் இயக்கத்தின் உயரிய மேம்பாட்டிற்கு ஆரம்ப காலம் முதல் பெரிதும் உழைத்தவரும் சமதர்ம இலட்சியத்தில் தீவிர பற்றுடையவருமாகத் திகழ்ந்த சென்னை தோழர் O.C. சீனிவாசன் அவர்கள் 18-01-1934ல் பஸ் விபத்தால் அகோர மரணமடைந்தார் என்ற செய்தி கேட்டுப் பெரிதும் வருந்துகிறோம்.

தோழர் ளி.சி. சீனிவாசன் அவர்கள் பாழான வருணாசிரமதர்மத்தையும் அதைப் போன்றதான இன்றைய முதலாளி - தொழிலாளி - பணக்காரன் - ஏழை என்ற கொடுமைகளையும் அறவே அகற்றப்பெரிதும் துணிவோடு தொண்டாற்றிய வாலிப வீரராவார்.

வாலிப உலகம், ஆண்மை, தியாகம் ஆகிய இரு குணங்களையும் பின்பற்றுவதற்கு அவர் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கியவர். உதாரணமாகச் சென்ற மூன்று வருஷங்களுக்கு முன்பு கொச்சி சமஸ்தான S.N.D.P. யோகத்தில் தலைமை தாங்கி மதப்பிரச்சாரத்தையும் உயர்வு தாழ்வுக்கான பொல்லாத வருணாசிரமத்தையும் பற்றி வடநாட்டு, பெருத்த பழுத்த வைதிகப் பண்டிதர் மதன் மோகன்மாளவியா அவர்கள் நெஞ்சில் மான,

ஈனமில்லாது பேசியகாலையில் நமது அருங்குணங்களமைந்த வீரர் ஆண்மையோடு தீப்பொறி பறக்கத் தனது தொப்பியை (ழயவ) அவர் முகத்திற்கு நேரே வீசி அவரது பிரச்சாரம் சிறிதும் செலாவணியாக விடாமல் மாளவியாவை உடனே மலையாள நாட்டை விட்டு விரட்டிய பேராற்றல் மிக்கவரில் குறிப்பிடத்தக்க முக்கியஸ்தராவார்.

நாற்பது ஆண்டுகளே நிறைந்த வீர சீனிவாசனை வாலிப உலகம் இழந்து பெரிதும் துயருகிறது என்பதில் அய்யமில்லை. அண்மையில் சென்னையில் நடைபெற்ற அகில இந்திய ஆசார சீர்திருத்த மகாநாட்டில் தான் தமிழர்களின் உயரிய வாழ்க்கைக்கு வீரகர்ஜனை செய்து மைலாப்பூர் பார்ப்பனியத்துக்குக் குழி தோண்டி புதைத்து, தமிழர்களின் ஆண்மைக்கு ஆக்கம் தேடிக் கொடுத்த சீரியராவார்.

இப்பேர்க்கொத்த நமது தோழர் சீனிவாசன் அவர்கள் மறைவுக்கு வருந்துகிறோமெனினும் இயற்கையின் போக்கை உணர்ந்த நாம் அதன் மூலமே ஆறுதலுறுவதோடு அவரது அருமை மனைவியாரும், குடும்பத்தாரும் ஆறுதல் பெறுமாறும் வேண்டுகின்றோம்.

- புரட்சி - துணைத்தலையங்கம் - 21.01.1934

Read more: http://viduthalai.in/page-7/99533.html#ixzz3X1AYr5pz

தமிழ் ஓவியா said...

தந்தைபெரியார் பொன்மொழிகள்மனிதன் யார் என்றால் நன்றி விசுவாச முடையவன் எவனோ அவன் மாத்திரமே மனிதனாவான். மற்றவர்கள் நரி, பூனை, பாம்பு, தேள், கொசு, மூட்டைப் பூச்சி முதலிய அதாவது மற்றவர்களை ஏய்த்தும், துன்புறுத்தியும், இரத்தம் உறிஞ்சியும், வாழும் ஜீவப் பிராணிகளேயாகும்.

மனிதன் - பிறந்தவன் சாவதென்பது இயற்கை. பிறக்கிறவன் எவனும் நிலைத்து வாழ்வது இல்லை. கடைசியில் செத்தே தீருவான். உலகத்தில் தோன்றும் எந்தப் பொருளும் மறைந்தே போகும். உலகத்தின் அடிப்படையே தோற்றமும் மறைவுமாகும். சாவது இயற்கை.

இருப்பதுதான் அதிசயம்! சாவதால் ஏன் துயரப்படுகிறோம்? சாகிறவன் இருந்தால் ஏற்படுகிற இன்ப துன்பங்களைக் கணக்குப் போட்டுத்தான் விசனப்படுகிறோம். அதாவது வியாபார முறையில் கணக்குப் போடுகிறோம்.

Read more: http://viduthalai.in/page-7/99533.html#ixzz3X1AfcB1m

தமிழ் ஓவியா said...

மன்னார்குடி மகாநாடு

நமது மாகாண சமதர்ம மகாநாடானது 4-ஆந் தேதி ஞாயிறன்று மன்னார்குடியில் சிறப்பாக நடந்தது. மகாநாட்டுக்கு சமதர்மத் தோழர் எம். சிங்காரவேலு அவர்கள் தலைமை வகிப்பதாக இருந்தும் திரேக அசவுக்கியத்தினால் அவர் வர முடியாமல் போனதினால் 3ஆம் தேதியன்று மகாநாடு நடைபெறவில்லை.

ஆனால் அன்று மகாநாட்டுக் கொட்டகையில் தோழர் ஈ.வெ. கிருஷ்ணசாமி அவர்கள் தலைமையில், வந்திருந்த இரண்டாயிரத்துக்கதிகமான பிரதிநிதிகளைக் கொண்டு ஒரு பொதுக் கூட்டம் நடந்தேறியது.

4ஆம் தேதியன்று மகாநாட்டுக் கொட்டகையில் மகாநாடு ஆரம்பமாயிற்று. வரவேற்புத் தலைவர் தோழர் எம். தருமலிங்கம் அவர்களின் வரவேற்புத் தலைவர் பிரசங்கம் நடந்ததும், தோழர் எ. ராமநாதன் எம்.ஏ.பி.எல் அவர்கள் மகாநாட்டுக்குத் தலைமை வகித்தார்.

முன், தலைமை வகிக்கவிருந்த தோழர் எம். சிங்காரவேலு பி.ஏ.பி.எல். அவர்களால் தயாரிக்கப்பட்டிருந்த அச்சடித் திருந்த அக்கிராசனப் பிரசங்கத்தைத் தோழர் எ. இராம நாதன் அவர்கள் வாசித்தார். அக்கிராசனார் முன்னுரைக்குப் பின் மகாநாட்டுத் தீர்மானங்களைத் தயாரிப்பதற்கு விஷயாலோசனைக் கமிட்டி நியமிக்கப்பட்டது.

பகல் 11 மணியிலிருந்து பிற்பகல் மூன்று மணி வரை விஷயா லோசனைக் கமிட்டிக் கூட்டம் தோழர் எ. ராமநாதன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. விஷயாலோ சனைக் கமிட்டிக் கூட்டத்தில் முதலில் ஆலோசனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது, நமது ஈரோடு சமதர்ம வேலைத் திட்டத் தீர்மானமாகும்.

தோழர் எ. ராமநாதன் அவர்கள் வழக்கம் போல் வேலைத் திட்டத்தை எதிர்த்தார். இரண்டொரு தோழர்கள் அவர் கூறியதற்கு ஆதரவு காட்டினார்கள். நீண்ட விவாதத்திற்கு பின்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மற்ற தீர்மானங்கள் தயாரிக்கப்பட்ட பின்பு விஷயாலோசனைக் கமிட்டிக் கூட்டம் முடிந்தது.

மாலையில் மகாநாட்டுக்குத் தோழர் ஈ.வெ. கிருஷ்ண சாமி அவர்கள் தலைமையில் மகாநாடு ஆரம்பமாயிற்று. சகல தீர்மானங்களும் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

மாகாண மகாநாட்டுக்குப் போதுமான விளம்பரம் இல்லாவிட்டாலும் பல ஜில்லாக்களி லிருந்தும் 200, 300க்கு மேற்பட்ட பிரதிநிதிகளும் ஜில்லாவின் பல பாகங்களி லிருந்தும் 500, 600க்கு மேற்பட்ட பிரதிநிதிகளும் விஜயஞ் செய்தது குறிப்பிடத்தக்கதாகும்.

சமதர்ம வேலைத் திட்டமானது தயாரிக்கப்பட்ட ஓராண்டு முடிவுக்குள் மாகாணச் சமதர்ம மகாநாட்டைக் கூட்டி வேலைத்திட்டத் தீர்மானங்களை நிறைவேற்ற முன்வந்த மன்னார்குடி வரவேற்பு கமிட்டியைப் பாராட்டு கிறோம்.

சமதர்மத் திட்டமோ, லட்சியமோ பயனற்றது என்றும் அத்தீர்மானங்கள் ஒழுங்குப்படி அமைக்கப்படவில்லை யென்றும் வீண்புகார் கூறுகிறவர்களுக்குத் தலைவர் எம். சிங்காரவேலு அவர்களின் ஆராய்ச்சி மிகுந்த தலைமை பிரசங்கமானது தக்க பதிலளிக்கப் போதுமானதாகும்.

அறியாமையாலோ, பொறாமையாலோ, பயத்தினாலோ இவைகள் ஒன்றுமில்லை என்றால் சுயநலத்தாலோ நமது திட்டத்தைப் பற்றி வீண் புகார் சொல்லும் நண்பர்கள் இருந்தால் அவர்களுக்கும் தலைவரின் பிரசங்கமானது தக்க பதிலை எடுத்துக் கூறுவது போல் தயாரிக்கப்பட்டிருக்கிறது.

சமதர்ம திட்டம் ஒன்றினாலல்லது வேறு எத்திட்டத்தாலும் ஒரு காது ஒடிந்த ஊசி அளவு கூட இந்நாட்டு ஏழை மக்களுக்குப் பலன் இல்லை என்பதற்குத் தலைவரின் நீண்ட பிரசங்கமே போதுமானதாகும்.

வரவேற்புக் கழகத் தலைவர் தோழர் தர்மலிங்கம் அவர்களைப் பற்றி தஞ்சை ஜில்லாவாசிகள் நன்கறிவார்கள். அந்த ஜில்லா அரசியல் பார்ப்பனர்களால் பலவித கஷ்ட நஷ்டங்களுக்கு ஆளாகியும் தமது கொள்கையில் விடாப் பிடியாக உறுதியுடன் நிற்குமவரின் பிரசங்கம் வேறொரு இடத்தில் பிரசுரித்திருக்கிறோம்.

மன்னார்குடியில் வரவேற்புக் கமிட்டியார் எதிர்பார்த்த தைவிட ஏராளமான பிரதிநிதிகள் விஜயம் செய்தும் சகலருக்கும் தக்கவிதம் சவுகரியங்கள் அமைத்துக் கொடுத்த வரவேற்புக் கழகத் தலைவர் எம். தர்மலிங்கமவர்களைப் பாராட்டுவதைப் போல் காரியதரிசிகளையும் பாராட்டுகிறோம்.

மகாநாட்டுத் தீவிர முயற்சி எடுத்துக் கொண்டவர்களின் தலைவர்களாக உள்ளவர்களில் தோழர் இராமையாவையும் சொங்கண்ணாவையும் பாராட்டுகிறோம்.

நமது தலைவர் சிறை புகுந்த ஒரு மாதத்துக்குள் இரண்டு தாலுகா மகாநாடு களும் ஒரு மாகாண மகாநாடும் நடந்ததொன்றே! நமதியக்கமானது தலைவருடன் மறையும் என்ற பொய் பிரச்சாரர்களுக்குத் தக்கபதிலாக இருக்குமென்று நம்புகிறோம். தமிழ் நாடெங்குமுள்ள நமது தோழர்களும் சங்கங்களும் மாகாண மகாநாட்டின் தீர்மானங்களைக் கவனித்து அனுஷ்டானத்தில் கொண்டு வர முயல ஆசைப்படுகிறோம்.

- புரட்சி - தலையங்கம் - 11.03.1934

Read more: http://viduthalai.in/page-7/99534.html#ixzz3X1AnbEHF

தமிழ் ஓவியா said...

விதவையிலும் பணக்காரனியமா?

நமது சட்டசபையில் கனம் கல்வி மந்திரியவர்கள் அய்ஸ்அவுஸ் என்பதிலுள்ள விதவைகள் விடுதிக்கு வருடம் செலவுக்கும், உபகாரச் சம்பளத்துக்கும் ரூபாய் 27-ஆயிரம் செலவாவதாகக் கூறியிருக்கிறார்.

அத்துடன் அவ்விதவை விடுதியில் பிராமணப் பெண்கள் 62-பேர் என்றும், பிராமணரல்லாதார் விதவைகள் பன்னிரண்டே பேர் களென்றும் கூறியுள்ளார்.

விதவைகள் மணத்தை எதிர்க்கும் வைதிகம், வைதிகப் பிராமணியம் இவர்களிடம் நாம் எதுவும் சொல்லவில்லை. சீர்திருத்த விதவை மணத்தை, விதவைகள் முற்போக்கை விரும்புகிறவர்களுக்கே கூறுகிறோம். விதவைகளில்கூடவா பணக்காரனியமும், பார்ப்பனியமும் இருக்கவேண்டும்.

இதற்குக் காரணர் விதவைகள் விடுதியில் தலைமை உத்தியோகம் ஒரு பிராமண விதவை அம்மாளிடமும், விதவை விடுதியில் உள்ள உபாத்தியாயினிகளில் பெரும் பாலும் பிராமண அம்மாள்களாலேயே நிரப்பப்பட்டி ருக்கிறதென்றும் ஜஸ்டிஸ் பத்திரிகையில் பலமுறை செய்தி வந்திருக்கிறது.

கனம் கல்வி மந்திரியவர்கள் விதவை விடுதி தலைமையைத் திருத்தியமைத்து வருடந்தோறும் வரும் பிராமணரல்லாத விதவைகள் மனுக்கள் குப்பைத் தொட்டிக்குப்போகாதிருக்கச் செய்ய இனியாவது தவறக் கூடாதென்று கூறிகிறோம்.

- புரட்சி - செய்தித்துணுக்கு - 04.02.1934

Read more: http://viduthalai.in/page-7/99535.html#ixzz3X1AzNb4l

தமிழ் ஓவியா said...

கேள்வி முறை ஏது?சென்ற சட்டசபையில் கூட்டத்தில் இனாம்தார்கள் குடிகள் சம்பந்தமாக ஒரு மசோதா செய்யப்பட்டதை எல்லாவிடங்களிலும் கண்டித்துத் தீர்மானங்கள் அனுப்பப் படுகிறது. பத்திரிகையின் செல்வாக்கு இனாம்தார்களின் குடிகள் நன்மையை விட, இனாம்தார்கள் நன்மை கோரியே பெரிதும் உபயோகப்படுத்தப்படுகிறது.

சர்க்கார் இம்மசோ தாவுக்கு ஆதரவு காட்டியபோதிலும் அதைப் பயன்படா தடிக்கச் செய்யப்படும் முயற்சி மிக அதிகமாகும். இதற்குக் காரணம் இனாம்தார்கள்தான். பெரும்பாலும் பத்திரிக்கை யைப் படிக்கும், ஆதரிக்கும் கூட்டமாக இருக்கிறார்கள்.

இனாம்தார்கள் குடிகளில் பெரும்பான்மையானவர் களுக்குத் தங்களுக்கெல்லாம் நன்மையைக் கொடுக்கக் கூடிய திட்டம் ஒன்று வந்திருக்கிறதென்பதே தெரியாத விஷய மாகும். இனாம்தார்களின் குடிகள் அவர்களின் நலம் கருதி செய்யப்பட்ட மசோதாவின் செய்தியை அறியும்படிச் செய்ய சர்க்கார் விளம்பர அதிகாரிகளாவது முயல வேண்டும்.

- புரட்சி - செய்தித்துணுக்கு - 04.02.1934

Read more: http://viduthalai.in/page-7/99535.html#ixzz3X1B5dayf

தமிழ் ஓவியா said...

நம்மில் ஓர் அளவுக்குப் பக்குவம், மனிதத் தன்மை அடைந்தவுடன் கவுன்சிலர் ஆகவேண்டும்; சட்டசபை மெம்பர் ஆகவேண்டும்; மந்திரியாக வேண்டும்;

ஏதாவது செய்து உயர்வு பெற்றுச் செல்வ வாழ்வு வாழ வேண்டும் என்று கருதுகிறார்களே ஒழிய, முயற்சிக்கிறார்களே ஒழிய, ஆகிறார்களே ஒழிய, மானத்தைப் பற்றிக் கவலைப்படுவதே இல்லையே.

Read more: http://viduthalai.in/page-7/99534.html#ixzz3X1BGiHT2

தமிழ் ஓவியா said...

மதமா? மார்க்கமா?

அய்ந்தறிவு ஆடும் மாடும் - வாழ
அசைத்து உணவு உண்ணும்
ஆறறிவு ஆட்கள் அதை உண்டு
ஆருயிர் காப்பர் அறிவீரே!

ஊரெல்லாம் உருவச்சிலை - கருங்
கல்லெல்லாம் கடவுள் சிலை - அதை
காண்போர்க்கெல்லாம் கஞ்சியும் இல்லை
தினம் கால்கடுக்க காத்திருப்பர்
திருப்பதியில்!

மதம் மார்க்க மாமனிதர்கள் - தம்
மதம் சேர்க்க நித்தம் நாடுகின்றனர்
மதம் சேர்ந்து சிலை நிலை கண்டாலும்
அதை கண்டவர் விண்டிலர் தானே!

இங்குள்ளது ஆங்கில்லை
அங்குள்ளது இங்கில்லை
ஏனிந்த ஈனப்பிறவிகள்
இல்லாததை காண ஏன் இந்த
திக்குமுக்கு தக்கு தாளம்?

- வணங்காமுடி, தருமபுரி

Read more: http://viduthalai.in/page3/99493.html#ixzz3X1ChSjha

தமிழ் ஓவியா said...

சமூகவலைதளத்திலிருந்து....

சமூகவலைதளத்திலிருந்து....
வீட்டில் நகை பணங்களை பீரோ வில் வைத்து பூட்டி விடுவது திருடர் களுக்குப் பயந்து அல்ல, வீட்டுப் பிள்ளைகளிடமிருந்து அவைகளைப் பாதுகாப்பாக வைக்கத்தான் - மோடி

(என்னே கண்டுபிடிப்பு!)

......

தாவரங்களில் உயிர் உள்ளது என்று ஆங்கிலேய அறிவியல் ஆய்வாளர்கள் கண்டறியும் முன்பே மகாபாரதம் மற்றும் ராமாயணத்தில் கூறி விட்டார்கள் - மோடி

(விஞ்ஞான பூஷணம் என்று பட்டம் கொடுக்கலாமா?)

Read more: http://viduthalai.in/page3/99495.html#ixzz3X1CsfBBc

தமிழ் ஓவியா said...

ஓரம்போ! ஓரம் போ!!
அத்வானி, ஜோஷிக்கு அழைப்பிதழ் இல்லை

பாஜக கட்சி 35-ஆவது ஆண்டு விழாவில் பாஜக மூத்த தலைவர்களான அத்வானி மற்றும் முரளிமனோகர் ஜோஷி கலந்துகொள்ளவில்லை. இதற்கு முக்கிய காரணமாக அவர்களுக்கு அழைப்பிதழ் அனுப்பபடவில்லை என்று பாஜக டில்லி வட்டாரங்கள் தெரி விக்கின்றன. புதுடில்லியில் கடந்த அய்ந்தாம் தேதி பாஜக கட்சியின் 35-ஆவது ஆண்டுவிழா கொண்டாடப்பட்டது.

இந்த விழாவில் பாஜக தலைவரான அமித்ஷா உட்பட நாடுமுழுவதிலும் இருந்து முக்கிய பாஜக தலைவர்கள் கலந்துகொண்டனர். பிரதமர் மோடியும் கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியில் பாஜக நிறுவப்படும் போது அதன் நிறுவனத்தலைவராக இருந்த அத்வானி மற்றும் முரளி மனோகர் ஜோஷி கலந்து கொள்ள வில்லை.

அழைப்பிதழில் இவர்களின் படங்களும் பெயர்களும் இடம்பெற வில்லை. அதே நேரத்தில் இவர்களுக்கு அழைப்பிதழ் அனுப்பபடவில்லை. 2000 அழைப்பிதழ்கள் அச்சடித்து அனுப்ப சுமார் 13 லட்சம் செலவு செய்யப்பட்டது. அழைப்பிதழின் இறுதிவடிவத்திற்கு அமித்ஷா ஒப்புதல் அளித்தபிறகே அச்சடிக்கப்பட்டது.

ஆகையால் பாஜக இன்றை தலைவரான அமித்ஷாவின் நேரடி உத்தரவின் பேரில் தான் அத்வானி மற்றும் முரளிமனோகர் ஜோஷி பெயர்கள் இடம்பெறவிலை. இதுகுறித்த பாஜவின் மூத்த தலை வர்கள் சிலர் தனிப்பட்ட முறையில் கருத்து தெரிவிக்கும்போது அத்வானி முரளிமனோகர் ஜோஷி போன்றோர் தொடர்ந்து கட்சியில் இருந்து புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர்.

கடந்த 1980ம் ஆண்டு ஏப்ரல் 6ம் தேதி வாஜ்பாய், அத்வானி போன்ற மூத்த தலைவர்கள் இந்த கட்சியை உரு வாக்கினர் என்பதை மறந்து விடக் கூடாது என்று அத்வானி ஆதவாளர் கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

அதே நேரத்தில் கட்சியின் தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில் தேசிய செயற்குழுவில் அனைத்து தலைவர்களும் கலந்து கொண்டதால் அழைப்பிதழை யார் யாருக்கு அனுப்பவேண்டும் என்று தீர்மானிக்க போதிய அவகாசமில்லை. அதே நேரத்தில் அத்வானி மற்றும் முரளிமனோகர் ஜோஷிக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பிவிட்டோம் என்று கூறியிருந் தனர்.

தேசிய செயற்குழுவைத் தொடர்ந்து அடுத்த ஓரிரு நாட்களிலேயே கட்சியின் முக்கிய நிகழ்ச்சியான நிறுவன நாள் விழாவில் அத்வானி புறக்கணிக்கப் படுவது இது இரண்டாவது நிகழ்வாகும் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த விழாவில் வெங்கய்யா நாயுடு உள்பட ஏராளமான மத்திய அமைச்சர்கள், பாஜக உயர்மட்ட தலைவர்கள் ஆகி யோர் கலந்து கொண்டனர்.

(தி எக்னாமிக் டைம்ஸ் - 7.4.2015 பக்.4)

Read more: http://viduthalai.in/page7/99503.html#ixzz3X1EbY0do