Search This Blog

1.4.15

அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளில் தாலி அகற்றும் நிகழ்ச்சி ஏன்?

அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளில் தாலி அகற்றும் நிகழ்ச்சி ஏன்?
ஹிந்து மதத்தின் எட்டு வகைத் திருமணத்தில் தாலி உண்டா?
சங்க இலக்கியத்தில்தான் தாலிபற்றி சொல்லப்பட்டுள்ளதா?
கழுதைக்கும் கழுதைக்கும் தாலி கட்டியபோது எதிர்ப்பாளர்கள் எங்கே போனார்கள்?
கருத்து மோதலுக்கு என்றும் தயார்! தயார்!!

தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள கருத்துரிமை போற்றும் அறிக்கை

நீதிமன்றம் தீர்ப்பளித்தும் காவிரி மேலாண்மை ஆணையத்தை மத்திய அரசு அமைக்காதது ஏன்?
தாலி அகற்றும் நிகழ்ச்சியை எதிர்த்துக் குரல் கொடுப்பவர்கள், கழுதைக்கும் கழுதைக்கும் தாலி கட்டி கல்யாணங்களை புரோகிதப் பண்டிதர்கள் செய்தபோது எங்கே போனார்கள்? என்ற அறி வார்ந்த கேள்வியை எழுப்பியுள்ளார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
அவர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:


இம்மாதம் (ஏப்ரல்) 14 ஆம் தேதி பாபா சாகேப் அண்ணல் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் அவர்களது 125 ஆம் ஆண்டு பிறந்த நாள் பெருவிழா!
அந்நாளில் திராவிடர் கழகத்தின் சார்பில், தந்தை பெரியார், டாக்டர் அம்பேத்கர் ஆகிய இருபெரும் ஒப்பற்ற புரட்சியாளர்களின் சிந்தனைகளைச் செயலாக்கும் வகை யில் விழா நடத்துவதே பொருத்தமாக இருக்கும் என்பதால், இரண்டு முக்கிய நிகழ்வுகளை திராவிடர் கழகம் அறிவித்துள்ளது.


பெண்ணடிமைச் சின்னம் - ஜாதிச் சின்னமே தாலி!

1. தங்களது கொள்கைக்கும், விருப்பத்திற்கும் மாறாக, திருமணத்தின்போது அணிவிக்கப்பட்ட தாலி என்ற பெண்ணடிமைச் சின்னத்தை, ஜாதியைப் பாதுகாக்கும் சின்னத்தை, தங்களுக்கு உண்டான விழிப்புணர்வு, துணிவு, தெளிவு, அச்சமின்மை காரணமாக, அன்றைய நாளில் பெரியார் திடலுக்கு வந்து, அந்நிகழ்வில் தாலியை அகற்றிக் கொள்ளும் நிகழ்வைப் பகிரங்கமாக, மக்கள் முன்னிலையில் நடத்திக் காட்டுவது, இதில் விருப்பமுள்ள தாய்மார்கள், திருமணமானவர்கள் முன்கூட்டியே அனுமதி பெற்று வந்து கலந்துகொள்ளலாம் என்று அறிவித்ததிற் கிணங்க, ஏராளமான திருமணமான வாழ்விணையர்கள் தங்கள் பெயர்களைப் பதிவு செய்து வருகிறார்கள்.
எந்தவித நிர்ப்பந்தமோ, கட்டாயமோ அல்லது அவர்களுக்கான லாப நோக்கோ - இந்த நிகழ்வில் இல்லை.

புரட்சிகர விடிவெள்ளியே 14 ஆம் தேதி நிகழ்ச்சி!

2. தந்தை பெரியார் அவர்களும், அண்ணல் அம் பேத்கரும், உண்மையான திராவிடர் இயக்கங்களும், கொள்கையாளர்களும், முற்போக்குச் சிந்தனையாளர் களும் விரும்பும் புரட்சிகர பெண்ணடிமை ஒழிந்த ஒரு புதிய சமூகத்தின் விடிவெள்ளியாகவே இந்த நிகழ்வு.

இதுபோல தனித்தனியே திராவிடர் கழக மாநாடு களிலும், கழகப் பிரச்சாரக் கூட்ட மேடைகளிலும் ஆங் காங்கே தாலி அகற்றும் நிகழ்ச்சி நடந்து வந்திருக்கிறது! இது புதுமையும் அல்ல; முதல் தடவையும் அல்ல!


ஏனிந்த நிகழ்ச்சி?

3. இப்போது ஏன் நடத்தப்படுகிறது என்றால், சென்னையில் உள்ள ஒரு தொலைக்காட்சியில் தாலி அணிவது பொருத்தமா? என்பதுபற்றி விவாதம் நடை பெறும் என்று அறிவிப்பு தரப்பட்ட நிலையில், அதற்கு மிரட்டல், எதிர்ப்புக்காட்டினர் ஹிந்துத்துவாவைப் பரப்பும் பல மதவெறிகள் - காவி அணிந்த அமைப்பினர். பிறகு அடுத்தகட்டமாக அந்தத் தொலைக்காட்சி அலுவலகத் திற்குள் டிபன்பாக்ஸ் வெடிகுண்டை எறிந்து, வெடித்தனர்.
நாங்கள்தான் செய்தோம்; இனியும் இதைவிட அதிக மாகவே செய்வோம் என்று பட்டாங்கமாய் அறிக்கையை அந்த அனாமதேய, பாசிச சமூக விரோதிகள் வெளியிட்டு வருகிறார்கள்.

கழுதைக்கும் கழுதைக்கும் தாலி கட்டியபோது எங்கே சென்றார்கள்? தாலி கட்டாத பல ஜாதிகள் குறிப்பாக தென்மாவட்டங்களில் உள்ளனவே அங்கே போய் அவர்களிடம் புனிதம்பற்றிப் பேசுவார்களா? கழுதைக்கும், கழுதைக்கும், நாய்க்கும், நாய்க்கும் புரோகிதர்களைக் கூப்பிட்டு, (அதற்கும் தட்சணை வாங்குகிறார்களே!) காதலர் தினத்தில் நடத்தினார்களே, படங்களும் வெளிவந்தனவே! கழுதைக்குத் திருமணம் நடத்தி, தாலி கட்டிப் படம் எடுத்துத் தங்கள் உறவை வெளிச்சம் போட்டனரே - அப்போது எங்கே போனது இந்தப் புனிதம்? மார்வாரி வட்டிக் கடையில், டாஸ்மாக்கில் குடிப்பதற்கு மனைவியை அடித்து உதைத்துத் தாலியை அடமானம்  வைத்துக் குடிக்கிறார்களே, அதைத் தடுக்க புனிதம், புடலங்காய்கள் எல்லாம் எங்கே போனார்களாம்? ஒன்றைக் கொடுத்து ஒன்பது பெறத் தயாரா?

அரசு எடுத்த நடவடிக்கை என்ன?

அவர்கள்மீது குண்டர் சட்டம் பாய்ந்திருக்கவேண் டாமா? தமிழ்நாட்டின் அமைதியைக் குலைத்து, சமூக நல்லிணக்கத்தைப் பாழாக்கிட முயல்கின்றவர்களிடம் அரசு எப்படி நடந்துகொள்கிறது? பாம்புக்கும் நோகாமல் பாம் படிக்கும் கோலுக்கும் நோகாமல் என்றபடி நடந்துகொள் கிறது!

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் கருத்துரிமை, பேச்சுரிமை, எழுத்துரிமை இத்தகைய அச்சுறுத்தல்களால் பலியாக லாமா?

இந்தக் கருத்து பரவக்கூடாது என்று மிரட்டப்பட்டதன் எதிர்வினையாகத்தான் 14 ஆம் தேதி - சென்னை, பெரியார் திடலில் தாலி அகற்றிக் கொள்ளும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அது விருப்பமுள்ள பெண்களின் தனி உரிமை. மற்றவர்கள் கூச்சல் போட என்ன உரிமை உள்ளது?

ஹிந்து மதத்தின் எட்டு வகை திருமணத்தில் தாலி உண்டா?

தாலி என்பதற்கு இவர்கள் கூறும் ஹிந்து மதத்தின் எட்டு வகை கல்யாணங்களில் தாலி எங்காவது கட்டாயம் என்றோ, ஆதியில் இருந்த முறை என்றோ காட்ட முடியுமா?

சங்க இலக்கியத்தில்கூட அகநானூறு இலக்கியத்தில் இரண்டு பாடல்கள் அக்கால மணமுறைபற்றி உள்ளனவே, அந்த முறையில் இந்தத் தாலி கட்டும் பழக்கம் உண்டா?

பழைமைகள் அனைத்தையும் பின்பற்றுபவர்கள் யார்?

(அ) பழைமையில் இருந்தது என்றுகூட வாதத்திற்கு ஒப்புக்கொண்டால்கூட, முந்தைய பழைமை முறைகளை எல்லா ஹிந்துத்துவா வீட்டுப் பெண்களும், தூண்டிவிடும் பார்ப்பனர்களும் இன்று பின்பற்றுகிறார்களா?

பார்ப்பன விதவைகளை மொட்டைப் பாப்பாத்தி களாக்கி - வெள்ளைச் சேலையில் காட்சியளிக்க வைத்தனரே அது இன்று உண்டா?

புனிதத்தைத் தேடும் இந்த புரட்டர்கள் அங்கே போய் எதிர்ப்புக்காட்டி ஆர்ப்பாட்டம் நடத்தினரா?

பொட்டும், பூவும் வைத்துக்கொள்ளும் கணவனை இழந்த பெண்களின் முற்போக்கு மனிதநேய சிந்தனை களை, செயற்பாடுகளை எதிர்த்து கிளர்ச்சியா செய்தனர்?

நீதிமன்றத் தீர்ப்பிலும்கூட...

சுயமரியாதைத் திருமணம் செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தீர்ப்பு எழுதிய இரண்டு பார்ப்பன நீதிபதிகள், நாரதர், பராசரன், யாக்ஞவல்கியர் போன்ற வர்களின் பல சுலோகங்களைக் காட்டி, சப்தபதிபற்றித்தான் கூறினார்களே தவிர, தாலி கட்டாயம் ஹிந்து திரு மணத்திற்கு என்று கூறவில்லையே!

விதவை மறுமணம் வந்ததே அதை எதிர்த்தனரா?

சங்கராச்சாரியார் கூறும் பால்ய விவாகத்தை நடத்த முடியுமா?

இன்னமும் பெண்களுக்கு 9 வயதுக்குள் திருமணம் பால்ய விவாகம் செய்துவிட வேண்டும் என்று காஞ்சி சங்கராச்சாரியார்கள் கூறுகிறார்களே, அதை பகிரங்கமாகச் செய்தால், தண்டனை கிரிமினல் குற்றம் என்று உள்ளதே! அதை எதிர்த்து இந்த வீராதி வீரர்கள், சூராதி சூரிகள் குரல் கொடுப்பார்களா? சட்டத்தை எதிர்த்து புனிதம், மத ஆச்சாரம் கெட்டுவிட்டது என்று கூறுவார்களா?

புலியைக் கொன்று பல்லைக் கொண்டு வரத் தயாரா?

இன்னும் சில அரைவேக்காடுகளும், புதிதாக தமிழ் தேசிய வியாதிகளும் தமிழன் வீரத்தின் அடையாளம் என்று கூறி, ஆகா, தாலியை எதிர்ப்பதா? என்று உளறு கிறார்களே, அந்த வீரர்கள் திருமணத்திற்குத் தாலியை நகைக் கடைகளில் வாங்குகிறார்களா? அல்லது காட்டிற்குச் சென்று புலியோடு போராடி, சாகடித்துப் புலிப் பல்லைக் பிடுங்கிக்கொண்டு வந்து வீரத்தின் அடையாளம் இதோ என்று கட்டுகிறார்களா?

அந்த நிபந்தனை இன்று வைக்கப்பட்டால், திருமணமே வேண்டாம் என்றுதானே ஆண்கள் ஓடி ஒளிவார்கள்.

எனவே, ஒத்த கருத்தாளர்கள் அனைவரும் வந்து கலந்துகொள்ள அழைப்பை விடுக்கிறோம்.

கருத்து மோதலுக்குத் தயாரா?

கருத்து மோதலுக்குத் தயார்! தயார்!! வேறு மோதலுக் குத்தான் தயார் என்றால், காவல்துறை பார்த்துக் கொள்ளும்; மீறி அவர்களால் முடியாத நிலை ஏற்பட்டால், மக்கள் பார்த்துக் கொள்வார்கள்.

தயார்! தயார்!!


----------------------------கி.வீரமணி, தலைவர்,   திராவிடர் கழகம். சென்னை
1.4.2015

67 comments:

தமிழ் ஓவியா said...

உலகிலேயே பிஜேபிதான் அதிக உறுப்பினர்கள் கொண்ட கட்சியாம்

மோசடி முகத்திரையைக் கிழிக்கிறது டைம்ஸ் ஆஃப் இந்தியா


ராஞ்சி மார்ச் 31 மோகன் ஜா என்ற விளையாட்டுப்பிரிவு செய்திப்பத்திரிகையாளர் உலகக் கோப்பை விளையாட்டிற்காக செய்தி சேகரித்துக் கொண்டு இருந்தார், அப்போது அவருக்கு இரண்டு முறை ஒரு எண்ணில் இருந்து (தவறிய) அழைப்பு வந்தது, பத்திரிகையாளர்கள் என்றாலே அவர்களுக்கு வரும் அழைப்புகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்பதால் அவர் தனது அறையைவிட்டு வெளியே வந்து மீண்டும் அழைப்பு வந்த எண்ணிற்கு அழைப்பு விடுத்தார்.

எதிர்புறம் யாரும் எடுக்கவில்லை, மீண்டும் ஒருமுறை போன் செய்துவிட்டு தனது அறைக்கு திரும்பியவரின் அலைபேசியில் குறுஞ்செய்தி வந்தது, அதில் இவ்வாறு எழுதியிருந்தது. வாழ்த்துக்கள் நீங்கள் பாஜகவின் உறுப்பினராகிவிட்டீர்கள். உங்களது உறுப்பினர் எண் 1087369859.

உங்களது முகவரி வோட்டர் அய்டி எண், மின்னஞ்சல் முகவரி அனைத்தையும் 09242492424 என்ற எண்ணிற்கு அனுப்பி உங்கள் உறுப்பினர் அட்டையை பெற்றுக் கொள்ளுங்கள் என்று அந்த குறுஞ்செய்தியில் எழுதியிருந்தது.

அவர் மீண்டும் அந்த எண்ணில் தொடர்பு கொண்டு பேச முற்பட்டப்போது எதிர்தரப்பில் யாரும் பேசவில்லை. இவரும் பதில் குறுஞ்செய்தி, எனக்கு தேவையில்லை, என்னை வலுக்கட்டாயமாக பாஜக உறுப்பினராக மாற்ற வேண்டாம் என்று அனுப்பினார்.

ஆனால், மீண்டும் அவருக்கு வாழ்த்துக்கள் நீங்கள் பாஜக உறுப்பினராகிவிட்டீர்கள் என்று மீண்டும் ஒரு புதிய உறுப்பினர் எண் குறுஞ்செய்தி வந்துசேர்ந்தது. அதாவது சில நிமிடங்களில் ஒரு நபருக்கு இரண்டு உறுப்பினர் எண்களை வழங்கியிருக்கிறார்கள். இறுதியில் மோடியுடன் இணைந்து பாஜகவை வழிநடத்துவோம் வாருங்கள் என்று மீண்டும் ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது.

பட்னாவைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவருக்கு வந்த குறுஞ்செய்தியோ பாஜகவின் செயலை சந்தி சிரிக்கவைத்துள்ளது. அவருக்கு மொத்தம் 3 மொபைல் போன்கள் மூன்று போன்களில் 13க்கு மேற்பட்ட பாஜக உறுப்பினர் எண்கள் வந்துவிட்டன. பாஜக ஆளும் கோவா மாநிலத்தில் ஜனவரியில் நடந்த உள்ளாட்சி தேர்தல்களில் பாஜகவிற்கு கிடைத்த மொத்த ஓட்டுக்கள் 1,50,674 மாத்திரமே ஆனால் கடந்த டிசம்பர் மாதம் கோவா பாஜக பத்திரிகையாளர்களை அழைத்து எங்கள் கட்சியில் கோவாவில் மத்திரம் 13 லட்சம் பேர் உறுப்பினராகி விட்டனர், என்று கூறியிருந்தனர்.

இதே நிலைதான் சிறீரங்கத்திலும் அங்கு நடந்த இடைத் தேர்ந்தலுக்கு முன்பு சிறீரங்கத்தில் மாத்திரம் 22 ஆயிரம் பேர் உறுப்பினராகிவிட்டனர். என்று அந்தக்கட்சியின் தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் அறிவித்திருந்தார்.

ஆனால் அங்கு பாஜகவிற்கு கிடைத்த வாக்குகளின் எண்ணிக்கையோ வெறும் அய்ந்தாயிரம் தான். டில்லியின் நிலையும் இப்படித்தான் டில்லி தேர்தலுக்கு முன்பு டில்லி மக்கள்தொகையில் 90 விழுக்காடு எங்கள் உறுப்பினராகி விட்டனர்.என்று தேர்தல் பிரச்சாரத்தின் போது அமித்ஷா தெரிவித்திருந்தார்.

ஆனால் 3 மூன்று பேர் மாத்திரமே தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதிலும் ஒருவர் அகாலிதள் கட்சியைச் சார்ந்தவர், மற்ற இருவரும் தனிப்பட்ட முறையில் மக்களிடம் செல்வாக்கு பெற்றவர்கள். ஜார்கண்ட் உள்ளாட்சிதேர்தலில் அத்தனை மாநகராட்சி களையும் பாஜக காங்கிரசிடம் இழந்து மூன்றா மிடம் வந்தது.

அங்கேயும் கோடிக்கணக்கான உறுப்பினர்கள் இருக்கிறார்கள் என்று உறுப்பினர் அட்டையைக் காண்பிக்கிறார்கள். சமீபத்தில் டில்லியில் ராயன் என்று பள்ளியில் 3-வதுபடிக்கும் குழந்தைகளின் கையில் உறுப்பினர் படிவத்தைக் கொடுத்து வீட்டிற்கு சென்று நிரப்பிக்கொண்டு வரவேண்டும் என்று வற்புறுத்திய சம்பவங்கள் எல்லாம் பத்திரிகையில் வந்து பாஜகவின் மட்டமான உறுப்பினர் சேகரிப்பு கூத்தை அம்பலப்படுத்தியது.

(டைம்ஸ் ஆஃப் இந்தியா, மகாராட்டிரா டைம்ஸ், தைனிக் பாஸ்கர் ஏடுகள் வெளியிட்ட தகவல்களிலிருந்து 31.3.2015)

Read more: http://viduthalai.in/page1/98858.html#ixzz3W3alrCDy

தமிழ் ஓவியா said...

ஒற்றுமை வளரட்டும்! தொடரட்டும்!

காவிரி நீர்த் தொடர்பாக தமிழ்நாடு - நடப்பு சட்டமன்ற கூட்டத்தில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம், அதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சிகளை மறந்து பிரதமரைச் சந்தித்து, வைத்த வேண்டுகோளும் பெருமிதத்தைத் தருகிறது - திராவிடர் கழகத் தலைவர் திரும்பித் திரும்பிச் சொல்லி வந்த வற்புறுத்தி வந்த இந்த ஒற்றுமை காலங் கடந்தாவது செயல்பாட்டுக்கு வந்ததில் வேறு எந்த அமைப்புகளையும்விட, திராவிடர் கழகத்திற்குக் கூடுதலாக மகிழ்வைத் தருகிறது.

மற்ற மற்ற மாநிலங்கள் இந்த முறையைத் தொடர்ந்து பின்பற்றியே வந்துள்ளன. தமிழ்நாட்டில் அந்த ஒற்றுமை இல்லாததால் கருநாடகம், கேரள மாநிலங்கள் பக்கம் நியாயம் இல்லை என்றாலும், தமிழர்களுக்குக் கிடைக்க வேண்டிய பலன்கள் தட்டிப் பறிக்கப்பட்டன - கால தாமதப்படுத்தப்பட்டும் வருகின்றன.

காவிரி நீர்ப் பிரச்சினையில் கருநாடக மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் சந்தித்தாலும் சரி, தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் சந்தித்தாலும் சரி. இந்தியாவின் பிரதமர்கள் தயாராக வைத்துள்ள பதில் கவனிக்கிறோம் என்பதுதான்.

விளைவோ ஒரு சென்டிமீட்டர்கூட அடுத்த அடி வைக்கப்பட்டதில்லை. காரணம் அரசியல் - பச்சையான அரசியல்தான்!

இதில் என்ன கொடுமை என்றால், உச்சநீதிமன்ற மும், நடுவர் நீதிமன்றமும் அளித்த தீர்ப்பின் அடிப் படையில் செயல்பட வேண்டிய மத்திய அரசுதான் இப்படி பாம்புக்கு தலையும் மீனுக்குத் வாலையும் காட்டும் விலாங்கு மனப்பான்மையில் நகர்ந்து கொண்டு வருகிறது.

இந்தியாவில் தேசியக் கட்சிகளாக இருந்தாலும் மாநிலத்திற்கு ஒரு முடிவை எடுத்துவருகின்றனர் என்பதுதான் வேடிக்கையாகும். பேசும் போது மட்டும் பாருங்கள் பரத கண்டம், ஒரே தேசம் இதில் மாநில உணர்வு என்ற குறுகிய பார்வை எல்லாம் கூடாது என்று நீட்டி முழங்குவார்கள்.

ஆனால் காரியம் எனறு வருகிறபோது இந்தத் தேசிய கட்சிகள் மாநில வெறி உணர்வோடு நடந்து கொள்வார்கள்.

2007ஆம் ஆண்டு காவிரி நடுவர் மன்றம் அளித்த இறுதி தீர்ப்பில் காவிரி நதிநீர் ஆணையம் அமைத்திட ஆணை பிறப்பிக்கப்பட்டது.

2013 பிப்ரவரி 19ஆம் தேதி மத்திய அரசிதழில் (கெசட்டில்) அத்தீர்ப்பும் வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து காவிரி மேலாண்மை வாரியத்தையும் காவிரி ஒழுங்கு முறை ஆணையத்தையும் உடனடியாக அமைக்குமாறு உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் வழக்குத் தொடரப்பட்டது.

மத்திய அரசு கண் துடைப்பாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் வரை தற்காலிகமாக காவிரி கண்காணிப்புக் குழு அமைத்தது. அதில் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி மற்றும் கருநாடக மாநில அரசுகளின் தலைமைச் செயலாளர்கள் உறுப்பினர்களாக இருந் தனர். இது ஒரு தற்காலிகக் குழுவே!

16ஆவது மக்களவைத் தேர்தலின்போது, தமிழ் நாட்டுக்குப் பிரச்சாரத்திற்கு வருகை தந்த நரேந்திர மோடி என்னவெல்லாம் பேசினார்? காவிரி நீர்ப் பிரச்சினையில் காங்கிரஸ் தலைமையிலான அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசின்மீது குற்றப் பத்திரிகை வாசித்தார். தாங்கள் ஆட்சிக்கு வந்தால் மணலைக் கயிறாகத் திரிப்போம் என்று நீட்டி முழங்கினார். அதற்கு மாறாக முந்தைய அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசால் அமைக்கப்பட்ட அந்த செயல்படாத தலைமைச் செயலாளர்கள் கொண்ட தற்காலிகக் குழுவே தொடரும் என்று அறிவிக்கப்பட்டது.

நடுவர் மன்றத் தீர்ப்பின் அடிப்படையில் சட்டப்படி செயல்பட வேண்டிய மத்திய அரசு தூங்கி வழிந்ததுதான் மிச்சம். மத்தியில் உள்ள கருநாடகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் சொல்கிறபடி நடந்து கொள்ள வேண்டிய நிலைக்குப் பிரதமர் தள்ளப்பட்டு விட்டார். இதுதான் இந்தியாவில் நிலவும் வெட்கம் கெட்ட தேசியமாகும்.

தமிழ் ஓவியா said...


இதற்கிடையில் கருநாடக மாநில அரசோ நீதிமன்ற தீர்ப்புகளையும் நெட்டித் தள்ளி மத்திய அரசு என்ற ஒன்று இருக்கிறது என்பது குறித்தும் நினைத்துப் பார்க்காமல், தானடித்த மூப்பாக கருநாடக மாநிலப் பகுதியில் காவிரியின் குறுக்கே இரண்டு தடுப் பணைகளைக் கட்டத் திட்டமிட்டது. அந்த இரண்டில் ஒன்றை மிகப் பெரிய அணையாகக் கட்டி முடிக்கத் திட்டமிட்டு செயல்பாட்டிலும் இறங்கிட ஆரம்பித்து விட்டது. நிதி நிலை அறிக்கையிலும் ரூ.25 கோடி ஒதுக்கியும் அறிவித்து விட்டது.

குடிநீர்ப் பிரச்சினைக்காக இந்த அணைகள் கட்டப்படுகின்றன என்று கருநாடக அரசு கபட நாடகம் ஆடுகிறது. தமிழ்நாட்டில் மட்டும் என்னதான் வாழுகிறது?

கோடை காலத்தின் தாக்கம் இப்பொழுதே தமிழ் நாட்டில் தெரிய ஆரம்பித்து விட்டது. மின்சாரப் பஞ்சத் தோடு, தண்ணீர்ப் பஞ்சமும் கைகோர்க்கப் போகிறது. அடுத்து வரும் மாதங்கள் தமிழ்நாட்டு மக்களுக்குப் பெரும் சோதனைக் காலமாகவே இருக்கப் போகிறது.

இப்பொழுது கட்சி வண்ணங்களை மறந்து ஒரு மனதாக சட்டமன்றத்தில் தீர்மானத்தை நிறைவேற்றச் செய்ததும் பிரதமர் சந்திப்பில் ஒற்றுமை உணர்வோடு சந்தித்ததும் எப்படி நடந்ததோ, அந்தப் பலத்தோடு தொடர் நடவடிக்கையை மேற்கொள்ள இதுதான் தக்க தருணம். ஆளும் அ.இ.அ.தி.மு.க.தான் இதற்கான தொடக் கத்தைக் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்

Read more: http://viduthalai.in/page1/98860.html#ixzz3W3b40Sn7

தமிழ் ஓவியா said...

தமிழகமெங்கும் திராவிடர் விழிப்புணர்வு வட்டார மாநாடுகள் பி.என்.எம். பெரியசாமி- (தலைவர் - பெரியார் படிப்பக வாசகர் வட்டம்)அய்யாவின் பேரைக் கேட்டாலே காதம் ஓடுகிற ஆத்திகரும் அவர் பேசக் கேட்டால் கீதம் கேட்ட கிறுகிறுப்பில் மயங்கிப் போவார். அவர் பாதம் படாத பட்டி தொட்டியுண்டா!

தமிழ் ஓவியா said...

பம்பரமும் ஓய்வு பெறும் சுற்றியபின் இவரோ! படுகிழமாய் போன பின்னும் பம்பரமாய் சுற்றி வந்தார்

என்று முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் மதிக்கப்பட்ட அறிவுலக மேதை தந்தை பெரியார் அவர்கள் தனது தள்ளாத வயதிலும் தளராத உள்ளத்துடன் 95 வயது வரை தொய்வின்றி சுற்றுப் பயணம் செய்து வந்தார். இன்று அவர் தடம் பதித்த இடத்திலெல்லாம் வட்டார மாநாடுகள். அவர் குரல் ஒலித்த இடத்தி லெல்லாம் மூடநம்பிக்கை ஒழிப்புப் பிரச்சாரங்கள்.

தமிழர்கள் மானமும் அறிவும் பெற்று சுயமரியாதை வாழ்வு வாழவேண்டும் என்ற நோக்கத்தை முன்வைத்து செயல்படும் ஒரே சமுதாய இயக்கம் திராவிட இயக்கம், அது மட்டுமல்ல; இந்து மதவாதிகள் சற்று அதிரச்சியுடனும் அச்சத்துடனும் பார்க்கப்படும் இயக்கம். அய்யா அவர்கள் வகுத்துத்தந்த பாதையில் தொடர்ந்து பயணம் செய்து வருகிறது. இந்த இயக்கம் பெரியாருக்குப் பின் இருக்குமா? என்ற அச்ச உணர்வு நம்மைப் போன்ற பலருக்கும்; இருக்கக் கூடாது என்ற ஆசை சிலருக்கும்; அதே சமயம் ஒடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்கள் தங்கள் உரிமைகளைப் பெறுவதற் காகவும் கல்வி மற்றும் அரசு வேலை வாய்ப்பில் தங்களுக்கான பங்கைப் பெறுவதற்காகவும் போராடக்கூடிய இயக்கம் நம்! திராவிட இயக்கம்.!! 1926 நவம்பர் மாதம் சென்னை சட்டசபைக்கு நடைபெற்ற பொதுத் தேர்தலில் பார்ப்பனரல்லாதார் கட்சி படுதோல்வியடைந்தது. சுயராச்சியக் கட்சி வெற்றி பெற்றது. தோல்வியடைந்த நீதிக் கட்சியினர் துவண்டு போய் அவ்வளவு தான் நம் அரசியல் வாழ்வு என்று எண்ணி வீட்டுக்குள் முடங்கி விட்டனர். அந்த நேரத்திலும் அய்யா அவர்கள் மட்டுமே சிறிதும் தளர்ச்சியடையாமல் தோல்வி வெற்றிக்கே என்று வீரமுழக்கம் செய்தார்.

தமிழ் ஓவியா said...

தோல்வியைக் கண்டு துவண்டு போகாமல் இந்த தோல்விதான் நமது தொடர் வெற்றிக்கு வழி வகுக்கும் என்ற புதிய சிந்தனையைத் தோழர்கள் மனதில் விதைத்தவர் நமது பெரியார். அவரிடம் பெற்ற இந்த பயிற்சிதான் திராவிட இயக்கம் ஒரு நூற்றாண்டைக் கடந்தும் செயல்படுகிறது. உலகத்தின் வரலாற்றைப் புரட்டிப் போட்ட எத்தனையோ தலை வர்கள் வாழ்ந்து மறைந்தார்கள். அவர் களின் தத்துவங்களும் கொள்கைகளும் அவர்கள் வாழ்ந்த காலத்தில் வெற்றி யடையவில்லை மக்களும் அதை ஏற்றுக் கொள்ளவில்லை காரணம் அவர்களில் பலர் தங்களின் மதத்திற்குக் கட்டுப் பட்டுச் செயல்பட்டதால் அவர்களின் மகத்தான பகுத்தறிவு கொள்கைகள் வெற்றியடையவில்லை. குறிப்பாக மனிதகுலத்தின் தோற்றமும் பரிணாம வளர்ச்சியும் சொன்ன தத்துவ பேராசிரியர் டார்வின் மற்றும் உலகம் உருண்டை என்று சொன்ன கலிலியோ போன்றவர் களின் தத்துவங்களை கிறித்துவ மதம் பைபிளைக் காட்டி அவர்களை தடுத்தது பலரை அடித்தே கொன்றது இது வரலாறு. ஆனால் பெரியார் ஒருவர் தான் தான் வாழ்ந்த காலத்திலேயே அவரே சொன்ன தனது தத்துவங்கள் அனைத்தும் வெற்றி பெற்று மக்களும் அவைகளை ஏற்றுக் கொண்டாடிய தையும் கண்டு களித்தார். அப்படிப்பட்ட கொள்கைகள் இன்று உலகமயமாகிக் கொண்டிருக்கிறது உலகத்தின் பல்வேறு நாடுகளில் அய்யாவைக் கொண்டாடி வருகிறார்கள். எப்படி இது சாத்திய மாயிற்று? அய்யா அவர்கள் மதத்திற்கு கட்டுப்படவில்லை கடவுளை ஏற்றுக் கொள்ளவில்லை என்பது மட்டுமல்ல அவைகளை வேரோடும் வேரடி மண்ணோடும் ஒழிக்கவே போராடினார்.

தனது வாழ்வையே அய்யாவிற்காக வும் அவரது கொள்கைகளைக் காப்ப தற்காகவும் ஒப்படைத்துக் கொண்ட தன்னலமற்ற தாய் அன்னை மணியம் மையார் அவர்கள் அய்யாவின் மறை விற்குப் பின் இயக்கத்தின் தலைமையை ஏற்றுக் கொண்டு ஒரு பெண்ணாக இருந்தாலும் அய்யாவைக் காட்டிலும் வீரத்துடனும் விவேகத்துடனும் ஒரு தாய் பறவையாய் இருந்து இந்த இயக்கத்தை பாதுகாத்து வந்தார். அதுமட்டுமல்லாமல் இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் இராம லீலா நடத்தி வந்தனர். அவர்களை எதிர்த்து வடமாநிலங்களுக்கே சென்று இராவணலீலா நடத்தி தமிழனின் பெரு மையை நிலைநாட்டினார். அன்னை மணியம்மையார் அவர்களுக்குப் பின் இயக்கத்தின் முழுப் பொறுப்பையும் ஏற்றுக் கொள்ளும் ஒரு தலைவரை அதாவது அய்யா அவர்கள் கொள்கை களை மட்டும் விட்டுச் செல்லவில்லை ஒரு நல்ல தலைவரையும் நமக்காக விட்டுச் சென்றார். அவர்தான் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள். அதை உணர்ந்த அன்னையார் அவர்கள் நீதிக்கட்சியின் பரிணாம வளரச்சியான திராவிடர் கழகத்தின் ஈடிணையற்ற தலைவராக தமிழர் தலைவர் அவர்களை முறையாகவும் சட்டப்படியும் நியமித்தார். தமிழர் தலைவர் அவர்கள் பொறுப் பேற்று 37 ஆண்டுகள் உருண்டோடி விட்டது இது 38வது ஆண்டில் அடி யெடுத்து வைக்கும் தமிழர் தலைவர் அவர்களின் அறிவாரந்த தலைமையின் கீழ் நாம் கடந்து வந்த பாதையை சற்று திரும்பிப் பார்த்தால் அத்தனையும் சாதனைச் சரித்திரங்கள் வரலாற்றுச் சுவடுகள் ஆகும்.


தமிழ் ஓவியா said...

அப்படிப்பட்ட இந்த இயக்க வரலாற் றில் சேலத்திற்கென்று ஒரு மிக முக்கிய பங்குண்டு. 2014 டிசம்பர் மாதம் 7ஆம் தேதி சேலத்தில் கூடிய திராவிடர் கழகத்தின் பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட தீரமானத் தின் படி ஓராண்டிற்குள் தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் 2000 திராவிடர் விழிப்புணர்வு வட்டார மாநாடுகள் நடத்தப் பட வேண்டும் என்பது. இதே சேலத்தில் நடைபெற்ற மாநாட்டில் நீதிக்கட்சியாக இருந்த திராவிட இயக்கத்தை திராவிடர் கழகம் என்று பெயர் மாற்றும் தீர்மானத்தை அறிஞர் அண்ணா அவர்கள் பெயரில் பெரியார் அவர்களே கொண்டு வந்து 1944 இல் திராவிடர் கழகத்தை தோற்றுவித்த இடம் சேலம். அதுவரை மிட்டா மிராசுதாரர் மற்றும் செல்வந்தர் பிடியில் சிக்கியிருந்த கட்சியை வெகு மக்களின் இயக்கமாக மாற்றிய பெருமை சேலத்திற்கும் அய்யா அவர்களுக்கும் மட்டுமே! உண்டு.
அதே போல் கழகம் தனது வரவாற்றுப் பக்கத்தில் பொன்னெழுத்துக்களால் பொறித் துக் கொள்ளக் கூடிய மற்றோரு நிகழ்ச்சி தான் இராமன் படம் செருப்பால் அடிபட்ட நிகழ்ச்சி அதாவது சேலத்தில் நடைபெற்ற ஊர்வலம் ஒன்றில் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ராமன் படம் வைக்கப்பட்டி ருந்தது. அதே ஊர்வலத்தில் அய்யா அவர்களும் ஒரு வாகனத்தில் வந்து கொண் டிருந்தார் அப்போது அய்யாவைப் பார்த்து ஒரு இந்து முன்னணிக்காரர் செருப்பை வீச! அது தவறுதலாக ராமன் படத்தின் மீது பட்டு விட்டது. அதைத் தொடர்ந்து கோபப்பட்ட நமது தோழர்கள் அதே செருப்பை எடுத்து ராமன் படத்தை தொடரந்து அடித்தார்கள்! அந்த நிகழ்ச்சி இந்தியா முழுக்க பரபரப்பாக பேசப்பட்டது. இது தொடர்பாக இராஜாஜி அவர்கள் கருத்து கூறும் போது இனி ஆத்திகர்கள் இங்கு வாழ்வதற்கு தகுதி இல்லையோ! என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். அந்த அளவிற்கு அந்நிகழ்ச்சி நமது இயக்க வரலாற்றில் இடம் பெற்றது. அது தேர்தல் சமயமானதால் அன்று தமிழகத்தின் அரசியல் வரலாற்றில் யாரும் எதிர்பாரத்திராத அளவிற்கு திமுகவின் வரலாறு காணாத வெற்றி ஒரு மாபெரும் திருப்பு முனையை ஏற்படுத்தக் காரணமாக இருந்ததும் சேலம் மாநகரம்.

தமிழ் ஓவியா said...

அறிஞர் அண்ணா அவர்கள் நாவலர் சோமசுந்தர பாரதி அவர்களோடு சொற் போரில் ஈடுபட்டு வெற்றி பெற்றார். அப்போது அறிஞர் அண்ணா அவர்கள் எடுத்து வைத்த வாதங்கள் அனைத்தும் அசைக்க முடியாத ஆதாரங்கள். ராமா யணம் மகாபாரதம் போன்ற இதிகாசக் குப்பைகளைத் தீயில் போட்டு பொசுக்க வேண்டும் என்ற அண்ணாவின் வாதங்கள் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது. அன்று அண்ணா அவர்களின் சொற் பொழிவு தீபரவட்டும் என்ற பெயரில் இயக்க வெளியீடாக வந்து தமிழகத்தைக் கடந்து அகில இந்தியாவிலும் பரபரப்பாக பேசப் பட்டது. அண்ணா அவர்களுக்கு பதில் சொல்ல முடியாதவர்கள் தோற்றோடி நீதிமன்றத்தின் மூலம் அந்நூலைத் தடை செய்ததோடு அண்ணாவையும் கைது செய்து சிறையில் அடைக்க காரணமாக இருந்ததும் இந்த சேலம் நகரம் தான். அதே போல் அய்யா அவர்கள் சேலத்தில் ஒரு நிகழ்ச்சியில் உரையாற்றிய அரிய சொற் பொழிவுகள் தத்துவ விளக்கம் என்ற பெயரில் புத்தகமாக வெளிவந்து இன்று இயக்கத்தின் கொள்கையாகவும் இலட்சிய மாகவும் இருக்கிறது என்றால் அதற்கும் சேலத்தின் பங்கு மகத்தானது.

மேலும் இதே சேலத்தில் அய்யா அவர்கள் தமிழறிஞர் திரு.தேவநேயப் பாவாணர் அவர்களுக்கு திராவிட மொழிஞாயிறு என்ற பட்டம் கொடுத்து பாராட்டினார் அதற்குப் பிறகு திராவிடத்தின் எதிரிகள் அப்பட்டத்தில் உள்ள திராவிட என்ற சொல்லை தவிர்த்து விட்டு மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர் என்று சுருக்கி விட்டனர். 2000 திராவிடர் விழிப் புணர்வு வட்டார மாநாடுகள் என்ற அறிவிப்பும் தனது குறிக்கோளை மிக விரைவில் எட்டும் விதத்தில் அறிவித்த குறுகிய காலத்திலேயே 160 க்கும் மேற்பட்ட வட்டார மாநாடுகளை எழுச்சியோடு நடத்தியுள்ளது. தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் திட்டமிட்டபடி நடைபெற்று வருகிறது என்பது நமக்கெல்லாம் ஒரு இனிப்பான செய்தியாகும்.

திராவிடர் கழகம் எந்தவொரு அறவழிப் போராட்டமானாலும் ஆர்ப்பாட்டமானாலும் காலம் அறிந்து அதன் தேவை அறிந்துதான் அறிவிக்கும். மத்தியில் மதவாத சக்தியான பா.ஜ.க அரசு மோடி தலைமையில் அமைந் தவுடன் அதற்கான சூழ்நிலை இயல்பாகவே அமைந்து விட்டது. மானமிகு தமிழர் தலைவர் அவர்களின் முன்னெச்சரிக்கை யின் விளைவாகத் தமிழ்நாட்டில் அவர்கள் வெற்றி பெறாவிட்டாலும் இந்தியாவின் பல பகுதிகளில் தங்களது பொய் பிரச்சாரத்தின் மூலமும் மக்களின் தெளிவற்ற அரசியல் பார்வையாலும் வெற்றி பெற்று விட்டார்கள். அதனால் பா.ஜ.க வை பின்னாலிருந்து இயக்கி வரும் மத வெறிபிடித்த இந்துத்துவா சக்திகளான பஜ்ரங்தள் சங்பரிவார் கும்பல் இந்து முன்னணி மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்புகள் தலை தூக்க ஆரம்பித்து விட்டன : அதன் விளைவுகள்.

தமிழ் ஓவியா said...

கல்வித்துறையில் காவிமயம்.

விவசாய விலைநிலங்களை பிடுங்கி வெளிநாட்டு முதலாளிகளுக்கு விற்பது

வரலாற்றுத் திரிபுவாதம் அதற்காகவே 18 பேர் கொண்ட ஒரு குழுவை RSS அமைத்துள்ளது அவர்கள் அனைவரும் RSS அய் சேர்ந்த முன்னணித் தலை வர்கள் ஆவர்.

காந்தியடிகளைக் கொன்ற நாதுராம் கோட்சேவிற்கு நாடு முழுவதும் சிலை.

மதன் மோகன் மாளவியாவிற்கு பாரத ரத்னா விருது.

இந்தித் திணிப்பு அதன் மூலம் சமஸ் கிருதத்தை இந்தியாவின் பொது மொழியாக அறிவிக்க நினைப்பது.

பகவத் கீதையை தேசிய பொது நூலாக அறிவிக்கும் முயற்சி.

இந்து பெண்கள் ஒவ்வொருவரும் குறைந்தது 4 குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று பேசுவது.

தமிழ் ஓவியா said...

பொது சிவில் சட்டம் கொண்டு வருவோம் என்பது.
மதமாற்றத் தடைச் சட்டம் மேலும் தாய் மதம் திரும்புதல்

அரசியல் சட்டத்தில் உள்ள செக்குலரிசம் என்ற சொல்லை நீக்குவது தொடர்பான விவாதம்.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை எடுத்துவிட்டு அதற்கு பதிலாக அந்த இடத்தில் மனுதர்மத்தை கொண்டு வருவது.

பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமனுக்கு கோயில் கட்டுவது.

அனைத்து மசூதிகளிலும் பிள்ளையார் படம் வைப்போம் என்று பேசுவது.

போன்ற தங்களது அனைத்து விதமான மக்கள் விரோதப் போக்கு மதவாத சிந் தனையை வளர்த்தெடுக்கும் முயற்சி சிறுபான்மையினரிடையே ஒரு பாதுகாப் பற்ற சூழல் எல்லாவற்றுக்கும் மேலாக சட்டம் ஒழுங்கு சீர்கெடும் அளவிற்கு அபாயகர மான அறிவிப்புகள் ஆட்சியாளர்களின் பேச்சுக்கள் நமது உலகளாவிய மக்களாட்சித் தத்துவத்திற்கு விடப்பட்ட மாபெரும் அறைகூவலாக அமைந்துள்ளது. சமீபத்தில் இந்தியாவிற்கு வருகை தந்த அமெரிக்க அதிபர் திரு.ஒபாமா அவர்களும் இந்தி யாவின் வளர்ச்சிக்கு மதமும் மதம் சார்ந்த அரசியலும் இந்தியாவின் வளர்ச்சிக்கும் அதன் பொருளாதார மேம்பாட்டிற்கும் பெரும் தடையாக இருப்பதை ஒரு எச்சரிக்கையுடன் தெளிவுபடுத்திச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. நாமும் இந்த சவாலை ஏற்கும் விதமாகத்தான் 2000 வட்டார மாநாடுகள் நடத்தி மக்களை விழிப்புணர்வடையச் செய்யும் செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளோம்.

இன்று தமிழக அரசியலில் நாட்டை ஆளும் வல்லமையுள்ள திராவிடக் கட்சிகளான தி.மு.க.மற்றும் தன்னையும் ஒரு திராவிடக் கட்சி என்று அறிவித்துக் கொள்ளும் அ.(அம்மா)தி.மு.க. போன்ற கட்சிகள் ஏதோ பலவீனப்பட்டு விட்டது என்றும் தமிழக அரசியலில் பெரிய வெற்றிடம் உருவாகியுள்ளது என்றும் அதை நிரப்பக்கூடிய சக்தி பா.ஜ.க விற்கே உண்டு என்றும் தங்களுக்கு பின்பாட்டுப் பாடுவ தற்காக விலை போகும் சில அரசியல் தலைவர்களையும் பார்ப்பன முதலாளித்துவ ஊடகங்களையும் தங்கள் கைகளில் வைத்துக் கொண்டு வழக்கமான தனது பொய்ப் பிரச்சாரத்தின் மூலம் தமிழகத்தில் தனது அரசியல் பலத்தை வளர்த்துக் கொள்ள RSS மற்றும் இந்துத்துவ மதவாத சக்திகள் மிகப்பெரிய காரப்பரேட் நிறுவனங் களின் உதவியுடன் மோடி என்ற பொம் மையை முன்னுக்குத் தள்ளி பின்னாலிருந்து மிகவும் தந்திரமாக செயல்படுகிறது.

இதை அறியாத மக்கள் ஏதோ வளர்ச்சித்திட்டம் பொருளாதார மேம்பாடு என்று அவர்களின் பொய்யான வியாபார விளம்பரத்தை நம்பி ஏமாந்து விடக்கூடாது என்பதற்காகவும் இந்து-மதவாத சக்திகளிடம் மிகவும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தவே இந்த மாநாடுகள் அதனால் தான் இதற்கு நமது தமிழர் தலைவர் அவர்கள் திராவிடர் விழிப்புணர்வு வட்டார மாநாடு என்று மிகவும் பொருத் தமான தலைப்பை வைத்துள்ளார்கள்.

தமிழ் ஓவியா said...

இன்று தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளில் திராவிடர் கழகம் திராவிட முன்னேற்ற கழகம் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பொதுவுடைமைத் தோழர்களின் கம்யுனிஸ்டு கட்சி நமக்குள் சில கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் பொது நன்மை கருதி இந்திய தேசிய காங்கிரசு உள்பட அனைத்து கட்சிகளும் ஒரே மேடையில் தமிழக மக்களின் சமூக ஒற்றுமைக்காகவும் சுயமரியாதையான வாழ்க்கைக்காகவும் அதைவிட முக்கியமான நமது வரலாற்று பாரம்பரியத்தையும் தமிழர் பண்பாடு போன்றவற்றை பாதுகாக்கவும் பண்பாட்டு படையெடுப்பை முறியடிக்கவும் மக்கள் தேர்தல் நேரத்தில் சரியான மற்றும் தெளிவான முடிவெடுக்கும் விழிப்புணர் வையும் பகுத்தறிவையும் பெற வேண்டும் என்பதற்காகவும் திராவிடர் கழகம் தனது பொறுப்பை உணர்ந்து சரியான நேரத்தில் சரியான முடிவெடுக்கும் விதமாகத்தான் இந்த மாநாடுகளை அறிவித்துள்ளதே தவிர தங்களது சுய விளம்பரத்திற்காகவோ அல்லது தமது இருப்பை காட்டிக் கொள் ளவோ அல்ல.

மேலும் இந்த மாநாடுகள் பெரிய நகரங்கள் மட்டுமல்லாமல் ஒவ்வொரு வட்டாரத்திலும் சிறு சிறு கிராமங்களிலும் மிக எளிமையான முறையில் அதே சமயம் எழுச்சியோடும் மகளிர்க்கு முக்கியத்துவம் தரும் வகையில் சமுதாய மாற்றத்திற்கு பெண்களின் பங்கும் இன்றியமையாதது என்பதை உணர்ந்த காரணத்தால் மாநாட்டைத் துவக்கி வைத்தல் கொடி யேற்றுதல் என்று மகளிரையும் பெருமளவு முன்னிறுத்தி மேலே சொன்னபடி ஒத்த கருத்துடைய ஏனைய அரசியல் கட்சித் தலைவர்களையும் இணைத்துக்கொண்டு செயல்படுகிறது. திராவிடர் கழகம் தனக்கென ஒரு தேர்தல் அரசியல் இல்லாவிட்டாலும் தனக்குள்ள அரசியல் சார்ந்த சமுதாயக் கடமையைச் செய்து வருகிறது. அய்யா அவர்கள் சொன்னது போல இப்பணியை செய்ய வேறு யாரும் முன் வராத காரணத்தால் நாம் தமது தோள் மேல் போட்டுக் கொண்டு செயல் படுகிறோம்.

தமிழ் ஓவியா said...

கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற முக்கியமான மூன்று முழக்கங்களை அறிஞர் அண்ணா அவர்கள் சொன்னா லும் அய்யா பெரியார் அவர்கள் இவற்றில் கட்டுப்பாடு ஒன்றுக்கே அதிக முக்கியத் துவம் கொடுத்தார் என்பதை இந்த மாநாடுகள் வாயிலாக நாம் காண முடிகிறது. நடைபெறுகிற கூட்டங்கள் அனைத்தும் அறிவித்தபடி சரியான நேரத்தில் தொடங்கி எந்த வகையிலும் பொது மக்களுக்கோ, மாணவ மாணவி யர்களுக்கும் சிறுதும் இடையூறின்றி சட்டம் ஒழுங்குக்கு கட்டுப்பட்டு காவல் துறையினர்க்கும் முழு ஒத்துழைப்பு கொடுத்து நடத்த வேண்டும் என்றும் குறிப்பாக நிகழ்ச்சி இரவு சரியாக 10 மணிக்கு முன்னதாக முடித்துக் கொள்ள வேண்டும் என்றும் தலைமைக் கழகத்தின் சார்பாக முன்கூட்டியே திட்டமிட்டபடி அனைத்துப் பகுதிகளிலும் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனாலும் பா.ஜ.க வைச் சேர்ந்தவர்கள் இது போன்ற மாநாடுகள் நடைபெற்றால் மக்களிடையே தங்களது கடைச்சரக்கு (மதமெனும் விஷ விதை) விலை போகாது என்ற பயத்தால் மாநாடு நடை பெறும் அனைத்து இடங்களிலும் முன்ன தாகச் சென்று காவல்துறையினரிடம் இது போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றால் இந்துக்கள் மனம் புண்படுகிறது என்ற சொத்தையான வாதத்தை முன்வைத்து (நம்மைக் குறை சொல்ல வேறு எந்த காரணமும் கிடைக்காததால்) தடையுத் தரவிற்கு விண்ணப்பித்தல் விழா, நடை பெறும் இடத்திற்கு சென்று கலவரம் செய்வது போன்ற செயல்களில் ஈடுபடு கிறார்கள். இதுவரை பல மாநாடுகள் நடைபெற்று விட்டன எந்த இடத்திலும் இந்து மதத்தைச் சேர்ந்த எவரும் தங்கள் மனம் புண்பட்டு விட்டது என்று யாரிடமும் புகார் சொல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் ஓவியா said...

இவற்றையெல்லாம் கடந்தும் நமது இயக்கத் தோழர்கள் சிறிதும் கட்டுப்பாடு குலையாமல் வெற்றிகரமாக நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். மக்களின் சிந் தனைக்கு சிறு துளி: மோடி பதவியேற்ற 300 நாட்களில் 600 மதக்கலவரங்கள்! இது செய்தி ஆனால் நமது பணி 365 நாட்களில் 2000 விழிப்புணர்வு வட்டார் மாநாடுகள்!! இது வரலாறு.

எளிமையின் சின்னமாக விளங்கும் நம் தமிழர் தலைவர் அவர்கள் கூட்டம் நடைபெறும் ஊர்களில் கூட்டம் முடிந்து செல்லும் பொழுது இரவு நேரங்களில் சாலையோரத்தில் தனது வாகனத்தை நிறுத்தி தமது தோழர்கள் தரும் மிக எளிமையான உணவை அவர்களோடு சேர்ந்து உண்பதோடு கூட்டம் நடைபெற்ற விதம் பற்றியும் அன்போடு உரையாடுவது அடுத்து நடைபெறக்கூடிய கூட்டம் பற்றி விவாதிப்பது இயக்கத் தோழர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாகவும் அதைவிட பெருமையாகவும் இருக்கிறது.

இதே நடைமுறையைத்தான் பச்சைத்தமிழர் காமராஜரும், அய்யா தந்தைப் பெரி யாரும் கொண்டிருந்தார்கள் என்று அப்போது உடனிருந்து பணியாற்றிய பெரியார் பெருந்தொண்டர்கள் பலரும் சொல்லக் கேட்டுள்ளோம். இந்த வட்டார மாநாடுகள் மூலம் மக்களை சந்தித்து பிரச்சாரம் செய்வதோடு இயக்கத் தோழர்களின் இல்லங்களுக்குச் சென்று மணவிழாக்களை அய்யா வழியில் நடத்தி வைப்பது குழந்தைகளுக்கு இனிய தமிழில் பெயர் சூட்டுவது மட்டுமல்லாமல் அவர்களின் இல்லங்களில் நிகழ்ந்து விட்ட துன்பியல் நிகழ்ச்சிகளிலும் தனது ஆழ்ந்த இரங்கலை இயக்கத்தின் சார்பாக தெரி வித்து வருவது பெரிதும் நெகிழ்ச்சியைத் தருகிறது.

தமிழர் தலைவர் அவர்கள் எடுத்து வைக்கும் வாதங்கள் அனைத்தும் தக்க ஆதாரங்களோடும் வரலாற்று ரீதியிலான ஆவணங்களோடும் இயக்க வெளியீடு களைக் கையில் வைத்துக் கொண்டு உரையாற்றுவது நடுநிலையாளர்களையும் பொது மக்களையும் பெரிதும் கவரும் விதமாக இருந்தது. சாலையில் செல்வோர் வாகனங்களில் செல்வோரும் நின்ற படியேயும் ஆங்காங்கே கடைகளிலி ருந்தும் கவனித்துக் கொண்டிருந்தனர்.

இது உரையாற்றுவோருக்கும் தோழர் களுக்கும் பெரிதும் உற்சாகத்தைக் கொடுத்தது. மேலும் மாநாடு நடைபெறும் முன்னதாக மக்களின் அறிவு வளர்ச்சிக்கு பெரும் சவாலாகவும் தடையாகவும் உள்ள மூடப்பழக்க வழக்கங்களைக் களையும் விதமாகவும் அதிலிருந்து மக்களை மீட்கும் விதமாகவும் மந்திரமா - தந்திரமா என்ற சிந்திக்க வைக்கும் அறிவுப் பூர்வமான நிகழ்ச்சியையும் நடத்தி வருவது மாணவ மாணவியர் மற்றும் பெண்கள் மத்தியில் மகிழ்ச்சியையும் புதிய சிந்தனையையும் ஏற்படுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழர் தலைவர் அவர்களால் அறிவிக்கப்பட்டு நடந்து முடிந்த மாநாடுகள் ஆனாலும் இனி நடக்க இருக்கும் மாநாடுகள் ஆனாலும் மதவாத சக்திகளின் முயற்சிகள் முறியடிக்கப் படுவதோடு மக்களுக்குத் தங்களின் பண்பாட்டு ரீதியிலான இனப்பகை எது வென்றும் அதை எவ்வாறு முனை மழுங்கச் செய்வது என்பதையும் உணர்த் துவதே இம்மாநாடுகளின் குறிக்கோளாகும்.

மக்கள் தாங்களாகவே இதை அறிந்து கொள்ள தந்தை பெரியாரின் ஈரோட்டுப் பாதை மிகவும் தேவை என்பதையும் இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்வதோடு இம்மாநாடுகள் மேலும் வெற்றியடைய இயக்கம் சாராத அனைத்துப் பொதுமக்களின் பங்களிப்பும் அவசியம் தேவை என்பதையும் இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்.

Read more: http://viduthalai.in/page1/98863.html#ixzz3W3bHqSDj

தமிழ் ஓவியா said...

இவற்றையெல்லாம் கடந்தும் நமது இயக்கத் தோழர்கள் சிறிதும் கட்டுப்பாடு குலையாமல் வெற்றிகரமாக நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். மக்களின் சிந் தனைக்கு சிறு துளி: மோடி பதவியேற்ற 300 நாட்களில் 600 மதக்கலவரங்கள்! இது செய்தி ஆனால் நமது பணி 365 நாட்களில் 2000 விழிப்புணர்வு வட்டார் மாநாடுகள்!! இது வரலாறு.

எளிமையின் சின்னமாக விளங்கும் நம் தமிழர் தலைவர் அவர்கள் கூட்டம் நடைபெறும் ஊர்களில் கூட்டம் முடிந்து செல்லும் பொழுது இரவு நேரங்களில் சாலையோரத்தில் தனது வாகனத்தை நிறுத்தி தமது தோழர்கள் தரும் மிக எளிமையான உணவை அவர்களோடு சேர்ந்து உண்பதோடு கூட்டம் நடைபெற்ற விதம் பற்றியும் அன்போடு உரையாடுவது அடுத்து நடைபெறக்கூடிய கூட்டம் பற்றி விவாதிப்பது இயக்கத் தோழர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாகவும் அதைவிட பெருமையாகவும் இருக்கிறது.

இதே நடைமுறையைத்தான் பச்சைத்தமிழர் காமராஜரும், அய்யா தந்தைப் பெரி யாரும் கொண்டிருந்தார்கள் என்று அப்போது உடனிருந்து பணியாற்றிய பெரியார் பெருந்தொண்டர்கள் பலரும் சொல்லக் கேட்டுள்ளோம். இந்த வட்டார மாநாடுகள் மூலம் மக்களை சந்தித்து பிரச்சாரம் செய்வதோடு இயக்கத் தோழர்களின் இல்லங்களுக்குச் சென்று மணவிழாக்களை அய்யா வழியில் நடத்தி வைப்பது குழந்தைகளுக்கு இனிய தமிழில் பெயர் சூட்டுவது மட்டுமல்லாமல் அவர்களின் இல்லங்களில் நிகழ்ந்து விட்ட துன்பியல் நிகழ்ச்சிகளிலும் தனது ஆழ்ந்த இரங்கலை இயக்கத்தின் சார்பாக தெரி வித்து வருவது பெரிதும் நெகிழ்ச்சியைத் தருகிறது.

தமிழர் தலைவர் அவர்கள் எடுத்து வைக்கும் வாதங்கள் அனைத்தும் தக்க ஆதாரங்களோடும் வரலாற்று ரீதியிலான ஆவணங்களோடும் இயக்க வெளியீடு களைக் கையில் வைத்துக் கொண்டு உரையாற்றுவது நடுநிலையாளர்களையும் பொது மக்களையும் பெரிதும் கவரும் விதமாக இருந்தது. சாலையில் செல்வோர் வாகனங்களில் செல்வோரும் நின்ற படியேயும் ஆங்காங்கே கடைகளிலி ருந்தும் கவனித்துக் கொண்டிருந்தனர்.

இது உரையாற்றுவோருக்கும் தோழர் களுக்கும் பெரிதும் உற்சாகத்தைக் கொடுத்தது. மேலும் மாநாடு நடைபெறும் முன்னதாக மக்களின் அறிவு வளர்ச்சிக்கு பெரும் சவாலாகவும் தடையாகவும் உள்ள மூடப்பழக்க வழக்கங்களைக் களையும் விதமாகவும் அதிலிருந்து மக்களை மீட்கும் விதமாகவும் மந்திரமா - தந்திரமா என்ற சிந்திக்க வைக்கும் அறிவுப் பூர்வமான நிகழ்ச்சியையும் நடத்தி வருவது மாணவ மாணவியர் மற்றும் பெண்கள் மத்தியில் மகிழ்ச்சியையும் புதிய சிந்தனையையும் ஏற்படுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழர் தலைவர் அவர்களால் அறிவிக்கப்பட்டு நடந்து முடிந்த மாநாடுகள் ஆனாலும் இனி நடக்க இருக்கும் மாநாடுகள் ஆனாலும் மதவாத சக்திகளின் முயற்சிகள் முறியடிக்கப் படுவதோடு மக்களுக்குத் தங்களின் பண்பாட்டு ரீதியிலான இனப்பகை எது வென்றும் அதை எவ்வாறு முனை மழுங்கச் செய்வது என்பதையும் உணர்த் துவதே இம்மாநாடுகளின் குறிக்கோளாகும்.

மக்கள் தாங்களாகவே இதை அறிந்து கொள்ள தந்தை பெரியாரின் ஈரோட்டுப் பாதை மிகவும் தேவை என்பதையும் இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்வதோடு இம்மாநாடுகள் மேலும் வெற்றியடைய இயக்கம் சாராத அனைத்துப் பொதுமக்களின் பங்களிப்பும் அவசியம் தேவை என்பதையும் இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்.

Read more: http://viduthalai.in/page1/98863.html#ixzz3W3bHqSDj

தமிழ் ஓவியா said...

கலாச்சாரப்படி..


. பார்ப்பானைத் தவிர்த்த மற்ற மக்கள் எல்லாம் திராவிடர்கள்தான். பார்ப்பனர்கள் என்பவர்கள் ஆரியர்கள்தான். இதை அவர்கள் பின்பற்றுகிற கலாச்சாரப்படிக் கூறுகிறோம்.
(விடுதலை, 24.2.1954)

Read more: http://viduthalai.in/page1/98859.html#ixzz3W3dGyykw

தமிழ் ஓவியா said...

ஆசிரியர் பேட்டி பற்றி முகநூலில் ஓவியா

தந்தி டிவி முதலாளிகள் கவனத்துக்கு...


எது பண்பாடு மிக்க நிகழ்வு?

தந்தி டிவி செய்தியாளர் என்ற போர்வையில் பாண்டே தலைவர் வீரமணியின் பேட்டிக்கு அனுமதி வாங்குகிறார். தந்திக்கு ஒரு பாரம்பரியம் உண்டு. அந்த அடிப்படையில் அவருக்கு அனுமதி தரப் படுகிறது. இந்த தார்மீக பொறுப்பை பாண்டே காப்பாற்றினாரா? அடுத்து ஒரு தலைவரை நேர்காணல் செய்து விட்டு அற்பத்தனமான முறையில் அவரது கவனத்திற்கு கொண்டு செல்லாத வெளியீடுகளை இவரது தொலைக்காட்சி அலுவலகத்தில் உட்கார்ந்து கோர்த்து அதை ஒரே நிகழ்வு மாதிரி ஜோடனை செய்து நிகழ்ச்சி தருவது உங்கள் அகராதியில் பண்பாடா??? முறை பெரிதல்ல முடிவே பெரிது என்ற அயோக்கியத்தனத்துக்கு அறம் என்ற பெயர் வைத்ததை ஏற்றுக் கொண்டு சிந்தித்தால் இப்படி எதையெதையோ பண்பாடு என்று வக்காலத்து வாங்க வேண்டி வரும்.

கடந்த சனிக்கிழமை தந்தி டிவியில் தனது சாதிப் பெயரையே தனது பெயராகக் கொண்டிருக்கும் பாண்டே, தலைவர் வீரமணி அவர்களை எடுத்த பேட்டி என்பது ஊடகவியல் அறம் பலவற்றையும் மீறிய பண்பாடற்ற ஒரு நிகழ்வாக இருந்தது. பெரியார் தொண்டர்கள் யாருக்கும் பொது எதிர்ப்பை சந்திக்கும் மனத் துணிச்சல் என்றும் உண்டு. அது நமக்கு இப்போதும் இருக்கிறது.

பாண்டேயின் கேள்விகள் மிகப் பழையவை. பலமுறை பதிலளிக்கப்பட்டவை. ஆனால் பிரச்சினை என்னவென்றால் கேள்விகள் பதிலை எதிர்பார்த்து கேட்கப்படவில்லை என்பதுதான். துக்ளக் சோ, அவரது வரிசையில் இந்த பாண்டே போன்றோருக்கெல்லாம் பிறர் பேசி அவர்கள் பேசுவதைக் காது கொடுத்து கேட்பது என்றால் என்னவென்றே தெரியாது. பாண்டே நமது பிரச்சினை அல்ல. பார்ப்பனரல்லாதார் நிறுவனம் ஒன்றை கபளீகரம் செய்து பெரியாருக்கு எதிரான பிரச் சாரத்தை செய்யவும் அவருக்குப்பின் அவரது இயக் கத்தை நடத்திக் கொண்டிருக்கிற தலைவரை நேருக்கு நேர் அவரது இடத்தில் சந்தித்து அவதூறு களை அள்ளி வீசி விட்டு, அந்த இடத்திலிருந்து மிகக் கவுரவமாக திரும்பி வரவும் முடிகிற அளவுக்குக் கட்டுப்பாடும் கண்ணியமும் மிக்க இயக்கத்தை பெரியார் உருவாக்கியிருக்கிறார். அந்த கண்ணியம் இன்று வரை அந்த இயக்கத்தில் காப்பாற்றப் படுகிறது என்பதுதான் உண்மை. இந்த உண்மை வேறு யாரையும் விட பார்ப்பன நண்பர்களுக்கு அன்றும் தெரியும் இன்றும் தெரியும். அதனால்தான் காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட போது சுட்டுக் கொன்றவர் ஒரு இஸ்லாமியர் என்ற வதந்தி பரப்பப் பட்ட போது அதனை மறுத்து வானொலியில் உரையாற்ற அவர்கள், பெரியாரை அழைத்தார்கள். பெரியார் பேசினார். "காந்தியைக் கொன்றவர் இஸ்லாமியர் அல்ல வீண் வதந்திகளை நம்பாதீர்கள்". என்று சொன்னார். ஆனால் அன்று அவர் சொல்லாத உண்மை காந்தியைக் கொன்றது ஒரு பார்ப்பனர் என்ற உண்மை.

பார்ப்பனர்களை வன்முறை மூலம் அழிக்க பெரியார் நினைத்திருந்தால்...?

தமிழ் ஓவியா said...

ஆனால் ஒரு போதும் வன்முறையை நாடாத இயக்கம் திராவிட இயக்கம். காந்தி அகிம்சையைப் பேசினார். ஆனால் அதைக் கடுமையாகக் கடைப் பிடித்த தலைவர் பெரியார். அன்றிலிருந்து இன்று வரை ஆனந்த விகடன் வாசனிலிருந்து இன்று ராஜன்குறை வரை பார்ப்பனர்களில் பலரும் பெரியார் மீது பற்றோடு இருந்திருக்கிறார்கள். அவர்களில் மனச்சாட்சி உள்ளவர்கள் இனியும் இருப்பார்கள். திராவிடர் கழகக் குடும்பங்களில் பெரும்பாலும் அனைவருக்கும் பார்ப்பனர்களில் நல்ல நண்பர்கள் அன்றும் உண்டு இன்றும் உண்டு. பார்ப்பானையும் பாம்பையும் கண்டால் முதலில் பார்ப்பானை அடி என்பது ஒரு வட இந்தியப் பழமொழி. இந்தப் பழமொழியை பல பேச்சாளர்கள் அன்றைய தினம் மேடையிலே எடுத்துக் காட்டி பேசியிருக்கிறார்கள்.

ஆனால் எவர் ஒருவரும் அடிக்க சொல்லி பேசியதில்லை. இரண்டுக்கும் மலையளவு வேறு பாடு உண்டு. மேலும் அப்படி அவர்கள் பேசிய காலம் எது தெரியுமா? பொது வெளியில் பார்ப்பனர்கள் இந்த நாட்டின் பெருவாரியான மக்களை அப்பட்டமாக "டேய் சூத்திரப் பயலே, இங்கே வாடா" என்று விளித்துக் கொண்டிருந்த காலம். அப்போது அந்த மாதிரியான பொது மேடைப் பேச்சுக்கள் இந்த மக்களுக்கு அளித்த தன்மானம் என்பது அளவிடற்கரியது. இன்று நினைத்துப் பார்த்தாலும் நம்மை உணர்ச்சி வசப்பட வைப்பது. அந்த இயக்கம்தான் தன்னை சீனிவாச அய்யரின் வீட்டு திண்ணையிலிருந்து உள்ளே அழைத்துச் சென்றது என்று சொன்னவர் இந்த நாட்டின் தேசப்பிதா என்று அழைக்கப்படும் மகாத்மா காந்தி. இன்றைய இளைஞர்கள் புரிந்து கொள்வதற்காக ஒரு திரைப்பட உதாரணம் சொல்கிறேன். பதினாறு வயதினிலே என்று ஒரு திரைப்படம். அதில் கமலகாசனை அத்திரைப்படத்தின் கிளைமாக்ஸ் நெருங்கும் போது கதாநாயகி சொல்வார் இனிமே உன்னை சப்பாணி ன்னு யாராவது சொன்னா சப்புனு அறைஞ்சிறு என்று. கமலகாசன் அதேபோல் ஒருவனை அடிப்பார். திரையரங்கம் கைதட்டலால் அதிரும். திராவிடர் கழக மேடைப் பேச்சாளர்களின் பேச்சுக்கெல்லாம் அன்றைய தமிழகம் அப்படித்தான் உணர்ச்சி பெருக்கோடு அதிர்ந்தது.

இதெல்லாம் நான் பாண்டே என்ற ஒரிசாவையோ, குசராத்தையோ, பீகாரையோ சேர்ந்த இந்து சாதிமானுக்கு சொல்லவில்லை. வந்தாரை யெல்லாம் வாழ வைக்கும் நமதருமை தந்தி டிவி முதலாளிகளுக்கும் (ஆமாம் இன்னிக்கும் சட்டப் படியே நாம் சூத்திரர்கள்தான் அதனால் என்ன?நாம முதலாளி நமக்கு தேவை காசு) என்னருமை தந்தி டிவி நேயர்களுக்கும் சொல்கிறேன்.

Read more: http://viduthalai.in/page1/98885.html#ixzz3W3dxNZdh

தமிழ் ஓவியா said...

முக்கிய அறிவிப்பு

தாலி அகற்றும் விழா மற்றும் மாட்டிறைச்சி விருந்துக்கு ஆதரவு குவிகின்றது

தமிழர் தலைவரால் அறிவிக்கப்பட்டு, திராவிடர் மகளிர் பாசறையால் நடத்தப்படும் தாலி அகற்றும் விழா மற்றும் மாட்டிறைச்சி விருந்துக்கு கழகத் தோழர்களிடமிருந்தும், மக்களிடம் இருந்தும் ஆதரவு குவிகின்றது.

ஏராளமான தோழர்கள் முன் பதிவு செய்துள்ளனர்.

சமூக ஊடகங்களில் இதுவே தவிர்க்க முடியாத விவாதப் பொருளாக மாறிவிட்டது.

இந்த விழாவைப்பற்றி மக்களிடம் கொண்டு செல்லாமல் இருட்டடிப்பு செய்த ஊடகங்கள்கூட தற்போது அதுகுறித்து விவாதிக்கத் தொடங்கியுள்ளன.

எனவே, இரு நிகழ்வுகளுக்கும் முன்பதிவு அவசியம்.

தொடர்பு கொள்ள:

திராவிடர் மகளிர் பாசறை,

9940348533 - 9841263955 - 9524097177

Read more: http://viduthalai.in/e-paper/98905.html#ixzz3W3er7tM8

தமிழ் ஓவியா said...

மாட்டுக்கறியை சாப்பிடக்கூடாதா?

மனிதன் புல், பூண்டைத்தான் சாப்பிட வேண்டுமா?

தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வெ.கி.ச. இளங்கோவன் பதிலடி!


சென்னை, ஏப்.1- மாட்டுக் கறி உணவு என்பது ஏழைகளின் உணவாகும்; அதனை சாப்பிடக்கூடாது என்று சொன்னால், தடை செய்தால் மனிதன் புல், பூண்டைத்தான் சாப்பிட வேண்டுமா? என்று தமிழகக் காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

அவருடைய பேட்டி வருமாறு:

மாட்டுக்கறி என்பது ஏழைகளின் உணவு. அதைச் சாப் பிடக் கூடாது; அதை விற்கக்கூடாது என்று தடை செய்வது, ஏழைகளினுடைய வயிற்றில் அடிப்பது போன்றது. ஏனென் றால், இன்றைக்கு ஆட்டுக்கறி ஒரு கிலோ 500 ரூபாய்க்கும்; கோழிக்கறி ஒரு கிலோ 200 ரூபாய்க்கும் விற்கிறது. ஏழை, எளியோர்களின் சத்தான உணவு மாட்டுக்கறி யாகும். மிகவும் விலை குறைவாகவும் கிடைக்கிறது. அது மட்டுமல்ல, மாட்டுக் கறி சுவையை விரும்பி பலர் சாப்பிடு கிறார்கள். நானும் மாட்டுக்கறியை விரும்பிச் சாப்பிடுவேன்.

திடீரென்று நீங்கள் எல்லாம் அரிசி உணவை சாப்பிடக்கூடாது என்றால் எவ்வளவு மோசமோ, கோதுமை உணவை சாப்பிடக்கூடாது என்றால் எவ்வளவு மோசமோ அதுபோன்றதுதான் மாட்டுக்கறி சாப்பிடக்கூடாது என்பது.

மக்கள் என்ன ஆடு, மாடுகள் சாப்பிடுகின்ற புல், பூண்டுகளையா சாப்பிட முடியும்?

உங்களுக்கு சைவ உணவு பிடிக்கும் என்றால், சைவ உணவை சாப்பிட்டுக் கொள்ளுங்கள்; அசைவ உணவு பிடிக்கும் என்றால் அசைவ உணவை சாப்பிட்டுக் கொள் ளுங்கள்; அதற்கு உங்களுக்கு முழு உரிமை உண்டு. அதனைத் தடுப்பதற்கு யாருக்கும் உரிமையில்லை. பாம்பைச் சாப்பிடவேண்டும் என்று ஆசைப்பட்டாலும், சாப்பிடலாம்; சீனாவில் பாம்புக் கறி உணவை சாப்பிடு கிறார்கள். ஆகவே, மாட்டுக்கறியை நாங்கள் தடை செய்கிறோம் என்று சொல்வது என்பது முழுக்க முழுக்க ஒரு மோசமான செயலாகும்.

தாலி கட்டும் பழக்கம்

இன்னொன்று தாலி கட்டும் பழக்கம் என்பது, உலகத்தில் இந்தியாவில்கூட தமிழ்நாட்டில் நம்முடைய பெண்கள் சிலரிடம்தான் உள்ளது. ஆகவே, தாலி கட்டுவது அவசி யமா? இல்லையா?

என்று விவாதம் நடப்பதில் தவறேதும் கிடையாது. உலகத்தில் இருக்கின்ற பெரும்பான்மையான பெண்கள் தாலி கட்டிக்கொள்வது கிடையாது. சில பெண்கள் மோதிரம் அணிந்து கொள்கிறார்கள்; சில பேர் தங்கச் சங்கிலியைப் போட்டுக் கொள்கிறார்கள்.

ஆகவே, தாலி அணியவேண்டும் என்று கட்டாயப்படுத் துவது மிகவும் தவறு; அதேநேரத்தில், தாலி கட்டக்கூடாது என்று சொல்வதும் தவறு என்று நினைக்கின்றேன்.

தாலி கட்டுவதும், தாலி கட்டாததும் ஒவ்வொரு வருடைய விருப்பத்தைப் பொறுத்தது. ஆகவே, தாலி வேண்டாம் என்று சொல்வது தவறு என்றெல்லாம் சொல்ல முடியாது. சுயமரியாதைத் திருமணங்களில் தாலி கிடை யாது.

ஆகவே, அதற்காக ஊடகங்களை உடைப்போம்; தொலைக்காட்சி அலுவலகத்தை நொறுக்குவோம்; குறிப்பாக சொல்லவேண்டுமென்றால், ஒரு தொலைக் காட்சியில், தாலி வேண்டுமா? வேண்டாமா? என்ற நிகழ்ச்சி ஒளிபரப்புகிறோம் என்றவுடன், நாங்கள் அந்தத் தொலைக்காட்சியை உடைப்போம் என்று சொல்வதை, சுதந்திர நாட்டில் ஏற்றுக்கொள்ள முடியாதது!

எல்லோருக்கும் கருத்துச் சுதந்திரம் உண்டு!

- இவ்வாறு தமிழகக் காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

Read more: http://viduthalai.in/e-paper/98906.html#ixzz3W3ezPykm

தமிழ் ஓவியா said...

பெண் ஒரு சொத்தா?பெண்களுக்குத்தான் கற்பு; ஆண்களுக்கு வலியுறுத்தக் கூடாது என்கின்ற தத்துவமே தனி உடைமைத் தத்துவத்தைப் பொறுத்தது. ஏன் என்றால், பெண் ஆணுடைய சொத்து என்பதுதான் இன்றைய மனைவி என்பவளின் நிலைமை
_ (குடிஅரசு, 1.3.1936)

Read more: http://viduthalai.in/page-2/98908.html#ixzz3W3fKnljy

தமிழ் ஓவியா said...

ஒரே வகை உணவுமுறை பார்ப்பனர்களுக்குள்தான் உண்டா?

தோழர்களே, கழகத் தோழர்களே ஏப்ரல் 14 அய் மறவாதீர்!

அந்நாள் அண்ணல் அம்பேத்கர் பிறந்த வரலாற்று மாட்சிமை நிறைந்த சிறந்த நாள்.

அந்நாளில் தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் அளித்த திட்டம் இன்றைக்கு அங்கு இங்கு எனாதபடி எங்கும் நீக்கமறப் பேசப்படுகிறது.

எந்தத் தொலைக்காட்சியை எடுத்துக்கொண்டாலும் சரி, எந்த ஏடுகளை, இதழ்களைப் புரட்டினாலும் சரி, தமிழர் தலைவர் அறிவித்த அந்தத் திட்டம்தான் பெரிதாகப் பேசப்படுகிறது!

நாம் மாநாடு நடத்துவதாக இருந்தாலும் சரி, தந்தை பெரியார்தான் சொல்லுவார், அவசரப்பட்டு விளம்பரங்களுக் காகச் செலவு செய்யாதீர்கள்! கடைசி நேரத்தில் நமது எதிரி விளம்பரப்படுத்தி விடுவான் - அது போதும்! என்று சொல்லு வார்கள். அந்தத் தலைவரின் தொலைநோக்குதான் என்னே!

அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளில் மாட்டுக்கறி விருந்தும், பெண்களின் அடிமைத்தளையாம் தாலி அகற்றும் நிகழ்ச்சியும் நேர்த்தியாக நடைபெறும் என்று அறிவித்தாலும் அறிவித்தார், அனைத்து மக்களின் பார்வையும் பெரியார் திடல் பக்கமே குத்திட்டு நிற்கிறது.

அந்தப் பொன்னாள் என்று வருமோ என்று வழிமேல் விழி வைத்துக் காத்துக் கிடக்கின்றனர். மாட்டுக் கறி விருந்து நடத்துவது என்பது திராவிடர் கழகத்துக்குப் புதிதான ஒன்றல்ல!

பசுவதைத் தடுப்பு என்ற பெயரால் அகில இந்திய காங்கிரஸ் தலைவராக இருந்த பச்சைத் தமிழர் காமராசர் அவர்களை ஒரு பட்டப்பகலில் (1966, நவம்பர் 7) இந்துத்துவா வெறியர்கள், ஜனசங்கத்தினர் (இன்றைய பாரதீய ஜனதா கட்சியினர்தான்) நிர்வாண சாமியார்கள், சங்கராச்சாரியார்கள் ஒன்று திரண்டு - உயிரோடு கொளுத்தத் திட்டமிட்டனர். மயிரிழையில் உயிர் தப்பினார்.

பசுவதையைத் தடுப்பது என்ற பேரால் மனித உயிரைக் குடிக்க மூர்க்கமாக எழுந்த மூட மதியினர் அவர்கள்.

அந்த நேரத்தில் தந்தை பெரியார் தமிழ்நாட்டில் போர்ச் சங்கு ஊதினார். கத்தியை எடுப்போம் - காவல் புரிவோம் என்று கர்ச்சனை செய்தார். நாடெங்கும் மாட்டுக்கறி விருந்தினை நடக்கச் செய்தார்.

இந்தியா முழுமையும் மாட்டிறைச்சிக்குத் தடை செய்வதற்கான சட்டத்தை இந்துத்துவா ஆட்சியான பி.ஜே.பி. தலைமையில் அமைந்துள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி கொண்டுவரவிருக்கும் காலகட்டத்தில், தந்தை பெரியார் அன்று இருந்து வழிகாட்டியதுபோல தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் மாட்டுக்கறி விருந்துக்கு அழைப்புக் கொடுத்துள்ளார்.

அனேகமாக மத்தியில் இருக்கும் இந்துத்துவா ஆட்சிக்கு இந்தச் சட்டம்தான் கடைசி மணியை அடிக்கப் போகிறது.

உலகம் முழுவதும் 62 சதவிகிதம் மக்கள் மாட்டிறைச்சி சாப்பிடக் கூடியவர்கள், இந்தியாவில் உழைப்பாளி மக்களுக் கான மலிவான சத்து நிறைந்த உணவு மாட்டிறைச்சியே! மக்களுக்கு மூன்று வேளை உணவைக் கொடுப்பதற்கு வக்கற்ற அரசு, ஏழை எளிய உழைப்பாளி மக்களின் உணவுப் பிரச்சினையில் கைவைத்தால் அதன் விளைவை அந்த ஆட்சி அனுபவிக்கத்தானே வேண்டும்!

மாட்டிறைச்சித் தொழிலை நம்பி வாழும் கோடானுகோடி மக்களுக்கான வேலை வாய்ப்பு எங்கிருந்து குதிக்கப் போகிறது? மாட்டிறைச்சியால் இந்தியாவுக்குக் கிடைக்கும் வருவாயை எப்படி ஈடுகட்டப் போகிறார்கள் என்ற கேள்விகளுக்கெல்லாம் பதில் இல்லை.

தமிழ் ஓவியா said...


பசு - இந்து மதத்தின் புனிதத் தாய் (கோமாதா) என் கிறார்கள். பசு புனிதம் என்பதால்தான் அதன் கறியை உண்ணவேண்டும் என்று சொல்லுவதும் இதே இந்து சாஸ்திரம்தான்!

இந்து மதம் என்றால், ஒரே கலாச்சாரம் உண்டா? மாமிசம் சாப்பிடுபவர்கள் உண்டு, காய்கறி சாப்பிடுபவர்கள் உண்டு. இந்துக் கடவுள்களுக்குப் படைப்பதில்கூட வேறுபாடு உண்டே!

பார்ப்பனத்தனமான கடவுள்களுக்குப் போடப்படும் படையல் என்ன? சூத்திர, பஞ்சம மக்களின் கடவுள்களுக்குப் போடப்படும் படையல் என்ன?

பார்ப்பனர்களில்கூட வங்காளத்துப் பார்ப்பனர்களுக்கு முக்கிய உணவு மீன்தானே! மறுக்க முடியுமா? இந்த நிலையில், ஒருவர் உண்ணவேண்டிய உணவைத் தீர்மானிக்க இன்னொரு மனிதனுக்கு உரிமை கிடையவே கிடையாது.

நாட்டு மக்களின் சிந்தனையைத் திசை திருப்பிட மத்திய அரசு இதுபோன்ற பிரச்சினைகளில் மூக்கை நுழைக்கிறது - இதில் நாட்டு மக்கள் ஏமாந்துவிடக் கூடாது.

கோவில்களில் கோசாலைகளில் நேர்த்திக் கடனுக்காக அளிக்கப்பட்ட பசுக்களின் நிலை என்ன? அவ்வப்போது செய்திகள் வெளிவந்தகொண்டுதானே உள்ளன. அங்குப் பசுக்கள் சரிவரப் பராமரிக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாற்று எழுந்தது உண்டே - மறுக்க முடியுமா?

அங்கிருந்து கூட பசு மாடுகள் திருட்டுத்தனமாக கசாப் புக்கு அனுப்பப்படுகின்றன என்ற செய்திகளும் வந்ததுண்டே! அதற்கெல்லாம் என்ன பதில்?

நாள் ஒன்றுக்கு 60 லிட்டருக்குமேல் மேனாட்டுப் பசுக்கள்பால் கறக்கின்றன. இந்தியக் கோமாதாக்களின் கறவை அளவு 3 லிட்டரைத் தாண்டுவதில்லையே! அதிக பால் தரும் பசுவை மற்ற நாட்டுக்காரன் கோமாதா என்று கூறுவதில்லை.

ஆனால், பாலுக்குப் பதிலாக நமது காசை, பொருளா தாரத்தைக் கறந்து கொண்டிருக்கும் இந்திய நாட்டுப் பசுக்கள் மட்டும் கோமாதாவாம். சென்னை போன்ற பெருநகரங்களில் இந்தக் கோமாதாக்கள் அன்றாட உணவே சுவரொட்டிகள்தான்; (இப்பொழுதெல்லாம் மாடுகளின் நடமாட்டம் கட்டுப்படுத்தப் பட்டுள்ளது).

உணவுக்குப் பயன்படுத்தப்படுவதன் மூலமாகத்தான் நம் நாட்டுக் கால்நடைகள் கொஞ்சம் இலாபகரமாக இருக்கின்றன என்பதுதான் உண்மை!

அதையும் தட்டிப் பறித்துவிட்டால், கால்நடைகளைக் காப்பாற்றத்தான் மனிதன் வாழவேண்டுமே தவிர, மனிதர் களுக்குக் கால்நடைகளால் பயன் இல்லை என்பதுதான் நடைமுறை உண்மை.

இந்த உண்மைகளையெல்லாம் நாட்டு மக்களுக்கு உணர்த்திடவும், மக்கள் வாழ்க்கையில் விளையாடும் இந்துத்துவாவாதிகளை அடையாளம் காட்டவும் - அண்ணல் அம் பேத்கர் அவர்களின் பிறந்த நாளான ஏப்ரல் 14 அய் பயன் படுத்திக் கொள்வோம்! வாரீர்! வாரீர்!!

Read more: http://viduthalai.in/page-2/98909.html#ixzz3W3fW2U39

தமிழ் ஓவியா said...

கல்விஎன்றபோர்வையில் இந்துத்துவக் கோட்பாட்டைத்திணித்தல்

பள்ளிகளின் பாடத் திட்டத்தில் சேர்ப்ப தற்காக பகவத் கீதையில் இருந்து சில சுலோகங்களைப் பரிந்துரைக்கவேண்டும் என்று மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலை, ராஷ்டிரிய சுயம் சேவக் சங்கத்தின் கோட்பாட்டாளரான தீனநாத் பாத்ரா தலைமையிலான அரி யானா மாநில அரசின் கல்விக் கலந்தாய் வுக் குழு, வலியுறுத்தியுள்ளது என்ற ஒரு செய்தி கடந்த பிப்ரவரி மாதத்தில் வெளி வந்துள்ளது.

இதில் ஆச்சரியப்படுவதற்கு ஏதுமில்லை. காவியுடைக் கட்சியினரின் செயல் திட்டத்தின் வரிசையில் ஒரு பகுதியே இது. முதலில் இந்தியாவுக்கு வருகை தந்த அல்லது மோடி விஜயம் செய்த நாடுகளின் தலைவர்களுக்கு மோடி கீதை நூலைப் பரிசாக அளித்தது; அதனையடுத்து, பக வத் கீதை தேச நூலாக (ராஷ்டிரிய கிரந்த்) பிரகடனப்படுத்தப்பட வேண்டும் என்று சுஷ்மா ஸ்வராஜ் கோரியது; அதனைத் தொடர்ந்து அரியானா மாநிலத்தின் கல்வி கலந்தாய்வுக் குழுத் தலைவராக பத்ரா நியமிக்கப்பட்டது ; இப்போது பகவத் கீதையின் பாடல்களை பள்ளிப் பாடத் திட்டத்தில் சேர்க்க முடிவு செய்திருப்பது அனைத்துமே அவர்களின் செயல்திட்டத் தில் படிப்படியாக நடந்தேறும் நாடகங்கள். இவை அனைத்துமே பா.ஜ.க.வின் கோட் பாட்டை ஒட்டியவைதான்.

ஆனால், மதச் சார்பின்மை என்ற கோட்பாட்டை வலி யுறுத்தும் இந்திய அரசமைப்பு சட்டத் திற்கும், நம் நாட்டில் கல்விக் கொள்கைக் கும் ஏற்றதா இது?

1986 இல் உருவாக்கப்பட்டு, 1992 இல் திருத்தியமைக்கப்பட்ட தேசிய கல்விக் கொள்கைதான் இன்று நாட்டில் நடை முறையில் இருக்கும் கல்விக் கொள்கை யாகும். மதச்சார்பின்மை, சமதர்மம், ஜன நாயகம், தொழில் தர்மம் என்ற லட்சியங் கள் மேலும் மேலும் நெருக்கடிகளுக்கு உள்ளாகி வருகின்றன என்பது கவலை யுடன் கவனிக்கப்படுகிறது (NPE -86,1.11).

தேசிய ஒருமைப்பாட்டு வளர்ச்சிக்கும், அறிவியல் மனப்பான்மைக்கும், சுதந்திர மான உணர்வுகள், மனம் மற்றும் சிந்தனை வளர்ச்சிக்கும் பங்களித்து வழிகாட்டுவ தன் மூலம், மதச் சார்பின்மை மற்றும் ஜனநாயகப் பண்புகளை வளர்ப்பதாக கல்வி இருக்கவேண்டும் என்று அது மேலும் வலியுறுத்துகிறது (ibid -2.2).

இந் தியாவின் பொதுவான கலாச்சாரப் பாரம் பரியம், சமத்துவக் கோட்பாடு, ஜனநாய கம், மதச்சார்பின்மைக்கோட்பாடு ஆகிய பண்புகளை வளர்ப்பதாகவும், அறிவியல் மனப்பான்மையை உருவாக்கி வளர்ப்ப தாகவும் அமைந்த ஒரு பாடத்திட்ட வடி வமைப்பினை ஆதாரமாகக் கொண்டதாக இந்த தேசியக் கல்வி நடைமுறை இருக் கும். இத்தகைய மதச்சார்பற்ற மதிப்பீடு களில் இருந்து சற்றும் பிறழாத ஒரு வழியிலேயே அனைத்து கல்வி செயல் திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்படும் (ibid --3.4).

தமிழ் ஓவியா said...

மேலே எடுத்துக்காட்டப்பட்டுள்ளவற் றில் இருந்து, தற்போது நடைமுறையில் இருக்கும் கல்விக் கொள்கை சமத்துவக் கோட்பாடு, மதச்சார்பின்மைக்கோட்பாடு, ஜனநாயகம், அறிவியல் மனப்பான்மை ஆகியவற்றை வளர்ப்பதையே இலக்காகக் கொண்டிருக்கிறது என்பதும், அனைத்து கல்வி செயல்திட்டங்களும் மதச்சார் பின்மை என்ற கோட்பாட்டினை ஒட்டியே நடைமுறைப்படுத்தப்படுவதையே விரும்பு கிறது என்பதும் எந்தவித சந்தேகத்திற் கும் இடமின்றி தெளிவாகத் தெரிகிறது. அப்படியானால், பள்ளிப் பாடத் திட்டத்தில் பகவத் கீதை சுலோகங்களைச் சேர்ப்பது என்ற அரியானா அரசின் முடிவு இத் தகைய மதிப்பீடுகளுக்கு ஏற்புடையதாக இருக்கிறதா?

முறையாகக் கூறுவதானால், மதச்சார் பின்மைக் கோட்பாடு என்பது அரசின் கொள்கைகளில், முடிவுகளில், அவை நடைமுறைப்படுத்தப்படுவதில் மதம் மற்றும் மதம் சார்ந்த கருத்துகளை ஏற்றுக் கொள்வதை நிராகரிக்கும் ஒரு கோட்பாடு என்றே சொல்லலாம். அரசின் முடிவுகளி லும், செயல்பாடுகளிலும் மதத்திற்கு இட மளிக்காமல் வைத்திருக்கும் ஒரு கோட் பாடே மதச்சார்பின்மைக் கோட்பாடாகும். ஆனால், நாமோ, அதற்கு பதிலாக, அனைத்து மதங்கள் மீதும் அரசு சமமான மரியாதை வைத்திருக்கிறது என்ற பொருள் தரும் சர்வமத சாம்பவா என்றே மதச்சார்பின்மை என்ற கோட்பாட்டுக்கு விளக்கம் அளித்து வருகிறோம். பகவத் கீதையில் இருந்து தேர்ந்தெடுக்கப் பட்ட சுலோகங்களைப் பள்ளி மாணவர்களுக் குக் கட்டாயமாகக் கற்பிப்பது, மதச்சார் பின்மைக் கோட்பாட்டை மீறுவதாகாது என்ற வாதத்தை முன்வைப்பதற்கு, இத் தகைய விளக்கம் அளிப்பதை பயன்படுத் திக் கொள்ள இயலும். எவ்வாறாயினும், இந்த வாதம் தனக்குள் தானே முரண் பட்டது என்பதுடன், அதன் சில பாதிப்பு கள் முற்றிலுமாக நடைமுறைப்படுத்தப்பட இயலாதவையாக இருக்கின்றன.

தமிழ் ஓவியா said...


அத்தகைய உள்முரண்பாடுகளை நாம் ஒதுக்கித் தள்ளிவிட்டாலும் கூட, சமத் துவம் என்ற கொள்கையுடன் இணைந்த சர்வ தர்ம சம்பவா கோட்பாடு, பாடத் திட்டத்தில் சேர்ப்பதற்கு எந்த ஒரு மத நூலில் இருந்தும் தேர்ந்தெடுக்கப்பட இய லாது என்பதை வலியுறுத்துகிறது. அப்படி யானால், இந்திய மக்கள் பின்பற்றும் இஸ்லாம், ஜைனம், சீக்கியம், புத்தமதம், கிறித்துவ மதம், ஜூடாமதம், ஜொராஸ்டி ரேனிசம் ஆகிய அனைத்து மதங்களின் நூல்களில் இருந்தும் தேர்ந்தெடுக்கப் படும் பாடல்கள் பாடத் திட்டத்தில் சேர்க் கப்படவேண்டும். இதைச் செய்யாமல் இருப்பதோ, அல்லது இவற்றை ஏற்றுக் கொள்ளாமல் இருப்பதோ, அரசின் கொள்கை முடிவாகவும், செயல்பாடாகவும் இருக்கும் சர்வ தர்ம சம்பவா என்ற கோட்பாட்டை மறுப்பதாகவும் கூட ஆகும். பகவத் கீதையைத் தவிர வேறு எந்த மத நூலின் பாடல்களும் பள்ளிப்பாடத் திட்டத் தில் சேர்க்க இதுவரை முடிவெடுக்கப்பட வில்லை என்றே தெரிகிறது. எனவே, பாடத் திட்டத்தில் கீதையை சேர்ப்பது என்ற திட்டம் நிச்சயமாக மதவாதத் தன்மை கொண்டதும், தேசியக் கல்விக் கொள்கைக்கு எதிரானதும் ஆகும்.

தமிழ் ஓவியா said...

காரண காரியங்களை நுணுக்கமாகப் பகுத்தாய்வு செய்வதன்மூலம் மட்டுமே சுதந்திரமான மனமும் சிந்தனையும் ஏற் படுவது இயலக்கூடும். அனைத்து நம்பிக் கைகளும், அவை ஏற்றுக் கொள்ளப்படு வதற்கு முன்பு, பகுத்தறிவின் அடிப்படை யில் பரிசீலனை செய்யப்படவேண்டும் என்று நுணுக்கமான காரண காரிய பகுத் தாய்வு கோருகிறது. ஒரு தனிப்பட்ட மனி தனின் வாழ்க்கையைக் கடந்து, சமூகத்தில் செல்வாக்கையும் பாதிப்பையும் ஏற்படுத்த இயன்றவையாக அந்த நம்பிக்கைகள் இருக்குமானால், அவற்றால் ஒவ்வொரு வரும் பாதிக்கப்படுவதனால், இந்த நுணுக் கமான காரணகாரிய பகுத்தாய்வு வெளிப் படையாக மேற்கொள்ளப்படவேண்டும். அதாவது, கீதையோ அல்லது வேறு எந்த ஒரு மத நூலோ பாடத் திட்டத்தில் சேர்க் கப்படுமானால், அறிவியல், அரசியல் மற்றும் சமூகக் கோட்பாடுகள், கொள்கை களுக்கு இணையாக அது நுணுக்கமான காரணகாரிய பகுத்தாய்வுக்கு உட்படுத் தப்பட வேண்டும்.

ஒழுக்க மதிப்பீடுகள் என்று ஏற்றுக் கொள்ளப்பட்ட, பகுத்தறிவின் அடிப்படை யில் ஏற்றுக் கொள்ள இயன்ற கீதையின் சுலோகங்கள் மட்டுமே பாடத் திட்டத்தில் சேர்க்கப்பட தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன என்ற வாதத்தை அரசு முன்வைக்கக் கூடும். ஆனால், அனைத்து மதங்களின் நூல்களிலிருந்தும், மனித இனத்துக்கு நன்மை பயக்கக்கூடிய இத்தகைய ஒழுக்க மதிப்பீடுகளைத் தேடி எடுத்து அளிக்கவும் இயலும். இவ்வாறு மதிப்பீடுகள் தேர்ந் தெடுக்கப்படுவது, அவற்றின் ஒட்டு மொத்த பண்பையும், தத்துவத்தையும் புரிந்து கொள்வதற்கு எந்த விதத்திலும் உதவாது. அவ்வாறு செய்ய முற்படுவது, தங்களால் புரிந்து கொள்ள முடியாத ஒரு மதத்தின் மத நூலை ஏற்றுக் கொள்ளு மாறு இளம் மனங்களில் திணிப்பதாக அமைவதாகும். இத்தகைய ஒரு கல்வி முறைதான் மத தீவிரவாதத்துக்கான அடித்தளம் அமைப்பதாகும்.

தமிழ் ஓவியா said...


ஏற்றுக் கொள்ளப்படத் தக்க கீதையின் போதனைகளைக் கற்றுக் கொள்ளவும், மதபோதனைகளைக் கட்டாயமாகத் திணிப்பதைத் தவிர்ப்பதற்குமான ஒரே வழி, மதிப்பீடுகள் மற்றும் அவற்றின் நியா யத்தன்மை பற்றிய ஒரு தீவிரமான வினாவை எழுப்புவதன் மூலம், அவற்றை நுணுக்கமாகப் படித்துப் பார்ப்பதுதான். எடுத்துக்காட்டாக, மிகச் சிறந்தவை என்று போற்றத் தக்க பெருந்தன்மை, நேர்மை, அடக்கம் பணிவு, அகிம்சை, பொறுமை, ஆசிரியர்பால் மரியாதை, நாணயம், உறுதிப்பாடு, சுயகட்டுப் பாடு, போன்ற மதிப்பீடுகளை எடுத்துக் கொள்வோம் (Fosse, Lars Martin, The Bhagavad Gita 13.7).

இந்த மதிப்பீடு களைக் குழந்தைகள் போற்றி பின்பற்ற வேண்டும் என்று நாம் விரும்பினால், அவற்றை ஏற்றுக் கொள்வதற்குத் தகுதி யான காரணங்களை அவர்கள் புரிந்து கொள்ளவும் வேண்டும். இந்த பிரபஞ்சம், மனித உயிர்கள், அழிவற்ற புருஷா அல் லது ஆன்மாவை ஒப்புக்கொண்டு அவற் றின் அடிப்படையில் செயல்படும் மனி தரின் செயல்பாடுகள், ஆதியில் தோன்றிய பிராகிருதி, பிராகிருதியின் முக்குணங்கள், ஆன்மாவின் பந்தம், பிரம்மன் மற்றும் இவை போன்ற பலப்பலவற்றைப் பற்றிக் கூறும் ஒரு கோட்பாட்டில் இருந்துதான் கீதை அளிக்கும் பகுத்தறிவு வெளிப்படு கிறது. இத்தகைய கோட்பாடுகளைப் பற்றி விளக்கங்கள் அளிக்காமல், கீதையில் தெரிவிக்கப்பட்டுள்ள மதிப்பீடுகளை ஏற்றுக்கொள்வதற்கான வாதங்களைக் கட்டமைக்க இயலாது.

தமிழ் ஓவியா said...

ஆனால் இக்கோட்பாடுகளை ஏற்றுக் கொள்வதில் குறைந்தது மூன்று மிக முக்கியமான பிரச்சினைகள் உள்ளன. முதலாவது, இந்த வாதம், 16-17 வயதுக் குட்பட்ட பள்ளிக் குழந்தைகளால் புரிந்து கொள்ளவே முடியாதபடி தந்திரம் மிக்க வையாகவும், சிக்கல் நிறைந்தவையாகவும் இருப்பவையாகும்.. 11 ஆம் வகுப்பிற்கு முன்னதாக இத்தகைய மதிப்பீடுகளை கீதையின்மூலம் கற்பிப்பது என்பது கட்டா யமாகத் திணிக்கப்படுவது என்றுதான் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட இயலும்.

இரண்டாவதாக, பிரபஞ்ச தோற்ற திட்டத்திற்கு ஆதரவாக முன்வைக்கப் படும் வாதங்கள் நம்பிக்கை என்பதன் மீது தொங்கிக்கொண்டிருப்பவையாகும். இத் திட்டத்தை ஏற்றுக்கொள்ளச் செய்வதற் கான பலமான பகுத்தறிவு வாதம் ஏது மில்லை. எனவே, சில மக்களால் நம்பப் படும் நடைமுறை சேராத கோட்பாட்டுத் திட்டமாகத்தான் அதனைக் கற்பிக்க இயலுமேயன்றி, உண்மையானது என்ற அடிப்படையில் அதனைக் கற்பிக்க இய லாது. நமது பள்ளிகளில் இதனை நடை முறைப்படுத்துவது மிகமிக கடினமான செயலாகும்.

தமிழ் ஓவியா said...


மூன்றாவதாக, வர்ண ஜாதி அடிப் படையினை நியாயப்படுத்துவதற்காகவும், அவரவர் ஜாதிக்கென நிர்ணயிக்கப்பட்ட கடமைகளை மக்கள் அர்ப்பணிப்பு உணர் வுடன் செய்யவேண்டும் என்ற வாதத்தை முன் வைப்பதற்காகவும்கூட இந்த பிர பஞ்ச தோற்ற திட்டம் பயன்படுத்தப்படு கிறது. இந்த நான்கு வர்ண ஜாதி நடை முறையைக் கொண்டு வந்தே தான்தான் என்று கிருஷ்ண பரமாத்மா அறிவித்தாராம் (ibid -4.13).

பெண்கள், வியாபாரிகள், விவ சாயிகள், பணியாளர்கள், தொழிலாளர்கள் ஆகிய அனைவரும் பாபயோனியில் இருந்து பிறந்தவர்கள் என்று அறிவிப்ப தற்கு இக் கட்டமைப்பு பயன்படுத்திக் கொள்ளப்படுகிறது (ibid -9.32).

இத்த கைய வர்ணஜாதிகளின் நடத்தை, மனப் பான்மை, அணுகுமுறை மற்றும் கடமைகள் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளவை மாற்றப் பட இயலாதவையாகும். அமைதி, சாந்தம், சுயகட்டுப்பாடு, எளிமை, தூயதன்மை, பொறுமை, நேர்மை, நாணயம், பேரறிவு, புரிந்துகொள்ளும் தன்மை, மற்றும் மத நம்பிக்கை ஆகியவற்றைப் பார்ப்பனர் களிடம் இயல்பாகவே தோன்றியவையாக இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கப் படுகிறது (ibid -18.42).

வீரம், ஆற்றல், உறுதித் தன்மை, செயல்திறன், போர்க் களத்திலிருந்து பின்வாங்காத துணிவு, பெருந்தன்மை மற்றும் அதிகாரம் செலுத் துவது ஆகியவை க்ஷத்திரியர்களின் இயல் பாகும் (ibid -18.43).

விவசாயம், கால்நடை வளர்ப்பு, வர்த்தகம் ஆகியவற்றை வைசி யர்கள் மேற்கொள்ளவேண்டும். பிற வர்ணத்தவர்களுக்கு சேவை செய்வதே சூத்திரர்களின் கடமையாகும் (ibid -18.44).

அவரவர் வர்ண ஜாதிக்காக விதிக் கப்பட்ட, நிர்ணயிக்கப்பட்டகடமைகளை அர்ப்பணிப்பு உணர்வுடன் செய்வதன் மூலம் மக்கள் முழுமையான வளர்ச்சியை அடைகின்றனர் என்று அது கூறுகிறது. வழிபாட்டின் மூலமாக மட்டுமே ஒரு மனி தன் தனது முழுமையான நிலையை எட்டு கிறான். இவ்வாறான இந்த வர்ணஜாதி மக்களின் விதியின் மீது கடவுளிடமிருந்து நேரடியாகப் பெறப்பட்ட ஒரு மத்திரை பதிப்பிக்கப்படுகிறது. ((ibid -18.45-46).

பண்டைய இந்துக்களின் மத சிந்த னையைப் புரிந்து கொள்வதற்காகக் கீதையைப் படிப்பதில் பிரச்சினை ஏது மில்லை. ஆனால் கீதை கோருவது போல குறை காண முடியாத ஒரு வழிகாட்டியாக கீதையை ஏற்றுக் கொள்வதில்தான் பிரச் சினையே உள்ளது. எதை நீ செய்யவேண் டும்; எதை நீ செய்யக்கூடாது என்பதை நீ முடிவு செய்யும்போது, இப்புனித நூலே உனது வழிகாட்டியாக இருக்க வேண்டும். (னை -16.24). அரியானா பள்ளிக் கல்வி பாடத் திட்டத்தில் கீதையைச் சேர்ப்பதில் பல பிரச்சினைகள் உள்ளன.

மற்ற மதங்களை விட மேலானதாக ஒரு மதத்தைக் கருது வது பற்றி விவரிப்பவை அவை. தங்கள் கோட்பாட்டினைத் திணிக்கும் ஒரு செயல் திட்டமே அது. கற்பிக்கும் கலையில் ஆசிரி யர்களுக்கும் பல இடையூறுகளை உரு வாக்கும் இத்திட்டம், வர்ணக் கோட்பாட் டின் மூலம் ஜாதிப் பிரிவினைகளைப் பற்றி கட்டுப்பாடு ஏதுமின்றி பிரச்சாரம் செய் வதாகும். எனவே கீதையைப் பள்ளிப் பாடத் திட்டத்தில் சேர்ப்பது என்ற அரி யானா அரசின் முடிவு தற்போது நடை முறையில் உள்ள தேசியக் கல்விக் கொள் கைக்கும், நாட்டின் மதச்சார்பற்ற தன் மைக்கும் எதிராகச் செல்வதேயாகும் என்பது நிச்சயமாகத் தெரிகிறது.

உயர் ஜாதி இந்துக்களின் ஆதிக்க நிலையைப் பறைசாற்றும் விருப்பத்தையே நோக்க மாகக் கொண்டது இந்த முடிவு என்றே தோன்றுகிறது. ராஜஸ்தான் பள்ளிகளில் மாணவர்கள் கட்டாயமாக சூரிய நமஸ் காரம் செய்யவேண்டும் என்று ஆணை யிட்டது, மகாராஷ்டிராவில் மாட்டிறைச்சி உண்பதற்குத் தடை விதித்தது போன்ற மற்ற முடிவுகளுடன் கீதையைப் பாடத் திட்டத்தில் சேர்க்கும் இதனையும் சேர்த் துப் பார்க்கும்பொழுது, வேறு எந்த முடிவுக் கும் நம்மால் வர முடியவில்லை. இத்தகைய முடிவுகளுக்கு எதிராக சமூகத்தின் எந்தப் பக்கத்திலிருந்தும் போதுமான அளவுக்கு எதிர்ப்பு காட்டப்படாமல் இருப்பது மிகப் பெரிய இழப்புக்கேடேயாகும்.

- ரோஹித் தங்கர்

நன்றி: தி இந்து 30.03.2015

தமிழில் த.க.பாலகிருட்டிணன்

Read more: http://viduthalai.in/page-2/98910.html#ixzz3W3fhoLRO

தமிழ் ஓவியா said...

இந்தியன் சயின்ஸ் காங்கிரசின் அபத்தம்
தமிழ்நாட்டில் மதவாத சக்தியை அனுமதியோம்!

சி.பி.எம். மாநில செயலாளர் தோழர் ஜி.இராமகிருஷ்ணன் முழக்கம்

சென்னை, ஏப்ரல் 1- தமிழ்நாட்டில் மதவாத இந்துத்துவா சக்திகளை அனுமதியோம் என்று முழக்கமிட்டார் தமிழக சி.பி.எம்.செயலாளர் தோழர் இராமகிருஷ்ணன் அவர்கள்.

சென்னை பெரியார் திடலில் 17.3.2015 அன்று தமிழக மூதறிஞர் குழுவின் சார்பில் மதவாதமும் - இந்திய அரசியலும் எனும் தலைப்பில் நடைபெற்ற சிறப்புக் கருத்தரங்கத்தில் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் அவர்கள் ஆற்றிய உரை வருமாறு:

எங்களுடைய கட்சியினுடைய நிகழ்வு ஒன்றுக்கு நான் செல்லவிருப்பதால், நான் தொடக்கத்தில் உரையாற்று கிறேன் என்று சொல்லி நான் இங்கே உரையாற்றுகிறேன். சுருக்கமாக என்னுடைய கருத்துகளை நான் முன்வைக்க விரும்புகிறேன்.

தமிழ் ஓவியா said...

மதவாத சக்திகளும், இந்திய அரசியலும் என்ற தலைப்பில் இந்த நிகழ்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

என்னுடைய புரிதலில், மதச்சார்பின்மையை வலியுறுத் துவது தான் இந்தத் தலைப்பினுடைய பொருள் என்று நான் கருதுகின்றேன்.

மதப் பழைமைவாதம் என்பது எந்த வடிவத்தில் வந்தாலும், அதனை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது

தமிழ் ஓவியா said...

மதவாத சக்திகள், மதப் பழைமைவாதம் என்று சொல்கின்றபோது, எந்த மதப் பழைமைவாதமாக இருந்தாலும், நாம் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்துப் பழைமைவாதமாக இருந்தாலும், இஸ்லாமிய பழைமைவாதமாக இருந்தாலும், சீக்கியப் பழைமை வாதமாக இருந்தாலும், மதச்சார்பின்மையை ஏற்றுக்கொள் பவர்கள், மதச்சார்பின்மையைப் பாதுகாக்கவேண்டும் என்று கருதக்கூடிய இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் மதப் பழைமைவாதம் என்பது எந்த வடிவத்தில் வந்தாலும், அதனை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது; ஏற்றுக்கொள்ளவும் கூடாது.

ஆனால், இன்றைக்கு இந்தியாவில் ஒரு மதப் பழைமைவாதம் என்று சொல்கின்றபோது, பிரதானமாக மதச்சார்பின்மைக்கு ஆபத்தை உருவாக்கக்கூடிய, மத நல்லிணக்கத்திற்கு ஊறுவிளைவிக்கக்கூடிய, மக்கள் ஒற்றுமைக்குப் பாதகத்தை உருவாக்கக்கூடிய ஒரு மதப் பழைமைவாதம் என்று சொல்கின்றபோது, அது இந்து மதப் பழைமைவாதம்; குறிப்பாக, ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவாரங் கள் போன்ற அமைப்புகளின் தலைமையிலான மதப் பழைமைவாதம், மதவாத சக்திகள் என்று வருகிறபொழுது, அதனைப் பற்றித்தான் நாம் குறிப்பாக இங்கே விளக்க வேண்டிய, உரையாற்றவேண்டிய அவசியம் உள்ளது என்பதை நான் வலியுறுத்தக் கடமைப்பட்டிருக்கிறேன்.

இந்திய அரசியலில் ஒரு வலது சாரி திருப்பம் ஏற்பட்டுள்ளது

குறிப்பாக, கடந்த ஆண்டு மோடி தலைமையில், பாரதீய ஜனதா கட்சி தலைமையில் மத்தியில் ஒரு ஆட்சி அமைந்தபொழுது, அதுவும் அறுதிப் பெரும்பான் மயோடு அந்த ஆட்சி அமைந்தபோது, நான் சார்ந்துள்ள இயக்கத்தின் சார்பாக, எங்களுடைய கட்சியினுடைய மத்தியக் குழு, அந்த அரசியல் வளர்ச்சிப் போக்கை மதிப்பீடு செய்து, பி.ஜே.பி. தலைமையில் ஒரு ஆட்சி அமைந்துள்ளது என்பது, இந்திய அரசியலில் ஒரு வலது சாரி திருப்பம் ஏற்பட்டுள்ளது என்பதையே அது எடுத்துக்காட்டுவதாக எங்களுடைய கட்சி கூறியது.
வலதுசாரி திருப்பம் இந்திய அரசியலில் ஏற்பட்டுள்ளது. அந்த வலதுசாரி திருப்பம் என்பது இரண்டு வகையில் - ஒன்று அதனுடைய இந்துத்துவா, வகுப்புவாத அம்சம். இன்னொன்று அந்த மத்திய அரசு கடைப்பிடிக்கக்கூடிய பிற்போக்குத்தனமான நவீன தாராளமய பொருளாதார கொள்கை. நான் இப்பொழுது அந்தப் பொருளாதார கொள்கைக்குச் செல்லவிரும்பவில்லை.

பி.ஜே.பி.யினுடைய, ஆர்.எஸ்.எஸினுடைய, சங் பரிவார் அமைப்புகளினுடைய அந்த மதவாத வகுப்புவாத கருத்தியல் என்று வருகிறபொழுது, நாம் ஏன் அதனை எதிர்க்கிறோம்? மதச்சார்பின்மைக்கு ஆபத்து என்று நாம் எப்படி சொல்கிறோம்? உங்களுக்கெல்லாம் தெரியாதது அல்ல; பல மதங்களைச் சேர்ந்த மக்கள் வாழக்கூடிய இந்தத் தேசத்தில், இந்துத்துவ அமைப்புகள், ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார் அமைப்புகள் ஒரு இந்துமத கருத்தியலை, இந்துத்துவா கருத்துக்களை இந்த நாட்டில் வாழக்கூடிய பிற மதத்தைச் சார்ந்தவர்களின்மேல் திணிக்கக்கூடிய, பிற மதத்தைச் சார்ந்தவர்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று வலியுறுத்தக்கூடிய, வன்முறையால் திணிக்கக்கூடிய அந்த முயற்சியை, கடந்த காலத்தில் இத்தகைய அமைப்புகள் கடைப்பிடித்தாலும்கூட, சங் பரிவார் அமைப்புகள் திணிப்பதற்கு முயற்சி எடுத்தாலும்கூட, கடந்த ஆண்டு மோடி தலைமையில் மத்தியில் ஆட்சி அமைந்த பிறகு, வேகமாக, பல்வேறு வடிவங்களில், ஆர்.எஸ்.எஸ்., சங் பாரிவார் போன்ற அமைப்புகள், இந்துத்துவா கருத்தியலைப் புகுத்தக்கூடிய அந்த நடவடிக்கையை நான் உங்களுக்கு விளக்கவேண்டிய அவசியம் கிடையாது. அன்றாடம் பத்திரிகைகளில் வெளிவரக்கூடிய செய்தியாகும்.

தமிழ் ஓவியா said...

ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார் அமைப்புகளுக்கு எதிராக, வகுப்புவாதத்திற்கு எதிராக, அந்த மதவாத சக்திகளுக்கு எதிராகக் குரல் எழுப்புவது என்பது, அந்தக் கட்சியைத் தேர்தலில் தோற்கடிப்பது என்பது மட்டுமல்ல, அது ஒருவகையான எதிர்ப்பு. உங்களுக்கெல்லாம் தெரியாதது அல்ல. பல ஆண்டுகளுக்கு முன்பு, அந்த இயக்கத்திற்குத் தலைவராக இருந்த அத்வானி அவர்கள் சொன்னார்கள், நாங்கள் தேர்தலில் வெற்றி பெறவேண்டும் என்று கருதுவது, ஆட்சிக்கு வரவேண்டும் என்பதற்காக அல்ல; அதிகாரத்தைப் பிடிப்பதற்காக அல்ல. இந்தியாவை, ஒரு இந்துத்துவா நாடாக மாற்றவேண்டும் என்பதே எங்களுடைய அடிப்படை நோக்கம் என்று அத்வானி எப்பொழுது கூறினாரோ, அந்த அடிப்படையில், அந்த வழியில் செயல்படுகிறவர்கள்தான், இன்று மத்தியில் ஆட்சியில் உள்ள பி.ஜே.பி. மற்றும் சங் பரிவார் அமைப்புகளும். என்றைக்கு ஆட்சிப் பொறுப்புக்கு வந்தார்களோ, என்று அமைச்சரவையை அமைத்தார் களோ, என்று மத்தியில் அதிகாரத்திற்கு வந்தார்களோ, அன்றைய தினத்திலிருந்து எல்லாத் துறைகளிலும் தங்களுடைய ஆட்களை நுழைப்பது; தங்களுடைய கருத்தியலைப் புகுத்துவதில் மிகவும் உறுதியாக, மிகவும் வேகமாக அவர்கள் நேரிடையாக, மறைமுகமாக அவர்கள் செய்துவரக்கூடிய பணி என்பது, மதச்சார்பின்மைக்கு ஆபத்தினை உருவாக்கும் என்பதை நான் உங்களுக்குச் சொல்லவேண்டிய அவசியம் இல்லை.

தமிழ் ஓவியா said...


இந்தியன் கவுன்சில் ஆஃப் இஸ்டாரிக்கல் ரிசர்ச் - மத்திய அரசின் அங்கமாக இருக்கக்கூடிய அந்த வரலாற்று ஆராய்ச்சி நிறுவனம் என்பது, பல பேராசிரியர்கள், பல வல்லுநர்கள் போன்ற மகத்தான மனிதர்கள் எல்லாம் தலைமை தாங்கிய அமைப்பாகும். ஆனால், இந்தியன் கவுன்சில் ஆஃப் இஸ்டாரிக்கல் ரிசர்ச் அந்த வரலாற்று ஆய்வு நிறுவனத்தில், ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சார்ந்தவர்களை, தலைவராக, நிருவாகிகளாக, தொடக்கத் திலேயே பி.ஜே.பி.யினர் புகுத்தினர்.

நேஷனல் புக் டிரஸ்ட் மத்திய அரசாங்கத்தினுடைய கட்டுப்பாட்டில் செயல்படக்கூடிய ஒரு பதிப்பகத்திற்குத் தலைவராக அவர்களுடைய ஆளை போட்டார்கள்.
இண்டியன் சயின்ஸ் காங்கிரஸ்

அடுத்து, ஆண்டுதோறும் நடைபெறக்கூடிய இண்டி யன் சயின்ஸ் காங்கிரஸ், அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சார்ந்தவர் களின் உரையை நான் உங்களுக்குச் சொல்லவேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் படித்திருப்பீர்கள், கேட்டிருப் பீர்கள். அந்த அமைப்பின் பெயர், இண்டியன் சயின்ஸ் காங்கிரஸ்; ஆனால், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சார்பாக கலந்துகொண்டு பேசியவர்கள் பேச்சு, அறிவியலுக்கு முரணானதாகும்.

இளமையிலேயே குழந்தைகளைப் பிடிக்கவேண்டும்; ஒயிட் பேப்பரில் எழுதினால்தான், சீக்கிரத்தில் பதியும் என்று சொல்வதுபோல், கல்வித் திட்டங்களைப், பாடத் திட்டங்களை மாற்றி, தங்களுடைய இந்துத்துவா கருத்துகளை அதில் திணிப்பதற்குப் பாடத் திட்டங் களையும் மாற்றியிருக்கிறார்கள். ஊடகத் துறைகளிலும் தங்களுடைய ஆட்களை நுழைக்கிறார்கள். இப்படி வருகின்றபொழுது, இதனால் நமக்கு என்ன ஆபத்து? மதச்சார்பின்மைக்கு என்ன ஆபத்து? நாட்டிற்கு என்ன ஆபத்து? மத நல்லிணக்கத்திற்கு என்ன ஆபத்து? நாட்டின் வளர்ச்சிக்கு என்ன ஆபத்து? என்ற கேள்விகள் எழலாம்.

உங்களுக்கெல்லாம் தெரியாததல்ல; அந்த அமைப்பைச் சார்ந்தவர்கள் பேசுவதெல்லாம், ஸ்டெம் செல் என்று சொல்லக்கூடிய குருத்தணு என்பது, சமீப காலத்தில் அமெரிக்காவில் நவீனமான ஒரு அறிவியல் கண்டுபிடிப்பாகும். சிகிச்சைக்குப் பயன்படுத்தலாம். இந்தியாவிற்கு இன்னும் வந்து சேரவில்லை. ஆனால், ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சார்ந்தவர்கள் சொன்னார்கள், இந்த ஸ்டெம்செல் என்று புதிய கண்டுபிடிப்பு என்பது, இன்று அமெரிக்காவில் கண்டுபிடித்ததல்ல; புராணக் காலங்களிலேயே பல நூறு ஆண்டுகளுக்கு முன்பாகவே இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டது என்று சொல்லி, அதற்குப் பல உதாரணங்களை, பொருந்தாத உதாரணங் களை, ஏற்றுக்கொள்ள முடியாத உதாரணங்களைச் சொல்கிறார்கள்.

அறிவியலுக்கு முரணானது; அறிவியலுக்கு எதிரானது

பாண்டவர்கள் அய்வர் என்றால், கவுரவர்கள் நூறு பேர் என்று சொல்லும்பொழுது; அந்த நூறு குழந்தைகள் பிறந்தது என்பதே, அன்றைக்குக் குழந்தை இல்லை; வயிற்றில் இடித்துக் கொண்டார்கள்; திரவத்தை நூறு பாத்திரத்தில் ஊற்றி வைத்தார்கள்; கவுரவர்கள் நூறு பேர் பிறந்தார்கள்; அதுதான் குருத்தணு என்று, ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சார்ந்தவர்கள், பொதுக்கூட்டத்தில் பேசவில்லை, அந்த இண்டியன் சயின்ஸ் காங்கிரஸ் கருத்தரங்கில் பேசுகிறார் கள். இது அறியவிலுக்கு முரணானது; அறிவியலுக்கு எதிரானது. தர்க்க இயலுக்கு ஏற்றுக்கொள்ள முடியாது.

அடுத்து, இந்தியப் பிரதமர் பேசுகிறார், பிளாஸ்டிக் சர்ஜரி என்பது அந்தக் காலத்திலேயே கண்டுபிடிக்கப் பட்டது; விமானத்தை ரைட் சகோதரர்கள் கண்டுபிடிக்க வில்லை; அந்தக் காலத்தில் நம்மவர்கள் கண்டுபிடித் தார்கள் புராணங்களில் என்கிறார். இவையெல்லாம் ஒரு நகைப்புக்குரியதாகத் தோன் றலாம்; ஆனால், இது உருவாக்கக்கூடிய ஆபத்து என்பது, விளைவுகள் என்பது, நாட்டைப் பின்நோக்கி இழுப்பது மட்டுமல்ல, அறிவியல் வளர்ச்சிக்கு முரணானது; அறி வியல் வளர்ச்சிக்குப் புறம்பானது; அறிவியல் வளர்ச்சிக்கு எதிரானது.

எப்படி? இந்தியா என்பது அய்ரோப்பிய நாடுகளைவிட ஒரு நீண்ட வரலாற்றை கொண்ட நாடு. நீண்ட வரலாற் றைக் கொண்ட இந்த நாடு, ஏன் அய்ரோப்பிய நாடுகளை விட அறிவியல் வளர்ச்சியில் பின்தங்கியிருக்கிறது? ஏன் மேலை நாடுகளைவிட பொருளாதார வளர்ச்சியில் பின்தங்கியிருக்கிறது? இங்கேதான் நாம் சிந்திக்கவேண்டிய அவசியம் இருக்கிறது.

தமிழ் ஓவியா said...


அய்ரோப்பிய நாடுகளில் குறிப்பாக, இங்கிலாந்தில், கிரீசில், இத்தாலியில் ஒரு 400, 500 ஆண்டுகளுக்கு முன்பாக, அந்த நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானிகள் புரூனோ எரித்துக் கொல்லப்பட்டார்; கலிலியோ, அவர் வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டு கொல்லப்பட்டார்; கோபர் நிக்கஸ் என்ன தவறு செய்தார்? புரூனோ என்ன தவறு செய்தார்? கலிலியோ செய்த தவறு என்ன? கலிலியோ என்ன சொன்னார்? அவர் கண்டுபிடித்த விஞ்ஞான உண்மையை, உலகிற்குச் சொல்ல முயற்சித்தபோது, அதனை அந்த நாட்டிலிருந்த மதக் குருமார்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அவரை அடித்து, துன்புறுத்தி, வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டு இறந்தார். அதுபோல, புரூனோ, அதுபோல கோபர் நிக்கஸ்.

அறிவியல் வளர்ந்தது! நாடு வளர்ந்தது! பொருளாதாரம் வளர்ந்தது!

அறிவியல் கண்டுபிடிப்புகளை, மதம் தடுக்கிறது; சர்ச் தடுக்கிறது; மத குருமார்கள் தடுக்கிறார்கள். மன்னராட்சி இருந்த அந்தக் காலத்தில், மன்னர் அதிகாரத்தில் இருந்தாலும்கூட, மதம்தான், மத குருமார்கள்தான், அந்த மத அமைப்புகள்தான் அந்த நாட்டை ஆண்டது; அதுதான் ஆதிக்கம் செலுத்தியது. அப்படி ஆதிக்கத்தை செலுத்திய போது அறிவியல் வளரவில்லை; மத ஆதிக்கம் செலுத்தும் போது பொருளாதாரம் வளரவில்லை; அறிவியல் கண்டு பிடிப்புகளோடு மக்கள் மத்தியில் எழுச்சி ஏற்படுகின்ற பொழுது, நாடாளுமன்றத்திற்கும், மன்னருக்கும் நடை பெற்ற மோதல், நாடாளுமன்றத்திற்கும், மதத்திற்கும் நடை பெற்ற மோதல், நாடாளுமன்றத்திற்கும் மத ஆதிக்கத் திற்கும் நடைபெற்ற மோதல் அந்த எழுச்சி ஏற்படுகின்ற பொழுது, நாடாளுமன்றம் வெற்றி பெற்று, மதம் ஒரு மனிதனுடைய தனிப்பட்ட பிரச்சினை; அரசியல் தலையீடு கூடாது; ஆதிக்கம் செய்யக்கூடாது; அறிவியல் கண்டு பிடிப்புகளைத் தடை செய்யக்கூடாது என்ற ஒரு பெரிய எழுச்சி ஏற்பட்ட பிறகுதான், செக்குலரிசம் என்ற மதச்சார்பின்மை என்ற அந்தக் கொள்கை உருவாக்கமே, மதத்திற்கு மதம் பிடித்துவிடக்கூடாது; மதம் அரசியலில் கலக்கக்கூடாது; அரசியல் தலையீடு கூடாது என்று அந்த மதத்தின் ஆதிக்கத்தை 400, 500 ஆண்டுகளுக்கு முன்பாக, அய்ரோப்பிய நாடுகளில் மக்கள் முடிவு செய்தார்களே, அறிவியல் விடுதலை பெற்றது; அறிவியல் வளர்ந்தது; நாடுவளர்ந்தது; பொருளாதாரம் வளர்ந்தது.

கிட்டத்தட்ட மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பவுத்த மதத்தை அழித்தார்களோ, சனாதன இந்து மத ஆதிக்கம் ஏற்பட்டதோ அதனால் அறிவியல் வளர்ச்சி தடைப்பட்டது; விஞ்ஞானம் தடைப்பட்டது; பொருளாதார வளர்ச்சி தடைப்பட்டது; இன்றும் மேலை நாடுகளுக்குப் பின்னால் பின்தங்கியிருக்கக்கூடிய அந்த நிலைமைக்குக் காரணம் ஜாதி, மத ஆதிக்கம் என்பதால்தான்.

தமிழ் ஓவியா said...

அப்படிப்பட்ட மோசமான சூழலை, இன்றைக்கு மீண்டும் உருவாக்க விரும்புகிறது சங் பரிவார அமைப்புகள், ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சார்ந்த அமைப்புகள்; பா.ஜ.க., விசுவ இந்து பரிசத் போன்ற அமைப்புகள்தான் அறிவியல் என்று சொன்னாலும், அறிவியல் கண்டுபிடிப்புகள் என்று சொன்னாலும், ஒரு முற்போக்குக் கருத்துகளைச் சொன் னாலும், மதச் சார்பின்மைக்கான கருத்துகளைச் சொன்ன லும், அவைகளைத் தடுக்கக்கூடிய, மறுக்கக்கூடிய, அழிக்கக்கூடிய மோசமான நடவடிக்கைகளை அந்த அமைப்புகள் எடுத்து வருவதை நான் உங்களுக்கு விளக்கவேண்டிய அவசியம் கிடையாது. இன்றைக்கு நாட்டில் பல இடங்களில் நீங்கள் பார்க்கலாம்; திருச்செங் கோட்டில் பெருமாள் முருகன் என்ற ஒரு ஆசிரியர், படைப்பாளி, அவர் படைத்த மாதொருபாகன் என்னாயிற்று என்பது உங்களுக்குத் தெரியும்.

அடுத்து புதிய தலைமுறை தொலைக்காட்சியில், ஒரு பொருள் குறித்து விவாதிப்பதற்காக முடிவெடுத்து, அந்த நிகழ்ச்சியை ஒளி - ஒலிப்பதிவு செய்து, அந்த நிகழ்ச்சியை மகளிர் நாளன்று ஒளிபரப்ப இருந்தபொழுது, அதனை எதற்காக தாக்குகிறார்கள்? எதற்காக இவையெல்லா வற்றையும் செய்கிறார்கள்? ஆக, ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சார்ந்தவர்கள் நாடு முழுவதும் அன்றாடம் அவர்கள் சொல்லக்கூடிய பல்வேறு கருத்துகள் எப்படி இருக்கின்றன என்பது உங்களுக்குத் தெரியும்.

நாடு முழுவதும் மாடுகளைக் கொல்வதைத் தடுக்கக்கூடிய சட்டத்தைக் கொண்டுவரவேண்டுமாம்!

நேற்று ஒருவர் சொல்லியிருக்கிறார், அவர் ஆர்.எஸ். எஸினுடைய பொதுச்செயலாளர். பி.ஜே.பி. ஆட்சி அமைந்த பிறகு, நாங்கள் பிரதமர் மோடியைச் சந்தித்தோம். நாடு முழுவதும் மாடுகளைக் கொல்வதைத் தடுக்கக்கூடிய சட்டத்தைக் கொண்டுவரவேண்டும் என்று நாங்கள் வலியுறுத்தி இருக்கிறோம். மாநிலங்களும் அத்தகைய சட்டத்தைக் கொண்டுவரவேண்டும்.

மகாராஷ்டிராவில், கிட்டத்தட்ட 18 ஆண்டுகாலமாக அந்தச் சட்டத்தை நிறைவேற்றி, அப்படியே வைத்திருந் தார்கள். இப்பொழுது தூசி தட்டி அதனை எடுத்து, குடியரசுத் தலைவரிடம் கையெழுத்து வாங்கி, அமுலுக்கு வந்தது என்று அறிவித்துவிட்டார்கள். மாடுகளை வெட்டு வது மட்டும் குற்றமல்லவாம்; யாராவது மாட்டிறைச்சியை வைத்திருந்தாலே அய்ந்து ஆண்டுகள் தண்டனை; ரூ.10 ஆயிரம் அபராதமாம். இப்படி ஏராளமாக உதாரணங்க ளைச் சொல்லலாம்.

தமிழ் ஓவியா said...

நண்பர்களே, இப்படி ஒவ்வொன்றாக, நாள்தாறும், இப்படியான கூத்துகள் நடைபெறுகின்றன. திடீரென்று சுப்பிரமணியசாமி ஒன்று சொல்கிறார். மசூதிகள் எல்லாம் வழிபடும் தலங்கள் அல்ல; அவற்றை இடிக்கலாம் என்று சொல்பவரை, கிறுக்கன் என்று சொல்லாமல் வேறு எப்படி சொல்ல முடியும்?

அன்றாடம் இவர்கள் இப்படி சொல்லக்கூடிய ஏராளமான விஷயங்கள்; ஆங்கிலத்தில் சொல்வார்கள், They have method in the magness என்று. அதை சொல்வதற்கு முக்கியமான காரணம், மத்திய அரசு சமர்ப்பித்த, அந்த ஆண்டின் நிதிநிலை அறிக்கை குறித்தோ, அல்லது மக்களவையில் நிறைவேற்றியிருக்கக் கூடிய நிலம் கையகப்படுத்தும் சட்டம் குறித்தோ, பொதுத் துறை நிறுவனங்களைத் தனியாருக்கு தாரை வார்க்கக்கூடிய அத்தகைய மத்திய அரசின் நடவடிக்கை குறித்தோ, வேறு பல பொருளாதார கொள்கை குறித்தோ மக்கள் விவாதிப்பதற்குப் பதிலாக, மாதொரு பாகன் நாவல் சரியா? தவறா? புதிய தலைமுறை தொலைக்காட்சியில் தாலி பற்றிய விவாதம் என்பது சரியா? தவறா? பசுவதைச் சட்டம் கொண்டு வந்தது சரியா? தவறா? காந்திஜியைக் படுகொலை செய்த கோட்சேவுக்கு சிலை வைப்பது சரியா? தவறா?

நாட்டு மக்கள் மத்தியில் ஒரு வகுப்புவாத ரீதியில் அந்தக் கருத்தியலை விவாதிக்கத் தூண்டக்கூடிய ஒரு மோசமான அந்த நடைமுறையை இந்த பி.ஜே.பி. கடைப்பிடித்து வரும்பொழுது, ஏதோ இது மக்கள் ஒற்றுமையைப் பாதிப்பது மட்டுமல்ல, மத மோதலை உருவாக்குவது மட்டுமல்ல, மதக்கலவரத்தை உருவாக்கு வது மட்டுமல்ல, மாறாக, பொருளாதார வளர்ச்சிக்கு, அறிவியல் வளர்ச்சிக்கு இது முரணாக, பாதிக்கக்கூடிய அறிவு வளர்ச்சிக்கு எதிரான ஒரு வகுப்புவாத கொள் கையை, கருத்தியலை ஆர்.எஸ்.எஸ். அங்கே திணிக்க முயற்சிக்கின்ற போது, பி.ஜே.பி., திணிக்க முயற்சிக்கின்ற போது, இந்துத்துவ அமைப்புகள் திணிக்க முயற்சிக்கின்ற போது, நம்முடைய கடமையெல்லாம் மதச்சார்பின் மையைக் காக்க, மத நல்லிணக்கத்தைக் காக்க ஒரு வலுவான குரலெழுப்பவேண்டிய அவசியம் உள்ளது. அதன் ஒரு பகுதிதான், நடைபெற்றுக் கொண்டிருக்கக்கூடிய கருத் தரங்கமாகும்.

இந்தக் கருத்தரங்கத்தில் நான் சொல்ல விரும்புவது, இத்தகைய ஒரு அறிவார்ந்த சபையில், மதவாத சக்திகளை எதிர்ப்பதற்கு, வகுப்புவாத சக்திகளை எதிர்ப்பதற்கு நாம் நடத்தக்கூடிய இத்தகைய நிகழ்ச்சிகள் மட்டுமல்ல, அறிவியல் ரீதியாக, உங்களுக்குத் தெரியாதது அல்ல; அவர்களுடைய நடவடிக்கைகள் எல்லாம், தொலைக் காட்சியைத் தாக்குவது, வெடிகுண்டுகளை எறிவது போன்ற நடவடிக்கைகள் மட்டுமல்ல. இவையெல்லாம் நாம் நேரிடையாக நம் கண்களால் பார்ப்பது. நாம் பார்க்க முடியாதபடி, அவர்களுடைய கருத்தியல்களை பல்வேறு வடிவங்களில், பாடத் திட்டங்கள் மூலமாக, ஊடகங்கள் மூலமாக, வரலாற்றுத் துறை மூலமாக, பல்வேறு வடிவங் களில் அந்த வகுப்புவாத கருத்தியல்களை புகுத்துவதற்கு ஏராளமான வேலைகளைச் செய்து வருகிறார்கள். பல்லாயிரக்கணக்கான பள்ளிகளை நடத்துகிறார்கள்.

மக்கள் மத்தியில், ஓர் அறிவியல் பார்வையை உருவாக்கவேண்டிய கடமை நமக்கு உள்ளது


நம்முடைய பணி, வகுப்புவாதத்தை நேரிடையாக எதிர்ப்பதோடு மட்டுமல்ல, இத்தகைய நிகழ்ச்சிகளை நடத்துவதோடு மட்டுமல்ல, நாட்டு மக்கள் மத்தியில், குறிப்பாக தமிழகத்து மக்கள் மத்தியில், ஓர் அறிவியல் பார்வையை உருவாக்கவேண்டிய கடமை நமக்கு உள்ளது என்பதை நான் நினைவுபடுத்தக் கடமைப்பட்டிருக்கிறேன்.

தமிழ் ஓவியா said...

இங்கே நீதியரசர் மதிப்பிற்குரிய மோகன் அவர்கள் இருக்கிறார்கள், நீதிபதி பரஞ்ஜோதி இருக்கிறார்; மற்ற நம் தலைவர்கள் எல்லாம் இருக்கிறார்கள்.

Fundamental Duties:
It shall be the duty of every citizens of India-
to develop the scientific temper, humanism and the spirit of inquiry and reform;

நாட்டிலுள்ள ஒவ்வொரு குடிமகனின் கடமை என்பது அறிவியல் பார்வையை வளர்ப்பது; மனித நேயத்தை வளர்ப்பது; எத்தகைய பிரச்சினையாக இருந்தாலும், கேள்வி கேட்பது, விசாரிப்பது, சீர்திருத்தத்திற்காக முயற்சி எடுப்பது.

நண்பர்களே, 1959 இல் பண்டித நேரு அவர்கள் பிரதமராக இருந்தபொழுது, சான்ஸ்கிரிட் நிறுவனத்தில் பணியாற்றிய ஒருவர், பண்டித நேருவிடம் ஒரு புத்தகத்தைக் கொடுத்து, சாதாரணமாக ஒரு புத்தகத்தை வெளியிடுவதற்கு முன்னால், என்னுடைய தாய்க்கு அர்ப்பணிக்கிறேன், தந்தைக்கு அர்ப்பணிக்கிறேன், அதற்கு சமர்ப்பனம், இதற்கு சமர்ப்பனம் என்று சொல்வார்கள். அவர் என்ன சொன்னார் என்றால், நான் ஜோதிட சம்பந்தமாகப் புத்தகம் எழுதியிருக்கிறேன். இந்தப் புத்தகத்தை உங் களுக்கு அர்ப்பணிக்கவேண்டும் என்று கருதுகிறேன் என்று நேருவிடம் அந்தப் புத்தகத்தைக் கொடுக்கிறார். அப்படி கொடுக்கும்பொழுது அந்த நபர் நேருவிடம் சொல்கிறார், எனக்குத் தெரியும் உங்களுக்கு ஜோதிடத்தில் நம்பிக்கை இல்லை என்று. இருந்தாலும், உங்களுக்கு நான் இந்தப் புத்தகத்தை அர்ப்பணிக்க விரும்புகிறேன் என்று சொன்னார்.

ஜோதிடத்தில் எனக்கு நம்பிக்கை இல்லை: பிரதமர் நேரு

உடனே நேரு அவர்கள், மன்னித்துக்கொள்ளுங்கள், ஜோதிடத்தில் எனக்கு நம்பிக்கை இல்லை என்பதை நீங்களே தெரிந்திருக்கிறீர்கள். ஆகவே, எனக்கு இந்தப் புத்தகத்தை அர்ப்பணிக்கவேண்டாம் என்று சொல்லி விட்டார்.

நண்பர்களே, மத்திய மனிதவளத் துறை அமைச்சராக உள்ள ஒரு பெண்மணி, ராஜஸ்தான் மாநிலத்திற்குச் சென்று, இரண்டு மணிநேரம் ஒரு ஜோதிடரைச் சந்தித்துவிட்டு, வெளியே வரும்பொழுது, ஒரு செய்தியாளர் அவரிடம் கேட்கிறார்,

தமிழ் ஓவியா said...

அறிவியலால் சாதிக்க முடியாததை, ஜோதிடம் சாதிக்குமாம்

நீங்கள் பி.ஜே.பி.யினுடைய தனிப்பட்ட தலைவர் மட்டுமல்ல, இந்தியாவின் மனித வளத்துறை அமைச்சர், உங்களுடைய தலைமையின்கீழ்தான் இந்தியாவில் பல அறிவியல் பல்கலைக் கழகங்கள் செயல்பட்டு வருகின்றன. மகத்தான ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அறிவியல் பல்கலைக் கழகங்களுக்குத் தலைமை தாங்கக்கூடிய மனிதவளத் துறை அமைச்சராகிய நீங்கள், ஜோதிடரைச் சந்தித்தீர்களே, இரண்டு மணிநேரம் பேசினீர்களே, அதனுடைய முக்கியத்துவம் என்னவென்று அவர் கேட்டபொழுது,
அந்த அமைச்சரான பெண்மணி சொல்லியிருக்கிறார், அறிவியலால் சாதிக்க முடியாததை, ஜோதிடம் சாதிக்கும் என்று பதில் சொல்லியிருக்கிறார்.

அறிவியல் பார்வையை உண்டாக்கவேண்டும் என்று அரசியல் சட்டம் சொல்கிறது. அந்த அரசியல் சட்டத்தின் மீது சத்தியம் செய்து அமைச்சர் பதவி ஏற்றுக்கொண்ட, மனிதவளத் துறை அமைச்சர் சொல்கிறார், அறிவியலை விட, ஜோதிடம் சரியாகக் கணித்துச் சொல்லும் என்று.

தமிழ் ஓவியா said...


200 மாணவர்களுடைய ஜாதகங்களைப் பார்த்து ஜோதிடர்கள் சொன்னது சரியாக இல்லை

சமீபத்தில் ஒரு ஆய்வு நிறுவனம், ஜோதிடத்தைப்பற்றி ஆய்வு செய்வதற்காக, 200 மாணவர்களை எடுத்துக் கொண்டார்கள்; 100 மாணவர்கள் திறமையுள்ள மாணவர் கள்; மற்றொரு 100 மாணவர்கள் மாற்றுத் திறனாளி மாண வர்கள், மனவளர்ச்சிக் குன்றிய மாணவர்கள். இந்த 200 மாணவர்களுடைய ஜாதகங்களைக் கலந்து, ஜோதிடர் களை அழைத்து, 200 ஜாதங்களைக் கொடுத்து, இதில் யார் சிறந்த மாணவர்கள், யார் பின்தங்கிய மாணவர்கள் என்பதை நீங்கள் பார்த்து சொல்லவேண்டும் என்று சொன்னார்கள்.

அந்த 200 மாணவர்களுடைய ஜாதகங்களைப் பார்த்து ஜோதிடர்கள் சொன்னது சரியாக இல்லை.

ஆகவே, ஜோதிடம், ஆரூடம் பொய் என்று நிரூபிக்கப்பட்ட இந்த நாட்டில், ஒரு மனிதவளத் துறை அமைச்சர் ஜோதிடத்தைப்பற்றி சொல்கிறார். இந்த ஜோதிடம், இந்துத்துவா போன்ற மூட நம்பிக்கைகளுடன் தொடர்புடையது. அறிவியலுக்குப் புறம்பானது.

அறிவியல் என்று வருகின்றபொழுது, ஒரு தகவலை உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன்
ஆல்பர்ட் அய்ன்ஸ்டீன் என்பவர் ஒரு பெரிய சயின்டிஸ்ட். நோபல் பரிசு பெற்றவர்.

அறிவியல் என்றால் என்னவென்று அவர் சொல்கிறார்,

If all truth can be accident by common sense science could not have evaled

நம் பொது புத்தியிலிருந்து எல்லாவற்றையும் புரிந்துகொள்ள முடிந்தால், அறிவியல் தேவைப்பட்டி ருக்காது; அறிவியல் வளர்ந்திருக்காது என்று சொல்கிறார்.

காரல் மார்க்ஸ் வேறு மாதிரியாக சொல்கிறார்,

If the appearance and the essence of going side there is no need for science

தோற்றமும், உள்ளடக்கமும் ஒன்றாக இருக்குமாயின், அறிவியல் தேவைப்பட்டிருக்காது. தோற்றம் சூரியன் கிழக்கே உதிக்கிறது; மேற்கே மறைகிறது. அது உண்மை யல்ல, உண்மையிலேயே சூரியன் கிழக்கே உதித்து, மேற்கே மறைந்தால், அறிவியல் தேவைப்பட்டிருக்காது என்று காரல் மார்க்ஸ் சொல்கிறார்.

அந்த அடிப்படையில், மதமாக இருந்தாலும், கொள்கையாக இருந்தாலும், எந்தப் பிரச்சினையாக இருந்தாலும், அறிவியல் ரீதியில், விஞ்ஞான ரீதியில் ஆய்வு செய்யக்கூடிய அத்தகைய முறைக்கு மாறாக, அறிவிய லுக்கு நேர்மாறாக, இன்று மத்தியில் ஆட்சிக்கு வந்திருக் கக்கூடிய பி.ஜே.பி, மோடி அரசு, சங் பரிவார் போன்ற அமைப்புகள் நாடு முழுவதும் அன்றாடம் அவர்கள் சொல்லக்கூடிய, தெரிவிக்கக்கூடிய, அறிவிக்கக்கூடிய கருத்துகள் என்பது, கடந்த காலத்தில் அந்த அமைப்புகள் செய்தன என்று, மத்திய அரசாங்கத்தினுடைய அந்த ஆதிக்கத்தின் அடிப்படையில், செல்வாக்கின் அடிப்படை யில், அத்தகைய இந்துத்துவா கருத்துகளைப் புகுத்துகின்ற பொழுது, இந்த நிகழ்ச்சியின் சார்பாக, தமிழக மூதறிஞர் குழு நடத்துகின்ற இந்த நிகழ்ச்சியின் சார்பாக, நாம் சொல்லவேண்டியது, மதம் ஒரு மனிதனுடைய தனிப்பட்ட உரிமை; எனக்கு மத நம்பிக்கையில்லை. கடவுள் நம்பிக்கை இல்லை. இன்னொருவருக்கு மத நம்பிக்கை இருக்கலாம்; கடவுள் நம்பிக்கை இருக்கலாம்.

ஆகவே, மதம் என்பது, ஒரு தனிப்பட்ட பிரச்சினை என்று வருகின்றபொழுது, மதம் அரசியலில் கலக்கக் கூடாது; அரசியலில் தலையிடக்கூடாது; அதிகாரத்தில் இருக்கக்கூடிய அந்தக் கட்சியைச் சேர்ந்தவர், ஒரு குறிப்பிட்ட மதத்தை, ஒரு குறிப்பிட்ட கலாச்சாரத்தை, இந்துத்துவாவைத் திணிப்பதற்கு முயற்சி எடுக்கின்ற பொழுது, அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்று வரு கின்றபொழுதுதான், இந்தக் கருத்தரங்கத்தின் தலைப்பு மதவாத சக்திகளும், இந்திய அரசியலும் என்று வருகின்ற பொழுது, மத வழிபாடு என்பது மனிதனுடைய தனிப்பட்ட உரிமை. ஆனால், அந்த மதத்தை அரசியலில் கலந்து, அரசியல் லாபம் தேடுவதற்காக, மதத்தைப் பயன்படுத் தக்கூடிய, மதவெறியை உருவாக்கக்கூடிய முயற்சியில் ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி., போன்ற அமைப்புகள் முயற்சிக் கின்றபொழுது, இந்துத்துவா அமைப்புகள் முயற்சிக்கின்ற பொழுது, நான் நிறைவாகச் சொல்ல விரும்புகிறேன், தமிழகத்து மண்ணில் இந்துத்துவாவிற்கும், ஆர்.எஸ். எஸிற்கும் இடங்கொடுக்கக்கூடாது; காலூன்ற அனுமதிக்கக் கூடாது என்பதற்கு, இத்தகைய கருத்தரங்கங்கள் பெரிதும் பயன்படும் என்று சொல்லி, இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, அறிவார்ந்த தலைவர்கள் வீற்றிருக்கக்கூடிய இந்த மேடையில் பங்கேற்று, எனக்கு சில கருத்துகளைச் சொல்ல வாய்ப்பளித்த தமிழக மூதறிஞர் குழுவிற்கு என்னுடைய நன்றியைத் தெரிவித்து நான் விடைபெறு கிறேன், நன்றி, வணக்கம்!

- இவ்வாறு இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் அவர்கள் உரையாற்றினார்.

Read more: http://viduthalai.in/page-4/98926.html#ixzz3W3gOZJCH

தமிழ் ஓவியா said...

அக்கிரகாரச் செருக்கை அய்யாவின் அறிவாயுதத்தால் முறியடிப்போம்

தமிழ் கூறும் நல்லுலகில் மனு தர்ம அடிப் படையில் பெண்களை அடிமைகளாக, பேரிளம் பெண்களை போகப் பொருளாக மொத்தத்தில் பிள்ளை பெறும் இயந்திரமாக ஆக்கி அடிமைப் படுத்திய காலத்தில் மனித உணர்வுகளின் மாட்சிமை தாங்கிய குறளாக அன்று தந்தை பெரியார், பெண் ஏன் அடிமையானாள்? என்ற கேள்வியை எழுப் பினார். அக்ரகாரத்துப் பெண்களுக்கும் அய்யாவின் கேள்வி சரியாகப் பட்டது.

பொட்டு வைத்து, பூ வைத்து பொட்டுக் கட்டிய தேவதாசி முறையினை ஆவேசமாக எதிர்த்த டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி, இராமாமிர்தம் அம்மையார் அவர்களின் ஆவேசக் குரலின் உள்ளே கூட அய்யாவின் கொள்கை ஒலித்தது. அய்யா என்ற அந்த உயிர் எழுத்து, ஆண்களிடம் இருந்து பெண்களைப் பாதுகாத்தது மட்டுமல்லாமல், ஆண்டவனிடத்திலிருந்தும், அக்ரகாரத்திலிருந்தும் பெண்களின் உரிமையைப் பாதுகாத்தது.

தாலி என்பது பெண்களுக்கு எந்த வகையில் வேலியாக உள்ளது? எங்களைக் காப்பதில் தாலி வேலியாக உள்ளதா? பாலியல் வன்முறை செய்யும் போது பெண்களின் கற்புக்கு தாலி வேலியாக இருந்து இருக்கிறதா? கணவனே மனைவியைக் கொலை செய்யும் போது தாலி பாதுகாத்திருக்கிறதா? அரசு அலுவலகத்திலே, காவல் நிலையத்திலே, அங்காடிகளிலே, சிற்றின்ப சீறல்கள் எழுந்த போது தாலி வேலியாக இருந்திருக்கின்றதா?

ஒரு காலத்தில் பெண்கள் கல்வி அறிவு இல்லாத, பகுத்தறிவு சிந்தனை இல்லாத போது, பெண் திருமணம் ஆனாள் என்ற அடையாளமாக தாலி இருந்தது (அடிமையாக்க).

இன்றோ, ஆகாய விமானத்தில் இருந்து அறிவுசார் தொழில்நுட்பம் வரையிலும் பெண்கள் முன்னேறி இருக்கிறார்கள். கல்வி, வேலை வாய்ப்புகளில், ஆட்சி அதிகாரத்தில் பெண்கள் அளப்பரிய சாதனைகளைச் செய்து வருகிறார்கள்.

தாலியை விரும்பினால் போட்டுக் கொள். விரும்பாவிட்டால் அகற்றி விடு. அறிவாய்ந்து வாழ்வது, அடிமையாக வாழ்வதும் அவரவர் விருப்பம்.

தாலி அகற்றும் நிகழ்ச்சி என்பது அறிவாய்ந்த பெண்களின் விருப்பத்தின்பாற்பட்டது. இதுவே அய்யா வீரமணி அவர்களின் அறைகூவல்.
இதையறியா மழைக்காலத்து மண்டூகங்களாய் தமிழ் நாட்டு அரசியலில் பால பாடம் படிக்கும் பக்குவமற்ற சிலர் (சரத்குமார்) சந்து முனையில் சிந்து பாடுகிறார்கள். அவரவர் வாழ்க்கையை அவர்களே திரும்பிப் பார்க்கட்டும்.

தாலிக்கு அவர்கள் கொடுத்த மரியாதை அவர்களுக்கே தெரியாதே? அய்யாவின் கொள்கைக்கு தமிழ்நாட்டின் பெண்கள் துணையாக நிற்போம்!

அய்யாவைக் கண்டிக்கும் அக்ரகாரச் செருக்கை அய்யா பெரியாரின் அறிவாயுதம் கொண்டு முறியடிப்போம்!

- கலைமகள் இளையபாரதி
பாப்பாநாடு (உரத்தநாடு)
மாவட்ட மகளிரணி அமைப்பாளர் (திமுக)

Read more: http://viduthalai.in/e-paper/98939.html#ixzz3W46i1YIe

தமிழ் ஓவியா said...

இனி பெண்கள் ஆம்ஆத்மி சின்னத்தை கையில் எடுக்க வேண்டியது தானா?


- ஊசிமிளகாய்

அரசியல் தலைவர்களும் சரி, சில சமூக அமைப்பின் தலைவர்களும் சரி, மகளிரைக் கொச்சைப்படுத்திப் பேசுவதில், ஒரு வகை இன்பம் காணும் போக்கு அண்மையில் மிகவும் மலிந்து வருவது வேதனையானதும், வெட்கக்கேடானதும் ஆகும்.

இதை வன்மையாகக் கண்டிக்க வேண்டும். மகளிர்கள் எக்கட்சியினர் - கட்சியேயல்லாத வர்களானாலும் கண்டித்து ஆங்காங்கே ஆர்ப்பாட்டங்கள், கண்டனப் பேரணி நடத்தப்படல் வேண்டும். நடத்துகிறார்கள்.

பாலின வன்புணர்ச்சியைவிட மனோதத் துவப் போர் போல இது கிளம்பியுள்ளது.

பா.ஜ.க. ஆட்சி மத்தியில் ஏற்பட்ட பிறகு தான் இப்போக்கு மிக அதிகமாக தலை தூக்கி நிற்கிறது. ஒரு மத்திய (பா.ஜ.க.) இணையமைச்சர் பீகார் கிரிராஜ் சிங் என்பவர் மிகவும் வாய்க் கொழுப்புடன் சோனியா காந்தி நிறம் கருப்பாக இருந்தால் அவர் காங்கிரசுத் தலைமைக்கு வந்திருப்பாரா? என்று பேசியுள்ளார்!

ஒரு அரசியல் தலைவரைப்பற்றி இப்படி பேசுவதா?

அய்க்கிய ஜனதா தளத்தின் தலைவர் சரத்யாதவ் மாநிலங்களவையில் இதேபோல் தென்னாட்டு மகளிர் நிறம் அழகு பற்றியெல் லாம் பேசி, அதற்குப் பெரும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் வருத்தம் தெரிவித்தார்.

அதுபோலவே கோவாவின் முதல் அமைச்சர் (பா.ஜ.க.) பெண்கள் வெயிலில் நின்று போராடினால் அவர்கள் நிறம் கறுத்து விடும்; பிறகு அழகு போய் விடும் என்று கூறி அவர்களது போராட்டத்தைக் கிண்டலும் கேலியும் செய்துள்ளார்!

இப்படிப்பட்ட நவீன மனுதர்ம, கிருஷ்ணா வதாரங்களை பா.ஜ.க. பெற்றுள்ளது என்பது மிகப் பெரிய தேசிய அவமானம் அல்லவா?

இவர்களது வக்கிர புத்தியும், கீழ்த்தர ரசனையும் இப்படியா நாளும் பெருகுவது?

கிருஷ்ணன் பெண்களையும், சூத்திரர் களையும் பாவயோனியிலிருந்து பிறந்தவர்கள் என்று கூறிய பாணியை இவர்கள் வேறு வகையில் கூறுகின்றனரோ? இவர்களது, கிருஷ்ண கடவுளே கறுப்புதானே!

பத்து பிள்ளைகள் பெற சங்கராச்சாரிகள் அருளுபதேசம் செய்வது,

ஒரு பெண் அமைச்சர் தேர்தல் பிரச்சாரத் தில் நீங்கள் (டில்லி வாக்காளர்கள்) பா.ஜ.க. வுக்கு வாக்களித்தால் இராமனுக்குப் பிறந்த வர்கள்; மாறி வாக்களித்தால் கண்டவர்களுக் குப் பிறந்தவர்கள் என்று தேர்தல் மேடையில் பேசி, இன்னமும் அந்த ஆர்.எஸ்.எஸ். அம் மணி பதவியில் தொடருகிறாரே, இதைவிட அரசியல் அநாகரிகம் வேறு உண்டா?

இப்படியே இவர்களைப் பேச விடாமல் தடுக்க ஆம் ஆத்மி தேர்தல் சின்னத்தை கையில் எடுத்துக் கூட போராடும் நிலை பெண்களுக்கு ஏற்பட்டு விடுமே!

அந்த அளவுக்கு நாடு போகுமுன் மோடிகளும், அவர்களை ஆட்டி வைக்கும் அரசியல் பொம்மலாட்டக்காரர்களும் சிந்திக்கட்டும்.

மாற்றம் வரும்! மாற்றம் வரும் என்றனரே, வந்த மாற்றம் இதுதானா?

அவமானம்! அவமானம்!!

Read more: http://viduthalai.in/e-paper/98963.html#ixzz3W9xlqxTh

தமிழ் ஓவியா said...

செய்தியும் சிந்தனையும்

கடைக்கோடி

செய்தி: சிங்கப்பூர் முன் னாள் பிரதமர் லீகுவான்யூ ஒரு சகாப்தம்! - பிரதமர் நரேந்திரமோடி
சிந்தனை: பல இனங்கள், பல மதங்கள், பல கலாச் சாரங்கள் உள்ள மக்களை ஒரு சார்பின்றி அனைவ ரையும் சகோதரத்துவத் துடன் வாழ வைத்தவர் ஒரு சகாப்தம்தான்; அதே கண் ணோட்டத்தில் பார்த்தால் மோடி - கடைக் கோடிதான்.

8,000

ஆண்டுதோறும் இந்தி யாவில் வரதட்சணைக் கொடுமையால் உயிரிழக் கும் பெண்களின் எண் ணிக்கை 8,000.

Read more: http://viduthalai.in/e-paper/98962.html#ixzz3W9y2IHGj

தமிழ் ஓவியா said...

குன்னூர் காவல்துறையின் ஆர்.எஸ்.எஸ். போக்கு

வன்முறையில் ஈடுபட்ட காலிகளை விட்டு விட்டு கழகத் தோழர்களை கைது செய்வதா?

நீலமலை மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் 31.3.2015 செவ்வாய் மாலை 6 மணியளவில் குன்னூர் - சேலாஸ் பகுதியில் திராவிடர் விழிப்புணர்வு வட்டார மாநாடு மாவட்ட கழக அமைப்பாளர் இரா. ரவி தலைமையில் நடை பெற்றது. மாவட்ட ப.க. தலைவர் இரா. புகழேந்தி, செயலாளர் மு. வாசுதேவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் ஒன்றிய செயலாளர் ரவிக்குமார், ம.தி.மு.க. நகர செயலாளர் கிங்ஸ்ராசன், த.மு.எ.க. சங்க மாவட்ட செயலாளர் மணிவசந்தம், மாவட்ட செயலாளர் மு. நாகேந்திரன், மாவட்ட கழக தலைவர் ஆ. கருணாகரன் ஆகியோர் பேசியபின், கழகப் பொருளாளர் டாக்டர் பிறைநுதல் செல்வி தொடக்க உரையாற்றினார். இறுதியாக கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன் சிறப்புரையாற்றினார். திராவிடர் கழகம் மக்களுக்கு ஆற்றிய தொண்டு தந்தை பெரியாரின் அளப்பரிய பணிகள், சூத்திர - பஞ்சமர் இழிவைப் போக்க கழகம் நடத்தி வரும் அரும்செயல்பாடுகள் பற்றி விளக்கி தமது பேச்சில் குறிப்பிட்டார்.

கூட்டம் முடியும் தறுவாயில் ஆர்.எஸ்.எஸ். இந்து முன்னணி காலிகள் கூட்டமாக வந்து ஜெய்காளி, ஓம்காளி என்று முழக்கமிட்ட வண்ணம் மேடையை நோக்கி வந்தனர். தொடர்ந்து கழகப் பொதுச் செயலாளர் பேசிய நிலையில் காலிகள் கல்லெறிந்து வன்முறையில் ஈடுபட்டனர். கழக மாவட்ட செயலாளர் மு. நாகேந்திரன் தலையில் கல் வீச்சால் காயம் ஏற்பட்டது. தோழர்கள் தந்தை பெரியார் வாழ்க, தமிழர் தலைவர் வாழ்க, மதவெறி ஒழிக, மதவெறி மாய்ப்போம், மனிதநேயம் காப்போம் என வீர முழக்கமிட்டு மாநாட்டை நிறைவு செய்தனர்.

தொடக்கம் முதலே சேலாஸ் பகுதியில் கழக மாநாடு நடைபெறக் கூடாது என காவல்துறையிடம் எதிர்ப்பு தெரிவித்து வந்த மதவெறியர்களின் முயற்சியை முறிய டித்து மக்கள் ஆதரவுடன் மாநாட்டை வெற்றிகரமாக நடத்துகிறோம் என்ற எரிச்சலில், காவல்துறையினர் கண்டும் காணாமல் இருந்த போக்கின் காரணமாக அவர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். இந்து முன்னணி அமைப்பாளர் கார்த்திக், ஆர்.எஸ்.எஸைச் சேர்ந்த கிஷோர் மற்றும் 30 பேர் கொண்ட கும்பல் வன்முறையில் ஈடுபட்டது. எதிர்ப்பை முறியடித்து கழகத்தின் மாநாடு வெற்றிகரமாக நடந்தது. முடிவில் மாவட்ட கழக இளைஞரணி தலைவர் சத்தியநாதன் நன்றி கூறினார். தலையில் காயம்பட்ட நிலையில் மாவட்ட செயலாளர் மு. நாகேந்திரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, நான்கு தையல்கள் போடப்பட்ட இந்நிலையில், குன்னூர் காவல்துறை கலவரத்தில் ஈடுபட்ட இந்துத்துவவாதிகளை கைது செய்யாமல், படுகாயம் அடைந்த மாவட்டச் செயலாளர் மு. நாகேந்திரன் மீதும், மாவட்டத் தலைவர் ஆ. கருணாகரன் மீதும் வெளியே வர முடியாத பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத் துள்ளனர்.

குன்னூர் பகுதியில் இந்துத்துவாவாதிகளுடன் காவல்துறை கைகோர்த்து நிற்பதாக பொது மக்கள் மத்தியில் அபிப்ராயம் ஏற்பட்டுள்ளது.

மாநில காவல்துறை அதிகாரிகள் இதில் போதிய கவனம் செலுத்தி மேல் நடவடிக்கைகளை, எடுப்பார்கள் என்று நம்புகிறோம். இன்றேல் நீதிமன்றப் பரிகாரத்தினை தேட கழகம் தயங்காது.

Read more: http://viduthalai.in/e-paper/98955.html#ixzz3W9yGpPNB

தமிழ் ஓவியா said...

மாட்டிறைச்சி கிடைக்காமல் வாட வேண்டுமாம்! சொல்வது உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்

அங்ரேல், ஏப்.2 அங்ரேல் (மே.வ) மாடுகள் கடத்தப்படுவதை தடுத்து விடுங்கள் அவர்கள் மாட்டிறைச்சி கிடைக்கா மல் பட்டினிகிடக்கட்டும் என்று உள்துறை அமைச் சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

மத்தியில் பாஜக ஆட் சிக்கு வந்ததில் இருந்தே பாஜக தலைவர்கள் நாடா ளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமல்ல கேபினெட் தகுதியுள்ள அமைச்சர் களும் தங்களின் பதவியை கருத்தில் கொள்ளாது மனம்போன போக்கில் பேசி வருகின்றனர்.

மனிதவளத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி சனிதோஷம் விலகவேண்டுமென்றால் அனைத்துப் பெண்களும் கருப்பு உளுந்தை சேலை யில் கட்டிக்கொள்ளுங்கள் என்று கூறுகிறார்.

நெடுஞ் சாலைத்துறை அமைச்சர் நிதின்கட்கரி விதர்பா விவசாயிகளின் தற் கொலையைத் தடுக்க யோசனை கேட்டால் விதர்பா விவசாயிகள், விவசாயம் செய்வதை நிறுத்திவிட்டு சாலை யோர நிலங்களில் மால்கள் மற்றும் ஓய்வு விடுதிகளை கட்டி அதன்மூலம் அதிகவருவாய் பார்க்கலாம் என்று கூறுகிறார்.

மற் றொரு புறம் கோவாவை ஆளும் பாஜக முதல் அமைச்சர் லட்சுமிகாந்த பரேஷ்கர், கருப்பான பெண்களைப் பிறர் தவறாகப் பார்ப்பார்கள் அவர்களுக்குத் திருமணம் ஆகாது என்று பேசி வருகிறார்.

இந்த வரிசையில் உள்துறை அமைச்சரின் பேச்சு, மிகவும் மட்டமான தாக இருக்கிறது.

மேற்கு வங்க மாநிலத்தின் உள்ள எல்லை மாவட்டமான அங்ரேல் பகுதியில் எல்லைப் பாதுகாப்புப் படைவீரர்களிடம் பேசும் போது அவர் கூறியதாவது: பக்கத்து நாடான வங்க தேசத்திற்கு மாடுகள் கொண்டு செல்லப்படு வதை எல்லைப் பாது காப்புப் படையினர் தடுக்க வேண்டும் வங்கதேசத் திற்குள் ஒரு மாடு கூட போகக் கூடாது. இதை இந்திய, _ வங்கதேச எல் லையில் குவித்து வைக் கப்பட்டிருக்கும் பாதுகாப்புப் படையினர் உறுதி செய்ய வேண்டும்.

அங்கே மாட்டுக் கறிக்குப் பஞ்சம் வரட்டும் மாட்டுக் கறி கிடைக்காத நிலை ஏற்பட்டு அவர்கள் பட் டினியால் வாடட்டும் என்று எல்லைப் பாது காப்புப் படைவீரர்கள் மத்தியில் பேசியுள்ளார்.

தொடர்ந்து இது போன்ற கீழ்த்தரமான பேச்சுக்களை, கேபினெட் அமைச்சர்களே பேசிவரு வது மக்களிடையே அமைச்சர்கள் மீதான மரியாதை தரம் தாழ்ந்து வருகிறது. 1958-ஆம் ஆண்டே மாட்டிறைச்சி உணவு தொடர்பான வழக்கொன் றில் தீர்ப்பு கூறிய உச்சநீதிமன்றம் தனிமனித உணவு உரிமையில் தலை யிடுவதை இந்திய அரச மைப்புச் சட்டம் அனுமதிக் காது, மாட்டிறைச்சி உண்பதும், உண்ணாததும் அவரவர் தனிப்பட்ட உரிமை என்று தீர்ப்பு வழங்கியுள்ளது. இந் நிலையில் நாடு முழுவதும் மாட்டிறைச் சியை தடை செய்யும் வகையில் பல்வேறு மறை முக திட்டங்களை மத்திய அரசு கொண்டுவந்து கொண்டிருக்கிறது.

இந் நிலையில் பக்கத்து நாட்ட வரான வங்கதேசத்தவரும் மாட்டிறைச்சி கிடைக் காமல் தவிக்கட்டும் என்று மத்திய உள்துறை அமைச் சரே பேசி இருப்பது அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது மட்டு மன்றி அயல்நாட்டு நட்புறவுக் கொள்கைக்கும் பங்கம் விளைவிப்பதாக அமையும்.

Read more: http://viduthalai.in/e-paper/98952.html#ixzz3W9yOx9nh

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

தனிக்கோயில்

மார்க்கண்டேயனுக்காக திருக்கடையூரையடுத்த மணல் மேட்டில் தனிக் கோயில் இருக்கிறதாம்.

அவன்தான் சிவனிடம் என்றும் பதினாறு என்று வரம் பெற்று விட் டானே அவன் அந்தப் பக்கத்தில்தானே பதினாறு வயதுள்ளவனாக நட மாடிக்கொண்டு இருக்க வேண்டும்; பக்தர்கள் கண்டுபிடித்துக் கொண்டு வருவார்களா?

Read more: http://viduthalai.in/e-paper/98954.html#ixzz3W9yZEWIf

தமிழ் ஓவியா said...

மாட்டிறைச்சி ஏற்றுமதிக்கு அனுமதி வழங்க முடியாதாம்
மத்தியப்பிரதேச முதல்வர் சவ்கான்

போபால், ஏப்.2 மத்தியப்பிரதேச மாநி லத்தில் மாட்டிறைச்சிக்கு கடுமையான சட்டம் இயற்றப்பட்டுள்ளது. முதல்வர் சிவ்ராஜ் சிங் சவ்கான் எந்த விலை கொடுத்தேனும் மாட்டி றைச்சி ஏற்றுமதிக்கு அனு மதி அளிக்க முடியாது என்று கூறியுள்ளார்.

சுவேதாம்பரர்கள் மத்தியில் மத்தியப்பிரதேச முதல்வர் சிவ்ராஜ்சிங் சவ்கான் கூறும்போது, எங்கள் அரசு பால் உற்பத்தி, காய்கறி, பழங்கள், தானியங்கள் உற்பத்தியை அதிகரிப் பதன்மூலம் காய்கறி உணவுமுறையை முன்னெ டுக்கிறோம். எந்த விலை கொடுத்தேனும் மாட்டி றைச்சி ஏற்றுமதிக்கு அனுமதி அளிக்கப்பட மாட்டாது என்றார்.

மத்தியப்பிரதேசத்தில் மக்கள் நவீன இறைச்சிக் கூடங்களை அமைத்துத் தருமாறு அரசிடம் கோரி வருகின்றனர். ஆனால், அது நடைபெறாது. எங் கள் அரசு இருக்கும்வரை நவீன இறைச்சிக்கூடங் களுக்கு அனுமதி அளிக் கப்பட மாட்டாது.

மத்தியப்பிரதேசத்தில் 1992ஆம் ஆண்டில் பாஜக தலைமையிலான சுந்தர்லால் பட்வா அரசு பசுவைக் கொல்லத் தடைச் சட்டம் கொண்டு வந்தது. நீண்ட காலத்துக் குப் பிறகு அந்தச் சட் டத்தில் கூடுதலாக அதி காரங்கள் அளிக்கப்பட்டு கடுமையாக்கப்பட்டது.

பசுக்கொலைத் தடுப் புச்சட்டத்தை கடுமை யாக்கினோம். பசுவைக் கொல்வது மனிதனைக் கொல்வதற்கு ஒப்பாக தண்டனைகள் கொண்டு வரப்பட்டது என்றார்.

மாட்டிறைச்சி வணிகம், ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்துக்குக் கொண்டு செல்லுதல் மற்றும் மாட் டிறைச்சி எடுத்துக்கொள் வது உள்ளிட்ட அனைத் தும் மத்தியப்பிரதேசத்தில் கடுமையான தண் டனைக்கு உள்ளதாகும்.

Read more: http://viduthalai.in/e-paper/98953.html#ixzz3W9ynVIfx

தமிழ் ஓவியா said...

கருப்பு நிற பெண்கள் குறித்து பிஜேபி கோவா முதல்வரின் மட்டரகக் கருத்து

பானாஜி (கோவா) ஏப். 2_ கோவா மாநில முதல்வர் தங்கள் உரிமைகளுக்காக போராடிவரும் செவிலி யர்களைப் பார்த்து நீங்கள் போராடினால் உங்கள் நிறம் மங்கி கருத்து விடுவீர்கள், கருப்பு நிறப்பெண்களை பிறர் தவறாகப் பார்ப் பார்கள், உங்களை யாரும் திருமணம் செய்யமுன் வரமாட்டார்கள் என்று கூறினார். கோவா மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவம னைகளில் செவிலியர் மற்றும் துணை மருத் துவப் பணியாளர்கள் அனைவரும் ஒப்பந்த அடிப்படையில் பணி புரிந்துவருகின்றனர். இவர்களை ஒப்பந்தத்தில் பணியமர்த்திய தனியார் நிறுவனம் அவசர ஊர்திசேவையையும் ஒப்பந்த அடிப்படையில் செய்து வருகிறது.

இந்நிலையில் தனியார் நிறுவனம் நீண்ட நாட் களாக சரிவர ஊதியம் தராமல் அலைக்கழித்து வருகிறது, புதிதாக துவங் கப்பட்ட அவசர ஊர் திக்கு நியமிக்கப்பட்ட ஓட் டுநர்களுக்கு ஊதியமும் ஊக்கத்தொகையும் இது வரை தரவில்லை. இதனை அடுத்து ஓட்டுநர்களும் போராட்டத்தில் இறங்கி னார்.

நீண்ட நாட்களாக நடக்கும் இந்த போராட் டத்திற்கு அரசும் தனியார் நிறுவனமும் செவிசாய்க்க வில்லை. இந்த நிலையில் கோவாவில் உள்ள அனைத்து மருத்துவமனை செவிலியர்கள் அனை வரும் திங்கள் முதல் பட்டினிப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த விவகாரம் குறித்து பேச்சு நடத்த கோவா முதல்வர் செவிலி யர்களின் பிரதிநிதிகளை அழைத்தார். அப்போது செவிலியர் களிடம் பேசிய லட்சுமி காந்த பாரேஷ்கர் கூறிய தாவது: நீங்கள் எல்லாம் தன்னலமற்ற சேவை செய்யபவர்கள், சிறு சிறு பிரச்சினைக்காக போராடு வது நியாயமல்ல.

நீங்கள் போராடினால் உண்ணா விரதமிருந்தால் உங்கள் உடல் இளைத்துவிடும் தோல் கருத்துவிடும், தோல்கருத்த பெண்களை தவறாகப் பார்ப்பார்கள், அவர்களை திருமணம் செய்ய எந்த ஆணும் முன்வரமாட்டான் உங் களது நிலை இப்படி ஆகி விடக்கூடாது, ஆகவே நீங்கள் உடனடியாக பணிக்குத்திரும்புங்கள் என்று கூறினார். இந்த மட்டமான பேச்சு ஊடகங்களில் வெளியான உடன் முதல்வர் அப்படி கூறவே இல்லை, அவரது பேச்சை திரித்து ஊடகங்கள் வெளியிடுகின்ற்ன என்று முதல்வர் அலுவலகம் அறிக்கை வெளியிட்டிருந் தது. ஆனால் இதுவரை முதல்வர் தன்னுடைய பேச்சுகுறித்து மறுப்பு ஏதும் தெரிவிக்கவில்லை.

Read more: http://viduthalai.in/e-paper/98965.html#ixzz3W9yxD68P

தமிழ் ஓவியா said...

பெருமைமந்திரிப் பதவி பெரிதல்ல; பணக்காரனாக இருப்பதும் பெரிதல்ல; மனிதனாக வாழ்வதுதான் பெருமை. இழிவற்றவனாக வாழ்வதுதான் பெருமை.
(விடுதலை, 10.10.1973)

Read more: http://viduthalai.in/page-2/98948.html#ixzz3W9zbvS5e

தமிழ் ஓவியா said...

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

அடடே, உலகிலேயே மிகப் பெரிய கட்சி பிஜேபியாமே!

8.8 கோடி உறுப்பினர்கள் உள்ள கட்சி உலகிலேயே பிஜேபி என்று பிஜேபி அறிவித்துள்ளதாக ஒரு செய்தி ஏடுகளில் வெளி வந்துள்ளது.
திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் பொதுக் கூட்டங்களில் ஒரு கருத்தைத் தவறாமல் சொல்லி வருகிறார்.

மிஸ்டு கால் மூலம் பிஜேபியினர் உறுப்பினர்களை சேர்க்கிறார்களாம். சொந்தக் காலில் நிற்க முடியாதவர்கள் மிஸ்டு காலில் நிற்கப் பார்க்கிறார்கள் என்று ஆசிரியர் குறிப்பிடும் பொழுதெல்லாம் மக்கள் மத்தியில் பலத்த கரவொலி வெடிக்கிறது.

பிஜேபியின் கட்சிக்கு உறுப்பினர் சேர்க்கை எந்த யோக்கியதையில் இருக்கிறது என்பதற்கு ஒரே ஒரு எடுத்துக்காட்டுப் போதுமே

தமிழ் மாநில இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் செயலாளர் தோழர் முத்தரசன் அவர்களுக்கே ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளதாக அவரே தெரிவித்துள்ளார்.

நீங்கள் பிஜேபியின் ஆரம்ப உறுப்பினராகி (Primary Membership) உள்ளீர்கள், உங்களடைய மின்னஞ்சல் உள்ளிட்ட விவரங்களை அனுப்பி வையுங்கள் என்று நாடறிந்த கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளருக்கே இப்படி வந்துள்ளது என்றால், பிஜேபி உறுப்பினர் சேர்க்கும் பித்தலாட்டம் எத்தகையது என்பதைப் புரிந்து கொள்ளலாம் - வெட்கக்கேடு!

Read more: http://viduthalai.in/page-5/98969.html#ixzz3WA1omQrm

தமிழ் ஓவியா said...

சிகரெட் மற்றும் புகையிலை பயன்படுத்துவதால் புற்றுநோய் ஏற்படுவதில்லை நாடாளுமன்ற நிலைக்குழுத்தலைவரின் பேச்சிற்கு நாடுமுழுவதும் எதிர்ப்பு

மும்பை, ஏப்.2_ பாஜக எம்பியும் நாடாளுமன்ற நிலைக்குழுத் தலைவரு மான டி.கே.காந்தி புகை யிலை குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந் தார். அதில் புகைபிடிப்ப தாலோ அல்லது வேறு ஏதாவது வகையில் புகை யிலையை உட்கொள்வ தாலோ புற்றுநோய் ஏற் படாது. அப்படி புற்று நோய் ஏற்படும் என்று இதுவரை எந்த ஒரு உறு தியான ஆய்வு முடிவும் கிடைக்கவில்லை என்று கூறினார்.

மேலும் இதுவரை நாடு முழுவதும் புற்று நோய் ஏற்படக்காரணம் புகையிலைதானா என்று கருத்துக்கணிப்புகள் எடுக் கப்படவில்லை. இதன் மூலம் புகைப்பிடிக்கும் பழக்கம் மற்றும் புகை யிலை பயன்படுத்துவதால் புற்றுநோய் ஏற்பட வாய்ப் பில்லை என்றே தெரிகி றது எனவும் தனது அறிக் கையில் கூறியிருந்தார்.

இதனை அடுத்து சிகி ரெட் மற்றும் புகையிலை பாக்கெட்டுகளின்மீது அச்சிடப்படும் எச்சரிக்கை வாசகமும், படமும் விலக் கப்படும் என்பது உறுதியா னது. இந்நிலையில் மத்திய சுற்றுப்புற பாதுகாப்பு அமைச்சகம் நிலைக்குழுத் தலைவரின் இந்த அறி விப்பு அவரது சொந்தக் கருத்து என்று கூறியுள் ளது.

கடந்த வாரம் புகை யிலை உற்பத்தியாளர்கள் வர்த்தக அமைப்பு மத்திய அரசுக்கு சில நிபந்தனை களை விதித்திருந்தது. அதில் கூறப்பட்டுள்ளதா வது: தற்போது புகையிலைப் பொருள்களின்மீது அச் சிடப்பட்டுவரும் படங் கள் மிகவும் விகாரமாக உள்ளன. இதனால், குழந் தைகள் மனநிலையில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும். அதேவேளை யில், மக்களிடையே ஒரு அச்ச உணர்வும் ஏற்படும்.

இதனால் புகையிலை தொடர்பான வர்த்தகத் தில் சரிவு ஏற்பட வாய்ப் புள்ளது. அப்படி சரிவு நேர்ந்தால் புகையிலை தொடர்பான வணிகத்தில் இருக்கும் தொழிற்சாலை கள் கடுமையான பொரு ளாதார இழப்பைச் சந் திக்க நேரிடும். இதனால், இதை நம்பி வாழும் லட் சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப் படும்.

ஆகவே, புதிய நிதியாண்டு முதல் (2015_2016) ஏப்ரல் ஒன் றிலிருந்து எச்சரிக்கைப் படங்கள் மற்றும் வாச கங்களை அகற்றவேண் டும் என்று கேட்டிருந்தது. இதனை அடுத்து நாடா ளுமன்ற நிலைக்குழுத் தலைவரின் பேட்டி

Read more: http://viduthalai.in/page-8/98992.html#ixzz3WA2gAIyf

தமிழ் ஓவியா said...

உங்களுக்குத் தெரியுமா?


தேசியக் கொடியில் காந்தியார் ராட்டை சின்னம்தான் இடம்பெற வேண்டும் என்று போராடிய நேரத்தில், அசோகச் சக்கரம் இடம்பெறச் செய்த பெருமைக்குரியவர் அம்பேத்கர் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?

தமிழ் ஓவியா said...

இணையதளங்களில் கருத்துரிமையைத் தடுக்கும் சட்டப் பிரிவு ரத்து உச்ச நீதிமன்றத்தின் பாராட்டத்தக்க தீர்ப்பு

தகவல் புரட்சி யுகம் என்று அழைக்கப்படும் புதுமையான மின்னணுப் புரட்சியால், உலகத்தின் ஒரு கோடி அல்லது மூலையில் உள்ள செய்தி, அடுத்த சில நொடிகளில் மற்றொரு கோடிக்கோ, மூலைக்கோ பரவும் வண்ணம் வேகமான மின்னஞ்சல் வசதி -_ அதையொட்டிய முகநூல், டுவிட்டர், வாட்ஸ் அப் எத்தனை எத்தனையோ!

அவற்றின்மூலம் ஏராளமான கருத்துப் பரிமாற்றங்கள் சுதந்திரமாக நடைபெற்று வருகின்றன உலகெங்கும்!

ஆனால், ஆட்சியாளர்கள் - இந்தக் கருத்துரிமை வெளிப்பாட்டின் கழுத்தை நெரிக்கவே புதிய சட்டங்களையும், திருத்தங்களையும், தங்களுக்குள்ள ஆட்சி, அதிகார பலத்தின் காரணமாக மக்கள்மீது திணிக்கச் செய்கின்றனர்.

அப்படி வந்த ஒரு திருத்தச் சட்டம்தான் 66ஏ (தகவல் தொழில்நுட்பப் பிரிவுச் சட்டத்தின் பிரிவு) என்ற செக்ஷன்.

ஆட்சியாளர்கள் இதில் கூறப்படும் கருத்துக்காக எவரையும் கைது செய்யலாம், தண்டிக்கலாம்.

இதைக் காட்டி முன்பு மும்பையிலும், மேற்கு வங்கத்திலும் இன்னும் பல ஊர்களிலும் கூறப்பட்ட கருத்துக்காக இரவோடு இரவாக கைது; சிறையில் அடைப்பு என்ற பாசிசப் போக்குகள் மலிந்துவரும் வேளையில், இப்படி ஒரு 66ஏ பிரிவு செல்லாது; இது இந்திய அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படையான கருத்துச் சுதந்திர உரிமைக்கு எதிரான சட்டம் என்று திட்டவட்டமாக, உச்ச நீதிமன்ற நீதிபதிகள், மார்ச் 24 அன்று அளித்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பில் கூறியுள்ளனர்!

இந்தச் சட்டத்தின் பிரிவை நாங்கள் ஆழ்ந்து ஆராய்ந்து தேவையான அளவுக்கே பயன்படுத்துவோம் - தவறாகப் பயன்படுத்தமாட்டோம் என்று மத்திய அரசு தரப்பில் எடுத்து வைக்கப்பட்ட கருத்தினை ஏற்கவில்லை உச்ச நீதிமன்றம்.

இந்த அம்சத்தை நாம் வெகுவாகப் பாராட்டுகிறோம்; காரணம், இதற்கு முன்பு ஜனநாயக உரிமைகளுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட அத்துணை கறுப்புச் சட்டங்கள் - கடுமைச் சட்டங்கள் (Draconian Laws ) அனைத்தையும் நுழைக்கும்போது, இப்படிப்பட்ட வாக்குறுதிகளை நாடாளுமன்ற, சட்டமன்றங்களில் ஆளுவோர் கூறுவதும், பிறகு நடைமுறையில் அவற்றைக் காற்றில் பறக்க விடுவதும் சர்வ சாதாரணமான நிகழ்வுகள் ஆகும்.

தவறாக எழுதப்படும் அவதூறு பரப்பும் செய்தி, கட்டுரைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க சிவில், கிரிமினல் தேசப் பாதுகாப்பு முதலிய சட்டங்கள் ஏராளம் சட்டப் புத்தகங்களில் உள்ளபோது, இம்மாதிரி புதிய உற்பத்திகள் பாசிசத்தின் வெளிப்பாடுகளேயாகும்.

எனவே, இத்தீர்ப்பின்மூலம், ஜனநாயகத்தின் அடிக்கட்டுமானம் குலைக்கப்படாமல் _- கருத்துச் சுதந்திரமே அது -_ காப்பாற்றப்பட்டுள்ளது!
எனவே, இத்தீர்ப்பினை வரவேற்கிறோம்.

- கி.வீரமணி,
ஆசிரியர்

தமிழ் ஓவியா said...

புரட்சியாளர் பிறந்த நாளில் புரட்சிகர நிகழ்வுகள்

தாலி அகற்றும் விழா - மாட்டுக்கறி விருந்து

இந்த சென்னையிலே - ஒரு தொலைக் காட்சியிலே தாலிபற்றிய ஒளிபரப்பைக் காட்டக்கூடாது என்று சொல்கிறான்? மீறினால் டிபன்பாக்ஸ் குண்டு, வெடிகுண்டு என்கிறான்.

ஏப்ரல்-14 அம்பேத்கர் அவர்களுடைய பிறந்த நாள். அந்த நாளில் சென்னையில் பெரியார் திடலில் தாலி அகற்றுகின்ற விழாவை எங்களுடைய பெண்கள் நிகழ்த்திக் காட்டுவார்கள்.

ஒத்த கருத்து உள்ளவர்கள் வரலாம்.

அன்றைக்கு மாலையிலேயே தாலியை அகற்றிய உடன், மாட்டுக்கறி விருந்து நடைபெறும். மாட்டுக்கறி விருந்துக்கு யார்யார் வருகிறீர்களோ இப்போதே ரிசர்வ் செய்து கொள்ளுங்கள்.

குறிப்பிட்ட அளவுக்கு மட்டும்தான் உண்டு.

ஏனென்றால், நான் என்ன சாப்பிடுவது என்பதை இராமகோபாலய்யர் முடிவு பண்ணுவதா?

எங்கள் வீட்டில் என்ன செய்வது, அல்லது இராமகிருஷ்ணன் வீட்டிலே, முத்தரசன் வீட்டிலே, பீட்டர் அல்போன்ஸ் வீட்டிலே என்ன சமைப்பது என்று இவர்கள் முடிவு செய்வார்களா?

எனக்கு டயாபடிசுங்க, தித்திப்பு வேண்டாம் என்றால், அது நியாயம்.

அதுமாதிரி சொல்லுங்கள்.

பசுவை மட்டும் பாதுகாப்பார்களாம். ஏன் எருமை மாடு என்னய்யா பாவம் பண்ணியது?

ஒரே விஷயம் கருப்புத் தோல் என்பதாலா? சிந்திக்க வேண்டாமா? என்று அறிவிப்பு தந்திருக்கிறார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி.

களம் சூடுபிடித்திருக்கிறது.

சுவைக்க வாருங்கள் ஏப்ரல் 14இல்!

தமிழ் ஓவியா said...

லீக்வான்யூ மறைவு, உலகிற்கே பேரிழப்பு!


உலகின் தலைசிறந்த நிர்வாக மேதையும், சிறந்த அரசியல் ஞானியும், நவீன சிங்கப்பூரின் ஆற்றல் மிகு தந்தையுமான பேரறிஞர் லீக்வான்யூ அவர்கள் தனது 91ஆவது வயதில் (23.3.2015) அன்று காலை காலமானார் என்ற செய்தி சிங்கப்பூர் நாட்டு மக்களுக்கு மட்டுமல்ல; உலகின் அறிவு சார் மனித குலத்திற்கே ஒரு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.

பெரும்பான்மையினர் சீனர்கள்தான் என்றா லும், தமிழர் திராவிடர் அடங்கிய இந்தியர், மலாய்காரர்கள், யூரேசியர்கள் வெகு குறைவான எண்ணிக்கையினர்தான் என்றாலும், பெரும் பான்மை சிறுபான்மை என்ற பிளவுபடுத்திப் பார்க்க முடியாத வண்ணம், இந்த முப்பெரும் இனத்தவர்களும் கைகோர்த்து, சமூக நல்லிணக் கத்தோடு வாழ, அவரவர்தம் மொழி, கலாச்சாரம், நாகரிகம், பண்பாடு இவைகளை மதித்ததோடு, தமது அரசில் சமவாய்ப்பினையும் கொடுத்த்தவர்.

ஈழத் தமிழர் வாழ்வுரிமைப் பிரச்சினையில் கூட, தன் மனதில் பட்ட கருத்தை எடுத்துச் சொல்லி, இலங்கையில் தமிழர் இன அழிப்பு (Genocide) என்பதை தயங்காமல் கண்டித்தவர் அவர்.

அவர் என்றும் வாழுவார். சிங்கப்பூரின் ஒவ்வொரு வளர்ச்சியிலும் அவர் வாழுகிறார்; அவர் தொடர்ந்து வாழ்வார். அவருக்கு நமது வீர வணக்கம்!

- திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி விடுத்த இரங்கல் அறிக்கையிலிருந்து..

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

ஆதிசங்கரர்

ஆதிசங்கரர் கங்கைக் கரைக்கு வந்தபோது, ஒரு புலையனும் (சுடுகாட்டில் பணிபுரிபவர்) அவரது மனைவியும் குறுக்கிட் டனர். ஒரு சீடன் அவர்களிடம், தாழ்ந்த ஜாதியில் பிறந்த நீங்கள், குருநாதர் வரும் போது இப்படி குறுக்கே போகி றீர்களே? என்றார். அதற்கு அவன், எல்லா உயிர்களி லும் கடவுளே குடியிருக் கிறார் என்பது தெரி யாதா? எனக் கோபித் தான்.

உடனே சங்கரர், நீ சொல்வது சரியே! அறி யாமல் சொன்ன சீடனை மன்னித்து விடு என்றார். அப்போது புலையனும், அவன் மனைவியும் சிவ பார்வதியாக காட்சி தந்தனர். அங்கு தான் சங்கரர், மனித தர்மம் பற்றிய மானிஷா பஞ்ச கம் என்னும் நூலை இயற்றினார்.

எல்லா உயிர்களிலும் கடவுளே இருக்கிறார் என்று சொன்னது சிவன் என்றால் அந்த சிவன் கோயிலில் தாழ்த்தப்பட்ட தோழன் ஏன் அர்ச்சக னாகக் கூடாது? ஆகமங் களைத் தூக்கிக் கொண்டு ஏன் உச்சநீதிமன்றத்திற்கு ஓடுகிறார்கள்?

Read more: http://viduthalai.in/e-paper/99017.html#ixzz3WFvuvvsv

தமிழ் ஓவியா said...

கோவில் திருவிழாவில் நகைகள் கோவிந்தாசென்னை, ஏப்.3- சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் திருவிழாவில் பக்தர்கள் கூட்டத்தில் கொள்ளை யர்கள் புகுந்து 9 பெண் களிடம் தங்க சங்கிலி மற்றும் ரூ.1 லட்சம் ரொக்கப்பணத்தையும் பறித்துச்சென்று விட் டனர்.

சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் நேற்று அறுபத்து மூவர் திருவிழா நடந்தது. பக் தர்கள் கூட்டம் அதிகமி ருந்தது. இணை ஆணை யர் சிறீதர், துணை ஆணை யர் பாலகிருஷ்ணன் தலைமையில் பலத்த காவல்துறை பாது காப்பு போடப்பட்டிருந்தது. பாதுகாப்பு வளை யத்தையும் மீறி பக்தர்கள் கூட்டத்தில் சங்கிலி பறிப்பு கொள்ளையர்கள் புகுந்து விட்டனர்.

9 பெண்களிடம் 55 சவரன் தங்க நகைகளை பறித்துச் சென்று விட்ட தாக புகார்கள் வந்தன. கோவிலுக்கு உள்ளேயே 2 பெண்கள் கூட்ட நெரி சலில் சிக்கியதை பயன் படுத்தி அவர்கள் அணிந்திருந்த நகைகளை திருடிச் சென்றனர். கண வன் கண் முன்னேயே பெண் ஒருவர் தாலி சங் கிலியை பறிகொடுத்தார்.

மயிலாப்பூர் பஜார் வீதியைச் சேர்ந்த மோகன் என்பவர் பையில் வைத் திருந்த ரூ.1 லட்சம் ரொக்கப்பணத்தையும் கொள்ளைக்கும்பல் பறித் துச் சென்று விட்டனர்.

மயிலாப்பூர் கோவில் திருவிழாவில் பெரிய கலவரம் நடக்கிறது என் றும், கழுத்தில் தங்க சங்கிலி போட்டு செல்லா தீர்கள் என்று ஏமாற்றி அபிராமபுரத்தில் இளம் பெண் ஒருவர் அணிந் திருந்த 6 சவரன் தங்க சங்கிலியை அதே பகு தியைச் சேர்ந்த நபர் ஒருவர் அபகரித்து சென்று விட்டார். இதுதொடர் பாக அபிராமபுரம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

Read more: http://viduthalai.in/e-paper/99014.html#ixzz3WFw1u5G1

தமிழ் ஓவியா said...

பதவி ஆசை


பதவி ஆசையில் மிதக்கிறவர்கள் எப்படிப்பட்ட அற்ப இழிவான அயோக் கியத்தனமான காரியத்தையும் செய்து வெற்றி பெறவே பார்ப்பார்கள். அவர் களிடம் சுயநலம் தவிர மனிதப் பற்றோ நாட்டுப் பற்றோ சிறிதளவும் காண முடியாது.
(விடுதலை, 3.5.1965)

Read more: http://viduthalai.in/page-2/99000.html#ixzz3WFwHQUUE

தமிழ் ஓவியா said...

நிலவை விழுங்கும் பார்ப்பனியப் பாம்பு

4.4.2015 சந்திர கிரகணம்

பூமி சூரியனைச் சுற்றிவரும் 12 மாதங்களில், 12 முறை பூமியைச் சுற்றிவரும் நிலவு, 12 முறை சூரிய ஒளியை முழுமையாக பிரதிபலிக்கும்போது வெள்ளுவா அல்லது பௌர்ணமி.

12 முறை முழுமையாக பிரதிபலிக்காதபோது காருவா அல்லது அமாவாசை. பூமி 23 டிகிரி சாய்ந்திருப்பதுபோல், நமது பூமியைச் சுற்றிவரும் ஒரே ஒரு துணைக்கோளான நிலவு 5 டிகிரி சாய்ந்திருக்கிறது.

நிலவு பூமியின் ஒரு பாதியைச் சுற்றிவர 14 நாள்களும், மற்றொரு பாதியைச் சுற்றிவர 14 நாள்களும் ஆகிறது. நிலவில் ஒரு இரவு என்பது 14 நாள்கள் ஒரு பகல் என்பது 14 நாள்கள். 24 மணி நேரத்தில் இரவையும், பகலையும் உணர்ந்து வாழப்பழகிவிட்ட மனிதன், நிலவில் குடியேற முடியாததற்கு அதுவும் ஒருகாரணம்.

பூமியில் வாழும் அனைவரும் நிலவை மேலே பார்க்கவில்லை பக்கவாட்டில்தான் பார்க்கிறோம் என்பதை முதலில் உணரவேண்டும் 5 டிகிரி சாய்வாக உள்ள நிலவு சூரியனை நோக்கி எத்தனை அளவு கோணத்தில் திரும்பி, ஒவ்வொரு நாளும் நாளும் சூரிய ஒளியை பிரதிபலிக்கிறதோ அதைத்தான் வளர்பிறை, தேய்பிறை என்கிறார்கள். நிலவு வளர்வதோ தேய்வதோ இல்லை. சூரிய ஒளியின் பிரதி பலிப்பின் அளவீடுதான் அந்த தோற்றத்திற்கு காரணம் நிலவின் பூமியைச்சுற்றும் பெயர்ச்சியானது சுருள் வடிவ நீள்வட்ட பாதையாகும். பூமிக்கும், சூரியனுக்கும் ஆன நேர்கோட்டில் பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் நிலா வரும்போது சூரிய ஒளியை நிலா மறைத்து நகரும். அப்போது நிலவின் நிழல் பூமியின் மீது விழுந்து நகர்ந்து கொண்டே செல்லும். இது கதிரொளி மறைப்பு அல்லது சூரியகிரகணம்.

பூமி ஒரு நிமிடத்திற்கு 30 கி.மீ. வேகத்தில் சுற்றுகிறது. ஆனால் நிலவு ஒரு நிமிடத்திற்கு 1 கிலோ மீட்டர் வேகத்தில் பூமியைச்சுற்றுகிறது. அந்த அடிப்படையில் நிலவின் நிழல் பூமியில் நேர்க்கோட்டு நாடுகளின் மேல் நகர்ந்து கொண்டே இருக்கும். எல்லா நாடுகளின் மீதும் விழாது.

அதேபோல் நிலவுக்கும் சூரியனுக்குமான நேர் கோட்டில் நிலாவுக்கும் சூரியனுக்கும் இடையில் பூமி வரும்போது பூமியின் நிழல் நிலவின் மீது விழும். அதாவது நிலவொளி மறைப்பு அல்லது சந்திரகிரகணம். நிலவின் சூரியஒளி பிரதிபலிப்பை பூமியின் நிழல் மறைத்துக் கொணடே நகரும். இதுவும் எல்லா நாடுகளிலும் தெரியாது.

இப்படி கதிரெளி மறைப்பும் (சூரிய கிரகணம்) நிலவொளி மறைப்பும் (சந்திரகரணகம்) எந்தெந்த ஆண்டு, எந்தெந்த மாதம், எந்தெந்த நாடுகளில் எவ்வளவு நேரம் நீடிக்கும் என்பதை வரும் 2100 ஆம் ஆண்டுவரை வானியல் அறிவியல் துல்லியமாக குறித்து வைத்துள்ளது. கடந்த மார்ச் 20ஆம் தேதி நிகழ்ந்த கதிரொளி மறைப்பை அய்ரோப்பிய நாடுகளில் கண்டுகளித்தார்கள்.

இந்தியாவின் மீது நிலவின் நிழல் அந்த நாளில் விழாததால் இந்தியாவில் அதைப்பற்றி ஒன்று கண்டு கொள்ளாமல்விட்டது ஆன்மிகம். ஆனால் ஏப்ரல் 4 ஆம்தேதி நிலவொளி மறைப்பு (சந்திரகிரகணம்). இந்தியாவில் தெரிவதால் இந்திய மக்கள் மீது ஆரியப் பார்ப்பனியம் அடுக்கடுக்காக அமோக ஆதிக்கம் செலுத்தி, மக்களின் உழைப்பை சுரண்டிக் கொழுக்க தயாராகி வருகிறது.

நிலாவைப் பாம்பு விழுங்குகிறது என்றும் கிரகணத்தின் போது கோவில் நடைச்சாத்து என்றும், கர்ப்பிணிப் பெண்கள் வெளியே வரக்கூடாது என்றும் சமைத்த உணவை அந்த நேரத்தில் மூடி வைக்கவேண்டும் என்றும் அந்த நேரத்தில் பயணம் செய்யக்கூடாது என்றும் இன்னும் எத்தனை எத்தனையோ?

இந்தியாவில் தெரியாத கதிரொளி மறைப்பைக் கண்டுகொள்ளாத பார்ப்பனியமே, பூமியின் சுழற்சிக்கும் பெயர்ச்சிக்கும் நிலவின் சுழற்சிக்கும் பெயர்ச்சிக்கும் எந்தத் தொடர்புமே இல்லாத சனிப்பெயர்ச்சியையும், குருப் பெயர்ச்சியையும் மக்கள் பண்பாட்டின் மீது கட்டிப் போட்டிருக்கும் உனது கற்பனைக் கயிற்றை வருங்கால தலைமுறையினர் பூமி சுழற்சி பெயர்ச்சி புரிந்தறி வாளர்களாக மாறி உன்னை பொசுக்கும் காலம் தொடங்கி விட்டது. பூணூலும், குடுமியும் பூமிக்குள் புதையும் காலம் கனிந்து விட்டது.

- செந்தமிழ்ச்செல்வன், சேகுவேரா

Read more: http://viduthalai.in/page-2/99003.html#ixzz3WFwTnwx6

தமிழ் ஓவியா said...

தந்தி டிவி பாண்டேவின் முகத்திரை கிழிந்து தொங்குகிறது

-குடந்தை கருணா

தந்தி டிவியில், கேள்விக்கென்ன பதில் நிகழ்ச்சியில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை பேட்டி கண்ட ரங்கராஜ் பாண்டே,சில வாசகங்களை பெரியார் சொன்னதாக எடிட் செய்து வெளியிட்டார்; அம்பேத்கர் மாட்டுக்கறி சாப்பிடக் கூடாது என்று சொன்னார் என்றெல்லாம் எந்த வித ஆதாரமும் இல்லாமல் வெளியிடப்பட்டது.

இது தொடர்பாக, திராவிடர் கழகத்தின் சார்பில் வெளியிடப் பட்ட மறுப்புகளை, குறுந்தகடு மூலம் தந்தி டிவிக்கு அனுப்பப்பட்டு, தந்தி டிவி, தொடர்ந்து அந்த உண்மை விவரங்களை நாட்டுக்கு தெரிவிக்க வேண்டிய ஒரு கட்டா யத்தை உண்டு பண்ணியுள்ளது.

நேற்றும் இன்றும் பல முறை, திராவிடர் கழகத்தின் சார்பில் தரப்பட்ட விளக்கத்தை தந்தி டிவி தொடர்ந்து ஒளிபரப்பிக் கொண்டி ருக்கிறது என்றால், எந்த அளவு, அந்த நிர்வாகத்திற்கு எதிர்ப்பு வந்திருக்கும் என்பதை நாம் யூகிக்க முடிகிறது. நிகழ்ச்சி நடத்திய ரங்கராஜ் பாண்டேயின் முகத்திரை முற்றிலுமாக கிழிக்கப்பட்டுவிட்டது. பாண்டேவை தயார் செய்த சங் பரி வாரங்களுக்கு சரியான பதிலடி யாகவும் அமைந்து விட்டது.

இன்னொரு தொலைக்காட்சியில் தாலி தொடர்பான விவாதம் வரக் கூடாது என்று மறுப்பு தெரிவித்து, தொலைக்காட்சி முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தி, வெடிகுண்டு வீசிய கலவரக்காரர்களுக்கும்,

தந்தை பெரியார் சொல்லாததை சொன்னதாக திரிபுவாதம் செய்த பாண்டேவின் செய்கையை அதே தந்தி டிவி மூலம், மறுப்பு வாதத்தை வெளியிட செய்த திராவிடர் கழகத்தின் அணுகுமுறைக்கும், உள்ள வேறுபாட்டையும், ஜனநாயக பண்பையும் மக்கள் அறிந்து கொள்ள முடிகிறது. இந்த நல்ல வாய்ப்பையும், விளம்பரத்தையும் அளித்த ரங்கராஜ் பாண்டேவிற்கு நன்றி.

பாண்டேவின் முகத்திரையை கிழித்து எறிந்த தந்தி டிவிக்கு நன்றி.

Read more: http://viduthalai.in/page-2/99006.html#ixzz3WFwhwjWn

தமிழ் ஓவியா said...

மகளிரைக் கொச்சைப்படுத்துவதற்கு முடிவு கட்ட வேண்டும்!

நாடாளுமன்றத்தில் நிதிநிலை அறிக்கைமீதான விவாதம் நடந்த போது மனிதவளத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானியைப்பார்த்து அய்க்கிய ஜனதா கட்சித் தலைவர் சரத்யாதவ் உங்களுடைய குணநலன்கள் என்ன என்று அனைவருக்கும் தெரியும் என்று கூறியிருந்தார். இந்த பேச்சிற்கு சமாஜ்வாடி கட்சி எம்பி ஜெயாபச்சன் முதல் பல்வேறு பெண் உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். சரத்யாதவ்மீது மகளிர் உரிமை ஆணையம் வழக்கு தொடுக்கவேண்டும் என்று கூறியிருந்தனர்.

இந்த நிலையில் பீகாரில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் கிரிராஜ்சிங், ராஜீவ் காந்தி நைஜீரிய பெண்ணை மணந்திருந்தால் காங்கிரஸ் தலைவர் பதவி கிடைத்திருக்குமா? சோனியா வெள்ளை நிறமாக இருப்பதால்தானே அவருக்கு அந்தப் பதவி கிடைத்தது என்று கூறியிருந்தார். இந்த மட்டமான பேச்சுக்கு நாடு முழுவதும் கடும் கண்டனம் தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் போராட் டங்களை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் பாஜகவின் பெண் உறுப்பினர்களும், மகளிர் ஆணையமும் இந்த விவகாரத்தில் கள்ள மவுனம் சாதித்து வருகின்றன. அதுமட்டுமல்லாமல், ராஜஸ்தானைச் சேர்ந்த திருமதி சந்தோஷ் அஹல்வாட் என்ற பாஜக எம்பி பேசும் போது சில நேரங்களில் வாய்தவறி சில வார்த்தைகள் வந்துவிடும், இது மனித இயல்பு; இது போன்ற விவகாரங்களை எதிர்க்கட்சிகள் வேண்டு மென்றே ஊடகங்களின் உதவியால் பெரிதுபடுத்து கின்றன என்று கூறினார். இதே வாதம் சரத்யாதவுக்குப் பொருந்தாதா? மேலும் அன்று சரத்யாதவ் மீது வழக்குத் தொடரவேண்டும் என்று பேசிய பாஜக பெண் உறுப்பினர்கள் சோனியா குறித்து கிரிராஜ் சிங் பேசிய விவகாரத்தில் முக்காடிட்டுக்கொண்டு அமைதி காத்துக் கொண்டு வருகின்றனர்.

பெண் உரிமைத்தொடர்பான விவகாரங்களில் எப்போதும் முதலாவதாக இருக்கும் ஜம்மு-காஷ்மீர் பெண் எம்பி மஹபூபா முஃப்தி இந்த விவகாரத்தில் எந்த ஒரு கருத்தும் கூறாமல் அமைதியாக இருக்கிறார் விரைவில் இவருக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைக்கவிருப்பதாக பேச்சு அடிபடுகிறது, ஆகவே, பதவிக்காக பெண்ணுரிமையை தூக்கிஎறியவும் அவர் தயாராகிவிட்டார் என்றே தெரிகிறது. சோனியா குறித்து அவதூறாகப் பேசிய கிரிராஜ் சிங் நைஜீரியப் பெண்ணுடன் ஒப்பிட்டுப் பேசினார். இது குறித்து இந்தியாவுக்கான நைஜீரியத் தூதர் பொறுப்பை வகிக்கும் ஓ.பி. ஓகங்கர் தனது கண்டனத்தை வெளிப் படுத்தினார். இது குறித்து அவர் ஊடகவியலாளர் களிடம் கூறும் போது அமைச்சரின் கருத்து விரும்பத் தக்கதல்ல, மிக மோசமானது! இது தொடர்பாக வெளி யுறவுத்துறை அமைச்சகத்திடம் புகார் செய்வோம். அமைச்சர் தனது கருத்தை திரும்பப் பெறுவார்; நைஜீரியா மக்களிடம் மன்னிப்பு கேட்பார் என்று எதிர்பார்க்கிறோம். இது குறித்து எங்கள் அரசுக்கு அறிக்கை அனுப்புவோம் எனக் கூறி உள்ளார்.

புதன் கிழமை உள்துறை அமைச்சர் அயல்நாட்டி னருக்கு மாட்டிறைச்சிகொண்டுசெல்வதை தடை செய்ய வேண்டும் அந்நாட்டினர் மாட்டிறைச்சி கிடைக்காமல் வாடவேண்டும் என்று ஒரு கருத்தைக் கூறியிருந்தார். இவர்களின் பேச்சால் அயல்நாட்டு நட்புறவிற்கும் பங்கம் வரும் என்றே கருதப்படுகிறது.

பாவ யோனியில் பிறந்தவர்கள் பெண்கள் என்று கீதையிலே கிருஷ்ணன் சொல்லியுள்ளான். அத்தகைய நூலை இந்தியாவின் புனித நூலாக அறிவிக்கப் போகிறோம் என்று மத்திய அரசின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஒரு பெண்ணாக இருந்தும் கூறியுள்ளார்.

இது மேற்கண்ட எல்லாவற்றையும்விட கொடுமை யானது - கண்டிக்கத்தக்கது.

காரைக்குடி பகுதியில் கடந்த சில மாதங்களாக 200-க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளனர் என்றும், ஆனால், ஒரே ஒரு வழக்கு தான் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் காரைக்குடி வட்டாரத்தைச் சேர்ந்த பொது மக்கள் குமுறியுள்ளனர்.

ஒரு பெண் முதல் அமைச்சர் உள்ள தமிழ்நாட்டில் (மக்கள் முதல்வர் தானே) இந்தக் கொடுமைகளைத் தடுக்க, கொடுமைகளைச் செய்தோர்மீது கடுமையாகத் தண்டிக்க போதிய முயற்சிகளை எடுத்துக் கொள்ள வேண்டாமா!?

திராவிடர் கழகம் - திராவிடர் கழக மகளிரணி, மகளிர் பாசறை இந்தப் பிரச்சினைகளைக் கடுமையாகக் கருதுகிறது; பெண்களுக்குத் தொடர்ந்து இழைக்கப் படும். கொடுமைகள், பெண்கள் மீதான தரம் தாழ்ந்த விமர்சனங்கள் இவைகளைக் கண்டித்தும் எதிர்த்தும் உரிய முறையில் போராட திராவிடர் கழகம் - திராவிடர் கழக மகளிர் மற்றும் பாசறை அணி தயங்காது.

வரும் ஞாயிறன்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள் தலைமை யில் நடைபெற உள்ள மகளிரணி, மகளிர் பாசறைக் கூட்டத்தில் உரிய முடிவுகள் எடுக்கப்படும்.

Read more: http://viduthalai.in/page-2/99001.html#ixzz3WFwrWISe

தமிழ் ஓவியா said...

புகையிலை பயன்படுத்துவதால் புற்றுநோய் வராது என்ற நாடாளுமன்ற குழு தலைவர் கருத்து முழுமையான தவறு

மருத்துவர் வி.சாந்தா பேட்டி

சென்னை,ஏப்.3- புகையிலை பயன்படுத்துவதால் புற்றுநோய் வராது என்ற கருத்து முழுமையான தவறு என்று அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் மருத்துவர் வி.சாந்தா கூறினார்.

சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் தலைவர் மருத்துவர் வி.சாந்தா நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

புகையிலை சட்டங்களை ஆய்வு செய்வதற்கான நாடாளுமன்ற குழு தலைவர் திலீப் குமார் காந்தி புகையிலை பொருட்களை பயன்படுத்துவ தால் புற்றுநோய் வரும் என்பதற்கு ஆதாரம் இல்லை என்று கூறி உள் ளார்.

மேலும் புகையிலை விளைவிப் பதை தடை செய்தால் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என்றும் அவர் களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும் கருத்து தெரிவித்து இருக் கிறார். புகையிலை பயன்படுத்தினால் புற்றுநோய் வராது என்ற அவரது கருத்து ழுமுக்க முழுக்க தவறானது. டில்லியில் உள்ள டாடா இன்ஸ்டி டியூட் ஆப் பண்டமெண்டல் ரிசர்ச் என்ற ஆராய்ச்சி நிறுவனமும், அடையாறில் உள்ள புற்றுநோய் மருத்துவமனையும் பல ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து வருகிறோம். அதன் பயனாகத்தான் புற்றுநோய் வந்தவர் களில் 40 சதவீதத்தினர் புகையிலை பயன்படுத்தியவர்கள்தான் என்பது தெரியவந்துள்ளது. விளம்பரத்தை 85 சதவீதமாக்கவேண்டும் இந்தியாவில் ஆண்டிற்கு புகையிலை பொருட்களை பயன்படுத்தியதால் 10 லட்சம்பேர் இறக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் 55 ஆயிரம் பேர் சாகிறார்கள். தமிழ்நாட்டில் 5800 புதிய புற்றுநோயாளிகள் வருடத்திற்கு வருகிறார்கள்.

பீடி பிடிப்பதால் வாயின் ஓரத்தில் புற்றுநோய் ஏற்படுகிறது. புற்றுநோய் வந்தவர்களில் 40 சதவீதத்தினர் புகையிலை பயன்படுத்தியவர்கள் என்ற புள்ளிவிவரம் கிடைத்துள்ளது. நுரை யீரல் புற்றுநோய் புகை பிடிப்பவர் களுக்கே வருகிறது. புகையிலை பொருட்களை பயன்படுத்தாதீர்கள் என்று வாசகம் எழுதினால் அது படித்தவர்களுக்கு மட்டும்தான் தெரியும். அதுவும் ஆங்கிலத்தில் எழுதப்படுகிறது. இதை படிக்காத பாமரர்கள் படித்து பார்க்காமல் புகையிலை பொருட்களை பயன்படுத் துகிறார்கள். எனவே புற்றுநோய் பற்றிய படங்களை புகையிலை பொருட்களின் மீது சுற்றப்பட்ட தாளில் அல்லது கவரில் அச்சிட்டால் நல்லது. குறிப்பாக அந்த விளம்பரம் 40 சதவீதத்தில் இருந்து 85 சதவீதமாக உயர்த்த இருந்தது. ஆனால் அது உயர்த்தப்படவில்லை. மாறாக இப்படி எம்.பி. திலீப்குமார் காந்தி கூறியிருப் பது வேதனை தருகிறது.

அமெரிக்காவில் 20 ஆண்டுகளுக்கு முன்பு புற்றுநோய் பாதிக்கப்பட்டவர் களில் 40 சதவீதத்தினர் என்ற நிலை இருந்தது. ஆனால் அங்கு விழிப் புணர்வு ஏற்பட்டதால் நிறையபேர் புகையிலை பொருட்களை பயன்படுத் துவதை நிறுத்தி விட்டனர். புதிதாக பயன்படுத்துவோரும் குறைந்துவிட் டனர். அதனால் அமெரிக்காவில் இப்போது 40 சதவீதம் என்பது 20 சதவீதமாக குறைந்துவிட்டது. எனவே யாரும் புகையிலை பொருட்களை பயன்படுத்தவேண்டாம். பீடியும் குடிக்கவேண்டாம்.

ஏனென்றால் பீடி குடித்தாலும் புற்றுநோய் வர வாய்ப்பு உண்டு. புகையிலைவேறு புற்றுநோய் வேறு அல்ல. இரண்டும் ஒன்றுதான் என்பேன். இவ்வாறு மருத்துவர் சாந்தா கூறினார்.

Read more: http://viduthalai.in/page-2/99005.html#ixzz3WFx3Loum

தமிழ் ஓவியா said...

பாதிரி காட்டிய படங்கள்

பாதிரியார் ஒருவர் கடவுள் நம்பிக்கையில்லாத ஒருவனை அழைத்து வந்து, ஆலயத்தில் மாட்டப் பட்டிருக்கும் படங்களையெல்லாம் காட்டினார்.

ஆண்டவன் மீது நம்பிக்கையுடையவர்கள் நடுக் கடலில் போகும்போது, கப்பலில் மூழ்கி விட்டதையும், பிறகு அவர்கள் ஆண்டவன் அருளால் தப்பியதையும் காட்டும் படங்களையும் அவனுக்கு அந்த பாதிரியார் காட்டினார். அப்படியானால், ஆண்டவன் மீது நம்பிக்கை யில்லாதவர்கள், ஆண்ட வனைத் தொழ மறுத்து கடலில் மூழ்கி செத்ததைக் காட்டும் படங்கள் எங்கே? என்று கேட்டானாம்.

ஆதாரம்: அண்ணாவின் சிறுகதைகள்

Read more: http://viduthalai.in/page-7/99049.html#ixzz3WFxeiZ6p

தமிழ் ஓவியா said...

கலைவாணர் போட்ட மந்திரம்!

எங்கள் வீட்டில் வயதான பாட்டி இருந்தார்கள். அவர் காலில் ஒரு நாள் தேள் கொட்டி விட்டது. வீட்டில் தம் நண்பர் களுடன் பேசிக் கொண்டிருந்த போது அப்பாவிடம் இதைச் சொன்னோம்.

அவர் உடனே, இவ்வளவு தானே நானே குணப்படுத்தி விடுகிறேன். செம்பு நிறைய நீரும் ஒரு கொத்து வேப்பி லையும் கொண்டு வாருங்கள் என்றார்.

அவை கொண்டு வரப்பட்டன. வேப்பிலையை நீரில் தொட்டு கொட்டிய இடத்தில் பாட்டிக்கு வீச ஆரம்பித்தார். வாய் முணுமுணுத்துக் கொண்டிருந்தது. அப்பாவின் நண்பர்கள் ஒன்றும் புரியாமல் பார்த்துக் கொண்டிருந்தனர். இப்போது வலி இறங்கி இருக்க வேண்டும். எப்படி இருக்கிறது என்று பாட்டியிடம் கேட்டார். பாட்டி, சற்றுத் தேவல்லை இன்னும் மேலிடத்தில்தான் வலிக்கிறது என்றார்.

உடனே மறுபடியும் ஒரு தடவை மந்திரம் முணு முணுத்து வேப்பிலை நீர் அடித்தார். பின்பு, இப்போது எப்படி இருக்கிறது. மேலிடத்திலும் வலி குறைந்து இருக்க வேண்டுமே என்று கேட்டார். பாட்டியார், அந்த இடத்திலும் வலி குறைந்து விட்டது என்றார்.

அப்படியானால் வலிசுத்தமாக இறங்கி விட்டது என்று அர்த்தம். இனி வலியே இருக்காது. எங்கே காலை மடக்கு பார்க்கலாம். பாட்டி காலை மடக்கினார். எழுந்து நில் பார்க்கலாம் பாட்டி எழுந்து நின்றார். நட பார்க்கலாம் பாட்டி நடந்து காட்டினார்.

இனி உன்னால் ஓடவும் கூட முடியும் அவ்வளவுதான் என்றார் அப்பா.

அப்பாவின் நண்பர்கள், வியப்பினால், தேள் கொட்டினால் விஷத்தை இறக்க மருந்து வைத்துக் கட்டாமல் இப்படி மந்திரம் போடுகின்றாயே. மந்திரத்தில் ஏதும் பயனில்லை என்று பிரச்சாரம் செய்கிறாய். இந்த மந்திரத்தை யாரிடம் கற்றாய்? இத்தனை நாள் எங்களுக்கு தெரியாமல் மறைத்து விட்டாயே. அது என்ன என்று எங்களுக்கு சொல்ல வேண்டும் என்று கேட்டனர்.

அது ஒன்றும் இல்லை. அது பரம ரகசியம். இன்னொரு நாளைக்கு இன்னொரு இடத்தில் சொல்லுகிறேன். இப்போது இங்கு வேண்டாம்
நண்பர்கள் விடாப்பிடியாக, இல்லை இப்போதே எங்களுக்கு சொல்ல வேண்டும் என்று கேட்க, அப்பா சுற்றும் முற்றும் பார்த்து கொண்டு, பாட்டியார் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு அது ஒன்றும் கஷ்டமான மந்திரம் இல்லை.

உன்னை கடிச்சா எனக்கென்ன, உன்னை கடிச்சா எனக்கென்ன என்று அவசரமாகச் சொன்னேன். இவ்வளவு தான். மனோதத்துவ வைத்தியம் இது - அவ்வளவுதான். நீங்களும் கூட இதைச் செய்யலாம் என்றாரே பார்க்கலாம்.

இதைக் கேட்டு நண்பர்கள் அப்படியா சங்கதி என்று கூறிக் கொண்டு அப்பாவின் கருத்தியல்புகளை மேலும் ஒரு படி புரிந்து கொண்டார்கள்.

கேட்டவர்: உடுமலை நடராசன்

கூறியவர்: மறைந்த நகைச்சுவை நடிகர் கலைவாணர் அவர்களின் புதல்வர் திரு.நல்லதம்பி

இடம்: பயணிகள் விடுதி, அமராவதிநகர், உடுமலை வட்டம். நாள்: 11.4.1981

Read more: http://viduthalai.in/page-7/99052.html#ixzz3WFxnygkf

தமிழ் ஓவியா said...

மகாலட்சுமி குடியிருக்கும் இடமாம்

பிரம்ம தேவன் உபதேசித்த மோகினி கவசம் பவிஷ் யோத்ர புராணத்தில் உள்ளது.

’கரௌ மஹாலயா ரக்ஷேதங்குளிர் பக்த வத்ஸலா
வைஷ்ணவீபாது ஜங்கேச மாயா மேட்ரம் குதம் தாதா’

பொருள்: மஹாலய தொடைகளையும் வத்ஸலா கை விரல்களையும் வைஷ்ணவி ஆடு தசைகளையும், மாயா ஆண், பெண் குறியையும் மலத்துவாரத்தையும் காத்து ரட்சிக்க வேண்டும்.

’ஆரண்யே ப்ராந்தரே கோரே ஸத்ரு ஸங்கே மஹாஹவே
ஸஸ்த்ர காதே விஷே பீதே ஜபன் ஸித்தி மாவப்னுயாத்’

பொருள்: நடுக்காட்டில் அச்சப்பட்டாலும் திருடர்கள், எதிரிகள் நடுவில் மாட்டிக் கொண்டாலும், ஆயுதத்தால் தாக்கப்படும்போதும் போரிலும், விஷம் குடித்திருந்தாலும் இதைப் பாராயணம் செய்தால் உடனே காப்பாற்றப் படுகிறார்கள்.

’போஜயேத் ப்ராஹ்ணாம் ஸ்சைவ
லக்ஷ்மீர்வஸ்தி ஸர்வதா
பதிதம் கவசம் நித்யம் பக்த்யா தவ மயோதிதம்’

பொருள்: பிராமணர்களுக்கு யார் சாப்பாடு போட்டு ஆதரிக்கிறார்களோ அவர்களது இல்லத்தில் மகாலக்ஷ்மி நிரந்தரமாக குடியிருக்கிறாள்.

ஆதாரம்: பொன் பாஸ்கர மார்த்தாண்டன் எழுதிய தேவி தரிசனம் VIII சோட்டானிக்கரை பகவதி அம்மன்.

-போத்தனூர் இரா. உமாபதி

Read more: http://viduthalai.in/page-7/99052.html#ixzz3WFy2E3dQ

தமிழ் ஓவியா said...

கம்பன் புலமையில் சிறந்தவனா?

கம்பராமாயண இன் சுவைப் பெருநாவலரான சிதம்பர நாதர்க்கு கம்பர் கவிகளே இணையில்லா இன்பச் செல்வங்களாகும். அவைகளை அவர் கடவுளின்பமாகவே கண்டாரென்றால் அது முழு உண்மையாகும். ஆனால், அதற்கு நேர்மாறாக நம் அடிகளோ,

கம்பர் பாடல்கள் சிறந்த நல்லிசைப் புலமையால் எழுந்தன அல்லவென்றும், பண்டைத் தண்டமிழ்ச் சங்கப் பாடல்களோடு அப்பாடல் களை ஒப்பிட்டால் கம்பர் கவிகள் சிறந்து நில்லா என்றும், அவை பகுத்தறிவுக் கொவ்வாக் கதைகளால், ஆரவாரமான, ஏராளமான - பொருளற்ற -கற்பனைகளால் வரை துறையின்றி யாக்கப்பட்டவை என்றும்,

கம்பரைப் பின்பற்றி எழுந்த ஏனைய காவியங்களும் அவர் முறையைப் பின்பற்றி எழுந்த ஏனைய காவியங்களும் அவர் முறையைப் பின்பற்றிச் சிறப்பிழந்தன என்றும், பாட்டுப் பற்றிய பண்டைத் தமிழர் மரபே கம்பரால் புறக்கணிக்கப்பட்ட தென்றும் தமிழர் நாகரிக - இன உணர்வைத் தம் கதையால் கம்பர் கெடுத்து விட்டார் என்றும் கருதினார்.

கருதியது மட்டுமின்றித் தாமாக்கிய சாகுந்தல நாடக ஆராய்ச்சி என்ற திறனாய்வு நூலிலும், முற்கால பிற்காலத் தமிழ் புலவோர் என்ற நூலிலும், பிறநூல்களிலும் மேற்காட்டிய கருத்துகளைக் காட்டி கம்பர் ஓர் நல்லிசைப் புலவர் அல்லர் என்றும், அவர் கவிகள் அப்படி ஒன்றுஞ் சிறந்தன அல்ல என்றும் சான்றுகளுடன் எழுதியுள்ளார்.

அத்துடனில்லாது அடிகள் தமிழர் நாகரிக - சமய - இன உணர்வுக்கு மாறான கம்பராமாயணத்தை பயிலுதலும். அவைக்களங்களில் அதனை விரித்தெடுத்து ஓதிப்பரப்பு தலும், தவறென்று தம் சொற்பொழிவுகளிலும், எழுத்து களிலும் வெளியிட்டும், எழுதியும் வந்தார். சைவ, வைணவ, சமய நூல்களின் ஆசிரியர்களும், உரையாசிரியர்களில் எவரும் கம்பர் கவிகளைத் தமது நூல்களில் மேற்கோள்களாகக் கூட எடுத்தாளவில்லை என்றும் எழுதியுள்ளார்.

அடிகள் சிவநெறியாளரானபடியால் அந்நெறிப் பற்றின் காரணமாக இவ்வாறு கம்பர் கவிகளைப் பழிக்கின்றார் என்றெண்ணுதல் பொருந்தாது. சைவசமயத்தின் சிறந்த புராணங்களில் ஒன்றாகிய கந்தபுராணத்தையே அடிகள் ஒப்பவில்லை. விநாயகரைப் பற்றிய கதைகளையும், ஏனைய பல தலபுராணங்களையும், அவற்றின் கதைகளையும் கருத்தில்லாப் பாடல்களையும் அடிகள் ஒப்பாது மறுத் தெழுதியும், பேசியும் உள்ளார்.

இதனை அடிகளின் கடவுள் நிலைக்கு மாறான கொள்கைகள் சைவம் ஆகா பழந்தமிழ்க் கொள்கையே சைவ சமயம் சாகுந்தல நாடக ஆராய்ச்சி முற்காலப் பிற்காலத் தமிழ்ப் புலவோர் என்றும் நூல்களிலும், அவற்றின் முன்னுரைகளிலும் விரிவாக காணலாம்.

மறைமலை அடிகள் வரலாறு (மறைமலை அடிகள் மகன் வித்துவான் மறை திருநாவுக்கரசு எழுதியது) (பக்கம் 661-642)

Read more: http://viduthalai.in/page-7/99053.html#ixzz3WFyAD1IJ

தமிழ் ஓவியா said...

மோடி கடைப்பிடிக்கும் மதச் சார்பின்மை இதுதான்!
ராமன் கோயில் கட்டி முடிப்பதில் பிரதமர் தீவிரமாம்

ராமஜென்மபூமி அமைப்பின் தலைவர் கூறுகிறார்

லக்னோ, ஏப்.3_ இங் கிலாந்திலிருந்து வெளி வரும் டெய்லி மெயில் (30.3.2015) ஏட்டுக்கு ராமஜென்மபூமி நியாஸ் அமைப்பின் தலைவர் நிருத்யா கோபால்தாஸ் அளித்த பேட்டியில் ராமன் கோயில் கட்டு வதற்காக முகாமடித்துக் காத்திருக்கும் காலம் முடிந்து விட்டது. ராமன் கோயில் கட்டுவதில் தீவிர மான நடவடிக்கைகளை பிரதமர் எடுத்துவருகிறார் என்று கூறியுள்ளார்.

தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அமைதி யாக இருக்கின்ற நேரத் தில், அயோத்தியில் விரை வில் ராமன் கோயில் கட்டுவதற்கான முடிவை பிரதமர் மோடி எடுக்க உள்ளதாக ராம் ஜென்ம பூமி நியாஸ் தலைவர் நிருத்யா கோபால்தாஸ் நம்பிக்கை வெளிப்படுத்தி யுள்ளார்.

பாஜக தலைமையி லான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அயோத் திப் பிரச்சினையில் நீதி மன்றத்துக்கு வெளியே தீர்வு காண முயன்று வருகிறது. அதேநேரத்தில் நாடாளுமன்றத்திலும் சட்டத்தை கொண்டுவர உள்ளது. ராமன் கோயில் கட்டுவதற்கான காலம் கனிந்து வருகிறது என்று தாஸ் கூறுகிறார்.

மேலும் தாஸ் கூறும் போது,கடவுள் ராமனை கூடாரத்துக்குள் அடைத்து வைத்து காத்திருக்கும் காலம் முடிந்துவிட்டது. அயோத்தியில் அற்புதமாக ராமன் கோயிலைக் கட்ட பிரதமர் மோடி தீவிர நட வடிக்கைகளை எடுத்துவரு கிறார் என்றார்.

விஸ்வஹிந்து பரி ஷத்தை வழிநடத்திவரும் அமைப்பான ராம் ஜென்மபூமி நியாஸ் ஏற் கெனவே ஆயிரக்கணக் கான தூண்களை அயோத் திக்கு அருகில் உள்ள கர்சேவாக் புரம் என்கிற பகுதியில் அமைத்துள் ளது. அந்தத் தூண்களைக் கொண்டு ராமன் கோயில் கட்ட அனுமதி கிடைக் கும் சில நாள்களிலேயே அயோத்தியில் ராமன் கோயில் கட்டி முடிக்கப் பட்டுவிடும்.

மோடியின் பதவிக்காலத்தில்

தாஸ் கூறுகையில் இந்த விவகாரத்தில் மோடியை நாடாளுமன் றத்தில் எதிர்க்கட்சிகளும் ஆதரிக்கும் என்று நாங் கள் எதிர்பார்க்கிறோம். மோடியின் பதவிக்காலத் திலேயே ராமன் கோயில் கட்டி முடிக்கப்படும் என்றார்.

பாஜகவின் மூத்த தலைவர் ஒருவர் கூறும் போது, இப்போதைக்கு இந்தப்பிரச்சினையை முன்னுக்குக் கொண்டுவர கட்சி விரும்பவில்லை. ராமன் கோயில் விவகாரம் உணர்ச்சிபூர்வமானது. இப்போது சீர்திருத்தங் களையும், நில சட்ட வரைவுகுறித்துமே அரசு முன்னிறுத்தும்என்றார்.

இதனிடையே சாமி யார்களின் பெரிய அமைப் பாக உள்ள அகாரா பரிஷத் அமைப்பின் சார்பில் கூறும்போது, மத்திய அரசு கோயில் விவகாரத்தில் ஒருதலைப் பட்சமான முடிவை எடுப் பதை அனுமதிக்கமாட் டோம் என்கிறார்கள்.

அதிக கூட்டங்கள்

அகாரா பரிஷத் அமைப்பில் புதிதாக தேர்வாகியுள்ள தலைவ ரான மகந்த் நரேந்திர கிரி கூறும்போது, ராம் ஜென்ம பூமி_ பாப்ரி மஸ்ஜித் வழக்கில் தொடக் கத்தில் இருந்து உள்ள மதத் தலைவரான ஹஷீம் அன்சாரியை விரைவில் சந்தித்து திட்டத்தில் முழு வடித்தை கொடுப்பதற்காக பேச உள்ளேன் என்றார்.

பிரச்சினைக்குரிய இடத்தில் ராமன் கோயிலைக் கட்டுவதற்கு, ராம ஜென்மபூமி நியாஸ் அமைப்புக்கு முசுலீம் களின் ஒத்துழைப்பைப் பெறுவதில் அகாரா பரி ஷத் பங்களிப்பு இருக்கும். அனைத்து (நான்கு) சங்கராச்சாரியார்கள், முக்கிய முசுலீம் மதத் தலைவர்களுடன் கோயி லுக்கான பூமி பூஜை நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர்.

பின்னர் இந்து மதத் தலைவர்களின் உதவி பெற்று மஸ்ஜித்தும் கட்டப்படும்.

மேலும் கிரி கூறுகை யில், இந்த ஆண்டில் ஆகஸ்டு மாதத்தில் நாடு முழுவதுமிருந்து நாசிக் கில் நடைபெற உள்ள கும்பமேளாவில் கூடும் சாமியார்களிடம் முழு வடிவத்துடன் உள்ள திட் டத்தை அளிக்க உள் ளோம் என்றார்.

அன்சாரியிடம் இது குறித்துக் கேட்டபோது, ராமன் சிலையை கூடா ரத்துக்குள் வைத்திருப்ப தற்கு எதிரானவன் நான். அதற்காக முசுலீம்களின் கருத்தை புறக்கணிப்பதற் கும் அரசை அனுமதிப்ப தாக பொருள் கிடையாது. பிரதமர் மோடியை சந் திப்பதற்கு விவாதிப்பதற்கு வாய்ப்பளிக்குமாறு கேட்டுள்ளோம்.

நரேந்திர கிரி இந்த விவகாரத்தில் விவாதிப்பதை நான் வர வேற்கிறேன். மதப் பிரச் சினைகளில் எந்த ஒரு முடிவையும் எடுப்பதில் அகாரா பரிஷத் அமைப்பை, தீர்மானிக்கக்கூடிய முக் கிய அமைப்பாக நான் கரு துகிறேன். ராம் ஜென்ம பூமி_ பாப்ரி மஸ்ஜித் பிரச் சினை மதப் பிரச்சினை. கேலிப் பொருளாக்கும் சூழலை தேவையின்றி உருவாக்குகிறார்கள். இரண்டு தரப்பிலும் பேச்சு வார்த்தையின் மூல மாகவே பிரச்சினையில் தீர்வை எட்ட முடியும் என்று அன்சாரி கூறினார்.

உத்தரப்பிரதேச மாநி லத்தின் கூடுதல் வழக் குரைஞர் மற்றும் சன்னி வக்ப் வாரியம் வழக்குரை ஞருமாகிய சவர்யாப் ஜிலானி இந்த வழக்கில் ஒரு கட்சிக்காரர் ஆவார். அவர் ஏற்கெனவே இவ் விவகாரம் குறித்துக் கூறும்போது, நாங்கள் உச்சநீதிமன் றத்தின் முடிவையே இந்த வழக்கில் எதிர்பார்க்கி றோம் என்றார்.

Read more: http://viduthalai.in/page-8/99060.html#ixzz3WFyO76fV